பேச்சொலி (speech sound) பற்றி ஓர் ஐய வினா ...

273 views
Skip to first unread message

rajam

unread,
Jan 4, 2022, 12:34:05 AM1/4/22
to tamilmantram
வணக்கம். மொழி ஆய்வலர்-ஆர்வலருக்காக இந்தப் பதிவு. பிறரும் பங்கு கொள்ளலாம். குறிப்பாக, பேச்சு மருத்துவ இயலில் (speech pathology) ஆர்வமுடையவர்கள் தம் கருத்தைப் பரிமாறலாம்.

"பேச்சொலிகளின் பிறப்பியல்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத ஆர்வம். அது தொடர்பாக இந்தப் பதிவு.

நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் … எவ்விடத்திலுமே .. “ஒலி” என்ற சொல் பயன்படாதது ஏன்?

நன்றியுடன்,
ராஜம்

வேந்தன் அரசு

unread,
Jan 4, 2022, 8:03:43 PM1/4/22
to தமிழ் மன்றம்
தமிழ்ப்பல்கலையில் சங்க இலக்கியங்களை காணோம்.  பார்க்க இணைப்பு.

செவ்., 4 ஜன., 2022, முற்பகல் 11:04 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/DC297384-0EF2-4A28-8EE7-9887BDEB0043%40earthlink.net.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Screenshot 2022-01-05 6.31.49 AM.png

C.R. Selvakumar

unread,
Jan 7, 2022, 9:29:48 AM1/7/22
to தமிழ் மன்றம்
அம்மா வணக்கம்.
மிக அருமையான ஒரு கண்டுபிடிப்பைப் பகிர்ந்துள்ளீர்கள்.
தொல்காப்பியத்தில் 'ஒலி' என்னும் சொல்லே ஆளப்படவில்லை!
ஆனால் 'ஓசை' உள்ளது. பேரா. பாண்டியராசாவின் தொடரடைவில்
தொல்காப்ப்பியத்தில் வரும் 'ஓசை' என்னும் சொல்லின் பயன்பாட்டினைக்
கீழே தந்துள்ளேன்.
ன் ஒலி என்னும் சொல் பயன்படுத்தவில்லை என்பது பற்றி
ஊகமாகச் சொல்லலாம், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.
ஒலி என்பது மிகவும் பொதுவானதாக இருக்கலாம்.
மொழி எழுத்துகளின் 'ஓசை' அல்லது 'ஒலியை', அவர்
ஒலி என்று கருதாமல் இருந்தாரோ என்று நினைக்கத்தோன்றுகின்றது.
மேலும் எண்ணிப்பார்க்கவேண்டிய ஒரு கேள்வி. சங்க இலக்கியத்திலே
108 இடங்களுக்கும் மேல் ஒலி என்னும் சொல் ஆட்சி பெற்றிருக்கின்றது.
துள்ளல் ஓசை கலி என மொழிப - பொருள். செய்யு:83/1
தூங்கல் ஓசை வஞ்சி ஆகும் - பொருள். செய்யு:84/1
ஒழுகு_வண்ணம் ஓசையின் ஒழுகும் - பொருள். செய்யு:226/1
அருமையான கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி அம்மா!

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/DC297384-0EF2-4A28-8EE7-9887BDEB0043%40earthlink.net.


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Jan 8, 2022, 1:06:06 AM1/8/22
to tamil...@googlegroups.com
வணக்கம் செல்வா. ஊக்கம் தரும் பதிவுக்கு மிக்க நன்றி! 

இந்த “ஒலி” பற்றிய கேள்வி என்னை நெடுங்காலமாக நெருடிக்கொண்டிருக்கிறது. பின்னொரு நாள் இதன் பின்னணியைச் சொல்கிறேன். 

ஆம், தொல்காப்பியத்தில் “ஒலி” என்ற சொற்பயன்பாடு இல்லை, “ஓசை” என்ற சொற்பயன்பாடு உண்டு. 

ஒலிக்கும் ஓசைக்கும் வேறுபாடுண்டு. 

மொழி பற்றிய இலக்கணம் படைத்த தொல்காப்பியர் பயன்படுத்திய அடிப்படைச் சொற்கள்: இசை(ப்பு), எழுத்து, உயிர்(த்தல்/ப்பு) … 

இன்னும் நிறையச் சொல்லவேண்டியதிருக்கிறது. எனக்குத் தெரிந்ததை மெல்ல மெல்லப் பகிர்ந்துகொள்கிறேன், இடக்கு மடக்கான பதிவுகள் குறுக்கிடாவிட்டால். 

நன்றி கலந்த அன்புடன், 
ராஜம்   



Appasamy Murugaiyan

unread,
Jan 8, 2022, 4:15:38 AM1/8/22
to tamil...@googlegroups.com

முனைவர் திருமதி ராஜம் அம்மையார் அவர்களுக்கும் நண்பர் திரு செல்வா அவர்களுக்கும் வணக்கம்.

தொல்காப்பியத்தில் (மற்றும் பிற தமிழ் மரபிலக்கணங்களிலும்) ஒலி / ஒலியனியல் – குறித்து முனைவர் திருமதி ராஜம் அம்மையார் அவர்களுக்கு என்னால் நேரடியாக ஒரு கருத்தும் அளிக்க முடியாத நிலையில், என்னுடைய “ஆவணங்களில்” தேடியதில் கிடைத்த விபரங்களை இணைத்துள்ளேன். இதில் உள்ள நூல்களின் PDF கோப்புகளை நண்பர் ஒருவரிடம் கேட்டுள்ளேன், கிடைத்ததும் அவற்றை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி.
அன்புடன்

அ. முருகையன்




--

Appasamy Murugaiyan
EPHE-UMR 7528 Mondes iranien et indien
27 rue Paul-Bert
94204- Ivry-sur-Seine
France
Tol-eḻuttu-JOT-71-2007.pdf
Tol-Phonology.pdf

Jean-Luc Chevillard

unread,
Jan 8, 2022, 5:20:34 AM1/8/22
to tamil...@googlegroups.com
Dear all,

a subsidiary question is:

Why did நன்னூல் make use of ஒலி?

See:

மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
யெழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே.


-- Jean-Luc

n58_vpa.png

தேமொழி

unread,
Jan 8, 2022, 2:23:04 PM1/8/22
to தமிழ் மன்றம்

மொழி ஆர்வலர் நோக்கில் இருந்து என் கருத்து அம்மா. 

பற்பல காலங்களுக்கு முன்னர் .......... 
sound.jpg
ஓசை என்பது உருவாக்கப் படுவதற்கும் 
ஒலி என்பது அதைக் கேட்பதற்கும் உரிய சொற்களாக ஒரு தெளிவான குறிப்பிடும் முறை இருந்திருக்கக் கூடும் 

காலப் போக்கில் ஓசை ஒலி என்பன ஒரு பொருட் பன்‍மொழி என்ற ஒரு நிலைக்குப் பயன்பாட்டில் மாறியிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது. 
flower-stage.jpg
இப்பொழுது மலர், அலர் எல்லாமே பூ என்ற பொருளில் நாம் கையாள்வது நினைவு வருகிறது. 

C.R. Selvakumar

unread,
Jan 8, 2022, 7:06:51 PM1/8/22
to தமிழ் மன்றம்
நல்ல கேள்வி இழான்! முதலாவதாக சங்க இலக்கியத்திலேயே 100-150 தடவை
ஒலி, ஒலிக்கும், ஒலித்த, ஒலிப்ப என்றெல்லாம் பற்பல சொல்லாட்சிகள் உள்ளன. 
தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்கு முந்தைய நூல் (தொல்காப்பியம் முழுதும் அன்று,
பல பகுதிகள்)என்பதற்கு இதுகூட சான்றாக இருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன். 

ஒலி என்னும் சொல் ஏன் தொல்காப்பியத்தில் ஆளப்படவில்லை என்னும்
கேள்வி மிக முக்கியமானது. நன்னூலில் ஒலி என்று சொன்னதில் எந்த
வியப்பும் இல்லை. தொல்காப்பிய உரைகள் ஒலி என்னும் 
சொல்லைப் பயன்படுத்துகின்றார்களா? அல்லது ஓசை-ஒலி பற்றி ஏதும்
வேறுபாடு சொல்கின்றார்களா என்றும் காணுதல் வேண்டும். 

அன்புடன்
செல்வா


C.R. Selvakumar

unread,
Jan 8, 2022, 7:10:30 PM1/8/22
to தமிழ் மன்றம்
அன்புள்ள முனைவர் தேமொழி,
நல்ல சிந்தனை. ஆனால் நீங்கள் சொல்லும்
ஓசை-ஒலி (பொருள்) வேறுபாட்டுக்கு சங்க இலக்கியத்தில் 
சான்றிருக்கின்றதா என்றும் பார்க்கவேண்டும் 
நல்ல சிந்தனையே, எனினும் தரவுகளின் அடிப்படையில்
இவை அணுகப்பட வேண்டும் அல்லவா?

அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Jan 8, 2022, 7:12:57 PM1/8/22
to தமிழ் மன்றம்
இவை பயனுடையவாய் இருக்குமா?
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் - நற் 77/7
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் - நற் 159/10
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ - குறு 303/3
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும் - ஐங் 163/2
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து - அகம் 301/19
செல்வா

Jean-Luc Chevillard

unread,
Jan 9, 2022, 3:37:30 AM1/9/22
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய செல்வா

அப்பர் பாடியதனைப் பாருங்கள்

++++++++++++++++++


ஓசைஒலிஎலாம் ஆனாய், நீயே;
உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர்எலாம் ஆனாய், நீயே;
மலையான்மருமகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே;
பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்குஎலாம் ஆனாய், நீயே---
திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!


அதற்கு வி.மு.சு. ஆங்கில மொழிப்பெயர்ப்பு கொடுத்தது

++++++++++++++++++


{6:38}__1+
{$} நீயே ஓசைஒலிஎலாம் ஆனாய்
you only are the sound that makes no sense and the sound that is useful in forming word
நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய்
you only are the unequalled chief for the world
நீயேவாசம் மலர் எலாம் ஆனாய்
you only are the fragrant flowers.
நீயே மலையான் மருருகனாய் நின்றாய்
you only are the son-in-law of the King of mountains.
நீயே பேசப்பெரிதும் இனியாய்
you only are exceedingly sweet to be praised.
நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய்
you only placed your feet on my head, being my master.
நீயே தேசவிளக்கு எலாம் ஆனாய்
you only are the bright lights such as sun, moon and fire.
திருஐயாறு அகலாத செம்பொற்சோதீ
you who are like the brightness of the pure gold and who never leaves Tiruvaiyāṟu!

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_038.HTM#p1

++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்

-- Jean-Luc

தேமொழி

unread,
Jan 9, 2022, 6:43:28 AM1/9/22
to தமிழ் மன்றம்
On Saturday, January 8, 2022 at 4:10:30 PM UTC-8 செல்வா wrote:
அன்புள்ள முனைவர் தேமொழி,
நல்ல சிந்தனை. ஆனால் நீங்கள் சொல்லும்
ஓசை-ஒலி (பொருள்) வேறுபாட்டுக்கு சங்க இலக்கியத்தில் 
சான்றிருக்கின்றதா என்றும் பார்க்கவேண்டும் 
நல்ல சிந்தனையே, எனினும் தரவுகளின் அடிப்படையில்
இவை அணுகப்பட வேண்டும் அல்லவா?

ஆம் உண்மைதான் பேரா. செல்வா. எனக்கும் தரவுகள் வழி பார்க்க ஆர்வம இருந்தது,
அவ்வாறு செய்யத் துவங்கினேன், ஆனால் கவனச் சிதறல்களும் இடையூறுகளும் இடையிட்டதால் முடிக்க முடியவில்லை.  

இப்பொழுது ஒருவகையாக நான் புரிந்து கொண்ட முறையில் தொகுத்து விளக்கியுள்ளேன். 
மாற்றுக் கருத்துகளை ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன் 
நன்றி, 

தேமொழி

unread,
Jan 9, 2022, 6:44:07 AM1/9/22
to தமிழ் மன்றம்
எழுப்பப்படுவது அல்லது உருவாக்கப்படுவது "ஓசை"; கேட்கப்படுவது "ஒலி"

என்ற எடுகோளை(Hypothesis) ஆய்வு செய்ய;
சங்க இலக்கியம் - தொடரடைவு தளத்தில் தரவுகள் சேகரிக்கப்பட்டது (நன்றி முனைவர் ப. பாண்டியராஜா):
(I) தரவுகளின்  ஆய்வெல்லை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
(http://tamilconcordance.in/sangconc-1-oo1.html)
'ஓசை'  என்ற சொல் கீழ்க்காணும் 10 இடங்களில் சங்க இலக்கியப் பாடல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

    ஓசை (7)
நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை - நற் 4/10
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது - நற் 154/6
உகிர் நுதி புரட்டும் ஓசை போல - குறு 16/3
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய - பரி 10/7
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார் - அகம் 171/9
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் - புறம் 36/9
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புது கண் மாக்கள் செது கண் ஆர - புறம் 261/8,9
 
    ஓசையின் (1)
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் - அகம் 267/12
 
    ஓசையும் (1)
களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு - அகம் 261/13
 
    ஓசையொடு (1)
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் - அகம் 94/11
__________________________________________

(1)
நற் 4/10
நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை
- நீண்ட வரிசையான வண்டிகள் மணலைத் தேய்த்து "எழுப்பும் ஓசை"

(2)
நற் 154/6
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
- யாவரும் அஞ்சுமாறு "முழங்கும் ஓசை" கேளாது

(3)
குறு 16/3
உகிர் நுதி புரட்டும் ஓசை போல
- நக நுனியிலே புரட்டுதலால் "உண்டாகிய ஓசையைப்" போல

(4)
பரி 10/7
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய
- ஆராய்ந்து அளவிடமுடியாத பல்வேறு "ஓசைகள் ஒலிக்க"

(5)
*அகம் 171/9
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்
- கொல்லுதல் வல்ல கரடி ஏற்றின் "ஒலியினை உணர்வதற்காக"

(6)
*புறம் 36/9
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப
- காவல் மரங்களை வெட்டுமோசை (எழுப்பப்படுகிறது) தன்னுடைய ஊரின்கண் நெடிய மதிலெல்லையில் தனது காவலையுடைய கோயிற்கண்ணே சென்றொலிப்ப (கேட்கப்படுகிறது)
அதாவது ஓசை ஒலிக்கப்படுகிறது

(7)
புறம் 261/8,9
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர
- நெய்யில் ஆட்டு இறைச்சி "வறுப்பதால் எழும்  ஓசை" கேட்டுக் கொண்டே இருக்கும். புதியவர்கள் இதைக் கண்டு கண் பூப்பர்

(8)
அகம் 267/11,12
வெதிர்படு வெண்ணெல் வெவ்வறைத் தாஅய
உகிர்நெரி யோசையிற் பொங்குவன பொரியும்
- மூங்கிலில் விளைந்த வெள்ளிய நெற்கள் வெப்பம் மிக்க பாறையில் உதிர்ந்து பரந்து நகத்தை நெரிப்பது போன்ற "ஒசையுடன்" பொங்கிப் பொரிந்திடும்

(9)
அகம் 261/13
இரும்புலி களிறு அட்டுக் குழுமும் ஓசையும்
- பெரிய புலியானது களிற்றினைக் கொன்று "முழங்கும் ஓசை"யினையும்

(10)
*அகம் 94/11
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
 - (தினைப்புனக் காவலர் ஊதும்) பெரிய கொம்பின் "ஓசையொடு கலந்து வந்து ஒலிக்கும்"
__________________________________________


(II) தரவுகளின்  ஆய்வெல்லை சங்கமருவிய நூல்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
(http://tamilconcordance.in/PATHINENconc-1-oo1.html)
'ஓசை'  என்ற சொல் கீழ்க்காணும் 5 இடங்களில் சங்கமருவிய காலப் பாடல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

    ஓசை (5)
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால் - நாலடி:34 2/2
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா - இன்னா: 40:35/2
சிறு குழல் ஓசை செறிதொடி வேல் கொண்டு - ஐந்: 50:7/3
மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள் - ஐந்:50:16/2,3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் - குறள்:3 7/1

(1)
நாலடி:34 2/2
பெருங்கடல் ஆடிய சென்றார், ஒருங்குடன் ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
- பெருங்கடலிலே நீராடுவது குறித்துச் சென்றவர்கள், இக்கடலின் "ஒலி  அடங்கிய" பின்னர் நாம் நீராடுவோம்’ என்று கருதினால்

(2)
இன்னா: 40:35/2
குழலி னினியமரத் தோசைநன் கின்னா
- குழலோசை இல்லாது  இயமரம் என்ற தோற்கருவியில் முழக்கப்படும் வெறும் தாள ஓசை துன்பம்.

(3)
ஐந்: 50:7/3
சிறு குழல் ஓசை, செறிதொடி! வேல் கொண்டு எறிவது போலும் எனக்கு.                  
- ஊதும் சிறிய புல்லாங்குழின் ஓசையானது, வேல் கொண்டு வீசுவது போல உள்ளது.

(4)
ஐந்:50:16/2,3
மடி செவி வேழம்-இரீஇ, அடி ஓசை அஞ்சி, ஒதுங்கும்
-மடிந்த காதுகளையுடைய யானையானது,   பின்வாங்கி, தன் நடையால்  உண்டாகும் ஓசையானது, (புலிக்குக் கேட்குமோ என்று,)  பயந்து மெதுவாக நடக்கும்

(5)
ஐந்:50:16/2,3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
-  உலகமானது. உண்டுணரும் சுவையும், கண்டுணரும்  ஒளியும், தொட்டால் உணரும் ஊறும். "ஓசை - (கேட்டுணரும்) ஒலியும்", மோந்துணரும் வாசனையும், என்று சொல்லப் படுகின்ற, ஐந்தின் திறத்தினை ஆராய்ந்தறிந்தவனிடத்திலேயே அடங்கிக் கிடக்கும் (பேரா. சுந்தரசண்முகனார்). i.e., Vulluvar mentions 'Inducing Source' of the senses

'ஓசை' என்பது பெயர்ச்சொல், அது குறித்துச் சுட்டும் பொழுது ஓசை என்பதைத் தொடர்ந்து ஒலிக்க, எழுப்ப, இசைக்க போன்ற சொற்கள் மேலும் விளக்கமாக கொடுக்கப்படுகிறது.
எடுத்துக் காட்டாக;
"கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப"
"கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்"
ஓசை "தோன்றும் இடமும்" தவறாமல் குறிக்கப்படுகிறது.  

மாறாக;
'ஒலி' என்பது பெயர்ப்பொருளாக மட்டுமின்றி  வினைப்பொருளாகவும் வரும் பண்பு கொண்டது.  
பெயர்ப்பொருள் - ஒலி = ஆரவாரம்,பேரிசை
வினைப்பொருள் - ஒலி = சப்தி, ஆரவாரி  
(பார்க்க: தமிழ்ச்சொல் விளக்கம்,   முல்லை முத்தையா (2004) - https://ta.wikisource.org/s/5hhg)
இதற்கு சங்கப் படல்களிலேயே எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் உள்ளன.

