கணியாமூர் சின்னசேலத்தின் அருகே உள்ள கிராமம். கணியாமூரைச் சில செய்தியாளர்கள் கனியாமூர் என எழுதுவதும் பார்க்கிறோம்! உண்மையில், பழம் என்கிற கனிக்கும் கணியாமூர்ப் பெயருக்கும் ஒரு தொடர்புமில்லை. சங்க இலக்கியம் முதலாக, மூன்று பெரிய மரங்கள் “கணி” என்ற சொல்லுடன் வழங்குகின்றன. இது பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள வழக்கம். சோதிடன் வாய்க் கூற்று போல, கணிவாய்ப் பல்லி, கணிவாய் வேங்கை எனச் சங்க நூல்களில் தமிழர் சோதிட நம்பிக்கை தெரிகிறது. கணியன் கணிப்பது போல, ஆண்டுதோறும், வசந்த காலத்தில் பூக்கும் மரங்கள் இவை. பின்னர், இந்த மூன்று கணி மரங்களும் மூன்று பெருந்தெய்வங்களுடன் தொடர்புபடுத்துவதும் இலக்கியங்களில் காண்கிறோம்.
(1) கணிகொன்றை:
-------------------
கணிகொன்றை (கணிகொன்ன, Indian laburnum) :
https://youtu.be/Tmg92EcH9X4வருடப் பிறப்பாகிய சித்திரை 1, சித்திரை விஷு சித்திரைக்கணி என கொன்றைப் பூவினாலே வழங்குகிறது. ஆண்டுதோறும் கணியன் கணிப்பது போல, பூக்கும். மேட ராசியிலே சூரியன் விழுங்காலம், விஷு. மேஷ விஷு சேரநாட்டில் சித்திரைக்கணி என்ற திருவிழா. ஆண்டுத் தொடக்கம். வருடத்தில் நான்கு விஷுக்கள் விசேஷம் ஆனவை.
கணிகொன்றை - கேரள ராஜ்யபுஷ்பம்,
https://www.artmajeur.com/en/anjali-gorg/artworks/8102332/kanikonnahttps://ekatvacollections.com/kerala-saree/gold-tissue-saree-with-kanikonna-print-ek-71489https://youtu.be/p9Mx5dxgHUw கணிக்கொன்னெ பாட்டு.
https://www.jeyamohan.in/164621/ ஐயப்ப பணிக்கர்
கொன்றை எரியில் இட்ட பொன் ஒக்கும் - குமரகுருபரர். கொல்- (கொல்லன்), >> கொன்றை. தங்கக் கடுக்கன் போன்ற புழற்காய் காய்க்கும். எனவே, கடுக்கை என்றும் சங்க நூல்கள் இத்தாவரத்தைச் சொல்லும். ‘பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை நீடிய சடையொடு ஆடா மேனிக் குன்றுறைத் தவசியர் போல’ - இதனால் தான் தவசி சிவபிரானுக்குக் கொன்றை உரித்தாயிற்று.
வள்ளி மௌவனீள் வயலைதுப் பிலதைகண்
மலர்விரி கணிகொன்றை
கள்ள வஞ்சிநா கத்தினுட் டந்நிலக்
கடிமர மொரீஇமூன்றும்
நள்ள மீப்படர்ந் தொருவழிக் கோத்திர
நண்ணினார் தமைநீவி
ஒள்ளி யோர்ப்புணர் மாதர்போன் றுறுவள
மொருமருங் குளதாமால்.
http://tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=107&pno=90https://www.suyaanthan.com/2020/05/blog-post_8.htmlநாஞ்சில் நாட்டில் கார்காலத்தில் கொன்றை மலர்தலை அறிந்தவர் நம்மாழ்வார்.
https://www.jeyamohan.in/108399/ தென்மேற்குப் பருவமழை காரணமாக, பிறக்கும் கார்காலம்.
இரண்டு பருவ மழைகளின் இயற்கைப் பெருநிகழ்வுகளால் எது கார்காலத் தொடக்கம் என்ற கேள்வி சங்க இலக்கியத்திலே உண்டு. நன்கு ஆராயத் தக்கது. கொன்றை, வேங்கை, முல்லை, ... போன்றன பூக்கும் காலம் சித்திரை-வைகாசி. எனவே, இத் தாவரங்களைக் குறிப்பிட்டு, கார்காலம் எனப் பாடும் பழைய பாக்களிலே சித்திரை-இளவேனிலை மனத்தில் கொண்டுள்ளனர் எனச் சொல்லலாம். தொல்காப்பியர் காரும் மாலையும் முல்லை என்றார். அவரும், நம்மாழ்வார் போன்றோரும் தென்மேற்குப் பருவமழையின் ஆதிக்கம் கொண்ட சேர நாட்டைச் சேர்ந்தவர்கள். நச்சினார்க்கினியர் கார்காலம் ஆவணியில் தொடக்கம் என்பது மெஜாரிட்டி ஊர்களில் மழை (NE Monsoon) காரணமாக. ஆனால், பழைய பாடல்களைத் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைப் பெய்யும் பகுதிகளில் பாடியன என வரையறுத்து அறிந்துகொள்ள அப்பாடல்களில் பேசப்படும் தாவரங்கள் கார்காலத்தில் பூக்கத் தொடங்கிவிட்டன எனச் சொல்ல இயலும். இந்தப் பருவமழை வேறுபாடு சங்க இலக்கியங்களில் தெளிவாக உள்ளது. நம்மாழ்வார் பாசுரம், அதன் வியாக்கியானம் பார்க்கலாம். இது, சித்திரை-வைகாசியின் கார்காலம். ஏனெனில் கொன்றை. சித்திரைக் கணி, வேங்கை பூக்கும் காலம் ஜோசியன் (கணியன்) போல, ஆண்டுதோறும் டாண் எனத் தொடங்கும்.
தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில், அகத்திணை இயலில் வரும் சூத்திரம்
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
பனிஎதிர் பருவமும் மொழிப
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”
என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் தொல்காப்பியர் கூறுவார்.
https://www.thamilasiriyar.xyz/2022/05/blog-post_65.htmlசேர நாடு பெரும்பாலும் முல்லை நிலம். “காரும் மாலையும் முல்லை”
என்ற வரையறையும், கார் காலத்தில் பூக்கும் மலர் கொன்றை எனும் பாடல்களையும்
ஆராய்ந்தால், கார் என்பது நச்சினார்க்கினியர் போன்றோர் கூறும் ஆவணி மாதமா?
இல்லை, கொன்றை மலரும் சித்திரையா?
“காரும் மாலையும் முல்லை" - தொல்காப்பியம்.
முல்லையும், கொன்றை போலவே சித்திரை, வைகாசியில் மலர்வது.
https://www.flowersofindia.net/catalog/slides/Common%20Jasmine.htmlBloom Time and Mature Plant Characteristics
White jasmine blooms from spring until fall and goes into a rest period in October, continuing through March. A mature white jasmine grows 20 to 30 feet with a 7- to 15-foot spread. These deciduous to semi-evergeen shrubs produce small, white or pink fragrant flowers about 1 inch across with green leaves that have 5 to 9 leaflets, each one about 2 1/2 inches long. White jasmine has a sprawling or trailing growth habit.
https://homeguides.sfgate.com/white-jasmine-bloom-45973.htmlFlowering: During the hot weather (April-May) the tree becomes most conspicuous with its pendulous inflorescence of golden yellow, mildly scented flowers. The tree remains leafless at the commencement of flowering and the end of the flowering season; the leaves start to appear.
from
https://www.ugaoo.com/knowledge-center/tree-saga-cassia-fistula-the-golden-shower-tree-amaltas/கொன்றை மலர்வது இளவேனில் காலம் (சித்திரை-வைகாசி). இதனைக் கார்காலம் என சேர நாட்டுக்குச் சொல்லலாம்.
Cassia fistula, commonly called golden shower tree, is a small to medium-sized tree that typically grows to 30-40' tall in an upright form often open at the top. It is native to India, Malaysia and Southeast Asia. It is well-known for producing a show-stopping bloom of yellow flowers in May-June/July.
https://www.missouribotanicalgarden.org/PlantFinder/PlantFinderDetails.aspx?taxonid=280435#கார்காலம் இரண்டு பருவமழைகளை வைத்தும், கொன்றை மலருங் காலத்தை வைத்தும் வினா எழுப்பும் குறுந்தொகைப் பாட்டு:
குறுந்தொகை 148, இளங்கீரந்தையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன போது ஈன் கொன்றை
குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின் 5
கனவோ மற்றிது வினவுவல் யானே.
பாடல் பின்னணி: பருவங்கண்டு வருந்திய தலைவியிடம் ‘இது பருவம் அன்று’ எனத் தோழி கூற, ‘இது கார்ப்பருவம் தான்’ எனத் தலைவி கூறியது.
அகநானூறு 364: இப்பாட்டும் முல்லை, கொன்றை பூக்கும் சித்திரையைக் கார்காலம் என்கிறது:
நீடிணர்க் கொன்றை கவின்பெறக் காடுடன்
சுடர்புரை தோன்றிப் புதறலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக்
சரி, கணிகொன்றையும், முல்லைக் கொடியும் மலர்காலம், தொல்காப்பியர் கூறும் கார்காலத்தை விளக்குவது சங்கப் பாடல்கொண்டு பார்த்தோம். கொன்றை, வேங்கை இரண்டும் ஒரே தாவரக் குடும்பம்.
சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில், மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில், அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச் சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பது தெரிகிறது. சகாப்த முறை, 12 ராசிகள் வடக்கே இருந்து கொணர்ந்ததால், சங்க காலச் சேரன் “ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” என அழைக்கப்பட்டிருக்கிறான். தொல்காப்பியத்திலே 12 மாதப் பெயர்களும், 27 நட்சத்திரப் பெயர்களும் எந்தெந்த எழுத்தில் முடியும் என ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது.
(2) கணிவேங்கை (Malabar Kino):
------------------
காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப்
பாவமை இதணம் ஏறிப் பாசினம்
வணர்குரல் சிறுதினை கடியப்
புணர்வது கொல்லோ, நாளையும் நமக்கே? - கபிலர்
நற்றிணை 373
https://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=21&song_no=373 தமிழரின் புத்தாண்டு மலர் வேங்கை மலர்!!!
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை - மலைபடுகடாம்.
முதல் நாளில் பூத்த பொன்னைப் போன்ற வேங்கை மலர் என்று பத்துப்பாட்டு நூல் இயம்புகிறது.
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால் - பழமொழி நானூறு.
புத்தாண்டு காலத்தில் மட்டும் தான் கணி வேங்கை பூக்கும். அதனால் தான், இதற்கு ‘கணி’வேங்கை (உவமத்தொகை) என்று பெயர் வந்தது!!!!
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த பெருநிலம் அருளின் முன்அருளி,
அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும் அளந்த எம் அடிகள்தம் கோயில்,
கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில் குறவர்தம் கவணிடைத் துரந்த,
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா! மட நெஞ்சே! - பெரிய திருமொழி
பண் மலர் பவளச் செவ் வாய்ப்
பனி மலர்க் குவளை அன்ன
கண் மலர்க் கொடிச்சிமார்க்குக்
கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி.
புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று. வானத்
தாரகை தாவும் அன்றே! - கம்பன்
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர்
கருத ஒணா கணி வேங்கை ஆகி ... கொடிய காட்டிடையே வாசம் செய்யும் வேடர்களுக்கு
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர்
களவினால் புணர் கந்த வேளே ... திருப்புகழ்
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து
காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து
காழி பதி மேவி உகந்த பெருமாளே
செங்குன்றாபுரத் திருப்புகழ்:
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
அன்றுன் பால்வர மோகம தாவுற அணைவோனே
சிரவை ப.வெ. நா. உரை:
https://groups.google.com/g/santhavasantham/c/xpqBksKLbtQ/m/2gRexmBuAwAJஏராளமான பாடல்களில் கணி வேங்கை என திருப்புகழ் போன்ற முருகன் சம்பந்தமான நூல்களில் செய்திகள் வரும்.
தினைப்புனம் காக்கும் வள்ளி, கணி வேங்கை ஆகிக் காதலித்தவன் அவன். கணிகொன்றை, வில்வம் சிவனுக்கானவை.
கணி யாம்/யா மரம் - கணியாமூர் பாலைநிலச் செல்வி கொற்றவையின் மலர். வாகை போல வெண்மையான நிறம்
யாம் (சால மரம்) பூக்கும் பூக்கள்.
கணி (Piṅkalam_sūtra 3278) (2 items under MAIN)
“வேங்கை மரமும், மருதமுங் கணியெனல்.” மருத நிலம் :: கணி < அகணி.
வடக்கே, வேங்கை மரத்துக்கு விஜய் சால் (சால மரம்) என்ற பெயரும் உண்டு.
(3) கணியாம் (கணி-யா மரம்):
-----------------------
கணிகொன்றை, கணிவேங்கை போலவே, இன்னொரு மரம் இளவேனில் காலத்தில் பூத்துப் பொலிவது. இது யா/யாம் எனச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படும். யா- யால் > சாலம் என்று வடக்கே வழங்குகிறது. ராஜ சாலம் = Shorea robusta. தென்னாட்டில் இன்று இல்லை. கோத்தும்பி, அகில், சாலம், ... எல்லாம் வடக்கே மட்டும் தான். சால மர வகைகளில் சில மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கிறது. வெண்மை நிற மயமான பூக்கள், கணிகொன்றை, கணிவேங்கை, கணியாஅம் மரத்திலும் உண்டு. கொன்றை பொன்னார் மேனியன் சிவனுக்கு ஆனது. வேங்கை தங்கவேல் முருகனுக்கு ஆனது. வாகை போல, வெண்ணிற மலர்கள் பூத்து, மரத்தையே மறைத்துக் காட்டும் கணியாஅம் (= Shorea Robusta, சால மரம்) மரம் அம்பாளுக்கு ஆனது. ஆ மலரை விரும்பிச் சூடுபவள் பார்வதி எனத் தேவாரம் பேசும். யா மரம் பாலைத் திணையின் மரம். பாலை நிலத்தின் செல்வி அல்லவா கொற்றவை? எனவே, கணியா(/ம்) மரம் உமைநங்கைக்கு உகந்தது என்பர் தமிழ்ப்பெரியோர்கள். இந்த கணியாஅம் (சாலம்) மரத்தினால் பெயர் பெற்ற ஊர் கணியாமூர். இது சின்னசேலம் அருகே உள்ள கிராமம். இப் பெயர் சில ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழர் வாழ்வியலில் புழங்கும் பெயர்.
‘யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்
ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே’’ (உயிர்ம. 27)
என்பது தொல்காப்பியம். (95). அதாவது, யா, பிடா, தளா >> யாம், பிடாம், தளாம் என்றும் வரும். தொல்காப்பிய நூற்பா விதியை, கணியாமூர், ஆமூர் போன்ற ஊர்ப் பெயர்களில் காண்கிறோம்.
சித்திரையில் பூத்துக் குலுங்கும் யா/யாம் மரம் : கணியாம் மரம்
https://www.flickr.com/photos/geetaarun/8627781779/in/photostream/https://www.flickr.com/photos/geetaarun/8627782491/in/photostream/https://www.flickr.com/photos/geetaarun/8628889914/in/photostream/https://en.wikipedia.org/wiki/Shorea_robustahttps://www.sundaytimes.lk/170430/news/real-sal-blooms-thrive-despite-the-cannon-ball-238746.htmlமேலும் அறிய:
நூற்றுக்கணக்கான யா மர வகைகள் இந்தோனேசியாவில் உண்டு. எனவே, யாவகம்/சாவகம் >> ஜாவா.
https://groups.google.com/g/vallamai/c/yffWm0H02dQ/m/OgX9IN_jAAAJகருமரம் (கம்மரம் - கன்னடத்தில்), கராச்சி, காராச்சா என அழைக்கப்படுவது அஞ்சன மரம். இந்த ஆச்சா மரத்துக்குப் பூக்கள் சிறப்பே இல்லை. எனவே, இது கணியா(/ம்) மரம் அன்று.
https://en.wikipedia.org/wiki/Hardwickia“The tiny, white/greenish-yellow coloured flowers are inconspicuous and are easily overlooked.[4]”
சங்க இலக்கியத்தில் யா மரங்கள் (Shorea robusta, சாலம்) (wrote in 2010)
https://groups.google.com/g/santhavasantham/c/ZMBFfQ7GvmI/m/Hw2nKtG4QKEJமலைபடு கடாம் - பாடல் முருகனுக்கு விசேடமான கடம்பம் பூவையும், அம்பிகைக்கு விசேடமான யாமரத்தின் பூவையும் அழகாக வர்ணிக்கிறது. இவ்வரிகளில் உள்ளது கருமரம்/காராச்சா அல்ல (அதற்குப் பூ இல்லை).
“தேம்பட மலர்ந்த மராஅ மெல்லிணரும்
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமர் கண்ணி
தரங்கு மரல் நாரில் பொலியச் சூடி” (மலைபடு கடாம்)
இங்கே, இணர் என்று தொங்கும் மாலை சொல்லப்படுவதால், மராஅம் = கடம்பு.
ஒண்முறி யா என்பது ஒள்ளிய தளிர்களைக் கொண்ட யா மரப் பூக்கள். அதாவது, சால மரம். கணியாம் - எனப் பூத்துக் குலுங்குவதால் அழைக்கும் மரம்.
(பிரதி பேதம்: ஆச்சாவிற் பூவும் - யாம் பூவும். நச்சர் உரை. உவேசா, பத்துப்பாட்டு,)
428. தேன் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் -தேனுண்டாக மலர்ந்த மராவினது மெல்லிய பூங்கொத்தும்,
429. உம்பல் அகைத்த ஒள் முறி யாவும் - யானைமுறித்த ஒள்ளிய தளிர்களை யுடைய யாம் பூவும், (பி-ம்: ஆச்சாவிற் பூவும்).
கணி வேங்கை போலவே. கணி யாஅம் மரத்துக்கும் திராவிட மொழி பேசும் மக்களின் கலியாணங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு. த்ராவிட ஜனங்களிடம் இருந்து, முண்டா மொழி மக்களும் சால் மரத்தைத் திருமணங்களுடன் இணைக்கின்றனர். திரவுபதி முறமு இந்திய ஜநாதிபதி ஆகியுள்ள பழங்குடிப் பெண்மணி.
https://www.thehindu.com/life-and-style/food/Where-the-sal-flowers-bloom.../article14644887.ece"In the hills and forests of Jharkhand, Sarhul marks the beginning of the New Year. It is celebrated by the Oraon, the Munda, the Ho, the Santhal, and by us, the Birjia. Falling on the third day of the moon in the month of Chaitra, Sarhul marks the advent of spring, and the word means the worship of the sal tree. " (கணியாம் மரம் பூக்கும் இளவேனில் - புத்தாண்டின் தொடக்கம்)
http://www.ecoindia.com/flora/trees/sal-tree.html“Tribal people give marriage invitation in the form of folded Sal leaves, with the little bit of turmeric and rice inside it.
Cultural Importance : Sal tree is worshiped among the Buddhist and Hindus in India. It is mentioned in many scriptures that the Buddha was born and died under the Sal tree. A branch of the tree bend down to support his mother Maya and as soon as he held on the tree, the baby appeared. Sal tree has special significance in the festivals and marriages of Adivasi. A pole of the Sal tree is considered very important and unless the bridegroom sits on the altar made of tree of Sal, the marriage has no meaning. It also holds great value in the lives of the indigenous populance of Chotanagpur plateau. It is the main attraction of the festival of Sarhul, which means Sal Blossoms Festival. The whole festival revolves round the Sal tree.”
குறுகர் என்னும் குறிஞ்சி நில, த்ராவிட மக்கள் (வட இந்தியாவில்), அவர்கள் கொண்டாடும் கணியாஅம் மரம், அதனுடன் கொண்டாடும் கலியாணத் திருவிழா:
https://en.wikipedia.org/wiki/Kurukh_peoplehttps://archive.org/details/cu31924021569128/page/144/mode/2up?q=oraons “ XII THE MARRIAGE OE THE GODS
The Oraons of Bengal worship the Earth as a goddess, and annually celebrate her marriage with the Sun-god Dharme at the time when the sal tree is in blossom. The ceremony is as follows. All bathe, then the men repair to the sacred grove (sarna), while the women assemble at the house of the village priest. After sacrificing some fowls to the Sun-god and the demon of the grove, the men eat and drink. " The priest is then carried back to the village on the shoulders of a strong man. Near the village the women meet the men and wash their feet. With beating of drums and singing, dancing, and jumping, all proceed to the priest's house, which has been decorated with leaves and flowers. Then the usual form of marriage is performed between the priest and his wife, symbolising the supposed union between Sun and Earth. After the ceremony all eat and drink and make merry ; they dance and sing obscene songs, and finally indulge in the vilest orgies. The object is to move the mother earth to become fruitful." Thus the Sacred Marriage
of the Sun and Earth, personated by the priest and his wife, is celebrated
as a charm to ensure the fertility of the ground; ”
கொன்றை, வேங்கை, யாம் மரங்கள் இளவேனில் காலத்தில் பூப்பன. கலியாண காலத்தின் தொடக்கம். எனவே, கணிகொன்றை, கணிவேங்கை, கணியாஅம் எனப் பழந்தமிழர் அழைத்தனர்.
நா. கணேசன்