சிவகளை தொல்லியல் களம்

15 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 3, 2021, 7:14:16 AM7/3/21
to Santhavasantham, santh...@gmail.com, rajan...@gmail.com, Poongundran R, bavani...@gmail.com, sivamani K, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Y. Manikandan, kuda...@yahoo.com, Vedachalam V, George Hart, Asko Parpola, Nirmal Selvamony
On the so called "proof" of Riemann Hypothesis by K. Eswaran:
ஆர்வக் கோளாறு காரணமாக, ரீமன் கருதுகோள் (Riemann Hypothesis) தன் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் நிறுவிவிட்டதாக அறிவிப்பு. இந்தியப் பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்தன. ஆனால், எண்கணிதம் பயின்றவர் அல்லர் இந்த ஆய்வாளர். எனவே, இந்தியா முழுதும் சொன்னாலும், Riemann Hypothesis நிரூபிக்கப்படவில்லை என்கின்றது உலக அறிஞர்  சபை.  ”கல்வி வள்ளல்கள்” கல்லூரி இடத்தை அதிக விலைக்கு விற்க இது ஓர் Publicity stunt. But they also have to think how this damages India's name and reputation in the world.
https://debrajray.blogspot.com/2021/07/the-improbable-road-to-riemann.html
Gaurav Tiwari's blog has URL links to all the recent postings on the so called "proof" of RH by K. Eswaran, Hyderabad.
https://gauravtiwari.org/riemann-hypothesis-has-not-been-solved/

நிற்க.

ஓர் ஒப்பீடு:

பிராமி எழுத்தின் தோற்றம் பற்றி ஈசுவரனின் RH ப்ரூஃப் போலவே, தமிழ்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வருவதைப் பல ஆண்டுகளாக அவதானிக்கலாம். 1891-ம் ஆண்டு தொடங்கிய ஹார்வர்ட் ஓரியண்ட்டல் ஸீரீஸ் என்னும் வரிசையில் எல்லாம் ஆர்ய பாஷைகளின் புஸ்தகங்களே வெளியாகின, முதன்முதலாக, தமிழ் பற்றி வெளிவந்த நூல் (2003-ம் ஆண்டு), சங்க காலக் கல்வெட்டுகள் எழுதும் தமிழ் பிராமி என்னும் எழுத்துமுறையும், வடக்கே இருந்து தமிழ் நாடு வருவதை விளக்குவதாகும். பொள்ளாச்சியில் ஸப்கலெக்டராய் பணிவாழ்வைத் துவங்கின ஐராவதம் மகாதேவனின் சீரிய படைப்பு (Sri. IM's Magnum Opus, published in HOS, 2003 CE). தமிழ் பிராமியில் புள்ளியின் காலத்தை அது உற்பத்தியாகும் சாதகர்ணி காசுகள் மூலம் நன்கு நிறுவலாகும். அதனால், தொல்காப்பியத்தின் மிக முக்கியக் கோட்பாடாகிய புள்ளி கொண்டு, அன்னாரின் காலம் கி.பி. 2-ம் நூற்றாண்டு என ஐராவதம் காட்டியுள்ளார். மற்ற இந்திய இலிபிகளிடம் இருந்து தமிழ் எழுத்துமுறை மாறுபட இந்த புள்ளி/விராமக் கோட்பாடு காரணம். ஸம்யுக்தாக்ஷரம் என்னும் கூட்டெழுத்து இல்லாமல் தமிழ் எழுத்துக்களைச் செய்வது புள்ளி தான். தமிழ் பிராமி எழுத்துக்கள் வருங்காலத்தில் வாட்ஸப், ஃபேஸ்புக் போன்றவற்றில் எழுதத் தொல்காப்பியரின் புள்ளி துணைசெய்யும். இதற்கு தனி கோட்பாய்ண்ட் யூனிகோட் எழுதுருவில் முயன்று பெற்றோம். http://nganesan.blogspot.com/2021/06/unicode-only-encoding-for-tamil.html

பிராமி எழுத்து, அதன் கட்டுமானம், ஆராய்ந்தால் இது வடநாட்டில், ஆர்ய பாஷைகளில் பிராகிருதம், பாலி எழுத ஏற்பட்டது. அடிப்படையில் பாணிநீயத்தின் அக்‌ஷரங்களுக்காக விரிவுபடுத்தப்பட்டது எனத் தெரியும். தமிழ் நாட்டுக்குச் சமணர்களும், வேளிர்களும் கொணர்ந்தது. தமிழுக்குத் தேவையான குறில் எ, ஒ, புள்ளி, ழ, ற, ன பின்னர் தமிழர்கள் வட நாட்டு லிபியான ப்ராமியில் சேர்த்தனர். To show Tamil Sangam era script's origins, Iravatham gave the name, Tamil Brahmi while Nagaswamy uses Brahmi in his published writings in English. He also said in tamil essays, because we find the name "Daamili" in late Mahayana suutras, we can use தமிழி as a newly coined term. Both Tamil Brahmi (in the academic and popular usage) and Tamizhi (in tamil blogs, essays) are in use.

ஐராவதம், நாகசாமி போன்றோர் தமிழ் பிராமி முழுதும் அசோகர் காலத்திற்குப் பின்னர் ஏற்பட்டவை என்பர். ஆனால், கொங்குநாட்டில் ஏற்பட்ட அகழாய்வுகள் - முக்கியமாக, பேரா. கா. ராஜன் (சுப்பராயலு, செ. ராசு மாணவர்) நடத்திய கொடுமணல், பொருந்தல் போன்றவை - தமிழ் பிராமியின் தொடக்கம் கி.மு. 5-ம் நூற்றாண்டில் எனக் காட்டுகின்றன.
http://nganesan.blogspot.com/2020/09/journey-from-graffiti-to-brahmi-krajan.html
http://nganesan.blogspot.com/2014/10/prof-k-rajan-interview.html

அதன் பின்னர் மதுரை அருகே கீழடியில் ஒன்றிரண்டு மௌரியர் காலத்திற்கு முற்பட்ட பிராமி கிடைக்கின்றன எனச் செய்திகள். இப்பொழுது தாமிரபரணிக் கரையில் சிவகளையில் சில பானைத்துண்டுகளில் பிராமி கிடைக்கிறது என்ற செய்திகள் பார்க்கிறோம். (1) கொடுமணல், பொருந்தல் (2) அதற்கு அப்புறம் மிகச்சில Pre-Mauryan ஓடுகள் கீழடியில் (3) காலத்தால் அதற்கு அப்புறம் ஒன்றிரண்டு ப்ராமி பானை ஓடுகள் பிற்பட்டன சிவகளையில் என்பதால், பிராமி எழுத்து தமிழகத்தில் வடக்கே இருந்து தெற்கே செல்லும் gradient தெளிவாகிறது. இவையெல்லாம் விஞ்ஞான பூர்வமாக மேலும் உறுதிசெய்யப்படல் வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அமெரிக்கா-ஐரோப்பா நாடுகளுக்கும் யுத்தம் எப்பொழுதும் என்றாலும், மேலைநாடுகளில் சிறந்த பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் குழுக்களுக்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் அகழாய்வு செய்ய இடங்களைத் தேர்ந்து அளிக்கவேண்டும். தமிழர்கள் தற்கால அகழாய்வு முறைகளைக் கற்க வாய்ப்பு ஏற்படும். மேலும் பிராமி எழுத்தின் காலம் பற்றிய கணிப்புகளில் உலகளாவிய நம்பகத்தன்மை ஏற்படும். நூற்றுக்கணக்கான ஏக்கர் பறம்புகளில் அகழாய்வு செய்ய இடங்கள் உள்ளன. கொடுமணல், பொருந்தல், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, .... இவற்றை கொரியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ... தொல்லியல் அறிஞர்கள் தமிழ்நாட்டாரோடு அகழாய்வு செய்தால் தமிழ் பிராமி தமிழகத்தில் வளர்ச்சி அடையும் காலம் இன்னும் துல்லியமாகத் தெரியும். தமிழகத் தொல்லியல் அறிவியல் சான்றுகளை உலகமே வியக்கும்.

ஆதிச்சநல்லூர் கி.மு. 900 ஆண்டு வாக்கில் தொடங்கியுள்ளது எனக் கரிமக் காலக்கணக்கு. ஆனால், பல காலம் அங்கே பிராமி இல்லை.  இரும்புக்காலத்தில் வேளிர் வருகை, ஐயனாரின் தோற்றம், இரும்பு, குதிரை, சில நூற்றாண்டு பின்னர் சமணர்கள் அளித்த தமிழ் பிராமி இலிபி தமிழக வரலாற்றின் தொடக்கம் எனத் தொல்லியல் காட்டுகிறது. இந்தியாவின் வானியல் 4700 ஆண்டு கால வரலாறு உடையது. நட்சத்திரக் கணிதத்தைத் தொடங்கினோர் சிந்துவெளி திராவிடர்/தொல்தமிழர்கள் ஆவர். ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழியில் உள்ள ”அப்ளிக்வேர்”(Cf. Jomon pottery of Japan) சிற்பம் இந்த வானியலைக் காட்டி, சிந்துவெளித் திராவிடர் வருகையை உறுதிசெய்கிறது. ஆதிச்சநல்லூர் தொன்மை பற்றிய ஆய்வுக்கட்டுரை: https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

ஆதிச்சநல்லூருக்கு இணையாக, சிவகளைப் பறம்பைக் காட்டிய நண்பர் ஆ. மாணிக்கம் அவர்களுக்கு நனிநன்றி [1]. எப்போதாவது, சிவகளைத் தாழியில் ஆதிச்சநல்லூர் வானியல் சிற்பத்தை ஒத்தது கிடைக்கும் என நம்புகிறேன். https://www.asiaville.in/article/the-excavation-at-sivakalai-48393

மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் 2019-ல் சிவகளை பிராமி எழுத்து கி.மு. 395 என்றும், ரிப்போர்ட் வர கால தாமதம் ஆகும் என்றும் அரசாங்க சார்பில் தாக்கல் செய்தார். இக் காலக் கணிப்பு உண்மையா? ரிப்போர்ட் வெளிவந்துவிட்டதா? 2 வருஷம் முடிஞ்சுபோச்சே. வந்தால், ரிப்போர்ட் அனுப்பி உதவுக.
https://twitter.com/news7tamil/status/1113762661152346116/
Sivakalai-Brahmi.jpg

Happy July 4th weekend!
நா. கணேசன்

[1] ஆசிரியர் ஆ. மாணிக்கம் அவர்களின்உறவினர் சிவகளை ச. கரையாளன் பல ஆண்டுகள் எங்கள் வீட்டில் இருந்து கற்பித்தார்கள். அவரே என் முதல் தமிழ், கணித ஆசிரியர்.  திரு. கரையாளன் ஆசிரியரின் மைத்துனர், சிவகளை மு. சுப்பையாபிள்ளை பேரூர் ஆதீன வித்துவான். “கொங்குநாட்டுக்கோயில்கள்” நூலின் ஆசிரியர். பல பழைய புலவர்கள் போலவே தேவராய பண்டிதர் என்னும் சிவாச்சார்யர் 17-ஆம் நூற்றாண்டில் சென்னிமலையில் செய்தது கந்தசஷ்டிக் கவசம் எனத் தெளிவாகக் கூறியுள்ளார். என் ஆசானூர் ஆகிய சிவகளை விரைவில் செல்வேன்.
https://www.youtube.com/watch?v=x8mBKefjuos
https://www.youtube.com/watch?v=aRAEhux-MNs

அறிஞர் தொ.ப. நான் ஆசிச்சநல்லூரைப் பார்க்கணும் என அழைத்துச் சென்றார்: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_20.html

[2] Is vakil Kadirvelu talking of graffiti like these in Sivakalai?
https://www.hindutamil.in/news/tamilnadu/565160-sivakalai-excavation-graffiti-found-1.html
Reply all
Reply to author
Forward
0 new messages