விதிர்ங்கோல் ‘Tuning fork' (விடுவிடுத்தல்/வெடுவெடுத்தல் (ideophone) > விதிர்த்தல்)

9 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 26, 2020, 8:05:03 AM3/26/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
I was looking at usages of the ideophone, viDuviDu-/veDuveDu- that is the source of Sangam term, vidir-ttal.
For the Tuning Fork, "vidirGkOl' seems to be a good neologism.

An instance of viDuviDu- :to be agitated, to go hurriedly, to quiver with anger etc.,
Even countryside is changing, due to money, so says the writer of this story.
I thought it is worth reading.

N. Ganesan

-------------
பாட்டி கேட்ட ஒற்றை கேள்வி.., பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்த இளைஞன்!!

நண்பர் ஒருவரைக் காண்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள அவரது ஊருக்குச் சென்றிருந்தேன். தேனி வரை பஸ்ஸில் பயணித்து, தேனியிலிருந்து கம்பம் செல்லும் பஸ்ஸில் உத்தமபாளையம் வரைக்கும் பயணித்தேன். நண்பரது வீடு, உத்தமபாளையத்திற்கும், கம்பத்திற்கும் இடையே தான் உள்ளது.

ஆனால், பஸ்ஸை அந்த ஊரில் நிறுத்த மாட்டார்களாம். சிட்டி பஸ்ஸில் தான் போக வேண்டுமாம்.(கிராமத்திற்கு எதற்கய்யா சிட்டி பஸ்சு?) இதற்காக கண்டக்டரிடம் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்காமல், உத்தமபாளையத்தில் இறங்கி கொண்டேன்.

அவர்கள் சொன்ன சிட்டி பஸ்?-சுக்காக வெகு நேரம் காத்திருந்தேன். வரவில்லை. நான் காத்திருந்த அரை மணி நேரத்தில் 24 பேருந்துகள் சென்றன. அதில் தனியார் பேருந்து கூட, அந்த ஊரில் நிறத்த மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். கடைசியாக ஒரு தனியார் வேன் வந்தது.

ஷேர் ஆட்டோ மாதிரி இருந்தது. நான் காக்கில்சிக்கையன்பட்டி என்ற கிராமத்திற்குப் போக வேண்டும். கேட்டேன். ஏற்றிக் கொண்டார்கள். ஏறியதும் 10 ரூபாயை, அந்த வேனில் உள்ளே இருந்த கண்டக்டர் போல் இருந்தவர் வாங்கிக் கொண்டார்.

               வேன், அனுமந்தன்பட்டி என்ற கிராமத்தைத் தாண்டிய போது, அருகில், அங்குள்ள வயலில் வேலை செய்த ஐந்து பெண்கள் வேகமாக கையைத் தட்டிக் கொண்டே வேனை நிறுத்தச் சொன்னார்கள். இதைக் கவனித்த டிரைவரும் வண்டியை நிப்பாட்டினார்.

எல்லோரும் வியர்க்க் விறுவிறுக்க வந்து வேனில் ஏறினார்கள். அவர்களில் கடைசியாக கண்ணாடி போட்ட மிக வயதான பாட்டியும் ஏறினார். இந்த வயதிலும் வயலில் வேலை செய்து வயிற்றுப்பாட்டைப் பார்க்க வேண்டிய கட்டாயம்.

வேன் புறப்பட்டது. கண்டக்டர் அங்கிருக்கும் பெண்களிடம் எல்லாம், பத்து ரூபாய் வசூலித்தார். பாட்டி தனது சுருக்குப் பையைத் திறந்து இருக்கிற சில்லரையை எல்லாம் எடுத்துக் கொடுத்தார். அதில் ஐந்து ரூபாய் வரை தான் இருந்தது. மீதியை பை முழுக்க துலாவினார். கிடைக்கவில்லை.

அவருடன் வந்த மற்ற பெண்களிடம், “ஐந்து ரூபாய் குடு. வீட்டுக்குப் போயி தர்றேன்” என்று கேட்டார். ஆனால், அந்தப் பெண்களில் ஒருவர் கூட அந்தப் பாட்டியை நம்பி ஐந்து ரூபாய் கொடுக்க மனம் வராமல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அந்தப் பாட்டி, அந்தக் கண்டக்டரைப் பரிதாபமாகப் பார்த்தார்.

              ஆனால் அந்த ஆளோ, “இங்க பாரு கிழவி, மிச்சம் அஞ்சு ரூபாய் குடு. இல்லேன்னா, வண்டியை விட்டு இறங்கிக்க”, என்று கத்த, டிரைவரும், அந்தச் சத்தத்தைக் கேட்டு வண்டியை நிறுத்தினார். அந்தப் பாட்டியைப் பார்க்க பாவமாக இருந்தது. “ஏம்பா வச்சிக்கிட்டா இல்லேங்கிறேன்.

நாளைக்கு வரும் போது தர்றேன்யா” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அந்த ஆள் கேட்கிற பாட்டைக் காணோம். நான் என் பாக்கெட்டிலிருந்து 10 ரூபாய் பணத்தை அந்த ஆளிடம் கொடுத்து, பாட்டியிடம் வாங்கிய ஐந்து ரூபாயைத் திருப்பித் தரச் சொன்னேன். அந்த ஆள் எதுவும் பேசாமல் நான் சொன்னதைச் செய்தார்.

               அந்தப் பாட்டிக்கு வியர்த்துக் கொண்டேயிருந்தது. நான் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து தண்ணீர் குடிக்கச் சொன்னேன். அந்த தண்ணீரைக் குடித்ததும் தான் அந்தப் பாட்டிக்கு ஒரு ஆயாசமே ஏற்பட்டது. இருந்தாலும், அந்தக் கண்டக்டர் பேசியைத் கேட்டு மனம் வருத்தப் பட்டிருப்பார் போல. கண்களில் தண்ணீர் தழும்பியது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. அந்த வயதான பாட்டியும் அந்த நிறுத்தத்தில் தான் இறங்கினார்.

கதவைத் திறந்து இறங்கிய அந்தப் பாட்டி, அந்தக் கண்டக்டரைப் பார்த்து, “ஏம்பா..நீ குடிக்கிற ஒரு சிகரெட்டுக்காகுமா அந்த அஞ்சு ரூபா காசு? என்று கேட்டு விட்டு, விடுவிடு என்று தள்ளாடியபடி நடக்கத் துவங்கினார். அந்த கண்டக்டரால் பதில் ஏதும் கூற இயலவில்லை. தற்போது கிராமத்தில் கூட மனிதநேயம் மடிந்து விட்டதோ, என்று தான் எனக்கு எண்ணத் தோன்றியது.

               என்னவென்று தெரியவில்லை. இப்போதும், ஐந்து ரூபாய் தாளைப் பார்த்தால், அந்தப் பாட்டியின் தெளிவல்லாத முகம் தான் நினைவிற்கு வருகிறது.  https://www.seithipunal.com/gossips/grandma-ask-one-question

N. Ganesan

unread,
Mar 28, 2020, 11:48:02 AM3/28/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-ல் என்னே தமிழின் இளமை - 2 -- 'வெள்ளென' எனும் பேரா. ப. பாண்டியராஜா அவர்களின் இழையில் கூறப்பட்ட கருத்து, விதிர்ங்கோல் என்னும் கலைச்சொல் ஆக்கம் பற்றி மேலும் உசாவ உதவும்.

விடுவிடு-/வெடுவெடு-, வெளவெள என்னும் தொடரோடு உறவுடையது. வெள்ளென-/வெட்டென-/வெண்டென-
எனும் தொடர்கள் விரைதல்/வேகமாய்/சீக்கிரமாய் என்ற பொருளில் வழங்குகிறது. வெளவெள- சற்றே மறைந்து
வெலவெல- என்பது பிரதானமாகிவிட்டது. அதே போல ரெட்ரோஃப்லெக்ஷன் இழந்து, விடுவிடு- ஒலிக்குறிப்பு 
விதுவிது- எனவாகி, விதிர்த்தல் என்றாகியுள்ளது. இதிலிருந்து, விதிர்ங்கோல் = Tuning Fork. பிஸிக்ஸ், எஞ்சினீரிங் துறைகளில்
கற்பித்தலில் விதிர்ங்கோல் ஒரு அடித்தளம் அமைக்கும் கருவி. மாணவர்கள் ரெஸொனன்ஸ், நேச்சுரல்
ஃப்ரிக்குவென்ஸி, ஐகன் வெக்டார் ... போன்றவை பற்றி அறிய விதிர்ங்கோல் இன்றியமையாதது.

வெள்ளெனல் (Cf. வெள்ளம்) என்ற சொல்லுக்கு “விரைவு” என்ற பொருளையும்  அகராதிகளில் ஏற்றவேண்டும்.
இப்பொழுது சென்னைப் பேரகராதியில் இல்லாத பழைய தொடர் இது. 

வெடவெடத்தல், வெளவெளத்தல்/வெலவெலத்தல், ... 
”வெள்ளெனல் (Cf.வெள்ளம்) = விரைவில்”. இந்தாலஜிஸ்ட்ஸ், பாரதபாஷைகளைப் படிக்கும் லிங்யுயிஸ்ட்ஸ் இடையே பல பதிற்றாண்டுகளாய் நாவளைஒலிகளுக்கான எழுத்துக்கள் (Systemic Retroflexion) எங்கிருந்து உற்பத்தி என்ற கேள்வியுண்டு. I have postulated a theory and to have a close look at the second syllable of Tamil/Dravidian words. If 100 or 150 sets of such Word pairs are analyzed, this fundamental, deep structural feature of Dravidian cannot be a borrowal either from Aryan or from Munda language families, none of these two families possessed systemic retroflexion originally. The second syllable retroflexion in Dravidian so beautifully illustrates Retroflexion is native to Dravidian and all other India's languages got it from Dravidian. Many such sets are given in the MinTamil thread, https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/O4M_q-iTESw/g6ZefggBxrsJ

’வெடுக்குனு பிடுங்கினாள்’, வளர்மதி வெடவெடத்துப் போனார், வெளவெளத்து/வெலவெலத்து நடுங்கினார், ... என்னும் அனுகரணவோசைச் சொல் (ideophone).
கிட்டாதாயின் வெட்டென மற - பொருளாழமுடைய  தமிழ்ப் பழமொழி.. இங்கே, வெட்டெனல் = வெள்ளெனல் = சீக்கிரமாக.
MTL example: வெட்டு² veṭṭu Stroke of fortune; திடீரென வரும் அதிர்ஷ்டம். அவனுக்குத் திடீரென ஒரு வெட்டு வெட் டிற்று. இரண்டாயிர ரூபா கிடைத்தது

வெள்-/வெட்- என்னும் த்ராவிட தாதுவேர் தெலுங்கினில் வழங்கும் விதம்: வடி- என்றாம்.
DEDR 5226 Te. vaḍi quickness, rapidity, speed, briskness, valour, violence; vaḍikãḍu a quick man, a brave man; vaḍigala quick, rapid, brisk, brave, spirited. Kol. vaḍi, vaḍi vaḍi quickly. DED 4274.

கிட்டாதாயின் வெட்டென மற. வெட்டு என்பது தெலுங்கில் வெண்டு என்று வழங்குகிறது. வெண்டனே  ரா என்றால் உடனே வா என்று பொருள்.

நன்றி, சேசாத்திரி. -ள்-/-ட்- இருந்தால் -ண்- (அ) -ண்ட- இருக்கணுமே எனத் தேடிக்கொண்டிருந்தேன்.
தியாகையா பயன்படுத்துகிறார்: வெண்டனே = உடனே

       கானகேகி3 ஆக்3ஞ மீரக மாயாகாரமுனிசி ஸி1கி2 செந்தனேயுண்டி3 
            4தா3னவுனி வெண்டனே சனி அஸோ1க தரு மூலனுண்டி3 


விள்- , விட்டு, விண்டு, விண்ணு- ‘solar rays = viSNu in Rgveda, acc. to Prof. Jan Gonda'/

வெள்-/வெட்-/வெண்ட- (Cf. வெள்ளம்) : = உடனே.
இன்றைய மொழிகள் எதுவாயினும், அதன் மிகப்பழைய முந்துமொழியை (Proto-Language) கட்டமைக்க மொழியியலார் பயன்படுத்துவது இதனால்தான்.
இரண்டு புறப்பாடல்களில் (359 & 207) “வெள்ளென” என்பது சீக்கிரம் என்ற பொருள் பொருந்துகிறது என 2 ஆண்டுமுன் எழுதினபோது இன்னும் சில தற்கால இலக்கியக் காட்டுகள்,

முக்கியமாக, “வெள்ளம்” என்ற சொல்லின் தாதுவேர் நீங்கள் ’வெள்ளென என்றால் சீக்கிரம்’ என்ற பொருள் என்று சொன்னபோது புரிந்தது.அதற்காகத் தான் புறப்பாட்டில் உள்ளதா எனப் பார்க்கலானேன். காய்ந்தே இருக்கும் ஆறுகளில், பருவமழை பொழியும்போது மலையில் இருந்து விரையும் நீரை வெள்ளம் என்றான் தமிழன். பல ஆறுகள் பாயும் கேரள நாட்டு மக்கள் தண்ணீரையே ’வெள்ளம்’ என்பது இதனால்: மலைச்சரிவில் விரைந்து ஓடும் நீரை அவர்கள் ‘வெள்ளம்’ என்பது பொருத்தந்தானே. இன்னொன்றையும் சொல்லலாம். தமிழ்நாட்டு தமிழருக்கு மேல் (மேற்கு) திசையில் சூரியன் மறைகிறான், கீழ் திசையில் சூரியன் உதிக்கிறான். கேரளா நிலவியலுக்கு இதுபொருந்தாது. எனவே, சூரியன் படுக்கும் திசையை படிஞாறு என்றும், சூரியன் எழும் திசை மலைகள் உள்ளமையால் எழிஞாயிறு என்பதும் மலையாள வழக்கம். அதுபோல, அவர்கள் வெள்ளம் என நீரைச் சொல்லும் வழக்கம் சைய மலையில் இருந்து “விரைந்து” பாயும் நீர் என்பதைக் குறிக்க எழுந்தது என நினைக்கிறேன். 

வெள்ளென --  விரைவில் 

இதனால் தான், கேரளாவில் மலைச்சரிவில் விரைந்தோடி கடலுக்குச் செல்லும்
நீரையே பார்த்தோர் தண்ணீரை வெள்ளம் என்கின்றனர். 
வெள்ளத்தை ஆள்பவன் வெள்ளாளன். வெள்ளத்தை ஆள்வது வெள்ளாண்மை/வெள்ளாமை.
யால்- (Cf. யானை, யால் மரம் = ஆல மரம்). யால்- >> சால்-/ சான்று. சான்றாண்மை = கள்ளிறக்குந்தொழில்.
சான்றான் = பனை, தென்னையினின்றும் கள்ளிறக்குவோன் என ஏராளமான கல்வெட்டுக்களில் 
படிக்கிறோம். 

I was looking at usages of the ideophone, viDuviDu-/veDuveDu- that is the source of Sangam term, vidir-ttal.
For the Tuning Fork, "vidirGkOl' seems to be a good neologism.

An instance of viDuviDu- :to be agitated, to go hurriedly, to quiver with anger etc.,
Even countryside is changing, due to money, so says the writer of this story.
I thought it is worth reading.

N. Ganesan


kuNil vitir-ttal is like Tuning fork trembling due to the membrane of the drum vibrating.

அம்மா வந்தாள், தி. ஜா. சிறுகதை:

” ஒரு நாள் அந்த அரை நிமிஷ மட்டிகளைக் கடிந்து, அவர் மண்டையில் போட்டுக் கொள்வதைப் பார்த்து வெதறிப் போய், சிரிப்பை அடக்கிக் கொண்டான்...

விதறுதல்/வெதறுதல் = சங்க காலத்தில் “விதிர்த்தல்”.  வெள்ளென என்பது இன்றும் இருப்பதுபோல், விதறுதல் விதிர்ப்புக்குச் சமானமாய் வாழ்கிறது. 
On Thu, Mar 26, 2020 at 2:58 AM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

///சங்க இலக்கியங்களில் பல இடங்களை உரையாசிரியர்கள் மூலம் அன்றி,என்னுடைய சிறுவயது ‘பட்டிக்காட்டுத்தனத்தை’ வைத்துப் புரிந்துகொண்டிருக்கிறேன். 
இதைப் போல் இன்னும் சில இடங்கள் உண்டு. உரையாசிரியர்கள் கூற்றினின்றும் மாறுபட்டு, இன்றைய வழக்கில் நன்கு புரிந்துகொள்ளக் கூடிய அந்த இடங்களை நேரம் வரும்போது இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.///


அருமையாக, இன்றைய தமிழுக்கும், சங்கத் தமிழ்ச் சொற்களுக்கும் உள்ள
தொடர்பை விளக்கிவருகிறீர்கள். தண்ணீர்ப்பந்தர் பற்றிப் பார்த்தோம் (உங்கள்
தினமணிக் கட்டுரை). தமிழர்களின் சமயச் சடங்குகள் பற்றிச் சங்க இலக்கியம்
கூறுவதென்ன என்பதுபற்றி நாட்டுப்புற நடவடிக்கை பற்றி அறிந்ததால் சற்றுக்
கூற முடிகிறது. அண்மைக்கால உரைகளில் இருந்து சங்ககாலப் பாணரில்
ஒரு (பெரும்)பிரிவு பண்டிதர்கள், அவர்கள் சடங்குகளில் பங்குபற்றல் (உ-ம்: புறம் 249)
காணமுடியாது.

கிராமப்புறங்களிலே உள்ள சொல்:
விதறுதல் - To tremble; to be agitated; to be shaky.
சங்க கால விதிர்த்தல் என்பதன் மாற்றம் ஆகும்.

தொடர்புடைய சொற்கள்:
விதுப்பு vituppu , n. < விதும்பு-. 1. Trembling, tremor; நடுக்கம். பிறைநுதல் பசப்பூரப் பெரு விதுப்புற்றாள் (கலித். 99). 2. Haste; விரைவு. ஆன்றவர் விதுப்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே (புறநா. 213). 3. Hurly-burly; பரபரப்பு. விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி (பெருங். உஞ்சைக். 36, 61). 4. Desire, longing; வேட்கை. மைந்தர் விதுப்புற நோக்கும் (கம்பரா. நாட்டுப். 11).

   விதும்பு¹-தல் vitumpu- , 5 v. intr. 1. cf. விதிர்¹-. To tremble; நடுங்குதல். மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே (சீவக. 2718). 2. To hasten; விரைதல். அவர்வயின் விதும்பல் (குறள், 127-அதி.). 3. To desire, long for, hanker after; ஆசைப்படுதல். பேதையர் விதும்பி நின்றார் (சீவக. 2530).

   விதும்பு² vitumpu , n. < விதும்பு-. Trembling, tremor; நடுக்கம். எனை விதும்புற வதுக்கி (தணிகைப்பு. நாரதனருள். 8).

விதிர்¹-தல் vitir- , 4 v. intr. [K. bidir.] To shake, shiver; நடுங்குதல். விதிர்ந்தன வமரர் கைகள் (கம்பரா. நாகபாச. 93).

   விதிர்²-த்தல் vitir- , 11 v. [T. Tu. vedaru, K. bidiru.] intr. — 1. To tremble, quiver; நடுங்கு தல். மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புற (பரிபா. 10, 47). 2. To be afraid; அஞ்சுதல். (W.) — tr. 1. To scatter, throw about; சிதறுதல். நெய்யுடை யடிசின் மெய்பெற விதிர்த்தும் (புறநா. 188). 2. To sprinkle; தெறித்தல். விதிர்த்த புள்ளி யன் (சீவக. 2010). 3. To shake; to brandish, as a sword; அசைத்தல். கையிற்றிருவாழியை விதிர்த்தான் (ஈடு, 2, 4, 9). 4. To shake out, throw off; உதறுதல். கலிமா . . . எறிதுளி விதிர்ப்ப (நெடுநல். 180). 5. To cut into pieces; to reduce to fragments; பலவாகப் போகடுதல். கொக்கி னறுவடி விதிர்த்த . . . காடி (பெரும்பாண். 309). 6. To pour, as ghee in a sacrifice; சொரிதல். நெய்விதிர்ப்ப நந்து நெருப்பழல் (நான்மணி. 62).

   விதிர்க்குவிதிர்க்கெனல் vitirkku-vitirk-keṉal , n. < விதிர்²- + விதிர்²- +. Expr. of trepidation; படபடத்தற் குறிப்பு. (யாழ். அக.)

   விதிர்ப்பு¹ vitirppu , n. < id. [T. vidurpu.] 1. Trembling, shivering, shaking from fear; நடுக்கம். என்போற் பெருவிதிர்ப்புறுக (புறநா. 255). 2. Tremor, fear; அச்சம். (திவா.)

   விதிர்ப்பு² vitirppu , n. < விதப்பு². Abundance; மிகுதி. (பிங்.)

   விதிர்விதிர்-த்தல் vitir-vitir- , 11 v. intr. Redupl. of விதிர்²-. 1. To throb, flutter, quiver with intensity of feeling; to be tremulous; நடுங்குதல். மெய்யெரி துயரின் மூழ்கி விதிர்விதிர்த்து (சீவக. 1540). 2. To be eager; to be agitated with to be ardour; ஆதுரப்படுதல். செங்கனகங்கண்டான் விதிர் விதிர்த்தான் சிவனடியார்க் கிடுவா னெண்ணி (திருவாலவா. 39, 5).

விதுவிதுப்பு vituvituppu , n. < விதுவிது-. 1. Longing, desire; ஆசை. 2. Throbbing pain; உடலின் குத்துநோவு. விதுவிதுப் பாற்ற லுற்றான் (கம்பரா. நாகபாச. 188). 3. Trembling; நடுக்கம். (இலக். அக.)

உங்கள் கட்டுரை, விதிர்ப்பு பற்றிக் காண ஆவல் உடையேன்.

விடுவிடு-த்தல்/வெடுவெடு-த்தல் = நடுங்குதல், விரைதல், அதிர்தல், சினத்தல் என்ற பொருள்களில் இன்றும் பயன்படுத்துகிறோம்.
இந்த அநுகரணவோசைச் சொல் தரும் வினைச்சொல்: விதிர்த்தல். The ideophone, viDuviDu, equivalently, viduvidu-
gives rise to vidirttal verb in Sangam texts. In the Japanese language, linguists
have built an ideophone dictionary. It is high time, Tamil and genetically related
Dravidian languages also get an Ideophone Dictionary. Many linguists can particpate
and accomplish this task.

கடம்பு > கதம்ப, கடவு > கதவு .... போல (spontaneous loss of cerebrals), விடுவிடு- > விதுவிது- > விதிர்-த்தல் (-இர் அசை சேர்ந்து).

(1) ஈர்ங்கதிர் (சந்திரன், குளிர்ந்தகதிர்) (2) வெதிர்ங்கோல் (மூங்கில்கோல், rattan rod) (3) கூர்ங்கண் (கூரிய கண்) ....
போல, இயற்பியல் துறையில், introducing Vibrations, Natural Frequency, Math modeling
and the Eigen vectors, Tuning Fork-கு சரியான தமிழ்ப்பதமாக, விதிர்ங்கோல் என அழைக்கலாம்.
விதிர்ங்கோல் = Tuning Fork

https://www.youtube.com/watch?v=UDymhyyxy14
https://www.youtube.com/watch?v=zstmGnaaaCI
https://www.youtube.com/watch?v=PiTFHG-atr8
https://www.youtube.com/watch?v=r2Mvm_jKoa4

விடுவிடு-/விதுவிது- :
தேனி பகுதியில் பாட்டியும், பஸ் கண்டக்டரும்.
கடைசியில் பாட்டி விடுவிடு எனச் சென்றார். (இந்த விடுவிடு- எனும்
ideophone-ல் அதிர்வு, விரைவு, சினம் அடங்கும்).
https://www.seithipunal.com/gossips/grandma-ask-one-question
“அந்தப் பாட்டிக்கு வியர்த்துக் கொண்டேயிருந்தது. நான் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து தண்ணீர் குடிக்கச் சொன்னேன். அந்த தண்ணீரைக் குடித்ததும் தான் அந்தப் பாட்டிக்கு ஒரு ஆயாசமே ஏற்பட்டது. இருந்தாலும், அந்தக் கண்டக்டர் பேசியைத் கேட்டு மனம் வருத்தப் பட்டிருப்பார் போல. கண்களில் தண்ணீர் தழும்பியது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. அந்த வயதான பாட்டியும் அந்த நிறுத்தத்தில் தான் இறங்கினார்.

கதவைத் திறந்து இறங்கிய அந்தப் பாட்டி, அந்தக் கண்டக்டரைப் பார்த்து, “ஏம்பா..நீ குடிக்கிற ஒரு சிகரெட்டுக்காகுமா அந்த அஞ்சு ரூபா காசு? என்று கேட்டு விட்டு, விடுவிடு என்று தள்ளாடியபடி நடக்கத் துவங்கினார். அந்த கண்டக்டரால் பதில் ஏதும் கூற இயலவில்லை. தற்போது கிராமத்தில் கூட மனிதநேயம் மடிந்து விட்டதோ, என்று தான் எனக்கு எண்ணத் தோன்றியது.”

எடும்எடும் எடும்என எடுத்ததோர்
          இகலொலி கடலொலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
          விடும்விடும் எனுமொலி மிகைக்கவே  - கலிங்கத்துப்பரணி

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 30, 2020, 7:40:21 PM3/30/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Mar 29, 2020 at 11:20 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
Tuning fork என்பது இசைக்கவை.

ஏற்கனவே அனைத்து பாட நூல்களிலும் இதுதான் உளது என அறிக.


தகவலுக்கு நன்றி. பள்ளிகளில் துல்லியமாக அறிவியலை அறிமுகப்படுத்த இச்சொல் உதவுமா?
என்னைக் கேட்டால் உதவாது என்பேன். இதனை யார் ஆக்கினர். ஆனால், அவருக்கு
ட்யூனிங் ஃபோர்க், அதன் டிஸைன், அதன் பயன் அறிவாரா?

எல்லாவற்றுக்கும் இசை தானா? சங்கீதம்/இசை என்பது பொதுவாக, 20 - 4000 ஹெர்ட்ஸ்
ஃப்ரெக்குவென்சி ஸ்பெக்ட்ரம் உள்ளது. ஃபாஸ்ட் ஃபூரியெர் ட்ரான்ஸ்ஃபார்ம் செய்தால்
விளங்கும். அதற்கு நேரெதிராக, விதிர்ங்கோல் ஒரே ஒரு ஃப்ரிக்குவென்சியில் அதிரும்/நடுங்கும்
கருவி. எனவே விதிர்ங்கோல் (அ) விதிர்ங்கவை/கவடி எனலாம். கபடி ஆட்டப் பெயர்
தமிழ் என எழுதியுள்ளேன். பார்க்கவும்.

நா. கணேசன்

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5dee0c70-2ff2-4813-8277-b76afa31c9a9%40googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 31, 2020, 7:36:14 AM3/31/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Mon, Mar 30, 2020 at 11:18 PM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
Right.

Let deal with facts.
  1. Each instrument has different Frequency. Right?
  2. Each instrument has one frequency right?
  3. Mixing of Different instrument fill the music ranges. right?
  4. The Electronic instruments remove the frequency range except 20Hz to 20kHz; like Amplifier. Right?
  5. As say Tuning Fork is also an instrument which exposes particular frequency. Right?
Now accept it or not?


>  Each instrument has one frequency right?

Incorrect. In Science, you have to be precise. Music instruments have many frequencies,
for example stringed instruments like Yaazh (harps), Guitars, Veena. 

கண்ணதாசன் பேச்சுகளில் குறிப்பிடும் ஒன்று நினைவுக்கு வருகிறது.
கோர்ட்களில் தமிழ் வந்தால், ஒரு ஸ்டேட்மெண்ட் எவ்வளவு விதமாகப்
பொருள் கொள்ளமுடியும் என்று நீதிபதி திண்டாடுவார் என சில
உதாரணங்களைக் காட்டுவார். யுட்யூபிலும் கேட்கலாம். அவர் அடிக்கடி
சொல்லும் காட்டு அது.

ட்யூனிங் ஃபோர்க் - இசைக்கவை என்பது இடுகுறிப்பெயர். காரணப்பெயர்
அல்ல. Because, tuning forks do exactly opposite of what music instruments do.
The person who coined the term does not seem to know the difference.

இசைக்கவை என்பது ட்யூனிங் ஃபோர்க்மொழிபெயர்ப்பு அல்ல.
ட்யூனிங் ஃபோர்க்கில் ம்யூஸிக் இல்லை. துல்லியமாகச் சொல்வதானால்,
ட்யூனிங் ஃபோர்க் என்பது விதிர்ங்கோல்/கவடி/கவண் ஆகும். 
this teaching tool in Physics, Engineering 101 classes about Vibration, Resonance frequency, ... 
students can learn more from my and other experts' papers in JSV (Journal of Sound and Vibration),
AIAA Journal (American Institute of Aeronautics & Astronautics) etc.,

best wishes,
N. Ganesan
a Structural Dynamicist
 


On Tuesday, 31 March 2020 08:50:58 UTC+5:30, N. Ganesan wrote:


On Mon, Mar 30, 2020 at 8:56 PM ? <pitchaim...@gmail.com> wrote:
ஒன்றைக் கூறாமல் விட்டேன்.

எப்பாேது tune எனும் வார்த்தை வந்து விட்டதாே அது இசையாகி விட்டது என்பதை அறிவீர்கள் என எண்ணுறேன்.

No. Music has a whole range of frequencies. Tuning fork is just one frequency, one note -it is NOT icai.
 

விதிர் எனும் சாெல் vibration எனும் சாெல்லாேடு வேண்டுமானால் தாெடர்பாகலாம்.

ஆனால் tune என்றால் இசையாேடு மட்டுமே தாெடர்பில் இருக்கும்.

இக்கருத்தை ஏற்கிறீரா மறுக்கிறீரா? மறுத்தால் அறிவுப் பூர்வமான கருத்தை முன்வையுங்கள்.


On Tuesday, 31 March 2020, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sun, Mar 29, 2020 at 11:20 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
Tuning fork என்பது இசைக்கவை.

ஏற்கனவே அனைத்து பாட நூல்களிலும் இதுதான் உளது என அறிக.


தகவலுக்கு நன்றி. பள்ளிகளில் துல்லியமாக அறிவியலை அறிமுகப்படுத்த இச்சொல் உதவுமா?
என்னைக் கேட்டால் உதவாது என்பேன். இதனை யார் ஆக்கினர். ஆனால், அவருக்கு
ட்யூனிங் ஃபோர்க், அதன் டிஸைன், அதன் பயன் அறிவாரா?

எல்லாவற்றுக்கும் இசை தானா? சங்கீதம்/இசை என்பது பொதுவாக, 20 - 4000 ஹெர்ட்ஸ்
ஃப்ரெக்குவென்சி ஸ்பெக்ட்ரம் உள்ளது. ஃபாஸ்ட் ஃபூரியெர் ட்ரான்ஸ்ஃபார்ம் செய்தால்
விளங்கும். அதற்கு நேரெதிராக, விதிர்ங்கோல் ஒரே ஒரு ஃப்ரிக்குவென்சியில் அதிரும்/நடுங்கும்
கருவி. எனவே விதிர்ங்கோல் (அ) விதிர்ங்கவை/கவடி எனலாம். கபடி ஆட்டப் பெயர்
தமிழ் என எழுதியுள்ளேன். பார்க்கவும்.

நா. கணேசன்

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Lo6dhhzNhcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUe3VRABqsmkzzacy_P67-MXKmA8L2OEZuRoJfdqmdgtUA%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAKhOV9vzo4dch9Z0vSvwtLuL1fy79Q6Ww0DX4QxZh4mbuRJX%2BA%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages