ஐயம்.. அய்யம்

821 views
Skip to first unread message

Suba.T.

unread,
Nov 15, 2014, 4:24:22 AM11/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர்களே,

சிலரது பதிவுகளில் ஐ என்பதன் பயன்பாடு தமிழ் சொற்களில் வரும் போது அய் என்ற வகையில் குறிக்கப்படுவதைக் காண்கின்றேன். 

உதாரணமாக ..
ஐயம் - அய்யம்
ஐயன் - அய்யன்

இவை இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணம் என்ன.. இதில் எது இலக்கணப்படி சரி.. எது தற்சமயம் தமிழக கல்வி போதனைப்படி பயன்பாட்டில் இருப்பது என்பதனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

அறிந்தோர் விளக்கினால் எனக்கு உதவும்.

சுபா

seshadri sridharan

unread,
Nov 15, 2014, 4:38:12 AM11/15/14
to mintamil
அய் சிந்து எழுத்துமுறை > இது மெல்லொலி > குறில் 

ஐ ஒட்டி எழுதும் எழுத்துமுறை > இது வல்லொலி > நெடில்  

சேசாத்திரி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Nov 15, 2014, 5:25:13 AM11/15/14
to mintamil
'ஐயா' என்று எழுதி வந்த நான், திரு.நரசய்யாவின் ஒரு இடுகையை படித்த பின், 'அய்யா' என்று எழுத ஆரம்பித்தேன்.

Kandiah MURUGATHASAN

unread,
Nov 15, 2014, 5:34:12 AM11/15/14
to mint...@googlegroups.com
திரு.சேசாத்திரி சிறீதரன் அவர்கள் கூறியது சரியானதுதான்.'சந்தேகப்படுகிறோம்' என்பதை 'ஐயப்படுகிறோம்' எனச் சொல்வதும் உண்டு. அய்யத்தில் மெதுமையான தன்மையும் ஐயத்தில் கடுமையயான தன்மையும்  உண்டு. 

ஐயப்படுதலில் நம்பிக்கையீனத்தின் உறுதி தெளிவாக உறுதிபடுத்தப்படுகிறது என்பது அபிப்பராயம். அய்யம் என்பது கொஞ்சம் இளகிய தன்மை போல் தெரிகிறது..

Venkatachalam Dotthathri

unread,
Nov 15, 2014, 6:56:51 AM11/15/14
to mintamil
ஓம்
கலைஞர் கருணாநிதி திருவள்ளுவர் அய்யன். என்றுதான் குறிப்பிடுகின்றார்.

‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே-வெள்ளைப்பரங்கியைத் துரை என்ற காலமும் பேச்சே!”
வெ.சுப்பிரமணியன் ஓம்

Dinesh Babu

unread,
Nov 15, 2014, 6:57:12 AM11/15/14
to mint...@googlegroups.com
நான் பொதுவாக...ஐ என்று எழுதியும் படித்தும் தான் வழக்கம்..
அய்..என்பதை .தமிழ் சரியாக...எழுத தெரியவில்லை என்று  தான் நினைத்ததுண்டு....

இதற்குள் ..இவ்வளவு விளக்கமா..

2014-11-15 16:04 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 15, 2014, 7:07:55 AM11/15/14
to mintamil
ஐயாவுக்கு 4 மாத்திரை

அய்யாவுக்கு 3 1/2 மாத்திரை.

இப்பிடி அரை மாத்திரையக் கொறச்சு போட்டீங்கன்னா அப்புறம் சர்க்கரை எப்படி குறையும்னு யாரோ கேக்கறாப்ல இருக்கே. :))

அன்புடன்,

தி.பொ.ச.

அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
மனமோ வயிறோ கெட்டுப் போனால்
மகிழ்ச்சி தொலைந்து போகும் - அதனால்
நல்லதை மட்டுமே நினைப்போம் ! - உயிர்க்கு
நல்லதை மட்டுமே உண்போம் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 15, 2014, 9:57:50 AM11/15/14
to mintamil

வணக்கம்

On 15-Nov-2014 2:54 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> நண்பர்களே,
>
> சிலரது பதிவுகளில் ஐ என்பதன் பயன்பாடு தமிழ் சொற்களில் வரும் போது அய் என்ற வகையில் குறிக்கப்படுவதைக் காண்கின்றேன். 
>
>
> உதாரணமாக ..
> ஐயம் - அய்யம்
> ஐயன் - அய்யன்
>
> இவை இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணம் என்ன.. இதில் எது இலக்கணப்படி சரி..

ஐயம் சரி
அய்யம் தவறு

எது தற்சமயம் தமிழக கல்வி போதனைப்படி பயன்பாட்டில் இருப்பது என்பதனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஐயம் என்ற சொல்லே பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது .

>
> அறிந்தோர் விளக்கினால் எனக்கு உதவும்.
>
> சுபா
>

Pandiyaraja

unread,
Nov 16, 2014, 3:43:52 AM11/16/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
அன்புடையீர்,
ஐயன் = அய்யன்?
 என்பதற்கு ஒரு விளக்கத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

ஐ = அய்?; ஔ = அவ்?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தக்காரர்கள் முதலில் தூக்கியெறியத் துடிப்பது ஐ, ஔ இரண்டையுமே. இந்த இரண்டும், இவை சேர்ந்த 18+18 = 36 உயிர்மெய்களும் என்னமோ தமிழுக்குத் தாங்கமுடியாத பெரும் பாரமாய்த் தோன்றுகிறது இவர்களுக்கு. ஔ என்பது ஒரு புதிய எழுத்து அல்ல. ஒ-வும் ள-வும் சேர்ந்த ஒரு கூட்டணிதான் இது. ஆங்கிலத்தில் c- யும், h-உம் சேர்ந்த கூட்டணிக்குக் க-என்ற ஒலி கிடைக்கிறது இல்லையா? அதைவிட t, i, o ஆகியவற்றின் கூட்டணிக்கு tio=ஷ என்ற புதிய ஒலி கொடுக்கப்படுகிறது. அதைப் போலத்தான் இதுவும். மேலும் கௌ, சௌ போன்றவற்றை எழுதுவதற்கும் புதிய எழுத்தோ, எழுத்துருவோ இல்லை. கெ-யில் இருக்கும் சின்னக் கொம்பையும், ள-வையும் ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ சேர்க்கவேண்டியதுதான். ஐ-யும், கை, சை, போன்றவற்றில் உள்ள இரட்டைச் சின்னக் கொம்பும் புதியவை. எனவே 2+18+18 = 38 எழுத்துக்கள் குறைகின்றன என்பது ஒரு பிரம்மையே. வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒன்றைச் செய்யும் ‘மனத்திருப்தி’ ஒருசிலருக்குக் கிடைக்கிறது என்பதைத் தவிர இதனால் யாருக்கும் ஒரு லாபமும் இல்லை.

தமிழில் 12 உயிர்கள் உண்டு. அவற்றுள் அ, இ, உ, எ, ஒ ஆகியவை குறில்கள் – ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை அளவு கொண்டவை. இவற்றுக்கு நேரான நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகியவற்றுக்கு இரண்டு மாத்திரை அளவு. இந்தக் கணக்கில் சேராமல் ஐ, ஔ தனித்து நிற்கின்றன. இவையும் நெடில்களே. மொழியியல்காரர்கள் இந்த இரண்டையும் உயிர் (Vowel) எனக் கொள்வதில்லை. இவற்றை dipthong என்கின்றனர். Dipthong என்பதன் பொருள் : A vowel sound that starts near the articulatory position for one vowel and moves toward the position for another என wordweb அகராதி கூறுகிறது. இப்பொழுது இவர்கள் கூறுவதை 2500 ஆண்டுகட்கு முன்னர் தொல்காப்பியர் கூறிவிட்டார்.

அகர இகரம் ஐகாரம் ஆகும்

அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்-மொழிமரபு-21,22

இதற்குப் பின் வந்த நன்னூல்(125), இலக்கணவிளக்கம்(35), முத்துவீரியம்(107) போன்றவையும் இதனையே கூறும். இலக்கணக்காரர்கள் இவற்றைப் போலி எழுத்துக்கள் என்ப. போலி என்றால் duplicate அல்ல - போல ஒலிப்பது. நச்சினார்க்கினியர் இதற்கு, “ அகரமும், இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல இசைக்கும், அது கொள்ளற்க” என்று உரை கூறுவார். ஐவனம் அஇவனம் எனவரும், (ஔவை அஉவை எனவரும்). ‘ஆகும்’ என்றதனான் இஃது இலக்கணம் அன்றாயிற்று என்பார் அவர். (ஒரு வேடிக்கை! இன்றைக்கு இதைத் தட்டச்சு செய்யும்போது a-வுக்கடுத்து  i-தட்டினால் அது ஐ-ஆக மாறிவிடுகிறது). அஇ, அஉ என அடுத்தடுத்து வரும் இரண்டு உயிர்களுக்கிடையே உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா! எனவே அஇ என்பது யகர உடம்படுமெய் பெற்று அயி என்றும், அஉ என்பது வகர உடம்படுமெய் பெற்று அவு என்றும் மாறுகின்றன. எனவேதான் கைலை என்பது கயிலை என்றும் மௌனம் என்பது மவுனம் என்றும் எழுதப்படுகின்றன. இப்படிக் கூறுவார் வேங்கடராசுலு ரெட்டியார்.

வடமொழியில் இவற்றின் சேர்க்கைகள் வேறாக இருக்கின்றன. அ+இ = ஏ, என்றும், அ+உ = ஓ என்றும் மாறுகின்றன. தேவ + இந்திர = தேவேந்திர; புருஷ + உத்தம = புருஷோத்தம. எனவே வடமொழியினின்றும் தமிழ் வேறுபட்டது எனக் காட்டத்தான் தொல்காப்பியர் இதனைக் கூறியுள்ளார் என்றும் கொள்ளலாம்.

ஒலிகளின் இந்தச் சேர்க்கையைப் பற்றிக் கூறிய தொல்காப்பியர், ஒலிகளைப் பற்றித் தான் கூறும் நூன்மரபில் இவற்றைக் கூறாமல், அடுத்த மொழிமரபில் இவற்றைக் கூறுகிறார். நூன்மரபு என்பது தான் எடுத்துக்கொண்ட நூலுக்கான மரபு. இது Postulate எனப்படும். ஆனால் மொழிமரபு என்பதை மொழியின் மரபு என்றும், மொழிகின்ற மரபு என்று கொள்ளலாம். இது axiom எனப்படும். இது தமிழின் / தமிழரின் மரபு என்று கூறுவதற்காகவே தொல்காப்பியர் இதனை மொழிமரபு என்ற இரண்டாம் இயலில் வைத்திருக்கிறார் எனலாம்.

இவற்றை அடுத்து, அடுத்த நூற்பாவில் அவர்,

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்

ஐ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் – தொல். மொழி. 23

என்று கூறுகிறார்.

“அகரத்தின் பின் இகரமேயன்றி, யகரமாகிய புள்ளி வந்தாலும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு மெய்பெறத் தோன்றும்” என்பர் நச்சினார்க்கினியர். “ஐவனம் அய்வனம் என வரும்” என்பார் அவர். ஆனால் வேங்கடராசுலு ரெட்டியார் இதனை மிக நுட்பமாக ஆராய்கிறார். ‘ஐயென் நெடுஞ்சினை’ என்றது ஐகாரம் என்னும் நெடிய சினையெழுத்து என்றபடி என்கிறார் அவர். மேலும் அவர், “இவ்வாசிரியர் முதல் எழுத்தினைச் சினை என்று வழங்குதல் இலர்; முதல் என்றே கூறுவர்.

நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் (உருபியல்.7)

என எடுத்துக்காட்டும் கொடுக்கிறார். (நீ + இன் = நின்) “ஆதலின் ‘சினை’ என்றது மொழியின் முதல் எழுத்தல்லாத எழுத்தினை என்று கோடல் அமைதி. மொழியின் இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரத்திற்கு அய் என்பது வரும் என்றவாறாகும். அ,இ- வுக்கு அடுத்து அ,உ –வைச் சொன்ன தொல்காப்பியர், இங்கே  அ+ய் = ஐ என்று கூறிவிட்டு, அடுத்து,

அகரத்து இம்பர் வகரப் புள்ளியும்

ஔ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

என்று கூறவில்லை.

“இவ்வாறு சூத்திரஞ் செய்யாததன் காரணம் புலனாகும். என்னையெனின், ஔகாரம் மொழியின் இடையிலும் கடையிலும் நிற்பது அன்மையின் அஃது அவ் என்றாதல் இல்லை” என்று மிக நுட்பமாக ஆய்ந்து கூறும் வேங்கடராசுலு ரெட்டியாரின் நுண்மாண்நுழைபுலம் வியந்து போற்றற்குரியது. இவ்வளவு நுட்பமாகத் தமிழை ஆய்ந்த தொல்காப்பியரின் மாண்புதான் என்னே!

அதாவது ஐயன் = அய்யன் என்பதில் தொல்காப்பியருக்கு உடன்பாடில்லை. ஆனால் தஞ்சை = தஞ்சய்; படையல் = படய்யல் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஏன் அதை மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று முழங்கையை உயர்த்திக்கொண்டு வருபவரிடம் சண்டை போடவேண்டாம். விட்டுவிடுவோம். அதை இப்படி எழுதலாம் என்பதற்காக அதுவே வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தரவில்லை.

ப.பாண்டியராஜா

பார்வை: தொல்காப்பியம் – உரைவளம் – எழுத்ததிகாரம் – மொழிமரபு , பதிப்பாசிரியர்-ஆ.சிவலிங்கனார் – வெளியீடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(அண்மையில் இப் பெருந்தகை காலமானார். அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவோம்)

seshadri sridharan

unread,
Nov 16, 2014, 4:22:20 AM11/16/14
to mintamil
2014-11-16 14:13 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

ஐ = அய்?; ஔ = அவ்?

இதற்குப் பின் வந்த நன்னூல்(125), இலக்கணவிளக்கம்(35), முத்துவீரியம்(107) போன்றவையும் இதனையே கூறும். இலக்கணக்காரர்கள் இவற்றைப் போலி எழுத்துக்கள் என்ப. போலி என்றால் duplicate அல்ல - போல ஒலிப்பது. நச்சினார்க்கினியர் இதற்கு, “ அகரமும், இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல இசைக்கும், அது கொள்ளற்க” என்று உரை கூறுவார். ஐவனம் அஇவனம் எனவரும், (ஔவை அஉவை எனவரும்). ‘ஆகும்’ என்றதனான் இஃது இலக்கணம் அன்றாயிற்று என்பார் அவர். (ஒரு வேடிக்கை! இன்றைக்கு இதைத் தட்டச்சு செய்யும்போது a-வுக்கடுத்து  i-தட்டினால் அது ஐ-ஆக மாறி விடுகிறது). அஇ, அஉ என அடுத்தடுத்து வரும் இரண்டு உயிர்களுக்கிடையே உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா! எனவே அஇ என்பது யகர உடம்படுமெய் பெற்று அயி என்றும், அஉ என்பது வகர உடம்படுமெய் பெற்று அவு என்றும் மாறுகின்றன. எனவேதான் கைலை என்பது கயிலை என்றும் மௌனம் என்பது மவுனம் என்றும் எழுதப்படுகின்றன. இப்படிக் கூறுவார் வேங்கடராசுலு ரெட்டியார்.

எனினும் ஐயா சிந்து முத்திரைகளில் ஐ என்பது அஇ என்றோ அல்லது அய் என்றோ தான் எழுதப்பட்டுள்ளது. அதே போல்  ஔ - அஉ என்றோ அல்லது அவ் என்றோ தான் எழுதப்பட்டது. 

Pandiyaraja

unread,
Nov 16, 2014, 6:39:30 AM11/16/14
to mint...@googlegroups.com
சிந்து முத்திரைகள் இன்னும் சரியாகவும் முழுமையாகவும் படிக்கப்பெறவில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. தங்களின் கூற்று அகில உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது ஒரு கொள்கைதானா?
ப.பாண்டியராஜா

seshadri sridharan

unread,
Nov 16, 2014, 10:47:33 AM11/16/14
to mintamil
2014-11-16 17:09 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
சிந்து முத்திரைகள் இன்னும் சரியாகவும் முழுமையாகவும் படிக்கப்பெறவில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. தங்களின் கூற்று அகில உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது ஒரு கொள்கைதானா?
ப.பாண்டியராஜா

உலகம் ஏற்க இன்னும் காலம் பிடிக்கும்.இந்த எழுத்து முறை முதன்முதலாக பேரா. மதிவாணன் என்பாரால் படிக்கப்பட்டது. அவரிடம் நான் அதைப் பயின்றேன்.

ங் > ன்+க் , ஞ் > ன் + ச்  என்று எழுதப்பட்டுள்ளது.  

மணிவண்ணன்

unread,
Nov 16, 2014, 12:39:33 PM11/16/14
to mint...@googlegroups.com
ஐகாரக்குறுக்கத்தில் ஐ அய் எனவும் ஔகாரக்குறுக்கத்தில் ஔ அவ் எனவும் ஆகுமல்லவா? 

Oru Arizonan

unread,
Nov 16, 2014, 5:41:46 PM11/16/14
to mint...@googlegroups.com
ஐ, ஔ, பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள், உயர்திரு பாண்டியராஜா அவர்களே!  

தற்பொழுது எழுத்துச் சீர்திருத்தம் என்று  பலரும் அலைவது எனக்குப் பிடிக்கவில்லை.  இப்படி மாற்றிக்கொண்டே போனால், கல்வெட்டுகளைப் படிக்கவென்று தனி வல்லுனர்கள் இருப்பதுபோல, தமிழ் மொழியின் எழுத்துமாற்றங்களையும் படித்தறிய வல்லுனர்களின் தேவை ஏற்பட்டு விடும் என்று அச்சமுறுகிறேன்.

தங்கள் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Nov 16, 2014, 8:49:43 PM11/16/14
to mint...@googlegroups.com
On Sunday, November 16, 2014 2:41:46 PM UTC-8, oruarizonan wrote:
ஐ, ஔ, பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள், உயர்திரு பாண்டியராஜா அவர்களே!  

தற்பொழுது எழுத்துச் சீர்திருத்தம் என்று  பலரும் அலைவது எனக்குப் பிடிக்கவில்லை.  இப்படி மாற்றிக்கொண்டே போனால், கல்வெட்டுகளைப் படிக்கவென்று தனி வல்லுனர்கள் இருப்பதுபோல, தமிழ் மொழியின் எழுத்துமாற்றங்களையும் படித்தறிய வல்லுனர்களின் தேவை ஏற்பட்டு விடும் என்று அச்சமுறுகிறேன்.

ஐ, ஔ எழுத்துச் சீர்திருத்தம் ஒருவரும் பேசுவதில்லை ஐயா. 

--------

” மொழியியல்காரர்கள் இந்த இரண்டையும் உயிர் (Vowel) எனக் கொள்வதில்லை. இவற்றை dipthong என்கின்றனர். Dipthong என்பதன் பொருள் : A vowel sound that starts near the articulatory position for one vowel and moves toward the position for another என wordweb அகராதி கூறுகிறது. இப்பொழுது இவர்கள் கூறுவதை 2500 ஆண்டுகட்கு முன்னர் தொல்காப்பியர் கூறிவிட்டார்.

அகர இகரம் ஐகாரம் ஆகும்

அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்-மொழிமரபு-21,22”

ஆங்கிலத்தில் எழுதும்போது இந்த டிப்தாங்ஸ் தொல். சூத்திரத்தை அப்படியே எழுதுவதுதான்.

ஐ =  ai; கை = kai.

ஔ = au; சௌ = cau

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 16, 2014, 8:59:26 PM11/16/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com

On Sunday, November 16, 2014 12:43:52 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
ஐயன் = அய்யன்?
 என்பதற்கு ஒரு விளக்கத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

அருமையான கட்டுரை.

இங்கேயும் பாருங்கள்,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 16, 2014, 9:04:37 PM11/16/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai
பாண்டியராஜா விளக்கிவிட்டார்கள்.
இங்கேயும் பார்க்கவும்,
ஆ கெழு கொங்கர் என்று தேவ் ஒரு காணொளி தந்தார்.
ஆக்களுக்கு முக்கியமான கோயில் மாலை கோயில்.
மாலை = மா+ஐ.  ஐ = ஐயன் = திருமால்.
 
சுபா

N. Ganesan

unread,
Nov 16, 2014, 9:13:01 PM11/16/14
to mint...@googlegroups.com
On Sunday, November 16, 2014 3:39:30 AM UTC-8, Pandiyaraja wrote:
சிந்து முத்திரைகள் இன்னும் சரியாகவும் முழுமையாகவும் படிக்கப்பெறவில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. தங்களின் கூற்று அகில உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது ஒரு கொள்கைதானா?
ப.பாண்டியராஜா

(1) சிந்து முத்திரைகள் எழுத்து எழுத்தாகப் படிப்பது பிழை. ஏனெனில் அப்போது இந்திய மொழிகளின் நெடுங்கணக்கு
கண்டுபிடிக்காத காலம். ஐபோனே இல்லாத காலத்தில், ஐபோனில் பேசுவதாக படம் காட்டுவது பிழை அல்லவா.

(2) தொல்காப்பியத்தில் வரும் ஐ, ஔ பிற்காலத்தவை. கி.பி. 1-3 நூற்றாண்டுகள்?
ஆனால், கல்வெட்டுச்சான்றுகள் அதற்கும் மிகப்பின்னே தான்.

(3) மலையாளம் ஐ, ஔ இல்லாமல் இருக்கிறது. உ-ம்: வாகசார்த்துப் பாட்டு,
தெலுங்கு கன்னடமும் தான்.

ஆனால், இது மிகப் பழையது என்று கண்டு “தொல்காப்பியர்” இலக்கணம் டிப்தாங்ஸ்-க்கு சொல்லியுள்ளார்.
எந்த நூற்றாண்டு? வடமொழிகள் ஏதாவது இலக்கணத் தாக்கமா? - 100 மில்லியன் டாலர் கேள்விகள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 16, 2014, 9:40:27 PM11/16/14
to mint...@googlegroups.com, vallamai

கூட்டொலிகள் பற்றிய பாடம்:

2.3.3 சங்க கால இலக்கியங்களில் ஐ, ஒள

    சங்க காலத்தில் தொல்காப்பிய இலக்கண நூலை அடுத்துத் தோன்றிய நூல்கள் சங்க இலக்கியங்கள் எனக் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் எவ்வாறு எழுதப்பட்டிருந்தன என்பதைக் காண்போம்.

    சங்க இலக்கியங்களில் ஐகாரம் , அகரமும் இகரமும் கூடிய ஒலியாகக் கருதப்பட்டு  என்று மட்டுமே எழுதப்பட்டது ; அய் என்று எந்த ஓர் இடத்திலும் எழுதப்படவில்லை. அதாவது சங்க இலக்கியங்களில்ஐவர், ஐந்து, ஐம்பது போன்ற சொற்கள் அய்வர், அய்ந்து, அய்ம்பதுஎன்றாற்போல எந்த ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. ஐவர், ஐந்து, ஐம்பதுஎன்றாற்போல மட்டுமே எழுதப்பட்டன.

    ஆனால் இதற்கு மாறாக, ஒளகாரமோ சங்க கால இலக்கியங்களில்ஒள என்றும் அவ் என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. பௌவம் (கடல்) என்ற சொல், பௌவம் என்றும் பவ்வம் என்றும் எழுதப்பட்டது. அதே போலக் கௌவை (அலர் அல்லது பழிச்சொல்) என்ற சொல், கௌவைஎன்றும், கவ்வை என்றும் எழுதப்பட்டது.

Pandiyaraja

unread,
Nov 16, 2014, 9:41:34 PM11/16/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி அரிசோனன் அவர்களே!
எழுத்துச் சீர்திருத்தம் என்பது இப்பொழுது செத்த பாம்பு ஆகிவிட்டது. அல்லது அடிவாங்கி, அடிவாங்கி மயங்கிக் கிடக்கிறது. யார் கண்டா? திடீரென்று எந்த்ப் புற்றுக்குள்ளிருந்தோ இன்னொருவிதப் பாம்பு வரலாம். இதுவே மயக்கம் தெளிந்து, அடிவாங்கிய கதை மறந்து மறுபடியும் படமெடுக்கலாம். இப்போதைக்குப் பிர்ச்சனை இல்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம். வருமுன் காப்பதற்குத்தான் - இந்த மாதிரிக் கட்டுரைகள்.

நான் எனது கட்டுரையை அனுப்பிய பிறகு வேறொரு கருத்து தோன்றியது. அதையும் இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.

தொல்காப்பியர் கூறிய அந்த மூன்று நூற்பாக்களையும் உற்றுப்பார்ப்போம்.

1.அகர இகரம் ஐகாரம் ஆகும்.
2. அகர உகரம் ஔகாரம் ஆகும்.
3. அகரத்து இம்பர் யகர மெய்ப்புள்ளி
ஐ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

இதனை நன்றாகப் பாருங்கள். அ-வும் இ-யும் சேர  ஐ பிறக்கும் என்கிறார் தொல்ஸ்.

இதனை அ + இ = ஐ என எடுத்துக்கொள்கிறார்கள். அது முதல் தவறு.

அப்புறம் இதைத் திருப்பிப்போட்டு
ஐ = அ + இ எனக் கொள்கிறார்கள். இது அடுத்த தவறு.

உண்மையில் இதனை

அ + இ => ஐ    (ஆகும்)
அ + உ => ஔ   (ஆகும்)
அ + ய் => ஐ  (தோன்றும்)

என்றுதான் கொள்ளவேண்டும்.

எங்கேயாவது இவை சேர்ந்தால் இவ்வாறு கொள்க என்றுதான் நம் தாத்தா கூறியுள்ளார்.

அதாவது,

If this happens then take like this.

கணினி மொழிகளில் இது ஒரு முக்கியமான கூற்று (If statement).

கணிதமுறைத் தர்க்கவியலில் (Mathematical logic) இதனை A implies B (A => B) என்பர்.

A => B எனில் B => A ஆகாது. Counter example கொடுக்கமுடியும்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

if (gold) then (will shine).

ஆனால், if (shines) then (gold) என்று சொல்லமுடியாது.

எனவே அ + இ => ஐ என்றால் ஐ => அ + இ என்று கூற முடியாது.

இதைப் போலத்தான் மற்ற இரண்டும்.

இன்னும் வேறுவகையில் சொல்லப்போனால்,

அ + இ => ஐ என்பது சேர்ப்பு விதி. மற்ற இரண்டும் அவ்வாறே.

இதைத் திருப்பிப்போட்டு,
அவற்றைப் பிரிப்பு விதியாக மாற்ற முயன்றதால் வந்த வினைதான் ஐ = அ + இ.

எனக்கு இலக்கணம் அவ்வளவு ஆழமாகத் தெரியாது. எங்கேயாவது வேறு ஏதாவது நூற்பா (தொல்காப்பியத்தில்) இருந்தால் சொல்லுங்கள். அதனையும் ஆய்வோம்.
நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Nov 16, 2014, 9:42:17 PM11/16/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
பேரா. சு. பசுபதி, சந்தவசந்தம், 2011-ல்

”ஒரு அரங்கில் , 'ஔ’ வை தமிழில் முழுதும் ஒழித்து, ‘அவ்’ பயன்படுத்தலாமே என்ற ஒரு கருத்து எழுப்பப்பட்டது..
 
இதைப் பிடிக்காத ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுந்து, கேட்டார்:
 
“ ஔவைப் பாட்டி சிறுவயதில் மிக அழகாக இருந்தாள்”
 
இந்த வாக்கியத்தில் , “ஔ” க்குப் பதிலாக “அவ்” 
இருந்தால்...? “ “

N. Ganesan

unread,
Nov 16, 2014, 9:48:32 PM11/16/14
to mint...@googlegroups.com
ஆங்கிலத்தில் ஐ = என்றும், ஔ = என்றும் எழுதுகிறோம்.
அதன் தாக்கமா மதிவாணரின் கூற்று: ng > ன்+க் , nj > ன் + ச் ?

N. Ganesan

unread,
Nov 16, 2014, 9:56:02 PM11/16/14
to mint...@googlegroups.com
On Sunday, November 16, 2014 6:41:34 PM UTC-8, Pandiyaraja wrote:
மிக்க நன்றி அரிசோனன் அவர்களே!
எழுத்துச் சீர்திருத்தம் என்பது இப்பொழுது செத்த பாம்பு ஆகிவிட்டது. அல்லது அடிவாங்கி, அடிவாங்கி மயங்கிக் கிடக்கிறது. யார் கண்டா? திடீரென்று எந்த்ப் புற்றுக்குள்ளிருந்தோ இன்னொருவிதப் பாம்பு வரலாம். இதுவே மயக்கம் தெளிந்து, அடிவாங்கிய கதை மறந்து மறுபடியும் படமெடுக்கலாம். இப்போதைக்குப் பிர்ச்சனை இல்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம். வருமுன் காப்பதற்குத்தான் - இந்த மாதிரிக் கட்டுரைகள்.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் முதல்வர் முடிவுதான். விடுதலை ஆசிரியர் கி. வீரமணி
உ, ஊ உயிர்மெய் சீர்மையில் மாதிரிகளை அச்சிடுகிறார். அசை இலக்கணம் பெரியார்
வடிவில் எழுதினால் மாறுவதில்லை. அரிசோனன் சொல்வதுபோல் உ, ஊ உயிர்மெய்களை
விடுதலை எழுத்தில் படிக்க வல்லுனர் குழுவும் தேவையில்லை.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 16, 2014, 10:02:32 PM11/16/14
to mint...@googlegroups.com

On Sunday, November 16, 2014 6:41:34 PM UTC-8, Pandiyaraja wrote:
ai is a single unit  என்கிறீர்கள். அதனை அ+இ என்று பிரிக்க முடிவதில்லை.
அதனால் தான் அய் (ay) என்று எழுதினார்களோ. தமிழ் ப்ராமி கல்வெட்டுக்களில்
அய் தான். ஐ இல்லை. பிறகு காலம் செல்லச் செல்ல இலக்கண அறிவு
வடமொழிகளில் ஐ பற்றிச் சொல்ல தொடங்குகிறது. அது மெல்ல மெல்ல தமிழுக்கு
வருகிறது.

இன்னொரு கேள்வி: கல்வெட்டுக்களில் அய் தான்; -ஐ காணோம்.
அப்படியானால், சங்கப் புலவர்கள் கய் என்று எழுதிய சுவடிகள்
திருப்பி திருப்பி எழுதப் படும்போழ் கை என திருத்தப்பட்டதா? 

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Nov 16, 2014, 10:31:17 PM11/16/14
to mint...@googlegroups.com
உயர்திரு கணேசன் அவர்களே,

//அரிசோனன் சொல்வதுபோல் உ, ஊ உயிர்மெய்களை
விடுதலை எழுத்தில் படிக்க வல்லுனர் குழுவும் தேவையில்லை.//

தாங்கள் சொல்வது தற்பொழுது நிகழ்ந்த மாற்றத்தைப் பற்றி.  இந்த மாற்றம் நிகழ்ந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன?  இம்மாதிரி பலப்பல மாற்றங்கள் நிகழ்ந்து ஒரு சில நூற்றாண்டுகள் கழிந்தால், வல்லுனர்கள் கட்டாயம் தேவைப்படுவார்கள்.  அதைத்தான் நான் சொன்னேன்.  

எந்த மாற்றத்தைக் கொணர்ந்தாலும் தொலை நோக்கு வேண்டும்.  அமெரிக்க முதலாளித்துவம் மாதிரி கால் ஆண்டுக்குக் கால் ஆண்டு நோக்கு சரியாகுமா?

"நான் வந்தேன்" என்பதை "ந்ஆன் வ்அந்த்ஏன்" என்றும் எழுதலாம், மொத்தம் 30 எழுத்துக்கள் போதும் இருநூற்றுக்கும் மேலானவை எதற்கு என்று இன்னும் சில ஆண்டுகள் கழித்து, இன்னொரு பெரியாரும். அரசியல் நோக்கத்திற்காக இன்னொரு முதல்வரும் மாற்றினால்..  இந்நிலை ஒவொரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்தால்...

இப்பொழுது இளம் தலைமுறை ரோமன் எழுத்துக்களில் தமிழை எழுதத் துவங்கிவிட்டது.  அது நிலைத்தால், நமது தமிழ் எழுத்துக்கள், தமிழ் கிரந்தம் தேவநாகரியால் மறைந்ததுபோல் இன்னும் ஒரு தலைமுறையில் (20 ஆண்டுகளில்) மறைந்தே போய்விடும்.  அந்தக் கண்ராவியைப் பார்க்க நாம் இருப்போமோ, என்னவோ?

தாங்களே சிந்தித்துச் சொல்லுங்கள்!
ஒரு அரிசோனன்

N. Ganesan

unread,
Nov 16, 2014, 10:48:49 PM11/16/14
to mint...@googlegroups.com

On Sunday, November 16, 2014 7:31:17 PM UTC-8, oruarizonan wrote:

நீங்கள் எழுத்து சீரமைப்பு பற்றி சொல்வது பூச்சாண்டி காட்டுவதாய் உள்ளது, ஐயா.
ஐராவதம் பேச்சில் பார்த்தீர்களா? முன்னால் இருப்பது வா. செ. குழந்தைசாமி, அவர் மனைவி.
ஐராவதம் தமிழ் வளர எழுத்துச் சீர்மை உ, ஊ உயிர்மெய் திருந்தணும் என்பவர்.
அவராகவே, எனக்கு இன்று அனுப்பிய மடலை குழுக்களுக்கு அனுப்பியிருந்தேன்.

(நீங்கள் முதலில் சொன்னீர்கள். மாலனும் ஃபேஸ்புக்கில் சொல்லியுள்ளார்.
பிள்ளையார்பட்டி கல்வெட்டை ஐராவதம் படித்தது தினமணியில் வந்தது என.
ஆனால், அதற்கு பல ஆண்டுகள் முன்னரே இரா. நாகசாமி சா. கணேசன் அழைத்துச்
சென்று படித்து நூலாக வெளியிட்டார்.)

நிறைய சிந்தித்தும், ஹூஸ்டன் தமிழ் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களைப் பல ஆண்டுகள் பார்த்தும் சொல்கிறேன்:
ஐ, ஔ என்று யாரும் சொல்வதில்லை. "நான் வந்தேன்" என்பதை "ந்ஆன் வ்அந்த்ஏன்" என்றும் யாரும் எழுதச் சொல்வதில்லை.
பெரியார் முன்வைத்த சீர்திருத்தம் விடுதலையில் இன்றும் அச்சாகிறது. உ,ஊ உயிர்மெய்கள் சீர்மை அது.
இதனால் சுமைகுறையும். சார்பெழுத்து இலக்கணம் விளங்கும். அசை இலக்கணம் கெடாது. உகர உயிர்மெய்
நிறைய இருப்பதால் ஸ்பேஸிங் முறையில் விடுதலை ஃபாண்ட்டில் எழுதலாம். அல்லது பிறைக்குறி போல
ஒன்றை எழுத்தின் மேலே அமைக்கலாம். வரிநீளம் குறையும். தமிழ் ப்ராமி பாருங்கள்: புள்ளி எல்லா இடத்திலும்
போட்டிருக்கிறார்கள் பின்னர் மேலே அச்சுக் காலத்தில் ஒழுங்கானது.

ஐபோனில் தமிழ் தட்டச்சிப் பாருங்கள். விசைப்பலகை சீரமைக்கப்பட்டுவிட்டது பார்த்தீர்களா?
டைப்ரைட்டர் கீபோர்ட் போய்விட்டது. அதை அப்படியே உயிர்மெய் வடிவம் என்று கொள்வது சிறப்பு. எளிமை. 
தமிழுக்கு வலிமை.

நா. கணேசன்
 
2014-11-16 20:02 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

seshadri sridharan

unread,
Nov 17, 2014, 5:22:50 AM11/17/14
to mintamil

2014-11-17 8:18 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஆங்கிலத்தில் ஐ = என்றும், ஔ = என்றும் எழுதுகிறோம்.
அதன் தாக்கமா மதிவாணரின் கூற்று: ng > ன்+க் , nj > ன் + ச் ?

kattanangan.jpg
 
இருபுறம் இரு கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி,  செவ்வக கட்டம்  -  ட ஒலி, அதை ஊடுருவி ஒரு  நெடுங் கோடு - ன ஒலி, நாமம் -- ண்க ஒலி, மேல் இரு கோடுகள் -- அ ஒலி,   பூ உள்ள வட்டம்  -- ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் காடனங்கன் என்பது. இதை காட்டனங்கன்  என படிக்கலாம்.

சிந்து எழுத்தில் U வடிவம் ககரம் ஆகும் அதன் நடுவே ஒரு நெடுங்கோடு ணகரம் ஆகும். இதுவே பிராமி எழுத்தில் ணகரம் குறிக்க இருத்திக் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. எனவே ண் +க் = ங் கை குறிக்கும். இதுவும் இருஒலியன் (dipthong) போன்றதே. 

சிந்து நாகரீகக் காலத்தில் நெடுங்கணக்கு முதலில் தோன்றி அதற்கான குறியீடு பிற்பட்டு தோன்றியிருக்க வேண்டும். அதிலும் அக்கால் தமிழ் நெடுங்கணக்கு இன்றினும் மெல்லொலி கொண்டதாகவே இருந்திருக்க வேண்டும். ஆதலால் மக்கள் ஙகரத்தை குறிக்க தனி குறியீடு கொள்ளாமல் இரு குறிகளால் அதை குறித்துள்ளனர். ண்க என்பதை விட ங்க என்பதன் ஒலி அளவு கூடுதலானது ஏனெனில் அது ண்க்க என்று ஒலிப்பதை ஊன்றி நோக்க இயலும்.  

ஆங்கிலர் இதை உணர்ந்தே ng,  nj என்று எழுதுகின்றனர் போலும்.     

Pandiyaraja

unread,
Nov 17, 2014, 7:00:33 AM11/17/14
to mint...@googlegroups.com
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!
உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.  இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding?
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Nov 17, 2014, 8:49:51 AM11/17/14
to mint...@googlegroups.com, vallamai

On Monday, November 17, 2014 4:00:33 AM UTC-8, Pandiyaraja wrote:
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!
உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.  இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding?
ப.பாண்டியராஜா

இரா. மதிவாணனின் ‘சிந்துவெளித் திறவு’ - பெரிய நூல். சேசாத்திரி எண்ணிம வடிவில் அளித்துள்ளார்.

முக்கிய எழுத்துக்கள் மீன், மகரம் சிந்தில் உள்ளன. அவை என்ன எழுத்து என்று இந்நூலில் இல்லை.
பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மதிவாணன் முயற்சிகளுக்கு நிறைய உதவியவர்.

ஐராவதம் பேப்பர் பார்த்தீர்களா? பல இடங்களில் சிக்கல்.

நா. கணேசன்
 
On Monday, November 17, 2014 3:52:50 PM UTC+5:30, seshadri sridharan wrote:

seshadri sridharan

unread,
Nov 17, 2014, 9:54:10 AM11/17/14
to mintamil
2014-11-17 17:30 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!
உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.  இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding? - ப.பாண்டியராஜா

இரா. மதிவாணனின் ‘சிந்துவெளித் திறவு’ - http://www.subaonline.net/thfebooks/THFchinthuveli_Ezhuthin_Thiravu.pdf. இது ஒரு குறுநூல் எனினும் தொடக்கப் பழகுநருக்குப் பெரிதும் புரிந்து கொள்ள உதவுவது. 

Indus script Dravidian என்ற ஆங்கில நூல் விளாவரியான விளக்கங்கள் கொண்டுள்ளது. இது ஒரு வழிகாட்டி நூல் என்றே கூறலாம். என்னிடம் உள்ளது. ஆனால் எண்ணிமம் செய்ய அவர் ஒப்பம் தர மறுத்துவிட்டார்.

1987 ல் ஒரு எழுத்து இரு எழுத்து என படிக்கத் தொடங்கி மெல்லமெல்ல 3 எழுத்து 4 எழுத்து உள்ள முத்திரைகளை படித்து இரண்டு ஆண்டுகளில் சிந்து எழுத்துகள் முழுவதையும் பழுதறப் படிக்கத் தெரிந்து கொண்டதாக கூறினார் பேரா. இரா. மதிவாணர். அவரிடம் பயிற்சி பெற்று நன்றாகப் படிக்கத் தெரிந்தவருள் நானும் ஒருவன். என் சிந்து முத்திரைகள் வாசிப்பு  https://groups.google.com/forum/#!topic/mintamil/m3FqXBxQsr0https://groups.google.com/forum/#!topic/mintamil/Lo1Ap8E-ALU ஆகிய இரு இழைகளில் என் இடுகைகளை படிக்க வேண்டுகிறேன்.

N. Ganesan

unread,
Nov 17, 2014, 9:59:04 AM11/17/14
to mint...@googlegroups.com

On Monday, November 17, 2014 6:54:10 AM UTC-8, seshadri sridharan wrote:
2014-11-17 17:30 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!
உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.  இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding? - ப.பாண்டியராஜா

இரா. மதிவாணனின் ‘சிந்துவெளித் திறவு’ - http://www.subaonline.net/thfebooks/THFchinthuveli_Ezhuthin_Thiravu.pdf. இது ஒரு குறுநூல் எனினும் தொடக்கப் பழகுநருக்குப் பெரிதும் புரிந்து கொள்ள உதவுவது. 

Indus script Dravidian என்ற ஆங்கில நூல் விளாவரியான விளக்கங்கள் கொண்டுள்ளது. இது ஒரு வழிகாட்டி நூல் என்றே கூறலாம். என்னிடம் உள்ளது. ஆனால் எண்ணிமம் செய்ய அவர் ஒப்பம் தர மறுத்துவிட்டார்.

என்னிடம் இருக்கிறது. தமிழ் நூலின் தொடர்ச்சியே இந்நூல். இவ்வாறு நெடுங்கணக்காகவும், பிராமியுடனும்
தொடர்பு படுத்த இயலாதவை சிந்து ஸிம்பல் ஸிஸ்டம்.

நா. கணேசன்
 
seshadri sridharan

unread,
Nov 17, 2014, 10:00:58 AM11/17/14
to mintamil
2014-11-17 19:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Monday, November 17, 2014 4:00:33 AM UTC-8, Pandiyaraja wrote:
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!
உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.  இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding? - ப.பாண்டியராஜா

முக்கிய எழுத்துக்கள் மீன், மகரம் சிந்தில் உள்ளன. அவை என்ன எழுத்து என்று இந்நூலில் இல்லை.
பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மதிவாணன் முயற்சிகளுக்கு நிறைய உதவியவர்.

மீன் > செதில் இல்லாத மீன் 'ச்' அல்லது 'ச' என்றும் இரு செதில் மீன் 'சா' என்றும், நான்கு செதில் மீன் 'சே' என்றும் மீனுக்கு இரு செதிலாக ஆங்கில Z இருந்தால் சோ என்றும் படிக்க வேண்டும். 

முதலையை அவர் 'ந'கரமாகக் கருதுகிறார். அது ஒரு குறுநூல் என்பதால் அதில் விளக்கங்கள் குறைவு. 

சேசாத்திரி 

ஐராவதம் பேப்பர் பார்த்தீர்களா? பல இடங்களில் சிக்கல்.

நா. கணேசன்
 
On Monday, November 17, 2014 3:52:50 PM UTC+5:30, seshadri sridharan wrote:

2014-11-17 8:18 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஆங்கிலத்தில் ஐ = என்றும், ஔ = என்றும் எழுதுகிறோம்.
அதன் தாக்கமா மதிவாணரின் கூற்று: ng > ன்+க் , nj > ன் + ச் ?

kattanangan.jpg
 
இருபுறம் இரு கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி,  செவ்வக கட்டம்  -  ட ஒலி, அதை ஊடுருவி ஒரு  நெடுங் கோடு - ன ஒலி, நாமம் -- ண்க ஒலி, மேல் இரு கோடுகள் -- அ ஒலி,   பூ உள்ள வட்டம்  -- ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் காடனங்கன் என்பது. இதை காட்டனங்கன்  என படிக்கலாம்.

சிந்து எழுத்தில் U வடிவம் ககரம் ஆகும் அதன் நடுவே ஒரு நெடுங்கோடு ணகரம் ஆகும். இதுவே பிராமி எழுத்தில் ணகரம் குறிக்க இருத்திக் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. எனவே ண் +க் = ங் கை குறிக்கும். இதுவும் இருஒலியன் (dipthong) போன்றதே. 

சிந்து நாகரீகக் காலத்தில் நெடுங்கணக்கு முதலில் தோன்றி அதற்கான குறியீடு பிற்பட்டு தோன்றியிருக்க வேண்டும். அதிலும் அக்கால் தமிழ் நெடுங்கணக்கு இன்றினும் மெல்லொலி கொண்டதாகவே இருந்திருக்க வேண்டும். ஆதலால் மக்கள் ஙகரத்தை குறிக்க தனி குறியீடு கொள்ளாமல் இரு குறிகளால் அதை குறித்துள்ளனர். ண்க என்பதை விட ங்க என்பதன் ஒலி அளவு கூடுதலானது ஏனெனில் அது ண்க்க என்று ஒலிப்பதை ஊன்றி நோக்க இயலும்.  

ஆங்கிலர் இதை உணர்ந்தே ng,  nj என்று எழுதுகின்றனர் போலும்.     

சேசாத்திரி 

--

Suba

unread,
Apr 12, 2016, 9:43:52 AM4/12/16
to மின்தமிழ், Dr.Subashini
பல சுவையான கலந்துரையாடல்கள் இந்த இழையில் நிகழ்ந்தன.

என்னளவில், முன்னர் நான் ஐயம் என்று எழுதியதை இப்போது அய்யம் என்று எழுதுகின்றேன்.

பிராமி எழுத்து வாசிக்கத்தொடங்கியதால் ஏற்பட்ட தாக்கம் இது. மனதில் ஒரு எண்ணம். பிராமியில் ஐ குறி இல்லை. பிறகு ஏன் திணிக்கப்பட்டதை ஏற்கவேண்டுமென்ரற ஒரு சாதாரண சிந்தனை மட்டுமே.

சேசாத்ரி சுட்டிக்காட்டும் சிந்து சமவெளி எழுத்திலும் ஐ இல்லை.

பாண்டியராஜா ஐயா சுட்டிய கட்டுரையை வாசித்தேன். ஆயினும் ஐ திணிக்கப்பட்டதே என்ற எண்ணமே எழுகின்றது.

சீர்திருத்தம், பெரியார் என்றெல்லாம் நாம் இந்த இழையின் நோக்கை திராவிட அரசியலுக்கு திருப்ப தேவையில்லை.

ஒரே முக்கிய கேள்வியாக என் மனதில் இருப்பது.. இன்றைக்கு தமிழின் பழமையான எழுத்துக் குறியீடாக இருக்கும் தமிழியில் ஐ இல்லை. சிந்து எழுத்திலும் இல்லை. ஆக ஐ தமிழர் எழுத்துப் பயன்பாட்டில் தேவைதனா?

