தொல்காப்பியத்தில் கூட்டொலிகள் (diphthongs) ஐ, ஔ அவற்றின் வரலாறும் தேவையும்

185 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Jan 19, 2009, 6:39:20 AM1/19/09
to Santhavasantham, panb...@googlegroups.com

ஸ்ரீமதி கமலம் அம்மையார் ஐ, ஔ தட்டெழுவதுபற்றிக்
கேட்டார். தங்கிலீசு முறையைப் பாவினால்.
ai (= ஐ), au (= ஔ) முறையே கிடைக்கும் என்றேன்.
தமிழ்99 விசைப்பலகையில் தனியாய்த் தட்டி (key)
இருக்கிறது.

இதில் உள்ள ஓர் அழகு பற்றிச் சொல்லலாம்.
இவ்வெழுத்துக்கள் ஐ, ஔ இரண்டும் கூட்டொலிகள்
(diphthongs) ஆகும். வடமொழி இலக்கண நூலார்
சந்தியக்கரம் எனக் குறிப்பிடுவர்http://en.wikipedia.org/wiki/Diphthong

தொல்காப்பியர் இந்த 2 கூட்டொலி எழுத்தையும்
நெடில் கணத்திலே அடக்குகிறார். ஆனால்,
குறில் = 1 மாத்திரை, நெடில் = 2 மாத்திரை,
கூட்டொலிகள் ஐ, ஔ = ~ 1.5 மாத்திரை
என்று எடுக்கவேண்டும்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திலேயே
கூட்டொலிகளுக்குச் சூத்திரம் செய்துவிட்டார்:
"அகர இகரம் ஐகார மாகும்." (54)
"அகர உகரம் ஒளகார மாகும்" (55)
இன்று எந்த கணியெழுதியிலும்
ai (= ஐ), au (= ஔ) என்று எழுதுகிறோமே.
அதற்கு எவ்வளவு scientific ஆக 2000
வருடத்திற்கு முன்னமே இலக்கணம்
வகுத்திருக்கிறது தமிழ் என்று எண்ணிப்
 பார்க்கலாம், வியக்கலாம்.
[ஐ அய்-யா? அஇ-யா? என்ற சர்ச்சை
தொல். சொல். அதிகாரத்துக்கும்,
எழுத்து சூத்திரத்துக்கும் இடையே உண்டு.
அதை விட்டு விடுகிறேன்.]

இலக்கண விளக்கத்தில் வைத்தியநாத தேசிகர்
இவற்றை அஇ, அஉ என்பவற்றுக்குச் சமன்
என எடுத்துக் கொள்கிறார். அதையே நாமும்
கொள்ளலாம்.

---------------

நாக. இளங்கோ ஐ, ஔ ஏன் பயன்படுத்த
வேண்டும் என்று எழுதினார். அது ஒரு
நல்ல ஆழமான மடல் ஆகும்.http://nayanam.blogspot.com/2008/05/blog-
post.html

இன்னும் ஒரு பழைய வழக்கத்தைக் குறிப்பிடலாம்.
நாக. இளங்கோ விரும்புவார் என்று நினைக்கிறேன்.

ஐ என்பது கொங்குநாட்டில் தனிச்சொல்லாக
இன்றும் பாவிக்கப்படுகிறது. ஐயணன் என்றும்
பெயர்கள் இருக்கும். ஐ-அண்ணன் என்று பொருள்.
கவிஞர் தமிழன்பன் என் வீட்டில் இருக்கும்
போதெல்லாம் என் மகள் நருமதை என்னை
ஐ, ஐயன் என்பதைக் கேட்டுப் பூரிப்பார்கள்.
"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே"
என்ற சங்கப் பாட்டைக் காட்டுவார்.
(எங்கள் கொங்குவேளிர் செய்த பெருங்கதையில்
நருமதை காண் படலம் படித்துக் கொண்டிருந்த
போது பிறந்தவள். சிந்து நாகரிகம் தொல் தமிழர்
 மேல்நிலையில் இருந்த நாகரிகம் என்பதில்
அசையா நம்பிக்கை உடையவன் நான்.
இப்பொழுது மேலும் பல ஆய்வுகள் அதை
உறுதி செய்கின்றன, என் பங்கும் அதிலுண்டு.
திராவிடர் மேல்நர்களாக (= மேனோன்/மேனன்
எனும் சொல்லை ஒப்பிடுக) இருப்பதால்
பல மொழிக் குடும்பங்கள் இல்லவே இல்லை
என்பதல்ல பொருள்: முண்டா ஆதிவாசிகளும்
இருந்தனர், ஆரிய மொழியினர் சற்றுப் பின்னால் வந்து
கலந்தனர்.)

ஐ தனிச் சொல்லாகச் சங்க இலக்கியத்தில்
தந்தை, மற்ற பெரியோருக்குப் பலமுறை
ஆளப்படுவதால் ஐயன், ஐயர்
ஆர்ய என்ற சொல்லின் தமிழாக்கம்
ஆதியில் அல்ல என்று உறுதிப்படுத்தலாம்.
ஆனால் அப்பொருளும் பின்னால்
'ஐயன்' மேல் ஏற்றப்பட்டிருக்கிறது.
உ-ம்: சாத்தன் ஆகிய ஐயப்பன்,
அவனை ஆரியன் என்று தமிழ் இலக்கியம்
குறிக்கும். ஆர்யங்காவு என்னும் பொதிகை
மலைக் குகையில் ஐயப்பன் பிரபலம்,
ஆரியங்காவுப்பிள்ளை என்பதெல்லாம்
முன்பு சாதாரணமாக விளங்கிய பெயர்கள்.
ஐயப்பன் ராஜலீலாசனத்தில் இருக்கும்
சிவ அமிசம். அவரே கைலாயத்தில்
ஞான உலா வாங்கித் தமிழ்நாட்டுக்குக்
கொண்டுவந்தார் எனும் கதைகள்
தமிழ்ச் சைவத்தில் பழையன. கல்வெட்டுகள்
உண்டு. ஐயன்: ஆரியன் தொடர்புகள்
இரும்பூழியில் (உ-ம்: ஆதிச்சநல்லூர்,
(தஞ்சை செம்பியன் கண்டியூர், ~ 800 BC)
 வாக்கில் தொடங்குகின்றன. விரிவாப்
பதிவு எழுதணும்.

கொங்கின் பட்டிநோம்பு பற்றிச் சொன்னேன்.
அதற்கு அடுத்த நாள் பூநோன்பு.
எங்கள் ஒரு டிரைவர் 50 வருஷமாய்
வீட்டில் இருக்கிறார். குமாரசாமி
கண்ணப்ப நாயனார் போல் வேட்டுவர்
(குலதெய்வம் வேடியப்பன் என்பர்).
அவர் பரம்பரைப் பூசாரி "மாலை"
கோயிலுக்கு. பழமைபேசிக்குத் தெரியும்.
பட்டி மாடு, எருது, காளை, கன்று
எல்லாம் மாலை கோயிலுக்குப்
பூநோன்பு அன்று போய் தீர்த்தம்
போட்டுட்டு வரும்.

 மாலை என்னவென்று தெரிகிறதா?
 மாலை = மால் + ஐ,
பெருமாளாகிய திருமால் ஐ (= ஐயன்).
முல்லை நில மாந்தர் குலதெய்வமான
கண்ணனையும் மாலை என்பது கொங்கு
நாட்டு வழக்கு. உடுமலைக்கு அருகே
 மாலை கோயில் (அதுவும் பூநோம்பு
அன்று) மகா பிரசித்தம். இப்பொழுது
சங்கம் புகழ்ந்த 'ஆ கெழு கொங்கர்',
'ஒளிர் வாள் கொங்கர்', ஆநிரை, வாள்
எல்லாம் விட்டுட்டாங்க :-)

ஐ என்னும் எழுத்தை, சொல்லைத் தமிழில்
இருந்து விலக்குதல் மிகப் பெரிய பிழை.
நீங்கா ஊறு விளைக்கும்.

யார் இதை ஏற்படுத்தியது 20-ஆம் நூற்றாண்டில்
என்று தெரியவில்லை. கடவுள் மற்றும் பெரியார்
பக்தர்கள் யாராயினும் ஐ என்று வரும் இடத்திலெல்லாம்
"அய்" என்றிடலை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
நான் நாக. இளங்கோவுடன் 100% உடம்படுகிறேன்.

நன்றி!
நா. கணேசன்

http://nayanam.blogspot.com/2008/05/blog-post.html
Monday, May 05, 2008
"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!
"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)

"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்
அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது
என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.
ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்.

"ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.
சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்.

"அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்
வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது
தவறில்லை என்பதே அறிஞர்களின்
கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்
"அய்" என்றே எழுதவேண்டும்
என்று வலியுறுத்துவதில்லை.

ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம்
இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப்
படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று
போய்விட்ட அந்த எதிர்வாதுகளை நான் சட்டை
செய்யவில்லை.

ஆயினும் இந்த "அய்" விதயத்தில் என்னிடம்
காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும்
"ஐ" எனவே புழங்குகிறேன். ஐ என்று
எழுதவேண்டும் என்று சில பெரியவர்களும்
எனக்கு சொன்னபோது இதனை நுணுகிப் பார்க்கத்
தோன்றியது. "அய்" என்று நிறைய
புழங்கியவன் என்ற முறையில் என் கருத்துக்களை
நான் விளக்க வேண்டும்.

1) "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல.
ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான
சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம்
என்று சொற்களை இழக்கக் கூடாது.

ஐ என்பதற்கு உள்ள பொருள்களில் மிக முக்கியமானவை
நுண்மை, மெல்ல, வியப்பு மற்றும் ஐந்தின் குறுக்கம்.

ஐந்தின் குறுக்கமாக "ஐ" பயன்படுவதைக் காண்க:

"ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை"
................சிலப்பதிகாரம்:27:174-175

வியப்பு:

"பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
'ஐ!' என்றாள், ஆயர் மகள்,"
..................சிலப்பதிகாரம்:ஆய்ச்சியர் குரவை

மெல்ல/பைய:

பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு "ஐ"யெனக் கழிய......
...................அகநானூறு:305

இந்த மூன்று பொருள்களில் இவ்வெழுத்து இலக்கியங்களில்
விரவிக் கிடக்கிறது. இதை மாற்றினால் அதன் தன்மை
எப்படி யிருக்கும் என்று பார்த்தால் ஐயம் வருகிறது.

மேற்சொன்னக் காட்டுகளில், "ஐ" வரும் இடங்களில் "அய்" என்று
போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால்
ஒவ்வொரு "அய்" யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக்
காணமுடிகிறது.

இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில்
சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரை
பெறும் (ஐகாரக் குறுக்கம்).

ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில்
அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை "அய்" என்று எழுதிக்
கெடுத்து விடுகிறோம் என்று என்னால் உணரமுடிந்தது.

குறிப்பாக மேற்சொன்ன அகப்பாடலை முழுதுமாகப்
படித்துப் பார்த்தால்தால் அந்த "ஐ" யின் வலிமையை
உணரமுடியும்.

அந்த அகப்பாட்டு எடுத்து வீசுகின்ற துயருக்கும் சூழலுக்கும்
இந்த ஐ என்ற ஒரு சொல் பெரும்பங்கு வகிப்பதை அதை
ஆழ்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

ஆதலின் "ஐ" யின் இழப்பு, ஒரு எழுத்து, ஒரு சொல்,
அதன் அகமான ஒலிப்பு என்ற மூன்றையும் இழக்க வைக்கிறது.

ஆகவே, "அய்" என்று எழுதக் கூடாது.
உரையிலும் சரி கவிதையிலும் சரி.

2) தமிழில் பிறமொழிகளை விட ஓரெழுத்து, ஈரெழுத்து மற்றும்
மூவெழுத்துச் சொற்கள் அதிகம் என்று அறிஞர் கூறுவர்.
ஆ, ஈ, ஓ, மா, மீ, கூ, கோ,சீ, தீ, தா, தூ, நீ,
ஐ, நை, மை, கை, வை, தை
போன்று பல ஓரெழுத்துச் சொற்கள் தனித்தோ, சொல்
விகாரமடைந்தோ பொருள் கொடுப்பவை இருக்கின்றன.
அதோடு பிற எழுத்துக்களோடு இவை புணர்ந்து
கொடுக்கும் சொற்கள் ஏராளம். அதில் "ஐ" மிக
முக்கியமானது. இதைச் சார்ந்து இருக்கும்
சொற்கள் மிக அதிகம். ஆகவே தமிழில்
இருக்கும் ஓரெழுத்துச் சொற்களை

இழக்கக் கூடாது. இது ஒளகாரத்திற்கும் பொருந்தும்.

3) இது வெறும் வரி வடிவம்தானே இதனை
மாற்றினால் என்ன என்று கருத இடம் இருக்கிறது
(சொல், ஒலிப்பு என்ற நிலையைத் தாண்டி)

ஆனால், இதை மாற்றுவதால் என்ன பயன்? என்று பார்த்தால்
ஒன்றுமேயில்லை. எனது சிற்றறிவினால் நிச்சயமாக எந்தப்
பயனையும் காணமுடியவில்லை.

"ஐ" என்று விரல்களால் எழுதும்போது வளவு நெளிவுகள் நிறைய
இருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். இதனை நீக்கி "அய்"
என்று எழுதினால் இதை விட அதிக சுழிப்புகளைத்தான்
போடவேண்டி உள்ளது.

4) ஐ என்று எழுதாமல் அய் என்று எழுதினால்
இரண்டு எழுத்துக்களின் இடத்தை எடுத்துக் கொள்கிறது.
இலக்கணக் கட்டில் மெய்யெழுத்துக்கள்
கணக்கிடப் படுவதில்லை. ஆனால் எழுதினால் அது ஒரு இடத்தை
அடைத்துக் கொள்ளவே செய்கிறது. காகிதத்தில் எழுதினாலும்,
கணியில் எழுதினாலும் தேவையில்லாமல் அதிக எழுத்துக்களை
நாம் பெருக்குகிறோம்.

ஐஐந்து (4 எழுத்துக்கள்) = அய்அய்ந்து = அய்யய்ந்து (6 எழுத்துக்கள்)

5) "ஐ" என்பது ஒரு சொல் என்று அறிவோம். அந்தச் சொல்
எப்படி வந்தது என்று பார்க்குங்கால் மனிதனின்
இயல்பான ஒலிப்பில் இருந்தே வந்திருக்கின்றது.

"ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது
சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு.
இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை.
ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக்
குறிக்கும் சொல்லை விட்டுத்தர என் மனம் ஒப்பவில்லை.

"ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும்.

மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.
அமைதிப்படுத்தும்போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய
ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்.
(மாடுகளுக்கு முகமன் கூறும் சொல்லே இந்த "ஐ" தான் :-).
நாமெல்லாம் ஆங்கிலத்தில் hi (ஐ) சொல்வது போலே :-) )

இந்த இயல்பான ஒலிப்பை உள்ளடக்கிய ஐ நிலைக்க வேண்டும்.

6) கீழ்க்கண்ட தேவாரத்தைப் படிக்க:

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
....அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
.....எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
.....பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
.....எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
.............. ஆறாம் திருமுறை: பாடல் 95: அப்பர் பெருமான்

இங்கே ஐய, ஐயோ என்ற இடங்களில் இருக்கும் ஐகளை
அய் என்று மாற்றிப் படிக்க மனம் ஒப்புதில்லை. தேவார திருவாசக
நூல்களில் ஐ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் பயன் படுத்தப்
படும் இடங்கள் மிக நுண்ணியமானவை. அவற்றை இழந்தால்
அந்த இடத்தின் இதம் கெடுகிறது போன்றொரு உணர்வு இருக்கிறது.
இதை வேறு ஆதரவில் என்னால் நிறுவ முடியாது. எனினும் இதை
விட்டு விட முடியவே முடியாது.

7) "புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி" என்பது
பெரியபுராணத்தில் வருகின்ற அடி.

இதில் ஐயடிகள் என்ற சொல்லினைக் காண்க.
"ஐ அடிகள்" என்பதில் ஐ என்பது சொல். அது வியக்கத்தக்க,
போற்றத்தக்க, அல்லது நுண்திறன் வாய்ந்த அடிகள் என்ற
பொருளைக் கொடுக்கிறது. இந்த ஐ என்ற சொல்லைத்
தூக்கினால் இம்மாதிரியானப்
பயன்பாடுகள் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
(ஐந்து அடிகள் என்று பொருள் கொண்டாலும்
ஐ யின் தனிச்சிறப்பு இருக்க வேண்டிய
அவசியத்தை நோக்குக.)

8) செய்யுளில் அளபெடுக்கும் இடங்களில் குழப்பமேற்படுத்தும்.

"யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!...."
............................சிலப்பதிகாரம்:கட்டுரைகாதை:19-21

அணி-இழாஅய் என்ற சீர் இன்னிசை அளபெடையாக வருகிறது.
இது அணியிழையாள் என்ற சொல் விகாரம் பெற்று அணி-இழாய்
ஆகி, மேலும் அளபு எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு பேச்சுக்கு, ஒரு செய்யுள்/கவிதை வரி இப்படி
அமைகிறது என்று வைத்துக் கொள்வோம்.
"அணி-இலாஅய் அடிகள் காண்குவம்... " என்று வருமானால்

இது அளபெடையா, அல்லது ஐயடிகளைச் சொல்கிறதா என்ற குழப்பம்
வரும். இந்தக் கருத்தின் இலக்கணச் சுத்தியை நான் நன்கு
ஆய்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டுக்காக
ழகரத்தை லகரமாக மாற்றி எழுதியிருக்கிறேன்; பிழையிருப்பின் அறிஞர்
பொறுக்க.

9) ஐ, ஐய, ஐயன், ஐயள், ஐயை, ஐயர், ஐயா, ஐயோ போன்ற
சொற்கள் மிகத் தனித்தன்மை வாய்ந்தன. அதை அப்படியே
போற்ற வேண்டும். (சொல்லோடு ஐ சேர்ந்து வரும்போது
இலக்கணப் படி சரியேயாயினும்).

10) இந்த "அய்" போக்கு சொல்லில் முன்னால் வருவதால்,
நடுவிலும் பின்னாலும் இப்படிச் செய்கிறார்கள். மலை
என்பதை மலய் என்று எழுதுகிறார்கள். சிலை = சிலய்,
கலை = கலய் என்று பயில்கிறார்கள்.
பழமலை என்பவர் பழமலய் என்றே எழுதுகிறார் இதழ்களில்.
இது ஆபத்தான போக்கு என்றே படுகிறது. இதை நுணுகி ஆராய்ந்தால்
இதன் சரவல்கள் வெளிவரக்கூடும். இது மிக சிக்கலான சிக்கல்
தரும் விதயமாகவே படுகிறது. எழுத்து, சொல், யாப்பு இலக்கனங்களை
நுணுகிப் பார்க்கவேண்டும். குறிப்பாக இப்பயன்பாடு மலய் என்று பழகி,
அது செய்யுளில் மருவி அல்லது விகாரமடைந்து பயன்படுத்தினால்
எப்படி இருக்கும் என்று எண்ணினால் ஐயமாக இருக்கிறது.

இக்காரணங்களால், நான் "அய்" என்ற பயன்பாட்டை அறவே தவிர்த்து
விட்டேன். சொல்லோடு சேர்ந்து வரும்போது அது பிழையில்லை
என்பதால் அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த
ஏற்பு, தனித்த ஐ என்ற சொல்லையும் பலரின் பயன்பாட்டால்
பாதிக்கிறது. ஆகவே "அய்" என்ற பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து.

(தொடர்புடைய திரு.குமரனின் கருத்துக்கள்:http://koodal1.blogspot.com/
2008/05/blog-post.html)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Siva Siva

unread,
Jan 19, 2009, 8:52:59 AM1/19/09
to santhav...@googlegroups.com
//  ஐ என்று வரும் இடத்திலெல்லாம் "அய்" என்றிடலை முற்றாகத் தவிர்க்க வேண்டும். //

தமிழய் விரும்பும் வய்யம் கய்யய்க் கூப்பி நன்றி சொல்லும். அய்யம் இல்லை.

சென்னய் அரசின் பங்கு இதில் ஏதேனும் உண்டோ?
('ஐ'யை - 'அய்' ஆக்க முயல்வதற்கோ, 'அய்' கூடாது என்று தடுக்க முயல்வதற்கோ)

நன்றி.

vanchi

unread,
Jan 20, 2009, 5:07:28 AM1/20/09
to சந்தவசந்தம்
எனக்கு 11ஆம் வகுப்பில் பாடமாக வந்த புறநானூற்றுப் பாடலில் "ஐ" என்பது
தனிச்சொல்லாகப் பயன்பட்டது நினைவிற்கு வருகிறது.
"என்ஐக்கு ஊரிஃதன்மையானும்
என்ஐக்கு நாடிஃதன்மையானும்
ஆடாடென்ப ஒருசாரோரே ..."

இது நினைவில் உள்ளதற்குக் காரணம் ""குலமகளிர் ஏதாவது ஒன்றைப் பிடித்துக்
கொண்டு நிற்கும் வழக்கம் " என்ற குறிப்புடன் வந்தது! உ வே சா எழுதிய
குறிப்பா?


தெரியவில்லை.

"முழாவரைப் போந்தை பொருந்தி நின்று யான் கண்டன் ..." என்று வரும். அதாவது
"முழவு போன்ற பனைமரத்தைப் பிடித்துக் கொண்டு பார்த்தேன் ..."

--வாஞ்சிநாதன்

On Jan 19, 4:39 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

> "அய்" என்றிடலை முற்றாகத் தவிர்க்க...
>
> read more »

kavimamani

unread,
Jan 20, 2009, 6:44:09 AM1/20/09
to சந்தவசந்தம்
வளிபடு தண்கண் கேட்பின் அது போர் என்னும் என் ஐ யும் உளனே என்கிறது
ஔவையின் பாடல்.

இலந்தை

> > பூநோன்பு அன்று போய் தீர்த்தம்- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

முகவை மைந்தன்

unread,
Jan 22, 2009, 11:39:11 AM1/22/09
to சந்தவசந்தம்
ஐ குறித்த நல்ல கட்டுரை.

வேற்றுமை உருபாக வரும் இடங்களில் உதைக்கும் என்றே படுகிறது. அவனை என்று
கூறுமிடத்தில் அவனய் என்றோ அவன்அய் என்று பொருதாதும் எழுத முடியுமா?
ஆனால் வட்டார பலுக்கலில் அவன(ய்) என்று பலுக்குவதையும் பார்க்கிறோம்.

மற்றொரு கேள்வி விதயம் குறித்தது. விஷயம் என்பதின் தமிழ் மரூஉ ஆகக்
குறிப்பிடுகிறீர்களா? பற்றியம் என்ற சொல்லையும் பாவாணர் குறிக்கக்
கண்டிருக்கிறேன். matter, விஷயம் போன்று எல்லா இடங்களிலும் பொதுவாகப்
பயன்படுத்தும் சொற்கள் ஏதாவது இருக்கின்றனவா? இது குறித்த விவாதங்கள்
இருந்தால் சுட்டிகள் அறியத் தாருங்கள்.

என்ன விஷயமா வந்தீங்க?
வந்த விஷயத்தைச் சொல்லுங்க
விஷயத்தை காதும் காதும் வைச்சாப்ல முடிக்கணும்.
இப்ப விஷயம் என்னன்னா....
விஷயம் இல்லாம வர மாட்டாரே!
அது வேற விஷயம்

இப்படி செய்தி, வேலை, தகவல் என பல்வேறு பொருள்களில் ஆள்கிறோம்.
வேற்றுமொழிச்சொற்கள் தமிழில் வேறு பொருளில் பயன்படுத்துவது வழக்கமாதலால்
மாற்றுச்சொல் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், அடிக்கடி இந்த
'விஷயத்தில்' சறுக்குவதால் உதவியாகவே கேட்கிறேன்.

முகவை.


On Jan 19, 7:39 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

N. Ganesan

unread,
Apr 17, 2016, 11:24:45 AM4/17/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai
2009-ன் சந்த வசந்த இழை ஒன்று: diphthongs ஐ, ஔ பற்றியது. மின்தமிழில் சுவையான விவாதமாக ஐ, ஔ பற்றிய
கருத்தார்ந்த மடல்கள் பலர் எழுதுகின்றனர். 

ஐ என்ற எழுத்து தமிழில் எப்பொழுது உருவாகியது?
அதனால் தெரியும் தொல்காப்பியச் சூத்திரங்களின் காலம் பற்றி எழுதினேன்:
https://groups.google.com/forum/#!topic/mintamil/WpaOMznw6tQ

Also, I mentioned that all scripts are additive. For a living script it is essential that different groups are represented, even though the users may be small in number.
For example, in Tamil lipi, we use 5 Grantha consonants for transliteration purposes. I also mention that since many youth worldwide
do not use Tamil lipi, we can also use u, uu uyirmey letters in a split form. This is what is adapted for Malayalam script officially.
In Tamil script, both forms of u, uu uyirmey letters may be admissible. Like the situation in Malayalam. Also, in Tamil
there is a method to write without Grantha 5 consnants, and also some use Grantha letters. Like the additive letters ஐ ஔ, or Grantha letters ஜ ஹ, ...
two forms for u, uu uyirmey letters.

மொழியியல்காரர்கள் இந்த இரண்டையும் உயிர் (Vowel) எனக் கொள்வதில்லை. இவற்றை dipthong என்கின்றனர். Diphthong என்பதன் பொருள் : A vowel sound that starts near the articulatory position for one vowel and moves toward the position for another என wordweb அகராதி கூறுகிறது. இப்பொழுது இவர்கள் கூறுவதை 2500 ஆண்டுகட்கு முன்னர் தொல்காப்பியர் கூறிவிட்டார்.

அகர இகரம் ஐகாரம் ஆகும்

அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்-மொழிமரபு-21,22”

ஆங்கிலத்தில் எழுதும்போது இந்த டிப்தாங்ஸ் தொல். சூத்திரத்தை அப்படியே எழுதுவதுதான்.

ஐ =  ai; கை = kai.

ஔ = au; சௌ = cau


-----------


ஒன்று குறிப்பிட மறந்துவிட்டேன்: எப்பொழுது ஐ, ஔ பற்றிய தொல்காப்பியச் சூத்திரங்கள் எழுதப்பட்டிருக்கும் என்ற ஆய்வுக் கேள்வி.
இதற்கான விடை திருநாதர்குன்றில் உள்ள ஐ வடிவம் காட்டுகிறது. பல காலமாக எழுதப்பட்டுவந்த பிராமி, தமிழ் பிராமி
இவற்றில் புள்ளி ஏற்படுகிற காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. இதனை ஐயத்துக்கிடமின்றி ஐராவதம் நிறுவிவிட்டார்கள்.
பின்னர் புள்ளி கொண்ட அய், அவ் உடன் வர்ணிக்கப்படும் சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் வருகின்றன. இவை
டிப்தாங்க்ஸ், இவ்வெழுத்து வடிவங்கள் வடக்கே உள்ள பிராமியில் இருந்து வரும் காலத்தில் இச்சூத்திரங்கள் எழுதப்பெற்றன
எனக் கணிக்கலாம். ஐ, ஔ பற்றிய சூத்திரங்கள் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வாக்கில் எனக் கொள்ள கல்வெட்டுச் சான்றுகள் உதவுகின்றன.

நா. கணேசன்

 

On Tuesday, April 12, 2016 at 10:45:26 PM UTC-7, kalai wrote:

வணக்கம்.
நானும் "ஐ" கட்சிதான்.
காரணம், சங்கத் தமிழ் அறிஞர் கூடி விவாதித்து சீர்மை செய்யப்பெற்றது தமிழ் மொழி.
இத் தொன்தமிழின் பயனாளர் நாம். 
"பல், பால்", "கல் கால்" 
தமிழிலில் குறிலுக்கும் நெடிலுக்கும் மிகுந்த பொருள் வேறுபாடு உண்டு.

"ஐயா" பொருளுடையது.
"அய்யா" பொருளற்ற சொல்.
இலக்கணப்படி யில்லாத சொற்களைப் பயன்படுத்த நமக்கு உரிமை இல்லை. அதற்கான புலமையும் இல்லை.


 
ஐயன், அய்யன் இரண்டுமே பொருளுடைய சொற்கள் தாம். ஔவை = அவ்வை போல, ஐயன், அய்யன்
இரண்டுமே வழக்கத்தில் உண்டு. இன்னும் சொல்லப்போனால், ஐ, ஔ என்னும் இரண்டு உயிரெழுத்துடைய
கூட்டெழுத்துக்கள் “டிப்தாங்ஸ்” என்பர். மூலத்ராவிட மொழியில் இவை இல்லை என்பர் மொழியியல்
அறிஞர்: பர்ரோ, எமனோ, பார்போலா, .... மூலத்ராவிட வார்த்தைகளை அமைக்கும்போது ஐ, ஔ
பயன்படுத்துதல் இல்லை. அய், அவ் தான். தொல்தமிழில் கய் என்றே கை இருந்திருக்கிறது என்பர்.

சங்க காலக் கல்வெட்டுகளில் ஐ, ஔ இல்லை என்பதும் பார்க்கவேண்டும். ஐ முதலில் வரும்போது
திரிசூல (trident) வடிவில் வந்துள்ளது. இது ஆந்திர மாநில கிருஷ்ணா நதி பாயும் கிருஷ்ணா மாவட்ட
அல்லூரு என்னும் ஊரில் உள்ள வடிவம் (பார்க்க: ஐராவதம் மகாதேவனின் தமிழ் ப்ராமி நூல்.)
வட இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் 3000+ ஆண்டுகளாக தொடர்புகள் வலுப்பட்டுக்கொண்டுள்ளன.
வேளிர் துவாரகையில் இருந்து வருகையும், பௌத்தம் இலங்கையில் பரவலும், சைனம் கர்நாடகம்,
தமிழகம் வருகையும் இதனைக் காட்டுகின்றன. தொல்லியலில் பார்த்தால் மெகாலித்திக் பண்பாடு
வடக்கே இருந்து தெற்கே நகர்தலையும், மகர விடங்கர் சிற்பம் வெண்கலமாக உள்ளது வட இந்தியாவில்,
அதுவே, இரும்பு உளியால் மாபெரும் கற்சிற்பங்களாக தென்னிந்தியாவில் உருவெடுப்பதும்
குறிப்பிடலாம். 

தமிழுக்கு எழுத்து உருவாவது கொங்குநாட்டில் என கொடுமணல் ஆய்வுகள் நிரூபித்துவிட்டன.
இது பாண்டிநாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் உள்ள பிரதேசம் என்பது முக்கியமான தரவு.
ப்ராமி எழுத்தில் பிராகிருதத்தில் உயிர்மெய்கள் கை, சை, தை, டை, ணை, .... போன்றன எழுதுவது
போலவே, தமிழ் ப்ராமியிலும் இந்த -அய்/-ஐ கூட்டெழுத்தீன் டையாகிரிட்டிக் குறியீடு உள்ளது.
இந்த வடிவம் இந்தியா முழுமையும் ஒன்றாயிருக்கிறது. விஷ்ணு > வைஷ்ணவ, சிவ > சைவம்,
ஜின > ஜைனம், புத்த > பௌத்தம் ... என்னும் வடமொழி இலக்கண விதியால் அமையும் வார்த்தைகளுக்காக
வட இந்தியாவில் இந்த ‘டிப்தாங்’ எழுத்துக்கள் எழுத ப்ராமி லிபியில் அமைந்த வடிவங்கள்,
பின்னர் தமிழ் வார்த்தைகள் எழுத ப்ராமியில் இருந்து தமிழ் ப்ராமி பிறந்தபோது அப்படியே
பயன்படுகின்றன.

அய் & ஐ இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே பயன்பாட்டில் உள்ளன. பெரியார் ஐ, ஔ வேண்டாம்
என்றார். வாரியார் சுவாமிகள் போன்றோர் இரண்டும் இருக்கட்டும் என எம்ஜிஆரிடம் சொன்னார்.
எப்பொழுதுமே ஸ்க்ரிப்ட்ஸ் எழுத்துக்களைக் கூட்டிக்கொண்டே செல்லும். உ-ம்: தமிழ் லிபியில்
இன்று 5 கிரந்த மெய்யெழுத்துக்கள். அதுபோல், காலத்தால் பிற்பட்ட ஐ, ஔ இருக்கலாம்.
ஆனால் தமிழ், திராவிட பாஷகளில் -அய், -அவ் தான் பழமை வாய்ந்தனவாகும். அவையும்
பொருளுடையவை. பயன்பாட்டில் உள்ளவை. பெரியார் வலியுறுத்திய உ,ஊ உயிர்மெய் வடிவுகளும்
இருக்கலாம். மலையாளத்தில் இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருப்பதுபோல,
கல்வி கற்பிக்க, தமிழ் உயிர்மெய் மேட்ரிக்ஸ் குழந்தைகளுக்கு விளங்க, நினைவில் நிறுத்த உதவும்.
பெரியார் தொடங்கிய விடுதலை இதழில் அச்சாகும் உ, ஊ உயிர்மெய் வடிவங்கள் பற்றிக்
கல்வெட்டறிஞர் பேரா. சு. ராஜவேல் கட்டுரையில் பிராமியுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார்,
அம்முறையும், இப்போதைய முறையுடன் ’பெரியார் எழுத்து’ என இருக்கலாம்.
உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என கல்வி கற்போருக்கு எளிதில் அப்போது புரியும்.
ஐ, அய் இரண்டும் இருப்ப்துபோல, பெரியார் உ,ஊ உயிர்மெய் வடிவங்கள், ஓலைச்சுவடி வடிவங்கள்
என இரண்டும். ஐபோன், ஆண்டிராய்ட் போன்றவற்றில் தமிழ்99 விசைப்பலகை பாருங்கள்:
தமிழ் தட்டச்சுப் பலகை போல் இல்லாமல், உயிர்மெய் சார்பெழுத்துக்கள் தமிழ்99 எளிதில்
உருவாகின்றன. இது பெரியார் பரிந்துரைத்த உயிர்மெய் வடிவங்கள் விஞ்ஞான அடிப்படை எனக்
காட்டும். மலையாளம் மாறிவிட்டது. அதுபோல, பெரியார் உ,ஊ உயிர்மெய்களும் தமிழுக்கு வேண்டும்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages