குயப் புல் (Kusha grass of the Veda, and its razor-edged blades)

286 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 15, 2014, 4:40:36 AM11/15/14
to mint...@googlegroups.com, Santhavasantham, vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com
குயம் என்னும் சொல்லின் பொருளை முனைவர் ராஜம் கேட்டிருந்தார்கள். 

திராவிட மொழிகளில் முதலெழுத்தில் -உ/-ஒ வேறுபாடு கொண்ட ஒருபொருள் தொகுதிகள் நிறைய உண்டு. உ-ம்: முய்-/மொய்- (முசுமுசு/மொசுமொசு. எனவே, முயல்/மொசல்), துள்-/தொள்- (துளை, தொள்ளு), புள்-/பொள்- (புள்ளி, பொள்ளுதல்), முள்-/மொள்- (முட்டை, மொட்டு, மொண்ணை) ... இது போல் ஒன்று: குய்-/கொய்-

குய்-/கொய்- என்னும் சொல்லுக்கு இரண்டு அடிப்படையான பொருள்கள் உண்டு. (1) குய்- ‘sharp'  குயம் ‘நாபிதன் கத்தி, அரிவாள், கொடுவாள்’ போன்றவற்றைக் கொய்தல் என்னும் வினையொடு த்ராவிட வேர்ச்சொல் அகராதி இணைக்கிறது:
DEDR 2119 Ta. koy (-v-, -t-) to pluck (as flowers), cut, reap, shear (as hair), snip off, choose, select; kuyam sickle, reaping-hook, curved knife, razor; kuvil reaping, cutting. Ma. koyka to cut, reap, crop, mow; koyyal, koyttu reaping; koyil the hire of a fruit-gatherer. Ko. koy- (koc-) to cut; koyḷ harvest, reaping. To. kwïy- (kwïs-) to pluck (fruits), (bee) sucks. Ka. koy (koyd-, kōd-), kuy to cut, saw, crop, reap, pluck (as fruit); n. cutting, etc.; koyilu, kuyilu cutting, reaping, plucking; koyita, koyikatana, kuyyuvike cutting; koyika man who cuts; fem. koyke; koyki woman whose (ears, etc.) have been cut. Koḍ. koy- (koyyuv-, kojj-) to pluck, harvest. Tu. koipini, koyipini, koyyuni to cut, reap, mow; koyilů, koilů reaping, harvest, a small paddy field; koyyelů harvest. Te. kōyu to cut, sever, divide, reap, pluck; kō̃ta cutting, reaping. ? Kol. (SR.) kayīpeŋ to cut (tīr hair; Kamaleswaran). Pa. koy- (koñ-) to reap, harvest; kōval stubble. Ga. (Oll.) koy- (kod-, kon-) to reap; (S) koy- to cut. Go. (A. Y. Mu. Ma. Ko. etc.) koy- to reap, cut, pluck (fruit); (Tr.) koīānā, kōīyānā to gather berries, mangoes, etc., harvest wheat or crops; (M.) koidānā to reap; (Ko.) koyal stubble (Voc. 914). Konḍa koy- (-t-) to reap, harvest, cut, pluck (flowers, etc.); (Sova dial.) koˀer, (BB) koˀeṟ (obl. koˀeR-) sickle. Pe. koy- (-t-) to cut (grass, weeds, etc.); koyes, koves sickle. Kui kōva (kōt-) to reap, cut off; n. reaping, harvesting; kōeri harvest, reaping. Kuwi (F.) koiyali (kōt-) to pluck. Kur. xoynā (xoss-) to cut down grass and the like with the sickle, mow, reap. Malt. qoye to reap; qoytre to have the crop reaped. / Cf. Mar. koytā grass-sickle; koytī small knife. DED(S, N) 1763.

குய்- என்னும் இந்த DEDR 2119 வேருக்கு அடியாக இருக்கும் பொருள் கூர்மை (sharpness) என்பதாகும்.  Sharpness of the edge of the blade என்பதால் குயம் என்பது நாவிதன் கத்தி (நேரான விளிம்பு), அரிவாள் (வளைந்துள்ள விளிம்பு) இவற்றுக்குப் பெயரானது. From MTL,
குயம்¹ kuyam , n. perh. கொய்-. 1. Sickle, reaping-hook, curved knife, அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 2. Razor; நாவிதன் கத்தி. அருங்குயந் தான்களைந்து (சீவக. 2500).  குயம் = கூரரிவாள் என்கிறது சூடாமணி நிகண்டு.

குய்- ‘sharp' அடிப்படையாகக் கொண்டிருக்கும் வடசொல் குஸ-/குஶ- என்னும் புல். இதற்குத் தமிழில் வழங்கும் பெயர்களை நோக்கலாம்: குயம் > குஸம்/குஶம். குயப் புல் விளையும் இடத்தில் ஓடும் ஆறு குசத்தலை நதி ஆந்திரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடி கடலருகே கலக்கிறது. புகழ்பெற்ற தக்கோலம் குயத்தலை/கொத்தலை நதிக்கரையிலே உள்ள சைவத்தலம். பல்லவர்கள், சோழர்கள் கட்டிய பெரிய கோயில். குயத்தலையாறு இப்போது குசத்தலை ஆறு என்று வழங்குகிறது. கொய்த்தலை ஆறு கொத்தலையாறு/கொற்றலை என்றும் சொல்கின்றனர். தருப்பை வகையில் ஒன்றான இப்புல்லால் குடிசை வேய்வதை இந்திய இலக்கியங்கள் (காட்டு: சங்க இலக்கியம்), கலைவரலாறும் காட்டுகின்றன. ரிக்வேதம் முதல் மண்டலத்திலே த்ராவிட மக்களின் சமயச் செய்திகள் இடம்பெறுகின்றன. அங்குதான் இந்தியாவில் முதன்முதலாக குய்- என்னும் வேர் கூர்மைப்பொருளில் கூர்மையான புல்லுக்குக் குஶ(ர) (< குய் ‘sharp') என்று பதிவாகியுள்ளது. குயப் புல் வேத யஜ்நச் சடங்களில் இன்றியமையானது, சோமத்திற்கு அடுத்த முக்கியம் வாய்ந்தது. அதர்வ வேதத்தில் குஶம் எனப்படும் குயம். தமிழ்/த்ராவிட மொழிகளில் இருந்து வேதத்திலும், இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கூர்மை (Sharpness) என்ற அர்த்த்தில் பண்பாகுபெயராக குயம் குஶம் ஆகியுள்ளமை தெளிவு. குஶ-அக்ர-புத்தி என்றால் வடமொழியில் குயப்புல்முனை போன்ற 'Sharp-pointed intelligence'. இராமர் - சீதையின் லவ-குசர் என்னும் இரு மகன்களில் குசன் என்பவன் பெயர் குயப்புல்லால் தான். தமிழில்/ப்ராகிருதத்தில் குயம்/குசம் எனப்படும் குஶப் புல்லின்  தாவரவியல் தாவரவியல் பெயரை ஆராயும் கட்டுரையை இணைத்துள்ளேன். Mahdihassan, S. (1987). "Three Important Vedic Grasses". Indian Journal of History and Science 22 (4): 286–291. 
இந்த ஆய்வுக் கட்டுரையை செந்தமிழ் (CTamil) குழுவில் சங்கத் தமிழர் கலியாணத்தில் வழிபடும் கொற்றி(காத்யாயனிப்) பாவையின் பொம்மை அலங்கரிப்புக்கு விளக்கமாகப் பயன்படுத்தியுள்ளேன். குயப் புல் (> குஶம், வேதங்களில்):

D. bipinnata has several synonymns such as "Poa cynosuriodes". Its old scientific name was "Eragrostis cynosuriodes". The sharp bladed and the tip of Kusha grass are proverbial in all Indian languages. 

"A word of caution for the new users of this Dharbai / Dharbam. It is sharper than a blade! The edges are so sharp, it might even hurt & cut your palm if handled carelessly, that you'll notice only when you find blood oozing from your palm! Yes, you'll not feel the pain while injuring, but later one feels it.  Only when it is wet, you can twist it to the form you need to make the so called  Pavithram, koorcham or Bugnams, but to use it after it has dried! Usually Pavithram should not be prepared by the person who has to use it because the electro-magnetic fields in the grass gets lost if it is prepared and worn by the same person! "

"Holy grass Eragrostis cynosuroides  (syn. Desmostachya bipinnata )- (Family Poacease)  Love grass genus 

The other names for this grass are Big cord grass  or Salt reed-grass (USA), Dharbha, Dharbhai (in Tamil),   Halfa grass (.Australia),  Kusa or Kusha (in Sanskrit), Vishwamitra. [...]
This grass grows in wild in clumps mostly in salty, marshy habitats. It can neither be cultivated everywhere nor can be harvested on any day. The edges of the leaf blades are very sharp."

Kashimiri - Jai Kishan Sharma writes,
"This grass grows naturally on the wet banks of paddy fields. The growing roots of this grass forms a dense mat which bind the soil of banks and prevents soil erosion. It cannot be planted and grown everywhere. The edges of the leaf blades are very sharp. It might hurt your skin with a cut if not handled cautiously. "
etc. etc.,

In the Churning of the Ocean story of the Mahabharata, there is a myth about sharp razor blades of Kusha (< Kuya- in Dravidian, DEDR 2119) that cut the tongues of snakes. It is due to their partaking few drops Amitha they remain young just shedding skin periodically. One of the first Dalit poems in Telugu is "A Blade of Grass" published in 1972. The beautiful poem mentions several grasses. On the Kusha grass, Velcheru N. Rao writes: "that sharp fellow: Darbha grass (Poa cynosuroides) has a sharp edge. Gods and anti-gods churned the essence of life from the ocean of milk, but Vishnu chetaed the anti-gods of their share. The snakes, who did not get their share either, licked the sharp grass where the pot stood. Their tongues were split into two, but they stayed young, only shedding their skin as it it got old."

what Sir William Jones said of Kusha grass,

-----------

குய்- என்னும் வேருக்கு மென்மை (softness) என்ற பொருள் உண்டு. அதுவே, குய்யம்/குயம்/குசம், குயக்குழி, குயவன்/கொசவன், ... போன்ற சொற்களைப் பிறப்பிக்கிறது. அகநானூறு 48 பாடலில் மென்மை என்று பொருள் வரும் பெண்ணுறுப்புகளில் ஒன்றாக நகிலைப் பாடிய சிறப்பான பாட்டையும் பார்ப்போம். பெண்ணுறுப்புக்களில் பலவும் குய்யம்/குயம் ( < குய்- ‘soft') எனப்படுகின்றன. மாந்தகுல வளர்ச்சியில் மட்பாண்டங்கள் செய்தல் மிக முக்கியமான ஒரு மைல்கல். வரலாற்றையே aceramic period vs. ceramic period எனப் பகுப்பர். Ceramic technology-யின் கலைச்சொல்லில் இருந்து ஒலிக்குறிப்புச் சொல் உருவாவதும் (”குய்யுடை அடிசில்”), கடுகு முதலியன தாளிக்கும் தாளித ஸ்பைசெஸ் எவ்வாறு பெயர் பெறுகிறது? - என்றும் அடுத்த மடலில் பார்ப்போம்.

நா. கணேசன்
20005abf_286.pdf

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 15, 2014, 6:07:00 AM11/15/14
to mintamil
குய் > குழைதல் பொருளில் தோன்றிய வினைச்சொல்லாம்.

மண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்பவன் - குயவன்

குயக்குழி = மண்ணைத் தோண்டி எடுத்த குழி

இனி குழைவான பொருட்களுக்கு மென்மைத் தன்மையும் உண்டு. இதனின்று மென்மைப் பொருளும் தோன்றிற்று என்க. இதனான்,

குயம் = குழையும் தன்மையுடைய தனம்.

குய் என்பது குழைவுத் தன்மையுடைய நெய் / எண்ணெயையும் குறிக்கும்.

குய்ப்புகை = நெய் / எண்ணையின் தாளிப்புப் புகை.

இனி, குழையும் பொருட்களுக்கு வளையும் தன்மையும் உண்டு என்பதால் வளைதல் பொருளும் தோன்றிற்று.

குயம் = வளைந்த அரிவாள்.

இந்த குய் என்னும் வேரில் இருந்தே குஞ்சம் (எ.கா : பட்டுக்குஞ்சம் ), குஞ்சித (வளைந்த), குயம் (புல்), குச்சம் (நாணல்), குச்சு ( புல்லால் வேய்ந்த வீடு), குச்சி ( புல்லின் தண்டுப் பகுதி), போன்ற பல சொற்கள் தோன்றிற்று.

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
மனமோ வயிறோ கெட்டுப் போனால்
மகிழ்ச்சி தொலைந்து போகும் - அதனால்
நல்லதை மட்டுமே நினைப்போம் ! - உயிர்க்கு
நல்லதை மட்டுமே உண்போம் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

N. Ganesan

unread,
Nov 15, 2014, 9:13:00 AM11/15/14
to mint...@googlegroups.com, vallamai

On Saturday, November 15, 2014 3:07:00 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:
குய் > குழைதல் பொருளில் தோன்றிய வினைச்சொல்லாம்.

குழைதல் - குள்-/குண்-/குட்- என்னும் வேர்.

(1) குய்- sharp - குயம்/குசம் (Kusha grass which has sharp edge), கு(ய்)ச்சு (=குச்சு.Cf. Sangam lit.,), குயம் - நாவிசன் கத்தி (நேராக இருக்கும்).

(2) குய்- - soft - குய்யம்/குயம், குயக்குண்டு, குயவன்/குசவன் (from potter's tech, we have the word for spices. kuyyuTai aTicil,
frying spices : neyyum kuyyum ATi (naR.)

What I wrote is just for (1) குய்- sharp . Next we will see:

N. Ganesan

unread,
Nov 15, 2014, 9:48:58 AM11/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Saturday, November 15, 2014 3:07:00 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:
குய் > குழைதல் பொருளில் தோன்றிய வினைச்சொல்லாம்.

குழைதல் - குள்-/குண்-/குட்- என்னும் வேர்.

(1) குய்- sharp - குயம்/குசம் (Kusha grass which has sharp edge), கு(ய்)ச்சு (=குச்சு.Cf. Sangam lit.,), குயம் - நாவிசன் கத்தி (நேராக இருக்கும்).

சிறு தினை கொய்ய - மதுரைக் காஞ்சி.
பொருள்: குயம் என்னும் கூர் அரிவாளால் தினை கொய்தல் (reaping. kuy- sharp)

seshadri sridharan

unread,
Nov 15, 2014, 10:35:50 AM11/15/14
to mintamil
குய் துளைப்பொருள் கருத்து. குய்ல் > குல் > கொல் = ஆயுதத்தால் உடலில் துளைப்படுத்தி உயிர் போகச் செய்தல் .culling என்பதன் பொருள் கொல்லுதலைக் குறிப்பதை நோக்குக.

சேசாத்திரி   

Dev Raj

unread,
Nov 15, 2014, 10:57:20 AM11/15/14
to mint...@googlegroups.com
On Saturday, 15 November 2014 06:13:00 UTC-8, N. Ganesan wrote:
(1) குய்- sharp - குயம்/குசம் (Kusha grass which has sharp edge), கு(ய்)ச்சு (=குச்சு.Cf. Sangam lit.,), குயம் - நாவிசன் கத்தி (நேராக இருக்கும்).
(2) குய்- - soft - குய்யம்/குயம், குயக்குண்டு, குயவன்/குசவன் (from potter's tech, we have the word for spices. kuyyuTai aTicil,
frying spices : neyyum kuyyum ATi (naR.)

>>>>குய்யோமுறையோ…கூச்சல்… குழப்பம்…. நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்தது என்ன? -வெளிவராத எக்ஸ்குளூசிவ் தகவல்கள்.<<<< 

ஐயா, இந்தக் குய்யோவின் பொருள் என்ன ? வேர் யாது ?

தேவ்

N. Ganesan

unread,
Nov 15, 2014, 11:00:28 AM11/15/14
to mint...@googlegroups.com, vallamai
On Saturday, November 15, 2014 7:35:50 AM UTC-8, seshadri sridharan wrote:
குய் துளைப்பொருள் கருத்து. குய்ல் > குல் > கொல் = ஆயுதத்தால் உடலில் துளைப்படுத்தி உயிர் போகச் செய்தல் .culling என்பதன் பொருள் கொல்லுதலைக் குறிப்பதை நோக்குக.

சேசாத்திரி   

 தமிழில் குய்-/கொய்- அரிதற் கருத்து (reaping, plucking). குயங் கொண்டு கொய்யும் தினை.

கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்  - கொய்து அழகுபடுத்தப்பெற்ற சுவல்.

குன்றக் குறவர் கொய் தினைப் பைங்கால்  (aingkurunuuru-284. )

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்  (maturaikkaanjci-1893)

கொயல் தொடங்கினரே கானவர் கொடுங் குரல்  (narrinai-306)

கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே  (narrinai-313)

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 15, 2014, 11:04:50 AM11/15/14
to mint...@googlegroups.com, vallamai
குயவரின் டெக்னாலஜியில் இருந்து பெற்ற ஒலிக்குறிப்புச் சொல். ‘குய்யுடை அடிசில்’ ...
குயக்குண்டு நீரூற்றி குழைக்கும் மென்மையான மண்ணில் இருந்து செய்யும் கலயங்களில் (> kalasha in Sanskrit)
உருவாகும் ஒலி இங்கே குறிக்கப்படுகிறது.

தேவ்

N. Ganesan

unread,
Nov 15, 2014, 11:16:56 AM11/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
புறநானூறு 348

இப்பாடலுக்குப் பழைய உரை இல்லை. உவேசா குயம் என்ற சொல்லுக்கு உரை கொடுக்கவில்லை.
ஔவை குயம் - குயவர் சேரி என்கிறார். ஆனால், குயம் என்றால் இங்கே அரிவாள் என்பது
பாடலின் கருப்பொருளுக்கு இன்னும் பொருந்துகிறதா?

நா. கணேசன்

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
கள்ளரிக்கும் குயம் சிறுசின்
மீன்சீவும் பாண்சேரி
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன                                    5
குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தின மன்எம் பெருந்துறை மரனே.                 

N. Ganesan

unread,
Nov 15, 2014, 11:41:05 AM11/15/14
to மின்தமிழ்
348

She is like the city of UN, ruled by Talumpan whose words
are always true, where bards who catch little fish live
on one street and on another potters who gather honey after the
bees
fly off frightened by the taNNumai drum that is beaten by harvesters
of the white paddy, leaving their sweet hive on a jagged branch 5
growing from the node of a palmyra palm. If her mother had never
given birth
to this girl whose darkened eyes look like blue waterlilies, then none
of this
would ever have happened! The trees of our spacious harbour are
suffering,
long chariots standing wherever
there is shade, and elephants with red-painted foreheads tied uo
everywhere! 10

The song of paranar. TiNai: kAJci. TuRai: makaTpAR kAJci.

N. Ganesan

unread,
Nov 15, 2014, 12:03:58 PM11/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Saturday, November 15, 2014 8:00:28 AM UTC-8, N. Ganesan wrote:
On Saturday, November 15, 2014 7:35:50 AM UTC-8, seshadri sridharan wrote:
குய் துளைப்பொருள் கருத்து. குய்ல் > குல் > கொல் = ஆயுதத்தால் உடலில் துளைப்படுத்தி உயிர் போகச் செய்தல் .culling என்பதன் பொருள் கொல்லுதலைக் குறிப்பதை நோக்குக.

சேசாத்திரி   

 தமிழில் குய்-/கொய்- அரிதற் கருத்து (reaping, plucking). குயங் கொண்டு கொய்யும் தினை.

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து  (porunaraarruppatai-) 
I believe kuyam in PuRam 348 has the same meaning/

N. Ganesan

unread,
Nov 15, 2014, 5:19:05 PM11/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Saturday, November 15, 2014 7:35:50 AM UTC-8, seshadri sridharan wrote:
குய் துளைப்பொருள் கருத்து. குய்ல் > குல் > கொல் = ஆயுதத்தால் உடலில் துளைப்படுத்தி உயிர் போகச் செய்தல் .culling என்பதன் பொருள் கொல்லுதலைக் குறிப்பதை நோக்குக.

சேசாத்திரி   

 தமிழில் குய்-/கொய்- அரிதற் கருத்து (reaping, plucking). குயங் கொண்டு கொய்யும் தினை.

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து  (porunaraarruppatai-) 
I believe kuyam in PuRam 348 has the same meaning.

 குயவரி (striped tiger, because its black stripes resemble sharp blades of a knife (made of Wutz steel):
--------

குயம் என்றால் கூர்மையான பக்கங்கொண்ட கத்தி, அதாவது நாவிதன் கத்தி, அல்லது paring knife எனலாம். குய் = கூர்மை “sharp blade". சங்க காலத்திலே இரும்பு கறுப்பாக இருந்தது. இரும்பின் பேரே இருள்/இரா இவற்றோடு தொடர்புடையது. உருக்கு (Wutz Steel) நிறம் கருப்பு. இது தமிழகத்திலிருந்து சிரியா போன்ற நாடுகளுக்குப் போய், அங்கிருந்து ஐரோப்பாவை எட்டியிருக்கிறது. இந்த டமாஸ்கஸ் ஸ்டீல் உலோகத்தால் செய்யும் paring knife மாதிரிகள்.

இதனைக் குயம் என்று சங்க காலத்திலே வழக்கியுள்ளார்கள் தேனடை எடுக்கும் பாளைக்கத்தியைக் குயம் என புறநானூறு 348-ல் பார்க்கலாம் என எண்ணுகிறேன். வரிப்புலி (striped tiger) குயவரி வேங்கை என்பது இதனால் தான். அதாவது குயம் என்னும் கத்தி போன்ற வரிகளைக் கொண்ட புலி என்பது இதுவே. 

"22-5. குயவரி இரும்போத்து பொருத புண் கூர்ந்து - பெரிய ஆண்புலி தாக்கியதாலாகிய புண் மிகுந்து, உயங்கு பிடி தழீஇய மதன்" (அகநானூறு)
 "குயவரி யிரும்போத்துப் பொருத புண்கூர்ந், துயங்குபிடி தழீஇய மதனழி யானை" (அகநா. 291, 398) ;

கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்து
நல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல்
நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோ
ஏமவேல் ஏந்தி இரா.  (திணைமாலை நூற்றைம்பது)

இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
குயவரி வேங்கை அனைய - வயவர்
பெறுமுறையான் பிண்டம்கோள் ஏவினான் பேணார்
இறும் முறையால் எண்ணி இறை
                  (புறப்பொருள் வெண்பாமாலை)

குயவரி = Tiger, because its stripes resemble knife (barber's knife, paring knife, etc.,)

N. Ganesan

N. Ganesan

unread,
Nov 17, 2014, 2:05:35 PM11/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, K Rajan, mozhitrust
Sri. Devarajan wrote:
On Sunday, 16 November 2014 23:53:23 UTC-8, கோதண்டராமன் wrote:
>>தனத்தைக் குறிக்கும் குயம் என்ற சொல் குய்யம் என்பதை விட குசம் என்பதோடு நெருங்கி இருப்பதாகத் தோன்றுகிறது.

>தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?

Yes. From Sangam lit. onwards.

kuy- is the root. It has two different meanings:
(1) sharp (2) soft
Hence, the Drav. words get disambiguated in Sanskrit

kuy- 'soft' gives rise to kuyam/kuyyam 'female organs'
(puyal, puyyal in Kannada, nuyi, nuyyi 'well in Telugu,
ey- verb > eyi 'porcupine' in Tulu & Kannada. And also, eyyi
ceyal, ceyyal < cey- 'to do' Tamil, veyil, veyyil 'sun's rays'.
etc.,). This kuyam 'breast' > kucam (pronounced as kusam).

On Saturday, 15 November 2014 01:40:36 UTC-8, N. Ganesan wrote:
>> குய்- ‘sharp' அடிப்படையாகக் கொண்டிருக்கும் வடசொல் குஸ-/குஶ- என்னும் புல்.
>> இதற்குத் தமிழில் வழங்கும் பெயர்களை நோக்கலாம்: குயம் > குஸம்/குஶம்.

On Sunday, 16 November 2014 03:36:19 UTC-8, N. Ganesan wrote:
>> குயம்/குய்யம் - மென்மை. குயம் = நகில். எனவே, அண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் அபீத-குசாம்பாள்>
>> குயம் ‘soft breast' > குசம்.

>குயம் > कुश [ku'sa]
>குயம் > कुच [kuca]
>இரண்டும் சரியா ? தேவ்

All these changes happen when non-literate languages of Dravidian
langaues' speakers change from mother tongue into Indo-Aryan after
as period of bilingualism. The differences are mainly due to
Sanskrit being a phonetic script where as Tamil is a phonemic script.

kuyam, with the meaning of 'sharp' blade, gets into Sankrit
as ku'sa (grass) (Cf. kuyavan is kusavan in speech).
kuyam - barber's knife, paring knife
(puRam 348. I will give a commentary), short sword
(Kampan uses "kuya vaTTanai" in war using swords).
And also in PuRam 348, where kuyam 'sharp pALaikkatti' is used
to cut out the honeybee hive. Also, see "kuya vari" for tiger
stripes compared to the black blades of the Wutz steel sword/knife.
https://groups.google.com/d/msg/mintamil/kujQLXZ9COI/wM6Cdn-IBwkJ

BTW, Kongunadu has given the oldest steel sword in the World
abot 1200 BCE, discovered by Prof. K. Rajan. A solitary example,
many may be there hidden in the South Indian soil. The name
used by those early Tamils around ~ 1000 BCE will be "kuyam"
for these sharp knives and swords, as furnished by the Sangam evidence.

Interestingly, when a *bronze* sword was found in China, it is
big news in Archaeology.
http://www.bbc.com/news/blogs-news-from-elsewhere-29108764
http://www.dailymail.co.uk/news/article-2748722/Chinese-boy-stumbles-3-000-year-old-bronze-sword-hands-river-wash-them.html

But Kongu country has Steel sword, "kuyam"
around the same time! Is it not 1000 times more important than
a bronze sword in World Archaeology and history of metallurgical science?

Over Time, India lost the technological edge and gotten enslaved.
It was Jamsetji Tata who overcame all prejudices and started a
revolution in Indian steel. When J. Tata started out not even a
kilogram of steel was being made in India. Proud to be a student of Indian Inst.
of Science which he founded on the lands donated by then Maharajah
of Mysore. It is this long distance vision that made Vengaaluuru
the Indian software industry capital.
http://www.tatasteel100.com/people/
http://upload.wikimedia.org/wikipedia/commons/7/76/Iisc-Founder.jpg

N. Ganesan

Cc. Prof. K. Rajan, Archaeologist, Pondicherry

தேமொழி

unread,
Nov 17, 2014, 2:44:00 PM11/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, rajan...@gmail.com, mozhi...@yahoo.com
குயம் பற்றி செங்கை பொதுவன் ஐயா அவர்களின் பதிவு கீழே 

 குயம்

குயம் என்னும் சொல் வளைவு, வளைவாக உள்ள அரிவாள் ஆகியவற்றை உணர்த்தும். குயவன் வளைவான பானைகளைச் செய்பவன்.

நெல் அறுக்கும் அரிவாள்
கூனிக் குயத்தின் வாய் நெல் அரிந்து,  
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,   
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை    
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும், (245)
சாலி நெல்லின், சிறை கொள் வேலி, (பொருநராற்றுப்படை 242)

நெல் அறுக்கும்போது தேன்கூட்டையும் அறுக்கும் அரிவாள்
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ,
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய,
கள் அரிக்கும் குயம், சிறு சில்
மீன் சீவும் பாண் சேரி, (5)
வாய்மொழித் தழும்பன் ஊணூர் (புறம் 348)

ஆண்மகனின் இருபால் மார்பகப் புடைப்பு
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், (அகம் 48 11)

வரி வரியான கோடுகள்
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், (அகம் 398 22)

N. Ganesan

unread,
Nov 17, 2014, 4:12:37 PM11/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Monday, November 17, 2014 11:44:01 AM UTC-8, தேமொழி wrote:
குயம் பற்றி செங்கை பொதுவன் ஐயா அவர்களின் பதிவு கீழே 

Podhuvan Aiya has read the mails & responded.

Note that
He agrees with my interpretation that kuyam in PuRam 348 is sharp knife

NG

N. Ganesan

unread,
Nov 17, 2014, 5:56:54 PM11/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
குயம் (=கொங்கை) என்பது சங்க இலக்கியத்திலும் பின்னரும் இலக்கியங்களில் பயிலும் சொல்.
குய்- = மென்மை ‘soft' என்னும் வேர் கொண்ட குயம் பேச்சுவழக்கில் குசம். குசம் இப்பொருளில்
தமிழ் தந்த சொல்லாக வடமொழியில் வருகிறது.

ஆழ்வார் பாசுரம்:.
வியமுடை விடையினம் உடைதர மடமகள்,
குயமிடை தடவரை யகலம துடையவர்,
நயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,
கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே

இன்னம்பர் ஊர்த் தேவாரம்
பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன்
குயம் பொன்மை மா மலர்ஆகக் குலாவின; கூட ஒண்ணாச்
சயம்பு என்றே, தகு தாணு என்றே, சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின---இன்னம்பரான்தன் இணைஅடியே.

நா. கணேசன்

On Sunday, November 16, 2014 11:53:23 PM UTC-8, கோதண்டராமன் wrote:
தனத்தைக் குறிக்கும் குயம் என்ற சொல் குய்யம் என்பதை விட குசம் என்பதோடு நெருங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. 

திராவிட மொழிகளின் வார்த்தைகளில் மெய்-உயிர்-மெய்(CVC) வேர் காட்டும். kuy- '= soft' is the source for kuya- and kuyya. Cf. nal- is the source for nala- and nalla-.
குய- ய-/ச- மாற்றம்: குசவன், குசம் (கொங்கை), ...

செய்- > செயல்/செய்யல், செய்யுள்
வெய்- > வெயில், வெய்யில்
ஒய்- > ஒயில், ஒய்யல்(ஒய்யாரம்)
குய்- ’soft'  > குயம், குய்யம்

நல்- > நல-, நல்ல-
வல்- > வலம் (பலம்), வல்லம்

புயல், புய்யல் - கன்னடம்
நுயி,நுய்யி ‘கிணறு’ - தெலுங்கு
எய்- எயி, எய்யி (=முள்ளம்பன்றி). (நாய் - நாயி, பேய் - பேயி, தாய் - தாயி, ஆய் - ஆயி, ... போல)

சு.கோதண்டராமன்
bharathiadi.blogspot.com,
vedamanavan.blogspot.com

2014-11-16 17:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Sunday, November 16, 2014 1:16:07 AM UTC-8, Dev Raj wrote:
On Saturday, 15 November 2014 23:11:08 UTC-8, கோதண்டராமன் wrote:
சித்த மருத்துவ நூல் ஒன்றில் குய்யம் என்பது மர்ம உறுப்புகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதற்கு மூலம் குஹ்யம் guhyam गुह्यम् என்ற வட சொல். குஹ் - மறைத்தல், குஹ்யம் - மறைக்கப்படவேண்டியது. 
அரிவாள் என்ற பொருள் தரும் குயம் பழந்தமிழ்ச் சொல்லாக இருக்கலாம். மற்றது வடசொல்லின் திரிபாக இருக்கலாம்.  

ஆம், சிந்தாமணியில் ’குய்யம்’ சொல்லாட்சி உள்ளது - 

நட்பிடைக் குய்யம் வைத்தான்
    பிறர்மனை நலத்தைச் சோ்ந்தான்
கட்டழற் காமத் தீயிற்
    கன்னியைக் கலக்கி னானு
மட்டுயி ருடலந் தின்றா
    னமைச்சனா யரசு கொன்றான்
குட்டநோய் நரகந் தம்முட்
     குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

குய்யம் வைத்தல் - நண்பனை குஹ்யமாக [மறைவாக] வஞ்சித்தல் .
குய்ய ரோகம், குய்ய தீர்த்தம் இவையும் உள்ளன

பெண்குறிக்கு குய்யம் என்னும் பெயர் குய்- ‘மென்மை’ என்னும் வேர் எனக் கொள்ளலாம்.
 குய்யரோகம், kuyya-rōkam, n. <id. +. Veneral disease peculiar to women, as chancre; பெண்குறியில் வரும் ரோகம். (சீவரட். 313).
குயம்/குய்யம் - மென்மை. குயம் = நகில். எனவே, அண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் அபீத-குசாம்பாள்>
குயம் ‘soft breast' > குசம்.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Nov 17, 2014, 6:43:24 PM11/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
குயம் (=கொங்கை) என்பது சங்க இலக்கியத்திலும் பின்னரும் இலக்கியங்களில் பயிலும் சொல்.
குய்- = மென்மை ‘soft' என்னும் வேர் கொண்ட குயம் பேச்சுவழக்கில் குசம். குசம் இப்பொருளில்
தமிழ் தந்த சொல்லாக வடமொழியில் வருகிறது.

குய்- என்னும் வேர் (1) மென்மை (soft) (2) கூர்மை (sharp) இரு பொருள் கொண்டு சொற்களை விரித்துள்ளது.

குயம் என்றால் ‘மென்மை’ என்று தருவது பிங்கல நிகண்டு, பாவாணர் குறித்துள்ளார்.
அந்த சூத்திரம் முழுதும் பார்க்கவேண்டும்.

கொங்குவேள் பாடியுள்ளார்:
12. பந்தடி கண்டது
 
     85    கூன்மேற் புரட்டியுங் குயநடு வொட்டியும்
           வாக்குறப் பாடியு மேற்படக் கிடத்தியும்
           நோக்குநர் மகிழப் பூக்குழன் முடித்தும்
           பட்ட நெற்றியிற் பொட்டிடை யேற்றும்
           மற்றது புறங்கையிற் றட்டின ளெற்றியும்
     90    முன்னிய வகையான் முன்னீ ராயிரங்
           கைந்நனி யடித்துக் கையவள் விடலும்

குயம் > கயம்:

குய் - குயம் = இளமை (திவா.).

குயம் - கயம் = 1. இளமை (திவா.). 2. மென்மை (பிங்.).

“கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்’’      (தொல். உரி. 24).

கயந்தலை = 1. குழந்தையின் மெல்லிய தலை. “முக்காழ் கயந்தலை தாழ’’ (கலித். 86 2). 2. யானைக்கன்று.

“துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே’’ (கலித். 11)

சிறுபிள்ளைகளைக் கன்றுகயந்தலை யென்பது பாண்டிநாட்டு வழக்கு.

சென்ற வாரம் மறைந்த பெரும்புலவர் ஆ. சிவலிங்கனார் (புலவர் மீனவன் அவர்களின் ஆசிரியர்):

கய (மேலும் ஒரு பொருள்)
 
316.

கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்            (25)

(கய என் கிளவி மென்மையும் செய்யும்)
 
ஆ. மொ. இல.

‘Kaya’ means tenderness also

ஆல்.

The morpheme ‘Kaya’ means tenderness also.

பி. இ. நூ.:

இல.வி. 284-4

கயவே பெருமையும் மென்மையும் கருதலும்

இளம்.

உரை :கய  என்னும்  சொல்  பெருமையே  யன்றி  மென்மைப்
பொருளும்படும், எ-று.

வ-று :‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) எனவரும்.
 
சேனா.

தெய்.

= (317 ஆம் சூத்திரத்திற் காண்க)

நச்.

இதுவுமது.

இ-ள் : கய என் கிளவி  மென்மையும் செய்யும்கய என்னும் சொல்
மென்மை என்னும் பண்பினையும் உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) எனவரும்.

வெள்.

இ-ள் : கய     என்னும்    உரிச்சொல்    பெருமையே  யன்றி
மென்மையாகிய பண்பையும் உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137)  எனவரும்.  மெல்லியோர்
என்ற   பொருளிற்  ‘கயவர்’  என்னும்  சொல்  கீழோரைக்  குறித்து
வழங்குதலை உலக வழக்கிற் காணலாம்.

ஆதி.

பொருள் :கய-கீழ்த்தர-மெல்லிய.

N. Ganesan

unread,
Nov 19, 2014, 3:07:39 AM11/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, November 18, 2014 9:39:44 AM UTC-8, Dev Raj wrote:
தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?

ஆழ்வாரிலிருந்தும், தேவாரத்திலிருந்தும், கொங்குவேள் பெருங்கதையில் இருந்தும்
சான்றுகள் கொடுதுள்ளேன். குயம் = நகில் என்பது சங்க இலக்கியத்திலிருந்து உள்ளது. திருப்புகழில் நிறைய.
குய்- என்னும் வேர் மென்மை என்று பொருள் படுவது. குயம் = மென்மை என்கிறது பிங்கல நிகண்டு.

கந்தபுராணம் 12-ஆம் நூற்றாண்டு.

8032.
காதல் மங்கைபால் வைத்த சிந்தையன் கரவீரப் 
போது கொய்யலன் இலை கொய்து பொற் கரத்து அளிப்ப 
ஏதிலாள நின் சேர்தலின் இங்கு இவை நுகர்ந்து 
சாதலே தலை எனச் சினைத் தாள் ஒரு தையல். 140
 
8033.
இங்கு உன் முலை நேர் குரும்பை இவையாய் குயம் போல் 
தங்கும் மிளநீர் உவை அன்னவள் தன்னை ஈன்றாள் 
கொங்கை நிகரும் அடல் பாளைக் குழு இது என்று ஓர் 
மங்கை நகைப்ப அவை காட்டி ஒர் வள்ளல் நின்றான். 141
 
8034.
ஓவாத தெங்கின் இளம் பாளையின் ஒன்று தன்னைத் 
தாவா ஒருவன் கொடு வந்து ஒரு தையல் முன்போய்ப் 
பாவாய் தமியேன் உயிரே நின் பணை முலைக்காங்கு 
ஓவாத முத்தத் தொடையிங்கு இது கொள்க என்றான். 142
 
8035.
மின்னார் தமக்கு ஓர் அரசே வெறி வேங்கை வீயும் 
புன்னாக வீயும் கொணர்ந்தேன் புனைகிற்றி என்ன 
மன்னா உனக்குப் பலர் உண்டு கொல் மாதர் என்னாத் 
தன் ஆவி அன்னான் தனைச் சீறி ஒர் தையல் போனாள். 143
 
8036.
பொன் பெற்ற மார்பன் ஒருவன் சில போது கொய்து 
கொன் பெற்ற வேல் கண் மடவார் கைக் கொடுத்தலோடும் 
பின் பெற்ற நங்கை வெகுண்டாள் பழுது என்று பேசி 
முன் பெற்றவளும் அவை சிந்தி முனிந்து போனாள்.  144
   
குயம் (=கொங்கை) என்பது சங்க இலக்கியத்திலும் பின்னரும் இலக்கியங்களில் பயிலும் சொல்.
குய்- = மென்மை ‘soft' என்னும் வேர் கொண்ட குயம் பேச்சுவழக்கில் குசம். குசம் இப்பொருளில்
தமிழ் தந்த சொல்லாக வடமொழியில் வருகிறது.

குய்- என்னும் வேர் (1) மென்மை (soft) (2) கூர்மை (sharp) இரு பொருள் கொண்டு சொற்களை விரித்துள்ளது.

குயம் என்றால் ‘மென்மை’ என்று தருவது பிங்கல நிகண்டு, பாவாணர் குறித்துள்ளார்.
அந்த சூத்திரம் முழுதும் பார்க்கவேண்டும்.

கொங்குவேள் பாடியுள்ளார்:
12. பந்தடி கண்டது
 
     85    கூன்மேற் புரட்டியுங் குயநடு வொட்டியும்
           வாக்குறப் பாடியு மேற்படக் கிடத்தியும்
           நோக்குநர் மகிழப் பூக்குழன் முடித்தும்
           பட்ட நெற்றியிற் பொட்டிடை யேற்றும்
           மற்றது புறங்கையிற் றட்டின ளெற்றியும்
     90    முன்னிய வகையான் முன்னீ ராயிரங்
           கைந்நனி யடித்துக் கையவள் விடலும்

குயம் > கயம்:

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2014, 4:45:28 AM11/19/14
to vallamai, மின்தமிழ்
குயம் =கூர்  என்ற தென் சொல்லும் குசம்= குயம் என்ற வடசொல்லும் சங்கமம் ஆகி இருக்கலாம். அன்னம் எனும் சொல் போல்

குயம் மண்டு ஆகம் என்றால் மயிர் நிறைந்த மார்பு எனவும் இருக்கலாமே. . புல் மண்டிக்கிடக்கு என்பார்கள்

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Nov 19, 2014, 5:19:52 AM11/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Wednesday, November 19, 2014 1:45:28 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
குயம் =கூர்  என்ற தென் சொல்லும் குசம்= குயம் என்ற வடசொல்லும் சங்கமம் ஆகி இருக்கலாம். அன்னம் எனும் சொல் போல்

அன்னம் என்னும் சொல் தமிழ்தானே. குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்
குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’
த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.

வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.
குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்று
ஆராயலாம்:

பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2014, 9:02:10 AM11/19/14
to vallamai, மின்தமிழ்

19 நவம்பர், 2014 5:19 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, November 19, 2014 1:45:28 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
குயம் =கூர்  என்ற தென் சொல்லும் குசம்= குயம் என்ற வடசொல்லும் சங்கமம் ஆகி இருக்கலாம். அன்னம் எனும் சொல் போல்

அன்னம் என்னும் சொல் தமிழ்தானே.

சோற்றுக்கும் அன்னம் என பேர்.
 
குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்
குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’
த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.

வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.
குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்று
ஆராயலாம்:

பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.

ஓ அப்படி போகுதா கதை.

N. Ganesan

unread,
Nov 19, 2014, 10:42:09 AM11/19/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Wednesday, November 19, 2014 6:02:08 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்
குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’
த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.

வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.
குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்று
ஆராயலாம்:

இன்னொன்றும் நீங்க பாக்கணும். மறைவிடச் சொற்கள், வசைச் சொற்கள் எல்லாம் மிக ஆழமான 
வரலாறு கொண்டன. எளிதில் மாறாதவை. பகு- என்னும் வினைச்சொல் தான் பகல்/பால். பால் > வால் = வெள்ளை.
இந்தப் பால் வால் என பாலூட்டிகளுக்குச் சொல்கிறோம், பகுப்பிடம்.
வால் (< பால்) வடமொழியில் பேரென்ன? 
பொக்கை, பொக்குள் என்னும் சொல்லொடு தொடர்புடைய த்ராவிட/தமிழ்ச் சொல் இது என தாங்கள் அறிந்ததே.

அதனால் குய்- ‘மென்மை’ என்னும் அடிப்பொருளில் உள்ள குயம்/குய்யம் என்ற சொற்கள் தமிழ்
தந்த லோன் வொர்ட்ஸ் எனக் கருதமுடிகிறது. புச்சம் ‘=tail' தமிழன்றோ. வடமொழியில் உள்ள த்ராவிட வார்த்தை.
 
பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.

ஓ அப்படி போகுதா கதை.

ஆமாங்க. தமிழ் சினிமாவிலும் ஹீரோன்னா அத்தனை ஹீரோயின்ஸ் அவனைச் சுத்தறாங்க இன்னைக்கும்.

மதுரையில் (இப்ப, ஹூஸ்டனிலும் தான்) மீனாட்சி (அவங்க வீட்டுப் பொண்ணு) தன் காதலனை
என்ன செய்கிறாள்? - என்று பாண்டியராஜா குலசேகரன் சொல்லியிருக்காரு. அபிராமி அந்தாதிக்கு
இன்ஸ்பிரேசனே இந்த நூல் தான். அந்தக் காலத்திலே பாண்டிநாட்டில், கொங்குநாட்டில் திண்ணைப்
பள்ளிக்கூடத்தில் முதலில் மனனம் செய்யப்பட்டது. அதனால் ப்ராஜெக்ட் மதுரைக்கு தட்டச்சி,
வார்த்தையை மர்ரே ராஜம் எடிஷன் போல பிரிச்சுக் கொடுத்தேன். (தமிழ்ப் புலவர் ஒருவரே
சில இடங்களில் பிரிக்க தெரியாமல் தவறா உரை மதுரை 1981 உலக தமிழ் மாநாட்டின்போது கொடுத்திருந்தார்.)
மதுராபுரி அம்பிகை மாலையில் சொல்லும் கதை சங்க காலத் தலைவனை மாதர் குயங்கள் தழுவுவதைத்
தழுவினது.

செழும் துங்கக் கொங்கையும், முத்து ஆரமும், பொன் சிலம்பும், திங்கள்
கொழுந்தும், மகரக் குழையும் எல்லாம், வண்டு கொண்டு சுற்றி
உழும் தும்பை சூடும் திரு மேனியும், உன் உடலும் ஒன்றாய்
அழுந்தும் பராசக்தியே!
மதுராபுரி அம்பிகையே! 9.

சங்க இலக்கியம் நல்லாப் படித்த வேந்தன் அரசு மதுரைப் பாண்டியராசா பாடினது.
BTW, Iravatham does not tell why Pandyas have the weapon CeNDu in their emblems.
Also, why would Kshatrya themes come in Mercantile (Vaisya) seals? May questions on Indus "script".

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 19, 2014, 8:29:42 PM11/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, November 19, 2014 7:42:09 AM UTC-8, N. Ganesan wrote:

On Wednesday, November 19, 2014 6:02:08 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்
குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’
த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.

வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.
குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்று
ஆராயலாம்:

இன்னொன்றும் நீங்க பாக்கணும். மறைவிடச் சொற்கள், வசைச் சொற்கள் எல்லாம் மிக ஆழமான 
வரலாறு கொண்டன. எளிதில் மாறாதவை. பகு- என்னும் வினைச்சொல் தான் பகல்/பால். பால் > வால் = வெள்ளை.
இந்தப் பால் வால் என பாலூட்டிகளுக்குச் சொல்கிறோம், பகுப்பிடம்.
வால் (< பால்) வடமொழியில் பேரென்ன? 
பொக்கை, பொக்குள் என்னும் சொல்லொடு தொடர்புடைய த்ராவிட/தமிழ்ச் சொல் இது என தாங்கள் அறிந்ததே.

அதனால் குய்- ‘மென்மை’ என்னும் அடிப்பொருளில் உள்ள குயம்/குய்யம் என்ற சொற்கள் தமிழ்
தந்த லோன் வொர்ட்ஸ் எனக் கருதமுடிகிறது. புச்சம் ‘=tail' தமிழன்றோ. வடமொழியில் உள்ள த்ராவிட வார்த்தை.
 
பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.

ஓ அப்படி போகுதா கதை.

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே!

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.

                                 அபிராமியந்தாதி

Dev Raj

unread,
Nov 20, 2014, 7:32:49 AM11/20/14
to mint...@googlegroups.com
கணேசர் ஐயா,

’குயம்’ நகிலைக் குறிப்பதாகச் சீவக சிந்தாமணியில்,
கம்ப ராமாயணத்தில் இருக்கிறதா ?

தேவ்

N. Ganesan

unread,
Nov 20, 2014, 9:01:49 AM11/20/14
to mint...@googlegroups.com, vallamai
தெரியலை. பார்க்கணும். குயம் - அபித குயாம்பிகை = உண்ணாமுலை. இங்கே குய்- = மென்மை.
குய்யம்/குயம் - இரண்டும் குய்- என்பது வேர். மறையுறுப்புகள் த்ராவிடச் சொற்கள்.
மேலும் ஓர் உதாரணம், புச்ச- என்னும் த்ராவிடச்சொல் பற்றிச் சொல்லியிருக்கிறேன்:
இப்பொருளில் குயம் ‘கொங்கை’ என அகநானூற்றில் வருகிறது.

------

குயம் = கூர்மை.
கம்பன் வாள் கொண்டு நடக்கும் போரை “குய வட்டணை” என்கிறான்.
அதனால் தான் குயம் என்பது “வளைவு” அல்ல. ஷார்ப் (கூர்மை)யான
வாளின், நாவிசன் கத்தியின், பாளைக்கத்தியின் blade.
நேரிக் குயம் உண்டு அது கம்பன் பாடுவது. புறநானூறு 348-ல்
தேன்கூடு தென்னை, பனை மற்ற மரங்களில் எடுக்கவும், 
fish fillet சீவவும் பயன்படுவது  இந்தக் குயம் என்னும் கத்தி/வாள்
ஊணூர்த் தழும்பனின் மகளுக்கு உவமை இந்தப் புறப்பாட்டிலே.
வாய்மொழியால் மறுத்துவிடுகிறான் அவளைக் கட்டிக்கொடுக்க.
அதனால் ஊர் கலைகிறது. பெண்டிர், வயதானோர், குழந்தையர்
வேறு ஊர்கள் செல்ல ஊர் துயரடைகிறது. இது Pre-War situation.
அது போல, போர் ஆரம்பிக்கிற போது ஆற்றங்கரையில் கட்டியுள்ள
எதிரி மன்னனின் யானைப்படை பெருமரங்களை அசைக்கின்றதால்
அவை வருத்தமடைகின்றன என்கிறார் பழைய ஜர்னலிஸ்ட் பரணர்.
இங்கே குயம் (paring knife) - தழும்பன் மகள் உவமைநயம் 
குயம் குயவர்சேரி என்று கொண்டால் போய்விடுகிறது. கத்தி (குயம்)
நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். அதுபோல் இன்பும், அன்பும்
தரும் இவளால், மகட்கொடை மறுக்க, துன்பு அடைகிறதே ஊர் எனப்
பதைக்கும் பாடல் பரணர் பாடல். 

இந்த நேர் குயம். உலகத்திலேயே
பழைய - 3200 ஆண்டு பழமை - கிடைத்திருப்பது கொங்கிலே.
புலியின் குயவரி என்பது இதுபோன்ற (நேரான) கத்தி, வாள் தான்.
எனவே குயம் = வளைவு எனல் பொருந்தாது. இங்கே எல்லாம், குயம் = sharp.

வளைவான அரிவாள் கூனிக் குயம் (சங்கம்), கொடுவாய்க் குயம் (சிலம்பு)
என்று அடைகொடுத்து விளக்கியுள்ளனர். 

நா. கணேசன்
 
தேவ்

Hari Krishnan

unread,
Nov 20, 2014, 9:14:47 AM11/20/14
to vallamai, mintamil

2014-11-20 19:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, November 20, 2014 4:32:49 AM UTC-8, Dev Raj wrote:
கணேசர் ஐயா,

’குயம்’ நகிலைக் குறிப்பதாகச் சீவக சிந்தாமணியில்,
கம்ப ராமாயணத்தில் இருக்கிறதா ?

தெரியலை. பார்க்கணும். குயம் - அபித குயாம்பிகை = உண்ணாமுலை

பூவினால் வேய்ந்து செய்த பொங்கு 
     பேர் அமளிப் பாங்கர், 
தேவிமார் குழுவும் நீங்கச் 
     சேர்ந்தனன்; சேர்தலோடும், 
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், 
     குயமும், புக்குப் 
பாவியா, கொடுத்த வெம்மை 
     பயப்பயப் பரந்தது அன்றே.

ஆரணிய காண்டம், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்.  (இராவணனுடைய காம நோய்.  குயம் என்பது மார்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.)
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Nov 20, 2014, 9:23:29 AM11/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Thursday, November 20, 2014 6:14:47 AM UTC-8, Hari wrote:

2014-11-20 19:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, November 20, 2014 4:32:49 AM UTC-8, Dev Raj wrote:
கணேசர் ஐயா,

’குயம்’ நகிலைக் குறிப்பதாகச் சீவக சிந்தாமணியில்,
கம்ப ராமாயணத்தில் இருக்கிறதா ?

தெரியலை. பார்க்கணும். குயம் - அபித குயாம்பிகை = உண்ணாமுலை

பூவினால் வேய்ந்து செய்த பொங்கு 
     பேர் அமளிப் பாங்கர், 
தேவிமார் குழுவும் நீங்கச் 
     சேர்ந்தனன்; சேர்தலோடும், 
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், 
     குயமும், புக்குப் 
பாவியா, கொடுத்த வெம்மை 
     பயப்பயப் பரந்தது அன்றே.

ஆரணிய காண்டம், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்.  (இராவணனுடைய காம நோய்.  குயம் என்பது மார்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.)

நன்றி, சீதாப்பிராட்டியின் குயம் என்று ஆள்கிறான் கம்பன் இங்கே. இங்கே குயம் ‘soft' என்னும் வேர்கொண்டு அமைந்த நகில் என்னும் பொருளது.
குயம் = மென்மை (பிங்கலந்தை). உண்ணாமுலை = அபிதகுயாம்பிகை (திருஅண்ணாமலை)
   (அரண்மனையுட் புகுந்த இராவணன்); தேவிமார் குழுவும் நீங்க -
(தன்) மனைவியர் கூட்டத்திலிருந்து விலகியவனாய்; பூவினால் வேய்ந்து
செய்த - 
மலர்கள் பரப்பி அமைக்கப்பட்ட; பொங்கு பேர் அமளிப்
பாங்கர் சேர்ந்தனன் - 
உயர்ந்த பெரிய படுக்கையிடத்தில் சேர்ந்தான்;
சேர்தலோடும் - அவ்வாறு சேர்ந்த மாத்திரத்தில்; நாவி நாறு ஓதி நவ்வி
புனுகின் நறுமணம் வீசும் கூந்தலையுடைய மான் போன்ற சீதையினுடைய;
நயனமும் - கண்களும்; குயமும் - மார்பும்; புக்குப் பாவியா -
மனத்தினுள் பல்வகை நினைவுகளை ஊட்ட; கொடுத்த வெம்மை -
(அப்பாவனைகள்) தந்த உணர்ச்சி வெப்பம்; பயப்பயப் பரந்தது - சிறிது
சிறிதாக மிகுதிப்படலாயிற்று. (அன்றே - அசை).                   89

அதே கம்பன், குயம் ‘sharp' = கூர்மை’ பக்கங்கள் கொண்ட வாளோடு நடக்கும்
போரையும் பாடுகிறான்:
வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ? 9

இங்கே, குயம் = நேரிக் குயம் = நேரான வாள் (Sword).

நா. கணேசன்

Dev Raj

unread,
Nov 20, 2014, 9:56:15 AM11/20/14
to mint...@googlegroups.com
On Thursday, 20 November 2014 06:14:47 UTC-8, Hari wrote:
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு 
     பேர் அமளிப் பாங்கர், 
தேவிமார் குழுவும் நீங்கச் 
     சேர்ந்தனன்; சேர்தலோடும், 
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், 
     குயமும், புக்குப் 
பாவியா, கொடுத்த வெம்மை 
     பயப்பயப் பரந்தது அன்றே.
ஆரணிய காண்டம், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்.  (இராவணனுடைய காம நோய்.  குயம் என்பது மார்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.)

நன்றி, ஹரிகி சார்.
கம்பர் குசப்புல்லைக் குயம் என்று
சொல்லியுள்ளாரா ?

தேவ்

N. Ganesan

unread,
Nov 20, 2014, 10:28:58 AM11/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

குய் ‘sharp edge' என்பது குயப் புல்லுக்கு வழங்கியிருக்கிறது. அதனால் தருப்பையால் குடிசை
வேயும்போது குய்+சு = குய்ச்சு = குச்சு என வழங்குகிறோம். வடமொழியில் கூர்சர என்றால்
குயப்புல்லின் தொகுதி. இது கூர்மையை அடியாய்க்கொண்ட தமிழ்ச்சொல் என்பது வெள்ளிடைமலை.
இதனால் ஏற்பட்ட பஞ்ச த்ராவிட நாட்டின் பெயர் கூர்ச்சரம். தமிழ்க்கடல் ராய.சொ,
காந்தி பிள்ளைத்தமிழில் கூர்ச்சர நாட்டான் காந்தியடிகளை அழைக்கிறார்கள். கூர்ச்சரம் > குச்சரம்
எனப் பிராகிருதம் ஆகும். பார்க்க: மணிமேகலை.குய்/கூர்ச்சர என்னும் தருப்பையால் வேய்வது
குடிசை குச்சு என்கிறோம். இதே குய் என்னும் வாளால் வெட்டுவதை வாளால் குத்தினான்
என்கிறோம். குத்து என்னும் வினைச்சொல் கு(ய்)த்து - இதில் ய் தொக்கது வேய்ங்கடம், வேய்ந்து (வேந்தன்) போல.
இந்தக் குயம் வடமொழியில் குசம் என்றாகியுளது. வடநாடு மொழிமாற்றம் ஆனபோது
நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

கம்பன், குயம் ‘sharp' = கூர்மை’ பக்கங்கள் கொண்ட வாளோடு நடக்கும்
போரையும் பாடுகிறான்:
வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ? 9

இங்கே, குயம் = நேரிக் குயம் = நேரான வாள் (Sword).

--------------------------

அகநானூறு 48 குயம் = நகில். சங்க அகப்பாடலின் இதே வரிகளை
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் பாடுகிறார்:

எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் 
   இரு குயமும் மண்டி எதிர் எதிர் விழுந்து 
எளிவரும் கலவி புலவிபோல் 
  இனிய தெய்வ மாதர்! கடை திறமினோ! 

ஒட்டக்கூத்தர் பரணியில் சொல்வது 1000 ஆண்டுக்கு முன்னே
அகநானூற்றில் பாடியிருப்பதுதான்.

நா. கணேசன்

On Thursday, November 20, 2014 6:14:47 AM UTC-8, Hari wrote:

N. Ganesan

unread,
Nov 20, 2014, 10:56:26 AM11/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, November 19, 2014 6:02:10 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:

19 நவம்பர், 2014 5:19 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Wednesday, November 19, 2014 1:45:28 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
குயம் =கூர்  என்ற தென் சொல்லும் குசம்= குயம் என்ற வடசொல்லும் சங்கமம் ஆகி இருக்கலாம். அன்னம் எனும் சொல் போல்

அன்னம் என்னும் சொல் தமிழ்தானே.

சோற்றுக்கும் அன்னம் என பேர்.

சோற்றுக்கு அன்னம் என்று இருப்பதால்தான், தமிழ் அன்னம் என்ற சொல்லை அம்சம் (> ஹம்ச) என்று
வடமொழி மாற்றியுள்ளது. அம்ச - இங்கே ம் என்பது அநுஸ்வாரம் அன்னம் > அஞ்ஞம்/அஞ்சம் > அம்சம் (ம் = அநுஸ்வாரம்).
அன்னம் = அம்சம் bar-headed goose என்னும் பதிவில் காண்க.
 
குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்
குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’
த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.

வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.
குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்று
ஆராயலாம்:

பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.

ஓ அப்படி போகுதா கதை.

அதே வார்த்தைகளுடன் தக்கயாகப்பரணியில் கூத்தமுதலியார் பாடுகிறார்:
எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் 
   இரு குயமும் மண்டி எதிர் எதிர் விழுந்து 
எளிவரும் கலவி புலவிபோல் 
  இனிய தெய்வ மாதர்! கடை திறமினோ! 

கொங்குவேள் பெருங்கதை கொடுத்தேன். கொங்கின் பெரும்புலவர்
சீவக சிந்தாமணியில் அகநானூற்றுப் பாடலை உபயோகிக்கிறார்.
பாருங்கள்:

”மாலைநுதி கொண்டுமழை மின்னென விமைக்கும்
வேலைவல னேந்திவிரி தாமமழ கழியச்
சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சுங்
கோலவரை மார்பினுறு கூற்றென எறிந்தான்.

   (இ - ள்.) நுதிமாலை கொண்டு மழை மின்என இமைக்கும் வேலை வலன்ஏந்தி - நுனியில் மாலையணிந்து முகிலிடை மின் என்று ஒளிரும் வேலை வலக்கையில் எடுத்து; சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும் கோலவரை மார்பின் - பொழிலிடையே மயில்போன்ற மகளிரின் விருப்பமூட்டும் துணைமுலைகள் துயிலும் அழகிய மலையனைய மார்பிலே; விரிதாமம் அழகு அழிய - மலர்ந்த வாகைமாலை அழகுகெட; உறுகூற்று என எறிந்தான் - தாக்கும் கூற்று என எறிந்தான்.

   (வி - ம்.) மயிலின் தன்மையார் என்ற பன்மையால் தேவியர் பலராயினார். [சச்சந்தனுக்குத் தேவியர் பலருண்டென்றும் காமக்கிழத்தியர் ஐந்நூற்றுவர் என்றும், க்ஷத்திர சூளாமணி என்ற நூல் கூறும்.] 'முலைகள் துஞ்சும் மார்பு' எனவே முன் தனக்கு நிகராக எறிவாரின்மை பெறப்பட்டது; 'மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் - மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப' (புறநா. 10) என்றார் பிறரும். 'யானை ஆழ எறிந்தான்' என முடிக்க.”

நா. கணேசன்
 
Dev Raj

unread,
Nov 20, 2014, 1:30:55 PM11/20/14
to mint...@googlegroups.com
On Thursday, 20 November 2014 07:56:26 UTC-8, N. Ganesan wrote:
சோற்றுக்கு அன்னம் என்று இருப்பதால்தான், தமிழ் அன்னம் என்ற சொல்லை .....

அன்னம் - வேர் என்ன ?

தேவ் 

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 2:58:48 PM11/20/14
to mint...@googlegroups.com
குயம் என்ற ஒரு தமிழ்ச் சொல்லுக்கு இத்தனை விளக்கமா?  இந்தச் சொல்மாரி விளக்க மழையில் நனைந்து தமிழ்த் தேனைப் பருக வாய்ப்பளித்த தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Nov 21, 2014, 9:50:49 AM11/21/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Thursday, November 20, 2014 9:20:47 PM UTC-8, ருத்ரா (இ.பரமசிவன்) wrote:
"குய்புகை"கமழும் குறுந்தொகை உள்ளிட்டு எண்ணற்ற அந்த சொல் தடங்களைக்காட்டிய தங்கள் ஆராய்ச்சி மிகவும் "கூர்மையானது" செறிவானது.குசம் குயம் இவையே குஞ்சம் என்பதையும் குறிக்கும் என நினைக்கிறேன்.குஞ்சம் அல்லது குச்சம் எனும் மென்மைத்தன்மை பெண்கள் கூந்தல் அழகு படுத்தலில் வழங்குகிறது.தேனி அருகில் உள்ள அந்த குஞ்சம் போன்று வளர்ந்திருக்கும் அந்த கோரைப்புல் இனக்காட்டில் தான் சனீஸ்வரன் (குச்சனூர்)கோயில் இருக்கிறது.நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.கொன்றை அங்குழல் மட்டும் அல்ல வேய்ங்குழல் எனும் மூங்கில் புல் குழல் (இதுவே புல்லாங்குழல்) இசையோடு ஒலி யெழுப்பி பாடல்கள் தான் ரிக் "வேய்தம்"ஆகியிருக்கலாம்.ரிக் என்ற(பாரசீக) அவெஸ்தா ஒலிச்சொல் சிந்துவெளித்தமிழன் பல நாடு கண்டு பல ஒலி கேட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்ததே ஆகும்.ரி என்ற எழுத்து சொல் முதல் வருவது
தமிழ் வழக்கம் இல்லாததால் இரிக்கு என்று ஆக்கப்பட்டபோதும்
வண்டின் இமிழொலியான ரீங்காரமும் புல்லாங்குழல் ஒலியும்
(வண்டு துளைத்த புல்லாங்குழல் ஒலியே) பொருள் குறிக்காத இரட்டைக்கிளவி போன்ற ஒற்றைக் கிளவியே ரீ இசையாகி ரிக் பாடல் 
ஆகியிருக்கலாம்.தமிழன் ஆக்கிய வடதமிழே சமஸ்கிருதம் என்பது
எனது கருத்து.

==================================================ருத்ரா

நன்றி கவிஞர் ருத்ரா.  குஞ்சம் வைத்த முகபடாம் போன்ற அணிகலன்களும் அம்பாரி வைக்க
கம்பளமும் ஏற்றிய பழக்கிய யானைகளுக்கு குஞ்சம் என்னும் அணிகலனால் வந்தபெயர்
குஞ்சரம். குங்கு/கொங்கு வளைதல் - அதனால் வளைந்த பாதம் கொண்ட திருவடி
குஞ்சிதபாதம். பலருக்கும் குஞ்சிதபாதம் என்ற பேர் இன்றுமுண்டு. சகலாகம பண்டிதர்
உமாபதி சிவம் செய்த சூத்திரம் நான் நன்கறிந்த வடமொழி வல்லுநரால் ஆக்ஸ்போர்டில்
மொழிபெயர்க்கப்பட்டுளது.

புறநானூற்று 348-ல் குயம் என்பது நேரிக் குயம் (பாளைக்கத்தி). அது அப்பாடலின் ஹீரோயினுக்கு
ஒப்பிடலாம். குய் என்னும் ஒலிக்குறிப்புச் சொல் பானை சூளையில் சுடும்போது ஏற்படும்
கலைச்சொல். மனிதன் வரலாற்றை aceramic vs. ceramic period என்பர். தமிழன் செராமிக் பீரியடில்
நுழைந்தபோது ஏற்பட்ட சொல்; குய் - குய்யுடை அடிசில் etc.,

வேதம் வித்யா என்ற சொல்லோடு தொடர்பு.

நா. கணேசன் 

On Saturday, November 15, 2014 1:40:38 AM UTC-8, N. Ganesan wrote:
குயம் என்னும் சொல்லின் பொருளை முனைவர் ராஜம் கேட்டிருந்தார்கள். 

திராவிட மொழிகளில் முதலெழுத்தில் -உ/-ஒ வேறுபாடு கொண்ட ஒருபொருள் தொகுதிகள் நிறைய உண்டு. உ-ம்: முய்-/மொய்- (முசுமுசு/மொசுமொசு. எனவே, முயல்/மொசல்), துள்-/தொள்- (துளை, தொள்ளு), புள்-/பொள்- (புள்ளி, பொள்ளுதல்), முள்-/மொள்- (முட்டை, மொட்டு, மொண்ணை) ... இது போல் ஒன்று: குய்-/கொய்-

குய்-/கொய்- என்னும் சொல்லுக்கு இரண்டு அடிப்படையான பொருள்கள் உண்டு. (1) குய்- ‘sharp'  குயம் ‘நாபிதன் கத்தி, அரிவாள், கொடுவாள்’ போன்றவற்றைக் கொய்தல் என்னும் வினையொடு த்ராவிட வேர்ச்சொல் அகராதி இணைக்கிறது:
DEDR 2119 Ta. koy (-v-, -t-) to pluck (as flowers), cut, reap, shear (as hair), snip off, choose, select; kuyam sickle, reaping-hook, curved knife, razor; kuvil reaping, cutting. Ma. koyka to cut, reap, crop, mow; koyyal, koyttu reaping; koyil the hire of a fruit-gatherer. Ko. koy- (koc-) to cut; koyḷ harvest, reaping. To. kwïy- (kwïs-) to pluck (fruits), (bee) sucks. Ka. koy (koyd-, kōd-), kuy to cut, saw, crop, reap, pluck (as fruit); n. cutting, etc.; koyilu, kuyilu cutting, reaping, plucking; koyita, koyikatana, kuyyuvike cutting; koyika man who cuts; fem. koyke; koyki woman whose (ears, etc.) have been cut. Koḍ. koy- (koyyuv-, kojj-) to pluck, harvest. Tu. koipini, koyipini, koyyuni to cut, reap, mow; koyilů, koilů reaping, harvest, a small paddy field; koyyelů harvest. Te. kōyu to cut, sever, divide, reap, pluck; kō̃ta cutting, reaping. ? Kol. (SR.) kayīpeŋ to cut (tīr hair; Kamaleswaran). Pa. koy- (koñ-) to reap, harvest; kōval stubble. Ga. (Oll.) koy- (kod-, kon-) to reap; (S) koy- to cut. Go. (A. Y. Mu. Ma. Ko. etc.) koy- to reap, cut, pluck (fruit); (Tr.) koīānā, kōīyānā to gather berries, mangoes, etc., harvest wheat or crops; (M.) koidānā to reap; (Ko.) koyal stubble (Voc. 914). Konḍa koy- (-t-) to reap, harvest, cut, pluck (flowers, etc.); (Sova dial.) koˀer, (BB) koˀeṟ (obl. koˀeR-) sickle. Pe. koy- (-t-) to cut (grass, weeds, etc.); koyes, koves sickle. Kui kōva (kōt-) to reap, cut off; n. reaping, harvesting; kōeri harvest, reaping. Kuwi (F.) koiyali (kōt-) to pluck. Kur. xoynā (xoss-) to cut down grass and the like with the sickle, mow, reap. Malt. qoye to reap; qoytre to have the crop reaped. / Cf. Mar. koytā grass-sickle; koytī small knife. DED(S, N) 1763.

குய்- என்னும் இந்த DEDR 2119 வேருக்கு அடியாக இருக்கும் பொருள் கூர்மை (sharpness) என்பதாகும்.  Sharpness of the edge of the blade என்பதால் குயம் என்பது நாவிதன் கத்தி (நேரான விளிம்பு), அரிவாள் (வளைந்துள்ள விளிம்பு) இவற்றுக்குப் பெயரானது. From MTL,
குயம்¹ kuyam , n. perh. கொய்-. 1. Sickle, reaping-hook, curved knife, அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 2. Razor; நாவிதன் கத்தி. அருங்குயந் தான்களைந்து (சீவக. 2500).  குயம் = கூரரிவாள் என்கிறது சூடாமணி நிகண்டு.

குய்- ‘sharp' அடிப்படையாகக் கொண்டிருக்கும் வடசொல் குஸ-/குஶ- என்னும் புல். இதற்குத் தமிழில் வழங்கும் பெயர்களை நோக்கலாம்: குயம் > குஸம்/குஶம். குயப் புல் விளையும் இடத்தில் ஓடும் ஆறு குசத்தலை நதி ஆந்திரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடி கடலருகே கலக்கிறது. புகழ்பெற்ற தக்கோலம் குயத்தலை/கொத்தலை நதிக்கரையிலே உள்ள சைவத்தலம். பல்லவர்கள், சோழர்கள் கட்டிய பெரிய கோயில். குயத்தலையாறு இப்போது குசத்தலை ஆறு என்று வழங்குகிறது. கொய்த்தலை ஆறு கொத்தலையாறு/கொற்றலை என்றும் சொல்கின்றனர். தருப்பை வகையில் ஒன்றான இப்புல்லால் குடிசை வேய்வதை இந்திய இலக்கியங்கள் (காட்டு: சங்க இலக்கியம்), கலைவரலாறும் காட்டுகின்றன. ரிக்வேதம் முதல் மண்டலத்திலே த்ராவிட மக்களின் சமயச் செய்திகள் இடம்பெறுகின்றன. அங்குதான் இந்தியாவில் முதன்முதலாக குய்- என்னும் வேர் கூர்மைப்பொருளில் கூர்மையான புல்லுக்குக் குஶ(ர) (< குய் ‘sharp') என்று பதிவாகியுள்ளது. குயப் புல் வேத யஜ்நச் சடங்களில் இன்றியமையானது, சோமத்திற்கு அடுத்த முக்கியம் வாய்ந்தது. அதர்வ வேதத்தில் குஶம் எனப்படும் குயம். தமிழ்/த்ராவிட மொழிகளில் இருந்து வேதத்திலும், இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கூர்மை (Sharpness) என்ற அர்த்த்தில் பண்பாகுபெயராக குயம் குஶம் ஆகியுள்ளமை தெளிவு. குஶ-அக்ர-புத்தி என்றால் வடமொழியில் குயப்புல்முனை போன்ற 'Sharp-pointed intelligence'. இராமர் - சீதையின் லவ-குசர் என்னும் இரு மகன்களில் குசன் என்பவன் பெயர் குயப்புல்லால் தான். தமிழில்/ப்ராகிருதத்தில் குயம்/குசம் எனப்படும் குஶப் புல்லின்  தாவரவியல் தாவரவியல் பெயரை ஆராயும் கட்டுரையை இணைத்துள்ளேன். Mahdihassan, S. (1987). "Three Important Vedic Grasses". Indian Journal of History and Science 22 (4): 286–291. 
இந்த ஆய்வுக் கட்டுரையை செந்தமிழ் (CTamil) குழுவில் சங்கத் தமிழர் கலியாணத்தில் வழிபடும் கொற்றி(காத்யாயனிப்) பாவையின் பொம்மை அலங்கரிப்புக்கு விளக்கமாகப் பயன்படுத்தியுள்ளேன். குயப் புல் (> குஶம், வேதங்களில்):

D. bipinnata has several synonymns such as "Poa cynosuriodes". Its old scientific name was "Eragrostis cynosuriodes". The sharp bladed and the tip of Kusha grass are proverbial in all Indian languages. 

"A word of caution for the new users of this Dharbai / Dharbam. It is sharper than a blade! The edges are so sharp, it might even hurt & cut your palm if handled carelessly, that you'll notice only when you find blood oozing from your palm! Yes, you'll not feel the pain while injuring, but later one feels it.  Only when it is wet, you can twist it to the form you need to make the so called  Pavithram, koorcham or Bugnams, but to use it after it has dried! Usually Pavithram should not be prepared by the person who has to use it because the electro-magnetic fields in the grass gets lost if it is prepared and worn by the same person! "

"Holy grass Eragrostis cynosuroides  (syn. Desmostachya bipinnata )- (Family Poacease)  Love grass genus 

The other names for this grass are Big cord grass  or Salt reed-grass (USA), Dharbha, Dharbhai (in Tamil),   Halfa grass (.Australia),  Kusa or Kusha (in Sanskrit), Vishwamitra. [...]
This grass grows in wild in clumps mostly in salty, marshy habitats. It can neither be cultivated everywhere nor can be harvested on any day. The edges of the leaf blades are very sharp."

Kashimiri - Jai Kishan Sharma writes,
"This grass grows naturally on the wet banks of paddy fields. The growing roots of this grass forms a dense mat which bind the soil of banks and prevents soil erosion. It cannot be planted and grown everywhere. The edges of the leaf blades are very sharp. It might hurt your skin with a cut if not handled cautiously. "
etc. etc.,

In the Churning of the Ocean story of the Mahabharata, there is a myth about sharp razor blades of Kusha (< Kuya- in Dravidian, DEDR 2119) that cut the tongues of snakes. It is due to their partaking few drops Amitha they remain young just shedding skin periodically. One of the first Dalit poems in Telugu is "A Blade of Grass" published in 1972. The beautiful poem mentions several grasses. On the Kusha grass, Velcheru N. Rao writes: "that sharp fellow: Darbha grass (Poa cynosuroides) has a sharp edge. Gods and anti-gods churned the essence of life from the ocean of milk, but Vishnu chetaed the anti-gods of their share. The snakes, who did not get their share either, licked the sharp grass where the pot stood. Their tongues were split into two, but they stayed young, only shedding their skin as it it got old."

what Sir William Jones said of Kusha grass,

-----------

குய்- என்னும் வேருக்கு மென்மை (softness) என்ற பொருள் உண்டு. அதுவே, குய்யம்/குயம்/குசம், குயக்குழி, குயவன்/கொசவன், ... போன்ற சொற்களைப் பிறப்பிக்கிறது. அகநானூறு 48 பாடலில் மென்மை என்று பொருள் வரும் பெண்ணுறுப்புகளில் ஒன்றாக நகிலைப் பாடிய சிறப்பான பாட்டையும் பார்ப்போம். பெண்ணுறுப்புக்களில் பலவும் குய்யம்/குயம் ( < குய்- ‘soft') எனப்படுகின்றன. மாந்தகுல வளர்ச்சியில் மட்பாண்டங்கள் செய்தல் மிக முக்கியமான ஒரு மைல்கல். வரலாற்றையே aceramic period vs. ceramic period எனப் பகுப்பர். Ceramic technology-யின் கலைச்சொல்லில் இருந்து ஒலிக்குறிப்புச் சொல் உருவாவதும் (”குய்யுடை அடிசில்”), கடுகு முதலியன தாளிக்கும் தாளித ஸ்பைசெஸ் எவ்வாறு பெயர் பெறுகிறது? - என்றும் அடுத்த மடலில் பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 21, 2014, 10:41:09 PM11/21/14
to mint...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
On Friday, November 21, 2014 3:59:42 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
குயத்தொழில் முதலில் செய்வது மண்ணை குழைவது. குழைவன் குயவன் ஆகி  இருப்பான் சென்னைத்தமிழில்.

குயம் என்றால் மென்மை என்கின்றது தமிழ் நிகண்டு. இதனால், (குய்- > ): குயம்/குய்யம் - பெண்ணுறுப்புக்கள்
 
நம் இரவுகள் குயத்தொழிலில் தானே தொடங்குது
-- 

அகநானூறு 48 - அதன் வார்த்தைகளுடன் தக்கயாகப்பரணியில் கூத்தமுதலியார் பாடுகிறார்:
எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் 
   இரு குயமும் மண்டி எதிர் எதிர் விழுந்து 
எளிவரும் கலவி புலவிபோல் 
   இனிய தெய்வ மாதர்! கடை திறமினோ! 

சங்கப்பாடலில் தலைவி குயங்கள் அடையும் நிலை என்ன? சென்னைப் பேரகராதி மண்டுதல் என்பதற்கு தரும் பொருள்களைக் காண்போம்.
மண்டுதல் -  To grow vehement; to wax fierce; உக்கிரமாதல். மண்டமர் (பு. வெ. 7, 28).; To blaze up; to glow; மிகச் சுவாலித்தல். மண்டு மெரியுள் (பு. வெ. 1, 1).; To increase; to become excessive; அதிகமாதல். மண்டிய கடும் பசி தனக்கு (தாயு. ஆனந்தமான. 4); To be fascinated, charmed, engrossed; ஈடுபடுதல். முற்பட வடிவிலே மண்டுகிறாள் (ஈடு, 5, 3, 1).--tr. 1. To thrust in; செலுத்துதல். நுதிமுக மழுங்க மண்டி . . . மதில்பாயு நின் களிறு (புறநா. 31). ...

குயம் மண்டு ஆகம்:
தண்கால் முடக்கொற்றனார் 

48. குறிஞ்சி

[...]
ஊசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண்டு
[...]

8-14. கண்போல் - மகளிர் கண்ணினைப்போலும், ஒண் செங்கழுநீர் ஆய் இதழ்-ஒளிபொருந்திய அழகிய செங்கழுநீர்ப்பூக்களை, ஊசி போகிய சூழ் செய் மாலையன் - ஊசியாற் கோத்து சுற்றிக் கட்டிய மாலையனாய், பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்-தலையின் ஒரு பக்கத்தே கொண்ட வெட்சிப்பூவாலாய கண்ணியனாய்,குயம் மண்டு ஆகம் - மகளிர் முலைகள் பாய்தற்குரிய மார்பில், செஞ்சாந்து நீவி - சிவந்த சந்தனத்தைப் பூசி, வரிபுனை வில்லன் - வரிந்து புனைந்த வில்லையுடையனாய், ஒரு கணை தெரிந்து கொண்டு - ஒப்பற்ற கணையினை ஆய்ந்து கைக்கொண்டு (ஒரு தலைவன் தோன்றி), அம் மா படர் திறம் யாதோ என - அப் புலி சென்ற வழி யாதோ என்று, வினவி நிற்றந் தோன் - வினவி நின்றனன்;

--------------

தங்கால் முடக்கொற்றனாரின் பாடலோடு குறிஞ்சித்திணைப் பாடல் - கலித்தொகையிலிருந்து ஒப்பிடலாம்.
குறிஞ்சிக்கலி 39
இது ''முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப், புரைதீர் கிளவி தாயிடைப்புகுப்பினும்'' என்னும் (1) விதிபற்றித் (2) தமர் வரைவுமறுத்

துழித் தோழி தாயர்க்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர்முதலியோர்க்கு அறத்தொடுநிற்ப, அவரும் ஒருவாற்றான் 1உடன் பட்டமை தோழி தலைவிக்குக் கூறி, தானும் அவளும் வரைவுகடிதின் முடிதற் பொருட்டு வரையுறை தெய்வத்திற்குக் குரவையாட அவன் வரையவருகின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது.

இதன்பொருள்.

(39.)(1) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா
(2) டாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா
னீணாக 2நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற்
(3) பூணாக முறத்தழீஇப் 3போதந்தா 4னகனகலம்
வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி
(1) யருமழை 1தரல்வேண்டிற் (2) றருகிற்கும் (3) பெருமையளே

எ - து : எம்மோடேகூடி விருப்பத்தையுடைய (4) கடிய நீரையாடுகின்றவள் கால்தளர்ந்து அஞ்சித் தாமரைபோலுங் கண்ணைப் புதைத்து அந்நீரோடே போகையினாலே தனக்குச்சென்ற (5) அருளினாலே நீண்ட சுரபுன்னைப் பூவாற் கட்டின நறிய குளிர்ந்த மாலை அசையும்படி அந்நீரிலே குதித்துப் பூணினை யுடைய இவள் மார்பைத் தன்மார்போடே உறும்படி அணைத்துக்கொண்டு கரையிலே போதவிட்டவனுடைய அகன்ற மார்பை இவளுடைய எழுகின்ற முலைகள் கூடினவென்று பிறர் கூறுகின்ற கூற்றாலே என்னுடைய தோழி நமக்கு அரியமழையைப் பெய்விக்க நாம் விரும்பில் அதனை நமக்குத் தரவல்ல கற்பின் பெருமையளாயினாள்; எ - று.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 24, 2014, 12:37:33 PM11/24/14
to mint...@googlegroups.com, vallamai
On Thursday, November 20, 2014 1:58:48 PM UTC-6, oruarizonan wrote:
குயம் என்ற ஒரு தமிழ்ச் சொல்லுக்கு இத்தனை விளக்கமா?  இந்தச் சொல்மாரி விளக்க மழையில் நனைந்து தமிழ்த் தேனைப் பருக வாய்ப்பளித்த தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

நன்றி திரு. அரிசோனன். வட, தென் மொழிகளாம் இந்திய இரு செம்மொழிகளை ஆழமாக
ஆராய்ந்தால் இந்தியாவின் சமயங்கள், சமூக அமைப்புகள் இவற்றின் அடிப்படையான ஒற்றுமை காட்டும்.

இயை- என்னும் வினைச்சொல்லில் இருந்து இசைக்கருவிகள்
இயம் எனப்படுகின்றன. பல்லியம் = orchestra. குய்- ‘sharp'
என்னும் வேர்ச்சொல்லால் இந்தியாவில் மிகப்பழமையான,
புற்களின் அரசன் என்று சொல்லப்படும் குயப் புல் குசை
என்றும் ய-ச போலியால் வழங்குகிறது.  வேதத்தில் சோமபானம்
செய்யும் தாவரம் சோமைக்கு அடுத்த முக்கியத்துவம் குயப் புல்லுக்குத்தான்.

குயம் - குசை (cf. இயம் - இசை).  
கூர்மை என்ற சொல் கூர்ச்சம்/சூருமம், குரம் (< கூர்-) என்றெல்லாம்
தருப்பைக்குப் பெயர் தருகிறது. சூர்-ராஷ்ட்ரம் - சௌராஷ்ட்ரம்.
கூர்ச்சரம் - குசைப் புற்கட்டு.  கூர்ச்சர (குஜராத்) நாடு;
குச்சரக் குடிகை - ”கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் என்பர்”.
(உவேசா, மணிமேகலை).

 ”குசை உறு பரியும் தேரும் வீரரும் குழுமி ” - கம்பன்
குசை n. < kušā. 1. Rein; குதிரையின் வாய்க்கருவியிற் கோத்துமுடியுங் கயிறு. (நெடுநல். 178, உரை.)  2. Bridle, bit; இந்தக் குசை (அ) கசை என்னும்
கடிவாளக் கயிறு குசைப் புல்லால் ஆதியில் செய்தது போலும்.

புவிபாலர் முன்னம் பொருந்திஅஞ் சாது புகன்றிடவும் 
குவியாதென் புந்தி குசைநுனி போல்மிகக் கூர்ந்திடவும் 
தவியாது கேட்பவர்க் கெல்லாம் இனிதுறச் சாற்றவுநாற் 
கவிபா டவும்அருள் செய்வாய்தென் கூடற் கயற்கண்ணியே!’ 
                                                     - கயற்கண்ணிமாலையில் உவேசா.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 25, 2014, 8:47:34 PM11/25/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
வருந்தின ஊணூரும், அதன் பெருமரங்களும் (புறம் 348)
--------------------------------------------

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
கள்ளரிக்கும் குயம் சிறுசின்

மீன்சீவும் பாண்சேரி
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன                                  
குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தின மன்எம் பெருந்துறை மரனே.                 
                                                             - பரணர்

”வருந்தலமன்” என்று உவேசா ஈற்றடியில் பதிப்பித்தார். ஆனால்,
”வேர்துளங்கின” என்னும் முந்தைய பாடல் ஈற்றடியைப் பார்க்கிறபோது
“வருந்தினமன்” என்று ஔவை துரைசாமிப்பிள்ளை பாடங்கொண்டது
சிறப்பு. இந்தப் புறநானூற்றுப் பாடலில் உள்ள உள்ளுறையை அறிந்துகொள்ள
இதற்கு முன் உள்ள கபிலர் பாடல் (புறம் 347) அடுத்துவரும் மதுரை மருதன் இளநாகனார் (புறம் 349) உதவும். பிறந்த ஊருக்கு அணங்குபோல வருத்தம் தரும் தலைவன் மகளை ”மரம் படு சிறு தீப் போல அணங்கு ஆயினள்” என்கிறார் இளநாகனார் (புறம் 349).
எதிரி மன்னனின் வேல் படை ஊரையே வருத்த தலைவன் மகள் காரணமாகிவிட்டாள் என்று பதைக்கிறார் இளநாகனார். கபிலர் புறம் 347-லிலோ அகுதையின் கூடல் என்னும் ஊரில் எதிரியின் ஒளிரும் வாள் படையால் நேரும் சேதத்துக்கு காரணமான பெண்மகளைச் சொல்கிறார். இவற்றைப் பார்க்கும்போது குயம் என்பதும் ஒருவகைப் படைக்கலம் என்று கொள்ளுதல் சாலப் பொருந்தும். குயவர்சேரியைக் குயம் என்று குறிப்பிடும் வழக்கம் என்றும் தமிழில் இருந்ததில்லை என்பதாலும் பரணரின் புறம் 348-ல் குயம் என்பது ஒரு படைக்கலம் என்பது தெளிவு.

குயப் புல் - கூர்மையான பக்கங்களை உடைய தருப்பைப் புல்.

குயவரிப் புலி - வாள் போன்ற வரிகளை உடைய கானுறை வேங்கை.
இங்கே, குயவரி - நேரிக் குயம் போன்ற வரிகள் உடையதால் புலிக்கு ஒரு பெயர்.
இலக்கியத்தில் வளைந்திருக்கும் குயம் என்று குறிப்பிடக் கூனிக் குயம் (sickle) என வரும்.

குய வட்டணை - சாரி நடமிட்டு நடக்கும் வாட்போர் (கம்பன்).
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=75&pno=71

பரணர் - புறம் 348 - பாடலை மீண்டும் படித்து, அதன் உரைகாண்போம்.

குவளைக்கண்ணி காரணமாகக் குயவட்டணைப் போர்!

வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தே னிரியக்
கள்ளரிக்குங் குயஞ் சிறுசின்

மீன்சீவும் பாண்சேரி
வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன
குவளை யுண்க ணிவளைத் தாயே
ஈனா ளாயின ளாயி னானாது
நிழறொறு நெடுந்தேர் நிற்ப வயின்றொறும்
வருந்தின மன்னெம் பெருந்துறை மரனே.

     உரை: வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ - வெண்மையான நெல்லை 
அறுவடை செய்யும் உழவர் தொடக்கத்தே இசைக்கும் தண்ணுமையோசை  கேட்டஞ்சி; கண் மடல் கொண்ட தீந்தேன் இரிய - கணுவிடத்தே தோன்றும் மடலிற் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் நீங்கியதனால்; கள்ளரிக்கும் குயம் - தேனடையை அந்த மரமேறி குயம் என்னும் நேரான பாளைக்கத்தி (paring knife) கொண்டு அரிந்தெடுத்து; சிறு சின்மீன் சீவும் பாண் சேரி - சிலவாகிய சிறுமீன்களை அக் குயக் கத்தியால் பட்டை பட்டையாக நீளவாக்கில் சீவி உண்ணும் பாண்சேரி; வாய்மொழித் தழும்பன் ஊணூரன்ன - ’உனக்குப் பெண் கொடேன்’ என்னும் உறுதியான மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப் போன்றன; குவளை யுண்கண் இவளை - குவளைப் பூப்போலும் கண்களையுடைய இம் மகளை; தாய் ஈனாளாயின ளாயின் - தாய் பெறாதொழிந்திருப்பாளாயின்; ஆனாது - அமையாமல்; நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப - மரநிழல் தோறும் நெடிய 
தேர்கள் நிற்க; வயின்தொறும் - இடந்தோறும்; செந்நுதல் யானை பிணிப்ப -
சிவந்த நுதலையுடைய யானைகளைக் கட்டுதலால்; எம் பெருந்துறை மரம் வருந்தினமன் - எம்மூர்ப் பெருந்துறைக் கணின்ற மரங்கள் வேர் துளங்கிப் பெரிதும் கெட்டன; எ - று.

தேனீக்கள் அஞ்சி இரிந்து நீங்குதல், போர் நிமித்தமாக பாணர் உள்ளிட்ட ஊர்மக்கள் கலைந்துபோதலுக்கும், குயம் என்னும் பாளைக்கத்திகொண்டு மரமேறித் தேனடை எடுத்தல், படைக்கலத்தால் போரிட்டு அணங்கு போலும் தழும்பன் மகளைக் கொள்ளுதற்கும் உவமை. தழும்பன் என்னும் தலைவனின் ஊணூர் மக்களின் வருத்தம் போர்தொடுக்கும் எதிரிமன்னனின் யானைகள் அசைக்க வேருடன் சாயும் ஊரில் பெருமரங்களின் வருத்தம் போன்றது என்கிறார் பரணர்.

PuRam 348 

The big trees of the port city of UuNuur are like the city itself - both are suffering.
City of UuNuur, ruled by Talumpan whose words are always true and who sticks to his words, 
    where tree climbers chop off the bee hives 
    to gather honey after the bees 
fly off from the tree tops, frightened by the taNNumai drum that is beaten by harvesters of the white paddy, and
where bards who catch little fish and make fillets using paring knives live 
on one street. (Alas, those peaceful days are coming to an end).

If her mother had never 
  given birth 
to this girl whose darkened eyes look like blue waterlilies, then none 
  of this 
would ever have happened! The trees of our spacious harbour are 
  suffering, 
long chariots standing wherever 
there is shade, and elephants with red-painted foreheads tied 
  everywhere!                                         1

The song of ParaNar. TiNai: kAJci. TuRai: makaTpAR kAJci.
Reply all
Reply to author
Forward
0 new messages