செங்குன்றாபுரத் திருப்புகழ்
செங்குன்றாபுரத் திருப்புகழ்தந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானன தனதானவம்புங் கோபமு மேவசு ராதிகள்
வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.
சந்தவசந்தக் கவிஞர்களுக்கு ஒரு கேள்வி. ஹரிகி, இன்னும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.இதே சந்தத்தில் வேறு திருப்புகழ்கள் உண்டா?
தந்தந் தனதன தந்தந் தனதன
தந்தந் தனதன தனதான
2017-02-28 20:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:செங்குன்றாபுரத் திருப்புகழ்தந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானன தனதானவம்புங் கோபமு மேவசு ராதிகள்
வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.இந்தப் பாடலை மீண்டும் இட்டு நினைவுறுத்தியதற்கு நன்றி கணேசன்.
சேலம் திருப்புகழ் நூலில் உள்ளது இந்தத் திருப்புகழ்.
சேலம் திருப்புகழ் நூலில் உள்ளது இந்தத் திருப்புகழ்.
2017-02-28 20:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சந்தவசந்தக் கவிஞர்களுக்கு ஒரு கேள்வி. ஹரிகி, இன்னும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.இதே சந்தத்தில் வேறு திருப்புகழ்கள் உண்டா?எனக்குத் தெரிந்த வரையில், நினைவுக்கெட்டிய வரையில் இல்லை.
செங்குன்றாபுரத் திருப்புகழ்தந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானன தனதானவம்புங் கோபமு மேவசு ராதிகள்
வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.
>>மற்ற மூன்று அடிகளிலும் மோனை உள்ளது போலமூன்றாம் அடிக்குப் பொருள் கொள்ளலாமா?ஆம், பொதுவில் 1-3 அடிகளில் மோனை வருவது தான் திருப்புகழ் வழக்கம்.2017-03-01 10:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:செங்குன்றாபுரத் திருப்புகழ்தந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானனதந்தந் தானன தானன தானன தனதானவம்புங் கோபமு மேவசு ராதிகள்
வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.
ௐ
செங்குன்றாபுரத் திருப்புகழ்
அருணகிரிநாதர் இயற்றியது
(திருவனந்தபுரத்தில் திருப்புகழ் ஓலைச்சுவடியில் உள்ள பாடல்)
உரை – பெரும்புலவர் ப. வெ. நாகராஜன்,
கௌமார மடம், சிரவணம்பட்டி, கோவை
சந்தக் குழிப்பு
தந்தந் தானன தானன தானன தனதான
வம்புங் கோபமு மேவசு ராதிகள்
வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
ரும்புந் தேனிகர் பாவுரை யாதுன
தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.
பதவுரை:
அம்பு ஒன்றே விழிசேர் குறமாது தன் இன்பம் தேடி – கணையைத் தவிர வேறு எதையும் இணையாகக் கூறமுடியாதபடி கூர்மையும் அழகையும் பெற்றுள்ள வள்ளிநாயகியின் உறவினை விரும்பி.
முன் ஓர் கணி ஆகவும் – அக்காலத்தில் நீர் ஒரு வேங்கை மரமாக நிற்க.
அன்று உன்பால் வர – அப்பொழுது அந்த வள்ளி நாச்சியார் உம் பக்கமாக வந்து நெருங்க.
மோகமதா உற அணைவோனே – காதலோடு மார்பில் அணைத்துக் கொண்டவரே.
செம்பொன் மாமதில் வான் உற – சிறந்த தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட பெரிய கோட்டைச் சுவர்கள் ஆகாயம் வரை உயர்ந்திருப்பதும்
வாவிகள் எங்கும் தாமரை மாமலர் சூழ்தரு – அனைத்து நீர்நிலைகளிலும் அழகிய கமலப்பூக்கள் நிறைந்திருப்பதும் ஆகிய
செங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் பெருமாளே – செங்குன்றாபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்றவரும் வாலிபன் என்று வழங்கப்படுபவருமாகிய முருகப்பெருமானே.
வம்பும் கோபமும் மேவு அசுராதிகள் வந்து – வஞ்சனையும் கொடிய சினமும் மிகுந்த சூரபத்மன் முதலிய அசுரர்கள் எதிர்த்துவந்து
அஞ்சாமல் உம் வானவர் பாலினில் – சற்றும் பயம் இல்லாமல் உங்களைச் சேர்ந்தவர்களாகிய தேவர்களோடு
மண்டும் போர்செயும் வேளையில் – மிக நெருங்கிவந்து செய்யப்படும் யுத்தத்தில் ஈடுபட்டபோது
அன்னோரை வெல் வடிவேலா – அந்த அரக்கர்களை வெற்றிகொண்ட கூர்மையான வேலாயுதத்தை உடையவரே
தம்பம்போல் உறு மூடர்கள்மீது – (எந்த வகையான அறிவுணர்ச்சியும் இல்லாமல்) தூணைப்போல உள்ள அறிவற்ற செல்வர்களைப் பற்றி
கரும்பும் தேன் நிகர் பா உரையாது – கரும்பையும் தேனையும் போன்ற இனிய கவிதைகளை இயற்றிச்சென்று இரந்தலையாவண்ணம்
“உன தஞ்சம் பார்” என ஓதுவன் – அடியேன் உனது அடைக்கலம்; என்னைக் கண்டருளிப் பாதுகாப்பீராக என்று வேண்டுவேன்.
நீ அருள்புரிவாய் ஏ – அதற்கு உளம் இரங்கி நீங்கள் ஆட்கொள்ள வேண்டும்; ஏகாரம் அசை.
குறிப்புரை:
வெல் வடிவேலா! உரம் அணைவோனே! பெருமாளே! மூடர்கள் மீது பா உரையாது “உன தஞ்சம்! பார்” என ஓதுவன்; அருள் புரிவாயே எனப் பொருள் முடிபு காண்க. வம்பு எனும் சொல் வஞ்சனைப் பொருள் தருவதை “மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் முலையணி கச்சும் படிறும் வம்பே” (4026) எனும் பிங்கலத்தால் அறியலாம். அசுரர்களை “செயல் உரை நஞ்சு உறழ் மயல் உறு நெஞ்சினர் வஞ்சகர் தீமான் கதர்” (வேல்வாங்கு வகுப்பு, கலை 3) என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமான் தேவர்களைப் பாதுகாக்க வந்திருப்பதை அறிந்திருந்தும் அசுரர்கள் போருக்கு வந்த பேதைமையைக் குறித்து அஞ்சாமலும் என்றார். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” (குறள் 428).
மூடரைப் பாடுதல்: ஒப்பு – ”சுமடர் அருகுற்று இயல்வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியும் மருள்” (திருப்புகழ் 268). பார் என்றது நோக்கி அருள்புரி என்னும் கருத்தில். “கரு வெந்து வீழக் கடைக்கணித்து” (239) என்பது மணிவார்த்தை.
தினைப்புனத்தைக் குறிஞ்சி நில இள மங்கையர் காவல்புரிவர். கதிர்முற்றி அறுவடைக்குத் தயார் ஆகும் போது வேங்கை மலர்கள் மலரும். இது திருமணம் செய்வதற்கு உரிய பருவம் ஆதலின் பெற்றோர் தம் மகளுக்குத் திருமணம் புரிய முயல்வர் என்பது தமிழ் அகப்பொருள் மரபு. அதனை இங்குப் பொருத்திப் பார்க்கத் தினைப்புனம் காத்திருக்கும் வள்ளிக்கு முருகன் வேங்கை மரமாகக் காட்சி அளித்தது அவளுக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதை உணர்த்தும் குறியீடு ஆகும்.
செவ்வேளை வீரம் நிறைந்ததோர் வாலிபனாகவும், அவ்வாறே வள்ளிதேவியின் காதலனாகவும் மட்டுமே நினைத்து ஊரார் குமரன் என்கின்றனர். அவனைச் “சிவனார் மனம் குளிர உபதேசம் மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர்செய் ஞானதேசிகனாகவோ” (திருப்புகழ் 113) “அரி அரன் பிரமாவோடே மூவகையர் இந்திர கோமான் நீள்வான் அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே” (திருப்புகழ் 1015) ஆகிய தேவாதி தேவனாகவோ நினைக்கவில்லை. இந்தப் பௌராணிக நிலையில் நிற்கும் தொடக்கநிலை அடியார்களுக்கே கந்தவேள் கருணை காட்டுகிறார் என்றால் கௌமார பரத்வம் உணர்ந்த ஞானிகளுக்கு என்ன செய்யமாட்டார் என்பது குறிப்பு.
”உன தஞ்சம்” என்புழி (உன்+அ) அகரம் ஆறன் உருபு, ஒருமைக்கு வந்ததை வழுவமைதியாகக் கொள்க. தேன் நிகர் என்றவிடத்து எண்ணும்மை விரிக்க. அம்பு ஒன்றே விழி என்றது நியம உவமையணி. துணையாகவும் என்னுமிடத்தில் உம்மை இசைநிறை, மோகம் அதா என்புழி “அது” பகுதிப் பொருள் விகுதி.
-சுபம்-
நன்றி: என் வேண்டுகோளுக்கு இணங்கி உரைதந்த புலவர் ப.வெ.நா. ஐயா அவர்களுக்கும், இ-மெயிலில் அனுப்பிவைத்த கௌமார மடாலயம் திரு. இராமானந்தன் அவர்களுக்கும் நனிநன்றி,
நா. கணேசன்