Re: [MinTamil] Re: வஹ்னி வம்சம்..

15 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 9, 2013, 9:40:08 AM7/9/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Monday, July 8, 2013 12:32:25 PM UTC-7, amachu wrote:
On Tuesday, July 9, 2013 12:27:17 AM UTC+5:30, Prakash Sugumaran wrote:
கட்டுத்தறியாடும் கதை கேட்டு கம்பனை வேளாளர் எனக் கருதி வந்தேன். ஒருவேளை அவர் வன்னிய சபையின் புலவனோ ??


இது கூட கம்பர் எழுதி தங்கள் வழக்கில் இன்னும் இருப்பதாய் கொங்கு நண்பர் ஒருவர் ஷேர் செய்திருந்தார்!

எவ்ளோ அழகா இருக்கு கேளுங்க!

http://thirumoorthy.typepad.com/blog/2009/09/

இங்கும் கேட்கலாம்:

சங்கத் தமிழ் இலக்கியங்களில் இரண்டே இரண்டு பாடல்கள் தாம் கலியாணத்தை விவரிக்கும் பாடல்கள்.
அவற்றில் பாவை வழிபாடு - கொற்றவை பற்றியது - இருக்கிறது. அது வெறும் பொம்மை அல்ல
என்று அகநானூற்றை மொழிபெயர்க்கும் பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு செந்தமிழ் (பாரிஸ்) குழுவில்
எழுதினேன். 

சங்கத் தமிழ்க் காலத்திலிருந்த மணச்சீர்கள் கொங்குநாட்டுத் திருமணங்களிலே இன்றும் பார்க்கலாம்
என்று பல தமிழ்ப்புலவர்கள் எழுதியுள்ளனர். கம்பர் பாடி, அவரது சமூகத்தார் விரிவாக்கிய பாடலை
இன்றும் மங்கல அந்தணர்கள் கொங்கு வேளாளர் திருமணங்களில் மைத்துனன் கைகோர்வையின்
போது பாடுகின்றனர். முதன்முதலாக, அச்சிட்டவர் திருச்செங்கோடு தி. அ. முத்துசாமிக் கோனாரவர்கள் (1912),
பின்னர் பலர் அச்சிட்டுள்ளனர். வாய்மொழி இலக்கியமாக விளங்குவதால் சில பாடபேதங்களுடன்
இந்த மங்கல வாழ்த்துப்பாடல் வாழ்வியல் இலக்கியமாக உள்ளது. 

கொங்கு வேளாளர் கலியாண மங்கலவாழ்த்து

------------------------

ஆமாச்சு> “கட்டுத்தறியாடும் கதை கேட்டு கம்பனை வேளாளர் எனக் கருதி வந்தேன்.”

கம்பர் வேளாளர் அல்லர் என்பது தமிழ் இலக்கியங்கள் அறிவிக்கும் செய்தி: உ-ம்: தமிழ் நாவலர் சரிதை.
அவர் குலம் வேளார் (=உவச்சர்). காளி, ஐயனார் கோவில் பூசாரிகளாக இன்றும் நாட்டுப்புறத்தில்
விளங்குகின்றனர். வேளார் தமிழ்நாட்டில் கல்வி அறிவை ஊட்டியவர்கள். ஆயிரக்கணக்கான
சோழர், பாண்டியர் கல்வெட்டுக்களில் எழுதியது [ஒரு பெயர்] வேளான் என முடியும். கம்பர்
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்று தமிழறிஞர்கள் நிறுவிப் பல ஆண்டுகள்
சென்றுவிட்டன. 12-ஆம் நூற்றாண்டின் இறுதி. 

வேளார்கள் பானை வனைவோர். சுடாத பானை பச்சை மண்ணாக இருக்கும் போது வேளார் குழந்தைகளும்,
பெரியோரும் எழுதிப் பழகியது கொடுமணல், பொருந்தல், ஆதிச்சநல்லூர், கொற்கை,
அழகன்குளம் என்று எல்லா ஊரிலும் 2300 - 2400 ஆண்டுகளுக்கும் முன்னரே கிடைக்கிறது.
தொல்காப்பிய உரைகளில் (உ-ம்: சேனாவரையம்) வேளாருக்கும் கணக்கப் பிள்ளைகளுக்கும்
உள்ள பிணக்கு அகவலாகப் பதிவாகியுள்ளது. வாரியார் சுவாமிகள் இந்தப் பிணக்கை
அழகாக ஒரு மிகப் பழைய வெண்பாச் சொல்லி விளக்குவார். ஞாபகத்திலிருந்து
அந்த வெண்பாத் தருகிறேன்.

காட்டெருவை மூட்டிக் கலஞ்சுட்ட நீள்புகையால்
வாட்டும் மழைபெய்ய வந்தபல மோட்டெருமை
உன்னும் படிஆய்ந்தால் ஊரில் உறைகின்ற
பன்னும் குயவன் பணி

இதனை, சேனாவரையர் மேற்கோள் காட்டும் பழைய அகவலுடன் ஒப்பிடுக.
கொங்குநாட்டிலே, அண்மைக் காலம் வரை பொன்னேர் போட்டும்போது
பருவமழை பெய்த பின், 30-40 ஏர் பூட்டும் முதல்நாளில் முதல் ஏரை
நடத்திச் சால் விதைப்பது வேளாரே. நானே பள்ளிக்காலங்களில்
பல ஊர்களில் பார்த்துள்ளேன் - உறவினர் தோட்டங்களில். இதன் ஒரு போட்டோ
’கொங்கு அம்மாள்’ பிருந்தா பெக் அச்சிட்டுள்ளார். பிருந்தா அண்ணன்மார்
கதையை முதலில் ஆராய்ந்தவர். பின்னர் சக்திக்கனல் நல்ல பதிப்பாக
அக்காவியத்தை அச்சிட்டார் நா. மகாலிங்கம் வெளியிட்டார். இன்று
இணையப் பல்கலையில் படிக்கலாம். 

எட்கர் தர்ஸ்டன் நூலில் H. A. ஸ்டூவர்ட் ஒரு கல்வெட்டு (திருப்பூவணம்) 
தந்த கல்வெட்டை மேற்கோள் காட்டுகிறார். ஸ்ரீவள்ளுவம் (கணித்தொழில்)
திருப்பூவணம் கோவிலில் பார்க்கும் வேளார் பற்றிய கல்வெட்டு அது.
கணிதமும், வானியலும், தமிழும் வளர்த்த பணியில் வேளார்கள் (அவர்கள்
வள்ளுவத் தொழிலை வளர்க்க வடமொழி வானியல் சாத்திரங்களைக்
கற்றிருப்பர்.) பங்கு பெரியது. அக் குலத்தில் பிறந்த கம்பர் வால்மீகியை
தமிழில் தந்த கவிச்சக்கரவர்த்தி. அவருக்கும், தாதன் என்னும் வாணியப்
புலவனுக்கும் இருந்த புலமைப் புகைச்சலால் வாணியன் தாதன் 
உத்தர ராமாயணம் பாடியருளினார். 

கம்பர் வாழ்க்கையை நன்கறிய புலவர் செ. இராசு
பதிப்பித்த ‘கொங்குச் சமுதாய ஆவணங்கள்’ தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
- நூலில் அறியலாம். மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர்
அளித்த ஓலைச்சுவடி ஆவணங்கள் அதில் அச்சாகியுள்ளன. 

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages