--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்
On 15-Nov-2014 2:54 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> நண்பர்களே,
>
> சிலரது பதிவுகளில் ஐ என்பதன் பயன்பாடு தமிழ் சொற்களில் வரும் போது அய் என்ற வகையில் குறிக்கப்படுவதைக் காண்கின்றேன்.
>
>
> உதாரணமாக ..
> ஐயம் - அய்யம்
> ஐயன் - அய்யன்
>
> இவை இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணம் என்ன.. இதில் எது இலக்கணப்படி சரி..
ஐயம் சரி
அய்யம் தவறு
எது தற்சமயம் தமிழக கல்வி போதனைப்படி பயன்பாட்டில் இருப்பது என்பதனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஐயம் என்ற சொல்லே பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது .
>
> அறிந்தோர் விளக்கினால் எனக்கு உதவும்.
>
> சுபா
>
ஐ = அய்?; ஔ = அவ்?
தமிழ் எழுத்துச் சீர்திருத்தக்காரர்கள் முதலில் தூக்கியெறியத் துடிப்பது ஐ, ஔ இரண்டையுமே. இந்த இரண்டும், இவை சேர்ந்த 18+18 = 36 உயிர்மெய்களும் என்னமோ தமிழுக்குத் தாங்கமுடியாத பெரும் பாரமாய்த் தோன்றுகிறது இவர்களுக்கு. ஔ என்பது ஒரு புதிய எழுத்து அல்ல. ஒ-வும் ள-வும் சேர்ந்த ஒரு கூட்டணிதான் இது. ஆங்கிலத்தில் c- யும், h-உம் சேர்ந்த கூட்டணிக்குக் க-என்ற ஒலி கிடைக்கிறது இல்லையா? அதைவிட t, i, o ஆகியவற்றின் கூட்டணிக்கு tio=ஷ என்ற புதிய ஒலி கொடுக்கப்படுகிறது. அதைப் போலத்தான் இதுவும். மேலும் கௌ, சௌ போன்றவற்றை எழுதுவதற்கும் புதிய எழுத்தோ, எழுத்துருவோ இல்லை. கெ-யில் இருக்கும் சின்னக் கொம்பையும், ள-வையும் ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ சேர்க்கவேண்டியதுதான். ஐ-யும், கை, சை, போன்றவற்றில் உள்ள இரட்டைச் சின்னக் கொம்பும் புதியவை. எனவே 2+18+18 = 38 எழுத்துக்கள் குறைகின்றன என்பது ஒரு பிரம்மையே. வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒன்றைச் செய்யும் ‘மனத்திருப்தி’ ஒருசிலருக்குக் கிடைக்கிறது என்பதைத் தவிர இதனால் யாருக்கும் ஒரு லாபமும் இல்லை.
தமிழில் 12 உயிர்கள் உண்டு. அவற்றுள் அ, இ, உ, எ, ஒ ஆகியவை குறில்கள் – ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை அளவு கொண்டவை. இவற்றுக்கு நேரான நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகியவற்றுக்கு இரண்டு மாத்திரை அளவு. இந்தக் கணக்கில் சேராமல் ஐ, ஔ தனித்து நிற்கின்றன. இவையும் நெடில்களே. மொழியியல்காரர்கள் இந்த இரண்டையும் உயிர் (Vowel) எனக் கொள்வதில்லை. இவற்றை dipthong என்கின்றனர். Dipthong என்பதன் பொருள் : A vowel sound that starts near the articulatory position for one vowel and moves toward the position for another என wordweb அகராதி கூறுகிறது. இப்பொழுது இவர்கள் கூறுவதை 2500 ஆண்டுகட்கு முன்னர் தொல்காப்பியர் கூறிவிட்டார்.
அகர இகரம் ஐகாரம் ஆகும்
அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்-மொழிமரபு-21,22
இதற்குப் பின் வந்த நன்னூல்(125), இலக்கணவிளக்கம்(35), முத்துவீரியம்(107) போன்றவையும் இதனையே கூறும். இலக்கணக்காரர்கள் இவற்றைப் போலி எழுத்துக்கள் என்ப. போலி என்றால் duplicate அல்ல - போல ஒலிப்பது. நச்சினார்க்கினியர் இதற்கு, “ அகரமும், இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல இசைக்கும், அது கொள்ளற்க” என்று உரை கூறுவார். ஐவனம் அஇவனம் எனவரும், (ஔவை அஉவை எனவரும்). ‘ஆகும்’ என்றதனான் இஃது இலக்கணம் அன்றாயிற்று என்பார் அவர். (ஒரு வேடிக்கை! இன்றைக்கு இதைத் தட்டச்சு செய்யும்போது a-வுக்கடுத்து i-தட்டினால் அது ஐ-ஆக மாறிவிடுகிறது). அஇ, அஉ என அடுத்தடுத்து வரும் இரண்டு உயிர்களுக்கிடையே உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா! எனவே அஇ என்பது யகர உடம்படுமெய் பெற்று அயி என்றும், அஉ என்பது வகர உடம்படுமெய் பெற்று அவு என்றும் மாறுகின்றன. எனவேதான் கைலை என்பது கயிலை என்றும் மௌனம் என்பது மவுனம் என்றும் எழுதப்படுகின்றன. இப்படிக் கூறுவார் வேங்கடராசுலு ரெட்டியார்.
வடமொழியில் இவற்றின் சேர்க்கைகள் வேறாக இருக்கின்றன. அ+இ = ஏ, என்றும், அ+உ = ஓ என்றும் மாறுகின்றன. தேவ + இந்திர = தேவேந்திர; புருஷ + உத்தம = புருஷோத்தம. எனவே வடமொழியினின்றும் தமிழ் வேறுபட்டது எனக் காட்டத்தான் தொல்காப்பியர் இதனைக் கூறியுள்ளார் என்றும் கொள்ளலாம்.
ஒலிகளின் இந்தச் சேர்க்கையைப் பற்றிக் கூறிய தொல்காப்பியர், ஒலிகளைப் பற்றித் தான் கூறும் நூன்மரபில் இவற்றைக் கூறாமல், அடுத்த மொழிமரபில் இவற்றைக் கூறுகிறார். நூன்மரபு என்பது தான் எடுத்துக்கொண்ட நூலுக்கான மரபு. இது Postulate எனப்படும். ஆனால் மொழிமரபு என்பதை மொழியின் மரபு என்றும், மொழிகின்ற மரபு என்று கொள்ளலாம். இது axiom எனப்படும். இது தமிழின் / தமிழரின் மரபு என்று கூறுவதற்காகவே தொல்காப்பியர் இதனை மொழிமரபு என்ற இரண்டாம் இயலில் வைத்திருக்கிறார் எனலாம்.
இவற்றை அடுத்து, அடுத்த நூற்பாவில் அவர்,
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் – தொல். மொழி. 23
என்று கூறுகிறார்.
“அகரத்தின் பின் இகரமேயன்றி, யகரமாகிய புள்ளி வந்தாலும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு மெய்பெறத் தோன்றும்” என்பர் நச்சினார்க்கினியர். “ஐவனம் அய்வனம் என வரும்” என்பார் அவர். ஆனால் வேங்கடராசுலு ரெட்டியார் இதனை மிக நுட்பமாக ஆராய்கிறார். ‘ஐயென் நெடுஞ்சினை’ என்றது ஐகாரம் என்னும் நெடிய சினையெழுத்து என்றபடி என்கிறார் அவர். மேலும் அவர், “இவ்வாசிரியர் முதல் எழுத்தினைச் சினை என்று வழங்குதல் இலர்; முதல் என்றே கூறுவர்.
நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் (உருபியல்.7)
என எடுத்துக்காட்டும் கொடுக்கிறார். (நீ + இன் = நின்) “ஆதலின் ‘சினை’ என்றது மொழியின் முதல் எழுத்தல்லாத எழுத்தினை என்று கோடல் அமைதி. மொழியின் இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரத்திற்கு அய் என்பது வரும் என்றவாறாகும். அ,இ- வுக்கு அடுத்து அ,உ –வைச் சொன்ன தொல்காப்பியர், இங்கே அ+ய் = ஐ என்று கூறிவிட்டு, அடுத்து,
அகரத்து இம்பர் வகரப் புள்ளியும்
ஔ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
என்று கூறவில்லை.
“இவ்வாறு சூத்திரஞ் செய்யாததன் காரணம் புலனாகும். என்னையெனின், ஔகாரம் மொழியின் இடையிலும் கடையிலும் நிற்பது அன்மையின் அஃது அவ் என்றாதல் இல்லை” என்று மிக நுட்பமாக ஆய்ந்து கூறும் வேங்கடராசுலு ரெட்டியாரின் நுண்மாண்நுழைபுலம் வியந்து போற்றற்குரியது. இவ்வளவு நுட்பமாகத் தமிழை ஆய்ந்த தொல்காப்பியரின் மாண்புதான் என்னே!
அதாவது ஐயன் = அய்யன் என்பதில் தொல்காப்பியருக்கு உடன்பாடில்லை. ஆனால் தஞ்சை = தஞ்சய்; படையல் = படய்யல் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஏன் அதை மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று முழங்கையை உயர்த்திக்கொண்டு வருபவரிடம் சண்டை போடவேண்டாம். விட்டுவிடுவோம். அதை இப்படி எழுதலாம் என்பதற்காக அதுவே வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தரவில்லை.
ப.பாண்டியராஜா
பார்வை: தொல்காப்பியம் – உரைவளம் – எழுத்ததிகாரம் – மொழிமரபு , பதிப்பாசிரியர்-ஆ.சிவலிங்கனார் – வெளியீடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
(அண்மையில் இப் பெருந்தகை காலமானார். அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவோம்)
ஐ = அய்?; ஔ = அவ்?
இதற்குப் பின் வந்த நன்னூல்(125), இலக்கணவிளக்கம்(35), முத்துவீரியம்(107) போன்றவையும் இதனையே கூறும். இலக்கணக்காரர்கள் இவற்றைப் போலி எழுத்துக்கள் என்ப. போலி என்றால் duplicate அல்ல - போல ஒலிப்பது. நச்சினார்க்கினியர் இதற்கு, “ அகரமும், இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல இசைக்கும், அது கொள்ளற்க” என்று உரை கூறுவார். ஐவனம் அஇவனம் எனவரும், (ஔவை அஉவை எனவரும்). ‘ஆகும்’ என்றதனான் இஃது இலக்கணம் அன்றாயிற்று என்பார் அவர். (ஒரு வேடிக்கை! இன்றைக்கு இதைத் தட்டச்சு செய்யும்போது a-வுக்கடுத்து i-தட்டினால் அது ஐ-ஆக மாறி விடுகிறது). அஇ, அஉ என அடுத்தடுத்து வரும் இரண்டு உயிர்களுக்கிடையே உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா! எனவே அஇ என்பது யகர உடம்படுமெய் பெற்று அயி என்றும், அஉ என்பது வகர உடம்படுமெய் பெற்று அவு என்றும் மாறுகின்றன. எனவேதான் கைலை என்பது கயிலை என்றும் மௌனம் என்பது மவுனம் என்றும் எழுதப்படுகின்றன. இப்படிக் கூறுவார் வேங்கடராசுலு ரெட்டியார்.
சிந்து முத்திரைகள் இன்னும் சரியாகவும் முழுமையாகவும் படிக்கப்பெறவில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. தங்களின் கூற்று அகில உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது ஒரு கொள்கைதானா?ப.பாண்டியராஜா
ஐ, ஔ, பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள், உயர்திரு பாண்டியராஜா அவர்களே!தற்பொழுது எழுத்துச் சீர்திருத்தம் என்று பலரும் அலைவது எனக்குப் பிடிக்கவில்லை. இப்படி மாற்றிக்கொண்டே போனால், கல்வெட்டுகளைப் படிக்கவென்று தனி வல்லுனர்கள் இருப்பதுபோல, தமிழ் மொழியின் எழுத்துமாற்றங்களையும் படித்தறிய வல்லுனர்களின் தேவை ஏற்பட்டு விடும் என்று அச்சமுறுகிறேன்.
” மொழியியல்காரர்கள் இந்த இரண்டையும் உயிர் (Vowel) எனக் கொள்வதில்லை. இவற்றை dipthong என்கின்றனர். Dipthong என்பதன் பொருள் : A vowel sound that starts near the articulatory position for one vowel and moves toward the position for another என wordweb அகராதி கூறுகிறது. இப்பொழுது இவர்கள் கூறுவதை 2500 ஆண்டுகட்கு முன்னர் தொல்காப்பியர் கூறிவிட்டார்.
அகர இகரம் ஐகாரம் ஆகும்
அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்-மொழிமரபு-21,22”
ஆங்கிலத்தில் எழுதும்போது இந்த டிப்தாங்ஸ் தொல். சூத்திரத்தை அப்படியே எழுதுவதுதான்.
ஐ = ai; கை = kai.
ஔ = au; சௌ = cau
நா. கணேசன்
அன்புடையீர்,ஐயன் = அய்யன்?என்பதற்கு ஒரு விளக்கத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.நன்றி,ப.பாண்டியராஜா
சுபா
சிந்து முத்திரைகள் இன்னும் சரியாகவும் முழுமையாகவும் படிக்கப்பெறவில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. தங்களின் கூற்று அகில உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது ஒரு கொள்கைதானா?ப.பாண்டியராஜா
2.3.3 சங்க கால இலக்கியங்களில் ஐ, ஒள
சங்க காலத்தில் தொல்காப்பிய இலக்கண நூலை அடுத்துத் தோன்றிய நூல்கள் சங்க இலக்கியங்கள் எனக் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் எவ்வாறு எழுதப்பட்டிருந்தன என்பதைக் காண்போம்.
சங்க இலக்கியங்களில் ஐகாரம் , அகரமும் இகரமும் கூடிய ஒலியாகக் கருதப்பட்டு ஐ என்று மட்டுமே எழுதப்பட்டது ; அய் என்று எந்த ஓர் இடத்திலும் எழுதப்படவில்லை. அதாவது சங்க இலக்கியங்களில்ஐவர், ஐந்து, ஐம்பது போன்ற சொற்கள் அய்வர், அய்ந்து, அய்ம்பதுஎன்றாற்போல எந்த ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. ஐவர், ஐந்து, ஐம்பதுஎன்றாற்போல மட்டுமே எழுதப்பட்டன.
ஆனால் இதற்கு மாறாக, ஒளகாரமோ சங்க கால இலக்கியங்களில்ஒள என்றும் அவ் என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. பௌவம் (கடல்) என்ற சொல், பௌவம் என்றும் பவ்வம் என்றும் எழுதப்பட்டது. அதே போலக் கௌவை (அலர் அல்லது பழிச்சொல்) என்ற சொல், கௌவைஎன்றும், கவ்வை என்றும் எழுதப்பட்டது.
மிக்க நன்றி அரிசோனன் அவர்களே!எழுத்துச் சீர்திருத்தம் என்பது இப்பொழுது செத்த பாம்பு ஆகிவிட்டது. அல்லது அடிவாங்கி, அடிவாங்கி மயங்கிக் கிடக்கிறது. யார் கண்டா? திடீரென்று எந்த்ப் புற்றுக்குள்ளிருந்தோ இன்னொருவிதப் பாம்பு வரலாம். இதுவே மயக்கம் தெளிந்து, அடிவாங்கிய கதை மறந்து மறுபடியும் படமெடுக்கலாம். இப்போதைக்குப் பிர்ச்சனை இல்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம். வருமுன் காப்பதற்குத்தான் - இந்த மாதிரிக் கட்டுரைகள்.
உயர்திரு கணேசன் அவர்களே,//அரிசோனன் சொல்வதுபோல் உ, ஊ உயிர்மெய்களைவிடுதலை எழுத்தில் படிக்க வல்லுனர் குழுவும் தேவையில்லை.//தாங்கள் சொல்வது தற்பொழுது நிகழ்ந்த மாற்றத்தைப் பற்றி. இந்த மாற்றம் நிகழ்ந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன? இம்மாதிரி பலப்பல மாற்றங்கள் நிகழ்ந்து ஒரு சில நூற்றாண்டுகள் கழிந்தால், வல்லுனர்கள் கட்டாயம் தேவைப்படுவார்கள். அதைத்தான் நான் சொன்னேன்.எந்த மாற்றத்தைக் கொணர்ந்தாலும் தொலை நோக்கு வேண்டும். அமெரிக்க முதலாளித்துவம் மாதிரி கால் ஆண்டுக்குக் கால் ஆண்டு நோக்கு சரியாகுமா?"நான் வந்தேன்" என்பதை "ந்ஆன் வ்அந்த்ஏன்" என்றும் எழுதலாம், மொத்தம் 30 எழுத்துக்கள் போதும் இருநூற்றுக்கும் மேலானவை எதற்கு என்று இன்னும் சில ஆண்டுகள் கழித்து, இன்னொரு பெரியாரும். அரசியல் நோக்கத்திற்காக இன்னொரு முதல்வரும் மாற்றினால்.. இந்நிலை ஒவொரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்தால்...இப்பொழுது இளம் தலைமுறை ரோமன் எழுத்துக்களில் தமிழை எழுதத் துவங்கிவிட்டது. அது நிலைத்தால், நமது தமிழ் எழுத்துக்கள், தமிழ் கிரந்தம் தேவநாகரியால் மறைந்ததுபோல் இன்னும் ஒரு தலைமுறையில் (20 ஆண்டுகளில்) மறைந்தே போய்விடும். அந்தக் கண்ராவியைப் பார்க்க நாம் இருப்போமோ, என்னவோ?தாங்களே சிந்தித்துச் சொல்லுங்கள்!ஒரு அரிசோனன்
2014-11-16 20:02 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆங்கிலத்தில் ஐ = என்றும், ஔ = என்றும் எழுதுகிறோம்.அதன் தாக்கமா மதிவாணரின் கூற்று: ng > ன்+க் , nj > ன் + ச் ?

மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding?ப.பாண்டியராஜா
On Monday, November 17, 2014 3:52:50 PM UTC+5:30, seshadri sridharan wrote:
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!
உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding? - ப.பாண்டியராஜா
2014-11-17 17:30 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding? - ப.பாண்டியராஜாஇரா. மதிவாணனின் ‘சிந்துவெளித் திறவு’ - http://www.subaonline.net/thfebooks/THFchinthuveli_Ezhuthin_Thiravu.pdf. இது ஒரு குறுநூல் எனினும் தொடக்கப் பழகுநருக்குப் பெரிதும் புரிந்து கொள்ள உதவுவது.Indus script Dravidian என்ற ஆங்கில நூல் விளாவரியான விளக்கங்கள் கொண்டுள்ளது. இது ஒரு வழிகாட்டி நூல் என்றே கூறலாம். என்னிடம் உள்ளது. ஆனால் எண்ணிமம் செய்ய அவர் ஒப்பம் தர மறுத்துவிட்டார்.
On Monday, November 17, 2014 4:00:33 AM UTC-8, Pandiyaraja wrote:
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா!
உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இது இந்த ஒலி என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? How did you arrive at this finding? - ப.பாண்டியராஜா
முக்கிய எழுத்துக்கள் மீன், மகரம் சிந்தில் உள்ளன. அவை என்ன எழுத்து என்று இந்நூலில் இல்லை.பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மதிவாணன் முயற்சிகளுக்கு நிறைய உதவியவர்.
ஐராவதம் பேப்பர் பார்த்தீர்களா? பல இடங்களில் சிக்கல்.
நா. கணேசன்
On Monday, November 17, 2014 3:52:50 PM UTC+5:30, seshadri sridharan wrote:2014-11-17 8:18 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஆங்கிலத்தில் ஐ = என்றும், ஔ = என்றும் எழுதுகிறோம்.அதன் தாக்கமா மதிவாணரின் கூற்று: ng > ன்+க் , nj > ன் + ச் ?இருபுறம் இரு கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, செவ்வக கட்டம் - ட ஒலி, அதை ஊடுருவி ஒரு நெடுங் கோடு - ன ஒலி, நாமம் -- ண்க ஒலி, மேல் இரு கோடுகள் -- அ ஒலி, பூ உள்ள வட்டம் -- ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் காடனங்கன் என்பது. இதை காட்டனங்கன் என படிக்கலாம்.சிந்து எழுத்தில் U வடிவம் ககரம் ஆகும் அதன் நடுவே ஒரு நெடுங்கோடு ணகரம் ஆகும். இதுவே பிராமி எழுத்தில் ணகரம் குறிக்க இருத்திக் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. எனவே ண் +க் = ங் கை குறிக்கும். இதுவும் இருஒலியன் (dipthong) போன்றதே.சிந்து நாகரீகக் காலத்தில் நெடுங்கணக்கு முதலில் தோன்றி அதற்கான குறியீடு பிற்பட்டு தோன்றியிருக்க வேண்டும். அதிலும் அக்கால் தமிழ் நெடுங்கணக்கு இன்றினும் மெல்லொலி கொண்டதாகவே இருந்திருக்க வேண்டும். ஆதலால் மக்கள் ஙகரத்தை குறிக்க தனி குறியீடு கொள்ளாமல் இரு குறிகளால் அதை குறித்துள்ளனர். ண்க என்பதை விட ங்க என்பதன் ஒலி அளவு கூடுதலானது ஏனெனில் அது ண்க்க என்று ஒலிப்பதை ஊன்றி நோக்க இயலும்.ஆங்கிலர் இதை உணர்ந்தே ng, nj என்று எழுதுகின்றனர் போலும்.சேசாத்திரி
--
//வழிவழியாக வந்த எழுத்துகளில் கைவைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
நான் எப்போதும் 'ஐ' கட்சிதான்.
ப.பாண்டியராஜா//
வணக்கம்.
நானும் "ஐ" கட்சிதான்.
காரணம், சங்கத் தமிழ் அறிஞர் கூடி விவாதித்து சீர்மை செய்யப்பெற்றது தமிழ் மொழி.
இத் தொன்தமிழின் பயனாளர் நாம்.
"பல், பால்", "கல் கால்"
தமிழிலில் குறிலுக்கும் நெடிலுக்கும் மிகுந்த பொருள் வேறுபாடு உண்டு.
"ஐயா" பொருளுடையது.
"அய்யா" பொருளற்ற சொல்.
இலக்கணப்படி யில்லாத சொற்களைப் பயன்படுத்த நமக்கு உரிமை இல்லை. அதற்கான புலமையும் இல்லை.

-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஐ எழுத்தின் வடிவம் பற்றிய பேச்சு மின்தமிழ் மடற்குழுவிலெழுந்தது. ”அகர இகரம் ஐகாரமாகுமெனத் தொல்காப்பியரே சொன்னதால் சங்ககாலத்தில் ஐக்கொரு தனிவடிவம் இருந்திருக்குமெ”ன்றும், நமக்கு அது கிடைக்கவில்லை” என்றும், அதற்குமாறாய், ”ஐகார வடிவம் ஏற்படுவதற்குமுன், பழந்தமிழியில் அஇ/அய் என எழுதியதாயும்” கருத்துக்கள் சொல்லப்பட்டன. இச்சிக்கலுக்கு முடிவு காண, ஐகார எழுத்தை மட்டும் தனித்துப்பாராது தமிழின் உயிர், மெய் எழுத்துவடிவங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப்பார்ப்பது நல்லதென்பேன். (உயிர்மெய்க் கீற்றுக்களையுங்கூடச் சேர்த்துப்பார்ப்பது இன்னும் நல்லதெனினும் நேரமில்லாததால் அவற்றை இக்கட்டுரையிற் தவிர்க்கிறேன்.)
ஒன்றுமட்டுஞ் சொல்லலாம். 350 ஆண்டுகளுக்கு முன்வந்த அச்சுநுட்பியலும், 40/50 ஆண்டுகளுக்கு முன்வந்த கணிநுட்பியலும், இவற்றின் இடையாட்டமும் தமிழெழுத்துக்களை முழுதாக நிலைபெறச் செய்துவிட்டன. இப் புதுநுட்பியல்கள் வந்ததாலேயே தமிழெழுத்துச் சீர்திருத்தங்களை இன்று பேசுவதிற் பொருளில்லாது போயிற்று. அன்றைக்குப் பெரியார் செய்தது சரி. இன்றைக்கு அவர்பெயரைச் சொல்லிச் சிறார்கல்வியைக் காரணங்காட்டிச் சீர்திருத்தம்பேசுவது வெறும் பம்மாத்து; கொஞ்சமும் உள்ளீடில்லாத பேச்சு.
அதேபொழுது பல்லவ, சோழ எழுத்து 5/6 ஆம் நூற்றாண்டுகளுக்கு அப்புறம் ஓரளவு மாறாமலும் இல்லை. (கொடுமணம், பொருந்தல், அநுராதபுரம், கீழடி போன்ற ஊர்களிற் கிடைத்த தொல்லியற் செய்திகள் உறுதிப்படுகையில், ”பழந்தமிழியே இந்தியாவில் முதலெழுந்த அகரவரிசை; அதிலிருந்தே வட பெருமி எழுந்திருக்கலாம்” என்ற கருத்து அண்மையில் வலுப்பெறுகிறது. இதனாற் பேரனைத் தாத்தனெனும் போக்கு மறையும். இதேபோலப் பழந்தமிழியிலிருந்தே கிரந்தம் எழுந்ததெனும் புரிதலும் வலுப்படும். இதை இன்னும் விளக்கப்புகுந்தால், வேறுபுலத்திற்கு இழுத்துச் செல்லும். எனவே, தமிழி>பெருமி, தமிழி>கிரந்தம் என்ற வளர்ச்சிப்போக்குகளைப் விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.)
மெய்யெழுத்துக்களை எடுத்துக்கொண்டால், ப் என்ற எழுத்து 3 ஆம் நூற்றாண்டிலும் (பழந்தமிழியின் வளைவு ப் - ற்கும் இற்றைச் சதுர ப் - ற்கும் பெரிதாய் வேறுபாடு கிடையாது), ல்.ள்.ன் என்பன 6 ஆம் நூற்றாண்டிலும், ட்,ண்,ம்,வ் ஆகிய எழுத்துக்கள் 8/9 ஆம் நூற்றாண்டுகளிலும், க்,ங்,ச்,ஞ்,த்,ந்,ய்,ர்,ற் என்பன 8/9 ஆம் நூற்றாண்டுகளில் ஓரளவு மாற்றம்பெற்று முற்றுமுழுதாக 13/14 ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைபெற்றிருக்கின்றன. சிறப்பு ழகரம் மட்டும் 17 நூற்றாண்டுதான் இற்றைவடிவம் பெற்றிருக்கிறது. இதுவும் ஒருவேளை அச்சுத்தொழிலால் இந்த மாற்றம் பெற்றதோ, என்னவோ?,
8/9 ஆம் நூற்றாண்டுகளில் தான் விசயாலயச் சோழர் ஆட்சி சோழநாட்டில் ஊன்றிப்பல்வேறு கல்வெட்டுக்களை எழுப்பி. செந்தரத்தைக் கட்டிக்காக்கத் தொடங்கியது. இந்தக் கொடிவழியினரின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் இறுதி பெற்று இவருக்குப் பின்வந்த பிற்காலப்பாண்டியர் மீண்டும் வட்டெழுத்துக்கு மாறாமல் சோழர் எழுத்திலேயே கல்வெட்டுக்களை ஏற்படுத்தினர். கிட்டத்தட்ட 15 ஆம் நூற்றாண்டே பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவிற்கு வந்தது. அவருக்கு அப்புறம் வந்த அரசர்கள் செந்தரப்படுத்தப்பட்ட எழுத்தையே பயன்படுத்தியிருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டு முடிவில் அச்சுத் தொழில் எழுத்தை நிலைப்படுத்தியிருக்கிறது.
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
-------------------
என்ற தொல்காப்பிய நூற்பாக்களைப் படித்தால் 8/9 ஆம் நூற்றாண்டு வரை ஐகார வடிவம் இல்லாது போனதின் காரணம் புரியும். நான் ஐகார வடிவத்தைப் போக்கச் சொல்லவில்லை. அந்த வடிவம் அஇ அல்லது அய் என்பதன் எழுத்துச் சுருக்கம் என்றே சொல்லவருகிறேன். இந்தக் காலத்தில் கணி வந்தற்காக & என்ற சுருக்கெழுத்தைத் தூக்கியா எறிகிறோம்? ஐ தேவை தான்.
அன்புடையீர்,ஐயன் = அய்யன்?என்பதற்கு ஒரு விளக்கத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.நன்றி,
ப.பாண்டியராஜா
ஐ = அய்?; ஔ = அவ்?
தமிழ் எழுத்துச் சீர்திருத்தக்காரர்கள் முதலில் தூக்கியெறியத் துடிப்பது ஐ, ஔ இரண்டையுமே. இந்த இரண்டும், இவை சேர்ந்த 18+18 = 36 உயிர்மெய்களும் என்னமோ தமிழுக்குத் தாங்கமுடியாத பெரும் பாரமாய்த் தோன்றுகிறது இவர்களுக்கு. ஔ என்பது ஒரு புதிய எழுத்து அல்ல. ஒ-வும் ள-வும் சேர்ந்த ஒரு கூட்டணிதான் இது. ஆங்கிலத்தில் c- யும், h-உம் சேர்ந்த கூட்டணிக்குக் க-என்ற ஒலி கிடைக்கிறது இல்லையா? அதைவிட t, i, o ஆகியவற்றின் கூட்டணிக்கு tio=ஷ என்ற புதிய ஒலி கொடுக்கப்படுகிறது. அதைப் போலத்தான் இதுவும். மேலும் கௌ, சௌ போன்றவற்றை எழுதுவதற்கும் புதிய எழுத்தோ, எழுத்துருவோ இல்லை. கெ-யில் இருக்கும் சின்னக் கொம்பையும், ள-வையும் ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ சேர்க்கவேண்டியதுதான். ஐ-யும், கை, சை, போன்றவற்றில் உள்ள இரட்டைச் சின்னக் கொம்பும் புதியவை. எனவே 2+18+18 = 38 எழுத்துக்கள் குறைகின்றன என்பது ஒரு பிரம்மையே. வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒன்றைச் செய்யும் ‘மனத்திருப்தி’ ஒருசிலருக்குக் கிடைக்கிறது என்பதைத் தவிர இதனால் யாருக்கும் ஒரு லாபமும் இல்லை.
தமிழில் 12 உயிர்கள் உண்டு. அவற்றுள் அ, இ, உ, எ, ஒ ஆகியவை குறில்கள் – ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை அளவு கொண்டவை. இவற்றுக்கு நேரான நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகியவற்றுக்கு இரண்டு மாத்திரை அளவு. இந்தக் கணக்கில் சேராமல் ஐ, ஔ தனித்து நிற்கின்றன. இவையும் நெடில்களே. மொழியியல்காரர்கள் இந்த இரண்டையும் உயிர் (Vowel) எனக் கொள்வதில்லை. இவற்றை dipthong என்கின்றனர். Dipthong என்பதன் பொருள் : A vowel sound that starts near the articulatory position for one vowel and moves toward the position for another என wordweb அகராதி கூறுகிறது. இப்பொழுது இவர்கள் கூறுவதை 2500 ஆண்டுகட்கு முன்னர் தொல்காப்பியர் கூறிவிட்டார்.
அகர இகரம் ஐகாரம் ஆகும்
அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்-மொழிமரபு-21,22
இதற்குப் பின் வந்த நன்னூல்(125), இலக்கணவிளக்கம்(35), முத்துவீரியம்(107) போன்றவையும் இதனையே கூறும். இலக்கணக்காரர்கள் இவற்றைப் போலி எழுத்துக்கள் என்ப. போலி என்றால் duplicate அல்ல - போல ஒலிப்பது. நச்சினார்க்கினியர் இதற்கு, “ அகரமும், இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல இசைக்கும், அது கொள்ளற்க” என்று உரை கூறுவார். ஐவனம் அஇவனம் எனவரும், (ஔவை அஉவை எனவரும்). ‘ஆகும்’ என்றதனான் இஃது இலக்கணம் அன்றாயிற்று என்பார் அவர். (ஒரு வேடிக்கை! இன்றைக்கு இதைத் தட்டச்சு செய்யும்போது a-வுக்கடுத்து i-தட்டினால் அது ஐ-ஆக மாறிவிடுகிறது). அஇ, அஉ என அடுத்தடுத்து வரும் இரண்டு உயிர்களுக்கிடையே உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா! எனவே அஇ என்பது யகர உடம்படுமெய் பெற்று அயி என்றும், அஉ என்பது வகர உடம்படுமெய் பெற்று அவு என்றும் மாறுகின்றன. எனவேதான் கைலை என்பது கயிலை என்றும் மௌனம் என்பது மவுனம் என்றும் எழுதப்படுகின்றன. இப்படிக் கூறுவார் வேங்கடராசுலு ரெட்டியார்.
வடமொழியில் இவற்றின் சேர்க்கைகள் வேறாக இருக்கின்றன. அ+இ = ஏ, என்றும், அ+உ = ஓ என்றும் மாறுகின்றன. தேவ + இந்திர = தேவேந்திர; புருஷ + உத்தம = புருஷோத்தம. எனவே வடமொழியினின்றும் தமிழ் வேறுபட்டது எனக் காட்டத்தான் தொல்காப்பியர் இதனைக் கூறியுள்ளார் என்றும் கொள்ளலாம்.
ஒலிகளின் இந்தச் சேர்க்கையைப் பற்றிக் கூறிய தொல்காப்பியர், ஒலிகளைப் பற்றித் தான் கூறும் நூன்மரபில் இவற்றைக் கூறாமல், அடுத்த மொழிமரபில் இவற்றைக் கூறுகிறார். நூன்மரபு என்பது தான் எடுத்துக்கொண்ட நூலுக்கான மரபு. இது Postulate எனப்படும். ஆனால் மொழிமரபு என்பதை மொழியின் மரபு என்றும், மொழிகின்ற மரபு என்று கொள்ளலாம். இது axiom எனப்படும். இது தமிழின் / தமிழரின் மரபு என்று கூறுவதற்காகவே தொல்காப்பியர் இதனை மொழிமரபு என்ற இரண்டாம் இயலில் வைத்திருக்கிறார் எனலாம்.
இவற்றை அடுத்து, அடுத்த நூற்பாவில் அவர்,
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் – தொல். மொழி. 23
என்று கூறுகிறார்.
“அகரத்தின் பின் இகரமேயன்றி, யகரமாகிய புள்ளி வந்தாலும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு மெய்பெறத் தோன்றும்” என்பர் நச்சினார்க்கினியர். “ஐவனம் அய்வனம் என வரும்” என்பார் அவர். ஆனால் வேங்கடராசுலு ரெட்டியார் இதனை மிக நுட்பமாக ஆராய்கிறார். ‘ஐயென் நெடுஞ்சினை’ என்றது ஐகாரம் என்னும் நெடிய சினையெழுத்து என்றபடி என்கிறார் அவர். மேலும் அவர், “இவ்வாசிரியர் முதல் எழுத்தினைச் சினை என்று வழங்குதல் இலர்; முதல் என்றே கூறுவர்.
நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் (உருபியல்.7)
என எடுத்துக்காட்டும் கொடுக்கிறார். (நீ + இன் = நின்) “ஆதலின் ‘சினை’ என்றது மொழியின் முதல் எழுத்தல்லாத எழுத்தினை என்று கோடல் அமைதி. மொழியின் இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரத்திற்கு அய் என்பது வரும் என்றவாறாகும். அ,இ- வுக்கு அடுத்து அ,உ –வைச் சொன்ன தொல்காப்பியர், இங்கே அ+ய் = ஐ என்று கூறிவிட்டு, அடுத்து,
அகரத்து இம்பர் வகரப் புள்ளியும்
ஔ-என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
என்று கூறவில்லை.
“இவ்வாறு சூத்திரஞ் செய்யாததன் காரணம் புலனாகும். என்னையெனின், ஔகாரம் மொழியின் இடையிலும் கடையிலும் நிற்பது அன்மையின் அஃது அவ் என்றாதல் இல்லை” என்று மிக நுட்பமாக ஆய்ந்து கூறும் வேங்கடராசுலு ரெட்டியாரின் நுண்மாண்நுழைபுலம் வியந்து போற்றற்குரியது. இவ்வளவு நுட்பமாகத் தமிழை ஆய்ந்த தொல்காப்பியரின் மாண்புதான் என்னே!
அதாவது ஐயன் = அய்யன் என்பதில் தொல்காப்பியருக்கு உடன்பாடில்லை. ஆனால் தஞ்சை = தஞ்சய்; படையல் = படய்யல் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஏன் அதை மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று முழங்கையை உயர்த்திக்கொண்டு வருபவரிடம் சண்டை போடவேண்டாம். விட்டுவிடுவோம். அதை இப்படி எழுதலாம் என்பதற்காக அதுவே வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தரவில்லை.
ப.பாண்டியராஜா
பார்வை: தொல்காப்பியம் – உரைவளம் – எழுத்ததிகாரம் – மொழிமரபு , பதிப்பாசிரியர்-ஆ.சிவலிங்கனார் – வெளியீடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
(அண்மையில் இப் பெருந்தகை காலமானார். அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவோம்)
On Saturday, November 15, 2014 8:27:50 PM UTC+5:30, kalai wrote:
வணக்கம்
On 15-Nov-2014 2:54 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> நண்பர்களே,
>
> சிலரது பதிவுகளில் ஐ என்பதன் பயன்பாடு தமிழ் சொற்களில் வரும் போது அய் என்ற வகையில் குறிக்கப்படுவதைக் காண்கின்றேன்.
>
>
> உதாரணமாக ..
> ஐயம் - அய்யம்
> ஐயன் - அய்யன்
>
> இவை இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணம் என்ன.. இதில் எது இலக்கணப்படி சரி..ஐயம் சரி
அய்யம் தவறுஎது தற்சமயம் தமிழக கல்வி போதனைப்படி பயன்பாட்டில் இருப்பது என்பதனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஐயம் என்ற சொல்லே பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது .
>
> அறிந்தோர் விளக்கினால் எனக்கு உதவும்.
>
> சுபா
>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒரேஎழுத்திற்கு இருவேறு மாத்திரைகள் வேறெழுத்துகளுக்கு வருமா என்றால் வரும். காட்டாக மகரப் புள்ளிக்கு அளவு பொதுவாக அரை மாத்திரை தான். அதேபொழுது மகரக்குறுக்கத்தில் கால் மாத்திரை வரலாம். யாப்பில் ஆய்தத்திற்கு இருவேறு மாத்திரைகள் உண்டு. சில இடங்களில் அதை மெய்யாகக் கருதி அரைமாத்திரை கொடுப்பதும், சில இடங்களில் உயிராகக் கருதி ஒரு மாத்திரை கொடுப்பதுமுண்டு. இதற்குக் குறளிலிருந்தே ஒரு முறை நண்பர் ஹரி சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். (எனக்குச் சட்டென்று அதை எடுத்துக்கொடுக்க நினைவில்லை.) இது போல வேறுசில எழுத்துக்களும் இருவேறு மாத்திரைகள் கொள்ளலாம்.
அழுக்கற் றகன்றாரு மில்லை அஃதில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் (170)
மில்லை தேமா தொடர்வது அகுதில்லார்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ( 226)
தீர்த்தல் தேமா தொடர்வது அகுதொருவன்
தவமுந் தவமுடையார்க் காகு மதனை
யஃதிலார் மேற்கொள் வது. 262
மதனை புளிமா தொடர்வது அகுதிலார்
வேண்டாமையன்ன விழுச்செல்வ மீண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில். 363
ஆண்டும் தேமா தொடர்வது அகுதொப்ப
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368
துன்பம் தேமா தொடர்வது அகுதுண்டேல்
உரமொருவற் குள்ள வெறுக்கை: யஃதில்லார்
மரமக்கள் ஆதலே வேறு. 600
வெறுக்கை புளிமா. தொடர்வது யகுதில்லார்
அற்றா லறவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943
துண்க தேமா. தொடர்வது அகுதுடம்பு
இன்பங் கடல்மற்றுக் காம மஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது. 1166
காம தேமா. தொடர்வது மகுதடுங்கால்
//இனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புதுவடிவம் என்பது புரியும்.//இப்பகுதி அருமையான விளக்கம். நான் இந்த வகையில் யோசித்ததில்லை.இந்தப் பதிவை ஒரு கட்டுரையாக நாம் மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
சுபா
இராமகி ஐயா அவர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த நூற்பாக்களைப் படிக்கும்போதே எனக்குத் தோன்றிய ஐயங்கள்.1.ஐ என்ற எழுத்தைப் பற்றிய இந்த நூற்பா நூன்மரபாகிய முதல் இயலில் வராமல் மொழிமரபு என்ற இரண்டாம் இயலில் இடம்பெறாதேன். (என்னுடைய கருத்துப்படி - நூன்மரபு - Postulates; மொழிமரபு - axioms - இதற்குரிய வேறுபாடுகளை தொல்காப்பியக் கட்டுரைகள் - 1 என்ற தலைப்பில் கூறியுள்ளேன்)2. அகர இகரம் ஐகாரம் ஆகும் என்று சுருங்கச் சொன்னவர் இந்த நூற்பாவுக்கு இரண்டு அடிகள் எடுத்துக்கொண்டதேன்?இம்பர், சினை, மெய்பெற என்ற சொற்களுக்குரிய ம்ழு விளக்கங்கள் என்ன? அவற்றின் தேவை என்ன?தொல்காப்பியம் - உரைவளம் என்ற புத்தகத்தைப் படித்தபோது பதிப்பாசிரியர் சிவலிங்கனார் இந்த ஐயங்களைப் போக்குகிறார். அதனைப் படம்பிடித்து அனுப்பியுள்ளேன். அவர் இந் நூற்பாவுக்குப் பல உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளைத் தொகுத்துக் கூறிவிட்டுப் பின்னர் தம் கருத்தாகக் கூறுவதைத்தான் அனுப்பியுள்ளேன். இது பலரின் ஐயங்களையும் தீர்க்கும் என நம்புகிறேன்.
ப.பாண்டியராஜா
On Saturday, April 16, 2016 at 10:03:50 AM UTC+5:30, இராமகி wrote:
--
--
// தமிழ்ர் தமிழராக நிலைக்கவேண்டுமானால் தமிழெழுத்தைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை தமிங்கிலராக மாற்றுவதற்கே வழிவகுக்கும். எழுத்துச் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் நம்மைத் தமிங்கிலராக மாற்றவே பாடுபடுகிறார். எத்தனைமுறை தேன்தடவிய சொற்களால் அவர் அதைச்சொன்னாலும் அதே பொருள்தான்..//
>>ஐ என்ற எழுத்தின் வடிவம் 8/9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன் கிடையாது. அதன் வடிவம் அகரமும் (180 பாகை சுற்றிய) இகரமும் சேர்ந்ததாய் இருக்கலாம். அன்றேல் அகரமும், யகரப்புள்ளியும் சேர்ந்ததாய் இருக்கலாம் என்று ஓர் இயலுமையை மட்டுமே சொன்னேன்.>>இராமகி ஐயா அவர்களுக்கு!கல்வெட்டுகளில் ஐ கிடையாது எனினும் கை, பை, தை போன்ற உயிர்மெய் எழுத்துகள் இருக்கின்றன. அவை கய், பய், தய் என எழுதப்பட்டது இல்லை. எனவே ஐ-க்கு ஓர் குறியீடு இருந்திருக்கவேண்டும். அதைப் பயன்படுத்தும் சொற்கள் கல்வெட்டில் இல்லை என்பதே உண்மை.
ஐ-யை முதலெழுத்தாகக் கொண்ட எழுத்துகள் இன்றைக்கும் மிகச் சிலவே. எனவே கல்வெட்டில் ஐ இல்லை. எனவே ஐ-க்குத் தனி உருவம் இல்லை என்பது சரியான வாதம் ஆகாது என்பது என் கருத்து.அன்புடன்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Tuesday, April 12, 2016 at 10:45:26 PM UTC-7, kalai wrote:வணக்கம்.
நானும் "ஐ" கட்சிதான்.
காரணம், சங்கத் தமிழ் அறிஞர் கூடி விவாதித்து சீர்மை செய்யப்பெற்றது தமிழ் மொழி.
இத் தொன்தமிழின் பயனாளர் நாம்.
"பல், பால்", "கல் கால்"
தமிழிலில் குறிலுக்கும் நெடிலுக்கும் மிகுந்த பொருள் வேறுபாடு உண்டு."ஐயா" பொருளுடையது.
"அய்யா" பொருளற்ற சொல்.
இலக்கணப்படி யில்லாத சொற்களைப் பயன்படுத்த நமக்கு உரிமை இல்லை. அதற்கான புலமையும் இல்லை.ஐயன், அய்யன் இரண்டுமே பொருளுடைய சொற்கள் தாம். ஔவை = அவ்வை போல, ஐயன், அய்யன்இரண்டுமே வழக்கத்தில் உண்டு. இன்னும் சொல்லப்போனால், ஐ, ஔ என்னும் இரண்டு உயிரெழுத்துடையகூட்டெழுத்துக்கள் “டிப்தாங்ஸ்” என்பர். மூலத்ராவிட மொழியில் இவை இல்லை என்பர் மொழியியல்அறிஞர்: பர்ரோ, எமனோ, பார்போலா, .... மூலத்ராவிட வார்த்தைகளை அமைக்கும்போது ஐ, ஔபயன்படுத்துதல் இல்லை. அய், அவ் தான். தொல்தமிழில் கய் என்றே கை இருந்திருக்கிறது என்பர்.சங்க காலக் கல்வெட்டுகளில் ஐ, ஔ இல்லை என்பதும் பார்க்கவேண்டும். ஐ முதலில் வரும்போதுதிரிசூல (trident) வடிவில் வந்துள்ளது. இது ஆந்திர மாநில கிருஷ்ணா நதி பாயும் கிருஷ்ணா மாவட்டஅல்லூரு என்னும் ஊரில் உள்ள வடிவம் (பார்க்க: ஐராவதம் மகாதேவனின் தமிழ் ப்ராமி நூல்.)வட இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் 3000+ ஆண்டுகளாக தொடர்புகள் வலுப்பட்டுக்கொண்டுள்ளன.வேளிர் துவாரகையில் இருந்து வருகையும், பௌத்தம் இலங்கையில் பரவலும், சைனம் கர்நாடகம்,தமிழகம் வருகையும் இதனைக் காட்டுகின்றன. தொல்லியலில் பார்த்தால் மெகாலித்திக் பண்பாடுவடக்கே இருந்து தெற்கே நகர்தலையும், மகர விடங்கர் சிற்பம் வெண்கலமாக உள்ளது வட இந்தியாவில்,அதுவே, இரும்பு உளியால் மாபெரும் கற்சிற்பங்களாக தென்னிந்தியாவில் உருவெடுப்பதும்குறிப்பிடலாம்.தமிழுக்கு எழுத்து உருவாவது கொங்குநாட்டில் என கொடுமணல் ஆய்வுகள் நிரூபித்துவிட்டன.இது பாண்டிநாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் உள்ள பிரதேசம் என்பது முக்கியமான தரவு.ப்ராமி எழுத்தில் பிராகிருதத்தில் உயிர்மெய்கள் கை, சை, தை, டை, ணை, .... போன்றன எழுதுவதுபோலவே, தமிழ் ப்ராமியிலும் இந்த -அய்/-ஐ கூட்டெழுத்தீன் டையாகிரிட்டிக் குறியீடு உள்ளது.இந்த வடிவம் இந்தியா முழுமையும் ஒன்றாயிருக்கிறது. விஷ்ணு > வைஷ்ணவ, சிவ > சைவம்,ஜின > ஜைனம், புத்த > பௌத்தம் ... என்னும் வடமொழி இலக்கண விதியால் அமையும் வார்த்தைகளுக்காகவட இந்தியாவில் இந்த ‘டிப்தாங்’ எழுத்துக்கள் எழுத ப்ராமி லிபியில் அமைந்த வடிவங்கள்,பின்னர் தமிழ் வார்த்தைகள் எழுத ப்ராமியில் இருந்து தமிழ் ப்ராமி பிறந்தபோது அப்படியேபயன்படுகின்றன.அய் & ஐ இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே பயன்பாட்டில் உள்ளன. பெரியார் ஐ, ஔ வேண்டாம்என்றார். வாரியார் சுவாமிகள் போன்றோர் இரண்டும் இருக்கட்டும் என எம்ஜிஆரிடம் சொன்னார்.எப்பொழுதுமே ஸ்க்ரிப்ட்ஸ் எழுத்துக்களைக் கூட்டிக்கொண்டே செல்லும். உ-ம்: தமிழ் லிபியில்இன்று 5 கிரந்த மெய்யெழுத்துக்கள். அதுபோல், காலத்தால் பிற்பட்ட ஐ, ஔ இருக்கலாம்.ஆனால் தமிழ், திராவிட பாஷகளில் -அய், -அவ் தான் பழமை வாய்ந்தனவாகும். அவையும்பொருளுடையவை. பயன்பாட்டில் உள்ளவை. பெரியார் வலியுறுத்திய உ,ஊ உயிர்மெய் வடிவுகளும்இருக்கலாம். மலையாளத்தில் இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருப்பதுபோல,கல்வி கற்பிக்க, தமிழ் உயிர்மெய் மேட்ரிக்ஸ் குழந்தைகளுக்கு விளங்க, நினைவில் நிறுத்த உதவும்.பெரியார் தொடங்கிய விடுதலை இதழில் அச்சாகும் உ, ஊ உயிர்மெய் வடிவங்கள் பற்றிக்கல்வெட்டறிஞர் பேரா. சு. ராஜவேல் கட்டுரையில் பிராமியுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார்,அம்முறையும், இப்போதைய முறையுடன் ’பெரியார் எழுத்து’ என இருக்கலாம்.உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என கல்வி கற்போருக்கு எளிதில் அப்போது புரியும்.ஐ, அய் இரண்டும் இருப்ப்துபோல, பெரியார் உ,ஊ உயிர்மெய் வடிவங்கள், ஓலைச்சுவடி வடிவங்கள்என இரண்டும். ஐபோன், ஆண்டிராய்ட் போன்றவற்றில் தமிழ்99 விசைப்பலகை பாருங்கள்:தமிழ் தட்டச்சுப் பலகை போல் இல்லாமல், உயிர்மெய் சார்பெழுத்துக்கள் தமிழ்99 எளிதில்உருவாகின்றன. இது பெரியார் பரிந்துரைத்த உயிர்மெய் வடிவங்கள் விஞ்ஞான அடிப்படை எனக்காட்டும். மலையாளம் மாறிவிட்டது. அதுபோல, பெரியார் உ,ஊ உயிர்மெய்களும் தமிழுக்கு வேண்டும்.நா. கணேசன்
ஐக்கான பழைய வடிவம் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாதர்குன்றிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டிலுள்ளது. திருநாதர் குன்று செஞ்சிக்கு அருகிலுள்ளது. இக்கல்வெட்டின் அச்சுப் பதிப்பு திரு.ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட Early Tamil Epigraphy என்ற பொத்தகத்தின் 472-473 ஆம் பக்கங்களில் உள்ளது. இந்தக் கல்வெட்டின் வாசகம்:L1. ஐம்பத்தேழனL2.சனந் நோற்றL3. சந்திரநந்தி ஆL4.சிரிகரு நிசீதிகைஇந்த ஐகார வடிவம் காரவேலனின் அத்திகும்பா பாகதக்கல்வெட்டில் உள்ள ஐகார வடிவிலிருந்து வேறுபடுவதாக ஐராவதம் மகாதேவன் சொல்கிறார். அதே பொழுது இந்த வடிவம் ஆந்திரத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் அல்லூரு என்னுமிடத்தில் உள்ள ARE 331/1924 பாகதக் கல்வெட்டில் இங்கே கொடுத்துள்ள வடிவமே பயில்வதாய்க் குறிப்பிடுகிறார். இந்த அல்லூருக் கல்வெட்டு T.N.Subramaniam 1957: pp 1518-1519; pl2.Col.IV.49 இல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அல்லூருக் கல்வெட்டு 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்றுஞ் சொல்லப்படுகிறது.அத்திகும்பாக் கல்வெட்டையும், அல்லூரு கல்வெட்டையும் நான் தேடவேண்டும்.படி இருப்பவர்கள் இங்கு வெளியிட்டால் பயனுள்ளதாயிருக்கும்.

ஒன்று குறிப்பிட மறந்துவிட்டேன்:
அன்பிற்குரிய ஹரி,உங்கள் தொகுப்பிற்கு மிக்க நன்றி.இதுபோன்ற தொகுப்புக்களை ஒரு கட்டுரையாக மாற்றி நீங்கள் தரவேண்டும். அதை திருவளர்.சுபா/தேமொழி அவர்கள் ஓரிடத்தில் சேகரித்து வைக்கவேண்டும்.
ஐக்கு உரிய மாத்திரை அளவு:என்ற பகுதியில் உங்கள் விளக்கத்தையும்,திரு. ஹரிகி கொடுத்த எடுத்துக்காட்டுகளையும் இணைத்துள்ளேன்.இப்பகுதி மின்தமிழ்மேடை காலாண்டிதழின் பக்கம் # 12 & 13 லும் இடம் பெற்றுள்ளது..... தேமொழி
2016-04-18 9:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:ஐக்கு உரிய மாத்திரை அளவு:என்ற பகுதியில் உங்கள் விளக்கத்தையும்,திரு. ஹரிகி கொடுத்த எடுத்துக்காட்டுகளையும் இணைத்துள்ளேன்.இப்பகுதி மின்தமிழ்மேடை காலாண்டிதழின் பக்கம் # 12 & 13 லும் இடம் பெற்றுள்ளது..... தேமொழி
ஹரி கொடுத்த எடுத்துக்காட்டுகளை ஹரி கொடுத்தது என்று குறிப்பிட முடியாவிட்டால் அங்கிருந்து நீக்கிவிடவும். என்னுடைய எழுத்து எதுவாக இருந்தாலும் முன் அனுமதி பெறவும்.
இராமகி ஐயா அவர்களின் பகுதியை அப்படியே உங்கள் பெயருடன் கொடுத்து, நீங்கள் கொடுத்த எடுத்துக்காட்டுகளையும் அதன் கீழ் கொடுத்துள்ளேன் திரு. ஹரிகி.
( படம்... வலைத்தளத்தையும் மின்தமிழ் மேடை மலரையும் காட்டுகிறது )
அடுத்தமுறை இது போன்று கட்டுரைக்கு உதவும் வகையில் உங்கள் எழுத்துகள் இடையில் இருந்தால் உங்களிடம் கேட்டுவிட்டே பதிவிடுகிறேன்.
புரிதலுக்கும், உங்கள் விருப்பத்தைக் கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்கும் நன்றி.
..... தேமொழி
பேரா. சு. பசுபதி, சந்தவசந்தம், 2011-ல்”ஒரு அரங்கில் , 'ஔ’ வை தமிழில் முழுதும் ஒழித்து, ‘அவ்’ பயன்படுத்தலாமே என்ற ஒரு கருத்து எழுப்பப்பட்டது..இதைப் பிடிக்காத ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுந்து, கேட்டார்:“ ஔவைப் பாட்டி சிறுவயதில் மிக அழகாக இருந்தாள்”இந்த வாக்கியத்தில் , “ஔ” க்குப் பதிலாக “அவ்”இருந்தால்...? “ “
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
திரு. இராமகி ஐயா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும்,திரு. ஹரிகி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க
2016-04-18 14:25 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:திரு. இராமகி ஐயா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும்,திரு. ஹரிகி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க
வேண்டுகோள் ஹரிகியினுடையது அன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்று கேட்டார்கள். சொன்னேன். ஆகவே வேண்டுகோள் என்னுடையதன்று.என் அனுமதியைப் பெறாமல் மின்மேடை ஏற்றினீர்கள்.
போகிறது. வேண்டுகோள் வைத்தேன் என்று பேசாதீர்கள்.--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
விபரீத விளையாட்டுக்கள் தமிழிலே கூடாது என்பதற்கு இது அருமையான உதாரணம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
”ஒரு அரங்கில் , 'ஔ’ வை தமிழில் முழுதும் ஒழித்து, ‘அவ்’ பயன்படுத்தலாமே என்ற ஒரு கருத்து எழுப்பப்பட்டது..இதைப் பிடிக்காத ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுந்து, கேட்டார்:“ ஔவைப் பாட்டி சிறுவயதில் மிக அழகாக இருந்தாள்”இந்த வாக்கியத்தில் , “ஔ” க்குப் பதிலாக “அவ்”இருந்தால்...? “ “என்று பேரா சு பசுபதி அவர்கள் சந்த வசந்தத்தில் 2011 ல் எழுதியதை வெளியிட்டாரே அதைக் கவனிக்கவில்லையா அதற்குத்தான் எழுதினேன்ஔ என்பதை அவ்வென்று மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி இப்போது புரிந்திருக்குமே சுபா அவர்களே
எழும் சந்தேகத்தை கேட்பதும் அதற்குத் தகவல் தெரிந்தோர் பதிலுரைப்பதும் தான் கலந்துரையாடல் என அழைக்கப்படுகின்றது.என்றோ ஒருவர் ஒரு விளக்கம் எழுதிய ஒரு காரணத்திற்காக இன்னொருவர் கேள்வி கேட்பது விபரீதமான விளையாட்டு
>>தமிழ் பிராமிஇவற்றில் புள்ளி ஏற்படுகிற காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. இதனை ஐயத்துக்கிடமின்றி ஐராவதம் நிறுவிவிட்டார்கள்.>>ஐராவதம் அசோகன் பிராமியை ஆதியாக வைத்துக்கொண்டு அளந்து சொல்பவர். அந்தக் காலம் மலையேறிவிட்டது.ப.பாண்டியராஜா
Thanks, Sri Tamil Thenee.My point is -ai, -au diphthongs in Brahmi and Tamil Brahmi scripts come from the North. Due to the Linguistic Analysisperformed on Indo-Aryan languages in North India. Tamil suutras are late, and ai and au letters come centuries later thanfirst attested North of Tamil lands.YoursNG
>>அதற்கும், தமிழில் புள்ளிக் கோட்பாடு உருவாகும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுஎனக் காட்டும் சான்றாதாரங்களுக்கும் என்ன தொடர்பு?- என விளங்கவில்லை>>அசோகன் பிராமி கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அப்போது புள்ளி இல்லை. எனவே 500 ஆண்டுகளைச் சேர்த்து, புள்ளியைப் பற்றிப்பேசும் தொல்காப்பியர் கி.பி. 2-ஆம் நூற். என்கிறார். மேலும் புள்ளியுள்ள பிராமி எழுத்துகள் சற்று வளர்ச்சியுற்றவை. இந்த வளர்ச்சிக்கும் சேர்த்து அவர் 500 ஆண்டு கொள்கிறார். பிராமி தோன்றிய சில காலத்திலேயே புள்ளி தோன்றிவிட்டது என்பது என் கருத்து. அதற்கு 500 ஆண்டுகள் ரொம்ப அதிகம். மேலும் முந்தைய பிராமியில் பிராகிருத எழுத்துகள் கலக்க ஆரம்பித்துவிட்டன. எ.கா- ஸ எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்னர் அதே காலத்திலேயே வட எழுத்துகள் தவிர்க்கப்பட்டன. எ.கா. உபாசஅன் - இதற்குக் காரணம் தொல். கூறிய வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ என்ற நூற்பாதான். எனவே பிராமி தொடங்கிய காலத்திலேயே தொல். இருந்துள்ளார். இப்பொழுது தமிழ்நாட்டில் பிராமியின் தொடக்கம் பின்னே போய்க்கொண்டே இருக்கிறது. தொல். -இன் காலமும்தான்.ப.பாண்டியராஜா
கண்ணில் பட்ட சில பிழைகளை மாற்றியுள்ளேன் ...கீழ் காணுமாறு படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.திரு. ஹரிகி மாறுபட்ட கருத்துடன் அவர் அனுமதி தேவை என்று குறிப்பிடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்பதே நான் செய்த தவறு. இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை.உங்கள் அறிவுரையின்படி இந்தத் தகராறுக்குக் காரணமான பகுதியை மின்தமிழ் மேடையில் நீக்கிவிட்டேன்...... தேமொழி
//அழுக்கற் றகன்றாரு மில்லை அஃதில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் (170)
மில்லை தேமா தொடர்வது அகுதில்லார்//
இக்குறள்
அழுக்கற் றகன்றாரு மில்லைஅஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
மரமக்கள் ஆதலே வேறு. 600
வெறுக்கை புளிமா. தொடர்வது யகுதில்லார்//
என்னும் குறளும்
மரமக்கள் ஆதலே வேறு
என அமைந்தால் தான் பா தளையின்றி சரியாக அமையும்.
எனவே இவ்விரு எடுத்துக்காட்டுகளிலும் ஆய்த எழுத்து மெய்யெழுத்து போல செயல்படுவதாகவே உணர்கிறேன்.
2016-04-16 10:03 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:ஒரேஎழுத்திற்கு இருவேறு மாத்திரைகள் வேறெழுத்துகளுக்கு வருமா என்றால் வரும். காட்டாக மகரப் புள்ளிக்கு அளவு பொதுவாக அரை மாத்திரை தான். அதேபொழுது மகரக்குறுக்கத்தில் கால் மாத்திரை வரலாம். யாப்பில் ஆய்தத்திற்கு இருவேறு மாத்திரைகள் உண்டு. சில இடங்களில் அதை மெய்யாகக் கருதி அரைமாத்திரை கொடுப்பதும், சில இடங்களில் உயிராகக் கருதி ஒரு மாத்திரை கொடுப்பதுமுண்டு. இதற்குக் குறளிலிருந்தே ஒரு முறை நண்பர் ஹரி சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். (எனக்குச் சட்டென்று அதை எடுத்துக்கொடுக்க நினைவில்லை.) இது போல வேறுசில எழுத்துக்களும் இருவேறு மாத்திரைகள் கொள்ளலாம்.
ஆமாம் ஐயா. இரண்டு மூன்று முறை தனித் தனியாகத் தொகுத்தேன். ஒவ்வொரு முறையும் தொலைத்துவிடுவேன். அண்மையில் Face Bookல் ஏதோ ஒரு உரையாடலின் போது தொகுத்ததை நினைவாகச் சேமித்து வைத்தேன். இதோ:
அழுக்கற் றகன்றாரு மில்லை அஃதில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் (170)
மில்லை தேமா தொடர்வது அகுதில்லார்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ( 226)
தீர்த்தல் தேமா தொடர்வது அகுதொருவன்
தவமுந் தவமுடையார்க் காகு மதனையஃதிலார் மேற்கொள் வது. 262
மதனை புளிமா தொடர்வது அகுதிலார்
வேண்டாமையன்ன விழுச்செல்வ மீண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில். 363
ஆண்டும் தேமா தொடர்வது அகுதொப்ப
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். 368
துன்பம் தேமா தொடர்வது அகுதுண்டேல்
உரமொருவற் குள்ள வெறுக்கை: யஃதில்லார்மரமக்கள் ஆதலே வேறு. 600
வெறுக்கை புளிமா. தொடர்வது யகுதில்லார்
அற்றா லறவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943
துண்க தேமா. தொடர்வது அகுதுடம்பு
இன்பங் கடல்மற்றுக் காம மஃதடுங்கால்துன்ப மதனிற் பெரிது. 1166
காம தேமா. தொடர்வது மகுதடுங்கால்
(நான் தமிழாயத்தில் இல்லை. ஆகவே அனுப்ப முடியவில்லை. தமிழ் உலகம் யாஹூ குழுமமாக இருந்தபோது இருந்தேன். இப்போது என் பெயர் அக்குழுவிலில்லை போலிருக்கிறது.)
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
என அமைந்தால் தான் பா தளையின்றி சரியாக அமையும்.
எனவே இவ்விரு எடுத்துக்காட்டுகளிலும் ஆய்த எழுத்து மெய்யெழுத்து போல செயல்படுவதாகவே உணர்கிறேன்.
யாப்பு சொல்லித் தருவதற்கு நன்றி.சீரின் முடிவில் ஃ என்று வந்து பார்த்ததில்லை.
சீரின் முடிவில் ஃ என்று வந்து பார்த்ததில்லை.