--//குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்குதந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லாஅன்பு இலி பெற்ற மகன் – கலி 86/32௩4//இலக்கியச்செம்மல் திரு.ப.பாண்டியராஜா அவர்களேமேலே கண்ட வரிகள் இன்றைய நுட்பமான லைன் கிங் படக்காட்சியையும் விட வெகு துல்லியமாய் மிக்க ஆழமான சொல்லாட்சியில் இருப்பதை வெகு அற்புதமாய் காட்டியிருக்கிறீர்கள்.கலித்தொகையில் "உள்ளம்" கூட ஒலிக்கும் விந்தையை காண்கிறோம்.சங்கத்தமிழ் உங்கள் கைகளால் முத்துப்பேழையாய் மாணிக்கப்பேழையாய் ஆகியிருக்கிறது.அது வெறும் சங்கப்பலகை அல்ல என்பதை உயிர்ப்புடன் காட்டியிருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.உளம் வழியும் பாராட்டுகளுடன்ருத்ரா
On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:...சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள் இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?கட்டுரையைப் படியுங்கள்.மிக்க நன்றி,ப.பாண்டியராஜாபின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.சங்கச் சொல்வளம்
1. அசைவுகள்
சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு)
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த ...
சிறு குழை துயல்வரும் காதின் ----------- - பெரும் 161
தாளுருவி அசையும் காதினையும் ---
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330
நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும்,
இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள், காலப்போக்கில் வழக்கிழந்து ஒரே பொருளாகக் கொள்ளப்பட்டன. எனினும், இந்த மூன்று சொற்களும் வெவ்வேறான அசைவுகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் உண்மையான பொருளோடு இந்த அடிகளைப் படிக்கும்போதுதான் மெய்யான இலக்கிய இன்பத்தைப் பெறமுடியும்.
இச் சொற்களுக்கு பலவிதப் பொருள் அமைந்தாலும், அசைதல் என்ற பொருளில் வரும் இடம் அல்லது சூழலை ஆய்வோம்.
முதலாவதாக இந்தச் சொற்களுக்குத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) தரும் பொருள்களைப் பார்ப்போம்.
அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).
துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).
துளங்கு - தல் To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).
இப்போது பத்துப்பாட்டில் இவற்றின் வழங்கிடங்களைப் பார்ப்போம்.
1. அலங்குதல் - இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161
ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல். தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை நன்கு காணலாம். எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில் ஆடுவது அலங்குதல். அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.
அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும். அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே. இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும். அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.
கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை அலங்கல் எனப்பட்டது எனலாம்.
அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில் அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட ஒருவகை அசைவையே குறிக்கிறது. அவற்றில் சில:
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13
பரிபாடல் அடியைப் பாருங்கள். அருவி எப்படி அலங்கும்? இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.
அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்
மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15: 19-21
பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்! ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால் அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர். இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.
2. துயல்(லு) - (வி) அலை, அசை, ஊஞ்சலாடு, swing, wave, sway
துயல், துயல்வரும் ஆகிய சொற்களும் அலங்கல் போன்று ஒரு நிலைப்புள்ளியைச் சார்ந்த அசைவையே குறிப்பன. எனினும் இயக்கத்தில் இவை வேறுபட்டன.
வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 207
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல - சிறு 2
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் - பெரும் 161
வான் கழல், துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ - குறி 127
இங்கு வரும் முதல் அடியிலேயே மாலை துயல்வர என்று காண்கிறோம். இங்கு, திருச்சீரலைவாயிலில் விரைந்துவரும் களிற்றின் மீதமர்ந்து வரும் முருகனைப் பற்றிக் கூறும் புலவர், அவ்வாறு விரைந்து வரும் களிற்றின் நெற்றியில் கிடக்கும் வாடாத மாலையாகிய பொன்னரி மாலையின் அசைவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ஓடை என்பது யானையின் நெற்றிப்பட்டம் - முகபடாம் எனப்படும். இந்த நெற்றிப்பட்டத்திற்கு மேலே தங்க மாலை அணியப்பட்டுள்ளது. யானை தலையைக் கீழும் மேலும் ஆட்டிக்கொண்டு விரைந்துவரும்போது முகபடாத்துடன் சேர்ந்து மாலையும் குதித்துக் குதித்து ஆடும் அல்லவா? அந்த முன்-பின்னான ஆட்டமே துயல்வருதல். குதிரையின் தலையில் இருக்கும் உளை எனப்படும் தலையாட்டம் (hair plume) குதிரை நடக்கும்போது எவ்விதம் ஆடும்? ஊட்டு உளை துயல்வர என்று பொருநராற்றுப்படை கூறுவதும் இதுவே. காது வளர்த்த பாட்டிமார், தங்கள் தலைகளை ஆட்டிப் பேசும்போது அவர்களின் காதுகளில் தொங்கும் தண்டட்டி எனப்படும் குழைகள் எவ்வாறு ஆடும்? சிறு குழை துயல்வரும் காதின் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதுவும் இதுவே. சிறுபாணாற்றுப்படையின் புகழ்பெற்ற ஆரம்ப உருவகமான நிலமடந்தையின் அணிமுலை துயல்வரும் ஆரத்தின் ஆட்டமும் இதுவே.
எனவே, ஒரு புள்ளியை நிலையாகக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது துயல்தல் ஆகும்.
அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
...
கோவையில் அலங்காம இரு என்பார்கள். ஆடாமல் இருப்பதை.
அடிப்பக்கம் ஆடாமல் தலைப்பக்கம் ஆடுவதே அலங்கு, தலையாட்டி பொம்மை போல்தலைப்பக்கம் ஆடாமல் அடிப்பக்கம் ஆடுவது துயல். ஊஞ்சல்போல்
...
On Thursday, December 4, 2014 7:12:32 PM UTC-8, வேந்தன் அரசு wrote:கோவையில் அலங்காம இரு என்பார்கள். ஆடாமல் இருப்பதை.
அடிப்பக்கம் ஆடாமல் தலைப்பக்கம் ஆடுவதே அலங்கு, தலையாட்டி பொம்மை போல்தலைப்பக்கம் ஆடாமல் அடிப்பக்கம் ஆடுவது துயல். ஊஞ்சல்போல்அடிமரமே ஆட்டம் காண்பது “துயர்”. துயர்/துயல்.
துயல்-/துயர்- தொடர்புடைய சொற்கள். எப்படி விளக்குவீங்க?துயர், துன்பம், துனி, துக்கம் இவற்றின் வேர் வேறு
மதுரைப் பக்கம் "அலுங்காமல் குலுங்காமல் ஆயிரமாயிரமாச் சம்பாதிக்கிறான் " என்பார்கள்
On Saturday, December 6, 2014 3:55:17 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:துயல்-/துயர்- தொடர்புடைய சொற்கள். எப்படி விளக்குவீங்க?துயர், துன்பம், துனி, துக்கம் இவற்றின் வேர் வேறுதுக்கம் - வடசொல்.
துனி, துன்பு - துன்-ஆனால்,துயர்/துயல் வேறு.நா. கணேசன்
மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார். அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது. உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும். நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும். ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும், அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.
முனைவர்.கி.காளைராசன்
On Saturday, December 6, 2014 11:48:52 PM UTC-8, kalai wrote:
மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார். அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது. உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும். நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும். ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும், அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.
எனக்குத் தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார். அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது. உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும். நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும். ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும், அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.
எனக்குத் தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை.ஊஞ்சலாடும் தேவியின் காது தொங்கட்டான் குழையின் நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulumநண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும் தெரிவது பற்றியது.____________________________________________________________________________________________On Friday, December 5, 2014 3:16 AM, tamilmani wrote:எனக்கு ஒரு அறிவியல் தேடல் விடையைக்காண முற்பட்டேன். சங்க தமிழ் இலக்கியத்தில் இரண்டு அறிவியற் கூறுகள் (தொல்காப்பியத்தில் ஒன்றில் குவிலேன்ஸ் பற்றிய ஒரு அறிவியல் & மற்றும் ஊஞ்சல் ஆடும் சிறுமியின் காதுஅணி சேர்ந்து (பெண்டுலம்) பற்றிய ஒரு அறிவியல் .இதை சார்ந்த பாடல்கள் வேண்டும் உங்கள் இடம் இருந்தால் எனக்கு அனுப்பிவைக்கவும் இதை இனையதளத்தில் தேட முற்பட்ட போது எனக்கு எதுவும் அகப்படவில்லைஅது மட்டும் யின்றி !!எனக்கு சங்க தமிழ் இலக்கிய நூலில் உள்ள வியக்க வைக்கும் அறிவியல் உண்மை மற்றும் கோட்பாடு ,அதிசயம் பற்றிய (தொகுப்பு,நிரல்,லிங்க்ஸ்,அனைத்தும் அனுப்ப வேண்டுகிறேன்நன்றி!வணக்கம்
எனக்குத் தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை.
ஊஞ்சலாடும் தேவியின் காது தொங்கட்டான் குழையின் நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulumநண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும் தெரிவது பற்றியது.
____________________________________________________________________________________________
On Saturday, December 6, 2014 11:48:52 PM UTC-8, kalai wrote:மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார். அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது. உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும். நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும். ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும், அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.
On Saturday, December 6, 2014 11:30:22 AM UTC-8, தேமொழி wrote:எனக்குத் தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை.பாடல் தருகிறேன். தமிழ்.நெட் காலத்திலிருந்து இணையத்தில் குறிப்பிட்ட பாடல்தான்.ஊஞ்சலாடும் தேவியின் காது தொங்கட்டான் குழையின் நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulumநண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும் தெரிவது பற்றியது.இப்பாடலின் கருத்து: வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது.பாடல் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. ஔவை?? தெரிந்தோர் சொன்னால் மகிழ்ச்சி.சந்தவசந்தத்திலும் கேட்கிறேன்.
நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும் தெரிவது பற்றியது.இப்பாடலின் கருத்து: வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது.
கபிலர் - திருவள்ளுவமாலை:தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால் - மனையளகுவள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்வெள்ளைக் குறட்பா விரி
On Saturday, December 6, 2014 11:48:52 PM UTC-8, kalai wrote:மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார். அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது. உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும். நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும். ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும், அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.இப்படி ஒருபாடல் மீனாட்சிக்கு இருக்கிறதா? எனக்குத் தெரியாது. இருந்தால் தாருங்கள். மகிழ்வேன்.குமரகுருபரர் மீனாட்சியை பாதாதிகேசமாக துதிக்கும் பாடல் அவள் பிள்ளைத்தமிழில் உண்டு.அதில் காதில் உள்ள குழை ஆடுகிறது. ஆனால் இந்தச் செய்தி இல்லை.நா. கணேசன்
நாலாயிர திவ்யப்ப்ரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் பாதாதிகேச வண்ணம், வெண்டளையால் வந்த கலித் தாழிசையால் பாடப்பட்டுள்ளது.அ.ரா
எனக்குத் தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை.ஊஞ்சலாடும் தேவியின் காது தொங்கட்டான் குழையின் நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulum
நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும் தெரிவது பற்றியது.____________________________________________________________________________________________