எனவே மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்கள்,   சங்கம் மருவிய கால இலக்கியங்களில்  ஓசை என்பது உருவாக்கப்படும் இடத்துடன் தொடர்பு கொண்டே வருவதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

C.R. Selvakumar

unread,
Jan 9, 2022, 5:43:41 PM1/9/22
to தமிழ் மன்றம்
அன்புள்ள தேமொழி அவர்களே,
மிக அருமையான தொகுப்பு.

//எனவே மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்கள்,   
சங்கம் மருவிய கால இலக்கியங்களில்  ஓசை என்பது உருவாக்கப்படும் இடத்துடன் 
தொடர்பு கொண்டே வருவதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.//

இக்கருத்து நிச்சயமாகக் கருதிப் பார்க்க வேண்டியது. 
மணியோசை என்பதுபோல.

நன்றி
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Jan 9, 2022, 5:57:43 PM1/9/22
to தமிழ் மன்றம்
அன்புள்ள இழான்,

அருமையான எடுத்துக்காட்டு. ஒரே வரியில் ஓசை ஒலி இருப்பதும்
பிற தொடர்களைப் பார்த்துப் பொருள் கொள்ள இடம்
இருப்பதும் அருமை. 

மிக்க நன்றி
அன்புடன்
செல்வா

rajam

unread,
Jan 9, 2022, 11:16:28 PM1/9/22
to tamil...@googlegroups.com, selvakumar C R
வணக்கம். 

இழையின் தலைப்பில் குறிப்பிட்டபடி என் ஐய வினா: எழுத்திலக்கணம் படைத்த தொல்காப்பியத்தில் “ஒலி” என்ற சொல் பயன்படாதது ஏன்? 

நான் ஒரு கேள்வி கேட்டால் … இன்னொரு கேள்விக்குப் பதில் வருகிறது!!! 

சரி … என் ஐயத்தை நானே விளக்கிக்கொள்கிறேன். :-(  அதன் மூலம் யாராவது பயனடையலாம். ;-)

எனக்குத் தோன்றிய விடை [ஆமாம், தொல்காப்பியரே என் கனவில் வந்து அறிவுகொளுத்தினார்!!! ;-) ]: 

 “ஒலி” என்ற சொல்லின் அடிப்படைப்பொருள்  (basic semantics)  மொழிக்கானதன்று. 

1. தொல்காப்பியத்தைத் தொட்டடுத்த சங்க இலக்கியங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் … அங்கே இரண்டு வகையில் “ஒலி” என்ற சொல் பயன்பட்டிருப்பது புலனாகும். 

1a. கட்புலனுக்கு மட்டுமே உணர்வாகும்.  எடுத்துக்காட்டு: மயிற்பீலி, மகளிர் கூந்தல், ஈந்து, கடம்பு, முத்து, நிழல் (?), … இன்ன  பிற அஃறிணைப்பொருள்களின் செழிப்பை/வளத்தை/மதர்ப்பை/செறிவைக் குறிப்பதாக … அதாவது … pointing to the voluminous, springing forth, booming, … qualities of entities.

1b. செவிப்புலனுக்கு உணர்வாகும். இதுவே இன்று யாவரும் சொல்வது. 

சரி, இந்த என் பதிவுக்கான ஒப்பு/மறுப்புப் பதிவுகளைப் பார்த்த பின் அடுத்துச் சொல்கிறேன்.

அன்புடன்,
ராஜம் 

தேமொழி

unread,
Mar 15, 2022, 3:52:22 AM3/15/22
to தமிழ் மன்றம்
/// இங்கே ஒலி என்பதைப் பற்றிய பதிவை நினைவில் கொள்ளவும். இந்தத் தமிழ்மன்றத்தில் ‘பேச்சொலி (speech sounds) பற்றி ஓர் ஐய வினா’ என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதன் சுட்டி இப்போது கிடைக்கவில்லை. ////

இதுதான் அந்த இழை 

__________________________________________

பேச்சொலி (speech sound)
https://groups.google.com/g/tamilmanram/c/_S7sDbPGmkE/m/QGlnqqdbBwAJ

எழுத்தின் பிறப்பியல் -- பகுதி 1
https://groups.google.com/g/tamilmanram/c/Pqw3ZLdBUTQ/m/gndd8HLnBAAJ

எழுத்தின் பிறப்பியல் -- பகுதி 2
https://groups.google.com/g/tamilmanram/c/MsjVDj60Sg0/m/7y6PYljrAQAJ

எழுத்தின் பிறப்பியல் என்பதை மட்டும் சப்ஜெக்ட் லைனில்  தொடர்ந்து போட்டு வந்தால் ஒரே இழையாக படிக்கக் கிடைக்குமே ...!!!

மின்னஞ்சலாக அனுப்பும் பொழுது முன்னர் அனுப்பிய மடலுக்கு ரிப்லை  போட்டாலும், பதிவுகளைத் தானே ஒரே இழையில் தொகுத்துவிடும்.  இந்தமுறை தொடர்ந்து படிப்பவருக்கு உதவும் 

நன்றி அம்மா 


On Monday, January 3, 2022 at 9:34:05 PM UTC-8 rajam wrote:

rajam

unread,
Mar 16, 2022, 12:01:09 AM3/16/22
to tamil...@googlegroups.com, தேமொழி
On Mar 15, 2022, at 12:52 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

/// இங்கே ஒலி என்பதைப் பற்றிய பதிவை நினைவில் கொள்ளவும். இந்தத் தமிழ்மன்றத்தில் ‘பேச்சொலி (speech sounds) பற்றி ஓர் ஐய வினா’ என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதன் சுட்டி இப்போது கிடைக்கவில்லை. ////

இதுதான் அந்த இழை 

__________________________________________


மிக்க நன்றி, தேமொழி!
-------------------------------------------------------------------------

எழுத்தின் பிறப்பியல் -- பகுதி 1
https://groups.google.com/g/tamilmanram/c/Pqw3ZLdBUTQ/m/gndd8HLnBAAJ

எழுத்தின் பிறப்பியல் -- பகுதி 2
https://groups.google.com/g/tamilmanram/c/MsjVDj60Sg0/m/7y6PYljrAQAJ

எழுத்தின் பிறப்பியல் என்பதை மட்டும் சப்ஜெக்ட் லைனில்  தொடர்ந்து போட்டு வந்தால் ஒரே இழையாக படிக்கக் கிடைக்குமே ...!!! 

ஒரே இழையில் என்றால் மிகவும் நீண்டு, படிப்பவர்களின் கவனம் சிதறி அலுத்துவிடுமே என்ற தயக்கத்தினால்தான் பிரித்துப் போட்டேன். 

[நூலாக வெளியிடும்போது இந்தக் கோளாறெல்லாம் இரா! ;-) ]

——————————————————————————————————————


மின்னஞ்சலாக அனுப்பும் பொழுது முன்னர் அனுப்பிய மடலுக்கு ரிப்லை  போட்டாலும், பதிவுகளைத் தானே ஒரே இழையில் தொகுத்துவிடும்.  இந்தமுறை தொடர்ந்து படிப்பவருக்கு உதவும் 

அப்படியா? அப்படியானால் அடுத்த முறை புதிய இழை தொடங்கும்போது அப்படிச் செய்ய முயல்கிறேன்.


நன்றி அம்மா 

மிக்க நன்றி தேமொழி.

அன்புடன்,
ராஜம் 
On Monday, January 3, 2022 at 9:34:05 PM UTC-8 rajam wrote:
வணக்கம். மொழி ஆய்வலர்-ஆர்வலருக்காக இந்தப் பதிவு. பிறரும் பங்கு கொள்ளலாம். குறிப்பாக, பேச்சு மருத்துவ இயலில் (speech pathology) ஆர்வமுடையவர்கள் தம் கருத்தைப் பரிமாறலாம்.

"பேச்சொலிகளின் பிறப்பியல்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத ஆர்வம். அது தொடர்பாக இந்தப் பதிவு.

நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் … எவ்விடத்திலுமே .. “ஒலி” என்ற சொல் பயன்படாதது ஏன்?

நன்றியுடன்,
ராஜம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages