மதிசூடி துதிபாடி - 4

269 views
Skip to first unread message

Siva Siva

unread,
Feb 4, 2012, 6:34:22 PM2/4/12
to santhavasantham
Continuation from the previous thread 'மதிசூடி துதிபாடி - 3'.

See below for links to the previous threads of this series:
'மதிசூடி துதிபாடி' : http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/7787777c7b7030f1/?hl=en&

'மதிசூடி துதிபாடி - 2' : http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/970277b8e6962d93?hl=en#

'மதிசூடி துதிபாடி - 3' : http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/8ebaf86e6461c5e0?hl=en

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Feb 4, 2012, 6:43:20 PM2/4/12
to santhavasantham

2010-08-04
திருவானைக்கா - 2
-------------------
(
கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")

1)
மருளில் ஆழ்த்தி வாட்டும் வல்வினை
இருளை நீங்க எய்து நெஞ்சமே
ஒருசி லந்திக் குலகை ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/4 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Feb 5, 2012, 1:03:30 PM2/5/12
to சந்தவசந்தம்
இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் பேரைப் போற்று நெஞ்சமே
தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே

அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.

இரிந்திட= சாய
தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 5, 4:43 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010-08-04
> திருவானைக்கா - 2
> -------------------
> (கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
> (சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")
>
> 1)
> மருளில் ஆழ்த்தி வாட்டும் வல்வினை
> இருளை நீங்க எய்து நெஞ்சமே
> ஒருசி லந்திக் குலகை ஆளவே
> அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்

> > <http://www.thevaaram.org/>
>
> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Feb 5, 2012, 10:06:32 PM2/5/12
to santhavasantham

2)
விளித்துக் காலன் பாசம் வீசுமுன்
களிக்க எண்ணில் கருது நெஞ்சமே
களிற்றின் அன்பைக் கண்டு நற்பதம்
அளித்த அண்ணல் ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/4 Siva Siva <naya...@gmail.com>

2010-08-04

திருவானைக்கா - 2
-------------------
(
கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")

1)

thangamani

unread,
Feb 6, 2012, 6:17:19 AM2/6/12
to சந்தவசந்தம்
பொளித்து வாழ்வைப் போக்கும் வாளென
களித்த நாளை கருது நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்பதம்

அளித்த அண்ணல் ஆனைக் காவையே.

பொளித்தல்=வெட்டுதல்.

அன்புடன்,
தங்கமணி.

Siva Siva

unread,
Feb 6, 2012, 8:32:04 AM2/6/12
to santhav...@googlegroups.com
சில ஐயங்கள்.

பொளித்தல் - அகராதியில் காணும் விளக்கத்தை நோக்கின், இது உளியால் செய்வதைச் சுட்டுகிறது. வாளால் வெட்டலாம், பொளிக்கலாமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.

களித்த நாள் - ஈசனைப் போற்றாது பொழுதுபோக்கிய நாள்களைச் சுட்டுகிறதா?

பிளிற்றும் வேழம் - யானை பிளிறும். பிளிற்றுதல் என்பதும் பொருந்துமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

2012/2/6 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Feb 6, 2012, 11:38:17 AM2/6/12
to சந்தவசந்தம்
// பலவுடன்
வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது
பெருங்களிறு பிளிற்றும் சோலை// (கபிலன்: நற்றிணை: 222:6௯)
பிளிற்றும்= யானை பேரொலி எழுப்புதல்.

முதலடியை மாற்றுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 6, 6:32 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சில ஐயங்கள்.
>
> பொளித்தல் - அகராதியில் காணும் விளக்கத்தை நோக்கின், இது உளியால் செய்வதைச்
> சுட்டுகிறது. வாளால் வெட்டலாம், பொளிக்கலாமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.
>
> களித்த நாள் - ஈசனைப் போற்றாது பொழுதுபோக்கிய நாள்களைச் சுட்டுகிறதா?
>
> பிளிற்றும் வேழம் - யானை பிளிறும். பிளிற்றுதல் என்பதும் பொருந்துமா?
> அறிந்தோர் சொல்லக்கூடும்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/6 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > பொளித்து வாழ்வைப் போக்கும்  வாளென
> > களித்த நாளை  கருது  நெஞ்சமே
> > பிளிற்றும் வேழம் பெறவோர்  நற்பதம்
> > அளித்த  அண்ணல்  ஆனைக்  காவையே.
>
> > பொளித்தல்=வெட்டுதல்.
>
> > அன்புடன்,

> > தங்கமணி.- Hide quoted text -

Siva Siva

unread,
Feb 6, 2012, 5:57:08 PM2/6/12
to santhavasantham

3)
துன்பத் தொடரில் சுழன்று தொய்வதேன்
இன்புற் றிருக்க எய்து நெஞ்சமே
தன்பத் தர்க்குத் தடைகள் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/5 Siva Siva <naya...@gmail.com>

2)


thangamani

unread,
Feb 7, 2012, 7:27:21 AM2/7/12
to சந்தவசந்தம்
ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்
விளித்து நற்றாள் விழையென் நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி
அளித்த அண்ணல் ஆனை காவையே.

அன்புடன்,
தங்கமணி.

> > - Show quoted text -- Hide quoted text -

thangamani

unread,
Feb 7, 2012, 8:29:08 AM2/7/12
to சந்தவசந்தம்
பொன்பெற் றாலென் புகழே கொண்டிலென்
என்பெற் றான்தாள் எய்து நெஞ்சமே
முன்புற் றவ்வூழ் முற்றும் தீர்த்தருள்

அன்பத் தனுறை ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 7, 3:57 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> துன்பத் தொடரில் சுழன்று தொய்வதேன்
> இன்புற் றிருக்க எய்து நெஞ்சமே
> தன்பத் தர்க்குத் தடைகள் தீர்த்தருள்
> அன்பத் தனுறை ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/5 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 7, 2012, 5:52:23 PM2/7/12
to santhavasantham

4)
நம்மை வினைகள் நாடி எய்துமுன்
செம்மை ஆகச் சேர்க நெஞ்சமே
இம்மை அம்மை இன்பம் நல்கிடும்
அம்மை யப்பன் ஆனைக் காவையே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/6 Siva Siva <naya...@gmail.com>

3)


thangamani

unread,
Feb 8, 2012, 11:37:48 AM2/8/12
to சந்தவசந்தம்
வெம்மை செய்தீ வினைகள் நீங்கிடச்
செம்மை யான்தாள் சேர்க நெஞ்சமே
தம்மை எண்ணி சாற்று வோர்க்கருள்
அம்மை அப்பன் ஆனைக் காவையே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 8, 3:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> நம்மை வினைகள் நாடி எய்துமுன்
> செம்மை ஆகச் சேர்க நெஞ்சமே
> இம்மை அம்மை இன்பம் நல்கிடும்
> அம்மை யப்பன் ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/6 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 8, 2012, 6:34:28 PM2/8/12
to santhavasantham

5)
சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
அழலார் விழியன் ஆனைக் காவையே.

நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/7 Siva Siva <naya...@gmail.com>

4)


naa.g...@gmail.com

unread,
Feb 8, 2012, 11:43:23 PM2/8/12
to சந்தவசந்தம்

On Feb 8, 3:34 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
> அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
> நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
> அழலார் விழியன் ஆனைக் காவையே.
>
> நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

நிழல் ஆர் மழுவன் - “ஒளிபொருந்திய மழு” என்பதற்கு பட்டைதீட்டியதால்
பளிங்குபோல் வரும் ஒளியைப் பிரதிபலிக்கும் மழு என்று கொள்ளலாமா?
தென்னிந்திய உருக்கு (Wootz steel) செய்த மழு அப்படி இருக்கும்.
http://en.wikipedia.org/wiki/Wootz

(1) ”காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி;” - சிலம்பு - நடுகற் காதை

நிழல் கால்கிற மண்டிலம் = பிம்பத்தை பிரதிபலிக்கும் (வெண்கலக்) கண்ணாடி.

(2) நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றமும் - இந்திரவிழவூரெடுத்தகாதை
(சிலம்பு)
= ஒளியைப் பிரதிபலிக்கும் பளிக்குத்தூண் நிற்கும் மண்டபம்.

(3) நெறிதரு குழலை அறலென்பர்கள்
*நிழலெழு மதியம் நுதலென்பர்கள்*
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ திரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு திலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே. (கோயில் நான்மணிமாலை, 11-ஆம் திருமுறை)

நிழலெழு மதியம் நுதலென்பர்கள் -
ஆயிரம் ஆண்டு முன்னமே சந்திரகிரணங்கள் சூரிய ஒளியின்
பிரதிபலிப்பு என தெரிந்துள்ளார்கள். எனவே
மதியொளிக்கு நிழல் என்ற சொல்லை பயன்படுத்தியுளர்.

இதனை சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்
சொல்லியுள்ளார்கள்.

(4) திருக்கரவீரம் - தேவாரம்

நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.
பொழிப்புரை :

ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில்
ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய
திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.

நிழல் என்பது சூர்ய ஒளியை அல்ல. சந்திரனது ஒளி.

திருத்தொண்டர் புராணமும் - உரையும் - சிகேஎஸ்
”(6) நிழல் - ஒளி; தன்னொளியின்றிச் சூரியனது நிழல் - ஒளி - படுதலே தனது
ஒளியாகவுடையது மதி என்பது வானநூலார் துணிபுமாம்; ”

நிழல் - ஒளியுடன் தொடர்பு படுத்துவது போல் வரும் இடங்களில்,
சந்திரன், பளிங்கு, பொன், மணி, ... எனத் தான் வாங்கும் ஒளியைப்
பிரதிபலிக்கும் (reflect, shadow) பொருட்கள் உள்ளனவா என்று பார்க்கலாம்.

நா. கணேசன்

> 2012/2/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 9, 2012, 1:13:49 PM2/9/12
to சந்தவசந்தம்
பொருள் சரியாக அமைய,சிறிது மாற்ரி இட்டுள்ளேன்.
என் பிசி ரிப்பேர்.மிகவும் படுத்துகிறது.

அன்புடன்,
தங்கமணி.

இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் உய்வாய் புகல்கொள் நெஞ்சமே


தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.

இரிந்திட= சாய

தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.

ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்

விளித்து நினைந்து வேண்டு நெஞ்சமே


பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி

அளித்த அண்ணல் ஆனை காவையே.

பொன்பெற் றாலென் புகழே கொண்டிலென்

அன்புற் றிறைஞ்சி அடைக நெஞ்சமே
முன்புற் றவ்வூழ் முற்றும் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே.

வெம்மை செய்தீ வினைகள் நீங்கிடச்

செம்மை நிலையுறச் சேர்க நெஞ்சமே


தம்மை எண்ணி சாற்று வோர்க்கருள்
அம்மை அப்பன் ஆனைக் காவையே.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

thangamani

unread,
Feb 10, 2012, 6:50:03 AM2/10/12
to சந்தவசந்தம்
சுழலார் வினைசெய் துன்பில் சிக்கியே
உழலா தடைய உரையென் நெஞ்சமே
கழலார் பாதன் கனகக் கொன்றையன்

அழலார் விழியன் ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 9, 4:34 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
> அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
> நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
> அழலார் விழியன் ஆனைக் காவையே.
>
> நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 10, 2012, 5:56:07 PM2/10/12
to santhavasantham

6)
அலையும் நிலையும் அழியும்; வல்வினை
தொலையும்; சென்று தொழுக நெஞ்சமே
கலையும் ஏந்தி கழலைக் காவிரி
அலைகொண் டேத்தும் ஆனைக் காவையே.

கலையும் ஏந்தி - மானையும் ஏந்தியவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/8 Siva Siva <naya...@gmail.com>

5)

Siva Siva

unread,
Feb 10, 2012, 6:13:11 PM2/10/12
to santhav...@googlegroups.com




/நிழல் - ஒளியுடன் தொடர்பு படுத்துவது போல் வரும் இடங்களில்,

சந்திரன், பளிங்கு, பொன், மணி, ... எனத் தான் வாங்கும் ஒளியைப்
பிரதிபலிக்கும் (reflect, shadow) பொருட்கள் உள்ளனவா என்று பார்க்கலாம். /

தேடியதில் கண்ட ஓர் உதாரணம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60390&padhi=039&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.39.7
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே.

 





--

Siva Siva

unread,
Feb 11, 2012, 8:41:22 PM2/11/12
to santhavasantham

7)
ஊறு செய்யும் வினைகள் ஓய்ந்துநற்
பேறு பெறுதற் கெய்து நெஞ்சமே
நீறு பூசி நெற்றிக் கண்ணினன்
ஆறு சூடி ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/10 Siva Siva <naya...@gmail.com>

6)


thangamani

unread,
Feb 12, 2012, 12:54:24 AM2/12/12
to சந்தவசந்தம்
வலையில் மீனாய் வதைசெய் வெவ்வினை
இலையென் றடைய இறைஞ்சு நெஞ்சமே
தலைவன் மலர்பூந் தாளை காவிரி
அலைகொண் டேத்தும் ஆனை காவையே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 11, 3:56 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> அலையும் நிலையும் அழியும்; வல்வினை
> தொலையும்; சென்று தொழுக நெஞ்சமே
> கலையும் ஏந்தி கழலைக் காவிரி
> அலைகொண் டேத்தும் ஆனைக் காவையே.
>
> கலையும் ஏந்தி - மானையும் ஏந்தியவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 12, 2012, 2:29:05 PM2/12/12
to சந்தவசந்தம்
மாறு  படுமிவ்   வைய   வாழ்வினில்
தேறு  தலுற  சேர்க  நெஞ்சமே
கூறு  பிறையன்  குளிர்செய் செஞ்சடை

ஆறு  சூடி  ஆனைக்  காவையே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 12, 6:41 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> ஊறு செய்யும் வினைகள் ஓய்ந்துநற்
> பேறு பெறுதற் கெய்து நெஞ்சமே
> நீறு பூசி நெற்றிக் கண்ணினன்
> ஆறு சூடி ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/10 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 12, 2012, 2:33:31 PM2/12/12
to santhav...@googlegroups.com
கூறு  பிறையன் = ?


2012/2/12 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 12, 2012, 9:03:43 PM2/12/12
to santhavasantham

8)
நடுக்கம் தீர நண்ணு நெஞ்சமே,
வெடுக்கென் றோடிக் கயிலை வெற்பினை
இடக்க முயன்ற இலங்கைக் கோன்தனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/11 Siva Siva <naya...@gmail.com>

7)


thangamani

unread,
Feb 13, 2012, 10:56:36 AM2/13/12
to சந்தவசந்தம்
//கூறு  பிறையன் = ?//


சுட்டலுக்கு நன்றி சிவா!மாற்றியுள்ளேன். சரிபார்க்கவும்.
மிக்க !நன்றி

மாறு  படுமிவ்   வைய   வாழ்வினில்
தேறு  தலுற  சேர்க  நெஞ்சமே

வீறு  கொண்டு   வேக  மாய்விழும்


ஆறு  சூடி  ஆனைக்  காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 13, 12:33 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> கூறு  பிறையன் = ?
>

> 2012/2/12 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Feb 13, 2012, 9:03:08 PM2/13/12
to santhavasantham

9)
புரிவல் வினையுன் புடைபு காமலே
இரிய எண்ணில் எய்து நெஞ்சமே
எரியின் உருவன் இருவர் காணுதற்(கு)
அரியன் உறையும் ஆனைக் காவையே.

புடை புகாமல் - பக்கத்தில் வாராமல்;
இரிதல் - அஞ்சி ஓடுதல்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/12 Siva Siva <naya...@gmail.com>

8)

Subbaier Ramasami

unread,
Feb 13, 2012, 10:11:28 PM2/13/12
to santhav...@googlegroups.com

பழகும் இறைமை பலம தாகவே

கழலைப் பணியக் கருது நெஞ்சமே

தழலைப் பணியை மழுவைத் தாங்கியே

அழகன் உறைவ தானைக் காவதே!

இலந்தை


2012/2/12 Siva Siva <naya...@gmail.com>

8)



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

thangamani

unread,
Feb 14, 2012, 2:10:44 AM2/14/12
to சந்தவசந்தம்
இடுக்கண் தீர எய்து நெஞ்சமே
திடுக்கிட் டதிர சிமைய வெற்பினை
எடுக்க முயன்ற இலங்கை மன்னனை

அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 13, 7:03 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> நடுக்கம் தீர நண்ணு நெஞ்சமே,
> வெடுக்கென் றோடிக் கயிலை வெற்பினை
> இடக்க முயன்ற இலங்கைக் கோன்தனை
> அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/11 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 14, 2012, 1:15:20 PM2/14/12
to சந்தவசந்தம்
இரியும் இன்னல்; இடர்செய் வல்வினை
சரிய எண்ணில் சாற்று நெஞ்சமே
உரியன் அன்பர்க்(கு); உன்னா தார்க்கவன்

அரியன் உறையும் ஆனைக் காவையே.

சாற்று=சொல்லு.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 14, 7:03 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> புரிவல் வினையுன் புடைபு காமலே
> இரிய எண்ணில் எய்து நெஞ்சமே
> எரியின் உருவன் இருவர் காணுதற்(கு)
> அரியன் உறையும் ஆனைக் காவையே.
>
> புடை புகாமல் - பக்கத்தில் வாராமல்;
> இரிதல் - அஞ்சி ஓடுதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/12 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 14, 2012, 10:58:38 PM2/14/12
to santhavasantham

10)
வெந்த நீற்றை விலக்கும் பொய்யரின்
மந்த வார்த்தை மதியு ளோர்கொளார்
வந்தித் துய்வர் மதியம் சூடிய
அந்தி வண்ணன் ஆனைக் காவையே.

மதியம் - சந்திரன்;
அந்திவண்ணன் - மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/13 Siva Siva <naya...@gmail.com>

9)

Siva Siva

unread,
Feb 15, 2012, 9:53:31 PM2/15/12
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்:

11)
பிணிசெய் வினைகள் பிரிய வேண்டினீர்
பணிசெய் தரனைப் பரவச் சேர்மினே
பணியும் நிலவும் பாயும் கங்கையும்
அணிசெய் முடியன் ஆனைக் காவையே.

பிணி - கட்டு; நோய்; துன்பம்;
வேண்டினீர் - வேண்டில் நீர்; வேண்டியவர்களே;
பணி - தொண்டு; நாகம்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/14 Siva Siva <naya...@gmail.com>

10)


thangamani

unread,
Feb 16, 2012, 2:24:53 AM2/16/12
to சந்தவசந்தம்
வெந்து யரற விழைக நெஞ்சமே
சிந்தை சிவமாய்த் திகழ்பேய் அம்மையை
அந்த மிலன்பில் அன்னை யேஎனும்

அந்தி வண்ணன் ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 15, 8:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> வெந்த நீற்றை விலக்கும் பொய்யரின்
> மந்த வார்த்தை மதியு ளோர்கொளார்
> வந்தித் துய்வர் மதியம் சூடிய
> அந்தி வண்ணன் ஆனைக் காவையே.
>
> மதியம் - சந்திரன்;
> அந்திவண்ணன் - மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 17, 2012, 8:55:35 PM2/17/12
to santhav...@googlegroups.com
பாடல்களைப் படித்து வரும் அன்பர்கள் அனைவர்க்கும் என் வணக்கம்.

2012/2/13 Subbaier Ramasami <elan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 17, 2012, 9:06:41 PM2/17/12
to santhavasantham

2012-01-21
---------------
திருக்கூடலையாற்றூர்
-------------------------------------------
கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

(
சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
"
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")

1)
ஓடது கலனாக ஊரிடு பலியேற்பான்
மாடமர் மணிகண்டன் பண்மலி வன்றொண்டர்
பாடலை மிகவேண்டிப் பழமலை வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/15 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Feb 18, 2012, 12:49:37 PM2/18/12
to சந்தவசந்தம்
ஆடலில் வல்லான் தன் அன்பனின் பண்ணாரும்
பாடலை உவந்தேற்கும் பரிவினில் முதுகுன்றம்
நாடிடும் அவர்தம்மை நம்பனும் வழிகாட்டிக்

கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 18, 7:06 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012-01-21
> ---------------
> திருக்கூடலையாற்றூர்
> -------------------------------------------
> கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.
>
> (சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
> "பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")
>
> 1)
> ஓடது கலனாக ஊரிடு பலியேற்பான்
> மாடமர் மணிகண்டன் பண்மலி வன்றொண்டர்
> பாடலை மிகவேண்டிப் பழமலை வழிகாட்டிக்
> கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 18, 2012, 10:58:16 PM2/18/12
to santhavasantham

2)
தக்கனின் பெருவேள்வி தகர்த்தவன் தழல்வண்ணன்
தக்கநன் மலராகத் தன்விழி இடுமாற்குச்
சக்கரம் அருள்செய்த சங்கரன் முடிமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/17 Siva Siva <naya...@gmail.com>

2012-01-21
---------------
திருக்கூடலையாற்றூர்
-------------------------------------------
கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

(
சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
"
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")

1)

thangamani

unread,
Feb 19, 2012, 1:09:42 PM2/19/12
to சந்தவசந்தம்
மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்க்கும்
இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது

கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தஙக்மணி.


On Feb 19, 8:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> தக்கனின் பெருவேள்வி தகர்த்தவன் தழல்வண்ணன்
> தக்கநன் மலராகத் தன்விழி இடுமாற்குச்
> சக்கரம் அருள்செய்த சங்கரன் முடிமீது
> கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/17 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2012-01-21
> > ---------------
> > திருக்கூடலையாற்றூர்
> > -------------------------------------------
> > கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.
>
> > (சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
> > "பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 19, 2012, 1:35:27 PM2/19/12
to santhav...@googlegroups.com
/வினைதீர்க்கும் /
இங்கே 'வினைதீர்ப்பான்' என்று பொருள்படும் என எண்ணுகிறேன். ('செய்யும்' வாய்பாட்டு வினைமுற்று?)
அவ்வாறு எனின், 'வினைதீர்ப்பான்' என்ற சொல்லே இங்கே பொருந்துவதால், அப்படி இருக்கின் படிப்போர்க்கு இன்னும் பொருள்தெளிவாகுமோ?


2012/2/19 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 19, 2012, 3:32:10 PM2/19/12
to santhavasantham

3)
பாவினை நிதம்பாடிப் பைங்கழல் பணிவாரின்
தீவினை அவையெல்லாம் தீர்ந்திட அருள்செய்வான்
சேவினை அமரீசன் செஞ்சடை யதன்மீது
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/18 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Feb 20, 2012, 1:22:02 PM2/20/12
to சந்தவசந்தம்
மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்ப்பான்

இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.

'வினைதீர்ப்பான்'என்றே மாற்றினேன்.சுட்டலுக்கு


நன்றி சிவா!

அன்புடன்,
தங்கமணி.


On Feb 19, 11:35 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> /வினைதீர்க்கும் /
> இங்கே 'வினைதீர்ப்பான்' என்று பொருள்படும் என எண்ணுகிறேன். ('செய்யும்'
> வாய்பாட்டு வினைமுற்று?)
> அவ்வாறு எனின், 'வினைதீர்ப்பான்' என்ற சொல்லே இங்கே பொருந்துவதால், அப்படி
> இருக்கின் படிப்போர்க்கு இன்னும் பொருள்தெளிவாகுமோ?
>

> 2012/2/19 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > மொக்குளின்  நிகராக முடிவுறும்  வாழ்வீதில்
> > அக்கரம்  அஞ்சோதின்  அன்பொடு  வினைதீர்க்கும்
> > இக்குவில் மதவேளை எரித்தவன்  சிரமீது
> > கொக்கிற  கணிவானூர்  கூடலை  யாற்றூரே.
>
> > அன்புடன்,

> > தஙக்மணி.- Hide quoted text -

thangamani

unread,
Feb 20, 2012, 1:27:00 PM2/20/12
to சந்தவசந்தம்
நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் பொழில்பூத்தக்

கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 20, 1:32 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> பாவினை நிதம்பாடிப் பைங்கழல் பணிவாரின்
> தீவினை அவையெல்லாம் தீர்ந்திட அருள்செய்வான்
> சேவினை அமரீசன் செஞ்சடை யதன்மீது
> கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 20, 2012, 2:49:48 PM2/20/12
to santhav...@googlegroups.com
'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை இலைக்கும் சொல்லலாமா?

2012/2/20 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 20, 2012, 7:24:55 PM2/20/12
to santhavasantham

4)
கான்மிகு மலர்தூவிக் காவெனும் அடியார்கள்
வான்மிசை நிலையாக வாழ்ந்திட அருள்செய்வான்
மான்மறி மழுவேந்தி வார்சடை யதன்மீது
கூன்மதி அணிவானூர் கூடலை யாற்றூரே.

கான் - வாசனை;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/19 Siva Siva <naya...@gmail.com>

3)


Subbaier Ramasami

unread,
Feb 20, 2012, 7:50:59 PM2/20/12
to santhav...@googlegroups.com

ஏடவிழ் கவியாலே பாடிடும் அடியார்கள்

வாடிடும் நிலைமாற்றும் மாடெழில் உமைநாதன்

மூடிடும் முகிலேறி ஓடிடும் மதில்சூழும்

கோடுயர் அணிகுஞ்சிக் கூடலை ஆற்றூரே!

 

இலந்தை

21-2-2012


2012/2/21 Siva Siva <naya...@gmail.com>
--

thangamani

unread,
Feb 21, 2012, 8:42:44 AM2/21/12
to சந்தவசந்தம்
நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்

கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

//'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை
இலைக்கும் சொல்லலாமா?//

கூவிளம் என்பது'வில்வம்' என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
சடையில் சூடுவதால் பூவென்று நினைத்துவிட்டேன்.
மாற்றி எழுதினேன்.சரிபார்க்கவும்
சுட்டுதலுக்கு நன்றி சிவா!

அன்புடன்,
தங்கமணி

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

thangamani

unread,
Feb 21, 2012, 8:45:14 AM2/21/12
to சந்தவசந்தம்
தேன்சுவை பதிகங்கள் செவிமடுத் திடுமீசன்
மீன்விழி உமைபங்கன் வேண்டிய அருள்செய்வான்
கான் தனில் தழலாடி கற்றைவார் சடைமீது
கூன்பிறை அணிவானூர் கூடலை யாற்றூரே.

கான்=காடு

அன்புடன்,
தங்கமணி.


On Feb 21, 5:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> கான்மிகு மலர்தூவிக் காவெனும் அடியார்கள்
> வான்மிசை நிலையாக வாழ்ந்திட அருள்செய்வான்
> மான்மறி மழுவேந்தி வார்சடை யதன்மீது
> கூன்மதி அணிவானூர் கூடலை யாற்றூரே.
>
> கான் - வாசனை;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/19 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 21, 2012, 11:55:56 AM2/21/12
to santhav...@googlegroups.com


2012/2/21 thangamani <tvthan...@gmail.com>

நாவினில்  இனிக்கின்ற  நலம்தரும்  பெயரானை
பாவினில்  இசைத்தோதும்  பத்தரின்  துணையாவான்
கூவிடும்  குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
கூவிளம்  அணிவானூர்   கூடலை  யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

//'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை
இலைக்கும் சொல்லலாமா?//

கூவிளம்  என்பது'வில்வம்' என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
சடையில் சூடுவதால் பூவென்று நினைத்துவிட்டேன்.
மாற்றி எழுதினேன்.சரிபார்க்கவும்
சுட்டுதலுக்கு நன்றி சிவா!

அன்புடன்,
தங்கமணி

அப்பர் தேவாரம் - 4.107.10
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொருள் வேண்டில்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41070&padhi=107&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

 

Siva Siva

unread,
Feb 21, 2012, 8:21:41 PM2/21/12
to santhavasantham

5)
தொல்விரி புகழாளன் சுந்தரர் தமிழ்நாடி
நல்வழித் துணையாகி நம்பனின் முதுகுன்றம்
செல்வழி இதுவென்று செப்பிய மறைநாவன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே.

தொல்விரி புகழாளன் - தொல்புகழாளன், விரிபுகழாளன் - பழமையான புகழ் உடையவனும், விரிந்த புகழ் உடையவனும் ஆன சிவபெருமான்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/20 Siva Siva <naya...@gmail.com>

4)


thangamani

unread,
Feb 21, 2012, 10:14:26 PM2/21/12
to சந்தவசந்தம்
மிக்கநன்றி சிவசிவா!

அன்புடன்,
தங்கமணி.

On Feb 21, 9:55 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/2/21 thangamani <tvthangam...@gmail.com>


>
> > நாவினில்  இனிக்கின்ற  நலம்தரும்  பெயரானை
> > பாவினில்  இசைத்தோதும்  பத்தரின்  துணையாவான்
> > கூவிடும்  குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
> > கூவிளம்  அணிவானூர்   கூடலை  யாற்றூரே.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > //'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை
> > இலைக்கும் சொல்லலாமா?//
>
> > கூவிளம்  என்பது'வில்வம்' என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
> > சடையில் சூடுவதால் பூவென்று நினைத்துவிட்டேன்.
> > மாற்றி எழுதினேன்.சரிபார்க்கவும்
> > சுட்டுதலுக்கு நன்றி சிவா!
>
> > அன்புடன்,
> > தங்கமணி
>
> அப்பர் தேவாரம் - 4.107.10
> தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
> ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
> கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
> ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
>

> பொருள் வேண்டில்:http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idFie...
>
>
>

Siva Siva

unread,
Feb 22, 2012, 6:50:17 PM2/22/12
to santhavasantham

6)
கார்விடம் அடைகண்டன் கையினிற் சிரமேந்தி
ஊர்விடை தனிலேறி உண்பலிக் குழலெந்தை
வார்குழல் உமைபங்கன் வானதி முடியேற்றான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.

வானதி - வான் நதி - கங்கை;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/21 Siva Siva <naya...@gmail.com>

5)


thangamani

unread,
Feb 22, 2012, 10:25:35 PM2/22/12
to சந்தவசந்தம்
பல்வகை  நிலைகாணும்  பத்திசெய்  வழிதன்னில்
வெல்வழி  இறைதாளை  விட்டிடா  நினைவாகும்
வல்வினை  அகன்றோடும்  வாழ்வினைத்  தருமீசன்
கொல்விடை  மர்வானூர்  கூடலை  யாற்றூரே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 22, 6:21 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> தொல்விரி புகழாளன் சுந்தரர் தமிழ்நாடி
> நல்வழித் துணையாகி நம்பனின் முதுகுன்றம்
> செல்வழி இதுவென்று செப்பிய மறைநாவன்
> கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே.
>
> தொல்விரி புகழாளன் - தொல்புகழாளன், விரிபுகழாளன் - பழமையான புகழ்
> உடையவனும், விரிந்த
> புகழ் உடையவனும் ஆன சிவபெருமான்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 23, 2012, 7:15:12 PM2/23/12
to santhavasantham

7)
அஞ்சலர்க் கணையானின் அழகுடல் பொடிசெய்தான்
மஞ்சடை கயிலாயன் நஞ்சடை மணிகண்டன்
செஞ்சடை அதன்மீது திங்களும் அணிதேவன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே.

பதம் பிரித்து:
அஞ்சு அலர்க் கணையானின் அழகு உடல் பொடி செய்தான்;
மஞ்சு அடை கயிலாயன்; நஞ்சு அடை மணிகண்டன்;
செஞ்சடை அதன்மீது திங்களும் அணி தேவன்;
குஞ்சரத்து உரியான் ஊர் கூடலையாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/22 Siva Siva <naya...@gmail.com>

6)


Dr Subramanian

unread,
Feb 23, 2012, 8:39:30 PM2/23/12
to santhav...@googlegroups.com

அன்பு சிவா
மஞ்சடை, நஞ்சடை,செஞ்சடை என்ற சொற்களின் பொருளும் ,பொருத்தமும்,இயைபும் முரணும் அருமையாக விழுந்திருக்கின்றன; படித்து நெஞ்சம் குளிர்ந்தேன். கொஞ்சம் நின்று கவனித்து இரசிக்க வேண்டிய இடங்கள்.
வவேசு

2012/2/24 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

thangamani

unread,
Feb 24, 2012, 4:17:00 AM2/24/12
to சந்தவசந்தம்
நீர்சடை அதன்மீது நிலவினை அணிவான் தன்
சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்

கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 23, 4:50 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> கார்விடம் அடைகண்டன் கையினிற் சிரமேந்தி
> ஊர்விடை தனிலேறி உண்பலிக் குழலெந்தை
> வார்குழல் உமைபங்கன் வானதி முடியேற்றான்
> கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.
>
> வானதி - வான் நதி - கங்கை;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 24, 2012, 9:08:30 AM2/24/12
to santhav...@googlegroups.com


2012/2/24 thangamani <tvthan...@gmail.com>

நீர்சடை அதன்மீது  நிலவினை  அணிவான் தன்
சார்கிற   நிறையன்பில்   தனதடி  யரைக்காத்துச்
சேர்கிற  நிதியாகத் திகழ்ந்திடும்  அருளாவான்
கூர்மழு  உடையானூர்   கூடலை  யாற்றூரே.


அன்புடன்,
தங்கமணி.

நீர் இருக்கும் சடை என்ற பொருள்வர 'நீர்ச்சடை' என்று வருமன்றோ?





thangamani

unread,
Feb 24, 2012, 10:11:06 AM2/24/12