கனிகாண்டலும் கைந்நீட்டமும்

57 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 14, 2024, 9:00:46 AM4/14/24
to Santhavasantham
தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தொடங்குவதை அறிவித்தவர்கள் முதலில் வஞ்சி மாநகர் (கரூர்) ஆண்ட சேரமன்னர்கள் ஆவர். வானத்தை அளந்து, 360 பாகையாக்கி, 12 இராசிகள் ஆக்கித் தமிழ் வருடப் பிறப்பு எனப் பிரகடனப்படுத்தினோர் சங்கச் சேரர்கள். ஆடு = Aries (Zodiac). இதில் முக்கியமானவன், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்.  கோட்பாடு < கோள் படுதல் (கவரப்படுதல், கொள்ளப்படுதல்). கோள் இதிலிருந்து வருவது கிரஹம் என்னும் வடமொழி வார்த்தை (Graha is a loan translation of the Dravida term, kOL, acc. to Linguists. Cf. kOLam > gola "sphere"). இமயமலை சென்று தம் வில் முத்திரை பொறித்ததால் “இமயவரம்பன்”, 12 இராசிகள் கொண்டு வானத்தை  வரம்பு கண்டதால், “வானவரம்பன்”.  வானவரம்பன், இமயவரம்பன் என மாறிமாறிச் சேரர்களுக்கு பரம்பரையாக வரும் பட்டப் பெயர்.

சேரர் இலக்கியம், பதிற்றுப்பத்து, ஆறாம் பத்தின் பதிகம்:
“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்”

தமிழ்ப் புத்தாண்டில், சித்திரை என்பதைக் கொன்றையும், வேங்கையும் பொன் போன்ற பூக்கள் பூத்துக் குலுங்குவதால் அறியலாம். இயற்கையாகவே உள்ள சோதிடன் என்னும் பொருள்படும்படி, கணிவேங்கை என அழைப்பது 2500 ஆண்டுகளாகக் காணும் மரபு. புலிவேங்கை கானுறை விலங்கு. வேங்கை மரத்து இலைகளும், கிளைகளும், பூவும் திருக்கோயில்களில் முருகன் திருமணவிழாவின் போது பின்னால் இருப்பது இதனால் தான் இன்றும். அருணகிரியார் திருப்புகழில் கணி வேங்கை பற்றி நிறைய வள்ளி-முருகன் கலியாணம் பற்றிப் பேசுகையில் காணலாம்.

கணிவேங்கை பூக்கும் சித்திரைப் புதுவருஷத்தில் “கனிகாணுதலும், கைந்நீட்டமும்”. தாய் குழந்தையின் கண்ணை மூடிப் பூஜை அறையில் புத்தாண்டில் கண்ணாடி காட்டுவது வழக்கம்.  தமிழ்க் கடவுள் முருகன் புத்தாண்டில் கண்ணாடி காணுதல்.

Karthik-Kani-KaaNal.jpeg

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 19, 2024, 6:05:52 AM4/19/24
to Santhavasantham
அன்பின் நிரஞ்சன்,

The paramount importance of the Sun, and the these Proto-Heliocentrism idea in classical Tamil fully developed in Kerala, the ancient Chera kingdom, later. As Chera kingdom supported Nambudiri immigration from North, the only surviving Rgveda rituals are found there and Sangam literature talks about them. Detailed analysis of it from the mid-20th century done by Staal, Parpola, ... In the Sangam age, Karur was the Chera capital, Muziris port connected to Karur (Vanji) via the Palghat gap - precisely the central Kerala location where Rgvedic rituals were/are fostered. These ritualists must have introduced the Solar calendar with the Aries in the Zodiac as the first month of Tamil New year. This was proclaimed to be the official New Year of the Tamil Panchangam by the Chera king. Hence his title, "aaTu kOTpaaTTuc Ceralaatan". aaTu = mesham = Aries, the first of the 12 Raasi cycle.
https://groups.google.com/g/santhavasantham/c/-E6P993IAz8/m/0qx1ig1BAgAJ
Seevaka ChintamaNi written near Vanji (Karur) calls the Zodiac as "kanali vaTTam" and lists Chitra month as the beginning of Tamil year.

மூவேந்தருள் சேரர்கள் ஆதரித்து நிறுவிய, ஆடு (Aries) 12 ராசிகளுள் தலையாயதாக விளங்குகிறது. இளவேனில் தொடக்கம் ஆகிய சித்திரைத் திங்கள் மேட ராசி தான். ஆடு கோள்படுத்தினோர் சேர ராஜாக்கள். சங்க காலத்திலே வஞ்சி மாநகரில் ஆண்டனர். கடைசி சேரமன்னர் கொல்லிக்கோன், கொங்கர்கோன், என்றெல்லாம் தன்னைக் கூறிக்கொள்ளும் குலசேகர ஆழ்வார் பெரிய இராம பக்தர். அவரது பாசுரங்கள் அண்மையில் கூட அயோத்தி மாநகர் பாலராமன் திருக்கோவிலில் பாடப்பட்டன. ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார் எழுதிய வஞ்சி மாநகர், சேரன் செங்குட்டுவன் என்னும் புகழ்பெற்ற நூல்களை வாசிக்கவும். 110+ ஆண்டுகள் ஆகிவிட்டன. சங்கச் சேரர்கள் ஆண்ட தலைநகர், வஞ்சி என்பது இன்றைய கரூர் என நிறுவினவர்கள் இத் தமிழ்ப் பெரும்பண்டிதர்களே. பின்னாளில், தொல்லியல் துறை நிபுணர்கள் பலர் மேலும் சான்றுகளைக் காட்டி நிலைநிறுத்தினர், அவற்றைத் தொகுக்கவேண்டும். அருணகிரிநாதர் திருப்புகழ் ராகவையங்கார்கள் வாழ்ந்த காலத்தில் முழுதும் வெளியாகவில்லை. வடக்குப்பட்டு த. சுப்பிரமணியபிள்ளை, திருமகன் தணிகைமணி, நூல்களில் இருந்து வஞ்சி மாநகர் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கட்டுரை எழுதவேண்டும். மிகுபுகழ் பெற்ற தமிழ்ப்பொழில், (கரந்தைத் தமிழ்ச் சங்கம்) ஆய்விதழில் செய்துதர அவா.

இன்றும் பார்த்தீர்களானால், தமிழ், தெலுங்கு, கன்னட மாசப் பெயர்கள் தொல்தமிழர்களின் நட்சத்திரக் கோட்பாட்டால் இயங்குகின்றன. அண்மையில் உருவான மலையாள மாசப் பெயர்கள் மட்டும் 12 ராசிப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. பாரதப் பண்பாட்டுத் தொடர்ச்சி மகரம்/தை என்ற தூய தமிழ்ப் பெயர்கள் முறையே ராசி வட்டத்திலும், திங்கட் பெயர்களிலும் உள்ளமை காட்டுகிறது.

சேர மன்னர்கள், வஞ்சி மாநகரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு நிலைநிறுத்திய வியாழவட்டம் (60 வருட Jovian Cycle = Samvatsara) ஏனை இரு பேரரசர்களாலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அண்மையில் எம்ஜிஆர் ஏற்படுத்திய எழுத்துச் சீர்திருத்த அரசாணை உலகமுழுதும், கணினியிலும் ஏற்கப்பட்டுவிட்டது அல்லவா? அதுபோல, சுமார் 18 நூற்றாண்டு முன் நிகழ்ந்த முக்கியமான காலக் கணிப்பு நிகழ்ச்சி: சக அப்தம் தமிழ் மூவேந்தர் ஏற்று நடைமுறைக்குக் கொணர்ந்த வானியல் சாத்திரக் கோட்பாடு. இதனைப் பாண்டியர் ஏற்றது சங்க நூல் வாயிலாய்க் காண்கிறோம். மதுரைப் பாண்டியர் அரண்மனை பின்னாளில் மீனாட்சி அம்பிகை திருக்கோயில். மீனாக்ஷி மலய த்வஜ பாண்டிய புத்ரி.

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” -நெடுநல்வாடை. வரி 160 -161
“வலிமையான கொம்பை உடைய ஆடு (மேடம்) முதலான உடுத்தொகுதிகளின் ஊடாகச் சூரியன் இயங்கும் வான் மண்டலம்” என்பதாகும்.

Zodiac என்பதற்குத் தமிழில் *கனலிவட்டம்* கலைச்சொல் தந்தவர், கொங்குநாட்டுப் பெரும்புலவர், சமணமுனி, திருத்தக்கதேவர் ஆவார். இன்றைய தாராபுரத்தில் வாழ்ந்தவர் (பார்க்க: புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம், Book published from his PhD thesis, NCBH). 12 ராசிகளைப் பாருங்கள். அதில் மகர ராசி மட்டுமே நிலையானதாய் இந்திய வானியலில் உள்ளது. பாபிலோனில் இருந்து கனலிவட்டம் இந்தியா வந்தகாலத்தில், 11 ராசிகளும் இந்தியாவில் ஏற்கப்பட்டன. ஆனால், மகரம் (= தை - தந்தை, எந்தை, முந்தை, போன்றவற்றில் உள்ள அடிச்சொல்) மட்டும் மாறவே இல்லை. இராசி சக்கரம் இந்தியாவுக்குப் புதிது. அதற்குச் சில ஆயிரம் (< saayira- < saasira/sahasra) ஆண்டு முன்னரே சிந்துவெளித் தமிழர்/த்ராவிடர் கண்ட கோட்பாடு: 27 நாள்கள் (நக்‌ஷத்ரம்). ஞெள்-/நெள்- என்றால் செறிவு/இருள் > நாள். தொல்காப்பியத்தில் நாள் என்றால் நக்ஷத்ரம். நாளும் கோளும் ... 12 ராசிகளுள் இந்திய வானியலின் மகர ராசி மட்டும் நிலைத்தது. அதே போல, 12 திங்கள்/மாதப் பெயர்களுள், தை ( = மகரம் என்பது பொருள்) மாத்திரம் தமிழர்கள் கண்டறிந்த 4500 ஆண்டு பழமையான தமிழ்ப் பெயர் நிலைத்தது. ஏனைய 11 திங்கட் பேர்கள் வடமொழிப் பாகதம் ஆகும். இது பற்றி விளக்கமாகச் சொல்லியுள்ளேன்: https://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

மகரம் என்பது தமிழர்கள் தந்த வானியல் கோட்பாடு. மகரம் = தை. இந்தியாவின் தொல்வானியல் சாத்திரத்தில் நிலைபெற்ற பெயர்கள் ஆகும். காரணம் இங்கே.
Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu
(This was published by Fr. Anand Amaladoss, SJ in CenkaantaL, Madras Christian College magazine)
Fr. Henry Heras was from Spain, and was the first one to propose based on the Fish sign that Indus civilization elites were speaking a (North) Dravidian language. Fr. H. Heras, SJ belonged to Jesuit priesthood, https://en.wikipedia.org/wiki/Jesuits

Many scholars, including myself, have developed it further. My main contribution is identifying Makara sign in Indus "script", and Makaram's remarkable continuity across 45 centuries in India's culture and religion. Also, read:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html
சித்திரைக் கணி என்னும் பெயர் சரியானது. அது பற்றி எழுதினேன். வாசித்திருப்பீர்.
~NG

N. Ganesan

unread,
Apr 25, 2024, 2:03:21 PM4/25/24
to vall...@googlegroups.com, sirpi balasubramaniam, Dr. Y. Manikandan
இரண்டு நூறாண்டுகளாக - சென்னை அரசாங்கம் வெளியிடும் விடுமுறை தினங்களில்
தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை 1)
-----------------------------------------------------------------------------------

For pictures of the Tamil New Year as Chithirai 1st issued by Govt. of Madras in
1813, 1832 and 2024 CE, see:
https://twitter.com/naa_ganesan/status/1783516293812887659

சங்க காலத்தில் சந்திர மாதங்களாக, திங்கள்கள் கணக்கீடு செய்யப்பட்டன. Cf.
Moon & Month in english too. பின்னர் வானியல் அறிவால், சூரியன்
நிகழ்ச்சிகட்குப் பொருத்தினர். Zodiac கனலிவட்டம் எனப்படுகிறது. Tamil
calendar is called Luni-Solar calendar, whereas Kananda-Telugu
Panchangams are Lunar calendars. இலக்கியத்தில், முழுமையாக, தமிழ் 12
மாதங்களையும் அடுக்கிச் சொல்வது சீவக சிந்தாமணியில் தான். இதனைக் கொங்கு
நாட்டுப் பேரிலக்கியம் என உவேசா குறிப்பிட்டுள்ளார். சிந்தாமணி தந்த
திருத்தக்கதேவர் வஞ்சி மாநகர் அருகிலே வாழ்ந்த முனிவர் (பார்க்க: புலவர்
செ. ராசு, கொங்குநாட்டில் சமணம், NCBH). தமிழ் வருடத்தின் 12 திங்கள்
கொண்ட கனலிவட்டம் (Zodiac), சிந்தாமணி தருவது:
https://groups.google.com/g/santhavasantham/c/cje7QX8TMWU/m/olyhlQqcDgAJ

11 மாதப் பெயர்கள் பாகதம், தை என்னும் ஒரு பெயர் மட்டிலும் தமிழ்,
கனலிவட்டம் இந்தியாவுக்குப் பாபிலோனில் இருந்து இடம் பெயர்ந்தாலும்,
மகரம்/தை என்னும் த்ராவிட/தமிழ்ப் பெயர்கள் அசையவில்லை. இது பாரத
உபகண்டத்தின் 4500 ஆண்டு வரலாற்றால்.
https://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதி. சூரியன் மேஷ ராசியில்
புகும்/விழும் நாள். விழு- > விஷு/விஷுவத். 2000 ஆண்டுகளாய் சங்க
இலக்கியத்தில் சித்திரை வருடப் பிறப்பைக் குறிப்பிடும் சொல்லாக, ஆடு
(Aries in Zodiac, மேட ராசி) பற்றிக் காண்கிறோம். (1) திண்ணிய மருப்பின்
ஆடு தலையாக, (2)ஆடு இயல் அழல் குட்டத்து (புறம் 229) - இப்பாடலும் சேர
மன்னனைப் பாடியது. கூடலூர் பதிற்றுப்பத்து குறிப்பிடும் முக்கூடல்
எனலாம். (3) ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் - ஆடு - மேடராசி அடிப்படையாகக்
கொண்ட பஞ்சாங்கத்தை வேத நிபுணர்களைக் கொண்டு, தமிழ்நாட்டில் தாபித்த சேர
மகராஜன். இன்றும் இருக்கு வேதம் இந்தியாவிலேயே வஞ்சி (கரூர்) - முசிறிப்
பட்டினம் வழியிலே (பாலக்காடு மாவட்டம்) வாழ்கிறது. காஞ்சிப் பெரியவர்
அங்கே முகாம் இட்டிருந்தபோது காந்திஜி சந்தித்தார். சங்க காலத்தில்
நொச்சி நியமம் இங்கே நொச்சியூர் எனப்படுகிறது.
https://twitter.com/Devasakha/status/1782434340301086800 Kollengode, Palakkad.

https://twitter.com/naa_ganesan/status/1783262067610227143
https://groups.google.com/g/vallamai/c/CuUx6qwpvJs/m/pYhAMcI5AQAJ

220+ ஆண்டுகளாக, தமிழ்ப் புது வருஷம் எனச் சித்திரை 1 தமிழக அரசு
கொண்டாடப்படுவதாக இருக்கிறது. 2000 ஆண்டுக்கு முன்னர், தமிழ் மூவேந்தர்
ஏற்படுத்திய பஞ்சாங்கக் கணிப்பு முறை. ஆடு (மேஷ ராசியில் சூரியன்
பிரவேசம்). கூடவே, சந்திரமான முறையில் உருவான தெலுங்கு உகாதி
தினத்துக்கும் விடுமுறை இருக்கிறது.

ஆண்டுதோறும் உகாதி (தெலுங்கு வருஷப் பிறப்பு) ~ தமிழ்நாட்டு முதல்வர்
வாழ்த்து! ஒவ்வொரு யுகாதிப் பிறப்புக்கும் தேடித் தொகுக்கலாம். செய்க.
2022:
https://youtu.be/yx1SMehP-WA?t=23
2023: தெலுங்கு வருஷப் பிறப்பை அரசாங்க விடுமுறை ஆக்கியவர் கருணாநிதி:
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
https://youtu.be/hYHQ9nolJ1E?t=36
2024:
https://youtu.be/Wm_o49_l6iU ...

221 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு = சித்திரை 1 (கி.பி.
1813-ம் ஆண்டு), பின்னர் அதே நாள், (கி.பி. 1832) - இரண்டும் கிழக்கு
இந்தியா கம்பெனி ஆட்சியில், சென்னை அரசாங்க வெளியீடுகள். இப்போதைய
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் 2024-ம் ஆண்டு விடுமுறை நாட்கள் பட்டியல்
இணைத்துள்ளேன்.

References:
(a) https://archive.org/details/thelandofcharity00mate/page/186/mode/2up
(b)http://iapsop.com/archive/materials/international_theosophical_year_book/international_theosophical_year_book_1937.pdf
(c)Pazha. Karuppiah's essay on Tamil New Year. At that time (2012), he
did not know that the oft-quoted porose lines were not from
Bharatidasan's writings. Maraimalai AdikaL never wrote that Thai 1
(Pongal) is Tamil New Year either. But, still worth reading:
http://www.pichaikaaran.com/2012/04/blog-post_13.html
(d) European and Native holidays in Madras Presidency in the year
1832. from Asiatic Annual Register (1832).
https://mylapooran.blogspot.com/2018/09/holiday-list-1832.html
(e) The Madras Almanac for the Year of Our Lord, Government Press,
1813. See page 177.
Please see the picture attached. Malabar = Tamil in 17-19th centuries.
"Malabar" gets replaced by "Tamil Bramin" in the year 1832 by British
East India Company officials.
https://books.google.com/books?id=MfYmDpWChhQC&
(f) The Madras Almanac for the Year of Our Lord, Government Press,
1834. See page 365.
https://books.google.com/books?id=-xM51LetHrkC&
(g) நித்திரையில் இருக்கும் தமிழா! - வசன வரிகள் குறித்து ஓர் ஆய்வு:
https://groups.google.com/g/santhavasantham/c/YOsTnbW7sdg

For pictures of the Tamil New Year as Chithirai 1st issued by Govt. of Madras in
1813, 1832 and 2024 CE, see:
https://twitter.com/naa_ganesan/status/1783516293812887659

வாழ்க வளமுடன்! வளர்க தமிழுடன்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
May 4, 2024, 6:23:22 AM5/4/24
to Santhavasantham
ஆடு என்ற கால்நடை யாகங்களில் பலி கொடுக்கப்பட்டது. ஆடு < யாடு, பலி < பொலி. வடமொழியில் உள்ள பழந்தமிழ்ச் சொல் பலி. “கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும், படி நிலை வேள்வியுள் பற்றி *ஆடு கொளலும்* ” (பரிபாடல் 2). ஆடு = மேஷ ராசி என்ற பழைய வானியலைக் காட்டும் இடங்கள் மூன்று சங்க நூல்களில் காண்கிறோம். தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதி. சூரியன் மேஷ ராசியில் புகும்/விழும் நாள். விழு- > விஷு/விஷுவத். Cf. திருவிழா > திருவிஷா, காவேரி டெல்ட்டா (அ. மு. பரமசிவானந்தம்). 2000 ஆண்டுகளாய் சங்க இலக்கியத்தில் சித்திரை வருடப் பிறப்பைக் குறிப்பிடும் சொல்லாக, ஆடு (Aries in Zodiac, மேட ராசி) பற்றிக் காண்கிறோம்.  (1) ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் - ஆடு - மேடராசி அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கத்தை வேத நிபுணர்களைக் கொண்டு, தமிழ்நாட்டில் தாபித்த சேர மகராஜன். (2)ஆடு இயல் அழல் குட்டத்து (புறம் 229) - இப்பாடலும் சேர மன்னனைப் பாடியது. கூடலூர் பதிற்றுப்பத்து குறிப்பிடும் வஞ்சி மாநகர் (கரூரின்) முக்கூடல் எனலாம். (3) திண்ணிய மருப்பின் ஆடு தலையாக, பாண்டியனின் மதிரை அரண்மணையில் (தற்போதைய மீனாட்சி ஆலயம்?) கனலிவட்டம் (Zodiac), சந்திரன், ரோஹிணி நட்சத்திரம் விதானத்தில் வரையப்பட்டிருந்தது.  https://web.archive.org/web/20221112172852/https://www.tamilvu.org/slet/l1100/l1100pag.jsp?book_id=20&pno=462
மேலும், https://groups.google.com/g/vallamai/c/CuUx6qwpvJs
கனலிவட்டமும், 27 விண்மீன்களும் விளக்கும் நல்லதோர் சித்திரம்:
https://twitter.com/naa_ganesan/status/1786697091529449921

நச்சினார்க்கினியர், வானியல் ஓவியத்து வரிகளை விளக்குகிறார்:

160 - 61. [திண்ணிலை மருப்பி னாடுதலை யாக, விண்ணூர்பு திரி தரும் :]

விண் - ஆகாயத்திடத்தே,

திண் நிலை மருப்பின் ஆடு தலையாக ஊர்பு திரிதரும் - திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,

161 - 2. வீங்கு செலல் மண்டிலத்து முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய - மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு 2திரியாமனின்ற,

163. உரோகிணி நினைவனள் நோக்கி - 3உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து , [நெடுநல்வாடை]

கனலிவட்டமும், 27 விண்மீன்களும் விளக்கும் நல்லதோர் சித்திரம்:
https://twitter.com/naa_ganesan/status/1786697091529449921

தெரிவு:
நா. கணேசன்



Reply all
Reply to author
Forward
0 new messages