மதிசூடி துதிபாடி - 2

106 views
Skip to first unread message

Siva Siva

unread,
May 26, 2010, 9:35:01 PM5/26/10
to santhavasantham

2009-10-17
தாள்தொழாய் நெஞ்சமே - 2
-------------------------------------
(
இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு. அடிக்கு 4 முறை 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது).
(
சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")

1)
நாளையென் றெண்ணியே நாளைநீ ஓட்டினாய்
தாளவொண் ணாத்துயர்ச் சாகரத் தாழ்கிறாய்
காளைமேற் செல்பவன் கண்ணுமோர் மூன்றினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே.

பதம் பிரித்து:
நாளை என்(று) எண்ணியே நாளை நீ ஓட்டினாய்;
தாள ஒண்ணாத் துயர்ச் சாகரத்(து) ஆழ்கிறாய்;
காளைமேல் செல்பவன், கண்ணும் ஓர் மூன்றினான்,
காளகண்டன் கழல் கைதொழாய் நெஞ்சமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
May 27, 2010, 6:54:49 AM5/27/10
to சந்தவசந்தம்
சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதன் சிந்தையில் தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக் கேயின்பு சேர்த்தநம்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே!


சிவசிவா!
உங்கள் பாடல் அருமை!வாழ்த்துகள்!
'குரு லகு குரு' வர அமைத்தப் பாடல்
இயற்றி இருக்கிறேன்.சரி பார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On May 27, 6:35 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009-10-17
> தாள்தொழாய் நெஞ்சமே - 2
> -------------------------------------
> (இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு.
> அடிக்கு 4 முறை
> 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது).
> (சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")
>
> 1)
> நாளையென் றெண்ணியே நாளைநீ ஓட்டினாய்
> தாளவொண் ணாத்துயர்ச் சாகரத் தாழ்கிறாய்
> காளைமேற் செல்பவன் கண்ணுமோர் மூன்றினான்
> காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே.
>
> பதம் பிரித்து:
> நாளை என்(று) எண்ணியே நாளை நீ ஓட்டினாய்;
> தாள ஒண்ணாத் துயர்ச் சாகரத்(து) ஆழ்கிறாய்;
> காளைமேல் செல்பவன், கண்ணும் ஓர் மூன்றினான்,
> காளகண்டன் கழல் கைதொழாய் நெஞ்சமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
May 27, 2010, 8:31:41 AM5/27/10
to santhav...@googlegroups.com


2010/5/27 thangamani <tvthan...@gmail.com>

சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதன் சிந்தையில்  தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக்  கேயின்பு  சேர்த்தநம்
காளகண்  டன்கழல்  கைதொழாய்  நெஞ்சமே!


சிவசிவா!
உங்கள் பாடல் அருமை!வாழ்த்துகள்!
'குரு லகு குரு' வர அமைத்தப் பாடல்
இயற்றி இருக்கிறேன்.சரி பார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


'கேயின்பு' - குரு-குரு-லகு.
 


On May 27, 6:35 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009-10-17
> தாள்தொழாய் நெஞ்சமே - 2
> -------------------------------------
> (இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு.
> அடிக்கு 4 முறை
> 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது).
> (சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")
>
> 1)
> நாளையென் றெண்ணியே நாளைநீ ஓட்டினாய்
> தாளவொண் ணாத்துயர்ச் சாகரத் தாழ்கிறாய்
> காளைமேற் செல்பவன் கண்ணுமோர் மூன்றினான்
> காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே.
>
> பதம் பிரித்து:
> நாளை என்(று) எண்ணியே நாளை நீ ஓட்டினாய்;
> தாள ஒண்ணாத் துயர்ச் சாகரத்(து) ஆழ்கிறாய்;
> காளைமேல் செல்பவன், கண்ணும் ஓர் மூன்றினான்,
> காளகண்டன் கழல் கைதொழாய் நெஞ்சமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
May 27, 2010, 10:49:40 AM5/27/10
to சந்தவசந்தம்
சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதன் சிந்தையில் தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக் கின்புசெய் மெய்யனாம்

காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே!

சிவசிவா!
உங்கள் பாடல் அருமை!வாழ்த்துகள்!
'குரு லகு குரு' வர அமைத்தப் பாடல்
இயற்றி இருக்கிறேன்.சரி பார்க்கவும்.


//'கேயின்பு' - குரு-குரு-லகு.//
மேற்கண்ட பிழையைசரிசெய்து இட்டுள்ளேன்.


சரிசெய்து இட்டுள்ளேன்.

கேளவர் நாவினுக் கின்புசெய் மெய்யனாம்
(கின் பு செய்=குரு லகு குரு
மெய் ய .னாம்=குரு லகு குரு)

> அன்புடன்,
> தங்கமணி.


On May 27, 5:31 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010/5/27 thangamani <tvthangam...@gmail.com>

> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
May 27, 2010, 10:06:39 PM5/27/10
to santhavasantham

2)
நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நிற்பவன்
போற்றுமன் பர்க்கெனக் கூற்றுமாய் கொள்கையான்
நீற்றினைப் பூசுவான் நேரிலாச் சோதியான்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.

அன்புடான்,

வி. சுப்பிரமணியன்



2010/5/26 Siva Siva <naya...@gmail.com>

2009-10-17
தாள்தொழாய் நெஞ்சமே - 2
-------------------------------------
(
இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு. அடிக்கு 4 முறை 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது).
(
சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")

1)

thangamani

unread,
May 28, 2010, 5:40:32 AM5/28/10
to சந்தவசந்தம்
ஏற்றினில் ஊர்ந்திடும் ஈடில்லா நாயகன்
ஊற்றெழும் அன்பினுக் குற்றிடும் சுத்தனாம்
பேற்றினும் பேறவன் பெற்றியைப் பேசுதல்

மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.

சிவா! சரி பார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On May 28, 7:06 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நிற்பவன்
> போற்றுமன் பர்க்கெனக் கூற்றுமாய் கொள்கையான்
> நீற்றினைப் பூசுவான் நேரிலாச் சோதியான்
> மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.
>
> அன்புடான்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/5/26 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-10-17
> > தாள்தொழாய் நெஞ்சமே - 2
> > -------------------------------------
> > (இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு. அடிக்கு 4
> > முறை 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது).
> > (சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
May 28, 2010, 6:13:57 AM5/28/10
to சந்தவசந்தம்
சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதில் சிந்தையாய்த் தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக் கின்புசெய் பேரினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே!

சிவா! 'கேளவர் நாவினுக் கின்புசெய் பேரினான்'
என்பது, சரியாகும் என்று படுகிறது.
பேரினான் என்று வருமா? தேடினேன்.
தேவாரத்தில் ஒரு சான்று:

ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
ஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணிய
கானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
May 28, 2010, 8:01:35 AM5/28/10
to santhav...@googlegroups.com
// ஏற்றினில்  ஊர்ந்திடும் ஈடில்லா //
ஏற்றினி லூர்ந்திடு மீடில்லா -- என்று ஆவதால் அமைப்புப் பிறழும்.
ஏற்றினில் லூர்ந்திடும் மீடிலா - என்று 'ல்', 'ம்' விரித்தல் விகாரம் பெற்று வரவேண்டுமோ?

இதேபோல் 'ஊற்றெழும்  அன்பினுக்' என்ற இடத்திலும்.

2010/5/28 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
May 28, 2010, 8:06:53 AM5/28/10
to santhav...@googlegroups.com
ஆயிரம் பேரினான் - ஆயிரம் பேர் உடையவன்.

நாவினுக்கு இன்பு செய் பேரினான் - எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/5/28 thangamani <tvthan...@gmail.com>



--

thangamani

unread,
May 28, 2010, 9:50:49 AM5/28/10
to சந்தவசந்தம்
//ஏற்றினில் ஊர்ந்திடும் ஈடில்லா //

ஏற்றினி லூர்ந்திடு மீடில்லா -- என்று ஆவதால் அமைப்புப் பிறழும்.
ஏற்றினில் லூர்ந்திடும் மீடிலா - என்று 'ல்', 'ம்' விரித்தல் விகாரம்
பெற்று
வரவேண்டுமோ?

இதேபோல் 'ஊற்றெழும் அன்பினுக்' என்ற இடத்திலும்.//

நீங்கள் குறிப்பிட்டப் பிழைகளைச் சரிசெய்ய,
கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கேன்.
சரிபார்க்கவும்.நன்றி!

ஏற்றினில் வந்துமே இன்னருள் செய்பவன்
ஊற்றெழும் பக்தியால் உற்றிடும் சுத்தனாம்


பேற்றினும் பேறவன் பெற்றியைப் பேசுதல்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.

அன்புடன்,
தங்கமணி.

On May 28, 5:01 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> // ஏற்றினில்  ஊர்ந்திடும் ஈடில்லா //
> ஏற்றினி லூர்ந்திடு மீடில்லா -- என்று ஆவதால் அமைப்புப் பிறழும்.
> ஏற்றினில் லூர்ந்திடும் மீடிலா - என்று 'ல்', 'ம்' விரித்தல் விகாரம் பெற்று
> வரவேண்டுமோ?
>
> இதேபோல் 'ஊற்றெழும்  அன்பினுக்' என்ற இடத்திலும்.
>

> 2010/5/28 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
>
>
> > ஏற்றினில்  ஊர்ந்திடும் ஈடில்லா நாயகன்
> > ஊற்றெழும்  அன்பினுக்  குற்றிடும் சுத்தனாம்
> > பேற்றினும்  பேறவன்  பெற்றியைப் பேசுதல்
> > மாற்றிலாப்  பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.
>
> > சிவா! சரி பார்க்கவும்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > On May 28, 7:06 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > 2)
> > > நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நிற்பவன்
> > > போற்றுமன் பர்க்கெனக் கூற்றுமாய் கொள்கையான்
> > > நீற்றினைப் பூசுவான் நேரிலாச் சோதியான்
> > > மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.
>
> > > அன்புடான்,
> > > வி. சுப்பிரமணியன்
>
> > > 2010/5/26 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > > > 2009-10-17
> > > > தாள்தொழாய் நெஞ்சமே - 2
> > > > -------------------------------------
> > > > (இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு.
> > அடிக்கு 4
> > > > முறை 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது).
> > > > (சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")
>
> > > > 1)
>

> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

thangamani

unread,
May 28, 2010, 10:22:23 AM5/28/10
to சந்தவசந்தம்
//ஆயிரம் பேரினான் - ஆயிரம் பேர் உடையவன்.>
> நாவினுக்கு இன்பு செய் பேரினான் - எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?//

(அப்பரின் பக்தியைக் கருத்தில் கொண்டு எழுதினேன்.)
நாவினுக்குச் சொல்ல(ச் சொல்ல) இன்பம் தரும் பேரை உடையவன்.

அன்புடன்,
தங்கமணி.

On May 28, 5:06 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> ஆயிரம் பேரினான் - ஆயிரம் பேர் உடையவன்.
>
> நாவினுக்கு இன்பு செய் பேரினான் - எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/5/28 thangamani <tvthangam...@gmail.com>

> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

Siva Siva

unread,
May 28, 2010, 7:45:15 PM5/28/10
to santhavasantham

3)
காய்நுதற் கண்ணினாற் காமனைச் சுட்டவர்;
மாய்நமன் மாளவோர் தாளினாற் செற்றவர்;
பாய்நதிச் சென்னிமேற் பாம்பையும் வைத்தவர்;
போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்



2010/5/27 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
May 29, 2010, 5:48:50 AM5/29/10
to சந்தவசந்தம்
வாய்சொலும் பேர்புகழ் மல்குநீர்ப் பொங்கிடத்
தூய்மலர் மாலையில் தோன்றிடும் சோதியர்
தாய்தரும் நேசமாய்த் தண்ணருள் செய்பவர்

போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.

சிவா!சரிபார்க்கவும்.


அன்புடன்,
தங்கமணி.

On May 29, 4:45 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> காய்நுதற் கண்ணினாற் காமனைச் சுட்டவர்;
> மாய்நமன் மாளவோர் தாளினாற் செற்றவர்;
> பாய்நதிச் சென்னிமேற் பாம்பையும் வைத்தவர்;
> போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/5/27 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

Message has been deleted

Siva Siva

unread,
May 30, 2010, 8:58:49 PM5/30/10
to santhavasantham

4)
வம்பரோ டாடியிவ் வாழ்வினிற் கண்டதென்?
துன்பமே; நெஞ்சமே, "தூமதிக் கண்ணியா!
அம்புமால் ஆகமுன் மும்மதில் சுட்டவா!
என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/5/28 Siva Siva <naya...@gmail.com>

3)


thangamani

unread,
May 31, 2010, 5:20:30 AM5/31/10
to சந்தவசந்தம்
புன்புலால் யாக்கையைப் போற்றியேக் கொண்டதென்?
துன்பமே;நெஞ்சமே!"சோதியே!சங்கரா!
என்பதே மாலையாய் ஏற்றவா!நின்மலா!

என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.

சிவா! சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On May 31, 5:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> வம்பரோ டாடியிவ் வாழ்வினிற் கண்டதென்?
> துன்பமே; நெஞ்சமே, "தூமதிக் கண்ணியா!
> அம்புமால் ஆகமுன் மும்மதில் சுட்டவா!
> என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/5/28 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
May 31, 2010, 10:03:07 PM5/31/10
to santhavasantham

5)
நல்லறஞ் சொல்லுவார் நால்வருக் காலமர்
செல்வனார் சேவினிற் செல்லுவார் அன்பினாற்
கல்லையும் பூவெனக் கொள்ளுவார் தாள்தொழ
எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/5/30 Siva Siva <naya...@gmail.com>

4)

thangamani

unread,
Jun 1, 2010, 12:22:18 PM6/1/10
to சந்தவசந்தம்
தொல்லையைக் கூட்டிடும் சோதனை யாவுமே
இல்லையென் றோட்டுமே எம்பிரான் தண்ணருள்
தில்லையின் கூத்தனார் செம்மலர் தாள்தொழ

எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.

சிவா!சரிபார்க்கவும்.
'தாள் தொ ழ=குரு லகு லகு ?

அன்புடன்,
தங்கமணி.


On Jun 1, 7:03 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> நல்லறஞ் சொல்லுவார் நால்வருக் காலமர்
> செல்வனார் சேவினிற் செல்லுவார் அன்பினாற்
> கல்லையும் பூவெனக் கொள்ளுவார் தாள்தொழ
> எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/5/30 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 1, 2010, 1:21:49 PM6/1/10
to santhav...@googlegroups.com
லகு = குறில்.
குரு = நெடில்/ நெடில்+ஒற்று/ குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்.


2010/6/1 thangamani <tvthan...@gmail.com>

தொல்லையைக் கூட்டிடும் சோதனை யாவுமே
இல்லையென்  றோட்டுமே  எம்பிரான் தண்ணருள்
தில்லையின் கூத்தனார்  செம்மலர் தாள்தொழ
எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.

சிவா!சரிபார்க்கவும்.
'தாள் தொ ழ=குரு லகு லகு ?

அன்புடன்,
தங்கமணி.


On Jun 1, 7:03 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> நல்லறஞ் சொல்லுவார் நால்வருக் காலமர்
> செல்வனார் சேவினிற் செல்லுவார் அன்பினாற்
> கல்லையும் பூவெனக் கொள்ளுவார் தாள்தொழ
> எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>




--

Siva Siva

unread,
Jun 1, 2010, 10:41:32 PM6/1/10
to santhavasantham

6)
ஆண்டவன் மாண்டவர் நீறணிந் தென்பையும்
பூண்டவன் பொற்பதம் போற்றிவா னோர்பலர்
வேண்டவன் னஞ்சுதான் உண்டவன் தில்லையில்
தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/5/31 Siva Siva <naya...@gmail.com>

5)

thangamani

unread,
Jun 2, 2010, 9:04:44 AM6/2/10
to சந்தவசந்தம்
காண்டுடன் வீசிடும் காலனின் பாசமும்
மூண்டெழும் பக்தியின் முன்னரென் செய்திடும்?
தூண்டிலின் மீனெனத் துன்புறா தின்புறத்

தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.


காண்டு=கோபம்.
பாசம்= கயிறு வடிவான ஆயுத வகை.

சிவா!சரி பார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 2, 7:41 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> ஆண்டவன் மாண்டவர் நீறணிந் தென்பையும்
> பூண்டவன் பொற்பதம் போற்றிவா னோர்பலர்
> வேண்டவன் னஞ்சுதான் உண்டவன் தில்லையில்
> தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/5/31 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 2, 2010, 9:42:19 PM6/2/10
to santhavasantham

7)
ஆசைகள் வந்துவந் தல்லலே செய்வதால்
பூசைகள் செய்துனைப் போற்றவல் லேனலேன்
நீசனேன் தன்னையும் வாசமார் செய்யதாள்
நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/1 Siva Siva <naya...@gmail.com>

6)


thangamani

unread,
Jun 3, 2010, 4:16:42 AM6/3/10
to சந்தவசந்தம்
வேசமும் ஆடலும் மேவிடும் அண்ணலே!
பூசலார் உள்ளமேப் பொற்புறும் கோவிலாய்ப்
பூசனை நேமமாய்ப் பூண்டவுன் செய்யதாள்

நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.


நேமம்=நித்திய அனுட்டானம்.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 3, 6:42 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> ஆசைகள் வந்துவந் தல்லலே செய்வதால்
> பூசைகள் செய்துனைப் போற்றவல் லேனலேன்
> நீசனேன் தன்னையும் வாசமார் செய்யதாள்
> நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/1 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 3, 2010, 7:54:28 AM6/3/10
to santhav...@googlegroups.com
// வேசமும்  ஆடலும்  மேவிடும் அண்ணலே! //
முதல் அடியில் புணர்ச்சியினால் அமைப்புப் பிறழும். அவ்விடங்களில் எல்லாம் விரித்தல் விகாரம் என்று கொண்டால்தான் அமைப்புக்கு ஒத்துவரும்.

// உள்ளமேப் பொற்புறும் //
ப் மிகாது.


2010/6/3 thangamani <tvthan...@gmail.com>

வேசமும்  ஆடலும்  மேவிடும் அண்ணலே!
பூசலார்  உள்ளமேப் பொற்புறும் கோவிலாய்ப்
பூசனை  நேமமாய்ப் பூண்டவுன் செய்யதாள்
நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.


நேமம்=நித்திய அனுட்டானம்.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 3, 6:42 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> ஆசைகள் வந்துவந் தல்லலே செய்வதால்
> பூசைகள் செய்துனைப் போற்றவல் லேனலேன்
> நீசனேன் தன்னையும் வாசமார் செய்யதாள்
> நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>



--

thangamani

unread,
Jun 3, 2010, 8:28:22 AM6/3/10
to சந்தவசந்தம்
வேசமோ டாடலை மேவிடும் நாயகா!
பூசலார் உள்ளமே பொற்புறும் கோவிலாய்ப்

பூசனை நேமமாய்ப் பூண்டவுன் செய்யதாள்
நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.

// வேசமும் ஆடலும் மேவிடும் அண்ணலே! //


முதல் அடியில் புணர்ச்சியினால் அமைப்புப் பிறழும். அவ்விடங்களில்
எல்லாம்
விரித்தல் விகாரம் என்று கொண்டால்தான் அமைப்புக்கு ஒத்துவரும்.

// உள்ளமேப் பொற்புறும் // ப் மிகாது.

சிவா!பிழை சுட்டியதற்கு மிக்க நன்றி!
ஒற்று நீக்கியும்,சிறிது மாற்றியும் எழுதியிருக்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 3, 4:54 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> // வேசமும்  ஆடலும்  மேவிடும் அண்ணலே! //
> முதல் அடியில் புணர்ச்சியினால் அமைப்புப் பிறழும். அவ்விடங்களில் எல்லாம்
> விரித்தல் விகாரம் என்று கொண்டால்தான் அமைப்புக்கு ஒத்துவரும்.
>
> // உள்ளமேப் பொற்புறும் //
> ப் மிகாது.
>

> 2010/6/3 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
>
>
> > வேசமும்  ஆடலும்  மேவிடும் அண்ணலே!
> > பூசலார்  உள்ளமேப் பொற்புறும் கோவிலாய்ப்
> > பூசனை  நேமமாய்ப் பூண்டவுன் செய்யதாள்
> > நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.
>
> > நேமம்=நித்திய அனுட்டானம்.
>
> > சிவா!சரிபார்க்கவும்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > On Jun 3, 6:42 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > 7)
> > > ஆசைகள் வந்துவந் தல்லலே செய்வதால்
> > > பூசைகள் செய்துனைப் போற்றவல் லேனலேன்
> > > நீசனேன் தன்னையும் வாசமார் செய்யதாள்
> > > நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.
>
> > > அன்புடன்,
> > > வி. சுப்பிரமணியன்
>

Siva Siva

unread,
Jun 3, 2010, 8:10:31 PM6/3/10
to santhavasantham

8)
வேகமாய்ப் போயரன் வெற்பசைத் தோனுரம்
போகவோர் மெல்விரல் வைத்தவன் போற்றநாள்
ஏகமாய் ஈந்தவர் பாகமோர் மங்கையார்
நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/2 Siva Siva <naya...@gmail.com>

7)

Siva Siva

unread,
Jun 4, 2010, 9:24:21 PM6/4/10
to santhavasantham

9)
பங்கயன் மாலிவர் காணொணாப் பண்பினீர்
செங்கயல் போல்விழிப் பெண்ணினர் சிந்தையால்
உங்கழல் வாழ்த்திடா ஊமையே னாயினேன்
இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/3 Siva Siva <naya...@gmail.com>

8)


thangamani

unread,
Jun 5, 2010, 1:05:29 AM6/5/10
to சந்தவசந்தம்
தேகமே ஆலயம் தெய்வமும் நெஞ்சினுள்
ஏகனாய் மூலனாய் ஈசனாய்க் காப்பவர்
பாகமாய்த் தேவியைப் பட்சமாய் வைத்தவர்

நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.

பட்சம்=அன்பு.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 4, 5:10 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> வேகமாய்ப் போயரன் வெற்பசைத் தோனுரம்
> போகவோர் மெல்விரல் வைத்தவன் போற்றநாள்
> ஏகமாய் ஈந்தவர் பாகமோர் மங்கையார்
> நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/2 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jun 5, 2010, 5:20:46 AM6/5/10
to சந்தவசந்தம்
அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன் பொற்கழல் போற்றினேன்
சங்கடம் தந்திடும் சஞ்சலம் யாவுமே

இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.


சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 5, 6:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> பங்கயன் மாலிவர் காணொணாப் பண்பினீர்
> செங்கயல் போல்விழிப் பெண்ணினர் சிந்தையால்
> உங்கழல் வாழ்த்திடா ஊமையே னாயினேன்
> இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/3 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 5, 2010, 8:41:41 AM6/5/10
to santhav...@googlegroups.com
// சஞ்சலம் யாவுமே இங்கு அழுந்தாதவாறு //

இவ்விடத்தில் பொருள் தெளிவாகவில்லை என்று தோன்றுகிறது.

2010/6/5 thangamani <tvthan...@gmail.com>

அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன்  பொற்கழல் போற்றினேன்
சங்கடம் தந்திடும் சஞ்சலம் யாவுமே
இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.


சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.




--

thangamani

unread,
Jun 5, 2010, 9:37:14 AM6/5/10
to சந்தவசந்தம்
அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன் பொற்கழல் போற்றினேன்
சங்கடந் தந்திடும் தாபமாம் வல்வினை

இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.

தாபம்=துன்பம்.

சிவா! சரிபார்க்கவும்.சிறிது மாற்றி
எழுதினேன்.மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

On Jun 5, 5:41 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> // சஞ்சலம் யாவுமே இங்கு அழுந்தாதவாறு //
>
> இவ்விடத்தில் பொருள் தெளிவாகவில்லை என்று தோன்றுகிறது.
>

> 2010/6/5 thangamani <tvthangam...@gmail.com>


>
> > அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
> > பொங்கழல் வண்ணனுன்  பொற்கழல் போற்றினேன்
> > சங்கடம் தந்திடும் சஞ்சலம் யாவுமே
> > இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.
>
> > சிவா!சரிபார்க்கவும்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 5, 2010, 10:28:08 AM6/5/10
to santhav...@googlegroups.com
//சங்கடந் தந்திடும் தாபமாம் வல்வினை இங்கழுந் தாதவா று.... //


சங்கடந் தந்திடும் தாகமா சாகரத் திங்கழுந் தாதவா று....
என்பது போல இருந்தால் இன்னும் தெளிவாகும்.
தாக மா சாகரம் - ஆசைப் பெருங்கடல்;

2010/6/5 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Jun 5, 2010, 1:12:07 PM6/5/10
to சந்தவசந்தம்
அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன் பொற்கழல் போற்றினேன்
சங்கடந் தந்திடும் தாகமா சாகரத்
திங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.

//சங்கடந் தந்திடும் தாகமா சாகரத் திங்கழுந் தாதவா று....
என்பது போல இருந்தால் இன்னும் தெளிவாகும்.//


தாக மா சாகரம் - ஆசைப் பெருங்கடல்;

சிவா!மிக்க நன்றி! நீங்கள் கூறியது பொருத்தமாக
இருக்கிறது.அந்த வரியையே எழுதுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 5, 7:28 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> //சங்கடந் தந்திடும் தாபமாம் வல்வினை இங்கழுந் தாதவா று.... //
>
> சங்கடந் தந்திடும் தாகமா சாகரத் திங்கழுந் தாதவா று....
> என்பது போல இருந்தால் இன்னும் தெளிவாகும்.
> தாக மா சாகரம் - ஆசைப் பெருங்கடல்;
>

> 2010/6/5 thangamani <tvthangam...@gmail.com>
>
>
>
>
>
> > அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
> > பொங்கழல் வண்ணனுன்  பொற்கழல் போற்றினேன்
> > சங்கடந் தந்திடும் தாபமாம் வல்வினை
> > இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.
>
> > தாபம்=துன்பம்.
>
> > சிவா! சரிபார்க்கவும்.சிறிது மாற்றி
> > எழுதினேன்.மிக்க நன்றி!
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > On Jun 5, 5:41 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > // சஞ்சலம் யாவுமே இங்கு அழுந்தாதவாறு //
>
> > > இவ்விடத்தில் பொருள் தெளிவாகவில்லை என்று தோன்றுகிறது.
>
> > > 2010/6/5 thangamani <tvthangam...@gmail.com>
>
> > > > அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
> > > > பொங்கழல் வண்ணனுன்  பொற்கழல் போற்றினேன்
> > > > சங்கடம் தந்திடும் சஞ்சலம் யாவுமே
> > > > இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.
>
> > > > சிவா!சரிபார்க்கவும்.
>
> > > > அன்புடன்,
> > > > தங்கமணி.
>

Siva Siva

unread,
Jun 6, 2010, 5:31:44 PM6/6/10
to santhavasantham

10)
ஏசுவார் நேசமில் லாதநீ சர்சிலர்
மாசுசேர் நெஞ்சினார் வார்த்தைமெய் அல்லவே
பாசுரம் பாடியன் பாயரன் சீரையே
பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/4 Siva Siva <naya...@gmail.com>

9)


thangamani

unread,
Jun 7, 2010, 6:39:39 AM6/7/10
to சந்தவசந்தம்
வீசுமோர் தென்றலாய் வெம்மையில் தோன்றுவார்
பூசுவார் நீற்றினைப் பூணுவார் நாகமே
தேசுசேர் மேனியார் சீர்கழல் தாளிணைப்

பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.


சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 7, 2:31 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> ஏசுவார் நேசமில் லாதநீ சர்சிலர்
> மாசுசேர் நெஞ்சினார் வார்த்தைமெய் அல்லவே
> பாசுரம் பாடியன் பாயரன் சீரையே
> பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/4 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 7, 2010, 7:10:53 PM6/7/10
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்:
11)
பாலனாய்க் காளையாய்ப் பாவைமார் மேற்பெரும்
மாலனாய் ஐம்புலன் மாயையால் வாழ்வினில்
சாலநாள் போக்கிவிட் டேனையும் சங்கரா
காலனார் கொள்ளுமுன் காத்தருள் செய்கவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/6 Siva Siva <naya...@gmail.com>

10)


Siva Siva

unread,
Jun 9, 2010, 6:18:45 PM6/9/10
to santhavasantham

2009-06-15
திருக்கடவூர் - 5
---------------------
(
வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)

(
சம்பந்தர் தேவாரம் - 1.37.1
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.)

1)
பிறவிப் பிணிசேர் வினையெல்லாம்
அறவே அழிதற்(கு) அடைநெஞ்சே
பிறவாப் பெருமான் பிறைசூடி
கறைசேர் மிடறன் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/7 Siva Siva <naya...@gmail.com>

இத்தொடரின் கடைசிப் பாடல்:
11)


thangamani

unread,
Jun 10, 2010, 8:31:26 AM6/10/10
to சந்தவசந்தம்
குறைசேர் மனதுள் குமையாமல்
நிறைவே அடைய நினைநெஞ்சே!
பிறையேர் சடையன் பெருநிதியன்

கறைசேர் மிடறன் கடவூரே.

குமைதல்=வருந்துதல்
ஏர்=மிக்க அழகு.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 10, 3:18 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009-06-15
> திருக்கடவூர் - 5
> ---------------------
> (வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)
>
> (சம்பந்தர் தேவாரம் - 1.37.1
> அரவச் சடைமேல் மதிமத்தம்
> விரவிப் பொலிகின் றவனூராம்
> நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
> பரவிப் பொலியும் பனையூரே.)
>
> 1)
> பிறவிப் பிணிசேர் வினையெல்லாம்
> அறவே அழிதற்(கு) அடைநெஞ்சே
> பிறவாப் பெருமான் பிறைசூடி
> கறைசேர் மிடறன் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/7 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > இத்தொடரின் கடைசிப் பாடல்:
> > 11)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 10, 2010, 10:04:53 PM6/10/10
to santhavasantham

2)
வருகா லமெலாம் மகிழ்வோடு
திருவா கிடநீ அடைநெஞ்சே
ஒருபால் உமையாள் உறைகின்ற
கருமா மிடறன் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/9 Siva Siva <naya...@gmail.com>

2009-06-15
திருக்கடவூர் - 5
---------------------
(
வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)

1)

thangamani

unread,
Jun 11, 2010, 6:46:54 AM6/11/10
to சந்தவசந்தம்
இருளா குவினை யதுதீர
வெருளா தவழி அடைநெஞ்சே!
மருமா மலர்சூழ் பொழில்மேவும்

கருமா மிடறன் கடவூரே.


சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 11, 7:04 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> வருகா லமெலாம் மகிழ்வோடு
> திருவா கிடநீ அடைநெஞ்சே
> ஒருபால் உமையாள் உறைகின்ற
> கருமா மிடறன் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/9 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-06-15
> > திருக்கடவூர் - 5
> > ---------------------
> > (வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 11, 2010, 6:40:41 PM6/11/10
to santhavasantham

3)
விருதா அலையா(து) அடைநெஞ்சே
ஒருபா லனுயிர் கொளவேண்டி
வருகா லனையன்(று) உதைசெய்த
கருமா உரியான் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/10 Siva Siva <naya...@gmail.com>

2)
வருகா லமெலாம் மகிழ்வோடு
திருவா கிடநீ அடைநெஞ்சே
ஒருபால் உமையாள் உறைகின்ற
கருமா மிடறன் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 11, 2010, 7:45:50 PM6/11/10
to santhav...@googlegroups.com

’கொளவேண்டி’ என்பதற்குக் கருமா உரியானும் எழுவாய் ஆக வாய்ப்புள்ளதால் சற்று மாற்றியமைக்கலாம் எனத் தோன்றுகிறது.

அனந்த்

2010/6/11 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta


thangamani

unread,
Jun 12, 2010, 6:54:24 AM6/12/10
to சந்தவசந்தம்
கருவா யுயிராய்ப் பிறவாது
தெருளா கிடநீ அடைநெஞ்சே!
திருவோ டுமறைத் (து) அளிசெய்த

கருமா உரியான் கடவூரே.

தெருள்=தெளிவு.
திருவோ டுமறைத் (து) அளிசெய்த=
திருநீலகண்டருக்கு அருள்செய்தது.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 12, 3:40 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> விருதா அலையா(து) அடைநெஞ்சே
> ஒருபா லனுயிர் கொளவேண்டி
> வருகா லனையன்(று) உதைசெய்த
> கருமா உரியான் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/10 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2)
> > வருகா லமெலாம் மகிழ்வோடு
> > திருவா கிடநீ அடைநெஞ்சே
> > ஒருபால் உமையாள் உறைகின்ற
> > கருமா மிடறன் கடவூரே.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 12, 2010, 9:44:11 AM6/12/10
to santhav...@googlegroups.com
அளவில் சிறிய பாடல்களில் இவ்வாறு எண்ண வாய்ப்புகள் உள.

எனினும், இரண்டாம் அடியை மாற்றியுள்ளேன்.

3)
விருதா அலையா(து) அடைநெஞ்சே

ஒருபா சமுடன் மறையோன்பால்


வருகா லனையன்(று) உதைசெய்த
கருமா உரியான் கடவூரே.

விருதா - வீணாய்; (திருப்புகழ் - திருவாவினன்குடி - "சிவனார் மனங்குளிர ... உலகில் விருதா அலைந்துழலும் அடியேனை ....");
பாசமுடன் - பாசத்தோடு (எமன் கையில் இருக்கும் சுருக்குக்கயிறு); அன்போடு;
(
பாசத்தை எமனோடு சேர்த்துப் பொருள்கொண்டால் - எமன் கையில் இருக்கும் கயிறு.
பாசத்தை இறைவனோடு பொருத்திக்கொண்டால் - அன்பு);
மறையோன் - இங்கே, அந்தணச் சிறுவனார் மார்க்கண்டேயர்;
கருமா உரியான் - யானைத் தோலை அணிந்த சிவன்; (கருமா - யானை; உரி - தோல்);

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




2010/6/11 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

’கொளவேண்டி’ என்பதற்குக் கருமா உரியானும் எழுவாய் ஆக வாய்ப்புள்ளதால் சற்று மாற்றியமைக்கலாம் எனத் தோன்றுகிறது.

அனந்த்

2010/6/11 Siva Siva <naya...@gmail.com>
3)
விருதா அலையா(து) அடைநெஞ்சே
ஒருபா லனுயிர் கொளவேண்டி
வருகா லனையன்(று) உதைசெய்த
கருமா உரியான் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
Jun 13, 2010, 5:43:50 AM6/13/10
to சந்தவசந்தம்
கருவா யுருவாய்ப் பிறந்தென்றும்
மருளா திருக்க அடைநெஞ்சே!
திருவோ டுமறைத் (து) அருள்செய்த

கருமா உரியான் கடவூரே.


சிவா!சிறிது மாற்றி எழுதியுள்ளேன்.


சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

Siva Siva

unread,
Jun 13, 2010, 8:16:19 AM6/13/10
to santhav...@googlegroups.com
//  .... திருக்க .... //
இப்பாடல்களில் அடிகளில் முதல் இரு சீர்களிலும் நடுவில் நெடிலோ ஒற்றோ (வல்லொற்று, மெல்லொற்று+வல்லினம்) இன்றியும், அச்சீர்களின் முடிவில் நெடிலோ ஒற்றோ அமைந்தும் வரின், ஒலி நயம் இன்னும் சிறக்கும் என எண்ணுகிறேன்.

சம்பந்தரின் 1.37 பதிகத்தை இங்கே காணலாம்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=10370&padhi=037&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


2010/6/13 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Jun 13, 2010, 10:29:42 AM6/13/10
to santhav...@googlegroups.com

4)
உலகிற் பிணியுற்(று) உழலாத
நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
நிலவைப் புனையும் பெருமாற்குக்
கலயர் பணிசெய் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/12 Siva Siva <naya...@gmail.com>
அளவில் சிறிய பாடல்களில் இவ்வாறு எண்ண வாய்ப்புகள் உள.

எனினும், இரண்டாம் அடியை மாற்றியுள்ளேன்.

3)

thangamani

unread,
Jun 13, 2010, 2:29:01 PM6/13/10
to சந்தவசந்தம்
கருவா யுருவாய்ப் பிறந்தென்றும்
மருளா யுலையா(து) அடைநெஞ்சே!

திருவோ டுமறைத் (து) அருள்செய்த
கருமா உரியான் கடவூரே.

உலை=அலைதல்.

சிவா!மிக்கநன்றி.இப்போது
சரியாகும் என எண்ணுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 13, 5:16 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> //  .... திருக்க .... //
> இப்பாடல்களில் அடிகளில் முதல் இரு சீர்களிலும் நடுவில் நெடிலோ ஒற்றோ
> (வல்லொற்று, மெல்லொற்று+வல்லினம்) இன்றியும், அச்சீர்களின் முடிவில் நெடிலோ
> ஒற்றோ அமைந்தும் வரின், ஒலி நயம் இன்னும் சிறக்கும் என எண்ணுகிறேன்.
>

> சம்பந்தரின் 1.37 பதிகத்தை இங்கே காணலாம்:http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idFie...
>
> 2010/6/13 thangamani <tvthangam...@gmail.com>

thangamani

unread,
Jun 14, 2010, 4:30:21 AM6/14/10
to சந்தவசந்தம்
தலமாய்த் திகழும் அமுதீசர்
அலமே தருதீ வினைதீர்ப்பார்
கலையா மனமாய் மணதூபக்
கலயர் பணிசெய் கடவூரே!.


கலையா மனமாய் மணதூபக்


கலயர் பணிசெய் கடவூரே

தலமாய்த் திகழும் அமுதீசர்
அலமே தருதீ வினைதீர்ப்பார்! என்று பொருள்
கொள்ளவேண்டும்.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 13, 7:29 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> உலகிற் பிணியுற்(று) உழலாத
> நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
> நிலவைப் புனையும் பெருமாற்குக்
> கலயர் பணிசெய் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/12 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > அளவில் சிறிய பாடல்களில் இவ்வாறு எண்ண வாய்ப்புகள் உள.
>
> > எனினும், இரண்டாம் அடியை மாற்றியுள்ளேன்.
>
> > 3)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 14, 2010, 8:34:19 PM6/14/10
to santhav...@googlegroups.com

5)
புவியிற் புரிதீ வினையெல்லாம்
அவியக் கருதில் அடைநெஞ்சே
செவியோர் குழைசேர் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/13 Siva Siva <naya...@gmail.com>

4)

thangamani

unread,
Jun 15, 2010, 8:28:16 AM6/15/10
to சந்தவசந்தம்
புவிவாழ் வெனுமோர் பவமூழ்கித்
தவியா வழியாம் அடைநெஞ்சே!
சவிசேர் நவியன் சிவனாரின்

கவினார் பொழில்சூழ் கடவூரே.

சவி=ஒளி,அழகு.
நவியம்=புதுமை,புதியது.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 15, 5:34 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> புவியிற் புரிதீ வினையெல்லாம்
> அவியக் கருதில் அடைநெஞ்சே
> செவியோர் குழைசேர் சிவனாரின்
> கவினார் பொழில்சூழ் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 15, 2010, 8:32:50 PM6/15/10
to santhav...@googlegroups.com

6)
அலமந் துலகில் அலையாமல்


நிலையைப் பெறநீ நினைநெஞ்சே

பலபேர் இடவோர் தலையோட்டைக்
கலமா உடையான் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/14 Siva Siva <naya...@gmail.com>

5)


Message has been deleted

thangamani

unread,
Jun 16, 2010, 6:29:04 AM6/16/10
to சந்தவசந்தம்
நிலையா உடலென் றறிவோடு
நலமே கொளநீ நவில்நெஞ்சே
அலைசேர் நதியன் அரவேதான்

கலமா உடையான் கடவூரே.

கலம்=ஆபரணம்,அணிகலம்

அன்புடன்,
தங்கமணி.


On Jun 16, 5:32 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> அலமந் துலகில் அலையாமல்
> நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
> பலபேர் இடவோர் தலையோட்டைக்
> கலமா உடையான் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/14 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 16, 2010, 9:55:08 PM6/16/10
to santhav...@googlegroups.com

7)
திணறும் கடைநாள் சிவனன்றித்
துணையார் உளர்நீ தொழுநெஞ்சே
அணையார் புரமூன்(று) அவைவேவக்
கணைதொட் டவனூர் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/15 Siva Siva <naya...@gmail.com>

6)


thangamani

unread,
Jun 17, 2010, 5:35:59 AM6/17/10
to சந்தவசந்தம்
புணையே எனவே புகல்நீ நெஞ்சே!
மணையே றியசுந் தரர்தன்னை
பிணைநீ எனவாட் கொளவந்து

கணைதொட் டவனூர் கடவூரே.

மணை=மணமேடை.
கணை=ஓலைமுத்திரை.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 17, 6:55 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> திணறும் கடைநாள் சிவனன்றித்
> துணையார் உளர்நீ தொழுநெஞ்சே
> அணையார் புரமூன்(று) அவைவேவக்
> கணைதொட் டவனூர் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 17, 2010, 5:59:42 PM6/17/10
to santhav...@googlegroups.com
// கணை=ஓலைமுத்திரை //
இச்சொல்லுக்கு இப்பொருள் உண்டா? OTL-ல் காண்கிலேன்.

அதேபோல், 'பிணை = அடிமை' என்ற பொருளும் உண்டா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/6/17 thangamani <tvthan...@gmail.com>

புணையே எனவே புகல்நீ நெஞ்சே!
மணையே றியசுந் தரர்தன்னை
பிணைநீ  எனவாட் கொளவந்து
கணைதொட் டவனூர் கடவூரே.

மணை=மணமேடை.
கணை=ஓலைமுத்திரை.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.




--

Siva Siva

unread,
Jun 17, 2010, 6:00:38 PM6/17/10
to santhav...@googlegroups.com

8)
விரையும் வினைகள் அணுகாத
அரணைப் பெறநீ அடைநெஞ்சே
விரலால் அவுணன் விறல்தீர்த்துக்
கரவாள் தருவான் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/16 Siva Siva <naya...@gmail.com>

7)


thangamani

unread,
Jun 18, 2010, 3:55:06 AM6/18/10
to சந்தவசந்தம்
தமிழ்லெக்ஸிகனில் கண்டேன்.
கணை என்னும் சொல்லுக்குப் பொருள் தேடியதில்,
கீழ்க்கண்ட பொருள் கண்டேன். நான் புரிந்துகொண்டது
தவறோ?

5. ஓலைமுகப்பாசுரம் ōlai-muka-p-pācuram : (page 630)

ஓலைமுகப்பாசுரம் ōlai-muka-p-pācuram
, n. < id. +. Prefactory address in a letter on a palmyra-leaf;
கடிதத்தொடக்கத்தெழுதும் வக் கணை. (சிலப். 13, 87, உரை.)

ஓலைமுத்திரை ōlai-muttirai
, n. < id. +. Stamp imprinted on a palmyra-leaf document;


On Jun 18, 2:59 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> // கணை=ஓலைமுத்திரை //
> இச்சொல்லுக்கு இப்பொருள் உண்டா? OTL-ல் காண்கிலேன்.
>
> அதேபோல், 'பிணை = அடிமை' என்ற பொருளும் உண்டா?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/17 thangamani <tvthangam...@gmail.com>


>
> > புணையே எனவே புகல்நீ நெஞ்சே!
> > மணையே றியசுந் தரர்தன்னை
> > பிணைநீ  எனவாட் கொளவந்து
> > கணைதொட் டவனூர் கடவூரே.
>
> > மணை=மணமேடை.
> > கணை=ஓலைமுத்திரை.
>
> > சிவா!சரிபார்க்கவும்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 18, 2010, 7:44:21 AM6/18/10
to santhav...@googlegroups.com
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.2.tamillex.363742

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?p.11:121.tamillex

வக்கணை¹ vakkaṇai - n. [K. vakkaṇe.] 1. Formal portion of a letter or other document; honorific superscription in a letter; கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம். (நாமதீப. 654.) 2. Words of courtesy; உபசார வார்த்தை. வக்கணையா லின்பம் வருமோ (தாயு. பராபர. 213). 3. Flowery or rhetorical speech or statement; வருணனை. வக்கணைப்பேச்சல்ல (இராமநா. உயுத். 30). 4. See வக்கணம்¹, 2, 3, 4, 5, 7. (யாழ். அக.) 5. Skilful talk; சமத்காரப் பேச்சு. Loc.

2010/6/18 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Jun 18, 2010, 10:00:05 AM6/18/10
to சந்தவசந்தம்
கணை என்பது மண்வெட்டி என்னும் பொருளில்
செய்துள்ளேன்.சரிபார்க்கவும்.

புணையாய் வருமே புகல்நெஞ்சே!
துணையா ருமிலா தவந்திக்குப்
பிணையா ளெனவே அருள்செய்யக்


கணைதொட் டவனூர் கடவூரே.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 18, 4:44 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.2.tami...
>
> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?p.11:121.tam...
>
> வக்கணை¹ vakkaṇai - *n*. [K. *vakkaṇe*.] 1. Formal portion of a letter or


> other document; honorific superscription in a letter; கடிதம் முதலியவற்றின்
> முகப்புவாசகம். (நாமதீப. 654.) 2. Words of courtesy; உபசார வார்த்தை. வக்கணையா
> லின்பம் வருமோ (தாயு. பராபர. 213). 3. Flowery or rhetorical speech or
> statement; வருணனை. வக்கணைப்பேச்சல்ல (இராமநா. உயுத். 30). 4. See வக்கணம்¹, 2,

> 3, 4, 5, 7. (யாழ். அக.) 5. Skilful talk; சமத்காரப் பேச்சு. *Loc*.
>
> 2010/6/18 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Jun 18, 2010, 7:45:28 PM6/18/10
to santhav...@googlegroups.com

9)
தரியாத் துயர்கள் தளையெல்லாம்
பிரியக் கருதில் அடைநெஞ்சே
எரியாய் எழுநாள் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/17 Siva Siva <naya...@gmail.com>

8)


thangamani

unread,
Jun 19, 2010, 4:31:42 AM6/19/10
to சந்தவசந்தம்
நிரலாய் வினையால் விளைதுன்பம்
வரவாய் அணுகா(து) அடைநெஞ்சே!
அரனார் அவுணன் விறல்தீர்த்து
கரவாள் தருவார் கடவூரே.


சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 18, 3:00 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> விரையும் வினைகள் அணுகாத
> அரணைப் பெறநீ அடைநெஞ்சே
> விரலால் அவுணன் விறல்தீர்த்துக்
> கரவாள் தருவான் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/16 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jun 19, 2010, 7:50:31 AM6/19/10
to சந்தவசந்தம்
நிரலாய் வினைசெய் துயர்சொல்லத்
தரமன் றெனநீ அடைநெஞ்சே!

அரனார் அவுணன் விறல்தீர்த்து
கரவாள் தருவார் கடவூரே.

சிவா!சரிபார்க்கவும்.

சற்று மாறுதல் செய்து எழுதியுள்ளேன்.

அன்புடன்,
தங்கமணி.

Siva Siva

unread,
Jun 20, 2010, 10:33:55 PM6/20/10
to santhav...@googlegroups.com

10)
சிவனைப் பரவார் சிலவீணர்;
அவலக் குழிவீழ்ந் தழிவாரே;
பவநோய் விலகப் பணிநெஞ்சே
கவசத் தலமாம் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/18 Siva Siva <naya...@gmail.com>

9)

thangamani

unread,
Jun 21, 2010, 4:53:17 AM6/21/10
to சந்தவசந்தம்
புரியா மயலாம் மயக்கங்கள்
இரியக் கருதில் அடைநெஞ்சே!
கரிகா டுடையான் அடிதேடும்

கரியாற் கரியான் கடவூரே.


சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 19, 4:45 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> தரியாத் துயர்கள் தளையெல்லாம்
> பிரியக் கருதில் அடைநெஞ்சே
> எரியாய் எழுநாள் அடிதேடும்
> கரியாற் கரியான் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/17 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jun 21, 2010, 7:26:26 AM6/21/10
to சந்தவசந்தம்
கவலை மிகுஇப் புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம் தருசிவ .னருளென்னும்
கவசத் தலமாம் கடவூரே!.

அவசம்=வசமின்மை.பரவசம்.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


On Jun 21, 7:33 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> சிவனைப் பரவார் சிலவீணர்;
> அவலக் குழிவீழ்ந் தழிவாரே;
> பவநோய் விலகப் பணிநெஞ்சே
> கவசத் தலமாம் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/6/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 21, 2010, 7:45:30 AM6/21/10
to santhav...@googlegroups.com


2010/6/21 thangamani <tvthan...@gmail.com>

கவலை மிகுஇப்  புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம்  தருசிவ .னருளென்னும்
கவசத் தலமாம் கடவூரே!.

அவசம்=வசமின்மை.பரவசம்.

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


தருசிவன் - இச்சீர், அமைப்பிலிருந்து மாறுபடுகிறது.
 

On Jun 21, 7:33 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> சிவனைப் பரவார் சிலவீணர்;
> அவலக் குழிவீழ்ந் தழிவாரே;
> பவநோய் விலகப் பணிநெஞ்சே
> கவசத் தலமாம் கடவூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>




--

thangamani

unread,
Jun 21, 2010, 1:43:42 PM6/21/10
to சந்தவசந்தம்
கவலை மிகுஇப் புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம் தருமின் அருள்தங்கும்

கவசத் தலமாம் கடவூரே!.

அவசம்=வசமின்மை.பரவசம்.

சிவா!சரிபார்க்கவும்.

>
>// தருசிவன் - இச்சீர், அமைப்பிலிருந்து மாறுபடுகிறது.//
>மிக்க நன்றி சிவா!பிறகுதான் பார்த்தேன்.
சரிசெய்து இட்டிருக்கிறேன்.


அன்புடன்,
தங்கமணி.


On Jun 21, 4:45 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010/6/21 thangamani <tvthangam...@gmail.com>


>
> > கவலை மிகுஇப்  புவிவாழ்வில்
> > அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
> > அவசம்  தருசிவ .னருளென்னும்
> > கவசத் தலமாம் கடவூரே!.
>
> > அவசம்=வசமின்மை.பரவசம்.
>
> > சிவா!சரிபார்க்கவும்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> தருசிவன் - இச்சீர், அமைப்பிலிருந்து மாறுபடுகிறது.
>
>
>
> > On Jun 21, 7:33 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > 10)
> > > சிவனைப் பரவார் சிலவீணர்;
> > > அவலக் குழிவீழ்ந் தழிவாரே;
> > > பவநோய் விலகப் பணிநெஞ்சே
> > > கவசத் தலமாம் கடவூரே.
>
> > > அன்புடன்,
> > > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jun 21, 2010, 9:23:37 PM6/21/10
to santhav...@googlegroups.com

இத்தொடரின் கடைசிப் பாடல்.

11)
உயிருக்(கு) ஒருநற் றுணைவேண்டில்
இயலும் பணிசெய்(து) அடைநெஞ்சே
மயிலாள் ஒருபால் மகிழ்கின்ற
கயிலைக் கிறைவன் கடவூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/20 Siva Siva <naya...@gmail.com>

10)


Siva Siva

unread,
Jul 4, 2010, 3:18:42 PM7/4/10
to santhav...@googlegroups.com

2010-07-03
சிவபெருமான் ஒருபா ஒருபஃது
----------------------
(
ஒரு விகற்பத்தால் அமைந்த நேரிசை வெண்பா.
பாடல்களின் முதல் ஈரடிகளில் முதற்சீர் மடக்குப் பெற்று வந்துள்ளது)

1)
வந்திக்கு முன்வந்து மண்சுமந்தாய் நின்கழல்
வந்திக்கு முன்னன்பர் வாயிலுள்ளாய் - உந்திக்குப்
பந்திக்கு முந்திக்கொள் பண்புடையேன் என்னையும்தாள்
சிந்திக்கு மாறரனே செய்.

2)
செய்ய திருப்பாதா செஞ்சடையா எல்லாமே
செய்ய வலவனே தேவர்க்கும் - ஐயனே
வெய்ய வினைதீர் விரைகழல் போற்றிமனம்
நையத் திருவருள் நல்கு.

3)
குழையா மனத்தேனும் கும்பிட்(டு)ஓர் காதில்
குழையா மணிகண்டா கோனே - பழையா
உழையார் கரனே மழையார் சடையா
அழகா எனவே அருள்.

4)
அருளார் கடையடைந்(து) அல்லல் உறலேன்?
அருளார் சிவனை அடைந்தால், - திருவும்
மருவும்; வினையும் மறையும்; மனமே,
ஒருவன் திருநாமம் ஓது.

5)
ஓத விடமுண்ட உத்தமன் தாளிணையை
ஓத மறவாதே உன்னெம - தூதர்கள்
வேதனை செய்ய விரைநாளில் வெள்ளேற்று
நாதனே காப்பான் நமை.

6)
நமைவினை சூழ்ந்து நரகிலிடு முன்னம்
நமைவினை எல்லாம் நலிய - உமைகோன்
இமையவர் நாதன் எருதேறி பாத
கமலம் இரண்டைக் கருது.

7)
கருவார் வினைகள் கழல விரும்பின்,
கருவார் பொழில்சூழ் கடவூர்ப் - பெருமான்
திருவார் கழல்கள் தினமும் தொழுவாய்;
தருவார்; அவர்வான் தரு.

8)
தருவாய் இதுவேநம் சங்கரனைப் போற்றாய்
தருவாய் எதையும் தருவான் - பெருமான்
அருமா மறையன் அடைந்தார்க் கருள்வான்
கருமா மிடறன் கடிது.

9)
கடிவான் மலரால் கழலைத் தொழுதால்
கடிவான் பழவினைக் கட்டின் - பிடிதான்;
முடிநான் முகனும் அடிமால் முயலும்
படிவான் கடந்தானைப் பாடு.

10)
பாடு விடவேண்டில் பார்வதி கோன்புகழ்
பாடு மடநெஞ்சே; பாலிப்பான் - வீடு,மதி
சூடும் பெருமான், சடையிடைத் தூநதி
ஓடும் இறைவன் உவந்து;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/6/21 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Jul 5, 2010, 8:38:30 AM7/5/10
to சந்தவசந்தம்
பக்தியில் தோன்றிய பாபஃதும் முத்தனைய
பத்தியென்(று) உள்ளத்தைப் பற்றியது!-- முத்தனை
நித்தியம் போற்றியும் நெஞ்சார உன்னிடும்
சித்தியைத் தேர்பாடல் சீர்.

பத்தி=வரிசை.

அன்புடன்,
தங்கமணி.

> 2010/6/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jul 5, 2010, 9:24:28 AM7/5/10
to santhav...@googlegroups.com

சில சொல் விளக்கங்களோடு:

2010-07-03

சிவபெருமான் ஒருபா ஒருபஃது
----------------------
(
ஒரு விகற்பத்தால் அமைந்த நேரிசை வெண்பா.
பாடல்களின் முதல் ஈரடிகளில் முதற்சீர் மடக்குப் பெற்று வந்துள்ளது)

1)
வந்திக்கு முன்வந்து மண்சுமந்தாய் நின்கழல்
வந்திக்கு முன்னன்பர் வாயிலுள்ளாய் - உந்திக்குப்
பந்திக்கு முந்திக்கொள் பண்புடையேன் என்னையும்தாள்
சிந்திக்கு மாறரனே செய்.

வந்தி - 1) ஒரு பக்தரின் பெயர்; 2) வந்தித்தல் - வணங்குதல்;
உந்தி - வயிறு;

2)

செய்ய திருப்பாதா செஞ்சடையா எல்லாமே
செய்ய வலவனே தேவர்க்கும் - ஐயனே
வெய்ய வினைதீர் விரைகழல் போற்றிமனம்
நையத் திருவருள் நல்கு.

செய்ய - 1) சிவந்த; 2) செய்தல் - ஆற்றுதல்;
வெய்ய வினை - வெம்மையான வினைகள்;
விரை கழல் - மணம்கமழும் திருவடி;
மனம் நைதல் - மனம் உருகுதல்;

3)

குழையா மனத்தேனும் கும்பிட்(டு)ஓர் காதில்
குழையா மணிகண்டா கோனே - பழையா
உழையார் கரனே மழையார் சடையா
அழகா எனவே அருள்.

குழையா - 1) குழையாத - நெகிழாத; 2) குழை அணிந்தவனே;
பழையா - பழையவனே;
உழை ஆர் கரன் - மான் ஏந்திய கையினனே;
மழை ஆர் சடையா - நீர் பொருந்திய சடையானே;

4)

அருளார் கடையடைந்(து) அல்லல் உறலேன்?
அருளார் சிவனை அடைந்தால், - திருவும்
மருவும்; வினையும் மறையும்; மனமே,
ஒருவன் திருநாமம் ஓது.

அருளார் - 1) கொடாதவர்கள்; 2) அருள் ஆர் - அருள் நிறைந்த;
கடை - வாயில்;
மருவுதல் - பொருந்துதல்;
ஒருவன் - ஒப்பற்றவன்;

5)

ஓத விடமுண்ட உத்தமன் தாளிணையை
ஓத மறவாதே உன்னெம - தூதர்கள்
வேதனை செய்ய விரைநாளில் வெள்ளேற்று
நாதனே காப்பான் நமை.

ஓத விடம் - கடல் நஞ்சு;
உன்னெம தூதர்கள் - "உன்னு; எம தூதர்கள்"
உன்னு - எண்ணு;
வெள் ஏற்று நாதன் - வெள்ளை இடபத்தின் மேல் வரும் தலைவன்;
நமை - நம்மை;

6)

நமைவினை சூழ்ந்து நரகிலிடு முன்னம்
நமைவினை எல்லாம் நலிய - உமைகோன்
இமையவர் நாதன் எருதேறி பாத
கமலம் இரண்டைக் கருது.

நமைவினை - 1) நம்மை வினை; 2) நமைக்கிற வினை;
நமைத்தல் - வருத்துதல்;
நலிதல் - அழிதல்;
கருது - எண்ணு; விரும்பு;

7)

கருவார் வினைகள் கழல விரும்பின்,
கருவார் பொழில்சூழ் கடவூர்ப் - பெருமான்
திருவார் கழல்கள் தினமும் தொழுவாய்;
தருவார்; அவர்வான் தரு.

கரு ஆர் வினைகள் - கருவில் பிணைக்கும் வினைகள் - பிறவி கொடுக்கும் வினைகள்;
(
ஆர்த்தல் - கட்டுதல்);
கழலுதல் - நீங்குதல்;
கரு வார் பொழில் - கருமையாகிய பெரிய சோலை;
திரு ஆர் கழல் - நன்மை பொருந்திய திருவடி;
தருவார் - வரம் அளிப்பார்;
வான் தரு - கற்பக மரம்;

8)

தருவாய் இதுவேநம் சங்கரனைப் போற்றாய்
தருவாய் எதையும் தருவான் - பெருமான்
அருமா மறையன் அடைந்தார்க் கருள்வான்
கருமா மிடறன் கடிது.

தருவாய் - 1) தக்க சமயம்; 2) கற்பக மரமாய்;
கரு மா மிடறன் - அழகிய நீலகண்டம் உடையவன்;
கடிது - விரைவாய்;

9)

கடிவான் மலரால் கழலைத் தொழுதால்
கடிவான் பழவினைக் கட்டின் - பிடிதான்;
முடிநான் முகனும் அடிமால் முயலும்
படிவான் கடந்தானைப் பாடு.

கடி வான் மலர் - வாசனைமிக்க அழகிய பூக்கள்;
கடிதல் - அழித்தல்; விலக்குதல்;
முயலும்படி வான் கடந்தானை - தேடும்படி விண்ணைக் கடந்து நின்றவனை;

10)

பாடு விடவேண்டில் பார்வதி கோன்புகழ்
பாடு மடநெஞ்சே; பாலிப்பான் - வீடு,மதி
சூடும் பெருமான், சடையிடைத் தூநதி
ஓடும் இறைவன் உவந்து

;

"
பாடு விடவேண்டில் பார்வதி கோன்புகழ் பாடு மடநெஞ்சே; மதி சூடும் பெருமான், சடையிடைத் தூநதி ஓடும் இறைவன் உவந்து வீடு பாலிப்பான்" - என்று கொண்டுகூட்டிப் பொருள்கொள்க.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/4 Siva Siva <naya...@gmail.com>

2010-07-03
சிவபெருமான் ஒருபா ஒருபஃது
----------------------
(
ஒரு விகற்பத்தால் அமைந்த நேரிசை வெண்பா.
பாடல்களின் முதல் ஈரடிகளில் முதற்சீர் மடக்குப் பெற்று வந்துள்ளது)


Siva Siva

unread,
Jul 19, 2010, 8:04:12 PM7/19/10
to santhav...@googlegroups.com

2010-07-18
திருப்பாதிரிப்புலியூர்
------------------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(
சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - (திருப்புள்ளிருக்கு வேளூர்) - 'கள்ளார்ந்த பூங்கொன்றை...')

1)
வரையிலதோர் வாரியென வருவினையால் வருந்தாமே
கரங்கொடுத்துக் காக்கின்ற கண்ணுதலான் கருதுமிடம்
திரையிலெறிந் தாலுமரன் திருப்பெயரை நாவரசர்
பரவியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
வி
. சுப்பிரமணியன்



2010/7/5 Siva Siva <naya...@gmail.com>

சில சொல் விளக்கங்களோடு:

2010-07-03

சிவபெருமான் ஒருபா ஒருபஃது
----------------------

Siva Siva

unread,
Jul 20, 2010, 9:35:29 PM7/20/10
to santhav...@googlegroups.com

2)
நாடிவரும் வினைக்கடலுள் நாமாழா வணம்காக்கும்,
ஓடிவரு நதிதன்னை ஒளிர்சடையுள் வைத்தவனூர்,
மாடிவரும் மாதேவன் நாமத்தை நாவரசர்
பாடியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே.

இவர்தல் - ஏறுதல்; செல்லுதல்; உலாவுதல்;
மாடிவரும் மாதேவன் - மாடு இவரும் மாதேவன் - காளையின்மேல் செல்லும் மகாதேவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/19 Siva Siva <naya...@gmail.com>

2010-07-18
திருப்பாதிரிப்புலியூர்
------------------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(
சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - (திருப்புள்ளிருக்கு வேளூர்) - 'கள்ளார்ந்த பூங்கொன்றை...')

1)

ka thamizhamallan

unread,
Jul 20, 2010, 10:23:44 PM7/20/10
to santhav...@googlegroups.com
நன்றி
முனைவர் க.தமிழமல்லன்

21 ஜூலை, 2010 7:05 am அன்று, Siva Siva <naya...@gmail.com> எழுதியது:

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Jul 21, 2010, 9:19:02 PM7/21/10
to santhav...@googlegroups.com

3)
மேன்மையிலா வினையடியார் மேல்மேவா வணம்காக்கும்
பான்மையினான் மான்விழியாள் பங்கனவன் உறையுமிடம்
வான்மதிசூ டரனருளால் மாகடலில் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடை பாதிரிப் புலியூரே.

வான்மதி - வான் மதி (வான் - வானம்; அழகு) / வால் மதி; (வால் - வெண்மை);
போன்மிதந்து - போல் + மிதந்து;

அன்புடன்
,

வி. சுப்பிரமணியன்



2010/7/20 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Jul 22, 2010, 6:01:56 AM7/22/10
to சந்தவசந்தம்
சரமாகப் பாய்கின்ற சகலவினைத் தொடரறுக்கும்
வரமாகத் திகழ்கின்ற வல்லவனின் அஞ்செழுத்தை
திரமாகும் கதியாக சிந்தைகொளும் நாவரசர்

பரவியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே.

சிவா, சரிபார்க்கவும்.
அன்புடன்,
தங்கமணி.

On Jul 19, 5:04 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010-07-18
> திருப்பாதிரிப்புலியூர்
> ------------------------
> (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
> (சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - (திருப்புள்ளிருக்கு வேளூர்) - 'கள்ளார்ந்த
> பூங்கொன்றை...')
>
> 1)
> வரையிலதோர் வாரியென வருவினையால் வருந்தாமே
> கரங்கொடுத்துக் காக்கின்ற கண்ணுதலான் கருதுமிடம்
> திரையிலெறிந் தாலுமரன் திருப்பெயரை நாவரசர்
> பரவியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே.
>
>  அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/5 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > சில சொல் விளக்கங்களோடு:
>
> > 2010-07-03
> > சிவபெருமான் ஒருபா ஒருபஃது
> > ----------------------
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jul 22, 2010, 4:05:49 PM7/22/10
to santhav...@googlegroups.com

4)
கடல்போல வினைவரினும் கழல்போற்றும் அடியார்கட்(கு)
இடரில்லா நிலையளிக்கும் எம்பெருமான் மேவியவூர்,
அடலேற்றன் திருப்பெயர்சொல் அப்பர்க்குக் கல்லுமொரு
படகாகி அவர்அடைந்த பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/21 Siva Siva <naya...@gmail.com>

3)

thangamani

unread,
Jul 23, 2010, 8:57:42 AM7/23/10
to சந்தவசந்தம்

வாடியுளம் வெம்பவரும் வல்வினைகள் பொடியாகத்
தேடிவரும் அருளாளன் சீருரைக்கும் நாமமதைச்
சூடிமகிழ் சிந்தைகொளும் துய்யடியார் நாவரசர்
பாடியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே....2

அன்புடன்,
தங்கமணி.

On Jul 20, 6:35 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> நாடிவரும் வினைக்கடலுள் நாமாழா வணம்காக்கும்,
> ஓடிவரு நதிதன்னை ஒளிர்சடையுள் வைத்தவனூர்,
> மாடிவரும் மாதேவன் நாமத்தை நாவரசர்
> பாடியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே.
>
> இவர்தல் - ஏறுதல்; செல்லுதல்; உலாவுதல்;
> மாடிவரும் மாதேவன் - மாடு இவரும் மாதேவன் - காளையின்மேல் செல்லும் மகாதேவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/19 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2010-07-18
> > திருப்பாதிரிப்புலியூர்
> > ------------------------
> > (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
> > (சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - (திருப்புள்ளிருக்கு வேளூர்) - 'கள்ளார்ந்த
> > பூங்கொன்றை...')
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jul 23, 2010, 9:06:17 AM7/23/10
to சந்தவசந்தம்
வான்பிறையும் கங்கையையும் வார்சடையில் அணிந்தவனாம்
தேன்குழலி உமைமகிழும் செங்கழலன் ஈமயெரி
கான்வெளியில் நடமிடுவான் கருணையினால் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடைப் பாதிரிப் புலியூரே.


அன்புடன்,
தங்கமணி.


On Jul 21, 6:19 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> மேன்மையிலா வினையடியார் மேல்மேவா வணம்காக்கும்
> பான்மையினான் மான்விழியாள் பங்கனவன் உறையுமிடம்
> வான்மதிசூ டரனருளால் மாகடலில் கல்நாவாய்
> போன்மிதந்து அப்பரடை பாதிரிப் புலியூரே.
>
> வான்மதி - வான் மதி (வான் - வானம்; அழகு) / வால் மதி; (வால் - வெண்மை);
> போன்மிதந்து - போல் + மிதந்து;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jul 23, 2010, 9:24:38 AM7/23/10
to சந்தவசந்தம்
தொடர்வினைகள் தருதுயரைத் தொலைந்தோடச் செய்திடுவான்;;
சுடரொளிரும் நுதல்விழியன்; சோதியெனும் அருள்பெருக்கில்
அடைவிக்கும் அரன்பேர்சொல் அப்பர்க்குக் கல்லுமொரு
படகாகி அவரடைந்த பாதிரிப் புலியூரே.


அன்புடன்,
தங்கமணி.

On Jul 22, 1:05 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> கடல்போல வினைவரினும் கழல்போற்றும் அடியார்கட்(கு)
> இடரில்லா நிலையளிக்கும் எம்பெருமான் மேவியவூர்,
> அடலேற்றன் திருப்பெயர்சொல் அப்பர்க்குக் கல்லுமொரு
> படகாகி அவர்அடைந்த பாதிரிப் புலியூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jul 23, 2010, 6:25:50 PM7/23/10
to santhav...@googlegroups.com
தேன்மொழியாள் - படித்திருக்கிறேன்.
தேன்குழலி என்றும் வரலாமா? அறிந்தோர் சொல்லின் உதவும்.

2010/7/23 thangamani <tvthan...@gmail.com>

வான்பிறையும் கங்கையையும் வார்சடையில்  அணிந்தவனாம்
தேன்குழலி  உமைமகிழும் செங்கழலன் ஈமயெரி
கான்வெளியில் நடமிடுவான் கருணையினால் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடைப்  பாதிரிப் புலியூரே.


அன்புடன்,
தங்கமணி.



--

Siva Siva

unread,
Jul 23, 2010, 6:27:19 PM7/23/10
to santhav...@googlegroups.com

5)
தணியாத வினைக்கடலுள் தவிக்கின்ற நிலைதவிர்த்துப்,
பணிசெய்யும் அடியார்க்குப் பரிந்தருளும் பசுபதியூர்,
மணிகண்டன் மலரடியை மனத்திருத்தி நாவரசர்
பணியக்கல் மிதந்தடைந்த பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/22 Siva Siva <naya...@gmail.com>

4)


Siva Siva

unread,
Jul 24, 2010, 8:16:08 PM7/24/10
to santhav...@googlegroups.com

6)
துணையாக உடன்நின்று தொண்டரைக்காத் தருள்கின்ற
இணையில்லா அருளாளன் எருதேறும் இறைவனிடம்,
பிணைகல்லும் பெருமானின் பெயர்பரவும் அப்பர்க்குப்
புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே.

புணை - தெப்பம்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/23 Siva Siva <naya...@gmail.com>

5)

thangamani

unread,
Jul 25, 2010, 6:49:33 AM7/25/10
to சந்தவசந்தம்
துணியாகும் பிறைதன்னை சுடர்மேவும் சடைசூடும்
மணிநீல மிடறுடையான் மனத்திருத்தும் ஆயிரமாம்
அணியான நாமமதற்(கு) அன்புடைய நாவரசர்

பணியக்கல் மிதந்தடைந்த பாதிரிப் புலியூரே.


அன்புடன்,
தங்கமணி.

On Jul 24, 3:27 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> தணியாத வினைக்கடலுள் தவிக்கின்ற நிலைதவிர்த்துப்,
> பணிசெய்யும் அடியார்க்குப் பரிந்தருளும் பசுபதியூர்,
> மணிகண்டன் மலரடியை மனத்திருத்தி நாவரசர்
> பணியக்கல் மிதந்தடைந்த பாதிரிப் புலியூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/22 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jul 25, 2010, 7:22:46 AM7/25/10
to சந்தவசந்தம்
சிவா!சரிசெய்து இட்டிருக்கிறேன்.மிக்க நன்றி!சிவா!


வான்பிறையும் கங்கையையும் வார்சடையில் அணிந்தவனாம்

மீன்விழியாள் உமைமகிழும் வெண்ணீற்றன் ஈமயெரி


கான்வெளியில் நடமிடுவான் கருணையினால் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடைப் பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Jul 24, 3:25 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> தேன்மொழியாள் - படித்திருக்கிறேன்.
> தேன்குழலி என்றும் வரலாமா? அறிந்தோர் சொல்லின் உதவும்.
>

> 2010/7/23 thangamani <tvthangam...@gmail.com>


>
> > வான்பிறையும் கங்கையையும் வார்சடையில்  அணிந்தவனாம்
> > தேன்குழலி  உமைமகிழும் செங்கழலன் ஈமயெரி
> > கான்வெளியில் நடமிடுவான் கருணையினால் கல்நாவாய்
> > போன்மிதந்து அப்பரடைப்  பாதிரிப் புலியூரே.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>

> --http://nayanmars.netne.net/

SUBBAIER RAMASAMI

unread,
Jul 25, 2010, 8:03:25 AM7/25/10
to santhav...@googlegroups.com

அஞ்செழுத்தைத்

கதியாகச்

தரவு கொச்சகத்திலும் விருத்தம் போல எதுகைகள் ஒரே வகைக் காய்ச்சீராக அமைவது நலம்.

இங்கே பரவியுய்ந்து என்னும் சீரை மாற்றல் நலம்.

 

இலந்தை


2010/7/22 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Jul 25, 2010, 8:42:48 AM7/25/10
to சந்தவசந்தம்
//அஞ்செழுத்தைத்
கதியாகச் //
ஒற்று இட்டேன்.சந்தேகம் நீங்கிச் சரியாக என்று
எழுதுவேனோ?
(நீங்கள் எனக்களித்த'ஐந்திலக்கணக்கணம்'படிக்கிறேன்.
திரு.அனந்த் அவர்களும் பொறுமையுடன் எடுத்துக் கூறுகிறார்.
நான் சரியாக ஒற்றுகள் இட,விட முயலுவேன் நம்பிக்கையுடன்.)


//தரவு கொச்சகத்திலும் விருத்தம் போல எதுகைகள் ஒரே வகைக் காய்ச்சீராக
அமைவது
நலம்.//
கவனம் கொள்கிறேன்.


//இங்கே பரவியுய்ந்து என்னும் சீரை மாற்றல் நலம்.//
பரனேற்றிக் கரையேறு..சரியாகுமா?

இலந்தை

சரமாகப் பாய்கின்ற சகலவினைத் தொடரறுக்கும்

வரமாகத் திகழ்கின்ற வல்லவனின் அஞ்செழுத்தைத்
திரமாகும் கதியாகச் சிந்தைகொளும் நாவரசர்
பரனேற்றிக் கரையேறு பாதிரிப் புலியூரே.

திரு.இலந்தை அவர்களுக்கு,
தாங்கள் சுட்டிய பிழைகள் சரிசெய்தேன்.


மிக்கநன்றி!

அன்புடன்,
தங்கமணி.


On Jul 25, 5:03 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> அஞ்செழுத்தைத்
>
> கதியாகச்
>
> தரவு கொச்சகத்திலும் விருத்தம் போல எதுகைகள் ஒரே வகைக் காய்ச்சீராக அமைவது
> நலம்.
>
> இங்கே பரவியுய்ந்து என்னும் சீரை மாற்றல் நலம்.
>
> இலந்தை
>

> 2010/7/22 thangamani <tvthangam...@gmail.com>

> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -

Siva Siva

unread,
Jul 25, 2010, 10:39:39 PM7/25/10
to santhav...@googlegroups.com

7)
முனிவொடுசேர் முன்வினையுள் மூழ்காத வாறடியார்க்
கினிதருளும் சிவபெருமான் ஏந்திழையோ டுறையுமிடம்,
கனிவறியாச் சமண்மூடர் கடலிலெறிந் தாலுமப்பர்
புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே.

பதம் பிரித்து:
முனிவொடு சேர் முன்வினையுள் மூழ்காதவாறு அடியார்க்கு
இனிது அருளும் சிவபெருமான் ஏந்திழையோடு உறையும் இடம்,
கனிவு அறியாச் சமண் மூடர் கடலில் எறிந்தாலும் அப்பர்
புனிதன் அடி போற்றி அடை பாதிரிப் புலியூரே.

முனிவு - கோபம்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/24 Siva Siva <naya...@gmail.com>

6)


thangamani

unread,
Jul 26, 2010, 10:14:15 AM7/26/10
to சந்தவசந்தம்
கணைவீசு மதனைத்தன் கண்ணுதலால் செற்றவர்க்குத்
திணையாக அன்புறினும் திருவருள்செய் இறைவனவன்
அணைகின்ற இறையன்பால் ஆழ்கல்லும் அப்பர்க்குப்

புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Jul 25, 5:16 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> துணையாக உடன்நின்று தொண்டரைக்காத் தருள்கின்ற
> இணையில்லா அருளாளன் எருதேறும் இறைவனிடம்,
> பிணைகல்லும் பெருமானின் பெயர்பரவும் அப்பர்க்குப்
> புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே.
>
> புணை - தெப்பம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jul 27, 2010, 5:07:32 AM7/27/10
to சந்தவசந்தம்
பனிபடரும் வெள்ளிமலை பணியவரும் தெய்வமவன்
நனிசுடுவெவ் வினையகல நலமருளும் துணைவனவன்
இனிதறியா அமணர்கள் எறிதிரையிட் டாலுமப்பர்

புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
தங்கமணி.


On Jul 26, 7:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> முனிவொடுசேர் முன்வினையுள் மூழ்காத வாறடியார்க்
> கினிதருளும் சிவபெருமான் ஏந்திழையோ டுறையுமிடம்,
> கனிவறியாச் சமண்மூடர் கடலிலெறிந் தாலுமப்பர்
> புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே.
>
> பதம் பிரித்து:
> முனிவொடு சேர் முன்வினையுள் மூழ்காதவாறு அடியார்க்கு
> இனிது அருளும் சிவபெருமான் ஏந்திழையோடு உறையும் இடம்,
> கனிவு அறியாச் சமண் மூடர் கடலில் எறிந்தாலும் அப்பர்
> புனிதன் அடி போற்றி அடை பாதிரிப் புலியூரே.
>
> முனிவு - கோபம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/24 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

SUBBAIER RAMASAMI

unread,
Jul 27, 2010, 10:00:46 AM7/27/10
to santhav...@googlegroups.com

அமணர்கள் என்னும் இடத்தில் ஓசை குறைகிறது

அமண்தீயர், அமண் மூடர், அமணோர்கள் என்பதுபோன்ற சொற்களை எழுதலாம்

இலந்தை


2010/7/27 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

thangamani

unread,
Jul 27, 2010, 10:15:19 AM7/27/10
to சந்தவசந்தம்
திரு.இலந்தை அவர்களுக்கு,
முதலில் 'அமண்தீயர்' என எழுதிப்பின்,
அமணர்கள் என்று எழுதினேன்.
சுட்டுதலுக்கு மிகவும் நன்றி!
சரிசெய்து எழுதியுள்ளேன்.

பனிபடரும் வெள்ளிமலை பணியவரும் தெய்வமவன்
நனிசுடுவெவ் வினையகல நலமருளும் துணைவனவன்

இனிதறியா அமண்தீயர் எறிதிரையிட் டாலுமப்பர்


புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Jul 27, 7:00 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> அமணர்கள் என்னும் இடத்தில் ஓசை குறைகிறது
>
> அமண்தீயர், அமண் மூடர், அமணோர்கள் என்பதுபோன்ற சொற்களை எழுதலாம்
>
> இலந்தை
>

> 2010/7/27 thangamani <tvthangam...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 27, 2010, 11:29:12 AM7/27/10
to santhav...@googlegroups.com

பாடல்களை சிவசிவாவை ஒட்டி அழகாக எழுதிவருகிறீர்கள்.

திணையாக = தினையாக (தினையளவு ஆக) என்றிருக்க வேணுமோ?

 

அனந்த்


2010/7/26 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

thangamani

unread,
Jul 28, 2010, 2:17:27 AM7/28/10
to சந்தவசந்தம்
கணைவீசு மதனைத்தன் கண்ணுதலால் செற்றவர்க்கு
அணையாத அன்புகொண்டால் அருள்வழங்கும் இறைவனவன்

அணைகின்ற இறையன்பால் ஆழ்கல்லும் அப்பர்க்குப்
புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே.

திரு.அனந்த் அவர்களுக்கு,
பாராட்டுக்கு மகிழ்ச்சி.
தங்கள் சுட்டுதலுக்கு நன்றிமிக உடையேன்.
ஆம்.'தினை'என்பதற்கு 'திணை'என்று எழுதிவிட்டேன்.
மூன்றுசுழி 'ணை' காரத்திற்கு
ரெண்டுசுழி'னை'காரம் சிறந்த எதுகையாகுமா?
எனவே சிறிது மாற்றி எழுதினேன்.நன்றி!

அன்புடன்,
தங்கமணி.


On Jul 27, 8:29 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> பாடல்களை சிவசிவாவை ஒட்டி அழகாக எழுதிவருகிறீர்கள்.
>
> திணையாக = தினையாக (தினையளவு ஆக) என்றிருக்க வேணுமோ?
>
> அனந்த்
>

> 2010/7/26 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Jul 28, 2010, 8:14:16 PM7/28/10
to santhav...@googlegroups.com

8)
அகலாத வினைக்கட்டை அறுத்தடியார்க் கருள்செய்யும்
பகவான்முன் அரக்கனையும் பாடவைத்த பரமனிடம்,
இகல்கொண்டோர் கடலிலெறிந் தாலுமப்பர் எழுத்தஞ்சைப்
புகல்கொண்டே கரையேறு பாதிரிப் புலியூரே.

பதம் பிரித்து:

அகலாத வினைக்கட்டை அறுத்து அடியார்க்கு அருள்செய்யும்
பகவான், முன் அரக்கனையும் பாடவைத்த பரமன் இடம்,
இகல்கொண்டோர் கடலில் எறிந்தாலும் அப்பர் எழுத்து அஞ்சைப்
புகல்கொண்டே கரையேறு பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/25 Siva Siva <naya...@gmail.com>

7)


Siva Siva

unread,
Jul 29, 2010, 6:09:24 PM7/29/10
to santhav...@googlegroups.com

9)
இன்னலளி வினைக்கடலில் எய்யாவா றடியார்கட்
கின்னருள்செய் ஈசனெல்லை இலாச்சோதி உறையுமிடம்
முன்னமணர் கல்பிணைத்து மூழ்த்தியபோ தப்பரரன்
பொன்னடியைப் போற்றியடை பாதிரிப் புலியூரே.

பதம் பிரித்து:

இன்னல் அளி வினைக்கடலில் எய்யாவாறு அடியார்கட்கு
இன்னருள் செய் ஈசன், எல்லை இலாச் சோதி உறையும் இடம்,
முன் அமணர் கல் பிணைத்து மூழ்த்தியபோது அப்பர் அரன்
பொன்னடியைப் போற்றி அடை பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/28 Siva Siva <naya...@gmail.com>

8)


thangamani

unread,
Jul 30, 2010, 5:03:09 AM7/30/10
to சந்தவசந்தம்
புகைகொண்ட எரிகானில் பொற்கழலன் நடனமதில்
அகலாத அன்புகொள்ளும் அடியவரின் அருளாளன்
பகைகொண்டார் நாவரசைப் பாழியிட்டும் அஞ்செழுத்தைப்
புகலென்றே கரையேறு பாதிரிப் புலியூரே.

பாழி=கடல்.

அன்புடன்,
தங்கமணி

On Jul 29, 5:14 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> அகலாத வினைக்கட்டை அறுத்தடியார்க் கருள்செய்யும்
> பகவான்முன் அரக்கனையும் பாடவைத்த பரமனிடம்,
> இகல்கொண்டோர் கடலிலெறிந் தாலுமப்பர் எழுத்தஞ்சைப்
> புகல்கொண்டே கரையேறு பாதிரிப் புலியூரே.
>
> பதம் பிரித்து:
> அகலாத வினைக்கட்டை அறுத்து அடியார்க்கு அருள்செய்யும்
> பகவான், முன் அரக்கனையும் பாடவைத்த பரமன் இடம்,
> இகல்கொண்டோர் கடலில் எறிந்தாலும் அப்பர் எழுத்து அஞ்சைப்
> புகல்கொண்டே கரையேறு பாதிரிப் புலியூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/25 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Jul 30, 2010, 10:10:06 AM7/30/10
to சந்தவசந்தம்
மின்னலெனும் வாழ்வுதனில் வினைவிளைக்கும் தீங்கழிப்பான்
உன்னவருள் புரிந்தடியார் உள்ளமுறை சோதியவன்
துன்னலர்தாம் நாவரசைத் துள்ளுதிரை இட்டாலும்

பொன்னடியைப் போற்றியடை பாதிரிப் புலியூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Jul 30, 3:09 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> இன்னலளி வினைக்கடலில் எய்யாவா றடியார்கட்
> கின்னருள்செய் ஈசனெல்லை இலாச்சோதி உறையுமிடம்
> முன்னமணர் கல்பிணைத்து மூழ்த்தியபோ தப்பரரன்
> பொன்னடியைப் போற்றியடை பாதிரிப் புலியூரே.
>
> பதம் பிரித்து:
> இன்னல் அளி வினைக்கடலில் எய்யாவாறு அடியார்கட்கு
> இன்னருள் செய் ஈசன், எல்லை இலாச் சோதி உறையும் இடம்,
> முன் அமணர் கல் பிணைத்து மூழ்த்தியபோது அப்பர் அரன்
> பொன்னடியைப் போற்றி அடை பாதிரிப் புலியூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2010/7/28 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

It is loading more messages.
0 new messages