புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் புத்தாண்டுக் கவிதைகள்

342 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 17, 2022, 11:41:42 PM1/17/22
to Santhavasantham
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் புத்தாண்டுக் கவிதைகள்
-------------------------------------------

நிகழும் 2022-ம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு தினங்கள் விவாதத்தில் ஓர் மைல்கல். அரசாணைகள், தமிழரசு என்னும் அரசு இதழ் போன்றவற்றில் தொடராண்டு (லீனியர் ஆண்டு) எனப் பல்லாண்டுகளாக தை 1 திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31-ல் தொடங்குகிறது. சங்க இலக்கியங்கள் (உ-ம்: நெடுநல்வாடை) காட்டும் சித்திரை/ஆடு (Aries) மாதம் பிறப்புநாளை, ’தமிழ்ப் புத்தாண்டு தினம்’ என கி.பி. 2022-லும் தமிழ்நாடு அரசாங்கம் விடுமுறை நாள் என அறிவித்து, 2022-ம் ஆண்டின் விடுமுறை நாள்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசாங்கம், பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு எனச் சித்திரை 1-ம் தேதியை ஏற்றுக்கொண்டுள்ளதைக் காட்டும் அறிக்கைகள் இவை. யூனிகோட் நிறுவனம் ISO அமைப்புடன் இணைந்து இயங்குவது. The Unicode character repertoire is synchronized with ISO/IEC 10646 (https://en.wikipedia.org/wiki/Unicode). பெரும்பான்மை எழுத்து வடிவத்தை எல்லா மொழிகளின் இலிபிகளிலும் ஏற்பதை நடைமுறையில் காணலாகும். காட்டாக, சென்னைப் பல்கலைப் பேரகராதியில் உள்ள 18 தமிழ்மெய்கள், 5 வடவெழுத்தும் தமிழ் யூனிகோட் கொண்டு வாட்ஸப், ட்விற்றர், ஃபேஸ்புக், ... இயங்குகிறது. அது போன்ற செயலாக, தமிழக அரசின் திருவள்ளுவர் தொடராண்டு, தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) அறிக்கையைக் காண்கிறேன். கேரளத்திலும், சித்திரை 1 சித்திரைக் கனி காண்பது என்று கொண்டாடப்பெறுகிறது. கொல்லம் ஆண்டு, நம் திருவள்ளுவர் ஆண்டு போன்ற லீனியர் ஆண்டு. ஆவணி 1 தொடங்கும்.

புலவர் இ. மு. சுப்பிரமணியபிள்ளை 1950-ம் ஆண்டு, செந்தமிழ்ச் செல்வி இதழிகையில் இராசிச் சக்கரத்தில் உள்ள பெயர்களைக் கொண்டு தமிழ் மாதப் பெயர்களாக்கி எழுதினார். 27 விண்மீன் கணிதம் சிந்து சமவெளியிலே உருவாகிய வானியல். இதனைத் தமிழ்த் திங்கட்பெயர்களாகப் பயன்படுத்துகிறோம். தொல்காப்பியரும் இவற்றின் பெயர்களின் இலக்கணம் தந்துள்ளார். ராசிச் சக்கரம் மிகப் பிற்காலத்தது.  
மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர். பழந்தமிழ்ச் சொல்லாகிய - சங்க இலக்கியத்தில் பயிலும் “மகரம்” என்ற சொல்லை தனித்தமிழ் ஆர்வலர்கள் இராசிச் சக்கரத்தால் புதிதாக உருவாகும் 12 மாதப் பெயர்களில் பயன்படுத்த வேண்டும். மகரம் வேறு, சுறவம் வேறு. எனவே, ராசி சக்கிரத்துக்கு உள்ள பெயர்களில் தனித்தமிழ் திங்கட் பெயர்களில் மகரம் என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவோம். http://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

மஞ்சப்பைகளில் தைப் பொங்கல் தினம் ‘தமிழர் திருநாள்’ எனத் திருத்தம் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய செய்திகள் இழை, இறுதியில் ஏற்பட்ட திருத்தம் முக்கியமானதாய் தமிழ்நாட்டில் சொன்னார்கள்: https://groups.google.com/g/vallamai/c/-Msn7ENStPU/m/SkzDGc-EDAAJ
பாரதியார், நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் புத்தாண்டு வாழ்த்துகளைக் காண்க.

----------

பாரி நிலையம், 1958-ல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய இளைஞர் இலக்கியம் என்ற நூலை வெளியிட்டது. அப்போது, பாரதிதாசன் முன்னுரையும் எழுதினார். அப்போதெல்லாம், சித்திரை ஆண்டின் முதல் திங்கள் எனக் கருத்துக் கொண்டிருந்தவர் பாரதிதாசனார் என்பது அவரது பாடல்களால் அறிய முடிகிறது. இந்த நூல் குழந்தை இலக்கியத்தில் சிறந்த ஒன்று.

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0kuYd&tag=இளைஞர் இலக்கியம்#book1/71
3.19. திங்கள் பனிரண்டு
------------------
சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு
     ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
    ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே
    கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
   வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.  (பாரதிதாசன், 1958-ல் பாடியது).
https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0023255_இளைஞர்_இலக்கியம்.pdf

-------------

1958-ம் ஆண்டின் பின்னர்,  புரட்சிக் கவிஞர் பொங்கல் வாழ்த்துக் கவிதைகளில்
தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு எனப் பாடியுள்ளார். இவை 1960-களில் இயற்றப்பட்டனவாகலாம். இவற்றில் இரண்டு கவிதைகள் தருகிறேன்.
எந்த ஆண்டில், பொங்கல் வாழ்த்தாக இவற்றைப் புரட்சிக் கவிஞர் இயற்றினார் எனத் தெரிவித்தால் நனிநன்றி.  ~NG

(1)
http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=88


திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து

(எண்சீர் விருத்தம்)

அகத்தியனும் காப்பியமும் தோன்று முன்னர்!
அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்!
மிகுத்தகடல் குமரியினை மறைக்கு முன்னர்!
விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்
பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப்
பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துக்
திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில்
திராவிடநாடு எனப்போற்றும் என்றன் அன்னாய்,

பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள்,
போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச்
செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்
செய்தமிழால் வானிலெல்லாம் செதுக்கிவைத்தோம்!
பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்
பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை.

தெலுங்குமலை யாளங்கன் னடமென் கின்றார்
சிரிக்கின்றாய் அன்னாய்நின் மக்கள் போக்கை!
நலங்கெட்டுப் போனதில்லை, அதனா லென்ன?
நான்குபெயர் இட்டாலும் பொருள் ஒன்றன்றோ?
கலங்கரையின் விளக்குக்கு மறுபேர் இட்டால்
கரைகாணத் தவறுவரோ மீகாமன்கள்?
இலங்குதிரு வே, வையம் செய்த அன்னாய்
எல்லாரின் பேராலும் உனக்கென் வாழ்த்தே!

தமிழகமே, திராவிடமே, தைம்முதல் நாள்
தனிலுன்னை வாயார வாழ்த்துகின்றேன்.
அழிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே
அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;
எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.
இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை
எனும் உணர்வால் வாழ்துகின்றேன்; வாய்ப்பேச்சல்ல.

அன்றொருநாள் வடபுலத்தைக் குட்டு வன்போய்
அழிக்குமுனம் தன்வீட்டில் இலையி லிட்ட
இன்பத்துப் பொங்கலுண்டான். அதைப்போ லத்தான்
இன்றுண்டேன்; அன்றுன்னை வாழ்த்தி னான்போல்
நன்றுன்னை வாழ்த்துகின்றேன் எனைப் பெற்றோயே
நல்லுரிமை உன்மூச்சில் அகன்ற தில்லை
பொன்னேஎன் பெருவாழ்வே அன்பின் வைப்பே
புத்தாண்டு வாழ்த்துரைத்தேன் நன்றுவாழ்க.

(2)
http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=89
 உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் ''நாங்கள்
உழவரே'' என்றுவிழ ஒப்பி மகிழ்ந்தாரே!

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்ய தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே!

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய் -- பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம், புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன் மணக்கவைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ் உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகுதாய்! வளர்ப்புப் பாலே பயன்! நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடை எல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடை எனப் பாலும், உயர் குன்றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுகஉண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!

தெரிவு:
நா. கணேசன்
https://nganesan.blogspot.com


Virus-free. www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages