Re: சங்கச் சொல்வளம்

586 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 6, 2014, 4:59:50 PM12/6/14
to mint...@googlegroups.com, vallamai


On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள்  இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?
கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

பின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.

சங்கச் சொல்வளம்

1. அசைவுகள்

 

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  (எ.டு)



In Aerodynamics, and Marine engineering, the movement in the 3 cardinal directions are called roll, yaw & pitch. we can see which
Tamil words suit these:

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

துளங்கு தல்  To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

-----------------

துயலுதல் துயர் என்னும் சொல்லைப் பற்றிச் சிந்திக்கிறேன்.

https://groups.google.com/forum/#!msg/vallamai/kujQLXZ9COI/-YesVZ1ool4J

திராவிட மொழிகளில் முதலெழுத்தில் -உ/-ஒ வேறுபாடு கொண்ட ஒருபொருள் தொகுதிகள் நிறைய உண்டு. உ-ம்: முய்-/மொய்- (முசுமுசு/மொசுமொசு. எனவே, முயல்/மொசல்), துள்-/தொள்- (துளை, தொள்ளு), புள்-/பொள்- (புள்ளி, பொள்ளுதல்), முள்-/மொள்- (முட்டை, மொட்டு, மொண்ணை) ... இது போல் ஒன்று: குய்-/கொய்-

குய்-/கொய்- என்னும் சொல்லுக்கு இரண்டு அடிப்படையான பொருள்கள் உண்டு. (1) குய்- ‘sharp'  குயம் ‘நாபிதன் கத்தி, அரிவாள், கொடுவாள்’ போன்றவற்றைக் கொய்தல் என்னும் வினையொடு த்ராவிட வேர்ச்சொல் அகராதி இணைக்கிறது.

இவைபோல், துய்-/தொய்- தொடர்புடையனவாய் தோன்றுகின்றன.
தொய்வு தொகு/தொங்கு/தூங்கு- இவற்றுடன் துயலுதல்/துயருதல் பொருந்துகிறது.

நா. கணேசன்

 

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த ...

சிறு குழை துயல்வரும் காதின் ----------- - பெரும் 161  

தாளுருவி அசையும் காதினையும் ---

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330

நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும்,

இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள், காலப்போக்கில் வழக்கிழந்து ஒரே பொருளாகக் கொள்ளப்பட்டன. எனினும், இந்த மூன்று சொற்களும் வெவ்வேறான அசைவுகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் உண்மையான பொருளோடு இந்த அடிகளைப் படிக்கும்போதுதான் மெய்யான இலக்கிய இன்பத்தைப் பெறமுடியும்.

இச் சொற்களுக்கு பலவிதப் பொருள் அமைந்தாலும், அசைதல் என்ற பொருளில் வரும் இடம் அல்லது சூழலை ஆய்வோம்.

முதலாவதாக இந்தச் சொற்களுக்குத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) தரும் பொருள்களைப் பார்ப்போம்.

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

துளங்கு - தல்  To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

இப்போது பத்துப்பாட்டில் இவற்றின் வழங்கிடங்களைப் பார்ப்போம்.

1. அலங்குதல் - இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.

        பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298

        நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

        முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144

        அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161

ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல். தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை நன்கு காணலாம். எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில் ஆடுவது அலங்குதல். அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.

அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும். அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே. இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும். அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.

கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை அலங்கல் எனப்பட்டது எனலாம்.

அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில் அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட ஒருவகை அசைவையே குறிக்கிறது. அவற்றில் சில:

அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12

அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

பரிபாடல் அடியைப் பாருங்கள். அருவி எப்படி அலங்கும்? இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.

அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்

மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15: 19-21

பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்! ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால் அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர். இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.

2. துயல்(லு) - (வி) அலை, அசை, ஊஞ்சலாடு, swing, wave, sway

துயல், துயல்வரும் ஆகிய சொற்களும் அலங்கல் போன்று ஒரு நிலைப்புள்ளியைச் சார்ந்த அசைவையே குறிப்பன. எனினும் இயக்கத்தில் இவை வேறுபட்டன.

வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79  

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86  

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 207  

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164  

அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல - சிறு 2  

துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265

சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் - பெரும் 161  

வான் கழல், துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ - குறி 127 

இங்கு வரும் முதல் அடியிலேயே மாலை துயல்வர என்று காண்கிறோம். இங்கு, திருச்சீரலைவாயிலில் விரைந்துவரும் களிற்றின் மீதமர்ந்து வரும் முருகனைப் பற்றிக் கூறும் புலவர், அவ்வாறு விரைந்து வரும் களிற்றின் நெற்றியில் கிடக்கும் வாடாத மாலையாகிய பொன்னரி மாலையின் அசைவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ஓடை என்பது யானையின் நெற்றிப்பட்டம் - முகபடாம் எனப்படும். இந்த நெற்றிப்பட்டத்திற்கு மேலே தங்க மாலை அணியப்பட்டுள்ளது. யானை தலையைக் கீழும் மேலும் ஆட்டிக்கொண்டு விரைந்துவரும்போது முகபடாத்துடன் சேர்ந்து மாலையும் குதித்துக் குதித்து ஆடும் அல்லவா? அந்த முன்-பின்னான ஆட்டமே துயல்வருதல். குதிரையின் தலையில் இருக்கும் உளை எனப்படும் தலையாட்டம் (hair plume) குதிரை நடக்கும்போது எவ்விதம் ஆடும்? ஊட்டு உளை துயல்வர என்று பொருநராற்றுப்படை கூறுவதும் இதுவே. காது வளர்த்த பாட்டிமார், தங்கள் தலைகளை ஆட்டிப் பேசும்போது அவர்களின் காதுகளில் தொங்கும் தண்டட்டி எனப்படும் குழைகள் எவ்வாறு ஆடும்? சிறு குழை துயல்வரும் காதின் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதுவும் இதுவே. சிறுபாணாற்றுப்படையின் புகழ்பெற்ற ஆரம்ப உருவகமான நிலமடந்தையின் அணிமுலை துயல்வரும் ஆரத்தின் ஆட்டமும் இதுவே.

எனவே, ஒரு புள்ளியை நிலையாகக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது துயல்தல் ஆகும்.




அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு

...

துரை.ந.உ

unread,
Dec 8, 2014, 11:24:29 PM12/8/14
to Groups, வல்லமை
2014-12-08 14:51 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

சங்கச் சொல்வளம்


2. இரிதல்

இன்றைக்கு வழக்கிழந்துபோன அருமையான சங்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இரிதல் என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி தரும் பொருள் இதுதான்:

1. To be destroyed, ruined;
கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9).

2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear;
ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.)

3. To fall away, as a garment; to drop; to recede;
விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.)

4. To drop, as perspiration; to ebb, as the tide;
வடிதல்.

5.To fear, dread;
அஞ்சுதல். (திவா.)

வழக்கம்போல் இச்சொல் இலக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காண்போம்.

தொண்டைமான் இளந்திரையனின் வள்ளண்மையைப் பாடவந்த புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணன் ஒருவன் அந்த மன்னனைத் தேடிச் சென்று பரிசில் பெறுவதாகத் தனது பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் கூறுகிறார். பலவித நிலங்களைக் கடந்து சென்ற பாணன் அறுவடைக்குத் தயாராக இருக்கும் முல்லைநிலக் காடு ஒன்றன் வழியாகச் செல்கிறான். முல்லைநிலக் காடுகள் வானம்பார்த்த பூமியாதலால், விதைப்புக்குப் பின் பொதுவாக மக்கள் காட்டின் உள்ளே செல்லமாட்டார்கள். அப்போது, புதராய் வளர்ந்துகிடக்கும் பயிர்களுக்கிடையே காடைக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வாழும். இவை மிக்க அச்சம் கொண்டவை. சிறிதளவு ஆளரவம் கேட்டாலேயே வெருண்டு ஓடுபவை. அறுவடைக்காரர்கள் திடீரென்று பயிருக்குள் நுழைந்தவுடன் இவை அச்சங்கொண்டு பதறியடித்துச் சிதறி ஓடுகின்றன. இதைக் கூறவந்த புலவர்:

Inline image 2
​இரியுறும் முயல்​

Inline image 1
​இரியுறும் மனிதன் ​

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

N. Ganesan

unread,
Dec 9, 2014, 8:58:06 AM12/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, December 8, 2014 10:18:59 PM UTC-8, Pandiyaraja wrote:
ஐயா துரை! அருமையான படங்கள். முயல்கள் தப்பித்துக்கொள்ளும். அந்த இரண்டு மனிதர்கள்? இதை எடுத்த அந்த மூன்றாம் மனிதர்? உயிருக்குப் பயந்த ஓட்டம் - பர்ர்பவருக்கு அருமையான காட்சிதான். பதைப்பவருக்கு எப்படியிருந்திருக்கும்?
மிக்க நன்றி ஐயா.
ப.பாண்டியராஜா


யானை ஓடுவது. அதன் மேல் யானையே இல்லாமல் ஓடிய இருவர். இரண்டையும் சேர்த்துச் செய்த படமா?

N. Ganesan

unread,
Dec 9, 2014, 10:01:43 AM12/9/14
to mint...@googlegroups.com, vallamai
On Monday, December 8, 2014 8:58:47 AM UTC-8, ருத்ரா இ.பரமசிவன் wrote:

//பெரு நீர்ப் போகும் இரியல் மாக்கள்//

மதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போல் என்பார்கள்.ஆனால் அந்த சிதறலில் ஒரு மறைவான பதற்றம் அச்சம் இவற்றை பார்க்க இயலாது.அது வெறும் தாறுமாறான (ரேண்டம்) ஒட்டம்.ஆனால் அந்த உள் அச்சம் (பேனிக்)எனும் உணர்வை அற்புதமாய் படம் பிடிக்கும் அழகான சொல் "இரியல்".விளக்கம் தொடருங்கள்.படிக்க படிக்க தமிழின் தொன்மைச்சுவை கூடிக்கொண்டே போகிறது.

அன்புடன் ருத்ரா


பேரா. பாண்டியராஜா விளக்கங்கள் அருமை. 

அலை- என்னும் சொல்லின் விரிவு அலங்குதல்/அலக்குதல்
துளை- என்னும் சொல்லின் விரிவு துளங்குதல்/துளக்குதல்.

கொங்குநாட்டில் அதிகம் புழங்கும் ஒரு சொல்லின் அர்த்தம்
பாண்டியராசா மடல்களால் கிடைத்தது. அமெரிக்காவில்,
time-compressed working-like-crazy periods-ஐ crunch-time என்கின்றனர்.
The interval of time immediately before a project is due, when it becomes apparent that the schedule has slipped and everyone is going to have to work like dogs to try to complete the project in time. Crunch time usually occurs during the period between the next-to-last scheduled milestone (prior to which everyone was able to delude themselves tht the schedule had NOT slipped) and the final deadline for delivery. During crunch time, workers are in crunch mode. Prevalent in the software industry, but used elsewhere as well.
"We've got three weeks left to complete six weeks worth of work. Looks like we'll be living on take-out for a while." 

"I freakin' hate crunch time."
crunch time - இதற்கு நேரான தமிழ்ச்சொல் காலங்காலமாக இருக்கிறது. மலையாளத்திலும் உண்டு.
அலை- என்னும் சொல்லின் விரிவு அலங்குதல்/அலக்குதல்
துளை- என்னும் சொல்லின் விரிவு துளங்குதல்/துளக்குதல்.
இது போல 
திரை- என்னும் சொல்லின் விரிவு திரங்குதல்/திரக்குதல்.

தோட்டத்தில் வேலை அதிகமாய் இருக்கும் பம்பல் சமயத்தில்
‘வேலை திரக்காய் இருக்கிறது’ என்போம். பம்பல் = அறுவடை (பம்பு- = செறிதல், நிறைதல்)

 


































 



நா. கணேசன்




 
On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள்  இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?
கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

பின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.

சங்கச் சொல்வளம்

1. அசைவுகள்

 

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  (எ.டு)

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

...

வேந்தன் அரசு

unread,
Dec 10, 2014, 6:48:04 AM12/10/14
to vallamai, மின்தமிழ்
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

சங்க இலக்கியங்களில் இரியல் பயிலும் இடங்களில் ஷிஃப்ட் எனும் பொருள சாலப்பொருந்தும்.

பறவைகள் அல்லது குரங்குகள் மீது கல்லெறிந்தால் அவை அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்று அமரும்.

9 டிசம்பர், 2014 ’அன்று’ 10:01 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Dec 10, 2014, 7:37:30 AM12/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.
 
...

N. Ganesan

unread,
Dec 10, 2014, 7:42:28 AM12/10/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, December 10, 2014 12:03:42 AM UTC-8, Hari wrote:

2014-12-10 13:02 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
என்பது போல் ‘இரி தவிற்க” என்று சொல்லமுடியுமா? இரிதலின் வேர், ‘இரி’ யா?

இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும்.  எடுத்துக் காட்டாக,

எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய

திசை யானைகளும் அஞ்சி ஓடின (உலகத்தை அழிப்பேன் என்று இராமன் சினம் கொண்டு நிற்கிறான்.  அவனை சடாயு சமாதானப்படுத்துகிறான்.

பேனிக் என்பதற்கு சமமான சொல்லாக இதைத் தமிழில் பயன்படுத்த முடியும்.

இரி என்பதே வேர்தான் என்று நினைக்கிறேன்.

n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்



வாசு ரங்கநாதனின் தளத்தில் இரி எனத் தேடினால்,
(இரியல்/இரிவு = panic. நேரான ஆங்கில வார்த்தை அருளிய ருத்ராவுக்கு நன்றி.)

Total hits: 83
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார் 
(aacaarakkoovai-44.)

இரும்பிடி இரியும் சோலை 
(ahanaanuuru-10 )

தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள், 
(ahanaanuuru-10 )

இரும்பிடி இரியும் சோலைப் 
(ahanaanuuru-10 )

இரியற் பிணவல் தீண்டலில், பரீஇச் 
(ahanaanuuru-15 )

உழைமான் அம்பிணை இனன்இரிந்து ஓடக், 
(ahanaanuuru-10 )

வம்ப நாரை இரிய, ஒருநாள், 
(ahanaanuuru-5 )

துணைப் புறா இரிக்கும் தூய்மழை நனந்தலைக், 
(ahanaanuuru-5 )

நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய, 
(ahanaanuuru-46 )

முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும் 
(ahanaanuuru-10 )

இளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து 
(ahanaanuuru-10 )

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் 
(aingkurunuuru-421. )

உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும் 
(aintinaiaimpatu-25,)

இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம், 
(divyaprabandam-1013 )

இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை 
(innaainiyavai-0)

தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு 
(kalittokai-)

இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க, 
(kalittokai-)

மன்ற மரையா இரிய ஏறட்டுச் 
(kuruntokai-)

இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் 
(maanikkavaacakar-)

ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 
(maanikkavaacakar-)

ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 
(maanikkavaacakar-)

இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் 
(maanikkavaacakar-)

வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக் 
(malaipatukataam-49.)

எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு 
(manimekalai-)

மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற 
(manimekalai-)

கம்புட் சேவல் இன்றுயில் இரிய 
(maturaikkaanjci-1893)

இரிஜிஸ்வான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த 
(mullaippaattu-)

தினை உண் கேழல் இரிய புனவன் 
(narrinai-119)

இரீஇய காலை இரியின் 
(narrinai-266)

தேன் செய் பெருங் கிளை இரிய வேங்கைப் 
(narrinai-202)

விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட 
(narrinai-242)

இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய 
(narrinai-161)

பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு 
(narrinai-383)

பழனப் பல் புள் இரிய கழனி 
(narrinai-350)

உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் 
(narrinai-310)

மட நடை நாரைப் பல் இனம் இரிய 
(narrinai-330)

கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு 
(narrinai-372)

விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட 
(narrinai-242)

தேன் செய் பெருங் கிளை இரிய வேங்கைப் 
(narrinai-202)

தினை உண் கேழல் இரிய புனவன் 
(narrinai-119)

இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய 
(narrinai-161)

மட நடை நாரைப் பல் இனம் இரிய 
(narrinai-330)

கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு 
(narrinai-372)

பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு 
(narrinai-383)

பழனப் பல் புள் இரிய கழனி 
(narrinai-350)

இரீஇய காலை இரியின் 
(narrinai-266)

உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் 
(narrinai-310)

இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208 
(ottakkuuttar-)

இதையும் களிறும் பிணையும் இரியச் 
(paripaatal-9.)

எங்கணும் இரியல் போக எதிர் பரிக் காரர் ஓடத் 
(periyapuranam-)

அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி, 
(puranaanuuru-378.)

கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக், 
(puranaanuuru-348.)

தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே. 
(puranaanuuru-284.)

கறையடி யானை இரியல் போக்கும் 
(puranaanuuru-135.)

இடுக்கண் இரியல் போக, உடைய 
(puranaanuuru-388.)

மென் பறையாற் புள் இரியுந்து; 
(puranaanuuru-396.)

அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப் 
(puranaanuuru-390.)

திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச் 
(silappathikaram- 5 )

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு 
(silappathikaram- 5 )

இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல் 
(tevaram1-)

கயலினம் வயலிள வாளைகள் இரிய 
(tevaram1-)

இளமேதி இரிந்தங்கோடிச் 
(tevaram1-)

நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு 
(tevaram2-)

50 வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங் 
(tevaram2-)

வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட 
(tevaram2-)

1000 தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக் 
(tevaram2-)

622. இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி 
(tevaram3-)

இமையோர் இரிந்து பயமாய்த் 
(tevaram4-)

இரியத்தான் எடுத்தி டலும் 
(tevaram4-)

இரிக்கும் பறையொடு பூதங்கள் 
(tevaram4-)

விஞ்சையர் இரிய அன்று 
(tevaram4-)

இரிந்தன பூத மெல்லாம் 
(tevaram4-)

வண்டினம் இரிந்த பொய்கைப் 
(tevaram4-)

குருகினம் இரிதரு கிடங்கிற் 
(tevaram7-)

இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி 
(tevaram7-)

806 ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத் 
(tevaram7-)

கைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச் 
(tevaram7-)

ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய 
(tevaram7-)

இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன 
(tirumantiram-)

கோழி வயப்பெடை இரியக் கேழலொடு 
(tirumurukaarruppatai-2.)

பருவரால் களும் இரிந்தன பகைஞர் மேல் இட்டு 
(tiruvilaiyadal-2479. குரவ)

சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன் 
(tiruvilaiyadal-2613. ஆற்றல்)

இரிதலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈதென்று 
(vivekasintamani-)

 


பார்க்கவும்.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Dec 10, 2014, 8:28:20 AM12/10/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, December 10, 2014 5:00:21 AM UTC-8, Dev Raj wrote:
On Wednesday, 10 December 2014 00:03:42 UTC-8, Hari wrote:
இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும்.  எடுத்துக் காட்டாக,
எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய
திசை யானைகளும் அஞ்சி ஓடின 


இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
             இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அந்தன் என்னும் அணிவிளங்கும்
            உயர்வெள்ளை அணையை மேவி...
                                                           [குலசேகர ஆழ்வார்]

இருள் அஞ்சி ஓட .....


ஆதிசேடனின் ஒரு மாணிக்கத்தின் ஒளியே இருளையெல்லாம் வெருவிச் சிதறி ஒழிக்க வல்லது.
நாகமாணிக்கம் 1000 இருக்கும் அனந்தாழ்வானின் பிரகாசத்தால் இருள் எங்ஙனே இருக்கும்? அஞ்சி
ஓடி ஒழியும் என்கிற பாசுரம்.


இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த

அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்

-

இருளானது சிதறி யொழியும் படி ஒளி             விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப்பெற்ற



ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவரங்கம் பெரியகோயிலில் உபயகாவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருளாநின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார். ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால் ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்கமணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது. ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க, ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்லவேண்டாவே.  இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல். துத்தி-படத்தின் மேலுள்ள பொறி. மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும். பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னியென்று பெயராயிற்று. “பொன்னி திரைக்கையாலடிவருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு.

கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

N. Ganesan

unread,
Dec 10, 2014, 8:38:05 AM12/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 

வேந்தன் அரசு

unread,
Dec 11, 2014, 4:46:39 AM12/11/14
to vallamai, மின்தமிழ்


10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 


ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.

புகழ் சால் சிறப்பின் நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே யென்றும்
மன்று படு பரிசிலர்க் காணின் கன்றொடு
றை அடி யானை இரியல் போக்கும்
--------------------
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்
--------------
 பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்

------------
வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித்து இழிதரும் போக்குஅருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கி யாங்கு

--------------------------
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் 
( இங்கு முனை இ என்ற சொல்லும் உண்டு, அதனால் இரியல் போகும்)


N. Ganesan

unread,
Dec 11, 2014, 8:29:09 AM12/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, December 11, 2014 1:46:40 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:


10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 


ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.

Not really.  இரியல் (அ) இரிவு - வினைப்பெயர் (இரிதல் வினை)

n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்



"இருள் இரிய” என்னும் ஆழ்வார் பாசுரம் போல, “இடுக்கண் இரியல் போக”  .
”குறும்பூழ்” காடைபறவைகள் அறுவடை செய்வோர் எழுப்பும் ஒலியால் ”இரியல் போகி”
மாக்கள் இரியல் போவதும், குயில்கள் இரியல் போவதும்.
....

moving with certain anxiety, fear - is involved here, like the mother elephant moving with her calf.

N. Ganesan

தேமொழி

unread,
Dec 12, 2014, 1:09:13 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.


இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.

அட்ரீனலின்  ...நார்எபிநெஃப்ரின் சுரப்புகளுடன் தொடர்புடைய ஓர் உணர்வு.  

..... தேமொழி


வேந்தன் அரசு

unread,
Dec 12, 2014, 6:47:23 AM12/12/14
to vallamai, மின்தமிழ்


11 டிசம்பர், 2014 ’அன்று’ 4:46 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:


10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 


ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.

புகழ் சால் சிறப்பின் நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே யென்றும்
மன்று படு பரிசிலர்க் காணின் கன்றொடு
றை அடி யானை இரியல் போக்கும்

வள்ளல் பரிசிலாக வழங்கிய யானைக்கு அச்சமா?
 
--------------------
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்

இடுக்கண்ணுக்குஏ அச்சமா? 
--------------
 பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்

உழப்படும்போது கோழிகளுக்கு என்ன பெரிய அச்சம்.  ட்ராக்டர் வச்சு உழுதார்களா?


------------
வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித்து இழிதரும் போக்குஅருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கி யாங்கு


இக்கரையில் இருந்து அக்கரை அல்லது ஒரு துறையில் இருந்து அடுத்த துறை போவோருக்கு என்ன அச்சம்?
கங்கையே அச்சம் என்றால் ஏன் ஆற்றில் முதற்கண் இறங்க வேண்டும்?
 
--------------------------
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் 


முனை இ என்றால் ”வெறுத்து” இடம் பெயர்கின்றன.
 வெறுத்து,  அஞ்சி என இரண்டு உணர்வுகள் சொல்லப்படுகின்றனவா?

இந்த இடங்களில் இடம் பெயர்தல் எனும் பொருள் கொண்டு வாசித்தால் சாலப்பொருந்தும்

N. Ganesan

unread,
Dec 12, 2014, 7:46:57 AM12/12/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
பொருந்தாது.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Dec 12, 2014, 7:50:15 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, December 12, 2014 8:36:06 AM UTC+3:30, Pandiyaraja wrote:
அன்பு நண்பர் சேவியர் அவர்களுக்கு,


”இடுக்கண் இரியல் போக” என்பதை ஆழ்வா பாடியுள்ள “இருள் இரிய” என்னும் தொடருடன் ஒப்பிடலாம்.

கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.


 
இரியல் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல் தருவதற்குக் கொடுத்த வாய்ப்புக்காகத் தங்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்துள்ள ஐந்து எடுத்துக்காட்டுகளையும் இங்கு அலசியிருக்கிறேன்.

இரியல் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருளைக் காண்போம்.

அச்சத்தினால் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடுவதையோ அல்லது ஆர்வத்தினால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவதையோ நமது இலக்கியங்கள் இரியல் போகுதல்' என்று சொல்கின்றன.

எனவே இரியலுக்கு எப்போதும் வெருட்சி தேவையில்லை. அச்சம், அவசரம், படபடப்பு - ஆகியவற்றின் கலவையுடன் சேர்ந்த இயக்கமே இரியல். இந்தக் கலவையில் சில நேரங்களில் அச்சம் 0 % இருக்கலாம். படபடப்பு 10 % இருக்கலாம். ஆனால் அவசரம் எப்போதும் உண்டு.

இரியல் என்பதற்குத் தாங்கள் கொடுத்திருக்கும் மூன்றாவது, நான்காவது ஆகிய இரண்டு (பெரும்பாணாற்றுப்படை 202, 432) இடங்களுக்கும் இரியல் என்பதற்கான பொருள் மிகச் சரியாக ஒத்துவருவதை ஏற்கனவே கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது.

தவ பள்ளி தாழ் காவின்

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்

55    ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்

      மா இரும் பெடையோடு இரியல் போகி

      பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்

      தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும்

என்ற பட்டினப்பாலை அடிகளில் புகையை வெறுத்த குயில்கள் என்ன செய்கின்றன என்பது மட்டுமல்ல, எப்படிச் செய்கின்றன என்பதுதான் கேள்வி.

இனிய சோலையில் இன்புற்றிருக்கின்றன குயில்கள். திடீரென்று பெரும்புகை எழுகின்றது. அது ஆவுதி நறும்புகையேயெனினும், குயில்களுக்கு அது பிடிக்கவில்லை. பிடிக்காமல் அடுத்த கிளைக்குத் தாவி அமரவில்லை. ‘படபட’-வென்று இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு இடத்தையே காலிசெய்து பூதம் காக்கும் நகருக்குள் தற்காலிகமாகத் தஞ்சம்புகுகின்றன. துச்சில் என்பது temporary abode. ஓரிடம்விட்டு வேறிடம் போகும்போது அவை நின்று நிதானித்துச் செல்வதில்லை. அதிலும் மனம்வெறுத்துச் செல்லும்போது வேகம் இன்னும் அதிகரிக்கும். அந்த வேகத்துடன் கூடிய இயக்கம்தான் இரியல்போகுதல். இங்கு காண்பது அச்சம்/ஆர்வம் கொண்ட அவசரம் அல்ல. வெறுப்பினால் வந்த அவசரம்.

இனி தாங்கள் கூறியுள்ள புறநானூற்று அடிகளைக் காண்போம்.

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு

கறையடி யானை இரியல் போக்கும்

மலைகெழு நாடன் மாவேள் ஆஅய் – புறம் 135 / 11-13

மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின் கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் மலையையுடைய நாடனே மா வேளாகிய ஆயே! - ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை.

இரியல் போகும் அல்ல – இரியல் போக்கும் என்றிருப்பதைக் கவனிக்கவேண்டும். இது தன்வினை அல்ல, பிறவினை.

உங்கள் வீட்டுக்கு ஒருவர் வருகிறார். வயதானவர். ஓரளவு பழக்கமானவர். வறியவர். கையில் ஒரு கசங்கிய நூறு ரூபாய்த் தாளை வைத்துக்கொண்டு தயங்கியபடி, “சில்லறை இருக்குமா?” என்கிறார். உங்களுக்கும் கொடுக்கலாம் என்று எண்ணம். “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று, பணப்பையைத் திறந்து சரியான சில்லறை நோட்டுகளை எடுத்து, ஒருதரத்துக்கு இருதரம் எண்ணிச் சரிபார்த்து, மீண்டும் வாசலுக்கு வந்து அவருக்குச் சில்லறை கொடுத்து அனுப்புகிறீர்கள். உள்ளே செல்லும்போதும், திரும்பும்போதும் உங்கள் நடையில் ஒரு நிதானம் இருக்கும். மற்ற செயல்களில் ஒரு பரபரப்பற்ற அடங்கிய நிலையே காணப்படும்.

இன்னொரு நாள் வேறொருவர் வருகிறார். உங்களுக்கு மிகவும் பழக்கமானவர். வேண்டியவர். நீங்கள் மிகவும் மதிப்பவர். வாசலில் நின்று, “சில்லறை இருக்குமா?” என்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? மிக்க மரியாதையுடன் “உள்ளே வாருங்கள் ஐயா” என்று அழைப்பீர்கள். “பரவாயில்ல, வேறொரு சமயம் வருகிறேன். இப்போது சில்லறை மட்டும் தாருங்கள்” என்கிறார். முன்பு போலவே உள்ளே சென்று சரியான சில்லறை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். ஆனால் உங்கள் நடையில் ஒரு அவசரம் இருக்கும். செயல்களில் ஒரு பரபரப்பு இருக்கும். கொஞ்சம் அதிக நேரம் ஆனால்கூட உங்கள் மனைவி, “என்னங்க, சில்லறை எடுத்தாச்சா?” என்று ஓங்கிக் குரல் கொடுக்கலாம். இதுதான் இரிதல், இரியல் போதல். இதற்குக் காரணம் உங்கள் உள்ளத்தில் உள்ள மரியாதை.

சரி, பாடலுக்கு வருவோம். பாணன் ஒருவன் வேள் ஆயிடம் பரிசில் வேண்டி வருகிறான். அவன் வந்து, வேண்டி, ஆயும் கொடுக்க எண்ணி, அருகில் உள்ள உதவியாளரிடம் “இரண்டு யானை கொடுத்தனுப்பு” என்று பாணனையும் அனுப்ப, யானை வரத் தாமதமானால், பாணன், “என்னங்க, யானை எப்போக் கிடைக்கும்?” என்று வினவினால், “எல்லால் வரும்யா, என்ன இப்போ அவசரம்? கொஞ்சம் பொறு” என்ற அதட்டல் வர, பாணன் தன்மானமுள்ளவன் என்றால் ஔவைப் பாட்டி போல, “காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை, எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்று அகன்று போயிருப்பான்.

இங்கே நடந்தது என்ன? பரிசிலரைக் கண்டவுடனேயே, மன்னன் உடனே யானைக்கு உத்தரவிடுகிறான். அவன் குரலிலிருந்த அவசரத்தையும், கண்டிப்பையும் பார்த்த உதவியாளர் வேகமாக ஓடுகிறார். யானைகளை அவிழ்த்துக்கொண்டு வருகிறார். அந்த யானைகள் ஆடி அசைந்து மெல்ல வருகின்றன. தாமதமானால் அரசன் கோபிப்பானே என்று பணியாளன் அந்த யானைகளை அடித்து விரட்டிக்கொண்டு வேகமாக வருகிறான். இதுதான் இரியல் போக்கல். யானைகள் இரியல் போகவில்லை. அவற்றுக்கு அவசரம் கிடையாது. பணியாளன் அவற்றை இரியல் போக்குகிறான். காரணம் அரசனின் அதிரடி உத்தரவு. அதற்குக் காரணம் அரசன் பரிசிலர்மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும். சில்லறை மாற்றும் இரண்டாம் கதை போல.

பரிசில் பெற்றுத் திரும்பிய இரவலன், தன் சுற்றத்தாரிடம், “என் தலையைக் கண்டமாத்திரத்தில்,  யானையை அடித்து விரட்டிக்கொண்டு வந்தார்கள்” என்று கூறும்போது அவன் முகத்தில் எத்துணை பெருமிதம் நிலவியிருந்திருக்கும்!

அந்த இரியல் போக்கல் என்பது வெறும் இடம் மாற்றம் மட்டும் அல்ல. இதற்கு உரைகாரர் கூறும் கூற்றை (அவர் ஓர் உரைவேந்தர், என் பெருமதிப்புக்குரிய ஆசிரியர் – மதுரைத் தியாகராசர் கல்லூரியில்) நான் அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இரியல் போக்கலில் உள்ள அவசரமும், பரபரப்பும்தான் இங்குள்ள இலக்கிய இன்பம். அந்தப் புலவனுக்கு எத்துணை மரியாதை கிடைத்தது என்பதை உட்பொதிந்து உரைக்கும் சிறப்புப்பொருள்.

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு

கறையடி யானை இரியல் போக்கும்

மலைகெழு நாடன்

என்று இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தப் இரவலனின் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமிதமும், அதை நுண்ணிதாகப் புலப்படுத்தும் புலவரின் நுண்மாண் நுழைபுலமும் நன்கு வெளிப்படும்.

இனி அடுத்து,

சிறுகுடிக் கிழான் பண்ணற் பொருந்தித்

தன்னிலை அறியுநனாக அந்நிலை

இடுக்கண் இரியல்போக … புறம் 388/4-6

என்பதைப் பார்ப்போம்.

சிறுகுடிக்குரியனாகிய பண்ணனையடைந்து தனது வறுமைநிலையை அறிவித்தானாக, அப்பொழுதே, அவனுற்ற பசித்துன்பம் நீங்குமாறு .. என்று உரை கூறுகிறார் ஔவை சு.து அவர்கள். அப்பொழுதே நீங்குதல்தான் இரியல்போதல். இங்கேயும் வெறும் நீங்குதல் என்று மட்டும் கொண்டால் இலக்கிய நயம் கிட்டாது.

காதலன் ஒருவன் காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான். கிட்டே வந்தும்விட்டான். அப்போது ஒரு சிறிய கல்லில் தடுக்கிவிடுகிறான். கால் விரலில் இரத்தம். “அம்மா” என்று அலறுகிறான். “ஐயோ” என்று பதறிப்போன காதலி அருகில் வந்து அமர்ந்து, தன் கைக்குள் வைத்திருந்த கைக்குட்டையைப் பிரித்து நெட்டுவாக்கில் மடித்து, கால்விரலைச் சுற்றி இறுக்கமாகக் கட்டி, ஆதரவுடன் தடவிக்கொடுத்து, “ரொம்ப வலிக்குதா?” என்று கேட்கிறாள். “முதலில் வலித்தது, நீ தொட்டுக் கட்டுப்போட்டுத் தடவிக்கொடுத்தவுடனேயே வலி இருந்த இடமே தெரியவில்லை. ஒரேநொடியில் பறந்ந்ந்ந்ந்ந்ந்ந்து போச்சு” என்று அவன் சொல்ல, சற்றே கன்னம் சிவக்க, ஒரு நாணம் கலந்த முறுவலுடன் காதலி அவனைப் பார்க்கும்போது அவனுக்குக் கிடைக்கும் பேரின்பத்துக்கு இணை வேறுண்டோ? “இதை விடுத்து, “ரொம்ப வலிச்சுச்சு, கட்டுப்போட்டிட்டில்ல, கொஞ்சம் பரவாயில்லை” என்று கூறியிருந்தால் அந்த இன்பம் கிடைத்திருக்குமா?

கண்ணன் குசேலரின் அவலைத் தின்றுகொண்டே குசேலரைப் பார்த்துச் சிரித்தான். அந்த நொடியில் அங்கே குசேலரின் வீட்டில் இருந்த பஞ்சம் பஞ்சாய்ப் பறந்துபோய்விட்டது” என்ற கூற்றில் இருக்கும் பஞ்சாய்ப் பறத்தல்தான் இங்கே இடுக்கண் இரியல் போக எனக் கூறப்பட்டுள்ளது.

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது. அதைவிடுத்து வெறும் நீங்குதல் (shift) எனக்கொண்டு, நிலைமையைச் ‘சப்’-பென்று ஆக்கிவிடாதீர்கள் வேந்தன் அரசு!

ப.பாண்டியராஜா

 

 

 

 

 

 

 



N. Ganesan

unread,
Dec 12, 2014, 8:06:02 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பேரா. பாண்டியராஜா எழுதினார்: 

இனி தாங்கள் கூறியுள்ள புறநானூற்று அடிகளைக் காண்போம்.

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு

கறையடி யானை இரியல் போக்கும்

மலைகெழு நாடன் மாவேள் ஆஅய் – புறம் 135 / 11-13


பாணன் வறியவன். கன்றுகளோடு உள்ள யானைகளை எப்படிப் பராமரிப்பான்? மேலும், யானைகளைக் கொப்பம்
வெட்டிப் பிடித்து கும்கி யானையோடு சேர்த்துப் பழக்குவதுதான் நடைமுறை. இன்றும் மேற்குத் தொடர்ச்சி
மலைகளில் நடக்கும் செயல். எனவே, அரசன கன்று, தாய், தந்தை என யானைக் கூட்டத்தை வறிய பாணர்களுக்கு
வழங்கினான் என்பது பொருள் அல்ல எனக் கருதுகிறேன்.

moving with certain anxiety, fear - is involved here, like the mother elephant moving with her calf.
தாய் யானை குழகன்றுடன் நடக்கும்போது ஓரு பதட்டம், அச்சம், விரைவு இருக்கும். எங்கிருந்தாவது
ஏதாவது (உ-ம்: புலி, சிறுத்தை, செந்நாய், ...) தாக்குமோ என்றஞ்சும். அதைத்தான் 
வேள் ஆயின் மலையில் சொல்கிறார் புலவர்: “கன்றொடு கறையடி யானை இரியல் போக்கும் மலைகெழு நாடன்”

அப்படிப் பட்ட மலைநாடன் குஞ்சு குழமானுடன் உள்ள தன் குடும்பத்தின் வறுமையைத் தன் பரிசிலால்
போக்கினான் என்கிறார். தாய் அஞ்சும் கன்றின் இரியலைப் போக்குதலை, மலைநாட்டு வேள் ஆஅய்
தன் குடும்ப வறுமைத் துயரைப் போக்குதற்கு உவமை ஆக்குகிறார்.

கன்றோடு யானையை புலவர்க்கு கொடுத்தான் என்று பொருள் காணோம்.

நா. கணேசன்

 

மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின் கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் மலையையுடைய நாடனே மா வேளாகிய ஆயே! - ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை.

N. Ganesan

unread,
Dec 12, 2014, 8:19:09 AM12/12/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, December 12, 2014 3:17:23 PM UTC+3:30, வேந்தன் அரசு wrote:

--------------------
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்

இடுக்கண்ணுக்குஏ அச்சமா? 

ஆம். இடுக்கண்ணுக்கே அச்சம்.

இருளுக்கே அச்சம்.  

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
             இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அந்தன் என்னும் அணிவிளங்கும்
            உயர்வெள்ளை அணையை மேவி...
                                                           [குலசேகர ஆழ்வார்]

----------

 பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்

உழப்படும்போது கோழிகளுக்கு என்ன பெரிய அச்சம்.  ட்ராக்டர் வச்சு உழுதார்களா?

பருவமழை பெய்தபோது 30, 40 ஏர்கள் உழவு ஓட்டுவதை எங்கள் தோட்டங்களில்
பார்த்திருக்கிறேன்.  காடை முதலிய பறவை இரியல் போகும். மனிதரும் ஏரும் கண்டு,
மேலும், பொன்னேர் பூட்டும் போது முன்னால் முரசு முழங்குதலும் உண்டு,

அறுவடையின் போதும் தண்ணுமை முழங்கும். குயம் என்பது பாளைக்கத்தி.
புறநானூற்றுப் பாடலுக்கு தவறாகப் பொருள் சொல்லியுள்ளனர்.
புறநானூறு 348-ல் குயம் என்பது ’குயவரி வேங்கை’ என்பதில் உள்ள குயம் = paring knife

பரணர் - புறம் 348 - பாடலை மீண்டும் படித்து, அதன் உரைகாண்போம்.

குவளைக்கண்ணி காரணமாகக் குயவட்டணைப் போர்!

வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தே னிரியக்
கள்ளரிக்குங் குயஞ் சிறுசின்
மீன்சீவும் பாண்சேரி
வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன
குவளை யுண்க ணிவளைத் தாயே
ஈனா ளாயின ளாயி னானாது
நிழறொறு நெடுந்தேர் நிற்ப வயின்றொறும்
வருந்தின மன்னெம் பெருந்துறை மரனே.

     உரை: வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ - வெண்மையான நெல்லை 
அறுவடை செய்யும் உழவர் தொடக்கத்தே இசைக்கும் தண்ணுமையோசை  கேட்டஞ்சி; கண் மடல் கொண்ட தீந்தேன் இரிய - கணுவிடத்தே தோன்றும் மடலிற் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் நீங்கியதனால்; கள்ளரிக்கும் குயம் - தேனடையை அந்த மரமேறி குயம் என்னும் நேரான பாளைக்கத்தி (paring knife) கொண்டு அரிந்தெடுத்து; சிறு சின்மீன் சீவும் பாண் சேரி - சிலவாகிய சிறுமீன்களை அக் குயக் கத்தியால் பட்டை பட்டையாக நீளவாக்கில் சீவி உண்ணும் பாண்சேரி; வாய்மொழித் தழும்பன் ஊணூரன்ன - ’உனக்குப் பெண் கொடேன்’ என்னும் உறுதியான மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப் போன்றன; குவளை யுண்கண் இவளை - குவளைப் பூப்போலும் கண்களையுடைய இம் மகளை; தாய் ஈனாளாயின ளாயின் - தாய் பெறாதொழிந்திருப்பாளாயின்; ஆனாது - அமையாமல்; நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப - மரநிழல் தோறும் நெடிய 
தேர்கள் நிற்க; வயின்தொறும் - இடந்தோறும்; செந்நுதல் யானை பிணிப்ப -
சிவந்த நுதலையுடைய யானைகளைக் கட்டுதலால்; எம் பெருந்துறை மரம் வருந்தினமன் - எம்மூர்ப் பெருந்துறைக் கணின்ற மரங்கள் வேர் துளங்கிப் பெரிதும் கெட்டன; எ - று.

தேனீக்கள் அஞ்சி இரிந்து நீங்குதல், போர் நிமித்தமாக பாணர் உள்ளிட்ட ஊர்மக்கள் கலைந்துபோதலுக்கும், குயம் என்னும் பாளைக்கத்திகொண்டு மரமேறித் தேனடை எடுத்தல், படைக்கலத்தால் போரிட்டு அணங்கு போலும் தழும்பன் மகளைக் கொள்ளுதற்கும் உவமை. தழும்பன் என்னும் தலைவனின் ஊணூர் மக்களின் வருத்தம் போர்தொடுக்கும் எதிரிமன்னனின் யானைகள் அசைக்க வேருடன் சாயும் ஊரில் பெருமரங்களின் வருத்தம் போன்றது என்கிறார் பரணர்.

PuRam 348 

The big trees of the port city of UuNuur are like the city itself - both are suffering.
City of UuNuur, ruled by Talumpan whose words are always true and who sticks to his words, 
    where tree climbers chop off the bee hives 
    to gather honey after the bees 
fly off from the tree tops, frightened by the taNNumai drum that is beaten by harvesters of the white paddy, and
where bards who catch little fish and make fillets using paring knives live 
on one street. (Alas, those peaceful days are coming to an end).

If her mother had never 
  given birth 
to this girl whose darkened eyes look like blue waterlilies, then none 
  of this 
would ever have happened! The trees of our spacious harbour are 
  suffering, 
long chariots standing wherever 
there is shade, and elephants with red-painted foreheads tied 
  everywhere!                                         1


The song of ParaNar. TiNai: kAJci. TuRai: makaTpAR kAJci.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 12, 2014, 8:50:42 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, December 12, 2014 9:39:12 AM UTC+3:30, தேமொழி wrote:


On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.


இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.

ஆம். இரிதலில் கொஞ்சம் அச்சமும் கலந்திருக்கும். பெருநீர்க் கங்கையில் படகில் போகும்போது
இமயத்தின் வெள்ளம் வருமோ என்ற அச்சம். கருங்கடலில் போகும்போது திரும்புவரோ, புயலில்
மடிவரோ என்ற அச்சம்.

வேந்தன் அரசு

unread,
Dec 12, 2014, 10:00:23 PM12/12/14
to vallamai, மின்தமிழ்


12 டிசம்பர், 2014 ’அன்று’ 8:50 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Friday, December 12, 2014 9:39:12 AM UTC+3:30, தேமொழி wrote:


On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.


இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.

ஆம். இரிதலில் கொஞ்சம் அச்சமும் கலந்திருக்கும். பெருநீர்க் கங்கையில் படகில் போகும்போது
இமயத்தின் வெள்ளம் வருமோ என்ற அச்சம். கருங்கடலில் போகும்போது திரும்புவரோ, புயலில்
மடிவரோ என்ற அச்சம்.

ஏன் படகு கவிழுமோ என்ற அச்சம் கூட இருக்கலாமே?
இரீ, இரியல் போகு இரண்டுக்கும் வேற்றுமை காண்கிறேன்.

N. Ganesan

unread,
Dec 12, 2014, 10:07:54 PM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இமயத்தின் flash floods படகைக் கவிழ்க்கும்.

N. Ganesan

unread,
Dec 12, 2014, 10:29:28 PM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, December 13, 2014 6:30:23 AM UTC+3:30, Zஈனத் Xஏவியர் wrote:

இரீ, இரியல் போகு இரண்டுக்கும் வேற்றுமை காண்கிறேன்.

இரீ = இருத்தல் ர/ல போலி: இரு/இல்- = இல்லம்.

இரியல்போகுதல் = இரிதல் = அஞ்சிவிரைதல். இந்த இரிதல் - இல்லாதுபோதல் ( ர்/ல் மாற்றம்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 21, 2014, 12:17:31 PM12/21/14
to mint...@googlegroups.com, vallamai, coral shree, thami...@googlegroups.com


On Saturday, December 20, 2014 11:22:35 AM UTC-8, தேமொழி wrote:
"சங்கச் சொல்வளம்" என்று பாண்டியராஜா ஐயா தொடங்கிய இந்த இழையில் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட  "இரியல்" என்று  சொல்லைத் தொடர்ந்து மேலும் பல சங்கச்சொற்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இழையில் அறிமுகமான மற்றொரு சொல்லான  "அலங்கு" என்ற சொல்லின் பொருளைப்  பற்றி மேலும் பல கோணங்களையும், மேலதிகத் தகவல்களையும்  சில குழும உறுப்பினர்கள் மேலும் சில இழைகளில் விளக்கமளித்து வருகிறார்கள்.

அவர்களது விளக்கங்களையும் தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கீழே அந்த இழைகளின் சுட்டிகள்: 

நூதலோசு:  சங்கநூல் + பழம் நூல்கள் சொல்வளம் = அலங்கு 

வேந்தன் சரவணன்: அலங்கு என்பது என்ன?

திரு. கணேசன்: கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

 
வலைக்கண்களுக்கு நன்றி, தேமொழி.  சிகாகோவில் உள்ள ஸ்ரீமதி பவளசங்கரி திருநாவுக்கரசு 
வல்லமையில் வெளியிட்டுள்ளார்கள். அவருக்கு என் நன்றி. அதன் தொடுப்பு:
கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

நா. கணேசன்

From CTamil (CNRS, Paris) list:
In Malayalam, the noun aṉakkam (അനക്കം) means movement, the intransitive verb aṉaṅṅŭ (അനങ്ങ്) means to move and the transitive verb aṉakkŭ (അനക്ക്) means to cause to move.  This word aṉaṅṅŭ may be related to Tamil alaṅku.  Interesting that a Tamil 'l' becomes an 'ṉ' in Malayalam.  Wonder if there are other Tamil-Malayalam word pairs where the Tamil 'l' changes to 'ṉ' in Malayalam.  I have observed a r-l change in Tamil word rakaḷai (commotion, row, quarrel etc.) and its Malayalam equivalent lahaḷa.  Is lahaḷa/rakaḷai a Dravidian word?  As I understand it, traditional south Dravidian words do not begin with a r or l.   Those that do begin with these letters in modern Dravidian most probably had a vowel preceding them in the older form of the word as in the case of raṇṭŭ / iraṇṭŭ meaning two.

Thanks and regards,
Radhakrishna Warrier


From: naa.g...@gmail.com
Date: Sat, 20 Dec 2014 19:37:44 -0800
To: cta...@services.cnrs.fr
Subject: [ctamil] அலங்கல் - mane of a horse

Kamban sings in a verse,
"Ayiram tErai, ATal An2aiyai, alaGkal mAvai
Ayiram talaiyai, Azip paTaikaLai aRuttum appAl".

Earlier, KonguvELir wrote with the same idea:
"aTalpEr yAn2aiyum, alaGkumayirp puraviyum".

Looking at the description of the mane of horses
from Sangam poetry onwards, it looks Kamban's
"alaGkal mA" refers to horses with manes.
Then, we can say "alaGkal arimA" would be male lion.

Here is my note on the verb, alaGku- < alai- "to move".

கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)
or, in Vallamai e-zine,

N. Ganesan




 

வேந்தன் அரசு

unread,
Dec 21, 2014, 1:23:29 PM12/21/14
to vallamai, மின்தமிழ், coral shree, தமிழாயம்
கதையில் ஒரு ட்விஸ்ட் இருக்கு என்பதற்கு கதையில் ஒரு சூரல் இருக்கு எனலாம்.

21 டிசம்பர், 2014 ’அன்று’ 9:17 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Dec 31, 2014, 11:02:08 AM12/31/14
to mint...@googlegroups.com, vallamai

On Wednesday, December 31, 2014 6:04:34 AM UTC-6, ருத்ரா இ.பரமசிவன் wrote:
மதிப்பிற்குரிய முனைவர் திரு.பாண்டியராஜா அவர்களே


பருவ வானத்து பால் கதிர் பரப்பி
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
            ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு- சிறு 250-253



இந்த வரிகளில் ஊர்தல் எனும் மெதுவாய் நகர்வதை அந்த திங்களின் ஒளி வட்ட நகர்வைக்கொண்டு அழகாய் விளக்கியுள்ளீர்கள்.அதில் "நோன் குறட்டு "என்ற சொல் உற்று நோக்கத்தக்கது.அந்த சக்கரத்தின் "கட கடத்த"ஒலியை அது காட்டுகிறது.மனிதனின் "குறட்டை"ஒலியும் அது தானோ.சக்கரம் அச்சில் "பிடிப்பு" ஏற்படுத்திக்கொள்வதில் அது நைகிறது (நோன்)
குறட்டு என்பதற்கு வலுவான பிடிவாதம் என்ற பொருளும் வருகிறது.

குறடு + ஆரம் = குறட்டாரம்

’செறிந்த குறங்கு’ - தொடையைச் சொல்வது இடுப்பைக் கால்பிடிக்கும் இடத்தில் இருப்பதாலா?

குறங்கு kuṟaṅku , n. perh. குறுகு-. 1. [T. kuruvu.] Thigh; துடை. செறிந்த குறங்கின் . . . அஃதை (அகநா. 96). 2. [K. koṟakalu.] Branch channel; கிளைக்கால். (S.I.I. ii, 352.) 3. Clasp, catch, link; கொக்கி. (W.)
 
 
நம்மிடையே வாழும் மலைவாழ் மக்களிடம் இத்தகைய‌
அரிய திறமை இருப்பதால் அவர்கள் இயற்கையின் சீற்றங்களை 
நன்கு தாக்குப்பிடிக்கின்றனர்.கொச்சையாய் அதை குறச்சாதனை என்கிறோம்.குறிஞ்சித்திணையின் உட்பொருளே அந்த குறட்டு தான்.
குறமகள் இளஎயினியின் சங்கப்பாடலில் அந்த குறிஞ்சியின் வெளிச்சம் நன்கு தெரிகிறது.மேலும் இப்படி ஒரு "பிடிமானக்கருவியை" நாம் "பற்றுக்குறடு" என்கிறோம்.உங்கள் சிறுபாணாற்றுப்படை பாடலின் வரிகள் பலவிதமான "சொற்குடைவு"களை நம்மிடம் நல்குகின்றன.தங்கள் "சங்கச்சொல்வளம்" தமிழ் ஒலிப்புகளின் "சொற்சுரங்கம்" என்பதில் ஐயமே இல்லை.

N. Ganesan

unread,
Feb 14, 2015, 9:20:07 PM2/14/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com, vallamai


On Friday, February 13, 2015 at 9:43:14 AM UTC-8, Pandiyaraja wrote:

1. அகைதல் / அகைத்தல்

ஒரு உயரமான அண்டாவில் நீர் நிறைய இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு குழாய் இருக்கிறது. அந்தக் குழாயைத் திறந்து ஒரு குவளை நீர் பிடிக்கிறோம். அண்டாவில் நீர்மட்டம் குறையும். இன்னும் கொஞ்சம் நீர் பிடிக்கிறோம். நீர் மட்டம் மேலும் குறையும். இவ்வாறு குழாயைத் திறந்துவைத்தால் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.

அடுத்து, அந்தக் குவளையை அண்டாவின் மேல் பாகத்தில் உள்ளே விட்டு நேராக நீர் முகக்கிறோம். அப்போதும் நீரின் மட்டம் குறையும். இவ்வாறு அடுத்தடுத்துக் குவளையில் நீர் மொண்டுவருகிறோம். இவ்வாறு நீரை மொண்டுகொள்ளும்போதெல்லாம் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த இருவகைக் குறைதலுக்குமுள்ள வேறுபாடு என்ன?

முதலாவதில் நீர் வடிய வடிய, நீரின் உயரம் தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே வருகிறது. அடுத்ததில், ஒருமுறை நீர் மொள்ளும்போது நீரின் உயரம் சடார் என்று ஓரளவுக்குக் குறைகிறது. ஒவ்வொரு முறையும் நீர் மொள்ள மொள்ள நீரின் உயரம் சடார் சடார் என்று குறைந்துகொண்டுவருகிறது. நீரின் உயரம் குறைதல் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு நடக்கிறது. அறிவியல் வழக்கில், முதலாவது continuos அடுத்தது discreet. ஆப்பிளை எடைத்தராசில் நிறுத்து வாங்கினால் அது continuos. 1 கிலோ, 1¼ கிலோ, 1½ கிலோ என்று வாங்கலாம். எண்ணிக்கைக் கணக்கில் வாங்கினால் அது discreet. 1 பழம், 2 பழம் என்றுதான் வாங்கமுடியும். 1¼ பழம் கிடைக்காது!

ஒரு குளத்தின் மடைவழியாக வயலுக்கு நீர் பாயும். சில நேரங்களில் அருகில் இருக்கும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு ஒரே ஆள் அல்லது இரண்டு ஆட்கள் சேர்ந்து ஒரு கூடையின் மூலம் நீரை முகந்து முகந்து வயலுக்குப் பாய்ச்சுவர். இதைப் பற்றிக் கூற வந்த ஒரு புலவர் கூறுகிறார்,

கயன் அகைய வயல் நிறைக்கும்

மென்தொடை வன்கிழார் - மதுரைக்காஞ்சி 92,93

(கயன்=குளம்; அகைய=குறைய; தொடை=கட்டு; கிழார்=நீர்முகக்கும் கருவி)

குளத்துநீர் குறையும்படியாக (நீரை முகந்து)வயலை நிறைக்கும் மெல்லிய கட்டுக்களையுடைய வலிமையான பூட்டுப்பொறி' என்பது இதன் பொருள்.




அகைதல் அல்லது அகைத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டுக் குறைதல் அல்லது குறைத்தல் என்று பொருள்படும். ஒரு யானை மரத்தின் தளிருள்ள கிளைகளை ஒவ்வொன்றாக ஒடித்து-ஒடித்து உண்ணும். இதை,

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்  என்கிறது மலைபடுகடாம் (429)

(உம்பல்=யானை;முறி=தளிர்).

குளத்தில் மடை இருந்தால், அதன் வழியே நீர் வெளியே செல்லும்போதும் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆனால், இது தொடர்ச்சியாக நடைபெறும். எனவே இது ஒரு continuos process. எனவே இது அகைத்தல் அல்ல. ஒரு பொறியினால், நீரை முகந்து முகந்து வெளியே கொட்டும்போது, நீர் விட்டுவிட்டுத்தானே குறையும்! ஒரு முகத்தலுக்கும் அடுத்த முகத்தலுக்கும் இடைப்பட்ட சிறிய இடைவெளியில் நீர் குறைவதில்லை. எனவே, இது ஒரு discreet process. இந்த நுணுக்கமான வேறுபாட்டையும் குறிப்பிடுவதற்குப் புலவர் தெரிந்தெடுத்துள்ள சரியான சொல், அவரின் சொல்திறனையும் தமிழின் சொல்வளத்தையும் காட்டுகிறது அல்லவா!


கிழங்கு - மண்ணைக் கிழித்துச் செல்வது. கிழார் கய நீரை அகழ்ந்து மொள்ளும் கமலை போலும்.

கல்வெட்டுக்களில் குறைந்த தண்ணீரை எடுத்துப் பாயும் கிளைவாய்க்கால் பற்றி உள்ளது/
சென்னைப் பேரகராதி:

அகையாறு akai-y-āṟu

n. < id. +. See அகைவாய்க்கால். இவ்வூர் அகையாறும் ஆக இறையிலி (S. I. I. ii, 56).

அகைவாய்க்கால் akai-vāykkāl

n. < id. +. Branch channel; கிளைவாய்க்கால். (S. I. I. iii, 171.)

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 14, 2015, 11:59:44 PM2/14/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com, vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Friday, February 13, 2015 at 9:43:14 AM UTC-8, Pandiyaraja wrote:

3. நிழத்து

உயர்ந்த ஒரு கோபுரத்தின் உச்சியில் இருக்கும் ஒரு பெரிய வெண்கலமணி ‘கணீர்’ என்று ஒலிக்கிறது. பின்னர் அந்த ஒலி சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தேய்ந்து மறைகிறது. சுற்றுப்புறச் சந்தடிகள் மணி ஒலியைச் சீக்கிரமாகவே அமுக்கி முழுங்கிவிடுகின்றன. இதுவே, நள்ளிரவாயிருந்தால், வேறு எந்தச் சந்தடியும் இல்லாத நேரத்தில் மணி ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தாலும் நீண்ட நேரத்துக்குக் கேட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் நிழத்துதல். முல்லைப்பாட்டில், தலைவனான அரசன் போர்மேற் சென்றிருக்கிறான். அவனுடைய பாசறைக் காட்சிகளை மிக அழகாகவும், வெகு விளக்கமாகவும் ஆசிரியர் கூறிக்கொண்டே வரும்போது நள்ளிரவு நெருங்குகிறது. அப்போது அங்கு இருந்த நீண்ட நாவினை உடைய மணியைப் பொழுது அறிவிப்போர் முழக்குகின்றனர். ஓங்கி ஒலித்த மணியின் ஓசை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இறுதிவரை நீண்ட நேரம் ஒலிப்பதைப் புலவர் நப்பூதனார்,

நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் – முல்லைப்பாட்டு 50

என்று கூறுகிறார். அது நள்ளிரவு நேரம். அரசனின் இருப்பிடம் வேறு. எனவே எங்கும் ஒரே அமைதி. எனவே மணியோசை இறுதிவரை ஒலித்து அடங்குகிறது. ஒருவேளை அது பகல் நேரமாயிருந்து, அந்நேரத்தில் வேறு அரவங்கள் இருந்திருந்தால் மணியோசை கடைசிவரை ஒலிக்காமல் சற்று நேரத்திலேயே அடங்கிப்போயிருக்கும். அவ்வாறு இடையில் சட்டென்று அடங்கிப்போகாமல் இறுதிவரை ஒலித்து மிக நுணுக்கமாக ஆகி மறைந்துபோவதே நிழத்தல்.

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32

என்கிறது தொல்காப்பியம். எனவே நிழத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மிகவும் நுணுகிப்போதல் என அறியலாம்.

இவ்வாறு நுணுகிக் குறையாமல் நின்றுபோவதை அடங்குதல் அல்லது அவிதல் எனலாம். உருமிக்கொண்டு வருகிற கருத்த மேகங்கள் இடி மின்னலுடன் பெருமழை பெய்து ஓய்ந்து போவதை,

உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்

பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/1,1

என்கிறது அகநானூறு. பெய்கின்ற மழை நின்றபின் அதன் ஒலி அடங்கிப்போவதையே மழை நின்று ஒலி அடங்கிய நள்ளிரவு என்கிறது இப் பாடல். அவிதலுக்கும் நிழத்தலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

மழை பெய்யாமல் வறங்கூர்ந்ததால் பெரிய மலையினின்றும் விழும் அருவி கொஞ்சம் கொஞ்சமாக நீர்வரத்துக் குறைந்து, நுணுகிப்போய் வறண்டுபோவதும் நிழத்தலே.

காட்டு விலங்குகளான யானை, காட்டுப்பன்றி போன்றவை தினைப்புனத்தை மேய்ந்து அல்லது தோண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகப் புனத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதும் நிழத்தலே. இதனை,

அருவி மா மலை நிழத்தவும் – பொருநராற்றுப்படை - 235

        நிழத்த யானை மேய் புலம் படர – மதுரைக்காஞ்சி - 303

        வாய் மடுத்துஇரும் புனம் நிழத்தலின் – குறிஞ்சிப்பாட்டு - 156,157

        விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலைபடுகடாம் - 193

ஆகிய அடிகள் வலியுறுத்தும். 
...


நிழத்து- பற்றி மேற்கண்ட வரிகளைப் படித்ததும், சங்க இலக்கியம் முதல் இச்சொல்லும், இதற்கு உறவுடைய
சொற்களும் பார்த்தேன். என் கருத்துக்கள் சில. 

அகைதல்/அகைத்தல், அருகு-/அருக்கு- என்னும் தன்வினை/பிறவினை இணைச்சொற்கள் போல, நிழலுதல்(=நிழறு-)/நிழத்து(=நிழற்று) என்ற சோடியும் உண்டு.

நிழல்+து = நிழறு.

நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது. நீங்கள் குறிப்பிடும் பாடல்களின் வரிகளில்
(1) நிழத்தல் - இல்லை என்றாதல், (just like shadow has nothing in it).
அருவி மா மலை நிழத்தவும் – பொருநராற்றுப்படை - 235
நிழத்த யானை மேய் புலம் படர – மதுரைக்காஞ்சி - 303
வாய் மடுத்து, இரும் புனம் நிழத்தலின் – குறிஞ்சிப்பாட்டு - 156,157
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலைபடுகடாம் - 193

நிழற்றுதல் - நிழல் தருதல். அரசனது வெண்கொற்றக்குடை குடிமக்களுக்கு
அவனது ஆட்சி தண்ணிழல் தருதலால் தான். சிந்து முத்திரை எழுத்திலே
ஒன்று பார்க்கலாம். மீன் (விண்மீன் தெய்வம்) சின்னத்துக்கு மேலே
ஒரு கொற்றக்குடை காட்டியிருப்பர். வே(ய்)ந்து-மீன் எனலாம். நீர்வாழ்
உயிரிகளில் மீன், மகரவிடங்கர் தெய்வங்களாக சிந்து எழுத்தில் இருப்பது
பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதுவரை
கிடைத்த முத்திரைகளில் பெரியதில் இதனை இன்ஸ்க்ரிப்ஷனில் பாருங்கள்,
Large unicorn seal

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32
இந்த முத்திரையில் ஒரு நுணுக்கம் சொல்லலாம். மெசபடோமியாவில் 
இருந்து வந்த, கொம்பு முன்னோக்கி உள்ள மாடுகள் குறைந்துபோக,
அதன் தலைக்கு ஒரு Antelope பொருத்தியுள்ளமை அறிக. இதன் பெயர்
Nilgai (http://en.wikipedia.org/wiki/Nilgai). 100 வருஷம் முன்பு நீலகிரி, பந்திப்பூர்,
மைசூர்க் காடுகளில் வாழ்ந்தது. இப்போது அழிந்துவிட்டது. சங்க இலக்கியத்தில்
மரையா (மரையான், lit. cow-like antelope) எனப் பல இடங்களில் வருவது.

அதே மரையான் - மாடு . இன்னொரு முத்திரை:
இதிலும் மீன் மீது வெண்கொற்றக் குடை உண்டு.























நல்லியக்கோடன் 
ஏரோர்க்கு நிழன்ற கோலையும், 
தேரோர்க்கு அழன்ற வேலையும் உடையவனாம். {சிறுபாணாற்றுப்படை 234).
இங்கே கோல் என்றால் செங்கோல் என்பதைவிட கொற்றக் குடையின்
காம்பு (கோல்) எனப் பொருள்கொள்ளல் சிறப்பு. கொற்றக் குடை
நிழல் செய்தலை ஏரோர்க்கு நிழன்ற கோல் என்றார்.

வடமலை நிகண்டு:
நிழற்றல் எனும்பெயர் நிழற்செய லுடனே
நுணுக்க மெனவே நுவன்றனர் புலவர்.

புறநானூறு 3:
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!

ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பி, 
புலவர் புகழ்ந்த நாண்இல் பெருமரம் 
நிலவரை எல்லாம் நிழற்றி, 
அலர் அரும்பு ஊழ்ப்பவும், வாரா தோரே - அகநானூறு

வேள்விக்குடிச் செப்பேடு:
பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து
அருள்புரி பெரும் அச்சுதர் கோவே.”

அருகக் கடவுள் வணக்கம் (நன்னூல், பவணந்தி முனிவர்)
முச்சக நிழற்று முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே.

கந்தபுராணம்:
மேக்குயர் வட்டமும் விளங்கு காம்புமாய்
நீக்கமில் கவிகைகள் நிழற்றி மல்குவ 
மாக்கிளர் ப·றொடை வானக் கம்பலந்
தூக்கிய திறனெனத் தோன்று கின்றவே

வீரசோழியம், தண்டி அலங்காரம் மேற்கோள் வெண்பா:
'மனுப்புவிமேல் வாழ மறைவளர்க்கு மாரப்
பனித்தொடையற் பார்த்திபர்கோ னெங்கோன் - றனிக்கவிகை
தண்மை நிழற்றன்று தற்றொழுத பேதையர்க்கு
வெம்மை நிழற்றாய் மிகும்.'

இது குணத்தினிடத்து வந்தமையாற் குணவவனுதி. இதன்கண் 'தண்மை நிழற்று' என்னும் குணத்தின் உண்மையை மறுத்து, 'வெம்மை நிழற்று' என்னும் பிறிதொரு குணம் சோழன் குடையின்மேல் ஏற்றிக் கூறப்பட்டமை காண்க.

‘சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற, அருளொடு அவனி ஆள்வார்,’ - கம்பன்

மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (1130 - ....)
ஸ்வஸ்திஸ்ரீ
திருமகள் புணரப் பூமகள் விளங்க
விக்கிரம சயமகள் பொற்புயத் திருப்பக்
கனக மேருவிற் கயல்விளை யாட
இருநிலத் தொருதனி வெண்குடை நிழற்ற
உயரும் மணிமுடிதன் உரிமையிற் சூடி - 5
உலகுபொது நீங்க ஓருகோ லோச்சி
வஞ்சி மன்னரும் வடபுல வேந்தரும்
அஞ்சிவந் திறைஞ்சி அடிமலர் சூட
மன்னிய வீர சிம்மா சனத்து
உலகு முழுதுடை யாரொடும் வீற்றிருந் - 10
தருளிய மாமுதல் மதிக்குலம் விளக்கிய
கோமுதல் கோமாற பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ பராக்கிரம
பாண்டிய தேவர்க்கு யாண்டு...................

சீவக சிந்தாமணியில் குரவமர பூக்கள்
பாவை போல இருப்பதும், அதன் தேனுக்கு
தேனீக்களும் வண்டுகளும் மலர்ப் பாவை மீது
மொய்த்து நிழல் உண்டாக்கலும் சொல்லப்படுகிறது:

நறவிரி சோலை யாடி நாண்மலர்க் குரவம் பாவை
நிறையப்பூத் தணிந்து வண்டுந் தேன்களு நிழன்று பாட
விறைவளைத் தோளி மற்றென் றோழியீ தென்று சோ்ந்து
பெறலரும் பாவை கொள்வாள் பெரியதோ ணீட்டி னாளே.

-----------------------------------------------

(2) நிழற்றல் (நிழத்தல்) பொருள் நீட்சியாகி “இல்லை என்று அழிபடுதல்”
என்ற பொருள் ஏற்கிறது எனக் கண்டோம். நிழல் என்றால் ஆடி நிழல். கண்ணாடியில்
தோன்றும் பிம்பம் என்றும் பொருள் வருகிறது. மேலும் கண்ணாடியை
எதிரொளிக்கச்செய்து ஒளியைக் குவிக்கலாம். ஸோலார் செல்களில்
கண்ணாடிகளை வைத்து ஒளியைக் குவிப்பதைக் காணலாம். எனவே,
நிழற்றுதல் என்றால் ஒளி விடுதல் என்ற பொருள்நீட்சியும் உண்டு.

நிழல்கால் நெடுங்கல் (சிலப். 5, 127) - ஒளிவிடும் இரத்தினக்கல்.

நிழல்கால் மண்டிலந் தம்மெதிர் நிறுத்தி (சிலப். 28, 30). ஒளி காலும்(வீசும்) கண்ணாடி (மண்டிலம்).

நெய்த்தலைக் கருங்குழல் நிழன்று (சீவக. 1101) - ஒளிசெய்தல். மின்னும் கார்குழல்.

நிழலுதல் என்னும் தன்வினையாக ”நிழன்ற” என்று சூளாமணி:
தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்.

இங்கே,  நீள் எழில் ஆரம் நிழன்ற - நீண்ட முத்து மாலை ஒளிவீச.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Feb 15, 2015, 8:49:32 AM2/15/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Saturday, February 14, 2015 at 10:30:12 PM UTC-8, Pandiyaraja wrote:
கணேசன் ஐயா அவர்களுக்கு,
நிழத்தல் வேறு, நிழற்றல்/நிழற்றுதல் வேறு. நீங்கள் சொல்லியபடி நிழத்தல் = இல்லையென்றாதல் முற்றிலும் சரி. இது எவ்வாறு ஆகும்? இருப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் முற்றிலும் இல்லையென்றாகும். இதைத்தான் தொல்காப்பியர் உள்ளதன் நுணுக்கம் என்கிறார். நான் பொருள்வழிச் சொல்லைப் பார்ப்பவன்.

நிழற்றல்/நிழத்தல் இரண்டும் ஒன்றுதான் ஐயா. வடமலை நிகண்டுச் சூத்திரம் அதைக்காட்டத் தந்தேன்.
நிழற்றல் எனும்பெயர் நிழற்செய லுடனே
நுணுக்க மெனவே நுவன்றனர் புலவர்

”நீங்கள் சொல்லியபடி நிழத்தல் = இல்லையென்றாதல் முற்றிலும் சரி. இது எவ்வாறு ஆகும்?”

நிழத்தல் = நிழற்றல். முல்லைப்பாட்டு அடி 50: நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் 
இதற்கான உரையைப் பாருங்கள். நிழத்திய = நிழற்றிய என்று உள்ளது. சென்னைப் பேரகராதி:
நிழற்று²-தல் niḻaṟṟu- , 5 v. intr. < நிழத்து-. To be still, calm; அடங்குதல். (முல்லைப். 50, உரை.)

நிழல்- என்னும் அடிப்படைச்சொல் நிழத்து/நிழற்று என “இல்லை என்றாதல்” என்னும் பொருள் ஏற்பைக்
குறிப்பிட்டேன். நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது. 

நா. கணேசன்
 
காரணம் எனக்கு வேர்ச்சொல்லாய்வு தெரியாது. எனவே வேர்களுக்குள் நான் நுழைவதில்லை. பொருளைத்தான் பார்க்கிறேன். அந்தப் பொருளும் பயன்பாட்டுவழிதான் தெரியும். எனவேதான் சொற்களின் வருமிடங்களை உற்றுப்பார்க்கிறேன். அவற்றினின்றும் பொருளை derive செய்கிறேன். பின்னரே அகராதிகளைப் பார்க்கிறேன். தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா
...

Hari Krishnan

unread,
Feb 15, 2015, 9:01:47 AM2/15/15
to vallamai, mintamil, Pandiyaraja Paramasivam, Kalairajan Krishnan, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

2015-02-15 19:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது. 

நிழலைத் தர, ஒளிவீச என்றும் பொருள்படும்.  கம்பன் பல சமயங்களில் இரண்டு பொருளிலும் ஆண்டிருக்கிறான்.

N. Ganesan

unread,
Feb 15, 2015, 9:02:33 AM2/15/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
அன்பின் பேரா. பாண்டியராசா அவர்கட்கு,

சில உதாரணங்கள், நிழற்று = நிழத்து என நிகண்டுகளிலும், பழைய உரைகளிலும் ஏன் தருகின்றனர் என்று காணப்
பார்ப்போம்:

(1) பற்று = பத்து
தீப் பற்றியது = தீப் பத்தியது
(2) காற்று = காத்து
(3) ஏற்று = ஏத்து
(4) புற்று = புத்து
(5) ஆற்று = ஆத்து
(காப்பி சூடா இருக்கு. ஆத்திக் கொடு)
(6) சுற்று = சுத்து
(7) இற்றுப்போனது = இத்துப் போச்சு
(8)மாற்று = மாத்து
(9) ஊற்று = ஊத்து
(10) கீற்று = கீத்து
(11) போற்று = போத்து (கேரளாவில் போற்றி/போத்தி)
...
இவை போல,
நிழற்று = நிழத்து


On Sunday, February 15, 2015 at 5:49:32 AM UTC-8, N. Ganesan wrote:


On Saturday, February 14, 2015 at 10:30:12 PM UTC-8, Pandiyaraja wrote:
கணேசன் ஐயா அவர்களுக்கு,
நிழத்தல் வேறு, நிழற்றல்/நிழற்றுதல் வேறு. நீங்கள் சொல்லியபடி நிழத்தல் = இல்லையென்றாதல் முற்றிலும் சரி. இது எவ்வாறு ஆகும்? இருப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் முற்றிலும் இல்லையென்றாகும். இதைத்தான் தொல்காப்பியர் உள்ளதன் நுணுக்கம் என்கிறார். நான் பொருள்வழிச் சொல்லைப் பார்ப்பவன்.

நிழற்றல்/நிழத்தல் இரண்டும் ஒன்றுதான் ஐயா. வடமலை நிகண்டுச் சூத்திரம் அதைக்காட்டத் தந்தேன்.
நிழற்றல் எனும்பெயர் நிழற்செய லுடனே
நுணுக்க மெனவே நுவன்றனர் புலவர்

”நீங்கள் சொல்லியபடி நிழத்தல் = இல்லையென்றாதல் முற்றிலும் சரி. இது எவ்வாறு ஆகும்?”

நிழத்தல் = நிழற்றல். முல்லைப்பாட்டு அடி 50: நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் 
இதற்கான உரையைப் பாருங்கள். நிழத்திய = நிழற்றிய என்று உள்ளது. சென்னைப் பேரகராதி:
நிழற்று²-தல் niḻaṟṟu- , 5 v. intr. < நிழத்து-. To be still, calm; அடங்குதல். (முல்லைப். 50, உரை.)

நிழல்- என்னும் அடிப்படைச்சொல் நிழத்து/நிழற்று என “இல்லை என்றாதல்” என்னும் பொருள் ஏற்பைக்
குறிப்பிட்டேன். நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது. 


(1) பற்று = பத்து
தீப் பற்றியது = தீப் பத்தியது
(2) காற்று = காத்து
(3) ஏற்று = ஏத்து
(4) புற்று = புத்து
(5) ஆற்று = ஆத்து
(காப்பி சூடா இருக்கு. ஆத்திக் கொடு)
(6) சுற்று = சுத்து
(7) இற்றுப்போனது = இத்துப் போச்சு
(8)மாற்று = மாத்து
(9) ஊற்று = ஊத்து
(10) கீற்று = கீத்து
(11) போற்று = போத்து (கேரளாவில் போற்றி/போத்தி)
...
இவை போல,
நிழற்று = நிழத்து

N. Ganesan

unread,
Feb 15, 2015, 9:05:38 AM2/15/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Sunday, February 15, 2015 at 6:01:48 AM UTC-8, Hari wrote:

2015-02-15 19:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது. 

நிழலைத் தர, ஒளிவீச என்றும் பொருள்படும்.  கம்பன் பல சமயங்களில் இரண்டு பொருளிலும் ஆண்டிருக்கிறான்.


ஆம். நேற்றைய மடலில் சிந்தாமணி, சூளாமணிப் பாடலைக் காட்டினேன்.
நிழல் ‘shadow', கண்ணாடி தொழில்நுட்பத்தால் ஒளிவீசல் என்ற பொருளும் ஏற்கிறது.

நிழற்றல் (நிழத்தல்) பொருள் நீட்சியாகி “இல்லை என்று அழிபடுதல்”
என்ற பொருள் ஏற்கிறது எனக் கண்டோம். நிழல் என்றால் ஆடி நிழல். கண்ணாடியில்
தோன்றும் பிம்பம் என்றும் பொருள் வருகிறது. மேலும் கண்ணாடியை
எதிரொளிக்கச்செய்து ஒளியைக் குவிக்கலாம். ஸோலார் செல்களில்
கண்ணாடிகளை வைத்து ஒளியைக் குவிப்பதைக் காணலாம். எனவே,
நிழற்றுதல் என்றால் ஒளி விடுதல் என்ற பொருள்நீட்சியும் உண்டு.

நிழல்கால் நெடுங்கல் (சிலப். 5, 127) - ஒளிவிடும் இரத்தினக்கல்.

நிழல்கால் மண்டிலந் தம்மெதிர் நிறுத்தி (சிலப். 28, 30). ஒளி காலும்(வீசும்) கண்ணாடி (மண்டிலம்).

நெய்த்தலைக் கருங்குழல் நிழன்று (சீவக. 1101) - ஒளிசெய்தல். மின்னும் கார்குழல்.

நிழலுதல் என்னும் தன்வினையாக ”நிழன்ற” என்று சூளாமணி:
தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்.

இங்கே,  நீள் எழில் ஆரம் நிழன்ற - நீண்ட முத்து மாலை ஒளிவீச.

நா. கணேசன்
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 7:44:33 AM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Monday, February 16, 2015 at 3:41:07 AM UTC-8, Pandiyaraja wrote:
மிக்க நன்றி கணேசன் ஐயா!
தாங்கள் பேச்சுவழக்கையும் சங்க வழக்கையும் போட்டுக் குழப்புவது வியப்பை அளிக்கிறது. காற்று, ஆற்று - க்குப் பதிலாக, காத்து, ஆத்து என்று சங்க வழக்குகள் உளவா? சேரி மொழியைப் பற்றித் தொல்காப்பியம் பேசினாலும் அது உரையாடலின்போது வரலாம் என்பர். இங்கே நிழத்திய என்பது தூய இலக்கிய வழக்கு. சேரி மொழி அல்ல.
தயவுசெய்து சங்கச் சொற்களுக்குப் பிற்காலத்திய நிகண்டு, அகராதி போன்றவற்றினின்றும் பொருளைத் திணிக்காதீர்கள். முதலில் சங்கச் சொற்களுக்குப் பொருள் சங்கப்ப்பாடல்களில்தான் பார்க்கவேண்டும். கிடைக்காவிடில் பிற்காலத்தோர் கூறுவதைப் பார்க்கலாம்.
நான் வைத்திருக்கும் அனைத்து உரைகளும் நிழத்திய என்பதற்கு நுணுகிய, அவிந்த அடங்கிய என்ற பொருளையே தருகின்றன. பெருமழைப்புலவர், "நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணிகளின் ஓசை நுணுகிய நடுயாமத்தே" என்கிறார். பின்னர் விளக்கத்தில் இதனையே 'அடங்கிய' என்கிறார். மறைமலை அடிகள் தன் முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை எனும் நூலில், "மணியினோசை அடங்கிய நள்ளிரவில் .. " என்கிறார் (பக்.89) "நிழத்திய = நுணுகிய, அஃதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப் பொருளையுணர்த்துதல் ,ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் நுணுக்கப் பொருள" என்னுந்தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தில் காண்க; இனி, நிழற்றல் எனப் பாடமோதுவாருமுளர். நிழற்றல் ஒளிவிடுதலெனப் பொருடரும் பிறிதொரு சொல்லாதலின் அஃதீண்டைக்குப் பொருந்தாது; அற்றேல், திவாகரத்தில் நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலுமாகும் என்று அஃது இரு பொருளும் உடைத்தாக ஒதப்பட்டவாறென்னையெனின், அது காப்பியத்தோடு முரணுவதாலிற் கொள்ளற்பாதன்றென மறுக்க என்றது. " என்று கூறுகிறார். எனவே நிழத்தல் நிழற்றல் ஆகியவை வேறு என நான் சொல்லவில்லை. இது மறைமலையடிகள் கூற்று.

மறைமலையடிகளுக்குப் பல நூற்றாண்டுகள் முந்தையவை நிகண்டுகள். திராவிட மொழிச்சொற்களின்
ஒப்பியல் அகராதிகளைப் பாருங்கள். நிழற்றல் = நிழத்தல், காற்று = காத்து, ... போன்றவற்றை ஒதுக்கிவிட இயலாது.
இவை திராவிட மொழிகளின் அடிப்படையான இயல்பு. 

நிழல் நுணுகியது தானே. அது ஒரு தோற்றம், ஒளியின் நுணுக்கம். நிழற்றல் என்றாலும், நிழத்தல் என்றாலும் நுணுக்கப் பொருள் ஏற்கும். நிழற்றிய என்ற பாடமும் முல்லைப்பாட்டு 50-ஆம் வரிக்கு உவேசா கொடுத்துள்ளதும் பார்க்கவும்.
மறைமலையடிகள் மற்றும் நம் முன்னோர்கள் நிழற்றிய = நிழத்திய என்றுதான் கருதியுள்ளனர் என்பதற்கு
முல்லைப்பாட்டு வரியின் பாடபேதங்களும், நிகண்டுகளும் (ஆதிநிகண்டாகிய திவாகரத்தில் இருந்து) சான்று.
நிழற்றிய என்றால் முல்லைப்பாட்டு வரி-50க்கு நுணுகிய என்ற பொருள் மறைந்துவிடாது.


நா. கணேசன்

 
ப.பாண்டியராஜா
பி.கு:
"நான்கும் நுணுக்கப் பொருள" என்று மறைமலையடிகள் கூறினும், அது, "உள்ளதன் நுணுக்கம்" எனப் பெருமழைப் புலவர் கூறுகிறார். உள்ளதன் நுணுக்கம் என்பதுதான் சென்று தேய்தல். 1-ஆக உள்ளது 1/2 ஆக நுணுகி, 1/2 ஆக உள்ளது 1/4-ஆக நுணுகி, 1/4-ஆக உள்ளது 1/8-ஆகி, 1/8-ஆக உள்ளது 1/16-ஆகி, இவ்வாறு 1, 1/2, 1/4, 1/8, 1/16 ................ என்று உள்ளதன் நுணுக்கமாக (decreasing sequence) ஆகி, இன்று சென்று தேய்கிறது (tends to zero) என்ற கருத்தை உணர்த்திநிற்கும் அழகிய தமிழ்ச்சொல் நிழத்தல். சுஜாதாவின் மொழியில் இது

ங்ஒய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்

 ப.பாண்டியராஜா
...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 8:14:09 AM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, Dr. Krishnaswamy Nachimuthu, mozhitrust, annamalaie
On Monday, February 16, 2015 at 3:41:07 AM UTC-8, Pandiyaraja wrote:

"நான்கும் நுணுக்கப் பொருள" என்று மறைமலையடிகள் கூறினும், அது, "உள்ளதன் நுணுக்கம்" எனப் பெருமழைப் புலவர் கூறுகிறார். உள்ளதன் நுணுக்கம் என்பதுதான் சென்று தேய்தல். 1-ஆக உள்ளது 1/2 ஆக நுணுகி, 1/2 ஆக உள்ளது 1/4-ஆக நுணுகி, 1/4-ஆக உள்ளது 1/8-ஆகி, 1/8-ஆக உள்ளது 1/16-ஆகி, இவ்வாறு 1, 1/2, 1/4, 1/8, 1/16 ................ என்று உள்ளதன் நுணுக்கமாக (decreasing sequence) ஆகி, இன்று சென்று தேய்கிறது (tends to zero) என்ற கருத்தை உணர்த்திநிற்கும் அழகிய தமிழ்ச்சொல் நிழத்தல். சுஜாதாவின் மொழியில் இது

ங்ஒய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்


பாண்டியராஜா ஐயா,

பெருமழைப் புலவர் உரை முற்றிலும் சரியே. ”அது, "உள்ளதன் நுணுக்கம்" எனப் பெருமழைப் புலவர் கூறுகிறார். உள்ளதன் நுணுக்கம் என்பதுதான் சென்று தேய்தல். 1-ஆக உள்ளது 1/2 ஆக நுணுகி, 1/2 ஆக உள்ளது 1/4-ஆக நுணுகி, 1/4-ஆக உள்ளது 1/8-ஆகி, 1/8-ஆக உள்ளது ”

நிழலைப் பாருங்கள். (நிணல் என்றும் நிழலைச் சொல்வதுண்டு. தழல்:தணல் போல்.)

நிழல் என்பதும் உள்ளதன் நுணுக்கம் தானே. நிழலுக்குப் பருமன் உண்டா? இல்லை. ஒளி நுணுகிய வேறுபாடு காட்டும். பகலில் நேரத்தைப் போல நீளும், குறுகும். திராவிட மொழிச் சொற்களில் முதல் 2 அல்லது 3 எழுத்து அதன் அடிப்படைப் பொருள் காட்டிவிடும் (CVC or VC structure). நிழல் + து = நிழத்து (அல்லது) நிழற்று. 

CTamil-ல் பதற்றம் என்பதை மதுரைப் பக்கம் பதத்தம் என்று சொல்வதை பேரா. இ. அண்ணாமலை எழுதினார்.
பதலை என்றே தாளக்கருவி சங்க இலக்கியத்தில். பதல்+து பதறு- பதற்றம் (அல்லது) பதத்தம். அழற்றியது (அ) அழத்தியது.
நிழற்றிய என்று வட மாவட்டங்களில் வழங்கும் சொல்லை நிழத்திய என்று தன் ஊர் வழக்கை தொல்காப்பியர் கூறுகிறார்.
தொல்காப்பியத்தில் குமரி மாவட்ட வழக்குகள் இருப்பதை மொழியியலாளர் (உ-ம்: பேரா. கி. நாச்சிமுத்து கட்டுரைகள்)
காட்டியுள்ளனர். பாணினி சாலதுர என்னும் ஊர்க்காரர் என்று அவரது நூலில் இருந்து சான்று காட்டுவதுபோல,
காப்பியர் தென்குமரி நாட்டார் என்பது அவர் காட்டும் பிரதேசப் பேச்சு வழக்கால் தெரிகிறது என்பர்.

 நா. கணேசன்

Cc. கி. நாச்சிமுத்து, பா. ரா. சுப்பிரமணியன், இ. அண்ணாமலை.

N. Ganesan

unread,
Feb 16, 2015, 9:37:46 AM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, tamiz...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 6:22:56 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்புள்ள ஐயா!
மதுரைப்பக்க பேச்சு வழக்கெல்லாம் நான் அறியாததா! ஆனால், தாங்கள் இன்னும் இன்றைய பேச்சு வழக்கையும், அன்றைய சங்க வழக்கையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். காற்று > காத்து, ஆற்று > ஆத்து போன்றவை எங்காவது சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா என்று காட்டுங்கள்.
நிழத்து என்பதை நீங்கள் நிழற்றுவின் கொச்சை வழக்கு என்று கூறினாலும், இங்கே நிழத்து என்பது சென்று தேய்ந்து மறைவது என்பதை ஒத்துக்கொண்டபின்னர் எனக்குச் சொலவதற்கு வேறு எதுவும் இல்லை.

நிழ(ல்) என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வரும். அழ(ல்) - அழற்று என்றும், அழத்து என்றும் வருவது போல். 
நிழத்து/நிழற்று = தேய்ந்து மறைவது (நிழல் ஒளி வந்தால் தேய்ந்து மறைந்துவிடும்). 
அப்படிப் பொருள் இல்லை என்று யாரும் - நான் உள்பட - எங்கும் சொல்லவில்லையே.

முல்லைப்பாட்டுச் சுவடிகளிலே நிழத்து இருக்கிறது, நிழற்று இருக்கிறது.
இரண்டும் ஒன்றே என்கின்றன நிகண்டுகள். மொழியியலாளரும் இவை ஒன்றே என்பதும் கவனத்தில் கொள்வோம்.

நா. கணேசன்

...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 9:49:26 AM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, tamiz...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 6:42:45 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்பின் ஐயா!
முல்லைப்பாட்டில் நிழற்று என்ற பாடத்தைப் பாடபேதமாகக் கொண்டு, அதனை ஆய்ந்து, மறைமலை அடிகள் ஒதுக்கிவிட்டதை என் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ப.பாண்டியராஜா

மறைமலையடிகள் ஆய்வுகள் கால்ட்வெல் போன்ற மொழியியல் அறிஞர்கள் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக்
கொண்டு தனித்தமிழை, தனித்தமிழர் மாட்சியை ஒரு புது வழி காட்டுவன. ஆனால், அவரது எழுத்துக்களுக்கும்,
வரலாற்றுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. மறைமலை அடிகள் சொன்னதால் நிழற்று = நிழத்து என்பது
மாறிவிடாது. நிகண்டுகள் பல நூற்றாண்டுக்கு முன்னரே ஆராய்ந்து சொல்லிய செய்தியிது. இன்றைய
மொழியியல்புலவரும் ஒப்புவதில்லை. நிழல்- என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வருவது தமிழில்
நிறைய. தேய்ந்து மறையும் நிழல் என்பதன் வினைச்சொல் ஆக்கங்கள். அரதப் பழசானவை.

நா. கணேசன்
 


On Monday, February 16, 2015 at 8:07:45 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Monday, February 16, 2015 at 6:22:56 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்புள்ள ஐயா!
மதுரைப்பக்க பேச்சு வழக்கெல்லாம் நான் அறியாததா! ஆனால், தாங்கள் இன்னும் இன்றைய பேச்சு வழக்கையும், அன்றைய சங்க வழக்கையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். காற்று > காத்து, ஆற்று > ஆத்து போன்றவை எங்காவது சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா என்று காட்டுங்கள்.
நிழத்து என்பதை நீங்கள் நிழற்றுவின் கொச்சை வழக்கு என்று கூறினாலும், இங்கே நிழத்து என்பது சென்று தேய்ந்து மறைவது என்பதை ஒத்துக்கொண்டபின்னர் எனக்குச் சொலவதற்கு வேறு எதுவும் இல்லை.

நிழ(ல்) என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வரும். அழ(ல்) - அழற்று என்றும், அழத்து என்றும் வருவது போல். 
நிழத்து/நிழற்று = தேய்ந்து மறைவது (நிழல் ஒளி வந்தால் தேய்ந்து மறைந்துவிடும்). 
அப்படிப் பொருள் இல்லை என்று யாரும் - நான் உள்பட - எங்கும் சொல்லவில்லையே.

முல்லைப்பாட்டுச் சுவடிகளிலே நிழத்து இருக்கிறது, நிழற்று இருக்கிறது.
இரண்டும் ஒன்றே என்கின்றன நிகண்டுகள். மொழியியலாளரும் இவை ஒன்றே என்பதும் கவனத்தில் கொள்வோம்.

நா. கணேசன்

ப.பாண்டியராஜா



On Monday, February 16, 2015 at 6:44:08 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Monday, February 16, 2015 at 3:41:07 AM UTC-8, Pandiyaraja wrote:

"நான்கும் நுணுக்கப் பொருள" என்று மறைமலையடிகள் கூறினும், அது, "உள்ளதன் நுணுக்கம்" எனப் பெருமழைப் புலவர் கூறுகிறார். உள்ளதன் நுணுக்கம் என்பதுதான் சென்று தேய்தல். 1-ஆக உள்ளது 1/2 ஆக நுணுகி, 1/2 ஆக உள்ளது 1/4-ஆக நுணுகி, 1/4-ஆக உள்ளது 1/8-ஆகி, 1/8-ஆக உள்ளது 1/16-ஆகி, இவ்வாறு 1, 1/2, 1/4, 1/8, 1/16 ................ என்று உள்ளதன் நுணுக்கமாக (decreasing sequence) ஆகி, இன்று சென்று தேய்கிறது (tends to zero) என்ற கருத்தை உணர்த்திநிற்கும் அழகிய தமிழ்ச்சொல் நிழத்தல். சுஜாதாவின் மொழியில் இது

ங்ஒ

...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 9:59:55 AM2/16/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, pipi...@gmail.com, tamiz...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu

On Monday, February 16, 2015 at 6:42:45 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்பின் ஐயா!
முல்லைப்பாட்டில் நிழற்று என்ற பாடத்தைப் பாடபேதமாகக் கொண்டு, அதனை ஆய்ந்து, மறைமலை அடிகள் ஒதுக்கிவிட்டதை என் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ப.பாண்டியராஜா

மறைமலையடிகள் தமிழர் பழமைக்கும், வரலாற்றுக்கும் பேச்சுச் சொற்களை ஒதுக்கி புதுப்பாதை போட முயன்றவர்,
அவரது நூல்கள் பலவும் படித்துள்ளேன். அதில் பல வரலாற்றுக்கு மாறான செய்திகள் உள்ளன. உ-ம்: வேளாளர்
நாகரீகம், தமிழரின் பழைய சமயம் சைவம், .... என்றெல்லாம் பாருங்கள்.

தமிழ் ஆகட்டும், திராவிட மொழிகள் ஆகட்டும், நிழற்று நிழத்து இரண்டும் ஒரே பொருளில் வருவது போல
வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக வட்டார வழக்குகளில் உண்டு. சம்ஸ்கிருதத்திலே கூட பேச்சு வழக்கைப்
பார்க்கிறோம். மக்கள் மொழியாக விளங்கும் தமிழ் போன்ற வட்டார மொழிகளில் பேச்சு வழக்கு இருக்காதா?

மக்கள் வழக்கத்தைப் பயன்படுத்திய மறைமலையடிகள் (அவர் இங்கிலீஷில் தான் டயரி எழுதினார்):
ஜீவா  சந்தித்த மறையடிகள்,

N. Ganesan

unread,
Feb 16, 2015, 10:12:07 AM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, tamiz...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 7:00:25 AM UTC-8, Pandiyaraja wrote:
மிக்க நன்றி ஐயா!
தாங்கள் இன்னும் theoretical -ஆகவே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
இன்னும் தாங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில் இதற்கு எடுத்துக்காட்டு உண்டா? (ஆற்று > ஆத்து, காற்று > காத்து)
சங்க இலக்கியத்தில் நிழற்று, நிழத்து இரண்டும் உண்டு. இரண்டும் வெவ்வேறான பொருளில் வருகின்றன.

நிழத்து (அ) நிழற்று- அடிப்படைப் பொருள் நிழல் தானே. நிழற்று- என்பது ஏன் “தேய்ந்து மறைதல்” என்ற பொருள் வராது?
நிழற்றிய என்று முல்லைப்பாடு வரி 50 சுவடிகளில் இருப்பது எதனால்?
நிழத்தல் = நிழற்றல் என்று நிகண்டுகள் தருவது எதனால்?

மறைமலையடிகள் சொல்லிவிட்டார் என்கிறீர்கள். அதனால், நிழத்தல் = நிழற்றல் பொருள் மாறுகிறதா?
மறைமலையடிகள் தமிழர் வரலாறு, சமயம் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான பிழைபட்ட கருத்துக்களை
சொல்லியுள்ளார். அவரது நூல்களைப் படித்தால் இது விளங்கும். ஜீவா கண்ட மரைமலையடிகள்,
கால்ட்வெல் திராவிட மொழிக்குடும்பம் கண்டு ஒப்பியல் இலக்கணம் செய்தார். இப்போது சேசாத்திரி
கால்ட்வெல் சிலையை நீக்கணும் என்று 3 பேர் பேசுவதை செய்தி அனுப்புகிறார். சுந்தரம்பிள்ளையும்,
வேதாச்சலம்பிள்ளையவர்களும் (பின்னாளில் மறைமலையடிகள் - துறவுநிலை) எல்லிஸ்,கால்ட்வெல்
கண்ட மொழிவிஞ்ஞானத்தை தம்போக்கில் தமிழில் தர முயன்றவர்கள். அதனை மேலெடுத்துச்
செல்ல வேண்டும். மறைமலையடிகள் கருத்துப்பிழைகளும் பல உண்டு. அவர் நூல்களை வாசித்தால் தெரியும்.
 
நிழற்றல் (அல்லது) நிழத்தல் அடிப்படையில் ஒரே பொருள். நிழலுதல் என்பதன் பிறவினை: நிழத்துதல் = நிழற்றுதல்.
நிழற்றல் என்று வட மாவட்ட வழக்கு, தென் மாவட்டத்தில் நிழத்தல் என்று பிரதேச வேறுபாடு எனக் கருதலாம்.

நா. கணேசன்


    நிழற்ற (2)
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற/கரை சேர் மருதம் ஏறி - ஐங் 74/2,3
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற/ஏம முரசம் இழுமென முழங்க - புறம் 3/2,3

  
    நிழற்றி (1)
நில வரை எல்லாம் நிழற்றி/அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே - அகம் 273/16,17

  
    நிழற்றிசினே (1)
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே/கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த - புறம் 272/3,4

  
    நிழற்றிய (2)
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை - அகம் 204/1
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் - புறம் 189/2

  
    நிழற்றுதல்-மன்னே (1)
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே/இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 35/3,4

  
    நிழற்றும் (2)
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்/எம் கோ வாழிய குடுமி தம் கோ - புறம் 9/7,8
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை - புறம் 51/2
------------

நிழத்த (4)
நிழத்த யானை மேய் புலம் படர - மது 303
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த/முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க - பரி 6/19,20
நில வரை அல்லல் நிழத்த விரிந்த - பரி 10/3
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த/துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என - அகம் 147/4,5

  
    நிழத்தலின் (2)
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது - குறி 157
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி - மலை 193

  
    நிழத்தவும் (1)
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ - பொரு 235

  
    நிழத்திய (1)
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் - முல் 50

இவற்றின் அடிப்படையில் தாங்கள் பேசினால் நல்லது. நல்ல விவாதத்துக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா




On Monday, February 16, 2015 at 8:19:24 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Monday, February 16, 2015 at 6:42:45 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்பின் ஐயா!
முல்லைப்பாட்டில் நிழற்று என்ற பாடத்தைப் பாடபேதமாகக் கொண்டு, அதனை ஆய்ந்து, மறைமலை அடிகள் ஒதுக்கிவிட்டதை என் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ப.பாண்டியராஜா

மறைமலையடிகள் ஆய்வுகள் கால்ட்வெல் போன்ற மொழியியல் அறிஞர்கள் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக்
கொண்டு தனித்தமிழை, தனித்தமிழர் மாட்சியை ஒரு புது வழி காட்டுவன. ஆனால், அவரது எழுத்துக்களுக்கும்,
வரலாற்றுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. மறைமலை அடிகள் சொன்னதால் நிழற்று = நிழத்து என்பது
மாறிவிடாது. நிகண்டுகள் பல நூற்றாண்டுக்கு முன்னரே ஆராய்ந்து சொல்லிய செய்தியிது. இன்றைய
மொழியியல்புலவரும் ஒப்புவதில்லை. நிழல்- என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வருவது தமிழில்
நிறைய. தேய்ந்து மறையும் நிழல் என்பதன் வினைச்சொல் ஆக்கங்கள். அரதப் பழசானவை.

நா. கணேசன்
 


On Monday, February 16, 2015 at 8:07:45 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Monday, February 16, 2015 at 6:22:56 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்புள்ள ஐயா!
மதுரைப்பக்க பேச்சு வழக்கெல்லாம் நான் அறியாததா! ஆனால், தாங்கள் இன்னும் இன்றைய பேச்சு வழக்கையும், அன்றைய சங்க வழக்கையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். காற்று > காத்து, ஆற்று > ஆத்து போன்றவை எங்காவது சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா என்று காட்டுங்கள்.
நிழத்து என்பதை நீங்கள் நிழற்றுவின் கொச்சை வழக்கு என்று கூறினாலும், இங்கே நிழத்து என்பது சென்று தேய்ந்து மறைவது என்பதை ஒத்துக்கொண்டபின்னர் எனக்குச் சொலவதற்கு வேறு எதுவும் இல்லை.

நிழ(ல்) என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வரும். அழ(ல்) - அழற்று என்றும், அழத்து என்றும் வருவது போல். 
நிழத்து/நிழற்று = தேய்ந்து மற
...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 12:25:23 PM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, tamiz...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 9:09:07 AM UTC-8, Pandiyaraja wrote:
தாங்கள் (இன்னும்)  மீண்டும்theoretical -ஆகவே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

Not really. You are talking of a theory nizattu- and nizaRRu are different in meaning.
But if you look at Sangam MullaippaaTTu ola leaves, it does not say so. Nor does
any old book.
 
இன்னும் தாங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில் இதற்கு எடுத்துக்காட்டு உண்டா? (ஆற்று > ஆத்து, காற்று > காத்து)
சங்க இலக்கியத்தில் நிழற்று, நிழத்து இரண்டும் உண்டு. இரண்டும் வெவ்வேறான பொருளில் வருகின்றன.
ப.பாண்டியராஜா


அவ்வாறு தெரியவில்லை. நிழத்து/நிழற்று இரண்டுக்குமே நிழல்- தான் அடிப்படை. முல்லைப்பட்டு வரி 50 - நிழற்றிய என்னும் சுவடிகளும் உள்ளன. அப் பாடத்தை நீங்கள் கொண்டாலும் இவ் வரியின் பொருள் மாறுவதில்லை.

நா. கணேசன்


 
...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 1:44:43 PM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, tamiz...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 9:51:19 AM UTC-8, Pandiyaraja wrote:
>>
"அவ்வாறு தெரியவில்லை"
Dear Dr.Ganesan,
I don't find any reason for continuing this because you refuse to see the truth and also refuse to come out with facts. This is like dribbling the ball without moving any further.
You have the right to say the same thing about my position.

Dear Sir,

You have not shown me anything that nizal- is the basis on which both nizattu-/nizaRRu- are formed.
And, either nizattu or nizattu both have the same meaning: shadow, or thinning down as a shadow.
We have palm leaves on MullaippaaTTu line 50 showing both forms of the verb, and old Tamil books
- all of them say nizattu = nizaRRu. I have no reason to change what the old Tamil authors have said.

I read Maraimalai AdikaL's view, but the evidence shows otherwise.
One of the classical mistakes that MaraimalaiyadikaL did is Manickavasakar lived in 3rd century,
no serious scholar believes Maraimalaiyadikal's words like these as Veda nowadays. 

For me, if nizattu & nizaRRu are different verbs, their basis must be different.
In this case, nizal is the base & so, nizaRRu = nizattu. That is what old Tamil books and lexicons say.

with kind regards
N. Ganesan

 
With regards,
P.Pandiyaraja
...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 10:23:28 PM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 9:51:19 AM UTC-8, Pandiyaraja wrote:

> ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
> ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32

அன்பின் பாண்டியராஜா ஐயா,

தொல்காப்பியப் பதிப்புகளின் இண்டெக்ஸ் பார்த்து பேரா. கி. நாச்சிமுத்து தெரிவித்தது.
சுவடி வேறுபாடாக நிழற்றல் என்றும் இந்த தொல்காப்பியச் சூத்திரத்திற்கு இருக்கிறதாம். 1976 பதிப்பு என்றார்.

 ”ஓய்தல் ஆய்தல் நிழற்றல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32

முல்லைப்பாட்டு 50-ஆம் வரிக்கு ’நிழற்றிய’ என்றும் சுவடிகளில் இருப்பதை உவேசா, பத்துப்பாட்டு
பதிப்பில் கொடுத்திருக்கிறார்கள்.

தொல்காப்பியம் உரிச்சொல் 32 சூத்திரத்துக்கு நிழற்றல் என்னும் பாடமும் முக்கியமானது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 16, 2015, 10:38:34 PM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu
பேரா. செ. வை. சண்முகம், அண்ணாமலைப் பல்கலை, சங்க இலக்கியத்தில் பேச்சுவழக்குகள்
பற்றி நிறைய எழுதியிருப்பதாய்ச் சொன்னார் நாச்சிமுத்து. கேட்டுப் பார்ப்போம்.

இராமகி நிழற்றல்/நிழத்தல் பற்றி எழுதியது துழாவியதில் கிடைக்கிறது:
”அழல் அவிர் வயங்கிழை பொலிந்த மேனி” என்பது தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியைக் குறிக்கிறது. இங்கே ”மேனி” பெண்ணிற்கு ஆகுபெயராகிறது. நிழல்தல்/ நிழற்றல்>நிழத்தல் = இல்லையென்றாக்கல்; ”அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகா நின் வெய்யோள்” = ”தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியை இல்லையென்றாக்கியும் போகாத, நின் விழைவிற்குரியவள்”.”தீயாற் (புடமிட்டு) ஒளிர்ந்துவிளங்கும் இழையணிந்த பெண்ணைவிட ஒளிர்தோற்றும் உன்மனைவி” என உயர்வு சொன்னான் சோழன்.

N. Ganesan

unread,
Feb 16, 2015, 11:29:22 PM2/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 8:12:53 PM UTC-8, Pandiyaraja wrote:
Dear Sir,
Repeatedly you are going back to the roots and to the different versions of the texts. I am always looking forward to the usage. So, finally I put forth this question. Can you show me any single example where நிழற்ற has been used in SANGAM literature with the meaning of நிழத்த - dwindling. All your theoretical derivations are meaningful only when you have supporting documentary evidence , in this case the Sangam works.  Otherwise we can both leave this and go back to our own routine.

I am not doing theoretical derivation.

In Sangam literature, MullaippaaTTu line 50 and Tolkaappiyam suutram, we have நிழற்ற- as existing variants from palm leaves. 
That is what establishes "நிழற்ற-” has a meaning - diminishing, thinning as shadow.

With regards
N. Ganesan

With regards,
P.Pandiyaraja


 

On Tuesday, February 17, 2015 at 8:53:27 AM UTC+5:30, N. Ganesan wrote:


On Monday, February 16, 2015 at 9:51:19 AM UTC-8, Pandiyaraja wrote:

> ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
> ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32

அன்பின் பாண்டியராஜா ஐயா,

தொல்காப்பியப் பதிப்புகளின் இண்டெக்ஸ் பார்த்து பேரா. கி. நாச்சிமுத்து தெரிவித்தது.
சுவடி வேறுபாடாக நிழற்றல் என்றும் இந்த தொல்காப்பியச் சூத்திரத்திற்கு இருக்கிறதாம். 1976 பதிப்பு என்றார்.

 ”ஓய்தல் ஆய்தல் நிழ
...

N. Ganesan

unread,
Feb 16, 2015, 11:53:59 PM2/16/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, pipi...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 8:12:53 PM UTC-8, Pandiyaraja wrote:
Can you show me any single example where நிழற்ற has been used in SANGAM literature with the meaning of நிழத்த - dwindling.

முல்லைப்பாட்டு வரி 50-இலும், தொல்காப்பியம் உரியியல் சூத்திரத்திலும்
சில சுவடிகளில் நிழற்ற (dwindling) என்று இருக்கிறது. 

எனவே, நிழற்ற = நிழத்த ‘dwindling'.

Please note that for the above statements, the documentary evidence is ancient palm leaves.
No theoretical derivation of mine is involved when our forefathers wrote these Ola leaves.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 17, 2015, 7:25:41 AM2/17/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, February 16, 2015 at 9:32:36 PM UTC-8, Pandiyaraja wrote:
I am tired Dr.Ganesan. I am asking for OTHER QUOTATIONS FROM OTHER SANGAM LITERATURE FOR நிழற்ற WITH THIS MEANING - NOT TEXT VARIATIONS.
If you have any instances please continue here. Otherwise, I think it is high time we stop this.
P.Pandiyaraja

will look for them, Sir. 

Like nizaRRa as variation for nizatta, both in Tolkappiyam and MullaippaaTTu, 
other instances of "nizatta" in Sangam literature may have a variation "nizaRRa".

N. Ganesan

...

rajam

unread,
Mar 9, 2015, 3:55:03 PM3/9/15
to mint...@googlegroups.com, vallamai, pipi...@gmail.com
எப்பவும்-போல் அருமை என்று சொன்னால் சுவையற்றுப்போய்விடுமோ என்று ஐயம். ஆனாலும் சொல்லுவேன் — அருமை!

இரண்டு கருத்துகள்/கேள்விகள்:

///ஒன்றன் பேரளவு நமக்குள் ஏற்படுத்தும் மலைப்பினால் ஏற்படும் அச்சமே உரு.///

///உள்ளத்தை நடுக்கி, நிலைகுலைத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் அச்சமே உட்கு///

1. “உரு உட்காகும் …” என்று தொல்காப்பியர் உரியியலில் சொன்னதைத் தங்கள் விளக்கத்தின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் … வானவில்-போன்ற உணர்ச்சிகளின் பல்வேறு நிலைகளைச் சொற்படுத்திய தமிழரின் உணர்வுக்கூர்மையை வியக்கத்தான் முடிகிறது!

2. 'அச்சம்’ என்பதுக்குக் குறிஞ்சிப்பாட்டு அடிகளை மேற்கோள் காட்டியதால் … ஏற்கனவே என்னுள் பலகாலம் அடங்கியிருந்த ஒரு கேள்வி: 

“புள் பிறர் அறியவும்” என்ற தொடருக்கு என்ன பொருள்? 

மக்கள் சிலிர்த்தெழவேண்டாம். இது என் ‘அறியா வினா.’ 

இவண்,
ராஜம்


On Mar 8, 2015, at 11:48 PM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

அன்புடையீர்,
சென்ற கட்டுரையைத் தொடர்ந்து பலவிதமான கருத்துப் பரிமாற்றங்கள் செய்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இந்தக் கட்டுரையில் 'அச்சம்' இடம்பெற்றுள்ளது. சிறிது அச்சத்தோடுதான் அனுப்பியிருக்கிறேன்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா



4. அஞ்சுதல்
 
 

ச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

4.1 அச்சம்

நீதிமன்றத்தில் உங்கள் சார்பாக ஒரு வழக்கு நடக்கிறது. அன்றைக்குத் தீர்ப்பு நாள். தீர்ப்பு எவ்வாறு இருக்குமோ, நடுவுநிலையான தீர்ப்பாக இல்லாமற்போய்விடுமோ என்ற உணர்வு உங்களுக்குள் தோன்றுமல்லவா! அதுதான் அச்சம்.

பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்கு இவ்வாறு வருவோரின் இத்தகைய உணர்வுகளை நீக்கி, தராசு முள்ளைப் போன்ற நடுவுநிலையுடன் பாண்டியனின் அறங்கூறவையம் இருக்கிறது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்:-

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்தாகி

சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மதுரைக்காஞ்சி 489 – 492

தலைவி ஒருத்தி காதல்கொள்கிறாள். இது தோழிக்கும் தெரியும். காதல் ஏக்கத்தால் தலைவி நோய்வாய்ப்படுகிறாள். இதைக் கண்ட செவிலி தோழியை விசாரிக்கிறாள். தலைவியின் நோயின் காரணம் கேட்கிறாள்.

இப்போது தோழியின் நிலை என்ன? செவிலியிடம் உண்மையைச் சொன்னால் அதனால் தலைவியின் காதலுக்கு ஊறு நேரலாமோ என்ற உணர்வு; தலைவிக்காகச் செவிலியிடம் உண்மையை மறைத்தால் தலைவியின் காதல்நோய் மிகுமே என்ற உணர்வு. யாருக்காகப் பேசினாலும் கேடு வருமே என்கிற உணர்வு. இங்கே தோழிக்கு இரண்டு வகையான தீர்வுகளில் எதை எடுப்பது என்ற தடுமாற்றம் மேலிடுகிறது. பகைமையுணர்வு கொண்டு போரிட எதிர்த்து நிற்கும் இரு பெரு வேந்தரிடையே பேசிப் பகைமையைத் தீர்க்க முயலும் ஒரு சான்றோனைப் போல தோழி தவிக்கிறாள்.

இகல்மீக்கடவும் இருபெரும் வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல

இருபேர் அச்சமொடு யானும் ஆற்றலென் – குறிஞ்சிப்பாட்டு 27 - 29

காதல்கொண்ட ஒரு தலைவன் மணமுடிக்கக் காலம் தாழ்த்துகிறான். இதனால் காதலி மனம் வருந்துகிறாள். அவளது தோழி இதனைத் தலைவனுக்கு உணர்த்த எண்ணுகிறாள். ஒருநாள் தலைவியைச் சந்திக்கக் காதலன் வரும் நேரம் பார்த்து, அங்கு இருக்கும் வண்டினைப் பார்த்துக்கூறுவதுபோல் உரக்கப் பேசுகிறாள். “ ஏ வண்டே, நீ போய்த் தலைவி இன்னும் தன் வீட்டாரிடம்தான் (உயிருடன்தான்) இருக்கிறாள் என்று சொல். அப்படிச் சொல்வதால் உனக்கு ஒன்றும் நேரிடாது. நல்ல சொல் சொல்ல அச்சம் தேவையில்லை அல்லவா!” என்கிறாள்.

அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி
நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர்நாட்டு
அண்ணல் நெடுவரை சேறியாயின்
------ ------ ------ -----  -

தமரின் தீராள் என்மோ … குறுந்தொகை – 392

அச்சம் என்பது ஏதேனும் தவறு அல்லது ஊறு நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் ஏற்படுவது.

4.2 உட்கு

தன் காதலியைச் சந்திக்கக் காதலன் ஒருவன் சென்றுகொண்டிருக்கிறான். குறுக்கே ஓர் ஆறு பெருவெள்ளத்துடன் ஓடுகிறது. அதை எப்படிக்கடக்கலாம் என்று அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, சற்றுத்தள்ளி, ஒரு மதங்கொண்ட யானை சற்றும் அஞ்சாமல் இறுமாப்புடன் நீருக்குள் இறங்குகிறது. ஆனால் ஆற்றுநீரின் வேகம் அந்தக் களிற்றியானையின் செருக்கை அழித்து அதனைப் புரட்டியெடுத்து இழுத்துக்கொண்டு செல்கிறது. இதைப் பார்த்த அவன் மனம் துணுக்குறுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையைப் பார்த்த அவன், நீருக்குள் இறங்க எடுத்துவைத்த காலைச் ‘சட்’-டென்று பின்னிழுத்துக் கரையேறுகிறான். அவன் மனம் ‘படக் படக் என்று அடித்துக்கொள்கிறது. அவன் உள்ளத்தை நடுங்கவைத்த அந்த வெள்ளம் அவனுக்குள் ஏற்படுத்தியதுதான் உட்கு.

மராஅ யானை மதம்தப ஒற்றி

உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் :18/4,5

ஒரு நள்ளிரவு – கும்மிருட்டு. மழை ஓங்கி அடித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் திறந்த வெளியில் ஒரு மறைவில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். மேகங்கள் ‘கடமுட’- வென்று உருமிக்கொண்டிருக்கின்றன. அப்போது பளீரென்று ஒரு பெரிய மின்னல் கண்ணைக் கூசவைக்கிறது. அடுத்த நொடியில் ‘சடசட’-வென்று ஆரம்பித்த ஒலி, மிகப்பெரிய ஓசையுடன் ‘டமார்’-என்று ஒரு பேரிடியாய் முழங்குகிறது. உங்கள் உடம்பே ஒரு குலுங்கு குலுங்குகிறது. அந்த அதிர்வினால் ஏற்பட்ட மனக்கலக்கம் உண்டாக்கியதுதான் உட்கு.


பானாள்

உத்தி அரவின் பைத்தலை துமிய
உரவுரு முரறும் உட்குவரு நனந்தலை – அகம் 202/9-11

ஆக, உள்ளத்தை நடுக்கி, நிலைகுலைத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் அச்சமே உட்கு

4.3 உரு

ஒரு குறுகலான சந்திற்குள் நுழைகிறீர்கள். சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பெரிய யானை – பழக்கியதுதான் – அதன் பாகன் மேலே அமர்ந்திருக்க, உங்களை ஒட்டி விரைவாகக் கடந்துசெல்கிறது. சிலநொடிகள்தான். இருப்பினும் அந்த பிரமாண்ட உருவம் உங்களுக்கு மிக அருகில் கடந்துசெல்லும்போது அந்தப் பேருருவம் உங்கள் இதயத்துடிப்பைச் சற்று அதிகரிக்கும் அல்லவா! அந்தப் பேரளவு ஏற்படுத்திய திகைப்பினால் உண்டாகும் கலக்கம் கலந்த அச்சமே உரு.

ஒரு பேய்க்காட்சியை இவ்வாறு காட்டுகிறது திருமுருகாற்றுப்படை.

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்

       சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
       கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
50     பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
       உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்திரு.47 - 51

ஒரு பேரளவைப் பார்த்துக் கொள்ளும் அச்சம் உரு. ஆனால் அந்தப் பேரளவு என்பது தோற்றத்தில்மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

சோழப்பேரரசு எத்துணை வலிமை மிக்கது? எத்துணை மாண்புடையது? அதன் தலைமைப் பொறுப்பை வகிப்பதென்பது எளிதான செயல் அன்று. அதற்கு உரித்தானாய்ப் பிறந்த கரிகாலனைச் சிறுவயதில் வஞ்சனையால் சிறையிலடைத்தனர். சீறும் புலியாய்ச் சிறையினை உடைத்து, எதிர்த்தோரைக் கொன்று தன் உரிமைத் தாயத்தை அடைகிறான் கரிகாலன். அதனைப் பாட வந்த புலவர் கூறுகிறார்:

பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி,

       அரும் கரை கவியக் குத்தி, குழி கொன்று,
       பெரும் கை யானை பிடி புக்காங்கு,
225    நுண்ணிதின் உணர நாடி, நண்ணார்
       செறிவு உடை திண் காப்பு ஏறி, வாள் கழித்து
       உரு கெழு தாயம் ஊழின் எய்திபட்டினப்பாலை 222 - 227

சோழப்பேரரசின் அரசுரிமையை உருகெழு தாயம் என்கிறார் புலவர். அதன் மாண்பு அத்துணை பெரிது.

காதல் கொண்ட ஒரு தலைவி தலைவனைச் சந்திக்கமுடியாமல் ஏங்குகிறாள். அந்த ஏக்கத்தில் நோய்பீடித்தவள் போல் ஆகிறாள். இதைக் கண்ட வீட்டார் அவளின் நோய் தீர்க்க வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கின்றனர். குறித்த நாளின் வேலன் வந்து வெறியாட்டு எடுக்கிறான். அவன் சாமிவந்து ஆடும்போது பார்ப்போர் குலை நடுங்குகிறது. வீட்டுக்கு வந்திருப்பது முருகன் அன்றோ! அந்த முருகனின் பேராற்றலை எண்ணி மக்கள் நடுக்கத்துடன் வணங்குகின்றனர். அந்த முருகு என்னும் தெய்வத்தைப் புலவர்,

உரு கெழு சிறப்பின் முருகு – அகநானூறு 138:10

என்கிறார்.

ஆக, ஒன்றன் பேரளவு நமக்குள் ஏற்படுத்தும் மலைப்பினால் ஏற்படும் அச்சமே உரு.


4.3 வெரு

ஆளரவமற்ற ஒரு காட்டுப்பாதையில் இருவர் ஓர் இருசக்கரவாகனத்தில் செல்கின்றனர். எதிரே ஒரு காட்டுயானை உருகெழு தோற்றத்துடன் அஞ்சுவர  நின்றுகொண்டிருக்கிறது. பதற்றத்தில் அவர்கள் சரிந்துவிழுகின்றனர். எழுந்து பின்னே சிறிது தொலைவு ஓடுகின்றனர். நின்று திரும்பிப் பார்த்தால் யானை அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறது. சற்றே துணிவு வந்து அந்த இருவரும் வண்டியை நோக்கி மெதுவாகச் செல்கின்றனர். வெகுண்ட யானை அவர்களை நோக்கி விரைந்து வருகிறது. அவ்வளவுதான், அரண்டுபோய் அவர்கள் மீண்டும் பின் திரும்பி ஓடுகின்றனர். அந்தப் பீதி கலந்த அச்சமே வெரு. இவ்வாறு வெருண்டு ஓடச் செய்யும் வேழத்தின் நடையை,

வெருவரு செலவின் வெகுளி வேழம் - பொரு 172

       வேழத்து அன்ன வெருவரு செலவின் - மது 392

என்று கூறுகின்றன நம் இலக்கியங்கள்.

அக் காலத்து கிரேக்கர்களும் ரோமானியர்களும் நல்ல உடற்கட்டை உடையவர்களாய் இருந்தனர். கைகால்கள் எல்லாம் ‘கிண்’-ணென்று இருக்க, உடம்பெல்லாம் முறுக்கேறிய திண்மை கொண்டவர்கள் அவர்கள். பரேரெறுழ் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் என்பார் நக்கீரர் நெடுநல்வாடையில். பார்த்தாலேயே மிரண்டு பின்வாங்கத்தக்கதான அவர்களின் தோற்றத்தை,

மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் – முல்லைப்பாட்டு 59 - 61

என்று வருணிக்கிறது முல்லைப்பாட்டு. வெறும் அச்சத்தைத் தோற்றுவிக்கும் தோற்றம் அல்ல. உள்ளத்தில் உட்குவரச் செய்யும் தோற்றம் அல்ல. பார்த்துப் பிரமித்துப்போய் நிற்கக்கூடிய உருகெழு தோற்றமும் அல்ல. வெருண்டு பின்வாங்கவைக்கும் தோற்றம். அதுவே வெருவரு தோற்றம்.

இருங்கழி ஓரத்தில் அமர்ந்து நீண்ட தூண்டிலைப் போட்டு அமர்ந்திருக்கிறான் ஒரு மீனவன். நீருக்குள் நீந்திவந்த ஒரு பெரிய வாளைமீன் தூண்டிற்புழுவைக் கவ்வுகிறது. ‘சுருக்’-கென்று முள் தைக்க, ஒரே உதறு உதறி, தூண்டிற் கொக்கியின் பிடியிலிருந்து தப்பிவிடுகிறது. பின் வேறோர் இடத்துக்குச் செல்கிறது. அங்கு கரையிலிருக்கும் ஒரு நீண்ட நாணலின் நிழல் நீரின் மேல் விழுந்திருக்கிறது. நீரின் அலையால் அந்த நிழல் மெதுவாக அசைய, அதனைத் தூண்டில் என்று எண்ணிய மீன் மிரண்டு பின்வாங்குகிறதாம். இந்த அழகிய நகைச்சுவைக் காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை இவ்வாறு கூறுகிறது.

கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த

285    நெடும் கழை தூண்டில் நடுங்க, நாண் கொளீஇ
       கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
       பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
       நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்பெரும்பாணாற்றுப்படை 284 - 288

இப்போது பேச்சுத்தமிழில் இதனை அரட்டி என்பார்கள்.


அச்சத்தைக் குறிக்கும் இந்த உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் சில பாடல் வரிகளில் அடுத்தடுத்தும் வருவதுண்டு.

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி - புறம் 58/17
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி/மெல்லிய இனிய மேவர கிளந்து - குறி 137,138
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் - பதி 82/2
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் - கலி 100/2
பிறந்த ஞான்றே நின்னை உட்கி/சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே - பரி 14/25,26

இந்தச் சொற்களுக்குள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர்ந்து இந்தப் பாடல் வரிகளைப் படிக்கும்போதுதான் சங்க இலக்கியங்களின் மாண்பு தெரியவரும்.

நடந்துவரும் பாதை அச்சம் தருவது என்பதைக் கூறவந்த புலவர்களும் அந்தந்தச் சூழ்நிலைகளுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவதைப் பாருங்கள்.

அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார் - அகம் 157/9
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை - அகம் 267/5
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் - அகம் 198/15
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் - கலி 150/12

பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்களைப்போட்டு மிகச் சரியான பொருளை உணர்த்தும் சங்கப் புலவர்களின் மாண்பும், அவர்களின் எண்ணத்திற்கேற்ப சொற்களை எடுத்து வழங்கும் சங்கத் தமிழின் திறமும் அவற்றை மிக உன்னிப்பாகக் கவனித்துப் படித்துப்போருக்குத்தான் தெரியவரும்.

சங்கச் செய்யுளின் சொல்வளத்தையும், சொல் திறத்தையும் படித்துச் சுவைத்துப்பாருங்கள்.

N. Ganesan

unread,
Mar 10, 2015, 12:07:26 AM3/10/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, March 9, 2015 at 5:25:22 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
எருவிடத்தில் பூக்கும் செடிகள் தான் "எருக்கஞ்செடிகள்" ஆயினவோ என எண்ணத்தோன்றுகிறது."சாணி"ப்பிள்ளையாருக்கு எருக்க மாலை சூடுவதன் சூட்சுமமும் இதுவாக இருக்கலாம்.

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வழக்கம். இதனால்
எருக்கு என்ற பெயரில் இருந்து எரு (=உரம்) என்றானதோ எனத் தோன்றுகிறது. எருக்கு = gigantic swallow-wort or manure-leaf .
மலையாளத்தில் “எரிக்கு”  என்கின்றனர். அதனால் சூரியன் எரிக்கும் பாலைத்திணையில் அதிகம் விளையும் எரிக்கு/எருக்கு போலும். இதன் தழைகள் உரமாக மிகுதியும் (manure-leaf) பயன்படுவதால் எரு போலும். எருக்கஞ்ச் செடிக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வடமொழியில் எருக்கு அர்க்க என்கின்றார்கள். அர்க்க (அருக்கன்) என்றால் சூரியன்.


எரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம்.

நா. கணேசன்

துரை.ந.உ

unread,
Mar 10, 2015, 1:50:30 AM3/10/15
to Groups, வல்லமை, Pandiyaraja Paramasivam, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu
2015-03-09 12:18 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:


4. அஞ்சுதல்

 

 

ச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

4.1 அச்சம்


 

அச்சம் என்பது ஏதேனும் தவறு அல்லது ஊறு நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் ஏற்படுவது.

4.2 உட்கு


 

ஆக, உள்ளத்தை நடுக்கி, நிலைகுலைத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் அச்சமே உட்கு



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Mar 10, 2015, 2:21:31 AM3/10/15
to Groups, வல்லமை, Pandiyaraja Paramasivam, mozhitrust, annamalaie


2015-03-10 11:41 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


4. அஞ்சுதல்

 


4.3 உரு

 

 பேரளவு ஏற்படுத்திய திகைப்பினால் உண்டாகும் கலக்கம் கலந்த அச்சமே உரு.

 
​.​
 

துரை.ந.உ

unread,
Mar 10, 2015, 2:22:04 AM3/10/15
to Groups, வல்லமை, Pandiyaraja Paramasivam, mozhitrust, annamalaie


 

4.3 வெரு

 

துரை.ந.உ

unread,
Mar 10, 2015, 2:24:24 AM3/10/15
to Groups, வல்லமை, Pandiyaraja Paramasivam, mozhitrust, annamalaie


2015-03-10 11:43 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
வழக்கம்போல் கட்டுரைக்கு மெருகூட்டிய துரை அவர்களுக்கு மிக்க நன்றி.

​ நன்றி ஐயா 
 
முதல்படம் தெளிவாகத் தெரியவில்லை. ஒலியும் இல்லை. ரஜனிபோல் இருக்கிறது. என்ன காட்சி என்று தெரியவில்லை. நான் அதிகம் திரைப்படங்கள் பார்ப்பது இல்லை. என் அறியாமையே காரணம்.

​தளபதி :)
 
அடுத்தபடம் சூப்பர் என்று சொன்னால் எனக்குப் பிடிக்குமெனினும் தமிழின் நலன் கருதி மிக அருமை என்பேன். அந்த மின்னல் - இடிக்காட்சி எனக்குப் பின்னர் தேவைப்படும். மின்னலின் வகைகள் பற்றி எழுதவுள்ளேன்.

​வாழ்க ஐயா .... தேவைப்படும் எனில் என்னிடம் இன்னும் சில படங்கள் உள்ளன ... அனுப்பி வைக்கிறேன் .​
 

தேமொழி

unread,
Mar 10, 2015, 4:56:43 AM3/10/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, mozhi...@yahoo.com, annam...@uchicago.edu


On Monday, March 9, 2015 at 11:15:24 PM UTC-7, Pandiyaraja wrote:
உங்களுக்குத் தெரியுமா துரை? இந்த மின்னல் வகைகளை நம் சங்கப் புலவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பாடிவிட்டும் சென்றிருக்கிறார்கள். நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

 
நன்றி ஐயா, நேரம் கிடைக்கும் பொழுது மின்னல்கள் வகைகள் பற்றியும் எழுதுங்களேன் ...
எனக்கு படிக்க ஆர்வமுண்டு 

அவர்கள் மேகத்தின் பலவகைகளை தமிழிலக்கியத்தில் இருந்து பகிர்ந்து கொண்டது வியப்பளிக்கும் வண்ணம் இருந்தது 
........ தேமொழி



N. Ganesan

unread,
Mar 10, 2015, 10:16:21 AM3/10/15
to mint...@googlegroups.com, vallamai, thami...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
On Tuesday, March 10, 2015 at 4:30:36 AM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
2015-03-10 9:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம். - . கணேசன்

எரு வெப்பக்கருத்துடையது எனலாம். எங்கள் வீட்டில் சில மரஞ்செடி இலைகளை ஒரு குண்டில் இட்டு மூடி ஒவ்வொரு நாளும் அதன் மேல் தண்ணீர் தெளித்தோம். 8 மாதங்கள் கழித்து அதைத் தோண்டிய போது இலைகள் மட்கி அந்த குண்டே வெப்பமாக இருந்தது. எருவும் வ ஏப்பமாக இருந்தது. 

கைத்தொழுவான். 

எரிக்கு (அ) எருக்கு வெப்பக் கருத்துடையது. பயன்படாத பாலை, குறை நிலங்களில் மிகுதியும் வளர்வது.
அதன் தழைகளை உரமாகப் பயன்படுத்தியதால் உரத்திற்கு எரு என்றே ஒருபெயர் ஏற்பட்டது.
வெருவுதல் என்பதற்கும் எரி-/எரு(க்கு) ஒரு தொடர்புமில்லை.

சாணி வறட்டி செய்கிறோம். எரி பொருள் தான் வறட்டி (< வறள்- ). எருவறட்டி, எருமுட்டை
இதெல்லாம் எரிக்கப்படுதலால் வரும் பெயர்கள்.

எரிக்கஞ்செடி (எருக்கு)

இதன் காய் வெடித்து கிழவிதலைப் பஞ்சு போல் இருப்பதால், ஒரு உவமையகுபெயர் வடக்கே உண்டு


எருக்கு/எரிக்கு > எக்கெ (கன்னடம்). இது ஹிந்துஸ்தானியில் அக், சம்ஸ்க்ரிதத்தில் அர்க்க, ஹிந்தியில் ஆக், ....
என்றெல்லாம் த்ராவிடச் சொல் எரிக்கஞ் செடிக்கு இன்றளவும் வழங்குகிறது. அமெரிக்க கண்டத்தில்
செவ்விந்தியர்கள் தம் மொழியை இழந்து ஸ்பானிச் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுதல்போல
வடக்கே திராவிட மொழி மாறி இந்தியாகி இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு சான்றாம்.

rajam

unread,
Mar 10, 2015, 11:11:25 PM3/10/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு, ‘என்னுடைய தலைதாழ்ந்த வணக்கமும் நெஞ்சார்ந்த கைகூப்பும்’ ;-)

'இழையைப் பிரிக்காதே, இடியப்பமாக்காதே’ என்று மின்தமிழ்க்குழுமத்தில் முதலில் ஓங்கிக் கூச்சல்போட்டவள் நான்தான் என்று நினைக்கிறேன். அதனால் தயங்கிக்கொண்டேதான் ‘புள் பிறர் அறியவும்’ பற்றிய கேள்வியை இந்த இழையில் முன்வைத்தேன். 

ஒரு தனியிழையில் அதைப் பற்றி உரையாட விருப்பம். இன்னும் ஓரிரு நாளில் சொல்கிறேன். இப்போது வேறு சில வேலைகளுக்காக மெனக்கிட்டுக்கொண்டிருக்கிறேன்.

சுருக்கமாக … 

///விடை சரியா? மார்க் எவ்வளவு?/// என்று கேட்டிருந்தீர்கள்.

ம்ம்ம் … முயற்சிக்கு 35, தேடுதலுக்கு 25, பொருந்தாத பொருளை வெட்டி நீக்கியதுக்கு 50, … இப்படிச் சேர்த்துக்கொண்டே போகலாம்!!! ;-)

இந்தக் குறிஞ்சிப்பாட்டுத் தொடரில் ("புள் பிறர் அறியவும்”) உள்ள ‘புள்’ என்பதுக்கும் பறவைக்கும் நிமித்தத்துக்கும் வளையலுக்கும் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறேன். 

தொடர்ந்து யோசிப்போம். 'புள் பிறர் அறியவும்' 'புலம்பு வந்து அலைப்பவும்’ ஆகிய இரண்டுக்கும் 'ஒன்றால் மற்றொன்று' (காரண-காரியம்; cause-effect) என்றவகைத் தொடர்பு இருக்கிறதா என்றும் யோசிப்போம். நீங்கள் சுட்டிய மலைபடுகடாம் வரி உதவும்.

பிற பின்னர், தனி இழையில்.

அன்புடன்,
ராஜம்




On Mar 10, 2015, at 10:07 AM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

அன்புடை அம்மையீர்,
இன்றைய தமிழ்நாட்டு மேடைப்பேச்சு வழக்கில், 'என்னுடைய முதற்கண் வணக்கம்" (?!!). தங்கள் பாராட்டு மொழிகளுக்கு மிக்க நன்றி. அதன்மூலம் சிந்திக்க வைத்ததற்கும் மிக்க நன்றி. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் கேட்பார். பெரும்பாலோர் இது out of syllabus என்று சொல்லிவிட்டுப்போய்விடுவர். நான் அப்படியில்லை. எனவே தொடர்ந்து சிந்தித்தேன். பல இணையதளங்களைப் பார்வையிட்டேன். ஒரு பதில் கிடைத்தது.
முதலில், இந்தத் தொடர் வரும் பகுதி:

குறிஞ்சிப்பாட்டில் காதல்வயப்பட்ட தலைவி காதலனைக் காணாமல் பலவிதத் துயரங்களுக்கு ஆளாகி மெலிந்துபோகிறாள். இதைக் கண்ட செவிலி ஐயுறுகிறாள். தலைவியின் தோழியை விசாரிக்கிறாள். தோழி உண்மையை மெல்ல மெல்ல வெளிவிடுகிறாள். (இது புதியவர்களுக்கு)
ஒலிமென் கூந்தல் என்தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்
உட்கரந்துறையும் உய்யா அரும்படர்
........-------------------
இவ்வாறு செவிலி படும்பாட்டையும் தலைவியின் நிலையையும் தோழி எடுத்துக்கூறுகிறாள். இதன் பிற்பகுதியின் உரை: "என் தோழியின் நன்மை மிக்க அழகு கெடவும், நறும்தோள் மெலியவும், வளை நெகிழ்தலை ஏதிலார் அறியவும் --- " 
ஆக புள் என்பதற்கு வளை (நெகிழ்தல்) எனப் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அகராதியில் புள் என்பதற்கு வளையல் என்றொரு பொருள் உண்டு எனக் காண்கிறோம். ஆனால் புள் கை போகிய புன்தலை மகாஅர் என்ற மலைபடுகடாம் அடியில் வளையல் என்று பொருள்கொள்ளப்பட்டுத் தரப்படும் பொருள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அது வேறு கதை.
இங்கும் புள் என்பதற்கு வளையல் என்ற பொருள் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வளையல் என்னவோ ரகசியமாகக் கழன்றுவிட்டதாகவும் அதைப் பிறர் அறிந்துவிட்டனர் என்றும் கொள்ளப்படுகிற பொருள் பொருத்தமானதாகப் படவில்லை. பொதுவாகப் புள் என்பதற்குப் பறவை என்று பொருள். சில இடங்களில் இது பறவை மூலமாகக் கிடைக்கும் சகுனம் அல்லது நிமித்தம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. சில பறவைகள் குறுக்காகப் பறந்து செல்வது தீநிமித்தம் எனக்கொள்ளப்படுகிறது. இது புள்பகை எனப்படுகிறது (புறம் 68) இதற்குப் பொருள்சொன்ன உரைவேந்தர் இது காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட்டோடித் தீநிமித்தம் செய்தல் என்பார். காக்கை கரைவது விருந்தினர் வருகையைக் குறிக்கும் என்று இன்றும் நாம் பேசிக்கொள்வதுண்டு (இது நல்நிமித்தமா, தீநிமித்தமா?!!!!) ஆந்தை அலறுவது இன்றைக்கும் அஞ்சப்படுகிறது. "டே மச்சி, நாளைக்கு டெஸ்ட் இருக்காதுடா". "ஏண்டா பட்சி சொல்லுச்சா?" இன்றைக்கும் பேச்சு வழக்கு இது. இவ்வாறு தன் காதலுக்கோ, காதலனுக்கோ ஏதேனும் தீங்கு நேரலாம் எனப் பறவை மூலம் தீநிமித்தம் கண்டு நொந்துபோயிருந்தபோது, தலைவியின் தீநிமித்தத்தை எவ்வாறோ பிறர் அறிந்து கௌவை தூற்றினர் என்று இங்கே பொருள்கொள்ளலாம். "ஏண்டி அவ என்னண்டோ இருக்கா?" "அவ ஒரு பய மேல உசுரா இருக்கா. ராத்திரி ஆந்த அலறுச்சில்ல. அதில இருந்து கலங்கிப்போயிருக்கா" "ஆந்த அலறுன்னா என்னடி?" "போடி இவளே, ஆந்த அலறுனா ஆம்புளக்கி ஆகாதுடி".
விடை சரியா? மார்க் எவ்வளவு?

-- 
-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fKA_3hTTQwo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 10, 2015, 11:20:23 PM3/10/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com


On Tuesday, March 10, 2015 at 8:11:26 PM UTC-7, rajam wrote:
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு, ‘என்னுடைய தலைதாழ்ந்த வணக்கமும் நெஞ்சார்ந்த கைகூப்பும்’ ;-)

'இழையைப் பிரிக்காதே, இடியப்பமாக்காதே’ என்று மின்தமிழ்க்குழுமத்தில் முதலில் ஓங்கிக் கூச்சல்போட்டவள் நான்தான் என்று நினைக்கிறேன். அதனால் தயங்கிக்கொண்டேதான் ‘புள் பிறர் அறியவும்’ பற்றிய கேள்வியை இந்த இழையில் முன்வைத்தேன். 

ஒரு தனியிழையில் அதைப் பற்றி உரையாட விருப்பம். இன்னும் ஓரிரு நாளில் சொல்கிறேன். இப்போது வேறு சில வேலைகளுக்காக மெனக்கிட்டுக்கொண்டிருக்கிறேன்.

சுருக்கமாக … 

///விடை சரியா? மார்க் எவ்வளவு?/// என்று கேட்டிருந்தீர்கள்.

ம்ம்ம் … முயற்சிக்கு 35, தேடுதலுக்கு 25, பொருந்தாத பொருளை வெட்டி நீக்கியதுக்கு 50, … இப்படிச் சேர்த்துக்கொண்டே போகலாம்!!! ;-)

 

N. Ganesan

unread,
Mar 11, 2015, 11:09:56 AM3/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com


On Tuesday, March 10, 2015 at 10:07:56 AM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடை அம்மையீர்,
இன்றைய தமிழ்நாட்டு மேடைப்பேச்சு வழக்கில், 'என்னுடைய முதற்கண் வணக்கம்" (?!!). தங்கள் பாராட்டு மொழிகளுக்கு மிக்க நன்றி. அதன்மூலம் சிந்திக்க வைத்ததற்கும் மிக்க நன்றி. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் கேட்பார். பெரும்பாலோர் இது out of syllabus என்று சொல்லிவிட்டுப்போய்விடுவர். நான் அப்படியில்லை. எனவே தொடர்ந்து சிந்தித்தேன். பல இணையதளங்களைப் பார்வையிட்டேன். ஒரு பதில் கிடைத்தது.
முதலில், இந்தத் தொடர் வரும் பகுதி:

குறிஞ்சிப்பாட்டில் காதல்வயப்பட்ட தலைவி காதலனைக் காணாமல் பலவிதத் துயரங்களுக்கு ஆளாகி மெலிந்துபோகிறாள். இதைக் கண்ட செவிலி ஐயுறுகிறாள். தலைவியின் தோழியை விசாரிக்கிறாள். தோழி உண்மையை மெல்ல மெல்ல வெளிவிடுகிறாள். (இது புதியவர்களுக்கு)
ஒலிமென் கூந்தல் என்தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்
உட்கரந்துறையும் உய்யா அரும்படர்
........-------------------
இவ்வாறு செவிலி படும்பாட்டையும் தலைவியின் நிலையையும் தோழி எடுத்துக்கூறுகிறாள். இதன் பிற்பகுதியின் உரை: "என் தோழியின் நன்மை மிக்க அழகு கெடவும், நறும்தோள் மெலியவும், வளை நெகிழ்தலை ஏதிலார் அறியவும் --- "
ஆக புள் என்பதற்கு வளை (நெகிழ்தல்) எனப் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அகராதியில் புள் என்பதற்கு வளையல் என்றொரு பொருள் உண்டு எனக் காண்கிறோம். ஆனால் புள் கை போகிய புன்தலை மகாஅர் என்ற மலைபடுகடாம் அடியில் வளையல் என்று பொருள்கொள்ளப்பட்டுத் தரப்படும் பொருள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அது வேறு கதை.
இங்கும் புள் என்பதற்கு வளையல் என்ற பொருள் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வளையல் என்னவோ ரகசியமாகக் கழன்றுவிட்டதாகவும் அதைப் பிறர் அறிந்துவிட்டனர் என்றும் கொள்ளப்படுகிற பொருள் பொருத்தமானதாகப் படவில்லை. பொதுவாகப் புள் என்பதற்குப் பறவை என்று பொருள்.

புள் என்றால் பறவைகள் உண்ண மரம், நிலம், புழு குத்தும் அலகு எனப் பொருள். புள் > புள்ளி, பொள்ளு- ... உடலின் முக்கியமான உறுப்புகளின் பெயர்ச்சொற்கள் புள்- என்னும் வேர் கொண்டன.

பலவகை விளக்கங்கள் “புள்” என்றால் சொல்லலாம் எனத் தெரிகிறது. அவற்றில். நச்சினார்க்கினியர் வளையல் என்று விளக்கியிருக்கிறார். 14-ஆம் நூற்றாண்டில் அவ்வாறு ஏன் சொல்லியிருக்கிறார்? - எனப் பார்க்கவேண்டும். சங்க காலத்திலும் சரி, அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பும் சரி, சங்கை அறுத்து வளையல்களை இந்தியப் பெண்கள் விரும்பி அணிந்துள்ளனர். சங்கு (’sankha) என்ற வடசொல்லே கொங்கு ‘வளை’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபுதான். சிந்து சமவெளி நாகரீகம் கொற்கை, இராமேசுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான சங்குகளை இறக்குமதி செய்துள்ளது. 1938-ல் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ராவ்பகதூர் கே. என். தீக்‌ஷிதர் இந்த இறக்குமதி பற்றி சென்னைப் பல்கலைப் பேருரையில் சொல்லியுள்ளதைப் பாருங்கள்:
(பக். 12 கடைசி பாரா, பக். 13-ல் தொடர்ச்சி)
Considering that the conch shell which is typical of the Indus valley civilization and which seems to have been in extensive use in the Indus cities was obtained from the south-east coast of the Madras Presidency, it would not be too much to hope that a thorough investigation of the area in the Tinnevelly Dt. and the neighboring regions such as the ancient sea port of Korkai will one day lead to the discovery of some site which would be contemporary with or even a little later than the Indus civilization."

Of course, Prof. Jonathan Mark Kenoyer, Archaeologist, U. of Wisconsin, Madison has done Phd dissertation and scores of papers and excavations on the 'sankha bangles, ... in Indus IVC.
See prof. J. M. Kenoyer's CV (& importance of 'sankha from Tamizhakam in Indus Valley of the Bronze Age).

Here is a lecture by J. M. Kenoyer on the relationship between Meluḫḫa (IVC) and Mesopotamia,
(Scholars like him, for generations, have dug and excavated Sumerian artefacts, and we see how fragile World's archaeological heritage is. ISIS thugs destroying all of Iraq's museums.)

Naccin2Akkin2iyar taking 'puL' (=bird) as "kuruku" (White Stork or Painted Stork) and as an "aaku-peyar" since stork's white color matches with that of Conch bangles, so traditionally vaLai is often called "kuruku" (stork) in Tamil literature for at least 2000 years. Nac. takes puL = kuruku (white stork, நாரை) = வளை (bangle). Let me give some examples where kuruku is used to refer to girls' bangles in Sangam literature onwards:

(a)
புட்கை போகிய புன்றலை மகாரொடு (மலை படு. 253). இங்கே நச்சினார்க்கினியர்
புட்கை = புள், அதாவது குருகு நிறத்த வளை அணியும் சிறுமியர் என்று விளக்கியுள்ளர்.
அதே போல், ”நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்” இங்கேயும் புள் என்பது குருகு (நாரை)
நிறத்த வளையல் என்றே பொருள் கொண்டார்.

(b) பதிற்றுப்பத்து
அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக்
கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குருகு ஓப்பும்

இங்கே, வெண்கை என்றது குருகு (வளையல்) அணிந்த மகளிர்
வெள்ளாங்குருகை ஓப்புதலாம்.

(c) குறுந்தொகை 303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
அம்மூவன் பாடல் இது. இங்கே குருகு - தலைவின் வளை ஒலி கேட்டுத் துஞ்சும்
தலைவனைச் சிலேடையாகச் சொல்கிறாள். அவளை விரைவில் மணந்துகொள் என்கிறாள் தோழி.

(d) இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகித்
    தன் துணைப் பிரிந்த யாஅம் தனிக் குருகு உசவுமே, நல்லந்துவனார், கலித்தொகை
தலைவன் பிரிய, தலைவியின் குருகு, அதாவது வளைகள், கழன்று நெகிழ்தலைப் பாடுகிறார்.
சங்க இலக்கியத்தில் குருகு = வளை என்று பொருள்படும் இடங்களை நன்கு பார்த்தால்
சிந்து நாகரீகத்தில் ஏன் சங்கு வளையல்கள் என்று புரிந்துகொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

(e) அங்கைசேப்பக் குருகிரங்க
          வலங்கலம்பூங் குழறுயல்வர
      மங்கைநல்லார் பவழவம்மி
          யரைத்தசாந்த மலர்பெய்மாலை (சிந்தாமணி, இலக்கணையார் இலம்பகம்).
நச்சினார்க்கினியர் விளக்குகிறார்: அங்கை சேப்ப - உள்ளங்கை சிவப்ப; குருகு இரங்க - வளை ஒலிக்க

குருகு = நாரையின் வெள்ளை நிறத்தால் Bracelet, armlet; கைவளை. கைகுவிபிடித்துக் குருகணி செறித்த (கல்லா. 44, 22). வெண்குருகு, வெள்ளாங்குருகு (=நாரை). ”சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகிஓர் வாளையின் வாயில்” (சுந்தரர் தேவாரம்).

(f) மாணிக்கவாசகர் சிலேடையில் சிறப்பாகச் சில இடங்களில் சொல்லியுள்ளார். உதாரணம், கோவை இலக்கியங்களில் தலைவி பரத்தையரை கூட்டுவிக்கும் தொழிலுடைய பாணனுக்கு வாயில் மறுப்பாள். ‘உள்ளே வராதே’ என்று கிடக்கும் கல்லை வீசி எறிவாள். அச் சினம் தணிக்கப் பாணன் புலந்துரைப்பான். அப்பொழுது கன்றே அமையும். உண்ணத் தந்த ஆவின் கன்று எனவும், என்னைப் பார்த்துக் கொள்ளும் கோவத்தைத் தணியும் என்றும் பாணன் வேண்டுவன். ஆக் கன்று வேளாண்மாந்தர் பாணர்க்கு உணத்தருதலை சங்க இலக்கியம் முதல் அப்பர், ... எல்லோரிடமும் 2000 வருட இலக்கியங்களில் காணலாகும்.

மாணிக்கவாசகர் இன்னோர் இடத்திலும் சிலேடையை - சங்க இலக்கியம் போல லாவகமாகக் கையாளுகிறார். அவரது திருவெம்பாவைப் பாட்டு ஒன்றில் குருகு என்பது வெள்ளை நாரையும், உமையாளின் கை வளைகளையும் குறிக்குமாறு பாடியுள்ளது படித்து இன்புறத்தக்கது.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

(g) இன்னும் பல உதாரணங்கள் குருகுப் புள்ளை வளையல் என்று பொருள்கொள்ளும் அகப்பாடல்களைக் காட்டலாம். காளமேகம் - சிலேடை:

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே! 

ஓர் உரை. இன்னும் சொல்லலாம்.

5000 ஆண்டுகளாய் இந்திய மாதர்கள் விரும்பி அணியும் சங்கு வளையல்கள் குருகு, புள் என
தமிழில் அழைக்கப்பட்ட பழமரபை நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். நச்சரையும் கருத்தில் 
கொண்டு மேலும் ஆராயலாம்.

நா. கணேசன்



 
சில இடங்களில் இது பறவை மூலமாகக் கிடைக்கும் சகுனம் அல்லது நிமித்தம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. சில பறவைகள் குறுக்காகப் பறந்து செல்வது தீநிமித்தம் எனக்கொள்ளப்படுகிறது. இது புள்பகை எனப்படுகிறது (புறம் 68) இதற்குப் பொருள்சொன்ன உரைவேந்தர் இது காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட்டோடித் தீநிமித்தம் செய்தல் என்பார். காக்கை கரைவது விருந்தினர் வருகையைக் குறிக்கும் என்று இன்றும் நாம் பேசிக்கொள்வதுண்டு (இது நல்நிமித்தமா, தீநிமித்தமா?!!!!) ஆந்தை அலறுவது இன்றைக்கும் அஞ்சப்படுகிறது. "டே மச்சி, நாளைக்கு டெஸ்ட் இருக்காதுடா". "ஏண்டா பட்சி சொல்லுச்சா?" இன்றைக்கும் பேச்சு வழக்கு இது. இவ்வாறு தன் காதலுக்கோ, காதலனுக்கோ ஏதேனும் தீங்கு நேரலாம் எனப் பறவை மூலம் தீநிமித்தம் கண்டு நொந்துபோயிருந்தபோது, தலைவியின் தீநிமித்தத்தை எவ்வாறோ பிறர் அறிந்து கௌவை தூற்றினர் என்று இங்கே பொருள்கொள்ளலாம். "ஏண்டி அவ என்னண்டோ இருக்கா?" "அவ ஒரு பய மேல உசுரா இருக்கா. ராத்திரி ஆந்த அலறுச்சில்ல. அதில இருந்து கலங்கிப்போயிருக்கா" "ஆந்த அலறுன்னா என்னடி?" "போடி இவளே, ஆந்த அலறுனா ஆம்புளக்கி ஆகாதுடி".
விடை சரியா? மார்க் எவ்வளவு?
ப.பாண்டியராஜா

On Tuesday, March 10, 2015 at 1:25:03 AM UTC+5:30, rajam wrote:
...

rajam

unread,
Mar 11, 2015, 5:18:07 PM3/11/15
to mint...@googlegroups.com, vallamai, pipi...@gmail.com
///நாங்கள் PUC படிக்கும்போது கணிதப்பாட வினாத்தாளில் Two thirds of the paper carries full marks என்று போட்டிருப்பார்கள். Answer any five போன்றவை கிடையாது. பெரியதும், சின்னதுமாகப் பலவித மதிப்பெண்களைக்கொண்ட கேள்விகள் இருக்கும். எதைவேண்டுமானாலும் எழுதலாம். அத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். சரியாக இருந்தால் மார்க் உண்டு. கேள்விக்கான மார்க்குகளைக் கூட்டினால் சுமார் 150 வரும். சிலருக்கு மதிப்பெண்களின் மொத்தம் நூற்றுக்கு மேல் வரும். அப்படிவந்தால் கடைசியில் 100/100 எனப் போடுவார்கள். சிலர் 100-க்கு மேலே வந்தாலே விடைத்தாள் திருத்துவதை நிறுத்தி வெளியே 100/100 போட்டுவிடுவார்கள். அம்மையார் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் என எண்ணுகிறேன். அவரும் கணிதம் படித்தவர்தானே!///

ஆமாமா, ஆமாமா! அப்படியே அந்தக்காலப் பி.யூ.சி பழக்கம் இங்கேயும் தொடர்ந்ததுங்க — யூனிக்ஸ் (UNIX) வகுப்பில் ஆசிரியரை வியப்பில் ஆழ்த்தி 60/50 என்ற மதிப்பெண் வாங்கினேனாக்கும்! ;-)


///(என்ன, தேடுதலுக்கான 25 கொஞ்சம் கம்மி. நான் தேடியெடுத்த 90-உக்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட நேரமில்லை. ///

நேரமில்லாமல் போனது விளங்காமலில்லை! ஆனாலும், தேடுதலுக்கான மதிப்பெண் ஏற்கனவே “முயற்சியில்” சேர்க்கப்பட்டுவிட்டது!!! ;-) கூடுதல் மதிப்பெண் வேணும்-னா … பின்னாடி முயற்சியின் வெற்றியில் பாப்பம், என்னா!

+++++++++++++++++++++

அன்புள்ள முனைவர் பாண்டியராஜா, 

என்னை மன்னிக்கவும். இழை பிசிறுபடுகிறது. பிற்காலத்து நூல்களிலிருந்து பாணன் போன்றோர் பற்றிய கருத்துகள் இங்கே வலிந்து புகுத்தப்படுவது தேவையில்லை. 

எனவே கூடிய விரைவில் நம் நோக்குக்காக இன்னோர் இழை தொடங்குவேன். 

நம் நோக்கு: உங்கள் “ சங்கச் சொல்வளம்” என்ற தொடருக்காக, சங்க இலக்கியங்களான குறிஞ்சிப்பாட்டு வரி, மலைபடுகடாம் வரி … போன்றவற்றைப் புரிந்துகொள்வது. 

இதற்கு இடையூறாக எந்தப் பதிவு அமைந்தாலும் ஒதுங்கிவிடுவதே நல்லது. 

இதுவரை, வேந்தன் சரவணன் கருத்து நல்லா’ருக்கு. தொடருவோம்.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்


On Mar 11, 2015, at 3:53 AM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

மறந்துவிட்டதா பேராசிரியர் ஐயா!
நாங்கள் PUC படிக்கும்போது கணிதப்பாட வினாத்தாளில் Two thirds of the paper carries full marks என்று போட்டிருப்பார்கள். Answer any five போன்றவை கிடையாது. பெரியதும், சின்னதுமாகப் பலவித மதிப்பெண்களைக்கொண்ட கேள்விகள் இருக்கும். எதைவேண்டுமானாலும் எழுதலாம். அத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். சரியாக இருந்தால் மார்க் உண்டு. கேள்விக்கான மார்க்குகளைக் கூட்டினால் சுமார் 150 வரும். சிலருக்கு மதிப்பெண்களின் மொத்தம் நூற்றுக்கு மேல் வரும். அப்படிவந்தால் கடைசியில் 100/100 எனப் போடுவார்கள். சிலர் 100-க்கு மேலே வந்தாலே விடைத்தாள் திருத்துவதை நிறுத்தி வெளியே 100/100 போட்டுவிடுவார்கள். அம்மையார் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் என எண்ணுகிறேன். அவரும் கணிதம் படித்தவர்தானே!
எப்படியோ சரி அல்லாத விடை எழுதி, Centum வாங்கிவிட்டேன்.
எனக்கு முதலிலேயே தெரியும், இது அவருக்கு அறியா வினா அல்ல என்று. மலைபடுகடாம்-இல் வரும் புள் பற்றிய எனது விளக்கத்தைக் கேட்டால் சிரிப்பீர்கள். ஆனால் அதுவும் வளையல் அல்ல என்பது உறுதி. இந்த வழியில் சென்று வேந்தன் சற்று கிட்ட வந்திருக்கிறார் என எண்ணுகிறேன். பார்ப்போம் அம்மையாரின் வேறு இழையை.
ப.பாண்டியராஜா
(என்ன, தேடுதலுக்கான 25 கொஞ்சம் கம்மி. நான் தேடியெடுத்த 90-உக்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட நேரமில்லை.

On Wednesday, March 11, 2015 at 9:17:17 AM UTC+5:30, கணினிதாசன் wrote:
ஒரு புள்ளிவிவரப்புலி செய்யுற வேலையா இது
100 மதிப்பெண்கள் அதிகம் என்று வரையறுத்தபின் 110 எப்படிப் போட முடியும்?
அதைவிடக் கொடுமை 110% 
தாங்கமுடியல சாமி கண்ணச் சுத்துது
கணினிதாசன்


தேமொழி

unread,
Mar 11, 2015, 5:31:17 PM3/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com


On Wednesday, March 11, 2015 at 2:18:08 PM UTC-7, rajam wrote:
///நாங்கள் PUC படிக்கும்போது கணிதப்பாட வினாத்தாளில் Two thirds of the paper carries full marks என்று போட்டிருப்பார்கள். Answer any five போன்றவை கிடையாது. பெரியதும், சின்னதுமாகப் பலவித மதிப்பெண்களைக்கொண்ட கேள்விகள் இருக்கும். எதைவேண்டுமானாலும் எழுதலாம். அத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். சரியாக இருந்தால் மார்க் உண்டு. கேள்விக்கான மார்க்குகளைக் கூட்டினால் சுமார் 150 வரும். சிலருக்கு மதிப்பெண்களின் மொத்தம் நூற்றுக்கு மேல் வரும். அப்படிவந்தால் கடைசியில் 100/100 எனப் போடுவார்கள். சிலர் 100-க்கு மேலே வந்தாலே விடைத்தாள் திருத்துவதை நிறுத்தி வெளியே 100/100 போட்டுவிடுவார்கள். அம்மையார் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் என எண்ணுகிறேன். அவரும் கணிதம் படித்தவர்தானே!///

ஆமாமா, ஆமாமா! அப்படியே அந்தக்காலப் பி.யூ.சி பழக்கம் இங்கேயும் தொடர்ந்ததுங்க — யூனிக்ஸ் (UNIX) வகுப்பில் ஆசிரியரை வியப்பில் ஆழ்த்தி 60/50 என்ற மதிப்பெண் வாங்கினேனாக்கும்! ;-)





 


///(என்ன, தேடுதலுக்கான 25 கொஞ்சம் கம்மி. நான் தேடியெடுத்த 90-உக்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட நேரமில்லை. ///

நேரமில்லாமல் போனது விளங்காமலில்லை! ஆனாலும், தேடுதலுக்கான மதிப்பெண் ஏற்கனவே “முயற்சியில்” சேர்க்கப்பட்டுவிட்டது!!! ;-) கூடுதல் மதிப்பெண் வேணும்-னா … பின்னாடி முயற்சியின் வெற்றியில் பாப்பம், என்னா!

+++++++++++++++++++++

அன்புள்ள முனைவர் பாண்டியராஜா, 

என்னை மன்னிக்கவும். இழை பிசிறுபடுகிறது. பிற்காலத்து நூல்களிலிருந்து பாணன் போன்றோர் பற்றிய கருத்துகள் இங்கே வலிந்து புகுத்தப்படுவது தேவையில்லை. 

...

N. Ganesan

unread,
Mar 12, 2015, 5:40:59 AM3/12/15
to mint...@googlegroups.com, vallamai, N. Ganesan


On Wednesday, March 11, 2015 at 7:55:13 PM UTC-7, myself wrote:
இந்த இழைக்கும் திரு கணேசன் எழுதியதற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. திரு கணேசன் இதை யாருக்குச் சொல்ல விரும்பினாரோ அவருக்கே நேரடியாகத் தனி இழை தொடங்கி அனுப்பி இருக்கலாம்.  இங்கு இதன் தேவை என்ன என்றே புரியவில்லை! :(

இந்த இழையில் எருக்கு/எரிக்கு என்னும் சங்கத் தமிழ்ச்சொல் பற்றி முதலில் கருத்து தெரிவித்தவர் கவிஞர் ருத்ரா அவர்கள் ஆவார். படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எரிக்கு என்று மலையாளத்தில் வழங்கப்படும் “எரி” தொடர்புடைய தாவரம் இது எனச் சொன்னேன். திங்களன் கைத்தொழுவான் வெப்பக் கருத்து எரிக்கு (அ) எருக்கு ஸ்தாவரப் பெயரில் உள்ளதை விளக்கினார். அதனை இங்கே கொடுத்துள்ளேன். பார்க்கலாம்:

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் உறவினர்கள் நடத்தும் டெக்ஸ்டைல் மில்களில் கார்டிங் மெசின் பல வடிவங்களில் பார்த்துள்ளேன். ‘carded cotton' ருஇ/ரூஇ என்று பல வடமொழிகளில் வழங்குதலுக்கும் எரு(க்கு) காரணம் ஆகலாம்.

நா. கணேசன்
 

2015-03-10 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, March 10, 2015 at 4:30:36 AM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
2015-03-10 9:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம். - . கணேசன்

எரு வெப்பக்கருத்துடையது எனலாம். எங்கள் வீட்டில் சில மரஞ்செடி இலைகளை ஒரு குண்டில் இட்டு மூடி ஒவ்வொரு நாளும் அதன் மேல் தண்ணீர் தெளித்தோம். 8 மாதங்கள் கழித்து அதைத் தோண்டிய போது இலைகள் மட்கி அந்த குண்டே வெப்பமாக இருந்தது. எருவும் வ ஏப்பமாக இருந்தது. 

கைத்தொழுவான். 

எரிக்கு (அ) எருக்கு வெப்பக் கருத்துடையது. பயன்படாத பாலை, குறை நிலங்களில் மிகுதியும் வளர்வது.
அதன் தழைகளை உரமாகப் பயன்படுத்தியதால் உரத்திற்கு எரு என்றே ஒருபெயர் ஏற்பட்டது.
வெருவுதல் என்பதற்கும் எரி-/எரு(க்கு) ஒரு தொடர்புமில்லை.

சாணி வறட்டி செய்கிறோம். எரி பொருள் தான் வறட்டி (< வறள்- ). எருவறட்டி, எருமுட்டை
இதெல்லாம் எரிக்கப்படுதலால் வரும் பெயர்கள்.

எரிக்கஞ்செடி (எருக்கு)

இதன் காய் வெடித்து கிழவிதலைப் பஞ்சு போல் இருப்பதால், ஒரு உவமையகுபெயர் வடக்கே உண்டு


எருக்கு/எரிக்கு > எக்கெ (கன்னடம்). இது ஹிந்துஸ்தானியில் அக், சம்ஸ்க்ரிதத்தில் அர்க்க, ஹிந்தி
...

வேந்தன் அரசு

unread,
Mar 12, 2015, 6:27:55 AM3/12/15
to vallamai, மின்தமிழ், Pandiyaraja Paramasivam, Kalairajan Krishnan, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


15 பிப்ரவரி, 2015 ’அன்று’ 9:02 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
அன்பின் பேரா. பாண்டியராசா அவர்கட்கு,

சில உதாரணங்கள், நிழற்று = நிழத்து என நிகண்டுகளிலும், பழைய உரைகளிலும் ஏன் தருகின்றனர் என்று காணப்
பார்ப்போம்:

(1) பற்று = பத்து
தீப் பற்றியது = தீப் பத்தியது
(2) காற்று = காத்து
(3) ஏற்று = ஏத்து
(4) புற்று = புத்து
(5) ஆற்று = ஆத்து
(காப்பி சூடா இருக்கு. ஆத்திக் கொடு)
(6) சுற்று = சுத்து
(7) இற்றுப்போனது = இத்துப் போச்சு
(8)மாற்று = மாத்து
(9) ஊற்று = ஊத்து
(10) கீற்று = கீத்து
(11) போற்று = போத்து (கேரளாவில் போற்றி/போத்தி)
...
இவை போல,
நிழற்று = நிழத்து


இவை பிற்காலத்து திரிபுகள்.

பாசறையில் காவலாளர்
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்,                        
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (50 - 54)
கருத்துரை
நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமத்தில் - காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள். நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல  தலையில்  தலைப்பாகையைக் கட்டிஉடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர், தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச் செய்தனர்.
சொற்பொருள் விளக்கம்
நெடுநா - நீண்டநாக்குஒண்மணி - ஒளிபொருந்திய மணிஅழகிய மணிநிழத்திய -ஓசை அடங்கியநடுநாள் - நடு யாமத்தில்அதிரல் - காட்டு மல்லிபூத்த - பூத்திருக்கும்,ஆடுகொடி - ஆடுகின்ற கொடிபடாஅர் - சிறுதூறுகள்சிதர் - நீர்த் திவலை; மழைத்தூறல்வரல் -வருகின்றஅசை - அசைந்துவளி - காற்றுஅசை - அசைந்துவந்துஆங்கு - வருவது போல,துகில் - துணிமுடித்து - தலைப்பாகைக் கட்டிபோர்த்த - உடம்பைப் போர்த்திதூங்கல் - தூக்க மயக்கம்ஓங்கு - உயர்ந்தநடை - ஒழுக்கம்பெருமூதாளர் - வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்,ஏமம் - காவல்சூழ - சுற்றிவர,

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 12, 2015, 10:47:31 AM3/12/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Thursday, March 12, 2015 at 3:27:55 AM UTC-7, வேந்தன் அரசு wrote:


15 பிப்ரவரி, 2015 ’அன்று’ 9:02 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
அன்பின் பேரா. பாண்டியராசா அவர்கட்கு,

சில உதாரணங்கள், நிழற்று = நிழத்து என நிகண்டுகளிலும், பழைய உரைகளிலும் ஏன் தருகின்றனர் என்று காணப்
பார்ப்போம்:

(1) பற்று = பத்து
தீப் பற்றியது = தீப் பத்தியது
(2) காற்று = காத்து
(3) ஏற்று = ஏத்து
(4) புற்று = புத்து
(5) ஆற்று = ஆத்து
(காப்பி சூடா இருக்கு. ஆத்திக் கொடு)
(6) சுற்று = சுத்து
(7) இற்றுப்போனது = இத்துப் போச்சு
(8)மாற்று = மாத்து
(9) ஊற்று = ஊத்து
(10) கீற்று = கீத்து
(11) போற்று = போத்து (கேரளாவில் போற்றி/போத்தி)
...
இவை போல,
நிழற்று = நிழத்து


இவை பிற்காலத்து திரிபுகள்.

அவ்வாறு தெரியவில்லை. அடிப்படையில் நிழற்று- எனலும், நிழத்து- எனலும் ஒரே வேரில் தோன்றியன.
யாரும் என்ற சொல் சில இடங்களில் ஆரும் என்று சங்க இலக்கியத்தில் வருகிறது. யாமை ஆமை என்று
வருகிறது. யாரும் = ஆரும், யாமை = ஆமை,யால் = ஆல் (ஆலமரம்)  ... போல நிழற்றல் = நிழத்தல்.

ஏற்று = ஏத்து, முற்று = முத்து, .... பார்க்கிறோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 12, 2015, 11:05:07 AM3/12/15
to mint...@googlegroups.com, vallamai
On Tuesday, March 10, 2015 at 9:25:28 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:
இந்த புள் ஒலி பெரும்பாலும் ஏதாகிலும் ஒரு பறவையின் ஒலியாகவே இருக்க வேண்டும். இப்படி பறவையின் ஒலியை எழுப்பி வேடர்கள் பறவைகளைப் பிடிப்பதுமுண்டாம். இதனை வள்ளுவர் கூடா ஒழுக்கத்தில் கூறுகிறார்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274



நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்
உட்கரந்துறையும் உய்யா அரும்படர்”

இந்த இரண்டு அடிகளையும் ஒருசேரப் பார்க்கவேண்டும்.
கவின் தொலைகிறது. தோளில் அணிந்துள்ள தொடி நெகிழ்ந்து
தங்கமாட்டேன் என்கிறது. பொன்னாசாரி வந்து சரி செய்ய வேண்டிய நிலை.
புள் என்னும் வளையல்கள் கழன்று விழுகின்றன. மெலிந்து தொடி கீழே விழுந்தும்,
கையில் வளையல் இல்லாமல் இருக்கும் பரிதாபமான நிலையில் தலைவி.
தலைவன் இல்லாமையால் ஒரே தனிமைத் துயரம். அதனால் புலம்பல் நேருகிறது. 
புள் என்னும் வளைகள் எழுப்பும் ஒலி பற்றி சீவக சிந்தாமணியில் இருக்கிறது. 
மணிமேகலையிலும் உண்டு. குருகு என்றும், புள் என்றும் வளைகளைக் கூறும் காரணம்
மிகப் பழமையானது. அதுபற்றி எழுதினேன். கட்டுரை ஆக்கலாம்.

நச்சினார்க்கினியர் புள் என்றாலும், குருகு என்றாலும் வளை என்று சொல்லியுள்ளார்கள்.
ஆனால், அவ்வாறு குருகு (அ) புள் என்றால் வளையலைக் குறிக்கும் - சங்க இலக்கியத்திலிருந்து 
1500 வருஷமாய் ஏன்  பாடியுள்ளனர்  என விளக்கம் தரவில்லை. மாணிக்கவாசகர் தரும் இரண்டு
சிலேடைகள் - பாணன், குருகு பற்றியன - பார்த்தோம். 

நா. கணேசன்
 




2015-03-11 9:40 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
அம்மா

புள் என்பது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான ஒரு சங்கேத ஒலிக்குறிப்பாக இருக்கலாம். அதாவது, தலைவன் தான் வந்துவிட்டதை தலைவிக்குத் தெரிவிக்க ஒருவகையான ஒலியை எழுப்புவான். அதைக்கேட்டதும் தலைவி அவனைச் சந்திக்கத் தயாராவாள். 

இந்த புள் ஓசையினை தலைவியின் குடும்பத்தார் அறிந்துவிட்டதனால் தலைவியை வெளியே விடாமல் இற்செறித்தனர். இதனால் தலைவியை தனிமைத் துன்பம் அலைக்கக் கழிக்கத் துவங்கியது. 

N. Ganesan

unread,
Mar 12, 2015, 9:34:20 PM3/12/15
to mint...@googlegroups.com, vallamai, Oru Arizonan


On Thursday, March 12, 2015 at 12:55:38 PM UTC-7, கணினிதாசன் wrote:

2015-03-12 22:09 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
Cause . Effect

​விளைவுகள் என்று கருதுவதற்குப் பதிலாக அறிகுறிகள் என்று கருதலாமே

சென்னை ​மனநோய் மருத்துவமனையின் இயக்குனராக இருந்த டாக்டர் ஓ சோமசுந்தரம் சங்க இலக்கியத்தில்குறிப்பிடப்பட்ட பசலைநோய் பற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.  அவர் நோயின் அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளார்


பேராசிரியரே,

ஆர்வத்தைத் தூண்டும் நூலாக உள்ளது. படிக்க முயல்வேன். கண்ணதாசன், பாரதியார் போன்றோர் குடித்தல், கஞ்சா போன்ற
ஆளுமைகளால் பரமானந்தநிலையை எட்டிப் பாடியதை எழுதியவர்தானே இந்த மருத்துவர்? அது நல்ல கட்டுரை. முன்பு பேசியுள்ளோம்.

மரு. சோமுவின் நூல் விமரிசனம்:

 


புள் என்ற சொல் குறிஞ்சித் திணையிலும் முல்லை மற்றும் நெய்தலிலும் திணை ஒழிக்கத்தின் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளதாகக் கருதினாள் குறிஞ்சியில் பிரிவுபற்றி விளக்க வாய்ப்பில்லை.  குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவிக்குமட்டுமே தெரிந்த புள்ளின் ஒலியைப் பயன்படுத்தி தலைவியைச் சந்தித்திருக்கவேண்டும்.  அதுவே வெளியில் கசிந்து அனைவரும் அறியும் நிலை உருவாகியிருக்கவேண்டும் என்று கருதினால் புள் கழன்றுவிழும் வளையல்களைவிட காட்டுமைனாவின் ஒலிப்பைத்தான்  குறிப்பிட வாய்ப்புள்ளது.

அவ்வாறு தெரியவில்லை. குருகு (அ) புள் என்பது Egrets (வெள்குருகு = Little Egret, சிறுவெண்குருகு - Egret Smaller) நிறப் பண்பினால் வலையலுக்கு ஆகிவரும் பண்பாகுபெயர். இதன் பழமை 5000 ஆண்டுகளாய் இந்தியக் கலாசாரத்தில் இருப்பதை எழுதியுள்ளேன். 

நச்சினார்க்கினியர் உரையில் விளக்கமாக Cascade of Events சொல்லியிருக்கும் குறிஞ்சிப்பாட்டை விளக்கியுள்ளாரே.
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் புள் என்பது நாகணவாய் அல்லது பிற பறவைகளோ, அவற்றின்
ஒலியோ, நிமித்தமோ அல்ல என்று விளக்கியிருக்கிறார். மணிமேகலையும், சிந்தாமணியும் அழகாகப்
புள் = வளையல் என்று பாடுவதைப் பாருங்கள்.

நாகணவாய் - மைனாப் பறவை பேசும் காணொளிகள் கண்டேன். நன்றி. இன்னும் தொகுக்கலாம்.
அரிசோனா திரு. மகாதேவனிடம் பேசும்போது, வேதங்களைக் கணம் பாடுதல் பற்றி விளக்கினார்.
எது என்றாலும் கேட்க இன்று எங்கள் நண்பர் இராசரத்தினபட்டர் இல்லை.

நாகணவாய் = மனிதர் நா கணம் பாடுவதுபோல், தன் வாயால் சொல்வதைச் சொல்லும் நா+கண+வாய் போலும்.
பூவை என்றும் நாகணவாய்க்கு பெண்கள் போல் மிழற்றும் மழலை ஆகுபெயர் உண்டு. 


நா. கணேசன்


கணினிதாசன்

N. Ganesan

unread,
Mar 13, 2015, 12:51:42 AM3/13/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Thursday, March 12, 2015 at 9:39:55 AM UTC-7, Pandiyaraja wrote:
No Result is also a Result என்பார் பேராசிரியர் சங்கரராஜுலு. இதோ ஒரு No Result.

புள் பிறர் அறியவும் – குறிஞ்சிப்பாட்டு 10

(கட்டுரையின் முழுமை கருதி இக் கூற்றின் முன்-பின் பகுதிகள் கொடுக்கப்படுகின்றன)

நன்றி, பேரா. பாண்டியராசா. உச்சிமேல் உங்களைப் போன்ற புலமையுடையோர்கொள்
நச்சினார்க்கினியர் அழகாக விளக்கியுள்ளார். அதன் பொருளை உங்கள் குறிஞ்சிப்பாட்டு
விளக்கம் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. சங்க இலக்கியத்தின் சிறந்த புலவர்களாம்
கபிலபரணர் பாடல்களால் அவர்களுக்குப் பின்வந்த தமிழ்க் கவிகளும், இந்திய
தொன்மையான கலாச்சாரமும் ஒருவாறு புரிந்துகொள்ள, ஆராய உதவுகிறது.
இந்தியா ஒரே கலாச்சாரம். பண்டை வேளாண் நாகரீகத்தின் பல நல்லதும், அல்லதும்
இருந்த நிலையை நாம் படிக்க இயல்கிறது. உங்கள் விரிவான சங்கச் சொல்வளம்
ஆய்வுகட்கும் விளக்கங்களுக்கும் நன்றி. 
 

தினைப்புனத்தில் கதிர்களைக் கொத்தித் தின்ன வரும் பறவைகளை விரட்டுவதற்காகத் தோழியருடன் தலைவி தினைப்புனக் காவலுக்குச் செல்கிறாள். காவல் முடிந்து வீடு திரும்பும் மாலை வேளையில் அருவியில் குளித்துப் பூக்களைச் சேகரித்துக்கொண்டிருக்கும் (99 வகைப் பூக்கள்!) வேளையில் அங்கு தலைவன் வருகிறான். அப்போது அங்கு வரும் யானையின் சீற்றத்தினின்றும் அவர்களைக் காக்கிறான். இருவரும் காதல்கொள்கிறார்கள். அவன் வேறூர்க்காரன். அன்றிலிருந்து முடிந்தபோதெல்லாம் இரவில் காதலியின் வீட்டுப்பக்கம் வருகிறான். யாருக்கும் தெரியாமல் அவர்கள் சந்திப்பு நிகழ்கிறது. சில நாட்களில் சந்திப்பு நிகழாமற்போனதும் உண்டு.

சிலநாட்களில், காதலன் வந்துசெல்லும் தடயத்தை எவ்வாறோ உணர்ந்த காவலர்கள், காதலியின் வீட்டுப்பக்கம் காவலைக் கடுமையாக்குகிறார்கள். சிலநாட்களில் தெருநாய்கள் இவன் வரவை மோப்பம் பிடித்துத் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. சிலநாட்களில் காதலியின் அருகே படுத்திருக்கும் தாய் தற்செயலாக எழுந்து உட்கார்ந்துகொள்கிறாள். சிலநாட்களில் நிலவு பகலாய்க் காய்கிறது. அந்த நாட்களிலெல்லாம் அவன் காதலியைச் சந்திக்காமலேயே போய்விடுவதும் உண்டு.

இப்படியிருக்கையில் காதலி நாளுக்குநாள் மெலிந்துகொண்டே போகிறாள். இவளது நோய்க்குக் காரணம் என்னவென்று தெரிய, செவிலி உள்ளூரில் இருக்கும் மருத்துவர்களையும் குறிசொல்பவர்களையும் நாடுகிறாள். ஆனால் பயனில்லை. பல்வேறு தெய்வங்களைப் பல்விதமாக வழிபட்டு வேண்டுகிறாள். எதற்குமே பலனில்லை. இறுதியில் தலைவியின் தோழியிடம் காரணம் கேட்கிறாள். அப்போதுதான் தோழி மெதுவாக எல்லாக் கதையையும் கூறுகிறாள்.

இப்போது பாடலுக்கு வருவோம்.

ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி

விறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்

அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,

பரவியும், தொழுதும், விரவுமலர் தூயும்,

வேறுபல் உருவின் கடவுள் பேணி,

நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று

எய்யா மையலை! நீயும் வருந்துதி – 2 – 8

இது தலைவியின் செவிலித்தாய் நோய்க்குக் காரணம்காண எடுத்துக்கொண்ட முயற்சி பயனில்லாமல் போனது.

அடுத்து தோழி தலைவியின் நோய்பற்றிக் கூறியது:

நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்

புள்பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்

உட்கரந்து உறையும் உய்யா அரும்படர் – 9 - 11

தலைவியின் மனத்திற்குள் மறைந்துகிடக்கிறது நோய். அது அவளை என்ன செய்கிறது.

(1). அவளது நல் கவினைத் தொலைக்கிறது.

(2). நறும் தோளை நெகிழ்க்கிறது.

(3). புள்ளைப் பிறர் அறியவைக்கிறது.

(4). தனிமை அவளை அலைக்கழிக்கிறது.

கபிலரின் கவித்திறன் காட்டும் வரிகள்:

நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்

புள்பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்

உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்


The master poet, Kapilar is describing a Cascade of Events happening for the heroine.

The four events that you list from Kapilar's masterpiece is happening in succession.

(a) she loses her beauty (b) her shoulder and hands are becoming thin and weak, 

this is biological. (c) As a result of biological event, the material decorations on her hands, 

adornments on the arms and shoulder, do not hold and fall off. The size is too large, 

and have to be remade by artisans. "puL piRar aRiyavum" is this, people notice that the

girl's jewelry no longer fits her and are too big for the emaciated body (d) she starts pining

for the guy. Only solution is to marry her (like in so many Tamil movies nowadays).

 

அப்படியென்றால் நோயினால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றுதான் புள் பிறர் அறிதல் என்றாகிறது. இதனாலேயேதான் உரைகாரர்கள் புள் என்பதற்கு வளையல் என்று பொருள்கொண்டு மெலிந்துபோவதால் தலைவியின் கையிலுள்ள வளையல்கள் ஒவ்வொன்றாய்க் கழன்றுவிழுவதைக் கவனித்துக் காரணம் கேட்கிறார்கள் என்று பொருள்கூறியிருக்கிறார்கள். ‘வளை நெகிழ்தலை ஏதிலார் அறியாநிற்பவும்’ என்று பெருமழைப்புலவர் உரை கூறுகிறார். இதனை அவர் தொல்காப்பியர் கூறிய புறஞ்செயச் சிதைத்தல் என்ற மெய்ப்பாட்டின்கண் அடக்குவார். உள் கரந்துறையும் உய்யா அரும்படர்  என்பதற்கு ‘அவள் நெஞ்சினுள்ளே இவையிற்றிற்கெல்லாம் காரணமாய் மறைந்திருக்கிற பிழைத்தற்கரிய நோயை’ என்று உரைகாண்கிறார் பெருமழைப்புலவர். எனவே இந்த நோயின் காரணமாக இந்த நான்கு விளைவுகளும் ஏற்படுகின்றன என்பது அவர் கருத்து. இப்பொழுது Cause நோய். Effect இந்த நான்கும்.


Yes. Cascase of Events due to the Kaama nOy. Being a mater poet, he sings them sequentially. One follows the other.


(1) நற்கவின் தொலையவும் (2) நறுந்தோள் நெகிழவும்

(3) புள்பிறர் அறியவும் (4) புலம்பு வந்து அலைப்பவும்

உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்


நச்சினார்க்கினியர் உரையை உவேசா தந்துள்ளார். அதன் வழியே பார்ப்போம்.
 ”ஒள் நுதல் (1) ஒலி மெல் கூந்தல் (2) விறல் (3) மேனி என் தோழி (2) உள் கரந்து உறையும் உய்யா அருபடர் (11) - ஒள்ளிய நுதலினையும் தழைக்கும் மெல்லிய மயிரினையும் பிறர் நிறத்தினைவென்ற வெற்றியினையுடைய நிறத்தினையுமுடைய என்னுடைய தோழி தன்மனத்துள்ளே மறைந்திருக்கும் தன்னுயிரைத் தான் தாங்கியிராமைக்குக் காரணமாகிய ஆற்றுதற்கரிய நினைவு,

இழை நெகிழ்த்த வீவு அரு கடுநோய் (3) செப்பல் வன்மையின் யான் செறித்து (12)- தானணிந்த கலன்களை நெகிழப்பண்ணின, 1 மருந்துகளாற் கெடுத்தற்கரிய கடிய நோய் நினக்குச்சொல்லுதற்கு எளிதன்றி வலியதன்மையையுடைமையினாலே யான் அதனை என்னுள்ளே அடக்கி,

நல் கவின் தொலையவும் நறு தோள் நெகிழவும் (9) புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் (10) கடவலின் (12) - அவளுடைய நன்றாகிய அழகுகெடவும் நறியதோள் மெலியவும் வளை கழலுதலைப் பிறர் அறியவும் தனிமை மேன்மேலே வந்து வருத்தவும் நினக்கு அறிவுறாமற் செலுத்துகையினாலே,

நீயும் (8) அலவுற்று (7) அகல் உள் ஆங்கண் அறியுநர் வினாய் (4)-நீயும் அலம்வந்து அகன்ற இடத்தையுடைய ஊரிடத்துக் 2கட்டினாலும் 3கழங்கினாலும் எண்ணியறிவாரை வினாவி அவர் தெய்வத்தான்வந்த வருத்தமென்றலின்,

வினாயுமென்றவிடத்து உம்மையைப் பேணி (6) என்பதன் பின்னே கூட்டுக."


இந்த நோய்க்குரிய காரணம் என்ன? காதல்தான். ஆனால் காதல் எண்ணம் மட்டுமே தலைவியை வாட்டுவதாகத் தோழி கூறவில்லை. காதலன்தான் ஏறக்குறைய ஒவ்வோர் இரவும் இரவுக்குறியில் அவளை வந்து சந்தித்துவிட்டுப்போகிறானே! இருப்பினும் இந்த மாய வரவின் இயல்பு நினைந்து, வலைப்படு மஞ்ஞையைப் போல் நலம்கெட்டு நினைத்து நினைத்துக் கண்ணீர் விடுகிறாள் என்கிறாள் தோழி (246 – 251). அப்படி என்ன இந்த மாய வரவின் இயல்பு? அதையும் தோழி சொல்கிறாள். தலைவன் வருகிற வழியில் புலிகளும், யாளிகளும், கரடிகளும், காட்டுமாடுகளும், யானைகளும் நடமாடித்திரியும். மழைபெய்தால் பலத்த இடி இடிக்கும். வருத்தும் அணங்குகள் திரியும். பாதைகளில் பாம்புகளும், பாதையோரப் பள்ளங்களில் முதலைகளும் பேய்களும், மலைப்பாம்புகளும் இருக்கும். கண்டால் கொன்றுகுவிக்கும் வழிப்பறிக்கொள்ளையரும் உண்டு. இன்னோரன்னவும், பிறவுமாகிய நிச்சயம் சாவுக்கேதுவான பல இடும்பைகள் தலைவன் வருகின்ற வழியில் உள்ளன. எனவே அந்த வழியாக நாள்தொறும் நடந்துவரும் தலைவனின் பாதுகாப்பை நினைந்து பெருமழையால் தாக்கப்பட்ட மலர்போல அழகழிந்து இமை சோர்ந்து, கண்கள் கலங்கி, நீரைச் சொரிந்து மார்பில் மழையாய்க் கொட்டுகிறது கண்ணீர் என்கிறாள் தோழி. இந்த அச்சம் – தலைவன் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளும் வாழ்வா சாவா என்ற Risk – இதுவே தலைவியின் நோய்க்குக் காரணம். (இவ்வாறு தோழி கூறுவதால், இந்த நோய் தீர ஒரே மருந்து தலைவி-தலைவன் திருமணமே என்பது தோழி கூறவந்த உள்கருத்து).

இதை விளக்கும் வரைபடம்:


இந்த வகையில் பொருள்கொண்டால் புள் பிறர் அறிதல் என்பது அரும்படரால் ஏற்பட்ட விளைவு என்றாகிறது.


Yes. That is the scenario that Kapilar is describing the heroine's viraha tApam. This is explained well by NaccinArkkiniyar in 14th century.

நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்

புள்பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்

உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்


The master poet, Kapilar is describing a Cascade of Events happening for the heroine.

The four events that you list from Kapilar's masterpiece is happening in succession.

(a) she loses her beauty (b) her shoulder and hands are becoming thin and weak, 

this is biological. (c) As a result of biological event, the material decorations on her hands, 

adornments on the arms and shoulder, do not hold and fall off. The size is too large, 

and have to be remade by artisans. "puL piRar aRiyavum" is this, people notice that the

girl's jewelry no longer fits her and are too big for the emaciated body (d) she starts pining

for the guy. Only solution is to marry her (like in so many Tamil movies nowadays.


 

ஏற்கனவே பிறர் பார்க்கும்படி தலைவியின் நற்கவின் தொலைகிறது, நறுந்தோள் நெகிழ்கிறது. இதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். பின் வளையல் கழன்று விழத்தானே செய்யும். இதனை மூன்றாவது விளைவாகப் புலவர் சொல்லவேண்டியதில்லை. ஒவ்வொன்றும் தனித்தனி விளைவுகளாக இருந்தால்தான் அவற்றைத் தோழி (புலவர்) வரிசைப்படுத்தியிருப்பார். முதலிரண்டின் விளைவை மூன்றாவது புதுவிளைவாகக் கூறவேண்டியதில்லை. ஏற்கனவே, இந் நோயை விறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய் என்று தோழி கூறுகிறாள்(அடி 3). இழை நெகிழ்த்த இந்தக் கடும் நோயால் இவள் வளை நெகிழ்ந்து விழுந்தது என்ற கூற்று கூறியது கூறல் ஆகாதா? எனவே, புள் பிறர் அறிய என்பதற்குக் கைவளை நெகிழ என்ற பொருள் தள்ளப்படுகிறது. அதனால், புள் பிறர் அறிய என்பது நோயின் விளைவுகளில் வேறு ஒன்றாக இருக்கவேண்டும். அது என்ன விளைவு?


"இவள் வளை நெகிழ்ந்து விழுந்தது என்ற கூற்று கூறியது கூறல் ஆகாதா?" 
வளை நெகிழ்ந்து விழுந்தது என்று கபிலர் கூறவே இல்லையே. அவர் கூறாததை வைத்து
கபிலர் “கூறியது கூறல்” செய்துவிட்டார். எனவே, புள் = வளையல் என்ற பொருளைத்
தள்ளுவோம் என்பது சரியா? - எனச் சிந்திப்போம்.

”புள் பிறர் அறியவும்” என்றுதான் கபிலர் பாடிச்செல்கிறார். அதாவது, முன்கையும்,
தோளும் மெலிந்தன. புள் (குருகு) வளைகள் தோளிலும், முன்கையிலும் கழன்று
போனதால், வெறுமையுடன் காட்சி அளித்தது முன்பு புஷ்டியாக இருந்த வளைக்கை
என்று உற்றார், நண்பர்கள் அறிகின்றனர். என்னே காதல் நோய் செய்யும் அவலம்
என்று காட்டுகிறார் கபிலர். ஊரார் தலைவியின் துயர் நிலையை அறிதலை
“புள் பிறர் அறியவும்” என்றார். இதை முன்னர் எங்கும் கூறாததால் “கூறியது
கூறல்” என்று பழைய பொருளைத் தள்ளமுடியாது.

 

புள் என்பதற்குச் சங்கேத ஒலி என்று பொருள் கொள்ளலாம் என வேந்தன் கூறியுள்ளார். ஆனால் இது உள்கரந்து உறையும் உய்யா அரும்படரின் விளைவு அல்லவே! சொல்லப்போனால் இது அந்த நோய்க்கு ஒரு காரணம். தலைவன் எழுப்பும் சங்கேத ஒலியைப் பிறர் அறிந்தால் சந்திப்பு தடைப்படும். ஊரில் அலர் எழும். ஆனால் அந்நாள் வரை இருவரின் காதல் வேறு யாருக்கும் தெரியாது. செவிலிக்கும் தெரியாததால்தான் அவள் தோழியை வினவுகிறாள். மேலும் வேறு பல காரணங்களால் சந்திப்பு தடைப்படும்போதெல்லாம் தலைவன் முனியல் உறான் என்று தோழி கூறுகிறாளேயொழிய தலைவி நிச்சயம் வேதனைப்பட்டிருப்பாள். எனவே, அம்மையார் முதலில் கூறியபடி, இந்த புள் பிறர் அறிதல் ஒரு cause.  புலம்பு வந்து அலைத்தல் அதன் effect. அதாவது, புள் பிறர் அறிந்ததால், (சந்திக்க முடியாமல்) புலம்பு வந்து அலைக்க உய்யா அரும்படர் உண்டாகிறது. எனவே புள் பிறர் அறியவும் (அதனால்) புலம்பு வந்து அலைப்பவும் என்பதை ஒரே கூற்றாகக் கொள்ளவேண்டும். இப்போது, உய்யா அரும்படரால் புலம்பு வந்து அலைத்ததா, புலம்பு வந்து அலைத்ததால் உய்யா அரும்படர் உண்டானதா? ஆனால் அரும்படரின் காரணத்தை ஏற்கனவே பார்த்தோம். அது தலைவன் எடுத்துக்கொள்ளும் Risk.காதல்வயப்பட்ட பெண்கள் (ஆண்களும்) தனிமையை மிக விரும்புவர். ஏற்கனவே நடந்ததை அசைபோட்டு மகிழ்ந்தவண்ணம் இருப்பர். நடப்பதை எண்ணி ஏங்கியவண்ணம் இருப்பர். இதற்காகவே அவர்கள் தன்மையை நாடுவர். அந்தத் தனிமை அவர்களுக்கு இனிமை. ஆனால் இங்கோ தலைவியின் தனிமை அவளை அலைக்கழிக்கிறது – வருத்துகிறது – நிலைகெடச்செய்கிறது. பார்க்க முடியாவிட்டால் அந்த ஏக்கம்; பார்க்கமுடிந்தால் தலைவனின் பாதுகாப்பைப் பற்றிய அச்சம். எனவே மனம் தனிமையை நாடினும் அந்தத் தனிமை அவளை வாட்டுகிறது. இதுவும் அவளின் உய்யா அரும்படருக்கு ஒரு காரணம் ஆகிறது. எனவே இத் தொடர், புள் பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும் உட்கரந்து உறையும் உய்யா அரும்படர், நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்’ என்று படிக்கப்பெறவேண்டும்.

இதை விளக்கும் வரைபடம்:


இங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. புள் பிறர் அறிய என்ற தொடர் பாட்டின் தொடக்கத்தில் வருகிறது (அடி 10). அப்பொழுது இன்னமும் தோழி தலைவியின் காதலைப் பற்றிச் செவிலிக்குத் தெரிவிக்கவில்லை. செவிலிக்கோ தலைவியின் நோயின் காரணம் இன்னதென்று தெரியாது. எனவேதான் அவள் தோழியை வினவுகிறாள். தோழி மிக மெதுவாகக் கதையைத் தொடங்குகிறாள். “முத்து, மணி, பொன் ஆகியவற்றால் செய்த அணிகலன் கெட்டுப்போனால் (அறுந்துபோனால்) சரிசெய்துகொள்ளலாம்; சான்றாண்மையும், பெருமையும், ஒழுக்கமும் கெடுமாயின் அதனைச் சரிசெய்தல் எளிதல்ல” என்று தோழி மிகக் கவனமாக முன்னுரை போடுகிறாள். இந்தக் காதல் கதையைத் தோழி சொல்வதைக் கபிலர் கையாளும் பாங்கு உளவியல் நோக்கில் உற்று ஆய்வதற்கு உரியதாகும்.


 தோழிக்கு தலைவி காதல் எல்லாமும் தெரியும். அதனால் தான், “புள் பிறர் அறியவும்” (வளையல் இல்லாமல் மெலிந்த
கரங்களை தோழிமார், அவர்கள் சுற்றுவட்டம் அறிவதைச் சொல்லிச் சென்றார்.)  இந்த வளையல்களின் ஸைஸை
கைகளுக்கு ஏற்ப வேண்டுமானால் சரிசெய்துகொள்ளலாம். ஆனால், சான்றாண்மை, பெருமை, ஒழுக்கம் சரிசெய்ய முடியாது என்று தொடங்குவதில் இருந்து கபிலர் தோழி தலைவியின் புள் (=வளைகள்) ஸைஸ் சரி இல்லாமல் இருப்பதையும்,
அவள் வீக்னெஸ் பற்றியும் குறிக்கிறார்.

     அங்கைசேப்பக் குருகிரங்க
          வலங்கலம்பூங் குழறுயல்வர
      மங்கைநல்லார் பவழவம்மி
          யரைத்தசாந்த மலர்பெய்மாலை (சிந்தாமணி, இலக்கணையார் இலம்பகம்).
நச்சினார்க்கினியர் விளக்குகிறார்: அங்கை சேப்ப - உள்ளங்கை சிவப்ப; குருகு இரங்க - வளை ஒலிக்க

புள்ளும்யாழுங் குழலுமேங்கப்
  புனைந்துவல்லா னினைந்தியற்றிய
பள்ளிச்செம்பொற் படையமளிமேன்
  மழலைமணியாழ் தான்வெளவிக்
கொள்ளுந் தீஞ்சொ லலங்காரப்பூங்
  கொடியைப்புல்லி மணிக்குவட்டினை
யௌ்ளிவீங்கித் திரண்டதோண்மேற்
  குழைவில்வீச விருந்தானே.
   (இ - ள்.) புள்ளும் யாழும் குழலும் ஏங்க - (தேசிகப் பாவையின் கையில் உள்ள) வளையும் யாழும் குழலும் ஒலிக்க இசையை நுகர்ந்து;

மணிமேகலை:
”பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பப்”

குருகு (அ) புள் என்பது Egrets (வெள்குருகு = Little Egret, சிறுவெண்குருகு - Egret Smaller) நிறப் பண்பினால் வளையலுக்கு ஆகிவரும் பண்பாகுபெயர். இதன் பழமை 5000 ஆண்டுகளாய் இந்தியக் கலாசாரத்தில் இருப்பதை எழுதியுள்ளேன். 

நச்சினார்க்கினியர் உரையில் விளக்கமாக Cascade of Events சொல்லியிருக்கும் குறிஞ்சிப்பாட்டை விளக்கியுள்ளாரே.
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் புள் என்பது நாகணவாய் அல்லது பிற பறவைகளோ, அவற்றின்
ஒலியோ, நிமித்தமோ அல்ல என்று விளக்கியிருக்கிறார். மணிமேகலையும், சிந்தாமணியும் அழகாகப்
புள் = வளையல் என்று பாடுவதைப் பாருங்கள்.

நா. கணேசன்

மெதுவாக நடந்ததைக் கூறிவந்த தோழி, 212-ஆவது அடியில்தான் ‘அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி’ என்று தலைவி தலைவன் மனம் ஒப்பிப்போனதை அறிவிக்கிறாள். எனவே புள் என்பது தலைவனின் சங்கேத ஒலி என்ற குறிப்பைத் தோழி பத்தாவது அடியில் குறித்திருப்பாளா? இதே தொடர் இறுதி அடிகளில் வந்திருந்தால் இதனை ஏற்றிருக்கலாம்.

அப்படியென்றால் மீண்டும் square 1.  புள் பிறர் அறிதல் விளைவாக இருந்தாலும், அல்லது காரணமாக இருந்தாலும் அவற்றுக்குரிய பொருள் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. எனவே இது முற்றிலும் வேறு பொருளை உடையது.

தொடர்ந்து சிந்திப்போம்..

ப.பாண்டியராஜா

...

N. Ganesan

unread,
Mar 13, 2015, 1:38:23 AM3/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, oruar...@gmail.com


On Thursday, March 12, 2015 at 12:55:38 PM UTC-7, கணினிதாசன் wrote:

புள் என்ற சொல் குறிஞ்சித் திணையிலும் முல்லை மற்றும் நெய்தலிலும் திணை ஒழிக்கத்தின் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளதாகக் கருதினாள் குறிஞ்சியில் பிரிவுபற்றி விளக்க வாய்ப்பில்லை.  குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவிக்குமட்டுமே தெரிந்த புள்ளின் ஒலியைப் பயன்படுத்தி தலைவியைச் சந்தித்திருக்கவேண்டும்.  அதுவே வெளியில் கசிந்து அனைவரும் அறியும் நிலை உருவாகியிருக்கவேண்டும் என்று கருதினால் புள் கழன்றுவிழும் வளையல்களைவிட காட்டுமைனாவின் ஒலிப்பைத்தான்  குறிப்பிட வாய்ப்புள்ளது.

பேரா. பாண்டியராசா விளக்கத்துடன் ஒத்துப்போகிறேன். புள் எனக் கபிலர் பெருமான் பாடுவது
நாகணவாய் அல்லது வேறெந்தப் புள்ளும் அன்று.

----------------------------------------

40 ஆண்டு முன்னர் ஜானி கார்சன் ஷோவில், நாகணவாய் பேசுகிறது:
Arizonan and others in America would have watched Johnny Carson's shows many a time.

பூவை (அ) நாகணவாய் பேச்சைப் பற்றி தமிழில் என்ன சொல்லியுள்ளனர்
என்று தனி இழையில் தொகுக்கலாம். நாகணவாய் விடியோக்களுக்கு நன்றி.

Nagarajan Vadivel

unread,
Mar 13, 2015, 3:15:14 AM3/13/15
to vallamai
குறிஞ்சித் திணையில் வளை கழன்றோடும் அளவுக்குப் பிரிவும் பிவுத் துயரும் இருக்காது.  தலைவன் பிரியவில்லை கூடியிருந்துபின் நீங்கியிருக்கிறான்.

தலைவன் தலைவியின் களவுறவைக் காட்டிக் கொடுத்தது
1. புள் என்ற வளையலா
2.புள் என்ற காட்டு மைனாவா

வட்டம் குறுகிவிட்டது கட்டத்துக்குள் அமைந்து அவர் சரி இவர் சரியில்லை என்று நாட்டாமை செய்யாமல் உங்கள் கருத்தைக் கூறவும்

பேரா.பாண்டியராஜர் இன்னும் தன் முடிவைத் தொடங்கவே இல்லையே அதுக்குள்ளாற எதுக்கு அவரோட ஒத்துப்போவதாகவும் வேந்தர் கருத்தோடு ஒத்துப்போக முடியாதென்றும் சொல்லவேண்டும்

கணினிதாசன்  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Mar 13, 2015, 3:58:30 AM3/13/15
to vallamai
2015-03-13 11:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேரா. பாண்டியராசா விளக்கத்துடன் ஒத்துப்போகிறேன். புள் எனக் கபிலர் பெருமான் பாடுவது
நாகணவாய் அல்லது வேறெந்தப் புள்ளும் அன்று.


5.4.3அல்ல குறி

இரவுக்குறியில் சந்திக்க வரும் தலைவன் தன் வருகையை அறிவிக்கச் சில செயல்பாடுகளை நிகழ்த்துவான். அவை அடையாளக் குறியீடுகள் ஆகும். பறவை போல ஒலி எழுப்புதல், தண்ணீரில் கல் எறிதல், இளநீரைப் பறித்துப் போடுதல் போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை நிகழ்த்தி, தலைவன் தன் வருகையை உறுதி செய்வான். அதை உணர்ந்து தலைவியும் குறியிடத்திற்குச் சென்று கூடுவாள். சிலசமயம் மேற்சொன்ன அடையாளச் செயல்பாடுகள் வேறு காரணத்தினால் அல்லது வேறு ஒன்றினால் அல்லது இயல்பாக நிகழ்ந்து விடுவது உண்டு. ஆனால் தலைவியோ அது தலைவன் நிகழ்த்திய அடையாளமே எனக் கருதிக் குறியிடத்திற்குச் சென்று, தலைவனைக் காணாது திரும்பி விடுவாள். தலைவனும் அவ்வாறே வந்து தலைவியைக் காணாது, காரணமும் புரியாது திரும்பி விடுவான். இதுவே அல்லகுறிப்படுதல்எனப்படும்.


​க்ணினிதாசன்​


சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 13, 2015, 8:33:23 AM3/13/15
to vallamai, mintamil, Pandiyaraja Paramasivam
மணிமேகலை காப்பியத்தை ஒரு கருத்தரங்கு உரைக்காகப்படித்துவருகிறேன். அதில் புகார் நகரில் விடியல் நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன.

“பணைநிலப் புரவி பலஎழுந்து ஆலப்
பணைநிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்ப
பூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்ப"

புள் இரண்டு பொருளிலும் மேற்கண்ட பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
பூங்கொடியார் குறித்துப் பேசும்போது வளையல் என்ற பயன்பாடு இயல்பாகிறது.

முந்தைய உரையாசிரியர்கள் பல பயன்பாடுகளை ஒப்பு நோக்கியும் இன்று நம் அறிஞர் பெருமக்கள் விவாதிப்பதுபோல முன்பு இருந்தோர்  கூறியுள்ள கருத்துக்களை உள்வாங்கியும் உரை எழுதியிருப்பார்கள் என்பது உறுதி.
உரை ஆசிரியர்களோடு வேறுபடுகிறவர்கள் பெரும்பாலன இடங்களில் வலிந்து பொருள்கொள்வதையே காண்கிறேன். 


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


N. Ganesan

unread,
Mar 13, 2015, 9:05:36 AM3/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, pipi...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Friday, March 13, 2015 at 5:33:24 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
மணிமேகலை காப்பியத்தை ஒரு கருத்தரங்கு உரைக்காகப்படித்துவருகிறேன். அதில் புகார் நகரில் விடியல் நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன.

“பணைநிலப் புரவி பலஎழுந்து ஆலப்
பணைநிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்ப
பூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்ப"

புள் இரண்டு பொருளிலும் மேற்கண்ட பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
பூங்கொடியார் குறித்துப் பேசும்போது வளையல் என்ற பயன்பாடு இயல்பாகிறது.

பெருங்கவிகள் இருபொருளிலும் பயன்படுத்துவர். பரணர், மாணிக்கவாசகர், பொய்யாமொழிப்புலவர், ...
கன்று என்ற சொல்லை இலாகவமாகக் கையாண்டுள்ளனர். மாணிக்கவாசகர் திருக்கோவையாரில்
கன்று என்றும், திருவெம்பாவையில் குருகு என்றும் சிலேடைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
புள்ளின் ஒலி என்று சாத்தனார் இங்கே கையாண்டுள்ளார். இவ்விழையில் குறிப்பிட்டுள்ளது இங்கே,

திருத்தக்கதேவர் கம்பருக்கு வழியமைத்தவர். அவர்தாம் வளையல்களைக் குருகு என்றும்,
புள் என்றும் பாடியவர். பழமையான, இந்தியா முழுதும் தமிழகப் பொருள் இதற்காக
(சங்கம்) 5000 ஆண்டாய் போயிருக்கிறது. தோளுக்குத் தொடிவளையும், முன்கைக்குக்
கைவளையுமாக குருகு (அ) புள் என வண்ணங்காரணமாகப் பெயர்பெறும் சங்கு (< கொங்கு = வளைதல்)
பயன்பட்டிருக்கிறது. எல்லா மெகாலித்திக் ஈமச்சின்னங்களிலும் சங்கு வளைகள் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டின் கொங்கு (வடமொழியில் குறில் ஒ இல்லை. எனவே, கொ- > க- ஆகும்.
வடகொங்கில் கங்க மன்னர் ஆட்சி. அவர்களில் பலர் சமணர்கள். கெவி > செவி போல
கொங்க ‘வளை’ > சங்க வடசொல் ஆகத் திரிந்தது. தமிழ்நாட்டின் குருகு (அ) புள் (= வளையல்கள்)
4000+ ஆண்டுகளின் முன்னர் சிந்து சமவெளியில்:
Back6. Unfinished shell bangles in the shell workshop, Gola Dhoro.Forward



Large Egret போலும் - இவ்வகைக் குருகு என்று வளையலைச் சொல்ல “பறக்காத பருந்து”
என்று “பறாஅப் பருந்து” என்று குருகை (வளையல் என லார்ஜ் இக்ரெட் பெயரால்) கலித்தொகை பாடுகிறது.

குருகு (அ) புள் என்று தமிழ் இலக்கியம் (உ-ம்: புள் பிறர் அறியவும். பொருளை நச்சர் விளக்கியுள்ளார்)
அழைக்கும் சங்கு வளையல்கள். பின்னாளில் உலோக (வெள்ளி, பித்தளை, தங்கம்), கல், கண்ணாடி
வளையல்களுகும் புள் (அ) குருகு என்னும் பழம்பெயர் நிலைத்துவிட்டது. 

குருகு என்றால் என்ன? ஜெயமோகன் கட்டுரை:

ஆனால், வளைகளுக்கு வருவது Egrets வகைகள். அவை வெள்ளாங்குருகுகள் (அ) வெண்குருகுகள் எனப்படுபவை.
கருங்குருகும் உண்டு. இவை அன்றில் வகைகள். யானையங்குருகு எனப்படும். வெள்ளாங்குருகு வெள்ளை நிறம்.
யானையங்குருகு என்னும் அன்றிற்பறவைகள் யானை போலக் கறுத்த நிறங்கொண்டவை.
இன்று வண்டானம் எனப்படுவது வண்டாழ்ங் குருகு - வண்டலில் திளைக்கும் Flamingo வகைகள். கப்பல் ஓட்டிய
தமிழன் வ. உ. சி. பெயரில் ”வ” என்பது கடற்கரையோர வண்டானம் என்னும் ஊர்ப்பெயர் எனக் கேட்டிருக்கிறேன்.
அவர் மகன் சுப்பிரமணியபிள்ளை கோவையில் இருந்தார். பின்னர் அமெரிக்க எம்பசியில் (சென்னை).

சங்க இலக்கிய குருகு வகைகளும், அவற்றில் Egrets என்பவற்றால் மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு போன்றவற்றில்
புள் என்றும், ஏராளமான இடங்களில் குருகு என்றும் 5000 வருஷமாய் வளையல்களை சிந்து முதல் ஈழம் வரை
அழைத்ததும் சிந்திப்போம். நன்றி.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 13, 2015, 8:13:56 PM3/13/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, minT...@googlegroups.com, pipi...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
புள் என்றால் வளை என்று சீவக சிந்தாமணிப் பாடலுக்குப் பொருள் சொல்ல,
மலைபடுகடாம் வரியை உதாரணம் காட்டுகிறார் நச்சினார்க்கினியர்.

1 புன்றலை இரு பரதவர் (90) - சிவந்த தலையினையுடைய பெரியபரதவர், (பட்டினப்பாலை)
1 "புட்கை போகிய புன்றலை மகாரோடு " (மலைபடு. 253) என்ற விடத்தும் புன்றலை யென்பதற்குச் சிவந்ததலையென்று உரையெழுதுவர். (உவேசா அவர்கள்).

மலைபடுகடாம் - உவேசா பதிப்பு:

253. புள் கை போகிய 1 புன்றலைமகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமானசிவந்த தலையினையுடைய பிள்ளைகளோடே,

2பிள்ளையைப் பெற்றால்வளையிடாராகலின், வளைபோதற்குப் பிள்ளைகள் காரணமாயினார். (நச்சர்)

புட்கை போகிய புன்றலை மகாரோ
டற்கிடை கழித லோம்பி யாற்றநு


53. புன்றலைமகார் : மலைபடு. 217.

இவ்வடி , புள் வளையென்னும் பொருளில் வருமென்பதற்கு மேற்கோள்; சீவக. 2591, ந. (உவேசா குறிப்பு).

-----------------------

முத்தி இலம்பகம் - சீவக சிந்தாமணி 2591
2591
புள்ளும்யாழுங் குழலுமேங்கப்
  புனைந்துவல்லா னினைந்தியற்றிய
பள்ளிச்செம்பொற் படையமளிமேன்
  மழலைமணியாழ் தான்வெளவிக்
கொள்ளுந் தீஞ்சொ லலங்காரப்பூங்
  கொடியைப்புல்லி மணிக்குவட்டினை
யௌ்ளிவீங்கித் திரண்டதோண்மேற்
  குழைவில்வீச விருந்தானே.

   (இ - ள்.) புள்ளும் யாழும் குழலும் ஏங்க - (தேசிகப் பாவையின் கையில் உள்ள) வளையும் யாழும் குழலும் ஒலிக்க இசையை நுகர்ந்து; வல்லான் நினைந்து புனைந்து இயற்றிய - வல்லானொருவன் சிந்தித்து அணிந்து இயற்றிய; பள்ளி - பள்ளியிலே; செம்பொன் படை அமளிமேல் - செம்பொன்னாற் படுத்த அணையின் மேலே; மழலை மணியாழ் தான் வெளவிக் கொள்ளும் தீஞ்சொல் அலங்காரப் பூங்கொடியை - மழலை பொருந்தியதும், அழகிய யாழ்தான் கருதிக்கொள்ளும் தகையது ம் ஆன இனிய மொழியையுடைய, ஒப்பனை செய்யப்பட்ட மலர்க்கொடி போல் வாளை; மணிக் குவட்டினை எள்ளி வீங்கித் திரண்ட தோள்மேல் புல்லி - மணிகளிழைத்த மலையை இகழ்ந்து பருத்துத் திரண்ட தோளிலே தழுவி; இருந்தான் - அமர்ந்திருந்தான்.

   (வி - ம்.) புள் - வளை. 'புட்கை போகிய புள்தலை மகார்' (மலைபடு 253) என்றார். தாளத்தை ஒற்றுதலின் வளையொலித்தன.



I forgot to add the link on Kuruku, from Jeyamohan's site. Now done.

N. Ganesan

unread,
Mar 14, 2015, 12:37:09 AM3/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, pipi...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
புள் கை போகிய புன்றலை மகாரோடு (மலைபடுகடாம்)

"252. [ மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட்பொதியினிர் :] பரூஉ கண் பதம் மிகுத்து கொண்டபொதியினிர் - பருத்த இடத்தையுடைய தசையாகிய உணவை முழுதுந் தின்னாமல் மிகுத்துவைத்துக் கட்டிக் கொண்ட பொதியின் சுமையினையுடையிராய்,

253. புள் கை போகிய புன்றலை மகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமான சிவந்த தலையினையுடைய பிள்ளைகளோடே,

2பிள்ளையைப் பெற்றால் வளையிடாராகலின், வளைபோதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.

254 - 5. [ அற்கிடை கழித லோம்பியாற்றநு, மில்புக் கன்ன கல்லளை வதிமின் :] இடை கழிதல்ஓம்பி ஆற்ற நும் இல் புக்கன்ன கல்அளை அற்கு வதிமின்- அவ்விடத்துப் போதலைப் பரிகரித்து வழியிடத்தனவாகியநும் இல்லிலே புக்காலொத்த கன்முழைஞ்சுகளிலே இராக்காலத்துத்தங்குவிர் ;

இஃது அசையுநற்புலமும் (67) வல்சியும்(68) சேரக்கூறிற்று." (நச்சினார்க்கினியர்).

புள் கை போகிய புன்றலை மகாரோடு =
”தாய்மார்களின் புள் (=வளையல்கள்) கையில் இருந்து போகப்பட்டதற்குக் காரணமான சிவந்த தலையுடைய மக்களுடன்”

சோறு அட்டிய சட்டி = சோறு அடப்பட்ட சட்டி
தரை மெழுகிற்று = தரை மெழுகப்பட்டது.
இவ்வாள் வெட்டிற்று = இவ்வாளால் வெட்டப்பட்டது
இவ்எழுத்தாணி  எழுதியது = இவ்வெழுத்தாணியால் எழுதப்பட்டது
இதுபோல், செயப்படு பொருளைச் செய்தது போலச் சொல்லும் வழக்கம்
மலைபடுகடாம் வரியில் உள்ளது போலும்.

சூ. 247 :

செயப்படு பொருளைச் செய்தது போலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே

(49)

க-து :

வழக்கின்கண்  வினைச்சொல்    பற்றி   நிகழ்வதொரு   மரபு
கூறுகின்றது.

உரை : செயப்படுபொருள் வினையாகக் கிளத்தலை வினைமுதல் வினை
போலத்   தொழிற்படச்   சொல்லுதலும்   பரவை   வழக்கின்கண் நிகழும்
மரபாகும். உம்மையான் அங்ஙனம் கிளவாமை பெரும்பான்மை என்பதாம்.

எ-டு: திண்ணை  மெழுகிற்று - சோறு       அட்டது     எனவரும்.
மெழுகப்பட்டது  - அடப்பட்டது  எனச்  செயப்படுபொருள் வாய்பாட்டாற்
கூறாமல் வினைமுதல், வாய்பாட்டாற் கூறப்பட்டவாறு காண்க.

இனி,  மரம்  வெட்டியது   என்றாற்   போலவன்றி   மரம்  வீழ்ந்தது
எனவரின்   அது   செயப்படு   பொருளுக்குரித்தாகாமையின்   செயப்படு
பொருள்   எனற்கு    ஏற்ற    தொழிலாற்    கிளக்க  வேண்டுமென்பார்
தொழிற்படக் கிளத்தலும் என்றார்.

"வழக்கியன்  மரபே"    என்றதனான்,     இவ்வாள்     வெட்டிற்று,
இவ்எழுத்தாணி  எழுதியது   எனக்    கருவியைச்    செய்தது   போலக்
கிளத்தலும் கொள்க.



ஆறு சென்றவியர்- ஆறு சேறலாகிய காரணத்தான் வந்த காரியமாகிய வியர். 
உண்டசோறு என்பதனைச் சோறு உண்ணப்பட்டது என்று அமைக்கலாம்; ஆனால் 
சென்ற வியர் என்பதனை வியர் சொல்லப்பட்டது என்று அமைத்தல் இயலாது; ஆதலின்
வியர் என்பதனை நேரே செயப்படு பொருள் என்னாது செயப்படுபொருட்கண் அடங்கும்
என்றார்.

ஆ கொடுத்த பார்ப்பான்- ஆ கொடுத்தற்காக வரவழைக்கப்பட்ட பார்ப்பான்-
இன்னதற்கு; ‘கபிலை கண்ணிய வேள்வி நிலையும்’ (தொல். பொருள்.90) என்ற 
தொடருக்கு ‘இது வரையா ஈகையன்றி, இன்னலுற்றால் கொடுக்க என்று பெரியோர் கூறும்
நாட்காலையிலே கொடுப்பதாம் ஆதலின் வேறு கூறப்பட்டது’ என்ற நச்சினார்க்கினியர்
உரையை உட்கொண்டு, இவ்வாறு உரை கொள்க.

ஆடை ஒலித்த கூலி- ஆடை ஒலித்ததன் பயனாகப் பெற்ற கூலி- இதுபயன்.

பழம் உதிர்ந்தகோடு-பழம் உதிர்தலைப்பெற்ற கோடு எனத் தீர்தல் பொருட்கண்
வந்தது.

‘மற்றிந்நோய் தீரும் மருந்து அருளாய்’ = மற்று இந்நோய் தீர்க்கப்படும் மருந்து
அதுபோல்,
புள் போகிய புன்தலை மகார் = புள் (=வளையல்) போகப்படுதலுகுக் காரணமாகிய புன் தலை மகார்.

------------------

பதிற்றுப்பத்து 6.3
”ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி 10
நின்னிற் றந்த மன்னெயி லல்லது”

"தரப்பட்ட வென்பதனைத் தந்த வெனச் செயப்படுபொருளைச் செய்தது போலச் சொல்லிற் றாக்குக" (பழைய உரை)

------------------

திருவாசகம்

யாழு மெழுதி யெழின்முத்
    தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
    தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
    தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
    டேற்கொண்டு போதுகவே. 

”எழுதிற்றென்பது செயப்படுபொருளைச் செய்தது போலக் கூறிநின்றது. வினை யெச்சங்களும் அவ்வாறு நின்றவெனினு மமையும்.”

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 8, 2015, 8:04:15 AM4/8/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Friday, March 13, 2015 at 9:37:07 PM UTC-7, N. Ganesan wrote:
புள் கை போகிய புன்றலை மகாரோடு (மலைபடுகடாம்)

"252. [ மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட்பொதியினிர் :] பரூஉ கண் பதம் மிகுத்து கொண்டபொதியினிர் - பருத்த இடத்தையுடைய தசையாகிய உணவை முழுதுந் தின்னாமல் மிகுத்துவைத்துக் கட்டிக் கொண்ட பொதியின் சுமையினையுடையிராய்,

253. புள் கை போகிய புன்றலை மகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமான சிவந்த தலையினையுடைய பிள்ளைகளோடே,

2பிள்ளையைப் பெற்றால் வளையிடாராகலின், வளைபோதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.

254 - 5. [ அற்கிடை கழித லோம்பியாற்றநு, மில்புக் கன்ன கல்லளை வதிமின் :] இடை கழிதல்ஓம்பி ஆற்ற நும் இல் புக்கன்ன கல்அளை அற்கு வதிமின்- அவ்விடத்துப் போதலைப் பரிகரித்து வழியிடத்தனவாகியநும் இல்லிலே புக்காலொத்த கன்முழைஞ்சுகளிலே இராக்காலத்துத்தங்குவிர் ;

இஃது அசையுநற்புலமும் (67) வல்சியும்(68) சேரக்கூறிற்று." (நச்சினார்க்கினியர்).

புள் கை போகிய புன்றலை மகாரோடு =
”தாய்மார்களின் புள் (=வளையல்கள்) கையில் இருந்து போகப்பட்டதற்குக் காரணமான சிவந்த தலையுடைய மக்களுடன்”


அகநானூறு 152-ஆம் பாட்டில் உள்ள ஒரு வரிக்குப் பொருள் என்ன? - என்று ஜார்ஜ் ஹார்ட் சில நாள்களுக்கு முன்னர்
கேட்டார். மலைபடுகடாத்தின் வரிக்கு நச்சினார்க்கினியர் விளக்கம் போல உரைவரைந்து மொழிபெயர்த்தால்
சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது என்றேன். ஏனெனில் இறால்களின் கூட்டம் எப்பொழுதும் கப்பலையோ
படகையோ தாக்காது அல்லவா? 

அகநானூறு 152-ன் வரிக்கு எவ்வாறு பொருள் கொள்ளலாம் என நான் எழுதின கடிதம் பின்னர்.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
May 7, 2015, 8:47:18 PM5/7/15
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
இரியல்= இடம் பெயர்தல்


என்றும் - எந்நாளும்; மன்று படு பரிசிலர்க் காணின்
- மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின்; கன்றொடு கறை யடி 
யானை இரியல் போக்கும் - கன்றுடனே கறை பொருந்திய 
அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும்; 
மலை கெழு நாடன் - மலையையுடைய நாடனே; மா வேள் ஆய் - 
மா வேளாகிய ஆயே;


8 ஏப்ரல், 2015 ’அன்று’ 8:04 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 25, 2016, 10:06:23 AM5/25/16
to மின்தமிழ், vallamai


On Sunday, May 22, 2016 at 8:45:41 AM UTC-7, singanenjan wrote:
ஆர்த்தலை  பின் வந்தவர்களும்    நிறைய    பயன் படுத்தியுள்ளார்கள்  என்றே தோன்றுகிறது.

"மருங்கு   வண்டு      சிறந்தார்ப்ப 
மணிப்  பூவாடையது   போர்த்தி "  (சிலம்பு)

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி 

எழுந்த கொழுங்கனல்  என்ன எழுந்தான்.

விழுந்தது வில் என  விண்ணவர் ஆர்த்தார் 

மொழிந்தனர் ஆசிகள்  முப்பகை வென்றார். (கம்பர்)


மும்முரசு  ஆர்த்தவர்  தமிழர் (கருணாநிதி)


ஆர்த்தல் என்பது ஒலியெழுப்பல் என்ற பொருள். ஒலியால் நிறைதல் எனலாம்.
கால்பந்து, துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போன்ற மக்கள் அரங்கங்களில் ஆர்த்தலைக் கேட்கிறோம்.

இந்த “ஆர்ப்பு” நிறைதல் என்ற பொருளில் சில பெயர்ச்சொல்களில் பார்க்கலாம்:
(1) மயில்கள் நிறைந்ததால் மயிலாப்பு என்ற பெயர். மயிலாப்பு + ஊர் = மயிலாப்பூர்.
எனவே, கற்பகம் அம்பாளை மயில் என்ப. “புன்னையங் கானல் மட மயிலை” (தேவாரம்).
மயிலா(ர்)ப்பு = மயிலாப்பு ஊர்ப்பெயர். மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1, அப்பர்)

(2) திரும்பிப் பெறுதலுக்கு குறியை ஆர்த்து செய்யும் செயல் குறியாப்பு. இன்னும் மக்கள் 
வழக்கில் உள்ளது. குறியா(ர்)ப்பு = குறியாப்பு.
”ஒருவரிடம் கைமாற்றாகப் பணம் வாங்குவதை மலசர் பழங்குடியின மக்கள் "குறியாப்பு' என்கிறார்கள். சங்க இலக்கியங்களில் இது குறியெதிர்ப்பு என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.”
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து (குறள்). குறியெதிர்ப்பு = குறியாப்பு

(3) மாரார்ப்பு = மாராப்பு

(4) கருஞ்செவ்வாப்பு karu-ñ-cevvāppu , n. < id. +. Unhealthy colour of a new infant, as patches of dark on the skin; பிறந்த குழந்தையின் நோய்க்குக்குறியான நிறவேறுபாடு. Loc.

(5) அரையாப்பு arai-yāppu , n. < அரை¹ +. Inguinal bubo; துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி.

(6) பசையாப்பு pacai-yāppu, n. < id. +. Bond of worldly attachment; உலகப்பற்றாகிய பந்தம். பசையாப்பவிழப் பணியாயே (சீவக. 1242).

(7) பையாப்பு paiyāppu , n. < பையா-. Distress, suffering; துன்பம். அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை (புறநா. 221, உரை). பையாப் போடு பசிகாட்டி (கலிங். 557).

(8) மெய்யாப்பு mey-yāppu , n. < id. + யா-. Coat; cloak; சட்டை. (சங். அக.)

On Sunday, May 22, 2016 at 4:42:15 PM UTC-7, Maravanpulavu K. Sachithananthan wrote:
ஆர்ப்ப என்ற சொல் பன்னிரு திருமுறைகளிலும் வருமாறு காண்க.

அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்ப 
பன்னிரு திருமுறை 02055007
மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை ஆர்ப்ப தன்முன் பன்னிரு திருமுறை 050485007,
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே பன்னிரு திருமுறை 060385002,
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப, பன்னிரு திருமுறை 060425006,
கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப பன்னிரு திருமுறை 060685006,
அரைமேல் ஆர்ப்பது நாகம் பன்னிரு திருமுறை 0701850071
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்,.... வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பன்னிரு திருமுறை 08107012,
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத் தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடகம் மெல்லடி ஆர்க்கும் பன்னிரு திருமுறை 08109007,
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் பன்னிரு திருமுறை 08109008,
துளிதரற் காரென ஆர்த்தன ஆர்ப்பத் பன்னிரு திருமுறை 08223009,
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய் பன்னிரு திருமுறை 11007004,
கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து பன்னிரு திருமுறை 11008064,
தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன் சலன் என்
றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் பன்னிரு திருமுறை 11009061,
கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர் அவ்வரு தாமங் களினம்வந் தார்ப்ப அணைகின்றதே பன்னிரு திருமுறை 11029097
பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் பன்னிரு திருமுறை 11037135
பரந்தஆர்ப் பரவம் பொங்க பன்னிரு திருமுறை 12030014
மறைகளும் முழங்கி ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12000215
மங்கலந் துவன்றி ஆர்ப்பத் பன்னிரு திருமுறை 12000159
முரசொடு சங்கம் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12000106
வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்பபன்னிரு திருமுறை 12030035
ஆர்கலி ஏழு மொன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12080053
வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12100179
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12280256
பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12280483
மறையொலிபோய் வானளப்ப மாமுரசம் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12280540
பொன்னணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12281226
பெருஞ்சேனை ஓதங் கிளர்ந்த தெனஆர்ப்பக் கதிர்வெண் திருநீற் றன்பர்குழாம் கங்கை கிளர்ந்த தென ஆர்ப்ப எதிர்வந் திறைஞ்சும் அமைச்சர்குழாம் ஏறும் இவுளித் துகளார்ப்ப பன்னிரு திருமுறை 12720022

 

2016-05-21 13:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கிடைத்தது நன்றி ஐயா.

ஒரு யாழில்  உள்ள நரம்புகள் அனைத்தும் ஒருசேர ஒலி எழுப்புவதை நரம்புகள் ஆர்த்தல்  என்கிறார் திருமுருகாற்றுப்படைப் புலவர்... என்று குறிப்பிட்டுள்ளீர்கள். 

ஆர்த்தல் என்று சங்ககாலத்தில் வழக்கில் இருந்த ஒரு சொல்லை இன்றைய பாரதிதாசனும் தனது பாடலில் எடுத்தாண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.  


ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதியந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்யல்லவோ?

சித்திரச் சோலைகளே உமைநன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே 


கடல் அலைகளைக் குறிப்பிடும் பொழுதும்  ஆர்த்திடும் கடல் அலைகளென படித்த நினைவுண்டு 

நன்றி ஐயா 

..... தேமொழி



On Saturday, May 21, 2016 at 12:33:09 AM UTC-7, Pandiyaraja wrote:
மிக்க நன்றி அம்மையே!
மீண்டும் கட்டுரையை இணைப்பாக அனுப்புகிறேன்.
என்னுடையதளத்தில் இன்னும் இக்கட்டுரையை ஏற்றவில்லை. கட்டுரைத் தொடர் முடிந்த பின்னர் முழுமையாக ஏற்ற எண்ணம். கட்டுரை எண் கடைசியில் 6. என்றுதான் எனது கோப்புகளில் இருக்கிறது. எனவேதான் இதனை 7. என்று எண்ணிட்டேன். இருப்பினும் மீண்டும் சரிபார்க்கிறேன்.
அனைத்துக்கும் மீண்டும் எனது நன்றி அம்மையே!
ப.பாண்டியராஜா


On Saturday, May 21, 2016 at 12:00:01 PM UTC+5:30, தேமொழி wrote:
ஐயா  கட்டுரை முழுமையாக வரவில்லை எனத் தோன்றுகிறது ...

எனக்கு இணையம் வழி குழுமமடலைப் படிக்கும்  பொழுது

கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற - ஐங் 383/1
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் - ஐங் 416/3
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ - கலி <sp

இத்துடன் வெட்டுப்பட்டுவிட்டது.

இனி இங்கும் பதிவிட்டபின்னர், உங்கள் தளத்தில் இருக்குமிடத்தின் சுட்டியையும் அத்துடன் கொடுத்து விடுங்களேன்...
முழுமையாக வரவில்லை என்றால் நான் சுட்டியைத்  தொடர்ந்து உங்கள் தளத்திற்குச் சென்று படித்துக் கொள்கிறேன். 

அத்துடன் இது அதிகாரம் 8  என்று இருக்க வேண்டுமோ? சரிபார்க்கவும் ஐயா. 
 
சங்கச் சொல்வளம்
1. அசைவுகள் 
2. நகர்வுகள் 
3. குறைத்தல்கள்
4. அஞ்சுதல் 
5. உண்ணுதல்  
6. உண்ணும் விதங்கள் 
7. உணவு வகைகள்
8. ஒலித்தல் வகைகள்

கட்டுரைக்கு மிக்க நன்றி.

அன்புடன்
..... தேமொழி







On Friday, May 20, 2016 at 11:05:39 PM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
சங்கச் சொல்வளம் என்ற தலைப்பில் உண்ணும் வகைகள், உணவு வகைகள் ஆகிய கட்டுரைகளின் தொடர் முடிவுற்றது. அடுத்து ஒலி வகைகள் என்ற தலைப்பில் ஒலித்தல் வகைகள், ஒலிப்பு வகைகள் ஆகியவை வரவிருக்கின்றன. முதலில் வருவருவது ஒலித்தல் வகைகள். இந்தவகையில் வரும் முதற்கட்டுரை இது.
ப.பாண்டியராஜா

சங்கச் சொல்வளம் –

7.1 ஒலித்தல் வகைகள்

 

ஒலிவகைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஆரவாரம் என்பது ஒலிப்பு. அது பெயர்ச்சொல். ஆரவாரி என்பது ஒலித்தல். அது வினைச்சொல். இப் பகுதியில் வினைச்சொற்களாக வரும் ஒலித்தல் வகைகளைக் காண்போம்.


Reply all
Reply to author
Forward
0 new messages