சுபா

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Pandiyaraja

unread,
Apr 12, 2016, 12:20:17 PM4/12/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
>>
பாண்டியராஜா ஐயா சுட்டிய கட்டுரையை வாசித்தேன். ஆயினும் ஐ திணிக்கப்பட்டதே என்ற எண்ணமே எழுகின்றது
>>
தவறு. தமிழ் பிராமியில் ஐ திணிக்கப்படவில்லை. எ, ஒ போன்ற குறில்களுக்குரிய எழுத்துகள்தாம் இடைச்செறுகலாகியிருக்கின்றன.
தொல்காப்பியத்தில் ஐ என்ற ஓர் உயிர் எழுத்து நெடிலாக இரண்டு மாத்திரை உள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல - அகர இகரம் ஐகாரமாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஐயம் என்பது 31/2 மாத்திரை அளவு கொண்டது (2+ 1+1/2).
அய்யம் என்பது 3 மாத்திரை அளவு கொண்டது (1+1/2+1+1/2)
எனவே மாத்திரை எண்ணிப்படிப்பதில் இது குழப்படி ஏற்படுத்தும்.
வழிவழியாக வந்த எழுத்துகளில் கைவைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
நான் எப்போதும் 'ஐ' கட்சிதான்.
ப.பாண்டியராஜா

Oru Arizonan

unread,
Apr 12, 2016, 11:35:19 PM4/12/16
to mintamil

2016-04-12 9:20 GMT-07:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
//வழிவழியாக வந்த எழுத்துகளில் கைவைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
நான் எப்போதும் 'ஐ' கட்சிதான்.
ப.பாண்டியராஜா//

நானும் இவ்விஷயத்தில் உங்கள் கட்சிதான், பாண்டியராஜா அவர்களே!
ஒரு அரிசோனன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 13, 2016, 1:45:26 AM4/13/16
to mintamil

வணக்கம்.
நானும் "ஐ" கட்சிதான்.
காரணம், சங்கத் தமிழ் அறிஞர் கூடி விவாதித்து சீர்மை செய்யப்பெற்றது தமிழ் மொழி.
இத் தொன்தமிழின் பயனாளர் நாம்.
"பல், பால்", "கல் கால்"
தமிழிலில் குறிலுக்கும் நெடிலுக்கும் மிகுந்த பொருள் வேறுபாடு உண்டு.

"ஐயா" பொருளுடையது.
"அய்யா" பொருளற்ற சொல்.
இலக்கணப்படி யில்லாத சொற்களைப் பயன்படுத்த நமக்கு உரிமை இல்லை. அதற்கான புலமையும் இல்லை.

துரை.ந.உ

unread,
Apr 13, 2016, 12:38:47 PM4/13/16
to Groups
ஐ !
Inline image 1

 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Pandiyaraja

unread,
Apr 13, 2016, 1:00:46 PM4/13/16
to மின்தமிழ்
உண்மைதான் துரை அவர்களே!
'ஐ' என்பதற்குரிய பிராமி எழுத்து கிடைக்கவில்லைதான். ஆனால் கை, சை, மை, ஆகிய உயிர்மெய் எழுத்துகளுக்குரிய பிராமி எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. 'ஐ' இல்லாமலா 'கை' பிறந்திருக்கும்?
நமக்குக் கிடைக்கவில்லை. அவ்வளவே!
ப.பாண்டியராஜா

Seshadri Sridharan

unread,
Apr 14, 2016, 5:29:31 AM4/14/16
to mintamil
2016-04-13 22:08 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
ஐ !
Inline image 1

 சிந்து எழுத்தின் சில நடைமுறைகளை  பிராமி பின்பற்றியுள்ளது சிந்து எழுத்தில் ஐ> அஇ என்றோ அல்லது அய் என்றோ .தான் எழுதப்பட்டது.

ன் + ச் = ஞ், ன் + க் = ங் என  எழுதப்பட்டது.  நான் எண்ணுகிறேன் ள் + ந் = ண்   என்ற ஒளி ஆகியுள்ளது.

மஞ்சன்   

இராமகி

unread,
Apr 15, 2016, 12:14:55 AM4/15/16
to மின்தமிழ், kalair...@gmail.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil...@googlegroups.com

ஐ எழுத்தின் வடிவம் பற்றிய பேச்சு மின்தமிழ் மடற்குழுவிலெழுந்தது. ”அகர இகரம் ஐகாரமாகுமெனத் தொல்காப்பியரே சொன்னதால் சங்ககாலத்தில் ஐக்கொரு தனிவடிவம் இருந்திருக்குமெ”ன்றும், நமக்கு அது கிடைக்கவில்லை” என்றும், அதற்குமாறாய், ”ஐகார வடிவம் ஏற்படுவதற்குமுன், பழந்தமிழியில் அஇ/அய் என எழுதியதாயும்” கருத்துக்கள் சொல்லப்பட்டன. இச்சிக்கலுக்கு முடிவு காண, ஐகார எழுத்தை மட்டும் தனித்துப்பாராது தமிழின் உயிர், மெய் எழுத்துவடிவங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப்பார்ப்பது நல்லதென்பேன். (உயிர்மெய்க் கீற்றுக்களையுங்கூடச் சேர்த்துப்பார்ப்பது இன்னும் நல்லதெனினும் நேரமில்லாததால் அவற்றை இக்கட்டுரையிற் தவிர்க்கிறேன்.)

[அதேபோது தொடர்புள்ள இன்னொரு புலம்பலை இங்கு சொல்லவேண்டும். உயிர்மெய்க் கீற்றுக்கள் எல்லாமே எழுத்துவடிவத் தொடக்கத்தில் மேலும், கீழும், பக்கவாட்டின் இருபுறமும் இழுக்கப்பட்ட கிடைக்கோடுகளின் மாற்று வடிவங்களேயாகும். ”எவ்விடத்தில் இடுகிறோம்?” என்பது தவிர இவற்றிற்கு எழுத்திலக்கணக் குறிப்புகள் கிடையா. ஆகச்சிறுத்த, பொருட்படுத்த முடியாத, (கால், கொக்கி, சுழி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, கொண்டை, சுழிக்கொண்டை, சிறகு என்ற) உயிர்மெய்க்கீற்றுகளை எந்தத் தமிழிலக்கணமும் இதுவரை விதந்து குறிப்பிட்டதில்லை. இவற்றின் இலக்கணமெது? எவற்றைக் குறிக்கின்றன? - என்று கூட யாரும் எங்கும் பதியவில்லை. ஆனாலும் எழுதுந்தேவை கருதி அக்காலத் திண்ணைப்பள்ளிகளில் ”உயிர்மெய்க் குறியீடுகள்” என்றே பெயரிட்டுச் சொல்லிக் கொடுத்தார். 65 ஆண்டுகளுக்குமுன் இளமையில் அப்படிக் கற்ற பட்டறிவு எனக்குண்டு.

இக்கால ஒருங்குறி ஆவணங்களில் இவற்றை உயிர்க்குறியீடுகள் - vowel markers - என்று பிழையாய்க் குறிப்பர். ”கால்” என்பதே ஆகார உயிர்க்குறியீடெனில் ஆகார உயிரின் கீழ்மாட்டில் வருஞ் சுழி பின் என்ன குறியீடாம்? அதை ஒருங்குறிச் சேர்த்தியங் கண்டுகொள்ளவில்லையே? மகனை அப்பன் பெயரிலேயே அழைப்பேமென்று அடம்பிடித்தாலெப்படி? தமிழிலக்கணத்தின் வழிகாட்டல்களை மறுத்து ”தமிழெழுத்து வரிசையை அபுகிடா” என்று தப்புந்தவறுமாய் வரையறுத்த ஒருங்குறி ஆவணத்தைப் பின்பற்றி இற்றைத் தமிழாய்வாளர் பிழைச்சொற்களைக் கையாள்வது கொஞ்சங்கொஞ்சமாய் நம்மரபைப் போக்கடிக்கும். (ஒருங்குறிக்கு வால்பிடிப்போர் தூண்டுதலால் பலவிடங்களில் vowelized consonant markers என்பதற்கு மாறாய் vowel markers எனக் கேட்கையில் என்போன்றோர்க்கு வருத்தமே எஞ்சுகிறது. வணிக வல்லாளுமை கொண்ட ஒருங்குறியின் போதாமையைப் பேசத் தொடங்கினால் மாளாது வேறுவழியின்றி இதைப் பொறுத்துக்கொண்டு எல்லோரும் ஆளவேண்டியுள்ளது.] 

இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்கு வருவோம். படவெழுத்துக்களில் தொடங்கி, குத்துக்கோடுகள், கிடைக்கோடுகள், வளைவுகளாலான எழுத்துக்களை உருவாக்கி மாறியபோது கல், மரம், ஓடு, மாழை போன்றவற்றிற் கீறியே தமிழரெழுதினர். (சொற்பிறப்பியலின் படியும் இழுத்தது எழுத்தாயிற்று என்பார் பாவாணர். நம் ”எழுத்தும்” மேலையிரோப்பிய ”letter” உம் பொருளிணை காட்டுவதைச் சொன்னால் இராம.கி.க்கு எப்பொழுதுமே பொல்லாப்பு.) மரத்திலெழுதியது பின் பட்டையில், ஓலையில் எழுதுவதற்கும் விரிந்தது. கல், மரம், ஓடு, மாழை போன்ற எழுதுபொருட்களில் எழுதுவதற்கும் நெகிழும் ஓலையில் எழுதுவதற்கும் நுணுகிய வேறுபாடுள்ளது. ஓலையின் நீட்டுவாக்கில் நார்களுள்ளதால், எழுத்தின் கிடைக்கோடுகள் ஓலையைக் கிழித்துவிட வாய்ப்புக்களுண்டு. இதைத் தவிர்க்கும் முகத்தான், ஓலைப்பயன்பாடு கூடக்கூட, எழுத்துக்களின் கிடைக்கோட்டு நீளங் குறைந்து, குத்துக்கோடுகள் வளைந்து எல்லா எழுத்துக்களும் வளைவுகளும் வட்டங்களும் கொள்ளத்தொடங்கின.

ஒரு நுட்பியலென்பது எழுத்துக்களை மாற்றவுஞ்செய்யும்; நிலைபெறவுஞ்செய்யும். கல்/மரம்/ஓடு/மாழை போன்றவற்றில் வெட்டியது சிற்சில மாற்றங்களுடன் எழுத்துக்களை ஓரளவு நிலைக்கவே வைத்தது. அதேபொழுது ஓலையிற்/தாளிற் கீறியது காலவோட்டத்தில் எழுத்துக்களை மாற்றியது. ஏனெனில் சுவடிகளைப் படியெடுக்கையில் ஒருவர் கையெழுத்துப்போல் இன்னொருவர் கையெழுத்து இருக்காது அல்லவா? ஓர் ஓலைச்சுவடிக்கு ஆயுட்காலம் என்பது ஏறத்தாழ 150 ஆண்டுகளே என்னும்போது இன்றுள்ள சங்க இலக்கியங்கள் 13/14 ஆம் எடுவிப்புக்கள் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இற்றையெழுத்தில் நாம்படிக்கும் சங்க இலக்கியங்கள் தாம்தோன்றிய காலத்தில் முந்தை எழுத்துவடிவிலே இருந்தன. நம்மில் யாரும் 2300 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சுவடியைப் பார்த்ததேயில்லை.

(இற்றை இகரங்கூடத் தாளால் மாறிய தோற்றமே காட்டுகிறது. 19 ஆம் நூற்றாண்டு இகரம் இதனினுஞ் சற்று மாறுபட்டது. இதைப் பேசினால் வேறுபக்கங் கொண்டுசெல்லும். என்னைக்கேட்டால் 13/14 ஆம் ஆண்டிலிருந்த இகர வடிவிற்கு நாம் மாறினால் இற்றைத் தமிழ் அச்சு/கணியெழுத்துகளில் இருக்கும் வடிப்புச்சிக்கலைத் தீர்க்கலாம். வடிப்புக் கிறுவியலைப் பற்றியெலாம் பேசுமளவிற்குத் தமிழ்க் கணிமை வந்துவிட்டதா, என்ன?. தமிழெழுத்துக்களைக் கணித்திரையில் காண்பதிலும், பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு, எந்திர மொழிபெயர்ப்பு என்று சொலவம் முழக்குவதிலே நாம் எல்லோரும் குளிர்ந்துபோய் விடுகிறோம். அப்புறமெங்கே இதிலெல்லாங் கவனஞ் செலுத்துவோம்?)

ஒன்றுமட்டுஞ் சொல்லலாம். 350 ஆண்டுகளுக்கு முன்வந்த அச்சுநுட்பியலும், 40/50 ஆண்டுகளுக்கு முன்வந்த கணிநுட்பியலும், இவற்றின் இடையாட்டமும் தமிழெழுத்துக்களை முழுதாக நிலைபெறச் செய்துவிட்டன. இப் புதுநுட்பியல்கள் வந்ததாலேயே தமிழெழுத்துச் சீர்திருத்தங்களை இன்று பேசுவதிற் பொருளில்லாது போயிற்று. அன்றைக்குப் பெரியார் செய்தது சரி. இன்றைக்கு அவர்பெயரைச் சொல்லிச் சிறார்கல்வியைக் காரணங்காட்டிச் சீர்திருத்தம்பேசுவது வெறும் பம்மாத்து; கொஞ்சமும் உள்ளீடில்லாத பேச்சு. 

எழுத்துத்திரிவை மேலும் பார்ப்போம். வட்டார எழுதுபொருட் பயன்பாடு அந்தந்த நாடுகளுக்கேற்ப மாறியது. பனையோலை பெரும்பாலும் வறண்ட பாண்டியிலும், தென்சேரலத்திலுமே கிடைத்தது. அதற்காக வடசேரல, சோழ நாடுகளில் பனையோலை கிடைக்கவேயில்லையென்று சொல்லமுடியாது. விழுக்காட்டு மேனி தென்பகுதிகளிலே அதிகங்கிடைத்தது, அவ்வளவுதான். எப்பகுதிகளில் அதிக ஓலை கிடைக்கவில்லையோ, அங்கு இலக்கிய ஆவணங்கள் குறைந்தே பேணப்பட்டன. தமிழ்ச்சுவடிகள் தென்பாண்டியில் பெரிதுங்கிடைத்தது அப்படித்தான். ஓலை மிகாவிடங்களில் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே மிகுந்தன. முன்சொன்னது போல் தமிழியெழுத்து பெரிதும் உருவம் மாறாது ஓலையிலா எழுதுபொருட்களில் இருந்துவந்தது. அதேபொழுது ஓலை பெரிதும் பயன்பட்ட பாண்டியிலும், தென்சேரலத்திலும் தமிழியெழுத்து கொஞ்சங்கொஞ்சமாய் வளைந்து நெளிந்து வட்டெழுத்தாய் மாறியது இயல்பான ஒன்றுதான். எல்லாம் கை பண்ணிய வேலை.

கடுங்கோன் வழியினரைத் தோற்கடித்து விசயாலய வழியினர் பாண்டியரை இல்லாமற்செய்த நிலையில் (குறிப்பாக இராசராசன் காலத்தில்) தம் ஆட்சி நன்குசெயற்பட எழுத்தை மாற்றவேண்டிய தேவை சோழருக்கு ஏற்பட்டது. ஏனெனில், வட்டெழுத்தின் அளவுமீறிய வளைவால் எழுத்துக்களின் தனியடையாளங் குலைந்து பொருள்புரியாதுபோகும் நிலை ஏற்கனவே பாண்டிநாட்டில் இருந்தது. அரசாணை மூலம் வட்டெழுத்தைத் திருத்தாமல், சோழ எழுத்தையே பாண்டிய, தென் சேரல நாடுகளில் புழங்கவைக்க சோழர் ஆணையிட்டார். அதனால் வட்டெழுத்து முடிவுற்றது. தென்சேரலத்தில் மட்டும் மேல்தட்டுவருக்க அரண்மனைப் புழக்கங்களில் வட்டெழுத்து நீடித்தது.

1600களில் வட்டெழுத்துக் குழப்பத்தைப் போக்கும் வகையிலும், அளவிற்கு மீறிய சங்கதப் புழக்கத்தை நேரிமப்படுத்தும் வகையிலும் வடசேரலத்தில் புழங்கிய கிரந்தத்திலிருந்து மலையாள எழுத்துக் கிளைத்து, அதுவே தென்சேரலத்திற்கும் பரவியது. மலையாள மொழி தனியெழுத்துப் புழக்கத்தாலேயே மலையாள மொழி நிலைபெற்றது. இல்லாவிட்டால் அது தமிழின் வட்டாரக் கிளைமொழியாய் நிலைத்திருக்கும். (இப்பொழுதுங்கூடத் தமிங்கிலத்தை ஒரு தனிமொழியாய் நிலைக்கவைக்கும் வாய்ப்பாகத் தமிழ் ஒருங்குறிக்குள் வேற்றொலி எழுத்துக்களைக் கொணரச் சிலர் விடாது முயல்கிறார். தமிழர் சற்றே கண்ணயர்ந்தாலும் மலையாளம் வேற்றம் 2.0 மீண்டும் ஏற்படலாம். ”ஐயையோ, சங்கதத்தைத்தான் நாங்கள் காப்பாற்றுகிறோம், தமிழுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை” என்று சிலர் சொல்வது வெறுங் கண்கட்டுவித்தை. ”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும்” என்றார் வள்ளலார். நான் கிரந்தத்திற்கு எதிரியில்லை. ஆனால் தமிழுக்குள் கிரந்தம் தேவையற்று நுழையவேண்டாம் என்பவன்.) 

அதேபொழுது பல்லவ, சோழ எழுத்து 5/6 ஆம் நூற்றாண்டுகளுக்கு அப்புறம் ஓரளவு மாறாமலும் இல்லை. (கொடுமணம், பொருந்தல், அநுராதபுரம், கீழடி போன்ற ஊர்களிற் கிடைத்த தொல்லியற் செய்திகள் உறுதிப்படுகையில், ”பழந்தமிழியே இந்தியாவில் முதலெழுந்த அகரவரிசை; அதிலிருந்தே வட பெருமி எழுந்திருக்கலாம்” என்ற கருத்து அண்மையில் வலுப்பெறுகிறது. இதனாற் பேரனைத் தாத்தனெனும் போக்கு மறையும். இதேபோலப் பழந்தமிழியிலிருந்தே கிரந்தம் எழுந்ததெனும் புரிதலும் வலுப்படும். இதை இன்னும் விளக்கப்புகுந்தால், வேறுபுலத்திற்கு இழுத்துச் செல்லும். எனவே, தமிழி>பெருமி, தமிழி>கிரந்தம் என்ற வளர்ச்சிப்போக்குகளைப் விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.)   

கடந்த நூறாண்டுகாலக் கல்வெட்டாய்வின் மொத்தப்பலனாய், இன்று இணையமெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும், History of Tamil Script என்ற படம் தமிழி>பல்லவ>சோழ எழுத்தில் ஏற்பட்ட வெவ்வேறு உயிர், மெய்த் திரிவுகளை நமக்கு இனங்காட்டும். வெவ்வேறு எழுத்துக்கள் எக்காலகட்டத்தில் இற்றைவடிவத்திற்கு வந்துசேர்ந்தன என்பதைச் சற்று ஆழவாய்ந்தால் மேலுஞ்சில உண்மைகள் புலப்படும்.

காட்டாக உயிரெழுத்துக்களில் அ என்பது 8 ஆம் நூற்றாண்டிலேயே இற்றை வடிவத்திற்கு வந்துசேர்ந்துவிட்டது. ஆ என்பது 13 ஆம் நூற்றாண்டில் இற்றைவடிவம் பெற்றிருக்கிறது. இ என்பது 12/13 ஆம் நூற்றாண்டில் நிலைத்த உருவம் பெற்று அச்சுத்தொழில் காரணமாய் 19 ஆம் நூற்றாண்டில் சட்டென்று இற்றையுருவம் பெற்றிருக்கிறது. அதாவது நிலைத்த உருவம் சட்டென்று மாறிப்போனது.. ஈ என்பது 12 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவங் கொண்டது.  உ -வும் ஊ-வும், எ-யும் 5/6 ஆம் நூற்றாண்டுகளில், இற்றையுருவம் பெற்றுவிட்டன. ஐ- யும் ஒ -வும் 9 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவம் பெற்றன. ஏ, ஓ, என்பது வீரமாமுனிவருக்கப்புறம் வடிவம் பெற்றது. ஔ என்ற எழுத்து 18/19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சுவடிவம் வந்தபிறகே உருவம் பெற்றிருக்கின்றது.

மெய்யெழுத்துக்களை எடுத்துக்கொண்டால், ப் என்ற எழுத்து 3 ஆம் நூற்றாண்டிலும் (பழந்தமிழியின் வளைவு ப் - ற்கும் இற்றைச் சதுர ப் - ற்கும் பெரிதாய் வேறுபாடு கிடையாது), ல்.ள்.ன் என்பன 6 ஆம் நூற்றாண்டிலும், ட்,ண்,ம்,வ் ஆகிய எழுத்துக்கள் 8/9 ஆம் நூற்றாண்டுகளிலும், க்,ங்,ச்,ஞ்,த்,ந்,ய்,ர்,ற் என்பன 8/9 ஆம் நூற்றாண்டுகளில் ஓரளவு மாற்றம்பெற்று முற்றுமுழுதாக 13/14 ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைபெற்றிருக்கின்றன. சிறப்பு ழகரம் மட்டும் 17 நூற்றாண்டுதான் இற்றைவடிவம் பெற்றிருக்கிறது. இதுவும் ஒருவேளை அச்சுத்தொழிலால் இந்த மாற்றம் பெற்றதோ, என்னவோ?, 
 
8/9 ஆம் நூற்றாண்டுகளில் தான் விசயாலயச் சோழர் ஆட்சி சோழநாட்டில் ஊன்றிப்பல்வேறு கல்வெட்டுக்களை எழுப்பி. செந்தரத்தைக் கட்டிக்காக்கத் தொடங்கியது. இந்தக் கொடிவழியினரின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் இறுதி பெற்று இவருக்குப் பின்வந்த பிற்காலப்பாண்டியர் மீண்டும் வட்டெழுத்துக்கு மாறாமல் சோழர் எழுத்திலேயே கல்வெட்டுக்களை ஏற்படுத்தினர். கிட்டத்தட்ட 15 ஆம் நூற்றாண்டே பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவிற்கு வந்தது. அவருக்கு அப்புறம்  வந்த அரசர்கள் செந்தரப்படுத்தப்பட்ட எழுத்தையே பயன்படுத்தியிருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டு முடிவில் அச்சுத் தொழில் எழுத்தை நிலைப்படுத்தியிருக்கிறது.

சோழரின் கல்வெட்டுப் பயன்பாடே இற்றைத் தமிழெழுத்தை உறுதிப்படுத்தியது என்பது இப்படத்தைப் பார்த்தால் தெற்றென விளங்கும்.

இனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புதுவடிவம் என்பது புரியும்.

இந்தப்புரிதலோடு 
-------------------

அகர இகரம் ஐகாரமாகும்

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
-------------------
என்ற தொல்காப்பிய நூற்பாக்களைப் படித்தால் 8/9 ஆம் நூற்றாண்டு வரை ஐகார வடிவம் இல்லாது போனதின் காரணம் புரியும். நான் ஐகார வடிவத்தைப் போக்கச் சொல்லவில்லை. அந்த வடிவம் அஇ அல்லது அய் என்பதன் எழுத்துச் சுருக்கம் என்றே சொல்லவருகிறேன். இந்தக் காலத்தில் கணி வந்தற்காக & என்ற சுருக்கெழுத்தைத் தூக்கியா எறிகிறோம்? ஐ தேவை தான்.

அன்புடன்,
இராம.கி. 

On Sunday, November 16, 2014 at 2:13:52 PM UTC+5:30, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
ஐயன் = அய்யன்?
 என்பதற்கு ஒரு விளக்கத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

ஐ = அய்?; ஔ = அவ்?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தக்காரர்கள் முதலில் தூக்கியெறியத் துடிப்பது ஐ, ஔ இரண்டையுமே. இந்த இரண்டும், இவை சேர்ந்த 18+18 = 36 உயிர்மெய்களும் என்னமோ தமிழுக்குத் தாங்கமுடியாத பெரும் பாரமாய்த் தோன்றுகிறது இவர்களுக்கு. ஔ என்பது ஒரு புதிய எழுத்து அல்ல. ஒ-வும் ள-வும் சேர்ந்த ஒரு கூட்டணிதான் இது. ஆங்கிலத்தில் c- யும், h-உம் சேர்ந்த கூட்டணிக்குக் க-என்ற ஒலி கிடைக்கிறது இல்லையா? அதைவிட t, i, o ஆகியவற்றின் கூட்டணிக்கு tio=ஷ என்ற புதிய ஒலி கொடுக்கப்படுகிறது. அதைப் போலத்தான் இதுவும். மேலும் கௌ, சௌ போன்றவற்றை எழுதுவதற்கும் புதிய எழுத்தோ, எழுத்துருவோ இல்லை. கெ-யில் இருக்கும் சின்னக் கொம்பையும், ள-வையும் ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ சேர்க்கவேண்டியதுதான். ஐ-யும், கை, சை, போன்றவற்றில் உள்ள இரட்டைச் சின்னக் கொம்பும் புதியவை. எனவே 2+18+18 = 38 எழுத்துக்கள் குறைகின்றன என்பது ஒரு பிரம்மையே. வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒன்றைச் செய்யும் ‘மனத்திருப்தி’ ஒருசிலருக்குக் கிடைக்கிறது என்பதைத் தவிர இதனால் யாருக்கும் ஒரு லாபமும் இல்லை.

தமிழில் 12 உயிர்கள் உண்டு. அவற்றுள் அ, இ, உ, எ, ஒ ஆகியவை குறில்கள் – ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை அளவு கொண்டவை. இவற்றுக்கு நேரான நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகியவற்றுக்கு இரண்டு மாத்திரை அளவு. இந்தக் கணக்கில் சேராமல் ஐ, ஔ தனித்து நிற்கின்றன. இவையும் நெடில்களே. மொழியியல்காரர்கள் இந்த இரண்டையும் உயிர் (Vowel) எனக் கொள்வதில்லை. இவற்றை dipthong என்கின்றனர். Dipthong என்பதன் பொருள் : A vowel sound that starts near the articulatory position for one vowel and moves toward the position for another என wordweb அகராதி கூறுகிறது. இப்பொழுது இவர்கள் கூறுவதை 2500 ஆண்டுகட்கு முன்னர் தொல்காப்பியர் கூறிவிட்டார்.

அகர இகரம் ஐகாரம் ஆகும்

அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்-மொழிமரபு-21,22

இதற்குப் பின் வந்த நன்னூல்(125), இலக்கணவிளக்கம்(35), முத்துவீரியம்(107) போன்றவையும் இதனையே கூறும். இலக்கணக்காரர்கள் இவற்றைப் போலி எழுத்துக்கள் என்ப. போலி என்றால் duplicate அல்ல - போல ஒலிப்பது. நச்சினார்க்கினியர் இதற்கு, “ அகரமும், இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல இசைக்கும், அது கொள்ளற்க” என்று உரை கூறுவார். ஐவனம் அஇவனம் எனவரும், (ஔவை அஉவை எனவரும்). ‘ஆகும்’ என்றதனான் இஃது இலக்கணம் அன்றாயிற்று என்பார் அவர். (ஒரு வேடிக்கை! இன்றைக்கு இதைத் தட்டச்சு செய்யும்போது a-வுக்கடுத்து  i-தட்டினால் அது ஐ-ஆக மாறிவிடுகிறது). அஇ, அஉ என அடுத்தடுத்து வரும் இரண்டு உயிர்களுக்கிடையே உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா! எனவே அஇ என்பது யகர உடம்படுமெய் பெற்று அயி என்றும், அஉ என்பது வகர உடம்படுமெய் பெற்று அவு என்றும் மாறுகின்றன. எனவேதான் கைலை என்பது கயிலை என்றும் மௌனம் என்பது மவுனம் என்றும் எழுதப்படுகின்றன. இப்படிக் கூறுவார் வேங்கடராசுலு ரெட்டியார்.

வடமொழியில் இவற்றின் சேர்க்கைகள் வேறாக இருக்கின்றன. அ+இ = ஏ, என்றும், அ+உ = ஓ என்றும் மாறுகின்றன. தேவ + இந்திர = தேவேந்திர; புருஷ + உத்தம = புருஷோத்தம. எனவே வடமொழியினின்றும் தமிழ் வேறுபட்டது எனக் காட்டத்தான் தொல்காப்பியர் இதனைக் கூறியுள்ளார் என்றும் கொள்ளலாம்.

ஒலிகளின் இந்தச் சேர்க்கையைப் பற்றிக் கூறிய தொல்காப்பியர், ஒலிகளைப் பற்றித் தான் கூறும் நூன்மரபில் இவற்றைக் கூறாமல், அடுத்த மொழிமரபில் இவற்றைக் கூறுகிறார். நூன்மரபு என்பது தான் எடுத்துக்கொண்ட நூலுக்கான மரபு. இது Postulate எனப்படும். ஆனால் மொழிமரபு என்பதை மொழியின் மரபு என்றும், மொழிகின்ற மரபு என்று கொள்ளலாம். இது axiom எனப்படும். இது தமிழின் / தமிழரின் மரபு என்று கூறுவதற்காகவே தொல்காப்பியர் இதனை மொழிமரபு என்ற இரண்டாம் இயலில் வைத்திருக்கிறார் எனலாம்.

இவற்றை அடுத்து, அடுத்த நூற்பாவில் அவர்,

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்

ஐ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் – தொல். மொழி. 23

என்று கூறுகிறார்.

“அகரத்தின் பின் இகரமேயன்றி, யகரமாகிய புள்ளி வந்தாலும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு மெய்பெறத் தோன்றும்” என்பர் நச்சினார்க்கினியர். “ஐவனம் அய்வனம் என வரும்” என்பார் அவர். ஆனால் வேங்கடராசுலு ரெட்டியார் இதனை மிக நுட்பமாக ஆராய்கிறார். ‘ஐயென் நெடுஞ்சினை’ என்றது ஐகாரம் என்னும் நெடிய சினையெழுத்து என்றபடி என்கிறார் அவர். மேலும் அவர், “இவ்வாசிரியர் முதல் எழுத்தினைச் சினை என்று வழங்குதல் இலர்; முதல் என்றே கூறுவர்.

நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் (உருபியல்.7)

என எடுத்துக்காட்டும் கொடுக்கிறார். (நீ + இன் = நின்) “ஆதலின் ‘சினை’ என்றது மொழியின் முதல் எழுத்தல்லாத எழுத்தினை என்று கோடல் அமைதி. மொழியின் இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரத்திற்கு அய் என்பது வரும் என்றவாறாகும். அ,இ- வுக்கு அடுத்து அ,உ –வைச் சொன்ன தொல்காப்பியர், இங்கே  அ+ய் = ஐ என்று கூறிவிட்டு, அடுத்து,

அகரத்து இம்பர் வகரப் புள்ளியும்

ஔ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

என்று கூறவில்லை.

“இவ்வாறு சூத்திரஞ் செய்யாததன் காரணம் புலனாகும். என்னையெனின், ஔகாரம் மொழியின் இடையிலும் கடையிலும் நிற்பது அன்மையின் அஃது அவ் என்றாதல் இல்லை” என்று மிக நுட்பமாக ஆய்ந்து கூறும் வேங்கடராசுலு ரெட்டியாரின் நுண்மாண்நுழைபுலம் வியந்து போற்றற்குரியது. இவ்வளவு நுட்பமாகத் தமிழை ஆய்ந்த தொல்காப்பியரின் மாண்புதான் என்னே!

அதாவது ஐயன் = அய்யன் என்பதில் தொல்காப்பியருக்கு உடன்பாடில்லை. ஆனால் தஞ்சை = தஞ்சய்; படையல் = படய்யல் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஏன் அதை மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று முழங்கையை உயர்த்திக்கொண்டு வருபவரிடம் சண்டை போடவேண்டாம். விட்டுவிடுவோம். அதை இப்படி எழுதலாம் என்பதற்காக அதுவே வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தரவில்லை.

ப.பாண்டியராஜா

பார்வை: தொல்காப்பியம் – உரைவளம் – எழுத்ததிகாரம் – மொழிமரபு , பதிப்பாசிரியர்-ஆ.சிவலிங்கனார் – வெளியீடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(அண்மையில் இப் பெருந்தகை காலமானார். அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவோம்)

On Saturday, November 15, 2014 8:27:50 PM UTC+5:30, kalai wrote:

வணக்கம்
On 15-Nov-2014 2:54 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> நண்பர்களே,
>
> சிலரது பதிவுகளில் ஐ என்பதன் பயன்பாடு தமிழ் சொற்களில் வரும் போது அய் என்ற வகையில் குறிக்கப்படுவதைக் காண்கின்றேன். 
>
>
> உதாரணமாக ..
> ஐயம் - அய்யம்
> ஐயன் - அய்யன்
>
> இவை இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணம் என்ன.. இதில் எது இலக்கணப்படி சரி..

ஐயம் சரி
அய்யம் தவறு

எது தற்சமயம் தமிழக கல்வி போதனைப்படி பயன்பாட்டில் இருப்பது என்பதனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஐயம் என்ற சொல்லே பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது .

>
> அறிந்தோர் விளக்கினால் எனக்கு உதவும்.
>
> சுபா
>

வேந்தன் அரசு

unread,
Apr 15, 2016, 10:08:24 AM4/15/16
to தமிழ் மன்றம், மின்தமிழ், Kalairajan Krishnan, tamil_ulagam, தமிழாயம்
ஐ க்கும் அய்க்கும் மாத்திரை ஒரே அள்வுதானா/ 

15 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 12:14 அன்று, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Pandiyaraja

unread,
Apr 15, 2016, 12:31:35 PM4/15/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, kalair...@gmail.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் ஐயா! முன்னதற்கு இரண்டு, அடுத்ததற்கு 1 + 1/2.
ப.பாண்டியராஜா

nkantan r

unread,
Apr 15, 2016, 1:04:21 PM4/15/16
to மின்தமிழ்
before adding my two paise worth, let me remind myself and others that I am not a qualified tamil scholar nor I am a great aficionado of the old tamil literature but I like still to participate in these discussions!

general:

we have become blasé (I hope people understand what is blasé) over the past 10-12 years to the immature and improper pronunciation of tamil words in radio, films, stages, tv and other AV media,  Modern heroes and singers pronounce "ள்  ல்  ழ்" all like as ல்.  The reason is not only they donot know by they are not taught or corrected;  if the director and music directors themselves lisp and mis-pronounce then they cannot correct others.  the second major mispronunciation is retroflex consonants (I can condone when native tamil speakers err while pronouncing Sanskrit based words such as neelakandam, geedhai, etc to meet knowlingly  or unknowingly to meet the tamil pronunciation rules and traditions; but I  have heard a recent song where kaveri is pronounced as gaveri!  gaadhali etc

so may be over the next few decades a question may rise whether we require ள்  ல்  ழ்  ற்  ந ? why not just use ல் ர்  ன் ???
=========================================================================================================================
specific:

imagine rewriting thirukurals with அய் and still match the venba rules!!!

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

or

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Leaving that traditional poetical structural rules aside, just  go for pronunciation

: when one tries to use niraval and stretch lettlers, extra caution has to be taken and MSV was a master;  and  stretching னை is NOT done but stressing is done!
if one cannot differentiate between உன்னை  and  உன்னய் then obviously more listenting is required!!

listen to மருதமலை மாமணியே   https://www.youtube.com/watch?v=uds_7gdrzmI where  Madurai somu sings his best; listen his stretching  he uses both ய்  and இ  and he shows the difference between ஐ   and அய்

my final vote: I use ஐ

regards
rnkantan

and listen to
On Friday, April 15, 2016 at 7:38:24 PM UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:

Oru Arizonan

unread,
Apr 15, 2016, 2:32:41 PM4/15/16
to mintamil
Fantastic explanation!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,

Suba

unread,
Apr 15, 2016, 2:54:43 PM4/15/16
to மின்தமிழ், Dr.Subashini
நல்லதொரு விளக்கம். 

//
இனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புதுவடிவம் என்பது புரியும்.
//

இப்பகுதி அருமையான விளக்கம். நான் இந்த வகையில் யோசித்ததில்லை.

இந்தப் பதிவை ஒரு கட்டுரையாக நாம் மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
சுபா

இராமகி

unread,
Apr 16, 2016, 12:33:50 AM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்பிற்குரிய வேந்தன் அரசு,

ஐக்கு உரிய மாத்திரை அளவு தொல்காப்பியத்தின்படி இருவகைப்படும். "அகர இகர ஐகாரமாகும்" என்பதால் அகரத்திற்கு ஒரு மாத்திரை, இகரத்திற்கு ஒரு மாத்திரை, எனவே ஐகாரத்திற்கு 2 மாத்திரை."அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்" என்பதால் ஐ என்னும் நெடுஞ்சினை (= நெடில் உறுப்பு) அய் ன்னும்போது மெய்பெறத் தோன்றும்  அதாவது 1+ 1/2 மாத்திரைகள் பெறும். 

ஒரேஎழுத்திற்கு இருவேறு மாத்திரைகள் வேறெழுத்துகளுக்கு வருமா என்றால் வரும். காட்டாக மகரப் புள்ளிக்கு அளவு பொதுவாக அரை மாத்திரை தான். அதேபொழுது மகரக்குறுக்கத்தில் கால் மாத்திரை வரலாம். யாப்பில் ஆய்தத்திற்கு இருவேறு மாத்திரைகள் உண்டு. சில இடங்களில் அதை மெய்யாகக் கருதி அரைமாத்திரை கொடுப்பதும், சில இடங்களில் உயிராகக் கருதி ஒரு மாத்திரை கொடுப்பதுமுண்டு. இதற்குக் குறளிலிருந்தே ஒரு முறை நண்பர் ஹரி சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். (எனக்குச் சட்டென்று அதை எடுத்துக்கொடுக்க நினைவில்லை.) இது போல வேறுசில எழுத்துக்களும் இருவேறு  மாத்திரைகள் கொள்ளலாம். 

ஐகாரத்திற்கும் இருவேறு மாத்திரைகள் பயன்பாட்டிற்குத்தக்க மாறும். இதை இத் தொல்காப்பிய நூற்பாக்கள் வழியாக அறியலாம். இருவேறு முறையில் (அஇ, அய்) எழுந்தாலும் ஐகார வடிவு என்பது ஒன்று தான். இந்த எழுத்தைப் பெற்றுவந்த வழியால் இருவேறு மாத்திரைகளை நாம் கைக்கொள்கிறோம்.

அளபெடையில் கூட ஆடூஉ என்பதில் டூஉ என்பதை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்பது நம் உகப்பைப் பொறுத்தது. ஆனால் எழுதும்போது டூஉ என்று மட்டுமே எழுதுவோம். சிலர் குறும்புடன் ஆடூஉஉஉ என்றும், ஆடூஊஊஉ என்றும் எழுதுவதற்கெல்லாம் இலக்கண ஒப்புதலில்லை.

ஒலிப்பு வேறு, எழுத்தின் வடிவு வேறு. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கான தாக்கத்தை ஓரளவுதான் கொண்டுபோகலாம். பலரும் ஐ, அய் என்பதை மாத்திரைகளைக் காட்டி வேறுபடுத்துவதை நான் ஏற்பவனில்லை. ஐக்கான மாத்திரை 2 ஆ, 1.5 ஆ என்பது நாம் ஒலிக்கும் அளவைப் பொறுத்தது சட்டென்று குறுக்கி ஒன்றரை மாத்திரையிலும் சற்று நீட்டி இரு மாத்திரையிலும் ஒலிக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.. 

On Friday, April 15, 2016 at 7:38:24 PM UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:

Hari Krishnan

unread,
Apr 16, 2016, 1:00:15 AM4/16/16
to தமிழ் மன்றம், மின்தமிழ்

2016-04-16 10:03 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
ஒரேஎழுத்திற்கு இருவேறு மாத்திரைகள் வேறெழுத்துகளுக்கு வருமா என்றால் வரும். காட்டாக மகரப் புள்ளிக்கு அளவு பொதுவாக அரை மாத்திரை தான். அதேபொழுது மகரக்குறுக்கத்தில் கால் மாத்திரை வரலாம். யாப்பில் ஆய்தத்திற்கு இருவேறு மாத்திரைகள் உண்டு. சில இடங்களில் அதை மெய்யாகக் கருதி அரைமாத்திரை கொடுப்பதும், சில இடங்களில் உயிராகக் கருதி ஒரு மாத்திரை கொடுப்பதுமுண்டு. இதற்குக் குறளிலிருந்தே ஒரு முறை நண்பர் ஹரி சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். (எனக்குச் சட்டென்று அதை எடுத்துக்கொடுக்க நினைவில்லை.) இது போல வேறுசில எழுத்துக்களும் இருவேறு  மாத்திரைகள் கொள்ளலாம். 

ஆமாம் ஐயா.  இரண்டு மூன்று முறை தனித் தனியாகத் தொகுத்தேன்.  ஒவ்வொரு முறையும் தொலைத்துவிடுவேன்.  அண்மையில் Face Bookல் ஏதோ ஒரு உரையாடலின் போது தொகுத்ததை நினைவாகச் சேமித்து வைத்தேன்.  இதோ:

அழுக்கற் றகன்றாரு மில்லை அஃதில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் (170)

மில்லை தேமா தொடர்வது அகுதில்லார்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி. ( 226)

தீர்த்தல் தேமா தொடர்வது அகுதொருவன்

தவமுந் தவமுடையார்க் காகு மதனை

யஃதிலார் மேற்கொள் வது. 262

மதனை புளிமா தொடர்வது அகுதிலார்

வேண்டாமையன்ன விழுச்செல்வ மீண்டில்லை

ஆண்டும் அஃதொப்ப தில். 363

ஆண்டும் தேமா தொடர்வது அகுதொப்ப

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும். 368

துன்பம் தேமா தொடர்வது அகுதுண்டேல்

உரமொருவற் குள்ள வெறுக்கை: யஃதில்லார்

மரமக்கள் ஆதலே வேறு. 600

வெறுக்கை புளிமா. தொடர்வது யகுதில்லார்

அற்றா லறவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943

துண்க தேமா. தொடர்வது அகுதுடம்பு

இன்பங் கடல்மற்றுக் காம மஃதடுங்கால்

துன்ப மதனிற் பெரிது. 1166

காம தேமா. தொடர்வது மகுதடுங்கால்

(நான் தமிழாயத்தில் இல்லை.  ஆகவே அனுப்ப முடியவில்லை.  தமிழ் உலகம் யாஹூ குழுமமாக இருந்தபோது இருந்தேன்.  இப்போது என் பெயர் அக்குழுவிலில்லை போலிருக்கிறது.)
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

தேமொழி

unread,
Apr 16, 2016, 1:20:40 AM4/16/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Friday, April 15, 2016 at 11:54:43 AM UTC-7, Suba.T. wrote:

//
இனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புதுவடிவம் என்பது புரியும்.
//

இப்பகுதி அருமையான விளக்கம். நான் இந்த வகையில் யோசித்ததில்லை.

இந்தப் பதிவை ஒரு கட்டுரையாக நாம் மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

மின்தமிழ் மேடையில் இங்கே இணைக்கப்பட்டுள்ளது >>> http://mymintamil.blogspot.com/2016/04/blog-post_14.html

..... தேமொழி
 
சுபா

N D Logasundaram

unread,
Apr 16, 2016, 1:21:52 AM4/16/16
to mintamil
அன்புள்ள தேமொழி இதனை நானும் வழி மொழிகிறேன் 

நூ த லோ சு 
மயிலை 

Pandiyaraja

unread,
Apr 16, 2016, 3:34:38 AM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
இராமகி ஐயா அவர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த நூற்பாக்களைப் படிக்கும்போதே எனக்குத் தோன்றிய ஐயங்கள்.
1.ஐ என்ற எழுத்தைப் பற்றிய இந்த நூற்பா நூன்மரபாகிய முதல் இயலில் வராமல் மொழிமரபு என்ற இரண்டாம் இயலில் இடம்பெறாதேன். (என்னுடைய கருத்துப்படி - நூன்மரபு - Postulates; மொழிமரபு - axioms - இதற்குரிய வேறுபாடுகளை தொல்காப்பியக் கட்டுரைகள் - 1 என்ற தலைப்பில் கூறியுள்ளேன்)
2. அகர இகரம் ஐகாரம் ஆகும் என்று சுருங்கச் சொன்னவர் இந்த நூற்பாவுக்கு இரண்டு அடிகள் எடுத்துக்கொண்டதேன்?
இம்பர், சினை, மெய்பெற என்ற சொற்களுக்குரிய ம்ழு விளக்கங்கள் என்ன? அவற்றின் தேவை என்ன?
தொல்காப்பியம் - உரைவளம் என்ற புத்தகத்தைப் படித்தபோது பதிப்பாசிரியர் சிவலிங்கனார் இந்த ஐயங்களைப் போக்குகிறார். அதனைப் படம்பிடித்து அனுப்பியுள்ளேன். அவர் இந் நூற்பாவுக்குப் பல உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளைத் தொகுத்துக் கூறிவிட்டுப் பின்னர் தம் கருத்தாகக் கூறுவதைத்தான் அனுப்பியுள்ளேன். இது பலரின் ஐயங்களையும் தீர்க்கும் என நம்புகிறேன்.
ப.பாண்டியராஜா'

ப.பாண்டியராஜா

K R A Narasiah

unread,
Apr 16, 2016, 5:13:14 AM4/16/16
to mintamil, tamilmanram, tamil_ulagam, thami...@googlegroups.com
நரசையா என்று தான் எழுதவேண்டும் என்று சிலர் நாங்கள் தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்த போது சொன்னார்கள். ஆனால் எம் தந்தையார் சொல் படி நான் ஆரம்பத்திலிருந்தே நரசய்யா என்று தான் எழுதி வருகிறேன்
நர்சய்யா

On Sat, Apr 16, 2016 at 1:04 PM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (pipi...@gmail.com) Add cleanup rule | More info

இராமகி ஐயா அவர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த நூற்பாக்களைப் படிக்கும்போதே எனக்குத் தோன்றிய ஐயங்கள்.
1.ஐ என்ற எழுத்தைப் பற்றிய இந்த நூற்பா நூன்மரபாகிய முதல் இயலில் வராமல் மொழிமரபு என்ற இரண்டாம் இயலில் இடம்பெறாதேன். (என்னுடைய கருத்துப்படி - நூன்மரபு - Postulates; மொழிமரபு - axioms - இதற்குரிய வேறுபாடுகளை தொல்காப்பியக் கட்டுரைகள் - 1 என்ற தலைப்பில் கூறியுள்ளேன்)
2. அகர இகரம் ஐகாரம் ஆகும் என்று சுருங்கச் சொன்னவர் இந்த நூற்பாவுக்கு இரண்டு அடிகள் எடுத்துக்கொண்டதேன்?
இம்பர், சினை, மெய்பெற என்ற சொற்களுக்குரிய ம்ழு விளக்கங்கள் என்ன? அவற்றின் தேவை என்ன?
தொல்காப்பியம் - உரைவளம் என்ற புத்தகத்தைப் படித்தபோது பதிப்பாசிரியர் சிவலிங்கனார் இந்த ஐயங்களைப் போக்குகிறார். அதனைப் படம்பிடித்து அனுப்பியுள்ளேன். அவர் இந் நூற்பாவுக்குப் பல உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளைத் தொகுத்துக் கூறிவிட்டுப் பின்னர் தம் கருத்தாகக் கூறுவதைத்தான் அனுப்பியுள்ளேன். இது பலரின் ஐயங்களையும் தீர்க்கும் என நம்புகிறேன்.
ப.பாண்டியராஜா'

ப.பாண்டியராஜா
On Saturday, April 16, 2016 at 10:03:50 AM UTC+5:30, இராமகி wrote:

--

இராமகி

unread,
Apr 16, 2016, 7:13:48 AM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்பிற்குரிய பாண்டியராசாவிற்கு,

ஆ>அ>அம்>அம்பு>அம்பர் என்று அகரச் சுட்டுச்சொல் விரிந்து ”அங்கே, அவ்விடம், yonder, there” என்ற பொருள்களைக் காட்டும். “அம்பர்ப் பருந்துபட” என்பது பெரும்பாண் 117 இல் வரும் கிளவி. அதே போல ஈ>இ>இம்>இம்பு>இம்பர் என்ற இகரச் சுட்டுச் சொல்லும் “இங்கே, இவ்விடம், இப்பக்கம்” என்ற பொருள்களைக் காட்டும். அகரத்து இம்பர் எனும் போது ”அகரத்துக்கு இந்தப்பக்கம்” என்றே பொருளாகும். இந்தப்பக்கம் என்பது தமிழர் மரபில் அருகில்வரும் பக்கத்தையே குறிக்கும். அதாவது அகரத்திற்கு அடுத்துவருவதையே குறிக்கும். ஒரு சொற்றொடரைப் படித்து நகரும்போது, பேசுபவர் கடைசி எழுத்திற்கு அருகில் இருப்பதாகவே தமிழ்மரபு அடையாளங்கொள்ளும். ”அகரத்திற்கு அடுத்து யகரப் புள்ளியும்”  என்றே இங்கு பொருள்கொள்ளமுடியும்.

சினை என்பதை உறுப்பு என்றே பொருள் கொள்கிறேன். நெடுஞ்சினை என்பதை சென்றமடலில் நெடில் உறுப்பு என்றே பொருள் கூறியிருந்தேன்.

மெய்பெறுதல் என்பதைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் ஏழாம் மடலம் மூன்றாம் பாகத்தில் செயப்படுபொருள்.குன்றிய வினையாகக் கொண்டு “எழுத்துக்கள் திருந்திய ஒலிவடிவு பெறுதல் to assume definite sound values as letter” என்ற பொருளைச் சொல்லி “மெய்பெறா மழலைச் சொல்” என்ற கலித்தொகை 81, 2 தொடரை எடுத்துக்காட்டாக்குவர். நான் அவர்களிலிருந்து வேறுபடுவேன். ஐ என்பது ககர மெய்யைப் பெற்றால் கை - யாகும். இது போல் தை, நை, பை, மை என பல்வேறு மெய்பெற்ற ஐகாரங்கள் எழலாம்.  மெய்பெறு ஐகாரம் என்பது ஓர் இலக்கணக் கலைச்சொல். எப்படிப் பாணினியத்தில் பல்வேறு கலைச்சொற்கள் பயனுறுகின்றனவோ, அதுபோல இது தொல்காப்பியர் பயனுறுத்திய கலைச்சொல். 

(இங்கோர் இடைவிலகல். தமிழ் அகரமுதலிகளில் காணப்படும் ஏகப்பட்ட மெய்பெற்ற ஐகாரச் சொற்கள் தமிழில் பிறந்தவையேயல்ல. ஏராளமான சங்கதச் சொற்களை இன்னதென்று தெரியாமல் நாம் தொடர்ந்து கையாளுகிறோம். காட்டாகச் சைவநெறி என்பதே தவறான ஒலிப்பு. தமிழோசை கூடித் தமிழிலக்கணப்படி சொன்னால் அது சிவ நெறி. சைவநெறி என்பது சங்கதமும் தமிழுங் கலந்த கலப்பொலிப்பு. பைத்தியம் சங்கதப் பட்டவத்தில் ஆன தமிழ்ச்சொல். பித்தம் என்பதே சரியான தமிழ்ச்சொல். ஐகாரச் சொற்களை ஆழ்ந்து ஆராய்ந்தால் 100க்கு 80 சொற்கள் சங்கதச் சாயலே பெற்றிருக்கும். இதேபோல ஔகாரச் சொற்களுக்கும் உண்டு. பலரும் பௌத்தம்/பவுத்தம் என்றெல்லாம் சொல்வார். அதுவும் சுற்றிவளைத்துச் சங்கதம் பேணும் பழக்கம் தான். புத்தம் என்பதே தமிழ்முறை. ஐகாரச்சொற்களிலும்  100க்கு 95 வடமொழிகல்ந்தே நாம் பயில்கிறோம். ஆழ்ந்துபார்த்தால் ஐகாரமும், ஔகாரமும் தமிழுக்குப் பெரிதும் புறனடைகளே. விரல்விட்டு எண்ணும் அளவே தமிழ்ச்சொற்கள் ஐகாரத்திலும், ஔகாரத்திலும் உள்ளன.)   
 . 
குறிப்பிட்ட  தொல்காப்பிய நூற்பாவை, ”ஐயென் நெடுஞ்சினை பெய்பெற, அகரத்து இம்பர் யகரப்புள்ளியும் தோன்றும்” என்றே பொருள் கொள்ளவேண்டும். அதாவது கை, தை, நை, பை, மை என்று வரும் போது அய் என்ற ஒலி எழுவதாகக் கொள்ளலாம். மாத்திரைப்படி பார்த்தால் முதலில் வரும் மெய்க்கு அரை மாத்திரை, அடுத்துவரும் ஐக்கு 1.5 மாத்திரை. ஆக கை, தை, நை, பை, மை போன்றவற்றிற்கு 2 மாத்திரை. முதலில் சொல்லும் ”அகர இகரம் ஐகாரமாகும்” என்பது மெய்பெற ஐகாரத்திற்கும், இரண்டாவது வரும் “அகரத்து இம்பர் யகரப்புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” என்பது மெய்பெறும் ஐகாரத்திற்கும் ஆகும் நூற்பாக்களாகும்.

இரண்டையும் தனித்தனியே பிரித்துச் சரியாகவே தொல்காப்பியர் கையாண்டிருக்கிறார் - என்றே நான் எண்ணுகிறேன்.
  
அன்புடன்,
இராம.கி.

Pandiyaraja

unread,
Apr 16, 2016, 8:14:46 AM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்பிற்குரிய ஐயா!
விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி. தங்கள் குறிப்புப்படி தொல்காப்பியரின் இந்த நூற்பா ஐ-கொண்ட உயிர்மெய் எழுத்துகளுக்குத்தான் என்று தாங்கள் கருதுவதாக உனர்கிறேன். கை = கய் என்பது சரி. ஆனால் ஐ = அய் என்பது சரியல்ல என்று தாங்கள் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன். மெய்பெற என்பது மெய்யெழுத்து பெற - அதாவது உயிர்மெய் எழுத்துகளில் - என்ற பொருள் நேரிடையாகவே தோன்றும்போது இது எப்படிக் கலைச்சொல் என்று குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை.
>>
ஆழ்ந்துபார்த்தால் ஐகாரமும், ஔகாரமும் தமிழுக்குப் பெரிதும் புறனடைகளே. விரல்விட்டு எண்ணும் அளவே தமிழ்ச்சொற்கள் ஐகாரத்திலும், ஔகாரத்திலும் உள்ளன
>>
இங்கே ஐகாரத்தை முதலெழுத்தாகக் கொண்ட சொற்களைக் குறிக்கிறீர்களா, அல்லது ஐகாரம் வரும் சொற்களைக் குறிக்கிறீர்களா எனத் தெரியவில்லை. என்னுடைய கணக்குப்படி, தமிழ் மொழிச் சொற்களில் அகரமுதல் னகர இறுவாயான முப்பது ஒலிகளில், மொத்தம் 45% உயிர் ஒலிகள் வருகின்றன. அவற்றில் 15% அகர உயிர் வருகிறது. இதன்படி உ - 9%; இ - 8%; ஆ - 4%; ஐ - 3%. அதாவது உயிர் 12-இல் ஐகார ஒலி ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது. எனவேதான் இதனை மாற்றி எழுதுவதைப் பற்றித் தீவிரமாக ஆயவேண்டும் என்பது என் கருத்து.

வைகுறு விடியல் மருதம்; எற்பாடு
நெய்தல் ஆதல் மெய்படத் தோன்றும் - என்ற தொல். நூற்பாவில் வை என்ற ஒலிக்கு எதுகையாக நெய் என்ற ஒலி வருவதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

மீண்டும் தங்களுக்கு மிக்க நன்றி,

அன்புடன்,
ப.பாண்டியராஜா

இராமகி

unread,
Apr 16, 2016, 9:26:49 AM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
உயிர்மெய் எழுத்து என்பது 12*18 என்று பெருக்கிய மொத்தத்தைக் குறிக்கும்.
மெய்பெறு ஐகாரம் என்பது ஐ*18 என்ற 18 ஐ மட்டுமே குறிக்கும்.

கொத்துத் தேற்றத்தின் (set theory) படி சொன்னால் 216 உறுப்பினர் கொண்ட உயிர்மெய்க் கொத்தில் மெய்பெறு ஐகாரம் என்பது ஓர் உட்கொத்து. இதற்கொரு கலைச்சொல் வேண்டுமல்லவா? இதேபோல மெய்பெறு அகரம்,மெய்பெறு ஈகாரம், என்று இன்னும் 11 உட்கொத்துக்கள் உண்டு. நம்மைப்போன்ற அறிவியல். நுட்பியல் பழக்கமுள்ளவர்  தொல்காப்பியத்தை ஆழமாகப் படிக்கவேண்டும். தமிழறிஞர் ஒரு பார்வையில் தொல்காப்பியத்தை அணுகுவார். நம்மைப் போன்றவர் வேறு பார்வையில் அணுகுவோம். இருபார்வைகளுமே இன்று தேவை. நம் பார்வையால் இன்னும் பல கலைச்சொற்கள் கிடைக்கக் கூடும். பாணினிய ஆய்வுகள் இது போன்ற கலைச்சொற்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அந்த அளவிற்குத் தொல்காப்பியத்தை  அறிவியற் பார்வையில் இன்னும் யாரும் அலசவில்லையோ என்றெண்ணுகிறேன்.

”ஆழ்ந்துபார்த்தால் ஐகாரமும், ஔகாரமும் தமிழுக்குப் பெரிதும் புறனடைகளே. விரல்விட்டு எண்ணும் அளவே தமிழ்ச்சொற்கள் ஐகாரத்திலும், ஔகாரத்திலும் உள்ளன”
என்று சொன்னபோது, ஐகார, ஔகார முதலெழுத்துச் சொற்களையும், மெய்பெறு ஐகார, மெய்பெறு ஔகார முதலெழுத்துச் சொற்ளையுமே நான் சொல்ல முற்பட்டேன். ஆனால், சொல் தெளிவின்மையால்,. என் கருத்தைச் சரியாக வெளிப்படுத்தவில்லை. மன்னியுங்கள். 

அன்புடன்,
இராம.கி.

Pandiyaraja

unread,
Apr 16, 2016, 12:09:31 PM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா!
ப.பாண்டியராஜா

N D Logasundaram

unread,
Apr 16, 2016, 3:19:07 PM4/16/16
to தமிழ் மன்றம், mintamil, vallamai, thamizayam, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Sivakumar M A, C.M.Elanttamil Maruthai, Banukumar Rajendran
அன்புமிகு இராமகி பாண்டியராசா அவர்களுக்கு கூரிய நிலையில் ஆழ்ந்த கருத்தின வைக்கும் தங்களுக்கு நன்றி பல 
ஒர குறிப்பு மட்டும் 
திரு இராமகி அவர்கள்'ஐ' கார  உருவம் அகரவடிவமும் யகரவடிவமும் இணைந்த நிலை எனக்காணலாம்  எனக்கட்டியுள்ளார். அகரம் மேல் நிலை யகரம் கீழ்நிலை என்பதும் முதல் ஒலிக்கும் ஒலி   மேலே அடுத்து வருவன கீழ் கீழ் செல்லும் எனும் சம்யுக்தத்காரத்தின் இயல் ஒத்து வரும்  எனலாம் 
 ஆனால் 
அவ்வடி (அப்படி) நோக்குங்கால் வடமொழி கைக்கொள்ளும் இரு எழுத்துக்களின் பிணை நிலை  கூட்டெழுத்து (samyukthaatcaram )  எனும் கீரும் பண்பு தமிழில் வடமொழி பற்றி ஒட்டிஉள்  வந்தது எனக் காட்ட எதுவாக முடியும் 

எனவே கூட்டொலி எழுத்துக்கள் தமிழில் இல்ல எனக்காட்ட 'அய் ' என்பதே சரியானதாகும் எனல் வேண்டும் 
காலம் சென்ற கொடுமுடி சண்முகனார் தமிழில் உள்ள உயிர்கள் அய்ந்தே எனவும்  ஐகாரமும் ஔகாரமும் புறத்தன அவை களை நீக்க வேண்டும் எனும் கருத்துடையவாக இருந்தார் என்பதை  அறிவேன்.கிரந்த எழுத்துக்களை நீக்கும் கருத்தினுக்க்கு  ஒக்கவே இதனையும் வைத்தவர் அவர் 

அதான்று  பிராமி  க ல்லெ லேழுத்து க்களில் ஐகாரம் காணவில்லை என்பதனைத்தான் நாம் அறிவோமே வேறு 
இதனுடன் ககர-ஙகர;சகர-ஞகர; டகர-ணகர; தகர-நகர; பகர-மகர  அணித்த நிலை  ஒலிகள் வரிசை யுடன் றகர-னகர அணிநிலை ஒலிகளை வைத்து பின்தான் யகரம் முதல் வரும் இடைஇன ஒலிளைவைத்து 
 தமிழ் எழத்து நிரலை காட்டவேண்டும் அவ்வழி    இப்போதுள்ள எழுத்துக்களின் நிரல்  நிலையை
முற்றிலும் மேற்கண்ட கருத்திற்கு இயைய மாற்றவும் வேண்டும் எனவும் காட்டியவர் அவர். இப்போது றகர -ன நகரங்கள் பின்னால் னல் தமிழுக்கே வந்து சேர்ந்தன எனக்காட்டும் நிலையில் கள்ளத்தனம் ஊடுருவிய நிலை 
 உள்ளது என சான்று பகரும் நிலைதனை முறியடிக்க நினைத்தவர்  அதுபோல் ஆய்த எழுத்தும் வடமொழியில்ஒலியில் முற்றிலும்  ஈடானதும் அதன்  நிரலில் கடையில் வைக்கப்பட்டுள்ளதும் காட்டப்பட்டது என்பார் அவர் 

க ங ச ஞ ட ண த ந பம றன யர லவ ழ ள 
உயிரில் அ (ஆ) , இ (ஈ) , உ (ஊ) எ (ஏ ) ஒ ஓ
பின்  ஃ 
 
நூ த லோ சு 
மயிலை 

--

Velmurugan Subramanian

unread,
Apr 16, 2016, 3:24:34 PM4/16/16
to tamilmanram, mintamil, vallamai, thamizayam, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Sivakumar M A, C.M.Elanttamil Maruthai, Banukumar Rajendran

அனைவருக்கும் வணக்கம். 

இந்த இழையில் பல புதியபுதியசெய்திகளை அறிந்தேன்.  

ஐயா இராமகியவர்களின்  ஒருகருத்து எனக்கு சற்று வியப்பைக்கொடுத்தது.

"பலரும் ஐ, அய் என்பதை மாத்திரைகளைக் காட்டி வேறுபடுத்துவதை நான் ஏற்பவனில்லை" என்பதுதான் அது. 
   
ஆனால், வேறுபடுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்தானே? 

ஐ -என்பது இரண்டாவேற்றுமையுருபாகிவிட்டது. இப்போதும்  அய்=ஐ என்றுசொல்வது சரியில்லை. இல்லையா? அதாவது "அய்"யானது "ஐ"யை ஒருபோதும் தவிர்க்கவுதவாது.   மாத்திரையளவிலும் அவை  வேறுபட்டேநிற்கின்றன. 

+++++++

மேலும் ஐயா பாண்டியராசாவவர்கள் கூறியதுபோன்று 
ஐ-இன் பயன்பாட்டிற்கு  திருக்குறளில் 5ஆவது இடம். ஒருகுறளுக்கு ஒன்று என்னும் விகிதாச்சாரத்தைவிட மிகுதியாயிருக்கிறது.    

செங்கோவைகொண்டுதேடலின் முடிவுகள்

திருக்குறளிலிருக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை.

ஐகாரவரிசையென்பது 19 எழுத்துகளைக்கொண்ட கணம் 
19:[ஐ, கை, ஙை, சை, ஞை, டை, ணை, தை, நை, னை, பை, மை, யை, ரை, றை, லை, ளை, ழை, வை]

நன்றி 
வேல் 

இராமகி

unread,
Apr 16, 2016, 8:28:21 PM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com
அன்பிற்குரிய ஹரி,

உங்கள் தொகுப்பிற்கு மிக்க நன்றி.இதுபோன்ற தொகுப்புக்களை ஒரு கட்டுரையாக மாற்றி நீங்கள் தரவேண்டும். அதை திருவளர்.சுபா/தேமொழி அவர்கள் ஓரிடத்தில் சேகரித்து வைக்கவேண்டும். பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். உங்களைப் போன்றவர் செய்யாவிட்டால் பின்னாளில் இதை மீள யாராவது செய்ய்வேண்டியிருக்கும்.

அன்புடன்,
இராம.கி. 

இராமகி

unread,
Apr 16, 2016, 8:47:33 PM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tami...@gmail.com, podh...@gmail.com, ara...@gmail.com, vas_...@hotmail.com, abans...@gmail.com, elan...@gmail.com, banuk...@gmail.com
அன்பிற்குரிய நூதலோசு,

தங்கள் கருத்திற்கு நன்றி. நான் இங்கு தமிழில் கூட்டெழுத்துக்கள் (ஸம்யுக்தாக்ஷரங்கள்) உண்டா இல்லையா என்று பேசவில்லை. அது வேறு புலனம். ஐ என்ற எழுத்தின் வடிவம் 8/9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன் கிடையாது. அதன் வடிவம் அகரமும் (180 பாகை சுற்றிய) இகரமும் சேர்ந்ததாய் இருக்கலாம். அன்றேல் அகரமும், யகரப்புள்ளியும் சேர்ந்ததாய் இருக்கலாம் என்று ஓர் இயலுமையை மட்டுமே சொன்னேன். இந்த வடிவம் சங்கதத் தாக்கத்தால் ஏற்பட்டதா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காலம் சங்கதத் தாக்கம் இருந்த காலந்தான். (பழந்தமிழியில் இதுநாள் வரை எந்த வடிவும் ஐகாரத்திற்கும் ஔகாரத்திற்கும் கிடைக்கவில்லை. ஒருவேளை வடிவமின்றி ஒலியும், கருத்தும் இருந்ததோ, என்னவோ?) 

அதேபொழுது மெய்பெறு ஐகாரம் தமிழ்ச்சொற்களில் இடையெழுத்தாக வருவது நிறையத்தான். ஆனால் தனி ஐகாரமும், மெய்பெறூ ஐகாரமும் முதலெழுத்தாக தமிழ்ச்சொற்களில் வருவது மிக்மிகக் குறைவே..

அன்புடன்,
இராம.கி.

இராமகி

unread,
Apr 16, 2016, 9:23:18 PM4/16/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tami...@gmail.com, podh...@gmail.com, ara...@gmail.com, vas_...@hotmail.com, abans...@gmail.com, elan...@gmail.com, banuk...@gmail.com
அன்பிற்குரிய வேல்முருகன்,

ஐ என்பதன் வடிவம் பற்றியே நான் பேசினேன். அது அஇ/அய் என்பதன் பிணைப்பு வடிவமாய் இருக்கலாம் என்பதே என் கருத்து. மற்றபடி ஐக்கு மாறாய் அய்யைப் பயன்படுத்தலாமா என்றால் இப்போதெல்லாம் சற்று தயங்குகிறேன். (விவரம் தெரியாமல் ஆய்வில்லாது ஒருகாலத்தில் நானும் விறுவிறுப்பில் அய்யா, அய்யம் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளேன். அப்போதிருந்த பெரியார் ஈடுபாடு, அதன் மிச்சசொச்சம் அதற்குக் காரணமாகும்.)

தொல்காப்பிய நூற்பாவின் படி பார்த்தால், மெய்பெறு ஐகாரத்துள் அய் என்ற கூறு உறுதியாக உள்ளது. தனி ஐகராத்தில் அஇ என்ற கூறேயுள்ளது. எந்த மாற்றத்தையும் நான் இங்கு சொல்லவில்லை. திரு.நரசையா தன் பெயரை நரசய்யா என்று எழுதுவது ஏற்கத்தக்கதே. அதேபோல கை என்பதைக் கய் என்று எழுதலாமா என்றுகேட்டால் ”ஒலிப்பில் தவறில்லை; ஆனால் எழுதும்போது கை என்பதே நம் மரபு” என்று சொல்லவேண்டியிருக்கிறது. மாத்திரையளவில் கையும், கய்யும் வேறுபட்டவை தான். 
 
பெரியார் சொன்னபடி ஐகாரத்தையும், மெய்பெறு ஐகாரத்தையும் தூக்கிவிட்டெறியலாமா என்று இன்றுகேட்டால் மறுப்பேன். இற்றைக்கு இருக்கும் பொத்தான்  தட்டும் சூழ்நிலையில், இக்கட்டளை கொஞ்சமும் பின்பற்றத் தேவையில்லாதது. என்னைக் கேட்டால் ஐகாரம்/மெய்பெறு ஐகாரம் அப்படியே நீடிக்கலாம். இற்றை நுட்பியலால் அதை எளிதிற் கையாள முடியும். ஐகாரச் சீர்திருத்தம், ஔகாரச் சீர்திருத்தம், உகர, ஊகாரச் சீர்திருத்தங்கள் என்ற எதற்குமே என் ஒப்புதல் கிடையாது. அவை காலம் முடிந்துபோன சீர்திருத்தங்கள். ”போயே போயிந்தி.”.அதைச் செய்யத் துடிக்கிறவர்கள் நம் பழம் ஆவணங்களிலிருந்து நம்மைப் பிரித்துத் தற்குறியாக்கவே முயல்கிறார். அது எந்த நாசகாரராய் இருந்தாலுஞ் சரி. எழுத்தைத் தொலைப்பது வரலாற்றைத் தொலைப்பதற்குச் சமம். துருக்கி, மலேசியா  இந்தொனேசியா, மாலத்தீவு போன்ற நாடுகள் தம் பழம் வரலாற்றை மூடிமறைக்க முற்பட்டது போலவே அது வந்துசேரும். தமிழ்ர் தமிழராக நிலைக்கவேண்டுமானால் தமிழெழுத்தைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை தமிங்கிலராக மாற்றுவதற்கே வழிவகுக்கும். எழுத்துச் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் நம்மைத் தமிங்கிலராக மாற்றவே பாடுபடுகிறார். எத்தனைமுறை தேன்தடவிய சொற்களால் அவர் அதைச்சொன்னாலும் அதே பொருள்தான்..

அன்புடன்,
இராம.கி.

Oru Arizonan

unread,
Apr 17, 2016, 1:19:55 AM4/17/16
to mintamil, vallamai

2016-04-16 18:23 GMT-07:00 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
// தமிழ்ர் தமிழராக நிலைக்கவேண்டுமானால் தமிழெழுத்தைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை தமிங்கிலராக மாற்றுவதற்கே வழிவகுக்கும். எழுத்துச் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் நம்மைத் தமிங்கிலராக மாற்றவே பாடுபடுகிறார். எத்தனைமுறை தேன்தடவிய சொற்களால் அவர் அதைச்சொன்னாலும் அதே பொருள்தான்..//

எனது நிலைப்பாடும் அதுவேதான், இராமகி அவர்களே!  என் மனதில் உள்ளதை அப்படியே எழுத்துகளால் வரைந்திருக்கிறீர்கள்.

Pandiyaraja

unread,
Apr 17, 2016, 3:21:30 AM4/17/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tami...@gmail.com, podh...@gmail.com, ara...@gmail.com, vas_...@hotmail.com, abans...@gmail.com, elan...@gmail.com, banuk...@gmail.com
>>
ஐ என்ற எழுத்தின் வடிவம் 8/9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன் கிடையாது. அதன் வடிவம் அகரமும் (180 பாகை சுற்றிய) இகரமும் சேர்ந்ததாய் இருக்கலாம். அன்றேல் அகரமும், யகரப்புள்ளியும் சேர்ந்ததாய் இருக்கலாம் என்று ஓர் இயலுமையை மட்டுமே சொன்னேன்.
>>
இராமகி ஐயா அவர்களுக்கு!
கல்வெட்டுகளில் ஐ கிடையாது எனினும் கை, பை, தை போன்ற உயிர்மெய் எழுத்துகள் இருக்கின்றன. அவை கய், பய், தய் என எழுதப்பட்டது இல்லை. எனவே ஐ-க்கு ஓர் குறியீடு இருந்திருக்கவேண்டும். அதைப் பயன்படுத்தும் சொற்கள் கல்வெட்டில் இல்லை என்பதே உண்மை. ஐ-யை முதலெழுத்தாகக் கொண்ட எழுத்துகள் இன்றைக்கும் மிகச் சிலவே. எனவே கல்வெட்டில் ஐ இல்லை. எனவே ஐ-க்குத் தனி உருவம் இல்லை என்பது சரியான வாதம் ஆகாது என்பது என் கருத்து.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

இராமகி

unread,
Apr 17, 2016, 4:45:52 AM4/17/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tami...@gmail.com
அன்பிற்குரிய பாண்டியராசா,

இற்றை ஐகாரம் கிட்டத்தட்ட 8/9 ஆம் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம் என்றுதான் சொன்னேன். தவிர அதற்கு முந்திய வடிவம் கிடைக்கவில்லை என்பதை இருவருமே ஒப்புகிறோம். என்ன உருவம் 8/9 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாலிருந்தது என்பதை இற்றைப் புரிதலிற் கற்பனையில் தான் சொல்லமுடியும்.

இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். இன்றுநாம் பயன்படுத்தும் ஆய்தம் (முப்புள்ளி) மேலே ஒரு புள்ளியும், கீழே இரு புள்ளிகளுமாயிருக்கிறது.  அது அக்காலத்தில் கிடையாது என்றே எல்லாக் கல்வெட்டியலாருஞ் சொல்வர். ஆய்தத்தின் உருவம் உரைகாரர் வழியே, 13/14ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம் சுவடிகளின் வாயிலாவே கிடைத்தது என்றே எங்கோபடித்த நினைவு எனக்கிருக்கிறது. (இதை மீண்டும் சரி பார்க்கவேண்டும்.)

முப்பாற்புள்ளி என்பதில் பால் என்ற இடைச்சொல்லை எடுத்துவிட்டு முப்புள்ளி என்று ஓர் உருவத்தை இன்று கொண்டுவந்துவிட்டார். மாறாக குற்றியலுகரம், குற்றிலிகரம்,  ஆய்தம் ஆகிய மூன்றிற்குமே மேல், கீழ், பக்கவாட்டுப் பக்கங்களில் ஒரேயொரு புள்ளிமட்டும் இட்டிருக்கலாம் என்ற கருத்தும் சிலருக்குண்டு. பால் = பக்கம். இந்தப் புள்ளி தான் மலையாளத்தில் சந்திரபிந்துவாக வந்தது என்று சொல்வாருமுண்டு. குமரி/நெல்லைமாவட்டங்களில் பிற்காலத்திற் கிடைத்த தமிழ்ச்சுவடிகளிலும் குற்றியலுகரம், குற்றியலிகரத்திற்குச் சந்திரபிந்து உண்டு..

அதே பொழுது  6 ஆம் நூற்றாண்டிற்கு முன்னால் இகரம் என்பது முப்புள்ளியாகவே இருந்தது. எல்லாப் பழந்தமிழிக் கல்வெட்டிலும் ஈகாரம் இருந்தால் அதைச் சில இடங்களிற்  குறிலாகப் படிப்பதும் இன்றேல் இந்த முப்புள்ளியே இகரத்துக்கு அடையாளமாய் இருப்பதும் உண்டு. பின்னால் 6 ஆம்  நூற்றாண்டில் ஏற்பட்ட இகரம் முப்புள்ளியிலிருந்து  திரிந்துவந்ததேயாகும். இந்த முப்புள்ளித் தொடர்பைக் காட்டுவதற்காகவே நான் 19 ஆம் நூற்றாண்டில் அச்சுத்தொழில் காரணத்தால் ஏற்பட்ட இகரத்தை வடிப்புக்கிறுவியல் வழி தொலைத்து 18 ஆம் நூற்றாண்டு இகரத்தை இன்று பயன்படுத்தலாம். கணியாவணங்களிலும், அச்சாவணங்களிலும் இன்று கோட்டு வெளிப்புச் (line spacing) சிக்கலுக்கு விடைகாணலாமென்று சொல்கிறேன்.

திருந்திய இகரத்தை 6 ஆம் நூற்றாண்டிற்கு  அப்புறம் பழகிய பின்னால் எல்லோருக்கும் அயன்மையாகிவிட்ட முப்புள்ளியை 13/14 ஆம் நூற்றாண்டு உரைகாரர் ஆய்தங் குறிக்கப் பயன் படுத்தினாரா? எப்பொழுது குற்றியலுகரம், குற்றியலிகரத்துக் குறியீடேயில்லாது போனது? - இவை போன்ற கேள்விகளுக்கு என்னிடம் இப்போது விடைகிடையாது.

”அப்படியானால்  தொல்காப்பியர் காலத்தில் அகரத்தை எழுதி அதனருகிலோ, கீழேயோ முப்புள்ளியை வரைந்து ஐகாரம் குறித்தாரா?” என்ற சான்றில்லாத ஊகமும் என்னுள் எழுகிறது.   

மொத்தத்தில் நமக்குத் தெரியாத (8 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய) ஒரு சிக்கல் இகரம் - ஆய்தம் - குற்றிலுகரம், குற்றியலிகரம் -ஐகாரம் ஆகியவற்றைச் சுற்றிக் கிடக்கிறது. பல்வேறு கல்வெட்டியலாரும் குழம்பித்தான் கிடக்கிறார்.  என்றோவொரு நாள் இந்தப்புதிர் விடுபடும் என்று நம்புவோம்.

அன்புடன்,
இராம.கி.

Pandiyaraja

unread,
Apr 17, 2016, 5:27:45 AM4/17/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tami...@gmail.com
தங்களின் கருத்து சரிதான் ஐயா!

தொல். குறிப்பிடும் முப்பாற் புள்ளி என்பது, {குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் } என்ற முப்பாற் புள்ளி என்றே பொருள் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து. இந்த மூன்றுமே புள்ளியுள்ள எழுத்துகள் என்று பொருள். அப்படியென்றால் ஆய்தத்துக்கு உருவம் எது?
இதனை, "திருக்குறளில் சீர்,தளை கணக்கீட்டில் சிக்கல்களும் கணினிவழித் தீர்வும்" என்ற என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். சென்ற மே மாதம் சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் அக் கட்டுரை படிக்கப்பட்டது. அதன்பின் மின் தமிழிலும் அதனை வெளியிட்டிருக்கிறேன்.
ப.பாண்டியராஜா

Suba

unread,
Apr 17, 2016, 5:35:11 AM4/17/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-04-17 9:21 GMT+02:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>
ஐ என்ற எழுத்தின் வடிவம் 8/9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன் கிடையாது. அதன் வடிவம் அகரமும் (180 பாகை சுற்றிய) இகரமும் சேர்ந்ததாய் இருக்கலாம். அன்றேல் அகரமும், யகரப்புள்ளியும் சேர்ந்ததாய் இருக்கலாம் என்று ஓர் இயலுமையை மட்டுமே சொன்னேன்.
>>
இராமகி ஐயா அவர்களுக்கு!
கல்வெட்டுகளில் ஐ கிடையாது எனினும் கை, பை, தை போன்ற உயிர்மெய் எழுத்துகள் இருக்கின்றன. அவை கய், பய், தய் என எழுதப்பட்டது இல்லை. எனவே ஐ-க்கு ஓர் குறியீடு இருந்திருக்கவேண்டும். அதைப் பயன்படுத்தும் சொற்கள் கல்வெட்டில் இல்லை என்பதே உண்மை.
இது தான் நான் முதலில் இந்த இழை தொடங்கக் காரணமே. 
நிறைய தமிழி கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ஏன் ஒன்றில் கூட ஐ க்கான வடிவம் இல்லை என்பது எனக்கு கேள்வியாகின்றது. 

ஐ-யை முதலெழுத்தாகக் கொண்ட எழுத்துகள் இன்றைக்கும் மிகச் சிலவே. எனவே கல்வெட்டில் ஐ இல்லை. எனவே ஐ-க்குத் தனி உருவம் இல்லை என்பது சரியான வாதம் ஆகாது என்பது என் கருத்து.
அன்புடன்,
​உங்கள் கருத்தை ஏற்கிறேன்.
ஆனால் சான்று கிடைத்தால் உபயோகமாக மேலும் உங்கள் கருத்தை  ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கும் டாக்டர்.பாண்டியராஜா அவர்களே.

சுபா
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Pandiyaraja

unread,
Apr 17, 2016, 7:44:12 AM4/17/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
அம்மையீர்,
தமிழில் ஐ என்ற உயிர் ஒலி 12 உயிர்களுக்குள் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பெரும்பானவை சொல்லின் இடையிலும், இறுதியிலும் உயிர்மெய் எழுத்துகளாக வருபவை. ஐ என்ற எழுத்து வரவேண்டுமானால் ஐ-இல் தொடங்கும் சொற்கள் தேவை. தொல்காப்பியம் பொருளதிகாரம் முழுதும் + பத்துப்பாட்டு முழுதும் + ஏனைய சங்க இலக்கியங்களிலிருந்து random sampling முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட மொத்தம் 32, 885 சொற்களில் ஐ-இல் தொடங்கும் சொற்கள் மொத்தம் 63தான் உண்டு. எழுத்துமொழியிலேயே இப்படி என்றால் கல்வெட்டு மொழியில் ஐ-சொற்கள் இன்னும் கிடைக்காகததில் வியப்பில்லை. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் எங்கேயாவது கிடைக்கும். என்னுடைய யூகம் ஒரு சதுரத்துக்குள் வரைந்த + (Plus) வடிவமே பிராமியின் ஐ வடிவம். இடது பக்கத்து மையத்திலிருந்து வலஞ்சுழியாக (clockwise) கையை எடுக்காமல் இந்த எல்லாக் கோடுகளை வரைந்தால் இன்றைய ஐ கிடைக்கும்!!!! (தமிழ் பிராமிக்கும் அசோகன் பிராமிக்கும் உள்ள் முக்கிய வேறுபாடு. நாம் வலஞ்சுழி - வடக்கே இடஞ்சுழி)
ப.பாண்டியராஜா

இராமகி

unread,
Apr 17, 2016, 10:34:35 AM4/17/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
ஐக்கான பழைய வடிவம்  6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாதர்குன்றிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டிலுள்ளது. திருநாதர் குன்று செஞ்சிக்கு அருகிலுள்ளது. இக்கல்வெட்டின் அச்சுப் பதிப்பு திரு.ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட  Early Tamil Epigraphy என்ற பொத்தகத்தின் 472-473 ஆம் பக்கங்களில் உள்ளது. இந்தக் கல்வெட்டின் வாசகம்:

L1. ஐம்பத்தேழன
L2.சனந் நோற்ற
L3. சந்திரநந்தி ஆ
L4.சிரிகரு நிசீதிகை

இந்த ஐகார வடிவம் காரவேலனின் அத்திகும்பா பாகதக்கல்வெட்டில் உள்ள ஐகார வடிவிலிருந்து வேறுபடுவதாக ஐராவதம் மகாதேவன் சொல்கிறார். அதே பொழுது இந்த வடிவம் ஆந்திரத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் அல்லூரு என்னுமிடத்தில் உள்ள ARE 331/1924 பாகதக் கல்வெட்டில் இங்கே கொடுத்துள்ள வடிவமே பயில்வதாய்க் குறிப்பிடுகிறார். இந்த அல்லூருக் கல்வெட்டு T.N.Subramaniam 1957: pp 1518-1519; pl2.Col.IV.49 இல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அல்லூருக் கல்வெட்டு 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்றுஞ் சொல்லப்படுகிறது.

அத்திகும்பாக் கல்வெட்டையும், அல்லூரு கல்வெட்டையும் நான் தேடவேண்டும்.

படி இருப்பவர்கள் இங்கு வெளியிட்டால் பயனுள்ளதாயிருக்கும்.

அன்புடன்,
இராம.கி.
img079.jpg

N. Ganesan

unread,
Apr 17, 2016, 11:03:21 AM4/17/16
to வல்லமை, mint...@googlegroups.com
ஒன்று குறிப்பிட மறந்துவிட்டேன்: எப்பொழுது ஐ, ஔ பற்றிய தொல்காப்பியச் சூத்திரங்கள் எழுதப்பட்டிருக்கும் என்ற ஆய்வுக் கேள்வி.
இதற்கான விடை திருநாதர்குன்றில் உள்ள ஐ வடிவம் காட்டுகிறது. பல காலமாக எழுதப்பட்டுவந்த பிராமி, தமிழ் பிராமி
இவற்றில் புள்ளி ஏற்படுகிற காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. இதனை ஐயத்துக்கிடமின்றி ஐராவதம் நிறுவிவிட்டார்கள்.
பின்னர் புள்ளி கொண்ட அய், அவ் உடன் வர்ணிக்கப்படும் சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் வருகின்றன. இவை
டிப்தாங்க்ஸ், இவ்வெழுத்து வடிவங்கள் வடக்கே உள்ள பிராமியில் இருந்து வரும் காலத்தில் இச்சூத்திரங்கள் எழுதப்பெற்றன
எனக் கணிக்கலாம். ஐ, ஔ பற்றிய சூத்திரங்கள் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வாக்கில் எனக் கொள்ள கல்வெட்டுச் சான்றுகள் உதவுகின்றன.

நா. கணேசன்

On Tuesday, April 12, 2016 at 10:45:26 PM UTC-7, kalai wrote:

வணக்கம்.
நானும் "ஐ" கட்சிதான்.
காரணம், சங்கத் தமிழ் அறிஞர் கூடி விவாதித்து சீர்மை செய்யப்பெற்றது தமிழ் மொழி.
இத் தொன்தமிழின் பயனாளர் நாம்.
"பல், பால்", "கல் கால்"
தமிழிலில் குறிலுக்கும் நெடிலுக்கும் மிகுந்த பொருள் வேறுபாடு உண்டு.

"ஐயா" பொருளுடையது.
"அய்யா" பொருளற்ற சொல்.
இலக்கணப்படி யில்லாத சொற்களைப் பயன்படுத்த நமக்கு உரிமை இல்லை. அதற்கான புலமையும் இல்லை.

ஐயன், அய்யன் இரண்டுமே பொருளுடைய சொற்கள் தாம். ஔவை = அவ்வை போல, ஐயன், அய்யன்
இரண்டுமே வழக்கத்தில் உண்டு. இன்னும் சொல்லப்போனால், ஐ, ஔ என்னும் இரண்டு உயிரெழுத்துடைய
கூட்டெழுத்துக்கள் “டிப்தாங்ஸ்” என்பர். மூலத்ராவிட மொழியில் இவை இல்லை என்பர் மொழியியல்
அறிஞர்: பர்ரோ, எமனோ, பார்போலா, .... மூலத்ராவிட வார்த்தைகளை அமைக்கும்போது ஐ, ஔ
பயன்படுத்துதல் இல்லை. அய், அவ் தான். தொல்தமிழில் கய் என்றே கை இருந்திருக்கிறது என்பர்.

சங்க காலக் கல்வெட்டுகளில் ஐ, ஔ இல்லை என்பதும் பார்க்கவேண்டும். ஐ முதலில் வரும்போது
திரிசூல (trident) வடிவில் வந்துள்ளது. இது ஆந்திர மாநில கிருஷ்ணா நதி பாயும் கிருஷ்ணா மாவட்ட
அல்லூரு என்னும் ஊரில் உள்ள வடிவம் (பார்க்க: ஐராவதம் மகாதேவனின் தமிழ் ப்ராமி நூல்.)
வட இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் 3000+ ஆண்டுகளாக தொடர்புகள் வலுப்பட்டுக்கொண்டுள்ளன.
வேளிர் துவாரகையில் இருந்து வருகையும், பௌத்தம் இலங்கையில் பரவலும், சைனம் கர்நாடகம்,
தமிழகம் வருகையும் இதனைக் காட்டுகின்றன. தொல்லியலில் பார்த்தால் மெகாலித்திக் பண்பாடு
வடக்கே இருந்து தெற்கே நகர்தலையும், மகர விடங்கர் சிற்பம் வெண்கலமாக உள்ளது வட இந்தியாவில்,
அதுவே, இரும்பு உளியால் மாபெரும் கற்சிற்பங்களாக தென்னிந்தியாவில் உருவெடுப்பதும்
குறிப்பிடலாம். 

தமிழுக்கு எழுத்து உருவாவது கொங்குநாட்டில் என கொடுமணல் ஆய்வுகள் நிரூபித்துவிட்டன.
இது பாண்டிநாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் உள்ள பிரதேசம் என்பது முக்கியமான தரவு.
ப்ராமி எழுத்தில் பிராகிருதத்தில் உயிர்மெய்கள் கை, சை, தை, டை, ணை, .... போன்றன எழுதுவது
போலவே, தமிழ் ப்ராமியிலும் இந்த -அய்/-ஐ கூட்டெழுத்தீன் டையாகிரிட்டிக் குறியீடு உள்ளது.
இந்த வடிவம் இந்தியா முழுமையும் ஒன்றாயிருக்கிறது. விஷ்ணு > வைஷ்ணவ, சிவ > சைவம்,
ஜின > ஜைனம், புத்த > பௌத்தம் ... என்னும் வடமொழி இலக்கண விதியால் அமையும் வார்த்தைகளுக்காக
வட இந்தியாவில் இந்த ‘டிப்தாங்’ எழுத்துக்கள் எழுத ப்ராமி லிபியில் அமைந்த வடிவங்கள்,
பின்னர் தமிழ் வார்த்தைகள் எழுத ப்ராமியில் இருந்து தமிழ் ப்ராமி பிறந்தபோது அப்படியே
பயன்படுகின்றன.

அய் & ஐ இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே பயன்பாட்டில் உள்ளன. பெரியார் ஐ, ஔ வேண்டாம்
என்றார். வாரியார் சுவாமிகள் போன்றோர் இரண்டும் இருக்கட்டும் என எம்ஜிஆரிடம் சொன்னார்.
எப்பொழுதுமே ஸ்க்ரிப்ட்ஸ் எழுத்துக்களைக் கூட்டிக்கொண்டே செல்லும். உ-ம்: தமிழ் லிபியில்
இன்று 5 கிரந்த மெய்யெழுத்துக்கள். அதுபோல், காலத்தால் பிற்பட்ட ஐ, ஔ இருக்கலாம்.
ஆனால் தமிழ், திராவிட பாஷகளில் -அய், -அவ் தான் பழமை வாய்ந்தனவாகும். அவையும்
பொருளுடையவை. பயன்பாட்டில் உள்ளவை. பெரியார் வலியுறுத்திய உ,ஊ உயிர்மெய் வடிவுகளும்
இருக்கலாம். மலையாளத்தில் இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருப்பதுபோல,
கல்வி கற்பிக்க, தமிழ் உயிர்மெய் மேட்ரிக்ஸ் குழந்தைகளுக்கு விளங்க, நினைவில் நிறுத்த உதவும்.
பெரியார் தொடங்கிய விடுதலை இதழில் அச்சாகும் உ, ஊ உயிர்மெய் வடிவங்கள் பற்றிக்
கல்வெட்டறிஞர் பேரா. சு. ராஜவேல் கட்டுரையில் பிராமியுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார்,
அம்முறையும், இப்போதைய முறையுடன் ’பெரியார் எழுத்து’ என இருக்கலாம்.
உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என கல்வி கற்போருக்கு எளிதில் அப்போது புரியும்.
ஐ, அய் இரண்டும் இருப்ப்துபோல, பெரியார் உ,ஊ உயிர்மெய் வடிவங்கள், ஓலைச்சுவடி வடிவங்கள்
என இரண்டும். ஐபோன், ஆண்டிராய்ட் போன்றவற்றில் தமிழ்99 விசைப்பலகை பாருங்கள்:
தமிழ் தட்டச்சுப் பலகை போல் இல்லாமல், உயிர்மெய் சார்பெழுத்துக்கள் தமிழ்99 எளிதில்
உருவாகின்றன. இது பெரியார் பரிந்துரைத்த உயிர்மெய் வடிவங்கள் விஞ்ஞான அடிப்படை எனக்
காட்டும். மலையாளம் மாறிவிட்டது. அதுபோல, பெரியார் உ,ஊ உயிர்மெய்களும் தமிழுக்கு வேண்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 17, 2016, 11:03:27 AM4/17/16
to மின்தமிழ், vallamai

Suba

unread,
Apr 17, 2016, 11:36:08 AM4/17/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-04-17 16:34 GMT+02:00 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
ஐக்கான பழைய வடிவம்  6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாதர்குன்றிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டிலுள்ளது. திருநாதர் குன்று செஞ்சிக்கு அருகிலுள்ளது. இக்கல்வெட்டின் அச்சுப் பதிப்பு திரு.ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட  Early Tamil Epigraphy என்ற பொத்தகத்தின் 472-473 ஆம் பக்கங்களில் உள்ளது. இந்தக் கல்வெட்டின் வாசகம்:

L1. ஐம்பத்தேழன
L2.சனந் நோற்ற
L3. சந்திரநந்தி ஆ
L4.சிரிகரு நிசீதிகை

இந்த ஐகார வடிவம் காரவேலனின் அத்திகும்பா பாகதக்கல்வெட்டில் உள்ள ஐகார வடிவிலிருந்து வேறுபடுவதாக ஐராவதம் மகாதேவன் சொல்கிறார். அதே பொழுது இந்த வடிவம் ஆந்திரத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் அல்லூரு என்னுமிடத்தில் உள்ள ARE 331/1924 பாகதக் கல்வெட்டில் இங்கே கொடுத்துள்ள வடிவமே பயில்வதாய்க் குறிப்பிடுகிறார். இந்த அல்லூருக் கல்வெட்டு T.N.Subramaniam 1957: pp 1518-1519; pl2.Col.IV.49 இல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அல்லூருக் கல்வெட்டு 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்றுஞ் சொல்லப்படுகிறது.

அத்திகும்பாக் கல்வெட்டையும், அல்லூரு கல்வெட்டையும் நான் தேடவேண்டும்.

படி இருப்பவர்கள் இங்கு வெளியிட்டால் பயனுள்ளதாயிருக்கும்.

நேற்று திருநாதர்குன்று பதிவு வெளியீடு  செய்ய நினைத்திருந்தேன். த்னிப்பட்ட பணிகள் காரணமாக இயலாமல் போனது. அனேகமாக வீடியோ பதிவு வரும் புதன் அல்லது வியாழன் வரும்.

நீங்கள் குறிப்பிட்ட கல்வெட்டு இதோ.

நாங்கள் பார்த்த போது வாசிக்க இயலாது இருந்ததால் பச்சை இலைகளைத் தேய்த்து சற்று வெளிச்சப்படுத்தினோம்.

​வாசிக்க முடிகின்றதா பாருங்கள்.

Inline image 1

சுபா

வேந்தன் அரசு

unread,
Apr 17, 2016, 12:07:48 PM4/17/16
to vallamai, மின்தமிழ்

17 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 10:39 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

ஒன்று குறிப்பிட மறந்துவிட்டேன்:
 
மறந்ததும் மறக்காததும் மறந்தே இருக்கலாம்

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Pandiyaraja

unread,
Apr 17, 2016, 12:16:55 PM4/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
>>
 தமிழ் பிராமி
இவற்றில் புள்ளி ஏற்படுகிற காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. இதனை ஐயத்துக்கிடமின்றி ஐராவதம் நிறுவிவிட்டார்கள்.
>>
ஐராவதம் அசோகன் பிராமியை ஆதியாக வைத்துக்கொண்டு அளந்து சொல்பவர். அந்தக் காலம் மலையேறிவிட்டது.
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Apr 18, 2016, 12:25:10 AM4/18/16
to மின்தமிழ்

On Saturday, April 16, 2016 at 5:28:21 PM UTC-7, இராமகி wrote:
அன்பிற்குரிய ஹரி,

உங்கள் தொகுப்பிற்கு மிக்க நன்றி.இதுபோன்ற தொகுப்புக்களை ஒரு கட்டுரையாக மாற்றி நீங்கள் தரவேண்டும். அதை திருவளர்.சுபா/தேமொழி அவர்கள் ஓரிடத்தில் சேகரித்து வைக்கவேண்டும்.

அன்பு இராமகி ஐயா, 
நீங்கள் குறிப்பிடும் இப்பகுதி...

ஐக்கு உரிய மாத்திரை அளவு:
என்ற பகுதியில் உங்கள் விளக்கத்தையும், 
திரு. ஹரிகி கொடுத்த   எடுத்துக்காட்டுகளையும் இணைத்துள்ளேன்.

இப்பகுதி  மின்தமிழ்மேடை காலாண்டிதழின் பக்கம் # 12 & 13 லும்  இடம் பெற்றுள்ளது 

..... தேமொழி

Hari Krishnan

unread,
Apr 18, 2016, 12:55:33 AM4/18/16
to mintamil

2016-04-18 9:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஐக்கு உரிய மாத்திரை அளவு:
என்ற பகுதியில் உங்கள் விளக்கத்தையும், 
திரு. ஹரிகி கொடுத்த   எடுத்துக்காட்டுகளையும் இணைத்துள்ளேன்.

இப்பகுதி  மின்தமிழ்மேடை காலாண்டிதழின் பக்கம் # 12 & 13 லும்  இடம் பெற்றுள்ளது 

..... தேமொழி

ஹரி கொடுத்த எடுத்துக்காட்டுகளை ஹரி கொடுத்தது என்று குறிப்பிட முடியாவிட்டால் அங்கிருந்து நீக்கிவிடவும்.  என்னுடைய எழுத்து எதுவாக இருந்தாலும் முன் அனுமதி பெறவும்.

தேமொழி

unread,
Apr 18, 2016, 1:31:25 AM4/18/16
to மின்தமிழ்

On Sunday, April 17, 2016 at 9:55:33 PM UTC-7, Hari wrote:

2016-04-18 9:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஐக்கு உரிய மாத்திரை அளவு:
என்ற பகுதியில் உங்கள் விளக்கத்தையும், 
திரு. ஹரிகி கொடுத்த   எடுத்துக்காட்டுகளையும் இணைத்துள்ளேன்.

இப்பகுதி  மின்தமிழ்மேடை காலாண்டிதழின் பக்கம் # 12 & 13 லும்  இடம் பெற்றுள்ளது 

..... தேமொழி

ஹரி கொடுத்த எடுத்துக்காட்டுகளை ஹரி கொடுத்தது என்று குறிப்பிட முடியாவிட்டால் அங்கிருந்து நீக்கிவிடவும்.  என்னுடைய எழுத்து எதுவாக இருந்தாலும் முன் அனுமதி பெறவும்.

இராமகி ஐயா அவர்களின் பகுதியை  அப்படியே உங்கள் பெயருடன் கொடுத்து, நீங்கள் கொடுத்த எடுத்துக்காட்டுகளையும் அதன் கீழ் கொடுத்துள்ளேன்   திரு. ஹரிகி.

( படம்... வலைத்தளத்தையும் மின்தமிழ் மேடை மலரையும் காட்டுகிறது )

அடுத்தமுறை இது போன்று கட்டுரைக்கு உதவும் வகையில் உங்கள் எழுத்துகள் இடையில் இருந்தால் உங்களிடம் கேட்டுவிட்டே பதிவிடுகிறேன்.

புரிதலுக்கும், உங்கள் விருப்பத்தைக் கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்கும் நன்றி. 

..... தேமொழி

தேமொழி

unread,
Apr 18, 2016, 4:55:39 AM4/18/16
to மின்தமிழ், iraamaki, Dr.Subashini, Hari Krishnan
அன்பு மின்தமிழர்களின் கவனத்திற்கு:

ஐயம்... அய்யம் 

என்ற மின்தமிழ் மேடையின் கட்டுரையின் பகுதியில் ...

திரு. இராமகி ஐயா அவர்களின் ஆலோசனையின்  அடிப்படையிலும், 
திரு. ஹரிகி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க .... அவர் குறிப்பிட்ட வகையிலும், 
சிவப்பு வண்ண எழுத்துக்களில் காணப்படும் ஒரு வரி இடையில் இணைக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது  என்பதைக் குறிப்பிட  விரும்புகிறேன்.

இருவரின் ஒத்துழைப்பிற்கும் உதவிக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

..... தேமொழி

___________________________________________________________

ஐக்கு உரிய மாத்திரை அளவு:
ஐக்கு உரிய மாத்திரை அளவு தொல்காப்பியத்தின்படி இருவகைப்படும். "அகர இகர ஐகாரமாகும்" என்பதால் அகரத்திற்கு ஒரு மாத்திரை, இகரத்திற்கு ஒரு மாத்திரை, எனவே ஐகாரத்திற்கு 2 மாத்திரை."அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்" என்பதால் ஐ என்னும் நெடுஞ்சினை (= நெடில் உறுப்பு) அய் ன்னும்போது மெய்பெறத் தோன்றும்  அதாவது 1+ 1/2 மாத்திரைகள் பெறும்.

ஒரேஎழுத்திற்கு இருவேறு மாத்திரைகள் வேறெழுத்துகளுக்கு வருமா என்றால் வரும். காட்டாக மகரப் புள்ளிக்கு அளவு பொதுவாக அரை மாத்திரை தான். அதேபொழுது மகரக்குறுக்கத்தில் கால் மாத்திரை வரலாம். யாப்பில் ஆய்தத்திற்கு இருவேறு மாத்திரைகள் உண்டு. சில இடங்களில் அதை மெய்யாகக் கருதி அரைமாத்திரை கொடுப்பதும், சில இடங்களில் உயிராகக் கருதி ஒரு மாத்திரை கொடுப்பதுமுண்டு. இதற்குக் குறளிலிருந்தே ஒரு முறை நண்பர் திரு. ஹரி சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். இது போல வேறுசில எழுத்துக்களும் இருவேறு  மாத்திரைகள் கொள்ளலாம்.

இனி அவர் கொடுத்த எடுத்துக்காட்டுகள்:

அழுக்கற் றகன்றாரு மில்லை அஃதில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் (170)

மில்லை தேமா தொடர்வது அகுதில்லார்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ( 226)

தீர்த்தல் தேமா தொடர்வது அகுதொருவன்

தவமுந் தவமுடையார்க் காகு மதனை
யஃதிலார் மேற்கொள் வது. 262

மதனை புளிமா தொடர்வது அகுதிலார்

வேண்டாமையன்ன விழுச்செல்வ மீண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில். 363

ஆண்டும் தேமா தொடர்வது அகுதொப்ப

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368

துன்பம் தேமா தொடர்வது அகுதுண்டேல்

உரமொருவற் குள்ள வெறுக்கை: யஃதில்லார்
மரமக்கள் ஆதலே வேறு. 600

வெறுக்கை புளிமா. தொடர்வது யகுதில்லார்

அற்றா லறவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943

துண்க தேமா. தொடர்வது அகுதுடம்பு

இன்பங் கடல்மற்றுக் காம மஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது. 1166

காம தேமா. தொடர்வது மகுதடுங்கால்

ஐகாரத்திற்கும் இருவேறு மாத்திரைகள் பயன்பாட்டிற்குத்தக்க மாறும். இதை இத் தொல்காப்பிய நூற்பாக்கள் வழியாக அறியலாம். இருவேறு முறையில் (அஇ, அய்) எழுந்தாலும் ஐகார வடிவு என்பது ஒன்று தான். இந்த எழுத்தைப் பெற்றுவந்த வழியால் இருவேறு மாத்திரைகளை நாம் கைக்கொள்கிறோம்.

அளபெடையில் கூட ஆடூஉ என்பதில் டூஉ என்பதை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்பது நம் உகப்பைப் பொறுத்தது. ஆனால் எழுதும்போது டூஉ என்று மட்டுமே எழுதுவோம். சிலர் குறும்புடன் ஆடூஉஉஉ என்றும், ஆடூஊஊஉ என்றும் எழுதுவதற்கெல்லாம் இலக்கண ஒப்புதலில்லை.

ஒலிப்பு வேறு, எழுத்தின் வடிவு வேறு. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கான தாக்கத்தை ஓரளவுதான் கொண்டுபோகலாம். பலரும் ஐ, அய் என்பதை மாத்திரைகளைக் காட்டி வேறுபடுத்துவதை நான் ஏற்பவனில்லை. ஐக்கான மாத்திரை 2 ஆ, 1.5 ஆ என்பது நாம் ஒலிக்கும் அளவைப் பொறுத்தது சட்டென்று குறுக்கி ஒன்றரை மாத்திரையிலும் சற்று நீட்டி இரு மாத்திரையிலும் ஒலிக்கலாம்.

Iyappan Krishnan

unread,
Apr 18, 2016, 6:11:01 AM4/18/16
to வல்லமை, mint...@googlegroups.com
:))) நல்ல கேள்வி தான் இது. 

On Monday, November 17, 2014 at 8:12:14 AM UTC+5:30, N. Ganesan wrote:
பேரா. சு. பசுபதி, சந்தவசந்தம், 2011-ல்

”ஒரு அரங்கில் , 'ஔ’ வை தமிழில் முழுதும் ஒழித்து, ‘அவ்’ பயன்படுத்தலாமே என்ற ஒரு கருத்து எழுப்பப்பட்டது..
 
இதைப் பிடிக்காத ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுந்து, கேட்டார்:
 
“ ஔவைப் பாட்டி சிறுவயதில் மிக அழகாக இருந்தாள்”
 
இந்த வாக்கியத்தில் , “ஔ” க்குப் பதிலாக “அவ்” 
இருந்தால்...? “ “
 
இறையடியான்

unread,
Apr 18, 2016, 6:22:46 AM4/18/16
to mintamil
எதாவது ஒரு விசயத்தை பற்றி ஐயம் எழுவது இயல்பு ஆனால் ஐ பற்றியே ஐயம் எழுந்தால் என்ன செய்வது

யேசுராஜன்

truth is pathless land

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2016, 6:26:03 AM4/18/16
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
விபரீத  விளையாட்டுக்கள்  தமிழிலே  கூடாது என்பதற்கு  இது அருமையான உதாரணம்

ஆன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Apr 18, 2016, 6:40:01 AM4/18/16
to தேமொழி, மின்தமிழ், iraamaki, Dr.Subashini

2016-04-18 14:25 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
திரு. இராமகி ஐயா அவர்களின் ஆலோசனையின்  அடிப்படையிலும், 
திரு. ஹரிகி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க

வேண்டுகோள் ஹரிகியினுடையது அன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எப்படி எழுதவேண்டும் என்று கேட்டார்கள்.  சொன்னேன்.  ஆகவே வேண்டுகோள் என்னுடையதன்று.

என் அனுமதியைப் பெறாமல் மின்மேடை ஏற்றினீர்கள்.  போகிறது.  வேண்டுகோள் வைத்தேன் என்று பேசாதீர்கள்.  

Suba

unread,
Apr 18, 2016, 6:58:53 AM4/18/16
to மின்தமிழ்
2016-04-18 12:39 GMT+02:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-04-18 14:25 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
திரு. இராமகி ஐயா அவர்களின் ஆலோசனையின்  அடிப்படையிலும், 
திரு. ஹரிகி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க

வேண்டுகோள் ஹரிகியினுடையது அன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எப்படி எழுதவேண்டும் என்று கேட்டார்கள்.  சொன்னேன்.  ஆகவே வேண்டுகோள் என்னுடையதன்று.

என் அனுமதியைப் பெறாமல் மின்மேடை ஏற்றினீர்கள்.
திரு இராமகி அவர்களது பதிவில் வந்த செய்தி நல்ல ​பல தகவல்களை உள்ளடக்கியிருந்தமையால் அது கட்டுரை போன்றவடிவில் மின் தமிழில் இணையட்டுமே என்று நான் தான் பரிந்துரை செய்தேன்.

உறுப்பினர்கள் யேரேனும் பரிந்துரை செய்யப்படும் கட்டுரைகள் மின் தமிழ் மேடயில் வைக்கப்படுவது தான் நாம் கடந்த பல மாதங்களாகச் செய்து வருகின்றோம். அந்த அடிப்படையில் தான் தேமொழி இக்கட்டுரைப்பதிவை இணைத்தார்கள் என்பதை தெளிவு படுத்தி விட விரும்புகின்றேன்.

இவ்வளவு பிரச்சனைகள் அதில் ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

@தேமொழி அந்த முழுக்கட்டுரையயும் நீங்கள் மின் தமிழ் மேடையிலிருந்து நீக்கி விடுங்கள். 
நமது மின் தமிழ் மேடை காலாண்டு இதழில் இக்கட்டுரை இடம்பெறுகின்றதா?
அப்படி இடம்பெற்றால் அதனை நீக்கி விட்டு ரீவெர்ஷன் செய்து எனக்கு அனுப்பிவிடுங்கள். நான் அந்தப் புதிய மின்னூலை இணைத்துவிடுகின்றேன்.

சுபா

 போகிறது.  வேண்டுகோள் வைத்தேன் என்று பேசாதீர்கள்.  
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

​​

Suba

unread,
Apr 18, 2016, 7:00:27 AM4/18/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-04-18 12:25 GMT+02:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
விபரீத  விளையாட்டுக்கள்  தமிழிலே  கூடாது என்பதற்கு  இது அருமையான உதாரணம்

தமிழ்த்தேனியார் - எது விபரீத விளையாட்டு ​
 
​என்று தங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று விளக்கினால் எனக்கு புரிந்து கொள்ள உதவும்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2016, 7:07:11 AM4/18/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
”ஒரு அரங்கில் , 'ஔ’ வை தமிழில் முழுதும் ஒழித்து, ‘அவ்’ பயன்படுத்தலாமே என்ற ஒரு கருத்து எழுப்பப்பட்டது..
 
இதைப் பிடிக்காத ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுந்து, கேட்டார்:
 
“ ஔவைப் பாட்டி சிறுவயதில் மிக அழகாக இருந்தாள்”
 
இந்த வாக்கியத்தில் , “ஔ” க்குப் பதிலாக “அவ்” 
இருந்தால்...? “ “

என்று  பேரா    சு  பசுபதி அவர்கள் சந்த வசந்தத்தில் 2011  ல் எழுதியதை வெளியிட்டாரே  அதைக் கவனிக்கவில்லையா  அதற்குத்தான்  எழுதினேன்  

ஔ  என்பதை  அவ்வென்று மாற்றக் கூடாது  என்பதை வலியுறுத்தி   இப்போது  புரிந்திருக்குமே  சுபா அவர்களே

அன்புடன்
தமிழ்த்த்

Suba

unread,
Apr 18, 2016, 7:48:11 AM4/18/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-04-18 13:06 GMT+02:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
”ஒரு அரங்கில் , 'ஔ’ வை தமிழில் முழுதும் ஒழித்து, ‘அவ்’ பயன்படுத்தலாமே என்ற ஒரு கருத்து எழுப்பப்பட்டது..
 
இதைப் பிடிக்காத ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுந்து, கேட்டார்:
 
“ ஔவைப் பாட்டி சிறுவயதில் மிக அழகாக இருந்தாள்”
 
இந்த வாக்கியத்தில் , “ஔ” க்குப் பதிலாக “அவ்” 
இருந்தால்...? “ “

என்று  பேரா    சு  பசுபதி அவர்கள் சந்த வசந்தத்தில் 2011  ல் எழுதியதை வெளியிட்டாரே  அதைக் கவனிக்கவில்லையா  அதற்குத்தான்  எழுதினேன்  

ஔ  என்பதை  அவ்வென்று மாற்றக் கூடாது  என்பதை வலியுறுத்தி   இப்போது  புரிந்திருக்குமே  சுபா அவர்களே

​அப்படியா?
சரி.. நான் கூட சந்த வசந்தம் குழுவில் இல்லை. ​என்னைப் போல மேலும் சிலரும் வேறு குழுக்களில் இல்லாமல் இருக்கலாம்.
எழும் சந்தேகத்தை கேட்பதும் அதற்குத் தகவல் தெரிந்தோர் பதிலுரைப்பதும் தான் கலந்துரையாடல் என அழைக்கப்படுகின்றது.
என்றோ ஒருவர் ஒரு விளக்கம் எழுதிய ஒரு காரணத்திற்காக இன்னொருவர் கேள்வி கேட்பது விபரீதமான விளையாட்டு என எப்படி சொல்கின்றீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.

சுபா

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2016, 8:06:42 AM4/18/16
to mint...@googlegroups.com, Dr.Subashini

2016-04-18 17:18 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
எழும் சந்தேகத்தை கேட்பதும் அதற்குத் தகவல் தெரிந்தோர் பதிலுரைப்பதும் தான் கலந்துரையாடல் என அழைக்கப்படுகின்றது.
என்றோ ஒருவர் ஒரு விளக்கம் எழுதிய ஒரு காரணத்திற்காக இன்னொருவர் கேள்வி கேட்பது விபரீதமான விளையாட்டு

​அதில்  அவர்  குறிப்பிட்டது உங்களுக்கு  புரியவில்லை  என  நினைக்கிறேன்

ஒரு அரங்கில் , 'ஔ’ வை தமிழில் முழுதும் ஒழித்து, ‘அவ்’ பயன்படுத்தலாமே என்ற ஒரு கருத்து எழுப்பப்பட்டது..
 
இதைப் பிடிக்காத ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுந்து, கேட்டார்:
 
“ ஔவைப் பாட்டி சிறுவயதில் மிக அழகாக இருந்தாள்”
 
இந்த வாக்கியத்தில் , “ஔ” க்குப் பதிலாக “அவ்” 
இருந்தால்...? “ “

அதில்  அவர்  சொல்வதைப் போல்   ஔவைப்பாட்டி  என்பதை அவ்வைப் பாட்டி  என்று  எழுதினால்    

அவ்           வைப்பாட்டி​  என் று வரும்   வைப்பாட்டி என்றால் தாசி    சின்ன வீடு என்று  தற்காலத்தில் சொல்கிறார்கள்  ஆனால்       பல மன்னர்கள்  கிளிமாதிரி  அரசி இருக்க  குரங்கு மாதிரி   ஒரு பெண்ணை வைப்பாட்டியாக  வைத்துக் கொள்வது போல்

தமிழ்ப் பாட்டியான ஔவயை  இழிவு செய்வது போல்   அவ்   வைப்பாட்டி என்று   எழுதக் கூடாது

ஔ  என்பதை  அவ்  என்று எழுதினால் வரும் விபரீதத்தை  அவர்  சுட்டிக் காட்டியுள்ளார்  ஆகவேதான் நானும்  அதை  ஒப்புக்கொள்ளும் வகையில்  அப்படி எழுதினேன்  இதில் உங்களுக்கு  என்ன  ப்ரச்சனை  என்றே எனக்குத் தெரியவில்லை     ஐய்யப்பன் கிருஷ்ணன்  அதைப் போட்டு  நல்ல கேள்விதான் என்று எழுதியதைப் படித்தபின்   நான் எழுதிய பதில் அது  அந்தப் பதில் ஐய்யப்பன் கிருஷ்ணனுக்கே

ஔ என்பதை  அவ்  வென்று எழுதினால் வரும் விபரீதத்தை அவர் குறிப்பிட்டும்   அதை விபரீதம்தான்  விபரீத விளையாட்டுக்கள்  தமிழிலே  கூடாது பொருள் மாறிவிடும்  ஆளாளாளுக்கு  தமிழை  சிதைப்பது  என்பது தமிழ் மொழிக்கும்   ஔவைப்பாட்டிக்கும்  செய்யும் த்ரோகம் என்று பொருள் வரும்படியாக   விபரீத  விளையாட்டு கூடாது  தமிழில் என்று எழுதினேன்

இதற்கு மேலும்   விளக்கம் வேண்டுமானால்  கேளுங்கள்  சொல்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

N. Ganesan

unread,
Apr 18, 2016, 9:09:40 AM4/18/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Sunday, April 17, 2016 at 9:16:55 AM UTC-7, Pandiyaraja wrote:
>>
 தமிழ் பிராமி
இவற்றில் புள்ளி ஏற்படுகிற காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. இதனை ஐயத்துக்கிடமின்றி ஐராவதம் நிறுவிவிட்டார்கள்.
>>
ஐராவதம் அசோகன் பிராமியை ஆதியாக வைத்துக்கொண்டு அளந்து சொல்பவர். அந்தக் காலம் மலையேறிவிட்டது.
ப.பாண்டியராஜா

நண்பர் கா. ராஜன் அவரது நூலை பொள்ளாச்சிக்கு அனுப்பிவைத்தார். வாசித்துக் கொண்டுள்ளேன். கொங்குநாட்டில் ஏற்படும் ப்ராமி எழுத்துக்கள்
பலவற்றில் பிராகிருதப் பெயர்கள் மிகுதி. அசோகர் காலத்திற்கு முன்னால் - சுமார் 100, 150 ஆண்டுகள் - எழுத்துக்கள்
கொடுமணலில் கிட்டுகின்றன. ஆனால், அதற்கும், தமிழில் புள்ளிக் கோட்பாடு உருவாகும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு
எனக் காட்டும் சான்றாதாரங்களுக்கும் என்ன தொடர்பு?- என விளங்கவில்லை. பிராமி எழுத்துக்கள் வடஇந்தியா (கர்நாடகம்,
அதற்கும் வடக்கே), தமிழகம் வணிக உறவுகளை அல்லவா காட்டுகின்றன. அதே போல, இலங்கையில் வட இந்திய
மக்கள் புலம்பெயர்வும், அதற்கும் பின் பௌத்தம் வருவதும். கற்றளிகளுக்கு எப்படி காஞ்சி கைலாசநாதர் ஆலயமோ,
ப்ராமிக்கு அசோகரின் மிக நீண்ட வாசகங்கள் கொண்ட கல்வெட்டுகள். கூட்டொலிவடிவங்கள் (ஐ, ஔ, அதன் உயிர்மெய் வடிவங்கள்)
வடக்கே இருந்து பெறப்பட்டன. புத்த > பௌத்த, ஜிந > ஜைந அடிப்படையான வடமொழி இலக்கண சொல்லமைப்புகள்.
ஜைநமும், பௌத்தமும் உருவான வட இந்தியாவில் இவ்வார்த்தைகள் எழுதும் முறையும் ப்ராமிக்கு ஏற்பட்டது.
தமிழ் தந்தது அல்ல. இம்முறைகளை தமிழும், தொல்காப்பியமும் ஏற்றுள்ளது. தொல்காப்பியத்தில் எழுத்து வரிசையை
(உயிர், மெய்) பார்த்தால் வட இந்திய ப்ராமியை தமிழ் ஏற்று சில எழுத்துக்களை சேர்த்துள்ளது என தெரிகிறது என தமிழறிஞர்கள்
குறிப்பிடுகின்றனர்.
 
தமிழில் தொல்காப்பிய சூத்திரத்தில் புள்ளி ஏற்படுவது கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. இதுபற்றி கா. ராஜன் ஒன்றும் பேசவில்லையே.
எவ்வாறு புள்ளி கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கும் முன் என ஆய்வுக் கட்டுரைகள் இருந்தால் ஆராய்வோம். நன்றி.

N. Ganesan

unread,
Apr 18, 2016, 9:20:01 AM4/18/16
to வல்லமை, mint...@googlegroups.com
கன்னடத்தில் அவ்வெ, அப்பே தான் இன்றைக்கும். avve/abbe. அவ்வைப் பாட்டி பலகாலமாகத் தமிழில் உண்டு. சங்க காலத்தில் அவ்வை தான் (கன்னடம் போல),
அப்போது ஔவை இல்லை. கல்வெட்டுட் தரும் செய்தி இது. பேரா. சு. பசுபதியின் ஜோக் பிற்காலத்துக்கே பொருந்தும்.

சங்க காலத்திற்கு அல்ல. அங்கே, அவ்வை தன்னை விறலி என வர்ணிக்கிறார்.
ஒருவேளை, நாயகி பாவத்தில் ஆழ்வார் எழுதுவது போல, எழுதிய பாடல்களோ?

நா. கணேசன்.

சிலர் சங்க காலத்தில் தேனும் பாலும் ஓடியது. கணிகை, பரத்தை, வைப்பு, பாணன்/விறலி தொழில் ... எல்லாம் இல்லை என்பர் :)
ஆனால், மருதத்திணை படித்தால் தெரியும். நற்றிணை 310 (ஹார்ட்டின் மொழிபெயர்ப்புடன்) கொடுத்துள்ளேன்.

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2016, 10:00:15 AM4/18/16
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஐய்யா  கணேசனாரே  வணக்கம்

நீங்கள் கூறிய விளக்கத்தை  புரிந்து கொண்டேன்

இப்படி  ஆதாரத்துடன்  விளக்கினால்  மகிழ்ச்சியாய்  இருக்கிறது

அதனால்தான்   தமிழிலே விவரம்  தெரியாமல் விபரீத  விளையாட்டெல்லாம்  கூடாது என்று கூறினேன்

தமிழ் மொழி  மிகவும் நுட்பமான  நுணுக்கமான  மொழி  அதிலே விளையாட்டு  கூடாது  என்று  சொன்னேன்

அறம் பாடும் புலவர்  பலர்   தமிழிலே அறம் பாடினால் அப்படியே  பலிக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள்

ஆகவே  தமிழை உபயோகிக்கும்போது  மிக  எச்சரிக்கையாக   உபயோகிக்க வேண்டும்  என்பதே   என் கோரிக்கை

    விளக்கம்  அளித்ததற்கு    மிக்க  நன்றி   

ஜீவ்ஸ்

unread,
Apr 18, 2016, 10:15:44 AM4/18/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
அன்பின் சுபா... 

ஒரு புரிதல் பிழை நடந்திருக்கிறது. அவ்வளவு தான்.

அவ்வைக் குறித்தான திரு பசுபதி அவர்களின் மடல் குறிப்பை இங்கே அளித்தவர் திரு கணேசன் அவர்கள்.  அதற்கு நான் திரு பசுபதி ஐயா அவர்களின் கேள்வி  நல்ல கேள்வி என்று குறிப்பிட்டேன். 

தேனீ சார் அதற்கு பதில் அளித்ததும், அதற்கு நீங்கள் கேள்வி கேட்டதும் அதற்கு தேனீ சார் பதில் அளித்ததும்....  

 முந்தைய மடல்களை தொடர்ச்சியாக வாசிக்காமல் போனதால் ஏற்பட்டிருக்கக் கூடிய குளறுபடி அவ்வளவே... 

அன்புடன்
ஐயப்பன். 

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2016, 11:31:12 AM4/18/16
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
​Thank You  Mr   N Ganesan  
Thanks For  Your   details  

Regards

Thamizthenee​

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

2016-04-18 19:50 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
Thanks, Sri Tamil Thenee.

My point is -ai, -au diphthongs in Brahmi and Tamil Brahmi scripts come from the North. Due to the Linguistic Analysis
performed on Indo-Aryan languages in North India. Tamil suutras are late, and ai and au letters come centuries later than
first attested North of Tamil lands.

Yours
NG

தேமொழி

unread,
Apr 18, 2016, 12:47:27 PM4/18/16
to மின்தமிழ்
சுபா, 

இங்கு நான் ஒரு விளக்கம் தரவேண்டியுள்ளது.  

நீங்கள் மின்தமிழ் மேடையில் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது "திரு. இராமகி ஐயா" அவர்களது கட்டுரையை மட்டுமே.   (https://groups.google.com/d/msg/mintamil/WpaOMznw6tQ/BPHgaCeQAwAJ)

உங்களைப் போலவே நூ த லோ சு ஐயாவும் பரிந்துரைத்துள்ளார்   (https://groups.google.com/d/msg/mintamil/WpaOMznw6tQ/9J_eO2PiAwAJ)

அதனைத் தொடர்ந்து விளக்கம் வளர்ந்தபொழுது, கருத்து மேலும் விவரிக்கப்பட்ட பொழுது, எடுத்துக்காட்டுகள் மூலம் அது மேலும் தெளிவுபடுத்தப்பட்டபொழுது, இதையும் தொகுப்பது தமிழர்களுக்கு உதவும் என்று திரு. இராமகி ஐயா குறிப்பிட்டிருந்தார்.

எனவே அதன் அடிப்படையில் நான் திரு. ஹரிகி அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டுகள்  பகுதியையும் இணைத்தேன். இது பொதுவாகவே நான் பின்பற்றும் முறைதான்.

ஒருமுறை திரு சன்னாவின் நேர்காணல் மின்தமிழ் மேடையில் பதிவேற்றலாம், திரு. நரசையாவின் நீர்வழித் தடங்கல் கட்டுரையைப் பதிவேற்றலாம் எனப் பரிந்துரை கிடைத்த பின்னர், நான் அது தொடர்பான கட்டுரைகள் மீண்டும் பதிவிடப்பட்டால் நானே அவற்றைக் கவனமாக மின்தமிழ்மேடையில் சேர்த்துவிடுவேன்.  

பொறுப்பை நம்பி ஒப்படைத்தால்  அதற்கேற்ற நடவடிக்கை என்பது என் கோணம்.  ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொடுப்பது 'மைக்ரோ மேனேஜ்மெண்ட்'  

இயன்றவரைத் திரு. இராமகி  ஐயாவின் பதிவின் வரிகளைக் குலைக்காமல் எடுத்துக்காட்டு வரவேண்டிய இடத்தில் திரு. ஹரிகி அவர்கள் வழங்கிய பகுதியையும் இணைத்தேன்.  

இது மின்தமிழ் மூலம் மாணவர்கள் பலரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையை நிறைவு செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. 

திரு. ஹரிகி மாறுபட்ட கருத்துடன் அவர் அனுமதி தேவை என்று குறிப்பிடுவார் என்று சொல்லுவார் என்பது நான் செய்த தவறு.  இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை.

இது எங்களிருவருக்கும் இடையில் உள்ள கருத்து  வேற்றுமையினால் இந்த நிலைக்குத் திரும்பியிருக்கலாம் என்பது எனது கணிப்பு.  எப்படியாயினும், உங்கள் அறிவுரையின்படி இந்தத் தகராற்றுக்கு காரணமான பகுதியை மின்தமிழ் மேடையில் நீக்கிவிட்டேன்.  நீங்களும் நூதலோசு ஐயா பரிந்துரைத்த பகுதிமட்டுமே அங்குள்ளது அடுத்து அதற்கேற்றவாறு மின்தமிழ்மேடை மலரையும் மாற்றி அனுப்பிவிடுகிறேன்.

ஆனால் இங்கு ஒன்றைக் குறிப்பிடாமல் இந்த மடலை முடிக்க விரும்பவில்லை. கற்பதை அனைவருக்கும் பகிர்வதில்தான் அதன் பயன் இருக்கிறது.  

இக்கால தொழில் நுட்பம் அறிந்த இளைஞர் பலர் தன்னார்வத்துடன் பணிகள் பல செய்து விக்கிப்பீடியாவில் தமிழ்ப்பக்கங்களை உருவாக்குவதும்,கட்டற்ற வகையில் தங்கள் முயற்சிகளைப் பலன் கருதாது பகிர்ந்துவரும் முறையையும் காணும் பொழுது இந்த இழையின் நேர்முக மறைமுக உரையாடல்கள் வியப்பைத் தருகிறது.

தங்கள் நேரத்தை தன்னார்வப்  பணிக்காக, தங்களுக்கு என்ன பலன் என்று பார்க்காமல் செலவழிப்பவர்கள் மனநிலை முற்றிலும் மாறுபட்டது.  அதனைச் சுருக்கமாக விளக்க வேண்டுமானால் நன்கொடை கேட்டு கையேந்தியபொழுது அந்தக் கையில் காறி உமிழ்ந்ததைத் தனது உடையில் துடைத்துக் கொண்டு, எனக்குக் கொடுத்ததை ஏற்றுக் கொண்டேன் இனி நான் உதவும் மக்களுக்கு ஏதேனும் கொடுங்கள் என்று மீண்டும் கைநீட்டிய அன்னை தெரசாவின் மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

விரைவில் நீங்கள் குறிப்பிட்டபடி மாற்றம் செய்த மின்தமிழ் மேடை  மலரை அனுப்புகிறேன் சுபா. 

தேவையற்ற வகையில் இழை திசை திரும்ப எனது செயல் காரணமாக அமைந்ததற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. 

..... தேமொழி

தேமொழி

unread,
Apr 18, 2016, 12:55:55 PM4/18/16
to மின்தமிழ்
கண்ணில் பட்ட சில பிழைகளை மாற்றியுள்ளேன் ...கீழ் காணுமாறு படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

திரு. ஹரிகி மாறுபட்ட கருத்துடன் அவர் அனுமதி தேவை என்று குறிப்பிடுவார் என்பதை  நான் எதிர்பார்க்கவில்லை என்பதே  நான் செய்த தவறு.  இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை. 

உங்கள் அறிவுரையின்படி இந்தத் தகராறுக்குக் காரணமான பகுதியை மின்தமிழ் மேடையில் நீக்கிவிட்டேன். 

..... தேமொழி

Pandiyaraja

unread,
Apr 18, 2016, 1:15:16 PM4/18/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
>>
அதற்கும், தமிழில் புள்ளிக் கோட்பாடு உருவாகும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு
எனக் காட்டும் சான்றாதாரங்களுக்கும் என்ன தொடர்பு?- என விளங்கவில்லை
>>
அசோகன் பிராமி கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அப்போது புள்ளி இல்லை. எனவே 500 ஆண்டுகளைச் சேர்த்து, புள்ளியைப் பற்றிப்பேசும் தொல்காப்பியர் கி.பி. 2-ஆம் நூற். என்கிறார். மேலும் புள்ளியுள்ள பிராமி எழுத்துகள் சற்று வளர்ச்சியுற்றவை. இந்த வளர்ச்சிக்கும் சேர்த்து அவர் 500 ஆண்டு கொள்கிறார். பிராமி தோன்றிய சில காலத்திலேயே புள்ளி தோன்றிவிட்டது என்பது என் கருத்து. அதற்கு 500 ஆண்டுகள் ரொம்ப அதிகம். மேலும் முந்தைய பிராமியில் பிராகிருத எழுத்துகள் கலக்க ஆரம்பித்துவிட்டன. எ.கா- ஸ எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்னர் அதே காலத்திலேயே வட எழுத்துகள் தவிர்க்கப்பட்டன. எ.கா. உபாஅன் - இதற்குக் காரணம் தொல். கூறிய வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ என்ற நூற்பாதான். எனவே பிராமி தொடங்கிய காலத்திலேயே தொல். இருந்துள்ளார். இப்பொழுது தமிழ்நாட்டில் பிராமியின் தொடக்கம் பின்னே போய்க்கொண்டே இருக்கிறது. தொல். -இன் காலமும்தான்.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Apr 18, 2016, 2:17:48 PM4/18/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Monday, April 18, 2016 at 10:15:16 AM UTC-7, Pandiyaraja wrote:
>>
அதற்கும், தமிழில் புள்ளிக் கோட்பாடு உருவாகும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு
எனக் காட்டும் சான்றாதாரங்களுக்கும் என்ன தொடர்பு?- என விளங்கவில்லை
>>
அசோகன் பிராமி கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அப்போது புள்ளி இல்லை. எனவே 500 ஆண்டுகளைச் சேர்த்து, புள்ளியைப் பற்றிப்பேசும் தொல்காப்பியர் கி.பி. 2-ஆம் நூற். என்கிறார். மேலும் புள்ளியுள்ள பிராமி எழுத்துகள் சற்று வளர்ச்சியுற்றவை. இந்த வளர்ச்சிக்கும் சேர்த்து அவர் 500 ஆண்டு கொள்கிறார். பிராமி தோன்றிய சில காலத்திலேயே புள்ளி தோன்றிவிட்டது என்பது என் கருத்து. அதற்கு 500 ஆண்டுகள் ரொம்ப அதிகம். மேலும் முந்தைய பிராமியில் பிராகிருத எழுத்துகள் கலக்க ஆரம்பித்துவிட்டன. எ.கா- ஸ எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்னர் அதே காலத்திலேயே வட எழுத்துகள் தவிர்க்கப்பட்டன. எ.கா. உபாஅன் - இதற்குக் காரணம் தொல். கூறிய வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ என்ற நூற்பாதான். எனவே பிராமி தொடங்கிய காலத்திலேயே தொல். இருந்துள்ளார். இப்பொழுது தமிழ்நாட்டில் பிராமியின் தொடக்கம் பின்னே போய்க்கொண்டே இருக்கிறது. தொல். -இன் காலமும்தான்.
ப.பாண்டியராஜா

I. Mahadevan's dating of PuLLi appearance in Tamil script does not change to K. Rajan's Kodumanal discoveries.
PuLLi first appears in coins of famous kings whose years of reign are well known.

N. Ganesan
 
N. Ganesan

unread,
Apr 18, 2016, 2:17:54 PM4/18/16
to வல்லமை, mint...@googlegroups.com
Thanks, Sri Tamil Thenee.

My point is -ai, -au diphthongs in Brahmi and Tamil Brahmi scripts come from the North. Due to the Linguistic Analysis
performed on Indo-Aryan languages in North India. Tamil suutras are late, and ai and au letters come centuries later than
first attested North of Tamil lands.

Yours
NG

Suba

unread,
Apr 18, 2016, 4:57:46 PM4/18/16
to மின்தமிழ்
2016-04-18 18:55 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
கண்ணில் பட்ட சில பிழைகளை மாற்றியுள்ளேன் ...கீழ் காணுமாறு படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

திரு. ஹரிகி மாறுபட்ட கருத்துடன் அவர் அனுமதி தேவை என்று குறிப்பிடுவார் என்பதை  நான் எதிர்பார்க்கவில்லை என்பதே  நான் செய்த தவறு.  இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை. 

உங்கள் அறிவுரையின்படி இந்தத் தகராறுக்குக் காரணமான பகுதியை மின்தமிழ் மேடையில் நீக்கிவிட்டேன். 

..... தேமொழி

​நன்றி.
மாற்றம் செய்யப்பட்ட புதிய கோப்பை இணைத்து விட்டேன்.

சுபா
 
பிரசாத் வேணுகோபால்

unread,
Apr 20, 2016, 9:20:58 AM4/20/16
to mintamil
வணக்கம் ஐயா...

நெடுநாட்களுக்கு பிறகு இன்று இணையம் வர வாய்ப்பு அமைந்தது... இம்மடல் வாசித்தேன்... என்னுடையது காலம் தாழ்த்திய கருத்தாக இருக்கலாம்... இருப்பினும் எனது கருத்து...

ஆய்த எழுத்து குறிலாக மாறக் கூடிய இடங்களாக தாங்கள் கொடுத்த தொகுப்பு பயனுள்ளது.

இதில் இரு உதாரணங்கள் தவறோ எனத் தோன்றுகிறது...

முதலாவது...

//அழுக்கற் றகன்றாரு மில்லை அஃதில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் (170)

மில்லை தேமா தொடர்வது அகுதில்லார்//

இக்குறள் 

அழுக்கற் றகன்றாரு மில்லைஅஃ தில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

என வந்தால் தான் முதல் அடிக்கும் இரண்டாம் அடிக்கும் தளை பிறழாமல் பா அமைகிறது.

இதே போல 

//உரமொருவற் குள்ள வெறுக்கையஃதில்லார்

மரமக்கள் ஆதலே வேறு. 600

வெறுக்கை புளிமாதொடர்வது யகுதில்லார்//

என்னும் குறளும் 

உரமொருவற் குள்ள வெறுக்கை:யஃ தில்லார்

மரமக்கள் ஆதலே வேறு

என அமைந்தால் தான் பா தளையின்றி சரியாக அமையும்.

எனவே இவ்விரு எடுத்துக்காட்டுகளிலும் ஆய்த எழுத்து மெய்யெழுத்து போல செயல்படுவதாகவே  உணர்கிறேன்.

2016-04-16 10:30 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-04-16 10:03 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
ஒரேஎழுத்திற்கு இருவேறு மாத்திரைகள் வேறெழுத்துகளுக்கு வருமா என்றால் வரும். காட்டாக மகரப் புள்ளிக்கு அளவு பொதுவாக அரை மாத்திரை தான். அதேபொழுது மகரக்குறுக்கத்தில் கால் மாத்திரை வரலாம். யாப்பில் ஆய்தத்திற்கு இருவேறு மாத்திரைகள் உண்டு. சில இடங்களில் அதை மெய்யாகக் கருதி அரைமாத்திரை கொடுப்பதும், சில இடங்களில் உயிராகக் கருதி ஒரு மாத்திரை கொடுப்பதுமுண்டு. இதற்குக் குறளிலிருந்தே ஒரு முறை நண்பர் ஹரி சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். (எனக்குச் சட்டென்று அதை எடுத்துக்கொடுக்க நினைவில்லை.) இது போல வேறுசில எழுத்துக்களும் இருவேறு  மாத்திரைகள் கொள்ளலாம். 

ஆமாம் ஐயா.  இரண்டு மூன்று முறை தனித் தனியாகத் தொகுத்தேன்.  ஒவ்வொரு முறையும் தொலைத்துவிடுவேன்.  அண்மையில் Face Bookல் ஏதோ ஒரு உரையாடலின் போது தொகுத்ததை நினைவாகச் சேமித்து வைத்தேன்.  இதோ:

அழுக்கற் றகன்றாரு மில்லை அஃதில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் (170)

மில்லை தேமா தொடர்வது அகுதில்லார்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி. ( 226)

தீர்த்தல் தேமா தொடர்வது அகுதொருவன்

தவமுந் தவமுடையார்க் காகு மதனை

யஃதிலார் மேற்கொள் வது. 262

மதனை புளிமா தொடர்வது அகுதிலார்

வேண்டாமையன்ன விழுச்செல்வ மீண்டில்லை

ஆண்டும் அஃதொப்ப தில். 363

ஆண்டும் தேமா தொடர்வது அகுதொப்ப

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும். 368

துன்பம் தேமா தொடர்வது அகுதுண்டேல்

உரமொருவற் குள்ள வெறுக்கை: யஃதில்லார்

மரமக்கள் ஆதலே வேறு. 600

வெறுக்கை புளிமா. தொடர்வது யகுதில்லார்

அற்றா லறவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943

துண்க தேமா. தொடர்வது அகுதுடம்பு

இன்பங் கடல்மற்றுக் காம மஃதடுங்கால்

துன்ப மதனிற் பெரிது. 1166

காம தேமா. தொடர்வது மகுதடுங்கால்

(நான் தமிழாயத்தில் இல்லை.  ஆகவே அனுப்ப முடியவில்லை.  தமிழ் உலகம் யாஹூ குழுமமாக இருந்தபோது இருந்தேன்.  இப்போது என் பெயர் அக்குழுவிலில்லை போலிருக்கிறது.)
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Apr 20, 2016, 11:19:52 AM4/20/16
to mintamil

2016-04-20 18:50 GMT+05:30 பிரசாத் வேணுகோபால் <prasa...@gmail.com>:

என அமைந்தால் தான் பா தளையின்றி சரியாக அமையும்.

எனவே இவ்விரு எடுத்துக்காட்டுகளிலும் ஆய்த எழுத்து மெய்யெழுத்து போல செயல்படுவதாகவே  உணர்கிறேன்.

யாப்பு சொல்லித் தருவதற்கு நன்றி.

சீரின் முடிவில் ஃ என்று வந்து பார்த்ததில்லை.

Hari Krishnan

unread,
Apr 20, 2016, 11:28:53 AM4/20/16
to mintamil

2016-04-20 20:49 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
யாப்பு சொல்லித் தருவதற்கு நன்றி.

சீரின் முடிவில் ஃ என்று வந்து பார்த்ததில்லை.

குறள் முழுக்கத் தேடி எட்டு எடுத்துக்காட்டுகள் கொடுத்திருக்கிறேன்.  எட்டும் தவறென்றால் சொல்லவும்.  உங்கள் கணக்குப்படியே இரண்டு தவறாக இருந்தாலும் மற்ற ஆறு இடங்களில் என்ன இலக்கணம்?  

இதற்காக எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும்.  ஒத்தி ஒட்டும் வேலையில்லை இது.  

Hari Krishnan

unread,
Apr 20, 2016, 12:12:28 PM4/20/16
to mintamil

2016-04-20 20:49 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
சீரின் முடிவில் ஃ என்று வந்து பார்த்ததில்லை.

சீர் ஃ என்று முடியும்தான்.
It is loading more messages.
0 new messages