தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும். ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும். தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம். நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன.
மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது. நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர். புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு) இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்) தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும். ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது. இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன.
பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
On Friday, March 20, 2015 at 4:20:47 PM UTC-4, தேமொழி wrote:--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
என்னுடைய தமிழ் இலக்கிய அறிவு குறைவே; நான் 8,9, 10-ம் வகுப்பில் இருந்தபோது என் வகுப்பு விஞ்ஞான ஆசிரியர்தான் தமிழ் இஇலக்கிய ஆர்வத்தைத் தூண்டியவர் . ஆனால் BE, Hindi, படிக்கப்போய், வேறு பக்கத்தில் கவனம் போய்விட்டது.
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வாய் நிலா உறக் குவிவ மானுமே. 89.
ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் மார்பையுடைய , சீராக சொள்ளு வடிக்கும் குழந்தைக்குப் பால்ச்சோறு வழங்கும் போது குவிந்திருக்கும் தாயின் கைகளானது; நிலா எழும் போது குவிந்திருக்கும் தாமரை மலர்களைப் போல இருக்குமாம்.
The thaali is worn on the chest of the baby and not mother; how and why? it is aimbadai thaali, which is worn as a talisman to protect young child. remember அரைஞாண் கயிறு with silver objects having embossed images? and why I say the infants are the objects of these talisman?
I again googled for the thaali in the older literature and got this beautiful link: http://valavu.blogspot.in/2007/07/5.html which mentions that young boys used to wear the ஐம்படைத் தாலி (காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும்)
ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது.
புறநானூற்றின் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்து நின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருது அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவது ஆகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அல்லாது, பெரியவனாயும் அல்லாது, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.
"கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுதுதான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்." என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.
"................................................. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்"
"மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்." என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது
====
kamba ramayan also talks about the மங்கையர் மங்கல தாலி ; we can discuss that later!
(btw mrs suba, as you mentioned தாலி களைதல் is a better word than தாலியறுத்தல் ; the latter has a semblance of violence?)
regards
rnkantan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
rnkantan அவர்களின் கருத்துடன் நான் மாறுபடுகிறேன்.கிருஷ்ணகுமார் அவர்களும் தாலி என்பது ஒரு அடையாளச் சின்னமாகத் தோன்றிய மரபு என்று சான்றுகளை முன்வைக்கிறார்.
- தாலி அணிவிக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. வடஇந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
- வேத மந்திரங்களைச் சொல்லி நடக்கும் திருமணத்தில் "மாங்கல்ய தாரணம்" என்பது ஒரு முக்கியமான செயலாகும்.
- http://www.ramanuja.org/sri/Web/VedicWeddingCeremony 5ம் பகுதி மாங்கல்ய தாரணம்.
- http://www.celextel.org/mantrasandrituals/vedicmarriageceremony.html
- http://www.sanskritdocuments.org/all_sa/marriage1_sa.html
- http://www.ask.com/wiki/Mangala_sutra?lang=en தென்னிந்தியத் திருமணம்
- http://www.indianweddingtips.com/indian-wedding/wedding-ceremony-traditions/north-indian-wedding-ceremonie-and-traditions/ வட இந்தியத் திருமண முறை
- http://legally.hubpages.com/hub/The-Fat-Indian-Pujabi-Wedding பஞ்சாபி திருமணம் -- மங்கலக் கயிறு கட்டப்படுகிறது.
- http://ourvivaha.com/stories/sindhi-weddings/ சிந்தி திருமணம், மங்கலக் கயிறு கட்டப்படுகிறது.
- அது எப்பொழுது வந்து சேர்ந்தது என்பது பற்றிய ஆய்வை ஆராய்ச்சியாளர்களிடமே விட்டுவிடுகிறேன்.
மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவனஹேதுனா |கண்டேஹ் பத்னாமி சுபஹே! ஸம்ஜீவ ஸரதஸ் ஸதம் ||என்ற மந்திரத்துடன் தாலியை ஆண் பெண்ணுக்குக் கட்டுகிறான்.
மந்திரங்களின் உட்பொருளை அறிந்தால் அதன்மீது வெறுப்பு வராது.
Every custom and tradition has its place only with reference to TIME and SPACE. We will not go anywhere discussing them positing them in the current time. Social Dynamics have to be understood and respected as per the norms of the TIME and SPACE.It really does not make any sense to discuss such things so much. Some people air their views more by their own understanding of the situation without any respect to some who respect certain values.In as much as THERE IS FREEDOM OF EXPRESSION, THERE IS ALSO FREEDOM TO CONDEMN PEOPLE WHO WANTONLY HURT OTHER FEELINGS JUST TO SHOW THAT THEY THINK DIFFERENTLY.
narasiah
2015-03-23 9:23 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, March 22, 2015 at 7:31:53 PM UTC-7, oruarizonan wrote:மந்திரங்களின் உட்பொருளை அறிந்தால் அதன்மீது வெறுப்பு வராது.நன்று. மூன்று முடிச்சுகளின் உட்பொருளைக் கூறுக....அடிமை வாழ்வை வெறுப்பவள் நான். நாமார்க்கும் குடியல்லோம் என்பது எனது வாழ்வு நெறி.வேண்டுகோள்: விளக்கத்தில் காலத்திற்கு ஏற்ப பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் தவிர்க்கவும்///அவளோ அவனைக் கட்டுப்படுத்தும் வளையத்தை அவன் காலில் அணிவிக்கிறாள். அந்த வலையமானது, பெண்தான் அந்த ஆணைத் தனது உரிமைப்போருளாக வளையமிட்டு [வளையத்திற்குள் இருப்பதுதான் உரிமைப்பொருள்] வைத்திருப்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.///இந்தக் கட்டுப்பாட்டை அணியாமல் ஆண்கள் வலம் வரும்பொழுது .... அடுத்தவரை மட்டும் வற்புறுத்துவது ... அதை வைத்து தவிர்க்கும் ஒருவரது ஒழுக்கத்தை எடைபோடுவது... சமத்துவம் இல்லாமல் போகிறதல்லவா? மரபுக் காவல் என்பது அனைவரது பொறுப்பு...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
எனக்கு இந்தத் தலைப்பில் ஒவ்வாமை உண்டென்றாலும் பெண்கள் எதை அணிவது, எப்படி அணிவது என்று ஆண்கள் விவாதித்துக் கொண்டிருப்பதனைக் காணச் சகிக்காமல் இடையிட வேண்டியிருக்கிறது.
sorry ms thenmozhiI did not mean to discuss what women folk should or should not wear or how they carry themselves (on their own volition or as instructed)..1) I just mentioned that Thaali has been a traditional talisman ornament of male and female children upto the age of 16/17.
விரும்பாத பெண்களின் கழுத்திலா தாலியை கட்டுவார்கள்?
1981 supreme court annulled a marriage where force was used;
--
நான் இங்கேயே முன்னர் பகிர்ந்துள்ளேன். என்னதான் இருந்தாலும் உள்ளூர்க்காரனுக்கு மதிப்பே தருவதில்லை இந்த உலகம்சர்க்கரைச்சீமான்
2015-03-23 10:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள் குறைந்து வருவது கண்கூடு.இனிமேல் திருமண நாளிலும் பிட்டு அடிக்க வேண்டிய நிலை உருவாகும் போல் உள்ளது.தாலி கொண்டு போகிறார்களோ இல்லையோ மணமகன்கள் கையோடு கால்குலேட்டர் கொண்டு போக வேண்டிய நிலைமை உருவாகிறது.அது சரி .... யாரந்த பெங்களூரு போலீஸ்காரர் பெண்ணை அடித்த பேஸ்புக் படம் பகிர்ந்து கொண்டது...ஹ்ம்ம்... நினைவில்லையே :))..... தேமொழி
On Sunday, March 22, 2015 at 10:11:21 PM UTC-7, செல்வன் wrote:On Mon, Mar 23, 2015 at 12:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:1981 supreme court annulled a marriage where force was used;
I hope that 99.99% marriages aren't forced :-)--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள் குறைந்து வருவது கண்கூடு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
//பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு// Selvan//தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?// Themozhiதிருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)
2015-03-23 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதிதனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?;-)..... தேமொழி
On Sunday, March 22, 2015 at 11:10:20 PM UTC-7, செல்வன் wrote:2015-03-23 0:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள் குறைந்து வருவது கண்கூடு.
பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கிருஷ்ணக்குமார் அவர்களின் பதிவு ஆழ்ந்த சிந்தனைக்கு
உரியது.
உடன் இன்னுமோர் சம்சயம் தோனி?கரணம் என்று தொல்காப்பியர் குறித்தது திருமணம் என்றால்
கரணம் தப்பினால் மரணம்
என்ற பழமொழிக்கு அர்த்தம்?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்...திருமண விருந்துமணமக்களின் விருப்பம் பற்றி அறிவது
..... தேமொழி
On Sunday, March 22, 2015 at 11:32:11 PM UTC-7, dhivakar wrote:
//பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு// Selvan//தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?// Themozhiதிருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)
2015-03-23 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதிதனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?
;-)..... தேமொழி
On Sunday, March 22, 2015 at 11:10:20 PM UTC-7, செல்வன் wrote:2015-03-23 0:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள் குறைந்து வருவது கண்கூடு.
பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)
பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ லோகசுந்தரம் ஐயா,மிகவும் ஆழ்ந்து (சித்திரங்களுடன் கூட) தாங்கள் அளித்த விளக்கங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் ஐயன்மீர்.நான் குறிப்பிட்டிருந்த அகநானூற்றுப்பாடலில் **தாலி** என்ற சொல் திருமணத்தில் அணிவிக்கப்படும் மங்கலநாண் என்ற பொருளில் அமையவில்லை என்று விளக்கியிருந்தீர்கள்.இன்று காலை ஸ்ரீமதி ராஜம் அம்மா அவர்கள் ஸ்ரீ பாண்டியராஜா ஐயா அவர்களது தொடரடைவு தளம் பற்றி அறிமுகம் செய்து அங்கு சங்க நூற்களில் சொற்களைத் தேட பணிப்பித்திருந்தார்கள். அதன் படி தாலி என்ற சொல்லைத் தேடப்புகையில்தாலி (5)புலி பல் தாலி புதல்வன் புல்லி - குறு 161/3வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் - ஐங் 166/2புலி பல் கோத்த புலம்பு மணி தாலி/ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் - அகம் 7/18,19பொன் உடை தாலி என் மகன் ஒற்றி - அகம் 54/18தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு - புறம் 77/7பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய் - திணை150:3 66/3மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி - மது 12/28 (சிலப்பதிகாரம்)அமளி துஞ்சும் ஐம்படை தாலிகுதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு - மணி 7/56,57
\\ உடன் இன்னுமோர் சம்சயம் தோனி?கரணம் என்று தொல்காப்பியர் குறித்தது திருமணம் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு அர்த்தம்? \\தாங்கள் தான் விளக்க வேண்டும் அம்மா. சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.
அன்பின் ஸ்ரீ லோக சுந்தரம் ஐயா, சங்க நூற்கள் மற்றும் தொல் தமிழ் நூற்கள் வாயிலாக தமிழகத்தில் திருமண நிகழ்வுகள் எப்படி நிகழ்ந்தன என்று தாங்கள் விளக்கங்கள் பகிர்ந்தால் பலரும் பயனுறுவார்கள்.
அன்புடை ஸ்ரீ லோகசுந்தரம் ஐயா, தேமொழி அம்மைதங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாது என்னுடைய வினாக்களுக்கு பதில்களித்தமைக்கு உளமார்ந்த நன்றிகள்.முதலில் தேமொழி அம்மையார் சுட்டிகள் மட்டிலும் கொடுத்த படிக்கு சம்சயங்கள் தீர்ந்த பாடில்லாமல் இருந்தது. பின்னர் ஸ்ரீ லோகசுந்தரம் ஐயாவும் அடுத்து தாங்களும் அடுத்தடுத்து விளக்கங்கள் அளித்தமை..... பல விஷயங்களைத் தெளிவு படுத்தியது.கம்ப ராமாயணம் பிற்காலத்து நூல் என்று மேம்போக்காகத் தெரிந்தது. ஆயினும் மற்ற தொல் தமிழ் நூற்களையும் சங்க நூற்களிலிருந்து வேறுபடுத்தினால் காலகட்டத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கும் என்ற தங்களது விளக்கம் கனகச்சிதமாக இருந்தது. தாங்கள் பகிர்ந்த தளத்தையும் குறித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். இதற்காக கூடுதல் நன்றி.
2015-03-24 9:59 GMT+05:30 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:அன்பின் ஸ்ரீ லோக சுந்தரம் ஐயா, சங்க நூற்கள் மற்றும் தொல் தமிழ் நூற்கள் வாயிலாக தமிழகத்தில் திருமண நிகழ்வுகள் எப்படி நிகழ்ந்தன என்று தாங்கள் விளக்கங்கள் பகிர்ந்தால் பலரும் பயனுறுவார்கள்.
தமிழர் திருமணம்பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் இணியத்தில் தேடிப்பார்க்க வேண்டும்
மீண்டும் ஸ்ரீமான் பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் தமிழர் திருமணம் பற்றி வில்லங்கம் செய்கிறார். கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குமுன் சங்ககாலத்தில் புரோகிதர் வைத்து அக்னிவலம் வந்து நடக்கும் திருமணமுறை தமிழர் திருமண முறையாக இருக்கவில்லை என்று கருதுகிறார்.
திருமணம்பற்றி நகரத்தார் திருமணம் பற்றிய முனைவர்பட்ட ஆய்வு உள்ளது.
திருப்பூட்டும்போது புரோகிதர் நீங்கிவிடும் வழக்கம் ஏனென்றும் எப்பொழுதிருந்தும் என்பது தெரியவில்லை.
ஒரு தாயோ தந்தையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பெற்றோராக இருக்கலாம் ... சகோதர சகோதரி, மகன் மகள் என்பதும் அவ்வாறே.
ஒருவரது தந்தை குத்துக்கல் மாதிரி இருக்கையில் இன்னொருவர் "நான் உன் அப்பா மாதிரி.." என்றால் கேட்பவர் கடுப்பாகமாட்டாரா?
2015-03-24 2:30 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஒரு தாயோ தந்தையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பெற்றோராக இருக்கலாம் ... சகோதர சகோதரி, மகன் மகள் என்பதும் அவ்வாறே.அதெப்படி இருக்கமுடியும்? ஒருவரது தந்தை குத்துக்கல் மாதிரி இருக்கையில் இன்னொருவர் "நான் உன் அப்பா மாதிரி.." என்றால் கேட்பவர் கடுப்பாகமாட்டாரா?
Exactly!!! you have got the point that I try to makeஅந்த தந்தைக்கு ஏன் கோபம் வருகிறது?
--
மறுபடியும் வெறுமே பேசிக் கொண்டிருப்பதிற்கு பதில், வடமொழி வல்லாரை கொண்டு, புரோகிதர்கள் சொல்லும் கல்யாண மந்திரத்தை, வரிக்கு வரி தமிழில் மொழிப்பெயர்த்து இங்கு இடலாம். (யான் திரு.கோதண்டராமர் ஐயாவைப் பரிந்துரைக்கிறேன் - அவருக்கு விருப்பம் இருப்பின்).இரா.பானுகுமார்
2015-03-24 13:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Tuesday, March 24, 2015 at 12:35:42 AM UTC-7, செல்வன் wrote:2015-03-24 2:30 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஒரு தாயோ தந்தையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பெற்றோராக இருக்கலாம் ... சகோதர சகோதரி, மகன் மகள் என்பதும் அவ்வாறே.அதெப்படி இருக்கமுடியும்? ஒருவரது தந்தை குத்துக்கல் மாதிரி இருக்கையில் இன்னொருவர் "நான் உன் அப்பா மாதிரி.." என்றால் கேட்பவர் கடுப்பாகமாட்டாரா?Exactly!!! you have got the point that I try to makeஅந்த தந்தைக்கு ஏன் கோபம் வருகிறது?எல்லாமே விகல்பமாக எடுப்பதும், நன்றாக எடுப்பதும் கேட்பவர், சொல்பவரை பொறுத்தே அமைவது.--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
8 ஆண்டுகளுக்கு முன்னால் 2007 இல் கீழே 7 பகுதிகளில் தாலி பற்றி ஓரளவு சொன்னேன். என்னுடைய எத்தனையோ தொடர்கள் முடிவுறாது இருப்பன போலவே இதுவும் முடிவுறாது போனது. இருந்தாலும் எழுதியதைப் படித்துப் பாருங்கள். தாலி என்ற சொல்லும், பொருளும் தமிழருடையது என்றே நான் கருதுகிறேன். அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.
http://valavu.blogspot.in/2007/06/1.html
http://valavu.blogspot.in/2007/06/2.html
http://valavu.blogspot.in/2007/06/3.html
http://valavu.blogspot.in/2007/06/4.html
http://valavu.blogspot.in/2007/07/5.html
http://valavu.blogspot.in/2007/07/6.html
http://valavu.blogspot.in/2007/07/7.html
திரு.ராம் காமேஸ்வரன் பகிர்ந்து கொண்ட தொ.பாவின் கட்டுரையை வாசித்த போது தமிழர் திருமண மங்கலச் சின்னம் பற்றி தனி இழையில் உரையாடலாமே என மனதிற்குத் தோன்றியது. ஏற்கனவே சில பதிவுகள் முன்னரே நமது மின் தமிழில் வந்துள்ளன.
இந்த இழையில் இந்த திருமண மங்கலச் சின்னம், அதன் தோற்றம், வரலாறு, பின்னனி, பல வேறுபட்ட சமூகங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி உரையாடலாம் என நினைக்கின்றேன்.
முதலில் எனது பங்களிப்பாக நான் வெளியிட்ட விழியப் பதிவு. இது தமிழக நாடார் சமூகத்தில் நாடார் வழக்கில் உள்ள வழக்கத்தை விளக்கும் பதிவு https://www.youtube.com/watch?v=Rytla9KDHwU தோழி திலகபாமாவின் மாமியார் இவர்.சுபா---------- Forwarded message ----------
From: Suba.T. <ksuba...@gmail.com>
Date: 2015-03-22 11:18 GMT+01:00
Subject: Re: [MinTamil] மாட்டிறைச்சி விருந்து இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
தொ.பாவின் எழுத்துக்களை நான் விரும்பிப்படிப்பேன். நல்லதொரு கட்டுரை.10ம் நூற்றாண்டு வரை தாலி என்னும் அடையாலச் சின்னம் பற்றிய குறிப்பு இல்லை என்பது யோசிக்க வைக்கின்றது. தனி இழையாகத்தாலி அல்லது தமிழர் திருமண மங்கலச் சின்னம் என்ற வகையில் ஒரு இழை தொடஙகாலம் என நினைக்கின்றேன்.சுபா
2015-03-21 3:10 GMT+01:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும். ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும். தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம். நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன.
மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது. நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர். புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு) இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்) தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும். ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது. இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன.
பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
On Friday, March 20, 2015 at 4:20:47 PM UTC-4, தேமொழி wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
Suba.T.http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி

அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.
2015-03-24 16:56 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.
நன்றாக உரக்கச் சொல்லுங்கள் ஐயா. வால்மீகி இராமாயணத்தில், தாலி கட்டாமல்தான் சீதையின் திருமணம் நடக்கிறது. இதைப் பின்பற்றிய கம்பன் தன்னுடைய காப்பியத்தில், கடிமணப் படலத்தில் எல்லாச் சடங்குகளையும் சொன்னாலும், தாலி கட்டுவதைப் பற்றித் தனியே குறிப்பிடவில்லை.ஆனால், பின்னால் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்தில்:'கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழித்து நீத்தமற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ!உன் கழுத்தில் இன்று தாலி இருக்கிறதென்றால், அதற்கு நீ அன்று களைந்த மற்ற அணிகலன்கள்தான் காரணம். (நீ அந்த அணிகலன்களை இட்டதால்தான், இராமன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.) என்று அழுத்தமாக வலியுறுத்துகிறான் கம்பன்.அரக்கியர் கழுத்திலும் தாலி இருந்தது. அனுமனைக் கட்டுவதற்குக் கயிறு தேடியபோது (சுந்தர காண்டத்தில்) அவனவன் தன் மனைவி கழுத்திலிருக்கும் தாலியைத் தவிர மற்ற எல்லாக் கயிறுகளையும் கொண்டு வந்தானாம்.மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்தபெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார்.மங்கலம் என்றால் தாலியைத்தான் குறிக்கிறது என்பது இந்தப் பாடலில் வலுப்பெறுகிறது.மங்கலம் என்ப மனைமாட்சி. இதுவும் அதுவே அன்றோ.
| ||||||||||||||||||||||||||||
(இ - ள்.) நாண் உள்இட்டுச் சுடர் வீசும் நன்மாணிக்கம் நகுதாலி - நாணைத் தன்னுள்ளே அடக்கி, ஒளிவீசும் நல்ல மணிகளிழைத்த நகுகின்ற தாலியை; நல்லார் பேணிக் கழுத்து அணிந்து - மடவார் ஓம்பிக் கழுத்திலே அணிந்து ; பெருங்கண்கருமை விருந்து ஊட்டி - பெரிய கண்ணிலே கரிய மையைப் புதுமைபெற அணிந்து; நீள்நீர் முத்தம் நிரைமுறுவல் - பெரு நீர்மையுடைய முத்தனைய வரிசையான பற்களை; கடுச்சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து - கடுவைச் சுட்டுத் தேய்த்தலால் அவை ஒளியை வீசி; தோள்நீர்க் கடலுள் பவளவாய் - தோண்டின நீரையுடைய கடலிலுள்ள பவளம் போன்ற வாயை; தொண்டைக் கனிகள் தொழுதன - கொவ்வைக் கனிகள் தோற்று வணங்கின. | ||||||||||||||||||||||||||||
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):
2015-03-24 18:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):
தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?
On Tuesday, March 24, 2015 at 6:04:00 AM UTC-7, Hari wrote:தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் மங்கலம் என்று வள்ளுவர் மங்கிலிய சூத்திரத்தைச்சொல்லுதலும், மங்கிலிய சூத்திரத்தை தாலி என்றே சிந்தாமணி குறிப்பிடுதலும் பார்ப்போம்.
கிறிஸ்துவ முறையில் ஆண் பென் இரு பாலருமே மோதிரம் அணிகின்றனர். தமிழர் வழக்கில் பெண்ணுக்கு மட்டும் தானே சடங்காக தாலி அணியப்படுகின்றது. இது தான் அடிமைத்தனத்தை ஒப்பிட்டு சொல்லப்படுகின்ரது என நான் நினைக்கின்றேன். இரு பாலருக்கும் அனைவரும் காணக்கூடிய ஒரு சின்னம் வழங்கப்பட்டால் அடிமைத்தனம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
2015-03-24 14:12 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:கிறிஸ்துவ முறையில் ஆண் பென் இரு பாலருமே மோதிரம் அணிகின்றனர். தமிழர் வழக்கில் பெண்ணுக்கு மட்டும் தானே சடங்காக தாலி அணியப்படுகின்றது. இது தான் அடிமைத்தனத்தை ஒப்பிட்டு சொல்லப்படுகின்ரது என நான் நினைக்கின்றேன். இரு பாலருக்கும் அனைவரும் காணக்கூடிய ஒரு சின்னம் வழங்கப்பட்டால் அடிமைத்தனம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
கிறிஸ்துவமதம், இந்துமதம், இஸ்லாம் மூன்றிலும் கணவனே குடும்பத்தின் தலைவன். மனைவி அவனுக்கு கட்டுபட்டு இருக்கவே பணிக்கபடுகிறது. ஆனால் அதன் பெயர் அடிமைத்தனம் அல்ல. ஒருவரை நாம் தலைவராக ஏற்றால் அவருக்கு நாம் அடிமைகள் என பொருள் இல்லையே?
இதை இன்று பின்பற்றவேண்டும் என கூறவில்லை :-) ஆனால் வரலாற்று ரீதியாக குடும்ப அமைப்பு சமத்துவத்தை கொண்டு உருவாக்கபட்டதில்லை.
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடுகாலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2015-03-24 18:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடுகாலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
வீடுகட்டிய பின் மேல்பூச்சு, பெயிண்டு என விரும்பிய மாற்றம் செய்யலாம் தேமொழி. ஆனால் அஸ்திவாரத்தை மாற்றுகிறேன் என ஆரம்பித்தால் அப்புறம் பில்டிங்கே தகர்ந்துவிடும் :-)
ஆதிமனிதன் உருவாக்கிய ஒரே சமூக அமைப்பு குடும்பம் மட்டுமே. நாகரிக மனிதன் உருவாக்கிய மதம், ஜாதி, அரசியல், கம்யூனிசம், பெண்ணியம், லிபரலிசம், கேப்பிடலிசம், ஜனநாயகம், போஸ்ட்மாடர்னிசம் போன்ற எந்த அமைப்பும் அந்த குடும்ப அமைப்பின் வெற்றிக்கு அருகே கூட நெருங்க முடியவில்லை. சொல்லபோனால் பின்னாளைய அமைப்புகள் உருவாக்கிய தீமைகள் பலவற்றில் இருந்து குடும்ப அமைப்பே மனித இனத்தை காத்து வந்தது. குடும்ப அமைப்பு சிதைந்தால் அதன்பின் பணம், சோஷியல் செக்யூரிட்டி, மெடிகேர், வெல்ஃபேர் என எதுவும் பயனளிக்காது...
இன்றைய குடும்ப அமைப்பு பல மில்லியன் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானது.
http://www.brighthub.com/environment/science-environmental/articles/21325.aspx
The Social Structure of Gorillas
Typically gorillas can be found living in groups of between three and thirty members. Groups are usually comprised of a single adult silverback and three to four adult females. Other immature males and females younger than eight may also be part of the group. The adult male is the leader and protector in this type of grouping. Groups of bachelors are also common, with an older dominant male as the primary leader and protector.
Chimpanzee
http://www.janegoodall.ca/about-chimp-behaviour-social-organization.php
Within a chimp community, a male hierarchy, ordered more or less in linear fashion, establishes social standing, with one male at the top or "alpha" position. All adult males dominate all females, although females have their own hierarchy, albeit much less straightforward.
Age is a deciding factor in male dominance hierarchies - the alpha-male is usually between the age of 20 and 26. Other factors that determine dominance and social status are physical fitness, aggressiveness, skill at fighting, ability to form coalitions, intelligence, and other personality traits. Status is either maintained or changed through communication and social interactions, such as physical competition and grooming.
பெண்வழி குடும்ப அமைப்புமுறை காணப்படும் விலங்குகளில் யானை முதன்மையானது.
Matriarchs / Hierarchy Status
கரணம் தப்பினால் மரணம் வரை
அது தொடரும்./ஒரு முறை நிகழும்
திருமணம் தவறின்றி நடைபெறவேண்டும்./இல்லையேல்
மரணம் வரை தொடரும் நரக வாழ்க்கை/.இது ஒரு முறை மட்டுமே திருமணம் என எண்ணி வாழ்பவர்களுக்கு.
--
பரிணாமகொள்கையில் நம்பிக்கை இல்லையெனில் படைப்புவாதத்தை நம்பலாம். :-)
// உண்மையில் இதுபோன்ற பிரச்சனைகள் தீர நல்ல நடுனிலைமையான சார்புயின்றி எழுதும் இருமொழி வல்லார்தான் தேவை. பிரச்சனைக்கு முடிவு உண்டாகும். ////ஆம்...ஒப்புக்கொள்கிறேன்//நான் நடுநிளைமையற்றவன் என்று முன்மொழிந்த உயர்திரு பானுகுமார் அவர்களுக்கும்,
குடும்பம் என்பது மனித இனத்திற்கே உரிய சிறப்பு கண்டுபிடிப்பு போல நீங்கள் சொல்லவும்... சமூக அமைப்பில் வாழும் பிற விலங்குகளைக் காட்ட எண்ணினேன்.மற்றபடி வாழும் அமைப்பு தனித்தோ, குடும்பமோ, அதில் தலைமை ஆணோ பெண்ணோ விலங்கிற்கு விலங்கு மாறுபாடும். மனித இனத்திலேயே மாறுபடும்.இப்படிக்கு ஒரு "ராணி"த்தேனீ
| 5809. | ‘ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை |
ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - ‘மலை போன்ற மிக்க
வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை;
நீங்கலம் - இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் -
(இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம்
ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால்
திருவாங்கலம் - இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து
இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்’; என்று
அழும் மாதரார் பலர் - என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர்.
‘தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன்
தலையின் மேல் தான் நடத்துவோம்’ என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன்
கூறினர் என்க. (5)
இழை (அ) நாணில் ஓலைச் சுருளில் தாயத்து போன்றவை கோத்துச்செய்த தாலி (ஆண், பெண், குழந்தை ...) கலியாணத் தாலி என்றுகி.பி. 3-4 நூற்றாண்டுகளில் மலர்ச்சி அடைந்திருக்கணும். ஸ்ரீஉத்தர காரணாகமத்திலும், லலிதா சகசிரநாமத்திலும் காண்கிறோம்.’மாங்கல்யம் தந்துநாநேன’ எந்த நூலில், எந்த நூற்றாண்டில் வருகிறதுஎனப் பார்க்கணும். தாலி obviously a Dravidian custom that is widely prevalentas a substratum element from Northwest India to Ceylon.இராவணன் இமையத்தை அசைக்கிறான். போர் மூளுமோ என்றுஉமை அஞ்சுகிறாள். மங்கிலியம் நிற்குமோ? - என பயம். எனவே,அந்த situation-ஐ பாடும் பாடல்களில் சேயிழை, ஏந்திழை, ஆயிழை, ...என்று பாடுவார்கள் தேவார முதலிகள். இங்கே அச் சொற்களுக்குமங்கலநாண் அணிந்த பார்வதி எனப் பொருளுண்டு.
சிலம்பிலே திருமணக்காட்சி
தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்
கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்
சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட
இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்
மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்
காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய
நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது
வருமாறு:
"யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்
அவ்வழி
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்
வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி
யெழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு
உழையதா வெப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ழி உருட்டுவோ னெனவே
(மங்கல வாழ்த்துப் பாடல்)
மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"
என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"
என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்து
வேறுபாடிருக்கவில்லை.
மணணுலக அருந்ததி
ரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றது
என்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளே
திருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்
திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.
இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாக
அருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.
அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்
கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்
கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்
பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்
சடங்கல்ல.
இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்
கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்
திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்
"புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்
வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொது
நம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்.
"மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேத
வழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே
"புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது.
"மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்
இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்
வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.
பொக்கை வாய்ப் புரோகிதர்
பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பது
இந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்
பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.
அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்
நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்
சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்
பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்
தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தை
நடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.
கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்
பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பது
வரையுள்ள வரிகளுக்கு,
" மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்
வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்ற
இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."
என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.
சிலம்பில் படும் புரோகிதர்
இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்த
அடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத
(இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரான
வணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்
இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலி
அணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்று
கிவிடாது.
கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல
- இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்
என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.
சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" என
வரும் சொற்றொடருக்கு,
"மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறிய
இழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.
சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமை
நெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு
" முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது
குத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"
என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்
நச்சினாக்கினியர்.
சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்ய
சூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்
பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியை
பாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணி
மகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.
பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்
என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்
அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.
வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடு
கண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்
இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.
திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி
கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக
அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.
நன்றி
மபொ சிவஞானம்
தமிழர் திருமணம்
பூங்கொடி பதிப்பகம்
--
நீங்கள் கூறிய எடுத்துக்காட்டுகள் பலவற்றை அனைவரும் கூறியுள்ளனர்.சில்ப்பதிகாரம் புகார்க காண்டத்தில்தாலி பற்றிய ஆய்வு முனைவர் இராசமணிக்கனார் காலம் முதல் ஆய்ந்து ஓய்ந்து போன தலைப்பு.மங்கல அணி என்பது தாலியா அன்றி வேறு பொருளா ! என்ற ஐயபாடு இன்றுவரை நிலவி வருகின்றது.இந்திரவிழாக் கொண்டாடும் காலத்தில் நகரப் பெண்டிர் அனைத்து அணிகளையும் அணிந்திருக்கக்கண்ணகியைச் சுட்டும் போது ” மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் “ என்று சொல்லப்படுகின்றது.புகார்க் காண்டத்தில் “ அகலுள் மங்கல அணி எழுந்தது “ என்று வருகின்றது.மதுரைக் காண்ட இறுதியில்கண்வனொடு மதுரை புகுந்த நான் இப்பொழுது வ்றிதே பெயர்கின்றேன்.என்று சொல்லிப் புறப்படும் போதுதன் கை வளையல்களை உடைத்தெறிந்து விட்டுப் போனாள் என்று சொல்லப் படுகின்றது.எனவே மங்கலஅணி என்பது தாலியன்று கை வளையலே என்பாரும் உளர்.ப்ழ்ங்காலத்தில் அரக்கில் செய்யப் பெற்றவளையல்களைப் பெண்ணின் கை அளவு பார்த்துத் திருமணத்திற்கு முதல்நாள் ஒட்டிச் சேர்ப்பது உண்டுஎன்று கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் த்ன்னுடைய நெடுங்கதையான “ இராவ் பகதூர் சிங்காரம் “என்பதில்பதிவு செய்கின்றார்.மங்கல அணி அணியும் வழக்கமுண்டு .அது மெய்யே.ஆனால் அதனை முற்காலஇலக்கியங்கள் சுட்டவில்லை.பிற்கால்த்தில்தான் தாலி அணிதல் வ்ழ்க்கிற்கு வந்துள்ளது என்பாரும் உளர்.தாலி இருந்த்தா இல்லையா என்ப்தை முடிவு செய்து என்ன செய்யப் பொஆகின்றோம்.இன்னும் அறியப்படவேண்டிய வ்ரலாற்றுச் செய்திகள் நிறைய உள.வரலாற்று உண்மைகள் பல திரித்து எழுதப்பட்டுள்ளன.சிவகங்கைமாவட்டத்தில் ஏராளம் உண்டு.அதனை எழுதுகிறவர்கள் சாதிப் பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.தாலி பற்றி எழுதிக் கால விரையம் செய்வதைவிட இதுவரை வெளிவ்ராத நூல்களைவெளிக்கொணரும் முயற்சியில் காலத்தைச் செலவிடலாம் என்பது என் கருத்து.யாரையும் குறைத்துநான் மதிப்பிடவில்லை.தேர்ந்த தமிழறிவு உடைய உங்களின் இலக்கியப் பங்களிப்பு த்மிழிலக்கிய வளர்ச்சிக்குத்திரும்பட்டுமே என்ற ஆதங்கம்தான் நான் இதை எழுதக் காரணம்.இதில் பிழையிருந்தால் அறிவுசால் நண்பர்களேபொறுத்தருளுங்கள்.மீனவன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தெலுகில் பனை மரத்துக்கு தாட்டிமான் என்பர். அது தாழை அல்லது தாலம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்

[1673. -- "For here is a Bird (having its name from the Tree it chuses for its Sanctuary, the toddy-tree). . . ." -- Fryer, 76.]
c. 1750-60. -- "It is in this tree (see PALMYRA, BRAB) that the toddy-birds, so called from their attachment to that tree, make their exquisitely curious nests, wrought out of the thinnest reeds and filaments of branches, with an inimitable mechanism, and are about the bigness of a partridge (?) The birds themselves are of no value. . . ." -- Grose, i. 48.
c. B.C. 320. -- "Megasthenes tells us . . . the Indians were in old times nomadic . . . were so barbarous that they wore the skins of such wild animals as they could kill, and subsisted (?) on the bark of trees; that these trees were called in the Indian speech tala, and that there grew on them as there grows at the tops of the (date) palm trees, a fruit resembling balls of wool." -- Arrian, Indica, vii., tr. by McCrindle.
c. 1330. -- ". . . There is another tree of a different species, which . . . gives all the year round a white liquor, pleasant to drink, which tree is called tari." -- Fr. Jordanus, 16.
[1554. -- "There is in Gujaret a tree of the palm-tribe, called tari agadji (millet tree). From its branches cups are suspended, and when the cut end of a branch is placed into one of these vessels, a sweet liquid, something of the nature of arrack, flows out in a continuous stream . . . and presently changes into a most wonderful wine." -- Travels of Sidi Ali Reïs, trans. A. Vambéry, p. 29.]
[1609-10. -- "Tarree." See under SURA.]
1611. -- "Palmiti Wine, which they call Taddy." -- N. Dounton, in Purchas, i. 298.
[1614. -- "A sort of wine that distilleth out of the Palmetto trees, called Tadie."-<-> Foster, Letters, iii. 4.]
1615.-
". . . And then more to glad yee
Weele have a health to al our friends in Tadee."
Verses to T. Coryat, in Crudities, iii. 47.
1623. -- ". . . on board of which we stayed till nightfall, entertaining with conversation and drinking tari, a liquor which is drawn from the coco-nut trees, of a whitish colour, a little turbid, and of a somewhat rough taste, though with a blending in sweetness, and not unpalatable, something like one of our vini piccanti. It will also intoxicate, like wine, if drunk over freely."-<-> P. della Valle, ii. 530; [Hak. Soc. i. 62].
[1634. -- "The Toddy-tree is like the Date of Palm; the Wine called Toddy is got by wounding and piercing the Tree, and putting a Jar or Pitcher under it, so as the Liquor may drop into it." --Sir T. Herbert, in Harris, i. 408.]
1648. -- "The country . . . is planted with palmito-trees, from which a sap is drawn called Terry, that they very commonly drink." -- Van Twist, 12.
1653. -- ". . . le tari qui est le vin ordi- naire des Indes." -- De la Boullaye-le-Gouz, 246.
1673. -- "The Natives singing and roaring all Night long; being drunk with Toddy, the Wine of the Cocoe." -- Fryer, 53.
" "As for the rest, they are very respectful, unless the Seamen and Soldiers get drunk, either with Toddy or Bang."-<-> Ibid. 91.
1686. -- "Besides the Liquor or Water in the Fruit, there is also a sort of Wine drawn from the Tree called Toddy, which looks like Whey." -- Dampier, i. 293.
1705. -- ". . . cette liqueur s'appelle tarif." -- Luillier, 43.
1710. -- This word was in common use at Madras. -- Wheeler, ii. 125.
1750. -- "J. Was vor Leute trincken Taddy? C. Die Soldaten, die Land Portugiesen, die Parreier (see PARIAH) und Schiffleute trincken diesen Taddy."-<-> Madras, oder Fort St. George, &c., Halle, 1750.
1857. -- "It is the unfermented juice of the Palmyra which is used as food: when allowed to ferment, which it will do before midday, if left to itself, it is changed into a sweet, intoxicating drink called 'kal' or 'toddy.'" -- Bp. Caldwell, Lectures on Tinnevelly Mission, p. 33.
"The Rat, returning home full of Toddy, said, If I meet the Cat, I will tear him in pieces." -- Ceylon Proverb, in Ind. Antiq. i. 59.
Of the Scotch application of the word we can find but one example in Burns, and, strange to say, no mention in Jameson's Dictionary:
1785.-
"The lads an' lasses, blythely bent
To mind baith saul an' body,
Sit round the table, weel content.
An' steer about the toddy. . . ."
Burns, The Holy Fair.
1798. -- "Action of the case, for giving her a dose in some toddy, to intoxicate and inflame her passions." -- Roots's Reports, i. 80.
1804.-
". . . I've nae fear for't;
For siller, faith, ye ne'er did care for't,
Unless to help a needful body,
An' get an antrin glass o' toddy."
Tannahill, Epistle to James Barr.
அருமையான தரவு.
--
ஹவாய்: அமெரிக்காவில், இந்து மதத்தை சேர்ந்த துளசி கப்பார்டு, 33 என்ற பெண் எம்.பி., வேத மந்திரங்கள் முழங்க, இந்து முறைப்படி, ஆபிரகாம் வில்லியம்ஸ், 26 என்ற, திரைப்பட ஒளிப்பதிவாளரை மணந்தார்.
ஹவாய் தீவில் நடைபெற்ற இத்திருமணத்தில், அமெரிக்க எம்.பி.,க்கள், மற்றும் இந்தியாவில் இருந்து, பா.ஜ., பொதுச்செயலர் ராம் மாதவ் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர். கரோல் - மைக் கப்பார்டு தம்பதியின் மகளான, துளசி, ஜனநாயக கட்சியின் ஹவாய் தீவு எம்.பி.,யாக உள்ளார். இவரது தாய், அமெரிக்காவில், 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தில் இணைந்து, இந்து மதத்தை தழுவினார். அதனால், பிரம்ம மத்வ கவுடிய சம்பிரதாய முறையில் வளர்ந்த துளசி, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க, துளசி கழுத்தில், வில்லியம்ஸ் தாலி கட்டினார். நிச்சயதார்த்தத்தின் போது, கிறிஸ்தவ முறைப்படி, துளசியின் கை விரலில், வில்லியம்ஸ் வைர மோதிரம் அணிவித்தார். துளசிக்கு இது, இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
| தவளைகளுக்கு தாலி கட்டி கொண்டாடிய மக்கள்! [Wednesday 2013-10-02 18:00] |
![]() கோவை அருகே மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தடபுடலாக விருந்து தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அன்றே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் தேதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். தவளைகளுக்கு புதுத் துணி கட்டி, மலர் களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது. நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த மொய் பணம் ரூ.3 ஆயிரம் சேர்ந்தது.காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம்,, குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். |
தவளைகளுக்கு தாலி கட்டி கொண்டாடிய மக்கள்! [Wednesday 2013-10-02 18:00]கோவை அருகே மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தடபுடலாக விருந்து தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அன்றே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் தேதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். தவளைகளுக்கு புதுத் துணி கட்டி, மலர் களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.
நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த மொய் பணம் ரூ.3 ஆயிரம் சேர்ந்தது.காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம்,, குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஒரு அளவே இல்லையா..?
மழை வர வேண்டுமென்று தவளைகளுக்கு தாலி கட்டும் மக்களை என்ன சொல்வது? அதிலே மணப்பெண் மணமகன் ஊர்வலம் வேறு.. விருந்து மொய்ப்பணம்.. எந்த காலத்தில் இருக்கின்றோம் நாம்?
மழைவரவேண்டுமென்றால் மரங்களை நட்டு வைத்து இயற்கை பாதுகாப்பை வள