ஆத்மா எங்கே ?

30 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Apr 1, 2020, 6:54:24 PM4/1/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan

சிறு மூளை !

சி. ஜெயபாரதன்.


ஆத்மாவைத் 
தேடி 
வேர்த்துக் களைப்பு !
மண்டை ஓட்டின் 
மதிலைத் தாண்டி
அண்டக் கோள்களின் 
விளிம்பித் தாண்டி 
பிரபஞ்சக் 
காலவெளி எல்லை
கடக்க 
முடியாமல் தவழ்ந்து
முடக்கம் ஆனது,
மனிதச் சிறு மூளை !
தூங்கிக் கொண்டுள்ள 
பெரு மூளை,
தூண்டப் பட்டு எப்போது
ஆறறிவு 
ஏழாம் அறிவாய்ச்
சீராகுமோ,
எப்போது போதி மரம்
தேடிப் போய் 
தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து
கோடி ஆண்டுகள்
தவமிருக்குமோ
அப்போது
ஓர் பெரு வெடிப்பு 
நேர்ந்து 
கீழ் வானம் சிவந்து
ஆத்மா
உதயமாகும்
ஞான ஒளியாய் !


S. Jayabarathan

unread,
Apr 1, 2020, 8:56:54 PM4/1/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan
சில மாற்றம்

On Wed, Apr 1, 2020 at 6:53 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

சிறு மூளை !

சி. ஜெயபாரதன்.


ஆத்மாவைத் 
தேடி 
வேர்த்த மழைத் துளிகள்
   வெள்ளமாய்
   ஓட வில்லை !
மண்டை ஓட்டின் 
மதிலைத் தாண்டி
அண்டக் கோள் பாதைகளின் 
விளிம்பைத் தாண்டி 
பிரபஞ்சக் 
காலவெளி எல்லை
கடக்க 
முடியாமல் தவழ்ந்து
முடக்கம் ஆனது,
   இறைக்கை இல்லாத, 
சிறு மூளை !
தூங்கிக் கொண்டுள்ள 
பெரு மூளை,
தூண்டப் பட்டு எப்போது
ஆறறிவு 
ஏழாம் அறிவாய்ச்
சீராகுமோ,
எப்போது சிந்தனை யானது
   போதி மர வெய்யிலைத்
தேடிப் போய் 
தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து
கோடி ஆண்டுகள்
தவமிருக்குமோ
அப்போது
   மூளைக்குள் 

S. Jayabarathan

unread,
Apr 2, 2020, 10:02:45 AM4/2/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan

மனித ஆத்மா

சி. ஜெயபாரதன், கனடா


கூடு விட்டு கூடு பாயும்
ஆத்மா ! இயங்கும்
வீடு விட்டு
வேறு வீடு தாவும்
மாய ஆத்மா !
உன் கை விரல்களை
உனக்காக 
எழுத வைக்கும்
ஆத்மாவை 
இல்லை, இல்லை என்று 
சொல்லி 
உன்னை நீயே அனுதினம்
ஏமாற்ற லாமா ?


மாட்டு வண்டி கிடைத்தால்
மனித ஆத்மா
பாட்டுப் பாடி ஓட்டுது !
சக்கரம் இரண்டுடன் சாயும்
சைக்கிள் வண்டியை 
தக்க முறையில் 
தராசு நிறுப்பது போல்
பளு ஊஞ்சல்
ஆடித்
தரை மீது ஓட்டுது !
எரிசக்தியில்   
நான்கு சக்கரத்தில்
நகரும் காரை
துரிதமாய் ஓட்டுது 
அரிய ஆத்மா !
பறவை போல்
ஆகாய விமானத்தை 
வான்வெளியில்,
வாயு மீதேறிப் பறக்க
வைத்து
வந்து இறங்குது 
கம்பீரமாய் !
கப்பலைக்
கடல் அலைகள் மீது
புயலை 
எதிர்த்து ஓட்டுது !
இப்போது ராக்கெட்டை 
இயக்கி
நிலவுக்குப் போய்
இறங்கி
முதல் தடமிட்டுப் புகழுடன்
பூமிக்கு மீண்டது 
மனித ஆத்மா !


எந்த வாகனம் உள்ளதோ
அந்த வாகனம்
இயக்கிச்
சொந்தம் ஆக்குது 
ஆத்மா !
உடம்பென்னும் வாகனம் 
இன்றேல்
உயிருக்கு வேலை
இல்லை !
உயிர் என்னும் 
ஓர் மாய உந்து சக்தி
ஆத்மா 
இயக்கா விட்டால் 
உடம்பு வெறும்
முப்பக்க
எலும்புக் கூடு !

++++++++++++++



வேந்தன் அரசு

unread,
Apr 2, 2020, 11:12:07 PM4/2/20
to தமிழ் மன்றம், mintamil, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
<உடம்பென்னும் வாகனம் 
இன்றேல்
உயிருக்கு வேலை
இல்லை !)

பேய்களுக்கு உடம்பு இல்லையே

வியா., 2 ஏப்., 2020, பிற்பகல் 7:32 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Apr 2, 2020, 11:46:55 PM4/2/20
to vallamai, தமிழ் மன்றம், mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

சி. ஜெயபாரதன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iZQ8%2BPKMnakB2Ed%2Bed%2BYB6cpAkgzWPkAL1_K%2B8UJrMsA%40mail.gmail.com.

rajam

unread,
Apr 3, 2020, 1:02:05 AM4/3/20
to S. Jayabarathan, vallamai, தமிழ் மன்றம், mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
ஹ்ம்ம்ம் … 

பேயன் (as in பேயன் வாழை, பனிமுல்லை பேயன் என்ற சங்கப்புலவர்), பே(ய்)ச்சி, பே(ய்)ச்சிமுத்து … இதுக்கெல்லாம் அடிப்படைப்பொருள் என்னவோ?

kanmani tamil

unread,
Apr 3, 2020, 1:46:01 AM4/3/20
to mintamil, vallamai
இல்லை. பண்டைத் தமிழில் பேய் என்ற சொல்லின் பொருட்பரிமாணம் வேறு. 
இயல்பான தன்மையைக் காட்டிலும் மாறுபட்டுத் தோன்றும் / மாறுபட்டுச் செயல்படும் / மாறுபட்ட சக்தி உடைய எதுவும் பேய் அல்லது பேய்த்தன்மை உடையதாகத்தான் புனையப்பட்டுள்ளது.  
முருகனுக்குரிய விழவு கூடப் பேஎ விழவு என்று அழைக்கப்படுவதுண்டு  (பரிபாடல் என்று நினைக்கிறேன்.)
சக  

On Fri, 3 Apr 2020 10:38 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
நரசிம்மன் போல ஒரு கற்பனை 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c1b25ea7-f042-4793-8f92-48e0bc8ecb86%40googlegroups.com

kanmani tamil

unread,
Apr 3, 2020, 2:14:10 AM4/3/20
to mintamil, vallamai
ஆமாம் தேமொழி; 
என்னுடைய அணங்குக் கோட்பாடு கட்டுரை வெளிவரட்டும். பகிர்ந்து கொள்கிறேன்.
 
சக  

On Fri, 3 Apr 2020 11:29 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
supernatural  !!!

N. Ganesan

unread,
Apr 6, 2020, 6:57:04 AM4/6/20
to S. Jayabarathan, vallamai, mintamil, vannan vannan, vaiyavan mspm
On Thu, Apr 2, 2020 at 10:46 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

சி. ஜெயபாரதன்

பே பே என்று அஞ்ச வைக்கும் தன்மையுடையதைப் பே(ய்) என்று பெயர் வைத்தனர் தமிழர்கள்.
இது உலக முழுக்க நடந்தது தான். ’ஹிஸ்டரி ஆஃப் ரிலிஜன்’ நூல்களில் உள்ள பாடங்கள்.
ஆபிசார வழிபாடுகள் அதர்வண வேதத்தில் மிகுதி. இந்த வருத்தும் அணங்கு சக்திகளைத்
தணிக்கும் பூசாரிகள் அம்-தணன் (அந்தணன், குறளில் பரிமேலழகர் உரையில் சில குறிப்பு
தருகிறார்), அம்பணவன் (பண் - பாடல்), அம்-பட்டன் (அணங்கு படுத்தல் செய்வோன்)
பெயர்களில் காணலாகும். அந்தணன், அம்பட்டன், அம்பணவன், .... என்ற பெயரில்
அம்- என்ற முன்னொட்டு அப்போதிருந்த இந்திய சமூகத்தில் அவர்கள் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
மெதுவாக, இந்தச் முற்சங்க கால வழிபாடுகள், அறிவு மிகலால், மாறுகிறது. இந்தியாவில்
பெருஞ்சமயம் உருவெடுக்கிறது. ஃபேஷனுக்கு துணியை மாற்றுதல்போல, ஃபேஷன் மாறி
கடவுள் என்ற வரையறை மாறுதலைச் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம்.
பேய் என்று கருதப்பட்ட முருகு எனும் அணங்கு, முருகன் என்றாகிறான்.
கடம்பு மரத்தில் இருந்த அணங்கு முருகு, அதற்கு ஆடு அறுத்து, களம் அமைத்துப்
பூஜை செய்தவன் கடம்பன் என்னும் வேலன் (மாங்குடி கிழார்) பாடல்.
இந்தக் கடம்பன் (அ) வேலனை, காதல் நோய் பீடித்த பெண்ணுக்கு
பூசை செய்து அணங்காடி அந்தப் பேயை விரட்ட தாயார்கள் ஏற்பாடு செய்வர்.
இப்பாடல்கள் பல சங்க இலக்கியத்தில் காணலாம். இவற்றில் வேலன்
என்னும் பாத்திரம் முட்டாளாகச் சித்திரிக்கப்பட்டிருப்பான்.

பிற்காலத்தில், நாலடி வெண்பா: (முருகனின் பூசாரி)
       வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
       முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
        மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
        அறிவுடை யாளர்கண் இல்.

மூத்த மாடு - மூதா, கன்றுக்குட்டி உள்ள மாடு சேதா, .... இதுபோல,
பேபே என்னும் அஞ்சுவது குறித்து ஏற்பட்ட வினைச்சொல், பேதுறு-தல்.
பேதாளம் > வேதாளம். மாகதர், வைதாளிகர் என்றெல்லாம் பாணர் வகையினர்
உண்டு. வைதாளிகர் வேதாளம் (அணங்கு, பேய்) பூசாரிகள் (அம்தணர் = அந்தணர்).

நம் காலத்திற்கும், சங்க காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தார் நம்மாழ்வார்,
சங்க காலத்தில் இருந்த அணங்கு வழிபாடு பற்றி விரிவாக ஒரு பத்துப்
பாசுரம் பாடியுள்ளார். அதில் சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்து,
பெருந்தெய்வம் கண்ணன், ராமனிடம் வாருங்கள் என பாடினர் ஆழ்வார்கள்.
இதே போல, சிவனிடம் வரச் செய்வது தேவாரம், ....

சங்கச் சமயமும், அதில் வந்த தாக்கங்களும், தாக்கணங்கு வழிபாட்டை மங்கல அந்தணர்
(தமிழிசை வளர்த்தோர்) நடாத்தியதும், பக்தி இலக்கிய காலத்தில் சங்ககால வழிபாடுகள்
அழிந்து, பெருஞ்சமய வழிபாடுகள் ஏற்பட்டதும் ஆய்விற்கு நல்ல துறைகள். உவேசா அவர்களின் தமிழ்
அறிவைப் பறைசாற்றுகிற புறநானூற்றுப் பதிப்பு முதல் பதிப்புகளில் உள்ளவாறே, அறிஞர் குழுக்கள்
ஏடுகளை எல்லாம் பார்த்து ஆராய்ந்த போது மீண்டுவிட்டது. அதனை வைத்துத் தான்
வரி நீறு ஆடு, அழுத கண்ணள் என்பதன் பொருளும், சங்க காலச் சமயமும் தெளிவாகிறது.
ஐந்து முக்கியமான பாடல்கள் - தமிழ்த்தாய் வாழ்த்து, + நான்கு சங்கப் பாடல்கள்
பற்றியும் அவற்றின் உயிர்நாடியாக உள்ள சொற்கள் பற்றியும் எழுதியுள்ளேன்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 8, 2020, 8:10:07 AM4/8/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, S. V. Shanmukam, Ashraf N.V.K., K Rajan
On Tue, Apr 7, 2020 at 1:03 PM KJ <kan...@gmail.com> wrote:
பேயன் என்றால் முட்டாள் என்றும் பொருள்.

பரமார்த்தகுருகதை என்று தமிழிலே உண்டு:
”தஞ்சையை அடுத்ததாக நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் – முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் மழைக்கும் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள்.”

வனாந்தரத்தில் இருப்பது பேய். எனவே, இயற்கையாக வளரும் தாவரங்கள் பேய்- என வரும். துறவியாகிய பட்டினத்தார் பேய்க்கரும்புடன் காட்டப்படுகிறார்.
பேயன் = காட்டான், பேயன்வாழை = வனவாழை ... பேய் தொழில் அணக்குவது. இதனால் அணங்கு, தாக்கணங்கு எனப்படும்.
புறநானூற்றில் மாங்குடி கிழார் பாடல், வட இந்தியாவில் இருந்து வர்ணாசிரமும், சமயமும் புகுதலும், தென்னாட்டில் இருந்த
அணங்கு வழிபாடும் பற்றிய வேற்றுமைகளைப் பதிவுசெய்யும் பாடல். It is talking of the transition, Pole reversal, happening in the religion,
when the demon worship is getting shifted, and gods are shifting towards the Great Tradition of North India. மாங்குடிகிழார் பாட்டில்
ஊரில் ஒரு சிறு விழுக்காடே இருந்த மக்களும், சாதாரணமான தானியங்கள், சாதாரணமான பூக்கள் பேசப்படுகின்றன.
இம்மக்களின் தொழில் என்ன என மருதத்திணைப் பாடல்களில் விரிவாக உள்ளது. வரிநீறு என்னும் சுடலைப்பொடி (புறம் 249),
திரிபுரத்தை எரித்து நீறு அணிதலைக் கூறும் சங்கப்பாடல் காட்டுகிறது. புறம் 249 காட்டும் நிகழ்ச்சியில் மங்கல அந்தணர்/பண்டிதர்
பங்கு என்ன என ஆராய்தல் வேண்டும். மண்ணாரமங்கலர் என்பவர்கள் கிராம வேளாண் சமூகத்தின் குடிமக்கள். தோலாத நல்லிசை நால்வர் என,
வருணன் - சிவன் (வேதக் கடவுள் என்பதன் அடையாளம் கணிச்சி மழு), பலதேவன் (கிருஷ்ணனின் அண்ணன், வேளாண் தெய்வம்),
கிருஷ்ணன் (விஷ்ணு), சுப்பிரமணியன் என பெருந்தெய்வ வழிபாட்டுக்கும் உள்ள வேறுபாடுகளை, from Bottom Up,
காட்டும் முக்கியமான பாடல் மாங்குடிகிழார் பாடல். அணங்கு வழிபாட்டின் முக்கியமான கடம்பன் (வேலன்), பாணன், ...
இடம்பெறும் பாடல். ஔவை துரைசாமிப்பிள்ளை சாதாரணமான இரு பூக்களைச் சொல்கிறார். பட்டிப்பூ இருக்கலாம்
எனப் பல ஆண்டுமுன்னர் எழுதியுள்ளேன். ஆனால், தாழை, மருது சேர்த்தால் நான்கு திணைகளையும் குறித்துவிடும்.
அத்திணைகளில் பேய் (அணங்கு) வழிபாடு, (கூடவே சமூகத்தில் அவர்கள் பணி : உ-ம்: மருதம்)  காட்டும். தாழை
வருணனுக்கானது. சிவனுக்கு எப்படிப் பயனாகிறது என்பதும் சி-டமில் போன்ற குழுக்களில் பார்க்கமுடியும்.

கடவுள் என்ற வரையறை காலங்காலமாக விஞ்ஞான அறிவு விருத்தியாகும் போது விரிந்து மாறிக்கொண்டே வருவது.
இதைச் சங்க இலக்கியம், தமிழர் சமயம் போன்றவற்றில் நன்கு காணலாம்.
செம்மொழி என்று தமிழ் பரவலாக அக்கடமிக் துறைகளில் சம்ஸ்கிருதம் போல
உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இருக்கவேண்டுமானால்,
வெளிநாட்டில் இருந்தும் பிற இனத்தார் ஆராய்ந்து பார்க்கவேண்டும். என் போன்றாருக்கு
சங்க காலச் சமயம் ‘அணங்கு’ பற்றி அறிய பேரா. ஹார்ட் போன்றோர் ஆய்வுகள் (ஹார்வர்ட் பல்கலை, 55 ஆண்டு
முன்) உதவின. அவருடன் பன்முறை இதுபற்றிக் கருத்தாடியுள்ளேன். மாங்குடி கிழாரின் பாடல் முக்கியமானது.
ஏன் கடம்பன் என்று முருகு என்னும் அணங்கின் பூஜாரி  குறிக்கப்படுகிறான் என எழுதியுள்ளேன்.
(பூஜை என்னும் தமிழ்ச்சொல் ரிக்வேதத்தில் உள்ளதை எனக்கு விட்சல் காட்டினார். பூஜை < பூசல்)
மாங்குடி கிழார் பாடல் பற்றிய விளக்கமான பதிவு எழுதணும். அழிந்துவிட்ட பூக்கள்:
தாழை, மருதம் என்னும் தாவரங்களாக இருக்கலாம். விளக்கமாக எழுதலாம்.

மாங்குடி கிழார் பாட்டு

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

நான்கு வகையான பூக்கள் – தாழை, மருது, குருந்து, முல்லை,
நான்கு வகையான உணவு -வரகு, தினை, கொள், அவரை.
நான்கு வகையான குடி – துடியன், பாணன், பறையன், கடம்பன்.
நான்கு வருணங்களை எதிர்க்கும் பாடல்.

தாழை, மருது, குருந்து, முல்லை - நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை என்று
நான்கு திணைகளிலும் வளரும் சாதாரண தாவரங்கள். தமிழர் சமயம்

Little Tradition to Great Tradition மாறுதலைக் காட்டும் பாடல். தேசி, மார்க்கம்;

சிறுதெய்வம் (அணங்கு), பெருந்தெய்வம் சமயத்தின் பரிணாம மாற்றங்கள் - அதன் முக்கிய காலகட்டம் சங்க காலம்.

நா. கணேசன்



On Friday, April 3, 2020 at 1:02:07 AM UTC-4, rajam wrote:
ஹ்ம்ம்ம் … 

பேயன் (as in பேயன் வாழை, பனிமுல்லை பேயன் என்ற சங்கப்புலவர்), பே(ய்)ச்சி, பே(ய்)ச்சிமுத்து … இதுக்கெல்லாம் அடிப்படைப்பொருள் என்னவோ?

On Apr 2, 2020, at 8:45 PM, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

சி. ஜெயபாரதன்

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/60ee538f-a552-46f5-a139-2722f95abfb5%40googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 8, 2020, 8:28:43 AM4/8/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, S. V. Shanmukam, Ashraf N.V.K., K Rajan
மாங்குடி கிழார் பாட்டில் உயிர்நாடியான சொல் நான்கு.
நான்கு என்னும் எண்ணுப்பெயர் மீண்டும், மீண்டும் வருகிறது.
என்ன காரணம்? நான்கு வருணங்கள் என்பது கீதையில் கண்ணபிரான் போன்றோர் சொல்வது.
அது இந்தியாவின் பெருஞ்சமயம். இப்பாடல் இயற்றிய காலத்தில்,
இங்கே எந்தெந்த நான்கு பொருள்கள் சமயத்தைக் காட்டுகின்றன
எனப் பதிவுசெய்யும் பாடல். அதனால், நான்கு வர்ணங்கள்
- வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் (பாண்டியன் நெடுஞ்செழியன்) -
எதிர்க்கும் பாடல் என்பது பெறப்படும். இறைச்சிப் பொருள் இது.
கிழார்கள் பயன்படுத்திய சமயம், சங்ககாலத்தில் நிகழ்ந்த சமயமாறுதல் (துருவ மாற்றம்).
பெருஞ்சமயம் ஏற்பட்டுப் பின்னர் பேரரசுகள் - பல்லவர் - உருவாதலுக்குக் கால்கோள்
காட்டும் அரிய பாடல்.

kanmani tamil

unread,
Jun 6, 2020, 9:54:04 AM6/6/20
to vallamai


---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Sat, Jun 6, 2020 at 7:23 PM
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] Re: [தமிழ் மன்றம்] Re: ஆத்மா எங்கே ?
To: mintamil <mint...@googlegroups.com>


மாங்குடி கிழார் பாடலில் நான்கு என்னும் எண்ணுக்குச் சிறப்பிடம் இருப்பது உண்மை.
ஆனால்  'இறைச்சி' என்றெல்லாம் விளக்கம் சொல்லும்போது.....

இது தான்... சரியான அடிப்படை இல்லாமல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் விளைவு என்று நான் கூறுவதன் காரணம்..
இறைச்சி அகப்பாடலுக்கு உரியது.
இது புறப்பாடல்...இங்கே பொருத்திப் பார்ப்பதே அடிப்படைத் தவறு.
சக   

Reply all
Reply to author
Forward
0 new messages