இழையப்பம் / சந்தகை / சேவை

159 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Dec 18, 2023, 1:03:19 PM12/18/23
to vallamai
தலைப்பாக அமைந்துள்ள மூன்று பெயர்களும் ஒரே அரிசிப் பண்டத்தைத் தான் குறிக்கின்றன. மூன்றையும் இன்றைய வட்டார வழக்குகள் ஆகக் காண்கிறோம். மதுரை வட்டாரத்தில் இ(ழை)டியப்பம்; கொங்கு வட்டாரத்தில் சந்தகை; தஞ்சை வட்டாரத்தில் சேவை. 

நெல்லரிசிப் பண்டங்களின் வரிசையில் இந்த இழை மதுரை வட்டாரத்து இடியாப்பம் பற்றிய தொகை இலக்கியச் செய்திகளைத் தொகுக்கிறது. இன்று வழங்கும் மேற்சுட்டிய மூன்று பெயர்களில் எதுவும் தொகை இலக்கியத்தில் இல்லை. ஆனால் அப்பெயர்கட்கு உரிய பண்டம் பற்றிய வருணனை உள்ளது.

"குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்

பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப்" பெரு.அ.375-379
கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் உவமை- நீர்நிலையில் விழுந்த காஞ்சி மர நிழலில் அம்மரத்தைச் சுற்றிய குருக்கத்திக் கொடியின் பூக்கள் உதிர்ந்து கிடந்தமை; கரிய குவியத்தின் வடிவம் கொண்ட  அடுகலனில் இனிய பாகோடு கூட்டி அட்டு இழைகளாகத் தோன்றும் வட்டமான அப்பம் பாலோடு கலந்து கிடப்பது போலக் காட்சி அளித்தது. 

(தொடரும்)

சக 

kanmani tamil

unread,
Dec 19, 2023, 2:41:03 AM12/19/23
to vallamai
முன்னர் சுட்டிய மேற்கோளில் இடம்பெறும் 'பாசிலைக் குருகு' குருக்கத்தி என்று அழைக்கப்படுவதாகும். அதன் ஒளிப்படம் பின்வருமாறு:



இப்பூவின் மகரந்தம் நூல் இழைகளைப் போல் தோன்றுவது காண்க. இதழ்கள் வெண்மையாக இருப்பதும் நோக்கத்தக்கது. இதன் காரணமாகவே நீரில் விழுந்து கிடந்த இப்பூ காண்பதற்குப் பாலோடு சேர்ந்து இருந்த இழையப்பம் போலக் காணப்பட்டது எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் புனைந்து உரைக்கிறார். (தொடரும்) சக
கூவியர்


N. Ganesan

unread,
Dec 19, 2023, 10:02:33 PM12/19/23
to vall...@googlegroups.com
பிட்டு (புட்டு), கொழுக்கட்டை ஆவியில் வேவிக்கும் உணவு வகைகள். அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக, இழையப்பம் உருவாகியுள்ளது. அரிசிமாவைக் கொஞ்சம் எண்ணெயில் வணக்கி, கொழுக்கட்டை ஆவியில் வேகச் செய்து, சந்தகம் என்னும் சந்து உள்ள நாழியில் பிழிவது சந்தகை. சந்து- கப்பிரத்தியம் (ka-pratyayam) பெற்றுச் சந்தகம் என்னும் கருவி பெயர் பெறுகிறது. அவித்தல் இங்கே மிகப் பழங்காலத்தில் பயனானது பற்றிய சான்று.

ஆனால், உழுந்து நொதிமாவாக்கி இட்லி, தோசை சங்க காலத்தில் உருவாகவில்லை எனலாம். இட்டளிகை எனக் கன்னட நாட்டு  பாக சாஸ்திர நூல்களில் காணும் செய்முறை வேறாக உள்ளது. இப்போதைய இட்லி (< இட்டவி? இட்டளி?) வேறு. இட்லியில் நொதித்தல் இருக்கிறது.

இழையப்பம் செய்முறை:
https://www.youtube.com/watch?v=a-LZOJ6i0Ps
https://www.facebook.com/TamilUnavuDotCom/posts/263898500805443/

NG

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv_qOPAz5pPz26GdRuC5d-GKWy6Za7yJOkMnq%2BBHQ9n3Q%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Dec 20, 2023, 12:14:43 AM12/20/23
to vallamai
பச்சரிசியை ஊற வைத்து (பச்சரிசி மிகக் குறைந்த நேரத்தில் ஊறிவிடும்.); உலர்த்திக்; குத்துரலில் போட்டு இடித்துச் (ஊறிய பச்சரிசியை வெகு சுலபமாக இடிக்கலாம்.);
சலித்து மாவாக்கி விடலாம். இது தான் பாரம்பரிய முறை. 

இன்று இதற்கு மலைத்து நிற்கும் சமூகத்தில் தான் நானும் இருக்கிறேன்; பெண்கள் சமுதாயமே இருக்கிறது. இப் பாரம்பரியத்திற்கு உரிய மாற்றாக ஒவ்வொரு வட்டாரத்திலும்; சமூகத்திலும் பல்வேறு முறைகள். 

எங்கள் வட்டாரத்திலும் பச்சரிசியை ஆட்டி எண்ணெயில் வதக்கிச் செய்வோர் உள்ளனர். நான் பின்பற்றும் முறை வருமாறு:

ஆண்டிற்கு ஒருமுறை தயார் செய்தால் போதுமானது. மூன்று கிலோ பச்சரிசியைக் கழுவி ஊற வைப்பேன். அக்கினி நட்சத்திரத்து வெயிலில் உலர்த்துவேன். காய்ந்தவுடன் மாவரைக்கும் மில்லுக்குக் கொடுத்து அனுப்பினால் பட்டுப் போல மிருதுவான மாவு வந்து சேரும். பங்கு போட்டு மகன் வீட்டிற்கு... மகள் வீட்டிற்கு... எனக் கொடுத்து அனுப்பிவிட்டு எனக்கும் வைத்துக் கொள்வேன். அவரவர் வீட்டில் அந்த மாவைக் குறைந்த பட்சத் தீயில் மெலிதாக வறுத்து வைத்துக் கொண்டால் போதும். 

பச்சரிசி மாவு தயார்நிலையில் (ready-made) பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
 
பாரம்பரிய முறையில் மரத்தால் ஆன குழலில் அரிசி மாவும் வெல்லக் கரைசலும் சேர்த்த கலவையைப் பயன்படுத்திச் செய்யும் இடியாப்பம். 


மரத்தாலான இடியாப்பக் குழலுக்கு மாற்றாகப் பல இயந்திரங்கள் வந்து விட்டன. மதுரை புதுமண்டபத்தில் கிடைக்கும் பாரம்பரியப் பொருட்களுள் இந்த இடியாப்பக் குழலும் அடக்கம் (இப்போது புதுமண்டபம் smart city திட்டத்தின் கீழ் புனரமைக்கப் படுவதால் இந்தப் பாரம்பரியப் பொருட்கள் கிடைக்கும் இடத்தை இனி தேடித் தான் பார்க்க வேண்டும்). ஆனாலும் மர இடியப்பக் குழல் இங்கே பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். 

கருப்பட்டிப் பாகு சேர்த்தும் செய்வது உண்டு. 


இதைத் தேங்காய்ப் பாலில் சேர்த்துச் சாப்பிடும் வழக்கமும் உள்ளது. 

வெல்லம் பயன்படுத்தும் போது தான்  பெரும்பாணாற்றுப்படையில் புலவர் கையாளும் உவமையின் வண்ணம் முற்றிலும் பொருந்துகிறது. 

மதுரையில் ஒவ்வொரு மருத்துவ மனைக்கு வெளியிலும் இடியாப்பக் கடை இருக்கும். குழந்தைகட்கும் நோயாளிகட்கும் வயோதிகர்க்கும் எந்தத் தீங்கும் செய்யாத உணவுமுறை. 

இந்த அரிசிப் பண்டம் ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்து மறையாத பாரம்பரியம் மிகுந்த உணவு ஆகும். 

சக 



kanmani tamil

unread,
Dec 20, 2023, 8:46:49 PM12/20/23
to vallamai
இழையப்பம் மெதுவாக இருக்க அரிசி மாவுடன் ஜவ்வரிசி சேர்த்து அரைக்கும் வழக்கம் உள்ளது. ஜவ்வரிசி குச்சிக் கிழங்கு என அழைக்கப்படும் ஏழிலைக் கிழங்கில் இருந்து செய்யப்படுவது ஆகும். இதன் பயன்பாட்டைப் பின்வரும் காணொலி காட்டுகிறது. 

https://youtube.com/shorts/raRA0u8lTbs?si=_ScjOmBEF_N6AQj6

பாரம்பரியமான பனைஓலைக் கண்தட்டில் இடியப்பம் பிழிந்து வேக வைப்பது நோக்கத் தக்கது. 


ஆவியில் அவிப்பதும் நீரிலே உவிப்பதும் திராவிட நாகரிகத்தின் அடையாளச் சின்னங்கள். 

(முற்றும்)

சக 

வேந்தன் அரசு

unread,
Dec 21, 2023, 4:19:36 AM12/21/23
to vall...@googlegroups.com
இடியாப்பம் வேறு அப்பம் வேறு அல்லவா?

வியா., 21 டிச., 2023, AM 7:16 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Dec 21, 2023, 5:21:31 AM12/21/23
to vallamai
ஆம் ஐயா; 
இழையப்பம் >>> இடியப்பம் 

குழியப்பம் = பணியாரம் 

அப்பம் = ஆப்பம் (தமிழ் இலக்கியம் சொல்லும் மெல்லடை). 

அப்பம் என்பது பொதுப்பெயர் 

சக 

N. Ganesan

unread,
Dec 21, 2023, 11:09:56 PM12/21/23
to vall...@googlegroups.com, Santhavasantham
SK > "குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்

பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப்" பெரு.அ.375-379

>கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் உவமை- நீர்நிலையில் விழுந்த காஞ்சி மர நிழலில்
> அம்மரத்தைச் சுற்றிய குருக்கத்திக் கொடியின் பூக்கள் உதிர்ந்து கிடந்தமை;
> கரிய குவியத்தின் வடிவம் கொண்ட  அடுகலனில் இனிய பாகோடு கூட்டி அட்டு
> இழைகளாகத் தோன்றும் வட்டமான அப்பம் பாலோடு கலந்து கிடப்பது போலக் காட்சி அளித்தது.

அருமையான சங்க நூல் வண்ணனை. பாரம்பரிய முறையில் சந்தகை சமைமுறை:
https://groups.google.com/g/vallamai/c/98ChVoBLL1E/m/x_OC4YskAAAJ

(1) குருகு = குருக்கத்தி, குருக்கத்திகை. கத்திகை என்றும் இலக்கியங்களில் வருகிறது. பொலி, பொலி என்று கிடாவெட்டில் கேட்கலாம். பின்னர் பொலிசை இடுவர். பொலி > பலி (சங்க நூல்கள், சம்ஸ்கிருத நூல்கள் (bali). சமணர் நூல்களில், இந்தப் பொலி, பூப்பொலி/பூப்பலி என்பதாக இருக்கிறது:

https://www.tamilvu.org/slet/l3E00/l3E00pur.jsp?n=1878
பேரொளிப் பீதக வுடையர் பைம்பொனால்
ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி
போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர்
வாரணி வனமுலை யவரொ டென்பவே.

https://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=1232
5. நடுகற் காதை
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.

----------
சிலப்பதிகாரத்தில் பிரதிஷ்டை(கும்பாபிஷேகம்)

சிலப்பதிகாரத்தில் பிரதிஷ்டை(கும்பாபிஷேகம்) பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. சேர மன்னன் கண்ணகிக்கு சிலை நிறுவ உத்தரவு பிறப்பிக்கின்றான். அதனை  இளங்கோவடிகள்,

"கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்பு கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்."

 என்று பாடுகின்றார். அதாவது ஒரு கும்பாபிஷேகம் செய்வதற்கான கிரியைகளை  மன்னன் வரிசையாக கூறி உத்தரவு இடுகின்றான். கும்பம் என்ற கடங்களை தயார் செய்து, பூப்பலி என்பதை இன்றைய பிரவேசபலி என்ற கிரியை செய்து, காப்புக் கடை நிறுத்தி என்ற வாஸ்து பூஜை செய்து அஷ்டதிக் பாலகர்களை பூஜித்து  காப்பாக நிறுத்தி,வேள்வியும் விழாவும் நாள்தொறும் என்றபடிக்கு, இன்றைக்கு செய்வதுபோல் யாகசாலை அமைத்து  நான்குகால, ஆறுகால யாகங்கள் பூஜைகள் செய்து, கடவுள் மங்கலம் என்ற கும்பாபிஷேகம் செய்ததாக சிலப்பதிகாரம் உரைக்கின்றது.

புரட்சிக்காவியமான சிலப்பதிகாரத்தில்தான் யாகங்கள் செய்து கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்த அற்புத செய்தியும் உள்ளது.

நன்றி!! தில்லை கார்த்திகேயசிவம். https://sivachariyar.com/important-articles/98-2019-09-18-16-46-12
------------------------

வண்டுசூழ் பூப்பலி சுமந்து தான்வலங்
கொண்டுசூழ்ந் தெழுமுறை யிறைஞ்சிக் கோனடி
யெண்டிசை யவர்களும் மருள ஏத்தினான் - சிந்தாமணி (கொங்கு நாட்டு இலக்கியங்களில் முக்கியமான ஒன்று.)

பூப்பொலி இன்றும் சேர நாட்டில் - அதன் தலைமையிடமான கொங்கு நாட்டிலும் வழக்கில் உள்ள சொல் தான். பாலக்காட்டுத் தந்திரிகள் திருவிளக்கு வைத்து, பூப்பொலி செய்வது வழக்கம். பார்க்க மிக அழகாக இருக்கும்.
https://m.dinamalar.com/detail.php?id=2450107
”பந்தலூர்:நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய, வயநாடு அம்பலவயல் வேளாண் ஆராய்ச்சி மையத்தில், மலர்கண்காட்சி துவங்கியது.நீலகிரி எல்லையில் உள்ள தாளூர் அருகே, கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், அம்பலவயல் பகுதி அமைந்துள்ளது. இங்கு வேளாண் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. அதில், 10 ஏக்கர் பரப்பளவில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டுக்கான மலர்கண்காட்சி துவங்கியது. 'பூப்பொலி - 2020' எனும் பெயரில் நடத்தப்படும் மலர்கண்காட்சியை கேரள வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரபாபு துவக்கி வைத்தார். ”

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0012602_தமிழில்_தாவரச்_செய்திகள்_2.pdf
வரகுணபாண்டியன், நிறைகுறையாப் பழங்காசினைப் “பூப்பொலி காசு” எனச் சபையாருக்கு வழங்கினான். இது, திருப்புத்தூர்க் கல்வெட்டிலே உள்ள செய்தி ஆகும். (சுந்தர சோபிதராஜ், பக்கம் 4).

மாயவரம் மயிலாடுதுறையில், அஞ்சொலாள் என்று தேவி திருநாமம் தேவாரத்தில் உள்ளது. பிற்காலத்தில், அஞ்சலாள் ஆகியுள்ளது. இதுபற்றி 2008-ல் எழுதின பதிவு: https://nganesan.blogspot.com/2008/12/mayiladuthurai-anjolaal.html

தம்பபன்னி - பாலி மொழியில் இருக்கிறது. இலங்கை தென்னம்பொருப்பன் (பொதியவெற்பர் = மலயத்வஜர்) ஆகிய
பாண்டியருக்கு அடங்கியது. எனவே, சிலோன் தீவை, கிரேக்கர்கள் முதற்கொண்டு தம்பபன்னி (< தம்பொன்ன < தம்பொருனை)
என்றே அழைத்துள்ளனர். பூப்பொலி என்னும் சொல் பூப்பலி (பலி < பொலி) ஆதற்போல்,தம்பொன்னை > தம்பன்னி தம்பபன்னி
என விரிந்தது. இந்தப் பாலி/ப்ராகிருத மாற்றம் சம்ஸ்க்ருதம் ஆனபோது தாமிரபர்ணீ. செம்பு > தம்ப (பாலி) > தாம்ர (வடசொல்)
ஆனது.  தண்பொருனை என்ற பெயர் தாம்ரபர்ணிக்கு மிகப் பிற்காலத்தில் தான் உண்டு என அப்பகுதியைப் பூர்வீகமாகக்
கொண்ட பேரா. ச. வையாபுரிப்பிள்ளை கட்டுரையில் விளக்கியுள்ளார். தம்பபொருனை தம்பொருனை > தண்பொருனை
எனப் பிற்காலத்தில் ஆக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

(a) அஞ்சொலாள் > அஞ்சலாள் (மயிலாடுதுறை) ( b) தம்பபொன்னை > தம்பபன்னி > தாம்ரபர்ணீ (c) பூப்பொலி > பூப்பலி (Cf. poli > bali) ...
போல, (d) குருகு + கொத்து ==> குருக்கொத்தி > குருக்கத்தி. குருக்கத்தி கத்திகை எனவும் வரும். கொத்திகை > கத்திகை. கொத்தாக, பாண்டியர் சேனைகள் இருந்த இடம் கொந்தகை (கீழடி அருகே) எனப் பெயர். விஜயநகரத்தில் ஆனெகுந்தி/ஆனெகொந்தி உள்ளது போல.

கொத்துக்கொத்தாக, குருகு மலர்கள் பூக்கின்றன. எனவெ “கோதை மாதவி” என இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. கடவு > கதவு, கடம்பு > கதம்பம் போல, கட்டுக்கட்டாக உள்ளதால், கட்டிகை > கத்திகை என ஆனதா என்பதும் சிந்திக்கலாம்.

---------------------------

குருகு(குருக்கத்தி) மலருக்கு மாதவி என்பது வடமொழிப் பெயர். முல்லைக் கொடி, மாதவிக் கொடி. முல்லைக்குப் பகரி (substitute) ஆக மாதவி மலரைச் சொல்வது மரபு. எனவே, தான் ஆடல் பாடல் வல்ல கணிகை ஆகிய பெண் கதாபாத்திரத்துக்கு மாதவி என்னும் பெயரைச் சூட்டியுள்ளார் இளங்கோ அடிகள்.
முன்பு ஒருமுறை விரிவாகச் சொல்லியுள்ளேன்:
https://groups.google.com/g/vallamai/c/vHgnu-a999M/m/3M4CvDVUDgAJ

கர்ணகம் என்றால் தாமரைப் பொகுட்டு (Pericarp of the Lotus). லக்ஷ்மிக்கு கர்ணகா, கர்ணகீ என்பது இதனால். பவித்திரா என்னும் வடமொழிப்பெயர் தமிழிலே பவித்திரை என்றாதல்போல, கர்ணகா கர்ணகை என்பதை உள்வாங்கிக் கோவலன் மனைவிக்கு இளங்கோ அடிகள் பெயரிட்டார், கர்ணகா/கர்ணகீ > கர்ணகை/கர்ணகி > கண்ணகி தாமரை நாளத்தின் பொகுட்டில் வீற்றிருப்பவள். கோவலன் கண்ணபிரான்/விஷ்ணு பெயரில் அமைந்ததால் இப்பெயர். குருக்கத்தி = மாதவி. முல்லைத் திணை கற்புக்குச் சின்னம். முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் மாதவி (குருக்கத்தி). எனவே, கணிகைக்கு மாதவி எனச் சிலம்பில் பெயரிட்டார். கனகர், விஜயர் - வடக்கே நடந்த மகாபாரதப் போரில் ஹரி என்றால் பொன், விஷ்ணு. விஜயன் அர்ஜுநன். பகவத் கீதை நாயகர்கள் பெயர்கொண்டு அமைந்த கற்பனை வடநாட்டு மன்னர் பெயர்களாக சிலம்பு நாவலில் எழுதினார் இளங்கோ அடிகள்.
https://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html

கண்ணகி (கர்ணகி) - கோவலன் (கிருஷ்ணன்) - சிலம்பின் நாயக, நாயகியர் பெயர்ப் பின்புலம்
https://groups.google.com/g/minTamil/c/sd6g6laCR20/m/Vsj8LvTNNSoJ

குருகு என்னும் கொடி (குருக்கத்தி), குரவு (குரா) என்னும் குறுஞ்செடி, குருந்து என்னும் குறுமரம் - மூன்றும் நறுமணம் கொண்ட மலர்களைப் பூப்பன ஆகும். அறிஞர் பி. எல். சாமி கட்டுரை குருகு, குரவு, குருந்து இம் மூன்று தாவரங்கள் மீதுமானது:
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdluhy.TVA_BOK_0006853/page/177/mode/2up

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jan 8, 2024, 10:25:11 PM1/8/24
to vallamai
"... மனையோள் 
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த 
திரிமரக் குரலிசை கடுப்ப வரிமணல் 
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ" அகம் 224

அரிசியை நன்கு காய வைத்துத் திரிகையில் சுற்றி மனையோள் மாவாக்கும் போது எழும் ஓசை போலத் தலைவனின் தேர்த்தடம் பதியும் மணலில் இருந்து எழும் ஓசையை எதிர்பார்த்துத் 'தலைவி காத்து இருப்பாள்; ஆதலால் விரைக' எனத் தேர்ப்பாகனிடம் தலைவன் சொல்கிறான். 

நெல்லரிசிப் பண்ணிகாரங்கள் ஆகிய கொழுக்கட்டை, இழையப்பம், புட்டு, தெள்ளுமா (துள்ளுமா) அனைத்திற்கும் அடிப்படை ஆக அமையும் அரிசி மாவைத் தயார் செய்யும் முறை இப்பாடல் அடிகளில் உள்ளது. 

'திரிமரம்' என்ற சொற்றொடர் பண்டு இதற்கு உரிய இயந்திரம் மரத்தால் ஆனதாகப் பயன்பாட்டில் இருந்தமையைக் காட்டுகிறது. கல்லால் ஆன இயந்திரத்தைத் திரிகல் > திருகல் எனப் பேச்சு வழக்கில் எங்கள் வட்டாரத்தில் வழங்கினோம். இன்று யாரும் இதைப் பயன்படுத்துவதாக இல்லை. 

விளக்கவுரை 'திரிமரம்- இது திரிகை என வழங்கும்' என்கிறது.

அரிசிமா செய்முறைக்கு உரிய நுட்டமாக; அதை நன்கு காய வைக்க வேண்டும் என்ற குறிப்பு இடம் பெறுகிறது. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 10, 2024, 6:23:13 AM1/10/24
to vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, pandiya raja, Pandiyaraja


On Mon, Jan 8, 2024 at 9:25 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> "... மனையோள்
> ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த
> திரிமரக் குரலிசை கடுப்ப வரிமணல்
> அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ" அகம் 224
>
> அரிசியை நன்கு காய வைத்துத் திரிகையில் சுற்றி மனையோள் மாவாக்கும் போது எழும் ஓசை போலத் தலைவனின் தேர்த்தடம் பதியும் மணலில் இருந்து எழும் ஓசையை எதிர்பார்த்துத் 'தலைவி காத்து இருப்பாள்; ஆதலால் விரைக' எனத் தேர்ப்பாகனிடம் தலைவன் சொல்கிறான்.

சுள்ளி-/சுணங்கு/சுடு- :: தமிழின் அடிப்படையான -ள்-/-ண்-/-ட்- வளைநா (retroflex) ஒலி கொண்ட சொற்றொகுதி. இவை போலும் சொற்றொகுதிகள் தமிழில் நூற்றுக்கணக்கில் உண்டு. எனவே தான். வளைநா ஒலியெழுத்துகள் சம்ஸ்கிருதத்தில் த்ராவிடபாஷையால் உருவானவை. Retroflexes are a deep structural phenomenon in Dravidian, and enters Sanskrit akshara-maalaa. One of the substratum effects of Dravidian in Sanskrit in North India.

உணக்கு- < சுணக்கு- (சொல்முதல் ச்-மெய் அழிதல்):
சுள்ளி-/சுணங்கு/சுடு- > உளத்து/உளர்த்து (உளர- கலித்தொகை),/ உணத்து/உணர்த்து (தலைமயிரை வெயிலில் நின்று நல்லா உணர்த்து/ஒணத்து). சுண்ணம் (சுண்ணாம்பு) > உண்ணம் > உஷ்ணம்.
விள்-/விண்/விட்டு(விண்டு). விண்ணு > விஷ்ணு போல, சுண்ண- > உண்ண > உஷ்ண.

சொன்முதல் மெய்கெட்டுச் சொற்கள் தோன்றுதல்:

>
> நெல்லரிசிப் பண்ணிகாரங்கள் ஆகிய கொழுக்கட்டை, இழையப்பம், புட்டு, தெள்ளுமா (துள்ளுமா) அனைத்திற்கும் அடிப்படை ஆக அமையும் அரிசி மாவைத் தயார் செய்யும் முறை இப்பாடல் அடிகளில் உள்ளது.
>
> 'திரிமரம்' என்ற சொற்றொடர் பண்டு இதற்கு உரிய இயந்திரம் மரத்தால் ஆனதாகப் பயன்பாட்டில் இருந்தமையைக் காட்டுகிறது. கல்லால் ஆன இயந்திரத்தைத் திரிகல் > திருகல் எனப் பேச்சு வழக்கில் எங்கள் வட்டாரத்தில் வழங்கினோம்.

திரிமரம் கல்லால் ஆனதே. அலைமருள்தல் > அலமரல், தெருள்மரல் > தெருமரல். அலைமரல், தெருமரல் இரண்டும் சுழற்சி என்கிறார் தொல்காப்பியர். கொங்குநாட்டில் தெருட்டுச்சீர் கன்னிப்பெண்கள் ருதுவாதல் சீர். திரட்டிச்சீர் என்கிறார்கள். தெருமரல் எந்திரம் தெருமரம் >> திரிமரம் என்றானது சங்க காலத்திலேயே என இலக்கியம் காட்டுகிறது. சங்ககாலத்தில் இப்படியா, பிற்காலத்தில் ஏடெழுதுவோர் திருத்தமா? லட்சக்கணக்கான மக்கள் நாடோறும் வழங்கும் சொல் பேச்சுவழக்கில் மாறுவது இயற்கை.

தெருமரம்/திரிமரம் யானையின் பாதத்தை ஒத்திருக்கும் என்கிறது பெரும்பாணாற்றுப்படை.
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் (பெரும்பாண். 187).

ஏனோ, திரிமரம் பற்றிய பெரும்பாணாற்றுப்படை அடி தமிழ் கன்கார்டன்ஸ் வலைத்தளத்தில் காணோம். பேரா. ப. பாண்டியராஜாவுக்கு நகல் அனுப்புகிறேன்.

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல்காப்பியம்). திரிமரம் தெருமரல் என்னும் வினைச்சொல்லின் தொழிற்பெயர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 10, 2024, 6:43:43 AM1/10/24
to vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, pandiya raja, Pandiyaraja
187. களிறு தாள் புரையும் திரி மரம் பந்தர்-யானையினது காலை யொக்கும் வரகு திரிகை நட்டு நிற்கும் பந்தரினையும்,

நச்சினார்க்கினியர் “திரிமரம்” என்ற எந்திரம் வரகு நெரிக்கப் பயன்படுவது என்பதை உணரச்செய்கிறார். ஆனால், திரிமரம் என்பது மரத்தால் செய்யப்படும் எனக் கூறவேயில்லை. இது குறிப்பிடத்தக்கது.

தற்கால உரை எழுதுவோர், திரிமரம் எனப் பார்த்ததும், மரத்தால் செய்தது என எழுதிவிட்டனர். :-)

திரிமரம் < தெருமரல் என்னும் வினை.

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல்காப்பியம்). இச் சூத்திரத்திற்கு நல்ல உதாகரணம்.

kanmani tamil

unread,
Jan 10, 2024, 8:00:18 AM1/10/24
to vallamai
///ஏனோ, திரிமரம் பற்றிய பெரும்பாணாற்றுப்படை அடி தமிழ் கன்கார்டன்ஸ் வலைத்தளத்தில் காணோம்./// Dr.Ganesan wrote at 4.53pm

tamilconcordance வலைத்தளத்தில் 
'க' வரிசை, 'தா' வரிசை, 'பு' வரிசை, 'தி' வரிசை, 'ம' வரிசை, 'ப' வரிசை அனைத்திலும் "களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்" என்ற தொடர் உள்ளது.

ஆனால் 'தெருமரல்' > திரிமரம் ஆனது என்பதற்கு வலுவான சான்று இல்லை. 

மரத்தால் ஆன உரலை வண்டியில் கட்டி எடுத்துச் சென்றதாகப் பத்துப் பாட்டு கூறுவதால் மரத்தாலான திரிகையும் புழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.
 சக 

N. Ganesan

unread,
Jan 10, 2024, 8:05:12 AM1/10/24
to vall...@googlegroups.com
உரல் வேறு. சிந்து சமவெளியிலே கூட மர உரல் உண்டு. ஆனால், கூலம் அரைத்து மாவு ஆக்கும் திருகை (பெருவாரியான சொல்) வேறு. மரத்தில் ஆசாரியுடன் சொல்லி வரகு, அராகி (ராகி) அரைத்துப் பார்க்கவும். மாவு கிடைக்காது.

NG

N. Ganesan

unread,
Jan 10, 2024, 8:10:33 AM1/10/24
to vall...@googlegroups.com
திருகை < தெருமரல் வினை. தெரும்வரல் (வருதல் என்பது verbalizer).
தெரும்- திரும் :: திரும்பு/திருப்பு, திருகு, ... (திருகாணி) ... தெரும் வரல், அலம் வரல் போல. அலமருதல், தெருமருதல். பிள்- எனும் வினை. பிள-,
பிணா, பெண் என வரும். பிள்-/பெள்- >> பெண். அதுபோல, திரு-/தெரு- >> தெரும்வரல்/தெருமரல். இதன் தொழிற்பெயர் திருகை. திரிகை எனவும் வரும்.

kanmani tamil

unread,
Jan 11, 2024, 4:51:56 AM1/11/24
to vallamai
அகம் 224 சொல்லும் திரிமரம் மரத்தால் ஆனது என்று நிறுவப் பெரும்பாணாற்றுப்படை சொல்லும் உவமை துணை செய்கிறது.  "களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்" (பெரு.187)" திரிமரத்தின் தோற்றம் ஆண்யானையின் பாதம் போல் இருக்கும் என்கிறது. ஆண்யானைப்பாதத்தின் படத்தையும் முதுபெருமரம் ஒன்றின் அடிப்பகுதியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவ் உவமையைப் புரிந்து கொள்ள இயலும் . 

இதோ ஒரு முதுபெருமரத்தின் அடிப்பகுதி. இதன் தண்டுப் பகுதியிலிருந்து வேர்கள் பிரிந்து பூமிக்குள் செல்லும் தோற்றம் நோக்கற்பாலது. இதே போல் யானையின் பாதத்திலும் அதன் விரல்களின் பிரிவு நகங்களோடு காட்சி அளிப்பது ஒப்புமைப் படுத்திப் பார்க்கத் தக்கது. 



 
இதோ யானையின் பாதம்... இது ஆண் யானை என்று உறுதி சொல்ல இயலாது எனினும்; யானைப் பாதத்தில் பால் பாகுபாடு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக இருக்குமா என்பது ஐயமாக உள்ளது. அளவாலும் வலுவாலும் சற்று முரட்டுத் தனமாக இருக்க வாய்ப்பு உண்டு; அவ்வளவே.





மரத்தின் அடி பூமியில் சேர்ந்து இருக்கும் இடமும் யானையின் பாதமும் ஒப்பிடக் கூடியதாக உள்ளன.
சக 








































    

N. Ganesan

unread,
Jan 11, 2024, 5:19:53 AM1/11/24
to vall...@googlegroups.com
திருகையின் சுற்றளவு பற்றிய ஒப்புமை யானையின் கால். முல்லை போன்ற பல், என்கிறபோது வெண்மை மட்டும்தான் ஒப்புமை. மேலும், ஆசாரி மரத்தைச் செதுக்கிச் செய்வார். படத்தில் உள்ள மரம் என்ன மரம்? இந்தியாவில் உண்டா?


kanmani tamil

unread,
Jan 11, 2024, 9:19:57 AM1/11/24
to vallamai
இன்னும் கொஞ்சம் தெளிவாக இவ் ஒப்புமையை ரசிக்க வேண்டும் என்றால் இன்னொரு படம் ஒட்டுகிறேன். இப் படத்தில் இந்த யானையின் கால் விரல்நகங்கள் வண்ணம் ஊட்டப்பட்டு உள்ளன; எளிதாக அவற்றை ஓரம்கட்டி (just  minus the fingers with nails) எஞ்சிய பகுதியை மட்டும் நோக்கினால் இந்த உவமை எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

வினை, பயன், மெய், உரு என்ற நான்கு அடிப்படைகளில் இது மெய்; அதாவது வடிவ ஒற்றுமைக்காகத் தேர்ந்த உவமை என்பது வெளிப்படை. 
எப்படிப் பயன்படுத்தி இருப்பர் என்று சிந்தித்துப் பார்த்தால்; அந்த அடிமரத்தைச் சுற்றிலும் இடைவெளி இன்றித் தாம் பயன்படுத்திய விலங்குத்தோலைச் சுற்றிக் கொண்டு; மேலே இன்னொரு மரவட்டமோ கல்வட்டமோ சுழலும் படி அமைத்து இருக்க வாய்ப்பு உள்ளது.   


எந்த ஊரைச் சேர்ந்த மரமாக இருந்தாலும் அடிமரத்தில் இருந்து வேர் பிரிந்து செல்லும் இடம் இப்படித் தானே தெரியும். வேறு மாதிரி நான் பார்த்தது கிடையாது.இதனால் பண்டைத் தமிழகத்தில் நிலவுரல் போலவும்; பாறைகளில் இருக்கும் மருந்துக் குழிகள் போலவும்; இடத்தை விட்டு அசைக்க முடியாத திரிமரங்கள் இருந்தன எனத் தெரிகிறது. இன்றைய மரங்களில் திரிமரம் செய்ய இயலாது ஏனெனில்; நாம் நூற்றாண்டுகளாக வளர்ந்து வாழ்ந்த வைரம் பாய்ந்த மரங்களை எல்லாம் அழித்து விட்டுப் பெருமையும் பேசுகின்றோம். "காடு கொன்று நாடாக்கிய சோழன் பாடல் பெறுகிறான் அல்லவா?!

அப்படி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக அழித்து விட்டதால்; தேவையான வைரம் பாய்ந்த மரங்கள் கிட்டாததால் கற்களிலிருந்து திரிகல் செய்து புழங்கி வந்துள்ளோம். திரிகை என்பது திரிமரத்துக்கும் திரிகல்லுக்கும் பொதுவான பெயர் ஆக இன்றும் சில வட்டாரங்களில் வழங்குகிறது. மதயானைக் கூட்டம் என்ற திரைப்படத்தின் பாடல் 'திரிக்கை' என்று திரிகையை வழங்குவது காண்க.


https://www.varigal.com/87de1f6fc5/kona-kondakari-songs-lyrics

"தினம் தினம் திக்கைக்குள்ளே கேப்பை போல என்னைத் திரிக்கிறா..."


சக




Raju Rajendran

unread,
Jan 12, 2024, 5:03:49 AM1/12/24
to vall...@googlegroups.com
like

வியா., 11 ஜன., 2024, PM 3:21 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jan 12, 2024, 7:49:38 AM1/12/24
to vallamai
இரண்டு படங்களும் (யானைப் பாதமும் அடிமரமும்) ஒத்து இருக்கின்றன என்று நீங்கள் சொல்வதாகப் பொருள் கொள்கிறேன்.  சரி தானே வேந்தர் ஐயா? நன்றி. 
சக 

Raju Rajendran

unread,
Jan 12, 2024, 8:45:42 AM1/12/24
to vallamai

kanmani tamil

unread,
Jan 12, 2024, 9:06:54 AM1/12/24
to vallamai

kanmani tamil

unread,
Mar 10, 2026, 5:03:26 AM (yesterday) Mar 10
to vallamai
இடியப்பம் பற்றிய செய்தி இன்னொரு புறநானூற்றுப் பாடலிலும் உள்ளது. 

இந்த இழை தொடங்கி நீண்ட காலம் கழிந்து விட்டதாலும்; பிற பல செய்திகள் குறுக்கிடுவதாலும்.... 

இடியாப்பம் பற்றிய தொகைப் பாடல் குறிப்புகள் வருமாறு:

"குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப்" பெரு.அ.375-379

கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் உவமை- நீர்நிலையில் விழுந்த காஞ்சி மர நிழலில் அம்மரத்தைச் சுற்றிய குருக்கத்திக் கொடியின் பூக்கள் உதிர்ந்து கிடந்தமை; கரிய குவியத்தின் வடிவம் கொண்ட  அடுகலனில் இனிய பாகோடு கூட்டி அட்டு இழைகளாகத் தோன்றும் வட்டமான அப்பம் பாலோடு கலந்து கிடப்பது போலக் காட்சி அளித்தது. 

அடுத்தது: புறநானூறு- 

வறுமையில் பசித்துன்பத்திற்கு ஆளான ஐயூர் முடவனார் வளமான விருந்துணவிற்கு ஆசைப்பட்டதை அவரது பாடல் காட்டுகிறது. அவர் விவரிக்கும் கிள்ளி வளவனது விருந்துணவு வருமாறு:

"அடுமகள் முகத்த அளவா வெண்ணெல் 
தொடிமாண் உலக்கைப் பரூஉக் குற்றரிசி 
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல் 
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி 
மோட்டிரு வாராஅல் கோட்டுமீன் கொழுங்குறை 
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல் 
பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத்தன்ன 
மெய்களைந்து இனனொடு விரைஇ… 
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்" (புறம்.399) 

காடி நீர் பெய்த வெள்ளுலையில் வெண்ணெலரிசியை இட்டுச் சமைத்த சோற்றுக்கு; 

ஓங்கிய மாமரத்தின் நிழலில் விளைந்து மணக்கும் மாங்காய் சேர்த்து வைத்த வரால்மீன் குழம்பும் (புளிப்பு) 

சுறாமீன் துண்டங்களின் பொரியலும்  (கார்ப்பு) 

வள்ளைக்கீரைக் கூட்டும் (தாது மிகுதி ஆதலால் உவர்ப்புக்கு உரியது)

பாகல் கறியும் (கசப்பு) 

கொத்தாகப் பூத்த  பாதிரிப் பூ
இதழ்கள் விரிய அவற்றின் புல்லிவட்டப் பகுதி நீங்கிய பின் நூல் போலத் தோன்றும் அல்லிவட்டத்தை மட்டும் சுவை ஊட்டக் கூடிய பொருளோடு சேர்த்துக் கலந்தாற்  போன்று பாலிலும் இனிப்பிலும் மூழ்குமாறு அளிக்கும் மென்மையாக வெந்து உதிரியாக இருக்கும் இழையப்பமும் (இனிப்பு - dessert) இடம் பெறும் மேன்மை பொருந்திய விருந்து என்கிறார்.

பாதிரி ஊழ்முகை = கொத்தாகப் பூத்த பாதிரி மொட்டுகள் 

அவிழ்விடுத்தன்ன = மலர்ந்து விரிந்ததைப் போல

மெய்களைந்து = புல்லிவட்டமாகிய இதழ்கள் நீங்கிவிட  

இனனொடு விரைஇ… = சேர்க்க வேண்டிய பால், இனிப்பு ஆகியவற்றைக் கலந்து... (பாடல் சிதைந்து உள்ளது - நூல் போலத் தோற்றம் அளிக்கும் அல்லிவட்டப் பகுதி மாதிரியான இழையப்பம்) 

மூழ்ப்பப் பெய்த = மூழ்கும்படி 

முழுஅவிழ்ப் புழுக்கல் = நன்கு மென்மையாக வெந்து உதிரி உதிரியாக இருத்தல் 

மேற்சுட்டிய பாடல் பகுதி சிதைந்த நிலையில் இருப்பதால் துவர்ப்புச் சுவைக்கு உரிய பதார்த்தத்தைக் காணோம். 

சக 




Reply all
Reply to author
Forward
0 new messages