This is a brief note on the difference between Tamil word, pok- vs. mok-. DEDR 4458, as noted in the first mail starting this thread, mokkaṇi = feed-bag, nose-bag lists it along with pokkaṇam but these two words are used by Tamil Nadu agriculturists in different ways and their origins are quite different. DEDR 4452 and DEDR 4458 are related and tied together, whereas mokkaNi has to do with the verb, mokku-.
பொக்கை, பொக்கணம், பொக்கசம் போன்ற சொற்கள் துளை, ஓட்டை என்பதைக் குறிக்கும் சொற்கள். பொக்கசம் பொக்கணத்தில் போட்டு வைக்கப்படும் காசு, மணிகள், இத் தூய தமிழ்சொல்லை டில்லி ஆகாசவாணி “ஷென்னை” என்பதுபோல, பொக்கசம் > பொக்கிஷம் என்றாக்கி எழுதுகிறார்கள்! பழைய இலக்கியங்களிலும், ஆவணங்களிலும் பொக்கசம் என்றுதான் உள்ளது. பல்லி தெலுங்கில் balli என உச்சரிப்பர், பொலி/பலி bali ஆகும். அதுபோல், பொக்கசம் கன்னடம்-தெலுங்கில் bokkasa(mu). Voicing of word-initial p- as b- is seen in Dravidian words such as palli, pali, pokkacam in Andhra, Sanskrit, and Carnatic.
மொகுமொகு- , மொக்குதல், மொக்கணி:
வாய் நிறைய இட்டு, அவசர அவசரமாய் விழுங்குதலை மொகுமொகு எனத் தின்னுதல் என்கிறோம். இந்த மொகுமொகு என்னும் ஒலிக்குறிப்புச் சொல்லில் (ideograph) உருவாகும் வினைச்சொல்: மொக்குதல்.
கப்புகப்பு எனத் தின்னல் = மொக்மொக் எனத் தின்னல். கப்புதல் = மொக்குதல்.
இரண்டு வினைச்சொற்களையும் ஒரே பொருளில் தமிழ்க்கடவுள் முருகனின் திருப்புகழில் காணலாம்.
கப்புதல் - மொக்கி விரைந்துஉட்கொள்ளுதல்
மொக்குதல் - வாய் நிறையக்கொண்டு மெல்லுதல்.
"கைத்தல நிறைகனி யப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி." (திருப்பு.விநாயக.1)
மொக்கு¹-தல் mokku-
, 5 v. tr. [T. mekku, K. mukku.] 1. See மொக்கித்தின்-. முக்கனி சர்க்கரை மொக்கிய (திருப்பு. 263).
மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ- , v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)
மொக்கணி mokkaṇi
, n. prob. மொக்கு- + அணி. [K. bakkaṇa.] 1. Feed-bag, nose-bag; குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை. மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6). 2. A kind of bridle for mules, etc.; கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை. (J.)
இலக்கியங்கள்:
(1)
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
[...]
காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே!
உரை:
(உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்
வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர்
வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம்
போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான
விநாயகருக்குத் தம்பியே,
(2) வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே (திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் ... திருப்புகழ் (திருத்தணிகை)).
மொக்கு- = (விரைவாக) உண்ணு-
(3) கந்தரலங்காரம் (காப்பு)
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன்: வருவார் தலையில்
தட பட எனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கட தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!
(4) கும்பேசர் குறவஞ்சி:
அக்கர வம்புனை முக்கணர் குடந்தை
ஆதி கும்பநாத ரன்ன வயலிலே
சிக்கிய பக்கியை மொக்கிடத் தாரேன்
(5) திருமாலிருஞ் சோலைமலை
அழகர் பிள்ளைத் தமிழ்
ஆசிரியர்: கவி காளருத்திரர் (?)
செக்கரி லொளிகெழு துப்பினை யெறிகடல்
செற்றிய தழலெனவே
திக்குள சுறவகை நெற்குலை சடைபடு
செய்த்தலை விழவருசேல்
மொக்கிய குருகெழ வுட்பொதி சினைசிறை
முத்திட வளைதவழா
முக்கெறி குரல்தனை விட்டுயிர் நிகர்பெடை
முற்பயில் வெளியெனவால்
அறிஞர் அண்ணா அடிக்கடி சொன்ன கதை இது:
”ஒரு ஊரில் கந்தசாமி என்பவர் முந்தைய இரவு ஒரு பார்ட்டியில் வர்ஜா வர்ஜமில்லாமல் மொக்கிய மொக்கினால் அடுத்த நாள் காலை”
மொகுமொகு என்று உண்ணுதல் = மொங்குதல் - இதனால் மொகர-/மொங்கர் என தொல்திராவிட மொழியிலே
முதலைக்குப் பெயர் அளித்தனர். ஸம்ஸ்கிருதம் போன்ற வடமொழிகளில் குறில் ஒகரம் இல்லையாதலால்,
மொகர- > மகரம் என்றானது. உகிருதல் > உசிரு > உயிர் போல, மொகர > மொசலெ (கன்னடம், தெலுங்கில் முதலை).
மொசலெ மொதலெ முதலை என இன்றைய தமிழ். The Proto-Dravidian term for crocodiles
is Mokara. And, it mutates to mocale in Kannada and Telugu, and appears as mutalai in Tamil.
Indus civilization religion: மகர விடங்கர் - கொற்றி தம்பதி.
மகரம் என்ற த்ராவிடச் சொல்லாய்வு, தமிழ்ப் பல்கலை (தஞ்சை), திராவிடப் பல்கலை (ஆந்திரா) நிறுவிய துணைவேந்தர்
வ. ஐ. சுப்பிரமணியனார் நினைவில் ஆய்வுக்கட்டுரைகள் மலர், Int. School of Dravidian Linguistics, Trivandrum, Kerala.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் அறிஞர்கள் நடத்திய மாநாட்டின்கண் வெளியிடப்பெற்றது.
A Dravidian Etymology for Makara - Crocodile
மொகுமொகு என்னும் ஒலிக்குறிப்புச் சொல், அதனால் பிறக்கும் மொக்குதல் என்னும் வினை.
மொகரம்/மொங்கர் = முதலை. இன்றும் பாகிஸ்தானில் மொங்கர் என்று முதலையை அழைத்து வழிபடுகின்றனர்.
கொங்குநாட்டில் மொக்கணீச்சுரம் சிறப்பான கோவில். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இங்கே வந்து வழிபட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தித் திருவகவல்:
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
கொங்குமண்டல சதகத்தின் பாடல்:
மொக்கணீசுரர்
24. ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சி கற்றோன்
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப் புதைக்க
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே.
இது ஆறை நாட்டுள்ள ஓர் ஊர். அவிநாசியினின்று சத்திய மங்கலம்
போகும் பாதையில் ஐந்தாவது மயிலிலுள்ள சேவூரினின்று வடமேற்கே
செல்லும் கொடி வழியில் சுமார் மூன்று மயில் தூரத்தே அழிந்த
ஆலயமாக இருக்கிறது ஊர் அழிந்து போயிற்று. கோட்டூர்ப்பள்ளம்
என்ற பெயர் மாத்திரம் சொல்ல இருக்கிறது. செட்டியார் நீராடிய
ஓடை தாழை யூற்று என்கிறார்கள். இவ்வாலயத்தின் உத்ஸவ மூர்த்திகள் சேவூர்
வாலீசப் பெருமான் கோயிலில் சுமார் முந்நூறு வருஷங்களின் முன்
சேர்க்கப்பட்டதாம். இச்சரிதத்தைச் சுற்றுமுள்ள குடியானவர்களெல்லாரும்
கூறுகிறார்கள். (திருச்செங்கோடு அட்டாவதானி முத்துசாமிக்கோனார், 1923,
கார்மேகக் கவிஞர் பாடிய கொங்குமண்டலசதகம்).
(மேற்)
மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
(திருவாசகம் - கீர்த்தித் திருவகவல்)
பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்புநெய் கரும்புக் கட்டி
எழிறரு மட்டித் திட்டே மிதவிய புல்லு மிட்டேங்
கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரை யோடு
முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி
(வேம்பத்தூர் திருவிளையாடல்)
Summary: There is difference between Tamil word, pok- vs. mok-. DEDR 4458, as noted in the first mail starting this thread, mokkaṇi = feed-bag, nose-bag lists it along with pokkaṇam but these two words are used by Tamil Nadu agriculturists in different ways and their origins are quite different. DEDR 4452 and DEDR 4458 are related and tied together, whereas mokkaNi has to do with the verb, mokku- and is not to be confused with other words starting with pok- in DEDR 4452 & DEDR 4458.
Happy Pongal! Tiruvalluvar New Year Greetings!
நா. கணேசன்
Tamil term for domestication of cattle (யாத்தல், யாப்பு என்பதும், ஆ, ஆயர், ஆடு எனும் சொற்களும்)
பொங்கல், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்! இயற்கைச் சூழலியலாளர் சு. தி. பாஸ்கரன் (
https://en.wikipedia.org/wiki/S._Theodore_Baskaran ) என்னை ஒரு வினாக் கேட்டார். காடுகளிலே வனவிலங்குகளாய் இருந்த ஆடு, மாடு போன்றவற்றை மேய்த்து பட்டிகளில் கிடத்துவதும், கட்டுவதும் ஆன செயல் மனிதகுல வரலாற்றில் முக்கியமானது. இந்தியாவில் திமில் உடைய மாடுகளை மனிதன் வேளாண்மைக்குப் பயன்படுத்தத் தொடங்கியதன் காலம் 7000 ஆண்டுகள் ஆகிவிட்டன - சிந்து சமவெளி நாகரீகம் வேளாண் நாகரீகமாகச் செழிக்க இச்செயல் முக்கிய அடிப்படை. திமில்/திமிர் என்னும் தமிழ்ச் சொல் சம்ஸ்கிருதத்தில் அப்படியே சென்று திமிர (தைம்ர) என கருமைக்குச் சொல்லாக விளங்குகிறது.
கட்டுரையில் சிந்துவெளி முத்திரை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதனை சல்லிக்கட்டு எனக் குறிக்கப்பட்டது. இது ஐராவதம் மகாதேவனால் சல்லிக்கட்டு தடைசெய்யப்பட்டபோது ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் சொன்ன செய்தி. ஆனால், சிந்து முத்திரையைக் கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளியலாம். இளம் பெண் ஒருத்தியை கான எருமை குத்தி மேலே வீசுகிறது. அவளது படையினரையும் தூக்கிப் பல திசைகளில் கடாசுகிற போர்க்காட்சி இஃது. அதாவது கொற்றவை (துர்க்காதேவி) மயிடாசுரனுடன் போர்கோலக் காட்சி. சிந்துவெளி முத்திரைகளில் சல்லிக் கட்டும் உளது. ஆனால், இங்கே காட்டப்பட்டுள்ள முத்திரை
கொற்றியின் போர்க்காட்சி. கானத்து எருமை அனேகமாக இந்தியாவில் மறைந்துவிட்டது. மிக அரிதாகவே உண்டு. தொதுவர்கள் (தோடர் என்று ஆங்கில வார்த்தையைப் பார்த்து தமிழ் பத்திரிகைகள் எழுதுகின்றன: மோதியை மோடி என எழுதற்போல்.) கான எருமைக்கு நெருக்கமான எருமைவளர்ப்பில் ஈடுபடுகின்றனர். எல்லா பழங்குடி மக்களும் இந்தியாவில் அழிதற்போல, தொதுவர்களும், அவர்கள் வாழ்வாதாரமான எருமைகளும் இன்று மறைந்துவிடும் நிலையிலேதான் இருக்கின்றன.
KoRRavai (proto-Durga) standing on the head of Wild Buffalo - an Indus seal, 4200 years old:
I have also published 3 papers on KoRRi- Makara ViTaGkar (Gharial) couple in Indus, Post-Indus
and as huge monolithic Anthropomorphic Axe sculptures of Tamil Nadu in pre-Sangam literature times.
This is NOT jallikaTTU scene, what is depicted is a girl in a skirt with a ponytail battling a wild buffalo.
Not zebu bulls of Palayakottai, used as a sports animal in Tamil Nadu through out nowadays. BTW, I am
related to Palayakottai Manradiar family for generations. Palayakottai family kept and developed
Kangayam breed of Zebus, one of the most beautiful kALai-s in the whole of India,
ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்! - சிலப்பதிகாரம்