"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

1,532 views
Skip to first unread message

Sanathani

unread,
Sep 1, 2013, 10:07:13 AM9/1/13
to mint...@googlegroups.com
"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

சி. ஜெயபாரதன்

unread,
Sep 1, 2013, 10:56:39 AM9/1/13
to mintamil
ஆய என்றால் உலகில் தோன்றிய.

சி. ஜெயபாரதன்


On Sun, Sep 1, 2013 at 10:07 AM, Sanathani <blis...@gmail.com> wrote:
"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Sanathani

unread,
Sep 1, 2013, 11:57:17 AM9/1/13
to mint...@googlegroups.com
Thanks.

ஜீவ்ஸ்

unread,
Sep 1, 2013, 12:55:20 PM9/1/13
to mint...@googlegroups.com


On Sunday, September 1, 2013 9:27:17 PM UTC+5:30, Sanathani wrote:
Thanks.

On Sunday, 1 September 2013 20:26:39 UTC+5:30, jayabarathans wrote:
ஆய என்றால் உலகில் தோன்றிய.

சி. ஜெயபாரதன்
\




ஆயம்¹ āyam

, n. < ஆய்-. 1. Secret; இரக சியம். உன்னாவல்லது அவ்வாயம் வெளிப்பட்டிருக்கு மோ (குருபரம். 126). 2. Female attendants of a lady; தோழியர் கூட்டம். சூழுடை யாயத்தை நீக்கும் வதி (திருக்கோ. 7). 3. Suffering, affliction; வருந் தம். ஆய மின்றிப்போ யண்ட மாள்வதற்றா (தேவா. 648, 7). 4. Cloud; மேகம். (பிங்.) 5. Kind of drum; மல்லரிப்பறை. (அக. நி.)



ஆய கலைகள் = நுணுக்கமான ( இரகசியாமான கலைகள் ? ) கலைகள் என்று கொள்ளலாமோ ?
 

Prakash Sugumaran

unread,
Sep 1, 2013, 3:12:21 PM9/1/13
to mintamil
ஜீவ்ஸ், ஆய்ந்து தேர்வு செய்யப்பட்ட 64 கலைகள் !!


2013/9/1 ஜீவ்ஸ் <jee...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Sep 1, 2013, 5:26:17 PM9/1/13
to mint...@googlegroups.com
ஆயம் என்றால் இந்த காலத்திய "அக்காடெமி" என்பது ஆன்றோர்களின் குழு 

என்றே பொருள்படும்."எண்பேர்+ஆயம்= எண்பேராயம்"என்பது சோழர் காலத்திய 
ஆட்சிக்குழு அல்லது அமைச்சர் குழு என்பது போல் தான்.ஆய் என்பது அறிவு 

நுண்மையைக்குறிக்கிறது.தேர்ந்து எடு என்ற பொருளும் அதில் தெரிகிறது.எங்கள் 

ஊரில்(நெல்லை) ஆய்ச்சி என்பவர்கள் (ஆச்சி)வெறும் பாட்டி என்ற பொருளில் 

இல்லாமல் தலைவி ..நாலும் தெரிந்த சான்றோர்கள் என்ற பொருளிலும் 

மதிக்கப்படுகிறார்கள்.இருப்பினும் ஆய்தல் என்றால் களை முதலியன நீக்குதல் 

அல்லது தூய்மைப்படுத்துதல் என்ற பொருளிலும் வழங்குகிறது.

"யேளா என்ன ?ஒலை வச்சாச்சா?"

"இல்லளா இப்பத்தான் கீர ஆய்ஞ்சு முடிச்சேன்"

என்று வீடுகளில் அம்மாக்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

கலைகள் என்பவை மனித அறிவை தூய்மையாக்கும் அல்லது செப்பனிடும் 

(பழுது பார்க்கும்) தன்மை வாய்ந்தன என்பதே இந்த "ஆய" குறிப்பிடுகிறது.
ஆதல் ஆகிவருதல் வழக்கத்துக்கு வருதல் என்பதும் ஆய என்ற சொல் 

குறிக்கும்.

"கற்றதனால் ஆய பயனென்கொல்"..இந்த குறள் வரி கற்றதனால் "ஏற்படும்"
பயன்களை குறிக்கிறது."ஏற்பாடு" அல்லது ஆக்கத்துக்கு வகைப்படுத்தல் என்ற 

பொருளே இங்கு உணரப்படுகிறது.(ஆகிய என்பதன் "குறுக்கமே" ஆய என்றும் இலக்கணக்குறிப்பு சொல்லலாம்.)

"அணங்கு கொல் ஆய் மயில் கொல்"...இந்த குறள் வரியில் வரும் ஆய் என்பது 

"அழகிய" என்பதைக் குறிப்பதால் "அழகிய அறுபத்து நான்கு கலைகள்" எனவும் 

எடுத்துக்கொள்ளலாம்.இல்லாவிட்டால் தோகை விரிக்கும் மயிலுக்கு இது 

அடைமொழியாக இருப்பதால் அறிவை "விரிவு" படுத்தும் கலைகளாகவும்
நாம் புரிந்து கொள்ள்லாம்.

====================================ருத்ரா  

N. Ganesan

unread,
Sep 1, 2013, 5:50:07 PM9/1/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com


On Sunday, September 1, 2013 7:07:13 AM UTC-7, Sanathani wrote:
"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

ஆ- என்பதில் தோன்றுவது போலுள்ளது. ஆ- ஆகும்:ஆம், பார்க்கலாகும்:பார்க்கலாம் 

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கும் என்னம்மை -- தூய 
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."

--கம்ப நாடர்


”கலைகள் ஆய 64-ஐயும்” எனக் கூட்டுக.
கலைகள் ஆகிய 64 எனப் பொருள்.

ஆய = ஆகிய. இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.
இன்னும் ஏராளமானவை தமிழில் உள.

திருஎறும்பியூர்

பாடல் எண் : 1

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
    எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்
தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
     தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
     அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Sep 2, 2013, 12:22:29 PM9/2/13
to vallamai, mintamil
நண்பர் அண்ணா கண்ணன்,

கலைகளில் ஆய்ந்தவை என்ன ?  ஆராயாதவை என்ன ?  கம்பர் ஆய்ந்த கலைகள் 64 என்றால் ஆராயாத கலைகள் வேறு என்ன ?   

சி. ஜெயபாரதன்.


On Sun, Sep 1, 2013 at 11:14 PM, Anna Kannan <annak...@gmail.com> wrote:

ஆய = ஆராய

ஆய கலைகள் = ஆராய்ந்ததில் கண்ட கலைகள்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Iyappan Krishnan

unread,
Sep 2, 2013, 12:33:43 PM9/2/13
to mintamil, vallamai

கலைகள் ஒவ்வொன்றுக்கும் சூத்திரம்/இரகசியம்/செயல்பாடுகள் உண்டல்லவா ? ஆய என்பதற்கு இரகசியம் என்றும் பொருள்படுகிறது என்று  அகராதி சொல்கிறது. அப்படியானால் ஒவ்வொரு கலைகளின் நுணுக்கங்களையும் அறிவது என்றும் பொருள் கொள்ள முடியும் இல்லையா ?

சி. ஜெயபாரதன்

unread,
Sep 2, 2013, 1:20:42 PM9/2/13
to vallamai, மின்தமிழ்
​ண்பர் நா. கணேசன்,

நண்பர் அண்ணா கண்ணன் சொல்வதுபோல் இசை ஞான  முறைகளும், நடனக் கலை நளினமும் பெருகும் டிஜிட்டல் கணனி யுகத்தில் கலைகளின் எண்ணிக்கை வளர்வது.  எண்ணிக்கை குறையாது​
​.

எழுதிச் செல்லும் கலைமகளின் மடிக்கணனி
எழுதி எழுதி மேற் செல்லும்.


​சி. ஜெயபாரதன் ​



2013/9/2 N. Ganesan <naa.g...@gmail.com>


On Monday, September 2, 2013 9:42:42 AM UTC-7, அண்ணாகண்ணன் wrote:

அன்பு நண்பர் ஜெயபாரதன்,

'ஆய' என்பதைக் கவிசொல்லி, தன்கூற்றாகவோ, பிறர்கூற்றாகவோ சொல்லியிருக்கலாம். 

எனக்குத் தெரிந்து இவ்வளவு கலைகள் என்றோ, இதுவரை வல்லோர் ஆராய்ந்து கண்டறிந்தவை இத்தனை கலைகள் என்றோ சொல்லலாம்.

பொதுவாக, கலைகளுக்கு எண்ணிக்கை உரைப்பது பொருந்தாது; கலைகள் கணந்தோறும் பெருகுபவை; கலை என்பது துறை சார்ந்தது என்பதை விட, ஒரு செயலை எவ்வாறு செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. 


கலைகள் மொத்தம் 64 என்பது பழைய மரபு. 8 என்பது அடிப்படையான எண். எண் என்றாலே 8 என்றும், ந்யூமரல் என்றும்
பொருள் இருக்கிறது. அதற்கு இரட்டியாக, எண்ணெண் கலைகள் என்று காட்டியுள்ளனர்.

உண்மைதான். 8, 8^2 (= 64) என்று நம் முன்னோர்கள் கண்டனர்.
இப்போது, 8^3, 8^4, 8^5, 8^6, ... 8^n என்று விரிக்கலாம்.

ஆனால் அடிப்படையாக எத்தனை கலைகள் மனிதகுலத்திடம் உள்ளன?
64-ஆ? 64-க்கும் குறைவா? அதிகமா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 2, 2013, 12:30:16 PM9/2/13
to vall...@googlegroups.com, mintamil


On Monday, September 2, 2013 9:22:29 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
நண்பர் அண்ணா கண்ணன்,

கலைகளில் ஆய்ந்தவை என்ன ?  ஆராயாதவை என்ன ?  கம்பர் ஆய்ந்த கலைகள் 64 என்றால் ஆராயாத கலைகள் வேறு என்ன ?   

சி. ஜெயபாரதன்.


முனைவர் அண்ணாகண்னனி ’ஆய = ஆராய’ என்பது பொருந்தவில்லை.

ஆய = ஆகிய - என்னும் பொருள் philology மூலம் அறியலாம்,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 2, 2013, 1:41:49 PM9/2/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, September 2, 2013 10:20:42 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
​ண்பர் நா. கணேசன்,

நண்பர் அண்ணா கண்ணன் சொல்வதுபோல் இசை ஞான  முறைகளும், நடனக் கலை நளினமும் பெருகும் டிஜிட்டல் கணனி யுகத்தில் கலைகளின் எண்ணிக்கை வளர்வது.  எண்ணிக்கை குறையாது​
​.

எழுதிச் செல்லும் கலைமகளின் மடிக்கணனி
எழுதி எழுதி மேற் செல்லும்.


நன்றி. அன்று 8^2, இன்றோ 8^n கலைகள்.

அனந்தம் சாஸ்திரம், அல்பம் ஜீவிதம் - வேதம்
கல்வி கரையில, கற்பவர் நாட்சில - நாலடியாரில் சமணமுனிவர்கள்.

பாரதி அன்றே சொல்லியிருக்கிறார்:
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
   பூதச் செயல்களின் நுட்பங்கள்கூறும்:
மெத்த வளருது மேற்கே - அந்த
   மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 9.

இன்று செந்தமிழையும், அதன்/த்ராவிடபாஷைகளின் பங்களிப்பையும்,
இந்தியாவில் அவற்றின் வரலாற்று ஆழத்தையும் அளந்துபார்க்க
உலகப் பல்கலைக்கழகங்களில் நிபுணர்கள் கிடைத்துவிட்டனர்.

பல ஆண்டு முன்னம் வள்ளுவரைப் பார்த்து இன்றைய தமிழ்
வளர்ச்சிக்குக் காரணமான யுனிகோட் பற்றி குறளொன்று சொன்னேன்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - குறள் (392) சொல்லுமாப்போலே

கணிவலை ஏனை ஒருங்குறி இவ்விரண்டுங் 
கண்ணென்ப வாழும் தமிழ்க்கு! 

உலகப் புகழ்மிக்க பல்கலைகளில் தமிழ்/த்ராவிட/வடமொழி ஆய்வு
நிகழ்த்தும் முனைவர்களை, அவர்களது ஆய்வுப் புதுமை
முடிபுகளை எங்ஙனம் தமிழில் சொல்வது? அவர்களை அழைத்து
எழுதச் சொல்வது எவ்வாறு? என்று சிந்தித்தேன்.
தமிழ் ஆராய்ச்சிகளை குழுக்களில் முன்னெடுக்கும்
வேந்தர் ஐயாவுக்கு எழுதிய மடலிது:

விஞ்ஞானத்தை தமிழில் தரும் உங்களின் நூற்றுக்கணக்கான
பதிவுகள் தமிழ் வளர்க்கின்றன. ஆராய்ச்சி முனைவர்கள்
பலரும் தங்கள் இழைகளில் ஆராய்ச்சிகளை எழுத வேண்டும்.
இல்லையெனில் அறிவுக்கலைகள், ஆராய்ச்சிகள் தேக்கநிலை 
இணையத்துக்கு ஏற்பட்டுவிடும் அல்லவா?

அன்புடன்,
நா. கணேசன்

Krishna Moorthi

unread,
Sep 2, 2013, 10:26:41 PM9/2/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com
இந்தக் கேள்விக்கு பாமரனின் பார்வையில் கம்பரைக் கோடிட்டே பதில் சொல்லலாம் என்று வருகிறேன்.

அந்நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை! நின்னை
துன் இருங்கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான்.

                                                              (
சுந்தர காண்டம் உருக்காட்டு படலம்)

இதில் அத்தன்மை பெற்ற ராமன் என்ற பொருளில் ஆய என்று வருகிறது.

 

தீயிடைக் குளித்தவத் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்

(யுத்த காண்டம்இராவணன் மந்திரப் படலம்)

இங்கு ஆயவள் என்பதில் திருமகளின் அம்சமான சீதை  என்று வரும்.

 

நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின் வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.

(யுத்த காண்டம்இரணியன் வதைப் படலம்)

இதிலோ ஆயது என்பது ஆனது போல் தான் தெரிகிறது.

 

காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்
ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர்
தேய்த்தார்தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல்.

இங்கோ ஆயத்தர் என்பதைல் தயாராய் இருப்பவர் என்றும் சொல்கிறார்.

 

ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.

லிட்டில் அந்தமான் தீவிலிருந்து அந்தமான் தமிழ்நெஞ்சன்.

Hari Krishnan

unread,
Sep 2, 2013, 10:45:06 PM9/2/13
to mintamil, vallamai, Santhavasantham, தமிழாயம்”

2013/9/3 Krishna Moorthi <tnkdc...@gmail.com>

ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.

இந்த அன்பருடன் சேர்த்து, பிறருக்கும்.  ஆய கலைகள் அறுபத்து நான்கு என்ற தொடர், ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்/ஏய உணர்விக்கும் என்னம்மை’ என்ற காளமேகத்தின் பாடலில் வருவது.

எனவே, பாடலில் உள்ளதை, கலைகள் ஆயவை அறுபத்து நான்கு என்று அன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்.  கலைகளாக ஆகியவை என்பது பொருள்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Sep 3, 2013, 12:01:28 AM9/3/13
to vallamai, mintamil, Santhavasantham, தமிழாயம்”

2013/9/3 என். சொக்கன் <ncho...@gmail.com>
அண்ணா,

கம்பர் என்று எழுத வந்து காளமேகத்தின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கம்பரின் சரஸ்வதி அந்தாதியில் வரும் வெண்பா அது. பின்னர் பி. சுசீலாவின் அருமையான குரலில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது:

எஸ்ஸு.  காளமேகம் பாட்டு--

வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரேடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய்.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும், கம்பர் பாட்டுதான்.  கவனப் பிழை.  ஒரு பக்கத்தில் வேலையையும் மறுபக்கத்தில் இங்கேயும் மாற்றி மாற்றி செய்துகொண்டிருந்தால் தவறு ஏற்பட்டுவிடுகிறது.  இருந்தாலும் தப்பு தப்புதான்.  சுட்டியதற்கு நன்றி சொக்கன்.

Iyappan Krishnan

unread,
Sep 3, 2013, 12:07:21 AM9/3/13
to சந்தவசந்தம், vallamai, mintamil

2013/9/3 Hari Krishnan <hari.har...@gmail.com>


ஆயகலைகள் அறுபத்து நான்கினையும், கம்பர் பாட்டுதான்.  கவனப் பிழை.  ஒரு பக்கத்தில் வேலையையும் மறுபக்கத்தில் இங்கேயும் மாற்றி மாற்றி செய்துகொண்டிருந்தால் தவறு ஏற்பட்டுவிடுகிறது.  இருந்தாலும் தப்பு தப்புதான்.  சுட்டியதற்கு நன்றி சொக்கன்.

ஆராய்ச்சி முனைவரா ஆகாம இருக்கிறதுல இது ஒரு வசதி அண்ணே. தப்புன்னு மனசுக்குப் பட்டதும் மன்னிப்புக் கேக்கனும்னு தோணுது பாருங்க.  உங்க கிட்ட இருந்து எங்களுக்கு  வந்த பல நற்பண்புகளில் இதுவும் ஒன்று.   எங்களுக்கு வழிகாட்டியாய் இருப்பதற்கு நன்றி அண்ணே.


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

N. Ganesan

unread,
Sep 3, 2013, 10:18:14 AM9/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Monday, September 2, 2013 7:26:41 PM UTC-7, Krishna Moorthi wrote:
இந்தக் கேள்விக்கு பாமரனின் பார்வையில் கம்பரைக் கோடிட்டே பதில் சொல்லலாம் என்று வருகிறேன்.


திரு. அந்தமான் கிருஷ்ணமூர்த்தி,

நீங்கள் சொல்வது சரியென எண்ணுகிறேன். நானும் கம்பர் பாடலைக் காட்டி ஆய = ஆகிய என்னும்
பொருள் கொடுத்துள்ளேன். 

டிஜிடல் கணினி யுகத்தில் எண்ணிறந்த கலைகள் தோன்றுமா என்பது ஐயம்.
எண்^n என்பதில் அடங்கும் என நினைக்கிறேன். எண்^2 என்று கம்பர் போன்றோர்
தொடங்கி வைத்தது சற்று வளரலாம். ஆனால், n = infinity ஆகாது.

N. Ganesan

unread,
Sep 5, 2013, 10:22:26 AM9/5/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Tuesday, September 3, 2013 10:38:00 AM UTC-7, அண்ணாகண்ணன் wrote:
ஆய என்பது ஆகிய என்பதைக் குறிக்க வேண்டுமானால், ஆய என்பதற்கு முன்னால் 64 கலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆகிய 64 கலைகள் என்பது பொருந்தும்; இங்கே ஆய கலைகள் எனத் தொடங்குவதால், ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருளே அதிகப் பொருத்தம் உடையதாய்த் தெரிகிறது. 


அவ்வாறு தெரியலையே. தேர்ந்த கலைகள், தெரிந்த கலைகள் என்பது போல் சொல்லவேண்டுமானால், ஆய்ந்த கலைகள் (ஆராய்ந்த கலைகள்) என இறந்த காலப் பெயரெச்சமாய் இருக்கணும்.
 
கலைகளின் எண்ணிக்கையைக் குறித்து வினவுகையில் அடிப்படைக் கலை, அதன் கிளைகள் என்ற கண்ணோட்டத்தை நா.கணேசன் முன் வைக்கிறார்.

நடனம் என எடுத்துக்கொண்டால், அதன் ஒவ்வொரு வகையுமே தனித் தனிக் கலைகளே ஆகும்; அவற்றை ஒட்டுமொத்தமாக நடனக் கலை எனக் குறிப்பிடுவது, அதிலிருந்து நாம் எவ்வளவு விலகியிருக்கிறோம் எனக் காட்டும்; இது, நட்சத்திரக் கூட்டத்தை நாம் தொலைவிலிருந்தவாறு ஒற்றை நட்சத்திரமாகக் காண்பதைப் போன்றது.

கலைகளின் முழுஎண்ணிக்கை 64 (எண்^2) என்று குறிப்பதால் ’கலைகள் ஆகிய 64’  என்று உரை தருகின்றனர்.
ஒவ்வொரு டிஜிட்டல் பாட்டும் ஒரு கலை என தெரியவில்லை. 64 கலையில் பார்த்தீர்களானால்,
பல மில்லியன் யுட்யூப் பாட்டும், பாடல் என்ற கலையில் அடங்குகிறதே.

வடமொழி சார்ந்தவற்றை வடகலை என்றும், தென்மொழி சார்ந்தவற்றை தென்கலை என்றும் சொல்கிறோம்.
ஆண்களின் கலை யாவும் ஆண்கலை, பெண்களின் கலை யாவும் பெண்கலை. உலகில் ஆணும், பெண்ணும்
பல பில்லியன்கள் இருக்கலாம்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Sep 6, 2013, 7:50:01 AM9/6/13
to vallamai, மின்தமிழ்



5 செப்டம்பர், 2013 10:22 AM அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

. உலகில் ஆணும், பெண்ணும்
பல பில்லியன்கள் இருக்கலாம்.

ஓ அப்படியா? 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Sep 6, 2013, 7:59:20 AM9/6/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Thursday, September 5, 2013 10:43:44 AM UTC-7, DEV RAJ wrote:
ஆகும் - ஆம்
போகும் - போம்


இவை போன்றவற்றின் தாது ஓரெழுத்துநெடில்.

ஆ- என்னும் தாதில் பிறப்பவை: ஆம்:ஆகும்.
போ -> போம்:போகும்
சா -> சாம்:சாகும்.
வே -> வேம்:வேகும்.
நோ -> நோம்:நோகும்
ஈ -> ஈம்:ஈகும்

ஓரெழுத்துநெடிற்பின் கப்பிரத்தியம் சேரும். சேராமலும் இயங்கும்.

நா. கணேசன்
 
வேகும் - வேம்: 
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும்; காணின் வேம் நயனமும்.
                                               - கம்ப ராமாயணம்

இதேபோல் ஆகிய - ஆய


தேவ் 

தொடர்பான பழைய மடலாடல் ஒன்று:

On Tuesday, September 3, 2013 7:00:11 PM UTC-7, வேந்தன் அரசு wrote:



3 செப்டம்பர், 2013 12:11 AM அன்று, Bhuvan Vellore <bhuvane...@gmail.com> எழுதியது:
அன்புடையோரே, வணக்கம். 

ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?

ஆக கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.
வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.

ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?

Perhaps, this term was coined to collectively represent those arts expected to be mastered by those present in an assembly of learned people.

PhD படிக்க coursework பண்ணவேண்டும். அதை PhDக்கான coursework என்று சொல்லாமல் PhD coursework என்று சொல்கிறோமல்லவா? அது போல ஆயத்துக்கான கலைகள் என்பதை ஆய கலைகள் என்று சொல்கிறோம் போலும்.


வேந்தன்> ஆயக்கலைகள் என்றால் நீங்க சொல்லுவது பொருந்தலாம்

அவர்கள் ஆய கலைகள் என்றுதான் கேட்டார்கள்


ஆ- என்னும் தாது தரும் ஆய (பொருள்: ஆகிய) என்னும் சொல் 
‘ஆய கலைகள் 64’ என்னும் கம்பர் பாடிய கடவுள் வாழ்த்தில்.
இது வினைச்சொல்.

பெயர்ச்சொல் ஆயம் என்றால் ஆயக்கலைகள் என்று நீங்கள்
சொல்வதுபோல் ஆகணும்.

இதற்கு சிறந்த உதாரணங்கள் சமண இலக்கியங்களில் இருந்து
பானுகுமார் எழுதியுள்ளார். வள்ளுவர் குறளில் ஆபயன் = ஆகின்ற பயன் = விளையுள் (மகசூல்).
இளங்கோ அடிகளின் சிலம்பில், ஆப்பயன் = ஆனைந்து.  (ஆவின் பால் முதலியன)

குறள் உரை மாறுபாடு பரிமேலகழரால் நேர்வது இந்த ஒற்று இல்லாமையை அவர் கண்டுகொள்ளாததால் 
தான். ஆப்பயன், ஆபயன் - மாறாட்டு பற்றி விரிவாக குழும மடல்களில் இருக்கிறது.

ஆம்: ஆகும், ஆய:ஆகிய - இந்த க சேரும் கப்பிரத்தியம்
பாலன்: பாலகன், தீபா:தீபிகா என்று வடமொழியில் இயங்குகிறதா?

நா. கணேசன்

 

DEV RAJ

unread,
Sep 6, 2013, 12:16:01 PM9/6/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆகிய ‘ஆய’ ஆவதை இடைக்குறை
என்று சொல்லலாமா ?


தேவ்

DEV RAJ

unread,
Sep 8, 2013, 10:57:25 AM9/8/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்...


கேசவா என்ன இடர் ஆய எல்லாம் கெடும்



தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages