செம்புலம்

370 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Mar 21, 2015, 7:22:29 AM3/21/15
to mint...@googlegroups.com

செம்புலம்

செந்தலை எனும் ஊரில் உள்ள  கல்வெட்டுப் பாடல்களில் “தஞ்சை செம்புல நாடு” பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக ஒரு நூலில் படித்தேன்.

இங்கே செம்புலம் என்பது செம்மை + புலம் எனப் பொருள்படுமா அல்லது

சிவந்த + புலம் என்று பொருள் படுமா?

நாவலர் சோமசுந்தர பாரதியார் , “செம்புலப் பெயல் நீர்” எனும் தொடரில் உள்ள செம்புலம் என்பது செம்மையான நிலம் என்பதையே குறிக்கும் என்று சொன்னதாக கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், பெரும்பாலானோர் செம்புலம் என்பதற்கு சிவந்த மண் என்றுதானே விளக்கம் சொல்கிறார்கள்.  

இராமகி

unread,
Mar 21, 2015, 7:48:37 AM3/21/15
to mint...@googlegroups.com

Singanenjam Sambandam

unread,
Mar 21, 2015, 8:30:28 AM3/21/15
to mint...@googlegroups.com
நல்லது இராமகி அவர்களே...உங்கள் சிவகங்கை, எங்கள் கடலூர்-பண்ருட்டி-நெய்வேலி பகுதிகளில் , பூமியின் மேற்பரப்பில் "கடலூர் மணல்பாறைகள்" அமைந்துள்ளன. இவற்றிலுள்ள இரும்புக் கூறுகள் காற்றிலும் மழையிலும் சிதைந்து மண்ணிற்கு சிவந்த நிறத்தை அளிக்கின்றன. செம்மங்குப்பம், செம்மேடு போன்ற பகுதிகளில் செம்மண் உள்ளது.
செம்மண் பூமியில் பெய்யும் மழை நீர் , மண்ணுடன் கலந்து சிவந்த நிறத்தை பெறுவதை பலமுறை பார்த்ததுண்டு.  மழை நின்ற பின் சிறிது நேரத்தில் , மண் பிரிந்து நீர் தெளிந்து விடும்.
ஆனால் சமதளத்தில் விழும் மழைத்துளிகள் ஒன்றுகலந்தபின், எந்தத் துளி எங்கே விழுந்தது என்று பிரித்து அறிய இயலாதல்லவா? -அன்புடை நெஞ்சங்கள் அப்படித்தான் கலக்கவேண்டும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 21, 2015, 11:39:37 AM3/21/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, anb...@googlegroups.com, thami...@googlegroups.com
On Saturday, March 21, 2015 at 5:30:28 AM UTC-7, singanenjan wrote:
நல்லது இராமகி அவர்களே...உங்கள் சிவகங்கை, எங்கள் கடலூர்-பண்ருட்டி-நெய்வேலி பகுதிகளில் , பூமியின் மேற்பரப்பில் "கடலூர் மணல்பாறைகள்" அமைந்துள்ளன. இவற்றிலுள்ள இரும்புக் கூறுகள் காற்றிலும் மழையிலும் சிதைந்து மண்ணிற்கு சிவந்த நிறத்தை அளிக்கின்றன. செம்மங்குப்பம், செம்மேடு போன்ற பகுதிகளில் செம்மண் உள்ளது.
செம்மண் பூமியில் பெய்யும் மழை நீர் , மண்ணுடன் கலந்து சிவந்த நிறத்தை பெறுவதை பலமுறை பார்த்ததுண்டு.  மழை நின்ற பின் சிறிது நேரத்தில் , மண் பிரிந்து நீர் தெளிந்து விடும்.
ஆனால் சமதளத்தில் விழும் மழைத்துளிகள் ஒன்றுகலந்தபின், எந்தத் துளி எங்கே விழுந்தது என்று பிரித்து அறிய இயலாதல்லவா? -அன்புடை நெஞ்சங்கள் அப்படித்தான் கலக்கவேண்டும்.

குறுந்தொகைப் பாடலை ஊன்றிப் படித்தால் நீங்கள் சொல்வதைத்தான் உவமையாக, மிக நயமாக சங்கப் புலவர்கள்
பயன்படுத்தியுள்ளமை தெளிவாக விளங்கும். எங்கோ உள்ள வானத்திலிருந்து கீழே இறங்கும்  ஆலி (< வாலி. இடங்கர் < விடங்கர் என்றாதற்போல)  நீரானது செம்புலத்தில் அதாவது சிவந்த நிறத்தை வைத்துள்ள “கடலூர் மணற்பாறைகளின்” சிவப்புடன் 
கலப்பது போலே,  தலைவன் தலைவி உள்ளங்கள் கலக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சங்க கால மக்கள். 
அந்த இயற்கையைப் பதிந்து வைத்தவர்கள் சங்கச் சான்றோராகிய புலவர்கள் [1]. Thanks for explaining the great KuRuntokai poem,
"Red Earth and Pouring Rain" on a scientific basis. On the observations based on your specialty, the Science of Geology.

 அறிதுமென்றது எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது.

    செம்மண்ணிலத்துப் பெய்த நீரானது அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும் சுவையையும் பெற்று ஒன்றுபடுவது போல நம் நெஞ்சம் ஒன்றோடொன்று கலந்து தன்மைகள் ஒன்றுபட்டனவென்று உவமையை விரித்துக் கொள்க. நெஞ்சுகலந்தமைக்குச் செம்புலப் பெயனீரை உவமை கூறிய சிறப்பால் இச்செய்யுளின் ஆசிரியர் 'செம்புலப் பெயனீரார்' என்னும் சிறப்புப் பெயர்பெற்றார். நெஞ்சங் கலந்தனவென்பது உள்ளப் புணர்ச்சியைக் குறித்தபடி; ‘உள்ளப் புணர்ச்சியு மெய்யுறு புணர்ச்சியும், கள்ளப் புணர்ச்சியுட் காதலர்க் குரிய(நம்பி.34).

உவேசா நம்பியகப்பொருள் காட்டுகிறார். அதற்காக, பொய்யாமொழிப் புலவர் அருளிய நூல்
தஞ்சைவாணன்கோவை. அதில், சங்கப் பாடல்களில் பாணனுக்குத் தரும் ‘கன்றுதருவல்சி” பற்றிய
விளக்கம் பொய்யாமொழியார் சொல்லியுள்ளார்,

சிங்கநெஞ்சன் ஐயா, நீவிர் விளக்கும் குறுந்தொகை உவமைநயத்தைத் தமிழ்ப் பேராசிரியர் விளக்கியுள்ளார்:
”உவமை

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே 
(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)

(யாய் = என்தாய்; ஞாய் = உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை = உன் தந்தை;  கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைநீர்) முன்பின் தெரியாத ஒருவனிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன்  நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன்.“என்தாயும், உன்தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று  கலந்துவிட்டன.”

இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம்  நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று  நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை  ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. இவ்விரண்டையும் இனிப் பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன், தலைவி  காதலையும் பிரிக்க இயலாது. முன்பின் அறியாத் தலைவன் தலைவியின் மனத்தில் நம்பிக்கையை உண்டாக்குவதற்கு அருமையான உவமையைப் பயன்படுத்தி உள்ளது பாராட்டத் தக்கது.

குறிஞ்சித்திணைப் பாடல்களில் எண்ணற்ற உவமைகள் நிறைந்து காணப்படுகின்றன.”

இந்தியாவின் செம்மொழிகளின் இலக்கியங்கள் எதுவாக இருந்தாலும்,
படிக்கவியலா நிலையில் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருந்தன.
இந்தியாவின் சங்க (அ) பிற (உ-ம்: வடமொழியின் செவ்விலக்கியம்) எப்படி
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும் என, சீன இலக்கியம்
ஆங்கிலத்தில் தர எஸ்ரா பௌண்ட் செய்தாற்போல, பாதைகாட்டியவர் ஏ. கே. இராமானுஜன்.
அவரது மொழிபெயர்ப்பு:

Kuruntokai - "Red Earth and Pouring Rain"

What He Said

What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
Did you and I meet ever?
But in love
our hearts have mingled
as red earth and pouring rain.

-- Cempulappeyanirar

Theodore Baskaran wrote,

"Red earth and pouring rain: Powerful imagery

SINCE June this year, an English translation of a Tamil poem from the Sangam anthology is on display in the trains in the London Underground. The original poem, in Tamil script, is also featured along with the English version.

The London Tube, as the underground metro train service is known, was started in 1863 and now covers 408 km. It is the lifeline of the city. When the transport authorities began paying attention to the interior of the coaches, they instituted prizes for the best advertisement posters. In 1986, encouraged by the Poetry Society, short poems of five or six lines were displayed in a special show. It proved so popular that poetry display has since become a permanent feature in the trains. Funded by the Arts Council of England, the poems are printed in uniform sized enamel plates and displayed inside the coaches. Copies of these displays are sold as posters and are sought after as souvenirs. The collection of these poems, published under the title Poems on the Underground has just gone into its ninth edition. This practice has been adopted by public transport systems in New York, Moscow and other metros and the display of poems has become part of the urban landscape.

The Tamil poem that is exhibited now, the oldest to be featured, is from Kurunthogai, a collection of 400 poems on love, ascribed to the first three centuries A.D.. This is the most popular and off-quoted of the Sangam anthology. When the team of selectors for Poems on the Underground started looking for the original text, Nalini Prasad, curator of the South Indian Languages section of the British Library stepped in. The library has in its holdings, a Kurunthogai text, published in 1915 by Vithyarathnagara Press at Vellore. Tirumaligai Sowriperumalarangam of Tirukannapuram had written the annotation. (There were later editions with annotation by U. Ve. Swaminatha Ayyer. It was my delight to see and handle this edition at the British library. A calico-bound imprint, in good condition, it had been bought from a certain Saraswathi Book Stores in Vellore, as evidenced by a rubber stamp impression on the title page."

நம் செம்மண் தந்த “செம்புலப் பெயல் நீர்” விரம் சந்திராவின் ஆங்கில இலக்கியம்
பிறக்க ஆணிவேராக இருந்தது சங்கச் சொல்வளம்தான் என்று பெருமைகொள்வோம்.

அன்புடன்
நா. கணேசன்

[1] பாரத மணித் திருநாட்டின் பழைய வேளாண் தொழிலின்
அமிசங்களில் மிக முக்கியமான ஓர் அங்கத்தைத் தமிழின் முதல் ஜர்னலிஸ்ட், மகாகவி ஒருவர் பதிவு செய்ததை
விரிவாகப் பாருங்கள்,

வேதரிஷிகளுக்கு இணையானவர் என்று தமிழ்மறை தந்த நம்மாழ்வாரை
ஸ்ரீவைஷ்ணவர்கள் இன்றைக்கும், என்றைக்கும் தொழுது ஏத்துகின்றனர்.
அவர் தமிழ்ச் சங்கம் மதுரையிலே வென்று அகவல் பாடினவர்.
நான் ரா. ராகவையங்கார் ஸ்வாமி உரையுடன் உள்ள நூலை தமிழ் மரபு
அறக்கட்டளைக்குத் தந்துள்ளேன். படித்துப் பாருங்கள். பெரும்புலவர் 
கம்பராமன் ஐயா சொன்னார்: இன்னும் நம்மாழ்வார் அகவலுக்குச்
சரியான உரை வரவில்லை என்று. அந்த அகவலைப் புரிந்துகொள்ள
சங்க இலக்கியமும், சிந்து அகழ்வாய்வு காட்டும் செய்திகளும்,
ரிக்வேதமும் வேண்டும் என  நினைக்கிறேன். பெருமரம் - மகரவிடங்கரின்
வானத்து ஆல (< யால்) மரம் என்பது தெளிவு. பரிபாடலும், நம்மாழ்வார்
அகவலும் பாருங்கள். வேதாந்த தேசிகர் திராவிட வேதங்கள் பற்றிச்
சொல்கிறார்:

”திராவிட வேதம்

ஆழ்வார்கள் ஈரத்தமிழில் பாடிய தெய்வப்பனுவல்கள்
திராவிட வேதம்
 என்று சிறப்பிக்கப்படுகின்றன. (ஈரம் = அன்பு)
வடமொழி வேதங்களைக் காட்டிலும் அருளிச் செயல்களுக்குத்
தனி ஏற்றம் உண்டு. ‘வேதங்களினால் கலங்கின ஞானமே
உண்டாகும் என்றும், ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களைக்
கொண்டே அதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்
என்றும்’ துணிந்துரைத்தார் வேதாந்ததேசிகர்.

செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே

என்பது அவர் வாக்கு.

‘அல்ப ஞானிகளால் கலங்கின வேதமானது உண்மை
ஞானத்துக்குத் துறையான ஆழ்வார் பக்கலிலே சேர்ந்து
ஆழ்பொருளை அறிவித்தது’ என்றார் அழகிய மணவாளப்
பெருமாள் நாயனார். அவரே, ஆசாரிய ஹிருதயம் என்னும்
நூலில் வேதத்தில் உபநிஷதம் போலத் தமிழ் மறையில்
திருவாய்மொழி
 சிறப்புடையது என்றும் குறிப்பிட்டார்.”

உண்மையில் பார்த்தால், திராவிட வேதங்கள் சங்க இலக்கியங்களுந்தாம்.

அவையின்றி நம்மாழ்வார் போல்வர் எப்படித் தமிழ் சமூஹத்திலே தோன்றமுடியும்??

K R A Narasiah

unread,
Mar 21, 2015, 12:35:10 PM3/21/15
to mintamil
எனது நான்காவது சிறுகதைத் தொகுதியின் பெயர் செம்புலப்பெயனீர். 
அத்தொகுப்பில் உள்ள ஒரு கதையின் தலைப்பும் அதுவே. முன்னட்டையிலேயே இப்பாட்டும் இடம் பெறுகிறது. அக்கதைக்கு ஆரம்பத்தில் இவ்வாறு எழுதியுள்ளேன்:
லண்டன் நகரத்து அண்டர்க்ரவுண்ட் ரயில்களில் விளம்பரப்பலகைகளில் உலகத்து நல்ல கவிதைகள் அந்தந்த மொழிகளிலேயே எழுதி அவற்றிற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்படவேண்டும் என்ற எண்ணம் முதன் முதலாக  ஜூடித் செமைக் என்பாருக்கு 1986ல் தோன்றியது. கவிதகளைத் தேர்தெடுக்க அமெரிக்க எழுத்தாளர் ஜூடித், சிசிலி ஹெர்பர்ட், ஜெரார்ட் பென்சன் என்பவர்களுடன் பல முறை மெட்ரோவில் பயணித்தார். வருடத்திற்கு மூன்று முறை புதுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது

நான் எழுதிய கதை ஐரிஷ் பெண்ணொருத்திக்கும் தஞ்சாவூர் தமிழனுக்கும் ஏற்பட்ட காதலைப் பற்றியது. இது நான் கடற்படையில் இருந்த போது நடந்த உண்மைப் பின்னணியில் எழுதப்பட்டது. அவள் தீவிர கத்தோலிக்க்ப் பெண் ஐ ஆர் ஏ வை நம்பியவள். கே சீ என்றழைக்கப்பட்ட அவ்னும் ஹான்னாவும் பிரிந்தனர். உடலால் மட்டுமே. 
நரசய்யா 

On Sat, Mar 21, 2015 at 9:09 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info

On Saturday, March 21, 2015 at 5:30:28 AM UTC-7, singanenjan wrote:
நல்லது இராமகி அவர்களே...உங்கள் சிவகங்கை, எங்கள் கடலூர்-பண்ருட்டி-நெய்வேலி பகுதிகளில் , பூமியின் மேற்பரப்பில் "கடலூர் மணல்பாறைகள்" அமைந்துள்ளன. இவற்றிலுள்ள இரும்புக் கூறுகள் காற்றிலும் மழையிலும் சிதைந்து மண்ணிற்கு சிவந்த நிறத்தை அளிக்கின்றன. செம்மங்குப்பம், செம்மேடு போன்ற பகுதிகளில் செம்மண் உள்ளது.
செம்மண் பூமியில் பெய்யும் மழை நீர் , மண்ணுடன் கலந்து சிவந்த நிறத்தை பெறுவதை பலமுறை பார்த்ததுண்டு.  மழை நின்ற பின் சிறிது நேரத்தில் , மண் பிரிந்து நீர் தெளிந்து விடும்.
ஆனால் சமதளத்தில் விழும் மழைத்துளிகள் ஒன்றுகலந்தபின், எந்தத் துளி எங்கே விழுந்தது என்று பிரித்து அறிய இயலாதல்லவா? -அன்புடை நெஞ்சங்கள் அப்படித்தான் கலக்கவேண்டும்.

N D Logasundaram

unread,
Mar 21, 2015, 1:07:00 PM3/21/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com
அன்புள்ளதிரு இராமகி அவர்களுக்கு 

மேலே  கண்ட திண்ணை வலைப்பக்கத்தில் நான் கண்ட ஓர் சொல்லும்  கா ட்டியுள்ள அதன் பொருளும்  
செம்பொன் = கலப்படம் இல்லாத தனிப் பொன்
என் எண்ணப்படி இஃது  செம்மை = சிவந்த நிறமுடைய பொன் (மாழை) ஆகும் = செம்பு எனத் திரிந்துள்ளது 
இதற்கு இணையாக இரும்பொன் = இருண்ட (கருத்த ) நிறமுடைய பொன் = இரும்பு எனத் திரிந்துள்ளது 

மஞ்சள் நிறப் பொன் / தங்கம் / கனகம் / பசும்பொன் எனப்படும் 
புலம் போன்ற இடப்பெயர்ச் சொர்களுடன்   வருங்கால்  செம்மை நிறத்தையே குறிக்கும் என்பது என் கருத்து
பூ வி னுடன் வரும்போதெ ல்லாம் அவ்வாறே 

செம்#### = சிவந்த 
செம்மண்(ஞ்)சேரி , செம்பாக்கம் செம்பங்குடி செம்மண் தோட்டம்
செங்கல், (கட்டிடம் )  செங்கால் (நாரை) 
செங்கழுநீர் (பூ)  பூவினுடன் வருங்கால் பெரும்பாலும் சிவந்த நிறம் காட்டும் 

செ  / சே = சிவந்த  
செவ்வாய் = கோள் 
செய்யன = சிவந்த 
சேய்  = குழந்தை = பிறக்கும் பொது பெரும்பாலும் எல்லா குழந்தைகளும்/குட்டிகளும் சிவந்த நிறமுடையதாக காண்பதால் 
சேவடி = சிவந்த அடி   சேயெரி,  சேயொளி 

மேலும் 

துவரங்குறிச்சி (துவர் = சிவந்த நிறம் - துவரம் பருப்பு , துவர் வாய் (இதழ்)
துவரிமண் (மதுரை அருகு ஒர் ஊர் ) 

அருணம் என்றாலும் சிவந்த எனும் பொருள் தருவதுண்டு
 அருணன் = ஞாயிறு  அருணாச்சலப் பிரதேசம் (சூரியன் உதிக்கும் நாடு) 
அரணை = சிவ ந்த வாலு டைய ஊர்வன

பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்பு நிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும் மதுரைக்காஞ்சி 514

செம்பியன் றன்ன செஞ் சுவர் புனைந்து மதுரைக்காஞ்சி 485
சேயிதழ் பொதிந்த செம்பொன் கொட்டை சிறுபாணாற்றுப்படை 75
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல் அகம் 63 
செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின் அகம் 96
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின் அகம் 99
செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி அகம் 133
பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கின அகம் 223
பொலன்செய் கிண்கிணி நலம்பெறு சேவடி அகம் 254
பொறிவரிப் புறவின் செங்கால் சேவல் அகம் 271
பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய் அகம் 305
திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு அகம் 309
தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் 2.68.5 திருமுறை 
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய் 11.725 திருமுறை
செய்ய சங் கீன்ற                                                       முத்தொள்ளாயி ரம் 
செய்ய தனி ஆழித் தேரோனும்                                                          மூவருலா 

2015-03-21 17:18 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:

--

Oru Arizonan

unread,
Mar 21, 2015, 1:28:19 PM3/21/15
to mintamil
மிகச் சிறந்த பதிவுகள்.  தமிழை நான் கற்றுக்கொள்ள உதவும் பதிவுகள்.  தொடர்க தங்கள் தமிழ்ப்பணி.  நானும் கற்றுக்கொள்கிறேன்.

நான் பிறந்த மண்ணான காரைக்குடியும் செம்மண் உடைத்ததே!  ஆஸ்திரேலியா சென்றபோது, குவீன்ச்லாந்தில், சில இடங்கள் செக்கச் சேவர் என்ற செம்மண்ணுடன் விளங்குவத்யும் கண்டேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2015, 9:44:02 PM3/21/15
to தமிழாயம், mintamil, வல்லமை, தமிழ் மன்றம், Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com
செங்கோல், செந்தன்மை போன்ற இடங்கள் சிவப்பு பொருந்தாது

21 மார்ச், 2015 ’அன்று’ 1:06 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 21, 2015, 9:49:54 PM3/21/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Saturday, March 21, 2015 at 6:44:02 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
செங்கோல், செந்தன்மை போன்ற இடங்கள் சிவப்பு பொருந்தாது

திரு. நூதலோசு குறிப்பிடவும் இல்லை.

Malarvizhi Mangay

unread,
Mar 22, 2015, 12:59:37 AM3/22/15
to mint...@googlegroups.com, வல்லமை

வேந்தன்அரசு ஐயாவின் கருத்து ஏற்புடையது.செம்மொழி என்பது போல செம்மைத் தன்மையைக்
குறிப்பது.பாரதியின் கூற்று நினைவிற்கு வருகிறது.
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
மக்களே ,பாரதி யைப் போலவே
இருகட்சிக்கும் இதைப் பொதுவில்
வைப்போமா?  செம்மை மாந்தர்
திறம்புவதில்லையாம்.
நன்றி நன்றி நன்றி.

Singanenjam Sambandam

unread,
Mar 22, 2015, 4:40:28 AM3/22/15
to mint...@googlegroups.com
நூ.தா. லோ. சு . அய்யா அவர்களுக்கு, மிக்க நன்றி, 

பழத்தைப் பிழிந்து சாறு கொடுத்திருகிறீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களைத் தேடிப்  படிப்பேன்.

அரிசோனன் அய்யாவிற்கு, 
பாறை சிதைந்து மண் உருவாகிறது. பாறையில் இரும்புக்கூறு அதிகம் இருப்பின் , அப்பாறையிலிருந்து உண்டாகும் மண் செந்நிறம் பெறுகிறது. காரைக்குடி-சிவகங்கை - பண்ருட்டி- நெய்வேலி பகுதிகளில் உள்ள செம்மண் பூமியில் இரும்பு சத்து அதிகம்,  முந்திரி- பலா போன்றவை பண்ருட்டி பகுதியில் செழித்தோங்க , செம்மண் நிலமே காரணம்
வேறோர் இழையில் தேமொழி கோபுரம் பற்றி எழுதியுள்ளதைப் பார்த்தீர்களா?

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2015, 7:50:52 AM3/22/15
to vallamai, மின்தமிழ்
செம்புலத்தில் பெய்த நீர் வடியாமல் உறிஞ்சப்படும். அதுதான் அன்புடைய நெஞ்சங்கள் கலக்குமாறு.

21 மார்ச், 2015 ’அன்று’ 9:49 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 22, 2015, 8:19:05 AM3/22/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 4:50:52 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
செம்புலத்தில் பெய்த நீர் வடியாமல் உறிஞ்சப்படும். அதுதான் அன்புடைய நெஞ்சங்கள் கலக்குமாறு.

உறிஞ்சப்படும். மழை அதிகமானால், நீர் வடியும். குறுந்தொகைப் பாடலின் செம்புலம் = “red earth" உவமையைப் புரிந்துகொள்ள
களவழி நாற்பது படிக்க வேண்டுகிறேன்.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2015, 8:45:51 AM3/22/15
to vallamai, மின்தமிழ்
கருப்பு எர்த்தில் கலக்காதா?

22 மார்ச், 2015 ’அன்று’ 8:19 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 22, 2015, 8:50:41 AM3/22/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 5:45:51 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
கருப்பு எர்த்தில் கலக்காதா?

களிமண், களர்மண் கருப்புநிலம். அது அவ்வளவு எளிதில் கலக்காது.
தண்ணீர் அப்படியே தெளிவாய் தேங்கி நிற்கும். எனவே, இந்நிலங்களில்
தமிழர் விவசாயம் செய்ய அறியவில்லை. சும்மா கிடந்த நிலங்களை
எடுத்து பருத்தி பயிர்செய்யக் காட்டியவர்கள் நாயக்கர்கள். கரிசல்
மண் கதைகளில் கி. ராஜநாராயணன் எழுதியிருப்பவை அதுவே.
நம் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு: செங்காடு என்றால் கவுண்டன்,
கருங்காடு என்றால் நாய்க்கன். 

களவழி நாற்பதில் ‘செம்புலப் பெயல் நீர்” உவமை கையாளப்படும்
பாடல் பார்த்தாச்சா?

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2015, 10:36:41 AM3/22/15
to vallamai, மின்தமிழ்
>களவழி நாற்பதில் ‘செம்புலப் பெயல் நீர்” உவமை கையாளப்படும்
பாடல் பார்த்தாச்சா?

அப்படி ஒரு பாட்டு இருக்கா?

22 மார்ச், 2015 ’அன்று’ 8:50 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

Singanenjam Sambandam

unread,
Mar 22, 2015, 11:28:09 AM3/22/15
to mint...@googlegroups.com
கணேசன் ஐயா , எவ்வளோவோ எடுத்தப் போடுகிறீர்கள் , நாற்பதில் ஒன்றையும் போடுங்களேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 22, 2015, 1:46:21 PM3/22/15
to mint...@googlegroups.com

 12. 
ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து.

காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து ...

காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன்  படையைச் செலுத்தி, விரைந்து பகைவரை  கொன்ற போர்க்களத்தில் ...

ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ ..

இடைவிடாது அம்புகள் தைக்க,  தளர்ந்துவிட்ட எழுச்சியையுடைய யானைகள்,  தீயின் நிறம் பொருந்திய  உதிரத்தை ஒ ழுக்குதலால், சிவந்த இடத்தையுடைய செம்மண் மலைகளென மழைக்கு ஒக்கும்.

காவிரி நாட்டின் அரசன் செங்கட் சோழன் படைநடத்தி எதிரிகளை  வென்ற போர்க்களத்தில் யானைகளின் தோற்றமானது;  செம்மண் குன்றில் பெய்த மழை செந்நீராக ஒழுகும் ... அது போல போரில் காயமடைந்து குருதி கொட்ட நின்ற யானைகள் மழை பெய்து செந்நீராக வடியவிடும் செம்மண் குன்றுகளைப் போலிருந்தன.

..... தேமொழி 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N D Logasundaram

unread,
Mar 22, 2015, 3:17:23 PM3/22/15
to mintamil
ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து.

திருமதி தேமொழி அவர்களுக்கு

 பூவலம் என்பது ஒர் குறிப்பிட்ட  இடத்தின் பெயரும்  (ஊர்) ஆகும் (வைப்புத்தலம )
என க்காட்டும் மாணிக்க வாசகரது கீர்த்தித்'திரு அகவல'திருவாசக வரிகள் 
- - - - -      - - - - -      - - - - -      - - - - -      - - - - -
- - - - -      - - - - -      - - - - -      - - - - -      - - - - -
திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக்
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்        55
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
- - - - -      - - - - -      - - - - -      - - - - -      - - - - -
- - - - -      - - - - -      - - - - -      - - - - -      - - - - -
வேட்டவலம் வலிவலம் திருவலம் போன்றவை ஏனைய 'வலம்' ஈற்று இடப்பெயர்கள் 

அன்புடன் 
நூ த லோ சு 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Mar 22, 2015, 5:21:45 PM3/22/15
to mintamil, வல்லமை, thamizayam, தமிழ் மன்றம், Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com
பா றையில் இரும்புக்கூறு இருப்பின் அதிலிருந்து உண்டாகும் மண் செந்நிறம் பெருகின்றது 

என எழுதுதப்பட்டுள்ளது 

செந் நி றம் தோன்றுவதற்கு இரும்புச் சத்து (TRACE ) மிக நுண்ணிய அ ளவில்  இருக்கும் என்பதில் கருதொற்றுமை யே 

இந்த நுண்ணியனிலை இரும்புச் சத்து  பற்றி  தொடர்புடையதால் எனக்குத் தெரிந்த 
சில துண்டுச் செய்திகளை வைப்பதில் தவறொன்றும் இல்லை என எண்ணுகின்றேன்

(1)
க்ளே clay எனப்படும் களிமண் எங்கும் கிடைக்கின்றது அதனைப்பயன்கொண்டுதன் செங்கல் செய்யப்படுகின்றது பக்குவநிலைக்கு 
சுட்டபிந்தான் சென்னிநிறம் தோன்று கி னறது என்வே இரும்புச் சத்து இருந்தால் மட்டும் போதாது வேண்டிய அளவில்  சூடும் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் 
செம்மண் காணும் இடங்கள் யாதானும் ஒர்  புவியியல்  காரணத்தால்அங்கு களிமண்  தீவாய்ப் பட்டிருக்கவேண்டும் அதனால் தன ஆங்காங்கே திட்டு திட்டா க
 செம்மண் பரப்பு காண்கின்றது ஒருவர் கன்யாகும  ரியிலி ருந்து காஷ்மீரம்வர ரயிலில்  சென்றால் குறைந்தது 20 இடத்திலாவது மழைக்கு அடுத்து சிறப்பா க  செந்நிற மண் உள்ளமை து உணரலாம் 
(2)
வெள்ளை க்  களிமண்ணி ல் மிகக் குறைவாக இரும்புச்சத்து இருக்கும்  போலும் அதன தன சுட்ட பின்னும் வெண்மை நிறம் செங்கல் போல்
 அதிகமாக மாறவில்லை பீங்கான் சாமான்களின் உடைந்த பகுதியில்தான் பார்க்க வேண்டும் ஏனெனில் அவைகளில் மே ற்பூச் சு வேறு பொருள் 

(3)
சேலம் அருகிலி ருந்து கோயில் சுவர்களில் பயன்படும்  காவி வீட்டு சுவர்களுக்கான மஞ்சள் நிற   கோபி இவை வரு ரின்றது இவை மண்ணிலிருந்தே
 இரும்புத்தாது பொருள் தனிலிருந்து செய்யப்படுகின்றது சிலபோது அப்படியே சிவந்த நிற இரும்பு ஆக்சைடு கிடைக்கின்றதாம் கோ க்பியும் அதுவே 

(4)
கல்லாடை கல்லா ல மரம்  எனும் சொர்கள் ல் பற்றி ஓர்  மடலில் எழுதும் போ து க ல் என்பதுவே சிவந்த நிறத்தைக் குறித்து என எழுதினேன் சிவந்த
 நிற முடைய பாறைகள் தான் எங்கும் எல்லா கண்டங்களிலும் லில் பரந்து காண ப்படு டிகின்றது  ஆக கல் என்றாலே சிவப்பு என்பதும் கல்லாடை சிவந்த 
ஆடை(துவராடை) எனப் பொருள் படும் மற்றும் கல்லால மரம் சிவந்த பழம் காய்க்கும் ஆலமரம் எனப்பொருள் படும் எனவும் காட்டியிருந்தேன் 

(5)
மரச் சக்கைகளிலிருந்து(நார்ப்பொருள்) செய்யப்படும் கா கிதத்தின் மேல் தடவப்படும் வெண்மைநிற பூச்ச்சு அலுமினியம் சல்பேட்டு என்பா ர்கள்
ஆனால் நாளடைவில் காகிதம் பழுப்பு நிற மா கிவிடுவது அந்த அலுமினியம் சுல்பெட்டு தயாரிக்க பயன் கொண்ட அலுமிநியத்தாது நுண்ணிய
 நிலையில் இரும்புச் சத்து கொண்டதனால் ஆவதும் நீடித்த வெண்மை நிறத்திற்கு இரும்புச் சத்து இல்லாத  பூச்சுப்பொருள்   தேவை என்பார்கள் 

(6 மண்ணிலிருந்து கண்ணாடி செய்யப்படுகின்றது பயன் கொண்ட மணலில்நுண்ணி யநிலையில் இரும்புச்சத்து    இருப்பதால் கண்ணாடியில்
 பக்கவாட்டில் தோன்றும் பச்சை நிறம் உண்டாகின்றதெ ன்பர்  போரக்ஸ் பயன்கொண்டு தயாரித்தல் தூய காண்ணடி கிடைக்கும் என்பார்கள் 

(7
எந்த பயிரினத்திலும்  உள்ள பச்சையத்தின்  (chlorophyll) நடுவில் மக்னீசியம் அணு கொண்டுள்ளது என்பர்கள் எப்போது இலைகளில்  பச்சையம்
 கு றை ந்து மஞ்சள் நிறம் தோன்று கின்றதோ அப்போது  மண்னில் மக்னீசிஉம் தேவை எனப தும்  ஆனால் உலகில் எந்த மண்ணிலும்எப்போதும்
  மக்னீசிஉம் உள்ளது என்பதும் ஆனா ல் பயிர்களுக்கு கிடை க்கும் நிலைக்கு வருவதற்கு மண்ணில் இரும்புச்சத்து இட வேண் டும் என்பார்கள் 
அதுவும் கரிம நிலை இரும்பு(ORGANIC ) இதற்கு சிறப்பான வழி ஒன்று  காய்ந்த இரத்தம் ( ஆட்டுத்தொட்டி இரத் தம் காய்ந்தநிலையில் கிடைக்கும்)
 இட்டால் உடனே இலைகளில் பச்சையம் தோன்றி எங்கும் பச்சப் பசே லென்றாகும்என்பார்கள் 

அன்புடன் 
நூ த லோ சு
மயிலை 

N. Ganesan

unread,
Mar 22, 2015, 10:37:10 PM3/22/15
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, podh...@gmail.com

On Sunday, March 22, 2015 at 2:21:43 PM UTC-7, N D Logasundaram wrote:

(4)
கல்லாடை கல்லா ல மரம்  எனும் சொர்கள் ல் பற்றி ஓர்  மடலில் எழுதும் போ து க ல் என்பதுவே சிவந்த நிறத்தைக் குறித்து என எழுதினேன் சிவந்த
 நிற முடைய பாறைகள் தான் எங்கும் எல்லா கண்டங்களிலும் லில் பரந்து காண ப்படு டிகின்றது  ஆக கல் என்றாலே சிவப்பு என்பதும் கல்லாடை சிவந்த 
ஆடை(துவராடை) எனப் பொருள் படும் மற்றும் கல்லால மரம் சிவந்த பழம் காய்க்கும் ஆலமரம் எனப்பொருள் படும் எனவும் காட்டியிருந்தேன் 

 கல் என்றால் சிவப்பு என்ற பொருளா?

ஆல மரத்தின் காய்கள் சிவப்பாக இருப்பவை:
சிவப்பான காய்கள் கொண்ட ஆலின் பெயர் வெறும் ஆல் தான். அம்மரத்துக்கு
கல் என்ற முன்ஒட்டு இல்லை.
http://www.flowersofindia.net/catalog/slides/Banyan%20Tree.html
http://irapl.altervista.org/nit/viewpics.php?title=Ficus+benghalensis
http://ibc.lynxeds.com/photo/coppersmith-barbet-megalaima-haemacephala/bird-feeding-ficus-benghalensis

தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பது மலையில் - இமயம், பொதிகை மலைகள்.
சங்க இலக்கியத்தில் கல் என்றால் மலை என்ற பொருள் பல பாடல்களில்
வரும். சில ஆயிரம் அடிகள் கடல்மட்டத்திலிருந்து வளர்வன கல்லால் மரங்கள்.
இங்கே, கல் = மலை, குன்று எனப் பொருள். கல்லிச்சி, கல்லரசு மரங்களும்
உள்ளன.

கல்லால மரம் எனத் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில்
வழங்குகிறது. கல்லால மரம் மராட்டியில் கல்லு-கோளி என்கின்றனர்.
கோள்- என்றால் பற்றுதல் எனப் பொருள். மனிதன் வாழ்க்கையில் சோதிடப்
படி பற்றுவது “கோள்” இந்த தமிழ் நம்பிக்கையை, சிந்துசமவெளியில்
இருந்துள்ளது. பின்னர் வடமொழியில்  மொழிபெயர்த்து கிரஹம் என
வழங்குகின்றனர்.

கல், கரடுகளில் வளரும்  கல்லால் = ஹில் பன்யன் (ficus mollis, பழைய பெயர்
ficus tomentosa). கல் பாங்கான இடங்களில் கற்களையும், பாறைகளையும்
பற்றி வளரும் கல்லால் மரம். ficus mollis (ficus tomentsa), கல்லால
மரத்தின்
 காய்கள் பச்சை நிறம் கொண்டவை, சிவப்பாக இல்லை என்பது
முக்கியமானது.
http://www.flowersofindia.net/catalog/slides/Soft%20Fig.html
http://commons.wikimedia.org/wiki/File:Ficus_mollis_in_Keesaraguda,_AP_W_IMG_9134.jpg
http://herbalmedicinalplants.org/Herbs.php?disp=Ficus_mollis&herblist=F

நா. கணேசன்

N D Logasundaram

unread,
Mar 23, 2015, 2:38:21 AM3/23/15
to thamizayam, வல்லமை, தமிழ் மன்றம், mintamil, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan
திரு நாசா கணேசன் அவர்களுக்கு,

மறுபடியும் உங்கள் மனம் போன வழியத்தான் ஒருவர் பொருள் கொள்ள வேண்டும் 
எனும் கொள்கையை இடம் விடாமல் சா தித்து வரும் தமிழ் ஆர்வலரே உங்களு க்கு
நேரம் இருப்பதால் மற்றவர்களுக்கு இடையூ று கொடுக்கும் எண்ணம் நன்கு ஊறி
போனவராக காட்டுவதில் மிக விருப்பம் என்பதை 1008 வது முறையாக கா ட்டுகின்றீர் 

கல்லாலமரம் கல்லாடை பற்றி  முன்பே வெகுநீண்ட வாதம் செய்து வந்தீர் நான்
கொண்ட பொருள் எதோ கூடாது பொருந்தாது என்பதாக கா ட்ட நினைக்கின்றீர் ஓர்
நல்ல மடலாடார் தன் கொள் கைகளை வைக்கும் பொது மறுக்க வேண்டுமென்றால்
எதிர்மறை க்கான  சான்றுகள் வைக்க வேண்டும் அல்லாது இதற்கு பொருள் இது
என எழுதினால் வேண்டுமென்றே சீண்டிப்பா ர்க்கும் குணம் வெளிவருவதை உணர்ந்தும்
பார்ப்போமே என்னை என்ன செய்துவிட முடியும் என காட்டநினைக்கும் கொள்கையீர்
உங்களை சிலர் மன் னிப்பதை ஓர் துணையாக கொ ண்டு உங்கள் மாற்றமுடியாத குணத்தை
அவர்களுக்கு உறுதி செய்கின்றீர்

நீங்கள் வைக்கும் மடலில் கல் அல்லது ஆலமரம் எனும் சொல் பயன் கொள்ள  வாய்ப்புகள் 
வரும்போது நினைவு கா ட்டுங்கள் உங்கள் கருத்தை. மற்றவர்கள் எழுதும் பொது மீண்டும்
மீண்டும் பழமையான புளித்துப்போன கள்ள த்தனமாக புகுத்தும் கொள்கையை வைக்கும்
குண நலனை  மறுத்து மறுத்து பலமுறை தனி மடலிலும்  காட்டியும்  நன்கே மருத்துபோன
உள்ளத்தை தொடர்கின்ரீர் ஆகையால் பலர் இடும் சாபங்கள் நிறைய சேர்ந்து சேர்ந்து
உங்கள் நா ட்டு வங்கியின் பெட்டகம் வழிந்து  வெ ளி (சுவிசு) நாட்டு வங்கியில் வழிந்தும் 
நீங்கள் பணிபுரியும்  நிறுவனம் ஒருவேளை வேற்றுக் கோளில் பாவம் புண்ணியத்திற்கு
வங்கி தொடங்கினால் அங்கும் வழிந்து விடும் என நினைகின்றேன் 
 
 நூ த லோ சு
மயிலை 

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 23, 2015, 11:01:08 AM3/23/15
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, podh...@gmail.com

தொடர்பில்லா செய்திகள். சுவிசு வங்கியில் உங்களுக்கு பணம் சேர வாழ்த்துக்கள்.

கல்லால மரம் = Hill banyan tree என்கிறது அகராதிகள். ஊர் வழக்கமும் அப்படியே.
அதன் காய்கள் சிவப்பு நிறத்தில் இல்லை. மலை ஆலமரம் கல்லால மரம்

சமவெளியில் உள்ள ஆல மரத்தின் காய்கள் சிவப்பு. ஆனால், அவை ஆலமரம் தான்.
கல்லால மரம் என்று அவற்றுக்குப் பேர் கிடையாது. இது விஞ்ஞானமும், மரபு பூர்வமான
உண்மை. 

நாசா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சுவிசு பாங்க், .... எல்லாம் கிடக்கட்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 23, 2015, 11:03:10 AM3/23/15
to mint...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 8:28:09 AM UTC-7, singanenjan wrote:
கணேசன் ஐயா , எவ்வளோவோ எடுத்தப் போடுகிறீர்கள் , நாற்பதில் ஒன்றையும் போடுங்களேன்.

தேமொழி அவர்களுக்கு நன்றி. களவழி நாற்பது கிட்டிவிட்டதுதானே.
நாகணவாய்ப் புள் பற்றி எழுதும்போது இப்பாடலைப் பார்த்தேன்.
செந்தலை என்பது தண்செய் செம்புலநாட்டின் தலைநகர். 

பிற பின்னர்!
நா. கணேசன்

N D Logasundaram

unread,
Mar 23, 2015, 12:01:15 PM3/23/15
to mintamil
40
குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

- [செம்புலப் பெயனீரார்]

N. Ganesan

unread,
Mar 25, 2015, 8:13:27 PM3/25/15
to mint...@googlegroups.com, vallamai

On Sunday, March 22, 2015 at 10:46:21 AM UTC-7, தேமொழி wrote:

 12. 
ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து.

செம்மண்மலையிற் பெய்த மழை செந்நீராயொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம் மலைகளை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் செம்மண்; "பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து" என (சிலப்.) வருவது காண்க. அம்-சாரியை.
 
சிவப்பான பூக்கள் மிகுதி. அவைபோல, இருக்கும் செம்மண்ணுக்குப் பூவல் என்றே பெயர். செந்தலை - செம்மண் இருக்கும் பிரதேசம்.
செந்தலை நிலத்தில் நிற்கும் சிவந்த மலையில் மழை பெய்தால் ‘செம்புலப் பெயல் நீர் போல’ சிவந்த ஆறும், அருவியும் பாயும்.
உவமை நயத்திற் உலகம் முழுதும் பாராட்டுப்பெறும் குறுந்தொகைப் பாடலின் கருத்தை அறிய களவழி நாற்பதில் உள்ள
இச் செய்யுளும் உதவுகிறது.

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 25, 2015, 8:20:50 PM3/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, March 25, 2015 at 5:13:27 PM UTC-7, N. Ganesan wrote:

On Sunday, March 22, 2015 at 10:46:21 AM UTC-7, தேமொழி wrote:

 12. 
ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து.

செம்மண்மலையிற் பெய்த மழை செந்நீராயொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம் மலைகளை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் செம்மண்; "பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து" என (சிலப்.) வருவது காண்க. அம்-சாரியை.
 
சிவப்பான பூக்கள் மிகுதி. அவைபோல, இருக்கும் செம்மண்ணுக்குப் பூவல் என்றே பெயர். செந்தலை - செம்மண் இருக்கும் பிரதேசம்.

ஆம், பூவல் என்றால் செம்மண் என்று மேலும் சில குறிப்புகளும் மற்ற  இலக்கியங்களிலும்  கிடைத்தன. 

வேந்தன் அரசு

unread,
Mar 25, 2015, 8:46:11 PM3/25/15
to vallamai, மின்தமிழ்
செம்புலம் இரண்டற கலக்கிறது 
செந்தலை இழிகிறது

N. Ganesan

unread,
Mar 25, 2015, 8:49:45 PM3/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, March 25, 2015 at 5:46:11 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
செம்புலம் இரண்டற கலக்கிறது 
செந்தலை இழிகிறது

தலை என்பது ஹெட் அல்ல. இடம்.
சீத்தலை (சாத்தனார் மணிமேகலை), நரிவெரூஉத்தலை, ....

செந்தலை என்ற ஊர் தஞ்சை செம்புல நாட்டில் உள்ளது.
செந்தலைக் கல்வெட்டு தமிழ் எழுத்து வரலாற்றில் முக்கியமானது.
அங்கே மழைபெய்தால் இழியாது. மலையும் இல்லை.
செம்புலப் பெயல் நீரார் செந்தலையில் நிற்கும்.

நா. கணேசன்
 
நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 26, 2015, 12:22:56 PM3/26/15
to mintamil
வணக்கம்.

2015-03-22 14:10 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
 
பாறை சிதைந்து மண் உருவாகிறது. பாறையில் இரும்புக்கூறு அதிகம் இருப்பின் , அப்பாறையிலிருந்து உண்டாகும் மண் செந்நிறம் பெறுகிறது. காரைக்குடி-சிவகங்கை - பண்ருட்டி- நெய்வேலி பகுதிகளில் உள்ள செம்மண் பூமியில் இரும்பு சத்து அதிகம்,  முந்திரி- பலா போன்றவை பண்ருட்டி பகுதியில் செழித்தோங்க , செம்மண் நிலமே காரணம்
செம்மண் நிலப்பரப்பு பலநூறு மைல்களுக்குப் பரவியுள்ளது.
மேலும், இவ்வளவு பெரிய செம்மண் பாறை இருந்து அது சிதைந்து இவ்வளவு செம்மண் உருவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளனவா? என்ற ஐயம் எழுகிறது ஐயா. 

சில இடங்களில் மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று செம்மண்ணுக்கு மேலே வெள்ளைநிற மணலும் உள்ளன.  எனவே, படத்தில் உள்ள பகுதியில் செம்மண்ணுக்கும் மேலே வெள்ளைமண் எப்படி வந்திருக்க முடியும் என்ற ஐயமும் எழுகிறது ஐயா.

அன்புள்ளம் கொண்டு தாங்கள் எனது ஐயங்களைத் தெளிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
Mar 26, 2015, 4:09:26 PM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, March 25, 2015 at 5:20:50 PM UTC-7, தேமொழி wrote:

On Wednesday, March 25, 2015 at 5:13:27 PM UTC-7, N. Ganesan wrote:

On Sunday, March 22, 2015 at 10:46:21 AM UTC-7, தேமொழி wrote:

 12. 
ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து.

செம்மண்மலையிற் பெய்த மழை செந்நீராயொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம் மலைகளை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் செம்மண்; "பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து" என (சிலப்.) வருவது காண்க. அம்-சாரியை.
 
சிவப்பான பூக்கள் மிகுதி. அவைபோல, இருக்கும் செம்மண்ணுக்குப் பூவல் என்றே பெயர். செந்தலை - செம்மண் இருக்கும் பிரதேசம்.

ஆம், பூவல் என்றால் செம்மண் என்று மேலும் சில குறிப்புகளும் மற்ற  இலக்கியங்களிலும்  கிடைத்தன. 

1. பூவல் - செம்மண்; “தருமணற்றாழப்பெய் தில்பூவலூட்டி” (கலித். 114 : 12); “புனைமாணிஞ்சி பூவ லூட்டி” (அகநா. 195 : 3); “பூவலங்குன்றம்” (களவழி. 12). படு - மடு. தோண்டிய -தோண்டுதலால் உண்டாகிய; “களர்ப்படு கூவற்றோண்டி” (புறநா. 311 : 1); கலித். 114 : 12.

உவேசாவுக்கு குடந்தை காலேஜில் வேலை வாங்கிக்கொடுத்தவர் பூவாளூர் தியாகராசச் செட்டியார்.
சென்னையில் தான் வாங்கிய வீட்டுக்கு “தியாகராச விலாசம்” என்று பெயரிட்டார் தமிழ்த்தாத்தா.
பூவலூர்  என்பதுதான் பூவளூர்/பூவாளூரா? அங்கே மண் செம்மண்ணா? - என்ற கேள்வி எழுகிறது.

நா. கணேசன்

-------------

வைரம் 20 நிறப்பெயர்களைத் தந்துள்ளார்:

1.சிவப்பு civappu

n. < சிவ-. 1. [K. kempu, M. cuvappu.] Ruddiness, red colour; செந்நிறம். (பிங்.) 2. Ruby; சிவப்புக்கல். 3. Anger; சினம். கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். சொல். 372). 4. Blackness; கறுப்பு. (அக. நி.)

2.செங்கல்மங்கல் ceṅkal-maṅkal

n. < id. +. 1. Dim red colour; மங்கின செந்நிறம். 2. Dimness, as of the evening twilight or eclipse; அந்திவேளை கிரகணகாலங்களில் உண்டாம் மங்கல். (W.)

3.துவர்; tuvar

n. cf. துகிர். [K. togar.] 1. Coral; பவளம். (திவா.) 2. [T.togaru.] Red colour, scarlet; சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6, 26). 3. Red ochre; காவி துவருறுகின்ற வாடை யுடல்போர்த்து (தேவா. 608, 10).

4.நலம் nalam

13. Colour; நிறம். செயலையந் தளிரேய்க்கு மெழி னலம் (கலித். 15). 14. Red colour; செம்மை நிறம். நலம்பெறு கலிங்கத்து (திருமுரு. 109).

5.பூவல் pūval

n. < பூ-. 1. Red colour; சிவப்பு. (சூடா.) 2. Red earth; செம்மண். இல் பூவலூட்டி (கலித். 114). 3. Large well; துரவு. (யாழ். அக.) 4. Flowering; பூத்திடுகை. (அரு. நி.)

6.நீலம் nīlam

n. < nīla. 1. Blue, azure or purple colour; நீலநிறம். (திவா.) 2. Blue dye, indigo; நீலச்சாயம்.  6. Black colour; கறுப்பு. (திவா.)

7.ஓரி ōri ,

n. [M. ōri.] 7. Dark blue colour of matured honey; தேன் முதிர்தலாற் பிறக்கும் நீல நிறம். அணிநிறவோரி பாய்தலின் (புறநா. 109, 7).

8.களங்கம் kaḷaṅkam

7. Blue colour; நீலம். (சங். அக.) 8. Mark, sign, token; அடையாளம். களங்கமொன்றிட்டு மண் ணுறுத்தி நற்றுகில்கொடு பொதிந்தனன் (கந்தபு. மார்க் கண். 133).

9.பூ  pū

6. Blue colour; நீலநிறம். (அக. நி.) 7. Beauty; charm; அழகு. (திவா.)

10.காங்கு kāṅku

n. [K. kāgu.] 1. Dark blue colour; கருநீல நிறம். காங்கிட்ட கச்சையுமாய்க் கானவர்கள் வந்துகண்டு (கூளப்ப. 66). 2. A kind of dark-blue saree; கருநீலப் புடைவைவகை

11.மணிநிறம் maṇi-niṟam

n. < id. +. Dark blue colour, as of sapphire; கருநீலநிறம். மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில் (ஐங்குறு. 224).

12.நிமிரி nimiri

n. 1. Yellow colour; மஞ்சள் நிறம். (G. Tj. D. I, 120.) 2. A disease of cattle; குதிரைவலிப்புநோய். (M. Cm. D. 249.)

13.சந்தனப்புல்லை cantaṉa-p-pullai

n. < id. +. Light yellow colour, as of cattle; மங்கலான மஞ்சள் நிறம். (பெரியமாட். 13.)

14.மஞ்சள்¹ mañcaḷ

n. < mañjiṣṭha. [K. mañjḷā, M. maññaḷ, Tu. mañjaḷ.] 1. Turmeric, Curcuma longa; செடிவகை. மஞ்சள் மெல் லிலை மயிர்ப்புறந் தைவர (சிறுபாண். 44). 2. Yellow colour, as that of turmeric; மஞ்சணிறம். மஞ்சள் வெயில்.

15.மகரம்² makaram

n. cf. makaranda. 1. See மகரந்தம்¹, 1. (பிங்.) 2. Pink colour; மங்கிய சிவப்புநிறம். (W.)

16. சீக்காய்நிறம் cīkkāy-niṟam

n. < id. +. Dull green colour; வெளிறின நிறம். (யாழ். அக.)

17.பச்சை paccai

n. < பசு-மை. [T. patcca, K. M. pacca.] 1. Green colour;greenness; பசுமை நிறம். பச்சைமா மலைபோல் மேனி (திவ். திருமாலை, 2). 2. Emerald; மரகதம். (திவா.)

18.பசப்பு³ pacappu

n. < பசு-மை. 1. Green colour; பச்சை நிறம். பால்பொன் பசப்புக்கார் வண் ணம் (திவ். இயற். நான்மு. 24). 2. Sallow complexion of women due to love-sickness;

19. பைம்மை¹ paimmai

n. < பை². Greenness; green colour; பசுமை. (திவா.)

20. மரகதம் marakatam

n. < marakata. 1. Emerald, one of nava-maṇi, q.v.; நவமணியு ளொன்றான பச்சை யிரத்தினம். மரகத மணியோடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147). 2. Green colour; பச்சைநிறம். மரகதக்கதிரும்

21. மாநிறம் māniṟam

n. < மா² +. Brown colour, tan colour; பொதுநிறம். (C. G.)

22.கருமயிலை karu-mayilai :

n. < id. +. Iron grey colour; இருண்ட சாம்பல் நிறம். (மாட் டுவை.)

வேந்தன் அரசு

unread,
Mar 26, 2015, 9:15:17 PM3/26/15
to vallamai, மின்தமிழ்
கபிலம் இல்லையே

26 மார்ச், 2015 ’அன்று’ 4:09 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Mar 28, 2015, 3:02:19 AM3/28/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Thursday, March 26, 2015 at 6:15:17 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
கபிலம் இல்லையே

காமர் - என்றால் ஒருவகைச் சிவப்பு நிறம். இச் சொல்லைப் பார்த்தீர்களா?

காமர் கயல்: (= செங்கயல்)
(ரோஹிதம் என்றால் சிவப்பு).

இந்த நிறத்தில் சிவந்த மண்ணுள்ள ஊர் காமர்பதி = பூவலூர். (இப்பொழுது பூவாளூர்).
பூவல் = செம்மண்.

காமர் என்னும் நிறம் பற்றிய சொல்லின் செய்திகளை நாளை பார்ப்போம்!

நா. கணேசன்
 
Malarvizhi Mangay

unread,
Mar 28, 2015, 6:22:57 AM3/28/15
to mint...@googlegroups.com

காமரும்பூக் கச்சி கனிகண்ணன் போகின்றான்,மணிவண்ணா
நீயும் உன் பைந்நாகப்பாயைச்
சுருட்டிக்கொள்.

--

Hari Krishnan

unread,
Mar 28, 2015, 7:43:12 AM3/28/15
to mintamil

2015-03-28 15:52 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

காமரும்பூக் கச்சி கனிகண்ணன் போகின்றான்,மணிவண்ணா
நீயும் உன் பைந்நாகப்பாயைச்
சுருட்டிக்கொள்.

தமிழ்ப் பேராசிரியைக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.  காமர், காமரு இரண்டும் வேறல்லவா?  பாஞ்சாலி சபதத்தில்,

வல்லவன் ஆக்கிய சித்திரம் போன்றும்
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்
நல்ல தொழில்உணர்ந் தார் செயல்என்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையு மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்து
சொல்லை இசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாம்ஒரு காப்பியம் செய்தார்.

அழகு என்பது பொதுவாக வழங்கப்படும் பொருள்.  ’காமர் வண்ண மார்பிற் தாரும் கொன்றை’

காமரு வேறு.

அதே பாஞ்சாலி சபதத்தில்--

கண்ணைப் பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் - பல
காமரு பொன்மணிப் பூண்கள் அணிந்தவர் தம்மையே 
மண்ணைப் புரக்கும் பாவலர் தாமந்த வேள்வியில் - கொண்டு
வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே
எண்ணைப் பழிக்கும் தொகையுடையார் இள மஞ்சரைப் - பலர்
ஈந்தனர் மன்னர் இவர்தமக்குத் தொண்டியற்றவே.
விண்ணைப் பிளக்கும் தொனியுடைய சங்குகள் ஊதினார் - தெய்வ
வேதியர் மந்திரத்தோடுபல் வாழ்த்துக்கள் ஓதினார்

இதற்கு ஒரு காலத்தில் உரை எழுதிக் கொண்டிருந்தேன்.  அப்போது எழுதிய உரை:

காமரு - விரும்பத்தக்க.  

கணிகண்ணன் செல்கின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

தன் சீடனான கணிகண்ணன் காஞ்சிபுரத்தை விட்டுச் செல்லும்போது திருமழிசை ஆழ்வார் பாடியது.  'என் சீடன் கணிகண்ணன் போகின்றான்.  எனக்கும் இங்கே ஒரு வேலையும் இல்லை.  துணிச்சல் உள்ள கவிஞன் நான் போகின்றேன்.  விரும்பத் தக்க காஞ்சி மணிவண்ணா!  நீயும் உன் நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு என்னோடு புறப்படு!'

காமரு என்னும் சொல் 'காமர்' என்ற சொல்லினின்றும் வேறுபட்டது. 
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Mar 28, 2015, 3:51:25 PM3/28/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Karanthai Jayakumar
கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு ஊராட்சி இருக்கிறது. பேடு - பேட்டை (சந்தை கூடுமிடம்). ஆனால், இங்கே
பூவலம் சிவன்கோவிலும் இல்லை. மாணிக்கவாசகர் வரவுமில்லை.

(போட்டோ பார்க்கவும்)

குடிமன்னர்களின் அட்டகாசத்தில் குமுறும் மக்கள்

Byபா.ஜான்பிரான்சிஸ், கும்மிடிப்பூண்டி

First Published : 29 October 2013 03:34 PM IST

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும், பல்வேறு கடைகள் உள்ள பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வரும் நிலையில் அந்த மதுபான கடைக்கு வந்து மது அருந்திச் செல்லும் குடிமன்னர்கள் செய்யும் அட்டகாசத்தில் அப்பகுதி மக்களும், மாணவர்களும், கடைக்காரர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். “

--------------------------

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=51

பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்;

பதப்பொருள் : பூவலம் அதனில் இனிது பொலிந்தருளி - திருப்பூவலத்தில் இனிதாக விளங்கியருளி, பாவம் நாசம் ஆக்கிய பரிசும் - பாவத்தை அழித்த விதமும்.

விளக்கம் : திருப்பூவலம் என்பது ஓர் ஊர். இதில் பாவ நாசம் ஆக்கிய வரலாறு அறியப்படவில்லை. 

காமர்பதி (காமரூர்) (அ) பூவலூர் (பூவளூர்) ஸ்தல புராணத்தோடு திருவாசகம் சொல்லும் வரலாறு
மிகப் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தேன். பூவாளூர்ப் புராணத்தால் யாருடைய பாவத்தை
சிவபிரான் நாசம் செய்தார் எனவும் தெரிகிறது. 

காமர் என்பது செந்நிறம். பூவல் என்பது செந்நிற மண். இச்செய்தி மறப்பதால் வருவது
பூவளூர்ப் புராணம். காளத்தி காளஹஸ்தி ஆவதும், ஆடானை அஜகஜபுரி ஆவதுபற்றியும்
மரைக்காடு = antelope forest, வேதங்களுக்கே காடு ஆவதும் ஆராய்ந்தோம்.

காமர் - செந்நிறம். காவி (ஆவ - கன்னடத்தில்) - அரத்தோற்பலம் (அரக்காம்பல்). காமர் > காம்பல் > ஆம்பல்
மருதநிலப்பண் (சுத்த தயாசி) - இலக்கியங்களை - புறம் 1-லிருந்து, குறுந்தொகை -1, ...
நளவெண்பா, பெரியபுராணம் பார்ப்போம்.

காமர்பதிக்கு தேவாரம் கிடைக்கவில்லை. பக்கத்தில் உள்ள தவத்துறை, செந்துறை, ... தேவாரம்
பாடியுள்ளனர். அழிந்துபட்டமை தமிழின் போகூழ்.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 7, 2015, 4:00:42 AM6/7/15
to mintamil
வணக்கம் ஐயா.

கடந்த மாதம் கடலூர் அருகில் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள திருவந்திபுரம் சென்று வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  

ஆற்றங்கரையில் உள்ளது மண்மலை என்றும், பிரளயகாலத்தில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கினால் அடித்துவரப்பட்ட மண்ணானது பெருமலைபோல் குவிந்து, இறுகிவிட்டது என்றும், அந்த மலையில் பிரளயத்திற்கு முந்திய உயிரினங்களின் படிமங்கள் இருக்குமோ என்றும் எனக்கு ஐயம்.

படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

எனது யூகங்கள் சரிதானா?
அறிவியல் அடிப்படையில் இந்த மலை ஆராயப்பட்டிருந்தால் அதன் விளக்கங்களை தந்து எனது ஐயங்களைப் போக்கி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 9, 2016, 12:36:16 PM10/9/16
to mintamil, tamils.an...@gmail.com, thiruppuvanam

வணக்கம்.

திருவந்திபுரம் முதலான ஊர்களில் உள்ள மலைமேல் தண்ணீர்  ஏறிய இடத்தில் பெருமாள் நின்று அருள்கிறார்.... கி.காளைராசன்.

இந்தக் கருத்தைக்  கொஞ்சம்  விளக்க  முடியுமா, ....புவியியல்  ஆய்வுக்கு  உதவும்.   திருவந்திபுரம் எங்கள்  ஊர்... ஐயா திரு.சிங்கநெஞ்சம் singa...@gmail.com

திருவந்திபுர மலையைப் பற்றித் தங்களிடம் கூறுவது கொல்லர்தெருவில் ஊசி விற்பது போன்றதாகும்.

திருவந்திபுரத்தில் ஆற்றுநீர் மேல் எழுந்த இடத்தில் பெருமாள் நின்று அருளுகிறார் என்ற கருத்து மட்டும் என்னது.

அன்பன்
கி. காளைராசன்

வணக்கம் ஐயா.

கடந்த மாதம் கடலூர் அருகில் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள திருவந்திபுரம் சென்று வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  

ஆற்றங்கரையில் உள்ளது மண்மலை என்றும், பிரளயகாலத்தில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கினால் அடித்துவரப்பட்ட மண்ணானது பெருமலைபோல் குவிந்து, இறுகிவிட்டது என்றும், அந்த மலையில் பிரளயத்திற்கு முந்திய உயிரினங்களின் படிமங்கள் இருக்குமோ என்றும் எனக்கு ஐயம்.

படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

thiruvanthipuram 5 may 2012 (13).jpg
Image1112.jpg

Singanenjam Sambandam

unread,
Oct 9, 2016, 1:17:24 PM10/9/16
to mint...@googlegroups.com
நன்றி காளை அய்யா , எனக்கு படம்  காட்டுவதற்கு. 

கடலூர் முதுநகரில் (கூடலூரில்)  கேப்பர் மலை என்று ஒன்று உண்டே, தெரியுமா. 

அதன் தொடர்ச்சிதான் திருவந்திபுரம் மலை. 

நமது 'ஃ பேஸ் புக் ' நண்பர்  சிவராம கிருஷ்ணன் (தொல்லியல்  அறிஞர்) சொன்னதின் பேரில் , கடலூர் "மாலைமலர்" பத்திரிக்கை ஆசிரியர் , அவர்களின் தீபாவளி மலருக்காக " கேப்பர் மலை " பற்றிய சிறு கட்டுரை ஒன்று கேட்டார்.  அனுப்பினேன். அது அச்சேறத் தயாராக உள்ளது . அது வெளியானதும் இது பற்றி பேசுவோம். 

இதில்  உள்ள பிரளயத்திற்கு ( விட மாட்டீர்கள் போல் இருக்கிறதே) முன்னால் இருந்த உயிரினம் பற்றி விரைவில் எழுதுகிறேன். 

நன்றி. வணக்கம். 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 10, 2016, 10:48:04 AM10/10/16
to mintamil

வணக்கம்.

On 09-Oct-2016 10:47 pm, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>
> நன்றி காளை அய்யா , எனக்கு படம்  காட்டுவதற்கு. 
>
> கடலூர் முதுநகரில் (கூடலூரில்)  கேப்பர் மலை என்று ஒன்று உண்டே, தெரியுமா. 
>
> அதன் தொடர்ச்சிதான் திருவந்திபுரம் மலை. 
>
> நமது 'ஃ பேஸ் புக் ' நண்பர்  சிவராம கிருஷ்ணன் (தொல்லியல்  அறிஞர்) சொன்னதின் பேரில் , கடலூர் "மாலைமலர்" பத்திரிக்கை ஆசிரியர் , அவர்களின் தீபாவளி மலருக்காக " கேப்பர் மலை " பற்றிய சிறு கட்டுரை ஒன்று கேட்டார்.  அனுப்பினேன். அது அச்சேறத் தயாராக உள்ளது . அது வெளியானதும் இது பற்றி பேசுவோம். 
>

மகிழ்ச்சியான செய்தி.
நாங்களும் அறிந்து கொள்ளும் வகையில் மின்தமிழிலும் பதிவு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

> இதில்  உள்ள பிரளயத்திற்கு ( விட மாட்டீர்கள் போல் இருக்கிறதே) முன்னால் இருந்த உயிரினம் பற்றி விரைவில் எழுதுகிறேன். 

மகிழ்ச்சி ஐயா.
குமரிக்கண்டம் தொடர்பான தங்களது பதிவு நல்லபல விளக்கங்களுடன் கருத்தை நிறுவுவதாக இருந்த்து.  அதுபோல் இக்கட்டுரையும் அமையும். படிக்க ஆவலாக உள்ளேன்.

மற்றபடி,
புராணம் கூறும் பிரளயங்கள் பற்றிப் பேசாதிருக்க என்னால் இயலாது.
1) கடலூர் பாறைகள் எவ்வாறு தோன்றின ?
2) BEDDING வகை மண்படிமங்கள் எதன் காரணமாக அந்த இடங்களில் தோன்றின ?
3) கொடைக்கானலில் pillar rocks எப்படி உருவானது ?
4) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கருப்பு மண்ணும்,  கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் செம்மண்ணும் இருப்பதற்கான காரணம் என்ன ?
5) சுயம்பு லிங்கங்கள் அருகே ஆழமான தீர்த்தகங்கள் (தெப்பங்கள்) எவ்வாறு உண்கின ?
6) கடற்கரை ஓரங்களில் கண்மாய்கள் நிறைய இருப்பது எதனால் ?
7) ஏன் (மண்) மலையடிவாரங்களில்  பெருமாள் நின்று அருளுகிறார்?
என்பன போன்ற கேள்விகளுக்கான விடை என்ன ?

"பிரளயங்களே (சுனாமிகளே) காரணம்" என்பதே எனது கருத்தாக உள்ளது !  :)

மேற்கண்ட கேள்விகளுக்குச் சரியான விடை தெரிந்தால்தான் பிரளயம் என்னை விடும் :)

அன்பன்
கி. காளைராசன்

>
> நன்றி. வணக்கம். 
>
> 2016-10-09 22:05 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>>
>> திருவந்திபுரம் முதலான ஊர்களில் உள்ள மலைமேல் தண்ணீர்  ஏறிய இடத்தில் பெருமாள் நின்று அருள்கிறார்.... கி.காளைராசன்.
>>
>> இந்தக் கருத்தைக்  கொஞ்சம்  விளக்க  முடியுமா, ....புவியியல்  ஆய்வுக்கு  உதவும்.   திருவந்திபுரம் எங்கள்  ஊர்... ஐயா திரு.சிங்கநெஞ்சம் singa...@gmail.com
>>
>> திருவந்திபுர மலையைப் பற்றித் தங்களிடம் கூறுவது கொல்லர்தெருவில் ஊசி விற்பது போன்றதாகும்.
>>
>> திருவந்திபுரத்தில் ஆற்றுநீர் மேல் எழுந்த இடத்தில் பெருமாள் நின்று அருளுகிறார் என்ற கருத்து மட்டும் என்னது.
>>
>> அன்பன்
>> கி. காளைராசன்
>>
>> வணக்கம் ஐயா.
>>
>> கடந்த மாதம் கடலூர் அருகில் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள திருவந்திபுரம் சென்று வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  
>>
>> ஆற்றங்கரையில் உள்ளது மண்மலை என்றும், பிரளயகாலத்தில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கினால் அடித்துவரப்பட்ட மண்ணானது பெருமலைபோல் குவிந்து, இறுகிவிட்டது என்றும், அந்த மலையில் பிரளயத்திற்கு முந்திய உயிரினங்களின் படிமங்கள் இருக்குமோ என்றும் எனக்கு ஐயம்.
>>
>> படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
>>
>>
>> ​
>> எனது யூகங்கள் சரிதானா?
>> அறிவியல் அடிப்படையில் இந்த மலை ஆராயப்பட்டிருந்தால் அதன் விளக்கங்களை தந்து எனது ஐயங்களைப் போக்கி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்

>> 2015-03-26 21:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>
>>> வணக்கம்.
>>>
>>>
>>>
>>>
>>>
>>> ​
>>>

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Oct 10, 2016, 11:15:11 AM10/10/16
to mint...@googlegroups.com
மகிழ்ச்சியான செய்தி.
நாங்களும் அறிந்து கொள்ளும் வகையில் மின்தமிழிலும் பதிவு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிகச் சிறிய கட்டுரைதான் என்றாலும் பகிர்ந்து கொள்வேன். 

>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages