:-)))இவை 'மறை பொருளை' அறிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்டும் செய்திகள் வகையில் அடங்கலாம் சுபா.
ஒரு கேள்வி எழாமல் இல்லை. இந்த மேலுள்ள பகுதியை உங்கள் குழந்தைகளிடம் அல்லது இக்கால தலைமுறை குழந்தைகளிடம் சொல்ல முடியுமா? சொன்னால் அவர்களது பதில் எதுவாக இருக்கும்.
இவை 'மறை பொருளை' அறிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்டும் செய்திகள் வகையில் அடங்கலாம் சுபா.சிவனுக்கு முதல் மனைவி பார்வதியின் தொடர்பால் குழந்தை இல்லை. மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பில் உருவாகிய குழந்தை முருகன்.இதில் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி, பார்வதிக்கு பிள்ளையாரும் பிறந்த குழந்தை கிடையாது, உருவாக்கப்பட்ட (தத்தெடுக்கப்பட்ட ?) குழந்தைதான்.சிவனின் இருமனைவி நிலைக்கு, முதல் மனைவி வழியில் குழந்தை பிறக்க வழியில்லாமல் போனது காரணம் (என சொல்ல விரும்புகிறார்களோ?)இதுவே சமுதாயத்தில் பிறகு மறைமுகச் செய்தியாக இருமனைவி வாழ்க்கைக்கு அடிப்படையாக காட்டப்பட்டிருக்கலாம்.
–எம்.ஜெயராமசர்மா.
[எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS]
(முன்னாள் கல்விப்பணிப்பாளர்)
“சமயம்” என்றால் என்ன? “மதம்” என்றால் என்ன? என்பதை நாங்கள் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு. அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் …. எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.
சமயம் என்பது நல்ல வழியைக்காட்டுவது. மதம் என்று அதற்கு இன்னுமொருபெயர். மனிதனிடம் காணப்படுகின்ற ஆணவம் என்கின்ற மதத்தை இல்லாமல் செய்ய உதவுவதால் ஒரு காரணப்பெயராக இப்படி அழைத்தனர். நான் என்னும் தன்முனைப்பு வாழ்க்கையில் இருக்குமானால் எவ்வளவு வரமும் உரமும் இருந்தும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீர்போலவே ஆகிவிடும். ஆகவே தன்முனைப்பு அற்ற நல்ல பாதை அமையுமானால் அதுவே மனித வாழ்வில் கிடைக்கும் நல்ல சமயமாக அமையும். இப்படி நல்ல ஒரு வாய்ப்பே சமயமானது. எனவே வேறு பெயர்களும் வேறு காரணங்களும் அடிப்படையாக அமைந்த பொழுதிலும் “சமயமும்” மதம் என்ற ஒன்றேதான் என்பதை நாமும் தெரிந்திருப்பதோடு நமது பிள்ளைகளுக்கும் விளக்கி நிற்கவேண்டும்.
வெளிநாட்டில் பல்வேறுவிதமான கலாசாரச் சூழல்களில் நாமே திக்கித்திணறுகின்றோம். நாங்களே இப்படி என்றால் எங்களின் பிள்ளைகள் என்னதான் செய்வார்கள்? இப்படியான சூழலில் வாழும் நாங்கள் சமயத்தை எப்படி அணுக வேண்டும் என்பது மிகவும் இலகுவான ஒரு காரியமல்ல.
ஊரிலே எங்களுக்குச் சமயம் கற்பது பாடசாலைகளிலே கட்டாயமானது. விரும்பியோ விரும்பாமலோ சமயம் என்பது பாடசாலைகள் மூலம் கொடுக்கப்படுகிறது. ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து திருவருட்பயனும், தேவாரங்களும் பாடமாக்கினோம். இளம்பருவத்தில் விருப்பமில்லாமல் படித்தாலும் — வயது வந்தபின்னர் அவை விளங்கிய பொழுதுதான் அவற்றின் அருமையும் பெருமையும் எங்களுக்கெல்லாம் தெரியவந்தது எனலாம். அதைவிட எங்களது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஏனைய உறவினர்கள் அத்தனை பேருமே எங்களின் சமய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. நாங்கள் சற்று வழிதடுமாற நினைத்தாலும் அவர்கள் அனைவ ருமே எம்மைத் தாங்கிப்பிடித்து மடைமாற்றம் செய்து நின்றார்கள். இவை எல்லாவற்றையும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ வந்த அத்தனை பேரும் மனங்கொள்வது அவசியமானதாகும்.
எங்கள் பிள்ளைகள் படிக்கும் சூழல் பழகும் சூழல் யாவும் எமக்குப் புதிதானவை. அவர்களது பாடசாலைச் சூழலும் மிகவும் வித்தியாச மானதாகும். அங்கே சந்திக்கும் பல தரப்பட்ட சமூகச் சூழலிலிருந்து வந்த பிள்ளைகளும் ஆசிரியர்களும் எங்கள் பிள்ளைகளில் பல தாங்கங்கள் ஏற்படக் காரணமாகிவிடுகிறார்கள்.
பெரும்பாலானவர்களுக்குச் சமயம் பற்றிய அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதைப்பற்றியே பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. இந்த நிலைமையில் படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுவதில்.. கட்டாயம் என்பது இருக்கவே கூடாது. அவர்களுக்குச் சமயத்தை மிகவும் இலகுவாக .. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொருத்தமாக மறுமொழி சொல்லியே .. விளங்கவைக்க முனைதல் வேண்டும். எங்களுக்குச் சமயம் போதித்த முறைகளை அடிமனத்தில் வைத்துக்கொண் டு .. செயற்பட முற்பட்டோமே யானால் யாவும் ஆரம்பத்திலேயே ஆட்டம் காண ஆரம்பி த்துவிடலாம்.
புராணக்கதைகளைப் பிள்ளைகளுக்குக் கூறலாமா? புராணக்கதைகளைச் சமயம் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகின்றன அல்லவா? மிகவும் கவனமாகக் கதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
எங்கள் வீட்டுக்கு முன்னால் பன்றிக்குட்டிகள் சில யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொழுது வந்துவிட்டன. எனது மனைவி அருவருப்போடு அவற்றைப் பார்த்து வெறுப்படை ந்து கல்லெடுத்து எறிந்து விரட்டி அடித்தார். உள்ளே இருந்த எனது ஏழுவயதுடைய மகள் ஓடிவந்து அம்மா .. அம்மா .. என்ன செய்துவிட்டீர்கள். நீங்கள் செய்தது பாவம் இல்லையா? எனக் கேட்டதும் எனது மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது. மகளை முறைத்துப் பார்த்து அசிங்கத்தை விரட்டாமல் அடுப்படியிலா வைப்பார்கள் என்று பொரிந்து தள்ளி விட்டார். அம்மாவின் கத்தலுக்கு ச் சற்றும் அசையாத எனதுமகள் .. அம்மாவைப்பார்த்து .. அம்மா இந்தக்குட்டிகளுக்குச் சிவபெருமான் தாயக வந்து பால் கொடுத்தார் என்று நீதானே நேற்று எனக்குப் புராணக்கதை சொல்லித்தந்துவிட்டு இப்போது அசிங்கம் என்று விரட்டுகிறாயே! சிவன் தாயாகிவந்து பால் கொடுத்தபடியால் இவையும் சிவனின் பிள்ளைகள்தானே என்றதும் .. அம்மா அதாவது எனது மனைவி வாயடைத்து மெளனியாகிவிட்டார் இதனை ஓரத்தில் நின்று கவனித்த நான் எனது பிள்ளையின் சமய அறிதலையும் உணர்தலையும் பார்த்து மெய்சிலிர்த்தேன்.
அதே மகளுடன் புலம்பெயர்ந்து இங்கு வந்தபின் அவளுக்குப் பிறந்த மகள் எனது பேரப்பிள்ளை கோவிலில் “சூரன் போரைப்பார்த்து” தாயிடம் கேட்டாள்.. சாமி ஏன் அம்மா மற்றவர்களைக் கொலை செய்யவேணும்? சாமி என்றால் நல்லது என்றுதானே நீங்கள் சொல்லித்தந்தது. இதைக் கேட்டதும் எனது மகள் தனது மகளுக்குத் தலையில் ஒரு குட்டுக் குட்டினாள். அவள் அழுதபடியே கோவிலில் நின்றாள். அதைத் தொடர்ந்து அவள் கோவில் என்றாலே விருப்பம் இல்லாத நிலைக்கு வந்துவிட்டாள்.
இது ஒரு குடும்பப் பிரச்சனை போல இருந்தாலும் இங்குதான் .. புலம்பெயர் நாடுகளில் சமயத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் பாடம் உருவாகிறது என நினைக்கின்றேன். பெரிய புராணத்திலே வருகின்ற கதைகள் பலவற்றை எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல் பயபக்தியோடு நாங்கள் படித்தோம். பிரசங்கங்கள் மூலமாகவும் கேட்டோம். ஆனால் அதைப்பற்றிய சந்தேகங்கள் எங்களுக்கு வந்தாலும் அப்பா இடமோ அம்மா இடமோ கேட்கவே மாட்டோம். காரணம் அது தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்று மனத்தில் இருந்த பயமாகும். ஆனாலும் எங்கள் மனத்திலும் கேள்விகள் இருந்தன என்பதை ஒத்துகொள்ளுதல் வேண்டும். எங்கள் சூழலால் அவை அப்படியே மனத்துள் புதைந்தே விட்டன என்றே எண்ணமுடிகிறது.
இன்றைய புலம்பெயர் சூழல் அப்படிப்பட்ட தல்ல. கண்ணப்பர்கதை, சிறுத்தொண்டர்கதை, திருநீலகண்டர் கதை, நால்வர் வரலாறுகளில் காணப்படும் சம்பவங்கள்.. இவைபற்றி யெல்லாம் சமயத்தினூடாகக் கற்பிக்கும் பொழுது மிகவும் அவதான மாகவே கையாள வேண்டியுள்ளது. இங்கு வளரும் பிள்ளைகள் பல வித விஞ்ஞானக் கருவிகளோடு உறவாடுகிறார்கள். விரல் நுனியிலே விஞ்ஞானம் நிற்கிறது. எதற்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கங்கள்தான் முன்னிற்கின்றன. இதனால் சமயத்தைக் கற்பிப்பது என்பது புலம்பெயர் நாடுகளில் மிகவும் இலகு என்று எடுத்து விடக்கூடாது.
கோவில்களில் இடம்பெறும் யாவுமே இங்கு வளரும் பிள்ளைகளுக்கு விளங்காதன. அவற்றைச் சமயத்தோடு இணைக்கும் பொழுது அவர்கள் தடுமாறாமல் இணைத்துக் காட்டும் வகையில் சமயக்கல்வியைப் போதிக்க வேண்டும். சந்தேகமோ , தடுமாற்றமோ ஏற்படாவண்ணம் சமயபாட போதனை அமைதல் கட்டாயமானது. சந்தேகம் எழுந்தால் அதற்குத் தக்கபடி பதிலைக் கொடுக்க வேண்டும். இதுவாக இருக்கலாம், அல்லது அதுவாக இருக்கலாம் என்னும் வகையில் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூ டாது.
சமயம் என்பது அறிவு ஆராய்ச்சிக்கு உட்பட்டதன்று. அது உணர்வு ரீதியானது என்பதை வலியுறுத்துவது சமயபோதனையில் மிக அவசியமானதாகும். விஞ்ஞான கூடப்பரிசோதனை.. சமயம் அல்ல என்று சொல்ல வேண்டும். கற்கண்டு இனிக்கும். மிளகாய் உறைக்கும். ஐஸ்கிறீம் இனிக்கும். பிஸ்கற்றுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சுவை. இவற்றை எப்படி அறிவீர்கள் என்று அவர்களையே சமய பாடவேளையில் கேட்கும்பொழுது ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பதில் சொல்ல முன்வருவார்கள். அப்பொழுது அவர்களை எங்கள் விஷயத்துக்குள் இலகுவாகக் கொண்டுவந்து விட முடியுமல்லவா?
சுவைகள் பல. அவற்றின் உருவம் எமக்குத்தெரியாது. ஆனால் அவற்றைச் சுவைத் தால்த்தான் என்ன சுவை என்பதை அறியமுடிகிறது. இங்கே சுவை என்பது உணர்வினால்தான் எமக்கு வந்து சேர்கிறது. அந்த உணர்வுதான் சமயம். அந்த உணர்வால் வரும் சுவைதான் கடவுள் என்று சமய போதனையை நடத்திப் பார்த்தோமேயானால் பிள்ளைகளிடம் நல்ல வரவேற்புக் கிடைப்பதோடு மனத்திலும் பதிந்து விடும்.
புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.
1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாழுதல் நன்று.
4) மனத்தில் பதியும் வண்ணம் திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவைமனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,
சமயய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ” என்பதே சமயஇயலாளரது அசையாத நம்பிக்கையாகும்.
“கற்றதனால் ஆயபயன் இறையுணர்வு பெறுதலே” இதை மனத்திற்கொண்டு செயற்பட்டால் எண்ணியது நிறைவேறும்.
படம் உதவிக்கு நன்றி: http://vedicodyssey.com/spiritualadventures/tag/sv-youth-camp/
ஜெயராமசர்மா has written 51 stories on this site.
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர். தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார். பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...
இப்போது என்ன பயன் எனக் கேட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. அப்படிப் பார்த்தால், பண்டைய கால சக்கரத்தின் பயன்பாடும் சட்டி பானையின் பயன்பாடும் அறிந்து இன்று நான் என்ன செய்யப் போகிறேன் எனக் கேட்பதற்கு ஒப்பாகும். சக்கரத்தின் பயனையும், சட்டி பானையின் பயனையும் அறிந்தவர்கள் இருப்பதால் இவற்றிற்கு இந்த தலைமுறைக்கு விளக்கங்கள் தேவையில்லை. இன்னும் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வரும் சந்ததிகள் இவற்றை கண்டு நகைக்கலாம். என்ன ஒரு அறிவிலித்தனம் எனவும் சொல்லலாம்.கதைகள் நடந்த கால கட்டத்தில் அக்கதையின் பயன் என்ன என்று அறிய முற்படுவது தொன்மையை தேட வழி வகை செய்யும். ஆனால், பயனேதும் இல்லை என்ற முடிவோடு அதனை அறிய முற்படலாகாது.ஒவ்வொரு மனிதனின் கிரகிக்கும் திறனும் வெவ்வேறானவை. அக்காலக் கட்டத்தில் அந்த கதைகளுக்கு தேவை என்ன என அறிந்தால் தான் நாம் மதிப்பீடு எல்லைக்குள் செல்லலாம்.இப்போதும், கடவுள் என்ற கோட்பாடில் பலரும் தனக்கு முன்னவர் சொன்னதையே வழியாக எடுத்துக் கொண்டு பின்தொடருகிறார்கள். அவர்களுக்கு தேவை நம்பிக்கை என்னும் பிடிப்பு. அந்த பிடிப்பு சரியா தவறா என்ற ஆராய்ச்சி இல்லை.பொருளற்ற விஷயங்கள் என முன்முடிவு எடுத்து விட்டால் எல்லா விஷயங்களும் பொருளற்றதாகவே தெரியும்.இதிகாச புராணக் கதைகளில், இரு மனைவியர் மட்டுமல்ல, பாஞ்சாலி ஐவரை மணந்தால் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரியும் ஹரனும் இணைந்து ஹரிஹரன் பிறந்தான் என்னும் கூற்றால் ஓரினச் சேர்க்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் விசாலமான பார்வை என்பதை ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதை ஏற்றுக் கொள்வதைப் பற்றியோ, ஒருத்திக்கு இரண்டு கணவன்கள் இருப்பதை ஏற்று கொள்வதைப் பற்றியோ குறிப்பிடவில்லை.விசாலமான பார்வை என நான் குறிப்பிடுவது, பண்டைய கதைகளை இன்றைய நடைமுறைக்கு அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்றைய காலகட்டத்தில் அதன் தேவை என்னவாக இருந்தது என அறிய முற்படுவதாகும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-10-28 12:50 GMT+01:00 PRASATH <pras...@gmail.com>:இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...கீழேயுள்ள ஏனைய பகுதிகளுக்குச் செல்லுமுன்..இருக்கலாம்..இருக்கலாம்-- இப்படி சொல்லி தேடுதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிலை அபாயகரமானது.இப்புராணங்கள் அன்றைய வாழ்வியலை காட்ட வாழ்வியல் அங்கங்களாக சமூகத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என கிடைக்கும் சான்றுகளையும் தேடி விட்டோமா? அக்கால தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட சமூகத்தினரால் முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை இக்கதைகள் என சான்று கிடைத்திருக்கின்றதா? ஒருவர் எழுத.. சிலர் அதனை வலிந்து அழுத்தம் கூட்டி சொல்ல.. கதைகளாக நாடகங்களாக ஆலயங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் இணைத்துச் சொல்ல ஆரம்பிக்கப்பட்ட பின் .. இதற்கு சமூகத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்று நாம் பொதுப்படையாகக் கூறுவது சரியான சமூகப் பார்வையா... ?சுபா
2014-10-28 17:31 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:2014-10-28 12:50 GMT+01:00 PRASATH <pras...@gmail.com>:இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...கீழேயுள்ள ஏனைய பகுதிகளுக்குச் செல்லுமுன்..இருக்கலாம்..இருக்கலாம்-- இப்படி சொல்லி தேடுதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிலை அபாயகரமானது.இப்புராணங்கள் அன்றைய வாழ்வியலை காட்ட வாழ்வியல் அங்கங்களாக சமூகத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என கிடைக்கும் சான்றுகளையும் தேடி விட்டோமா? அக்கால தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட சமூகத்தினரால் முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை இக்கதைகள் என சான்று கிடைத்திருக்கின்றதா? ஒருவர் எழுத.. சிலர் அதனை வலிந்து அழுத்தம் கூட்டி சொல்ல.. கதைகளாக நாடகங்களாக ஆலயங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் இணைத்துச் சொல்ல ஆரம்பிக்கப்பட்ட பின் .. இதற்கு சமூகத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்று நாம் பொதுப்படையாகக் கூறுவது சரியான சமூகப் பார்வையா... ?சுபா
நான் தேடுதலுக்கு முற்றுபுள்ளி எங்கே வைத்தேன்...தங்கள் மடல் தான் எனக்கு, "இந்த கதைகள் யாவும் அன்றைய வாழ்வியல் நெறிகளை காட்டவே இல்லை எனச் சொல்லி இக்கதைகளின் பின்புலம் பற்றிய தேடலை அறிய முற்படுவதைத் தடுத்து நிறுத்துவதாக பொருள் தருகிறது."
நான் சொல்வது எல்லாம், கதைகள் பண்டைய வாழ்வியலை பிரதிபலித்தது என்ற முடிவோடும் அணுகாமல், பிரதிபலிக்கவில்லை என்ற முடிவோடும் அணுகாமல் கதைகளின் கால கட்டத்திற்கு சென்று ஆய்வு செய்து முடிவுகளை வழங்க வேண்டும் என்பதே...
இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...
மேலும், நான் எனது கருத்தாக, பிரதிபலித்தது என்ற முன்முடிவோடு எங்கேயும் கருத்து சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் தான் நான் தேடுதலைத் தடுப்பதாகும்.இருக்கலாம் என்று சொல்லும் பொழுதே அங்கே தேடுதலுக்கான இடம் உள்ளது என்பது தானே பொருள்.எனக்கு தான் எனது கருத்தை சரியாக சொல்லத் தெரியவில்லையோ???
சுபா கேட்ட கேள்வியின் பதில், பேராசிரியரின் "பழையன கழிதல் இழை"யில் அவர்கள் பேராசிரியரின் பதிவுக்கு சொன்ன கருத்தே.அடுத்த தலைமுறைக்கு இந்துமதத்தை எடுத்துச் செல்ல விரும்பினால்... இளையதலைமுறையும் ஒப்புக்கொள்ளும் வகையில் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும்.
எனது கேள்விக்கு விடை இதில் இல்லை.சரி வளர்ந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.. என்றால் பின்னனியில் ஒரு தவறு இருக்கின்றது என்ற சிந்தனை உள்ள வகையான தொணியாக எனக்குத் தோன்றுகின்றது.. சரி அப்படியே அறிமுகப்படுத்தும் வேளையில் இதனை அறிவுப்பூர்வமான ஒன்றாக எடுத்துக் கொள்வரா.. கொஞ்சம் யோசித்தாலே இது ஒவ்வா கருத்து என தூக்கிப் போடத்தான் மனம் விரும்பும்.
பேரண்டங்களையும் காக்கும் மகா சக்தி.. உயிருடன் கலந்த ஒரு இயக்கம் என்ற அச்சக்தியை கேவலப்படுத்தும் மிகச் சர்வ சாதாரண அல்லது கீழ்த்தரமான ஒரு பார்வையாகத்தான் எனக்கு இவ்வகை விஷயங்கலெல்லாம் படுகின்றன.
2014-10-27 21:33 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:சுபா கேட்ட கேள்வியின் பதில், பேராசிரியரின் "பழையன கழிதல் இழை"யில் அவர்கள் பேராசிரியரின் பதிவுக்கு சொன்ன கருத்தே.அடுத்த தலைமுறைக்கு இந்துமதத்தை எடுத்துச் செல்ல விரும்பினால்... இளையதலைமுறையும் ஒப்புக்கொள்ளும் வகையில் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும்.
இந்துமதத்தை பற்றி எல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது தேமொழி. அடுத்த தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு (கவலை அல்ல)
பேராசிரியரின் இழையை ஒட்டிதான் சுபா கருத்தை எழுப்பினார் என்பது உங்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது :-)
2014-10-28 2:21 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
..
பேரண்டங்களையும் காக்கும் மகா சக்தி.. உயிருடன் கலந்த ஒரு இயக்கம் என்ற அச்சக்தியை கேவலப்படுத்தும் மிகச் சர்வ சாதாரண அல்லது கீழ்த்தரமான ஒரு பார்வையாகத்தான் எனக்கு இவ்வகை விஷயங்கலெல்லாம் படுகின்றன.
அது உங்கள் பார்வை. என்னளவில் இலக்கியங்களை "ஆபாசம், அசிங்கம்" எனும் நோக்கில் அணுக கூடாது. வீனஸ் எனும் தெய்வத்தின் சிலை அரை நிர்வாணமாக வடிக்கபட்டிருப்பது அசிங்கமா, கலையா?
இல்லை செல்வன்.உங்கள் கட்டுரையில் வந்த நான் வெட்டி ஒட்டி காட்டிய அப்பகுதிக்கு மட்டுமே என் கேள்வி.
என்னைப் பொருத்த அளவில் இவ்வகை புராணப் பகுதிகள் தாம் இந்து மதத்திற்கு சேதத்தையும் தாழ்வையும் சீர்குலைவையும் இளைய தலைமுறையினரிடையே ஏற்றுக் கொள்ள முடியாத நிலையையும் உருவாக்குபவை. இவற்றை விடுத்து தத்துவ விஷயங்களை சிறு பிராயத்திலிருந்து குழந்தைகளுக்கு நல்லொழுக்கம், அன்பு, நேர்மை, இறையென்றால் அன்பு என்ற வகையில் சொல்லிக் கொடுப்பதில் சிறிதளவும் பிரச்சனை இருக்காது. சிவம் சக்தி என்ற இரு கூறுகளை மனிதத்தன்மைக்கு இறக்குவதோடு மிக அற்பமாக சித்தரித்து அதற்கு காரணமும் தேடும் முயற்சி தொடரும் வரை மடமை நமது சமூகத்தில் தொடரும்.
அந்தத் தொன்மைங்களினால் பெருமையடையவும் தேவையில்லை, சிறுமையடைவும் தேவையில்லை. தள்ளி நின்று பார்ப்போம்.இப்பொழுது நம்மிடம், எகிப்து, கிராக்க, ரோம புராணங்களைக் கூறினால் அவற்றையெல்லாம் ஒரு கதை என்று புரிந்து கொண்டு, படித்த பிறகு அதில் எந்தவித ஈடுபாடுடன் இருப்போமோ அதே போன்று நம் தொன்மங்களை நாம் காணும் கோணமும் இருக்க வேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
////.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//இப்படி எழுவது சிவபெருமானை வழிபடுபவர்களின் மனதைப் புண்படுத்தவதில் வெற்றிபெறும்; அவ்வளவே!
2014-10-28 21:34 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:உயர்திரு சுபா அவர்களே,//உள்ள விஷயத்தை உள்ளவாறு கிரகித்துக் கொள்ள முடியாது அறிவீலிகளா நம் சமூகத்தினர். ஏன் நம் தமிழ் இனத்தோரையே தாழ்ந்து நாம் மதிப்பிட்டு.. இப்படியெல்லாம் சொன்னால் தான் மகத்துவம் புரியும் என நாமே கற்பனை செய்து கொண்டு பின்னர் அதனையும் ஏற்றி வைத்து வழி வழியாகக் கொண்டு வந்து இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்.////.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//நானும் பொதுவாகத்தான் கேட்கிறேன்.//நீங்கள் இருக்கிறீர்கள்.//இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்// இதைப் படித்தால் நீங்களே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது. எனவே, எந்தவிதமான விளக்கத்தைக்கொடுத்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை. அப்படி இருக்கும்போது //பொதுவாகத்தான் கேட்கிறேன்// என்பதின் பொருள்தான் விளங்கவில்லை., நீங்கள் //ஏன் நம் தமிழ் இனத்தோரையே தாழ்ந்து நாம் மதிப்பிட்டு.. இப்படியெல்லாம் சொன்னால் தான் மகத்துவம் புரியும் என நாமே கற்பனை செய்து கொண்டு பின்னர் அதனையும் ஏற்றி வைத்து வழி வழியாகக் கொண்டு வந்து இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்.// என்று குறிப்பிடுவது தமிழ் சமூகத்திற்கு மட்டும் அல்ல.இக்கதைகள் மொத்த இந்து சமய சமூகத்திற்கும் சொல்லப்பட்டு இருகின்றன. ஆக, மொத்த இந்து சமூகமும் அறிவிலிகள் என்று கொண்டால், மற்ற சமயக் கதைகளைப் படித்தாலும் அப்படியே தோன்றும். இதற்கு ஒரே வழி -- கடவுள் மறுப்புக் கொள்கைதான் என்ற முடிவுக்குத்தானே வரவேண்டும்!நான் புராணங்கள் பற்றி கொடுத்த விளக்கத்திற்கு மதிப்பிற்குரிய லோகசுந்தரம் அவர்கள் என்மீது சினம் கொண்டார். எனவே, நான் மேலும் விளக்கம் கொடுத்து உங்கள் சினத்தையும் ஈட்டிக்கொள்வானேன்?////.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//இப்படி எழுவது சிவபெருமானை வழிபடுபவர்களின் மனதைப் புண்படுத்தவதில் வெற்றிபெறும்; அவ்வளவே! தாங்களோ எந்தவித விளக்கத்தையும் செவிமடுக்க விரும்பவும் இல்லை. தீர்வு எப்படிக் கிடைக்கும்? There will be no closure to this subject.ஒருபக்கம் குலதெய்வ வழிபாட்டைப் போற்றுகிறோம். இன்னொரு பக்கம் இப்படி எழுதிகிறோம். எனக்குப் புரியவில்லை.
உயர்திரு சுபா அவர்களே,
//எனக்கு சினம் இல்லை. கோபம் வராது.//மிக்க நன்றி. எனக்கும் என் மனதில் பதிய எதுவாக இருக்கும்.//இவை நீக்கப்பட்டு உண்மையான தத்துவ விசாரணை பக்கம் மனம் திரும்பினால் உண்மையான இந்துக்களாக நாம் இருப்போம் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கின்றேன்.//தாங்கள் சொல்லும் நிலையைத்தான் ஒவ்வொரு இந்துவும் அடையவேண்டும். இந்த நிலை முனைவர் நிலைக்கும் மேலானது (post-doctorate செய்வதற்கு இணையானது) என்று சமயப் பெரியோர்கள் உரைக்கின்றார்கள்.
ஆன்மிக அறிவில் நான் இன்னும் உயர்நிலைப்பள்ளிக்குள் கூட நுழையவில்லை. எனவே, முனிவர் பட்டம் எப்படி சுபா வாங்க இயலும்? முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.
மனித வாழ்க்கையில் நல் மனிதராக நம்மால் இருந்து நமக்கும் பிறருக்கும் உதவி வாழும் நிலையுடன் நமது ஒவ்வொரு செயலும் இருந்தால் அதுவே இறைத்தன்மையின் உயரிய நிலை.
உலகின் மிக பெரிய ஆலயமான அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் என்பது தெரிந்திருக்கலாம். இரண்டாம் சூரியவர்மனால் கிபி 12ம் நூற்ராண்டில் கட்டபட்ட இந்த ஆலயத்தில் இன்றும் வழிபடபடும் விஷ்ணு சிலை உள்ளது. கம்போடிய சாயலில் உள்ள விஷ்ணுவை இங்கே கானலாம்
விஷ்ணுவுக்கு அங்கே படைக்கபடும் உணவில் சிக்கனும் உண்டு. அது அங்கே தவறாக கருதபடுவது இல்லை.

இப்பொழுதுள்ள சமூகச்சூழ்நிலையில் மனிதன் ( ஆண்,பெண் இருவரும்) தனிமனித
சுதந்திரம் என்ற பெயரிலும், என் சந்தோஷம், என் வாழ்க்கை என்று அனைத்திலும்
சுயநலமாக வாழ்ந்து வரும் இக்காலவாழ்க்கையோடு ஒப்பிடுகையில்
அக் காலப்புராணக்கதைகள் தங்கள் தரத்தை இழக்காமல் இருக்கின்றன.
இருபெரும் காப்பியங்களை படைத்தவர்கள் ஆண்கள் என்பதால் அவர்களுக்குச்
சாதகமாக இப்படைப்புகள் படைக்கப்பட்டவை என்பதுதானே உங்கள் கருத்து
இக்காலப் பெண்களுக்கு பேச்சுரிமையும், எழுத்துரிமையும் 200% உள்ளது.
அப்படி இருக்கையில் இக்கால தலைமுறையினர்க்கும், பெண்களுக்கும் ஏற்றபடி
ஒரு மாபெரும் காப்பியத்தை ஒரு பெண் ஏன் இன்னும் படைக்கபடவில்லை?
கேள்விகள் கேட்பதற்க்கு பதிலாக ஏன் புதிய படைப்புகளை படைக்ககூடாது ?
அப்படைப்புகள் எதிர்காத்தலைமுறையினர் விவாதிக்கும் தளமாக இருந்திட
உதவும் அல்லவா?
கேள்விகளை கேட்பது பெண்களுக்கே உரித்தான குணம் எனவே
குழந்தைகளைப்போல் கேள்விகள் கேட்கும் அந்நிலையிலிருந்து
பதில்கள் சொல்லும் நிலைக்கு பெண்கள் முன்னேற வேண்டும்
என்பது என் விருப்பம்
திருமதி. ஸ்ரீவிபா
மாபெரும் காப்பியத்தைப் படைத்தால்தான் அது இலக்கியம் என்றில்லை ஸ்ரீவிபா.
அதனால் இக் கதையினால் என்ன பயன் என்று கேட்பதை தவிர்த்து, பல
தலைமுறையையும் தாண்டி வாழும் படைப்புகள் தோன்றினால் சந்தோஷமே.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யென பெய்யும் மழைஇந்த குறளுக்கு வள்ளுவர் கடுமையாக விமர்சிக்கபடுகிறார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இப்படியும் ஒரு விளக்கம்

சட்டையை மாற்றுவதுபோல வாழ்க்கைத் துணைவர்களை (ஆண், பெண் இருவருமே) மாற்றும் அளவுக்கு நிலைமை மாற்றிவிட்டது. இங்கு நான் ஒருவன்தான் வாழ்க்கைத் துணைவர் (life companion) என்று எழுதிகிறேன். இப்பொழுது வாழ்க்கைத் துணை என்பது, வாழ்க்கைக் கூட்டாளி, வாழ்க்கைப் பங்குதாரர் (life partner) என்று ஆகிவிட்டது.
வணக்கம்.
http://thirukural-kalai.blogspot.com/2014/01/55.html இப்படியும் ஒரு விளக்கம் என்னிடம் உள்ளது.
On 15-Dec-2014 10:43 pm, "Nagarajan Vadivel" <radius.co...@gmail.com> wrote:
>
>
> 2014-12-15 21:54 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
>>
>> தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
>> பெய்யென பெய்யும் மழை
>>
>> இந்த குறளுக்கு வள்ளுவர் கடுமையாக விமர்சிக்கபடுகிறார்.
எவ்வளவுதான் கடுமையாக விமர்சித்தாலும், பதில் சொல்ல திருவள்ளுவர் வரவே மாட்டார் என்ற தைரியம்தான்.
அப்படியே வந்தாலும், “நீங்கள்தான் திருவள்ளுவர் என்பதற்கு என்ன ஆதாரம்?“ என்று கேட்டு, ஆள்மாறாட்டம் வழக்குத் தாக்கல் செய்துவிடலாம் என்ற தைரியம்தான்.
அன்பன்
கி.காளைராசன்