மல்லல் மூதூர் மதுரை

1,945 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Nov 7, 2014, 8:52:12 PM11/7/14
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
சென்ற சனிக்கிழமை என்றுமுள தென்தமிழ் என்ற தலைப்பில் ஓர் இழை தொடங்கப்பட்டது. முதல் கட்டுரையும் வெளியானது. அதனை அனுப்பிய பின்னர்தான் உற்றுக் கவனித்ததில் அதன் தலைப்பு "என்முள தென்தமிழ்" என்று தவறாக எழுத்தப்பட்டுள்ளது தெரிந்தது. பெரிய மனது பண்ணி யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை - எனவே அதனைச் சுட்டிக்காட்டவும் இல்லை. எனினும் அது சற்று உறுத்தலாகவே இருந்தது. இதற்கிடையில் என்றுமுள தென்தமிழ் என்ற தலைப்பில் வேறொரு கட்டுரைத் தொடரும் தொடங்கப்பட்டது. அப்புறம்தான் இரண்டு தலைப்புகளும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் குழப்பம் ஏற்படலாமோ என்ற அச்சம் உண்டானது. எனவே முதல் கட்டுரைத் தொடரின் தலைப்பை மாற்றியமைக்கலாமா என்ற எண்ணத்தை மாற்றி, அதன் தலைப்பை முற்றிலும் மாற்றிவிடுவது என்ற முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாகத் தோன்றியதுதான் இந்தப் புதிய இழை.
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் என்ற நெடுநல்வாடையின் அழகிய அடியினின்றும் கொஞ்சம் சுட்டு, மல்லல் மூதூர் மதுரை என்ற இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது. மல்லல் என்பதற்கு வளமை என்று பொருள்.
ஒரு தொடர்ச்சிக்காக, அந்தப் பழைய இழையில் வெளிவந்த முதல் கட்டுரை இங்கு மீண்டும் கொடுக்கப்படுகிறது. அதில் இருந்த ஒரு சிறு (கணக்கில் கழித்தல்) பிழையும் திருத்தப்பட்டுள்ளது. அந்தப் பிழையையும் பெரிய மனது பண்ணி யாரும் சுட்டிக்காட்டவில்லை.
அக் கட்டுரையைப் படித்தவர்களுக்கும், பின்னூட்டம் தந்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
இதோ அந்தப் பழைய கட்டுரை. புதிய கட்டுரை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா



மல்லல் மூதூர் மதுரை - உள்ளமைப்பு

முன்னுரை

வரலாற்றில் மதுரை

மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ, பெரிப்லுஸ், பிளினி, டாலமி, மார்க்கோ போலோ

புராண இதிகாசங்களில் மதுரை

 – இராமாயணம், மகாபாரதம், மகாவமிசம்

கல்வெட்டுகளில் மதுரை -

தமிழ் இலக்கியங்களில் மதுரை

 - மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பரிபாடல், சிலப்பதிகாரம், பிற.

மதுரையின் அமைப்பும் வளர்ச்சியும்

– சங்க கால மதுரை, இடைக்காலப்பாண்டியர் மதுரை, பிற்காலப் பாண்டியர்      மதுரை, நாயக்கர் கால மதுரை, வெள்ளையர் கால மதுரை.

 

 

 

 

 

 

 


மல்லல் மூதூர் மதுரை

முன்னுரை


தொடர்ச்சியான பாரம்பரியத்தையும், தொன்றுபட்ட வரலாற்றையும், தொடர்ந்துவரும் மக்கள் குடியிருப்பையும் கொண்ட பழம்பெரும் நகரங்களில் மதுரையும் ஒன்றாகும். இந்தியாவில் அப்படிப்பட்ட நகரங்கள் ஏழனை வரிசையிட்டால், அவற்றில் மதுரை நான்காம் இடத்தைப் பெறுகிறது. அந்த நகரங்களின் வரிசை இதோ:-

நகரம்              மாநிலம்           காலம்

            வாரணாசி         உத்தரப் பிரதேசம்  கி.மு 1200-1000

            உஜ்ஜயினி         மத்தியப் பிரதேசம் கி.மு 800

            இராஜகிருக        பீகார்              கி.மு 600

            மதுரை            தமிழ்நாடு         கி.மு 500

            வைசாலி          பீகார்              கி.மு. 500

            பாடலிபுத்திரம்      பீகார்              கி.மு 400

            தஞ்சாவூர்         தமிழ்நாடு         கி.மு 300

நன்றி: http://en.wikipedia.org/wiki/List_of_cities_by_time_of_continuous_habitation


இத்தகைய சிறப்பினைப் பெற்றுள்ள மதுரை, பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக நெடுங்காலம் இருந்துள்ளது. எனவே இதன் வரலாறு பாண்டியர்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது. எனினும் பாண்டியர்களின் பின்னணியில் மதுரையின் வரலாற்றையும், வளர்ச்சியையும் ஆய்வதே இந் நூலின் நோக்கம்.

எண்பெருங்குன்றங்கள் என்று அழைக்கப்படும் எட்டுப் பாறைமலைகளுக்கு நடுவே மதுரை அமைந்திருக்கிறது.

பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி

அருங்குன்றம் பேராந்தை ஆனை - இருங்குன்றம் 

 என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் 

சென்றெட்டு மோபிறவித் தீங்கு

என்ற தனிப்பாடலில் காணப்படும் பரங்குன்று (திருப்பரங்குன்றம்), ஆனை (யானை மலை), இருங்குன்றம் (அழகர்மலை) ஆகியவை தவிர ஏனையவை இன்ன மலை என்று தெரியவில்லை. எனினும் மதுரையைச் சுற்றியிருக்கும் சமணத் திருத்தலங்களாக திருப்பரங்குன்றம், சமணர்மலை, குறட்டிமலை, யானைமலை, அழகர் மலை, நாகமலை, அரிட்டாபட்டிமலை, கீழவளவுக்குன்று என்ற எட்டு மலைகள் குறிப்பிடப்படுகின்றன.

இன்றைய மதுரையின் மையப் பகுதியாக அமைந்திருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாகும். 254 மீ x 238 மீ என்ற செவ்வக வடிவில் சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இக் கோவில். இக் கோவிலின் நடுப்பகுதியின் நில அளவைக் குறியீடுகள் : 90 55’ North Latitude, 780 7’ East Longitude. அதாவது, நில நடுக்கோட்டிலிருந்து ஏறக்குறைய 100 அளவுக்கு வடக்கில் அமைந்துள்ளது மதுரை. மார்ச் 20-இல் நில நடுக்கோட்டுக்கு நேர்மேலே இருக்கும் சூரியன், கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி நகர்ந்து, ஜூன் 21-இல் கடகரேகையை (23026’ N) அடைகிறது. எனவே, ஏப்ரல் 28-வாக்கில் நண்பகலில் சூரியன் மதுரைக்கு நேர்மேலே காணப்படும். இந்த நாள் சித்திரை 15 ஆகும். பாண்டிய மன்னனுக்குப் புதிய அரண்மனை கட்டுவதற்குத் தொடக்க நேரமாக இந்த நாளில் நண்பகலையே தேர்ந்தெடுத்தார்கள் என நெடுநல்வாடை (73 – 78) உரை கூறுகிறது.


இந்திய நேரம் (IST) என்பது கிரீன்விச் நேரத்திலிருந்து (GMT) 5 மணி 30 நிமிடங்கள் முந்தையது என அறிவோம். காட்டாக, இந்தியாவில் நண்பகல் 12 மணி என்றால் கிரீன்விச்சில் அப்போது காலை 6 மணி 30 நிமிடம். அதாவது கிரீன்விச் 00 Longitude என்றால் இந்தியாவின் மையம் 820 30’ East Longitude என்று எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. (1 மணி = 150). ஆனால் மதுரையின் நிலநெடுங்கோட்டு அளவு (East Longitude) 780 7’ தான். இதனால் மதுரைக்கு 8 நிமிடம் தாமதம் ஆகும். அதாவது இந்தியத் தர நேரம் (Indian Standard Time) பகல் 12 மணி என்றால், அப்போது மதுரையின் உள்ளூர் நேரம் (Madurai Local Time) 11 மணி 52 நிமிடங்கள்தான். மிகச் சரியாக அந்த நேரத்தைக் கணக்கிடவே,

            இருகோல் சமநிலை வழுக்காது குடக்கேர்பு

            ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து – நெடு 74-75

            நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டதாக நெடுநல்வாடை கூறுகிறது.

மதுரையின் பழமையையும், இருப்பிடத்தையும், அமைப்பையும் ஓரளவு பார்த்தோம். இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் பொதிந்திருக்கின்றன என்பதையும் பார்த்தோம்.


இவற்றைப் பற்றிய விரிவான செய்திகளை இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.


 


 







Pandiyaraja

unread,
Nov 7, 2014, 9:48:13 PM11/7/14
to mint...@googlegroups.com
சுபா/கீதா அம்மையாருக்கு/கண்ணன் அவர்களுக்கு,

இந்த முறை தலைப்பு list-இல் சரியாகத் தெரியவில்லை. உள்ளே திறக்கும்போது மல்லல் மூதூர் மதுரை என்று சரியாகத் தெரியும் தலைப்பு வெளியில் மலலல மூதூர மதுரை என்று புள்ளிகள் இல்லாமல் தெரிகிறது. ஏனைய தலைப்புகள் எல்லாம் புள்ளிகளுடன் இருக்கின்றன. மேலும் அவை தடிமனாக (Bold)த் தெரியும்போது இந்தத் தலைப்புமட்டும் தடிமன் இன்றிக் காணப்படுகிறது.

இந்த மலலல மூதூர மதுரை - யைத் தொடராலாமா என்று குழப்பமாயிருக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Nov 7, 2014, 10:00:19 PM11/7/14
to mint...@googlegroups.com


On Friday, November 7, 2014 6:48:13 PM UTC-8, Pandiyaraja wrote:
சுபா/கீதா அம்மையாருக்கு/கண்ணன் அவர்களுக்கு,

இந்த முறை தலைப்பு list-இல் சரியாகத் தெரியவில்லை. உள்ளே திறக்கும்போது மல்லல் மூதூர் மதுரை என்று சரியாகத் தெரியும் தலைப்பு வெளியில் மலலல மூதூர மதுரை என்று புள்ளிகள் இல்லாமல் தெரிகிறது. ஏனைய தலைப்புகள் எல்லாம் புள்ளிகளுடன் இருக்கின்றன. மேலும் அவை தடிமனாக (Bold)த் தெரியும்போது இந்தத் தலைப்புமட்டும் தடிமன் இன்றிக் காணப்படுகிறது.

இந்த மலலல மூதூர மதுரை - யைத் தொடராலாமா என்று குழப்பமாயிருக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

உங்கள் உலாவியில் பிரச்சினை இருக்கலாம். இங்கே ’மல்லல் மூதூர் மதுரை’ என்றுதான்  தெரிகிறது.

Pandiyaraja

unread,
Nov 7, 2014, 11:14:09 PM11/7/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா! அந்தப் பக்கம் பிரச்சினை இல்லையென்றால் சரி.
இதோ இத்துடன் அடுத்த கட்டுரை வருகிறது.
வரலாற்றில் மதுரை - என்ற தலைப்பில் வரும் முதல் பகுதி. மெகஸ்தனிஸ் பற்றியது. ஸ்ட்ராபோ, பெரிப்லுஸ் இன்னும் பிற அடுத்தடுத்து வரும்
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை


1. வரலாற்றில் மதுரை


1. மெகஸ்தனிஸ் (Megasthenes : 350 BC – 290 BC)

அ. யார் இந்த மெகஸ்தனிஸ்?

      மா மன்னன் அலெக்சாண்டர் (356 BC – 323 BC) இந்தியாவின் மீது படையெடுத்துவந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் தன் நாடு திரும்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது தான் வென்ற பகுதிகளை ஆள்வதற்கு செல்யூகஸ் நிகடோர் (Seleucus Nicator : 358 BC – 281 BC) என்ற தன் தளபதியை ஆளுநராக நியமித்துவிட்டு தன் நாடு திரும்பினான். திரும்பும் வழியில் அலெக்சாண்டர் இறந்துவிடவே, தக்சசீலத்தைத்(Taxila) தலைநகராகக் கொண்டு நிர்வகித்த செல்யூகஸ், தன்னை மன்னனாக அறிவித்துக்கொண்டான். அப்போது அண்டை நாடாக இருந்த மகத நாட்டில் ஆண்டுவந்த சந்திரகுப்த மௌரிய மன்னுடன் நட்புறவு கொள்ள, மெகஸ்தனிசை கிரேக்கத்திலிருந்து வரவழைத்தான். மெகஸ்தனிஸ் இந்தியாவுக்கு எந்த ஆண்டு வந்தார், இங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தார் என்பதைப் பற்றிய உறுதியான செய்திகள் இல்லை. எனினும், சந்திரகுப்தன் கி.மு.298-இல் இறந்தான் என்பதால், கி.மு.310-வாக்கில் மெகஸ்தனிஸ் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்பர் வரலாற்றறிஞர். (Ref: Classical Philology, Vol.91.No.2 (Apr., 1996 – The Historical Setting of Megasthenes’ Indica – Bosworth, A.B -. Available in internet : http://www.jstor.org/discover/10.2307/270500?uid=3738256&uid=2&uid=4&sid=21104483512391

ஆ. இண்டிகா (Indika)

மெகஸ்தனிஸ் இங்குத் தங்கியிருந்த காலங்களில் பெரிய அளவில் பயணங்களை மேற்கொண்டார் என அறியமுடிகிறது. அப்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களையும், தான் கண்டவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் நான்கு தொகுதிகள் கொண்ட ஒரு நூலாக ஆக்கினார். அந் நூலுக்கு இண்டிகா  எனப் பெயரிட்டார். ஆனால் நாளாவட்டத்தில் அந் நூல் அழிந்துபோய்விட்டது. எனினும், மெகஸ்தனிசுக்குப் பின்னர் வந்த டயோடோரஸ் (Diodorus), ஸ்ட்ராபோ (Strabo), பிளினி (Pliny), ஆர்ரியன் (Arrian) போன்ற வரலாற்றாசிரியர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியபோது, மெகஸ்தனிசின் நூலிலிருந்து பல பகுதிகளை மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த ஷ்வான்பெக் (Dr.Schwanbeck) என்பவர், பல்வேறு நூல்களில் இண்டிகாவிலிருந்து கையாளப்பட்ட மேற்கோள்களை எல்லாம் சேகரித்து, தலைப்பிட்டு, வரிசை எண்களிட்டு, விளக்கவுரை, குறிப்புகளுடன் 1846-இல் மெகஸ்தனிஸ் இண்டிகா – செய்தித் துணுக்குகள் (Fragments) என்ற ஒரு நூலாக வெளியிட்டார். 1877-இல் இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு மெக்கிரிண்டில் (J.W.McCrindle) என்பவரால் வெளியிடப்பட்டது. இண்டிகா பற்றிய அனைத்துச் செய்திகளுக்கும் ஆதாரம் இவ்விரண்டு புத்தகங்கள்தாம்.

1. Megasthenes Indica . Fragmenta collegit, commentationem et indices addidit,  E.A.Schwanbeck. Bonnae , 1846.

2. Ancient India as described by Megasthenes and Arrian – J.W.McCrindle, 1877.

மெகஸ்தனிசின் இந்த துணுக்குத் தொகுப்பே இந்தியாவைப் பற்றி அறியக்கிடைக்கும் மிகப் பழமையான வரலாற்று ஆவணம் ஆகும்.

இ. மதுரையைப் பற்றி மெகஸ்தனிஸ்.

இண்டிகா – துணுக்குகளில் பாண்டிய நாட்டைப் பற்றிப் பல செய்திகள் கிடைத்தாலும், பாண்டியர் தலைநகரான மதுரையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

துணுக்கு 51-இல் பாண்டிய நாட்டுப் பெண்கள் ஆறு வயதினராய் இருக்கும்போதே பிள்ளைபெறுவார்கள் என்று மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

FRAGM. LI.

Phlegon. Mirab. 33.

Of the Pandaian Land.

(Cf. Fragm. XXX. 6.)

Megasthenes says that the women of the Pandaian realm bear children when they are six years of age.

(Available in internet : http://www.sdstate.edu/projectsouthasia/upload/Megasthene-Indika.pdf)

இது எந்த அளவுக்கு நம்பத்தகுந்தது என அறிவோம். ஒருவேளை எங்காவது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை அவர் பொதுமைப்படுத்தியுள்ளார் எனலாம். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எனது தந்தைவழிப் பாட்டியார், என் தந்தையையும், அவருக்கடுத்துப் பிறந்த ஒரு பெண்குழந்தையையும் மிகச் சிறியவயதில் விட்டுவிட்டுக் காலமானார் என்றும், அதனால் என் பாட்டனார், சிறு குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள என் பாட்டியாரின் கடைசித் தங்கையை, அவர் பூப்படையாத பருவத்திலும், திருமணம் செய்துகொண்டார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். (பின்னர் பூப்படைந்த அச் சிறுமி, பிறந்த வீடு திரும்பிய பின்னர் மீண்டும் ‘கணவர்’ வீட்டுக்குச் செல்லாமல், வேறு ஒருவரை மணமுடித்தது வேறு கதை) இதைப் போன்ற கதையை மெகஸ்தனிஸ் கேட்டு வியந்திருக்கலாம்.

துணுக்கு 56-ஆ என்ற துணுக்கில், மெகஸ்தனிசின் காலத்தில் பாண்டியநாட்டைப் பெண்களே ஆண்டுவந்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FRAGM. LVI. B.

Solin. 52. 6-17.

Catalogue of Indian Races.

The Pandaean nation is governed by females, and their first queen is said to have been the daughter of Hercules.

                இதனால் மெகஸ்தனிஸ் குறிப்பிடுவது நம்முடைய பாண்டியநாடுதானா என்ற ஐயம் எழுகிறது. துணுக்கு 58-இல் அந்த ஐயம் நீங்குவதுடன் வேறு ஒரு விந்தைக் கதையும் தெரிகிறது. பாண்டியநாட்டு அரசியின் பெயர் பாண்டி என்றும், அவள் ஆளும் பகுதி இந்தியாவின் தென்பகுதியில் கடலே எல்லையாகக் கொண்டது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பாண்டியநாட்டில் 365 கிராமங்கள் இருந்தன என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு கிராமம் என்ற முறையில் அரண்மனைக்கு அன்றைக்குரிய தேவையான பொருள்கள் அனுப்பப்படவேண்டும் என்றும் மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார்.

FRAGM. LVIII.

Polyaen. Strateg. I. 3. 4.

Of Hercules and Pandaea.

(Cf. Fragm. L. 15.)

Herakles begat a daughter in India whom he called Pandaia. To her he assigned that portion of India which lies to southward and extends to the sea, while he distributed the people subject to her rule into 365 villages, giving orders that one village should each day bring to the treasury the royal tribute, so that the queen might always have the assistance of those men whose turn it was to pay the tribute in coercing those who for the time being were defaulters in their payments.

மதுரை புறஞ்சேரியில் குடியிருந்த முதுமகள் மாதரி தன் மகளான ஐயையிடம், “பாண்டியனது கோயிற்கண்ணே நெய்ம்முறை நமக்கு இன்று ஆம்” என்று கூறுவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அதாவது கோவலர்கள் முறைவைத்து ஒவ்வொருநாளும் அரண்மனைக்குத் தேவையான நெய்யை வழங்கியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்

காலை முரசம் கனைகுரல் இயம்புமாகலின்

நெய்ம்முறை நமக்கு இன்றாம் என்று

ஐயைதன் மகளைக் கூஉய்க்

கடைகயிறு மத்துங்கொண்டு

இடைமுதுமகள் வந்து தோன்றுமன்

– சிலம்பு-மதுரைக்காண்டம்-ஆய்ச்சியர் குரவை 5 – 10

இவ்வாறு நெய் முறை போன்று பால் முறை, நெல் முறை எனப் பலவிதக் குடும்பங்களுக்குப் பல்வேறு முறைகள் இருந்திருக்கலாம். அதனையே மெகஸ்தனிஸ் இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்பார் நீலகண்ட சாஸ்திரியார்(4).

Herakles பற்றி மெகஸ்தனிஸ் கூறுவதைப் பாருங்கள்.

FRAGMENT I

OR AN EPITOME OF MEGASTHENES.

(Diod. II. 35-42.)

(38) --------- -------------

The men of greatest learning among the Indians tell certain legends, of which it may be proper to give a brief summary. They relate that in the most primitive times, when the people of the country were still living in villages, Dionusos made his appearance coming from the regions lying to the west and at the head of a considerable army. He overran the whole of India, as there was no great city capable of resisting his arms.

(39.) Such, then, are the traditions regarding Dionusos and his descendants current among the Indians who inhabit the hill-country. They further assert that Herakles also was born among them. They assign to him, like the Greeks, the club and the lion's skin. He far surpassed other men in personal strength and prowess, and cleared sea and land of evil beasts. Marrying many wives he begot many sons, but one daughter only. The sons having reached man's estate, he divided all India into equal portions for his children, whom he made kings in different parts of his dominions. He provided similarly for his only daughter, whom be reared up and made a queen.

            Herakles ஒரு மலைநாட்டு அரசன் என்றும் அவனது மகளே பாண்டிய அரசி என்றும் மெகஸ்தனிஸ் கூறுவது, மலையத்ஜுவ பாண்டியன் கதையை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

பாண்டியநாட்டுச் செல்வத்தைப் பற்றி மெகஸ்தெனிஸ் இவ்வாறு கூறுகிறார்.

FRAGM. LVI.

Plin. Hist. Nat. VI. 21. 8-23. 11.

List of the Indian Races.

(23)

Next come the Pandae, the only race in India ruled by women. They say that Hercules having but one daughter, who was on that account all the more beloved, endowed her with a noble kingdom. Her descendants rule over 300 cities, and command an army of 150,000 foot and 500 elephants.

ஆக, இத்தகைய கூற்றுகளை வைத்து மெகஸ்தனிஸ் உண்மையில் பாண்டியநாட்டுக்கு வருகைதந்திருப்பாரா என்பதே ஐயத்திற்குரியதாகிறது. மேலும் நமக்குக் கிடைத்த துணுக்குகளில் மதுரை நகரைப் பற்றிய எந்தச் செய்தியும் இல்லை. மதுரா என்ற நகரைப் பற்றிய அவரின் செய்தியும் வடநாட்டு மதுரா நகரைப் பற்றியதே என அறியலாம். துணுக்கு 56-இல் அவர் மதுராவைப் பற்றிக் கூறுகிறார்.

FRAGM. LVI.

Plin. Hist. Nat. VI. 21. 8-23. 11.

List of the Indian Races.

The river Jomanes flows through the Palibothri into the Ganges between the towns Methora and Carisobora.

Palibothri என்பது இன்றைய பாடலிபுத்திரம்(பாட்னா). எனவே மெகஸ்தனிசின் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய செய்திகள் இல்லை.

ஆனால், மெகஸ்தனிசின் முழு நூலும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதை நினைவுகூர வேண்டும். நமக்குக் கிடைத்துள்ள துணுக்குகளில் மதுரை பற்றிய செய்தி இல்லை என்பதால் அவர் மதுரையைக் குறிப்பிடவில்லை என்றோ, மதுரைக்கு வரவில்லை என்றோ கூறமுடியாது. மெகஸ்தனிசின் துணுக்குகளில் ஒரு சிலவற்றை முற்றிலும் நம்பக்கூடியது என்றும் ஏனைய நம்பத் தகுந்தன அல்ல என்றும் வரலாற்றறிஞர்கள் பிரித்திருக்கிறார்கள். அவர்கள் நம்பத் தகுந்தன எனக் கூறும் துணுக்குகளின் அட்டவணையில் பாண்டியநாட்டைப் பற்றி அவர் கூறியுள்ள துணுக்குகள் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தகுந்தது. (Ref: Journal of the American Oriental Society, Vol.78.No.4 (Oct-Dec., 1958 – The Indika of Magasthenes, Majumdar R C, pp.273-276 – available in internet – www.jstor.org/stable/595790)

வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரியாரும் மெகஸ்தனிசின் குறிப்புகள் முழுதும் நம்பத் தகுந்தன அல்ல என்று கூறுகிறார்.

The first notice of a South Indian Kingdom occurs in Megasthenes whose quaint account of the Pandyan Kingdom seems to be a mixture of facts and of contemporary fables relating to that kingdom – Foreign Notices of South India – 1939 – page 4.

எனினும் மெகஸ்தனிசின் காலத்தில் தென்னிந்தியாவில் பாண்டிய அரசு என்று ஒன்று இருந்திருக்கிறது என்பதற்கான ஒரு வரலாற்று ஆவணம் இருக்கிறது. அக் காலத்தில் மதுரையே அதன் தலைநகராக இருந்திருக்கவேண்டும் என்பதால், மதுரையின் பழமைக்கு இது ஒரு மறைமுகச் சான்றாக அமைகிறது எனலாம்.

 

Ref:

1. Ancient India as described by Megasthenes and Arrian – McCrindle, J.W, 1877 – available in internet –

https://archive.org/details/AncientIndiaAsDescribedByMegasthenesAndArrianByMccrindleJ.W)

2. Megasthenes: Indika - South Dakota State University -

www.sdstate.edu/projectsouthasia/upload/Megasthene-Indika.pdf

3. Foreign Notices Of South India from Megasthenes to Ma Huan , Nilakanta Sastri K.A, Univerity of Madras, 1939 – available in internet – https://archive.org/details/foreignnoticesof035145mbp

4. The Pandyan Kingdom – From the Earliest Times to the Sixteenth Century, Neelakanta sastri, K A (1929) – Page 34-

      available in internet – https://archive.org/details/ThePandyaKingdom

Geetha Sambasivam

unread,
Nov 9, 2014, 3:27:03 AM11/9/14
to மின்தமிழ்
தாமதமாய்ப் பார்ப்பதற்கு மன்னிக்கவும்.  தலைப்பு என் கணினியில் சரியாகத் தெரிகிறது,  உங்கள் கணினியின் அநேகமாய் ஃபான்ட் பிரச்னை இருக்கலாம்.

Pandiyaraja

unread,
Nov 14, 2014, 10:01:36 PM11/14/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி அம்மா!
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Nov 14, 2014, 10:07:54 PM11/14/14
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
வரலாற்றில் மதுரை என்ற தலைப்பில் அடுத்ததாக ஸ்டராபோ-வின் கூற்றுகள் பற்றிய கட்டுரை இதனுடன் அனுப்பப்பட்டுள்ளது. நிறையப்பேர் படிக்கிறதுபோல் தெரிகிறது. ஆனால் மிகச் சிலரே பின்னூட்டம் இடுகின்றனர். ஒரு கலைஞனுக்குத் தேவை கைதட்டு. அதுவும் அவன் காதில் விழவேண்டும். அதுதான் அங்கீகாரம். இன்னும் உற்சாகமாக ஆட அவனுக்கு அது தெம்பளிக்கும். (ஒரே மாதிரி தட்டி உட்காரவைக்கவும் அது செய்யும்!!)
அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

2. ஸ்ட்ராபோ (Strabo : 64 BC – 24 AD)

அ. யார் இந்த ஸ்ட்ராபோ?

      ஸ்ட்ராபோ ஒரு கிரேக்க வரலாற்றாசிரியர். தேர்ந்த புவியியலாளர் (geographer). அவர் ஒரு தத்துவஞானியும் கூட. இவர் புவியியல் (Geographica) என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். இது 17 தொகுதிகளைக் கொண்டது. முதன் முதலில் கி.மு 7–இல் வெளியிடப்பட்ட இந்நூல் இன்றும் அப்படியே கிடைக்கிறது(மிகச் சில பகுதிகளைத் தவிர).

      ஸ்ட்ராபோ ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்று தான் நேரில் கண்டவற்றையும், கேட்டவற்றையும், அன்றைய வழக்கில் இருந்த வரலாற்று நூல்களில் தான் படித்தவற்றையும் பதிந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு வந்ததில்லை. இதைப் பற்றி ஹாமில்ட்டன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்.

In the 15th book, Strabo describes India and Persia, the latter in two chief divisions, viz. Ariana or East Persia, and Persis or West Persia. These countries Strabo never saw; his description, therefore, is founded on the authority of travellers and historians. The topography of India is meagre, and limited to a few towns and rivers; but his account of the people of the country is more copious, he being supplied with materials from the historians of Alexander and of the campaigns of Seleucus in India.

(Strabo, Geography : H.C. Hamilton, Esq., W. Falconer, M.A., Ed.

The Geography of Strabo. Literally translated, with notes, in three volumes. London. George Bell & Sons. 1903)

எனினும் ஆண்டியோக் (Antioch) என்ற ஒரு நகரில் அகஸ்டஸ் சீசர் இருந்தபோது இந்தியாவில் பாண்டியோன் என்ற மன்னனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து சீசரைச் சந்தித்தான் என்று கூறுகிறார் (பார்க்க – இறுதிப் பகுதி ***). இந்தத் தூதனைப் பற்றி வேறு சில வரலாற்றறிஞர்களும் எழுதியிருக்கிறார்கள்.

ஆ. ஜியாக்ராபிக்கா (Geographica)

ஸ்ட்ராபோ எழுதியுள்ள இந் நூலின் 15-ஆவது தொகுதியில் அவர் இந்தியாவைப் பற்றிச் சில தகவல்களைச் சொல்கிறார். அத்துடன் அவர் காலத்திய புவியியல் அறிவின்படி சில வரைபடங்களையும் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் பாண்டியோன் என்ற ஓர் அரசனிடமிருந்து அகஸ்டஸ் சீசரைக் காண வந்த ஒரு தூதனைப் பற்றி அவர் விவரிப்பதைப் படியுங்கள்.

Book 15, Chapter 1:

Very few of the merchants who now sail from Egypt by the Nile and the Arabian Gulf to India have proceeded as far as the Ganges; and, being ignorant persons, were not qualified to give an account of places they have visited. From one place in India, and from one king, namely, Pandion, or, according to others,5 Porus, presents and embassies were sent to Augustus Caesar. With the ambassadors came the Indian Gymno-Sophist, who committed himself to the flames at Athens,6 like Calanus, who exhibited the same spectacle in the presence of Alexander 6.

இங்கே ஸ்ட்ராபோ குறிப்பிடும் மன்னன் தென்னாட்டுப் பாண்டியன்தானா என்ற ஐயம் எழுப்பப்படுகிறது. இங்கே Pandion, or, according to others,5 Porus என்று கிரேக்கத்தில் எழுதப்பட்ட தொடர் பல்வேறுவிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத் தொடர் இதுதான் : 5.  κατ λλους for κα λλου.Groskurd.

நியூயார்க், ஃபோர்தாம் பல்கலைக்கழக (Fordham University, New York) மொழிபெயர்ப்பில், இது But, from India, from one place and from one king, I mean Pandion, or another Porus, there came to Caesar Augustus presents and gifts of honour ……  என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. J.W.McCrindle இத் தொடரை, From one place in India and from one king, Pandion, but according to other writers, Poros, there came to Caesar Augustus gifts and an embassy ………

ஃப்லோரஸ் (Florus) என்ற மற்றொரு வரலாற்றாசிரியர் தன்னுடைய நூலான  The Epitome of Roman History என்பதில் இதே தூதனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சூரியனுக்கு நேர் கீழே வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பரிசுப்பொருள்களுடன் தூதன் சக்கரவர்த்தியக் காண வந்தான் என்று குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இதுதான்:

For the Scythians and the Sarmatians sent ambassadors seeking friendship; the Seres4 too and the Indians, who live immediately beneath the sun, though they brought elephants amongst their gifts as well as precious stones and pearls, regarded their long journey, in the accomplishment of which they had spent four years, as the greatest tribute which they rendered; and indeed their complexion proved that they came from beneath another sky (available in internet :

http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Florus/Epitome/home.html

                எனவே ஸ்ட்ராபோ குறிப்பிடும் இந்தியத்தூதன் தென்னாட்டுப் பாண்டிய மன்னனால் அனுப்பப்பட்டவனே என்பது உறுதியாகிறது.

      ஆனால் பாண்டியநாட்டுத் தூதன் சென்றதன் நோக்கம் சரியாக விளக்கப்படவில்லை. அகஸ்டஸ் சீசர் ஒரு உரோமப் பேரரசின் சக்கரவர்த்தியாக (Emperor) இருந்தான் எனவும் அவனுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளத் தூதர்கள் வந்தனர் என்ற செய்தியுடன் பாண்டிய நாட்டுத் தூதன் வருகையும் குறிக்கப்படுகிறது. Roman History என்ற தன் நூலில், டயோன் காஸியஸ் (Dion Cassius) என்பவர் கூறுவதைப் பாருங்கள்:

      But Augustus, for his part, returned to Samos and once more passed the winter there. In recognition of his stay he gave the islanders their freedom, and he also attended to many matters of business. For a great many embassies came to him, and the people of India, who had already made overtures, now made a treaty of friendship, sending among other gifts tigers, which were then for the first time seen by the Romans, as also, I think by the Greeks. (available in : http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Cassius_Dio/54*.html)

பாண்டியநாட்டுத் தூதுவன் அகஸ்டசைப் பார்க்கச் சென்றதற்கான காரணத்துக்கு வேறொரு விளக்கமும் உள்ளது. H.G.Rawlinson என்பவர் தன்னுடைய Intercourse Between India and the Western World என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.

The news of the accession of Augustus quickly reached India. Many Indian states sent embassies to congratulate him, an honour as he (Augustus) remarks, never paid before to any Western prince. The most striking of these was one sent by an important king called, according to Strabo, Porus by some and Pandion by others.

If his name really was Pandion, he was one of the Pandya kings of Madura, the most southerly of the three Tamil kingdoms. (available in :

http://www.forgottenbooks.com/readbook_text/Intercourse_Between_India_and_the_Western_World_1000170773/117

பேரரசர் அகஸ்டசுக்கு முன்னர் இருந்த எவருக்கும் அந்த மரியாதை கிடைக்கவில்லை என்பதை அகஸ்டசே கூறுகிறதைப் பாருங்கள்.

MONUMENTUM ANCYRANUM (RES GESTAE DIVI AUGUSTI)

Part VI

32 Kings of the Parthians, Tiridates,131 and later Phrates,132 the son of King Phrates, took refuge with me as suppliants; of the Medes, Artavasdes;133 of the Adiabeni,134Artaxares; of the Britons, Dumnobellaunus135 and Tim . . . . . .; of the Sugambri,136 Maelo; of the Marcomanni and Suevi . . . . .rus. Phrates, son of Orodes, king of the Parthians, sent all his sons and grandsons to me in Italy, not because he had been conquered in war, but rather seeking our friendship by means of his own children as pledges.137 And a large number of other nations experienced the good faith of the Roman people during my principate who never before had had any interchange of embassies or of friendship with the Roman people.

http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Augustus/Res_Gestae/6*.html

(The Res Gestae Divi Augusti (‘Deeds of the Divine Augustus’) is Octavian’s own epitome of his life and achievements. An inscription at the Monumentum Ancyranum preserves the text in virtually complete form.)

            Principate என்ற சொல்லைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் உரோமைய வரலாறு தெரிந்திருக்கவேண்டும். கி.மு.44-இல் ஜூலியஸ் சீசர் கொலைசெய்யப்பட்ட பின் அக்டேவியஸ் சீசர் பதவியில் அமர்த்தப்பட்டார். இதை எதிர்த்து அகஸ்டஸ் சீசர், மார்க் அன்ட்டனி, மார்கஸ் லெபிடஸ் (Marcus Lepidus) ஆகியோரின் கூட்டணி முயன்று வெற்றிபெற்றது. நாட்டை மூன்றாகப் பிரித்து, தளபதிகளாக மூவரும் ஆண்டனர். எனினும் நாளடைவில் மற்ற இருவரையும் விரட்டிவிட்டு அகஸ்டஸ் நாட்டை ஒன்றாக்கி, பேரரசர் (Emperor) என்று தன்னை அறிவித்து, எல்லா அதிகாரங்களையும் தனதாக்கி, நாட்டைக் குடியரசிலிருந்து மாற்றினார். அவர் எழுதிய புதிய அரசியல் சட்ட அமைப்பே Principate எனப்பட்டது. பின்னர் கி.மு.27-இல் அவர் பேரரசராக முடிசூடிக்கொண்டார். இது நடந்தது அந்த முடிசூட்டு விழாவுக்குத்தான் முதன்முறையாகப் பன்னாட்டுத் தூதுவர்கள் வருகைதந்தனர் என்கிறார் அகஸ்டஸ்.

எனினும், ஸ்ட்ராபோ மதுரையைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. அவரது காலத்தில் (BC 64 – AD 24) தமிழ்நாட்டில் ஒரு பாண்டிய மன்னன் ஆண்டுவந்தான் என்றுமட்டும் தெரிகிறது. அக் காலகட்டத்தில் மதுரை நகரே பண்டியர்களின் தலைநகராக இருந்தது என்பதை நாம் அறிவோம். எனவே, ஸ்ட்ராபோவின் கூற்று மதுரையின் பழமைக்கு மற்றுமொரு சான்றாக விளங்குகிறது.

பார்வை:

  1. Ancient India as described in classical Literature, J.W.McCrindle, page 9, para 4

  2. Epitome of Roman History, Florus (available at http://penelope.uchicago.edu/    Thayer/E/Roman/Texts/Florus/Epitome/home.html

  3. Roman History, Cassius Dio (available at: http://penelope.uchicago.edu/Thayer/ E/Roman/Texts/Cassius_Dio/54*.html

    4.   Strabo: Geography: Book XV: On India, Fordham University, New York (available at: http://www.fordham.edu/halsall/ancient/strabo-geog-book15-india.asp

    5. Geographica – available at:  http://en.wikipedia.org/wiki/Geographica

    6. Account of India by the Greek Writer Strabo, Para 4 (available at : http://www.ibiblio.org/britishraj/Jackson9/chapter01.html

7. History of India: Historic Accounts of India by Foreign Travellers, Classic, Oriental, and Occidental, A. V. Williams Jackson (available at :

http://books.google.co.in/books?id=lllGG9RtILQC&pg=PA72&lpg=PA72&dq=nikolaos+damaskenos&source=bl&ots=lJEDS4Dq8Q&sig=z30LxqMdb-GXj0HOcXx12XN7ToI&hl=en&sa=X&ei=rOZaVKzoMIaLuwSEjYKYAg&ved=0CD4Q6AEwCA#v=onepage&q=nikolaos%20damaskenos&f=false

8. The geography of Strabo. Literally translated, with notes. The first sia books by H.C. Hamilton, esq., the remainder by W.Falconer (1854) Book 15, Chapter 1: (available at : https://archive.org/details/geograofstrablit02strauoft

***

Book 15, Para 13.

The inhabitants of the south resemble the Ethiopians in colour, but their countenances and hair are like those of other people. Their hair does not curl, on account of the humidity of the atmosphere. The inhabitants of the north resemble the Egyptians.

Para 22.

Aristobulus says of the wool-bearing trees, that the flower pod contains a kernel, which is taken out, and the remainder is combed like wool.

Southern India, like Arabia and Ethiopia, produces cinnamon, nard, and other aromatics. It resembles these countries as regards the effect of the sun's rays, but it surpasses them in having a copious supply of water, whence the atmosphere is humid, and on this account more conducive to fertility and fecundity; and this applies to the earth and to the water, hence those animals which inhabit both one and the other are of a larger size than are found in other countries.

Book 15, Chapter 1.Section 73

This writer states that at Antioch, near Daphne, he met with ambassadors from the Indians, who were sent to Augustus Cæsar. It appeared from the letter that several persons were mentioned in it, but three only survived, whom he says he saw. The rest had died chiefly in consequence of the length of the journey. The letter was written in Greek upon a skin; the import of it was, that Porus was the writer, that although he was sovereign of six hundred kings, yet that he highly esteemed the friendship of Cæsar; that he was willing to allow him a passage through his country, in whatever part he pleased, and to assist him in any undertaking that was just.

Eight naked servants, with girdles round their waists, and fragrant with perfumes, presented the gifts which were brought. The presents were a Hermes (i. e. a man) born without arms, whom I have seen, large snakes, a serpent ten cubits in length, a river tortoise of three cubits in length, and a partridge (?) larger than a vulture. They were accompanied by the person, it is said, who burnt himself to death at Athens. This is the practice with persons in distress, who seek escape from existing calamities, and with others in prosperous circumstances, as was the case with this man. For as everything hitherto had succeeded with him, he thought it necessary to depart, lest some unexpected calamity should happen to him by continuing to live; with a smile, therefore, naked, anointed, and with the girdle round his waist, he leaped upon the pyre. On his tomb was this inscription,—ZARMANOCHEGAS,2 AN INDIAN, A NATIVE OF BARGOSA,3 HAVING IMMORTALIZED HIMSELF ACCORDING TO THE CUSTOM OF HIS COUNTRY, HERE LIES.

 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 15, 2014, 3:10:29 AM11/15/14
to mintamil
வணக்கம் ஐயா.

நமது பழமையை நாம் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் தங்களது கட்டுரை அமைந்துள்ளது.
அருமையிலும் அருமையான பதிவு. பாராட்டுகள் ஐயா.
தொடர்ந்து படித்து வருகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

க்ருஷ்ணகுமார்

unread,
Nov 15, 2014, 6:59:05 AM11/15/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
அன்பின் பாண்டியராஜா ஐயா

வடமதுரைக்குப் போகுமுன்னமேயே வாசித்த பதிவு இது.  தலைப்பு முன்னம் வேறாக இருந்ததா நினைவில்லை.

திருப்பரங்குன்றம் என்று வாசித்ததுமே பார்வை நிலை குத்தி விட்டது.  குன்றுதோராடும் குமரனின் படைவீடாயிற்றே.

அதற்கு மேல் அழகர் மலை.

வடமதுரையிலிருந்து வந்த பின் அழகர் மலையை வாசித்த பின் மனம் ஒப்பிலா கள்ளழகர் பாலும் திருமாலிருஞ்சோலையிலும் நிறைந்து விட்டது.

பல பல நாழஞ் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை
அலவலை மை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே

என்ற பெரியாழ்வாரின் அமுதமொழி திருமாலிருஞ்சோலையை கண்முன் நிறுத்துகிறது.

மூன்று தசாப்தங்கள் முன்னர் எனது நண்பன் வீட்டு விவாஹத்தின் போது மதுரை வந்தது.   மீனாக்ஷியம்மன் சுந்தரேசர் கோவில், திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை............. மதுரையென்றதும் நினைவில் வருவது.

மிக விஸ்தாரமாக மதுரை பற்றி நீங்கள் எழுத முனைவதற்கு வாழ்த்துக்கள்.

கீழ்க்கண்ட தலைப்பிலான விபரங்களையும் இயன்றால் சேர்த்துக்கொள்ளவும்.

1.  மதுரையின் நீர்நிலைகள்.  ஆறுகள், ஏரிகள் (மதுரை பாஷையில் கம்மாய் என்று நினைவு) குளங்கள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள். அதன் முந்தைய மற்றும் இன்றைய நிலை.
2.  மதுரைக்கே உரித்தான காய், கனி, மலர்கள்
3. மதுரையிலும் அடுத்த சிற்றூர்களிலும் உள்ள சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன, க்றைஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலங்கள்
4.சங்ககாலம் தொட்டு தற்போதைய காலம் வரைக்குமான மதுரையைச் சார்ந்த சான்றோர்கள்.
5. மதுரையின் ப்ரபலமான உணவு வகைகள்.  சாப்பாட்டுக் கடைகள்.
6. மதுரையை அடுத்த சுற்றுலா ஸ்தலங்கள். அது பற்றிய விபரங்கள்

ம்........தொல்லை கொடுக்கிறேனா?............ தெரியவில்லை.

ம்............ நடுவிலே கூரத்தாழ்வாரின் பஞ்ச ஸ்தவங்களில் ஒன்றான சுந்தரபாஹுஸ்தவம் மூலமாகவும் அழகு மிகுந்த திருமாலிருஞ்சோலையை நினைவு கூர்கிறேன்.

அந்தந்த ஸ்தலங்களைப் பற்றிய சித்திரங்களையும் இயன்றால் சேர்க்க முயலவும் ஐயா.

மதுரை பற்றிய பல பாகங்கள் கொண்ட ஒரு நூலாக தங்களது முயற்சி திருவினையாகட்டும் என எங்கள் அடியார்க்கு நல்ல பெருமாளை இறைஞ்சுகிறேன்.

அன்புடன்
க்ருஷ்ணகுமார்

பி.கு:- அன்பின் கணேசன் ஐயா, இது போல நமது கொங்கு நாட்டைப்பற்றியும் தாங்கள் விரிவாக எழுத வேண்டும் என்பது சிறியேனின் அபிலாஷை. தர்மபுரியை உள்ளடக்கிய சேலம் ஜில்லா தமிழகத்தின் மிகப்பெரிய ஜில்லாவாக ஒரு காலத்தில் இருந்தது.

Pandiyaraja

unread,
Nov 15, 2014, 9:02:26 AM11/15/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
மிக்க நன்றி திரு காளை.
ப.பாண்டியராஜா

...

Pandiyaraja

unread,
Nov 15, 2014, 9:21:00 AM11/15/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
மிக்க நன்றி திரு கிருஷ்ணகுமார்.
தங்கள் கடிதத்தை நகலெடுத்துக்கொண்டேன். கூடியவரை தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன்.
ஐயா, தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பல செய்திகள் ஏற்கனவே பல புத்தகங்களில் வெளிவந்திருக்கின்றன.
முடிந்தால் அவற்றை வாங்கிப் படியுங்கள்.

மாநகர் மதுரை - அன்றும் இன்றும் - குன்றில்குமார் - சங்கர் பதிப்பகம் - சென்னை - தொ.பேசி; 26502086 - விலை. ரூ.200 - மதுரைக்குள்ளும் சுற்றிலும் இருக்கின்ற கோவில்களைப் பற்றிய முழுவிபரங்களும் மேலும் பல செய்திகளும் அடங்கியுள்ளன.

மதுர வரலாறு, சமணப் பெருவழியின் ஊடே - பசுமை நடை, திருநகர், மதுரை - தொ.பேசி; 9789730105 - விலை ரூ.100 - பல கல்வெட்டுச் செய்திகளை அடக்கியது.

அறியப்படாத மதுரை - ந.பாண்டுரங்கன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, தொ.பேசி; 26359906/26251968/26258410 - விலை ரூ.165

இவற்றில் தாங்கள் குறித்துள்ள பல செய்திகளும், இன்னும் பல செய்திகளும் உள்ளன. வேறு புத்தகங்களும் உள்ளன. திரு. நரசையா ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என அறிகிறேன். அவர் மின்குழும உறுப்பினர். அவரிடம் ஒரு புத்தகம் கேட்கலாம். எனக்கும் ஒன்று வேண்டும்.

வேறு புத்தகங்களும் இருக்கலாம். அவற்றைப் பற்றி அறிந்தவர்கள் இங்கு குறிப்பிடலாம்.
இவற்றையெல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம் - இந்தச் செய்திகளைத் தவிர்ப்பதற்காகத்தான். எழுதியதையே மீண்டும் எழுதும் பழக்கம் எனக்கில்லை. இங்குள்ள செய்திகள் ஒருவேளை முழுமைபெறாமல் இருந்தால் அவற்றை விரிவாக எழுத முயல்வேன். ஆனால் இந்தப் புத்தகங்கள் மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளன.

தங்கள் விரிவான மடலுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Nov 15, 2014, 9:32:39 AM11/15/14
to mint...@googlegroups.com, vallamai
On Friday, November 14, 2014 7:07:54 PM UTC-8, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
வரலாற்றில் மதுரை என்ற தலைப்பில் அடுத்ததாக ஸ்டராபோ-வின் கூற்றுகள் பற்றிய கட்டுரை இதனுடன் அனுப்பப்பட்டுள்ளது. நிறையப்பேர் படிக்கிறதுபோல் தெரிகிறது. ஆனால் மிகச் சிலரே பின்னூட்டம் இடுகின்றனர். ஒரு கலைஞனுக்குத் தேவை கைதட்டு. அதுவும் அவன் காதில் விழவேண்டும். அதுதான் அங்கீகாரம். இன்னும் உற்சாகமாக ஆட அவனுக்கு அது தெம்பளிக்கும். (ஒரே மாதிரி தட்டி உட்காரவைக்கவும் அது செய்யும்!!)
அன்புடன்,
ப.பாண்டியராஜா


 பழைய வரலாற்றுச் செய்திகள் படிப்போரும், ஆதரவளிப்போரும் தொகை குறைந்துவருகிறது ஐயா. நீங்களே புள்ளியியல் கணக்கு போட்டுப் பார்த்தீர்களானால் தமிழ் தேசியம் என்று புதிதாய் ஆரம்பித்த குழுக்களில் மடல் எண்ணிக்கை, அதைவிட Contents குறைச்சல் என்பதை கணக்குப்பட்டியலில் நீங்கள் காட்டமுடியும் அல்லவா? எழுதும் குழுக்களை ஆராய்க. தொல்லியல் அறிஞர் நாகசாமி சொல்வார் -கலைவரலாறு போன்ற ஸீரியசான சமாச்சாரங்கள் தமிழில் படிப்போர் குறைவு. அதனால் தான் ஆங்கிலத்தில் எழுதவேண்டியுள்ளது என்பார். மக்கள் ஆதரிக்காதவை ஆங்கிலத்துக்குப் போய்விடும். டிவி பட்டிமன்றம் போன்ற ஜாலிதான் மிஞ்சும்.

மதுரை பற்றிப் பல நூல்கள் உள. சில குறிப்பிட்டுள்ளீர்கள். நல்ல பல முனைவர் பட்ட ஆய்வேடுகளும் உள்ளன.

நா. கணேசன்

Pandiyaraja

unread,
Nov 15, 2014, 11:09:35 AM11/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அன்பின் ஐயா!,
மிக்க நன்றி. நிறைவான கூட்டத்துக்கு மலிவாக எழுதுவதைவிட, குறைவான கூட்டத்துக்குச் செறிவாக எழுதுவது நலம் என நினைக்கிறேன்.
மதுரையைப் பற்றித் தகவல்கள் கிடைக்குமிடங்களைப் பற்றித் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன். நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
மீண்டும் நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Nov 15, 2014, 11:19:33 AM11/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, November 15, 2014 8:09:35 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்பின் ஐயா!,
மிக்க நன்றி. நிறைவான கூட்டத்துக்கு மலிவாக எழுதுவதைவிட, குறைவான கூட்டத்துக்குச் செறிவாக எழுதுவது நலம் என நினைக்கிறேன்.
மதுரையைப் பற்றித் தகவல்கள் கிடைக்குமிடங்களைப் பற்றித் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன். நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
மீண்டும் நன்றி,
ப.பாண்டியராஜா


எனக்குத் தெரிந்ததைத் தருகிறேன் ஐயா. சுமார் நூறு ரெஃபெரென்ஸ் ஆவது தேறும்.

Aside:
புறம் 348 பாருங்கள். குயம் குயவர் சேரி என்பது பொருத்தமாகப் படலையே.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 16, 2014, 3:32:41 AM11/16/14
to mintamil

வணக்கம்

மதுரை மகாலுக்குக் கிழக்கே., முனிச்சாலைக்கு மேற்கே குயவர்பாளையம் என்ற பகுதி உள்ளது .

--

Pandiyaraja

unread,
Nov 16, 2014, 3:52:08 AM11/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஐயா,
மதுரைக்கு மேற்கே, திருப்பரங்குன்றத்துக்கும் வடக்கில் (தென்கால் கண்மாய்க் கரையில்) விளாச்சேரி என்ற ஓர் ஊர் உண்டு. இன்றைக்கும் அது குயவர் நிறைந்தது. அழகிய மண்பாண்டங்கள் செய்கின்றனர். இப்போது சற்று முன்னேற்றம் கண்டு மண் பொம்மைகள் செய்கின்றனர். கொலு வைக்கும் காலத்தில் இன்னமும் கூட்டம் அங்கே மொய்க்கும். இன்றைக்கும் இருக்கிறது குயவர் சேரி!!!!
ப.பாண்டியராஜா
குறிப்பு: கண்மாய்க்கரையில் இருப்பதால் மீன்சேரியும் அதுவே.

seshadri sridharan

unread,
Nov 16, 2014, 4:12:16 AM11/16/14
to mintamil
2014-11-16 14:22 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
விளாச்சேரி என்ற ஓர் ஊர் உண்டு. 

விளாச்சேரி என்பதில் உள்ள விளா என்பதற்கு பொருள் அறியத்தர வேண்டுகிறேன். விளாச்சேரி, விளாம்பக்கம், விளாங்காடு, விளாகம், இடை ஆற்றூர்விளாகம் என்பவற்றில் உள்ள விளா பண்டு இடுகாட்டை குறித்திருக்குமோ என்று ஐயுறுகிறேன் ஏனென்றால் இன்றும் ஆற்றிடையே புதைகாடுகள் இருப்பதை காணுகின்றேன்.


சேசாத்திரி     
 

Pandiyaraja

unread,
Nov 16, 2014, 6:36:05 AM11/16/14
to mint...@googlegroups.com
விளா-வுக்குப் பொருள் தெரியவில்லை ஐயா! "சொல் வல்லார் யாரேனும் உளராயின் அவரிடம் செல்க" என்று கையைக்காட்டவேண்டியதுதான்!!
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் குறிப்பிட்ட அந்த விளாச்சேரியில்தான் பரிதிமால்கலைஞர் என்றழைக்கப்படும் சூரியநாராயண சாஸ்திரியார் பிறந்து வளர்ந்தார். அவர் பயின்ற பசுமலை உயர்நிலைப் பள்ளியில் நானும் பயின்றேன் என்பதில் எனக்குப் பெருமை!
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Nov 16, 2014, 6:44:32 AM11/16/14
to mint...@googlegroups.com


On Sunday, November 16, 2014 3:36:05 AM UTC-8, Pandiyaraja wrote:
விளா-வுக்குப் பொருள் தெரியவில்லை ஐயா! "சொல் வல்லார் யாரேனும் உளராயின் அவரிடம் செல்க" என்று கையைக்காட்டவேண்டியதுதான்!!
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் குறிப்பிட்ட அந்த விளாச்சேரியில்தான் பரிதிமால்கலைஞர் என்றழைக்கப்படும் சூரியநாராயண சாஸ்திரியார் பிறந்து வளர்ந்தார். அவர் பயின்ற பசுமலை உயர்நிலைப் பள்ளியில் நானும் பயின்றேன் என்பதில் எனக்குப் பெருமை!
ப.பாண்டியராஜா

விளா = விளவம் (வில்வம்)

விளாங்கோடு > (விடாங்கோடு) விதாங்கோடு
திரு-விதாங்கோடு - விளா உண்டு இதில்.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Nov 16, 2014, 10:42:03 AM11/16/14
to mintamil
விள் > பிளவுக் கருத்து வேர். எனவே நிலத்தைப் பிளந்து அதிலே பிணத்தை இடுவது என்ற பொருளில் இந்த விளா வந்திருக்குமோ என்று எண்ணமிடுகிறேன். ஈழத்தில் சித்திவிளாகம் என்றொரு ஊர் உண்டு. சித்தி அடைதல் என்பது சமாதி நிலையைக் குறிக்கும். அப்படி சித்தி அடைந்தவருக்கு விளாகம் (square) அமைத்து பின் கோவிலாக மருவியிருக்கலாம். இடைஆற்றுவிளாகம் > ஆற்றின் நடுவே அமைந்த புதைப்பிடம் ஆகலாம். 

சென்னை செங்குன்றம் (redhills) அருகே விளாங்காட்டுப்பாக்கம் என்றொரு ஊர் உள்ளது. சுடுகாடு இடுகாடு போல் விளாங்காடு. இவற்றை ஒப்பிட்டுத்தான் விளா என்பது புதைப்பிடமாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

Pandiyaraja

unread,
Nov 21, 2014, 11:38:22 PM11/21/14
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
வரலாற்றில் மதுரை என்ற தலைப்பில் மூன்றாவதாக வருவது பெரிப்லூசில் மதுரை பற்றியது. இங்கும் பாண்டியர்களைப் பற்றிய செய்திகளே கிடைக்கின்றன. 'மதுரை'க்காக இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கவேண்டும்.
கட்டுரை கீழே:

ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

3. செங்கடலை அடுத்த பயணம் (Periplus of the Erythraean Sea

– The Voyage around the Erythraean Sea – AD 40 - 50)

அ. Periplus என்றால் என்ன?

பெரிப்லூஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல் (Περίπλους). இதற்குக் கடலில் சுற்றிவருதல் (sailing around) என்று பொருள். ஆகுபெயராக அப்படிப்பட்ட ஒரு பயணத்தையும் குறிக்கும் (a voyage or a trip around something - as an island or a coast). பலதரப்பட்ட பெரிப்லூஸ்கள் எழுதப்பட்டுள்ளன. இது எரித்ரியன் கடலைச் சுற்றிய பயணம். கிரேக்க மொழியில் எரித்ரா (Erythra) என்றால் சிவப்பு என்று பொருள். எனவே எரித்ரீயன் கடல் என்பது செங்கடல் (Redsea). இருப்பினும் செங்கடலை அடுத்துள்ள பாரசீக வளைகுடா (Persian Gulf), அதனை அடுத்துள்ள அரபிக்கடல் ஆகிய பகுதிகளையும் இது குறிக்கும். எனவே செங்கடல், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை, இந்தியாவின் மேற்குக்கரைப் பகுதி ஆகியவற்றில் கடற்பயணமாகச் சுற்றிவருவதே Periplus of the Erythraean Sea ஆகும்.  இவ்வாறு சுற்றி வந்த கடற்பயணத்து அனுபவங்கள், கண்ட இடங்கள், அங்கிருந்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் நேரடிக் கூற்றே இந்நூல் ஆகும்.

இந் நூலை எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. எழுதப்பட்ட காலமும் சரிவரத் தெரியவில்லை. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளையும், அதில் இடம்பெறும் அரசர் ஆகியோர் பெயர்களையும் வைத்து இது கி.பி. 40–50 ஆக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை எழுதியவர் எகிப்தில் வசித்துவந்த இரு கிரேக்கராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந் நூல் கிரேக்க மொழியில் Περίπλους τῆς Ἐρυθράς Θαλάσσης என்றும், லத்தீன் மொழியில் Periplus Maris Erythraei என்றும் அழைக்கப்படுகிறது.

ஆ. Periplus of the Erythraean Sea கூறுவது என்ன?

      இந் நூல் 66 பத்திகளை (Paragraph)க் கொண்டது. ஒவ்வொரு பத்தியும் 5 முதல் பத்து வரிகளைக் கொண்டது. மொத்தத்தில் 4 பக்கங்களுக்குள் அடங்கிவிடும் இந் நூல் அக் காலத்திய வணிகத்தைப் பற்றியும், நாடுகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும் முக்கியமான பல செய்திகள் அடங்கிய ஒரு தகவல் சுரங்கம் ஆகும்.

      இதில் முதல் 18 பத்திகள் வடக்கு – தெற்கு திசையில் எகிப்திலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை வழியாக இன்றைய டான்ஜானியா (Tanzania) வரையிலான துறைமுகப்பட்டினங்களையும், கடல்வழிகளையும் விவரிக்கின்றன. அடுத்து வரும் 42 பத்திகள் (19 முதல் 60 வரை) மேற்கு – கிழக்கு திசையில் பாரசீக வளைகுடாவை ஒட்டி, எகிப்திலிருந்து இந்தியாவின் மேற்குக் கடற்கடற்கரை வரையிலான பகுதியை விவரிக்கின்றன. கடைசி ஆறு பத்திகள் இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் இலங்கையிலிருந்து, மசூலிப்பட்டினம் வழியாகக் கங்கைநதியின் முகத்துவாரம் வரையிலான பகுதிகளை விவரிக்கின்றன. இதுவரை இந் நூலாசிரியர் தன் நேரடி அனுபவங்களாகவே கூறுகிறார். இதன் பின்னர் சீனம் வரையிலான பகுதிகள் பற்றித் தான் கேள்விப்பட்டவற்றை எழுதுகிறார்.

குறிப்பாக 53, 54, 55, 56 ஆகிய பத்திகள் தமிழ்நாட்டு மேற்குப் பக்கக் கடற்கரைப் பட்டினங்களான முசிறி, தொண்டி ஆகிய துறைமுகங்களைப் பற்றிக் கூறுகின்றன.

இ. பெரிப்லூஸ் கூறும் தமிழகப் பகுதிகள்

முதலில் குஜராத்திலிருந்து முசிறி, தொண்டிவரை பயணிக்கும் பகுதி.

53.   Beyond Calliena there are other market-towns of this region; Semylla, Mandagora, Pala patma, Meligara, Byzantium, Togarum and Aurannohoas. Then there are the islands called Sesecrienae and that of the Aegidii, and that of the Caenitae, opposite the place called Chersonesus (and in these places there are pirates) and after this the White Island. Then come Naura and Tyndis, the first markets of Damirica [=Limyrike], and then Muziris and Nelcynda, which are now of leading importance. (available in internet:  The Voyage around the Erythraean Sea -

https://depts.washington.edu/silkroad/texts/periplus/periplus.html

Aegidii கோவா;

Naura – கண்ணனூர், கேரளா

Tyndis – (சங்க காலத்துத் தொண்டி) – பொன்னானி, கேரளா

Damirica – தமிழகம்

Muziris - (சங்க காலத்து முசிறி) – கொடுங்களூர் (Cranganur), கேரளா  

Nelcynda – கோட்டயம் அருகில் (τ Νελκύνδα), கேரளா

     தொண்டி, முசிறி பற்றி நம் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பாருங்கள்.

    தொண்டி (20)
திண் தேர் பொறையன் தொண்டி
   தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே - நற் 8/9,10
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல் - நற் 18/4
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி
   நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என - நற் 195/5,6
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை - குறு 128/2
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
   முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு - குறு 210/2,3
தொண்டி அன்ன என் நலம் தந்து - குறு 238/4
தொண்டி அன்ன பணை தோள் - ஐங் 171/3
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண் - ஐங் 172/2
அரவு உறு துயரம் எய்துப தொண்டி
   தண் நறு நெய்தல் நாறும் - ஐங் 173/2,3
அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன - ஐங் 174/1
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே - ஐங் 175/4
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டி
   தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி - ஐங் 176/1,2
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே - ஐங் 177/4
குட்டுவன் தொண்டி அன்ன - ஐங் 178/3
இன் ஒலி தொண்டி அற்றே - ஐங் 179/3
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே - ஐங் 180/4
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே - அகம் 10/13
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம் - அகம் 60/7
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை - அகம் 290/13
கள் நாறும்மே கானல் அம் தொண்டி
   அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் - புறம் 48/4,5
   தொண்டியோர் (2)
வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந - பதி 88/21
தண் தொண்டியோர் அடு பொருந - புறம் 17/13
  முசிறி (3)
முதுநீர் முன்துறை முசிறி முற்றி - அகம் 57/15
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ - அகம் 149/11
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன - புறம் 343/10

இவை அனைத்தும் வெறும் இலக்கியக் கூற்றுகள் இல்லை. இவற்றுக்கு வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன அல்லவா!

இப் பகுதியில் கோவாவிலிருந்து தெற்கில் பயணிக்கும்போது உள்ள துறைமுகங்களின் பெயர்களை மட்டும் பெரிப்லூஸ் குறிப்பிடுகிறது. அடுத்த பகுதியில் இவ்விடங்களின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் குறிப்பிடுகிறது. தமிழகம் என்ற பெயர் அக்காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு உச்சரித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? அன்றைக்கே இது லெமூரியா என்ற அழைக்கப்பட்டிருக்கிறதோ?

Damirica என்பதன் முதல் கிரேக்க எழுத்து  (Delta=D). இது தவறுதலாக கிரேக்க (Lambda=L)-வாகப் படிக்கப்பட்டிருக்கலாம், எனவேதான் இதனை Limyrike எனச் சிலர் படித்திருக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கூறுவர்.

54.   Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same Kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea.

55.   There is another place at the mouth of this river, the village of Bacare; to which ships drop down on the outward voyage from Nelcynda, and anchor in the roadstead to take on their cargoes; because the river is full of shoals and the channels are not clear. The kings of both these market-towns live in the interior. And as a sign to those approaching these places from the sea there are serpents coming forth to meet you, black in color, but shorter, like snakes in the head, and with blood-red eyes.

Cerobothra – சேர புத்திரர் – C – என்பதை K – என்ற உச்சரிப்பில் படித்ததால்தான் இது கேரளம் ஆனதோ?

Nelcynda பற்றி அண்மையில் ஒரு புதிய செய்தி வெளிவந்துள்ளது. G. Mahadevan என்பவர் இந்து நாளிதளில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

THIRUVANANTHAPURAM: A team from the Department of Archaeology, University of Kerala, that undertook surface exploration studies in the Central Travancore region of Kerala claims to have stumbled upon what could well be Nelcynda, a trade emporium of ancient Kerala.

The 16-member team led by the Head of the Department, Ajit Kumar, found a piece of the handle of what was possibly a Roman amphora — a vessel used at the turn of the first millennium to carry wine and olive oil — from the Alumthuruthu-Kadapra area on the banks of the river Pampa. Pottery shards of local origin were also found during the exploration done in December 2007.

Now we have found evidence that points to the possibility that the ancient trade port of Nelcynda was located in what is today Alumthuruthu-Kadapra near Chengannur,” Dr. Ajit Kumar said.

http://www.thehindu.com/todays-paper/study-points-to-ancient-trade-connection-in-central-travancore/article1180832.ece

பாண்டியன் என்ற பெயரை இங்கே நாம் பார்க்கிறோம். அக் காலத்தில் மேற்குக் கரைத் தொண்டியும், முசிறியும் சேரர் வசம் இருந்திருக்கின்றன. ஆனால் அதற்குச் சற்றுத் தெற்கே கோட்டயம் பகுதியும், அதற்குத் தெற்கிலுள்ள கடற்கரைப் பகுதியும் பாண்டியர் வசம் இருந்திருக்கின்றன. அயல்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதிக்காக மேற்குக் கரையில் தமக்கு உரிமையுள்ள ஓரிடம் இருக்கவேண்டும் என்று பாண்டியர் அதைக் கொண்டிருந்திருக்கின்றனர் போலும்.

Becare – Porakkad in Kerala


பெரிப்லூஸ் குறிப்பிடும் துறைமுகங்கள்.

      பெரிப்லூசில் மதுரையைப் பற்றிய தகவல்கள் இல்லையென்றாலும், பாண்டிய அரசைப் பற்றிய தகவல்களால் மதுரையின் தொன்மை இதன் மூலமும் தெரியவருகிறது.


File:Map of the Periplus of the Erythraean Sea.jpg
படங்கள் இங்கே ஒழுங்காக வரவில்லையென்றால் தேமொழி அவர்களிடம்தான் உதவி கேட்கவேண்டும். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு pdf கோப்பையும் இணைத்துள்ளேன்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா


1C.வரலாற்றில் மதுரை.pdf

தேமொழி

unread,
Nov 22, 2014, 12:32:21 AM11/22/14
to mint...@googlegroups.com

அன்புடையீர்,

வரலாற்றில் மதுரை என்ற தலைப்பில் மூன்றாவதாக வருவது பெரிப்லூசில் மதுரை பற்றியது. இங்கும் பாண்டியர்களைப் பற்றிய செய்திகளே கிடைக்கின்றன. 'மதுரை'க்காக இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கவேண்டும்.

கட்டுரை கீழே:

 

ப.பாண்டியராஜா

 

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

3. செங்கடலை அடுத்த பயணம் (Periplus of the Erythraean Sea

– The Voyage around the Erythraean Sea – AD 40 - 50)

அ. Periplus என்றால் என்ன?

பெரிப்லூஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல் (Περίπλους). இதற்குக் கடலில் சுற்றிவருதல் (sailing around) என்று பொருள். ஆகுபெயராக அப்படிப்பட்ட ஒரு பயணத்தையும் குறிக்கும் (a voyage or a trip around something - as an island or a coast). பலதரப்பட்ட பெரிப்லூஸ்கள் எழுதப்பட்டுள்ளன. இது எரித்ரியன் கடலைச் சுற்றிய பயணம். கிரேக்க மொழியில் எரித்ரா (Erythraஎன்றால் சிவப்பு என்று பொருள். எனவே எரித்ரீயன் கடல் என்பது செங்கடல் (Redsea). இருப்பினும் செங்கடலை அடுத்துள்ள பாரசீக வளைகுடா (Persian Gulf), அதனை அடுத்துள்ள அரபிக்கடல் ஆகிய பகுதிகளையும் இது குறிக்கும். எனவே செங்கடல், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை, இந்தியாவின் மேற்குக்கரைப் பகுதி ஆகியவற்றில் கடற்பயணமாகச் சுற்றிவருவதே Periplus of the Erythraean Sea ஆகும்.  இவ்வாறு சுற்றி வந்த கடற்பயணத்து அனுபவங்கள், கண்ட இடங்கள், அங்கிருந்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் நேரடிக் கூற்றே இந்நூல் ஆகும்.

இந் நூலை எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. எழுதப்பட்ட காலமும் சரிவரத் தெரியவில்லை. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளையும், அதில் இடம்பெறும் அரசர் ஆகியோர் பெயர்களையும் வைத்து இது கி.பி. 40–50 ஆக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை எழுதியவர் எகிப்தில் வசித்துவந்த இரு கிரேக்கராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந் நூல் கிரேக்க மொழியில் Περίπλους τῆς Ἐρυθράς Θαλάσσηςஎன்றும், லத்தீன் மொழியில் Periplus Maris Erythraei என்றும் அழைக்கப்படுகிறது.

ஆ. Periplus of the Erythraean Sea கூறுவது என்ன?

      இந் நூல் 66 பத்திகளை (Paragraph)க் கொண்டது. ஒவ்வொரு பத்தியும் 5 முதல் பத்து வரிகளைக் கொண்டது. மொத்தத்தில் 4 பக்கங்களுக்குள் அடங்கிவிடும் இந் நூல் அக் காலத்திய வணிகத்தைப் பற்றியும், நாடுகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும் முக்கியமான பல செய்திகள் அடங்கிய ஒரு தகவல் சுரங்கம் ஆகும்.

      இதில் முதல் 18 பத்திகள் வடக்கு – தெற்கு திசையில் எகிப்திலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை வழியாக இன்றைய டான்ஜானியா (Tanzania) வரையிலான துறைமுகப்பட்டினங்களையும், கடல்வழிகளையும் விவரிக்கின்றன. அடுத்து வரும் 42 பத்திகள் (19 முதல் 60 வரை) மேற்கு – கிழக்கு திசையில் பாரசீக வளைகுடாவை ஒட்டி, எகிப்திலிருந்து இந்தியாவின் மேற்குக் கடற்கடற்கரை வரையிலான பகுதியை விவரிக்கின்றன. கடைசி ஆறு பத்திகள் இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் இலங்கையிலிருந்து, மசூலிப்பட்டினம் வழியாகக் கங்கைநதியின் முகத்துவாரம் வரையிலான பகுதிகளை விவரிக்கின்றன. இதுவரை இந் நூலாசிரியர் தன் நேரடி அனுபவங்களாகவே கூறுகிறார். இதன் பின்னர் சீனம் வரையிலான பகுதிகள் பற்றித் தான் கேள்விப்பட்டவற்றை எழுதுகிறார்.

குறிப்பாக 53, 54, 55, 56 ஆகிய பத்திகள் தமிழ்நாட்டு மேற்குப் பக்கக் கடற்கரைப் பட்டினங்களான முசிறி, தொண்டி ஆகிய துறைமுகங்களைப் பற்றிக் கூறுகின்றன.

இ. பெரிப்லூஸ் கூறும் தமிழகப் பகுதிகள்

முதலில் குஜராத்திலிருந்து முசிறி, தொண்டிவரை பயணிக்கும் பகுதி.

53.   Beyond Calliena there are other market-towns of this region; Semylla, Mandagora, Pala patma, Meligara, Byzantium, Togarum and Aurannohoas. Then there are the islands called Sesecrienae and that of the Aegidii, and that of the Caenitae, opposite the place called Chersonesus (and in these places there are pirates) and after this the White Island. Then come Naura andTyndis, the first markets of Damirica [=Limyrike], and then Muziris and Nelcynda, which are now of leading importance. (available in internet:  The Voyage around the Erythraean Sea -

Damirica என்பதன் முதல் கிரேக்க எழுத்து Δ  (Delta=D). இது தவறுதலாக கிரேக்க Λ (Lambda=L)-வாகப் படிக்கப்பட்டிருக்கலாம், எனவேதான் இதனை Limyrike எனச் சிலர் படித்திருக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கூறுவர்.

54.   Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same Kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea.

55.   There is another place at the mouth of this river, the village of Bacare; to which ships drop down on the outward voyage from Nelcynda, and anchor in the roadstead to take on their cargoes; because the river is full of shoals and the channels are not clear. The kings of both these market-towns live in the interior. And as a sign to those approaching these places from the sea there are serpents coming forth to meet you, black in color, but shorter, like snakes in the head, and with blood-red eyes.

Cerobothra – சேர புத்திரர் – C – என்பதை K என்ற உச்சரிப்பில் படித்ததால்தான் இது கேரளம் ஆனதோ?

Nelcynda பற்றி அண்மையில் ஒரு புதிய செய்தி வெளிவந்துள்ளது. G. Mahadevan என்பவர் இந்து நாளிதளில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

THIRUVANANTHAPURAM: A team from the Department of Archaeology, University of Kerala, that undertook surface exploration studies in the Central Travancore region of Kerala claims to have stumbled upon what could well be Nelcynda, a trade emporium of ancient Kerala.

The 16-member team led by the Head of the Department, Ajit Kumar, found a piece of the handle of what was possibly a Roman amphora — a vessel used at the turn of the first millennium to carry wine and olive oil — from the Alumthuruthu-Kadapra area on the banks of the river Pampa. Pottery shards of local origin were also found during the exploration done in December 2007.

Now we have found evidence that points to the possibility that the ancient trade port of Nelcynda was located in what is today Alumthuruthu-Kadapra near Chengannur,” Dr. Ajit Kumar said.

http://www.thehindu.com/todays-paper/study-points-to-ancient-trade-connection-in-central-travancore/article1180832.ece

பாண்டியன் என்ற பெயரை இங்கே நாம் பார்க்கிறோம். அக் காலத்தில் மேற்குக் கரைத் தொண்டியும், முசிறியும் சேரர் வசம் இருந்திருக்கின்றன. ஆனால் அதற்குச் சற்றுத் தெற்கே கோட்டயம் பகுதியும், அதற்குத் தெற்கிலுள்ள கடற்கரைப் பகுதியும் பாண்டியர் வசம் இருந்திருக்கின்றன. அயல்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதிக்காக மேற்குக் கரையில் தமக்கு உரிமையுள்ள ஓரிடம் இருக்கவேண்டும் என்று பாண்டியர் அதைக் கொண்டிருந்திருக்கின்றனர் போலும்.

Becare – Porakkad in Kerala

 

 

பெரிப்லூஸ் குறிப்பிடும் துறைமுகங்கள்.

பெரிப்லூசில் மதுரையைப் பற்றிய தகவல்கள் இல்லையென்றாலும், பாண்டிய அரசைப் பற்றிய தகவல்களால் மதுரையின் தொன்மை இதன் மூலமும் தெரியவருகிறது.


 

தேமொழி

unread,
Nov 22, 2014, 12:36:35 AM11/22/14
to mint...@googlegroups.com
படத்தை தனியே சேமித்து, இடையில் இணைத்து மீண்டும் ஒருமுறை பதிவிட்டுள்ளேன், மிக்க நன்றி  ஐயா. 

அன்புடன்
..... தேமொழி

Pandiyaraja

unread,
Nov 22, 2014, 2:44:51 AM11/22/14
to mint...@googlegroups.com
மிக அருமை, மிக்க நன்றி தேமொழி அம்மா!
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 22, 2014, 2:51:46 AM11/22/14
to mintamil
வணக்கம்.

பண்டைக்காலத்திலேயே இந்தியாவில் வணிகம் சிறப்பாக இருந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
அருமையான தகவல்களை ஆதாரங்களுடன் அளித்து வருகின்றீர்கள் ஐயா.
படங்களைப் பதிவு செய்து வழங்கிய திருமதி.தேமொழி அவர்களுக்கும் நன்றி.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Nov 28, 2014, 11:11:53 AM11/28/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
மிக்க நன்றி காளை அவர்களே,
அன்புடையீர்,
இத்துடன் 'வரலாற்றில் மதுரை' என்ற தலைப்பின் அடுத்த பகுதி வருகிறது. இது, பிளினி என்பவரைப் பற்றியது. கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் எழுதிய நூலில்தான் முதன்முறையாக மதுரை என்ற பெயரைப் பார்க்கிறோம். எனினும் வேரு தகவல்கள் இல்லை.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

4. மூத்த பிளினி (Pliny the Elder - Gaius Plinius Secundus) ( கி.பி. 23 – கி.பி. 79)

யார் இந்தப் பிளினி?

உரோமையப் பேரரசின் தளபதியாய் இருந்தவர் பிளினி. இவருடைய மருமகன் பெயரும் பிளினி என்பதால் இவர் மூத்த பிளினி என்று அழைக்கப்படுகிறார். தன் ஓய்வுநேரத்தின் பெரும் பகுதியைப் படிப்பதிலும், ஆய்வுகள் நடத்துவதிலும் செலவிட்டவர். மணமாகாதவர். கணிதவியல், மனித உடற்கூறு இயல், வேளாண் இயல், தாவரவியல், மருந்தியல், சிற்பவியல், ஓவியவியல், விலங்கியல், வானியல், புவியியல், கனிமவியல் (mineralogy) ஆகிய பலவிதத் துறைகளில் நாட்டமும் அறிவும் கொண்டவர். தான் கற்றவற்றையும் கேட்டவற்றையும் The Natural History என்ற ஒரு பெரிய நூலாக எழுதினார்.

The Natural History (Naturalis Historia)

பிளினி எழுதிய இந் நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகம் மட்டும் அல்ல, ஒரு அறிவுப் பெட்டகமும் ஆகும். 37 பகுதிகளை உள்ளடக்கிய பத்துத் தொகுதிகளைக் (37 Books in 10 Volumes) கொண்ட அந் நூல் ஒரு கலைக்களஞ்சியத்தைப் (encyclopedia) போன்றதாகும். இதில் Volume II, Book VI, Chapter XXIII – இல் இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதில்தான் முதல்முறையாக மதுரையைப் பற்றிப் பார்க்கிறோம்.

பெரிப்லூசில் குறிப்பிட்டதைப் போலவே Muziris, Caelobothras, Pandion ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, மதுரையைப் பற்றியும் பிளினி கூறுகிறார்.

BOOK VI. c. 23 (26). The journal of the voyage of Onesikritus and Nearchus has neither the names of the stations nor the distances set down in it; and first of all it is not sufficiently explained where and near what river Xylenopolis was--a city founded by Alexander and that from which his expedition started when it left India. Still, the following places mentioned by them are worthy of notice--the town of Arbis, founded by Nearchus in the course of the voyage, and the river Arbis, which is navigable and opposite which lies an island at a distance of 70 stadia; Alexandria built by Leonnatus by Alexander's orders in the territories of this people; Argenuus with a convenient harbour; the river Tonberos, which is navigable, and around its banks the Pasirae; then come the Ichthyophagi. . . . In after times it was considered an undeniable fact that the voyage from Syagrus, a cape in Arabia, reckoned at 1335 miles, can be performed by aid of a west wind which is there called Hippalus. The age that followed pointed out a shorter route that was also safer by making the voyage from the same cape to Sigerus, a seaport of India; and for a long time this route was followed until one still shorter was discovered by a merchant, and India was brought nearer us through the love of gain. So then at the present day voyages are made to India every year; and companies of archers are carried on board because the Indian seas are infested by pirates. . . . If the wind called Hippalus be blowing, Muziris, the nearest mart of India, can be reached in forty days. It is not a desirable place of call, pirates being in the neighbourhood who occupy a place called Nitrias, and besides it is not well supplied with wares for traffic. Ships besides anchor at a great distance from the shore, and the cargoes have to be landed and shipped by employing boats. At the time I was writing this Caelobothras was the sovereign of that country. Another more convenient harbour of the nation is Neacyndon which is called Becare. There Pandion used to reign, dwelling at a great distance from the mart, in a town in the interior of the country called Modura. The district from which pepper is carried down to Becare in canoes is called Cottonara. None of these names of nations, ports, and cities are to be found in any of the former writers--from which it appears that the names (stations) of the places are changed. ( available in internet :

http://www.sdstate.edu/projectsouthasia/upload/Pliny-Voyages-to-India.pdf

 - South Dakota State University, Brookings, SD 57007

     வேறு யாரும் இதுவரை இந்தப் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்கிறார் பிளினி. மதுரை பற்றிய குறிப்பு மெகஸ்தனிசின் இண்டிகா, பெரிப்ளுஸ் ஆகியவற்றில் இல்லை. ஆனால் முசிறி, சேரபுத்திரர் ஆகியோரைப் பற்றி பெரிப்லூசில் குறிப்புகள் உள்ளன. எனவே பிளினி இதனை எழுதும்போது பெரிப்லூஸ் வெளிவரவில்லை எனத் தெரிகிறது.

பிளினி தன் நூலை லத்தீன் மொழியில் எழுதினார். எனவே மதுரை என்ற பெயரில் மொழிபெயர்ப்பு வேறுபாடுகளும் உண்டு. இதோ இன்னொரு மொழிபெயர்ப்பைப் பாருங்கள்:

Pliny the Elder, The Natural History , John Bostock, M.D., F.R.S., H.T. Riley, Esq., B.A., Ed. என்ற நூல் இவ்வாறு கூறுகிறது.

If the wind, called Hippalus,32 happens to be blowing, it is possible to arrive in forty days at the nearest mart of India, Muziris33 by name. This, however, is not a very desirable place for disembarcation, on account of the pirates which frequent its vicinity, where they occupy a place called Nitrias; nor, in fact, is it very rich in articles of merchandize. Besides, the road-stead for shipping is a considerable distance from the shore, and the cargoes have to be conveyed in boats, either for loading or discharging. At the moment that I am writing these pages, the name of the king of this place is Cælobothras. Another port, and a much more convenient one, is that which lies in the territory of the people called Neacyndi, Barace by name. Here king Pandion used to reign, dwelling at a considerable distance from the mart in the interior, at a city known as Modiera. (available in :

http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.02.0137%3Abook%3D6%3Achapter%3D26)

Pliny’s Natural History – In thirty seven Books – A Translation on the basis of that by Dr.Philemon Holland Ed. 1601., என்ற நூல் இவ்வாறு கூறுகிறது:

--- -- At the time when this Account was written, the King that reigned was named Celebothras. There is another Harbour that is more commodious, belonging to the Nation Necanidon, which they call Becare; the King’s Name at present is Pondion; far off is another Town of Merchandise within the Land, called Modusa. (available in : https://archive.org/stream/plinysnaturalhis00plinrich#page/n347/mode/2up

பிளினி லத்தீன் மொழியில் எழுதிய மூலத்தின் நகல் அப்படியே கிடைக்கிறது. லத்தீன் மொழியில் மேற்கண்ட பகுதி எவ்வாறு அமைந்திருக்கிறது என்று பாருங்கள்:

Pliny's Natural history

http://www.livius.org/pi-pm/pliny/pliny_e3.html

Book 6: Geography of the far south and the far east
A.o., the Black Sea, Ecbatana, the Caspian Sea, Scythia and China, size of India, rivers of India, the Indus, Sri Lanka, way of life on Sri Lanka, Babylonia, Arabia, the canal between the Nile and the Red Sea, Ethiopia

http://penelope.uchicago.edu/Thayer/L/Roman/Texts/Pliny_the_Elder/6*.html

Pliny the Elder: the Natural History

6

Geography of Asia; summary overview and wrap-up of world geography.

Liber VI

xxvi

104

navigare incipiunt aestate media ante canis ortum aut ab exortu protinus veniuntque tricesimo circiter die Ocelim Arabiae aut Canen turiferae regionis. est et tertius portus qui vocatur Muza, quem Indica navigatio non petit nec nisi turis odorumque Arabicorum mercatores. intus oppidum, regia eius, appellatur Sapphar, aliudque Save. Indos vento hippalo navigant diebus XL ad primum emporium Indiae Muzirim. non expetendum propter vicinos piratas, qui optinent locum nomine Nitrias, neque est abundans mercibus; praeterea longe a terra abest navium statio, lintribusque adferuntur onera et egeruntur. regnabat ibi, cum proderem haec, Caelobothras.

105

alius utilior portus gentis Neacyndon, qui vocatur Becare. ibi regnabat Pandion, longe ab emporio in mediterraneo distante oppido quod vocatur Modura. regio autem, ex qua piper monoxylis lintribus Becaren convehunt, vocatur Cottonara. quae omnia gentium portuumve aut oppidorum nomina apud neminem priorum reperiuntur, quo apparet mutari locorum status.

106

ex India renavigant mense Aegyptio Tybi incipiente, nostro Decembri, aut utique Mechiris Aegyptii intra diem sextum, quod fit intra idus Ianuarias nostras: ita evenit ut eodem anno remeent. navigant autem ex India vento volturno et, cum intravere Rubrum mare, Africo vel austro. nunc revertemur ad propositum.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 29, 2014, 2:19:32 AM11/29/14
to Pandiyaraja, mintamil
 வணக்கம் ஐயா.

அருமையாக ஆதாரங்களுடன் சொல்லி வருகின்றீர்கள்.
தொடர்ந்து படித்து வருகிறேன் ஐயா.


2014-11-28 21:41 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

4. மூத்த பிளினி (Pliny the Elder - Gaius Plinius Secundus) ( கி.பி. 23 – கி.பி. 79)

யார் இந்தப் பிளினி?

உரோமையப் பேரரசின் தளபதியாய் இருந்தவர் பிளினி. இவருடைய மருமகன் பெயரும் பிளினி என்பதால் இவர் மூத்த பிளினி என்று அழைக்கப்படுகிறார். தன் ஓய்வுநேரத்தின் பெரும் பகுதியைப் படிப்பதிலும், ஆய்வுகள் நடத்துவதிலும் செலவிட்டவர். மணமாகாதவர்.

மணமாகாதவருக்கு மருமகன் எப்படி? 

கணிதவியல், மனித உடற்கூறு இயல், வேளாண் இயல், தாவரவியல், மருந்தியல், சிற்பவியல், ஓவியவியல், விலங்கியல், வானியல், புவியியல், கனிமவியல் (mineralogy) ஆகிய பலவிதத் துறைகளில் நாட்டமும் அறிவும் கொண்டவர். தான் கற்றவற்றையும் கேட்டவற்றையும் The Natural History என்ற ஒரு பெரிய நூலாக எழுதினார்.

The Natural History (Naturalis Historia)

பிளினி எழுதிய இந் நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகம் மட்டும் அல்ல, ஒரு அறிவுப் பெட்டகமும் ஆகும். 37 பகுதிகளை உள்ளடக்கிய பத்துத் தொகுதிகளைக் (37 Books in 10 Volumes) கொண்ட அந் நூல் ஒரு கலைக்களஞ்சியத்தைப் (encyclopedia) போன்றதாகும். இதில் Volume II, Book VI, Chapter XXIII – இல் இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதில்தான் முதல்முறையாக மதுரையைப் பற்றிப் பார்க்கிறோம்.

பெரிப்லூசில் குறிப்பிட்டதைப் போலவே Muziris, Caelobothras, Pandion ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, மதுரையைப் பற்றியும் பிளினி கூறுகிறார்.

BOOK VI. c. 23 (26). The journal of the voyage of Onesikritus and Nearchus has neither the names of the stations nor the distances set down in it; and first of all it is not sufficiently explained where and near what river Xylenopolis was--a city founded by Alexander and that from which his expedition started when it left India. Still, the following places mentioned by them are worthy of notice--the town of Arbis, founded by Nearchus in the course of the voyage, and the river Arbis, which is navigable and opposite which lies an island at a distance of 70 stadia; Alexandria built by Leonnatus by Alexander's orders in the territories of this people; Argenuus with a convenient harbour; the river Tonberos, which is navigable, and around its banks the Pasirae; then come the Ichthyophagi. . . . In after times it was considered an undeniable fact that the voyage from Syagrus, a cape in Arabia, reckoned at 1335 miles, can be performed by aid of a west wind which is there called Hippalus. The age that followed pointed out a shorter route that was also safer by making the voyage from the same cape to Sigerus, a seaport of India; and for a long time this route was followed until one still shorter was discovered by a merchant, and India was brought nearer us through the love of gain. So then at the present day voyages are made to India every year; and companies of archers are carried on board because the Indian seas are infested by pirates. . . . If the wind called Hippalus be blowing, Muziris, the nearest mart of India, can be reached in forty days. It is not a desirable place of call, pirates being in the neighbourhood who occupy a place called Nitrias, and besides it is not well supplied with wares for traffic. Ships besides anchor at a great distance from the shore, and the cargoes have to be landed and shipped by employing boats. At the time I was writing this Caelobothras was the sovereign of that country. Another more convenient harbour of the nation is Neacyndon? which is called Becare? There Pandion used to reign, dwelling at a great distance from the mart, in a town in the interior of the country called Modura. The district from which pepper is carried down to Becare in canoes is called Cottonara. None of these names of nations, ports, and cities are to be found in any of the former writers--from which it appears that the names (stations) of the places are changed. ( available in internet :

Pandiyaraja

unread,
Dec 5, 2014, 12:55:06 PM12/5/14
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
மிக்க நன்றி, காளை அவர்களே!
அன்புடையீர்,
இத்துடன் வரலாற்றில் மதுரை என்ற தலைப்பின் கீழ் 5-ஆவது கட்டுரை வெளிவருகிறது. கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் எழுதிய நூலிலிருந்து மதுரையைப் பற்றிய செய்தி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

5. தாலமி (Ptolemy கி.பி. 90 – கி.பி. 168)

யார் இந்த தாலமி?

இவரின் முழுப்பெயர் கிளாடியஸ் தாலமி (Claudius Ptolemy – Klaudios Ptolemaios). இவரின் மூதாதையர் கிரேக்கர் ஆவர். இவர் வாழ்ந்தது எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா என்ற பட்டணத்தில். இவர் காலத்தில் உரோமப் பேரரசு இப் பகுதியை ஆண்டது. இவர் உரோமக் குடியுரிமை பெற்றிருந்தார். கணிதவியல், வானியல், பூகோளவியல், சோதிடவியல் ஆகிய துறைகளில் வல்லவர். இவர் ஒரு கவிஞரும் கூட. இவர் பூகோளவியலைப் பற்றி எழுதிய நூல் ஜியாக்ரஃபியா (Geographia) எனப்படும். தனது தாய்மொழியான கிரேக்க மொழியில் இப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.

தாலமியின் அச்சுத்தொலைவுகள்/ஆயத்தொலைவுகள் (co-ordinates)

தனது காலத்தில் தெரிந்திருந்த பூகோளவியல் செய்திகளை இவர் இந் நூலில் பதிந்துவைத்துள்ளார். ஆனால் இது வெறும் விளக்கவுரையாக அமையாமல் பல வரைபடங்களையும் (map) கொண்டது. மேலும் தான் குறிப்பிடும் ஊர்களுக்கான பூகோள அளவு எண்களையும் அவர் கொடுத்துள்ளார். பூமியின் எந்தவோர் இடத்தையும் குறிக்க இரண்டு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதனை Latitude, Longitude என்பர். இவற்றை நேராயத்தொலை (நேராங்கு), நெட்டாயத்தொலை (நெட்டாங்கு) எனலாம். நேராயத்தொலை (Latitude) நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கிலோ தெற்கிலோ அமைந்திருக்கும் தூரம். நெட்டாயத்தொலை என்பது லண்டன் அருகேயுள்ள க்ரீன்விச் என்ற இடத்திலிருந்து கிழக்கிலோ மேற்கிலோ அமைந்திருக்கும் தொலைவு. இந்த முறையை முதலில் உருவாக்கியவர் தாலமி ஆவார். அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்திருந்த சுமார் 8000 இடங்களுக்கு இந்த அளவீடுகளை அவர் குறித்துள்ளார். ஆனால் இந்தத் தொலைவுகளை அளக்க அவர் எடுத்துக்கொண்ட முறைதான் வேறு. அவருக்குத் தெரிந்த நிலப்பகுதியில் ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் இருந்த ஒரு தீவுக்கூட்டத்தைத் (Canary Islands) தொடக்கமாகவும், கிழக்குக் கோடியில் இருந்த சீனப்பகுதியை இறுதியாகவும் கொண்டு, இடைப்பட்ட பகுதியை 180 பாகைகளாகப்(Degree) பிரித்து நெட்டாயத்தொலையைக் கணக்கிட்டார். நேராயத்தொலையைக் கணக்கிட அவர் மிகவும் சிக்கலான ஒரு முறையைக் கையாண்டார். எனினும், Co-ordinate Geometry உருவாகிய காலத்துக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பூமிப் பரப்பின் இடங்களுக்கு ஆயத்தொலைவுகள்(Co-ordinates) வகுத்தது மிகவும் போற்றத்தக்கது. தாலமி காலத்து உலகமும், அவர் வரைந்த நேராயம், நெட்டாயம் ஆகிய கோடுகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன. (http://www.csiss.org/classics/content/76)

Geographia கூறுவது என்ன?

பிளினி, பெரிப்லூஸ் நூல் ஆகியவை கூறுவது போல, பல துறைமுகப் பட்டினங்களையும், வணிகப் பட்டணங்களையும் தாலமி தன் நூலில் விவரிக்கிறார். அந்தந்த ஊர்களின் ஆயத்தொலைகளையும் அவர் குறிப்பிடுகிறார். அவை இன்றைய கணக்கீட்டின்படி பிழையுள்ளனவாயினும், அவருக்குக் கிடைத்த செய்திகளின்படி அவர் இத்துணை நெருக்கமாகக் கணக்கீடு செய்திருப்பதே அரிய சாதனைதான்.

பிளினியின் நூல், பெரிப்லூஸ் ஆகியவற்றில், தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தொண்டியும் (Tyndis), முசிறியும் (Muziris) சேரநாட்டைச் சேர்ந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், தாலமியும் குறிப்பிடுகிறார். ஆனால் Nelcynda என்று முந்தைய ஆசிரியர்களால் குறிக்கப்பட்ட பட்டினத்தை இவர் Melkynda என்று குறிப்பிடுகிறார். இவருக்கு முந்தைய ஆசிரியர்கள் இந்தப் பட்டினம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தது என்று குறிப்பிடும்போது, தாலமி இது ஆய் (Aioi) நாட்டைச் சேர்ந்தது என்கிறார். இது பொதிகைமலைப் பகுதியை ஆண்ட ஆய் அண்டிரன், ஆய் எயினன் போன்ற வேளிர்கள் ஆண்ட ஆய்நாடு ஆகும். எனவே, தாலமியின் காலத்தில் தென்மேற்குக் கடற்கரைப் பகுதி ஆய் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. ஒருவேளை இவர்கள் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக இருந்திருக்கலாம். தாலமி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கும் கிழக்குக் கடற்கரைப் பகுதியையே பாண்டிய நாடு (Land of Pandion) என்கிறார். பின்னர் பாண்டியநாட்டு உள்நாட்டு இடங்களைக் (Inland cities of the Pandionoi) கூறவந்த தாலமி, அந்த அட்டவணையில் மதுரையை Modoura, the royal city of Pandion எனக் குறிப்பிடுகிறார்.

முதலில் தாலமி ஆய், பாண்டியன் ஆகியோரின் கடற்கரைப் பட்டினங்களைக் குறிப்பிடுகிறார்.




பின்னர் அவர் அந்த மன்னர்களின் உள்நாட்டுப் பட்டணங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். எனவே அவர் ஆய், பாண்டியன், ஆகியோரின் நாடுகளைத் தனித்தனியாகவே கருதுகிறார் எனலாம்.

தாலமியின் மூலநூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர்கள் தாங்கள் புரிந்துகொண்ட முறையில் பெயர்களை மொழிமாற்றம் செய்தனர். Edward Luther Stevenson, என்பவர் The Geography by Claudius Ptolemy என்ற தனது நூலில் தமிழ்ப் பெயர்களை மொழிபெயர்த்திருக்கும் முறையைப் பாருங்கள்.

தாலமியும் மதுரை நகரின் பெயரை மட்டுமே குறிப்பிடுகிறாரேயொழிய, மதுரையைப் பற்றிய வேறு எந்தத் தகவலும் இவர் நூலிலும் இல்லை.

பார்வை:

1. The Geography by Claudius Ptolemy, Greek geographer of the 2nd century A.D., translated by Edward Luther Stevenson (New York, 1932). Book 7: India, Sinae,  Taprobana; - Page 154 (available in internet at:

   https://archive.org/details/PtolemysGeographyBook7)

2. Ptolemy’s Geographia By Rachel Quist (available in internet at: (http://www.geolounge.com/ptolemys-geographia/)

3. Ancient India as described by Ptolemy – McCrindle, J.W ., (available at : https://archive.org/details/ancientindiaasd00mccrgoog

4. The Ancient Geography of India, Alexander Cunningham, London, 1871 (available at : https://archive.org/stream/cu31924023029485#page/n9/mode/2up

5. Claudii Ptolemaei geographia, Editio stereotypa. Edidit Carolus Fridericus Augustus Nobbe, Published 1843 by Sumptibus et typis Caroli Tauchnitii in Lipsiae . Written in Ancient Greek.

(https://archive.org/stream/claudiiptolemaei03ptol#page/n5/mode/2up)


ப.பாண்டியராஜா

K R A Narasiah

unread,
Dec 6, 2014, 12:31:23 AM12/6/14
to mintamil
பாண்டியராஜா அவர்களின் கட்டுரை சிறப்பானது. நல்ல ஆய்வுத் திறனுடன் தந்துள்ளார். என்னுடைய மொழிபெயர்ப்பில் பெரிப்ளஸ் ஆஃப் த எரித்ரியன் சீ என்பதை செங்கடல் வழிகாட்டி என்றே  குறிப்பிட்டுள்ளேன். செங்கடலை அடுத்த பயணம் என்று குறிப்பிடப்படுவது சரியன்று. ஏனெனில், அக்காலக் கிர்ரேக்க்ர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் செங்கடல் தான் தெரியும் ஆகையால் அடுத்து இருக்கும் எல்லா கடலும் செங்கடல் என்றே நம்பினார்கள். அரேபியர்கள் முதலில் நன்கு இவ்வழிகளைத் தெரிந்து வைத்திருந்தனர். அவர்களால் அரபிக்கடல் என்ற பெயர் வந்தது. 
பெரிப்ளஸ் ஒரு சாதாரண மாலுமியால் எழுதப்பட்ட குறிப்பு. ஆகையாலும் அது எழுதப்பட்ட வருடம் கி. பி.80- 87 என்பதாலும் மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும் பாண்டிய மன்னனை பெரிப்ளஸ் குறிப்பிடுகிறது. 54 வது பாராவைப் பார்க்கவும்.
The Kerala archaeologists say, “Now we have found evidence that points to the possibility that the ancient trade port of Nelcynda was located in what is today Alumthuruthu-Kadapra near Chengannur.”
Periplus states that Nelcynda is 500 ‘stadia’ (about 92 km) from Muziris (Kodungalloor) by sea and by river and is 120stadia (about 22 km) from Bacare (Porakkad) along the mouth of the same river.
பெரிப்ளசின் 54 வது பாரா இவ்வாறுள்ளது:

  54. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea. 


நரசய்யா


On Fri, Dec 5, 2014 at 11:25 PM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (pipi...@gmail.com) Add cleanup rule | More info

மிக்க நன்றி, காளை அவர்களே!
அன்புடையீர்,
இத்துடன் வரலாற்றில் மதுரை என்ற தலைப்பின் கீழ் 5-ஆவது கட்டுரை வெளிவருகிறது. கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் எழுதிய நூலிலிருந்து மதுரையைப் பற்றிய செய்தி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

5. தாலமி (Ptolemy கி.பி. 90 – கி.பி. 168)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 6, 2014, 1:47:55 AM12/6/14
to Pandiyaraja, mintamil
வணக்கம் ஐயா.
மீண்டும் அருமையான ஆதாரங்களுடன் ஒரு பதிவு.

1) தமிழர் பனையோலைகளில் எழுதினர்.  தாலமி எதில் எழுதினார்? 

2)நாங்கள் அட்சரேகை, தீர்க்கரேகை என்று படித்தோம்.  
தங்களது நேராயம், நெட்டாயம் என்ற சொற்கள் அருமை, எளிமை.

3) படத்தில் சிவப்பு மையினால் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள தீவு இலங்கையா? அல்லது வேறு ஒரு தீவா?
இத் தீவிற்குத் தாலமி குறிப்பிடும் பெயர் என்ன?

4) படத்தில் 12 ராசிகளுக்கான படங்கள் (ஊதா மை வட்டங்கள்) வரையப்பட்டுள்ளனவே!!!
பாண்டிநாடு அல்லது மதுரை நகரம் இவற்றை நட்சத்திரங்களுடன் தொடர்புபடுத்தித் தாலமி ஏதும் குறிப்பிட்டுள்ளரா?

என அறிந்து கொள்ள அவா.

Pandiyaraja

unread,
Dec 6, 2014, 3:56:55 AM12/6/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய நரசையா ஐயா அவர்களுக்கு,

தங்களது பின்னூட்டம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. நான் இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்குப் பலவித இணையதளங்களைத் தோண்டித்தோண்டிப் பார்த்துத்தான் எழுதுகிறேன். நெடுநாள்களுக்கு முன்னர் மின் தமிழில் வந்த தங்கள் சொற்பொழிவு பற்றிய செய்தியையும் தோண்டி எடுத்து அதனையும் உற்றுக் கேட்டபின்னர்தான் கட்டுரையை எழுதினேன்.
>>பெரிப்லூஸ் என்பதனைச் செங்கடலை அடுத்த பயணம் என்று குறிப்பிடப்படுவது சரியன்று. >>
எனக் கூறியுள்ளீர்கள். நான் பார்த்த பகுதி இதுதான்:
Periplus is the Latinization of the Greek word περίπλους (periplous, contracted from περίπλοος periploos), literally "a sailing-around." Both segments, peri- and -plous, were independently productive: the ancient Greek speaker understood the word in its literal sense; however, it developed a few specialized meanings, one of which became a standard term in the ancient navigation of Phoenicians, Greeks, and Romans.

இதனையே என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். sailing around என்பதற்கான தமிழ்ச்சொல் 'அடுத்த பயணம்'  என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை செங்கடலை அடுத்துப் பயணித்தல் என்பது இன்னும் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
Erythraean என்பது செங்கடலையும், அதனை அடுத்துள்ள பாரசீக வளைகுடாவையும், அதனையும் அடுத்துள்ள அரபிக்கடல் ஆகிய பகுதிகளையும் குறிக்கும் எனவும் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மற்றபடி, Nelcynda பற்றிய இன்றைய கேரள அகழ்வாய்வுக்குறிப்புகளையும், பெரிப்லூசில் பாரா 54-இல் உள்ளவற்றையும் நான் ஏற்கனவே என் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இவை கட்டுரையின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளன.
தங்கள் பின்னூட்டத்துக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ப.பாண்டியராஜா
...

K R A Narasiah

unread,
Dec 6, 2014, 4:09:51 AM12/6/14
to mintamil
Anyway, your posting is excellent. So much f information! Yes peri means around (perimeter, peripheral etc.,) plus is together or in addition to. So your meaning is quite alright. Erythraean means red; from the Greek word erythro i Greek means red (Erythromycin is a red coloured antibiotic 

Earlier sailors saw red colour matter floating in teh sea there and named it as red sea (I have several times sailed through this sea) 

Once again congrats for the excellent article.
Narasiah



capsule) 

--

Pandiyaraja

unread,
Dec 6, 2014, 11:18:15 AM12/6/14
to mint...@googlegroups.com
Thank you very much, vasishtar avarkaLE!
P.Pandiyaraja
...

Pandiyaraja

unread,
Dec 8, 2014, 10:55:50 PM12/8/14
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
அன்பு காளையார் அவர்களே!
மிக்க நன்றி.
தாலமி எகிப்தில் வாழ்ந்த கிரேக்கர். எகிப்தியர்கள் Papyrus என்ற ஒரு வகைத் தாவரத்தின் தண்டிலிருந்து தம் எழுதுபொருளைத் தயாரித்தனர். நைல் நதி முகத்துவாரப்பகுதியில் மிகுதியாக விளையும் புல் போன்ற உயரமான தாவரம் இது. இதன் தண்டின் மேல்தோலை நீக்கி, உட்பகுதியை நெடுகப் பிளந்து அவற்றின் ஓரங்களை ஒட்டுவர். பின்னர் இதே போன்று குறுக்காகவும் செய்து இரண்டு layer கொண்ட தாளைச் செய்து அதனைப் பதப்படுத்தி, எழுதுவதற்குப் பயன்படுத்துவர். மையைத் தொட்டு எழுதுகோலினால் எழுதுவர்.
ஐயா, நானும் அட்சரேகை, தீர்க்க ரேகை என்று படித்தவன்தான். இதற்குரிய நல்ல தமிழ்ச்சொற்களையும் இணையதளங்கள் மூலமாகத் தெரிந்துகொண்டேன். பின்பு அவற்றை சுருக்கி நேராங்கு, நெட்டாங்கு ஆக்கினேன். எனவே பாராட்டு: இணையதளத்துக்குத்தான்.
தாங்கள் காட்டியிருப்பது இலங்கைத் தீவே. அக்காலத்தில் இது tambrabone என்று அனைவராலும் அழைக்கப்பட்டது. நம்நாட்டு நதியான தாமிரபருணியின் பெயரை ஒட்டிய பெயர் இலங்கைக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. இன்றைய தினமலர் (சென்னை) பதிப்பில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. இலங்கையை அசோகர் தாம்ரபோன என்று அழைத்ததன் காரணம் என்ன? கிருஷ்ணமூர்த்தி, தமது செழியன் கால நாணயங்களைப் பற்றிய புத்தகத்தில் விளக்கியிருப்பதாகத் தகவல். விலை ரூ.400. உங்கள் பக்கத் தினமலரிலும் விளம்பரம் வந்திருக்கலாம்.
ஐயா ராசிகள் பற்றிய படங்கள் தாலமியின் புத்தகத்தில் உள்ளதைப் பார்த்தேன். அதைப்பற்றித் தெரிய புத்தகம் முழுவதையும் படிக்கவேண்டும். நேரமில்லை. நான் கொடுத்திருக்கும் இணைப்புகள் மூலம் படித்தவர்கள் தெரிவிக்கலாம்.
தங்களின் ஆர்வத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
...

தேமொழி

unread,
Dec 9, 2014, 1:38:20 AM12/9/14
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com


On Monday, December 8, 2014 7:55:50 PM UTC-8, Pandiyaraja wrote: 
நம்நாட்டு நதியான தாமிரபருணியின் பெயரை ஒட்டிய பெயர் இலங்கைக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. இன்றைய தினமலர் (சென்னை) பதிப்பில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. இலங்கையை அசோகர் தாம்ரபோன என்று அழைத்ததன் காரணம் என்ன? 


  • தமிழத்தின் பொருநை சமஸ்கிரதத்தில் தாமிரபரணி என்று குறிப்பிடப் பட்டதாகத் தகவல்.

  • தாமிர/செப்பு போன்ற சிவந்த மண் என்பதும் அதைத் தொட்ட கைகள் சிவப்பதனால் இலங்கையில் தரையிறங்கிய விஜயன் குழுவினர் அந்நிலத்தை தாம்ப்ரபொன் (Tambapanni) என்று அழைத்ததாக இலங்கையின் "மகாவம்ச" நூல் கூறுகிரதென்பதும் ஒரு கருத்து ...

  • ஆனால் அது சிங்களவர் கோணத்தில் கூறப்பட்ட தகவல் என்ற கருத்தும் இருக்கிறது.

  • கால்டுவெல் தனது  நூலில் தாமிரபரணி என்ற நதியின்  பெயரை விரிவாக ஆராய்ந்ததாகவும் தகவல்...

எனக்கு இணையம் வழி கிடைத்த தகவல்கள் கீழே....



When he had spent some days at that spot he went to Tambapanni. There VIJAYA founded the city of Tambapanni and dwelt there, together with the yakkhini, surrounded by his ministers.
When those who were commanded by VIJAYA landed from their ship, they-sat down wearied, resting their hands upon the ground and since their hands were reddened by touching the dust of the red earth[11] that region and also the island were (named) Tambapanni.[12]


11-The soil of Ceylon is composed of latent which crumbles into a red dust. [^]
12-A play on the word tambapani, red hand. [^]


_________________________________________________________________________________

Tambapanni is a name derived from Tamraparni or Tamravarni (in Sanskrit). This means the color of copper or bronze because on the landing Vijaya's and his followers' hands and feet which touched the ground became red with the dust of the red-earth, and the city founded on that spot was named therefore Tambapanni.(1) A derivative of this name is Taprobane (Greek). Tambapanni is a Pali version of the name Tamira Varni.

This is the Sinhala version of the story. We can discuss this tomorrow further. Even now the river in Thirunelveli, Tamil Nadu is called Thamaraparani. I can also give you the etymology. <<<


_________________________________________________________________________________

The meaning and origin of the name Tamiraparani is reasoned out
differently. Bishop R. Caldwell, in his book, A History of Tinnevelly discussed 91
the various interpretations of the word ‘Tamiraparani’ at length. According to him
the meaning of the name Tamiraparani in itself is sufficiently clear, but its
application in this connection is far from being self-evident. Tamara means, red,
parani means parana, a tree which has leaves. Tamiraparani might, therefore mean
a tree with red leaves, but, this is a strange derivation for, the name of a river and
the ideas naturally suggest itself that some events or legends capable of explaining
the name lies beyond. He further discussed the similarity of the name
Tamiraparani and of the old name of the present Sri Lanka which was called in
olden days as Tambrabane and tried to find out the political, cultural and
anthropological intercourse of the land of the river with that island. He concludes
that it seems more natural that Tamiraparani, the tree with the red leaves should
have been first the name of a tree, then of a town, then of a district and then of a
river (it being not uncommon in India for villages to adopt their names from
remarkable trees). 


Etymology[edit]

Some scholars interpret the name Thamirabarani as Thamiram (copper in Tamil language) and Varuni (stream or river).[2]

The meaning and origin of the name Thamirabarani is reasoned out differently. Bishop R. Caldwell, in his book A History of Tinnevelly, discussed the interpretations of the word ‘Tamiraparani’ at length. According to him the meaning of the name in itself is sufficiently clear, but its application in this connection is far from self-evident. Tamara means red, parani means parana: a tree that has leaves. Tamiraparani might, therefore, mean a tree with red leaves. But this is a strange derivation for the name of a river. Ideas naturally suggest that some events or legends capable of explaining the name lies beyond. He further discussed the similarity of the name Tamiraparani and of the old name of the Sri Lanka — which was called in olden days as Tambrabane — and tried to find out the political, cultural and anthropological intercourse of the land of the river with that island. He concludes that it seems more natural that Tamiraparani, the tree with the red leaves should have been first the name of a tree, then of a town, then of a district and then of a river (it being not uncommon in India for villages to adopt their names from remarkable trees).

History[edit]

Spelt as Tampraparani, Tamraparni, Tamiravaruni, etc., the river is mentioned as the Porunai nathi in Tamil poetic literature. It gets recognition and is referred to as the renowned one in Sanskrit literature references to which are as old as that of the Puranas and Epics. The river is mentioned in existing ancient Sangam and Tamil texts.[3] There is an ancient script written as Thamirabarani mahathmiyam.

In Mahabharatha (3:88) the river is mentioned as "Listen, O son of Kunti, I shall now describe Tamraparni. In that asylum the gods had undergone penances impelled by the desire of obtaining salvation".[4]


http://en.wikipedia.org/wiki/Thamirabarani_River


..... தேமொழி


துரை.ந.உ

unread,
Dec 9, 2014, 2:11:02 AM12/9/14
to Groups, Pandiyaraja Paramasivam, Kalairajan Krishnan
வாழ்க ஐயா 

அற்புதமான பயணம் ...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 9, 2014, 2:13:02 AM12/9/14
to Pandiyaraja, mintamil
வணக்கம் ஐயா.
அருமையான விளக்கங்கள்.
மிக்க நன்றியுடையேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

Suba.T.

unread,
Dec 9, 2014, 3:02:16 PM12/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
இத்தகைய மிக உயரிய தரம் வாய்ந்த ஆய்வாக இக்கட்டுரைத் தொடர் மின்தமிழில் இடம்பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.  உடனுக்குடன் வாசிக்கவில்லையென்றாலும் புக் மார்க் செய்து வைத்து வாசிக்கின்றேன். பண்டைய எகிப்திய கிரேக்க வரலாற்றுடன் ஒப்பிட்டு நோக்கவும் உதவுகின்றது. மிகச் சிறப்பான கட்டுரை தொடர். நிறைய அறிந்து கொள்ள முடிகின்றது. 

சுபா




2014-11-15 4:07 GMT+01:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புடையீர்,
வரலாற்றில் மதுரை என்ற தலைப்பில் அடுத்ததாக ஸ்டராபோ-வின் கூற்றுகள் பற்றிய கட்டுரை இதனுடன் அனுப்பப்பட்டுள்ளது. நிறையப்பேர் படிக்கிறதுபோல் தெரிகிறது. ஆனால் மிகச் சிலரே பின்னூட்டம் இடுகின்றனர். ஒரு கலைஞனுக்குத் தேவை கைதட்டு. அதுவும் அவன் காதில் விழவேண்டும். அதுதான் அங்கீகாரம். இன்னும் உற்சாகமாக ஆட அவனுக்கு அது தெம்பளிக்கும். (ஒரே மாதிரி தட்டி உட்காரவைக்கவும் அது செய்யும்!!)
அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

1. வரலாற்றில் மதுரை

2. ஸ்ட்ராபோ (Strabo : 64 BC – 24 AD)

அ. யார் இந்த ஸ்ட்ராபோ?

      ஸ்ட்ராபோ ஒரு கிரேக்க வரலாற்றாசிரியர். தேர்ந்த புவியியலாளர் (geographer). அவர் ஒரு தத்துவஞானியும் கூட. இவர் புவியியல் (Geographica) என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். இது 17 தொகுதிகளைக் கொண்டது. முதன் முதலில் கி.மு 7–இல் வெளியிடப்பட்ட இந்நூல் இன்றும் அப்படியே கிடைக்கிறது(மிகச் சில பகுதிகளைத் தவிர).

      ஸ்ட்ராபோ ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்று தான் நேரில் கண்டவற்றையும், கேட்டவற்றையும், அன்றைய வழக்கில் இருந்த வரலாற்று நூல்களில் தான் படித்தவற்றையும் பதிந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு வந்ததில்லை. இதைப் பற்றி ஹாமில்ட்டன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்.

In the 15th book, Strabo describes India and Persia, the latter in two chief divisions, viz. Ariana or East Persia, and Persis or West Persia. These countries Strabo never saw; his description, therefore, is founded on the authority of travellers and historians. The topography of India is meagre, and limited to a few towns and rivers; but his account of the people of the country is more copious, he being supplied with materials from the historians of Alexander and of the campaigns of Seleucus in India.

(Strabo, Geography : H.C. Hamilton, Esq., W. Falconer, M.A., Ed.

The Geography of Strabo. Literally translated, with notes, in three volumes. London. George Bell & Sons. 1903)

எனினும் ஆண்டியோக் (Antioch) என்ற ஒரு நகரில் அகஸ்டஸ் சீசர் இருந்தபோது இந்தியாவில் பாண்டியோன் என்ற மன்னனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து சீசரைச் சந்தித்தான் என்று கூறுகிறார் (பார்க்க – இறுதிப் பகுதி ***). இந்தத் தூதனைப் பற்றி வேறு சில வரலாற்றறிஞர்களும் எழுதியிருக்கிறார்கள்.

ஆ. ஜியாக்ராபிக்கா (Geographica)

ஸ்ட்ராபோ எழுதியுள்ள இந் நூலின் 15-ஆவது தொகுதியில் அவர் இந்தியாவைப் பற்றிச் சில தகவல்களைச் சொல்கிறார். அத்துடன் அவர் காலத்திய புவியியல் அறிவின்படி சில வரைபடங்களையும் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் பாண்டியோன் என்ற ஓர் அரசனிடமிருந்து அகஸ்டஸ் சீசரைக் காண வந்த ஒரு தூதனைப் பற்றி அவர் விவரிப்பதைப் படியுங்கள்.

Book 15, Chapter 1:

Very few of the merchants who now sail from Egypt by the Nile and the Arabian Gulf to India have proceeded as far as the Ganges; and, being ignorant persons, were not qualified to give an account of places they have visited. From one place in India, and from one king, namely, Pandion, or, according to others,5 Porus, presents and embassies were sent to Augustus Caesar. With the ambassadors came the Indian Gymno-Sophist, who committed himself to the flames at Athens,6 like Calanus, who exhibited the same spectacle in the presence of Alexander 6.

இங்கே ஸ்ட்ராபோ குறிப்பிடும் மன்னன் தென்னாட்டுப் பாண்டியன்தானா என்ற ஐயம் எழுப்பப்படுகிறது. இங்கே Pandion, or, according to others,5 Porus என்று கிரேக்கத்தில் எழுதப்பட்ட தொடர் பல்வேறுவிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத் தொடர் இதுதான் : 5.  κατ λλους for κα λλου.Groskurd.

நியூயார்க், ஃபோர்தாம் பல்கலைக்கழக (Fordham University, New York) மொழிபெயர்ப்பில், இது But, from India, from one place and from one king, I mean Pandion, or another Porus, there came to Caesar Augustus presents and gifts of honour ……  என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. J.W.McCrindle இத் தொடரை, From one place in India and from one king, Pandion, but according to other writers, Poros, there came to Caesar Augustus gifts and an embassy ………

ஃப்லோரஸ் (Florus) என்ற மற்றொரு வரலாற்றாசிரியர் தன்னுடைய நூலான  The Epitome of Roman History என்பதில் இதே தூதனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சூரியனுக்கு நேர் கீழே வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பரிசுப்பொருள்களுடன் தூதன் சக்கரவர்த்தியக் காண வந்தான் என்று குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இதுதான்:

For the Scythians and the Sarmatians sent ambassadors seeking friendship; the Seres4 too and the Indians, who live immediately beneath the sun, though they brought elephants amongst their gifts as well as precious stones and pearls, regarded their long journey, in the accomplishment of which they had spent four years, as the greatest tribute which they rendered; and indeed their complexion proved that they came from beneath another sky (available in internet :

http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Florus/Epitome/home.html

                எனவே ஸ்ட்ராபோ குறிப்பிடும் இந்தியத்தூதன் தென்னாட்டுப் பாண்டிய மன்னனால் அனுப்பப்பட்டவனே என்பது உறுதியாகிறது.

      ஆனால் பாண்டியநாட்டுத் தூதன் சென்றதன் நோக்கம் சரியாக விளக்கப்படவில்லை. அகஸ்டஸ் சீசர் ஒரு உரோமப் பேரரசின் சக்கரவர்த்தியாக (Emperor) இருந்தான் எனவும் அவனுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளத் தூதர்கள் வந்தனர் என்ற செய்தியுடன் பாண்டிய நாட்டுத் தூதன் வருகையும் குறிக்கப்படுகிறது. Roman History என்ற தன் நூலில், டயோன் காஸியஸ் (Dion Cassius) என்பவர் கூறுவதைப் பாருங்கள்:

      But Augustus, for his part, returned to Samos and once more passed the winter there. In recognition of his stay he gave the islanders their freedom, and he also attended to many matters of business. For a great many embassies came to him, and the people of India, who had already made overtures, now made a treaty of friendship, sending among other gifts tigers, which were then for the first time seen by the Romans, as also, I think by the Greeks. (available in : http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Cassius_Dio/54*.html)

பாண்டியநாட்டுத் தூதுவன் அகஸ்டசைப் பார்க்கச் சென்றதற்கான காரணத்துக்கு வேறொரு விளக்கமும் உள்ளது. H.G.Rawlinson என்பவர் தன்னுடைய Intercourse Between India and the Western World என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.

The news of the accession of Augustus quickly reached India. Many Indian states sent embassies to congratulate him, an honour as he (Augustus) remarks, never paid before to any Western prince. The most striking of these was one sent by an important king called, according to Strabo, Porus by some and Pandion by others.

If his name really was Pandion, he was one of the Pandya kings of Madura, the most southerly of the three Tamil kingdoms. (available in :

http://www.forgottenbooks.com/readbook_text/Intercourse_Between_India_and_the_Western_World_1000170773/117

பேரரசர் அகஸ்டசுக்கு முன்னர் இருந்த எவருக்கும் அந்த மரியாதை கிடைக்கவில்லை என்பதை அகஸ்டசே கூறுகிறதைப் பாருங்கள்.

MONUMENTUM ANCYRANUM (RES GESTAE DIVI AUGUSTI)

Part VI

32 Kings of the Parthians, Tiridates,131 and later Phrates,132 the son of King Phrates, took refuge with me as suppliants; of the Medes, Artavasdes;133 of the Adiabeni,134Artaxares; of the Britons, Dumnobellaunus135 and Tim . . . . . .; of the Sugambri,136 Maelo; of the Marcomanni and Suevi . . . . .rus. Phrates, son of Orodes, king of the Parthians, sent all his sons and grandsons to me in Italy, not because he had been conquered in war, but rather seeking our friendship by means of his own children as pledges.137 And a large number of other nations experienced the good faith of the Roman people during my principate who never before had had any interchange of embassies or of friendship with the Roman people.

http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Augustus/Res_Gestae/6*.html

(The Res Gestae Divi Augusti (‘Deeds of the Divine Augustus’) is Octavian’s own epitome of his life and achievements. An inscription at the Monumentum Ancyranum preserves the text in virtually complete form.)

            Principate என்ற சொல்லைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் உரோமைய வரலாறு தெரிந்திருக்கவேண்டும். கி.மு.44-இல் ஜூலியஸ் சீசர் கொலைசெய்யப்பட்ட பின் அக்டேவியஸ் சீசர் பதவியில் அமர்த்தப்பட்டார். இதை எதிர்த்து அகஸ்டஸ் சீசர், மார்க் அன்ட்டனி, மார்கஸ் லெபிடஸ் (Marcus Lepidus) ஆகியோரின் கூட்டணி முயன்று வெற்றிபெற்றது. நாட்டை மூன்றாகப் பிரித்து, தளபதிகளாக மூவரும் ஆண்டனர். எனினும் நாளடைவில் மற்ற இருவரையும் விரட்டிவிட்டு அகஸ்டஸ் நாட்டை ஒன்றாக்கி, பேரரசர் (Emperor) என்று தன்னை அறிவித்து, எல்லா அதிகாரங்களையும் தனதாக்கி, நாட்டைக் குடியரசிலிருந்து மாற்றினார். அவர் எழுதிய புதிய அரசியல் சட்ட அமைப்பே Principate எனப்பட்டது. பின்னர் கி.மு.27-இல் அவர் பேரரசராக முடிசூடிக்கொண்டார். இது நடந்தது அந்த முடிசூட்டு விழாவுக்குத்தான் முதன்முறையாகப் பன்னாட்டுத் தூதுவர்கள் வருகைதந்தனர் என்கிறார் அகஸ்டஸ்.

எனினும், ஸ்ட்ராபோ மதுரையைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. அவரது காலத்தில் (BC 64 – AD 24) தமிழ்நாட்டில் ஒரு பாண்டிய மன்னன் ஆண்டுவந்தான் என்றுமட்டும் தெரிகிறது. அக் காலகட்டத்தில் மதுரை நகரே பண்டியர்களின் தலைநகராக இருந்தது என்பதை நாம் அறிவோம். எனவே, ஸ்ட்ராபோவின் கூற்று மதுரையின் பழமைக்கு மற்றுமொரு சான்றாக விளங்குகிறது.

பார்வை:

  1. Ancient India as described in classical Literature, J.W.McCrindle, page 9, para 4

  2. Epitome of Roman History, Florus (available at http://penelope.uchicago.edu/    Thayer/E/Roman/Texts/Florus/Epitome/home.html

  3. Roman History, Cassius Dio (available at: http://penelope.uchicago.edu/Thayer/ E/Roman/Texts/Cassius_Dio/54*.html

    4.   Strabo: Geography: Book XV: On India, Fordham University, New York (available at: http://www.fordham.edu/halsall/ancient/strabo-geog-book15-india.asp

    5. Geographica – available at:  http://en.wikipedia.org/wiki/Geographica

    6. Account of India by the Greek Writer Strabo, Para 4 (available at : http://www.ibiblio.org/britishraj/Jackson9/chapter01.html

7. History of India: Historic Accounts of India by Foreign Travellers, Classic, Oriental, and Occidental, A. V. Williams Jackson (available at :

http://books.google.co.in/books?id=lllGG9RtILQC&pg=PA72&lpg=PA72&dq=nikolaos+damaskenos&source=bl&ots=lJEDS4Dq8Q&sig=z30LxqMdb-GXj0HOcXx12XN7ToI&hl=en&sa=X&ei=rOZaVKzoMIaLuwSEjYKYAg&ved=0CD4Q6AEwCA#v=onepage&q=nikolaos%20damaskenos&f=false

8. The geography of Strabo. Literally translated, with notes. The first sia books by H.C. Hamilton, esq., the remainder by W.Falconer (1854) Book 15, Chapter 1: (available at : https://archive.org/details/geograofstrablit02strauoft

***

Book 15, Para 13.

The inhabitants of the south resemble the Ethiopians in colour, but their countenances and hair are like those of other people. Their hair does not curl, on account of the humidity of the atmosphere. The inhabitants of the north resemble the Egyptians.

Para 22.

Aristobulus says of the wool-bearing trees, that the flower pod contains a kernel, which is taken out, and the remainder is combed like wool.

Southern India, like Arabia and Ethiopia, produces cinnamon, nard, and other aromatics. It resembles these countries as regards the effect of the sun's rays, but it surpasses them in having a copious supply of water, whence the atmosphere is humid, and on this account more conducive to fertility and fecundity; and this applies to the earth and to the water, hence those animals which inhabit both one and the other are of a larger size than are found in other countries.

Book 15, Chapter 1.Section 73

This writer states that at Antioch, near Daphne, he met with ambassadors from the Indians, who were sent to Augustus Cæsar. It appeared from the letter that several persons were mentioned in it, but three only survived, whom he says he saw. The rest had died chiefly in consequence of the length of the journey. The letter was written in Greek upon a skin; the import of it was, that Porus was the writer, that although he was sovereign of six hundred kings, yet that he highly esteemed the friendship of Cæsar; that he was willing to allow him a passage through his country, in whatever part he pleased, and to assist him in any undertaking that was just.

Eight naked servants, with girdles round their waists, and fragrant with perfumes, presented the gifts which were brought. The presents were a Hermes (i. e. a man) born without arms, whom I have seen, large snakes, a serpent ten cubits in length, a river tortoise of three cubits in length, and a partridge (?) larger than a vulture. They were accompanied by the person, it is said, who burnt himself to death at Athens. This is the practice with persons in distress, who seek escape from existing calamities, and with others in prosperous circumstances, as was the case with this man. For as everything hitherto had succeeded with him, he thought it necessary to depart, lest some unexpected calamity should happen to him by continuing to live; with a smile, therefore, naked, anointed, and with the girdle round his waist, he leaped upon the pyre. On his tomb was this inscription,—ZARMANOCHEGAS,2 AN INDIAN, A NATIVE OF BARGOSA,3 HAVING IMMORTALIZED HIMSELF ACCORDING TO THE CUSTOM OF HIS COUNTRY, HERE LIES.

 



On Saturday, November 15, 2014 8:31:36 AM UTC+5:30, Pandiyaraja wrote:
மிக்க நன்றி அம்மா!
ப.பாண்டியராஜா


On Sunday, November 9, 2014 1:57:03 PM UTC+5:30, myself wrote:
தாமதமாய்ப் பார்ப்பதற்கு மன்னிக்கவும்.  தலைப்பு என் கணினியில் சரியாகத் தெரிகிறது,  உங்கள் கணினியின் அநேகமாய் ஃபான்ட் பிரச்னை இருக்கலாம்.

2014-11-08 8:18 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
சுபா/கீதா அம்மையாருக்கு/கண்ணன் அவர்களுக்கு,

இந்த முறை தலைப்பு list-இல் சரியாகத் தெரியவில்லை. உள்ளே திறக்கும்போது மல்லல் மூதூர் மதுரை என்று சரியாகத் தெரியும் தலைப்பு வெளியில் மலலல மூதூர மதுரை என்று புள்ளிகள் இல்லாமல் தெரிகிறது. ஏனைய தலைப்புகள் எல்லாம் புள்ளிகளுடன் இருக்கின்றன. மேலும் அவை தடிமனாக (Bold)த் தெரியும்போது இந்தத் தலைப்புமட்டும் தடிமன் இன்றிக் காணப்படுகிறது.

இந்த மலலல மூதூர மதுரை - யைத் தொடராலாமா என்று குழப்பமாயிருக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
நன்றி,
ப.பாண்டியராஜா
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Pandiyaraja

unread,
Dec 12, 2014, 9:27:20 PM12/12/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
உணர்வூட்டும் பின்னூட்டங்கள் தந்த தேமொழி, துரை, காளை, சுபா ஆகிய  பெருந்தகைகளுக்கு மிக்க நன்றி.
அன்புடையீர்,
இத்துடன் புராண, இதிகாசங்களில் மதுரை என்ற தலைப்பிலான பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இராமாயணம், மகாபாரதம், சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் ஆகிய நூல்களில் மதுரை, பாண்டிய மன்னன் பற்றிய குறிப்புகள் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
கட்டுரை இதோ:

மல்லல் மூதூர் மதுரை

2. புராண இதிகாசங்களில் மதுரை

1. இராமாயணம்

வால்மீகி இராமாயணத்தில் தமிழகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு காணப்படுகிறது. சீதையைத் தேடிவரும் இராமர் சுக்கிரீவனைச் சந்திக்கிறார். சுக்கிரீவன் தனது வானர சேனையைச் சீதையைத் தேடும் பணியில் ஈடுபடுத்துகிறார். உலகின் பலநாடுகளுக்கும் சென்று சீதையைத் தேடும்படி கூறும் சுக்கிரீவன், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடும்போது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பகுதியைப் பற்றியும் கூறுகிறார்.

வால்மீகி இராமாயணத்தில் நான்காவது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தின் 41-ஆவது சரகத்தில் 12-ஆவது சுலோகத்தில் இந்தக் குறிப்பு காணப்படுகிறது. அப் பகுதி இதோ:

Book IV : Kishkindha Kanda - The Empire of Holy Monkeys

Chapter [Sarga] 41

(available in: http://www.valmikiramayan.net/kishkindha/sarga41/kishkindha_41_frame.htm)

Sugreeva sends Vanara-s to southward which troop includes Hanuma, Jambavanta, Niila and others and Angada is its leader. Sugreeva gives a vivid picture of the southern side of Jambu dviipa up to the south-most part of passable regions, next to which the abode of Yama, the Terminator is there. This troop is also given one month's time to find the whereabouts of Seetha.

नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत |
तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् || ४-४१-१२

godaavariim nadiim caiva = Godavari, river, also, thus; sarvam eva= all of them; anu pashyata= closely, see - make a through search;

tathaiva = like that; aandhraan ca = Andhra territory; puNDraan ca colaan paaNDyaan keralaan = Pundra, Chola, Paandya, Kerala [provinces];

then River Godavari that courses through Dandaka forest, and then the provinces of Andhra, Pundra, Chola, Paandya, Kerala are to be searched thoroughly. [4-41-12]

அடுத்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளைப் பற்றிய குறிப்பு காணக்கிடக்கிறது. முதலில் சந்தன மரங்கள் நிறைந்த ஒரு மலை (பொதிகை) குறிப்பிடப்படுகிறது.

அதன் பின்னர் காவேரி ஆறும் அதன் சிறப்பும் குறிப்பிடப்படுகின்றன.

அடுத்து மலையின் உச்சியில் தங்கியிருக்கும் அகத்திய முனிவரைப் பற்றிக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் தாமிரபரணி ஆறும் அதன் சிறப்பும் கூறப்படுகின்றன.

இறுதியில் பாண்டியரின் (தலை)நகரின் கோட்டை வாயிலும் அதன் சிறப்பும் கூறப்படுகின்றன.

अयोमुखः च गंतव्यः पर्वतो धातु मण्डितः |
विचित्र शिखरः श्रीमान् चित्र पुष्पित काननः || ४-४१-१३
सुचंदन वनोद्देशो मार्गितव्यो महागिरिः |

13, 14a. dhaatu maNDitaH = with ores, crowded with; vi citra shikharaH = verily, amazing, with crests; shriimaan = prosperous [mountain]; citra puSpita kaananaH = motley, flowered, with forests; such a; ayaH mukhaH parvataH = iron, mouths, mountain - a mountain having iron-ore mines in the shape of mouths, namely Mt. Malaya]; gantavyaH = reachable - you shall go to; su candana vanaat deshaH = best, sandalwood trees, with copses, places; mahaa giriH maargitavyaH = great mountain, is to be searched.

"You shall go to the prosperous Mt. Malaya which is crowded with iron-ore mines as its vast mouths, and with amazing crests and motley flowered forests. Search shall be carried out on that great mountain in the places that are with the copses of sandalwood trees. [4-41-13, 14a]

(This Mountain is also called Agastyamalai and it is in Western Ghats from which River Tamraparni emerges.)

ततः ताम् आपगाम् दिव्याम् प्रसन्न सलिलाशयान् || ४-४१-१४
तत्र द्रक्ष्यथ कावेरीम् विहृताम् अप्सरो गणैः |

14b, 15a. tataH = from there; divyaam = divine one; prasanna salila ashayaan = limpid, waters, receptacle of; apsaraH gaNaiH vihR^itaam = by apsara, throngs, make pleasure-trips; taam kaaveriim = her, Kaveri; aapa gaam = water, flowing [river]; tatra drakSyatha = there, you shall see.

"From there you shall go and see the divine River Kaaveri there, a receptacle of limpid waters, to where throngs of apsara-s will be making pleasure-trips. [4-41-14b, 15a]

तस्य आसीनम् नगस्य अग्रे मलयस्य महोजसम् || ४-४१-१५
द्रक्ष्यथ आदित्य संकाशम् अगस्त्यम् ऋषि सत्तमम् |

15b, 16a. mahaa ojasam = highly resplendent [mountain]; tasya malayasya nagasya agre = of that, Mt. Malaya, mountain, on the top of it; aasiinam = who is sitting; aaditya sankaasham = Sun, in similarity; R^iSi sattamam agastyam drakSyatha = Sage, the eminent, Agastya, you shall see.

"You shall see the eminent sage Agastya, whose resplendence is akin to that of the Sun, and who will be sitting on the top of that highly resplendent Mt. Malaya. [4-41-15b, 16a]

ततः तेन अभ्यनुज्ञाताः प्रसन्नेन महात्मना || ४-४१-१६
ताम्रपर्णीम् ग्राह जुष्टाम् तरिष्यथ महानदीम् |

16b, 17a. tataH = from there; prasannena mahaa aatmanaa = when he becomes complaisant, great-soul [Agastya]; tena = by him; abhi anuj~naataaH = well permitted; graaha juSTaam taamraparNiim = capturers [crocodiles,] highly cherished by, River Taamraparni; such a; mahaa nadiim = great river; tariSyatha = you shall cross over.

"And when that great-souled Agastya complaisantly permits you, then you shall leave that mountain and cross over the great River Taamraparni, a highly cherished river of crocodiles. [4-41-16b, 17a]

सा चन्दन वनैः चित्रैः प्रच्छन्ना द्वीप वारिणी || ४-४१-१७
कान्ता इव युवती कान्तम् समुद्रम् अवगाहते |

17b, 18a. citraiH candana vanaiH = with amazing, sandalwood trees, copses; pracChannaa dviipa vaariNii = with overlapped, islands, water; saa = she [the river]; yuvatii = a young woman [Taamraparni]; kaantaa = one who is yearning for; kaantam iva = for whom she is yearning - her love, as with; samudram = to ocean; avagaahate = [she will be] rendezvousing.

"She whose water is overlapped with amazing copses of sandalwood trees and islands that River Taamrapani will be drifting for a rendezvous with her much yearned lover, namely the ocean, as with a young woman who will be coursing to have a rendezvous with her yearned lover. [4-41-17b, 18a]

ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८
युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः |

18b, 19a. vaanaraaH = oh, vanara-s; tataH = from there; yuktam = joined to - braced to the wall of fortress; hemamayam divyam = full with gold, beautiful one; muktaa maNi vibhuuSitam = pearls, gemstones, decorated with; paaNDyaanaam kavaaTam = of Paandya [kingdom's,] castle-door; gataaH = having gone there; drakSyatha = you shall see; search inside that gateway.

"From there, on going to the Paandya Kingdome you shall see a fully golden castle-door bracing the compound-wall of the fortress, which is decorated with pearls and jewels, and conduct your search even in that kingdom. [4-41-18b, 19a]

இங்கே, கவாடம் பாண்ட்யானாம் என்பது பாண்டியனின் கோட்டைக் கதவு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இது தாமிரபரணியை அடுத்து வரும் நகரமாதலால் மதுரையாக இருக்க முடியாது.

ஆனால், முதலில் பொதிகை மலையைப் (சந்தன மரங்களைக் கொண்ட பெரிய மலை) பற்றிக் கூறிவிட்டு அடுத்து காவிரியைப் பற்றிய குறிப்புக்குப் பின் மீண்டும் தாமிரபருணியைப் பற்றிய குறிப்பு வருகிறதைப் பார்க்கிறோம். எனவே இங்கே வரிசையில் ஒரு குழப்பம் தென்படுகிறது. இதே போல்தான் தாமிரபருணியைப் பற்றிய குறிப்புக்குப் பின் கோட்டை மதிலைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம். எனவே இது மீண்டும் வரிசையில் ஒரு குழப்பம் எனக்கொண்டு, இங்கு குறிப்பிடப்படுவது மதுரை நகரே எனக் கொள்ளலாம்.

முதலில் கூறப்படும் மலையை, உரைகாரர் கொள்வது போல் அகத்திய மலை என்று கொள்ளாமல், காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மலை எனக் கொண்டால் குழப்பங்கள் இல்லை. எனில், பின்னர் கூறப்படும் பாண்டியர் நகரம் தாமிரபரணியின் முகத்துவாரத்தில் இருந்த ஒரு கடற்கரைப் பட்டினம் ஆகலாம்.

கவாடம் என்பதைக் கோட்டை மதில் எனக் கொள்ளாமல் கவாடபுரம் என்ற இடைச்சங்கத்துப் பாண்டியர் தலைநகராகவும் கொள்ளலாம். அல்லது பாண்டியரின் கொற்கை போன்ற கடற்கரைப் பட்டினமாகவும் கொள்ளலாம். பாண்டியரின் இரண்டாம் தலைநகரமாக இது இருந்திருக்கக்கூடும்.

எனவே வால்மீகி இராமாயணத்தில் பாண்டியரையும் அவரது தலைநகரையும் பற்றிய குறிப்பு கிடைக்கிறது. கோட்டைக் கதவின் அமைப்பினின்றும் மேனாட்டினர் குறிப்பிடும் பாண்டிய நாட்டின் பெருவளம் மெய்யானதே என அறியமுடிகிறது.

2. மகாபாரதம்

வியாச முனிவரின் மகாபாரதம் 18 பகுதிகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய நூல். ஒவ்வொரு பகுதியும் ஒரு பருவம் (Parva) எனப்படும. ஒவ்வொரு பருவத்திலும் பல உள்-பருவங்கள் உண்டு. சில பருவங்களில் நூற்றுக்கணக்கான உள்-பருவங்கள் உண்டு. (http://www.sacred-texts.com/hin/mbs)

மகாபாரதத்தில் பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பல இடங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. திரௌபதியின் சுயம்வரத்துக்கு ஒரு பாண்டிய மன்னன் சென்றிருந்தான் எனக் காண்கிறோம்.

Then those princes--Karna, Duryodhana, Salwa, Salya, Aswatthaman, Kratha, Sunitha, Vakra, the ruler of Kalinga and Banga, Pandya, Paundra, the ruler of Videha, the chief of the Yavanas, and many other sons and grandsons of kings,--sovereigns of territories with eyes like lotus-petals,--one after another began to exhibit prowess for (winning) that maiden of unrivalled beauty (Book 1: Section 189). 

யுதிஷ்டரின் ராஜசூய வேள்வியில் ஒரு பாண்டிய மன்னன் கலந்துகொண்டதாகவும் அறிகிறோம்.

And the Kings of Chola and Pandya, though they brought numberless jars of gold filled with fragrant sandal juice from the hills of Malaya, and loads of sandal and aloe wood from the Dardduras hills, and many gems of great brilliancy and fine cloths inlaid with gold, did not obtain permission (to enter) (Book 2: Section 51).

குருசேத்திரப் போரில், பாண்டவர்களுக்கு உறுதுணையாக ஒரு பெரும்படையுடன் ஒரு பாண்டிய மன்னன் கலந்துகொண்டான் என்ற செய்தியும் கிடைக்கிறது.

And the king of Magadha, Jayatsena of great strength, brought with him for Yudhishthira an Akshauhini of troops. And similarly, Pandya, who dwelt on the coast-land near the sea, came accompanied by troops of various kinds to Yudhishthira, the king of kings (Book 5: Section 19).

மேலும், போரில் பாண்டியர் ஆற்றிய வீரச் செயல்கள் மிகவும் புகழ்ந்து போற்றப்பட்டிருக்கின்றன.

And there hath come Pandya also, who, hardly inferior to Indra on the field of battle, is followed when he fights by numberless warriors of great courage. Remarkably heroic and endued with prowess and energy that have no parallel, he is devoted to the Pandava cause (Book 5: Section 22).

Devoted to the Pandavas and endued with great bravery, there is another great Ratha of the Pandavas, viz., king Pandya, that bowman of mighty energy (Book 5: Section 172).

They consisted of Dhrishtadyumna and Shikhandi and the five sons of Draupadi and the Prabhadrakas, and Satyaki and Chekitana with the Dravida forces, and the Pandyas, the Cholas, and the Keralas, surrounded by a mighty array, all possessed of broad chests, long arms, tall statures, and large eyes (Book 8: Section 12).

Book 8: Section 20 முழுக்க பாண்டிய மன்னனுக்கும், துரோணரின் மகனான அசுவத்தாமாவுக்கும் நடந்த கடும்போர் விவரிக்கப்படுகிறது. இங்கு, போரிட்ட பாண்டிய மன்னனின் பெயர் மலயத்துவஜன் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Thus addressed, Pandya answered, "So be it." Then Drona's son, telling him "Strike," assailed him with vigour. In return, Malayadhwaja pierced the son of Drona with a barbed arrow.

பாண்டியநாட்டின் சில பகுதிகளும் மகாபாரதத்தில் குறிப்படப்பட்டுள்ளன. அகத்தியர் தீர்த்தம், குமரித்தீர்த்தம், தாமிரபருணி ஆறு போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.

And, O Yudhishthira, in the country of the Pandyas are the tirthas named Agastya and Varuna! And, O bull among men, there, amongst the Pandavas, is the tirtha called the Kumaris. Listen, O son of Kunti, I shall now describe Tamraparni. In that asylum the gods had undergone penances impelled by the desire of obtaining salvation. In that region also is the lake of Gokarna which is celebrated over the three worlds, hath an abundance of cool waters, and is sacred, auspicious, and capable, O child, of producing great merit. That lake is extremely difficult of access to men of unpurified souls. Near to that tirtha is the sacred asylum of Agastya's disciple, the mountain Devasabha, which abounds in trees and grass, and fruits and roots. And there also is the Vaiduryya mountain, which is delightful abounding in gems and capable of bestowing great merit. There on that mountain is the asylum of Agastya abounding in fruits and roots and water (Book 3: Section 88).'"

குருசேத்திரப் போரில் ஒரு பாண்டிய மன்னன் கௌரவரின் பக்கமும் இருந்து போரிட்டிருக்கிறான் என்ற செய்தியும் கிடைக்கிறது.

The mighty Krishna also slew the valiant king of Chedis, that leader of kings, as if he were some animal, on the occasion of the latter's disputing about the Arghya. Putting forth his prowess, Madhava hurled unto the sea the Daitya city called Saubha, (moving) in the skies, protected by Salwa, and regarded as impregnable. … The Avantis, the Southerners, the Mountaineers, the Daserakas, the Kasmirakas, the Aurasikas, the Pisachas, the Samudgalas, the Kamvojas, the Vatadhanas, the Cholas, the Pandyas, O Sanjaya, the Trigartas, the Malavas, the Daradas difficult of being vanquished, the Khasas arrived from diverse realms, as also the Sakas, and the Yavanas with followers, were all vanquished by him of eyes like (Book 7: Section 11)

எனவே, மகாபாரதத்தில் மதுரையைப் பற்றிய நேரடியான தகவல்கள் இல்லையெனினும் பாண்டியரின் பழமைக்குப் பல சான்றுகள் அங்கே உள்ளன.

3. மகாவமிசம்

மகாவம்சம் என்பதற்கு மாபெரும் வரலாற்று ஆவணம் (Great Chronicle) என்று பொருள். இது பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் பௌத்த மத வரலாற்றைக் கூறும் நூல் இது. கௌதம புத்தரின் காலத்திலிருந்து இதன் வரலாறு தொடங்குகிறது. மொத்தம் 37 பகுதிகளைக் கொண்டது இந் நூல். இவற்றில் 6-ஆவது பகுதியில் இலங்கையின் முதற் பேரரசை நிறுவிய விஜயன் இலங்கைக்கு வந்து சேரும் செய்தி காணப்படுகிறது.

கி.மு.6-ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் புத்தமத நிகழ்வுகள் பல துறவிகளால் ஆவணமாக்கப்பட்டு வந்தன. கி.பி.4-ஆம் நூற்றாண்டில் பௌத்த பிக்குவான மகாதீர மகாநம என்பவர் அவற்றையெல்லம் தொகுத்து ஒரு நூலாக்கினார். அதன் பின்னரும் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றும் காலம் வரை ஆவணங்கள் தொடர்ந்து பல்வேறு துறவிகளால் எழுதப்பட்டு வந்தன. இவற்றின் தொகுப்பே மகாவம்சம் எனப்படுகிறது.

வங்க-கலிங்கப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பிரதேசத்தில் சிம்மபுரா என்ற ஊரை நிறுவி ஆண்டுவந்த சிம்மபாகு என்ற ஓர் அரசனின் தலைமகனாகப் பிறந்தவன் விஜயன். இந்த விஜயன் ஓர் அடங்காத தீயவனாக வளர்கிறான். எனவே இந்த இளவரசன் மீது வெறுப்பு கொண்ட குடிமக்கள் அவனைக் கொன்றுவிடும்படி மன்னனை வேண்டுகின்றனர். அதற்கு மனமில்லாத மன்னன் விஜயனை நாடுகடத்துகிறான். விஜயனையும், அவனுடன் எழுநூறு பேர்களையும் ஒரு கப்பலில் ஏற்றி நாட்டைவிட்டு அனுப்புகிறான். நெடுந்தொலைவு கப்பலில் வந்த விஜயன் இலங்கையில் கரையிறங்குகிறான். மனம் மாறி நல்லவன் ஆன விஜயன் அங்கு ஓர் அரசை நிறுவுகிறான். அதுதான் இன்றைய சிங்கள இலங்கையின் தொடக்கம். விஜயன் இலங்கையை அடைந்த நாளில்தான் புத்தர் இவ்வுலக வாழ்வை நீத்தார் என்று மகாவம்சம் கூறுகிறது.

The prince named VIJAYA, the valiant, landed in Lanka, in the region called Tambapanni on the day that the Tathagata lay down between the two twinlike sala-trees to pass into nibbana (mahavamsa CHAPTER VI - THE COMING OF VIJAYA – available at : http://lakdiva.org/mahavamsa/chap006.html)

விஜயனுக்கு முடிசூட்ட அவனது அமைச்சர்கள் முனையும்போது அவன் மறுக்கிறான். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த பின்னரே முடிசூடமுடியும் என்று கூறுகிறான். எனவே அவனது அமைச்சர்கள் பாண்டிய நாட்டு மதுரைக்கு வந்து பாண்டிய மன்னனின் மகளை விஜயனுக்காகப் பெண்கேட்கின்றனர். அதற்கு ஒத்துக்கொண்ட பாண்டியன் தனது இளவரசியையும் அவளுடன் திருமணமாகாத பல இளம்பெண்களையும் இலங்கைக்கு அனுப்புகிறான். எனவே இன்றைய சிங்கள நாட்டுக்கு ஒரு பாண்டிய இளவரசியே முதல் அரசியாக இருந்திருக்கிறாள்.

But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhura in southern (India), to woo the daughter of the Pandu king for their lord, devoted (as they were) to their ruler; and they also (sent to woo) the daughters of others for the ministers and retainers.

When the messengers were quickly come by ship to the city of Madhura they laid the gifts and letter before the king. The king took counsel with his ministers, and since he was minded to send his daughter (to Lanka) he, having first received also daughters of others for the ministers (of VIJAYA), nigh upon a hundred maidens, proclaimed with beat of drum:

`Those men here who are willing to let a daughter depart for Lanka shall provide their daughters with a double store of clothing and place them at the doors of their houses. By this sign shall we (know that we may) take them to ourselves.'

When he had thus obtained many maidens and had given compensation to their families, he sent his daughter, bedecked with all her ornaments, and all that was needful for the journey, and all the maidens whom he had fitted out, according to their rank, elephants withal and horses and waggons, worthy of a king, and craftsmen and a thousand families of the eighteen guilds, entrusted with a letter to the conqueror VIJAYA. All this multitude of men disembarked at Mahatittha; for that very reason is that landing-place known as Mahatittha (mahavamsa CHAPTER VII  - THE CONSECRATING OF VIJAYA– available at : http://lakdiva.org/mahavamsa/chap007.html)

 ஆனால் இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, விஜயன் தன் மருமகனை அரசனாக்குகிறான். அந்த மருமகன் தமிழனா அல்லது வங்க-கலிங்கனா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

எது எப்படியாயினும், விஜயனின் காலமாகிய கி.மு.543-இல் பாண்டிய நாட்டின் தலைநகராக மதுரை இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.


ப.பாண்டியராஜா
...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2014, 10:53:43 AM12/13/14
to mintamil, Subashini Tremmel

வணக்கம் ஐயா.
மீண்டும் ஒரு அருமையான வரலாற்று ஆவணத் தொகுப்பு .  ஆனால் மதுரை மிகமிகப் பழமையானது . பிரளய காலத்தில் ஏற்பட்ட கடல்சீற்றத்தினால் (சுனாமியினால் ) அழிந்துபட்ட மதுரையை மலையத்துவச பாண்டியன்தான் மீட்டுருவாக்கம் செய்தவன் என்கிறது திருவிளையாடற் புராணம்.

தங்களுடைய அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.

...

N. Ganesan

unread,
Dec 14, 2014, 11:38:00 AM12/14/14
to mint...@googlegroups.com, vallamai
On Friday, December 12, 2014 6:27:20 PM UTC-8, Pandiyaraja wrote:
உணர்வூட்டும் பின்னூட்டங்கள் தந்த தேமொழி, துரை, காளை, சுபா ஆகிய  பெருந்தகைகளுக்கு மிக்க நன்றி.
அன்புடையீர்,
இத்துடன் புராண, இதிகாசங்களில் மதுரை என்ற தலைப்பிலான பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இராமாயணம், மகாபாரதம், சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் ஆகிய நூல்களில் மதுரை, பாண்டிய மன்னன் பற்றிய குறிப்புகள் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
கட்டுரை இதோ:


பேரா. அப்துல் ரகுமான் தன்னூர் மதுரை பற்றிச் சொல்கிறார் - விகடனில்.
(”என் ஊர்”  என்று தங்கள் ஊர்களைப் பற்றி பலரும் சொல்லியிருப்பது விகடனில் உள்ள நல்ல தொடர்.
என் ஊர் - விகடனில். என்று யாராவது தொகுக்கலாம். நம் ஊர்ப் பெருமைகள் யாவும் கிட்டும்.)

---------------------

என் ஊர்!
தமிழ்ப் பால் ஊட்டிய தாய் மதுரை!

''உருது என் தாய். தமிழ் என் காதலி! அதனால் பட்டப் படிப்பில் தமிழ் படித்தேன். தமிழ் மேல் எனக்கு ஏற்பட்ட தீராக் காதலுக்கு வைகை ஆற்றங்கரையும் மதுரை மண்ணும்தான் முக்கியக் காரணங்கள்!'' - மனதின் அடி ஆழத்தில் இருந்து வார்த்தைகளைக் கோத்து நயமாகப் பேசுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். மரபு மகுடியாலும் புதுக்கவிதை புல்லாங்குழலாலும் வாசகனை மயக்கும் கவிதைக்காரர் மதுரை புகழ் பாடுகிறார்...

 ''வைகைக் கரையில் இருக்கும் கீழச் சந்தைப்பேட்டையில் பிறந்தேன். தவழ்ந்து, நடை பழகி, படித்துப் பட்டம் பெற்று, கவிதை எழுதி, இலக்கியம் செய்து என சுமார் 23 ஆண்டு காலம் அங்கே வாழ்ந்து இருக்கிறேன்.  

ஆற்றங்கரையில் இருந்து நடக்கும் தொலைவில் வீடு. தினமும் குளியல் ஆற்றில்தான். அப்போது எப்போதும் ஆற்றில் நீர் இருக்கும். ஆற்றங்கரைக்கு எதிரே அந்தப் பக்கம் தெப்பக்குளம். அதன் மைய மண்டபம் எனக்கு மிகவும் பிடித்த இடம். அந்த மண்டபத்தில் தவம் செய்வதுபோன்று அமர்ந்துவிடுவேன்.


அரசு தொடக்கப் பள்ளியிலும், சௌராஷ்டிரா பள்ளியிலும், தியாகராசர் கல்லூரியிலும் கல்வி கற்றேன். தியாகராசர் கல்லூரியில் நான் படித்த காலத்தை 'பொற்காலம்’ எனலாம். ராசமாணிக்கனார், இலக்குவனார், அ.கி.பரந்தாமனார் போன்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் இருந்த காலம் அது. எங்கள் தெருவில் கம்யூனிஸ்ட், திரா விடர் வாசக சாலை இருந்தன. பொது வுடைமை உணர்வுகளையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் என்னுள் வளர்த்தவை அந்த வாசக சாலைகள்தான்.

எங்கள் தெருவை ஒட்டியே தலித் மக்கள் வாழும் பகுதி. அதனை அடுத்து உருது முஸ்லிம்கள் வசித்தார்கள். அங்கே 'கவ்வாலி’ என்ற புகழ்பெற்ற உருது இசை அமைப்புகொண்ட சூஃபி பாடல்களைப் பாடுவார்கள். என் ஆன்மிக நாட்டத்துக் கும் கவிதைத் திறனுக்கும் இந்த கவ்வாலி தான் அடிப்படை.

மதுரையில் எல்லா திரையரங்குகளிலும் இந்திப் படங்கள் திரையிடுவார்கள். பேர் தான் இந்திப் படம். ஆனால் வசனங்கள், பாடல்கள் முதற்கொண்டு அனைத்துமே உருதுதான்.  'சாஹிர்’, 'ஹமர்’ போன்ற மேதைகள் இசையமைத்த திரைப்படங் களை அங்கு நான் கண்டுகளித்துஇருக்கிறேன். சிந்தாமணி தியேட்டரில் திரையிடப்பட்ட நௌஷாத் இசையமைப் பில் வெளிவந்த 'ஷபாப்’ படத்தைப் பார்த்த நாட்கள் இன்றும் நெஞ்சில் நினைவுச் சுருளாகப் பொதிந்து இருக்கிறது.  திரைப்படம் பார்க்க முடியாத நாட்களில் தியேட்டருக்குப் பக்கத்தில் நின்று பாடல் களைக் கேட்பேன்.

அப்போது 'மதுரை எழுத்தாளர் மன்றம்’ என்று ஓர் அமைப்பு இருந்தது. ஆண்டுதோறும் அந்த மன்றம் நடத்தும் இலக்கிய விழா வுக்குப் பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கி மக்கள் வந்து செல்வார்கள். அப்படியான விழா ஒன்றில்தான் கலைஞர் எனக்கு அறிமுகம் ஆனார்.

டவுன்ஹால் ரோட்டில் 'காலேஜ் ஹவுஸ்’ காபி எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று. கல்லூரி முடிந்தவுடன் வாசக சாலைக்குச் சென்றுவிட்டு, வடகோபுர வாசலில் உள்ள 'அசல் நாகப்பட்டினம் அல்வா’ கடையில் அல்வா வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே நான், கவிஞர் மீரா, அவ்வை நடராசன் மூன்று பேரும் சென்ட்ரல் டாக்கீஸ் வரை வருவோம்.

எங்கள் தெரு பள்ளிவாசலுக்கு எதிரே இருந்த பத்து நோன்புச் சாவடி வாசலில் அமர்ந்து நண்பர்களுடன் இலக்கியம் பேசுவோம். மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெற்ற வாரியார் இலக்கியக் கூட்டங்கள், திலகர் திடல்  அரசியல் கூட்டங்கள் அனைத்துக்கும் செல்வோம். பின் நாட்களில் நான் பேராசிரியர் வேலை கிடைத்து வாணியம்பாடிக்கு வந்து விட்டேன். சுமார் 30 வருடங்கள் அங்குதான் ஜீவிதம். தற்போது சென்னை. ஆனால், இப்போதும் நினைவின் அடுக்குகளில் மதுரை தூசி படிந்துகிடக்கிறது. தமிழ்ப் பால் ஊட்டி என்னை வளர்த்த தாய் மதுரைதான் என்று சொன்னால் அதுவே உண்மை!''

- ந.வினோத்குமார், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜெ.தான்யராஜு

Pandiyaraja

unread,
Dec 16, 2014, 12:30:48 PM12/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
திருவாளர்கள் காளை, கணேசன் ஆகியோருக்கு மிக்க நன்றி.
இத்துடன் அடுத்த பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் மதுரை என்ற தலைப்பில், அசோகன் கல்வெட்டுகளில் மதுரை என்ற தலைப்பிலான பகுதி இங்கு படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா


மல்லல் மூதூர் மதுரை

3. கல்வெட்டுகளில் மதுரை

 

அ-1. அசோகன் கல்வெட்டுகள்

மறம் வெறுத்து அறம் மேற்கொண்ட மாமன்னன் அசோகன், தான் தழுவிய புத்தமதக் கொள்கைகளைத் தான் ஆண்ட பகுதிகளின் பல இடங்களில் கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும், தான் எழுப்பிய தூண்களிலும் பொறித்துவைத்தான். இவை Rock Inscriptions, Cave Inscriptions, Pillar inscriptions எனப் பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாறைக் கல்வெட்டுகளும், பெரும் பாறைக் கல்வெட்டுகள் (Major Rock Inscriptipons), சிறு பாறைக் கல்வெட்டுகள் (Minor Rock Inscriptipons) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வடமேற்கு மூலையான பெஷாவார் பகுதியிலிருந்து தென்கிழக்கு மூலையான கர்நூல் மாவட்டம் வரையிலான பகுதியில் 10 இடங்களில் இந்த பெரும் பாறைக் கல்வெட்டுகள் காணக்கிடக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.



இவற்றுள் குஜராத் பகுதியில் கிர்னார் (Girnar), டேராடூன் பகுதியில் கால்சி (Khalsi), கலிங்கப் பகுதியில் ஜவ்கடா (Jaugada) ஆகிய இடங்களில் 14 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தப் பதினான்கில் சில மட்டுமே ஏனை இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வடமேற்குப் பகுதியில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் கரோஷ்டி எழுத்திலும், ஓரிடத்தில் கிரேக்க-அராமிக் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ஏனையவை பாலி மொழியில் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்டவை. இந்தப் பதினான்கு கல்வெட்டுகளில் இரண்டாம், பதிமூன்றாம் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அத்துடன் சதியபுதோ என்றழைக்கப்படும் ஒரு தமிழ்மன்னனும் குறிப்பிடப்படுகின்றான். அது அதியமான் நெடுமான் அஞ்சி என யூகிக்கப்படுகிறது.

அ-2. அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)

அசோகனின் இரண்டாம் கல்வெட்டு Shabhazgarhi (S), Khalsi (K), Girnar (G), Dhauli (D), Jaugarh (J) ஆகிய ஐந்து இடங்களில் காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுகளில் இரண்டாம் வரியில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேதலபுதோ ஆகிய அரசுகளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவற்றில் சில கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. இதில் குறிப்பிடப்படும் சதியபுத்ர (சதியபுதோ) யாரைக் குறிக்கிறது என்பதில் தெளிவற்ற நிலை காணப்பட்டது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்பை என்ற ஊரின் அருகே மலைக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டு ஒன்று ‘சதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி ஈத்த பாளி”  Satiyaputo atiyan netuman anci itta pali என்று படிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னனே அல்லது இவனது முன்னோர்களுள் ஒருவனே அசோகனால் குறிக்கப்பட்டிருக்கிறான் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கல்வெட்டின் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு இவ்வாறு அமைகிறது.



இதன் மொழிபெயர்ப்பு இவ்வாறு அமைகிறது:

Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi’s domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras, the Keralaputras, as far as Tamraparni and where the Greek King Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos, …

(Available in internet : http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html)

இவற்றில் Khalsi (K) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் இரண்டாம் கல்வெட்டில் இப்பகுதி இடம்பெற்றுள்ளதைப் பிராமி எழுத்துகளில் இங்கு காணலாம். சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டுள்ள நான்கு சொற்களும் முறையே சேட(chEda), பண்டியா(paNdiyA), ஸதியபுதோ(sathiyaputhO), கேதலபுதோ (kEdhalaputhO) என சில எழுத்துப்பிழைகளுடன் இருப்பதைக் காணலாம்.



Girnar (G) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் இரண்டாம் கல்வெட்டில் இப்பகுதி இடம்பெற்றுள்ளதைப் பிராமி எழுத்துகளில் இங்குக் காணலாம். சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டுள்ள நான்கு சொற்களும் முறையே சேட(chEda), பாண்டா(PANdA), ஸதியபுதோ(sathiyaputhO), கேதலபுதோ (kEthalaputhO) என எழுத்துப்பிழைகளுடன் இருப்பதைக் காணலாம்.

அடியில் காணப்படுவது இந்தக் கல்வெட்டு பாறையில் உள்ளபடியே.

Jaugada (J) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் இரண்டாம் கல்வெட்டில் இப்பகுதி இடம்பெற்றுள்ளதைப் பிராமி எழுத்துகளில் இங்குக் காணலாம். சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டுள்ள நான்கு சொற்களும் முறையே சேட(chEda), பாண்டியா(PANdiyA), ஸதியபு*(sathiyapu*) என எழுத்துப்பிழைகளுடன் இருப்பதைக் காணலாம்

ஆ. அசோகனின் பெரும்பாறை பதிமூன்றாம் கல்வெட்டு (Edict XIII)

அசோகனின் பதிமூன்றாம் கல்வெட்டு மிகப் பெரியதாகும். இதன் இறுதிப் பகுதியில் சோழ, பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இது Shahbazgarhi(S), Khalsi(K), Girnar(G) ஆகிய இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சோழ, பாண்டிய என்று வரும் அடிகள் ஆங்கில எழுத்துக்களில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் மொழிபெயர்ப்பு:

(Now it is conquest by Dhamma that Beloved-of-the-Gods considers to be the best conquest.[27] And it (conquest by Dhamma) has been won here, on the borders, even six hundred yojanas away, where the Greek king Antiochos rules, beyond there where the four kings named Ptolemy,) Antigonos, Magas and Alexander rule, likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamraparni.

Khalsi-இல் உள்ள பதிமூன்றாம் கல்வெட்டில் சோழ, பாண்டியர் குறிக்கப்பட்டுள்ள இடம் இங்கே காட்டப்பட்டுள்ளது (அடிக்கோடிட்ட சொற்கள்):


Girnar-இல் காணப்படும் பதிமூன்றாம் கல்வெட்டின் பகுதி இங்கே:


அசோகன் கல்வெட்டுகளில் பாண்டியர் பற்றிய குறிப்பிலிருந்து தமிழ்நாடு அசோகரின் கீழ் இருந்ததில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது. இருந்தாலும், இவற்றிலிருந்து மதுரையைப் பற்றிய தகவல் இல்லை.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்பை அருகே காணப்படும் ஸதியபுதோ அதியமாந் பற்றிய கல்வெட்டு.

பார்வை:

1. E. Hultzsch - Corpus Inscriptionum Indicarum – Volume 1: Inscriptions of Asoka.

 (available in interenet : https://archive.org/stream/InscriptionsOfAsoka.NewEditionByE.Hultzsch/HultzschCorpusAsokaSearchable#page/n2/mode/1up)

2. Alexander Cunningham, C.S.I., Corpus Inscriptionum Indicarnum – Vol I – Inscriptions of Asoka.

(available in internet : https://archive.org/stream/inscriptionsaso00hultgoog#page/n8/mode/1up


ப.பாண்டியராஜா




Oru Arizonan

unread,
Dec 16, 2014, 1:20:40 PM12/16/14
to mint...@googlegroups.com
மிகவும் பயனுள்ள குறிப்பு, மதிப்பிற்கு உரிய பாண்டியராஜா அவர்களே!

நன்றி, வணக்கம்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 17, 2014, 4:11:45 AM12/17/14
to mintamil, vallamai
வணக்கம் ஐயா.
சிறந்த ஆவணங்களின் கால வரிசைப்படி தங்களது கட்டுரை எழுதப்பட்டுவருகிறது.
மதுரை மற்றும் பாண்டியர் பற்றிய சிறந்ததொரு ஆவணமாகத் தங்களது கட்டுரை உள்ளது ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

துரை.ந.உ

unread,
Dec 17, 2014, 4:27:29 AM12/17/14
to வல்லமை, mintamil
Inline image 1
அறிய, அரிய ... அற்புதமான தொகுப்புகள் / பகிர்வுகள் .... தொடர்கிறேன் ஐயா 

2014-12-17 14:41 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 17, 2014, 7:16:01 AM12/17/14
to vallamai, mintamil
பல செய்திகளை ஆவணங்களுடன் தருகிற அருமையான பதிவு ஐயா. ஆர்வத்துடன் படித்துவருகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Pandiyaraja

unread,
Dec 29, 2014, 12:01:27 PM12/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


திருவாளர்கள்.அரிசோனன், காளை, துரை, வினைதீர்த்தான் ஆகியோருக்கு மிக்க நன்றி.

அன்புடையீர்,
இத்துடன் 'மல்லல் மூதூர் மதுரை' - தொடர் கட்டுரையின் அடுத்த பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் கலிங்க மன்னன் காரவேலன் தனது கல்வெட்டில் தமிழ்நாட்டைப் பற்றியும், பாண்டிய மன்னனைப் பற்றியும் குறிப்பிடும் பகுதி இடம்பெற்றுள்ளது.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

3. கல்வெட்டுகளில் மதுரை

 

ஆ-1. காரவேலர் கல்வெட்டு

கலிங்கத்தை வென்ற அசோக மன்னனின் (கி.மு.273 – 230) பேரரசு வேட்கை அத்துடன் தணிந்தது என்று அறிவோம். அதன் பின்னர் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குக் கலிங்க நாடு அடிமைப்பட்டே கிடந்தது. கி.மு.180-இல் கலிங்கம் வீறுகொண்டு எழுந்தது. அடிமைத்தளையை அறுத்ததுடன் பல அண்டை நாடுகளையும் வென்று கலிங்கப் பேரரசை நிலைநாட்டினான் மன்னன் காரவேலன் (Kharavela). காரவேலன் (209-B.C(பிறப்பு) – 184-B.C(ஆட்சி) 170-B.C(கல்வெட்டு)) தன் வெற்றிச் சரிதத்தை யானைக்குகை என்ற பொருள்கொண்ட ஹாதிகும்பா (Hathigumpha) என்ற குகை வாயிலில் பொறித்துவைத்தான். இதுவே ஹாதிகும்பா கல்வெட்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் இடைக்கால, பிற்கால மன்னர்கள் தங்கள் வெற்றிகளையும், கொடைகளையும் கோவில்களிலும், பட்டயங்களிலும் மெய்க்கீர்த்திகளாகப் பொறித்து வைத்ததைப் போல, காரவேலன் தான் பெற்ற பல்வேறு வெற்றிகளைப் பற்றிய மெய்க்கீர்த்தியே இந்தக் கல்வெட்டுச் செய்தியாக அமைந்திருக்கிறது.

ஆ-2. காரவேலர் கல்வெட்டுச் செய்தி

இந்த ஹாதிகும்பா கல்வெட்டு ஸ்டர்லிங் (Stirling) என்பவரால் 1825-இல் ஒரிசாவில் உள்ள புவனேசுவர் நகரத்தின் அருகில் உள்ள கந்தகிரி(Khandagiri), உதயகிரி(Udayagiri) என்ற இரட்டை மலைகளில் உதயகிரி மலையில் உள்ள ஒரு குகைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பொறித்த காரவேல மன்னன் சமண மதத்தைச் சேர்ந்தவன். இந்தக் கல்வெட்டு பிராமி எழுத்துக்களால் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. மொத்தம் 17 அடிகளைக் கொண்ட இந்தக் கல்வெட்டு முதலில் இறைவணக்கத்துடன் தொடங்குகிறது. பின்னர் காரவேலனின் பிறப்பு, வளர்ப்பு, பட்டமேற்பு ஆகியவை கூறப்படுகின்றன. அதன் பின்னர் வடநாட்டில் பல்வேறு நாடுகளை அவன் வென்ற வெற்றிச் சிறப்பும் பெற்ற பரிசுகளும் விதந்தோதப்படுகின்றன.  11-ஆம், 13-ஆம் அடிகளில் தமிழகத்தைப் பற்றிய செய்திகள் காணக்கிடக்கின்றன என்பது அறிஞர் முடிவு.

ஆ-3. காரவேலர் கல்வெட்டு – அடி 11

இந்தக் கல்வெட்டில் உள்ள பழமையான பிராகிருத மொழியைச் சரியாகப் புரிந்துகொள்வதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மேலும் பல இடங்களில் எழுத்துகள் முழுமையாகவும் பகுதியாகவும் சிதைந்தும் அழிந்தும் காணப்படுவதால் நன்கு தெரியும் பகுதின் முழுமையான பொருளையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. குறிப்பாக 11-ஆம் வரியில் உள்ள பல சொற்கள் பல்வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.

இவற்றில் இரண்டு விதமான ஆங்கில மொழிபெயர்ப்பைப் பாருங்கள்.

(L.11) .................. And the market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada).

http://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf

From: Epigraphia Indica, Vol. XX (1929-30). Delhi: Manager of Publications, 1933, 86-89.

--------------------------------------------------------

Line 10-11 - And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies] [His Majesty] caused to be cultivated pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

http://www.jatland.com/home/Hathigumpha_inscription

இதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு இதோ:

L.11 - कलिंग पुवराज निवेसितं पिथुडं गधवनंगलेन कासयति [।।] जनपद भावनं च तेरसवस सत कतं भिदति तमिर देह संघातं [।।] बारसमे च वसे ..... वितासयति उतरापध राजनो [ततो]

 Sadananda Agrawal has prepared the text in Sanskrit,

இதன் தமிழ் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது.

.............. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைப் பிடித்துக் கழுதைகள் பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுது அழித்தார்; பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு (ஜனபதம்) தொல்லையாக இருந்து வந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முழுதும் உடைத்தார். பன்னிரண்டாம் ஆண்டில் உத்தரபதத்தின் அரசர்களை ஆயிரக்கணக்கான ...... வைத்து அச்சுறுத்தி,

தமிழ் எழுத்துக்களின் வழியே இந்தக் கல்வெட்டுச் செய்தி இதுதான்:

கலிங்க³ புவராஜ நிவேஸிதம்ʼ பிது²³ம்ʼ ³வநங்க³லேந காஸயதி [।।] ஜநபத³ பாவநம்ʼ ச தேரஸவஸ ஸத கதம்ʼ பி³தி தமிர தே³ஹ ஸங்காதம்ʼ [।।] பா³ரஸமே ச வஸே ..... விதாஸயதி உதராபத ராஜநோ [ததோ]

http://ta.wikipedia.org/wiki/ஹாத்திகும்பா_கல்வெட்டு

இங்கு குறிக்கப்படும் பிதுண்டா என்ற நகரம் எது என்பதில் அறிஞரிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆவா மன்னன் யார் என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. இங்கு கழுதையைப் பூட்டி உழுகின்ற செய்தி கூறப்படுகிறது. ஆனால் இதைச் செய்தவன் காரவேலனா அல்லது பிதுண்டா மன்னனா என்றும் உறுதியாகக் கூறமுடியவில்லை. போரில் இரு மன்னர்கள் ஈடுபடும்போது, வென்ற மன்னன் தோற்ற மன்னனின் நாட்டு விளைநிலங்களைக் கழுதையைப் பூட்டி உழுது காணத்தை விதைக்கும் வழக்கம் தமிழக மன்னர்களிடையே இருந்துள்ளது.

கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில்புறம் 15/1-3
(பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது)
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ வாழிய பெரிது எனபுறம் 392/6-11
(அதியமான் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது)
ஆனால் இவ்வழக்கம் வடநாட்டு வேந்தரிடம் இல்லை எனத் தெரிகிறது. எனவே இங்கு குறிக்கப்படும் வேந்தன் தமிழ்நாட்டவனே என்பது ஆய்வாளர் முடிபு.
மேலும் இங்கு குறிக்கப்படும் தமிர தேஹ என்பது தமிழ்நாட்டைத்தான் குறிக்கிறது என்பதுவும் ஐயத்துக்குரியது. அந்நாட்களில் தமிழ் வடநாட்டவரால் த்ரமிள என்றுதான் அழைக்கப்பட்டது. எனவே இது தமிழ் தேசம் அல்ல என்பார் உண்டு. இது எழுத்துப்பிழை எனக்கொண்டு தமிழ்நாடே என்பாரும் உண்டு. ஸங்காதம் என்பது ஒப்பந்தம். பிதும்டா நகரைப் பிடித்துத் தமிழரின் கூட்டணியை முறியடித்தார் என்று கல்வெட்டு கூறுகிறது. இந்தக் கூட்டணிபற்றித் தமிழ் இலக்கியங்களில் செய்தி இல்லை. இருப்பினும், மாமூலனாரின் பாடல் ஒன்றை இங்கே ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே அகம் 31/13-15
தமிழ் மூவேந்தரும் காக்கும் மொழிபெயர்தேசம் பற்றி மாமூலனார் இங்கு குறிப்பிடுகிறார். இது தமிழகத்தின் அன்றைய வடவெல்லையான வேங்கடமலைக்கும் வடக்கில் உள்ள பகுதி. இதனைத் தமிழ் மன்னர்களின் கூட்டுப்படை காத்துவந்தது. தமக்குள் எவ்வாறோ போரிட்டுக்கொண்டாலும் தமிழ் மன்னர்கள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் இது. வணிகம் காரணமாக வடநாடு செல்வதற்குத் தேவையான பாதுகாப்பு நல்குவதற்கு மூன்று அரசர்களுக்கும் இது தேவைப்பட்டது. மேலும், மௌரியரின் காலத்தில் ஏற்பட்ட யவன அரசன் அலெக்சாந்தரின் படையெடுப்புக்குப் பிறகு, அதைப் போன்றோ, அல்லது வேறு வடநாட்டு அரசர்களோ தென்னாட்டைத் தாக்கினால் கூட்டாக எதிர்த்துத் தமிழகத்தைக் காக்கத்தான் இந்த தமிழ்கெழு மூவரும் இந்த மொழிபெயர் தேசத்தைக் காத்துவந்தனர் என்பது அறிஞர் கருத்து. இந்தக் கூட்டணியையே காரவேலன் உடைத்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்து இங்குக் கூறப்படும் ஆண்டுக்கணக்கிலும் குழப்பம் நீடிக்கிறது. இதைப்பற்றி விக்கிப்பீடியா கூறுவதைப் பாருங்கள்:
தமிழ் மூவேந்தர் கூட்டணிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் தேரஸவஸ ஸத” (तेरसवस सत) என்பதை த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். த்ரயோதஸ என்பதைப் பதின்மூன்று என்று கொண்டால், த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதைப் பதின்மூன்று நூறு வருடங்கள் அல்லது 1300 ஆண்டுகள் என்று கொள்ளலாம். அவ்வளவு பெருங்காலத்துக்கு ஒரு கூட்டணி நீடித்திருக்க முடியுமா என்று ஐயங்கொள்ளும் ஆய்வாளர்கள் இதை நூற்றுப் பதின்மூன்று அல்லது 113 ஆண்டுகள் நீடித்த கூட்டணியாகக் கொள்கிறார்கள்.[26] ஆனால், சசிகாந்து இதையும் மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு என்று கொள்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர் கூட்டணி கி.மு. 414ல் தோன்றியது என்று அவர் கருதுகிறார்.[27]

ஆனால் இநதக் கல்வெட்டைக் காரவேலர் பொறித்த ஆண்டிலிருந்து அதற்கு முந்தைய 113 ஆண்டுகள் என்றும் கொள்வர். காரவேலன் பட்டத்துக்கு வந்தது கி.மு.184-இல். அவனது 13-ஆவது ஆட்சியாண்டில் (கி.மு.170) கல்வெட்டு பொறிக்கப்பட்டது.  அன்றிலிருந்து 113 ஆண்டுகள் முன்பு என்றால், கூட்டணியின் தொடக்கம் கி.மு.283.  மௌரியப் பேரரசின் காலம் B.C.322-185. தமிழகக் கூட்டணியின் காலம் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் மகனான பிந்துசாரரின் காலம். பிந்துசாரர் பட்டத்துக்கு வரும்போது அவரது தந்தை வடநாடு முழுவதையும் கைப்பற்றியிருந்தார். எனவே பிந்துசாரர் தெற்கே கவனம் செலுத்தினார். அவரைப்பற்றி விக்கிப்பீடியா கூறுவது இதுதான்:

Bindusara, just 22 year-old, inherited a large empire that consisted of what is now, Northern, Central and Eastern parts of India along with parts of Afghanistan and Baluchistan. Bindusara extended this empire to the southern part of India, as far as what is now known as Karnataka. He brought sixteen states under the Mauryan Empire and thus conquered almost all of the Indian peninsula (he is said to have conquered the 'land between the two seas' – the peninsular region between the Bay of Bengal and the Arabian Sea). Bindusara didn't conquer the friendly Dravidian kingdoms of the Cholas, ruled by King Ilamcetcenni, the Pandyas, and Cheras. Apart from these southern states, Kalinga(modern Odisha) was the only kingdom in India that didn't form the part of Bindusara's empire. It was later conquered by his son Ashoka, who served as the viceroy of Ujjainiduring his father's reign.

(http://en.wikipedia.org/wiki/Maurya_Empire#Bindusara)

அதாவது பிந்துசாரரால் தமிழகத்தை வெல்லமுடியவில்லை. இங்கே தமிழகம் அவனுடன் நட்புநாடாக இருந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மௌரியர் எனப்படும் மோரியர்கள் தமிழ்நாட்டை வெல்ல முயன்று தோற்றனர் என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன.

விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனராயினும் - அகம் 69/10-12
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள்ளருவிய அறைவாய் உம்பர் - அகம் 251/12-14
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து
ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்தவரோ சென்றனர் - அகம் 281/8-12
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத்தன்ன
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே - புறம் 175/6,7
இப் பாடல்களில் வரும் ‘அறை’ என்ற சொல்லுக்குப் ‘பாறை’ (மலைபடு.133) என்றும், ‘பாசறை’ (பதிற்.24/14) என்றும் பொருள் உண்டு. எனவே அகப்பாடல்களில் கூறப்படும் அறை என்பது வேங்கடமலையின் பாறைகளையோ, அதனை அடுத்துக் கூட்டணியினர் அமைத்த பாசறையையோ குறிக்கலாம்.
தம் தேர்ப்படை வருவதற்கு மோரியர் வேங்கடமலையை வெட்டிப் பாதை ஏற்படுத்தினர் என இதன்மூலம் அறிகிறோம். வம்ப மோரியர் என்று ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இவர்கள் தமிழகத்துக்குப் புதிதாய் வந்தவர்கள் என அறிகிறோம். எனவே அதுவரை வேறு எந்த நாட்டுப் படையும் தமிழகம் வந்ததில்லை எனவும் அறியலாம்.
மோரியர் வடுகரை முன் நிறுத்தி வந்தனர் என அகம் 281 கூறுகிறது. அகம் 375-இல் ‘வம்ப வடுகர் பைந்தலை சவட்டி, செம்பு உறழ் புரிசை பாழி நூறி’னான் சோழன் இளஞ்சேட் சென்னி என்பான் என்று கூறப்படுகிறது. இந்தப் பாழிதான் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள பிதும்டா நகராக இருக்கலாம். 
இந்தப் புறப்பாட்டு கள்ளில் ஆத்திரையனார் என்பவர் ஆதன் நுங்கன் என்ற குறுநில மன்னனைப் பாடியது. இந்த மன்னன் வேங்கடத்தைச் சார்ந்த பகுதியை ஆண்டுவந்தவன் என்பார் ஔவை.சு.துரைசாமியார். இவனே தமிழ்மன்னரின் கூட்டுப்படைக்குத் தளபதியாக இருந்திருக்கலாம். இப் பகுதிக்கு ஔவை அவர்கள் கூறும் உரை இதுதான்:
“விசும்பைத் தொடும் நெடிய குடையினையும், கொடியணிந்த தேரினையுமுடைய மோரியரது திண்ணிய ஆர் சூழ்ந்த சக்கரம் இயங்குவதற்குக் குறைக்கப்பட்ட வெள்ளி மலைக்கு அப்பாலாகிய உலகத்துக்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டு பரந்த இடத்தையுடைய ஆதித்த மண்டிலத்தை ஒப்ப நாடோறும் இரவு பகல் என்னாமல் பலரையும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய நின்னை.”
இங்கே அறை என்பதை வெள்ளிமலை எனக் கொள்கிறார் உரையாசிரியர். எனவே, அதற்கும் அப்பால் என வருவதால் அதனைச் சூரிய மண்டிலத்தின் உறைவிடமாகக் கொள்ள நேரிடுகிறது. ‘உலக இடைகழி அறைவாய் நிலைஇய’ என்ற தொடருக்கு (வேங்கடமலைக்கும் அப்பால் இருக்கும்) உலகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையில் இருக்கும் பகுதியான பாசறையில் நிலைத்து நின்று, ஞாயிற்றைப் போல, இரவும் பகலும் நுங்கன் காத்து வந்தான் என்று பொருள் கொள்ளல் பொருத்தம் எனத் தோன்றுகிறது. எனவே உலக இடைகழி அறைவாய் என்பதே இந்தப் பாழி என்ற பிதுண்டா நகர் எனவும் கொள்ளலாம். 
எனவே, பிந்துசாரராலும் வெல்லமுடியாத தமிழகத்தின் கூட்டணியைத் தான் முறித்ததாகக் காரவேலன் பெருமையுடன் இந்தக் கல்வெட்டில் பதித்திருக்கிறான் எனலாம். ஆனால் அவன் அந்த எல்லைவெற்றியுடன் நின்றுவிட்டான் எனவும் தமிழகத்தினுள் வரவில்லை எனவும் தெரிகிறது. அவனது ஆட்சி எல்லையில் தமிழகம் குறிக்கப்படவில்லை.

தமிழ் தேசக் கூட்டணி முறியடிப்பு என்பது எத்தகையது என்பதுவும் தெளிவாக இல்லை. போரிட்டு முறியடித்தலா அல்லது வஞ்சனையால் முறியடித்தலா என்பதுவும் தெளிவாக இல்லை. மூவேந்தருக்குள் பகைமை மூட்டியதால் கூட்டணி முறிவுபெற்றதா என்றும் ஆயவேண்டும்.
இதையெல்லாம் விடுத்து வேறொரு கோணத்திலும் இந்தக் கல்வெட்டு ஆராயப்பட்டுள்ளது. முதலில் தமிர தேச என்பது தமிழகமே இல்லை என்பார் உண்டு. அதாவது, தமிர தேச என்பதனைத் தாமிர தேச என்று கொண்டு இது வங்காளத்துக்கு அருகில் தாமிர உலோகம் அதிகமாகக் கிடைக்கும் பிரதேசம் என்ற கருத்து உண்டு. மேலும், தமிழகத்துக்கும் கலிங்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சாதவாகனர்கள் ஆண்டுவந்தனர். சாதவா கன்னர் என்ற நூற்றுவர் கன்னர் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் சேரன் செங்குட்டுவனுடன் நட்புக்கொண்டவர்கள். எனவே இவர்களைத் தாண்டி காரவேலன் தமிழ்நாட்டுக்கு வந்திருக்க முடியாது என்பர்.
(http://controversialhistory.blogspot.in/2007/06/myth-of-tamil-antiquity-hathigumpha.html#.VKEznl4Ak)
அடுத்து இந்தத் தொடரையே வேறுவிதமாகப் படிப்போரும் உண்டு. கே.பி.ஜஸ்வால் என்பவர் இத் தொடரைப் படிப்பதைப் பாருங்கள்:

Jana-pada-bhavanam cha terasa-vasa-sata-ketu-Bhada-tit + amara-deha-samghatam(p.457).

(K.P.Jayswal, Hathigumpha Inscription of the Emperor Kharavela (173 B.C to 160 B.C), Journal of the Bihar and Orissa Reasearch Society, Vol.III (1917), pp.425-473)
இவர் tamara என்பதையே t + amara என்று படிக்கிறார். எனவே இவர் கொள்ளும் பொருள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

“His Highness Ketu who (flourished) thirteen centuries before,………which has been established by the Former Kings in the city of Prith=udaka-darbha and is pleasing to the country” (p.464).

இது சரியெனில் காரவேலன் தமிழ்க் கூட்டணியை முறியடித்ததைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை.

ஆ-4. காரவேலர் கல்வெட்டு – அடி 13

இந்த அடியில்தான் பாண்டிய மன்னனைப் பற்றிய குறிப்பு வெளிப்படையாகக் காணப்படுகிறது. பண்டராஜா என்ற பெயர் இந்த அடியில் இருப்பதைக் காணலாம். எனினும், இந்த அடியின் முழுப் பொருளும் வெவ்வேறுவிதமாகவே கொள்ளப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனிடமிருந்து குதிரைகளும், யானைகளும், மணிகள் பதித்த அணிகலன்களும், பெருமளவு முத்தும் பெறப்பட்டன என்பது செய்தி. ஆனால் இப் பொருள்கள் நன்கொடையாகப் பெறப்பட்டனவா அல்லது திறையாகக் கொள்ளப்பட்டனவா என்பதில் தெளிவு இல்லை.

இங்கே மூன்றுவித மொழிபெயர்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

(L. 13) .................(He) builds excellent towers with carved interiors and creates a settlement of a hundred masons, giving them exemption from land revenue. And a wonderful and marvellous enclosure of stockade for driving in the elephants (he)...... and horses, elephants, jewels and rubies as well as numerous pearls in hundreds (he) causes to be brought here from the Pandya King.

http://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf

From: Epigraphia Indica, Vol. XX (1929-30). Delhi: Manager of Publications, 1933, 86-89.

Line 13 - [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here ( capital KalingaNagri) various pearls, jewels and precious stones hundred thousand in number.

(http://www.jatland.com/home/Hathigumpha_inscription)

L.13 - ...तुं जठर लखिल गोपुरानि सिहरानि निवेसयति सत विसिकनं परिहारे हि [।।] अभुत मछरियं च हथीनाव तं परिहर [उपलभते] हय हथी रतन मानिकं [।।] पंडराजाएदानि अनेकानि मुत मनिरतनानि आहारापयति इध सतस [हसानि]

...தும்ʼ ஜட²ர லகி²ல கோ³புராநி ஸிஹராநி நிவேஸயதி ஸத விஸிகநம்ʼ பரிஹாரே ஹி [।।] அபுத மச²ரியம்ʼ ச ஹதீ²நாவ தம்ʼ பரிஹர [உபலபதே] ஹய ஹதீ² ரத்ந மாணிகம்ʼ [।।] பாண்ட³ராஜா ஏதா³நி அநேகாநி முக்த மணிரத்நாநி ஆஹாராபயதி இத ஸதஸ [ஹஸாநி]

(அவர்) பல அற்புதமாகச் செதுக்கிய உள்ளறைகளைக் கொண்ட கூட கோபுரங்களைக் கட்டுவித்து அவற்றைக் கட்டிய நூறு கொத்தனார்களுக்கென ஒரு குடியிருப்பையும் அமைத்து மேலும் அவர்களுக்கு நிலவரிகளிலிருந்தும் விலக்களித்தார். யானைகளை ஓட்டுவதற்கான வியப்புக்குரிய கொட்டங்களை அவர் .... மற்றும் குதிரைகள், யானைகள், ரத்தினங்கள், மாணிக்கங்கள், பாண்டிய அரசனிடமிருந்து எண்ணற்ற முத்து, மணி, ரத்தினங்களை கலிங்கத்திடம் திறை கட்டுமாறு செய்தார்.

(http://ta.wikipedia.org/wiki/ஹாத்திகும்பா_கல்வெட்டு)

காரவேலன் கல்வெட்டில் சோழ மன்னனைப் பற்றிய குறிப்பு இல்லை. எனவே அச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதையுமே பாண்டிய மன்னன் ஆண்டுவந்தான் எனப் பெறலாம். காரவேலனின் காலத்தை ஒட்டிய அந்தப் பாண்டியப் பேரரசன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாகவே இருந்திருக்கவேண்டும். அவன் யாராயிருந்தாலும் தமிழ்நாடு முழுமையும் ஆண்ட ஒரு பேரரசன் காரவேலனுக்குத் திறை செலுத்தியிருப்பான் என்று கொள்ள முடியாது.

எனவே கல்வெட்டு இன்னும் முழுமையாக ஆயப்படவேண்டும். கலிங்கப் பிராமி எழுத்துக்களும், அன்றைய பிராகிருத மொழி இலக்கணமும் நன்கு தெரிந்த ஒரு தமிழ் அறிஞர் இதனை ஆயவேண்டும். அவர் பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல் நல்லது.

எப்படியாயினும், மேனாட்டுப் பயண ஆசிரியர்கள் பாண்டிய நாட்டு வளத்தைப் பற்றிச் சொல்லிப்போந்தவை காரவேலன் கல்வெட்டாலும் உறுதிசெய்யப்படுவதை இங்குக் காண்கிறோம்.

காரவேலன் கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

   

கல்வெட்டின் கையெழுத்துப் பிரதி இது:


கல்வெட்டின் 11-ஆம், 13-ஆம் அடிகளில் குறிப்பிட்ட பகுதிகள் அடிக்கோடிடப்பட்டுள்ளன



பார்வை:

1. Hathigumpha Inscription of Kharavela of Kalinga

http://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf

2. Hathigumpha inscription of King Khāravela at Udayagiri Hills as first drawn in "Corpus Inscriptionum Indicarum, Volume I: Inscriptions of Asoka by Alexander Cunningham", 1827

https://archive.org/details/inscriptionsaso00hultgoog

https://archive.org/stream/inscriptionsaso00hultgoog#page/n212/mode/1up

3. Controversies in History - Moda Sattva

http://controversialhistory.blogspot.in/2007/06/myth-of-tamil-antiquity-hathigumpha.html#.VKEznl4Ak

4. K. A. Nilakanta Sastri, A History of South India, Oxford University Press, Madras, 1966, p.88.

5.  N. K. Sahu, Kharavela, Orissa State Museuem,Bhubaneswar, 1984.

6. K.P.Jayswal, Hathigumpha Inscription of the Emperor Kharavela (173 B.C to 160 B.C), Journal of the Bihar and Orissa Reasearch Society, Vol.III (1917), pp.425-473
http://www.hinduwebsite.com/history/mahasangam.asp#ref14
7. Hathigumpha inscription - Laxman Burdak लक्ष्मण बुरड़क

Dhivakar

unread,
Dec 30, 2014, 2:10:18 AM12/30/14
to மின்தமிழ், vallamai
திரு பாண்டியராஜா அவர்களுக்கு,
மிகத் தெளிவான அழகான கட்டுரையை அளித்தமைக்கு நன்றி! 

காரவேலன் தமிழ்க் கூட்டணியை வென்றான் என்பதற்கு ஒரு ‘த்ரமிர’ எனும் வார்த்தை போதுமா என்று தெரியவில்லை. ஆனால் அதே கல்வெட்டின் அடுத்த பாராவாக பாண்டியன் செல்வத்தைப் பயன்படுத்தியதாக அதுவும் முத்துக்களை பயன்படுத்தியதாக epigraphica India Valume XX  இல் மொழிபெயர்த்துத் தரப்பட்டிருக்கிறது. அந்த முழு மொழிபெயர்ப்பையும் கீழே கொடுத்திருக்கிறேன்.    இதனால் பாண்டியனுடன் போரிட்டிருக்கலாம். அவன் காலமான கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்டிருந்த பாண்டியன் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. 

தமிழர் கூட்டணி என்பது எப்போதுமே சாத்தியமில்லை என்பதாகத்தான் கடந்து போன சரித்திரங்கள் சொல்லுகின்றன. தமிழன் அழிவுக்கும் தமிழனேதேன் காரணமாகிறான் என்பதையும் பல சரித்திர நிகழ்ச்சிகள்: எடுத்துக் காட்டாக இருக்கின்றன. காரவேலன் நாடான கலிங்க தேசம் தமிழகத்திலிருந்து சற்று அதிகமான தூரமான தேசம் என்பதாலும் அங்கே சான்றோர்கள் சமணர்கள் மட்டுமே அதிக அளவில் இருந்திருக்கலாம் என்பதாலும், காரவேலன் சக்தி வாய்ந்த வல்லமையாளனாக இருந்திருக்கிறான் என்ற ஒரு சிறப்பாலும் காரவேலன் என்ன பொறித்திருந்தாலும் அதைக் கொண்டு, அதன் அடிப்படையில் மற்றவர்களை குறிப்பாக தமிழ் அரசர்களைக் கணிப்பது எப்படி முடியும் என்பது தெரியவில்லை. இந்த கல்வெட்டு மிகப் பெரியதாக மேல் விட்டத்துப் பாறையில் பொறிக்கப்பட்டிருந்ததை நானே நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் நிறைய கேள்விகள் எனது மனதில் எழுந்துள்ளதால் இதன் விவரங்களைப் பற்றி வேறு வேறு தகவல்கள் படித்திருக்கிறேன். 

//காரவேலன் கல்வெட்டில் சோழ மன்னனைப் பற்றிய குறிப்பு இல்லை. எனவே அச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதையுமே பாண்டிய மன்னன் ஆண்டுவந்தான் எனப் பெறலாம். காரவேலனின் காலத்தை ஒட்டிய அந்தப் பாண்டியப் பேரரசன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாகவே இருந்திருக்கவேண்டும். அவன் யாராயிருந்தாலும் தமிழ்நாடு முழுமையும் ஆண்ட ஒரு பேரரசன் காரவேலனுக்குத் திறை செலுத்தியிருப்பான் என்று கொள்ள முடியாது.

எனவே கல்வெட்டு இன்னும் முழுமையாக ஆயப்படவேண்டும். கலிங்கப் பிராமி எழுத்துக்களும், அன்றைய பிராகிருத மொழி இலக்கணமும் நன்கு தெரிந்த ஒரு தமிழ் அறிஞர் இதனை ஆயவேண்டும். அவர் பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல் நல்லது.//

மேற்கண்ட உங்கள் கோரிக்கை நியாயமானதே. ஆனால் எத்தனை ஆராய்ந்தாலுமிந்தக் கல்வெட்டுச் செய்திகள் சரியானதுதான் என்பதில் குழப்பம் தீரும்வரை, இந்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாமே சந்தேகத்துக்குரியதாகத்தான் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

கீழே உள்ளது அக்கல்வெட்டுகளின் ஆங்கில மொழியாக்கம்.

Hathigumpha Inscription of Kharavela of Kalinga

 (Line 1) Salutation to the Arhats (Arihats = lit. 'Conquerors of Enemies,' i.e., Jinas). Salutation to all

the Siddhas. By illustrious Kharavela, the Aira (Aila), the Great King, the descendant of

Mahameghavahana, the increaser (of the glory) of the Cheti (Chedi) dynasty, (endowed) with excellent

and auspicious marks and features, possessed of virtues which have reached (the ends of) the four quarters,

overlord of Kalinga,

(L. 2) for fifteen years, with a body ruddy and handsome were played youthsome sport; after that (by

him who) had mastered (royal) correspondence, currency, finance, civil and religious laws (and) who had

become well-versed in all (branches) of learning, for nine years (the office of) Yuvaraja (heir apparent) was

administered. Having completed the twenty-fourth year, at that time, (he) who had been prosperous

(vardhamana) since his infancy (?) and who (was destined) to have wide conquests as those of Vena,

(L. 3) then in the state of manhood, obtains the imperial (maharajya) coronation in the dynasty of

Kalinga. As soon as he is anointed, in the first (regnal) year (he) causes repairs of the gates, the walls and

the buildings (of the city), (which had been) damaged by storm; in the city of Kalinga (he) causes the

erection of the embankments of the lake (called after) Khibira Rishi, (and) of (other) tanks and cisterns,

(also) the restoration of all the gardens (he) causes to be

(L. 4) done at (the cost of) thirty-five-hundred-thousands, and (he) gratifies the People. And in the

second year (he), disregarding Satakamini, despatches to the western regions an army strong in cavalry,

elephants, infantry (nara) and chariots (ratha) and by that army having reached the Kanha-bemna, he

throws the city of the Musikas into consternation. Again in the third year,

(L. 5) (he) versed in the science of the Gandharvas (i.e., music), entertains the capital with the

exhibition of dapa, dancing, singing and instrumental music and by causing to be held festivities and

assemblies (samajas); similarly in the fourth year, 'the Abode of Vidyadharas' built by the former

Kalingan king(s), which had not been damaged before ………..................... with their coronets rendered

meaningless, with their helmets (?) (bilma) cut in twain (?), and with their umbrellas and

(L. 6) bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the

Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital

from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda

................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and

cesses,

(L. 7) bestows many privileges (amounting to) hundreds of thousands or the City-Corporation and the

Realm-Corporation. In the seventh year of his reign, his famous wife of Vajiraghara obtained the dignity

of auspicious motherhood ………….Then in the eighth year, (he) with a large army having sacked

Goradhagiri

(L.8) causes pressure on Rajagaha (Rajagriha). On account of the loud report of this act of valour, the

Yavana (Greek) King Dimi[ta] retreated to Mathura having extricated his demoralized army and

transport.… …………….(He) gives……………..with foliage

(L. 9) Kalpa (wish-fulfilling) trees, elephants, chariots with their drivers, houses, residences and resthouses.

And to make all these acceptable (he) gives at a fire sacrifice (?) exemption (from taxes) to the

caste of Brahmanas. Of Arhat ..................................

(L. 10) ..................(He) causes to be built . . . . a royal residence (called) the Palace of Great Victory

(Mahavijaya) at the cost of thirty-eight hundred thousands. And in the tenth year (he), following (the threefold

policy) of chastisement, alliance and conciliation sends out an expedition against Bharatavasa (and)

brings about the conquest of the land (or, country) ........ and obtains jewels and precious things of the

(kings) attacked.

(L.11) .................. And the market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down

with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira (Dramira)

countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada).

And in the twelfth year he terrifies the kings of the Utarapatha with .................. thousands of

(L.12) .................. And causing panic amongst the people of Magadha (he) drives (his) elephants into

the Sugamgiya (Palace), and (he) makes the King of Magadha, Bahasatimita, bow at his feet. And (he) 

Oru Arizonan

unread,
Dec 30, 2014, 11:21:47 AM12/30/14
to mintamil
//காரவேலன் கல்வெட்டில் சோழ மன்னனைப் பற்றிய குறிப்பு இல்லை. எனவே அச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதையுமே பாண்டிய மன்னன் ஆண்டுவந்தான் எனப் பெறலாம். காரவேலனின் காலத்தை ஒட்டிய அந்தப் பாண்டியப் பேரரசன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாகவே இருந்திருக்கவேண்டும். அவன் யாராயிருந்தாலும் தமிழ்நாடு முழுமையும் ஆண்ட ஒரு பேரரசன் காரவேலனுக்குத் திறை செலுத்தியிருப்பான் என்று கொள்ள முடியாது.

எனவே கல்வெட்டு இன்னும் முழுமையாக ஆயப்படவேண்டும். கலிங்கப் பிராமி எழுத்துக்களும், அன்றைய பிராகிருத மொழி இலக்கணமும் நன்கு தெரிந்த ஒரு தமிழ் அறிஞர் இதனை ஆயவேண்டும். அவர் பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல் நல்லது//


இக்கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறொரு தகுதி ஒன்றும் எனக்கில்லை.  ஒரு இனிய இசைக்கச்சேரியைக்கேட்கும் இரசிகன் நிலையில்தான் உள்ளேன்.  மேலும் தொடருங்கள்.  பாண்டிநாட்டில் பிறந்த எனக்கு, பாண்டியர் புகழ் நிலைநிறுத்தப்படல்வேண்டும் என்பதைவிட வேறு எதை வேண்டமுடியும்.


பணிவன்புடன்,

ஒரு காரைக்குடிப் பாண்டிய அரிசோனன் 

Pandiyaraja

unread,
Jan 5, 2015, 3:01:14 AM1/5/15
to mint...@googlegroups.com

திருவாளர்கள் திவாகர், அரிசோனன் ஆகியோருக்கு மிக்க நன்றி. படித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடையீர்,
இக் கட்டுரைத் தொடரில் அடுத்த கட்டுரையாகத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் மதுரை என்ற தலைப்பிலான கட்டுரை இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.
அனைவருக்கும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

3. கல்வெட்டுகளில் மதுரை

 

இ-1. மதுரையைச் சுற்றி இருக்கும் பிராமிக்கல்வெட்டுகள்

மதுரைநகரைச் சுற்றியிருக்கும் பல குன்றுகளிலும், மலைகளில் உள்ள பாறைகளிலும் பல பிராமிக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. மதுரை அருகில் உள்ள மாங்குளம் என்ற ஊரின் அருகில் இருக்கும் மீனாட்சிபுரம் கல்வெட்டுகள் அல்லது மாங்குளம் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படும் பிராமிக் கல்வெட்டுகளே, தமிழ்நாட்டில் கிடைக்கும் மிகப் பழமையான பிராமிக் கல்வெட்டு என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. இதைத்தவிர மதுரையைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, அழகர்மலை, கருங்காலக்குடி, கீழவளவு, குன்றக்குடி, கொங்கற்புளியன்குளம், சித்தர்மலை, சித்தன்னவாசல், திருப்பரங்குன்றம், திருவாதவூர், நாகமலைப் புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி, முத்துப்பட்டி, யானைமலை, விக்கிரமங்கலம் ஆகிய இடங்களிலும், இன்னும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை யாவற்றினும் மாங்குளம் கல்வெட்டே மிகப் பழமையானது என்பது அறிஞர் கருத்து.

தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் எகிப்து, ஓமன், தாய்லாந்து, இலங்கை ஆகிய வெளிநாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் பட்டனம், அம்புகுத்திமலை, காசர்கோடு ஆகிய பகுதிகளிலும் தமிழ் பிராமி எழுத்துகள் காணப்பட்டுள்ளன.

மலைகளில் உள்ள குகைகளிலும் பாறைகளிலும் மட்டுமன்றி, மக்கள் வதியும் பகுதிகளிலும், மட்பாண்டங்களிலும் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பகுதிகள் கிடைத்துள்ளன. மதுரை, தேனூரில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு தங்கப் பாளம் கிடைத்துள்ளது. இவை எல்லாம் பன்னெடுங்காலத்துக்கு முன்னரேயே இந்தப் பிராமி எழுத்து தமிழ்நாட்டில் புழங்கியுள்ளது என்பதைப் பறைசாற்றுகின்றன.

இ-2. தமிழ் பிராமி – ஓர் சிறு அறிமுகம்

பிராமி என்பது ஒரு மொழி அல்ல. இது ஓர் எழுத்துமுறை மட்டுமே. இந்த எழுத்துமுறையை யார், எப்பொழுது தொடங்கினார்கள் என உறுதியாகத் தெரியவில்லை. சிந்து சமவெளி எழுத்துகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இந்த எழுத்துமுறை திடீரென்று காணப்படுகிறது. இந்த எழுத்துமுறையில் வடநாட்டு பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் எழுதப்பட்டுவந்தன. அசோகர் தன் அறவுரைகளைப் பெரும்பாலும் பாலி மொழியில் பிராமி எழுத்துகளால் நாடு முழுதும் பொறித்துவைத்தார். கலிங்க மன்னன் காரவேலன் தன் வெற்றிகளைப் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துகளில் பொறித்துவைத்தான். இன்றைய தேவநாகரி எழுத்துமுறைக்கு மூலம் இந்தப் பிராமி எழுத்துமுறையே.

வடநாட்டில் முதன்முதலாக அசோகனின் கல்வெட்டுகள், தூண் பொறிப்புகள் மூலமாகவே இந்தப் பிராமி எழுத்துமுறை பற்றி அறிஞர் அறிந்தனர். அசோகனின் பொறிப்புகளுக்கு முந்தைய பிராமி எழுத்துகள் வடநாட்டில் இல்லை. எனவே, தமிழ்நாட்டிலும் பிராமி எழுத்துகளைக் கண்டுபிடித்தபோது இது பாலி அல்லது பிராகிருத மொழி என்றே அறிஞர் கருதினர். இருப்பினும் வடநாட்டுப் பிராமியில் இல்லாத சில புதிய குறியீடுகள் தமிழ்நாட்டுப் பிராமியில் காணப்பட்டன. K.V.சுப்பிரமணிய ஐயர்(1924),  H.கிருஷ்ண சாஸ்த்திரி, கே.கே.பிள்ளை போன்றோர் அரிதின் முயன்று தமிழ்நாட்டுப் பிராமி எழுதப்பட்டுள்ள மொழி தமிழே என்று மெய்ப்பித்தனர். பின்னர் ஐராவதம் மகாதேவன், T.V. மகாலிங்கம், நாகசாமி, R. பன்னீர்செல்வம் போன்றோர் இக் கருத்துக்கு வலுவூட்டினர். எனினும் இவை எல்லாமே அசோகன் அல்லது அவனுக்குப் பிற்பட்ட காலத்தவையே என்று உறுதியாக நம்பினர்.

அண்மையில் கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டு எழுத்துகள் கி.மு.500 காலத்தவை என்று அறிவியற்பூர்வமாக நிறுவப்பட்ட செய்தி இந்தியா முழுக்க அதிர்வலைகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து பழனி அருகே பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட நெல்லுடன் கூடிய பாத்திரம் கி.மு.500 காலத்துக்கு முந்தையது என்று அமெரிக்க சோதனைக்கூடங்களால் உறுதிசெய்யப்பட்டது. அந்தப் பாத்திரத்திலும் பிராமி எழுத்துகள் உள்ளன. இவை எல்லாமே அசோகனின் காலத்துக்கு முன்னரேயே பிராமி எழுத்துகளால் தமிழ் எழுதப்பட்டுவந்தது என்று சான்று பகர்கின்றன. எனவே தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுகளின் காலத்தைத் திருத்தி எழுதவேண்டிய காலம் வந்துவிட்டது.

வடமொழிகளில் இல்லாத தமிழ் எழுத்துகள் நான்கு. அவை ற, ன, ழ, ள ஆகியவை. இவற்றுள் ன, ள, ற ஆகியவை ந, ல, டத ஆகியவற்றின் எழுத்துகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பெழுத்தான ழ மட்டும் தனியொரு குறியீட்டால் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு tantric குறியீடாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. கொங்கற்புளியன்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வாசகத்தை அடுத்து ழகரம் போன்ற ஒரு குறியீடும், ஒரு சதுரத்துக்குள் + (Plus) வடிவமும் காணப்படுகின்றன. இந்த இரு குறியீடுகளினின்றுமே பிராமி எழுத்துமுறை உருவாக்கப்பட்டது என்பார் முனைவர்.கிஃப்ட் சிரோமணி (Gift Siromani) என்பார்.


‘ட்’ என்பது வளைநா ஒலி. ‘த்’ என்பது நுனிநா ஒலி. இவை இரண்டும் சேர ‘ற்’ பிறக்கிறது என்ற மொழியியல் (பிறப்பியல்) கூற்றை உணர்ந்தவர்களே இதனை உருவாக்கியிருக்கமுடியும்.


தமிழ் மொழிக்கு வடநாட்டு எழுத்துமுறையா?

பிராமியை உருவாக்கியது தமிழர்களா?

அசோகனுக்கும் முன்பு பிராமி (தமிழகத்தில்) இருந்ததா?

இம் முறை சமண, பௌத்த துறவிகளால் இங்குக் கொணரப்பட்டு மக்களிடையே பரவியதா?

செவ்விலக்கியங்கள் உருவாகிய காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டுகளில் மொழிநடை பாமரத்தனமாகவும், எழுத்துப்பிழைகளுடனும் இருப்பதேன்?.

விடைகாண முடியாத இந்தக் கேள்விகளை ஒட்டி விவாதங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும்.

இ-3. மாங்குளம் கல்வெட்டில் நெடுஞ்செழியன்

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் நேர் சாலையில், கத்தப்பட்டி என்ற சிற்றூரின் அருகே வடமேற்கில் பிரிந்து செல்லும் பாதையில் சென்றால் மாங்குளம் என்ற ஊர் வரும். இதனை அடுத்துள்ள மீனாட்சிபுரம் என்ற ஊரினை ஒட்டி ஓவாமலை, கழுகுமலை என்ற இரு குன்றுகள் உள்ளன. இந்த ஓவாமலையின் கிழக்குப்பகுதியில் ஐந்து குகைகள் அமைந்துள்ளன. இவற்றைச் சமதளப்படுத்தி, கற்பாறைகளிலேயே படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்குள் மழைநீர் செல்லாவண்ணம் குகையின் முகப்பின் மேலுள்ள பாறை நெடுக விளிம்புகள் செதுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விளிம்புகளில் ஆறு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவையே முதலில் மீனாட்சிபுரம் கல்வெட்டுகள் என்று அழைக்கப்பட்டு, இப்போது மாங்குளம் கல்வெட்டுகள் என்னப்படுகின்றன.

மாங்குளம் கல்வெட்டுகளில் மதுரை மன்னன் நெடுஞ்செழியன் என்பானது பெயர் இரண்டு முறை காணப்படுகிறது. இதோ அந்தக் கல்வெட்டுகள்:



இதோ அந்தக் கல்வெட்டின் மூலம்.




இங்கு நெடுஞ்செழியன் என்ற பெயர் நெடுஞ்சழியன் என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். ச என்ற எழுத்துக்கு மேலே இடப்பக்கம் கோடு போட்டிருந்தால் இது ‘செ’ என்று சரியாக இருந்திருக்கும். ஆனால் கோடு வலப்பக்கம் போடப்பட்டிருக்கிறது. இது ச/சா ஆகியவற்றில் பொருத்தமானதைக் குறிக்கும். ந-விலிருந்து ன-உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தமிழ் சிறப்பெழுத்தான ழகரம் எத்துணை பழமை வாய்ந்தது என்று கண்டு பெருமிதம் கொள்ளலாம். வழுதி என்ற பெயரும் பிழையுடன் காணப்படுகிறது.

நெடுஞ்செழியனின் பெயர் காணப்படும் மற்றொரு கல்வெட்டு இதோ:




http://www.chenaitamilulaa.net/t42842-topic

இக் கல்வெட்டிலும் நெடுஞ்செழியனின் பெயர் தவறாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்செழியன் யார் என்பது தெரியவில்லை. எனினும் அசோகன் காலத்துக்கும் முந்தையதாகக் கருதப்படும் கல்வெட்டுகளில் பாண்டிய மன்னனின் பெயர் காணப்படுவது மதுரையின் தொன்மையைப் பறைசாற்றி நிற்கிறதல்லவா!

இ-4. பிராமிக் கல்வெட்டில் மதுரை -1

மதுரை என்ற பெயர் மதுரை அருகிலுள்ள அழகர்மலை, சித்தர்மலை ஆகிய இரண்டு இடங்களிலுள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

மதுரைக்கு வடக்கில் உள்ளது அழகர்கோவில் என்ற வைணவத் திருத்தலம். அங்கிருந்து மேலூர் செல்லும் பாதையில் உள்ள கிடாரிப்பட்டி அருகில் உள்ள மலைத்தொடரில் சற்று உயரமான பகுதியில் உள்ள ஒரு குகையின் முகப்பில் 15 இடங்களிலும், குகையினுள் உள்ள கற்படுக்கைத் தளத்தில் ஒரு கல்வெட்டுமாக மொத்தம் 16 பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் ஒன்றிரண்டில் எழுத்துகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டின் தொடக்கத்திலேயே மத்திரைய் என்ற சொல் காணப்படுகிறது. இது மதுரை நகரைக் குறிக்கிறது என்பர்.


எழுத்துப்பிழையுடன் கூடிய மதுரை பற்றிய கல்வெட்டு இதோ:


இந்தக் கல்வெட்டுகளில் பொன்கொலவன், உப்பு வணிகன், பணித வணிகன், கொழு வணிகன், அறுவை வணிகன் ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. பணிதம் என்பது சர்க்கரை. கொழு என்பது இரும்பைக் குறிக்கும். அறுவை என்பது துணி.

இ-5. பிராமிக் கல்வெட்டில் மதுரை -2

மதுரை என்ற சொல் கொண்ட இன்னொரு கல்வெட்டு வைகை ஆற்றங்கரையில் உள்ள அணைப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள சித்தர்மலை என்ற மலையின் உச்சியில் இருப்பதாகும். இந்தக் கல்வெட்டுக்குப் பின்னால் ஓர் அண்மைக்கால வரலாறு உண்டு.

மேட்டுப்பட்டி கல்வெட்டுகள் என்ற பெயரில் ஏற்கனவே இங்கு சில பிராமிக் கல்வெட்டுகள் உண்டு. அந்தக் கல்வெட்டுகளைப் பார்க்க, நானும், எனது நண்பர், உடனாசிரியர் திரு. இம்மானுவேல் ஜெபராஜனும், சில மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றோம். தெரிந்த கல்வெட்டுகள் ஒரு நீண்ட குகையின் உள்ளே இருந்த பல கற்படுக்கைகளின் தலைமாட்டில் எழுதப்பட்டிருந்தன. அப்போது, அக் குகையின் முகப்பில் இருந்த நீர்வடித் தடத்தில் ஏதேனும் எழுத்துகள் தென்படுகின்றனவா என்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். “ஏற்கனவே தெரிந்த கல்வெட்டுகள் எல்லாம் படுக்கைகளில் இருக்கின்றன. அவற்றைப் பார்த்துவிட்டோம், வேறு எழுத்துகள் இல்லை” என்றார் நண்பர். இருப்பினும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது சில எழுத்துகள் தெரிந்தன. உற்சாகத்துடன் கூவினேன். உடனே அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். அது எங்கள் கையில் இருந்த குறிப்பில் இல்லாத கல்வெட்டு. சிரமப்பட்டு அதனை வாசித்தோம். அதுதான் மதுரை என்ற சொல்லைத் தாங்கிய இரண்டாம் கல்வெட்டு. அன்று இந்தியாவின் விடுதலைத் திருநாள் – 15-8.1982.

அப்போது சென்னை, கிறித்தவக் கல்லூரியில் இருந்த முனைவர்.கிஃட் சிரோமணிக்கு அதைப் பற்றி எழுதினோம். (அப்போதெல்லாம் கைபேசிகள் கிடையா) அவரும் சென்னைத் தொல்பொருள் நிலையத்திலுள்ள ஆவணங்களைப் படித்து, அது ஒரு புதிய கல்வெட்டு என்றும் அதைப் பார்க்க உடன் வருவதாகவும் எழுதினார். 26-8-1982 அன்று அவருடன் வேம்பு என்ற மாணவரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் மலை ஏறிப்பார்த்தோம். நாங்கள் படித்தது போலவே அவரும் அதனைப் படித்தார். இதை அவர் தனது வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கிறார் - http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tamilbrahmi.htm. இதைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது:

The inscription is about one metre long and the letters are not deeply engraved. The text can be tentatively read as A MA NA N MA TI RAI A T TI RA N UNTE U TA YA N SA which means "(the dwelling) of Utayan alias Attiran who was a Jain from Madurai".

இந்தக் கல்வெட்டிலும் மதுரை என்ற பெயர் தவறாகவே பொறிக்கப்பட்டுள்ளது. பேச்சு வழக்கில் இருக்கும் வண்ணம் ஒரு கல்வி அறிவில்லாக் கல்தச்சனால் இது எழுதப்பட்டிருக்கக்கூடும். இதில் உள்ள ஊந்தே என்பது வேறுவிதமாகப் பிற்காலங்களில் படிக்கப்பட்டுள்ளது. இதனை உறை என்று படிப்பார் ஐராவதம் அவர்கள். ந்தே என்பது கூட்டெழுத்தாக இருப்பதைக் காணலாம். இது வடநாட்டுப் பிராமி முறை. இது தமிழில் கையாளப்பட்டிருப்பது கவனிக்கப்படவேண்டியது. சமணன் என்ற சொல்லின் தமிழ்வடிவான அமணன் என்று அழகாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். ஆத்ரேயன் என்பதுவே அத்திரன் என்று எழுதப்பட்டுள்ளது என்பர். தொடரின் இறுதியில் ஸ என்ற வடமொழி வேற்றுமை உருபு காணப்படுகிறது. எனவே வடநாட்டு பிராமி எழுத்துகளுடன், வடமொழி இலக்கணத்துடன் இத் தொடர் அமைந்திருப்பது உற்று நோக்கற்குரியது.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

      எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே - சொல். எச்ச:5/1,2

என்று தொல்காப்பியர் கூறியிருப்பதற்கு, இவ்வாறான மொழித்திணிப்பு காரணமாக இருந்திருக்கலாம். இதிலிருந்து தொல்காப்பியரின் காலத்தைக் கணிக்க முற்படுவதைவிட, இது தொல்காப்பியரின் காலத்தது என்ற முடிவுக்கு வரலாம்.


தமிழகப் பிராமியின் காலம் பொதினிப் பிராமி எழுத்துகளின் காலக்கணக்கீட்டின்படி மிகவும் பின்னோக்கிச் செல்லத்தக்கது என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளதை நினைவுபடுத்துகிறேன்.

    கல்வெட்டு பற்றிய செய்தி அன்றைய நாளிதழிலும் வெளிவந்துள்ளது.


பார்வை:

1. தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுகள் – மின் தமிழ் - seshadri sridharan 

http://archive.today/szGe#selection-863.0-92224.0, http://archive.today/szGe#selection-20263.0-20337.1

2. அழகர்மலைத் தமிழிக் கல்வெட்டு – முனைவர்.மா. பவானி -

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/alakarmalai.htm

3. அழகர்மலைக் குகைக் கல்வெட்டுகளும் பாறை ஓவியங்களும் -

http://kathirvalaipoo.blogspot.in/2012/07/blog-post_13.html

4. உதயனின் உதார்கள் - http://udhayan-photos.blogspot.in/2013_01_01_archive.html

5. பசுமைநடை – கிடாரிப்பட்டி - http://thamizhmani2012.blogspot.in/2013/01/blog-post_5.html

6. Did Tamil-Brahmi Originate Before Asoka-Brahmi? -

However Dr. Ramesh who retired as Joint-Director, ASI in 1993, said the Tamil-Brahmi inscriptions found at Mankulam, near Madurai, were pre-Asoka. He claimed “The consonants in the Mankulam inscriptions do not have vowel value attached to them. They are pre-Asoka and the script is more rudimentary than the Asoka-Brahmi.”

https://enorkumar.wordpress.com/2014/08/30/did-tamil-brahmi-originate-before-asoka-brahmi/

6. Epigraphy – Dr.Gift Siromoney

http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tamilorigin.htm,

http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_madurai.htm

http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_origin.htm

7. Earlier date for Tamil-Brahmi - by Jayakrishnan Nair on FEBRUARY 21, 2005 in HISTORY: BEFORE 1 CE - http://varnam.nationalinterest.in/2005/02/earlier_date_for_tamil_brahmi/

8. Tamil Brahmi - http://en.wikipedia.org/wiki/Tamil-Brahmi

9. Potsherd with Tamil-Brahmi script found in Oman - http://www.thehindu.com/news/national/potsherd-with-tamilbrahmi-script-found-in-oman/article4038866.ece

10. Tamil Brahmi script in Egypt - http://www.thehindu.com/todays-paper/tamil-brahmi-script-in-egypt/article1952611.ece

11. Tamil Brahmi Script Discovered On Ancient Jars In Egypt And Oman
http://www.messagetoeagle.com/tamibrahmiscriptfound.php#.VKo-vCuUfek

12. Tissamaharama Tamil Brahmi inscription

http://en.wikipedia.org/wiki/Tissamaharama_Tamil_Brahmi_inscription

13. Tamil-Brahmi inscription on pottery found in Thailand -

http://www.thehindu.com/todays-paper/tamilbrahmi-inscription-on-pottery-found-in-thailand/article3105628.ece

14. Palani excavation triggers fresh debate -

http://www.thehindu.com/news/national/tamil-nadu/palani-excavation-triggers-fresh-debate/article2408091.ece

http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece

15. Kodumanal excavation yields a bonanza again -

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kodumanal-excavation-yields-a-bonanza-again/article3463120.ece


ப.பாண்டியராஜா

...

Suba.T.

unread,
Jan 6, 2015, 6:13:46 AM1/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-01-05 9:01 GMT+01:00 Pandiyaraja <pipi...@gmail.com>:



மல்லல் மூதூர் மதுரை

3. கல்வெட்டுகளில் மதுரை

 

இ-1. மதுரையைச் சுற்றி இருக்கும் பிராமிக்கல்வெட்டுகள்

மதுரைநகரைச் சுற்றியிருக்கும் பல குன்றுகளிலும், மலைகளில் உள்ள பாறைகளிலும் பல பிராமிக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. மதுரை அருகில் உள்ள மாங்குளம் என்ற ஊரின் அருகில் இருக்கும் மீனாட்சிபுரம் கல்வெட்டுகள் அல்லது மாங்குளம் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படும் பிராமிக் கல்வெட்டுகளே, தமிழ்நாட்டில் கிடைக்கும் மிகப் பழமையான பிராமிக் கல்வெட்டு என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. இதைத்தவிர மதுரையைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, அழகர்மலை, கருங்காலக்குடி, கீழவளவு, குன்றக்குடி, கொங்கற்புளியன்குளம், சித்தர்மலை, சித்தன்னவாசல், திருப்பரங்குன்றம், திருவாதவூர், நாகமலைப் புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி, முத்துப்பட்டி, யானைமலை, விக்கிரமங்கலம் ஆகிய இடங்களிலும், இன்னும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை யாவற்றினும் மாங்குளம் கல்வெட்டே மிகப் பழமையானது என்பது அறிஞர் கருத்து.

தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் எகிப்து, ஓமன், தாய்லாந்து, இலங்கை ஆகிய வெளிநாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் பட்டனம், அம்புகுத்திமலை, காசர்கோடு ஆகிய பகுதிகளிலும் தமிழ் பிராமி எழுத்துகள் காணப்பட்டுள்ளன.

மலைகளில் உள்ள குகைகளிலும் பாறைகளிலும் மட்டுமன்றி, மக்கள் வதியும் பகுதிகளிலும், மட்பாண்டங்களிலும் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பகுதிகள் கிடைத்துள்ளன. மதுரை, தேனூரில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு தங்கப் பாளம் கிடைத்துள்ளது. இவை எல்லாம் பன்னெடுங்காலத்துக்கு முன்னரேயே இந்தப் பிராமி எழுத்து தமிழ்நாட்டில் புழங்கியுள்ளது என்பதைப் பறைசாற்றுகின்றன.

இ-2. தமிழ் பிராமி – ஓர் சிறு அறிமுகம்

பிராமி என்பது ஒரு மொழி அல்ல. இது ஓர் எழுத்துமுறை மட்டுமே. இந்த எழுத்துமுறையை யார், எப்பொழுது தொடங்கினார்கள் என உறுதியாகத் தெரியவில்லை. சிந்து சமவெளி எழுத்துகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இந்த எழுத்துமுறை திடீரென்று காணப்படுகிறது. இந்த எழுத்துமுறையில் வடநாட்டு பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் எழுதப்பட்டுவந்தன. அசோகர் தன் அறவுரைகளைப் பெரும்பாலும் பாலி மொழியில் பிராமி எழுத்துகளால் நாடு முழுதும் பொறித்துவைத்தார். கலிங்க மன்னன் காரவேலன் தன் வெற்றிகளைப் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துகளில் பொறித்துவைத்தான். இன்றைய தேவநாகரி எழுத்துமுறைக்கு மூலம் இந்தப் பிராமி எழுத்துமுறையே.

வடநாட்டில் முதன்முதலாக அசோகனின் கல்வெட்டுகள், தூண் பொறிப்புகள் மூலமாகவே இந்தப் பிராமி எழுத்துமுறை பற்றி அறிஞர் அறிந்தனர். அசோகனின் பொறிப்புகளுக்கு முந்தைய பிராமி எழுத்துகள் வடநாட்டில் இல்லை. எனவே, தமிழ்நாட்டிலும் பிராமி எழுத்துகளைக் கண்டுபிடித்தபோது இது பாலி அல்லது பிராகிருத மொழி என்றே அறிஞர் கருதினர். இருப்பினும் வடநாட்டுப் பிராமியில் இல்லாத சில புதிய குறியீடுகள் தமிழ்நாட்டுப் பிராமியில் காணப்பட்டன. K.V.சுப்பிரமணிய ஐயர்(1924),  H.கிருஷ்ண சாஸ்த்திரி, கே.கே.பிள்ளை போன்றோர் அரிதின் முயன்று தமிழ்நாட்டுப் பிராமி எழுதப்பட்டுள்ள மொழி தமிழே என்று மெய்ப்பித்தனர். பின்னர் ஐராவதம் மகாதேவன், T.V. மகாலிங்கம், நாகசாமி, R. பன்னீர்செல்வம் போன்றோர் இக் கருத்துக்கு வலுவூட்டினர். எனினும் இவை எல்லாமே அசோகன் அல்லது அவனுக்குப் பிற்பட்ட காலத்தவையே என்று உறுதியாக நம்பினர்.

அண்மையில் கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டு எழுத்துகள் கி.மு.500 காலத்தவை என்று அறிவியற்பூர்வமாக நிறுவப்பட்ட செய்தி இந்தியா முழுக்க அதிர்வலைகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து பழனி அருகே பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட நெல்லுடன் கூடிய பாத்திரம் கி.மு.500 காலத்துக்கு முந்தையது என்று அமெரிக்க சோதனைக்கூடங்களால் உறுதிசெய்யப்பட்டது. அந்தப் பாத்திரத்திலும் பிராமி எழுத்துகள் உள்ளன. இவை எல்லாமே அசோகனின் காலத்துக்கு முன்னரேயே பிராமி எழுத்துகளால் தமிழ் எழுதப்பட்டுவந்தது என்று சான்று பகர்கின்றன. எனவே தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுகளின் காலத்தைத் திருத்தி எழுதவேண்டிய காலம் வந்துவிட்டது.

வடமொழிகளில் இல்லாத தமிழ் எழுத்துகள் நான்கு. அவை ற, ன, ழ, ள ஆகியவை. இவற்றுள் ன, ள, ற ஆகியவை ந, ல, டத ஆகியவற்றின் எழுத்துகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பெழுத்தான ழ மட்டும் தனியொரு குறியீட்டால் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு tantric குறியீடாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. கொங்கற்புளியன்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வாசகத்தை அடுத்து ழகரம் போன்ற ஒரு குறியீடும், ஒரு சதுரத்துக்குள் + (Plus) வடிவமும் காணப்படுகின்றன. இந்த இரு குறியீடுகளினின்றுமே பிராமி எழுத்துமுறை உருவாக்கப்பட்டது என்பார் முனைவர்.கிஃப்ட் சிரோமணி (Gift Siromani) என்பார்.

​மிகச் சிறப்பான பதிவு ஐயா.

வாசிப்போருக்கு தொகுப்பாக பல தகவல்களை உள்ளடக்கித் தருகின்றது. பாதுகாக்கவேண்டிய ஒரு இழை இது.

சுபா

Pandiyaraja

unread,
Jan 6, 2015, 12:17:50 PM1/6/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
மிக்க நன்றி, அம்மா!
கட்டுரைத்தொடரின் மைய நோக்கத்தினின்றும் விலகிச் செல்லாமல் இருக்க, தமிழ் பிராமி பற்றிய இப் பகுதியைச் சுருக்கமாகவே கொடுத்துள்ளேன். இதனை இன்னும் விரிவாக எழுதலாம். திரு.சேஷாத்திரி போன்றோர் இன்னும் நன்றாகச் செய்வர்.
ப.பாண்டியராஜா

Seshadri Sridharan

unread,
Jan 7, 2015, 9:07:54 AM1/7/15
to mintamil
தமிழ் பிராமி கல்வெட்டுகள் பற்றிய என் மின்தமிழ்ப் பதிவுகள் https://groups.google.com/forum/#!msg/mintamil/y9tCWkFsmYE/DaAhYVn0Hh0J

சேசாத்திரி 

Pandiyaraja

unread,
Jan 7, 2015, 11:40:10 AM1/7/15
to mint...@googlegroups.com
இந்தப் பதிவினைப் படித்துள்ளேன். அதனை என் கட்டுரையின் பார்வை நூல்களின் பட்டியலிலும் குறிப்பிட்டுள்ளேன் ஐயா.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Jan 11, 2015, 12:58:48 PM1/11/15
to mint...@googlegroups.com
அன்புடையீர் வணக்கம்.
யவனக் கப்பல்களில் பயணித்து, இதிகாசங்களில் மூழ்கியெழுந்து, கல்வெட்டுகளைத் தேடியலைந்து இப்போது செவ்விலக்கியங்களைக் கையிலெடுத்திருக்கிறோம். செவ்விலக்கியங்களில் மதுரை என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையில் விவரங்கள் அதிகம் இல்லை.  வெறும் புள்ளிவிவரங்கள்தான் இதில் உள்ளன. யாரேனும் ஒருசிலருக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். விவரங்கள் அடுத்துவரும் கட்டுரைகளில்.
நன்றி,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

4. தமிழ்ச் செவ்விலக்கியங்களில் மதுரை

      
மதுரை என்ற பெயரே மயக்கம் தருவது. இனிமையானது. இதனைச் சங்க இலக்கியங்கள் பலவாறாகப் போற்றி மகிழ்ந்திருக்கின்றன. பலவகை உவமங்களுக்கு மதுரை என்ற பெயர் துணைபோயிருக்கிறது. மதுரை நகர் கூடல், நான்மாடக்கூடல் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குரிய காரணம் என்னவென்பதில் பல கதைகள் நிலவுகின்றன. நான் மதுரைக்கு அருகில் உள்ள பசுமலை என்ற ஊரில் பயின்றவன். அந்த ஊரில் பலகாலம் வாழ்ந்திருக்கிறேன். மழைக் காலங்களில் அருகிலுள்ள காளைமலையில் மாலைநேரத்தில் ஏறி உச்சிக்குச் சென்ற சில பொழுதுகளில் மேகங்கள் திரண்டு மதுரை நகருக்கு மேலே கூடிவரும் காட்சியைப் பலநாட்கள் பார்த்திருக்கிறேன். மதுரையைச் சுற்றி மலைகள் உள்ளன. எனவே மதுரை ஒரு பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது. மேகங்கள் கூடுவதற்கு அதுவும் ஒரு காரணமாகலாம். இருப்பினும் கூடல் மாநகர் என்று மதுரையை அழைப்பது எத்துணை பொருத்தமானது என்று எண்ணி அந்நேரங்களில் மகிழ்ந்திருக்கிறேன்.
மதுரை, கூடல், நான்மாடக்கூடல் ஆகிய சொற்கள் செவ்விலக்கியங்களில் வருமிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (சங்க இலக்கியங்களில் மது. என்பது மதுரைக்காஞ்சியையும், சிலப்பதிகாரத்தில் மது. என்பது மதுரைக் காண்டத்தையும் குறிக்கும்)
மதுரைக்கு மூதூர் என்ற பெயரும் உண்டு. ஆனால் சங்கப் புலவர்கள் இன்னும் பல ஊர்களை மூதூர் என்று அழைத்திருக்கிறார்கள். எனவே மூதூரெல்லாம் மதுரை அல்ல என்பதால் அவ்வாறு வருமிடங்கள் இங்கு கொடுக்கப்படவில்லை.
செம்மொழி நிறுவனம் 41 நூல்களைச் செவ்விலக்கியங்கள் எனக் குறிப்பிடுகிறது. அவை: பத்துப்பாட்டு (10). எட்டுத்தொகை (8), பதினெண்கீழ்க்கணக்கு (18), சிலப்பதிகாரம் (1), மணிமேகலை (1), முத்தொள்ளாயிரம் (1) இறையனார் அகப்பொருள் (1)  
4.1 சங்க இலக்கியங்களில் மதுரை
    மதுரை (7)
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை - மது 699
இடை நெறி தாக்குற்றது ஏய்ப்ப அடல் மதுரை
   ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்
   அம் தண் புனல் வையை யாறு எனக் கேட்டு  - பரி 12/9,10
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
   மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
   குதிரையோ வீறியது - கலி 96/22,23,24
    மதுரையும் (2)
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5
4.2 சிலப்பதிகாரத்தில் மதுரை
   மதுரை (26)
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு - புகார் 0/20
அதிரா சிறப்பின் மதுரை மூதூர் - புகார் 0/39
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி - புகார் 0/43
உரை_சால் அடிகள் அருள மதுரை
   கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் - புகார் 0/88,89
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு - புகார் 9/76
மதுரை மூதூர் யாது என வினவ - புகார் 10/41
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் - புகார் 10/51
மா மறை முதல்வ மதுரை செம் நெறி - மது 11/58
மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி - மது 11/147
மதுரை மூதூர் மா நகர் போந்தது - மது 11/188
மதுரை தென்றல் வந்தது காணீர் - மது 13/132
வானவர் உறையும் மதுரை வலம் கொள - மது 13/181
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு - மது 15/6
மாட மதுரை மா நகர் புகுக என - மது 15/112
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை
   கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட - மது 19/28,29
இட முலை கையால் திருகி மதுரை
   வலமுறை மும் முறை வாரா அலமந்து - மது 21/43,44
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு - மது 23/177
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் - வஞ்சி 24/104
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் - வஞ்சி 25/77
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு - வஞ்சி 27/61
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு - வஞ்சி 27/84
உரை செல வெறுத்த மதுரை மூதூர் - வஞ்சி 27/131
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண - வஞ்சி 28/97
மதுரை மூதூர் மா நகர் கேடு உற - வஞ்சி 28/218
மதுரை மா நகர் புகுந்து - வஞ்சி 29/57
மாட மதுரை மகளிர் குறுவரே - வஞ்சி 29/183
   மதுரைக்கு (2)
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு
   ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் - புகார் 10/58,59
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் - மது 11/139
   மதுரையார் (2)
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி - மது 19/16
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே - வஞ்சி 29/125
 
   மதுரையில் (1)
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் - வஞ்சி 27/71
   மதுரையின் (1)
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து - மது 13/25
   மதுரையும் (3)
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் - புகார் 8/3
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - மது 15/9
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் - மது 21/37
   மதுரையோடு (2)
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் - மது 23/136
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை - வஞ்சி 24/5
4.3 மணிமேகலையில் மதுரை
   மதுரை (5)
தக்கண மதுரை தான் சென்று எய்தி - மணி 13/105
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் - மணி 22/106
தக்கண மதுரை தான் வறிது ஆக - மணி 22/121
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் - மணி 25/139
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் - மணி 26/12
4.4 முத்தொள்ளாயிரத்தில் மதுரை
    மதுரையார் (1)
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை - முத்தொள் 66/3
4.5 சங்க இலக்கியத்தில் கூடல்
    கூடல் (30)
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்
  நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்
  மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி 8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்
  ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி 10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்
  வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி 10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்
  அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி 10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்
  உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி 12/31,32
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்
  கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்
  கடி மதில் பெய்யும் பொழுது - பரி 20/106,107
காமரு வையை சுடுகின்றே கூடல்
  நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/4,5
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்
  மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி 24/46,47
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்
  தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி 57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
  வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி 92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்
  நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்
  விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6
    கூடலவரொடு (1)
உரு கெழு கூடலவரொடு வையை - பரி 24/92
    கூடலார் (1)
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
   புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - கலி 35/17,18
    கூடலும் (3)
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்
  முற்று இன்று வையை துறை - பரி 24/26,27
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் - கலி 27/12
   கூடலுள் (1)
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
   கூடலொடு (1)
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
   கூடற்கு (1)
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
 
   கூடற்கும் (1)
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்
  கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி 17/45,46
4.6 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் கூடல்
   கூடல் (1)
கோடா புகழ் மாறன் கூடல் அனையாளை - திணை150:1 4/1
4.7 சிலப்பதிகாரத்தில் கூடல்
   கூடல் (17)
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய - புகார் 0/35
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - மது 13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல்
   ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - மது 13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - மது 14/6
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட - மது 14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல்
   வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் - மது 14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் - மது 14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட - மது 14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் - மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - மது 16/131
நல் தேரான் கூடல் நகர் - மது 21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் - மது 21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத - மது 22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் - மது 23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் - மது 23/123
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை - வஞ்சி 29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட - வஞ்சி 30/149
   கூடலான் (1)
கூடலான் கூடு ஆயினான் - மது 20/101
   கூடலில் (1)
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
   தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் - மது 19/58,59
   கூடலை (1)
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை
   தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - வஞ்சி 24/110,111
4.8 முத்தொள்ளாயிரத்தில் கூடல்
   கூடல் (4)
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என - முத்தொள் 55/1
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் - முத்தொள் 73/1
கூடல் பெருமானை கூடலார் கோமானை - முத்தொள் 82/1
நெடு மாட கூடல் அகம் - முத்தொள் 89/4
   கூடலார் (3)
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார்
   கோமான் பின் சென்ற என் நெஞ்சு - முத்தொள் 60/3,4
கூடல் பெருமானை கூடலார் கோமானை - முத்தொள் 82/1
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார்
   மன்னவனே மார்பின் மறு - முத்தொள் 92/3,4
4.9 சங்க இலக்கியத்தில் நான்மாடக்கூடல்
   நான்மாடக்கூடல் (3)
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா - பரி 23/3
நான்மாடக்கூடல் நகர் - பரி 29/4
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் - கலி 92/65
4.10 சிலப்பதிகாரத்தில் நான்மாடக்கூடல்
    நான்மாடக்கூடல் (1)
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் - மது 21/39
4.11 சங்க இலக்கியத்தில் பாண்டியர்
    பாண்டியர் (1)
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் - அகம் 27/8
   பாண்டியன் (7)
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன் - குறு 393/4
வில் கெழு தானை பசும் பூண் பாண்டியன்/களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர - அகம் 162/21,22
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன்/புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை - அகம் 201/3,4
விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன்/பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/12,13
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்/பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/5,6
பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன்/அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன் - அகம் 338/5,6
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் - புறம் 179/5
4.12 சிலப்பதிகாரத்தில் பாண்டியர்
   பாண்டியர் (2)
படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் - மது 23/206
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று - வஞ்சி 29/114
   பாண்டியன் (6)
பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் - புகார் 0/19
பத்தினி ஆகலின் பாண்டியன் கேடு உற - புகார் 0/33
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் - மது 13/127
மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில் - மது 17/5
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப - மது 19/45
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என - மது 20/29
   பாண்டியன்-தன் (1)
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் - வஞ்சி 29/117
4.13 சங்க இலக்கியத்தில் பாண்டிநாட்டுப் புலவர்கள்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் பெயர் தெரிந்த புலவர்களின் எண்ணிக்கை 473. சில புலவர்களின் பெயர்களில் ஐயம் இருப்பதால் வெவ்வேறு பதிப்பாளர்கள் சில பெயர்களை ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ கொள்கின்றனர். எனவே இந்த எண்ணிக்கையில் சிறிதளவு வேறுபாடுகள் இருக்கலாம்.
இந்தச் சங்கப் புலவர்களில் பாண்டியநாட்டுப் புலவர்கள் என அடையாளம் காணப்பட்டோரின் தொகை 90. அவர்களின் பெயர்கள் அகரவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாண்டியநாட்டுப் புலவர்கள் (90)

    1. அகம்பன் மாலாதனார்

    2. அண்டர்மகன் குறுவழுதியார்

    3. அள்ளூர் நன்முல்லையார்

    4. ஆலம்பேரிச் சாத்தனார்

    5. இரணிய முட்ட்த்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

    6. இளம்புல்லூர்க் காவிதி

    7. இளம்பெருவழுதி

    8. உக்கிரப் பெருவழுதி

    9. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

    10. கடியலூர் உருத்திரங்கண்ணனார்

    11. கபிலர்

    12. கணியன் பூங்குன்றனார்

    13. கிள்ளிமங்கலத்தார்

    14. கிள்ளிமங்கலக்கிழார் மகனார் சேர கோவனார்

    15. கோட்டியூர் நல்லந்தையார்

    16. கோளியூர் கிழார் மகனார் செழியனார்

    17. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

    18. செங்கண்ணனார்

    19. சேந்தம்பூதனார்

    20. சேந்தங்கண்ணனார்

    21. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

    22. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

    23. நக்கீரர்

    24. படுமரத்து மோசி கீரனார்

    25. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

    26. பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

    27. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

    28. பாண்டியன் பன்னாடு தந்தான்

    29. பாண்டியன் மாறன்வழுதி

    30. பாரிமகளிர்

    31. பிசிராந்தையார்

    32. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

    33. பெருங்குன்றூர்க் கிழார்

    34. பெருவழுதி

    35. பேராலவாயர்

    36. பொதும்பில் கிழார்

    37. பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்

    38. பொதும்பில் புல்லாளங்கண்ணியார்

    39. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்

    40. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

    41. மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

    42. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

    43. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

    44. மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்

    45. மதுரை ஓலைகடையத்தார் நல்வெள்ளையார்

    46. மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்

    47. மதுரைக் கணக்காயனார்

    48. மதுரைக் கண்டரதத்தனார்

    49. மதுரைக் கண்ணத்தனார்

    50. மதுரைக் கவுணியன் பூதத்தனார்

    51. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

    52. மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

    53. மதுரைக் கூத்தனார்

    54. மதுரைக் கொல்லன் புல்லன்

    55. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

    56. மதுரைச் சுள்ளம் போதனார்

    57. மதுரைத் தத்தங்கண்ணனார்

    58. மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்தேவனார்

    59. மதுரைத் தமிழக் கூத்தனார்

    60. மதுரைப் படைமங்க மன்னியார்

    61. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்

    62. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

    63. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

    64. மதுரைப் புல்லங்கண்ணனார்

    65. மதுரைப் பூதன் இளநாகனார்

    66. மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

    67. மதுரைப் பெருங்கொல்லன்

    68. மதுரைப் பெருமருதனார்

    69. மதுரைப் பெருமருதிள நாகனார்

    70. மதுரைப் போத்தனார்

    71. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

    72. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

    73. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்

    74. மதுரை வேளாசான்

    75. மருங்கூர்க் கிழார் பெருங்கண்ணனார்

    76. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

    77. மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்

    78. மாலைமாறன்

    79. மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்

    80. மாறோக்கத்து நப்பசலையார்

    81. முடத்திருமாறன்

    82.  மோசி கண்ணத்தனார்

    83. மோசி கீரனார்

    84. மோசி கொற்றன்

    85. மோசிக் கரையனார்

    86. மோசி சாத்தனார்

    87. விரியூர் நக்கனார்

    88. வெள்ளிவீதியார்

    89. வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்

    90. வேம்பற்றூர்க் குமரனார்

இவருள் மதுரை என்று ஊரின் பெயரை அடைமொழியாகக் கொண்டவர் எண்ணிக்கை 38. அவர் பெயர்களும், பாடல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  1. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் - பாடல் 13- அகநானூறு 33, 144, 174, 244, 314, 344, 353, குறுந்தொகை 188, 215, நற்றிணை 82, 297, 321, புறநானூறு 388

  2. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் - பாடல் 12 - அகநானூறு 56, 124, 230, 254, 272, 302, குறுந்தொகை 185, நற்றிணை 33, 157, 221, 344, புறநானூறு 329

  3. மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் - பாடல் 1 குறுந்தொகை 144.

  4. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் - பாடல் 1 புறநானூறு 309

  5. மதுரை இளங்கௌசிகனார் - பாடல் 1 அகநானூறு 381.

  6. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் - பாடல் 3 அகநானூறு 102, 348, நற்றிணை 273

  7. மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் - பாடல் 1 புறநானூறு 350.

  8. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் - பாடல் 2 நற்றிணை 250, 369

  9. மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் - பாடல் 1குறுந்தொகை 223.

  10. மதுரைக் கணக்காயனார் - பாடல் 5 - அகநானூறு 27, 336, 342;  நற்றிணை 23, புறநானூறு 330

  11. மதுரைக் கண்டராதித்தனார் - பாடல் 1 குறுந்தொகை 317.

  12. மதுரைக் கண்ணத்தனார் - பாடல் 2 அகநானூறு 360, நற்றிணை 351

  13. மதுரைக் கவுணியன் பூதத்தனார் - பாடல் 1 அகநானூறு 74.

  14. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் - பாடல் 2 அகநானூறு 170, புறநானூறு 316.

  15. மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் - பாடல் 1 அகநானூறு 204

  16. மதுரைக் காருலவியங் கூத்தனார் - பாடல் 1நற்றிணை 325.

  17. மதுரைக் கூத்தனார் - பாடல் 1 அகநானூறு 334.

  18. மதுரைக் கொல்லன் புல்லன் - பாடல் 1 குறுந்தொகை 373

  19. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 2 அகநானூறு 363, நற்றிணை 385.

  20. மதுரைச் சுள்ளம் போதனார் - பாடல் 1 நற்றிணை 215.

  21. மதுரைத் தத்தங்கண்ணனார் - பாடல் 1 அகநானூறு 335.

  22. மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் - பாடல் 1 அகநானூறு 164.

  23. மதுரைத் தமிழக் கூத்தனார் - பாடல் 1 புறநானூறு 334.

  24. மதுரைப் படைமங்க மன்னியார் - பாடல் 1 புறநானூறு 351

  25. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் - பாடல் 1 நற்றிணை 322.

  26. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் - பாடல் 1 அகநானூறு 172.

  27. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் - பாடல் 1 அகநானூறு 92.

  28. மதுரைப் புல்லங்கண்ணனார் - பாடல் 1 அகநானூறு 161.

  29. மதுரைப் பூதன் இளநாகனார் - பாடல் 1 புறநானூறு 276.

  30. மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் - பாடல் 1 நற்றிணை5 317.

  31. மதுரைப் பெருங்கொல்லன் - பாடல் 1அது குறுந்தொகை 141.

  32. மதுரைப் பெருமருதனார் - பாடல் 1 நற்றிணை 241.

  33. மதுரைப் பெருமருது இளநாகனார் - பாடல் 1 நற்றிணை 251.

  34. மதுரைப் போத்தனார் - பாடல் 1 அகநானூறு 75.

  35. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் - பாடல் 2 நற்றிணை 329, 352.

  36. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் - பாடல் 3 அகநானூறு 247, 364, நற்றிணை 388.

  37. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் - பாடல் 1 குறுந்தொகை 332.

  38. மதுரை வேளாசன் - பாடல் 1 புறநானூறு 305.

    மருதன் இளநாகனார் என்ற புலவரின் பெயர் சில பதிப்புகளில் மதுரை மருதனிளநாகனார் என்றே காணப்படுகிறது. அவர் பெயர் இந்த வரிசையில் காணப்படவில்லை.

    மருதன் இளநாகனார் - பாடல் 79

    அகநானூறு 34, 59, 77, 90, 104,(5) 121, 131, 184, 193, 206,(10) 220, 245, 255, 269, 283,(15) 297, 312, 343, 358, 365,(20) 368, 380, 387, (ஆகமொத்தம் 23 பாடல்)

    கலித்தொகை - மருதக் கலி 35 பாடல்

    குறுந்தொகை 77, 160, 279, 367, (4 பாடல்)

    நற்றிணை 21, 39, 103, 194, 216,(5 பாடல்) 283, 290, 302, 326, 341,(10 பாடல்) 362, 392,(ஆகமொத்தம் 12 பாடல்)

    புறநானூறு 52, 55, 138, 139, 349,(5 பாடல்)

    இந்தப் பாடலாசிரியர்களில் 13 பேர் மதுரையை ஆண்ட மன்னர்களாகவும் இருந்திருக்கின்றனர். அத்தகைய அரசப் புலவர்கள் பெயர் தனியே கொடுக்கப்படுகிறது.

 
4.14 சங்க இலக்கியத்தில் பாண்டிய அரசப் புலவர்கள்
  1. அண்டர் மகன் குறுவழுதியார் - பாடல் 4 - அகநானூறு 150,228 குறுந்தொகை 345 புறநானூறு 346

  1. அறிவுடை நம்பி - பாடல் 4 - புறநானூறு 188, அகநானூறு 28, குறுந்தொகை 230,  நற்றிணை 15

  2. இளம்பெருவழுதி - பாடல் 2  புறநானூறு 182, பரிபாடல் 15

  3. உக்கிரப் பெருவழுதி - பாடல் 2

  4. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் - பாடல் 2 அகநானூறு 25, புறநானூறு 71.

  5. நல்வழுதியார் - பாடல் 1  பரிபாடல் 12

  6. பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் - பாடல் 1 —(புறம்-183)

  7. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் - பாடல் 1 புறநானூறு 72

  8. பாண்டியன் பன்னாடு தந்தான் - பாடல் 1 குறுந்தொகை 270

  9. பாண்டியன் மாறன் வழுதி - பாடல் 2 . நற்றிணை 97, 301.

  10. பெருவழுதி - பாடல் 2 நற்றிணை 55, 56.

  11. மாலைமாறன் - பாடல் 1 குறுந்தொகை 245.

  12. முடத்திருமாறன் - பாடல் 2 நற்றிணை 105, 228

    பாடல்கள் அந்தந்த அரசப் புலவர்கள் இயற்றியவை.

4.15 சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய அரசர்கள்

1. அண்டர்மகன் குறுவழுதி

2. அறிவுடை நம்பி – பிசிராந்தையார் புறம் 184,

3. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

4. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் - ஆவூர் மூலங்கிழார் – புறம் 196, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் – புறம் 57, நக்கீரர்- புறம் 56, பேரிசாத்தனார் புறம் 198, மருதன் இளநாகனார் புறம் 55,

5. ஏனாதி நெடுங்கண்ணன்

6. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

7. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

8. கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி – இரும்பிடர்த்தலையார் – புறம் 3

9. கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி – ஐயூர் மூலங்கிழார் – புறம் 21, ஔவையார் – புறம் 367

10. கீரஞ்சாத்தன்- ஆவூர் மூலங்கிழார் – புறம் 178

11. குறுவழுதி

12. கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி – ஐயூர் முடவனார் – புறம் 51, மருதன் இளநாகனார் புறம் 52

13. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் – சீத்தலைச் சாத்தனார் – புறம் 59

14. செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி – இடையன் சேந்தன் கொற்றன் – அகம் 375

15. தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் – இடைக்குன்றூர்க் கிழார் – புறம் 76, 77,78,79, கல்லாடனார்-புறம் 23, 25, 371, நக்கீரர் – நெடுநல்வாடை, பொதும்பில் கிழார் மகனார் நற் 387, மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி, புறம் 24, 26, 372

16. நம்பி நெடுஞ்செழியன் – பேரெயின் முறுவலார் புறம் 239

17. நல்வழுதி

18. நிலந்தருதிருவில் நெடியோன் – பெருங்குன்றூர்க் கிழார் பதி.82, மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி

19. பசும்பூண் பாண்டியன் – ஈழத்துப் பூந்தன் தேவனார் – அகம் 231, நக்கீரர்- அகம் 253, நற்-358, பரணர் அகம் 162,குறுந்.393

20. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – காரிகிழார்-புறம் 6, நெடும்ப்பல்லியத்தனார் – புறம் 64, நெட்டிமையார்- புறம் 9,12,15

21. பூதப்பாண்டியன்

22. பொற்கைப்பாண்டியன்

23. மதிவாணன்

24. மாலைமாறன்

25. மாறன்வழுதி

26. முடத்திருமாறன்

27. வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் – புறம் 58

28. வெற்றிவேற் செழியன்

(நன்றி: செவ்விலக்கியக் கருவூலம் – பேராசிரியர்.ந.சஞ்சீவி, தமிழ்மண் அறக்கட்டளை)

ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Jan 17, 2015, 1:30:16 PM1/17/15
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
இன்றைய மதுரையைப் பின்னோக்கி இருபது நூற்றாண்டுகளுக்கு இழுத்துச் செல்கிறேன்.  அங்குச் சிறிதுகாலம் தங்கிவிட்டு, மீண்டும் பயணம் முன்னோக்கித் தொடரும். இதோ அந்த flashback.

மல்லல் மூதூர் மதுரை

4. தமிழ்ச் செவ்விலக்கியங்களில் மதுரை

 

4.1 மதுரை – இன்றைய மதுரையைப் பின்னோக்கி இழுக்க ..



இதுதான் இன்றைய மதுரை. சிவப்புச் சதுரத்துக்குள் இருப்பது மதுரை மூதூர். இந்தச் சிவப்புச் சதுரத்தை ஒட்டி உள்ளே காணப்படும் மஞ்சள் கோடு மதுரையின் வெளிவீதிகள். மதுரைக்கு வடக்கில் சற்றுக் குறுக்காக நீளப் பட்டையாகத் தெரிவது வைகை ஆறு. மதுரை வைகையின் தென்கரையில் உள்ளது. இந்த வெளிவீதிகள் கீழவெளிவீதி, வடக்கு வெளிவீதி, மேலவெளிவீதி, தெற்கு வெளிவீதி எனப் பெயர் பெறும். இந்த வெளிவீதிகளுக்கு வெளியே விரிந்து பரந்து கிடக்கிறது நவீன மதுரை. எனினும் இந்த நான்கு வெளிவீதிகளுக்கு உள்ளேதான் மதுரையின் உயிர்ப்பு இருக்கிறது. இதுதான் மதுரையின் இதயம்.


இந்தச் சிவப்புச் சதுரத்தின் நடுவில் நீலச்சதுரத்தின் உள்ளே இருப்பது மதுரை மீனாட்சிஅம்மன் கோவில். இன்றைக்கு அது மீனாட்சி கோவில் என அழைக்கப்பட்டாலும் நாயக்கர் காலத்துக்கு முன்னர் அது சிவன் கோவில். சொக்கநாதர் கோவில், ஆலவாய் அழகர் கோவில், சுந்தரேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இக் கோவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்றாகி, இப்போதெல்லாம் பெரும்பாலும் மீனாட்சி கோவில் அல்லது மீனாட்சி அம்மன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.


இந்த மதுரைப் படத்தை இன்னும் சற்றுப் பெரிதாக்கிப் பார்க்கலாம்.


மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நான்கு வாயில்கள் உண்டு. இந்த வாயிகளில் பெரும் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை கிழக்குக் கோபுரம், வடக்குக் கோபுரம், மேலக்கோபுரம், தெற்குக்கோபுரம் என அழைக்கப்படும். இவற்றில், கிழக்குக் கோபுரத்துக்குச் சற்றுத் தெற்கே இன்னொரு சிறிய கோபுரம் உண்டு. இதுவே இப்பொழுது அம்மன் சன்னதி என்று அழைக்கப்படும். கிழக்குப் பக்கமிருந்து கோவிலுக்குச் செல்கிறவர்கள் மிகப்பெரும்பாலும் இந்த அம்மன் சன்னதியைத்தான் பயன்படுத்துவர். இந்தக் கிழக்குக்கோபுரத்தின் வாயிலிலிருந்து நேர் கிழக்காகப் புறப்படும் ஒரு சாலை, (இப்போதுள்ள) புதுமண்டபத்தின் ஊடாகச் சென்று, எழுகடல்தெருவாக மாறி, பின்னர் முனிச்சாலையாக மாறிக் கிழக்குமுகமாக இராமநாதபுரம் வரை செல்கிறது. இதுதான் முற்காலப் பாண்டியர் காலத்தில் மதுரையையும் அழகன்குளம் துறைமுகத்தையும் இணைக்கும் பெருவழியாக இருந்திருக்கவேண்டும். அகழ்வாராய்ச்சியில், அழகன்குளத்தில் ரோம நாணயங்களும் பிராமி எழுத்துகள் பொறித்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. அகழ்வாய்வாளர்கள் இந்த அழகன்குளம் சங்க காலப் பாண்டியர்களின் முக்கியத் துறைமுகமாக இருந்தது எனக் கூறுவர்.

தெற்கு வாயிலிலிருந்து புறப்படும் ஒரு சாலை சின்னக்கடைத் தெருவாக மாறி, அவனியாபுரம் சாலை ஆகி, நேரே தூத்துக்குடி செல்கிறது. இதுவே சங்க காலப்பாண்டியர்கள் மதுரையிலிருந்து கொற்கைத் துறைமுகத்துக்குச் செல்லும் பெருவழியாக இருந்திருக்கவேண்டும். கொற்கையின் முத்துவளம் இந்த வழியாகத்தான் மதுரைக்குள் வந்திருக்கிறது.

மேற்கு வாயிலிருந்து புறப்படும் மேலக்கோபுரத்தெரு, டவுன்ஹால் ரோடு ஆக மாறுகிறது. இதை நீட்டினால் மதுரைப் புகைவண்டி நிலையம் வரும். எனவே இப்போது மேம்பாலத்துக்காக இந்தச் சாலை வளைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தச் சாலையிலிருந்து புகைவண்டி நிலையத்துக்குக் குறுக்காக இன்றும் ஒரு நடைமேம்பாலம் இருக்கிறது. இதன் வழியாகச் சென்றால் இந்தச் சாலையை மீண்டும் பிடிக்கலாம். இதுவே அரசரடிச் சாலை. அதுவே இப்போது கொச்சி நெடுஞ்சாலையாக மாறிக் கம்பம் குமுளி வழியாகக் கோட்டயம் வரை செல்கிறது. இந்தப் பாதையே சங்க காலத்தில் இடுக்கிவரை சென்று அங்கிருந்த Nelcynda என்று யவனர்களால் அழைக்கப்பட்ட நெற்குண்டம் என்ற ஊருக்குப் போகும் பெருவழியாக இருந்திருக்கவேண்டும். மேற்குக் கடற்கரைப் பட்டினமான Nelcynda பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக யவன ஆசிரியர்கள் கூறுவதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

ஆக, மேற்கு (Nelcynda), கிழக்கு (அழகன்குளம்), தெற்கு (கொற்கை) ஆகிய மூன்று துறைமுகப் பட்டினங்களையும் அவற்றை இணைக்கும் பெருவழிகளையும் உடைய பேரரசுக்குத் தலைநகராக விளங்கிது நம் மதுரை மூதூர். அதற்குரிய ஆதாரங்கள் இன்றும் காணப்படுவதுதான் மதுரையின் தனிச் சிறப்பு. இவை கீழ்க்கண்ட படத்தில் சிவப்புக்கோடுகளால் காண்பிக்கப்பட்டுள்ளன.


இதே போன்று வடக்கே திண்டுக்கல், பழனி, பாலக்காடு வழியாக முசிறி, தொண்டி ஆகிய ஊர்களுக்கும் ஒரு பெருவழி மதுரையிலிருந்து இருந்திருக்கவேண்டும். அது கருப்புக்கோட்டால் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த Nelcynda என்ற மேற்குக்கடற்கரைப் பட்டினம் சேரநாட்டுடையது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தனக்கு யவனருடன் நேரடித் தொடர்பு வேண்டி இந்தப் பட்டினத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும். மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறுவதைப் பாருங்கள்.

வான் இயைந்த இருமுந்நீர்ப்

பேஎம் நிலைஇய இரும் பௌவத்து

கொடும் புணரி விலங்கு போழ

கடுங்காலொடு கரை சேர

நெடுங்கொடி மிசை இதை எடுத்து

இன்னிசைய முரசம் முழங்க

பொன்மலிந்த விழுப்பண்டம்

நாடு ஆர நன்கு இழிதரும்

ஆடு இயல் பெரு நாவாய்

மழை முற்றிய மலை புரையத்

துறை முற்றிய துளங்கு இருக்கை

தெண் கடல் குண்டு அகழி

சீர் சான்ற உயர் நெல்லின்

ஊர் கொண்ட உயர் கொற்றவ – மதுரைக்காஞ்சி 75 – 88

இந்த Nelcynda பட்டினம் தெளிந்த நீரைக் கொண்ட ஒரு கழியில் அமைந்த நகர் என்றும், இங்கு வரும் நாவாய்கள் கடுங்காற்றால் (தென்மேற்குப் பருவக்காற்று) வந்தன என்றும் அவை நிறையப் பொன்னையும் இன்னும் விழுமிய பண்டங்களையும் கொண்டுவந்தன என்றும் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நெல்லின் ஊர் Nelcynda பட்டினம்தான் என்று உறுதியாகிறது.

இங்குக் குறிக்கப்படும் நெல்லின் ஊர் என்பது சாலியூர் என்றும், நெல்லூர் என்றும் உரையாசிரியர்களால் குறிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஊர்கள் எங்கு இருந்தன என்ற குறிப்பு இல்லை. பெருமழைப்புலவர் தன் உரையில், “இதனைச் சாலியூர் என்றும், இதனால் தனக்கு நடவாததோர் ஊர்கொண்டான் என்றும் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இஃது ஆராய்ந்து காண்டற்பாலதாம்” எனக் கூறுகிறார். நெல்லின் ஊர் பற்றிய இந்த அடிகளை அடுத்து,

கயன் அகைய வயல் நிறைக்கும்

மென் தொடை வன் கிழாஅர்

------------ ------------- --------- ----------------

மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்

பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப

------------ ------------- --------- ----------------

பல் குட்டுவர் வெல்கோவே – மதுரைக். 92 – 105

என்ற அடிகளில் நெய்தலும் மருதமும் ஒருங்கே வளம்கொடுக்கும் குட்டுவர் நாட்டையும் பாண்டியன் வென்றதாகப் புலவர் கூறுகிறார். இந்தக் குட்டுவர் நாட்டைக் குட்டநாடு என்று உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். Nelcynda  நகரை ஒட்டிய பகுதி அற்றைநாளில் குட்டநாடு என்று அழைக்கப்பட்டது. இந்த நகர் இருங்கழியில் உள்நாட்டில் அமைந்திருந்தது. எனவே இதனை ஒட்டிய கடற்கரைப் பகுதியையும் கைப்பற்றும் நோக்கில்தான் பாண்டியன் குட்டநாட்டையும் கைப்பற்றினான் எனக் கொள்ளலாம். அது இன்றைக்கும் நெல்வளமிக்க பகுதியாக விளங்கி, கேரளாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.



http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/of-commerce-and-cupid/article4315984.ece



https://www.keralatourism.org/destination/kuttanad-alappuzha/59



நாயக்கர் கால மதுரையையும் அதன் விரிவாக்கத்தையும் கண்டோம். நாயக்கர் காலத்தில் எந்தவித விரிவாக்கமும் இல்லாமல், கோட்டைக்குள் அடங்கிக்கிடக்கும் மதுரை நகர்தான் கீழே இருப்பது.. மதுரை நகரைச் சுற்றிக் காணப்படும் வளைவான கோடுகள் அதன் கோட்டை. அதனை ஒட்டி வெளியில் இருப்பது நாயக்கர் கால அகழி. அகழிக்கு வெளியே இருப்பதுதான் இன்றைய வெளித்தெருக்கள். ஆர்க்காட்டார் ஆட்சிக்குப் பின்னர் வந்த ஆங்கிலேய கவர்னரால் இந்தக் கோட்டை இடிக்கப்பட்டு, அகழி மூடப்பட்டு, நான்கு திசைகளிலும் சாலைகள் அமைக்கப்பட்டு, மாரட் தெரு, பெருமாள் மேஸ்திரி தெரு எனப் பெயரிடப்பட்டன. இன்றைய மதுரை மாநகரின் இதயம் இதுதான் என்று முன்னர்க் குறிப்பிடப்பட்டது சரிதானே.


http://www.thehindu.com/news/cities/Madurai/madurais-history-lies-underneath-our-feet/article4461853.ece

நாயக்கர் காலத்துக்கு முன்னர் இருந்த மதுரையின் அளவு இன்னும் சிறியதாகும். இடைக்கால, பிற்காலப் பாண்டியர் காலத்தில் இருந்த மதுரைநகர்க் கோட்டை நாயக்கர்களால் இடிக்கப்பட்டு, நகர் விரிவாக்கப்பட்டு, புதிய கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டன. பாண்டியர் காலக் கோட்டை இருந்த இடத்தைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.




சிவப்புக் கோடுகள் - நாயக்கர்காலக் கோட்டை.


நீலக்கோடுகள் - மீனாட்சி அம்மன் கோவில்


மஞ்சள் கோடுகள் - இடைக்காலப் பாண்டியர்காலக் கோட்டை.


(கி.பி. 6 –ஆம் நூற்றாண்டு)


மஞ்சள் கோட்டில் மேற்குப் பக்கத்தில் அடியில் West Pandiyan agil Street என்று எழுதியிருப்பதைப் பாருங்கள்(கருப்பு அடிக்கோடு இடப்பட்டிருக்கிறது). ஆம், இன்றும் பாண்டியர் கால அகழி இருந்ததற்கான அடையாளம் மதுரையில் இருக்கிறது. நீங்கள் காண்பது மேலப்பாண்டியன் அகிழ் தெரு. அகழி என்பது அகிழ் என்று அழைக்கப்படுகிறது. இதுபோல நான்கு பக்கங்களிலும் அகழித்தெருக்கள் இருந்திருக்கின்றன. இப்போது அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டுவிட்டன. இந்தக் கோட்டையை இடித்து, அகழியை மூடி அதனை அகழித் தெருவாக்கி, அப்போதிருந்த வெளித்தெருக்களை மாசிவீதி எனப் பெயரிட்டனர் நாயக்கர்கள். இன்றைய மாசிவீதிகளின் கதை இதுதான். படத்தில் நீங்கள் காண்பது இன்றைய கீழமாசிவீதியின் ஒரு பகுதி. இங்கிருக்கும் கட்டடத்தின் ஒரு பகுதியை நீங்கள் இன்றும் பார்க்கலாம். இங்குக் காணப்படும் வீதியே கீழமாசிவீதி. அதனை அடுத்து வலப்புறம் கருப்பாக இருப்பது அங்கிருந்த அகழியை மூடியதால் ஏற்பட்ட பள்ளம். இதன்மேல்தான் இன்றை கீழமாசிவீதிக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.




இதே கட்டிடம் மீண்டும் 1880-களில் எடுக்கப்பட்டுள்ளது. கீழமாசிவீதியில் 1990-களில் எடுக்கப்பட்ட அதே இடத்துடன் ஒப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளது.


இடைக்காலப் பாண்டியர் காலத்துக்கும் முற்பட்ட களப்பிரர் காலத்துக்கு முந்தைய சங்ககாலப் பாண்டியர் மதுரையும் இதுவேதான். ஆம், இந்த மஞ்சள் கோட்டுப் பகுதிதான் 2000 ஆண்டுளுக்கு மேலாய் வாழ்ந்துகொண்டிருக்கும் என்றுமுள தென்மதுரையாய் விளங்கும் மதுரை மூதூர். ஒரே ஒரு வித்தியாசம். சங்ககாலப் பாண்டியர் காலத்தில் நீலக்கோடுகளுக்கு நடுவில் இருந்தது மீனாட்சி கோவில் அல்ல. அது பாண்டியன் கோயிலாக இருந்தது. கோ என்றால் அரசன். இல் என்பது இல்லம். இதுவே சங்ககாலப் பாண்டியர் அரண்மனை.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையும் சீரூர்; பூவின்

இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து

அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் – பரிபாடல் திரட்டு 7/1-4

என்ற பரிபாடல் அடிகளில் காணப்படுவது போல, தாமரையின் இதழ்களாய் நான்கு பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில் அதன் பொகுட்டைப்போலப் பொலிவுடன் இருந்தது மன்னனின் அரண்மனை.

அந்தப் பாண்டியர் மதுரை எப்படி இருந்தது? அதையும் காணத்தான் போகிறோம், இனிவரும் கட்டுரைகளில்.

...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 25, 2015, 10:47:32 PM1/25/15
to mintamil

வணக்கம் ஐயா .
பண்டைய பெயர்களும் வணிகமும்  இன்றும் நிலைத்துள்ளதை ஐயா  பாண்டிய ராசா சொல்லக் கேட்டுப் பெரு மகிழ்ச்சி யடைகிறேன்.
ஆனால் மதுரை மாநகர் சதுரத்துள் சதுரமாகத்தானே உள்ளது ! தாமரைப்பூ போன்று இல்லையே?
ஐயா அவர்களின் விளகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

--

துரை.ந.உ

unread,
Jan 25, 2015, 11:02:27 PM1/25/15
to Groups
2015-01-26 9:17 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம் ஐயா .
பண்டைய பெயர்களும் வணிகமும்  இன்றும் நிலைத்துள்ளதை ஐயா  பாண்டிய ராசா சொல்லக் கேட்டுப் பெரு மகிழ்ச்சி யடைகிறேன்.
ஆனால் மதுரை மாநகர் சதுரத்துள் சதுரமாகத்தானே உள்ளது ! தாமரைப்பூ போன்று இல்லையே?


​வாழ்க ஐயா 
///தாமரையின் இதழ்களாய் நான்கு பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில் அதன் பொகுட்டைப்போலப் பொலிவுடன் இருந்தது மன்னனின் அரண்மனை.​///

கவனிக்கவும் ...அது  ... மன்னனின் அரண்மனை 
 


துரை.ந.உ

unread,
Jan 25, 2015, 11:06:37 PM1/25/15
to Groups
(ப்ளான் வ்யூ:)

Pandiyaraja

unread,
Jan 28, 2015, 11:43:44 AM1/28/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
அன்புள்ள காளை ஐயா அவர்களுக்கு,
சென்ற 10 நாட்களாக நான் மதுரையில் இருந்ததால் இந்த மடலைக் காணவில்லை. இன்று சென்னை திரும்பியதும்தான் பார்த்தேன்.
ஐயா, தாமரைப்பூ உவமை இங்கு உருவத்துக்கு அல்ல. மதுரை நகரின் அமைப்புக்கு அது உவமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முதுமுனைவர் தமிழண்ணல் ஐயா அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
"பாண்டியன் அரண்மனை பொகுட்டாக நடுவே இருக்கத் தெருக்கள் இதழ்களாக இலங்க, நகரம் மலர்ந்த தாமரை என விளங்க ----"
மதுரை மாநகர் - ஊரும் பேரும் : கட்டுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பு மலர் 08.04.2009
- ப்க்கம் 154.
தாமரை மலரின் நடுவில் (வட்டமாக) இருக்கிறது அதன் பொகுட்டு. அதேபோல் மதுரை நகருக்கு நடுவில் (சதுரமாக) இருக்கிறது மன்னன் அரண்மனை. பொகுட்டைச் சுற்றி அடுக்கடுக்காக இதழ்கள் அமைந்திருக்கின்றன. முதல் அடுக்கு பொகுட்டை ஒட்டி. அதுதான் ஆடிவீதி. கிழக்கு ஆடிவீதி, தெற்கு ஆடி வீதி, மேற்கு ஆடிவீதி, வடக்கு ஆடிவிதி என நான்கு இதழ்கள். தாமரையின் முதல் அடுக்குக்கு வெளியே அடுத்த அடுக்கு அமைந்திருக்கிறது. அதைப் போன்றதுதான் சித்திரை வீதிகள். கிழக்குச் சித்திரைவீதி, தெற்குச் சித்திரைவீதி, .. என நான்கு இதழ்கள். அதற்கும் வெளியே மூன்றாம் அடுக்கு. இவை ஆவணிமூல வீதிகள். அதற்கும் வெளியே மாசி வீதிகள். கிழக்கு மாசிவீதி, தெற்கு மாசி வீதி, ... என்ற நான்கு இதழ்கள். தாமரைக்குப் பொகுட்டைச் சுற்றி நான்கு இதழ்கள் மட்டும்தானா என்று கேட்கக்கூடாது. அந்த அமைப்பையே பார்க்கவேண்டும்.

இதே கட்டுரையில் வேறோரிடத்தில் தமிழண்ணல் ஐயா குறிப்பிடுகிறார்: " மதுரை நகரின் மையத்தில் முன்பு பாண்டியன் அரண்மனை இருந்தது. இப்போது ஆலவாய் அண்ணல் சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சியம்மை திருக்கோயில் உளது."
திரு.ருத்ரா அவர்கள் "கவனிக்க: என்று கூறிய கூற்றுக்கும் இதேதான் பதிலாகக் கொள்க.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

...

rajam

unread,
Jan 28, 2015, 1:19:11 PM1/28/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா, வணக்கம். 

முதலில், இந்த அருமையான, ஆவணப்படுத்தவேண்டிய, தொடருக்காக நன்றி. 

ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தப் பக்கம் வர இயலவில்லை. இன்றுதான் வரமுடிந்தது. 

படித்தபோதெல்லாம் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் இடுவதுக்கு மனம் துடிக்கும், கை வாராது. கசியும் நீர் கண்களை மறைத்துவிடும். [என்னையும் புகுந்த வீட்டாரையும் பற்றி ஓரளவு அறிந்துள்ள உங்களுக்கு அது புரியும்.]

அது கிடக்க.


மதுரைத்தெருக்களின் அமைப்பு
------------------------------------------

தாமரைப்பொகுட்டையும் (== இப்போதைய கோயில்) அதன் இதழ்களையும் (== தெருக்கள்) ~4 வயதிலிருந்து 33 வயதுவரை சுற்றிவந்தவள் யான்! கோயிலில் என் கால் பதியாத இடமில்லை என்றும் சொல்லலாம்! கோயிலின் சில தூண்களும் (காட்டு: யாழிவாய்க்கல் தூண்) சிலைகளும் (காட்டு: விபூதிப்பிள்ளையார்) அவற்றோடு ஒவ்வொரு நாளும் போராடிய இந்தச் சிறுமியை நினைவுகூரும்!

ஆடிவீதியில் நடக்கவும் விளையாடவும் கற்றேன். அதோடு, சித்திரை மாசி வெளி வீதிகளில் வசித்தும், ஆவணிமூல வீதிகளில் திரிந்தும் ... ... ... நழுவிப்போன அந்த வாழ்வின் நிழலில் இப்போது கிடக்கிறேன். 

மதுரை வீதிகளின் அமைப்பில் ஒரு சிறப்பு: ஆடி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணிமூல வீதிகள், மாசி வீதிகள் இவை எல்லாமே நம்மைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போகும், குறுக்குச் சந்துகள் வழியாக. (என்னவோ சொல்றாங்களே All streets lead to Rome-ஓ என்னவோ, அப்படி.) குறுக்குச் சந்துகள் சிறு சிறு கால்வாய்கள் போல அமைந்திருந்தன. மாசி வீதிக்கு அப்பால்தான் வெளிவீதிகள். அவற்றின் புறக்கிளைகளே ஊருக்கு வெளியே போகும் வழிகளைக் காட்டும். வையை ஆறும் அங்கே ஓடியது. என்ன அழகான கட்டமைப்பு!! [ஒரு காலத்தில் என் அப்பாவழித் தாத்தாவும் அங்கே நகரமைப்புப் பொறியாளராகப் பணியாற்றினார் என்பதில் எனக்குப் பெருமை!]

வீதி, தெரு, சந்து ... போன்ற ஒவ்வொரு சொல்லுக்கும் தனிப்பொருளும் செயலமைதியும் உண்டு. அதையெல்லாம் மாற்றி 'ரோடு கீடு' என்று பெயரமைத்தது பண்பாட்டின் இழப்பு.

மேல அனுமந்தராயன் கோயில் சந்து என்ற குறுக்குச் சந்து திண்டுக்கல் ரோட்டையும் (== திண்டுக்கல் தெரு; இன்றைய நேதாஜி ரோடு!) மேலக்கோபுரத் தெருவையும் இணைக்கும். அந்தச் சந்தில்தான் வடகோடியில், கிழக்கைப் பார்த்தாற்போல், என் வீணை ஆசிரியை சண்முகவடிவுத் தாயாரின் வீடு. அந்த வீடுதான் இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி வீடு. அதே தெருவில்தான் தென்கோடியில் எம்.எல்.வசந்தகுமாரியின் வீடு என்று சிறுபிள்ளைப் பருவ நினைவு. தவிர, மதுரை சோமு, டி.எம்.எஸ், மதுரை மணி ஐயர் ... ஆகியோர் வாழ்ந்து பெருமைப்பட்டதும் இதே தெருக்களில்தான்! 

[ஒவ்வொரு நாளின் இரவிலும் அந்த மதுரை மீனாளின் புறக்கணிப்பை நினைத்து அவளைக் கடிந்துகொள்கிறேன் -- 'என்னைப் புறந்தள்ளியது ஏன்' என்று. ]

கட்டுரைத்தொடர் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து எழுதி மேலும் சிறப்புற என் நல்வாழ்த்து.

அன்புடன்,
ராஜம்
...

Pandiyaraja

unread,
Jan 29, 2015, 12:26:09 AM1/29/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
மிக்க நன்றி அம்மையீர்.
நெஞ்சம் நெக்குருகும் தங்கள் மடல்கண்டு உள்ளம் நெகிழ்ந்துபோனது. தாங்கள் எனக்கு மூத்தவர். என் மதினியாரின் கல்லூரி உடன்மாணவர். மனைவியின் மதிப்புக்குரிய ஆசிரியராய் எனக்கு மாமியாராய் வாய்த்தவர். தங்களுக்கு அறிவுரையோ ஆறுதலோ கூறும் வயதும் தகுதியும் எனக்கில்லை. யோபின் (Job)கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.  கேட்டிருப்பீர்கள். அதை நினைவிற்கொள்ளுங்கள்.
மதுரையின் தென்மேற்குக்கோடிக்கு வெளியிலுள்ள பசுமலையிலிருந்து மதுரையின் வடகிழக்குக் கோடிக்கு வெளியில் உள்ள அமெரிக்கன்கல்லூரியில் படிக்கவும் பணியாற்றவும் என நாற்பது ஆண்டுகளுக்கு மேலாய் மதுரையின் மையத்தை ஊடுறுவி முதலில் TVS Bus-களிலும் பின்னர் பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் மதுரையைக் கிழித்துக்கொண்டு பயணம் செய்த எனக்கே மதுரை என்ற பெயரைக்கேட்டதுமே கண்கள் (இப்போதெல்லாம்) குளமாகிவிடும் நிலையில், அங்கேயே பிறந்து வளர்ந்து ஓடி ஆடி உருண்டு புரண்டு நடந்து திரிந்து பொழுதெல்லாம் கழித்தவருக்கு எப்படி இருக்கும் என உணர முடிகிறது.
இன்றைய மாசிவீதி சங்க காலத்தில் (கோட்டைக்கு வெளியில் இருக்கும்) வெளிவீதியாக இருந்திருக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கும் என எண்ணுகிறேன். நக்கீரர் நடைப்பயணம் என்று நெடுநல்வாடையைப் பற்றி தமிழ் மன்ற மின்குழுவில் நான் எழுதிவந்த தொடர் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். மதுரைக்கு மேற்கே நாகமலைத் தொடரின் சரிவுகளில் கிடைபோட்டிருந்த மாட்டு இடையர்களிலிருந்து தன் பாடலைத் தொடங்கிய புலவர் நக்கீரர், வைகைக் கரை வழியாகவே வந்து கொக்குகளையும் நாரைகளையும், பூக்களையும், வயல்களையும் தோப்புகளையும் சோலைகளையும் காட்டியபின் கரையேறி (அரசரடிப் பக்கம்) மாடம் ஓங்கிய மல்லல் மூதூரைக் காட்டி, மயக்கநிலை யவனர்களைக் காட்டி (Railway colony) மாலை அயரும் மங்கையரைக் காட்டுவார். எனவே அது மதுரைக் கோட்டையின் மேற்குப் பகுதி. அதன்பின் அவர் எந்த வாசல் வழியாக மதுரைக்குள் செல்கிறார் என்பதில் எனக்குக் குழப்பம் இருந்தது. இரவும் பகலும் மயங்கிக் கையற்று மதலைப் பள்ளிகளில் மாறி மாறி இருக்கும் புறாக்களைக் காட்டுகிறார். எனவே அது பெரிய மாடிவீடு. பின்னர் உள்ளே சிலந்திவலை பின்னிக்கிடக்கும் சீர்மிகு விசிறிகளையும் சீந்தாமல் கிடக்கும் குளிர்நீர்ப் பானைகளையும் காட்டுவார். அப்போது இரவு 9 மணிக்கு மேல் இருக்கும். அந்நேரத்தில் வீட்டிற்குள் யாழ் மீட்டப்படுவதைக் காட்டுவார். தொய்ந்துகிடந்த நரம்புகளை முறுக்கேற்ற கொம்மை வருமுலையின் வெம்மையின் தடவும் பாடகிகளைக் காட்டுவார். இது ஒருவேளை வடக்காவணிமூலவீதியாய் இருக்குமோ என்ற ஐயம் எனக்கு இருந்தது. குழப்பமாகவும் இருந்தது. தாங்கள் குறிப்பிடும் வீணை சண்முகவடிவு அம்மாள் அவர்களின் வீடு மேற்கு அனுமந்தராயன் கோவில் சந்தில் வடக்குக் கோடி என்கிறீர்கள். எனவே அது மேலக்கோபுரத்தெருவுக்கு மிக அருகில் இருப்பது. அதன்வழியாகத்தான் நக்கீரர் நகருக்குள் செல்கிறார் (மேற்கு வாசலில் நுழைந்து). அவர் கேட்டது இந்த வீணைக்காரரின் முன்னோர்கள் வாசித்த யாழின் இசையாக இருக்குமோ?
அந்த இசைக்கேற்பப் பாடி ஆடிய மங்கை தங்களின் மூ----த்த பாட்டியாக இருக்குமோ?
மேகங்கள் விலகுவதுபோல் உணர்கிறேன்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா
...

Geetha Sambasivam

unread,
Jan 29, 2015, 4:37:10 AM1/29/15
to மின்தமிழ்
அருமையான, மனதுக்கு மகிழ்வான கட்டுரை.  மதுரையைப் பற்றி எவ்வளவு படித்தாலும் மனம் நிறைவடையாது.  மிக்க நன்றி.

Geetha Sambasivam

unread,
Jan 29, 2015, 4:40:48 AM1/29/15
to மின்தமிழ்
திரு பாண்டியராஜா, திருமதி ராஜம் அம்மா ஆகியோரின் மலரும் நினைவுகள் மனம் நெகிழ வைத்தது.  ஊர்ப்பாசம் யாரை விட்டது! 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2015, 5:04:33 AM1/29/15
to mintamil
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.
தங்களது நினைவெல்லாம் அன்னை மதுரை மீனாட்சியின் திருவருளை நாடியே நிற்கின்றன.
மனதிற்கு நெகிழ்ச்சியான பதிவு.

அன்புடன்
தம்பி
காளை

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2015, 5:34:52 AM1/29/15
to Pandiyaraja, mintamil
வணக்கம் ஐயா.
தங்களது விரிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா.  மதுரையைப் பற்றி மிகவும் அருமையாகச் சுவைபடக் கூறிவருகின்றீர்கள் ஐயா.  மிகவும் மனதிற்கு நிறைவாக உள்ளனது.

மற்றபடி எனக்கென்னவோ, 
பரிபாடல் மிகவும் தொன்மையான பிரளயகாலத்திற்கும் முந்தைய மதுரை மாநகரைச் சுட்டுகின்றதோ? என்று ஓர் ஐயம்.

அன்பன்
கி.காளைராசன்
2015-01-28 22:13 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

Pandiyaraja

unread,
Jan 31, 2015, 10:21:02 AM1/31/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
அன்புடையீர்,
ஆர்வத்துடன் இந்தக் கட்டுரைத் தொடரைப் படிப்பவருக்கும், படித்து ஊக்கமொழிகள் ஊட்டுவோருக்கும் மனங்கனிந்த நன்றி. இத்துடன் இருக்கும் கட்டுரையில் சங்ககால மதுரையைப் பற்றிக் காணலாம். இதை எழுதுவதற்கு முன்னர் இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களை நேரிற்சென்று பார்த்துப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுவர மிக ஆர்வத்துடன் சென்ற மாத இறுதியில் மதுரை சென்றேன். ஆனால் அங்குச் சென்றபோது மிகவும் உடல்நலம் குன்றிப்போய்விட்டதால் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவரைக் கலந்தாலோசித்து, மருந்துகளை மாற்றி எழுதிவாங்கிக்கொண்டு எப்படியோ சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். எனவே வழக்கம்போல் இணையதளங்களின் உதவியுடன் கட்டுரையை எழுதியிருக்கிறேன். அடுத்தமுறை மதுரை செல்லும்போது நேரில் சென்று பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துவர எண்ணம். அப்போது சில படங்கள் மாறலாம். சில பகுதிகளும் மாற்றம்செய்யப்படலாம்.
மீண்டும் அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

5. சங்க கால மதுரை

 

5.1 சங்ககால மதுரையின் எல்லைகள்

சங்க காலத்தில் மதுரைநகர் நான்கு ஆவணிமூல வீதிகளுக்குள் அடங்கி இருந்தது எனப் பார்த்தோம். இன்றைய மதுரையில் அதற்கான சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்ப்போம்.

சங்க காலக் கட்டிடங்கள் என்று உறுதிபடச் சொல்லும் அளவுக்குத் தமிழ்நாட்டில் இன்று ஒரு கட்டிடமும் இல்லை எனச் சொல்லலாம். ஆய்வாளர்கள் சங்ககாலம் என்பதனை கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைக் குறிப்பிடுவர். கி.மு.3-ஆம் நூற்றாண்டு என்பதனை உறுதியாகச் சொல்லமுடியாது. பழனி அருகே, பொதினியில் கண்டெடுத்த பிராமி எழுத்துகள் பொறித்த பானையிலிருந்த நெல்லை ஆய்ந்த பிறகு, தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக்களின் காலம் கி.மு.4-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது என்பது தெளிவாகிறது. மாங்குளத்தில் இருக்கும் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த பிராமி எழுத்துகளின் காலம் குறிப்பிட்ட 3-ஆம் நூற்றாண்டும் முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே சங்க காலத்தின் தொடக்கம் ஆய்வுக்குரியது. எனினும் கி.பி.3-ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்து, களப்பிரர் ஆட்சி ஓங்கியது என்பது உண்மை. களப்பிரர் ஆட்சி கி.பி.6-ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. கி.பி.575-இல் இடைக்காலப் பாண்டியர் எழுச்சிபெற்று களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இவர்களின் ஆட்சி கி.பி.966 வரை தொடர்ந்தது. இக் காலத்தில்தான் சங்ககாலப் பாண்டியர் இருந்து ஆண்ட அரண்மனைப் பகுதி கோவிலாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. மாவட்டத் தொல்லியல் அலுவலர் முனைவர்.சொ.சாந்தலிங்கம் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்கும் ‘மதுரை – தெரிந்ததும் தெரியாததும் என்ற விழியத்தில் (Video) கொடுக்கப்பட்டுள்ள படம் இது.

கி.பி.7-ஆம் நூற்றாண்டில் சிவனுக்குரிய வழிபாட்டுத்தலமாக இப் பகுதி இருப்பதைக் காணலாம். எனவே களப்பிரர் காலத்தில் சிதைந்துபோன சங்ககாலப் பாண்டியர் அரண்மனைப்பகுதியில் மீண்டும் குடியேற விரும்பாமல், இடைக்காலப் பாண்டியர் தமக்கென வேறோரிடத்தைக் கட்டி, இப் பகுதியை இறைவழிபாட்டு இடமாகக் கொண்டனர் என்று கொள்ளலாம்.

பின்பு பாண்டியநாடு சோழர் வசமானது. கி.பி.966 முதல் கி.பி.1180 வரை பாண்டியநாடு சோழப்பேரரசின் பகுதியாக விளங்கியது. கி.பி.1180-இல் இரண்டாம் பாண்டியப் பேரரசு விக்கிரம பாண்டியனால் அமைக்கப்பட்டது. இவன் மதுரை நகருக்கு வெளியே சிலைமான் என்ற ஊருக்கு அருகிலிருக்கும் மணலூர் என்ற பகுதியிலிருந்து ஆண்டுவந்தான். இவனுக்குப் பின்னர் கி.பி.1190-இல் பட்டத்துக்கு வந்த சடையவர்மன் குலசேகரபாண்டியன் சிதைந்துபோயிருந்த மதுரைக் கோட்டையையும் அகழியையும் சீரமைத்தான். இந்தக் கோட்டையே பாண்டியரின் ஆட்சி இறுதிவரை மதுரையைக் காத்தது. பின்னர் இது டில்லி சுல்தானியரால் பெரும் அழிவுக்குள்ளானது. மதுரையில் நாயக்கர்கள் தலையெடுத்தபோது இக் கோட்டையை இடித்து அகழியைத் தூர்த்து மதுரையை விரிவாக்கி, புதிய கோட்டையை உருவாக்கினர். எனவே நாயக்கர்கள் இடித்துத் தூர்த்த கோட்டையும் அகழியும் இருந்த இடமே சங்ககாலப் பாண்டியரின் கோட்டை, அகழிப் பகுதிகளாக இருக்கவேண்டும்.

இந்தப் பிற்காலப் பாண்டியர் பேரரசின் கோட்டை பற்றிய சில வரலாற்றுச் செய்திகள் மதுரையில் இன்றும் உள்ளன. மதுரையில் மேல ஆவணிமூல வீதிக்கும் மேலமாசி வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு சிறிய தெரு உண்டு. அதற்கு மேலப்பாண்டியன் அகிழ்தெரு என்று பெயர். அகிழ் என்பது அகழி என்பதன் மருவிய வழக்கு.

எனவே இந்தத் தெருதான் பாண்டியர் காலத்துக் கோட்டையைச் சுற்றியிருந்த அகழி இருந்த பகுதி. கோட்டையை இடித்து அகழியை மூடி அதனைத் தெருவாகக் கொண்டனர். இந்த அகழி குறைந்தது 50 அடி அகலம் இருந்திருக்கவேண்டும். ஆக்கிரமிப்புகளால் இது குறுகிப்போய் இப்போது ஒரு சந்து என்னும் அளவுக்கு இருக்கிறது. கூகுள் படத்திலேயே இந்தத் தெருவின் பெயர் காணப்படுவதை முன்னர்க் கண்டோம். இதே போன்ற தெருக்கள் நான்கு பக்கங்களிலும் இருந்திருக்கின்றன. இப்போது பெயர் மாற்றம் பெற்று அடையாளம் அற்றுப்போய்விட்டன. சங்க கால மதுரையின் மேற்கு எல்லை இதுவே. வடக்கே சங்கீத விநாயகர் கோவில் தெரு, வித்துவான் பொன்னுசாமி பிள்ளை தெரு எனப் பெயர் மாற்றம் பெற்ற இந்த வடக்குப் பாண்டியன் அகிழ்தெரு, முதலில் பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அகழியைச் சரியாக மூடாததால் தெரு பள்ளமாக இருந்தபோது இந்தப் பெயர் பெற்றது எனலாம். தெற்குப் பக்கத்தில் இதன் பகுதி ஜடாமுனிகோவில் சந்து எனப் பெயர்பெற்றிருக்கிறது. கிழக்குப்பக்கம் பாண்டியர் கோட்டை இருந்ததற்கான இரண்டு அடையாளங்கள் இன்றும் உள்ளன. கீழஆவணி மூலவீதியிலிருந்து கீழமாசிவீதிக்குச் செல்லும் தெரு இப்போது அம்மன் சன்னதித் தெரு எனப்படுகிறது. இந்தப் பகுதியின் நடுவில் ஒரு உயரமான வாயில் இருக்கிறது. இதற்கு விட்டவாசல் என்று பெயர். அதாவது, நாயக்கர்கள் பாண்டியன் கோட்டையைத் தகர்த்தபோது இடிக்காமல் விட்டுவிட்ட வாசல்பகுதி இது. வரலாற்றுப் புகழ் மிக்க இந்த அமைப்பு இன்று ஆக்கிரமிப்பாளர்களால் பொலிவிழந்து பார்ப்போரின் கண்களிலிருந்து நீரை வரவழைக்கும் நிலையில் உள்ளது. இந்த வாசலின் உயரே ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 1935-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முதலாம் நாள் அன்றைய நகர் நிர்வாகப் பொறியாளராக இருந்த ஜி.எம்.பிலிப் என்பவரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு Ancient Monument என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறது.


THIS STRUCTURE WAS FORMERLY THE EASTERN GATE WAY OF THE OLD PANDIAN FORT. ANY PERSON DESTROYING, DEFACING, REMOVING, ALTERING OR IN ANY WAY INJURING ANY PART OF IT OR CAUSING IT TO BE SO DAMAGED WILL BE PROSECUTED.

“இந்தக் கட்டிடம் முன்னர் பண்டைய பாண்டியன் கோட்டையின் கிழக்கு வாயிலாக இருந்துள்ளது. இதை அழிக்கவோ, சிதைக்கவோ, உருமாற்றம் செய்யவோ அல்லது எவ்விதத்திலேனும் இதற்கு ஊறு விளைவிக்கவோ செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்பதே அச் செய்தி. குறைந்தது 700 ஆண்டுக்காலப் பழமையைக் கொண்ட இந்த ஒப்பற்ற வரலாற்றுச் சின்னம் நம்மவர்களாலேயே இப்போது பாழ்படுத்தப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

இந்த வாயில் ஒரு மன்னனின் கோட்டை வாயிலாக இருந்தது என்னும் அளவுக்கு அழகும் பொலிவும் உள்ளதாகத் தோன்றவில்லை என்பது உண்மையே. ஆனால் இது பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது என்பதை நினவிற்கொள்ளவேண்டும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இப்போது கிழக்குக்கோபுரம் என்று அழைக்கப்படும் வாயிலே சங்ககாலப் பாண்டியர் காலத்தில் பாண்டியர் அரண்மனைக்கு முதன்மை நுழைவாயிலாக இருந்தது. இதனுள் நுழைந்து நேரே சென்றால் மன்னனின் அரசவை இருந்திருக்கும். களப்பிரர்க்குப் பின்னர் வந்த இடைக்காலப் பாண்டியர் காலமான 7-ஆம் நூற்றாண்டில் இதுவே சிவன் கோவில் சன்னதியாக இருந்தது என்று பார்த்தோம். இந்தக் கிழக்குக் கோபுர வாயிலே அன்றைய கோயில் வளாகத்துக்கு ஒரே நுழைவாயிலாக இருந்திருக்கும். எனவே அதற்கு நேரே செல்லும் தெரு கோட்டை மதிலை அடையும் இடத்திலேயே கோட்டைக்குரிய முதன்மை வாசல் இருந்திருக்கும். அதன் பின்னர் பிற்காலப்பாண்டியர் காலமான கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான் அம்மன் சன்னதி உருவாக்கப்படுகிறது என்பதை முன்னர்க் குறிப்பிட்ட விழியம் பதிவுசெய்கிறது. அதற்கும் பின்னர் பிற்காலப்பாண்டியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான் இந்த அம்மன் சன்னதி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

எனவே கோட்டைக்குரிய முதன்மை வாயில் இந்த அம்மன் சன்னதிக்கு நேரே இருக்கும் பண்டைய பாண்டியர் கோட்டை வாயில் அல்ல என்பது புரியும். அந்த முதன்மை வாயில் இன்றைய புதுமண்டபத்துக்கு நேர் கிழக்கே இருக்கும் ராயர்கோபுரமே என்பது தெளிவு. அதனை இப் படம் தெளிவுபடுத்தும்.

படத்தில் வலக்கோடியில் unfinished Gopuram என்று காட்டப்பட்டிருக்கும் பகுதியே சங்க கால மதுரை நகரின் முதன்மை வாயிலாக இருந்திருக்கும். இதன் வழியாகத்தான் கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குள் புகுந்திருப்பார்கள். இங்கே இருந்த அந்த அழகும் பொலிவும் மிக்க முதன்மை வாயிலை திருமலை நாயக்கர் இடித்துவிட்டு அதைவிட மேலும் பொலிவுள்ள கோபுரமாகக் கட்ட எண்ணியுள்ளார். மிகவும் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய பக்க மதில்களைக் கொண்ட இரு பெரும் தூண்களை அவர் நிறுவினார். இது இன்றும் 50 அடி உயரத்துக்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் இந்தக் கோபுரம் முற்றுப்பெறவில்லை. சங்கப் பாண்டியரின் முதன்மை வாயில் இருந்த இடம் இன்று மிகவும் பொலிவிழந்து நிற்கிறதைப் பாருங்கள்.

பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –

ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழமாசிவீதியிலிருந்து கிழக்குக் கோபுரம் நோக்கி -

அடுத்து, பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –

ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழ ஆவணிமூல வீதியிலிருந்து கிழக்கு நோக்கி

இந்தத் தெருவே சங்க கால மதுரையின் நுழைவுவாசல் இருந்த பகுதி. இது இப்பொழுது எழுகடல்தெரு என்று அழைக்கப்படுகிறது. ராயர் கோபுரம் இருக்கிற இடத்தில் அன்று மதுரை மாநகரின் நுழைவாயில் இருந்தது. இதுதான் வையை அன்ன வழக்குடை வாயில் (மதுரைக் காஞ்சி – 356) – அதாவது (அன்றைய) வைகையின் நீர் இடையறாது ஓடுவது போன்று இந்த வாயிலில் மக்கள் வெள்ளம் இடையறாது சென்றுவந்துகொண்டிருந்தது என்கிறார் மதுரைக் காஞ்சிப் புலவர் மாங்குடி மருதனார்.

இதுவரை சங்ககால மதுரையின் எல்லைகளைக் கண்டோம். இன்றைய மதுரையின் நான்கு ஆவணிமூல வீதிகளுக்குள்தான் அன்றைய மதுரை கடலென ஆர்ப்பரித்து இயங்கியிருக்கிறது.

505   பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு

      சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்,

      மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்

      பழையன் மோகூர் அவையகம் விளங்க

      நான் மொழிக் கோசர் தோன்றி அன்ன

510   தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும்,

      கோடு போழ் கடைநரும், திரு மணி குயினரும்,

      சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்,

      பொன் உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,

      செம்பு நிறை கொண்மரும், வம்பு நிறை முடிநரும்,

515   பூவும் புகையும் ஆயும் மாக்களும்,

      வ் வகைச் செய்தியும் உவமம் காட்டி

      நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்

      கண்ணுள் வினைஞரும், பிறரும் கூடி

      தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல்

520   குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து

      சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ

      நால் வேறு தெருவினும் கால் உற நிற்றரமதுரைக் காஞ்சி

இதன் அடிநேர் உரை:

பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு-- சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும் -

மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய

பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு

நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,

தாம் மேலாய் விளங்கிய நாற்பெருங்குழுவும் -                         510

சங்கினை அறுத்துக் கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,

சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,

பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும்,

செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,

பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்,               515

பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்

கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய

ஓவியரும், பிறரும் கூடி,

தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல

சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,    520

சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,

நான்காய் வேறுபட்ட தெருக்கள்தோறும் (ஒருவர் காலொடு ஒருவர்)கால் நெருங்க நிற்றலைச் செய்ய -

இந்த வாசலுக்குள் நுழைந்தால் நாம் இத்தனை மாந்தரையும் கண்டுகளிக்கலாம். நால்வேறு தெருவினும் என்று அன்று மாங்குடியார் பாடிய அந்த நான்கு தெருக்கள் – கீழ ஆவணிமூல வீதி, தெற்காவணிமூல வீதி, மேலாவணிமூல வீதி, வடக்காவணிமூல வீதி ஆகியவையே. வரலாற்றுப் பேழைகளாய், வாழும் கலைச் செல்வங்களாய் அவை நம் பழமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. ஒரு விந்தை தெரியுமா? இந்த நால்வேறு தெருவிலும் சுற்றிவந்தால் இன்றும் மாங்குடியார் கூறிய அத்தனை மாந்தரையும் காணலாம். என்ன, அவர்களின் உடை மட்டும் மாறியிருக்கும்.

நாம் இன்னும் சங்ககால மதுரைக்குள் நுழையும் நேரம் வரவில்லை. முதலில் கோட்டைக்கு வெளியே இருந்த புறநகர் எப்படி இருந்தது எனக் காண்போம் – அடுத்த கட்டுரையில்.

ப.பாண்டியராஜா

...

Seshadri Sridharan

unread,
Jan 31, 2015, 11:11:47 AM1/31/15
to mintamil
அருமை பாராட்டுகள் 

--

rajam

unread,
Jan 31, 2015, 10:38:44 PM1/31/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா, வணக்கம்.

சங்க(க்)கால மதுரையின் பாண்டியன் கோயிலைத் தொட்டடுத்த தெற்குச்சித்திரை வீதியில் வளர்ந்தேன் என்பது எனக்குப் பெருமிதம்! கோயிலின் முகவரிக்கும் நாங்கள் வசித்த வீட்டின் முகவரிக்கும் (27 தெற்குச் சித்திரை வீதி) மிகச்சில எண்களே குறுக்கீடு!!! மேலமாசி வீதி வீட்டில் வளர்ந்தது பண்பாட்டின் வளர்ச்சி. இதையெல்லாம் வேறிடத்தில் ஒரு நாள் விளக்கமாகச் சொல்லுவேன்.

நிற்க. 

அரசி மீனாள் எப்படி (ஒரு ‘சிறுதெய்வமான’) மதுரைவீரனைத் தன் சுற்றுப்புற வீதியொன்றில் கோயில்கொள்ளவைத்தாள்?? மதுரைவீரன் கோயில் நினைவிருக்குதானே? சின்ன வயதில் தாத்தாவின் கையைப் பிடித்துகொண்டு அந்தத் தெருக்களில் சுற்றியபோது … மதுரைவீரன் கோயில் பக்கம் வந்தவுடனே ஓடிப்போய்த் தெருவின் எதிர்ச்சிறகில் நடப்பேன்! அவ்வளவு பயம் — அந்தச் சிலையைப் பார்க்கவே முடியாது அந்த வயதில்! அந்தக் கோயில் எப்போது அங்கே நிலைபெற்றது??

+++++++++++++++

கீழ்க்காணும் என் பதிவுகளை இயன்றபோது பார்க்கவும்:


(எங்கள் குடும்ப நண்பர் மனோகரைத் தயவுசெய்து தொடர்புகொள்ளவும். மதுரையைப் பற்றி இன்னொரு நூல் எழுதியிருக்கிறார் — Well Green Years; நாகமலைப் புல்லூத்துப் பற்றிய நூல்.)


(படங்கள் 5, 7 முனைப்பாகப் பார்க்கவும். 7-இல் பழைய கோட்டை தெரியும்.)


எழுகடல் தெருவை அடைத்துக்கொண்டிருக்கும் கலியுகநந்தி வாந்தி வரவழைக்கிறது.  :-(

++++++++++++++++

பிற பின்னர்.

உங்கள் சீரிய கட்டுரைத் தொடரைத் தொடர்கிறேன். வாழ்த்து.

அன்புடன்,
ராஜம்


மேற்கு வாயிலிருந்து புறப்படும் மேலக்கோபுரத்தெரு, டவுன்ஹால் ரோடு ஆக மாறுகிறது. இதை நீட்டினால் மதுரைப் புகைவண்டி நிலையம் வரும். எனவே இப்போது மேம்பாலத்துக்காக இந்தச் சாலை வளைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தச் சாலையிலிருந்து புகைவண்டி நிலையத்துக்குக் குறுக்காக இன்றும் ஒரு நடைமேம்பாலம் இருக்கிறது. இதன் வழியாகச் சென்றால் இந்தச் சாலையை மீண்டும் பிடிக்கலாம். இதுவே அரசரடிச் சாலை. அதுவே இப்போது கொச்சி நெடுஞ்சாலையாக மாறிக் கம்பம் குமுளி வழியாகக் கோட்டயம் வரை செல்கிறது. இந்தப் பாதையே சங்க காலத்தில் இடுக்கிவரை சென்று அங்கிருந்த Nelcyndaஎன்று யவனர்களால் அழைக்கப்பட்ட நெற்குண்டம் என்ற ஊருக்குப் போகும் பெருவழியாக இருந்திருக்கவேண்டும். மேற்குக் கடற்கரைப் பட்டினமான Nelcynda பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக யவன ஆசிரியர்கள் கூறுவதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

...
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/vMEC8XCoBJo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

rajam

unread,
Jan 31, 2015, 11:15:39 PM1/31/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com
இன்னொன்று குறிப்பிட மறந்தேன். 

///இது ஒருவேளை வடக்காவணிமூலவீதியாய் இருக்குமோ என்ற ஐயம் எனக்கு இருந்தது. குழப்பமாகவும் இருந்தது. தாங்கள் குறிப்பிடும் வீணை சண்முகவடிவு அம்மாள் அவர்களின் வீடு மேற்கு அனுமந்தராயன் கோவில் சந்தில் வடக்குக் கோடி என்கிறீர்கள். எனவே அது மேலக்கோபுரத்தெருவுக்கு மிக அருகில் இருப்பது. அதன்வழியாகத்தான் நக்கீரர் நகருக்குள் செல்கிறார் (மேற்கு வாசலில் நுழைந்து).
அவர் கேட்டது இந்த வீணைக்காரரின் முன்னோர்கள் வாசித்த யாழின் இசையாக இருக்குமோ?
அந்த இசைக்கேற்பப் பாடி ஆடிய மங்கை தங்களின் மூ----த்த பாட்டியாக இருக்குமோ? 
மேகங்கள் விலகுவதுபோல் உணர்கிறேன்.///
யானும் அப்படியே உணர்கிறேன். அந்தக் காலத்தில் எங்கள் உறவினர்களும் அப்பாவின் வங்கி அலுவலக நண்பர்களும் அப்பாவைச் சாடினார்கள்: ‘தேவதாசித் தெருவுக்கு, தேவதாசி வீட்டுக்கு, உன் பெண்ணை வீணை படிக்க அனுப்புகிறாயே’ என்று. உறுதியாக அப்பா சொல்லிவிட்டார்: 'கலை அங்கேதான் இருக்கிறது' என்று. பணக்கார வீட்டு அக்காமார்கள் சிலர் தங்கள் வீட்டுக்கு ஒரு பிராமண ஆசிரியையை வரவழைத்து வீணை கற்றுக்கொண்ட நாட்கள் அவை!
ஆகவே, மதுரையில் ஒரு சில தெருக்கள் ‘தாசி வீடுகள்’ அமைந்த தெருக்கள் என்று கருதப்பட்ட காலம் அது. பின்னாளில் அதே தெருவில் அமைந்த வீடுகளில் பிறந்து வளர்ந்த பெண்கள் கல்லூரியில் எனக்குத் தோழியர்கள். 
காலத்தின் கோலம்!
அன்புடன், ராஜம்



Oru Arizonan

unread,
Feb 1, 2015, 7:10:16 AM2/1/15
to mintamil
அருமையான கட்டுரைத்  தொடர்.

நம் நாட்டில்தான் பழமைச் சின்னங்கள் பாதுகாக்கப் படாமல் அழிக்கப்படுகின்றன.  பணத்திற்காக எதையும் பெயர்த்தெடுத்து விற்றுவிடுகறார்கள்.  நம் இளம்தலைமுறையோ அந்நியநாட்டு மோகம் என்ற மதுவில் மயங்கிக்கிடக்கிறது.  இந்நிலையில் நமது பழமையைப் பிற்காலத்திற்காகப் பதியும் தங்கள் பணியைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 8, 2015, 7:45:42 AM2/8/15
to Pandiyaraja, mintamil
வணக்கம் ஐயா.
அருமை, அருமை.
மதுரை பற்றிய கட்டுரையைப் படிக்கப் படிக்க மனமெல்லாம் அருள் நிறைகிறது.
ஆதாரங்களுடன் கூடிய தங்களது இந்தப் பதிவிற்குத் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தொன்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் தங்களது இந்த முயற்சிக்கு நன்றிகள் பல.

2015-01-31 20:51 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
இடைக்காலப் பாண்டியர் எழுச்சிபெற்று களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இவர்களின் ஆட்சி கி.பி.966 வரை தொடர்ந்தது. இக் காலத்தில்தான் சங்ககாலப் பாண்டியர் இருந்து ஆண்ட அரண்மனைப் பகுதி கோவிலாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

சுயம்புலிங்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான மரங்களின் படிமங்கள் ஆகும்.
எனவே சுயம்புலிங்கங்களை இடமாற்றம் செய்யமுடியாது.
மதுரையைப் போன்றே திருப்பூவணம், திருப்புத்தூர், காளையார்கோயில் முதலான சுயம்புலிங்கங்கள் இருந்த இடங்களிலும் பாண்டியர் கோட்டை கட்டியுள்ளனர்.  ஆனால் அரண்மனைகள் இல்லை.
எனவே மதுரையில் கோயில் அரண்மனை இரண்டுமே கோட்டையின் உள்ளேயே அமைந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.

தங்களுடன் மதுரையின் கோட்டை உள்ளே சென்று பார்க்க ஆவலுடன் தொடர்ந்து வருகிறேன் ஐயா.

Pandiyaraja

unread,
Feb 11, 2015, 1:31:18 AM2/11/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com
அன்பின் அம்மையார் அவர்களுக்கு,
தாங்கள் நேரம் எடுத்து இங்கு பதிவுசெய்த செய்திகளுக்கு மிக்க நன்றி. அருமையான படங்களுடன், தங்களின் மலரும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. ஓவியர் திரு தேவதாஸ் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியின் பழைய மாணவர். என் இன்னொரு மதினியார் ஸ்ரீரங்கம் சீதா அவர்களின் வகுப்புத் தோழர். அவர் சென்னையில்தான் இருக்கிறார் என்பது செய்தி. பார்க்க முயல்கிறேன். தாங்கள் சுட்டியுள்ள பதிவுகளையும் பார்த்தேன். மிக்க நன்றி. வீணை சண்முகவடிவு அம்மாள் வீடு பற்றிய செய்தி எனது நெடுநல்வாடை கட்டுரைக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதனைத் திருத்தி எழுதும்போது இத் தகவலைப் பயன்படுத்திக்கொள்வேன். மல்லல் மூதூர் மதுரைக்கும் உதவியாக இருக்கலாம். போகப் போகத் தெரியும். நான் ஆசிரியராக இருந்தபோது புதுப்புது பாடங்களைக் கேட்டு வாங்கிக் கற்றுக்கொடுப்பேன். இப்படித்தான் FORTRAN II - புத்தகத்தைப் படித்துப் படித்துச் சொல்லிக்கொடுத்தேன். முதல் chapter நடத்தும்போது அடுத்த chapter எப்படி இருக்கும் என்று தெரியாது. இருட்டில் Torch light அடித்துக்கொண்டே செல்வது போல. இன்று மல்லல் மூதூர் கட்டுரையும் இப்படித்தான். Torch அடித்துக்கொண்டேதான் செல்கிறேன். திருப்பிப் பார்க்கும்போது இடையில் தெரிந்த தகவல்கள் உதவும். அப்படித்தான் மேல அனுமந்தராயர் கோவில் தெரு செய்தியும். எனவே அதற்கு மிக்க நன்றி.
எனக்காக நேரம் செலவழித்த தங்களுக்கு மீண்டும் என் நன்றி.
ப.பாண்டியராஜா

...

Pandiyaraja

unread,
Feb 11, 2015, 1:43:41 AM2/11/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com

அன்பின் நண்பர்கள் திங்களன், அரிசோனன், காளை அவர்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து படித்து வருவோருக்கும் மிக்க நன்றி. இராசம் அம்மையார் அவர்களுக்குத் தனிப்பட எழுதியுள்ளேன். அவர்களுக்கும் மிக்க நன்றி.
இத்துடன் மல்லல் மூதூர் மதுரை - அடுத்த கட்டுரையை அனுப்பியுள்ளேன். இது மதுரையின் புறநகர்ப் பகுதியைப் பற்றியது. தகவல்கள் சேகரிக்கக் காலம் அதிகமாவதால் இடைவெளியும் அதிகமாகிறது. அடுத்த கட்டுரை இன்னும் தாமதமாகலாம்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

5. சங்க கால மதுரை

 

5.2 சங்ககால மதுரையின் புறநகர்ப் பகுதிகள்

சங்க காலத்தில் மதுரைநகர் நான்கு ஆவணிமூல வீதிகளுக்குள் அடங்கி இருந்தது எனப் பார்த்தோம். இந்த ஆவணிமூல வீதிகளுக்கு அன்றைக்கு என்ன பெயர் இருந்தது எனத் தெரியவில்லை. இவற்றை ஒட்டியே மதுரையின் கோட்டை அமைந்திருந்தது. கோட்டைக்கு வெளியே நாற்புறங்களிலும் அகலமும் ஆழமும் கொண்ட அகழி இருந்தது. இந்த அகழியை ஒட்டி கோட்டையைச் சுற்றிலும் ஒரு பாதை இருந்திருக்கவேண்டும். இந்தப் பாதையே கோட்டையின் நான்கு வாயில்களையும் இணைக்கும் பாதையாக இருந்திருக்கவேண்டும். இதுவே அன்றைய வெளிவீதி. அதாவது, இன்றைய மாசிவீதிகள் சங்க கால மதுரையின் வெளிவீதிகளாக இருந்திருக்கின்றன. அந்த வெளிவீதிகளை ஒட்டியும் மக்கள் வாழ்விடங்கள் அமைந்திருந்தன. அவை புறஞ்சேரி எனப்பட்டன. இந்தப் புறஞ்சேரிகள் மதுரைக் கோட்டைக்கும், வையை ஆற்றுக் கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த சோலைகளின் நடுவே இருந்தன.

1. புறஞ்சேரிகள் – பாடுவோர் பாக்கமும் ஆடுவோர் சேரியும்

மதுரை நகரின் புறஞ்சேரிகளைப் பற்றிப் பண்டை இலக்கியங்கள் நமக்குப் பல செய்திகளைத் தருகின்றன. இவற்றில் மதுரைக்காஞ்சி கூறுவதைப் பாருங்கள்.

இயங்கு புனல் கொழித்த வெண் தலைக் குவவு மணல்

       கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்

       தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்

       கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்

340    அவிர் அறல் வையைத் துறைதுறைதோறும்

       பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி

அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும்  -  மதுரைக்காஞ்சி

இதன் உரை:-

டிவரும் நீர் கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய

காடுகளும் சோலைகளும் சூழ்ந்த நீரடையும் கரைகள்தோறும்,

தாதுக்கள் சூழ்ந்த கோங்கினையுடைய பூவும் (ஏனை)மலர்களும் பரந்து

மாலையைப் போன்று ஒழுகி ஓடும் பெருநீர் நன்கு வருகின்ற

ஒளிர்கின்ற அறலையுடைய வையையின் துறைகள்தோறும்             340

பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த,

நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும் -

புதிதாக உருவான ஒரு குடியிருப்புப் பகுதி புதுமைப் பொலிவுடன் திகழும். ஆனால் நெடுங்காலமாய் இருந்துவரும் குடியிருப்புப் பகுதி, ஆங்காங்கே இடிந்த சுவர்களுடனும், பாழடைந்த கட்டிடங்களுடனும், சிதைந்த கூரைகளுடனும் காணப்படும், இதைத்தான் புலவர் அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கை என்று கூறுகிறார். எனவே இந்தப் புறநகர்ப் பகுதிகளும் மதுரையைப் போலவே மிகவும் பழமை வாய்ந்தவை எனத் தெரிகிறது. இங்கு குறிப்பிடப்படும் பகுதி பெரும்பாணர்களின் குடியிருப்பாகும்.

வைகையில் பெருவெள்ளம் வரும்போது முதலில் பாதிப்படைவது இந்தப் பாக்கங்கள்தான். மதுரையில் பெருவெள்ளம் வரும்போது அந்த ஊர்மக்கள் பரபரப்புடன் பேசிக்கொள்வதைப் பரிபாடல் அழகாகப் படம்பிடித்துக்காட்டுகிறது.

கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார்
மாதர் மட நல்லார் மணலின் எழுதிய
பாவை சிதைத்தது என அழ ஒருசார்
அக வயல் இள நெல் அரி கால் சூடு
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார்
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார்
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார்
பாடுவார் பாக்கம் கொண்டு என
ஆடுவார் சேரி அடைந்து என- பரிபாடல் 7 : 23 - 32

பாடுகின்ற பாணரின் பாக்கமும் ஆடுகின்ற விறலியர் சேரியும் வைகைநீரால் சூழப்பட்டன என மக்கள் பேசிக்கொள்வதாக இங்குக் காண்கிறோம்.

இந்தப் பெருவெள்ளத்தைக் காண்பதற்குக் கோட்டைக்குள் இருக்கும் மக்கள் அனைவரும் ஆற்றைநோக்கி விரைகின்றனர். இந்தக் கூட்ட நெரிசலில் புறஞ்சேரி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதை,

சேரி இளையர் செலவரு நிலையர் – பரிபாடல் 6 : 38

என்ற இன்னொரு பாடல் அடி உணர்த்துகிறது.

2. வைகையின் துறைகள்

வையை ஆறு பண்டுதொட்டு மதுரையை ஏறக்குறையத் தொட்டுக்கொண்டு ஓடுகிறது. மதுரை மக்கள் வையையில் நீராடி மகிழ ஆற்றில் பல இடங்களில் இறங்குதுறைகள் இருந்தன. அவற்றில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் அழகிய துறை என அமைந்திருந்தது திருமருத முன்துறை அல்லது மருதந்துறை. வருசநாட்டுப் பகுதியிலிருந்து புறப்பட்டு வரும் வையை, நறுமணம் கமழும் பலவித வண்ண மலர்களைச் சுமந்துகொண்டு இத்துறையை அடைகிறதாம்.

அழகிய மலர்களான போர்வையைப் போர்த்து, அருமையான முத்தாரம் போன்ற மென் குமிழ்களாகிய வெண் நுரைகளை மிதக்கவிட்டு, இன்மணத்தோடு இத் துறையை அடையும் வெள்ளப் பரப்பு, சந்தனக் குழம்பு பூசிய வையை மடந்தையின் முன்றானை போன்று தோன்றுவதால் இதனை திருமருத நீர்ப்பூந்துறை என்கிறது பரிபாடல் (பரிபாடல் 11 : 26 – 30).

 பெருந்துறை என்றொரு துறையைப் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இத்துறையின் வட கரையில்தான் கவுந்தி அடிகள் கோவலன் கண்ணகியோடு வந்து சேர்வதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வைகையைக் கடப்பதற்காகப் பலவித ஓடங்கள் அங்கே நின்றிருந்ததாகச் சிலம்பு கூறுகிறது. குதிரைமுக ஓடம், யானைமுக ஓடம், சிங்கமுக ஓடம் ஆகியவை அங்கே இருந்தன (சிலம்பு – மதுரைக்காண்டம் – புறஞ்சேரி இறுத்த காதை – 176 – 180). . எனவே இதுவே திருமருதமுன்துறையாக இருக்கலாம்.

வைகை மதுரைக்கு மேற்கிலிருந்து வருவதால் மதுரையின் வடக்குப் பகுதியை ஒட்டியே செல்கிரது. எனவே மதுரையின் வடக்குவெளிவீதியிலிருந்து பல இடங்களில் ஆற்றுக்குச் செல்லும் பாதைகள் அமைந்திருக்கின்றன. அவை ஆற்றை அடையும் இடங்களில் மக்கள் நீராடுவதற்கு வசதியாகப் படிகள் கட்டப்பட்டிருந்தன. இன்றும், ஓபுளா படித்துறை, திருமலைராயர் படித்துறை, அனுமார் கோயில் படித்துறை, பேச்சியம்மன் படித்துறை ஆகியவை உண்டு. இப்போதெல்லாம் வைகையில் பெரும்பாலும் நீர்வரத்து அற்றுப்போனதால் இந்தப் படித்துறைகள் மறைந்துகொண்டுவருகின்றன.


3. புறஞ்சேரிகள் – அறம்புரி மாந்தர் புறஞ்சேரி

பெருந்துறையில் இருந்த பெரிய ஓடங்களில் ஏறாமல், சற்றுத் தள்ளிச் சென்று ஒரு தனித்த மரப்புணையில் கவுந்தியடிகள் முதலியோர் ஏறி வைகையின் தென்கரையை அடைகிறார்கள். அங்கே கோட்டைச் சுவருக்குச் சற்று வெளியே,

அறம்புரி மாந்தரன்றிச் சேராப்

புறஞ்சேரி மூதூர் புக்கனர் – என்கிறது சிலப்பதிகாரம். (புறஞ்சேரியிறுத்த காதை 195,6)

இது மதுரைக் கோட்டையின் கிழக்கு வாயிலுக்கு அயலதாக இருந்த முனிவர் இருப்பிடம் என்பார் அடியார்க்குநல்லார். கவுந்தியடிகள் சமணத்துறவியாதலால் இந்த இடம் சமணர்பள்ளியாக இருந்திருக்கலாம். பின்னர் அடைக்கலக்காதையில் இதே இடத்தை,

அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய

புறஞ்சிறை மூதூர் – 7, 8 ; 115,116

என்கிறது சிலம்பு. ஓரிடத்தில் இதனைப் பொழிலிடம் என்றும் மற்றோரிடத்தில் இது இயக்கியின் இருப்பிடம் எனவும் சிலம்பு கூறுகிறது. இயக்கி என்பது சமண மதத்தார் வணங்கும் ஒரு காவல் தெய்வம் ஆகும். எனவே மதுரைக் கோட்டைக்கு வெளியே பாணர்களின் சேரியன்றி முனிவர்கள் வாழுமிடங்களும் இருந்திருக்கின்றன.

4. புறஞ்சேரிகள் – இடையர் சேரி

பத்துப்பாட்டில் நெடுநல்வாடை என்னும் பாடல் மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடுவது என்பது அறிஞர் கருத்து. இது பாடலில் நேரடியாக குறிக்கப்படவில்லையெனினும் அதன் பாட்டுடைத் தலைவன் ஒரு பாண்டிய மன்னன் என்று பாடல் கூறுகிறது. எனவே அப் பாடலில் வரும் மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் மதுரையே எனத் துணியலாம். அப் பாடலின் தொடக்கத்தில் மதுரைக்கு வெளியே நெடுந்தொலைவில் மாடுகளைக் கிடைபோட்டுக் காத்திருக்கும் கோவலர்களைப் பற்றிய செய்தி உள்ளது. இந்தப் பாடலில் வருபவர் அனைவரும் மதுரையைச் சார்ந்தவரே என்பதால் இந்த இடையர்கள் மதுரைக்காரர்களே எனலாம். அந்நாளில் பெரும் செல்வர்கள் நிறைய பசுமாடுகளைக் கொண்ட மந்தைகள் வைத்திருப்பர். அவற்றை ஊருக்கு வெளியில் உள்ள பட்டி எனப்படும் மாட்டுத் தொழுவங்களில் அடைத்திருப்பர். ஒவ்வொருநாளும் அந்த மாட்டுக் கூட்டத்தை அருகிலுள்ள மலைக்கு அழைத்துச் சென்று மாலையில் வீடுதிரும்புவது வழக்கம். சில காலங்களில் மாடுகளை மலையிலேயே தங்கவைத்து இருப்பதும் உண்டு. அவ்வாறு செய்வதுதான் கிடைபோடுவது. கிடைபோடாத காலங்களில் மாடுகள் ஒவ்வொரு நாளும் காலையில் மேயச் சென்று மாலையில் வீடு திரும்பும்.

இவ்வாறு கிடைபோட்டிருக்கும் மாடுகளை நெடுநல்வாடையும், கிடைபோடாமல் வீடு திரும்பும் மாடுகளை முல்லைப்பாட்டும் கூறுகின்றன. முல்லைப்பாட்டு ஓர் அகத்திணைப் பாடலேயாயினும், அதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியனே என்பதுவும் அறிஞர் கருத்து. இங்கும் பாடலின் தொடக்கத்தில் மேய்ந்து திரும்பும் ஆநிரை பற்றிக் கூறப்பட்டுள்ளது. தலைவியின் செவிலியரான சில முதிய பெண்கள் போர்மேற் சென்றிருக்கும் தலைவன் எப்போது திரும்புவான் என இறைவாக்கு கேட்பதற்காக மாலையில் நெல்லும் மலரும் தூவி இறைவனை வேண்டுகிறார்கள். அப்போது, அவர்களுக்கு எதிரில் இளங்கன்றுகள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன. அவை மாலையில் தம் தாய்ப்பசுக்கள் வரத் தாமதமாவதால் பசியுடன் குரல் எழுப்புகின்றன. அப்போது அங்கிருக்கும் ஓர் இடைச் சிறுமி, அவற்றைப் பார்த்து, அது அன்னையர் வரும் நேரம்தான் என ஆறுதல் கூறுகிறாள். இதனையே அந்த முது பெண்டிர் விரிச்சி எனப்படும் இறைவாக்காகக் கொள்கிறார்கள். இந்த இடம் நிகழ்வதாகப் புலவர் கூறுவது, ‘அருங்கடி மூதூர் மருங்கில்’ என்கிறார். கோட்டையும், அகழியும் சூழ்ந்த அரிய காவலையுடைய மூதூரின் பக்கத்தில் என்பது இதன் பொருள். மருங்கு என்பதற்குப் பக்க ஓரம் அல்லது எல்லை என்று பொருள். எனவே விரிச்சி கேட்கும் பெண்கள் கோட்டைக்கு வெளியில் நிற்கிறார்கள். அங்கு மேயப்போன பசுக்களின் இளங்கன்றுகள் கயிற்றினால் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன. எனவே கோட்டைக்கு வெளியே மாட்டுத் தொழுவங்களும், அவற்றை மேற்பார்க்கும் இடையர் குடியிருப்புகளும் இருந்திருக்கும் என்பது தெரிகிறதல்லவா? மிக அண்மைக்காலம்வரை மதுரையின் இன்றைய மேலமாசிவீதி – அன்றைய வெளிவீதி – யை அடுத்து நிறைய மாடுகளைக் கொண்ட குடியிருப்புகள் இருந்தன. பாண்டியர் காலத்தில் புறஞ்சேரிகளாக இருந்த இப் பகுதி, நாயக்கர் காலத்து விரிவாக்கத்துக்குப் பின்னர் நகரின் உட்பகுதியாக ஆன போதிலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளாக இல்லை என்பதைப் பதினெட்டாம் நூற்றாண்டு மதுரைப் படங்கள் தெளிவாகக் கூறுகின்றன. எனவே சங்க கால மதுரையில் கோட்டைக்கு மேற்கில் உள்ள பகுதி இடையர் சேரியாக இருந்திருத்தல் கூடும்.


5. புறஞ்சேரிகள் – யவனர் சேரி

தமிழ்நாட்டில் உரோமைய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் மதுரையும் ஒன்று. மதுரை நகரின் கோட்டை வாயிலில் யவனர்கள் காவலாளிகளாக இருந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது.

கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு மதுரைக் காண்டம் - ஊர்காண்காதை - 67

மதுரை வீதிகளில் படலைக் கண்ணி பரேர் எறுழ் திணிதோள் முடலை யாக்கை முழு வலி மாக்கள் வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ்சிறந்து, வேண்டுவயின் திரிந்ததாக நெடுநல்வாடை (31 - 36) கூறுகிறது. இவர்கள் யார் என்பது பாடலில் குறிப்பிடப்படவில்லை-யெனினும் அவர்கள் யவனரே என்று இராசமாணிக்கனார் உள்படப் பலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மதுரை நகரின் வடமேற்கு மூலையில் ஒரு நூற்பு ஆலை தொடங்குவதற்காகத் தோண்டியபோது அங்கு உரோமைய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. எனவே மதுரைக்கோட்டைக்குப் புறத்தே – குறிப்பாக – வடமேற்குப்பக்கத்தில் யவனர் குடியிருப்பு இருந்திருக்கலாம்.

இந்த யவனர்கள் முல்லைப்பாட்டுத் தலைவனின் (நெடுஞ்செழியன்?) போர்ப்பாசறையில் மன்னனுக்குரிய கூடாரத்தை அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
60     மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
       வலி புணர் யாக்கை வன்கண் யவனர்      
       புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்முல்லைப்பாட்டு 59 - 62

என்ற அடிகள் இதனை உணர்த்தும். இத்துணை அளவு மன்னனுக்கு நெருக்கமாக இருந்த யவனர் நகருக்குள்ளேயே இருக்கை அமைத்து இருந்தனரா, நகருக்கு வெளியே சேரி அமைத்து இருந்தனரா என்பது ஆயத்தக்கது.

6. மதுரை – வயல்வெளி

வைகைக் கரையை அடுத்து மதுரையைச் சுற்றி வயல்வெளிகள் இருந்தன. தோட்டங்கள் கொண்ட பண்ணைகள் இருந்தன. வைகை நீரால் நிரப்பப்பட்ட ஏரிகள் இருந்தன. வாழைத்தோட்டமும் கமுகுத்தோப்புகளும் நிறைந்திருந்தன.

அங்கண் அகல்வயல் ஆர்கலி கலித்த

வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்

கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெரும் குலை

25     நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு

தெண் நீர்ப் பசும் காய் சேறு கொள முற்ற– என்று நெடுநல்வாடை (21 - 26) கூறுகிறது.

புள்ளணி கழனியும், பொழிலும் பொருந்தி

வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்

காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்

வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை – சிலம்பு – புறஞ்சேரியிறுத்த காதை – 191-4

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.         

7. மதுரை - காவற்காடு

மதுரைக் கோட்டையைச் சுற்றிலும் மரங்கள் அடர்ந்த காடு இருந்தது.

கலை தாய, உயர் சிமையத்து,

மயில் அகவும், மலி பொங்கர்,

மந்தி ஆட, மா விசும்பு உகந்து

முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் – மதுரைக்காஞ்சி 332 - 335

என்ற அடிகள் கருங்குரங்குகள் தாவித்திரிய உயர்ந்த உச்சிகளில் மயில்கள் அகவ, நெருங்கிய பூங்கிளைகளில் குரங்குகள் ஆட, விண்ணைத் தீண்டுமளவுக்கு உயர்ந்துள்ள மரங்களில் பெருங்காற்று மோத - இவ்வாறு பல மரங்கள் நிறைந்த சோலைகளைப் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது.

மதுரைக்கு வெளியே,

நளிகொள் சிமைய, விரவுமலர் வியன்கா – அடர்ந்து படர்ந்த மேற்பரப்பை உடைய, பல்வித மலர்கள் கலந்து காணப்படும் அகன்ற சோலைகளை நெடுநல்வாடை (அடி 27) கூறுகிறது.

அருமிளை உடுத்த அகழி – என்கிறது சிலம்பு (புறஞ்சேரியிறுத்த காதை 183). மிளை என்பது காவற்காடு.



வைகை வடகரையிலிருந்து மதுரையின் தோற்றம். இது வரையப்பட்ட ஆண்டு 1858. ஆற்றை ஒட்டி மதுரையைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த மரங்களின் தோற்ரத்தைக் காணலாம். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

8. வைகையும் மதுரைக் கோட்டையும்

வையைப் பெருநதி மதுரையை ஏறக்குறைய தொட்டுக்கொண்டு செல்வதாகப் பார்த்தோம். இன்றும் சென்னையிலிருந்து மேலூர் வழியாக மதுரைக்கு வருகிறவர்கள் வைகைப் பாலத்தைக் கடந்தவுடன் மதுரையின் வடக்கு வெளிவீதியும், கிழக்குவெளிவீதியும் சந்திக்கின்ற இடத்தில்தான் இறங்கவேண்டும். இந்த முனைதான் வைகைக்கு வெகு அருகில் இருப்பது. சங்க காலத்திலும் வைகை ஆறு மதுரைக் கோட்டைக்கு வெகு அருகில் சென்றிருக்கவேண்டும். பெருவெள்ளம் வரும்போது வைகை நீர் கரையைத் தாண்டி, அகழியை நிறைத்து, கோட்டை மதிலில் மோதுவதாகப் பரிபாடல் கூறுகிறது.

நளிகடல் முன்னியது போலும் தீநீர்

வளிவரல் வையை வரவு;

வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர்தாய்

அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு – பரிபாடல் 12 : 7 - 10

இருப்பினும் வையையில் நீர் அருகி ஓடும் நேரங்களில் ஆற்றிலிருந்து நிலத்தடிப் பாதை வழியாக நீர் அகழிக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் பரிபாடல் கூறுகிறது. இந்த நிலத்தடிப் பாதையில் செல்லும் நீருடன் பலவித மலர்களும் சென்று அகழிக்குள் விழுவது ஒரு களிறு தன் துதிக்கையில் நீரை முகந்து பூக்களுடன் சேர்த்து பூமாரி பெய்வதுபோல் தோன்றுகிறது எனப் பரிபாடல் கூறுகிறது. இந்த அமைப்பை நெடுமால் சுருங்கை நெடுவழி அன்று அப் பாடல் கூறுகிறது (பரிபாடல் 20: 98 – 107).. எனவே, சுரங்க வழியாக அன்று அகழிக்கு வையையின் நீர் கொண்டுவரப்பட்டுள்ளது.

9. மதுரை – அகழியும் மதிலும்

மதுரைக் கோட்டையைச் சுற்றி இருந்த அகழி வைகை நீரால் நிரப்பப்பட்டது என்று கண்டோம். இதனை மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு என்னும் மதுரைக்காஞ்சி (351). மண்ணுள்ள அளவும் ஆழமாகத் தோண்டப்பட்ட இந்த அகழியில் தெள்ளிய மணி போன்ற நீர் தேங்கியிருந்தது.

மதுரைக் கோட்டையில் பலவித பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டை மதில் புரிசை எனப்படும். விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை என்கிறது மதுரைக்காஞ்சி (352). பலவிதமான படைக்கருவிகள் பொருத்தப்பட்டு விண்ணளவு உயர்ந்து நின்றதாம் மதுரைக்கோட்டை. அந்தப் பல்வித படைகள் என்னென்ன என்று சிலப்பதிகாரம் விவரமாகக் குறிப்பிடுகிறது. வளைந்து தானே எய்யும் இயந்திர வில்லும், கருங்குரங்கு போன்ற பொறியும், கல்லினை வீசும் கவண்பொறியும், கொதிக்கின்ற நெய்யும், செம்பை உருக்கிக் கொட்ட உதவும் பெரிய பானைகளும், இரும்பைக் காய்ச்சி ஊற்ற உலைகளும், கற்களை நிறையக் கொண்ட கூடைகளும், தூண்டில் வடிவான பொறிகளும், கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்டலைப் பறவை போன்ற அடுப்பும், அகழியினின்றும் ஏணிவைத்து ஏறுகின்றோரைத் தள்ளும் இரும்புக் கப்புகளும், கழுவும், அம்புக் கட்டுகளும், அம்புகளை ஏவும் சிறிய அறைகளும், தம்மை நெருங்கினார் தலையை நெருக்கித் திருகும் மரங்களும், மேலே ஏறி மதிலின் உச்சியைப் பிடிப்பாரின் கையைக் குத்தும் ஊசிப்பொறிகளும், பகைவர்மேல் சென்று தாக்கும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறியும், மதில் மேல் ஏறினாரைக் கொம்பால் குத்திக் கிழிக்கும் பன்றிப்பொறியும், மூங்கில் வடிவான பொறிகளும், கதவுக்கு வலிமை சேர்க்க குறுக்காக வைக்கும் எழுக்களும், கதவை இறுக்கத் தாங்கும் சீப்புகளும், கதவைத் தாங்கிப் பிடிக்கும் கணையங்களும், எறிகோலும், கைவேலும், நீள வேலும், ஆகியவை மதுரைக் கோட்டையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது (மதுரைக்காண்டம் – அடைக்கலக் காதை – 207 – 217)

கோட்டை வாயிலின் உச்சியில் பாண்டிய நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் நடந்த போரில் பெற்ற வெற்றியைக் குறிக்கக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

கோட்டை வாயிலின் நிலை வலிமை மிக்கதாகவும், தெய்வங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டதாகவும் இருந்தது; வாயிலில் பெரிய இரட்டைக் கதவுகள் இருந்தன; அவற்றின் எளிதான இயக்கத்துக்காக ஒழுங்காக நெய் தடவப்படுவதால் அவை கருத்துக் காணப்பட்டன. வாயிலின் உச்சியில் உயர்ந்த மாடங்கள் கட்டப்பட்டிருந்தன. போரில்லாக் காலங்களில் திறந்திருக்கும் வாயிலின் வழியாக மக்கள் வெள்ளம் வைகைப் பெருக்குப் போல எப்போதும் சென்றுவந்து-கொண்டிருந்தனர்.

தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு

வையை அன்ன வழக்குடை வாயில் – மதுரைக்காஞ்சி 353 – 356

என்று மதுரைக்காஞ்சி பெருமையுடன் கூறுகிறது.

இந்த வாயிலின் வழியே மதுரைக்குள் நுழைந்து பார்ப்போமா – அடுத்த கட்டுரையில்.



On Sunday, February 8, 2015 at 6:15:42 PM UTC+5:30, kalai wrote:
வணக்கம் ஐயா.
அருமை, அருமை.
மதுரை பற்றிய கட்டுரையைப் படிக்கப் படிக்க மனமெல்லாம் அருள் நிறைகிறது.
ஆதாரங்களுடன் கூடிய தங்களது இந்தப் பதிவிற்குத் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தொன்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் தங்களது இந்த முயற்சிக்கு நன்றிகள் பல.

2015-01-31 20:51 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
இடைக்காலப் பாண்டியர் எழுச்சிபெற்று களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இவர்களின் ஆட்சி கி.பி.966 வரை தொடர்ந்தது. இக் காலத்தில்தான் சங்ககாலப் பாண்டியர் இருந்து ஆண்ட அரண்மனைப் பகுதி கோவிலாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

சுயம்புலிங்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான மரங்களின் படிமங்கள் ஆகும்.
எனவே சுயம்புலிங்கங
...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 19, 2015, 12:54:00 AM2/19/15
to Pandiyaraja, mintamil
வணக்கம் ஐயா.

2015-02-11 12:13 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
7. மதுரை - காவற்காடு


படத்தில் ஒட்டகம் மதுரை வந்துள்ளதை அறிய முடிகிறது.

மதுரையின் வடக்கிலிருந்து பார்த்தால், தெற்கே திருப்பரங்குன்றமும் பசுமலையும் தெரியும்.
ஆனால் இப்படத்தில் அரண்மனைக்குப் பின்னால் மலைகள் வரையப்பெற்றுள்ளனவே?
இது ஒரு கற்பனை ஓவியமா?

அன்பன்
கி.காளைராசன்

வைகை வடகரையிலிருந்து மதுரையின் தோற்றம். இது வரையப்பட்ட ஆண்டு 1858. ஆற்றை ஒட்டி மதுரையைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த மரங்களின் தோற்ரத்தைக் காணலாம். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

Pandiyaraja

unread,
Feb 19, 2015, 1:38:54 AM2/19/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
மிக்க நன்றி காளை ஐயா!
இது ஓவியம்தான். ஓவியர்கள் 'கண்முன்' காட்சிகளை வரையும்போது அவற்றில் கற்பனையைக் கலப்பார்களா எனத் தெரியவில்லை. பொதுவாகக் கலக்கூடாது என்றாலும் ஓர் அழகுணர்ச்சிக்காகப் பின்புலத்தை மட்டும் விருப்பப்படி அமைப்பார்களா எனத் தெரியவில்லை. இந்தப் பின்புலமும் முழுதும் கற்பனை அல்ல. நீங்களே சொல்கிறீர்கள் - திருப்பரங்குன்றம், பசுமலை ஆகிய குன்றுகள் இருக்கின்றன என்று. எனவே இது கற்பனை கலந்த உண்மையான பின்புலமா என்றும் தெரியவில்லை. இது வரையப்படும்போது ஓவியர் நின்றிருந்த இடம் எதுவாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்.
இதைப் பாருங்கள்.

இது பழைய கல்பாலம். இப்போது இல்லை. இதன்மேல்தான் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு படங்களிலும் முன்னால் தெரிவது கிழக்குக் கோபுரம். ஆனால் முதல் படத்தில் (ஓவியத்தில்)அதற்குப் பின்னால் உள்ள (தெற்குக்)கோபுரம் சற்று விலகியிருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் அந்தக் கோபுரம் ஒட்டித் தெரிகிறது.
எனவே இந்தக் கல்பால இறக்கத்திலிருந்து இன்னும் சற்று மேற்காகப் போனால் பின்புறமுள்ள கோபுரம் விலகித் தெரியும். கல்பால இறக்கத்திலிருந்து மேகே சென்றால் ராயர்படித்துறை எதிர்புறம் வரும் (கல்பனா டாக்கீஸ் எதிர்கரை) நாயக்கர் காலத்தில் அதுவே முக்கியமான படித்துறையாக இருந்திருக்கும் - திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது.  அங்கு இப்போது புதிய causeway போட்டிருக்கிறார்கள். அந்த முனையிலிருந்து (ஓர் உயரமான கட்டிடத்தின் உச்சியிலிருந்து) பார்த்தால் பின்புலம் தெளிவாகத் தெரியும். சரஸ்வதி மஹால் போன்ற உயரமான கட்டிடங்கள் அங்கு இருக்கின்றன. சென்று பார்க்க ஆசை. அனுமதி பெற்றாலும் அவ்வளவு உயரம் ஏறமுடியுமா தெரியவில்லை.
எனினும் தங்களின் ஆர்வமிக்க கேள்விக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா


On Thursday, February 19, 2015 at 11:24:00 AM UTC+5:30, kalai wrote:
வணக்கம் ஐயா.

2015-02-11 12:13 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
7. மதுரை - காவற்காடு


படத்தில் ஒட்டகம் மதுரை வந்துள்ளதை அறிய முடிகிறது.

மதுரையின் வடக்கிலிருந்து பார்த்தால், தெற்கே திருப்பரங்குன்றமும் பசுமலையும் தெரியும்.
ஆனால் இப்படத்தில் அரண்மனைக்குப் பின்னால் மலைகள் வரையப்பெற்றுள்ளனவே?
இது ஒரு கற்பனை ஓவியமா?

அன்பன்
கி.காளைராசன்

வைகை வடகரையிலிருந்து மதுரையின் தோற்றம். இது வரையப்பட்ட ஆண்டு 1858. ஆற்றை ஒட்டி மதுரையைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த மரங்களின் தோற்ரத்தைக் காணலாம். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

8. வைகையும் மதுரைக் கோட்டையும்

வையைப் பெருநதி மதுரையை ஏறக்குறைய தொட்டுக்கொண்டு செல்வதாகப் பார்த்தோம். இன்றும் சென்னையிலிருந்து மேலூர் வழியாக மதுரைக்கு வருகிறவர்கள் வைகைப் பாலத்தைக் கடந்தவுடன் மதுரையின் வடக்கு வெளிவீதியும், கிழக்குவெளிவீதியும் சந்திக்கின்ற இடத்தில்தான் இறங்கவேண்டும். இந்த முனைதான் வைகைக்கு வெகு அருகில் இருப்பது. சங்க காலத்திலும் வைகை ஆறு மதுரைக் கோட்டைக்கு வெகு அருகில் சென்றிருக்கவேண்டும். பெருவெள்ளம் வரும்போது வைகை நீர் கரையைத் தாண்டி, அகழியை நிறைத்து, கோட்டை மதிலில் மோதுவதாகப் பரிபாடல் கூறுகிறது.

நளிகடல் முன்னியது போலும் தீநீர்

வளிவரல் வையை வரவு;

வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர்தாய்

அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு – பரிபாடல் 12 : 7 - 10

இருப்பினும் வையையில் நீர் அருகி ஓடும் நேரங்களில் ஆற்றிலிருந்து நிலத்தடிப் பாதை வழியாக நீர் அகழிக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் பரிபாடல் கூறுகிறது. இந்த நிலத்தடிப் பாதையில் செல்லும் நீருடன் பலவித மலர்களும் சென்று அகழிக்குள் விழுவது ஒரு களிறு தன் துதிக்கையில் நீரை முகந்து பூக்களுடன் சேர்த்து பூமாரி பெய்வதுபோல் தோன்றுகிறது எனப் பரிபாடல் கூறுகிறது. இந்த அமைப்பை நெடுமால் சுருங்கை நெடுவழி அன்று அப் பாடல் கூறுகிறது (பரிபாடல் 20: 98 – 107).. எனவே, சுரங்க வழியாக அன்று அகழிக்கு வையையின் நீர் கொண்டுவரப்பட்டுள்ளது.

9. மதுரை – அகழியும் மதிலும்

மதுரைக் கோட்டையைச் சுற்றி இருந்த அகழி வைகை நீரால் நிரப்பப்பட்டது என்று கண்டோம். இதனை மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு என்னும் மதுரைக்காஞ்சி (351). மண்ணுள்ள அளவும் ஆழமாகத் தோண்டப்பட்ட இந்த அகழியில் தெள்ளிய மணி போன்ற நீர் தேங்கியிருந்தது.

மதுரைக் கோட்டையில் பலவித பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டை மதில் புரிசை எனப்படும். விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை என்கிறது மதுரைக்காஞ்சி (352). பலவிதமான படைக்கருவிகள் பொருத்தப்பட்டு விண்ணளவு உயர்ந்து நின்றதாம் மதுரைக்கோட்டை. அந்தப் பல்வித படைகள் என்னென்ன என்று சிலப்பதிகாரம் விவரமாகக் குறிப்பிடுகிறது. வளைந்து தானே எய்யும் இயந்திர வில்லும், கருங்குரங்கு போன்ற பொறியும், கல்லினை வீசும் கவண்பொறியும், கொதிக்கின்ற நெய்யும், செம்பை உருக்கிக் கொட்ட உதவும் பெரிய பானைகளும், இரும்பைக் காய்ச்சி ஊற்ற உலைகளும், கற்களை நிறையக் கொண்ட கூடைகளும், தூண்டில் வடிவான பொறிகளும், கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்டலைப் பறவை போன்ற அடுப்பும், அகழியினின்றும் ஏணிவைத்து ஏறுகின்றோரைத் தள்ளும் இரும்புக் கப்புகளும், கழுவும், அம்புக் கட்டுகளும், அம்புகளை ஏவும் சிறிய அறைகளும், தம்மை நெருங்கினார் தலையை நெருக்கித் திருகும் மரங்களும், மேலே ஏறி மதிலின் உச்சியைப் பிடிப்பாரின் கையைக் குத்தும் ஊசிப்பொறிகளும், பகைவர்மேல் சென்று தாக்கும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறியும், மதில் மேல் ஏறினாரைக் கொம்பால் குத்திக் கிழிக்கும் பன்றிப்பொறியும், மூங்கில் வடிவான பொறிகளும், கதவுக்கு வலிமை சேர்க்க குறுக்காக வைக்கும் எழுக்களும், கதவை இறுக்கத் தாங்கும் சீப்புகளும், கதவைத் தாங்கிப் பிடிக்கும்

...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 19, 2015, 11:05:02 AM2/19/15
to Pandiyaraja, mintamil
வணக்கம் ஐயா.

தங்களது விளக்கத்திற்கு நன்றி ஐயா.
2015-02-19 12:08 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

இது ஓவியம்தான். ஓவியர்கள் 'கண்முன்' காட்சிகளை வரையும்போது அவற்றில் கற்பனையைக் கலப்பார்களா எனத் தெரியவில்லை. பொதுவாகக் கலக்கூடாது என்றாலும் ஓர் அழகுணர்ச்சிக்காகப் பின்புலத்தை மட்டும் விருப்பப்படி அமைப்பார்களா எனத் தெரியவில்லை. இந்தப் பின்புலமும் முழுதும் கற்பனை அல்ல. நீங்களே சொல்கிறீர்கள் - திருப்பரங்குன்றம், பசுமலை ஆகிய குன்றுகள் இருக்கின்றன என்று. எனவே இது கற்பனை கலந்த உண்மையான பின்புலமா என்றும் தெரியவில்லை. இது வரையப்படும்போது ஓவியர் நின்றிருந்த இடம் எதுவாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்.
இதைப் பாருங்கள்.


கல்பாலம்.
ஒளிப்படம் எடுத்த இடமும்,
ஓவியர் நின்று வரைந்த இடமும் ஒன்றே எனத் தோன்றுகிறது.

Pandiyaraja

unread,
Feb 22, 2015, 12:18:55 PM2/22/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com

இந்த முறைக்கு முற்றிலும் மாறான வேறொரு முறை அன்றைய தமிழகத்தில் பின்பற்றப்பட்டது.  ஒரு வட்டமான பலகையில் ஏதேனும் ஒரு விட்டத்தின் எதிர்முனைகளில் இரண்டு குச்சிகளைச் செங்குத்தாக நிறுவவேண்டும். காலையின் அந்த இரண்டு குச்சிகளின் நிழல்களும் மேற்குப்பக்கம் ஒருபோகாகச் சாய்ந்திருக்கும். நேரம் ஆகஆக அந்த நிழல்களுக்கிடையே உள்ள தூரம் குறைந்து சரியான உச்சிப்பொழுதில் அந்த இரு நிழல்களும் ஒரே நேர்கோட்டில் அமையும். அதுவே அந்த இடத்தில் சரியான நண்பகல் – உள்ளூர் நேரம் மதியம் 12 மணி (Local Time). அந்தச் சரியான நண்பகலில் மனை வகுக்கும் பணிகள் தொடங்கப்படுவதாக நெடுநல்வாடை கூறுகிறது. 
      மாதிரம்
      விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
      இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
75    ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்துநெடுநல்வாடை 72-75

இதன் பெயர் தமிழரின் இருகோல் குறிநிலை. வடவரின் வாஸ்த்து முறையில் கூறப்படுவது ஒருகோல் குறிநிலை. தமிழரின் இருகோல் குறிநிலை சரியான நேரத்தை அளக்கப் பயன்படுவது. வடவரின் ஒருகோல் குறிநிலை சரியான திசையை அளக்கப் பயன்படுவது. எனவே தமிழரின் கட்டிடக்கலையியல் வடவரின் சாஸ்த்திரங்களினின்றும் வேறுபட்டது என அறியலாம். இந்தக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நகரமே மதுரை என்பது தெளிவாகும்.
குறிப்பு:- இருகோல் குறிநிலை என்ற கட்டுரை தினமணி – 09-06-2013 அன்று ஞாயிறு தமிழ்மணி பகுதியில் வெளியாகியுள்ளது. அக் கட்டுரை பிற்சேர்க்கையாக இந்தக் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. (பிற்சேர்க்கை – 3)
ஒரு முன்னோட்டக் குறிப்பு:-
நெடுநல்வாடையில் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுக்க நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டதாகப் பார்க்கிறோம். அதாவது அரண்மனை கட்ட கயிறு கட்டி வாணம் தோண்டியிருக்கிறார்கள். எனில் அதுவரை மன்னன் வாழ்ந்தது எங்கே? அப்பொழுதுதான் அரண்மனை உருவானதா? ஏற்கனவே உருவாக்கப்பட்ட நகர் மையத்தில் அப்போது அரண்மனை கட்டப்பட்டதா? அல்லது நகரமுமே அப்பொழுதுதான் எழுப்பப்பட்டதா? 
இன்னும் நாம் நகருக்குள் நுழையவேயில்லை. மதுரை நகருக்குள் நுழைந்து அதன் உள்ளமைப்பைத் தெருத்தெருவாகப் பார்த்த பின்னர் அதன் மையப்பகுதியான அரண்மனைக்குச் செல்வோம் இல்லையா? அப்போது இக் கேள்விக்குரிய பதிலைத் தேடுவோம்.

பார்வை:

1. MADURAI, INDIA: THE ARCHITECTURE OF A CITY by Julian S. Smith, partial fulfillment of the requirements for the degree Master of Architecture at the MASSACHUSETTS INSTITUTE OF TECHNOLOGY, February, 1976.

2. Madurai: Koyil Nakar, Holly Baker Reynolds, THE CITY AS A SACRED CENTER, International Studies in Sociology and Social Anthropology, Edited by Bandwell Smith and Holly Baker Reynolds, 1987.

பிற்சேர்க்கை-1

களவியல் என்ற இறையனார் அகப்பொருள்

முச்சங்க வரலாறு


        தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர்.
       
அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், 2முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என  இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும்,  களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து  நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக  எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட  மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்ப. 

இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார்  ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர்  பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், 4குருகும்,  வெண்டாளியும், 5வியாழமாலை அகவலும் இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவை. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார் வெண்தேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்து என்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது.

இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும்,
சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங் குன்றூர் கிழாரும்,
இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை
மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என
இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று
நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன
நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும்,
புற நானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும்,
எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும்,
என்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும்
என்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது 1ஆயிரத்து எண்ணூற்று
ஐம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார்
கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்
பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினார்
மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை என்ப.

சிலப்பதிகாரத்தில் உரைப்பாயிரம் என்ற பகுதிக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையின் பகுதி

இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் (1) இடைச் சங்கத்துத் (2) தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும், வெள்ளூர்க் காப்பியனாரும், சிறுபாண்டரங்கனாரும், மதுரை ஆசிரியன் மாறனாரும், துவரைக் கோமகனும், கீரந்தையாரும் என்று இத் தோடக்கத்தார் ஐம்பத்து ஒன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழுநூற்றுவர் தம்மால் பாடப்பட்ட கலியும் குருகும் வெண்டாளியும் முதலான செய்யுள் இலக்கியம் ஆராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும் கருதுவது அங்கு ஒன்று உண்டோ காப்பியக் கவிகள் காம எரி எழ விகற்பித்திட்டார்” (1585) எனச் சிந்தாமணியுள்ளும், “நாடகக் காப்பியம் நன்னூல் நுனிப்போர்” (19-80) என மணிமேகலையுள்ளும், பிறவற்றுள்ளும் கூறினமையானும் சொற்றொடர்நிலை, பொருட்டொடர்நிலை என்னும் தொடர்நிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்து என உணர்க.

 

பிற்சேர்க்கை – 3

இரு கோல் குறிநிலை

முனைவர் ப.பாண்டியராஜா

 

பத்துப்பாட்டு நூல்களுள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை என்னும் பாடலில் வரும் இருகோல் குறிநிலை என்ற சொற்றொடரைப் பற்றி ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

பாண்டிய மன்னனுக்கு அரண்மனை உருவாக்குவதற்காக, முதலில் நூல் கயிறிட்டு இடம் குறிக்க, ஒருநாள் நண்பகலில் உச்சிப்பொழுதில் வேலையைத் தொடங்குகிறார்கள்.

---------- ---------- ------------, மாதிரம்

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு

ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து - நெடு 72-75

என்ற இந்த அடிகள் அதனைக் கூறுகின்றன. இதன் பொருள்,

---, திசைகள்(எல்லாவற்றிலும்)

விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,

இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக,

ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில்,

என்பதே.

நீங்கள் ஒரு திறந்தவெளியில் நிமிர்ந்து நிற்கும்போது, உங்கள் தலைக்கு நேர் மேலே இருக்கும் வானத்தின் உச்சிக்கு zenith என்று பெயர். நீங்கள் வடக்கு நோக்கி நின்றால், வடக்கையும், தெற்கையும் இந்த உச்சிப்புள்ளியின் வழியாக இணைக்கும் ஒரு பெருவட்டத்திற்கு meridian great circle என்று பெயர். இந்த நடுப்பெருவட்டம் வானத்தைக் கிழக்கு, மேற்கு என இரு சமபாகங்களாகப் பிரிக்கிறது. கிழக்கில் எழும் எந்த ஒரு வான்பொருளும் (celestial object) இந்த நடுவட்டத்தைக் கடந்துதான் மேற்கே செல்லவேண்டும். இவ்வாறு கடந்து செல்வதைக் கடப்பு(transit) என்பர். ஞாயிறு இவ்வாறு கடந்துசெல்லும் நேரம்தான் அந்த இடத்தின் உச்சிப்பொழுது(நண்பகல்) ஆகும்.

இந்த உச்சிப்பொழுதை மிகச் சரியாகக் கணிப்பதற்கு, அன்றைய தமிழகத்தில் ஒரு சிறிய கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வட்டமான கல் அல்லது மரப்பலகையில், அதன் விட்டத்தின் இரு முனைகள் அருகிலும் இரண்டு கோல்களைச் செங்குத்தாக நட்டிருக்கவேண்டும். இந்தக் கோல்கள் சரியாக வடக்கு-தெற்கு திசையில் இருக்கும்வண்ணம் வட்டத்தை, ஒரு திறந்தவெளியின் சமதரையில் வைத்திருக்கவேண்டும். காலையில், இந்தக் கோல்களின் நிழல்கள் மேற்குப்புறமாகச் சாய்ந்த இணைகோடுகளாகத் தெரியும். நேரம் ஆக-ஆக இந்த இணைகோடுகள் கிழக்கு நோக்கி நகரும். சரியாக 12 மணிக்கு, இந்த இணைகோடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே நேர்கோடு ஆகும். (பின்னர், மாலையில் அவை மீண்டும் பிரிந்து கிழக்குப்புறமாகச் சாய்ந்த இணைகோடுகள் ஆகும்.)

மன்னனின் அரண்மனையைக் கட்டும் வேளையில், முதலில் மனைவகுக்க, சரியான நண்பகல் நேரத்தில், தெய்வத்தைத் தொழுது, நூலடித்துக் கட்டி வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதைத்தான் புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

இது ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடியது. ஆனால், இதற்கு நச்சினார்க்கினியர் என்ன உரை எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம். ஆனால், அதற்கு முன்னர், உங்களுக்கு ஓர் ஐயம் தோன்றியிருக்கவேண்டும். நண்பகலில், ஞாயிறு தலைக்கு நேர் மேலே இருக்கும்போது, செங்குத்தாக நடப்பட்ட ஒரு கோலுக்கு நிழல் விழுமா? விழும். காரணம், உங்கள் கேள்வியில் நீங்களாக ஒன்றைத் தவறாக  அனுமானித்துக்கொள்கிறீர்கள்! அதாவது, நண்பகலில் ஞாயிறு தலைக்கு நேர் மேலே இருக்கும் என்பது! நண்பகலில் ஞாயிறு நம் தலைக்கு நேர் மேலே உச்சிப்புள்ளியில் ஆண்டிற்கு இரு முறைதான் வரும். சித்திரை மாதத்தில் ஒரு நாளும், ஆடி-ஆவணி மாதத்தில் ஒருநாளுமே. அதுவும், இடத்திற்கேற்றபடி மாறும். இப் பாடலில் குறிப்பிடப்படுவது மதுரை என்பதால், மதுரைக்கு(10 degree North Latitude) உரிய நாள்கள் சித்திரை 15(April 28), ஆடி 31(August 16). மற்ற நாட்களில் ஞாயிறு நண்பகலில் தலைக்கு நேர் மேலே உள்ள நடுப்பெருவட்டத்தில் சற்று வடக்குப் பக்கமாகவோ, தெற்குப் பக்கமாகவோ சாய்ந்து இருக்கும். இதில் ஓரொரு நாட்கள் முன்னே-பின்னே இருந்தால் பெரிய மாறுபாடு தெரியாது. எனவே, ஐந்து நாட்கள் முன்னரும் பின்னரும் எடுத்துக்கொண்டால், சித்திரை 10 முதல் 20 வரை, மதுரையில் நண்பகலில் தலைக்கு நேர் மேலே ஞாயிறு இருக்கும். அப்போது செங்குத்தாக நடப்பட்ட கோலில் நிழல் விழாது. (இவற்றோடு இன்னும் இரண்டிரண்டு நாட்களைச் சேர்த்து முன்னேழு-பின்னேழு என்ற அக்கினி நட்சத்திர நாட்களை இவ்வாறுதான் கணக்கிட்டார்கள் போலும்). இதனை ஒட்டியே நச்சினார்க்கினியரும் இதற்கு உரை எழுதுகையில், ‘இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்கொள்ளும் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச் சாரப்போகாத சித்திரைத் திங்களின் நடுவிற் பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே அங்குரார்ப்பணம்(திருமுளைச்சார்த்து) பண்ணி' என உரை எழுதுகின்றார். இதற்கு விளக்கவுரை எழுதிய பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் ‘சித்திரைத் திங்கள் பத்தாநாள் தொடங்கி, இருபதாநாள் முடிய நிகழும் நாட்களில் யாதாமொரு நாள்' எனக் கூறுகிறார்.

இந்த நாட்களில், ஞாயிறு கிழக்கிலிருக்கும்போது மேற்குப்பக்கம் சாய்ந்திருக்கும் நிழல், நேரம் ஆக-ஆகக் குறைந்து, நண்பகலில் கோலுக்கு நேர் கீழே மறைந்து, பின்னர் ஞாயிறு மேற்கில் செல்லும்போது கிழக்குப்பக்கமாக நீழும். ஆனால், இதற்கு இரண்டு கோல்கள் தேவையில்லையே? இதுவே புலவரின் எண்ணமாயும் இருந்திருந்தால், ஒரு கோல் குறிநிலை என்றுதான் கூறியிருப்பார். புலவர் கூறியிருப்பது இத்தகைய வட்டத்தில் அமைந்த இருகோல் குறிநிலையே என்பதற்கு வலுவான மற்றொரு ஆதாரமும் உண்டு.

சிந்துசமவெளி நாகரிகத்தைப் பற்றிப் படித்திருப்பீர்கள். மொகஞ்சாதாரோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, 5000 ஆண்டுகட்கு முன்னர் இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தைப் பற்றியது அது. அங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, ஒரு வட்டமான கல். சிறுவர் உருட்டும் வண்டியின் சக்கரத்தைப் போன்று, நடுவில் ஒரு பெரிய துளையுடன் உள்ளது. அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சிறு பள்ளங்கள் உண்டு.

 முதலில் இதனை ஆய்ந்தோர் இதனை ஒரு சிறுவர் விளையாட்டுப் பொருள் எனக் கூறிவிட்டனர். ஆனால், இதனை மறு ஆய்வு செய்த போலந்து நாட்டைச் சேர்ந்த மவுலா என்ற அறிஞர், இது ஒரு வானியல் கருவி என்று கூறுகிறார். அந்த இரு சிறு பள்ளங்களிலும் இரண்டு குச்சிகளைச் செங்குத்தாக நட்டு வைத்துச் சூரியனின் அன்றாட ஓட்டத்தைத் துல்லியமாக அளக்க இதனைப் பயன்படுத்தினர் என்று கூறுகிறார். மேலும் அதில் காணப்பட்ட வரிசையான சிறிய பள்ளங்களிலும் குச்சிகளை நட்டு, ஆண்டின் பருவகால மாற்றங்களையும் கண்டறிந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். ‘வானியல் பேசும் வட்டக்கற்கள்' என்று நாளிதழ் செய்தியாக (தினமணி 27-12-1980) அது வெளிவந்திருக்கிறது.

எனவே சிந்துசமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய அந்த வட்டக்கற்களே தமிழ்நாட்டிலும், ஞாயிற்றின் அன்றாட ஓட்டத்தை அளக்கப் பயன்பட்டது எனக் கொள்ளலாம். நெடுநல்வாடைப் புலவர் நக்கீரர் கூறும் இருகோல்குறிநிலை என்பதுவும் இதைப் போன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டதே என்பது தெளிவு.

எனவே, ஒருதிறம் சாரா அரைநாள் அமயம் என்பது ஒவ்வொரு நாளும் அமையும் அமயம் என்றும், அப்படி ஏதோவொரு நாளில் பாண்டியன் அரண்மனைக்கு நூலிட்டனர் என்றும் தெளியலாம்.

ப.பாண்டியராஜா

அன்புடையீர்,
முந்தைய கட்டுரையைப் பார்த்த அனைவருக்கும், பதிவுசெய்த அனைவருக்கும் மிக்க நன்றி. இத்துடன் அடுத்த கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது. நாம் மதுரை நகருக்குள் நுழையும் நேரம் தள்ளிக்கொண்டே போகிறது. இக் கட்டுரையில் ஒரு வான ஊர்தியில் ஏறி மதுரையைச் சுற்றிப் பார்க்கிறோம். Bird's eye view. அதாவது, மதுரையின் அமைப்பை ஆராய்கிறோம்.
மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

5. சங்க கால மதுரை

 

5.3 சங்ககால மதுரையின் அமைப்பு

1. உருவாகிய ஊரும் உருவாக்கப்பட்ட ஊரும்.

நான் படித்து வளர்ந்த ஊர் பசுமலை. மதுரைக்கு மேற்கில் உள்ளது. அதன் ஒரு பகுதி கிருஷ்ணாபுரம் எனப்படும். மிகப்பெரும்பாலும் கள்ளர் வகுப்பு மக்களைக் கொண்ட பகுதி இது. செக்காணூரணி, உசிலம்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட கள்ளர்நாட்டுப் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து குடியமர்ந்தவர்கள். மதுரையில் பல பஞ்சாலைகள் தொடக்கப்பட்டபோது அங்கு வேலை செய்வதற்காக அப்பகுதியிலிருந்து பலர் இந்த ஊருக்கு வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் வந்து சேர்ந்து வீடுகள் கட்டிக்கொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக ஊர் பெரிதாக ஆகியது. இது உருவாகிய ஊர். இதன் தெருக்கள் கோணல்மாணலாய் இருக்கும். சந்துகளும் முட்டுச்சந்துகளும் நிறைய இருக்கும்.

திடீரென இப்பகுதிக்குக் கிறிஸ்தவ மிஷனரிகள் வந்தனர். ஏற்கனவே திருமங்கலத்தில் இருந்து ஊழியம் செய்தவர்கள் நகருக்கு அருகாமையில் இருக்கவேண்டும் என்பதற்காக இங்கு வந்தனர். கிருஷ்ணாபுரத்தை ஒட்டி, மலையடிவாரத்தில் ஒரு பெரிய நிலப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார்கள். உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, தொழிற்பயிற்சிப் பள்ளி, இறையியல் பயிற்சிப்பள்ளி எனப் பல கல்விக்கூடங்களை நிறுவினார்கள். அங்குப் பணிபுரிவோர் வாழ ஓர் ஊரை உருவாக்கினார்கள். அங்கு ஜோன்ஸ்புரம், டீச்சர்ஸ் லைன், செமினரி லைன் எனப் பல பகுதிகளை உருவாக்கினார்கள். இப்பகுதிகளின் தெருக்கள் ஒருபோகாகவும் (parrallel) இடைத் தெருக்கள் செங்குத்தாகவும் இருக்கும். கிணறு, திறந்தவெளி, விளையாட்டு இடம் எனப் பல பகுதிகள் இடையிடையே இருக்கும். இது உருவாக்கப்பட்ட ஊர்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது மதுரை உருவாகிய நகரமா அல்லது உருவாக்கப்பட்ட நகரமா?

2. சங்க கால மதுரை உருவாகிய ஊரா/ உருவாக்கப்பட்ட ஊரா?

இன்றைய மதுரை சங்ககால மதுரையின் விரிவாக்கமே என்று முன்பு கண்டோம். எனவே இன்றைய மதுரை புதிதாக உருவாக்கப்பட்ட பல பகுதிகளைக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிய ஊர். இதன் அடிப்படை சங்ககால மதுரையே. அந்தச் சங்க கால மதுரை உருவாகியதா, உருவாக்கப்பட்டதா?

சங்க கால மதுரையின் அமைப்பைப் பார்ப்போம். ஊரின் நடுவே பாண்டிய மன்னனின் அரண்மனை இருந்தது. இது ஏறக்குறைய சதுரவடிவில் இருந்தது. அதைச் சுற்றி நால்வேறு தெருக்கள் இருந்ததாக மதுரைக்காஞ்சியும், சிலப்பதிகாரமும் தெரிவிக்கின்றன.

நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர - மதுரைக்காஞ்சி 522
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் சிலம்பு-மதுரைக்காண்டம் 14/212

நகரத்தைச் சுற்றிக் கோட்டையும் அகழியும் இருந்தன. இதை வைத்துப் பார்த்தால் மதுரையில் இன்றைய மீனாட்சி அம்மன் கோவிலே பாண்டிய மன்னனின் அரண்மனை இருந்த இடம். இதைப் பல இலக்கிய வரலாற்று அறிஞர்கள் உறுதிசெய்துள்ளனர். ஏற்கனவே நாம் கண்ட சான்றுகளின்படி, நான்கு ஆவணிமூலவீதிகளைக் கொண்ட பகுதியே சங்க கால மதுரை. கோட்டைக்கு வெளியில் இருந்த அகலமான அகழியை அடுத்து நகரைச் சுற்றி இருந்த புறச்சுற்று வீதியே, பின்னர் அந்தக் கோட்டையைத் தகர்த்து விரிவாக்கிய நாயக்கர்கள் ஏற்படுத்திய மாசிவீதிகள். எனவே இன்றைய மாசி வீதிகளுக்கு உட்பட்ட பகுதியே அன்றைய மதுரையின் எல்லைகள் என்பது தெளிவாகிறது. இதன் அமைப்பு இதுதான்:

கோ இல் என்பது அரசனின் இல்லம். இப்போது கோயில். இன்றைய பெயர்களைக் கொண்டு பார்த்தால், அரண்மனையைச் சுற்றியுள்ள வீதி ஆடிவீதி. இந்த ஆடிவீதியை அடுத்து அரண்மனை வளாகத்தின் சுற்றுச்சுவர் இருந்திருக்கவேண்டும். இது கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டதால், இந்த வளாகத்துக்குக் கிழக்குப்பக்கம் ஒரு பெரிய வாயில் இருந்திருக்கும். இதுவே அன்றைய அரண்மனையின் நுழைவு வாயில். இதன் வழியாகத்தான் கண்ணகி புயலாய்ப் புகுந்திருக்கிறாள்.

இந்த வளாகத்துக்கு வெளியே இருப்பது சித்திரை வீதி. இது நான்கு பகுதிகளைக் கொண்டது. அந்தந்தப் பகுதியின் திசையின் பெயருடன் சேர்த்து அழைக்கப்படும், கிழக்குப் பக்கம் இருப்பது கிழக்குச் சித்திரை வீதி அல்லது கீழச் சித்திரை வீதி. இந்தச் சித்திரை வீதிகளை நாம் வலஞ்சுழியாக (Clockwise) வந்தால் நமக்கு வலப்பக்கம் அரண்மனை(கோயில்) வளாகச் சுவர்தான் இருக்கும். இடப்பக்கம் மட்டுமே குடியிருப்புப் பகுதிகள் இருக்கும். இன்றைக்கு மிகப்பெரும்பாலும் கடைகள் ஆகிவிட்டன. சித்திரை வீதிகளை அடுத்து அவற்றுக்கு இணையாக நான்கு பக்கங்களிலும் இருப்பன ஆவணிமூலவீதிகள். இவற்றுக்கு இருமருங்கிலும் குடியிருப்புகள் உண்டு. அவையும் இப்போது மிகப்பெரும்பாலும் கடைகளாக மாறிவிட்டன.

இந்தக் குடியிருப்புகளுக்குப் பின்னால் கோட்டை இருந்துள்ளது. ஆனால் இடைப்பட்ட பகுதியில் பெரிய திறந்தவெளிகள் இருந்துள்ளன. அவற்றில் உழைப்பாளி மக்கள், குறிப்பாக இடையர்கள் வாழ்ந்துள்ளனர். கோவலன் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த இடைக்குல மங்கை மாதரி குடியிருந்தது இப்பகுதியில்தான். குறிப்பாக நகரின் வடக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் – ஆவணிமூல வீதிக்கும், மாசிவீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் - அண்மைக்காலம் வரை இடையர்கள் குடியிருந்துள்ளனர் என்பதை இந்தப் படம் காட்டுகிறது.


கோட்டை கொத்தளங்கள் அடங்கிய ஒரு அரண்மனையும் அதற்குத் துணைநிற்போர், சார்ந்தோர் ஆகியோர் வாழிடங்களும் கொண்ட ஒரு பகுதி என்பது பெரும்பாலும் உருவாக்கப்பட்டதே. ஆனால் இவற்றுள் பொதுமக்களின் வாழிடங்களும் அடங்கும் என்றால் ஒரு மொத்த நகரமே உருவாக்கப்பட்டுள்ளது இல்லையா! மதுரை அப்படிப்பட்ட ஒரு நகரமா?

வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் கொண்ட வரலாறு மதுரைக்கு இல்லை. ஆனால் பண்டைத் தமிழ்நூல்களில் மதுரை உருவாகிய செய்திகள் காணக்கிடக்கின்றன. இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் எழுதிய உரை இறையனார் அகப்பொருள் உரை அல்லது இறையனார் களவியல் உரை எனப்படுகிறது. இந்த நக்கீரர் களவியல் உரைகாரர் எனப்படுவார். இந்த நூல் 8-ஆம் நூற்றாண்டில் தோன்றி, 10-ஆம் நூற்றாண்டில் பதிவேறியது என்பர். இதில் பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்காகச் சங்கம் அமைத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுப் புலவர்கள் அவ்வப்போது பாடிய அருந்தமிழ்ப் பாடல்களைத் தொகுத்து வகைப்படுத்தி வெளியிட ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தமிழ்ச்சங்கம். மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக அந்த நூல் கூறுகிறது. முதல் தமிழ்ச்சங்கம் தென்மதுரையில் இருந்தது. இது இருந்த இடம் கடல்கொண்ட லெமூரியா என்று இப்போது அழைக்கப்படும் பகுதியாகும். இப்பகுதியைக் கடல் கொண்டது என்பர். அதன் பின்னர் பாண்டியர் வடக்கு நோக்கி வந்து கபாடபுரம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அப்போது அங்கே அவர்கள் உருவாக்கியதுதான் இரண்டாம் தமிழ்ச்சங்கம். இந்தக் கபாடபுரமும் கடற்கோளால் அழிந்துபோய்விட, பாண்டியர்கள் தற்போதுள்ள மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அப்போது அவர்கள் உருவாக்கியதே மூன்றாம் தமிழ்ச்சங்கம். இவை மூன்றும் முறையே, முதல், இடை, கடைச் சங்கங்கள் எனப்படும். இந்தச் சங்கங்கள் நிலவிய ஆண்டுகள், புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் பேணிய அரசர்கள், அவர்களின் எண்ணிக்கை, பாடல்களின் பெயர்கள் ஆகியவை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இந்தச் செய்தி முச்சங்க வரலாறு என்ற தலைப்பில் களவியல் உரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதி, இக் கட்டுரையின் இறுதியில் பிற்சேர்க்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (பிற்சேர்க்கை-1)

இந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகும் இன்னொரு செய்தி சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் கிடைக்கிறது. சிலப்பதிகாரத்தில் உரைப்பாயிரம் என்ற பகுதிக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையில் முச்சங்கங்களின் வரலாறும் கூறப்பட்டுள்ளது.(பிற்சேர்க்கை-2)

இவற்றினின்றும் பார்க்கும்போது மதுரை ஓர் உருவாக்கப்பட்ட நகரமே என்பது தெரியவருகிறது. ஆனால் முச்சங்க வரலாறு என்பதனையே மறுக்கும் ஆய்வாளர்கள் உண்டு. தென்மதுரை, கபாடபுரம், கடற்கோள் போன்றவை வெறும் கற்பனையே என்பாரும் உளர்.

மதுரை உருவாக்கப்பட்ட நகரம் எனில், அது எப்போது யாரால் உருவாக்கப்பட்டது? இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடையிறுக்கும் விதத்திலான சான்றுகள் இல்லை. ஆனால் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே மதுரையைப் பற்றிய செய்திகள் மேனாட்டுப் பயண, வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களினின்றும் கிடைக்கின்றன என்று பார்த்தோம். அந்தக் காலகட்டத்தை ஒட்டி எழுந்த இந்திய வரலாற்று ஆவணங்களில் மதுரையைப் பற்றிய தகவல்கள் இல்லை என்றே கூறலாம். எனினும் மதுரையின் அமைப்பு வடநாட்டு சிற்பக்கலை நூல்களில் கூறப்பட்டுள்ள நகர அமைப்பு பற்றிய குறிப்புகளுடன் பெரிதும் ஒத்துப்போவதைக் காணலாம்.

சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரான கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் தன் நூலான அர்த்தசாஸ்த்திரத்தில் ஒரு நகரம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சங்ககால மதுரையின் அமைப்பைத் தெரிந்துகொள்ள நமக்குப் பெரிதும் துணைபுரிவன பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான மதுரைக்காஞ்சியும், சிலப்பதிகாரமுமே. மதுரைக்காஞ்சி பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடுவது. 782 அடிகளைக் கொண்ட இப்பாடல் பத்துப்பாடில் உள்ள பாடல்களிலேயே மிகப் பெரியதாகும். மாங்குடி மருதனார் என்ற புலவரால் பாடப்பட்டது. இப் பாடலில் அன்றைய மதுரையின் அமைப்பும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

சாணக்கியரின் குறிப்புகளுடன் மதுரைக்காஞ்சியின் விவரணங்கள் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்று இங்குக் காட்டப்பட்டுள்ளது.

http://www.scribd.com/doc/86624483/Town-Planning-Concepts#scribd

1. According to Chanakya’s Arthashastra, a city should be located in the central part of the country so as to facilitate trade and commerce.

முழவு இமிழும் அகல் ஆங்கண்

விழவு நின்ற வியல் மறுகின்

துணங்கை அம்தழூஉவின் மணம் கமழ் சேரி

இன் கலியாணர் குழூப்பல பயின்றாங்கு

பாடல் சான்ற நல்நாட்டு நடுவண் – மதுரைக்காஞ்சி 327 - 331

2. The site elected for the purpose of this city should be quite large in area and on the banks of the river, or by the side of an artificial or natural lake, which never goes dry.

கோதையின் ஒழுகும் விரிநீர் நல் வரல்

அவிர் அரல் வையைத் துறைதுறைதோறும்

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி,

அழுந்துபட்டிருந்த பாண் இருக்கையும் – மதுரைக்காஞ்சி 339-342

3. Its shape should be circular, rectangular or square as would suit the topography. There should be water on all sides.

Separate areas should be provided for marketing different goods.

மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

ஓவுக்கண்டன்ன இரு பெரு நியமத்து – 364-365

மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்

நாளங்காடி நனந்தலைக் கம்பலை – 429-430

பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே

அல்லங்காடி அழிதரு கம்பலை – 543-544

4. There should be a wall around the town, which should be at least six dandas high and twelve dandas wide. Beyond this wall, there should be three moats of 14 feet, 12 feet and 10 feet wide to be built four arm-lengths apart. The depth should be three-fourth of width.

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க்கிடங்கின்

விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை

தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு

வையை அன்ன வழக்குடை வாயில் – 351- 356

5. Three-east west and three North – south roads should divide the town. The main roads should be eight dandas wide and other roads four dandas wide.

6. The palace should be in the central part. It should face either north or east.

7. The houses of priests and ministers should be on the south-east, traders, skilled workers, and kshatriyas on the east, the treasury, goldsmiths and industries on the south, forest produce on the northeast and doctors city fathers, the army commander, artists, on the south.

ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகி

சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும் – 491-492

---------

பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களும் – 498-499

8. Temples should be located in the center of the town.

மழுவாள் நெடியோன் தலைவன் ஆக

நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு – 455 - 458

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்

சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் – 466 - 467

பெரியோர் மேஎய் இனிதின் உறையும்

குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் – 473 - 474

செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து

இறும்பூது சான்ற நறும் பூஞ் சேக்கையும் – 485-487

9. Cemeteries should be located on the north and east of the town that for the higher caste to be located on the south. The depressed classes should be housed beyond the cemetery. There should be one well for every group of ten houses.


http://www.slideshare.net/ctlachu/ancient-system-of-town-planning-in-india

http://www.srmuniv.ac.in/downloads/townplaning.pdf

வைதீக நெறியாளர்களின் வேதங்களிலும் ஊர், நகர அமைப்புப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. வாஸ்த்து சாஸ்த்திரம் என்ற தலைப்பின்கீழ் வரும் நூல்களில் இந்த அமைப்பு முறை விளக்கப்பட்டுள்ளது. இந்த நூலின்படி நகர அமைப்பு

  1. Chaturmukham 2. Dandakam 3. Swastikam 4. Prastaram 5. Sarvatobhadram

6.  Nandyavartam 7. Padmakam 8. Karmukam

என்ற எட்டு வகைப்படும்.

இவற்றில் சதுர்முகம் என்ற முதலாவது அமைப்பு மதுரை நகர் அமைப்பில் காணப்படுகிறது.


http://www.srmuniv.ac.in/downloads/townplaning.pdf


http://vaastuveda.com/town-planning/

எனினும் வைதீக நெறியாளர் அமைப்பியலில் இறைவன் தங்கும் கோவிலே நகரின் மையமாகக் கொள்ளப்படுகிறது. மேலும் இக் கோயிலைச் சுற்றிலும் உள்ள இடம் நால்வகை வருணத்தாருக்குத் தனித்தனியே ஒதுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்து மதுரையில் மன்னனின் அரண்மனையே ஊரின் மையமாக இருந்துள்ளது. சங்க காலத்தில் தமிழ் மக்கள் நால்வகை வருணப்பிரிவில் பிரிக்கப்பட்டிருந்தனரா என்பதுவும் கேள்விக்குரியது. எனினும் வைதீக நெறியாளரின் வேதமுறை வாஸ்த்து சாஸ்த்திர நூலில் காணப்படும் பல கூறுகள் மதுரை நகர் அமைப்பில் அமைந்துள்ளதைக் காணலாம்.

மதுரை நகரின் அமைப்பை மிகவும் ஆழமாக ஆய்ந்துள்ள திரு.ஜூலியன் ஸ்மித் என்பார் கொடுத்திருக்கும் சர்வதோபத்ரம் என்ற அமைப்பிலும் மதுரையின் நகர அமைப்பு ஒத்து வருவதைக் காணலாம்.

http://dspace.mit.edu/handle/1721.1/34289

MADURAI, INDIA: THE ARCHITECTURE OF A CITY – BY Julian S.Smith

http://dspace.mit.edu/bitstream/1721.1/34289/1/02639082.pdf


ஏற்கனவே குறிப்பிட்டபடி, இங்கு 1- எனக் குறியிடப்பட்டுள்ள இடம் சங்ககால மதுரையில் மன்னனின் அரண்மனையாக இருந்திருக்கிறது. 2- என்பது ஆடி வீதிகளும் சித்திரை வீதிகளும். 3 என்பன ஆவணிமூல வீதிகள். இதுவே மதுரைக்காஞ்சியில் கூறியுள்ளபடி மக்கள் வாழும் பகுதியாக இருந்திருக்கிறது. 5 – என்பது காவல் தெய்வத்தின் கோயில். இன்றைய மதுரையில் அவ்விடத்தில் பழைய சொக்கநாதர் கோவில் இருக்கிறது. இதுவே மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ள மழு வாள் நெடியோனின் கோவிலாக இருந்திருக்கக்கூடும். பிற்காலத்தில் அரண்மனை இருந்த இடத்தில் சிவன் கோவில் கட்டப்பட்ட பின்னர், முதலில் நகர எல்லையில் இருந்த சிவன் கோவில் பழைய சொக்கநாதர் கோவில் என அழைக்கப்பட்ட்தாகக் கொள்ளலாம். 6- என்பது வைஷ்ணவி கோவில். அதற்கும் வடக்கே இருக்கும் 4-என்பது இறந்தோரைப் புதைக்கும்/எரிக்கும் இடமாகும்.

இங்கு ஒன்றை நினைவுகூர வேண்டும். கோவலன் கொலையுண்ட நேரத்தில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த இடைக்குலப் பெண்ணான மாதரி, அச் சமயத்தில் கோட்டைக்கு வெளியே திருமால் கோவிலுக்குச் சென்றிருக்கிறாள். அந்த இடத்தில்தான் அவள் கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேள்விப்பட்டு, நகருக்குள் வந்து கண்ணகிக்குத் தெரிவிக்கிறாள். கொலையுண்ட கோவலனை எரியூட்ட அங்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, அதனை மாதரி கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வைஷ்ணவி கோவில் இடத்தில் இன்றும் ஓர் அனுமார் கோவில் இருக்கிறது.

இப்பகுதிக்கு வடக்கே எதிர்ப்புறத்தில் வைகையின் வடகரையில் மதுரையின் இன்றைய மயான பூமியான தத்தநேரி இருக்கிறது என்பதுவும் இதனுடன் ஒத்துப்போகும் செய்தியாகும். சங்க காலத்தில் வைகையின் தென்கரையிலிருந்த மயான பூமி நகரின் விரிவாக்கக் காலத்தில் எதிர்ப்புறமான வைகை வடகரைக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது.

 சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம், வேதகாலத்து வாஸ்த்து சாஸ்த்திரம் ஆகியவற்றில் கூறியவற்றின் அடிப்படையில்தான் மதுரை நகர் அமைக்கப்பட்டது என்று கூறமுடியாது. சாணக்கியரின் காலத்துக்கும் முந்தையது நம் மதுரை. வேதகால நூல்களினின்றும் அடிப்படையிலேயே பெரிதும் மாறுபட்டது நம் மதுரையின் அமைப்பு. தமிழருக்கென்று நகர அமைப்பு முறைகள் இருந்திருக்கவேண்டும். நெடுநல்வாடையில் பாண்டிய மன்னனின் அரண்மனை எவ்வாறு உருவானது என்று வெகு விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

      நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
      தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
      பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்துநெடுநல்வாடை 76-78
இங்கே நூல் என்று குறிப்பிடப்படுவது அன்றைய தமிழ்நாட்டில் இருந்த கட்டிடக்கலை பற்றிய நூல்களே. மன்னர்க்குரிய மனை வகுக்கவே நூல்கள் இருந்திருந்தால் நகரங்கள் அமைப்பதற்கான நூல்களும் கட்டாயம் இருந்திருக்கவேண்டும். இலக்கணங்களைக் கற்று இலக்கியங்கள் படைப்பார் உண்டு. அந்த இலக்கணங்களே அவற்றுக்கு முன்பிருந்த இலக்கியங்களில் காணப்பட்ட ஒழுங்கமைவை நியதிகளாக மாற்றப்பட்டவைதானே. அதைப்போல மதுரையைப் போன்ற பெருநகரங்கள் அன்றைய மாந்தரின் பட்டறிவால் எழுப்பப்பட, அவற்றினின்றும் கட்டிடக்கலை நூல்கள் உருவாயின என்றும் கொள்ளலாம். 
தமிழ்நாட்டு நகர அமைப்பு வடவரின் நகர அமைப்புக்கு முற்றிலும் மாறுபட்டது என்பதை நிறுவ இன்னொரு சான்றும் உள்ளது. வடவரின் வாஸ்த்து சாஸ்த்திரத்தில் சங்குஸ்தாபனம் என்ற ஒரு முறை திசைகளைக் காணப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வட்டமான பலகையின் நடுவில் ஓர் உயரமான குச்சியைச் செங்குத்தாக நட்டுவைத்துக் காலையிலிருந்து சூரிய ஒளியில் அந்தக் குச்சியின் நிழலைக் கவனித்துவரவேண்டும். காலையில் குச்சியின் நிழல் மேற்கில் நீளமாகச் சாய்ந்து விழும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதன் நீளம் குறைந்துகொண்டே வரும். அந்த நிழலின் உச்சி, வட்டத்தின் விளிம்பைத் தொடும்போது வட்டத்தில் அந்த இடத்தைக் குறித்துக்கொள்ளவேண்டும். பின்னர் நண்பகலுக்குப் பின்னர் நிழல் கிழக்குப்பக்கம் சாய்ந்து நீண்டுகொண்டே போகும். அவ்வாறு செல்லும்போது அது வட்டத்தின் விளிம்பைத் தொடும் இடத்தையும் குறித்துக்கொள்ளவேண்டும். வட்டத்தின் விளிம்புகளில் இருக்கும் அந்த இரு புள்ளிகளையும் இணைத்தால் அதுவே கிழக்கு மேற்குத் திசை ஆகும். 
However, in earlier times a procedure called Shankustaapana was followed, wherein a gnomon was erected in the centre of the plot.  A circle was drawn with the bottom of the gnomon as it’s centre and a radius twice it’s length. Two points were marked where the shadow of the gnomon before and after noon met the circumference of the circle. The line joining these two points is the East-West line. Two circles are drawn at the East-West points with their distance as the radius. The intersecting points are the North and South points.
http://architectureideas.info/2009/12/vastu-principle-orientation/
...

தேமொழி

unread,
Feb 23, 2015, 1:55:15 AM2/23/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com
///

சிந்துசமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய அந்த வட்டக்கற்களே தமிழ்நாட்டிலும், ஞாயிற்றின் அன்றாட ஓட்டத்தை அளக்கப் பயன்பட்டது எனக் கொள்ளலாம். நெடுநல்வாடைப் புலவர் நக்கீரர் கூறும் இருகோல்குறிநிலை என்பதுவும் இதைப் போன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டதே என்பது தெளிவு.

///

சுவையான தகவல், அறிய தந்தற்கு  நன்றி ஐயா.

..... தேமொழி





On Sunday, February 22, 2015 at 9:18:55 AM UTC-8, Pandiyaraja wrote:

இந்த முறைக்கு முற்றிலும் மாறான வேறொரு முறை அன்றைய தமிழகத்தில் பின்பற்றப்பட்டது.  ஒரு வட்டமான பலகையில் ஏதேனும் ஒரு விட்டத்தின் எதிர்முனைகளில் இரண்டு குச்சிகளைச் செங்குத்தாக நிறுவவேண்டும். காலையின் அந்த இரண்டு குச்சிகளின் நிழல்களும் மேற்குப்பக்கம் ஒருபோகாகச் சாய்ந்திருக்கும். நேரம் ஆகஆக அந்த நிழல்களுக்கிடையே உள்ள தூரம் குறைந்து சரியான உச்சிப்பொழுதில் அந்த இரு நிழல்களும் ஒரே நேர்கோட்டில் அமையும். அதுவே அந்த இடத்தில் சரியான நண்பகல் – உள்ளூர் நேரம் மதியம் 12 மணி (Local Time). அந்தச் சரியான நண்பகலில் மனை வகுக்கும் பணிகள் தொடங்கப்படுவதாக நெடுநல்வாடை கூறுகிறது. 
      மாதிரம்
      விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
      இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
75    ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்துநெடுநல்வாடை 72-75

இதன் பெயர் தமிழரின் இருகோல் குறிநிலை. வடவரின் வாஸ்த்து முறையில் கூறப்படுவது ஒருகோல் குறிநிலை. தமிழரின் இருகோல் குறிநிலை சரியான நேரத்தை அளக்கப் பயன்படுவது. வடவரின் ஒருகோல் குறிநிலை சரியான திசையை அளக்கப் பயன்படுவது. எனவே தமிழரின் கட்டிடக்கலையியல் வடவரின் சாஸ்த்திரங்களினின்றும் வேறுபட்டது என அறியலாம். இந்தக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நகரமே மதுரை என்பது தெளிவாகும்.

[...]

Pandiyaraja

unread,
Apr 1, 2015, 1:29:25 PM4/1/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com
அன்புடையீர்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறது மதுரையைப் பற்றிய இந்தக் கட்டுரை. இங்குக் கூறப்பட்டுள்ளது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூலில் காணப்படும் மதுரையைப் பற்றிய செய்தி. இதை வடிவமைப்பதற்கு முன், மதுரையின் தெருக்களை எல்லாம் நேரில் சென்று பார்க்க எண்ணியிருந்தேன். அதனால்தான் இந்தத் தாமதம் ஏற்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. இனியும் தாமதிக்கவேண்டாமென்றுதான் இந்தப் பதிப்பு வெளிவருகிறது. நான் கூற நினைத்தவை எல்லாம் இதில் இல்லை. மனத்தளவில் மதுரையைச் சுற்றிவந்து இதனை எழுதியிருக்கிறேன். எனது அடுத்த மதுரைப் பயணத்துக்குப் பின் (?) நிறைய எழுதுவேன்.
அனைவருக்கும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

5. சங்க கால மதுரை

 

5.4 சங்ககால மதுரை

சங்க கால மதுரையின் உள் அமைப்பைத் தெரிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல் ஆகும். இது மதுரையைப் பற்றிய மிக விரிவான செய்திகளையும் கூறுகிறது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களில் ஒரு சில குறிப்புகளே உள்ளன. சங்க இலக்கியங்களை அடுத்து, சிலப்பதிகாரம் மதுரையைப் பற்றிய விரிவான செய்திகளைக் கூறுகிறது.

5.4.1 இலக்கியங்களில் மதுரை.

1. மதுரைக் காஞ்சியில் மதுரை

அ. பாண்டியன் வாயில்

மதுரை மாநகரைச் சுற்றிலும் மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு (அகழி) இருந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. அதை ஒட்டி விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை இருந்தது. புரிசை என்பது கோட்டை. கோட்டையின் மேல் பலவிதப் படைக்கலன்கள் வைக்கப்பட்டிருந்தன. கோட்டை வாயிலில் தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை இருந்தது. வலிமை மிக்க தொன்மைத் தெய்வமாம் கொற்றவையின் உருவம் செதுக்கப்பட்ட நெடிய நிலையில் நெய்படக் கரிந்த திண்போர்க் கதவுகள் இருந்தன. போர்க்கதவு என்பது இரண்டு பக்கமும் வந்து நடுவில் பொருதக்கூடிய இரட்டைக் கதவுகள். அவற்றில் உள்ள இரும்புப் பட்டைகளுக்கு எண்ணெய் தடவி விடுவதால் அவை கருத்துப்போய் இருந்தன. இந்த வாசல் நிலையின் மேல் மிக உயரமான மாடங்கள் இருந்தன. எப்போதும் ஆட்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதால் மதுரை நகர் வாயில் வையை அன்ன வழக்குடை வாயில் என்னப்பட்டது. இடையறாது வையை நதியில் நீரொழுக்கு ஓடிக்கொண்டே இருப்பதைப் போல மக்களின் நடமாட்டமும் மதுரை நகர் வாயிலில் இடையறாது இருந்துகொண்டிருந்தது.

மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்

      விண்ணுற ஓங்கிய பல் படைப் புரிசை

      தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை

      நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின்

355   மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு

      வையை அன்ன வழக்கு உடை வாயில்

என்கிறது மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி.

      வாயிலில் நுழைந்தவுடன் நமக்கு முன்னே நீண்டு அகன்று கிடக்கின்றது மன்னனது அரண்மனைக்கு நம்மை இட்டுச் செல்லும் நேர்வழி. அதற்குக் குறுக்காக இரண்டு பக்கங்களிலும் நீண்டு கிடக்கிறது நகரின் முக்கியத் தெரு. இவற்றை ‘ஆறு கிடந்தன்ன அகல்நெடும் தெரு’ என்கிறது மதுரைக்காஞ்சி. இத் தெருக்களின் இரு பக்கங்களிலும் வகை வகையாக வானம் மட்டும் எட்டியிருக்கும் மாடங்களைக் கொண்ட நல்ல இல்லங்கள் எழுந்து நிற்கின்றன.

கை பெற எழுந்து வானம் மூழ்கி

      சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்

யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்

பல்வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப  மதுரைக் காஞ்சி 357 - 359

புழை என்பது சாளரம் – ஜன்னல். வாயிலை ஒட்டி இருந்த தெருக்களில் பல இடங்களில் குழுக்குழுவாக மக்கள் இசை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

ஊருக்குள் நுழைந்தவுடன் இருப்பது நாளங்காடி எனப்படும் பகல்நேர வணிகம் நடைபெறும் இடம். இது ஓவியத்தில் தீட்டப்பட்டதைப் போன்ற அழகுடன் இரு பெரு நியமங்களைக் கொண்டது. ‘ஓவுக் கண்டன்ன இருபெரும் நியமத்து’ என்கிறது மதுரைக்காஞ்சி (365). நியமம் என்பது கடைத்தெரு. ஊருக்குள் பரந்து விரிந்த இடப்பரப்பில் இருக்கும் இந்த நாளங்காடிப் பகுதி ஓயாமல் கேட்கும் ஆரவார ஒலிகள் நிறைந்தது. ‘நாளங்காடி நனந்தலைக் கம்பலை’ என்று இதனை விவரிக்கிறது மதுரைக்காஞ்சி (430). நனந்தலை என்பது அகன்ற இடம். கம்பலை என்பது ஆரவாரம்.

நாளங்காடி தொடங்குமிடம் ஊர்ப்பொதுவிடம் அல்லவா! அங்கே பல கம்பங்கள் நடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல் நிறக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஊரில் திருவிழா நடக்கும்பொழுது ஏற்றப்பட்ட கொடியை அச்சத்துடன் அனைவரும் வணங்கிச் செல்கின்றனர். பகைவரின் பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றும்போதெல்லாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கொடி என நாள்தோறும் ஏற்றப்பட்டிருக்கும் கொடிகள். பகைவர் படைகளை அழித்துப் பாழ்படுத்தும்போதெல்லாம் வெற்றியைப் பறைசாற்ற எடுத்த வெற்றிக்கொடிகள். போவோர் வருவோர் வருத்தம் தீரக் கள் குடித்து மகிழக் கள்ளுக்கடையின் களிப்பை உணர்த்தி உயர்த்தப்பட்ட கொடிகள் எனப் பல்வேறு கொடிகள் ஊர் வாயிலில் ஏற்றப்பட்டிருந்தன. எந்நேரமும் ஏதேனும் ஒரு திருவிழா கொண்டாடப்படுவதால் ஊர் வாயிலில் பல்லியங்கள் முழங்கப் பலரும் ஆடிக் களித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதனையே,

செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி

வரி புனை பந்தொடு பாவை தூங்க

பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து

மாடம் மலி மறுகின் கூடல் – திரு. 67 - 71

என்று திருமுருகாற்றுப்படை மிகச் சுருக்கமாக விவரிக்கிறது.

பந்தும் பாவையும் மகளிர் விளையாட்டுப் பொருள்கள். அவற்றை ஊர் வாசலில் தொங்கவிட்டிருக்கிறார்கள். “பகைவரே! உம்மை எம் மகளிர் போலக் கருதுகிறோம். உம்மில் ஆண்மையாளர் யாரேனும் இருந்து அவருக்குத் துணிவும் இருந்தால் தொட்டுப்பாருங்கள்” என்று அறைகூவல் விடுக்கும்வண்ணம் அவை தொங்கவிடப்பட்டிருக்குமாம். அவ்வாறு எடுத்துச் சென்றவர்களை விரட்டிச் சென்று வெற்றிகொண்டு அழித்துவிட்டதனால் இப்பொழுது போரே அற்றுப்போய்விட்டது பாண்டியன் நகர் வாயிலில் என நக்கீரர் மதுரை நகர் வாயிலைப்பற்றிக் கூறுகிறார்.

ஆ. மதுரையின் நாளங்காடி

மதுரை நகர்த் தெருக்களில் பாண்டிய மன்னனின் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் எப்போதும் சுற்றிச் சுற்றி வந்து காவல் புரிந்தன. தட்டுகளில் வைத்த பூக்களையும், பரப்பி விரித்த பூமாலைகளையும் விற்போர் உயர்ந்த மாடங்களின் நிழலில் கடை பரப்பி விற்பர். அவரோடு இடித்த சுண்ணாம்புத் துகளை விற்போர், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை விற்போர் ஆகியோரும் கடை பரப்பியிருப்பர். பல்வேறு தின்பண்டங்களைக் கூவிக்கூவித் தெருக்களில் விற்றுத் திரிவோரும் உண்டு. அவர்கள் படைகளின் நடமாட்டத்தின்போது அஞ்சியோடி மாடத்து நிழலில் ஒதுங்கியிருப்பர்.

செக்கச் செவேலென்று சிவந்த மேனியுள்ள இளம்பெண்கள் தம்மை முழுதுமாய் ஒப்பனை செய்துகொண்டு அங்குச் செல்லும் இளையவர்களைக் கைதட்டி அழைத்து அவருடன் சேர்ந்து மகிழ்ந்திருப்பர். இவர்கள் நுகர்ந்து மகிழ, வாரிப்பின்னிய நரைமுடி முதுப்பெண்டிர், மணமிக்க பூக்களுடன் பலவித நுகர்பொருள்களை அழகிய செப்புப் பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்று விற்றுத் திரிவர்.

மழை மேகங்கள் எவ்வளவுதான் அள்ளிச்சென்றாலும் கடல்நீர் குறைவது இல்லை. ஆற்றுநீர் எவ்வளவுதான் பாய்ந்தாலும் கடல் பொங்கிப் பெருகுவதில்லை. அதைப் போல வாங்கிச் செல்வோர் எவ்வளவுதான் கொண்டுசென்றாலும் அந்தக் கடைத்தெருவில் பண்டங்கள் குறைவதில்லை. புதிதாய்ப் பண்டங்கள் எவ்வளவுதான் வந்து சேர்ந்தாலும் வாங்குவோர் கொண்டுசெல்வதால் கடைகள் நிரம்பி வழிவதுமில்லை. இவ்வாறு பகல் முழுதும் நடைபெறும் ஆரவாரமிக்க அந்தக் கடைத்தெரு மதுரையின் நாளங்காடி எனப்படும்.

இ. மதுரையின் செல்வர்களும் மகளிரும்

மதுரையின் செல்வர்கள் செக்கச் செவேலென்று கண்ணைக் கூசவைக்கும் பளபளப்பான ஆடைகள் அணிந்து, இடையில் வாளைக் கட்டித் தொங்கவிட்டு, மார்பில் மாலைகளும் ஆரங்களும் புரள, புரவிகள் பூட்டிய தேர்களில் தம் முன்தானைகள் புரளக் காற்றாய்க் கடந்து செல்வர்.

வீட்டு நிலாமுற்றங்களில் மணமிக்க மலர்களைச் சூடிய மகளிர், காலில் சிலம்புகள் ஒலிக்க, மின்னுகின்ற குழைகள் திகழும் ஒளிமிக்க முகத்தினராய் வரிசையாக இருக்கும் மாடங்களில் நின்றுகொண்டு நகரத்தின் விழாக்கோலத்தைக் கண்டு மகிழ்வர்.

ஈ. மதுரையின் கோவில்கள்

மாலை நேரத்தில் மதுரை வீறுகொண்டு எழுகிறது. தன் முழு மாண்பும் வெளித் தெரிய, மதுரை நகரத்தின் தெருக்களில் உள்ள அந்திக் காலத்துக் கடைகளில் கூடும் மக்கள் வெள்ளத்தால் நகரமே ஆரவாரம் மிக்கு விளங்குகிறது.

பொழுது சாயும் நேரத்தில் இசைக்கருவிகள் முழங்குகின்றன.

சிவன் கோவிலில் வேள்விகளும் பலிகளும் நடத்தப்பெறுகின்றன.

பௌத்தப் பள்ளிகளில் பூக்களுடன் தொழுகைகள் நடத்தப் பெறுகின்றன.

அந்தணர் பள்ளிகளில் வேதங்கள் முழங்கப்படுகின்றன.

அமணப் பள்ளிகளில் பூவும் புகையும் கொண்டு சாவகர் அருகனைத் துதிப்பர்.

இந்த இறைக்கூடங்களை அடுத்து அறக்கூடங்கள் உள்ளன. சமன்செய்து சீர்தூக்கும் கோல் போன்று சிறந்த கொள்கையராய் அறத்தின்வழி காய்தல் உவத்தல் இன்றித் தீர்ப்பு வழங்கும் அறங்கூறவையம் உண்டு.

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து, அன்பையும் அறத்தையும் காக்கும் காவிதி மாக்களின் மன்றுகளும் உண்டு.

உ. மதுரையின் அல்லங்காடி

பகற்காலம் முடியும்போது அல்லங்காடி என்று அழைக்கப்படும் இரவு நேரக் கடைத் தெரு உயிர்பெற்று எழத் தொடங்குகிறது. இப்பொழுது நாம் மதுரை நகரின் கடைத் தெருக்களைச் சுற்றிவரலாம்.

முதலில் நாம் காண்பது வணிகர் தெரு. இவர்கள் தம் பண்டங்களை மாளிகை போன்ற தம் இல்லங்களில் வைத்தவாறே வணிகம் செய்வர். மலைகளில் கிடைப்பவை, நிலத்தினில் விளைந்தவை, நீரின் வழியாக வந்தவை ஆகிய மணிகளையும் முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு மிகச் சிறந்த அயல்நாட்டுப் பண்டங்களை இவர்கள் விற்பர்.

இங்கு வாங்கும் பொருள்களின் மீது ஐயம் ஏற்பட்டால், முறையிட்டுத் தீர்க்க நாற்பெருங்குழு என்ற அமைப்பைச் சேர்ந்தோர் அங்கு இருப்பர்.

இன்னும் நடந்து சென்றால் பல்வேறு தொழில்செய்வோர் வைத்திருக்கும் கடைகளைக் காணலாம்.

சங்கு அறுத்து வளையல் செய்வோர் அங்கு இருப்பர்.

மணிகளைக் குடைந்து ஆரம் செய்வோரும் அங்கு இருப்பர்.

பொன்னை உருக்கிப் பொன் அணிகலன்கள் செய்வார் அங்கு உண்டு.

அந்தப் பொன்னில் ஐயம் ஏற்பட்டால் பொன்னின் மாற்றைக் கண்டு சொல்ல பொன்னை உரைத்து மாற்றுச் சொல்வாரும் அங்கு உண்டு.

துணிக்கடைகள் உண்டு.

செம்பை நிறுத்து வாங்கும் கடைகள் உண்டு.

அரைக்கச்சைகளையும், மார்புக்கச்சைகளையும் அழகுற முடிச்சுப்போட்டுத் தருவோரும் உண்டு.

பூக்கள், சந்தனம் ஆகியவற்றின் மொத்த விற்பனைக் கடைகளும் அங்கு உண்டு.

நகைகளுக்கான வடிவமைப்பையும், ஏனைய எந்தவகைத் தொழிலையும் பிறர் உணர்வதற்கான ஓவியமாகத் தீட்டுவோரும் அங்கு உண்டு.

இவர்கள் தெருவோரத்தில் சிறியவும் பெரியவும் ஆகிய புடவைகளை விரித்துத் தம் பண்டங்களைப் பரப்பி நான்கு தெருக்களிலும் நெருக்கியடித்து நின்றுகொண்டு விற்பனை செய்வர்.

ஊ. மதுரையின் உணவுக்கடைகள்

கூட்டம் கூட்டமாக வந்து இப் பொருள்களை அள்ளிச்செல்ல வரும் மக்களுக்குப் பசிக்காதா? அதற்குப் பலவகையான உணவுகளையும் தின்பண்டங்களையும் விற்குமிடங்கள் உண்டு. அங்கு சாற்றாலும் மணத்தாலும் ஒன்றற்கொன்று வேறுபட்ட பலாச்சுளைகள் உண்டு. பல்வேறு வகையான அழகழகான மாம்பழங்கள் உண்டு. இன்னும் பல்வேறு உருவின் காயும் கனியும் உண்டு. கொடிகளில் வளர்ந்த மெல்லிய கொழுந்து இலைகள் உண்டு. அமிழ்தம் போன்ற கற்கண்டுப் பாகு உண்டு. புகழ்படப் பண்ணிய ஊன்சோறு உண்டு. கிழங்கு வகைகளும் உண்டு. அக்கார அடிசில் போன்ற இனிய சோறும் உண்டு. இவற்றைப் பலவிடங்களிலும் மக்கள் நுகர்ந்துகொண்டிருப்பர்.

கப்பல்களில் பண்டங்கள் வந்திறங்கும் கடற்கரைப் பட்டினத்தில் எழும் ஆரவார ஒலியைப் போல, அணிகலன்கள் ஆகிய பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக வெளிநாட்டு வணிகர்கள் பெருங்குரல் எழுப்பி அலைமோதித் திரிவர். நள்ளிரவில் இருங்கழியில் பேரலைகள் எழும்பி மோதிச் செல்லும்போது பல்வேறு பறவைகள் ‘கல்லென’ப் பேரொலி எழுப்புவதைப் போன்ற ஒலிகளுடன் அல்லங்காடியில் ஆரவாரம் மிக்கு ஒலிக்கின்றது.

இதுதான் மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகரம். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த இந்த அமைப்பு மிகவும் வியத்தக்க வகையில் இன்றைய மதுரையின் அமைப்போடு மிக நெருக்கமாக ஒத்துப்போவதைக் காண்போம். அதற்கு முன்னர் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் காட்டும் மதுரையையும் அடுத்த கட்டுரையில் காண்போம்.

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரையைப் பற்றிய செய்திகள் அடங்கிய அந்த எடுப்பான அழகிய அடிகள் இதோ:-


மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

அகழி, புரிசை, நிலை, கதவு, வாயில்

மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின்

விண் உற ஓங்கிய பல் படை புரிசை

தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை

நெய் பட கரிந்த திண் போர் கதவின்

355    மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு

வையை அன்ன வழக்கு உடை வாயில்

மாடம், தெரு

வகை பெற எழுந்து வானம் மூழ்கி

சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்

யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்                        

360    பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப          

வாயிலில் ஆரவாரம்

மா கால் எடுத்த முந்நீர் போல

முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல

கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை         

மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை

இருபெரு நியமங்கள், பல்வகைக் கொடிகள்

365      ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து        

சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி                       

வேறு பல் பெயர ஆர் எயில் கொளக்கொள

நாள்தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி                      

நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு

370      புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி        

புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி

கள்ளின் களி நவில் கொடியொடு நன் பல

பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலைஇ

பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க

படைகளின் காவல்

 யானைப்படை

375      பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்            

வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ

கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்

கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ

நெடும் சுழி பட்ட நாவாய் போல

380      இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து            

கோலோர் கொன்று மேலோர் வீசி

மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்

தேர்ப்படை

அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து

385    ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும்         

செம் கால் அன்னத்து சேவல் அன்ன

குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து

கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்                             

குதிரைப்படை

கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்

390    அடிபடு மண்டிலத்து ஆதி போகிய                       

கொடி படு சுவல இடுமயிர் புரவியும்

காலாட்படை

வேழத்து அன்ன வெருவரு செலவின்

கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும்

அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்

நாளங்காடிப் பொருள்கள்

395    தீம் புழல் வல்சி கழல் கால் மழவர்                    

பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப

பிடகை பெய்த கமழ் நறும் பூவினர்                                   

பல வகை விரித்த எதிர் பூ கோதையர்

பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்

400    தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய்           

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்

இரு தலை வந்த பகை முனை கடுப்ப

இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து

ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை

405    பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்          

மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர                         

நாளங்காடியில் முதுமகளிரும் பொதுமகளிரும்

இரும் கடல் வான் கோது புரைய வாருற்று

பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர்                             

நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர்

410    செம் நீர் பசும்பொன் புனைந்த பாவை                  

செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன

செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண்

ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று

வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள்

415    சோர்ந்து உகு அன்ன வயக்குறு வந்திகை              

தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை

மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல்

மயில் இயலோரும் மட மொழியோரும்

கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து

420    கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப                 

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்

காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்

கமழ் நறும் பூவொடு மனைமனை மறுக

நாளங்காடிக் கூட்டம்

மழை கொள குறையாது புனல் புக மிகாது

425    கரை பொருது இரங்கும் முந்நீர் போல                 

கொளக்கொள குறையாது தரத்தர மிகாது

கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி

ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே

மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்                                    

430    நாளங்காடி நனம் தலை கம்பலை                                     

செல்வர் தேரோட்டம்

வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று

செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்

கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம்                             

பொன் புனை வாளொடு பொலிய கட்டி

435    திண் தேர் பிரம்பின் புரளும் தானை                    

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி

மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல்

மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை

அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ

440    கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ                 

காலோர் காப்ப கால் என கழியும்

வான வண் கை வளம் கெழு செல்வர்

நிலா முற்றங்களில் மகளிர்

நாள் மகிழ் இருக்கை காண்மார் பூணொடு                            

தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல்

445    தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை         

அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்

மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ

ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம்

திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்

450    தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப          

நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்

மழை மாய் மதியின் தோன்றுபு மறைய

கோயில்கள் – சிவன் கோயில்

நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய

455    மழு வாள் நெடியோன் தலைவன் ஆக                 

மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்                           

வாடா பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்கு

மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்

460    அந்தி விழவில் தூரியம் கறங்க                         

கோயில்கள் – பௌத்தப் பள்ளி

திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை

ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி

தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு

தாமும் அவரும் ஓராங்கு விளங்க

465    காமர் கவினிய பேரிளம் பெண்டிர்                       

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி                        

சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்

கோயில்கள் – அந்தணர் பள்ளி

சிறந்த வேதம் விளங்க பாடி

விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

470    நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி                   

உயர் நிலை உலகம் இவணின்று எய்தும்

அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்

பெரியோர் மேஎய் இனிதின் உறையும்

குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும்

கோயில்கள் – சமணர் பள்ளி

475    வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து             

பூவும் புகையும் சாவகர் பழிச்ச                                         

சென்ற காலமும் வரூஉம் அமயமும்

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

வானமும் நிலனும் தாம் முழுது உணரும்

480    சான்ற கொள்கை சாயா யாக்கை                        

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்

கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை

பல் புரி சிமிலி நாற்றி நல்குவர

கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து

485    செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து                         

நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி

இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும்

குன்று பல குழீஇ பொலிவன தோன்ற

அறங்கூறவையம்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி

490    செற்றமும் உவகையும் செய்யாது காத்து              

ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி

சிறந்த கொள்கை அறங்கூறவையமும்

காவிதி மாக்கள்

நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து                            

ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து  

495    மா விசும்பு வழங்கும் பெரியோர் போல               

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி

அன்பும் அறனும் ஒழியாது காத்து

பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களும்

வணிகர் தெரு

500    அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி                  

குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன

பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்

பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி

மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்                                

505    பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு  

சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும்

நாற்பெருங்குழு

மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள்

பழையன் மோகூர் அவையகம் விளங்க

நான் மொழி கோசர் தோன்றி அன்ன

510    தாம் மேஎ தோன்றிய நாற்பெருங்குழுவும்             

பல்வேறு தொழிலினரும் அவர்தம் பண்டங்களும்

கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும்

சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்

பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும்

செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்

515  பூவும் புகையும் ஆயும் மாக்களும்                      

எ வகை செய்தியும் உவமம் காட்டி

நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்

கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி

தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல்

520   குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து             

சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ

நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்

தண் கடல் நாடன் ஒண் பூ கோதை

525   பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ               

விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன்

உணவுக் கடைகள்

சேறும் நாற்றமும் பலவின் சுளையும்

வேறு பட கவினிய தேம் மாங்கனியும்

பல் வேறு உருவின் காயும் பழனும்

530   கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி              

மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்

அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும்

புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்                        

கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்                         

535    இன் சோறு தருநர் பல் வயின் நுகர                    

அல்லங்காடியின் ஆரவாரம்

வால் இதை எடுத்த வளி தரு வங்கம்

பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து

ஒல்லென் இமிழ் இசை மான கல்லென

நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக

540  பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்             

இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து

உரு கெழு பானாள் வருவன பெயர்தலின்

பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே

அல்லங்காடி அழி தரு கம்பலை

அடிநேர் உரை

அகழி, புரிசை, நிலை, கதவு, வாயில்

 (கீழே)மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த, நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,

விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,

தொன்றுதொட்ட வலிமை நிலைபெற்ற, தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும்,

நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருத்தப்பட்ட கதவினையும்,

முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,                                     355

வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்,

மாடம், தெரு

பலவகையால் பெயர்பெற எழுந்து வானத்தே சென்று(ப்பின்)

சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும்

ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருவில் -

பல வேறுபட்ட குழுவினரின் ஓசை எழுந்து ஒலிக்க,                                       360

வாயிலில் ஆரவாரம்

பெருமையையுடைய காற்று எடுத்த கடலொலி போல

முழங்கும் ஓசையையுடைய நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற,

குளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு

மகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரத்தையும் உடைய,

இருபெரு நியமங்கள், பல்வகைக் கொடிகள்

ஓவியத்தில் கண்டாற்போன்ற இரண்டு பெரிய அங்காடித்தெருவின்கண்                 365

விழா நிகழ்த்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,

வேறுபட்ட பல பெயர்களையுடைய (உறுதி)நிறைந்த அரண்களைக் கைப்பற்றக் கைப்பற்ற

நாள்தோறும் உயர்த்திய நன்மையுடைய அலங்காரமான கொடியும்,

கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை)

புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து, 370

புகழை உண்டாக்கி எடுத்த வெற்றி அமைந்த நல்ல கொடியும்,

கள்ளின் களிப்பைக் கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல

பலவாய் வேறுபட்ட திரண்ட கொடிகளோடு பெருங்கொடிகளும் நிலைபெற்று,

பெரிய மலையிடத்து அருவியைப் போன்று நெளிந்துஆட,

படைகளின் காவல் - யானைப்படை

பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,                                    375

இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்

பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்

கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,

நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல

இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)சங்குகள் ஒலிக்க, வெகுளி மிக்கு               380

கோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, பாகரைத் தூக்கி எறிந்து,

மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,

கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;

தேர்ப்படை

அழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு

ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும்     385

சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த,

நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,

காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

குதிரைப்படை

 (கோலைக்)கொண்ட வலவன் தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின்,

தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின                  390

ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்

 காலாட்படை

யானை போன்ற அச்சம்தரும் போக்கினையுடைய

கள்ளை உண்ட மறவரின் பெரிய போரைச்செய்யும் கலக்கமும்,

(இவ்வாறு தடுத்தற்கு)அரியனவும், எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் வந்து போகையினால் 

நாளங்காடிப் பொருள்கள்

இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட கழலணிந்த காலினையுடைய மழவரின்   395

பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற

கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,

பலவகையாக விரித்துவைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலையுடையவரும்,

பலர் கூடி இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும்,

அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடன்,             400

நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த) சுண்ணாம்பையுடையவரும்,

இரண்டு பக்கத்திலும் (படை)வந்த பகைப்புலத்தை ஒக்க,

இனிய உயிருக்கு அஞ்சி, இன்னாததாகப் பெருமூச்செறிந்து,

ஏங்குபவராயிருந்து, அப்படை சென்ற பின்னர்,

பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,      405

மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க -

நாளங்காடியில் முதுமகளிரும் பொதுமகளிரும்

கரிய கடலில் (மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி)

பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய,

நல்ல வனப்பினையுடைய, பழைமை மூத்த பெண்டிர் --

{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை                        410

வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற

சிவந்த நிறத்தையுடையவரும்; (ஆண்களை)வருத்தும் பார்வையை உடையவரும்; மடப்பத்தையுடைய கண்ணோடே

(பார்ப்பவர்)வியந்து கலங்கும் மாமை நிறமுடையவரும்; கூர்மையான பற்களின்

ஒழுங்குபட்ட வாயையுடையவரும்; வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,

நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற கைவந்திகைகளையும்,                415

தொய்யிலால் பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்,

மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய

மயிலின் தன்மையையுடையோரும்; மடப்பத்தையுடைய மொழியினையுடையோரும்;(ஆகிய மகளிர்)

(தம்மை)அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக்

கல்லாத இளைஞருடன் சிரிப்பவராய் உண்டு துய்க்க,                                       420

புடைத்தல் அமைந்த அழகிய பலவகைப்பட்ட செப்புக்களில்,

விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை

கமழ்கின்ற நறிய பூவோடு மனைகள்தோறும் எடுத்துச்செல்ல -

நாளங்காடிக் கூட்டம்

முகில்கள் முகக்கக் குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது,

கரையை மோதி ஒலிக்கும் கடலைப் போல,                                         425

(வாங்குவோர்)எடுக்க எடுக்கக் குறையாது, (வணிகர்)கொணரக் கொணர நிறையாது,

தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,

ஆட்டங்கள் நிறைவுபெறும் விழாவின்போது (மக்கள்)ஆரவாரித்ததைப் போன்று,

மாடத்தால் விளக்கமுற்ற மிக்க புகழையுடைய மதுரையில்

நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும் -                430

செல்வர் தேரோட்டம்

வெயிலையுடைய சுடர்கள் (வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய

செவ்வானத்தை ஒத்த, சிவந்து நுண்ணிதான வடிவில்,

கண்களை மயக்கி தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை,

பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உடைவாளோடு அழகுபெறக் கட்டி,

திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,                       435

கச்சம் இறுக்கித் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் திருத்தமான கால்களையும்,

(உலகத்தார்)வலிமையைக் கடந்து (புகழோடு) திரியும் ஒப்பற்ற பெரிய வேப்பமாலையினையும்,

மாணிக்கம் ஒழுகினாற் போன்ற ஒளிரும் செங்கழுநீர் மாலையினையும்,

அழகு விளங்கும் மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து,

காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி,                             440

காலாட்கள் (சூழ்ந்து)காக்க, காற்று என விரைந்து செல்லும்,

முகில்போன்று (வரையாமற்கொடுக்கும்)வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்திய செல்வர்

நிலா முற்றங்களில் மகளிர்

நாட்காலத்தே மகிழ்ந்திருக்கின்ற இருப்பின்கண் இருந்து விழாக் காண - (ஏனைய)அணிகலன்களோடே

தெள்ளிய உள்மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி, ஒளிரும் நெருப்பில்(இட்டு)

குற்றமற்று விளங்கிய அழகிய பொன்னாற் செய்த பளபளக்கும் அணிகலன்களையுடைய,  445

தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,

மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,

ஒள்ளிய மகரக்குழை விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகம்,

திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத்

தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால்,        450

ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலா முற்றங்கள்தோறும்

மேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய -

கோயில்கள் – சிவன் கோயில்

நீரும் நிலனும் நெருப்பும் காற்றும்

திசைகளையுடைய வெளியுடன்(ஆன) ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த

மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,        455

அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையோர், சூழ்ந்த ஒளியினையுடைய

வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,

அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,

பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,

அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க -                             460

 கோயில்கள் – பௌத்தப் பள்ளி

திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்

பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,

தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல

தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,

ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,                                   465

பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி

சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் -

கோயில்கள் – அந்தணர் பள்ளி

சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,

சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,

நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து)            470

உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்

அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய

பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்

மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் -

கோயில்கள் – சமணர் பள்ளி

வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய           475

பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,

சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்

இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து,

வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,

(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும்,                           480

நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு,

கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்

பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய,

குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,

செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி,                         485

கண்பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி,

வியப்பமைந்த நறிய பூக்களையுடைய (அமண்)பள்ளியும் -

மலைகள் பலவும் திரண்டு பொலிவன (போலத்)தோன்ற;

அறங்கூறவையம்

அச்சத்தையும், வருத்தத்தையும், பற்றுள்ளத்தையும் போக்கி,

பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் (தம்மைப்)பாதுகாத்து,                   490

துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய்,

சிறந்த கொள்கைகள் (உடைய)அறங்கூறவையமும் -

காவிதி மாக்கள்

நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய்,

யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,

அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போன்று,                                      495

நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,

அன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து,

பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற

தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும் -

வணிகர் தெரு

அறத்தின் வழியினின்றும் தவறாது, நல்வழியே நடந்து --                             500

அருகருகேயமைந்த பலவான சிறுமலைகளைக் கண்டாற் போன்று

பருந்துகள் (இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லங்களில்

பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று,

மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய

பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு  505

-- சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும் -

நாற்பெருங்குழு

மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய

பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு

நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,

தாம் மேலாய் விளங்கிய நாற்பெருங்குழுவும் -                                       510

பல்வேறு தொழிலினரும் அவர்தம் பண்டங்களும்

சங்கினை அறுத்துக் கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,

சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,

பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும்,

செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,

பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்,                                  515

பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்

கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய

ஓவியரும், பிறரும் கூடி,

தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல

சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,             520

சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,

நான்காய் வேறுபட்ட தெருக்கள்தோறும் (ஒருவர் காலொடு ஒருவர்)கால் நெருங்க நிற்றலைச் செய்ய

வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,

குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய

பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு                                      525

விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப - பலவுடன்,

உணவுக் கடைகள்

சாறும், மணமும் (கொண்ட)பலாப்பழத்தின் சுளைகளையும்,

ஒன்றற்கொன்று வேறுபட்ட அழகிய மாவின் பழங்களையும்,

பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும், பழங்களையும்,

மழை வளர்க்கக் கொடிவிட்டு அழகுபெற்று,                                                 530

மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,

அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்,

புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,

கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற பதார்த்தங்களையும்,

இனிய (கற்கண்டுச்)சோறு தரப்பெற்றோர் பலவிடங்களிலும் உண்ண -                  535

அல்லங்காடியின் ஆரவாரம்

வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள்(கொணர்ந்த)

பலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து

ஒல்லென முழங்குகின்ற ஓசையைப் போன்று, கல்லென

அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல,

பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி        540

கரிய கழியில் தழுவிப் பாய்வதற்காக மிகுந்து எழுந்து,

அச்சம் பொருந்திய நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால்,

பல வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்ததைப் போன்றது

அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம் -

 





On Monday, February 23, 2015 at 12:25:15 PM UTC+5:30, தேமொழி wrote:
///

சிந்துசமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய அந்த வட்டக்கற்களே தமிழ்நாட்டிலும், ஞாயிற்றின் அன்றாட ஓட்டத்தை அளக்கப் பயன்பட்டது எனக் கொள்ளலாம். நெடுநல்வாடைப் புலவர் நக்கீரர் கூறும் இருகோல்குறிநிலை என்பதுவும் இதைப் போன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டதே என்பது தெளிவு.

///

சுவையான தகவல், அறிய தந்தற்கு  நன்றி ஐயா.

..... தேமொழி





On Sunday, February 22, 2015 at 9:18:55 AM UTC-8, Pandiyaraja wrote:

இந்த முறைக்கு முற்றிலும் மாறான வேறொரு முறை அன்றைய தமிழகத்தில் பின்பற்றப்பட்டது.  ஒரு வட்டமான பலகையில் ஏதேனும் ஒரு விட்டத்தின் எதிர்முனைகளில் இரண்டு குச்சிகளைச் செங்குத்தாக நிறுவவேண்டும். காலையின் அந்த இரண்டு குச்சிகளின் நிழல்களும் மேற்குப்பக்கம் ஒருபோகாகச் சாய்ந்திருக்கும். நேரம் ஆகஆக அந்த நிழல்களுக்கிடையே உள்ள தூரம் குறைந்து சரியான உச்சிப்பொழுதில் அந்த இரு நிழல்களும் ஒரே நேர்கோட்டில் அமையும். அதுவே அந்த இடத்தில் சரியான நண்பகல் – உள்ளூர் நேரம் மதியம் 12 மணி (Local Time). அந்தச் சரியான நண்பகலில் மனை வகுக்கும் பணிகள் தொடங்கப்படுவதாக நெடுநல்வாடை கூறுகிறது. 
      மாதிரம்
      விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
      இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
75    ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்துநெடுநல்வாடை 72-75

இதன் பெயர் தமிழரின் இருகோல் குறிநிலை. வடவரின் வாஸ்த்து முறையில் கூறப்படுவது ஒருகோல் குறிநிலை. தமிழரின் இருகோல் குறிநிலை சரியான நேரத்தை அளக்கப் பயன்படுவது. வடவரின் ஒருகோல் குறிநிலை சரியான திசையை அளக்கப் பயன்படுவது. எனவே தமிழரின் கட்டிடக்கலையியல் வடவரின் சாஸ்த்திரங்களினின்றும் வேறுபட்டது என அறியலாம். இந்தக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி உருவ
...

தேமொழி

unread,
Apr 2, 2015, 1:53:52 AM4/2/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com

அடிநேர் உரை மிகவும் உதவியது ஐயா, மிக்க நன்றி.  

..... தேமொழி 
...

Oru Arizonan

unread,
Apr 2, 2015, 2:01:01 AM4/2/15
to mintamil
சங்கால மதுரைக்கே எங்களை இழுத்துச் சென்று, கடைத்தேருவெல்லாம் சுற்றிக்காண்பித்து, உணவும் படைத்துவிட்டீர்கள் , பாண்டியராஜா அவர்களே!  நன்றிபல!
ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Malarvizhi Mangay

unread,
Apr 2, 2015, 6:06:47 AM4/2/15
to mint...@googlegroups.com

தங்கள் பதிவினைப் படித்தவுடன்
மதுரைக்காரி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 3, 2015, 1:51:10 AM4/3/15
to mintamil, Pandiyaraja Paramasivam

வணக்கம் ஐயா.

நேற்று முன்தினம் தங்களது இந்தப் பதிவைப் படித்தேன்.

நேற்று காலையில் புளியங்குளம் கல்வெட்டை ஆய்வு செய்தோம்.

மதியம் மதுரைக்கு வந்தேன்.

தங்களது இந்தப் பதிவில் உள்ளது போன்றே இன்றும் மதுரை உள்ளது.

ஒரே குறை, அகழியையும் கோட்டையையும் காணோம்.

அப்படியே வெளிவீதிகளில் பேருந்தில் பயணம் செய்து, தங்களது இந்தப் பதிவையும் படித்து ரசித்து மகிழ்ந்தேன்.

திரைப்படம் பார்ப்பதுபோன்று காட்சிகளை அமைத்துள்ளீர்கள்.

அருமையானதொரு பதிவு. வாழ்த்துகள் ஐயா.

...........................

மற்றபடி,

 

அடிநேர் உரை

அகழி, புரிசை, நிலை, கதவு, வாயில்

 (கீழே)மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த, நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,

விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,

தொன்றுதொட்ட வலிமை நிலைபெற்ற, தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும்,

நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருத்தப்பட்ட கதவினையும்,

முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,                                     355

வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்,

 

 

என்று உள்ளதே,

புரிசையின் வடிவம் (வட்டமா? சதுரமா?) பற்றிய குறிப்பிகள் ஏதேனும் உண்டா என அறியத்தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Pandiyaraja

unread,
Apr 3, 2015, 2:16:32 AM4/3/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com
மிக்க நன்றி தாயே!

பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களுக்குமான அடிநேருரைகளை http://sangamstudies.blogspot.in/ என்ற என் வலைப்பக்கத்தில் பார்க்கலாம். இது உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு வலையகம். நேரம் கிடைக்கும்போது மாற்றங்களையும் ஏற்றங்களையும்  செய்துகொண்டுவருகிறேன்.
ப.பாண்டியராஜா
...

Pandiyaraja

unread,
Apr 3, 2015, 2:17:46 AM4/3/15
to mint...@googlegroups.com
கூடச் சுற்றிப்பார்க்க வந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
ப.பாண்டியராஜா
...

Pandiyaraja

unread,
Apr 3, 2015, 2:23:24 AM4/3/15
to mint...@googlegroups.com
தாங்கள் மதுரைகாரர் என்ற மகிழ்ச்சியைத்தான் ஏற்கனவே வேறு இழையில் வெளியிட்டுவிட்டீர்களே!  மீண்டும் மகிழ்வெய்தியமை குறித்து எனக்கும் மகிழ்ச்சி.
ப.பாண்டியராஜா
...

Pandiyaraja

unread,
Apr 3, 2015, 2:28:23 AM4/3/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, kalair...@gmail.com
>>
திரைப்படம் பார்ப்பதுபோன்று காட்சிகளை அமைத்துள்ளீர்கள்.
>>
அன்புள்ள காளை அவர்களே!
காட்சிகளை அமைத்தது நம் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் மதிப்புமிகு மாங்குடி மருதன். நான் அவற்றை உரைநடைப்படுத்தியிருக்கிறேன். அவ்வளவுதான். அன்றைய மதுரையை அப்படியே ஏடுகளுக்குள் இருத்திவைத்தானே , அவன் செய்த தொண்டு அளப்பரியது.
ப.பாண்டியராஜா


On Friday, April 3, 2015 at 11:21:10 AM UTC+5:30, kalai wrote:

வணக்கம் ஐயா.

நேற்று முன்தினம் தங்களது இந்தப் பதிவைப் படித்தேன்.

நேற்று காலையில் புளியங்குளம் கல்வெட்டை ஆய்வு செய்தோம்.

மதியம் மதுரைக்கு வந்தேன்.

தங்களது இந்தப் பதிவில் உள்ளது போன்றே இன்றும் மதுரை உள்ளது.

ஒரே குறை, அகழியையும் கோட்டையையும் காணோம்.

அப்படியே வெளிவீதிகளில் பேருந்தில் பயணம் செய்து, தங்களது இந்தப் பதிவையும் படித்து ரசித்து மகிழ்ந்தேன்.

திரைப்படம் பார்ப்பதுபோன்று காட்சிகளை அமைத்துள்ளீர்கள்.

அருமையானதொரு பதிவு. வாழ்த்துகள் ஐயா.

...........................

மற்றபடி,

 

அடிநேர் உரை

அகழி, புரிசை, நிலை, கதவு, வாயில்

 (கீழே)மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த, நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,

விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,

...

தேமொழி

unread,
Apr 3, 2015, 2:31:16 AM4/3/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com
ஆகா,  http://sangamstudies.blogspot.in/  இது மிக அருமையான தளம் ஐயா, மிக்க  நன்றி.

மரபு மூலம், சொற்பிரிப்பு மூலம், அடிநேர் உரை, ஆய்வுகள் என்று அருமையாக உதவும் வகையில் பிரித்தக் கொடுத்துள்ளீர்களே!!!

சொற்பிரிப்பு மூலம், அடிநேர் உரை இரண்டும் படித்துவிட்டு பாடலை மீண்டும் ஒரு முறை பார்க்கும் பொழுது, அட இது ஏன் முன்பு புரியவில்லை என்று தோன்றும் .

தளத்தை குறித்து வைத்துக் கொண்டேன்.  உங்கள் உதவிக்கு மீண்டும் நன்றி.


..... தேமொழி



On Thursday, April 2, 2015 at 11:16:32 PM UTC-7, Pandiyaraja wrote:
மிக்க நன்றி தாயே!

பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களுக்குமான அடிநேருரைகளை http://sangamstudies.blogspot.in/ என்ற என் வலைப்பக்கத்தில் பார்க்கலாம். இது உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு வலையகம். நேரம் கிடைக்கும்போது மாற்றங்களையும் ஏற்றங்களையும்  செய்துகொண்டுவருகிறேன்.
ப.பாண்டியராஜா


On Thursday, April 2, 2015 at 11:23:52 AM UTC+5:30, தேமொழி wrote:

அடிநேர் உரை மிகவும் உதவியது ஐயா, மிக்க நன்றி.  

..... தேமொழி 



On Wednesday, April 1, 2015 at 10:29:25 AM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறது மதுரையைப் பற்றிய இந்தக் கட்டுரை. இங்குக் கூறப்பட்டுள்ளது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூலில் காணப்படும் மதுரையைப் பற்றிய செய்தி. இதை வடிவமைப்பதற்கு முன், மதுரையின் தெருக்களை எல்லாம் நேரில் சென்று பார்க்க எண்ணியிருந்தேன். அதனால்தான் இந்தத் தாமதம் ஏற்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. இனியும் தாமதிக்கவேண்டாமென்றுதான் இந்தப் பதிப்பு வெளிவருகிறது. நான் கூற நினைத்தவை எல்லாம் இதில் இல்லை. மனத்தளவில் மதுரையைச் சுற்றிவந்து இதனை எழுதியிருக்கிறேன். எனது அடுத்த மதுரைப் பயணத்துக்குப் பின் (?) நிறைய எழுதுவேன்.
அனைவருக்கும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

5. சங்க கால மதுரை

 

5.4 சங்ககால மதுரை

சங்க கால மதுரையின் உள் அமைப்பைத் தெரிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல் ஆகும். இது மதுரையைப் பற்றிய மிக விரிவான செய்திகளையும் கூறுகிறது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களில் ஒரு சில குறிப்புகளே உள்ளன. சங்க இலக்கியங்களை அடுத்து, சிலப்பதிகாரம் மதுரையைப் பற்றிய விரிவான செய்திகளைக் கூறுகிறது.

5.4.1 இலக்கியங்களில் மதுரை.

1. மதுரைக் காஞ்சியில் மதுரை

அ. பாண்டியன் வாயில்

மதுரை மாநகரைச் சுற்றிலும் மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு (அகழி) இருந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. அதை ஒட்டி விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை இருந்தது. புரிசை என்பது கோட்டை. கோட்டையின் மேல் பலவிதப் படைக்கலன்கள் வைக்கப்பட்டிருந்தன. கோட்டை வாயிலில் தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை இருந்தது. வலிமை மிக்க தொன்மைத் தெய்வமாம் கொற்றவையின் உருவம் செதுக்கப்பட்ட நெடிய நிலையில் நெய்படக் கரிந்த திண்போர்க் கதவுகள் இருந்தன. போர்க்கதவு என்பது இரண்டு பக்கமும் வந்து நடுவில் பொருதக்கூடிய இரட்டைக் கதவுகள். அவற்றில் உள்ள இரும்புப் பட்டைகளுக்கு எண்ணெய் தடவி விடுவதால் அவை கருத்துப்போய் இருந்தன. இந்த வாசல் நிலையின் மேல் மிக உயரமான மாடங்கள் இருந்தன. எப்போதும் ஆட்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதால் மதுரை நகர் வாயில் வையை அன்ன வழக்குடை வாயில் என்னப்பட்டது. இடையறாது வையை நதியில் நீரொழுக்கு ஓடிக்கொண்டே இருப்பதைப் போல மக்களின் நடமாட்டமும் மதுரை நகர் வாயிலில் இடையறாது இருந்துகொண்டிருந்தது.

மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்

      விண்ணுற ஓங்கிய பல் படைப் புரிசை

      தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை

...

Geetha Sambasivam

unread,
Apr 3, 2015, 7:23:28 AM4/3/15
to மின்தமிழ்
அற்புதமான தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. மதுரைக் கோட்டையைப் பார்க்கும்போதும், வைகை நதியைப் பார்க்கும்போதும் நெஞ்சம் விம்முகிறது. இப்போதைய வைகையின் நிலை எப்போது மாறும் என ஏக்கம் கொள்ள வைக்கிறது!

Geetha Sambasivam

unread,
Apr 3, 2015, 7:28:00 AM4/3/15
to மின்தமிழ்
உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தாங்கள் கொடுத்திருக்கும் இந்த அரிய தகவல்களுக்கு நன்றி.  அந்தக்கால மதுரை கண் முன்னே தோன்றியது. 

Oru Arizonan

unread,
Apr 3, 2015, 2:23:00 PM4/3/15
to mintamil
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாட, புராணத்தில் மதுரையைப்பற்றிய விவரிப்பு -- கோட்டை, எதிரிகளைத் தாக் க உதவும் ஆயுதங்கள், முதலானவை பற்றியும் காண்கின்றேன்.  

இவைகளைப்பற்றி ஏதாவது ஆய்வு நடந்திருக்கிறதா, அல்லது விவரிப்புகள் பரஞ்சோதி முனிவரின் கற்பனை என்று தள்ளப்பட்டிருக்கிறதா?  

பரஞ்சோதி முனிவர் சங்ககாலத்தவர் அல்ல என்று அறிவேன்.

இதுபற்றி, பாண்டியராஜா அவர்களும், மற்ற தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

ஏனெனில், மதுரையை ஒரு பாசறையாக [garrison], எதிரியத்தாக்கி அழிக்கவல்ல ஒரு வலிமை நிரந்த இடமாகத திருவிளையாடற்புராணம் சித்தரிக்கிறது.  அதனால்தான் என் ஆர்வம் மிகுகிறது.

இது மதுரையைப் பற்றிய கேளிவி என்பதால், இழையைத் திசை திருப்பவில்ல என்றே நினைக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 3, 2015, 3:14:51 PM4/3/15
to mint...@googlegroups.com

ஐயா ...அன்றிலிருந்து இன்று வரை ...என காலக்கோட்டில்  இலக்கியங்களில் மதுரை பற்றிய தகவலை வரிசைப்படுத்தி  விவரித்து வருகிறார். 

பிற்கால புலவர்களைப் பற்றித் தொடரும்பொழுது மற்றபிற தகவல்களையும்  தெரிந்து கொள்ளும் ஆவலில்தான் நானும் இடையிடாமல் இருக்கிறேன்.

ஆனால் இக்கட்டுரை தூண்டிய ஆவலில் புலியூர் கேசிகன் தொகுத்தெழுதிய "முத்தமிழ் மதுரை" என்ற நூலை >>> http://www.tamilvu.org/library/nationalized/pdf/59-puliyurkesigan/016.muthamilmadurai.pdf

என்ற நூலை தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் இருந்து தரவிறக்கி படித்தேன்.  உங்களுக்கும் பிடிக்கும் என நினைகிறேன்.

..... தேமொழி






On Friday, April 3, 2015 at 11:23:00 AM UTC-7, oruarizonan wrote:
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாட, புராணத்தில் மதுரையைப்பற்றிய விவரிப்பு -- கோட்டை, எதிரிகளைத் தாக் க உதவும் ஆயுதங்கள், முதலானவை பற்றியும் காண்கின்றேன்.  

இவைகளைப்பற்றி ஏதாவது ஆய்வு நடந்திருக்கிறதா, அல்லது விவரிப்புகள் பரஞ்சோதி முனிவரின் கற்பனை என்று தள்ளப்பட்டிருக்கிறதா?  

பரஞ்சோதி முனிவர் சங்ககாலத்தவர் அல்ல என்று அறிவேன்.

இதுபற்றி, பாண்டியராஜா அவர்களும், மற்ற தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

ஏனெனில், மதுரையை ஒரு பாசறையாக [garrison], எதிரியத்தாக்கி அழிக்கவல்ல ஒரு வலிமை நிரந்த இடமாகத திருவிளையாடற்புராணம் சித்தரிக்கிறது.  அதனால்தான் என் ஆர்வம் மிகுகிறது.

இது மதுரையைப் பற்றிய கேளிவி என்பதால், இழையைத் திசை திருப்பவில்ல என்றே நினைக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

2015-04-03 4:27 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தாங்கள் கொடுத்திருக்கும் இந்த அரிய தகவல்களுக்கு நன்றி.  அந்தக்கால மதுரை கண் முன்னே தோன்றியது. 

2015-04-01 22:59 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புடையீர்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறது மதுரையைப் பற்றிய இந்தக் கட்டுரை. இங்குக் கூறப்பட்டுள்ளது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூலில் காணப்படும் மதுரையைப் பற்றிய செய்தி. இதை வடிவமைப்பதற்கு முன், மதுரையின் தெருக்களை எல்லாம் நேரில் சென்று பார்க்க எண்ணியிருந்தேன். அதனால்தான் இந்தத் தாமதம் ஏற்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. இனியும் தாமதிக்கவேண்டாமென்றுதான் இந்தப் பதிப்பு வெளிவருகிறது. நான் கூற நினைத்தவை எல்லாம் இதில் இல்லை. மனத்தளவில் மதுரையைச் சுற்றிவந்து இதனை எழுதியிருக்கிறேன். எனது அடுத்த மதுரைப் பயணத்துக்குப் பின் (?) நிறைய எழுதுவேன்.
அனைவருக்கும் மிக்க நன்றி,
   
...

Oru Arizonan

unread,
Apr 3, 2015, 7:53:48 PM4/3/15
to mintamil
மிக்க நன்றி, அன்பின் தேமொழி!

படித்துப் பயன் பெறுகிறேன்.
அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Apr 18, 2015, 12:50:21 AM4/18/15
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
பெருகிவரும் தங்களது ஆதரவு குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய பின்னூட்டங்கள் மிகவும் உற்சாகமளிக்கின்றன. தங்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தகுதியுடையேனாகத் தொடர்ந்து இருக்கவேண்டுமே என்ற கவலையும் தொற்றிக்கொண்டுள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இத்துடன் இலக்கியங்களில் மதுரை என்ற பகுதியில் சிலப்பதிகாரத்தில் மதுரை என்ற பகுதி வந்திருக்கிறது. வழக்கம்போல், சிலம்பினின்றும் சில தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளும் அவற்றுக்கான அடிநேர் உரையும் கொடுக்கப்பட்டுள்ளன. விட்டுப்போன பகுதிகளும் சுவையானவையே. ஆனால் அவை இக் கட்டுரையில் மூல நோக்கத்திற்குட்பட்டவையல்ல என்பதால் விடப்பட்டுள்ளன. இலக்கிய நயம் விழைவோர் சிலப்பதிகார நூலில் அவற்றையும் படிக்கலாம்.

அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

5. சங்க கால மதுரை

 

5.5 சங்ககால மதுரை

சங்க கால மதுரையின் உள் அமைப்பைத் தெரிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல் ஆகும். இது மதுரையைப் பற்றிய மிக விரிவான செய்திகளைக் கூறுகிறது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களில் ஒரு சில குறிப்புகளே உள்ளன. சங்க இலக்கியங்களை அடுத்து, சிலப்பதிகாரம் மதுரையைப் பற்றிய விரிவான செய்திகளைக் கூறுகிறது. இப்பகுதியில் சிலம்பு காட்டும் மதுரையைக் காண்போம்.

5.5.1 இலக்கியங்களில் மதுரை -  சிலப்பதிகாரத்தில் மதுரை

அ. கவுந்தி அடிகள் முதலானோர் மதுரையைச் சேர்தல்

கவுந்தி அடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் புகார் நகரத்திலிருந்து மதுரைக்கு நடந்தே வருகிறார்கள். அப்பொழுது வேனிற்காலமாதலால், பொதுவாக இரவுமுழுதும் நடந்து பகலில் ஓய்வெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி ஒரு நாள் இரவுமுழுதும் நடந்து காலையில் வெள்ளென மதுரைக்குப் புறத்தே இருக்கும் ஒரு பாணர் சேரியை அடைகிறார்கள். மதுரையை நெருங்கிவிட்டோம் என்பதை அறியாத அவர்கள் பாணரிடம் கூடலாகிய மதுரை நகருக்கு இன்னும் எத்தனைக் காவத தூரம் இருக்கிறது என்ற பொருளில் “கூடல் காவதம் கூறுமின்” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் தொலைவில் தெரியும் ஒரு புகை மூட்டத்தைக் காட்டுகிறார்கள். “மதுரை மாநகரின் வீட்டு அடுக்களைகளில் உண்டாகும் தாளிப்புப் புகையும், அங்காடித் தெருவில் அப்ப வணிகர் அப்பம் சுடுதலால் உண்டாகும் புகையும், மைந்தரும் மகளிரும் மாடங்களில் எடுத்த புகையும், வேள்விச் சாலைகளில் தோன்றும் ஓமப் புகையுமே அவ்வாறு பெரும் மூட்டமாய்த் தோன்றுகிறது. அத்துடன் பாண்டியன் அரண்மனையில் எழுப்பப்படும் பல்வித நறுமணப்புகைகளும் மதுரைத் தென்றலில் மிதந்து வருவதைக் காணீர், மதுரை மூதூர் நனி சேய்த்து அன்று” என்று அப் பாணர் கூறுகின்றனர். மேலும் நடந்த அம் மூவர் அதிகாலைப் பொழுதில் மதுரையை அடைகின்றனர்.

ஆ. மதுரையின் பல்வேறு ஓசைகள்

கவுந்தி அடிகள் முதலானோர் சேர்வது மதுரையை ஒட்டி ஓடும் வைகை ஆற்றின் வடகரையில். அப்போது தென்கரையில் இருக்கும் மதுரைக் கோட்டைக்குள்ளிருக்கும் சிவன் கோயிலிலிருந்தும், பாண்டியனின் அரண்மனையிலிருந்தும் ஒலிக்கும் முரசுகளின் ஒலியும், நான்மறை அந்தணர் நவின்ற ஓசையும், பெருந்தவ முனிவர்கள் ஓதும் ஒதையும், வாட்படை வீரர்கள் நாட்காலையில் எழுப்பும் ஓசையும், போர்யானைகளின் முழக்கமும், பந்திகளில் நிற்கும் குதிரைகளின் கனைப்பொலியும், பொருநர் எழுப்பும் வைகறைக் கிணைப்பறை ஒலியும், கடல் முழக்கத்தைப் போல் அவர்களுக்குக் கேட்கிறது. இந்த ஆர்ப்பொலி எதிர்கொள, ஆரஞர் நீங்கியவராய் வையை ஆற்றைக் கடக்கும் வழியைத் தேடுகிறார்கள். புனல் ஆறு அன்று; இது பூம்புனல் ஆறு என்று சொல்லத்தக்க வகையில் பலவித மலர்களைச் சுமந்துவரும் வையை என்ற பொய்யாக் குலக்கொடியை வணங்கி மகிழ்கிறார்கள்.

இ. வையையைக் கடத்தல்

இன்று பேச்சியம்மன் படித்துறை என்று அழைக்கப்படும் திருமருதந்துறையின் வடகரையில் அவர்கள் நிற்கிறார்கள். அது செல்வர் நீராடும் பகுதி. எனவே, பலவித அழகிய ஓடங்கள் அங்கே இருக்கின்றன. குதிரை முக ஓடம், யானை முக ஓடம், சிங்க முக ஓடம் ஆகியவை இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றிலொன்றில் ஏறாமல், கிழக்குப்பக்கம் சிறிது நகர்ந்து, வேறு ஒரு சிறிய துறையில் ஒரு மரத்தெப்பத்தில் ஏறி ஆற்றைக் கடக்கிறார்கள். காவற்காடு சூழ்ந்த அகழியை வலஞ்சுழியாகச் சுற்றிச் செல்கிறார்கள். நிமிர்ந்துபார்த்தால் மதுரைக் கோட்டையின் மீது ஏற்றப்பட்ட கொடிகள் “இங்கே வராதீர்கள், வராதீர்கள்” என்று கையால் மறித்துக் காட்டுவன போல் அசைந்து பறந்துகொண்டிருந்தன என்கிறார் இளங்கோவடிகள். மதுரைக் கோட்டைக்குக் கிழக்குப்பக்கத்தில், வயல்களும், சோலைகளும், தோட்டங்களும் ஏரிகளும் நிறைந்த பகுதியில், வாழையும், கமுகும், தென்னையும் சூழ்ந்த ஒரு, ஒரு மூங்கில் பந்தலின் அடியில் இருக்கும் இருப்பிடத்தைக் கொண்ட, அறம்புரி மாந்தர் அன்றி வேறு யாரும் சேராப் புறஞ்சேரியினை அடைகிறார்கள்.

ஈ. ஊர் துயிலெழக் கோயில்களில் வழிபாடு

புள் எழுந்து ஆர்த்தன. பொய்கைத் தாமரை பூத்துச் சிரித்தது. உலகு தொழு மண்டிலமான ஞாயிறு ஊர்துயில் எடுப்பியது. ஏந்துவாள் செழியனை எண்ணி பகைவேந்தர் நடுங்கிக்கொண்டே எழுந்தனர்.

மதுரைக் கோட்டைக்குள் இருக்கும் நெற்றிக்கண் சிவன் கோவில், கருடச் சேவலின் திருமால் சன்னதி, கலப்பைப் படையின் பலராமன் பேரரங்கம், கோழிச் சேவல் கொடியோன் கோட்டம், அறவோர் பள்ளி, மன்னவன் கோயில் ஆகிய இடங்களிலிருந்து சங்கொலியும், முரசொலியும் செறிவான குரலில் விடியலின் சேதியை அறிவிக்க முழங்கின.

உ. கோவலன் புறப்பட்டு நகர் புகல்

நன்கு விடிந்ததும் கோவலன் கவுந்தியடிகளை வணங்கித் தான் மதுரை சென்று, அங்கிருக்கும் வணிகருக்குத் தன் நிலையை எடுத்துச்சொல்லி வருவதாகவும், வருமளவும் கண்ணகி அவரின் அடைக்கலம் என்றும் கூறி, அவர்களிடமிருந்து விடைபெற்று, மதுரை நகரை நோக்கிச் செல்கிறான்.

முதலில் அவன் எதிர்கொள்வது கட்டுவேலி சுற்றிலும் அமைக்கப்பட்ட காவற்காடு. பெரும்படையுடன் வரும் பகைமன்னர் எளிதில் நகரை நெருங்காவண்ணம் மிகவும் செறிவான மரங்களைக் கொண்ட இக் காடு மதுரை நகரின் முதற்பாதுகாப்பரண் ஆகும். அதை அடுத்து இருப்பது ஆழமான அகழி. வைகை ஆற்றின் தெளிந்த நீர் ஆழத்தில் பளபளத்துக்கொண்டிருக்கிறது. அகழியை அடுத்து முதலில் அவன் காண்பது சுரங்க வழியின் வாயில். பெரும் யானைகளும் செல்லக்கூடிய அளவுக்கு மிகப் பெரிதான இப் பாதையைச் சுற்றிக் கடந்து சென்றால், அங்கே கோட்டை மதிலின் வாயிலில் யவனர்கள் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்கள் ஐயுறாவண்ணம் கோவலன் நகருக்குள் நுழைகிறான். ‘சட்’டென அவன் கண்களுக்கெதிரே தோன்றும் காட்சியைக் கண்டு பிரமித்து நிற்கிறான். உலகத்துச் செல்வத்தையெல்லாம் வீதிகளில் கிடத்தியிருக்கும் அந்த இரு பெரு நியமங்களையும் கண்ட அவன், இந்திரனின் அரிய அணிகலன்களைக் கொண்ட பேழையை வாயைத் திறந்து வைத்திருக்கிறார்களோ என்று வியந்துபோகிறான்.

ஊ. கொடி நிறைந்த தெருவும் பொதுமகளிரும்

அது ஆடிமாத காலம். தென்மேற்குப் பருவக்காற்று ஆடிக்காற்றாய் சுழற்றி வீசுகிறது. ஊர் மன்றத்தில் ஏற்றப்பட்டுள்ள கொடிகள் ‘படபட’-வென்று அடித்துக்கொண்டு ஆடுகின்றன. அந்தச் சந்திப்பில்தான் அனைத்துச் சந்திப்புகளும் நடக்கும்போலும். அதிகாலையில் வெளியே சென்று திருமருதந்துறையில் நீராடச் செல்கின்றனர் களிமகளிர். அவருடன் இரவெல்லாம் ஆட்டம்போட்ட பணக்கார இளைஞர்கள், பகலில் இந்த மகளிரைப் படகுகளில் கொண்டுசென்று வையை ஆற்றில் கூடிவிளையாடக் கூடவே செல்கின்றனர். கொஞ்சம் தள்ளிச் சென்றால் இவர்கள் வாழும் வீதி இருக்கும். நல்ல குடிப்பிறந்த செல்வரும், நாடாளும் மன்னரும் விரும்பி நுழையும் வீதி அது. அவர்கள் வீட்டு வாசலில் வெளியூர் சென்றுவர வில்வண்டிகள் காத்திருக்கும். உள்ளூரில் ஊர்ந்துவர பல்லக்குகள் படுத்திருக்கும். வீட்டுக்குள்ளேயோ கால்களில் மணிகள் பதித்த கட்டில்கள் காத்திருக்கும். வியர்க்காதிருக்கச் சாமரை வீசும் பணியாளர், பொன்னாலான வெற்றிலைப்பெட்டியை வைத்திருக்கும் ஏவலர், காவலுக்குக் கூர் வாளுடன் காவலர் எனப் பணியாளரின் பணிவிடையில் அவர்கள் மகிழ்ந்திருப்பர். வற்றாமல் வந்துகொண்டிருக்கும் செல்வத்தில் மூழ்கித்திளைக்கும் அம் மகளிரின் கைகளில் சங்கு வளையல்கள் இல்லை. மாறாகப் பொன்வளையல்கள் மின்னுகின்றன. களைக்கும்போதெல்லாம் களிப்பேற்றச் செம்பொன் வட்டில்களில் தேறல் குவளைகளை ஏந்திய ஏவலர் எப்போதும் அருகில் நிற்பர். அந்த மயக்கத்தில், மொய்க்காத வண்டுகளை அவை இல்லாத இடத்திலிருந்து தம் பொல்லாத கரங்களால் போக்கிக்கொண்டிருப்பர். செக்கச் செவேலென்ற சிவந்த உதடுகளில் மாயப்புன்னகை ஒன்றுடன் ஊடற்காலத்தில் யோசிக்காமற் சொன்ன உயிரற்ற சொற்களை எண்ணி உள்ளுக்குள் நகைத்திருப்பர். இந்தப் பேரழகில் மயங்கிய பெருந்தனக்காரர்கள் அவரின் கண்ணசைவுக்குக் காத்துக்கொண்டிருப்பர்.

எ. கலைஞர் வீதி

உலக இன்பத்துக்காக உடல்விற்கும் இந்த மங்கையரின் வீதியை அடுத்துக் கோவலன் காண்பது செவியையும் சிந்தையையும் மயக்கும் கலைஞரின் வீதி. இவர்கள் கலைக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டு அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். வடக்கு வாசலை ஒட்டியிருக்கும் இவர்களுக்குரிய இரு பெரு வீதிகளையும் கடக்கும்போது கோவலனின் கலையுள்ளம் தடுமாறி நின்றிருக்கும். வேத்தியல், பொதுவியல் என, அரசர்க்கான கூத்திலும், பொதுமக்களுக்கான கூத்திலும் அவர்கள் பயிற்சிமேற்கொண்டிருக்கையில் அங்கு எழும் ஆடலும், பாடலும், தாளங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் இன்னிசையும் எவர் மனத்தையும் மயக்கவல்லன. அரசனிடமிருந்து நாள்தோறும் ஆயிரத்தெட்டு கழஞ்சினைத் தவறாமல் பெறுகின்றவர் இவர். தவநெறிப்பட்டோரையும் தடுமாறவைக்கும் இந்தப் பேரழகு மங்கையரும் ஒரோவழிப் பிறரின் ஆசையைத் தணிக்க உடன்பட்டுச் செல்வதுமுண்டு.

ஏ. அங்காடி வீதி

வடக்குத் தெருவைத்தாண்டி மேற்குத்தெருப் பக்கம் திரும்பிய கோவலனை வியப்புக்குள்ளாக்குகிறது அடுத்திருக்கும் அங்காடி வீதி. பெரிய வில்வண்டிகள் முதல் சிறிய குத்துவாள் வரை இங்கே கிடைக்காத பண்டமில்லை எனலாம். வண்டியும், வண்டிக்குரிய பொருள்களையும் அடுத்து, போர்க்குத் தேவையான கவசம், அங்குசம், காலணி, இடுப்புப்பட்டி, வளைதடி, கவரி, பல்விதக் கேடயங்கள், குத்துவாள் ஆகியவை அங்கே எராளமாகக் கிடைக்கின்றன. அடுத்துச் செம்புக்கடை, வெண்கலக்கடை, துணிமுடிச்சுக்கடை, பூமாலைக்கடை, தந்தப்பொருள் கடை, வாசனைப்பொருள் கடை, சந்தனக்கடை என இன்னும் பல்வேறு பொருள்களைப் பரப்பிவைத்திருக்கும் கடைகளைக் காண அரசரும் விரும்பி வருவராம்.

ஐ. நவரத்தினக்கற்கள் வீதி

மேற்குத் தெருவை முடித்துத் தெற்குத்தெருவில் கோவலன் திரும்பியவுடன் அவன் கண்ணிற் பட்டவை கண்ணைக்கூசவைக்கும் இரத்தினங்கள் பரப்பிவைத்த கடைகள்தாம். வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம், புருடராகம், மரகதம், மாணிக்கம், நீலமணி ஆகிய ஒன்பது வகையான மணிகளும், அவற்றில் எவ்விதக் குற்றமும் குறைபாடும் இன்றி அங்கே கிடைப்பதைக் கோவலன் கவனத்துடன் ஆய்ந்து பார்த்துக்கொண்டே நகர்கிறான்.

ஒ. நகைக்கடை வீதி

நவமணிக் கடைகளையொட்டி நீண்டு இருப்பன நகைக்கடைகள்தாம். சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்ற நான்கு வகையான தங்க நகைகளைப் பரப்பிய கடைகளின் வாசலில் அங்கே எந்தவிதப் பொன் கிடைக்கும் என்பதை அறிவிக்கும் கொடிகளும் இருப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டே மேலும் நடக்கிறான் கோவலன்.

ஓ. துணிக்கடை வீதி

நகைக்கடை வீதியை அடுத்து கிழக்குத் தெருவில் திரும்பும் முன்னர் வருவது துணிக்கடை வீதி. பருத்தி ஆடைகள், உரோம ஆடைகள், பட்டு ஆடைகள் ஆகியவை ஒன்றற்கொன்று வேறுபாடு தெரியாத அளவில் மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்டு நறுமணமும் சேர்க்கப்பட்டு அடுக்கடுக்காக அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன இந்தக் கடைகளில்.

ஔ. தானியக் கடை வீதி

துணிக்கடைவீதியைத் தாண்டினால் கிழக்குத்தெருவில் வருவது நவதானியக்கடைகளின் வீதி. நிறுப்பன, முகப்பன ஆகியவற்றுக்கான அளவுக் கருவிகளுடன் அத்தனை தானியங்களும், மிளகு மூடையும் குவித்துக்கிடப்பதைப் பார்த்துக்கொண்டே கோவலன் தொடர்ந்து நடக்கிறான்.

ஃ. கோவலன் திரும்புதல்

இவ்வாறு, பொதுமக்களுக்கான நான்கு தெருக்களிலும், அவற்றுக்குக் குறுக்காக ஓடும் பல்வகை வீதிகளைப் பார்த்தவண்ணம் சுற்றிவந்த கோவலன், அடுத்து மன்னனைச் சார்ந்துள்ளோர் வாழ்வதற்கெனத் தனித்தனிப் பகுதியினருக்காகப் பிரிக்கப்பட்ட நான்கு வேறுபட்ட தெருக்களையும் சுற்றி வருகிறான். இவை இன்றைய சித்திரைத் தெருக்கள். இந்தத் தெருக்களும் வீதிகளும் சந்திக்கும் முச்சந்திகளிலும், நாற்சந்திகளிலும் ஆங்காங்கிருந்த கோயில்களின் முகப்பிலிருந்த கோயிற்கடைத் தெருக்களிலும், மன்றுகளிலும், தெருக்கள் கூடுமிடங்களிலும், குறுந்தெருக்களிலும் அலைந்து, வானின் நடுவில் வெம்மை முறுகியோடும் ஞாயிற்றின் கதிர்களும் நுழைய முடியாத அளவுக்குப் புதிதான சிறிய கொடிகளும், பெரிய கொடிகளும் பந்தலாய் அமைந்த நிழலில் மன்னனின் ஊரைக் கண்டு மகிழ்ந்து கோவலன் கொடிகளையுடைய மதிலின் புறத்தே திரும்பிச் செல்கிறான்.

க. மாதரி வரவு

கோவலன் கவுந்தியடிகள் தங்கியிருக்கும் பகுதிக்குச் சென்று தான் மதுரைக்குள் சென்று வந்ததைப் பற்றிக் கூறிமுடிக்கிறான். அப்போது, கவுந்தியடிகள் முனிவர்கள், தவத்தோர் ஆகியாரல்லது ஏனையோர் அப் பகுதியில் இரவில் தங்கக் கூடாது எனவும், கோவலனும் கண்ணகியும் இரவுக்குள் மதுரைக்குள் சென்றுவிடவேண்டும் என்றும் கூறுகிறார். அப்போது, மதுரையைச் சேர்ந்த ஓர் ஆயர் முதுமகள், மாதரி என்போள், ஊர்ப்புறத்தே இருக்கும் இயக்கிக்குப் பால் படைப்பதற்காக அங்கு வருகிறாள். வந்தவள் அடிகளைப் பார்த்து வணங்கிநிற்கிறாள்.

கா. மாதரியிடம் அடைக்கலம் கொடுத்தல்

கோவலன், கண்ணகி ஆகியோரின் சிறப்பைப் பற்றி மாதரியிடம் உயர்வாகக் கூறிய அடிகள், அவர்கள் உரிய இடம் சேரும்வரை அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துத் தாய் போல் காக்க என்று அடிகள் கூற, மாதரி அதனை மகிழ்வுடன் ஏற்று கோவலன் கண்ணகி ஆகியோரைத் தன்னுடன் வந்த ஆய்ச்சியர் சிலர் சூழ்ந்துவர அழைத்துச் செல்கிறாள்.

கி. கோவலன், கண்ணகி மதுரை நகர் புகல் – மதுரைக் கோட்டைக் கருவிகள்

கோவலனும் கண்ணகியும் ஆய்ச்சியர் சிலர் சூழ்ந்துவர, மாதரியைப் பின்தொடர்ந்து மதுரைக்குள் செல்கின்றனர். செல்லும் வழியில் அங்கிருந்த மதுரைக் கோட்டையையும், அதன்மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் வியப்புடன் நோக்கியவண்ணம் உள்செல்கின்றனர்.

முதலில் காவற்காட்டையும், பின்னர் அகழியையும் கடந்த அவர்கள் கோட்டையை அண்ணாந்து நோக்கிகிறார்கள். தானே வளைந்து அம்புவிடும் தானியங்கி வில்பொறிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. வந்தாரை வளைத்துப்பிடிக்கும் கருங்குரங்குப் பொறிகள் கரிய விரல்களுடன் அமர்ந்திருக்கின்றன. தாமே கல்லை வீசும் கவண்பொறிகள் அங்கு இருக்கின்றன. கோட்டையின் மீதேறுவாரைச் சுட்டுப்பொசுக்கும் கொதிக்கும் எண்ணெய் மிடாக்களும், செம்பை உருக்கும் குழிப்பானைகளும், இரும்பைக் காய்ச்சும் உலைகளும், கவணுக்குரிய கல்லைப் போட்டு வைக்கும் கூடைகளும் இருக்கின்றன. தொலைவில் ஏறுவோரைக் கவ்விப்பிடிக்கும் தூண்டில்களும், அவரின் கழுத்தை முறிக்கும் சங்கிலிகளும், ஆண்டலை என்ற ஆந்தை வடிவான அடுப்புகளும் ஆயத்தநிலையில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. மதில்மேல் ஏறுவாரின் கழுத்தைப் பிடித்துத்தள்ளும் கவைகளும், ஏறிவந்தோரைப் பிடித்து இறக்கக் கழுக்களும், அம்புக்கட்டுகளும், மறைந்து நின்று ஏவுமிடங்களும், ஏறிவந்தோரைத் தடுக்கும் துலாக்கட்டைகளும். அவற்றைப் பிடிப்போரின் கையைக் குத்தும் ஊசிப்பொறிகளும், பறந்து தாக்கும் மீன்கொத்திப் பொறியும், மதில் உச்சிக்கு வந்தோரைக் கொம்பால் குத்தித்தள்ளும் பன்றிப்பொறிகளும், கோட்டைக் கதவைத் தாங்கும் நிலைமரங்களும், மூங்கிற் பொறிகளும், கதவின் உள்பக்கத்தைச் சேர்க்கும் தளைக்கட்டும், கோட்டைக்கதவுக்கு வலுச்சேர்க்கும் கணையமரங்களும், எறிகோல்களும், குத்துக்கோல்களும், வேல்களும், இன்னும் பிற பொறிகளும் மிகுதியாகச் செறிந்து காணப்படும் சிறப்பு மிக்க கோட்டை மதிலின் மீது அன்றைய நாளின் கொடி அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது.

இந்த வாயிலைக் கடந்து மாதரி அனைவரையும் தன் மனைக்கு அழைத்துச் செல்கிறாள்.

கீ. கோவலன் சிலம்பு விற்கச் செல்லுதல்

மாதரி ஏற்பாடு செய்த வீட்டில் மனைவியுடன் இராத்தங்கின கோவலன் மறுநாள் காலையில் கண்ணகியின் ஒரு சிலம்பை எடுத்துக்கொண்டு அதனை விற்றுவர நகருக்குள் செல்கிறான். முதலில் இடையர்கள் குரவை போன்ற விழாக்கள் நடத்தும் சாணம் மெழுகியிருக்கும் மன்றத்தை அடைகிறான். பின்னர் கோயில்களில் பணிசெய்யும் பணிப்பெண்டிர் வாழும் குறுகிய சந்துகளின் வழியே செல்கிறான். அதன்பின்னர் கடைத்தெருவுக்கு வருகிறான்.

கு. கோவலன் பொற்கொல்லனைக் காணல்

அப்போது தன் உதவியாளருடன் வந்துகொண்டிருக்கும் அரசவைப் பொற்கொல்லனை அவன் எதிர்கொள்கிறான். இந்தச் சந்திப்பு எங்கே நிகழ்ந்திருக்கும்? தெற்குத் தெருவில்தான் இரத்தினக்கடைவீதியும், நகைக்கடைவீதியும் இருப்பதாகப் பார்த்தோம். எனவே, தெற்குத்தெருவும், மேற்குத்தெருவும் சந்திக்கிற சந்திப்பிலோ, தெற்குத்தெருவும் கிழக்குத்தெருவும் சந்திக்கிற சந்திப்பிலோ இது நடந்திருக்கவேண்டும். அடுத்து, பொற்கொல்லன் சிலம்பை வாங்கிக்கொண்டு மன்னனின் அரண்மனைக்குள் செல்கிறான். மன்னனின் கோயில் கிழக்குப்பார்த்தது என அறிவோம். எனவே கோவலன் கிழக்குத்தெரு அங்காடியில்தான் பொற்கொல்லனைப் பார்க்கிறான். சிலம்பை வாங்கிய பொற்கொல்லன், கோவலனை அருகிலுள்ள தன் குடிலுக்குச் சென்று அங்கு தங்கியிருக்கச் சொல்கிறான். நகைக்கடை வீதியை அடுத்தே நகைசெய்வோர் இல்லங்கள் இருந்திருக்கவேண்டும்.

கூ. கோட்டை வாயில்கள்

கோவலன் கொலையுண்டான் என்று கேட்ட கண்ணகி கொதித்தெழுந்து மன்னன் கோயில் புக்கு, அவனுடன் வாதாடி, தன் கணவன் கள்வனல்லன் என்று நிறுவிய பின்னர் மதுரையைச் சுட்டெரித்துவிட்டு வைகைக் கரை வழியே மேற்குநோக்கிச் செல்கிறாள். கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்; மேல் திசை வாயில் வறியேனாய்ப் பெயர்கிறேன் என்று கூறுகிறாள். எனவே மதுரைக் கோட்டைக்குக் கிழக்கிலும் மேற்கிலும் வாயில்கள் இருந்தன என அறிகிறோம். இதைப் போலவே தெற்கிலும் வடக்கிலும் நகர வாயில்கள் இருந்திருக்கவேண்டும் என்று கொள்ளலாம்.

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை

கவுந்தி அடிகள் முதலானோர் மதுரையைச் சேர்தல்

ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம்

பாடும் பாணரில் பாங்குறச் சேர்ந்து                       105

---------- ---------- ------- ---------

கூடல் காவதம் கூறுமின் நீர் என                  114

---------- ---------- ------- ---------

அட்டில் புகையும் அகல் அங்காடி

முட்டா கூவியர் மோதகப் புகையும்

மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த

அம் தீம் புகையும் ஆகுதிப் புகையும்                     125

பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர்

விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின்

அளந்து உணர்வறியா ஆர் உயிர் பிணிக்கும்

கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்

புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்                    130

பொதியில் தென்றல் போலாது ஈங்கு

மதுரைத் தென்றல் வந்தது காணீர்

நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்

தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என

---------- ---------- ------- ---------

மதுரையின் பல்வேறு ஓசைகள்

அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும்

பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்

பால் கெழு சிறப்பின் பல்லியம் சிறந்த

காலை முரசக் கனை குரல் ஓதையும்                    140

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்

மாதவர் ஓதி மலிந்த ஓதையும்

மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு

வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்

போரில் கொண்ட பொரு கரி முழக்கமும்                 145

வாரிக் கொண்ட வயக் கரி முழக்கமும்

பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்

கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்

கார்க் கடல் ஒலியின் கலி கெழு கூடல்

ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி                  150

---------- ---------- ------- ---------

புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி                    170

---------- ---------- ------- ---------

புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என

அன நடை மாதரும் ஐயனும் தொழுது                   175

வையையைக் கடத்தல்

பரி முக அம்பியும் கரி முக அம்பியும்

அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும்

பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண்

மாதவத்தாட்டியொடு மரப்புணை போகித்

தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி                180

வானவர் உறையும் மதுரை வலம் கொள

தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு

அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி

---------- ---------- ------- ---------

போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி

வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட                 190

புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி

வெள்ள நீர்ப் பண்ணையும் விரி நீர் ஏரியும்

காய் குலைத் தெங்கும் வாழையும் கமுகும்

வேய்த் திரள் பந்தரும் விளங்கிய இருக்கை

அறம் புரி மாந்தர் அன்றிச் சேராப்                              195

புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என்

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - ஊர்காண் காதை

ஊர் துயிலெழக் கோயில்களில் வழிபாடு

புறஞ்சிறைப் பொழிலும் பிறங்கு நீர்ப் பண்ணையும்

இறங்கு கதிர்க் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப

புலரி வைகறைப் பொய்கைத் தாமரை

மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம்

வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய                 5

ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்

உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்

மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்               

கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்                 10

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்

மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய

காலை முரசம் கனை குரல் இயம்பக்

கோவலன் புறப்பட்டு நகர் புகல்

கோவலன் சென்று கொள்கையின் இருந்த                 15

காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி

----------- ---------- ------- --------

தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு              21

என் நிலை உணர்த்தி யான் வருங்காறும்

பாதக் காப்பினள் பைம்_தொடி --------

---------------

வருந்தாது ஏகி மன்னவன் கூடல்                   60

பொருந்துழி அறிந்து போது ஈங்கு என்றலும்

இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த

இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில்

பெருங்கை யானை இன நிரை பெயரும்

சுருங்கை வீதி மருங்கில் போகிக்                   65

கடி மதில் வாயில் காவலின் சிறந்த

அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு

ஆயிரம்கண்ணோன் அருங்கலச் செப்பு

வாய் திறந்து அன்ன மதிலக வரைப்பில்

கொடி நிறைந்த தெருவும் பொதுமகளிரும்

குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின்                70

கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு

வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை

விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை

ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கிப்

பூம் புணை தழீஇப் புனல் ஆட்டு அமர்ந்து                 75

---------- ----------- ----------- -

வையமும் சிவிகையும் மணிக் கால் அமளியும்           126

உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும்

சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்

கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்பப்

பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்                     130

பொற்றொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து

செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய

அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி

பொறி வரி வண்டினம் புல்லுவழி அன்றியும்

நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்தாங்கு           135

இலவு இதழ்ச் செவ்வாய் இள முத்து அரும்பப்

புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த

காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு

நாவொடு நவிலா நகைபடு கிளவியும்

அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன                140

செம் கயல் நெடும் கண் செழும் கடைப் பூசலும்

கொலை வில் புருவத்துக் கொழும் கடை சுருளத்

திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்

செவ்வி பார்க்கும் செழும் குடிச் செல்வரொடு

வையம் காவலர் மகிழ்தரு வீதியும்                      145

கலைஞர் வீதி

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்

முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை

வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து

மாத்திரை அறிந்து மயங்கா மரபின்

ஆடலும் வரியும் பாணியும் தூக்கும்                     150

கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து

நால் வகை மரபின் அவிக் களத்தினும்

ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்

மலைப்ரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்

வாரம் பாடும் தோரிய மடந்தையும்                      155

தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும்

நால் வேறு வகையின் நயத்தகு மரபின்

எட்டுக்கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு

முட்டா வைகல் முறைமையின் வழாஅத்

தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டாங்கு      160

அரும்பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக

தவத்தோராயினும் தகை மலர் வண்டின்

நகைப்பதம் பார்க்கும் இளையோராயினும்

காம விருந்தின் மடவோராயினும்

ஏம வைகல் இன் துயில் வதியும்                        165

பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல்

எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும்

அங்காடி வீதி

வையமும் பாண்டிலும் மணித் தேர்க் கொடுஞ்சியும்

மெய் புகு கவசமும் வீழ் மணித் தோட்டியும்

அதள் புனை அரணமும் அரியாயோகமும்                 170

வளைதரு குழியமும் வால் வெண் கவரியும்

ஏனப் படமும் கிடுகின் படமும்

கானப் படமும் காழ் ஊன்று கடிகையும்

செம்பின் செய்நவும் கஞ்சத் தொழிலவும்

வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும்               175

வேதினத் துப்பவும் கோடு கடை தொழிலவும்

புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும்

வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய

அரசு விழை திருவின் அங்காடி வீதியும்

நவரத்தினக்கற்கள் வீதி

காகபாதமும் களங்கமும் விந்துவும்                      180

ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா

நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி

நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்

ஏகையும் மாலையும் இருளொடு துறந்த

பாசு ஆர் மேனிப் பசும் கதிர் ஒளியவும்                   185

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்

விதி முறை பிழையா விளங்கிய சாதியும்

பூச உருவின் பொலம் தெளித்தனையவும்

தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும்

இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும்          190

ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்

இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்

தோற்றிய குற்றம் துகளறத் துணிந்தவும்

சந்திரகுருவே அங்காரகன் என                           195

வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்

கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்

திருக்கும் நீங்கிய செங்கொடி வல்லியும்

வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கிப்

பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும்                200

நகைக்கடை வீதி

சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்

சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின்

பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு

இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்

துணிக்கடை வீதி

நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும்               205

பால் வகை தெரியாப் பல் நூல் அடுக்கத்து

நறு மடி செறிந்த அறுவை வீதியும்

தானியக்கடை வீதி

நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர்

அம்பண அளவையர் எங்கணும் திரிதரக்

காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு                210

கூலம் குவித்த கூல வீதியும்

கோவலன் திரும்புதல்

பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்

அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்

மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து

விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா               215

பசும் கொடி படாகை பந்தர் நீழல்

காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி

கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என்

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - அடைக்கலக் காதை

மாதரி வரவு

---------- ----------- ----------- -

அறத்துறை மாக்கட்கு அல்லது இந்த

புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின்

அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின்

உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு       110

காதலிதன்னொடு கதிர் செல்வதன் முன்

மாட மதுரை மா நகர் புகுக என

மா தவத்தாட்டியும் மா மறை முதல்வனும்

கோவலன்தனக்கு கூறுங்காலை

அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய                    115

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்

பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்

ஆயர் முதுமகள் மாதரி என்போள்

காவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழலும்

---------- ----------- ----------- -

மாதரியிடம் அடைக்கலம் கொடுத்தல்

உடைப் பெருஞ்செல்வர் மனைப் புகுமளவும்

இடைக் குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்           130

---------- ----------- ----------- -

தாயும் நீயே ஆகித் தாங்கு ஈங்கு                         136  

---------- ----------- ----------- -

நீட்டித்து இராது நீ போக என்றே

கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி                           200

---------- ----------- ----------- -

கோவலன் கண்ணகி மதுரை நகர் புகல் – கோட்டைக் கருவிகள்

செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ                  206

மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும்

கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும்

பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும்

காய் பொன் உலையும் கல் இடு கூடையும்               210

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்

கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கை பெயர் ஊசியும்

சென்று எறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும்                 215

கோலும் குந்தமும் வேலும் பிறவும்

ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும்

வாயில் கழிந்து தன் மனை புக்கனளால்

கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என்

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - கொலைக்களக் காதை

கோவலன் சிலம்பு விற்கச் செல்லுதல்

------------ -------- -------- ---------

சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய்            92

மாறி வருவன் மயங்காது ஒழிக என

------------ -------- -------- ---------

தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து                   

மாதர் வீதி மறுகிடை நடந்து

பீடிகைத் தெருவில் பெயர்வோன் ஆங்கண்

கோவலன் பொற்கொல்லனைக் காணல்

கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய                 105

நுண் வினைக் கொல்லர் நூற்றுவர் பின் வர

மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவின்

கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகி

------------ -------- -------- ---------

சிறு குடில் அங்கண் இருமின் நீர் எனக்

கோவலன் சென்று அக் குறுமகன் இருக்கை ஓர்           125

------------ -------- -------- ---------

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - கட்டுரை காதை

கோட்டை வாயில்கள்

கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என
அடிநேர் உரை

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம்

புறஞ்சேரியிறுத்த காதை

 

கவுந்தி அடிகள் முதலானோர் மதுரையைச் சேர்தல்

அழிக்கும் தன்மையையே இயல்பாகவுடைய கொற்றவையைப்

பாடும் பாணருடன் தோழமையுடன் கலந்து,                                 105

---------- ---------- ------- ---------

“மதுரைநகர் எத்துணைக் காவத தூரத்திலுள்ளது கூறுங்கள்” என்று கேட்க- 114

---------- ---------- ------- ---------

சமையலறைப் புகையும், அகன்ற கடைவீதிகளில்

தட்டுப்பாடில்லாத அப்ப வாணிகர் அப்பம் சுடும் புகையும்,

மைந்தரும் மகளிரும் மாடங்களில் எடுத்த

அழகிய இனிய புகையும், வேள்விப் புகையும்,                               125

பலவித பொலிவுள்ள புகையும் கலந்து, வெற்றி காணும் போரினையுடைய

ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மார்பின் பாண்டியன் அரண்மனையின்கண்

அளவிட்டறிய முடியாத, உள்ளத்தை மயக்கும்

நறுமணக் கலவையின் தொகுதியும் அழகிதாகத் தோன்றி,

புலவரால் பாடப்பெற்ற, உயர்ந்துநிற்கும்                                     130

பொதிகை மலையில் தோன்றும் தென்றல் போலல்லாமல், இங்கு

மதுரைத் தென்றல் வந்தது காணீர்,

மிகத் தொலைவிலுள்ளது அன்று, பாண்டியனின் செல்வம் மிகுந்த மூதூர்,

நீங்கள் தனியே செல்லினும் தடுத்து நிறுத்துநர் இல்லை என்று சொல்ல –

---------- ---------- ------- ---------

மதுரையின் பல்வேறு ஓசைகள்

அரிய அழித்தல் தொழிலின் கடவுளின் அகன்ற பெரிய கோயிலிலும்,

பெரும்பெயர் மன்னவனின் பெரும்புகழ் வாய்ந்த கோயிலிலும்,

பல்வேறு தனித்தனியான சிறப்புகளையுடைய பல்லியம், சிறந்த

காலை முரசம் ஆகியவற்றின் செறிந்த முழக்கொலியும் -                     140

நான்மறை அந்தணர் நவிலுகின்ற ஓசையும்,

மாதவத்தார் ஓதும் மலிந்த ஓசையும்,

மீளா வெற்றியையுடைய வேந்தனிடம் பெற்ற சிறப்புடன்

வாள்வீரர் எடுத்த நாள்காலை முழவுகளின் ஓசையும்,

போரில் கொண்ட போர்யானைகளின் முழக்கமும்,                           145

காட்டிற் பிடித்த லியானைகளின் முழக்கமும்,

இலாயங்களில் நிற்கும் புரவிகள் கனைக்கும் சையும்,

கிணைப்பறையையுடைய மள்ளரின் வைகறைப் பாட்டொலியும் (சேர்ந்து),

கார் கடல் ஒலி போன்று, மகிழ்ச்சி மிக்க மதுரையின்

ரவார ஒலி எதிர்வர, பெருந்துன்பம் நீங்கப்பெற்றவராய்                     150

---------- ---------- ------- ---------

 

புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி                                      170

---------- ---------- ------- ---------

புனல் று அன்று இது பூம் புனல் று என

ன்ன நடை மாதரும் கோவலனும் தொழுது;                         175

வையையைக் கடத்தல்

குதிரை முகத் தோணியும் யானை முகத் தோணியும்

சிங்க முகத் தோணியும்,ரிய துறையில் செலுத்தும்

பெரிய துறையாகிய திருமருதந்துறைப் பக்கம் செல்லாது, அங்கு

மாதவத்தாட்டியொடு மரப்புணையில் சென்று,

தேன்சிந்தும் மலர்கொண்ட நறும் பொழிலின் தென் கரை எய்தி                180

வானவர் உறையும் மதுரையை வலப்பக்கம் கொண்டால்

அது மிகவும் பெரிதான சிறப்புடைது என்று, அவ்விடத்தே

ரிய காவற்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிப்போய்,

---------- ---------- ------- ---------

போரில் முயன்று எடுத்த அரிய மதிலின்கண் நீண்ட கொடிகள்

வராதீர் என்பன போல் மறித்துக் கைகாட்ட,                               190

பறவைகள் அணிசெய்யும் கழனியும் பொழிலும் பொருந்தி

மிக்க நீருடைய தோட்டங்களும், விரிந்த நீர்ப்பரப்புடைய ஏரிகளும்

காய் குலைத் தென்னையும், வாழையும், கமுகும்,

திரண்ட மூங்கிலால் இடப்பெற்ற பந்தலும் விளங்கிய இருப்பிடங்களையுடைய

அறம் புரி மாந்தர் அன்றி, வேறு எவரும் சேரா                            195

மூதூரின் புறஞ்சேரியில் விரும்பிப் புகுந்தனர் -

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - ஊர்காண் காதை

ஊர் துயிலெழக் கோயில்களில் வழிபாடு

புறஞ்சேரிச் சோலையிலும், பளிச்சிடும் நீர் கொண்ட தோட்டங்களிலும்

வளைந்த கதிர்களையுடைய வயல்வெளிகளிலும் பறவைகள் துயிலெழுந்து ஆரவாரிக்க -

புலர்கின்ற வைகறைப் பொழுதில் குளத்துத் தாமரைகள்

மலர்வதற்குக் கூம்புவிடச்செய்த, உலகத்தார் தொழும் ஞாயிறு

பகையரசர் தலை நடுங்க, வாளினை ஏந்திய பாண்டியனின்

சிறப்பான பெருமையையுடைய மதுரை நகரத்தவரைத் துயிலினிறும் எழுப்ப -

நெற்றியில் விழித்த கண்ணையுடைய இறைவனின் கோயிலும்,

கருடச் சேவற்கொடியை உயர்த்திய திருமாலின் சன்னதியும்

கலப்பையை வெற்றியோடு உயர்த்தும் பலராமனின் பேரரங்கும்

சேவற்கொடியை உடைய முருகனது இறைவளாகமும்                 10

அறநெறியிற் சிறந்த முனிவரின் உறைவிடங்களும்

போரிற் சிறந்த அரசனின் மாளிகையும் (ஆகிய இடங்களில்)

தூய வெண்ணிறங்கொண்ட சங்குகளோடு, பலவகைப்பட்ட சிறப்புடைய

காலை முரசுகள் செறிவான குரலில் விடியற் செய்தியை அறிவிக்க -

கோவலன் புறப்பட்டு நகர் புகல்

கோவலன் சென்று தவத்தில் இருந்த                     15

கவுந்தியடிகளைக் கைதொழுது போற்றி

----------- ---------- ------- --------

மூதூரிலுள்ள வணிக மக்களுக்கு                         21

எனது நிலையை விளக்கி நான் மீண்டு வருமளவும்

உமது அடைக்கலம் என் மனைவியாகிய கண்ணகி -----------

---------------

(அதற்கு அடிகள்)

வருத்தமின்றிச் சென்று பாண்டியனின் கூடல்நகரில்        60

சரியானவர் இருப்பிடம் அறிந்து நேரத்தே வருக என்று கூற -

கட்டுவேலி சுற்றிலும் அமைக்கப்பட்ட காவற்காட்டொடு வளைவாகக் கிடந்த

தகதகக்கின்ற நீர்ப்பரப்பையுடைய வலஞ்சுழியாக அமைந்த அகழியின்மேல்

பெரும் துதிக்கைகளையுடைய யானைக் கூட்டம் நடந்துசெல்லத்தக்க

சுரங்க வீதியின் பக்கமாகச் சென்று

காவல் நிறைந்த கோட்டை மதிலின் வாயிலைக் காப்பதிற் சிறந்த

உருவிய வாளையுடைய யவனக் காவலர்க்கு ஐயம் ஏற்படாவகையில் உள்ளே நுழைந்து

இந்திரனின் அருமையான அணிகலப்பெட்டியின்

வாயைத் திறந்து வைத்ததைப் போன்ற அகநகரின் புறஎல்லையில்

கொடி நிறைந்த தெருவில் பொதுமகளிர்

மேற்குக் காற்று வீசுவதால் கொடிகள் அசைகின்ற சாலைச் சந்திப்பில்    70

பொதுமகளிர் தம்மேல் காதல் கொண்ட செல்வருடன்

வெள்ளம் வருகின்ற வையையாற்றின் திருமருதமுன்துறையில்

அகன்ற பொலிவுமிக்க நட்டாற்றுத் திடலின் கரைமேடுகளில்

உயர்ந்த பள்ளியோடத்தோடு தோணிகளைச் செலுத்தியும்

பொலிவுள்ள தெப்பத்தினைத் தழுவியும் நீந்தி மகிழ்ந்து (திரும்புவர்)     75

---------- ----------- ----------- -

காமக்கிழத்தியர் வீதி

வில்வண்டியும், பல்லக்கும், மணிகள் பதித்த இருக்கையும்,       126

நந்தவனத்தில் பணியாளரின் பணிவிடை மகிழ்ச்சியும்,

சாமரையாகிய கவரியும், பொன்னால் செய்த வெற்றிலைப்பெட்டியும்

கூர் முனை வாளும் தம் அரசன் கொடுப்பப்

பெற்றுக்கொண்ட செல்வம் மாறாத வாழ்க்கையுடைய                  130

பொன்வளை அணிந்த மகளிர் புதியாருடன் கூடிச்சேர்ந்து

செம்பொன் வட்டில்களில் ஏவலர் ஏந்திய

அழகிய இனிய தெளிந்த கள்ளைப் பருகிக் களித்து

புள்ளிகளையுடைய வண்டுகள் மொய்க்காதபோதும்

நறுமலர் மாலையால் அவை இல்லாத இடத்திலிருந்து விரட்டியும் 135

இலவமலர் இதழ்களைப் போன்ற சிவந்த உதடுகளில் முறுவல் தோன்ற

ஊடற்காலத்தில் யோசிக்காமல் சொன்ன

நீலமலர் போன்ற கண்ணுடையாரின் சொற்களாகிய (நெஞ்சு முதலான)எண்வகை இடத்தும்

(பொருந்தி)நாவால் நவிலப்படாத நகைமொழியும்,

அழகிய செவ்வல்லியின் அரும்பை அவிழ்த்துப் பார்த்ததைப் போன்ற          140

சிவந்த கயலைப் போன்ற நீண்ட செழுமையான கடைக்கண்ணின் பூசலும்,

கொலை வில்லைப் போன்ற புருவத்தின் அழகிய கோடிகள் சுருண்டுவிழ,

திலகமணிந்த சிறிய நெற்றியில் அரும்பிய வியர்வையும்

அகலும் நேரம் பார்த்துக் காத்திருக்கும் வளமிக்க குடியிற் பிறந்த செல்வரோடு

நாடாளும் மன்னரும் விரும்பும் வீதியும் -                                  145 

கலைஞர் வீதி

செங்கல் தலையில் ஏற்றப்படாத பழி நீங்கிய சிறப்பினையுடைய

முடிசூடிய மன்னரும் மறைவாக வந்து தங்கும் காவலுடைய வீட்டில் வாழும்

வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைக் கூத்தின்

இயல்பை அறிந்து, அவை மயங்காத வழியில்

ஆடலும் பாடலும் தாளங்களும் அவற்றின் வழியான எழுவகைத் தூக்குகளும்   150

கூடிய இசைக்கருவிகளும் உணர்ந்து

நால்வகை முறைமையுடைய அபிநயத்திற்கான களத்திலும்

ஏழுவகையான சுரங்களிலும் ஆடல் பாடல்களை விரிவாகச் செய்யும்

மாறாத சிறப்பினையுடைய தலைக்கோல் பட்டமெய்திய மங்கையரும்

முதற்பாட்டைப் பாடும் கூத்தியும், இடைப்பாட்டைப் பாடும் கூத்தியும்

நால்வகையோடும் கூடி யாவரும் விரும்பும் மரபின்

ஆயிரத்து எட்டுக் கழஞ்சினை

குறையின்றி நாள்தோறும் பெறும் வழக்கத்தினின்றும் வழுவாத

தாக்குகின்ற தெய்வமகளிர் போன்றோரின் கண்வலையில் அகப்பட்டு     160

பெறுதற்கரிய தமது அறிவு கெட்டொழிய

தவநெறிப்பட்டோராயினும், அழகிய மலர் நுகரும் வண்டைப் போல

(அம் மங்கயர்) நகைக்கும் வேளையை நோக்கியிருக்கும் இளையோராயினும்

காம விருந்தை நுகர்ந்தறியாத புதியராயினும்,

நாள்தோறும் புணர்ச்சியில் மயங்கி இனிய துயிலில் கிடக்கும்           165

இசையையும் கிளியையும் பழித்த இனிய சொல்லையுடைய,

அறுபத்துநான்கு கலைகளிலும் வல்லோர் வாழும் இரு பெரு வீதிகளும் -

அங்காடி வீதி

வில்வண்டியும், கூட்டுவண்டியும், அழகிய தேரின் முகப்பு மொட்டும்,

உடம்பை மூடும் கவசமும், நல்ல மணிகள் பதித்த அங்குசமும்,

தோலாற் செய்யப்பட்ட காலணிகளும், இடுப்பில் கட்டும் பட்டிகைகளும்,        170

வளைதடியும். மிகவும் வெண்மையான கவரியும்,

ஏனப்படம், கிடுகுப்படம்,

கானப்படம் என்ற மூன்று விதக் கேடயங்களும், குத்துக்கோல்களும்,

செம்பாற் செய்தனவும், வெண்கலத்தாற் செய்தனவும்,

கயிற்றால் முடியப்பட்டனவும், மாலையாகப் புனையப்பட்டவையும்,            175

ஈர்வாள் முதலிய கருவிகளும்,  தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்டவையும்,

வாசனைப் புகைக்கானவைகளும், சந்தனக் கலவைக்கானவைகளும், பூச் சரங்களும்,

வேறுபாடுகள் தெரிந்துகொள்ளமுடியாத பல்வித வளங்கள் ஒன்றுகூடிக்கிடக்கின்ற

அரசரும் விரும்பும் செல்வத்தையுடைய அங்காடி வீதியும் -

மணிக்கற்கள் வீதி

காகபாதம், களங்கம், புள்ளி,                                          180

இரேகை ஆகிய குற்றங்கள் நீங்கி, குணங்களில் குறைவுபடாமல்

நூலோரால் கூறப்பட்ட மிக்க நுண்மையான கோடியினையும்

நால்வகை நிறத்தினையும் நன்மை பொருந்திய ஒளியையும் உடைய வைரமும் –

இரேகை, மாலை ஆகிய குற்றங்களை இருள் என்னும் குற்றத்தோடு நீக்கிய

பச்சையான மேனியையுடைய இளைங்கதிரொளியாய் மின்னும் மரகதமும் –    185

பதுமம், நீலம், விந்தம், படிதம் என்ற

நால்வகைச் சாதியில், நூல்களில் விதித்த முறையில் அமைந்த மாணிக்கமும் -

பூசமீனின் உருவத்திலமைந்த பொன்னைத் தேய்த்தாற்போன்ற புருடராகமும் -

குற்றமற்ற ஞாயிற்றின் ஒளியும் தெளிதேனின் நிறமுமுடைய வைடூரியமும் –

இருளைத் தெளியவைத்ததைப் போன்ற நீலமணியும்இரு வண்ணம் கலந்த கோமேதகமும் – 190

ஒன்றான பிறப்பினையும் ஐந்து வகையான வனப்பையும்

மின்னுகின்ற ஒளியைத் தரும் நன்மை பொருந்திய (மேற்கூறிய) மணிகளும்

காற்று, மண், கல், நீர் ஆகியவற்றால்

உண்டாகும் குற்றம் சிறிதளவும் இல்லாமல் தெளிவான ஒளியையுடைவைகளும் –

வெள்ளியும் செவ்வாயும் போல                                            195

வெண்மையும் செந்நிறமும் உடைய திரண்ட முத்துக் குவியலும் –

நடுவில் துளையுடையனவும், கல்லிடுக்கிற்பட்டு வளைக்கப்பட்டனவும்,

திருகுதலுற்றனவும் ஆகிய குற்றங்கள் நீங்கிய சிவந்த கொடிப்பவளமும் –

(இந்த ஒன்பது)வகையான மணிகளையும் தெரிந்த வணிகர் கூட்டத்தால் சிறப்புப் பெற்று,

பகைவரால் வருத்தமுறுவதை அறியாத பயன்மிக்க இரத்தினக் கடைவீதியும் - 200

நகைக்கடை வீதி

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்

சாம்பூநதம் என்ற நான்கு வகையாகச் சிறந்த இயல்பு கொண்ட

பொன்னைத் தேடியலையும் வணிகரின் துன்பத்தைப் போக்கும் வகையில்

ஒளிவிடும் கொடி யுயர்த்திய நன்மை மிக்க தங்க நகைக்கடை வீதியும் -

துணிக்கடை வீதி

பருத்தி நூலாலும், எலிமயிராலும், பட்டு நூலாலும்                           205

வேறுபாடு தெரியாத வகையில் நெய்யப்பட்டு பலவாக அடுக்கப்பட்ட,

நறுமணமுள்ள புடவைகளைச் செறிவாகப் பெற்ற துணிக்கடை வீதியும் –

தானியக்கடை வீதி

நிறுக்கும் துலாக்கோலையும், முகந்து அளக்கும் பறை என்ற கருவியையும்

மரக்காலையும் கொண்டு அளப்போர் எல்லாவிடங்களிலும் திரிந்துகொண்டிருக்க,

விளைகின்ற காலம் இல்லாதபோதும் பெரிய மிளகு மூடைகளுடன்            210

தானியங்களும் குவித்துக்கிடக்கும் தானியக்கடை வீதியும் - 

ஏனையவை

தனித்தனிப் பகுதியினருக்காகப் பிரிக்கப்பட்ட நான்கு வேறுபட்ட தெருக்களிலும்

முச்சந்திகளிலும், நாற்சந்திகளிலும், கோயிற்கடைத் தெருக்களிலும்

மன்றுகளிலும், தெருக்கள் கூடுமிடங்களிலும், குறுந்தெருக்களிலும் அலைந்து

வானின் நடுவில் வெம்மை முறுகியோடும் ஞாயிற்றின் கதிர்கள் நுழையாத    215

புதிதான சிறிய கொடிகளும், பெரிய கொடிகளும் பந்தலாய் அமைந்த நிழலில்

மன்னனின் ஊரைக் கண்டு மகிழ்ந்து

கோவலன் கொடிகளையுடைய மதிலின் புறத்தே திரும்பிச் சென்றான் –

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - அடைக்கலக் காதை

மாதரி வரவு

---------- ----------- ----------- -

அறத்துறை மக்களுக்கன்றி வேறு எவருக்கும் இந்த

புறஞ்சேரி இருக்கை பொருந்தாதாகலின்,

அரசருக்கடுத்தவரான வணிகர்கள், நகருக்குள் உன்னுடைய

புகழால் உன்னை ஏற்றுக்கொள்வர்; இங்கிருக்கும் உன் இருக்கையை விடுக;

உன் மனைவியுடன் ஞாயிறு மறைவதற்குள்

மாட மதுரை மாநகரினுள் புகுக” என்று

மாதவத்தாட்டியும், மாமறை முதல்வனாகிய மாடலனும்

கோவலனுக்குக் கூறும்போது,

அறம் புரி நெஞ்சின் அறவோர் மிகுந்த                                115

மூதூரின் புறஞ்சேரியிலிருக்கும் பூப்போன்ற கண்களையுடைய இயக்கிக்குப்

பால்சோறு படைத்துப் முறைமையுடன் மீளும்

ஆயர் முதுமகள் மாதரி என்போள்

கவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழ,

---------- ----------- ----------- -

மாதரியிடம் அடைக்கலம் கொடுத்தல்

பெருஞ்செல்வத்தையுடையோரின் மனையில் புகுமளவும்

இடைக்குல மடந்தையாகிய உனக்கு அடைக்கலம் தந்தேன்        130

---------- ----------- ----------- -

தாயும் நீயே ஆகித் தாங்கு, இங்கே                            136  

---------- ----------- ----------- -

நீட்டித்து இராது நீ போக என்றே

கவுந்தி கூற மாதரி உவந்தனள் ஏத்தி -                         200

---------- ----------- ----------- -

கோவலன் கண்ணகி மதுரை நகர் புகல் – கோட்டைக் கருவிகள்

செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ,                       206

காவற்காடும், அகழியும், வளைந்து அம்பெய்யும் வில் பொறியும்,

கருவிரல் ஊகம் போன்ற பொறியும், கல்லை உமிழ்கின்ற கவணும்,

துன்புறுத்தும் சூடான எண்ணெயும், செம்பை உருக்கும் குழிபானையும்

இரும்பை உருக்குதற்கான உலையும் கற்களைப் போட்டுவைக்கும் கூடையும்,  210

தூண்டிலும், சங்கிலியும், ஆண்டலைப் பறவை வடிவிலான அடுப்பும்,

கவையும், கழுவும், அம்புக்கட்டுகளும், மறைந்தெய்ய மறைவிடங்களும்,

துலாக்கட்டைகளும், கையைக் குத்தும் ஊசியும்,

சென்று எறிகின்ற மீன்கொத்திப் பொறியும், பன்றிப் பொறியும்,மூங்கிற்பொறியும்,

எழுமரமும், சீப்புக்கட்டையும், முழு வலிமை மிக்க கணையக்கட்டையும் 215

எறிகோலும், குத்துக்கோலும், வேலும், பிறவும்

கோட்டை மதிலில் மிகுந்திருக்க - அற்றைநாள் கொடி அசைந்தாடும்

வாயிலைக் ந்து தன் மனை புக்கனள்,

இடைக்குல மடந்தையான மாதரி, தன் அடைக்கலக் கொள்கையின்படியே -

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - கொலைக்களக் காதை

கோவலன் சிலம்பு விற்கச் செல்லுதல்

------------ -------- -------- ---------

“சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய்            92

விற்று வருவேன் கலங்காமல் இருக்க என

------------ -------- -------- ---------

சாணம் மெழுகிய மன்றத்தைத் தான் உடன் கழிந்து                   

மாதர் வீதிச் சந்துகளிடையே சென்று

கடைத்தெருவில் நடந்தான் - அங்கு

கோவலன் பொற்கொல்லனைக் காணல்

தட்டாரும், வேலைத் திறமிக்க                                       105

நுண் வினைக் கொல்லர் நூற்றுவரும் பின் வர

மேற்சட்டை அணிந்து மாறும் நடைப்போக்குடைய

கையில் கோல் கொண்ட பொற்கொல்லனைக் கண்டவனாகி,

------------ -------- -------- ---------

எனது சிறு குடில் அருகில் இருங்கள்” எனப் பொற்கொல்லன் சொல்லக்,

கோவலன் சென்று அக் குறுமகன் இருக்கை அருகே இருந்தான்          125

------------ -------- -------- ---------

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் - கட்டுரை காதை

கோட்டை வாயில்கள்

கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல் திசை வாயில் தனியேனாய்ச் செல்கிறேன்” என


 ப.பாண்டியராஜா


 


On Saturday, April 4, 2015 at 5:23:48 AM UTC+5:30, oruarizonan wrote:
மிக்க நன்றி, அன்பின் தேமொழி!

படித்துப் பயன் பெறுகிறேன்.
அரிசோனன் 

2015-04-03 12:14 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

ஐயா ...அன்றிலிருந்து இன்று வரை ...என காலக்கோட்டில்  இலக்கியங்களில் மதுரை பற்றிய தகவலை வரிசைப்படுத்தி  விவரித்து வருகிறார். 

பிற்கால புலவர்களைப் பற்றித் தொடரும்பொழுது மற்றபிற தகவல்களையும்  தெரிந்து கொள்ளும் ஆவலில்தான் நானும் இடையிடாமல் இருக்கிறேன்.

ஆனால் இக்கட்டுரை தூண்டிய ஆவலில் புலியூர் கேசிகன் தொகுத்தெழுதிய "முத்தமிழ் மதுரை" என்ற நூலை >>> http://www.tamilvu.org/library/nationalized/pdf/59-puliyurkesigan/016.muthamilmadurai.pdf

என்ற நூலை தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் இருந்து தரவிறக்கி படித்தேன்.  உங்களுக்கும் பிடிக்கும் என நினைகிறேன்.

..... தேமொழி






On Friday, April 3, 2015 at 11:23:00 AM UTC-7, oruarizonan wrote:
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாட, புராணத்தில் மதுரையைப்பற்றிய விவரிப்பு -- கோட்டை, எதிரிகளைத் தாக் க உதவும் ஆயுதங்கள், முதலானவை பற்றியும் காண்கின்றேன்.  

இவைகளைப்பற்றி ஏதாவது ஆய்வு நடந்திருக்கிறதா, அல்லது விவரிப்புகள் பரஞ்சோதி முனிவரின் கற்பனை என்று தள்ளப்பட்டிருக்கிறதா?  

பரஞ்சோதி முனிவர் சங்ககாலத்தவர் அல்ல என்று அறிவேன்.

இதுபற்றி, பாண்டியராஜா அவர்களும், மற்ற தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

ஏனெனில், மதுரையை ஒரு பாசறையாக [garrison], எதிரியத்தாக்கி அழிக்கவல்ல ஒரு வலிமை நிரந்த இடமாகத திருவிளையாடற்புராணம் சித்தரிக்கிறது.  அதனால்தான் என் ஆர்வம் மிகுகிறது.

இது மதுரையைப் பற்றிய கேளிவி என்பதால், இழையைத் திசை திருப்பவில்ல என்றே நினைக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

2015-04-03 4:27 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தாங்கள் கொடுத்திருக்கும் இந்த அரிய தகவல்களுக்கு நன்றி.  அந்தக்கால மதுரை கண் முன்னே தோன்றியது. 

2015-04-01 22:59 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புடையீர்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறது மதுரையைப் பற்றிய இந்தக் கட்டுரை.
...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 18, 2015, 12:37:17 PM4/18/15
to mintamil

வணக்கம் ஐயா.
கோவலன் கண்ட காட்சிகளில் கோட்டை மட்டுமே இன்று இல்லை.

கிழக்கு வாயில் வழியே உள்ளே செல்வது ஒரு மரபு.

ஆனால் வலமாகச் சுற்றும் மரபு மீறி மதுரையைக் கோவலன் ஏன் இடமாகச் சுற்றினான்?   இதனால் கோவலனுடன் கூட்டாக மதுரையைச் சுற்றிட மனமில்லாது போனது.

அன்பன்
கி. காளைராசன்

...

Pandiyaraja

unread,
Apr 18, 2015, 1:49:09 PM4/18/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
நானும் யோசித்தேன் காளை அவர்களே.

உலகமுவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு என்று திருமுருகாற்றுபடை நக்கீரரும்

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் மொழிந்தென என்று நெடுநல்வாடை நக்கீரரும்,

பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி என்று முல்லைப்பாட்டு நப்பூதனாரும்

வலனேர்பு திரிதருதலைப் போற்றிச் சொல்லியிருக்கக், கோவலன் மதுரையை இடஞ்சுழியாகச் சுற்றிவருகிறானே என்று யோசித்தேன். ஆனால், மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனாரும் கிழக்கில் தொடங்கி, பொதுமகளிர் வாழும் வடக்குத் தெருவைச் சொல்லி, பின்னர் மேற்கு அங்காடியைச் சொல்லி, இறுதியில் தெற்கு நகைக்கடைத்தெருவைச் சொல்கிறார். கோவலனாவது சாதாரணக் குடிமகன். ஒரு பெரும் புலவர் இப்படிச் செய்யலாமா என்று பார்த்தால் ஒரு விடை தெரிகிறது.
வலஞ்சுழியாக ஓரிடத்தை வலம்வருவது பின்னாளைய பழக்கம். சங்க/சங்கம் மருவிய காலத்தில் அந்த வழக்கம் இருந்ததில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஆயத்தக்கது.
ப.பாண்டியராஜா

...

Singanenjam Sambandam

unread,
Apr 20, 2015, 11:16:14 AM4/20/15
to mint...@googlegroups.com
எல்லாமே படிக்கப் படிக்க சுவை கூட்டுகின்றன.வாழ்க நீங்கள்...வளரட்டும் உங்கள் பணி.

--

N. Ganesan

unread,
Apr 20, 2015, 11:45:53 AM4/20/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com


On Saturday, April 18, 2015 at 10:49:09 AM UTC-7, Pandiyaraja wrote:
நானும் யோசித்தேன் காளை அவர்களே.

உலகமுவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு என்று திருமுருகாற்றுபடை நக்கீரரும்

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் மொழிந்தென என்று நெடுநல்வாடை நக்கீரரும்,

பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி என்று முல்லைப்பாட்டு நப்பூதனாரும்

வலனேர்பு திரிதருதலைப் போற்றிச் சொல்லியிருக்கக், கோவலன் மதுரையை இடஞ்சுழியாகச் சுற்றிவருகிறானே என்று யோசித்தேன். ஆனால், மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனாரும் கிழக்கில் தொடங்கி, பொதுமகளிர் வாழும் வடக்குத் தெருவைச் சொல்லி, பின்னர் மேற்கு அங்காடியைச் சொல்லி, இறுதியில் தெற்கு நகைக்கடைத்தெருவைச் சொல்கிறார். கோவலனாவது சாதாரணக் குடிமகன். ஒரு பெரும் புலவர் இப்படிச் செய்யலாமா என்று பார்த்தால் ஒரு விடை தெரிகிறது.
வலஞ்சுழியாக ஓரிடத்தை வலம்வருவது பின்னாளைய பழக்கம். சங்க/சங்கம் மருவிய காலத்தில் அந்த வழக்கம் இருந்ததில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஆயத்தக்கது.

கோவலன் மதுரையில் இறந்துபடுகிறான். அதைக் குறிப்பதற்காக, அப்பிரதட்சிணாமாகச் சுற்றி வருகிறான் எனப் பாடுகிறாரா இளங்கோ அடிகள்?

காஞ்சித் திணை வாழ்க்கை நிலையாமையைக் குறிப்பது. சங்க கால மெகாலித்திக் ஈமச் சின்னங்களில் சுமார் 15 இடங்களில்
- மோட்டுர் (செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்), உதயாநத்தம் - போன்ற இடங்களில் 12 - 15 அடி உயரத்தில்
மோனோலித்திக் கற்சிலைகள் மகரவிடங்கருக்காய் கிடைத்துள்ளன. Anthropomorphic Axe. அவை யாவும் தெற்கே பார்த்தே
நிறுத்தப்பட்டுள்ளன. தென்புலத்தார் மறைந்தார் திசை. எனவே, மதுரைக் காஞ்சி ஆசிரியர், வாழ்க்கை/ஆதவன் உதிக்கும் கிழக்கு
திசையில் தொடங்கி வடக்கே போய், மேற்கே வந்து தென் திசையில் முடிக்கிறார் எனலாம். “மழுவாள் நெடியோன்” என்று
Anthropomorphic Axe-கு சங்ககாலப் பெயரை அறிவிப்பதும் மதுரைக் காஞ்சி தான். எனவே, வாழ்வின் நிலையாமை காட்ட
அப்பிரதட்சிணம் காஞ்சித் திணையில் பாடுகிறாரோ?

My 2 cents,
நா. கணேசன்
 
...

N. Ganesan

unread,
Apr 20, 2015, 3:58:16 PM4/20/15
to mint...@googlegroups.com

On Saturday, April 18, 2015 at 10:49:09 AM UTC-7, Pandiyaraja wrote:
நானும் யோசித்தேன் காளை அவர்களே.

உலகமுவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு என்று திருமுருகாற்றுபடை நக்கீரரும்

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் மொழிந்தென என்று நெடுநல்வாடை நக்கீரரும்,

பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி என்று முல்லைப்பாட்டு நப்பூதனாரும்

வலனேர்பு திரிதருதலைப் போற்றிச் சொல்லியிருக்கக், கோவலன் மதுரையை இடஞ்சுழியாகச் சுற்றிவருகிறானே என்று யோசித்தேன். ஆனால், மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனாரும் கிழக்கில் தொடங்கி, பொதுமகளிர் வாழும் வடக்குத் தெருவைச் சொல்லி, பின்னர் மேற்கு அங்காடியைச் சொல்லி, இறுதியில் தெற்கு நகைக்கடைத்தெருவைச் சொல்கிறார். கோவலனாவது சாதாரணக் குடிமகன். ஒரு பெரும் புலவர் இப்படிச் செய்யலாமா என்று பார்த்தால் ஒரு விடை தெரிகிறது.
வலஞ்சுழியாக ஓரிடத்தை வலம்வருவது பின்னாளைய பழக்கம். சங்க/சங்கம் மருவிய காலத்தில் அந்த வழக்கம் இருந்ததில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஆயத்தக்கது.

கோவலன் மதுரையில் இறந்துபடுகிறான். அதைக் குறிப்பதற்காக, அப்பிரதட்சிணாமாகச் சுற்றி வருகிறான் எனப் பாடுகிறாரா இளங்கோ அடிகள்?

காஞ்சித் திணை வாழ்க்கை நிலையாமையைக் குறிப்பது. சங்க கால மெகாலித்திக் ஈமச் சின்னங்களில் சுமார் 15 இடங்களில்
- மோட்டுர் (செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்), உதயாநத்தம் - போன்ற இடங்களில் 12 - 15 அடி உயரத்தில்
மோனோலித்திக் கற்சிலைகள் மகரவிடங்கருக்காய் கிடைத்துள்ளன. Anthropomorphic Axe. அவை யாவும் தெற்கே பார்த்தே
நிறுத்தப்பட்டுள்ளன. தென்புலத்தார் மறைந்தார் திசை. எனவே, மதுரைக் காஞ்சி ஆசிரியர், வாழ்க்கை/ஆதவன் உதிக்கும் கிழக்கு
திசையில் தொடங்கி வடக்கே போய், மேற்கே வந்து தென் திசையில் முடிக்கிறார் எனலாம். “மழுவாள் நெடியோன்” என்று
Anthropomorphic Axe-கு சங்ககாலப் பெயரை அறிவிப்பதும் மதுரைக் காஞ்சி தான். எனவே, வாழ்வின் நிலையாமை காட்ட
அப்பிரதட்சிணம் காஞ்சித் திணையில் பாடுகிறாரோ?


மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் இடம்புரியாக மதுரையை வர்ணித்தது ஏன்? - என நச்சினார்க்கினியர் உரையின்
தொடக்க வரிகளைச் சிந்திக்கலாம்.

இதன் பொருள்

இப்பாட்டிற்கு மாங்குடிமருதனார் மதுரைக்காஞ்சியென்று துறைப்பெயரானன்றித் திணைப்பெயராற் பெயர் கூறினார். இத்திணைப் பெயர் பன்னிருபடல முதலிய நூல்களாற் கூறிய திணைப்பெயரன்று, தொல்காப்பியனார் கூறிய திணைப்பெயர்ப்பொருளே இப்பாட்டிற்குப் பொருளாகக் கோடலின். வஞ்சி மேற்செல்லலானும், காஞ்சி எஞ்சாதெதிர் சென்றூன்றலானும், "வஞ்சியுங் காஞ்சியுந் தம்முண் மாறே" எனப் பன்னிருபடலத்திற்கூறிய திணைப்பெயர் இப்பாட்டிற்குப் பொருளன்மையுணர்க. அவர் முதுமொழிக்காஞ்சி முதலியவற்றைப் பொதுவியலென்று ஒரு படலமாக்கிக்கூறலின், அவை திணைப்பெயராகாமை யுணர்க.

இனி, மதுரைக்காஞ்சியென்றதற்கு மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சியென விரிக்க. இஃது உருபும்பொருளும் உடன்றொக்கது. "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே" (தொல். புறத். சூ 22) என்பதனாற் காஞ்சி பெருந்திணைக்குப் புறனாயிற்று. அது, "பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானு, நில்லா வுலகம் புல்லிய நெறித்தே" (தொல். புறத். சூ. 23) என்பதாம். இதன்பொருள் : பாங்கு அருசிறப்பின்-தனக்குத் துணையில்லாத வீடுபேறு நிமித்தமாக, பல ஆற்றானும்-அறம் பொருள் இன்பமென்னும் பொருட்பகுதியானும், அவற்று உட்பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையு முதலியவற்றானும், நில்லா உலகம் புல்லிய நெறித்து-நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்து அக்காஞ்சியென்றவாறு. எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமை சான்றோரறையுங் குறிப்பினது காஞ்சித்திணையென்பது பொருளாயிற்று.

இச்செய்யுட்புலவர் இப்பொருளே கோடலின், யாம் இப்பொருளே தர உரைகூறுகின்றாம்



 
நா. கணேசன்
 
ப.பாண்டியராஜா



On Saturday, April 18, 2015 at 10:07:17 PM UTC+5:30, kalai wrote:

வணக்கம் ஐயா.
கோவலன் கண்ட காட்சிகளில் கோட்டை மட்டுமே இன்று இல்லை.

கிழக்கு வாயில் வழியே உள்ளே செல்வது ஒரு மரபு.

ஆனால் வலமாகச் சுற்றும் மரபு மீறி மதுரையைக் கோவலன் ஏன் இடமாகச் சுற்றினான்?   இதனால் கோவலனுடன் கூட்டாக மதுரையைச் சுற்றிட மனமில்லாது போனது.

அன்பன்
கி. காளைராசன்

On 18-Apr-2015 10:20 am, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
அன்புடையீர்,
பெருகிவரும் தங்களது ஆதரவு குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய பின்னூட்டங்கள் மிகவும் உற்சாகமளிக்கின்றன. தங்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தகுதியுடையேனாகத் தொடர்ந்து இருக்கவேண்டுமே என்ற கவலையும் தொற்றிக்கொண்டுள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இத்துடன் இலக்கியங்களில் மதுரை என்ற பகுதியில் சிலப்பதிகாரத்தில் மதுரை என்ற பகுதி வந்திருக்கிறது. வழக்கம்போல், சிலம்பினின்றும் சில தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளும் அவற்றுக்கான அடிநேர் உரையும் கொடுக்கப்பட்டுள்ளன. விட்டுப்போன பகுதிகளும் சுவையானவையே. ஆனால் அவை இக் கட்டுரையில் மூல நோக்கத்திற்குட்பட்டவையல்ல என்பதால் விடப்பட்டுள்ளன. இலக்கிய நயம் விழைவோர் சிலப்பதிகார நூலில் அவற்றையும் படிக்கலாம்.

அன்புடன்,
ப.பாண்டியராஜா

மல்லல் மூதூர் மதுரை

5. சங்க கால மதுரை

 

5.5 சங்ககால மதுரை

சங்க கால மதுரையின் உள் அமைப்பைத் தெரிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல் ஆகும். இது மதுரையைப் பற்றிய மிக விரிவான செய்திகளைக் கூறுகிறது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களில் ஒரு சில குறிப்புகளே உள்ளன. சங்க இலக்கியங்களை அடுத்து, சிலப்பதிகாரம் மதுரையைப் பற்றிய விரிவான செய்திகளைக் கூறுகிறது. இப்பகுதியில் சிலம்பு காட்டும் மதுரையைக் காண்போம்.

5.5.1 இலக்கியங்களில் மதுரை -  சிலப்பதிகாரத்தில் மதுரை

அ. கவுந்தி அடிகள் முதலானோர் மதுரையைச் சேர்தல்

கவுந்தி அடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் புகார் நகரத்திலிருந்து மதுரைக்கு நடந்தே வருகிறார்கள். அப்பொழுது வேனிற்காலமாதலால், பொதுவாக இரவுமுழுதும் நடந்து பகலில் ஓய்வெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி ஒரு நாள் இரவுமுழுதும் நடந்து காலையில் வெள்ளென மதுரைக்குப் புறத்தே இருக்கும்

...
It is loading more messages.
0 new messages