அல்லி

18 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 27, 2021, 9:31:37 AM9/27/21
to Santhavasantham
ஞெள்-/நெள்- :: நள்-/நாள்- இருள். இருளில் திரிவது நண்டு, நள்ளி.

நள்- > அள் > அல் ‘இரவு’.
ராத்திரியில் மலர்வது அல்லி என சங்கப் பாடல் அல்லது பின்னர் இருக்கிறதா? அப்படி இணைய தளங்கள் உள்ளன.

அல்லி, அலவன், அல்நம் (= அன்னம்) <<< அல் ‘இரவு’ < நள்-

NG

N. Ganesan

unread,
Sep 30, 2021, 6:57:21 PM9/30/21
to Santhavasantham
சக > யாழைச் சுற்றிய பொதியைத் தொகை இலக்கியம் 'பொள்ளல் பொத்திய பொதி' என்கிறது. அதனால் 'பொள்-' என்னும் அடிச்சொல்லின்
> பயன்பாடு பொருள் பொதிந்ததாகப் பண்டே நிலவியமை உறுதி.
> அது கருவுற்ற பெண்ணின் வயிற்றுக்கு உவமையாக அமைந்துள்ளது. reference அப்புறமாகப் பார்த்துச் சொல்கிறேன்.

நன்றி. இது பொருநராற்றுப்படையில் வருவது. பொள்ளம் > பொல்லம். இதுபோல் தான், அல்- < அள்/நள்-. அணுக்கு/அணுங்கு- அணக்கு/அணங்கு. அணு என்ற வடசொல் இத் தமிழ்ச்சொல் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கில் அணுக்குதல் - வருத்துதல் அனுங்குதல் என வருகிறது. ‘பல்லவம் அனுங்க’ கம்பன். பாறு- : பருந்து. இவையெல்லாம் spontaneous loss of retroflexion. ர/ற வேறுபாடு அழிந்த காலத்தில் மரைக்காடு > மறைக்காடு. Myths were generated in Tevaram. யானை > ஆனை, யால் > ஆல மரம், விந்து > இந்து, விடங்கர் > இடங்கர், காம்பு > ஆம்பல் (ஆனை, அல்லிமலர்). கறுகு > அறுகு, சமணர் அமணர், சிப்பி > இப்பி,  நுண்ணி > உண்ணி, மலர் > அலர், ... இவைபோல், சொன்முதல் மெய் அழிதலில் பல காட்டுகள் கொடுத்துள்ளேன்.

அல்- < அள்- < நள்-. எனவே, இயற்கையின் 3 முக்கியமான கொடைகளுக்கு அல்- பயன்பாடு நினைவுக்கு வருகிறது. (1) அலவன் (நளவன்) = ஞெண்டு; (2) அல்லி = மாலை/இரவில் பூக்கும் குமுதம். இப் குடும்பத்தில் காலைமலர் (நாண்மலர்) ஆகிய தாமரை, நெய்தல் (கருங்குவளை/நீலோற்பலம்) சில சமயம் அடங்கும். அச் சமயங்களில் அல்லி என்றால் தாமரை, நெய்தல் எனப் பாடற்பொருள் வரும்.  பொதுவாக, அல்லி (< அல்-) = வெள்ளாம்பலும், செவ்வாம்பலும் தான். அதாவது குமுத மலர்கள். வேதாந்த தேசிகர் சீபாதுகாசகசிரத்தில் பெருமாளின் பாதத்தில் அல்லி மலர்கள் போல, முத்துப் பதித்த காலணி என்று பாடியுள்ளார். https://www.sadagopan.org/pdfuploads/Paduka%20Sahasram.pdf
(3) அன்னம் = https://en.wikipedia.org/wiki/Bar-headed_goose. அதிகாலை நேரங்களில் காற்றின் ஏரோடடைனமிக்ஸ் உந்துவிசையைப் பயன்படுத்தி, விடிகாலையிம் நம் ஊர்களுக்கு வரும் புள் இஃது. சாத்து-சாந்து- என்னும் வினையடியாக, ந ப்ரத்தியம் பெற்று சந்தநம் அமைகிறது. அதே போல, அல் என்னும் ராவேளையில் (ராத்திரி வேதத்தில் உள்ள தமிழ்ச்சொல்) பறப்பது என்னும் பொருளில் அல்நம் என்ற பெயர் பழந்தமிழர் அளித்தனர். அல்நம் = அன்னம் (புணர்ச்சி விதி). பூரித்தல்/பூலித்தல் - பூனை; யால் (யால்/ஆல் மரத்தில் ஞாலும் விழுது போன்ற துதிக்கை) - யால்நை > யானை/ஆனை  ... போல.

அன்னப் பறவை ஆண்டுதோறும் இமயத்தை இருமுறை தாண்டுபவை. சங்கப் புலவோர் தென்னிந்தியாவில் கூடு கட்டுவதோ, முட்டையிடலோ இல்லை என வியந்துள்ளனர். எனவே, இவ்வகை geese (அன்னத் தாரா) ஆத்மாவுக்கு உவமையாகக் கொள்வர் பாரத கலை, இலக்கிய நூல்களில். மெக்சிகோ மாயன் நாகரிகத்திலும், கனடா தாரா ( https://en.wikipedia.org/wiki/Canada_goose )வை ஆத்மாவுக்கு உவமையாகக் கொண்வதுண்டு.  எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது எனத் தெரியாத காலங்களில் ஏற்பட்ட உவமை. 4000 ஆண்டு முன்னர், சுமேரியாவில் கிடைத்த, தந்தத்தால் ஆன, கல்லறைகளில் “மேலுஹா பறவை” அன்னம் எனக் கருதுகிறேன். ஆர்க்கியாலஜிஸ்ட் டேன் பாட்ஸ் (நியூ யார்க்/ஆஸ்திரேலியா) அவர்களிடம் சொன்னேன். அவர் குடுமிவாத்து என எழுதினார். ஆனால், அது பொருந்தவில்லை. அன்னம் கல்லறையில் வைப்பது. பௌத்த ஸ்தூபிகளில் கிடைப்பது. விரிவு பின்னர். அன்னப் பறவை பற்றி என் கட்டுரைகள்,
https://archive.org/details/Annam_the_Himalayan_Superbird_and_Tirukkural/mode/2up
https://archive.org/details/annam_BHgoose_II_Int_Tirukkural_Conference_UK

Published in:
Second International Conference on Tirukkuṟaḷ.
Souvenir, June 27-29, 2018, Liverpool, England.

Aṉṉam - the Himalayan Superbird and Tirukkuṟaḷ
Abstract: In Tirukkuṟaḷ, the human soul is compared to a bird that is leaving its nest once sufficient time has elapsed after its hatching. It is interesting to analyze the ornithological identity of the bird in this important poem with the background of Indian tradition. Tiruvaḷḷuvar is generally thought to be of Jaina religion as the first four chapters of his work reveal, and also his strict vegetarianism, abstinence from alcohol, importance given to the ascetics, impermanence of life and his preaching of equality among castes. Looking at the arts and literature of the Śramaṇic religions, the bar-headed goose crossing Himalayas where they raise their young and reaching Tamil country 2000 miles south during the frigid winter months stands out as "the bird" representing the soul. In Buddhist stūpas, often a bar-headed goose made of crystal is placed inside a bowl. Hence, the hamsa/aṉṉam is taken to represent the human soul in sepulchral monuments and in this Tirukkuṟaḷ verse. Also, two couplets describing the intimate relationship between lovers compare them to soul-body pair and significantly, a particle of comparison is employed in them by Tiruvaḷḷuvar hinting with a dhvani of aṉṉam bird.

------------

நீங்கள் குறிப்பிடும் சங்க இலக்கியத் தொடர் ‘பொள்ளல் பொத்திய பொதி' ரெட்ரோஃப்லெக்ஸ் இழந்து, பொள்ளம் > பொல்லம் பொத்திய என்றுள்ளது. You can see the Loss of Retroflex (poL- > pol-). யாழ்/வீணையின் ரெஸொனேட்டர் தான் பொள்ளம் (> பொல்லம்) என்பது ஆகும். பொத்துதல் - போர்த்துதல். தோலால் போர்த்துவர். உலகத்திலேயே வில்லால் தெறிக்கும் யாழைக் கண்டது இந்தியா என்பர். இதைப் பற்றிச் சங்க இலக்கியத்திலே வருகிறது. பழைய தொல்திராவிடர்களின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு: Bowing in Yaazh. For example, see RaavaNahastam instrument of ancient India, still in use. காளமேகத்தின் அரிய வெண்பா ஒன்றை முன்னர் விளக்கியுள்ளேன்.

"பொள் = பொருந்து. பொள் + து - பொட்டு = கன்னத்தின் மேற்பொருத்து (temple). பொள் = கொத்து. பொட்டு = கொத்திய இடம் போன்ற புள்ளி, புள்ளி போன்ற திலகம். பொள் = வெட்டு. பொட்டு = பயிரைப் பூச்சி வெட்டினாற்போன்ற சிற்றிடம். பொட்டு + அல் - பொட்டல் = நிலத்திற் பயிரில்லாத அல்லது தலையில் மயிரில்லாத வெற்றிடம். பொள் = துளை. பொட்டு = துளைக்கும்போது விழும் தூள், பொடித்துண்டு, சிற்றளவு, பயற்றங்காய்த் தோட்டுப் பொடி, சிறுபூச்சி. பொள் - பொடி - பொடுகு - பொடுகன். பொள் + தை - பொட்டை = துளை. பொட்டைக்கண் = குருட்டுக்கண்.
பொட்டு = பொருத்து, கட்டு. பொட்டு + அணம் - பொட்டணம். " பாவாணர்

https://indianbijou.wordpress.com/2016/03/16/short-history-of-bobbili-veena/
https://www.india-instruments.com/encyclopedia-saraswati-vina.html
குடம் என்னும் ரெசொனேட்டர் = பொள்ளம்/பொல்லம். சுரைத் தும்பையும் பொள்ளல் உடையது.
நாரதர், தும்புரு என்னும் சங்கீத முனிகள் இருவருக்கும் தமிழ்ப்பெயர் காண்க:
நார்/நரம்பு - மகதி வீணை கையில் வைத்துள்ள நாரதர்; ரெஸொனேட்டர் உள்ள தும்பு- தும்புரு. தம்புரா < தும்புரு. 
saraswati-veena.gif


பொள்ளல் (உட்டுளை) உடைய பொள்ளத்தின் (> பொல்லத்தின்) வாயைத் தோலால் மூடியதைப் பொருநராற்றுப்படை விளக்குகிறது.
இதனை இன்றும் பண்டை யாழ்களிலே பார்க்கலாம். உ-ம்: ராவணஹஸ்தம், (விரல்தெறி யாழ்)
https://www.facebook.com/magictune.org/photos/ravanahatha-the-ravanahatha-variant-names-ravanhatta-rawanhattha-ravanastron-rav/1079931042031396/
https://www.ebay.com/itm/143348449611
தாய்லாந்திலே இந்தியர் அளித்த வில்தெறி யாழ் (வயலின் முன்னோடி). தேவாரம். நாலாயிரம் பாசுரம் என்னுன் தெய்வீகத் தமிழ் இன்றும் கிரந்த அட்சரங்களில் எழுதி விழாக்களில்,
மன்னர் முடிசூட்டலில் பாடும் நாடு தாய்லாந்து.  http://tkapp.tkpark.or.th/stocks/content/developer1/thaimusic/25_sorduang/web/index_en.html
‘கின்னரக் கலைஞர்’ சீர்காழி இராமு https://www.vallamai.com/?p=90679
கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History)
https://groups.google.com/g/santhavasantham/c/aMK2Pa10Wvc/m/50g4ci83CQAJ

அப்பர் தேவாரம்:
மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலா லினிது சொன்ன
கிஞ்ஞரங் கேட் டுகந்தார் கெடிலவீ ரட்ட னாரே.  

கைதை என்னும் தமிழ்ச்சொல், வடமொழியில் கேத, கேதகி என்றாகும். அதுபோல, கைந்நர(நர) ::::> கிந்நர என்றும் கந்தருவர்கள் பெயர் ஆகலாம்.
கின்னரம் என்பது பலிகொடுத்த ஆந்தைகளாகக் காட்டப்படுவன. See fishing owl bodies in Kinnaras in Mahabalipuram Arjuna's penance sculpture.

யாழின் பொல்லம் (< பொள்ளம், resonator) தோல்கொண்டு பொத்தப்பட்டுள்ளது. பொருநராற்றுப்படை பார்ப்போம்.
     'விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை'
(Color contrast. தோல் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது.  விளிம்பில் வள்வாரால் விசித்துக் கட்டப்படும் தோல் பச்சைத்தோல். Cf. வள்ளுவன் எனும் தொழிற்பெயர். அதாவது, தண்ணீரில் வேவிப்பது (உ-ம்: செருப்பு தயாரிக்க) போன்றன செய்யாத பச்சைத்தோல். திண்டிமம் போன்ற பெரிய முரசுகளுக்கு வள்வார் முரசு எருமைத்தோல் பச்சையாகப் பயன்படும் (மகாபாரதம், ...)

இன்னும் நன்றாகத் தெரியாத இளஞ்சூலையுடைய சிவந்த நிறமுள்ள அழகிய வயிற்றில் மெல்லியதாக மயிர் தொடர்ந்திருப்பது போல அந்தத் தையல் இருக்கிறது. வாரை யாழ், முரசு பொள்ளத்தில் பொத்துதலால் பாணர் பிறகாலத்தில் தையல் தொழிலை மேற்கொண்டனர். தைத்தல்/தைக்க- > தக்‌ஷ என்னும் வடசொல் சிந்துவெளி முடிந்துவிட்ட காலத்தில் உருவானது (ஐராவதம்). பாணர்க்குச் சொல்லுவதும் தை - காளமேகத்தின் வெண்பா.  https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2014/mar/16/ஏழில்-மூன்று-858912.html
ஆந்திரப் பாணர்கள் பொள்ளம்/பொல்லம் பொத்துந் தொழில் மேற்கொண்டிருந்ததால், “பொல்லர்” என ஒரு பெயர் உண்டு. சென்னைப் பல்கலைப் பேரகாதி: பொல்லர் pollar , n. < பொல்லு-. 1. Tailors, as sewers; தையற்காரர். (பிங்.) 2. Leather-workers, shoe-makers; சக்கிலியர். (W.)

    'எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
    ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்
    பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை,'

[எய்யா - அறிய முடியாத, செய்யோள் – சிவந்த நிறம் உடையவள். சிவந்த மேனியில் மயிரின் ஒழுங்கு மெல்லிதாக இருந்தாலும் நன்றாகத் தெரிகிறது. ஐது - மெல்லிது. ஒழுகிய –நீண்ட. பொல்லம் பொத்திய – தைத்த; பொதி உறு - பொதிந்து வைத்த.]
குடத்தைத் தைப்பதற்கு ஆணிகளை முடுக்கியிருக்கிறார்கள். அந்த ஆணிகள் வளையில் வாழும் நண்டுகளின் கண்களைப் போல இருக்கின்றன.
    அளைவாழ் அலவன் கண்கண் டன்ன
    துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி.
[...] https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0599.html

பொள்ளைக் கரத்த போதகத்தின்
http://www.tamilvedham.org/index.php?r=site/pasuram1&username=&song_no=1349&thirumoli_id=1&prabhandam_id=13&alwar_id=
    பொள்ளல் இவ் உடம்பு என்று எண்ணி - சிந்தாமணி.

தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார்
    பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி

தேவாரம் - அப்பர்
    பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த
    புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்
    புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை
    பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்

பொள்ளம்/பொல்லம் யாழின் குடத்தைப் பொத்துவது பார்த்தோம், இப்படிப் பொத்திய பாத்திரம் பொத்தர்/பத்தர் என்று வழங்கப்படும். பொலி/பலி போல, பொத்தர்/பத்தர்,
 பத்தர்¹ pattar , n. 1. See பத்தல், 1, 4, 5. 2. Wooden trough for feeding animals; தொட்டி. பன்றிக் கூழ்ப்பத்தரில் (நாலடி, 257). 3. Cocoanut shell or gourd used as a vessel; குடுக்கை. கொடிக்காய்ப் பத்தர் (கல்லா. 40, 3).

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages