சங்கச் சொல்வளம்

2,762 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Dec 1, 2014, 3:20:21 AM12/1/14
to mint...@googlegroups.com
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள்  இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?
கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

பின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.

சங்கச் சொல்வளம்

1. அசைவுகள்

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  (எ.டு)

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த ...

சிறு குழை துயல்வரும் காதின் ----------- - பெரும் 161  

தாளுருவி அசையும் காதினையும் ---

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330

நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும்,

இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள், காலப்போக்கில் வழக்கிழந்து ஒரே பொருளாகக் கொள்ளப்பட்டன. எனினும், இந்த மூன்று சொற்களும் வெவ்வேறான அசைவுகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் உண்மையான பொருளோடு இந்த அடிகளைப் படிக்கும்போதுதான் மெய்யான இலக்கிய இன்பத்தைப் பெறமுடியும்.

இச் சொற்களுக்கு பலவிதப் பொருள் அமைந்தாலும், அசைதல் என்ற பொருளில் வரும் இடம் அல்லது சூழலை ஆய்வோம்.

முதலாவதாக இந்தச் சொற்களுக்குத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) தரும் பொருள்களைப் பார்ப்போம்.

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

துளங்கு - தல்  To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

இப்போது பத்துப்பாட்டில் இவற்றின் வழங்கிடங்களைப் பார்ப்போம்.

1. அலங்குதல் - இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.

        பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298

        நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

        முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144

        அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161

ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல். தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை நன்கு காணலாம். எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில் ஆடுவது அலங்குதல். அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.

அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும். அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே. இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும். அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.

கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை அலங்கல் எனப்பட்டது எனலாம்.

அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில் அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட ஒருவகை அசைவையே குறிக்கிறது. அவற்றில் சில:

அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12

அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

பரிபாடல் அடியைப் பாருங்கள். அருவி எப்படி அலங்கும்? இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.

அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்

மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15: 19-21

பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்! ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால் அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர். இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.

2. துயல்(லு) - (வி) அலை, அசை, ஊஞ்சலாடு, swing, wave, sway

துயல், துயல்வரும் ஆகிய சொற்களும் அலங்கல் போன்று ஒரு நிலைப்புள்ளியைச் சார்ந்த அசைவையே குறிப்பன. எனினும் இயக்கத்தில் இவை வேறுபட்டன.

வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79  

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86  

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 207  

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164  

அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல - சிறு 2  

துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265

சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் - பெரும் 161  

வான் கழல், துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ - குறி 127 

இங்கு வரும் முதல் அடியிலேயே மாலை துயல்வர என்று காண்கிறோம். இங்கு, திருச்சீரலைவாயிலில் விரைந்துவரும் களிற்றின் மீதமர்ந்து வரும் முருகனைப் பற்றிக் கூறும் புலவர், அவ்வாறு விரைந்து வரும் களிற்றின் நெற்றியில் கிடக்கும் வாடாத மாலையாகிய பொன்னரி மாலையின் அசைவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ஓடை என்பது யானையின் நெற்றிப்பட்டம் - முகபடாம் எனப்படும். இந்த நெற்றிப்பட்டத்திற்கு மேலே தங்க மாலை அணியப்பட்டுள்ளது. யானை தலையைக் கீழும் மேலும் ஆட்டிக்கொண்டு விரைந்துவரும்போது முகபடாத்துடன் சேர்ந்து மாலையும் குதித்துக் குதித்து ஆடும் அல்லவா? அந்த முன்-பின்னான ஆட்டமே துயல்வருதல். குதிரையின் தலையில் இருக்கும் உளை எனப்படும் தலையாட்டம் (hair plume) குதிரை நடக்கும்போது எவ்விதம் ஆடும்? ஊட்டு உளை துயல்வர என்று பொருநராற்றுப்படை கூறுவதும் இதுவே. காது வளர்த்த பாட்டிமார், தங்கள் தலைகளை ஆட்டிப் பேசும்போது அவர்களின் காதுகளில் தொங்கும் தண்டட்டி எனப்படும் குழைகள் எவ்வாறு ஆடும்? சிறு குழை துயல்வரும் காதின் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதுவும் இதுவே. சிறுபாணாற்றுப்படையின் புகழ்பெற்ற ஆரம்ப உருவகமான நிலமடந்தையின் அணிமுலை துயல்வரும் ஆரத்தின் ஆட்டமும் இதுவே.

எனவே, ஒரு புள்ளியை நிலையாகக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது துயல்தல் ஆகும்.

அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164  

என வரும் அடிகளில் அலங்கு, துயல்வருதல் ஆகிய இருவித அசைவுகளும் உளை எனப்படும் குதிரையின் தலையாட்டத்திற்குக் கூறப்பட்டுள்ளன. மோனை அழகுக்காக அலங்கு உளை .. ஐவரொடு என்றும், ஊட்டு உளை .. ஓரி என்றும் கூறப்பட்டுள்ளதாக எண்ண இடமுண்டு. எனினும் புற அழகுக்காகப் பொருள் பொருத்தத்தைச் சங்கப்புலவர்கள் மாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இக்கூற்றுகளை ஆராயவேண்டும். குதிரை வேகமாக நடக்கும்போது தலையைக் கீழும் மேலும் ஆட்டும் பொழுது உளை முன்னும் பின்னும் ஆடும். இதுவே துயல்வரும் உளை. குதிரை நின்றுகொண்டிருக்கும்போது, காற்றினாலோ, குதிரை தன் முகத்தைப் பக்கவாட்டில் ஆட்டுவதாலோ உளை இட-வலப் பக்கம் ஆடலாம். அப்போது அது அலங்கு உளை. இது குதிரையைச் சார்ந்த இயக்கம். பார்ப்பவரைச் சார்ந்த இயக்கமாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். குதிரையின் முன்னே நின்று பாக்கும்போது, உளை நம்மை நோக்கி முன்னும் பின்னும் ஆடுகிறது. இது துயல்வருதல். நாம் குதிரையின் பக்கவாட்டில் நின்று பார்க்கும்போது, குதிரையின் தலையாட்டம் ஆடும்பொழுது அது நமக்கு இடது-வலது பக்கமாக ஆடுவதாகத்தானே தெரியும்! பொருநராற்றுப்படையில் நாம் காணும் குதிரை, தேரில் பூட்டப்படுவதற்காகக் கொண்டுவரப்படுவது. இந்தக் காட்சியைத் தேருக்கு முன்பக்கம் நின்றுகொண்டு பார்க்கும் புலவருக்குக் குதிரை உளையின் ஆட்டம் துயல்வருவதாகத்தான் தெரியும். புறநானூற்றுக் குதிரையோ மகாபாரதப் போரில் காணப்படுவது. தொலைவிலிருந்து, ஓடுகிற குதிரையைப் பார்க்கிற புலவருக்கு அதன் உளையின் ஆட்டம் அலங்கல்தானே!

துயல், துயல்வருதல் என்ற சொற்கள் எட்டுத்தொகை நூல்களில் 30 முறை வருகின்றன. அவற்றில் சில:

புன்பூங் கலிங்கமொடு, வாடா மாலை துயல்வர ஓடி - நற் 89,90/5

செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர - அகம் 86/27

பொலம்பிறையுள் தாழ்ந்த புனைவினை உருள்கலன்

நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர - கலித்தொகை 81:3,4

நோன் கழை துயல்வரும் வெதிரத்து - புறம் 277/5

புறநானூற்று நோன்கழை துயல்வருதலும், நாம் ஏற்கனவே கண்ட அலங்கு கழையும் (மலைபடுகடாம்), பார்ப்பவரைச் சார்ந்து  தெரியும் அசைவுகளே எனலாம்.

3. துளங்கு - (வி) அசை, அசைந்தாடு, move, shake, sway from side to side

துறைமுகத்தில் நின்றுகொண்டிருக்கும் கப்பல் எவ்வாறு அசையும்? நன்கு வளரப்பெற்ற திமிலைக் கொண்ட ஒரு காளை நடந்துவரும்பொழுது அதன் திமில் எவ்வாறு அசையும்? பொங்கலன்று கிராமத்தார் வாசலில் அடுப்பு வைத்துப் பானை நிறையப் பொங்கல் ஆக்கும்போது, ‘தளக் புளக்' என்ற சத்தத்துடன் பொங்கல் பொங்கி வழியும்போது பானை எவ்வாறு அசையும்? அதுதான் துளங்குதல்.

ஒரு பருத்த அமைப்பைக் கொண்ட பொருள் முழுதுமாக அசைவதுதான் துளங்குதல். இதற்குப் பல்வேறு பொருள்கள் இருப்பினும் அசைதல் என்ற பொருளில் இது பயன்படுத்தப்படும்போது அது இத்தகைய அசைவைத்தான் குறிக்கிறது. துளங்கல் என்ற சொல் காணப்படும் பத்துப்பாட்டு அடிகள் இவைதாம்.

துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் - சிறு 262

தொல் பசி அறியா துளங்கா இருக்கை - பெரும் 253 

துறை முற்றிய துளங்கு இருக்கை - மது 85

துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி - மலை 43

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் - மலை 463

பாண்டிய நாட்டுத் துறைமுகத்தில் இறக்குமதி செய்ய, வெளிநாட்டுப் பண்டங்களைக் கொண்டுவரும் நாவாய்கள், கடலில் பலவாறாக ஆடிக்கொண்டு வந்து, மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல துறைகளைச் சூழ்ந்து நின்றவண்ணம் ஆடிக்கொண்டு நிற்கின்றன என்று கூறவரும் மதுரைக்காஞ்சி அடிகளைப் பாருங்கள்.

பொன்மலிந்த விழுப்பண்டம்

நாடுஆர நன்கு இழிதரும்

ஆடுஇயல் பெருநாவாய்

மழைமுற்றிய மலைபுரையத்

துறைமுற்றிய துளங்கு இருக்கை - மதுரைக்காஞ்சி - 81-85

கடற்பயணத்தின்போது பல்வேறு வகைகளிலும் ஆடுகின்ற தன்மையையுடைய நாவாய்கள் துறைமுகத்தில் துளங்கிக்கொண்டு நிற்கின்றன என்பது இதன் பொருள். இந்தத் துளங்கு இருக்கை என்னும் தொடர் இதன் பொருளை முழுதும் உணர்த்தி நிற்கிறது.

துளங்கு என்ற சொல் எட்டுத்தொகை நூல்களில் 31 முறை வருகிறது. அவற்றுள் சில:

துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர - நற் 20/4

சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை - பதி 42/11

துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் - கலி 106/9

துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே - அகம் 71/18

கடி மரம் துளங்கிய காவும் நெடு நகர் - புறம் 23/9

ஒரு மரத்தின் கிளைகள் காற்றினால் அசைந்தால் அதனை அலங்கு சினை என்கிறோம். பெருங்காற்றால் அந்த மரமே அசைந்தால் அதனைத் துளங்கு மரம் என்கிறது அகநானூறு (71).

நற்றிணையில் ஒரு பாடலில் ஒரே அடியில் துளங்கு, துயல்வரல் ஆகிய இரு சொற்களும் உள்ளன. எனவே, இதன் முழுப் பொருளைக் காண்போம்.

மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ்இணர்த்

தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்

துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச்

செறிதொடி தெளிர்ப்ப வீசி ------- நற்றிணை 20: 2 - 5

முதல்நாள் பரத்தையின் வீட்டுக்குச் சென்று வருகிறான் தலைவன். மறுநாள் அந்தப் பரத்தை தலைவியின் வீட்டுப்பக்கம் கைகளை வீசிக்கொண்டு பெருமையுடன் நடைபோட்டு வருகிறாள். அதைப் பார்த்த தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் இது. இங்கு துளங்கியல், துயல்வரல் என்பதற்குப் பலவாறாக உரைகள் அமைந்துள்ளன.

(கூந்தல்) துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து வீழ்ந்தசையாநிற்ப, இடையிற் கட்டிய உடை சரிந்து அசையாநிற்ப (பின்னத்தூரார்),

(கூந்தல்) துவண்ட மேனிமேல் சரிந்து விளங்க, உடுத்த ஆடை புறத்தே அசைய (ஔவை சு.),

(கூந்தல்) விளங்கிய வகையில் அசையுமாறும், இடையிற் கட்டிய உடை சரியவும் (கு.வே.பா).

இங்கு, சிறுபுறத்து (வீழ்ந்தசைய), மேனிமேல் (சரிந்து விளங்க) என்பதற்குப் பாடலில் சொற்கள் இல்லை. உரைகாரர்கள் சேர்த்துக்கொண்டவை இவை. துளங்கியலில் வரும் இயல் என்பதற்கு நடை அல்லது தன்மை என்ற பொருள்கொள்ளலாம். கூந்தல் துளங்கியல் அசைவர என்பதால் துளங்கியல் என்பதைக் கூந்தலின் அசைவுக்கு அடையாகக் கொள்ளலாம். அசைதல் என்பது ஆடுதல், நகர்தல், இடம்பெயர்தல் என்பதற்குப் பொதுவான சொல். கூந்தல் எவ்வாறு அசைந்தது என்பதையே இது விளக்குவதாகக் கொள்ளலாம். கூந்தல் என்பது பெண்களின் தலை மயிர் - அதுவும் இது தலையின் பின்புறமாக நீண்டு தொங்கும் பகுதியையே குறிக்கும். பொதுவாகத் தமிழ்நாட்டுப் பெண்கள் கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு வெளியில் வரமாட்டார்கள். தலைமயிரை வாரி இழுத்துக் குறைந்த அளவு ஒரு சிறு முடிச்சாவது போட்டுத் தொங்கவிட்டிருப்பார்கள். இந்தக் கூந்தல் அசையும்போது, தொங்கும் பகுதிதான் அலங்கும் அல்லது துயல்வரும். ஆனால் இங்கு துளங்கும் என்று புலவர் கூறுவதன் காரணம் என்ன? முந்தின நாள் தலைவன் தன்னுடன் தங்கியிருந்ததனால், மறுநாள் காலையில் பரத்தை தலைக்கு நீர் ஊற்றிக் குளிக்கிறாள். பின்னர் தலையை நன்றாக உலர்த்திய பின்னர், ஒரு சிறிய முடிச்சினைப் போட்டுக்கொண்டு பெருமையுடன் வீதியில் கைகளை வீசிக்கொண்டு நடக்கிறாள். தலையை இறுக்க வாராது இருந்ததினால் தலையைச் சுற்றிலும் கூந்தல் தளரத் தொங்கிக்கொண்டு இருக்கிறது. எனவே, தொங்குகின்ற பகுதி மட்டும் அல்லாமல், தலையில் உள்ள அத்துணை மயிர்களும் அசையும்படி அவள் நடந்து சென்றாள் என்பதைக் குறிக்கவே துளங்கியல் அசைவர என்கிறார் புலவர் எனலாம். ஆகவே, நமது வரையரையின்படி இது முழுவதுமான அசைவாக இருப்பதினால் இது துளங்கும் தன்மையில் அசையும் கூந்தல் என்பது பொருத்தமான சொல்லாட்சியாகவே இருக்கிறது.

அடுத்து, கலிங்கம் துயல்வர என்கிறார் புலவர். அவள் வேகமாக நடக்கும்போது இடையிலிருந்து தொங்கும் ஆடை, கொசுவத்துடன் முன்னும் பின்னும் ஆடும் அல்லவா? இதுவும் ஒருவிதத்தில் யானையின் ஓடை துயல்வருவது போலத்தானே! இந்த சொல்லாட்சிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து படிக்கும்பொதுதான், கவிஞன் தான் மனக்கண்ணால் கண்ட காட்சியை எவ்வாறு ஒரு சொல்லோவியமாகப் படைத்திருக்கிறான் என்பதை நம் மனக்கண்ணால் பார்க்கமுடியும்.

இந்த மூன்றுவித அசைவுகளின் இயக்கத்தைக் கீழ்க்கண்ட படம் விளக்குகிறது.

அலங்குதல், துயல்வருதல் என்ற இரு அசைவுகளுமே ஒரு பொருளின் ஒரு பகுதி அசையும் இயக்கங்களே. இவற்றுக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கலாம். உரையாசிரியர்கூட, சிலவிடங்களில் தமது பொருளைக் கூறிவிட்டு, வேறு ஒரு பொருளைக் கூறி, “என்பாரும் உளர்எனக் கூறுவர் இல்லையா? அதைப் போல, ஒருவரே இரண்டுவிதக் காரணங்களைக் கூறலாம் அல்லவா!

அலங்கு என்பது, மிகப்பெரும்பாலும் மரக்கிளை அல்லது செடியின் பூ போன்றவற்றின் ஆட்டத்தைக் குறிக்கிறது. இவை எப்படி அசையும்? இதற்கு ஒரு புறவிசை (external force) வேண்டும். பெரும்பாலும் இவை காற்றினால் அசைகின்றன. எனவே, ஒரு பொருளின் ஒரு பகுதி, ஒரு புறவிசையினால் ஆடுவதே அலங்கல் எனலாம்.

அலங்கல் = the movement of a part of a body by external force.

துயல்வரல் என்பது காதில் நீண்டு தொங்கும் குழையின் ஆட்டத்தைப் போன்றது. யானையின் முகபடாம் அது நடக்கும்போது குதித்துக் குதித்து ஆடுவது, குதிரை நடக்கும்போது அதன் தலையாட்டம் ஆடுவது போன்றவற்றைக் கூர்ந்து நோக்கினால், அவற்றை எந்தப் புறவிசையும் இயக்கவில்லை என்பதை உணரலாம். அவை எந்தப் பொருளின் பகுதியாக இருக்கின்றனவோ அந்தப் பொருளின் அசைவால் உண்டாகும் அகவிசையே (internal force) இதற்குக் காரணம். காட்டாக, ஒரு பெண் தலையை ஆட்டும்போது அவளின் காதணிகள் துயல்கின்றனவே யொழிய, அந்தக் காதணிகளை ஆட்டிவிடுவதால் அல்ல. குதிரையின் தலையாட்டமும் அவ்வாறே. எனவே, துயல்வருதல் என்பது, ஒரு பொருளின் ஒரு பகுதி, ஓர் அகவிசையினால் ஆடுவதே எனலாம்.

துயல்வருதல் = the movement of a part of a body by internal forces.

காற்றினால் ஆடும் கழையை அலங்கு கழை எனவும், அது தன்னுடைய எடையைப் பொறுக்கமாட்டாது ஆடும்போது துயல் கழை எனவும் கொள்ளலாம். ஒரு மயில் நடக்கும்போது அதன் தோகை மேலும் கீழும் அசையும். அதனை,

ஒலி நெடும் பீலி துயல்வர இயலி - குறு 264/2 என்கிறது குறுந்தொகை.

இந்த ஆட்டத்திற்குக் காரணம் மயிலின் உடம்பில் ஏற்படும் அசைவே. இந்த அசைவினால் ஏற்படும் அகவிசை காரணமாகத் தோகை துயல்வருகிறது.

ஒரு பெண் நடந்து செல்லும்போது அவளின் பின்புறத்தில் கூந்தல் அசைவதை,

துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2 என்கிறது ஐங்குறுநூறு.

ஆனால்,

தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர்

ஆடுமயில் பீலியின் வாடையொடு துயல்வர - நற்றிணை 262: 1,2

என்கிறது நற்றிணை. தோகையை விரித்து ஆடுகின்ற மயில், தன் பீலிகளை இயக்குகிறது. பீலிகளைப் பொருத்தமட்டில் இது அகவிசையே. ஆனால், அதைப் போல, கண் போன்ற தோற்றமுடைய கருவிளை மலர் வாடையுடன் துயல்வருகிறது என்கிறார் புலவர்.

கரிய மலர், வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலி போல ஆடா நிற்ப - பின்னத்தூரார்.

பெரிய பூ, ஆடுகின்ற மயிலின் பீலி போல வாடைக்காற்றால் அசைய - ஔவை. சு.

கரிய மலர், வாடைக்காற்று வீசுவதால், ஆடுகின்ற மயிலின் தோகை அசைவது போல அசைந்து விளங்க - கு.வெ.பா

இங்கே பூவின் ஆட்டம் வாடைக்காற்றால் ஏற்படுவது என்று உரைகள் கூறுகின்றன. அப்படியெனில் இது புறவிசையால் ஏற்பட்ட அசைவு. ஆனால், இந்த அசைவு ஆடுகின்ற மயிலின் பீலி போல என்று கூறப்பட்டுள்ளது. மயிற்பீலியின் அசைவு அகவிசையால் ஏற்படுவது. எனவே இங்கு உவமையிலேயே தவறு உள்ளது. தற்குக் காரணம், மலர் வாடைக்காற்றால் ஆடுகிறது என்று உரைகாரர்கள் கொண்டதுவே. இங்கே புலவர் வாடையொடு துயல்வர என்று கூறியிருப்பதைக் கவனிக்கவேண்டும். கீழ்க்கண்ட அடிகளைப் பாருங்கள்.

நெல்லொடு வந்த வல் வாய் பஃறி - பட் 30

பாலொடு வந்து கூழொடு பெயரும் - குறு 221/3

காலொடு பட்ட மாரி - நற் 2/9 - காற்றொடு கலந்த மழை (பின்னத்)

காலொடு வந்த கமம் சூல் மா மழை - குறு 158/3 - காற்றோடு வந்த நிறைந்த நீராகிய சூலையுடைய பெரிய மழை (நச்)

இங்கெல்லாம் ஒடு' என்பது உடன்' என்ற பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது. எனவே, வாடையொடு துயல்வர என்ற தொடருக்கு, வாடைக்காற்றுடன் அசைய என்ற பொருள் கொள்ளவேண்டும். எப்படியென்றாலும், மலரின் அசைவுக்குக் காரணம் காற்றுதானே என நினைக்கலாம். வாடைக்காற்று கருவிளைக் கொடியை அசைக்கிறது. கருவிளைக்கொடிக்கு இது புறவிசை. கொடியின் இந்த அசைவினால், மலர் ஆடுகிறது. மலருக்கு இது அகவிசை. எனவே மலரின் ஆட்டம் துயல்வருதல்தான்.

அடை இறந்து அவிழ்ந்த தண்கமழ் நீலம்

காலொடு துயல்வந்து அன்ன நின் - அகம் 357/14,15

என்ற அடிகளுக்கும் இதே விளக்கம்தான். இந்த நற்றிணைக் காட்சியைப் பாருங்கள்.

---------  -----------  கொன்றையந் தீங்கனி

பறைஅறை கடிப்பின் அறைஅறையாத் துயல்வர

வெவ்வளி வழங்கும் ---------  ---------  - நற் 46/6-8

கொடிய காற்று வீசுகின்றது. கொன்றை மரத்தின் கிளைகள் அலைப்புண்டு ஆடுகின்றன (அலங்கல்). அப்போது அந்தக் கிளைகளில் காய்த்துத் தொங்கும் கொன்றைக்காயின் நெற்றுகள் ஆடுகின்றன (துயல்வருதல்). அவ்வாறு ஆடிக்கொண்டு அவை பக்கத்துப் பாறையில் மோதுவது முரசை அறையும் குறுந்தடி போல் இருக்கிறது என்கிற நற்றிணைக் காட்சி நம் ஐயத்தைத் தெளிவிக்கிறது.

கொன்றையின் இனிய சுவையை உடைய கனிகள், பறையை முழக்கும் குறுந்தடி போலப் பாறையில் விழுமாறு கிளைகள் மிகத் துவண்டாடக் கொடிய காற்று வீசாநின்ற என்கிறது பின்னத்தூரார் உரை. இங்கே கொன்றைக் கிளைகளின் ஆட்டம் காற்று என்னும் புறவிசையால். இதனால் ஆடும் நெற்றுகளின் ஆட்டம் கிளைகளில் உண்டான அகவிசையால்.

கழனியில் நெற்பயிர் உயர்ந்து கிளைத்து வளர்ந்திருக்கிறது. அதன் உச்சியில் இருக்கும் நெற்கதிர்கள் காற்றால் அசைகின்றன (அலங்கல்). வரப்போரத்தில் இருக்கும் சில நெற்பயிர்கள் வரப்பினில் மோத, அப்போது அந்தப் பயிர் வரப்புமேல் அசைகின்றது (துயல்வரல்).

கழனி நெல்ஈன் கவைமுதல் அலங்கல்

நிரம்புஅகன் செறுவில் வரம்புஅணையாத் துயல்வர

புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை - அகம் 13/19-21

அலங்கல், துயல்வரல் ஆகிய இரு சொற்களும் காணப்படும் இந்தப் பகுதி, நம் வாதத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது எனலாம்.

சொல்வளம் தொடரும் ...
ப.பாண்டியராஜா

Mohanarangan V Srirangam

unread,
Dec 1, 2014, 3:33:52 AM12/1/14
to min tamil
அலங்குடை விளக்கத்தால் துயல்வரும் உட்பொருள் விளங்க
துளங்குடை மயல் தீர்க்கும் முயற்சிக்கு நன்றி ஐயா.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Dec 1, 2014, 3:44:07 AM12/1/14
to Groups
2014-12-01 13:50 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

சங்கச் சொல்வளம்

1. அசைவுகள்

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

Inline image 2 

துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

Inline image 1 

துளங்கு - தல்  To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

Inline image 3

​வாழ்க ஐயா .... மிக அருமையான புதுமையான கற்பிக்கும் முறை​... பின் தொடைகிறேன் ஐயா ..

படத்தில் அசைவுகள் சரியாக உள்ளனவா ?

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Mohanarangan V Srirangam

unread,
Dec 1, 2014, 3:52:53 AM12/1/14
to min tamil
துரை சார் அருமை

--

Pandiyaraja

unread,
Dec 1, 2014, 6:54:10 AM12/1/14
to mint...@googlegroups.com
மிக்க அருமை துரை ஐயா! உங்களை மாதிரி 'படங்காட்ட' எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறேன். I am still in still pictures. The motion pictures on motion are just beautiful.
P.Pandiyaraja

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 1, 2014, 9:32:06 AM12/1/14
to mintamil

வணக்கம் ஐயா.
அருமையான தமிழ்ச் சுரங்கம் .
அதற்கேற்ற படங்கள் .
அருமை அருமை.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 1, 2014, 11:46:01 AM12/1/14
to mint...@googlegroups.com
செந்தமிழ்ச்செம்மல் முனைவர் ப.பாண்டியராஜா அவர்களே
=================================================================

கனைகதிர் ஊச்சும் தூம்பு வள்ளையும்
தடக்கை ஊதும் வேழக்களியும்
நீரின் புல்மணி ஒளி சொரிந்து ஆர்ப்ப‌
குணில் பாய் அருவி இமிழ்தரும் மன்னே
சொல் கீறி பொருள் ஒலிக்கும்
பொருள் ஊறி எழுத்தொலிக்கும்
தமிழ் பாய் பொலங்கிளர் கிளவிநுணுக்கம்
தந்தீர் முனைவ!தாழ்த்திய சென்னியில்
வணங்குதும் வாழ்த்துதும் தமிழ்த்துறை ஐய!
நரல் தரும் நயத்தின் நறவு மிக்குண்டு
இனிக்கும்  தமிழின் சொன்னீர் வீழ்ச்சி
தடவிய சுரமெலாம் மொழியின் வீழ்க்கும்
உயிர் வேர் நனைக்கும் நறுஞ்சினை கிளைக்கும்
மொழி பல பிறள்க்கும் மொழி பல கிளர்க்கும்
எம்மொழியாயினும் அம்மொழி தமிழே என‌
நற்றிறம் காட்டும் நறுஞ்சொல் அரசரே!
ஓதலாந்தையார் ஓரம்போகியார்
நரிவெரூஉத் தலையார் நல்லந்துவனார்
அணிலாடு முன்றிலார் கல்பொரு சிறுநுரையார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
பிசிராந்தையார் குமட்டூர் கண்ணனார்
சில பெயர் மட்டுமே ஈண்டுநான் சுட்டினேன்
கபிலர் பரணர் மருதனிள நாகனார் என‌
சங்கத்தமிழ்ச் சுவடிகளில் உயிர்நனிபெய்தார்
எத்துணை எத்துணை எத்துணை பேர்!
கல் ஆயினும் கண் பொருது இரங்கும்.
புல் பூ புள் ஆயினும் ஊன் பொதி பசுங்குடையன்ன‌
தமிழ்ச் சோறு மண்டும் தண்பெரும் சொற்கள்
சுவைத்தனம்!சுவைத்தனம்!ஒல்காப்பரவை
நெடுங்கடல் அன்ன நீள் ஆறு படுக்கும்
செஞ்சொற்கள் எத்தனை?எத்தனை?
அத்தனையும் காட்டும் தமிழ்ச்சாற்றும் திறம்
தங்கள் எழுத்தெலாம் இனிக்க 
எறும்பு மூசும் பலவின் தீஞ்சுளை
வரி பிளந்து மணியின் காட்சிகள் மலிய‌
கண்டோம்!வியந்தோம்!அருந்தமிழ்ச்செல்வ!

அன்புடன் 
ருத்ரா
...

Pandiyaraja

unread,
Dec 3, 2014, 4:22:49 AM12/3/14
to mint...@googlegroups.com
உண்மையில் மெய்சிலிர்த்துப்போனேன் ருத்ரா அவர்களே. சங்கச் சொல்வளம் மிக்க ஒரு அருமையான கவிதையை எனக்காகப் புனைந்துள்ளீர்கள். மிக்க நன்றி.
திருவாளர்கள் மோகனரங்கம், துரை, காளை ஆகியோருக்கு என் மனமுவந்த நன்றி உரித்தாகும். தங்களின் அன்பு மழையில் நனைவது ஓர் இனிய அனுபவம். அனைவருக்கும் மிக்க நன்றி.
இதோ அடுத்த கட்டுரை. முந்தையது அசைவுகளைப் பற்றியது. இது நகர்வுகளைப் பற்றியது. முதல் நகர்வு இவர்தல். இதற்கே நான்கு பக்கம் ஆகிவிட்டது. எனவே மற்ற நகர்வுகள் அடுத்த கட்டுரைகளில் வரும்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

சங்கச் சொல்வளம்

2. நகர்வுகள்

உயிர்கள் அல்லது பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்வதையே நகர்வு (movement) என்கிறோம். இங்கு இவர்தல், ஊர்தல், இயலுதல், இரிதல் என்ற நான்குவிதமான நகர்வுகளைப் பற்றிக் காண்போம்.

1. இவர்தல்

இவர்தல் என்பதற்குப் பலவிதமான விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது.

To rise on high, ascend; உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959).

To go, proceed; செல்லுதல். இருவிசும் பிவர்தலுற்று (சீவக. 959).

To move about, pass to and fro; உலாவுதல். இரைதேர்ந்திவருங் கொடுந்தாண் முதலையொடு (மலைபடு. 90).

To spread, as a creeper; பரத்தல். தூவற்கலித்த விவர்நனை வளர்கொடி (மலைபடு. 514.)

To spring, leap, rush out; பாய்தல். குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்கு (கலித். 86, 32).

எனவே, ‘இவர்’ என்பதற்கு, மேலே செல்(soar), உயர்(ascend), பர(spread), பாய்(leap) என்ற பொருள்கள் தரப்படுகின்றன.  சங்க இலக்கியங்களில் பன்முறை இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவை அனைத்தும் அடிப்படையில் ஒரேவித நகர்வைத்தான் குறிக்கின்றன.

முதலைகள் நடக்கும்போது, தம் நான்கு குறுங்கால்களையும் நிமிர்த்தித் தம் உடலை அவற்றுக்கு மேலே தூக்கி ஒவ்வொரு காலாக எடுத்துவைக்கும். ஆனால், அவை இரையைப் பிடிக்கச் செல்லும்போது, நன்றாகத் தரையில் படுத்துக்கொண்டு, கால்களைப் பரப்பி, ஒரு முன்னங்காலை முன்னெடுத்துவைத்து, அந்தக் காலால் தரையினைப் பற்றிக்கொண்டு, அடுத்த காலையும் எடுத்துவைத்து, அக்காலால் தரையைப் பற்றிக்கொண்டு, என மாற்றி மாற்றி தன் உடம்பைத் தரையில் இழுத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும். இதுவே இவர்தல்.

இதனையே, இரை தேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலை என்கிறது மலைபடுகடாம் (90).

ஒரு குறிய மரம் அல்லது உயர்ந்த செடிகள் கொண்ட புதரின் அருகில் ஒரு அவரைக்கொடியோ, முல்லைக்கொடியோ கொடிவீசி எவ்வாறு படரும்? முதலில் தனக்கு எட்டுகின்ற ஒரு சிறிய பிடிமானத்தை அது இறுகப்பிடிக்கும். பின்னர் அதைச் சுற்றி வளைக்கும், அதனை இறுக்கியவாறே தன் முனையை அக் கொடி உயர்த்தி நீட்டும். இதையே கொடி படர்கிறது என்கிறோம். இதனையே,

பனிப் புதல் இவர்ந்த பைம் கொடி அவரை - குறு 240/1

உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் - அகம் 289/2

என்கின்றன இலக்கியங்கள். இன்னும், பீர்க்கு, பாகல், புடலை, சுரை போன்ற கொடிகளில் இந்த நகர்வை வெளிப்படையாகவே பார்க்கலாம். இவ்வகைத் தாவரங்கள் முதலில் சிம்பு போன்ற ஒரு நீண்ட மெல்லிய இழையை வெளியில் நீட்டுகின்றன. அவை கிடைக்கும் பிடிமானத்தைக் கவ்விப் பிடித்துச் சுருட்டிக்கொள்கின்றன. இந்தப் பிடிமானத்தைக் கொண்டு கொடிகள் தம்மை இழுத்து நீட்டிக்கொள்கின்றன. இதுதானே இவர்தல்.

இக் காட்சிகளைத்தான் நம் இலக்கியங்கள்,

பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி - பதி 26/10
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் - அகம் 287/5
என்று கூறுவதைப் பார்க்கிறோம். 
ஒரு ஆறு சில காலமாய் வறண்டுகிடக்கிறது எனக் கொள்வோம். ஒருநாள் தொலைவில் பெருமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. வெள்ளம் வரவர வறண்ட ஆறு குடித்துக்கொண்டே இருக்கும். எனவே வெகு தொலைவுக்குப்பின் வெள்ளத்தின் வேகம் வெகுவாகக் குறையும், நீரின் முன்பகுதி கொஞ்சம் கொஞ்சமாகத் திக்கித்திக்கி முன்னேறிவரும். இதுவும் இவர்தல்தான். 

     குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி - மது 245

இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான் - பரி 16/27
என்பதனால் உயிரற்ற பொருள்களின் நகர்வும் இவர்-வகையைச் சேரும் என அறிகிறோம்.

காலையில் ஞாயிறு விரிகதிர் பரப்பியவண்ணம் எழுகின்றது. அந்தக் கதிர்களால் வானத்தை இறுகப்பிடித்தவண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உன்னி உன்னி மேலே உயர்கின்றது. உச்சிக்கு வந்த ஞாயிறு மேற்கில் இறங்குகிறது. அப்போது மடமடவென்று சரிந்துவிடாமல், மீண்டும் தன் கதிர்களால் வானத்தை இறுகக் கவ்விப்பிடித்த வண்ணம் மெல்ல மெல்ல இறங்கி மலைக்கும் பின்னால் மறைகிறது. என்ன அருமையான கற்பனை பார்த்தீர்களா!

விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன - புறம் 228/8 (இது எழுஞாயிற்றின் இவர்தல்)
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே நற் 67/1,2    (இது விழுஞாயிற்றின் இவர்தல்)

ஞாயிறு இவர்கிறது என்ற சொல்லாட்சியினால் விளைந்த அழகுக் கற்பனை இது!

சிங்கங்கள் செங்குத்தான பாறைகளைப் பற்றிக்கொண்டு ஏறுமா? ஏறுவதைப் பார்த்திருக்கிறார் சங்கப் புலவர். தந்தை ஒருவன் தரையில் கால்நீட்டிச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறான். குழந்தையின் தாய், குழந்தையை அவன் மடியில் கிடத்துகின்றாள். குப்புறப் படுத்த குழந்தை அண்ணாந்து பார்த்து தந்தையின் கழுத்தில் கிடக்கும் முத்துமாலையைப் பிடிக்கத் தாவுகிறது. கைக்குழந்தைதானே! முடியாததால், அவன் மார்பின் மீது ஏற முயல்கிறது. தந்தை குறும்பாக முத்து மாலையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்கு இழுக்கிறான். தந்தையின் மார்பை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, ஒவ்வொரு கையாக மேலே தூக்கிப்போட்டுத் தந்தையின் மார்பில் ஏற முயலுகிறது குழந்தை. இதுதானே இவர்தல்.  இந்தக் காட்சியைக் கண்ட புலவர், குழந்தை தந்தையின் மார்பில் பாய்ந்து ஏறுவது, குன்றத்து இறுவரையில் கோள்மா இவர்ந்து ஏறுகிறதைப் போல் இருக்கிறது என்கிறார்.

இறுவரை என்றால் என்ன? ஒரு மலையின் சரிவில் இறங்கிக்கொண்டே வருகிறீர்கள். திடீரென்று மலையைக் காணோம்! மலை இற்றுவிட்டது. இறு என்பதற்கு அறு, முறி, முடிவுறு என்று பொருள். மலை அறுந்தது என்றால், எட்டிப்பாத்தால் அதலபாதாளம். ஆங்கிலத்தில் cliff என்போம். கொடைக்கானல் suicide point போல. இந்த இறுவரையின் கீழிருந்து ஒரு சிங்கம் ஏறுவதைப் போலிருந்ததாம் குழந்தை தந்தையின் மார்பில் ஊர்ந்துகொண்டு ஏறிச் செல்வது. கலித்தொகையில் இக் காட்சியைக் காண்கிறோம்.

குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன் கலி 86/32-34

ஆக, இவர்தலில் பலவகை இல்லை. அடிப்படையில் எல்லாம் ஒன்றே.
இனி அடுத்த கட்டுரையில் ஏனையவற்றைக் காண்போம்.
நகர்வுகள் தொடரும்.
ப.பாண்டியராஜா

...

க்ருஷ்ணகுமார்

unread,
Dec 3, 2014, 5:01:02 AM12/3/14
to mint...@googlegroups.com
பேரன்பிற்குரிய பாண்டியராஜா ஐயா

தூய தமிழினின்று என் கலப்பு நடைத் தமிழ் தொலைமுனைப்புள்ளியில் (நன்றி தாங்கள் பகிர்ந்த சொல்லுக்கு) இருந்தாலும் தங்களது பல பதிவுகளை வாசிக்குங்கால் பற்பல புதிய சொற்களைக் கற்று அபிவ்ருத்தியாகிறது என்றால் மிகையாகாது. மின் தமிழ் மடலாடற்குழுவில் பங்கு பெறுவதில் தங்கள் பதிவுகளிலிருந்து புத்துணர்வு மிக சிறியேனது சொல்லாட்சி மிகுகிறது. 

 ஆனால்........... ஆனால்............ நினைவில் இவற்றை எப்படித் தக்க வைப்பது என்பது ஒரு சவால். ம்............ முயற்சி திருவினையாக்கும்.
 
அலங்குதல்............ 
துயலுதல்...............(முருகப்பெருமான் களிற்றின் மீது வருதலை நினைவுறுத்தினால் மனதில் தங்கும்)

ஓடை ............. முகபடாம் (பின்னது தெரிந்த சொல் ............. முந்தையது புதிது)
.
உளமார்ந்த நன்றிகள்.
க்ருஷ்ணகுமார்

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 3, 2014, 6:29:04 AM12/3/14
to mint...@googlegroups.com
பேராசிரியர் ஐயா தங்களுடைய ஆர்வமும் முயற்சியும் என் போன்றோருக்கு
வழிகாட்டி. ஒவ்வொரு சொல்லின் விளக்கமும் தங்கள் உழைப்பைப்
புலப்படுத்துகிறது.
அலங்கு, துயல், துளங்கு, இவர் அடடா!
நண்பர் திரு துரையின் பின்னூட்டம் இழைக்குச் சிறப்பு சேர்க்கிறது. நண்பர்
திரு ருத்ரா கவிதையும் திரு மோகனரங்கன் சொற்கோவையும் நண்பர்கள்
தங்களுக்குச் செய்த பாராட்டு அணி. நன்றி.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Kannan

unread,
Dec 3, 2014, 10:34:53 AM12/3/14
to மின்தமிழ்
பலகாலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சிங்கம் தமிழகத்தில் இருந்ததா? என்று. ஆண்டாள் ஒரு பாசுரத்தில் விலாவாரியாக சிங்கத்தின் நடத்தையை விவரிக்கிறாள். இப்போது பேராசிரியர் என்னை ஆச்சர்யப்படுத்துகிறார். சங்ககாலம் என்பது எவ்விடத்தில் நடந்தது? குஜராத்திலா? ஆப்பிரிக்காவிலா? இல்லை தமிழ் நாட்டிலா?

புலவர் இராசு, தமிழ்நாடுதான் என்று சொல்லுவார். இருந்தாலும் கேட்டால் தப்பில்லை.

நன்றி.

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Oru Arizonan

unread,
Dec 3, 2014, 11:05:44 AM12/3/14
to mint...@googlegroups.com
உயர்திரு ருத்ரா அவர்களே,

தங்கள் கவி மழை என்னைத் தமிழால் குளிப்பாட்டியது, அலைஅலையாக வந்த கவிதை அலை என்னை ஆட்டிப் படைத்தது.  மிக்க நன்றி ஐயா!

மதிப்பிற்குரிய பாண்டியராஜா அவர்களே!

தங்களது சொல்லலங்காரச் சுரங்கத்திலிருந்து மீண்டு வெளிவரும் வழியறியாது சுற்றிச் சுற்றி வந்து கலைத்து ஓய்ந்துவிட்டேனையா!

இது போதாதென்று, துரை அவர்கள் என்னை அலைகடலில்  அழகாய் ஆர்ப்பரிக்கும் நாவாயிலேற்றி அலைக்கழித்துவிட்டார்.  இன்னும் தலைசுற்றல் நிற்கவில்லை.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Jayabalan Mavanna

unread,
Dec 3, 2014, 11:54:47 AM12/3/14
to mint...@googlegroups.com
அருமையான விளக்கம்.  படக்காட்சிகளும்  வரைபடமும் அருமை.

அலுங்காமல் குலுங்காமல் என்பதில் முதல் சொல் அலங்காமல் என்பதன் திரிபா?

எம்.டி.ஜெ
...

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 4, 2014, 8:15:19 AM12/4/14
to mint...@googlegroups.com
//குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/32௩4//

இலக்கியச்செம்மல் திரு.ப.பாண்டியராஜா அவர்களே

மேலே கண்ட வரிகள் இன்றைய நுட்பமான லைன் கிங் படக்காட்சியையும் விட வெகு துல்லியமாய் மிக்க ஆழமான சொல்லாட்சியில் இருப்பதை வெகு அற்புதமாய் காட்டியிருக்கிறீர்கள்.
கலித்தொகையில் "உள்ளம்" கூட ஒலிக்கும் விந்தையை காண்கிறோம்.சங்கத்தமிழ் உங்கள் கைகளால் முத்துப்பேழையாய் மாணிக்கப்பேழையாய் ஆகியிருக்கிறது.அது வெறும் சங்கப்பலகை அல்ல என்பதை உயிர்ப்புடன் காட்டியிருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி.
உளம் வழியும் பாராட்டுகளுடன்
ருத்ரா

On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
...

N. Ganesan

unread,
Dec 6, 2014, 4:59:49 PM12/6/14
to mint...@googlegroups.com, vallamai

On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள்  இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?
கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

பின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.

சங்கச் சொல்வளம்

1. அசைவுகள்

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  (எ.டு)

In Aerodynamics, and Marine engineering, the movement in the 3 cardinal directions are called roll, yaw & pitch. we can see which
Tamil words suit these:

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

துளங்கு தல்  To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

-----------------

துயலுதல் துயர் என்னும் சொல்லைப் பற்றிச் சிந்திக்கிறேன்.

https://groups.google.com/forum/#!msg/vallamai/kujQLXZ9COI/-YesVZ1ool4J

திராவிட மொழிகளில் முதலெழுத்தில் -உ/-ஒ வேறுபாடு கொண்ட ஒருபொருள் தொகுதிகள் நிறைய உண்டு. உ-ம்: முய்-/மொய்- (முசுமுசு/மொசுமொசு. எனவே, முயல்/மொசல்), துள்-/தொள்- (துளை, தொள்ளு), புள்-/பொள்- (புள்ளி, பொள்ளுதல்), முள்-/மொள்- (முட்டை, மொட்டு, மொண்ணை) ... இது போல் ஒன்று: குய்-/கொய்-

குய்-/கொய்- என்னும் சொல்லுக்கு இரண்டு அடிப்படையான பொருள்கள் உண்டு. (1) குய்- ‘sharp'  குயம் ‘நாபிதன் கத்தி, அரிவாள், கொடுவாள்’ போன்றவற்றைக் கொய்தல் என்னும் வினையொடு த்ராவிட வேர்ச்சொல் அகராதி இணைக்கிறது.

இவைபோல், துய்-/தொய்- தொடர்புடையனவாய் தோன்றுகின்றன.
தொய்வு தொகு/தொங்கு/தூங்கு- இவற்றுடன் துயலுதல்/துயருதல் பொருந்துகிறது.

நா. கணேசன்

...

Pandiyaraja

unread,
Dec 8, 2014, 4:21:11 AM12/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அன்புடையீர்,
திருவாளர்கள். கிருஷ்ணகுமார், வினைதீர்த்தான், கண்ணன், அரிசோனன், ஜயபாலன், ருத்ரா, கணேசன் ஆகியோருக்கு மிக்க நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் உண்மையில் நல்ல் ஊட்டச்சத்தாய் அமைகின்றது. திரு.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இங்கே வேர்ச்சொல் ஆய்வு வேண்டாம். இலக்கியங்கள் மூலம் விளக்கவுரைகளே இங்கு இடம்பெறும்.
இந்த வாரக் கட்டுரையில் 'இரிதல்' என்ற சொல் விளக்கப்பட்டுள்ளது.
கட்டுரை கீழே.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

சங்கச் சொல்வளம்

2. நகர்வுகள்

உயிர்கள் அல்லது பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்வதையே நகர்வு (movement) என்கிறோம். இங்கு இவர்தல், இரிதல், ஊர்தல், இயலுதல் என்ற நான்குவிதமான நகர்வுகளைப் பற்றிக் காண்போம்.

2. இரிதல்

இன்றைக்கு வழக்கிழந்துபோன அருமையான சங்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இரிதல் என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி தரும் பொருள் இதுதான்:

1. To be destroyed, ruined;
கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9).

2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear;
ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.)

3. To fall away, as a garment; to drop; to recede;
விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.)

4. To drop, as perspiration; to ebb, as the tide;
வடிதல்.

5.To fear, dread;
அஞ்சுதல். (திவா.)

வழக்கம்போல் இச்சொல் இலக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காண்போம்.

தொண்டைமான் இளந்திரையனின் வள்ளண்மையைப் பாடவந்த புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணன் ஒருவன் அந்த மன்னனைத் தேடிச் சென்று பரிசில் பெறுவதாகத் தனது பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் கூறுகிறார். பலவித நிலங்களைக் கடந்து சென்ற பாணன் அறுவடைக்குத் தயாராக இருக்கும் முல்லைநிலக் காடு ஒன்றன் வழியாகச் செல்கிறான். முல்லைநிலக் காடுகள் வானம்பார்த்த பூமியாதலால், விதைப்புக்குப் பின் பொதுவாக மக்கள் காட்டின் உள்ளே செல்லமாட்டார்கள். அப்போது, புதராய் வளர்ந்துகிடக்கும் பயிர்களுக்கிடையே காடைக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வாழும். இவை மிக்க அச்சம் கொண்டவை. சிறிதளவு ஆளரவம் கேட்டாலேயே வெருண்டு ஓடுபவை. அறுவடைக்காரர்கள் திடீரென்று பயிருக்குள் நுழைந்தவுடன் இவை அச்சங்கொண்டு பதறியடித்துச் சிதறி ஓடுகின்றன. இதைக் கூறவந்த புலவர்:

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை               
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்பெரும். 201-205

என்கிறார். குறும்பூழ் என்பது காடைப்பறவை. இதனை quail bird என்பர். இந்தப் பறவையைப் பற்றி விலங்கியலார் கூறுவதைப் பாருங்கள்:

Jungle bush quail bird is a terrestrial species, feeding on seeds and insects on the ground. It is notoriously difficult to see, keeping hidden in crops, and reluctant to fly, preferring to creep away instead. The natural habitat of the Jungle bush quails mostly consists of the Indian dry grasslands.

The bird is usually seen in small coveys and is quite shy by nature. One can get a glimpse of the Jungle bush quails of India mainly when they burst out into flight from under the vegetation.

இரிதல், இரியல்போகுதல், இரிவுறுதல் என்பதற்குரிய நேர்ப்பொருளை உணரவேண்டுமானால் இந்தக் காட்சியை மனக்கண்ணால் கண்டுணரவேண்டும்.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கின்றனர். ஒரு பேருந்து வருகிறது. நிறுத்தத்தில் நிற்காமல் கொஞ்சம் தள்ளிப்போய் நிற்கிறது. உடனே கூட்டம் அதன் நுழைவாயிலை நோக்கி விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறது. உள்ளே நுழைய கூட்டம் அலை மோதுகிறது. ஒரு சிலரை மட்டும் ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற பின்னர், கூட்டம் திரும்பி வந்து அடுத்த பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு நிறைய இடங்களில் இது போன்ற காட்சிகளை நாம் பார்க்கிறோம். சில நேரங்களில் மெத்தப் படித்தவர்களும் கூட காத்திருக்கப் பொறுமை இல்லாமலோ அல்லது நேரம் இல்லாமலோ இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். கானக்கோழிகள் திடீரென்று வந்த பேரொலியைக் கேட்டு இவ்வாறு அலறிப்புடைத்துக்கொண்டு ஓடுவதைப் பெரும்பாணாற்றுப்படையில் பார்த்தோம். இவ்வாறு அச்சத்தினால் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடுவதையோ அல்லது ஆர்வத்தினால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவதையோ நமது இலக்கியங்கள் இரியல் போகுதல்' என்று சொல்கின்றன.

அப்படிப்பட்ட இன்னொரு காட்சியைக் கடியலூர்க்காரர் இளந்திரையனின் அரண்மனை வாயிலில் காண்கிறார். அவனது வாயில் பரிசிலர்க்கு அடையா வாயிலெனினும், ஏனையோர் அவனைப் பார்ப்பதற்குக் காத்திருக்கவேண்டும். திடீரென்று வாயில் கதவுகள் திறக்கும். அப்போது காத்திருக்கும் கூட்டம் விழுந்தடித்துக்கொண்டு வாயிலை நோக்கி ஓடும். ஒரு சிலரே உள்ளே அனுமதிக்கப்பட்ட பின்னர், கூட்டம் திரும்ப வந்து காத்திருக்கத் தொடங்கும். அப்படி ஓடிக் களைத்த கூட்டத்தில் யார் யார் இருந்தனர் தெரியுமா? இளந்திரையனின் நட்பை வேண்டியும், அவனிடம் அடைக்கலம் கேட்டும் வந்த மன்னர்கள் கூட்டமே அது என்று புலவர் கூறுகிறார்.

அந்தச் சூழ்நிலையில் புலவருக்குத் தான் முன்பு கண்ட ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒரு முறை புலவர் வடநாட்டில் உள்ள காசிக்குச் சென்றிருந்தார். காசிக்குச் செல்வதற்குக் கங்கை நதியைக் கடக்கவேண்டும். அதற்குப் படகுத் துறைகள் உண்டு. இவர் போன சமயம் அங்கு ஒரே ஒரு படகு மட்டும்தான் இயங்கிக்கொண்டிருந்தது. படகுத்துறையில் ஒரு பெருங்கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. அப்பொழுது மறுகரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு வருவதை இவர் கண்டார். தூரத்தில் படகு வருவதைப் பார்த்த கூட்டம் சட்'டென்று எழுந்து ஆற்றை நோக்கி ஓட ஆரம்பித்தது. ஒரே தள்ளுமுள்ளு - முண்டியடித்துக்கொண்டு முதலில் ஏறுவதற்கு ஒருவரோடொருவர் போட்டி. இந்தக் களேபரத்தைக் கண்ட புலவர் சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். படகு சிறியதுதான். எனவே கொஞ்சம் ஆட்களை மட்டும் ஏற்றிக்கொண்டு மீண்டும் மறுகரையை நோக்கி நகர ஆரம்பித்தது. ஏறமுடியாமல் திரும்பிய மக்கள் கூட்டம் படகின் அடுத்த வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தது. இளந்திரையனைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு வந்த மன்னர்கள் கூட்டத்தைப் பார்த்த புலவருக்குத் தான் காசியில் பார்த்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வந்தது. இதோ அவர் கூறிய அடிகள்:
நட்புக் கொளல் வேண்டி நயந்திசினோரும்
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்
கல் வீழ் அருவி கடல் படர்ந்த ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமைய செவ் வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர்ப் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து - பெரும் 425 - 435
அவனிடம் நட்புக் கொள்வதை வேண்டி விரும்பினவர்களும்,
அவன் வலிமையைத் துணையாகக்கொள்ளக் கருதிய உதவியில்லாதவர்களும்,
மலையிலிருந்து விழுகின்ற அருவி கடலில் படர்ந்ததைப் போல்
பலவேறு வகைகளாலும் கீழ்ப்படிந்த அரசர்கள் -
தேவர்கள் இருக்கும் உச்சியையுடைய செவ்விய மலையின்கண்
வெண் நிற ஓடைகள் கிழித்தோடுவதால் பளபளக்கும் ஒளியுடைய நெடிய சிகரத்திலிருந்து
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரும் நீரைக் கடந்துபோக ஓடித் தவித்த மக்கள்
ஒரேயொரு தோணி அடுத்த முறை வரும் காலத்திற்காகக் காத்திருத்ததைப் போல
குறையாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
தக்க நேரத்தைப் பார்த்திருக்கும் வளம் மிகுந்த முற்றத்தினையுடைய;

அடுத்து ஓர் அருவிக்காட்சியைக் காண்போம். இது எப்போதும் நிதானமாக ஓடும் அருவி அல்ல. திடீர் மழையால் மலைச் சரிவில் பெருக்கெடுத்து ஓடிவரும் புனல்வெள்ளம். மரம் செடி கொடிகளைத் தாக்கி உருட்டிவிட்டு, விலங்கினங்களும் பறவையினமும் வெருண்டு சிதறியோட, மலைச் சரிவில் பெரும் முழக்கத்தை உண்டாக்கி ஓடிவந்து ஒரு பெரும் பள்ளத்தில் ‘தடால்’ என்று விழும் புயலருவி. நக்கீரனார், திருமுருகாற்றுப்படையில் பழமுதிர்சோலை மலையில் புரண்டுவரும் அருவியைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்:

பல உடன்

வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து

ஆர முழு முதல் உருட்டி, வேரல்

பூ உடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த     

தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல

ஆசினி முது சுளை கலாவ, மீமிசை

நாக நறு மலர் உதிர, யூகமொடு

மா முக முசுக் கலை பனிப்ப, பூ நுதல்

இரும் பிடி குளிர்ப்ப வீசி, பெரும் களிற்று

முத்து உடை வான் கோடு தழீஇ, தத்துற்று,

நல் பொன் மணி நிறம் கிளர, பொன் கொழியா,

வாழை முழு முதல் துமிய, தாழை

இளநீர் விழுக் குலை உதிரத் தாக்கி,

கறிக் கொடி கரும் துணர் சாய, பொறிப் புற

மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ,

கோழி வயப் பெடை இரிய, கேழலொடு

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் 

பெரும் கல் விடர் அளை செறிய, கரும் கோட்டு

ஆமா நல் ஏறு சிலைப்ப, சேணின்று

இழும்’-என இழிதரும் அருவி

பழமுதிர்சோலை மலை - திரு 295 – 317

பலவும் ஒன்றாகச் சேர்ந்த,

வேறு வேறான பல துகில் கொடிகளைப் போன்று அசைந்து, அகிலைச் சுமந்துகொண்டு,

சந்தனமரத்தின் முழு அடிமரத்தைப் புரட்டித் தள்ளிக்கொண்டு, சிறுமூங்கிலின்,

பூவையுடைய அசைகின்ற கொம்பு வருந்த, வேரைப் பிளந்து,

வானத்தை முட்டிநிற்கும் உயர்ந்த மலையில் சூரியனைப் போன்று (தேனீக்கள்)செய்த

குளிர்ச்சியானதும் மணக்கின்றதுமான விரிந்து பரந்த தேன்கூடு கெட, நல்ல பல ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில்

சுரபுன்னை மரத்தின் நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு,

கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புள்ளிகள் கொண்ட நெற்றியையுடைய,

கரிய பெண் யானை குளிரும்படி வீசி, பெரிய ஆண்யானையின்,

முத்தை உடைய வெண்மையான கொம்புகளைத் தழுவி, தத்துதல் அடைந்து

நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து, (பொடியான) பொன்னைத் தெள்ளி,

வாழையின் பெரிய அடிமரம் துணிக்கப்பட, தென்னையின்

இளநீரையுடைய நன்கு பருத்த குலைகள் உதிர மோதி,

மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாய, பொறியையுடைய முதுகினையும் மடப்பத்தினையுடைய நடையினையும் உடைய மயில்கள் பலவற்றோடே அஞ்சி,

கோழியின் வலிமையுடைய பேடைகள் விழுந்தடித்து ஓட, ஆண் பன்றியுடன்

கரிய பனையின் - (உள்ளே)வெளிற்றினையுடைய - புல்லிய செறும்பை ஒத்த

கரிய நிறங்கொண்ட மயிரையுடைய உடம்பையும் வளைந்த அடியினையுமுடைய கரடி

பெரிய கல் வெடித்த முழைஞ்சில் சேர, கரிய கொம்பினையுடைய
ஆமாவினுடைய நல்ல ஏறுகள் முழங்க, உயரத்தினின்றும்
இழும் என்னும் ஓசைபடக் குதிக்கும் அருவி,
வாழை அடியோடு சாய்கிறது. தென்னைமரத்தைக் குலுக்கிய குலுக்கலில் இளநீர்க்காய்கள் கொத்துக்கொத்தாய் திடும் திடும்-என உதிர்கின்றன. 
மயில்கள் வெருண்டோடுகின்றன. கானக்கோழியின் வயப்படை இரிந்து ஓடுகிறது. கோழி வயப்பெடை இரிய என்கிறார் புலவர். 
வயப்பெடை என்பது வலிமையுள்ள விடைக்கோழி. வயதான கோழிகளும் வயதில்லாக் குஞ்சுகளும் குடுகுடு-வென்று ஓடியிருக்கும். 
இது வயப்பெடை அல்லவா? வெடித்துப் பறக்கிறது. இதுதான் இரிதல்.

இனி அடுத்த கட்டுரையில் ஏனையவற்றைக் காண்போம்.
நகர்வுகள் தொடரும்.
 
ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 8, 2014, 11:58:47 AM12/8/14
to mint...@googlegroups.com

//பெரு நீர்ப் போகும் இரியல் மாக்கள்//

மதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போல் என்பார்கள்.ஆனால் அந்த சிதறலில் ஒரு மறைவான பதற்றம் அச்சம் இவற்றை பார்க்க இயலாது.அது வெறும் தாறுமாறான (ரேண்டம்) ஒட்டம்.ஆனால் அந்த உள் அச்சம் (பேனிக்)எனும் உணர்வை அற்புதமாய் படம் பிடிக்கும் அழகான சொல் "இரியல்".விளக்கம் தொடருங்கள்.படிக்க படிக்க தமிழின் தொன்மைச்சுவை கூடிக்கொண்டே போகிறது.

அன்புடன் ருத்ரா

On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
...

Pandiyaraja

unread,
Dec 8, 2014, 1:09:28 PM12/8/14
to mint...@googlegroups.com
>>
ஆனால் அந்த உள் அச்சம் (பேனிக்)எனும் உணர்வை அற்புதமாய் படம் பிடிக்கும் அழகான சொல் "இரியல்
>>
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ருத்ரா!
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா
...

N. Kannan

unread,
Dec 8, 2014, 9:08:07 PM12/8/14
to mint...@googlegroups.com

இனிமேல் Panic என்பதைச் சுட்ட இரிபட வேண்டாம் என் சொல்லலாமா?

க.

--

Pandiyaraja

unread,
Dec 8, 2014, 9:50:38 PM12/8/14
to mint...@googlegroups.com
இரியுறவேண்டாம், இரிவுறவேண்டாம் (இரிவு +உறுதல்) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் கண்ணன். வழக்கிற்குக் கொண்டுவரப்படவேண்டிய சொல். இனிமை, குறுமை, செழுமை, புதுமை - சொல்லில் இனிமை, சொல்வதில் குறுமை, சொல் ஆழத்தில் செழுமை, சொல் கருத்தில் (பழமை பொருந்திய) புதுமை ஆகிய ஒரு நல்ல கலைச்சொல்லுக்குரிய நான்கு நற்பண்புகளும் கொண்ட அழகிய சொல் இது. கலைச்சொற்களுக்குச் சொல்லாக்கம் ஒரு வழி என்றால், சொல்மீட்பு இன்னொரு வழி.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

N. Kannan

unread,
Dec 8, 2014, 10:58:03 PM12/8/14
to mint...@googlegroups.com

On Dec 9, 2014 10:50 AM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> இரியுறவேண்டாம், இரிவுறவேண்டாம் (இரிவு +உறுதல்) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் கண்ணன். 
>

இரியுறுதல் தவிர்க்க!

அழகாகத்தான் இருக்கிறது!

&&&&&

 கலைச்சொற்களுக்குச் சொல்லாக்கம் ஒரு வழி என்றால், சொல்மீட்பு இன்னொரு வழி.
>  

ஏற்றுக்கொள்கிறேன். அதுவே செம்மொழியின் சிறப்பு இல்லையா? எவ்வளவு வேர்ச்சொற்கள்!!

சொற்கள் எப்படிக்காணாமல்   போகின்றன பேராசிரியரே?

நா.கண்ணன்

துரை.ந.உ

unread,
Dec 8, 2014, 11:24:31 PM12/8/14
to Groups, வல்லமை
2014-12-08 14:51 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

சங்கச் சொல்வளம்

2. இரிதல்

இன்றைக்கு வழக்கிழந்துபோன அருமையான சங்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இரிதல் என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி தரும் பொருள் இதுதான்:

1. To be destroyed, ruined;
கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9).

2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear;
ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.)

3. To fall away, as a garment; to drop; to recede;
விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.)

4. To drop, as perspiration; to ebb, as the tide;
வடிதல்.

5.To fear, dread;
அஞ்சுதல். (திவா.)

வழக்கம்போல் இச்சொல் இலக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காண்போம்.

தொண்டைமான் இளந்திரையனின் வள்ளண்மையைப் பாடவந்த புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணன் ஒருவன் அந்த மன்னனைத் தேடிச் சென்று பரிசில் பெறுவதாகத் தனது பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் கூறுகிறார். பலவித நிலங்களைக் கடந்து சென்ற பாணன் அறுவடைக்குத் தயாராக இருக்கும் முல்லைநிலக் காடு ஒன்றன் வழியாகச் செல்கிறான். முல்லைநிலக் காடுகள் வானம்பார்த்த பூமியாதலால், விதைப்புக்குப் பின் பொதுவாக மக்கள் காட்டின் உள்ளே செல்லமாட்டார்கள். அப்போது, புதராய் வளர்ந்துகிடக்கும் பயிர்களுக்கிடையே காடைக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வாழும். இவை மிக்க அச்சம் கொண்டவை. சிறிதளவு ஆளரவம் கேட்டாலேயே வெருண்டு ஓடுபவை. அறுவடைக்காரர்கள் திடீரென்று பயிருக்குள் நுழைந்தவுடன் இவை அச்சங்கொண்டு பதறியடித்துச் சிதறி ஓடுகின்றன. இதைக் கூறவந்த புலவர்:

Inline image 2
​இரியுறும் முயல்​

Inline image 1
​இரியுறும் மனிதன் ​

Pandiyaraja

unread,
Dec 9, 2014, 1:18:59 AM12/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஐயா துரை! அருமையான படங்கள். முயல்கள் தப்பித்துக்கொள்ளும். அந்த இரண்டு மனிதர்கள்? இதை எடுத்த அந்த மூன்றாம் மனிதர்? உயிருக்குப் பயந்த ஓட்டம் - பர்ர்பவருக்கு அருமையான காட்சிதான். பதைப்பவருக்கு எப்படியிருந்திருக்கும்?
மிக்க நன்றி ஐயா.
ப.பாண்டியராஜா

N. Kannan

unread,
Dec 9, 2014, 2:59:38 AM12/9/14
to மின்தமிழ்
2014-12-09 14:18 GMT+08:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
 பதைப்பவருக்கு எப்படியிருந்திருக்கும்?
மிக்க நன்றி ஐயா.
ப.பாண்டியராஜா

Inline image 1
​இரியுறும் மனிதன் ​

We grew with elephant and hence no fear for them but they are huge. K at close quarters! 

Kannan

ps. the NHM Writer dumped me, so no Tamil :-(
​ 

N. Ganesan

unread,
Dec 9, 2014, 8:55:47 AM12/9/14
to mint...@googlegroups.com

On Monday, December 8, 2014 6:08:07 PM UTC-8, N. Kannan wrote:

இனிமேல் Panic என்பதைச் சுட்ட இரிபட வேண்டாம் என் சொல்லலாமா?

”இரிய வேண்டாம்”  என்பதே போதுமே.

N. Ganesan

unread,
Dec 9, 2014, 8:58:05 AM12/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Monday, December 8, 2014 10:18:59 PM UTC-8, Pandiyaraja wrote:
ஐயா துரை! அருமையான படங்கள். முயல்கள் தப்பித்துக்கொள்ளும். அந்த இரண்டு மனிதர்கள்? இதை எடுத்த அந்த மூன்றாம் மனிதர்? உயிருக்குப் பயந்த ஓட்டம் - பர்ர்பவருக்கு அருமையான காட்சிதான். பதைப்பவருக்கு எப்படியிருந்திருக்கும்?
மிக்க நன்றி ஐயா.
ப.பாண்டியராஜா

யானை ஓடுவது. அதன் மேல் யானையே இல்லாமல் ஓடிய இருவர். இரண்டையும் சேர்த்துச் செய்த படமா?

N. Ganesan

unread,
Dec 9, 2014, 8:59:26 AM12/9/14
to mint...@googlegroups.com

On Monday, December 8, 2014 7:58:03 PM UTC-8, N. Kannan wrote:

On Dec 9, 2014 10:50 AM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> இரியுறவேண்டாம், இரிவுறவேண்டாம் (இரிவு +உறுதல்) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் கண்ணன். 
>
இரியுறுதல் தவிர்க்க!

அழகாகத்தான் இருக்கிறது!

இரியவேண்டாம் என்றால் இன்றைய தமிழ் ஆகும்.

N. Kannan

unread,
Dec 9, 2014, 9:08:07 AM12/9/14
to mint...@googlegroups.com

On Dec 9, 2014 9:59 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> :

>> >
>> > இரியுறவேண்டாம், இரிவுறவேண்டாம் (இரிவு +உறுதல்) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் கண்ணன். 
>> >
>> இரியுறுதல் தவிர்க்க!
>>
>> அழகாகத்தான் இருக்கிறது!
>
>
> இரியவேண்டாம் என்றால் இன்றைய தமிழ் ஆகும்.
>  
>>

இரியல் தவிர்க்க (don't be panic)
சரியாக வருகிறது.

இரிய வேண்டாம்? எனக்குத் தெரியலை. எங்க ஆசிரியரைக் க்கேட்போம்!

கண்ணன்

N. Ganesan

unread,
Dec 9, 2014, 9:18:15 AM12/9/14
to mint...@googlegroups.com

On Tuesday, December 9, 2014 6:08:07 AM UTC-8, N. Kannan wrote:

On Dec 9, 2014 9:59 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> :
>> >
>> > இரியுறவேண்டாம், இரிவுறவேண்டாம் (இரிவு +உறுதல்) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் கண்ணன். 
>> >
>> இரியுறுதல் தவிர்க்க!
>>
>> அழகாகத்தான் இருக்கிறது!
>
>
> இரியவேண்டாம் என்றால் இன்றைய தமிழ் ஆகும்.
>  
>>

இரியல் தவிர்க்க (don't be panic)
சரியாக வருகிறது.

Do you mean: "don't be in a panic". Here, panic is a noun.
 
இரிய வேண்டாம்? எனக்குத் தெரியலை. எங்க ஆசிரியரைக் க்கேட்போம்!

Here, panic is used as a verb. 
don't panic = இரிய வேண்டாம்.

don't come = வர வேண்டாம்
don't go = போக வேண்டாம்
...
என்பது போல.

நா. கணேசன்
 
கண்ணன்

N. Ganesan

unread,
Dec 9, 2014, 9:39:34 AM12/9/14
to mint...@googlegroups.com

On Monday, December 8, 2014 6:50:38 PM UTC-8, Pandiyaraja wrote:
இரியுறவேண்டாம், இரிவுறவேண்டாம் (இரிவு +உறுதல்) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் கண்ணன். வழக்கிற்குக் கொண்டுவரப்படவேண்டிய சொல். இனிமை, குறுமை, செழுமை, புதுமை - சொல்லில் இனிமை, சொல்வதில் குறுமை, சொல் ஆழத்தில் செழுமை, சொல் கருத்தில் (பழமை பொருந்திய) புதுமை ஆகிய ஒரு நல்ல கலைச்சொல்லுக்குரிய நான்கு நற்பண்புகளும் கொண்ட அழகிய சொல் இது. கலைச்சொற்களுக்குச் சொல்லாக்கம் ஒரு வழி என்றால், சொல்மீட்பு இன்னொரு வழி.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

 படுதல், உறுதல் என்னும் துணைவினைகள் (auxiliary verbs) சேர்த்தவேண்டுமா? துணைவினைகள் இல்லாமலே
இரிதல் என்னும் வினைச்சொல் ஆளப்படுகிறது அல்லவா?

மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ,

கோழி வயப் பெடை இரிய, (திருமுருகு).

 panic is used as a verb. 
don't panic = இரிய வேண்டாம்.

don't come = வர வேண்டாம்
don't go = போக வேண்டாம்
...
என்பது போல.

நா. கணேசன்

On Tuesday, December 9, 2014 7:38:07 AM UTC+5:30, N. Kannan wrote:

N. Ganesan

unread,
Dec 9, 2014, 10:01:41 AM12/9/14
to mint...@googlegroups.com, vallamai
On Monday, December 8, 2014 8:58:47 AM UTC-8, ருத்ரா இ.பரமசிவன் wrote:

//பெரு நீர்ப் போகும் இரியல் மாக்கள்//

மதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போல் என்பார்கள்.ஆனால் அந்த சிதறலில் ஒரு மறைவான பதற்றம் அச்சம் இவற்றை பார்க்க இயலாது.அது வெறும் தாறுமாறான (ரேண்டம்) ஒட்டம்.ஆனால் அந்த உள் அச்சம் (பேனிக்)எனும் உணர்வை அற்புதமாய் படம் பிடிக்கும் அழகான சொல் "இரியல்".விளக்கம் தொடருங்கள்.படிக்க படிக்க தமிழின் தொன்மைச்சுவை கூடிக்கொண்டே போகிறது.

அன்புடன் ருத்ரா

பேரா. பாண்டியராஜா விளக்கங்கள் அருமை. 

அலை- என்னும் சொல்லின் விரிவு அலங்குதல்/அலக்குதல்
துளை- என்னும் சொல்லின் விரிவு துளங்குதல்/துளக்குதல்.

கொங்குநாட்டில் அதிகம் புழங்கும் ஒரு சொல்லின் அர்த்தம்
பாண்டியராசா மடல்களால் கிடைத்தது. அமெரிக்காவில்,
time-compressed working-like-crazy periods-ஐ crunch-time என்கின்றனர்.
The interval of time immediately before a project is due, when it becomes apparent that the schedule has slipped and everyone is going to have to work like dogs to try to complete the project in time. Crunch time usually occurs during the period between the next-to-last scheduled milestone (prior to which everyone was able to delude themselves tht the schedule had NOT slipped) and the final deadline for delivery. During crunch time, workers are in crunch mode. Prevalent in the software industry, but used elsewhere as well.
"We've got three weeks left to complete six weeks worth of work. Looks like we'll be living on take-out for a while." 

"I freakin' hate crunch time."
crunch time - இதற்கு நேரான தமிழ்ச்சொல் காலங்காலமாக இருக்கிறது. மலையாளத்திலும் உண்டு.
அலை- என்னும் சொல்லின் விரிவு அலங்குதல்/அலக்குதல்
துளை- என்னும் சொல்லின் விரிவு துளங்குதல்/துளக்குதல்.
இது போல 
திரை- என்னும் சொல்லின் விரிவு திரங்குதல்/திரக்குதல்.

தோட்டத்தில் வேலை அதிகமாய் இருக்கும் பம்பல் சமயத்தில்
‘வேலை திரக்காய் இருக்கிறது’ என்போம். பம்பல் = அறுவடை (பம்பு- = செறிதல், நிறைதல்)

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Dec 9, 2014, 11:25:08 AM12/9/14
to mint...@googlegroups.com
யானையின் அணைப்பில் ஆனந்தம் காண்பவரைப் பார்த்தால் மகிழ்வாக இருக்கிறது.  அது என் நினைவில் நான் குன்றக்குடிக் கோவில் யானையுடன் கொண்ட உறவையும் நினைவு படுத்துகிறது.

நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் நகரச் சிவன் கோவில் திருவிழாக்களுக்கு குன்றக்குடியிலிருந்து கோவில் யானை வரும்.  சாலையைத் தாண்டி எங்கள் வீடு எதிரில் இருக்கும் தென்னைமர்த்தில்தான் அதைக் கட்டி வைத்திருப்பார்கள்.  நானும், என் தோழர்களும் தள்ளி நின்று, விளையாட்டைக்கூட மறந்து, அது ஆடிக்கொண்டு இருக்கும் அழகைப்  பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்போம்.  

அந்த யானை தென்னை மட்டைகளை மரத்திலிருந்து இழுத்துப் பிய்த்துத் தின்னும் அழகை இரசித்துக்கொண்டிருப்போம்.  

ஒரு தடவை என் பாடி செய்த திரட்டுப்பாலை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு  இருந்தபோது,அந்த யானை தன தும்பிக்கையை என்பக்கம் நீட்டவே, அதற்கும் கொடுக்கவேண்டும்.என்று தோன்றியது.  எனவே, அதற்கும் சிறிது கொடுத்தேன்.

வாங்கித் தின்றுவிட்டு, மீண்டும் துதிக்கையை நீட்டியது.  எனக்கு ஒரே பெருமை.  இவ்வளவு பெரிய மிருகம் என்னைப் பார்த்துக் கையை நீட்டுகிறதே! மேலும், நான் விருப்பப்பட்டுத் தொழும் தும்பிக்கையானே என்னைப் பார்த்துக் கேட்பது போலவும், இருந்தது.

எனவே, வீட்டில் என் பாட்டி செய்து வைத்திருக்கும் திரட்டுப்பாலை எடுத்து, உருட்டி அதனிடம் கொடுத்தேன்.  யானை அதை வாங்கித் தின்றுவிட்டு, துதிக்கையை உயர்த்தி மத்தகத்தில் வைத்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தது.  எனக்கு ஒரே பெருமை!  என் நண்பர்கள் நடுவில் என்னை யானை வாழ்த்தி விட்டதே!

எனக்கும் யானைக்கும் உள்ள உறவு தொடர்ந்தது.  என் பாட்டி ஒரு தூக்கு நிறையச செய்துவைத்திருந்த திரட்டுப்பாலின் அளவும் வெகுவாகக் குறைந்தது.  அதை நான்தான் தின்கிறேன் என்று நினைத்த பாட்டி, "இவ்வளவு தின்றால் உடம்புக்கு என்ன ஆகும்?" என்று கடிந்துகொண்டு, திரட்டுப்பாலை உள்ளே வைத்துப் பூட்டி விட்டார்கள்.

யானை என்னைப்பார்த்துக் துதிக்கையை நீட்டும்.  அதற்கு ஒன்றும் தர இயலவில்லேயே என்று என் மனம் உருகும்.  ஓடிப்போய் விடுவேன்.

அடுத்த நாள், காலை யானை ஊர்வலமாக வந்தது.  எங்கள் வீட்டைத்தாண்டும்போது மேலே செல்லாமல், என்னைப்பார்த்து துதிக்கையை உயர்த்திப் இலேசாகப் பிளிறியது.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  நான் மெதுவாக என் பாட்டியிடம் விஷயத்தைச் சென்னேன்,  பாட்டி சிரித்துக்கொண்டே, "யானைக்கு எதைக் கொடுப்பது?  அதைக்கட்டித் தீனி போட யாரால் முடியும்?" உள்ளே சென்று திரட்டுப்பால் பாத்திரத்தை என்னிடம் கொடுத்து "கொடு!" என்றார்கள்.

யானைக்கு அதில் இருந்த திரட்டுப்பாலை வழித்து வழித்து உருட்டிக் கொடுத்தேன், பாத்திரம் காலி ஆகும்வரை.  அப்பொழுது என்னை ஆட்கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  யானை துதிக்கையை உயர்த்தி என்னை வாழ்த்திவிட்டுக் கிளம்பிவிட்டது. என் மெய்சிலிர்த்தது.

இதை எழுதும்போது இப்பொழுதும் என் மெய் சிலிர்க்கிறது.

தங்கள் இழைக்குத் தொடர்பு இல்லாத ஒன்றுதான்.  யானையின் அன்புப் பிடியில் இருப்பதைக் கண்ட படத்தைப் பார்த்ததும், இந்நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது.  நான் யானையுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை, இருக்கத் துணிவும் இருந்ததில்லை.

இழைக்குத் தொடர்பில்லாத ஒன்றைப் புகுத்தியதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Dec 9, 2014, 12:01:57 PM12/9/14
to mint...@googlegroups.com

On Monday, December 8, 2014 7:58:03 PM UTC-8, N. Kannan wrote:

On Dec 9, 2014 10:50 AM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> இரியுறவேண்டாம், இரிவுறவேண்டாம் (இரிவு +உறுதல்) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் கண்ணன். 
>
இரியுறுதல் தவிர்க்க!

அழகாகத்தான் இருக்கிறது!

இரியற்க   என்பதும்  சரியாக இதே பொருள் தருமல்லவா?  

பயப்படாதே...  அஞ்சாதே... என்பது போல

இவ்வாறு  பயன்படுத்தினால் இச்சொல் நினைவில் தங்குமா?

..... தேமொழி

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 9, 2014, 12:14:20 PM12/9/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய முனைவர் அவர்களே.

 //பதைப்பவருக்கு எப்படியிருந்திருக்கும்?//

நீங்களே அந்த "பதைப்பை" பார்த்து மேலே கண்ட சொற்றொடரை ஒரு ரெஃப்லெக்ஸ் போல பயன்படுத்திவிட்டீர்கள் பேனிக் என்பதன் பதை பதைப்பை.மக்கள் கூட்டமாக இருந்தால் கடல் பரப்பு ஒரு பரபரப்பில் தளும்புமே அது போன்ற உணர்ச்சியின் விளிம்பில் இருப்பார்கள். அதனால் தானோ என்னவோ சங்கத்தமிழில்"மன் பதை"என்பது மக்களை குறித்த சொல்லாக வழங்குகிறது.தமிழின் சொல் வளம் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் செழித்துக்கிடப்பதை நன்கு காட்டியிருக்கிறீர்கள். ஆக்ஸ்ஃபோர்ட் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் எது எப்படி இருப்பினும்"லத்தீன்"(இலக்கணம்)பாடத்தை கட்டாயமாக வைத்திருந்தார்களாம்.அது போல் நம் பல்கலைக்கழகங்கள் "எட்டுத்தொகையையும் பத்துப்பாட்டையும்"கட்டாய பாடம் ஆக்கி விடலாம். இந்திய தொன்மைச்செம்மொழிக்கு அதுவே அவர்கள் அளிக்கும் சரியான‌ கௌரவமாகும் (பெருமை) .

அன்புடன் ருத்ரா

Pandiyaraja

unread,
Dec 9, 2014, 12:26:41 PM12/9/14
to mint...@googlegroups.com
அடேயப்பா! எத்தனைவிதப் பயன்பாடுகள். இரிபடவேண்டாம், இரியுற வேண்டாம், இரிய வேண்டாம், இரியற்க ,.   அவரவர் விருப்பம்போல் பயன்படுத்தலாம். ஆனால் ஒன்றை நினைவிற்கொள்வது நல்லது. இரிதல் என்பதில் ஒரு அவசரம், அச்சம், இவற்றின் கலவை இருப்பதுபோல, அதில் ஒரு suddenness, spontaneity, ஒரு 'திடுக்'-உணர்வு உண்டு. மரத்தின் உச்சியில் அமைதியாக இருக்கிறது ஒரு பறவைக்கூட்டம். அப்போது திடீரென்று 'டுமீல்' என்ற துப்பாக்கிச் சத்தம் கேட்டால் என்ன நடக்குமோ அதுதான் இரிதல். மனம் + செய்கை + அந்த நொடி. That immediate reaction with the underlying emotions.
ஒரு பொதுக்கூட்டத்தில், யாரோ "பாம்பு" என்று உரக்கக் கத்தினால், மக்கள் பதறி ஓடும்போது, "இரியவேண்டாம், இரியற்க, இரிந்தோட வேண்டாம், இரியுற வேண்டாம்" என்றெல்லாம் ஒலிபெருக்கியில் கூவலாம் - இரிதல் என்றால் என்ன என்பதைச் சாதாரண மக்களும் அறிந்த நிலையில். அதற்குப் பயன்பாடு தேவை.
அனைவருக்கும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

N. Kannan

unread,
Dec 10, 2014, 2:32:36 AM12/10/14
to மின்தமிழ்
நான் நினைத்ததை எழுதிவிட்டீர்கள். ஆயினும் யாமிருக்க பயமேன்? என்பதோடு இணைக்க முடியுமா தெரியவில்லை.

அச்சம் தவிர்!

என்பது போல் ‘இரி தவிற்க” என்று சொல்லமுடியுமா? இரிதலின் வேர், ‘இரி’ யா?

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Dec 10, 2014, 2:35:04 AM12/10/14
to மின்தமிழ்
அற்புதமான அனுபவம் ஒரு அரிசோனன் (alias மகாதேவன்).

அந்த யானை அணைத்துப்பிடிக்கும் போதுதான் உணர்ந்தேன் யானை பலமென்றால் என்னவென்று. ஆயிரம் யானை பலம் கொண்டவன் பீமன் என்றால்? அம்மாடி!

இழை மாற்றம்..மன்னிக்க!

நா.கண்ணன்

Pandiyaraja

unread,
Dec 10, 2014, 2:50:44 AM12/10/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு.கண்ணன்.
இரி என்பது வினைச்சொல். தன்வினை, பிறவினை ஆகிய இரண்டும் இதேதான். இரிந்தான் என்பது தன்வினை. வெருண்டு ஓடினான் என்று பொருளாகும். இரித்தான் என்பது பிறவினை. வெருண்டோடச் செய்தான் என்று பொருளாகும்.

இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த - யுத்3:22 98/2
என்பார் கம்பர். இரிந்து ஓடச்செய்தது என்பது பொருள்.
சங்க இலக்கியங்களில் இரிந்த, இரிய என்று தன்வினையாகவே வருகிறது. பிறவினையாக இரிவுற்று என வரும்.
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன - மலை 116
என்கிறது மலைபடுகடாம். கரும்புக்கொல்லை காற்றினில் அசைவது, தோற்றோடும் வேற்படையைப் போல் இருக்கிறதாம். என்ன அருமையான கற்பனை பாருங்கள். கண்ணை மூடிக் கற்பனை செய்து உவமத்தின் அழகை நான் பலமுறை ரசித்திருக்கிறேன். இப்போதெல்லாம் வெளியூருக்குச் செல்லும் போது கரும்புத்தோட்டங்களைப் பார்த்தால் மீண்டும் கண்களை மூடிக்கொள்வதுண்டு.
நினைவுகளைத் தூண்டியமைக்கு மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

N. Kannan

unread,
Dec 10, 2014, 2:58:01 AM12/10/14
to மின்தமிழ்
2014-12-10 15:50 GMT+08:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
மிக்க நன்றி திரு.கண்ணன்.
இரி என்பது வினைச்சொல். தன்வினை, பிறவினை ஆகிய இரண்டும் இதேதான். இரிந்தான் என்பது தன்வினை. வெருண்டு ஓடினான் என்று பொருளாகும். இரித்தான் என்பது பிறவினை. வெருண்டோடச் செய்தான் என்று பொருளாகும்.

நன்றி சார்.

பாருங்கள் வெருண்டு...இன்னொரு புழக்கத்திலுள்ள சொல்!

வெருள்தல் எபதும் இரிதல் என்பதும் ஒன்றா?

நிறையச் சொற்களை மீட்டெடுத்து மின்தமிழில் தொடர்ந்து பயன்படுத்துவோம். சமகால ஆங்கில இடைச்செருகலுக்கு முக்கிய காரணம் போதிய தமிழ்ச்சொல்வளம் பேசுபவருக்கு (எழுதுபவருக்கு) இல்லாததே. சொல்லிக்கொடுங்கள். கற்றுக்கொண்டு பயன்படுத்துகிறோம்.

நன்றி,

நா.கண்ணன்

Hari Krishnan

unread,
Dec 10, 2014, 3:03:42 AM12/10/14
to mintamil

2014-12-10 13:02 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
என்பது போல் ‘இரி தவிற்க” என்று சொல்லமுடியுமா? இரிதலின் வேர், ‘இரி’ யா?

இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும்.  எடுத்துக் காட்டாக,

எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய

திசை யானைகளும் அஞ்சி ஓடின (உலகத்தை அழிப்பேன் என்று இராமன் சினம் கொண்டு நிற்கிறான்.  அவனை சடாயு சமாதானப்படுத்துகிறான்.

பேனிக் என்பதற்கு சமமான சொல்லாக இதைத் தமிழில் பயன்படுத்த முடியும்.

இரி என்பதே வேர்தான் என்று நினைக்கிறேன்.

n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்

பார்க்கவும்.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Pandiyaraja

unread,
Dec 10, 2014, 4:39:58 AM12/10/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா!
இரிவு = Panic என்று கொள்ளலாம்.
இதைக் தந்தவர் ருத்ரா. அவருக்கும் நன்றி.
ப.பாண்டியராஜா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 10, 2014, 5:13:20 AM12/10/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

"இரி"க்கு திரி கொளுத்தி வெளிச்சம் காட்டியவர் நீங்கள்.அதில் வியப்பு அடைந்தவர்கள் நாங்கள்.அதிலும் யானை துரத்த ஓடும் மக்கள் இரியல் உற்று ஓடுவது(ரன் அமக்)சங்கப்பாடல் வரிகளில் உணரும்போது அதன் அகன்ற காலடியில் எங்கே நாம் மிதிபடுவோமோ என்று வெருண்டு நமக்கே மதம் பிடித்தது போல்
ஓடுகிறோம்."மதத்தில்" மறைந்ததும் "மதத்தை"மறைப்பதும் மாமத யானை அல்ல.மாமத மனிதனே ஆகும்.

அன்புடன் ருத்ரா

On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள்  இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?
கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

...

வேந்தன் அரசு

unread,
Dec 10, 2014, 6:48:06 AM12/10/14
to vallamai, மின்தமிழ்
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

சங்க இலக்கியங்களில் இரியல் பயிலும் இடங்களில் ஷிஃப்ட் எனும் பொருள சாலப்பொருந்தும்.

பறவைகள் அல்லது குரங்குகள் மீது கல்லெறிந்தால் அவை அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்று அமரும்.

9 டிசம்பர், 2014 ’அன்று’ 10:01 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Pandiyaraja

unread,
Dec 10, 2014, 7:22:05 AM12/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. shift என்பது just changing one's position. இரியல் என்பதன் ஒரு மிகச் சிறிய பகுதி. இத்துடன் வேறு பலவும் உண்டு.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 10, 2014, 7:36:28 AM12/10/14
to mint...@googlegroups.com

On Wednesday, December 10, 2014 1:39:58 AM UTC-8, Pandiyaraja wrote:
மிக்க நன்றி ஐயா!
இரிவு = Panic என்று கொள்ளலாம்.

இரியல் என்றாலும்  Panic தான். இரியல் தவிர்க்க = don't be in a panic.
Here, panic is a noun.

don't panic = இரியவேண்டாம். (don't eat = உண்ண வேண்டாம், don't climb =  ஏற வேண்டாம்,  don't sleep =  தூங்க வேண்டாம், ... போல)

N. Ganesan

unread,
Dec 10, 2014, 7:37:29 AM12/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.
 
...

N. Ganesan

unread,
Dec 10, 2014, 7:42:26 AM12/10/14
to mint...@googlegroups.com, vallamai

On Wednesday, December 10, 2014 12:03:42 AM UTC-8, Hari wrote:

2014-12-10 13:02 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
என்பது போல் ‘இரி தவிற்க” என்று சொல்லமுடியுமா? இரிதலின் வேர், ‘இரி’ யா?

இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும்.  எடுத்துக் காட்டாக,

எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய

திசை யானைகளும் அஞ்சி ஓடின (உலகத்தை அழிப்பேன் என்று இராமன் சினம் கொண்டு நிற்கிறான்.  அவனை சடாயு சமாதானப்படுத்துகிறான்.

பேனிக் என்பதற்கு சமமான சொல்லாக இதைத் தமிழில் பயன்படுத்த முடியும்.

இரி என்பதே வேர்தான் என்று நினைக்கிறேன்.

n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்

வாசு ரங்கநாதனின் தளத்தில் இரி எனத் தேடினால்,
(இரியல்/இரிவு = panic. நேரான ஆங்கில வார்த்தை அருளிய ருத்ராவுக்கு நன்றி.)

Total hits: 83
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார் 
(aacaarakkoovai-44.)

இரும்பிடி இரியும் சோலை 
(ahanaanuuru-10 )

தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள், 
(ahanaanuuru-10 )

இரும்பிடி இரியும் சோலைப் 
(ahanaanuuru-10 )

இரியற் பிணவல் தீண்டலில், பரீஇச் 
(ahanaanuuru-15 )

உழைமான் அம்பிணை இனன்இரிந்து ஓடக், 
(ahanaanuuru-10 )

வம்ப நாரை இரிய, ஒருநாள், 
(ahanaanuuru-5 )

துணைப் புறா இரிக்கும் தூய்மழை நனந்தலைக், 
(ahanaanuuru-5 )

நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய, 
(ahanaanuuru-46 )

முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும் 
(ahanaanuuru-10 )

இளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து 
(ahanaanuuru-10 )

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் 
(aingkurunuuru-421. )

உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும் 
(aintinaiaimpatu-25,)

இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம், 
(divyaprabandam-1013 )

இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை 
(innaainiyavai-0)

தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு 
(kalittokai-)

இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க, 
(kalittokai-)

மன்ற மரையா இரிய ஏறட்டுச் 
(kuruntokai-)

இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் 
(maanikkavaacakar-)

ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 
(maanikkavaacakar-)

ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 
(maanikkavaacakar-)

இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் 
(maanikkavaacakar-)

வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக் 
(malaipatukataam-49.)

எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு 
(manimekalai-)

மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற 
(manimekalai-)

கம்புட் சேவல் இன்றுயில் இரிய 
(maturaikkaanjci-1893)

இரிஜிஸ்வான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த 
(mullaippaattu-)

தினை உண் கேழல் இரிய புனவன் 
(narrinai-119)

இரீஇய காலை இரியின் 
(narrinai-266)

தேன் செய் பெருங் கிளை இரிய வேங்கைப் 
(narrinai-202)

விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட 
(narrinai-242)

இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய 
(narrinai-161)

பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு 
(narrinai-383)

பழனப் பல் புள் இரிய கழனி 
(narrinai-350)

உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் 
(narrinai-310)

மட நடை நாரைப் பல் இனம் இரிய 
(narrinai-330)

கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு 
(narrinai-372)

இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208 
(ottakkuuttar-)

இதையும் களிறும் பிணையும் இரியச் 
(paripaatal-9.)

எங்கணும் இரியல் போக எதிர் பரிக் காரர் ஓடத் 
(periyapuranam-)

அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி, 
(puranaanuuru-378.)

கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக், 
(puranaanuuru-348.)

தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே. 
(puranaanuuru-284.)

கறையடி யானை இரியல் போக்கும் 
(puranaanuuru-135.)

இடுக்கண் இரியல் போக, உடைய 
(puranaanuuru-388.)

மென் பறையாற் புள் இரியுந்து; 
(puranaanuuru-396.)

அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப் 
(puranaanuuru-390.)

திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச் 
(silappathikaram- 5 )

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு 
(silappathikaram- 5 )

இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல் 
(tevaram1-)

கயலினம் வயலிள வாளைகள் இரிய 
(tevaram1-)

இளமேதி இரிந்தங்கோடிச் 
(tevaram1-)

நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு 
(tevaram2-)

50 வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங் 
(tevaram2-)

வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட 
(tevaram2-)

1000 தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக் 
(tevaram2-)

622. இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி 
(tevaram3-)

இமையோர் இரிந்து பயமாய்த் 
(tevaram4-)

இரியத்தான் எடுத்தி டலும் 
(tevaram4-)

இரிக்கும் பறையொடு பூதங்கள் 
(tevaram4-)

விஞ்சையர் இரிய அன்று 
(tevaram4-)

இரிந்தன பூத மெல்லாம் 
(tevaram4-)

வண்டினம் இரிந்த பொய்கைப் 
(tevaram4-)

குருகினம் இரிதரு கிடங்கிற் 
(tevaram7-)

இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி 
(tevaram7-)

806 ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத் 
(tevaram7-)

கைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச் 
(tevaram7-)

ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய 
(tevaram7-)

இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன 
(tirumantiram-)

கோழி வயப்பெடை இரியக் கேழலொடு 
(tirumurukaarruppatai-2.)

பருவரால் களும் இரிந்தன பகைஞர் மேல் இட்டு 
(tiruvilaiyadal-2479. குரவ)

சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன் 
(tiruvilaiyadal-2613. ஆற்றல்)

இரிதலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈதென்று 
(vivekasintamani-)

Dev Raj

unread,
Dec 10, 2014, 8:00:21 AM12/10/14
to mint...@googlegroups.com
On Wednesday, 10 December 2014 00:03:42 UTC-8, Hari wrote:
இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும்.  எடுத்துக் காட்டாக,
எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய
திசை யானைகளும் அஞ்சி ஓடின 

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
             இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அந்தன் என்னும் அணிவிளங்கும்
            உயர்வெள்ளை அணையை மேவி...
                                                           [குலசேகர ஆழ்வார்]

இருள் அஞ்சி ஓட .....

தேவ்

N. Ganesan

unread,
Dec 10, 2014, 8:28:19 AM12/10/14
to mint...@googlegroups.com, vallamai
ஆதிசேடனின் ஒரு மாணிக்கத்தின் ஒளியே இருளையெல்லாம் வெருவிச் சிதறி ஒழிக்க வல்லது.
நாகமாணிக்கம் 1000 இருக்கும் அனந்தாழ்வானின் பிரகாசத்தால் இருள் எங்ஙனே இருக்கும்? அஞ்சி
ஓடி ஒழியும் என்கிற பாசுரம்.

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த

அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்

-

இருளானது சிதறி யொழியும் படி ஒளி             விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப்பெற்ற

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவரங்கம் பெரியகோயிலில் உபயகாவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருளாநின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார். ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால் ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்கமணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது. ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க, ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்லவேண்டாவே.  இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல். துத்தி-படத்தின் மேலுள்ள பொறி. மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும். பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னியென்று பெயராயிற்று. “பொன்னி திரைக்கையாலடிவருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு.

கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

N. Ganesan

unread,
Dec 10, 2014, 8:38:03 AM12/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 

வேந்தன் அரசு

unread,
Dec 11, 2014, 4:46:40 AM12/11/14
to vallamai, மின்தமிழ்

10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 

ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.

புகழ் சால் சிறப்பின் நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே யென்றும்
மன்று படு பரிசிலர்க் காணின் கன்றொடு
றை அடி யானை இரியல் போக்கும்
--------------------
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்
--------------
 பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்

------------
வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித்து இழிதரும் போக்குஅருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கி யாங்கு

--------------------------
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் 
( இங்கு முனை இ என்ற சொல்லும் உண்டு, அதனால் இரியல் போகும்)

N. Ganesan

unread,
Dec 11, 2014, 8:29:07 AM12/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Thursday, December 11, 2014 1:46:40 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:

10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 

ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.

Not really.  இரியல் (அ) இரிவு - வினைப்பெயர் (இரிதல் வினை)

n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்

"இருள் இரிய” என்னும் ஆழ்வார் பாசுரம் போல, “இடுக்கண் இரியல் போக”  .
”குறும்பூழ்” காடைபறவைகள் அறுவடை செய்வோர் எழுப்பும் ஒலியால் ”இரியல் போகி”
மாக்கள் இரியல் போவதும், குயில்கள் இரியல் போவதும்.
....

moving with certain anxiety, fear - is involved here, like the mother elephant moving with her calf.

N. Ganesan

Pandiyaraja

unread,
Dec 12, 2014, 12:06:06 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அன்பு நண்பர் சேவியர் அவர்களுக்கு,
இரியல் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல் தருவதற்குக் கொடுத்த வாய்ப்புக்காகத் தங்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்துள்ள ஐந்து எடுத்துக்காட்டுகளையும் இங்கு அலசியிருக்கிறேன்.

இரியல் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருளைக் காண்போம்.

அச்சத்தினால் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடுவதையோ அல்லது ஆர்வத்தினால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவதையோ நமது இலக்கியங்கள் இரியல் போகுதல்' என்று சொல்கின்றன.

எனவே இரியலுக்கு எப்போதும் வெருட்சி தேவையில்லை. அச்சம், அவசரம், படபடப்பு - ஆகியவற்றின் கலவையுடன் சேர்ந்த இயக்கமே இரியல். இந்தக் கலவையில் சில நேரங்களில் அச்சம் 0 % இருக்கலாம். படபடப்பு 10 % இருக்கலாம். ஆனால் அவசரம் எப்போதும் உண்டு.

இரியல் என்பதற்குத் தாங்கள் கொடுத்திருக்கும் மூன்றாவது, நான்காவது ஆகிய இரண்டு (பெரும்பாணாற்றுப்படை 202, 432) இடங்களுக்கும் இரியல் என்பதற்கான பொருள் மிகச் சரியாக ஒத்துவருவதை ஏற்கனவே கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது.

தவ பள்ளி தாழ் காவின்

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்

55    ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்

      மா இரும் பெடையோடு இரியல் போகி

      பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்

      தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும்

என்ற பட்டினப்பாலை அடிகளில் புகையை வெறுத்த குயில்கள் என்ன செய்கின்றன என்பது மட்டுமல்ல, எப்படிச் செய்கின்றன என்பதுதான் கேள்வி.

இனிய சோலையில் இன்புற்றிருக்கின்றன குயில்கள். திடீரென்று பெரும்புகை எழுகின்றது. அது ஆவுதி நறும்புகையேயெனினும், குயில்களுக்கு அது பிடிக்கவில்லை. பிடிக்காமல் அடுத்த கிளைக்குத் தாவி அமரவில்லை. ‘படபட’-வென்று இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு இடத்தையே காலிசெய்து பூதம் காக்கும் நகருக்குள் தற்காலிகமாகத் தஞ்சம்புகுகின்றன. துச்சில் என்பது temporary abode. ஓரிடம்விட்டு வேறிடம் போகும்போது அவை நின்று நிதானித்துச் செல்வதில்லை. அதிலும் மனம்வெறுத்துச் செல்லும்போது வேகம் இன்னும் அதிகரிக்கும். அந்த வேகத்துடன் கூடிய இயக்கம்தான் இரியல்போகுதல். இங்கு காண்பது அச்சம்/ஆர்வம் கொண்ட அவசரம் அல்ல. வெறுப்பினால் வந்த அவசரம்.

இனி தாங்கள் கூறியுள்ள புறநானூற்று அடிகளைக் காண்போம்.

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு

கறையடி யானை இரியல் போக்கும்

மலைகெழு நாடன் மாவேள் ஆஅய் – புறம் 135 / 11-13

மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின் கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் மலையையுடைய நாடனே மா வேளாகிய ஆயே! - ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை.

இரியல் போகும் அல்ல – இரியல் போக்கும் என்றிருப்பதைக் கவனிக்கவேண்டும். இது தன்வினை அல்ல, பிறவினை.

உங்கள் வீட்டுக்கு ஒருவர் வருகிறார். வயதானவர். ஓரளவு பழக்கமானவர். வறியவர். கையில் ஒரு கசங்கிய நூறு ரூபாய்த் தாளை வைத்துக்கொண்டு தயங்கியபடி, “சில்லறை இருக்குமா?” என்கிறார். உங்களுக்கும் கொடுக்கலாம் என்று எண்ணம். “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று, பணப்பையைத் திறந்து சரியான சில்லறை நோட்டுகளை எடுத்து, ஒருதரத்துக்கு இருதரம் எண்ணிச் சரிபார்த்து, மீண்டும் வாசலுக்கு வந்து அவருக்குச் சில்லறை கொடுத்து அனுப்புகிறீர்கள். உள்ளே செல்லும்போதும், திரும்பும்போதும் உங்கள் நடையில் ஒரு நிதானம் இருக்கும். மற்ற செயல்களில் ஒரு பரபரப்பற்ற அடங்கிய நிலையே காணப்படும்.

இன்னொரு நாள் வேறொருவர் வருகிறார். உங்களுக்கு மிகவும் பழக்கமானவர். வேண்டியவர். நீங்கள் மிகவும் மதிப்பவர். வாசலில் நின்று, “சில்லறை இருக்குமா?” என்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? மிக்க மரியாதையுடன் “உள்ளே வாருங்கள் ஐயா” என்று அழைப்பீர்கள். “பரவாயில்ல, வேறொரு சமயம் வருகிறேன். இப்போது சில்லறை மட்டும் தாருங்கள்” என்கிறார். முன்பு போலவே உள்ளே சென்று சரியான சில்லறை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். ஆனால் உங்கள் நடையில் ஒரு அவசரம் இருக்கும். செயல்களில் ஒரு பரபரப்பு இருக்கும். கொஞ்சம் அதிக நேரம் ஆனால்கூட உங்கள் மனைவி, “என்னங்க, சில்லறை எடுத்தாச்சா?” என்று ஓங்கிக் குரல் கொடுக்கலாம். இதுதான் இரிதல், இரியல் போதல். இதற்குக் காரணம் உங்கள் உள்ளத்தில் உள்ள மரியாதை.

சரி, பாடலுக்கு வருவோம். பாணன் ஒருவன் வேள் ஆயிடம் பரிசில் வேண்டி வருகிறான். அவன் வந்து, வேண்டி, ஆயும் கொடுக்க எண்ணி, அருகில் உள்ள உதவியாளரிடம் “இரண்டு யானை கொடுத்தனுப்பு” என்று பாணனையும் அனுப்ப, யானை வரத் தாமதமானால், பாணன், “என்னங்க, யானை எப்போக் கிடைக்கும்?” என்று வினவினால், “எல்லால் வரும்யா, என்ன இப்போ அவசரம்? கொஞ்சம் பொறு” என்ற அதட்டல் வர, பாணன் தன்மானமுள்ளவன் என்றால் ஔவைப் பாட்டி போல, “காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை, எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்று அகன்று போயிருப்பான்.

இங்கே நடந்தது என்ன? பரிசிலரைக் கண்டவுடனேயே, மன்னன் உடனே யானைக்கு உத்தரவிடுகிறான். அவன் குரலிலிருந்த அவசரத்தையும், கண்டிப்பையும் பார்த்த உதவியாளர் வேகமாக ஓடுகிறார். யானைகளை அவிழ்த்துக்கொண்டு வருகிறார். அந்த யானைகள் ஆடி அசைந்து மெல்ல வருகின்றன. தாமதமானால் அரசன் கோபிப்பானே என்று பணியாளன் அந்த யானைகளை அடித்து விரட்டிக்கொண்டு வேகமாக வருகிறான். இதுதான் இரியல் போக்கல். யானைகள் இரியல் போகவில்லை. அவற்றுக்கு அவசரம் கிடையாது. பணியாளன் அவற்றை இரியல் போக்குகிறான். காரணம் அரசனின் அதிரடி உத்தரவு. அதற்குக் காரணம் அரசன் பரிசிலர்மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும். சில்லறை மாற்றும் இரண்டாம் கதை போல.

பரிசில் பெற்றுத் திரும்பிய இரவலன், தன் சுற்றத்தாரிடம், “என் தலையைக் கண்டமாத்திரத்தில்,  யானையை அடித்து விரட்டிக்கொண்டு வந்தார்கள்” என்று கூறும்போது அவன் முகத்தில் எத்துணை பெருமிதம் நிலவியிருந்திருக்கும்!

அந்த இரியல் போக்கல் என்பது வெறும் இடம் மாற்றம் மட்டும் அல்ல. இதற்கு உரைகாரர் கூறும் கூற்றை (அவர் ஓர் உரைவேந்தர், என் பெருமதிப்புக்குரிய ஆசிரியர் – மதுரைத் தியாகராசர் கல்லூரியில்) நான் அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இரியல் போக்கலில் உள்ள அவசரமும், பரபரப்பும்தான் இங்குள்ள இலக்கிய இன்பம். அந்தப் புலவனுக்கு எத்துணை மரியாதை கிடைத்தது என்பதை உட்பொதிந்து உரைக்கும் சிறப்புப்பொருள்.

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு

கறையடி யானை இரியல் போக்கும்

மலைகெழு நாடன்

என்று இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தப் இரவலனின் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமிதமும், அதை நுண்ணிதாகப் புலப்படுத்தும் புலவரின் நுண்மாண் நுழைபுலமும் நன்கு வெளிப்படும்.

இனி அடுத்து,

சிறுகுடிக் கிழான் பண்ணற் பொருந்தித்

தன்னிலை அறியுநனாக அந்நிலை

இடுக்கண் இரியல்போக … புறம் 388/4-6

என்பதைப் பார்ப்போம்.

சிறுகுடிக்குரியனாகிய பண்ணனையடைந்து தனது வறுமைநிலையை அறிவித்தானாக, அப்பொழுதே, அவனுற்ற பசித்துன்பம் நீங்குமாறு .. என்று உரை கூறுகிறார் ஔவை சு.து அவர்கள். அப்பொழுதே நீங்குதல்தான் இரியல்போதல். இங்கேயும் வெறும் நீங்குதல் என்று மட்டும் கொண்டால் இலக்கிய நயம் கிட்டாது.

காதலன் ஒருவன் காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான். கிட்டே வந்தும்விட்டான். அப்போது ஒரு சிறிய கல்லில் தடுக்கிவிடுகிறான். கால் விரலில் இரத்தம். “அம்மா” என்று அலறுகிறான். “ஐயோ” என்று பதறிப்போன காதலி அருகில் வந்து அமர்ந்து, தன் கைக்குள் வைத்திருந்த கைக்குட்டையைப் பிரித்து நெட்டுவாக்கில் மடித்து, கால்விரலைச் சுற்றி இறுக்கமாகக் கட்டி, ஆதரவுடன் தடவிக்கொடுத்து, “ரொம்ப வலிக்குதா?” என்று கேட்கிறாள். “முதலில் வலித்தது, நீ தொட்டுக் கட்டுப்போட்டுத் தடவிக்கொடுத்தவுடனேயே வலி இருந்த இடமே தெரியவில்லை. ஒரேநொடியில் பறந்ந்ந்ந்ந்ந்ந்ந்து போச்சு” என்று அவன் சொல்ல, சற்றே கன்னம் சிவக்க, ஒரு நாணம் கலந்த முறுவலுடன் காதலி அவனைப் பார்க்கும்போது அவனுக்குக் கிடைக்கும் பேரின்பத்துக்கு இணை வேறுண்டோ? “இதை விடுத்து, “ரொம்ப வலிச்சுச்சு, கட்டுப்போட்டிட்டில்ல, கொஞ்சம் பரவாயில்லை” என்று கூறியிருந்தால் அந்த இன்பம் கிடைத்திருக்குமா?

கண்ணன் குசேலரின் அவலைத் தின்றுகொண்டே குசேலரைப் பார்த்துச் சிரித்தான். அந்த நொடியில் அங்கே குசேலரின் வீட்டில் இருந்த பஞ்சம் பஞ்சாய்ப் பறந்துபோய்விட்டது” என்ற கூற்றில் இருக்கும் பஞ்சாய்ப் பறத்தல்தான் இங்கே இடுக்கண் இரியல் போக எனக் கூறப்பட்டுள்ளது.

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது. அதைவிடுத்து வெறும் நீங்குதல் (shift) எனக்கொண்டு, நிலைமையைச் ‘சப்’-பென்று ஆக்கிவிடாதீர்கள் வேந்தன் அரசு!

ப.பாண்டியராஜா

Oru Arizonan

unread,
Dec 12, 2014, 12:17:24 AM12/12/14
to mint...@googlegroups.com
இரியல் போவது பற்றித்  தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள், பாண்டியராஜா அவர்களே!

நான் இந்தச் சொல்லை அடைப்புகுறியில் விளக்கம் கொடுத்து (அவசரமாக என்று) கையாள முனைகிறேன்.  இப்படியாக நாம் வழிக்கொழிந்த சொற்களை இரியல் போகி(விரைவாக) நடைமுறைக்குக் கொணரலாமே! (எழுதி இருப்பது சரிதானா?)

தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

தேமொழி

unread,
Dec 12, 2014, 1:09:12 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.

இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.

அட்ரீனலின்  ...நார்எபிநெஃப்ரின் சுரப்புகளுடன் தொடர்புடைய ஓர் உணர்வு.  

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Dec 12, 2014, 6:47:25 AM12/12/14
to vallamai, மின்தமிழ்

11 டிசம்பர், 2014 ’அன்று’ 4:46 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".

Not really.

ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல். 

ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.

புகழ் சால் சிறப்பின் நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே யென்றும்
மன்று படு பரிசிலர்க் காணின் கன்றொடு
றை அடி யானை இரியல் போக்கும்

வள்ளல் பரிசிலாக வழங்கிய யானைக்கு அச்சமா?
 
--------------------
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்

இடுக்கண்ணுக்குஏ அச்சமா? 
--------------
 பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்

உழப்படும்போது கோழிகளுக்கு என்ன பெரிய அச்சம்.  ட்ராக்டர் வச்சு உழுதார்களா?

------------
வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித்து இழிதரும் போக்குஅருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கி யாங்கு

இக்கரையில் இருந்து அக்கரை அல்லது ஒரு துறையில் இருந்து அடுத்த துறை போவோருக்கு என்ன அச்சம்?
கங்கையே அச்சம் என்றால் ஏன் ஆற்றில் முதற்கண் இறங்க வேண்டும்?
 
--------------------------
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் 

முனை இ என்றால் ”வெறுத்து” இடம் பெயர்கின்றன.
 வெறுத்து,  அஞ்சி என இரண்டு உணர்வுகள் சொல்லப்படுகின்றனவா?

இந்த இடங்களில் இடம் பெயர்தல் எனும் பொருள் கொண்டு வாசித்தால் சாலப்பொருந்தும்

N. Ganesan

unread,
Dec 12, 2014, 7:47:01 AM12/12/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
பொருந்தாது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 12, 2014, 7:50:13 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Friday, December 12, 2014 8:36:06 AM UTC+3:30, Pandiyaraja wrote:
அன்பு நண்பர் சேவியர் அவர்களுக்கு,

”இடுக்கண் இரியல் போக” என்பதை ஆழ்வா பாடியுள்ள “இருள் இரிய” என்னும் தொடருடன் ஒப்பிடலாம்.

கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

N. Ganesan

unread,
Dec 12, 2014, 8:06:00 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பேரா. பாண்டியராஜா எழுதினார்: 

இனி தாங்கள் கூறியுள்ள புறநானூற்று அடிகளைக் காண்போம்.

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு

கறையடி யானை இரியல் போக்கும்

மலைகெழு நாடன் மாவேள் ஆஅய் – புறம் 135 / 11-13

பாணன் வறியவன். கன்றுகளோடு உள்ள யானைகளை எப்படிப் பராமரிப்பான்? மேலும், யானைகளைக் கொப்பம்
வெட்டிப் பிடித்து கும்கி யானையோடு சேர்த்துப் பழக்குவதுதான் நடைமுறை. இன்றும் மேற்குத் தொடர்ச்சி
மலைகளில் நடக்கும் செயல். எனவே, அரசன கன்று, தாய், தந்தை என யானைக் கூட்டத்தை வறிய பாணர்களுக்கு
வழங்கினான் என்பது பொருள் அல்ல எனக் கருதுகிறேன்.

moving with certain anxiety, fear - is involved here, like the mother elephant moving with her calf.
தாய் யானை குழகன்றுடன் நடக்கும்போது ஓரு பதட்டம், அச்சம், விரைவு இருக்கும். எங்கிருந்தாவது
ஏதாவது (உ-ம்: புலி, சிறுத்தை, செந்நாய், ...) தாக்குமோ என்றஞ்சும். அதைத்தான் 
வேள் ஆயின் மலையில் சொல்கிறார் புலவர்: “கன்றொடு கறையடி யானை இரியல் போக்கும் மலைகெழு நாடன்”

அப்படிப் பட்ட மலைநாடன் குஞ்சு குழமானுடன் உள்ள தன் குடும்பத்தின் வறுமையைத் தன் பரிசிலால்
போக்கினான் என்கிறார். தாய் அஞ்சும் கன்றின் இரியலைப் போக்குதலை, மலைநாட்டு வேள் ஆஅய்
தன் குடும்ப வறுமைத் துயரைப் போக்குதற்கு உவமை ஆக்குகிறார்.

கன்றோடு யானையை புலவர்க்கு கொடுத்தான் என்று பொருள் காணோம்.

நா. கணேசன்

மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின் கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் மலையையுடைய நாடனே மா வேளாகிய ஆயே! - ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை.

N. Ganesan

unread,
Dec 12, 2014, 8:19:12 AM12/12/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Friday, December 12, 2014 3:17:23 PM UTC+3:30, வேந்தன் அரசு wrote:

--------------------
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்

இடுக்கண்ணுக்குஏ அச்சமா? 

ஆம். இடுக்கண்ணுக்கே அச்சம்.

இருளுக்கே அச்சம்.  

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
             இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அந்தன் என்னும் அணிவிளங்கும்
            உயர்வெள்ளை அணையை மேவி...
                                                           [குலசேகர ஆழ்வார்]

----------

 பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்

உழப்படும்போது கோழிகளுக்கு என்ன பெரிய அச்சம்.  ட்ராக்டர் வச்சு உழுதார்களா?

பருவமழை பெய்தபோது 30, 40 ஏர்கள் உழவு ஓட்டுவதை எங்கள் தோட்டங்களில்
பார்த்திருக்கிறேன்.  காடை முதலிய பறவை இரியல் போகும். மனிதரும் ஏரும் கண்டு,
மேலும், பொன்னேர் பூட்டும் போது முன்னால் முரசு முழங்குதலும் உண்டு,

அறுவடையின் போதும் தண்ணுமை முழங்கும். குயம் என்பது பாளைக்கத்தி.
புறநானூற்றுப் பாடலுக்கு தவறாகப் பொருள் சொல்லியுள்ளனர்.
புறநானூறு 348-ல் குயம் என்பது ’குயவரி வேங்கை’ என்பதில் உள்ள குயம் = paring knife

பரணர் - புறம் 348 - பாடலை மீண்டும் படித்து, அதன் உரைகாண்போம்.

குவளைக்கண்ணி காரணமாகக் குயவட்டணைப் போர்!

வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தே னிரியக்
கள்ளரிக்குங் குயஞ் சிறுசின்
மீன்சீவும் பாண்சேரி
வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன
குவளை யுண்க ணிவளைத் தாயே
ஈனா ளாயின ளாயி னானாது
நிழறொறு நெடுந்தேர் நிற்ப வயின்றொறும்
வருந்தின மன்னெம் பெருந்துறை மரனே.

     உரை: வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ - வெண்மையான நெல்லை 
அறுவடை செய்யும் உழவர் தொடக்கத்தே இசைக்கும் தண்ணுமையோசை  கேட்டஞ்சி; கண் மடல் கொண்ட தீந்தேன் இரிய - கணுவிடத்தே தோன்றும் மடலிற் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் நீங்கியதனால்; கள்ளரிக்கும் குயம் - தேனடையை அந்த மரமேறி குயம் என்னும் நேரான பாளைக்கத்தி (paring knife) கொண்டு அரிந்தெடுத்து; சிறு சின்மீன் சீவும் பாண் சேரி - சிலவாகிய சிறுமீன்களை அக் குயக் கத்தியால் பட்டை பட்டையாக நீளவாக்கில் சீவி உண்ணும் பாண்சேரி; வாய்மொழித் தழும்பன் ஊணூரன்ன - ’உனக்குப் பெண் கொடேன்’ என்னும் உறுதியான மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப் போன்றன; குவளை யுண்கண் இவளை - குவளைப் பூப்போலும் கண்களையுடைய இம் மகளை; தாய் ஈனாளாயின ளாயின் - தாய் பெறாதொழிந்திருப்பாளாயின்; ஆனாது - அமையாமல்; நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப - மரநிழல் தோறும் நெடிய 
தேர்கள் நிற்க; வயின்தொறும் - இடந்தோறும்; செந்நுதல் யானை பிணிப்ப -
சிவந்த நுதலையுடைய யானைகளைக் கட்டுதலால்; எம் பெருந்துறை மரம் வருந்தினமன் - எம்மூர்ப் பெருந்துறைக் கணின்ற மரங்கள் வேர் துளங்கிப் பெரிதும் கெட்டன; எ - று.

தேனீக்கள் அஞ்சி இரிந்து நீங்குதல், போர் நிமித்தமாக பாணர் உள்ளிட்ட ஊர்மக்கள் கலைந்துபோதலுக்கும், குயம் என்னும் பாளைக்கத்திகொண்டு மரமேறித் தேனடை எடுத்தல், படைக்கலத்தால் போரிட்டு அணங்கு போலும் தழும்பன் மகளைக் கொள்ளுதற்கும் உவமை. தழும்பன் என்னும் தலைவனின் ஊணூர் மக்களின் வருத்தம் போர்தொடுக்கும் எதிரிமன்னனின் யானைகள் அசைக்க வேருடன் சாயும் ஊரில் பெருமரங்களின் வருத்தம் போன்றது என்கிறார் பரணர்.

PuRam 348 

The big trees of the port city of UuNuur are like the city itself - both are suffering.
City of UuNuur, ruled by Talumpan whose words are always true and who sticks to his words, 
    where tree climbers chop off the bee hives 
    to gather honey after the bees 
fly off from the tree tops, frightened by the taNNumai drum that is beaten by harvesters of the white paddy, and
where bards who catch little fish and make fillets using paring knives live 
on one street. (Alas, those peaceful days are coming to an end).

If her mother had never 
  given birth 
to this girl whose darkened eyes look like blue waterlilies, then none 
  of this 
would ever have happened! The trees of our spacious harbour are 
  suffering, 
long chariots standing wherever 
there is shade, and elephants with red-painted foreheads tied 
  everywhere!                                         1

The song of ParaNar. TiNai: kAJci. TuRai: makaTpAR kAJci.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 12, 2014, 8:50:41 AM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Friday, December 12, 2014 9:39:12 AM UTC+3:30, தேமொழி wrote:

On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.

இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.

ஆம். இரிதலில் கொஞ்சம் அச்சமும் கலந்திருக்கும். பெருநீர்க் கங்கையில் படகில் போகும்போது
இமயத்தின் வெள்ளம் வருமோ என்ற அச்சம். கருங்கடலில் போகும்போது திரும்புவரோ, புயலில்
மடிவரோ என்ற அச்சம்.

வேந்தன் அரசு

unread,
Dec 12, 2014, 10:00:23 PM12/12/14
to vallamai, மின்தமிழ்

12 டிசம்பர், 2014 ’அன்று’ 8:50 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Friday, December 12, 2014 9:39:12 AM UTC+3:30, தேமொழி wrote:

On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:

இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.

இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.

ஆம். இரிதலில் கொஞ்சம் அச்சமும் கலந்திருக்கும். பெருநீர்க் கங்கையில் படகில் போகும்போது
இமயத்தின் வெள்ளம் வருமோ என்ற அச்சம். கருங்கடலில் போகும்போது திரும்புவரோ, புயலில்
மடிவரோ என்ற அச்சம்.

ஏன் படகு கவிழுமோ என்ற அச்சம் கூட இருக்கலாமே?
இரீ, இரியல் போகு இரண்டுக்கும் வேற்றுமை காண்கிறேன்.

N. Ganesan

unread,
Dec 12, 2014, 10:07:52 PM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இமயத்தின் flash floods படகைக் கவிழ்க்கும்.

N. Ganesan

unread,
Dec 12, 2014, 10:29:26 PM12/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Saturday, December 13, 2014 6:30:23 AM UTC+3:30, Zஈனத் Xஏவியர் wrote:

இரீ, இரியல் போகு இரண்டுக்கும் வேற்றுமை காண்கிறேன்.

இரீ = இருத்தல் ர/ல போலி: இரு/இல்- = இல்லம்.

இரியல்போகுதல் = இரிதல் = அஞ்சிவிரைதல். இந்த இரிதல் - இல்லாதுபோதல் ( ர்/ல் மாற்றம்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 19, 2014, 11:38:12 PM12/19/14
to mint...@googlegroups.com

On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:

1. அலங்குதல் - இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.

        பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298

        நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

        முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144

        அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161

ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல். தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை நன்கு காணலாம். எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில் ஆடுவது அலங்குதல். அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.

அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும். அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே. இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும். அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.

கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை அலங்கல் எனப்பட்டது எனலாம்.

அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில் அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட ஒருவகை அசைவையே குறிக்கிறது. அவற்றில் சில:

அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12

அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

பரிபாடல் அடியைப் பாருங்கள். அருவி எப்படி அலங்கும்? இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.

அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்

மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15: 19-21

பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்! ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால் அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர். இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.

 அலங்கு < அலை-

சூரியன் கிழக்கே உதித்து, வானத்தில் அலைந்து, மேற்கே மறைபவன், வானில் அலைதலை அலங்குதல் என்று சங்க காலத்தில் கூறியுள்ளனர்.  அலங்கு கதிர் = சூரிய ஒளி. எனவே, அலங்கல் = ஒளி என்றும் சூரியனால் ஒரு பொருள் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது.

அலங்கல் alaṅkal, n. < அலங்கு-. 1. Light; ஒளி. (ஈடு, 10, 1, 2.) 

அலங்கு-தல் alaṅku- , 5 v. intr. [T. K. alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.] 1. To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா. 2). 2. To be agitated in mind, troubled; மனந்தத்தளித்தல். (W.) 3. To pity, sympathise; இரங்குதல். (பிங்.) 4. To shine, glitter, flash; ஒளிசெய்தல். (பிங்.)

வானில் விண்மீன்களும், சூரியனும் அலையும்தன்மையினால் அலங்குதல் என்றால் ஒளி செய்தல் என்ற பொருள் எனக் கருதலாம்.

விலங்கலும் வேலையும், மேலும் கீழரும், 
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும், 
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காலக் காற்று, 
இலங்கையை எய்தின, இமைப்பின் வந்துஅரோ. 
                                                             - கம்பர்
 
விலங்கலும்- மலைகளையும்; வேலையும்- கடல்களையும்;
மேலும் கீழரும் - மேல், கீழ் உலகங்களையும்; அலங்கு ஒளி-
சூரிய ஒளி; திரிதரும் உலகு அனைத்தையும் - பாயும் எல்லா
உலகங்களையும்;  கலங்குறத் திரிந்தது- கலங்கும்படி செய்து
திரிந்த;  ஓர் ஊழிக்காலக்  காற்று-   பிரளய காலப் புயல்;
இமைப்பின் வந்து - நொடிப்போதில் வந்து;  இலங்கையை
எய்தின- இலங்கையை அடைந்தது. (அரோ - அசை)

மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான்,
அஞ்சலன்’ என,வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரிசக்கரவாகமுடன், தாழ்
கஞ்சமும்,மலர்வுற்றன; காந்தின காந்தம்.  - கம்பன்

     மஞ்சு - மேகத்திடையே; அலங்கு - அசைந்து செல்லும்; 
ஒளியோனும்- சூரியனும்; இம் மாநகர் - இந்த இலங்கைக்கு; வந்தான் -

உருக்கிய சுவணம் ஒத்து , உதயத்து உச்சி சேர் 
அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எலாம் 
தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் திசை 
விரித்து இருந்தனன் என , விளங்குவான் தனை  - கம்பன்

அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் - அகம் 381/5
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் - எரியினைக் கக்கிச் செல்லும் அசையும் கதிர்களையுடைய ஞாயிறு, 

-------------

நாட்டுப்புறத்தில் அங்குமிங்கும் அலைந்துதிரிந்த நாய் அலங்கு நாய் எனப்பட்டது.
தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்.
தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன அலங்கு நாய்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Dec 20, 2014, 2:22:35 PM12/20/14
to mint...@googlegroups.com
"சங்கச் சொல்வளம்" என்று பாண்டியராஜா ஐயா தொடங்கிய இந்த இழையில் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட  "இரியல்" என்று  சொல்லைத் தொடர்ந்து மேலும் பல சங்கச்சொற்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இழையில் அறிமுகமான மற்றொரு சொல்லான  "அலங்கு" என்ற சொல்லின் பொருளைப்  பற்றி மேலும் பல கோணங்களையும், மேலதிகத் தகவல்களையும்  சில குழும உறுப்பினர்கள் மேலும் சில இழைகளில் விளக்கமளித்து வருகிறார்கள்.

அவர்களது விளக்கங்களையும் தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கீழே அந்த இழைகளின் சுட்டிகள்: 

நூதலோசு:  சங்கநூல் + பழம் நூல்கள் சொல்வளம் = அலங்கு 

வேந்தன் சரவணன்: அலங்கு என்பது என்ன?

திரு. கணேசன்: கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

N. Ganesan

unread,
Dec 21, 2014, 12:17:29 PM12/21/14
to mint...@googlegroups.com, vallamai, coral shree, thami...@googlegroups.com
வலைக்கண்களுக்கு நன்றி, தேமொழி.  சிகாகோவில் உள்ள ஸ்ரீமதி பவளசங்கரி திருநாவுக்கரசு 
வல்லமையில் வெளியிட்டுள்ளார்கள். அவருக்கு என் நன்றி. அதன் தொடுப்பு:
கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

நா. கணேசன்

From CTamil (CNRS, Paris) list:
In Malayalam, the noun aṉakkam (അനക്കം) means movement, the intransitive verb aṉaṅṅŭ (അനങ്ങ്) means to move and the transitive verb aṉakkŭ (അനക്ക്) means to cause to move.  This word aṉaṅṅŭ may be related to Tamil alaṅku.  Interesting that a Tamil 'l' becomes an 'ṉ' in Malayalam.  Wonder if there are other Tamil-Malayalam word pairs where the Tamil 'l' changes to 'ṉ' in Malayalam.  I have observed a r-l change in Tamil word rakaḷai (commotion, row, quarrel etc.) and its Malayalam equivalent lahaḷa.  Is lahaḷa/rakaḷai a Dravidian word?  As I understand it, traditional south Dravidian words do not begin with a r or l.   Those that do begin with these letters in modern Dravidian most probably had a vowel preceding them in the older form of the word as in the case of raṇṭŭ / iraṇṭŭ meaning two.

Thanks and regards,
Radhakrishna Warrier

From: naa.g...@gmail.com
Date: Sat, 20 Dec 2014 19:37:44 -0800
To: cta...@services.cnrs.fr
Subject: [ctamil] அலங்கல் - mane of a horse

Kamban sings in a verse,
"Ayiram tErai, ATal An2aiyai, alaGkal mAvai
Ayiram talaiyai, Azip paTaikaLai aRuttum appAl".

Earlier, KonguvELir wrote with the same idea:
"aTalpEr yAn2aiyum, alaGkumayirp puraviyum".

Looking at the description of the mane of horses
from Sangam poetry onwards, it looks Kamban's
"alaGkal mA" refers to horses with manes.
Then, we can say "alaGkal arimA" would be male lion.

Here is my note on the verb, alaGku- < alai- "to move".

கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

வேந்தன் அரசு

unread,
Dec 21, 2014, 1:23:30 PM12/21/14
to vallamai, மின்தமிழ், coral shree, தமிழாயம்
கதையில் ஒரு ட்விஸ்ட் இருக்கு என்பதற்கு கதையில் ஒரு சூரல் இருக்கு எனலாம்.

21 டிசம்பர், 2014 ’அன்று’ 9:17 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Dec 27, 2014, 12:09:52 PM12/27/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தேமொழி அம்மா!
கடந்த வாரத்தில் மனைவியுடன் மகள் எழில் குடும்பத்தாருடன் (மருமகன் ராஜேஷ், பேத்தி யாழினி) புதுடெல்லி சுற்றுலாப் பயணம் சென்றிருந்தேன். அதனால் மின் தமிழுக்கான பணிகளைத் தொடரமுடியவில்லை. இப்போ மீண்டும் சென்னை. இனி கட்டுரைகள் தொடரும்.
நன்றி,
ப.பாண்டியராஜா

Nagarajan Vadivel

unread,
Dec 27, 2014, 12:11:39 PM12/27/14
to மின்தமிழ்
ஐயா நீங்க வந்துட்டீங்க
ஆனா அம்மா இன்னும் வரக் காணமே

ரு.பூனை

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
Dec 27, 2014, 12:30:20 PM12/27/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-12-27 18:11 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஐயா நீங்க வந்துட்டீங்க
ஆனா அம்மா இன்னும் வரக் காணமே

​விடுமுறையில் இருக்கின்றார் தேமொழி..

சுபா​
 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 27, 2014, 1:05:13 PM12/27/14
to mintamil, Pandiyaraja Paramasivam, Subashini Tremmel
இன்று ஒரு நண்பரிடம் உரையாடும்போது தமிழ் இலக்கியங்களில் சொல்லடைவு குறித்து சில வாரங்களுக்கு முன் தினமலர் கணினி மலரில் ஒரு பதிவு வந்திருக்கிறது. மிகுந்த பயன் தர வல்லது என்றார். நானும் எங்கள் குழும நண்பர் பெரியவர் பேராசிரியர் திரு பாண்டியராஜா அவர்கள் இவ்வகையில் பெருமுயற்சி செய்துள்ளார் என்று கூறி நண்பர் சேமித்து வைத்திருந்த செய்தித்தாள் பகுதியை தரக்கேட்டுக்கொண்டேன். அவர் எடுத்த வந்த செய்தி நம் பேராசிரியர் தந்திருந்த செய்தி!
நண்பரிடம் மகிழ்ச்சியுடன் பேராசிரியrin அரிய செயல் குறித்துப்பகிர்ந்துகொண்டுவிட்டு செய்தியினை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
நண்பர்கள் பார்வைக்கு இணைத்துள்லேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தேன். 

IMG_2952.JPG
IMG_2953.JPG

Pandiyaraja

unread,
Dec 28, 2014, 9:47:26 PM12/28/14
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, ksuba...@gmail.com
மிக்க நன்றி திரு.வினைதீர்த்தான். தொடரடைவு பற்றிய எனது இணையதளத்தைத் தற்செயலாகப் பார்த்த முனைவர்.போஸ் அவர்கள் தொலைபேசியில் என்னுடன் தொடர்புகொண்டு பாராட்டிப் பேசினார். அவர் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியர். தற்போது தினமலர் கல்விமலரில் கணினிப் பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறார். எனது இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை வைத்து ஒரு கட்டுரை எழுதி தினமலரில் வெளியிட்டிருக்கிறார். அது மதுரைப் பதிப்பில் வெளிவந்தது. சென்னையில் நானே அதைப் பார்க்கவில்லை. அவர் சொல்லி, தினமலர் இணையதளத்தில் சென்று பார்த்தேன். மதுரையிலிருக்கும் என்னுடைய தமையரிடம் சொல்லி அதனை எடுத்துவைக்கச் சொல்லிப் பின்னர் நீண்டநாள் கழித்து அதனைப் பெற்றேன். தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 29, 2014, 8:11:09 AM12/29/14
to mint...@googlegroups.com, Dr. Chandra Bose

On Sunday, December 28, 2014 8:47:26 PM UTC-6, Pandiyaraja wrote:
மிக்க நன்றி திரு.வினைதீர்த்தான். தொடரடைவு பற்றிய எனது இணையதளத்தைத் தற்செயலாகப் பார்த்த முனைவர்.போஸ் அவர்கள் தொலைபேசியில் என்னுடன் தொடர்புகொண்டு பாராட்டிப் பேசினார். அவர் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியர். தற்போது தினமலர் கல்விமலரில் கணினிப் பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறார். எனது இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை வைத்து ஒரு கட்டுரை எழுதி தினமலரில் வெளியிட்டிருக்கிறார். அது மதுரைப் பதிப்பில் வெளிவந்தது. சென்னையில் நானே அதைப் பார்க்கவில்லை. அவர் சொல்லி, தினமலர் இணையதளத்தில் சென்று பார்த்தேன். மதுரையிலிருக்கும் என்னுடைய தமையரிடம் சொல்லி அதனை எடுத்துவைக்கச் சொல்லிப் பின்னர் நீண்டநாள் கழித்து அதனைப் பெற்றேன். தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

பேரா. சந்திர போஸ் (மாநிலக் கல்லூரி)  நீண்டகாலமாக இணையத்தில் எழுதிவருபவர். தமிழ்ப் பல்கலைக் கழகம் கணினித்துறையில் முனைவர் கா. செ. செல்லமுத்து இருந்தார். பின்னர் அமெரிக்கா  வந்துவிட்டார். நண்பர் செல்லமுத்து நடத்திய  கணினிப் பயிலரங்குகளில் பங்கேற்று கணினிக்கு வந்தவர் பேரா. போஸ். இன்றும் பார்த்து கணினி முன்னேற்றங்களை கணினி மலரில் வெளியிடுவது பட்டிதொட்டியெங்கும் கணினி வளர்ச்சியைக் கொண்டுசெல்கிறது.  

அரசாங்கம் இன்னும் உதவினால் - (1) தன் துறைகளை கணினிமயம் ஆக்கலும், அதன் வலைத்தலங்களை தமிழ் யூனிகோடில் கொண்டுவருதலும் (2) லட்சக் கணக்கான தமிழ்ப் புஸ்தகங்களை பிடிஎஃப், தட்டச்சு மூலம்  இணையமேற்றல் செய்தல் - செம்மொழி தமிழ் அடுத்த தலைமுறைக்கும், உலக தமிழ் ஆய்வாளர்களுக்கும் சென்றுசேரும். தமிழில் இல்லாதது ஒன்றும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கான தரவுகளை அரசாங்கம் தர உதவட்டும்.

நா. கணேசன்
 
On Saturday, December 27, 2014 11:35:13 PM UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:

Pandiyaraja

unread,
Dec 30, 2014, 7:08:44 AM12/30/14
to mint...@googlegroups.com, drchan...@gmail.com
அன்புடையீர்,
இரிதல் மிகப் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. நல்லதுதான். கருத்துப் பரிமாற்றங்கள் கருத்து மாற்றங்களுக்கும் சமயத்தில் ஏதுவாகும். இந்த முறை அது நடக்கவில்லை. கொள்கைப் பிடிப்பு நல்லதுதான். கலந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
இந்த முறை ஓர் எளிய சொல் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது- ஊர்தல். மேலும் ஊர்கொள்ளுதல் என்ற தொடரும் விளக்கப்பட்டுள்ளது.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

சங்கச் சொல்வளம்

2. நகர்வுகள்

உயிர்கள் அல்லது பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்வதையே நகர்வு (movement) என்கிறோம். இங்கு இவர்தல், இரிதல், ஊர்தல், இயலுதல் என்ற நான்குவிதமான நகர்வுகளைப் பற்றிக் காண்போம்.

3. ஊர்தல்

ஊர்தி என்பது வாகனம். வாகனத்தை நாம் ஏன் ஊர்தி என்கிறோம்? Very simple. அது ஊர்ந்து செல்கிறது, இல்லையா? ஆனால், உண்மையில் பாம்பு ஊர்வது போலவா வாகனம் ஊர்கிறது? சக்கரங்கள் உருளுவதால்தான் வாகனம் நகர்கிறது. அப்புறம் ஏன் அதனை ஊர்தி என்கிறோம்?

மிக மெதுவாகச் செல்வதையும் ஊர்வது என்கிறோம். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பார்கள். வாகன நெருக்கடியில் அனைத்து வாகனங்களும் மிக மெதுவாகச் சென்றால், ஊர்ந்து ஊர்ந்து செல்வதாகச் சொல்கிறோம். ஆனால் வேகமாகச் செல்வதையும் ஊர்தி என்றுதான் சொல்கிறோம். ஊர்தல் என்பதற்கு இன்னொரு பொருள் சவாரி செய்தல் என்பது. ஊர்தல் என்பதற்கு to ride, as a horse; to drive, as a vehicle; என்று தமிழ்ப் பேரகராதி ஒரு பொருள் சொல்கிறது. காதலில் தோற்றவன் பனைமடலால் குதிரை போல் செய்து அதில் ஏறிச் செல்வது மடலேறுதல் அல்லது மடலூர்தல் எனப்படும். இது அகனைந்திணையில் அடங்காத பெருந்திணை ஒழுக்கம்.

ஞாயிறாகிய பகலவன் ஒரு சக்கரம் கொண்ட தேரின் மீது ஏறி உலகை வலம்வருகிறான் என்பது நம்பிக்கை.

ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன் - அகம் 360/2
என்ற அகப்பாடல் அடி கதிரவன் ஊர்ந்துசெல்லும் தேர் அதனுடைய ஊர்தி எனக் கூறுகிறது.
வலவன் ஏவா வான ஊர்தி/எய்துப என்ப - புறம் 27/8,9
எனப் புறப்பாடல் கூறுவதையும் பார்க்கலாம்.

விசும்பின், மீன் பூத்து அன்ன உருவ பன் நிரை

ஊர்தியொடு நல்கியோனேபுறம் 399/30-32

என்ற புறப்பாடல் காளையை ஊர்தி என்கிறது. பசுக்கூட்டத்தை நடத்திச் செல்ல ஊர்ந்து செல்வதற்கு ஏற்ற காளையே இங்கு ஊர்தி எனப்படுகிறது.

முல்லைத் தலைவன் வினைமேற் சென்று, வினைமுடித்து மீண்டும் தேரில் வருகிறான். அவனுக்கு அவசரம். தேர் மெதுவாக ஓடுவது போல் தோன்றுகிறது அவனுக்கு. விரைந்து தேரை ஓட்டுமாறு தேர்ப்பாகனுக்குக் கட்டளையிடுகிறான் தலைவன். அதனை,

வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந - அகம் 234/9
என்று தலைவன் கூறுவதாக அகப்பாடல் கூறுகிறது. 
இருப்பினும், மெதுவாகச் செல்லுதல், பரவுதல் போன்ற வழக்கமான பொருளிலும் ஊர்தல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைவன் பிரிவை எண்ணி ஏங்கியிருக்கும் தலைவியின் நெற்றி வாட்டமுறுகின்றதாம். இதனைப் பசலை பிடித்தல் என்றும் பசப்பு ஊர்தல் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே - நற் 197/2
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே - குறு 205/7
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை - கலி 99/10
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர - அகம் 205/6

இங்கெல்லாம் ஊர்தல் என்பது மெதுவாகப் பரவுதல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

ஊர்தல் என்பதன் பொருளோடு தொடர்பு அற்றதாயினும், அச் சொல்லோடு தொடர்பு உள்ள ஓர் அழகிய சொல்லாக்கம் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. சில சமயங்களில் வானத்தில் இலேசான மேக மூட்டம் காரணமாக, ஞாயிறோ அல்லது திங்களோ ஒரு பெரிய ஒளிவட்டத்துடன் (Halo) காணப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இதை நம் இலக்கியங்கள் ஊர்கொள்ளுதல் என அழைக்கின்றன.

தலைவனை இரவுக்குறிக்கண் வரச்சொல்லும் வண்ணம் தோழி அவனிடம் கூறுகிறாள்:
அரும் கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் 
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே - அகம் 2/14-17
நிறைமதிநாளன்றுதான் திங்கள் நீண்ட நேரம் வானில் இருக்கும். எனவே அது நெடு வெண் திங்கள் எனப்பட்டது. அது நள்ளிரவில் தலைக்கு நேர் மேலே நின்றிருக்கும். எனவே மிக அதிக ஒளி தரும். ஆனால் அது ஒளிவட்டம் போட்டிருந்தால் மேக மூட்டத்தால் ஒளி மங்கித் தெரியும். எனவே அஞ்சாமல் தலைவியைச் சந்திக்க வரலாம் என்று குறிப்புக் கொடுக்கிறாள் தோழி.
மாட்டு வண்டியின் சக்கரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? நடுவில் அச்சுக்கோக்கும் இடம் சிறிய வட்டமாக இருக்கும். அதனைக் குறடு என்பர். அதில் சுற்றிவர ஆரங்கள் கோக்கப்பட்டு, அந்த ஆரங்களின் தலையில் சக்கரப் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அந்தச் சக்கர விளிம்பில் இரும்புப் பட்டை இருக்கும். இதனைத் திங்கள் ஊர்கொண்டதனோடு ஒப்பிடுகிறார் புலவர்.

பருவ வானத்து பால் கதிர் பரப்பி
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
            ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு- சிறு 250-253

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 31, 2014, 6:11:18 AM12/31/14
to mintamil, Dr. Chandra Bose

வணக்கம் ஐயா.

அருமையானதொரு பதிவு.  

“நெமிசாரண்யம்“ என்ற ஊரில் தான் 18 புராணங்களும் எழுதித் தொகுக்கப்பெற்றன. இந்த இடத்தை “நைமிசாரண்யம்“ என்றும் அழைக்கின்றனர்.

https://www.google.co.in/maps/place/Neemsar/@27.3482077,80.4872611,429m/data=!3m1!1e3!4m2!3m1!1s0x399ec25bbefeeb0d:0x6d1939a4d9d4eb4c?hl=en

இதுநாள்வரை இப்பெயர்ச் சொல்லானது ஒரு வடசொல் என்று எண்ணியிருந்தேன்.

தங்களது இந்தப் பதிவால் இச்சொல் தமிழ்ச்சொல் என்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி ஐயா.

அன்பன்

கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 31, 2014, 6:13:16 AM12/31/14
to mintamil, Dr. Chandra Bose

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 31, 2014, 7:04:34 AM12/31/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய முனைவர் திரு.பாண்டியராஜா அவர்களே

பருவ வானத்து பால் கதிர் பரப்பி
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
            ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு- சிறு 250-253

இந்த வரிகளில் ஊர்தல் எனும் மெதுவாய் நகர்வதை அந்த திங்களின் ஒளி வட்ட நகர்வைக்கொண்டு அழகாய் விளக்கியுள்ளீர்கள்.அதில் "நோன் குறட்டு "என்ற சொல் உற்று நோக்கத்தக்கது.அந்த சக்கரத்தின் "கட கடத்த"ஒலியை அது காட்டுகிறது.மனிதனின் "குறட்டை"ஒலியும் அது தானோ.சக்கரம் அச்சில் "பிடிப்பு" ஏற்படுத்திக்கொள்வதில் அது நைகிறது (நோன்)
குறட்டு என்பதற்கு வலுவான பிடிவாதம் என்ற பொருளும் வருகிறது.நம்மிடையே வாழும் மலைவாழ் மக்களிடம் இத்தகைய‌
அரிய திறமை இருப்பதால் அவர்கள் இயற்கையின் சீற்றங்களை 
நன்கு தாக்குப்பிடிக்கின்றனர்.கொச்சையாய் அதை குறச்சாதனை என்கிறோம்.குறிஞ்சித்திணையின் உட்பொருளே அந்த குறட்டு தான்.
குறமகள் இளஎயினியின் சங்கப்பாடலில் அந்த குறிஞ்சியின் வெளிச்சம் நன்கு தெரிகிறது.மேலும் இப்படி ஒரு "பிடிமானக்கருவியை" நாம் "பற்றுக்குறடு" என்கிறோம்.உங்கள் சிறுபாணாற்றுப்படை பாடலின் வரிகள் பலவிதமான "சொற்குடைவு"களை நம்மிடம் நல்குகின்றன.தங்கள் "சங்கச்சொல்வளம்" தமிழ் ஒலிப்புகளின் "சொற்சுரங்கம்" என்பதில் ஐயமே இல்லை.

அன்புடன் ருத்ரா

On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள்  இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?
கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

பின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.

சங்கச் சொல்வளம்

1. அசைவுகள்

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  (எ.டு)

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த ...

சிறு குழை துயல்வரும் காதின் ----------- - பெரும் 161  

தாளுருவி அசையும் காதினையும் ---

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330

நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும்,

இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள், காலப்போக்கில் வழக்கிழந்து ஒரே பொருளாகக் கொள்ளப்பட்டன. எனினும், இந்த மூன்று சொற்களும் வெவ்வேறான அசைவுகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் உண்மையான பொருளோடு இந்த அடிகளைப் படிக்கும்போதுதான் மெய்யான இலக்கிய இன்பத்தைப் பெறமுடியும்.

இச் சொற்களுக்கு பலவிதப் பொருள் அமைந்தாலும், அசைதல் என்ற பொருளில் வரும் இடம் அல்லது சூழலை ஆய்வோம்.

முதலாவதாக இந்தச் சொற்களுக்குத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) தரும் பொருள்களைப் பார்ப்போம்.

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

துளங்கு - தல்  To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

இப்போது பத்துப்பாட்டில் இவற்றின் வழங்கிடங்களைப் பார்ப்போம்.

1. அலங்குதல் - இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.

        பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298

        நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

        முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144

        அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161

ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல். தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை நன்கு காணலாம். எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில் ஆடுவது அலங்குதல். அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.

அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும். அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே. இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும். அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.

கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை அலங்கல் எனப்பட்டது எனலாம்.

அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில் அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட ஒருவகை அசைவையே குறிக்கிறது. அவற்றில் சில:

அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12

அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

பரிபாடல் அடியைப் பாருங்கள். அருவி எப்படி அலங்கும்? இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.

அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்

மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15: 19-21

பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்! ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால் அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர். இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.

2. துயல்(லு) - (வி) அலை, அசை, ஊஞ்சலாடு, swing, wave, sway

துயல், துயல்வரும் ஆகிய சொற்களும் அலங்கல் போன்று ஒரு நிலைப்புள்ளியைச் சார்ந்த அசைவையே குறிப்பன. எனினும் இயக்கத்தில் இவை வேறுபட்டன.

வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79  

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86  

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 207  

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164  

அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல - சிறு 2  

துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265

சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் - பெரும் 161  

வான் கழல், துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ - குறி 127 

இங்கு வரும் முதல் அடியிலேயே மாலை துயல்வர என்று காண்கிறோம். இங்கு, திருச்சீரலைவாயிலில் விரைந்துவரும் களிற்றின் மீதமர்ந்து வரும் முருகனைப் பற்றிக் கூறும் புலவர், அவ்வாறு விரைந்து வரும் களிற்றின் நெற்றியில் கிடக்கும் வாடாத மாலையாகிய பொன்னரி மாலையின் அசைவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ஓடை என்பது யானையின் நெற்றிப்பட்டம் - முகபடாம் எனப்படும். இந்த நெற்றிப்பட்டத்திற்கு மேலே தங்க மாலை அணியப்பட்டுள்ளது. யானை தலையைக் கீழும் மேலும் ஆட்டிக்கொண்டு விரைந்துவரும்போது முகபடாத்துடன் சேர்ந்து மாலையும் குதித்துக் குதித்து ஆடும் அல்லவா? அந்த முன்-பின்னான ஆட்டமே துயல்வருதல். குதிரையின் தலையில் இருக்கும் உளை எனப்படும் தலையாட்டம் (hair plume) குதிரை நடக்கும்போது எவ்விதம் ஆடும்? ஊட்டு உளை துயல்வர என்று பொருநராற்றுப்படை கூறுவதும் இதுவே. காது வளர்த்த பாட்டிமார், தங்கள் தலைகளை ஆட்டிப் பேசும்போது அவர்களின் காதுகளில் தொங்கும் தண்டட்டி எனப்படும் குழைகள் எவ்வாறு ஆடும்? சிறு குழை துயல்வரும் காதின் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதுவும் இதுவே. சிறுபாணாற்றுப்படையின் புகழ்பெற்ற ஆரம்ப உருவகமான நிலமடந்தையின் அணிமுலை துயல்வரும் ஆரத்தின் ஆட்டமும் இதுவே.

எனவே, ஒரு புள்ளியை நிலையாகக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது துயல்தல் ஆகும்.

அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு

...

N. Ganesan

unread,
Dec 31, 2014, 10:47:19 AM12/31/14
to mint...@googlegroups.com

On Wednesday, December 31, 2014 6:04:34 AM UTC-6, ருத்ரா இ.பரமசிவன் wrote:
மதிப்பிற்குரிய முனைவர் திரு.பாண்டியராஜா அவர்களே

பருவ வானத்து பால் கதிர் பரப்பி
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
            ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு- சிறு 250-253

இந்த வரிகளில் ஊர்தல் எனும் மெதுவாய் நகர்வதை அந்த திங்களின் ஒளி வட்ட நகர்வைக்கொண்டு அழகாய் விளக்கியுள்ளீர்கள்.அதில் "நோன் குறட்டு "என்ற சொல் உற்று நோக்கத்தக்கது.அந்த சக்கரத்தின் "கட கடத்த"ஒலியை அது காட்டுகிறது.மனிதனின் "குறட்டை"ஒலியும் அது தானோ.சக்கரம் அச்சில் "பிடிப்பு" ஏற்படுத்திக்கொள்வதில் அது நைகிறது (நோன்)
குறட்டு என்பதற்கு வலுவான பிடிவாதம் என்ற பொருளும் வருகிறது.

குறடு + ஆரம் = குறட்டாரம்

N. Ganesan

unread,
Dec 31, 2014, 11:02:07 AM12/31/14

’செறிந்த குறங்கு’ - தொடையைச் சொல்வது இடுப்பைக் கால்பிடிக்கும் இடத்தில் இருப்பதாலா?

குறங்கு kuṟaṅku , n. perh. குறுகு-. 1. [T. kuruvu.] Thigh; துடை. செறிந்த குறங்கின் . . . அஃதை (அகநா. 96). 2. [K. koṟakalu.] Branch channel; கிளைக்கால். (S.I.I. ii, 352.) 3. Clasp, catch, link; கொக்கி. (W.)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 8, 2015, 6:24:38 AM1/8/15
to mintamil

வணக்கம்.

காளையார்கோயில் புராணம் சுவர்னவல்லி திருமணப்படலம் பாடல் எண் 9

...மயனுமவ்வாறுநீலமணியினிற்குறடுவேய்ந்து

நயனுறுசெம்மணித்தூணாயிரநாட்டிமீது

வியனுறுமாடகத்தின்விளங்குபோதிகைபொருத்தி

வெயிலுறுவச்சிரத்தாலுத்திரம்விரவவிட்டு...

அன்பன்

கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 8, 2015, 7:03:12 AM1/8/15
to mintamil

வணக்கம்.

காளையார்கோயில் புராணம் சுவர்னவல்லி திருமணப்படலம் பாடல் எண் 9

...மயனுமவ்வாறுநீலமணியினிற்குறடுவேய்ந்து

நயனுறுசெம்மணித்தூணாயிரநாட்டிமீது

வியனுறுமாடகத்தின்விளங்குபோதிகைபொருத்தி

வெயிலுறுவச்சிரத்தாலுத்திரம்விரவவிட்டு...

அன்பன்

கி.காளைராசன்

2014-12-31 21:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Jan 8, 2015, 11:25:43 AM1/8/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
அன்புள்ள காளை அவர்களுக்கு,
தாங்கள் குறிப்பிட்ட இடத்தில் குறடு என்பதற்கு எழுதகம் (Cornice) என்று பொருள். அடுத்த அடியில் தூண் என வருவதாலும் இது உறுதியாகிறது. தூணின் உச்சியில் உள்ள வேலைப்பாடுள்ள பிதுக்கம்தான் இது. ஆனால் நான் குறிப்பிட்டுள்ள பாடலில் குறடு என்பது மாட்டு வண்டி, தேர் ஆகியவற்றில் அச்சு கோக்கும் இடம்.
குறடு என்பதற்கு இன்னும் பல பொருள் உண்டு.
நன்றி,
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 8, 2015, 11:58:23 AM1/8/15
to Pandiyaraja Paramasivam, mintamil

வணக்கம் ஐயா.

On 08-Jan-2015 9:55 pm, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> அன்புள்ள காளை அவர்களுக்கு,
> தாங்கள் குறிப்பிட்ட இடத்தில் குறடு என்பதற்கு எழுதகம் (Cornice) என்று பொருள். அடுத்த அடியில் தூண் என வருவதாலும் இது உறுதியாகிறது. தூணின் உச்சியில் உள்ள வேலைப்பாடுள்ள பிதுக்கம்தான் இது.

வட்டவடிவ அறை. அதன் நடுவே ஒற்றைத் தூண். தூணின் மேலே வண்டிச்சக்கரத்தில் உள்ளது போன்ற ஓர் குறடு. அதில் ஆரக்கால்கள் போன்று அமைத்துக் கூறை வேய்ந்திருப்பர் எண்ணினேன் ஐயா.

நாளை தொடர்புடைய பாடல்கள் அனைத்தையும் பதிப்பிக்கிறேன் ஐயா.

Pandiyaraja

unread,
Jan 9, 2015, 2:35:15 AM1/9/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
அனைவருக்கும் மிக்க நன்றி. ஏற்கனவே கொடுக்கப்பட்ட சொற்களுக்கான விளக்கங்கள் தொடர்ந்துவருவதற்கிடையில் மற்றுமொரு நகர்வுச் சொல் வருகிறது. இது இயல் என்னும் வினைச்சொல்.
ப.பாண்டியராஜா

சங்கச் சொல்வளம்

2. நகர்வுகள்

உயிர்கள் அல்லது பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்வதையே நகர்வு (movement) என்கிறோம். இங்கு இவர்தல், இரிதல், ஊர்தல், இயலுதல் என்ற நான்குவிதமான நகர்வுகளைப் பற்றிக் காண்போம்.

2.4. இயலுதல்

இயல் என்ற வினைச்சொல்லுக்கு இப்போது கூடியதாகு (Be possible) என்ற பொருளே கொள்ளப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் நட அல்லது உலாவு என்ற பொருளிலேயே இச் சொல் கையாளப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மயில்களும், இளம்பெண்களும் நடந்துவருவதையே இயல் என்ற சொல்லால் குறிக்கின்றனர்.

வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை - மலை 509
மெல்ல இயலும் மயிலும் அன்று - கலி 55/13
பீலி மஞ்ஞையின் இயலி கால - பெரும் 331
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி/ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு - குறு 264/2,3
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் - அகம் 82/9
என்பன மயிலின் நடையைக் குறிப்பன.
அன்னிமிஞிலியின் இயலும்/நின் நல தகுவியை முயங்கிய மார்பே - அகம் 196/12,13
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி/திண் சுவர் நல் இல் கதவம் கரைய - மது 666,667
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி/வந்திசின் வாழியோ மடந்தை - ஐங் 175/2,3
மை அணல் காளையொடு பைய இயலி/பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை - ஐங் 389/2,3
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி/கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல - பதி 78/5,6
இன் நகை விறலியொடு மென்மெல இயலி/செல்வை ஆயின் செல்வை ஆகுவை - புறம் 70/15,16
என்பன இளமங்கையரின் நடையைக் குறிப்பன.
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
  மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் - நற் 264/3,4
நன் மா மயிலின் மென்மெல இயலி
  கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது - மது 608,609
விரை வளர் கூந்தல் வரை வளி உளர
  கலவ மஞ்ஞையின் காண்வர இயலி - புறம் 133/4,5
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி
  கையறு நெஞ்சினள் அடைதரும் - அகம் 279/15,16
என்பன மயில் போல் இயலும் இளமங்கையரின் நடையைக் குறிப்பன
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது - நற் 260/3
வினை அமை பாவையின் இயலி நுந்தை - நற் 362/1
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி/வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த - புறம் 79/3,4
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்/வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை - நற் 194/3,4
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் - கலி 52/6
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி/செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்/ யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்து - அகம் 332/6,7, 8

என்பன களிற்றின் நடையையும், களிறு போன்ற தகைமை உள்ளோரின் நடையையும் குறிக்கின்றன. இவை முரணாகத் தெரியவில்லையா?

இதனைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் முதலில் மயிலின் நடை எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ளவேண்டும்.

(திரு.துரை அவர்கள் இங்கு ஒரு நல்ல அசைபடத்தைக் கொடுப்பாரா?)

மயில் நடக்கும்போது அதன் கால்களைக் கவனியுங்கள். உறுதியாக எட்டு எடுத்துவைப்பதைக் காணலாம். அதில் தயக்கம் இல்லை. தளர்வு இல்லை. உடல் நிமிர்ந்து இருக்கும். அதில் ஒரு தன்னம்பிக்கை இருக்கும். ஆக, தயக்கமோ, தளர்வோ, அச்சமோ, கூச்சமோ இல்லாமல் துணிச்சலுடன் கால்களை எடுத்துவைத்து நடப்பதே இந்த இயலுதல். இங்கே மெல்ல இயலும், மென்மெல இயலி என்று வரும் தொடர்கள் மெதுவாகச் செல்வதையே குறிக்கின்றனவேயொழிய தயக்கத்தைக் குறிக்கவில்லை. மை அணல் காளையொடு பைய இயலும் பாவையின் நடையில் தயக்கமும் அச்சமும் இருக்கமாட்டா அன்றோ!

மதுரை மாநகரில், கணவரின் முயக்கத்தில் இனிது துஞ்சிய காதல் மனைவியர், காலையில் விழித்துத் தம் அன்றாடப் பணியைத் தொடங்க எழுந்து வந்து வாசலைத் திறக்கும் காட்சியை மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் விவரிக்கிறார்:

நயந்த காதலர் கவவுப் பிணி துஞ்சி
      புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி
      கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய
      ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி
      திண் சுவர் நல் இல் கதவம் கரைய மதுரைக். 663-667

காலின் கொலுசுகள் ‘கலீர்-கலீர்’-என்று தெழிக்க அவர்கள் நடந்து வருகிறார்களாம். அத்துணை சுறுசுறுப்பு. அதுவே இயலுதல்.

ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2015, 6:26:54 AM1/9/15
to Pandiyaraja Paramasivam, mintamil

வணக்கம்.

காளையார்கோயில் புராணம் சுவர்னவல்லி திருமணப்படலம் பாடல் எண் 9

...மயனுமவ்வாறுநீலமணியினிற்குறடுவேய்ந்து

நயனுறுசெம்மணித்தூணாயிரநாட்டிமீது

வியனுறுமாடகத்தின்விளங்குபோதிகைபொருத்தி

வெயிலுறுவச்சிரத்தாலுத்திரம்விரவவிட்டு... 

On 08-Jan-2015 9:55 pm, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:

>
> அன்புள்ள காளை அவர்களுக்கு,
> தாங்கள் குறிப்பிட்ட இடத்தில் குறடு என்பதற்கு எழுதகம் (Cornice) என்று பொருள். அடுத்த அடியில் தூண் என வருவதாலும் இது உறுதியாகிறது. தூணின் உச்சியில் உள்ள வேலைப்பாடுள்ள பிதுக்கம்தான் இது.

வட்டவடிவ வீடு(அல்லது அறை). அதன் நடுவே ஒற்றைத் தூண். தூணின் மேலே வண்டிச்சக்கரத்தில் உள்ளது போன்ற ஓர் குறடு. அதில் ஆரக்கால்கள் போன்று அமைத்துக் கூறை வேய்ந்திருப்பர் எண்ணினேன் .
என்ற முகவரியில் பாடல்கள் உள்ளன ஐயா.

துரை.ந.உ

unread,
Jan 9, 2015, 7:36:00 AM1/9/15
to Groups, Pandiyaraja Paramasivam, Kalairajan Krishnan

2015-01-09 13:05 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

2.4. இயலுதல்

​மயில் 

​​(பெண்ணுக்கு ஆண்மயிலை ஒப்புமைக்கொளவது சரியா ஐயா ?)

​யானை 

அளவுவாரியாக 

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Pandiyaraja

unread,
Jan 9, 2015, 12:54:42 PM1/9/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
திரு.காளை அவர்களுக்கு,
இத்துடன் எனக்குத் தெரிந்த விளக்கத்தை அளித்திருக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

மயனுமவ்வாறுநீலமணியினிற்குறடுவேய்ந்து

நயனுறுசெம்மணித்தூணாயிரநாட்டிமீது

வியனுறுமாடகத்தின்விளங்குபோதிகைபொருத்தி

வெயிலுறுவச்சிரத்தாலுத்திரம்விரவவிட்டு

10

மரகதப்பலகையெங்கும்வயங்கிடப்பரப்பிச்செம்மை

மயனும் அவ்வாறு நீலமணியினில் குறடு வேய்ந்து

நயனுறு செம்மணித் தூண் ஆயிர(ம்) நாட்டி மீது

வியனுறு மாடகத்தின் விளங்கு போதிகை பொருத்தி

வெயிலுறு வச்சிரத்தால் உத்திரம் விரவ இட்டு

மரகதப் பலகை எங்கும் வயங்கிடப் பரப்பி ….

மயன் திருமண மண்டபம் கட்டுவதை இப் பகுதி விவரிக்கிறது. ஒரு திறந்த வெளியில் ஒரு மண்டபம் அமைப்பது எப்படி?

குறடு என்பதற்கு Cornice on a wall or column; என்று பேரகராதி (தமிழ் லெக்சிகன்) கூறுவதை எடுத்துக்கொள்ளலாம். Cornice என்பதற்கு The topmost projecting part of an entablature என்று Wordweb பொருள் கூறுகிறது. Entablature என்பதற்கு the structure consisting of the part of a classical temple above the columns between a capital and the roof என்று அதுவே விளக்கம் கூறுகிறது. குறடு என்பது தூணில் உள்ள உச்சிப்பகுதி. அதுவே மேல் தளத்தைத் தாங்குகிறது. எனவே அது தூணைக்காட்டிலும் அகலமாக இருக்கப் பிதுக்கமாக அமைக்கப்படுகிறது.

இது மேனாட்டுக் கட்டடக் கலை அமைப்பு என்று கூறலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் தூண்களைப் பாருங்கள்.

இங்கும் அதே நான்கு பகுதிகளைக் காண்கிறீர்கள். மேலே இருப்பதுதான் குறடு. அது கூரையைத் தாங்குகிறது. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் உள்ள தொலைவைப் (Span) பொருத்து இதன் நீளம் மாறும்.

இந்தக் குறட்டில் நீலமணிகள் பதிக்கிறார்கள். வேய் என்பதற்குப் பதித்தல் (to set, as gems) என்ற பொருள் உண்டு எனப் பேரகராதி கூறுகிறது. நீலமணி வேய்ந்த குறடு மாட்டிய தூண் ஆயிரம் நாட்டி என்று பொருள் கொள்ளவேண்டும். இந்தத் தூண்களுக்கு இடையே குறுக்குக்கட்டை (போதிகை)யை வைத்து அதனைத் தூணுடன் சேர்த்து முறுக்காணி (Screw - மாடகம்) யினால் இறுக்குகிறார்கள். இந்தக் குறுக்குக்கட்டைகளின் மேல் வெயிலில் நன்கு காய்ந்த வச்சிரமேறிய உத்திரக்கட்டைகளை விரவுகிறார்கள். இந்த உத்திரங்களின் மீது மரகதம் பதித்த பலகையைப் பரப்பினால் மண்டபம் தயார்.

ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2015, 8:01:26 PM1/9/15
to Pandiyaraja Paramasivam, mintamil

வணக்கம் ஐயா .
படங்களுன் கூடிய நுட்பமான விளக்கத்திற்கு மிகவும் நன்றியுடையேன். தங்களது இந்த விளக்கத்தை "கானப்பேரெயில்" இழையில் சேர்த்துக்கொள்ளத் தங்களது அனுமதியை வேண்டுகிறேன் ஐயா.

Pandiyaraja

unread,
Jan 9, 2015, 10:41:48 PM1/9/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
ஐயா காளை!
இது என்னுடைய விளக்கம்தான். முறையாகத் தமிழ் கற்றறிந்தோரிடம் (தாங்கள் உட்பட) காட்டிச் சரியா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள். சரியென்று பட்டால் தாங்கள் விரும்பும்விதத்தில் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். என் அனுமதி உங்களுக்கு எப்போதும் உண்டு.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Jan 9, 2015, 11:04:30 PM1/9/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
அன்புள்ள  துரை ஐயா!
இங்கு பெண்ணின் நடை மயிலின் நடைக்குத்தான் ஒப்பிடப்படுகிறது. நடையின் இயல்புக்கு அது உவமை. பெண்ணின் கூந்தல் ஆண்மயிலின் பீலிக்கு ஒப்புமைகொள்ளப்படுகிறது. ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் அமைத்து அதில் தன் காதலியை அமர்த்திக் காதலன் ஆட்டும்போது அவளின் கூந்தல் ஆடுமயில் பீலியின் பொங்குகிறது என அகம் 385 கூறுகிறது. இது உருவத்திற்கும் பொலிவுக்கும் ஒப்புமை. அதைப்போலத்தான் இங்கு நாம் காண்பது நடைக்கு ஒப்புமை.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 10, 2015, 2:40:29 AM1/10/15
to Pandiyaraja, mintamil
வணக்கம் ஐயா.

2015-01-10 9:11 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
இது என்னுடைய விளக்கம்தான். முறையாகத் தமிழ் கற்றறிந்தோரிடம் (தாங்கள் உட்பட) காட்டிச் சரியா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள்.
தங்களது விளக்கம் மிகவும் சரியாகவே உள்ளது ஐயா. 
எனது நெறியாளர் அம்மா வள்ளி அவர்களிடமும் விளக்கம் கேட்டுப் பொருள் புரிந்து கொள்வேன் ஐயா. 

சரியென்று பட்டால் தாங்கள் விரும்பும்விதத்தில் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். என் அனுமதி உங்களுக்கு எப்போதும் உண்டு.
தங்களது அன்புநிறைந்த ஒப்புதலுக்கு மிக்க நன்றி ஐயா.

Pandiyaraja

unread,
Feb 13, 2015, 12:43:14 PM2/13/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
சென்ற கட்டுரைக்குப் பின்னூட்டம் இட்டோர் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றி. வேறு அலுவல்களில் மூழ்கிவிட்டதால் இக் கட்டுரைக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இத்துடன் குறைதல்கள் பற்றிய சொற்களைப் பற்றிய கட்டுரை அனுப்பட்டுள்ளது.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

3.குறைத்தல்கள்

ஒரு வெள்ளரிக்காயை நன்றாகக் கழுவி ஒரு பலகையில் நீளவாக்கில் வைத்து ஓர் ஓரத்திலிருந்து கத்தியால் வெட்டிக்கொண்டே வருகிறீர்கள். இப்பொழுது காயின் நீளம் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது ஒருவகைக் குறைத்தல் அல்லது குறைதல்.

ஓர் ஊரில் ஒரு குறிப்பிட்ட இனத்தார் நிறையப்பேர் இருக்கிறார்கள். நாளாக ஆக அவர்களுக்கு வருமானம் இல்லை. ஒவ்வொரு குடும்பமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். ஊரில் அவர்களின் தொகை குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது இன்னொரு வகைக் குறைதல்.

ஓர் அருவி பெரும் வெள்ளப்பெருக்குடன் ஆர்ப்பரித்து விழுகிறது. நீர்வரத்து குறையக் குறைய அருவிநீரின் அளவும் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இதுவும் வேறோர் வகைக் குறைதல்.

இவை மூன்றுமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைதல்கள்தான். ஆனால் இலக்கியங்கள் இவற்றை வேறுபடுத்திக்காட்டுகின்றன. முதலாவது அகைதல், அடுத்தது அருகுதல். கடைசியானது நிழத்துதல். சங்க இலக்கியவழி இவற்றை ஆய்வோம்.

1. அகைதல் / அகைத்தல்

ஒரு உயரமான அண்டாவில் நீர் நிறைய இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு குழாய் இருக்கிறது. அந்தக் குழாயைத் திறந்து ஒரு குவளை நீர் பிடிக்கிறோம். அண்டாவில் நீர்மட்டம் குறையும். இன்னும் கொஞ்சம் நீர் பிடிக்கிறோம். நீர் மட்டம் மேலும் குறையும். இவ்வாறு குழாயைத் திறந்துவைத்தால் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.

அடுத்து, அந்தக் குவளையை அண்டாவின் மேல் பாகத்தில் உள்ளே விட்டு நேராக நீர் முகக்கிறோம். அப்போதும் நீரின் மட்டம் குறையும். இவ்வாறு அடுத்தடுத்துக் குவளையில் நீர் மொண்டுவருகிறோம். இவ்வாறு நீரை மொண்டுகொள்ளும்போதெல்லாம் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த இருவகைக் குறைதலுக்குமுள்ள வேறுபாடு என்ன?

முதலாவதில் நீர் வடிய வடிய, நீரின் உயரம் தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே வருகிறது. அடுத்ததில், ஒருமுறை நீர் மொள்ளும்போது நீரின் உயரம் சடார் என்று ஓரளவுக்குக் குறைகிறது. ஒவ்வொரு முறையும் நீர் மொள்ள மொள்ள நீரின் உயரம் சடார் சடார் என்று குறைந்துகொண்டுவருகிறது. நீரின் உயரம் குறைதல் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு நடக்கிறது. அறிவியல் வழக்கில், முதலாவது continuos அடுத்தது discreet. ஆப்பிளை எடைத்தராசில் நிறுத்து வாங்கினால் அது continuos. 1 கிலோ, 1¼ கிலோ, 1½ கிலோ என்று வாங்கலாம். எண்ணிக்கைக் கணக்கில் வாங்கினால் அது discreet. 1 பழம், 2 பழம் என்றுதான் வாங்கமுடியும். 1¼ பழம் கிடைக்காது!

ஒரு குளத்தின் மடைவழியாக வயலுக்கு நீர் பாயும். சில நேரங்களில் அருகில் இருக்கும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு ஒரே ஆள் அல்லது இரண்டு ஆட்கள் சேர்ந்து ஒரு கூடையின் மூலம் நீரை முகந்து முகந்து வயலுக்குப் பாய்ச்சுவர். இதைப் பற்றிக் கூற வந்த ஒரு புலவர் கூறுகிறார்,

கயன் அகைய வயல் நிறைக்கும்

மென்தொடை வன்கிழார் - மதுரைக்காஞ்சி 92,93

(கயன்=குளம்; அகைய=குறைய; தொடை=கட்டு; கிழார்=நீர்முகக்கும் கருவி)

குளத்துநீர் குறையும்படியாக (நீரை முகந்து)வயலை நிறைக்கும் மெல்லிய கட்டுக்களையுடைய வலிமையான பூட்டுப்பொறி' என்பது இதன் பொருள்.

அகைதல் அல்லது அகைத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டுக் குறைதல் அல்லது குறைத்தல் என்று பொருள்படும். ஒரு யானை மரத்தின் தளிருள்ள கிளைகளை ஒவ்வொன்றாக ஒடித்து-ஒடித்து உண்ணும். இதை,

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்  என்கிறது மலைபடுகடாம் (429)

(உம்பல்=யானை;முறி=தளிர்).

குளத்தில் மடை இருந்தால், அதன் வழியே நீர் வெளியே செல்லும்போதும் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆனால், இது தொடர்ச்சியாக நடைபெறும். எனவே இது ஒரு continuos process. எனவே இது அகைத்தல் அல்ல. ஒரு பொறியினால், நீரை முகந்து முகந்து வெளியே கொட்டும்போது, நீர் விட்டுவிட்டுத்தானே குறையும்! ஒரு முகத்தலுக்கும் அடுத்த முகத்தலுக்கும் இடைப்பட்ட சிறிய இடைவெளியில் நீர் குறைவதில்லை. எனவே, இது ஒரு discreet process. இந்த நுணுக்கமான வேறுபாட்டையும் குறிப்பிடுவதற்குப் புலவர் தெரிந்தெடுத்துள்ள சரியான சொல், அவரின் சொல்திறனையும் தமிழின் சொல்வளத்தையும் காட்டுகிறது அல்லவா!

2. அருகு / அருக்கு

மதுரை, தேனி மாவட்டங்களில் சில கிராமங்களில் குறைந்த அளவு வாழும் அந்தணர்கள் உண்டு. அவர்களின் இருப்பிடம் அக்ரகாரம் எனப்படும். இப்போதெல்லாம் அங்கு பிறந்து வளர்ந்தவர்கள் வெளியூர்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று தங்கிவிடுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து அவர்களின் பெற்றோரும் சென்றுவிட, அக் கிராமங்களில் அந்தணர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இப்படியாகத் தாமாகக் குறைவதை அருகுதல் என்றும், வேறு யாரோராலோ குறைக்கப்படுவதை அருக்குதல் என்றும் கூறுகின்றன நம் சங்க இலக்கியங்கள்.

பொருநரை உபசரிப்பதில் குன்றாத நாட்டமுடைய மன்னன் கரிகாலனைப் புலவர் முடத்தாமக் கண்ணியார் குறையாத பாசத்துடன் அவர்களைப் பார்க்கிறான் என்பதை இப்படியாக விவரிக்கிறார்:-

கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி,

வேளாண் வாயில் வேட்பக் கூறி,

கண்ணில் காண நண்ணுவழி இரீஇ,

பருகு அன்ன அருகா நோக்கமொடு – பெரும்பாணாற்றுப்படை 74 - 77

உறவினரைப் போல உறவுகொள்ளுதலை விரும்பி, தான் விருந்தோம்பல் செய்வதையே விரும்புவதாகக் கூறி, கண்ணுக்கு எதிராக இருக்கும்படி அருகிலே இருத்தி, கண்ணால் பருகிவிடுவதுபோல் குறையாத பார்வையால் –

என்பது இதன் பொருள். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். அது போலன்றி, அவன் பொருநரிடத்தில் அருகாத கனிவான பார்வை கொண்டிருந்தான் என்கிறார் புலவர்.

சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் ஆமூர் என்ற ஊரின் சிறப்பைக் கூறுங்கால்,

அந்தணர் அருகா அருங்கடி வியல் நகர் – சிறுபாணாற்றுப்படை - 187

என்கிறார். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இப்போதெல்லாம் பறவைகளின் வரத்து அருகியே காணப்படுகிறது என்று இப்போதும் சிலர் எழுதுவதைப் பார்க்கிறோம். எனவே அருகுதல் என்பது தாமாகவே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைதல் என்ற பொருள்படும்.

இனி, அருகு என்பதன் பிறவினையாக அருக்கு என்ற சொல்லும் ஆட்சியில் இருந்திருக்கிறது. இது பிறரால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படுதல் அல்லது குறைவுறுதல் எனலாம்.

ஆய் எயினன் என்ற வேளிர்குல மன்னன் ஒரு போரில் மிஞிலியுடன் போரிட்டு மாய்கிறான். அப்போது பெருந்துன்பம் கொண்ட வேளிர் மகளிர் போர்க்களத்துக்கு விரைந்து வருகிறார்கள். மாண்டுகிடக்கும் மன்னனைப் பார்த்துத் தம் கூந்தலில் சூடியுள்ள வண்ண மலர்ச் சரங்களைக் கையிலெடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துப் பிய்த்து எறிந்து அழுகிறார்கள். இதனைக் கூற வந்த புலவர் பரணர்,

குரூஉப் பூ பைம் தார் அருக்கிய பூசல் - அகம் 208/16
என்று கூறுகிறார். இவ்வாறு பூச்சரங்கள் குறைக்கப்படும்போது எழுந்த கூக்குரலை, பூந்தார் அருக்கிய பூசல் என்கிறார் புலவர்.
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகின்ற அல்லது குறைக்கப்படுகின்ற அருகு அல்லது அருக்கு என்பது இதே பொருளில் வரும் அகைய அல்லது அகைத்த என்ற சொல்லினின்றும் எவ்வாறு வேறுபடுகின்றது?
அகைதல் அல்லது அகைத்தலில், குறையும்போது ஓர் அழிவோ சிதைவோ ஏற்படுவதில்லை. ஆனால் அருகுதலிலும் அருக்குதலிலும் சிதைவு உண்டாகிறது. முதலில் சுவையாக இருந்த பால் பின்னர் புளிக்கத் தொடங்குகிறது அல்லவா! அவ்வாறு இல்லாத நோக்கமே அருகா நோக்கம். அந்தணர் நிறைய இருக்கும்போது பொலிவுடன் இருந்த இல்லங்கள், அவர்கள் அருகிய பின்னர் சிதைவுற்றும் பாழடைந்தும் போய்விடும் அல்லவா? அவ்வாறு நடக்காத ஊரே அந்தணர் அருகா வியல் நகர். 
திரிகடுகம் 50-ஆவது பாடலைப் பாருங்கள்:-
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்
உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்
இல் இருந்து எல்லை கடப்பாளும் இம் மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்
குடிமக்களைத் துன்புறுத்தி வரிவசூலிக்கும் மன்னனும், உண்மை சொல்லாப் பொய்மொழி மாந்தரும், தற்காத்துக்கொள்ளாத மனைவியும், மழையினை அருக்கும் கோள்களாவர் என்கிறது இப் பாடல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினால் மழை வளம் கரக்கும் என்கிறது பட்டினப்பாலை. அவ்வாறு திசைமாறிய கோள்களை ஒப்பர் இம் மூவரும் என்பது இதன் பொருள். மழை அற்றுப்போனால் என்ன நிகழும்? சிதைவும் வெறுமையும்தானே. இதனையே அருக்கும் கோள் என்கிறார் திரிகடுகத்தார்.
சீதையின் எண்ணத்தை மாற்ற முடியாத இராவணன் சீற்றங்கொண்டு இராம இலக்குவரையும் அவருடன் சேர்ந்த அனைவரையும் கொன்று அழிப்பேன் என்று சினந்து, யுத்தகாண்டம் மாயாசனகப் படலத்தில் கூறுவதைப் பாருங்கள்:-

தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்

யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத

மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட

தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் - யுத்2:17 90/2

      போரில் பகைவரைக் கொல்லக் கொல்ல படைபலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்தானே! பின்னர் அழிவும் சிதைவும் ஏற்படும் அல்லவா! எனவேதான் இராவணன் யாவரையும் கொன்று அருக்கி என்று கூறுவதாகக் கூறுகிறார் கம்பர்.

3. நிழத்து

உயர்ந்த ஒரு கோபுரத்தின் உச்சியில் இருக்கும் ஒரு பெரிய வெண்கலமணி ‘கணீர்’ என்று ஒலிக்கிறது. பின்னர் அந்த ஒலி சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தேய்ந்து மறைகிறது. சுற்றுப்புறச் சந்தடிகள் மணி ஒலியைச் சீக்கிரமாகவே அமுக்கி முழுங்கிவிடுகின்றன. இதுவே, நள்ளிரவாயிருந்தால், வேறு எந்தச் சந்தடியும் இல்லாத நேரத்தில் மணி ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தாலும் நீண்ட நேரத்துக்குக் கேட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் நிழத்துதல். முல்லைப்பாட்டில், தலைவனான அரசன் போர்மேற் சென்றிருக்கிறான். அவனுடைய பாசறைக் காட்சிகளை மிக அழகாகவும், வெகு விளக்கமாகவும் ஆசிரியர் கூறிக்கொண்டே வரும்போது நள்ளிரவு நெருங்குகிறது. அப்போது அங்கு இருந்த நீண்ட நாவினை உடைய மணியைப் பொழுது அறிவிப்போர் முழக்குகின்றனர். ஓங்கி ஒலித்த மணியின் ஓசை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இறுதிவரை நீண்ட நேரம் ஒலிப்பதைப் புலவர் நப்பூதனார்,

நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் – முல்லைப்பாட்டு 50

என்று கூறுகிறார். அது நள்ளிரவு நேரம். அரசனின் இருப்பிடம் வேறு. எனவே எங்கும் ஒரே அமைதி. எனவே மணியோசை இறுதிவரை ஒலித்து அடங்குகிறது. ஒருவேளை அது பகல் நேரமாயிருந்து, அந்நேரத்தில் வேறு அரவங்கள் இருந்திருந்தால் மணியோசை கடைசிவரை ஒலிக்காமல் சற்று நேரத்திலேயே அடங்கிப்போயிருக்கும். அவ்வாறு இடையில் சட்டென்று அடங்கிப்போகாமல் இறுதிவரை ஒலித்து மிக நுணுக்கமாக ஆகி மறைந்துபோவதே நிழத்தல்.

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32

என்கிறது தொல்காப்பியம். எனவே நிழத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மிகவும் நுணுகிப்போதல் என அறியலாம்.

இவ்வாறு நுணுகிக் குறையாமல் நின்றுபோவதை அடங்குதல் அல்லது அவிதல் எனலாம். உருமிக்கொண்டு வருகிற கருத்த மேகங்கள் இடி மின்னலுடன் பெருமழை பெய்து ஓய்ந்து போவதை,

உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்

பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/1,1

என்கிறது அகநானூறு. பெய்கின்ற மழை நின்றபின் அதன் ஒலி அடங்கிப்போவதையே மழை நின்று ஒலி அடங்கிய நள்ளிரவு என்கிறது இப் பாடல். அவிதலுக்கும் நிழத்தலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

மழை பெய்யாமல் வறங்கூர்ந்ததால் பெரிய மலையினின்றும் விழும் அருவி கொஞ்சம் கொஞ்சமாக நீர்வரத்துக் குறைந்து, நுணுகிப்போய் வறண்டுபோவதும் நிழத்தலே.

காட்டு விலங்குகளான யானை, காட்டுப்பன்றி போன்றவை தினைப்புனத்தை மேய்ந்து அல்லது தோண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகப் புனத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதும் நிழத்தலே. இதனை,

அருவி மா மலை நிழத்தவும் – பொருநராற்றுப்படை - 235

        நிழத்த யானை மேய் புலம் படர – மதுரைக்காஞ்சி - 303

        வாய் மடுத்து, இரும் புனம் நிழத்தலின் – குறிஞ்சிப்பாட்டு - 156,157

        விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலைபடுகடாம் - 193

ஆகிய அடிகள் வலியுறுத்தும்.

இத்தருணத்தில் இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். அகைதல் என்பது ஒருவகையான குறைதல் என்று கண்டோம். ஆனால் குறைதல் மட்டுமன்றி அகைதலுக்குத் தழைத்தல் (sprout) என்ற பொருளும் உண்டு.

குப்பைக் கீரை கொய்க் கண் அகைத்த

முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று - புறம் 159/9,10

என்ற புறநானூற்று அடிகள் மூலம் இதனை அறியலாம். சில வகைக் கீரைகளை வேருடன் பிடுங்காமல் நுனியில் இளந்தண்டுகளுடன் கிள்ளிப் பிடுங்குவார்கள். அவ்வாறு கிள்ளப்பட்ட இடங்களில் உள்ள கணுக்களிலிருந்து புதிய தளிர்கள் துளிர்விடும். இவ்வாறு துளிர்விடுதலையும் அகை என்ற சொல் குறிக்கும். இவ்வாறு குறைதலையும், துளிர்விடுதலையும் ஒரே சொல் குறிப்பது இச் சொல்லின் தனிச் சிறப்பாகும்.

ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 13, 2015, 1:31:17 PM2/13/15
to mintamil, Pandiyaraja Paramasivam, Kalairajan Krishnan
தங்கள் பதிவின் சிறப்பைக்கூற வார்த்தைகள் கிடைக்கவில்லை ஐயா.
1.அகைதல் 2.நிழத்தல் 3.அருகுதல் ஆகிய மூன்று சொற்களின் வேறுபாடுகளை அருமையாகச் சங்கப்பாடல்கள் வழி எடுத்துக்கூறி இன்றைய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்திக்கூறியுள்ளது வெகு சிறப்பு.

அருகு என்ற சொல் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. மற்ற இரு சொற்களை மீட்டெடுத்துக்காட்டியுள்ளீர்கள்.
அகை என்ற சொல் குறைதலையும் அவ்வாறு குறைந்த பகுதி வளர்தலையும் குறிக்கும் தனிச்சிறப்பு அருமை.

நன்றி.
சொ.வினைதீர்த்தான்

rajam

unread,
Feb 13, 2015, 2:59:17 PM2/13/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
அருமை, அருமை! 60 ஆண்டுகளுக்கு முன்னான என்னை இன்றைய என்னிலிருந்து தோண்டி எடுத்துவருகிறீர்கள்!!!

முன்னிரண்டும் (அகைதல்/அகைத்தல்; அருகு/அருக்கு) இலக்கணப் பார்வையில் தன்வினை/பிறவினை என்று நோக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். அருகம்புல்/அறுகம்புல் போன்ற சொற்களும் நினைவுக்கு வருகின்றன. 

மற்றபடி, 'நிழத்து' என்பதின் விளக்கம் என்பது எனக்கு மிகவும் பிடித்தது. 'நிழல்' என்றால் ஏதோ ஒரு கருப்பு நிறமானது என்று நினைக்கும் நினைப்பைச் சரி செய்கிறது. 

+++++++++++++
முற்பிறவியில் நான் செய்த பாவம் ... socio-anthro மக்களின்கீழ் வேலைபார்க்கும் நிலை அமைந்தது. தமிழைப்பற்றி அரைகுறைப் படிப்பை வைத்துப் பதவிகள் பெற்ற வெள்ளையர் என் தமிழ் ஆய்வைக் கேலி செய்தார்கள் -- உருப்பெருக்கிக் கண்ணாடியை வைத்துக்கொண்டு தரையில் தவழும் ஒருத்தியாகவே என்னைப் பாவித்தார்கள்; கணினிப்பயனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது என்னை "techie" என்று சொல்லிப் புறந்தள்ளினார்கள். செங்கிருதச் சொல்லாய்வு என்றால் வரவேற்றார்கள். தமிழ்ச்சொல் ஆய்வென்றால் அதை anecdotal என்றார்கள். பஞ்சுமிட்டாய் போன்ற பளபளப்பு ஆய்வுகளே கவர்ச்சி பெற்றன. இந்தப் பாவியரை மன்னியும் பரமபிதாவே!!!
+++++++++++++ 
இன்றும் தமிழில் எழுதமுடியாதவர் சொல்லுவது: Sangam literature is not a dictionary. One should not read Sangam literature as they would read New York Times.  
+++++++++++++ 

எது எப்படிப் போனாலும் நம் தமிழ்ப்பணி தொடரவேண்டும் என்று செயல்படும் உங்களுக்கு என் கணக்கிலா ஆதரவு. 

உங்களைப் போன்றவ்ருக்கு விருது கொடுக்காமல் ... (எழுதவே கை கூசுகிறது).

நல்வாழ்த்துடன்,
ராஜம்
...

Pandiyaraja

unread,
Feb 14, 2015, 3:35:32 AM2/14/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
மிக்க நன்றி திரு.வினைதீர்த்தான் ஐயா அவர்களே.
தாங்கள்  தங்களின் நெற்குப்பை மாணவர் பயிலரங்கம் இழையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளீர்கள்:
>>
இந்நிகழ்வில் நான் கரும்பலகையில் எழுதும்போது ஒரு செய்யக்கூடாத Spelling தவறுசெய்துவிட்டேன். பலகையை அழிக்கும்போது அதனைக்கண்டுவிட்டேன். சரியான சொல்லை 5 முறை இம்போசிசன் மாதிரி கரும்பலகையில் எழுதி தவறை ஒத்துக்கொண்டு spellingஐ மாணவர்களுக்கு உணர்த்தினேன். 
செய்த தவறுக்குப் பிராசித்தம் மட்டுமே உண்டு. மாற்ற முடியாது.
>>
இதோ என்னுடைய பிராயச்சித்தம்:
continuous
continuous
continuous
continuous
continuous

discrete
discrete
discrete
discrete
discrete

இந்தச் சொற்கள் என் கட்டுரையில் தவறாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவசரத்தில் கவனிக்காதது என் தவறுதான். இதனை ஐந்தைந்து முறை தட்டச்சு செய்தேன். Copy & Paste செய்யவில்லை!!
முன் வழிகாட்டிய தங்களுக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Feb 14, 2015, 3:50:43 AM2/14/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
பேரன்பும் மரியாதைக்கும் உரிய அம்மையீர்,
தங்களின் கடிதம் கண்டு உருகிப்போனேன். சொற்களைத்தான் மீட்டுருவாக்கம் செய்வதாக எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது உங்களையே உங்களுக்குள்ளிருந்து தோண்டிக்கொண்டுவருவதை என் கட்டுரைகள் செய்வது கேட்டு அகமிக மகிழ்கிறேன். தங்கள் ஊக்க மொழிகளுக்கு என் தலைசாய்த்த நன்றி பல.
விருது பற்றிக் கூறியிருப்பதுதான் என்னைக் கூசவைக்கிறது. நெடுங்காலமாகக் கணித அரங்கில் கால்பந்து ஆடிக்கொண்டிருந்த நான் காலங் கழித்து இப்போது கரையற்ற கடல்வெளியில் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறேன். அதில் நீந்தி மகிழ்ந்து அதன் கரையையும் கண்டவர்கள் தாங்கள். I know my limitations. மழலைக் குரலைக்கேட்டு மகிழும் தாயின் கைதட்டலாக அதனை எடுத்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 14, 2015, 4:28:04 AM2/14/15
to mint...@googlegroups.com
On 2/14/15, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

> discrete
இந்தச் சொற்கள் என் கட்டுரையில் தவறாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன.
அவசரத்தில் கவனிக்காதது என் தவறுதான். இதனை ஐந்தைந்து முறை தட்டச்சு
செய்தேன்.

பெரியர்!!
அன்புடன்

தேமொழி

unread,
Feb 14, 2015, 4:50:25 AM2/14/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com

On Friday, February 13, 2015 at 9:43:14 AM UTC-8, Pandiyaraja wrote:
சென்ற கட்டுரைக்குப் பின்னூட்டம் இட்டோர் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றி. வேறு அலுவல்களில் மூழ்கிவிட்டதால் இக் கட்டுரைக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இத்துடன் குறைதல்கள் பற்றிய சொற்களைப் பற்றிய கட்டுரை அனுப்பட்டுள்ளது.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

3.குறைத்தல்கள்

ஒரு வெள்ளரிக்காயை நன்றாகக் கழுவி ஒரு பலகையில் நீளவாக்கில் வைத்து ஓர் ஓரத்திலிருந்து கத்தியால் வெட்டிக்கொண்டே வருகிறீர்கள். இப்பொழுது காயின் நீளம் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது ஒருவகைக் குறைத்தல் அல்லது குறைதல்.

ஓர் ஊரில் ஒரு குறிப்பிட்ட இனத்தார் நிறையப்பேர் இருக்கிறார்கள். நாளாக ஆக அவர்களுக்கு வருமானம் இல்லை. ஒவ்வொரு குடும்பமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். ஊரில் அவர்களின் தொகை குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது இன்னொரு வகைக் குறைதல்.

ஓர் அருவி பெரும் வெள்ளப்பெருக்குடன் ஆர்ப்பரித்து விழுகிறது. நீர்வரத்து குறையக் குறைய அருவிநீரின் அளவும் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இதுவும் வேறோர் வகைக் குறைதல்.

இவை மூன்றுமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைதல்கள்தான். ஆனால் இலக்கியங்கள் இவற்றை வேறுபடுத்திக்காட்டுகின்றன. முதலாவது அகைதல், அடுத்தது அருகுதல். கடைசியானது நிழத்துதல். சங்க இலக்கியவழி இவற்றை ஆய்வோம்.

1. அகைதல் / அகைத்தல்

ஒரு உயரமான அண்டாவில் நீர் நிறைய இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு குழாய் இருக்கிறது. அந்தக் குழாயைத் திறந்து ஒரு குவளை நீர் பிடிக்கிறோம். அண்டாவில் நீர்மட்டம் குறையும். இன்னும் கொஞ்சம் நீர் பிடிக்கிறோம். நீர் மட்டம் மேலும் குறையும். இவ்வாறு குழாயைத் திறந்துவைத்தால் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.

அடுத்து, அந்தக் குவளையை அண்டாவின் மேல் பாகத்தில் உள்ளே விட்டு நேராக நீர் முகக்கிறோம். அப்போதும் நீரின் மட்டம் குறையும். இவ்வாறு அடுத்தடுத்துக் குவளையில் நீர் மொண்டுவருகிறோம். இவ்வாறு நீரை மொண்டுகொள்ளும்போதெல்லாம் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த இருவகைக் குறைதலுக்குமுள்ள வேறுபாடு என்ன?

முதலாவதில் நீர் வடிய வடிய, நீரின் உயரம் தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே வருகிறது. அடுத்ததில், ஒருமுறை நீர் மொள்ளும்போது நீரின் உயரம் சடார் என்று ஓரளவுக்குக் குறைகிறது. ஒவ்வொரு முறையும் நீர் மொள்ள மொள்ள நீரின் உயரம் சடார் சடார் என்று குறைந்துகொண்டுவருகிறது. நீரின் உயரம் குறைதல் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு நடக்கிறது. அறிவியல் வழக்கில், முதலாவது continuos அடுத்தது discreet. ஆப்பிளை எடைத்தராசில் நிறுத்து வாங்கினால் அது continuos. 1 கிலோ, 1¼ கிலோ, 1½ கிலோ என்று வாங்கலாம். எண்ணிக்கைக் கணக்கில் வாங்கினால் அது discreet. 1 பழம், 2 பழம் என்றுதான் வாங்கமுடியும். 1¼ பழம் கிடைக்காது! 

ஒரு குளத்தின் மடைவழியாக வயலுக்கு நீர் பாயும். சில நேரங்களில் அருகில் இருக்கும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு ஒரே ஆள் அல்லது இரண்டு ஆட்கள் சேர்ந்து ஒரு கூடையின் மூலம் நீரை முகந்து முகந்து வயலுக்குப் பாய்ச்சுவர்.

இதைப் பற்றிக் கூற வந்த ஒரு புலவர் கூறுகிறார்,

கயன் அகைய வயல் நிறைக்கும்

மென்தொடை வன்கிழார் - மதுரைக்காஞ்சி 92,93

(கயன்=குளம்; அகைய=குறைய; தொடை=கட்டு; கிழார்=நீர்முகக்கும் கருவி)

குளத்துநீர் குறையும்படியாக (நீரை முகந்து)வயலை நிறைக்கும் மெல்லிய கட்டுக்களையுடைய வலிமையான பூட்டுப்பொறி' என்பது இதன் பொருள்.

அகைதல் அல்லது அகைத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டுக் குறைதல் அல்லது குறைத்தல் என்று பொருள்படும். ஒரு யானை மரத்தின் தளிருள்ள கிளைகளை ஒவ்வொன்றாக ஒடித்து-ஒடித்து உண்ணும். இதை,

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்  என்கிறது மலைபடுகடாம் (429)

(உம்பல்=யானை;முறி=தளிர்).

குளத்தில் மடை இருந்தால், அதன் வழியே நீர் வெளியே செல்லும்போதும் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆனால், இது தொடர்ச்சியாக நடைபெறும். எனவே இது ஒரு continuous process.

அருகுதல்
continuous
 
:)) சரியா ஐயா 

Pandiyaraja

unread,
Feb 14, 2015, 6:19:06 AM2/14/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
மிக்க அருமை! தேமொழி அம்மையீர்! முன்னதை அகைத்தல் எனலாம். அகையப்படுவது குளம். அகைப்பவர்கள் அந்த இருவர். கயன் அகைய வயல் நிறைக்கிறார்கள். கணினிக் கில்லாடி இப்போது கற்பூரக் கில்லாடி ஆகியுள்ளார். இதன் ஒரு பதிவை அச்சு வடிவில் இணைத்துக்கொள்கிறேன்.
மீண்டும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா
...
It is loading more messages.
0 new messages