அன்புடை கணேசனார் அவர்களுக்கு
எனது பொருட்பிழையை திருத்தியமைக்கு நன்றி.
முன்பு இட்ட தகவலை வெட்டி ஒட்டும் போதுகூட முன்னர் செய்த பிழையை கவனிக்க தவறினேன்.
கோங்கு என்பது வேறு மரம். சால் வகை அல்ல. கொங்கை என்ற சொல் இந்தக் கோங்கு மரப்பூவால் வைத்தனர்.
சால மரம் என்பது யா மரம். பெரு வறட்சியிலும் பட்டைகளில் நீர் இருக்கும். யானைகள் உறிஞ்சி அந்த நீரைக் குடிக்கும். பாலைத் திணை செய்யுள்களில் காண்க.
--------------
கோங்கு - இலவ மர வகைகள். Caung trees. They are not shorea ( yaa in Sangam, saal in Indo-Aryan languages) trees.
கோங்குக்கு கணிகாரம்/கர்ணீகாரம் என்பது ஒரு பெயர்.
கணிகாரம் kaṇikāram
, n. < karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5).
கோங்கிலவு kōṅkilavu
, n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)
கோங்கு kōṅku
, n. 1. Common caung, 1. tr., Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Iron-wood of Malabar, Hopea parviflora; நீர்க்கோங்கு. (L.) 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See முள்ளிலவு. (L.)
நான் சொல்ல வந்தது யாதெனில், பரவலாக இந்த சால மரம் எனும் ஷொரியா ரோபஸ்டா வெண்கோங்கு இனத்தை சார்ந்தது எனும் தாவிரவியல் செய்தி. எனது சொற்கள் இந்த செய்தியை சொல்ல தவறியதற்கு மன்னிக்கவும்
Common name: Malabar Ironwood, White Kongu, Hopea • Kannada: Bogi mara, Bovu Mara, Kiralbhogi, Sannele Bogi • Malayalam: Urippu, Irumbogum, Kongu, Thambagam, Iripu • Tamil: Irubogam, Pongu, Vellaikongu , வெள்ளை கோங்கு எனும் வெண்கோங்கு, இருபோகம்
Botanical name: Hopea parviflora Family: Dipterocarpaceae (Sal family)
தாங்கள் குறிப்பிடும் Hopea wightiana வும் சால மர வகையை சார்ந்த்தே. இதன் இன்னொரு பெயராக Hopea ponga
Common name: Ponga • Kannada: ಹೈಗ haiga • Konkani: पाव pav • Malayalam: ഇലപ്പൊങ്ങ് ilappong, ഇരുന്വകം irunvakam, കന്വകം kanvakam • Marathi: कवशी kavshi • Tamil: கோங்கு konku
Botanical name: Hopea ponga Family: Dipterocarpaceae (Sal family) Synonyms: Artocarpus ponga, Hopea wightiana
இந்த கோங்கு வகையை சாராத மற்றொரு மரத்திற்கும் கோங்கு என்ற பெயர் வழக்கத்தில் உண்டு. இது சால வகை அல்ல.
Common name: Ceylon Cherry • Malayalam: അട്ടനാറിപ്പൊങ്ങ് attanaripongu, ഇരട്ടാനി irattani, മുട്ടക്കൊങ്ങ് muttakkon, നെയ്ക്കമ്പകം naikambagam,നായ്ത്തമ്പകം naithambagam, രെട്ടിയാൻ rettiyan • Marathi: ढाका dhaka, कौला kaula, कोगल kogal • Tamil: முட்டைநாரி கோங்கு muttainari kongu, பாலன்கச்சி palankacchi
Botanical name: Prunus ceylanica Family: Rosaceae (Rose family)
மேலும் தாங்கள் தரும் Cochlospermum gossypium என்பது காட்டு பருத்தி. அது பிக்ஸ்ஸேஸி Bixaceae (Annatto family) எனும் தாவிர குடும்பத்தை சார்ந்த்து. நல்ல பருத்தி - நூல் நூற்கும் பருத்தி -மால்வேஸி இனத்தை சார்ந்தது- Malvaceae (Mallow family)
முள்ளிலவு என்பது - Common name: Silk Cotton Tree, Kapok Tree • Hindi: शाल्मली Shalmali, सेमल Semal • Manipuri: Tera • Assamese: Dumboil • Tamil: Sittan, Sanmali • Malayalam: Unnamurika • Nepali: सिमल Simal Botanical name: Bombax ceiba Family: Bombacaceae (baobab family), Synonyms: Salmalia malabarica. இவண் சால்மாலியா மலபாரிகா எனும் மாற்று பெயர் தொடர்பை தந்தாலும், பின்னர் இது வேறு குடும்பத்தை சார்ந்ததாக கண்டு மாற்றப்பெற்றது.
இவை வெவ்வேறு தாவிர குடும்பத்தை சார்ந்தது
எனவே சாலவிருக்ஷம் கோங்கு வகையை சார்ந்த ஒரு மரம் என்பதை தாவிரவியல் ரீதியில் குடும்ப இனத்தின் பெயரால் தவறாக குறித்துவிட்டேன். மன்னிக்கவும்.
-----Original Message-----
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 30 August 2017 19:30
To: மின்தமிழ்
Cc: vall...@googlegroups.com; thami...@googlegroups.com
Subject: Re: [வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை
On Tuesday, August 29, 2017 at 11:14:03 PM UTC-7, Jalasayanan wrote:
>
> சால மரம் என்பது குங்கிலிய மரம்.
>
> Common name: Sal • Hindi: साल Sal, Salwa, Sakhu, Sakher • Marathi: sal, guggilu, rala, sajara • Tamil: attam, venkungiliyam, kungiliyam • Malayalam: karimaruthu, kungiliyam, maramaram • Kannada: ashvakarna, asina, asu, bile-bhogimara • Bengali: Sal • Oriya: Sargi gatcho • Urdu: Ral, Safed dammar • Assamese: Sal, Hal • Khasi: Dieng blei • Sanskrit: agnivallabha, ashvakarna, ashvakarnika
>
> Botanical name: Shorea robusta Family: Dipterocarpaceae (Sal family)
>
> இதற்கு பரவலான பெயர் கோங்கு – இது தென்னிந்தயாவில் பரவலாக காணக்கூடிய மரமே. கேரளத்தில் இதை கரிமருது என்பர். மருத இனத்தை சார்ந்த்து என தமிழ் வழக்கு
>
> Falsus in Uno, Falsus in omnibus
>
> சால விருக்ஷம் என்றால் என்ன என்று தெரியாத்தால் வந்த நிலை இது. நிற்க.
>
ஆமாம். சால மரங்கள் தென்னிந்தியாவில் பல வகைகள் உள்ளன. சங்க காலத்தில் இருந்த பலவகைகள் இன்று அழிந்த நிலை. இருப்பினும் சால மரங்களின் பல வகைகள் தென்னகத்தே உள்ளன. அவை பற்றி.
https://groups.google.com/forum/#!msg/mintamil/x4EBxnSZuQA/JiealWsDBgAJ
----------------
கோங்கு என்பது வேறு மரம். சால் வகை அல்ல. கொங்கை என்ற சொல் இந்தக் கோங்கு மரப்பூவால் வைத்தனர்.
சால மரம் என்பது யா மரம். பெரு வறட்சியிலும் பட்டைகளில் நீர் இருக்கும். யானைகள் உறிஞ்சி அந்த நீரைக் குடிக்கும். பாலைத் திணை செய்யுள்களில் காண்க.
--------------
கோங்கு - இலவ மர வகைகள். Caung trees. They are not shorea ( yaa in Sangam, saal in Indo-Aryan languages) trees.
கோங்குக்கு கணிகாரம்/கர்ணீகாரம் என்பது ஒரு பெயர்.
கணிகாரம் kaṇikāram
, n. < karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5).
கோங்கிலவு kōṅkilavu
, n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)
கோங்கு kōṅku
, n. 1. Common caung, 1. tr., Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Iron-wood of Malabar, Hopea parviflora; நீர்க்கோங்கு. (L.) 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See முள்ளிலவு. (L.)
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=725
இறைவன் - கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்.
இறைவி - சுவேதவளை நாயகி, வெள்வளைநாயகி
தலமரம் - கோங்கு இலவு (இதன் அடியில் உள்ள லிங்கம் கோங்கிலவு வனநாதேஸ்வரர்)
நா. கணேசன்
> தரப்பட்ட சுட்டியில் உள்ள பதிவை காணும் போது
>
> லங்கா எனும் இலங்கை சோன்பூர் எனும் போது சிற்சில சிந்தனைகள். 1. இராமாயணம் முழுவது சரித்திரம் என ஏற்கொண்டால் மட்டுமே இதனை நம்ப வேண்டும். 2. லங்கா என்பது சோன்பூர் மற்றும் சிங்கள என்பது சிலோன் என்றதும் மனதில் எழுவது, சிலோன் தமிழ் கூறும் நல்லுலகு இல்லையா, திராவிடம் என்று சொல்லப்படும் பூமியில் சிலோன் இல்லையா, சிங்களம் தமிழ் போலும் பழமை வாய்ந்த மொழிதானா என்ற கேள்விகளுக்கு ஆமாம் என்றே பதில் தர வேண்டியிருக்கிறது. ஏன் எனில் முதல் கேள்விக்கான பதில்தான். சரித்திரம் என்று ஏற்கொண்டாகிவிட்டதே. 3. சொல்லப்படும் 7-6 கிமு கலிங்கம் முழுவதும் பௌதமாக இருந்ததாக உள்ள சரித்திரம் எங்கு ஒளிந்துள்ளது, மௌரிய சாம்ராஜ்ய காலத்திற்கு முன்பும் இப்பிரதேசம் கலிங்கம் என்று குறிக்கப்பட்டதை கவனத்தில் கொள்ளாதது ஏன். இராமாயண மகாபாரதத்தில் கலிங்கம் எனும் சொல்லே இல்லையோ 4. அனுமன் கடல் கடந்ததாக உள்ள சரித்திரம் எங்கே ஒத்துபோகிறது
>
> சிலோன் எனும் சிறீலங்காவை இராமாயணத்திடம் இருந்து பிரிப்பது என்னை பொருத்தவரை வெற்று சூழ்ச்சியாகவே காண்கிறேன்.
>
>
சங்க இலக்கிய மரங்களில் முக்கியமானது யா மரம். இந்த யா மரம் ஆ, ஆச்சா என்று பின்னாளில் வழங்கும்.ஆ மலரை விரும்பிக் கொற்றவை அணிகிறாள் என்கிறது தேவாரம். கொற்றவை பாலைநிலத்துக்கு கடவுள்.யா மரங்கள் பாலை நிலத்தில் நெடிது வளர்வன.
Hardwickia is a monotypic genus of flowering plant in the subfamily Detarioideae of the legumes. The only species is the Anjan, Hardwickia binata Roxb., an Indian tree that grows some 25 to 30 m high.[1][2] This plant genus was named after Thomas Hardwicke by William Roxburgh.[3]
It is a characteristic tree of the dry deciduous forests and can grow on shallow,gravely soils.[4] In India, it is found in the western Himalayas up to an elevation of 1500m[6][7] and dry open forests of Central and South India.[4][6] In southern India, it is particularly found in Kadapa, Nellore and Ceded districts and in the valleys of Cauvery and Bhavani rivers[8]
எனவே, யாவகம் என்ற பெயர் சால மரங்களுக்காக தமிழர் அமைத்தனர் என்பது தெளிவு. மலாயா (மலையகம்), அருமணம் (மரமணம், இன்றைய பர்மா), வருணத் தீவு (போர்னியோ), யாவகம் (சாவகம், ஜாவா) என்ற பெயர்கள் தமிழர்கள் தந்த பெயர்கள். Tamils also imported tin to make tin bronzes from South East Asia.
நா. கணேசன்
A fishing port? Not an all-weather shipping port...??rnk
Shorea species. இதனால், யாவகம் என்று சாலியூர், கொற்கை, தொண்டி, நாகை, புகார் போன்ற
துறைமுகங்களில் இருந்து சென்றோர் பெயரிட்டனர், யாவகம் சாவகம் என்றும் ஜாவா என்றும் மருவியுள்ளது.சங்க இலக்கியத்தில் யா மரங்கள் (Shorea robusta, சாலம்)யா/ஆ/ஆச்சா - primarily shorea trees. கராச்சி (கரு+ ஆச்சி), கம்மரம் (கருமரம்) (கன்னடத்தில்), அஞ்சனம் (hardwickia binata) என்னும் மரமும் பிற்காலத்தில் ஆச்சா எனப்படுதல் உண்டு, ஆனால், யா மரம் முக்கியமாக ஷொரியா மரங்கள். பார்க்க பிங்கலந்தை, சென்னைப் பல்கலைப் பேரகராதி, DED. (first Pingalandai was published by Pollachi SivanpillaiyavarkaL, in which he said he will publish VaLaiyApati next. Obviously, Sivanpillai, UvECaa, VeLLakaal pa. Subramanyam had in their possession VaLaiyaapati mss. now presumably lost.)மரைக்காடு (antelope forest) மறைக்காடு (Veda forest) என மொழிபெயர்ப்புஆனதுபோல, யா என்றால் ஷொரியா மரங்கள் என்பதை விட்டுவிட்டு, யவ த்வீபம் என்றுசம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். ஆனால், யவம் = பார்லி தான்யம் யாவகத் தீவில் விளைவத்தில்லை.
இது ஈராக் போன்ற ஊர்களின் தானியம் யவம்.நா. கணேசன்
இதுவா? (கொண்டல் ...)
===========================================
from: https://ta.wikisource.org/wiki/அகநானூறு/01_முதல்_10_முடியபாடல் 10 (வான்கடற்)
வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை,
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழப் 5
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்,
அரிது துற்றனையால். பெரும!- உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் 10
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே 13
இதில் உள்ள செய்தி
அம்மூவனார் என்னும் புலவர் பாடிய நெய்தல் திணைப் பாடல் இது. தலைவியை நல்கும்படி தலைவன் தோழியை வேண்டுகிறான். தோழி மறுக்கிறாள். தலைவன் விலகிச் செல்ல நினைக்கிறான். விலகிச் சென்றால் உரிய முறையில் மணந்து இவளையும் அழைத்துச் செல்க என்று தோழி தலைவனை வற்புறுத்துகிறாள்.
அவன் புலம்பு(நாடு) - கடலில் மழை பெய்யும்போது மழைத்துளியை அருந்த மீன்கள் தலைதூக்கும். அது புன்னைப் பூக்கள் உதிர்வது போல இருக்கும். மீன்களை அருந்த அந்தப் புன்னை மரத்தில் பறவைகள் அமர்ந்திருக்கும். இப்படிப்பட்ட புலம்புநாட்டின் தலைவன் அவன்.
அவள் தொண்டித் துறைமுகம் போன்ற அழகுள்ளவள். தொண்டியில் உள்ள பரதவர் கொண்டல் என்னும் கீழைக்காற்று அடிக்கும்போது தம் பழைய திமில்படகுகளைப் புதிதாக்கிக்கொள்வர். தாம் பிடித்துவந்த மீன்களை மணல் மேட்டில் விரித்து ஊர்மக்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள்.
வெண்கல சிலைகள் செய்யப்பட்ட காலங்களில் , வெள்ளீயம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என நம்புவதற்கு வழியுண்டு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.