மதிசூடி துதிபாடி - 3

154 views
Skip to first unread message

Siva Siva

unread,
Feb 2, 2011, 6:05:57 PM2/2/11
to santhavasantham
முன்னர் இட்ட பாடல்களை "மதிசூடி துதிபாடி -2" இழையில் காண்க.
(http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/970277b8e6962d93?hl=en# )

Siva Siva

unread,
Feb 2, 2011, 9:00:57 PM2/2/11
to santhavasantham

2010-07-10
பெற்ற பயன் - (ஒருபா ஒருபஃது)
------------------------------------
(
அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள்)

1)
பிறப்பை அறுக்கும் பிரானோர் பிறப்பும்
இறப்பும் இலாமுக்கண் எந்தை; - சிறக்கப்
பிறைக்கும் முடியிலிடம் தந்த பெருமான்;
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/2 Siva Siva <naya...@gmail.com>
முன்னர் இட்ட பாடல்களை "மதிசூடி துதிபாடி -2" இழையில் காண்க.
(http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/970277b8e6962d93?hl=en# )




--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Feb 3, 2011, 6:46:01 PM2/3/11
to santhavasantham

2)
கைசேர்த்து வானோர் கழல்தொழக் காத்தருள்செய்ம்
மைசேர் மிடறன் மலைமகள்சேர் - மெய்காட்டி;
கோணற் பிறையான் குடிகொள் தலங்களைக்
காண நடக்குமென் கால்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/2 Siva Siva <naya...@gmail.com>

2010-07-10
பெற்ற பயன் - (ஒருபா ஒருபஃது)
------------------------------------
(
அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள்)

1)
பிறப்பை அறுக்கும் பிரானோர் பிறப்பும்
இறப்பும் இலாமுக்கண் எந்தை; - சிறக்கப்
பிறைக்கும் முடியிலிடம் தந்த பெருமான்;
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Feb 4, 2011, 7:26:49 PM2/4/11
to santhavasantham

3)
காலால் எமனையுதைத் தன்பரைக் காத்தவன்;
பாலாடும் எம்பெருமான்; பங்கயன் - மாலார்க்கு
முன்னெரியாய் நீண்ட முதல்வன்; அவனடி
தன்னைத் தொழுமென் தலை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/3 Siva Siva <naya...@gmail.com>

2)
கைசேர்த்து வானோர் கழல்தொழக் காத்தருள்செய்ம்
மைசேர் மிடறன் மலைமகள்சேர் - மெய்காட்டி;
கோணற் பிறையான் குடிகொள் தலங்களைக்
காண நடக்குமென் கால்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Feb 5, 2011, 5:54:04 PM2/5/11
to santhavasantham

4)
தலையின்மேல் கங்கையைத் தாங்கியவன்; பிச்சைக்(கு)
அலைகின்ற ஐயன்; அருளின் - நிலையவன்;
கொண்டல் நிறக்கண்டன் கோயிலின் கோபுரத்தைக்
கண்டு மகிழுமென் கண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/4 Siva Siva <naya...@gmail.com>

3)
காலால் எமனையுதைத் தன்பரைக் காத்தவன்;
பாலாடும் எம்பெருமான்; பங்கயன் - மாலார்க்கு
முன்னெரியாய் நீண்ட முதல்வன்; அவனடி
தன்னைத் தொழுமென் தலை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
Feb 6, 2011, 4:15:30 AM2/6/11
to சந்தவசந்தம்
சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தனின்

கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

கைலைப் பதியவன் காலனை உதைத்தவன்
மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்
மைவிழி உமையின் மகிழ்நன் தலந்தொறும்
கைதொழ நடக்குமென் கால்.

காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் தொழவருள் மலையன்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைக்குச்
சாலவும் தாழும் தலை.

அன்புடன்,
தங்கமணி.

பி.கு. கணினி ரிப்பேர் எட்டு நாளாய்..இன்று வந்தேன்.

On Feb 5, 5:26 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> காலால் எமனையுதைத் தன்பரைக் காத்தவன்;
> பாலாடும் எம்பெருமான்; பங்கயன் - மாலார்க்கு
> முன்னெரியாய் நீண்ட முதல்வன்; அவனடி
> தன்னைத் தொழுமென் தலை.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/3 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2)
> > கைசேர்த்து வானோர் கழல்தொழக் காத்தருள்செய்ம்
> > மைசேர் மிடறன் மலைமகள்சேர் - மெய்காட்டி;
> > கோணற் பிறையான் குடிகொள் தலங்களைக்
> > காண நடக்குமென் கால்.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 6, 2011, 8:29:42 AM2/6/11
to santhav...@googlegroups.com
சில நாள்களாய்க் காணவில்லையே என்று எண்ணியிருந்தேன்.

சில இடங்களில் தளையைச் சீர் செய்க.

2011/2/6 thangamani <tvthan...@gmail.com>
சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தனின்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

பந்தனின் * கறைக்கண்டன்  

 
கைலைப் பதியவன் காலனை உதைத்தவன்
மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்
மைவிழி உமையின் மகிழ்நன் தலந்தொறும்
கைதொழ  நடக்குமென் கால்.

காலனை * உதைத்தவன் -- (காலனைஉ  தைத்தவன் ?)
மைவிழி * உமையின்
கைதொழ * நடக்குமென் -- (
கைதொழந  டக்குமென் ?)
 

காலெடுத்  தாடிடும் கம்பீரன் நீலனாம்

மாலயன் தொழவருள்  மலையன்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைக்குச்
சாலவும் தாழும் தலை.

மாலயன் * தொழவருள்  * மலையன்!-- * பாலனாம்
இறைக்குச் * சாலவும் * தாழும்

Siva Siva

unread,
Feb 6, 2011, 7:22:47 PM2/6/11
to santhavasantham

5)
கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
சீர்கேட்கும் என்றன் செவி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/5 Siva Siva <naya...@gmail.com>

4)
தலையின்மேல் கங்கையைத் தாங்கியவன்; பிச்சைக்(கு)
அலைகின்ற ஐயன்; அருளின் - நிலையவன்;
கொண்டல் நிறக்கண்டன் கோயிலின் கோபுரத்தைக்
கண்டு மகிழுமென் கண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
Feb 7, 2011, 2:46:15 AM2/7/11
to சந்தவசந்தம்
/சில இடங்களில் தளையைச் சீர் செய்க.//
தளைகளைச் சீர்ச்ர்ய்து இட்டேன்.
சுட்டலுக்கு மிக்க நன்றி!சிவா!

அன்புடன்,
தங்கமணி.

2011/2/6 தஙமனி <ட்வ்தஙம்...@க்மைல்.cஒம்>


> சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
> பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்

> திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்


> கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

> பந்தனின் * கறைக்கண்டன்

> கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்


> மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்

> மைவிழி யன்னை மகிழ்நன் தலந்தொறும்
> கைதொழ செல்லுமென் கால்.

காலனை * உதைத்தவன் -- (காலனைஉ தைத்தவன் ?)
மைவிழி * உமையின்
கைதொழ * நடக்குமென் -- (கைதொழந டக்குமென் ?)

> காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்

> மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
> வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்


> சாலவும் தாழும் தலை.

மாலயன் * தொழவருள் * மலையன்!-- * பாலனாம்
இறைக்குச் * சாலவும் * தாழும்


On Feb 6, 6:29 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சில நாள்களாய்க் காணவில்லையே என்று எண்ணியிருந்தேன்.
>
> சில இடங்களில் தளையைச் சீர் செய்க.
>

> 2011/2/6 thangamani <tvthangam...@gmail.com>

> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Feb 7, 2011, 7:36:09 AM2/7/11
to santhav...@googlegroups.com
முன்னர்க் கவனிக்கத் தவறிய ஓர் இடம்:

2011/2/7 thangamani <tvthan...@gmail.com>

/சில இடங்களில் தளையைச் சீர் செய்க.//
தளைகளைச் சீர்ச்ர்ய்து இட்டேன்.
சுட்டலுக்கு மிக்க நன்றி!சிவா!
அன்புடன்,
தங்கமணி.

2011/2/6 தஙமனி <ட்வ்தஙம்...@க்மைல்.cஒம்>
> சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
> பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
> திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
> கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

> பந்தனின் * கறைக்கண்டன்

> கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
> மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்
> மைவிழி யன்னை மகிழ்நன் தலந்தொறும்
> கைதொழ  செல்லுமென் கால்.

காலனை * உதைத்தவன் -- (காலனைஉ  தைத்தவன் ?)
மைவிழி * உமையின்
கைதொழ * நடக்குமென் -- (கைதொழந  டக்குமென் ?)

தளை: -- விமலன் * தையலாள்
ஒற்று மிக வேண்டும்: -- கைதொழ*ச்*  செல்லுமென்

thangamani

unread,
Feb 7, 2011, 9:29:36 AM2/7/11
to சந்தவசந்தம்
சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
மெய்யருள் செய்யும் விமலனாம்!-- தையலாள்
மைவிழி தேவி மகிழ்நன் தலந்தொறும்
கைதொழச் செல்லுமென் கால்.

காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்
சாலவும் தாழும் தலை.

விடுபட்டக் குறைகளை சரி செய்தேன்.
மிகவும் நன்றி!சிவா!!

அன்புடன்,
தங்கமணி

On Feb 7, 5:36 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> முன்னர்க் கவனிக்கத் தவறிய ஓர் இடம்:
>

> 2011/2/7 thangamani <tvthangam...@gmail.com>

> > > > பி.கு.  கணினி ரிப்பேர் எட்டு நாளாய்..இன்று வந்தேன்.- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -

thangamani

unread,
Feb 7, 2011, 10:03:19 AM2/7/11
to சந்தவசந்தம்
தலையில் அலைநதி தாங்கிடும் அண்ணல்
கலைமதி ஆர்பரன் காப்பான்! -- குலைவில்
நிலையுறு பக்தியில் நிற்கும் சிவனைக்
கலிதீரக் காணுமென் கண்.

கண்ணுதல் தெய்வக் கருணை நெகிழ்வுற
எண்ணிட ஓடிடும் இன்னலாம்-- பண்ணொடு
சேர்கிற இன்னிசையில் செஞ்சடையன் வான்புகழ்
சீர்தனைக் கேட்கும் செவி.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 7, 5:22 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
> பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
> சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
> சீர்கேட்கும் என்றன் செவி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/5 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 4)
> > தலையின்மேல் கங்கையைத் தாங்கியவன்; பிச்சைக்(கு)
> > அலைகின்ற ஐயன்; அருளின் - நிலையவன்;
> > கொண்டல் நிறக்கண்டன் கோயிலின் கோபுரத்தைக்
> > கண்டு மகிழுமென் கண்.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 7, 2011, 6:27:52 PM2/7/11
to santhavasantham

6)
செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
நாளும் நவிலுமென் நா.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/6 Siva Siva <naya...@gmail.com>

5)
கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
சீர்கேட்கும் என்றன் செவி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Feb 8, 2011, 7:51:39 PM2/8/11
to santhavasantham

7)
நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.

ஆர்த்தல் - ஒலித்தல்;
ஆரம் - மாலை (Garland); (புகழ் ஆரம் - துதிமாலை - தேவாரம், திருவாசகம்);
புகழாரக் காற்று - புகழ் ஆர் அக்-காற்று / புகழ் ஆரக் காற்று;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/7 Siva Siva <naya...@gmail.com>

6)
செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
நாளும் நவிலுமென் நா.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
Feb 9, 2011, 3:22:20 AM2/9/11
to சந்தவசந்தம்
செவியில் மணியொலிக்கத் தேவன் அருள்வேண்டிக்
குவியும் அடியவர்க் கூட்டம்-- கவியுமெய்
அன்பில் அகப்படும் ஆண்டவன் நாமத்தை
நம்பி செபிக்குமென் நா.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 8, 4:27 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
> அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
> மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
> நாளும் நவிலுமென் நா.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/6 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 5)
> > கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
> > பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
> > சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
> > சீர்கேட்கும் என்றன் செவி.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 9, 2011, 6:41:59 PM2/9/11
to santhavasantham

8)
மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
உற்றுத் தொழுமென் உடல்.

மூக்கம் - மூர்க்கம் - சீற்றம்;
ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/8 Siva Siva <naya...@gmail.com>

7)
நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.

ஆர்த்தல் - ஒலித்தல்;
ஆரம் - மாலை (Garland); (புகழ் ஆரம் - துதிமாலை - தேவாரம், திருவாசகம்);
புகழாரக் காற்று - புகழ் ஆர் அக்-காற்று / புகழ் ஆரக் காற்று;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Feb 9, 2011, 11:04:36 PM2/9/11
to santhavasantham
ஓராண்டிற்குமுன் இட்டிருந்த பாடல். இப்போது மறுபிரசுரம் - ஒலியோடு!
======================
(சம்பந்தர் தேவாரம் - 1.136.1 - "மாதர்ம டப்பிடியும் மட அன்னமும்)

1)
உனை விழை மனம் அருள்வாய்
------------------------------------------
நெஞ்சினில் ஆசைகள் வெற்பைநி கர்த்துநி றைந்தவை
..
நிதம் மதம் மிகும் இழி நிலைதர அதனால்
வெஞ்சின னாய்மிகு தீவினை செய்துழ லாதரு
..
வினை கெட அனை உனை விழைமனம் அருள்வாய்
நஞ்செழ அஞ்சிய விண்ணவர் வந்தழ அன்பொடு
..
நனி இனி கனி என நலமளி அமுதாய்
அஞ்சன வேல்விழி அம்மையும் அஞ்சிட உண்டவ
..
அணி மணி பணி துணி மதிதிகழ்அங் கணனே.

பதம் பிரித்து:
நெஞ்சினில் ஆசைகள் வெற்பை நிகர்த்து நிறைந்(து), அவை
..
நிதம் மதம் மிகும் இழி நிலை தர அதனால்,
வெஞ்சினனாய் மிகு தீவினை செய்(து) உழலா(து), அரு
..
வினை கெட அனை உனை விழை மனம் அருள்வாய்;
நஞ்(சு) எழ, அஞ்சிய விண்ணவர் வந்(து) அழ, அன்பொடு
..
நனி இனி கனி என நலம் அளி அமுதாய்,
அஞ்சன வேல் விழி அம்மையும் அஞ்சிட உண்டவ;
..
அணி மணி பணி துணி மதி திகழ் அங்கணனே.

நெஞ்சினில் ஆசைகள் வெற்பை நிகர்த்து நிறைந்(து) - மனத்தில் ஆசைகள் மலையைப் போல நிறைந்து;
அவை நிதம் மதம் மிகும் இழி நிலை தர அதனால் - அவை தினந்தோறும் செருக்கும் வெறியும் மிகுகிற இழிந்த நிலையைத் தர அதனால்;
வெஞ்சினனாய் மிகு தீவினை செய்(து) உழலா(து) - கொடிய சினத்தை உடைவனாகி, பல தீவினைகள் செய்து நான் உழலாமல்;
அரு வினை கெட அனை உனை விழை மனம் அருள்வாய் - கொடிய வினையெல்லாம் அழியும்படி அன்னை உன்னை விரும்பும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக;
நஞ்(சு) எழ, அஞ்சிய விண்ணவர் வந்(து) அழ - (பாற்கடலைக் கடைந்தபொழுது) விஷம் தோன்ற, அதைக் கண்டு பயந்த தேவர்கள் உன்னிடம் வந்து அழுது தொழ;
அன்பொடு நனி இனி கனி என நலம் அளி அமுதாய் - அன்போடு, மிகவும் இனிக்கும் பழம் என அதை நன்மை கொடுக்கும் அமுதாக;
அஞ்சன வேல் விழி அம்மையும் அஞ்சிட உண்டவ - மை அணிந்த வேல் போன்ற விழி உடைய பார்வதியும் அஞ்சும்படி உண்டவனே;
அணி மணி பணி துணி மதி திகழ் அங்கணனே - (அதனால் கழுத்தில்) அழகிய மணியும், பாம்பும், பிறைச் சந்திரனும் திகழ்கிற, அருள் நோக்கு உடைய சிவபெருமானே!
------------------
nenjinil - by rama.m4a

thangamani

unread,
Feb 10, 2011, 3:48:58 AM2/10/11
to சந்தவசந்தம்
நானா விதப்பூவில் நறும்புகையில் பூசித்தால்
ஆனாத அன்பருளும் ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க் கற்பூரச் செம்மணக் காற்றையே
மூச்செனக் கொள்ளுமென் மூக்கு.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 9, 5:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
> ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
> பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
> மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.
>
> ஆர்த்தல் - ஒலித்தல்;
> ஆரம் - மாலை (Garland); (புகழ் ஆரம் - துதிமாலை - தேவாரம், திருவாசகம்);
> புகழாரக் காற்று - புகழ் ஆர் அக்-காற்று / புகழ் ஆரக் காற்று;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/7 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 6)
> > செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
> > அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
> > மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
> > நாளும் நவிலுமென் நா.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 10, 2011, 3:51:56 AM2/10/11
to சந்தவசந்தம்
அருமை!கேட்டு மகிழ்வு கொண்டேன்!
பாராட்டுகள்!

அன்புடன்,
தங்கமணி.

>  nenjinil - by rama.m4a
> 3079KViewDownload

thangamani

unread,
Feb 10, 2011, 6:22:53 AM2/10/11
to சந்தவசந்தம்
மூக்கின் உயிர்ப்பும் முழையின் இசையுடன்
நாக்கின் மொழியும் நம்பனருள்-- பாக்குள்
ஆழ்ந்தப் பொருளான ஆண்டவன் தாளிடை
வீழ்ந்துப் பணியுமென் மெய்.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 10, 4:41 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
> தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
> வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
> உற்றுத் தொழுமென் உடல்.
>
> மூக்கம் - மூர்க்கம் - சீற்றம்;
> ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/8 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 7)
> > நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
> > ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
> > பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
> > மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.
>
> > ஆர்த்தல் - ஒலித்தல்;
> > ஆரம் - மாலை (Garland); (புகழ் ஆரம் - துதிமாலை - தேவாரம், திருவாசகம்);
> > புகழாரக் காற்று - புகழ் ஆர் அக்-காற்று / புகழ் ஆரக் காற்று;
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 10, 2011, 7:42:45 AM2/10/11
to santhav...@googlegroups.com


2011/2/10 thangamani <tvthan...@gmail.com>

மூக்கின் உயிர்ப்பும் முழையின் இசையுடன்
நாக்கின் மொழியும் நம்பனருள்-- பாக்குள்
ஆழ்ந்தப் பொருளான ஆண்டவன் தாளிடை
வீழ்ந்துப் பணியுமென் மெய்.

அன்புடன்,
தங்கமணி.


முழை = ?

பாக்குள் ஆழ்ந்தப் பொருளான - பாக்குள் ஆழ்ந்து அப்பொருளான?

ஆழ்ந்த, வீழ்ந்து - இவ்விடங்களில் வல்லொற்று மிகாது.
 

thangamani

unread,
Feb 10, 2011, 10:08:23 AM2/10/11
to சந்தவசந்தம்
மூக்கின் உயிர்ப்பும் மூங்கில் துளைப்பண்ணும்
நாக்கின் மொழியும் நம்பனருள்-- பாக்களில்
ஆழ்ந்த பொருளாய் ஆளுமையன் தாளிடை
வீழ்ந்து பணியுமென் மெய்.

> அன்புடன்,
> தங்கமணி.

முழை = ?
தவறுக்கு வருந்துகிறேன்.முழை என்றால் மூங்கில் எனத் தவறாக
நினைத்து விட்டேன்.சுட்டலுக்கு மிக நன்றி!
பாக்குள் ஆழ்ந்த பொருளான - பாக்குள் ஆழ்ந்து அப்பொருளான?
பாக்குள்-பாவிற்குள் பொருளாக என்றுஎழுத எண்ணினேன்.
சற்று மாற்றினேன்.
சிவா!பிழை சரிசெய்தேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 10, 5:42 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/2/10 thangamani <tvthangam...@gmail.com>

> > > > வி. சுப்பிரமணியன்- Hide quoted text -

Siva Siva

unread,
Feb 10, 2011, 6:47:22 PM2/10/11
to santhavasantham

9)
உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.

*
மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பிய நிகழ்ச்சியைச் சுட்டியது.
மரித்தல் - ஸ்மரித்தல் - நினைதல்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/9 Siva Siva <naya...@gmail.com>

8)
மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
உற்றுத் தொழுமென் உடல்.


thangamani

unread,
Feb 11, 2011, 6:26:30 AM2/11/11
to சந்தவசந்தம்
சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

சேவிப்பர் பிறப்பிறப்பு--தளை தட்டல்.
பேறாம் பிறப்பிறப்பு--தளை சரிசெய்தேன்.


நானா விதப்பூவில் நற்றூபப் பூசனையில்


ஆனாத அன்பருளும் ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க் கற்பூரச் செம்மணக் காற்றையே
மூச்செனக் கொள்ளுமென் மூக்கு.

விதப்பூவில் நறுபுகையில்--தளைதட்டல்
விதப்பூவில் நற்றூபப்-ஸரிசெய்தேன்.

> அன்புடன்,
> தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

thangamani

unread,
Feb 11, 2011, 6:59:47 AM2/11/11
to சந்தவசந்தம்
மெய்யினில் வெண்ணீறு மேவிட அஞ்சலருள்
கையில் கனலேந்தும் கைலாயன் -நைய
அலைந்திடும் ஓடுடை அரனின் தயையே
நிலையாய் நினையுமென் நெஞ்சு.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 11, 4:47 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
> மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
> அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
> மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.
>
> * மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பிய நிகழ்ச்சியைச் சுட்டியது.
> மரித்தல் - ஸ்மரித்தல் - நினைதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/9 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 8)
> > மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
> > தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
> > வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
> > உற்றுத் தொழுமென் உடல்.
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 11, 2011, 7:59:55 PM2/11/11
to santhavasantham

மண்டலித்து வரும் இவ்வந்தாதியின் கடைசிப் பாடல்.

10)
மனத்தால் நினைத்தால் அனைத்தும் தருவார்
பனைக்கைப் பகட்டின் உரியார் - கனத்தவெற்பை
வீசவந்தான் வாய்பத்தும் வீரிடநெ ரித்தார்சீர்
பேசலே நல்ல பிறப்பு.

பனைக்கைப் பகட்டின் உரியார் - பனைபோன்ற கையையுடைய யானையின் தோலை அணிந்தவர்;
கனத்த வெற்பு - பெருமையுடைய மலை - கயிலைமலை;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/10 Siva Siva <naya...@gmail.com>

9)
உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.

thangamani

unread,
Feb 12, 2011, 2:49:03 AM2/12/11
to சந்தவசந்தம்
நெஞ்சில் நினைந்து நெடுஞ்சாண் கிடையாகத்
தஞ்சமவன் என்றே சரணடைவம்--விஞ்சையருள்
புனிதன் தாளினைப் போற்றிப் பணியும்
மனிதப் பிறவி சிறப்பு.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 12, 5:59 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> மண்டலித்து வரும் இவ்வந்தாதியின் கடைசிப் பாடல்.
>
> 10)
> மனத்தால் நினைத்தால் அனைத்தும் தருவார்
> பனைக்கைப் பகட்டின் உரியார் - கனத்தவெற்பை
> வீசவந்தான் வாய்பத்தும் வீரிடநெ ரித்தார்சீர்
> பேசலே நல்ல பிறப்பு.
>
> பனைக்கைப் பகட்டின் உரியார் - பனைபோன்ற கையையுடைய யானையின் தோலை அணிந்தவர்;
> கனத்த வெற்பு - பெருமையுடைய மலை - கயிலைமலை;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/10 Siva Siva <nayanm...@gmail.com>


>
> >  9)
> > உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
> > மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
> > அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
> > மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 12, 2011, 2:14:43 PM2/12/11
to சந்தவசந்தம்
மூக்கின் உயிர்ப்பினில் மூங்கில் துளைப்பண்ணில்
நாக்கின் மொழியினில் நம்பனுளான் -- பாக்களில்
ஆழ்ந்த பொருளாய் அருள்பவன் தாளிடை

வீழ்ந்து பணியுமென் மெய்.

தளை தட்டல் சரிசெய்தேன்.பிழைக்கு வருந்துகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

> > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
Feb 12, 2011, 9:12:24 PM2/12/11
to santhavasantham

2007-11-04
மதுரை
-----------------------------------
(
திருமுக்கால் அமைப்பில்)
(
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி')

1)
திருமிகு மதுரையம் பதியினில் திகழ்பவன்
கருநிற மிடறுடை யோனே
கருநிற மிடறுடை யோன்கழல் கருதிட
அருவினை அழிவது திடமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/11 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Feb 13, 2011, 7:25:53 PM2/13/11
to santhavasantham

2)
அணிமிகு மதுரையம் பதியினில் அமரிறை
மணிதிகழ் மிடறுடை யோனே
மணிதிகழ் மிடறுடை யோன்கழல் வழிபடப்
பிணிவினைத் தொடர்விடப் பெறுமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/12 Siva Siva <naya...@gmail.com>

2007-11-04
மதுரை
-----------------------------------
(
திருமுக்கால் அமைப்பில்)
(
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி')

1)


thangamani

unread,
Feb 14, 2011, 2:42:03 AM2/14/11
to சந்தவசந்தம்
திருநிறை மதுரையில் அருள்தரு சிவனவன்
மருவுறு மலரணி வோனே
மருவுறு மலரணி வோன்கழல் மனங்கொள
வருதுயர் அழிவது நிசமே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 13, 7:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2007-11-04
> மதுரை
> -----------------------------------
> (திருமுக்கால் அமைப்பில்)
> (திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி')
>
> 1)
> திருமிகு மதுரையம் பதியினில் திகழ்பவன்
> கருநிற மிடறுடை யோனே
> கருநிற மிடறுடை யோன்கழல் கருதிட
> அருவினை அழிவது திடமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/11 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 14, 2011, 6:39:09 PM2/14/11
to santhavasantham

3)
அறமிகு மதுரையம் பதியினில் அருள்பவன்
கறைமிகு மிடறுடை யோனே
கறைமிகு மிடறுடை யோன்கழல் கைதொழப்
பறைவது பழவினைப் பகையே.

பறைதல் - அழிதல்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/13 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Feb 15, 2011, 10:07:17 AM2/15/11
to சந்தவசந்தம்
பணியணை மதுரையில் கயல்விழி உமையரன்
துணிபிறை சடையுடை யோனே
துணிபிறை சடையுடை யோன்கழல் தொழுதிட
தணியுறு வினையது சதமே.

பணி அணை=பாம்பு அணையாகச் சூழ்ந்த மதுரை

அன்புடன்,
தங்கமணி.


On Feb 14, 5:25 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> அணிமிகு மதுரையம் பதியினில் அமரிறை
> மணிதிகழ் மிடறுடை யோனே
> மணிதிகழ் மிடறுடை யோன்கழல் வழிபடப்
> பிணிவினைத் தொடர்விடப் பெறுமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/12 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2007-11-04
> > மதுரை
> > -----------------------------------
> > (திருமுக்கால் அமைப்பில்)
> > (திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி')
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 15, 2011, 10:26:16 AM2/15/11
to சந்தவசந்தம்
பணியணை மதுரையில் கயல்விழி பதியரன்

துணிபிறை சடையுடை யோனே
துணிபிறை சடையுடை யோன்கழல் தொழுதிட
தணியுறு வினையது சதமே.

பணி அணை=பாம்பு அணையாகச் சூழ்ந்த மதுரை

முதலடி ஈற்றுச்சீர் மோனை சரிசெய்தேன்.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

Siva Siva

unread,
Feb 15, 2011, 6:11:02 PM2/15/11
to santhavasantham

4)
மறைவளர் மதுரையம் பதியினில் மகிழ்பவன்
கறைமிளிர் திருமிட றோனே
கறைமிளிர் திருமிட றோன்குரை கழல்தொழும்
நிறைவுளர் இலரொரு குறையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/14 Siva Siva <naya...@gmail.com>

3)


thangamani

unread,
Feb 16, 2011, 1:39:12 AM2/16/11
to சந்தவசந்தம்
அறமலி மதுரையில் கலைவளர் நிதியவன்
திறமிகு நடமிடு வோனே
திறமிகு நடமிடு வோன்கழல் சிரம்கொளப்
புறமிடு வினையதும் பொடியே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 15, 4:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> அறமிகு மதுரையம் பதியினில் அருள்பவன்
> கறைமிகு மிடறுடை யோனே
> கறைமிகு மிடறுடை யோன்கழல் கைதொழப்
> பறைவது பழவினைப் பகையே.
>
> பறைதல் - அழிதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 16, 2011, 5:20:50 AM2/16/11
to சந்தவசந்தம்
மறைபுகழ் மதுரையில் வளர்தமிழ் விழைபவன்
பிறைமிளிர் சடையுடை யோனே
பிறைமிளிர் சடையுடை யோன்கழல் பிறவியின்
நிறைவினைத் தருமொரு நெறியே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 16, 4:11 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> மறைவளர் மதுரையம் பதியினில் மகிழ்பவன்
> கறைமிளிர் திருமிட றோனே
> கறைமிளிர் திருமிட றோன்குரை கழல்தொழும்
> நிறைவுளர் இலரொரு குறையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/14 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 17, 2011, 6:24:19 PM2/17/11
to santhavasantham

5)
தமிழ்வளர் மதுரையம் பதியினில் தருபவன்
உமிழ்கடல் விடமிட றோனே
உமிழ்கடல் விடமிட றோன்கழல் உரைசெய
அமிழ்தன சுவைதரும் அதுவே.

உமிழ்கடல் விடம் - '(அரவு) உமிழ் விடம், கடல் விடம்' என்று பொருள்கொள்க; ('கடல் உமிழ் விடம்' என்றும் பொருள்கொள்ளலாம்;)


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/15 Siva Siva <naya...@gmail.com>

4)


Siva Siva

unread,
Feb 18, 2011, 6:17:57 PM2/18/11
to santhavasantham

6)
எழில்மிகு மதுரையம் பதியுறை இறையவன்
விழிநுதல் திகழ்பெரு மானே
விழிநுதல் திகழ்பெரு மான்கழல் விதிவழி
வழிபடின் உறுவது வளமே.

விதிவழி - முறைப்படி;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/17 Siva Siva <naya...@gmail.com>

5)


thangamani

unread,
Feb 19, 2011, 2:35:13 AM2/19/11
to சந்தவசந்தம்
புகழ்மிகு மதுரையில் முறைசெயு மிறையவன்
திகழ்மதி புனைசடை யோனே
திகழ்மதி புனைசடை யோன்கழல் சிரம்கொள
மகிழ்வுறு நிலையதும் வசமே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 18, 4:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> தமிழ்வளர் மதுரையம் பதியினில் தருபவன்
> உமிழ்கடல் விடமிட றோனே
> உமிழ்கடல் விடமிட றோன்கழல் உரைசெய
> அமிழ்தன சுவைதரும் அதுவே.
>
> உமிழ்கடல் விடம் - '(அரவு) உமிழ் விடம், கடல் விடம்' என்று பொருள்கொள்க; ('கடல்
> உமிழ் விடம்' என்றும் பொருள்கொள்ளலாம்;)
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 19, 2011, 4:39:51 PM2/19/11
to santhavasantham

7)
புனல்மிகு மதுரையம் பதியினில் பொலிபவன்
அனல்மிகு விழியுடை யோனே
அனல்மிகு விழியுடை யோன்கழல் அடைபவர்
இனல்மிகு பிறவிகள் இலரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/18 Siva Siva <naya...@gmail.com>

6)


thangamani

unread,
Feb 20, 2011, 4:32:06 AM2/20/11
to சந்தவசந்தம்
பொழில்நிறை மதுரையில் விழவினில் திகழ்பவன்
எழில்விழி நுதலுடை யோனே
எழில்விழி நுதலுடை யோன்கழல் விழைவுற
உழ்ல்வினை அகன்றிடும் உடனே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 19, 4:17 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> எழில்மிகு மதுரையம் பதியுறை இறையவன்
> விழிநுதல் திகழ்பெரு மானே
> விழிநுதல் திகழ்பெரு மான்கழல் விதிவழி
> வழிபடின் உறுவது வளமே.
>
> விதிவழி - முறைப்படி;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/17 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 20, 2011, 4:36:48 PM2/20/11
to santhavasantham

8)
நிலம்புகழ் மதுரையம் பதியினில் நிகழ்பவன்
இலங்கையன் தனையடர்த் தோனே
இலங்கையன் தனையடர்த் தோன்கழல் இணைதொழ
அலந்தரும் அருவினை அறுமே.

நிகழ்தல் - தங்குதல்; உறைதல்;
அலம் - துன்பம்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/19 Siva Siva <naya...@gmail.com>

7)


Siva Siva

unread,
Feb 21, 2011, 5:19:43 PM2/21/11
to santhavasantham

9)
வியனகர் மதுரையம் பதியுறை விடையவன்
அயனரி இடையெழு தீயே
அயனரி இடையெழு தீயவன் அடியவர்
இயமன திடர்பிணி இலரே.

வியன் - பெருமை (Greatness); சிறப்பு (Excellence);


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/20 Siva Siva <naya...@gmail.com>

8)


thangamani

unread,
Feb 22, 2011, 5:22:59 AM2/22/11
to சந்தவசந்தம்

புனல்தவழ் மதுரையில் புகல்தரும் துணையவன்
கனல்தவழ் கரமுடை யோனே
கனல்தவழ் கரமுடையோன்கழல் கருதிட
மனம்கொளும் உயர்வுறு மதியே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 20, 2:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> புனல்மிகு மதுரையம் பதியினில் பொலிபவன்
> அனல்மிகு விழியுடை யோனே
> அனல்மிகு விழியுடை யோன்கழல் அடைபவர்
> இனல்மிகு பிறவிகள் இலரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 22, 2011, 2:06:12 PM2/22/11
to சந்தவசந்தம்
வலம்பெறு மதுரையில் விடையமர் மறையவன்
பொலம்திகழ் திருவுடை யோனே
பொலம்திகழ் திருவுடை யோன்கழல் புணையெனும்
பலம்தரும்;அறும்தொடர் பவமே

வயம்நிறை மதுரையில் வரம்தரும் இறையவன்
கயல்விழி உமைபுடை யோனே
கயல்விழி உமைபுடை யோன்கழல் கைதொழல்
மயல்தரு வினையறும் வழியே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 22, 3:19 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> வியனகர் மதுரையம் பதியுறை விடையவன்
> அயனரி இடையெழு தீயே
> அயனரி இடையெழு தீயவன் அடியவர்
> இயமன திடர்பிணி இலரே.
>
> வியன் - பெருமை (Greatness); சிறப்பு (Excellence);
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 22, 2011, 7:35:43 PM2/22/11
to santhavasantham

10)
செய்வள மதுரையம் பதியுறை சிவனடி
பொய்வழி யினரறி யாரே
பொய்வழி யினரறி யான்கழல் புகழ்பவர்
நைவழி வுறும்வரும் நலமே.

செய் - வயல்;
நைவு - வருத்தம்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/21 Siva Siva <naya...@gmail.com>

9)

Siva Siva

unread,
Feb 23, 2011, 6:32:33 PM2/23/11
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்.

11)
தென்னகர் மதுரையம் பதியினில் திகழ்பவன்
மின்னிறச் சடையுடை யானே
மின்னிறச் சடையுடை யான்கழல் விழைபவர்
இன்னொரு பிறவியும் இலரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/22 Siva Siva <naya...@gmail.com>

10)


thangamani

unread,
Feb 23, 2011, 9:24:23 PM2/23/11
to சந்தவசந்தம்
மொய்வள மதுரையில் சிறந்திட முறைசெயும்
மெய்புனை பொடியுடை யோனே
மெய்புனை பொடியுடை யோன்கழல் விழைவுற
எய்திடும் உயர்வதும் எளிதே.


மொய்=பெருமை.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 23, 5:35 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> செய்வள மதுரையம் பதியுறை சிவனடி
> பொய்வழி யினரறி யாரே
> பொய்வழி யினரறி யான்கழல் புகழ்பவர்
> நைவழி வுறும்வரும் நலமே.
>
> செய் - வயல்;
> நைவு - வருத்தம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 25, 2011, 8:18:50 PM2/25/11
to santhavasantham

2007-11-13
சிவன் பேர் செப்பும் என் நா
-----------------------------------
(
அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5
சீர்களில் மோனை)

1)
பெற்ற(து) எல்லாம் என்னால் என்று பெருமை பேசியது
குற்றம் என்(று)அ றிந்தேன்; தில்லைக் கூத்தா; உன்கழலே
உற்ற துணைஎன்(று) இன்(று)உ ணர்ந்தேன்; ஓடி வரும்எமனைச்
செற்ற சிவனே; மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/23 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Feb 26, 2011, 8:00:52 AM2/26/11
to சந்தவசந்தம்
சுற்றும் வினைசெய் தீங்கை
...ஒற்றித் துடைக்கு முன்பார்வை
பெற்ற முவந்து தேரில்
...உலவும் பெம்மான்! காப்பாயே
பற்றென் றுன்னைப் பற்றின்
...பூந்தாள் பரிவாய்த் தந்தாள்வாய்
தெற்றென் றுணரும் அன்பில்
...உன்பேர் செப்பும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 26, 6:18 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2007-11-13
> சிவன் பேர் செப்பும் என் நா
> -----------------------------------
> (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
> 1-5 சீர்களில் மோனை)
>
> 1)
> பெற்ற(து) எல்லாம் என்னால் என்று பெருமை பேசியது
> குற்றம் என்(று)அ றிந்தேன்; தில்லைக் கூத்தா; உன்கழலே
> உற்ற துணைஎன்(று) இன்(று)உ ணர்ந்தேன்; ஓடி வரும்எமனைச்
> செற்ற சிவனே; மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 26, 2011, 8:22:58 AM2/26/11
to santhav...@googlegroups.com


2011/2/26 thangamani <tvthan...@gmail.com>

சுற்றும் வினைசெய்  தீங்கை
...ஒற்றித் துடைக்கு முன்பார்வை
பெற்ற முவந்து தேரில்
...உலவும் பெம்மான்! காப்பாயே
பற்றென்  றுன்னைப் பற்றின்
...பூந்தாள்  பரிவாய்த் தந்தாள்வாய்
தெற்றென்  றுணரும்  அன்பில்
...உன்பேர் செப்பும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.


// பெற்ற முவந்து தேரில்...உலவும் பெம்மான்! //
இந்த இடம் எனக்குப் புரியவில்லை. 'பெற்றத்தைத் தேராகக்கொண்டு அதிற் செல்பவன்' என்று சொல்லவருகிறிர்களா?
 


thangamani

unread,
Feb 26, 2011, 12:20:53 PM2/26/11
to சந்தவசந்தம்
// பெற்ற முவந்து தேரில்...உலவும் பெம்மான்! //
> இந்த இடம் எனக்குப் புரியவில்லை. 'பெற்றத்தைத் தேராகக்கொண்டு அதிற் செல்பவன்'
> என்று சொல்லவருகிறிர்களா//

பிரதோஷ மாலையில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் சிறுதேரில்
உலா வருவதைக் குறித்து எழுதினேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 26, 6:22 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/2/26 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Feb 26, 2011, 6:09:02 PM2/26/11
to santhavasantham

2)
எல்லை இல்லா ஆசைக் கடலை என்றன் அகந்தையெனும்
கல்லைக் கட்டிக் கொண்டு கடக்கக் கருதித் துயருற்றேன்;
தொல்லை போக்கித் துணையாய் வரும்உன் தூய கழல்என்றே,
தில்லைச் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/25 Siva Siva <naya...@gmail.com>

2007-11-13
சிவன் பேர் செப்பும் என் நா
-----------------------------------
(
அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5
சீர்களில் மோனை)

1)


thangamani

unread,
Feb 27, 2011, 1:25:45 PM2/27/11
to சந்தவசந்தம்
புல்லைப் பூண்டைப் படைத்தப் புனித னுன்னைநாடி
இல்லைப் புகலென் றுந்தாள் துணையே என்போர்க் கருள்செய்வாய்
சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 27, 4:09 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> எல்லை இல்லா ஆசைக் கடலை என்றன் அகந்தையெனும்
> கல்லைக் கட்டிக் கொண்டு கடக்கக் கருதித் துயருற்றேன்;
> தொல்லை போக்கித் துணையாய் வரும்உன் தூய கழல்என்றே,
> தில்லைச் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/25 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2007-11-13
> > சிவன் பேர் செப்பும் என் நா
> > -----------------------------------
> > (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
> > 1-5 சீர்களில் மோனை)
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 27, 2011, 2:04:37 PM2/27/11
to santhav...@googlegroups.com
முதலடியில் ஒரு சீர் குறைகிறதோ?

2011/2/27 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Feb 28, 2011, 2:44:44 AM2/28/11
to சந்தவசந்தம்
கவனப் பிசகாய் விடுபட்ட சீரைச் சேர்த்துவிட்டேன்.
நன்றி!சிவா!

அன்புடன்,
தங்கமணி.


புல்லைப் பூண்டைத் தருவைப் படைத்தப் புனித னுனைநாடி
இல்லைப் புகலென் றுன்தாள் துணையே என்போர்க் கபயமென்பாய்


சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 28, 12:04 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> முதலடியில் ஒரு சீர் குறைகிறதோ?
>

> 2011/2/27 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > புல்லைப் பூண்டைப் படைத்தப் புனித னுன்னைநாடி
> > இல்லைப் புகலென் றுந்தாள் துணையே என்போர்க் கருள்செய்வாய்
> > சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
> > ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே.
>
> > அன்புடன்,

> > தங்கமணி.- Hide quoted text -

Siva Siva

unread,
Feb 28, 2011, 5:51:29 PM2/28/11
to santhavasantham

3)
உய்யும் வழியை உணரா(து) இந்த உலகில் உழன்றுநிதம்
பொய்யும் புரட்டும் பேசி வாழ்வில் பொருளைத் தேடிமனம்
தொய்யும் நிலையை மாற்றப், புரங்கள் சுட்டு நீறாகச்
செய்யும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/2/26 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Mar 1, 2011, 5:28:10 AM3/1/11
to சந்தவசந்தம்
மெய்யில் அரவும் புலியின் அதளும் மிளிரும் அழகோடு
கையில் பலிதேர் கலனும் மழுவும் கனலும் விளங்கிடவும்
கொய்யும் மலரில் அலங்கல் புனைந்து அரனுன் பதம்போற்றித்
தெய்வத் திருவே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.

On Mar 1, 3:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> உய்யும் வழியை உணரா(து) இந்த உலகில் உழன்றுநிதம்
> பொய்யும் புரட்டும் பேசி வாழ்வில் பொருளைத் தேடிமனம்
> தொய்யும் நிலையை மாற்றப், புரங்கள் சுட்டு நீறாகச்
> செய்யும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/26 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

selva kumaran

unread,
Mar 1, 2011, 7:32:20 AM3/1/11
to santhav...@googlegroups.com
ஓர் ஒழுங்கோடு கட்டப்படுவதால் மாலைக்கு அலங்கல் என்ற பெயர்.  அப்பொருள்  இங்கே மிக நன்றாய் பொருந்தி வருகிறது.


2011/3/1 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

thangamani

unread,
Mar 1, 2011, 12:07:17 PM3/1/11
to சந்தவசந்தம்
அழகான கருத்து!
மிக்க நன்றி! செல்வகுமரன்!

அன்புடன்,
தங்கமணி

On Mar 1, 5:32 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> ஓர் ஒழுங்கோடு கட்டப்படுவதால் மாலைக்கு அலங்கல் என்ற பெயர்.  அப்பொருள்  இங்கே
> மிக நன்றாய் பொருந்தி வருகிறது.
>

> 2011/3/1 thangamani <tvthangam...@gmail.com>

> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -

thangamani

unread,
Mar 1, 2011, 12:40:02 PM3/1/11
to சந்தவசந்தம்
மெய்யில் அரவும் புலியின் அதளும் மிளிரும் அழகோடு
கையில் பலிதேர் கலனும் மழுவும் கனலும் விளங்கிடவும்
கொய்யும் மலரில் அலங்கல் புனைந்து குருவுன் பதம்போற்றித்

தெய்வத் திருவே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

சிறிது மாற்றி இட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

வித்யாசாகர்

unread,
Mar 1, 2011, 5:35:35 AM3/1/11
to santhav...@googlegroups.com
தமிழ் பெரியோர் அனைவருக்கும்,

வணக்கம். உங்களின் தொடர்பால், தமிழால்; மலர்களின் நறுமனத்திற்கு இடையே மதிமயங்கி நிற்பது போல் நிற்கிறேன். உங்களின் தமிழ் ஆக்காங்கள் இறையின் மேல் பக்தி கூட்டுகிறதோ இல்லையோ; தமிழ் மேல் நிறைய கூட்டுகிறது!

மிக்க நன்றிகளும் வாழ்த்தும்.. சந்தவசந்தத்தின் அனைவருக்கும்!!

வித்யாசாகர்

2011/3/1 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Siva Siva

unread,
Mar 2, 2011, 6:35:56 PM3/2/11
to santhav...@googlegroups.com
பாடல்களைப் படித்து வரும் அன்பர்கள் அனைவர்க்கும் என் வணக்கம்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/3/1 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>

Siva Siva

unread,
Mar 2, 2011, 7:23:55 PM3/2/11
to santhavasantham

4)
பேரும் புகழும் விரும்பித் தினமும் பெரிதும் உற்றதுயர்
தீரும் வழிஉன் திருத்தாள் என்று தெரிந்து கொண்டேனே;
பாரும் விண்ணும் படைத்தாய்; முடிமேல் பாம்பும் பிறைமதியும்
சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/2/28 Siva Siva <naya...@gmail.com>

3)


thangamani

unread,
Mar 3, 2011, 4:50:06 AM3/3/11
to சந்தவசந்தம்
ஊரும் உறவும் எதுவரை என்றே உழலும் மனமாற்றி
நேரும் வினையின் விளைவைத் தாங்கும் நிலையைத் தருவாயே
வேரும் கிளைக்கும் பூவும் கனியும் விதையாய் இருப்போனே
காரும் சிவனே மறவா துன்பேர் கழறும் என்நாவே!


அன்புடன்,
தங்கமணி.

On Mar 3, 5:23 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> பேரும் புகழும் விரும்பித் தினமும் பெரிதும் உற்றதுயர்
> தீரும் வழிஉன் திருத்தாள் என்று தெரிந்து கொண்டேனே;
> பாரும் விண்ணும் படைத்தாய்; முடிமேல் பாம்பும் பிறைமதியும்
> சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/2/28 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 3, 2011, 5:58:53 PM3/3/11
to santhav...@googlegroups.com


2011/3/3 thangamani <tvthan...@gmail.com>

ஊரும் உறவும் எதுவரை என்றே உழலும் மனமாற்றி
நேரும் வினையின் விளைவைத் தாங்கும் நிலையைத் தருவாயே
வேரும் கிளைக்கும்  பூவும் கனியும் விதையாய் இருப்போனே
காரும் சிவனே மறவா துன்பேர் கழறும் என்நாவே!


அன்புடன்,
தங்கமணி.

காரும் சிவனே = ?
 

Siva Siva

unread,
Mar 3, 2011, 6:07:21 PM3/3/11
to santhavasantham

5)
ஆரும் இங்கே துணைஆ கார்என்(று) அறியா(து) உழன்றிருந்தேன்;
நேரும் இடர்கள் நீக்கிக் காப்பாய் நீஎன்(று) இன்றுணர்ந்தேன்;
நீரும் நிலவும் அரவும் முடிமேல் நிலவ இடத்திலுமை


சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/2 Siva Siva <naya...@gmail.com>

4)


thangamani

unread,
Mar 4, 2011, 1:05:55 AM3/4/11
to சந்தவசந்தம்
காரும் சிவனே = ?
சிவனே!(எம்மை)காப்பாற்றுவாய்! என்னும்
பொருளில்.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 4, 3:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/3/3 thangamani <tvthangam...@gmail.com>

> > On Mar 3, 5:23 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:- Hide quoted text -

thangamani

unread,
Mar 4, 2011, 5:31:32 AM3/4/11
to சந்தவசந்தம்
சாரும் அடியார் உன்னைப் போற்றும் தமிழ்ப்பா விழைவாயே
சோரும் அன்பர் துயரைப் போக்கும் தூக்கும் மலர்தாளே
கோரும் எளியர் வறுமை நோயைக் கொள்ளும் அருளாலே
தீரும் சிவனே மறவா துன்பேர் செப்பும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.

On Mar 4, 4:07 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> ஆரும் இங்கே துணைஆ கார்என்(று) அறியா(து) உழன்றிருந்தேன்;
> நேரும் இடர்கள் நீக்கிக் காப்பாய் நீஎன்(று) இன்றுணர்ந்தேன்;
> நீரும் நிலவும் அரவும் முடிமேல் நிலவ இடத்திலுமை
> சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/2 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 4, 2011, 6:37:48 PM3/4/11
to santhav...@googlegroups.com


2011/3/4 thangamani <tvthan...@gmail.com>

சாரும் அடியார் உன்னைப் போற்றும்  தமிழ்ப்பா விழைவாயே
சோரும் அன்பர் துயரைப் போக்கும் தூக்கும் மலர்தாளே
கோரும் எளியர் வறுமை நோயைக் கொள்ளும் அருளாலே
தீரும் சிவனே மறவா துன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
தங்கமணி.

தீர்த்தல் - 'தீரும்' என்று வாராதே? 

Siva Siva

unread,
Mar 4, 2011, 6:39:22 PM3/4/11
to santhavasantham

6)
ஓரும் அடியார் தங்கள் வினையை ஓட்டும் வழிஆனாய்;
ஊரும் அரவும் பிறையும் சடைமேல் உடையாய்; நறுங்கொன்றைத்
தாரும் அணிந்து, கையில் பிரமன் தலையில் இடுபிச்சை
தேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/3 Siva Siva <naya...@gmail.com>

5)


thangamani

unread,
Mar 5, 2011, 6:42:22 AM3/5/11
to சந்தவசந்தம்
சாரும் அடியார் உன்னைப் போற்றும் தமிழ்ப்பா விழைவாயே
சோரும் அன்பர் துயரைப் போக்கும் தூக்கும் மலர்தாளே
கோரும் எளியர் வறுமைப் பிணியைத் தீர்க்கும் மருந்தென்றே
சேரும் சிவனே மறவா துன்பேர் செப்பும் என்நாவே.

//தீர்த்தல் - 'தீரும்' என்று வாராதே?//

சுட்டலுக்கு நன்றி சிவா!சிறிது மாற்றினேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 5, 4:37 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/3/4 thangamani <tvthangam...@gmail.com>

thangamani

unread,
Mar 6, 2011, 6:19:01 AM3/6/11
to சந்தவசந்தம்
சீரும் சிறப்பும் வாழ்வும் பொருளும் இறைநீ என்றிருப்பேன்
சாரும் பிழையும் நீங்கச் செய்யும் தயையை உடையவனே
நீரும் வளியும் வானும் மண்ணும் நெருப்பும் எனுமைந்தாய்ச்
சேரும் சிவனே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 5, 4:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> ஓரும் அடியார் தங்கள் வினையை ஓட்டும் வழிஆனாய்;
> ஊரும் அரவும் பிறையும் சடைமேல் உடையாய்; நறுங்கொன்றைத்
> தாரும் அணிந்து, கையில் பிரமன் தலையில் இடுபிச்சை
> தேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/3 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 6, 2011, 10:34:59 AM3/6/11
to santhavasantham

7)
பார்க்கும் பொருள்கள் எல்லாம் ஆன பரமா; பணியாத
ஆர்க்கும் காண இயலா அரனே; அரவு மதியோடு
நீர்க்கும் முடிமேல் இடம்தந் தருளும் நிமலா; எவ்வினையும்
தீர்க்கும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2011/3/4 Siva Siva <naya...@gmail.com>

6)

thangamani

unread,
Mar 7, 2011, 4:37:43 AM3/7/11
to சந்தவசந்தம்
நார்க்கும் மணம்வரும் வாச மலர்களை நாருடன் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியரின் கூட்டினில் சீர்கமழ் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழுறும் யாவும் உனதருள் செம்மையினால்
ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.


On Mar 6, 8:34 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> பார்க்கும் பொருள்கள் எல்லாம் ஆன பரமா; பணியாத
> ஆர்க்கும் காண இயலா அரனே; அரவு மதியோடு
> நீர்க்கும் முடிமேல் இடம்தந் தருளும் நிமலா; எவ்வினையும்
> தீர்க்கும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/4 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 7, 2011, 7:55:31 AM3/7/11
to santhav...@googlegroups.com


2011/3/7 thangamani <tvthan...@gmail.com>

நார்க்கும் மணம்வரும் வாச மலர்களை நாருடன் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியரின் கூட்டினில் சீர்கமழ் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழுறும் யாவும்  உனதருள் செம்மையினால்
ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.


பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதுபோல், அடியரோடு சேர்ந்து நாம் நலம்பெறலாம் என்ற கருத்து அழகு!

பாடலில் சில இடங்களில் வாய்பாடு மாறுகிறதுபோல் தோன்றுகிறதே.

 

Siva Siva

unread,
Mar 7, 2011, 8:19:16 AM3/7/11
to santhavasantham

8)
வானே வழியாய்ச் செல்லும் தன்தேர் மலையால் தடைப்படவும்,
நானே வலியன் என்று மலையை நகர்த்த முயல்இலங்கைக்
கோனே அலற நசுக்கிப் பின்வாள் கொடுத்த பெருமானே;
தேனே; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/6 Siva Siva <naya...@gmail.com>

7)


thangamani

unread,
Mar 7, 2011, 9:27:15 AM3/7/11
to சந்தவசந்தம்
நார்க்கும் வாசம் வருமே நறும்பூ நாரில் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழும் யாவும் அருளும் செம்மையினால்

ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.


பிழைகளைச் சுட்டியதற்கு மிக்க நன்றி!சிவா!
ஏனோ ரொம்பவும் தவறு செய்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.


On Mar 7, 5:55 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/3/7 thangamani <tvthangam...@gmail.com>

> > > 7)- Hide quoted text -

naa.g...@gmail.com

unread,
Mar 7, 2011, 9:34:05 AM3/7/11
to சந்தவசந்தம்

On Mar 7, 8:27 am, thangamani <tvthangam...@gmail.com> wrote:
> நார்க்கும் வாசம் வருமே நறும்பூ நாரில் மாலையெனச்
> சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
> வார்க்கும் வனப்பில் திகழும் யாவும் அருளும் செம்மையினால்
> ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.
>

ஆர்க்கும் சிவனே - என்றே இருக்கலாமே அம்மா.

ஆர்த்தல்.

அன்புடன்,
நா. கணேசன்


> பிழைகளைச் சுட்டியதற்கு மிக்க நன்றி!சிவா!
> ஏனோ ரொம்பவும் தவறு செய்கிறேன்.
>
> அன்புடன்,
> தங்கமணி.
>
> On Mar 7, 5:55 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
>
>
> > 2011/3/7 thangamani <tvthangam...@gmail.com>
>
> > > நார்க்கும் மணம்வரும் வாச மலர்களை நாருடன் மாலையெனச்
> > > சேர்க்கும் நிலைபோல் அடியரின் கூட்டினில் சீர்கமழ் பக்தியுண்டாம்
> > > வார்க்கும் வனப்பில் திகழுறும் யாவும்  உனதருள் செம்மையினால்
> > > ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.
>
> > > அன்புடன்,
> > > தங்கமணி.
>
> > பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதுபோல், அடியரோடு சேர்ந்து நாம் நலம்பெறலாம் என்ற
> > கருத்து அழகு!
>
> > பாடலில் சில இடங்களில் வாய்பாடு மாறுகிறதுபோல் தோன்றுகிறதே.
>
> > > On Mar 6, 8:34 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > > 7)- Hide quoted text -
>

> > - Show quoted text -- Hide quoted text -

thangamani

unread,
Mar 7, 2011, 1:40:19 PM3/7/11
to சந்தவசந்தம்
சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
> வார்க்கும் வனப்பில் திகழ ஆடும் மன்றில் சதங்கைபதம்
> ஆர்க்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.


//ஆர்க்கும் சிவனே - என்றே இருக்கலாமே அம்மா.//
அன்புள்ள கணேசன்,
இப்போது சரியாகும் என எண்ணுகிறேன்

ஆர்த்தல்.


On Mar 7, 7:34 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

thangamani

unread,
Mar 8, 2011, 1:11:53 AM3/8/11
to சந்தவசந்தம்
ஆனே உவக்கும் ஊர்தி என்றே அமரும் ஆண்டவனே
தானே அன்பர் தம்மை ஆளாய்த் தாங்கும் பித்தனும்நீ
கூனே எழிலாம் பிறையைச் சடையில் கொள்ளும் முக்கணனே
கோனே சிவனே மறவா(து) உன்பேர் கூறும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.

On Mar 7, 6:19 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> வானே வழியாய்ச் செல்லும் தன்தேர் மலையால் தடைப்படவும்,
> நானே வலியன் என்று மலையை நகர்த்த முயல்இலங்கைக்
> கோனே அலற நசுக்கிப் பின்வாள் கொடுத்த பெருமானே;
> தேனே; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/6 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Mar 8, 2011, 6:58:22 AM3/8/11
to சந்தவசந்தம்
நார்க்கும் வாசம் வருமே நறும்பூ நாரில் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழ ஆடும் மன்றில் சதங்கைபதம்
ஆர்க்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.

ஒருஅடி விடுபட்டிருந்ததை இட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 7, 7:34 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

Siva Siva

unread,
Mar 8, 2011, 10:21:16 PM3/8/11
to santhavasantham

9)
ஆடும் கடலில் பாம்புப் படுக்கை அதன்மேல் துயில்பவனும்
ஏடும் மணமும் மிகுந்த கமலத்(து) இருக்கும் நான்முகனும்
வாடும் படிநீ தீயாய் நிற்க, வானில் மண்ணிலவர்
தேடும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/7 Siva Siva <naya...@gmail.com>

8)


thangamani

unread,
Mar 9, 2011, 5:14:42 AM3/9/11
to சந்தவசந்தம்
ஓடும் காலம் திரும்பா தென்றும் ஓர்ந்தே நம்பியுனை
நாடும் பக்தி நெறியில் செல்ல நாளும் பணிந்தேத்திச்
சூடும் நிலவும் நதியும் கவினாய்த் துலங்கு சடைசரிய
ஆடும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.

On Mar 9, 8:21 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> ஆடும் கடலில் பாம்புப் படுக்கை அதன்மேல் துயில்பவனும்
> ஏடும் மணமும் மிகுந்த கமலத்(து) இருக்கும் நான்முகனும்
> வாடும் படிநீ தீயாய் நிற்க, வானில் மண்ணிலவர்
> தேடும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

வித்யாசாகர்

unread,
Mar 8, 2011, 11:22:21 PM3/8/11
to santhav...@googlegroups.com
மனதின் அடி ஆழத்திலிருக்கும் அவனுக்கான அன்பை மேலே கொண்டுவந்து அவன் பெயர் சிவன் என்று சொல்லாமல் சொல்கிறது உங்கள் பாடல். அவனையே எண்ணி உருகி நிற்கும் மனதிற்கு இதமான வரிகள் இது!! மிக்க நன்றி!!

2011/3/9 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
வித்யாசாகர்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 9, 2011, 9:38:42 AM3/9/11
to santhav...@googlegroups.com
அழகிய கருத்தும், சொல்லாட்சியும் கொண்ட துதிப் பாடல்.

அனந்த்

Siva Siva

unread,
Mar 9, 2011, 9:20:23 PM3/9/11
to santhavasantham

10)
அல்லும் பகலும் வேத வழியை அகன்று விடுமாறு
சொல்லும் அவர்கள் அறியா மெய்யே; தொடரும் வினையையெலாம்
வெல்லும் வழியைக் காட்டும் முக்கண் வேந்தே; ஏற்றின்மேல்
செல்லும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/8 Siva Siva <naya...@gmail.com>

9)

thangamani

unread,
Mar 10, 2011, 11:26:43 AM3/10/11
to சந்தவசந்தம்
திரு.அனந்த் அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்கு மகிழ்வுடன் மிக்க நன்றி.

அன்புடன்,
தங்கமணி.


On Mar 9, 7:38 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அழகிய கருத்தும், சொல்லாட்சியும் கொண்ட துதிப் பாடல்.
>
> அனந்த்
>

> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -

Siva Siva

unread,
Mar 10, 2011, 8:54:41 PM3/10/11
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்:

11)
பூவா இலையா என்னா(து), அடியைப் போற்றும் அன்பருக்குச்
சாவா நிலைதந் தருளும் முக்கண் தந்தை நீயலையோ;
மூவா முதலே; முடிவாம் பொருளே; முன்னர் நஞ்சுண்ட
தேவா; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/9 Siva Siva <naya...@gmail.com>

10)


thangamani

unread,
Mar 11, 2011, 12:28:11 AM3/11/11
to சந்தவசந்தம்
கல்லும் துதிக்கும் மலராய்க் காணும் கருணை விழியோனே
ஒல்லும் வகையில் திருத்தாள் தனையே உன்னும் மனமருளே
கொல்லும் விடத்தை அமுதாய் உண்டாய் நீதித் தேர்நடத்திச்
செல்லும் சிவனே மறவா(து)உன்பேர் செப்பும் என்நாவே.


அன்புடன்,
தங்கமணி.


On Mar 10, 7:20 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> அல்லும் பகலும் வேத வழியை அகன்று விடுமாறு
> சொல்லும் அவர்கள் அறியா மெய்யே; தொடரும் வினையையெலாம்
> வெல்லும் வழியைக் காட்டும் முக்கண் வேந்தே; ஏற்றின்மேல்
> செல்லும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Mar 11, 2011, 5:05:36 AM3/11/11
to சந்தவசந்தம்
கல்லும் துதிக்கும் மலராய்க் காணும் கருணை விழியோனே
ஒல்லும் வகையில் திருத்தாள் தனையே உன்னும் மனமருளே
கொல்லும் விடத்தை அமுதாய் உண்டாய் கோனே அறம்நடத்திச்

செல்லும் சிவனே மறவா(து)உன்பேர் செப்பும் என்நாவே.

மூன்றாம் அடியில் மோனை சரிசெய்தேன்.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

Siva Siva

unread,
Mar 13, 2011, 12:44:50 AM3/13/11
to santhavasantham

2007-11-15
அடைவார் வினை அறுமே
---------------------------------
('
மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4
சீர்களில் மோனை)

1)
அடைவோம்அமு தென்றேஇமை யோர்பாற்கடல் அதனைக்
கடைநாளினில் எழுமாவிடம் தாங்காதவர் கதற
உடனேஅதை உண்டான்சிவன் அவன்சேவடி உகந்தே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/10 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Mar 15, 2011, 2:26:01 AM3/15/11
to சந்தவசந்தம்
மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே

அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.


அன்புடன்,
தங்கமணி.

On Mar 13, 10:44 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2007-11-15
> அடைவார் வினை அறுமே
> ---------------------------------
> ('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
> 1-4 சீர்களில் மோனை)
>
> 1)
> அடைவோம்அமு தென்றேஇமை யோர்பாற்கடல் அதனைக்
> கடைநாளினில் எழுமாவிடம் தாங்காதவர் கதற
> உடனேஅதை உண்டான்சிவன் அவன்சேவடி உகந்தே
> அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/10 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 20, 2011, 8:13:39 PM3/20/11
to santhavasantham

2)
மழுமானொடு திரிசூலமும் கையேந்துபெம் மானே
புழுவாயொரு பிறப்பேவரும் என்றாலுமுன் பொற்றாள்
தொழுமாறருள் செய்வாயுனை இரந்தேனெனச் சொல்லி
அழுவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/13 Siva Siva <naya...@gmail.com>

2007-11-15
அடைவார் வினை அறுமே
---------------------------------
('
மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4
சீர்களில் மோனை)


thangamani

unread,
Mar 21, 2011, 10:53:15 AM3/21/11
to சந்தவசந்தம்
பொழுதாகவும் நொடியாகவும் சுழன்றோடிடும் புவியில்
வழுவேமலி அவமாயையில் தடுமாறிட மலைந்து
விழுவேனெனை தடுத்தேயருள் செய்வாயென இறைஞ்சி

அழுவார்வினை அறுமேஇனி இலையோர் பிறப் பவர்க்கே.


அன்புடன்,
தங்கமணி

On Mar 21, 5:13 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> மழுமானொடு திரிசூலமும் கையேந்துபெம் மானே
> புழுவாயொரு பிறப்பேவரும் என்றாலுமுன் பொற்றாள்
> தொழுமாறருள் செய்வாயுனை இரந்தேனெனச் சொல்லி
> அழுவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/13 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2007-11-15
> > அடைவார் வினை அறுமே
> > ---------------------------------
> > ('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
> > 1-4 சீர்களில் மோனை)
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Mar 21, 2011, 10:59:41 AM3/21/11
to சந்தவசந்தம்
பொழுதாகவும் நொடியாகவும் சுழன்றோடிடும் புவியில்
வழுவேமலி அவமாயையில் தடுமாறிட மலைந்து
விழுவேனெனை தடுத்தேயருள் செய்வாயென வேண்டி

அழுவார்வினை அறுமேஇனி இலையோர் பிறப் பவர்க்கே.

மோனை சரி செய்தேன்.

அன்புடன்,
தங்கமணி

Siva Siva

unread,
Mar 25, 2011, 6:47:00 PM3/25/11
to santhavasantham

3)
இணைநாளினில் புரமூன்றையும் நொடிப்போதினில் எரித்தாய்
கணையாயொரு நகையேகொடு சிவனேஉனைக் காட்டில்
துணையாரினி உள்ளாரென அன்போடடி தொழுதே
அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/20 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Mar 26, 2011, 9:24:55 AM3/26/11
to சந்தவசந்தம்
மணைமீதமர் இளையோன்மணம் தடுத்தாட்கொள வந்தே
பிணைநீஎன தடியானென அருளேசெயும் பெம்மான்
அணைமீறிடு அன்பாலுன தடியேபிடித் தழுதே

அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.

சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 26, 3:47 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> இணைநாளினில் புரமூன்றையும் நொடிப்போதினில் எரித்தாய்
> கணையாயொரு நகையேகொடு சிவனேஉனைக் காட்டில்
> துணையாரினி உள்ளாரென அன்போடடி தொழுதே
> அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/3/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 26, 2011, 8:27:17 PM3/26/11
to santhavasantham

4)
வழக்காடிய ஆரூரரைத் தமிழ்பாடிட வைத்தாய்
கழற்சேவடி தொழுவானவர் தமைக்காத்தமுக் கண்ணா
குழைக்காதுடைக் கோனேஉமை கூறாவெனக் கும்பிட்(டு)
அழைப்பார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/3/25 Siva Siva <naya...@gmail.com>

3)


It is loading more messages.
0 new messages