கல் என்றால் சிவப்பு என்ற பொருளா?

389 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 4, 2012, 10:21:48 AM9/4/12
to வல்லமை, santhav...@googlegroups.com, thami...@googlegroups.com
வல்லமை இணைய இதழில், நூ. த. லோகசுந்தரம் அவர்கள்
கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதுபற்றி தமிழாயம் குழுவில்
பேசினோம்.

”கல்லாடையும் துவராடையும் ஒரே பொருளைத் தரும் இரு சொற்களாகும்.
கல்/துவர் எனும் இரு சொற்களும் சிவந்த நிறத்தைக் காட்டும்.”
வல்லமை கட்டுரை தொடக்கம்.

கல் என்றால் சிவப்பா? இப்படி ஒரு பொருள் எந்த இலக்கியத்திலும்
காணோம். நீலக்கல், பச்சைக்கல், மஞ்சள்கல், சிவப்புக்கல், செங்கல்,
காவிக்கல், வெண்கல், கருங்கல், ... என்று பல வண்ணங்களிலும்
கற்கள் கிடைக்கின்றன. கல் = சிவப்பு என்று மாத்திரம் சொல்ல
இயல்வதில்லை. கல் கருப்பாகவும், வெள்ளையாகவும்,
நீலமாகவும், பச்சையாகவும், சிவப்பாகவும், ... இருக்கிறது.

கல்லாடை சைவ, வைணவ துறவியர்க்கும், துவராடை பௌத்த
பிக்குகளும் அணிவது தமிழ் இலக்கியத்தில் நெடுகவருகிறது.
காவிக்கல் தோய்த்து வண்ணமூட்டுவது கல்லாடை. எனவே,
இதனைக் காவி வஸ்திரம் என்பதும் உண்டு. சென்னை அகராதி:
கல்லாடை n. கல் +. Cloth dyed in red ochre, worn by those who have
renounced the world; காவி வஸ்திரம். கோத்தகல்லாடையும் (தேவா. 509, 2).
Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும்
(இலக். வி. 707, உரை). காவி வஸ்திரம் முல்லைப்பாட்டிலேயும்
உண்டு: ”கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப”

மேலும், மருத மர இலை, பூ வேவித்துச் சாயமூட்டுவது துவராடை
எனத் தேவாரம், நீலகேசி (சமண இலக்கியம்), ... காட்டுகின்றன.
இதை அணிவோர் பௌத்த மத பிக்ஷுக்கள்.

கல் என்றால் சிவப்பில்லை என்றறிய முக்கியமாக ஒரு சான்று காட்டலாம் - ஆல
மரத்தின்
இனங்கள் வழியாக.

ஆல மரத்தின் காய்கள் சிவப்பாக இருப்பவை:
சிவப்பான காய்கள் கொண்ட ஆலின் பெயர் வெறும் ஆல் தான். அம்மரத்துக்கு
கல் என்ற முன்ஒட்டு இல்லை.
http://www.flowersofindia.net/catalog/slides/Banyan%20Tree.html
http://irapl.altervista.org/nit/viewpics.php?title=Ficus+benghalensis
http://ibc.lynxeds.com/photo/coppersmith-barbet-megalaima-haemacephala/bird-feeding-ficus-benghalensis


தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பது மலையில் - இமயம், பொதிகை மலைகள்.
சங்க இலக்கியத்தில் கல் என்றால் மலை என்ற பொருள் பல பாடல்களில்
வரும். சில ஆயிரம் அடிகள் கடல்மட்டத்திலிருந்து வளர்வன கல்லால் மரங்கள்.
இங்கே, கல் = மலை, குன்று எனப் பொருள். கல்லிச்சி, கல்லரசு மரங்களும்
உள்ளன.

கல்லால மரம் எனத் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில்
வழங்குகிறது. கல்லால மரம் மராட்டியில் கல்லு-கோளி என்கின்றனர்.
கோள்- என்றால் பற்றுதல் எனப் பொருள். மனிதன் வாழ்க்கையில் சோதிடப்
படி பற்றுவது “கோள்” இந்த தமிழ் நம்பிக்கையை, சிந்துசமவெளியில்
இருந்துள்ளது. பின்னர் வடமொழியில் மொழிபெயர்த்து கிரஹம் என
வழங்குகின்றனர்.

கல், கரடுகளில் வளரும் கல்லால் = ஹில் பன்யன் (ficus mollis, பழைய பெயர்
ficus tomentosa). கல் பாங்கான இடங்களில் கற்களையும், பாறைகளையும்
பற்றி வளரும் கல்லால் மரம். ficus mollis (ficus tomentsa), கல்லால
மரத்தின்
காய்கள் பச்சை நிறம் கொண்டவை, சிவப்பாக இல்லை என்பது
முக்கியமானது.
http://www.flowersofindia.net/catalog/slides/Soft%20Fig.html
http://commons.wikimedia.org/wiki/File:Ficus_mollis_in_Keesaraguda,_AP_W_IMG_9134.jpg
http://herbalmedicinalplants.org/Herbs.php?disp=Ficus_mollis&herblist=F

நா. கணேசன்

Anna Kannan

unread,
Sep 4, 2012, 11:14:30 AM9/4/12
to vall...@googlegroups.com
கல் என்பது குறித்து ஆராய்ந்து நான் இந்தக் கருத்தினைக் கூறவில்லை.

ஆனால், கல்லைச் சிவப்புடன் எந்தப் புள்ளியிலாவது இணைக்க முடியுமா என்ற ஏரணத்தின் (லாஜிக்) அடிப்படையில் சிந்தித்தேன்.

சான்றுக்கு, அகல் என்பதை எடுத்துக்கொள்வோம். கல்லால் ஆன விளக்குகளும் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். அத்தகைய கல் விளக்கில் தீபத்தை ஏற்றிய பிறகு, பெரும் ஜோதி எழுந்த பிறகு, சற்றே தொலைவில் இருந்து பார்க்கையில், இப்போது கல் மறைந்து செந்நிறத் தீபமே தென்படும். இந்தப் புள்ளியில் கல்லும் செம்மை எய்தி, சிவப்பாகத் தோன்றும் வாய்ப்புண்டு. எனவே அந்தக் கல்லைச் சிவப்பு என்று அழைக்க வாய்ப்பு உண்டு. இவ்விடத்தில் கல் தீபத்தின் நிறமும் ஆடையின் நிறமும் ஒத்திருக்கும்.

அடுத்து, மரகதக் கல்லைப் பச்சை என அழைப்பது போல், மாணிக்கக் கல்லைச் சிவப்பு என இன்றும் அழைப்போர் உண்டு. இந்தப் புள்ளியிலும் கல்லும் சிவப்பும் இணைகின்றன.

Hari Krishnan

unread,
Sep 4, 2012, 10:46:24 PM9/4/12
to vall...@googlegroups.com


2012/9/4 Anna Kannan <annak...@gmail.com>

சான்றுக்கு, அகல் என்பதை எடுத்துக்கொள்வோம்.

கவிதை|அகவிதை என்பதைப்போல் இது கல்|அகல் என்றும் கொள்ளலாம் போலிருக்கிறது.  சொல்லாராய்ச்சி அதகளப்படுகிறது.  இப்படியே தேடிக்கொண்டு போனால், வானம் பச்சை நிறம் என்றும் நிரூபித்துவிடலாம்.  

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Sep 5, 2012, 10:04:05 AM9/5/12
to vall...@googlegroups.com
On Sep 4, 10:38 pm, vis gop <vis...@gmail.com> wrote:
> கல்லாடை மரபினால் செவ்வாடையைக் குறிப்பது தெளிவானால் கல்லாடை செவ்வாடைதானே?
> கல் என்பது சிவப்பைக்குறிக்காமலேயே இது உண்மையாகக்கூடும்.
> (உம்) மஞ்சள் சோறு (மஞ்சள் சாதம்). மஞ்சள் என்பது எலுமிச்சைப் பழத்தைக்
> குறிக்காமலேயே  மஞ்சள் சோறு  எலுமிச்சைச் சோற்றைக் குறிப்பதில்லையா?
> எலுமிச்சைச் சோற்றில் சிறிது மஞ்சள் கலக்கப்படுவதும் அது பெரும்பாலும்
> மஞ்சளாகவே இருப்பதும் வழக்கத்தில் இருப்பதால் இதில் குழப்பமில்லை. அதுபோல,
> 'ஆடை' பற்றிய சூழலில் (context) கல் என்பது காவியையே (ஆகவே சிவப்பைக்)
> குறிப்பது மரபாவதால் இதில் குழம்ப வேண்டியதில்லை.
> நல்வாழ்த்துக்களுடன்,
> கோபால்.
>

ஆம். கல்லாடை காவிக் கல்லில் தோய்ப்பதால் குழப்பமில்லை.

ஆனால், அதை வைத்து கல் = சிவப்பு என்றால் குழப்பம் ஏற்படும்.
நீலக்கல், பச்சைக்கல், கருங்கல், வெண்கல்,  ... இருக்கின்றன.
கல் = சிவப்பு - அவற்றுக்குப் பொருந்தாது.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Sep 5, 2012, 9:49:11 PM9/5/12
to vall...@googlegroups.com


4 செப்டம்பர், 2012 7:46 pm அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:



2012/9/4 Anna Kannan <annak...@gmail.com>
சான்றுக்கு, அகல் என்பதை எடுத்துக்கொள்வோம்.

கவிதை|அகவிதை என்பதைப்போல் இது கல்|அகல் என்றும் கொள்ளலாம் போலிருக்கிறது.  சொல்லாராய்ச்சி அதகளப்படுகிறது.  இப்படியே தேடிக்கொண்டு போனால், வானம் பச்சை நிறம் என்றும் நிரூபித்துவிடலாம்.  


முற்காலத்தில் அரச குலத்தினரே மன்னரானார்கள்
இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர்தாம்
அதனால் ஆராய்ச்சி யாரும் செய்யலாம். குறிப்பாக மொழிக்கு ஆய்வுக்கூடம் தேவை இல்லையே!
 
--
அன்புடன்,
ஹரிகி.

--
 
 



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Hari Krishnan

unread,
Sep 5, 2012, 10:02:24 PM9/5/12
to vall...@googlegroups.com


2012/9/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

அதனால் ஆராய்ச்சி யாரும் செய்யலாம். குறிப்பாக மொழிக்கு ஆய்வுக்கூடம் தேவை இல்லையே!

அறிவே தேவையில்லை.  டாக்டர் டமுக்கடிச்சான் டாவின்ஸ்கி, டாக்டர் டிக்னிஃபிகா டெமாலிஷன் என்றெல்லாம் வாயில் நுழையாத பெயர்களை உதிர்த்துக் கொண்டே போய், அவர்களெல்லாம் இந்தத் தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டால் போதும்.  தமிழனுக்குத்தான் தமிழே தெரியாதே! இந்தப் பெரிய மனுஷங்களோடய ஆய்வுக்கூடம் விண்ணில் அல்லவா இருக்கிறது!

N. Ganesan

unread,
Sep 5, 2012, 11:11:33 PM9/5/12
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, September 5, 2012 7:41:42 PM UTC-7, visgop wrote:
கல் என்றால் சிவப்பு என்ற யூகம் செய்வது குழந்தைத்தனமானது.

அன்பு கோபால்,

இதையேதான் இவ்விழையின் முதல் மடலில் எழுதியுள்ளேன்:

கல் = சிவப்பு என்று நூதலோசு ஐயா வல்லமை இணைய இதழில்
விரிவாக எழுதிச் செல்கிறார். பார்க்கவும்,

கல் = சிவப்பு என்று கொண்டால், பச்சைக்கல் என்று எப்படிச்
சொல்வது? என்று கேட்டிருக்கிறேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 5, 2012, 11:21:30 PM9/5/12
to vall...@googlegroups.com, Santhavasantham


On Wednesday, September 5, 2012 6:49:13 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

முற்காலத்தில் அரச குலத்தினரே மன்னரானார்கள்
இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர்தாம்
அதனால் ஆராய்ச்சி யாரும் செய்யலாம். குறிப்பாக மொழிக்கு ஆய்வுக்கூடம் தேவை இல்லையே!
 

மொழிக்கு நிச்சயமாக ஆய்வுக்கூடம் தேவை. மொழிக் குடும்பங்கள் என்ற கான்செப்ட் வந்ததே
வெளிநாடுகளில் இருந்துதானே.

இல்லையெனில், கல் = சிவப்பு என்ற கட்டுரைகள் தாம் பெருகும்.

நா. கணேசன் 

DEV RAJ

unread,
Sep 5, 2012, 11:35:51 PM9/5/12
to vall...@googlegroups.com

On Wednesday, 5 September 2012 20:21:30 UTC-7, N. Ganesan wrote:
>>> மொழிக் குடும்பங்கள் என்ற கான்செப்ட் வந்ததே
வெளிநாடுகளில் இருந்துதானே.<<<


’விள் - விண் - விண்ணு - விஷ்ணு ’ஆயிருக்கணும் போன்ற
Pseudoscientific language comparison  புறப்பட்டதும் வெளிநாடுகளிலிருந்துதான் :))

ஜிஷ்ணு, த்ருஷ்ணு ?
இன்னும் பல சொற்கள் உள்ளன


தேவ்

Hari Krishnan

unread,
Sep 5, 2012, 11:50:39 PM9/5/12
to vall...@googlegroups.com


2012/9/6 DEV RAJ <rde...@gmail.com>

’விள் - விண் - விண்ணு - விஷ்ணு ’ஆயிருக்கணும் போன்ற
Pseudoscientific language comparison  புறப்பட்டதும் வெளிநாடுகளிலிருந்துதான் :))

மொழியை இனத்தோடு தொடர்புபடுத்தி, இனங்களுக்கிடையே பிரிவினையை உருவாக்கியதும் மொழிக்குடும்பங்கள் என்ற கான்செப்ட்டின் உள்நோக்கம்தான்.

ராஜிவ் மல்ஹோத்ரா - அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘உடையும் இந்தியா?’ புத்தகத்தை எந்த டாக்டரும் சிபாரிசு செய்யவில்லையோ? 

N. Ganesan

unread,
Sep 5, 2012, 11:55:08 PM9/5/12
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com


On Wednesday, September 5, 2012 8:35:52 PM UTC-7, DEV RAJ wrote:

On Wednesday, 5 September 2012 20:21:30 UTC-7, N. Ganesan wrote:
>>> மொழிக் குடும்பங்கள் என்ற கான்செப்ட் வந்ததே
வெளிநாடுகளில் இருந்துதானே.<<<


’விள் - விண் - விண்ணு - விஷ்ணு ’ஆயிருக்கணும் போன்ற
Pseudoscientific language comparison  புறப்பட்டதும் வெளிநாடுகளிலிருந்துதான் :))


நல்ல ஸயண்டிஃபிக் முறையில் மொழியியல் பேராசிரியர்கள்
விஷ்ணு என்ற சொல்வேரைக் காட்டியுள்ளனர். விண்ணு, விட்டு, விட்டல் ...

நா. கணேசன்

 

DEV RAJ

unread,
Sep 6, 2012, 1:56:29 AM9/6/12
to vall...@googlegroups.com
On Wednesday, 5 September 2012 20:55:08 UTC-7, N. Ganesan wrote:
>>> விண்ணு, விட்டு, விட்டல்  ...<<<


விஷ்ணுவுக்கு ‘விட்டல்’ பண்டரிபுரத்தில்
மட்டுமே. ‘விடேவரி உபா’ - செங்கல்மேல்
நிற்கும் தேவனை மராட்டிய அடியார்கள்
மட்டுமே பாடியுள்ளனர். ஆங்கில மராட்டி
அகராதியில் ’ brick - விடா’ என்று கொடுத்துள்ளது
காண்க. மராட்டிய மொழிக்கு வெளியே
‘விட்டல்’ கிடையாது. பிரபல இண்டாலஜிஸ்டான
ஐயாவுக்கு இது தெரியாதது வியப்பே !

ஜய ஹரி விட்டல -
http://www.youtube.com/watch?v=mIUIWtUzmpg.


ஜிஷ்ணு, தே³ஷ்ணு, த்⁴ருʼஷ்ணு, த்³ருʼஷ்ணு, ஸஹிஷ்ணு, கரிஷ்ணு,
க்³ரஸிஷ்ணு , சரிஷ்ணு , ஜநிஷ்ணு ,ஜயிஷ்ணு, ரோசிஷ்ணு, வர்திஷ்ணு,
வர்தி⁴ஷ்ணு, ப்⁴ராஜிஷ்ணு,  தா⁴ரயிஷ்ணு, மாத³யிஷ்ணு, காரயிஷ்ணு,
நிராகரிஷ்ணு,  ப்ரஜநிஷ்ணு, உத்பசிஷ்ணு, உத்பதிஷ்ணு, உன்மதி³ஷ்ணு ,
அபத்ரபிஷ்ணு போன்ற சொற்களின் வேர்ப்பகுப்பில் ‘விஶ்' இடம்
பெறுவதால்  ‘விஷ்ணு’ என்று வடிவம் பெறுகிறது.

இதற்கான சங்கத நூற்பாவும் உள்ளது  -
அலங்க்ருʼஞ்நிராக்ருʼஞ்ப்ரஜநோத்பசோத்பதோந்மத³ ருச்யபத்ரபவ்ருʼதுவ்ருʼது⁴ஸஹசர இஷ்ணுச்||  3 : 2 : 136

[அடிக்க வராதீர்கள் .புரியவில்லை என்றால் அடியேனின் குற்றமன்று;
இதில் மேற்சொன்ன சொற்கள் வடிவம் பெறுவதை ஒரே தொகுப்பாகக்
காட்டியுள்ளார் பாணிநி. பாணிநீயம் கூட நல்ல ஸயண்டிஃபிக் முறையில்
அமைந்ததுதான் என்பர் மொழியிலாளர்]


’தஸ்மாத் தே³வோச்யதே ”விஷ்ணு: ” விஶ்தா⁴தோ: ப்ரவேஶநாத்’
என்பது வடமொழி அறிந்த பவுத்தர், சமணர், நாத்திகர் அனைவரும்
ஒருமனத்தோடு ஒப்புக்கொண்ட விளக்கம்.  ஏனெனில்
‘ப்ரவேஶ: , பிரவேசம், ப்ரவேஷ்’ அன்றிலிருந்து புழக்கத்திலிருக்கும்
வார்த்தை.  ‘அந்த: ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜநாநாம்’ எனும்
மறை தரும் விளக்கமும் ’விஷ்ணு’ சப்தத்திற்கு
வலிமை சேர்க்கிறது.


தற்பவத்தில் ஷ ‘ட’ ஆகும்; [எ கா] விடம், பாடை, காட்டம் [காஷ்டம்]
நட்டம். அருளிச்செயலில் ‘விட்டுணு’ என்றே வடிவம். விண்ணவர்
என்பது தமிழ் ‘விண்’ வானத்துடன் தொடர்புடையது. வைணவரை
எக்காலத்திலும் ‘விண்ணவர்’ என்றது கிடையாது. புதிதாகப்
புகுத்தும் முயற்சி. மீண்டும் மீண்டும் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள்
கூறிய விளக்கத்தை ஒத்தி ஒட்டினால்  அது கணேசர் ஐயாவின் இட்டம்.
Auto fill software மாதிரி ஏதேனும் ஐயாவிடம் இருக்கலாம்.


பக்தி அனிமேஷனும் ஐயாவுக்கு மிகவும்
பிடிக்கும் என்பதால் சற்றே விட்டல நாமம்  -

ஸுந்தர தே த்யாந உபே விடேவரி - [லதா] :
http://www.youtube.com/watch?v=xEeqxdmIbg0

விடேவரி உபா :
http://www.youtube.com/watch?v=L9XGZ0CFYqA


உபா கஸா ராஹிலா விடேவரி:
http://www.youtube.com/watch?v=juXbaBxOsF4



தேவ்

DEV RAJ

unread,
Sep 6, 2012, 2:12:04 AM9/6/12
to vall...@googlegroups.com
புரந்தரதாஸர் தொடங்கிய தாஸ ஸாஹித்யத்தில்
பண்டரிநாதனுக்கு இடமுள்ளது எனினும்
‘விடேவரி உபா’ எனும் தொடர் மராட்டிய
அபங்கங்களில் மட்டும் உள்ளது



தேவ்

N. Ganesan

unread,
Sep 6, 2012, 9:16:49 AM9/6/12
to வல்லமை

On Sep 5, 10:56 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Wednesday, 5 September 2012 20:55:08 UTC-7, N. Ganesan wrote:
> >>> விண்ணு, விட்டு, விட்டல்  ...<<<
>
> விஷ்ணுவுக்கு ‘விட்டல்’ பண்டரிபுரத்தில்
> மட்டுமே. ‘விடேவரி உபா’ - செங்கல்மேல்
> நிற்கும் தேவனை மராட்டிய அடியார்கள்
> மட்டுமே பாடியுள்ளனர். ஆங்கில மராட்டி
> அகராதியில் ’ brick - விடா’ என்று கொடுத்துள்ளது
> காண்க. மராட்டிய மொழிக்கு வெளியே
> ‘விட்டல்’ கிடையாது. பிரபல இண்டாலஜிஸ்டான
> ஐயாவுக்கு இது தெரியாதது வியப்பே !
>

சம்ஸ்க்ருதம் தெரிந்தவர் தாங்கள் ஒருவர்தானே.

அதனால், நீங்கள் சொல்லிவிட்டால் சரிதான்.
மொழியியல் முனைவர்களும், பேராசிரியர்களும்
ஆய்வேடுகளில் எழுதி இருப்பதை விட்டுவிடுவோம்.

நா. கணேசன்


> ஜய ஹரி விட்டல -http://www.youtube.com/watch?v=mIUIWtUzmpg.

N. Ganesan

unread,
Sep 6, 2012, 9:27:00 AM9/6/12
to வல்லமை, thami...@googlegroups.com
On Sep 5, 10:56 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Wednesday, 5 September 2012 20:55:08 UTC-7, N. Ganesan wrote:
> >>> விண்ணு, விட்டு, விட்டல்  ...<<<
>
> விஷ்ணுவுக்கு ‘விட்டல்’ பண்டரிபுரத்தில்
> மட்டுமே. ‘விடேவரி உபா’ - செங்கல்மேல்
> நிற்கும் தேவனை மராட்டிய அடியார்கள்
> மட்டுமே பாடியுள்ளனர். ஆங்கில மராட்டி
> அகராதியில் ’ brick - விடா’ என்று கொடுத்துள்ளது
> காண்க. மராட்டிய மொழிக்கு வெளியே
> ‘விட்டல்’ கிடையாது. பிரபல இண்டாலஜிஸ்டான
> ஐயாவுக்கு இது தெரியாதது வியப்பே !
>

அப்படியா? புதுத் தகவல். சம்ஸ்க்ருத அறிஞரிடம்
கேட்டுப்பார்ப்போம்.

விட்டுவே நீ இங்கே வாராய் என்கிறாரே பெரியாழ்வார்.
விட்டுசித்தரும், புரந்தரதாசரும் விட்டு (விட்டல், விட்டுணு)
பாடியுள்ளனர். தென்னக மொழிகளின் ஆதிச் சொல்லாக
விட்டு (விட்டல-) உள்ளது.


> ஜய ஹரி விட்டல -http://www.youtube.com/watch?v=mIUIWtUzmpg.


>
> ஜிஷ்ணு, தே³ஷ்ணு, த்⁴ருʼஷ்ணு, த்³ருʼஷ்ணு, ஸஹிஷ்ணு, கரிஷ்ணு,
> க்³ரஸிஷ்ணு , சரிஷ்ணு , ஜநிஷ்ணு ,ஜயிஷ்ணு, ரோசிஷ்ணு, வர்திஷ்ணு,
> வர்தி⁴ஷ்ணு, ப்⁴ராஜிஷ்ணு,  தா⁴ரயிஷ்ணு, மாத³யிஷ்ணு, காரயிஷ்ணு,
> நிராகரிஷ்ணு,  ப்ரஜநிஷ்ணு, உத்பசிஷ்ணு, உத்பதிஷ்ணு, உன்மதி³ஷ்ணு ,
> அபத்ரபிஷ்ணு போன்ற சொற்களின் வேர்ப்பகுப்பில் ‘விஶ்' இடம்
> பெறுவதால்  ‘விஷ்ணு’ என்று வடிவம் பெறுகிறது.
>
> இதற்கான சங்கத நூற்பாவும் உள்ளது  -
> அலங்க்ருʼஞ்நிராக்ருʼஞ்ப்ரஜநோத்பசோத்பதோந்மத³ ருச்யபத்ரபவ்ருʼதுவ்ருʼது⁴ஸஹசர
> இஷ்ணுச்||  3 : 2 : 136
>
> [அடிக்க வராதீர்கள் .புரியவில்லை என்றால் அடியேனின் குற்றமன்று;
> இதில் மேற்சொன்ன சொற்கள் வடிவம் பெறுவதை ஒரே தொகுப்பாகக்
> காட்டியுள்ளார் பாணிநி. பாணிநீயம் கூட நல்ல ஸயண்டிஃபிக் முறையில்
> அமைந்ததுதான் என்பர் மொழியிலாளர்]
>
> ’தஸ்மாத் தே³வோச்யதே ”விஷ்ணு: ” விஶ்தா⁴தோ: ப்ரவேஶநாத்’
> என்பது வடமொழி அறிந்த பவுத்தர், சமணர், நாத்திகர் அனைவரும்
> ஒருமனத்தோடு ஒப்புக்கொண்ட விளக்கம்.  ஏனெனில்
> ‘ப்ரவேஶ: , பிரவேசம், ப்ரவேஷ்’ அன்றிலிருந்து புழக்கத்திலிருக்கும்
> வார்த்தை.  ‘அந்த: ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜநாநாம்’ எனும்
> மறை தரும் விளக்கமும் ’விஷ்ணு’ சப்தத்திற்கு
> வலிமை சேர்க்கிறது.
>

வேஶ்யா என்ற சொல்லும் விஶ்- வேர்தான்.

ஆனால், விட்டு, விட்டுசித்தர், விட்டலன், ... என்ற சொற்கள்
அதில்லை. பாணிநி நன்கு கற்ற சம்ஸ்க்ருத அறிஞர்கள்
விளக்கியுள்ளனர். விஷ்ணு த்ராவிட மொழியில் இருந்து
பிறந்த சொல் என்று. விள்-/விண்-/விட்-.
விண்ணன், விட்டு போன்ற சொற்கள் விஷ்ணு ஆகியுள்ளது.

நா. கணேசன்

> தற்பவத்தில் ஷ ‘ட’ ஆகும்; [எ கா] விடம், பாடை, காட்டம் [காஷ்டம்]


> நட்டம். அருளிச்செயலில் ‘விட்டுணு’ என்றே வடிவம். விண்ணவர்
> என்பது தமிழ் ‘விண்’ வானத்துடன் தொடர்புடையது. வைணவரை
> எக்காலத்திலும் ‘விண்ணவர்’ என்றது கிடையாது. புதிதாகப்
> புகுத்தும் முயற்சி. மீண்டும் மீண்டும் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள்
> கூறிய விளக்கத்தை ஒத்தி ஒட்டினால்  அது கணேசர் ஐயாவின் இட்டம்.
> Auto fill software மாதிரி ஏதேனும் ஐயாவிடம் இருக்கலாம்.
>
> பக்தி அனிமேஷனும் ஐயாவுக்கு மிகவும்
> பிடிக்கும் என்பதால் சற்றே விட்டல நாமம்  -
>
> ஸுந்தர தே த்யாந உபே விடேவரி - [லதா] :http://www.youtube.com/watch?v=xEeqxdmIbg0
>
> விடேவரி உபா :http://www.youtube.com/watch?v=L9XGZ0CFYqA
>
> உபா கஸா ராஹிலா விடேவரி:http://www.youtube.com/watch?v=juXbaBxOsF4
>
> தேவ்
>

விட்டு தமிழ் இல்லை என்று பக்தியால் காட்டிவிட்டீர்கள்.
ஆனால், சம்ஸ்க்ருதப் பேராசிரியர்கள் எழுதியிருப்பதும்
குறிப்பிட வேண்டியிருக்கிறது.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Sep 6, 2012, 10:12:59 AM9/6/12
to வல்லமை
On Sep 6, 6:16 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> சம்ஸ்க்ருதம் தெரிந்தவர் தாங்கள் ஒருவர்தானே. <<<


’விஶ்’ 6ம் கணத்தொகுப்பின் வேர்.
பகவான்ஸிங் அவர்களின் தாதுபாடத் தொகுப்பில் 1636ம்
வேராகக் காட்டியுள்ளார்.

சங்கதம் தெரிந்தவர் அனைவரும் ஒப்புக்கொள்வதையே
எடுத்துக்காட்டியுள்ளேன், ஐயா -


’தஸ்மாத் தே³வோச்யதே ”விஷ்ணு: ” விஶ்தா⁴தோ: ப்ரவேஶநாத்’

[’விஶ்’ நுழைதலைக் குறிப்பதால் ’விஷ்ணு’ என்று கூறப்படுகிறான்]

இண்டாலஜிஸ்ட்கள் என்னைத்தான் கேட்கின்றனர்
என்று எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை.

அவன் நுழைந்தான் என்பதற்கு ’அவன் விண்டான்’, ‘அவன் விள்ளினான்’
தமிழில் உண்டா ? விள்ளுதல் - வெளிப்படுத்துதல் என்றே பொருள்
தருகிறது - கண்டவர் விண்டிலர்.


वेश्या - वेशेन पण्ययोगेन जीवति
வேஶ்யா - வேஶேந பண்யயோகே³ந ஜீவதி [வேஶ்]

https://www.google.co.in/#hl=en&gs_nf=1&tok=zn5GD_79c1KqB2V063O5fg&pq=%E0%A4%B5%E0%A5%87%E0%A4%B6%E0%A5%8D%E0%A4%AF%E0%A5%87%E0%A4%A8%20%E0%A4%AA%E0%A4%A3%E0%A5%8D%E0%A4%AF%E0%A5%87%E0%A4%A8&cp=5&gs_id=2kx&xhr=t&q=%E0%A4%B5%E0%A5%87%E0%A4%B6%E0%A5%87%E0%A4%A8+%E0%A4%AA%E0%A4%A3%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%AF%E0%A5%8B%E0%A4%97%E0%A5%87%E0%A4%A8&pf=p&sclient=psy-ab&oq=%E0%A4%B5%E0%A5%87%E0%A4%B6%E0%A5%87%E0%A4%A8+%E0%A4%AA%E0%A4%A3%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%AF%E0%A5%8B%E0%A4%97%E0%A5%87%E0%A4%A8&gs_l=&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_cp.r_qf.&fp=22581390e64adbd8&biw=1467&bih=662&bs=1

வேஶ் - வேர் காட்டப்பட்டுள்ளது காண்க. ’விஶ்’ இல்லை.


>> விட்டுவே நீ இங்கே வாராய் <<

ஷ - ட : தற்பவ வடிவம் சொல்லப்பட்டு விட்டது.
‘விட்டுவே’ விளி தற்பவம்.
மராட்டியில் ’விட்டல்’ என்பது செங்கலின் அடிப்படையில்.
13ம் நூற்றாண்டின் நாமதேவ மஹராஜின் பாடல்களால்
புகழடைந்து வெளியுலகில் பரவிய சொல்.

ஆங்கிலத்தின் wit கூடச் சேர்க்கலாம் என்று
கிளம்புவரோ தெரியவில்லை.

विष्णु ऋक्ष : viSNu RkSa -lunar mansion shravaNa
சோதிட நூல்களிலும் இடம் பெறும் பரவலான
பயன்பாடு பொருந்திய பெயர்; ’விட்டல்’ தலபுராணப் பெயர்.
தாயுமானவர் - மாத்ருபூதேசுவரர் : தல புராணத்தை ஒட்டி
அமைந்த அரனாரின் பெயர். இந்திய அளவில் அனைவருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை

தேவ்

Prakash Sugumaran

unread,
Sep 6, 2012, 5:29:14 PM9/6/12
to vall...@googlegroups.com
கல் என்பது சிகப்பெனில் செங்கல் எதற்கு !?!?!

2012/9/6 DEV RAJ <rde...@gmail.com>
--





--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Prakash Sugumaran

unread,
Sep 6, 2012, 5:31:08 PM9/6/12
to vall...@googlegroups.com
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தது..
மண்ணுக்கே மூத்தது சிவப்புக்கு இளையதா ? :))

2012/9/7 Prakash Sugumaran <praka...@gmail.com>

DEV RAJ

unread,
Sep 7, 2012, 2:13:49 AM9/7/12
to வல்லமை
Pseudoscientific language comparisons -

விட்டல - விட் + ஸ்தல இரு சொற்களின் கூட்டு
என்கின்றனர் மராட்டியர். சங்கதம் இதைப் பிராந்தியப்
பெயராகவே ஏற்றுள்ளது. மராட்டி 12, 13 நூற்றாண்டுகளில்
மராட்டியப் பாகதத்தின் அபப்ரம்சமாக உருப்பெற்ற மொழி.

விட்டல, விடோபா - மராட்டி மொழியின் தாயான பாகத மொழிக்குத்
தொடர்பு காட்டுவதே சரியான மொழியியல் கண்ணோட்டமாக
இருக்கும்.

கலிஃபோர்னியா எனும் பெயர் அமெரிக்கா தவிர
பிற பகுதிகளிலும் பயன்பாட்டில் உண்டு;
உருவம் மாறுபட்டிருக்கலாம். ஸ்பெயின் நாட்டுத் தொடர்புடையது.

California is a place name used by three North American states:
in the United States by the state of California,
and in Mexico by the states of Baja California and
Baja California Sur.

கபிலாரண்யத்தையும், கலிஃபோர்னியாவையும் தொடர்பு
படுத்திக் கூறுவர் . பொருத்தமற்ற முயற்சி

தேவ்

On Sep 6, 7:13 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Sep 6, 6:16 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> சம்ஸ்க்ருதம் தெரிந்தவர் தாங்கள் ஒருவர்தானே. <<<
>
> ’விஶ்’ 6ம் கணத்தொகுப்பின் வேர்.
> பகவான்ஸிங் அவர்களின் தாதுபாடத் தொகுப்பில் 1636ம்
> வேராகக் காட்டியுள்ளார்.
>
> சங்கதம் தெரிந்தவர் அனைவரும் ஒப்புக்கொள்வதையே
> எடுத்துக்காட்டியுள்ளேன், ஐயா -
> ’தஸ்மாத் தே³வோச்யதே ”விஷ்ணு: ” விஶ்தா⁴தோ: ப்ரவேஶநாத்’
> [’விஶ்’ நுழைதலைக் குறிப்பதால் ’விஷ்ணு’ என்று கூறப்படுகிறான்]
>
> இண்டாலஜிஸ்ட்கள் என்னைத்தான்  கேட்கின்றனர்
> என்று எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை.
>
> அவன் நுழைந்தான் என்பதற்கு ’அவன் விண்டான்’, ‘அவன் விள்ளினான்’
> தமிழில் உண்டா ? விள்ளுதல் - வெளிப்படுத்துதல் என்றே பொருள்
> தருகிறது - கண்டவர் விண்டிலர்.
>
> वेश्या - वेशेन पण्ययोगेन जीवति
> வேஶ்யா - வேஶேந பண்யயோகே³ந ஜீவதி [வேஶ்]
>

> https://www.google.co.in/#hl=en&gs_nf=1&tok=zn5GD_79c1KqB2V063O5fg&pq...

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Sep 9, 2012, 9:01:25 AM9/9/12
to வல்லமை, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, Santhavasantham
On Sep 6, 7:13 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> அவன் நுழைந்தான் என்பதற்கு ’அவன் விண்டான்’, ‘அவன் விள்ளினான்’
> தமிழில் உண்டா ? விள்ளுதல் - வெளிப்படுத்துதல் என்றே பொருள்
> தருகிறது - கண்டவர் விண்டிலர்.
>

விஷ்ணு என்றால் எங்கும் பரவுதல். விண்வெளி எங்கும் Pervader.
pervasive. விண்டுவை all pervasive sky or solar deity என்பார்கள்.
அதனால் தான் கருடன் வாகனம். காற்றின் மைந்தனும்.
திரிவிக்ரம அவதாரம் என்பது solar motif. அப்போது சூரியனைப்
பற்றித் தெரிந்த செய்தியைச் சொல்லியுள்ளனர். கிழக்கே
உதித்து வானில் உயர்ந்து மேற்கே மறையும் 3 படிகள்
விஷ்ணுவின் த்ரிவிக்ரம செயல்.

விள்- என்னும் வேர் விண்ணன், விட்டு (விட்டல்), விண்டு, ...
என்று விஷ்ணுவைப் பழந்தமிழில் குறிக்கிறது. தொல்த்ராவிடச்
சொற்கள் பலவும் -ள்-/-ண்-/-ட்- 2-ம் எழுத்தின் தொகுதியாய்க்
காணலாகும். இந்த விள்- என்னும் த்ராவிட வேர் வடமொழிக்கு
அளிப்பது விஷ்ணு என்னும் சொல். Unique Indian language phenomenon
of systemic retroflexion & its connection to Dravidian can be seen in
the -L-/-N-/-T- word formations in that language family which
ultimately
give rise to words like viSNu in Sanskrit. Many example sets given,
https://groups.google.com/group/tiruvalluvar/msg/bbc601087e5ea683

நுழை- விஶ்- வேரால் விஷ்ணு = நுழைபவன் என்பது
Solar deity ஆன விண்டு/விட்டு/விண்ணுவுக்குப் பொருந்தாது.
திராவிடச் சொல் (விண்டு/விட்டு/விண்ணு/விள்- > விஷ்ணு)
மூலம் தெரியாத வடநாட்டார் சொல்லும் வேர் அது.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Sep 9, 2012, 10:39:43 AM9/9/12
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, Santhavasantham


9 செப்டம்பர், 2012 6:01 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Sep 6, 7:13 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> அவன் நுழைந்தான் என்பதற்கு ’அவன் விண்டான்’, ‘அவன் விள்ளினான்’
> தமிழில் உண்டா ? விள்ளுதல் - வெளிப்படுத்துதல் என்றே பொருள்
> தருகிறது - கண்டவர் விண்டிலர்.
>

விஷ்ணு என்றால் எங்கும் பரவுதல். 

விரிதல், வீங்குதல், வீசுதல், வியாபித்தல்,  விப்பு( தெலுகு)

இவைகளுக்குள் மரபணு தொடர்பு இருக்குமோ?

கையை விரிப்பதால் விரலுக்கு அப்பேர் வந்ததோ?


DEV RAJ

unread,
Sep 9, 2012, 1:43:50 PM9/9/12
to வல்லமை
On Sep 9, 6:01 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> விள்- என்னும் வேர் விண்ணன் <<<

விண்ணன் விஷ்ணுவுக்கான தமிழ்ச்சொல் என்றால்,
பொன்வண்ணத்தந்தாதி ‘விண்ணன்’ என
சிவபிரானைச் சொல்வது எதனால் ?

TVU -

புண்ணியன்; புண்ணியல் வேலையன்; வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன்; கண்ணியல் நெற்றியன்; காரணன்; காரியங்கும்
விண்ணியன்; விண்ணியல் பாணியன்; பாணி கொளவுமையாள்
பண்ணியன்; பண்ணியல் பாடலன் நாடற் பசுபதியே.


'விண்ணன்' என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது. அடியார்கட்கு
வெளிப்படுங்கால் விண்ணில் நின்று காட்சி வழங்குதல் பற்றி இறைவனை,
'விண்ணன்' என்றார்.


>>> மூலம் தெரியாத வடநாட்டார் சொல்லும் வேர் அது.<<<

மூலம் தெரியவில்லை என்பதெல்லாம் பொருளற்ற பேச்சு.
இதுபோன்ற பேச்சுகளை எதிர்பார்த்தே ‘அந்த: ப்ரவிஷ்ட: சாஸ்தா ஜநாநாம்..'
[अन्त:प्रविष्ट: शास्ता जनानाम्] எனும் மொழியும் தரப்பட்டது

தேவ்


On Sep 9, 6:01 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Sep 6, 7:13 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
> > அவன் நுழைந்தான் என்பதற்கு ’அவன் விண்டான்’, ‘அவன் விள்ளினான்’
> > தமிழில் உண்டா ? விள்ளுதல் - வெளிப்படுத்துதல் என்றே பொருள்
> > தருகிறது - கண்டவர் விண்டிலர்.
>
> விஷ்ணு என்றால் எங்கும் பரவுதல். விண்வெளி எங்கும் Pervader.
> pervasive. விண்டுவை all pervasive sky or solar deity என்பார்கள்.
> அதனால் தான் கருடன் வாகனம். காற்றின் மைந்தனும்.
> திரிவிக்ரம அவதாரம் என்பது solar motif. அப்போது சூரியனைப்
> பற்றித் தெரிந்த செய்தியைச் சொல்லியுள்ளனர். கிழக்கே
> உதித்து வானில் உயர்ந்து மேற்கே மறையும் 3 படிகள்
> விஷ்ணுவின் த்ரிவிக்ரம செயல்.
>
> விள்- என்னும் வேர் விண்ணன், விட்டு (விட்டல்), விண்டு, ...
> என்று விஷ்ணுவைப் பழந்தமிழில் குறிக்கிறது. தொல்த்ராவிடச்
> சொற்கள் பலவும் -ள்-/-ண்-/-ட்- 2-ம் எழுத்தின் தொகுதியாய்க்
> காணலாகும். இந்த விள்- என்னும் த்ராவிட வேர் வடமொழிக்கு
> அளிப்பது விஷ்ணு என்னும் சொல். Unique Indian language phenomenon
> of systemic retroflexion & its connection to Dravidian can be seen in
> the -L-/-N-/-T- word formations in that language family which
> ultimately

> give rise to words like viSNu in Sanskrit. Many example sets given,https://groups.google.com/group/tiruvalluvar/msg/bbc601087e5ea683

DEV RAJ

unread,
Sep 9, 2012, 2:04:22 PM9/9/12
to வல்லமை
கணேசர் ஐயா சொன்னது -
>>> முக்யம் முகம் என்ற தமிழ்ச் சொல்லில்
இருந்து வடமொழியில் உருவாகியுளது<<<


ஸக்²யம், ஶாக்²யம் - உருவாகக் காரணமான
சொற்களையும் இனம் காட்டினால் நல்லது

தேவ்

வேந்தன் அரசு

unread,
Sep 9, 2012, 2:26:47 PM9/9/12
to vall...@googlegroups.com


9 செப்டம்பர், 2012 11:04 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

கணேசர் ஐயா சொன்னது -
>>> முக்யம் முகம் என்ற தமிழ்ச் சொல்லில்
இருந்து வடமொழியில் உருவாகியுளது<<<

முகம் தமிழ்ச்சொல். காரணம்

தமிழ் மொழியில் முன் நீட்டிக்கொண்டு இருக்கும் பொருள்களின் பெயர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கு

முன்
முள்
முனை
முலை
முளை
முட்டி
முந்து
முகை
மூக்கு
முகம்
முது
மூப்பு


Hari Krishnan

unread,
Sep 9, 2012, 11:09:48 PM9/9/12
to vall...@googlegroups.com


2012/9/9 DEV RAJ <rde...@gmail.com>

விண்ணன் விஷ்ணுவுக்கான தமிழ்ச்சொல் என்றால்,
பொன்வண்ணத்தந்தாதி ‘விண்ணன்’ என
சிவபிரானைச் சொல்வது   எதனால் ?

Because அவங்களுக்கு தமிழ் தெரில!  கோவைப் பண்ணையார் அப்ரூவல் இல்லாம எழுதினா இப்படிதான் தப்பு தப்பா எழுதுவாங்க.  விண்ணன் அப்டினா அருகன்னு அர்த்தம்.  விண்>வீண்>வில்>விர். வில்லிலிருந்து அம்பு விர்ர் என்று பறப்பது போல அவருடைய சமயம் பரவியதால், அம்பு+விர்=அர்.  அர் உகுத்தலே, அர் உகன்=அருகன் என்ற அடிப்படை கூட தெரியாத நீங்களெல்லாம் பக்தி அனிமேஷன் காட்டதான் லாயக்கு.  தெர்தா?

DEV RAJ

unread,
Sep 10, 2012, 12:02:49 AM9/10/12
to வல்லமை
’விண்ணு’ விஷ்ணு எனும் பொருளில்
இலக்கியத்தில் சொல்லப்படுகிறதா ?
[விட்டு என்பது காட்டம், நட்டம் போன்ற
தற்பவ வடிவம்; ’விட்டல’ வீடா எனும்
பாகத/ மராட்டிய அடிப்படையில்]


வைணவரை இலக்கியம் விண்ணவர்
என்று சொல்லியுள்ளதா ?


தொல் திராவிடச் சொல் என்றால்
தொல் இலக்கியத்தில் இடமிருக்க
வேண்டும், வேர் சார்ந்த பயன்பாடு
இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்
தவறு என்ன ?


கருடன் மறையின் ப்ரதீகம்;
நான்முகனுக்கும்தான் அன்னப் பறவை
ஊர்தியாக உள்ளது.

தேவ்

DEV RAJ

unread,
Sep 10, 2012, 1:50:48 AM9/10/12
to வல்லமை
”ஆதிச்சொல் 'விட்டு’ அன்புமணி தேடுபொறியில்”


On Sep 6, 6:27 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> தென்னக மொழிகளின் ஆதிச் சொல்லாக
விட்டு (விட்டல-) உள்ளது. <<<

Etexts from Project Madurai are linked to the PM website in
appreciation of the volunteers.
==========================================================================

ஐங்குறுநூறு: 268x03 வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும்
ஐங்குறுநூறு: 268x04 நல் மலை நாடன் பிரிதல்
ஐங்குறுநூறு: 268x05 என் பயக்கும் ஓ நம் விட்டு துறந்து ஏ

ஐங்குறுநூறு: 340x01 அம்ம வாழி தோழி காதலர்
ஐங்குறுநூறு: 340x02 உள்ளார் கொல் நாம் மருள் உற்றனம் கொல்
ஐங்குறுநூறு: 340x03 விட்டு சென்றனர் நம் ஏ


======================================================

அகநானூறு: 071x02 பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
அகநானூறு: 071x03 நயன் இல் மாக்கள் போல வண்டு இனம்
அகநானூறு: 071x04 சுனை பூ நீத்து சினை பூ படர

அகநானூறு: 078x11 நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர்
அகநானூறு: 078x12 என் ஆகுவர் கொல் அளியர் தாம் என
அகநானூறு: 078x13 எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிது உம்

அகநானூறு: 109x10 வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்
அகநானூறு: 109x11 கை பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு
அகநானூறு: 109x12 இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு

அகநானூறு: 158x13 மன்ற மராஅத்த கூகை குழறினும்
அகநானூறு: 158x14 நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன் தலை
அகநானூறு: 158x15 புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு

==============================================

அகநானூறு: 340x21 கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை
அகநானூறு: 340x22 தண் கடல் அசை வளி எறிதொறும் வினை விட்டு

======================================================

குறுந்தொகை: 222x01 தலை புணை கொளின் ஏ தலை புணை கொள்ளும்
குறுந்தொகை: 222x02 கடை புணை கொளின் ஏ கடை புணை கொள்ளும்
குறுந்தொகை: 222x03 புணை கைவிட்டு புனலோடு ஒழுகின்

குறுந்தொகை: 265x02 வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டு உம்
குறுந்தொகை: 265x03 தாம் அறி செம்மை சான்றோர் கண்ட
குறுந்தொகை: 265x04 கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு


குறுந்தொகை: 298x01 சேரி சேர மெல்ல வந்து வந்து
குறுந்தொகை: 298x02 அரிது வாய்விட்டு இனிய கூறி

குறுந்தொகை: 317x04 ஓங்கு மலை பை சுனை பருகும் நாடன்
குறுந்தொகை: 317x05 நம்மை விட்டு அமையும் ஓ மற்று ஏ கைம்மிக


குறுந்தொகை: 397x04 தாய் உடன்று அலைக்கும் காலை உம் வாய்விட்டு
குறுந்தொகை: 397x05 அன்னாய் என்னும் குழவி போல

===================================================

மலைபடுகடாம்: 048 புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்
மலைபடுகடாம்: 049 புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி

====================================================


நற்றிணை: 080x01 மன்ற எருமை மலர் தலை காரான்
நற்றிணை: 080x02 இன் தீம் பால் பயம் கொண்மார் கன்று விட்டு

நற்றிணை: 141x10 வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
நற்றிணை: 141x11 அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
நற்றிணை: 141x12 விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலன் ஏ


நற்றிணை: 171x04 சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
நற்றிணை: 171x05 ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன்
நற்றிணை: 171x06 பன் மலை அரு சுரம் இறப்பின் நம் விட்டு


நற்றிணை: 263x03 ஊர் அலர் தூற்றும் கௌவை உம் நாண் விட்டு
நற்றிணை: 263x04 உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு
நற்றிணை: 263x05 கடு சூல் வயவொடு கானல் எய்தாது

நற்றிணை: 266x04 அகல் உள் ஆங்கண் சீறூரேம் ஏ
நற்றிணை: 266x05 அது ஏ சாலும் காமம் அன்றி உம்
நற்றிணை: 266x06 எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று

நற்றிணை: 365x01 அரு கடி அன்னை காவல் நீவி
நற்றிணை: 365x02 பெரு கடை இறந்து மன்றம் போகி
நற்றிணை: 365x03 பகல் ஏ பலர் உம் காண வாய் விட்டு


நற்றிணை: 384x09 காண் இனி வாழி என் நெஞ்சு ஏ நாண் விட்டு
நற்றிணை: 384x10 அரு துயர் உழந்த காலை

=========================================================

பரிபாடல்: 11x041 மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர்
பரிபாடல்: 11x042 காமம் கள விட்டு கைகொள் கற்பு உற்றென

பரிபாடல்: 11x054 கண் ஆரும் சாயல் கழி துரப்போரை
பரிபாடல்: 11x055 வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோர் உம்

========================================================

பதினெண்கீழ்க்கணக்கு: 81x31 மாண் இழை அரிவை காணிய ஒரு நாள்
பதினெண்கீழ்க்கணக்கு: 81x32 பூண்க மாள நின் புரவி நெடு தேர்
பதினெண்கீழ்க்கணக்கு: 81x33 முனை கைவிட்டு முன்னிலை செல்லாது

======================================================

பொருநராற்றுப்படை: 121 செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
பொருநராற்றுப்படை: 122 மெல்லென கிளந்தனம் ஆக வல்லே
பொருநராற்றுப்படை: 123 அகறிர் ஓ எம் ஆயம் விட்டு என


====================================================

புறநானூறு: 077x05 நெடு தேர் கொடுஞ்சி பொலிய நின்றோன்
புறநானூறு: 077x06 யார் கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு
புறநானூறு: 077x07 தாலி களைந்தன்று உம் இலன் ஏ பால் விட்டு


புறநானூறு: 141x01 பாணன் சூடிய பசு பொன் தாமரை
புறநானூறு: 141x02 மாண் இழை விறலி மாலையொடு விளங்க
புறநானூறு: 141x03 கடு பரி நெடு தேர் பூட்டு விட்டு அசஈ


புறநானூறு: 326x01 ஊர் முது வேலி பார் நடை வெருகின்
புறநானூறு: 326x02 இருள் பகை வெரீஇய நாகு இள பேடை
புறநானூறு: 326x03 உயிர் நடுக்குற்று புலா விட்டு அரற்ற

புறநானூறு: 341x03 செ பொறி சிலம்பின் இளையோள் தந்தை
புறநானூறு: 341x04 எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின்

புறநானூறு: 395x01 மென்புலத்து வயல் உழவர்
புறநானூறு: 395x02 வன்புலத்து பகடு விட்டு

=====================================================

தொல் தமிழ் இலக்கியத்தில்

//// நம் விட்டு துறந்தே,
வட்டு விட்டு எறிவோர்,
பற்று விட்டு ஒரூஉம்,
எம் விட்டு அகன்ற,
எறிதொறும் வினை விட்டு,
வாய்விட்டு அன்னாய் என்னும் குழவி போல,
புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு,
புணை கைவிட்டு புனலோடு ஒழுகின்,
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு,
வாய்விட்டு இனிய கூறி,
விரி ஒலி கூந்தல் விட்டு,////

போன்றவற்றையே காண முடிகிறது.

ஐயா அவர்கள் ‘தொல் திராவிடச் சொல்’ என்று
அடித்துக் கூறியதால் பிற்கால நூல்களில்
தேடும் முயற்சியைக் கை விட்டேன்.

தேடுபொறி கொடுத்தவற்றில் ‘விட்டு’ எனும் கடவுள் கூறப்பட்டுள்ளதா ?
இத்தொடர்களில் இடம்பெறும் ’விட்டு’ வேர் என்ன ?
அது சுட்டும் பொருள் யாது ?
ஐயா சொல்லும் ஆதிச்சொல் இவை தவிர
இலக்கியத்தில் வேறெங்காயினும் காணப்படுகிறதா ?

தேவ்

DEV RAJ

unread,
Sep 10, 2012, 2:15:55 AM9/10/12
to வல்லமை
’விட்டு’ என்பதைத் தொல் திராவிடச்சொல்லாகக்
காட்டுவதோடு, அதற்குரிய பயன்பாடாகப்
பெரியாழ்வாரின் ‘விட்டுவே’ எனும் விளியைக்
காட்டுகிறார் கணேசர் ஐயா. பரிபாடலில்கூட
இல்லை போலும் !


பெரியாழ்வார் சொல்லும் அவபிரதம்,
இருடீகேசன், உயோகு, பங்கயம், அஞ்சனம்,
நயனம், சேமம், அரவிந்தம் போன்ற சொற்களையும்
தொல் திராவிடச்சொற்களாக வகைப்படுத்தலாமா ?

தேவ்

> புறநானூறு: 326x03 உயிர் நடுக்குற்று புலா விட்டு ...
>
> read more »

வேந்தன் அரசு

unread,
Sep 12, 2012, 10:16:49 PM9/12/12
to vall...@googlegroups.com


9 செப்டம்பர், 2012 10:50 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
                 ”ஆதிச்சொல் 'விட்டு’ அன்புமணி தேடுபொறியில்”

தேடுபொறி கொடுத்தவற்றில் ‘விட்டு’ எனும் கடவுள் கூறப்பட்டுள்ளதா ?
இத்தொடர்களில் இடம்பெறும் ’விட்டு’ வேர் என்ன ?
அது சுட்டும் பொருள் யாது ?
ஐயா சொல்லும் ஆதிச்சொல் இவை தவிர
இலக்கியத்தில் வேறெங்காயினும் காணப்படுகிறதா ?


சொல்லுங்க குருவே சொல்லுங்க. 

N. Ganesan

unread,
Sep 12, 2012, 11:29:45 PM9/12/12
to வல்லமை

குரு சொல்லட்டும்.

விள்-/விட்டு/விண்ணு- தமிழின் (திராவிட மொழிகளின்) அடிப்படையான
சொல்தொகுதி. இந்திலிருந்து உருவான சொல் விஷ்ணு.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Sep 13, 2012, 12:35:21 AM9/13/12
to வல்லமை
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென.....

ஆதிச்சொல்லைக் காட்டிய ஆதிகுரு
ஆனை முகருக்குத்தான் அஞ்ஞான
இருளை நீக்கும் திறமை உள்ளது.

விட்டுவை நீட்டி ’வீட்டு’ எனவும் அனிமேஷன்
செய்து பார்க்கலாம். இன்னும் சில பெயர்கள்
அகப்படும்


தேவ்

வேந்தன் அரசு

unread,
Sep 13, 2012, 7:40:22 AM9/13/12
to vall...@googlegroups.com


12 செப்டம்பர், 2012 11:29 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


குரு சொல்லட்டும்.

விள்-/விட்டு/விண்ணு- தமிழின் (திராவிட மொழிகளின்) அடிப்படையான
சொல்தொகுதி. இந்திலிருந்து உருவான சொல் விஷ்ணு.

இது போல உருமாறிய பிற சொற்கள் இருக்கா. வடசொல் இல்லை என்னினும் பிற திராவிட சொற்கள்

விண்/ விஷ்னு
எனில்
மண்/ மஷ்ணு
பண்/பஷ்ணு
போல உளவா?

ஆனால் கை/ கரம் , பூ/ புஷ்பம் என ஒரு உறவு இருப்பது போல்  விண்/ விஷ்ணு உறவு இருக்கலாம். அதனால் கையில் இருந்து கரம் வந்தது என சொல்ல முடியுமா? இரண்டுமே மிக தொல்லையில் தோன்றிய சொற்கள்
நாம் ஒன்றிலிருந்து இன்னொன்று தோன்றியது என்பதை விட இந்தியாவில் தோன்றிய இவ்விரு மொழிகளுக்கும் உள்ள உறவை போற்றலாம்


--

DEV RAJ

unread,
Sep 13, 2012, 8:02:54 AM9/13/12
to வல்லமை
As a proto-language, Proto-Dravidian has been reconstructed and is not
itself found in the historical record.
http://en.wikipedia.org/wiki/Proto-Dravidian_language

கன்ஹா - க்ருஷ்ண
தன்ஹா - த்ருஷ்ண
போன்ற வடிவங்கள் போப் கால்ட்வெல்
முன்வைத்த தொல் திராவிடவடிவங்களில்
உள்ளனவா என்பதை ஆராய வேண்டும்


தேவ்

N. Ganesan

unread,
Sep 14, 2012, 9:32:43 AM9/14/12
to தமிழாயம், vall...@googlegroups.com

On Sep 12, 9:41 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> தமிழ்ச்சொற்களை ஆராயும் போது தமிழிலக்கியங்களிலிருந்தே சான்றுகளைத் தருதல்
> வேண்டும். வடமொழியிலிருந்தோ ஆங்கிலத்திலிருந்தோ சான்றுகளை அளிக்காதீர்கள்.
>
> அவ்விரண்டும் தமிழ்க்கு நிகரானவையன்று.
>
> விஷ்ணு என்பதை விட்டுணு என்று தமிழில் சொல்லிவிட்டால் அச்சொல்
> தமிழ்ச்சொல்லாகிவிடாது.
>

முனைவர் இரவா,

விள்- என்பதிலிருந்து பிறக்கும் விண்ணு/விட்டு/விண்டு எல்லாம் தூய
தமிழ்ச்சொற்கள் தாம். ஐயமில்லை. வடதிராவிட மொழிகளில்
விட்டு அல் விகுதிபெற்று விட்டல் ஆகியுள்ளது.

தமிழ் த்ரமிட என வடக்கே மாறியது. விள்-/விண்- விஷ்ணு ஆக்கி
விட்டார்கள். தென் அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி
அமெரிக்க இந்திய மொழிகளின் இடத்தில் இடம்பெற்றாற்போல்,
திராவிட மொழிகளின் இடத்தில் இந்தோ-ஆர்ய மொழிகள்
வடஇந்தியாவில் 3000 ஆண்டுகளாய் வளர்ந்துவிட்டன.
இந்த மொழிமாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம்
’சமயதொழில்நுட்பம்’ (Technology of religion) என மேலைநாட்டு
அறிஞர்கள் எழுதியுள்ளனர். இந்தியாவில் தொழில்நுட்பத்தை விட
சமயம் வலிமை பெற்றதாகவிளங்குவது. அதனால்தான்
தேசியத்தை பாரதி போன்றோர் பாரதமாதா உருவில் உருவாக்கி
இருக்கிறார்கள். பாரத்மாதா முன்னர் மாநில அரசாங்கங்கள்
எல்லாம் ஒரு முனிசிபாலிட்டி அதிகாரம்தான்.

நா. கணேசன்

>  இருக்கும் வரை தமிழ் அணையில்
>                   அன்புடன்
>                       இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்:  www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>
> 9 செப்டம்பர், 2012 8:09 pm அன்று, வேந்தன் அரசு
> <raju.rajend...@gmail.com>எழுதியது:
>
>
>
>
> > 9 செப்டம்பர், 2012 6:01 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>எழுதியது:


>
> > On Sep 6, 7:13 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
> >> > அவன் நுழைந்தான் என்பதற்கு ’அவன் விண்டான்’, ‘அவன் விள்ளினான்’
> >> > தமிழில் உண்டா ? விள்ளுதல் - வெளிப்படுத்துதல் என்றே பொருள்
> >> > தருகிறது - கண்டவர் விண்டிலர்.
>
> >> விஷ்ணு என்றால் எங்கும் பரவுதல்.
>
> > விரிதல், வீங்குதல், வீசுதல், வியாபித்தல்,  விப்பு( தெலுகு)
>
> > இவைகளுக்குள் மரபணு தொடர்பு இருக்குமோ?
>
> > கையை விரிப்பதால் விரலுக்கு அப்பேர் வந்ததோ?
>
> > வேந்தன் அரசு
> > வள்ளுவம் என் சமயம்
>

> >  --
> > இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
> > விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

DEV RAJ

unread,
Sep 14, 2012, 2:18:29 PM9/14/12
to வல்லமை
On Sep 14, 6:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> வடதிராவிட மொழிகளில் விட்டு அல் விகுதிபெற்று
விட்டல் ஆகியுள்ளது.<<<


வட திராவிட மொழிகளில் ‘அல்’ விகுதிபெற்ற
பிற சொற்கள் என்னென்ன ?

>> ’சமயதொழில்நுட்பம்’ (Technology of religion)<<

வடமொழி என்றால் சமயம் மட்டுமே எனும்
கருத்து முற்றிலும் தவறு; விஞ்ஞானம்,
தொழில்நுட்பம், மருத்துவம், வானியல்,
கணிதம், உலோகவியல் போன்ற சங்கதப்
பயன்பாடுள்ள துறைகள் பலவும் உள்ளன.

மேற்கத்தியரின் ஆராய்ச்சி முயற்சி, மொழிகளை
சமயம், இனம், பிராந்தியம் சார்ந்ததாகப்
பிரிப்பதாக இருந்து வருகிறது; இந்தியர்
பலரும் அந்த மாயக் கருத்தியலுக்கு
விலை போகின்றனர்.

அர்தமாகதி ஜைநர்களின் மொழியாக
இருந்த போதிலும் குந்த குந்தாசார்யர்
சௌரஸேனியில் எழுதியவர்.

ஹேமச்ந்த்ரர் [ஜைநம்] சங்கத நூல்களை
எழுதினார். சங்கதமொழிக்கு பௌத்தர் பங்களிப்பும்
இருந்தது. மராட்டிய மொழியின் முதல் நூல்
‘விவேக ஸிந்து’ அத்வைதம் தொடர்பானது.
பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட
வேதாந்த - சித்தாந்த நூல்கள் பல உள்ளன.

சாயணர், மாயணர் எனும் சாதாரணப் பெயர்களிலும்
பிராந்தியச் சாயம் ! இங்கிருந்து அங்கு போனது
என்று துப்பறிந்து கண்டுபிடித்த பெருமிதம்.
இதில் போக்குவரத்து எதற்கு ?
தமிழாகவே இருந்தால் யார் தலையைச்
சீவப் போகிறார் ? சங்கத நூலாசிரியர்களில்
தோழப்பர், அன்னம் பட்டர் போன்ற
தென்னிந்தியர் இருந்துள்ளனர்.
ஹேமசந்த்ரரின் இயற்பெயர் சங்கதேவர்;
அது ஒரு பிராந்தியப் பெயர். நவத்வீபத்தில்
சங்கதப் பெரும் புலவராயிருந்தவர் நிமாயி
பண்டிதர். நிமாயி ஒரு வங்க மொழிச்சொல்.

”அப்பய்ய யஜ்வந்நவநீஸுராணாம்
அந்நம் ஸுவர்ணம் ஸரஸம் த³தா⁴நே |”

அப்பய்ய தீக்ஷிதர் அவர்களுக்குச் சங்கதப்
பெயர் ஒன்று இருந்தாலும், அவர் இன்றுவரை
தமிழ்ப் பெயராலேயே அறியப்படுகிறார்

தேவ்

N. Ganesan

unread,
Sep 15, 2012, 9:18:18 AM9/15/12
to வல்லமை, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Sep 14, 11:18 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Sep 14, 6:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>> வடதிராவிட மொழிகளில்
>விட்டு அல் விகுதிபெற்று விட்டல் ஆகியுள்ளது.<<<
>
> வட திராவிட மொழிகளில் ‘அல்’ விகுதிபெற்ற
> பிற சொற்கள் என்னென்ன ?
>
> >> ’சமயதொழில்நுட்பம்’ (Technology of religion)<<
>
> வடமொழி என்றால் சமயம் மட்டுமே எனும்
> கருத்து முற்றிலும் தவறு; விஞ்ஞானம்,
> தொழில்நுட்பம், மருத்துவம், வானியல்,
> கணிதம், உலோகவியல் போன்ற சங்கதப்
> பயன்பாடுள்ள துறைகள் பலவும்  உள்ளன.
>

ஆப்கானிஸ்தானம் - அஸ்ஸாம் வரை சமயம் மற்றும்
பிற துறைகளில் கோலோச்சிய மொழி சமஸ்க்ருதம்.
எனவே, அந்தக் காலத்தில் சில முன்னேற்றங்கள்
இருப்பதற்கான நூல்கள் உள்ளன. இது 200+ வருடமாக
உலகப் பல்கலைக்கழகங்களில் மிக தெரிந்த ஒரு
சமாச்சாரம்தான். பலர் ஆராய்ந்த துறை, இன்றும்
பல பேராசிரியர்கள் ஈடுபட்டுழைக்கும் துறையே.

> மேற்கத்தியரின் ஆராய்ச்சி முயற்சி, மொழிகளை
> சமயம், இனம், பிராந்தியம் சார்ந்ததாகப்
> பிரிப்பதாக இருந்து வருகிறது; இந்தியர்
> பலரும் அந்த மாயக் கருத்தியலுக்கு
> விலை போகின்றனர்.
>

பிலாலஜி, லிங்யுஸ்டிக்ஸ் துறைப் பேராசிரியர்கள்
அவ்வெண்ணத்தில் இருப்பதில்லை. காந்தி, மார்ட்டின்
லூதர் கிங், மண்டேலா போன்றோர் வந்து மாற்றிவிட்டனர்.
இன்று அமெரிக்க மால்களில் நடந்தால் தெரியும்,
கருப்பர்களும் - வெள்ளையரும் பல லட்சம் திருமணங்கள்
நிகழ்கின்றன. இன்னும் அதிகமாகும்.

இந்தியாவில் 3000 ஆண்டுகளாய் இனக்கலப்புகள் நடந்தே
வந்துள்ளன. இப்போதைய போக்குவரத்து, தொழில்
காரணங்களால் எல்லா மக்களும் மணத்தாலும், பொருளியலாலும்
இணைவது கூடுகிறது.

-ள்-/-ண்-/-ட்- திராவிட மொழிகளின் சொல்தொகுதி பிறக்க
அடிப்படையான ஒரு விதி. விள்-/விண்ணு-/விட்டு-/விண்டு-
யாவும் விஷ்ணு சொல்மூலத்தைக் காட்டி நிற்கிறது.
லிங்யுஸ்டிக்ஸ் ஒரு ஸயன்ஸ். 2 + 2 = 4 போல என்பார்
மறைந்த பேரா. ப. கிருஷ்ணமூர்த்தி. விஷ்ணு திராவிடச்
சொல் வேர் கொண்டது என்பதாலோ, த்ரமிடம் திராவிடச்
சொல் வேர் என்பதாலோ என்ன பிரச்சினை? தமிழ் பிராந்திய
மொழியாக எப்படி இந்தியாவில் குறுகிற்று என்பதை
அல்லவா காட்டுகிறது?

முனைவர் நடன. காசிநாதன் (இயக்குனர், தொல்பொருள்துறை,
சென்னை இருந்தவர்) ‘இந்தியா முழுவதும் தமிழே’ என்கிறார்:
http://groups.google.com/forum/?fromgroups=#!topic/thamizayam/hLrZct8XokA

லிங்யுஸ்டிக்ஸ் தரும் அறிவியற் செய்திகளை பிராந்தியம்
என்று ஒதுக்கிவிட முடியாது. தென்னமெரிக்காவில் ஸ்பானிஷ்
பரவி 500 ஆண்டுதான் ஆகிறது. இந்தியாவில் 3000 ஆண்டுக்கு
முன் இந்த ப்ராசஸ் தொடங்கிவிட்டது, சமய டெக்னாலஜியால்.
இப்போது ஐ.டி. டெக்னாலஜி போன்றவை ஆங்கிலத்துக்கு
இந்தியாவை மாற்றிக் கொண்டுள்ளது போல்.

விஷ்ணு திராவிடமொழிகளின் வேர்ச்சொல் என்றால்
இந்திய் பக்திமான்களிடம் விஷ்ணுவுக்கு என்ன குறை?
விஷ்ணு என்ற சொல்லையே ஆழ்வார்கள் ஒருவரும்
பயன்படுத்தவில்லையே. அவர்களுக்குத் தெரியும்
விள்-/விண்ணு/விட்டு/விண்டு இச்சொல்லில் பிறந்த
சொல் விஷ்ணு என.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 15, 2012, 9:24:43 AM9/15/12
to வல்லமை, thami...@googlegroups.com

On Sep 9, 10:43 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Sep 9, 6:01 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> விள்- என்னும் வேர் விண்ணன் <<<
>
> விண்ணன் விஷ்ணுவுக்கான தமிழ்ச்சொல் என்றால்,
> பொன்வண்ணத்தந்தாதி ‘விண்ணன்’ என
> சிவபிரானைச் சொல்வது   எதனால் ?
>

பேராசிரியர்களும் முனைவர்களும் மொழியியல்துறை
அறிஞர்கள் விஷ்ணு தமிழ்வேர் கொண்டது எனக் காட்டியுள்ளனர்.

நான் பொன்வண்ணத்தந்தாதி படித்திருக்கிறேன், ஐயா.

எந்த முனைவர் ‘விண்ணன்’ என்று பொன்வண்ணத்தந்தாதியில்
இருக்கிறது என்று சொல்கிறார்?

நா. கணேசன்

DEV RAJ

unread,
Sep 16, 2012, 6:20:15 AM9/16/12
to வல்லமை
On Sep 15, 6:24 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> எந்த முனைவர் ‘விண்ணன்’ என்று பொன்வண்ணத்தந்தாதியில்
> இருக்கிறது என்று சொல்கிறார்?

பொன்வண்ணத் தந்தாதி

புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சனங்கக்


கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன் நாடற் பசுபதியே.

விண்ணன்` என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது. அடியார்கட்கு
வெளிப்படுங்கால் விண்ணில் நின்று

காட்சி வழங்குதல் பற்றி இறைவனை, `விண்ணன்` என்றார்.

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=11&Song_idField=11006

ஐயா பலவாறாகத் திசை திருப்புமுன்
இக்கேள்விகளுக்கு விடை கூற
முயன்றால் நல்லது

On Sep 9, 10:50 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
ஆதிச்சொல் 'விட்டு’ -

தேடுபொறி கொடுத்தவற்றில் ‘விட்டு’ எனும் கடவுள் கூறப்பட்டுள்ளதா ?
இத்தொடர்களில் இடம்பெறும் ’விட்டு’ வேர் என்ன ?
அது சுட்டும் பொருள் யாது ?
ஐயா சொல்லும் ஆதிச்சொல் இவை தவிர
இலக்கியத்தில் வேறெங்காயினும் காணப்படுகிறதா ?


On Sep 13, 4:40 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
விண்/ விஷ்னு எனில்
மண்/ மஷ்ணு
பண்/பஷ்ணு
போல உளவா?


தேவ்

DEV RAJ

unread,
Sep 16, 2012, 6:28:09 AM9/16/12
to வல்லமை
On Sep 15, 6:18 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> தமிழ் பிராந்திய மொழியாக எப்படி இந்தியாவில் குறுகிற்று என்பதை
>>> அல்லவா காட்டுகிறது?

தமிழ் பிராந்திய மொழியாகக் குறுகியதற்கு
நீலிக்கண்ணீர் வடிக்கும் கணேசர்
முன்பு எழுதியது -

On Jul 6 2011, 5:07 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
ஆனால், திருவள்ளுவன் என்ற சொல் ஆளப்படும்
நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்களைப் பார்த்தால்
சம்ஸ்க்ருதப் பகுதியில் ஸ்ரீவல்லபர் என்றும்,
அதற்கு நேராக வள்ளுவன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஜைனர் கொடையான திவாகரத்திலும் அரச உட்படு கருமத்தலைவர்
வள்ளுவர் என்றுள்ளது.


http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/8173e022245c3eb0/20741055d78f0be1?lnk=gst&q=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA+%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D#20741055d78f0be1

வள்ளுவர் சமணர் என நிறுவ வேண்டுமானால் கணேசர், ஸ்ரீவல்லபர்
திருவள்ளுவர் ஆயிற்று என்பார். அவருக்கு வேண்டுமிடங்களில்
மு.இராகவ ஐயங்கார்; இப்போது நடன காசிநாதன். தமிழ் பரந்துபட்ட
மொழியாக இருந்திருக்குமானால் திருவள்ளுவர் ‘ஸ்ரீவல்லபர்’
ஆகியிருக்க வேண்டும்

தேவ்

> சென்னை இருந்தவர்) ‘இந்தியா முழுவதும் தமிழே’ என்கிறார்:http://groups.google.com/forum/?fromgroups=#!topic/thamizayam/hLrZct8...

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Sep 16, 2012, 9:58:18 AM9/16/12
to வல்லமை

On Sep 16, 3:20 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Sep 15, 6:24 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > எந்த முனைவர் ‘விண்ணன்’ என்று பொன்வண்ணத்தந்தாதியில்
> > இருக்கிறது என்று சொல்கிறார்?
>
>               பொன்வண்ணத் தந்தாதி
>
> புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சனங்கக்
> கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் காரியங்கும்
> விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொளவுமையாள்
> பண்ணியன் பண்ணியல் பாடலன் நாடற் பசுபதியே.
>
> விண்ணன்` என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது. அடியார்கட்கு
> வெளிப்படுங்கால் விண்ணில் நின்று
> காட்சி வழங்குதல் பற்றி இறைவனை, `விண்ணன்` என்றார்.
>

விண்ணு- விண்ணன் விஷ்ணுவின் பெயர். விண்ணுக்கு பிரதம தொடர்பு
விண்ணு/விண்டு/விஷ்ணுவுக்குத் தான்.

பொன்வண்ணத்தந்தாதி விண்ணன் என்று சொல்வதில்லை.

நா. கணேசன்


> http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=11&Song_idFie...

வேந்தன் அரசு

unread,
Sep 16, 2012, 9:50:42 PM9/16/12
to vall...@googlegroups.com


16 செப்டம்பர், 2012 9:58 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Sep 16, 3:20 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Sep 15, 6:24 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > எந்த முனைவர் ‘விண்ணன்’ என்று பொன்வண்ணத்தந்தாதியில்
> > இருக்கிறது என்று சொல்கிறார்?
>
>               பொன்வண்ணத் தந்தாதி
>
> புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சனங்கக்
> கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் காரியங்கும்
> விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொளவுமையாள்
> பண்ணியன் பண்ணியல் பாடலன் நாடற் பசுபதியே.
>
> விண்ணன்` என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது. அடியார்கட்கு
> வெளிப்படுங்கால் விண்ணில் நின்று
> காட்சி வழங்குதல் பற்றி இறைவனை, `விண்ணன்` என்றார்.
>

விண்ணு- விண்ணன் விஷ்ணுவின் பெயர். விண்ணுக்கு பிரதம தொடர்பு
விண்ணு/விண்டு/விஷ்ணுவுக்குத் தான்.

பொன்வண்ணத்தந்தாதி விண்ணன் என்று சொல்வதில்லை.

நா. கணேசன்


முற்றும்


--

N. Ganesan

unread,
Sep 16, 2012, 10:47:14 PM9/16/12
to வல்லமை, Santhavasantham

பொன்வண்ணத்தந்தாதி விண்ணன் என்று சிவனைச் சொல்வதில்லை.
விண்ணன் பெருமாளுக்குப் பெயர் அன்றோ?

விட்டு என்னும் பெயர்ச்சொல் விண்டு/விண்ணு/விஷ்ணுவுக்கு
ஒரு பெயர். ஸ்ரீவைஷ்ணவ மரபில் பெரியாழ்வார் எப்போது வாழ்ந்தார்?
மிகப் பழங்காலத்தில் இருந்து தமிழில் விட்டு (விட்டல் = விட்டு+அல்)
என்றால் விஷ்ணுதான். பெரியாழ்வாருக்கு இப்பெயரையே
அவரது பெற்றோர் இட்டு மகிழ்ந்தனர்.
http://www.kamakoti.org/tamil/divya9.htm
”பெற்றோர் இவருக்கு விட்டுசித்தன் என்ற பெயரை வைத்துத் தக்க வயதில் கல்வி
கற்பிக்கத் தொடங்கினர். பின்னர், இவருக்குத் திருமாலுக்குத் தொண்டு
செய்வதே சிறந்தது எனத் தோன்றியது. எனவே, மூதாதையர் ஈட்டி வைத்திருந்த
பொருட்குவியலினின்றும் ஒரு பெரும்பகுதியைக் கொண்டு நீர்ப்பாங்கான
நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, வேலி வளைத்து அதில் பலவகை மலர்ச்செடிகளையும்
பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளைக் கட்டி, அப்பதியில் உள்ள
வடபெருங்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலிற்குச் சார்த்தி
வருவாராயினார்.”

திவ்வியப்பிரபந்தத்தில் பல இடங்களில் விட்டு என்றால் விஷ்ணு என்ற
பொருளுண்டு.

விட்டுவே நீயிங்கே வாராய் (திவ். பெரியாழ். 2, 3, 5).

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பி பிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன் விரித்தஇப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லைபாவமே

கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்தங்கோர் கரியலற
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் விண்ணவர் கோனடி நண்ணுவரே

வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்
விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே

பெரியாழ்வார் மகள் கோதையும் தந்தைபெயரைச்
சொல்கிறாள்:

512 கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த
மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே

இதேபோல் பற்பல இடங்களில் விட்டு = விண்டு (விஷ்ணு) என நாலாயிரத்தில்
காணலாம். ஆழ்வார்கள் இச் செந்தமிழ் மரபைப் பேணித் தமிழுக்களித்துள்ளனர்.

விள்- என்னும் மூலத்தில் கிளைக்கும் தமிழ்ச் சொற்கள் விட்டு/விண்டு/
விண்ணு.

தொள்- > தொட்டு-/தொண்டு-/தொண்ணு-
முள்- > முட்டு-/முண்டு-/முண்ணு-
பெள்- > பெட்டு-/பெண்டு-/பெண்ணு-
....

நா. கணேசன்

தமிழ்ச் சொற்களின் -ள்-/-ண்-/-ட்- உறவுகள்:
https://groups.google.com/forum/?fromgroups=#!msg/tiruvalluvar/O4M_q-iTESw/g6ZefggBxrsJ

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 16, 2012, 11:35:05 PM9/16/12
to vall...@googlegroups.com, Santhavasantham
ஆஹா..

அப்ப கண்ணுக்கு மூலம் கள்ளா ? அதான் பெண்கள் கண்களைப் பார்த்ததும் ஆண்கள் தொபுக்கடீர்னு மயங்கிடறாங்களா...

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/9/17 N. Ganesan <naa.g...@gmail.com>

--



N. Ganesan

unread,
Sep 16, 2012, 11:50:38 PM9/16/12
to வல்லமை, Santhavasantham

On Sep 16, 8:35 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> ஆஹா..
>
> அப்ப கண்ணுக்கு மூலம் கள்ளா ? அதான் பெண்கள் கண்களைப் பார்த்ததும் ஆண்கள்
> தொபுக்கடீர்னு மயங்கிடறாங்களா...
>

:-)

இருக்கலாம். முழுக்க தொடர்பில்லை எனக் கூறவியலாது.
கண் என்றால் பார்வையால் இரண்டு பொருள்களை இணைத்தல்/தொடுத்தல்.
சங்கிலியின் வளையங்கள் சேர்வதைக் கண்ணி என்கிறோம்.

-கள் என்கிற பன்மைவிகுதியைப் பார்க்கவும்.
-ள்-/-ண்-/-ட்- த்யரியை அப்ளை செய்தால்,
கள்- சொல்லுக்குத் தொடர்பான கட்டு-/கண்டு/கண்ணு- கிடைக்கிறது.
கட்டு- (உ-ம்: கட்டை - உறுதியானபொருள்), கண்டு (உ-ம்: கல்கண்டு,
ஆங்கிலச் சொல் candy என்பது இந்தக் கண்டு-/கண்டம் தான்.),
கண்(ணு) மனிதன்/உயிரியை பொருளுடன் தொடுக்கும் உறுப்பு.

கள் {உ-ம்: மக்கள் (=மகள்/ன் + கள்), மலர்கள், .. } - பன்மைவிகுதி
ஒன்றன் இனமானவற்றைத் தொடுத்துப் பன்மையைக் குறிக்கும்
விகுதி. கள்- கட்டு-/கண்டு/கண்ணு- ...
மலரின் சாரத்தை எல்லாம் தொகுத்திருப்பதும் கள் (மது).
இளமையின் சாரமெல்லாம் தொகுத்த விலங்குப் பருவம்: களிறு, காளை,.

நா. கணேசன்


> Iyappan Krishnan
>
> http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.comhttp://kaladi.blogspot.com


> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **
>

> 2012/9/17 N. Ganesan <naa.gane...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 16, 2012, 11:53:52 PM9/16/12
to vall...@googlegroups.com, Santhavasantham
நன்றி ஐயா,
எல்லாமே தமிழ் இயக்கம் உங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது.
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/9/17 N. Ganesan <naa.g...@gmail.com>
--



N. Ganesan

unread,
Sep 16, 2012, 11:59:22 PM9/16/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com

On Sep 16, 8:53 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> நன்றி ஐயா,
> எல்லாமே தமிழ் இயக்கம் உங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது.
>

ஐயா,

த்ராவிடமொழிகளின் இரண்டாம் எழுத்தாகிய -ள்/-ண்-/-ட்- விதி
அம் மொழிக் குடும்பச் சொற்களின் பிறப்பைக் காட்டிநிற்கிறது.
இந்தியாவின் மொழிகளில் நாவளை ஒலிகள் (ரெட்ரொஃப்லெக்ஷன்)
தோற்றத்தை ஆராயவும் பயன்படும்.

இந்த த்ராவிடச் சொற்பிறப்பு விதி “எல்லாமே தமிழ்” என்று
பறைவதில்லை.

நா. கணேசன்

> >http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.com...

> >https://groups.google.com/forum/?fromgroups=#!msg/tiruvalluvar/O4M_q-...
>
> > > > --
>
> > --

DEV RAJ

unread,
Sep 17, 2012, 1:52:13 AM9/17/12
to வல்லமை
On Sep 16, 7:47 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
தொள்- > தொட்டு-/தொண்டு-/தொண்ணு-
முள்- > முட்டு-/முண்டு-/முண்ணு-
பெள்- > பெட்டு-/பெண்டு-/பெண்ணு-


விள் - நீட்டி விஷ்ணு வரை retroflection :))
தொள், முள், பெள், கள் ...????

கன்ஹா -> க்ருஷ்ண
தன்ஹா -> த்ருஷ்ண

இதில்தான் retroflection
என்று சொல்ல முடியும்


தேவ்

On Sep 16, 7:47 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> பொன்வண்ணத்தந்தாதி விண்ணன் என்று சிவனைச் சொல்வதில்லை.
> விண்ணன் பெருமாளுக்குப் பெயர் அன்றோ?
>
> விட்டு என்னும் பெயர்ச்சொல் விண்டு/விண்ணு/விஷ்ணுவுக்கு
> ஒரு பெயர். ஸ்ரீவைஷ்ணவ மரபில் பெரியாழ்வார் எப்போது வாழ்ந்தார்?
> மிகப் பழங்காலத்தில் இருந்து தமிழில் விட்டு (விட்டல் = விட்டு+அல்)
> என்றால் விஷ்ணுதான். பெரியாழ்வாருக்கு இப்பெயரையே

> அவரது பெற்றோர் இட்டு மகிழ்ந்தனர்.http://www.kamakoti.org/tamil/divya9.htm

> தமிழ்ச் சொற்களின் -ள்-/-ண்-/-ட்- உறவுகள்:https://groups.google.com/forum/?fromgroups=#!msg/tiruvalluvar/O4M_q-...

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 17, 2012, 2:05:38 AM9/17/12
to vall...@googlegroups.com
மள் - மண்டு - மண்
கள் - கண்டு - கண்
விள் - விண்டு - விண்
தொள் = தொண்டு - தொண்
பெள் = பெண்டு = பென்...

பென்னேஸ்வரன் சாரோட பெயர்  மூலம் கிடைச்சுட்டுதேய்.....
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/9/17 DEV RAJ <rde...@gmail.com>

--



Message has been deleted

N. Ganesan

unread,
Sep 17, 2012, 8:50:13 AM9/17/12
to வல்லமை

On Sep 16, 10:52 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Sep 16, 7:47 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> தொள்- > தொட்டு-/தொண்டு-/தொண்ணு-
> முள்-  > முட்டு-/முண்டு-/முண்ணு-
> பெள்-  > பெட்டு-/பெண்டு-/பெண்ணு-
>
> விள் -  நீட்டி விஷ்ணு வரை retroflection :))
> தொள், முள், பெள், கள் ...????
>

???

> கன்ஹா -> க்ருஷ்ண
> தன்ஹா -> த்ருஷ்ண
> இதில்தான் retroflection
> என்று சொல்ல முடியும்
>

அப்படியா?

N. Ganesan

unread,
Sep 17, 2012, 8:52:21 AM9/17/12
to வல்லமை

On Sep 16, 11:05 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> மள் - மண்டு - மண்
> கள் - கண்டு - கண்
> விள் - விண்டு - விண்
> தொள் = தொண்டு - தொண்
> பெள் = பெண்டு = பென்...
>
> பென்னேஸ்வரன் சாரோட பெயர்  மூலம் கிடைச்சுட்டுதேய்.....
>
> Iyappan Krishnan
>

பெண்ணேஸ்வரன். பெண்ணை நதிக்கரை.
பெண்ணை (பெண் பனை, நதி) - விரிவாய் எழுதப்பட்டுள்ளது.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages