Re: "ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

92 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 1, 2013, 5:50:07 PM9/1/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com

On Sunday, September 1, 2013 7:07:13 AM UTC-7, Sanathani wrote:
"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?

ஆ- என்பதில் தோன்றுவது போலுள்ளது. ஆ- ஆகும்:ஆம், பார்க்கலாகும்:பார்க்கலாம் 

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கும் என்னம்மை -- தூய 
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."

--கம்ப நாடர்

”கலைகள் ஆய 64-ஐயும்” எனக் கூட்டுக.
கலைகள் ஆகிய 64 எனப் பொருள்.

ஆய = ஆகிய. இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.
இன்னும் ஏராளமானவை தமிழில் உள.

திருஎறும்பியூர்

பாடல் எண் : 1

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
    எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்
தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
     தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
     அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

நா. கணேசன்

Anna Kannan

unread,
Sep 1, 2013, 11:14:17 PM9/1/13
to Vallamai

ஆய = ஆராய

ஆய கலைகள் = ஆராய்ந்ததில் கண்ட கலைகள்

Swaminathan Venkat

unread,
Sep 1, 2013, 11:18:02 PM9/1/13
to all friends in
நிறைய படித்து விட்டால் இது தான் சங்கடம். சாதாரண விஷயத்திற்குக்கூட படித்ததெல்லாம் மடை திறந்து கொட்டும். அப்படித்தான் ஆய என்ற சொல்லுக்கு பொருள் சொல்லப் புகுந்தவர்கள் காட்டில்புகுந்து மரத்தை மறந்து விட்டார்கள் என்று இது எதுவுமே தெரியாத எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அண்ணா கண்ணன் சொல்வது தான் சரி. வெகு சுலபமாகச் சொல்லிவிட்டார். வெங்காயம் விலை ஏறிப் போச்சு என்றால் வெங்காயம், விலை, எல்லாத்துக்கும் சொல்லாராய்ச்சி செய்யப் புகுந்தால் இது தான் வினை.

On Mon, Sep 2, 2013 at 8:44 AM, Anna Kannan <annak...@gmail.com> wrote:

ஆய = ஆராய

ஆய கலைகள் = ஆராய்ந்ததில் கண்ட கலைகள்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

சி. ஜெயபாரதன்

unread,
Sep 2, 2013, 12:22:29 PM9/2/13
to vallamai, mintamil
நண்பர் அண்ணா கண்ணன்,

கலைகளில் ஆய்ந்தவை என்ன ?  ஆராயாதவை என்ன ?  கம்பர் ஆய்ந்த கலைகள் 64 என்றால் ஆராயாத கலைகள் வேறு என்ன ?   

சி. ஜெயபாரதன்.

On Sun, Sep 1, 2013 at 11:14 PM, Anna Kannan <annak...@gmail.com> wrote:

ஆய = ஆராய

ஆய கலைகள் = ஆராய்ந்ததில் கண்ட கலைகள்

--

N. Ganesan

unread,
Sep 2, 2013, 12:30:16 PM9/2/13
to vall...@googlegroups.com, mintamil

On Monday, September 2, 2013 9:22:29 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
நண்பர் அண்ணா கண்ணன்,

கலைகளில் ஆய்ந்தவை என்ன ?  ஆராயாதவை என்ன ?  கம்பர் ஆய்ந்த கலைகள் 64 என்றால் ஆராயாத கலைகள் வேறு என்ன ?   

சி. ஜெயபாரதன்.

முனைவர் அண்ணாகண்னனி ’ஆய = ஆராய’ என்பது பொருந்தவில்லை.

ஆய = ஆகிய - என்னும் பொருள் philology மூலம் அறியலாம்,

நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
Sep 2, 2013, 12:33:43 PM9/2/13
to mintamil, vallamai

கலைகள் ஒவ்வொன்றுக்கும் சூத்திரம்/இரகசியம்/செயல்பாடுகள் உண்டல்லவா ? ஆய என்பதற்கு இரகசியம் என்றும் பொருள்படுகிறது என்று  அகராதி சொல்கிறது. அப்படியானால் ஒவ்வொரு கலைகளின் நுணுக்கங்களையும் அறிவது என்றும் பொருள் கொள்ள முடியும் இல்லையா ?

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2013, 12:35:44 PM9/2/13
to vallamai

காளை ஐயா
ஒங்க கேள்விக்குப் பதில் சொல்ல சிவகாமிப் பாட்டியால் மட்டுந்தேன் முடியும்
பாட்டியைத் தொடர்புகொண்டேன்
ரொம்பச் சலிச்சுப்போய் என்னைய்யா எழுதறீக நீங்க இஷ்டத்துக்கு
ஒரு விவரனை வேணாமா
மதுரை மீனாட்சி கையில எங்கடா பேராண்டி கிளி ஒக்காந்திருக்கு
நீயே படத்தைப் பாரு என்று ஒரு படத்தைக் காட்டினார்
சரி பாட்டி கோவிச்சுக்காதே நம்ம காளை ஐயா காரைக்குடியிலிருந்து
கேட்டிருக்கார் என்றேன்
அப்புடியா புள்ளையாண்டன் நம்ம பக்கமா
அப்படின்னா சரி சொல்றேன் என்று சொல்ல ஆரம்பித்தார்
மதுரைக்காரப் பொண்ணுங்கள் ரொம்ப வீரமா வளந்தவய்ங்க
மருதை ராசாவுக்கு புள்ளைவரம் கேட்டப்ப பையனுக்குப் பதிலாப் பெண்ணைக்
கொடுத்து ராசாவே இதை பெண் மாதிரி இல்லாம  ஆம்புளமாதிரி வீரத்துடன்
வளர்த்து உனக்குப் பின்னால மருதைக்கு ராசாவாக்கு என்று அசரீரி
சொல்லிச்சாம்
அப்புடியே ராசா மீனாட்சியை வீரமா வளர்த்து நாட்டையும் ஆட்சியையும் ஒப்படைச்சார்
மீனாட்சியும் எல்லா ராசாக்களையும் தோக்கடிச்சு கடைசியிலே இமயமலையில்
ஈசுவரனையும்  தோக்கடிச்சா
ஆனாலும் அந்த ஆணழகனைப் பார்த்ததும் காதல் வந்துடுச்சு
சுந்தரமான ஈசுவரரும் பதிலுக்கு மீனாட்சியைக் காதலித்து கல்யாணம் செய்ய முடிவாச்சு
மீனாட்சி நீங்க எங்க ஊருக்கு வந்து அடக்க ஒடுக்கமா பரிசம் போட்டு என்னைக்
கலியானம் செய்து எங்கூடக் குடும்பம் நடத்துங்க என்று கூப்பிட்டுச்சு
சுந்தரேசுவரரும் சரின்னு மதுரைக்கு வந்து
அவருக்கும் மீனாட்சிக்கும் கல்யாணமுன்னு அண்ணன்காரன்
சொந்தபந்தங்களையெல்லாம் கூப்பிட்டு விமரிசையாக் கல்யாணம் பண்ணி வச்சார்
பேராண்டி மதுரைப் பூமிக்கு சிறப்பே ஐம்பெரும் கடவுள்களில் வடக்கால
இருந்து வந்த இந்திரனை வருணனை விடுடு மத்த மூனு சாமிகளும் சிவன் திருமால்
முருகன் மூனுபேரும் மதுரையிலேயே இருக்காங்க என்று கூடுதல் தகவல் சொன்னார்
கலியாணம் ஆகி குடும்பம் நடத்த வந்தவரை மனம் மகிழ வைக்கனுமே அப்பதான்
மீனாட்சிக்கு அந்தக் கிளி உருவில் ராஜ மாதாங்கி தேவி வந்து தோளில்
அமர்ந்து ஆய கலைகள் 64ஐயும் சொல்லிக் கொடுத்தது
உங்க ஆட்களுக்குத் தேவி கிளி வடிவில் மீனாட்சிக்குச் சொல்லிக்குடுத்த
கலைகள் பட்டியலை மறக்காமப் போடு அப்பதான் அவய்ங்களுக்கு நம மீனாட்சி
அருமை புரியும் என்றார்

அப்படியே பட்டியல் கீழே

(1) singing
(2) instrumental music
(3) dancing
(4) painting
(5) forehead adornments
 (6) making decorative floral and grain designs on the floor
(7) home and temple flower arranging
(8) personal grooming
(9) mosaic tiling
(10) bedroom arrangements
(11)creating music with water
(12) splashing and squirting with water
(13) secret mantras
(14) making flower garlands
 (15) head adornments
(16) dressing
(17) costume decorations
(18) perfumery
(19) jewelry making
(20) magic and illusions
(21) ointments for charm and virility
 (22) manual dexterity
(23) skills of cooking, eating and drinking
(24) beverage and dessert preparation
 (25) sewing
(26) embroidery
(27) playing vina and drum
(28) riddles and rhymes
(29) poetry games
(30) tongue twisters and difficult recitation
(31) literary recitation
(32) drama and story telling
(33) verse composition game
(34) furniture caning
(35) erotic devices and knowledge of sexual arts
(36) crafting wooden furniture
(37) architecture and house construction
(38) distinguishing between ordinary and precious stones and metals
(39) metal-working
(40) gems and mining
(41) gardening and horticulture
 (42) games of wager involving animals
 (43) training parrots and mynas to speak
(44) hairdressing
(45) coding messages
(46) speaking in code
(47) knowledge of foreign languages and dialects
(48) making flower carriages
(49) spells, charms and omens
(50) making simple mechanical devices
(51) memory training
(52) game of reciting verses from hearing
(53) decoding messages
(54) the meanings of words
(55) dictionary studies
(56) prosody and rhetoric
(57) impersonation
(58) artful dressing
(59) games of dice
(60) the game of akarsha (dice board game)
61) making dolls and toys for children
(62) personal etiquette and animal training
(63) knowledge of dharmic warfare and victory
(64) physical culture.

எப்படியோ மீனாட்சிகூட வீட்டு மாப்பிள்ளையா அடக்க ஒடுக்கமா இப்ப இருக்குற
இங்கிளந்து ராணி வீட்டுக்காரன் மாதிரி பவ்யமா இருந்து மீனாட்சியோடு
மகிழ்ச்சியா குடும்பம் நடத்துனாரு

மீனாட்சி தோள்ள இருக்குறது கிளியில்ல பேராண்டி ஆய கலைகல் 64 ஐயும்
கற்றுக்கொடுத்த தேவி ராஜ மாதாங்கியாக்கும் அந்த தேவிக்கு ராஜ சியாமளான்னு
இன்னொரு பேரும் இருக்கு ஸ்ரீலலித திருபுர சுந்தரியின் மந்திரியான இந்தத்
தேவி மீனாட்சியோட கூட்டாளியாக நெருங்கி இருந்து 64 கலைகளையும் கற்பித்த
தேவியாக்கும் என்றார் சிவகாமிப்பாட்டி

சும்மா உங்க ஆளுங்க காமன் மன்மதன் அப்புடின்னு புருடா விடறாய்ங்க
கையில கிளி வச்சிருந்தா உக்கிரமான தேவி மென்மையாக மாறி உக்கிரத்தைவிட்டு
அன்பா இருப்பாய்ங்கன்னு தெரிஞ்சுக்க அவுக பிரம்மச்சாரியா இருக்கும்
சாமியைக் குடும்பம் நடத்தும் மனப்பக்குவத்துக்குத் தயார் செய்ய
ம்ன்மையாக மாறி விடுவதைக்காட்டும்
இங்க மீனாட்சி கைல கிளியில்லை பேராண்டி
ஆண்டால் கையில் இருந்த கிளி ஒரு தூதர் அம்புட்டுத்தேன்
பேராண்டி காளையை கண்டதெல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லிவை என்று
முடித்துக்கொண்டார்
நாகராசன்

2013/9/2 N. Ganesan <naa.g...@gmail.com>

Anna Kannan

unread,
Sep 2, 2013, 12:42:42 PM9/2/13
to Vallamai

அன்பு நண்பர் ஜெயபாரதன்,

'ஆய' என்பதைக் கவிசொல்லி, தன்கூற்றாகவோ, பிறர்கூற்றாகவோ சொல்லியிருக்கலாம். 

எனக்குத் தெரிந்து இவ்வளவு கலைகள் என்றோ, இதுவரை வல்லோர் ஆராய்ந்து கண்டறிந்தவை இத்தனை கலைகள் என்றோ சொல்லலாம்.

பொதுவாக, கலைகளுக்கு எண்ணிக்கை உரைப்பது பொருந்தாது; கலைகள் கணந்தோறும் பெருகுபவை; கலை என்பது துறை சார்ந்தது என்பதை விட, ஒரு செயலை எவ்வாறு செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. 

N. Ganesan

unread,
Sep 2, 2013, 1:01:28 PM9/2/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
கலைகள் மொத்தம் 64 என்பது பழைய மரபு. 8 என்பது அடிப்படையான எண். எண் என்றாலே 8 என்றும், ந்யூமரல் என்றும்
பொருள் இருக்கிறது. அதற்கு இரட்டியாக, எண்ணெண் கலைகள் என்று காட்டியுள்ளனர்.

உண்மைதான். 8, 8^2 (= 64) என்று நம் முன்னோர்கள் கண்டனர்.
இப்போது, 8^3, 8^4, 8^5, 8^6, ... 8^n என்று விரிக்கலாம்.

ஆனால் அடிப்படையாக எத்தனை கலைகள் மனிதகுலத்திடம் உள்ளன?
64-ஆ? 64-க்கும் குறைவா? அதிகமா?

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Sep 2, 2013, 1:20:42 PM9/2/13
to vallamai, மின்தமிழ்
​ண்பர் நா. கணேசன்,

நண்பர் அண்ணா கண்ணன் சொல்வதுபோல் இசை ஞான  முறைகளும், நடனக் கலை நளினமும் பெருகும் டிஜிட்டல் கணனி யுகத்தில் கலைகளின் எண்ணிக்கை வளர்வது.  எண்ணிக்கை குறையாது​
​.

எழுதிச் செல்லும் கலைமகளின் மடிக்கணனி
எழுதி எழுதி மேற் செல்லும்.

​சி. ஜெயபாரதன் ​

2013/9/2 N. Ganesan <naa.g...@gmail.com>

--

N. Ganesan

unread,
Sep 2, 2013, 1:41:49 PM9/2/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, September 2, 2013 10:20:42 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
​ண்பர் நா. கணேசன்,

நண்பர் அண்ணா கண்ணன் சொல்வதுபோல் இசை ஞான  முறைகளும், நடனக் கலை நளினமும் பெருகும் டிஜிட்டல் கணனி யுகத்தில் கலைகளின் எண்ணிக்கை வளர்வது.  எண்ணிக்கை குறையாது​
​.

எழுதிச் செல்லும் கலைமகளின் மடிக்கணனி
எழுதி எழுதி மேற் செல்லும்.

நன்றி. அன்று 8^2, இன்றோ 8^n கலைகள்.

அனந்தம் சாஸ்திரம், அல்பம் ஜீவிதம் - வேதம்
கல்வி கரையில, கற்பவர் நாட்சில - நாலடியாரில் சமணமுனிவர்கள்.

பாரதி அன்றே சொல்லியிருக்கிறார்:
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
   பூதச் செயல்களின் நுட்பங்கள்கூறும்:
மெத்த வளருது மேற்கே - அந்த
   மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 9.

இன்று செந்தமிழையும், அதன்/த்ராவிடபாஷைகளின் பங்களிப்பையும்,
இந்தியாவில் அவற்றின் வரலாற்று ஆழத்தையும் அளந்துபார்க்க
உலகப் பல்கலைக்கழகங்களில் நிபுணர்கள் கிடைத்துவிட்டனர்.

பல ஆண்டு முன்னம் வள்ளுவரைப் பார்த்து இன்றைய தமிழ்
வளர்ச்சிக்குக் காரணமான யுனிகோட் பற்றி குறளொன்று சொன்னேன்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - குறள் (392) சொல்லுமாப்போலே

கணிவலை ஏனை ஒருங்குறி இவ்விரண்டுங் 
கண்ணென்ப வாழும் தமிழ்க்கு! 

உலகப் புகழ்மிக்க பல்கலைகளில் தமிழ்/த்ராவிட/வடமொழி ஆய்வு
நிகழ்த்தும் முனைவர்களை, அவர்களது ஆய்வுப் புதுமை
முடிபுகளை எங்ஙனம் தமிழில் சொல்வது? அவர்களை அழைத்து
எழுதச் சொல்வது எவ்வாறு? என்று சிந்தித்தேன்.
தமிழ் ஆராய்ச்சிகளை குழுக்களில் முன்னெடுக்கும்
வேந்தர் ஐயாவுக்கு எழுதிய மடலிது:

விஞ்ஞானத்தை தமிழில் தரும் உங்களின் நூற்றுக்கணக்கான
பதிவுகள் தமிழ் வளர்க்கின்றன. ஆராய்ச்சி முனைவர்கள்
பலரும் தங்கள் இழைகளில் ஆராய்ச்சிகளை எழுத வேண்டும்.
இல்லையெனில் அறிவுக்கலைகள், ஆராய்ச்சிகள் தேக்கநிலை 
இணையத்துக்கு ஏற்பட்டுவிடும் அல்லவா?

அன்புடன்,
நா. கணேசன்

Anna Kannan

unread,
Sep 2, 2013, 2:40:46 PM9/2/13
to Vallamai
கலைகளுக்கான எண்ணிக்கை, அவற்றைத் தொகுத்தவர்களின் வசதி, ஆற்றல், அவர்களிடமிருந்த தரவுகள் ஆகியவற்றைப் பொறுத்தது; இதற்கும் எட்டின் அடுக்குகளுக்கும் தொடர்பில்லை. 

அடிப்படைக் கலைகள் எனச் சுருக்குவது, மனித ஆற்றலையும் கற்பனையையும் சுருக்குவதாகும்; மேலும் மேலும் நுண்ணிய கூறுகளை மனிதன் ஆராய்கையில், ஒன்றிலிருந்து பலவும் கிளைப்பதே இயல்பு; எனவே, இதற்கு எல்லை வரையறுப்பதாயின், தாம் கண்ட கலைகள் என ஒருவர் தொகுத்துப் பட்டியலிடலாமே ஒழிய, இவைதாம் கலைகள் என அறுதியிட இயலாது.

2013/9/2 N. Ganesan <naa.g...@gmail.com>

கலைகள் மொத்தம் 64 என்பது பழைய மரபு. 8 என்பது அடிப்படையான எண். எண் என்றாலே 8 என்றும், ந்யூமரல் என்றும்
பொருள் இருக்கிறது. அதற்கு இரட்டியாக, எண்ணெண் கலைகள் என்று காட்டியுள்ளனர்.

உண்மைதான். 8, 8^2 (= 64) என்று நம் முன்னோர்கள் கண்டனர்.
இப்போது, 8^3, 8^4, 8^5, 8^6, ... 8^n என்று விரிக்கலாம்.

ஆனால் அடிப்படையாக எத்தனை கலைகள் மனிதகுலத்திடம் உள்ளன?
64-ஆ? 64-க்கும் குறைவா? அதிகமா?

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Dr.Annakannan

Tamil Editor, Yahoo India
(http://tamil.yahoo.com)
Bengaluru.

N. Ganesan

unread,
Sep 2, 2013, 3:02:37 PM9/2/13
to vall...@googlegroups.com

On Monday, September 2, 2013 11:40:46 AM UTC-7, அண்ணாகண்ணன் wrote:
கலைகளுக்கான எண்ணிக்கை, அவற்றைத் தொகுத்தவர்களின் வசதி, ஆற்றல், அவர்களிடமிருந்த தரவுகள் ஆகியவற்றைப் பொறுத்தது; இதற்கும் எட்டின் அடுக்குகளுக்கும் தொடர்பில்லை. 

அடிப்படைக் கலைகள் எனச் சுருக்குவது, மனித ஆற்றலையும் கற்பனையையும் சுருக்குவதாகும்; மேலும் மேலும் நுண்ணிய கூறுகளை மனிதன் ஆராய்கையில், ஒன்றிலிருந்து பலவும் கிளைப்பதே இயல்பு; எனவே, இதற்கு எல்லை வரையறுப்பதாயின், தாம் கண்ட கலைகள் என ஒருவர் தொகுத்துப் பட்டியலிடலாமே ஒழிய, இவைதாம் கலைகள் என அறுதியிட இயலாது.

இன்ஃபினிட்டி கலைகள் என்கிறீர்கள். தமிழில் இன்ஃபினிட்டி கலைகள் வரவேண்டும். 

பேராசிரியர் ஒரு அடிப்படையான 64 கலைகள் லிஸ்ட் தந்துள்ளார். நீங்கள் அதற்குமேல் எவ்வளவு கலைகள் 
தருகிறீர்களோ சேர்த்தலாம். மொத்தம் எவ்வளவு கலைகள், அது எட்டின் பவர் (n) ஒன்றில் சொல்லமுடியுமா?
என்றும் கணிதத்தில் பார்க்கலாம். 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 2, 2013, 4:19:41 PM9/2/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, September 2, 2013 10:20:42 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
​ண்பர் நா. கணேசன்,

நண்பர் அண்ணா கண்ணன் சொல்வதுபோல் இசை ஞான  முறைகளும், நடனக் கலை நளினமும் பெருகும் டிஜிட்டல் கணனி யுகத்தில் கலைகளின் எண்ணிக்கை வளர்வது.  எண்ணிக்கை குறையாது​
​.

டிஜிட்டல் கணினி யுகத்தில் பெருகுவது எல்லாம் தனித்தனிக் கலைகளா?
இல்லை, ஒரே கலையின் பல பிரிவுகளா? உ-ம்: இசை, நடனம் இரண்டு கலைகள்.
டிஜிடல் கணினியில் பல லட்சம் இசை, நடனம் இருக்கிறது. இவையெல்லாம்
தனித்தனிக் கலைகளா? இல்லை, எல்லாம் இசை அல்லது நடனம்
எனும் கலைப்பகுப்பில் அடங்கிவிடுமா?

முனைவர் அண்ணாகண்ணன், நீங்கள் சொல்லுங்கள்.

அன்புடன்,
நா. கணேசன்
 
எழுதிச் செல்லும் கலைமகளின் மடிக்கணனி
எழுதி எழுதி மேற் செல்லும்.

​சி. ஜெயபாரதன் ​

Krishna Moorthi

unread,
Sep 2, 2013, 10:26:41 PM9/2/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com
இந்தக் கேள்விக்கு பாமரனின் பார்வையில் கம்பரைக் கோடிட்டே பதில் சொல்லலாம் என்று வருகிறேன்.

அந்நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை! நின்னை
துன் இருங்கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான்.

                                                              (
சுந்தர காண்டம் உருக்காட்டு படலம்)

இதில் அத்தன்மை பெற்ற ராமன் என்ற பொருளில் ஆய என்று வருகிறது.

தீயிடைக் குளித்தவத் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்

(யுத்த காண்டம்இராவணன் மந்திரப் படலம்)

இங்கு ஆயவள் என்பதில் திருமகளின் அம்சமான சீதை  என்று வரும்.

நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின் வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.

(யுத்த காண்டம்இரணியன் வதைப் படலம்)

இதிலோ ஆயது என்பது ஆனது போல் தான் தெரிகிறது.

காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்
ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர்
தேய்த்தார்தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல்.

இங்கோ ஆயத்தர் என்பதைல் தயாராய் இருப்பவர் என்றும் சொல்கிறார்.

ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.

லிட்டில் அந்தமான் தீவிலிருந்து அந்தமான் தமிழ்நெஞ்சன்.

Hari Krishnan

unread,
Sep 2, 2013, 10:45:06 PM9/2/13
to mintamil, vallamai, Santhavasantham, தமிழாயம்”

2013/9/3 Krishna Moorthi <tnkdc...@gmail.com>

ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.

இந்த அன்பருடன் சேர்த்து, பிறருக்கும்.  ஆய கலைகள் அறுபத்து நான்கு என்ற தொடர், ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்/ஏய உணர்விக்கும் என்னம்மை’ என்ற காளமேகத்தின் பாடலில் வருவது.

எனவே, பாடலில் உள்ளதை, கலைகள் ஆயவை அறுபத்து நான்கு என்று அன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்.  கலைகளாக ஆகியவை என்பது பொருள்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

என். சொக்கன்

unread,
Sep 2, 2013, 11:38:32 PM9/2/13
to vall...@googlegroups.com, mintamil, Santhavasantham, தமிழாயம்”
அண்ணா,

கம்பர் என்று எழுத வந்து காளமேகத்தின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கம்பரின் சரஸ்வதி அந்தாதியில் வரும் வெண்பா அது. பின்னர் பி. சுசீலாவின் அருமையான குரலில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது:

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை .. தூய

உருப் பளிங்குபோல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள், இங்கு வாராது இடர்.

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

Bhuvan Vellore

unread,
Sep 2, 2013, 11:59:46 PM9/2/13
to vallamai
அன்புடையோரே, வணக்கம்.
ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?
ஆகா கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.
வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.

ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?

பணிவன்புடன்,
புவனேஷ்வர்

Best Regards,
Bhuvaneshwar Dharmalingam

2013/9/3 என். சொக்கன் <ncho...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Sep 3, 2013, 12:01:28 AM9/3/13
to vallamai, mintamil, Santhavasantham, தமிழாயம்”

2013/9/3 என். சொக்கன் <ncho...@gmail.com>

அண்ணா,

கம்பர் என்று எழுத வந்து காளமேகத்தின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கம்பரின் சரஸ்வதி அந்தாதியில் வரும் வெண்பா அது. பின்னர் பி. சுசீலாவின் அருமையான குரலில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது:

எஸ்ஸு.  காளமேகம் பாட்டு--

வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரேடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய்.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும், கம்பர் பாட்டுதான்.  கவனப் பிழை.  ஒரு பக்கத்தில் வேலையையும் மறுபக்கத்தில் இங்கேயும் மாற்றி மாற்றி செய்துகொண்டிருந்தால் தவறு ஏற்பட்டுவிடுகிறது.  இருந்தாலும் தப்பு தப்புதான்.  சுட்டியதற்கு நன்றி சொக்கன்.

Iyappan Krishnan

unread,
Sep 3, 2013, 12:07:21 AM9/3/13
to சந்தவசந்தம், vallamai, mintamil

2013/9/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும், கம்பர் பாட்டுதான்.  கவனப் பிழை.  ஒரு பக்கத்தில் வேலையையும் மறுபக்கத்தில் இங்கேயும் மாற்றி மாற்றி செய்துகொண்டிருந்தால் தவறு ஏற்பட்டுவிடுகிறது.  இருந்தாலும் தப்பு தப்புதான்.  சுட்டியதற்கு நன்றி சொக்கன்.

ஆராய்ச்சி முனைவரா ஆகாம இருக்கிறதுல இது ஒரு வசதி அண்ணே. தப்புன்னு மனசுக்குப் பட்டதும் மன்னிப்புக் கேக்கனும்னு தோணுது பாருங்க.  உங்க கிட்ட இருந்து எங்களுக்கு  வந்த பல நற்பண்புகளில் இதுவும் ஒன்று.   எங்களுக்கு வழிகாட்டியாய் இருப்பதற்கு நன்றி அண்ணே.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Hari Krishnan

unread,
Sep 3, 2013, 12:10:10 AM9/3/13
to vallamai

2013/9/3 Bhuvan Vellore <bhuvane...@gmail.com>

ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?

எப்படி வேணும்னாலும் கொள்ளலாம் ஐயா.  அது அவங்கவங்க விருப்பம்.  உயர்திரு நாக கணேசனாருக்கு ஆய என்பதில் ‘ஆ’வுக்கு ஒரு அர்த்தம்; ‘ய’வுக்கு ஒரு அர்த்தம்.  ஆய அப்படிங்கற சொல்லைப் படைச்சவரே திருத்தக்க தேவர்.  அவர்கிட்டேந்து கடன் வாங்கிட்டு இன்னிக்கும் வட்டி கட்டிட்டிருக்கான் கம்பன்.

அதனால, விருப்பம் போல அர்த்தம் சொல்லிக்கலாம்.  ஆனா, இந்த தொடர் பயின்று வரும் வெண்பாவில் ‘கலைகள் ஆயவை அறுபத்து நான்கு’ என்பது அன்வயம்.

இதுல பட்டுக்க வேணாம்னு பாத்தேன்.  வாயக் குடுத்து மாட்டிக்கிட்டேன்.  (புவன் ஐயா ஒங்களச் சொல்லலீங்க.)  இப்ப, தான் பிடிச்சதே பிடின்னு ஒரு மூணு வயசுக் குழந்தை வாஆஆ ஆஆன்னு அடம் பிடிச்சு ‘நான் சொல்றத எல்லாரும் ஏத்துக்கற வரைக்கும் ஒத்தி ஒட்டித்தான் ஆவேன்‘னு கையக் கால ஒதச்சுக்கிட்டு கதறப் போவுது.  வேந்தர்களெல்லாம் தொட்டிலை ஆட்றதுக்கு காத்துட்டிருக்காங்க. :))

Hari Krishnan

unread,
Sep 3, 2013, 12:16:26 AM9/3/13
to vallamai

2013/9/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

இப்ப, தான் பிடிச்சதே பிடின்னு ஒரு மூணு வயசுக் குழந்தை வாஆஆ ஆஆன்னு அடம் பிடிச்சு ‘நான் சொல்றத எல்லாரும் ஏத்துக்கற வரைக்கும் ஒத்தி ஒட்டித்தான் ஆவேன்‘னு கையக் கால ஒதச்சுக்கிட்டு கதறப் போவுது.  
இதை

இப்ப, தான் பிடிச்சதே பிடின்னு சம்பந்தமுள்ள ஒரு மூணு வயசுக் குழந்தை 

அப்படின்னு படிச்சுக்க வேணுமாய் வணங்கி வேண்டி கேட்டுக்கொல்கிறேன்.  (மத்தவங்க எழுதறதுல எல்லாம் விடாம க், ச் எல்லாம் திருத்தி கிண்டல் வேற பண்றவர் எழுத்துல உள்ள பிழைகளை பட்டியலிட்டா எடம் போதாது.  அதை நாம ஏன் கண்டுக்கறதில்லன்னா, ‘அதை அவர் அலட்சியப்படுத்துகிறார் என்று பொருள்’ அப்படிங்கற மாதிரி என்னவோ ஒண்ணை வேந்தர் வேற ஒரு இழைல சொல்லியிருந்தாரே, அதே காரணம்தான்னு பொருள்.)

N. Ganesan

unread,
Sep 3, 2013, 10:13:39 AM9/3/13
to vall...@googlegroups.com

On Monday, September 2, 2013 8:59:46 PM UTC-7, bhuvaneshwar.d wrote:
அன்புடையோரே, வணக்கம்.
ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?
ஆகா கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.
வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.

ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?

தமிழ் ஆயம் என்றே புலவர் ஒருவரால் குழு நடக்கிறது. ஆனால், இங்குள்ள ஆய கலைகள் 64 - கலைகள் ஆய 64,
ஆகிய என்று பொருள்படும். கம்பர் பாடலும், பக்தி இலக்கியப் பாடல்களும் கொடுத்துள்ளேன். பார்க்கவும்.

நா. கணேசன்
 
பணிவன்புடன்,
புவனேஷ்வர்

N. Ganesan

unread,
Sep 3, 2013, 10:18:14 AM9/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Monday, September 2, 2013 7:26:41 PM UTC-7, Krishna Moorthi wrote:
இந்தக் கேள்விக்கு பாமரனின் பார்வையில் கம்பரைக் கோடிட்டே பதில் சொல்லலாம் என்று வருகிறேன்.

திரு. அந்தமான் கிருஷ்ணமூர்த்தி,

நீங்கள் சொல்வது சரியென எண்ணுகிறேன். நானும் கம்பர் பாடலைக் காட்டி ஆய = ஆகிய என்னும்
பொருள் கொடுத்துள்ளேன். 

டிஜிடல் கணினி யுகத்தில் எண்ணிறந்த கலைகள் தோன்றுமா என்பது ஐயம்.
எண்^n என்பதில் அடங்கும் என நினைக்கிறேன். எண்^2 என்று கம்பர் போன்றோர்
தொடங்கி வைத்தது சற்று வளரலாம். ஆனால், n = infinity ஆகாது.

Anna Kannan

unread,
Sep 3, 2013, 1:38:00 PM9/3/13
to Vallamai
ஆய என்பது ஆகிய என்பதைக் குறிக்க வேண்டுமானால், ஆய என்பதற்கு முன்னால் 64 கலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆகிய 64 கலைகள் என்பது பொருந்தும்; இங்கே ஆய கலைகள் எனத் தொடங்குவதால், ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருளே அதிகப் பொருத்தம் உடையதாய்த் தெரிகிறது. 

கலைகளின் எண்ணிக்கையைக் குறித்து வினவுகையில் அடிப்படைக் கலை, அதன் கிளைகள் என்ற கண்ணோட்டத்தை நா.கணேசன் முன் வைக்கிறார்.

நடனம் என எடுத்துக்கொண்டால், அதன் ஒவ்வொரு வகையுமே தனித் தனிக் கலைகளே ஆகும்; அவற்றை ஒட்டுமொத்தமாக நடனக் கலை எனக் குறிப்பிடுவது, அதிலிருந்து நாம் எவ்வளவு விலகியிருக்கிறோம் எனக் காட்டும்; இது, நட்சத்திரக் கூட்டத்தை நாம் தொலைவிலிருந்தவாறு ஒற்றை நட்சத்திரமாகக் காண்பதைப் போன்றது.

N. Ganesan

unread,
Sep 5, 2013, 10:22:26 AM9/5/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Tuesday, September 3, 2013 10:38:00 AM UTC-7, அண்ணாகண்ணன் wrote:
ஆய என்பது ஆகிய என்பதைக் குறிக்க வேண்டுமானால், ஆய என்பதற்கு முன்னால் 64 கலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆகிய 64 கலைகள் என்பது பொருந்தும்; இங்கே ஆய கலைகள் எனத் தொடங்குவதால், ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருளே அதிகப் பொருத்தம் உடையதாய்த் தெரிகிறது. 

அவ்வாறு தெரியலையே. தேர்ந்த கலைகள், தெரிந்த கலைகள் என்பது போல் சொல்லவேண்டுமானால், ஆய்ந்த கலைகள் (ஆராய்ந்த கலைகள்) என இறந்த காலப் பெயரெச்சமாய் இருக்கணும்.
 
கலைகளின் எண்ணிக்கையைக் குறித்து வினவுகையில் அடிப்படைக் கலை, அதன் கிளைகள் என்ற கண்ணோட்டத்தை நா.கணேசன் முன் வைக்கிறார்.

நடனம் என எடுத்துக்கொண்டால், அதன் ஒவ்வொரு வகையுமே தனித் தனிக் கலைகளே ஆகும்; அவற்றை ஒட்டுமொத்தமாக நடனக் கலை எனக் குறிப்பிடுவது, அதிலிருந்து நாம் எவ்வளவு விலகியிருக்கிறோம் எனக் காட்டும்; இது, நட்சத்திரக் கூட்டத்தை நாம் தொலைவிலிருந்தவாறு ஒற்றை நட்சத்திரமாகக் காண்பதைப் போன்றது.

கலைகளின் முழுஎண்ணிக்கை 64 (எண்^2) என்று குறிப்பதால் ’கலைகள் ஆகிய 64’  என்று உரை தருகின்றனர்.
ஒவ்வொரு டிஜிட்டல் பாட்டும் ஒரு கலை என தெரியவில்லை. 64 கலையில் பார்த்தீர்களானால்,
பல மில்லியன் யுட்யூப் பாட்டும், பாடல் என்ற கலையில் அடங்குகிறதே.

வடமொழி சார்ந்தவற்றை வடகலை என்றும், தென்மொழி சார்ந்தவற்றை தென்கலை என்றும் சொல்கிறோம்.
ஆண்களின் கலை யாவும் ஆண்கலை, பெண்களின் கலை யாவும் பெண்கலை. உலகில் ஆணும், பெண்ணும்
பல பில்லியன்கள் இருக்கலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 5, 2013, 10:41:04 AM9/5/13
to vall...@googlegroups.com

On Tuesday, September 3, 2013 10:38:00 AM UTC-7, அண்ணாகண்ணன் wrote:
ஆய என்பது ஆகிய என்பதைக் குறிக்க வேண்டுமானால், ஆய என்பதற்கு முன்னால் 64 கலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆகிய 64 கலைகள் என்பது பொருந்தும்; இங்கே ஆய கலைகள் எனத் தொடங்குவதால், ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருளே அதிகப் பொருத்தம் உடையதாய்த் தெரிகிறது. 

ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருள் வரவேண்டும் என்றால் “ஆய கலைகள் 64” என்று பாடமாட்டார்கள்.
ஆய் கலைகள் என்று பாடுவர். கொல்களிறு, சொல்பாடல் (சொல்கிற பாடல்), ... 

DEV RAJ

unread,
Sep 5, 2013, 12:53:32 PM9/5/13
to vall...@googlegroups.com
On Thursday, 5 September 2013 20:11:04 UTC+5:30, N. Ganesan wrote:
ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருள் வரவேண்டும் என்றால் “ஆய கலைகள் 64” என்று பாடமாட்டார்கள்.
ஆய் கலைகள் என்று பாடுவர். கொல்களிறு, சொல்பாடல் (சொல்கிற பாடல்), ... 

கரீட் நைனா !
நச்சுனு இத்த ஸொல்றா மாரி
ஸெங்கண் பத்தியும் கரீட்டா
ஸொல்லு வாதாரே. எம்மா
நேரம் ஸும்மா குந்திகினு...

தேவ்

தேமொழி

unread,
Sep 5, 2013, 12:54:52 PM9/5/13
to vall...@googlegroups.com

tribunal = தீர்ப்பாயம்
என்பதில் வருவது போன்று மன்றம் சொன்ன தீர்வு, அதாவது, அறிஞர்களின் முடிவான கூற்றுப்படி 64 கலைகள் என்ற பொருளில் குறிப்பிடப் பட்டிருக்கலாம். 

..... தேமொழி

DEV RAJ

unread,
Sep 5, 2013, 1:43:44 PM9/5/13
to vall...@googlegroups.com
ஆகும் - ஆம்
போகும் - போம்

வேகும் - வேம்: 
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும்; காணின் வேம் நயனமும்.
                                               - கம்ப ராமாயணம்

இதேபோல் ஆகிய - ஆய

தேவ் 

N. Ganesan

unread,
Sep 6, 2013, 7:43:27 AM9/6/13
to vall...@googlegroups.com

On Thursday, September 5, 2013 9:54:52 AM UTC-7, தேமொழி wrote:

tribunal = தீர்ப்பாயம்
என்பதில் வருவது போன்று மன்றம் சொன்ன தீர்வு, அதாவது, அறிஞர்களின் முடிவான கூற்றுப்படி 64 கலைகள் என்ற பொருளில் குறிப்பிடப் பட்டிருக்கலாம். 

..... தேமொழி

தமிழாயம் என்றால் தமிழை ஆயும் குழு. 
தீர்ப்பாயம் என்றால் வழக்கை ஆய்ந்து தீர்ப்பு வழங்கும் குழு. தீர்ப்பாயம் 64 கலைகளும் அறிகிலார்.

நா. கணேசன்

On Thursday, September 5, 2013 7:41:04 AM UTC-7, N. Ganesan wrote:

வேந்தன் அரசு

unread,
Sep 6, 2013, 7:50:01 AM9/6/13
to vallamai, மின்தமிழ்

5 செப்டம்பர், 2013 10:22 AM அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

. உலகில் ஆணும், பெண்ணும்
பல பில்லியன்கள் இருக்கலாம்.

ஓ அப்படியா? 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Sep 6, 2013, 7:59:20 AM9/6/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Thursday, September 5, 2013 10:43:44 AM UTC-7, DEV RAJ wrote:
ஆகும் - ஆம்
போகும் - போம்

இவை போன்றவற்றின் தாது ஓரெழுத்துநெடில்.

ஆ- என்னும் தாதில் பிறப்பவை: ஆம்:ஆகும்.
போ -> போம்:போகும்
சா -> சாம்:சாகும்.
வே -> வேம்:வேகும்.
நோ -> நோம்:நோகும்
ஈ -> ஈம்:ஈகும்

ஓரெழுத்துநெடிற்பின் கப்பிரத்தியம் சேரும். சேராமலும் இயங்கும்.

நா. கணேசன்
 
வேகும் - வேம்: 

தொடர்பான பழைய மடலாடல் ஒன்று:

On Tuesday, September 3, 2013 7:00:11 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

3 செப்டம்பர், 2013 12:11 AM அன்று, Bhuvan Vellore <bhuvane...@gmail.com> எழுதியது:
அன்புடையோரே, வணக்கம். 

ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?

ஆக கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.

வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.

ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?

Perhaps, this term was coined to collectively represent those arts expected to be mastered by those present in an assembly of learned people.

PhD படிக்க coursework பண்ணவேண்டும். அதை PhDக்கான coursework என்று சொல்லாமல் PhD coursework என்று சொல்கிறோமல்லவா? அது போல ஆயத்துக்கான கலைகள் என்பதை ஆய கலைகள் என்று சொல்கிறோம் போலும்.

வேந்தன்> ஆயக்கலைகள் என்றால் நீங்க சொல்லுவது பொருந்தலாம்

அவர்கள் ஆய கலைகள் என்றுதான் கேட்டார்கள்

ஆ- என்னும் தாது தரும் ஆய (பொருள்: ஆகிய) என்னும் சொல் 
‘ஆய கலைகள் 64’ என்னும் கம்பர் பாடிய கடவுள் வாழ்த்தில்.
இது வினைச்சொல்.

பெயர்ச்சொல் ஆயம் என்றால் ஆயக்கலைகள் என்று நீங்கள்
சொல்வதுபோல் ஆகணும்.

இதற்கு சிறந்த உதாரணங்கள் சமண இலக்கியங்களில் இருந்து
பானுகுமார் எழுதியுள்ளார். வள்ளுவர் குறளில் ஆபயன் = ஆகின்ற பயன் = விளையுள் (மகசூல்).
இளங்கோ அடிகளின் சிலம்பில், ஆப்பயன் = ஆனைந்து.  (ஆவின் பால் முதலியன)

குறள் உரை மாறுபாடு பரிமேலகழரால் நேர்வது இந்த ஒற்று இல்லாமையை அவர் கண்டுகொள்ளாததால் 
தான். ஆப்பயன், ஆபயன் - மாறாட்டு பற்றி விரிவாக குழும மடல்களில் இருக்கிறது.

ஆம்: ஆகும், ஆய:ஆகிய - இந்த க சேரும் கப்பிரத்தியம்
பாலன்: பாலகன், தீபா:தீபிகா என்று வடமொழியில் இயங்குகிறதா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 6, 2013, 8:10:23 AM9/6/13
to vall...@googlegroups.com

On Friday, September 6, 2013 4:50:01 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

5 செப்டம்பர், 2013 10:22 AM அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
. உலகில் ஆணும், பெண்ணும்
பல பில்லியன்கள் இருக்கலாம்.

ஓ அப்படியா? 

அந்தக் காலத்தில் 84 லட்சம் யோனிபேதம்(ஸ்பீஸிஸ்) என்பது சமணர்கள் கோட்பாடு.
இதனை பல மதங்கள் உள்வாங்கின - உ-ம்: சம்பந்தர், லோகாயதம், ...
ஆறறிவு ... வகைப்படுத்தலில் மிக விருப்பம் உடையவர்கள் சமணர்கள்.
ஐந்திர வியாகரணம் அவர்களுடையது. அது முற்றிய தொல்காப்பியர்
ஓரறிவில் இருந்து ஆறறிவை விளக்குவதால் அவர் சமணர் என்று தெரிகிறது.
தமிழின் பெரும்பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். 

நா. கணேசன்

DEV RAJ

unread,
Sep 6, 2013, 12:16:01 PM9/6/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆகிய ‘ஆய’ ஆவதை இடைக்குறை
என்று சொல்லலாமா ?

தேவ்

DEV RAJ

unread,
Sep 6, 2013, 12:21:47 PM9/6/13
to vall...@googlegroups.com
On Friday, 6 September 2013 17:40:23 UTC+5:30, N. Ganesan wrote:
 அந்தக் காலத்தில் 84 லட்சம் யோனிபேதம்(ஸ்பீஸிஸ்) என்பது சமணர்கள் கோட்பாடு.

இப்படியே சொல்லி ஓட்டக் கூடாது;
எந்த நூலில், அதன் காலம் என்ன
அனைத்தையும் சொல்லி விளக்க
வேண்டும்

தேவ்

Nagarajan Vadivel

unread,
Sep 6, 2013, 12:22:25 PM9/6/13
to vallamai
கவின் கலைகள் நுண்கலைகள் போல் வாழ்வியலுக்கென தொகுத்த கலைகள் ஆயகலைகள்

(1) singing
(2) instrumental music
(3) dancing
(4) painting
(5) forehead adornments
 (6) making decorative floral and grain designs on the floor
(7) home and temple flower arranging
(8) personal grooming
(9) mosaic tiling
(10) bedroom arrangements
(11)creating music with water
(12) splashing and squirting with water
(13) secret mantras
(14) making flower garlands
 (15) head adornments
(16) dressing
(17) costume decorations
(18) perfumery
(19) jewelry making
(20) magic and illusions
(21) ointments for charm and virility
 (22) manual dexterity
(23) skills of cooking, eating and drinking
(24) beverage and dessert preparation
 (25) sewing
(26) embroidery
(27) playing vina and drum
(28) riddles and rhymes
(29) poetry games
(30) tongue twisters and difficult recitation
(31) literary recitation
(32) drama and story telling
(33) verse composition game
(34) furniture caning
(35) erotic devices and knowledge of sexual arts
(36) crafting wooden furniture
(37) architecture and house construction
(38) distinguishing between ordinary and precious stones and metals
(39) metal-working
(40) gems and mining
(41) gardening and horticulture
 (42) games of wager involving animals
 (43) training parrots and mynas to speak
(44) hairdressing
(45) coding messages
(46) speaking in code
(47) knowledge of foreign languages and dialects
(48) making flower carriages
(49) spells, charms and omens
(50) making simple mechanical devices
(51) memory training
(52) game of reciting verses from hearing
(53) decoding messages
(54) the meanings of words
(55) dictionary studies
(56) prosody and rhetoric
(57) impersonation
(58) artful dressing
(59) games of dice
(60) the game of akarsha (dice board game)
61) making dolls and toys for children
(62) personal etiquette and animal training
(63) knowledge of dharmic warfare and victory
(64) physical culture.

ஆயகலைகளின் பட்டியல் சுட்டும் கருத்து வாழ்வியலுக்கான கலைகள் என்பதே

ஆராய்ச்சிக் குஞ்சு

--

DEV RAJ

unread,
Sep 8, 2013, 10:57:25 AM9/8/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்...

கேசவா என்ன இடர் ஆய எல்லாம் கெடும்

தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages