அருந்தமிழும் அன்றாட வழக்கும்

5,110 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 24, 2020, 1:34:11 AM5/24/20
to மின்தமிழ்
9. தமிழின் தனித்தன்மை..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================

“இன்றளவும் வழங்கும் தமிழை மேனோக்காகக் காண்பவரும் அதன் சொற்களின் தனித்தன்மையைக் காணலாம்” என்பார் எடுத்துக்காட்டி விளக்குவது இது:

  உழவும் கலப்பையும், காரும் கயிறும், குண்டையும் நுகமும், சாலும் வயலும், வாய்க்காலும் ஏரியும், மடுவும் ஏற்றமும் பிறவும், பயிர்களையும், நட்டலும் கட்டலும், முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளான் இயன்றனவே. தமிழர்கள் வதியும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கிடையும், புழைக்கடையும், கூரையும் வாரையும், கூடமும் மாடமும், தூக்கும் தூணும், கல்லும் கதவும், திண்ணையும் குறடும், தரையும் சுவரும், மண்ணும் மானும், மற்றவுந் தமிழே. தலையும் காலும், கண்ணும் காதும், மூக்கும் மூஞ்சியும், வயிறும் மார்பும், நகமும் தசையும், நாவும் வாயும், பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தனித் தமிழன்றோ தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர், சீரூர், ஆரூர், பேரூர், புத்தூர், புற்றூர், சேய்ஞ்ஞலூர், மணலி, நெல்லூர், நெல்லை, கொன்னூர், குறட்டூர் என்னும் இடப் பெயர்களும், செவ்வாய், வியாழம், வெள்ளியும் ஆகிய கிழமை பெயர்கள் தமிழ்ப் பெயர்களே. தொண்ணுற்றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களில் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை. ஆழாக்கு உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, துணி, கலன் என்னும் முகத்தலளவையும், இன்னும் கீழ்வாயிலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே. 

தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும், காயும் கறியும், பாலும் பழமும், நெய்யும் தயிரும், உப்பு முதல் ஒன்பதும், பருப்பு முதல் பத்தும், தமிழ்ச் சுவையே. எழுத்தும் சொல்லும், பொருளும், யாப்பும், அணியும் ஆகிய ஏடுஞ் சுவடியும், எடுத்துப் பார்க்குமிடமெல்லாம் தமிழே. துணியும் அணியுந் தமிழே. தொழும் கடவுளும் தமிழ் மயமே. வீடும் நாடும், காடும் மேடும் ஆகிய எங்கும் தமிழ் மயமாகவே இருக்கின்றது. தமிழின் தனிச்சிறப்பை ஏற்க மறுப்பாரும் இருந்தமையன்றோ வியப்பு. 

  இது தொடர்பாகச் ‘செந்தமிழ் வழக்கு’ என்னும் நூலில் புலவர் இளமுருகனார், உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் பயின்றுவருஞ் சொற்களைப் பற்றிச் சிறிது ஆராயலாம் என்று தொடங்கி விரிந்த கருத்துகளை வழங்கியுள்ளார். சொல்லாவது, பொருளை அறிவிக்கும் ஆற்றலுடைய எழுத்தொலியாகும். அஃது, இருதினைப் பொருள் தன்மையையும், ஒருவர் உணர்ந்து கொள்வதற்குக் கருவியாகும். பொருள்களைப் புலப்பட விளக்கும் தன்மையை நோக்கி வடநூற் புலவர் சொல்லை விளக்கு என்பர். அது குறித்துச் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ‘‘சொல்லெனப்படுஞ் சோதி தோன் றாதாயின், எல்லை நீர் ஞாலத்தில் எப்பொருள்தான் புலப்படும்? ஆதிபகவனை அறிவதும் இல்லை. ஆகமங்களை அறிவதும் இல்லை! அறம், பொருள் முதலியவற்றை அறிவதும் இல்லை. அவற்றை வலி யுறுத்தும் பழஞ்சரிதங்களை அறிவதும் இல்லை. தங்கருத்தைப் பிறர் அறிவதும் இல்லை. பிறர் கருத்தைத் தாம் அறிவதும் இல்லை அறியாமை யாண்டும் தலைப்படும். உலகம் தலைதடுமாறும். ஆதலால் உலகை வழங்கிவரச் செய்வது சொல்லெனப்படுஞ் சோதியென்றே சொல்லுக'' என்றார்.

  சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்பனவாம். இவற்றைப் பெயர், வினை, இடை, உரிச்சொற்களுடன் சேர்த்தவழிப் பத்தாகும்.

  இவற்றுள் இயற்சொல்லாவது, உலக வழக்குக்குரிய செஞ்சொல்லாகும். இயற்சொல் - இயல்பாய்ப் பொருள் உணருஞ்சொல். அச்சொல் செந்தமிழ் நிலத்துக்குரியதாய்க் கற்றார்க்குங் கல்லாதார்க்கும் ஒப்பத் தன் பொருளை விளக்குந் தன்மையுடையது. தமிழ்மக்கள் பேசுதற்கும் உரைநடையில் எழுதுதற்கும் இயல்பாய் அமைந்த சொல்லென்பது கருத்து.

  அடுப்பு, நெருப்பு, நிலம், நீர், காற்று, பகல், இரா, மலை, ஆறு, கடல், குளம், விளக்கு, உப்பு, புளி, வீடு, கோயில், மக்கள், காடு, மேடு, பள்ளம், யானை, குதிரை, நடந்தான், இருந்தான், பார்த்தான், கற்றான், கொன்றான், தின்றான் என்பனவும் பிறவும் இயற்சொற்களாம். மக்கள், நாளிலும் பொழுதிலும் தம் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைத் தாம் உணரவும் அச்சொற்கள் பெரிதும் துணை புரிவன. 

  புதுப்பொருள்களும், புதுக்கருத்துகளும், புது நிகழ்ச்சிகளும், புது நுகர்ச்சிகளும், பிறக்குந்தோறும் உலகவழக்குச் சொற்களை மக்கள் பெருக்கிக் கொள்வர். இவ்வாறு உலக வழக்குச் சொற்களை நாளடைவிலே பெருகி மொழியை வளப்படுத்தும். இனி, இவ்வுலக வழக்குச் சொற்களேக்கல்லாதாருங் கற்றாரும் வழங்குவாராதலின், ஒருசேர அவருள் கற்றார் அவற்றை இலக்கண நெறிக்கு ஏற்ப வழங்கு வரென்றும், கல்லாதார் அந்நெறியிகந்து வழங்குவரென்றும் அறியலாம். கற்றார் வழக்கே உயர்வழக்கென்றும் கூறுவர். உலகவழக்குச் சொற்கள் இழிவழக்காக மாறுவதைச் சிறிது விளக்குவோம். பார்த்தான், கொன்றான், தின்றான். கோபம், நுங்கு, பனாட்டு, ஆற்றங்கரை, அகப்பை, ஒன்று. ஆண்பிள்ளை, இளநீர், கடற்கரை, கைம்மாற்று. சிவப்பு, சுவர், சுருட்டு, கிரகணம், புடைவை, பிட்டு, திறப்பு, பன்றி, பாகற்காய், நாற்றம் என்பனவற்றை இக்கால எழுத்தாளர், பாத்தான், கொண்டான், தின்னான், கோபம், நொங்கு, பினாட்டு, ஆத்தங்கரை, ஆப்பை, ஒண்டு, ஆம்பிளை, இளனி, கடக்கரை, கைமாத்து, சிகப்பு, சிவர், கிராணம், பிடவை, புட்டு, துறப்பு, பண்டி, பாவக்காய், நாத்தம் என்று தாம் எழுதும் நூல்களில் வழங்கிவரக் காண்கின்றோம்.

  இச்சொற்களுக்கு இலக்கண அமைதியில்லை. பார்த்தான் என்பதற்குப் பார் என்பது பகுதி, பார், நோக்கு, பார்த்தல், பார்த்தான், பார்த்தாள் என்று எழுதியவழியே நோக்குதல், நோக்கினான், என்ற பொருள்படும். பார்த்தான் என்பதற்குப் பகுத்தான் என்பதும் பொருள். பாத்தல் - பகுத்தல், ஆகவே, இரண்டுக்கும் பொருள் வேறுபாடு மிகுதியுமுண்டு. பார்த்தலும் பாத்தலும் ஒன்றெனக் கருதிக்கொள்ளும் வழக்குமிகுமாயின் பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்டல் அரிது என்னும் திருக்குறளைப் படிப்போர், தான் உண்பதைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்க உண்னும் இயல்புடையவனைப் பசி என்னும் தீய நோய் தீண்டாது, என்று பிழையாகப் பொருள் கொண்டு திருவள்ளுவர் கருத்தை மாறாக விளங்கிப் பெரிதும் மயங்குவரன்றோ இவ்வாறே ஏனைய சொற்களையும் பொருத் திக் காண்க. ஆகவே, இழிவழக்குச் சொற்கள் எழுத்திற் புகுந்து ஆட்சி செய்யுமாயின், செந்தமிழ் வழக்குச் சொற்களெல்லாம், பொருளில் மாறுபட்டுத் தமிழ் மொழி முழுவதுஞ்சிதையும், ஆதலினாலன்றோ செந்தமிழ்ச் சான்றோர் இழிவழக்கை வழக்கென்று கொள்ளாது. உயர் வழக்கையே உலக வழக்கென்றும், சான்றோர் வழக்கென்றும், அவ்வழக் கின் நிலைப்பாட்டை மரபென்றும், வரையறுத்துக் கொள்வாராயினர் ஆசிரியர் தொல்காப்பியனாரும், இக்கருத்தை உணர்த்தவே, “மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்” என்று இலக்கணஞ் செய்தார். இவ் வழக்கை மீறிக் கல்லாதார் பேசுவது போலவே எழுதிச் சிறுகதை இலக்கியஞ் செய்தல் வேண்டும் என்பார் கொள்கை, செந்தமிழ் வழக்கை அழித்துக் கொடுந்தமிழ் வழக்கை நிலைநாட்டும் கொடுமையாகும்.

செய்யுள் வழக்குச்சொற்கள்

உரைநடை இலக்கியங்கட்கு இயற்சொற்களே பெரிதும் உரிமையுடையன என முன்னர்க் காட்டினோம். செய்யுள் வழக்குக்கு அவ்வியற்சொல்லும், திரிசொல்லும், வடசொல்லும், திசைச்சொல்லும் ஆகிய நால்வகைச் சொற்களும் உரிமையுடையன. அவற்றுள்ளே திரிசொற்கள் செய்யுட்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாம். அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுள்மொழி என்பர். திரிசொல் இயற்சொல்லின் வேறாயது. திரிதல் வேறுபடுதல், வேறுபடுதலாவது, இயற்சொற்போல வெளிப்படையாகப் பொருள் விளங்காது. கல்வியறிவால் உணர்வதாய் அமைவது. ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அமையும். திரி சொல் இயற்சொல்லின் வேறாய் நின்று அரிதிற் பொருள் விளக்குஞ் சொல். இயற்சொல்லினுந் திரிசொல்லே இலக்கியத்துக்கு இன்றியமையாதது. திரிசொல் இல்லையாயின், சுருங்கச் சொல்லுதல் கூடாது. சுவைபெறப் பெய்தலும் கூடாது. மோனை, எதுகை முதலியன அமைதலுங் கூடாது. கவிநடையும் வேறுபட்டு இழியும், என்று கூறிப் போந்தார். 

வடசொல்

  ஆரிய சொல் தமிழ்நடை பெற்று வழங்குதல் வடசொல்லெனப்படும். தமிழ்நடை பெறுதலாவது, தமிழோசைக்கு இணங்கி அதற்கு நிகரான தமிழெழுத்தால் அமைவது. வடமொழியோசையும், அதற்குரிய எழுத்தும் அமைய நிற்பன ஆரியச் சொல்லென்றும், தமிழ் நடைபெற்றுத் தமிழே போல விரவி நிற்பன வடசொல்லென்றும் பகுத்துணர்ந்து கொள்ளலாம். தமிழ் இயற்கை ஒலியுடையதாகலின், உரப்பியும், எடுத்துங்கனைத்தும் கூறும் வடவெழுத்துகளை நீக்கி, அவற்றுக்கு நிகரான தமிழ் எழுத்துகளை இட்டு வழங்குதலைத் தொல்காப்பியனாரும் நன்னூல் பவணந்தியாரும் அவரையுள்ளிட்ட ஆசிரியர் எல்லாரும் வேண்டினர். செந்தமிழ் வழக்கை மதித்து நூல் செய்த சங்ககாலச் சான்றோரும், இடைக்காலச் சான்றோரும், பிற்காலச் சான்றோரும், இக்காலச் சான்றோரும், அம்மரபினை வழுவவிடாது பெரிதும் பேணி வருவாராயினர். 

செயற்கை ஒலிகளையுடையது ஆரியம். அவ்வாரியமொழிச் சொற்களைத் தமிழ்நடைப்படுத்தாது கிடந்தாங்கு வழங்குதலினால், இனிய செந்தமிழ்க்கு அமைந்த இனிய நல்லோசை வளங்குன்றிவிடும். எழுத்துகளின் இன்னோசை அமைப்புத் திரியும். நாளடைவில் அவ் வழக்குத் தமிழின் மொழி நடையை மாற்றி அது பிறிதொரு மொழியாகத் திரிதற்குத் துணை செய்யுமென்க. அவ்வாறே அருந்தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமாகத் திரிந்ததை மொழி வரலாற்றால் அறிகின்றோம். அத்துணை சிறந்த பாதுகாப்பினை ஆசிரியர் தொல்காப்பியனார் ஐயாயிரவாண்டுகளுக்கு முன்னரே தமது இலக்கண நூலிற் செய்தமை பாராட்டற்பாலதாம். 

‘‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே,
என்றும், 
சிதைந்தன வரினு மியைந்தன வரையார்.''

என்றும் பொதுவகையில் இலக்கணவரம்பு செய்தார். அச்சூத்திரங்களை விளக்கிய சேனாவரையர், ‘‘வடசொற்கிளவியாவது, வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம். எனவே, பொதுவெழுத்தால் இயன்ற வடசொல்லும் செய்யுள் செய்தற்குச் சொல்லாம் என்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன. பொதுவெழுத்தால் இயன்றனவேயன்றி வடவெழுத்தால் இயன்ற வடசொல் சிதைந்துவரினும் பொருத்தமுடையன செய்யுளிடத்து வரையார். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய்வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க என்று கூறியதும் நோக்கியறிக.

-  முனைவர் ஔவை ந.அருள், தொடர்புக்கு: dr.n...@gmail.com

தேமொழி

unread,
May 31, 2020, 4:14:23 AM5/31/20
to மின்தமிழ்
10.  பாதுகாக்கப்படும் தமிழ் மொழி நலம்..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================

“இனி உரப்பியும், எடுத்துங்கனைத்தும் வருகின்ற செயற்கையொலிகள் ஆரியத்தில் உண்டென்பர் நச்சினார்க்கினியர், உரப்போடு கூடிய எழுத்துகள், கவ்வருக்கம் முதற் பவ்வருக்கம் முடிய ஐந்து வருக்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துகளாம். எடுப்போடு கூடிய வெழுத்துகள், ஐந்து வருக்கங்களில் மூன்றாம் எழுத்துகளாம். கனைப்போடு கூடிய வெழுத்துகள், அவற்றில் நான்காம் எழுத்துகளாம். ஏனைய வெழுத்தொலிகளிற் சொற் பயிலாமை நோக்கி அவற்றை விட்டனரென்க.

  இனி, இற்றைக்கு ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த பவணந்தி முனிவர், தொல்காப்பியனார் பொதுவகையில் வகுத்த வடமொழியாக்க விதியைச் சிறப்பு முறையிலே விளக்கி விதிசெய்வாராயினார். பவணந்தி முனிவர் காலத்திலே வடமொழி இலக்கியப் பயிற்சி தமிழ் நாட்டிலே மிகுவதாயிற்று. ஆரியச் சொற்கள் வரம்பின்றி இலக்கியங்களிற் கலக்கத் தொடங்கின. அக்கலப்புத் தமிழ்மொழியின் ஒலித் தூய்மையை அழித்துவிடும் என்றஞ்சிய பவணந்தி முனிவர் ஆரியச் சொற்களைக் கிடந்தாங்கு வழங்காது. தமிழ் நடைபெற்ற வடசொல்லாய் வழங்குமாறு விளக்கமாய் விதி செய்தனர். நன்னூலிற் பதவியலின் ஈற்றிலே வடமொழியாக்கம் என்னும் பகுதியிலும், (146 - ஆம் சூத்) பெயரியலில் 274 ஆம் நூற் பாவிலும் கண்டு கொள்க. ஆகவே, வடசொற்கள், ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவான எழுத்துகளாலும், ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்துத் திரிந்த எழுத்துகளாலும், இயன்று செந்தமிழ்ச் சொல்லை ஒப்பனவாகிச் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவனவாம் என்றுணர்க.

  இனி பவணந்திமுனிவர் விளக்கமாய்ச் செய்த வடமொழியாக்கத்தை அவர்க்குப் பின்னிருந்த இலக்கண நூலாசிரியர்களெல்லாரும் வழி மொழிந்து பேணி வந்தனர். யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமார சுவாமிப்புலவர், அவ்வடமொழியாக்க மரபினைத் திட்பநுட்பமாய் ஆராய்ந்து பவணந்தி முனிவரைக் காட்டிலும் பெரிதும் வற்புறுத்துவாராயினர். அதனை அவர் செய்த இலக்கணச் சந்திரிகை, இலக்கியச் சொல்லகராதி என்னும் நூல்களிற் கண்டு தெளிக.

  ஆரியச் சொற்களை வழங்கும்பொழுது, அவற்றிலுள்ள வடவெழுத்துகளை நீக்கியெழுதும் மரபு, தமிழகப் புலவராற் பெரிதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை போல, ஈழத்துப் பூதன்றேவனார் முதல் இன்றுகாறும் உள்ள யாழ்ப்பாணப் புலவராலும் தமிழ்மொழி நலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையரசின் கல்விக்குழுவின் அறிக்கை நாம் காணத்தக்கதாகும்.

  வடமொழியாக்க மரபின் நோக்கம் தமிழ்மொழிக்கு இயல்பாய் அமைந்த இயற்கை ஒலியுடைமையைப் பாதுகாப்பதேயாம். செயற்கை ஒலிக்கூட்டங்கள், ஆரியம் ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சொற்கள் வழியாகத் தமிழிலே புகுந்து ஆட்சி செய்யுமாயின், தமிழ்மொழி தனக்கியல்பாய் அமைந்த இனிய மெல்லோசையில் திரிந்து போகும். ஆயிரக்கணக்கான சொற்கள் அங்ஙனம் புகநேரின், தமிழ் பிறிதொரு மொழியாகச் சில ஆண்டுகளிலோ பல ஆண்டுகளிலோ மாற்றமடையும். இவ்வகைச் செயற்கையொலிக் கூட்டச் சொற்கள் வரம்பின்றிக் கலந்த பெருங்கலப்பாலே தமிழ், பல்லாண்டுகளுக்கு முன்பே மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலியனவாக மாற்றமடைந்த வரலாற்றுக்கு மொழி நூல்கள் உறுதி கூறுகின்றன. அம்மொழிகளின் இக்கால வடிவத்தை நுணுக்கமாக ஆராய்வோமெனில், கல்லாதார் வழக்காகிய கொடுந்தமிழும், ஆரியச் சொற்கோவையும் பிறவும் ஒன்றும் சேர்ந்த பிழம்பே அவை என்பதைக் காண்போம்.

  ஆகவே, இக்காலக் கொடுந்தமிழ் வழக்கு ஒரு நூற்றாண்டுக்கு ஆட்சி செய்து நிலைக்குமாயின், செந்தமிழ்மொழி வேறு வடிவமெய்தும் என்பது மறுக்க முடியாத பேருண்மையாகும். யாமுரைத்த உண்மையை உணர்தற்குப் பின்வருஞ் சொற்கோவை மிகப் பயன்படும். அஃது இக்கால எழுத்தாளர் செய்த சிறுகதை இலக்கியங்களிலே கண்டு கோவைப்படுத்தப்பட்டது. ஆரியச் சொற்களைத் தமிழ் நடைப்படுத்தி வட சொல்லாக்காது, வழங்கிய கொடுந்தமிழ் வழக்கே இஃது என்று கொள்க. அச்சிறுகதை நூல்களிற் காணப்படும் பிறமொழிச் சொற்கோவையும் பிறவகை வழுக்களும் காணலாம்.

  ஜலம் - ஜனம் - ஜகம் - ஜடம் - ஜங்கமம் - ஜனகன் - ஜனனம் - ஜயம் - அம்புஜம் - ராஜ்யம் - சமாஜம் - விஜயன் - துவஜம் - ஜாதி - ஜாலம் - ஜாக்கிரதை - ஜீவன் - ஜீரணம் - ஜீவாலை - இராஜன் - புஜம் - போஜனம் - ஜெந்து - பிரஜை - பூஜை - ஜோதி - அஷ்டம் - அதிர்ஷ்டம் - திருஷ்டிவிஷம் - கிருஷ்ணன் - சிருஷ்டி - துஷ்டன் - நஷ்டம் - பாஷை - ஒளஷதம் - குஷ்டம் - சீஷன் - நிமிஷம் - வருஷம் - வேஷம் - அபிஷேகம் - ஷண்முகம் - ரிஷி - அஸ்திரம் - அஸ்தமனம் - அவஸ்தை - உத்ஸவம் - கஸ்தூரி - சரஸ்வதி - சாஸ்திரம் - புஸ்தகம் - மஸ்தகம் - வாஸ்ம் - விஸ்தாரம் - ஸ்பா -ஸ்வாமி - ஸ்க்தி - ஸ்ப்தம் - ஹரி - ஹனுமன் - ஹிமிம் - ஹிதம் - ஹீனம் - ஹேது ஸ்நேஹம் - கூடிணம் - பக்ஷ - அக்ஷரம் - கூேடிமம் - லகஷ்மி - பரீகூைடி - ராமன் - ரகசியம் - ரசாயனம் - ரஞ் சிதம் - ரசம் - ராணி - ராணுவம் - ராத்திரி - ராமாயணம் - ராவணன் - ருக்மணி - ருசி - ருத்திரன் - ருது - ரோகிணி - ரதம் - ரதி - ரவி - ராகம் - ராசன் - ரோமம் - லகு - லஞ்சம் லாபம் - லிங்கம் - லோகம் - லோபம். இவை ஒரு சிலவாம். இவற்றின் வடசொல்லாக்கம் காண முற்பட்டால் சலம் - சனம் - சகம் - சடம் - சங்கமம் - சனகன் - சனனம் - சயம் - அம்புசம் - இராச்சியம் - சமாசம் - விசயன் - துவசம் - சாதி - சாலம் - சாக்கிரதை - சீவன் - சீரணம் - சுவாலை - இராசன் - புயம் - புசம் - போசனம் - செந்து - பிரசை - சோதி - அட்டம் - அதிட்டம் - திட்டிவிடம் - கிருட்டிணன் - (கண்ணன் - சிருட்டி - துட்டன் - நட்டம் - பாடை - ஒளடதம் - குட்டம் - சீடன் - நிமிடம் - வருடம் - வேடம் - அபிடேகம் - சண்முகம் - இருடி - அத்திரம் –அத்தமனம் - அவத்தை - உற்சவம் - கத்துரி - சரசுவதி - சாத்திரம் - புத்தகம் - மத்தகம் - வாசம் - வித்தாரம் - சபை - சாமி - சுவாமி - சக்தி - சத்தம் - அரி - அநுமன் - இமம் - இதம் - ஈனம் - ஏது - சிநேகம் - கணம் - பட்சி - அட்சரம் - அக்கரம் - சேமம் - இலக்குமி - பரீட்சை - இராமன் - இரகசியம் - இரசாயனம் - இரஞ்சிதம் - இரத்தம் - இரசம் - இராணி - இராணுவம் - இராத்திரி - இராமாயணம் - இராவணன் - உருக்குமணி - உருசி - உருத்திரன் - இருது - உரோகிணி - இரதம் - இரதி - இரவி - இராகம் - இராசன் - உரோமம் - இலகு - இலஞ்சம் - இலாபம் - இலிங்கம் - உலோகம் - உலோபம் என்பனவாம்.

  இவற்றுக்கு நேரான செந்தமிழ்ச் சொற்கள் பற்பல கிடப்பவும், அவற்றை வழக்கழிந்து ஒழியவிட்டு, வடமொழிச் சொற்களை வாங்குதல் உய்தியில் குற்றமாம். அவ்வடசொற்களுக்கு நேரான சொற்கள் தமிழில் இல்லாதவழி அவற்றைத் தமிழ்நடைப்படுத்தி வழங்குதல் குற்றமாகாது.

தேமொழி

unread,
Jun 7, 2020, 1:58:23 AM6/7/20
to மின்தமிழ்
11.  தமிழில் கடந்த திசைச் சொற்கள்..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================

திசைச்சொற்கள்

ஏறத்தாழ வடமொழிக்கு முந்தைய வடிவம் கொண்ட ஆரியச்சொல் வடதிசையினின்றும் வந்து தமிழில் புகுந்ததைப் போலவே, ஏனைய திசைகளிலிருந்தும் சில சொற்கள் வந்து புகுந்துகொண்டன. அவற்றைத் திசைச்சொல் என்று குறித்தனர். நட்புறவு, வணிகம், கல்வி முதலிய தொடர்புகளினாலும், வேற்றவர் ஆட்சியினாலும், திசைமொழிகள் மக்கள் பேசும் மொழிகளில் கலப்பது இயற்கையாகும். அச்சொற்களை வரம்பு கடந்து செல்ல விடாமல் மட்டுப்படுத்துவதும், அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்களை படைத்து வழங்குவதும், தமிழுக்கு மரபாயிற்று.  

ஆரியச் சொற்களை எங்ஙனம் தமிழ்நடைப்படுத்தி வடசொல்லாக்கி வழங்கினார்களோ, அங்ஙனமே திசைச்சொற்களையும் தமிழோசைக்கேற்பத் தமிழ் எழுத்துகளால் தமிழ் நடைப்படுத்தி வழங்குதல் வேண்டும்.  அங்ஙனம் தமிழ்நடைப்படுத்தி வழங்கிய வழியே அவை திசைச்சொற்கள் எனப்பட்டன. ஆரிய மொழிக்குரிய எழுத்துகளை அப்படியே வழங்கத் தொடங்கினால், ஏனைய திசைச்சொற்களையும் அவ்வத் திசைமொழிக்குரிய எழுத்துகளால் கொள்ள வேண்டும். அங்ஙனம் வழங்குதல் தமிழ்மொழியின் ஒலியமைப்பையும் தூய்மையையும், இலக்கண வரம்பையும் சீர்குலைத்துவிடும். மதி நுட்பமும், மொழிப்பற்றும் மிகுந்த இலக்கணச் சான்றோர் ஆரியம் முதலாய எல்லாத் திசைமொழிச் சொற்களையும் தமிழ் நடைப்படுத்தி வழங்குமாறு ஆணையிட்டனர்.

நன்னூற்கு உரைகண்ட சங்கர நமச்சிவாயப்புலவர், ‘‘வடக்கும் ஒரு திசையன்றோ திசைச்சொல்லன்றி வடசொல்லென வேறு கூறுவதென்னையெனின், தமிழ் நாட்டிற்கு வடதிசைக்கட் பதினெண் மொழிகளுள் ஆரிய முதலிய பல மொழியுளவேனும் தென் தமிழ்க்கு எதிரியது கடவுட் சொல்லாகிய ஆரியமொன்றுமேயென்பது தோன்ற, அவற்றுள் தமிழ் நடைபெற்றதை வடசொல்லென்றும், ஏனைவற்றுள் தமிழ் நடைபெற்றதைத் திசைச்சொல்லென்றும் சான்றோரால் நியமிக்கப்பட்டன என்று உரை எழுதினார். இனி அக்காலத்திலே தமிழ்நிலத்தைச் சூழ்ந்த பதினேழ் நிலத்தையும், ‘சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுகு குடம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த் தமிழ்சூழ் பதினேழ்புவி தாமிவையே’ என்னுஞ் செய்யுளாலறிக'’ என்று கூறினர்.  

இந்த பதினேழு நாடுகளின் அமைப்பும் நெருக்கமும் இவையென்று நம்மால் விளக்கமாக அறிய முடியவில்லை.  இக்காலத்திற் போர்த்துக்கேய நாடு, ஒல்லாந்த நாடு, ஆங்கிலேய நாடு, பிரெஞ்சு நாடு முதலிய நாடுகளுந் தமிழ் நாட்டுடனும் இலங்கையுடனுந் தொடர்பு கொண்டமை அறியப்படும். அந்நாடுகளுக்குள்ளே ஆங்கில நாட்டுக்குரிய ஆங்கிலம், இந்நாளில் உலகப் பொதுமொழியாக மதிக்கப்படுவதாலும், தமிழ் மொழியை வளப்படுத்தும் புத்தம்புதிய கலைகள் அம்மொழியினின்றும் பெயர்த்துக்கொணர வேண்டியிருத்தலினாலும், அம்மொழிச் சொற்கள் பலவாய்த் தமிழிலே புகுதற்கு வாய்ப்பு உண்டாகும். அதனை ஒரு காரணமாகக்கொண்டு புதிய கலைக்குரிய, சொற்களைத் தமிழிலே ஆக்கிக் கொள்ளாது விடுவதும், அக்கலைச் சொற்களைக் அப்படியே வழங்குவதும், தமிழ்மொழிக்குச் செய்யும் கேடாகும் என்பது இலக்கண முடிவாகும். ஆகவே, இன்றியமையாது வேண்டப்படும் சிற்சில இடங்களிலே மட்டும் ஆங்கிலம் முதலான வேறு மொழிச் சொற்களை ஓசையாலும் எழுத்தாலும் தமிழ்நடைப்படுத்தி வழங்கிவருதல் வேண்டும்.

வரம்பிட்டும் தடுக்க முயன்ற நிலையிலும் வடமொழிக் கொள்கைக்கு இலக்கணம் வரைவதற்காகவே கி.பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமத்திரர் வீரசோழியம் எழுதினார். கி.பி 17ஆம் நூற்றாண்டில் சாமிநாத தேசிகர் இலக்கணக் கொத்து எழுதியதோடு, உரையும் வரைந்தார். வடமொழி தமிழ்மொழி என்னும் இருமொழிகளுக்கும் இலக்கணம் ஒன்றே என இவர் கூறினார். இதே நூற்றாண்டில் பிரயோக விவேகம் என்னும் நூலைச் சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றி வடமொழிக்கு வாழ்வளித்தார். சோழர் காலத்தில் கல்வியென்றால் வடமொழிக் கல்வியே ஆகும். கல்லூரிகளில் வேதாந்தம் வியாகரணம், மீமாம்சம் போன்றவற்றைக் கற்பதுதான்.  தமிழ்க்கல்விக்கென ஒரு மானியம் தரப்பட்டதாக ஒரு கல்வெட்டும் இல்லை. கி.பி. 1640இல் நாயக்க மன்னராட்சியில் மதுரையில் மட்டும் பதினாயிரம் மாணவர் வட மொழிக் கல்வியைக் கற்றனர் என்ற குறிப்பும் உண்டு.

வடமொழியிலும், தமிழ்மொழியிலும் ஒரே வடிவமுடையனவாக வழங்கப்படும் சொற்கள், ஒலிவடிவில் ஒற்றுமைப்பட்டிருப்பினும், வெவ்வேறு பொருள்களைக் குறிக்கின்றன. நிகர்வடிவமுடைய வடமொழி தென் மொழிச் சொற்கள், முரணான பொருளில் வழங்குதலையும் பின்வரும் பட்டியலில் காணலாம்.

சமஸ்கிருதம் (வடசொல்) - தமிழ்
1. உத்தியோக - முயற்சி உத்தியோகம் - வேலை
2. உபந்யாச - நாவல், புதினம் உபந்நியாஸம் - அருள்நெறிச் சொற்பொழிவு
3. கல்யாண் - நல்ல, மங்கள கலியாணம் - திருமணம்
4. சரித்ர - ஒழுக்கம் சரித்திரம் - வரலாறு
5. சேஷ்ட்டா - முயற்சி, சேஷ்டை - கெட்ட நடவடிக்கை, குறும்பு 
6. பிரசங்கம் - முன்பின் சந்தர்ப்பம் பிரசங்கம் - சமயச் சொற்பொழிவு
7. பத்ர - மென்மையான பத்திரம் - சாக்கிரதை
8. ம்ருக - மான் மிருகம் - விலங்கு
9. விலாஸ் - சுகபோகமான விலாசம் - முகவரி
10. சங்கதி - தொடர்பு சங்கதி - செய்தி
11. சம்சார் - உலகம் சம்சாரம் - மனைவி
12. சமாதான் - ஐயங்களை விளக்குதல் சமாதானம் - ஒத்துப்போதல்
13. சாது - சந்நியாசி சாது - எளியவன், சரளமானவன்
14. அபராத் - குற்றம் அபராதம் - தண்டனை
15. ஆதர - மரியாதை ஆதரவு - துணை
16. பாச - பயிறு பாசம் - பற்று
17. பிரச்ன - கேள்வி பிரச்சினை - சிக்கலான செய்தி
18. ஆலய - இடம் ஆலயம் - கோயில்
19. காய - சரீரம் காயம் - புண்
20. நீர - தண்ணீர் நீர் - நீங்கள்
21. பத்ர - இலை, கடிதம் பத்திரம் - விலைச்சீட்டு
22. பிரமாத் - சோம்பேறித்தனம் பிரமாதம் - நன்றாக
23. யோஜனா - திட்டம் யோசனை - சிந்தனை
24. ரண - போர் ரணம் - காயம்
25. துவார் - வாயில் துவாரம் - சந்து
26. அன்னம் - சமைத்த சாதம் அன்னம் - அன்னப்பறவை
27. வயிராகி - பற்றற்றவன் வைராக்கியம் - மனஉறுதி
28. வைபவ - செழிப்பு வைபவம் - குடும்ப அலுவல்
29. சர - அம்பு சரம் - மாலை தொடுக்கும் நூல்
30. சாலா - கூடம் சாலை - பாதை
31. ஸ்ருங்கார் - இன்பச்சுவையுள்ள சிங்காரம் - அழகுபடுத்துதல்
32. சமய் - காலம் சமயம் - மதம்
33. சகாய - உதவி சகாயம் - மலிவான
34. சித்தி - ஆன்மிக வெற்றி சித்தி - தாயின் தங்கை
35. காதக் - கொல்பவன் காதகன் - பொறாமைக்காரன்
36. பசு - பிராணி பசு - பசுமாடு
37. மணி - இரத்தினம் மணி - காலம்
38. சமாச்சார் -உயர்ந்த ஒழுக்கம் சமாச்சாரம் - செய்தி
39. அகம் - ஆணவம் அகம் - உள்ளே (வீடு)
40. கேவல் - தனியே கேவலம் - இழிந்த 
41. புருஷ் - ஆண்மகன் புருஷன் - கணவன்
42. விகட் - மிகக் கடுமையான விகடம் - நகைச்சுவை
43. அவதி - எல்லை அவதி - துன்பம்
44. விஜய் - வெற்றி விஜயம் - வருகை
45. விஷய - ஐம்பொறிகளால் நுகரும் பொருள்கள் விஷயம் - செய்தி
46. ஆலோசனா - திறனாய்வு ஆலோசனை - யோசனைகேட்பது
47. ஆஸா - நம்பிக்கை ஆசை - விருப்பம்
48. நிர்வாணம் - முத்தி, வீடுபேறு நிர்வாணம் - ஆடையற்ற நிலை
49. நாம் - பெயர் நாமம் - திரிபுண்டரம் அணிதல்
50. காலத்தைக் கழிப்பது காலட்சேபம் - சமயச்சொற்பொழிவு
51. கரி - யானை கரி - அடுப்புக்கரி
52 முத்ரா - நாணயம் முத்திரை - சின்னம்
53. மாத்ரா - அளவு மாத்திரை - மருந்து, மாத்திரை
54. காயம் - ஆகாசம்
55. பூதி -  பூழ்தி விபூதி
56. புடவி - ப்ருத்வி
57. மதங்கம் - மிருதங்
58. பவளம் - பிரவாளம்
59. மெது - ம்ருது
60. ஸ்ரு - செவியுறு 

தமிழ் வடமொழி 
1. அப்பம் 2. அரவம் 3. ஆயிரம் 4. உரு, உருவம் 5. கலுழன் 6. காலம் 7. சாமை 8. சொல்வம் 9. திடம் 10. தீவு 11. பக்கம் 12. படிமை 13. பரம் 14. பாகம் 15. மண்டலம் 16. மந்திரம் 17. மயில் 18. முகம் 19. மாயை 20. முத்து, முத்தம்

 இவ்வாறு சொற்கள் சான்றுகளாகக் காட்டப்பட்டுள்ளன. உலகத் தொடர்பு பெருகும்போது, பல்வேறு மொழிச் சொற்கள் பல்கும்போது, தூய்மையும் தாய்மையும் அமைந்துவிடுகின்றன.  

தேமொழி

unread,
Jun 14, 2020, 2:50:41 AM6/14/20
to மின்தமிழ்
12. மொழிக்கலப்பும் - நன்னூல் காட்டும் நெறிப்பாடும்..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================

நன்னூல் பதவியலில், வடமொழியாக்கம் பற்றிய அயல் வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன.

இடையில் நான்கும், ஈற்றில் இரண்டும்,
அல்லா அச் ஐ வருக்கம் முதல், ஈறு;
யவ் ஆதி நான்மை, ளவ், ஆகும் ஐ-ஐம் 
பொது எழுத்து; ஒழிந்த நால்-ஏழும் திரியும். (19) 
அவற்றுள்,

ஏழாம் உயிர் இய்யும் இருவும்; ஐ வருக்கத்து 
இடையில் முன்றும், அவ்அம் முதலும்,
எட்டே யவ்வும்; முப்பது ச, யவும்; 
மேல் ஒன்று ச, டவும்; இரண்டு ச, தவும்; 
முன்றே அ, கவும்; ஐந்து இரு கவ்வும்; 
ஆ, ஈறு ஐயும், ஈ, ஈறு இகரமும். (20)
 
ரவ்விற்கு அம் முதல் ஆம் முக் குறிலும், 
லவ்விற்கு இம் முதல் இரண்டும், யவ்விற்கு 
இய்யும், மொழி முதல் ஆகி முன் வருமே. (21)
 
இணைந்து இயல்காலை ய, ர, லக்கு, இகரமும், 
மவ், வக்கு, உகரமும், நகரக்கு அகரமும், 
மிசை வரும்; ரவ் வழி உவ்வும் ஆம் பிற. (22)
 
ற, ன, ழ, எ, ஒவ்வும், உயிர்மெய்யும், உயிரளபு, 
அல்லாச் சார்பும், தமிழ், பிற பொதுவே. (23)

நன்னூலார் இந் நூற்பாக்களில், வடமொழியாக்கம்’ நிகழும் நெறி முறைகளைச் சுட்டினார். 

தமிழுக்கு இலக்கணம் வகுத்த நன்னூலார், வடமொழியாக்கத்திற்குத் தனித் தலைப்பு வகுத்துக் கொண்டு இலக்கணம் வரைவது சிந்திப்பதற்குரியது. தமிழ்க் கலைகளோடன்றி வடவர் வடமொழிக் கலப்பு மிக்கோங்கி வடவர் கலைகளை அறிந்துகொள்வதற்குத் துணையாகத் தவிர்க்க வியலாத நிலையில், தமிழ் வழக்கில் வடசொற்களை இடம்பெறச் செய்யும் முறைகளை நன்னூ லார் காட்டியுள்ளார். நன்னூல் கூறும் விதிகளின்படி, வடமொழிச் சொற்கள் தமிழில் கலக்கும்போது, தமிழில் மொழிக்கு முதலில் வாராத ரகரம் வடசொல்லில் வந்திருந்தால், அதன் முன் அ இ உ என்பன வற்றுள் ஏதேனும் ஓர் ஒலியினைச் சேர்க்க வேண்டும்.
 
சான்று ரங்கம் - அரங்கம் 

ராமன் - இராமன்

ரோமம் - உ ரோமம் 

மொழி முதலில் வாராத லகரம் வட சொல்லில் இருந்தால், அதன்முன் இ, உ என்பனவற்றுள் ஏதேனும் ஓர் ஒலியினைச் சேர்க்க வேண்டும்.

சான்று லேசு - இலேசு 

லோகம் - உலோகம்

வடசொல்லின் ஈகார இறுதி தமிழில் இகரமாக வேண்டும். ஆகார இறுதி ஐகாரமாக வேண்டும்.

சான்று கெளரீ - கெளரி ; சீதா - சீதை

வடசொல்லின் மொழி இடைச் சிறப்பு மெய், தமிழில் அவ்வவ் விடத்து முதல் மெய்யாக வேண்டும். ஜ என்பது ச ஆக வேண்டும் அல்லது யகரமாக வேண்டும்.

சான்று நிஜம் - நிசம் பங்கஜம் - பங்கயம்

வடசொல்லின் ஸ என்பது தமிழில் தகரமாக வேண்டும்.

சான்று மாஸம் - மாதம்

வடசொல்லின் ஷ என்பது தமிழில் டகரமாக வேண்டும்.

சான்று நஷ்டம் - நட்டம் வேஷம் - வேடம்

வடசொல்லின் முதலிலோ இடையிலோ வருகிற 'ஹ' என்பது தமிழில் மறைந்து விட வேண்டும்.

சான்று ஹரி - அரி: பிராஹ்மணர் - பிராமணர்

வடசொல்லின் க்ஷ என்பது தமிழில் க்ச அல்லது ட்ச ஆக வேண்டும்.

சான்று மீனாக்ஷி - மீனாட்சி பக்ஷம் - பக்கம்  பக்ஷி - பட்சி

தமிழில் மயங்கக்கூடாத இரண்டு மெய்கள் வடசொல்லில் மயங்கி வந்தால், அது தமிழாகும்போது ஓர் ஒற்றுடன் உகரம் அல்லது இகரம் சேர்க்க வேண்டும்.

சான்று பக்வம் - பக்குவம் பத்மம் - பதுமம்

ரத்னம் - இரத்தினம் சுக்லம் - சுக்கிலம்

அல்லது மயங்கக் கூடாத இரண்டு மெய்களும் ஓரினமாக்கப் படவேண்டும்.

சான்று சிம்ஹம் - சிம்மம் கன்யா - கன்னி

வடசொல் யகரத்துடன் தொடங்கினால், தமிழில் யகரத்தின் முன் இகரம் அல்லது உகரம் சேர்க்க வேண்டும்.

சான்று யமன் - இயமன் யுத்தம் - உயுத்தம்

அல்லது யகரம் எகரமாக வேண்டும். அல்லது யகரம் உகர மாக வேண்டும். 

சான்று யமன் - எமன் யுத்தம் - உத்தம் யுக்தி - உத்தி 

மேலே வடசொல்லுக்குக் கூறப்பட்ட விதிமுறைகள் பிறமொழிச் சொற்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும்.

சான்று ரயில் - இரயில் வில் - உயில் பெஞ்ச் - பெஞ்சு

ஜேசு - இயேசு பஃராங் - பரங்கி லண்டன் - இலண்டன் 

ஜனவரி - சனவரி

பிறமொழிக் கலப்பைப் பற்றிச் சிந்தித்து, நன்னூலார் அளித்த கருத்துகளை இலக்கண முறையாக ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றைய நிலையில் தமிழ்ப்புலவர் சிலர் யாப்பியலும் புத்தி லக்கண வரைவியலும் செய்துள்ளனர் அவ்வகையில் தமிழ் என்ற இலக்கண நூல் யாத்த திருவாரூர்ப் புலவர் சரவணத் தமிழன், அயல் மொழிப் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுதுவதற்கான விதிகளை வரையறுத்துள்ளார்.

‘எழுத்தைக் குறிப்பினும் அயன்மொழிப் பெயர்ச்சொல் வழுத் தும் பொழுதில் வாய்ப்பு நோக்கியும் கூறிய மூவகை மாறியும் வருமே.” என்னும் நூற்பாவின் வழிப் பிறமொழிப் பெயர்களை எடுத்துக் கூறும் போதில், மூவிட விதி சற்றே மாறுபட வரலாம் என்பது கருத்து. சான்று கால்டுவெல், கேப்டன், பெர்னாட்சா, அலெக்சாண்டர், குப்தர், அப்துல், அப்துல் வகாப்பு, இட்லர், போப்பு).

தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்திருப்பதைத் தற்சமம், தற்பவம், திரிபு என்று குறிப்பதுண்டு. யாதொரு மாறுபாடும் இன்றித் தமிழில் வழங்குவது தற்சமமாகும். நதி, ஜலம், பருவதம், தேசம் முத லியன சான்றுகளாகும். வடமொழிச் சொற்கள் நேர்வடிவில் அமை யாமல், பிராகிருதச் சொற்களாயிருந்து தமிழில் இடம் பெறுவதைத் தற்பவம் என்பர். தற்பவம் என்பது பின்வருமாறு அமையும்:

வடமொழி பிராகிருதம் தமிழ்

ஸ்திரி இத்தி த்தி (மறத்தி) 

ராகு ராணி 

ஆகு ஆனா ஆணை 

முக்தா முத்தா முத்து 

ஆர்ய அஜ்ஜ அய்யன் 

ப்ரவாலி பவள பவளம் 

வணிஜ வாணிய வாணியன் 

கிருஷ்ண கண்ண கண்ணன் 

சிரேஷ்டி செய்டி சேடசெட்டி 

திரிபு இரு வகைப்படும்.

1. திரிவு விதிகளின்படி மாறுபட்டுத் தமிழில் வழங்கும் வட மொழிச் சொற்களாக உலகம், அரசன், அட்டமி, முத்தி, பக்கம், புரிதல், இராமன், அரங்கம், இலக்கணம், இலக்கியம், பகுதி முத லியவற்றைக் குறிக்கலாம்.

2. எவ்விதிக்கும் இசையாது உருக்குலைந்தவை என்ற நிலையில் அவிட்டம், திருவோணம், கேட்டை, ஆயில்யம், வைகாசி, மார்கழி, பங்குனி முதலியன என்பர்.

தமிழுள் வழங்கும் வடசொற்களுள் பல உபசருக்கங்கள் ஒட்டி வருவனவாகக் காணப்படுகின்றன. மதிநுட்பம் என்னும் குறளுரையில், 'அதி என்பது ஓர் இடைச்சொல் என்று பரிமேலழகர் குறிப்பிட்டார். இவ்வாறு இடைச்சொற்கள் இருப்பதாகக் கொள்வாருண்டு. சான்றாகச் சிலவற்றைக் காணலாம்.

பிர - பிரதானம், மிகுதி, எதிர்
பரா - பின், எதிர், அதிகம், முரிதல்
அப - எதிர், அப்பால், பிரிவு, தள்ளல்
சம் - சுகம், நன்மை, அழகு
அது - பின், கூட, வரிசை, ஒப்பு
நிர் - நிச்சயம், விலக்கு, வெளியாதல்
துர் - நிந்தை, துக்கம், விலக்கு
வி - விலக்கு, பிரிவு, விசேட நிச்சயம், அற்பம்
ஆ - அற்பம், எதிர், எல்லை, நிறைவு
நி - அதிகம், சமீபம், நிச்சயம், எதிர்
அபி - ஐயம், நிந்தை, பின்
அதி - அதிகம், கடத்தல், அதிசயம்
சு - மேன்மை, அதிகம், அதிசயம்
உத் - மேல், அதிகம், விகற்பம்
பிரதி - எதிர், விலக்கு, அளவு

இவ்வாறு நன்னூல், மொழிக்கலப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முறையை வரையறுத்துக் கூறுகிறது. இவ்வரையறை இருந்தும் சொற்களின் பொருள் முழுமையும் அறியாது தமிழில் அச்சொற்களே திரிபடைந்தன.

சான்றாக, 'நீர் என்ற இனிய தனித் தமிழ்ச்சொல்லை  நீர, நீரம், நீரஜா என்ற வடமொழிப் புணர்ப்பாக்கி மாற்றியதோடன்றி பிற்கால நூலாசிரியர் தமது நூல்களில் மேற்கோளாக நீர் என்ற சொல்லைச் சமக்கிருதமாகச் சுட்டியதையும் முந்தைய கட்டுரையில் கண்டோம். நீர், மீன் சொற்களை வடசொற்களாக நினைப்பதற்குத் துளியும் இடமில்லை. நீர் என்பது மென்மை, தண்மை, இயல்பு, நேர்மை என்றெல்லாம் பொருள்படுமாறு இலக்கியங்கள் காட்டியதை மொழிஞாயிறு பாவாணர் எடுத்துச் சொல்லிப் பெருமிதம் ஊட்டினார்.

மணிப்பிரவாளம் 

பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடை என வழங்கப்பட்ட புதிய நடைப்போக்குத் தமிழகத்தில் தோன்றியது. மாலையில் மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுக்கப்பட்டதைப் போன்று, தமிழ்த் தொடர்களையும் வடமொழித் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கே இலக்கிய மணிப்பிரவாள நடையாகும்.

மணிமிடை பவளம் என்ற அகநானூற்றுத் தொடரைப் பின்னாளில் கலப்பு வடிவுக்கும் பெயராகக் காட்டினர். மாணவர்களுக்கு இனிமையாக இவ்விதிமுறையை ஊட்ட வேண்டும் என்று பேராசிரியர் தெய்வசுந்தரம் வலியுறுத்துவார். மெல்ல மெல்லப் பழக்கத்தில் இந்த விதிமுறை இலக்கியப் பயிற்சியால் பதிய வேண்டும். 

தேமொழி

unread,
Jul 1, 2020, 6:39:47 PM7/1/20
to மின்தமிழ்
13. மணியும் பவளமும் விரவிய மாய மாலை..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================


உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார்.

1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது.

2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண வேறு பாட்டால் காட்சிக்கின்பம் பயத்தல் போல, வடமொழியும் தென்மொழியும் கலந்த இந்நடை செவிக்கின்பம் பயத்தலால், இப்பெயர் பெற்றது. 
(இது செவிக்கு இன்பமா?)

3. நவமணியும் பவளமும் கலந்து சேர்க்கப்பட்ட மாலைபோலச் செந்தமிழும் வடமொழியும் கலந்து இயன்றதால், இப்பெயர் வந்தது.

வடமொழியும் தமிழும் கலந்து மணிப்பிரவாளம் என்னும் இந்நடைப்போக்கை நடை என்று வீரசோழியம் கூறியது. இந்நடை சமய சாத்திரங்களிலும், விளக்க உரைகளிலும் மிகுதியாகப் பயின்று வந்தது. வடசொற்கள் எல்லை கடந்து இவற்றில் வழங்கப்பட்டன.

வடமொழியிலக்கணமும், தமிழிலக்கணமும் ஒன்றே என்னும் கொள்கை உருவாகும் அளவிற்கு இந்நடை தமிழ்மொழியில் பெரு வரவாயிற்று. வடமொழிக் கலப்பைத் தடுக்க வடமொழி கற்ற தமிழர் தாய்மொழியில் மேற்கொண்ட வீண் முயற்சியின் விளைவே மணிப்பிரவாள நடை என்றும், கிரந்த எழுத்துகளும் இம்முயற்சியின் விளைவாகத் தோன்றியவை என்றும், ஸ்ரீபுராணம் முதலிய நூல்களின் அளவிலும், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் முதலிய சில ஊர்ப் பெயர்களை மாற்றும் அளவிலுமே அந்த முயற்சிகள் நின்று தோற்றன என்றும் அறிஞர் மு.வ. கருதினார்.

சமண சமய நூலான ஸ்ரீபுராணத்தில் பயின்று வரும் நடைக்குச் சான்று: ஒருநாள் மஹா மேருபர்வத நந்தன வனத்துப் பூர்வதிக்ஜின பவனத்தை அடைந்து, ப்ரதக்கூடிணிகரண ப்ரணாமஸ்தவநாப்யர்ச்சனம் பண்ணியபின், அங்கே, ஸ்ந்நிஹிதராகிய விபுலமதிசாரண தபோத னரை நமஸ்கதிர்த்துத் தர்மஸ்ரவணா நந்தரம் ஏன் ஸ்வாமி, புத்திரியாகிய கந்தர்வ தத்தை, யாவர்க்கு யோக்யை, என்று யான் வினவ, அவரும் அவதி ஞனத்தாற் பார்த்து அருளிச் செய்வார் ‘‘ஜம்பூத்விப பரத கூடித்ர ஹேமாங்கத விஷய ராஜ மஹாராஜபுத்ரனுக்கு வீணாஸ் வயம்வத்தால் தேவியாகும்'' என்று அருளிச் செய்தனர்.

‘ராஜ மஹா புரத்து வருஷபதத்த ஸ்ரேஷ்டிக்கும் பத்மாவதிக்கும் புத்திரன், ஜினதத்தனென்பான். அவனால் நமது அபிப்பிரேத கார்யம் ஸித்திக்கும். அஃது எவ்வண்ணமென்னின், ராஜ மஹாபு ஸ்மீபமாகிய ப்ரீதவர்த்தநமென்னும் உத்யானத்து ஸாகசேன கேவலிகளுக்குக் கேவல பூஜார்த்தமாக நின் பிதாவினோடுங் கூடச் சென்று கேவல பூஜை பண்ணியபின், தர்ம வாத்ஸல்யத்தால் வருஷபதத்த ஜினதத்தர்களோடு பாந்தவமுண்டாயிற்று. அதன்பின் வ்ருஷபதத்தன் புத்ரனுக்கு ஸ்ரேஷ்டிப் பதங்கொடுத்து குணபால முனி சமீபத்தே தீக்ஷத்தனள். ஸ்ரேஷ்டிபத ப்ராப்தனாகிய ஜினதத்தனும் வாணிஜ் யார்த்தமாக ஜலயாத்திரையால் இங்கே வருவன். 
‘இது தமிழா?' என்று அனைவரும் வினவத் தோன்றும் ஆம் ‘இதுதான் தமிழ்' என்று எழுத முயன்றனர் அந்நாளைய ஸ்ரீபுராணச் சமணர்கள்.

பெரிய வாச்சான் பிள்ளை என்ற வைணவப் பெரியார், நாலாயிரப்பிரபந்தப் பாடல்களனைத்திற்கும் பேருரை எழுதினார். அதற்கு ‘ஈடு’ எனப் பெயர் தரப்பட்டுள்ளது. அந்த ஈடு மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டதாகும். ‘சார்வ பெளமராய்ப் போந்த இராஜாக்கள் அந்த ராஜ்யஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆனார்கள். ஆன பின்பு, ஸ்ரீவத்ய யஷ நித்யஸ்ரீ ஸ்ரீவத்சத்தை மார் பிலேயுடையவன் நித்யமான ஸ்ரீயையுடையவன். இப்பாசுரத்திற்கு ஏகமூர்த்தி என்பது பரத்துவத்தைச் சொல்லுகிறதென்றும், இருமூர்த்தி என்பது வியூகத்தைச் சொல்லுகிறது என்றும் அதாவது வாசுதேவ ஸங்கர்ஷணரைச் சொல்லுகிறது என்றும், மூன்று மூர்த்தி என்பது யூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறதென்றும், பல மூர்த்தி என்பது, அவதாரத்தைச் சொல்லுகிறதென்றும், ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அறிவாகி நாகம் ஏறி, நடுக்கடலுள் துயின்ற நாராயணனே என்பது இன்னார் சிருஷ்டிக்கக் கடவர்; இன்னார் பாது காத்தலுக்குக் கடவர் என்கிறபடியாலே, சொல்லுகிறதென்று நிர்வகிப் பாரும் உளர். இவை, திருவாய்மொழி ஈட்டின் பகுதிகளாகும். ஈட்டின் தமிழாக்கத்தை சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் புருஷோத்தமன் நாயுடு அவர்கள் வெளியிட்டது பெருமைக்குரியது.

‘தமிழ்மொழிக்கே உரிய சமயமெனப்படும் சைவத்திலும், காமிகம் முதலிய சைவ ஆகமங்களுள் ஞான பாதத்தினுளதாகிய ஆசங்கை நீக்கி, அவற்றில் பொருளுண்மை, பொதுவியல்பு, சிறப்பியல்பு என்று இருவேறு வகைப்படுத்திக் காட்டிப் போதித்ததற்கு, இரெளர ஆகமத்தின் எழுந்த சிவஞானபோத நூலினைத் தமிழுலகம் உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து, பொழிப்புரைப்பான் எடுத்துக் கொண்ட ஆசிரியர் சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிது மனுகாமை புரிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு சிறிது மணுகாமை அறிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு நீக்குவதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்து வதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்.’

இது, சிவஞானபோதம் என்னும் சைவ சாத்திர நூலுக்கு எழுதப்பட்டுள்ள சிற்றுரையில், மங்கல வாழ்த்துப் பாடலுக்குரியதாகும். சிவஞான போதமே வடமொழியிலிருந்து வந்த மொழிபெயர்ப்பு என்று குறித்த இக்கொள்கையைச் சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவர்கள் நூற்று இருபது காரணங்களைக் காட்டிச் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பன்று தமிழ்நூலே என நிறுவியதைத் தமிழுலகம் நன்கறியும்.

தமிழகத்துக்கேயன்றி, பாரதப் பெருநிலத்திற்கும் புறச்சமயங்களாகிவிட்ட கிறித்தவ, இசுலாமிய சமயங்களின் வரவாலும் தமிழில் பிறமொழிச் சொற்கள் புகலாயின. கிறித்தவ வேத நூலாகிய விவிலியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

அதிலிருந்து நரஜீவன்களையெல்லாம் பட்டக் கருக்கினால் வெட்டிச் சங்காரம் பண்ணினார்கள். சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை. ஆதி ஆதீ சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

யுத்தம் பண்ண இஸ்ரேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவருக்கு ஹிருதயம் கடினமானதும், இப்படியே அவர்களின் பேரில், இரக்கம் உண்டாகாமல் கர்த்தர் மொலேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை அழித்து ஸங்காரம் பண்ணி னதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. - யோசுவா: 1.1 இவ்வாறு பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கக் காணலாம். இப்போது எளிய இனிய தமிழில் எழுதிய நூல்கள் வந்துள்ளன.

ஆட்சித்துறையில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் செழிப்பாக விளங்கித் தமிழை ஆட்சிமொழியாகப் போற்றி வந்ததாலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பத்திமைப் பாடல்களைத் தமிழில் வெள்ளமெனப் பாடி உணர்வூட்டியதாலும், சமய ஆர்வம் மிகுந்த நிலையிலும் முழுவதும் வட சொற்களையே நாடாவண்ணம் தமிழிலேயே வேண்டுவனவற்றை வழங்கியதாலும் மணிப்பிரவாள முயற்சி பின்னர்த் தோற்றுத் தொலைந்தது.


மொழிக்கலப்பு எதிர்ப்பு மறுப்பும் தூய்மை விருப்பும்
பிறமொழிச் சொற்கள் தம் மொழியில் புகுவதை ஒவ்வொரு மொழியின் அறிஞர்களும் ஒவ்வொரு காலத்திலும் தமது எதிர்க் கருத்தைக் கூறி இக்கடிந்து வருகின்றனர். தமிழில் வடசொற்கலப்பும் இவ்வாறே தொடர்ந்து எதிர்க்கப்பட்டது. தேவையும் பயனும் கருதிச் சில சொற்களைக் கடன் பெறும்போது எதிர்ப்புணர்ச்சி எழுவதில்லை. அழகுக்காகவும் தாம் ஒன்றை அறிந்தவர் என்று தம்மைத்தனிக் குழுவினராக வேறுபடுத்திக் காட்டும் அகந்தைக்காகவும் பிறமொழிச் சொற்களை இணைக்கும்போது எதிர்ப்பு எழுகிறது. ஒரு மொழியை நன்கு கற்றுப் புலமை பெற்றவர்களும், இன்றியமையாமை உணராமல், தாம் அறிந்த பிறமொழிச் சொற்களைக் கண்டவிடமெல்லாம் புகுத்த முயல்வாராயின், அம்முயற்சியும் விரும்பத்தக்கதில்லை. பிறமொழி கற்றவர்கள், தாம் கற்ற மொழி உயர்ந்தது என்ற மனப்பான்மை கொண்டு, இல்லை என்று இரப்பவனுக்குப் பெருமிதத்துடன் ஈபவன் கொடை வழங்குதல் போலச் சொற்கள் பலவற்றை ஒரு மொழியில் புகுத்தத் தொடங்கினும், அம்முயற்சி எதிர்க்கப்படும் புதிய அறிவுத் துறைகளைப் பயிலும்போது, தாமே புதுவதாக அறியத் தொடங்குவதால், தமக்கே முழுமையாக விளங்காத நிலையில் தாம் கேட்டறிந்த சொற்களை மொழிபெயர்க்க முடியாமல் கணக்குக் குறியீடுகளைப்போல அவ்வச் சொற்களை எழுதுவதுமுண்டு. மொழி பெயர்க்கத் தெரியாமையோடு, தவறாக மொழிபெயர்த்ததால் நேரும் சிக்கலைத் தவிர்க்கவும், ஒருகால் மொழிபெயர்த்தாலும் அத்தமிழ்ச் சொற்கள் வேறு பொருளைக் குறிப்பதாலும் என்றெல்லாம் பல சூழல்கள் நிலவின; சிலநிலைகளில் இன்று நிலவுகின்றன. இதுவும் எதிர்கொள்ள வேண்டியதாகும். இத்தனை எதிர்ப்பும் இன்றிச் சில சொற்கள் ஒரு மொழியில் புகுந்தபின், அந்த மொழிக்கே உரிமையான செஞ்சொற்களும் கடன் வாங்கப்பட்டவையே என்று யாரேனும் எடுத்தியம்பி, வருமொழியைப் பல காட்டி நிலைமொழியான தமிழைத் தாழ்வுபடுத்த முனையினும் எதிர்க்கப்படும்.

தொன்றுதொட்டே வடமொழிச் சொற்களைத் தங்குதடையின்றி ஏற்றுக் கொள்ளாமல் தமிழ் மரபு மறுதலித்து வந்துள்ளது. வட மொழியிலிருந்தே தமிழ் கடன் வாங்கியது என்றும், தமிழிடமிருந்து வடமொழி எதையும் பெற்றதில்லை என்றும், அதனால் தமிழைவிட வடமொழி உயர்வுடையது என்றும் உண்மைக்குப் புறம்பாகக் கூறி வந்ததால், வடசொற்கள் தமிழர் நெஞ்சில் ஒரு முள்ளாகவே இருந்தது. நடுவு நிலைமையின்றி. ‘வடமொழியை உயர்ந்தது’ எனப் பரப்பிய கருத்துகள் தமிழ் வடமொழிப் பகைமைக்கு வித்தூன்றின. இதன் விளைவாக எழுந்த மொழிக்கிளர்ச்சி மொழியைக் காக்கும் எல்லையோடு நிற்காமல் தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்கும் பெருமிதமான வழி அமைத்தது.

எழுதவே விரல் நடுங்கிய மேற்கோள்களைப் படிக்க நான் திணறியபோது, உடனிருந்து உதவிய பெரும்புலவர் அமுதலிங்கம் எனக்குத் துணை நின்றதை நான் நினைவுகூராத நாளில்லை.

தேமொழி

unread,
Jul 1, 2020, 6:45:09 PM7/1/20
to மின்தமிழ்
அருந்தமிழும் அன்றாட வழக்கும்
என்ற தலைப்பில் 
முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு
அவர்கள் எழுதும் கட்டுரை 
மின்தமிழ் ›  அருந்தமிழும் அன்றாட வழக்கும்
என்ற இந்த இழையில் 
கட்டுரை எண் 9 இல்  இருந்துதான் துவங்குகிறது. 
அப்பொழுதுதான் நான் இக்கட்டுரைகள் குறித்து அறிந்து படிக்கவும் பகிரவும்  துவங்கினேன் 

இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகளைக்  குறித்து அறியும் ஆர்வம் ஏற்பட்டதில், 
கோரிக்கையை ஏற்று முனைவர் அருள்  ஐயா அவர்கள் மின்தமிழுக்கு அனுப்பி வைத்தார்கள்
 இழையில் இணைப்பாக உள்ளது. 

இந்த இழையைத் தொடர்வோருக்காக அதன்  சுட்டியும்  இணைத்துள்ளேன் 
இணைப்பிலும் கட்டுரைகளைக் காணலாம். (அருந்தமிழ் அன்றாட வழக்கு (1-8).docx)
நன்றி 
Arunthamizh Andrada vazhakku - Dr Arul Articles 1-8 attachment.docx

தேமொழி

unread,
Jul 1, 2020, 6:56:33 PM7/1/20
to மின்தமிழ்
14. தனித்தமிழியக்கம்..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மொழித் தூய்மையை நிலைநிறுத்தும் தனித்தமிழியக்கம் தோன்றியது. அவ்வியக்கம் மனோன்மணீயம், சீவகன், புருடோத்தமன், குடிலன், சகடன் என்ற பெயர்கள் வடமொழிப் பெயரின என்றாலும் வடமொழியினும் தமிழே உயர்ந்தது, சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதே என்றும், கனம் சடை என்று உருவேற்றிக் கதறுவரோ என்றும் வடமொழி எதிர்ப்பு வளர்ச் சியை வேரூன்றச் செய்த முதன்மைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையைச் சாரும். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலியோருடைய ஊக்கமும் இந்நல்லுணர்வுக்கு ஆக்கம் தந்தன.

பிறமொழிச் சொற்களுக்கு அதிலும் குறிப்பாக வடமொழிச் சொற்களுக்கு எதிரான இயக்கமாகும். பரவலாக ஆட்சியிலுள்ள, தேவையான பிறமொழிச் சொற்களைக்கூட விலக்க வேண்டுமென அவ்வியக்கத்தினர் கூறுவதைப் பலர் ஒப்புக் கொள்ளத் தயங்கலாம். ஆனால், பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத, தேவையற்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர் என கருதினார் தெ.பொ.மீ. இந்த இயக்கம் பெரும் பாலும் தமிழில் மலிந்த வடசொற்களைக் களையும் நோக்கத்தில் தான் தோன்றியது.

புலவர்கள், கற்றறிந்தோர், அரசு கல்வி நிலையங்கள் ஆகிய நிலைகளில் தனித்தமிழ் உணர்வு பரவுதற்கு இவ்வியக்கம் வழி வகுத்தாலும், அன்றாட வாழ்வில் வளர்ந்த நாகரிகக் கூறுகளால், புதிய துறைகளால், வாணிகம், அறிவியல் வளர்ச்சியால், கல்விப் புதுமைகளால், வடமொழியையும் விஞ்சி ஆங்கிலச் சொற்கள் பரவலாக நுழையத் தொடங்கியதால், இவ்வியக்கம் வடமொழியைப் போல ஆங்கிலச் சொற்களையும்களையும் பெருஞ்சுமையை ஏற்க வேண்டியுள்ளது.

தனித்தமிழியக்கம் தோன்றிய வரலாறு சுவையுடையது. பரிதிமாற் கலைஞரே தனித்தமிழியக்கத்தின் வழிகாட்டி என்றுரைப்பின் பொருந்தும். தம் இயற்பெயராகிய சூரிய நாராயண சாஸ்திரியார் எனும் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். தனிப்பாசுரத்தொகை எனும் நூலின் உண்மைப் பதிப்பு எத்தகையது என்பதை உணர விரும்பித்தான் பரிதிமாற் கலைஞர் எனும் புனைபெயரை அமைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு பெயர் மாற்றம் தொடங்கியதாகப் பின்னர்ப் பலர் தங்கள் பெயரை மாற்றிக் கொள்வதற்கும் வழிகாட்டியாக அமைந்தது.

அளவிறந்த வடமொழிக் கலப்பினை அவர் வெறுத்து ஒதுக் கினார் என்பது உண்மை. அதே நிலையில் அவரது நூலின் தலைப்பு கள், நூலில் அவர் கையாண்ட பெயர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருந்தன.

மனோன்மணியம் பற்றியும் முன்னர் இக்கருத்தைக் காட்டியுள் ளோம். தனித்தமிழ் உணர்ச்சி அவரிடம் அமைத்திருந்தது என்றாலும், நெடுங்காலமாக நிலைத்த வடமொழியின் பிடிப்பிலிருந்து அவரா லும் விடுபட முடியவில்லை என்றே யுரைக்கலாம். மறைமலையடி களார் மட்டுமே பின்னர்த் தனித்தமிழியக்கத்தைக் தோற்றுவித்து, அதனை ஒரு பேரியக்கமாகத் தாமே தலைமையேற்று நடத்தினார். அவர் அவ்வாறு செயற்படத் தூண்டுகோலாயமைந்தது பரிதிமாற் கலைஞரின் தனித்தமிழ் ஆர்வம் என்பதும் நினைக்கத்தக்கது.

'இந்தச் சூரிய நாராயணருக்கு மட்டும் ஏன் இவ்வளவு தமிழ்ப் பற்று. அதிலும் தனித்தமிழ்ப் பற்று. நான் தனித்தமிழ் இயக்கம் காண்பதற்கு முன்பே அவர் தனித்தமிழ் உணர்ச்சி கொண்டு, தம் வடமொழிப் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டாரே'

என்று பரிதிமாற் கலைஞரைப் பற்றித் தம் வாழ்நாள் முழுவதும் மறைமலை அடிகள் பாராட்டிக் கொண்டிருந்தார் என்னும் கருத்து இதனை உறுதி செய்கிறது.

தனித்தமிழ் காக்கவும், வடமொழி நீக்கவும் தமிழகத்தில் தோன்றிய மூன்று வெவ்வேறு அமைவுகள் காரணங்களாயின.

1. சமயஞ்சார்ந்த தமிழுணர்ச்சி: இதற்குத் தலைமையேற்றவர் மறைமலை அடிகள்.
2. சமுதாய அடிப்படையில் உருவான மொழியுணர்ச்சி; தந்தை பெரியார் தலைமையேற்கத் தமிழர் திரண்டெழுந்த காலம்.
3. தேசிய எழுச்சி அடிப்படையில் பிறந்த மொழியுணர்ச்சி: இதில் பாரதியார், வ.உ. சிதம்பரனார், திரு.வி. கலியாணசுந்தரனார் போன்றோர் ஈடுபட்டனர். இம்மூன்று உணர்ச்சிகளும் ஒன்று பட்டு நிகழ்த்திய பெரும்போரில், தமிழ் வடமொழிக் கலப்பி லிருந்து காக்கப்பட்டது எனில், மிகையன்று. தமிழ் மொழியை இழந்தால் தமிழர் கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றையும் இழந்து, வடமொழக்குத் தமிழர் அடிமையாவர் என்னும் கருத்து வலிமை பெற்றது. இது பற்றி மறைமலை அடிகளார் வரலாற்று நோக்கில் கண்டு எழுதினார்.

தமிழையும், தமிழரின் கலைகளையும் கலாச்சாரத்தையும் சீர்குலைப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள். இந்த சூழ்ச்சி சென்ற 500 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மக்களை எழுச்சி கொள்ளச் செய்தார் அடிகளார், தமிழ்த் தென்றல் திருவிகவும்.
நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு. நாம் கண்டது தமிழ் கேட்டது தமிழ் உண்டது தமிழ் உயிர்த்தது தமிழ், உற்றது தமிழ் அத்தமிழ் அமிழ்தங் கொண்ட நாடு இந்நாடு. இதுபோது தமிழின்பம் நுகர்கிறோமா? இல்லையே! காரணமென்ன? உரிமையிழந்தோம்; தமிழை மறந்தோம்; மீண்டும் உரிமையுணர்வு பெற யாண்டுப் போதல் வேண்டும். தமிழ்த்தாயிடம் செல்வோமாக! அவள்சேவையால் உரிமையுணர்வு பெறலாம்.
தமிழ் மக்களே சேவைக்கு எழுங்கள் எழுங்கள் என எழுச்சி உரையாற்றி, மொழித்தூய்மை காக்க தேசிய உணர்வுடன் முற்பட்டார்.

இத்தகு எழுச்சியால் தமிழ் வடமொழியின் நுழைவுப் பிடியி லிருந்து பெருமளவு நிலைபெற்றது. தந்தை பெரியார் இப்போக்கினை அரசியல் இயக்கமாக்கியதால், தமிழ் மக்கள் அனைவர் நெஞ்சங்களிலும் தமிழ் எழுச்சி பேரெழுச்சியாய் மலர்ந்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழியக்கத்தின் வரிகள் ஒவ்வொன்றும் வைர வரிகளாயின. தமிழ்த்தென்றல், நவசக்தி, தேசபக்தன் என்று வெளியிட்டபோது, குடியரசு, விடுதலை அழகியத் தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்திய தன்மான இயக்க ஏடுகள், பெரியார் பாசறையிலிருந்து வெளிவந்த படைக்கலன்களாகும்.

எனினும், பம்பாயில் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்மொழிக் கவியரங்கில், புரட்சிக் கவிஞர் வழங்கிய ஒரு கவிதை யில் இந்தியப் பெருநாட்டை - ஒருமைப்பாட்டைக் கருதினாலும், ஓரினத்து மொழியைப் பல இனத்தும் பரப்பும் முயற்சியைக் கடிந்து கூறினார். ஓரினத்துக்குள்ள மொழியைப் பலவினத்துள்ளும் பரப்ப முயல்வதால், நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற கோட்பாடு சரியென்று கொள்வதற்கில்லை. அவ்வவ்வினத்தின் அவ்வம் மொழிகளைச் செம்மை செய்து, செழுமையாக்கி இனத்து மக்கள் எவர்க்கும் பரப் பும் ஒன்றினால் மட்டுமே ஒற்றுமை ஏற்படும் என்பது நோக்கமாகும். இப்படி இருவேறு கருத்துகள் இருந்தே வந்தன.

மொழிக்கலப்பால் சொற்கள் வழக்கிழத்தல்
பிறமொழிக்கலப்பு நேர்ந்ததாலும், கலந்த சொற்கள் நிலைத்த வழக்கிலிருப்பதாலும் தொன் மொழியின் சொற்கள் காலப்போக்கில் வழக்கிலிலிருந்தே மறைந்துவிடும். தூய தமிழைக் குழந்தைகளுக்கும் வலியுறுத்தும் நிலையைப் பாவேந்தர் பாடலில் காணலாம்.

காட்சி என்றெழுது தம்பி - சிலர்
காமாஷி என்பார் அது தப்பாம்!
காட்சி எனும் பெயர்தம்பி - கேள்
காணும் எனும் சொல்லின் விளைவாம்

அடிக்கடி உத்யோகம் என்பர் அதை
அலுவல் என்றுரைத்திடு தம்பி
படிப்பது வாசித்தல் இரண்டனில் - உன்
பழந்தமிழ் முன்னது தம்பி!

மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்று பெயர்கள் இவ்வடிவம் பெற்றன.

தேமொழி

unread,
Jul 5, 2020, 1:37:05 AM7/5/20
to மின்தமிழ்

15. செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================

கலப்பினால் தமிழில் வழக்கிழந்த சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். சான்றாக, அகநாழிகை அல்லது உண் ணாழிகை கர்ப்பக்கிருகம் நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (மாலைக்கடை) அடுத்துண் (தீவனத்திற்கு விட்ட நிலம்) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்று) மதில் (அணல் தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (ஆயத்தம்) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை) இதழ்குவி பா (ஒட்டியம்) இதழகல் பா (நிரோட்டகம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்) இயம் (வாத் தியம்) இயவன் (வாத்தியகாரன்) இளிந்த நாக்கடித்தல் (ஆராயாது வாக்களித்தல்) உகப்பு உறாவரை அல்லது முற்றுட்டு (சர்வமானியம்) அறம் (தருமம்) ஆடிடம் (விளையாடுமிடம்) ஆரோசை (ஆரோ கணம்) அமரோசை (அவரோகணம்) ஆளுங்கணம் (ஆளொட்டி அல்லது ஆளொதுங்கி) காவற்கூடு (ஆளோடி குளத்தின் மதிலுள் புறமாக மக்கள் நடப்பதற்குக் காட்டிய வழி) ஒம்படுத்தல் அல்லது ஒம்படை (மக்களைக் காத்தல்) ஊட்டகர், ஊட்டுநர் (போஷகர்) ஊட்டுப்புரை (அன்னசத்திரம்) ஊமையாமொழி (அஜபா மந்திரம்) ஐயம் அல்லது இரப்பு (பிச்சை) ஐயம் அல்லது அயிர்ப்பு (சந்தேகம்) ஒப்புரவு (உபகாரம்) தெரிப்பு (தெரிந்தெடுக்கை) வலிவு மெலிவு ஒகநன் (கடலாளி) ஓமாலிகை (நறுமணச் சரக்கு) ஒலக்கம் (அரசு வீற்றிருக்கை) கண்ணெச்சில் (கண் திருஷ்டி) கரிசு (பாவம்) குடவோலை (குடும்பு) கூலம் (தானியம்) கூற்றம் (தாலுகா) கூற்றுவன் (எமன்) கையடை (பாதுகாக்கும்படி ஒப்புவித்த பொருள்) நீர்ச்சீலை (பீனம், கோவணம்) கதியெழுகை (தேசாந்திரம்) பண்டுவம், பரிகாரம் (சிகிச்சை) பலகணி (சன்னல்) பாடுகிடத்தல் (வரங்கிடத்தல்) பிறங்கடை (வாரிசு) புரவுவரி (வருவாய்) புலம்பன் (ஆன்மா) பொதுநாயகம் பொருநன் (போர்வீரன்) மதங்கம் (மிருதங்கம்) மதவலி (பயில்வான்) கையறம் (சரமகவி) கலக்கரணை (செளகரியம்) சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு) சால்வு (திருப்தி) தக்கை முறுக்கி (ஸ்குரூ) தவப்பழி (உண்ணாவிரதம்) தார்ச்சீலை (இலங்கோடு) திணைக்களம் (துறை) மெய்ப்பாடு (பாவம்) வலவன் (சாரதி) வழக்காரம் (பிராது வழுவாய்) மருப்பு (தந்தம்) மறம் (வீரம்) மழவன் அல்லது மறவன் (வீரன்) மன்பதை (சமுதாயம்) மீகாமன், மீகான் (மாலுமி) வாய் வாளாமை (மெளனம்) விறல் (சத்துவம்) விசி (பலகை)

மேற்காட்டிய பொதுச்சொற்கள் போன்றே, சாத்தன், கொற்றன், ஆதன், பூதன், கீரன், பேகன், பாரி, காரி, நள்ளி, குமணன், வெளியன், தித்தன், நம்பி, கம்பன், கூத்தன், கண்ணன், முருகன், புகழேந்தி, அடி யார்க்கு நல்லான், நச்சினார்க்கினியன், பரிமேலழகன், தோலாவழக்கன் முதலிய எண்ணிறந்த மக்கட் பெயர்களும், கயற்கண்ணி (மீனாட்சி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி), திருமகள் (இலட்சுமி) முதலிய தெய்வப் பெயர்களும் பொருநை (தாம்பிர பரணி), தில்லை (சிதம்பரம்), மறைக்காடு (வேதாரணியம்), பழமலை அல்லது முதுகுன்றம் (விருத்தாசலம்) மயிலாடுதுறை (மாயவரம்) குரங்காடுதுறை (கவித்தலம்) முதலிய பல இடப்பெயர்களும் வழக்கற்றன. விடாப்பிடி (வைராக்கியம்) தடுமம் அல்லது நீர்க்கோவை (ஜலதோஷம்), ஊக்கம் (உற்சாகம்), திருவிழா (உற்சவம்) விழிப்பு (ஜாக்கிரதை முதலிய பல சொற்கள் வழக்கு வீழும் நிலையில் உள்ளன.

கனவு, தூக்கம், பயிற்சி, வெள்ளி முதலிய தென்சொற்களிருப் பவும், சொப்பனம், நித்திரை, அப்பியாசம், நட்சத்திரம் முதலிய வடசொற்கள் வீணே உலவி வருகின்றன. எழுநாட்பெயர்களுள், அறிவன் (புதன்), காரி (சனி) என்னும் இருநாட் பெயர்கள் வழக்கு வீழ்ந்து போயின. இரங்கும் நிலையில், ‘அளியன் அளியள்’ ‘அளிது அளிய' என்றும் சொல் வழக்கு வீழ்ந்து, பாவம் என்னும் சொல்லோ வேரூன்றிக் கொடிவீசலாயிற்று.

இந்த நிலையிலும் தமிழிற்போதிய சொற்களில்லை என்று கூறுதலும் வழக்கற்ற சொற்களைப் புகுத்தக்கூடாதென்று தடை செய்தலும் சிலர்பால் உண்டு. ஆட்சியும் மாட்சியும் நீங்கி நெடுங்காலம் கழிந்த பின்னும், இக்காலக் கருத்துக்கேற்ற சொற்களும் சொற்கருவிகளும் தமிழில் எஞ்சியுள்ளன. பல தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்தமைக்குக் காரணம், அயலாரால் புகுத்தப்பெற்ற சொற்களின் விளைவாகும். எனினும், அவற்றுக்கு மாறாகப் பழஞ் சொற்களைப் பெய்தல் தமிழர் கடனாகும்.

புதிய அணுகுமுறை
இன வளர்ச்சி, மொழி வளர்ச்சியின் அடிப்படை இன வளர்ச்சிக்கு எதிரான மொழிக் கொள்கையை நாம் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அதனால் இன வளர்ச்சியும் கெடும்; மொழி வளர்ச்சியும் தடைப்படும். நமது சமுதாயத்தின் தனி வளர்ச்சிக்கோ, நாம் தலைமை பெறுவதற்கோ, மாறான நம்பிக்கைக்கோ நமது நோக்கம் ஆட்பட்டுவிடலாகாது.

பழைமை, பழம் பெருமை, பழைய பண்பாடு, மொழியின் தனித் தன்மை, தூய்மை போன்றன நாம் தலை நிமிரப் பயன்படலாம். அவை நாம் தடம் புரளவும் காரணமாகாமல் கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கையோ, ஒரு தத்துவமோ, மரபோ மக்கள் வாழ்வியற் கலைகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறதா என்ற வினாவை ஒவ்வொரு நிலையிலும் நாம் எழுப்ப வேண்டும். ‘துணை' என்ற நிலை மாறிச் சுமை என்ற நிலைமைக்கு ஒரு மரபோ அணுகு முறையோ வந்து சேர்ந்தால், எவ்விலை கொடுத்தும் அதைத் தாங்கும் மனநிலை நமக்கு அமையக் கூடாது.

தமிழ் விண்ணிலிருந்து வந்தது அன்று விண்ணவர் தந்ததுமன்று. மனித சமுதாயம் தமக்குத்தாமே பெருகப் பெருக தட்டுத்தடுமாறி, அரிய முயற்சியின் பெரியதாக மொழியை உருவாக்கிக் கொண்டது. மனிதன் படைத்த எதுவும் குறையுடையது; வளர்ச்சிக்கு வழி கோலுவது வளர வேண்டிய தேவையுடையது. எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான எல்லாவற்றையும், மொழியைப் பொறுத்தவரை முன்னரே அமைந்ததாக முடிந்ததாக எண்ணவோ நம்பவோ இடமில்லை.

தமிழும் உலகிலுள்ள மற்ற மொழிகளைப் போன்றதே ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் இருக்கலாம். தமிழுக்குச் சில சிறப்புகள் கூடுதலாகவே இருக்கலாம். இருப்பினும், வளர்ந்த நாட்டினரின், மொழி வளர்ச்சியும், அவர்கள் தம் மொழியில் கடைப்பிடித்த முறை, அவர்கள் கண்ட அனுபவம் ஆகியன சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நமக்கும் பயன்படும். பயன் தரும் நமது மொழி மற்ற மொழிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இயல்பும், சிறப்பும் உடையது என்ற நோக்கோடும் மற்ற மொழியினர் பெற்ற அழுத்தங்கள் நமக்குத் தேவையில்லை, அல்லது பயன்படா என்னும் மனநிலையோடும்; காதும், கருத்தும் கண்ணும் மூடிய நிலையில் நடக்க முடியாது. முன்னேறியுள்ள நாடுகளின் கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து இயன்ற வழியில் தேவையான மாற்றங்களோடு அவற்றைப் பயன்கொண்டு அதன்வழி நாம் நலம் பெறவேண்டும் என்ற பணிவுடைமை நமக்கு எந்நாளும் வேண்டும்.

ஆங்கில மொழி 50 சதம் இலத்தீனிலிருந்தும் 25 சதம் கிரேக்கத்திடமிருந்தும் கடன் பெற்று வளர்ந்தது என்பர். சீன மொழியோ பிறசொற்களை ஏற்பதில்லை. பிறநாட்டு இடப்பெயர்கள் இயற்பெயர்களாகக் கூடத் தம்மொழிக்கேற்பவோ மொழி பெயர்த்தோ சொல்கின்றனர். வடமொழியாரோடும் ஊர்ப் பெயர்கள் இயற்பெயர்களை மொழி பெயர்த்து மாற்றுவதை நாம் அறிவோம். தமிழரிடத்திருந்த அரிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழர் அறிந்த முன்னமே தாம் அறிந்தன போலவும், வட மொழியிலிருந்தே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும், வட மொழியிலிருந்தே தமிழிற்கு அவை வந்தன போலவும் ஆரியர் காட்டினர் என்று வீ.கோ. சூரிய நாராயண சாத்திரியார் தமிழ்மொழி வரலாற்றில் எழுதினார்.

அறிஞர் வ.சுப. மாணிக்கம் இது தொடர்பாகத் ‘தமிழ் ஒரு முதுமொழி. அதனை அது வளர்ந்து வந்த இயற்கைப்படி வளர்க்க வேண்டும். தமிழ்ஞாலத் தொன்மொழியாதலானும், பல மொழிகள் ஞாலத்திடை தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றி வளர்ந்து இலக்கண இலக்கியங்கண்ட செம்மொழியாதலானும், ஒரு குடும்பத்துக்கு ஒரு மகவு போல் உடன் பயில்மொழியாதுமின்றித் தனித்து ஓடியாடி உரம்பட்ட செல்வ மொழியாதலானும் அதனைத் தன்னிச்சைப்படி வளர்ப்பதுவே நெறி.

ஆங்கிலம் இந்தி முதலான பன்மொழிகள் ஏராளமான மொழிகள் வழங்கிய உலகக் காலத்துப் பிறந்தன. கலப்பிற் பிறந்தன; கலப்பிலே வளர்ந்தன. கலப்பிலே வளரும் பெற்றியன. ஆதலின் அன்ன மொழிகளை அசை பிறந்த சூழற்படி வளர்ப்பதுவே நெறி. இவை மொழியியற்கையாதலின், பெருமை சிறுமை என்ற ஏத்துக்கும் ஏச்சுக்கும் இடம் யாண்டுண்டு? என வினவுவது குறிக்கத் தக்கது.

 எட்டிப் பறித்த பூக்களில், எழிலார்ந்த நன்மலர்கள் விடுபட, என நண்பர்கள் சுட்டிக்காட்டிய தனித்தமிழ் தானை மறவர்களை நாடு எப்போதும் மறப்பதில்லை.  பாவாணர், மூதறிஞர் வ.சுப.மா., பாவலரேறு, முன்னாள் அமைச்சர் அறிஞர் தமிழ்க்குடிமகன், கழகப் புலவர் இராமநாத அடிகள், இளவழகனார், அண்ணல் தங்கோ, கோவை இளஞ்சேரன், அறிஞர் அருளி, இளங்குமரனார், மதிவாணன், இ மு சு, வளனரசு என்ற பட்டியல் குறிக்கத்தக்கது.

 அறிஞர் தமிழ்க்குடிமகன், அமைச்சராகவும் திகழ்ந்த நிலையில், தனித்தமிழுக்கென அரும்பணியாற்றினார். அரசு ஆணைகளிலும், அறிவிப்புகளிலும், வணிகக் கடைப் பெயர்களிலும் தனித்தமிழ் மணங்கமழச் செய்தார்.
 
  நூற்றாண்டு கண்ட சைவ சிந்த்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார், வெளியிட்ட அனைத்து நூல்களும், தனித்தமிழ்ச்சாறு ததும்பும் கனிச்சுளைகளாகும். சுழன்றும் சுப்பையா பின்னது பதிப்புலகம் என்று பாவாணர் பாராட்டினார்.  

தேமொழி

unread,
Jul 16, 2020, 10:59:07 PM7/16/20
to மின்தமிழ்
16. ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================

மொழிக் கொள்கை பற்றிய பூசல் நம்மிடையே பட்டிமன்றமாகவே ஒருவர் எடுத்து மொழியவும், மற்றவர் மறுத்துக் கூறவுமாக நடுவர் இல்லாமலேயே நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது பற்றிய பொருண்மையில் மற்ற மொழிகளிலிருந்து ஆங்கிலமொழிச் சொற்களைக் கடன் வாங்கி வளர்ந்த அனுபவத்தை ஒருவர் சுட்டிக் காட்டினால், அதை அறிவு நோக்கில் ஆய்ந்து, அந்த அனுபவம் தமிழுக்குப் பொருந்துமா, பொருந்தாதா என முடிவு செய்வதுதான் முறை. முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதைவிடுத்து ஏழை கடன் வாங்குவான் இரவலன் இரக்கிறான். அதற்காகச் செல்வந்தர்களும் கையேந்த வேண்டுமா?’ என்று வினவுவது மொழியியலுக்கு முறையாகாது. மொழியியல் வேறு வாழ்வியல் நடப்பு வேறு. உள்ளத்தில் உண்மையும், கடமையில் தெளிவும், நமது மொழி எல்லா நிலைகளிலும் எல்லோர்க்குமாக ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வும் நடைமுறையில் வளர்ச்சியை நாம் அனைவரிடமும் நல்லனவற்றைப் பெற வேண்டும் என்ற துடிப்பும் மேம்பட்டு வருகின்றன.

சென்ற வாரம் என் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை வினவினார். உலகில் பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி ஏதுமில்லை. சீனம் பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை என்பது முற்றிலும் சரியான கருத்து அல்ல. கம்பன் பயன்படுத்திய ஐயோ என்ற சொல் இன்றும் அதே பொருளில் சீனத்தில் வழக்கிலுள்ளது. மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன (எ-டு: கடை) பிற மொழிகள் தமிழ்ச் சொற்களை ஏற்கும்போது பெருமிதம் கொள்ளும் நாம், தமிழ் பிற மொழிச் சொற்களை ஏற்கும்போது ஏன் வருந்த வேண்டும்? மொழி என்பது மக்கள் சார்ந்தது. அதை அறிஞர் சார்ந்த மொழியாகக் கருதித் தூய்மைப்படுத்த முனைந்தால் அது அழிந்து போகும் வாய்ப்பு வரும். பிராகிருதம் செப்பம் செய்யப்பட்ட சமசுகிருதமாகியதால்தான் வழக்கொழிந்தது.

அதேநிலையில், மாற்றாகவும் கருத்துரைக்கலாம். சிறிதளவு கலப்பு எல்லா மொழிகளிலும் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளன. தமிழைப்போல அதனை இலக்கணத்திலும் சேர்த்துக் கூறிய மொழிகள் உலகில் எத்தனை உள்ளன? அளவிறந்தும், தேவையற்றும் கலப்பது மொழியைச் சிதைக்கும். சிதைத்துத் திரிந்து அற்றும் போன மொழிகள் பல. உணவில் உப்பு இருந்தால் சுவை கூடும், ஆனால், உப்பாகக் கொட்டி வைத்தால் அது உணவன்று.

அதிகம் கலப்பதாகக் கருதப்படும் பல புதின, கதை எழுத்தாளர்களின் எழுத்துகளை அலசினாலும் அதில் கலப்பு குறைவே (5-15%). நான் அலசி இருக்கின்றேன். அக்கலப்புகள் குறைவாக இருந்திருந்தாலும் சுவை ஒன்றும் குன்றிவிடாது என்று என் நண்பர் கூறினார்.

கலப்பால் சிக்கல் இல்லை. இந்தக் கலப்பால் வேண்டுமென்றே ஓர் ஆங்கில, சமற்கிருத பிறமொழி மோகத்தை உண்டுபண்ணும் பண்பாட்டுப் புரட்டால்தான் எதிர்ப்புணர்வு. தாழ்வு மனப்பான்மை வலிந்தும் நுட்பமாயும் ஊட்டுவதைச் சிலர் எதிர்க்கின்றனர். அளவான கலப்பு என்றுமிருக்கும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழர்கள் தமிழில் சொல்லி மகிழ்பவர்கள் அது அவர்கள் விருப்பம்.

தூய்மை, தனித்தன்மை என்பன உயர்ந்த கூறுபாடுகளைக் குறிப்பிடும் சொற்கள். ஆனால், மொழித்துறையில் எது தூய்மை, எது தனித்தன்மை என்பதில் தெளிவு கண்டாக வேண்டும். கன்னித் தன்மைதான் தூய்மையுடையது என்பதில்லை. தாய்மையும் தூய்மையானதே. தனிமை வேறு, தனித்தன்மை வேறு. பலருடன் சேர்ந்து செயற்படும் பொழுதுதான் ஒருவரது தனித்தன்மை புலனாகிறது. அறிவு ஓரிடத்தில் தேங்காமல் நாளடைவில் மற்றைய கருத்துகளாகி, எண்ணுதற்கு எட்டாத எழிலார்ந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தழுவி நடைபெறுகின்றது. சமயம், தத்துவம், மொழியியல், கலை, பொருளாதாரம், வாணிகம், போக்குவரவு, அறிவியல், தொழில் நுட்பம், அணுவியல், மரபணுவியல், மின்னியல், கணினியியல், ஊடகவியல், வாழ்வியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் உலகின் எந்த மூலையில் வளர்ச்சிப் பொறி தட்டுப்பட்டாலும், அது மானிடத்தின் பொதுச் சொத்தாகி மலர்ந்த காலம் இன்றைய காலமாகும்.

வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நாகரிக வளர்ச்சியுடன் எல்லாக் காலத்திலும், எல்லா நாட்டினராலும், எல்லா இனத்தாராலும் உருவாக்கப்பட்ட அறிவுடைமை முழுமைக்கும் நாமும் உரிமை கொண்டாடும் வாய்ப்பு அமைந்துள்ளது. ஊர்கூடித் தேரிழுக்கும் மக்கள் வெள்ளத்தில் நாமும் பங்கு கொள்ளும் மனப்பான்மையும் விளைநலங்களைப் பயன்படுத்தும் திறனும் நமக்கு வேண்டும். அறிவு வளர்ச்சியில் அயன்மை என்று ஒன்றும் இல்லை. நமக்கு ஏற்றது. ஏலாதது, தேவையானது, தேவையில்லாதது என்ற பாகுபாடு வேண்டுமானால் நாம் வகுத்துக் கொள்ளலாம். ஓர் இனத்தின் வாழ்வோடு. உணர்வோடு நெருங்கிய கலை, பண்பாடு, செயற்பாடு போன்றவை கூட மற்ற இனங்களின் தொடர்பால் மாற்றங்களைப் பெறுகின்றன.

‘‘உயிரோட்டமுள்ள நாகரிகம், வளரும் நாகரிகமாக நாற்புறமும் வீசும் அலைகளை அரவணைத்து அவற்றின் மூலம் மேம்பட்டு முன்னேறிச் செல்லும் தகுதியுடையதாகத் திகழ வேண்டும். தாக்குதல் தொடாத இடத்தில் தாழிட்டுக் கொண்டு வாழக்கூடாது. தனது பின்னணியைத் தனக்கே வாய்த்த தனித்தன்மையைத் தமிழ் நிகழ்த்தி வந்த தரத்தை உரிய அளவில் நிலைநிறுத்திக் கொண்டு புதியவற்றுள், தக்கவற்றைத் தன்மயமாக்கிக் கொள்ளும் திறன், வளரும் இனத்திற்குத் தேவையான ஒன்றாகும்'' என்று அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி, மொழித்தூய்மை, மொழிக்கலப்புப் பற்றிக் குறித்த கருத்துரைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கனவாகும். மொழி என்பது வழிபடுபொருளாய், எல்லையறு பரம்பொருளாய், உணர்ச்சிக் குவியலாய் எண்ணும் நிலையில், அதன் தூய்மை மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

வளர்ச்சிக்குரிய உயிருடையதாய் உலகத் தொடர்புப் பாலமாய் மொழியைக் கருதும் இந்நாளில் மாற்றங்களுக்கு உட்படுதலே உயிருணர்ச்சிக்கு அடையாளமாகிறது. என்ற நிலையைத் தவிர்க்க இயலாது. எனவே, மொழிக்கலப்பு இனத்தின் வளர்ச்சி நோக்கி நிகழும்போது, ஏற்புடையதாகவும், இனத்தின் குலைவுக்கும் தாழ்ச்சிக்கும் வழிவகுக்கும்போது நீக்கத்தக்கதாகவும் கருதலாம். இப்புதிய அணுகுமுறை மொழி வளர்ச்சிக்கு உலக நாடுகள் மேற்கொண்டு காட்டிய நடைமுறையாகும்.

அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, 16ஆம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரையில், ஆங்கிலேயர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தம் ஆட்சியை ஏற்படுத்தியதும், ஆதிக்கம் செலுத்தியதும் முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஆங்கில மொழிக்குச் செல்வாக்கை ஏற்படுத்தியது. அடிமை நாட்டார் மேல் ஆட்சி மொழி திணிக்கப்பட்டது. இந்தியா, மியான்மர், இலங்கை, மலேயா, ஆங்காங், இசுரேல் போன்ற நாடுகள் இதற்கு எடுத்துக் காட்டுகளாய் உள்ளன.

சமுதாயவியல் அடிப்படையில் ஆராயும்போது, தங்கள் அரசியல் செல்வாக்கினால் உலகில் மிகப்பெரும் ஆளும் வல்லரசாக மாறிய ஆங்கிலேயர், தொழில், அறிவியல் ஆகிய புதிய துறைகளில் பெரும் வளர்ச்சி பெற்று முன்னோடியாகத் திகழ்ந்ததைக் காண்கிறோம். தொழிற்புரட்சி முதன் முதலில் தோன்றியது இங்கிலாந்தில்தான். இவர்களுக்குப் பின்னரே உருசியரும், அமெரிக்கரும், செருமானியரும், சப்பானியரும் முன்னேற்றமடைந்தனர். ஓர் இனம் பல துறைகளில் சிறப்பையும் முதன்மையையும் அடையும்போது, அந்த மக்களிடம் மொழி இயல்பாகவே மேன்மையுறுகிறது; விரிவடைகிறது. வளர்ச்சியை எய்துகிறது. அவ்வகையில் ஆங்கிலம் கல்வி மொழியாகவும், அறிவியல் மொழியாகவும், தொழில்சார் மொழியாகவும், ஊடக மொழியாகவும் ஓங்கியதில் வியப்பில்லை. வளர்ச்சியின் பின்தங்கிய நாடுகளும் தங்கள் முன்னேற்றப் பாதையின் வழிகாட்டியாக ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கின.

பிரித்தானியத் தூதரகங்களிலும், வானூர்தி நிலையங்களிலும், கலைகளிலும், அறிவியலிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், இலக்கியத்திலும் உலகில் தலை சிறந்தது பிரித்தனே என்ற பெருமிதம் பறைசாற்றும் பலகையைக் காணலாம்.

தேமொழி

unread,
Jul 25, 2020, 9:38:55 PM7/25/20
to மின்தமிழ்
17. அரியணை மொழியே அனைவரையும் ஈர்த்தது..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு

=================================================

‘ஊர் கூடித் தேர் இழுப்போம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு தனித்தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் பா.இறையரசன் எனக்கு எழுதிய மடல் சிந்திக்கத்தக்கது.

“தமிழறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எனப்பலரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுத்தால் உண்டு நன்மை. ஆங்கிலம் தன்னை வளர்த்துக் கொள்ள பிறமொழிச் சொற்களைப் பெற்று- தன்னில் கலப்படம் செய்து வளர்ந்தது பொருந்துமா என்று ஆய வேண்டும். வணிகம், சமயம், ஆட்சி, கல்வி, பயணம், இடப்பெயர்வு ஆகியவற்றால் மொழிக்கலப்பு, கடன் வாங்கல், மொழித் திரிபு நிகழ்கின்றன. ஆட்சியாளர்களால் அவரது மொழிச்சொற்கள் ஆளப்படுவோரிடம் விரைந்து பரவுவதுண்டு. அவ்வழிச் செல்வாக்குப் பெற்ற ஆங்கிலம், வளராத குறுமொழியாக இருந்ததால், இலத்தீனிலிருந்து பிறந்து / பிரிந்து பல மாற்றங்களைப் பெற்றுக் கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் இற்றைநிலை அடைந்துள்ளது. தாம் வென்ற சென்ற நாடுகளில் உள்ள அயல்மொழிச் சொற்களைக் கடன் பெற்று வளர்ந்தது. அவ்வாறு பிற மொழிச்சொற்களைத் தமிழ் கடன்பெற வேண்டுமா?

பல்லாயிரம் ஆண்டு வளர்ச்சியும் தோண்டத் தோண்ட வற்றாமல் வழங்கும் கருவூலமாய்ச் சொல்வளமும் மொழி நலமும் மிக்கது தமிழ். மிகப்பெரிய செல்வவளம் மிக்க வணிகன், சிலநேரங்களில் கடன் வாங்குதல் போல், பிற மொழிச்சொற்களைக் கடன் வாங்கலாம். ஆனால், தன் மொழியின் திறத்தால் கலைச்சொல்லாக்க ஆளுமையால் புதிய புதிய கலைச் சொற்களைத் தன்னகத்திலிருந்தே தமிழ் உருவாக்கம் செய்ய வேண்டும். கடன் பெற்றே வாழ முயன்றால், இப்போது “தங்கிலிசு'' எனும் நிலையில் உள்ள தமிழ் திரிநிலை மொழி ஆகிடும். அவ்வாறாகாமல் தடுக்க, பிற மொழிக்கலப்பைத் தடுப்பதும், தமிழில் பல்லாயிரம் கலைச்சொற்களை உருவாக்குவதும் வேண்டும். அதற்காகத் தமிழ் அறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தமிழக அரசினர் என அனைவரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் என்ற உங்கள் எழுத்து எப்போதும் பொருந்தும்.”

அதேநிலையில், மாற்றுக் கருத்தை மொழிபெயர்ப்பாளர் வத்சலா எழுதியிருந்தார்.

“பழந்தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் வேறு சொற்களைப் பயன்படுத்துவது தவறில்லை என்று நினைக்கிறேன். 21-ம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தை உபயோகிப்போம், ஆனால், சொற்கள் மட்டும் தொல்காப்பியர் காலத்தவையாக இருக்க வேண்டும் என்றால் எப்படி? அகல் விளக்கும், பனை ஓலையும், எழுத்தாணியும் பயன்படுத்திய காலத்துச் சொற்கள் இந்த மின்னணு உலகில் யார் பயன்படுத்துவர்? அரசாங்கம் புகுத்த முயலலாம். மக்கள் ஏற்பரா? எவ்வளவு ஆண்டுகளாக அரசாங்கம் ‘பேருந்து' என்றே கூறி வருகிறது. மக்களோ விடாப்பிடியாக ‘பஸ்' என்றே கூறுகின்றனர். தமிழைத் தன்போல் விட்டாலும் அழியாது என்பதே என் கருத்து”.
இதற்கு மட்டும் நான் இப்படிச் சொல்ல விழைகிறேன்.
பல்லாயிரம் ஆண்டுகளாக கண் காது, வாய், மூக்கு, அன்பு அறிவு, ஆறு, குளம் என்பதுபோல பல்லாயிரக்கணக்கில் சொன்னவற்றை இன்றும் அப்படியேதான் பயன்படுத்துகின்றோம். அதில் என்ன பிழை. அது உண்மையில் சிறப்பு. பேன்ல, கொஞ்சம் ஆயில் போர் பண்ணுங்க என்பது 21 ஆம் நூற்றாண்டுத் தமிழா? தட்டைச் சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள் என்பன போலச் சொன்னால் தவறா? அப்புறம் விடாமல் இந்தப் ‘பேருந்தை' திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். கூகுளில் ‘பேருந்து' என்று இட்டுப்பாருங்கள். 1,520,000 தேடல் முடிவுகள் வருகின்றன. ‘பஸ்' என்றிட்டால் 1,800,000 முடிவுகள் வருகின்றன. பேச்சுவழக்கில் மக்கள் ‘வண்டி' என்று சொல்வதும் வழக்கம். எல்லா மொழிகளிலும் இரட்டை வழக்கு (எழுத்து மொழி - பேச்சுமொழி) உண்டு, தமிழில் இவ்வழக்கு சற்று கூடுதலான வேறுபாட்டைக் கொண்டதுதான். அதனாலும் சில மாறுபடுவதுண்டு. ஆங்கிலத்திலே பேசும்பொழுது commence என்று சொல்வதில்லை, ஆனால், அது எழுத்துமொழியில் பல இடங்களில் வழங்குவது. ஆங்கிலத்தில் முறையாக எழுதுமிடத்தில் gimme, lemme என்றெழுதுவதில்லை. இதுபோல பல்லாயிரக்கணக்கானச் சொல்லாட்சிகளைச் சொல்லமுடியும்.

தமிழர்கள் தங்களுக்குத் தேவையான இக்கால உலகுக்கான சொற்களை அழகாக பல்லாயிரக்கணக்கில் ஆக்கிக்கொண்டே இருக்கின்றார்கள் (அறிவியல், பொறியியல், மருத்துவம்...). ஆனால், தாழ்வு மனப்பான்மை கொண்டு, பிறப்பு வளர்ப்பால் தாய்மொழியைத் தள்ளி வைக்கும் போலியாகவும், பகட்டாகவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோரால்தான் பலவும் மேலும் செல்வாக்குப் பெறாமல் இருக்கின்றது.

ஆங்கிலத்தைவிட அதிகமாகப் பேசப்படுகின்ற மொழி சீனமாகும். தற்போது உலக அளவில் 200 கோடிக்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தைப் பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்ற சூழலில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலம் உலகிலேயே அதிகமாகப் பேசப்படும் மூன்றாவது மொழியாகும்.

அயர்லாந்து விடுதலை பெற்றதாக அறிவித்தபோது, இங்கிலாந்திலிருந்து தனது தொடர்புகளை அறுத்துக்கொள்ள முயன்றது. இங்கிலாந்திற்கும் தமக்கும் இடையேயான இறுதி உறவான ஆங்கில மொழியையும் துண்டித்து விடுங்கள் ‘ஐரிசு’ மொழியையே பேசுங்கள் என்று கூறும் பலகைகள் ஆங்காங்கே ஐரிசு நாட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆனால், அந்தப் பலகைகளும் வழியின்றி ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்தன. நீக்கமற நிறைந்து விடும் ஆங்கிலத்தின் நிலையை, வளர்ச்சியை இதன்வழி அறியலாம். எத்தியோப்பியாவில் ஆங்கிலமும் பிரெஞ்சும் ஆட்சிமொழிகளாக உள்ளன. எதிர்காலத்தில் ஆங்கிலத்திலேயே முழுவதும் நடத்தும் திட்டங்கள் உள்ளன.
இவ்வாறு உலக அரங்கில் ஆங்கிலம் தனிச் செல்வாக்கும், பிற மொழிகளில் ஊடாட்டம் நிகழ்த்தும் வல்லமையும் பெற்ற மொழியாக விளங்குகிறது.

நம் இந்தியப் பெருநாட்டின் பதினெட்டு மொழிகளையும் 350 வட்டார மொழி வழக்குளையும் மக்கள் பேசுகின்றனர். ஆனால், ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவு கொண்டு எந்த ஒரு மொழியிலும் பேசிப் பழக முடியவில்லை. நமது மக்கள் தொகையில் 2 கோடி மக்கள் மட்டுமே பேசக்கூடிய ஆங்கிலம்தான் நமது ஒரே தொடர்பு வாயிலாக நிலவுகின்றது. இந்நிலை ஆங்கிலத்தின் இன்றியமையாத பெரும் பங்கினை எந்த நிலையிலும் செலுத்துகிறது. மனிதகுலம் மொழியைக் கருவியாகக் கொண்டே தனது சமுதாயக் கடமைகளை நிறைவேற்றி வருகிறது. இனங்கள் பலவாய், மொழிகள் பலவாய் இயங்குகின்ற நிலைகளில் மொழிக்கலப்புத் தவிர்க்க இயலாததாகின்றது. உயிருள்ள மொழிகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது, அவற்றுக்குள் கொடுக்கல் வாங்கல் நிகழ்கின்றன. தமிழ்மொழியோடு பல மொழிகள் இவ்வுறவைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலமே இன்றுவரையில் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தமிழில் ஊடாட்டம் நிகழ்த்தும் மொழியாக இருந்து வருகிறது. இவ்வாறு கலந்த ஆங்கிலம், நம் அன்றாட வழக்குகளில் வல்லாண்மை செலுத்தி வருதலை வகை பிரித்தறிதலே இவ்வியலின் நோக்கமாகும். அரியணையில் அமர்ந்த மொழியை அனைவரும் அரவணைத்துத் தம்மை தொழும்பர்களாக மாற்றிக் கொண்டனர். எழுத்து வழக்கு, மக்கள் வழக்கு எனும் இரு பகுப்புகளில் ஆங்கிலச்சொற்களின் கலப்பு நிலைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

தொன்று தொட்டுத் தமிழ் இலக்கியம் பல இலக்கண நெறிகளுக்குட்பட்டு வளர்ந்து வந்தது. பிற்கால இலக்கியங்களிலும் அவற்றுக்கு முன்னர்த் தோன்றிய இலக்கியங்களிலும் பிறமொழிக் கலப்பு மிகுதியாகத் தொடங்கிற்று. இந்நிலைக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம், வடமொழிக் கலப்பை ஓரளவிற்குத் தடுத்தது எனினும், ஆங்கிலத்தின் நுழைவை முற்றிலுமாகத் தடுக்க இயலவில்லை. ஆங்கிலேயர் 300 ஆண்டுக்காலம் நம் நாட்டை ஆண்டனர். அவர்கள் நம் நாட்டிற்குக் கொண்டு வந்த புதிய துறைகள் வழியாக அத்துறைகளுக்குரிய சொற்கள் என்னும் முத்திரையோடு, ஆங்கிலச் சொற்கள் தமிழிற் கலந்தன. ‘சைக்கிள்’ மட்டுமல்லாது அதன் தொழில் நுட்பத் துணைப் பொறிகள் அனைத்தும் ஆங்கிலச் சொற்களாலேயே சுட்டப்பட்டதை எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

சீட், வால்டியூப், பெல், மட்கார்டு, பிரேக், சீட்கவர், வீல் கோன், ரிம், செயின், போக்ஸ், செயின்கார்டு, பெடல், டைனமோ, டயர், லைட், டேஞ்சர்லைட், ஹாண்டில், ஸ்டேண்ட், கேரியர், பிரேக் ஒயர் என்ற ஆங்கிலச் சொற்கள் பேச்சு வழக்கில் இன்றும் நீங்காமல் நிலைத்துள்ளன. இவ்வாறு பல பொருள்கள் வந்தன போன்று தமிழிலக்கியத்திற்கும் சில இலக்கிய வடிவங்கள் ஆங்கிலத்திலிருந்து வந்து கலந்தன. இவ்வாறு வந்தவற்றில் முதன்மையானது நெடுங்கதையாகிய நாவல் என்னும் உரைநடை வடிவம் ஆகும். செய்யுளே தமிழ் என்ற நிலை மாறி, உரைநடை வடிவத்தில் தமிழ் வளரத் தொடங்கியபோது, பிறமொழிச் சொற்கள் கலக்க நேர்ந்தன. இக்கலப்பை நிகழ்த்துவதில் வடமொழியே முதலிடம் பெற்றிருந்தாலும், அடுத்த நிலையில் அண்மைக்காலம் வரையில் இவ்வுரைநடையில் ஆங்கிலச் சொற்கள் அதிகமாக இடம் பெற்று வருகின்றன எனக் கருதலாம். வட மொழி எதிர்ப்பினால், தனித்தமிழ் இயக்க எழுச்சியால் தமிழில் கலந்திருந்த வடமொழிச் சொற்கள் மறையத் தொடங்கின என மகிழ்ச்சியுறும் அதே நேரத்தில், ஆங்கிலச் சொற்கள் அந்த இடங்களில் அமர்ந்து கொள்வதை மறுக்க இயலாது. சான்றாக,
அவர் பிரபலமானவர் (வடமொழி)
அவர் புகழ்ப்பெற்றவர் (தாய்மொழி)
அவர் பேமசானவர் (ஆங்கிலம்)
‘பிரபலமானவர் என்ற வடசொல், பேமசானவர் என்ற ஆங்கிலச் சொல்லால் இடம் பெயர்கின்றது.
‘ஆசீர்வாதம்' என்ற வடசொல் வாழ்த்தாக மாறி, இப்பொழுது ‘பெஸ்ட் விஷஸ், கிரீட்டிங்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இடம் அளித்துள்ளது.
இத்தகைய ஆங்கிலக் கலப்பு இன்றைய புதினங்களிலும் கட்டுரைகளிலும் இடம் பெறுகிறது. பெரிதாகத் தமிழில் பரபரப்பாக விற்பனையாகும் புதினங்களில் இந்நிலையே உள்ளது. போற்றப்பட்ட எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் தான் எழுதிய ஒரு கதையில்கூட 337 சொற்களில் 36 சொற்கள் பிறமொழிச்சொற்கள் (ஏறத்தாழ 10.7%) இடம்பெற்றிருந்தன. 2619 எழுத்துகளில் 22 எழுத்துகள் கிரந்த எழுத்துகளாக அமைந்தன.

தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் இதழ்களுக்கு ஆங்கிலத்திலே பெயரிட்டு, அதைத் தமிழ் எழுத்துகளிலேயே எழுதுவதும் உண்டு. ‘பாக்கெட் நாவல்', ‘எ நாவல் டைம்’, ‘கிரைம் நாவல்’, ‘சஸ்பென்ஸ்', ‘ஜாப் கைடு லைன்ஸ்', ‘இந்தியா டுடே' இவையனைத்தும் தமிழ் எழுத்துகளால் வழங்கப்பட்டு வரும் ஆங்கிலப் பெயர்கள். இவை மட்டுமின்றி இதழ்களில் வரும் தமிழ்க் கதைகளில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதும் அவல நிலை உள்ளது.

KJ

unread,
Jul 27, 2020, 3:11:51 PM7/27/20
to மின்தமிழ்
mikka nanRi.

தேமொழி

unread,
Aug 6, 2020, 11:19:45 PM8/6/20
to மின்தமிழ்
18. கலப்பு மொழி கன்னல் மொழியாகக் காட்சியளிக்கிறதே..!

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================

கல்விக்கூடங்களில்...

கல்விக்கூடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வரையறுக்கப்பட்ட கல்வி முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன. ஆங்கிலம் பயிற்று மொழியாகவே (Medium of Instruction) எங்கும் எளிதில் உள்ளதென்றால் மிகையாகாது. ஏறத்தாழ இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த நிலைதான். ஆங்கில ஆட்சிக்கு அகப்பட்ட நாடுகள் அனைத்திலும் இந்த அவலம் உண்டு.

தமிழ்நாட்டில் ஆங்கிலத்தின் வாயிலாகப் பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புக்குச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள வகுப்பிலே பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் இந்நாட்டில் முனைந்து பாடுபடுகிறார்கள்.

ஆங்கிலம் அறிவு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுதல் பொருந்தும் அது அந்த நிலையில் இன்றியமையாதது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடு விளங்க வேண்டும் என்று கூறும்போதுதான் ஆங்கிலத்தின் மீது உள்ள மோகம், தேம்சு நதிக்கரையில் உள்ளவர்களின் பற்றைவிடப் பெரிது என்று தெரிகிறது. இதன் பயனாக நாட்டில் இளைஞர்களின் வாழ்வில் விளையும் தீமை எத்தகையது என்பதை அவர்கள் பார்ப்பதே இல்லை.

தமிழகத்தில் மழலையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்து வருவது கண்கூடு. இதன் விளைவாக மாணவப் பருவத்திலிருந்தே தாய்மொழியில் சிந்திக்கும் வழக்கம் குறைந்து விடுகிறது. எப்பொருளையும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்தும் இக்கல்வி முறை, ஆங்கிலச் சொற்களைத் தாய்மொழியில் கலக்கவும் வழி வகுக்கிறது.
Uniform, Slate, Tiffin Box, Pen, Lace, Socks, Water Bag, School Bag, Book, Pencil, Rubber எனப் பல ஆங்கிலச்சொற்களை இளஞ்சிறார்களும் பெற்றோர்களும் தமிழாகவே எண்ணித் தமிழைப் போல் பயன்படுத்துகின்றனர்.

பள்ளிகளில் கல்விமுறையில் மட்டுமின்றிப் பேச்சுமொழியில் ஆங்கிலம் பெருமளவில் கலந்து உள்ளது.
Chalk Piece, Bath Room, Miss, Board, Prayer, Friend, Table, Desk, Revision, Sheet, Portion, Master, Tuition, Duster, Interval, Exam எனப்பல சொற்களை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆங்கிலப் பயிற்று முறை, ஆங்கிலச் சொற்களின் கலப்பைப் பெருக்குவதோடு மட்டுமின்றித் தாய்மொழிப் பயிற்சியையும், தாய்மொழிச் சொற்களை அறிந்துகொள்ளும் வாயில்களையும் அடைத்துவிடுகின்றது.

கல்லூரிகளில் பள்ளிகளைக்காட்டிலும், ஆங்கிலச் சொற்புழக்கம் அதிகம் எனலாம். பாடத் திட்டங்கள், ஆங்கில மொழியில் அதிகமாக இடம் பெற்றிருப்பது இதற்குரிய முதன்மையான காரணம். பாடத் திட்டத்தில் ஆங்கிலத்தில் படித்தும், எழுதியும் பழகிவிடும் மாணவர்களும், ஆசிரியர்களும் பழகும் இடங்களிலும் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தும் போக்கினைக் காணலாம். Principal, Professor, Lecturer, Laboratory, ‘Cut’ அடித்தல், ‘Bit’ அடித்தல், Fail, Pass, Arrears, T.C., Degree, Library, Attender, Syllabus என்பவை கல்லூரிகளில் அன்றாட வழக்கில் கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களுக்குச் சில சான்றுகள். பள்ளிச் சிறார்களுக்குப் பழகிய சொற்களை விலக்கித் தாய்மொழியில் புரியவைக்கும் கடமை பெற்றோர் முதல் ஆசிரியர் வரையில் அனைவருக்கும் உண்டு. இருப்பினும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாய்மொழிச் சிந்தனை குறைந்தவர்களாக இருப்பதாலும், சிறார்களுக்குப் புரியும்மொழியில் பேசுவதே போதுமென்ற எண்ணத்தினாலும் இத்தகைய மொழிக் கலப்புத் தடுக்க இயலாததாகிறது.

இக்காரணங்களைவிடவும் தன் குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டு மகிழும் ஆங்கில மதிப்புயர்வு, பெற்றோர்களிடத்தில் மிகுந்துள்ளதே மொழிக்கலப்பு நிகழ்வதற்குப் பெருங்காரணமாகக் கொள்ளலாம். ஆங்கிலம் வாழ்நிலைக்கு மதிப்பூட்டும் அடையாளமாகி விட்டது.
மாணவர்கள் ஆங்கிலத்தைப் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் முறை இங்குச் சிந்திக்க வேண்டிய ஒன்று. தமிழின் ஒலிக்குறிப்புகளை ஆங்கிலத்தோடு இணைத்துப் பேசும் புதியமுறை வேகமாக வளர்ந்து வருகிறது.
‘கம்’டா (come‘டா'), ‘வாட்’பா (What ‘பா’), ‘எஸ்'யா (Yes ‘யா’) என டா, பா, யா, தமிழ் ஒலிகளை ஆங்கிலச் சொற்களோடு இணைத்தும் மாணவர்கள் பேசி வருகின்றனர்.
கல்லூரி நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள். இவர்கள் தாய்மொழியைப் பற்றியும், ஆங்கிலத்தைப் பற்றியும் சிந்தனை செலுத்திப் பிற மொழிக் கலப்பை நீக்குதலில் தனியார்வம் காட்டவேண்டும்.
ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுத் தமிழர்பட்ட தொல்லைகளைவிட ஆங்கிலத்துக்கு அடிமைப்பட்டுத் தமிழ் இளைஞர் படும் தொல்லைகள் மிகுதியாக உள்ளன. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் அல்லர் அறிவு மொழியாகிய ஆங்கிலமும் அன்று தமிழ்ப்பற்று இல்லாத தமிழர்களுக்கு உள்ள ஆங்கில மோகமே ஆகும்.

கற்றவர்கள் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும்போது, அவர்கள் கூறும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அவர்கள் அறிந்திருக்கக்கூடும். இருப்பினும், வழக்கத்தில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை.

ஐரோப்பிய மாணவர்களுக்குத் தம் தாய் மொழியைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை இல்லை. தன்குஞ்சு பொன்குஞ்சு என்னும் காக்கைகளாக உள்ளனர். தமிழர்களோ பொன்குஞ்சு பெற்றும் ஏங்கும் பேதை நெஞ்சம் உடையவர்களாக உள்ளனர். தமிழர்களில் பெரும்பாலோர்க்கு மொழிப்பற்று இல்லை. (வீட்டுப் பெயர்கள், கடைப் பெயர்கள், விற்பனைச் சீட்டுகள், கடிதத் தலைப்புகள், கடித முகவரிகள், அளவளாவும் பேச்சுகள் முதலியவற்றைக் காணில் இந்த உண்மை விளங்கும்) இந்திய நாட்டிலேயே மொழிப்பற்று உடைய படித்த தமிழருள் பலருக்குத் தம் தாய்மொழி எந்தக் கருத்தையும் உணர்த்தும் ஆற்றல் வாய்ந்த அருங்கலையாக விளங்க வல்லது என்ற நம்பிக்கை இல்லை. ஆங்கிலச் சொற்கள் தமிழில் அதிகமாகக் கலந்தமைக்கு இச்செயற்பாடும் ஒரு காரணமாக உள்ளது.

எடுத்துக்காட்டாக,
Cinema, Shop, Theatre, Purchase, Marker, Advancement, Road, Doctor, TV, Serial, Fees, Drainage, Drama போன்ற பல ஆங்கிலச் சொற்கள் பலராலும் பயன்படுத்தப்படுதலை நாம் காணலாம். இச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்கள் எளிதில் கிடைப்பன. வழக்கத்திலும் சில இருந்து வந்தன. இருப்பினும், அன்றாட வழக்கில் இவற்றைப் பயன்படுத்துவது கற்றவர்களிடையே இயல்பாக இருந்து வருகிறது. இந்நிலை மாறிடின், ஆங்கிலச் சொற்கலப்பைக் குறைக்க முடியும்.

அலுவலகங்களில்...

அலுவலகங்களில் அன்றாட வழக்கில் ஆங்கிலச் சொற்கள் மிகப் பலவாக வழங்கப்படுகின்றன. அலுவலகப் பதிவு முறைகள், பதிவேடுகள், கோப்புகள் போன்றவை அரசின் ஆணைகளின்படித் தமிழில் பேணப்பட்டுவந்த போதிலும், பேச்சு வழக்கில் இன்னமும் ஆங்கிலம் இருந்து வருகிறது.

Attendance, Sign, Late Permission, Telephone, Memo, Note, File, Promotion, Increment, Paper, Report, Statement, Pay Advance, Leave, Medical Leave, Casual Leave, Fund, Scheme, Camp, Inspection, Office, Conference Meeting, Urgent, Section Officer, Under Secretary, Deputy Secretary, Action, Suspense, Dismiss, Explanation, Enquiry Commission எனப்பல ஆங்கிலச் சொற்களை அலுவலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்குமுரிய பதிவுகள் தமிழில் இருந்த போதிலும், பேச்சு வழக்கில் ஆங்கிலத்திலேயே புலப்படுத்தும் போக்குக் குறிப்பிடத்தக்கது. எனவே, அலுவலகங்களின் அன்றாட வழக்கிலும் ஆங்கிலம் தன் செல்வாக்கைச் செலுத்தி வருகிறது என்பதை அறியலாம். ‘அரசியலார் அலுவலகம், அறமன்றம் இங்கெல்லாம் அலுவல் பெற்றீர்! உரையனைத்தும் ஆங்கிலமோ?’ எனப் புரட்சிக்கவிஞர் வினாத் தொடுத்தும், நிலைமை இன்னும் மாறவில்லை என எண்ணிட வேண்டியுள்ளது.

பொழுதுபோக்கிடங்களில்...

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மட்டுமன்றிப் பொழுது போக்குமிடங்களிலும் ஆங்கிலச் சொற்கள் அன்றாட வழக்கில் மிகுந்திருத்தலை அறியலாம்.
Walking, Hello, Jogging, Shopping, Strain, Side Seeing, Heart Attack, Driving, Swimming, Hockey, Appointment, Diving, Tennis Club / Ground, Party, Bun, Meeting Hall, Snacks, Lecture, Friend, Speaker, Complaint, Matter, Aim, Speech, Small Recreation, Switch, Employment, Aim Large போன்ற ஆங்கிலச் சொற்கள் பொழுது போக்குமிடங்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, மக்களால் ஆங்கிலச் சொற்கள் தடையின்றிப் பேசப்படுகின்றன. தமிழில் புரிந்த, தெரிந்த ஒரு பொருளைக் குறிப்பிடவும், விளக்கவும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. இவ்விடங்களில் மொழியைப் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை என்றே கூறலாம். இதன் விளைவாகத் தாய்மொழியின் பயன்பாடு குறைந்து ஆங்கிலச் சொற்களின் வரவு அதிகமாகிறது.

வீதிகளில் பேருந்துகளில்...

“தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தானில்லை” எனக் கவலையுற்றார் புரட்சிக்கவிஞர். இன்றும் தமிழகத்தில் வீதிகளின் பெயர்கள் பலவும் பிறமொழிகளில் அமைந்துள்ளன.
Luz, Church Road, Armenian Street, Flat, Anderson Street, Avenue, Villa, Sector, Apartments, Colony என்பன வீதிகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் குறிப்பதற்காக வழங்கப்பட்டு வரும் ஆங்கிலச் சொற்கள். இவ்வாறு கூறும் வழக்கம் இன்னும் நீங்கவில்லை. வீதிகளில் உள்ள கடைகளில், நிறுவனங்களில் இன்னமும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகளே இருந்து வருகின்றன.

Readymade Shop, Jewellery, Hardwares, Hospital, Doctor, Guest, Telephone Booth இவை கடை வீதிகளில் வீற்றிருக்கும் ஆங்கிலப் பெயர்களுக்குச் சில சான்றுகள். இவ்வாங்கிலப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதி வைக்கும் முறை, மக்களின் தாய்மொழிப் பற்றின்மையையும், மொழியறிவின்மையையும் காட்டுவதாகவே உள்ளது. “உணவுதரு விடுதிதனைக் கிளப்பென வேண்டும் போலும் துணிக்கடைக்குச் ‘சில்க் ஷாப்’ எனும் பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்'' எனப் புரட்சிக்கவிஞர் எள்ளி நகையாடி எத்தனையோ ஆண்டுகள் கழிந்தன. இன்னமும் இனிய தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கப்படாத நிலைதான் உள்ளது.

பேருந்துகளில் வழங்கப்படும் ஆங்கிலச் சொற்களைக் காண்போம்...
Stopping, Checking, Break-down, Bus, Inspector, Token, Foot-board, Driver, Change, Conductor, Overtake, Depot, Ticket, Left, Time keeper, Stage, Jerking, Hold-on, Accident, Bata, Ladies, Whistle, Excess Collection, Up, Pass, Down Punch. பேருந்துத் தொடர்பாக மட்டுமே இத்தனை சொற்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. பேருந்தில் உள்ள Tyre, Gear, Steering, Break, Air, Diesel என்பன போன்ற பல சொற்கள் தொழில்நுட்பம் வாய்ந்தவையெனக் கருதப்பட்டு ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டு வருகின்றன. பேருந்துத் தொடர்பான மேற்குறிப்பிட்ட பல சொற்களைத் தமிழில் தடையின்றிப் பேசமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆங்கிலத்தை அகற்ற முயலா மக்கள் இத்தனை சொற்களை இன்னமும் வழங்கிவருகின்றனர்.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்தையார் இலக்கியக் கூட்டத்தில் பேசும்போது நயமாக ஒரு குறிப்பினைச் சுட்டிக் காட்டினார். விடியற்காலையில் ஒரு குக்கிராமத்தில் தான் சீருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே ஒருமுறை நிறுத்தி முகவரியை வினவிவிட்டுப் புறப்படும்போது, ஒரு மூதாட்டி தனது பெயர்த்தியிடம் சாணியை Thick-ஆக் கரைடி என்று சொன்னதைக் கேட்டு வியந்து ஆங்கிலம் எவ்வளவு Thick-ஆக நம்முள் ஊடுருவியிருக்கிறது என்று குறிப்பிட்டதை நான் இப்போது நினைவுகூர்கிறேன்.

ஆங்கிலத்தை எளிதாக ஒதுக்க முடியாது. காரணம், ஆங்கில மொழியில் பேசுவது Habit-ஆகவே மாறிவிட்டது. அவ்வளவு எளிதில்லை. அந்த ஆங்கிலச் சொல்லில் H-ஐ எடுங்கள் ‘a bit’ remains, அந்த a-ஐ எடுங்கள் ‘bit’ remains, அந்த b-ஐ எடுங்கள் ‘it’ remains என்று அடிக்கடி என் அப்பா வேடிக்கையாகச் சொல்வதும் குறிப்பிடத் தக்கதாகும்.

தேமொழி

unread,
Aug 9, 2020, 2:45:52 PM8/9/20
to மின்தமிழ்
19. எல்லா நிலைகளிலும் சார்பின்றி வாழ எழுச்சி பெறுவோம்

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================

சென்றவாரம் என் கட்டுரையப் படித்தவுடன், என் நெருங்கிய உறவினர் திரு.மதனகோபால் எனக்கு எழுதிய குறிப்புரையை நான் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இளம் சிறார்களுக்குப் பெற்றோர்களுக்கும்அதாவது மழலையர் பள்ளி உயர்நிலை பள்ளி ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருவது கண்கூடு அதில் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலக்கவும் சிறு எடுத்துக்காட்டாக uniform முதல் rubber வரை ஆங்கிலம் பெருமளவில் தமிழில் எல்லா இடத்திலும் கலந்து உள்ளது ஆங்கிலச் சொற்களோடு இணைத்து மாணவர்கள் பேசிவருகிறார்கள்வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி ஆங்கிலச் சொற்கள் மிகப் பரவலாகப் பேசப் படுகிறது ஒரு எடுத்துக்காட்டு நாம் வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி பார்த்தேன் என்று கூறுவதைவிட டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்கிறோம் வங்கி காசோலையைக் கையொப்பம் விடுகிறேன் என்று சொல்ல மாட்டோம் cheque book sign என்றுதான் கூற முடிகிறது என் அம்மா கூட ஆங்கிலத்தில் pension வாங்க Bank இக் செல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள் தமிழில் இருந்த போதும் அன்றாட பேச்சு வழக்கில் ஆங்கிலத்திலேயே புலப்படுத்தும் போக்கு குறிப்பிடதக்கது அலுவலகத்தை நாமே சில நேரத்தில் ஆங்கிலத்தில் office என்றுதான் குறிப்பிட வேண்டியது உள்ளது நிலைமை இன்னும் மாறவில்லை என எண்ணிட வேண்டியுள்ளது.

இல்லங்களில் வழங்கிவரும் ஆங்கிலச் சொற்கள் அளவற்றன. காலை முதல் இரவுவரை மொழியோடு உறவாடும் மக்கள் தம் கருத்துகளைப் பிறர் புரிந்துகொண்டால் போதுமென்ற நிலையில் மொழிச் சிந்தனைக்கு உரிய இடமளிக்காது விடுகின்றனர். இதன் விளைவாக இல்லங்களிலும் அன்றாட வழக்கில் ஆங்கிலம் அரசோச்சுகின்றது.

ஆங்கிலச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும் பயன் படுத்துவதில், கற்றார்க்கும், பாமரர்க்கும் வேறுபாடுண்டு. கற்றோர் பயன்படுத்தும்போது, தாய்மொழியில் அச்சொற்களுக்கு இணையான சொற்கள் இருப்பதை அறிந்தும், பிற மொழிச்சொற்களையே பயன்படுத்துவர். ஆனால் பாமரர்கள் தாய்மொழியில் மிகுந்த அறிவுடையவர்கள் அல்லர். மொழியைப் பற்றியும், அதன் பயன்பாட்டைப் பற்றியும் போதிய தெளிவற்றவர்கள். ஒருவன் தப்பித்தான், ஓடிவிட்டான் என்பதை, 'ஜகா வாங்கினான்’ என்று கூறினாலே போதுமென்று எண்ணுபவர்கள். இவர்கள் வாழ்வில் மொழிச்செம்மைக்கு இடமில்லை. இதனால் பிறமொழிச் சொற்கள் இவர்களிடம் பெருமளவில் புழங்கத் தலைப்பட்டன என்றால், நகர மக்களின் தவறான சொற்புணர்ப்புச் செயன்மைகளே காரணம்.
தமிழில் அன்றாட வழக்கில் கலக்கும் ஆங்கிலச் சொற்களில் தொழில் நுட்பச் சொற்களும், வாணிகச் சொற்களும் மிகுந்த அளவில் இடம்பெறுகின்றன. ஆங்கிலத் தொழில் நுட்பங்களின் வரவாலும், வாணிகப் பொருள்களின் வரவாலும் இந்நிலை தோன்றுகிறது. கம் யூட்டர் என்னும் கணினி வரவாலும் இணைப்பாலும் குறைந்தது நூறு ஆங்கிலச் சொற்கள் நிலைபெறும். இக்காரணங்களையும் கடந்து தமிழ்ச்சொற்களை வாழ்விக்க வேண்டும். அதுவே மொழி உரிமை என்கிறார் மு.வ. மென்மை குறைந்த ஆடையாக இருந்தாலும் நம் நாட்டு ஆடையை உடுத்துவதே நாட்டுப்பற்று என்று அன்று உணர்ந்தோம். அதுபோலவே ஆங்கிலம் போல் திறம்பட எழுத முடியாவிட்டாலும், தமிழில் நடத்துவதே உரிமையுணர்ச்சிக்கு அடையாளம் என்று உணர வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.
ஆங்கிலச் சொற்களின் பட்டியல், ஆங்கிலம் செல்வாக்கால் ஊடுருவிக் கொண்டிருப்பதை மெய்ப்பிக்கிறது எனினும், நமக்குரிய மொழிச் சிந்தனை சீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் உய்த்துணர வழிகாட்டுகிறது.
இன்றைய நிலையில், தமிழர் பிற மொழிகளைப் பழித்துப் பேசியும் வெறுத்துப் பேசியும் ஆறுதல் அடைவதில் பயனில்லை. பிறரை வெறுப்பதில் உள்ள ஆர்வத்தில் ஒரு பாதியாவது நம்மவரை விரும்புவதில் உள்ளதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பிறமொழியைப் பழிப்பதில் உள்ள ஊக்கத்தில் கால்பங்காவது தம்மொழியைப் போற்றுவதில் உள்ளதா என்று கவனித்துக்கொள்ள வேண்டும்.
கடைத்தெரு முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழர்க்குத் தமிழ் மொழியில் பற்று உள்ளது என்பதற்குச் சான்றுகள் வேண்டும். “நான்கு பேர் கூடினால் தமிழ் பேசக் கூசுவது, தமிழில் கடிதம் எழுத நாணுவது தமிழைப் போதனை மொழியாகக் கொள்ளத் தயங்குவது ஆகிய இவற்றையே இன்று தமிழகம் காண்கிறது” என மு.வ. மொழியும் கருத்துகளின் வழி நமது மொழிச் சிந்தனையைச் செம்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம் என்பதை மறுக்க இயலாது; மறக்கவும் இயலாது. மொழிக்கலப்பு, மொழித்துய்மை பற்றி நாவலர் ச. சோமசுந்தரப் பாரதியார் கூறியுள்ள கருத்துகளும் நமது மொழிச் சிந்தனைக்குப் புதிய வழித்தடம் அமைப்பனவாக உள்ளன. வழுமலிந்து முடிவு ஒவ்வாக் கீழ்மக்கள் கொச்சைக் குழறலை மொழிநலம் விரும்புவோர் நல்ல தமிழெனக் கொள்ள இசையார். மாரிக்காலத்து நீரில் கத்தும் தவளை போலச் சந்தையில் தெருவில் மக்கள் பேசும் சழக்குரை எல்லாம் தமிழெனக் கொண்டால், அழகிய எழுத்தும், ஐந்து இலக்கணமும் நிரம்பிப் பழுத்த செந்தமிழ் பாழாய்ப் போய்விடும். பல பத்திரிகை வித்தகர்கள், செலாவணி செய்யும் புதிய மொழிநடை கால்முடமும், உடல் நோயும் காட்டுகிறது. அது போதாமல் இலக்கணத்தை எரித்துவிட்டு ஊரார் பேசுகிறபடி எழுது வதே நல்ல தமிழ் என்று சிலர் கூசாமல் கூறவும் கேட்கிறோம். இவர்கள், 'யார் பேசுகிறபடி எழுதவேண்டும் என விளக்குகிறார்கள் இல்லை. ஊர்தோறும் பேச்சு வேறுபடுகிறதே. ஓர் ஊரிலும் வகுப்புவாரியாக, தொழில்வாரியாக, இனவாரியாக உருவழிந்து, பல்வகை மொழிகள் உலாவுகின்றனவே ஒலி உருவும், வரி வடிவும் அற வேறுபட்ட எழுத்து களின் இயைபும், பயனும் அறியாமல் எல்லாம் குழம்பிக் கதம்ப நடை தொடுப்பதைக் காணுகிறோம். வல்லின ற கரத்தையும் சிறப்பு ‘ழ’ கரத்தையும் நாடாமல் நாடு அகற்றி, ‘ர கர ‘ள கரங்கட்கே ஊராண்மை தருபவர் பலர் ஆவர். ‘நாகரிக உலகில் எந்த மொழி யிலும் வழுமலியப் பேசும் வகுப்பார் உண்டு. ஆனால் அவர் பேச்சு எதுவும் எழுத்தாளர் கொள்ளமாட்டார். 'வலைச்சியர் புலை மொழி' (BILLINGS GATE) போன்ற கொச்சைமொழிகளை மேல்நாட்டார் இகழ்ந்து விலக்குவதை யாவரும் அறிவர். அம்மொழிமரபு அறிந்தோ அறியாமலோ கேட்போர் கேட்பதைக் கேட்டபடி கொள்வதே தமிழ் வளர்ப்பதாகும் எனத் துணியும் தமிழ்ப்புலமையை வியப்பதா நகைப்பதா என்பதைத் தமிழர்களே தேர்ந்து தெளியட்டும்.
ஆங்கிலம் முதலிய கலைச்செல்வம் நிறைந்த புதிய உயர் மொழி யிலுள்ள வளங்களையும் எழில்களையும் தமிழ்மகள் அடைந்து, புதிய பெருவாழ்வு பெற்று முன்னிலும் சிறந்தோங்கச் செய்வது நம் கடன். எனினும் அவ்வளங்களும் எழில்களும் நிரம்பத் ததும்பும் ஆங்கிலத்தைக்கூடக் கட்டாயப் பாடமாக வைத்திருப்பது தவறு.
இவ்வியலில் ஆங்கிலச்சொற்களின் பட்டியலிலிருந்து நாம் பின்வரும் கருத்துகளைப் பெறலாம்.
Ø ஆங்கிலச் சொற்கள், கல்வி, வாணிகம், தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் கலக்கின்றன.
Ø சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும், மக்கள் வழக்கில் ஆங்கிலச் சொற்களே நிலவி வருகின்றன. (எ.டு. கல்லூரி - College, பேருந்து - Bus, நிறுத்தம் - Stop.
Ø ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்படாமையால், அவ்வாங்கிலச் சொற்கள் வழக்கில் நீண்ட காலம் வழங்கப்பட்டு வருகின்றன. Umpire, Elastic, Enamel, Wire.
Ø சில ஆங்கிலச் சொற்களுக்கு உருவாக்கப்படும் தமிழ்ச்சொற்கள் வழக்கில் வருவதற்குக் கடினமாக இருப்பதாலும், அவ்வாறு வழக்கில் வருவதற்கு நீண்ட காலமாவதாலும் ஆங்கிலச் சொற்களே நீடித்து வருகின்றன. (எ.டு. Inchtape – விரற்கிடைவார், Agency – முகவாண்மை, Ice – பனிகம், Ice cream – பனிப்பாகு)
இவ்வியலின் முடிப்பாகச் சில கருத்துகளைத் தெள்ளிதின் உணரலாம்.
Ø ஆங்கில மொழிக்கலப்பு என்பது, ஆங்கில மொழியின் செல்வாக்கால் மட்டுமன்றித் தமிழ் மக்களின் ஆங்கில மோகத்தாலும் நிகழ்கிறது.
Ø தமிழகக் கல்வி முறையில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பேரிடம், தமிழ்வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.
Ø பிறமொழி எதிர்ப்பால் மட்டுமே தமிழின் வளர்ச்சி நிகழ்ந்து விடாது, பிறமொழியை எதிர்க்கும் நிலைகளிலும் களங்களிலும் தமிழை நிலைப்படுத்தி, வழக்கில் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Ø அறிவியல், தொழில் நுட்பங்கள் ஆங்கிலத்தின் வழியே நம் மொழிக்கு வரும்போது, அவற்றைத் தமிழ்ப்படுத்தி அறிமுகப் படுத்தவும், ஆளவும் முயல வேண்டும்.
Ø புதிய கலைச் சொல்லாக்கங்களும், மக்கள் சுணக்கமின்றி ஏற்கத் தக்க மொழிபெயர்ப்புகளும் பிறமொழிக் கலப்பைத் தடுக்க உதவி செய்வன. இம்முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
Ø மொழிக் கலப்பைத் தடுக்கத் தமிழில் தொன்மையில் வழங்கப்பட்டு, இன்று வழக்கிழந்து போயிருக்கும் அரிய சொற்களை மீண்டும் வழங்கத் தலைப்படல் வேண்டும்.
Ø உலக அறிவியல், பொருளாதார, வாணிக முன்னேற்றத்தில் நாமும் கலந்து பயன்பெறத் தக்க வகையில் தனித் தன்மையை இழக்காத பிறமொழியைப் பயன்கருதி மட்டும் ஏற்கும் நிலைக்கு நமது மொழிச் சிந்தனை செம்மை படுத்தப்படவேண்டும்.

தேமொழி

unread,
Aug 11, 2020, 11:15:39 PM8/11/20
to மின்தமிழ்
20. வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================

இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.
ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது பல சொற்களைக் கடன் வாங்கிக் கொள்ளும். பின்னது ஒரு சில சொற்களையே கடன் வாங்கும். வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஒரு சில மட்டும் இருத்தற்கும், தமிழில் வட சொற்கள் பல புகுந்தமைக்கும் காரணம் இதுவே.

இவ்வாறு படிப்படியாக நிகழும் மொழிக்கலப்பு, எழுத்து மொழியில் இடம்பெற நீண்ட காலமாகும். பேச்சு மொழியிலோ விரைவில் இடம் பற்றி வழக்கில் இருக்கும்.
இவ்வாறு பேச்சுமொழி வழக்கில் இருக்கும்போதே, தாய்மொழியில் தோன்றிய சொல்லாக்கத்தின் எதிர்ப்பால் பிறமொழிகள் மறைந்தும் போகும்.
‘ஜனம்’ - மக்கள், ‘ராஜா’ - அரசன், ‘அபேட்சகர்’ - வேட்பாளர், ‘ஓட்டு’ - வாக்கு, ‘ஓட்டர்’ - வாக்காளர், ‘விருக்ஷம்’ - மரம், ‘கேசம்’ - முடி.
மேற்குறிப்பிட்ட சொற்களில் வடமொழிச் சொற்கள், பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்படுத்தியதாலும், புதிய சொல்லாக்கங்களாலும் வழக்கொழிந்து விட்டதை அறியலாம்.
மொழிக்கலப்பு நிகழும் போது மக்களின் நம்பிக்கையின் வழியாகச் சென்று கலக்கும் பிற மொழிச் சொற்கள் நீண்ட காலம் உயிர்வாழ நேரிடுகிறது. இதே போன்று வாணிக வழியில், அறிவியல் வழியில் நுழையும் சொற்களையும் அகற்றுவது ஒரு மொழிக்குக் கடினமாகும். மொழிக் கலப்பு நிகழ்ந்த தமிழ் மொழியிலும், இவ்வாறே எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் பிற மொழிச் சொற்கள் கலக்க நேர்ந்துள்ளது.
இவை எழுத்து வழக்கில் குறைவாக இருப்பினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் பிறமொழிச் சொற்களை இவ்வியலில் ஆய்ந்தறியலாம்.

வடமொழி வழக்கு
------------------------------

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் செய்திகள் பலவற்றையும் தத்தம் தாய்மொழிகளில் எழுதிய சான்றோர்கள், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகவும், விரிவாகவும் குறிப்பிட வேண்டிய செய்திகள். இந்திய எல்லையில் அனைவருக்கும் பயன்படல் வேண்டுமென்ற கருத்தால் அவற்றை வடமொழியில் வரைந்தனர்.
மேலும் வானியல், சிற்பம் போன்றவற்றின் கலைச்சொற்கள் பலவும் வடமொழியிலேயே கொள்ளப்பட்டுத் தத்தம் மொழிகளுக்கு ஏற்பச் சில திரிபுகளுடன், இந்திய நாட்டில் பன்மொழி பேசும் பல்வேறு பகுதியினரின் தாய்மொழிகளிலும் ஏற்கப்பட்டன. இம்முறையில் வடமொழிச் சொற்கள் பல அப்படியேயும், சிறிது திரிந்தும், தமிழிலும் வழங்கப்பட்டன.
இன்று வழங்கும் விண்மீன்களின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும், வடமொழியிலிருந்து தமிழொலிக்கேற்பச் சிறிது திரித்தும், திரிக்காமலும் கொள்ளப்பட்டன.
இற்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் திகழும் தொல்காப்பியத்திலும், மாதப் பெயர்களும் விண்மீன்பெயர்களும் ஏற்கப்பட்டன என்று கருதுவாரும் உளர்.
சொல்லமைப்பிலும், சொற்றொடர் அமைவிலும் வடமொழியைப் பின்பற்றிய முறைகளும் உண்டென்றும் சிலர் எழுதினர். இவ்வாறு தொன்று தொட்டே வடமொழி தமிழின் மீது வல்லாண்மை செலுத்திக் கலப்பு நிகழ்த்தும் மொழியாக இருந்து வந்துள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றிருந்த போதிலும், வடமொழியின் வரவுக்கு வழிவகுத்தனர். வட மொழியின் வழியாகப் புகுத்தப்பட்ட சமயம், சோதிடம் போன்ற நம்பிக்கைகள் மன்னர்களுக்கு மகிழ்வூட்டும் கலைகளாக இருந்தன.
இத்துறைகளில் வல்ல பல வடமொழியாளர்களைத் தமிழ் மன்னர்கள் காத்து, அவர்கள் மொழி தமிழகத்தில் பரவிடவும் வழி வகுத்தனர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் நிகழ்ந்த தமிழ்க் காப்புப் போராட்டம் வடமொழிக்கலப்பைத் தடுக்க முயன்றது. இருப்பினும் மணிப்பிரவாள உருவில் வடமொழிக் கலப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது.
இந்நூற்றாண்டில் தோன்றிய திராவிட இயக்கம், தமிழ்மொழி, இனம், பண்பாடு, கலை ஆகியவை பிறமொழித் தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனப் பொங்கி எழுந்தது’.
இதன் விளைவாக மேலும் பிறமொழிக் கலப்பு நிலை தடுக்கப்பட்டது. இருப்பினும், அன்றாட வழக்கில் கலந்துவிட்ட வடமொழிச் சொற்கள் கடவுள் நம்பிக்கை வழிவந்தவையாகவும், சோதிடக்கலை வழிவந்தனவாகவும் இருந்தமையால், அவற்றை எளிதில் நீக்க இயலாத நிலை உள்ளது.
இவற்றை நல்லன எனக்கருதி மக்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக உள்ளது. மக்கள் ஏற்றுக் கொண்டமைக்கான காரணத்தைப் பேராசிரியர் இரா. இராகவையங்கார் ‘தமிழ்மொழியுள் ஆரியச் சொற்கள் நேரேயும் திரிந்தும் சிதைந்தும் மற்றைத் திசைச் சொற்களினும் மிகுதியாக வழங்கியதற்குக் காரணங்கள் அடுத்துப் பயின்ற திசைத் தொடர்பு மட்டுமல்லாது, அறிவு ஒற்றுமையும், மனக்கோட்பாட்டிற்குப் பெரிதும் ஏற்றது பற்றியும், எம்மொழியிலும் அதன் கண்ணுள்ள நல்லனவற்றையும் கொள்ளும் சிறந்த பெருநோக்கமும் ஆகுமென்று துணிவது தகும்’ எனக் குறிப்பிடுவதைக் கருத்தில் கொள்ளலாம்.

கடவுள், கோயில் தொடர்பாக இன்றும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் வடமொழிச் சொற்களைக் காண்போம்.
‘பிரகாரம்’, ‘பார்வதி’, ‘பூஜை’, ‘தீபாராதனை’, ‘புனஸ்காரம்’, ‘அங்கப் பிரதட்சணம்’, ‘புஷ்பம்’, ‘எதேஷ்டம்’, ‘உற்சவம்’, ‘மூலவர்’, ‘பிரபை’, ‘ஞானம்’, ‘நைவேத்தியம்’, ‘பிரசாதம்’, ‘ஈசுவரன்’, ‘பிரதிஷ்டை’, ‘பிரம்மா’, ‘பஞ்சலோகம்’, ‘விஷ்ணு’, ‘விக்ரகம்’, ‘லக்ஷ்மி’, ‘ஆத்மா’, ‘சரஸ்வதி’, ‘விபூதி’, ‘குங்குமம்’, ‘திதி’, ‘கலசம்’, ‘மகோத்ஸவம்’, ‘பஞ்சாமிர்தம்’, ‘கும்பாபிஷேகம்’, ‘சுபம்’, ‘விரதம்’, ‘கும்பம்’, ‘நவக்கிரகம்’, ‘பிரதிமை’, ‘சனீஸ்வரன்’, ‘சாஷ்டாங்கம்’, ‘தீர்த்தம்’, ‘நவலோகம்’, ‘ஜலம்’, ‘அலங்காரம்’, ‘அஷ்டம்’, ‘அர்த்தஜாம பூஜை’, ‘தூபம்’, ‘அந்திம பூஜை’, ‘தூப தீபம்’, ‘தீட்சிதர்’, ‘அர்ச்சகர்’, ‘பாகவதர்’, ‘அர்ச்சனை’, ‘தேவன்’, ‘அஷ்டமி’, ‘நவமி’ என மிகப்பல வடமொழிச் சொற்கள் இன்றும் அன்றாட வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன.
இவை மக்களின் இறை நம்பிக்கையைக் கால்கோளாகக் கொண்டு புகுத்தப்பட்டமையால், இன்னும் நீங்கா நிலையில் உள்ளன. சோதிடம் என்பது காலக்கணக்காகக் கருதப்பட்டாலும், இதனால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் மிகப்பலவாகும்.
‘ஜோசியம்’, ‘கிரகப்பிரவேசம்’, ‘ராகு’, ‘புத்தி’, ‘ஓரை’, ‘சகுனம்’, ‘சுக்கிரன்’, ‘அமாவாசை’, ‘கிருத்திகை’, ‘ஜென்மநட்சத்திரம்’, ‘பூராடம்’, ‘விருச்சிகம்’, ‘யோகம்’, ‘அபிஷேகம்’, ‘கஷ்டகாலம்’, ‘நட்சத்திரம்’, ‘திசை’, ‘லக்னம்’, ‘நிமித்தம்’, ‘திவசம்’, ‘பாட்டிமை’, ‘பஞ்சாங்கம்’, ‘போகம்’, ‘மகம்’, ‘தனுசு’, ‘சித்தம்’, ‘துலாம்’, ‘பஞ்சமிதிதி’, ‘ஜாதகம்’, ‘கிரகணம்’, ‘கேது’, ‘பலன்’, ‘விவாஹம்’, ‘ராசி’, ‘கேட்டை’, ‘அனுகூலம்’, ‘ஆயில்யம்’, ‘உத்திராடம்’, ‘மீனம்’, ‘துவாதசி’ இவ்வாறு சோதிடத் துறையால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் பலவாகும்.
இவையனைத்தும் மக்களின் சோதிட ஆர்வத்தைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் நுழைந்தவை.
திருமணத் தொடர்பாக வடசொற்கள் வருமாறு:-
‘கரணம்’, ‘சேவித்தல்’, ‘கங்கணம்’, ‘ஓமம்’, ‘அட்சதை’, ‘அருந்ததி’, ‘ஜானவாசம்’, ‘ஆசீர்வாதம்’, ‘மாங்கல்யம்’, ‘பிரகாரம்’, ‘விவாக சுபமுகூர்த்தம்’.
தமிழ் ஆண்டுகள் என்று பெருவழக்காகச் சொல்லப்படும் அறுபது ஆண்டுகளும், ஆண்டில் பன்னிரு மாதங்களும் வடமொழிச் சொற்களே. கிழமைகளாக வழங்கப்படுபவற்றுள்ளும் பெரும்பான்மையின வடமொழிச் சொற்களே.
அன்றாட வாழ்வில் இவற்றை வழங்காமல் நீக்குவது எளிதானதல்ல. நம்பிக்கை வழியாக மட்டுமின்றி, வடமொழியாளர் தொடர்பால் புகுந்த ஏராளமான சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
நகர்ப்புறங்களில் ஆங்கிலக் கலப்பு இருந்து வருவதால், வடமொழிக் கலப்புக் குறைகிறது. ஆங்கிலத்தின் வரவால் வடமொழி மறைவதில் தமிழுக்குப் பயன் விளையாது.
பிறமொழிகள் இரண்டும் கலப்பு நிகழ்த்தும் நிலையில்தான் தமிழின் அன்றாட வழக்கு இயங்கி வருகிறது என்பதைக் கருத வேண்டும்.
‘அக்ரகாரம்’, ‘அகடவிகடம்’, ‘அகந்தை’, ‘அகிம்ஸை’, ‘அங்கஹீனம்’, ‘அங்கீகாரம்’, ‘அசந்தர்ப்பம்’, ‘அசாதாரணம்’, ‘அசுரன்’, ‘அசெளக்கியம்’, ‘அட்டகாசம்’, ‘அத்தியாவசியம்’, ‘அதிசயம்’, ‘அதிபர்’, ‘அதோகதி’, ‘அந்திமம்’, ‘நாமம்’, ‘அநியாயம்’, ‘அப்பிராணி’, ‘அபத்தம்’, ‘அபிப்பிராயம்’, ‘அம்சம்’, ‘அமங்கலம்’, ‘அயோக்கியன்’, ‘அரிதாரம்’, ‘அவகாசம்’, ‘அவதாரம்’, ‘அவஸ்தை’, ‘அக்ரமம்’, ‘அகதி’, ‘அகஸ்மாத்து’, ‘அகிலம்’, ‘சேஷ்டை’, ‘அசடு’, ‘அனந்தகோடி’, ‘அசிங்கம்’, ‘அசுத்தம்’, ‘நமஸ்காரம்’, ‘அத்தாட்சி’, ‘தர்மம்’, ‘அதிபதி’, ‘அதிர்ஷ்டம்’, ‘அந்தரங்கம்’, ‘அந்நியன்’, ‘அநாமதேயன்’, ‘அநீதி’, ‘அபகரித்தல்’, ‘அபயம்’, ‘அபாண்டம்’, ‘அபிவிருத்தி’, ‘அம்பிகை’, ‘அமிர்தம்’, ‘அர்த்தபுஷ்டி’, ‘அலங்காரம்’, ‘அவசரம்’, ‘அவதானம்’, ‘அக்கினி’, ‘அக்கினிப் பிரவேசம்’, ‘அகாலம்’, ‘அகோரம்’, ‘வஸ்திரம்’, ‘சந்தர்ப்பம்’, ‘அசம்பாவிதம்’, ‘அஜீரணம்’, ‘செளக்கியம்’, ‘அட்சதை’, ‘அத்தியாயம்’, ‘அதர்மம்’, ‘சதிபதி’, ‘அதிருப்தி’, ‘அந்தஸ்து’, ‘அநாதை’, ‘அபிஷ்டு’, ‘அப்பாவி’, ‘அபசாரம்’, ‘அபராதம்’, ‘அபாயம்’, ‘அபூர்வம்’, ‘அம்புஜம்’, ‘அமோகம்’, ‘அர்த்தம்’, ‘அலட்சியம்’, ‘அவசியம்’, ‘அவலட்சணம்’ எனப்பல வடமொழிச் சொற்கள் அன்றாட வழக்கில் மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வருதலை அறியலாம்.
எனவே, தமிழில் கலந்த பிறமொழிச் சொற்களில் வடமொழியே முதன்முதலில் மிகுதியான சொற்களைக் கலந்தது . வடமொழியோடு நெருங்கிய தொடர்புடையன பிராகிருத மொழிகளாகும்.
தமிழும்,பிராகிருதமும் என்ற கட்டுரையில் ‘அக்கி’, ‘அத்தம்’, ‘இசை’, ‘உவச்சன்’, ‘ஊராண்மை’, ‘ஐயர்’, ‘ஓமாலிகை’, ‘கப்பம்’, ‘கண்ணன்’, ‘கலுழன்’, ‘காமம்’, ‘கோட்டி’, ‘சதுக்கம்’, ‘சிட்டன்’, ‘சுண்ணம்’, ‘தக்கினம்’, ‘தம்பலம்’, ‘தயிர்’, ‘தலைவர்’, ‘தானம்’, ‘திட்டி’, ‘துவை’, ‘தூசு’, ‘தொடி’, ‘நேயம்’, ‘படிமை’, ‘பள்ளி’, ‘பளிங்கு’, ‘பாயிரம்’, ‘பிசைமட்டம்’, ‘மயானம்’, ‘முத்து’, ‘மையம்’, ‘வயிரம்’, ‘விஞ்சை’ முதலிய சொற்களைப் பேராசிரியர் வையாபுரியார் பிராகிருதம் எனப் பட்டியலிட்டுள்ளார்.
வைதிக சமயத்தால் வடசொற்களும், சமண சமயத்தால் பிராகிருதச் சொற்களும், பெளத்த சமயத்தால் பாலி மொழிச் சொற்களும் பல கலந்தன என்றும் கூறினார்.

-முனைவர் .ஒளவை ந. அருள்.   தொடர்புக்கு: dr.n...@gmail.com

தேமொழி

unread,
Aug 28, 2020, 1:13:47 AM8/28/20
to மின்தமிழ்
21. தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================

சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி சிவம் அவர்களுடைய “மிக அருமையான, ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கட்டுரை அருள்.” என்னும் பாராட்டுரை குறிப்பிடத்தக்கது. அவ்வண்ணமே மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடுகின்ற தனியிதழான ‘திசையெட்டும்’ ஆசிரியர் பெருந்தகை திரு. குறிஞ்சிவேலன் அவர்களின் “இத்தனை சொற்களும் பிறமொழிகளிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளோம் அல்லது பயன்படுத்துகிறோம் என்று தமிழறிஞர்கள் சொன்னதை முனைவர் அருள் பட்டியலிட்டுள்ளார். இவற்றை விடுவிப்பதோ பயன்படுத்துவதோ என்பதை முடிவு செய்வது மக்களின் பேச்சிலும் எழுத்திலும்தான் உள்ளது. அவ்வளவு ஏன் படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மாலேயே இவற்றை விடுவிக்க முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்...” என்ற குறிப்புரை சிந்திக்கத் தூண்டுகிறது.

தெலுங்கு மொழிச்சொற்கள் வந்த வரலாறு:
தமிழ் தெலுங்குத் தொடர்பு, சங்க காலத்திலிருந்தே பழைமையானது. சங்க இலக்கியங்களில் திருப்பதிக் குன்றுகளை ஆண்ட சிற்றரசர்கள் தொடர்பான குறிப்புகள் வருகின்றன. பிற்காலச் சோழப் பேரரசர்கள் வெளியுறவுக் கொள்கையின் நிமித்தமாகத் தெலுங்கு மொழிபேசும் வேங்கியர்களுடன் திருமண உறவு கொண்டனர். தெலுங்குக் காப்பியப் புலவர்களில் முதல்வரான நன்னயப்பட்டரை ஆதரித்த மன்னர் இராசராசேந்திரன் முதலாம் இராசேந்திரனின் மருமகனாவார். பின்னர் இவர் குடும்பத்தில் தோன்றிய முதலாம் குலோத்துங்கன் பதினோராம் நூற்றாண்டில் சோழப் பேரரசனாகின்றான். இம்மன்னர்கள் அளித்த வாய்ப்பால் தெலுங்குச் சொற்கள் தமிழிற் கலந்தன. ‘அக்கடா’ முதலிய தெலுங்குச் சொற்கள் கம்பராமாயணத்தில் வருவதாகக் கூறுவர். தெலுங்கு மொழியில் வழங்கிய ஆபரணங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள், வேலைக்குப் பயன்படும் கருவிகள், சாதிப்பெயர்கள் ஆகியவை தொடர்பான சொற்கள் இவற்றின் தொடர்பால் தமிழில் கலக்கத் தொடங்கின. ‘இரளி’, ‘உப்புசம்’, ‘சளிப்பு’, ‘கலிங்கம்’, ‘கண்டி’, ‘கத்திரி’, ‘கடப்பாரை’, ‘ராயசம்’, ‘தரகரி, ‘சேந்திரவர்’, ‘கம்பத்துக்காரர்’, ‘குப்பம்’, ‘ரெட்டியார்’, ‘பத்தர்’, ‘கோமட்டி’, ‘ராஜா’, ‘கரிசை’, ‘அளவு’ முதலிய சொற்கள் தெலுங்கிலிருந்து வந்தவை. ‘அந்தரங்க வைபவம்’, ‘அட்டி’, ‘அண்ணு’, ‘இண்டிமாமா’, ‘ரவிக்கை’, ‘ராவடம்’, ‘ரேக்கு’, ‘லஞ்சம்’, ‘லாகிரி’, ‘உத்தி’, ‘உம்மச்சு’, ‘ஒட்டாரம்’, ‘கட்டடம்’, ‘கந்தை’, ‘கண்ணாவி’, ‘கபோதி’, ‘கம்பத்தம்’, ‘கம்பல்’, ‘கலப்படம்’, ‘கவுனி’, ‘காட்டம்’, ‘குப்பு’, ‘கெடுவு’, ‘கொப்பி’ (கும்பி), ‘கொலுசு’, ‘சந்தடி’, ‘சலவை’, ‘ஜயிப்பு’, ‘சிட்டிகை’, ‘சிமிளி’, ‘உருண்டை’, ‘சுங்கு’, ‘தெண்மை’, ‘சதை’, ‘சொக்கா’, ‘சொட்டு’, ‘சவுத்தி’, ‘த்ராபை’, ‘தடவை’, ‘திப்பி’, ‘திமிசு’, ‘தும்பு’, ‘தெப்பல்’ (அடி), ‘தெலுங்கு’, ‘தெட்ட’, ‘தேவாத்தி’ (வேட்டி), ‘நீச்சு’ (மீன்நாற்றம்), ‘பட்டறை’, ‘பண்டைப்பேச்சு’, ‘பலப்பம்’, ‘பவிசு’, ‘வாணலி’, ‘பால்மாறுதல்’, ‘பிருடை’, ‘பூஞ்சைக்காளம்’, ‘போல்’, ‘ஜப்பை’, ‘ஜாஸ்தி’, ‘சந்து’, ‘சுளுவு’ முதலிய சொற்களும் தெலுங்கில் இருந்து வந்தனவென்று கூறுகிறார் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். தெலுங்கு அதிகாரிகள் தம் ஆட்சியின் போது, அங்கெல்லாம் தெலுங்கு மட்டுமே விளங்குமாறு செய்தனர். அவர்கள் தாய்மொழிப் பற்று மிகுந்தவர்கள். தமிழர்கள் கடமையுணர்ச்சி குறைந்தவர்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கிற்று, சித்தூர் மாவட்டத்தில் பெருந்தொகையான மக்கள் தமிழ் பேசுவோராக இருந்தபோதே, மாவட்ட அரசியல் மொழி தெலுங்கு ஆயிற்று என பேராசிரியர் மு.வரதராசனார் குறிப்பிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம். தெலுங்கின் வரவால் தமிழகத்தின் ஊர்ப்பெயர்களிலும் தெலுங்குச் சொற்கள் இடம்பற்றின. பச்சூர், பழையனூர், புதூர், கட்காவூர், பழைய பேட்டை, கோமுட்டியூர், வாலாரிப்பட்டி - என வழங்கப்பட்ட பழைய தமிழ்ப் பெயர்கள் மாற்றம் பெற்றுப் பந்தார பள்ளி, அதனகவுணி, பல்லிகொண்ட, சிந்தனபல்லி, கொத்துரர், ஜயந்திபுரம், பய்யப்ப நாயனுபேட்டெ, நல்ல கதிரணபல்லி எனத் தெலுங்கு மொழியிலே ஊர்ப் பெயர்கள் மாற்றம் பெற்றுத் தமிழர்களால் பொருள் விளங்கிக் கொள்ளாமலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் கலந்துள்ள தெலுங்குச் சொற்களைக் காண்போம்.
செகண்டி - கோன்மணி, சேட்டை, சேனை, சோலி - கருமம், சொரு - உவர்ப்பு, டக்கு (வார்) - பதிப்படை, டமாரம் - முரசு, டேவணி - முன்பணம், தக்கழ - பொய், ததி - தகுந்த நேரம், தம்பி - தாமரை, தரகரி - தரகன், தறிபடுகு - நெட்டிழை, துண்டரிக்கம் - முகக்களை, துண்டை - துடுக்கன், துருசு - விரைவு, துலாபி - பகட்டுச் செலாவணி, தேலிக்கை - மென்மை, தொம்பரம் - பலருக்குச் சமைத்த ஊன், நவாது - வெண் சர்க்கரை, பவனி - உலாவரல், பிகுவு - இருக்கம், வலிவு பேட்டு - பட்டைக்கரை, சூடு மைதா - கள்மயக்கம், ரெப்பை - இரப்பை, லத்தி - சாணம், வெட்டை லாகிரி - மதுக்களிப்பு, ஜட்டி - மல்லர் அணியும் கவ்வுரி வகையுள் ஒன்று, சேகரம் - கூட்டம், சேதாரம், சோம்பு - பெருஞ்சீரகம், செளக்கம் - பண்டமலிவு, டக்கு - விகு, பிகு, டப்பை - மூங்கிற் பிளாச்சி, டாப்பு - பட்டி, டொங்கு - பொந்து, தபலை - மாழைக்குடம், தனை - ஆசை, தருசு - நெருங்கிய இழை, திப்பை - மேடு, துண்டன் - கொலைஞன், துத்து - பொய், துருதை - தினவு, துப்பிரதண்டி - சொற்படிகேளாள், தொடக்கம் - மிதித்துத் துவைக்கை, தோசிளி - இருவகைத்தவசம், பங்காரு - பொன், மலுவு - எடைக்கனம், பிசினாறி - கருமி, கஞ்சன், பொக்கிஷம் - பொருளறை, ரம்பம் - அரிவாள், லச்சி - குப்பைக்காரி, லம்பாடி - இலம்பாடியினம், திரிநன், வெளித்தி - ஒல்லி, ஜண்டை - இணை, ஜோடி, ஜல்லடை - சலிதட்டு, ஜலுப்பு, ஜாஸ்தி - மிகுதி.

மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு:
தமிழும் மலையாளமும் தாயும் மகளும் என்ற தொடர்புடையன. மலையாளத்தைத் தமிழின் உடன்பிறந்த தங்கை என்றே கருதுகிறார்கள் மொழியியலாளர்கள். மலையாள மொழியில் தொடக்க நிலையில் கருத்தறியாத் தமிழ்ச்சொற்கள் பலவும், உருத்திரிந்தன. சிலவும் வழங்கி வந்தன. இன்றும் மலையாள மொழி தமிழர்க்கும், தமிழ்மொழி மலையாளிகட்கும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடியனவாகவே உள்ளன என்பார் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. நாஞ்சில் நாடு (கன்னியாகுமரி மாவட்டம்) திருவாங்கூர் அரசின் கீழ் நீண்டகாலம் இருந்தமையும் இதற்குக் காரணம் எனலாம். தமிழில் கலந்த மலையாளச் சொற்கள் தமிழாகவே மாறிவிட்டவை என்பதால், அவற்றை வேறுபடுத்தி அறிவது சிக்கலானதாகும் என்றும், ‘சக்கை’, ‘சாயா’, ‘கஞ்சி’, ‘வஞ்சி’, ‘வெள்ளம்’, ‘அவியல்’, ‘கச்சவடம்’, ‘காலன்’, ‘கொச்சி’, ‘சொக்கன்’, ‘குரங்கு’, ‘தளவாய்’, ‘தேநீர்’, ‘நெரியல்’ போன்றவை மலையாளச் சொற்களே என்றும் பேராசிரியர் தெ.பொ.மீ. கருதுகின்றார். திராவிட மொழிகளுள் இடம் பற்றியும் இயல்பு பற்றியும் தமிழுக்கு மிக நெருக்கமாவது மலையாளமாகும். அதில் வடசொற்கள் அளவிறந்து கலந்துள்ளன என்று ஒப்பியலறிஞர் கால்டுவெல் கூறியுள்ள கருத்து, அதன் நூல்வழக்கைச் சார்ந்ததேயன்றி, உலக வழக்கைச் சார்ந்ததன்று. இன்றும் மலையாளப் பேச்சு வழக்கை நோக்கின், அது பெரிதும் வடசொற் கலப்பற்றதென்பது புலனாம். இற்றைத் தமிழில் வழங்கும் சில வடசொற்களும் ஆங்கிலச்சொற்களுக்கும் நேர் மலையாள மொழியில்தான் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில சொற்களைக் காண்போம்.
மைத்துனன் - அணியன், மத்தியானம் - மதியம், உச்சி, வருஷம் - ஆண்டு, கொல்லம் (ஏகர்), ஆரம்பம் - தொடக்கம், உபாத்தியாயர் - வாத்தியார், எழுத்தச்சன், அமாவாசை - காருவா, பூரணை - பவுர்மணி, வெளுத்தாவு, கறுத்தாவு - வெள்ளுவா
சோழ, பாண்டி நாடுகளில் வழக்கற்றுப் போன ஒரு சில சொல்வினைகள், சேர நாடாகிய மலையாள நாட்டிலேயே இன்று வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டு:
மலையாளம் (ஒருசொல்வினை) இற்றைத்தமிழ் (இருசொல்வினை)
கட்குன்னு, கக்குன்னு களவு செய்கிறான்
குலெக்குன்னு குலை தள்ளுகிறது
முருடுன்னு முருடாகின்றது
குழிக்குன்னு குழிதோண்டுகின்றான்
சேரநாட்டுத் தமிழின் சிறந்த சொல்வளம், மலையாளம் மொழியின் வாயிலாகவே இன்று அறியக் கிடக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஆழ்ச்ச - கிழமை, ஆழ்ச்சவட்டம் - வாரம், பகர்க்குக - படியெடுக்க, பையாணி - தசையைக் கொத்திப் பிடுங்கும் ஒருவகைப்பாம்பு, நொண்ணு - உள்வாய், முத்தாழம் (முற்றாலம்) - காலையுண்டி, அத்தாழம் (அற்றாலம்) - இராவுண்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதேபோல், ஆங்கிலச்சொல்லுக்கு நேரான சில தமிழ்ச்சொற்கள் (சேரநாடு) வருமாறு:-
பென் - தூவல், பாத்ரூம் - குளமுறி, டிராயர் (மேசை) - வலிப்பு, காம்பவுண்டு - பரம்பு, வேக்கன்சி - ஒழிவு, நோட்டு - குப்பாயம், வெராந்தா - கோலாயி.
உச்சி, ஆண்டு, தொடக்கம் முதலிய தென்சொற்கள் தமிழ்நாட்டு வழக்கிலும், மலையாள நாட்டிற்போல அத்துணைப் பெருவழக்காகவும் நாடு முழுமையும் வழங்குகின்றன. இற்றைத் தமிழ்நாட்டில் வழங்கும் சில தென்சொற்கட்டு எதிர்பாற்சொற்கள் இன்று மலையாள நாட்டு வழக்கிலேயே உள்ளன. எடுத்துக்காட்டு,
அச்சி(தாய் தமக்கை) - அச்சன்(தந்தை), சிறுக்கி - செறுக்கன்(சிறுக்கன்), தம்பிரான் - தம்பிராட்டி,
தொன்றுதொட்டுச் சேரநாட்டில் வழங்கி வரும் மீன் பெயர்கள், திசைச்சொல் முறையில் மலையாளத்தில் வழங்கும் தென் சொற்கள் மாபெருந்தொகையின,
எடுத்துக்காட்டாக, கயறு - ஏறு (ஏவல் வினை), கரிச்சல் - குடலை, குறுக்கன் - நரி (குள்ளநரி), கோளாம்பி - படிக்கம், பகரம் - பதில், பதிலாக, மேடி - வாங்கு, வெடிப்பாக்கு - துப்புரவாக்கு, வெளுத்தோடன் - அலக்குரான், வண்ணான், குட்ட - தீவட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மலையாளத்தில் வழங்கும் திசைச்சொற்களும் பெரும்பாலன சற்றே பொருள் திரிந்த தமிழ்ச்சொற்களே.
எடுத்துக்காட்டு
அதே - ஆம்
அடுக்கல் - பக்கம், கிட்ட இடம்
என்ற அடுக்கல் - என்னிடம்
ஒடுக்கம் - முடிவு, முடிவில்
களி - விளையாட்டு, களித்தாடு
குட்டி - பிள்ளை
தெற்று - தப்பு, பிழை
நேராக்க - செப்பனிடுக
செருமன் - கள்மன், களத்தடிமை
செறு - வயல்
வலிய - பெரிய,
வளரே - மிக
விடக்கு - கெட்ட
விடக்குகுட்டி - கெட்டபிள்ளை
கழியும் - முடியும்
செய்வான் கழியும் - செய்ய முடியும்
கள, களை - விடு,
வன்னுகள - வந்துவிடு
மதி - போதும் (போதிய அளவு)
சில தென்சொற்கள் பழம்பொருளிலேயே இன்றும் மலையாள நாட்டில் வழங்கி வருகின்றன.
எ.டு. கோயிலகம் - அரண்மனை
அம்பலம் - கோயில்
பொன்னம்பலம், வெள்ளியம்பலம், சிற்றம்பலம், பேரம்பலம் என்னும் வழக்குகளை நோக்குக.
‘வெயில் என் கிளவி மழையியல் நிலையும் என்னும் தொல்காப் பிய நூற்பாப்படி, வெயில் என்னும் நிலைமொழி அத்துச் சாரியை பெற்றுப் புணரும் புணர்ச்சியை, இன்று வெயிலத்துச் சென்று, ‘வெயிலகத்து போகருது’ என மலையாள நாட்டு வழக்கில்தான் காண்கின்றோம்.
‘பதிற்றுப்பத்து’ என்னும் புணர்மொழி பெயரோடொத்த முப்பத்திற்றுப்பத்து அம்பதிற்று நாலு முதலிய இற்றுச்சாரியைப் புணர்ச்சித் தொடர்மொழிகளும் இன்று மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன.
இவ்வாறு தமிழின் வேர்ச்சொற்களையும், வழக்குச் சொற்களையும் கொண்ட மொழியாக மலையாளம் விளங்குகின்றது. இதன் விளைவாக மலையாள வழக்குச் சொற்கள் தமிழில் கலக்கும் காலத்தில் அவை தமிழெனவே கருதும் நிலை ஏற்பட்டு, அச்சொற்கள் தமிழினின்றும் பிரித்தறிய முடியாதனவாகியுள்ளன.

- முனைவர் ஔவை ந. அருள், தொடர்புக்கு:  dr.n...@gmail.com
---

தேமொழி

unread,
Sep 8, 2020, 12:53:07 AM9/8/20
to மின்தமிழ்
22. கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================

சென்ற வாரம் வெளிவந்த 'தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு' கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் அவர்களுடைய நூலை, அதே பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் வெளியிடும் வாய்ப்புப் பெற்றேன். பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வித் துறையின் தலைமைப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும், பல்கலைக்கழகம் அவரை விடுவதாக இல்லை. மீளமீள அவருக்கு ஆய்வுப் பணிகளை ஒப்படைத்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களுக்கு படைத் தளபதியாக மிளிர்கிறார். தமிழ்நாட்டில் மலையின மக்களின் வாழ்வு வரலாறு பண்பாடு என்று யார் கேட்டாலும் அத்தலைப்பில் கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறார். முதுமுனைவர் சற்குணவதி அம்மையார் என்னைப் பாராட்டி, ''நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாறும் தெலுங்கு, மலையாளம்- தமிழுடன் கலந்துள்ள சொற்களும் படிப்பதற்கே மலைப்பாக உள்ளது நம்மை அறியாமலேயே பயன்படுத்துகிறோம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று கட்டுரை அருமை வாழ்த்துகள்" என்று எழுதிய வரிகள் என்னை மலைக்க வைத்தது. 

கன்னடம்:
சங்க இலக்கியங்களில் வரும் 'வடுகர்' என்னும் சொல் கன்னடர்களைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. யாப்பருங்கலக் காரிகை உரை, குணகாங்கேயம் என்கிற கன்னட யாப்பு நூலைக் குறிப்பிடுகிறது. அட்டிகை, இதா, எகத்தாளம் எட்டன், சமாளித்தல், சாடுமாலி, ஒரு சிறை, அரிசி, சொத்து, பட்டாக்கத்தி, பம்பு, மூங்கில், பீக்கலட்டம் முதலிய சொற்கள் கன்னடத்திருந்து வந்தவையே. டாசு மாலி (வீடு பெருக்கி), தண்டால், தப்பிலி, தவுக்கை (மாழைத்தட்டு), திகளர் (தமிழர்) ரகளை, ஜவுளி ஆகிய சொற்களும் தமிழில் கலந்துள்ள கன்னடச் சொற்களே. 

தமிழில் இன்றும் வழக்கில் உள்ள கருமாறி, கருமாறிப் பாய்ச்சல் ஆகிய சொற்கள் பழங்கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த வரலாறு, சுவையும் பயனும் அளிப்பதோடு, கன்னடம் தமிழில் கலந்த முறையையும் தெளிவாக்குகிறது செந்தமிழ்ச் செல்வியில் கூறப்பட்ட அவ்வரலாறு. இந்தச் சான்றுகளினாலே கருமாடம் என்னும் சொல் உண்டென்பதும், அதன் பொருள் மாடிவீடு என்பதும் நன்கு தெரிகின்றன. எனவே, நக்கீரர் தம்முடைய நெடுநல்வாடையில், கருவொடு பெயரிய இல் என்னும் தொடருக்கு அவர் கருதிய சொல் கருமாடம் அல்லது கருமாடி என்பது ஐயமறத் தெரிவாகத் தெரிகிறது. கருமாடம் என்னும் சொல் பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வழக்கொழிந்து விட்டபடியால், மிகப் பிற்காலத்தவரான நச்சினார்கினியர், இச்சொல்லுக்குக் கர்ப்பக் கிரகம் என்ற தவறான பொருத்தமற்ற உரையை எழுதி விட்டார் என்பதும் அறிந்தோம். 

பழந்தமிழகத்தில் வழங்கி வந்த கருமாடம் அல்லது கருமாடி என்னும் சொல் பிற்காலத்தில் மறைந்து விட்டாலும், திராவிட இன மொழியாகிய கன்னடத்தில் இச்சொல் இலக்கிய நூல்களில் இன்றும் நின்று நிலவுகின்றது. கருமாடி என்னும் சொல் தமிழ்நாட்டில் இலக்கிய வழக்கில் மறைந்து போனாலும், இச்சொல் பேச்சு வழக்கில் நெடுங்காலம் வழங்கி வந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் மட்டும் இருந்தபடியால், இச்சொல் சிதைந்து வழங்கிற்று. 

கருமாடி என்பது பேச்சுவழக்கில் கருமாறி என்று திரிந்து விட்டது. சில ஊர்களில் கருமாறியம்மன் என்னும் பெயருள்ள காளி (கொற்றவை) கோயில்கள் உள்ளன. கருமாடியம்மன் என்பதே கருமாறியம்மன் என்று திரிந்து வழங்குகிறது என்பது தெளிவு, பெரிய மாடமாக அதாவது பெரிய கோயிலாக அமைந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் என்பது இதன் கருத்து அல்லது கருமாடமாகிய அரண்மனையில் அமைந்த அம்மன் கோயில் என்பது இதன் கருத்தாகும். கருமாடி என்னும் சொல் கருமாறி என்று பிற்காலத்தில் திரிந்து விட்டது என்பதை அறிகிறோம். 

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் குளக்கரையின் மேல் ஒரு கருமாடி உண்டு, அது, மூன்று நிலையுள்ள மாடக்கோயில், அக்கருமாடியில் இப்போது நின்றான், இருந்தான், கிடந்தான் என்னும் பெயருள்ள மூன்று திருமால் திருவுருவங்கள் எழுந்தருளியுள்ளன. முற்காலத்தில் இந்தக் கருமாடியில் மூன்று புத்த உருவங்கள் நின்றான் இருந்தான் கிடந்தான் என்னும் அமைப்பில் இருந்தன என்பதைப் புராணங்களால் அறிகிறோம். இந்தக் கருமாடி பிற்காலத்தில் உருமாறி என்று திரித்து வழங்கப்பட்டது. இடைக்காலத்தில், உற்சவக் காலத்தில் இந்தக் கருமாடியின் மேல் தளத்திலிருந்து குளத்தில் குதிப்பது ஒரு காட்சியாக நடைபெற்றது. அக்காட்சியை மக்கள் திரண்டு வந்து கண்டனர். அதற்குக் கருமாறிப் பாய்ச்சல் என்பது பெயர். கருமாடிப் பாய்ச்சல் என்பதுதான் கருமாறிப் பாய்ச்சல் என்று தவறாக வழங்கப்பட்டது. 

பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்தவரான காளமேகப்புலவர் கருமாறிப் பாய்ச்சலைக் கூறுகிறார் அவர் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்த ஆறு சிறப்புச் செய்திகளை அவர் கூறுகிறார். அவர் கூறிய செய்யுள் இது. 
"அப்பா குமரகோட்டக் கீரை செவிலிமேட் 
டுப் பாகற்காய், பருத்திக் குளநீர் - செப்புவா 
சற் காற்று, கம்பத் தடியில் தவம், கருமா 
றிப் பாய்ச்சல் யார்க்கும் இனிது." 
- (தனிப்பாடல்) 

காளமேகப் புலவர் காலத்தில் காஞ்சிபுரக் குமரகோட்டத்துக் கொல்லையில் விளைந்த கீரையும், செவிலிமேட்டுக் கொல்லையில் விளைந்த பாகற்காயும் சுவையாக இருந்தனவாம். இப்போதும் மண் வளம் குன்றாமல் அவை சுவையாக இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. பருத்திக்குளம் இப்போது பாழடைந்துள்ளது. ஆகையால், அதன் நீர் இனிமையாக இருக்கமுடியாது. செப்புவாசல் என்பது செப்பினால் செய்யப்பட்ட கோபுரவாயில், அங்குச் சென்று தங்கினால் காற்று இனிமையாக வீசுமாம். அந்தச் செப்புவாசல் இப்போது இல்லை. கம்பத்தடியில் தவம் என்பது திருவேகம்பத்தில் உமையம்மையார் தவம் செய்தார் என்பது புராணக்கதை இந்தக் காட்சியை இன்றும் ஏகாம்பர ஈசுவரர் கோயிலில் காணலாம். கருமாறிப் பாய்ச்சல் என்பது, காமாட்சியம்மன் குளக்கரைமேல் உள்ள கருமாடி என்னும் மாடக் கோயிலின் உச்சியிலிருந்து குளத்தில் குதித்துப் பாய்வது, கருமாடிப் பாய்ச்சல் என்பது காளமேகப்புலவர் காலத்தில் கருமாறிப் பாய்ச்சல் என்று வழங்கப்பட்டது. 

கருமாடிப் பாய்ச்சலைக் கருமாறிப் பாய்ச்சல் என்று நாலாயிரத் திவ்யப்பிரபந்த வியாக்கியானமும் கூறுகிறது. கருமாடி என்னும் சொல்வழக்கு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் மாறுபட்டுக் கருமாறி என்று வழங்கியதை இதனால் அறிகிறோம். 

இவ்வாறு கன்னட மொழியும் தமிழில் கலப்பு நிகழ்த்திய மொழியே என்பதை அறியலாம்.

உருது: 
தென்னிந்தியாவில் இசுலாமியர் ஆண்டபோது, தெக்காணி உரு அவர்களால் ஓங்கியது. இதன் விளைவாக உருதுச் சொற்கள் மிகப்பலவாகத் தமிழில் கலந்தன. இன்றும் தமிழில் வழக்கிலுள்ள உருதுச் சொற்கள் மிகப் பலவாகும். 181 உருதுச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டுள்ளேன். 
உருது - தமிழ் (சொற்பட்டியல் 181) 
கந்திரி (இரவலன்), கசர் (கொசுறு), குலாபு (நீர்மலர்), குலாம் (அடிமை), குந்தா (துமுக்கியடி), குரிசி (நாற்காலி), குஜிலி (அந்திக்கடை), சக்ரத்து (இலவசம்), சப்பிராசி (வேலையாள்), சுனாவணி (வேண்டுகோள் படிக்கை), சூத்தி (செருப்பு), செரு (துண்டுநிலம்), செலாவணி (பொருண்மாற்று), சேந்தி (கள்), சேர்பந்து (சாட்டை), சோகாரிகன் (வேட்டைக்காரன்), சோராவரி (கொள்ளை), செளடால் (டப்பாசு), டாணா (காவலிடம்), தகலுப்பு (ஏமாற்றுகை), தண்டை (சொந்தரை), தப்புத் தண்டா (குற்றம்), தமாம் (முழுவதும்), தமுக்கு (வார்ப்பறை), தர்கா (பள்ளிவாயில்), தர்பீத்து (பயிற்சி), தர்மா (ஊதியம்), தர்முஸ்தாஜர் (உட்குத்தகைக்காரன்), தரத்தூது (முயற்சி), தரப்பு (பக்கம்), தராசு (துலாக் கோல்), தரீப்பு (தீர்மானம்), தரோபஸ்து (முழுவதும்), தலாக் (மனைவிக்கு), சிறாயத்து (குச்சி), சுபேதார் (படையதிமான்), சூர்மா (கண்மை), செண்டா (கொடி), சேடை (நீர்க்கட்டு), சேம்பா (சளிநோய்), சோக்கு (பகட்டாரம்), சோட்டா (தடிக்கம்பு), சோல்னா (தொங்குபை), டக்கர் (குழப்பம்), டபேதார், டாபர் (கூட்டுபவன்), தண்டா (சண்டை), தண்டோரா (பறையறிவிப்பு), தபால் (அஞ்சல்), தமாஷ் (வேடிக்கை), தயார் (அணியம்), தர்ணா (மறியற்போராட்டம்), தர்மா (அறமன்றம்), தர்ஜமை (மொழிபெயர்ப்பு), தரப்தார் (கீழ்ப்பணிஞன்), தரா (வகை), தரி (நன்செய்நிலம்), தரோகா (பொய்), தலப்பு (ஊதியம்), தலாயத்து (ஏவலன்), தலால் (தரகன்), தாலவி (உசாவல்), தவுஜி (ஓய்வூதியம்), தஜ்வீஸ் (தீர்ப்பு), தஸ்தா (24 தாள்கள் கொண்ட தொகுதி), தஸ்தாவேஜூ (உரிமைச் சான்றாவணம்), தஸ்து (தாண்டிய இருப்புத் தொகை), தாக்கலா (கணக்கிற்பதிகை), தலாலி (தரகு), தவுடு (படையெடுப்பு), தனியா (அரைக்கச்சை), தஸ்கத் (கையெழுத்து), தஸ்துர் (வழக்கம்), தாக்கல் (குறிப்பீடு, அறிக்கை), தாக்கீது (உத்தரவு), தாசில்தார் (வட்டாட்சியர்), தாதி (முறையீட்டாளன்), தாபிதா (பட்டாடை), தபேதார் (சாரியன், பின்னடையன்), தமாஷ் (நேர்ப்பகிர்வு), தாயத்து (சுருள்தகடு), தாரிப்பு (மதிப்பு), தாரோகா (ஏவல் தலைவன்), தாலுக்கா (வட்டம்), தாளா (ஒப்பு), திக்குறு (புனமுருங்கை), திண்டேல் (கப்பல் கண்காணி), தில்பசந்து (உயரொட்டுமா), திவான் (அரசிறையதிகாரி), தீன் (மதம்), துனியா (நாடு), துபாஷ் (இருமொழிவல்லான்), மொழியெர்ப்பாளன், தும்பால் (கொடை), துரஸ்து (தூய்மை), தாசில் (வட்டாட்சி), தாத்து (முறையீடு), தாதுபிராது (அறிகுறி), தாபே (பின்பற்றி), தஹசீல் (நிலவரித்தண்டல்), தாம் (விலை), தாமேஷா (ஈவு), தாயி (முறையீட்டாளன்), தாரிக் (நாள்), தாலாப்பு (குளம்), தாவா (வேண்டுகை), தாஜா (புதியது), திகர் (வேறு), திம்மாக்கு (வீண்பெருமை), திவால் (பணகொடி), தினிசு (பொருள்வகை), தீன்தார் (அழிவு), துபாரா (இருமுறை), துராய் (முத்துத்தலையணி), தேக்சா (குடுவி, குடக்கலம்), பிராது (முறையீடு), பீடி (இலைச்சுருட்டு), புகார் (பெருங்கூச்சல், முறையீடு), பில்லை (தலைவல்லை), புதினா (ஈயெச்சக்கீரை), பூரி (மரப்பூதி, பூதி), பேசரி (மூக்கொட்டி), பேட்டி (நேருரை), பேமானி (மானமிலி), பேஷ் (மிகநன்று), பைசா (காசு), போதை (வெறிமயக்கம்), மசூதி (பள்ளிவாயில்), பூந்தி (பொடிக்கோளி), பேக்கு (மடையன்), பேட்டா (படிப்பயணம்), பேடி (விலங்கு), பேஜார் (சோர்வு), பைசல் (தீர்வு), போணி (முதன்மாறு), மகால் (அரண்மனை), மண்டி (பெருவிற்பகம்), மசோதா (சட்டமுதல் முந்தாவணம்), மத்தாப்பு (தீப்பூ), மாகாணம் (மாநிலம்), மார்வாரி (வட்டியீட்டு), மிராசுதார் (முகமையன்), மைசூர்ப்பாகு (கண்டப்பாகு), மைனா (நாகண வாய்ப்புள்), மெளசு (கவர்ச்சி), ரப்பு (இழையோட்டுகை), ரேக்கு (ஒள்ளிதழ், பூவிதழ்), லத்தி (குறுந்தடி), லாடம் (குளம்பணி), லோலாக்கு (தொங்கணி), வசூல் (தொகுத்தல், தண்டல்), வாய்தா (தவணை), விலாவரி (முழுவிளக்கம்), ஜரூர் (விரைவு, கடிது), மல் (பெல்லி), மாஞ்சா (ஆடிப்பொடிப்பயன்), மாஜி (முந்தின), முண்டா (தோள்), மைதா (மைதாமா), மோஸ்தர் (எழிற்பாங்கு), ரகம் (வகை), ராட்டை (இராட்டினம்), ருசு, ருஜூ (மெய்ப்பிப்பு), ரேக்ளா (ஓரியனுர்தி), லாகு (தாங்குதல்), லோட்டா (நீர்ச்செப்பு), வகையறா (முதலியன, பிற), வாபஸ் (திரும்பப்பெறல்), வாரிசு (மரபுரிமையன்), ஜமின்தார் (நிலக்கிழார்), ஜல்தி (விரைவு), ஜிம்கானா (பொதுவிளையாட்டிடம்), ஜிகினா (ஒண்தகடு), ஜீரா (தீங்கூழ்).  

- முனைவர் ஔவை ந. அருள்,தொடர்புக்கு dr.n...@gmail.com
---

தேமொழி

unread,
Sep 9, 2020, 7:26:20 PM9/9/20
to மின்தமிழ்


23. அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================

சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம் சங்கரநாராயணன் அவர்கள் என்னை வாழ்த்தியது என்னுடைய வாழ்வின் பெரும்பேறாகும். பேராசிரியர் சங்கரநாராயணன் சைவத் திருமுறைகள், தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், பல சங்க இலக்கியப் பாடல்கள், முழுமையாக ஒற்றை வரியிலேயே திருக்குறள், பாரதியார், பாவேந்தர் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் மட்டுமில்லை, அண்மையில் நீங்கள் யார் எதை எழுதியிருந்தாலும், செழுமையான ஆங்கிலத்தில், மொழியாக்கம் செய்யும் வல்லமை படைத்தவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதாளர், எண்ணற்ற மாணவர்களை உருவாக்கிய பேராசிரியப் பெருந்தகை முனைவர் சங்கர நாராயணனின் பாராட்டு வரிகள் என்னை மேலும் நெகிழ்விக்கிறது. அவர் வாழ்த்திய வரிகள் பின்வருமாறு:- 

"அன்புள்ள அருள். நீங்கள் தினச்செய்தியில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளை நான் அச்செடுத்து வரிக்கு வரி படித்து வருகிறேன். சென்றவாரம் நீங்கள் எழுதிய கட்டுரை நுட்பமான கட்டுரையாகும். மிகவும் பயனுள்ள கட்டுரை. தமிழோடு இரண்டறக் கலந்த வேற்றுமொழிச்சொற்களை முற்றிலும் தவிர்த்து தமிழைத் தூய்மையாக்குவதென்பது இமைப்பொழுதில் நிகழக்கூடியதன்று. காலம் அதனை நிறைவேற்றும். ஆனால், அனைத்துத் தமிழ்ச் சொற்களையும், அதில் கலந்துள்ள வேற்றுமொழிச் சொற்களையும் உள்ளடக்கி, ஒவ்வொரு சொற்களின் தனிச்சிறப்புகளையும் விவரித்து, அச்சொற்களுக்கு வேற்றுமொழியில் வழங்கும் பொருளையும் உள்ளடக்கி பேரகரமுதலி ஒன்றை உருவாக்குவதே காலத்தின் தேவையாகும் (இத்துடன், தமிழ் ஒலிக்குறிப்பு அகராதியையும், சிறப்பு ஒலி வடிவங்களையும் கருதிப் பார்க்கலாம்). இதற்கென பேரகரமுதலி வல்லுநர்களைக் கொண்ட குழுவொன்றையும் நாம் உருவாக்கலாம். ஒரேசொல்லில் இரண்டு வேர்ச்சொற்கள் இடம்பெற்றிருப்பது தமிழுக்கே வாய்த்த தனிச்சிறப்பாகும். மொழிகள் ஒன்றோடொன்று கலக்கும் இயல்பினவாகும். அவ்வாறே முரண்பட்ட பேச்சுவழக்கைக் கையாளும் திறன்பட்டனவாகும்.

அரபு: 
முகமதியரின் சமய மொழியாக அரபுமொழி திகழ்ந்தது. திருக்குரான் மிளிர்ந்ததும் மலர்ந்ததும் இம்மொழியில்தான் என்பது நாம் அறிந்தது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இசுலாமியப் பெருமக்கள் தமிழில் செய்யுளிலும் உரை நடையிலும் நூல்கள் எழுதி வருகின்றனர். பல அரேபியப் பெயர்களும் சொற்களும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. 

தமிழில் ஏறத்தாழ 61 சொற்கள் தமிழாகவே இப்போது படர்ந்திருப்பதை இச்சொற்களின் வாயிலாக அறியலாம். அல்வா, இலாக்கா, சுபேதார், புகார், சுல்தான், கல்மானா, சுன்னத்து, சேப்பு, சைத்தான், தக்சீர், தகத்து, தகரார், தகவல், தகாதா, தாக்கீது, தசரிப்பு, தணிக்கை, தத்தாரி, தப்சீல், தப்தில், தபளா, தபா, தவாவத்து, தமகு, தவில், தாவாதார், தினார், துனியா, தைக்கா, நக்தி, நகத், நிக்கா, நகல், பக்கிரி, பலானவன், பாக்கி, மக்கர், மகசூல், மராமத்து, மவுஸ், மிட்டாய், முகாம், முரப்பா, முலாம், முனிசீப்பு, முன்ஷி, முஸ்திப்பு, மொபஸில், ரத்து, லங்காடி, லாயம், வக்கீல், வஜா (நிலவரித் தள்ளுபடி), ஜப்தி (கைப்பற்றல்), ஜபர்தஸ்து (வல்லந்தம்), ஜமாய்த்தல் (திறம்பட முடித்தல்), ஜவாப் (விடை, மறுமொழி), ஜப்பா (குப்பாயம்), ஜில்லா (மாவட்டம்), ஜேப்படி (பைப்பறி), ஜேப்பி (சட்டைப்பை). மேலே அடிக்கோடிடப்பட்ட சொற்களை உற்றுப்பார்த்தால் தமிழ்ச்சொற்கள்தான் இவையென்று பட்டிமன்றமே நடத்தலாம். இந்தச்சொற்கள் அரபுச் சொற்கள் என்று சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை. எவ்வளவு ஆழமாக, அகலமாக, நீளமாக அரபுச் சொற்கள் நம்மிடையே படர்ந்து, தொடர்ந்து, வளர்ந்து தமிழ்ச் சொல்லாகவே மாறியிருக்கிறது என்பதைப் பார்த்து மொழியியலாளர்கள் வியந்து நிற்கிறார்கள். 

பாரசீகம்: 
இந்திச் சொற்கள் உருதுமொழி வழியாகவும் பாரசீக வழியாகவும் தமிழில் படர்ந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார் பேராசிரியர் திலகம் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். மாலிக்காபூரின் படையெடுப்புகளுக்குப்பின் மதுரையில் நாற்பது ஆண்டுகள் சுல்தானியர் ஆட்சி நடைபெற்றதும் பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்தமைக்குக் காரணமாகும். தமிழில் கலந்துள்ள பாரசீகச் சொற்களைப் பற்றி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெரும் சிந்தனையாளர் இந்திய நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் மூதறிஞர் இராஜாஜி நிகழ்த்திய ஆய்வு இங்கு எண்ணத்தக்கது. “ஒரு பாஷையில் அந்நிய மொழிகள் வந்து சேருவதற்குப் பல காரணங்கள் உண்டு. அது ஒரு தாழ்வாகாது. மேன்மையுமன்று. இந்துஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய பாஷைகளில் அரபி, பாரசீக மொழிகள் ஏராளமாகக் கலந்திருப்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், தமிழிலுங்கூட அரபு, பாரசீக மொழிகள் இல்லாமலில்லை.

மிராசுதார் உலகத்தில் அடிபடும் சொற்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கிஸ்தி, மகசூல், வசூல், ஜப்தி, ஜாரி, அசல், பாக்கி, ஜாமீன், ரசீது, வக்கீல், தாவா, தாக்கல், ஜமீன், மிராசு, பசலி, மாமுல் இவையெல்லாம் அராபி அல்லது பாரசீகச் சொற்கள்தானெனினும், அராபியே அதிகமாகக் கலந்துள்ளது. இப்படித்தான் வீடுகளில் உரையாடல் நடக்கிறது. 

வசந்தன் ஆபிஸிலிருந்து வந்தான். வந்ததும் தலையிலிருந்து சரிகை உருமாலையை எடுத்து, மெதுவாக மேஜைமேல் வைத்து விட்டுச் சோம்பேறி நாற்காலியில் கால் நீட்டி உட்கார்ந்து மனைவியைக் கூப்பிட்டு காமு நல்ல காபி போடுவாயா? முதல்தரமாக இருக்க வேண்டும். எவ்வளவு ஜல்தியில் முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என்றான். 

காப்பி அராபிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. கூடவே அதன் அராபியப் பெயரும் வந்தது. இது இயற்கை., ஆனால், ஜல்தி என்ற அராபிய மொழி எதற்கு? 

இதைப்பேச்சில் கலப்பதில் தமிழருக்கு ஒரு தனி மகிழ்ச்சி, “சரிகை” பாரசீகச் சொல். “சரி” என்பது தமிழில் சரிகையாயிற்று. உருமலை என்பது பாரசீகம், 'மாலை'க்கும் 'உருமாலை'க்கும் சம்பந்தமில்லை. 'ருமால்' என்ற பாரசீகச் சொல்லின் திரிபு அது. வடநாட்டில் 'ருமால்' என்றால், கைக்குட்டை அதாவது முகம் துடைக்கும் துணி என்று பொருள், தமிழ், தெலுங்கு கன்னட நாடுகளில் கைத்துண்டைத் தலையில் கட்டிய காரணத்தால், 'உருமால்' என்பது தலைப்பாகையாயிற்று. 

‘டோபி’ என்றால் இந்துஸ்தானி என்றும், 'குல்லாய்' என்பது நல்ல தமிழ் என்றும் சிலர் எண்ணலாம். ஆனால் 'குல்லா’யும் பாரசீகச் சொல்லே, ‘மேஜை‘ என்பது பாரசீகச் சொல்லேயாகும். 'முதல்தரமான காப்பி' என்பதில் ‘தரம்’ என்பது உண்மையில் தமிழன்று. நீங்கள் இப்படி அவசரப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். காப்பி தயாராக வைத்திருக்கிறேன். பேஷ்! அப்படியல்லவோ இருக்கவேண்டும் வாழ்க்கைத் துணைவி! 

பேஷ், சபாஷ், வகையறா போன்ற மகிழ்ச்சிக் குறிப்புகள் பாரசீகத்திலிருந்து தமிழருக்குக் கிடைக்காமலிருந்திருந்தால், பாட்டுக் கச்சேரிகள் தமிழ்நாட்டில் எவ்வாறு இச்சொற்களிலில்லாமல் நடந்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வகையறா என்பதற்கும், வகை என்ற தமிழ்ச் சொல்லுக்கும் ஒரு தொடர்புமில்லை. வகையறா என்பது சுத்த பாரசீகச் சொல்லாகும். அதிலுள்ள ககரம் நெஞ்சிலிருந்து வரவேண்டும். கச்சேரியைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. 

தயார் என்பது சுத்த அராபியச் சொல்லாகும். சாப்பாடு தயார். திருமணத்திற்கு எல்லா சமையற் சாமான்களும் தயாராகிவிட்டனவா? அவன் எதற்கும் தயார், என்றெல்லாம் பல வீடுகளில் பேச்சு நடக்கும்போது, அராபியச் சொல் ஒன்று எவ்வளவு நுணுக்கமாக தமிழில் படர்ந்திருக்கிறது என்பதை நோக்குங்கால், சொற்கலப்பின் சிறப்பு தெரிய வருகிறது. 

வசந்தன் நிமிர்ந்து உட்கார்ந்து, பேனாவை நாசூக்காக வாயில் வைத்து, மனைவியைப் பார்த்த வாக்காகக் காப்பியை உறிஞ்சினான். 

‘சுமாராக இருக்கிறதா?’, என்றாள் மனைவி. ‘கொஞ்சம் சர்க்கரை ஜாஸ்தி’ என்றான் வசந்தன். நேற்று இவ்வளவேதான் போட்டேன். கம்மி என்றீர்களே? நேற்று காப்பிப் பொடி ஜாஸ்தியாக இருந்திருக்கலாம். அதனால் சர்க்கரையை எடுத்துக்காட்டவில்லை. சரி இனி எல்லாம் தராசில் நிறுத்துத்தான் நான் சமையல் வேலை செய்ய வேண்டும். குஸ்திக்கு வரவேண்டாம், அம்மே கேட்டதற்குப் பதில் சொன்னேன். 

‘குஸ்தி’ பாரசீகச் சொல் என்பது வெளிப்படை. ஜாஸ்தி, கம்மி, தராசு, நாசூக் எல்லாம் பாரசீகச் சொற்களே. ‘ஜாஸ்தி’ என்பது மொகலாய மராட்டிய ஆட்சியில் நிலத்தீர்வை, ஜமாபந்தி மொழிகளுடன் வந்திருக்கவேண்டும். 

‘ஜ்யாமிதி’ என்பது பாரசீகச் சொல்லின் சுருங்கிய உருவம். ‘சுமார்’ என்ற சாதாரண மொழியும் ஒரு சுத்த பாரசீகச் சொல்லாகும். ‘பதில்’ என்பதும் நல்ல அராபியச் சொல்லாகும், தமிழன்று. பெருமக்களே இதற்கென்ன பதில் சொல்லப் போகிறீர்கள். தோற்றத்திலும் பயன்பாட்டிலும் ‘சுமார்’ என்பது ‘ஏறக்குறைய’ என்பதைத் தோற்கடிக்கிறது. ‘பதில்’ என்பதும் அவ்வாறே ‘விடை’ என்பதைத் தோற்கடிக்கும். 

‘கதர்க்கடையில் புதுத் தினுசு நிறைய வந்திருக்கிறதாம் போய்ப் பார்க்கலாம், நீங்களும் வாருங்கள். அப்படியே கலாய்க்காரனிடம் கொடுத்திருக்கும் பாத்திரச் சாமான்களையும் வாங்கி வரலாம்’ .,‘ஒரு மாதத்தில் எத்தனை தபா கலாய் பூசுவது? மண் பாத்திரமே உபயோகித்தால் என்ன? உடம்புக்கும் கூட அது நல்லது என்கிறார்கள்’. 

‘அப்படியே செய்யலாம், நீங்களும் ஆபீசில் காகிதத்திற்குப் பதில் பனை ஓலையையே உபயோகித்து வரலாம்’. ‘ரகம்’ என்பது அரபி மொழி. மோஸ்தர் என்பதும் அவ்வாறே அன்னியமொழி. 

ஆனால், ‘தினுசு’ என்பது தமிழ் என்று சிலர் எண்ணலாம். இது தவறு. ‘ஜினுசு’ என்றால் ஓர் அராபி வியாபார மொழியின் தமிழ்த் திரிபு. ஜினுசு என்றால் வியாபாரச் சரக்குகள். பட்டு ஜினுசு கம்பளி ஜினுசுகள் தானிய ஜினுசுகள் என்றும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமாகப் பண்டங்களை வகை வகையாகப் பிரித்து வைத்திருக்கும் முறையில் இம்மொழியின் உபயோகம். அதுவே தினுசு என்றாயிற்று. அதிலிருந்து அவன் பேச்சு ஒரு அலாதி தினுசு, இது புதுத் தினுசு மீசை என்றெல்லாம் விற்பனைக்கு அமைக்கப்படா விஷயங்களைப் பற்றியும் இம்மொழியின் பிரயோகம் நடைபெற்று வருகிறது. 

‘கலாயம்’ என்பது அராபியச் சொல்லாகும். தங்கம், வெள்ளி முதலிய நாகரிகப் பூச்சுக்கு ‘முலாம் பூசுவது’ என்பதும், அராபிய மொழிச் சொல்லாகும். ‘சாமான்’ என்பது பாரசீகச் சொல்லாகும். மகர ஒற்றும் னகர ஒற்றும் மொழியின் ஈற்றில் வந்து, தமிழ் வடிவமாகப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. ‘காகிதம்’ என்பது பாரசீகச் சொல். ‘காகஸ்’ என்பது இந்துஸ்தானியச் சொல் என்பார்கள். 

‘கடுதாசி’ என்றாலும் அந்நிய மொழியிலிருந்து தப்பமாட்டோம். அது அராபியச் சொல்லான ‘கிட்தாஸ்’ என்பதன் திரிபு. 

மலையாளத்தில் அராபி மொழிச்சொற்களின் சேர்க்கை அதிகமானதால்ல், ‘கலதாஸி’ என்பது மலையாளத்தில் அதிகமாகப் புழங்கும் சொல்லாகும். 

“எங்கள் அம்மா கல்சட்டியில் குழம்பு செய்வாள்; அதன் ருசியே அலாதி”. 

“அம்மா எது செய்தாலும் உங்களுக்கு நன்றாகவிருக்கும். நான் கல்சட்டியன்று. பொன்சட்டியில் செய்தாலும்கூட உங்களுக்குப் பிடிக்காது”. மன்னிக்க வேண்டும். நான் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். 

'வாபஸ்' என்பது பாரசீகச் சொல், 'அலாதி' என்பதும் அராபியச் சொல். இவை எவ்வாறு தமிழில் வந்து சேர்ந்தன என்று அராபி அறிஞர் ஒருவர் மிகவும் வியந்தார். அண்ணன் பங்கும், என் பங்கும் அலாதி என்றெல்லாம் பேச்சில் சாதாரணமாக வருகிறது. 

     ஆசாமி பரவாயில்லை. கெட்டிக்காரர். 
     இனாமாகக் கொடுத்தாலும் வேண்டாம். 
     நீ என்ன அவனுக்குச் சிபாரிசு பேசுகிறாய். 
     கடன் வாங்கின ஆசாமிகளில் பாதிப்பேர் பராரி. 
     இரண்டு மாதத்திற்குள் பைசல். 

இந்தச் செருப்புக்கு யாரும் வாரிசு இல்லை போலிருக்கிறது இத்தகைய செந்தமிழ்ப் பேச்சில், ஆசாமி, பரவா, இனாம், சிபாரிசு, பராரி, பைசல், வாரிசு எல்லாம் அராபி அல்லது பாரசீகம். 

அராபி மொழியை ஏன் பயன்படுத்தக் கூடாது? சமசுகிருதம் மட்டும் உயர்ந்த மொழியோ? 

அப்படி யாரும் சொல்லவில்லை. எந்த மொழியானாலும் சரிதான்; வழக்கத்தில் வந்து, தமிழ் வடிவம் பெற்று அனைவரும் பொருள் அறிந்த வார்த்தையாயிருந்தால், அதைப் பொருந்திய இடத்தில் பயன்படுத்துவதில் யாதொரு பிசகும் இல்லை. வைதிகர்கள் கூட தடைசொல்ல மாட்டார்கள். 

தமிழிற் கலந்த பாரசீகச் சொற்கள்:
காக்கி, கிஸ்தி, சுவான்தார் (உரிமையன்), செஞ்சி (போர், போரகம்), சொளதாகிரி (குதிரை வாணிகன்), டகர்பாச்சி (ஏமாற்று), டப்தர் (ஆவணக்கட்டு), டவாலி, (தோட்கச்சை), டாகு (புள்ளி), தக்கியா (இரவலர் இல்லம்), தகா (ஏமாற்று), தீவாணம் (அரசாட்சி), தீவானம் (பித்து), துருஸ்து (பழுதுபார்க்கை), நமூனா (சான்றாவணம்), நாஸ்தா (சிற்றுண்டி), பஜார் (கடைத்தெரு), பிஸ்தா, மஜா, மைதானம், மைதுனம், மோர்சிங்கு, ரசீது, ரஸ்தா, லகான், லங்கடா, லுங்கி, வஸ்தாது, ஜமீன், ஜரிசை, ஜோர், ஷாமியானா.

தேமொழி

unread,
Sep 11, 2020, 11:16:10 PM9/11/20
to மின்தமிழ்

24. பாரசீகம் மற்றும் பிறநாட்டு மொழிச்சொற்கள் தமிழில் கலந்த வரலாறு 

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================

என் அருமைத்தம்பி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரான பரதனும், என்னுடைய மைத்துனர் புகழ்வாய்ந்த மென்பொறியாளர் தங்கவேலு இராமலிங்கம் என்கிற சக்தி ஆகிய இருவரும் அடிக்கடி என்னிடம் சொல்லுவது, எந்தத் தகவலையோ, தரவையோ, கணக்கையோ, மருத்துவ, பணிக் கோப்புகளையோ ஐந்து நிமிடத்திற்குள் கணினியிலிருந்து மீள எடுப்பதில் தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டுமென்று. அங்ஙனம் இல்லையென்றால், கணினிப் பயன்பாட்டில் நீங்கள் வளரவேயில்லை என்பது பொருளாகும் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். இன்றைய இளைஞர் உலக இப்பொருண்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோளாகும். 

தினச்செய்தி இதழில் நான் தொடர்ந்து வரைந்து வரும் தொடர் கட்டுரைகளையும், எந்தையார் எழுதிவரும் தொடர் கட்டுரைகளையும் மிக நுட்பமாக எண்ணுடனும், தேதியுடனும் ஒரே சுட்டியில் காத்து வரும் என் தோழி அமெரிக்காவைச் சார்ந்த ஜோதி எஸ். தேமொழியை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். 

தேமொழி ஓக்லஹோமா மாநில அரசில் திட்ட ஆய்வாளராக (Program Analyst) பணியாற்றியவர். தன்னார்வலராக முன்னர் ‘வல்லமை’ இதழின் துணை ஆசிரியராகவும், தற்பொழுது ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ பன்னாட்டு அமைப்பின் “மின்தமிழ்மேடை” காலாண்டு இதழின் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டு வருவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் செயலாளராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் கூகுள் மின்தமிழ் குழுமத்தின் நெறியாளராகவும் செயற்படுகிறார். 

கடந்த ஒன்பது ஆண்டுகளாக திண்ணை, வல்லமை, கீற்று, சிறகு போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளும்; ஆய்விதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருவதும், தமிழகம் மற்றும் இலங்கையைச் சார்ந்த பழந்தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரையையோ, தொகுப்பையோ அவர்களின் ஒளிப்படத்தையோ, நான் வினவியவுடன் உடனுக்குடன் மின்னஞ்சலில் அனுப்புகிற தகைமையும், அவருடைய தலைமைக் குணத்திற்குப் புகழ்ச் சிறகுகளாகும். 

பாரசீக மொழி:
தில்லி சுல்தான்கள் காலம் முதல், முகலாயர்கள் காலம் வரை நாடெங்கும் பாரசீக மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. நீதி நிருவாகத்திலும், ஆட்சியிலும் பாரசீக மொழியே இருந்தது. அரசுப் பணியில் இருந்த இந்துக்கள், இந்தி மொழியைப் பயன்படுத்தினர். இந்தியாவிலுள்ள பல அரசுகள் மாமன்னர் அக்பரின் ஆணையினால் அரசின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் பாரசீக மொழியிலேயே கணக்குகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

ஆங்கிலம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து நிலையாக அமரும்வரை பாரசீக மொழிச் சொற்கள்தான் அரசு நிருவாகத்தில் கோலோச்சியது. 
பாரசீகம் -  
தமிழில் கலந்த பல பாரசீகச்சொற்கள் இன்றும் வழக்கிலுள்ளன. 
1) அஜ்மாஷ் - ஆய்வு செய்தல், பயிரடைப்பு 
2) கம்மி - குறைவு 
3) குமாஸ்தா -எழுத்தர் 
4) கொத்தவால் - காவல்முறை அலுவலர் ஆணையாளர் 
5) சராசரி - நிரல் 
6) சிரஸ்தார் - அலுவலக மேலாளர் 
7) தர்காஸ்து -தரிசு நிலம் 
8) பந்தோபஸ்து - காப்புச் செய்தல் 
9) பினாமி -இரவல் பெயர் 
10) ரசீது - பற்றுச்சீட்டு 
11) ஜமீன் - நிலம் 
12) டபேதார் -அலுவலக உதவியாளர் 
13) டவாலி -கச்சை 
14) தஸ்தாவேஜி - ஆவணம் 
15) பிராது -குற்ற முறையீடு, குறையீடு 
16) காபந்து -அக்கறையுடன் கூடிய பாதுகாப்பு 
17) சிப்பந்தி -பணியாளர் 
18) யாதஸ்து -எழுத்தாலான குறிப்பாணை 
19) ரோந்து -சுற்றிவரல் 
20) காகிதம் -தாள் 
21) சிப்பாய் -படைவீரன் 
22) பஜார் - கடைத்தெரு 
23) துப்பாக்கி - சுடும் கருவி 
24) பாரா - காவல் 
25) சந்தா - தவணைப்பணம் 
26) நங்கூரம் -ஆதாரம், நிலைக்கச் செய் 
27) அந்தஸ்து - நிலை பொருள் 
28) சிபாரிசு -பரிந்துரை 
29) சுமார் - பரவாயில்லை 
30) தயார் - ஆயத்தம் 
31) தராசு - துலாக்கோல் 
32) ஜல்தி - விரைவு 
33) சடுதி - விரைவு 
34) செலான் -செலுத்துச்சீட்டு 
35) பட்டா - நில உரிமை ஆவணம் 
36) மிட்டா -நிலக்கிழார் 
37) தண்டோரா - ஒலி எழுப்பி அறிவித்தல் 
38) தமுக்கு -ஒலி எழுப்பி அறிவித்தல் 
39) திவால் -முறிவு 
40) பஞ்சாயத்து - ஊராட்சி 
41) புகார் - முறையீடு 
42) பட்டுவாடா - வழங்கல், ஊதியம் வழங்கல் 
43) பேட்டி -நேர்காணல் 
44) உண்டியல் - சிறு பணப்பெட்டி 
45) வரா - குறிவு 
46) லத்தி - தடி 
47) வசூல் - தண்டல் 
48) இஸ்திரி -பெட்டி போடல் 
49) செலாவணி - நாணயம் 
50) பட்டியல் -அட்டவணை 

51) பாலம் -இணைப்பு மேடை 
52) ஜோடனை - அலங்கரித்தல் 
53) வாரித -மரபுரிமை 
54) வாய்தா -தள்ளிப்போய் 
55) ஒப்தி - கைப்பற்றல் 
56) ஒவாமு - மறுமொழி 
57) ஜமாபந்தி - வருவாய்த் தீர்வாயம் 
58) ஜாமீன் - பிணையம் 
59) ஜாஸ்தி - அதிகம் 
60) மகஜர் - மனு, விண்ணப்பம் 
61) அசல் - முதல் 
62) அத்து - எல்லை 
63) அமுல் - நடைமுறைப்படுத்தல் 
64) அநாமத்து - ஒப்படைத்த பொருள் 
65) அயன் -அதைரியம் 
66) ஆசான் -ஆசிரியன் 
67) ஆப்காரி -மது உற்பத்தி விற்பனை வரி 
68) ஆஜர்பட்டி - வருகைப்பட்டி 
69) ஆபத்து -இடர், பேரிடர் 
70) இனாம்தார் - மானிய நிலத்துக்குரியவர் 
71) இருகால் -செலுத்துகை 
72) உசூர் - மாவட்டம் 
73) கலால் -சாராயம் 
74) கஜானா -கருவூலம் 
75) காயம் -நிலையான 
76) காஜி - நீதிபதி 
77) கிஸ்தி -தீர்வை 
78) குலாம் -அடிமை 
79) கைது - சிறையீடு 
80) சரகம் - வட்டாரம் 
81) சரத்து -நிபந்தனை 
82) சராப்பு -காசுக்கடைக் கருவூல உதவியாளர், பணம் அளிப்பவர் 
83) ஜாப்தா - பட்டியல் 
84) ஜாரி - சேர்ப்பித்தல் 
85) ஜில்லா - மாவட்டம் 
86) தனக்கை - கணக்குச் சரிபார்த்தல் 
87) தர்ஜமா - மொழி பெயர்த்தல் 
88) தாக்கீது - குறிப்பாணை 
89) தபா - காலம் 
90) திவான் - பிரதம அமைச்சர் 
91) தோபா - கப்பம் 
92) நமூனா - படிவம் 
93) நகல் - படி 
94) பசலி - வருவாய்த்துறை ஆண்டு வேளாண்மை ஆண்டு 
95) மராமத்து - பழுதுபார்த்தல் 
96) மஹால் - மாளிகை 
97) ருஜி - மெய்ப்பித்தல் 
98) மராத - நிலக்கிழார் 
99) மகசூல் - விளைச்சல் 
100) முகலம் - தந்தல் 

101) முச்சலிகா - உடன்படிக்கை 
102) ரயத்து - குடியானவன் 
103) ரயத்துவாரி - நிலத்தீர்வை 
104) ரொக்கம் - பணம் 
105) லாயக்கு - தகுதி 
106) அம்பாரம் - குவியல் 
107) அலாதி - தனி 
108) ஆப்காரி - மதுவரி 
109) கரம் - சூடு, காரம் 
110) சாவி - பதர் 
111) சிப்பந்தி - பணியாள் 
112) ஜமீன்தார் -நிலக்கிழார் 
113) பிராது -குறையீடு 
114) பூரா - முழுவதும் 
115) மனு - விண்ணப்பம் 
116) மனுதாரர் - விண்ணப்பதாரர் 
117) ராஜனாமா - பணிவிலகல் 
118) சிபாரிசு - பரிந்துரை 

பிற மொழிகள்: 
தமிழகமும் இலங்கையும் கொண்டிருந்த தொடக்கக் கால உறவால் சிங்களச் சொற்கள் தமிழில் இடம் பெற்றுள்ளன. முருங்கை, ஈழம் என்ற இலங்கைச் சொற்கள் பழைய உரையாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளன. 

தக்கோலி, அருமணவன், கிடாரவன் முதலிய தாய்லாந்துச் சொற்கள் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளன. 

கிடங்கு, கிட்டங்கி என இன்றும் தமிழில் வழங்கப்படும் சொற்கள் மலாய்ச் சொல்லான ‘கடாங்’ என்பதிலிருந்து உருப்பெற்றுத் தமிழில் கலந்தவை. இம்மொழியிலிருந்து ‘சாம்பிராணி’ என்னும் சொல் தமிழில் வழங்கப்படுகிறது.

‘சொங்கு’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் ஜாவானியச் சொல்லிலிருந்து வந்ததாகும். 

படகு வகையைச் சேர்ந்த ‘சம்பான்’ என்ற சொல்லும் பெரிய மண்கலத்தைக் குறிக்கும். காங்கு என்ற சொல்லும், பீங்கான் என்ற சொல்லும் சீன மொழியிலிருந்து வந்தவையாகும். 

‘ரோஜா’ என்னும் மலர்ச்சொல் இலத்தீன் மொழிக்குரியது எனக் கூறுகிறது அயற்சொல் அகராதி. 

‘கொய்யா’ என்னும் தமிழ்ச்சொல் பிரேசில் நாட்டுக்குரியது. 

‘கக்கூஸ்’, ‘துட்டு’ என்னும் சொற்கள் டச்சு மொழியில் இருந்து வந்து தமிழிற் கலந்தவை. 

கடுதாசி, கிராதி, கொரடா, கோப்பை, சங்கடம், சப்பாத்து, செருப்பு சாவி, திராவி, துவாலை, பாதிரி, மேசை, சன்னல் என்பவை தமிழில் வழங்கப்படும் போர்த்துகீசியச் சொற்களாகும். 

‘மிச்சம்’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் பாலி மொழியைச் சார்ந்தது. கபே, ரோந்து, லாந்தர் என்று தமிழில் வழங்கப்படும் சொற்கள் பிரெஞ்சு மொழியைச் சார்ந்தவை. 

‘ரிக்ஷா’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் சப்பானிய மொழியைச் சார்ந்தது. 

மேற்குறித்த சிங்களம், மலாய், தாய், ஜாவானிய, சீன, லத்தீன், பிரேசில், டச்சு, போர்த்துகீயம், பாலி, பிரெஞ்சு போன்ற பிறமொழிக் கலப்புச் சொற்ககளிலிருந்து பெறப்படும் முடிவுகளாவன:- 
1. ஆட்சிக் செல்வாக்கும், வாணிகத் தொடர்பும் மிகுதியாகப் பெற்றிருந்த வடமொழி, இந்தி, உருது போன்ற மொழிகள் தமிழில் மிகுதியாகக் கலந்துள்ளன. 
2. மொழிக் கலப்பால் தமிழில் கலந்த பிறமொழிச்சொற்கள் மக்களின் கல்வி, நாகரிகம், இவற்றிற்கேற்ப வும், நகரம் கிராமம் என்ற பாகுபாட்டிற்கேற்பவும் வழக்கில் உள்ளவை களாக மாற்றம் பெற்றுள்ளன. 
3. ஆட்சிச் செல்வாக்கு, வாணிகத் தொடர்பு, மக்களின் நம்பிக்கைகள் இவற்றைக் கால்கோள்களாகக் கொண்டு தமிழில் புகுந்த பிறமொழிச் சொற்கள் நீண்டகாலம் அன்றாட வழக்கில் இருந்து வருகின்றன. 
4. நாளடைவில் கலப்பால் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் இன்று வழக்கிழந்து மறைந்துள்ளன. எடுத்துக்காட்டு - தும்மா (பிரெஞ்சு) - பாடை, திவரம் (மராத்தி) - நாடு. அபாண்டம், கச்சாயம், காகிதம், காசாண்டி, காமாண்டி, கில்லாடி, குண்டான், கெண்டி, கேசரி, மற்றும் கோகம்பரி போன்ற சொற்களும் தமிழில் கலந்த மராத்தி மொழிச் சொற்களேயாகும். மராத்திய மொழியைப் பற்றி இன்னொரு சிறப்புக்கூறு என்னவென்றால், அருட்தந்தை தாமஸ் ஸ்டீஃபன் 1615-ஆம் ஆண்டு, கொங்கணி மற்றும் போர்த்துக்கீசிய மொழிச் சொற்களைக் கொண்டு ‘கிறித்து புராணத்தை’ மராத்திய வரிவடிவத்தில் இயற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. கொங்கணி மொழிக்கு எழுத்து வரிவடிவம் என்று ஒன்றுமில்லாத சூழலில், மராத்தியம், கன்னடம், மலையாளம், தேவநாகரி மற்றும் உரோம வரிவடிவங்களை ஏற்றுக் கொள்கிறது. பலர் தங்கள் தாய்மொழியின் புகழை எடுத்துரைப்பதை பல நிகழ்வுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். ஆங்கில மேனாட்டறிஞர்கள் புகழ்ந்துரைப்பதையும் கண்டு நாம் பெருமிதம் அடைந்திருக்கிறோம். ஆனால், மராத்திய மொழியைப் பற்றி அருட்தந்தை தாமஸ் ஸ்டீபன் 1580-ஆம் ஆண்டுகளில், சொன்ன வரிகள் பொன்வரிகளாக மிளிர்கின்றன. 
      “கற்களில் ஒளிரும் இரத்தினமாக 
      இரத்தினங்களில் மின்னும் மாணிக்கமாக 
      மலர்களில் மணம் கமழும் மல்லிகையாக 
      நறுமணங்களில் மணக்கும் கஸ்தூரியாக 
      பறவைகளில் ஆடும் கலாப மயிலாக 
      விண்மீன்கள் மத்தியில் கண்ணைக் கவரும் நட்சத்திர ஒளிவெள்ளமாக       மொழிக்குடும்பங்கள் மத்தியில் சிங்க நிகர் மராத்திய மொழி தகத்தகாயமாக ஒளிர்கிறது."

      ” Excellence of the Marati tongue
      Like a jewel among pebbles 
      Like a sapphire among jewels 
      Like the jasmine among blossoms 
      the musk among perfumes 
      the peacock among birds 
      the zodiac among the stars 
      is Marati among languages."

5. தமிழில் உருவாகும் புதிய சொல்லாக்கங்களைப் பிறமொழிக் கலப்பால் வந்து வழங்கப்படும் சொற்களின் வழக்கை நீக்குகிறது. 
வளரும்... 

- முனைவர் ஔவை ந. அருள், தொடர்புக்கு dr.n...@gmail.com
---

தேமொழி

unread,
Sep 18, 2020, 5:14:29 AM9/18/20
to மின்தமிழ்
25. இந்துத்தானியம், இந்தி மொழிச் சொற்கள் தமிழில் பங்குகொண்ட வரலாறு

- முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

        பெருமக்களே! கடந்த 24 வாரங்களாக நான் எழுதிவரும் மொழியியல் கட்டுரை பெரும் வரவேற்புப் பெற்று பலர் பல வினாக்களை எனக்கு மின்னஞ்சலிலும், கருத்துகளை தொலைபேசியிலும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

        அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். ஐந்தாம் வகுப்பு பயிலும்போதே என்னுடைய கணக்காசிரியர் திருமதி இராஜலட்சுமி அம்மையார், நான் சரியாகக் கணக்குப் பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை என்பதை என்னிடம் சுட்டிக்காட்டினாலும், அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் என் தம்பி பரதனிடம், “உன் அண்ணன் அருளுக்கு சுத்தமாகக் கணக்கு வரவில்லை. நீயாவது உன் பெற்றோரிடம் சொல்லி இக்குறையைக் களைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தம்பி என்னிடம் சிரித்துக் கொண்டு, “நான் சொல்லியா தெரியப் போவது. பெற்றோர்கள் அறியாததா இது!” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.

        துணிந்து நானும் வாராத கணக்குப் பாடத்தை உடும்புப் பிடிபோல் பிடித்துக் கொண்டு ஆறாவது முதல் பத்தாவது வகுப்பு வரை, சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்தவ ஆடவர் மேனிலைப் பள்ளியில் பயின்றேன். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பையும் மேலும் துணிந்து கணக்கை முதன்மைப் பாடமாக எடுத்துக் கொண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை (M3) வகுப்பில் பயின்றேன். Algebra, Trigonometry, Calculus, Integral Calculus போன்ற கணக்குப் பாடச் சுழலில் திக்குமுக்காடி எழ முடியாமல் தத்தளித்தேன். இன்றுவரை பல இரவுகளில் இக்கணக்குப் பாடங்கள் என் கனவில் வந்து உறுத்தும்.

        1985-ஆம் ஆண்டு, சனவரி, பிப்ரவரி திங்களில், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், என்னைப் பல வழிகளில், கணக்கைப் புரிய வைக்க வேண்டுமென்று அரும்பாடு பட்ட என் பள்ளியின் கணக்காசிரியர் பெருந்தகை சௌந்தரராசன் என்னிடம், தனி நேர்வாகக் கேட்ட ஒரு வினாவிற்குப் பதில் அன்றைக்குத் தெரியவில்லை. ஆனால், முப்பதாண்டுகள் கழித்து, மீண்டும் மீண்டும் என்னை அக்கேள்வி நினைக்கத் தூண்டியது என்றால், என் கணக்காசிரியர் பெருந்தகை சௌந்தர ராசனின் சிறப்பை என்னென்று சொல்வேன்! என்னுடைய இலக்கியப் படிப்பிற்கும் வளர்ச்சிக்கும் திரு. சௌந்தர ராசன்தான் மூல விதையாவார். என்றும் என் பணிவான வணக்கம் அவருக்கு உரித்தாகுக. அவ்வினா என்னவென்றால், “அருள்! பொதுத் தேர்வு முடிந்த பிறகு நீ என்ன படிக்கப் போகிறாய்? நீ என்ன இளங்கலை தமிழிலக்கியம் சேரப் போகிறாயா?” என்பதுதான்.

        பொதுத்தேர்வு முடிவுகள் வந்து வெற்றிபெற்று பச்சையப்பன் கல்லூரியில் இளம் அறிவியல் வேதியியல் பயில அனுமதிக் கடிதமும், மயிலையிலுள்ள விவேகானந்தர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியத்திற்கு அனுமதிக் கடிதமும், தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் புலத்திற்கு வைப்புத் தொகையுடன் சிறப்புக் கட்டணம் கட்ட வேண்டிய கடித அனுமதியும் கிடைத்தது. கணிதம் மற்றும் அறிவியல் சுழலில் அகப்பட வேண்டாம் என்றெண்ணி, பொறியியல் கல்லூரியையும், பச்சையப்பன் கல்லூரியையும் நானாகவே தவிர்த்து விட்டேன்.

        என் தாயார், மருத்துவமாமணி தாரா நடராசனும், என் அக்கா திருமதி சுதா நலங்கிள்ளியும், பலமுறை வேண்டிவேண்டி என்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலம் பயிலுமாறு நெறிப்படுத்தினார்கள். உயர்கல்வி, நல்லொழுக்கம், அறச்சிந்தனை, ஈகையுணர்வு விவேகானந்தர் கல்லூரியில் கிடைக்கும் என்று உறுதி கூறினார்கள். ஆயிரம் முறை கேட்டுக் கேட்டும் இளங்கன்று பயமறியாது என்ற துடுக்கு நெஞ்சத்துடன் யாவரும் திடுக்கிடும் வண்ணம், அந்த அனுமதிக் கடிதத்தையும் புறந்தள்ளினேன்.

        எங்கும் அனுமதி கிடைக்காமல், சூலைத் திங்களும் சென்று கொண்டிருக்கிறது. அச்சூழலில் எந்தையாரின் ஆணைக்கிணங்க, அவரின் நேர்முக உதவியாளர் முனைவர் கண்ணன் (பதிப்பாசிரியர், சென்னை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்) மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் விண்ணப்பம் வாங்கி, நிறைவு செய்து ஒரே நாளில் என்னை அக்கல்லூரியில் சேர்த்து விட்டார்.

        மிகவியப்பான செய்தியென்னவென்றால், நான் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு பயிலும்போது, செட்டிநாட்டரசர் வள்ளல் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் எந்தையார் மீது தனிப்பரிவு கொண்டு, எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு சேர்வதற்கு அனுமதிக் கடிதம் வழங்கினார். அதையும் ஏற்காமல் தமிழிலக்கியத்தையே பயின்றேன்.
--
இந்துஸ்தானி மொழிச்சொற்கள் பங்குகொண்ட வரலாறு:
1) ஆஸாமி  - ஆள்
2) கித்தான்  - சாக்கு
3) ஜதை  - இணை
4) ஜாகீர்  - மானியம்
5) ஜாகீர்தார்   - ஊழிய மானியம் பெற்றவர்
6) ஜிம்கானா  - விளையாட்டிடம்
7) ஜோடி  - இணை
8) டப்பா, டப்பி  - கொள்கலன்
9) டேரா  - கூடாரம்
10) டோபிகானா  - வெளுப்பகம்
11) தம்  - மூச்சு
12) நாசூக்  - நாகரிகமாக
13) நாடா  - பட்டை
14) பக்கா  - முற்றிலுமாக
15) பரவாநகி  - சுமார், பரவாயில்லை
16) முஸாபரி பங்களா  - பயணர் விடுதி
17) மேஸ்திரி  - மேற்பார்வையாளர்       
18) ரசீது  - பற்றுச்சீட்டு
19) ரொக்கம்  - மொத்தப்பணம்
20) லஸ்கர்   - உழையர், சிற்றேவலர்
21) லேவாதேவி  - கடன் வரவு செலவு

தில்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் தங்களது ஆட்சியின்போது பயன்படுத்திய ஆட்சிச் சொற்களும் நூற்றுக்கணக்கில் அடங்காதன. சான்றாக,
1) ஹாஜர்  - வருகை
2) ஹாஜர்பட்டி  - வருகைப் பதிவேடு
3) இன்குலாப்  - புரட்சி
4) கமால்  - ஊர்ப்பணியாளர்
5) ராஜிநாமா  - பதவி விலகல், எழுத்தாலான ஒத்திசைவு
6) இலாகா  - துறை
7) இஜாஸ்து  - அனுமதி, விடைபெறல்
8) இஸ்தியார்  - அறிக்கை, அரசுப்பொது அறிவிப்பு விளம்பரம்
9) ஹுக்கும் - அனுமதி ஆணை
10) கச்சேரி - அரசு அலுவலகம் (வருவாய்த்துறை, நீதித்துறை அலுவலகம்)
11) கபூலி - ஏற்பு, இசைவு, ஒப்புதல் வாக்குமூலம்
12) கபூலியாட்டு - எதிர்த்தரப்பு ஒப்பந்தம்
13) காய்டா - ஆணை விதி
14) காயம் - நிலையான, நிரந்தரம்
15) கார்வார் - மேலாண்மை
16) காலி - ஒழிவு, வெறுமை
17) கானுன் - சட்டம் விதி
18) சாப்பா - முத்திரை
19) சம்சாயி - கடன்
20) சர்க்கார் - அரசு
21) வடிரா - குறிப்பு, நிபந்தனை, குறிப்புரை
22) ஜரூர்  - காலந்தவறாமை
23) ரஜா  - விடுப்பு
24) ரத்து - நீக்கம்
25) ருக்கா - குறிப்பாணை
26) ரோஜ்கார்  - பணி, வேலை வாய்ப்பு
27) வாபஸ் - திரும்பப் பெறல்
28) சாப்பு - படி, பார்த்து எழுது
29) ஹத்து பந்தி - நான்கெல்லை குறித்தல்

பதவிப்பெயர்கள்:
1) அஞ்சனதார், தொகாக்காரன் - மதிப்பீட்டாளர்
2) அமல்தார்  - வருவாய் அலுவலர்
3) அமீனர் - உரிமையியல் நடுவர் மன்றக் கீழ்நிலைப் பணியாளர் படைத்தலைவன்
4) அமீர் - படைத்தலைவன்
5) அர்க்கார் - கண்காணிப்பாளர்
6) அசமகர்ணம் - கிராம கர்ணம்
7) கஜான்ஜி - கருவூல அலுவலர்
8) காலிபா - அரசன், சுல்தான்
9) கார்கூன் - இயக்குநர், மேலாளர், வருவாய் ஆய்வாளர்
10) கார்வாரி - மேலாளர், முகவரி, கண்காணிப்பாளர்
11) கணக்க - கிராம அல்லது மாவட்ட அலுவலர்
12) குமாஸ்தா - எழுத்தர்
13) குல்லா சேவகன் - காவலர்
14) குலாப்தலையாட்டு டரப்தாரி - அலுவலக உதவியாளர்
15) கொத்தவால் - காவல்துறை ஆணையாளர்
16) சமாத்துர் - கோட்ட வருவாய் அலுவலர்
17) சர்தார் - உயர் அதிகாரி
18) ஷராப்பு - கருவூல உதவியாளர், பணம் அளிப்பவர், காசுக்கடை
19) ஜலான் - காவலர்
20) சவுக்கிதார் - சுங்கத்துறை அலுவலர்
21) சிப்பந்திபாகந்தாஸ் - ஆயுதப்படைக் காவலர்
22) சிப்பாய் - படைவீரர்
23) சிரஸ்ததார் - அலுவலக மேலாளர், நடுவர் மன்ற மேலாளர்
24) சுபேதார்  - ஆளுநர்
25) சொக்கன் - உடனாள்
26) கோக்கீரா - பணிப்பையன்
27) டபேதார்.தரோகா - தலைமை அலுவலக உதவியாளர்
28) ட்ப்தார். பந்து, தஸ்தார்தர் - பதிவறை எழுத்தர், ஆவண எழுத்தர்
29) தபால்காரன் - அஞ்சல் ஆண்
30) தாசில்தார் - வட்ட ஆட்சியர்
31) திவான் - பிரதம அமைச்சர், மாநிலத்தின் முதன்மை அலுவலர்
32) துபாசி - விளக்கிப் பொருள் கூறுவோர், மொழி பெயர்ப்பாளர்
33) நவசினதா - கணக்கர்
34) நவாப்  - முகலவாள ஆளுநர்
35) நிஜாம் - அரசன்
---
இந்தி மொழிச் சொற்கள் பங்குகொண்ட வரலாறு:
இந்திய அரசில் அரசு மொழிகளாகப் பதினெட்டு மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. இந்தி நடுவணரசை நடத்தும் மொழியாக விளங்குகிறது. இந்தி ஒன்றே இந்நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமென்னும் கருத்து அடிக்கடித் தோன்றுவதும், பிறமொழி பேசும் மாநிலங்களில் புகுத்தப் படுவதும், பிற மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு நிலைக்கேற்ப இக்கருத்துத் திரும்பப் பெறப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆட்சிமொழி எனும் உயர்நிலை பெற்ற இம்மொழி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வகைகளில் ஊடாட்டம் நிகழ்த்துகிறது. ஆட்சிமொழி என்பதால், நடுவணரசின் மாநில அலுவலகங்கள் முதலாகத் தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு வழிகளில் இந்தி மக்களிடையே பரவுகின்றது. தமிழகத்தில் இந்திமொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இவர்கள் வழியாகவும் இந்தி தமிழில் கலக்கிறது.
1) ஆகாஷ்வாணி - வானொலி
2) தூர்தர்ஷன் - தொலைக்காட்சி
3) சமாச்சார் - சமாச்சாரம்
4) உத்யோக் - உத்தியோகம்
5) தோத்தி - வேட்டி
6) ஷர்வானி - ஒருவகை உடை
7) அதிகார் - அதிகாரி
8) முக்ய - முக்கிய
9) மண்டல் -  மண்டலம்
10) நிரூப் - நிரூபணம்
11) படா - பெரிய
12) சோட்டா - சிறிய
13) சோர் - திருடன்
14) அச்சா - நன்று
15) பகுத் அச்சா - மிக நன்று
16) ஜாவ் - போ
17) ஜிந்தாபாத் - வாழ்க, வெல்க
18) ஜெய்ஹிந்த் - இந்தியா வெல்க
19)  பாரத் - பாரதம்
20) தர்ணா - மறியல்
21)  தர்ம் - தருமம்
22)  உதார் - உதாரணம்
23) அபராத் - குற்றம்
24) மஸ்தூர் - தொழிலாளர்
25) கட்டுமஸ்து - கட்டுடல்
26) வஸ்து - பொருள்
27) நமஸ்தே - வணக்கம்
28) உத்தர் - வடக்கு
29) சொஜ்ஜி - சிற்றுண்டிவகை
30) சோக்ரா - ஏவல் செய்பவன்
31)  தட்டுவாணி - நாட்டுக் குதிரை
32) தம்படி - காசு
33) தம்புரு - நரம்பு வாத்தியம்
34) துப்பட்டா - துணிவகை
35) தூட்டி - ஆடை
36) மிட்டாதார் -  பணக்கார்ர்
37) பந்த் - கடையடைப்பு
38) மந்திரி - அமைச்சர்
39) தோசா - தோசை
40) சுந்தர் - அழகு
41) தோஸ்த் - நண்பன்
42) பச்சா - மகன்
43) மோடா - கூடை இருக்கை
44) நாம் -  பெயர்
45) பகவான் - கடவுள்
46) சோடனை - ஒப்பனை
47) சோதா - சோம்பேறி
48) சோபதி - தோழன்
49) சொக்கிதார் - சுற்றுக்காவலன்
50) சௌடோல் - யானை
51) டக்கர் - தக்கணம்
52) டப்பா - தகட்டுப்பெட்டி
53) டபாய் - ஏமாற்று
54)  டீக்கு - சரி
55) டேரா -  தங்குதல்
56) டோசர் - மோதுகை
57) சட்னி - உணவு வகை
58) டோபி - சலவையாள்
59) டோலி - தூக்குப்படுக்கை
60) முண்டாசு - தலைப்பாகை
61) மோட்டா - கடினமான
62) ரொட்டி - உணவுவகை
63) லேவாதேவி - கொடுக்கல் வாங்கல்
64)  ஜகா - பின்வாங்குதல்
65) ஜதை - இரண்டு
இவ்வாறு அன்றாட வழக்கில் மக்கள் பயன்படுத்தும் இந்திச் சொற்கள் பல உள்ளன. நடுவணரசின் ஒப்புதல் பெற்ற பள்ளிகளில் இந்தி ஒரு மொழிப்பாடமாகவே கற்பிக்கப் படுகிறது. தமிழகத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு இணையான அளவில் இந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆட்சிமொழி எனும் செல்வாக்கும், மக்கள் தொடர்புக் கருவிகளில் வழங்கப்படும் மொழியாக உள்ள வாய்ப்பும் இந்தி தமிழில் கலக்கக் காரணங்களாக அமைகின்றன. “நடுவணரசு இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதாலும், நம் பள்ளிச் சிறுவர்கள் தொடக்க வகுப்பகளிலே இதனைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுவதாலும், காலப் போக்கில் மேலும் இந்திச் சொற்கள் தமிழில் வந்து சேரலாம்” எனக் கருதுகின்றார் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இந்திமொழியினாலேயும் தமிழ்மொழி உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மையெனத் தோன்றுகிறது என்பது இந்திமொழிக் கலப்பைப் பற்றிப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கொண்டிருந்த கருத்தாகும்.

தேமொழி

unread,
Sep 22, 2020, 2:31:38 PM9/22/20
to மின்தமிழ்
26. செய்யுளில் வரும் இயற்சொற்கள்

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 
 
இளவரசர்களின் எழிற்சோலை (Princes of Presidency) என்ற பெருமிதப் பெயர் நானிலம் புகழும் மாநிலக் கல்லூரிக்கு வழக்கிலிருந்த நிலையில், அரண்மனைக்குள் நுழைவதைப்போல் தனிப்புகழ் வாய்ந்த தமிழ்த்துறையில் இளங்கலை தமிழிலக்கியத்தில் 1985-இல் இணைந்தேன். தமிழ்த்துறையில் பணியாற்றிய பதினேழு பேராசிரியப் பெருமக்களை (‘Major’ P. பாண்டுரங்கன், (தமிழ்த்துறைத் தலைவர்), ‘சிந்தனைத் திலகம்’ இ. மறைமலை, ‘அன்பின் அன்னை’ இராசலட்சுமி, ‘கவிவேந்தர்’ மு. மேத்தா, ‘கவிதைப் பேரொலி’ பொன் செல்வகணபதி, ‘இலக்கணச்சுடர்’ இரா. சண்முகம், ‘இலக்கண ஒலி’ மு.கங்காதரன், ‘பண்புச் செம்மல்’ ப. அன்பு, ‘பகுத்தறிவுச் செம்மல்’ இரா. இளவரசு, ‘அருங்கலைத் திலகம்’ மாணிக்கம், ‘கலைச்செம்மல்’ கு. தாமோதரன், ‘நற்றமிழ்ப் பேராசிரியர்’ இரா.கு.நாகு, ‘பேராசிரிய செம்மல்’ தி.வ. மெய்கண்டார் (இளந்தமிழர் இதழாசிரியர்), ‘தென்குமரி’ P. யோகீசுவரன் பிள்ளை, ‘ஒப்புரவாளர்’ பெ. ஊரப்பன், ‘ஆய்வுச் செம்மல்’ ம.செ. இரவிசிங், ‘அருட்பா பாவலர்’ சுப. பாலச்சந்திரன்) நான் பார்த்தபோதே தமிழ்த்தென்றலும், தடங்கடலில் புரண்டுவரும் வெற்றி அலைக்காற்றும் என்னை மகிழ்வித்தன.

எனக்குப் பசுமரத்தாணி போன்ற ஒரு நினைவு. எனக்கு முதல் வகுப்பாக மாபெரும் கூடத்தில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில், ‘பாடும் நிலாவே, தேன் கவிதை’ என்ற திரையிசை வரிகளை அறிமுகம் செய்த கவிவேந்தர் மேத்தா, ‘நீ எதற்குத் தமிழ் படிக்க வந்தாய்?’ என்று அவர் வினவியபோது, என் தந்தையார் இட்ட பணியை தொட்ட பணியைத் தொடர வந்துள்ளேன் என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்தினேன்.

நானும், என்னுடைய தோழன் ஆண்டவரும் வகுப்பில் அருகருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து, ‘ஆண்டவனும் அருளும், இந்த வகுப்பறையில் எப்போதும் நிறைந்துள்ளனர்’ என்று பேராசிரியர் மறைமலை அடிக்கடி கூறுவார்.

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. இராஜுவின் அரும்புதல்வர், நிழக்கிழாராக மிளிரும் திரு.இரவிசங்கர், திண்டிவனத்தில் பெருவணிகராகத் திகழும் முகமது இப்ராஹிம், புனேயில் உள்ள இராணுவ நெஞ்சக நோய் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் Lieutenant Colonel ஆகத் திகழும் கு. பர்ணபாஸ், இன்றைக்குத் தமிழ்த்துறையில் சீரும் சிறப்புமாக விளங்கும் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் முத்துராமலிங்க ஆண்டவர், புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழும் அப்துல் காதர், விழுப்புரத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையின் இணைப் பேராசிரியராகத் திகழும் முனைவர் ச. மகாவிஷ்ணு, திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகத் திகழும் செங்குட்டுவன், அரிய தமிழிலக்கிய நூல்களை வெளியிட்ட ‘பார்க்கர்’ பதிப்பகத்தின் உரிமையாளராக இருந்து, இப்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கருணாநிதி, இலங்கையில் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்று கவிஞராய்த் திகழும் பகீரதன், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பு.பிராங்க்ளின், சீனிவாசன் ஆகிய பதினோறு வகுப்புத் தோழர்களுடன் படித்து, அளவளாவி மகிழ்ந்த நாள்களை எண்ணிப்பார்த்துப் பெருமிதம் அடைகிறேன்.

மாநிலக் கல்லூரியில் பயிலும்போதே, அந்நாளைய சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில், பட்டிமன்றத்தில் பங்குபெறும் ஒரு பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குமுதம் இதழின் பால்யு அவர்கள் என்னைப் பேட்டியெடுத்து வெளியிட்ட பெருமிதமும் அப்போதே என் நண்பர்கள் சொல்லிப் பாராட்டினார்கள்.

செல்லும் திசையெல்லாம், இன்றைக்கு நாங்கள் ஆங்கிலத்தில் சொல்லும் ஒரே வரி, ‘East or west, Presidency is the Best’ என்றே சொல்லிக் காட்டுவோம். எழிலார்ந்த கட்டடமும், பசுமையான சோலைகளும், வசந்த மண்டபத்தைப் போன்ற வகுப்பறைகளும், எங்கும் காணக் கிடைக்காத அறிவுக் கோயிலான நூலகமும், தமிழ்த் தாத்தா உ.வே.சா. திருவுருவச் சிலையும், சலவைக்கற் சிலைகளும், மாநிலக் கல்லூரியின் மாட்சிமையைப் புலப்படுத்தும் நினைவகங்களாகும். இன்றைக்கு அரசு பெரும் பொறுப்புகளில் இருக்கும் தலைமை அதிகாரிகளும், பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களும் மாநிலக் கல்லூரியின் மாணவர்கள் என்று அவர்கள் எடுத்துரைப்பது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக உள்ளது.

இயற்சொற்கள்:
இன்றளவும் வழங்கும் செய்யுளை மேனோக்காகக் காண்பவரும் அதன் இயற் சொற்களின் தனித்தன்மையைக் காணலாம்.

உழவும் கலப்பையும், காரும் கயிறும், குண்டையும் நுகமும், சாலும் வயலும், வாய்க்காலும் ஏரியும், மடுவும் ஏற்றமும் பிறவும், பயிர்களையும், நட்டலும் கட்டலும், முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளான் இயன்றனவே.

தமிழர்கள் வதியும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கிடையும், புழைக்கடையும், கூரையும் வாரையும், கூடமும் மாடமும், தூக்கும் தூணும், கல்லும் கதவும், திண்ணையும் குறடும், தரையும் சுவரும், மண்ணும் மானும், மற்றவுந் தமிழே.

தலையும் காலும், கண்ணும் காதும், மூக்கும் மூஞ்சியும், வயிறும் மார்பும், நகமும் தசையும், நாவும் வாயும், பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தனித் தமிழன்றோ!

தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர், சீரூர், ஆரூர், பேரூர், புத்தூர், புற்றூர், சேய்ஞ்ஞலூர், மணலி, நெல்லூர், நெல்லை, கொன்னூர், குறட்டூர் என்னும் இடப் பெயர்களும்,

செவ்வாய், வியாழம், வெள்ளியும் ஆகிய கிழமை பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.

தொண்ணூற்றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களில் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை.

ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலன் என்னும் முகத்தலளவையும், இன்னும் கீழ்வாயிலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.

தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும், காயும் கறியும், பாலும் பழமும், நெய்யும் தயிரும், உப்பு முதல் ஒன்பதும், பருப்பு முதல் பத்தும், தமிழ்ச் சுவையே.

எழுத்தும் சொல்லும், பொருளும், யாப்பும், அணியும் ஆகிய ஏடுஞ் சுவடியும், எடுத்துப் பார்க்குமிடமெல்லாம் தமிழே.

துணியும் அணியுந்தமிழே, தொழும் கடவுளும் தமிழ் மயமே, வீடும் நாடும், காடும் மேடும் ஆகிய எங்கும் தமிழ்மயமாகவே இருக்கின்றது.

தமிழின் தனிச்சிறப்பை ஏற்க மறுப்பாரும் இருந்தமையன்றோ வியப்பு!

இது தொடர்பாகச் செந்தமிழ் வழக்கு என்னும் நூலில் புலவர் இளமுருகனார், “உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் பயின்றுவருஞ் சொற்களைப் பற்றிச் சிறிது ஆராயலாம் என்று தொடங்கி விரிந்த கருத்துகளை வழங்கியுள்ளார். சொல்லாவது, பொருளை அறிவிக்கும் ஆற்றலுடைய எழுத்தொலியாகும். அஃது, இருதிணைப் பொருள் தன்மையையும், ஒருவர் உணர்ந்து கொள்வதற்குக் கருவியாகும்”. பொருள்களைப் புலப்பட விளக்கும் தன்மையை நோக்கி வடநூற் புலவர் சொல்லை விளக்கு என்பர். அது குறித்துச் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் “சொல்லெனப்படுஞ் சோதி தோன்றாதாயின், எல்லை நீர் ஞாலத்தில் எப்பொருள்தான் புலப்படும்? ஆதிபகவனை அறிவதும் இல்லை! ஆகமங்களை அறிவதும் இல்லை! அறம், பொருள் முதலியவற்றை அறிவதும் இல்லை! அவற்றை வலியுறுத்தும் பழஞ்சரிதங்களை அறிவதும் இல்லை! தங்கருத்தைப் பிறர் அறிவதும் இல்லை! பிறர் கருத்தைத் தாம் அறிவதும் இல்லை! அறியாமை யாண்டும் தலைப்படும். உலகம் தலைதடுமாறும். ஆதலால் உலகை வழங்கிவரச் செய்வது சொல்லெனப்படுஞ் சோதியென்றே சொல்லுக” என்றார்.

சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்பனவாம். இவற்றைப் பெயர், வினை, இடை, உரிச்சொற்களுடன் சேர்த்தவழிப் பத்தாகும். இயற்சொல்லாவது, உலக வழக்குக்குரிய செஞ்சொல்லாகும். இயற்சொல் - இயல்பாய்ப் பொருள் உணருஞ்சொல். அச்சொல் செந்தமிழ் நிலத்துக்குரியதாய்க் கற்றார்க்குங் கல்லாதார்க்கும் ஒப்பத்தன் பொருளை விளக்குந்தன்மையுடையது. தமிழ் மக்கள் பேசுதற்கும் உரைநடையில் எழுதுதற்கும் இயல்பாய் அமைந்த சொல்லென்பது கருத்து. அடுப்பு, நெருப்பு, நிலம், நீர், காற்று, பகல், இரா, மலை, ஆறு, கடல், குளம், விளக்கு, உப்பு, புளி, வீடு, கோயில் மக்கள், காடு, மேடு, பள்ளம், யானை, குதிரை, நடந்தான், இருந்தான், பார்த்தான், கற்றான், கொன்றான், தின்றான் என்பனவும் பிறவும் இயற்சொற்களாம். மக்கள், நாளிலும் பொழுதிலும் தம் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைத் தாம் உணரவும் அச்சொற்கள் பெரிதும் துணை புரிவன.

உலகவழக்குச் சொற்களை புதுப்பொருள்களும், புதுக்கருத்துகளும், புது நிகழ்ச்சிகளும், புது நுகர்ச்சிகளும், பிறக்குந்தோறும் மக்கள் பெருக்கிக் கொள்வர். இவ்வாறு உலக வழக்குச் சொற்களை நாளடைவிலே பெருகி, மொழியை வளப்படுத்தும். இனி, இவ்வுலக வழக்குச் சொற்களேக் கல்லாதாருங்கற்றாரும் வழங்குவாராதலின், ஒருசேர அவருள் கற்றார் அவற்றை இலக்கணநெறிக்கு ஏற்ப வழங்குவரென்றும், கல்லாதார் அந்நெறியிகந்து வழங்குவரென்றும் அறியலாம். கற்றார் வழக்கே உயர்வழக்கென்றும் கூறுவர். உலகவழக்குச் சொற்கள் இழிவழக்காக மாறுவதைச் சிறிது விளக்குவோம். பார்த்தான், கொன்றான், தின்றான், கோபம், நுங்கு, பனாட்டு, ஆற்றங்கரை, அகப்பை, ஒன்று, ஆண்பிள்ளை, இளநீர், கடற்கரை, கைம்மாற்று, சிவப்பு, சுவர், சுருட்டு, கிரகணம், புடைவை, பிட்டு, திறப்பு, பன்றி, பாகற்காய், நாற்றம் என்பனவற்றை இக்கால எழுத்தாளர், பாத்தான், கொண்டான், தின்னான், கோபம், நொங்கு, பினாட்டு, ஆத்தங்கரை, ஆப்பை, ஒண்டு, ஆம்பிளை, இளனி, கடக்கரை, கைமாத்து, சிகப்பு, சிவர், கிராணம், பிடவை, புட்டு, துறப்பு, பண்டி, பாவக்காய், நாத்தம் என்று தாம் எழுதும் நூல்களில் வழங்கிவரக் காண்கின்றோம்.

இச்சொற்களுக்கு இலக்கண அமைதியில்லை. பார்த்தான் என்பதற்குப் பார் என்பது பகுதி. பார், நோக்கு, பார்த்தல், பார்த்தான், பார்த்தாள் என்று எழுதியவழியே நோக்குதல், நோக்கினான், என்ற பொருள்படும். பார்த்தான் என்பதற்குப் பகுத்தான் என்பதும் பொருள். பாத்தல்-பகுத்தல், ஆகவே, இரண்டுக்கும் பொருள் வேறுபாடு மிகுதியுமுண்டு. பார்த்தலும் பாத்தலும் ஒன்றெனக் கருதிக்கொள்ளும் வழக்குமிகுமாயின்,
“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்டல் அரிது”       (குறள் - 227)

தான் உண்பதைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்க உண்ணும் இயல்புடைய வனைப்பசி என்னும் தீயநோய் தீண்டாது, என்று பிழையாகப் பொருள் கொண்டு திருவள்ளுவர் கருத்தை மாறாக விளங்கிப் பெரிதும் மயங்குவரன்றோ! இவ்வாறே ஏனைய சொற்களையும் பொருத்திக் காண்க. ஆகவே, இழிவழக்குச் சொற்கள் எழுத்திற் புகுந்து ஆட்சி செய்யுமாயின், செந்தமிழ் வழக்குச் சொற்களெல்லாம், பொருளில் மாறுபட்டுத் தமிழ் மொழி முழுவதுஞ் சிதையும், ஆதலினாலன்றோ செந்தமிழ்ச் சான்றோர் இழிவழக்கை வழக்கென்று கொள்ளாது, உயர் வழக்கையே உலக வழக்கென்றும், சான்றோர் வழக்கென்றும், அவ்வழக்கின் நிலைப்பாட்டை மரபென்றும், வரையறுத்துக் கொள்வாராயினர் ஒல்காப்புகழ் தொல்காப்பியனாரும், இக்கருத்தை உணர்த்தவே, “மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்” என்று இலக்கணஞ் செய்தார். இவ்வழக்கை மீறிக் கல்லாதார் பேசுவது போலவே எழுதிச் சிறுகதை இலக்கியஞ் செய்தல் வேண்டும் என்பார் கொள்கை, செந்தமிழ் வழக்கை அழித்துக் கொடுந்தமிழ் வழக்கை நிலைநாட்டும் கொடுமையாகும்.

தேமொழி

unread,
Sep 30, 2020, 10:07:21 PM9/30/20
to மின்தமிழ்
27. நாளொரு சொல்லும் புதிய பயன்பாடும்

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான ஏழு திங்கள் கழித்து இராயப்பேட்டையிலுள்ள சரோஜினி தனியார் மருத்துவமனையில் பிறந்ததிலிருந்து 1973 வரை இராயப்பேட்டையிலேயே, 10, பெசன்ட் சாலையில் வளர்ந்து வந்தேன். 

பெசன்ட் சாலையின் சிறப்பு என்னவென்றால், நாங்கள் மாடி வீட்டில் இருந்தோம். கீழ்தளத்தில் பொதுப்பணித்துறையின் பொறியாளர் பழனிசாமி, அவரின் துணைவியார் கமலா, அருமைப் பிள்ளைகள் மோகன், குமார், திருமதி கமலாவின் தங்கை சிவகாமி, மற்றும் திரு. பழனிசாமியின் தம்பி வழக்கறிஞர் நல்லியண்ணன் துணைவியார் திருமதி மல்லிகா, மகன் கோபி, அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்த காட்சியையும் மாட்சியையும் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் எதிர்ப்புறத்தில்தான், கவிஞர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஏ.எல். சீனிவாசனின் இல்லம் இருந்தது. அந்நாளைய மவுண்ட் ரோட்டில், சஃபையர் திரையரங்கின் எதிர்ப்புறத்தில் விண்ணெட்டும் திரைப்படப் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அப்பதாகைகள் தயாரிக்கப்படும் மோகன் கலைக்கூடமும் எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்தது. எங்கள் வீட்டின் இடப்புறத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ‘Friend’ இராமசாமியின் இல்லமும், நாடகப் பயிற்சிக் கூடமும் இருந்தது. அடுத்ததாக நடிகர் திலகத்தின் மகள் சாந்தியின் இல்லமும், நடிகர் திலகத்தின் அலுவலகமும் அமைந்திருந்தது. 
அவ்வண்ணமே புகழ்படைத்த மருத்துவர் தாராபாய் இல்லமும், தலைசிறந்த மனநல மருத்துவர் அருணகிரியின் இல்லமும், கவியரசி திருமதி சௌந்தரா கைலாசத்தின் தம்பி வழக்கறிஞர் சேதுரத்தினம் இல்லமும் அமைந்திருந்தது. எங்கள் வீட்டின் பின்புறத்தில், பழம்பெரும் நடிகர் திரு. சகஸ்ரநாமம், பழம்பெரும் நடிகை திருமதி எம்.என்.இராஜம் இல்லங்களும் இருந்தன. 

எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடான மருத்துவர் ஸ்ரீதர் வீட்டின் நெல்லிக்காய் மரம் எங்கள் சமையலறையிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் இருந்தபடியால், கொத்துக்கொத்தாய் எங்களால் எளிதாகப் பறிக்க முடிந்தது. சில கல்தூரம் நடந்தால், பெரும்புகழ் படைத்த ஔவை டி.கே.எஸ். இல்லமும், அவர் வீட்டிற்கு எதிரில் சிலம்பொலி செல்லப்பனார் இல்லமும் இருந்தது. 

அதற்கருகில், இசையாசிரியைகள் முத்து மீனாட்சி, லலிதா இல்லங்களும், மருத்துவர் சகுந்தலா இல்லமும் இருந்தது. வீட்டிலிருந்து இரண்டு கல் தூரம் நடந்தால் முதன்மைச் சாலை வரும். அச்சாலையில் ஈஸ்வரி தனியார் நூலகம் எங்கள் பெற்றோர்களுக்கு அறிவுக் கோயிலாக மிளிர்ந்தது. அதன் எதிரில் காஷ்மீர் சிற்றங்காடி, Snow White சலவையகம், Bison பெருங்கடை, சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஜனார்தனத்தின் தாயார் இல்லம் போன்றவை அமைந்திருக்கும். அங்கிருந்த நல்வழி மண்டபத்தில் எந்தையாரின் பல கூட்டங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். 

கோபாலபுர கனரா வங்கிக்கு எதிரில் உள்ள பழம்பெரும் கட்டடத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி.யும், யு.கே.ஜியும் பயின்றேன். பாடத்தைவிட அதிகமாக என் வகுப்புத் தோழி ஸ்ரீமதியைப் பற்றித்தான் அதிகமாகப் பேசுவேன் என்று என்னுடைய அம்மா சிரித்துக் கொண்டே சொல்லுவார். 

ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளை இல்லத்திற்கு அருகில் உள்ள நேஷனல் பள்ளியில் படித்தபொழுது, ஆசிரியை என்னை அடித்ததனால் சினமுற்று பள்ளி முதல்வரிடம், “குழந்தைகளை அடிக்கக் கூடாது. மீறி அடித்தால், மேதகு ஆளுநரிடம் புகார் தெரிவிப்பேன்”, என்று எழுபதுகளிலேயே பேசுகிற மனத்திறம் என் அம்மாவிடம் மட்டுமே இருந்தது என்று நான் பெருமையாகச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். 

இரண்டாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை அண்ணாநகரில் உள்ள புகழ்பெற்ற வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் பயின்றேன். என் அப்பாவின் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் இப்பள்ளியின் நிறுவனராவார். தொடக்கத்தில், அவர் வாழ்ந்த செனாய் நகர் இல்லத்தில் பயிலத் தொடங்கி சிந்தாமணி அங்காடிக்கு எதிரில் வானுயர்ந்த பள்ளியில் மாறிவந்து வகுப்புகள் தொடர்ந்தன. 

எங்கள் தலைமையாசிரியையாகத் திகழ்ந்த திருமதி செண்பகம், கனிவும், கண்டிப்புக்கும் உரிமையானவர். ஆசிரியப் பெருந்தகைகளான திருமதி இராஜலட்சுமி, திருமதி தங்கம், திருமதி லில்லி, திருமதி சாவித்ரி, திருமதி நவநீதம், திருமதி உமா, திருமதி தங்கமணி, திருமதி தில்லிகுமாரி, திருமதி சகுந்தலா, திருமதி செந்தாமரை ஆகிய பதின்மரும் நன்முறையில் வகுப்பெடுத்து எங்களை நல்வழிப் படுத்தினார்கள். நாள்தோறும் பள்ளி தொடங்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆங்கிலத்தில் ‘All things bright and beautiful’ என்ற பாடலும் பாடி வகுப்பகள் தொடங்கப்பெறும். அவ்வேளையில், வாரம் ஒருமுறை அந்நாளைய செய்திகளை ஆங்கிலத்தில் அவையில் பேசுமாறு அழைக்கப்படுவேன். வாரம் ஒருமுறை தையற்வகுப்பு நடைபெறும்போது, ஒருமுறைகூட என்னால் ஒரு கைக்குட்டை கூட செய்யமுடியாமல் தத்தளித்தேன்.

என் வகுப்பில் பயின்றோரான, ஸ்ரீராம், அரவிந்த், வெங்கடேஷ் பாபா, அமுதா இன்றும் தொடர்பிலுள்ளனர். உடன்பயின்ற மற்றவர்கள் சாரதா, இராதா, வித்யபிரியா, அனுசூயா, கீதா, தாமோதரன், சிவக்குமார், கல்பனா, சிவகாமி, வள்ளி, சொர்ணலதா, மாலா, பிரபா, மோகன்ராஜ், பீயூசு, பத்ரி நாராயணன், எம்.பி. லதா, பி.லதா, தீபா, மம்தா, மீரா, சுஜாதா, மதுசூதன், இராஜ்மோகன், தேன்மொழி, கணேஷ், கலையரசன், இராம்பிரபு, பிரமோது, தனசேகர், கணேஷ் நிரஞ்சன், என்.எஸ்.பாலாஜி, பாலாஜி, மாதவி, மகாலட்சுமி, அருணா, நஜிமுனிஷா ஆகிய 41 பேருடன் பயின்றேன். 

மூன்றாம் வகுப்பு பயிலும்போது, பள்ளியின் மாறுவேடப் போட்டியில் குறத்தியாகவே வேடமணிந்து நடித்தேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும், நண்பர்களும் உண்மையிலேயே பெண்ணாகவே நீ மாறிவிட்டாய் என்று பாராட்டினார்கள். ஆனால், என்னுடைய வருத்தம் நான், “ஒரு குறத்தி நான் ஒரு குறத்தி நான் ஒரு குறத்தி”, என்று மூன்றுமுறை மட்டும் சொல்லி இறங்கி விட்டேன். நான்காம் வகுப்பின் மாறுவேடப் போட்டியில், நான் மருத்துவராகவும், என் தம்பி பரதன் நோயராகவும் நடித்து முதல் பரிசு பெற்று கூடுதலாக பணிநிரம்ப செய்யும் நிறுவனரையும், தலைமையாசிரியையும் நான் பரிசோதிக்க விரும்புகிறேன் என்று நான் அறிவித்தவுடன் அரங்கமே அதிர்ந்து சிரித்தது. 

ஐந்தாம் வகுப்பு மாறுவேடப் போட்டியில், நான் ஆரூடக் காரனாக புனைந்து நடித்து சில காலங்களில் இப்பள்ளி ஒரு பெரும் கல்லூரியாக மாறும் என்று சொல்லி வாழ்த்தினேன். அந்த வாழ்த்தொலிக்குப் பெரும் கரவொலி எழுந்தது. வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி என்று வான்முட்ட இன்று பட்டொளி வீசிக் கொண்டிருப்பது பெருமையாகும்.

அன்றாட சொற்கள்
ஆங்கில மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன். அக்கூற்று நாம் சிந்திக்கத் தக்கதாகும்.
“The words with which we have to do, taking the most extensive view of the field, are in fact organic remains deposited under the various currents of external influence that have washed the shores of India during twenty centuries or more...
The trade and conquests of the Arabs both brought foreign words to India and picked up and carried westward, inform more or less corrupted, words of Indian Origin, some of which have in one way or other become part of the heritage of all succeeding foreigners in the East...
The conquests and long occupation of the Portuguese, who by the year 1540 had established themselves in all the chief ports of India and the East, have as might have been expected, bequeathed a large number of expressions to the European nations who have followed and in great part superseded them.”

தொ. எண். நாடுகளின் பெயர் இயற்பெயர் திசைச்சொல்
1 தென்பாண்டிநாடு எருமை, ஆ சோறு பெற்றம் சொன்றி
2 குட்டநாடு தாய், ஞாய் தள்ளை, ஞெள்ளை
3 குடநாடு தந்தை அச்சன்
4 கற்காநாடு வஞ்சர் கையர்
5 வேணாடு கோட்டம் கிழார்
6 பூழிநாடு நாய், சிறுகுளம் ஞமலி, பாழி
7 பன்றிநாடு செறு செய்
8 அருவாநாடு செறு, சிறுகுளம் செய், கேணி
9 அருவாவட தலைநாடு குறுணி, புளி குட்டை, எகினம்
10 சீதநாடு ஏடா,தோழன் தோழி , தம்மாயி எலுவன், இகுளை தந்துவை
11 மலைநாடு தோழி இகுனை
12 புனல்நாடு தாய் ஆய்
13 குடகம் பிள்ளை குடா
14 சிங்களம் ஐயோ அந்தோ
15 கருநடம் கைப்பற்ற விளித்தல் பனிக்க சிக்க கரைதல் குளிர
16 வடுகநாடு சொல் செப்பு
17 தெலுங்கநாடு பசு, எருது பாண்டில்
18 துளு மாமரம் கொக்கு

செய்யுள் வழக்குச் சொற்கள்
உரைநடை இலக்கியங்கட்கு இயற்சொற்களே பெரிதும் உரிமையுடையன என முன்னர்க் காட்டினோம். செய்யுள் வழக்குக்கு அவ்வியற்சொல்லும், திரிசொல்லும், வடசொல்லும், திசைச்சொல்லும் ஆகிய நால்வகைச் சொற்களும் உரிமையுடையன. அவற்றுள்ளே திரிசொற்கள் செய்யுட்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாம். அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுள்மொழி என்பர். 

திரிசொல் இயற்சொல்லின் வேறாயது. திரிதல் வேறுபடுதல், வேறுபடுதலாவது, இயற்சொற்போல வெளிப்படையாகப் பொருள் விளங்காது. கல்வியறிவால் உணர்வதாய் அமைவது. ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அமையும். திரிசொல் இயற்சொல்லின் வேறாய் நின்று அரிதிற் பொருள் விளக்குஞ் சொல். 

இயற்சொல்லினுந் திரிசொல்லே இலக்கியத்துக்கு இன்றியமையாதது. திரிசொல் இல்லையாயின், சுருங்கச் சொல்லுதல் கூடாது. சுவைபெறப் பெய்தலும் கூடாது. மோனை, எதுகை முதலியன அமைதலுங் கூடாது. கவிநடையும் வேறுபட்டு இழியும், என்று கூறிப் போந்தார்.

வடசொல்
ஆரிய சொல் தமிழ்நடை பெற்று வழங்குதல் வடசொல்லெனப்படும். தமிழ்நடை பெறுதலாவது, தமிழோசைக்கு இணங்கி அதற்கு நிகரான தமிழெழுத்தால் அமைவது. வடமொழியோசையும், அதற்குரிய எழுத்தும் அமைய நிற்பன ஆரியச் சொல்லென்றும், தமிழ் நடைபெற்றுத் தமிழே போல விரவி நிற்பன வடசொல்லென்றும் பகுத்துணர்ந்து கொள்ளலாம். தமிழ் இயற்கை ஒலியுடையதாகலின், உரப்பியும், எடுத்துங்கனைத்தும் கூறும் வடவெழுத்துகளை நீக்கி, அவற்றுக்கு நிகரான தமிழ் எழுத்துகளை இட்டு வழங்குதலைத் தொல்காப்பியனாரும் நன்னூல் பவணந்தியாரும் அவரையுள்ளிட்ட ஆசிரியர் எல்லாரும் வேண்டினர். செந்தமிழ் வழக்கை மதித்து நூல்செய்த சங்ககாலச் சான்றோரும், இடைக்காலச் சான்றோரும், பிற்காலச் சான்றோரும், இக்காலச் சான்றோரும், அம்மரபினை வழுவவிடாது பெரிதும் பேணி வருவாராயினர்.

செயற்கை ஒலிகளையுடையது ஆரியம். அவ்வாரியமொழிச் சொற்களைத் தமிழ்நடைப் படுத்தாது கிடந்தாங்கு வழங்குதலினால், இனிய செந்தமிழ்க்கு அமைந்த இனிய நல்லோசை வளங்குன்றி விடும். எழுத்துகளின் இன்னோசை அமைப்புத் திரியும். நாளடைவில் அவ்வழக்குத் தமிழின் மொழி நடையை மாற்றி அது பிறிதொரு மொழியாகத் திரிதற்குத் துணை செய்யுமென்க. அவ்வாறே அருந்தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமாகத் திரிந்ததை மொழி வரலாற்றால் அறிகின்றோம். அத்துணை சிறந்த பாதுகாப்பினை ஆசிரியர் தொல்காப்பியனார் ஐயாயிரவாண்டுகளுக்கு முன்னரே தமது இலக்கண நூலிற் செய்தமை பாராட்டற்பாலதாம்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே,
என்றும்,
சிதைந்தன வரினு மியைந்தன வரையார்.
என்றும் பொதுவகையில் இலக்கணவரம்பு செய்தார். அச்சூத்திரங்களை விளக்கிய சேனாவரையர், "வடசொற்கிளவியாவது, வடசொற்கே உரிய வெனப்படுஞ் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம். 

எனவே, பொதுவெழுத்தால் இயன்ற வடசொல்லும் செய்யுள் செய்தற்குச் சொல்லாம் என்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன. பொதுவெழுத்தால் இயன்றனவேயன்றி வடவெழுத் தால் இயன்ற வடசொல் சிதைந்துவரினும் பொருத்தமுடையன செய்யுளிடத்து வரையார். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய் வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க என்று கூறியதும் நோக்கியறிக.

Report of the special Committee on Education 1943
"The problem of teaching Tamil also is primarily a problem of providing books. Those at present used in the schools are obtained from South India. Written to suit Indian students, they are not altogether suitable for Ceylon Students. Though the literary language is the same in India and in Ceylon, the Colloquial languages of the two countries differ widely. Owing to the insularity of the country, the Tamil language of Ceylon has remained comparatively free from the influences of other languages, and struck out on a line different from the Tamil language of India. Through the influence of Indo Aryan language and of Arabic and Persian, the spoken Tamil of India contains many non-Tamil words and phrases which are unintelligible in Ceylon. There is too a tendency in India to borrow Sanskrit words and phrases without changing them into the Tamil phonetic system. Moreover, the Indian text books use Sanskrit Characters for reproducing foreign words with non-Tamil sounds, a, practice which has never obtained in Ceylon. Ceylon Tamil is to be maintained in its purity, therefore, the selection of Indian books to be used in our schools must be carefully made. The considerable differences between written and spoken Tamil require that considerable attention be paid to grammar."

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n...@gmail.com
----

தேமொழி

unread,
Oct 5, 2020, 5:03:39 PM10/5/20
to மின்தமிழ்
28. அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள்

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன். அவர் மறையும்போது உனக்கு என்ன வயது என்று என்னிடம் என் அம்மா மீண்டும் கேட்டார்கள். எனக்கு மூன்று வயது என்றேன். மூன்று வயதில் நடைபெற்றது உனக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டு வியந்தார்கள். 

எங்கள் மூவரின் வளர்ச்சியில் நாள்தவறாமல் கண்ணூன்றிக் கண்டு நெகிழ்ந்த பெறற்கரியவர் என் அன்னையார். என் நினைவுகளின் நீளத்தை நான் எடை போட்டுப் பார்க்க விரும்பினேன். நான் சிறுவனாக இருந்தபோதே விருந்தினர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்போது என் அண்ணன் கண்ணனுக்கு நிறையத் தின்பண்டங்கள் வாங்கி வந்து தருவார்கள் என்று என் பெற்றோர்கள் சொல்வார்கள். ஆனால் ஒன்றைக்கூட அவன் எடுத்து உண்டதேயில்லை. வைத்த இடத்தில் அப்படியே இருக்கும் என்பார்கள். ஆனால், நான் இரண்டாம் மழலையாகப் பிறந்தபோது, அண்ணனுக்கும் எனக்கும் இரண்டாண்டுகள் இடைவெளி. நான் பிறந்து சில மாதங்கள் கழித்துத் தின்பண்டங்கள் அனைத்தையும் நான் ஆர்வமாக உண்பேன் என்று என் அண்ணன் கூறியதாக என் பெற்றோர்கள் மகிழ்ந்து வியப்பார்கள்.

நான் வளர்ந்த பெசன்ட் ரோடு அழகான இடமாகும். அந்தக் காலத்தில் ‘கிருஷ்ணாயில்’ என்று வண்டியில் மண்ணெண்ணெய் விற்பார்கள். ‘கெரோசின்’ எண்ணெயைத் தான் கிருஷ்ணாயில் என்று சொல்கிறார்கள் என்று ஒருமுறை அப்பா கூறினார். பெசன்ட் ரோட்டில் திரு. நாராயண பிள்ளை, கதையாசிரியர் பாலசுப்பிரமணியம், நகைச்சுவைத்திலகம் டி.எஸ். துரைராஜ், டி.என். சிவதாணு இல்லங்கள் இருந்தன. மேலும், பாலசுப்பிரமணிய பக்தஜனசபை என்ற மண்டபத்தில் பல்வேறு கூட்டங்களில் எங்கள் தந்தை உரையாற்றும்போது பார்வையாளராகக் கலந்து கொண்டதையும் நான் நினைந்து பார்க்கிறேன். எங்கள் பெசன்ட்ரோடு இல்லத்திற்கு வராத பெரியவர்கள் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச் செல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் திரு. துரைமுருகன், முத்தமிழ்க் காவலர், தவத்திரு ஊரனடிகள், புலவர் புலமைப் பித்தன், பல தலைசிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள் என்று பட்டியல் நீளும்.

அப்போது நான் பயன்படுத்திய கருப்பு நிறப் பையில், என் வியர்வை படர்ந்து என் கைகளில் கருப்பு நிறம் படிந்ததை நான் பலமுறை கண்டிருக்கிறேன். என் அம்மா என்மேல் தூசி படிய விடமாட்டார்கள். சின்ன அண்ணா என்னை அடிக்கடி துடைத்துவிடுவார். அம்மாவுக்கு சிறுகறை, தூசி எங்கும் பிடிக்காது. அண்ணாநகரிலுள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்போது, முதன்முறையாக நான் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு, ‘சித்தார்த்தா மீண்டும் மனக்குழப்பமா’ என்ற வரிகளையே மீண்டும் மீண்டும் சொல்லி, அதற்கு மேல் பேச முடியாமல் திணறி நின்றேன்.

அப்பள்ளியில் ‘பீயுஷ்’ என்ற நண்பர் முத்து முத்தாக எழுதுவார். என்னுடன் இரண்டாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து படித்து வந்தவர் வெங்கடேஷ் பாபா, அரவிந்து என்பவராவர். இவர்கள் இருவரும் என்னுடன் பன்னிரண்டாவது வரை படித்து வந்தனர். 

என்னுடன் படித்த திரு. அரவிந்து (லால்குடி ஜெயராமன் மாணவர்) அற்புதமாக வயலின் வாசிப்பவராவார். இன்றைக்கு அவரும் அமெரிக்காவில் இருக்கிறார். நண்பர் வெங்கடேஷ் பாபா தனியார் விமான நிறுவனத்தில் பெரிய பதவியில் உள்ளார். இவரும் ஆங்கிலக் கருவியான ‘Band’ வாசிப்பதில் வல்லவராக பல இன்னிசை நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். அவர்களைப் போலவே என்னுடன் 2-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயின்ற ஸ்ரீராம் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே வளர்ந்தவர். அவருடைய அண்ணன் இராமசாமி, தம்பிகள் இராமநாதன், சங்கர், தங்கைகள் சித்ரா, சுதா போன்றோர் எங்கள் குடும்பத்துடன் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். இவர்கள் படிப்பதற்காகவும், ஐ.ஐ.டி.யில் சேர்வதற்காகவுமே படித்து அமெரிக்காவில் குடியிருக்கப் போகிறார்கள் என்ற நோக்கத்திலேயே அவர்களின் பெற்றோர் வளர்த்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். 

இவர்கள் ஆறு பேரும் பின்னர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து, பின்னர் ஐ.ஐ.டி-யில் சேர்ந்து படித்து, இன்று அமெரிக்காவில் புகழோடு வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அப்பா புகழ்பெற்ற ‘டன்லப்’ நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தவர். என்மீது அதிகம் பரிவுகாட்டி நீயொருவன்தான் உன் தந்தையைப் போலத் தமிழ்பேசி, தமிழிலக்கியம் பயின்று மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகவே உன் அப்பாவைப் போல வருவாய்” என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுத்துவார். அவர் சொன்னது உண்மையாகவே மாறிவிட்டது. அவர் இன்று அமெரிக்காவில் தன் குடும்பத்தாருடன் பெருவாழ்வு வாழ்வதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன். என்னுடன் 5-ஆம் வகுப்புவரை பயின்ற திரு. இராஜ்மோகன் வீட்டிலுள்ள Weston TV-யில் வரும் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வாரந்தோறும் சென்று வருவேன். 

இந்த பள்ளியின் சிறப்பு இன்றைக்கு எங்கும் சிறந்து இருப்பதால் என்னுடன் பயின்ற திருமதி அமுதா இன்றைக்கு வள்ளியம்மாள் பள்ளி மாணவ-மாணவியர்களையெல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்காக ஒருமுறை விருந்து நிகழ்ச்சி நடத்தி என்னை அழைத்ததையும் நான் நினைவுகூர்கிறேன். அண்மையில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பாக மாலை அணிவிக்கும்போது, அப்பள்ளியின் முதல்வர் திருமதி பத்மினி அவர்களை நான் பார்த்து, நான் உங்கள் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் எனக்கு நான்கு வயது மூத்தவர்கள் என்று நினைவுப்படுத்தியதை அறிந்து அவர் வியந்தார். 

எப்படி என்னை நினைவிருக்கிறது என்றவுடன், என் வீட்டின் அடுத்த வீட்டில் Indian Fertilizers Limited- நிறுவனத்தில் பணியாற்றிய திரு. சீனிவாசன் அவர்களின் மகள் பிரேமா தங்கள் வகுப்புத்தோழி. அவர்களும், அவர் தம்பி ராம்கியும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் இன்னொரு அக்கா சுதா அக்காலத்தில் மருத்துவக் கல்லூரியில் பயின்றதும் நினைவு கூர்ந்து, இன்று பிரேமா மருத்துவராக அமெரிக்காவிலும், ராம்கி, சீனாவிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டேன். ஆக, வள்ளியம்மாள் பள்ளியில்தான் என்னுடைய தொடக்கக்கல்வி உரம் அமையத்தொடங்கியது என்று நான் நினைத்து  மகிழ்கிறேன்.
---------------------------------------------------------
தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களின் பொதுப் பட்டியல் தொ. எண் தமிழ் வடமொழி 
1. இலக்கு - லக்ஷ்ய 
2. உலகம் - லோக 
3. கலை - கலா 
4. கோட்டம் - கோஷ்ட 
5. சாலை - சாலா 
6. தயிர் ததி 
7. திறம் - ஸ்திர 
8. தூண் - தூணம் ஸ்தாணு 
9. படி - பரதி 
10. பதம் - பத 
11. பலம் - பல 
12. பாதை - பாதா 
13. மது - மட்டு மது 
14. மயிர் - ஸ்மஸ்ரு 
15. மாகம் - நாகம் 
16. மாதம் - மாஸம் 
17. மீன் - மீந 
18. வட்டம் - விருத்த 
19. விதை - பீஜ 
20. விந்து - பிந்து 
21. குட்டம் - குஷ்ட 
22. மடி - மிரு 
23. சடலம் - சரீரம் 
24. தாமரை - தாமரஸ 
25. மானம் அனுமானம், உபமானம், சமானம், பிரமாணம்
26. கமுகு - கரமுக 
27. விதை - வருஷ 
28. வித்து - விந்து 
29. வேட்டி - வேஷ்டி 
30. சலம் - ஜலம் 
31. நாழி - நாடி 
32. ஆகாயம் - ஆகாசம் 
33. பூதி - பூழ்தி விபூதி 
34. புடவி - ப்ருத்வீ 
35. மதங்கம் -  மிருதங் 
36. பவளம்  - பிரவாளம் 
37. மெது  - ம்ருது 
38. செவியுறு -  ஸ்ரு 

தமிழில் கலந்துள்ள ஆங்கிச் சொற்களின் பொதுப் பட்டியல்: 
அங்கிள், அட்வெர்டைசர், அட்டாக், அடிஷனல், அண்டர்கிரவுண்டு, அண்டர்வேர் அப்ளாஸ், அபார்ஷன், அம்ப்பயர், அயர்ன் பாக்ஸ், அர்ஜென்டு, அரேஞ்ச்மென்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், ஆக்டர், ஆக்ஷன், ஆட்டம்பாம், ஆட்டோகிராப், ஆட்டோமொபைல்ஸ், ஆஃப், ஆப்பரேஷன், ஆடியோசென்ட்டர், ஆம்லெட், ஆப்செட்பிரஸ், ஆர்ட்பிரிண்டர்ஸ், ஆல்ரைட், ஆர்ட்ஸ் காலேஜ், ஆஷ்டிரே, ஆன் பண்ணுதல், இங்க்பாட்டில், இன்சூரன்ஸ், இன்ச்டேப், இன்ஜெக்ஷன், இன்ஜினியர், இன்ஸ்டிடியூட், ஈவினிங், ஈஸி, உல்லன், எக்கோ, எக்ஸ்கியூஸ், எக்ஸ்பர்ட், எஞ்சின், எடிட்டர், எம்.எல்.ஏ., எம்பிராய்டரி, எம்ப்ளாய்மெண்ட் எக்சேன்ஜ், எம்போரியம், எம்.பி., எமெர்ஜென்சி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் - ட்ரெயின், எலாஸ்டிக், எலெக்ஷன், எவர்சில்வர், என்.ஜி.ஓ., என்.சி.சி, எனாமல், எஸ்டிமேட், எஸ்டேட், ஏர்கண்டிஷண்டு, ஏர்லைன், ஏரியா, ஏஜென்ட், ஐ.ஏ.எஸ்., ஐகோர்ட், ஐட்டம், ஐடியா, ஐரோடு, ஐ.ஜி, ஐஸ், ஐஸ்கிரீம், ஒய்ப், ஒயர், ஒரிஜினல், ஓ.கே, ஓல்டேஜ், ஓவர் ஆயிலிங், ஓவர்டேக், ஓவர்லுக், க்யூ, க்ராக், க்ராப், க்ராஸ், க்ரீம், கிரீஸ், க்ரைண்டர், க்லாஸ், க்ளிப், க்ளீன், க்ளைமாக்ஸ், கசின், கட்டிங்பிளேயர், கட்பீஸ், கண்டிஷன், கம் (பிசின்), கம்ப்ளெய்ண்ட், கம்பவுண்டர், கம்யூனிஸ்ட், கமெண்ட்டரி, கர்ச்சிப், கரண்ட், கலர், கலெக்டர், கவர்னர், கண்ட்ரோல், கன்ஸ்யூமர், கஸ்டம்ஸ், காட்டன், காம்பவுண்டு, கார், காலண்டர், காலிஃப்ளவர், கான்ட்ராக்டர், கான்வென்ட், காஸ்ட்லி, கிக், கிரிக்கெட், கிலோகிராம், கிலோமீட்டர், கீ, குருடாயில், குவார்ட்டர்ஸ், கூல்ட்ரிங்க்ஸ், கூலிங்கிளாஸ், கேக், கேன்ட்டின், கேமிரா, கேரம்போர்டு, கேஸ், கைடு, கொக்கோ, சப்ளை, சம்திங், சர்க்கஸ், சர்ட், சர்வேயர், சலூன், சவுண்டு, சாக்லேட், சார், சாலரி, சான்ஸ், சிக்னல். சிகரெட், சிட்பண்ட், சில்க், சிலிண்டர், சீசன், சீல், சீன், சூட்கேஸ், சூப்பர் மார்க்கெட், செக், செட்டில்மெண்டு, செயின், செஸ்ட், செஸ், சைடு பிசினஸ், சோபா, ட்யூப்லைட், ட்ரம், ட்ரா, ட்ராபிக், ட்ராமா, ட்ரிம், ட்ரை, டம்ளர், டவல், டாக்ஸி, டாப், டாய்லெட், டார்ச், டயல், டான்ஸ் , டிப்ஸ், டிபன்பாக்ஸ், டிமாண்ட், டிலே, டெய்லர், டெய்லி, டென்னிஸ், டேபிள், டொனேஷன், டோக்கன், டெளட், திக், நம்பர், நர்ஸ், நர்ஸரி, நர்சிங் ஹோம், நார்மல், நியூஸ், நெக்லஸ், நெய்ல்பாலீஷ், ப்ரெசன்ட், ப்ரஷர் குக்கர், பிரெட், ப்ரேயர், ப்ரோக்கர், ப்ளக், ப்ளாட், ப்ளாக், ப்ளாஸ்டிக், ப்ளேடு, கஃப்ராடு, பட்டன், பர்ஸ், பவுஃபுல், பவுடர், பாண்டு, பாத்ரூம், பாய்லர், பார், பால்பென், பாலிடெக்னிக், பாலித்தீன், பாலிஷ், பிசி, பில், பிஸ்கட், பீட்ரூட், பீன்ஸ், பீஸ், பெயிண்ட், பென்ஷன், பேஷண்ட், பைப், போட்டோ, போலீஸ், போன், மக், மஃப்ளர், மாடல், மிக்சர், மிக்ஸி, மிஸ்டர், மூட், மெடிக்கல் ஷாப், மெயின்ரோடு, மெஸ், மேடம், மைக், மொசேயிக், யூ.கே.ஜி, யூஸ்லெஸ், ரசீது, ரப்பர், ரவுடி, ரவுண்டு, ரஷ், ராஸ்கல், ரிசப்ஷன், ரிசர்வேஷன், ரிப்பேர், ரியல் எஸ்டேட், ரிலீஸ், ரூம், ரெடி, ரெஸ்ட், ரேட், ரேஷன், ரைட், ரைஸ்மில், ரோஸ்மில்க், லக், லாட்ஜ், லாரி, லிட்டர், லிப்ஸ்டிக், லிஃப்ட், லிஸ்ட், லூப், லூஸ், லெட்டர், லேட், லைசென்ஸ், லோன், வயரிங், வாட்ச், வாலிபால், விக், விசா, விசில், விட்டமின், வில்லன், வீக், வெராந்தா, வெரிகுட், வேன், வேஸ்ட், ஜாம், ஜாலி, ஜீன்ஸ், ஜூஸ், ஜெயில், ஷட் அப், ஷட்டர், ஷாம்பு, ஷிப்ட், ஷூ, ஷோரூம், ஸ்கிரீன், ஸ்டவ், ஸ்டுடியோ, ஸ்டோர், ஸ்பீக்கர், ஸ்பீடு, ஸ்லிப்பர்ஸ், ஸ்லோ, ஸ்வெட்டர், ஸுப்பர், ஹலோ, ஹால்டிக்கட், ஜெயில்.

வளரும்...- 

முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n...@gmail.com
-----

Kamal Sir

unread,
Oct 5, 2020, 11:13:47 PM10/5/20
to mint...@googlegroups.com
அருமை அம்மா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ae82badf-7c2e-45f7-b341-a3ce11c5e43an%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 25, 2020, 5:41:07 PM10/25/20
to மின்தமிழ்
29. அயற் மொழிச் சொற்களின் அணிவகுப்பு

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

இராயப்பேட்டையிலுள்ள பெசன்ட் ரோடு இல்லத்தில் இருந்தபொழுது எங்களுடைய வீட்டில் எந்தையாரின் நண்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அதில் மிகக் குறிப்பாக பெருமிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன், மேலவை உறுப்பினர் டாக்டர். இரா. ஜனார்த்தனம், பேராசிரியர்கள் சி. பாலசுப்பிரமணியம், சஞ்சீவி, ‘அருட்பா அரசு’ கிரிதாரி பிரசாத், ‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்ரமணியம், திரு. அருள் சங்கர், திரு. வீரமணி, திரு. சுகிசிவம், வழக்கறிஞர் இரவி, ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான், ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், கவிஞர் மீரா, கவிஞர் முருகு சுந்தரம், கவிஞர் நா. காமராசன், கவிஞர் முருக சரவணன், கவிஞர் புலமைப்பித்தன், ‘பாரதி காவலர்’ இராம்மூர்த்தி, ‘பாரதி அடிப்பொடி’ மணி, பேராசிரியர் சு. பாலச்சந்திரன், ஒய்.எம்.சி.ஏ. பக்தவத்சலம், பெ.நா. அப்புசாமி என்ற பல பழுத்த தமிழறிஞர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து சென்றதைக் கண்டு மகிழ்ந்தேன். 

‘கவியருவி’ ஈரோடு தமிழன்பனின் ஒல்லி உடலும், ஒளி உமிழ் சொற்களும் எங்களால் மறக்க முடியாது. என் அண்ணனையும் என்னையும் தூக்கிச்சுமந்த அந்த தோள்களும் ஜெர்ரி, ககாரின் என்று எங்களை அழைப்பதையும் நாங்கள் மறக்கவே முடியாது. தொலைக்காட்சியில் அவர் செய்திகள் படிப்பதைக்கேட்ட பிறகு தான் தமிழுக்கு அமுது என்று பேர் என்று நான் நினைப்பது உண்டு. 

பெசன்ட்ரோடு இல்லத்தில் இருந்த பொழுது என்னுடைய தந்தையாரும் தாயாரும் அலுவல் பணியாக காலை முதல் மாலை வரை பணியாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் எங்கள் மூவரையும் காவல் தெய்வம் போல இருந்து அரவணைத்தவர் திரு.நாராயணன் என்பவர் ஆவார். அவரை நாங்கள் ‘சின்னண்ணா’ என்று தான் எப்பொழுதும் அழைத்துப் பழகியிருக்கிறோம். அவர்தான் எங்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். அவர் காரைக்குடியில் இருந்து வந்தவர். திருத்தணிகையிலுள்ள சரஸ்வதி மில்லின் உரிமையாளர் திரு. நாராயணன் செட்டியாரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த திரு சுப்பையாவும், திரு.அழகப்பனும் எங்கள் அப்பா அங்கு செல்லும் போதெல்லாம் உடனிருந்து கவனித்தவர்கள். அவர்களிடம் எந்தையார் ஓர் இளைஞரை சென்னைக்கு எனக்கு உதவியாளராக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் உடனே தங்கள் தம்பி நாராயணனை பெசன்ட் ரோடு இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அவர் எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களைக் கண்ணும் கருத்துமாக எங்களுடைய படிப்பு, உணவு, நாங்கள் எப்படி எல்லாம் பண்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களைச் செதுக்கிச் செதுக்கி வளர்த்தவர். கண் இமை இரண்டும் காப்பது போல் எங்கள் குடும்பத்தை வண்ணமுறக் காத்தவர். எங்கள் பெற்றோர்கள், “ஒரு நாளும் அவர் வாய் முணுத்துக் கண்டதே இல்லை” என்பார்கள். 

அவர் எங்களுக்கு வாத்தியாராகவும், வளர்ப்புத் தாயாகவும் எல்லா வகையிலும் எங்களைப் பார்த்து, நாங்கள் ஒரு குறையுமின்றி, நாங்கள் எந்த வேளையில் சாப்பிட வேண்டும், பால் எந்த வேளையில் அருந்த வேண்டும், மோர் எந்த வேளையில் அருந்த வேண்டும் என்று நயந்து சொல்வார். 

என்னுடைய தந்தையார் அடிக்கடி அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியராய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் இங்கு இவனைப் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேன் என்று பாரதியின் வரிகளை அடிக்கடி சொல்லி மகிழ்வார். அவருடைய கண்ணிலேயே நல்ல குணம் இருப்பதைப் பார்த்துத்தான் எங்கள் இல்லத்தில் இருந்து, வளர்ந்து அவர் அடுத்த நிலையாக அருட்செல்வரின் தனிச்செயலாளர் பண்புத்திலகம் இரவியின் பரிந்துரையால் சின்னண்ணா-நாராயணன் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு ஆணிவேராக திரு.இரவி திகழ்வதை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசியும். 

அருட்செல்வர் மகாலிங்கம் ஐயா அவருடைய கண்ணுக்கும், அவருடைய சொல்லுக்கும் ஏற்ற ஒரு நல்ல சேவகனாய், தொண்டராய் அவரிடம் பல ஆண்டுகள் பணியாற்றி இன்றும் குடும்பத்திற்கும் அலுவலகத்திற்கும் வேண்டப்பட்டவராக மிக நயமாகப் பணியாற்றுகின்ற பண்பாளராய் மிளிர்கிறார். பல ஆண்டுகள் கழிந்தாலும் இன்றைக்கும் நாங்கள் அவரைப் பார்க்கும் போதெல்லாம் சின்னண்ணா… சின்னண்ணா… என்றுதான் அழைத்து மகிழ்கிறோம். 

பெசன்ட் ரோடு இல்லத்திலிருந்து புறப்பட்டு 1973-களில் அண்ணா நகருக்கு மாறிவிட்டோம். ஆனாலும் பெசன்ட் ரோடு எங்களுக்கு என்றைக்கும் நீண்ட உறவாகவே இருந்ததற்கு காரணம் நாங்கள் அந்த பெசன்ட் ரோடில் இருந்து வெளியேறிய பிறகு எங்களுடைய பெரியம்மா அவர்கள் குடும்பம் அங்கேயேதான் பல ஆண்டுகள் இருந்தார்கள். 

வள்ளியம்மாள் பள்ளியில் இருக்கும் பொழுதே என்னுடைய பெற்றோர்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனிமுதல் இவர்கள் மூவரும் ஆடவர் பள்ளியில்தான் பயில வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து சென்னையிலேயே எண்பதுகளில் மிகச் சிறப்பாக இருந்த சென்னை கிறித்துவ மேனிலை ஆடவர் பள்ளியில் எங்கள் மூவரையும் எங்களுடைய பெற்றோர்கள் இணைத்தார்கள். வள்ளியம்மாள் பள்ளியிலிருந்து அண்ணனை சென்னை கிறித்துவக் பள்ளிக்கு மாற்றும் பொழுது, மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்கு பல நாட்கள் செலவானது என்பார்கள். நான் ஐந்தாவது படித்தவுடன் என்னுடைய தேர்ச்சி சான்றிதழுடன் என்னுடைய மாற்றுச்சான்றிதழ் அனுப்பி விட்டதைக் கண்டு எங்கள் அம்மா மிகவும் வியந்து பெருமிதம் அடைந்தார்கள். எந்த விதமான முயற்சியும் இன்றி என்னை சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது பள்ளி முதல்வர் திரு.கிளமென்ட் பீலிக்ஸ் எங்கள் அம்மாவிடம் சொன்னார்களாம், “மூன்று பிள்ளைகளையும் நீங்கள் சேர்க்கலாம். ஒருவர் சேர்ந்தால் அடுத்தவர் தானாகவே சேர்க்கப்படுவார்” என்று சொல்லி நாங்கள் மூவரும் அப்பள்ளியிலேயே பயின்றோம். 

பள்ளியின் விளையாட்டுத் திடல் F1, F2, F3, F4 என்று நான்கு நிலைகளாகவும் பள்ளியே மொத்தம் 100 ஏக்கருக்கு மேல் விரிந்து இருப்பதைக் காணும் பொழுது பிரமிப்பாக இருக்கும். பெரிய வகுப்பறைகளையும், கவினார்ந்த கட்டிடங்களையும் கண்ட பொழுது இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற மிகச்சிறந்த பள்ளியான ETON என்ற பள்ளிதான் நினைவு வரும். பள்ளியில் எந்தப் படிப்பிற்கும் குறைவில்லை. எந்தப் படிப்பையும் படிக்கலாம். ஓவியம் கற்றுத் தரப்படும். மரத்தச்சு வேலைகளையும் நாங்கள் பயின்றோம். மிக அற்புதமான ஒரு இசைக்குழு (band) இருந்தது. எல்லாவிதமான மேற்கத்திய இசைக் கருவிகளைக் கற்றுத் தெளிவதற்கும் அங்கு ஓர் ஆசிரியர் இருந்தார். 

ஆறாம் வகுப்பில் நாங்கள் சேரும் பொழுதே மொத்தமாக 72 மாணவர்கள் பயின்றோம். ஆறாவது வகுப்பு பயிலும்போதே முதன்முறையாக சுற்றுலாவாக மாமல்லபுரத்திற்கு 20 ரூபாய் செலவில் சென்று வந்ததை நான் இன்றும் நினைந்து மகிழ்கின்றேன். 

மிகத் திறமையான மாணவர்கள் எங்கள் மத்தியில் படித்தார்கள். இன்றைக்கு அவர்கள் எல்லாம் தலைசிறந்த மருத்துவர்களாக, பொறியாளர்களாக, அமெரிக்காவிலும், துபாயிலும், லண்டனிலும், சென்னையில் மிகப்பெரிய நிறுவனங்களிலும் மிகப்பெரிய பதவிகளிலும் இருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகின்றேன். ஆசிரியர்களாக திரு.லோகநாதன், மணிவாசகம், தமிழாசிரியர் ஜெயராமன், தமிழாசிரியர் சம்பத், மோசஸ் கணபதி, திரு. லட்சுமி நாராயணன், திரு. கட்டார் சிங், சுந்தர் சிங் என்று ஆசிரியப் பெருமக்கள் பட்டியலே நீளும். 

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது டேராடூனில் ராஷ்ட்ரிய மிலிட்டரி சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று நான் நேர்காணலில் வெற்றி வாய்ப்பு இழந்தேன். ராணுவப்படை, கப்பற்படை, விமானப்படை என மூன்று பிரிவுகள் இருந்தன. நான் 7ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை அந்தக் கப்பல் குழுவில் இடம் பெற்று செவ்வாயும், வியாழனும் பள்ளி வகுப்புக்கள் முடிந்த பிறகு அணிவகுப்புகளில் எல்லாம் கலந்து கொண்டதை நினைத்துப் பார்க்கின்றேன். சென்னைத் துறைமுகத்தில் பெரிய கப்பல்களைப் பார்க்கும் வாய்ப்பும், பாய்மரப்படகு ஓட்டுவதற்கான வாய்ப்பும் தரப்பட்டது. 

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் அப்பொழுதே நான் கலந்து கொண்டு திருக்குறள் செல்வன் என்ற வெற்றிச் சான்றிதழையும் பெற்று மகிழ்ந்தேன். பாரதியினுடைய நூற்றாண்டு விழா நடைபெற்ற பொழுது முதன்முறையாக அனைத்து பள்ளிப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டியிலும் நான் கலந்து கொண்டேன். 

பள்ளிக்கூடத்திற்கு நாள்தோறும் பேருந்தில் சென்று நெடுக நடந்து எல்லோரிடமும் பண்பாகவும் பரிவாகவும் நடந்து பல நண்பர்களைப் பெற்றேன். 

இன்றும் நண்பர்கள் அனைவரும் தொடர்பிலேயே உள்ளோம். குறிப்பாக என்னுடைய இனிய நண்பராக திரு. சாய்சேஷன் எந்தவொரு ஐயத்திற்கும் அமுதசுரபி போலத் தீர்வுகளை வழங்கி வருவதுடன், என்னுடைய முனைவர் ஆய்வு நூலை நேர்த்தியாக மெருகேற்றியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமையும் தமிழில் ஆழ்ந்த செழுமையும் வாய்த்தவர் ஆவார். ஒருமுறை என் மகள் ஆதிரையைக் கண்டதும் அவர் கேட்ட கேள்வியொன்று எவ்வளவு அழகான கவிதை நடையில் அமைந்துள்ளதென்று பாருங்கள். 

நான் அருளுடன் பள்ளிக்குச் சென்றேன், 
ஆத்திசுடி கற்றுக் கொண்டேன். 
எழுதியது யார்? என்றேன். 
ஔவையார் என்றார்கள். 
அவ்வை யார்? என்றேன். 
பாட்டி என்றார் தமிழ் ஆசிரியர். 
இன்று அருள் இல்லத்திற்கு சென்றேன் 
ஆதிரை சொல்கிறாள் அவ்வை தாத்தா என்று 
காலம் மாறிவிட்டது. 

பெரும் பேராசிரியர் தெ.ஞானசுந்தரத்தின் மகன் சேந்தன் அமுதனும் என்னுடன் பயின்றவர் ஆவார். மதிய உணவு வேளைக்குப் பிறகு எங்கள் பள்ளியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ‘மேரி ஐஸ்கிரீம்’ வண்டியில் வரும் பலவண்ண ஐஸ்கிரீம்களையும் மாங்காய் கீற்றுகளையும் தவறாமல் உண்பது எங்கள் வாடிக்கையாகும். 

---------------------------- 
அயற்மொழிச் சொற்களின் அணிவகுப்பு 
I. அணிகலன்:- 
1 அட்டிகை கன்னடம் 
2 கொலுசு தெலுங்கு 
3 ஜிமிக்கி இந்தி 
4 தோடு இந்தி 
5 நத்து இந்தி 
6 பேசரி இந்தி 
7 ராக்கடி இந்தி 
8 லோலாக்கு இந்தி 
9 தாயத்து அரபு 
10 நகாசு அரபு 
11 பாட்லா மராட்டியம் 
12 பாசிபந்து பாரசீகம் 
13 புல்லாக்கு துருக்கி 
14 மெடல் ஆங்கிலம் 

II. ஆடை உடை:- 
1 உருமால் பாரசீகம்
2 குடித்துணி பாரசீகம் 
3 குல்லாய் பாரசீகம் 
4 சரிகை பாரசீகம் 
5 சகலாத்து பாரசீகம் 
6 சால்வை பாரசீகம் 
7 தாவணசி பாரசீகம் 
8 மல் பாரசீகம் 
9 லுங்கி பாரசீகம் 
10 கதர் இந்தி 
11 டோரியா இந்தி 
12 துப்பட்டி இந்தி 
13 தோத்தி இந்தி 
14 தொப்பி இந்தி 
15 பாகை இந்தி 
16 புட்டா இந்தி 
17 நாடா இந்தி 
18  முண்டாசு இந்தி 
19 லங்கோடு இந்தி 
20 ஜோடு இந்தி 
21 கமிசு அரபு 
22 சிராய் அரபு 
23 நிசார் அரபு 
24 மகமல் அரபு 
25 ஜிப்பா அரபு 
26 பனியன் அரபு
27 சொக்காய் தெலுங்கு 
28 ஜாக்கட்டு ஆங்கிலம் 
29 டிராயர் ஆங்கிலம் 
30 பாடி ஆங்கிலம் 
31 சூட்டு ஆங்கிலம்
32 ஷர்ட் ஆங்கிலம் 
33 கோர்ட்டு ஆங்கிலம் 
34 காலர் ஆங்கிலம் 
35 டை ஆங்கிலம் 
36 பாக்கெட் ஆங்கிலம் 
37 பித்தான் ஆங்கிலம் 
38 பிளானல் ஆங்கிலம் 
39 பெல்டு ஆங்கிலம் 
40 பூட்சு ஆங்கிலம் 
41 சப்பாத்து போர்த்து 
42 துவாலை போர்த்து 
43 சாரி சமஸ்கிருதம் 
44 நோரியல் மலையாளம் 

III. உணவு:- 
1  அல்வா அரபு
2  ஜிலேபி அரபு
3  மசாலா அரபு
4  முரப்பா அரபு
5  மைசூர்பாகு அரபு
6  கிச்சடி இந்தி
7  கீர் இந்தி
8  கேசரி இந்தி
9  கோவா இந்தி
10  கொத்சு இந்தி
11  லட் இந்தி
12  பக்கோடா இந்தி
13  பஜ்ஜி இந்தி
14  பூரி இந்தி
15  பேணி இந்தி
16  பேடா இந்தி
17  மிட்டாய் இந்தி
18  ரவை இந்தி
19  ரொட்டி இந்தி
20  சப்பாத்தி பாரசீகம்
21  பர்பி பாரசீகம்
22  பாதாம் பாரசீகம்
23  பூந்தி பாரசீகம்
24  புலாவ் பாரசீகம்
25  மைதா பாரசீகம்
26  சாம்பார் மராட்டியம்
27  சேமியா மராட்டியம்
28  கோசுமரி மராட்டியம்
29  டாங்கர் மராட்டியம்
30  பட்டாணி மராட்டியம்
31  பாத்து மராட்டியம்
32  தோசை போர்த்து
33  கருவாடு போர்த்து
34  ஐஸ்கிரீம் ஆங்கிலம்
35  கேக்கு ஆங்கிலம்
36  சாக்லட்டு ஆங்கிலம்
37  பப்பிரமெண்டு ஆங்கிலம்
38  பிஸ்கொத்து ஆங்கிலம்
39  டோஸ்ட்டு ஆங்கிலம்
40  அன்னாசி போர்த்து
41  பரங்கி (ப்பழம்) போர்த்து
42  பப்பளிமாசு மலேயம்
43  மங்குஸ்தான் மலேயம்
44  ஆரஞ்சு ஆங்கிலம்
45  ஆப்பிள் ஆங்கிலம்
46  சப்போட்டா ஆங்கிலம்
47  தம்பட்டம் ஆங்கிலம்
48  பேரிக்காய் ஆங்கிலம்
49  ஒயின் ஆங்கிலம்
50  ஓவல் ஆங்கிலம்
51  கலர் ஆங்கிலம்
52  காபி ஆங்கிலம்
53  கொக்கோ ஆங்கிலம்
54  சாலட் ஆங்கிலம்
55  சோடா ஆங்கிலம்
56  பிராந்தி ஆங்கிலம்
57  லெமனேட்டு ஆங்கிலம்
58  ஆல்பக்கடா பாரசீகம்
59  எலுமிச்சை அரபு
60  சர்பத்து அரபு
61  கொய்யா பிரேசில்
62  சாயா சீனம்

IV. கட்டடப்பொருள்:- 
1 ஆர்ச்சு ஆங்கிலம் 
2 கர்டர் ஆங்கிலம் 
3 காம்பரா ஆங்கிலம் 
4 காம்பவுண்டு ஆங்கிலம்
 5 கேட்டு ஆங்கிலம் 
6 செட்டு ஆங்கிலம் 
7 பங்களா ஆங்கிலம் 
8 தார்சா ஆங்கிலம் 
9 கோரி பாரசீகம் 
10 ஜன்னல் போர்த்து 
11 வராந்தா போர்த்து 
12 குசினி போர்த்து 
13 கிராதி போர்த்து 
14 கக்கூசு டச்சு 
15 காடிகானா இந்தி 
16 பாலம் இந்தி 
17 மால் அரபு 

V. அறையுறை:- 
1 அலமாரி போர்த்து 
2 மேசை போர்த்து 
3 ஈசிசேர் ஆங்கிலம் 
4 சோபா ஆங்கிலம் 
5 டீப்பாய் ஆங்கிலம் 
6 பீரோ ஆங்கிலம் 
7 பெஞ்சு ஆங்கிலம் 
8 குரிச்சி அரபு 
9 பங்கா இந்தி 

VI. பயன்பொருள்:- 
1 குண்டாக் மராட்டியம் 
2 கெண்டி மராட்டியம் 
3 கூஜா அரபு 
4 கோப்பை ஆங்கிலம் 
5 தம்ளர் ஆங்கிலம் 
6 கெட்டில் ஆங்கிலம் 
7 பீங்கான் சீனம் 
8 லோட்டா சீனம் 
9 அண்டா இந்தி 
10 வாளி இந்தி 
11 தேக்சா இந்தி 

VII. கூலங்கள்:- 
1 அரிக்கன் ஆங்கிலம் 
2 ஆரொட்டி ஆங்கிலம் 
3 ஆக்கர் ஆங்கிலம் 
4 இசுக்போல் ஆங்கிலம் 
5 இஞ்சின் ஆங்கிலம் 
6 ஊக்கு ஆங்கிலம் 
7 சிமிட்டி ஆங்கிலம் 
8 சிலேட்டு ஆங்கிலம் 
9 பம்பு ஆங்கிலம் 
10 பாட்டில் ஆங்கிலம் 
11 பல்பு ஆங்கிலம் 
12 பிக்காசு ஆங்கிலம் 
13 புனல் ஆங்கிலம் 
14 மிஷின் ஆங்கிலம் 
15 மில் ஆங்கிலம் 
16 மீட்டர் ஆங்கிலம் 
17 நட்டு ஆங்கிலம் 
18 லஸ்தர் ஆங்கிலம் 
19 லாந்தர் ஆங்கிலம் 
20 ராட்டு ஆங்கிலம் 
21 வாட்சு ஆங்கிலம் 
22 ஜாக்கி ஆங்கிலம் 
23 கப்பி அரபு 
24 கித்தான் அரபு 
25 கீல் (கீர்) அரபு 
26 கோலி பாரசீகம் 
27 படுதா பாரசீகம் 
28 குப்பி இந்தி 
29 கொப்பரை இந்தி 
30 ஜமுக்காளம் இந்தி 
31 டப்பா இந்தி 
32 டப்பி இந்தி 
33 சாக்கு டச்சு 
34 சாவி போர்த்துக்கீசியம் 
35 சாடி போர்த்துக்கீசியம் 
36 பீப்பாய் போர்த்துக்கீசியம் 

வளரும்... 

- முனைவர் ஔவை ந. அருள், 

தேமொழி

unread,
Oct 29, 2020, 10:16:17 PM10/29/20
to மின்தமிழ்

30. அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

இளம் பிள்ளைகளாக நாங்கள் இருந்த பொழுதே நாங்கள் அணிந்த சட்டைகளும் பேண்டுகளும் வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் இராயப்பேட்டை கவுடியா மடத்திலுள்ள ‘ஜூவல் டெய்லர்ஸ்’தான். அதேபோல அருகிலுள்ள பைலட் திரையரங்கத்தில் நாங்கள் பல திரைப்படங்களைப் பார்த்துள்ளோம். குறிப்பாக, ‘காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தை அங்கு தான் நாங்கள் பார்த்தோம்.

அண்ணாநகரில் எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே, பெரிய விளம்பர நிறுவனத்தை நடத்திய திரு.இ.பி.ஜி. நம்பியார், சென்னையின் ஆட்சியராக இருந்த திரு.எம்.ஏ. ஷெரீப் இ.ஆ.ப., தலைசிறந்த குழந்தை நல மருத்துவர் திருஞானசம்பந்தம், திரு. சீதாராம்தாஸ், இ.ஆ.ப., திரு. ஏ.பி. முத்துசாமி, இ.ஆ.ப., முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.ஜெ.ஆர். இராமநாதன், இ.ஆ.ப., திரு.சி.என். இராமதாசு, இ.ஆ.ப., திரு.ஷெனாய், இ.கா.ப. ஆகியோர் இல்லங்களும் அமைந்திருந்தன. எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த ஃபோர்டீன் ஷாப்ஸில் (14 Shops) இல்டா (HILDA) ஸ்டோர்ஸ் என்ற கடையும் இருந்தது. என்னுடைய அப்பா தொலைபேசியில் யார் பேசினாலும், “இல்டா ஸ்டோர்சுக்குப் பின்புறம் வாருங்கள் அங்குதான் என்னுடைய இல்லம் உள்ளது” என்று பேசுவார்கள்.

அதேபோல முன்னாள் சட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.பொன்னையன் இல்லமும், எங்களுடைய ஆசிரியர் திருமதி. சாவித்திரி அம்மையார் இல்லமும் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. குடும்ப நண்பர் என்கிற வகையில், அவர்களுடைய இல்லத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் பலமுறை வந்து செல்வார். தீபாவளியை முன்னிட்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் வந்த பொழுது எனக்கு எப்படி பட்டாசு வெடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். ஒரு வத்திப்பெட்டி அளவுக்கு உள்ள ஒரு ரயில் பெட்டி, கயிற்றிலே வேகமாகப் போவது போல வெடி வெடிக்கும் ஓர் அற்புதமான நிகழ்வையும், எப்படியெல்லாம் பட்டாசுகள் வெடிக்கலாம் என்பதையெல்லாம் அவர் எனக்கு பொறுமையாகக் கற்றுக்கொடுத்தது இன்றைக்கும் நினைவில் உள்ளது.

அண்ணாநகர் இல்லம் அருகில்தான் பாரதரத்னா எம். விஸ்வேஸ்வரய்யா கோபுரம் உள்ளது. கல்லூரிக் காலங்களில் என் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்குள்ள படகுக் குழாத்தில் படகிலேயே சென்ற நினைவுகள் எல்லாம் எனக்கு நினைவில் உள்ளது. சென்னை கிறித்துவப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நாட்டு நலப்பணித்திட்டத்தில் நான் சேர்ந்து அங்கும் சமூகத் தொண்டில் ஈடுபட்டேன். அதேபோல புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியிலும் நாட்டு நலப்பணித்திட்டத்தில் கலந்து கொண்டேன். தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின் அணிவகுப்பின் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கட்டிடத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு எதிரிலுள்ள மொழித்துறையில் முதுகலைத் தமிழிலக்கியம் ஈராண்டுகள் பயின்றேன். என்னைத் துறையில் இணைத்து எனக்கு எல்லாமாக இருந்து வழிநடத்தியவர் பேராசிரியப் பெருந்தகை முனைவர் சி. பாலசுப்பிரமணியம் அவர்களாவார். அவர் எந்தையாரின் வகுப்புத் தோழர்; பெரும்பேராசிரியர்; அங்குலம் அங்குலமாக என்னை வளர்த்துப் பல பேச்சுப் போட்டிகளுக்கெல்லாம் அனுப்பி செதுக்கியவர் ஆவார். நான் முழுமையாக தமிழிலக்கியத்தில் ஈடுபட்டு கல்லூரிப் பேராசிரியராக வளரவேண்டுமென்று பெரிதும் விரும்பினார். களங்கமில்லாத நெஞ்சத்தோடு என்னை வளர்த்த பெருந்தகைக்கு நான் எப்பொழுதும் கடன்பட்டவனாவேன்.
--------------------------------------------------------
அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை
கவின்பொருள்:-
1 அம்பர் அரபு
2 அத்தர் அரபு
3 உக்கா அரபு
4 ஊதுபத்தி அரபு
5 சவ்வாது அரபு
6 சலாமிசிரி அரபு
7 அபின் பாரசீகம்
8 கசகசா பாரசீகம்
9 ரவேஸ் பாரசீகம்
10 ரெக்கு பாரசீகம்
11 கஞ்சா இந்தி
12 சோப்பு ஆங்கிலம்
13 சிகரெட்டு ஆங்கிலம்
14 சாம்பிராணி மலேயம்

போக்குவரவு:-
1 ஏரோப்ளேன் ஆங்கிலம்
2 கார் ஆங்கிலம்
3 கோச்சு ஆங்கிலம்
4 சாரட்டு ஆங்கிலம்
5 சைக்கிள் ஆங்கிலம்
6 டக்கு ஆங்கிலம்
7 டிராம் ஆங்கிலம்
8 மோட்டார் ஆங்கிலம்
9 பஸ் ஆங்கிலம்
10 பீட்டன் ஆங்கிலம்
11 லாரி ஆங்கிலம்
12 ரயில் ஆங்கிலம்

தகவல் தொடர்பு:-
1 இன்சூர் ஆங்கிலம்
2 கவர் ஆங்கிலம்
3 கார்டு ஆங்கிலம்
4 போஸ்டாபீசு ஆங்கிலம்
5 மணியார்டர் ஆங்கிலம்
6 ரிஜிஸ்தர் ஆங்கிலம்
7 லேபில் ஆங்கிலம்
8 லெட்டர் ஆங்கிலம்
9 ஜட்கா இந்தி
10 சப்பரம் இந்தி
11 டோலி இந்தி
12 ரேக்ளா இந்தி
13 தபால் இந்தி
14 லக்கோடா இந்தி
15 மேனா பாரசீகம்
16 கடுதாசி அரபு
17 ரிக்‌ஷா ஜப்பான்

வாணிகம்:-
1 அட்வான்சு ஆங்கிலம்
2 ஆண்டிமாண்டு ஆங்கிலம்
3 காண்டிராக்டு ஆங்கிலம்
4 டெண்டர் ஆங்கிலம்
5 டிப்பாசிட்டு ஆங்கிலம்
6 பண்டு ஆங்கிலம்
7 மார்க்கட்டு ஆங்கிலம்
8 வங்கி ஆங்கிலம்
9 அட்டவணை மராட்டியம்
10 உண்டியல் இந்தி
11 சவுக்கார் இந்தி
12 செலாவணி இந்தி
13 சிட்டை இந்தி
14 துபாஷ் இந்தி
15 பட்டியல் இந்தி
16 வட்டம் இந்தி
17 லாலா இந்தி
18 லேவாதேவி இந்தி
19 கசர் அரபு
20 கசாப்பு அரபு
21 கரார் அரபு
22 குசில் அரபு
23 சிராப்பு அரபு
24 தினுசு அரபு
25 தினுசுவாரி அரபு, பாரசீகம்
26 மகமை அரபு
27 மெளசு அரபு
28 ரகம் அரபு
29 கிட்டங்கி மலேயம்
30 சந்தா பாரசீகம்
31 தராசு பாரசீகம்
32 பசார் பாரசீகம்
33 மேஸ்திரி போர்த்து
34 நிரக்கு போர்த்து

எடை அளவு:-
1 அந்தர் ஆங்கிலம்
2 டன் ஆங்கிலம்
3 அஞ்சு ஆங்கிலம்
4 பர்லாங்கு ஆங்கிலம்
5 மைல் ஆங்கிலம்
6 ஏக்கர் ஆங்கிலம்
7 செண்டு ஆங்கிலம்
8 டசன் ஆங்கிலம்
9 கொயர் ஆங்கிலம்
10 ரீம் ஆங்கிலம்
11 கண்டி மராட்டியம்
12 ராத்தல் அரபு
13 தோலா இந்தி
14 கஜம் பாரசீகம்
15 தஸ்தா பாரசீகம்

ஆட்சியியல்:-
1 அசல் அரபு
2 அத்து அரபு
3 அமுல் அரபு
4 அகேர் அரபு
5 அனாமத்து அரபு
6 அயன் அரபு
7 ஆசாமி அரபு
8 ஆசில் அரபு
9 இனாம் அரபு
10 இருசால் அரபு
11 உசூர் அரபு
12 ஐவேசு அரபு
13 கஜானா அரபு
14 கவுல் அரபு
15 காயம் அரபு
16 சிபாயத்து அரபு
17 கிஸ்து அரபு
18 கைது அரபு
19 ஷரத்து அரபு
20 தணிக்கை அரபு
21 தபசில் அரபு
22 தஸ்தி அரபு
23 தாக்கீத் அரபு
24 தாக்கல் அரபு
25 தாசில் அரபு
26 பசலி அரபு
27 பாக்கி அரபு
28 நகது அரபு
29 மசரா அரபு
30 மராமத்து அரபு
31 மாசூல் அரபு
32 மாமூல் அரபு
33 மிராசு அரபு
34 முகாம் அரபு
35 ரயத்து அரபு
36 ரொக்கம் அரபு
37 வசூல் அரபு
38 வஜா அரபு
39 வாரிசு அரபு
40 வாய்தா அரபு
41 ஜப்தி அரபு
42 ஜமாபந்தி அரபு
43 பாரசீகம் அரபு
44 ஜாரி அரபு
45 ஜாமீன் அரபு
46 ஜாஸ்தி அரபு
47 ஷரா அரபு
48 அமீனா அரபு
49 ஆஜர் அரபு
50 இஸ்தியார் அரபு
51 கைதி அரபு
52 தகராறு அரபு
53 தகதா அரபு
54 தரப்பு அரபு
55 தாணா அரபு
56 பைசல் அரபு
57 நாசர் அரபு
58 முனிசிப்பு அரபு
59 ரத்து அரபு
60 ராசி அரபு
61 ருஜூ அரபு
62 ரோக்கா அரபு
63 வக்காலத்து அரபு
64 வக்கீல் அரபு
65 இலாக்கா அரபு
66 கஸ்பா அரபு
67 சன்னது அரபு
68 தாக்கீது அரபு
69 தாலுக்கா அரபு
70 பிதிஷி அரபு
71 பிர்க்கா அரபு
72 மசோதா அரபு
73 மாகாணம் அரபு
74 மாசர் அரபு
75 மாப்பு அரபு
76 மாஜி அரபு
77 ரஜா அரபு
78 அம்பாரி அரபு
79 லாயம் அரபு
80 கசரத்து அரபு
81 அம்பாரம் பாரசீகம்
82 அர்ஜி பாரசீகம்
83 ஆப்காரி பாரசீகம்
84 ஜமாசு பாரசீகம்
85 கம்மி பாரசீகம்
86 கார்வார் பாரசீகம்
87 கானுகோ பாரசீகம்
88 குமாஸ்தா பாரசீகம்
89 கொத்துவால் பாரசீகம்
90 கோஸ்பாரா பாரசீகம்
91 சரகம் பாரசீகம்
92 சராசரி பாரசீகம்
93 சிரஸ்தார் பாரசீகம்
94 தர்க்காஸ்து பாரசீகம்
95 பந்தோபஸ்து பாரசீகம்
96 பாவத்து பாரசீகம்
97 பினாமி பாரசீகம்
98 நவுக்கர் பாரசீகம்
99 ரசீது பாரசீகம்
100 வாபீசு பாரசீகம்
101 ஜமீன் பாரசீகம்
102 டபேதார் பாரசீகம்
103 டவாலி பாரசீகம்
104 தஸ்தாவேஜு பாரசீகம்
105 பிராது பாரசீகம்
106 சர்க்கார் பாரசீகம்
107 பிப்பந்தி பாரசீகம்
108 தர்பார் பாரசீகம்
109 திவான் பாரசீகம்
110 மொகர் பாரசீகம்
111 யதாஸ்து பாரசீகம்
112 ரோந்து, லோந்து பாரசீகம்
113 சிப்பாய் பாரசீகம்
114 துப்பாக்கி பாரசீகம்
115 பாரா பாரசீகம்
116 பீரங்கி பாரசீகம்
117 சர்தார் பாரசீகம்
118 சவாரி பாரசீகம்
119 சவுக்கு பாரசீகம்
120 சுபேதார் பாரசீகம்
121 சேணம் பாரசீகம்
122 லகான் பாரசீகம்
123 பட்டா இந்தி
124 மிட்டா இந்தி
125 கேது இந்தி
126 சுருதி இந்தி
127 கலான் இந்தி
128 டேரா இந்தி
129 கொட்டடி இந்தி
130 டலாய்த்து இந்தி
131 கச்சேரி இந்தி
132 தண்டோரா இந்தி
133 தமுக்கு இந்தி
134 பிசானம் தெலுங்கு
135 சம்பிரதி தெலுங்கு
136 கலெக்டர் ஆங்கிலம்
137 செட்டில்மெண்டு ஆங்கிலம்
138 டே ஆங்கிலம்
139 வாரண்டு ஆங்கிலம்
140 ஜவாப் ஆங்கிலம்
141 அசெசர் ஆங்கிலம்
142 அபிடவிட்டு ஆங்கிலம்
143 அப்பீல் ஆங்கிலம்
144 இன்லெண்டு ஆங்கிலம்
145 ஈரங்கி ஆங்கிலம்
146 உயில் ஆங்கிலம்
147 கிரிமினல் ஆங்கிலம்
148 கேசு ஆங்கிலம்
149 கோர்ட்டு ஆங்கிலம்
150 சம்மன் ஆங்கிலம்
151 சிவில் ஆங்கிலம்
152 டிக்கிரி ஆங்கிலம்
153 புரோநோட்டு ஆங்கிலம்
154 பீசு ஆங்கிலம்
155 பெட்டிஷன் ஆங்கிலம்
156 பென்ஷன் ஆங்கிலம்
157 நோட்டீசு ஆங்கிலம்
158 மவுண்டு ஆங்கிலம்
159 மேயர் ஆங்கிலம்
160 மேடோவர் ஆங்கிலம்
161 மைனர் ஆங்கிலம்
162 ரிக்கார்டு ஆங்கிலம்
163 ரூல் ஆங்கிலம்
164 லாயர் ஆங்கிலம்
165 ஜட்ஜ் ஆங்கிலம்
166 ஜெயில் ஆங்கிலம்
167 ஆபீசு ஆங்கிலம்
168 எலெக்‌ஷன் ஆங்கிலம்
169 எஸ்டேட் ஆங்கிலம்
170 ஏஜண்டு ஆங்கிலம்
171 ஓட்டு ஆங்கிலம்
172 கவர்னர் ஆங்கிலம்
173 சர்க்கிள் ஆங்கிலம்
174 சப்போர்ட் ஆங்கிலம்
175 சீல் ஆங்கிலம்
176 சூப்பிரண்டு ஆங்கிலம்
177 பவுண்டு ஆங்கிலம்
178 பியூன் ஆங்கிலம்
179 போலீசு ஆங்கிலம்
180 மேஜிஸ்டிரேட் ஆங்கிலம்
181 கிளிப்பு ஆங்கிலம்
182 கம் ஆங்கிலம்
183 பென்சில் ஆங்கிலம்
184 பேப்பர் ஆங்கிலம்
185 பேனா ஆங்கிலம்
186 பின் ஆங்கிலம்
187 பிளாட்டிங்கு ஆங்கிலம்
188 நிப்பு ஆங்கிலம்
189 ஸ்டீல் ஆங்கிலம்
190 துப்பு ஆங்கிலம்
191 ஏட்டு ஆங்கிலம்
192 ரிவால்வர் ஆங்கிலம்
193 படாலியன் ஆங்கிலம்

தேமொழி

unread,
Nov 1, 2020, 1:33:11 AM11/1/20
to மின்தமிழ்

31 - ‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முழுநேர வகுப்பில் இணைந்து, பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறிவுரைக்கிணங்க போராசிரியர் வ.ஜெயதேவனிடம் முதுநிலை ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் வ. ஜெயதேவன் உயர்ந்த சிந்தனையாளர்; அடுத்தவரை ஊக்குவிக்கும் மனமாட்சியும், மதிநுட்பமும் வாய்ந்தவர். பல்வேறு செய்திகளைத் தேர்ந்து தெளிந்து முடிவுகளைக் கூறுபவர். பேராசிரியர் ஜெயதேவன் போன்றவர்கள் தொடக்கத்திலேயே அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவருடைய அறிவுப் பெருமிதம் உலகெல்லாம் பரவியிருக்கும். போதுமென்ற மனமே அவருடைய புலமைக்கு அமைதி மனத்தைத் தந்துவிட்டது. கவியரசர் ஈரோடு தமிழன்பன் எழுத்தெண்ணி இவரைத் ‘தமிழின் தங்கக் கப்பல்’ என்று அழைத்தது பொருத்தமான தொடராகும்.

தமிழர் மனங்களில் ஒரு தங்கக் கப்பல்
ஆரவாரிக்கும்
உப்புக் கடலுக்கு எதிரே
அமைதியான
அருந்தமிழ்க்கடல் பேராசிரியர்
வ. செயதேவன்...
கிழக்குச் சூரியன்
முகம் பார்த்துக் கொள்ளக்
கிடைத்த
மானுடக் கண்ணாடி
அதிர்ந்து நடக்காத
பூனையின்
மெத்தென்ற பாதங்களில்
உதித்துவரும்இவர் சொற்கள்;
ஆனால்
வாஞ்சை மட்டுமே இருக்கும்
வஞ்சகம் இருக்காது!
வளர்வது நம் கண்ணுக்குத்
தெரியாமல் வளர்ந்துவரும்
குழந்தைகள் போல
வளர்ந்துவரும் இவர் செயல்கள்!
உழுந்தளவு
செயலாற்றவே உலக அளவு
அலட்டிக்கொள்ளும்
மனிதர்களிடையே
உலகளவு செயல்கள் இவரிடம்
உழுந்தளவு அலட்டல்
இல்லை.....
உதாரண மனிதர் செயதேவன்!
சிவந்த
ரோஜா மொட்டாய் இருக்கும்
மெரினாக் கட்டடத்துள்
மலர்ந்த மானுட ரோஜா
செயதேவன்!
இயக்கமாக இருந்து
இயங்கிக் கொண்டிருக்கும்
செயதேவன் அறைக்குள்
போய்வந்த காற்றுக்குள்ளும்
கதவு திறக்கும்
காரியாலயங்கள்
ஈர நிலா ஒளிபட்டு
இரும்புகள்
உருகும் சாத்தியம்
எங்கும் இருக்காது எனினும்
செயதேவன்
அறைக்குள்ளும் துறைக்குள்ளும்
எப்படியோ சாத்தியம்
என்பதை
வரலாறு முரசறையும்!
தமிழர் மனங்களில்
ஒரு
தங்கக் கப்பல்...
செயதேவன்!
பயணப் பதிகம்
வளரக்
கோடி கோடி அலைகளில்
குவிக்கிறோம் வாழ்த்துகள்.
----------------------------------

எதையும் புதுவதாக அறிந்து ஒழுக நினைக்கும் வேட்கை மக்களினத்திற்கு அமைந்த மனவுணர்ச்சியாகும் அரசியல், வாணிகம், கலை, இலக்கியம், பண்பாடு, இணைந்து நாம் நடத்தும் வாழ்க்கையில் பெருகிவரும் உறவுகளின் பயனாகக் கொண்டும் கொடுத்தும் மக்கள் தங்கள் மொழிகளை வளர்க்கின்றனர். அறிவியல் துறைகளைப் பற்றிய விவரங்களும் செய்திகளும் பொதுமக்கட்குச் சென்று சேரவேண்டும் என்னும் கருத்து உலகமெல்லாம் வரவேற்கப்படுகின்றது. காலை முதல் மாலை வரை நம் வாழ்வில் அயல் நாட்டுப் பொருள்கள், சொற்கள், சிந்தனைகள் எவ்வாறேனும் கலந்து விடுகின்றன. 

இந்நிலையில் கற்றார்க்கு மட்டுமே ஒரு மொழி உரியதாக நிற்பதில்லை. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் வகையில் எல்லார்க்கும் இசைவதாய்க் கூட்டு முயற்சியிலேயே மொழி ஊட்டம் பெறுகிறது. தமிழ்மொழியில் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட வழக்காறுகள் பிற்றை நாளில் மாறின. தொல்காப்பியர் காலத்தே ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் கூறப்பட்ட ஆண்பால் பெண்பால் இளமைப் பெயர்கள் இன்றைய வாழ்வில் நாம் காணுமாறு வழக்கில் பல இல்லை. ஏறு, ஒற்றை, ஒருத்தல், மோத்தை, தகர், கண்டி, மூடு, நாகு, அளகு, பிறவு போன்ற சொற்கள் இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு மரபுகள் தாமாகவே விலகும் போலும் புது வரவுகளை ஏற்றுக்கொள்ளவே வழுவமைதிகளும், மரூஉக்களும் ஒரு மொழியின்கண் அமைந்தன எனக் கூறுவாரும் உளர். இவ்வாறு காலந்தோறும் கடியப்படாத வகையில் பல்வேறு சொற்கள் மொழியில் கலந்து இடம் பெறும் சொற்குவியலைத் தொகுத்துக் கூறும் முன்னிலை ஆய்வாக நான் எழுதமுற்பட்ட ஆர்வத்தைக் கருத வேண்டுகின்றேன்.

வாணிகத்தின் பொருட்டும், அரசியல் உறவு காரணமாகவும், தொழில் நுணுக்கத் தொடர்பாலும் மக்கள் பலரோடு இணைந்து வாழ்ந்தனர்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்”
என்று சிலப்பதிகாரத்திலும்,

“மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடிக்
கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை?”
என்று மணிமேகலையிலும் நாம்காணும் போது, மாற்றங்கள் பலவற்றைக் காணும் இன்றைய நிலையை நாம் என்னென்று கூறுவது.

மொழிக்கலப்பு என்பது தமிழில் மட்டுமே நிகழ்ந்ததன்று. உலகின் செல்வாக்குள்ள மொழியாக அமைந்த ஆங்கிலம் பெருங்கலப்புக்கு உள்ளான மொழியே. இந்திய மொழிகளின் சொற்கள் பலவும் ஐரோப்பிய மத்திய ஆசிய மொழிகளின் வழியாக ஆங்கிலத்தில் பரவிக் கலந்தன என்று ஆப்சன் ஜாப்சன் தம்முடைய சொல்லகராதியின் முன்னுரையில் கூறியிருப்பது கருதத்தக்கது. வானத்தின் கீழே உலகத்தில் ஒவ்வொரு பகுதியினின்றும் பாயும் ஆறுகளனைத்தும் இணைந்து கலக்கும் கடலாகத் திகழும் ஆங்கிலமென்னும் நாகரிக மொழிக்கு நான் நன்றி பாராட்டும் அவாவினன் என்று எமர்சன் தமது தாய் மொழியைப் போற்றினார்.

மொழியைப் பற்றிய சிந்தனைகளையும் இனம், கலை, பண்பாடு நாகரிகம் பற்றிய தனிக்கருத்துகளையும் தெளிவாக அறியும் முயற்சிகள் மொழிவழி மாநிலப் பிரிவுகளுக்குப் பிறகு இந்திய நாட்டில் முன்னேற்றம் பெற்றன. மொழிக்கலப்பின் தேவையைத் தவிர்க்கவியலாது என ஒரு சாராரும், மொழிக்கலப்பால், மொழி கெடும் - தடுக்கப்பட வேண்டியது எனப் பிறிதொரு சாராரும் தத்தம் கருத்துகளை வலியுறுத்துகின்றனர். மொழியியல் நோக்கில் மொழிக்கலப்பிற்கான காரணங்களை அறிஞர் மு.வ. பின்வருமாறு குறித்தார்.

‘எபர்சன் கருத்துப்படிச் சொற்களைக் கடன் வாங்குவதற்குரிய காரணங்கள் மூன்றாகும். 

முதலாவது தம்மிடம் இல்லாத புதிய பொருள்களைப் பயன்படுத்தும்போது, அவற்றின் பிறமொழிப் பெயர்களைக் கடன் வாங்குதல். 

இரண்டாவது ஒரு மொழியாரிடமிருந்து செல்வாக்கோ உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது, அதற்கு உரிய அம்மொழிச் சொற்களையும் கற்றுக் கையாளுதல். 

மூன்றாவது மொழி பெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரணமாகத் தம் மொழிச் சொற்களைத் தேடிக் காணாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வந்து கலந்து சேர்த்தல்.’ இவ்வாறு ஒரு மொழி கடன் வாங்கியதைப் பற்றி ஆராயும்போது, இன்ன அளவிற்குத் கடன் வாங்கியது என்றும் ஆராய்தல் வேண்டும். பெரும்பாலும் கடன்வாங்கப்படுபவை பொருள்களின் பெயர்களும் பண்பும் ஆகும். வினைச்சொற்கள் மிகக்குறைந்த அளவிலே கடன் வாங்கப்படுகின்றன. இடைச்சொற்கள் கடன் வாங்கப்படுதல் அரிது. துணைவினை முதலியவற்றைக் கடன் வாங்கல் இல்லை. வேற்றுமையுருபுகள், வினை விகுதிகள் முதலியவற்றைக் கடனாகப் பெறுதல் சிறிதும் இல்லை எனலாம். ஒரோவழி எண்ணுப் பெயர்களில் ஒரு சில கடன் வாங்கப்படுதல் உண்டு.

மொழியில் இயற்கை நிகழ்வாக இக்கலப்பு நேர்ந்து கொண்டிருக்க மொழித்துய்மைக்கு அரணாக நின்றோர் பிறமொழிச் சொற்களைச் சுட்டிக் காட்டியும் மொழித் தூய்மையை வலியுறுத்தினர். “வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா” என்று வினவினார் பாவேந்தர் பாரதிதாசன், வடவர் ஆதிக்க எதிர்ப்பு, ஆரிய வெறுப்பு, இந்தி மறுப்பு என்ற எண்ணங்களிலிருந்து விடுபடாமலேயே இந்திய நாட்டு ஒற்றுமைக்கு இசைவாகப் பல்வேறு மாநில மொழிச் சொற்கள் விரவுவதை மறுக்க இயலாதவராக,

“பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி
பிரிய நினைத்தவர் பிழையுணர்கின்றார்.
பெருநிலத்தில் ஒரே கொடி பறந்தது
நாவலந்தீவிலோ எல்லாரும் நல்லவர்
எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்
இமயச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்து கொண் டோடினான்.
ஒருவர்க்கு வந்தது அனைவர்க்குமென்ற
மனப்பாங்கு வளர்ந்தது. வேண்டிய மட்டும்
இமயம் மீட்கப்பட்டது ஈதோ பார்
சீனன் செந்நீர் கண்ணீராக
எங்கோ ஒட்டம் எடுக்கின்றானடி” என்றும் பாடினார்.

வடசொற்கள் எனக் கருத்தப்பட்டவை தமிழ்ச் சொற்களே என வாதிட்டுப் பல சொற்களைப் பலர் பட்டியலிட்டனர். சான்றாக கனம், தானம், இலக்கணம், நேயம், ஆசை, நாடகம், பூசை, தெய்வம், காவியம், காப்பியம், இமயம், வேதம், மானம், ஆதி பகவன், கங்கை, சலம், உவமை, அமிழ்து, ஆலயம், நாகரிகம், திராவிடம், முட்டி, ஆசாரம், அதி, ஆசிரியர், அடம், அரங்கு, முரலை, முரலி, மா, கண்ணியம், காயம், ஓம், சங்கம், பதி, பிலம், குலம், மனம், கன்னி, காலம், உலகம், ஆகுலம், சிவம், சட்ட செட்டி, முகம், காரணம், காரியம், கடிகை, கடிகாரம், கற்பனை, வடிவு, படிவு, தாரம், ஒரை, பரதர், பாரதம், பரதன், தாசர், வித்தகம், மளிகை, பூ (பூமி), குடம், வினயம், கவி, புருவம், வாரி, வாரிதி, தாமரை, பஞ்சம், பனாதி, வேந் தன், ஆய்தம், சங்கம், வரம், பகுதி, பிச்சை, தச்சன், பாக்கியம், கோட்டி, கருப்பம், கூகை, மனிதர், விருத்தம், தூது, சுவர்க்கம், தேவர், அவி, நாகம், பலி, துளசி, வாலி, தாமரை, இலட்சம், கோடி, மலம், ஆயுள், பசு, பதம், கவசம், குண்டம், சூது, விஞ்சை, சடை, மேதை, கம்பளம், அவிசு, அவை, சபை, மேழம், சாரீரம், வீணை, தூரம், கூட்டம், கோட்டம், கூகம், கவழன், இராகு, அகளம், அங்கம், தங்கி, அங்குடம், அங்குரம், அசடு, அடவி, அம்பரம், அம்பா, அமர், ஆகுலம், மங்கலம், மங்களம், ஒட்டகம், தூலம், இயேசு, பலபம், சுலபம், தாளம், மேளம் அருச்சனை, புதன், வியாழன், இலம்பாடி, இரகு, கோளம், காவிரி, ஏளனம், ஆலாபனம், சேது மூலம், வண்ணம், அலாதி, முந்திரி, தை, மது, சாரம், சுரம், பாலன், பாலியன், நீதி, சேட்டு, திருமதி, விகுதி, அச்சாரம், பெட்டி, காந்தி, ஒருவந்தம், புத்தகம், வேகம், திசை, திக்கு, சொத்து, வேகம், வேதனை, சொந்தம், படி, அனுப்பு, அனுபோகம், உத்தரவு, உத்தாரம், உச்சரி, கண்ணியம், கவனம், கண்டம், கொஞ்சம், பாடம், படம், இயேசு, கண்ணி, குமரி, கொட்டாரம், பந்து, சிப்பம், கன்னம், சக்கரம், அகராதி, தன்மை, கிண்கிணி, நுகர், தானம், சிரத்தை, கவனம், செந்திரை, தரை, மானம் என்ற பட்டியலைக் காணலாம்.

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n...@gmail.com
---

தேமொழி

unread,
Nov 2, 2020, 12:23:39 AM11/2/20
to மின்தமிழ்
32 - ‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது,

முனைவர் சி. பாலசுப்பிரமணியம் - சங்க இலக்கியத்தையும், முனைவர் வ. ஜயதேவன் - அகராதியியலையும், முனைவர் மா. செல்வராசன் - இக்காலம் (ம) இடைக்காலம் மற்றும் படைப்பிலக்கியத்தையும், முனைவர் இ. சுந்தரமூர்த்தி - தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தையும், முனைவர் அ. அ. மணவாளன் - இலக்கியத்திறனாய்வு ஒப்பிலக்கியத்தையும், முனைவர் ந. தெய்வசுந்தரம் - பொது மொழியியலையும், முனைவர் இன்னாசி, முனைவர் பொன்னுசாமி மற்றும் ஆய்வு மாணவர் திரு. கார்த்திகேயன் - இலக்கியப் படைப்பியலையும், ஆய்வு மாணவர் திருமதி நிர்மலா - மொழிபெயர்ப்பியலையும் கற்பிக்கும் பேராசிரியப் பெருந்தகையர்களாகத் திகழ்ந்தனர்.

என்னுடன் முதுகலை பயின்றவர்களில், மூர்த்தி குருநானக் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், சற்குருநாதன் அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகவும், ஜயச்சந்திரன் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், மகாதேவ ராவ் தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் உரிமையாளராகவும், மணிமேகலை சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

எது கலையென்று தெரிவதற்குள்ளே முதுகலையில் முந்திக்கொண்டு பல்வேறு கல்லூரிப் பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் வீறுகொண்டு கலந்து அங்கிங்கெனாதபடி நான் சென்னையை வலம் வந்தேன்.

என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்கப் பல்கலைக்கழகம் செல்லத் திட்டமிட்டு, சிகாகோ இலினாய் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பெர்க்ளி பல்கலைக்கழகம், விசுகான்சின் ,மேடிசன் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பினேன். தொண்ணூறுகளில் இப்பல்கலைக்கழகங்களில், தெற்காசிய இலக்கியத் துறையொன்று அமைந்திருந்ததால், பேராசிரியர் ஏ.கே. இராமானுஜன், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர் நார்மன் கட்லர் இவர்களுக்கெல்லாம் தொடர்ந்து கடிதம் எழுதி தமிழிலக்கியத்தை ஆய்வாக அங்குவந்து பயில்வதற்கு முனைந்தேன். இம்முயற்சிகளுக்கெல்லாம் என்னுடைய மாமா மருத்துவர் இளமதியும், முனைவர் வானவன் ஏகாம்பரமும் உறுதுணையாக இருந்தனர். அப்பொழுதே சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு நான் செல்ல திரு.வி.ஜே.பாபு மிகவும் உதவியாக இருந்தார். சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் திரு. சுப. தின்னப்பன் மகன் அருண் வீரப்பன் , திருமதி பனையப்பன், திரு. பேரம்பலம், திரு. பார்த்திபன் சண்முகம் போன்றோர் துணை நின்றனர். என்னுடைய அமெரிக்கா ஆய்வு முயற்சி அன்றைய சூழலால் நான் செல்வதற்கு இயலாமல் நின்றது . என் அன்னையாரும் அமெரிக்காவிற்குச் சில ஆண்டுகள் கழித்துச் செல்லலாம் என்று தேற்றினார்கள். அதேபோல உன்னை அந்த நாடே அழைக்கும் ஒருநாள் வராமலா போய் விடும் என்று ஆற்றுப்படுத்தினார்கள். அம்மாவின் வாக்கின்படி, சென்ற ஆண்டு சூலை - பத்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் அரசின் சார்பில் கலந்து கொள்வதற்காக அதே சிகாகோவிற்குச் செல்ல நேர்ந்தது. அம்மாவும் நானும் மகிழ்ந்தோம்.

பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து நீக்க வேண்டுமென்ற துடிப்பு ஒரு புறத்திலும், இவற்றை நீக்க வேண்டியதில்லை என்று கருத்து மறுபுறத்திலுமாகத் தமிழின் மொழிக்கொள்கை இருவேறு இயல்பாக உருப்பெற்றது.

இந்நிலையில் ஒருசாரார் புதிய அறிவுத்துறைப் பொருண்மைகளைக் குறிப்பதற்குப் பிறமொழிச் சொற்களை எடுத்தாளுதலில் எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது என்றனர். வேறொரு சாரார் தமிழ்ச் சொற்களைத்தான் எங்கும் நாம் வழங்குதல் வேண்டும் என்றனர். இப்போக்கினைப் பற்றி, "இது முடிந்து விடவில்லை. இந்நிலை என்றேனும் முடிந்துவிடப் போவதும் இல்லை, இது புதிதாக உண்டான ஒரு விவாதமும் அன்று. தமிழ் மொழியில் தொடக்க நிலையிலிருந்தே எப்பொழுதும் இது உள்ளதுதான். ஆனால் முன்பெல்லாம் கட்சிப் பிரதிகட்சிகள் இல்லை. வாதப் பிரதிவாதங்களும் இல்லை. பிறமொழிக் கலப்பினால் நமது மொழி பாழாய்விடும் அதைப் பாதுகாத்தற்குத் தமிழ்ப் பாதுகாப்புப் படை ஒன்றுவேண்டும் என்று படை திரட்டியதும் இல்லை. எனினும், உள்ளூர அடிப்படையில் இந்த விவாதம் அமைதியாய் நடந்து கொண்டுதான் இருந்தது. நமது தாய்மொழிக்கு மட்டும் இவ்விவாதம் தனி உரிமையுமில்லை; வழக்கிலுள்ள எல்லா மொழிகளிலும் இது காணப்படுவதே" என்றார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

ஒருவர் வாணிகத் துறையில் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவரிடம் விடுமுதல் அதிகமாயில்லை. தம்மிடமுள்ள கைப்பொருளுக்கு ஏற்றபடிச் சுருங்கிய அளவில் வணிகம் தொடங்குகிறார். இவரிடத்தில் ஐம்பது சரக்குகள்தாம் உள்ளன. இவரைச் சுற்றி வாழும் மக்களுக்குத் தேவையோ இருநூறு சரக்குகள். அச்சரக்கு அவரிடம் இல்லை. அதைக் காட்டிலும் தம்மிடமுள்ள வேறொரு சரக்கு அதிகம் பயனுடையது என்று சொல்லி இச்சரக்கை இவர் கொடுத்து வருகிறார். மக்கள் நிறைவு அடையவில்லை. இதைக் கண்டதும் அவர்கள் கேட்கும் சரக்கு இதுதான் என்று தம் கடையிலுள்ள பிறிதொரு சரக்கைக் கொடுத்து வருகிறார். மக்கள் நிறைவடையாமல் , வாணிகர் மீது மிகுந்த வெறுப்புக் கொள்ளுகிறார்கள். இவர் கடையில் வாடிக்கை வைத்துக் கொள்ளாது வேறுகடைக்கு மக்கள் செல்கிறார்கள். வாணிகர் மற்ற கடைகளோடு சமமாகப் போட்டி போட்டு, மக்கள் வேண்டும் சரக்குகளையும் வாங்கிவைத்து அவர்களையும் நிறைவு பண்ணித் தருகிறார். இவ்வணிக நிகழ்ச்சி போன்றதே மொழி வரலாறும். சொற்களே சரக்குகள் மக்கள் தேவைதான் புதிய அறிவுத் துறைகள்.

ஆனால் வருங்காலத் தமிழைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. வாணிகர் தனது சரக்குகளைச் செய்தது போலத் தமிழ்மொழியும் உயிர் என்ற சொல்லை எவ்வளவு பயன்படுத்தக் கூடுமோ அவ்வளவும் செய்து விட்டது. ஆனால் நாழி முகவாது நானாழி. புதுச் சரக்குகளை வாங்கத்தான் செய்தார் வாணிகர். அது போல ஆன்மா என ஒன்று உண்டு என்று சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, சொல்லளவிலாவது அதனைக் கடன் வாங்க வேண்டியதுதான். கடன் வாங்கிய அச்சொல்லைத் தள்ளிவிட முடியாது என்றும் அவர் குறிப்பதும் சிந்தனைக்குரியது.

பிறமொழிச் சொற்களை முழுவதும் ஏற்பது, அறவே தள்ளி விடுவது என்ற நிலைகளை விடுத்து, இயன்றவரையில் தமிழாக்கம் செய்தும் தனித்தமிழில் எழுதியும் வரும் நிலை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பேரறிஞர் அண்ணா இம்முயற்சியில் தாம் எவ்வளவு வெற்றி பெற்றோம் என்பதைக் குறிப்பிடும் போது, “தம்பி பலவற்றை நான் எழுதிய பிறகு அவற்றில் பிறமொழிச் சொற்களின் கலப்பையெண்ணி வருந்தியுள்ளேன். என்னால் இயன்றது அவ்வளவுதான். நீயாவது பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி எழுதவும் பேசவும் பழகு” எனக் கூறுவது இங்குக் கருதத்தக்கது.

உலக அறிவியல் வளர்ச்சியோடு ஒப்புநோக்கி பேரறிஞர் வா. செ. குழந்தைசாமி குறிப்பிடும் கருத்துகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டி, மொழிக் கோட்பாட்டில் ஒரு புதிய அணுகுமுறையை நமக்கு அறிவிப்பதாக அமைந்திருக்கிறது.

தூய்மை, தனித்தன்மை என்பது உயர்ந்த கூறுபாடுகளைக் குறிப்பிடும் சொற்கள். ஆனால், மொழித்துறையில் எது தூய்மை, எது தனித்தன்மை என்பதிலும். அது எங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் நமக்குத் தெளிவு வேண்டும். கன்னித் தன்மை தான் தூய்மையுடையது என்பதில்லை. தாய்மையும் தூய்மையானதே. தன்மை வேறு தனித் தன்மை வேறு. பலருடன் சேர்ந்து செயற்படும் பொழுதுதான், ஒருவரது தனித்தன்மை தெரிகிறது.

தமிழ் விண்ணிலிருந்து பிறந்தது அன்று விண்ணவர் தந்ததும் அன்று மனித சமுதாயம் படைத்த மொழி; மனித சமுதாயம் வளர்த்த மொழி; மனிதன் படைத்த எதுவும் குறையுடையது. வளர்ச்சிக்கு வழியுடையது வளர வேண்டிய தேவையுடையது. எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான எல்லாவற்றையும், நம் மூதாதையர்கள், மொழியைப் பொறுத்தவரை முடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று நாம் எண்ணவோ, நம்பவோ இடமில்லை.

தமிழும் உலகிலுள்ள மற்றைய மொழிகளைப் போன்றதே. ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் இருக்கலாம். தமிழுக்குச் சில சிறப்புகள் கூடுதலாகவே இருக்கலாம். இருப்பினும், வளர்ந்த நாட்டினர் தம் மொழி வளர்ச்சி, அதில் அவர்கள் கடைப்பிடித்த முறை, அவர்கள் கண்ட அனுபவம் ஆகியன சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நமக்கும் பயன்படும் பயன் தரும். நமது மொழி மற்ற மொழிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இயல்பும், சிறப்பும் உடையது என்பது போன்ற பார்வையோடும், மற்ற மொழியினர் அனுபவம் நமக்குத் தேவையில்லை, அல்லது பயன்படாது என்னும் மனநிலையோடும், காதும், கருத்தும் மூடிய நிலையில் இருந்து கொண்டு எழுதுவதும், பேசுவதும் தக்க பாதையாகாது. முன்னேறியுள்ள நாடுகளின் கடந்த கால அனுபவங்களை ஆய்ந்து, அவற்றை இயன்ற வழியில், தேவையான மாற்றங்களோடு பயன்படுத்தி, அதன் வழி நாம் பயன் பெறவேண்டும் என்ற நோக்கம் நமக்கு வேண்டும்.

அருந்தமிழில் அயற் சொற்களை ஆய்வு செய்த வகையில், எதிர் கால நலன் கருதி நாம் ஏற்கத் தக்கதாக துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமி கருத்து அமைகிறது. எனினும், அயல் மொழிச் சொற்கள் வழக்கில் வந்தமை கருதிப் பொதுமக்களுக்கு என்று எழுதும் நூலில் பலவாகப் பிறமொழிச் சொற்கள் அமையுமானால், அவர்களுக்கு என்ன விளங்கும்? கல்லூரியில் பாடநூல்கள் வேறு, பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வேறு. பொதுமக்களுக்கு அவர்கள் அறிந்த சொற்களைக் கொண்டே தெளிவாக எழுதி நாம் விளக்க வேண்டும். இங்கே மணிப்பிரவாள நடை பயன்படாது. இதனாலேயே இந்த நாட்டுப் பழைய மணிப்பிரவாள நடை வேர்கொள்ளாது மறைந்து விட்டது. உலகம் போகின்ற போக்கில், பொதுமக்கள் மக்களாட்சியில் சிறந்த இடம் பெற வேண்டுமானால், உலக அறிவை எல்லாம் ஒரு வகையாக அவர்கள் எளிமையாகப் பெற்றே தீரவேண்டும். கலைச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களாக அவர்கள் வாயிலும் காதிலும் இனிக்கின்ற காலம் அமையவேண்டும். முற்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதினாலன்றிச் சில கருத்துகளை விளக்கவே முடியாதென்று அறிஞர்கள் சிலர் கருதினார்கள். ஆனால் நாளடைவில் அந்த அறிவையெல்லாம் எளிய தமிழில் எழுதிக் காட்டக்கூடும் என்ற நிலை ஏற்பட்டபோது, மணிப்பிரவாள நடை தானாவே மறைந்து போனது. இலத்தீனில்தான் கருத்துகளைத் தெரிவிக்க முடியுமென்று நியூட்டன் எழுதினார். இப்போதோ அந்த நிலைமாறி ஆங்கிலத்தில் எழுதும் காலம் அமைந்து விட்டது. அந்த நிலை தமிழில் ஓராண்டில் ஈராண்டில் வாராது. எனினும், கற்றவர்கள் பொதுமக்களுக்காக எழுதும்போது இந்த நிலை படிப்படியாக வளரும். அதுவரையிலும் ஆங்கிலத்தமிழ் மணிப்பிரவாள நடை வழக்கத்தில் இருந்து கொண்டுதான் வரும். பாவேந்தர் பாரதிதாசன் பல புதிய சொல்லாக்கங்களை நமக்கு வழங்கிய போதிலும் அவரும், மியூசியம், தியேட்டர், இண்டியன், ரெயில், இந்தியன் பார்லிமெண்டரி, கவர்னர் ஜெனரல், கோர்ட், எலக்சன், கொம்முயூன், எலச்சியம், அத்மினிஸ்ராத்தேர், பிரெஞ்சு, சர்க்கார், போஸ்த், பிரிட்டிஸ், ஹைதராபாத், பிர்க்கா, தாலுக்கா, ஸ்தலஅதிகாரி, காண்டிராக்ட், பம் பாய், கிராணிக்கல், பிரிபிரஸ் ஜர்னல், நேஷனல் ஸ்டாண்டர்ட், ரிமாண்டு, கமிஷன், கார்ப்பரேஷன், மோட்டார், சோஷலிஸ்டுகள் போன்ற ஆங்கிலச் சொற்களைத் தம்முடைய படைப்புகளில் சேர்க்க நேர்ந்ததை எண்ணிப் பார்க்கலாம். ஆங்கிலம் என்பது ஆங்கிலேயர் மொழி என்னும் பொருளுடையதன்று. ஆங்கில மொழி இன்றைய நிலைக்கு உலக வளர்ச்சியில் புதுமையின் வடிவமாக, புதுமையின் வாய்க் காலாக அமைகிறது. அதனைத் தமிழ்நிலத்தில் பாய்ச்சிக் கொள்வதில் கேடொன்றுமில்லை. பழையன இங்கு நிறைய உண்டு. எல்லாம் செழிப்பாக வளர்வதில் என்ன ஐயம்? எனப் பேராசிரியர் தெ. பொ. மீ. வினவுவது, வருங்காலம் நோக்கித் தமிழில் ஆங்கிலக் கலப்பு நிகழ்வதைத் தவிர்க்க இயலாது என்பதைத் தெளிவாக்குகிறது.

தேமொழி

unread,
Nov 9, 2020, 3:28:57 AM11/9/20
to மின்தமிழ்
33 - ‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும், பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் பேராசிரியர் சித்ரா மற்றும் மல்லிகா, செந்தாமரை, மூர்த்தி, மகாதேவராவ் போன்றோர் என்னுடன் பயின்றனர்.

எனக்கு இளம் பிராயத்தில் எதைப் படித்தாலும் அப்பாடத்தை ஒட்டிய இடங்களைப் பார்க்க வேண்டும், படித்த நாடகக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் என் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும். ஆறாம் வகுப்பில் செஞ்சிக்கோட்டை என்ற பாடம் படித்தபோது எந்தையாரிடம் செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துச் செல்லுமாறு பலநேரம் கேட்டேன் என்று என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதேபோல, பத்தாம் வகுப்பில் ‘பதினேழாம் நாள்’ நாடகம் படித்து மகிழ்ந்தேன். அந்நாடகத்தை எழுதியவர் என் மாமா பேராசிரியர் இரா.குமரவேலன். அந்நாடகத்தை எங்கள் அண்ணாநகர் இல்லத்தில் திறந்தவெளி மாடத்தில் அரங்கேற்றினோம். அதில் நான் துரியோதனனாகவும், அண்ணன் கண்ணன் கிருஷ்ணராகவும், தம்பி பரதன் புரோகிதராகவும், அண்ணன் முரளி சல்லியனாகவும், நண்பர்கள் இராமசாமி, ஸ்ரீராம், இராமநாதன், கோபால் ஏனைய மகாபாரதப் பாத்திரங்களாக நடித்தனர். கதாபாத்திரங்கள் ஒப்பனைகள் அனைத்தையும் நாங்களே மிக நேர்த்தியாகச் செய்ததெல்லாம் நினைத்து மகிழ்கிறேன். நிறைவாக, நாடகத்தைப் பாராட்டிப் பேசும்போது, எந்தையார் ‘துரியோதனனாகவே அருள் மாறிவிட்டான்’என்று பாராட்டியதையும் நினைத்து மகிழ்கிறேன்.

இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டு மாநிலக்கல்லூரியில் பயின்றபோதே தமிழ்த்துறை மாணவர்களுக்கு தமிழ்ச்சங்க விழாவில் மிகப் புதுமையாக ‘அணுக்கதிர்ப் பிளவும் - கசிவும்’ என்ற தலைப்பில் ‘மருத்துவ மாமேதை’ செ.நெ. தெய்வநாயகம் தலைமையில் ‘மருத்துவத் திலகம்’ அமலோற்பவநாதன் , ‘மருத்துவச் சுடர்’ சுதா சேஷைய்யன் போன்றோரை மாநிலக் கல்லூரியில் அழைத்து தமிழிலேயே உரையாற்றியதை அப்பொழுதே இதழ்கள் பாராட்டின.

மாநிலக் கல்லூரியில் பயிலும்போதே முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்த என் நண்பர் சிவக்குமார் வழிகாட்டுதலில், ‘லியோ கிளப்’பில் உறுப்பினராக நான் சேர்ந்தேன். அங்கு நாங்கள் அரிமா சங்கத்தின்கீழ் இடையறாது சமூகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அச்சூழலில், திங்கள்தோறும் வெளியிடப்படும் ‘லியோ லிங்க்’ என்ற தனியிதழின் ஆசிரியப் பொறுப்பும் எனக்குக் கிடைக்கப்பெற்றது. வாரந்தவறாமல், கூட்டங்களில் ஆங்கிலத்திலேயே பேசுவதும், இதழ்களில் ஆங்கிலக் கட்டுரைகளை வரைவதும் இளங்கலை வகுப்பிலேயே ஒரு பயிற்சியாக மாறிவிட்டது. பல பெருந் தலைவர்களையும், நடிகர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் இயல்பாகக் கிடைக்கப் பெற்றது. கல்லூரிப் பருவத்திலேயே அரிய வாய்ப்பாக பொதுமக்கள் உறவும், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் மலர்ந்தது. லியோ கிளப் கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்த திருமதி சாவித்திரி இராகவேந்திரா என் ஆங்கில உரையைக் கேட்டுப் பாராட்டி எழுத்தாளர் சிவசங்கரியிடம் பரிந்துரைத்து அவர்கள் தலைமையில் எழுத்தாளர் மாலனுடன் நானும் என் நண்பர்கள் கணபதி சுப்பிரமணியம், அண்ணாமலையுடன் தில்லிக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. அப்பயணத்தில் எழுத்தாளர் சிவசங்கரி மூலமாக பாரதப் பிரதமர் திரு. இராஜீவ் காந்தியை மிக அருகில் சென்று சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

லியோ கிளப் வாயிலாக கல்லூரிகளில், பொதுவிடங்களில் குருதிக்கொடை முகாம்கள் நடத்தி கலைஞானி கமலஹாசன் தலைமையில் பேசும் வாய்ப்புக்கள் அமைந்தன. லியோ கிளப்பின் நல்லுறவால் கிடைக்கப்பெற்ற தோழி வித்யா மூலம், பம்பாய் விளம்பர நிறுவனமான கிளியா விளம்பர நிறுவனத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளராக முதுகலை முடித்தவுடனே ஒருசேரப் பணியும் கிடைத்தது. அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சீரோடு சீருந்தில் சென்றுவரும் வசதியுடன், முதுநிலை ஆய்வையும், தில்லி முனைவர் பட்ட ஆய்வையும் முடித்து அதே நிறுவனத்தில் 1997 வரை நிறுவன மேலாளராகப் பணியாற்றி பல்வேறு வணிக நிறுவனங்களின் பங்கு முதலீட்டு விளம்பரவாணராக மிளிர்ந்து இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு வானூர்தியில் எளிதாக சென்று வரும் பாங்கும் வளர்ந்தது.

இந்தியாவிலுள்ள பல நிறுவனங்களுக்கு நல்ல தமிழில் விளம்பரம் வரைவதை உறுதியாக்கம் செய்தேன் என்பது எனக்கு பெருமகிழ்ச்சியாகும்.

என் பாட்டனார் உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் பெரிய விளம்பரப் பதாகை அமைத்து - தமிழறிஞரின் தனிப்புகழை ஒளிரவைத்த சாதனை கிளியா விளம்பர நிறுவனத்தின் புகழொளியாகும். மேலும், கிளியா நிறுவனத்தின் நிறுவனர்களான திரு. சுனில் கௌதம், திரு. வேணுகோபால், திரு. தவல் தேசாய், முப்படைத் தளபதிகளைப்போல நிறுவனத்தை மும்மடங்கு வேகத்தில் நடத்தி வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். திரு. வேணுகோபாலின் மகள் பெயர் கிளியா. இதற்கு பொருள் கேட்பதே பல நிறுவனத் தலைவர்களின் வாடிக்கையாகும். நான் சொல்லும் பதில், Clea என்ற பெயரை Clear என்று சொல்லி மகிழ்வேன். இம்மூவரும் என்மீது அன்பும் பரிவும் காட்டியதை நினைந்து மகிழ்கிறேன். அவ்வண்ணமே ஆறு திங்களுக்கு மேல், பம்பாயிலேயே நான் பணியாற்ற வாய்ப்பு நல்கியதையும் எனக்காகவே ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் தங்குவதற்கு வசதி செய்ததையெல்லாம் எண்ணிப் பெருமிதமடைகிறேன். வசந்தகால நிகழ்வுகளையெல்லாம் எண்ணும்பொழுது, என்னுடைய இனிய நண்பராக, குடும்ப உறவாக வடுவூரைச் சேர்ந்த திரு.இராதாகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தூணாகத் திகழ்ந்தார். அவருடைய விழியும் எண்ண வழியும், என்னை பல நேரங்களில் அங்கே ஆற்றுப்படுத்தின. அவர் சொறிந்த அன்பு தாயன்பைப் போன்றது. மராத்திய மண்ணில் மறத்தமிழராய் மிளிரும் அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும்; இன்னும் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பது என் விழைவாகும்.
--------------------------------------------------------

இதுகாறும் தமிழில் அயல்மொழிச் சொற்கள் புகுந்ததை ஆராய்ந்த நிலையில், கலப்பு நேர்வது இயல்பு என்றும், கலப்பாக வருவது வந்த மொழிக்கு வளர்ச்சியாகவும், சொந்த மொழிக்குத் தளர்ச்சியாகவும் அமையக் கூடாது என்ற கருத்து நாட்டவரால் உணரப்படுகிறது. ‘டிக்கெட்’ என்று பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச்சொல், ஐம்பதாண்டுகட்குப் பின்னர்ச் சில மாவட்டங்களில் 'சீட்டு’ என்று கூறப்படுகிறது. 'சீட்டு’ என்பதும் தமிழ்ச் சொல்லன்று, எனினும், ‘டிக்கெட்' என்ற சொல் வழக்கொழிந்தது. ஞாயிறு, திங்கள் முதலியவை கிழமைகளாகக் கருதப்படும்போது நிலைபேறு பெற்றன. இச்சொற்களே சூரியன், சந்திரன் என்னும் விண்கோள்களைக் குறிப் பிடுகையில் வழக்கிற்கு வருவதில்லை. அயலவர் ஆட்சிக்கு ஆட்பட்டதால், ஆங்கிலச் சொற்களின் வரவு நேர்ந்தது. சீனம், ஜப்பான் முதலிய நாடுகள் அயலவர்க்காட்படாதிருந்ததால், எதனையும் தத்தம் மொழியிலேயே வழங்க வேண்டுமென்ற நிலை உண்டாயிற்று. தமிழ் நாட்டிலும் ஆங்கிலச் சொற்கள் பாமரர் வழக்கில் இடம் பெறும்போது, அதனை அயல்மொழி என்று நாம் எவ்வாறு கருத முடியும் என்று வினவும் பேராசிரியர் தெ.பொ.மீ. ஆங்கிலத்தில் எல்லாக் கலைகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலம் வாழ்கிறது என்கிறோம், எல்லாக் கலைகளும் அம்மொழியில் திளைத்துச் செருக்கிக் கூத்தாடுகின்றன. அம்மொழி கற்றார் அதன் வழியே எல்லாம் அறிதல் கூடும், இக்கலைகள் தோன்றிய நாள் முதல் ஆங்கில மொழி அவற்றைப் பேசி வருவதால், இங்கு ஒரு புதுமையும் இல்லை. ஆனால், தமிழோ? தமிழனைப் பாருங்கள். மிகமிகப் பின்தங்கி விட்டான். அவற்றைக் கற்ற தமிழரும் அவற்றை ஆங்கிலத்திலேயே கற்றனர். தமிழில் பேசச் சொல்லின்றித் தடுமாறுகின்றார். இது, கற்றோர்கள் நிலையே அன்றி மற்றோர்கள் நிலை அன்று. பணியாட்கள் தமிழில் அன்றி வேறு எதனில் பேச முடியும்? ஆங்கிலப் பெயர்களை அப்படியே தங்களால் முடிந்த அளவு ஒலித்த தமிழிலேயே பேசுகிறார்கள். இதனைப் பார்த்து மகிழப் பலருக்குக் கண் இல்லை; கேட்டுக் களிக்கக் காது இல்லை; இது தமிழ் இல்லை என்கின்றனர் தமிழ் அறிஞர்கள் . அவர்கள் விரும்பும் தமிழ் அன்று என்பது உண்மையாகலாம். இருந்தாலும் தமிழே, தமிழே, தமிழேயாம். என்று குறிப்பிடுவது ஆழ்ந்த மொழியியல் முடிவாகும்.

தொடக்கநிலையில் முதுநிலை ஆய்வாக அமைந்த என் முயற்சி, இளம் ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்வுக்கும் உறுதுணையாக அமையும் என்பது திண்ணம். அயல்மொழிச் சொற்கள் தமிழில் கலந்துள்ள நிலைகளை,
1. தமிழ், தமிழரைப் பற்றிய பிறநாட்டறிஞர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையிலான பிறமொழிக் கலப்பாய்வு.
2. இலக்கியங்களில் காணும் பிறமொழிச் சொற்கள்.
3. அரசின் முற்கால ஆணைகளில், கோப்புகளில் காணப்படும் பிறமொழிச் சொற்கள்.
4. கல்வெட்டுகளில் காணப்படும் பிறமொழிச் சொற்கள்.
5. தமிழ் இதழ்கள், நாளேடுகளில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள்.
6. பழந்தமிழ் அகராதிகளில் அயல்மொழிச் சொற்கள்.
7. தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் அயல்மொழிச் சொற்கள்
8. மக்களிடமிருந்து நேரில் கண்டறியும் பிறமொழிச் சொற்கள். எனப் பலவகைளில் எதிர்காலத்தில் ஆராய நம்மைத் தூண்டும். இவை மட்டுமன்றி, அன்றாட வழக்கில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்களை மக்கள் ஈடுபடும் துறைகள் ஒவ்வொன்றிலும் தனித் தனியே கண்டறியவும், எந்தெந்த நிலைகளில் விரவுகின்றன என்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இடமுண்டு.

விவிலிய ஈபுரு மொழியில் 8000 சொற்களே இருந்தன. ஆனால் இன்றைய ஈபுருவில் பல இட்சக்கணக்கான சொற்களைக் கொண்டே 17 தொகுதிகள் கொண்ட பேரகராதி வெளியிடப்பட்டதை அறிஞர் மலையமான் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் பெருமிதமும் ஊக்கமும் தமிழ் மக்களிடம் மலர வேண்டும்.

ஒரு நாட்டின் மொழிக் கொள்கையைச் சார்ந்தே அந்நாட்டு மொழி வளர்ச்சி அமையும். ஆட்சி, கல்வி, செய்தித் தொடர்பு, அறிவியல் தொழில் நுணுக்கம் முதலிய துறைகளில் ஒரு மொழியைப் பயன்படுத்தும் முறையில் நாடு முழுவதற்கும் ஒருமைப்பாடு வேண்டும் என்று கருதினால் பன்மொழி வழங்கும் நாட்டில் மாநில மொழிகள் சில மாற்றங்களைப் பெறும். அவற்றின் வளர்ச்சி கூடத் தடைப்படலாம். ஒரு மொழியைத் திணித்தல் சிறுபான்மை மொழிகளைப் புறக்கணித்தல் போன்ற மொழிக் கொள்கைகள் மொழிகளின் உறவைச் சீர்குலைப்பதோடு, சமுதாய வளர்ச்சியையும் பின்னடையச் செய்யும் என்றும் மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n...@gmail.com
----

தேமொழி

unread,
Nov 23, 2020, 2:59:04 AM11/23/20
to மின்தமிழ்
34 - ‘ஆய்வுக்கும் கலைக்கும் ஓய்வில்லை’

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

ஆங்கில அரசு உருவானதும் பல்வேறு பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளிகளையும் மேனிலைப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க நினைத்தார்கள். அந்த வகையிலேதான் பல்கலைக்கழகமாக கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய்ப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மூன்றும் முதலில் உருப்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து உருப்பெற்று ஓங்கியதுதான் தில்லிப் பல்கலைக்கழகம். தில்லிப் பல்கலைக்கழகம் பரந்து விரிந்த இடத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பல்கலைக்கழகமாகும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் பழமை பெரிதும் போற்றப்படுகிறது என்பது போன்ற கருத்தால் பிறகுதான் புதுமை உணர்வை வளர்க்க சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

‘கிளியா’ விளம்பர நிறுவனத்தினுடைய பெருமிதத்தால் நான் திங்களுக்கு இரண்டு முறை தில்லி செல்கிற வாய்ப்பு ஏற்பட்டது. அப்படித் தில்லி செல்கிறபோதுதான் என் மனதில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் அரும்பியது. திரும்பிச் சென்னைக்கு வந்து ஒருவாரம் தங்கியிருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், துறைத்தலைவர், டாக்டர் சி.பா. அவர்களிடம் தில்லியில் போய் ஆய்வு செய்யலாம் என்பதைச் சொன்னேன். அவர் அதை விரும்பவில்லை என்றாலும், நீ விரும்பினால் சென்று வா என்று தான் ஊக்கமளித்தார். பேராசிரியர் சி.பா., நான் தில்லி சென்றால் தமிழ்நாட்டில் புகழ்பெறுவது அரிது என்றும் கருதினார். அப்போது, திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த பொன் சௌரிராசன் எந்தையாரிடம் அருளைத் தில்லிப் பல்கலைக்கழகத்துக்குப் போய் ஆய்வு செய்யச் சொல்லுங்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிற பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் கனிவானவர்; பண்பானவர்; இந்தி தெரிந்தவர். அவரிடம் ஆய்வு செய்யட்டும். நான் கடிதம் வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று சொன்னதை வாய்ப்பாக எடுத்துத் , தில்லிப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தேன்.

தமிழிலக்கியம் பயின்றாலும், ஒப்பிலக்கிய நெறிப்பாட்டில் வளரவேண்டும் என்ற விழைவால், தில்லிக்குச்சென்று ஆய்வுசெய்ய நீ முனைய வேண்டும் என்ற எந்தையாரின் அறிவுரைக்கிணங்கத் தில்லியிலுள்ள சிறந்த பல்கலைக்கழகமான தில்லி பல்கலைக்கழகத்தில், நான் முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்தேன்.

அங்கிருக்கும் ‘Modern Indian Languages and Literary Studies’ என்ற துறையில் முனைவர் பி.பாலசுப்பிரமணியத்திடம் (தோற்றம்:10.07.1933- மறைவு: 07.07.2007) ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். வாராது வந்த மாமணிபோலப் பேராசிரியர் என்மீது தனிப்பரிவு காட்டித் தில்லியில் அவர் தங்கியிருந்த ‘கரோல் பாக்’ வளமனையிலேயே எனக்கும் மாடிப்படிக்கருகிலுள்ள அறை ஒதுக்கி, தில்லியில் பயில்வதற்கு வழிசெய்த பெருந்தகை அவராவார். அவர் அப்பல்கலைக்கழகத்திலேயே 1965 முதல் 1997 வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். மொழிபெயர்ப்புக் கலையில் வல்லமை பெற்ற அவர், தெலுங்கில் இயற்றப்பட்ட கதைகளைத் தமிழிலும், எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற புதினத்தைச் சாகித்திய அகாடெமிக்காக ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தவர் ஆவார். அறிவியல் நுணுக்கம் வாய்ந்தவர். ‘கலைக்கதிர்’ இதழில் பணியாற்றிய பாங்கும், அவரே தானாக ‘அணுக்கதிர்’ என்ற தனியிதழை நடத்திய பெருமிதமும், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் எவருக்கும் அஞ்சாத துணிவும் வாய்ந்த என் பேராசிரியர் தில்லியின் கடுங்குளிரிலும் வாட்டும் வெயிலிலும் பல கருத்துகளை என்னிடம் தன் இல்லத்திலும், தில்லிப் பல்கலைக்கழகத் துறையிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தில்லிப் பூங்காக்களிலும் என்னிடம் பேசியதை நினைந்து நினைந்து நெகிழ்கிறேன். பேராசிரியருடைய துணைவியார் திருமதி சுகந்தா எனக்கு இன்னொரு தாயாக இருந்து அன்பும் பரிவும் ஊட்டி வளர்த்தார்கள். இன்றைக்கு இருவரும் இல்லையென்றாலும், அவர்களுடைய மக்கட்செல்வங்களில் ஒருவரான திருமதி பானுபூஷண்ராஜ் சென்னையில் மருத்துவராகவும், மற்றொருவரான திரு. இரமேஷ்குமார் தில்லியில் இதழாளராகவும் சீரோடும் சிறப்போடும் பணியாற்றி வருகிறார்கள். முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பான ‘Study on Translations and Adaptations of Shakespeare’s plays in Tamil’ என்பதை ஆங்கிலத்திலேயே மூன்றாண்டுகள் ஆய்ந்து தோய்ந்து பலபேரறிஞர்களையும், பேராசிரியர்களையும், சந்தித்துப் பல செய்திகளை அறிந்து இந்தியாவிலுள்ள தலைசிறந்த நூலகங்கள் (தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை) எல்லாம் நேராகச் சென்று, பல தகவல்களைத் திரட்டி ஆய்வினை நிறைவு செய்தேன். இருமொழிப் பெரும் பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் சேக்ஸ்பியர் நாடகங்களின் மொழியாக்கம் பற்றிய நூல் எனக்கு மூலவழிகாட்டியாக அமைந்தது. இன்றும் அவர் பரிவில் இருந்து வருகிறேன். நான் ஆய்வு மேற்கொண்ட துறையின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நான் என் ஆய்வுச்சுருக்கப் பதிப்பை முழுமையாக வெளியிடும் முன், அங்குள்ள பிற இந்தியமொழிப் பேராசிரியர்கள் மத்தியில், என் ஆய்வின் சிறப்புக் கூறுகளைப் பற்றி ஒரு மணிநேரம் ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும். அங்குள்ள வங்கமொழி, அசாமிய மொழிப் பேராசிரியர்கள் தங்கள் கருத்தை முன்மொழிவார்கள். அக்கூட்டத்தில்தான் நான் முதன்முதலாக ஞானபீட இலக்கிய விருது பெற்ற பத்மஸ்ரீ இந்திரா கோஸ்வாமி அவர்களைச் சந்தித்து அவர்களும் என் தலைப்பை வாழ்த்தியது நினைவிருக்கிறது.

என்னுடைய தந்தையார் சொல்வார்கள், நாம் தமிழர் என்பதில் எவ்வளவு பெருமிதம் கொள்கிறோமோ அதே போல இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டைப் பற்றி எண்ணிப்பார்க்கின்ற வகையில் இந்திய மாநிலங்கள் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு நூறு வரிகளாவது தெளிவான குறிப்புக்களை எழுதவேண்டும் என்று வற்புறுத்துவார்கள். நம்மிடையே பலர் அசாம் செல்ல வாய்ப்பில்லை. பல்வேறு மாநிலங்களுக்குப் பலர் சென்றிருக்க மாட்டார்கள். அதிகமாகத் தெரிந்தவர்கள் கொச்சி, மைசூரு, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, தில்லி என்றுதான் குறிப்பிடுவார்கள். இமாசலப்பிரதேசத்தில், சிம்லாவில் ‘Indian Institute of Advanced Studies’ என்னும் பெரிய ஆய்வு நிறுவனம் இருப்பதும், அங்கே அறிஞர்கள் போய் நூலாராய்ச்சி செய்து வருவதும் உண்டு. மெல்லிய குளிர் காற்று எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் அழகிய மாளிகையை நாம் இப்போது நினைத்தாலும் நமக்கு மனம் பெரிய ஊக்கத்தைத் தரும். எனக்குத் தெரிந்து தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலிருந்து பட்டிமண்டபத் திலகம் பேராசிரியர் இராசகோபாலன் அந்த ஆய்வு நிறுவனத்துக்குப்போய் மூன்று மாதங்கள் ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார். அந்த வகையிலேதான் நான் கல்லூரி மாணவனாக இருந்த பொழுதே என்னுடைய நண்பனின் உதவியால் ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியதால் தில்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா போன்ற நகரங்களுக்குப் போய்ச்சென்று நான் பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை வந்த போது அந்த மாநகரங்களையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருந்ததால் நான் தனியாகப் பேராசிரியர் இராசகோபாலனிடம் தில்லியிலிருந்து சிம்லாவுக்குச் சென்று, அவருடன் மூன்று நாள்கள் தங்கியிருந்து அந்நிறுவனத்தின் நூலகத்தைக் கண்டு வியந்தேன்.

தில்லி பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறையின் பேராசிரியர்களாக முனைவர் ஆறுமுகம், கலைச்செம்மல் முனைவர் சாலை இளந்திரையன், இந்திரா பார்த்தசாரதி, முனைவர் இரவீந்திரன், முனைவர் மாரியப்பன் போன்றோர் பணியாற்றினார்கள். இப்பொழுது இத்துறையைச் சீரும் சிறப்புமாகத் தலைமையேற்று நடத்தி வருபவர் முனைவர் கோவிந்தசாமி இராஜகோபால் ஆவார். அவருக்குத் தக்கதுணையாகப் பேராசிரியர் பிரேமானந்தன், பேராசிரியர் உமாதேவி போன்றோர் திகழ்கின்றனர். 1922 - இல் தொடங்கப்பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் 15 முதல் 20 நூலகங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு சாரநாதன், திருமதி இராஜலட்சுமி இணையரின் மகன் திரு நரசிம்மன் என்கிற கண்ணனுடன் அவர் வாழ்ந்து வருகின்ற ஆழ்வார் திருநகரில் அவருடன் பத்தாம் வகுப்பு இணைந்து படித்தேன். கண்ணன் படித்தது ஆவிச்சி பள்ளியில், நான் படித்த்தோ சென்னை கிறித்தவப் பள்ளியில். அவருடைய தமக்கையார் திருமதி சித்ரா நாராயணன் புகழ்பெற்ற பட்டமன்றப் பேச்சாளர், கவிஞர். அவருடைய வழிகாட்டுதலில் கண்ணனும் நானும் கணக்குப் பாடத்திற்காக அவர் சென்று வந்த கணக்காசிரியரிடம் தனிப்பயிற்சிக்குச் சென்று வந்தேன். நான் முன்னரே சொன்னதுபோல கணக்குப் பாடம் படிப்பதற்காகப் பல திசைகள் சென்றேன். வென்றேனா என்பதுதான் எனக்குள் அவ்வப்போது இன்றுவரை எழுந்துவரும் வினாவாகும். கண்ணன் பழகுதற்கு இனிமையானவர். கணக்குப்பாடம் வருகிறதோ இல்லையோ அவர் என்னைத் தன் அன்பால் மெருகேற்றினார். அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம், கலைஞானி கமலஹாசனைப் பார்ப்பதைப் போலவே இருக்கும். அந்தத் தொடர்பு மீண்டும் நான் தில்லியில் முனைவர் பட்டம் பயிலும்போது அரும்பியது. அவர் அப்பொழுதே தில்லித் தலைமைச் செயலகத்தில் உள்துறையில் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்தவர். முனைவர் வகுப்பிற்கு எனக்கு வகுப்பு மாணவர்களே இல்லை. ஓராசிரியர் பள்ளியில் பயில்வதுபோல முனைவர் பாலசுப்பிரமணியனிடம் தில்லிப் பல்கலைக்கழகத்தில் மிராண்டா இல்லத்தில் பயின்றேன். அவ்வப்பொழுது தில்லியைச் சுற்றிக் காட்டுவதையும், தென்னிந்திய உணவுகளைச் சமைத்துப் பரிமாறுவதையும் கண்ணனின் இயல்பான நற்பண்புகளாகும் .

---------------------------------------------------------

இந்நிலையில், அறிஞர் தெ.பொ.மீ. குறிப்பிடுவதும் சிந்தனைக்குரியது. “தமிழன் சில நூற்றாண்டுகள் தூங்கிக் கிடந்தான். ஆங்கிலேயன் இவனைத் தூங்கவும் வைத்தான். இப்போதுதான் தமிழன் விழித்தெழுகின்றான். ‘ஆமையும் முயலும் ஓடிய கதை’யாய்த் தோன்றுகின்றது. ஆங்கிலேயன் அனைவரையும் தள்ளி முன்னேறி ஓடியுள்ளான். அவன் ஓடிய வழியில் அவன் அடிச்சுவட்டினைப் பின்பற்றித்தானே நாம் ஓட வேண்டும்? விரைவாக ஓடி வெற்றிபெறவும் வேண்டும். ஆங்கிலத்தில் இருப்பதுபோலத் தமிழிலும் எல்லாக் கருத்துகளும் அழகழகாக, இனிமையாக எல்லோருக்கும் எளிதில் எட்டும்படி குவித்துக்குவித்து வைக்க வேண்டும். அதுவரையில் ஆங்கிலத்தையோ பிறமொழிகளையோ நாம் புறக்கணித்துப் பயனில்லை. தமிழ்மொழி பேராற்றல் படைத்தது. கும்பகருணன் பேராற்றல் படைத்தவன். ஆனால், தூங்கித் தூங்கி ஒன்றுக்கும் உதவாமற் போனான். நாமும் தூங்கக்கூடாது. எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்; விழித்தெழுந்து விரைவாக ஒடித் தொடர வேண்டும். தூங்கினால் ஆமை விழித்தோடினால் முயல், இல்லை, தூங்கினால் பிணம் ஓடினால் பணம், பணம் எங்கும் பாயும். தமிழ் இப்போது விரைந்தோடுகிறது. அதற்கென்ன ஓட்டம்? செலாவணி? தமிழ்மொழி, உண்மையில் முதல் மொழியாக அமையவேண்டும். அப்போது எல்லாம் தமிழாகிவிடும் எங்கும் தமிழாகிவிடும்.” வளர்ச்சியும் விரைவும் இருதடங்களாகக் கொண்டு அயல்மொழிகளையும் அரவணைத்துத் தமிழின் செம்மையைக் காப்பது அரிய பணியாகும்.

மொழி என்பது இனத்தையும் பண்பாட்டையும் குறிப்பதாகக் கருதப்படுவதும், நமது நாட்டில் மொழிவழி மாநிலப் பிரிவுகள் அமைந்திருப்பதால் தேசியம், சார் தேசியம், மாநிலப்பற்று முதலிய கோட்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. மொழி வளர்ச்சி ஒரு நாட்டின் ஒருமையையும், பொதுக் கொள்கையையும் சார்ந்தே அமையும் என்று எதிர் நாளியல் அறிஞர்கள் கருதுகின்றனர். நிறைவாக மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் குறிப்பிட்ட நிலையே தமிழ் மக்களின் உயிர்ப் பண்பாகும்.

கருத்தைப் புலப்படுத்தும் ஒரு கருவியே மொழி என்பது தொடக்கக் கருத்து. இறைவன் நீங்கலாக உலகத்து எப்பொருளும் கருவிகளே. இறைவனைக் கூட நிமித்த காரணன் என்பர். உடம்பும் ஐம்பொறிகளும், ஊர்திகளும் தகவலியங்களும் கருவிகள்தாம். இவற்றின் தூய்மைக்கும் செம்மைக்கும் ஒழுங்குக்கும் எவ்வளவு ஆய்வு நடத்துகின்றோம். உடல் நலத்துக்கென உலகம் எவ்வளவு கோடிகள் செலவழிக்கின்றது. உடல் மாயும் கருவிதானே என்று பேசுவது அறியாமையன்றோ? மொழி என்பது மனிதவுடைமை. பண்டு இன்று நாளை என எக்காலத்துக்கும் இயங்குடைமை, அதனாற்றான் ‘வாழிய செந்தமிழ்’ என்றார் பாரதியார். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசனார்.

தேமொழி

unread,
Nov 30, 2020, 12:08:44 AM11/30/20
to மின்தமிழ்
35 -  ‘தாய்மொழியால்தான் தலைநிமிர முடியும்’

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, எவருமே எதிர்பார்க்காத அளவுக்கு, தொலைத்தொடர்பு வசதி இப்படியெல்லாம் வாய்க்குமா வளருமா என்று எண்ணிப்பார்க்காதபொழுது, நான் பணியாற்றிய ‘கிளியா’ விளம்பர நிறுவனத்தில் ஒருமுறை Morgan Stanley போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனத் தலைவர்கள் அமெரிக்காவிலிருந்து தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை செய்தியாளர்களுடன் காணொலி வாயிலாகத் தொடர்பாளர் கூட்டத்தை ஒருங்கிணைக்கின்ற வாய்ப்பை நான் பெற்று நடத்தியதில் மகிழ்ந்தேன்.

செப்புக் கம்பிகளை உருவாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விளம்பரத்தைப் பம்பாய் கிளியா நிறுவனம் வெளியிட்டபோது, உலகத்தின் பல்வேறு நாகரீகங்கள் எப்படியெல்லாம் செப்பு நாணயத்தை வெளியிட்டிருந்தார்கள் என்பதையும், செப்புக் கம்பிகளின் நெடுங்காலத் தொல்வரலாற்று தகவல்களையும், தொடர் விளம்பரங்கள் மூலமாகச் சாசன வரிகளாக ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுக் காட்டியது. அச்சு வடிவங்களை அகழ்ந்தபோது கண்டெடுத்த பழைய ஆவணங்களைக் கடத்தும் கருவியாகச் செப்பு பயன்படுகிற பாங்கினைக் காட்டும் உண்மைகளையும் படிப்படியாகக் காலத்தால் உணரத் தொடங்கினோம். ஒப்பரிய உலோகமான செப்பு நாகரிக உலகத்தின் நரம்பாக இயங்கி வருகிறது என்ற பொருள்பட விளம்பரப்படுத்தினோம்.

வெறும் வெட்டி ஒட்டும் விளம்பரதாரர்களாக இல்லாமல், வரலாற்றை மீளவும் வரைந்து காட்டும் ஆய்வாளர்களாக அமைய வேண்டும் என்றே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாடமாகப் பயின்றோம்.

கிளியா விளம்பர நிறுவனம், 1995-ஆம் ஆண்டில் சிறந்த சாதனை படைத்துப் பத்தாண்டுகளாக விளம்பரத் துறையில் பணியாற்றியதன் அடையாளமாக அடையாறு பாலத்திற்கு அருகில் ‘1986-1995 Clea alone, ahead. 10 eventful years’ என்ற மிகப்பெரிய விளம்பரத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தோம். இது வெளிவந்த போது நான் சொன்னேன், எழுதப்பட்ட விளம்பரம் செலவல்ல; ஏராளமானவர்களையும் வரவேற்கும் வரவு என்றேன்.

கிளியா நிறுவனத்தின் முன்னால் தலைவராகத் திகழ்ந்த திரு. அனீஷ் பேனட், கிரியா விளம்பர நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டு வந்த ‘Above par’ என்ற வணிக இதழில் விளம்பரங்களை வெளியிடும் போது சமுதாயச் சிந்தனையோடு எழுத்தறிவு, எய்ட்ஸ் நோய், குழந்தைத் தொழிலாளர் கொடுமை, கொத்தடிமை முதலிய பல்வேறு நலவாழ்வு விளம்பரங்களுக்கு நடுப்பக்க முதன்மையை இலவசமாகவே தருகிறேன் என்று கூறினார்கள். கூறியதைப் போலவே செய்தும் காட்டினார்கள். விளம்பர உலகம் இப்படியெல்லாம் முயற்சிசெய்தால், விளம்பரம் என்பது ஒரு செலவல்ல. சமுதாய முற்போக்குக்கு ஒரு நல்வரவாக அமையும்.பஞ்சாப் சிங்கம் திரு அனிசு பானட் சமூக சிந்தனையாளராக மலர்ந்து இன்றைக்கு சிறப்பாக சண்டிகரில் வாழ்ந்து வருகிறார். அவருடைய துணைவியார் திருமதி சாந்தி தமிழ் மகளாக அவர் குடும்பத்திற்கு மகரந்தம் சேர்த்து வருகிறார்.பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்களது இனிய இல்லத்தில் தங்கிப் பேறு பெற்றவன்.அவருடைய தங்கை விமான ஏரணங்கு செல்வி நீரஜாவின் வீர மறைவை முன்னிட்டு நமது தினச்செய்தியில் கட்டுரை வரைந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------
நினைப்புகளையும், மனத்தில் பதுங்கியிருக்கும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு அமைந்த வாயிலாக மொழி அமைகிறது. மொழி ஒரு மனிதனை அடையாளங் காட்டுவதோடு, அவருடைய வாழ்வு, வளம் முதலியவற்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு மனிதனைப் பிறர் மதிப்பிடவும், முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் மொழி அவனாகவே அமைந்து விடுகிறது. மொழியென்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் உருவான நாள் முதல் பதிந்த பண்பாட்டு சுவடுகளைத் தாங்கியுள்ளது. இதன் மேம்பாட்டிற்காகக் கோடிக்கணக்காகச் செலவிடத் தயங்கக் கூடாது. இந்த நிலையில், வல்லமை உடையவர்கள், வணிகவளம் கொண்டவர்கள், ஏமாற்றத் தெரிந்தவர்கள், பேரறிவுடையவர்கள் என்ற வகையில் மக்கள் இனம் வளர்ந்ததோடு அவரவர்கள் தனித்தனியாகத் தங்கள் நாடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். இடத்தாலும், பரப்பாலும் சிறிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும், வல்லமையால் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் வாயிலால் மிகப் பெரிய நாடுகளைக்கூடத் தங்களுக்குக் கீழ் வசப்படுத்திக் கொள்ளவும், தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொள்ளவும் முடிந்தது. ஆங்கில அரசாளுகையின் வரலாறு இப்படித்தான் ஏற்பட்டது. ‘ஆங்கிலத்தின் மூலம் எவரையும் அடிமைப்படுத்த முடியாது’ என்றே கூட ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலம், அடிப்படையிலேயே அதிகாரக் குருதியோடும் மொழியாக இருக்கிறது என்பார்கள். இதனால், பல நாடுகள் ஒற்றுமையின்மையாலும், காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியை இழந்தாலும், எளிதாக அடிமைப்பட நேர்ந்தது. அடிமைப்பட்டாலும், அறிவு உழைப்பு, முயற்சி இவைகளையெல்லாம் தங்களை அடிமைப்படுத்திய அரசுகளின் மொழி வாயிலாகவே மீண்டும் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. அதனால்தான், ஆங்கில அரசுதான், நம்மை அடிமைப்படுத்தியது என்றாலும், ஆங்கிலக் கல்வியினால் ஏற்பட்ட தெளிவே அடிமைத் தளையை நீக்கிக் கொள்ளவும் நமக்கு உதவியது.

கல்வி, தொழில், நீதிமன்றம், அரசு நடவடிக்கைகள், தகவல் சாதனங்கள் அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆங்கில ஆட்சியில் ஆங்கில மொழி எங்கும் பரவியது. அதுவே சில நிலைகளில் சிக்கலாகவும் நமக்கு அமைந்தது.

ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கல்வி தருவது கடமையென்றாலும் கூட அவன் அயலவனாக இருந்த காரணத்தால் பொதுக்கல்வி தந்தபோது அடித்தளத்து மக்கள் அந்த ஆங்கில மொழிக் கல்வியைப் பெற முடியாமல் பின்தங்கினர்.

மாட்டுத் தோலை அறுத்துப் பழகியவர்களுக்கும், காலணி தைத்தவனும்தான் மருத்துவக் கல்வியை எளிதாகப் புரிந்து கொண்டு வந்திருக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து கற்களை உடைத்தும், சாலைகளைச் செப்பனிட்டும் பயிரிட்டும் பாடுபட்டவன்தான் காவல் துறைக்கு வந்திருக்க வேண்டும். மரங்களை வெட்டிக் கருவிகளைச் செய்தவனும், இரும்பை உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சியவனும் பொறியாளராக வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? இந்த ‘மொழி மாயை’தான் ஒரு காரணமாயிற்று என்று அறிஞர்கள் பலமுறை கூறிவந்தனர். உயர்ந்த நிலையான அறிவைப் பெறுவது போதாது. சமுதாயம் முழுவதுமே அறிவியல், தொழில் நுணுக்கம் முதலிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக, பெறுபவர்களாக மக்கள் மாறும்போதுதான் பிற நாடுகளோடு நாமும் நிகராக வளர முடியும் என்பதைக் காலத்தின் போக்கில் அறிந்தார்கள்.

நாம் இப்போது எவ்வளவுதான் பழகியதாக இருந்தாலும், அயல் மொழியிலேயே அறிவியல் தொழில் நுணுக்கங்களைக் கற்கின்ற பழக்கம் தொடர்ந்து நீடித்து வருமானால், நமது சமுதாயம் வளர முடியாததாகவே மாறி விடும் என்று மொழியாராய்ச்சியாளர்கள் பேசியதும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். அப்படி ஆங்கிலத்திலேயே இருந்து வந்தால், சிலருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தேர்ச்சிக்கும் வேண்டுமானால் அது உதவலாம். ஆனால், சமுதாயத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவாது. பள்ளத்தில் விழுந்திருக்கும் எல்லோரும், எழுந்து நிற்கும் ஒட்டுமொத்தமான சமூகமுன்னேற்றம் வந்தால், தமக்கு ஏதேனும் சங்கடம் வருமோ என்று சந்தேகிக்கும் சிலரின் தன்னலப் போக்குகளால், தாய்மொழிகள் தலையெடுக்க முடியாமற் தடுமாறுகின்றன. இந்த நிலையில், நாட்டுக்கு விடுதலை வந்ததும், மாநிலங்கள் மொழிவழியாக அமைந்ததும், கல்வி, ஆட்சி, சட்டம், நீதி, தொழில்வளம், அறிவியல், தகவல் சாதனங்கள் எல்லாம், அந்தந்த மாநில மொழிகளில் மெல்ல வரத் தொடங்கின என்றால், மக்கள் விழிப்புற்று அந்தத் துறைகளில் பங்கேற்கத் தொடங்கினார்கள் என்று பொருள். ரேடியோ, நியூஸ்பேப்பர், ரயில்வே, அன்றாட கருவிகள் எல்லாவற்றையும், அவர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கியதும், பழக்கத்தில் இருந்த ஆங்கில மொழி மெல்ல மெல்ல நீங்கிச் சில நிலைகளில் தாய்மொழி ஆற்றலோடு இப்போது வந்து விட்டது. இப்பொழுது, வானொலி, செய்தித்தாள், தொடரி என்றே சொல்லத் தொடங்கி விட்டோம். கேபினெட் என்பது அமைச்சரவை என்றும், உலகச் செய்திகள் பலவற்றைச் சிற்றூர்களில் அறிந்து கொள்ளவும் பேப்பர் தாள் என்றும், இங்க் மை என்றும் வந்ததால் ஒருபெரிய அதிசயம் நடக்க ஆரம்பித்தது. சான்றாக, தமிழ் மொழியில் மூன்று லட்சம் சொற்கள் என்றால், ஆதிக்கம் கொண்டிருந்த ஆங்கிலம் ஒன்பது லட்சம் சொற்களைக் கொண்டது. மேலும் ஆங்கிலம் தனி ஆளுகைவலிமை பூண்டிருந்த காலத்தில், தமிழ் வாய்மூடிப் பதுங்கியிருந்தது. ஆகவே, ஆங்கிலத்தில் பத்துச் சொற்களுக்குத் தமிழுக்கு ஒரு சொல்லை வைத்துக் கொண்டு ஈடுகட்ட முடியுமா? என்றும் ஐயம் ஏற்படலாம். Plan, Scheme, Project, Model என்று எல்லாவற்றையும் திட்டம் என்று சொல்லி வருகிறோம். அதனால் ஒரு பெரிய குறையில்லை. அட்வெர்டைஸ்மென்டு என்று 1965 வரையில் கூட எழுதிவந்தோம். பிறகுதான் விளம்பரம் என்று சொல்லிப் பார்த்தோம். விளம்புதல் என்றால் நான்கு பேருக்குப் பரவலாக எடுத்துச் சொல்லுதல் என்பது பொருள்.

சுற்றுலா, கூட்டுறவு என்ற சொற்களைப் போல விளம்பரம் என்ற சொல் தமிழுக்கு நல்வரவாயிற்று. ஆங்கிலத்தின் பொருளைவிட அழுத்தமான கனத்தைக் கொண்ட அரிய சொல்லாக இது அமைந்திருக்கிறது. ஒரு மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர், டூரிசத்திற்கு நிகராகச் சுற்றுலா என்றவொரு சொல்லை வேறு எந்த மொழியிலும் தமிழைப் போல் காணவில்லையென்றாராம். ஏனென்றால் ‘யாத்ரா’ என்றுதான் அனைவரும் முதலில் கூறினர். நான்கைந்து பேருக்கு உணவு பரிமாறுவதைக்கூட விளம்பு என்று கூறும் வழக்கமுண்டு. இன்னும் ‘குழம்பை விளம்பு’ என்று சமையற் கூடத்தில் சொல்லும் வழக்கமுண்டு. மேல்நாட்டில் உள்ள பழக்கத்தால் பல்வேறு அறிவுத் துறைகள் அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம், தமிழுக்குக் கொண்டுவரவேண்டியது அரிய முயற்சிதான், ஆனால், செய்யவேண்டிய முதற்பணியாகும்.
‘புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’
என்றும்
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
கலைச்செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’
என்று பாரதியார் நமக்கு வலியுறுத்தியதையும் நாம் கணம் தவறாமல் நினைவிற்கொள்ள வேண்டும்.

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n...@gmail.com
 --------

தேமொழி

unread,
Dec 14, 2020, 2:25:55 AM12/14/20
to மின்தமிழ்
36 -  “வளர்க வாழைக்கன்று”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள். யாரோ சொன்னார்கள் என்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள். ‘டிஷ் ஆன்டெனா’ மூலமாகத் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சன் டிவி, ஜெயின் டிவி, ஜீ டிவி, சிஎன்என் டிவி, பிபிசி டிவி இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ‘ஆன்டெனா’ உதவுகிறது என்று சொல்வதற்கு ‘The world is at your finger tips’ என்று எழுதியிருந்தார்கள். அதற்கு நான் உடனே தமிழில் சொன்னேன், ‘அமர்ந்தபடியே அகிலத்தைக் காணலாம்’ என்று. கிளியா நிறுவனம் நான் தமிழில் எழுதிய விளம்பரத்தைப் பார்த்த பிறகுதான் பல கேபிள் டிவி அதிபர்கள் நாங்கள் எழுதிக் கொடுத்த நிறுவனத்தை நாடி வந்தார்கள். ஆக அன்று முதல் அந்தப் பெங்களூர் இளைஞர்கள் ஆங்கில விளம்பரமே வேண்டாம். தமிழ் விளம்பரத்தை மட்டுமே பத்து முறைக்கு மேல் வெளியிட்டுத் தங்கள் வணிக வளத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டார்கள். அதேபோல், மும்பையில் ஓர் ஆய்வு நடந்தது. ஆங்கில விளம்பரத்தைப் படிப்பதை விட, அந்தந்த மாநில மொழி மக்கள் தங்கள் தாய்மொழியில் வெளியாகும் விளம்பரத்தையே ஆர்வமாகப் படித்துக் கவனிக்கிறார்கள் என்பது புலனாகிறது. இன்னும் பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிடும்போது, அவரவர் தாய்மொழியில் விளம்பரம் என்றுதான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குமுதம் இதழ், உலகளவில் எல்லோருக்கும் தெரிந்த இதழாக இருப்பது போலவே, மலையாள மனோரமாவும் உலகளவில் பரவியிருப்பதும் சிறந்த சான்றுகளாகும். மாநில மொழிகளின் சிறப்பை இனிக் குறைத்து மதிப்பிட முடியாது என்பது வெள்ளிடை மலையாயிற்று.

நிதியியல் சார்ந்த நிறுவனமான கிளியா நிறுவனம் 95 - ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற பங்குச்சந்தைச் சரிவின் காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் விளம்பரம் வெளியிட்ட தொகையைக்கூடத் தரத் தடுமாறிக்கொண்டிருந்த தருணம் அது. ஏறக்குறைய விளம்பர நிறுவனமே மூடி விடலாமா? என்கின்ற நிலையில் மேலாளராக இருந்த நான், பல வழிகளில் விளம்பரம் சாராமல் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவாய் தேடிக்கொண்டிருந்த நிலையில் பல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டுச் செல்லலாமா என்ற ஏக்க நிலையில், 22.4.1996 அன்று எங்கள் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர்கள் ஆண்டுதோறும் தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை பெருமிதமாகவே வழங்கி வருகின்ற கிளியா நிறுவனம் இந்த வருடம் சுணக்கம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி நின்றார்கள். தலைமை அலுவலக இயக்குநர்களுக்கு நுணுக்கமாக நான் கடிதம் எழுத முற்பட்டேன். நான் எழுதுவதெல்லாம் இலக்கியச் சாயல் கொண்டதாகப் பதிய வேண்டும் என்று மனம் எப்போதும் ஏங்கும். அப்பொழுது என் நினைவுக்குக் கவிஞர் வால்ட் விட்மென் வரிகள்தான் வந்தன. கடிதத்தின் இறுதிப்பகுதியில் அப்பாடல் வரிகளை மேற்குறித்திருந்தேன். அப்பாடலின் தமிழாக்கம்:-

விலங்குகளாக மாறி வாழ்ந்துவிடத் துடிக்கிறது மனது
அவை பெரிதும் அமைதியாகவும் தன்னிறைவானவையாகவும் வாழ்கின்றன இனிது
நீண்ட நெடிய நேரம் உற்று நோக்கினேன் நின்றும்
தமது நிலைமைக்காக அவை புழுங்கியது மில்லைப் புலம்பியதுமில்லை என்றும்
நள்ளிரவில் விழித்துக் கிடப்பதுமில்லை;
பாவங்களுக்காக நொந்து தலையணை நனைப்பதுமில்லை
கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடன்களை வாதித்து என்னைப் படுத்துவது மில்லை
வேட்கை நோயால் வெளிறியோடுவதில்லை
உடமை வெறியால் உளம் பிறழ்தலுமில்லை
ஒருவர் மற்றொருவர் முன்னோ
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
மூதாதையர் முன்னோ எவரும் மண்டியிடுவ தில்லை
மதிப்புக்குரியோராக விழையப் பெறுவோருமில்லை
மண்ணுலக வாழ்வில் வெறுப்புற்றோரு மில்லை

இயக்குநர்கள் இதனைப் படித்துவிட்டு உடனே ஏற்றுக்கொண்டு ஊக்கத் தொகையை எவ்விதச் சுணக்கமுமின்றிப் பணியாளர்கள் விரும்பியவாறே வழங்கினர். இலக்கியம் வணிகத்தையும் மெருகேற்றும் என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

--------

தினச்செய்தியில் வாரந்தவறாமல் வெளிவரும் அருந்தமிழ்க் கட்டுரையைப் படித்து மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.கூ.வ.எழிலரசு அவர்கள் எனக்கு அனுப்பிய மதிப்புரை பின்வருமாறு:-

“அறிஞர் எழிலரசு ஆழ்ந்த தமிழறிவும் - அன்பும் - அடக்கமும் பூண்டவர் .புன்னகை மாறாமல் புதியன சொல்வதும் செய்வதும் அவர் இயல்பு. பேராசிரியர் நெஞ்சம் கவர்ந்த தமிழ்த்திறனாளர் .அவரோடு பழகியது நான் பெற்ற பேறு. அப்பா சொல்வார் அவர் எழுத்தும் அழகு. எண்ணமும் அழகு. பெயரும் பெருமையும் ஒன்றாக இணைந்தவர்.

“என் அன்பிற்குரிய இளவல் முனைவர் ந. அருள் அரிதின் முயன்று அழகுற அளித்துவரும் இக்கட்டுரை தொடரினை நான் வாரந்தவறாமல் தினச்செய்தியில் படித்து மகிழ்ந்து வருகிறேன்.

'மொழி வழக்கு', 'ஆங்கிலச் சொற்கள்', 'வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருதுச் சொற்கள்' - எனும் பகுப்பில் அமைந்த இத்தொடர் கட்டுரையில் ஆய்வின் பக்குவம் பளிச்சிடுகிறது.

சொல்லாய்வு, மொழி கலப்பாய்வு - என்பனவற்றின் நோக்கமே சொந்த மொழியின் சொற் செல்வத்தை ஆய்ந்து இழந்தவை போக - இருப்பதை மேலும் இழக்காமல் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்துவதுதான். ‘ஒரு மொழியில் உள்ள சமுதாயத்தேவை கருதியும், சமுதாயத் தொடர்பை விரிவாக்கும் காரணங்களாலும் ஒரு மொழியில் வேறு சொற்கள் புகுந்து இடம் பெறுவதையே மொழிக்கலப்பு என்கிறோம். மொழி இழப்பு என்பது, மொழிக்கலப்பால் ஒரு மொழி தன்னிடமிருந்த சொற்களைப் பயன் குறைந்ததாக இழந்து நிற்கும் அவல நிலையாகும்’ என்கிறார் ஔவை அருள். ‘மொழியின் தொன்மையைப் போன்றே மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்தது போலும்’ என ஆய்ந்துரைப்பதும், ‘சொல் வளமின்றி ஒரு மொழி வறுமையுற்றிருப்பதும், பேச்சு மொழிக்கு உந்தாற்றலான கலந்து பழகும் உணர்ச்சியும், எழுதுவோன் விருப்பமும், போலச் செய்தலும், கடன் வாங்கலும் ஆகிய காரணங்கள் மொழிக் கலப்பை விளைவிக்கின்றன' - என மொழிக் கலப்பிற்கான காரணங்களை நுண்ணிதின் விளக்கும் பாங்கும் பாராட்டத்தக்கது.

மொழிக்கலப்பு நிகழ்ந்த காலந்தொட்டே, அதை நீக்கவும் நம் முன்னோர்கள் முயன்றனர் என்பதை ஔவை அருள் விளக்கியுரைக்கும் பாங்கு மகிழ்ச்சியூட்டுகிறது. தண்டமிழாசானாகிய ‘சாத்தனார்’, பௌத்தர் கூறும் ‘சத்தியத்தை' ‘வாய்மை' எனவும், ‘துவாதச நிதானங்களை'ப் 'பன்னிரு சார்புகள்' எனவும், ‘தருமத்தை' ‘அருளறம்' எனவும் 'புத்தத் தன்ம சங்க'த்தை ‘முத்திற மணி' எனவும், ‘தருமச் சக்கர'த்தை ‘அறக் கதிராழி' எனவும், ‘சயித்தியத்தை'ப் ‘புலவோன் பள்ளி' எனவும், ‘ஏது பிரபவ தர்மம்' என்பதனை 'ஏதுநிகழ்ச்சி' எனவும், ‘நிருவாணத்தை'ப் 'பெரும் பேறு' எனவும் தமிழாக்கியுள்ளார்' - எனும் பகுதி இதற்கு ஒரு சான்றாகிறது.

தமிழின் மீது ஆண்டவன் பெயரால் ஆளுமை நிகழ்த்தி ஒரு காலத்தில் ‘மணி பிரவாளமே தமிழ்’ என மயங்க வைத்த வட மொழியின் வல்லாண்மை முதலாக, ஆதிக்க முறையில் அரியணை ஏறி அன்னைத் தமிழில் ஊடுருவி நிலைத்த ஆங்கிலம் வரையில் தமிழில் மொழிக்கலப்பு நிகழ்ந்த வரலாறுகளையும், சொல்லடைவுகளையும் ஆழமாகவும், அழகாகவும் இத்தொடர்கட்டுரையில் வலியுறுத்தி வருவதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

ஔவை அருள் தமிழ் மக்கள் வழங்குகின்ற வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழிச் சொற்களை முயன்றாய்ந்து பட்டியல் அளித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறார். காலையில் தொடங்கி, உறங்கப் போகும் நேரம் வரையில் நாம் எத்தனை பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும், இவற்றை நீக்கிவிட முயற்சி செய்யாதிருக்கிறோம் என்பதையும் எண்ணும் போது, 'தமிழன் திருந்தினால்தான் தமிழ் திருந்தும்' என்றே கூறத் தோன்றுகிறது. ஒவ்வொரு தமிழரும் இயன்றவரையில் பிறமொழிச் சொற்களை நீக்கிப்பேசவும், எழுதவும் முயலுதல் வேண்டும் என்ற உந்தாற்றலை உள்ளீடாகக் கொண்டு உலா வரும் இக்கட்டுரை தொடரை எழுதிவரும் ஔவை அருளை உச்சி மேல் வைத்து மெச்சிப் புகழத் தோன்றுகிறது.

மொழிக்கலப்பு தவிர்க்க முடியாதது தான், எந்த மொழியும் கலப்பின்றி இயங்கவில்லை என்பதும் கண்கூடானதுதான். ஆனால், கற்றவர்கள் அறிந்தே மொழிக்கலப்புக்கு வழி கோலுகின்றனர். கல்லாதவர்களோ தமக்கு வரும் பிறமொழிச் சொற்களையே தம்முடைய தாய் மொழிச் சொல்லென்று பிழையாக உணர்ந்து கொள்கின்றனர், இத்தகைய நிலை தமிழுக்கு மட்டுமன்றி, எந்த மொழியின் வளர்ச்சிக்கும் ஏற்றம் அளிக்காது என்பதை உலக மொழிகள் சிலவற்றிற்கு நேர்ந்த நிலைகள் மெய்ப்பிக்கின்றன. பிரான்சில் வாழ்ந்திருந்த 'கால்' இனத்தவர் தம்மொழியைத் துறந்து பிரெஞ்சு மொழியை ஏற்றுக் கொண்டதால், அந்த இனமே அழிந்ததையும், வட இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிடர் தம்மொழியைத் துறந்து, வந்தேறிகளின் மொழியை ஏற்றுக் கொண்டதால், அவர்களின் பண்பாடே மாறிப் போனதையும் மொரீசியசுத் தீவில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தமிழர்கள் தாய்மொழியை மறந்துவிட்டு, 'கிரியோல்' என்ற கலப்பு மொழியை ஏற்றுக் கொண்டதால் தங்கள் தமிழறிவையே இழந்ததையும், 'செக்' மொழிப்பற்றாளர்கள் உழைப்பால், செருமன் மொழி மேலாண்மை யிலிருந்து விடுபட்டுச் 'செக்' நாட்டினர் இன்று தனி இனமாக வாழ்வதையும் ‘மொழிக்கலப்பு’ நமக்களிக்கும் படிப்பினைகளாகவே இங்குக் கருதிப் பார்க்கலாம்.

இவ்வகையில் உலகளாவிய நிலையில் கருதப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வருகின்ற மொழிக்கலப்பு' என்ற பொருண்மையைத் தமிழிடை வைத்து நுணுகி ஆய்ந்து வரும் ஔவை அருளின் ஆய்வுத்திறன் போற்றிப் பாராட்டுதற்குரியது. ஔவை அருள் இத்தொடரின் வழி ஆற்றி வரும் அருந்தொண்டால், மொழி ஆய்வு மேற்கொண்ட நம் தமிழறிஞர்கள் வரிசையில் தக்கதோர் இடம் பெற்றுள்ளார் எனில் அது மிகையன்று.

‘வளர்ச்சிக்குரிய உயிருடையதாய் உலகத் தொடர்புப் பாலமாய் மொழியைக் கருதும் இந்நாளில், மாற்றங்களுக்கு உட்படுதலே உயிருணர்ச்சிக்கு அடையாளமாகிறது என்ற நிலையைத் தவிர்க்க இயலாது. எனவே, மொழிக்கலப்பு, இனத்தின் வளர்ச்சி நோக்கி நிகழும்போது ஏற்புடையதாகவும், இனத்தின் குலைவுக்கும் தாழ்ச்சிக்கும், வழி வகுக்கும்போது நீக்கத்தக்கதாகவும் கருதலாம். இப்புதிய அணுகு முறை மொழிவளர்ச்சிக்கு உலக நாடுகள் மேற்கொண்டு காட்டிய நடைமுறையாகும்' - என மொழிக் கலப்பின் தாங்கு திறனையும் எல்லை கோடிட்டு எச்சரிக்கை செய்கிறார் ஔவை அருள்.

இப்படி வாரந்தோறும் எழுதும் அருள் ஆங்கில மொழிவளர்ச்சி குறித்து என்னிடம் ஒரு கட்செவியைச் சில்லாண்டுகளுக்கு முன் காட்டினார். மேலும் அருந்தமிழக்கு அணிசேர்த்த சங்க இலக்கியங்களின் சாரத்தைப் பிழிந்து அறிமுக அமுதமாக அளிக்க வேண்டும்.”

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்.
---

தேமொழி

unread,
Dec 21, 2020, 4:47:27 AM12/21/20
to மின்தமிழ்
37 -  “சங்க இலக்கியச் சாரலிலே”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

பங்குச் சந்தை வாயிலாகப் பொதுமக்களிடமிருந்து பங்குகளாக நிதி திரட்டுகின்ற நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடுகின்ற சிறப்பு வாய்ந்த நிறுவனமாகக் கிளியா நிறுவனம் திகழ்ந்தது. சென்னையில் முதன்முதலாக 06.05.1992-ஆம் நாளன்று இரு நிறுவனங்களின் (பென்டாபோர் மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்.ஐ. வீடு கட்டும் நிறுவனம்) பங்கு விளம்பரங்களை வெளியிட்டோம். அன்று முதல் 1997 வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுக் கருப்பு வெள்ளை, வண்ண விளம்பரங்கள், இந்தியா முழுதும் செய்தியாளர் கூட்டங்கள், பங்கு முகவர்கள் கூட்டங்கள், முதலீட்டாளர் கூட்டங்கள் என்றெல்லாம் பல தரப்பட்ட வழிகளில் விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.

பங்குச் சந்தையில் நிதி திரட்டும் நிறுவனங்கள் அவை திரட்டப்போகும் தொகையில் 6 முதல் 8 சதவீதத்தை விளம்பரத்திற்காகவே ஒதுக்கிச் செலவிடுவார்கள். 1993-94-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 154 நிறுவனங்கள் மொத்தம் ரூ.21,850 கோடியைப் பங்குவெளியீட்டின் மூலம் திரட்டியிருக்கின்றன. அதாவது, ஏறக்குறைய ரூ.1500 கோடியை இந்நிறுவனங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே செலவளித்திருக்கின்றன.

கடந்த 1990 முதல் 1994 வரையிலான நான்காண்டுகளில் பங்குச் சந்தையில் திரட்டடப்பட்ட நிதியானது, ஏறத்தாழ ஆண்டுதோறும் 98 சதவீதம் உயர்ந்திருப்பதால் பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள் பங்குநிதி விளம்பரங்கள் மீதுதான் தமது திருப்பார்வையைச் செலுத்திப் பணியாற்றினார்கள்.

குஜராத்தைச் சேர்ந்த திரு.சுனில் கௌதம், கேரளாவைச் சேர்ந்த திரு.வேணுகோபால், 1980-களில் ஒருசேரப் பிரஸ்மேன் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி அங்கிருந்து விலகி, குஜராத்தைச் சேர்ந்த திரு. தவல் தேசாய் உடன் கிளியா நிறுவனத்தைத் தொடங்கினார்கள். திரு. வேணுகோபால் ரிலையன்ஸ் அம்பானியிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய பெருமை பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்க் கிளியா நிறுவனத்தில் தமியராகச் சேர்ந்தவுடன் எனக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. ‘தி இந்து’ பத்திரிகை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையுடைய தலைமைச் செய்தியாளர்களை எஸ்ஸார் நிறுவனத்தின் எஃகுத் தொழிற்சாலையைச் சூரத்திலுள்ள அசீராவிற்குப் பார்வையிடுவதற்காக வருவதற்கு வானூர்திச் சீட்டுக்களை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பிவைக்குமாறு வேண்டினார். தற்செயலாக ‘தி இந்து’ பத்திரிகை தலைமையாசிரியர் வரமுடியாத சூழலில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலைமைச் செய்தியாளர் திரு. தாமஸ் செல்வதற்கு ஆயத்தம் நடந்தது. உடனே கிளியா வேணுகோபால் என்னை அழைத்து இந்து செய்தியாளருக்குரிய விமானச்சீட்டில் நீ உடன்வா என்று ஆணையிட்டார். ஒன்றும் தெரியாமல் மருட்சியாக இருந்த நான் அசீராவுக்கு உடன் சென்றேன். என்னை அங்கு அரவணைத்து, “இது ஒரு தொடக்கப்புள்ளிதான் நீ இன்னும் பல இடங்களுக்குச் செல்வாய். பல நாடுகள் கண்டு வெல்வாய்” என்று வாழ்த்திய உயர்ந்த உள்ளத்தை நான் என்றும் மறப்பதற்கில்லை. அவருடைய மூத்த பெண் மௌசத்தின் அரங்கேற்றத்தைச் சென்னை மியூசிக் அகாதமியில் நடத்த வேண்டும் என்ற பேரார்வம் அவரிடம் இருந்தது. அதனைப் பேச்சுவாக்கில் தெரிந்துகொண்டு, அதற்குரிய ஆயத்தங்களையெல்லாம் செவ்வனே செய்து, கவியரசியாகத் திகழ்ந்த சௌந்திரா கைலாசம் அம்மையாரின் தலைமையில் நிகழ்ச்சியைப் பாங்குற நடத்த உறுதுணையாக இருந்தேன். ஆங்கிலப் புதினமொன்றில் வரும் பெண்மணியின் பெயர்தான் கிளியா. மிகவும் திறமையும், அறிவுச் சிறப்புமிக்க, சக்திவாய்ந்த, எதையும் நினைத்தவுடன் சிறப்பாகச் செய்து முடிக்கிற குணம் இந்தப் பெண்ணிற்கு உண்டு. பொதுவாக, விளம்பரம் என்பதே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒரு செயல்தானே. பத்தாண்டு நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி, ஒருபக்க விளம்பரம்பரத்தில் நாங்கள் சொல்லிவிடுவது போல, நிறுவனத்தின் அனைத்துக் கொள்கையையும் ஒரே சொல்லில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கிளியா என்ற பெயரை இம் மூவரும் தேர்வு செய்தனர். எஸ்ஸார் குழும நிறுவனத்திற்காக ஒரே நாளில், ஒரே நேரத்தில் 7 வெவ்வேறு இடங்களில் செய்தியாளர்கள் மற்றும் பங்கு முகவர்கள் சந்திப்பை நடத்தியதைக் கிளியா நிறுவனத்தின் பெரிய சாதனையென்றுதான் சொல்ல வேண்டும்.

விளம்பரங்களைத் தயாரிப்பதில் கிளியா நிறுவனத்தின் அணுகுமுறை சற்று வேறுபாடானது. நாங்கள் எப்போதும் தகவல்களுக்கு முதன்மை கொடுப்பதில்லை. தகவல்களை உறுதிப்படுத்தும் பொருண்மைகளுக்குத்தான் முதலிடம் கொடுப்போம். சான்றாக, ஒரு பொருளைப்பற்றி அதிகத் தகவல்களை அளித்துவிட்டு அதைத்தேடி வாடிக்கையாளர்களை அலையவிடுவதைவிட அப்பொருள் சந்தையில் இந்த இடத்தில் இன்ன விலையில் கிடைக்கும் என்று சொல்வதையே நாங்கள் விரும்புவோம். இதுதான் வாடிக்கையாளர்களை நெறியான வழியில் இட்டுச்செல்வதாயிருக்கும். அடிக்கடி எங்கள் இயக்குநர்கள் வலியுறுத்தியதை நினைவுகூர்கிறேன். விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசியல் தலைவரின் பொறுப்புணர்ச்சியும், இலக்கியவாணரின் அழகுணர்ச்சியும் இன்றியமையாதது என்பார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டால்தான் மக்களுக்கு எளிதில் போய்ச்சேரும்.

-------------------------------------------

‘சங்கம்’ என்பதற்குக் கூட்டம், சபை, அவை, சங்கு, அழகு, கைவளை, நெற்றி, கணைக்கால், சேனைவகை, இலட்சம்கோடி எனும் பொருள்கள் உண்டு.

‘இலக்கியம்’ என்பதற்குத் தொல்காப்பியத்தில் இடமில்லை. ஒருசொல் தன்மையாகிய இச்சொல்லை, இலக்கு+இயம் எனப்பிரிக்கலாம். ‘இலக்கு’ என்பதற்குக் குறி, குறிப்பொருள், சமயம் எனும் பொருள்கள். ‘இயம்’ என்பதற்கு வாச்சியம், மத்தளம், ஒலி, சொல் எனும் பொருள்கள்.

‘சாரல்’ என்பதற்குப் பக்கமலை, கிட்டுகை, தூவானம் எனும் பொருள்கள்.

‘இயம்புதல்’ என்பதற்கு ஒலித்தல், வாச்சியமொலித்தல், சொல்லுதல், துதித்தல் எனும் தொழிற்பெயர்ப் பொருள்கள். மேற்காண் ‘இயம்’ என்பது பெயர்ச்சொல்.

எனவே, ‘சங்க இலக்கியச் சாரல்’ என்பதற்குச் சங்ககாலத்தில் தோன்றிய இலக்கியங்களின் தூவல்கள் எனம் பொருள் கொள்ளலாம். மழைச்சாரல் என்பது போல, இலக்கியச்சாரல் என்பது பொருந்தும்.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனச் சங்கங்கள் மூன்று. முதற்சங்கத்தைத் தலைச்சங்கம் என்பர். முச்சங்க வரலாற்றைக் காண்போம். சங்கங்களை நிறுவியவர் பாண்டியர்.

தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என, இத்தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவரால் பாடப்பட்டன எத்தனையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என, இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்பது, அவரைச் சங்கமி இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் ‘அகத்தியம்’ என்ப.

இடைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர் காப்பியனாரும், சிறுபாண்ட ரங்கனாரும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என, இத்தொடக்கத்தார் ஐம்புத்தொன்மதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவராற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என, இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பயமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவை. அவர், மூவாயிரத்து எழுநுற்றாண்டு சங்கமிருந்தார் என்ப. அவருள் சங்கம் இர்இணினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மா என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர், சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரம் என்ப. அக்காலத்துப் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது போலும்.

கடைச்சங்கம் இருந்தால் சிறுமேகாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரானாரும், பெருங்குன்றூர்க்கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்என, இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர்அவருள் கவியரங்கேறினார் மூவர் என்ப. அவர், சங்கம் இருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.

‘இலக்கியம்’ என்னும் சொல், சூளாமணியில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். ‘காமநூலினுக்கு ‘இலக்கியம்’ காட்டிய வளத்தார்’ - (சூளா.455).

எட்டுத்தொகை:
சங்க இலக்கியங்களை, தொகையும் பாட்டும் என்ப. அவை எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் என விரிவன. முதலில் எட்டுத்தொகை குறித்த வெண்பா

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோடு அறம்புறமென்று
இத்தீறத்த எட்டுத் தொகை’

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எட்டுத்தொகையாகும்.

திணை என்பதற்கு இடம், வீடு, குலம், ஒழுக்கம் என்ற பொருள்கள் உண்டு. எனவே, ‘நற்றிணை’ என்பதை நற்குலம் அல்லது நல்லொழுக்கம் எனலாம்.

நற்றிணை அறிமுகம்:
தொகை நூல்களில் முதலிடம் பெறுவது நற்றிணை. ஏழடிச் சிற்றெல்லையும், பதின்மூன்றடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களை உடையது. நானூறு பாடல்களைக் கொண்ட இந்நூலில், 234ஆம் பாடல் கிடைக்கவில்லை. நற்றிணையைத் தொகுத்தவர், யாரெனத் தெரியவில்ல; தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி. பாடிய புலவர் 192.

சாரல் 1: - தூறல் 1:
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லிய கூற்று. கபிலர் பாடிய குறிஞ்சித்திணைப் பாடல். நூலின் முதற்பாடலும் இதுதான்.

‘நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்று என்தோள் பிரிபறி யலரே!
தாமரை தண்தாது ஊறி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்றப் புரையோர் கேண்மை
நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந் தருள்
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே!

சொன்னதைச் செய்வபனே தலைவன்; செய்வதைச் சொல்பவனே தலைவன்; என்றும் மாறாத இனிய மனம் படைத்தவனே! எந்தச் சூழலிலும் தலைவியைப் பிரியமாட்டாதவனே! தாமரை மலரின் குறிர்ச்சி பொருந்திய நறுந்தேன் கொண்டு, மணக்கின்ற சந்தனமரத்தில் அதனைச் சேர்த்தது போன்ற நற்பண்பு உடையவன்! மேலும், நீரில்லாமல் இந்த நீளுலகம் இல்லாதது போலவே, அத்தன்மை உடையவனே தலைவன். அதனால், அவள் பிரிவினை கருதமாட்டாதவனே தலைவன், எனத் தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.

சாரல்:1-தூறல்:2:
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லிய கூற்று. தேய்புரிப் பழங்கயிற்றனார் பாடியது. இது, அவர்தம் இயற்பெயரன்று; பாடலில் இடம்பெறும் உவமையினால் அமைந்த பெயர்.

‘புறந்தாழ் இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈரிதழ்ப் பொலிந்த வுண்கள்
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வா மென்னும்
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்
எய்யா மையோடு இழிவுதலைத் தருமென,
உறுதி தூக்காத் தூக்கி யறிவே
சிறிதுநனி விரையல் என்னு மாயிடை
ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல-
வீவது கொல்லென் வருந்திய வுடம்பே! (284)

பொருளீட்டச் சென்றுள்ளான் தலைவன். தலைவியின் பிரிவு, அவனை அலைக்கழிக்கிறது. அன்பு மேலிட, உணர்வு ‘பார்க்கச்செல்’ என்கிறது. கடமை மேலிட, அறிவு ‘பொருளீட்டு’ என்கிறது. இவ்வாறாக உணர்வுக்கும் அறிவுக்கும் நெடும்போராட்டம் நிகழ்கிறது. உணர்வும் ஒரு யானை; அறிவும் ஒரு யானை. இரண்டு வலிமைமிக்க களிறுகள், கயிறிழுக்கும் போட்டி நடத்துகின்றன. கடமை முடியாமல் பார்க்கச் செல்வதால், இழிவுதருமென அறிகிறான். உணர்வோ தலைவியைக் காணாமல் தடுமாறுவதையும் உணர்கிறான். ஒருபுறம் அறிவுப் போராட்டம்; மறுபுறம் உணர்வுப் போராட்டம். தலைவனின் உள்ளமோ, இருதலைக் கொள்ளி எறும்பென ஆயிற்று. உடல் நோகின்றது; உள்ளம் வேகின்றது. இரண்டு யானைகளும் பற்றி இழுப்பதோ, தேய்ந்துபோன- பிய்ந்துபோன மிகப் பழங்கயிறு. இப்பக்கமும் இல்லாமல் அறுந்துபட்டது. அந்தக் கயிற்றைப் போல, அவன் வருந்திய உடம்பானது அழிந்துபடுவதோ என வருந்துகின்றான்.

வளரும்...

தேமொழி

unread,
Dec 24, 2020, 1:47:43 AM12/24/20
to மின்தமிழ்
38 -  “வாழ்வுச் சாரலும் வண்டமிழ் தேறலும்!”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

கவியரசியார் சௌந்திரா கைலாசம் அம்மையார் என்னை அழைத்துத் தன் இல்லத்திலுள்ள நூலகத்தில் பழைய நூல்களையெல்லாம் சீர்பெற அடுக்கவும், கிழிந்த தாள்களில் உள்ள கவிதைகளை மீளச் செம்மையாக எழுதித் தருவதற்கும் நல்ல தமிழார்வமுள்ள ஓர் இளைஞரை எனக்கு அறிமுகம் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய எம்.ஏ. வகுப்புத் தோழரான மகாதேவ ராவினை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். காரணம், அவருடைய கையெழுத்து முத்து முத்தாக இருப்பதால் அப்பணியை அவர் செவ்வனே செய்வார் என்ற உறுதியுடன் அழைத்துச் சென்றேன்.

அத்தொடர்பணி தொய்வின்றி நடைபெற்றாலும் ஓரிரு முறை மகாதேவன் சுணக்கம் காட்டினார். நான்தான் அவரை ஆற்றுப்படுத்திப் பொறுமை காத்தால் அகிலத்தை வெல்வாய் என்று கூறினேன்.

அப்பொறுமைக்குப் பரிசாகப் பணி முடிந்தவுடன் குமுதம் இதழின் தலைமை நிருபர் திரு. பால்யூவை அழைத்து இவர் பெயர் மகாதேவன், ஔவை அருளின் வகுப்புத் தோழர். நாளை முதல் இவரைப் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ குமுதம் இதழில் பணியமர்த்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள குமுதம் இதழில் மகாதேவனுக்கு நிருபர் பணி கிடைத்தது.  அம்மையாரின் சிறப்பு அளவிடற்கு முடியாது.  எனக்கு இன்னும் பசுமையாக நினைவுள்ளது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த வேளையில் என்னையும் என் தம்பி பரதனையும் அவர்கள் தலைமையில் இந்தியன் ஏர்லைன் வானூர்தியில் சென்னை-மதுரை தொடக்கப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது பெருமையாகும். இதுவே எனக்குத் தொடக்கமான வான்வழிப் பயணமாகும்.

1989-இல் நான் லியோ கிளப்பில் உறுப்பினராக இருந்தபோது பேச்சுப் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்வது வழக்கம்.  அப்போது, இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த செல்வி வித்யா அற்புதமாகப் பாடும் கலைஞராக இருந்தார். பிறகு, பம்பாயில் கிளியா நிறுவனத்தில் உதவித் துணைத் தலைவராகப் பணிபுரிந்துகொண்டிருந்த வேளையில், என்னிடம் தொலைபேசியில் அழைத்து, பல பேச்சுப் போட்டிகளில் ஈடுபட்டு வரும் நீங்கள் ஏன் மக்கள் தொடர்புக் கலையில் ஈடுபட்டு உங்கள் பேச்சினைப் பணமாக்கக்கூடாது என்று கேட்டார்.

இந்தக் கேள்வி எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்த எம்.ஏ. படிப்பைத் தொடர்ந்து கொண்டே சென்னையிலேயே கிளியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். விளம்பரத் துறைக்கு நான் உள்ளே வரக் காரணமாயிருந்தது செல்வி வித்யா.  மேலும் உந்துசக்தியாய் விளங்கிப் பெருமக்கள் பலரிடம் பழகுவதற்கும் பல செய்தியாளர்களைச் சந்தித்து நண்பர்களாக்கிக் கொள்வதற்கும் பல வெற்றி நிலைகளுக்கு என் வாழ்வை மாற்றியமைத்தவரும் திருமதி வித்யா சீனிவாசன் என்றால் மிகையாகாது.

முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு ஞாயிறு இரவும் பத்தே முக்கால் முதல் பதினைந்து மணித்துளிகளுக்கு ‘மேலும் நாணயம்’ (Few Rupees More) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இரண்டாவது அலைவரிசையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியபோது, முதலாம் நிலைச் சந்தை பற்றியும், இரண்டாம் நிலைச் சந்தை பற்றியும், பரஸ்பர நிதியம் பற்றித் தொடக்க நிலையிலிருந்து நேயர்களுக்கு விளக்கிக் காண்பித்து இத்துறையில் முன்னோடியாய் விளங்கும் பலரை அழைத்து அவர்களைத் தனித்துக் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளையும் பாங்குற நடத்திய என் இனிய நண்பர் பம்பாய்த் தமிழர் திரு.சீனிவாசன் பல ஆர்வலர்களை வென்றார்.

அவ்வரிசையில் என்னை விளம்பர வானில் ஒளிவீச வைத்த கிளியா நிறுவனத்தின் துணைத் தலைவர் செல்வி வித்யாவின் கருத்தையும், சிந்தனையையும் கொள்ளை கொண்டு தன்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அமைத்துக் கொள்வதற்கு இந்நிகழ்ச்சியே விதையூன்றியது.    வித்யாவின் தந்தை திரு சடகோபன் அவர்களின் நல்லாசியில் மிகச் சிறப்பாக வித்யா சீனிவாசனின் திருமணம் நடைபெற்றது. 

குறுந்தொகை அறிமுகம்:-
நான்கடிச் சிற்றெல்லை எட்டடி பேரெல்லை கொண்டது நல்ல குறுந்தொகை. ஆனால், 307ஆம் பாடல், 391ஆம் பாடல் ஆகிய இரண்டும் ஒன்பதடிப் பேரெல்லைகளைக் கொண்டவை. இரண்டுமே தலைவி கூற்றுகள்.  401 பாடல்கள் கொண்ட குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ.

சாரல்: 2- தூறல்: 1
ஔவையார் பாடல். 23ஆம் பாடல்.
‘அகவன் மகளே! அகவன் மகளே! 
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் 
அகவன் மகளே! பாடுக பாட்டே! 
இன்னும் பாடுகபாட்டே அவர் 
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!’

தலைவியின் தாயை நற்றாயென்பர்; தாயின் தோழியைச் செவிலித்தாயென்பர். கொண்ட காதல் நோயால், தலைவியோ உடல் மெலிவுற்றாள்- நலிவுற்றாள். குறிகேட்கச் செல்கின்றாள் தாய். தோழி, குறி சொல்பவளிடம் தலைவியின் தாய் கேட்குமாறு மலைவளத்தைப் பாடுமாறு சொல்வாள்.  தலைவியின் மெலிவுக்கும், நலிவுக்கும் காரணம் குறிஞ்சித் தலைவனே என்பதைக் குறிப்பாக உணர்த்தச் செய்வாள். இதற்கு ‘அறத்தொடு நிற்றல்’ என்பது பெயர். இந்த ஐந்தடிப் பாடலில், குறிசொல்பவளை மும்முறை விளிப்பதாகவும், பாடலைப் பாடவேண்டி இருமுறை வியங்கோள் வினையாகவும் அமைத்துள்ளமை, எண்ணி மகிழ்தற்குரியது.  மேலும் ஈற்றடி, முன்னரே நன்னெடுங்குன்றம் பாடிய பாடலெனவும் தெரிகின்றது.

சாரல்: 2 - தூறல்: 2
இன்னோர் ஐந்தடிப் பாடலையும் காண்போம். இப்பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. முன் சொன்னது போலவே பாடலில் இடம்பெறும் உவமைத் தொடராலேயே அவர் பெயர் அமைந்துள்ளது. ‘செம்புலப் பெயல் நீரார்’ என்பதே அஃது. 40-ஆம் பாடல். 

‘யாயும் ஞாயும் யாரா கியரோ? 
என்தையு நுந்தையும் எம்முறை கேளிர்? 
யானும் நீயும் எவ்வழி யறிதும்? 
செம்புலப் பெயனீர் போல, 
அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே!’

இஃது, தலைவன் கூற்றாக அமைந்த பாடல். ‘உன்தாயும் யாரோ? என்தாயும் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவின் முறையினரோ? அவ்வளவு ஏன்? நீயும் நானுமேகூட, எவ்வகையில் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம்? ஆனால், செம்மண் நிலத்தில் பெய்யும் மழைநீர் போல, நம்முடைய அன்புகெழுமிய இரண்டு உள்ளங்களும் ஒன்றுபட்டனவே! என்கின்றான் தலைவன். எங்கோ இருக்கின்ற விண்ணின் மழைத் துளியும், இங்கே இருக்கின்ற மண்ணாகிய நிலமும் இணைந்து நிறம் மாறுவதால், இரண்டறக் கலந்துவிடுகின்றன என்பது, எண்ணி மகிழக்கூடிய ஈடிலா உவமை.

ஐங்குறுநூறு அறிமுகம்:-
ஐந்து + குறுமை + நூறு - ஐந்குறுநூறு, திணைக்கு நூறு குறும்பாடல்களாக, ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு குறும்பாடல்களைக் கொண்டது ஐங்குறுநூறு. மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களை உடையது. மருதத்திணையைப் பாடியவர் ஓரம்போகியார்; நெய்தல் திணையைப் பாடியவர் அம்மூவனார்; குறிஞ்சித் திணையைப் பாடியவர் கபிலர்; பாலைத் திணையைப் பாடியவர் ஓதலாந்தையார்; முல்லைத் திணையைப் பாடியவர் பேயனார். இதனைத் தொகுத்தவர், புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்;  தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. திணைப்பாடல்கள் ஒவ்வொன்றும், பத்துப்பத்துகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைந்த அகநூல், ‘ஐங்குறுநூறு ஒன்றே!

சாரல்: 3 - தூறல்: 1
மருதத்திணையில் இரண்டாம் பத்தாகிய வேழப்பத்தின் 14ஆம் பாடல்- தலைவிகூற்றாக அமைந்தது. ‘வேழம்’ என்பது, நாணல் என்றும் புல்வகை. அதைக் கொறுக்கச்சி, கொறுக்காந்தட்டை என்றும் கூறுவர்.

‘கொடிப்பூ வேழம் தீண்டி யயல 
வடிகொள் மாஅத்து வண்டளிர் நுடங்கும் 
அணித்துறை யூரன் மார்பே 
பனித்துயில் செய்யு மின்சா யற்றே!’

தலைமகளின் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினால் உணர்ந்த தோழி, ‘அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைத்து ஆற்றாயாகின்றது என்ன?’ என்றாட்குத் தலைவி, ‘அவன் கொடியனே ஆயினும், அவன் மாப்பு, குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ஈதலாற் காணெனச் சொல்லியது.

சாரல்: 3 - தூறல்: 2
முல்லைத் திணையின் நான்காம் பத்தாகிய புறவணிப் பத்தின் முதற்பாடல் - தோழி கூற்றாக அமைந்தது. சிற்றெல்லையாகிய மூன்றடிப் பாடல். 

‘நன்றே காதல் சென்ற வாறே 
அணிநிற வரும்பொறை மீமிசை 
மணிநிற வுருவின தோகையு முடைத்தே!’ 
‘பிரிவுடன் பட்டும் ஆற்றயாகின்றது என்ன? என்று வினவிய வழி, ‘அவர் போன சுரம், போகற்கரியது என்று ஆற்றேனாகின்றேன்’ என்ற தலைமகட்கு, ‘வேனிற்காலம் கழிந்தது; கார்ப்பருவத் தோற்றத்திலே பிரிந்தாராகலான், அச்சுரம் நன்று’ எனத்தோழி சொல்லி ஆற்றுவித்தது.

பதிற்றுப்பத்து அறிமுகம்:-
பது+இற்று+பத்து - பதிற்றுப்பத்து. பத்து x பத்து-நூறு. இடையிலுள்ள ‘இற்று’ என்பது சாரியை. எனவே, நூறு பாடல்களைக் கொண்டது. பதிற்றுப்பத்து, புறத்திணைநூல். இது, சேரமன்னரை மட்டும் பாடுவது. முதல்பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்காமற் போயின. எட்டுப்பத்துகளையும் எட்டுப்புலவர் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் தெரியவில்லை. எல்லாப் பாடல்களும் பாடாண் திணைப் பாடல்களே. பாடல்கள், ஐந்தடிச் சிற்றெல்லையும், ஐம்பதேழடிப் பேரெல்லையும் கொண்டவை.

சாரல்: 4-தூறல்: 1
பரணரின் ஐந்தாம் பத்தாம் பாடல். மன்னனை ‘நீடு வாழ்க! என வாழ்த்துவதாக அமைந்துள்ளது. ‘பேரெழில் வாழ்க்கை’ என்பது பாடலின் தலைப்பு.  துறை - இயன்மொழி வாழ்த்து. 18 அடிகளைக் கொண்டது. எட்டாம் பாடலாக உள்ளது. ‘

பைம்பொன் தாமரை பாணர் சூட்டி! 
ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி, 
கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்கு, 
கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ! 
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம், ‘ஈண்டிவர் 
கொள்ளாப் பாடற்கு எளிதினி னீயும் 
கல்லா வாய்மைய னிவனெனத் தத்தம் 
கைவ லிளையர் நேர்கை நிரப்ப, 
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை 
முனைசுடு கனையெரி யெரித்தலின் பெரிதும் 
இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்தபுலர் 
பல்பொறி மார்ப! நின் பெயர்வா ழியரோ- 
நின்மலப் பிறந்து நின்கடல் மண்டும் 
மலிபுனல் நிகழ்தரும் தீம்நீர்விழவின்,
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை, 
மேவரு சுற்றமோ டுண்டினிது நுகரும், 
தீம்புன லாய மாடும், 
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே!’

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர், பலபடப் பாராட்டுகிறார். சேரநாட்டு மக்களின் வாழ்வு, சிறந்திருப்பதாகக் கூறுகிறார். அதனை ‘பேரெழில் வாழ்க்கை என்று போற்றுகிறார்.

பாடற்பொருள்: குட்டுவன், பொற்றாமரைப் பூவினைப் பாணர்க்குச் சூட்டுகிறான். பொன்னரி மாலையை விறலியர்க்குப் பூட்டுகிறான். புகழ்பலவும் பெற்றுள்ளான். கடற்போரில் பெற்ற பொருட்களை, அவன் பிறந்தநாளில் புலவர்தம் பாடல்களுக்குப் பரிசளிப்பதைத் தவிர, வேறொன்றையும் அறியான். பகைவர் நாட்டை வென்று, தீ மூட்டியதால் கரிந்த மாலையினை அணிந்துள்ளான். சந்தனம் பூசிய புலர்ந்த மார்பினன். ஆறுகளில் நீர்விழாச் செய்து, புனலாடியவன். நீர்விழாவையும் வேனிற்காலத்தின் வெம்மையைப் போக்குமாறு நிகழ்த்தியவன். சோலைகளில் பேரழகு வாய்ந்த இல்வாழ்க்கையை விரும்பிச் சுற்றஞ்சூழ உண்டு வாழ்ந்தனர் குடிமக்கள். ‘ பேரெழில் வாழ்க்கையே’ அவர்தம் வாழ்க்கை. ‘உன் புகழானது காஞ்சியாற்றின் பெருந்துறையில் உள்ள மணலைக்காட்டிலும் பலவாக, உன் பெயரும் அதுவாக வாழ்வதாக!’ என்று பாடலை நிறைவு செய்கிறார் பரணர்.

தேமொழி

unread,
Dec 27, 2020, 3:11:12 AM12/27/20
to மின்தமிழ்

39 -  “தண்ணளி பொழிந்த தாயுள்ளம்!”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது என் அம்மாவிற்குப் பெறர்கரிய வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு அவர்கள் நான்காண்டுகள் அயன் முகமையில் (Deputation) பணியாற்றுவதற்கு வட ஆப்பிரிக்காவிலுள்ள இலிபியா நாட்டிற்குச் செல்வதற்கு ஆணை கிடைக்கப்பெற்றது. சூலைத் திங்கள் 1979-ஆம் ஆண்டில் தன்னந்தனியாகப் புறப்பட்டு, இலிபியா நாட்டின் இரண்டாம் தலைநகரமாகத் திகழ்ந்த பென்காசியில் அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்துணையாகச் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவரோடு இணைந்து பயின்ற மருத்துவர் கதீஜாவும் அவருடைய மருகன், மகள் சாகிதாவும் பெருந்துணையாய் இருந்தனர். அவ்வேளையில் நாங்கள் மூன்று சகோதரர்களும் எங்கள் பெரியம்மா (அம்மாவின் தமக்கையார்) திருமதி பரமேசுவரி அம்மையாரின் அரவணைப்பில், நாங்கள் முதன்முதலாகத் தங்கியிருந்த அதே பெசன்டு ரோடு இல்லத்தில் அவர்கள் குடும்பத்துடன் தங்கிப் பயின்றோம். நாள் தவறாமல் குறைந்தது 8 கடிதங்கள் எங்கள் அனைவருக்குமாக அம்மா எழுதியெழுதித் தொடர்ந்து அனுப்பியவண்ணம் இருப்பார்கள். அதற்கும் மேலாக ஒலியிழையில் குரல்பதிவாகப் பல தகவல்களையும், நல்லுரைகளையும் எங்களுக்கு அனுப்பினார்கள். 

எண்ணெய் வளம் கொழிக்கும் இலிபியாவில் மருத்துவப்பணி போற்றத் தகுந்த பணியாகும். அந்நாட்டுக் குடிமக்கள் இவர்களை இரண்டாம் தெய்வமாகவும் போற்றினார்களாம். பெருமழையென்றாலும், பெரும்புயலென்றாலும் மருத்துவர்களுடைய போக்குவரவு வசதியைக் கண்ணும் கருத்துமாகக் காத்து நாள் தவறாமல் மருத்துவமனை வருவதற்கு வழிசெய்து அம்மாவைப் போன்ற மருத்துவர்களுக்கு அரணாக இருந்தார்கள். அங்கிருந்தபோது அம்மா ஒரு பெரிய கனவு கண்டார். ஓரிரு ஆண்டுகளில், எங்கள் மூவரையும் எகிப்திலேயோ, உரோமாபுரியிலேயோ உள்ள உயர்ந்த பள்ளியில் படிக்கவைக்க விழைந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர்களான திரு. மொகிதீன் குடும்பத்தினரைப் பாராட்டிய வண்ணமே இருந்தார்கள். அம்மாவுடைய ஏக்கமெல்லாம் சென்னையிலிருந்து எங்கள் பதில் கடிதங்கள் வந்து சேருவது என்பது, இருபதிலிருந்து முப்பது நாள்களாகும். அவ்வேளைகளில் இந்தியாவுக்குச் செல்கிற மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாகவும் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களெல்லாம் யாதும் அறியாத இளங்கன்றுகளாக இருக்கிறோமே என்ற ஏக்கம்தான் அவர்களைக் கவலைகொள்ள வைத்தது. அவ்வேளைகளில் என் பெரியப்பா பொதுப்பணித் துறைப் பொறிஞர் சுந்தரமூர்த்தி, அவர்களுடைய மகள்கள் திருமதி சுதா நலங்கிள்ளி, (பாஸ்டன் பள்ளியில் ஆங்கில ஆசிரியர்) திருமதி உஷா மதனகோபாலன் (காயிதே மில்லத் அரசுக் கல்லூரி இளம் அறிவியல் கணிதப் பட்ட வகுப்பில் மூன்றாமாண்டு மாணவி) கணக்கு, ஆங்கிலம், அறிவியல் பாடங்களைக் கண்ணும் கருத்துமாய் எங்களைப் படிக்க வைத்ததும், எங்களின் நலங்களைக் கண்காணித்ததும் இலிபியாவிலுள்ள அம்மாவைப் பெரிதும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

பெரியம்மா பரமேசுவரிக்குப் புற்றுநோய் வளர்ந்த நிலையில் அல்லலுற்றிருந்த நிலையில் எங்கள் அம்மாவால் இலிபியாவில் இருப்புக்கொள்ள முடியாமல் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பான அயற்பணியை விட்டு, ஆறே திங்களில் பதவியிலிருந்து விலகி, சென்னைக்கு 1980 சனவரியில் திரும்பி வந்தார்கள். அம்மா வந்து ஒரே திங்களில் எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு எங்கள் பெரியம்மா மறைந்து விட்டார்கள். அவ்வேளையில் எங்கள் அப்பாவுக்குச் சென்னையில் வீட்டுப் பணியாளாக முருகேசன் என்ற நல்லிளைஞர் இருந்தார். நாங்கள் வாரஇறுதியில் அண்ணாநகருக்குச் சென்றபோதெல்லாம், எங்களுடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அவர் மாறியது அண்ணா நகரிலுள்ள பலரை வியப்பில் ஆழ்த்தியது. அவர் எப்பொழுதும், வேட்டி அணிந்துகொண்டு வேகப்பந்து வீசுவதைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும். அதே வேகப்பந்துக்கு நிகராக மட்டை வீச்சிலும் சிறந்த வீரராகவும் மிளிர்ந்தார். என்னுடைய அண்ணன் கண்ணன் Gaylord Cricket Club, Kingston Cricket Club என்று இரண்டு குழுக்களை அண்ணா நகரில் நடத்திய பெருமைக்குரியவர் ஆவார். அந்நாளைய இ.ஆ.ப. அதிகாரிகளுடைய மகன்கள், இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரன் போன்ற பலர் இந்த அணியில் வந்து விளையாடியவர்கள் ஆவார்கள். மேலும் அந்த அணியில் இடம்பெற்ற நண்பர்களின் பெயர்ப்பட்டியல் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. (எங்கள் இல்லத்திலிருந்து, கண்ணன், அருள், பரதன், முரளி, முருகேசன்; எதிர்வீட்டிலிருந்து இராமதாஸ், அர்ஷத்; பக்கத்து வீடுகளிலிருந்து இராம்கி, மாதவன்; பின்வீட்டிலிருந்து இராமசாமி, ஸ்ரீராம், இராமநாதன், கோபால், பாலு, இரமேஷ்; கிரிக்கெட் நடுவராக இலட்சுமி, அரவிந்து, இரவிசங்கர், இரகு, விஜய், சூரஜ், சேகர், சதீஷ், சிவக்குமார், பிரதீப், ஜான், விஜயதாஸ், விஜயகுமார், சாய்ராம், சூர்யா, இராம்மோகன், சாய் மற்றும் சத்யா) அவ்வப்போது என் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில் வகுப்பில் மாணவர்களாகிய பாடநூலின் பக்கங்களை விரித்து மடித்து அப்பக்கங்களிலுள்ள ஓரிலக்க எண்களைக் கூட்டிப் புக் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாகும். மேற்குறித்த நண்பர்களின் உதவியால், எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள காலிமனைகளைக் கிரிக்கெட் மைதானமாக மாற்றியமைத்து அங்கு மண்டிக்கிடந்த முட்புதர்களையெல்லாம் அகற்றிச் சீர்செய்து காரை உருளைக் குப்பைத் தொட்டிகளை வைத்துப் பந்து வீசும் தளப்பரப்பைச் செம்மைப்படுத்தியதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொலைக்காட்சியில் கண்ட என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி இம்ரான்கானின் வேகப்பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டியதும் என் நினைவில் இன்னும் பசுமையாகவுள்ளது.

------------

பதிற்றுப்பத்து:-

சாரல்: 4-தூறல்: 2
செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடுகிறார். வாழியாதனின் போர்க்களம், புலால்நாற்றம் வீசுகிறது. காயம்பட்ட களிறுகளும் போர்மறவரும் புண்பட்டிருந்தமையால், அந்நாற்றம் பெருகியது. வள்ளல் பாரியின் நெருங்கிய அறிவார்ந்த நண்பர் கபிலர். ஆதனைக் காணச்சென்ற கபிலர், பாரியின் பெருமையைப் பாடுகிறார். ‘புலாஅம் பாசறை’ என்னும் முதற்பாடல்:

‘பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை தூக்கும் நாடுகெழு பெருவிரல்,
ஓவத் தன்ன வினைபுனை நல்லில்,
பாவையன்ன நல்லோள் கணவன்,
பொன்னி னன்ன பூவின் சிறியிலைப்
புண்கால், உன்னத்துப் பகைவன் எங்கோ!
புலர்ந்த சாந்தின் புலரா வீகை,
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்கவென,
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
ஈத்த திரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே- ஒள்வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,
நிலவி னன்ன வெள்வேள் பாடினி
முழவில் போக்கிற வெண்கை
விழவின அன்னநின் கலிமகி ழானே!

பூசியுலர்ந்த சந்தனத்தைத் தன் அகன்ற மார்பிலுடையவன் வள்ளல் பாரி. அவன் மரத்தில் பழுத்த பலாப்பழத்தின் பிளவிலிருந்து ஒழுகும் தேனை, வாடைக்காற்று மெல்லத்தூவும் நாட்டினை உடையவன் அவன். ஓவியப் பாவையின் கணவன். உன்னமரத்திற்குப் பகைவன். அவனுடைய முழவுமண் காய, இரவலர் துன்பமடைய, மீண்டுவாரா விண்ணுலகத்திற்குச் சென்றுவிட்டான். அதனால் நீ எம்மைப் பாதுகாக்க வேண்டி, இரந்து செல்ல நான் இங்கு வரவில்லை. எதையும் மிகையாகக் கூறமாட்டேன். மெய்யொன்றையே பேசுவேன். நீயும் பெருங்கொடையாளனென்று உனது புகழை உலகமக்கள் பேசுவதை அறிந்து, உன்னைக் காண வந்தேன். நிலவொளி போல் ஒளிவீசும் உனது படைக்கலனாகிய வேலினைப் பாடும் விறலி, முழவிசைக்குப் பொருந்தத் தன்கையால் தாளம்போடும் விழாவைப்போல், ஆரவாரம் மிகுந்த உனது இன்பக் களியாட்டத்தின்போது உன்னைக் காணவந்தேன் என்கிறார் கபிலர். தமது பெருமிதத்தையும் நிலைநாட்டுகிறார்.

பரிபாடல்:-
பரிபாடல், பரிபாட்டெனவும் வழங்கப்படும். பரிதல்-பற்றுதல். திருமாமலைப் பற்றுதலும், செவ்வேளைப் பற்றுதலுமாகிய நிலைகளில், பாடல்கள் அமைந்துள்ளன. பரிபாடலின் அடிச்சிறுமை 25, அடிப்பெருமை 400 என்பது தொல்காப்பியம் (1418). இதுவரை கிடைத்துள்ள பாடல்கள் 22. திருமால் குறித்து 6, செவ்வேள் குறித்து 8, வையை குறித்து 8.

சாரல்: 5-தூறல்: 1
ஒவ்வொன்றும் நெடிய பாடல்கள். எனவே, தேர்ந்தெடுக்கப்பெற்ற இரண்டு பாடல்களின் சிலவரிகளை மட்டுமே காணலாம். முதலில் மூன்றாவது பாடலின் பகுதி. திருமால் குறித்தது. கடுவன் இளவெயினனார் பாடியது. மொத்தமுள்ள 94 அடிகளில், 63 முதல் 72 முடியவுள்ள 10 அடிகள்.

‘தீயினுள் தெறல்நீ! பூவினுள் நாற்றம்நீ!
கல்லினுள் மணியும்நீ! சொல்லினுள் வாய்மைநீ!
அறத்தினுள் அன்புநீ! மறத்தினுள் மைந்துநீ!
வேதத்து மறைநீ! பூதத்து முதலும்நீ!
வெஞ்சுடர் ஒளியும்நீ! திங்களுள் அளியும்நீ!
அனைத்தும்நீ! அனைத்தினுள் பொருளும்நீ! ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே! உண்மையும்
மறவியல் சிறப்பின் மாயமார் அனையை;
முதன்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலின்
மறவாப் பிறப்பிலை; பிறப்பித்தோ ரிலையே!

படைப்புக் கடவுளாகிய மாலவன், தீயின் பெருவெப்பமாக விளங்குகிறான்; பூவின் நறுமணமாக விளங்குகிறான்; கல்லின் மாணிக்க மணியாக விளங்குகிறான்; சொல்லில் வாய்மை உடையவனாக விளங்குகிறான்; அறத்தில் பெரும்பற்று உடையவனாக விளங்குகிறான்; மறத்தில் பெருவலிமை படைத்தவனாக விளங்குகிறான்; வேதத்துக்கு நாயகனாக விளங்குகிறான்; பஞ்சபூதங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான்; வெஞ்சுடரின் பேரொளியாக விளங்குகிறான்; திங்களின் தண்ணளி கொண்டவனாக விளங்குகிறான்; அனைத்துமாக விளங்குகிறான்; அனைத்தினுள் இயங்குபவனாக விளங்குகிறான்; ஆதலினால், அவனுக்கு உறைவிடமும் இல்லை; அவன் உறைவதும் இல்லை; உண்மையாகவும், விடுவலாச் சிறப்பின் வியப்புக்குரியவனாகவும் விளங்குகிறான்; எல்லாமாகவும் விளங்குகிறான்; முதல், இடை, கடைமுறைகளின் பிறப்பிலியாகவும், பிறப்பித்தோர் இலனாகவும் விளங்குகிறான். இப்படி ஒரு ஈடில்லாத வாழ்த்து அமைய முடியாது.

சாரல்: 5-தூறல்: 2
அடுத்ததாகப் பதினான்காவது பாடலின் பகுதி. செவ்வேளாகிய முருகவேளைப் பற்றியது. அவனிடம் பற்று மிகக்கொண்ட கேசவனார் என்னும் புலவர் பாடியது. மொத்தமுள்ள 32 அடிகளில், 18 முதல் 32 அடிகள் முடியப் பதினைந்து அடிகள்.

‘சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே!
கறையில் கார்மழை பொங்கி யன்ன,
நறையின் நறும்புகை நனியமர்ந் தோயே!
அறுமுகத்து ஆறிரு தோளால் வென்றி,
நறுமலர் வள்ளி பூநயந் தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே!
பிறந்த ஞான்றே, நின்னை யுட்கிச்
சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே!
இருபிறப்பு, இருபெயர், ஈரநெஞ்சத்து,
ஒருபெயர், அந்தணர் அறனமர்ந் தோயே!
அன்னை யாகலின், அமர்ந்துயாம் நின்னைத்
துன்னித் துன்னி வழிபடு வதன்பயம்
இன்னு மின்னுமவை யாகுக
கொன்முதிர் மரபின்நின் புகழினும் பலவே!

தேவருக்குத் தொல்லை கொடுத்துவந்த சூரபத்மனை அழித்த - ஒளிவீசும் வேலாயுதம் தாங்கிய செவ்வேளே! கருக்கொண்ட மேகம், கனமழை பெய்வது போன்ற தூபத்தின் மணப்புகையில் இனிதமர்ந்தவனே! ஆறுமுகங்களுடன், பன்னிரண்டு தோள்களால் வெற்றிவீரனாக விளங்குபவனே! மணமிகு மலராகிய வள்ளியம்மையெனும் பூவை விரும்பியவனே! நட்புக்கொண்டு, சுற்றத்தார் சூழ்ந்திருக்க, உன்னை உயர்த்திப்பாடும் பாட்டினைச் செவிமடுத்துச் சுவைத்து மகிழ்பவனே! நீ தோன்றியபோதே தேவேந்திரன் உள்ளிட்ட தேவரெலாம் மகிழ்ந்தனரே! அசுரரெலாம் அஞ்சிய சீரூடையவனே! இருபிறப்பு, இருபெயர், ஈரநெஞ்சத்து ஒருபெயராம் அறவோராகிய அந்தணர்தம் அறத்தில் விளங்குபவனே! தண்ணளி பொழியும் தாய் போன்றவனாகையால், உள்ளம் ஒருமுகப்பட்டு, ஊனை நெருங்கி நெருங்கி வழிபடுகின்றோம். அந்தத் தன்மையானது, மேன்மேலும் அவ்வாறே தொடர்வதாகட்டும். கணிக்கவியலாத பழமரபின் வழிபட்ட உன் பெருத்த புகழைக்காட்டிலும் அவை பல்கிப் பெருகட்டும்! என்று, கேசவனார் உள்ளம் உருகிப் போற்றுகிறார்.

தேமொழி

unread,
Jan 8, 2021, 12:06:32 AM1/8/21
to மின்தமிழ்
40 -  “ வாழ்வியல் காட்டிய வளம் ! ”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ்வண்ணமே எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எந்தையார் புதிய தொடராக ‘ விழிப்போடு வருக ’ என்ற பெயர்ப்பலகையை வைத்திருந்தார். இப்பெயர்ப்பலகை அந்நாளில் பல வார இதழ்களில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

1974 முதல் 1998 வரையில் எங்கள் இல்லத்தின் அசைக்க முடியாத அருந்துணையாக நான்கு கால் நண்பராக, வெவ்வேறு காலங்களில், காவல் தெய்வங்களாக, ‘காரி’, ‘டாமி’, ‘சீசர்’, ‘ஜூலி’, ‘அஞ்சலி’ வலம் வந்தது பசுமையாகவுள்ளது. இவை எங்களுடன் பின்னிப்பிணைந்து மிக விழிப்பாக எங்களைக் கண்காணித்ததை மறக்க முடியாதது.

எந்தையார் மீதும், தம்பி பரதன் மீதும், அண்ணன் கண்ணன் மீதும் உச்சந்தலை வரை தொட்டுத் தொட்டு விளையாடுவதும், அவர்களுடைய செவிகளில் உராய்வதும் காணக்கிடைக்காத காட்சிகளாகும். சைவப் பிறவிகளாகிய நாங்கள் எங்கள் நாயகர்களையும் கடுஞ்சைவமாக வளர்த்தது எங்கள் அன்னையாரின் பெரும்பணியாகும். பாலும், தயிரும் உண்டாலும், அணுவளவும் சீற்றங்குறையாமல் எங்கள் பெற்றோர் எப்போதாவது ஒருமுறை எங்களிடம் குறைகாணும்பொழுது தவறிக் கையுயர்த்தினால் சீசரின் வேகத்தால் அவர்கள் அமைதியாவார்கள். எங்களைப் போலவே, கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபாடும், பூப்பந்தாடும்பொழுது அந்த உயரத்திற்கு எட்டித் தாவுவதும், ஊஞ்சலில் எங்களுடன் சரிசமமாக ஏறியமர்ந்து விளையாடுவதும் மறக்க முடியாத காட்சிகளாகும்.

சில நேரங்களில், மதிற்சுவரின் மேல்தான் எங்கள் பேச்சரங்கம் நடைபெறும். அவ்வேளைகளில் சீசரும் மதிற்சுவரில் உடன் அமர்ந்திருக்கும். இக்காட்சியைக் கண்டு, எங்கள் வீட்டுக்கு எதிரிலுள்ள அம்மாவின் பேராசிரியர், டாக்டர் சி.டி. திருஞானசம்பந்தம் அவர்கள் எங்கள் அம்மாவிடம் முறையிட்டாராம். முறையீட்டில் ‘ என்ன தாரா ! இப்படி உன் பிள்ளைகளும், நான்குகால் நண்பரும் மதிற்சுவரில் நிற்பதா ?’ என்று திகைத்துக் கேட்டாராம். அம்மா அடிக்கடி இதை எங்களிடம் சுட்டிக்காட்டுவார்கள்.

வேற்றொரு தருணத்தில், அஞ்சலியைக் காலை நடைக்கு அழைத்துச் சென்றபோது, வேற்றொரு இன நண்பரைப் பார்த்துச் சீற்றங்கொண்டு கைச்சங்கிலியிலிருந்து விடுபட்டு ஓடியபொழுது, விரைந்து வந்த சரக்குந்தில் அடிபட்டு இறந்த காட்சியைக் கண்டு நான் கலங்கி இரண்டு நாள்கள் உணவருந்தாமல் தத்தளித்தேன். எங்கள் இல்லத் தோட்டத்தில் எலுமிச்சை மர நிழலில் அஞ்சலியை மீளாத் துயில்கொள்ள வைத்தோம்.

தீபாவளி வந்தால், நாயகர்கள் நடுங்குவதைக் கண்டதால், அப்போதே, பட்டாசுகள் மீது எங்களுக்குக் கோபம் வந்துவிட்டது. இன்றும்கூடத் தோழர் நெமிலியை வளர்க்க வேண்டும் என்று என் மகள் ஆதிரை அடம் பிடிக்கிறார். என் அண்ணன் மகள் மருத்துவம் பயிலும் தாரா நிகிதா தன் தங்கையாக ‘மெலடி’யை ஆஸ்திரேலியாவில் பதினைந்து ஆண்டுகளாக வளர்க்கிறார்.

என் பெற்றோர்கள் இருவருக்கும் அற்புதமான பழக்கமுண்டு. அவர்களைவிட மூத்தவர்களையும், பதவியில் முதுநிலையில் உள்ளவர்களையும் மதிப்பதையும், அவர்களைவிட இளமையாகவுள்ள நண்பர்களைப் போற்றி வளர்ப்பதையும் கண்டு நான் பெருமிதங் கொள்வதுண்டு.  ஆண்டுத் தொடக்கமான சனவரி 1-ஆம் தேதியன்று, அப்பா முதல்வரையும், அருட்செல்வர் ந. மகாலிங்கம் அவர்களையும் சந்திப்பது போல், அம்மா டாக்டர் திருமதி மரக்காயரைச் சந்திப்பது தவறாத வழக்கமாகும்.

அம்மாவுடன் பணியாற்றிய மருத்துவத் திலகங்கள் எங்கள் மீதும் அன்பு சொறிந்தனர். இவர்களில், இராயப்பேட்டை மருத்துவமனை (1970-1978) டாக்டர் மங்கலம், டாக்டர் சுசீலா, டாக்டர் மெகருன்னிஷா, டாக்டர் பெர்லின் ஜோசப், அம்மாவிடம் பயிற்சியெடுத்த டாக்டர் தியாகராஜன், வசுந்தரா தியாகராஜன், (நங்கநல்லூர் பி.எம். மருத்துவமனை உரிமையாளர்கள்) டாக்டர் கமலக்கண்ணன் (அம்மாவைப் போல இலிபியாவில் பணியாற்றியவர்), டாக்டர் கிருபாகிரி மற்றும் செவிலியர் திருமதி தெரெசா, திருமதி பிளோமினா; ஸ்டான்லி மருத்துவமனை (1980-1981) நண்பராக டாக்டர் சந்திரா, தொழிலக மருத்துவமனையில் (1981-1982) மருத்துவர் தாராபாய்; கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (1982-1987) மருத்துவர் சினேகலதா (என் வகுப்புத் தோழர் தீபக்கின் அம்மா), எழும்பூர் குழந்தைநல மருத்துவமனையில் (1987-1989) டாக்டர் பார்வதி, டாக்டர் நர்மதா, டாக்டர் கே.ஜி. கமலா, மருத்துவர் இராமமூர்த்தி, மதுரை மருத்துவமனையில் (1989-1991) அம்மா முதல்வராக இருந்தபொழுது உதவியாளர் திருமதி இராதா போன்றோரும் மற்றும் குடும்ப நண்பர் ஓமியோபதி மருத்துவர் முருகன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர்.

என் பல்வரிசையை ஒருசீராக அமைப்பதற்குக் கம்பி கட்டிய பல்மருத்துவர் அண்ணா நகரிலுள்ள டாக்டர் பாணிசங்கர், புரசைவாக்கத்தில் டாக்டர் எம்.ஜே. இராமகிருஷ்ணன் (அம்மாவைப் போல இலிபியாவில் பணியாற்றியவர்), இராதாகிருஷ்ணன் சாலையில் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் ஆவர். எனக்குக் கண்ணாடி அணிவதற்காக கண் சிகிச்சை செய்த அண்ணாநகரிலுள்ள டாக்டர் சிவப்பிரகாசம் மயிலையிலுள்ள டாக்டர் பிரேமா அனைவரும் அம்மாவின் நண்பர்களே.

மழலை மருத்துவத்தின் மாத இதழாக மலரும் ‘Indian Academy of Paediatrics’ இதழை அம்மா எழுத்தெண்ணிப் படிப்பது வழக்கமாகும்.

என் மகள் ஆதிரைக்கு குழந்தைநல மருத்துவராகவுள்ள டாக்டர் பிரபாகரனிடம் நான் ஏதாவது மருத்துவக் கேள்வி கேட்டால், “என் பெருமைக்குரிய பேராசிரியராகிய உங்கள் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்” என்பார்.  அவ்வண்ணமே நான் தமிழ்ப் பேராசிரியர்களிடம் இலக்கியத்தில் ஐயம் கேட்டால், “அப்பாவைக் கேட்டுத் தெரிந்துகொள்” என்பார்கள். முதுபெரும் மருத்துவர்களான டாக்டர் சீலா தம்பையா, டாக்டர் சௌமினி, டாக்டர் கனகா, டாக்டர் நம்மாழ்வார், டாக்டர் பாஸ்கர் ராவ், இதய மருத்துவர்களான டாக்டர் சிவராஜ், டாக்டர் லலிதா காமேசுவரன், டாக்டர் சே.நெ. தெய்வநாயகம், டாக்டர் சண்முக சுந்தரம், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன் முதலியோரை எப்போதும் பெருமிதமாக அம்மா பேசுவார்.

மாபெரும் மருத்துவராகிய அம்மாவைப் போலவே மருத்துவர்களாக நாங்களும் வரவேண்டும் என்று நினைத்த எங்கள் குடும்ப உறவினர்கள் பதினெட்டு பேர் மாமருத்துவர்களாக மிளிர்கிறார்கள் என்பதே அம்மாவின் பெருஞ் சாதனையாகும்.

------------

கலித்தொகை அறிமுகம்:

கற்றறிந்தார் ஏத்தும் கலியென்பது கலித்தொகை. கருத்து வளமிக்க நூல்; காதலைப்பற்றிக் கூறும் நூல்; தமிழர் பண்பாட்டைப்பற்றிப் பேசும் நூல்; அன்பு, பண்பு, முறை, நிறை, பொறை, போற்றுதல், ஆற்றுதல் போன்றவற்றுக்கு விளக்கங்களைத் தருகின்ற நூல்; வலிமைக்கு எளிமையான நூல்; எளிய சொற்களைக் கொண்டு, அரிய நீதிகளைக் கூறும் நூல். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், முதுமொழிக்காஞ்சி தவிர, வெண்பாவில் அமைந்தவை.

எட்டுத்தொகை நூல்கள், ஆசிரியப்பா அல்லது அகவற்பாவில் அமைந்தவை.

சாரல்: 6-தூறல்:1
மொத்தமுள்ள 150 பாக்களில், முதலாவதாகத் தோழிகூற்றாக அமைந்துள்ள 133ஆம் பாடல்; சோழன் நல்லுருத்திரன் பாடியது. 19 அடிகளை உடைய பாடலில், 6 முதல் 14 அடி முடியவுள்ள 9 அடிகளை மட்டும் இங்கு காணலாம். திருக்குறள் சார்ந்த நெறிகளையே எடுத்தியம்பும் திறத்தைக் காண்போம்.

‘ஆற்றுத லென்பதொன் லந்தவர்க் குதவுதல்;
போற்றுத லென்பது புணர்ந்தாலைப் பிரியாமை;
பண்பெனப் படுவது தன்கிளை செறாஅமை;
அறிவென படுவது பேதையார் சொல்நோற்றல்;
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை;
நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை;
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்;
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்!

ஏதுமற்ற ஏழை எளியவர்க்கு - வறியவர்க்கு வேண்டுவன ஈதல்வேண்டும்; முதலாவதாகப் பசிப்பிணி அகற்றும் மருத்துவராக இருத்தல் வேண்டும்; அடுத்த அடிப்படைத் தேவைகளான உடை வழங்குதல், உறையுள் வழங்குதல் வேண்டும். மொத்தத்தில் உற்றுழியும் உதவுதல் உயர்ந்தநெறி. புணர்ந்தாரை எனில், நட்புச் செய்தாரை என்பது பொருள்.

அவரை ஒருபோதும் பிரிதல் கூடாது. அந்த நட்பும் நுனிக்கரும்பிலிருந்து அடிக்கரும்பைச் சுவைப்பதுபோல்-அதாவது வளர்வதாக இருத்தல் வேண்டும். அதைத்தான் ‘போற்றுதல்’ என்கிறார். பண்பெனப்படுவதும் குணமெனப்படுவதும் ஒன்றுதான். முன்னோர் சென்ற நன்னெறியில் நாமும் நடைபயில்வதே ‘பண்பு’ எனப்படும். அன்பெனப்படுவது தெரிந்தவர்மாட்டுக் கொள்ளும் பற்றுள்ளமாகும். எனவே, உற்றாரும் உறவினருமாகிய அனைவரிடத்திலும் அன்புகொள்ள வேண்டும்.

‘அருளென்னும் அன்பீன் குழவி’ என்பார் திருவள்ளுவர். மேதையர் எனப்படுவோர், பேதையர் பிதற்றும் தகாச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளலாகும். அறிவானது, அற்றம் காக்கும் கருவியில்லையா? ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பதையும் நினைவிற் கொண்டு, வாழ்வதே அறிவுடைமையாகும்.

செறிவென்பது, ‘திண்மை’ எனப்படும். ஒருவர், முன்னர்க் கூறியதை மறக்காமலும், மறைக்காமலும் இருப்பதே ‘செறிவு’ எனப்படும். மறைபொருள் என்பது, ஒன்றைப் பிறர் அறியாமல் பாதுகாத்துக்கொள்வது. இல்லையெனில், வெளிப்பட்டு வேதனைப்படுத்தும், இத்தகைய நிலைப்பாடே ‘நிறை’ எனப்படும். கண்ணோட்டம் என்பது, இரக்கம் எனப்படும். அத்தகு இரக்கம் கொள்ளாமல், உயிரைக் கொல்லுதல் கூடாது. ‘வௌவல்’ என்பதற்குக் கவர்தல் என்பது பொருள்.

எனவே, இரக்கமின்றி அரக்கத்தனமாக எந்த உயிரையும் வௌவுதல் கூடாது. மன்னவன், மக்களை ‘முறை’ செய்து காக்க வேண்டும். ‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப்படும்’ இல்லையா? மனுநீதிச்சோழன், தன் மகனென்றும் பாராமல் வீதிவிடங்களைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றதை ‘முறைசெய்தல்’ எனலாம். ‘முறை’யெனில், ‘நீதி’யென்க! ‘பொறை’ என்பதன் பொருள், பொறுமை என்பதாகும்.

தன்னைப் பிறர் போற்றாமல் தூற்றியபோதும் பொறுத்துக்கொள்ளுதல், ‘பொறை’ எனப்படுவதாகும்.

சாரல்:6-தூறல்:2
அடுத்ததாகக் ‘கண்டோர்கூற்று’ என்னும் தலைப்பிலான 9ஆம் பாடல். 24 அடிகளைக் கொண்ட அதிலிருந்து 12ஆம் அடி முதல் 20ஆம் அடி முடியவுள்ள 9 அடிகளைக் கொண்ட பகுதியைக் காண்போம்.

‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்வர்க் கல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கவைதா மென்செயும்?
நினையுங்கா லும்மகள் நுமக்குமாங் கனையளே!
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை,
நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செயும்?
தேருங்கால், நும்மகள் நுமக்குமாங் கனையளே!
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை,
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செயும்?
சூழங்கால், நும்மகள் நுமக்குமாங் கனையளே!’

பழங்காலத்தில், ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தனர். திருமணத்திற்குத் தடையென்றால், தலைவன் தலைவியை உடனழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வான். அவ்வாறு ஒருவன் ஒருத்தியை அழைத்துச் சென்றுவிட்டான். அவரைத் தேடிச் செவிலித்தாய் செல்கிறாள். துறவியர் சிலர், எதிர்ப்படுகின்றனர். அவரிடம் அவள், ‘ஓர் இளம் இணையர், இவ்வழியே சென்றாரா?’ என வினவுகிறாள்.

அவரும், ‘அவ்விணையர் சென்றதை யாமும் கண்டோம்; அவர் செய்த செயல்தான் யாதோ? இல்லறம் மேற்கொள்ளத்தானே செல்கின்றனர்? அது நல்லதுதானே?’ என்றனர். இதுதான் ‘கண்டோர் கூற்று’. ‘சந்தனம் மலையில் பிறந்தாலும், மலைக்குப் பயனில்லை; பூசுபவர்க்கே அது பயனாகும். முத்து கடலில் பிறந்தாலும், கடலுக்குப் பயனில்லை; அணிபவர்க்கே அது பயனாகும். இசையோ யாழில் பிறந்தாலும், யாழுக்குப் பயனில்லை; செவிமடுப்பவர்க்கே அது பயனாகும்.

அவற்றைப் போலவே, உம்மகள் பிறந்த இடத்திற்குப் பயன்படுவதைக் காட்டிலும், புகுந்த இடத்திற்குத்தானே பயன்பட முடியும். சிறந்த முடிவைத்தானே தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, துயர்களைக! என்று, கண்டோர் அறிவுறுத்தினர்.

அகநானூறு அறிமுகம்:

‘அகம்’ என்னும் சொல்லுக்கு உள், மார்பு, மனம், ஞானம், பாவம், வீடு, பூமி, மலை, மருதம், அகத்திணை ஆகிய பொருள்கள். இங்கு ‘அகம்’ என்னும் சொல்லுக்கு ‘அகப்பொருள்’ என்பது பொருள். வீட்டு வாழ்க்கை பற்றியது. மனம் பற்றியதாகவும், மனைவாழ்க்கை பற்றியதாகவும் அமைவதெனலாம். பதினெண்கீழ்க்கணக்கில் நாலடி நானூறு போலவும், பழமொழி நானூறு போலவும் எட்டுத்தொகையில் அமைவது ‘அகநானூறு’ எனலாம்.

அகநானூற்றின் அடிச்சிறுமை 13; அடிப்பெருமை 31. இதனைத் தொகுத்தவர், மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவன் பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி. சரிபாதி அதாவது 200 பாடல்கள், பாலைத்திணைக்குரியன. மேலும், தோழிகூற்றே மிகுதியாகவும் உள்ளன.

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்,

தொடர்புக்கு "dr.n...@gmail.com 
----

தேமொழி

unread,
Jan 10, 2021, 1:48:09 AM1/10/21
to மின்தமிழ்
41 -  “எம்முளும் உளன் ஒரு பொருநன்”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவதற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று உரையாற்றி மகிழ்வித்தார்.  செஞ்சி என்றால் அப்பன்ராஜ் (திருவாமூர் சமணத் திருமடத்தின் தலைவராக உள்ளார்),  திருச்சி என்றால் திரு.குணசேகரன் (கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் (ஓய்வு)),  தஞ்சை என்றால் இராஜேந்திரன், மாயவரம் என்றால் அண்ணல் இராஜசேகரன்,  சேலம் என்றால் சண்முகம், நெல்லையென்றால் முருகன், செங்கோட்டை என்றால் ஆசிரியர் ஜனார்தனன்,  தென்காசி என்றால் டாக்டர் பத்மானந்தன்,  நாகர்கோயில் என்றால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,  கிருஷ்ணகிரி என்றால் தாது,  ஓசூர் என்றால் கிருஷ்ணன்,  மதுரை என்றால் சாந்தகுமார், திருப்பத்தூர் என்றால் திருமதி மணிமொழி,  திண்டிவனம் என்றால் டாக்டர் பாலதண்டாயுதம்,  வடலூர் என்றால் செல்வராஜ், கோவை, திருப்பூர், உதகை, கேரளம் முதலிய அனைத்து இடங்களுக்கும் ஆடிட்டர் தமிழ்ச்செம்மல் லோகநாதன்,  புதுவை என்றால் வழக்கறிஞர் முருகேசன், ஜெயராம் ஓட்டல் திரு. லட்சுமி நாராயணன், ஆனந்த முதலியார், இந்திப் பேராசிரியர் இராமசாமி,  பம்பாய் என்றால் தேவதாஸ்,  பூனா என்றால் கிருஷ்ணசாமி, கல்கத்தா என்றால் மு.சீனிவாசன், நக்கீரன், பெங்களூர் என்றால் நீலகண்டன், மைசூரு என்றால் அரவிந்தன், ஐதராபாத் என்றால் ரெட்டி,  தில்லி என்றால் முனிற்கா இராமகிருஷ்ணன், சுந்தர், இலண்டன் என்றால் ஜோதி, வழக்கறிஞர் சிரி கந்தராஜா, கவிஞர் கருணானந்தராஜா,  ஜெர்மனி என்றால் நித்யா, பிரான்ஸ் என்றால் சிவசண்முகம், பாலகிருஷ்ணன், இரவீந்திரன், இலங்கை என்றால் ஞானசம்பந்தன், மலேசியா என்றால் கோயில் நடராஜா, வானொலி பூபாலன், நல்லகுமார்,  சிங்கை என்றால் திருமதி இந்திரா கிருஷ்ணன்,  மஸ்கட் என்றால் திருமதி சித்ரா நாராயணன்,  அமெரிக்கா என்றால் அரிசோனா இராஜகோபாலன்  என்று ஊர்தோறும் பல நண்பர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து அழைத்துப் போவார்கள். இவர்களைப்போன்ற பெறற்கரிய நண்பர்களெல்லாம் தமிழ்தானே ஈட்டித்தந்தது என்று பெருமிதமாக நாளொன்று குறையாமல் அவர்கள் நலம் பேசி மகிழ்வார் எங்கள் அப்பா.

எனக்கு அந்தச் சூழலில் பல நண்பர்களுக்குச் சென்னை வந்தால் எங்கள் அண்ணாநகர் இல்லமான ‘தாரகை’ விருந்தகமாக அமையும். அப்பாவும் அம்மாவும் விருந்து வரக்காத்திருந்த நல் விருந்தினராகத் திகழ்ந்தார்கள்.  எனக்குத் தெரிந்து செஞ்சியிலிருந்து திரு அப்பன்ராஜ் அடிகளாரும், அவர் துணைவியார் திருமதி சுமதியும் அவர்களின் குடும்பச் செல்வங்களும் எங்கள் குடும்ப உறவினர்களாகவே திகழ்ந்தார்கள்.  என்னுடைய தாத்தா உரைவேந்தர் அவர்களின் இறுதிக் காலத்தில் அவருக்கு உற்ற துணையாக, ‘வெள்ளை உடைக் கட்டிளங்காளை’ சீரங்கன் என்ற அப்பாவின் நண்பர் உடனிருந்து பணிவிடை ஆற்றியதை நாங்கள் மறக்கவியலோம். சென்னையில் அவருடன் ஒருமுறை ‘ஒரு தலைக் காதல்’ திரைப்படம் பார்த்த பொழுது திரைப்படத்தை விட அவர் விம்மி விம்மி அழுத காட்சிதான் எனக்குப் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.  ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் தாத்தாவிற்கு பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி விருது வழங்கிய நாள் வரை சீரங்கன் ஒட்டியே இருந்தார். அதற்குப் பிறகு, ஊர் சென்றவர் திரும்பவேயில்லை. என் சிற்றப்பா மருத்துவர்களான மெய்கண்டான், நெடுமாறன் இருவரும் மதுரை, கோவையில் இருந்தபோதும் சீரங்கனைத் தேடியும் காண முடியாது போயிற்று. 

எந்தையார் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இலக்கிய உரையாற்றச் சென்றபோது மலேசிய அமைச்சர் தான்ஸ்ரீ பெருந்தகை சாமிவேலு முதல் தென்னாப்பிரிக்கா வணிக வேந்தர் திரு.முதலி வரை பல நண்பர்களைப் பெற்றார்.  மலேசியத் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய திரு குலசிங்கத்தின் மகள் சுபத்ரா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் பயில வந்தபோது, தில்லியிலிருந்து அவர் மருத்துவக் கல்வி பயில்வதில்த் தடையின்மைச் சான்று பெறவேண்டிய சூழல் இருந்தது.  பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான் அவர்களை அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று அந்நாளைய செய்தித்துறையின் துணை இயக்குநர் திரு. அமிர்தலிங்கம் (அப்பாவின் நண்பர்) வாயிலாக அச்சான்றிதழைப் பெற்றுத் திரும்பினோம். 

மலேசியாவைச் சார்ந்த குணா என்ற நடனக்கலைஞர் கலாக்ஷேத்ராவில் பயின்றபோது எங்கள் இல்லத்தில்தான் தங்கியிருந்து பயின்றார். அம்மாவின் முயற்சியால் சைவ உணவை விரும்பிச் சாப்பிடும் பழக்கத்திற்கும் ஆளானார். மலேசியாவைச் சார்ந்த ஆனந்தராஜ் என்ற மாணவரும், எங்கள் இல்லத்தில் தங்கிப் பயின்றதையும், சிங்கையிலிருந்து கவிதா தன் பள்ளிப்படிப்பை எங்கள் இல்லத்தில் தங்கிப் பயின்றதையும், தென்னாப்பிரிக்காவிலிருந்து திருமதி மானசா தன்னுடைய நடன அரங்கேற்றத்திற்காகச் சென்னையில் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்ததையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனோ என்ற மாணவியும் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்ததையும், இலங்கையிலிருந்து இன்னிசைப் பாடகர் சிவபாலன் மற்றும் மருத்துவர் சிலோன் பாலா,  மலேசியத் திருநாட்டின் ஈப்போ நகரத்தின் பண்பாட்டுத் திலகமாகவும், தமிழ்க் களஞ்சியம் தொகுத்த பெருமைக்குரிய கவிக்குயில் கலிய பெருமாள் (எவர் தொலைப்பேசியில் அழைத்தாலும் முதல் குரலாக ‘இன்பமே சூழ்க என்னாளும் வாழ்க’ என்று வாழ்த்துச் சொல்லித்தான் பேசுவார்) போன்றோர் விருந்தினர்களாகத் தங்கிச் சென்றதைவிட  அப்பாவின் நண்பர்களின் மக்கட்செல்வங்களே எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நாங்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற காலத்தில் ஒருங்கே இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.

------------
அகநானூறு...
சாரல்:7-தூறல்:1
இங்கு ‘வாயில் வேண்டிச்சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது’ என்னும் தோழிகூற்றுப் பாடலைப் பார்ப்போம். அள்ளூர் நன்முல்லையார் பாடிய மருதத்திணைப் பாடல். 46ஆம் பாடல்.
‘சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டூது பனிமல ராரு மூர!
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று,
உறையிருந்து,ஒளிருந் தாழிருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை யயர்ந்தனை என்ப, அஃதியாம்
கூறேம், வாழியர் எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னவென்
ஒண்டொடி நெகிழிறு நெகிழ்க!                     
தலைவன், தலைவியைச் சந்திக்க விரும்புகிறான். தலைவியோ, அவனுடைய பரத்தையர் தொடர்பால் காண விரும்பவில்லை. தோழியைத் துணை செய்யுமாறு கூறுகிறான். அவளோ, அவனுக்கு மாறுபடப் பேசுகிறாள். எருமை, தான் பிணிக்கப்பட்டிருந்த தொழுவத்தைச் சிறுநீராலும் சாணத்தாலும் சேறாக்கிக்கொண்டு, பிணிகயிற்றை அறுத்துக்கொண்டு, பக்கத்து வயல்வேலியையும் விலக்கிக்கொண்டு, வயலுக்குள் செல்கிறது.  வயல்மீன்கள், அஞ்சியோடுகின்றன. எருமை, வள்ளைக்கொடியைச் சிதைக்கிறது. வண்டோ, தாமரையின் தண்ணிய தேனைச் சிதைக்கிறது. மாலை நேரமானதால், தாமரையும் கூம்பிவிட்டது. வண்டு, பூவில் இருக்கிறது. எருமை, அந்தத் தாமரை மலரை உண்ண விரும்புகிறது. ‘எருமையை என்னதான் செய்யவியலும்? நீ வேறொருத்தியை வீட்டிற்கே அழைத்துவந்து, மணந்து கொண்டதாக ஊர் கூறுகின்றது. உன்னையும் என்னதான் செய்யவியலும்? நீ சென்று வரலாம்.’ என்கிறாள்.  அள்ளூர் போன்ற அழகி என் தலைவி எனக்கூறும் பாங்கினை வேறு எம்மொழியிலும் நாம் காண்பதற்கில்லை.  நகரின் அழகை நங்கையின் அழகோடு ஒப்புமை செய்வது வியப்புக்குரியது.

சாரல்:7-தூறல்:2
அடுத்ததாக, முல்லைத்திணைக்குரிய பாடல். இடைக்காடனார் பாடியது.  தலைவன் கூற்றாக அமைந்தது. வினைமுற்றிய தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன்னெஞ்சிற்குச் சொல்லியதாகும். 284ஆம் பாடல்.
‘சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன,
குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்,
முடந்தை வரகின் வீங்குழு ளருந்துபு,
குடந்தையும் செவிய கோட்பவ ரொடுங்கி,
இன்றுயி லெழுந்து துணையொடு போகி,
முன்றிற் சிறுநிறை நீர்கண் டுண்ணும்
புன்புலந் தழீஇய பொறைமுதற் சிறுகுடி,
தினைக்க ளுண்ட தெறிகோல் மறவர்,
விசைத்த வில்லர் வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
காமர் புறவி னதுவே - காமம்
நம்மினுந் ததன்தலை மயங்கிய
அம்மா வரிவை யுறைவி னூரே!’
சிற்றிலைகளை உடைய நெல்லிமரத்தின் அழகிய காய்போன்ற கண்களைக் கொண்டதாகவும், உடல் முழுவதும் அழகிய மயிரை உடைய சிறுமுயலானது, தலைசாய்ந்த வரகின் முதிர்ந்த தானியத்தைச் சுவைக்க விரும்பவும், வரகினைக் கொள்பவரைக் கண்டு அஞ்சி, உறக்கத்தினின்றும் விழித்துக்கொண்டு, துணையுடன் சென்று, வீட்டின் முற்றத்திலுள்ள சிறிதளவாகவே உள்ள நீரினைக் கண்டு பருகும்.  அத்தகைய காடுசார்ந்த நிலமாகிய கொல்லையில் வாழ்கின்ற சிறுகுடியைச் சேர்ந்த தினைக்கஞ்சி உண்ட சிதறுகோல் உடைய முல்லைநில வேட்டுவர், வில்லேந்தி வேட்டையாடச் சென்று, முல்லைநிலக் கொல்லையில் புல்லரிசி கிண்டும் விருப்புடைய காடு அதுவாகும்.  இன்பத்தை நம்மைவிட மிகக்கொண்டு, மனமயக்கம் கொண்ட தலைவி வாழ்கின்ற இனியவூர் அதுவாகும். 
எனவே, தலைவியைச் சென்றடைய விரைந்து தேரினைச் செலுத்த வேண்டும் என்பதாம். தலைவன், தனது நெஞ்சுக்கே தான் சொல்லியதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.  முயலின் வடிவம், முல்லைநில வேடுவர், தலைவியின் காதல் இப்பாடலில் வனப்புற வரையப்பட்டுள்ளன.

புறநானூறு அறிமுகம்
‘புறம்’ என்னும் சொல்லுக்குப் பக்கம், முதுகு, இறையிலி நிலம், புறத்திணை என்னும் பொருள்கள் உண்டு.  இங்குப் ‘புறம்’ என்பதற்குப் ‘புறப்பொருள்’ என்பதுவே பொருளாகும்.  அக ஒழுகலாறு நீங்கிய அனைத்துமே, புற ஒழுகலாறுகள் எனப்படும்.  பதினென்கீழ்க்கணக்கில் ‘நாலடி நானூறு’ போலவும், ‘பழமொழி நானூறு’ போலவும், எட்டுத்தொகையில் ‘அகநானூறு’ போலவும் அமைவது ‘புறநானூறு’. புறநானூற்றின் அடிச்சிறுமை 3, அடிப்பெருமை 40.  நானூறு பாக்களில், சில பாக்கள் சிதைந்துள்ளன. எல்லாப் பாக்களுமே, ஆசிரியப்பா அல்லது அகவற்பாக்களால் அமைந்தவை. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில், வெண்பாவின் தாக்கம் இருப்பதுபோல், எட்டுத்தொகை நூல்களில் ஆசிரியப்பாவின் தாக்கம் இருக்கும்.  ஆசிரியப்பாவின் அடிச்சிறுமையே மூன்றுதான், ஆனால், அடிப்பெருமைக்கோர் அளவில்லை. 

இதுவரை நற்றிணை முதலாக அகநானூறு முடிவாக ஏழு தொகைநூல்களிலுமாக ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு பாடல்களாகப் பதினான்கு பாடல்களைப் பார்த்தோம்.  இறுதித் தொகை நூலாகிய புறநானூறோ, வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.  எனவே, எட்டாம் இறுதித் தொகைநூலாகிய புறநானூற்றினின்றும் எட்டுப்பாடல்களே எடுத்துக்கொள்ளலாம்.  புறநானூற்றின் போர்வரிகள் தமிழர் பெருமைக்கு வழங்கிய தங்கப் பதக்கமாகும்.

சாரல்:8-தூறல்:1
முதலாவதாகக் கடையெழு வள்ளல்களுள் புகழ்பொலிந்த அதியமான் நெடுமானஞ்சியை அறிவரசியார் ஔவையார் பாடிய பாடல். தானைமறத் துறை, ‘தானைமறம்’ என்பது படைவீரம். தும்பைத்திணை, ‘தும்பை’ என்பது, அதிரப் போர் செய்வது.  87ஆம் பாடல்.
‘களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போரெதிர்ந்து,
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே!’
புலமைப் பெருமாட்டி ஔவையார், கடையெழு வள்ளல்களுள் அதியமான் நெடுமானஞ்சியை எதிர்க்கின்ற பகைவரை எச்சரிக்கிறார்.  எவ்வாறு? ‘பகைவரே! போர்க்களம் புகுவதைத் தவிர்த்து விடுங்கள். போரை எதிர்கொண்டு வெற்றிபெற. எங்களில் ஒரு மாவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? 
ஒரு மாதத்தில் ஒரு தேரினைச் செய்யும் தச்சன், ஒரு நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றவனானால் எப்படியோ, அப்படிப்பட்ட பெருமுயற்சியால் ஒரு திங்களுக்கு ஒரு சக்கரம் மட்டுமே செய்வதென்பது எத்துணை நுணுக்கப் பெருமிதம் கொண்டதாக அமைக்க முடியும்.  அத்தகைய பேராற்றல் படைத்த மாவீரன் அதியமான நெடுமானஞ்சி!’ என்கிறார்.

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு "dr.n...@gmail.com
-----

தேமொழி

unread,
Jan 22, 2021, 5:07:28 PM1/22/21
to மின்தமிழ்
42 -  " சான்றோர் சான்றோர் பால ராப ! " 

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வகுப்பாசிரியர்களுடைய பயிற்சியை விடக் கூடுதலாகத் தனியாசிரியர்களை அமர்த்தி எங்கள் பெற்றோர்கள் கண்காணித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன்.

தொடக்க காலத்திலேயே அதாவது முதல் வகுப்புப் பயிலும்போதே இராயப்பேட்டை பெசன்டு சாலை இல்லத்தில், ஆங்கிலோ - இந்திய மாதரசியான திருமதி ஒகோனா ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிக்கும் ஒலிப்பு முறையைக் கற்றுத் தந்தது இன்றும் என்னுடைய ஆங்கிலச் செழுமைக்கு அடிப்படையாகும்.  கணக்குப் பாடத்திற்காக என்னுடைய மாமா தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளராகத் திகழ்ந்த திரு.ஆனந்தன் அண்ணாநகர் இல்லத்திற்குச் சென்று பயின்றதையும் நான் நினைவு கூர்கிறேன்.

அதேபோல், வேதியியல் பாடத்தை அண்ணாநகர் மேற்கில் திரு புஜங்கா ராவிடமும், திரு வடிவேலுவிடமும், பார்வைத் திறனற்ற சக்கரபாணி நாயுடுவிடம் பயின்றதையும், விலங்கியல் பாடத்திற்கு அம்மாவின் நண்பர் டாக்டர் நர்மதாவின் கணவரான விலங்கியல் பேராசிரியர் இராமசாமி , இந்திக்கு திரு. நாராயணனிடமும், வடமொழிக்கு அவரின் தந்தையார் கேசவ ஐயங்கார், தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவற்றை முதுநிலைப் பேராசிரியர் இரங்கநாதனிடம் பயின்றதையும் நினைவுகூர்கிறேன்.

தமிழையும், கணக்கையும் வீட்டிலேயே வந்து கற்றுத் தந்த திரு குணசேகரன், மொழிபெயர்ப்புத் துறையில் மொழிபெயர்ப்பு அலுவலரான அகமத்துல்லாவிடமும் திரு .பாபுவிடமும் , முதுபெரும் தமிழறிஞரும் - நெடிய தோற்றமும் - வேட்டியும் தோளில் துண்டுமாகப் புலவர் அமிர்தலிங்கனார் காஞ்சியிலிருந்து வாரம் மும்முறை அண்ணாநகர் இல்லத்திலேயே உடன் தங்கியிருந்து செவ்வனே தமிழிலக்கியத்தையும், இலக்கணப் பாடங்களையும் கற்றுத் தந்த உத்தியும்; அவரிடம் ஒருமுறை, “ தந்தையாரைப் போலத் தமிழறிவு பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? ” என்று கேட்ட போது, “அப்பா திரட்டிய நூல்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டாலேயே நீ தமிழறிஞர் ஆகிவிடுவாய் ” என்றார். மேலும் நீதிநெறிப் பாடல்களைச் சொல்லி மனப்பாடம் செய்ய வேண்டுமென்றார். காரணம், அப்பா திரட்டியது அரை இலட்சம் நூல்களுக்கும் மேல் என்பதால் அவர் அவ்வாறு சொன்னார்.

அகர முதலித்துறை முன்னாள் இயக்குநர் முனைவர் மதிவாணன் திருமகனார் பேராசிரியர் அன்பரசனிடம் அறிவியல் பாடங்களையும் கற்றேன்.  மாநிலக் கல்லூரியில் இருந்த பொழுது நண்பர் இரவிசங்கர் வாயிலாக சைதையில் தமிழாசிரியர் தேவராசனிடமும் பயின்றதும் , வகுப்புத்தோழர் ஆண்டவரும் நானும் என் மாமா முனைவர் குமரவேலிடம் பயின்றதும், அமைந்தகரையில் தொல்காப்பிய வகுப்பு பேராசிரியர் இராமசுப்பிரமணியிடமும்,  கல்லூரிப் பேச்சுப் போட்டிகளுக்காக என்னை ஊக்கப்படுத்திப் பல கருத்துக்களை பேசுவதற்க்கு எழுதித்தந்து கம்பராமாயணம் - பெரியபுராணம் தொடர்களை உச்சரிக்கக் கற்றுத்தந்தும் பேசும்பொழுது தொடக்கமாக பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனல் வரிகளை பேசுவதற்கு ஏற்ற வரிகளை அறிமுகம் செய்த பேராசிரியர் அரசேந்திரன் ஆகியோரின் பயிற்றுமுறைகள் மறக்கவொண்ணாப் பயிற்சிக் களங்களாகும் .

கோவையிலிருந்து கல்வியாளர் செந்தில் ஆறுமுகம் சென்னையில் எங்கள் இல்லத்தில் தங்குகிற நேரங்களிலெல்லாம் எங்கள் மூவருக்கும் வாழ்வின் விழுமியங்களை மறவாமல் கற்றுத் தருவார்.  கருநாடக வாய்ப்பாட்டுப் பயிற்சியும், வயலின் கருவியை மீட்டுவதற்கும், புல்லாங்குழல் ஊதுவதற்கும், ஆர்மோனியம் இசைப்பதற்கும் வள்ளியம்மாள் பள்ளியின் இசையாசிரியர் திருமதி கமலாவிடம் பயின்றோம் (எங்களை எல்லாம் விஞ்சி என் அண்ணன் கண்ணன் சிறந்த கருநாடக இசைப் பாடகராக மிளிர்ந்து 1977 ஆம் ஆண்டிலேயே புதிய ஆவடி சாலையில் - பச்சையப்பர் கல்லூரி எதிரில் உள்ள பிரசன்ன வெங்கடேசுவர சோமஸ்கந்த திருக்கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் பெரும் பாடகராகப் போற்றப்பட்டார்).  அப்போது அவர் பாடிய பாடல் கூட " எனக்கென்ன மனக்கவலை , என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை " என்பதாகும்.   திருமதி கமலா அண்ணன் கண்ணனை " கன்னம் கன்னம் " என்று சொல்லித்தான் பெருமைப்படுத்துவார் .

அதேபோல வாகனம் ஓட்டுவதற்காகத் தலைமைச் செயலக ஓட்டுநர்களான திரு. தனராஜ், (என்னுடைய பதினொன்று - பனிரெண்டாம் வகுப்புக்களின் அறிவியல் பாடங்களின் விளக்கப் படங்களை நுட்பமாக வரைந்து தருபவராவார். அவருடைய மிதிவண்டியை கண்ணுங்கருத்துமாகப் பேணியதை இன்றுவரை நான் மறவேன்.)  திரு. வெங்கடேசன், திரு.பரஞ்சோதியிடம் பல காலநிலைகளில் கற்றதும்,  அதேபோல அப்பாவின் நேர்முக உதவியாளராக இருந்த திரு ஜகன்னாதன் அவர்களும், என்னுடைய நண்பர்களான இரவிசங்கர், இராம்மோகன் போன்றோரும் உடற்பயிற்சிப் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஊக்கமளித்ததும் மறக்கவியலாது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றுகொண்டிருந்த வேளையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக இந்திரா காந்தியும் இந்திய தேசிய ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் பங்கு கொள்ளச் சென்றேன். அங்குப் பேசிய பல நண்பர்களும், காங்கிரசு கொள்கையைச் சார்ந்து பேசியதனால், மாறுபட்ட சிந்தனையாக இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி ஒரு வரலாற்று நோக்கில் நான் பேசிவிட்டு இந்திரா காந்தியைப் பற்றி அதிகம பேசாமல் அவர்கள் நேருவின் திருமகள் என்றும், அவர்கள் வளர்ந்த சூழல், சிறந்த நிலை என்று பாராட்டி அமர்ந்தேன்.

அன்று வேறு சில நண்பர்கள் இந்திராகாந்தி அம்மையாரை வசைபாடிப் பேசினார்கள்.  அன்று மாலையே அந்நாளைய காவல்துறை அதிகாரி திரு. இராதாகிருஷ்ணன் (கிராக்கி, என்ற புனைபெயரில் எழுதிய எழுத்துச்செம்மல் பெருந்தகை) எந்தையாரைத் தொலைபேசியில் அழைத்து அன்று மதியம் நடந்த பேச்சுப்போட்டியில் பேசிய நண்பர்கள் பற்றிச் சொல்ல தங்கள் மகனும் கலந்து கொண்டதாகச் சொல்லி அதற்கு உடனே எந்தையார் அருளுக்கு அதிகம் பேசிப் பழக்கமில்லை,  இப்பொழுது தான் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறான்.  தவறாக அவன் ஒருநாளும் பேசமாட்டான். அன்னை இந்திரா காந்தியைச் சுட்டவர்களை விட்டு விட்டது சரியா என்று வினா எழுப்பியிருப்பான்.  அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தோசை சுடுவதைப் பற்றித்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நகைச்சுவையாக கேட்க காவல்துறைத் தலைவரே சிரித்தாராம் .

நாவன்மையும் - சொல்வன்மையும் ஒன்றுதான். ஒருவர் பேசிப் பலர் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள் ?  எதிரே அமர்ந்திருப்பவர்கள் பேசத்தெரியாதவர்கள் என்றா நினைப்பது?  அதனால்தான் ஒருவர் பேசும்போது கீழே உட்கார்ந்திருப்பவர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பார்கள் .  

சொல்வன்மை தான் திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு பெயராகும்.   ஆக்கமும் , கெடுதலும் அதனால் வரும் .
வேட்ப மொழிதல்,  திறனறிந்து சொல்லுக , வெல்லும் சொல்லாகப் பேசுக, நிரந்தினது சொல்லுக ,  சில சொல்லல் தேறுக, கற்றதை உணர்த்த விளக்கிப்பேசுவது  என்றெல்லாம் அழமாகக் கூறுவதை இளைஞர்கள் தெரிந்து பேசவேண்டுமென்று நான் பெரியப்பா என்று பரிவுடன் அழைக்கும் திருக்குறளார் கூறியதைப் பிறகு தான் உணர முடிந்தது .

------

புறநானூறு...

சாரல்: 8 - தூறல்: 3
மூன்றாவதாகவும் கபிலர் பாடிய பாட்டே மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. அவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனே. முன்பாடலைப் போலவே, பாடாண்திணை மற்றும் இயன்மொழித் துறைப் பாடல்.  124ஆம் பாடல்.

‘நாளன்று போகி, புள்ளிடை தட்ப,
பதனன்று புக்கு, திறனன்று மொழியினும்,
வறிது பெயர்குந ரல்லர்-நெறிகொளப்
பாடாண் றிரங்கு மருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே ! ’

‘ குறிஞ்சிக்கோமான் மலையமான் திருமுடிக்காரி. ஆரவாரத்துடன் இழியும் பேரருவிப் பெருமலைக்கு உரியவனும், பெருமிதப் பண்பாளனுமாகிய அவனைப் பாடியோர், அவனைக் காண நாளில்லாத நாளிலும் போகலாம்; வழியில் பறவைச்சகுனம் தடைசெய்யலாம்; பக்குவம் இல்லாத நிலையிலும் சென்று காணலாம்; பேசத் தெரியாமலும் பேசலாம்; எப்படிப்பட்ட எதிர்வினைகளாயினும், வேண்டிச்சென்ற பொருள்களைப் பெறாமல், இரவலர் வறிதே திரும்புபவரல்லர் ’ காரியின் பெருமையை அருமையாகக் காட்டுகிறார்.

சாரல்: 8-தூறல்: 4
நான்காவதாக மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. பொதுவியல் திணைப்பாடல். பிற திணைகளில் கூறப்படாச் செய்திகளையும், அவற்றுக்குப் பொதுவாக உள்ள செய்திகளையும் தெரிவிப்பது பொதுவியல். பொருண்மொழிக் காஞ்சித் துறை. வாழ்வின் உன்னத நிலை குறித்தும், நிலையற்ற தன்மை குறித்தும் எடுத்து மொழிவது. 189 ஆம் பாடல்.

‘தெண்கடல் வாளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேமெனினே தப்புந பலவே !’

தெளிந்த கடலால் சூழப்பட்ட உலகத்தைப் பொதுவின்றித் தனியொருவராக வெண்கொற்றக் குடையின்கீழ் ஆண்ட அரசருக்கும், நள்ளிரவிலும் நண்பகலிலும் உறங்காதவனாகிய வேடனுக்கும் - காக்கும் வேந்தன் தொடங்கி விலங்கின் உயிரை நீக்கும் வேடன் வரை அனைவரும் நிகரே !

உண்ணும் உணவின் அளவு நாழியரசிதான்; அதாவது முகத்தலளவையாகிற காற்படி; உடுப்பவை இரண்டுதாம்; அதாவது கீழாடையும் மேலாடையும். பிற அனைத்துமே, இருவர்க்கும் நிகரானவையே. எனவே, செல்வம் பெற்றதன் பயன், இல்லையென்பார்க்கு ஈதலும், ஈதலால் இசைபட வாழ்தலுமே. மாறாகத் தாமே நுகர்வதாயின், அச்செல்வம் அவரிடமிருந்து தப்பிச்செல்லப் பலவழிகள் உள.

சாரல்: 8 - தூறல்: 5
ஐந்தாவதாகப் பிசிராந்தையார் பாடியது. முன்பாடலைப் போலவே, பொதுவியல் திணை; பொருண் மொழிக் காஞ்சித்துறை. ‘கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை, கேட்குங்காலம் பலவாலோ ? நரை நமக்கு இல்லையாலோ ? ’ என்ற சான்றோர்க்கு அவர் மொழிந்தது ’.

‘யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர ஏன்ளிளையரும்; வேந்தனும்,
அல்லவை செய்யான் காக்கும்; அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே ! ’

புலவர் ஆந்தையார், ‘ பிசிர் ’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். எனவே, ‘ பிசிராந்தையார் ’ என அழைக்கப் பெற்றார். அவரோ, அகவை நிரம்பியவர் - முதுமை கனிந்தவர். அவரைக் கண்டோரெல்லாம், ‘ இவ்வளவு முதுமையிலும், உமக்கு நரை தோன்றவில்லையே ! யாது காரணம் ? ” என வினவினர். அவர் கூறிய விடைதான் பாடல்.

‘என்னுடைய மனைவி, மாண்புடையவள்; மக்களும் அவரைப் போலவே, அறிவிலும் பண்பிலும் நிறைந்தனர்;  என்னின் இளைஞரும், என் எண்ணப் படியே கடமைகளைச் செய்பவர்; நாடாளும் மன்னனும், அல்லவற்றைச் செய்யாமல் நல்லவற்றையே செய்பவன்; குடிமக்களைக் கண்போல் காப்பவன்; அனைத்துக்கும் மேலாக,  யான் வாழும் ஊரில், கல்வி கேள்விகளில் சிறந்து, பாடறிந்தொழுகும் பண்புடைய சான்றோர் பெருமக்கள் வாழ்கின்றனர்.  எனவே, எனக்குக் கவலையின்மையால், நரை தோன்றவில்லை ’ என்றார்.இப்படி ஓர் அரிய பாடல் நம் நினைவில் நிலைப்பாதாகும் .

சாரல்: 8- தூறல்: 6
ஆறாவதாகப் பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணைவிளக்கம் முன் பாடலில். கையறுநிலை என்பது, இறந்தாரை எண்ணிச் செய்வதறியாது இரங்குதலாகும். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமலே அன்பு வயப்பட்டனர். இருவர் தம் நட்பும், உயர்நட்பின் உன்னத அடையாளம்.  218ஆம் பாடல்.

‘ பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்குங் காலை,
ஒருவழித் தோன்றியாங் குளன்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப;
சாலார் சாலார் பாலரா குபவே ! ’

பொன்னும் பவளமும் முத்தும் பெருமலையில் விளைத்த அழகிய இரத்தினக்கல்லும், ஒன்றுக்கொன்று தோன்றுமிடங்களால் இடைவெளியிட்ட சேய்மையவாகினும், மாலையாகத் தொடுக்கப்பட்டு, அரிய விலைப்பொருளான அணிகலனாக அமைக்கும்போது, ஒன்றுசேர்ந்து விளங்குவதுபோல், எந்நாளும் சான்றோர் பெருமக்கள், சான்றோர் பெருமக்களையே சார்வர்; சால்பில்லாதவர்,  சால்பிலாதவரிடையே சார்வர்.

சாரல்: 8 - தூறல்: 7
ஏழாவதாக ஒல்லையூர் கிழார்மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயில் கீரத்தனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணை துறை விளக்கம் காண , முன் பாடல்களில்.  242ஆம் பாடல்.

‘இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்; பாடினி யணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை,
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே ! ’

இளவயதினரோ, தலையில் சூடிக்கொள்ள மாட்டார்; வளையணிந்த வனிதையரோ, கொடியிலிருந்து கொய்ய மாட்டார்; பாடுந்தொழிலோனாகிய பாணனோ, இசைக்கருவியாகிய நல்ல யாழின் மேல் சூடமாட்டான்; அவன் துணையாகிய பாடினியோ, அணிந்துகொள்ள மாட்டாள். சூடாததும், கொய்யாததும், அணியாததும் எது தெரியுமா ? அதுதான் முல்லைமலர். ஏன் ? என்னவாயிற்று ? வீர மறவரை எல்லாம் பேராற்றலுடன் வெற்றிகொண்ட வெற்றி வேலையுடைய ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மறைந்துவிட்டான்.

இந்தக் கொடுமை உணராமல் ஒல்லையூரில் முல்லையே நீயும் பூத்தனையோ ? சூடாமலும், கொய்யாமலும், அணியாமலும் இருப்பதால், மலர்ந்து தான் என்ன பயன் ? ஒன்றுமில்லை. இவ்வாறாகக் குடவாயில் கீரத்தனார், தமது கையறுநிலையைப் புலப்படுத்துகிறார்.படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன .

சாரல்: 8 - தூறல்: 8
எட்டாவதாகப் பொன்முடியார் பாடியது, வாகைத்திணை; மூதின் முல்லைத் துறை. வாகை என்பது, வெற்றியைக் குறிக்கும்; மூதின்முல்லை என்பது, முதிர்ந்த , உயர்ந்த பண்பாட்டு ஒழக்கத்தைக் குறிக்கும்.

‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்றுனடை நல்கல் வேற்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே !’

நன்மக்களைப் பெற்றெடுத்துக் கொடுப்பது, தனது தலையாய கடமையெனத் தாயாகவிருந்து பொன்முடியார் கூறுகிறார்; கல்வி, கேள்வி, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவனாக உருவாக உதவுதல், தந்தைக்குக் கடமையாகும்; கூரிய வேலினை வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும்;  ஒளிவீசும் வாளைத் தீட்டிக்கொண்டு, எதிர்வரும் போரில் ஆண் யானையை வீழ்த்திவிட்டுக் களத்தினின்றும் மீண்டுவருவதுமான , மறவனாகிய காளைக்குக் கடமையாகும். அனைவர்க்குமான கடமைகளை வகுத்துக்கூறும் பொன்முடியாரின் புறப்பாடல், எண்ணிப் பெருமையடைலாம் .

வளரும்...

- முனைவர் ஔவை ந. அருள்,

தொடர்புக்கு
dr.n.arul[at]gmail.com
---

தேமொழி

unread,
Jan 29, 2021, 12:18:05 AM1/29/21
to மின்தமிழ்
43 -  “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன். பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணாநகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு பொதுவரங்கம் நடப்பது போலத்தான் இயங்கும்.  அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பல நிலையினரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அன்றைய சூழலில் தான் தேசியகவி மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவைப் புரட்சித்தலைவர் அறிவித்திருந்து ஏற்பாடுகள் பல நிலைகளில் எக்களிப்போடு நிகழ்ந்தன. 
விடுதலைக் கவியரசருக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் விழாக்கோலம் தெரிந்தது. பள்ளி மாணவனாக இருந்த என்னை எழுத்தாளரும், பேச்சாளரும், ஊடகச் சுடருமாக விளங்கும் திருமதி. சுபா வெங்கட் முதன் முறையாக ஸ்ரீராம் இலக்கியக் கழகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.  கோபாலபுரம் மாநகராட்சிப் பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியிலும், கட்டுரைப் போட்டியிலும் பங்கு பெறச் செய்தார். என் அன்னையார் தாரா நடராசன் தனது மருத்துவமனையிலிருந்து இதற்காகவே வந்து நான் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்து எங்களை உட்லண்ட்சு உந்துவெளி உணவகத்துக்கு அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக உள்ளது. கேட்டு மகிழ வந்த தாய் என்று படித்திருந்த்தை என் தாய் வடிவில் பார்த்தேன்.

மூதறிஞர்கள் சிலம்புச் செல்வர், பெ.நா.அப்புசாமி, கிருஷ்ணசாமி பாரதியார், அருட்செல்வர் நா.மகாலிங்கம், ஆங்கிலப் பேரறிஞர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், முதுமுனைவர் டி.என்.ஆர், பேராசிரியர்கள் பி. சுந்தரம், கே.ஜி.சேஷாத்திரி, நாகராஜன், ந.சஞ்சீவி, என்னை வளர்த்த சீ.பா, சர்மா, வழக்கறிஞர் இரவி, சொல்லின் செல்வர் சுகி சிவம், அன்னையாக அரவணைத்த கவியரசியார் திருமதி செளந்தரா கைலாசம், கலைமாமணி விக்கிரமன், கம்பர் கவிநயச் செல்வர் எஸ். நல்ல பெருமாள், பாரதி ஆய்வறிஞர் பெ.சு.மணி, அரு.சங்கர், புலவர் வீரமணி, எனக்கு வழிகாட்டியான பெரும்பேராசிரியர் குடந்தை எஸ்.ஏ. சங்கர நாராயணன், பாரதி காவலர் இராமமூர்த்தி, பாரதி அடிப்பொடி மணி, சிந்தனைப் பேரொளி பாரதி சுராஜ், நாடக வேந்தர் எஸ்.வி. சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன், இதயம் பேசுகிறது மணியன் முதலிய பெருமக்கள் அவ்வப்போது பேசுவதைக் கேட்டதோடு அவர்கள் அன்போடு முதுகில் தட்டிய பரிவும் இப்போது ஓரளவேனும் ஆளாக்கி உள்ளன.

பாரதியார் நம் தமிழ்ப் பரம்பரையின் மாபெரும் சொத்து, அந்தக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து பாடல்கள் சிலவற்றையாவது எந்த நேரமும் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வை வரிசையாக வந்த பெருமக்கள் ஊட்டினார்கள்.  இந்த ஊக்கம் தான் என்னை வேறு துறைகளுக்குச் செல்லாமல், அப்போது என் அம்மா விரும்பாமலும் கூடத் தமிழ்க் கல்வியை ஆர்வமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். கைத்தட்டல்தான் என்னைக் கம்பம் ஏறவைத்தது என்ற ஆங்கிலத் தொடர் நினைவில் நிற்கிறது.

என் தந்தையாரின் நிழலாகவே எப்போதும் இருந்ததால், எனக்கு தமிழ்வழி காட்டியாகப் புலவர் மாமணி அமிர்தலிங்கனார் பாரதியார் பாடல்களை எப்படிச் சீரிபிரித்துப் படிக்க வேண்டும் என்று எழுத்தெண்ணி வகுப்பாக நடத்திக் காட்டினார்.

அந்நாளில் கவிப்பேரரசு வைரமுத்துவின் "கவிராஜன் கதை” வெளிவந்தது.  வாய் திறந்தால் கவிராஜன் கதையில் வந்த வரிகளையும், தொடர்களையும் மனப்பாடமாகவே மாணவர்கள் சொல்லிப் பெருமிதமுற்றனர். முண்டாசுக் கவிஞர் பாரதியார், எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தார். பாரதியார் வரிகள் இல்லாத மேடை இல்லை, திரைப்படமில்லை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்லை, செய்திகள் இல்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் பாரதியார் அலை வீசிய நேரத்தில், பாரதியாரின் பற்று என்னைச் சிறிதாவது நிமிர்த்தியது. தொடர்ந்து பாரதியாரின் வரிகளைச் சொல்வதிலும் ஆர்வத்தோடு அலைந்தேன்.

மாநிலக் கல்லூரியில் முதலாண்டு தொடங்கி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வு பயிலும் வரையில் (1985-1991) தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அறநிலையங்களிலும், தனியார் நடத்தும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, சில பரிசுகளைப் பெறுகிற அளவு பேச்சுத் திறமையை பட்டை தீட்டிக் கொண்டு வந்தேன்.
 அவ்வேளைகளில், கதர் வேட்டியும், கதர்ச் சட்டையும் அணிந்த என் மூத்த நண்பர் வழக்கறிஞர் பால. சீனிவாசன் கரம்பிடித்து, அவரோடு சென்று கோவை சி.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் பேசியதையும் நினைந்து மகிழ்கிறேன்.  அக்கல்லூரியின் பொறியியல் மாணவர் மணிவண்ணன் என்ற நண்பர் எங்கள் மீது பரிவும் அன்பும் கொண்டு நேரம் தவறாமல் சுடச்சுட நல்லுணவும் வழங்கிப் பேச வைத்தார். அப்பொழுது அவரை நோக்கி, “உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பேன்” என்றேன். அதற்கு உடனே, “உப்பி வருகிறவரை நானும் மறவேன்” என்றார்.  வட சென்னையில், ‘விடிவெள்ளி’ என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்கள் பேசவைத்த நாநல நாயகமாக இலக்கியச்சுடர் வழக்கறிஞர் த. இராமலிங்கம் சில ஆண்டுகள் கழித்து ‘நம்பிக்கைதான் வாழ்க்கை’, ‘நம்பிக்கைதான் முன்னேற்றம்’, ‘நம்பிக்கைதான் வரலாறு’, ‘நல்லதையே சொல்வோம், நல்லதையே சேய்வோம்’ என்ற கொள்கை முழக்கத்தோடு ‘தமிழ் இளைஞர் இயக்கம்’ ஒன்றையும் தோற்றுவித்தார். இலக்கியச்சுடரின் பாசறையிலிருந்து சூடானிலுள்ள ஐ.நா. அவையின் உயரலுவலர் வழக்கறிஞர் கண்ணன் (நிறுவனர், முச்சங்கம்), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி இராமலிங்கம் (நிறுவனர், ‘கரும்பு அம்புகள்’), வழக்கறிஞர் செல்வானந்தம், நினைவில் வாழும் திரை இயக்குநர் திருப்பதிசாமி போன்ற நல்லிளைஞர்களை புகழின் உச்சிக்கு வளர்த்து ஒளிர வைத்தார். வழக்கறிஞர் கண்ணன் சிறந்த ஆங்கிலத்திலும், செம்மாந்த தமிழிலும் உரையாற்றும் உரையாளர். 
ஆற்றலோடு சென்னை உயர்நீதிமன்றம் நடத்தும் Moot Court (மாதிரி நீதிமன்றம்)-இல் பேசுகின்ற அளவிற்கு மாண்புடையவராவார். அவருடைய ஒருங்கிணைப்பில் இராஜாஜி மண்டபத்தில் ஐக்கிய நாட்டு அவையின் பொருண்மைகளை இளங்கலையிலேயே ஆங்கிலத்தில் பேசும் வாய்ப்பினையும் அவர் நல்கினார்.  எனக்குத் தனிப்பட்ட மடல்கள் எழுதுகின்ற அளவிற்கு நான் அவருடன் நெருக்கமாகப் பழகினேன். அக்கடிதங்களில், பேரறிஞர் அண்ணாவின் மேற்கோள்களை சுட்டிக் காட்டி வரைவேன்.  அமெரிக்காவிலிருந்து என் மாமா மருத்துவர் இளமதி, திருமதி சாரா, மகன் சிவனுடன் கண்ணனின் இராயபுரம் இல்லத்தில் விருந்துண்டது மறக்கவொண்ணாதது.  1986-இல் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு பயிலும்போது, அந்நாளைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.அன்பரசு அவர்களின் தலைமையில் சென்னைத் தொலைக்காட்சியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் (தலைப்பு - இளைஞர்கள் முன்னேற்றத்திற்குத் தேவைப்படுவது எதிர்பார்த்து வாழ்வதா? எதுவரினும் ஏற்பதா?) ஆற்றொழுக்காகப் பேசி ‘பூட்டிய இருப்புக் கோட்டையின் கதவு திறந்தது’ என்ற பாவேந்தரின் வரிகளோடு நிறைவு செய்தேன்.  பட்டிமன்றம் ஒளிபரப்பாகிய பின் மாநிலக் கல்லூரியில் பல மாணவ மாணவியருக்கு நான் பெரிதும் அறிமுகமாகிப் பாராட்டுப் பெற்றேன்.  தமிழிலக்கிய மாணவர்கள் பெரும்பாலானோர் வகுப்புக்கு வருவதும், பேராசிரியர்களுடன் அளவளாவுவதோடு சென்று விடுவதுதான் வழக்கமாகவே இருந்தது.

இதில் நான் முழுதும் மாறுபட்டுக் கல்லூரிக்கு வரும்பொழுதே பேருந்துகளை நாடாமல் என் அம்மா வாங்கித் தந்த ஐந்து சக்கர இணைப்புச் சாய்வுந்தில் (Side-car Scooter) வலம் வருவதே கல்லூரிக்குப் புதுமையாக இருந்தது.  கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் பொதுத் தேர்தலுக்கு அவ்வாகனத்தைத்தான் தரச்சொல்லி நண்பர்கள் வற்புறுத்துவார்கள். என் வகுப்புத் தோழர்களைக் காட்டிலும், என்னைவிட மூத்த பெருமக்களுடன் நான் பெரும்பாலும் பழகி வந்தேன். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக இன்றும் நினைவில் உள்ளவர்கள், 
டாக்டர் தேவநாதன் (தலைவர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்), ஜெயப்பிரகாஷ் (நிறுவனர், அக்னி பொறியியல் கல்லூரி), தாம்சன் (காவல்துறை உயர் அலுவலர்), நகைச்சுவை மாமணி மோகனசுந்தரம் (பட்டிமன்றப் பேச்சாளர்), ஆறுமுகம் (தலைவர், மாணவர் பேரவை), ஆர்.பிரதாப் குமார், (மாநில தகவல் ஆணையர் (ம) பொதுச் செயலாளர், மாணவர் பேரவை), வாஷிங்டன் (பொதுச் செயலாளர், மாணவர் பேரவை), இளங்கோ மணிவண்ணன் (தலைவர், மாணவர் பேரவை), சிங்கை ஜமால், G.வெங்கடேசன், (அரசியல் அறிவியல் மாணவர், கருவூலகத்துறையில் பணியாற்றியவர்), புகழேந்தி (புலவர் புலமைப் பித்தன் மகன்), குகன் (கவிஞர் ஆ.கு. ஆதித்தர் பெயரன்), எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகள் ஆனந்தி, திரு.பூம்பொழிலன் (வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு.இராஜாராமன் மகன்), சன் தொலைக்காட்சி செம்பியன் (திரைத் தயாரிப்பாளர் கோவை செழியன் மகன்), வழக்கறிஞர் சிவக்குமார், ஆங்கில ஆசிரியர் அறிவுச் செல்வன், ஆங்கில ஆசிரியர் கீர்த்தி வாசன், பகுத்தறிவுக் கனல் தமக்கையார் வழக்கறிஞர் அருள்மொழி, திரைப்பட நடிகர் தாமு, இலக்ஷமண் சுருதி, தமிழ்ப் பேராசிரியர் சேக்மீரான், காவல்துறை உயர் அலுவலர் பாண்டியன் (கவிப்பேரரசு தம்பி), தமிழ்ப்பேராசிரியர் டென்சன், திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ், அமெரிக்கா காவேரி கணேஷ், திரைப்பட நடிகர் சந்தானம், புள்ளியியல் துறை சீனிவாசன், நீச்சல்வீரர் கந்தன், சென்னை வானொலி நிலைய பழ. அதியமான், மோகன கிருஷ்ணன் மற்றும் 
என் மாமன் மகன் முனைவர் வானவன் ஏகாம்பரம் (அமெரிக்காவில் பெரும்புகழோடு அறிவியல் பேராசிரியராக உள்ளார்), அத்தை மகன் முனைவர் கதிரவன் சுப்பிரமணியன் (பொதுப்பணித் துறையில் மூத்த பொறிஞராய் உள்ளார்) மற்றும் என் பெரியம்மா மகன் முரளி சுந்தரமூர்த்தி (விளம்பர வாணராக உள்ளார்).

என்னுடைய தந்தையார் அடிக்கடி சொல்லும் வரிகள் இவைகள். ‘படித்துத் தயாரித்துப் பேசுவது ஒரு கலை. பேசியதை மறக்காமல் சொல்வதும் ஒரு கலை. பேசினேன் என்று சொல்லி நினைத்துப் பேசாமல் வருவதும் ஒரு கலை.’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார். இலயோலா கல்லூரியில் என் நண்பர் இந்திய வருவாய்த் துறையில் உயர் அலுவலராகவுள்ள கென்னடி தலைமையில் ஈழம்- நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பேச்சுப்போட்டியில் எதிர்பாராமல் முதல் பரிசு பெற்றேன்.  கல்லூரிப் போட்டிகளில்தான் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர்கள் சுமதி, சதீஷ், தமிழ்ப் பேராசிரியர் பர்வீண் சுல்தானா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக துணைத் தலைவர் குணசீலன், அருணா, கனடா கல்பனா, ஸ்டெர்லைட் சர்வேசன், அபுபெக்கர், சேஷாத்ரி போன்றோர் நண்பர்களாக வாய்த்தனர். அறிவியல் மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம் எப்படியொரு தனிப்பட்ட பயிற்சியை வளர்க்குமோ, அதுபோலப் பேச்சுப் போட்டிகளும் கட்டுரைப் போட்டிகளும், கவிதைப் போட்டிகளும் தமிழிலக்கிய மாணவர்களுக்கு வளர்ச்சி நோக்கிய அறிவுக்களங்களாகும்.

------
புறநானூறு...
சாரல்: 8 - தூறல்: 7
ஏழாவதாக ஒல்லையூர் கிழார்மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயில் கீரத்தனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணை துறை விளக்கம் காண , முன் பாடல்களில் 242ஆம் பாடல்.
     ‘இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
     நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
     பாணன் சூடான்; பாடினி யணியாள்;
     ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
     வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை,
     முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே ! ’
இளவயதினரோ, தலையில் சூடிக்கொள்ள மாட்டார்; வளையணிந்த வனிதையரோ, கொடியிலிருந்து கொய்ய மாட்டார்;  பாடுந்தொழிலோனாகிய பாணனோ, இசைக்கருவியாகிய நல்ல யாழின் மேல் சூடமாட்டான்; அவன் துணையாகிய பாடினியோ, அணிந்துகொள்ள மாட்டாள். சூடாததும், கொய்யாததும், அணியாததும் எது தெரியுமா? அதுதான் முல்லைமலர். ஏன்? என்னவாயிற்று? வீர மறவரை எல்லாம் பேராற்றலுடன் வெற்றிகொண்ட வெற்றி வேலையுடைய ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மறைந்துவிட்டான்.

இந்தக் கொடுமை உணராமல் ஒல்லையூரில் முல்லையே நீயும் பூத்தனையோ? சூடாமலும், கொய்யாமலும், அணியாமலும் இருப்பதால், மலர்ந்து தான் என்ன பயன்? ஒன்றுமில்லை. இவ்வாறாகக் குடவாயில் கீரத்தனார், தமது கையறுநிலையைப் புலப்படுத்துகிறார். படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன .

சாரல்: 8 - தூறல்: 8
எட்டாவதாகப் பொன்முடியார் பாடியது, வாகைத்திணை; மூதின் முல்லைத் துறை. வாகை என்பது, வெற்றியைக் குறிக்கும்; மூதின்முல்லை என்பது, முதிர்ந்த , உயர்ந்த பண்பாட்டு ஒழக்கத்தைக் குறிக்கும்.
     ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
     சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;
     வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
     நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
     ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்
     களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’
நன்மக்களைப் பெற்றெடுத்துக் கொடுப்பது, தனது தலையாய கடமையெனத் தாயாகவிருந்து பொன்முடியார் கூறுகிறார்; கல்வி, கேள்வி, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவனாக உருவாக உதவுதல், தந்தைக்குக் கடமையாகும்; கூரிய வேலினை வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும்; ஒளிவீசும் வாளைத் தீட்டிக்கொண்டு, எதிர்வரும் போரில் களிற்று யானையை வீழ்த்திவிட்டுக் களத்தினின்றும் மீண்டு வருவதும் மறவனாகிய காளைக்குக் கடமையாகும். அனைவர்க்குமான கடமைகளை வகுத்துக்கூறும் பொன்முடியாரின் புறப்பாடல், எண்ணி நாளும் பெருமையடைலாம்.
வளரும்...

- முனைவர் ஔவை அருள்,

Jeyapal K

unread,
Jan 29, 2021, 3:06:21 PM1/29/21
to mint...@googlegroups.com
"முல்லையும் பூத்தியோ"  ---- பூத்தனையோ?, பூத்தாயோ? என்று இப்பொழுது உபயோகிக்கிறோம்.

இதைப் பார்த்ததும் எம் வழக்கில் இன்றும் உள்ள சில சொல்லாடல்கள், பேச்சுத் தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்று.

இதைப் பா(ர்)த்தியே?
கேட்டியே கதையை?

நாம் இன்னும் சங்கத் தமிழில் உரையாடுகிறோம் என்பதில் பெருமை.





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/V3aH05BBtLU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c55d267f-03fc-42f7-a489-2c5131b70560n%40googlegroups.com.

தேமொழி

unread,
Feb 7, 2021, 12:23:24 AM2/7/21
to மின்தமிழ்
44 - “நம்பி வழங்கிய நன்கொடை”

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல் மாலை வரை (9.45-10.30- முதல் பாடவேளை; 10.30-11.15- இரண்டாம் பாடவேளை; 11.15-11.30- இடைவேளை; 11.30-12.15- மூன்றாம் பாடவேளை; 12.15-1.00 - நான்காம் பாடவேளை; 1.00-1.30 - உணவு இடைவேளை; 1.30-1.45 - நன்னெறிப் பாடவகுப்பு; 1.45-2.30 - ஐந்தாம் பாடவேளை; 2.30-3.15 - ஆறாம் பாடவேளை; 3.15-3.20 - இடைவேளை; 3.20-4.05 - ஏழாம் பாடவேளை) காலநிரல்வரிசையில் படைவீரரின் மிடுக்கோடு பயின்றோம். ஒரு பழக்கத்தைத் தொடர்ந்து 21 நாள்கள் கடைப்பிடித்தால் பழக்கம் வழக்கமாகிவிடும் என்பார்கள். 

ஏழாண்டுத் தொடர் பழக்கத்திற்குப் பிறகு, மாநிலக் கல்லூரியில் முதலாண்டு தமிழிலக்கியம் பயிலும்போது பல நிலைகளில் மருட்சியாக இருந்தது. அதனால் வளரிளமையில் சுணக்கம் ஏற்பட்டு வகுப்புகளுக்குத் தாமதமாக வருவதும் மாலையில் இல்லத்திற்கு விரைந்து செல்வதும் ஒரு மரபாக மாறத்தொடங்கியது. இந்த உரிமையைக் கண்டு என் அம்மா மிக வருத்தப்படத் தொடங்கினார்கள்.

 இம்முறைமையை அப்பாவிடம் சுட்டிக் காட்டி, “அருளை மாலையில் நீங்கள் செல்லும் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் பேசுகிற உரைகளையாவது கேட்டுத் தமிழ் படிப்பதற்கு மேலும் தூண்டுதலாக அவனுக்கு அமையும்” என்று வலியுறுத்தினார்கள். அக்கருத்தினை ஏற்றுக்கொண்டு, அவருடைய கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன்.

ஒருமுறை, இராயப்பேட்டையிலுள்ள காந்திய அறநிலையத்தில், ‘கலைக் காவலன் கோவலன்’ என்ற தலைப்பில் அப்பா மாலை 5 மணிக்குப் பேச வந்தார். எண்ணிப் பார்த்தால், அவரையும் சேர்த்து மொத்தம் 8 பேர்தான் இருந்தோம். எண்ணிக்கை பெரிதல்ல, வந்தவர்களின் எண்ணங்கள் காவிய மனமுடையன என்று சொல்லி அப்பா பேசிக் கொண்டிருந்தார். ‘விடுதல் அறியா விருப்பினன்’ என்ற தொடரை விளக்கிக் காட்டிப் பேசியது என் நினைவில் மின்னலிடுகிறது. அவருடைய நெருங்கிய நண்பர் நயவுரை நம்பி இடையில் வந்தமர்ந்து உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார். உரை முடிந்தபிறகு அவரை வழியனுப்புவதற்கு அவர் வாகனம் வரை நான் சென்றேன். 

அவர் என்மீது அளப்பரிய அன்பு கொண்டவர். நான் பள்ளிகளில் படிக்கும் பொழுதே, சில வேளைகளில் வகுப்பாசிரியர்கள் மாணவர்களை நல்ல சமுதாயத் திட்டங்களுக்காக இருபது பேரிடமிருந்து நன்கொடை வாங்குவதற்கு விண்ணப்பப்படிவங்கள் அளிப்பது இயல்பாகும். நான் உரிமையாக எதிர்வீடு, பக்கத்துவீடு, அடுத்தவீடு, நண்பர்கள், உறவினர்கள் என்று அந்தப் படிவங்களை நிரப்பிப் பணம் வாங்குவேன். குறைந்தளவு பத்து ரூபாயிலிருந்து, அதிகபட்சம் ஐம்பது ரூபாய் வரைதான் கிடைக்கும். ஆனால், நயவுரை நம்பி மட்டும் ஐநூறு ரூபாய் வழங்குவார். அப்பொழுதே எங்கள் அம்மா அவரிடம் ‘இவ்வளவு பணமா?’ என்று கேட்கும்பொழுது, அவர் சிரித்துக் கொண்டு, “அக்கா, நம் அருள் வகுப்பில் முதலில் வரவில்லையென்றாலும் கவலையில்லை. நன்கொடையிலாவது முதல் மாணவனாக இருக்கட்டுமே” என்று அன்பு பாராட்டுவார்.  அவர் அன்றைக்கு சீருந்தில் ஏறும்போது என்னைப் பார்த்து, “என்ன அருள்? இவ்வளவு மணிநேரத்தை வீணடிக்கிறாயே! நீ என்னுடைய பொறியியல் கல்லூரியிலாவது சேர்ந்திருக்கலாம் அல்லவா? இப்போது வேண்டுமென்றாலும் என்னுடைய பாரத் பொறியியற் கல்லூரியில் சேர்த்து விடுகிறேன்.  எந்தத் துறை விருப்பமோ சொல். சேர்த்து விடுகிறேன்” என்று மிக அன்பாக வலியுறுத்தினார்.“கோவலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதுவா பருவம்? இதுவா நேரம்?” என்று சொல்லிக் கொண்டே, “How many Man-hours are getting wasted!” என்று திடுக்கிடுமாறு சொல்லிச் சென்றார்.

பள்ளியில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் வருகின்ற சுற்றறிக்கைகள் வாயிலாகவோ நண்பர்கள் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம். ஆனால் அத்தகைய சூழல் ஏதும் இல்லாத காரணத்தால், இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாண்டுத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் தெரியாததாலும், உரிய நேரத்தில் தேர்வுக்கட்டணம் கட்டாத காரணத்தாலும் என்னால் தேர்வு எழுத இயலாமற் போயிற்று. அப்பாவும் அம்மாவும் சோர்ந்து போனார்கள்.
 ஆண்டுத்தேர்வு நடந்தபொழுது (14.04.1986) மதுரையில் நடந்த உலகத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவிற்கு அப்பாவுடன் மதுரைக்குச் சென்று விட்டேன்.  அப்போது நண்பர்கள் அப்பாவிடம், என்னைப்பற்றி வினவியபோது சிரித்துக்கொண்டே சொன்னார், ‘அருள் சராசரி மாணவனை விடச் சரிந்து போனவன்’ என்று. கண்களில் நீர் முட்டியது. எப்படியாவது நிமிர வேண்டும் என்ற ஏக்கம் அலைமோதியது. என் தாய் பட்ட கவலை என்னை அழவைத்தது.

கல்லூரி நண்பர்கள் சிவகுமாரும், வா.மு.சே. ஆண்டவரும் என்னை ஒரு மாலை வேளையில், தாசப்பிரகாஷ் உணவகத்திற்கு எதிரிலுள்ள தருமபிரகாஷ் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தலைமையில் தமிழறிஞர்கள் பலருடன் நாங்களும் போய் அக்கூட்டத்தில் அமர்ந்தோம். மேடையில் எழுத்துலக வேந்தர்களான, ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி ஆகியோர் இந்தி மொழிக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசும்போதே தன்னுடைய மிடுக்கான குரலில் சற்றுத் தரக்குறைவாகப் பேச முற்பட்டபோது, பெருங்கவிக்கோ தன்னுடைய பெருமீசையை முறுக்கிக்கொண்டே ‘நெற்றிக்கண் திறக்கும் சிவனைப்’ போலச் சீறி நின்றி விழிகள் சிவக்க “நிறுத்து உன் பேச்சை” என்று முழங்கினார். உடனே அங்கிருந்த என் நண்பர்கள் நாற்காலிகளை எடுத்து மேசையை நோக்கி வீசத் தொடங்கினார்கள். உடனே என் நண்பர் சிவகுமார் ‘இந்தி ஒழிக’ என்று சொல்லி என்னையும் நாற்காலியை வீசச் சொன்னார். என்னைக் கவர்ந்த எழுத்துப் பெருமக்கள் இருவரையும் காலம் எப்படியாவது தானாக மாற்றும் என்று கருதிய நான், சில நேரங்களில் சில மனிதர்களை, குறிஞ்சி மலர்களையும் நெறிஞ்சி முட்களாக மாற்றியதைக் கண்டு அண்ணாந்து பார்த்தபடி நின்றேன்.

இளங்லையில் தமிழிலக்கியத்தைத் தவிர வாரத்தில் இரண்டு நாள்கள் பிறதுறை மாணவர்களுடன் இணைந்து ஆங்கில வகுப்புப் பாடங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது, அறிமுகமான பாடம்தான் ஷேக்ஸ்பியரின் ‘வணிகபுரி வணிகர்’ (Merchant of Venice) நாடகம் ஆகும். அப்பாடத்தை மிக நளினமாக நடத்திய ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர் பெர்னாட்ஷாவை மறக்கவே முடியாது. அவர் ஷேக்ஸ்பியர் நடையைப் போலவே பேசிக் காட்டி எங்களையெல்லாம் வியப்படையச் செய்தார்.   அவ்வண்ணமே, பேராசிரியர்கள் சிதம்பரம் குமாரசாமி, துரைசாமி, சமய உலகில் புகழ்பெற்ற டாக்டர் பிரேமா பாண்டுரங்கன் ஆகியோர் மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்களாக மிளிர்ந்தனர். ஆங்கிலத் துறையின் துறைத் தலைவர் முனைவர் பீட்ரிக்ஸ் திசோசா அம்மையார் மிக அழகாக ஆங்கிலம் பேசுவதும், தலைமைக் குணத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கினார்.

மாநிலக் கல்லூரியில் சேருவதற்கு முன்னரே என்னுடைய சிற்றப்பா டாக்டர் ஞானசம்பந்தன் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகத் திகழ்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அவர் பெருமைகளையெல்லாம் எங்கள் தமிழ்த்துறைப் பேராசிரியர் மறைமலை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அப்பாவும் சித்தப்பாவும் இணைந்து பட்டிமன்றம் பேசினார்கள். அப்போது, மாற்று அணியில் பேசிய சித்தப்பா, அப்பாவைப் பார்த்து, “உங்கள் பேச்சில் என்ன இருக்கிறது? Words words nothing but words” என்று கூறினார்.  சிரித்துக் கொண்டே என் தந்தையார் “நானும் சொல்லுகிறேன். உனக்கு நான் மொழி கற்றுக் கொடுத்தேன். என்மீது வசை பொழிகிறாய்” என்று Prospero, Caliban-ஐப் பார்த்துச் சொன்ன ஷேக்ஸ்பியர் நாடகத் தொடரைச் சொன்னார். வாகீசக் கலாநிதி கி.வா.ஜ. சொன்ன “இரண்டு லட்டுகள் மோதினால் பூந்தியாய்க் கொட்டும்.” என்ற தொடர்தான் என் நினைவுக்கு வந்தது.
-----

புறநானூற்று புதையல்:
புறநானூறு எட்டுத்தொகையுள் அமைந்த முழுப் புறப்பொருள் நூல்கள் இரண்டினுள் ஒன்றாகும். இந்நூலின் நானூறு பாடல்களில் இரண்டு முழுப்பாடல்கள் கிடைக்கவில்லை. சில பாடல்களில் சிற்சில அடிகள் சிதைந்துள்ளன. கிடைக்கும் 398 பாடல்களைப் பாடிய புலவர்கள் நூற்றைம்பத் தெழுவராவர். இந்நூலைச் சுவடிகளிலிருந்து அச்சுப் பதிப்பாகத் தக்க ஆய்வுரையோடு தமிழ்க்கடல் உ.வே.சா. 1894-ஆம் ஆண்டில் முதற்கண் வெளியிட்டார்.  266 பாடல்கள் வரையிலான பழைய உரையையும், பிற பாடல்களுக்கான குறிப்புரையையும் சேர்த்து ஐயரவர்கள் இந்நூலை வெளியிட்டார்.  பிறகு 1947-ஆம் ஆண்டில், உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் நூல் முழுமைக்குமான தம் உரையுடன் இந்நூலை வெளியிட்டார்கள். சங்க இலக்கியங்களில் மிகுந்த படிப்புக்கும் பயிற்சிக்கும் உரியதாகத் திகழ்வது இப்புறநானூறேயாகும்.  இந்நூலின் பால் அறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கொண்ட ஆர்வம் பற்றிக் கூறுகையில் தமிழ்க்கடல் உ.வே.சா. எழுதிய குறிப்புரை பெருமையுடையது.

"காலஞ்சென்ற ஜி.யு.போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.  அவர் இப்புத்தகம் வெளிவந்த காலத்தில் இப்புத்தகத்தைப் பாராட்டி அடிக்கடி எனக்கு எழுதுவதுண்டு. இதிலுள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கின்றார்
ஒவ்வோர் ஆங்கில வருடப் பிறப்பன்றும் இந்நூற் செய்யுட்களுள் ஒன்றை மொழிபெயர்த்து எனக்குச் சில ஆண்டுகள் வரையில் அனுப்பி வைத்தார்"
 அயல்நாட்டாரையும் ஈர்த்த செம்மொழிப் பனுவல் புறநானூறு என்பது இதனால் புலப்படும்.

தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்று எண்ணுகின்றபோது தமிழர்தம் வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரம் செய்கின்ற மூச்சாகத் திகழ்வது புறநானூறேயாகும். கூனரை நிமிர்த்துகின்ற வீரவுணர்வு செறிந்த புகழ்ப்பாக்களின் தோப்பாகப் புறநானூறு திகழ்கின்றது.

பாடிய புலவர்கள்:
மொத்தப் புலவர்களின் எண்ணிக்கை 157. 157 பேரும் 386 பாடல்களைப் பாடியுள்ளனர்.  12 பாடல்களைப் பாடினோர் பெயர் தெரியவில்லை .
 பெண்பால் புலவர்கள் 15 பேர், ஆண்பால் புலவர்கள் 142 பேர். புறநானூற்றில் மட்டும் பாடல் பாடியவர்களாக அறியவரும் புலவர்கள் 76 பேர்.

அரசர்கள் பற்றியன:
400 பாடல்களில் 138 பாடல்கள் 43 வேந்தர்களைப் பற்றியனவாக அமைந்துள்ளன.  (பாண்டியர் - 37, சேரர் - 27, சோழர் - 74) 141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியதாக அமைந்துள்ளன.

திணை, துறைகள்:
400 பாடல்கள் 11 திணையிலும் 65 துறைகளிலும் பாடப்பட்டுள்ளன. (பாடாண் திணை பற்றி மட்டும் 139 பாடல்கள் உள்ளன. வாகை - 77, பொதுவியல் - 67), 19 பாடல்களுக்குத் திணையும், 13 பாடல்களுக்குத் துறையும், ஒரே ஒரு பாடலுக்குத் திணை, துறையும் குறிப்பிடப்படவில்லை.

‘மலர் என்றாலே குரவம், தளவும், குருந்தம், முல்லை என்கிற நான்கு மலர்தான். உணவு என்றாலே தினை, வரகு, அவரை, கொள் இவை நான்கே. குடி என்றாலே துடியன் முதல் நான்கே, அப்படிக் கடவுள் என்றாலே போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனது நடுகல்லே’ என உறுதியிட்டுச் சொல்லும் மாங்குடி கிழாரின் குரல் நினைக்கத் தக்கது.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு "dr.n.arul[at]gmail.com
----

தேமொழி

unread,
Feb 16, 2021, 5:54:26 AM2/16/21
to மின்தமிழ்
45  -  “எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 

என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவ்வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒரு நிகழ்வு நெஞ்சை நெருடும். நான் நான்காம் வகுப்புப் (1976) பயிலும்பொழுது, மாலைவேளைகளில், கிரிக்கெட் மட்டையும் ஓட்டமுமாக இருப்பது வழக்கம். விளையாட்டுத் திடலிலிருந்து அண்ணாநகர் இல்லத்திற்கு வேகமாக வந்து எங்கள் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டுவதுபோலப் பாய்ந்து தாவிக் குதிக்கும் முன், பாதி சுவருடன் நானும் தரையில் விழுந்தேன். விழுந்த வேகத்தில், எழமுடியாமல் தத்தளித்தேன். அப்பொழுது உதவிக் கரம் நீட்டி என்னை அண்ணாநகரிலுள்ள செல்வரங்கம் மருத்து மனைக்கு தன் சீருந்தில் தானே ஓட்டிக் கொண்டு அழைத்துச்சென்றவர் திருமதி இலட்சுமி நம்பியார், எங்கள் வீட்டின் எதிர்வீட்டு திரு. நம்பியாரின் துணைவியார் ஆவார். அவர்களுடைய மகன் இராமதாசு எங்கள் விளையாட்டுத் தோழராவார். என் பெற்றோர் இருவரும் அலுவலகத்திலிருந்தும் மருத்துவமனையிலிருந்தும் திரும்பிடாத நேரமது.

மருத்துவர் செல்வரங்கம் ‘இன்னும் ஒரு செங்கல் விழுந்திருந்தால் உனக்கு எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். திரு. நம்பியார் அந்நாளைய பெரிய விளம்பர நிறுவன நிருவாகியாவார். அவர் நடத்திய நிறுவனத்தின் பெயர், சாயா விளம்பர நிறுவனம் மற்றும் ஸ்ரீசக்ரா விளம்பர நிறுவனங்கள் ஆகும். நாங்கள் அண்ணா நகருக்கு வருவதற்கு முன்பே 1969-ஆம் ஆண்டிலேயே அவர்கள் குடியேறியவர்கள் ஆவார்கள். நாங்களெல்லாம் பெருமையாக அவர்கள் இல்லத்தை வெள்ளை மாளிகை என்றுதான் அப்போது சொல்லி மகிழ்வோம். இராமதாசு தன் பெற்றோர்களைவிட தன்னுடைய அம்மம்மா (ருக்மணியம்மா) மீது மிகுந்த மரியாதையும் பரிவும் கொண்டவராவார். அவ்வண்ணமே அவர்கள் மகள் சோபா என் அம்மாவிடம் தமிழ்ப் பாடங்களில் சந்தேகங்களைக் கேட்டுக் களைவார். எங்கள் வீட்டின் ஊஞ்சலிலும் மகிழ்ந்து ஆடிச் செல்வார். திரு. நம்பியார், எந்தையாரிடம் அவ்வப்போது நலம் பாராட்டும் நல்லறிஞர். சுவாமி சின்மயானந்தரின் நன்னெறிகளின் வழிநடப்பவர். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் காவல்துறைத் தலைவராயிருந்த திரு.இலட்சுமி நாராயணனிடம் நட்பு பூண்டவர். பல ஆண்டுகளாகக் காலை வேளைகளில் மேற்கொள்ளும் நீண்ட நடைப்பயிற்சிக்குப் பெயர் பெற்றவராவார்.

ஏழாம் வகுப்பு பயிலும்பொழுது, தேசிய மாணவர் படையின், கப்பற் பிரிவில் நான் இணைந்து, வாரத்தில் செவ்வாய், வியாழன் மாலை 6 மணி வரை நடைபெறும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்டேன். அணிவகுப்பு நடையில் குளறுபடி செய்ய நேர்ந்தால், பின் கழுத்துப் பக்கமாக வேகமாக அறைகின்ற ஆசிரியப் பெருமகனாகத் திரு.வேலாயுதம் அச்சமூட்டுவார். அவர் கரம்பட்டால் வலி பெருகும். பயிற்சி முடிந்த பிறகு, செவ்வாய்க் கிழமைகளில் வழங்கும் பன், எலுமிச்சைச்சாறு, வியாழக்கிழமைகளில் உப்புமா, வடை, சுடச்சுடத் தேநீர் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால், என் அண்ணன் கண்ணன் ஒருபோதும் உண்ணாமல் தவறாமல் தன்னுடைய உணவுப் பெட்டியில் எங்களுக்காகச் சிற்றுண்டியினை எடுத்து வருவது வாடிக்கையாகும். அதனாலோ என்னவோ, நான் தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன் என்றுகூட நினைப்பதுண்டு.

அண்ணன் என்னைவிட ஈராண்டு மூத்தவர். அவரும் தே.மா.படையில் கப்பற் பிரிவில் இருந்தபோது, 1982-83-ஆம் ஆண்டுகளில், தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டார். அதற்குரிய தீவிர உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டதை வியந்து பார்த்தேன். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள குசால்தாசு வள மாளிகையில் நடைபெறும் பயிற்சிகளைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண் தேவை. தில்லி அணிவகுப்பிற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில் என் அண்ணன், கிழக்குக் கப்பற் படைப்பிரிவில் (விசாகப்பட்டினம்) - ஐ.என்.எசு. விக்ராந்த் வானூர்தி தாங்கிப் போர்க் கப்பலிலும், ஆக்ராவிலுள்ள இந்திய விமானப்படை பாராசூட் வீரர் பயிற்சிப் பள்ளியிலும், தில்லியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பவியல் நிறுவனத்திலும், ஆவடியிலுள்ள டோனாகேலா முகாமிலும் பயிற்சிபெறும் வாய்ப்புப் பெற்றார். ஆனால், ஏதோ காரணத்தால் என் அண்ணனுக்குப் பதிலாக வேற்றொரு நபர் தில்லி அணிவகுப்பிற்குச் செல்ல நேர்ந்தது இன்றும் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. சில தருணங்களில், தகுதியை நிறுத்திப் பார்க்கும் எடைக்கல்லேகூட ஏமாற்றமளித்தது.

மாநிலக் கல்லூரியில் இரண்டாமாண்டு தமிழிலக்கியம் பயின்றபோது (1987) நண்பர் ஜோதி இராமலிங்கத்தின் வழிகாட்டுதலில் சென்னைத் தொலைக்காட்சியில் காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அன்பரசு தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசிய உரைப் பகுதி:
“எதிர்பார்ப்பின் அரசாகவும், எந்த நிலையிலும் அன்பானவராகவும் தலைசிறந்த பண்பாளராகத் திகழும் தகுதியுடைய தலைவர் அவர்களே! நாநலம் நாடும் நண்பர்களே! தொலைக்காட்சி அன்பர்களே! வணக்கம்.

எதிர்பார்ப்புடன் வாழ்வது என்பது ஒன்றை ஆய்ந்து அதில் தோய்ந்துபோய்த் தொடரும் வாழ்வாகும். எதுவரினும் ஏற்பது என்பது சாய்ந்த பார்வையாகும், ஏன் ஒரு தேய்ந்த வாழ்வுக்கு வழிவகுக்கும். இளைஞர்கள் வளம்பெறக் களம் அமைப்பது எதிர்பார்த்த வாழ்வாகும். அதுவே சரிபார்த்த நெடுங்கணக்காகும். வாழ்க்கை என்பது வானவில் என்றும், வண்ணக்கலவை என்பதெல்லாம், பாடல்களின் பார்வைகளாகும். வாழ்க்கையென்பது இப்படி நடந்தால் அப்படி வளரும் என்று சீர் தூக்கிப் பார்க்கும் கணிதமாகும். இந்தக் கணக்கை எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு வெற்றி ஏற்படும். எது வரினும் ஏற்பவர்களுக்குப் பிணக்கு வர வைக்கும். இன்னும் பார்த்தால், வாழ்க்கையென்பதை ஏணியைப் போலப் படிப்படியாக முன்னேறிச் செல்கின்றவர்கள், வெற்றிபெறவேண்டும் என்ற நம்பிக்கைதான், அதிர்ச்சி தராத நங்கூரமாகும். அசையாமல் நிலைநிறுத்தும்.

இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ இடமில்லை! நடப்பதை நாளை யாரறிவார்? என்பவையெல்லாம் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சி நடுங்கிய வேதாந்திகள் வடித்து வைத்த வேதனை விருத்தங்கள். எதையும் கணக்கிட்டுப் பார்த்து இது எப்படி நடக்கும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதுதான் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும், பெருமை சேர்க்கும். எனவே, எதிர்பார்ப்புடன் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையாகும். இரும்பு கூடத் தோற்கும் உறுதியான வாழ்க்கையாகும். எது வந்தாலும் பரவாயில்லை என்பது கண்மூடித்தனமான முடிவல்லவா? அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் என்பது திருக்குறள். இதற்குச் சான்றாக ஒன்று சொல்லலாம். மருத்துவமனை வாயிலில் சீருந்துகளும், பிற வண்டிகளும் மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கைப் பலகை தொங்கும். ஏனெனில் ஓடிவரும் சிறார்களுக்கும், நலிந்து போன நோயாளிகளும் வருவதற்கு வசதி பயக்க இவ்வழியாகும்.

அதைப் பார்க்காமல் வேகமாக வருவேன், நடந்து வருபவர்கள் பார்த்து வரட்டும் என்ற முரட்டு உணர்வுடையோர் செயற்படின் அது நோய் வாழ்வாகும். வருபவர்களுக்கே நலம் பயக்க மெதுவாக வருவது அறிவு வாழ்வு. முன்னே சொன்னது, எதுவரினும் ஏற்பேன் என்ற முரட்டு வாழ்வாகும். பின்னே வருவது முரட்டு வாழ்வை தெருட்டி வாழும் உன்னத வாழ்வாகும். எதையும் தாங்கலாம் என்பது ஒரு போக்கு, இதைத் தாங்கலாம், இதைத் தகர்க்கலாம் என்று வரையறுத்துக் கொள்வதுதான் வாலிபம். ஆக, எதுவரினும் ஏற்பது என்பது, எதையும் தாங்க முடியாமல் வாழ்வையும் ஓங்க முடியாமலும் வாழும் வாழ்வாகும். எதிர்பார்த்து விழித்துச் செயற்படும் வாழ்வில் சிலவற்றைத் தாங்கலாம், சில தாங்க முடியாது, ஒரு சில கருத்துகளைத் தாங்கலாம், ஒருசில கருத்துகளைத் தகர்க்கலாம் என்று வரையறுக்கும் உண்மை வாழ்வாகும். எதுவரினும் ஏற்பது, இப்படி வாழ வேண்டும் என்றில்லாமல் எப்படியும் வாழலாம் என்ற தப்பு நெறியாளர்களின் வாழ்வு ஒரு வலி வாழ்வாகும்.

இதை எப்படியும் அடைவேன், கொண்டதை வெல்வேன், கொள்கையில் வழுவேன் என்ற உயர் நெறியாளர்களின் வாழ்வு, வலதுபுறம் விழுந்தால்தான் உண்ணுகின்ற தன்மையுடைய வரிப்புலி வாழ்வாகும். ஆக, நண்பர்களே! எதிர்பார்ப்புடன் இந்தப் பெருமையுடன் நாம் நடத்தும் வரிப்புலி வாழ்வு மேன்மையானதா? எதுவரினும், எது கொடுப்பினும் யார் தடுப்பின்றி வாழும் எலி வாழ்வு உன்னதமானதா என்பதை நீங்கள் சீர்தூக்கி எண்ணிப் பார்ப்பீர்.  இந்த எண்ணம் பெற்றால் நாம் பகுத்தறிவில் புத்தறிவைக் காண்போம் என்பது மெய்யாகும்”.

---------

புறநானூற்றுப் பொற்றுகள்:-

புறநானூற்றின் முதற் பதிப்பு 1894 ஆம் ஆண்டு வெளிவந்தது. டாக்டர் உ.வே.சா. புறநானூற்றுப் பதிப்பு தமிழகத்துக்கு வழங்கிய பெருங்கொடையாகும்.

புறநானூறு தமிழகத்தின் வரலாறும் வாழ்வியலும் காட்டும் பெரும்புதையலாகும்.

கடந்த 125 ஆண்டுகளில் ஏறத்தாழ 30 பதிப்புக்களை தமிழுலகம் கண்டுள்ளது.

அண்மையில் வெளியிட்ட அறிஞர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா புறநானூற்றை ஏழு வகையாகப் பிரித்துள்ளார்.
Ø கடவுள் வாழ்த்து
Ø சிற்றூர்களுக்கள் சிறுநடை
Ø வேந்தர்களின் வரிசை
Ø போர் விளைந்த காரணம், போருக்குப்பின், போருக்குமுன், வீரர் மறைவும் புலவர் நிலையும்
Ø போருக்குப் பின் பெண்களின் நிலை
Ø அரசுக்கு அறிவுரை
Ø முதிர்ந்த சிந்தனைகள்

பாடல்கள் சொற்பிரிப்போடு வனப்புற எளிய விளக்கம் எழுதி அறிஞர் பாப்பையா வழங்கும் பெறற்கரிய பெரும்பரிசு.

முதற்பதிப்பை வெளியிட்ட தமிழ்க்கடல் டாக்டர் உ.வே.சா. புறநானூறு முழுவதையும் பிழிந்த பொருள் முடிவுகளாக பின்வரும் 39 முடிவுகளை எழுதியுள்ளார்.

“முன்னாளிடையே இந்நாடாண்ட, காவலர் பல்லோர் பாவலர் பல்லோர், மாசரிதத்தை ஆசற விளக்கிச், சொற்சுவை பொருட்சுவை துவன்றி எஞ்ஞான்றும், ஒப்புமையில்லாத் திப்பிய நடையுடைத், திறப் பாடமைந்த இப் புறப்பாட்டுக்கள்,
Ø தெய்வ வணக்கம் செய்யும் என்பவும்,
Ø அறத்தின் பகுதியை உறத்தெரிப்பனவும்,
Ø பாவ வழியை நீ வல் நன்றென்பவும்,
Ø இம்மைப் பயனொடு மறுமைப் பயனைச்,
Ø செம்மையின் வகுத்துத் தெரிவிப்பனவும்,
Ø அந்தணரியல்பைத் தந்துரைப்பனவும்,
Ø அரச நீதியை உரைசெய்வனவும்,
Ø வணிக இயல்பைத் துணிவுறுப்பனவும்,
Ø வேளாண் மாக்களின் தாளாண்மையினை, இயம்புவனவும்
Ø வயம்புரி போர்க்கு முந்தும் அரசரை சந்து செய்வனவும்,
Ø ஒற்றுமைப் பயனைச் சொற்றிடுவனவும்,
Ø வீரச் சிறப்பை ஆரத்தெரிப்பவும்,
Ø இல்லறமாகிய நல்லறம் உரைப்பவும்,
Ø துறவறம் அதனைத் திறவிதிற் தெரிப்பவும் ,
Ø மிடித்துன்பத்தை எடுத்துரைப்பனவும்,
Ø வண்மையும் தண்மையும் உண்மையும் திண்மையும் என்னுமிவற்றைப் பன்னுவனவும்,
Ø அளியையும் ஒளியையும் தெளிவுறுப்பனவும்,
Ø தம்மைப் புரந்தோர் தாம் மாய்ந்திடவே, புலவர்கள் புலம்பி அலமரல் தெறிப்பவும்,
Ø நட்பின் பயனை நன்கு இயம்புனவும்,
Ø கல்விப் பயனைக் கட்டுரைப்பனவும்,
Ø நீர்நிலை பெருக்கென நிகழ்த்துவனவும்,
Ø மானந் தன்னைத் தான் நன்குரைப்பவும்,
Ø இளமையும் யாக்கையும் வளமையும் நிலையா என்றே இசைத்து நன்று ஏய்ப்பனவும்,
Ø அருளுடைமையினை மருளறத் தெரிப்பவும்
Ø தரமறிந்து ஒழுக என்று உரனுற விதிப்பவும்,
Ø அவாவின் கேடே தவாவின்று
Ø இனியவை கூறல் நனிநலன் என்பவும் ,
Ø உழவின் பெருமையை அழகுற உரைப்பனவும்,
Ø நன்றி அறிக என்று இசைப்பனவும்,
Ø கொடுங்கோன்மையினை விடுங்கோல் என்பவும்,
Ø தவத்தின் பெருமையைத் தவப்பகர்வனவும்,
Ø மடியெனும் பிணியைக் கடிமின் என்பவும்,
Ø கொலையெனும் பகையைத் தொலைமின் என்பவும்,
Ø நல்லோர்ப் புணர்ந்து புல்லோர்த்தணந்து, தாழ்வொன்று இன்றி வாழ்மின் என்பவும்,
Ø சுற்றம் புரக்கும் நற்றிறம் உரைப்பவும்,
Ø கற்பின் திறத்தைக் கற்பிப்பனவும்
Ø மக்கட் பேற்றின் மாண்புரைப்பனவும்,
Ø கணவனை இழந்த மணமலி கூந்தல் தீப்பாய் செய்தி தெரிவிப்பனவும்,
Ø கைம்மை விரத வெம்மை விரிப்பவும்,

இன்னும் பற்பல பன்னுவனவுமாய்ச், செப்புநர் எவர்க்கும் ஏய்ப்பிடை வைப்பாய், அரும் பெறல் மரபில் பெரும்பயன் தருமே” என்று ஒருவாறு பொதுப்படத் தொகுத்துக்கூறுவதன்றி (39) இன்னபாடல் இத்தன்மையதென்று தனித்தனியே எடுத்துக்காட்டி இவற்றின் அருமை பெருமைகளைச் சீராட்டிப் பாராட்டுதற்கு ஒரு சிறிதும் வல்லேன் அல்லேன்.
Ø போர் பற்றியன
Ø போரால் விளையும் புகழ் பற்றியன
Ø வறுமை
Ø வன்மை
Ø நட்பின் பயன்
Ø கல்வியின் சிறப்பு
Ø மானஉணர்வின் இன்றியமையாமை
Ø பழிக்கு அஞ்சுதல்
Ø இல்லறம்
Ø துறவறம்
Ø மக்கட்பேறு
Ø உழவின் உயர்வு
Ø கைம்மைக் கொடுமை
Ø கற்பின் திறம்
Ø நிலையாமை - ஆகியன புறத்தில் அடங்கும்.

கரந்தை முதல் வெட்சி வரை 11 திணைகளும் அரசியல் வாகை முதல் வேத்தியல் வரை 60 க்கு மேற்பட்ட துறைகளில் பாடல்கள் உள்ளன.

ஆற்றுப்படை, தூது, பரணி, பள்ளிஎழுச்சி, காஞ்சி போன்ற இலக்கிய வகைகள் மட்டுமல்லாமல் பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் என அனைத்தும் புறநானூற்றுக்கு கடன்பட்டிருப்பது கண்கூடு.

டாக்டர் ஜி.யூ.போப் 71 புறப்பாடல்களையும் 59 புறப்பொருள் வெண்பாமாலை பாடல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு "dr.n.arul[at]gmail.com
------

தேமொழி

unread,
Feb 28, 2021, 10:51:36 PM2/28/21
to மின்தமிழ்

46  -  “அகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த முள்தாள் தாமரை!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

சென்னைத் தொலைக்காட்சியில் நான் பேசிய பட்டிமன்ற உரையைக் கேட்டு எந்தையாருடன் நடைபயிலும் நண்பர் கவிஞர் சுந்தரபாண்டியன் (21.04.1988) எழுதித் தந்த கவிதை என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.

“நாவருள் பெற்றுள்ள நம்மருள்
நயமுற நல்கினார் நற்பொருள்
பாவலர் ஔவையின் வழியிலே
பகர்ந்திட்டார் செந்தமிழ் மொழியிலே
ஆவலைத் தூண்டிடும்விதத்திலே
ஆற்றிடும் செந்தமிழ்ப் பதத்திலே
நாவலராகவே விளங்குவார்
நற்றமிழ் இலக்கியம் வழங்குவார்
காவலாம் தமிழுக்குத் திருக்குறள்
கற்றவர் கவிதையின் உட்பொருள்
யாவுமே அறிந்திட்டார் உயர்வார் அவர்
நாவிலே நாவன்மை பெருகவே”

மாநிலக் கல்லூரியில் 1987-ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கிய நண்பர்களான கீர்த்திவாசன், சிவகுமார் வாயிலாக லியோ கிளப், பேசின் பிரிட்ஜ் என்ற அமைப்பில் நானும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன்.  குருதிக்கொடை, கண்தானம், நல்வாழ்வுக் களங்களை நடத்தும்பொழுது ஒருங்கிணைப்பையும், அவ்வப்போது, அக்கூட்டங்களில் நிகழ்வுரையாளனாகப் பணியாற்ற நான் பழகினேன். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அந்நாளைய உட்லெண்சு உணவகத்தில்தான் எங்கள் வாரக் கூட்டங்கள் நடைபெறும்.

ஆசிரியர் தினக் கூட்டத்தை மிகச் சிறப்பாக மயிலைத் திருக்கோயிலுக்கு எதிரிலுள்ள ஜே.டி. பன்னாலால் அரங்கத்தில் நடத்தும் வழக்கமுண்டு. எந்தையாரின் நண்பர்களை இக்கூட்டத்திற்கு அழைத்துத் தலைமைதாங்கச் சொல்லிப் பள்ளி ஆசிரியர்களைப் பெருமை படுத்திச் சிறந்த சிற்றுணவை வழங்குவது என் வாடிக்கையாகும். நான் பேசின் பிரிட்ஜ் லியோ கிளப் செயலாளராக இருந்தபொழுது என்னுடைய நண்பர் டெமிட்ரியசு ஐசக்கு தலைவராக இருந்தார். டெமிட்ரியசும் நானும் ஆறாம் வகுப்பு முதல் சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளி வகுப்புத் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் எதைச் செய்தாலும், தட்டிக் கொடுத்துத் தன் பணத்தையே வழங்கி சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்.

லியோ கூட்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களைக் காட்டிலும் என்னுடைய நண்பர்கள் பலரை அழைத்து அரங்கத்தை நிரம்பச் செய்து தலைமை தாங்கும் விருந்தினரைப் பெருமைப் படுத்துவேன். என்னுடைய அமைப்பு மட்டுமின்றி பல லியோ கிளப் உறுப்பினர்களையும் பாங்கறிந்து அன்பு பாராட்டினேன். வழிந்த அன்பில் பல விழுமிய நண்பர்களைப் பெற்றேன். லியோக்களை தமிழில் அரிமாக் குருளை என்றுதான் நான் சொல்லித்தான் விளிப்பேன். அரிமாக் குருளையர்களான விஜயானந்த், அண்ணாமலை என்கிற வெங்கட், சிவகுமார், எம்.ஆர். சிவகுமார், ‘கிளியா’ சுரேஷ், கிஷோர் சாப்பிரயா, சீமா கவுர், சித்ரா, வித்யா சடகோபன், இரவிக்குமார், கணேஷ், ஏ.கே. ஸ்ரீராம், சாய்சேஷன், ரத்னமாலா, சுந்தர், ரஜினிகாந்த், நெல்சன், இளங்கோ, சாரதா, முகமது அலி போன்றோர் என் இனிய நண்பர்களாக மாறினார்கள்.

என் வாழ்வில் முதன்முறையாக இத்தாலிய பீட்சா உணவினை உண்ண எனக்கு அறிமுகம் செய்தவர் லியோ விஜயானந்த் ஆவார். எத்திராசு மகளிர் கல்லூரியின் எதிரிலுள்ள ‘ஜிஃப்பி’ உணவகத்தில் வாங்கித் தந்தார். விஜயானந்த் மற்றும் அண்ணாமலை நன்முயற்சியினால், ‘லியோ லிங்க்’ என்கின்ற ஆங்கில ஆறு பக்க செய்தி ஏட்டின் ஆசிரியர் குழுவில் என்னையும் இணைத்து பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் நான் எழுதுவதற்கு வகை செய்தனர். இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களாக மாற்றும் முயற்சியாக அரிமாக் கழகம், அரிமாக் குருளையர்கள் (Leo) கழகத்தை உருவாக்கினார்கள்.

1957-இல் இங்கிலாந்தில் உள்ள Glenside அரிமாக் கழகம் முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. LEO என்ற மூன்றெழுத்துகளின் பொருள் Leadership, Experience, Opportunity என்பதாகும். இன்றைக்கு உலகிலுள்ள 104 நாடுகளில் 4300 லியோ கிளப்புக்கு மேல் உள்ளது என்பது வரலாற்றுச் சாதனையாகும். தமிழகத்தில் முதன்முறையாக Leo Club of Meenambakkam தோற்றுவிக்கப்பட்டது.

அவ்வண்ணமே அரிமாக்கள் பலர் நற்றுணையாய் பல நல்ல திட்டங்களை வெற்றி பெறுவதற்கு வழிகாட்டிகளாக சீன்லேக் பவுடர் உரிமையாளர் அரிமா ஜான் பீட்டர், இராமச்சந்திர ஓரா, புஷ்பராஜன், அருண், நடராஜன், பல்பீர்சிங் லோட்டா மிளிர்ந்தார்கள். அரிமாக்களான பட்டயக் கணக்கர் என்.சி. கிருஷ்ணனின் ஆங்கில உரைகள் அறிவார்ந்த உரைகளாக அமைந்தன. அவர் உரையைக் கேட்பதற்கு நான் பல கூட்டங்கள் சென்றிருக்கிறேன். சென்னைப் பங்குச் சந்தையின் தலைவராக திரு. வி.கே. பத்மநாபன் அரிமாவாக இருந்து பல திட்டங்களில் வெற்றி பெறுவதற்கு எனக்கு வழிகாட்டியிருக்கிறார். சென்னை அருங்காட்சி அரங்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் எங்களுடைய அமைப்புத்தான் முதற்பரிசு பெற்றது. அச்சிறப்புப் பரிசினை நாங்கள் பெறுவதைக் கண்டு பலர் மருண்டனர், முகம் இருண்டனர். விருதுபெறும் நிகழ்வில் அமளிப்பூசல் ஏற்பட்டு விருதினை எங்களுக்கு வழங்காமலேயே கூட்டம் நிறைவுற்றது. சில நாட்களிலேயே எங்கள் பேசின்பிரிட்ஜ் லியோ கிளப்பினை ஒடுக்குவதற்கு அரிமாக்களிடம் அறிவுறுத்தி நிலையாக மூடப்பட்டது.

சில வாரங்கள் கழித்து என் இனிய நண்பர் லியோ இராதாகிருஷ்ணன், தான் தலைமை. தாங்கிய லியோ கிளப், போரூரில் என்னை இணைத்துக் கொண்டு பல அறப்பணிகளில் என்னை ஈடுபடுத்தினார். காயிலே மில்லத்து அரசு மகளிர் கல்லூரியில் குருதிக்கொடை நிகழ்வினை மிகப் பெரிய அளவில் நான் நடத்திக்காட்டி வெற்றிபெற்றேன். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் ஒவ்வொரு முறையும் அருளுக்காகத்தான் இந்தக் குருதிக்கொடை நடைபெறும் என்றே வாயாரப் பாராட்டினார்கள்.  நினைவில் வாழும் லியோ நண்பர் அக்சய சர்மாவும் நானும் கலைஞானி கமலஹாசனை அவர் பிறந்த நாளன்று அழைத்து வந்து குருதிக்கொடை நிகழ்வுக்காக அழைத்துவர முனைந்தோம்.

கல்லூரி முதல்வருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அதற்காக ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு முற்பகல் சென்றோம். பெருங்கூட்டமாக இருந்தது. அக்சய சர்மாவை ஒரு இந்திப்படத் தயாரிப்பாளர் என்று சொல்லி முன்னே அழைத்துச் சென்று விட்டேன். அவரைப் பார்த்தவுடன் திருமதி சரிகா ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்கள். இவரை இந்தியிலேயே மறுமொழி சொல்லி ‘கமலஹாசனைத் தலைமை தாங்க வேண்டினார். உடனே அவர்கள் பேசி ஒப்புதல் வாங்கித் தந்தார்கள். கல்லூரி அல்லோலகல்லோலப்பட்டது. கலைஞானியின் வருகை கல்லூரிக்குப் பெருமையளித்தது. அரிமாக்களும், அரிமாக் குருளையர்களும் வியந்து எங்களைப் பாராட்டினார்கள்.

காயிதே மில்லத் கல்லூரியின் குருதிக்கொடையினை வெற்றிகரமாக மருத்துவக் குழுவைத் தலைமைதாங்கி நடத்தித் தந்தது குழந்தை நல மருத்துவமனை / செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விமலா இராமலிங்கம் (கவித்திலகம் அன்னையார் சௌந்திரா கைலாசத்தின் மூத்த மகள்) ஆவார். அவர்களும் மருத்துவர் கலையரசியும் மிகப் பொறுப்பாகவும், கனிவாகவும் குருதிக்கொடை நிகழ்வுகளை மிகச் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு நல்கினர். லியோ கிளப் சார்பாக ஆரம்பாக்கம், கொடைக்கானல், உதகமண்டலம் போன்ற ஊர்களுக்கெல்லாம் சென்று பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கொடைக்கானலில் ஒருமுறை என்னுடைய இருமொழி உரையினைக் கேட்டு நெறியாளராக வருகைபுரிந்த ஜெய்சீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. புருசோத்தமன் என்னை இருமொழிச் சொற்கொண்டல் என்று பாராட்டினார். லியோ இராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, இறுக்கமான ஆடைகளை அணிந்து மிடுக்காக நான் காட்சியளித்ததை என் பெற்றோர்கள் பார்த்துப் பூரிப்படைந்தனர். லியோ இராதாகிருஷ்ணனின் அரிய முயற்சியினால் எழும்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சியொன்றை நடத்தினோம். அதற்காக கனரா வங்கியின் தலைமை மேலாளர் அரிமா இராமகிருஷ்ணன் அவர்கள் வங்கி வாயிலாக நன்கொடை வழங்கி கண்காட்சியினைச் சிறப்பாக நடத்த வழிசெய்தார்.

தேனாம்பேட்டையிலுள்ள இராதாகிருஷ்ணனுடைய இல்லத்தில் பல வேளைகளில் அவர் தாயார் அன்னம் பாலித்தார். நன்கொடையினை வாங்குவதற்கு அப்பொழுது எனக்குப் பெருந்துணையாக சட்டக் கல்லூரி மாணவியான சுமதி (இப்போது நாடறிந்த வழக்கறிஞர் / உரையாளர்) பெரிதும் உதவினார். நேரம் பாராமல் பல நிறுவனங்களுக்கு எங்களுடன் வந்து நிதி திரட்ட உதவினார். தோழி சுமதியின் வாயிலாக அருமையான நண்பர்களாக, கவிஞர் சதீசும் (இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில வழக்கறிஞர்), சர்வேசனும் மலர்ந்தனர். பல தருணங்களில் அண்ணாநகரிலுள்ள சர்வேசனின் இல்லத்தில் உரிமையாகச் சென்று அவரை உணவு சமைக்கச் சொல்லி உண்டு மகிழ்வேன். சர்வேசன் (இப்போது வேதாந்தா குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி) அடிக்கடி என்னிடம் சொல்வது, ‘சுமதியின் அக்கா தரணியால் தான் எனக்கு உங்களையெல்லாம் தெரியும்’.

அவ்வண்ணமே கவிஞர் சதீசின் இல்லத்தில் அன்னையார் வசந்தா அக்கார அடிசில் விருந்திட்டு தானும், உண்போரையும் ஒருசேர மகிழ்விக்கும் உருக்கத்தை நான் சொற்களால் முழுவதுமாகச் சொல்ல முடியாது. அன்னை வசந்தா (கவிஞர் பாரதி சுராஜின் தங்கை) சைதையிலுள்ள கணபதி தேசிய நடுநிலைப்பள்ளியின் (அரசு உதவிபெறும் பள்ளி) தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த பாடகரும் ஆவார். அவரின் தமிழ்த்தாய் வாழ்த்து, பாரதி பாடல்கள் பலரை ஈர்த்தது. அவர்களை அரிமா அகமது செரிப்பிடம் அறிமுகம் செய்தேன். பிறகு, அவர்கள் பெரியமேடு அரிமாக்கழகத்தில் அரிமா வசந்தாவாக மிளிர்ந்தார்.

அறிவியல் கண்காட்சியாக மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டு, இரண்டாவது நாளன்று யார் என்றே தெரியாத வண்ணம், வன்முறையாளர்கள் கண்காட்சிக்குள் உட்புகுந்து, உட்பூசலிட்டு இராதாகிருஷ்ணனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். வேறு சில நண்பர்கள் சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டனர். தோழி சுமதி இரவென்றும் பாராமல் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் தானாக முன்சென்று உதவுவதற்கு முற்பட்டார். நான் இச்செயல்களில் எல்லாம் பின்வாங்கி விட்டேன். வன்முறை, சச்சரவு, தகராறு இவைகளையெல்லாம் தவிர்த்து விழிப்பாக விலகி நிற்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டேன். சில நாட்களிலேயே லியோ கிளப், போரூரையும் நிறுத்த வேண்டும் என்று அரிமாக்கள் முடிவெடுத்தனர். அன்று முதல் அரிமாக் குருளையர் இயக்கத்திலிருந்து யானும் விலகி நின்றேன்.

தலைமை, அனுபவம், வாய்ப்பு இம்மூன்றையும் தெரிந்து கொள்வதற்கு ஒரு பயிற்சிக் களமாக இவ்வமைப்பு அமைந்தது.

-----

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:
தொகையென்றால், எட்டுத்தொகையைக் குறித்தது போலவே, பாட்டென்றால், பத்துப்பாட்டையே குறிக்கும்.
எட்டுத்தொகையைக் குறிக்கும் நூல்களைப் பட்டியலிடும் வெண்பாவைப் போலவே, பத்துப்பாட்டைப் பட்டியலிடும் வெண்பாவுமுண்டு.

முன்னது இன்னிசை வெண்பா; பின்னது நேரிசை வெண்பா. அது வருமாறு:
‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து’

1. முருகு – திருமுருகாற்றுப்படை-317 அடிகள்
2. பொருநாறு – பொருநராற்றுப்படை-248 அடிகள்
3. பாணிரண்டு
     அ.சிறுபாணாற்றுப்படை – 269 அடிகள்
     ஆ.பெரும்பாணாற்றுப்படை – 500 அடிகள்
5. முல்லை – முல்லைப்பாட்டு-103 அடிகள்
6. மதுரைக்காஞ்சி – 782 அடிகள்
7. நெடுநல்வாடை – 188அடிகள்
8. குறிஞ்சிப்பாட்டு – 261 அடிகள்
9. பட்டினப்பாலை – 301 அடிகள்
10. கடாம்-மலைபடுகடாம் – 583 அடிகள்

பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை அகப்பொருள் குறித்தன. திருமுருகாற்றுப்படை, பொருணராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, மலைபடுகடாம் போன்றவை புறப்பொருள் குறித்தன. அவற்றுள் ஐந்து ஆற்றுப்படை நூல்களும் தமிழக நில வரைபடத்தை விரிவாகக் குறிக்கின்றன.

நால்வகை ஆசிரியப் பாக்களில், பத்துப்பாட்டுக்களுமே நேரிசை ஆசிரியப் பாக்கள். தொகைநூல்களின் பாடல்களில் எண்களைக் கொடுத்தமை போல், இவற்றுக்கு எண்களைக் கொடுக்கவியலாமை. காரணம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நெடிய பாட்டுக்களாக அமைந்தன. எந்தப் பாடலையுமே முழுமையாகவும் காணவியலாது. எனவே, பகுதிப் பாடலாகவே காணவியலும். பத்துப்பாட்டுகளில், முல்லைப்பாட்டே அடிச்சிறுமை உடையது; மதுரைக் காஞ்சியே அடிப்பெருமை உடையது.

1.திருமுருகாற்றுப்படை

செவ்வேளை-முருகவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. இவர், நக்கீரர், நக்கீர தேவ நாயனார், மதுரை நக்கீரர் என்றெல்லாம் அழைக்கப் பெறுபவர். இந்நூல், பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப் போலாகும். இதைப் ‘புலவராற்றுப்படை’ எனவும் வழங்குவர். ஆற்றுப்படை, பொதுவாகப் பொருள் பெறுவோர் பெயரால் அமையும். இதுவோ, பொருள்தருவோன் பெயரால் அமைந்தது. வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடுபெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது என்று பொருள் கூறுவார் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.

பொதுவாக ஆற்றுப்படை நூலில் ஆற்றுப்படுத்தப் படுகிறவர் பெயரோடு சேர்த்து வழங்கப்பெறும். ஆனால், திருமுருகாற்றுப்படையில் மட்டும் யாரிடம் ஆற்றுப்படுத்த்தப்பட்டுள்ளதோ, அவருடைய பெயருடன் சேர்த்து வழங்கப்பெற்றுள்ளது.  திருப்பரங்குன்றம், திருச்சீரலவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர்சோலை (கள்ளழகர் கோயில் மலைமேல் உள்ளது) என்னும் ஆறுபடை வீடுகளைப் பற்றிய நெறிமுறைகளைக் கூறி, முருகன் அருள் பெறுதற்குரிய வழியில் செலுத்துவதாகப் பாடப்பெற்றுள்ளது.  இப்பாடலைப் பூசையாகக் கொண்டு புகல் என்பர். இன்றும் வழிபாட்டு நூலாக இப்பாபாடல் விளங்குகிறது.

அ.திருப்பரங்குன்றம்
‘திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி, வைகறை
கள்கமழ் நெய்த லூதி, எல்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கண மொலிக்கும்
குன்றமர்ந் துறைதலு முரியன்……………’

செல்வம் கொழித்துக் கோலோச்சும் குற்றமிலா நகரத்தில், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் நிறைந்துள்ள மதுரை மாநகரின் மேலைத்திசையில், நீர்வளம் மிகுந்த சேற்றுவயலில், முள்தாளையுடைய தாமரையானது விளங்குகிறது.  விடியலில் தேனொழுகும் வெள்ளாம்பல் மலரானது இதழ்விரித்து ஒளிவீசக் கண்போல் மலர்ந்துள்ள அழகிய நீர்ப்பூவால் வண்டுக் கூட்டங்கள் ஆரவாரம் செய்கின்ற திருப்பரங்குன்றத்துத் திருமலையில் இனிதமர்ந்து, வாழ்தலுக்குரியவன் செவ்வேளாகிய முருகவேள்.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு-dr.n.arul[at]gmail.com
---

தேமொழி

unread,
Mar 6, 2021, 11:32:01 PM3/6/21
to மின்தமிழ்
47  -  “தமிழ்ப்பேச்சும் - தடந்தோள் வீச்சும்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியம் பயிலும்பொழுது பேராசிரியப் பெருந்தகையரான முனைவர் மறைமலையும், கவிஞர் மேத்தாவும் வகுப்பில் எங்களிடம் “தமிழிலக்கியம் பயின்றால், தமிழாசிரியராகத்தான் வரமுடியும் என்ற நிலையெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது. நீங்கள் முனைந்தால் ஊடகத் துறையிலோ, வேறு பிரிவிலோ நுழைவுத்தேர்வு எழுதி ஆட்சித்துறையிலோ, திரைப்படத் துறையிலோ பணியாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.

என்னை அரிமாக் குருளையர் இயக்கத்தில் இணைத்த நண்பர் சிவகுமாரை நான் என்றும் மறவேன்.அவருடைய அறிமுகத்தால் எனக்குப் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து, அனுபவங்களில் தோய்ந்து, தலைமையை நோக்கி விரைந்து முன்னேறுவதற்கு அடித்தளம் கிடைக்கப் பெற்றது.  எந்தையார், சிவகுமாரை அப்பொழுதே பெருமிதமாக நீ ஒரு ‘Lateral Thinker’ என்று விளித்து மகிழ்வார். நுணுக்கமாகப் பல கருத்துகளைச் சொல்லும் ஆற்றல் வாய்ந்த சிவகுமார் ஆங்கிலப் பேராசிரியராக மாறுவார் என்று தான் நான் நினைத்தேன். பாதை மாறி, வழக்கறிஞராக இப்பொழுது மிளிர்கிறார். அரிமாக் குருளையர் இயக்கத்தால் தான் செல்வி வித்யா சடகோபனின் நட்பினைப் பெற்று ‘கிளியா’ விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பெருவாய்ப்புக் கிடைக்கப்பெற்றது. அரிமாக் குருளையர்களாக நாங்கள் அப்பொழுது அதிகம் பெருமை தெரியாத ஏலகிரியில் தலைமைப்பண்புப் பயிற்சி செய்யகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. அங்குத்தான் பெரும் திரைத்தயாரிப்பாளர், கவிஞர் பஞ்சு அருணாசலத்தின் மகனார் சுப்பு பஞ்சுவை அறிந்து பழகினேன். அதேபோல் சித்ரா திரையரங்க உரிமையாளரின் திருமகன் விஜயானந்த் நட்பும் கிடைத்தது. விடியற்காலைகளில் மெரினா கடற்கரையில் அவர் நீந்தும் ஆற்றல் பெற்றவர்.

அதேபோல், பாரிமுனையில் ஆண்டர்சன் தெருவிலுள்ள பெரும் காகித நிறுவனத்தின் திரு. அண்ணாமலையின் மகனார், வெங்கட் அண்ணாமலையின் அறிமுகமும் கிடைக்கப் பெற்றது. வெங்கட்டின் ஆங்கில உரைகளைக் கேட்பது இனிமையாக இருக்கும். அவரை லியோ கிளப்பின் டெமாஸ்தினஸ் என்று பாராட்டுவார்கள். அவரும், அவர் தங்கை சிவகாமியும் என்னுடன் நீண்ட நேரம் பேசி மகிழ்வார்கள். அவர்களின் இல்லத்தின் தவசிப்பிள்ளை சமைக்கும் உணவு தனிச்சுவை வாய்ந்தது.

வழக்கறிஞர் மணிநாராயணன் மைந்தர் அரிமாக் குருளை சிதம்பர குமாரின் நட்பு ஏற்பட்டு, வளர்நிலைகள் பல எய்தியுள்ளது. அரிமாக் குருளையர்களான தேவன் தேவே, ஜினேஷ் ஷா, இராஜீவ் ஓரா, பிரக்னேஷ், பாலகுமார் போன்றோரும் நண்பர்களானார்கள். அந்நாட்களில், கலைஞானி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு நல்கியதைக் கவிஞர் சதீஷ் இன்றும் சொல்லி மகிழ்வார். கவியரசு கண்ணதாசன் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி, கவிஞரின் நினைவாக ‘மியூசிக் அகாதமி’ அரங்கத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இன்னிசை நிகழ்வினை ஒருங்கு செய்ய நண்பர் ஜோதி இராமலிங்கம் முயன்றார். அம்முயற்சி வெற்றிபெறச் செய்வதற்கு நன்கொடைகளை வாங்கித் தருவதற்கு வழக்கறிஞர் கண்ணனும், வழக்கறிஞர் சுமதியும் நானும் முனைந்தோம். வழக்கறிஞர் சுமதியின் நன்முயற்சியினால் பல நிறுவனங்களிலிருந்து நன்கொடைகள் பெற்று, விழா வெற்றிகரமாக நடைபெற்றது. பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், பேச்சுப் போட்டிகள் என்ற பல நிகழ்வுகளுக்கு வழக்கறிஞர் சுமதி, கவிஞர் சதீஷையும், சர்வேசன், அபுபக்கர், பா.ரா.சண்முகம் போன்றோரையும் என்னையும் அழைத்துச் செல்வார்கள்.

காயிதே மில்லத்து மகளிர் அரசுக் கல்லூரியின் குருதிக்கொடை நிகழ்வின்போது இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்று வந்த மாணவிதான் இன்று புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர் ஜெய்ஸ்ரீ சுந்தர் ஆவார். அவரை அப்போது நான் கல்லூரியில் சந்தித்தபோது ஒதுங்கி அஞ்சும் இயல்பு கொண்டவராகத்தான் காட்சியளித்தார். அவரைப் பார்த்தவுடன் அவருடைய பெற்றோர்கள் திரு கண்ணன், திருமதி மணிமேகலை கண்ணன் அவரின் பாட்டனார் முத்தமிழ்க் காவலர்தான் நினைவில் சுழன்றார்கள்.

முத்தமிழ்க் காவலர் (10.11.1899-19.12.1994) எங்கள் குடும்பத்துக்குப் பெரிதும் வேண்டியவர். தமக்கையார் மணிமேகலையும், மாமா கண்ணனும் இன்றுவரை அந்த பாசமழையைப் பொழிந்து வருகின்றனர். கல்லூரியில் வகுப்புக்குத் திடுமென்று வருகை தரும் முதல்வர் போல முத்தமிழ்க் காவலர் எங்கள் வீட்டுக்கு வருவார். ‘டாக்டர் மருமகளே’ என்று என் அன்னையாரைப் பரிவுடன் அழைப்பார். தமிழ், கணக்கு, கல்வி, ஆங்கிலம், உடற்பயிற்சி, சிக்கனம், உடையொழுங்கு என்றெல்லாம் எங்களுக்கு வேடிக்கையாக அறிவுறுத்துவார். அடிக்கடி என் அம்மா சொல்வது: ‘முத்தமிழ்காவலர்தான் என் தாய் தந்தை திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். அவர் சொல்லிய நல்லுரை, “அரவணைத்து நட. அதிலே பயனில்லையென்றால் அடக்கிப் பார். அதிலும் பயனில்லையென்றால் அடங்கிப் போ என்பது நகைச்சுவைக்காக நான் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கையை வடிவாக்க வேண்டும்” என்று கூறினாராம். 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய முதற்கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிய தலையாய தமிழ்ப் பெருமகனார் முத்தமிழ்க் காவலர் ஆவார். அதில் அவர் சொல்வது, “பாடலுக்காக ஒருமுறை படித்தேன், பாட்டிலே உள்ள பகுத்தறிவு மணத்திற்காக மீண்டும் ஒருமுறை படித்தேன், கவிதைக்காக மறுமுறை படித்தேன், பிறகு, கருத்துக்காக பலமுறை படித்தேன். ஒவ்வொரு முறையும் படித்தேனாகவே பாடல்களைச் சுவைத்தேன்.”

நாங்கள் அவருடைய திருச்சி இல்லத்திற்கு அவ்வப்போது சென்று வருவோம். அவர் வளர்த்த நான்கு கால் நாயகர்கள் எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாட வைக்கும்.  காலை 11 மணிக்கு இரு காக்கைகள் வரும். அவற்றிற்கு உணவிடுவார். இது காக்கைக்குன்றம் என்பார். அவரிடம் ஒருமுறை ‘இது என்ன கைப்பை?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இதில் 40 பொருள்கள் இருக்கின்றன. மாற்றுடை, போர்வை, துண்டு, கணக்கேடு, நாட்குறிப்பு, பேனா, பென்சில், விபூதி, சந்தனம், குங்குமம், எழுதாத அஞ்சலட்டைகள், ரெவின்யூ அஞ்சல் தலை, திருக்குறள், ஏலக்காய், சிறு கத்தி, எண்ணெய், சிறு பணப்பை, வெள்ளைத் தாள், பதிவு செய்த டிக்கட், மூக்குக்கண்ணாடி (மாற்று) என்று எடுத்து வைத்து எண்ணச் சொன்னார். பெட்டியை மூடிக் காட்டி இது என் தலையணை’ என்றார்.  எதிலும் ஒழுங்கு, நேர்மை, நாணயம், தெளிவு, துணிவு கொண்ட வேந்தராகச் சிவந்த மேனி, செம்மாந்த நடையோடு கைவீசி அவர் நடக்கும் அழகே தனி!

பேரறிஞர் அண்ணா ஒருமுறை ‘சிலருடைய நகைச்சுவைகள் தடுக்கி விழுந்து அதைப் பார்த்துச் சிரிக்க வைக்கும். மற்ற சிலரின் நகைச்சுவை ஒருவரைக் குப்புறத் தள்ளிவிட்டு விழுந்ததைப் பார்த்துக் கைதட்டிச் சிரிக்கின்ற நகைச்சுவையாக இருக்கும். ஆனால், முத்தமிழ்க் காவலருடைய நகைச்சுவை மட்டும் நினைத்து நினைத்துப் பின்பற்றக்கூடிய அறிவுரை பொதிந்த நகைச்சுவையாக இருக்கும்’. என்று குறிப்பிட்டார். எங்கள் மூவரிடமும் ‘எண்ணூறு பெரிதா, தொண்ணூறு’ பெரிதா என்று கேட்பார். அதற்கு ‘தொண்ணூறு பெரிது’ என்று நான் சொல்லியதைத் திருத்திக் காட்டினார். தொழிலாளர் என்ற அழகான சொல்லில் ழ, ல, ள மூன்றும் உள்ளது என்றும், இசையில் குழல், முழவு, யாழ் என்ற தமிழின் சிறப்பைப் பாடமாகவே எனக்கு நடத்திக் காட்டினார். ஆங்கிலத்தில் A, B, C, D இல்லாத 100 சொற்களை நொடியில் சொல் என்பார். One முதல் Ninety Nine வரை சொல்லச் சொல்லி எதிலும் ஏ, பி, சி, டி இல்லை என்பார். 

அவர் 11.11.1958-இல் தமிழகப் புலவர் குழுவினை அமைத்தார். அதன் தலைவராக எந்தையார் இப்போது அணி செய்கிறார். மாமா கண்ணன் இந்தி மொழியில் பெரும்புலமை படைத்தவர். அவர் செய்கின்ற சப்பாத்திகளைப் பூரிப்பாக உண்போம். கோதுமை மாவைப் பிசைந்து குறைந்தது 8 வகை பூரி, சப்பாத்தி செய்து, தானே சுட்டு அளிப்பார். மணிமேகலை அக்கா சுழலும் பம்பரமாகத் தமிழ்ப்பணிகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர். அக்காவிற்கு அண்மையில் தமிழக அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விருது வழங்கிப் பெருமையளித்தது. அவர்களின் திருமகன் ஸ்ரீகாந்த் கவிஞராகவும், தொழில் அதிபராகவும், தேசியக் கட்சி பாஜக-வில் பொறுப்பு வாய்ந்த ஒருங்கிணைப்பாளராகவும் மிளிர்கிறார்.

ஒருமுறை என்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதற்குக் குரல்பதிவு செய்ய அழைத்தார். என் பதிவைக் கேட்ட பிறகு, ‘உன் குரல் செய்தி வாசிக்கும் குரல் அல்ல. மேடையில் முழங்கும் குரல் இது. இதை விடுத்து உன் மனைவி, என் தங்கை வாணியைக் குரல் பதிவுக்கு அழைத்து வா. இன்னிசை பாடும் குரல் உன் மனைவியுடையது. பொருத்தமாய் அமையும்’ என்றார். ஆனால், வாணிக்கு அதில் விருப்பமில்லை. தங்கை வெற்றிச் செல்வி தனித்தமிழ்ப் பற்றாளராகவும், திருச்சி மேற்குத் தொகுதியில், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் ‘மக்கள் பாதை’ பேரியக்கம் சார்பாகப் போட்டியிடத் துணிந்திருக்கிறார்.

தமிழ்ப்பண்பாட்டின் முழுவடிவமாகவும் அன்பின் நிறைகுடமாகவும் பெருமிதத்தின் உறைவிடமாகவும் முத்தமிழ்க் காவலர் குடும்பத்தினை எண்ணிப் பாராட்டுகிறேன்.

-----

திருமுருகாற்றுப்படை...

திருமுருகாற்றுப்படை மூலபாடம் மட்டும் 1834-இல் சென்னப்பட்டணம் விவேகக் கல்விச்சாலைத் தமிழ்த்தலைமைப் புலவராக இருந்த சரவணப்பெருமாலையரால் கல்வி விளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்பதிப்பு நச்சினார்க்கினியர் உரையை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப்பட்ட மூலபாடப் பதிப்பாகும்.  
பிறகு 1839-இல் பதவுரையுடன் கூடிய பதிப்பாக நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி இலக்குமணன் பதிப்பு வெளிவந்தது.
ஆறுமுக நாவலர் 1853-இல் திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி புத்துரையொன்றை வெளியிட்டார். இதன் பத்தாம் பதிப்பு 1930-யிலும் 16-ஆம் பதிப்பு 1947-லும் வெளிவந்தது. 20-ஆம் பதிப்பு 2011 மார்ச்சில் கனடாவிலுள்ள வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் மூலம் அச்சிடப்பட்டது.
1881-இல் திருமுருகாற்றுப்படையின் அடுத்த பதிப்பான சதாசிவம் பிள்ளையால் ஆறுமுக நாவலர் உரையுடன் சென்னப்பட்டணத்தில் வித்யானுபாலன அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
1917-இல் பொன்னம்பலப்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது.
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் பத்துப்பாட்டின் மூலம் நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றோடு 1889-இல் முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
பத்துப் பாட்டை 1946-இல் அறிஞர் J.V. செல்லையா ஆங்கிலத்தில் வெளியிட்டார். இது அரிய மொழியாக்கம். இது தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மீளச்சில் வந்துள்ளது.

ஆ.திருச்சீரலைவாய்:
‘அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப, வால்வளை ஞெரல,
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ,
விசும்பா றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயிர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே!’

‘திரைச்சீரலைவாய்’ என்பது திருச்செந்தூர். முதல் 125 முடியவுள்ள அடிகள். ஆகாயத்தில் பல்வேறு வாத்தியங்கள் முழங்கவும், வலிமைகொண்ட ஊது கொம்பானது இசையெழுப்பவும், வெண்சங்கு ஊதவும், பேராற்றலுடன் ஓசையிடும் இடியெனும் முரசமொடு பல்வேறு வண்ணப்புள்ளிகளையுடைய தோகைமயில் அகவலோசை எழுப்பவும், விண்ணகமே வழியாக விரைந்து செல்ல முற்பட்டு, உலகமக்கள் புகழ்ந்தேத்தும் மிக்குயர்ந்த சீர்புகழூராம் திருச்சீரலைவாயென்னும் திருச்செந்தூர் அடைதலும், செவ்வேளாகிய குமரவேளின் நிலைத்த பண்பே!

இ.திருவாவினன்குடி:
‘திருவாவினன்குடி’ என்பது பழனித் தலமாகும். 170 முதல் 176 முடிய உள்ள அடிகள்.

‘வளிகிளர்ந் தன்ன செலவினர், வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர், தீப்பட
உருமிடித் தன்ன குரலினர், விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்,
அந்தரக் கொட்பினர், வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி யசைதலு முரியன்!’

செவ்வேளை வணங்கி வழிபட, முனிவரெலாம் முந்திச் செல்வர். அவர், துவராடையுடனும், நரைமுடியுடனும், இளைத்த உடலுடனும், சினமற்ற உள்ளத்துடனும், ஆசையறுத்த நிலையினர். அவர்க்குப்பின் தெய்வமங்கையரும், மாலவனும், உருத்திரனும், இந்திரனும், தேவரும் கணங்களும் தத்தம் மனக்குறைகளைப் போக்கிக்கொள்ள, ஆகாய வழியாக வந்து, வணங்குவர்.  அங்குத் தீதிலாக் கோட்பாட்டுத் திருவினாள் தெய்வயானை அம்மையொடு, சிலநாள்கள் இருத்தலும் உரியவன்.

ஈ.திருவேரகம்:
திருவேரகம் என்பது சுவாமிமலை என்பர். 177 முதல் 189 முடியவுள்ள அடிகள். இது, முழுமையான பகுதி.

‘இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி,
அறுநான் கிரட்டி யிளமை நல்யாண்டு
ஆறினில் கழிப்பிய, அறன்நவில் கொள்கை,
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து,
இருபிறப் பாளர், பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்,
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மறருங்கின் நவிலப் பாடி,
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்து,
ஏர கத்து உறைதலு முரியன்!'

படைவீடு தங்கிய திருக்கோயில் என்று பொருள். படுத்தல், படை விடுத்தல், விடை கொடுத்தல், கொடை போல ஆற்றுப்படுத்தும் இடம் ஆறுபடை என ஆயிற்று. முந்தைய மூன்று படைவீடுகளைப் போலவே, நான்காம் படைவீடாகிய ‘சுவாமிமலை’ என்னும் திருவாவினன்குடியிலும் அவன் வீற்றிருப்பான். அறவோராகிய அந்தணர், தமக்கே உரிய ஓதல் முதலிய அறுவகைச் செயல்களையும் செய்கின்ற சிறந்த குடிப்பிறப்பாளர். அவர், நாற்பத்தெட்டு அகவை வரை மாணவ நோன்பைக் கடைப்பிடிப்பவர். அவ்வாறு நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம், முத்திச்செல்வத்தை உடையவராவர். குளிர்ந்த நீரில் நீராடி, ஈர ஆடையுடன் ஏரகச் செவ்வேளை வணங்கி வழிபடுவதற்காக, மணம் மிகுந்த நாண்மலர்களை ஏந்திக்கொண்டு வருவர். அவனும் பெரிதாக அதைக்கண்டு மகிழ்வுற்று, ஏரகத்தில் வாழ்தலும் உரியவன்.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு "dr.n.arul[at]gmail.com
-----

தேமொழி

unread,
Mar 13, 2021, 2:42:14 AM3/13/21
to மின்தமிழ்

48  -  “அரும்பெறல் மரபின் பெரும் பெயர்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன். கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) - சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு - ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம் மகள்) திருமண வரவேற்பிற்காக வேலூர் காட்பாடிக்கு அருகிலுள்ள ‘திருமணி’ கிராமத்திற்குச் செல்லும் இனிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றேன். என் சின்னத் தாத்தா தான் திருமணிக்குக் கணக்குப்பிள்ளை. ஊர்க்கணக்கு வேலை தலைமுறை தலைமுறையாக வந்தது. 

எங்கள் பெரிய தாத்தா மயிலாசலம் பிள்ளை (உரைவேந்தரின் அண்ணன்) ஆலைக்கிராமம், ஒளவையார் குப்பம் கணக்குப்பிள்ளையாவார். ‘எதுவும் இல்லையென்றால் கணக்கு இசும்பு இவனுக்குக் கிடைக்கும்’ என்று பாட்டி சொல்வார்கள். ‘இசும்பு’ என்பது தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஈர்ப்பு. ஏரி, கரை, வயல், வாய்க்கால், குளம், கபிலம், ஏற்றம், தென்னந்தோப்பு, பனைமரக்குலை, புளியந்தோப்பு, காளை, காராம்பசு, கன்று, ஆடு, ஊர் ஓரத்தில் இருந்த ஊது உலை, வீதியில் நெசவாளர் நூல் கட்டியிருப்பது, தெருக்கூத்து இவைகளையெல்லாம் மெல்ல மெல்ல நினைவில் படர்கின்றன. திருமணியில் பஜனைக்கோயில் தெருவில் உள்ள பெரிய வீடுதான் என் சின்னத்தாத்தா இல்லமாகும். அங்கிருந்து மணமக்கள் திரௌபதியம்மன் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு, திருமணச் சடங்குகளில் ஈடுபடுவது கண்டு மகிழ்ந்தேன். அவர்களின் திருமணம் அன்று காலை அண்ணா நகர் இல்லத்திற்கு அருகிலுள்ள திரு.வி.க. பூங்காவிற்கு எதிரில் புல்லாரெட்டி நிழற்சாலையில் உள்ள ‘ஜோதி வித்யாலயா’ பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. அச்சாலையில்தான் எங்கள் தாயாரின் மருத்துவச் சிற்றில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

திருமணி கிராமத்தில் நான்கைந்து நாள்கள் தங்கி அண்ணன் இளங்கோவின் அன்பு அரவணைப்பில் கிணற்றில் நீச்சலடித்துத் திளைத்தேன். அக்கிணறு ஆழமாகவும் அகலமாகவும் இருந்ததை என் கண்கள் இன்றும் மறக்கவில்லை. என்னுடைய நீச்சுப் பயில் திறனுக்கு இக்கிணற்றுக் குளியல் அடித்தளமாகும். அண்ணன் இளங்கோ, வீட்டுத் திண்ணையில் அமர்ந்த வண்ணம், ‘ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா... வா....’ என்ற புரட்சித் தலைவரின் பாடலை நயமாகப் பாடி மகிழ்வித்ததையும் மறவேன். வழக்கறிஞர் செல்வத்தரசின் மூத்த அண்ணன் தான் திரு இராஜா என்பவராவார். அவரும் எந்தையாரும் இணைபிரியா நண்பர்களாகப் பள்ளி நாள்களில் மகிழ்ந்ததைச் சொல்லி நெகிழ்ந்தார். இராஜாவும் எந்தையாரை அண்ணன் என்றே அழைத்து உருகுவார்.

எந்தையார், எங்கள் மூவரையும் அம்மாவுடன் அழைத்துக் கொண்டு வடலூருக்குச் செல்லும் வழக்கமுண்டு. வடலூரிலுள்ள மாட்டு வண்டிகளில் ஏறிச்சென்று மகிழ்ந்து விளையாடுகிற நினைவலைகள் நீளமானவையாகும். தவத்திரு ஊரனடிகளாரின் அன்பும் பண்பும் எங்களை எல்லையில்லாத மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அவர் காலை உணவாக இட்டலியையும் மிளகாய்ப் பொடியினையும் சேர்த்துப் பிசைந்து உண்ணும் பழக்கம் இன்றைக்கும் அவர் கூறி மகிழ்வார். அப்பழக்கம் என்னையும் தென்னாப்பிரிக்காவிலுள்ள என் தம்பி பரதனையும் இன்றும் விட்டு நீங்கவில்லை. அது தலைமுறை தலைமுறையாக வளரும் என்றே எண்ணுகிறேன்.

தமிழக அரசு முதன்முதலாக அருட்பிரகாச வள்ளலார் விருது என்று அறிவித்தவுடன் அவ்விருதுக்கு தகுதிவாய்ந்து அணிசெய்யும் பெருமை அடிகளாரைத்தான் சாரும் என்று நினைத்தேன். 01.02.2021-அன்று அவ்விருது தவத்திரு ஊரனடிகளாருக்கே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும். 1967-ஆம் ஆண்டில், திருச்சியில் தவத்திரு ஊரனடிகளார் துறவு வாழ்வை மேற்கொண்ட பொழுது சன்மார்க்க உலகின் வேர் ஊரனடிகள் பற்றிய குறிப்பைத் தன்னுடைய எழுபதாம் அகவை மலரில் அடிகளார் பொறித்துள்ளார்.

சமயபுரம் ஊரன் அடிகள் 23.5.1967-ம் நாளில் சத்திய தருமச்சாலை நூற்றாண்டு விழாவின்போது அருட்திரு. சன்மார்க்க தேசிகன் என்னும் திருப்பெயர் பூண்டு துறவு பூண்ட பெருநிலையைப் போற்றி எந்தையார் எழுதிய பொருளுரை:-

'கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
          கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாங் கண்டேன்
அடர்கடந்த திருவமுதுண் டருளொளியால் அனைத்தும்
          அறிந்து தெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
          உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர்தவிர்க்குஞ் சித்தியெலாம் என் வசமோங் கினவே
          இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவனருட் செயலே'

அருட்பிரகாச வள்ளற்பெருமான் அருளிய அமுதப் பாக்களின் அலங்கலாகத் திகழும் ஞானப் பெருநூலாகிய திருவருட்பா நூற்றாண்டு விழாவும், மேலையிலே, இம்மையிலே, ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எல்லாம் ஒரு பகலில் தரும் சத்திய தருமச் சாலை நூற்றாண்டு விழாவும் ஆகிய இருபெரு நூற்றாண்டு விழாக்களும் இணைந்து கொண்டாடப்பெறும் இவ்வினிய பொழுதில், தாங்கள் வள்ளற் பெருமானை வணங்கி வழிபட்டதோடன்றி அவற்கே ஆட்படும் வகையில் “உரைகள் எல்லாம் உணர்வெய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார்” என்னும் செம்மொழிக்கேற்பத் துறவு பூண்டதை அறிந்து நாங்கள் வியந்து போற்றுகின்றோம்.  உரை, செயல், சிந்தை என்ற மூன்றையும் ஒரு நெறிக்கே வைத்து அருட்பா அடியாரான புதுமையைத் தமிழகம் பல்லாண்டுகள் கழித்து இன்றே கண்டு மகிழ்கின்றது.

“கடைவிரித்தேன், கொள்வாரில்லை” எனப் பெருமான் கவன்றுரைத்த காலம் கழிந்து திருவருட்பாத் திருநெறியைப் போற்றி மகிழும் ஆர்வம் இன்று மக்களிடையே அரும்பி வருகின்றது. காலமுண்டாகவே, இக்காதல் அவர்பால் நிலைநிற்குமாறு செய்யும் கடன் நமது அருங்கடனாகும். இந்நிலையில் தாங்கள் மேற்கொண்டுள்ள துறவுநெறி வாயிலாக சிறப்பாகச் செந்தமிழ்நாடு முழுதும், பொதுவாக உலக முழுவதுமாக விரிவுரைத் தொண்டுகளும், விளக்கவுரை நூல்களும் ஆக்கிச் சன்மார்க்கப் பெருநெறியை உலக முழுவதும் தழையுமாறு செய்தல் வேண்டும். அப்பெரும்பணியாற்ற வள்ளற்பெருமான் அருளால், நீடிய வாழ்வும் நிறை நலமும் பெற்று உயர்ந்தோங்குமாறு இறைஞ்சுகின்றோம்.

'தன்னைவிடத் தலைமையொரு தகவினுமிங் கியலாத்
          தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
பொன்னடியென் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
          புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
          இருவருமொன் றாகியிங்கே இருக்கின்றோம் இதுதான்
நின்னருளே அறிந்ததெனிற் செயுஞ்செய்கை அனைத்தும்
          நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே'

என் பாட்டனார் உரைவேந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மூன்று திருமண விழாக்களில் கலந்து கொண்டதை நான் நினைவுகூர்கிறேன். இரண்டாம் வகுப்பு பயிலும்போது, என்னுடைய சித்தப்பா ‘சமயப் பொழிவாளர்’ திருநாவுக்கரசு - ‘அறுசுவை அரசி’ முத்துலட்சுமி (23.08.1974) திருமணம் நுங்கம்பாக்கதிலுள்ள அகத்தீசுவரர் திருக்கோயிலில் நடைபெற்றது. பிறகு விருந்து என் சின்னத்தாத்தா ஏகாம்பரம் (லோகாம்பாள் பாட்டியின் தம்பி) இல்லத்தில் நடைபெற்றது. நான் ஆறாம் வகுப்பு பயிலும்போது, மருத்துவ மாமணி மெய்கண்டான் - ‘இசையரசி’ சீதை (ஔவை டி.கே. முத்துசாமி திருமகள்) இராயப்பேட்டையில் ஹேமமாலினி திருமண மண்டபத்தில் (26.10.1978) நடைபெற்றது. ஆட்சிமொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் நடத்தி வைத்தார். மாலை வரவேற்பில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.வி. இரமணன் இன்னிசை மழையில் நனைந்தோம். நினைவில் வாழும் மருத்துவத் திலகம் நெடுமாறன் - ‘மருத்துவச்சுடர்’ கலாவதி திருமணம் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் (03.03.1980) சீரும் சிறப்புமாக நடைபெற்றதும் பசுமையாக நினைவில் உள்ளது.

அவ்வண்ணமே சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும்பொழுது என் வகுப்புத் தோழன் தீபக்கும் நானும் விடுமுறை விண்ணப்பம் வழங்கியபோது, என் வகுப்பாசிரியர் ‘என்ன இருவரும் ஒரே திருமணத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் இருவரும் உறவினர்களா?’ என்று உசாவினார். நான் உடனே ‘என் சின்னத்தாத்தா ஏகாம்பரம் அவர்களின் இரண்டாம் மகன் அமெரிக்கா வாழ் ‘அறிவியல் வாணர்’ வானவன் திருமணத்திற்குச் செல்கிறேன்’ என்றேன். உடனே தீபக் (மருத்துவர் சினேகலதா மகன்), ‘எங்கள் பக்கத்து வீட்டு அக்கா ஆனந்தி திருமணத்திற்குச் செல்கிறேன்’ என்றார். சிரித்துக் கொண்டே ஆசிரியர், ‘நம் பள்ளிக்கு அருகிலுள்ள ‘குசலாம்பாள்’ திருமண மண்டபத்திற்குத்தான் வருகிறீர்களா’ என்று திருமண அழைப்பிதழைப் பார்த்துச் சொன்னார். என் மாமா வானவன் இல்லத் திருமணம் இனிதாக (03.09.1981) நடைபெற்றது.

பனிரெண்டாம் வகுப்பு பயிலும்போது, எங்கள் பெற்றோர்கள் ஒருங்கிணைப்பால் ஆங்கிலத்துறை நல்லாசிரியர் சுதா திருமணத்தில் நாங்கள் ஓடியாடி அனைத்துப் பணிகளையும் செய்தது மறக்கவொண்ணா நிகழ்வாகும். அண்ணா நகரிலுள்ள பெரியார் திருமணக் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற திருமணம் ஆகும். தவத்திரு. அழகர் அடிகளாரின் பெயரன் மீஞ்சூர் மருத்துவர் சண்முகம் - குமுதவல்லி திருமகன் மருத்துவர் நலங்கிள்ளியை என் அக்கா இனிதே கரம் பிடித்தார் (08.06.1984). குடும்பத்தினர் அனைவரும் குலவிளக்குகளாகச் சுடர்விட்டு அங்குமிங்குமாக அமெரிக்கா, இலண்டன், ஆசுதிரேலியா, நியூசிலாந்து, துபாய், சென்னை, மதுரை, கோவை என வளமாக வாழ்ந்து வருகின்றனர்.

-----

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:
திருமுருகாற்றுப்படை

உ.குன்றுதோறாடல்:

‘மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன், செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்,
கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்,
குழலன், கோட்டன், குறும்பல் லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகரில் சேவலம்
கொடியன், நெடியன், தொடையணி தோளன்,
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு,
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்,
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்,
முழுவுறழ் தடக்கையி னியல் வேந்தி,
மென்றோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து,
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே!’

மயிலைப் போன்ற மென்னடை மகளிரொடு செம்மையானவன், சிவந்த ஆடையை உடுத்தியவன், அசோகின் இளந்தளிரைச் செருகிக்கொண்ட காதினன், கச்சையணிந்தவன், கழலணிந்தவன், வெட்சிமாலையணிந்தவன், காதில் குழல் செருகியவன், ஆரவாரத்தன், சிறிய பல வாத்தியங்களைக் கொண்டவன், மயிலூர்தியன், குற்றமற்ற அழகிய சேவற்கொடியன், நெடியன், தோள்வளை புனைந்த தோளினன், நரம்பு எழுப்புகின்ற இனிய குரலொடு சிறு புள்ளிகளையுடைய தண்ணிய சாயல் கொண்டு, அரையில் பிணித்த, நிலத்தையளக்கும் ஆடையணிந்தவன். உரிமை மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டு, குன்றுதோறும் ஆடல் நிகழ்த்துவதும் அவனுடைய நிலைத்த பண்பே!

ஊ.பழமுதிர்சோலை:

‘அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோர் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ!
மாலை மார்ப! நூலறி புலவ!
செருவி லொருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்த ரேறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!

இந்தத் துதித்தொடர்களை விடியலில் என் தாத்தா (உரைவேந்தர் ஔவை துரைசாமி) இசையுடன் பாடுவார். கார்த்திகை மகளிராம் அறுவர் பெற்ற அருஞ் செல்வனே! பெருமலை நாயகியாம் மலைமகள் மகனே! ஆலமர் கடவுளின் அரும்புதல்வனே! பகைவர்க்குக் கூற்றுவனாக உள்ளவனே! வெற்றிச்செல்வியாம் துர்க்கையின் சிறுவனே! அணிகலச் சிறப்புடைய காளியின் குழந்தையே! தேவாசுரப் போரில் தேவர்படைக்குத் தலைவனே! மணமிகுந்த மாலையணிந்த மார்பனே! நூலறிவுமிக்க நுண்ணிய புலவனே! போர்புரிவதில் ஒப்பற்றவனே! போர்க்களத்துப் பெருவீரங் கொண்ட இளைஞனே! அறவோராகிய அந்தணர்தம் செல்வமே! நூலறிந்த புலவர்தம் சொல்மலையே! தெய்வயானை கணவனே! வள்ளியம்மை மணாளனே! ஆற்றல்மிக்க இளஞ்சிங்கமே! கையில் வேலாயுதத்தைத் தாங்கிய பெருங்குணச் செல்வனே! கிரௌஞ்சமலையை குறுகு பெயர்க்குன்றம் அழித்த குறைவிலா வீரத்து, விண்ணளாவிய நெடுமலைக் குறிஞ்சியின் கோமானே! பலரும் பாராட்டிப் புகழ்கின்ற நன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெரும் தொழில் மரபின் பெரும்பெயர் கொண்ட முருக வேளே! பழமுதிர் சோலை மலைகிழவோனே!

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு: dr.n.arul[at]gmail.com
---

Sathivel Kandhan Samy

unread,
Mar 13, 2021, 10:23:05 AM3/13/21
to mint...@googlegroups.com
உள்ளம் மகிழ்கிறது., 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a9409f9a-d347-496b-a70c-aa99c67ebb52n%40googlegroups.com.

தேமொழி

unread,
Mar 15, 2021, 1:03:28 AM3/15/21
to மின்தமிழ்
49  -  “பார்த்திபன் கனவும் துணிவும்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசி முடித்து அமர்ந்திருந்தபொழுது, புதுமுகமான நல்லிளைஞர் ஒருவர் என் தோளைத் தட்டி ‘வாருங்கள், ஸ்டெல்லா மாரீசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழாப் போட்டிக்குச் செல்லலாம்’ என்று தன்னுடைய நண்பரின் சீருந்தில் அழைத்துச் சென்றார். அறிமுகமே இல்லாத திருமுகம் அவர். நேர்த்தியான உடலமைப்பு, பம்பரம் போல் சுழலும் விழிகள், கற்பூரம் போல் பற்றிக் கொள்ளும் நட்புக் கேண்மை. சிரித்துக் கொண்டே என் பெயர் பார்த்திபன் என்றார். நான் உடனே பேராசிரியர் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நான் படித்த வரலாற்றுப் புதினம் என்று சொல்லி மகிழ்ந்தேன். அனைத்துக் கல்லூரிப் பலகுரல் போட்டியில் முதற் பரிசினை நண்பர் பார்த்திபன் பெற்றார். கல்லூரியில் கூடியிருந்த மாணவ மாணவியர் அவரைச் சூழ்ந்து பாராட்டியதைக் கண்டு நான் பெருமிதம் அடைந்தேன். இரண்டாமியாண்டு தமிழிலக்கியம் பயிலும் காலம் தொடங்கி (1986-87) இன்று வரை எங்கள் ஆழ்ந்த நட்பு அளவிடற்கரியது. அப்பொழுது, அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை இராணுவவியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து பல போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றதும் நன்றாக நினைவில் உள்ளது. நான் நடத்திய குருதிக்கொடை நிகழ்வில் அவருடைய பங்கு பெரிதும் போற்றத்தகுந்தது.

காயிதே மில்லத்து மகளிர் கல்லூரி முதல்வர் தொடங்கி நூற்றுக்கணக்கான மாணவியருக்குச் செல்லப் பிள்ளையாக பார்த்திபன் விளங்கினார்.  மருத்துவர்களான திருமதி விமலா இராமலிங்கமும், கலையரசியும் - பார்த்திபன் சொல்லும் வேடிக்கைக் கதைகளைக் கேட்டு சிரித்துக்கொண்டேயிருப்பார்கள்.  கல்லூரி மாணவிகளுக்குக் குருதி அளிப்பு நிகழ்வு நெடுநேரமாகும். காரணம், உணவு உட்கொள்வதில் ஈடுபாடு குறைவாகவே தான் அக்காலக் கல்லூரி மாணவிகளுக்கு இருந்தது. நெடுநேரத்தை உடன் தீர்க்கும் வல்லமை பார்த்திபனுக்கு இயல்பாக அமைந்தது. ஈகை தரும் மாணவிகளைப் பார்த்து, ‘என் கண்களைப் பாருங்கள்’ என்று தன்னுடைய விழிகளை உருட்டி மருட்டிக் காட்டுவார். குருதி ஈகை தந்த மாணவி ஒருவர் அரை மணி நேரத்தில் இனிப்புகள் பல எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து, என் பெயர் பால கல்யாணி. என் பிறந்த நாள் இன்று என்று சொல்லி இனிப்புகளை வாரி வழங்கினார். தொடர்ந்து குருதிக்கொடை நடைபெற்ற இரண்டு நாள்களுக்குள் பால கல்யாணி பார்த்திபனைப் பெரிதும் விரும்பினார். ஆனால், பார்த்திபன் எந்த அன்பும் ஆர்வமும் வளர்த்துக் கொண்டவரில்லை. வலையிலும் சிக்காமல், அவருக்கு நல்லுரை சொல்லி, ‘நீ வளர வேண்டிய பெண்’ என்று சொல்லி ஆற்றுப்படுத்தினார். நற்பண்பை வளர்த்தது இளமை! அத்தகைய பார்த்திபனுடைய பேராசிரியர் பெருந்தகை முனைவர் கே.சி. மனோகரன், மிடுக்கான தோற்றமும், ஆழமான சொற்களும், விழுமிய கருத்துகளைப் போற்றும் பேராசிரியர் ஆவார். அவரின் வழிகாட்டுதலின்படி, பார்த்திபன் நடந்திருந்தால் அத்துறையிலேயே முனைவர் பட்டம் பெற்றிருப்பார். ஆனால், அவரும், அக்காலச் சூழலுக்கு ஏற்பப் பெங்களூரில் சட்டம் பயின்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில், அவருடைய இனிய நண்பர்களான வீரமோகன், அரக்கோணம் நிலக்கிழார் இராஜேந்திர பிரசாத், வழக்கறிஞர் வித்யா பாலசுப்பிரமணியம், மேனாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் கே. இராஜாராமின் இளவல் மருத்துவ மாமணி காந்தராஜ், திருமதி சத்திய வாணி முத்துவின் மருமகள் காந்திமதி அறச்செல்வம், மதுரை பி.டி.ஆர். பழனிவேல் இராஜனின் உறவினர் மோகன், அடையாறு சுவரம் மருத்துவமனைத் தலைவர் அரி இரமேஷ் போன்றோர் நண்பர்களாக எனக்கும் அறிமுகமானார்கள். பார்த்திபன் பலகுரல் மன்னர் மட்டுமல்லாமல் திரைப்படத் துறையில் மின்னும் நட்சத்திரமாக வாய்ப்புக் கிடைக்கப்பெற்று இது நம் தொழிலல்ல என்று விலகி நின்றவர். பார்த்திபன் மீது, தனிப்பாசம் காட்டியவர்கள் இயக்குநர் திலகம், டி. இராஜேந்தர், இயக்குநர் இரங்கராஜன் ஆவார்கள். இயக்குநர் டி. இராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கிய பொழுது, கட்சிக்கான கொள்கை விளக்கத்தினை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய பொழுது, பார்த்திபன் என்னை அழைத்துச் சென்று, எழுத வைத்துக் காட்டினார். உடனே, டி. இராஜேந்தர் அவர்கள் என்னைப் பார்த்து ‘தமிழிலக்கியம் பயிலும் மாணவனாகிய நீ, வனப்பான ஆங்கிலம் எழுதுகிறாயே’ என்று பாராட்டினார்.

1989-இல் பம்பாய் நிறுவனம் நடத்திய நட்சத்திரப் பெருவிழா நாரத கான சபையில் நடைபெற்ற பொழுது பார்த்திபனின் துணிவால் நடிகை சௌகார் ஜானகியின் பெயர்த்தி நடிகை வைஷ்ணவிக்குப் பதிலாக அவ்விழாவில் என்னைத் தொகுப்புரையாற்ற வைத்தார். நிரலில் இல்லாத பொழுதும் பார்த்திபனை பத்து நிமிட இடைவெளியில் பலகுரல் செய்ய வைத்ததும் அரங்கமே அதிர்ந்தது. இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் முதல் பல நடிகர் நடிகைகள் அவரைப் பெரிதும் பாராட்டினார்கள். சென்னைப் பல்கலைக்கழக கலைவிழாப் போட்டிக்கு தலைமை தாங்கிய கல்வி அமைச்சரிடமும், துணை வேந்தரிடமும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதை நன்றியுரையாற்றும்பொழுது என்னைச் சொல்லச் சொல்லி துணிவு தந்தவர் பார்த்திபனேயாவார். 1989-ஆண்டு, மோரீசில் நடைபெற்ற ஏழாம் உலகத்தமிழ் மாநாட்டிற்குச் செல்லவேண்டுமென்று பார்த்திபனும் நானும் ஏங்கினோம். அதற்கு எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழறிஞர்கள் செல்லும் இடத்திற்கு முதுகலை தமிழிலக்கியம் பயிலும் மாணவன் செல்ல வாய்ப்புக்கிடைப்பதென்பது கானல் நீராகும். அப்பொழுது எந்தையார்தான் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக, அவர் தலைமையில் அறிஞர்கள் சென்றனர். ஆனால் அவரிடம் கேட்பதற்கு அச்சமாக இருந்தது. ஆனால், நண்பன் பார்த்திபன் ஓர் அழகான திட்டம் தீட்டி, அருணா சர்க்கரை ஆலையின் தலைவர் திரு. மருதைப் பிள்ளையவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, இந்திய மோரீசு தமிழ்ப் பண்பாட்டு மையம் என்ற அமைப்பைத் தொடங்கி அவரைத் தலைவராக நியமித்து, அவர் அலுவலகத்தைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு, மடலேட்டிலும் ( Letterhead), முகவரி அட்டையிலும் ( Visiting Card) எங்கள் பெயர்களைக் அச்சிட்டு வழங்கி மகிழ்ந்தார்.

1989 திசம்பர் திங்களில் நடைபெறவிருக்கிறது ஏழாம் உலகத்தமிழ் மாநாடு. செப்டம்பர் திங்களிலேயே சுவர்தாங்குச் சாலையில் உள்ள (Spurtank Road) உலகப் பல்கலைக் கழக அரங்கத்தில் ( WUS Centre) தொடக்க விழா நடைபெற்றது. நாடாளுமன்றத் துணைத் தலைவர் திரு. தம்பிதுரை, மோரீசு நாட்டின் கல்வியமைச்சர் திரு. ஆறுமுகம் பரசுராமன், பேராசிரியர் திருமலை செட்டி, கவிஞர் சௌந்திரா கைலாசம், டாக்டர் காந்தராஜ், டாக்டர் கே.சி. மனோகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அவ்விழாவில் டாக்டர் விமலா இராமலிங்கத்தின் மகள் ‘கலைமயில்’ சோபா இராமலிங்கத்தினுடைய நடன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பார்வையாளர்களாக, அறிஞர் பெருமக்கள் பலர் மத்தியில் காயிலே மில்லத் அரசுக் கல்லூரி மாணவிகளும் புடைசூழ வருகை புரிந்தனர். தொழிலதிபர் மருதைப் பிள்ளையும், அவருடைய நிறுவனத்தின் மேலாளர் திரு. சோமசுந்தரமும் அடுத்த நாள் இருவரையும் அழைத்துப் பெரிதாகப் பாராட்டினார்கள். ‘வருங்காலங்களில் நீங்கள் வளருவீர்கள்’ என்று வாழ்த்தினார்கள். மோரீசு செல்லும் வாய்ப்பு மட்டும் எங்களுக்குக் கிடைக்கவேயில்லை. எங்கள் இருவருக்கும் முதல் முகவரி அட்டை அளித்த வள்ளல் மருதைப் பிள்ளை என்று அவருடைய பெயரன் கார்த்திக்கிடம் அண்மையில் நான் தெரிவித்தேன்.

மோரீசு நாட்டுக்கு என் தந்தையார் சென்று சேர்ந்த மறுநாள், என் அம்மாவுக்கும் அரசின் இசைவு வந்தது. ‘என் மகன் அருள் செல்லாதபோது எனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம்’ என்ற மறுத்து விட்டார்கள். என் தந்தையும் தாயும் பின்னர் ஓய்வு பெற்ற பிறகு, மோரீசு சென்று உரையாற்றி வந்தனர். எந்தையாரின் நண்பர் திருமதி சாவித்ரி இராகவேந்திரா என்னை பல தருணங்களிலும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவதைப் போலவே வணிக செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துவார். அதற்கு ஒரு வாய்ப்பாக டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள சிற்றரங்கில் நடைபெற்ற பொருட்காட்சியில் பார்த்திபனும் நானும் சிற்றுண்டி மாடம் அமைத்து பெருலாபம் ஈட்டினோம். நாள்தோறும் பூவிருந்தவல்லியிலிருந்து அமைந்தகரை வரை பேருந்தில் வந்து, என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்னை முழுதும் வலம் வருவோம். பார்த்திபன் சட்டம் பயின்று முடித்த ஓரிரு ஆண்டுகளில் என் அறிமுகத்தால், புகழ்பெற்ற ‘வழக்கியல் திலகம்’ திருமதி நளினி சிதம்பரத்திடம் சட்ட இளையோராகப் பணியாற்றி 1993-இல் ‘கிளியா’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, என்னிடம் வந்து, ‘நாளை நாம் இருவரும், அமெரிக்கத் தூதரக அலுவலகம் செல்கிறோம். அமெரிக்காவிற்கு உடனே விசா எடுக்கிறோம். அமெரிக்கா செல்கிறோம் என்றார். அடுத்தநாள் அவர் என்னைப் பார்க்க வரவில்லை. நானும் எதற்கும் தயாராகவில்லை. பத்து நாள் கழித்து அமெரிக்காவிலிருந்து பார்த்திபன் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். இந்தியத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றவிருக்கிறேன் என்று சொன்னார். அன்று முதல் அமெரிக்க வானில் சுழலும் சுடராக மிளிர்கிறார். அவருடைய துணைவியார் திருமதி கலைச் செல்லம் புகழ்பெற்ற மூப்பியல் மருத்துவராகவும், அவர்களுக்குப் பெண் மக்கள் வெண்ணிலா, வானதி ஆவார்கள். வெண்ணிலாவுக்கு, சபையர் திரையரங்கத்திற்கு எதிரிலுள்ள ‘சர்ச் பார்க்’ மகளிர் பள்ளியில் தொடக்க வகுப்பில் நான் அவர் பெற்றோர்கள் வராமலேயே என் பரிந்துரையில் பள்ளியில் சேர்த்தேன். மேனாள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பயின்ற பள்ளியில் தன் மகள் படிக்க வேண்டும் என்பது பார்த்திபனின் விருப்பமாகும்.

பார்த்திபனும் அவருடைய நண்பர் டாக்டர் விஜய் பிரபாகரும் (இ.சி. பிரபாகர், இ.ஆ.ப. மகனும் அமெரிக்காவில் பெருந் தகைமையாளராகப் பொதுநலப் பணியில் பணியாற்றுகிறார்) அமெரிக்காவில் சிகாகோவில் உள்ளூர் மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் தமிழக அரசியல் தலைவி பெயரில் தெருவொன்றிற்குப் பெயர் சூட்டிய சிற்பிகளாவார்கள். இன்று வெண்ணிலா உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார் என்பது பெருமிதமாகவுள்ளது. தன்னுடைய தாய், தம்பி, தங்கையையும் அமெரிக்காவிலேயே குடியமர்த்திய பெருமையும் பார்த்திபனைச் சாரும். சென்னையில் இன்றும் மைத்துனர் வழக்கறிஞர் சக்திவேல் குடும்பமும், பார்த்திபனின் உடன் பிறந்த தம்பி கிருஷ்ணராஜும் பார்த்திபனுக்கு உற்ற துணையாகத் திகழ்ந்து வருகின்றனர். பார்த்திபன் பரிவார்ந்த நண்பர், படித்தவர், பழகியவர்களுக்கு உயிர் கொடுக்கும் பண்பு கொண்டவர். நாமக்கல் கவிஞரின் பெயரன். என்னை அமெரிக்காவிற்க அழைத்துச் செல்ல விடாப் பிடியாய் நின்றார். கிளியாவில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பும் சிறப்பும் என்ன பெரிய அமெரிக்கா, எந்த நாட்டுக்கும் எப்போதும் குடியேற என் அதிகாரம் செல்லும் என்ற செருக்கு நிலையில் இருந்தேன். பார்த்திபன் கனவும் நினைவும் வெற்றி பெற்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அரசு அமையும் என்று ஆறு மாதத்துக்கு முன்னே கணித்துச் சொன்னவர். அன்றாடம் முகநூலில் அவரின் பதிவுகளுக்கு உலகம் காத்திருக்கிறது. டாக்டர் விஜய் பிரபாகரும், டாக்டர் பார்த்திபனும் அமெரிக்காவில் புகழோடு வாழ்கிறார்கள். இருவருக்கும் அரசிலோ, ஊடகத்திலோ தலைமையேற்கும் பொன்னான நாள் காத்திருக்கிறது.


-----
பத்துப்பாட்டில் மனம் பற்றுக:
திருமுருகாற்றுப்படை
தியாகராசர் கல்லூரியில் எந்தையார் இளங்கலைத் தமிழ் வகுப்பில் மலையிலிருந்து விழும் அருவி எப்படி நக்கீரர் சொற்களில் இழுமென் ஓசையோடு அதிர்ந்து விழுவதை உணர்ச்சி ததும்பக் கூறுவார்களாம்.  அந்தக் கல்லருவிக் காட்சியைக் சொல்லருவியாகத் திகழ்ந்த நாவேந்தர் கா. காளிமுத்து மேடைதோறும் தமிழின் மேன்மைக்குச் சான்று இதோ பாருங்கள். அருவி விழுகிறது என்று இந்த வரிகளை அடுக்கிச் சொல்வார். மேடை இந்த உரையைக் கேட்டுப் பெரிதும் ஆரவாரித்தது. அந்த இனிய பகுதியை நீங்கள் இப்போது காணலாம்.

பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீ இத் தத்துற்று
நன்பொன் மணி நிறங் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தென்னை
இள நீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய்
அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேண் நின்று
இழுமென இழிதரு மருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே!

மலையுச்சியில் பல இடங்களில் தோன்றும் அருவிகள் கீழ் நோக்கிப் பாய்கையில் காற்றால் அலைப்புண்ணும் பல துகிற்கொடிகளைப் போலக் காணப்படுகின்றன. இவ்வருவிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேரருவியாய் உருவெடுத்துக் கீழ் நோக்கிப் பேரிரைச்சல் இட்டுக்கொண்டு பாய்கின்றன. அப்பேரருவி தன் போக்கில் சிறு மூங்கிலின் வேரைப் பிளக்கிறது; தேனீக்கள் அமைத்த தேன்கூடுகளைக் கலைக்கிறது; நன்கு முற்றிய ஆசினிப் பலாப்பழங்கள் வெடித்துச் சிதறிய சுளைகளைக் கொண்டு செல்கிறது. மலையுச்சியில் உள்ள சுரபுன்னையின் நறிய மலர்கள் அவ்வருவி நீரில் உதிர்கின்றன. அருவியின் ஓட்டத்தையும் ஓசையையும் கண்டும் கேட்டும் கருக்குரங்குகளுடன் கரிய முகத்தையுடைய முசுக்கலைகள் நடுங்குகின்றன. அருவி நீர், புகரையணிந்த மத்தகத்தையுடைய பெரிய பெண்யானை குளிரடையும்படி வீசுகிறது; தன் போக்கில் அகப்பட்ட யானைக்கொம்புகளைத் தன்னுள் அடக்கி, பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி மேலே கொண்டு குதித்து, தத்துதலையுற்றுப் பொடியான பொன்னைத் தெள்ளுகிறது; வாழையின் பெரிய முதல் துணியும்படியும் தெங்கின் இளநீர்க்குலை உதிரும்படியும் அவ்விரண்டனையும் மோதுகிறது; மிளகுக்கொடியின் கரிய கொத்துகளைச் சாய்விக்கிறது; மயில்கள், கோழிகள் முதலிய பறவைகளை வெருவி ஓடச்செய்கிறது; ஆண் பன்றியையும் கரடியையும் மலைக்குகைகளில் பதுங்கும் படி செய்கிறது; கரிய கொம்புகளையுடைய காட்டுப் பசுக்களின் எருதுகளை முழக்கமிடச் செய்கிறது. இங்ஙனம் பேரருவி பாய்கின்ற பெரிய மலையில் பழம் முற்றிய சோலை பல இருக்கின்றன.

தேமொழி

unread,
Mar 19, 2021, 11:08:24 PM3/19/21
to மின்தமிழ்
50  -  “சாதித்து வெல்பவர் சாந்தகுமார்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================


1974-ஆம் ஆண்டு முதல் 1992 வரையில் தலைமைச் செயலகத்தில் எந்தையார் செய்தித் துறையின் துணை இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர்திரு அரசு செயலாளராக அமர்ந்திருந்த வரையிலும், தமிழன்பர்களுக்கும், புலவர்களுக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் இளைப்பாறும் குளிர்நிழல் தென்றலாக, மன்றமாக அவரின் அலுவலகத்தைப் போற்றிப் பாடினார்கள்.

என் பாட்டனார் உரைவேந்தரின் நண்பர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் எந்தையாரை வந்து அந்நாள்களில் தலைமைச் செயலகத்திலேயே சந்திப்பது என்பது பெரும்பேறாகக் கருதினார்கள்.  அவ்வண்ணம் மதுரையில் காந்தி நகரில் இருந்த என் பாட்டனாரின் அடுத்த வீட்டு நண்பர் பெரியவர் கரையாண்டி (தமிழ்நாடு அரிசன சங்கத் தலைவர்) தன் தொண்டர்களையும், நண்பர்களையும் அப்பாவிடம் அறிமுகம் செய்வது வாடிக்கையாகும்.

1982-ஆம் ஆண்டில், அண்ணா நகர் இல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர்தான், திரு. சாந்தகுமார் ஆவார்.  அந்நாட்களில் மதுரையில் மீனாட்சி நகைக்கடை உரிமையாளராகவும் திகழ்ந்தவர். அவருடைய உயரிய அன்பிலும், குடும்பப் பரிவிலும், நாங்களும் ஆட்பட்டோம்.  வாரந் தவறாமல் மதுரையிலிருந்து சென்னைக்கு வரும்பொழுதே மதுரையில் புகழ்பெற்ற சுமங்கலி இனிப்பகத்திலிருந்து இனிப்பு, கார வகைகளுடன் முகம் மலர திருநீற்றுக் குங்குமம் பூண்டு முகப்பொலிவுடன் விடியற்காலை ஏழு மணியளவில் வருவது வாடிக்கையாகும். பெற்றோர்கள் இருவரும் அவரைப் பாராட்டிய வண்ணமே இருந்தார்கள். பள்ளி நாட்களில் என்னையும் என் உடன் பிறந்தவர்களையும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது அவரின் வழக்கமாகும்.

ஒருமுறையும் திரையரங்கத்தில் விற்கப்படும் (ரூ.1.10, ரூ2.90, ரூ.4.50) மதிப்பீட்டிலான திரைச்சீட்டுகளைப் பெற முடியாமல் இருப்போம். காரணம் அத்திரைப்படங்களெல்லாம் கமல், ரஜினி நடித்த முதல் நாள் முதல் காட்சிகளாகும்.  எப்பொழுதும் அதற்கு மேல் பணம் செலுத்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.  அமைந்தகரையிலுள்ள இலட்சுமி திரையரங்கம், முரளிகிருஷ்ணா திரையரங்கம், புரசையிலுள்ள அபிராமி, அண்ணாசாலையிலுள்ள அலங்கார் மற்றும் தேவி குழுமத் திரையரங்கம் செல்வது குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.  திரைப்படம் முடித்து மும்மீன் அல்லது ஐமீன் உணவகங்களில் உண்பதும் அவர் அறிமுகத்தால் தான் பழகினேன்.  பீடும் மிடுக்குமாக அவர் செய்த செலவுகள் எண்ணற்றவை.  ஒருமுறை சோழா ஐமீன் உணவகத்தில் நீச்சலடிக்க வேண்டும் என்று முனைந்தபொழுது என்னையறியாமல் மூழ்கி விட்டேன். உடனே, அங்கிருந்த பயிற்றுநரிடம் ரூ.100/- வழங்கி தம்பி அருளை மீட்கச் செய்தார்.

அவர் கொண்டுவரும் பலகார வகைகள் எங்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல் கவிஞர் சௌந்திரா கைலாசம், திரு. கிருஷ்ண பாரதி, இ.ஆ.ப., எழுத்து வேந்தர் கோ. வி. மணிசேகரன், இல்லங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று வழங்குவார்.  மதுரைக்கு அப்பா செல்லும் போதெல்லாம் அவரை வரவேற்று நிற்பவர் சாந்தகுமார் ஆவார். அப்பா மதுரையில் தங்கும் ஆரத்தி உணவகத்தில் தலைமை விருந்தினராக அவரே மிளிர்வார். மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் இராஜாஜி மருத்துவமனையின் தலைவராக அம்மா திகழ்ந்தபொழுது உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் பெருமனம் கொண்டவராவார்.  அவரின் ஒருங்கிணைப்பில் அம்மா, நயவுரை நம்பியின் இல்லத்தரசி (நினைவில் வாழும் அனுசூயா அம்மையாருடன்) ஆகியோருடன் நானும் குற்றால அருவிக்குச் சென்று வந்தது பசுமையான நினைவாகும்.

நான் இளங்கலை தமிழிலக்கியம் இறுதியாண்டின் போது, சாந்தகுமாரின் திருமணம் மிகச் சிறப்பாக மதுரையில் நடைபெற்றது (27.03.1988).  எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள் பலர் எனப் புடைசூழ தொடரியின் முழுப்பெட்டியையே பதிவு செய்து அழைத்துச் சென்ற பாங்கு வியப்பில் ஆழ்த்தும்.  எந்தையாரின் நன்முயற்சியில் என் சித்தப்பா சமயப் பொழிவாளர் திருநாவுக்கரசை, மலேயாவுக்கு அழைத்துச் சென்றதும் அவ்வண்ணமே 1990-ஆம் ஆண்டில் எனக்கு முதன்முறையாக கடவுச்சீட்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அடைக்கலராஜின் நல்லுறவால் சுற்றுலா முகவர் ஜான் தாமஸ் முயற்சியில் கிடைக்கப் பெற்றதும் சாந்த குமாரின் ஒத்துழைப்பால்தான் என்பதை மறக்கவியலாது.

சாந்தகுமார் வளமாக வணிகம் செய்த பொழுது பெற்றோர்கள் அடிக்கடி அவரிடம் வலியுறுத்துவது, ‘செலவு நிறைய செய்ய வேண்டாம், சாந்தகுமார் இது சேமிப்புப் பருவம், பணம் ஈட்டுவதை செல்வமாக காத்து வைக்க வேண்டும்’ என்பதுதான்.  ஆனால் அவைகள் எல்லாம் கரைந்துபோய் மீளமுடியாத கடன்துயரில் ஆட்பட்ட பொழுதும் மனம் கலங்காமல், கடினப்பாதையை உய்த்துக் கடக்கும் காளையாக நிமிர்ந்து துன்பமும் துன்புறும் வண்ணம் மீண்டெழுந்தவர் எங்கள் சாந்தகுமார். சென்னை நோக்கி தன் திசையை மாற்றினார். என் இனிய நண்பர் லியோ இரவிக்குமாரும் அவரின் தந்தையார் திரு. பழனிச்சாமியின் நன்மணத்தாலும், அவர்கள் நடத்திவந்த நுங்கம்பாக்கம் சாலையிலுள்ள கடையிலேயே பின்வாயிலில் சாந்தகுமார் திவ்யா நகையகத்தைத் (1991) தொடங்கி வெற்றி பெற்றார்.  எவ்வளவு தான் பொன் வணிகத்தில் உழைத்தாலும் பட்ட காலிலேயே படும் என்பதுபோல மீண்டும் சரிவுற்றார்.

என்ன பணி செய்வது என்று தெரியாமல் மருண்டிருந்த சாந்தகுமார் வாடகை உந்துகளைத் தொழிலாகச் செய்யலாமா என்று நினைத்து, அதிலும் வெற்றி பெற முடியாமல் இருந்தார்.  அப்பொழுது நான் கிளியா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பல விளம்பரங்களை மக்கள் குரலில் வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.  அப்பொழுது இதழாளர் திரு. சித்தரஞ்சன் அவர்களிடம் சாந்தகுமாரின் திறமையைப் பரிந்துரைத்தேன். உடனே, என்னிடம் அவரை அனுப்புங்கள் செதுக்கிக் காட்டுகிறேன் என்று சொன்ன பெருவுள்ளத்தின் பெட்டகம் சித்தரஞ்சன் ஆவார்கள்.  அவருடைய நல்லுள்ளத்தால், மாலை நேர இதழான மக்கள் குரலில் பணிசெய்ய சாந்தகுமாருக்கு 1992-இல் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.  இன்றுவரை வேறெந்தப் பணியிலும் கவனம் சிதறாமல் சிந்தனை ஒருநிலையாக மக்கள் குரல் இதழின் விளம்பர வளர்ச்சியின் தூணாக விளங்குகிறார்.

நகைத் தொழிலே மரபாக வளர்ந்ததால், கல்லூரிக் கல்வியைப் புறக்கணித்து, வாழ்வின் உயரத்துக்குச் சென்று ஆழ்ந்த துயரத்துக்கு ஆட்பட்டு இப்போது அரசியல் தலைவர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர்கள், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் இ.ஆ.ப., இ.கா.ப. உயரதிகாரிகள், மருத்துவ மேதைகள், இதழாளர்கள் மத்தியில் பரிவோடு பழகும் பண்பாளராக பலர் போற்ற சாந்தகுமார் மிளிர்வதைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.  அப்படிப்பட்ட சாதனைச் செம்மல் சாந்தகுமார், தன்னந்தனியராக அந்நாட்களில் (1988-ஆம் ஆண்டு) புதுதில்லி சென்று மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு ஆர்.வீயைப் பார்த்து தங்கவிலையேற்றத்தால் பொற்கொல்லர் தவிப்பதை எடுத்துக் கூறினார். அந்த வயதில் அந்த அனுபவம் எவருக்கும் வாய்க்காது.

பள்ளம், மேடு, சேறு, சரிவு என்று பாராமல் மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் என்ற திருக்குறளை அவரிடம் அடிக்கடி கூறுவேன். வாழ்க்கை எப்படியெல்லாம் வளைகிறது என்று சொல்வேன். மீண்டும், மீண்டும் நான் சொல்வதை சொல்லச்சொல்வார்.  இன்றுவரை எதுவும் இயலாது என்று சொல்லாமல் முடிந்தவரை முயல்வேன் என்று வாழ்ந்து வெற்றி பெற்றுள்ளார்.  சாந்தகுமாரின் திருமகன் பிரவீன் பொறியியல் கல்வி முடித்து அலுவலில் சேரவிருக்கிறார்.  எந்த நேர்முகத்திற்கும் காலையில் வரச்சொல்லி மாலையில் ‘இல்லை’ என்று சொல்வது இயற்கையான நிலை ஆகிவிட்டது என்று அடிக்கடி இப்பொழுது என்னிடம் சொல்வார்.  நான் மீண்டும் சொல்வேன், ‘நல்ல அலுவல் பிரவீனுக்கு அமையும். உங்கள் பொன் மனத்திற்கு நல்லவைகளே நாடி வரும். இன்பமே எந்நாளும் துன்பமில்லை’.

---------------------------------------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படைக்கு அடுத்ததாகப் பொருநராற்றுப்படை அறிமுகத்துக்கு முன் ஓர் இனிய தகவலை சேர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  ஏறத்தாழ எழுபதாண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலியில் நடந்த பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் மாநாட்டில் என் பாட்டனார் உரைவேந்தர் திருமுருகாற்றுப்படைப் பற்றி ஆற்றிய உரை ஒரு புதையலாகும்.

அவ்வுரை:-
செந்தமிழ் நாட்டுப் பண்டைய இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தலையாயவை. மிக்க தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்துக்கும் தொன்மை மிக்க பாட்டுக்கள் சங்க இலக்கியங்களுள் உண்டு என்பர்.  அவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என இருதிறப்படும் அவற்றுள் பத்துப்பாட்டின் கண் முதற்கண் நின்று இனிய இலக்கியக்காட்சி வழங்குவது திருமுருகாற்றுப்படை.

முதற்கண் நிற்கும் திருமுருகாற்றுப் படையின் வேறாக, நான்கு ஆற்றுப்படைகள் இப்பத்துப் பாட்டினுள் உள்ளன.  அவை பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படையாகிய மலைபடுகடாம் என்பனவாகும். திருமுருகாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படையீறாக, நான்கனையும் முறையே நிறுத்தி, வேறு பாட்டுகள் ஐந்தனை இடையே நிறுத்தி இறுதியில் கூத்தராற்றுப் படையை வைத்துப் பத்துப் பாட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது.  இத்தொகுதியில் உள்ள பாட்டுப் பத்தனுள், செம்பாகம் ஆற்றுப்படையாகவே இருப்பதும், தொடக்கத்தில் நான்கு ஆற்றுப்படைகளை நிறுத்தி, இறுதியிலும் ஆற்றுப்படையே நிற்கத் தொகுத் திருப்பதும் காணுமிடத்து ஆற்றுப் படைபத்து என்று பெயர் கூறுமாறு இஃது அமைந்து இருப்பது புலனாகும்.  சில உரையாசிரியர், இப்பத்துப்பாட்டை, ஆற்றுப்படையென்பதும் இதனால் பொருத்தமாதல் தெளியப்படும்

ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர் பாடு தற்குக் கொண்ட பாட்டுவகைகளுள் ஒன்று. ஆற்றுப்படையாவது ஆற்றின் கட்படுப்பது;  ஆறு என்பது வழி; படுப்பது செலுத்துவது. அஃதாவது, ஒருவர்க்குச் செல்லவேண்டும் வழி துறைகளைச் சொல்லித் தெரிவித்து அவற்றைப் பின்பற்றிச் செல்க எனச் செலுத்துவது என்பதாம்.  ஆகவே செல்ல வேண்டும் குறிப்பு உடைய ஒருவனுக்குச் சென்று பயின்ற ஒருவன் செல்லுதற்குரிய நெறியைத் தெரிவித்துச் செலுத்துவது ஆற்றுப் படையின் கருத்தாம்.

இக்கருத்தே முடத்தாமக் கண்ணியாரது பொரு நராற்றுப்படையிலும், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரது சிறுபாணாற்றுப்படையிலும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரது பெரும்பாணாற்றுப்படையிலும், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கோசிகனாரது கூத்தராற்றுப் படையிலும் அமைந்திருக்கிறது.  ஏனைப் புறத்திலும் பதிற்றுப்பத்திலும் காணப்படும் ஆற்றுப் படைகளும் இக்கருத்தையே குறித்து நிற்கின்றன.  இனி, (ஆசிரியர் தொல்காப்பியனார்), "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க் கறிவு றீஇச் சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமும்,"  என்று ஆற்றுப்படையின் இயல்பைப் பொதுப்படக் கூறினார் பின்வந்த சான்றோர் புரவலன் ஒருவனிடம் சென்று பெரும்பொருள் பரிசிலாகப் பெற்ற பொருநர், பாணர், விறலியர், புலவர் முதலியோருள் ஒருவன் ஏனைப் பரிசிலருள் ஒவ்வொரு திறத்தார்க்குப் புரவலனுடைய நாடு, ஊர், பெயர், பரிசில் முதலியவற்றை எடுத்தோதி அவன்பாற் சென்று தாம் பெற்றவாறே பெறுக எனச் சொல்லி விடுப்ப தென்றும், இவ்வாறு பாடும் பாட்டு ஆயிரம் அடிப் பெருமை உடைய தென்றும் கூறினார்.

இவ்வாறு இயன்றுவரும் ஆற்றுப்படைகள் பலவும், பரிசில் பெற்ற ஒருவன் பெறா தான் ஒருவனுக்குத் தான் பெற்ற பெருவளத்தையும் அதனை நல்கிய தலைவன் பாற் செல்லுதற்குரிய வழி துறைகளையும் எடுத்துச்சொல்லி அங்கே சென்று பெறுமாறு செலுத்துவது கருத்தாக அமைந்துள்ளன.  இது நிற்க. சிலர் ஆற்றுப்படையை வழி காட்டி போல்வதென்று கருதுகின்றனர்.  வழிகாட்டியென்பது ஆற்றுப்படைபோல வழிச்செல்வோனை அவ்வழியையே பின்பற்றிச் சென்று பயன்பெறுமாறு வற்புறுத்தும் நீர்மைய தன்று. ஆசிரியர் தொல்காப்பியனார்  “சென்று பயனெ திரச் சொன்னபக்கம்” என்று விளங்கக் கூறுவது ஆற்றுப்படையின் கருத்தா தலைத் தெளிதல் வேண்டும்.

இனி திருமுருகாற்றுப் படையில் வரும் ஆற்றுப்படைப் பகுதி ஏனை ஆற்றுப் படைகளிலும் ஓராற்றால் வேறுபட்டதாகும்.  ஏனைப் பொருநராற்றுப்படை, பாணாற்றுப்படை முதலியவற்றால் சிறப்பிக்கப் பெறும் தலைவர், மக்களிற் சிறந்த முடிவேந்தரும், குறுநிலத் தலைவருமாவர்.  அவர் நல்கிய பெருவளம் உலகியற் செல்வங்களாகும். ஆதலால், அவைகள் ஆற்றுப்படுக்கப்படுவோரால் பெயர் - கூறப்படுகின்றன.  பொருநனை ஆற்றுப்படுப்பது பொருநராற்றுப்படை; பாணனை ஆற்றுப்படுப்பது பாணாற்றுப்படை; கூத்தரை ஆற்றுப்படுப்பது கூத்தராற்றுப்படை; விறலியை ஆற்றுப்படுப்பது விறலியாற்றுப்படை; புலவரை ஆற்றுப்படுப்பது புலவராற்றுப்படை என வருவது காணலாம்.

முருகாற்றுப் படையில் வீடுபேறு கருதிய சான்றோர் ஒருவரை, முருகன் திருவருளால் வீடுபேற்றுக்குரிய திருவடி ஞானம் கைவரப்பெற்ற சீவன் முத்தரொருவர், முருகன்பால் ஆற்றுப்படுக்கின்றார்.  வீடுபேற்றுக்கமைந்த திருவருள் ஞானத்தை நல்குதலில் தலைசிறந்து நிற்கும் குரவன் முருகப்பெருமான் ஆதலால், ஆற்றுப்படைக்கு இடனாகின்ற வகையில் முருகப் பெருமான் திருப்பெயரால், இந்த ஆற்றுப்படை திருமுருகாற்றுப்படை என வழங்குகின்றது.  இவ்வாறு ஏனை ஆற்றுப் படைகளிலும் ஒரு வகையில் வேறுபட விளங்குவது பற்றி முருகாற்றுப்படையென்பது வேறுபொருள் கொள்ளும் வகையில் நிற்கின்றது.  இம்முருகாற்றுப்படை குறவர்கள் முருகனை வழிபடும் இடத்தை "முருகாற்றுப் படுத்த உருகெழு என்று குறிக்கின்றது.

முருகாற்றுப்படுத்த என்பதற்கு நச்சினார்க்கினியர் “பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின" என்று பொருள் கூறுவர்;  "பிள்ளையாரைத் தம் வழிப்படுத்தின'' என்பர் பிறர். ஆறு: வழியெனவும், படை, படுப்பதெனவும் பொருள்படுதலின், ஆற்றுப் படையென்பது வழிப்படுப்பது எனப் பொருள்படு மாறும் காணப்படும். படவே, முருகாற்றுப்படை என்பது முருகன் அருள் வழிப்படுவது என்று பொருள் தருமாறும் பெறப்படும். முருகனை வழிபடுவதாவது, முருகன் உறையும் இடமறிந்து சென்று வழிபடுவதென்பதாம்.  வழிபாட்டின்கண் முருகன் திருவுரு நலமும், திருவருள் நலமும், அவன் உறையும் திருப்பதிகளின் நலமும், வழிபடும் திறமும், வழிபாட்டின் இறுதியில் அப்பெருமான் போந்து அருள் வழங்குந் திறமும் நன்கு விளக்கப்படும்.  இச்சிறப்புக் கருதியே, இது சைவத்திருமுறைகளுள் பதினொராந் திருமுறையில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு:  dr.n.arul[at]gmail.com
-------


தேமொழி

unread,
Mar 22, 2021, 1:24:39 AM3/22/21
to மின்தமிழ்
51  -  “கைத்திறனும் கல்விச் செறிவும் – சிங்கப்பூர் சிந்தனை”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

முதுகலைத் தமிழிலக்கியம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முடிக்கும் சூழலில் பம்பாயைச் சார்ந்த கிளியா நிறுவனத்தில் திருமதி வித்யா சீனிவாசன் பரிந்துரையில் பணியில் சேர்ந்திருந்தேன்.  முதுகலைத் தமிழிலக்கியம் நிறைவாண்டில் எந்தையார் ஆய்வுப் படிப்புக்காக அமெரிக்கா செல்ல நீ முயலலாம் என்று அறிவுறுத்தினார்கள்.  அப்பொழுது சிங்கைத் தமிழாசிரியர் திருமதி இந்திரா கிருஷ்ணன் சென்னைக்கு அவ்வப்போது வருகை புரிந்து என் பெற்றோர்களிடம் சிங்கைப் பல்கலைக்கழகத்திலேயே ஒப்பிலக்கியத் துறையிலோ, மொழியியல் துறையிலோ முனைவர் பட்டத்திற்கு அருள் முயலலாம். பல்கலைக் கழகத்தில் பயிலும்பொழுதே சிங்கையிலுள்ள செய்தித்தாள்களிலோ, தொலைக்காட்சி நிறுவனத்திலோ சேர்ந்து பணியாற்றலாம். அதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கும் முகமாக என்னுடன் அருளை சிங்கைக்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறினார்கள். 
சிங்கையிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்வது எளிது என்றும் வலியுறுத்தினார்கள். 

எந்தையார் அடிக்கடி சொல்வது, ‘இலக்கியக் கல்வி பன்முகத் திறனும், நோக்கமும் கொண்டதாக அமைய வேண்டும். செயற்படுத்தும் வாய்ப்பும் செயல்திறனில் மேம்பாடும் என்ற வகையில் தமிழிலக்கியம் பயில வேண்டும். அறிதோறும் அறியாமை என்பது போல அன்றாடம் அறிவியற் புதுமை அலைகள் உலகெங்கும் வீசுகின்றன. நேற்று என்பது நாளைய வடிவமாக வரக்கூடாது. நேற்றைக்குப் பெயர் தமிழில் இறந்தகாலம் என்றுதான் சொல்வார்கள் என்பார்.  திருமதி இந்திரா கிருஷ்ணன் அழைப்பில் அணிகல வணிகச் செம்மல் சாந்தகுமாருடன் (A G குமார்) 21.06.1990-ஆம் நாளன்று முதன்முதலாக வெளிநாட்டுச் செலவு மேற்கொண்டேன்.  சிங்கையிலுள்ள டவுனர் சாலையிலுள்ள அடுக்ககத்தில் சரியாக ஒரு திங்களுக்குத் தங்கினோம். 
சிங்கையிலே பல உயர் அலுவலர்கள், பேராசிரியப் பெருமக்கள், இதழாசிரியர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர், வணிக வேந்தர்கள் எனப் பலரை திருமதி இந்திராவும் அவரது அருமைக் கணவர் தமிழ்ச்செம்மல் கிருஷ்ணனும் என்னை அறிமுகம் செய்து மகிழ்வித்தனர்.  பலர் தங்கள் கருத்துகளை எடுத்தியம்பினாலும், செயல்வடிவம் பெறுவதென்பது எட்டாத் தொலைவில் இருந்தது.  இதனூடே சிங்கையையும், மலேயாவையும் கண்டு களிப்பதும் பெருமகிழ்ச்சியளித்தன. தமிழகத்தில் இருப்பதுபோலவே காட்சியளித்தாலும், சிங்கையின் தூய்மை, புதுமை, கண்களைப் பளிச்சிட வைத்தன. 

திருமதி இந்திரா கிருஷ்ணன் வாயிலாக சிங்கையின் தமிழ்ப் பேரவையில் “சிங்கப்பூர் மருமகள்” என்ற நாடகத்தின் பாராட்டு விழாவில் 23.06.1990-இல் நான் வாழ்த்துரை வழங்கினேன்.  நாடகப் பாராட்டு விழாவிற்குப் பிறகு அதே நாளில் சிங்கையிலுள்ள ‘பார்க்’ ஹோட்டலில் டாக்டர் வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும், நான் உரையாற்றினேன். இக்கூட்டங்கள் அனைத்தும் முன்னதாகத் திட்டமிடப்பட்டவை அல்ல. அழைத்துச் சென்றவுடன் அறிவிப்பின்றிப் பேசிய கூட்டங்கள் ஆகும்.   சிங்கையில் எந்தையாரின் இனிய நண்பர் பெரும் பேராசிரியர் சுப. திண்ணப்பனை அவர்களின் இல்லத்திலேயே சந்தித்துத் தமிழிலக்கிய மேற்படிப்பு வாய்ப்புகள் தொடர்பாக அளவளாவினோம்.  அவருடைய திருமகன் அருண் திண்ணப்பன், அக்காலங்களில் என்னுடைய இனிய நண்பர் பார்த்திபனுடைய அமெரிக்க நண்பரும் ஆவார்.
 அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அருணின் வழிகாட்டுதல் சிறப்பாக அமைந்தது. 

சிங்கையில் மறக்கவொண்ணாத நிகழ்வு என்னவென்றால், ஜெருவோஸ் சாலையில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு நாங்கள் சென்றபொழுது (25.06.1990), நான் எடுத்துச் சென்ற குடையை மறந்து வைத்துவிட்டுத் திரும்பினேன். மீண்டும் 4 மணிநேரம் கழித்து அவ்வலுவலகத்திற்குச் செல்கையில் குடையை என்னிடமே மீளத் தந்தது கண்டு என் விழிகள் வியப்பில் உயர்ந்தன.  சிங்கையில் தமிழ் முரசின் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களைச் சந்தித்து நாளிதழில் பணியாற்றுவதற்குரிய வாய்ப்பினைப் பற்றி வினவினோம். அதற்கேற்ப ஓரிரு ஆங்கிலச் செய்திக் கட்டுரைகளை என்னை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து தருமாறு சொன்னார்கள். அதனையும் ஒருங்கே செய்தேன்.  ஆசிரியர் அரசு, சிங்கையிலேயே படித்துப் பணியாற்ற வேண்டுமென்றால் அங்குள்ள ‘O Level’ (பள்ளி நின்ற நிலைத்) தேர்வை எழுத வேண்டுமெனச் சுட்டிக் காட்டினார்கள்.

சிங்கையின் கோளரங்கத்தில் (30.06.1990) எங்களுடைய உடல் எடையை ஒரே நேரத்தில் பூமியிலும், செவ்வாய்க் கோளிலும் எவ்வளவு என்பதை ஒப்பிட்டுக் காண்கிற திறவுகோலைக் கண்டு வியந்தோம்.  பெலிஸ்டியார் சாலையிலுள்ள சிங்கை ஒலிபரப்புக் கழகத்தைச் சார்ந்த உயர் அலுவலர் திரு. எஸ்.பி. பன்னீர்செல்வம் நன்முயற்சியால், கண்காணிப்பாளர் N. K. நாராயணன் வழிகாட்டுதலில், 02.07.1990 அன்று சிங்கை வானொலியில் ‘தமிழ் அன்றும் இன்றும்’ மற்றும் ‘மொழிபெயர்ப்பும் அதன் விளைவுகளும்’ என்ற இரு தலைப்புகளில் ஒரு மணிநேரம் நான் பேசிப் பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது.  வானொலியில் தொடக்கமாக நான் பேசிய அவ்வுரைப்பகுதி இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. 

“சிங்காரத்தின் சிகரம் சிங்கப்பூர். தமிழ்க் கருத்துகளை இலக்கிய நயத்தோடு வரலாற்றுத் தேடலோடு, சமூகத் தூண்டுதலோடு வானொலி நிலையத்தார் தேனொலி பாய்ச்சுகிறார்கள்.  தமிழிளைஞனின் பார்வையில் இரு தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் பொருள்களுக்கு விலையுண்டு. ஆனால், வாழும் மக்களோ விலையுயர்ந்தவர்கள். நான் கற்ற பாடம் இங்கே பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் சிங்கையில் பெரும்பாலும் இல்லை என்பது.  எந்தக் காரியத்தை எந்தக்காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிடத் துடிக்கின்றனர்.  பரபரப்பான நடை, சுறுசுறுப்பான சிந்தனை, துறுதுறுவென்றிருக்கும் மூளை இவையே சிங்கப்பூர்.”  கணிப்பயிற்சி, தொலைத் தொடர்பியம், அடுப்படி மின் செப்பனீடு, தச்சுப்பணி, குளிர் வளிமக் குறை நீக்கம், காரோட்டுதல் முதலிய தொழில் நோக்கில் பாடங்கள் இலக்கியக் கல்வியில் இணைய வேண்டும்.  முதலுதவியும் தெரியும் முத்தமிழ்ப் புலமையும் வேண்டும் என்று பெருமிதமாக இங்கே பலர் இருப்பதைக் கண்டு வியக்கிறேன். மறந்தும், அரசைக் குறை சொல்லாத மனம் சிங்கப்பூர் மக்களைக் கடமை வீரர்களாக மாற்றியுள்ளது  என்று குறிப்பிட்டுத் தொடங்கினேன்.

சிங்கையிலிருந்து சாந்தகுமாரும் நானும் பேருந்திலேயே மலேயாவுக்குச் (05.07.1990) சென்றோம்.  அங்கே, எந்தையாரின் இனிய நண்பர் திரு. கோடிவேலும், அவர் மகன் வழக்கறிஞர் முரளியும் எங்களை வரவேற்று மலேயா, பினாங்கு, ஈப்போ, பட்டர்வர்த் ஆகிய இடங்களையெல்லாம் சுற்றிக் காட்டினார்கள்.  ஈப்போவில், கவிக்குயில் கலியபெருமாளைச் சந்தித்து, அவரின் இல்லத்திலேயே தங்கியதும் மறக்கவொண்ணா நிகழ்வாகும். கவிக்குயில் பல அறிவுரைகளை எனக்கு நல்கினார்.  அப்பொழுதே அவர் சொன்ன நல்லுரைகள் பல,  அப்பாவைப் பின்தொடர்ந்து செல், அவரின் களஞ்சியங்களை மறவாமல் கற்றுக் கொள். அவர் பேசுவதை உற்றுக் கவனி. அவரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகைப்படுத்துக. அவற்றின் ஒலி வடிவத்தை வரிவடிவமாக மாற்று, என்றெல்லாம் அறிவுறுத்தியது இன்றும் என் நினைவில் பசுமையாவுள்ளது.  அப்பாவைத் தொடர்ந்து ஏதாவது கேட்டால், எதற்குப் பதிவு செய்கிறாய். நேற்றைக்கு நடந்ததை மறந்து, ஏதாவது புதிதாகப் படித்ததை எனக்குச் சொல் என்றுதான் இன்றும் அறிவுறுத்துகிறார். அப்பா எவ்வளவு மறுத்தாலும், நாளைய உலகம் ‘ஏன் பதிவு செய்யவில்லை’ என்று கேட்கும் என்பதனால் முடிந்தவரை அவர் பேசிய (90) உரைகளையும், பல அறிஞர்களுக்கு வரைந்த (738) அணிந்துரைகளையும், பல்வேறு (400) கட்டுரைகளையும் தட்டச்சு செய்து இதுவரை திரட்டியுள்ளேன். 

கவிக்குயில் கலியபெருமாள் 07.07.1990-ஆம் நாளன்று நள்ளிரவில் புனைந்த 
VAN – கூட்டுந்து,  Ambulance - காப்புந்து,  Aeroplane - வானுந்து,  Helicopter - திருகு உந்து  போன்ற கலைச்சொற்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. தொலைபேசி யில் முதலில் அவர் சொல்வது இன்பமே சூழ்க எதிர்முனையில் சொல்வார்கள் எல்லோரும் வாழ்க என்று... எந்தையாரின் நண்பரான கவிதாயினி இராமநாயகம் குடும்பத்தினருடன் பட்டர்வர்த்துக்கும் அவர்களின் நண்பர் நார்மனுடன் பினாங்கு சென்றதையும் நினைத்துப் பார்க்கிறேன்.  சிங்கைக்கும் ,மலேயாவுக்கும் சென்ற வாய்ப்பை இன்றும் எண்ணிப் பார்த்தால் மீண்டும் எத்தனையோ முறை இந்த இரு நாடுகளுக்கு நான் சென்று வந்தேன் என்பதையும் எண்ணிப் பெருமைப்படுகிறேன். 
------------------------------------
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர்
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

இனி, “முருகப் பெருமான், காலை இளங்கதிரவன் கடற்கண் தோன்றுங்கால் திகழும் ஒளியைப் பொருந்தியவன்; தன்னை அடைந்தாரைத் தாங்கும் அழகு பொருந்தியது அவனது திருவடி; தன்னை வெறுத்துப் பகைத்தாரைப் பழிக்கும் வலிமிக்கது அவனது திருக்கை; கற்பால் மாசு மறு இல்லாதவர் அவன் தேவியர்; அவனது திருமார்பில் செங்கடம்பின் உருள் பூவால் தொடுக்கப்பட்ட தண்ணிய தார் கிடந்து புரளும்; திருமுடியில், சுடர்விட்டுத் திகழும் காந்தட்பூவாலாகிய பெருந்தண் கண்ணி இருந்து இனிய காட்சி வழங்கும்;  கடல் நடுவிற் புகுந்து, ஆங்கே வாழ்ந்த சூரனை அடியோடு தொலைத்த நெடுவேல் அவன்பால் இருந்து அவனது அடல்விளக்கி நிற்கின்றது; பகைவரான அவுணர்க்கு வலியும் அரணும் நல்கி வந்த மாமரத்தை வேரோடு தொலைத்ததினால் உண்டான மறுவில்லாத வெற்றியால், என்றும் அழியாத புகழ்பெற்றுச் செவ்வேலேந்தும் இந்த முருகனுடைய செம்மை விளங்கும் திருவடியை நீ நினைந்து, செம்மல் உள்ளம் பெற்றனை; அவ்வுள்ளத்தால் நலம்புரி கொள்கையை மேற்கொண்டு பிறவிக் கேதுவாகிய புலன்கள் வழிச்செல்லாது முருகன் திருவடிக்கண் சென்று சேரும் அருள் நெறியில் செல்லும் செலவையே நீ விரும்புகின்றாய்; அதனால் நன்னெறித்தாகிய நின் நெஞ்சின்கண் நேயமாகிய இனிய ஞானவேட்கை நன்கு கைகூடக், கருதிய பேற்றைக் கருதியவாறே இப்போதே பெறுவாய்" என்று சீவன் முத்தராகிய சான்றோர் முருகனது திருவடிஞானம் விழைந்து வந்த சான்றோர்க்கு உரைக்கின்றார்.

கேட்ட சான்றோர் தமது உள்ளத்தே, "முருகப்பெருமான் எங்கும் எல்லாமாய் இருக்கும் பரம் பொருளாதலால், எங்கே சென்று எப்படிக் காண்பது?' என எண்ண மிடுகின்றார். 
அதனை யவர் முகக்குறிப்பால் உணர்ந்து கொள்ளும் சீவன்முத்தர்,
"கூடல் நகர்க்கு மேற்கிலுள்ளதும், ஞாயிறு தோன்றிய காலைப்போதில், வண்டினம் போந்து ஒலிக்கும் மலர் நிறைந்த சுனையையுடையதுமான பரங்குன்றத்தில் நெஞ்ச மர்ந்து உறைவன்; அதுவேயன்றி, உலகத்து நன்மக்களது புகழால் உயர்ந்த திருச்சீரலை வாய்க்கு விசும்பாறாகச் செல்வதும் அவனுக்கு நிலைத்த பண்பாகும்;  தேவரும் முனிவரும் பிறரும் வந்து தன்னைக் காணும்படியாகத் திருவாவினன்குடியில் மடந்தையுடன் சின்னாட்கள் இருப்பன்; அதுவேயன்றி இரு பிறப்பாளர் தனக்குரிய ஆறெழுத்து மறையை ஓதி மலரிட்டு வழிபட அதனைப் பெரிதும் உவந்து திருவேரகத்தில் எழுந்தருளியிருத்தற்கும் உரியன்;  அதுவேயன்றிக் குறமகளிராடும் குரவைக் கூத்துக்கு முதற்கை கொடுத்து அவரோடு குன்றுதோறும் விளையாடுவதும் அவன்பால் நிலை பெற்ற பண்பு;  அதுவேயுமன்றி, ஊர்தோறும் மக்கள் செய்யும் திருவிழாக்களிலும், தன்பால் அன்புடையார் ஏத்துதற்கு அமைத்த இடங்களிலும், வேலேந்தி வேலன் வெறியாடும் இடங்களிலும், காடுகளிலும் காக்களிலும் அழகிய ஆற்றிடைத் தீவுகளிலும் குளங்களிலும் வேறுபல அழகிய இடங்களிலும், சதுக்கம், சந்தி முதலியவற்றிலும், புதுப்பூ மலரும் கடம்பு மரங்களிலும், மன்றங்களிலும், பொதியில்களிலும், கந்து நிற்கும் கந்துடை நிலைகளிலும், வேறுபிற இடங்களிலும் ஆங்காங்குத் தன்னை வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட எழுந்தருளுவன்" என்று கூறுகின்றார்.

அது கேட்டு மகிழ்ச்சியால் முகமலர்கின்றார் சான்றோர் அவரைச் சீவன்முத்தர் நோக்கி, “ஆங்காங்கு அவன் எழுந்தருளக் கண்டதும், அவனது தெய்வ வடிவு நோக்கி அஞ்சாமல் அன்புடன் முகனமர்ந்து துதித்துக் கைகூப்பித் தொழுது அவன் திருவடியில் தலை பொருந்த வீழ்ந்து வணங்கி;
செல்வ, 
ஆல் கெழு கடவுள் புதல்வ, 
மலைமகள் மகனே, 
மாற்றோர் கூற்றே, 
கொற்றவை சிறுவ,
பழையோள் குழவி, 
தானைத்தலைவ, 
மாலை மார்ப, 
புலவ, 
ஒருவ, 
மள்ள, 
அந்தணர் வெறுக்கை, 
சொன்மலை, 
மங்கையர் கணவ, 
பெருஞ் செல்வ,
குறிஞ்சிக் கிழவ, 
புலவர் ஏறே, 
பெரும்பெயர் முருக, 
இசை பேராள, 
பொலம்பூண் சேய், 
நெடுவேள், 
பெரும் பெயர் இயவுள்,
 மதவலி, 
பொருந, 
குரிசில், 
என்று இவ்வாறு யான் கூறும் அளவில் அமையாது மேலும் பல சொல்லி, 'நின் பெருமை அளந்தறிதல் மன்னுயிர்க்கரிது; நின் திருவடி பெற வேண்டி வந்தேன். நின்னோடு ஒப்பார் பிறர் இல்லாத மெய்ஞ்ஞானமுடைய வனே,'  என மொழிந்து, உன் மனத்திற் கருதும் கருத்தைப் புலப்படுத்துவாயாயின்,  அங்கே பலவேறு உருவுடன் குறியராகிய பல கூளியர் நின் கருத்தை உணர்ந்து கொண்டு விழா அயரும் களத்தின்கண் எழுந்தருளும் முருகன் திரு முன்னே வணங்கி நின்று, 'பெரும, மிக்க வாய்மையுடைய புலவன் ஒருவன் நின் திருவருளை இரந்து இனியவும் கேட்போர்க்கு நலம் பயப்பனவுமாகிய நின் புகழை விரும்பிப் பல சொற்களால் வாழ்த்திக் கொண்டு வந்துள்ளான்” என்று தெரிவிப்பர்.

உடனே முருகன் தெய்வத்தன்மையோடு கூடிய வன்மை பொருந்திய தன் வடிவின் வானளாவி நிற்கும் பெருமையொடு எழுந்தருளிக் கண்டார்க்கு அச்சம் பயக்கும் தன் உயர் நிலையைத் தன்னுள் அடக்கிக்கொண்டு பண்டு தான் கொண்டிருந்த தெய்வமணங் கமழும் இளமைக் கோலத்தைக் காட்டி, ''வீடுபேற்றுக்குரிய ஞானம் வேண்டி வந்த நின் வரவினை அறிவேன் ;  அஞ்சற்க,'' என்று அன்பு பொருந்திய நன் மொழிகளை யருளிச்செய்து, கடல் சூழ்ந்த இந்நில வுலகத்து வாழ்வோருள் நீ ஒருவனே வீடுபெறத்தக்கவன் என்று பலரும் விளங்கத் தெரியுமாறு விழுமியவற்றிற் கெல்லாம் விழுமியதும் பிறர் பெறுதற்கரியதுமாகிய திருவருள் ஞானத்தை, மலை கிழவோனாகிய அவன் நல்குவன்," என்று கூறுகின்றார்.

இங்கே கூறிய இப்பொருளைத் தன்னகத்தே கொண்ட இத்திருமுருகாற்றுப் படையில் திருவருள் ஞானம், "விழுமிய பெறலரும் பரிசில்" எனப்படுகிறது. நச்சினார்க்கினியர் அதனைக் கந்தழி என்று கூறி, “கந்தழியைப் பெற்றானொருவன் அதனைப் பெறா தான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப் படுத்துக் கூறுவான்,'' என்றும், 'கந்தழியாவது ஒருபற்று மற்று அருவாய் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்," என்றும், “இதனை 'உற்ற ஆக்கையின் உறு பொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' என அதனை யுணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க,'' என்றும் கூறினர்.  

கந்து பற்றுக் கோடு எனப் பொருள்படுவதாகலின், கந்தழியாவது சார்பில தாதுகாத்தருள் என்பதாகக் கொண்டார்.  பரம்பொருளை நல்கப் பெறுவ தென்பது, அதற்குரிய ஞானத்தைப் பெறுவதாம். பரம்பொருளை எய்தினோர் மீள உலகிற்கு வாராராதலால், நல்குதற்கும் பெறுவதற்கும் உரியது பரமஞானமே யாம் எனத் தெளிதல் வேண்டும். ' பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர், பதார்த்தங்கள் பாரார்,'' (சிவ. சித்தி) எனப் பிற்காலத் தான்றோர் இதனை விளங்கக் கூறியிருப்பது காணலாம்.

தேமொழி

unread,
Mar 28, 2021, 1:51:56 AM3/28/21
to மின்தமிழ்

52  -  “பட்டிமண்டபம் ஒரு பல்கலைக்கழகமே!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய மாலை நேர நிகழ்ச்சிகளாக அப்பாவின் பட்டிமன்ற, வழக்காடு மன்றங்கள் கண்டு கேட்பதை வழக்கமாகப் பேணி வந்தேன். அப்பா ஆற்றிய ஆற்றொழுக்கான உரைகளைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தேன். தங்குதடையின்றி எல்லாக் கூட்டங்களிலும் எவ்விதக் குறிப்புகள் இன்றி, தான் விரும்பிய கவிஞர்களின் கவிதைகளை, சங்க இலக்கியம், பாரதியார், பாவேந்தர் பாடல்களை அருவியெனச் சொல்லிக் காட்டிய விதத்தை கண்டு விழிகள் வியப்பில் விரிந்தன.   அம்மா அடிக்கடி சொல்வார்கள், ‘அப்பாவைப் பார், அவர் பேசும் விதத்தைப் பார். எவ்வளவு பாடல்களை அவர் மனப்பாடமாகச் சொல்லும் திறனைக் கேட்டு நீ வியப்பது பெரிதல்ல. அவருடைய கல்வியாற்றல் எவ்வளவு பெரிய ஆற்றல் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். எதைப் படித்தாலும் பசுமையாக நினைவில் வைத்துக்கொண்டு அவர் சொல்லும் மேடைத் திறத்தை நீயும் கடைப்பிடிக்க வேண்டும்’  என்று அடிக்கடி வலியுறுத்துதியதை நான் இன்றும் நினைந்து நெகிழ்கிறேன்.

அப்பாவின் கம்பன் கழக உரைகளெல்லாம் சிறப்பாக அமையும். அவர் பேசிய கம்பன் கழக சென்னைக் கூட்டங்கள் ஏ.வி.எம். இராஜேசுவரி மண்டபத்திலும், புதுவையில் நடைபெற்ற கம்பன் கழகக் கூட்டங்கள் அளப்பரியன. புதுவை கம்பன் கழகச் செயலாளர், அண்ணல் அருணகிரி, வழக்கறிஞர் முருகேசன் ஒருங்கிணைத்து நடத்துகின்ற கூட்டங்கள் சிறப்பாக நடைபெறும்.  புதுவை அரசின் முதல் அமைச்சர் தொடங்கி அனைத்துப் பெருமக்களும் கம்பர் கழக அறிஞர் பெருமக்களின் தனித்திறனைப் பாராட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மதிய விருந்து, அல்லுணா நேர்த்தியாக நடத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் பொழுது பேராசிரியர் ஒருவர் என்னைப் பார்த்து, (1990-இல்) ‘அருள்! பட்டிமன்றம் பேசி விட்டாலே தமிழ் வளர்ந்து விடும் என்று நீ நினைக்கிறாயா?’ என்று தொடர்ந்து கேட்பார். நான் சொல்வேன், ‘பட்டிமன்றம் பேசுவதும் ஒரு கலைதான் அக்கலையை நாம் போற்ற வேண்டும். வருங்காலத்தில் பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு இந்திய அரசே பத்மஸ்ரீ விருது வழங்கும் பொற்காலம் வரும்’ என்றேன். அவ்வாறே, 2010-ஆம் ஆண்டில் எந்தையாருக்கும், 2021-ஆம் ஆண்டிற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. பெரும்பேராசிரியர் ப. நமசிவாயம் எந்தையாருக்கு பச்சையப்பன் கல்லூரியில் ஓராண்டு மூத்தவர். நயமாகவும் - நளினமாகவும் - நகைச்சுவைப் படரப் பேசுபவர். என் மீது பேரன்புசொரிந்தவர். அவர் திடுமென்று கேட்டார். நீ எப்படி இங்கே வந்தாயென்று, அப்பாவுடன் வந்தேன் பட்டிமண்டபம் பார்க்கவும் - கேட்கவும் ஆசையென்றேன். ஆமாம் எந்த அணி உனக்குப் பிடிக்கும்? உங்க அப்பா அணிக்கு பாலசந்தர் அணி என்று பெயர். மதுரையில் வருகிற அணிக்கு பாரதிராஜா அணி என்று பெயர் என்று சொல்லி மகிழ்ந்தார். பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அப்படியானால் நீ பாலு மகேந்திரா அணி, தாம்பரம் பேராசிரியர் இராசகோபாலன் வாதிடுவது என்னைக் கவரும் என்றேன். அப்படியானால் நீ பார்த்திபன் அணி என்றார். என்ன இப்படி சினிமா பெயர்களையே சொல்லுகிறீர்களே என்றேன்.  பட்டிமண்டபம் பாதி சினிமா போலத்தானே நடக்கிறது என்றார். பிறகு சிரித்துக் கொண்டே மேடையில் சொன்னார், நடிகை விஜயகுமாரி மாதிரி இருப்பார்களே அவர்கள் தானே கண்ணகி என்று என்னை மாணவன் ஒருவன் கேட்கிறான். நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருப்பாரா வ.உ.சி. என்று கேட்கிறான் இன்னொரு மாணவன் என்றதும் அரங்கே அதிர்ந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறளார் முனுசாமி, வாகீச கலாநிதி கிவஜ, பேராசிரியர் சீனிவாச இராகவன், பேராசிரியர் எஸ்.ஆர்.கே.(எசு இராமகிருஷ்ணன்,) பேராசிரியர் அ.சா.ஞா., புலவர் கீரன் இப்படி ஒரு மூத்த அறிஞர் தலைமுறை தொடங்கி வைத்தது தான் பட்டிமண்டப அரங்கம் .
pattimandram speekers.jpg
எந்த ஒரு கருத்தையும் விளக்குவது, கதைகளால் மறுப்பது, விடைகளால் சிக்கலை விடுவிப்பதும், பட்டிமண்டபத்தின் வாதமாக அமைந்து இலக்கியத்தில் திறனாய்வுப் போக்கை வளர்த்தது. நீதியரசர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள் என்ற உயர்நிலையில் பங்கு கொண்டிருந்த இளையோர்கள் அனைவரும் பட்டிமண்டப பேச்சாளர்களாய் இருந்ததையும் நான் கேட்டதையும் எண்ணியெண்ணி மகிழ்கிறேன்.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யனும், உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. இராமசுப்பிரமணியமும் பட்டிமண்டபத்தில் பங்கேற்றவர்களே. இன்று நாடறிந்த வழக்கறிஞர்களும், சொல்வேந்தர்களும் பட்டிமன்றத்தில் பேசிய காலம் ஒன்று உண்டு. பல்கலைத்திலகமாக பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் மாமணியாகிய திருமதி சுமதி இவர்களெல்லாம் இன்றும் பேசிவரும் பெருமை உடையவர்கள். பட்டிமன்ற பேச்சு போன்ற மிக சிறந்த உரைகளை எல்லாம் கேட்டு வளர்ந்த விதத்தைக் கண்டு நான் பெருமைப்படுகின்றேன். அப்பாவைப் போலவே பேசுகின்ற ஆற்றல் படைத்த பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம், பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் ஆற்றும் அறிவார்ந்த உரைகளைக் கேட்டு இன்புற்றேன்.  கனிவாக, தன் கருத்துக்களை வலியுறுத்தி மென்மையாக ஆணித்தரமாகப் பேசுகின்ற பேராற்றல் பேராசிரியர் தெ.ஞா.வின் தனிப்பெரும் சிறப்பாகும்.  மாநிலக் கல்லூரியில் மாணவராக இருந்தபொழுது எங்கள் கல்லூரியின் தமிழ் மன்றத்திற்கு அவரைப் பேசவைக்க அவருடைய அண்ணாநகர் இல்லத்திற்குப் பேராசிரியர் ஷேக்மீரானும், ஆண்டவரும் நானும் சென்றிருந்தோம்(1987). அப்போது அவர் சொன்னார். மாணவர்களுடைய தமிழ் உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். நீங்களெல்லாம் ஆழமாகப் படித்து கல்வியுலகில் முன்னேற வேண்டும். ஒரு மணிநேர நிகழ்ச்சியை நீங்களெல்லாம் அமைதியாகக் கேட்கும் பக்குவம் இன்னும் பெறவில்லை. கூச்சலும் குழப்பமுமாகவேதான் கல்லூரித் தமிழ்மன்றக் கூட்டங்கள் நடைபெறுவதைக் கண்டு நான் வருந்துகிறேன். நான் ஒரு மணிநேரம் பேசுவதற்குப் பல மணிநேரம் பல கருத்துகளைப் படித்து ஆய்ந்து சொல்வதற்கு விரும்புகிறவன் என்று அன்றே அவர் சொன்னதுதான் அவருடைய நல உரைகளின் வெற்றியாகும்.

பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் பட்டுச் சட்டை அணிந்து கொண்டு மிக அழகாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு, தன்னுடைய சிகையை மிக நேர்த்தியாக வாரிக்கொண்டு அவர் கலகலப்பாகப் பேசுகின்ற காட்சிகளும், அவர் ஒருமுறை கம்பன் கழகத்தில் தயரதனை ஷேக்ஸ்பிரின் லியர் மன்னனுடன் ஒப்பிட்டு ‘King Lear is a tragic hero’ என்று ஆங்கிலத்தில் சொன்ன விதத்தில் நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். அவர் ஒவ்வொரு வரியையும் மிக அழகாக நேர்த்தியாகப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்த பெரும் பேராசிரியர் ஆவார்.   அவ்வண்ணமே, மதுரைப் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம், முதல்வர் திருமதி இளம்பிறை மணிமாறன், பேராசிரியர் திருமதி சரசுவதி இராமநாதன், வங்கி அலுவலர் திருமதி உமையாள் முத்து, கல்லூரி முதல்வர்கள் திருமதி சாரதா நம்பி ஆரூரன், திருமதி உலகநாயகி பழநி, பேராசிரியர் அரங்க இராமலிங்கம் உரைகளெல்லாம் எங்கள் வகுப்பாசிரியர்களின் பாடங்களை விட நுட்பமாக அமைந்திருந்தன.

கம்பன் கழகக் கவியரங்கத்தில் நாவலர், பொற்கிழிப் பாவலர் சொ.சொ.மீ. சுந்தரம், கவிஞர் மரியதாஸ் போன்றோரின் கவிதைகள் என்னைக் கவர்ந்தன. கவித்துவ வரிகளை விட மானுட நம்பிக்கைகளையே தம் மூச்சாக அமைத்துக் கொண்டு, நேர்த்தியாக எந்தையாருடன் உரையாற்றிய பெருமாட்டிதான் திருமதி சாவித்திரி இராகவேந்திரா ஆவார்கள்.  இயல்பான மேடைத் தமிழும், எளிமையான சொற்களிலும், எதிரிலிருப்பவரை ஈர்த்த உரையாளராகத் திகழ்ந்தார்கள். ஒருமுறை அவர்கள் கூட்டத்தில் சொன்ன கருத்து இன்றைக்கும் பொருள்பொதிந்த கருத்தாகவே அமைந்துள்ளது. ‘கைம்பெண்ணுக்கு மறுமணம் நடந்தது. அவருடைய புதிய கணவர் மறைந்த தன் முதல் மனைவியின் ஒளிப்படத்தைச் சுட்டிக் காட்டி, அக்காவை வணங்கு என்று சொன்னாராம். இதே கருத்தை மாற்றி, மறுமணமான அக்கைம்பெண் தன் புதிய கணவரிடம், மறைந்த அத்தானின் ஒளிப்படத்தைச் சுட்டிக்காட்டி, அண்ணனை வணங்குவோம்’  என்று சொல்லி பார்வையாளர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றிக் காட்டிய புரட்சிப் பெண்மணியாவார். அவர்களுடைய அறிமுகத்தால் தான், நான் தில்லிக்குச் சென்று, பிரதமர் இராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நாளைய பட்டிமன்றங்களையெல்லாம் செவ்வனே விழாக்குழுவினர் நடத்துவதற்கு அறிவுரைகளையும் நல்கிப் பல பேச்சாளர்களுக்கு அதிகமான மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆற்றுப்படுத்திய பெருமை திருமதி சாவித்திரி இராகவேந்திராவைச் சாரும் என்றால் மிகையாகாது.

விண்மீன்களுக்கு நடுவில் முழு நிலாவாக இலக்கியச்சுடர் த இராமலிங்கம் தனிப்பட உயர்ந்து நின்றார். அவருடைய உரைத்திறம் என்ற உலைக்கூடத்தில் தீட்டிய ஈட்டிகள் சில மிளிர்ந்தன. அறிஞர் அமெரிக்கா கண்ணன் ஐ.நா.வில் சென்று அமர்ந்திருக்கிறார். ஆங்கிலமும் தமிழும் அவரிடம் ஏவல் கேட்கும் யுக்தி குறிப்பிடத்தக்கது. எங்கே பேசினாலும் தன் எழுச்சியான உரையால் பகுத்தறிவு பார்வையோடு அணுகி தமக்கையார் வழக்கறிஞர் அருள்மொழி தன் வாதத்திறமையால் அவையை வியக்கச்செய்வார்.  நிமிர்ந்த நடையோடு இலக்கிய உணர்வோடும் திகழ்ந்த கவிஞர் நிர்மலா சுரேஷ் மண்டபங்களுக்கு ஒளி கூட்டினார். அந்நாளிலேயே தன் நகைச்சுவையாலும் கருத்துரையாலும் ஒளிர்ந்த மணிகண்டன் - மோகனசுந்தரம் குறிப்பிடத்தக்கவர்கள்.இப்போது சிம்மாஞ்சனாவின் முழக்கம் தான் எங்கும் ஒலிக்கிறது.

-----

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர்
திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி

இனி, இத்திருமுருகாற்றுப்படையில் அடங்கியுள்ள பொருளைக் காணுமிடத்து, முதற்கண் முருகனுடைய உருநலம், செயல் நலம் கூறுவதும்; பின்னர் அவன் எழுந்தருளும் பரங்குன்றம் முதலாக வரும் இடங்களைக் கூறுவதும்; பின்பு இறுதியாக முருகனை வழிபடும் திறம் கூறுவதும் அவ்வழிபாட்டையேற்று அவன் எழுந்தருளிக் காட்சி வழங்கியருளுவது கூறுவதும் காணப்படும்.  முருகப் பெருமானுடைய உரு நலன் செயல் நலன் ஆகியவற்றை திருமுருகாற்றுப் படையின் கருப்பொருட் பகுதியில் கண்டோம்.
இனி, அவன் எழுந்தருளும் இடங்களைக் காணலாம்.

மதுரை மாநகர்க்கு மேற்கில் உள்ளது; மதுரை மாநகரின் வாயிலில் போர்குறித்து நெடுந்கொடி நிறுவப்பட்டிருக்கிறது;  கொடியில் சிறியதொரு பாவையும், பந்தும் தொங்கவிடப் பட்டுள்ளன. நகரவாயில் பகையச்சமின்றித் திறந்தே கிடக்கிறது. பொருதற்குக் கருதும் பகைவரும் இல்லையாயினர். வாயிலைக் கடந்து சென்றால் திருவீற்றிருக்கும் கடைத்தெரு உளது; அதற்கப்பால் இருமருங்கும் மாடங்கள் நிற்கும் நெடுந்தெரு நிலவுகிறது. இத்தகைய சிறப்புடன் திகழும் மதுரைமாநகரின் மேற்கில் வளவிய சேறு பரந்தநெல் வயல்கள் காட்சி நல்குகின்றன. அகன்ற அவ்வயல்களிடையே தாமரை மலர்ந்து விளங்குகின்றது. அவற்றிற் படிந்து வண்டுகள் தேனுண்ணும்; இந் நிலையில் பகற்பொழுது மறைதலால் தாமரை குவிந்துவிடும்; அப்போது தேனுண்டு கிடக்கும் வண்டு அம்மலரிடத்தே உறங்குகிறது. விடியலில் அவ்வண்டு வெளிவரும், அப்போது நெய்தல் புதுப்பூ மலர, அதனுள் அவ்வண்டு படிந்து தா தளைந்து தேனுண்ணும்; இதற்குள் ஞாயிறு எழுந்துவிடும். உடனே அவ்வண்டு பரங்குன்றத் துக்குச் சென்று அங்குள்ள சுனையில் மலர்ந்திருக்கும் நீலமலர்களின் தேனையுண்டு சூழ்வந்து பாடும். இத்துணை இயற்கை நலம் சிறந்த பரங்குன்றத்தில் முருகன் விரும்பி உறைகின்றான். திருப்பரங்குன்றத்தில் அமர்ந்துறையும் முருகப் பெருமான், திருச்சீரலைவாய்க்கு யானையேறிச் செல்வன். அந்த யானை நெற்றியிலே பட்டமும், பக்கத்தில் மாறியொலிக்கும் மணியும் கட்டப்பெற்றது; கூற்றத்தையொக்கும் வன்மையும் காற்றையொத்த கடுநடையும் உடையது.

இதன் மேல் காட்சியளிக்கும் முருகனுடைய சென்னியில் பலவகை ஒளிமிக்க மணிகள் இழைத்த முடியிருந்து அழகு செய்யும்; அவன் காதுகளில் அணிந்துள்ள மகரக் குழைகள், முகம் முழுத்திங்கள் போல இருத்தலால், முழுமதியைச் சூழ்ந்து திகழும் விண்மீன்கள் போல விளங்குகின்றன; தத்தம் கொள்கையில் தப்பாது, மேற்கொண்ட தொழிலைச் செய்து முடிக்கும் திறலுடையவர் சிந்தை யின்கண் அவனுடைய திருமுகம் ஒளிவிளங்கித் தோன்றும்; முகம் எனப் பொதுப்படக் கூறினும், அம் முகம் ஆறெனக் கொள்ளல் வேண்டும். 

திருமுகங்கள் ஆறனுள், ஒருமுகம், புறவிருளிலே அழுந்திக் கிடக்கும் உலகம் குற்றமின்றி விளங்குமாறு பல வேறு ஒளிக்கதிர்களைப் பரப்பி ஞாயிறுபோல ஒளிசெய்யும்; ஒருமுகம், தன்பால் அன்பு செய்யும் அடியவர்கள், தன்னை வழிபட அவ் வழிபாட்டை மகிழ்ந்தேற்று அவர்கள் விருப்பத்துக்கேற்ப இனிதொழுகி, அவர் வேண்டும் வரங்களை அன்புடன் நல்குகின்றது; ஒருமுகம் மறைகளில் விதித்த முறையில் தவறாமல் அந்தணர்கள் செய்யும் வேள்வி குறித்து அதற்குத் தீங்கு வாராதபடி பாதுகாக்கின்றது; ஒருமுகம், நூலறிவாலும் இயற்கையறிவாலும் உணரப்படாத உண்மைப் பொருளை, இருள் நீங்கத் தண்ணிய நிலவினைப் பொழிந்து விளக்கும் கலைநிறைந்த திங்களைப் போல், அறியாமை நீங்கத் தண்ணிய அருளொளியைச் செய்து உண்மை ஞானத்தைத் தலைப்படுவிக்கின்றது; ஒருமுகம், அன்பராயினாருடைய பகைவரை வலியழித்து அவர் செய்யக் கருதும் போரைக்கெடுத்து அதுவே வாயிலாகக் கறுவு கொண்ட நெஞ்சத்தால் அவர் செய்யும் களவேள்வியை நிகழச் செய்கின்றது; ஒருமுகம், குறவருடைய இளமை நலங் கனிந்த மகளும், கொடிபோன்ற இடையையுடையவளுமாகிய வள்ளியுடன் மகிழ்ச்சி கொண்டாடுகின்றது.

இங்ஙனம் விளங்கும் முகங்கள் ஆறுக்கும் ஏற்ப, அவனுடைய கைகள் பன்னிரண்டும் முறையே பணி புரிகின்றன; அகன்றுயர்ந்த அவனது மார்பின்கண் சிவந்த வரிகள் கிடந்து சிறப்புச் செய்கின்றன. வெற்றி யாலும் கொடையாலும் வீறுமிக்குப் புகழால் அவனுடைய தோள்கள் உயர்ந்திருக்கின்றன. புறவிருளை நீக்கும் திருமுகத்திற்கேற்ப, ஒருகை ஞாயிற்றொளியின் மிகுதியைத் தாங்கி விண்ணிடத்தே ஞாயிறோடு திரியும் முனிவர் களைத் தாங்கிச் செல்ல, ஒருகை இடையிலே ஊன்றி யிருக்கும், யானை மேல் தோன்றி வரங்கொடுக்க வரும் திருமுகத்திற்கேற்ப ஒருகை அங்குசம் ஏந்த, ஒருகை துடையின்மேல் கிடக்கும். அந்தணர் வேள்வி காக்கும் திருமுகத்துக்கியைய ஒருகை கேடகத்தையேந்த, ஒருகை வேலைச் சுழற்றிக் கொண்டிருக்கும். உண்மை ஞான முணர்த்தும் திருமுகத்துக்கொப்ப ஒருகை மார்பின்கண் ஞானக்குறிப்பொடு விளங்க, ஒருகை அம்மார்பின் மாலையோடே அழகாகத் தவழ்ந்து கிடக்கும்; களவேள்வி காணும் திருமுகத்துக்கேற்ப, ஒருகை தான் அணிந்த கொடியுடனே மேலே சுழன்று கொண்டிருக்க, ஒருகை மணிகள் மாறி மாறி யொலிக்கச் செய்யும்; வள்ளியொடு நகைமகிழும் திருமுகத்துக்கமைய ஒருகை நீல முகிலை மழை பெய்விக்கும்.

தேமொழி

unread,
Apr 23, 2021, 2:07:46 AM4/23/21
to மின்தமிழ்
53  -  “இருந்தமிழே உன்னால் இருந்தேன்!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் தணியாத ஆர்வம் கொண்டவன் நான். என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே என் நினைவுகள் அந்தத் திசையிலேயே சிறகடித்தன. வள்ளியம்மாள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் போதே, ‘சித்தார்த்தா மீண்டும் மனக்குழப்பமா’?, என்று புத்தரைப் பற்றிய ஒரு பக்கக் கட்டுரைப் பகுதியை மனப்பாடமாக ஒப்பித்துப் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன்.  பத்தாம் வகுப்பு பயிலும் பொழுது என் மாமா அறிஞர் குமரவேலன் எழுதிய ‘17ஆம் நாள்’ நாடகத்தில் துரியோதனனாகப் பேசிய வசனங்களும் மறக்க முடிவதில்லை.

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியத் துறையில் 1985இல் சேர்ந்த பொழுது அவ்வாண்டு இறுதியில் என்னுடைய தந்தையார் என்னை அழைத்து ‘பேசுவதைக் காட்டிலும் பல நூல்களை நீ தொடர்ந்து படிக்க வேண்டும், பல பாடல்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ‘கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவாய்’ என்பது போல பல நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். என்னிடம் முதன்முதலாக தந்தையார் கொடுத்து படிக்கச் சொன்ன புதினம், காலத்தால் அழிக்க முடியாத முதல் புதினமான (23.08.1879) பிரதாப முதலியார் சரித்திரம் தான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான் படிக்கும் முதல் புதினமும் இதுதான் தமிழ் உலகத்திற்கும் வெளிவந்த முதல் புதினமும் பிரதாப முதலியார் சரித்திரமே ஆகும்.

நீதியரசர் வேதநாயகம் பிள்ளையின் (1826-1889) நூலிலுள்ள அருமையான பகுதி என்னை வியக்க வைத்தது.
“பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும், பாடசாலையை விட்ட பிற்பாடு, தானே படிக்கிற படிப்பு மேற்கட்டத்துக்குச் சமானமாயுமிருக்கின்றது.
பூட்டி வைத்திருக்கிற பொக்கிஷத்திற்குத் திறவுகோல் கொடுப்பதுபோல, எந்த புத்தகத்தை வாசித்தாலும், பொருள் தெரிந்து கொள்ளும்படியான ஞானத்தைத் தரும்.
இனிமேல் நீ உன்னுடைய முயற்சியால் அக்கருவூலத்தைத் திறந்து நீ நிறைய படிக்க வேண்டும்”
என்ற அப்பொன் வரிகள் நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்து விட்டது.

இவ்வரிகளைப் படித்தபொழுது அப்பா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை தெரிந்து வியந்தேன். ஒரு நீதியரசர் தன் புனைக்கதையில் உண்மை வரிகளைப் படம் பிடித்துள்ளார் என்று காணும்போது என் நெஞ்சம் பதறியது.அவ்வரிகள்:
“தமிழ் நியாயவாதிகள், தமிழில் வாதிக்காமல் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களென்று கேள்விப்படுகிறோம். தேசமொழியும் தமிழ்! வழக்காடு மன்றத்திலும் தமிழ்! நீதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலும் தமிழர்! மற்ற கட்சிக்காரர்களும், வக்கீல்களும் தமிழர்களே! இப்படியாக எல்லாம் தமிழ்மயமாயிருக்க ஏன் வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை? தாய்மொழி பேசத் தெரியாமலிருப்பதைப்போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா? ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான பிரதிபதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்லுவது அவர்களுடைய தெரியாமையல்லாமல் உண்மையல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால் பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா? வழக்குமன்றங்கள் நாடக சாலையாகத் தோன்றுகின்றனவேயல்லாமல் நியாயசபையாகத் தோன்றவில்லை. ஆங்கிலத்தில் வாதிக்கிற நியாயாதிபதிகள் தமிழ் நாட்டையும், தமிழ் மொழியையும், மற்ற வக்கீல்களையும், கட்சிக்காரர்களையும், அனைத்து மக்களையும் மெய்யாகவே அவமானப்படுத்துகிறார்கள்”
என்று 1857-இல் எழுதியிருப்பதைப் படிக்கும்போது அவலமாகவே இன்றும் உள்ளதே என்றுதான் புலம்பத் தோன்றுகிறது.

ஏட்டுக் கல்வியைத் தவிர புதினம், கவிதை, கட்டுரை, நாடகம், சங்க இலக்கியம், சமயம், அறிவியல், தத்துவம் ஆகியவையெல்லாம் அவ்வப்போது படிப்பதுதான் படிப்பாக அமையும். ஒருவனுக்குக் கல்வி, அறிவு, தெளிவு இருந்தால் தான் அவன் முழு மனிதன் என்றே கருதப்படுவான். எதையும் நான் படிப்பேன் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டால் நம்மை மரணத்திலிருந்தும் கூட அது எழுப்பி விடும் என்பார்கள். இப்பொழுதெல்லாம் எனக்குள்ள ஆசை உலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் எப்படியாவது படித்து விட வேண்டும் என்பதுதான்.

இவ்வரிகளைக் கண்ணும் காதும் பதித்துக் கொண்ட கருத்துக் கோவை என்ற தலைப்பில் 18.12.1985 அன்று பதிவிட்டு எழுதியதை நினைத்து மகிழ்கிறேன். எப்பொழுதும் எந்த நூலைப் படித்தாலும் அதில் வருகின்ற சிறப்பான வரிகளையும், எனக்குப் பிடித்த கருத்துக்களையும் என்னையறியாமல் கோடிட்டு வரைவதும், பல கருத்துக்களை நான் தனியாக எழுதி வைத்திருந்ததை மீண்டும் என்னுடைய நினைவு ஓட்டத்தில் மீட்டெடுப்பதற்கு இது நல்ல வாய்ப்பாயிற்று.

இவ்வுலகத்தில் எதையும் தமிழில் சொன்னால், நிச்சயமாக அச்செய்தி பொன்னாகும். அதுபோல் சரித்திரங்களையெல்லாம் தமிழில் அழகாக, முதன் முதலாகப் புதின வகையில் எழுதிக் காட்டி, வெற்றி பெற்று எல்லோருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் கல்கி (09.09.1899 - 05.12.1954) ஆவார். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘நூறு கடல்களையுடைய நூதனமான கரை’ எனலாம். அவருடைய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் வரும்,
“தாங்கள் சொல்லிப் பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன். ஆயிரம் சாம்ராஜ்யங்கள் என் வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற்காகத் தியாகம் செய்வேன். இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் சித்தமாயிருப்பேன். கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன். அத்தியந்த நண்பர்களின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால் போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்... !

இல்லையெனின் கடல்களுக்கு அப்பாலுள்ள பவழத்தீவிலிருந்து விலைமதிக்க முடியாத பவழங்களைக் கொண்டு வரச் சொல்லுங்கள், ஆழ்கடலின் அடியில் இருந்து முத்துக்களைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மேரு மலையின் உச்சிச்சிகரத்திலே ஏறிச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மேக மண்டலத்துக்கு மேலே பறந்து நட்சத்திரங்களைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்து ஆரம் தொடுத்துத் தங்கள் கழுத்தில் போடச் சொல்லுங்கள். பூரண சந்திரனைக் கொண்டு வந்து தங்களுடைய முகம் பார்க்கும் கண்ணாடியாக்கித் தரும்படி சொல்லுங்கள்”
என்ற கல்கியின் வனப்பு வரிகள் என்னை அக்காலங்களில் மிகவும் கவர்ந்தன.

மீண்டும் அதே பொன்னியின் செல்வன் புதினத்தில் இயற்கைக் கோலத்தை பேராசிரியர் கல்கி புனைந்து காட்டும் தேன்சுரக்கும் வரிகள்:
“பின்பனிக்காலம் வழக்கத்தை விட விரைவாக விடை பெற்றுக் கொண்டு சென்றது. தென்றல் என்னும் தெய்வ ரதத்தில் ஏறிக்கொண்டு வசந்த காலம் வந்தது. பைங்கிளிகள் மாமரங்களில் குங்கும நிறத் தளிர்களுக்கு அருகில் தங்கள் பவள வர்ண மூக்குகளை வைத்து ஒத்திட்டுப் பார்த்தன. அரச மரங்களின் தங்க நிறத் தளிர்கள் இளங்காற்றில் அசைந்தாடி இசை பாடின. புன்னை மரங்களிலிருந்து முத்துப்போன்ற மொட்டுக்களை உதிர்த்துக் கொண்டு குயில்கள் கோலாகலமாகக் கூவின. இயற்கைத் தேவி உடல் சிலிர்த்தாள். பூமாதேவி குதூகலத்தினால் பொங்கிப் பூரித்தாள். இலைகள் உதிர்ந்து மொட்டையாகத் தோன்றிய மரங்களில் திடீரென்று மொட்டுக்கள் அரும்பிப் பூத்து வெடித்தன. மாதவிப் பந்தல்களும், மல்லிகை முல்லைப் புதர்களும், பூங்கொத்துக்களின் பாரம் தாங்க முடியாமல் தவித்தன. நதிகளில் பிரவாகம் குறைந்துவிட்டது. கரையோரமாகப் பளிங்கு போன்ற தெளிந்த நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. அருவி விழும்போது எழுந்த ‘சோ’ என்ற சத்தம் நூறு சிங்கங்களின் கர்ஜனையையும், இருநூறு யானைகளின் பிளிறல்களையும் விழுங்கி விடக்கூடியது.  வந்தியத்தேவனுடைய செவிகளில் ஆயிரம் கிண்கிணிகள் ஒலித்தன. வானத்திலிருந்து பொன்மழை பொழிந்தது. தளிர்களும் மலர்களும் குலுங்கிய மரங்களின் உச்சியில் வர்ணப் பட்டுப்பூச்சிகள் இறகுகளை விரித்து நடனம் புரிந்தன.

சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் எளியவர்களின் வாழ்வையும் காட்டியவர்களில் தலைசிறந்தவராக திரு. ஜெயகாந்தன் (24.04.1934-08.04.2015) திகழ்கிறார். அவருடைய ‘பாரிசுக்கு போ’ என்ற புதினத்தில் என்னைக் கவர்ந்த வரிகள்:
“இலக்கியம் என்பது ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின். ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல். இலக்கியத்தின் வெற்றி என்பது காலத்தை வெல்வது, உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி”.

அதேபோல அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ கட்டுரையில் நான் கோடிட்டிருந்த வரி:
“நான் மானசீகமாய் இலக்கிய மகுடம் தரித்துக் கொண்டு எனது பழைய நாற்காலியை அரியாசனமாய் அவதானித்துக் கொண்டு இறந்த காலங்களிலேயும், எதிர்கால நூற்றாண்டுகளிலும் இலக்கியத்தில் ஏகச் சக்ராதிபத்தியம் செய்ய வேண்டும் என்னும் ஒரு மாபெரும் கனவு”.

30.7.86 அன்றைய குறிப்பேட்டில் எழுதிய வரி:
“பல நூல்களை நான் இப்பொழுது படித்துக் கொண்டிருந்தாலும் கட்டுரைகளையும், கதைகளையும் தவிர பல வல்லுநர்கள் பேசிய சொற்பொழிவுகளையும் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது.
அதில் நான் படித்தது துணைவேந்தர் தந்தை என்று அழைக்கப்பெற்ற ஏ.எல் முதலியாரின் (14.10.1887-15.04.1974) உரையாகும். முதலியார் மருத்துவராகவும், பல்லாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய அறிஞர். அறிஞர்கள் உலகம் அவரை என்றும் போற்றுமாறு உயர்ந்து நின்றார். அவருடைய ஆங்கில உரையில் நான் திக்குமுக்காடிப் போய் விட்டேன் என்று சொல்வது மிகையாகாது. அவருடைய ஆங்கில உரைக் குறிப்புகளை கைநோகக் குறித்துள்ளேன். காரணம், இந்நூலினை என்னுடைய பின்வீட்டு நண்பர் ஸ்ரீராம் தான் படிக்கும் சென்னை ஐஐடி நூலகத்திலிருந்து படிப்பதற்காக என்னிடம் தந்தது நீங்கொணாத நினைவாகும். அந்நூலில், குறிப்பாக ஒரே ஒரு வரியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவதில் நான் பெருமைப்படுகிறேன். 

“Knowledge is proud that it knows so much,
while Wisdom is humble that it knows no more"

இதே வரிகளை என்னுடைய ஆருயிர் அம்மா அப்பாவின் ஆங்கில நூலின் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்ததை ஒருநாள் கண்டு என் கண்கள் கசிந்தன.

-----

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர் - (ஈ)
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி .... 
அலைவாய்க்கு யானைமேற் செல்லும் முருகப் பெருமான் திருவாவிநன்குடியில் சின்னாள் தங்கியிருப்பன். அப்போது பல்வேறு முனிவர்களும் விரதிகளும் தாபதர்களும் முன்னே வர யாழ் வன்மையும் மென்மொழியும் உடைய இசைவாணர் நரம்புக் கருவிகளை இசைத்துவர, உடல் நலமும், மேனி நலமும், கற்பு நலமும் உடைய நன் மகளிர் உடன்போந்து விளங்க, திருமாலும், உமையமர்ந்து விளங்கும் திருமேனியையுடைய சிவபெரு மானும், வெள்ளையானையேறும் இந்திரனும், முருகனால் ஒறுக்கப்பட்ட பிரமன் பொருட்டு வந்து காண, ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்துக்கள் என நால்வகைய ராகிய முப்பத்து மூவரும், பதினெண் கணங்களும் தாம் உறுகுறை தீர்ந்து முறைபெறல் வேண்டி விண்மீன் போன்ற தோற்றமும் காற்றொத்த செலவும், இடி போன்ற குரலும் உடையவராய் வான் வழியாக வந்து வழிபாடு செய்வர். அக்காலை முருகப்பெருமான் மடந்தையோடு திருவோலக்கமிருந்து அவர்கட்குத் தன் திருவருளை வழங்குவன்.

ஆவிநன்குடி யென்பது இப்போது பழனியென வழங்கும் ஊர்; இது சங்க காலத்தில் பொதினியென்ற பெயருடன் ஆவியென்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாயிருந்தது. இதன் அருகில் ஆய்க்குடியென இருக்கும் ஊர் ஆவிகுடி யென்பதன் மரூஉ வழக்கு. இப்பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாவி நாடு என்றே குறிக்கின்றன. ஆவிகுடியினும் இப் பொதினிப்பகுதி நன்செய்வளம சிறந்திருந்ததுபற்றி இது ஆவி நன்குடியென வழங்கிற்று. இவ்வரலாறு விளங்காத காலத்தில் பொதினி பழனியாயிற்று ; திருவாவி நன்குடி திரு, ஆ, இனன், குடி என்று பிரிக்கப்பட்டுத் திருமகளும், காமதேனுவும், ஞாயிறும், நிலமகளும், தீக்கடவுளும் வழிபட்ட இடம் எனப் புராண வரலாறு பெறுவதாயிற்று.

திருவேரகம் என்னும் திருப்பதியில் அடியார் வழிபட முருகன் எழுந்தருளுவன். இந்த அடியார்கள், உயர்குடியில் தோன்றி நாற்பத்தெட்டாண்டுகள் பிரம சரியங்காத்து அறங்கூறும் கொள்கையும் நாடோறும் முத்தியோம்பும் முறைமையும் உடைய இருபிறப்பாளராகிய வேதியராவர். ஒவ்வொரு நாளும் காலமறிந்து வேத மோதுவது இவர்களது தொழில் ; மார்பிலே ஒன்பது புரிகொண்ட மூன்றாகிய பூணூல் அணிந்திருப்பர். இவர்கள் நாட்காலையில் நீராடி, ஈரவுடை தானே புலருமாறு அரையில் உடுத்து இருகைகளையும் தலைமேல் குவித்து முருகன் திருப்புகழையேத்தி , அப்பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை நாப்பிறழுமளவும் பன்முறையும் ஓதி மணமிக்க புதுமலர்களை அவன் திருவடியில் இட்டு வழிபடுவர். அவ்வழிபாட்டை முருகன் பெரிதும் உவந்தேற்று அவ்வூரிலே எழுந்தருளியிருப்பன்.

ஏரகம் என்பது தஞ்சைக்கு அருகேயுள்ள சுவாமிமலையென்று கூறுவர். இதற்கு அருணகிரிநாதரது திருப்புகழ் ஆதரவு தருகிறது. நச்சினார்க்கினியர் '' மலைநாட்டகத் தொரு திருப்பதி " என்று எழுதுகின்றார். தென் கன்னடத்து உடுப்பிப் பகுதியில் ஏரகம் என்ற பெயருடைய ஊர் ஒன்று உளது ; இது மலை நாட்டது ; இங்கே பழைமையான முருகன் கோயில் இருந்திருக்கிறது. " சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன் ' என்ற சிலப்பதிகாரக் குன்றக்குரவை கூறும் இடங்களுள் வெண்குன்றைச் சுவாமிமலையென அரும்பதவுரைகாரர் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது. இதனால் ஏரகத்தைப்பற்றித் துணிபு கோடற்கு நன்கு ஆராய்ச்சி செய்யவேண்டியிருக்கிறது.

முருகன் குறிஞ்சிநிலக் கடவுளாதலால், குன்றுகள் எல்லாம் அவன் விளையாட்டயரும் இடங்களாகும். இக்குன்றுகளில் வாழ்பவர் குறிஞ்சி நில மக்களான குறவர்களாவர். இக்குறவர்கள் முருகனை வழிபடுங்கால், இவர்களுள் வழிபாட்டுக்கென ஒருவன் இருப்பன். அவன் முருகனது வேற்படையைக் கையிலேந்தித் தன்னை இன்னான் எனத் தோற்றுவிக்கும் வகையில் இருப்பன் ; அவனை இக் குறவர்கள் வேலன் என அழைப்பர். பச்சிலைக்கொடியில் சாதிக்காயும், தக்கோலக்காயும் இடையிடையே விரவ, காட்டுமல்லிகையும் வெண்கூதாளியுமாகிய பூக்களைக்கலந்து கண்ணி தொடுத்துச் சென்னியிற் சூடுவன் ; மார்பின்கண் நறிய சந்தனம் பூசிக்கொள்வான்; இவ்வேலன் முருகனை வழிபடுதற்கென ஓரிடங்கண்டு தூய்மை செய்து பச்சிலைப் பந்தரமைத்துக் கோழிக்கொடி நட்டுக் கோயிலமைப்பன். அவ்விடத்தே குறவர்கள் அனைவரும் வந்து கூடி மூங்கிற் குழாய்களில் பெய்து வைத்திருக்கும் தேன்பெய்து செய்யும் கட்டெளிவை உண்பர்; பின்பு இளையரும் முதியரு மாகிய பலரும் கூடிக் குரவைக் கூத்தாடுவர். அக் காலையில் தொண்டகம் என்னும் சிறுபறை முழங்கும். அதன் தாளத்துக்கிசையவே கூத்தும் நடைபெறும்.

அவ்விடத்தே சில நல்லிள மகளிர் முருகனைச் சேவித்து நிற்பர். அவர் கூந்தலில் சுனைகளிற் பூத்த நீர்ப்பூக்களின் அரும்புகளைக் கொய்து அவற்றைக் கைவிரலால் அலர்த்தித் தொடுத்த கண்ணி சூட்டப்பெற்று இருக்கும். கண்ணிக்குப் பின்னே, வேறுபல மலர்ந்த பூக்களின் இதழ்களைப் பிரித்துத் தொடுத்த மாலை சுற்றப்படும்.அவர்கள் இடையில் கஞ்சங்குல்லைப்பூவும் வேறுபிற பூங்கொத்துக்களும் பைந்தழைகளும் விரவித்தொடுத்த தழையுடை அணிந்திருப்பர். முடிமுதல் அடி காறும் பன்னிறப் பூக்களும் பைந்தழையும் புனைந்து மென்மெல இயலும் அவரது இயல் மயிலின் சாயலைக்காட்டி மாண்புறுத்துகிறது. இந்நிலையில், யாழிசை போலும் இனிய மிடற்றோசையையுடைய மகளிர் சிலர் சேவித்துப் பாடுவர்.

இம் மகளிரிடையே முருகன் தோன்றிக் குரவை யாடும் மகளிர்க்குத் தலைக்கை தந்து அவர்களோடு குன்றுதோறும் விளையாடுவன். அவனுடைய பண்புகளுள் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு விளையாடுமிடத்து அவன் சிவந்த ஆடையணிந்து காதில் காம்பு சிவந்த அசோகக் தளிரைச் செருகிக்கொள்வன். இடையிற் கச்சையும் காலிற் கழலும் அணிந்துகொண்டு, வெட்சிப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலையிற் சூடுவன். ஒரு பால் குழலும் , ஒருபால் கொம்பும், ஒருபால் குறிய பல இயங்களும் இசைக்க, யாட்டுக்கிடா பின்வரத் தான் மயில் மேலேறிக் கோழிக்கொடி உயரத்திற் பறக்க நெடியோனாய்க் காட்சி நல்குவன். அவன் தோளில் தொடி கிடந்து அழகு திகழும்.இடையில் கட்டிய அரைக்கச்சையின் மேலே கிடந்து நிலத்தளவும் தொங்குமாறு மேலாடை தரித்துக் கொள்வன்.

தேமொழி

unread,
Apr 25, 2021, 3:27:41 AM4/25/21
to மின்தமிழ்

54  -  “பின்னல் சிக்கலைப் பிரித்தெடுப்போம்!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

பல செய்திகளைத் தகவல்களை அறிந்துகொள்ளப் புதினங்கள், கவிதைகள், பலர் சொல்லும் அறிவுரைகளைப் படித்தும், கேட்டும் வந்த சூழலில் கட்டுரைகளும் படிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. 23.02.1986 அன்று நான் எழுதிய குறிப்பு, எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது’ என்ற நூலாகும். என்னுடைய மனத்தின் அடியில் ஊன்றி அதில் எழுதிய பல கருத்துக்கள் என்னுடைய செவிப்பறையில் எதிரொலித்தன.

இந்நூலில் நாம் செய்யும் தவறுகளும், நிறைகளும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. மனிதர்கள் அன்றாடம் செய்யும் தவறுகள் முற்றி பூகம்பமாக மாறி நம் வாழ்க்கையை சிறைப்படுத்தி வைப்பது தான் இந்நூலின் மையக் கருத்தாகும். இந்நூலின் வாயிலில் நம் வாழ்க்கையில் நிம்மதி, நம்பிக்கை, அன்பு ஆகியவை தான் வாழ்வின் இலக்காக அமைய வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

பேரன்பு காட்டிய சாவித்திரி இராகவேந்திரா அம்மையார் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாழ்வியல் உண்மைகளைத் தன் மகனுக்குக் கூறும் தந்தையைப் போல பரிவோடு என்னிடம் கூறுவார்கள். கலை, சிற்பம், ஓவியம், கவிதை, கதை தனக்கென ஓர் இலக்கு என்ற பாதையில் அவர்களும் டாக்டர் இராகவேந்திராவும் இணையராக சிரித்த முகமாக பெருமிதமாக நடந்து வந்தார்கள். சில நேரங்களில் என்னை மகனே என்று தான் அழைப்பார்கள். அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் தான் எழுத்துமாமணி சிவசங்கரி படைத்த நூலாகும்.

தனி மனிதனுக்குத் தோன்றும் சின்ன நூல் இழைகள் போன்ற உணர்வுகள் பெரிதாக மாறி வலிமை பெற்று பல பூதாகரமான சிக்கல்களை இரும்புச் சங்கிலிகள் சிறைப்படுத்தி சித்திரவதை செய்வதை ஆசிரியர் பல எடுத்துக்காட்டுகளுடன் வெளிக்காட்டி இருக்கிறார். ஆழ்ந்த சிந்தனைக்கு நம்மை ஆட்படுத்தும் திறமை வியக்க வைக்கிறது.

இந்நூலின் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் அருமையாகத் தான் வடிக்கின்ற கட்டுரையைப் பற்றி கூறும் இடம் எப்படி என்றால், ஒருவர் நலனில், வளர்ச்சியில் மற்றவர்கள் அக்கறை கொண்டு வேண்டாத தளைகளை நூல்களாக எடுத்துச் சிக்குவதைக் காட்டிலும், கைகோர்த்து, நீங்களும் நானும் நடக்க, உரக்க சிந்திக்க, ஆசைப்பட்டு அதன் விளைவே இக்கட்டுரைத் தொடர் என்கிறார் ஆசிரியர். நம் வாழ்க்கையில் பெரிய, சின்ன பிரச்சினை என்று எதுவுமே இல்லை.

நம்மையும் மீறி இயற்கையாகவோ, விபத்தாகவோ வரும் சிக்கல்களைத் தவிர, பாக்கி அனைத்தையும் நாமே உண்டாக்குகிறோம். சின்னப் பொறியை ஊதி ஊதிப் பெரிய தீயாக கனன்று எரிவதைப் போல், கடுகத்தனை விஷயத்தையும் பேசிப் பேசி மாய்ந்து, உருகி, தவித்து, படபடத்து, விசுவரூபம் எடுக்கச் செய்து விடுகிறோம் என்பது தான் உண்மை.

ஒருமுறை தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளதை நினைந்து பார்க்க வேண்டும். “ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினால், அதை எப்படியும் நிறைவேற்றி விடுவான். அப்படி அவன் செய்யவில்லை என்றால் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உண்மையானது அல்ல என்பதாகும்.” குழப்பத்தைத் தவிர்க்க வழி என்னவென்றால் சரியான 'analysis, proper planning, sharing of knowledge, observation and concentration, discipline' ஆகும்.

வாழ்க்கையின் பொருள் என்ன?
உயிர் வாழ்தல்.
எப்படி உயிர் வாழ்வது அவசியம்?
நிம்மதியோடு...
சரி, இந்த நிம்மதியை அடைவது எப்படி?
நம்மைச் சுற்றியிருக்கும் எல்லா உயிரினங்களுடன் சரியான உறவை உண்டாக்கிக் கொள்வதன் மூலம், ஒரு இடத்தில், நாம் செய்யும் ஒரு செயலையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லாத செய்கை என்பதோடு, இரசனை, திறமை, வசதி, ஆர்வம், ஈடுபாடு, போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் என்பதையும், மனதில் மறக்காமல் செதுக்கிக் கொள்வதற்கு நமக்கு உறுதி வேண்டும்.

ஒருவரைப்போலவே இன்னொருவர் இருப்பதும், சிந்திப்பதும், நடந்து கொள்வது சாத்தியம் என்றால் அப்புறம் தனித்தன்மை என்பது யாது? பலநிறப் பூக்கள்தானே பூஞ்சோலை! எதிர்பார்ப்புக்கள் இயல்பான மனித வாழ்க்கையில் ஒவ்வொரு ஏமாற்றம் ஏதாவது பாடத்தை கற்று தரவே செய்யும். ஒரு வருடமாக இக்கட்டுரையைத் தொடராக ஆசிரியர் ‘ஜூனியர் விகடன்’ இதழில் எழுதினார்.

நான் இதை நூல் வடிவத்தில் ஒரே நாளில் படிக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்குள் ஒரு வித தெளிவை அமைத்துக் கொண்டேன். புதிதாய்த் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கவும், மீண்டும் தலைநிமிர வைக்கவும், உரக்கச் சிந்திக்கவும், புன்னகைக்கவும் இந்நூல் அனைவருக்கும் உதவும் என்பது திண்ணம்.

எண்ணங்களில் மருட்சியும், புழுக்கமும், கோழைத்தனமும், மனச்சோர்வும், உளைச்சலும் அவரவர் உள்ளத்தில் தான் படிந்திருக்கின்றன. இதை நாம் உணராமல், உணர முடியாமல் கோபமும், வேதனையும், வலியும், ஆற்றாமையும், அறிவீனமும், பலவீனமும் தொடக்கத்தில் சன்னமான நூல் இழைகளாக நம்மைப் பின்னிப் பிணைக்கும். பிற்பாடு, அவையே நம்மை மண்ணோடு மண்ணாய்ப் புதைக்கும். வலிமை பெற்ற கனமான இரும்புச் சங்கிலிகளாய் மாறவும் இடம் கொடுத்தால், இழப்பு யாருக்கு? வேதனை, தேக்கம் யாருக்கு? சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? துணிந்துவிட்டால் எவையும் நூலிழைகள் தாம்... கணப்பொழுதில் அவைகளை அறுத்துக் கொண்டு வெளியேறி உயரே உயரே பறப்பது எவராலும் முடியும்.

ஆக இந்நூலில் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை அமைந்திருக்கிறது என எவரும் எண்ணலாம். அதாவது, ‘The awareness to become a better person’. தன்னை இன்னும் மேம்படுத்த, ஒளிசேர்க்க விழிப்புணர்வுத் தேவை. நம்முடைய குறைகளைக் குறைத்து, நிறைகளை வளர்த்து துளித்துளியாய் உயர்ந்து கொண்டே போவதுதான் வாழ்க்கையின் அமைவுக்கூறு ஆகும்.

உயரம், பருமன், அழகு, இளமை இவை வரம்புக்கு உட்பட்டவை. மனிதனின் உடம்பு மட்டுமே கண்ணுக்குத் தெரிந்து உயரமாகும். மனதில் வளர்ச்சிக்கு உயரமில்லை, அழகுக்கு உச்சவரம்பு இல்லை, இளமைக்கு முதுமையில்லை. இதை நாம் மறக்கக்கூடாது. மனதை வளப்படுத்தும் முயற்சிதான் தன்னிலை அலசல். ஆக தற்போக்கு என்றால்? இது எனக்கு இன்பத்தைத் தருகிறது, இது என் கோபத்தைத் தூண்டுகிறது, இது அடுத்தவரை வேதனைப்படுத்துகிறது,
இது என்னை நெகிழ வைக்கிறது, இது எனக்கு நிம்மதியைத் தருகிறது என்று நம்முடைய சிந்தனை, செயல்களால் ஏற்படும் உணர்ச்சிகளை அடையாளம் காட்டி, கட்டம் கட்டத் தெரிவதுதான் தன்னிலை தெளிதலாகும்.

இந்த விழிப்புணர்வு வளர்ந்தால் தேக்கம், அழுக்கு, ஊனம் என்பதெல்லாம் இல்லை.
ஆக மனிதாபிமானம் என்றாலென்ன என்றுணர்ந்து, நெகிழ்ந்து, சிலிர்ப்பதும்; உலகத்தைப் பற்றி, நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களைப் பற்றிக் கவலை கொள்வதும், அக்கறை காட்டுவதும் இன்னொரு கோணம் மட்டுமல்ல, இன்னும் பல நூற்றுக்கணக்கான கண்ணோட்டங்கள் உள்ளன என்ற அறிவுத்தெளிவு உண்டானால் ஒருவர் மனதால் வளர முடியும்.
ஆக, இது எவ்வளவு தூரம் எனக்குள் இருக்கிறது என்றால், திட்டவட்டமான பதில் கூறத் தெரியவில்லை...

உதயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், போகவேண்டிய தூரம் எல்லை கடந்தது.
இதனை உணர்ந்து, புரிந்து, தெளிந்து, செயலில் காட்டவேண்டியன இன்னும் ஏராளம் என்று மட்டும் கூறத் தோன்றுகிறது. ஆக, இந்நூலின் கருத்துக்களை மெல்ல மெல்ல அசைபோட வேண்டும்... நிறைய நிறைய என்று நான் முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குறித்திருந்ததை மீள் பதிவு செய்வதில் புரிந்துணர்வு பெறுகிறேன். 15.10.2019 அன்று எழுத்து மாமணி சிவசங்கரி தன் அன்புக் கரங்களால் தான் எழுதிய சூரிய வம்சம் நூல்களை வழங்கியபோது அம்மையார் சாவித்திரி இராகவேந்திரா நம்முடன் இல்லையே என்று நெகிழ்ந்தேன்.

-----

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
உரைவேந்தரின் உரைத் தொடர் - (உ)
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி .. .. .. 

குன்றுதோறும் விளையாடும் பண்புடையனாகிய முருகன் இழும் என்னும் ஓசை நிலவ வீழும் அருவியொடு சோலைகளிற் பழுத்திருக்கும் பழங்கள் கனிந்து வீழும் பழமுதிர் சோலைமலைக்கு உரிய தலைவனாவன். இவ்வருவிகள் மலையினின்று வீழுங்கால் பலவேறு ஆடைகளை விரித்துத் தொங்கவிட்டாற்போலத் தோன்றுகின்றன.

அருவி நீர் அகிற்கட்டைகளைச் சுமந்து வருகிறது; வருங்கால் அயலிலுள்ள சந்தன மரங்கள் அலைப்புண்டு உருண்டு வீழ்கின்றன. பூச்சுமந்து நிற்கும் சிறு மூங்கில்கள் வேர் அரிப் புற்று வீழும்; வான் அளாவிநிற்கும் மலையுச்சியில் ஞாயிற்று வட்டம்போல் இருக்கும் தேனடை சிதைந்து வீழ, ஆசினிப் பலாப்பழங்கள் வீழ்ந்து பிளந்து, சுளை சுளையாகப் பிரிந்து அருவி நீரில் கலக்கின்றன; மலைமேல் நிற்கும் சுரபுன்னைப் பூக்கள் அருவியின் அதிர்ச்சியால் உதிர்கின்றன; நீர் வீழ்ச்சியில் புகைப்படலம் போல் எழுந்து பரவும் நீர்த்திவலைகளின் குளிரால் கருங்குரங்குகளும் முசுக்கலைகளும் நடுங்குகின்றன; பிடியானைகள் குளிரால் வேறிடத்துக்குச் சிதறியோடுகின்றன; பெருங்களிறுகளின மருப்பின்கண் உண்டாகும் முத்துக்கள் பல அருவி நீரில் கலக்கின்றன. மேலிருந்து வீழ்ந்து தலைகீழாய்க் கலங்குங்கால் நல்ல பொன்னும் மணியும் மேல் வந்து அழகிய நிறத்தைச் செய்கின்றன. கரையில் நிற்கும் மலைவாழைகள் அருவியின் பெருக்கால் வேரொடு அரிக்கப்படுகின்றன; தென்னைகள் (வாழை என்ற பெயர் வழக்கம் இருந்தது) தாம் தாங்கும் இளநீர்கள உதிருமாறு தாக்கப்படுகின்றன; மிளகுக் கொடிகள் கரிய துணரொடு அறுப்புண்டு மெலிய, அருகில் மேயும் மயில்களும், கானக்கோழிகளும் அஞ்சி நீங்குகின்றன; காட்டுப்பன்றிகளும், கரடிகளும் அஞ்சிக் கற்குகைகளில் ஒடுங்குகின்றன.

இம் முருகாற்றுப்படை பழமுதிர்சோலைமலை கிழவோன் என்றது கொண்டு,  பழமுதிர்சோலையென ஒரு திருப்பதி முருகனுக்கு உரியதாகக் கூறுவதுண்டு. நச்சினார்க்கினியார் உரையால் அத்தகையதொரு திருப்பதி இருப்பதென அறிய இயலவில்லை; முருகாற்றுப்படையின் சொல்லமைப்பும் அதனை வற்புறுத்தவில்லை. ஆயினும், பழமுதிர்சோலையென ஒன்று தனியே கொண்டு, அதுவே மதுரைக்கண்மையில் அழகர்மலையென வழங்கும் பகுதி யென்பவரும் உண்டு.அதனைத் திருமாலடியார்கள் "திருமாலிருஞ்சோலைமலை" யென்கின்றனர். அவர்கள் சோலைமலையென வழங்குவதும், முருகாற்றுப்படை பழமுதிர் சோலைமலையென வழங்குவதும் ஒத்திருப்பதுபற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டாகிறது. இதுவும் நன்கு ஆராய்தற்குரியது.

இத்தகைய பொருள் நலஞ் சிறந்த அருவிகளோடு கூடிய மலைகட்குரியனான முருகன் குன்றுதோறும் விளையாடிக் காட்சி நல்குவதோடு, ஊர் தோறும் மக்கள் விழாச் செய்யும் இடங்களிலும், தன்பால் அன்புடையவர் தன்னை நினைந்து பரவும் இடங்களிலும், வேலன் வெறியாடுமிடங்களிலும், காடுகளிலும் பூங்காக்களிலும், அழகு பொலியும் ஆற்றிடைத் தீவுகளிலும், ஆறு குளங்களிலும், இவை போலும் வேறு இடங்களிலும், சதுக்கம், சந்தி, மன்றம், பொதியில் முதலிய இடங்களிலும், புதுப்பூ மலரும், கடப்பமரங்கள் நிற்கும் இடங்களிலும் கந்துடை மன்றங்களிலும் வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட, அவர்கள் வேண்டியவாறு ஆங்காங்கே எழுந்தருளுவன்.

முருகன் எழுந்தருளும் சீர்த்த இடங்களைக் கூறியபோது, திருவாவிநன் குடியில் முனிவர் முதல் பதினெண் கணங்கள் ஈறாகத் தேவர் பலரும் வழிபடுந்திறமும், திருவேரகத்தில் வேதியர் வழிபடுமியல்பும் விளங்கக் காண்கின்றோம். இவ்வாறே, சூரர  மகளிரும், குறமகளிரும் முருகனைப் பரவும் திறம் தொடக்கப்பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் குறிக்கப்படுகின்றன.

சூரர மகளிர் வானளாவ உயர்ந்த மலையிடங்களில் செழித்துவிளங்கும் சோலைகளில் விளவின் தளிர்களைக் கிள்ளி விளையாடுவர்; அப்போது ஒருவர் மேல் ஒருவர் எறிந்து, அது தம்பால் பட்ட பொழுது மகிழ்ச்சி கூர்ந்து முருகனுடைய, " கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிது'' என்று ஏத்தி அவன் புகழைப் பாடியாடுவர். அவர்கள், தம்முடைய சிறிய அடிகளில் கிண்கிணி யணிந்திருப்பர்; கணைக்கால் நன்கு திரண்டிருக்கிறது; இடை வளைந்து நுண்ணிதாக இருக்கும்; தோள் பெருத்துளது; அவர்கள் உடுத்திருக்கும் ஆடை தம்பலப் பூச்சி போல் இயல்பாகச் சிவந்த செந்நிறங் கொண்டுளது; அது செயற்கையாக நிறம் ஊட்டப்படுவ தன்று; இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதியாகிய அல்குலிடத்தே பல மணிகள் கோத்த மேகலை அணியப்பெற்றுள்ளது; அவர்கள் பால் தோன்றும் அழகு பிறர் ஒப்பனை செய்வதாற் பிறக்கும் செயற்கையாகாது இயற்கையழகாகும்; அணிந்திருக்கும் இழைகள் சாம்பு நதம் என்னும் உயரிய பொன்னால் இயன்றவை. அவரது மேனியொளி நெடுந்தொலைவில் சென்று விளங்குகிறது. அவர்களுடைய கூந்தலொழுங்கு காணும் ஆய மகளிர் நன்று நன்று எனப் பாராட்டுகின்றனர்.

இணை யொப்பப் படிந்த கூந்தலில் வெட்சிப்பூவை வட்டமாகப் புனைந்து இடையே குவளைப்பூவின் இதழ்களைக் கிள்ளி யிட்டுச் சீதேவிக்கோலம் ஒருபாலும் வலம்புரிக்கோலம் ஒருபாலும் செய்து கொள்கின்றனர். நெற்றியாகிய பிறையை விழுங்குதற்கு மகாமீன் ஒன்று வாயைத் திறந்து கொண்டு கிடப்பது போலத் தலைவகிரின் ஒழுங்கில் மகரமீன் கோலம் செய்கின்றனர். நெற்றியில் மணங்கமழும் திலகம் இடப்பெற்றிருக்கிறது, இவ்வாறு வேண்டுங் கோலமெல்லாம் குறைவறச் செய்யப்பெற்ற கொண்டையில் செண் பகப் பூவைச் செருகிப் பின்பு மருதம்பூவின் கொத்துக்களை அதற்குமேற் சூடுவர். நீரின் கீழ்ப் பச்சென்ற காம்பு பெற்று மேலே சிவந்து தோன்றும் நீர்ப்பூ வரும்புகளை மாலையாகத் தொடுத்து அதனைச்சுற்றி வளைத்துக் கட்டுவர். அசோகின் தளிர்களுள் இணையொத்த இரண்டைப் பூணார மணிந்த மார்பின்கண் தொங்கியசையுமாறு இரண்டு காதுகளிலும் செருகிக்கொள்வர். மார்பின்கண் சந்தனக் குழம்டை மருதிணர்போலும் தோற்றம் அமையப் பூசி அதன் ஈரம் புலா வேங்கைப்பூவின் நுண்ணிய தாதினைத் தூவுவர். இது சூரரமகளிரின் ஒப்பனை.

குறமகளிர் முருகனை வழிபடக் கருதியதும் வழிபாட் டுக்கென ஓரிடம் கண்டு நன்கு தூய்மை செய்வர். அங்கே கோழிக்கொடியை நிறுவி, அதனை நெய்யும் வெண்கடுகும் கலந்து பூசி அதற்குரிய மறைமொழியை மந்தமாக வாய்க் குள்ளே ஓதுவர். பின்பு, அதனெதிரே வணங்கி நின்று தூய பூக்களைத் தூவுவர். உள்ளே ஓர் ஆடையை யுடுத்து அதன் நிறத்துக்கு மாறுபட்ட நிறமுடைய வேறோராடையை மேலே உடுத்திக் கொண்டு கையில் சிவந்த நூலாற் காப்புக் கட்டிக் கொள்வர். காப்பு முடிந்ததும், வெள்ளிய பொரிகளைச் சொரிந்து, கிடாயினது குருதி கலந்து பிசைந்த வெள்ளரிசிச் சோற்றைச் சிறு சிறு பிரப்புக் கூடைகளில் படைச்சலிட்டு வைப்பர். அதன்பின் சிறு மஞ்சளை அரைத்துச் சந்தனக் குழம்போடு கலந்து தெளிப்பர். இதனைக் கூந்தல் தெளித்தல் என்று இக்காலத்துக் குறவர் வழங்குகின்றனர்.

இனி, அக்கொடியில் செவ்வலரிப்பூவையும் வேறு பல நறியபூக்களையும் தம்மில் ஒப்பத்தொடுத்து இணையொப்பத் தொங்குமாறு கட்டிவிடுவர். பின்பு குறமகள் முன்வந்து மலைப்பக்கத்தில் அமைந்த தம் ஊர்கள் பசியும், பிணியும், பகையுமின்றி வசியும் வளமும் சிறக்க என்று வாழ்த்தி நறும்புகை காட்டிக் குறிஞ்சிப் பண்ணிற் பல பாட்டுக்களைப் பாடுவள்.

ஒருபால் அருவியொலிக்க, பலவகை இயங்களும் ஒலிக்கும். பாட்டு முடிந்ததும் சிவந்த பூக்களைத தூவிக் குருதி கலந்த தினையரிசியைப் பரப்பி முருகன் விரும்பும் இயங்களை இயக்குவர். அப்போது அவ் வழிபாட்டின்கண் முரணிய கருத்துடையவர்களும் கண்டால் முரண் நீங்கி வழிபடுவர். இவ்விடத்தே தான் வேலன் வெறியாடுவதும் செய்வன். வெறியாடு களம் எதிரொலிக்க அதற்கு ஏற்ற பாட்டுக்களைப் பாடிக் கொம்புகள் பலவற்றை வாய்வைத்து ஊதி, கொடிய ஒசையைச் செய்யும் மணியை ஒலிப்பிப்பர்.  இறுதியில் முருகன் ஏறிவரும் யானையை வாழ்த்தித் தம் வேண்டுகோள் புலப்பட நின்று வழிபடுவர்.

வளரும்...

- முனைவர் ஔவை அருள், 
தொடர்புக்கு: dr.n.arul[at]gmail.com 
---

தேமொழி

unread,
Apr 27, 2021, 4:06:28 AM4/27/21
to மின்தமிழ்

55  -  “நின்னளந்து அறிதல் அருமை!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

எந்தையாரின் நெருங்கிய மாணவர் திலகமாகவும் - கவிச்செம்மலாகவும் பச்சையப்பர் கல்லூரிக் காலங்களிலேயே எங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவர் கவிப்பேரரசர் ஆவார்.  அவருடைய அடுக்குக் கவிதைகளைப் பல இலக்கியக் கூட்டங்களில் எந்தையார் மேற்கோள்களாகக் சொல்கிற பாங்கினைக் கண்ட அறிஞர் பெருமக்கள் பெருமிதம் கொண்டார்கள். தான் எழுதுகிற நூல்களை வெளியிட்டவுடன் எந்தையாருக்கு வழங்குவதில் கவிப்பேரரசர் பெருமகிழ்ச்சி அடைவார்.  அந்நூல்களில் முதல் பக்கத்தில் எந்தையாரைக் குறித்து அவருடைய அழகான கையெழுத்தில் எழுதித் தருகிற தித்திப்பு வரிகள் என் கல்லூரிக் காலத்திலேயே நெஞ்சில் வேரூன்றியன. 

சான்றாக,
Ø என் தாக நாட்களின் தண்ணீர்ப் பந்தலாயிருந்த டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு அன்புடன் வைரமுத்து. (14.02.1983)
Ø கலங்கரை விளக்கத்திற்குப் படகின் பரிசு. (1985)
Ø தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், தமிழ்ப்புலமையில் இணையில்லா வேந்தருமாகத் திகழும் திருமிகு டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு நன்றியில் நனைந்து வைரமுத்து (05.08.1993)
Ø என் ஆருயிர்ச் சகோதரர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு அன்புடன் வைரமுத்து (1996)
Ø தமிழ்நாட்டு நல்லறிஞர், முன்னைப் புதுமைக்கும், முன்னைப் பழமையராய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியராய்த் துலங்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசனுக்கு அன்போடு வைரமுத்து. (16.07.2002)
Ø என் வழிகாட்டியும் ஒளிகாட்டியுமான முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு, அன்போடு வைரமுத்து (14.10.2015)
என்ற எழில் வரிகளைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் எந்தையாரிடம் பேசும்போது  ‘கவிஞர் உங்களுக்கு மாணவரா? என்று கேட்டபொழுது, ‘அவர் என் மாணவரல்ல. ஆசிரியர்’ என்றே பெருமிதமாகச் சொன்னார். அதற்கு உடனே இயக்குநர், ‘எப்படி ஆசிரியர் என்று சொல்லுங்கள்’ என்று கேட்டார். ‘எனக்குத் தெரியாத பலவற்றைப் புரியாத சிலவற்றை எவ்வளவு அழகாக எடுத்துப் பொருத்திக் காட்டியிருக்கிறார், உங்கள் படங்களின் பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் நான் புதிய உலகத்துக்கே போய் வருகிறேன். ஆகையினால், கவியரசர் வைரமுத்து எனக்கு ஆசிரியர்’ என்று வலியுறுத்திச் சொன்னவுடன், இயக்குநர் திலகம் சிரித்துக் கொண்டே, ‘ஆமாம், வைரமுத்து ஆசிரியர்தான். ஔவை! நீங்கள் பேராசிரியர் என்பதை எனக்குக் காட்டிவிட்டீர்கள்’ என்றார்.

அப்படிக் கிடைத்த வாய்ப்பில் நான் முதன்முதலாகக் கவிஞரின் நூலினை இளங்கலை இரண்டாமியாண்டு தமிழிலக்கியம் மாநிலக் கல்லூரியில் பயிலுங்கால், 04/10/1986 அன்று நான் குறித்து வைத்திருந்த ‘கல்வெட்டுகள்’ என்ற நுட்பமான ஆய்வு நூலிலிருந்து பல கருத்துக்களைச் சுவைத்து மகிழ்ந்தேன்.  கவிஞர், ஆய்வாளராக இருப்பதற்குப் பேராற்றல் கொண்டவர் என்ற கருத்துக்குக் கட்டியம் கூறும் கட்டுரைகளாக ‘கல்வெட்டுகள்’ நூல் அமைந்துள்ளது.

“ஓசை ஒலிகளின் எடையைக் கூட நிறுத்தச் சொன்ன தொல்காப்பியம் - மனித மனத்தின் போக்குவரத்திற்குக் கோடு கிழித்துக் கொடுத்த கொடை தான் திருக்குறள் - மனிதனின் சமுத்திர உணர்ச்சிகளைச் சின்னச் சின்னச் சிப்பிகளில் சிக்கவைத்துக் காட்டிய சங்க இலக்கியம் - மனக்கசடுகளை வடிகட்டிக் கொடுத்த நீதி நூல்கள் என்னும் சல்லடை இலக்கியங்கள் - வெறும் உபதேசங்களாக அல்லாமல் வாழ்க்கைக்கு வாய்மொழிச் சட்டங்களான நீதி நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கு - கவிதைச் சத்து மிகுந்த காப்பியங்கள் - ஆழ்வார்கள் நாயன்மார்களின் ஆனந்த அழுகைகள் - சித்தர்களின் நெருப்புச் சித்தாந்தங்கள் - ஆடம்பரமான பிரபந்தங்கள் - சிருங்காரத்தில் நனைந்த தனிப்பாடல்கள் - பழைய இலக்கியங்களைத் திருகித் திசை திருப்பிய பாரதியின் எழுத்துக்கள் - பாரதிதாசனின் வாள் வார்த்தைகள் - புதிதாய்ப் பிறப்பெடுத்த உரைநடை இலக்கியம் - கண்ணதாசன், சுரதா என்னும் தனித்தனிப் பள்ளிகள் - பிரபஞ்சப் பசியோடு பேனா பிடித்திருக்கும் புதுக்கவிதைக் காரர்கள் - தமிழ்கூறு நல்லுலகின் பரப்பு இதுதான்” 
என்று வனப்பாக வரைந்திருந்த வரிகள் என் நெஞ்சில் கல்வெட்டு வரிகளாகவே நிலைத்தன.

“இலக்கியம் படைப்பவன் அல்லது ஒரு சமூகப் பொதுச் சிந்தனையாளன் எல்லோருடைய சிரிப்பையும் தன் உதடுகளால் சிரித்து விடுகிறான். எல்லோருடைய கண்ணீரையும் தன் கண்களால் அழுது விடுகிறான். ஆழ்வார்களும், நாயன்மார்களும் அழுத கதையை நான் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களின் அழுகை பொது அழுகை, சமூக மேம்பாட்டுக்கு அவர்கள் ஒரு விடியலை நம்பினார்கள்.”
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்! - என்றவரும்,
காக்கைக் குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்! - என்று பாடியவரும், 
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்! - 
என்று குரல் கொடுத்தவரும் உலக அமைதியின் தூதுவர்கள் அல்லவா?

அதிகமாகப் புகழப்படுகிறபோது ஐயப்படவும், அதிகமாய் இகழப்படுகிறபோது சிரித்து விடவும், நம் படைப்பாளிகள் பழகிக்கொள்ள வேண்டும். விமர்சகன் என்பவன் ஒட்டகம், கனிகளை விட்டுவிட்டு முட்களை மேய்ந்து கொண்டிருப்பவன். இன்னொன்று, ஒரு படைப்பாளன் தினமும் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதே மூடநம்பிக்கை. தினமும் எழுதிக் கொண்டிருக்க படைப்பு என்பதொன்றும் நாட்குறிப்பன்று. எழுத்தே எழுந்து வந்து எழுதச்சொல்லும் போது எழுது. இக்கட்டளை வரிகள் என்னை மிகவும் ஈர்த்த வரிகளாகும். எழுதுவதெல்லாம் ஒரு மன உறுதிக்காகவும் மக்களுக்குத் தரும் செய்தியாகவும் தான் எழுதவேண்டும் என்று எனக்கு அன்று புரிந்தது.

கவிதை என்பது மொழியின் மின்சாரக் கிடங்கு. அது ஓர் இனிய நெருப்பு; அல்லது சுடும் பூ. 
மொழி - மனிதனை மேம்படுத்துகிறது; 
கவிதை - மொழியை மேம்படுத்துகிறது.
போர்க்குணம் கொண்ட ஒரு புதுக்கவிதைக்காரனின் கைகளில் பேனா நிமிர்ந்தால் வேலாகிறது; வளைந்தால் வில்லாகிறது.
நமது கல்வி முறையில் போதிப்பதை விடச் சோதிப்பது அதிகமாக இருக்கிறது.
பாரதியார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, பழமையின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென்பதற்கு முன்னுரையாக ஐதீகத்தின் பிடியிலிருந்து தன்னை அறவே விடுவித்துக் கொண்டு வெளியே வந்தவரல்லவா! வறுமை அவர் உயிரை முற்றுகையிட ஒத்திகை பார்த்தபோதும், அவரது கம்பீரத்தின் உயரம் குறையவில்லையே! சீட்டுக்கவி எழுதும்போதும் கூட தானும் ஓர் அரசராகவே மன்னருக்கே ஆணையிட்டவர்.

முப்பது கோடி உள்ளங்களின் ஊமை எண்ணங்களை அவர் ஒரு நாவால் பாடினார்.  அந்தப் பாடலின் எதிரொலியில் ஊமை உள்ளங்களும் பேசத்தொடங்கின. தமிழ் இலக்கிய வரலாற்றில், அதிக மொழிகள் தெரிந்த கவிஞராக நமக்கு அடையாளம் தெரிகிறவர் பாரதியார் ஒருவரே.

‘யாமறிந்த மொழிகளிலே’ என்று செருக்கோடு சொல்வதற்குக் கவிஞருக்குப் பொருளுண்டு. காரணம், பாரதியின் ஆங்கிலக் கல்வி அவருக்கு இலட்சிய வேட்கையை வளர்த்தது.  வடமொழிக் கல்வி அவர் நெஞ்சில் சமய தத்துவங்களுக்குக் கால்கோள் செய்தது. கவிதை, சொற்களால் மட்டும் அமைவதில்லை.

ஆங்கிலக் கவிஞர் கீட்சு சொல்வதுபோல், கவிதை - சொற்களில் இல்லை; சொற்களுக்கிடையில் இருக்கிறது; (Poetry is not in the words. It is in between the words). மானிடக் காதலியை வர்ணிக்கும் கவிஞர் ஷெல்லி காதலியின் கண்களை,
‘அந்த ஆழமான கண்கள்; அவை இரட்டை கிரகங்கள்.’ (Thy deep eyes a double planet) என்று சொன்னதைப்போல, பாரதியும் இதே படிமத்தில்,
‘சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ!’
என்று பாடும்போது, ஷெல்லியின் பாட்டிலில்லாத உட்தொனி, உள்ளுறை பாரதியார் பாட்டிலும் படிந்து கிடக்கிறது என்று பெருமிதமாகப் பாரதியாரைப் பற்றி பெரும் பாடமே கவிப்பேரரசு நடத்தியுள்ளார்.

இப்படி வாழ்க்கைக்கும் உணர்ச்சிக்கும் வண்ணம் பூசிய உலகப் பாடல்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.
‘எனக்காகப் பிறந்தவள்,
நீ மட்டும்தான்,
இருமுறை சொல்’
‘நீ என்னை எழுப்பும் போது தான்
என் கண்களுக்கு வெளிச்சம்’
உலகப் பாடகன் மைக்கேல் ஜாக்சன் பாடலை மிக அழகாக கவிஞர் மொழிபெயர்த்த விதத்தைக் கண்டு கல்லூரிக் காலத்திலேயே நாங்களெல்லாம் பெருமிதம் அடைந்தோம். மேற்கத்தியப் பாடல்கள் வாழ்க்கையின் சிதைவுகளையும் கனவுகளையும் உள்ளது உள்ளபடியே சித்தரிக்கின்றன என்று அப்பொழுதுதான் நாங்களெல்லாம் உணர்ந்தோம்.

காலமே! உனது கையில் நானொரு தூரிகை; சின்னத் தூரிகை. என்னை உயர்ந்த சித்திரங்கள் வரையப் பயன்படுத்திக் கொள். இப்படி எத்தனைப் பாடல்கள் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் நான் எழுதித் தரச் சித்தமாய் இருக்கிறேன் என்ற கவிஞரின் அழியாத வரிகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தன.

------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
உரைவேந்தரின் உரைத் தொடர் - (ஊ)
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி .. .. .. 

திருவாவிநன்குடியில் முருகனை வழிபடும் முனிவர்கள் இயல்பை இனிக் காணலாம்.  இம்முனிவர்கள் அரையில் மரவுரியை யுடுப்பர்; தலைமயிர் வலம்புரிச் சங்கின் நிறம்போல வெளுத்து நரைத்திருக்கும்;
 காலந்தோறும் நீராடும் இயல்பினராதலால் அவர் மேனி மிக்க தூய்மையாய் ஒளிவிட்டு விளங்கும். 
மார்பில் கிருட்டினாசினம் என்னும் மான்தோலையணிந்திருப்பர்; விரதங்களால் பட்டினியிருந்து மேனி கரைந்திருத்தலின், அவர் உடல் எலும்பை நன்றாகக் கண்களால் எண்ணலாம்;  பல நாள்கள் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்து சிறிதே உண்ணுவர்.  அவர் நெஞ்சில் எதனிடத்தும் மாறுபட்ட உணர்வோ எவ்வுயிர்மீதும் பகைமையோ இருப்பது கிடையாது; எல்லாம் கற்ற பேரறிவினர்க்கும் தெரியாத பெரு நுட்பமுணர்ந்த பேரறிவுடையவர். கற்றோர் எனப்படுவார் எல்லோருக்கும் தலைவராக இருக்கும் கல்விச் சால்பு மிக்கவர். அவர்பால் காமமும் கடுஞ்சினமும் கடுகளவும் இல்லை;  ஒன்றை வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவராதலால், எவ்வகைத் துன்பமும் அவர்கள் அறிந்திலர்; ஒருவரையும் வெறுத்து நோக்கும் இயல்பில்லாதவர் இம் முனிவர்கள்.

இவரிடையே முருகன் திருப்புகழைப் பாடும் இசைவாணர் உள்ளனர்.  அவர்கள் இடையில் புகைபோன்ற மெல்லிய ஆடையணிந்து, மார்பில் புதிது மலர்ந்த பூவால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்து கொள்ளுகின்றனர். நல்ல யாழ்ப்பயிற்சியும் அன்பு நிறைந்த நெஞ்சும் உடையர்;  இவருடைய வாயில் மென்மையான மொழிகளே நிலவுகின்றன.
 இப்பெற்றியோர் நரம்பை இயக்கி இனிய இசையை இசைக்கின்றனர்।  இவர்களுடன் மிடற்றாற் பாடும் நன் மகளிர் உள்ளனர்.  அவர் நோயின்றியன்ற உடம்பும் மாந்தளிர்போலும் மேனியும் உடையர்; அம் மேனியில் பொன்னிறம் கொண்ட தேமல் பூத்துளது. இவர்கள் அல்குலிடத்தே பருமமென்னும் மேகலையணிவர். இவரது கற்பு மாசுமறுவற்றது. 

திருவேரகத்தில் முருகனை வழிபடும் வேதியர் அறு தொழிலோர் என்ற இலக்கணத்திற் குறைவில்லாதவர்; தாய் தந்தையர் நற்குலத்தவர் என உலகினர் புகழும் பல்வேறு குடியினர்.  நாற்பத்தெட்டு யாண்டு பிரமசரியம் காப்பவர்; 
எப்பொழுதும் அறம் கூறும் கொள்கையுடையவர்; மூன்றுவகையான தீயை வளர்ப்பதையே செல்வமாகக் கொண்டவர்; முப்புரி நூல் மூன்று கொண்ட பூணூல் விளங்கும் மார்பையுடையர்.

இவ்வண்ணம் முருகனை வழிபடுவோர் இயல்பை மிக நுட்பமாக அறிந்து கூறும் ஆசிரியர் நக்கீரர், மகளிர் நலங்கூறுமிடத்து அவரது கற்பு மாண்பை "மாசில்கற்பு'" என்றும் "மறுவில்கற்பு” என்றும் எடுத்துக்காட்டி வற்புறுத்துவதும் அவர்கள் ஆடவரிடையிலும் முருகன் திருமுன்பும் இருக்கும் நிலையின் தூய்மை நலத்தை "மறுவின்றி விளங்க" என்று சுருங்கக் காட்டி விளக்குவதும் நுனித்தெண்ணி இன்புறத்தகுவன.  மகளிர் நலம்புனைந்துரைத்த பண்டைச் சான்றோருள் இவர்போல மகளிரது யாக்கையமைப்பை வியந்து நோயின்றியன்ற யாக்கையர்" என்றதுபோல மொழிந்தோர் பெரும்பாலும் சிலர் என்றே கூறலாம்.  மகளிரது யாக்கை நோயின்றியன்ற அமைதி யுடைய தாக வேண்டுமெனக் கருதிக்கூறும் இப்புலமையுரை பொன்போற் போற்றத்தக்கது. இனி, இம்முருகாற்றுப் படையினை இவ்வாறு வளமிகக் கூறும் ஆசிரியர் முருகனைக் கண்டு வழிபடுவோர் அவன் புகழ்களை யெடுத்தோதும் வகையைச் சிறிது விரித்துரைக்கின்றார்.

'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் 
அங்கையேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ, 
ஆல்கெழு கடவுள் புதல்வ, 
மால்வரை மலைமகள் மகனே,
மாற்றோர் கூற்றே, 
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ, 
இழையணி சிறப்பின் பழையோள் குழவி,
வானோர் வணங்குவில் தானைத் தலைவ,
மாலை மார்ப,
நூலறி புலவ, 
செருவில் ஒருவ, 
பொருவிறல் மள்ள, 
அந்தணர் வெறுக்கை, 
அறிந்தோர் சொன்மலை, 
மங்கையர் கணவ, 
மைந்தரேறே, 
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ, 
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ, 
பலர்புகழ் நன்மொழிப் புலவரேறே,
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக, 
நசையுநர்க் கார்த்தும் இசைபேராள, 
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய். 
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் 
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்,
பெரியோ ரேத்தும் பெரும் பெயர் இயவுள், 
சூர்மறுங் கறுத்த மொய்ம்பின் மதவலி, 
போர்மிகு பொருந, 
குரிசில்.'' 
என்பது முருகனைப் பரவுவோர் சொல்லி யேத்துதற்குரிய புகழுரை.

நெடும் பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ'' என்றது நெடும்பெரும் சிமயமாகிய இமயத்தின்கண் இறைவன் தந்த கருப்பத்தினை இந்திரன் வாங்கி முனிவர்பால் தர, அவர்கள் அதனைத் தாங்கமாட்டாது தீயின்கட்பெய்து தம் மனைவியர்பால் தந்தாராக, அவருள் அறுவர் தலைக் கொரு குழவியாக நீலம் மலர்ந்த பசிய சுனையின்கண் பதுமப் பாயலில் பெற்றெடுப்ப அந்த ஆறும் சேர்ந்து ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமுடையனாய் அமர்ந்த செல்வனே என்பது. ஐவருள் ஒருவன் ஏற்ப அறுவர் சிமயத்துப் பைஞ்சுனைப் பயந்த ஆறமர் செல்வ என இயையும்.

ஆல்கெழுகடவுள் புதல்வ என்றது, கல்லாலின் கீழிருந்து முனிவர்க்கு அறமுரைத்த கடவுளாகிய சிவபரம் பொருட்கு மகன் என்பது. இழையணி சிறப்பின் பழை யோள் குழவி என்றது, இழையணிந்து விளங்கும் சிவ சத்தியாகிய பழையவளின் குழவி யென்றவாறு.

இறைவன் பங்கிலுறையும் உமைநங்கையை மலைமகள் என்றும் கொற்றவையென்றும் பழையோள் என்றும் மூவகையாகப் பிரித்துக்கூறுகின்றார்.

சிவசத்தியாய் இறை வனுக்குத் திருமேனியையும் எல்லாவுயிர்கட்கும் வேண்டிய உடல் கருவி கரணங்களையும் உலகுகளையும் உலகியற் பொருள் நுகர்ச்சிகளையும் தரும் முதலாய் அமைதலின் பழையோள் என்றும், வெற்றிக்கு வேண்டிய ஆற்றலே தன் வடிவாகக் கோடலின் கொற்றவை யென்றும், உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி உலகியல் நடாத்தி உய்கி பெறுவித்தலின் மலைமகள் என்றும் கருதப்படுவது விளங்க இம் மூவகையினையும் எடுத்தோதினார்.

நுண்ணூற் பொருள்களைச் சான்றோர்க்கு ஐயமறத் தெளிவித்துரைக்கும் சீர்மிக்க ஆசிரியன் என்பது விளங்க நூலறி புலவன் என்றும், பலர் புகழும் நல்லுரையால் சமயப்புலவர் தொடுக்கும் வாதங்களை வென்று மேம்படும் உயர்வு தோன்ற, 'பலா புகழ் நன்மொழிப் புலவரேறே," என்றும் கூறுகின்றார்.

என்றுங் குன்றாத இளமையும், பெறற்கரிய வீடுபேறு நல்குதலும் தனக்கு உரிமையாகவுடைமை பற்றி ''அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருக'' என்றார்.

பிறரால் இடுக்கண்பட்டு வருந்தி வருவோர்க்கு, நடுவு நின்று முறை வழங்கும் செம்மையுடைமை தோன்ற ''அலந்தோர்க் களிக்கும் பொலம் பூண் சேஎய்'' என்றார். 

நெடுவேள் என்பதற்கேற்பத் தன்னையடைந்த பரிசிலர்க்கு. வேண்டுவன பெருக நல்கித் தாங்குவது தோன்றப் ''பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்'' என்றார்.

எத்தகைய பெரியோர்க்கும் பெருமைக்குரிய செயலாற்றுதற்கேற்ற மனத்திட்பமும் வினைத்திட்பமும் இன்றியமையாதன.  அவற்றிற்குரிய அவரது ஆற்றலை எழுப்பி இயக்கும் திருவருள் இயக்கத்துக்கு அவன் முதலாதல் தோன்றப் “பெரியோ ரேத்தும் பெரும்பெயர் இயவுள்” என்றார்.

உலகியல் நுகர்ச்சிக்கு இளமையும் வினைத்திட்பத் துக்கு இயக்கமும் பெறற்கு முதலா தலின் இரண்டையும் உணர்த்தும் முருகன், இயவுள் என்ற பெயர்களைப் பெரும் பெயரெனச் சிறப்பித்தார்.

எல்லையில் காலமாகப் பல்வகைப் பிறப்பும் பிறந்து பிறந்து அறிவு சிறந்துவரும் மன்னுயிரெல்லாம் தன்னுள் ஒடுங்கத் தான் அவற்றை ஒடுக்கி மேற்பட விரிந்து நிற்றலின், அவ்வுயிர்கட்கு, அவன் பண்பெல்லாம் அறிதல் இயலாமையின், “நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமை” என்றும், அவ்வருமை யுணர்ந்து அவை செயற்பாலது அவன் அடியில் வணங்குவது அன்றி வேறில்லை என்பார்,  ''நின்னடி உள்ளி வந்தனன்" என்றும் கூறினார். 
ஞான சம்பந்தரும், தாட்பால் வணங்கித் தலை நின்றிவை கேட்கத் தக்கார்' என்பது காண்க.

தேமொழி

unread,
May 3, 2021, 12:56:41 AM5/3/21
to மின்தமிழ்
56  –  “வலம்புரியில் பிறந்த வார்த்தை வளம்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

சொற்கள் எங்கிருந்து பிறக்கின்றன என்றால் நூல்களில் தேங்கியுள்ளன என்று நமக்கெல்லாம் தெரியும். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவையெல்லாம் வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜானின் நாவில் இருந்து வருபவை என்று அவருடைய ‘பாரதி-ஒரு பார்வை’ என்ற நூலில், கவிதை என்றால் என்ன என்று எழுதியபோது அருவியாக விழுந்தன. 

“கவிதை என்பது சுகமான சொற்களின் சொர்க்கவாசல் திறப்பல்ல;
கவிதை என்பது பசும்புல் தலைகளில் பனிக்குடங்களை முத்தமிடவருகிற மோகக்காற்றல்ல; 
கவிதை என்பது வெள்ளை அன்னத்தின் கொள்ளை வனப்பை அள்ளி விழுங்கிட ஆரோகணித்து வரும் வெண் நுரைப் பூக்கள் அல்ல;
கவிதை என்பது விழுந்த அடியில் விழைந்த வீக்கம்; 
கவிதை என்பது இதயக்கதவுகளின் இறுக்கமான கீறல்களின் வழியாக ஒரு கோடி கல் வரைக்கும் படர்ந்து பரவும் ஓலம்; 
கவிதை என்பது போகிற போக்கில் போக்கை விதிக்கும் புதுவெள்ளம்;
கவிதை என்பது சாயாத கோபுரங்களின் சரியாத பிரகடனம்!
கவிதை என்பதை சினம் – சீற்றம் – எழுச்சி – ஏக்கம். 
கவிதை என்பது கனவு – கவிதை என்பது நிழல் – கவிதை என்பது நகல் – அசல் – அனைத்தும்”
என்று, நான் 18.12.1985 காதும் கண்ணும் பதித்துக் கொண்ட கருத்துக் கோவையாகும். 

அக்காலங்களில் எங்களுடைய அண்ணாநகர் இல்லத்திற்கு நாள்தோறும் பல செய்தி இதழ்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். அதில் குறிப்பாக, வாரம் தவறாமல் நான் விரும்பிப் படிக்கும் இதழாக ‘தாய்’ இதழ் அமைந்தது. தாய் இதழில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசிப்பக்கத்தில் ஆசிரியர்ப்பகுதியும், அவருடைய கேள்வி-பதில் பகுதியும் தான். ஒருமுறை ஒருவர் வினா தொடுத்திருந்தார். பின்னணிப்பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குரல் வளத்தையும், பாடகர் ஜேசுதாஸ் குரல் வளத்தையும் ஒப்பிட்டுச் சொல்லுங்கள்? அதற்கு, ‘ஞானபாரதி’ வலம்புரிஜான் சொன்ன பதில் இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது:-
எஸ்.பி.பி.-யின் குரல் வளம் ‘மாந்தளிரைக் கோத வைக்கும் குயிலின் குளிர்காலக் குரலைப் போல’ இருக்கும்,  ஜேசுதாஸின் குரல் வளம் ‘ஆலோலத் தென்றலிலே அசைகின்ற ஆலய மெழுகுவர்த்திகள் உருக்குகின்ற மௌன சங்கீதத்தைப்போல’ இருக்கும். 

ஒருமுறை விஜய் தொலைக்காட்சியில் நண்பர்கள் பாலகிருஷ்ண்ணும், சொல்லின் செல்வர் மணிகண்டனும் வடிவமைத்த ‘சொல்லப்பட்ட சுவையோ ஆறு, சுல்தான் தொட்டால் ஏழு’ 
என்ற சமையல் நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினராக ‘கலைமாமணி’ வலம்புரிஜான் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் ஒரு சுவையான ‘கேக்’ ஒன்றை அவர் அருகில் வைத்து இதைப்பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று நான் கேட்டபொழுது, தான் பேசுவதற்கு முன்பு மீண்டும் சுவைத்து பார்ப்பதற்காக அக்கேக்கை மீண்டும் கேட்டுவிட்டு மீண்டும் கேட்க வைத்ததனால் ‘கேக்’ என்று பெயர் வந்ததோ என்று சொல்லித் தன் பேச்சைத் தொடங்கியது என் நினைவிலிருந்து இன்னும் நீங்கவில்லை. 

தாய் இதழின் தொடக்க இதழில் அவர் எழுதிய வரிகள் பொன் வரிகளாகும்.
‘தாய் பிறக்கும் நாளும் வரும், வாய் மணக்க ஊர் புகழும், போட்ட முதல் அசலாகும், புதுப் பாட்டின் நகல் ஆகும்.

வார்த்தைச் சித்தர் தான் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் அவருக்கே உரிய குரல் தொனியில் தொடங்குகிற வரிகள் இளைஞராய் இருந்த என்னை மிகவும் ஈர்த்த வரிகளாகும்.
கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமைமிகு நிலப்பிறப்பின்
முதற்பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தருமுன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதிமதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண்புலவர்
தன்னை வணங்குகின்றேன்.

வலம்புரியார் அதிகமாகப் பிறரைப் புகழ்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவருடைய பதில்:-
“நீல வண்ண நீர்த்தீவில் சிறகுப் படகுகளில் சில்லிடுகிற செம்போத்துப் பறவை உயரமாகப் பறக்கிறது என்பது அதன் குறைபாடல்ல; 
இருட்டு இராத்திரிகளில் ஒரு வெளிர் நீலப்பூ இதழவிழ்ந்து தேன் விதைப்பது அதன் குற்றமல்ல; 
குயிலுக்குப் பாட்டும், மயிலுக்கு ஆடலும் அவைகளைக் கேட்டுக்கொண்டு வருவதல்ல.”

பதினெட்டாண்டுகளுக்கு முன்பு (18.04.2003) இலங்கையில், கம்பன் கழக விழாவில் அவரை நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபொழுது, ‘அப்பாவின் உரைகளை எழுத்தாய்ப் பதிவு செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டு என்மீது விழுந்துள்ளது. என்ன செய்யலாம்?’ என்று கேட்டபொழுது, சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்;
“அருள்! ஒரு பறவை பறந்து போகிறது. பறக்கும்போதே இறகுகள் ஆங்காங்கே உதிரத்தான் செய்யும், உடனே, பறக்கிற பறவை கீழே இறங்கி வந்து தன் அழகான இறகுகளைக் கொத்திக் கொத்தித் திரட்டிக் கொண்டிருந்தால் பயணம் தடைபடும் அல்லவா? எனவே பறப்பதுதான் பறவைகளின் செயல்; சிறகுகளைச் சேகரிப்பதல்ல” என்றார்.

அவருடைய ஒவ்வொரு சொற்களும், நட்சத்திரக் கனகாம்பரங்கள். சான்றாக:
காத்திருக்கும் வரை நான் காற்று, புறப்பட்டால் புயல்
தொண்டை பழுதாகிற போதும் ஆற்றுகிற பொதுத் தேர்தல்த் தொண்டை மறக்கக்கூடாது.
நான் விதையைப் போன்றவன், விரல்களிலேயே இருந்தாலும் நான் விருட்சமாவேன்.
நினைத்ததும் பாடுகிற நிர்மலமான இந்த இளைஞருக்கு வீங்கு புகழ் வரவும் – ஓங்கு புகழ் வரவும் தாய் அன்போடு வாழ்த்துகிறது.

வெட்டுக்கிளிப்போல துள்ளித் துள்ளிப் போகிற அறிவு நதி.  விதையாக விழுந்திருக்கிறார், இனி விளைவாக எழுவார். நமது கனவு மாளிகைக்கு கந்தர்வத் தூணாக எழுவார். 
தாழைமடலில், சந்தனக்குழம்பு கொண்டு, பித்திகை அரும்புகளால் பின்னிராப் பொழுதுகளில் முத்திரைக்கவிதை –  முழுநிலாக் கவிதை – சித்திரைக் கவிதை – சீதளக் கவிதை... 
மத்தாப்பூ மனிதர், கித்தாப்பு மொழிக்காரர்.
நுரைப் பூக்களின் நூதனமான சங்கீதம்.
வாழும்போதே வரலாறு ஆகிறார்.
வானங்கள் நமக்கு எல்லைகள் அல்ல.
புத்தராவது எட்டாத வானத்தில் கிட்டாத நிலவு.
வெண்பனி இமயத்திற்கு முன்பாகக் கைகட்டி நிற்கிற வெளிறிப்போன கூழாங்கல்லாக நான் உணர்கிறேன்.
மாளாத நினைவுகள் மருளாத உணர்வுகள்.
ஆறு என்றால், தயங்கித் தயங்கி ஓடுகிற ஒரு தண்ணீர் விரிப்பு.  நதியென்றால் விரிந்த சடை போல வெள்ளம் மணலை ஊடறுத்துப் போவது.
உன் எதிரிகளைச் சொல், இதோ! உன்னை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன்.
எந்தப் புத்தகம் உன்னை புரட்டிப் புரட்டித் தூங்கவிடாமல் விழித்துக்கொள்ளப் பண்ணுவதாக இருந்தால் அதுவே விழுமிய புத்தகம்.
எப்போதும் வருவதல்ல கவிதை, எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை. இதயம் கனத்தால் வருவது கவிதை!
நதி குளிக்கப்போகிறது. 
நீலம் நிறமல்ல. 
தரைக்கு வராத தாகமில்லாத சூரியன்.
ஆகாயத்தோப்பின் அகத்திப்பூ.
சொல்லிவிடுவது வசனம்; சொல்லாமல் விடுவது கவிதை!
பிச்சிப்பூச் சொற்கள்.
நான் காற்றைச் சுவாசிப்பதில்லை, நம்பிக்கைகளை நான் சுவாசிக்கிறேன்.
அடுத்தவர் மேல் ஆயுதம் செலுத்துவது மதவெறியாகும்; அன்பு செலுத்துவது மதநெறியாகும்.
வார்த்தைகள் நடந்தால் வசனம்; நடனமாடினால் கவிதை.
கந்தர்வ அழகோடு நுரைத்துச் சிரிக்கிற நுங்கு நடை.
அந்தகாரத்தின் அசுர ஆட்டம்.
விழிப்புருவங்களை வில்லாக்கி விடுகிறது.
எட்டாத வானத்தில் கிட்டாத நிலவுகள்.
முதலை ஆள்பவன் முதலாளி; தொழிலை ஆள்பவன் தொழிலாளி.
கிழக்கு வானம் சிவக்காமல் இருக்கலாம்; கீழ்வானம் வெளுக்கவில்லை.
கபாலங்களுக்குள் முள்ளிச்செடிகள் முளைத்து விட்டன. 
சமூக அநீதிக்குச் சாமர வீசிகள் வந்துவிட்டார்கள்.
மேற்கு நாடுகளில் அமைதியைத் தேடி அலைகிற பலரும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் கிண்கிணிக் கிரீடமான யோகாவைத் தரித்துக் கொள்கிறார்கள். 
இங்கே மழை கூட விசிறிக் கொண்டே விழுகிறது; காற்றுக்கூட இருமிக்கொண்டே நடக்கிறது.
கொடிமரங்களுக்குப் பூச்சி மருந்து அடிப்பதே வரலாறாகி விட்டது.
சிங்கம் செத்துக் கிடந்தாலும் சரி, அதன் கம்பீரத்தைக் களவாட முடியாது.
ஒருநாள் உதயராகம் பாடியே தீரவேண்டிய பாட்டு வானப்பறவை.
பாதரசப் பளபளப்பு.
நுரைத்த பூக்களின் நூதன சங்கீதம்.
செல்லாக்காசின் பொல்லாக் கோபம்.
புதிய ரேகைகளைப் புறப்பட வைத்த பூகோளப் பொறிவண்டு
விழுதுகளின் ஆட்டத்தை விமர்சிக்கும் கிளிகளுக்கு விதைக்குள்ளே உயிர் உறங்கும் வித்தகத்தை யார் உரைப்பார்?

வலம்புரியாரின் எழுத்தும், பேச்சும் காலக்கோயிலில் கற்பக நிவேதனமாய் என்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்வதை நான் பல தருணங்களில் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.  நயவுரை நம்பியின் நூலறி நண்பர், கோவைத்திலகம் அண்ணல் கிருஷ்ணகுமார் ஆண்டு தவறாமல் வலம்புரியாரின் நினைவு நாளன்று (08.05.2005), விளம்பரம் வெளியிடுவார்.  கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தான் வங்கியில் உயரலுவலராய் இருந்தபோது, தாராளமான தொகையை வங்கி வாயிலாக இலக்கியக்கொடையாக வலம்புரியாருக்கு வழங்கியது தன் பேறு என்று இன்றும் சொல்லிக்காட்டுவார். அவ்வண்ணமே வலம்புரியாரின் வார்த்தைகளை நண்பர் மை பா நாராயணன் சொல்லிக் காட்டிப் பெருமைப்படுத்துவார்.

மின்னலைப்போல அவரது எழுத்து நடை, என் இளமைக் காலங்களில் விமானத்தை விட வேகமாகப் பறந்தது. 
மகரந்த நடையில் மணக்கும் கட்டுரைக் கனிகளை சுகந்தமான வரிகளுக்கு அப்பாலும் வடிந்து விடாத வெள்ளமாக நுரைத்துச் சிரிக்கிறார் வலம்புரியார்.  நெஞ்சில் கனல் மணக்கும் நித்திலப்பூவாக வாழ்கிறார். 

‘காவியக் கவிஞர்’ வாலியின்
“உன் வித்தக விரல்களில் விளையாடும் எழுத்துக்கள் எல்லாமே, பாக்கள்! 
நாங்கள் அதைச் சுற்றி வரும் ஈக்கள்”
 என்னும் கவி வரிகள் கல்வெட்டு வரிகளாகும்.

“மின்னல் சாரத்திற்கு மெருகேற்றுவதும், வலம்புரியின் எழுத்து வாசலுக்கு வார்த்தைத் தோரணம் கட்டுவதும் ஒரே வகையான பணிதான்.
 உவமைகளிலே புதுமை! உருவகங்களிலே கவர்ச்சி!” 
என்று எந்தையார் வலம்புரியை வரைந்து காட்டிய பெருமை வரிகளும் ஈடற்றவை.

------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
உரைவேந்தரின் உரைத் தொடர் – (எ)
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி ... 

இதுபோது கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளில் இறைவனை அருச்சிப்போர் முடிவில்,  "நானாவித மந்திரபுஷ்பாணி சமர்ப்பியாமி''  என்று சொல்லி முடிப்பது முறையாக இருக்கிறது.  இங்கே முருகனை அருச்சிப்போர் அருச்சனை முடிவில், 
“நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின், நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு, புரையுநர் இல்லாப் புலமையோய்”  என முடிப்பது அறிவுநெறிக்கு மிகவும் ஒத்திருப்பது நோக்கத் தக்கது.  இத்திருமுருகாற்றுப்படை, முருகன் திருவடி ஞானம் பெறுதற்குத் துணையாகும். திருமுறையாவதையும், அவ்வாறு ஆகுமிடத்து இடையிடையே கூறும் முருகனுடைய அருளுருச் செயல்களையும் பிறவற்றையும் காணும் நாம் இயற்கைப் பொருள்கள் சிலவற்றின் அமைப்பியல்புகளையும் காண்கின்றோம்.

அடுக்கம் என்பது மலைப் பக்கத்தைக் குறிக்கும் சொல்.  மலைப்பக்கம் மண் படிந்து மரங்கள் வானளாவ உயர்ந்து வளர்தற்குரிய இடம்.  மரங்கள் செறிந்த சோலைகளும் அங்கே நிறைந்திருக்கும்;  சூரர மகளிர் அச்சோலைகளில் விளையாடுவர்.
 குரங்கேறாத மரமில்லையென்பது பழமொழி; அத்தகைய குரங்குகளும் ஏறியறியாத உயரமுடைய மரங்கள் அடுக்கங்களில் நிற்கின்றன.  அங்கே காந்தள் மலர்ந்து தேன் நிறைந்து மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்காந்தட்பூவால் தொடுக்கப்படும் கண்ணி முருகன் திருமுடியில் பெருமையும் தட்பமும் கொண்டு விளங்குகிறது. 

கூதளம் என்பது தாளியைக் குறிக்கும் சொல். இது வெண் கூதாளி, செங் கூதாளியென இருவகைப்படும்; இவையே வெண்டாளி யென்றும் செந்தாளியென்றும் வழங்கும். முருகனது வேலேந்தி விளையாட்டயரும் வேலன், இதனால் தொடுக்கப்படும் கண்ணியணிகின்றான. பச்சிலைக்கொடியை நாராகக் கொண்டு சாதிக்காய் தக்கோலம் என்ற இவற்றோடு காட்டு மல்லிகையை இடையிடையே விரவி இத் தாளிப்பூங்கண்ணி தொடுக்கப்படுகிறது. சாதிக்காய் நறுமணம் பெற்று விளங்குதலால் அதனை நறைக்காய் என்றும், தக்கோலத்தின் காய் புட்டில் போன்றிருத்தலின் புட்டில் என்றும் முருகாற்றுப்படை மொழிகின்றது. 
செங்கடம்பின் பூவால் தொடுக்கப்படும் தார் உருள் பூந்தார் எனப்படுகிறது. 
கடம்பின் பூ தேருருள் போலும் வடிவினையுடைமைபற்றி உருள்பூ எனப்பட்டது. 

இப்பூ இவ்வாறு உருண்டு திரண்ட காட்சி பெறுதற்கு வாயிலாக, முகில் கடற்குச் சென்று நீரை நிரம்ப முகந்து மேனி கருத்து வானத்திற் பரந்து கார்காலத்து முதல் மழையைப் பெய்கிறது.  அக்காலத்தே இருளுண்டாகச் செறியத் தழைத்திருக்கும்  இக்கடம்பு அடி பருத்து அழகுறப் பூத்து நிற்கும். இப்பூவால் தொடுக்கப்படும் தார், முருகன் திருமார்பில் கிடந்து இனிய காட்சி வழங்குகிறது.

பரங்குன்றத்தின் சிறப்புக் கூறவரும் முருகாற்றுப்படை, அங்குள்ள சுனை யிடத்து மலர்ந்திருக்கும் பூக்களை வண்டினம் மொய்த்து ஒலிக்கும் காட்சியை எடுத்துக் காட்டுகிறது.  கூடல் நகர்க்குக் குடபாலில் கருஞ்சேறு பரந்த அகன்ற வயல்கள் உள்ளன; அங்கே நீர் இடையறாமையின் தாமரைகள் இதழ் விரிந்து பூத்துள்ளன. 
இரவுப்போதில் தாமரை குவிதலின், வண்டினம் இரவெல்லாம் குவிந்த அத்தாமரை மலர்க்குள் இருந்து உறங்கும்.  வைகறைப்போதில் நெய்தல் மலருதலின் அவ்வண்டு தாமரையினின்றும் வெளிப்போந்து புதிது மலரும் நெய்தற்பூவிற் படிந்து தாதூதுகின்றன. ஞாயிறெழுந்து வெயில் பரப்புங்கால் நெய்தலை நீங்கிச் சுனையையடைந்து அதன்கண் தோன்றி மலர்ந்திருக்கும் சுனைப்பூக்களைச் சூழ்வந்து ஒலிக்கின்றன.

பேய்மகள் நெய்ப்பசையின்றி யுலர்ந்த தலைமயிரும் அகன்ற வாயும் உடையவள்; 
அவள் வாயில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிரையொவ்வாமல் பற்கள் முளைத்திருக்கின்றன. அவளுடைய பசுங்கண்கள் எப்போதும் சினந்து சுழன்று திரியும்; கண்பார்வை மிகக் கொடுமையானது; காதுகளில் கூகையும் பாம்புகளும் வாழ்கின்றன; நீண்டு தொங்கும் அடிக்காது மார்பில் வீழ்ந்து அசைகிறது. வயிற்றின் மேந்தோல் பனையின் பட்டைபோல் சுரசுரப்பாக இருக்கும். அவள் நடக்கும் நடை காண்பார்க்கு அச்சம் தருகிறது. அவளது பெரிய கையில் போரிலே வீழ்ந்தாருடைய தலை இருக்கிறது. அதன் கண்களைக் கைவிரல் நகத்தால் குடைந்து தோண்டி யெடுத்துத் தின்கின்றாள்; அவ்வாறு செய்வதால் அவள் கைவிரல் குருதிபடிந்து சிவந்திருக்கிறது. இந்நிலையில், நிணத்தைத் தின்றுகொண்டே கையைத் தோளுற முடக்கி விலாப்புறத்தையடித்து ஓசை செய்துகொண்டு கூத்தாடுகிறாள். இது முருகன் அவுணரைக் கொன்றழித்த போர்க்களத்துக் காட்சிகளுள் ஒன்று.

உடையைப்பற்றிக் கூறவந்தபோது இந்நூல் உடையென்பதன் வேறாகத் துகில், காழகம், உடுக்கை முதலி சொற்களை எடுத்தாளுகின்றது. உடையென்பது கையால் முகந்த புகைபோல மென்மையும் நொய்மையு முடையதெனவும், இதனை மென் மொழி வழங்கும் யாழ் வல்லுநர் உடுக்கின்றனரெனவும் கூறுகிறது. துகிலென்பது சூரர மகளிடத்தும், முருகனிடத்தும் காணப்படுகிறது. அரமகளிர் அணிந்திருக்கும் துகில் செந்நிறமுடையது; அந்நிறம் அதற்கு இயல்பாய் அமைந்ததேயன்றிச் செயற்கை யாய்த் தோய்க்கப்பட்ட தன்று. முருகன் திருமேனியில் கழுத்தைச் சூழ்ந்து மார்பின் இருமருங்கும் ஒழுகி உதர பந்தத்தின் உள்ளே இறுகி நிலத்தளவும் தாழ விடப்பட்டுளது; அதன்பால் நறுமணமும் மென்மையும் அமைந்துள்ளன. அருவி வீழுங்கால் அவற்றின், தோற்றம் குறியவும் நெடியவுமாகிய பல துகில்களை உவமமாகக் காட்டுகின்றது. 

மேலும் அம்முருகன் அரையில் செந்நிறமுடைய ஆடை திகழ்கிறது. முனிவர்கள் பால் மரவுரி யுடுக்கையும் முருகாற்றுப் படுக்கும் குறமகள் பால் மாறுபட்ட நிறமுடைய அறுவைகளும், இருபிறப்பாளரிடையே காழகமும், முருகனோடு விளையாடும் மகளிர்பால் தழை யுடையும் காணப்படுகின்றன.

தேமொழி

unread,
May 7, 2021, 5:11:33 PM5/7/21
to மின்தமிழ்
57  –  “பேரறிஞர் அண்ணா வளர்த்த பேச்சுத் தமிழ்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் பொழுது பல நூல்களைப் படித்து வந்த பொழுது, பேரறிஞர் அண்ணாவின் எழுச்சியான உரைகளையும், எழுத்து வடிவில் வந்த நூல்களையும், கவினார்ந்த கட்டுரைகளையும், ‘திராவிட நாடு’ பழைய இதழ்களையும் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி ‘தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்’ மடலங்களாகப் படித்து அருமை நண்பர் ஐ.நா. உயர் அலுவலர் அண்ணன் டாக்டர் கண்ணன் அவர்களுக்குக் கடிதங்கள் எழுதும்போது அண்ணாவின் மேற்கோள்களையே சுட்டிக் காட்டி எழுதும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டேன்.

24.01.1986 - ஆம் நாளைய குறிப்பேட்டில், பேரறிஞர் அண்ணாவைப் (15.09.1909 - 03.02.1969) பற்றிய திரு. ஏ. கே. வில்வத்தின் குறிப்புகளைப் படித்து வியந்தேன்.

“ஒரு மொழி வைத்து உலகாண்டவன் நீ ! இன்று வருமொழிக்கெல்லாம் நடை பாவாடை விரித்து நாசமாவதா ?”
“தென்னாடு வேட்டைக்காடு, வடநாடு வேட்டையாடுபவரின் நாடு. இதுதான் இன்றைய அரசியல் ஏடு, இதனால் விளைவது மாபெரும் கேடு !”
“இரும்பென்றால் டாடா ! செருப்பென்றால் பாடா ! மருந்தென்றால் தாதா ! துணியென்றால் கிஷன்சந்த் செல்லாராம் ! சிமெண்ட் என்றால் டால்மியா ! நகையென்றால் சுராஜ்மல் ! நவதானியங்களென்றால் ருட்சர் கேவல்சந்த் !”
“சென்னையில் பிறந்தவன் கைவண்டி இழுக்கிறான். சென்னையில் பிழைக்க வந்தவன் இங்கே தனியாக ஒரு வளாகத்தை வளைத்துக் கொண்டான்.”
“இந்த மண்ணுக்கு உரியவன் நாளெல்லாம் உழைத்து விட்டு நள்ளிரவில் தன் வாயில் அள்ளிப் போடும் ஒரு கவளச் சோற்றில் கலந்திருக்கும் கற்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். ஒண்ட வந்தவனோ இங்கே உப்பரிகையில் அமர்ந்தபடி வைரக் கற்களில் நீரோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறானே, இது என்ன நியாயம் ? இவ்வளவு பெரிய பேதத்தை வைத்துக்கொண்டு பேசுகின்ற கூட்டங்களிலே எல்லாம் பண்டித நேரு மக்களைப் பார்த்து ‘ஜெய்ஹிந்த் !’ என்று முழக்கமிடச் சொல்கிறாரே, முழக்கமிடவா தோன்றும்? முகாரியல்லவா எதிரொலிக்கும்.”
“Respected Chairman and my learned friends! I rarely speak in English! But, that does not mean my English is rare and I belong to the Dravidian stock. I am proud of it”.
“குழந்தையிடம் அழகான ரோஜா மலரைக் கொடுத்தால், அது சற்று நேரம், அதன் அழகைப் பார்த்து ரசிக்கும். பிறகு, ஒவ்வொன்றாகப் பிய்த்து எறியும். அது போன்றதுதான் இளமைப்பருவம்.”
“தங்கத்திலே அரிசி செய்து சமைத்து, கோமேதகக் கூட்டும், வைர வறுவலும், முத்துப் பச்சடியும், மோர்க் குழம்பிலே செம்பும் கலந்தா சாப்பிடுகிறீர்கள் ? உங்களைப் போன்ற சிலர் தர்மப் பிரபுவாக வாழ தொழிலாளர்கள் தரித்திரர்களாக இருக்க வேண்டுமா ?”
“தமிழ்க் கடவுள் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தால் ஏற்க மாட்டாரா ? வேண்டுதல் வேண்டாமை இலானாகிய இறைவன், தமிழ் மொழியை வெறுப்பாரா! தமிழா ! உன் மொழியே வேண்டாமென்றால், உன் மொழியிலேயே அர்ச்சனை செய்தால், உன் வேண்டுகோளை ஏற்க மாட்டேன் என்று மறுத்தால், அந்த இறைவனை வழிபடுவதால் என்ன பயன் விளையும் ? ‘தாயினும் நல்லன்’ என்று இறைவனைப் புகழ்கிறீர்களே, அந்த இறைவன், உன் தாய் மொழியான தமிழ் மொழியை ஏற்றுக் கொள்ள மாட்டாரா ?”
“வறுமையில் அச்சமின்றி நம் தந்தையர் நம்மைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்பிப் படிக்க வைத்தனர். ஆசிரியர் அடிப்பாரே என்று அச்சமின்றி, நாமும் பள்ளிக்குச் சென்று படித்தோம். ஆகவே, நம் வாழ்க்கையில் வரக்கூடாதது அச்சம். ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’. அச்சமின்றி வாழ வேண்டுமானால் நெப்போலியன் வரலாற்றைப் படியுங்கள். அச்சத்துக்கு அச்சம் உண்டாக்க வேண்டுமானால் பெரியாரைப் பாருங்கள். ஆகவே நீங்கள் அச்சமின்றி வாழ வேண்டும். பிறரை அச்சமின்றி வாழ வைக்க வேண்டும். அச்சம் வந்தால் மிச்சம் எதுவுமிருக்காது. ஆனால், அச்சம் வேண்டும். தீமை செய்ய அச்சம் வேண்டும். இந்த அச்சம், மச்சம் அழகூட்டுவது போல, வாழ்வுக்கு மகிழ்வை ஊட்டும்.”
“கோலாரிலே தங்கம் கிடைக்கிறது என்றால், பூமியை வெட்டியவுடன் இது பாளம் பாளமாகக் கிடைப்பதில்லை. கல்லை வெட்டி, அதைக் கரைத்து, அரைத்துக் காய்ச்சிய பின்புதான், மின்னும். தங்கத்தை எடுக்கின்றவர்கள் அவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது அது போன்றதுதான் சமுதாய சீர்திருத்தப்பணியாகும்.”
“கொங்குநாடு கேட்காததை; வங்கநாடு கேட்கிறது. ”
பட்டமளிப்பு விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முடிவுரை வரிகள் பொன்னான வரிகளாக மிளிர்கின்றன.
“தமிழ் உமது முரசாகட்டும் ! பண்பாடு உமது கவசமாகட்டும் ! அறிவு உமது படைக்கலனாகட்டும் ! அறநெறி உமது வழித்துணையாகட்டும்...”
அண்ணாவின் புகழ் சூடிய திரைப்பட வசனமாக, ‘சொர்க்க வாசல்’ படத்தின் மறக்கவொண்ணா மணிவாசகம்... ‘சாலையோரத்தில் வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீதக் குறிகள், வேந்தே ! இதுதான் காலக்குறி.’
‘புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே;’ என்பது 202-ஆவது புறநானூற்றுத் தொடராகும். புலவரை இகழ்ந்தால், நகரம் அழிந்தது என்பது பொருள். அரிய பணிகளைச் செய்யும் புலவர்களை நினைத்து, அண்ணா சொன்ன பொன்வரிகள், “புலவர்களைப் பழிக்கிறவன் புதைகுழிக்குள் போவான்; புவியில் எங்கிருந்தாலும் அவன் தலையில் இடி விழும் ”.
1942 - ஆம் ஆண்டு, ‘திராவிடப் பாசறை’யில் என் பாட்டனார், உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி எழுதிய வரிகள் இன்றும் பொன்னாய் மிளிர்கிறது.
“அண்ணாத்துரை ஒருவர் போதாது, பல அண்ணாத்துரைகள் வேண்டும். அவருடைய பரந்த அறிவு பல கோளாறுகளை ஆணிவேரோடு அகழ்ந்தெறிய முற்பட வேண்டும். அச்செயற்கு அரணாக அஞ்சாமையும், ஆண்மையும் செறிந்த அடல் மிக்க இளைஞர்கள் படை திரள வேண்டும். அவர்கள் வாய்ப்பறையாக நாக கடிப்பாக, எல்லோருடைய செவியிலும் அறிவுக் கருத்துரைகள் சென்று முழங்க வேண்டும். அதன் விளைவாக, தலைசிறந்த தமிழரது வாழ்வாக சீரிய, கூரிய தீஞ்சொல் அருஞ்செல்வமாக, அணிகலனாக நம் அண்ணா மிளிர்கிறார்.”

சென்னைப் பல்கலைக்கழகத்தில், 1986 - ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி மூன்று நாள் அறக்கட்டளைப் பொழிவில் எந்தையார் உரையாற்றியபொழுது, பெருங்கூட்டமாக ஆயிரக்கணக்கில் ஆர்வலர்கள் வந்து கேட்டதை நானும் கண்டு மகிழ்ந்தேன். அக்கூட்டத்தில் ‘உரை உலகம்’, ‘கலை வானம்’, ‘கருத்துக் கடல்’ என மூன்று பொருண்மைகளில் நயம்பட உரைத்தார்கள். உரையினூடே ஆங்கிலத்தில் அப்பா அண்ணாவைப் பற்றிச் சொன்ன வரிகள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. “ The Dravidian Demosthenes has inaugurated a new era of Tamil eloquence which is original and wonderful, but, unorthodox...”. அவ்வண்ணமே, பேரறிஞர் அண்ணா தமது பேச்சில் பயன்படுத்திய சில தொடர்கள் மட்டுமே சாசன வரிகளைப் போல சாகாமல் இருக்கின்றன என்று சொல்லி அத்தொடர்களை அப்பா அடுக்கிச் சொன்னபோது, கூட்டத்தில் ஆரவாரமான கையொலி அடங்க நெடுநேரமாயிற்று.

     தீ! பரவட்டும்.
     தம்பி வா ! தலைமை தாங்க வா!
     எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
     எங்கிருந்தாலும் வாழ்க !
     வாழ்க வசவாளர் !
     ஏழை – கோழையல்ல – எரிமலை.
     சாமானியர்களின் சகாப்தம்.
     நாம் பலர் – அவர்கள் சிலர்.
     இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
     தம்பியுடையான் படைக்கஞ்சான்.
     கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு.
     பணிவு – துணிவு – கனிவு.
     கட்டிமுடித்த கோபுரம் – கொட்டிக் கிடக்கும் செங்கல்.
     மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.
     மறப்போம் மன்னிப்போம்.
     நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.
     வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது.
     கேட்டுப் பழகிய கை – போட்டுப் பழகிய பை – சொல்லிப் பழகிய பொய்.
     Revolution – not by bullets, but by ballots.
     Determination ever – deviation never.
     Tap the rich and pat the poor.
     Your days are numbered என்று அண்ணாவைப் பார்த்துச் சொன்னவுடன், அண்ணா சொன்ன பதில்,      ‘ My steps are measured ’.

அண்ணாவின் சீர்திருத்தக் கட்டுரைகள் ‘வால்டேர்’ எழுதியதற்கு நிகராகும். அண்ணாவின் நாடகங்கள் ‘மோலியர்’ நாடகங்களுக்கு நிகராகும். அண்ணாவின் சிறுகதைகள் ‘ஓ ஹென்றி’, ‘மாப்பசான்’ சிறுகதைகளுக்கு நிகராகும். அண்ணாவின் நீண்ட கதைகள் ‘விக்டர் யூகோ’க்கு நிகராகும். அண்ணாவினுடைய பேச்சு ‘மார்க் ஆண்டனி’, ‘எட்மண்ட் பர்க்’, ‘ஆபிரகாம் லிங்கனுக்கு’ நிகராகும்.

தன்னுடைய உரையின் இறுதியில், அண்ணாவின் எழுத்துகளை எண்ணினால், ஒரு இலட்சம் பக்கங்களுக்கு மேலாகவும், பதிப்பித்தால் அறுபது தொகுதிகளாகவும் வெளியிடலாம் என்று வலியுறுத்தினார். அதனை அண்மையில், தமிழ்மண் பதிப்பக நிறுவனர், இளவழகனார், அண்ணா அறிவுக்கொடை 110 தொகுதிகளாகத் திட்டமிட்டு, இதுகாறும் 64 தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

அந்த மூன்றுநாள் உரையையும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து எழுத்து வடிவமாக்கியவர் இலக்கியத் தூதுவர் சிவகுமார் ஆவார் ( 02.05.1986 ). அவ்வுரையைத் தொகுத்து, திருமகள் நிலையத்தார் ‘அண்ணா’ என்ற தலைப்பில் நூலாக (முதல் பதிப்பு - ஆகத்து, 1986; இரண்டாம் பதிப்பு – நவம்பர் 1989) வெளியிட்டார்கள். இன்றைக்கு அந்த நூல்படி ஒன்றுகூட மிச்சமில்லை.

அப்பாவுடன் எந்நேரமும் நிழலாக மிளிர்ந்தவர் திருவையாறு சிவகுமார். அவர்தான் முதன்முதலாக ஸ்ரீராம் நிறுவன இயக்குநர்களான, திருமதி வத்சலா அரங்கநாதனையும், திருமதி அகிலா சீனிவாசனையும் அப்பாவிடம் அறிமுகம் செய்து, பாரதியாருடைய இலக்கியப் போட்டிகளை ஸ்ரீராம் நிறுவனம் நடத்துவதற்குத் துணை நின்றவராவார். தமிழக அரசின் வேளாண் துறையில் 38 ஆண்டுகளாக பணியாற்றிய ‘பாரதிமணி’, 1975 முதல் சென்னை பாரதி இளைஞர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், பொறுப்பாளராகவும் பொறுப்பு வகித்து ஆண்டுதோறும் திசம்பர் 11 முதல் ஏழு நாள்கள் பாரதியார் பிறந்த நாள் விழாவை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடத்தினார். ‘வீட்டுக்கு வீடு பாரதி’ திட்டத்தின்படி, ஒவ்வொரு இல்லத்திலும் பாரதியார் படத்தைத் திறக்க ஏற்பாடு செய்த பெருமையும் ‘இலக்கியத் தென்றல்’ சிவகுமாரைச் சாரும். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், கவிஞர் எஸ். டி. சுந்தரம், புரட்சித் தலைவர், திரு. ஜி. கே. மூப்பனார், இல்லங்களிலும், 1977ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் ஆளுநர் மாளிகையில் பாரதியார் படத்தைத் திறப்பதற்கும், உதகையில், ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்னும் பாரதியார் பாடலைச் சலவைக்கல்லில் அரசு சார்பில் பதிக்கவும், 1980 இல் கங்கை நதிக்கரையில் ‘அனுமன் காட்’ பகுதியில் ‘இன்னறு நீர் கங்கை ஆறு எங்கள்’ என்ற பாரதியார் பாடலை கல்வெட்டில் பதித்து கங்கைக் கரையில் நிறுவுவதற்கும் துணை நின்றார். ‘பாரதி காவலர்’ இராமமூர்த்தி ஆற்றிய பணிகள் ஒப்பற்றவை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றிய அறக்கட்டளை உரையை அப்பா ஆற்றியதை திருவையாறு சிவக்குமார் பதிவு செய்தார். ஆனால், என்ன காரணமோ ! அப்பதிவு நூலாக மலரவேயில்லை ! ‘பாரதி பணிச் செல்வர்’ சிவகுமார் கருநிற மேனியும் சிரித்த முகமும் வெற்றிலைச் சிவப்பும் மணக்க மணக்கப் பேசும் நல்லன்பர்பால் பல கல்லூரி மாணவிகள் ஈர்க்கப்பெற்று அவரின் அன்பால், பண்பால் அக்காலங்களில் அவரின் வழிகாட்டுதலில் மேடைகளில் வீசிய மெல்லிய தளிர்கள் இன்றைக்குப் பாட்டிமார்களாக பெருமிதமாக வாழ்கின்றனர்.

------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக !
உரைவேந்தரின் உரைத் தொடர் – (ஏ)

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி ..... 

கடல் நிலவுலகைச் சூழ்ந்து நிற்பது; அந் நிலவுலகு தோன்றுதற்கு முன் தோன்றிய தொன்மையும் இதற்குண்டு; இதனால் இது பார்முதிர்கடல் எனப்படுகிறது. இஃது எப்போதும் நீரறாத நிலையமாதலின் இதனைப் பனிக்கடல் என்றார். அளக்கலாகாத ஆழத்தால் நீலநிறங்கொண்டு தோன்றும் இதன்கண் விடியற்காலத்தில் செஞ்ஞாயிறு தோன்றுவது, நீலமயிலின்மீது செம்மேனியனாகிய முருகன் - காட்சியளிப்பது போன்றிருக்கும். இதன் நலங்கண்டே இந்நூல், ''ஞாயிறு கடற்கண்டாங்கு ஓவற இமைக்கும். சேண்விளங்கவிரொளி'' எனக் கூறுகிறது. எத்துணைக் கலங்கள் படரினும் காற்றுத் திரண்டு மோதினும் கலங்காத இக்கடல், முருகன் சூர்மருங்கறுத்தற்கு உள்புக்கபோது கலக்க மெய்திற்றென்றார், கலங்காத கடலையும் கலக்கின முருகன் சூர் மருங்கறுப்பது அருமையானது என்பதற்கு. அதனை அவன் படைமேலேற்றிச் ‘சூர் முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்’ என்றார். முகில்கள் நிலவுலகிற் பரந்து சென்று பெய்யும் மழைநீர்க்கு முதல் இக்கடலே; இதுபற்றியே இது கார்கோள் எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

கணவீரம் என்பது செவ்வலரிப் பூவுக்குப் பெயர் ; இப்பூ பெருமையும் தட்பமும் உடையது; இதன் நறுமணம் குறித்துக் குறவர் முருகனைப் பரவுமிடத்தே, மாலையாகக் கட்டி வழிபடுகளத்தை ஒப்பனை செய்கின்றனர்.
களிற்றின் பெண்ணினம் பிடி எனப்படும். அது களிறு போலக் கொம்புடைய தன்று. இக் களிறும் பிடியும் அருவிவீழும் மலைச்சாரற் காட்டில் காணப்படுகின்றன. அருவியின் தட்பத்தால் பிடியானை குளிர்மிகுந்து நீங்குகிறது.

ஆமா என்பது காட்டுப் பசுவகை; இதன் ஏறு வலிய கோடுகளையுடையது; காட்டில் கொடிய பகைவிலங்குகள் பலவாதலின், அவற்றோடு பொருதற்கென அமைந்திருத்தலின், ஆமா ஏற்றின் கோடுகள் வலியுடைய வெனச் சிறப்பிக்கப்படுகின்றன. "கருங்கோட்டு ஆமா நல்லேறு'' என்பது காண்க.

இறால் என்பது தேனடை; வானளவே உயர்ந்த மலைப்பாறைகளில் தேனீக்களால் கட்டப்பெற்றிருக்கும் தேனடை இப்பாட்டில் இடம்பெறுகிறது; நெடிதுயர்ந்து நீனிறங்கொண்டு தோன்றும் நெடுவரையில் தேனிறால் தன் பொன்னிறத்தால் ஞாயிற்று மண்டிலம் போல் காட்சித் தருகிறது.

உளியம் என்பது கரடியைக் குறிப்பது. இதன் உடல் மயிர் மேலே கருமையும் தோலடியில் வெண்மையும் கொண்டு உள்ளே அடியில் வெளுத்து மேலே கருத்துத் தோன்றும் பனைச்செறும்பை ஒத்திருக்கும். கரடியின் அடி உள்வளைந்து காணப்படும்.

முடிப்புரை:- இறுதியாக ஒன்று கூறி இச்சொற் பொழிவை முடிக்கின்றாம்; பரங்குன்றில் உறைதலும், அலைவாயிற்சேறலும், ஆவி நன்குடியில் அசைதலும், ஏரகத்து உறைதலும், குன்றுதோறும் விளையாடலும் முருகன் செய்யும் செயல்வகையென இம்முருகாற்றுப் படை மொழிகின்றது. உறைதற்கு இரண்டிடமும் பிற செயல்கட்கு முறையே ஒவ்வோரிடமும் கூறப்படுகின்றன. அசைதல் என்பதற்கு உரைகாரர் இருத்தல் என்றே உரை கூறுகின்றார். எனினும், முருகாற்றுப்படை கூறுவதையே கொண்டால் உறையுமிடம் பரங்குன்றும் ஏரகமும் என்ற இரண்டுமேயாம். உறையுமிடத்து, பரங்குன்றில் அமர்ந்துறை வன் என்றும் ஏரகத்தில் பெரிதுவந்து உறைவன் என்றும் நக்கீரர் சிறப்பித்துக் கூறுவது குறிக்கத்தக்கது. ஏரகத்தில் உவந்து உறைவதுபோலவே பரங்குன்றில் அமர்ந்த துறைவன் என்பதனால் ஏரகத்தில் அவன் உவத்தற்கேற்ப இருபிறப்பாளர் வழிபாடு செய்யக் காண்பதுபோலும் வழிபாடொன்று பரங்குன்றிலும் நிகழ்வது பெறப்படும். ஆனால், பரங்குன்றில் அகன் வயலில் மலர்கள் மலர் தலையும் வண்டினம் தேனுண்டு கிடந்து சென்று சுனைமலரைச் சூழ்ந்து ஒலித்தலையும் காண்கின்றோம். வண்டின் நிகழ்ச்சி யில் வழிபாடொன்று உள்ளுறுத்தப்படுவது இதனால் உணரப்படுகிறது. அவ்வழிபாடு யாது? தாமரையைச் செல்வர் மனையாகவும், தாமரையில் துஞ்சிய வண்டினைச் செல்வராகவும், வைகறையில் நெய் தலை யூதுவது செல்வர் வைகறையில் எழுந்து நீராடிச் செல்வதாகவும், அவ்வண்டினம் சுனைமலரை யடைந்து ஒலிப்பதைச் செல்வர் பரங் குன்றடைந்து முருகனை வழிபடுவதாகவும் கொண்டால், மதுரைமாநகரிடத்து வாழும் செல்வப் பெருமக்கள் நாட் காலையில் எழுந்து நீராடிப் பரங்குன்றம் சென்று முருகப் பெருமானை வழிபடக் கண்டு அவன் அங்கே அமர்ந்து உறைகின்றான் என்பது புலனாகிறது. ஆகவே, ஏரகத்தில் முத்தீச்செல்வர் வழிபாடும் பரங்குன்றில் மதுரைச் செல்வர் வழிபாடும் நிகழ்வது காணலாம்.

மேலும் முருகனைத் தேவரும், முனிவரரும் பதினெண் கணங்களும், எண்வகை வசுக்களும் மக்களுட் செல்வரும் இருபிறப்பாளரும் குறவரும் வழிபடுவதும், மகளிருள் சூரர மகளிர் முதல் குறவர் மகளிர் ஈறாகப் பலரும் வழி படுவதும், உயர்ந்தோர்க்குப் பரங்குன்றம் முதலிய இடங்களில் எழுந்தருளி அவர் செய்யும் வழிபாட்டையேற்று உவந்தருளும் முருகன், குறவர் வெறியயர்களத்தும் குற மகளிர் குரவைக் கூத்தாடுமிடத்தும் எழுந்தருளி அவர் மகிழக் கலந்து தலைக்கை தந்து விளையாடுவதும் காணும் நமக்கு முருகப்பெருமான் எளியார்க்கெளியனாய் எழுந் தருளி இன்பம் அளிக்கும் இனிய பெருமான் என்பது தோன்றி ஊக்கம் தருகிறது.

இவ்வாறு அறிவுக்கு இன்பமும் வழிபாட்டில் ஊக்கமும் பயக்கும் காட்சிகள் பலவற்றை இம் முருகாற்றுப் படை நமக்கும் காட்டி உலகியல் வாழ்வின் புன்மையையும் சொல்லோவியம் செய்து
மெய்யுணர்வுப்பேற்றின்கண் நம்மை ஈடுபடுத்தி நிற்கிறது. புறக்காட்சிகளால் நம் உள்ளத்தைக் கவர்ந்து அகக்காட்சிகளால் முருகனுடைய திருவருட் காட்சிகளைக் கண்டு இன்புறுவித்து அவற்றின் வாயி லாக நம்மை முருகன் திருவடிக்கண் ஆற்றுப்படுத்தும் பெருமைவாய்ந்த திருமுருகாற்றுப்படையின் நலம் ஆயுந்தோறும் இன்பந் தரும் இயல்பிற்றென்பது தெளிவாம்.

தேமொழி

unread,
May 10, 2021, 10:23:26 PM5/10/21
to மின்தமிழ்
58  –  “நாளிதழால் வளரும் நல்லறிவு”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

பேரறிஞர் அண்ணாவின் மூன்று நாள் அறக்கட்டளைப் பொழிவுக்குப் பிறகு, பல நண்பர்கள் அப்பாவைச் சூழ்ந்து கொண்டு தாங்கள் ஓர் இலக்கிய இயக்கப் பாசறையைத் தொடங்க வேண்டும், இளைஞர்கள் பலரை ஊக்குவித்து வருங்காலத் தலைவர்களாக மாற்ற வேண்டும் என்று ஆர்வமாக வேண்டினர். அரசுப் பொறுப்பில் இருப்பதனால் மன்றம், இயக்கம் எல்லாம் நானெப்படி நடத்துவது என்றவுடன், அண்ணல் அருசங்கர், புலவர் வீரமணி, திருமதி சாவித்திரி இராகவேந்திரா போன்றோர் ‘நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்களை வழிநடத்தினால் போதும்’ என்று பேசிக் கொண்டார்கள். பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போல வட சென்னையிலுள்ள அண்ணல் அருசங்கரின் தொழில் வளாகத்தில் முதற் கூட்டம் தொடங்கப்பெற்றது. அமைப்புக்குச் ‘செயல்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். பல நிலைகளில் எழுச்சிக் கூட்டங்கள், சிந்தனை மன்றங்கள் நடத்தப்பட்டன. திருமதி சாவித்திரி இராகவேந்திராவின் இல்லத்தில் (நந்தனம் ‘டவர்’ அடுக்ககத்தில்) நடைபெற்ற செயற்கூட்டங்களில் பல நல்லிளைஞர்கள் வருகை தந்ததும், அவருடைய கணவர் டாக்டர் இராகவேந்திரா, செல்வ மகள்கள் குந்தவை மற்றும் ஜானவி விருந்தோம்பியதும் இன்றும் பசுமையாக என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவர்கள் இல்லத்தில் உதவியாளராக இருந்த தம்பி குணசேகரன் இன்றைக்கு தலைமைச் செயலகத்தில் பதிவுரு எழுத்தராய்ப் பணியாற்றுவது அவர்களின் சிறந்த வளர்ப்புக்குச் சான்றாகும். சில திங்களுக்குப் பிறகு, இலக்கியக் கூட்டத்தில் பங்கு கொண்டு அப்பா அரங்கத்தை நீங்கி மகிழுந்தில் ஏறும்போது, வேறுசில நண்பர்கள் ‘செயல்’ என்னாயிற்று என்றார்கள். அப்பா நகைச்சுவையாக, ‘செயல் மறந்து வாழ்த்துதுமே!’ என்று சிரித்துக் கொண்டே சொல்லிச் சென்றார். 

தொடர்ந்து பல நூலாசிரியர்களின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்த தருணத்தில், அப்பா என்னை அழைத்து ஆங்கில நாளிதழான இந்து நாளேட்டினை நாள்தோறும் படிக்குமாறும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலக் கட்டுரைகளை உரக்க வாசிக்குமாறும் வலியுறுத்தினார். இந்து நாளிதழை எப்படிப் படிக்க வேண்டுமென்று வரையறையொன்றைக் கட்டமைத்தார். குறிப்பாக, முதல் பக்கம், நடுப்பக்கம், ஆசிரியர் உரை (Editorial), வாசகர் கடிதங்கள் (Letters to Editor), சமயம் குறித்த கையகலக் கட்டுரை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், குறிப்பாக ஆங்கிலக் கடல் கே.ஆர். சீனிவாச ஐயங்கார், திருமதி பிரேமா நந்தகுமார், திரு டி. ஆஞ்சநேயலு, திருமதி கௌரி இராம நாராயணன், திரு. ஆர்ட் புக்வால்டு, என். இராம் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்குமாறு வலியுறுத்தியிருந்தார். அக்கட்டுரைகளில் உள்ள சிந்தனைச் சுடர் மணிகளை அங்கிங்கெனாதபடி என்னுடைய குறிப்பேட்டில் பதிவிட்டிருந்தேன். 

அப்பா சொல்லாததைச் செய்வதுதானே மகனின் ஆர்வமாகும். அங்ஙனம் கடைசிப் பக்கங்களில் உள்ள விளையாட்டுச் செய்திகள் மீதும், எனக்கு அளப்பரிய ஆர்வமுண்டு. விளையாட்டுப் பிள்ளையல்லவா! குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டின்மீது அளப்பரிய ஆர்வம். இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னர் சுனில் கவாஸ்கர் முப்பத்து மூன்றாவது சதம் எடுத்த ஆங்கிலக் குறிப்பின் (16.10.1986) தமிழாக்கம் பின்வருமாறு:-
“மட்டைப்பந்தாட்டத் தொடர் போட்டியின் அடுத்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்தது. மட்டைப்பந்தாட்டத்தின், இந்திய நட்சத்திர வீரர் தனது 33ஆவது சதத்தை அடிக்கக் கூடும் என அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாளது. தொடர் போட்டியின் இரண்டாவது நாளின் இறுதியில், இந்திய நட்சத்திர வீரரான கவாஸ்கர் தனது 30ஆவது சதத்தை அடித்த விதமும் அவர்தம் திறனும் எங்களை அவ்வாறு காத்திருக்கச் செய்தன. தனது உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தித் தன்னை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் திறன்மிகு வகையில் கையாளும் திறன் பிற விளையாட்டு வீரர்களுக்குக் கலங்கரை விளக்காய் ஒளி காட்டியது. கவாஸ்கர் அவர்களின் மணிமகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக இந்த 33-ஆவது சதத்தை பதிப்பதற்கு, அவர் பல பந்துகளை சந்திக்கக் கூடும் எனக் கருதினோம். தன்னை நோக்கி வீசப்படும் பந்தை அவர் கையாளும் முறை மிகவும் புதுமையாக இருந்தது. அவர்தம் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான விளையாட்டுத் திறனும் அவர் கொண்டிருந்த சுறுசுறுப்பும், வரம்புக் கோட்டை அவர் அடையும் பாங்கும், மட்டைப்பந்தாட்டத்தில் உறுதியாக அவரைச் சிகரங்களை அடையச் செய்யும் என்ற நம்பிக்கை ஆர்வலர்களை மகிழச் செய்தது.”

அவ்வண்ணமே, 18.10.1986-ஆம் நாளன்று இந்து நாளிதழில் வரப்பெற்ற ‘மாணவர்கள் போராட்டம்’ குறித்த கோவையைச் சேர்ந்த நல்லன்பர் கே.இராமராசனின் ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-
“பருவகால மழை கூடப் பொய்த்துப் போகலாம், ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் போராட்டம் மட்டும் உறுதியாக நடந்தே தீரும். பெரும்பாலும், குறிப்படத்தக்க எண்ணிக்கையிலான, மாணவர் சங்க நிருவாகிகளால்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. உண்மையில், பெரும்பாலான மாணவர்கள் இத்தகைய போராட்டங்களை ஆதரிக்கின்றனரா என்றால், நிச்சயமாக இல்லை என்பதே இதற்கான பதில். அவ்வாறு அவர்கள் அந்த போராட்டங்களை ஆதரிக்கின்றனர் எனில், அப்போராட்டங்கள் நடந்த நாட்களில் கல்லூரிகளில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளில், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதே சான்றாகும். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு முன் உதாரணமாய் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில், போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்த சில மாணவர்களும், இத்தகைய போராட்டம் நடப்பதற்கு நான்தான் முக்கிய காரணம் என்று பிறர் தன்னை உயர்வாக நினைக்கவேண்டும் என்று கருதும் மாணவர்கள்கூட இந்தச் சிறப்பு வகுப்புகளில் சீராகப் பங்கேற்றதைக் காண இயன்றது. இது இரட்டை வஞ்சகமாகும். அதாவது போராட்டம் நடத்துவதற்கான காரணத்திற்கும், மாணவர்களுக்கும் இழைக்கும் மாறான இரட்டைப் போக்காகும். இத்தகைய நாள்களில், கல்லூரிகளில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்படவில்லையெனில், இந்தச் சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண இயலும். மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில், வருகைப் பதிவேடு எனும் முறைமை கிடையாது. விருப்பமுள்ள மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்ளலாம். வகுப்பிற்கு வருவதற்கு விருப்பமில்லாத மாணவர்கள், அவர்களுக்கு பயனளிக்கக்கூடும் என்று தாம் கருதும் வகையில் தங்கள் நேரத்தைச் செலவிடலாம். வகுப்பறையைச் சுற்றியுள்ள நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து விரிவுரைகளைக் கேட்டால் மட்டும் அறிவைப் பெற்றிட இயலாது. மிகவும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன், வகுப்பில் இருப்பதை விட நூலகத்தில் ஒரு மணி நேரம் செலவிட்டால், அது தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதலாம். செய்முறை வகுப்புகள் நீங்கலாக, ஏனைய அனைத்து வகுப்புகளும் வருகைப்பதிவேடின்றி நடத்தப்படலாம், மாணவர்கள் விரும்பினால் வகுப்புகளுக்கு வரலாம், இல்லையெனில் அவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாம் எனும் இந்த நடைமுறையை நாம் பின்பற்றினால், போராட்டங்கள் நடப்பதற்குக் காரணமாக விளங்கும் மாணவர்களின் பிடியை நாம் தளர்த்தலாம், போராட்டக் காலத்தின்போதும் அனைத்து மாணவர்களும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றதே இதற்கான சான்றாகும்.”

ஆங்கிலவாணர் ஆர்ட் புக்வால்டு ‘Money’ என்ற தலைப்பில் எழுதிய 03.11.1986-ஆம் நாளிட்ட கட்டுரையில் இடம்பெற்ற கருத்து மணிகளின் தமிழாக்கம் பின்வருமாறு:-
“ஏழைகளுக்குப் பணம் இவ்வுலகை இயக்கும் பெரிய சக்தியாகும். நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு எனும் தங்கள் கனவை நனவாக்கும் வல்லமை பெற்ற ஆயுதமாகும். நடுத்தரக் குடும்பத்தினருக்கு, அவர்கள் விரும்பும் வாழ்க்கை முறையை அடைய உதவும் மைல்கல் பணமாகும். அவர்களின் இலட்சியத்திற்கும் எதிர் காலத்திற்குமான அடிப்படை தேவைப் பணம் தான். செல்வந்தர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரே காகிதம் பணம்தான். தங்கள் மனநிறைவிற்கான கடவுச்சீட்டு... உங்களுக்கு? சிந்தியுங்கள் நண்பர்களே!”

அதேபோல, வேறு ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்: “நண்பர்களால் பயனேதுமில்லை. என் குடும்பம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. தனிமையில் அமர்ந்து ஆழ்ந்து சிந்திப்பதற்காக, மதிகேடான இந்த கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டியதொரு சூழலை ஒவ்வொரு மனிதரும் கண்டிருப்பார்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும், தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கும், உங்கள் மீது முதலில் நீங்கள் இரக்கம் கொள்ளுங்கள் அல்லது, மன உறுதியுடன் வாழ்க்கையோடு துணிந்து போராடுங்கள். நீங்கள் நீங்களாகவே இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - அவ்வாறு நான் வாழ ஏன் தடையாக உள்ளீர்கள்? எனது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். எனது நலன் கருதியே நீங்கள் அறிவுரை வழங்குகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், நான் நானாகாவே வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ள விழைகிறேன். வாழ்க்கைப் பாதை என்பது மிகவும் குறுகிய மற்றும் நீண்டதொரு பாதையாகும். கடும்பாறைகளும் முட்களும் அதில் நிரம்பியிருக்கும். சிலர் அதனை நரகம் என்று அழைப்பார்கள். ஆனால், வெற்றிக்கான ஒரே பாதையாகும். ஒருவேளை, அவனது வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டால், அவர் அதனை ஏற்பாரா? அவர் வாழக் கருதிய முறையில், தவறுகள் ஏதுமின்றி, இதய வலிகள் அனைத்தையும் தவிர்த்து, அவர் விரும்பியதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் கூறுவேன். நீங்களாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, இளமை என்பது நம் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் தான் வந்துபோகும் வானவில்லாகும்.”

‘மாதிரிப் பள்ளி’ அறிமுகம் தொடர்பாக 86-களில் அதிக விவாதம் நடைபெற்றது. அதுகுறித்து வந்தவொரு கட்டுரையின் தமிழாக்கத்தைக் காணலாம்:
“நவீன பள்ளிகள், தங்கள் பள்ளிகளில், தேசிய ஒருமைப்பாட்டை முனைப்புடன் ஊக்குவித்து வருகின்றனவா? அங்குப் பயிலும் மாணவர்கள் உண்மையிலேயே ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் திறன்மிக்கவர்களாகவும் உள்ளனரா? உண்மையில், அங்கு எவ்வித முறைகேடுகளும் நடப்பதில்லையா? பழைய மெக்காலேயின் கல்வி முறையை “தரம் நிறைந்த கல்வி – பரவல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு” என்று புதிய தலைப்பிட்டு இன்றைய நவீன பள்ளிகள் வழங்கி வருகின்றனவா? அல்லது தமிழர்கள் மற்றும் வங்காளர்களிடையே இந்தி மொழியைத் திணிப்பதற்கான முயற்சி இதுவா? மாய வித்தைகளில் ஈடுபடுபவர்கள், பிறர் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, “ஓம் சூம் சீபூம்பா” போன்ற சில போலி மந்திரங்களை உச்சரிப்பர். பிறரைக் குழப்புவதற்காக அல்லது ஏமாற்றுவதற்காக இத்தகைய தேவையற்ற செயல்களில் சிலர் ஈடுபடுவர். அரசியல் சூழ்ச்சி குறித்து என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
ஒருவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் சிக்கலில் இருக்கும் நபர்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பதை, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பர். இவர்களும் இதனைத்தான் செய்து வருகின்றனர். நம் “தமிழ் உடன் பிறப்புக்களின் பாதுகாப்பு” எனும் பெயரில் எத்தகையதொரு சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை இப்பொழுதாவது தமிழக மக்களுக்கு நலம் புரிந்திடச் செய்ய வேண்டும்.”

------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி.......

திருமுருகாற்றுப் படையில் ,--அங்குசம், உரு (ரூபம்), கணம், சதுக்கம், சந்தி, சிரை, பலி, மகரம், மந்திரம், மனன், முகம், வட்டம், விடை என்றற் போல மிகச்சில வடமொழிச் சொற்களே வந்துள்ளன: ஏறக்குறைய இரண்டாயிரம் சொற்கள் கொண்ட இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று வீதம் வடமொழி வந்துள்ளதெனலாம்: ஆகவே, செந்தமிழே நிறைந்து இயற்கைப் புனைவு மிகுந்து இந்நூல் மிகச்சிறந்து விளங்குகின்றது என்க. பேரறிஞர் ‘உபய வேதாந்த’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. ஜெகன்னாதச்சாரியர் இயற்றிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையின் அருமை கருதி இதனைச் சேர்த்துள்ளேன்.

திருமுருகாற்றுப்படையுடன் தொடர்ந்து ஆர்வலர் ஓதிவரும் வெண்பாக்கள் சொற்றெறிவும், பொருட்பொலிவும் பொதிந்தன.
பகுதி - 1
குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாயென் னுள்ளத் துறை. 
குன்றம் எறிந்தாய் - கிரௌஞ்ச மென்னும் மலையைப் பிளந்தவனே! குரை கடலில் - ஒலிக்கின்ற கடலினிடையே புக்கிருந்த, சூர் - மாமர வடிவான சூரபன்மனை, தடிந்தாய் - வீழ்த்தியவனே! புன் தலைய பூதம்-புற்கென்ற தலையினையுடைய பூதத்தை, பொரு - போர் செய் தழித்த, படையாய் - படைக்கலத்தை ஏந்தியவனே ! என்றும் இளையாய் - எக்காலத்தும் இளமை குன்றாத குமரனே ! அழகியாய் - பேரழகு பொருந்தியவனே ! ஏறு ஊர்ந்தான் ஏறே - இடபவாகனத்தையேறிச் செலுத்தும் சிவபிரானுக்குச் சிங்கவேறுபோன்ற மைந்தனே ! ( நீ ) உளையாய் - எஞ்ஞான்றும் நிலை பெற்றிருப்பவனாய், என் உள்ளத்து - அடியேன் மனத்தில், உறை - தங்கியிருப்பாயாக.

இதனால் புலவர் குமரனைத் தம்முள்ளத்துக் கோயில் கொள்ளுமாறு வேண்டுகிறார். எறிந்தாய் முதலிய விளி ஆறும் அறுமுகனுக்கு ஏற்ப வந்தன போலும். 'யசோதையிளஞ்சிங்கம்', சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்' என்பன போல, ஈண்டு 'ஏறே' என்பது சிங்கவேற்றைக் குறித்தது. இனி, விடையெனக் கொள்ளலுமாம்; ''மழவிடையே! திருமாமடிகட்கென வைத்த கௌத்துவமே' என்று குமரகுருபரர் விடையாகக் கூறியிருத்தலுங் காணலாம். முருகனாதலின் இளையாய் அழகியாய் என்றது. ''என்றுமழியாத விளமைக்கார'' என்றது திருப்புகழ். உளையாய் - முற்றெச்சம். உளையாய் உறை என்றமையால், நீங்கா துறைதல் வேண்டப்பட்டது. 

இனி, குன்றமெறிந்த கதை :- சிவபிரானின் இளைய குமாரனாய்த் தேவர் வேண்டுகோளால் அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாபதியாம் பொருட்டு அவதரித்த முருகக் கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லும் வழியிடையே, கிரௌஞ்சமென்னும் அசுரன் பெரிய மலை வடிவங் கொண்டு அவனை நலிவதாக எதிர் வந்து நிற்க, அதன்மேல் அப் பெருமான் தனது தெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி அதனைத் துளைத்து அழித்திட்டானென்பது. இனி, பரசுராமனும் சுப்பிரமணியனும் பரமசிவனிடம் வில் முதலிய ஆயுதப்பயிற்சியைச் செய்து முடித்த பின்பு, இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும் பொருட்டுச் சிவபிரான் உமாதேவியின் முன்னிலையிலேயே இவர்களுக்குக் கிரௌஞ்ச மலையைச் சுட்டிக்காட்டி ‘இதனைத் துளைத்திடும்' என்று நியமிக்க, பரசுராமபிரான் அம்பெய்து அதனைத் துளையிட்டுக் காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை வீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டனனென்றும் கதை கூறப்படும். சூர் தடிந்த வகையை '' மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து'' என்ற தன் உரையிடத்துக் காண்க. பூதம் - நக்கீரனைச் சிறைவைத்த பூதம். பொருபடை - வேல்; கதாயுதம் எனினுமாம். பூதத்தைக் கதா யுதத்தால் மோதி முடியைத் தகர்த்துக் கொன்றனர் என்பர்; இனி, வேல்வகுப்பில் '' பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப் புலவனிசைக் குருகி வரைக்குகையையிடித்து வழி காணும்" என்றும், 'மலைமுகஞ் சுமந்த புலவர் செஞ்சொல்கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா' என்றும் வருவன நோக்கி வேலெனலாம். மேலை வெண் பாவில்" கற்பொதும்பிற் காத்ததுவும்... வேல்' என வருதலும் நோக்குக.

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
குன்றம் எறிந்ததுவும் - கிரௌஞ்சகிரியைப் பிளந்ததும், குன்ற - பகைவர் ஒழியும்படி, போர் செய்ததுவும் - போரிட்டதும், அன்று போரிட்ட அக்காலத்து, அங்கு - அவ்விடத்து, அமரர் இடர் தீர்த்ததுவும் - தேவர்களின் துன்பத்தைப் போக்கியதும், இன்று - இற்றைவரை, என்னை - அடியனாகிய என்னை, கைவிடா நின்றதுவும் - விட்டொழியாது நின்றதும், கல் பொதும்பில் காத்ததுவும் - கல் முழையினிற் சிறையினின்று காப்பாற்றியதும், (எதுவெனில்), மெய் விடா வீரன் - சத்தியத்தினின்றும் பிறழாத வீரனாகிய முருகனின், கை வேல் - கையிடத்துள்ள தாகிய வேலாகும். இதனால், முருகன்கை வேலின் சிறப்புக் கூறப்பட்டது. அமரிடர் தீர்த்தது - தேவசேனாபதியாகி அசுரர்களையொழித்தமையாலாகும். கற்பொதும்பிற் காத்தது - பூதத்தினின்று. 'எறிந் ததுவும்', 'செய்ததுவும்' எனக் குற்றியலுகரம் ஒரோவிடத்துக் கெடாமல், வகரவுடம்படு மெய்பெற்று வந்தது. 
---

தேமொழி

unread,
May 16, 2021, 10:22:34 PM5/16/21
to மின்தமிழ்
59  –  “எழுச்சியூட்டிய ஈடில்லாப் பேராசிரியர்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================


சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் போது, சென்னை வானொலி நிலையத்தில் பேசுவதற்கான வாய்ப்புகள் பல வந்தன.  அதில், இரண்டு முறை நூல் திறனாய்வு உரை நிகழ்த்தும் நெறியில் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன்.  

கல்லூரிக் காலத்திலேயே என் நெஞ்சைக் கவர்ந்த பேராசிரியப் பெருமகனார் அறிஞர் க.ப. அறவாணன் (1941 - 2018) ஆவார்.  அவரும், அவருடைய துணைவியார் பேராசிரியர் தாயம்மாள் அறவாணனும் எங்கள் பெற்றோரிடம் மிகுந்த பரிவும் பற்றும் கொண்டவர்கள் ஆவார்கள்.  பேராசிரியருக்கு இணையாக பரிவு பொங்கும் தாயம்மாள் அவர்கள் என்னை அன்பு பொங்க ‘அருள்’ என்று அழைப்பதை என்றும் மறப்பதில்லை.

அறிஞர் அறவாணரின் சிந்தனைக் கழனியில் மலர்ந்த பூக்கள் நாடெங்கும் நறுமணம் வீசுகின்றன. தமிழ், ஆங்கிலம், மானிடவியல், மரபியல், உளவியல், பண்பாட்டு ஆய்வு எனப் பல்வேறு நெறிகளில் ஆசிரியரின் புலமை வனப்பூட்டுகிறது.  அறிஞர் அறவாணன் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், புகழோங்கி விளங்கினார்.  நெல்லையிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக அவர் செய்த புதுமைகள் இளைஞர் நல்வாழ்வுக்கு ஆற்றல் அளித்தன.  பேராசிரியர் அறவாணனின் உடையும் அவர் அணிந்திருந்த தொப்பியும் மிகக் கவர்ச்சியான தோற்றப் பொலிவோடு அவர் மிளிர்ந்ததை நாம் எல்லோரும் அறிவோம்.  அந்நாட்களில், செனகால் நாட்டில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றிய மாண்பும், அவரின் நூலறிவும், சொற்பொழிவு மாட்சியும் மாணவர்களை வியக்க வைத்தன.  தமிழ்த்துறை மாணவர்கள் என்றால் சங்க இலக்கியம் பயில்வது, புதுக்கவிதை எழுதுவது, எளிய உடை அணிவது என்ற வரம்பை உடைத்தெறிந்து, இலயோலா கல்லூரியில் முதன்முறையாகத் தமிழிலக்கிய மாணவர்களுக்குத் தமிழ்த் தட்டச்சும், சுருக்கெழுத்தும், திரைப்படப் பயிற்சியும், நாடகக் கலையையும் அறிமுகப்படுத்திய ஒரே பேராசிரியர் அறிஞர் அறவாணன் ஆவார்.  ஆல்போல் தழைத்து அறிவுத் தலைமை பெற்ற பேராசிரியரின் மருமகள் முனைவர் வாணி சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக அணி செய்கிறார்.  பேராசிரியர் வாணியிடம் மண்டியிருக்கும் நூலாயும் திறனும், நுண்ணிய புலமையும் கருத்தரங்கில் அவர் படித்த கட்டுரைகளில் பளிச்சிடுகின்றன.  பேராசிரியர் அறவாணன் மறைந்தபொழுது, அவர் குடும்பத்தினர் நடத்திய இரங்கல் கூட்டத்திற்குத் தன்னுடைய சீருந்தைத் தானே ஓட்டி என் அப்பாவை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது என் நினைவினின்று என்றும் நீங்காததாகும்.

19.11.1990-ஆம் நாளன்று பேராசிரியர் க.ப. அறவாணனின் ஆற்றலால், அறிவால், ஆழ்ந்த அனுபவத்தால், மொழி மானமும், இனமானமும் ஒருங்கே ஒளிர்ந்த ஆசிரியரின் நூற்கனிதான் ‘தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ ஆகும்.  அந்நூலினைத் திறனாய்வு செய்திட சென்னை வானொலி நிலையத்தார் வாயிலாக வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதில் எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தேன்.

அந்நாளில் நான் படித்த திறனாய்வு உரை பின்வருமாறு:-  
“நூலுக்கு நுழையும் முன் முகிழ்க்கின்ற கருத்துக்கள்.  கலை, கல்வி, பண்பாடு, நாகரிகம் இவை பற்றி எல்லாம் நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். ஏன் அவ்வப்போது எண்ணுகிறோம். ஆனால் செயல் அளவில் இவை தொடர்பாக நம்மிடம் உள்ள ஏழைமைகள் அல்லது பற்றாக்குறைகள் தான் அதிகம்.  இந்த இடைவெளியை நம்பகக் குறைபாடு என்கிறார்கள்.

இந்த நூலை ஒருமுறை முழுக்கப் படித்தால் நாம் அறிவது, ஆழ எழுதுவது, அழுத்தமாகச் சொல்வது, வாழ வழி காட்டுவது, வரிக்கு வரிக்கு நாட்டு வளர்ச்சிக்கு உரமூட்டுவது என்னும் நான்கு தூண்களுக்கு மேல் சிந்தனை மண்டபத்தை அமைத்துக் காட்டுகின்ற பேரறிவுத் திறனைப் பாராட்ட வேண்டும்.

கருத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் நம் நாட்டில் சிலர்.  ஆனால் காரணம் தெரியாமல் கண்ணீர் சிந்துபவர்கள் பலர். எண்ணத் தெரியாதவர்களும் பலர். எதையும் பண்ணத் தெரியாதவர்களும் பலர் என்ற நிலைமையைக் வளர்த்துக் கொண்டிருக்கும் நமது மக்களுக்கு எதிர்காலப் பெருமிதம் என்ற வாயில் திறக்கின்ற ‘சிந்தனைக் கோயில்’ இந்நூல் எனலாம்.

இந்நூலில் ஆசிரியரின் பார்வையை விட அவர் கொண்ட ஆழ்ந்த நோக்கு எவரிடமும் காணாத சிறப்பாக உள்ளது.  ஏனெனில் பார்வை வேறு; நோக்கு வேறு;  பார்வை என்பது பொதுவாகப் பட்டுத் தெரிப்பது.  நோக்கு என்பது குத்தி நிலைப்பது. ஆகப் பண்பாட்டு வீழ்ச்சியை மைய மண்டபமாய் கொண்டு இந்நூலை அணுகலாம்.

நூலின் நுழைவாயிலில் ஆசிரியர் தன்னையும், இந்த மண்ணையும் விழிக்க வைத்து விழிமூடிய வெண்தாடி வேந்தருக்கு இந்நூல் காணிக்கை என்கிறார்.   எளிமை கண்டு இரங்குவதும், சிறுமை கண்டு பொங்குவதுமான பெரியாரின் தொண்டன் என்று ஆசிரியர் தன்னுடைய முகவரியை அடையாளம் காட்டுகிறார்.  நூலுக்கு அடிநாதமாய் 33 நூல்களைத் துணையாக வைத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.

இந்த நூல் 1985ல் திருச்சி சூசையப்பர் கல்லூரியில் இருந்து அருள் திரு. சி. கே. சுவாமி பெயரில் அறக்கட்டளைச் சொற்பொழிவாக எழுந்ததாகும்.  ஒரே வரியில் இந்த நூலால் ஏற்படுகின்ற எண்ணம் என்னவென்றால் “தன் நோயை அறிந்திருக்கும் நோயாளியை விட தனக்குள்ள கொடும் நோயையை அறியாது இருக்கும் ஒருவனுக்கு அண்மையில் அவனுக்கு நிகழவிருக்கும் ஏதம் மிகப்பெரிதாக இருக்கும்.  எதிர்பாராததாகவும் இருக்கும்.  பண்பாட்டுச் சீரழிவு என்ற கடும் புற்றுநோய் தமிழினத்தின் எலும்புக்கூட்டை எல்லாம் உருக்கிக் கொண்டிருக்கிறது என்று தவிக்கிறார் ஆசிரியர்.

தமிழரைப் பற்றி தமிழுக்கு உள்ளாகவும் தமிழர்க்கு உள்ளாகவும் இருந்து பார்த்ததைவிட, அவற்றிற்கு அப்பால் இருந்து காண்பது என்பது நேருவின் (Discovery of India) பார்வைக்கு நிகராக இந்நூலை நிற்க வைக்கிறது.  இந்நூலை (Discovery or Recovery of Tamil Culture) என்று கூடச் சொல்லலாம்.

உலக இனங்களிலேயே தமிழினம் தாழ்ந்த இனமாக இன்று உள்ளது.  இப்பார்வையைச் சமூகம், பொருளியல், அரசியல் என்று முத்திற வகையில் நோக்கலாம்.  தமிழர்களிடம் மலிவாக பேசப்பெறும் பாலுறவுக் கொச்சைச் சொற்கள் இக்கொடுமையைத் தெளிவுறுத்துகின்றன.  தமிழ்ப் பண்பாடு பேசப்படும் சொற்களில் துல்லியமாகத் தெரியும் கல்லூரி இளைஞர்களிடம் சொல்லுக்குச் சொல் இழிசொல் நடமாடுவதைக் கேட்கும் அவலத்தைப் பாருங்கள்.  அது போல 1987-ஆம் ஆண்டு, ‘Sunday’ இதழில் தமிழ்நாட்டு நடிகர் உருவம் பொறித்த சுவரொட்டிகளைச் சிற்றூர்ப் பெண்கள் ஓரிரவில் அதன் மேல் படுத்து உறங்குவதற்கு ஒரு ரூபாய் வாடகை கொடுத்துப் பெறுவதற்கு போட்டியிட்டார்களாம்.

அதுபோல, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 2500-க்கும் மிகுதியான திரையரங்குகள் உள்ளன.  எங்கும் மிகுதியான சாராயக்கடைகள், அதிகமான குடியர்கள் பெருகியுளனர்.  வள்ளலாரின் அருட்புகழை இயம்புகின்ற தருணமிது.  சென்னையில் தான் காட்டுப் புலிகளின் கொடுமை அஞ்சி நம்மிடம் நிழல் தேடி வந்த விலங்குகளின் கசாப்புக் கடைகள் உள்ளன.  நோயற்ற வாழ்விற்குப் பேரணி நடத்துகின்ற நம் நாட்டில்தான் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.

அதேபோல கல்வியறிவில் நாம் தான் அளவில் குறைவு. பொய் சொல்வதில் நடந்த போட்டியில் நாம் தான் பெரிய பொய்யர் என வெற்றியும் பெற்றோம். இடைவிடாமல் நயாகரா அருவி போல இரவு பகலாக 200 மணி நேரம் தொடர்ந்து பேசியவர்தான் கடலூரைச் சார்ந்தவர்.  இவையன்றிப் பொது இடத்தில் எச்சில் துப்புவது, மூக்கு சிந்துவது, குப்பையை அடுத்த வீட்டில் கொட்டுவது, எதிர் வீட்டுச் சுவர் ஓரம் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, புறம் பேசுவது முதலான சில அல்ல, பல பண்பாட்டுக் குறைகளுக்கு அவலத்தைத் தேடித் தரும் சிறுமை நமக்கு உண்டு.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பரிசுச் சீட்டுகள் 80 விழுக்காடு நம் மாநிலத்தில் மட்டும் விற்பனை ஆகின்றன.”

திறனாய்வு உரை அடுத்த வாரமும் தொடர்ந்து வரும்.
------
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி ........ 

பேரறிஞர் ‘உபய வேதாந்தம்’ ‘உரைச் செம்மல்’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி.ஜெகந்நாதாச்சாரியர் இயற்றிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையில் சிறப்புப் பாக்களாக உள்ள ஈடற்ற வெண்பாக்களின் உரையைக் காணலாம்.

பகுதி-2
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.

செவ்வேள் திரு கை வேல் முருகப்பெருமானின் அழகிய கையேந்திய வேலானது, வீரவேல் - வீரம்பொருந்திய வேலாகும்; தாரை வேல் - கூரிய வேலாகும்; விண்ணோர் சிறைமீட்ட - தேவர்களை அசுரரிட்ட சிறையினின்றும் காப்பாற்றிய, தீரவேல் - வலிபடைத்த வேலாகும்; வாரி குளித்த வேல் - கடலிற் பாய்ந்த வேலாகும்; சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் - சூரபன்மனின் மார்பையும் அவனுக்கு மறைவாய் ஓடிவரலான மலையையும் துளைத்திட்ட வேலாகும்; (ஆகவே) கொற்றவேல் - வெற்றிவேலாகும்; அத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த வேல்) துணை உண்டு - (அடியனாகிய எனக்குத் துணையாக வமைந்திருக்கிறது; (எனவே, இனி, எனக்கு என்ன குறை என்றபடி);
'இதனால், முருகன் கைவேல் இத்தன்மைத்தெனக் கூறி, அது துணையாயினார்க்குக் குறையில்லையென்பது பெறவைக்கப்பட்டது.

செவ்வேள் - அடை, கருவேளிற் பிரித்தபடி. தாரை - கூர்மை; இதனைக்கூறியது குன்றும் துளைக்கும் எனப் பெறவைத்தற்கு, முருகக்கடவுட்கு முன்னே எதிர்நிற்கமாட்டாது சூரபன்மன் கடலி னுட்புக்கு ஒளிக்க, அந்த முருகக்கடவுள் அக்கடலினுட்புக்குத் தனது வேற்படையினால் அவ்வசுரனை வெட்டியபோது வேல் வாரி குளித்தமை பெறப்படும்; மற்றும், கடல்சுவற வேல் விட்டமையும் நினைக. 'சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல்' என்றவிடத்து, "உழல் சூரு மலைமார்பும் உடனூடுறப்பொருது'' என்ற தக்கயாகப் பரணியும், அதனுரையாக “சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறுபடப், பொரு தருளி ' என்று கூறியிருத்தலும் நோக்குக: இனி, குன்று - கிரௌஞ்சகிரியுமாம். வேல் துணையாவதை அருணகிரியாரும் தனித்து வழிநடக்குமென திடத்து மொருவலத்து இருபுறத்து மருகடுத்து இரவுபகற்றுணையது வாகும்” என்றார். உண்டே துணை - இதில், தெளிவுப்பொருளைத் தருதலால், ஏகாரம் தேற்றம்.

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.

கொன் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா - பெருமை பயின்ற வேலினால் (மாமரமாய் மாறி நின்ற) சூரபன்மனை வெட்டிய வெற்றியையுடையவனே ! முன்னம் - முன்னொருகால், பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட தனி வேலை - பனியினாற் சூழ்ந்த பெரிய கிரௌஞ்சகிரியைத் தீண்டி யூடுருவும்படி ( விசை யொடு ) விடுத்த ஒப்பற்ற வேலை, எனது இடும்பைக் குன்றுக்கும் – (அடியனாகிய ) என்னுடைய துன்பமாகிய குன்றினைத் தகர்த்து நீக்கு தற்கும், இன்னம் ஒருகால் - இதுபோதும் ஒருமுறை, வாங்கத் தகும் - விடுத்தல் தகுதியாகும்; இதனால், வேலின் துன்பநீக்கி இன்பம் பயக்கும் பண்பு தெரிவிக்கப்பட்டது.

வேல், இடும்பை தொலைத்தலை 'சுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதி தனக்கும், நரர் தமக்கும் நமர் தமக்கும் உறுமிடுக்கண் வினைசாடும் '' என்ற தாலுமுணரலாம். மலை போன்று பெரி தாய இடும்பையும் வேல்தொட்ட மாத்திரத்தில் நீங்குமென்ற படி, இடும்பையைக் குன்றாக உருவகித்தது, தீவினையினாலீட்டிய அதன் பேரளவு நோக்கி. ' குன்றுக்கும் ' என்றவிடத்து, நான்க னுருபுக்கு “ துன்பத்திற்கு யாரே துணையாவார், மறத்திற்குமஃதே துணை, பிணிக்குமருந்து என்பவற்றிற்போலே நீக்கஎன நடுவே பெய்து பொருளுரைக்கப்பட்டது.  கொன் - பெருமை; '' அச்சம் பயமிலி காலம் பெருமை யென்று, அப்பால் நான்கே கொன்னைச் - சொல்லே '' என்றது தொல்காப்பியம்.

உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை யொருவரையான் பின்செல்லேன்---பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ்வே.

பன்னிரு கை - பன்னிரண்டு திருக்கைகளிலும், கோல் - ( ஈட்டி, வாள் முதலிய ) ஆயுதங்களையேந்தியுள்ள, அப்பா - தலைவனே ! வானோர்-தேவர்களின், கொடிய வினை தீர்த்து அருளும்கடிய பாபங்களைப் போக்கிக் காத்துத் திருவருள் புரியும், வேல் அப்பா - வேலேந்திய தலைவனே ! செந்தி வாழ்வே- திருச்செந்தூரில் நித்தியவாசம் பண்ணுமவனே ! யான்-,உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் - உன்னைவிட்டு - வேறொரு கடவுளையும் நம்புகின்றேனில்லை; பின்னை - ஆகவே, ஒருவரைப் பின் செல் லேன் - வேறொருவரையும் பின்பற்றிச் செல்லமாட்டேன்;  இதனால், கவி தான் மறந்தும் புறந்தொழாமை பெறவைத்தார். 

கோல் - ஆயுதப் பொதுவைக் குறிப்பது.  பன்னிருகைக்கும் பன்னிரு படையேந்திநிற்றலை 'அவரும் பிறரும் அமர்ந்து படையளித்த, மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும், பொறிவரிச் சாபமு மரனும் வாளுஞ், செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியுந், தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும், வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு.......  புகழ்வரம் பிகந்தோய் '' என்ற பரிபாடலால் உணர்க. வேலப்பா என வேலை விதந் தெடுத்துக் கூறியது, வானோர்கொடிய வினை தீர்த்தருளுதலில் பேருதவி புரிந்தமைபற்றி. வானோர்கொடியவினை - அசுரர்நலிந் தமை, சிறைப்பட்டமை முதலியன.  செந்தி - செந்தில்: திருச்செந்தூர். செந்தில் என்றே பாடங்கொண்டாலும் இழுக்கில்லை.  வாழ்வே - அனைவர் வாழ்ச்சிக்கும் காரணமாகுமவனே என்றபடியுமாம். நம்பு கிலேன் - கில், மாட்டாமை தெரிப்பது. பின்செல்லுதல்-வழிபடுதல்.

அஞ்சு முகந் தோன்றின் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்--நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றுனை
முருகாவென் றோதுவார் முன்.

முருகா என்று ஓதுவார் - முருகா ! என்று அவன் திருநாமத்தைச் செபிப்பவர்க்கு, அஞ்சு முகம் தோன் றின் - (யாதொரு பயத்தினால்) அஞ்சிய முகம் ஏற்படின், (அஞ்ஞான்று), முன் - அவர் முன்னிலையில் (அப்பயம் நீக்குதற்கு), ஆறுமுகம் தோன்றும் - ஆறு திருமுகங்களோடு முருகக்கடவுள் தோற்றமளிப்பான்: (மற்றும்) வெம் சமரில் - கொடிய (போர் ஏற்படுமாயின் அப்) போரிடத்து, (முன் - அவர்முன்னே ), அஞ்சல் என - 'பயப் படாதே' என்று அபயமளித்து, வேல் தோன்றும் - (முருகப்பெருமானின்) வேலாயுதம் தோற்றமளிக்கும்; (மற்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் - மனத்தில் (பத்தி சிரத்தையோடு) ஒருமுறை தியானிப்பாரேயாயின், ( முன் - அவர்முன்னே, இரு காலும் தோன்றும் - (அப்பெருமானின் இரண்டு திருவடிகளும் தோற்றமளிக்கும்;  இதனால், பக்தி சிரத்தையோடு முருகன் திருநாமங்களைச் செபிப்பவர்க்கு ஏற்படும் பலன் கூறப்பட்டது. 

' ஓதுவார் ' என்ற சொல்லாற்றலால், முருகன் திருநாமம் வேதம்போற் சிறப்புடைத்தாதல் பெறவைக்கப்பட்டது.  ' முன் ' என்றது ஏனையீரிடத்தும் கூட்டப்பட்டது.  முதலடி மூன்றாமடிகளில் சொல்லலங்காரம் காண்க. முருகு - மாறாத இளமைசெவ்வி : அதனையுடையவன் - முருகன்.

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே -- ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

முருகனே! செந்தி முதல்வனே - திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள தலைவனே! மாயோன் மருகனே - திருமாலின் மருகனே! ஈசன் மகனே - சிவபிரானின் குமாரனே! ஒருகைமுகன் தம்பியே - விநாயகனின் தம்பியே! நின்னுடைய  தண்டைக்கால் - தண்டையென்னுங் காலணி அணிந்துள்ள திருவடிகளை, எப்பொழுதும் - எக்காலத்திலும், நான்- நம்பியே, கைதொழுவேன் - கைகூப்பி வணங்குவேன்;
இதனால், முருகனின் திருவடியே தஞ்சம் என்பது பெறவைக்கப்பட்டது. 

மருகன், மகன், தம்பி என உறவிட்டுச் சொன்னது, அவன் குடிப்பெருமை கிளந்தபடி. பார்வதியின் அமிசமான காளி கிருஷ்ணாவதாரஞ்செய்த திருமாலுக்கு உடன்பிறந்தவளாதலாலும், அறுமுகக்கடவுள் பார்வதியின் புதல்வனாதலாலும், முருகக்கடவுள் அத்திருமாலுக்கு மருகனாவன். மாயோன் - திருமால். ஒருகை முகன் - ஒப்பற்ற துதிக்கையை முகத்திலுடையவன், ஆனைமுகத்தான், கரிமுகன்.

விநாயகன் கரிமுகனான வரலாறு:-மாகதனென்னும் முனிவனுக்கு விபுதையென்னும் அசுரகன்னிகையினிடத்தில் யானைமுகமாய்ப் பிறந்த கஜமுகாசுரனென்பவன், அநேகவரங்களைப் பெற்று, தன்னுடன்பிறந்த பல அசுரர்களுடனே உலகத்துக்கு அளவிறந்த பலவகைத் தீங்குகளை இழைத்து வருகையில், தேவர்களின் வேண்டுகோளால் அவனைக் கொல்லும்பொருட்டுச் சிவபிரான் யானைமுகக்கடவுளாக விநாயகமூர்த்தியை உண்டாக்கினர் என்பதாம். அவ்வசுரன் இரணியன்போலத் தேவர்களாலும் அசுரர்களாலும் மனிதர்களாலும் மற்றும் பலபிராணிகளாலும் தனித்தனி இறவாதபடி வரம் பெற்றிருந்ததனால், அவனைச் சிவபிரான் யானைமுகமும் தெய்வப்பிறப்பும் பூதவடிவமுங்கொண்ட ஒரு புத்திரனையுண்டாக்கி அவனால் அழித்தருளினர்.

வளரும்...

- முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு:  dr.n.arul[at]gmail.com
---

தேமொழி

unread,
May 24, 2021, 12:30:25 AM5/24/21
to மின்தமிழ்


60  –  “கொள்கை முரசு கொட்டுக!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

பேராசிரியர் க.ப. அறவாணன் எழுதிய ‘தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’  நூற்றிறனாய்வின் வானொலி உரைத் தொடர்ச்சி வருமாறு:-
“வேலை இல்லாதோர் எண்ணிக்கை பெருகுவதும் அடுத்தபடியாக வந்தாரை வாழவைத்து இருந்தாரைத் தாழவைத்த தமிழகத்திலும், புரட்சியின் சங்கநாதம் எனப் பாராட்டப் பெறும் புதுவையில் தான் இந்நிலை கூடுதலாக உள்ளது.

இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலையின்போது, மக்கள் வெளிப்படுத்திய துன்ப முறை வேறு.  தமிழர்கள் வெளிப்படுத்திய துன்பமுறை வேறு. இந்திரா அம்மையார் இறப்பைத் தாளாமல் தமிழர்கள் நால்வர் தற்கொலை செய்து கொண்டார்கள்.  அதில் மூன்று பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தனர். ஒருவர் நஞ்சுண்டு இறந்தார்.  அதுமட்டுமின்றி ஏழுபேர் நெஞ்சு அதிர்ச்சியால் இறந்தனர். இந்திரா காந்தி அம்மையார் பிறந்த உத்திரப் பிரதேசத்திலோ, அவர் குடும்பத்தின் பிறந்தகமான காஷ்மீரிலோ, அவரைத் தேர்ந்தெடுத்த ஆந்திரத்திலோ, வேறு எங்கும் யாரும் தற்கொலை செய்யவில்லை. ஆக, தமிழினத்தின் மன வீழ்ச்சியை இங்ஙனம் சொல்லலாம். 

போர்க்குணமின்மை, தாழ்வு மனப்பான்மை, அயல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கண்மூடி வரவேற்றுப் போற்றும் போக்கு தொலைநோக்கின்மை, சமய நம்பிக்கை மற்றும் கடவுள் வழிபாடு ஆகிய இந்த ஆறும் நம்மைப் பின் இழுத்து தள்ளிக்கொண்டிருக்கின்றன. அது போலச் சில ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் தொடர் கதை ஒன்றில் சாதியை புண்படுத்தியதால் தொடர்கதை  இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆக சாதி பற்றி எவனும் குறைவாகச் சிறிதே கூறினாலும் நாம் பொங்குவோம், கொதிப்போம், குதிப்போம், வெட்டுவோம். ஆக தமிழர்களுக்குக் கூட்டூக்கம் கிஞ்சித்தும் கிடையாது.

தமிழ்நாட்டின் ரசிகர் மன்றங்கள் பெருகிய அளவிற்குச் சிந்தனை மன்றங்கள் பெருகவில்லை. ஏன் பல்கலைக் கழகங்களிலேயே கட்சி மன்றங்கள் வளருவது போல அறிவரங்க மன்றங்கள் வளரவேயில்லை.  சிந்தையில் மயங்குகிற நாம் சிந்தனைக்கு மரியாதை தருவதில்லை. இத்தனை குறைகளை நுட்பமாக விளக்கிய பேராசிரியர் அறவாணன் தன்னுடைய நூலின் வாயிலாகவே வழிகாட்டுகின்ற முடிவுகளையும் பெருமிதமாக வழங்கியுள்ளதை நாம் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

தன்னம்பிக்கை வேர்கொள்ள மொழிதான் முதற்படி. தமிழைப் பள்ளிமுதல் பல்கலைக் கழகம் வரை பாடமாக வைக்கவேண்டும். தமிழுக்குத்தான் மரியாதை தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தாழ்வு மனப்பான்மை, அயல் மொழிப் பண்பாடு, நாகரிக மோகம் போன்றவைகள் விடைபெறும். தன்னம்பிக்கை உரம்பெறும். அதே போல சாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

 நகரில் வாழும் தமிழருடைய ஒரு குடும்பத்தை உற்றுப் பார்த்தால் அவர்களுடைய உறைவிடம் ஐரோப்பிய முறையில் இருக்கும். அவர்தம் உடைகள், உணவுகள், பல் துலக்கு முன் காபி,  பல் துலக்கிய பின் சிற்றுண்டி, சப்பாத்தி, குருமா, ரொட்டி, ஜாம் அதுபோக குழந்தைகளின் மம்மி டாடி அழைப்புகள் என்றுதான் தெரியும்.
 நீதிமன்றத்திற்கு ஆங்கிலமும், கோயிலுக்கு வடமொழியையும், நிர்வாகத்திற்கு இந்தியும், இசைக்குத் தெலுங்கும், ‘ஐயோ! சுடுகாட்டிற்காவது  இருக்கட்டும்’ எங்கள் தமிழ் என்ற அவலநிலைதான் உள்ளது.

ஒரு காலத்தில் திராவிடர் தம் குழந்தைகளுக்குப் பெயரிடும் போது தாய்ப் பெயரையே முதலெழுத்தாக வழங்கினர். திராவிடரை ஒத்த பழக்கவழக்கங்கள் உடைய ஆப்பிரிக்கரிடமும் தாய்வழிப் பெயரிடும் முறை, இன்றும் வழக்கில் உள்ளது.

தோதுவரிடை வழங்கும் ஒருத்தி பல கணவர் என்ற கோட்பாடு மருந்துக்குக்கூட தமிழ் மக்களிடையே வழங்கவில்லை. மணவாளன் உயிருடன் இருக்க மறுமணத்திற்கு உரிய சுயம்வர அறிவிப்புச் செய்த நளதமயந்தி கதை தமிழுக்குரியது அன்று. மணவாளன் இறக்க மற்றவனை நாடிய சூர்ப்பனகைக்கதை.  தமிழர் கற்பனையன்று. அதேபோல பாரதம் தமிழர்க்கோ திராவிடர்க்கோ உரியது அன்று. 

தமிழ்ப் பண்பாடு என்பது ஒரு பொருட்காட்சிப் பொருளாகி விட்டது. இந்த வரலாற்றுண்மையை நன்கு அறிந்த சில வம்பர்கள் பண்பாட்டுப் படையெடுப்புகளையும், பண்பாட்டுக் கலப்பினையும் வரவேற்று எழுதுகிறார்கள். 
தமிழ்நாட்டில் நேற்று நிகழ்ந்ததும் இன்று நிகழ்வதும் பண்பாட்டுக் கலப்பன்று. ஒரு  பண்பாட்டு அழிப்பு, அழிவு. மூச்சை அடக்குவது வேறு. மூச்சையே விட்டுவிடுவது வேறு.  தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டு மூச்சையே விட்டு விட்டனர் என்பதுதான் இந்த நூலின் பேச்சு மூச்சு! 

இந்த அரிய நூலை பேராசிரியர் அறவாணன் பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று எண்ணித் தீரத் தெளிந்த நூலாகும். 1982 இல் தொடங்கி 1986-இல் பெரும் பகுதி நிறைவு பெற்றது. இந்நூலில் ‘பண்பாடு என்றால் என்ன?’ என்பதை மானுடவியற் பார்வை மூலம் அணுகியிருக்கிறார். அது போக, இன வெறுப்புக்கு உரிய காரண காரியங்களையும், அதன் கொள்கைகளையும், பொருளாதார மேன்மையால் படர்கிற அடிமை நிலைப்பாடுகளையும், அறியாமையால் விளைகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும், போலி அறிவால் ஏற்படுகிற கருத்துச் சிதைவுகளையும் வரைபடமாக வரைகிறார்.

மேலும், மலையாள மொழிப்பிறப்பும், யவனக் கலப்பும் வரதட்சணை என்பது ஆரியரால் விளைந்த  விஷம் என்று கூறி அதன் சொல் விளக்கங்களும், கர்ணன், ஏகலைவன் வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதும், கிரேக்கர்கள் வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒருங்கே கண்டு வருந்துகிறார்.  அதுபோக அராபிய, இசுலாமிய படையெடுப்புகளை பற்றியும் விளக்கமாக ஆராய்ந்து இவையனைத்தின் துணைக்கொண்டு ஆராய்ச்சி உரையை நுணுக்கமாக முடிக்கிறார். 

இந்த அறிவு விளக்கப் பனுவலில் இளைஞர்களுக்கு தமிழகத்தின் வளரும் எரிமலைகளுக்கு 11 கட்டளைகள் இடப்பட்டுள்ளன. அவற்றை நுணுகிப் பார்த்து செயலளவில் மாணவர்கள் இயக்கமென இயங்க வேண்டும். ஆக உறங்குவது போல உள்ள தமிழ் வல்லாளர்களுக்கு இளையோருக்கு விழிப்பூட்டுகிற வினாக்கள் விடுத்துள்ளார் ஆசிரியர். நமக்கு வாய்த்த இந்நூல் தமிழர்களின் உரிய நேரத்தில் கிடைத்த உறுதியான நல்லுரை கொட்டும் வீர முரசு எனலாம். இக்கொள்கை முரசு எங்கும் கொட்டட்டும்.” என்று என் வானொலி உரை 19.11.1990 அன்று நிறைவு பெற்றது.  பேராசிரியர் அறவாணன் இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையைத் தலைமை தாங்கிய பொழுது, வாராவாரம் ‘வியாழன் விருந்து’ நடத்தினார் என்பது இன்றைய மாபெரும் பேச்சாளர் பெருமக்களெல்லாம் நினைந்து நினைந்து போற்றுவதை நாம் எண்ணிப் பெருமையடையலாம்.

அந்நாள்களில் வானொலியில் பேசுவது என்பது எல்லையில்லாத மகிழ்ச்சியாகும்.  மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழிலிக்கியம் பயிலும் பொழுது ஆய்வு மாணவராக இருந்த அண்ணன் பழ அதியமான் மற்றும் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர் மோகன கிருஷ்ணன் சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியதும் குறிப்பிடத்தகுந்தன.  அவ்வண்ணம் சன் தொலைக்காட்சியின் எடுப்பான முழங்கு குரலான தூரன் கந்தசாமி மாநிலக் கல்லூரியில் முதுகலை தமிழிலக்கிய மாணவச்செம்மலாகவும் மூத்த மாணவத்திலகமாக திகழ்ந்த பெருமிதம் வாய்ந்தவர்.  எழுத்தாளர் சு. சமுத்திரம்  சில நிலைகளில் வானொலி நிலையத்தில் இயக்குநராக இருந்த போது என்னை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேச வேண்டும் என்று சுட்டிக்காட்டியதை நினைந்து மகிழ்கிறேன்.
 எந்தையார் 1963 ஆம் ஆண்டில் தில்லியில் வானொலியில் பணியாற்றிய பெருமிதம் வாய்ந்தவர்.  நடிகர் சரத்குமார் தந்தையார் இராமநாதனும்  அப்பாவும் தில்லியில் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். அப்பா செய்திகள் சொல்லத் தொடங்கிய பிறகு தமிழிலில் பெரிய ஒலி வடிவ மாற்றத்தைத் தந்தது என்று பலர் பாராட்டியுள்ளனர்.  அப்பா  பல முறை சென்னை வரனொலியில் பேசியது பலர் அறிவர். (3.12.2018 அன்று தமிழ் அமுதம் என்ற தலைப்பில் மூன்று நிமிடங்களுக்கு மூன்று வாரமாக பேசிய அருமையான உரை, 20.9.2019 அன்று திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் குறித்த செப்பமான மூன்று நிமிடங்களுக்கு பத்து நாள் உரை)
 திருவெம்பாவிற்கு வானொலியில் பொழிந்த உரை நூலாகவே வெளி வந்துள்ளது. என் அம்மாவும் பல நிலைகளில் சென்னை (30.3.1966, 5.1.1971) மதுரை வானொலிகள் வாயிலாக மருத்துவ பொருண்மைகள் தொடர்பாக உரையாற்றிய பெருமிதமானவர்.  என் அண்ணன் மருத்துத்திலகம் கண்ணன் நியூசிலாந்திலும்,  ஆசுத்திரேலியாவிலும்  பல வானொலி நேர்காணல்கள்,  முதியோர் நலன் தொடர்பான பல நல்லுரைகளை தேனொலியாக பொழிவாற்றியதை எண்ணி மகிழ்கிறேன். வானொலி உங்கள் நண்பன் என்பது எங்கள் குடும்பத்திற்கு பொருத்தமான பொன்வரிகள்.

------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

பேரறிஞர் ‘உபய வேதாந்த’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி.ஜெகந்நாதாச்சாரியார் வரைந்த பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையின் தொடர்ச்சி வருமாறு:-
பகுதி-3
    காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால்
    ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும் 
    கடம்பா முருகா கதிர்வேலா நல்ல 
    இடங்காண் இரங்காய் இனி.
அறுமுகவா - ஆறுமுகனே !  காக்க கடவிய நீ - காப்பதற்கெனக் கடம்பூண்டுள்ள நீ, காவா திருந்தக்கால் - (கடமை மறந்து) காப்பாற்றாமலிருப்பாயாயின், (அஞ்ஞான்று) ஆர்க்கு - யாருக்கு, பரம் ஆம் - மேலுலகம் கிட்டும் ? ( வீடுபேறு சித்திக்கும்). ஒருவர்க்கும் கிட்டாது என்றபடி); (ஆதலின்), பூக்கும் கடம்பா - பூத்த கடம்பமாலையை யணிந்துள்ளவனே ! முருகா-, கதிர் வேலா - ஒளிவிடுகின்ற வேலனே! நல்ல இடம் காண் - காப்பதற்கு நல்ல இடம் என்னிடத்துக்காண்பாயாக; இனி - அங்ஙன் கண்ட பின்னர், இரங்காய் - (என்மாட்டு) இரக்கங்கொள்வாயாக. 

இதனால், முருகன் காத்தலாற்றான் வீட்டுலகம் சித்திக்கும் என்பது பெறவைக்கப்பட்டது. எனவே, வீடுபேறு வழங்குந் தகுதி முருகனுக்கேயுளது என்றபடி. கடவு - கடமை: 'என்னுக் கடவுடையேன் யான்' (இராமா நுச நூற்றந்தாதி: தனியன்) என்ற விடத்துங் காண்க. பரம் - மேலுலகம், வீட்டுலகம்: ‘ இகபரமாகி யிருந் தவனே ' என்றது திருவாசகம். ' மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று ' என்றார் நாயனாரும். ' ஆர்க்கும் பரமாம் ' என்று பாடங்கொள்வாருமுளர்: அப்போது, ஆர்க்கும் - யாவர்க்கும், பரம் ஆம் - பாரம் ஏற்படும் என்று பொருள். பாரம் - துன்பச் சுமை. ஈற்றடியில் மோனையழகு காண்க.

    பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
    கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு--சுருங்காமல் 
    ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப் 
    பூசையாக் கொண்டே புகல்.
நெஞ்சே - மனமே! (நீ) பரங்குன்றில் - திருப்பரங் குன்றத்துக் கோயில் கொண்டுள்ள, பன்னிருகைக் கோமான் தன் பாதம் - பன்னிரண்டு திருக்கைகளைக் கொண்ட தலைவனாகிய முருகப் பெருமானின் திருவடிகளை, கண் குளிரக் கண்டு - கண்குளிரும்படி பார்த்து, கரம் கூப்பி - கைகூப்பி வணங்கி, ஆசையால் - ஆர்வத்தோடு, அணி முருகாற்றுப்படையை - அழகிய திருமுருகாற்றுப் படையென்னும் நூலை, பூசையாக்கொண்டே - (முருகனின்) நித்திய பூசனைக்குரியதாக்கொண்டே, சுருங்காமல் - தவறாமல், புகல் - (நியமத்துடன்) சொல்வாயாக (பாராயணஞ் செய்வாயாக என்றபடி). 

இதனால், முருகனுடைய திருவருளை விரும்புபவர் நித்திய பூசைக்குரியதாகத் திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு, நியமத்துடன் பாராயணஞ்செய்தல் வேண்டுமென்பது பெறவைக்கப்பட்டது. ஈண்டு, கவி தமது நெஞ்சை விளித்துக் கூறுமுகத்தான் அனைவர்க்கும் அறிவுறுத்துகிறார். 'நெஞ்சே' என்றதால் மனமும், 'புகல்' என்றதால் வாக்கும், 'கூப்பி, கண்டு' என்றவற்றால் காயமும் தெரிவிக்கப்பட்டுத் திரிகரணங்களாலும் முருகனை வழிபடல்வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டது. ஆசை - ஆர்வம்: பத்தி. பூசை - நித்தியபூசனை: 'சிறப்பொடு பூசனை செல்லாது' என்றவிடத்துப் போல. சுருங்குதல் - ஒழுக்கம் முதலியவற்றினின்று தவறுதல். 

இப்பொருளில் வருதலை "துகிலிடைச் சுற்றியில் தூநீ ராட்டி, நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி, சொல்லின பரிசிற் சுருங்கலன்'' என்ற திருக்கண்ணப்பதேவர் திருமறத்திலுங் காணலாம். இனி, சுருங்காமல் - தப்பாமல், சங்கிரகமாக்காமல் எனப் பொருள் காணலுமாம். இத் திருமுருகாற்றுப்படையை நியமமாகப் பாராயணஞ்செய்யுங்கால், பெரியோர்களால் தொன்றுதொட்டு ஓதப் பெற்றுவருகின்ற கட்டளைக்கலித்துறைச்செய்யுள் பின்வருமாறு : " ஒருமுருகா என்ற னுள்ளங் குளிர உவந்துடனே, வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ஙனே, தருமுரு 'கா வென்று தான்புலம் பாநிற்பத் தையல் முன்னே, திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே” என்பது.

    நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
    தற்கோல நாடோறுஞ் சாற்றினால்-முற்கோல 
    மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் 
    தானினைத்த வெல்லாந் தரும்.
நக்கீரர் தாம் உரைத்த - நக்கீரராகிய பெரும் புலவர் சொன்ன, நல் முருகாற்றுப்படையை - நல்ல திருமுருகாற்றுப் படையை, நாள்தோறும் - தினமும், தன் கோல - தன் அபிமானம் அகங்காரம்) கெட, சாற்றினால் - ஓதினால், முன் – (அங்ஙனம் ஓதுபவர்) முன்னே , கோலம் மா முருகன் - அழகிய சிறந்த முருகன், வந்து - தோன்றி, மனக்கவலை தீர்த்து அருளி-(அன்னார்க்குள தாம் மனக்கவலையனைத்தையும் போக்கி யருள் செய்து, பின்னும்), நினைத்த எல்லாம் - அவ்வோதுபவர் நினைக்கின்ற எல்லா விருப்பங்களையும், தான் தரும் - தானே தருவன். 

இதனால், திருமுருகாற்றுப்படையை நாடோறும் ஓது தலால் உண்டாம் நற்பயன் கூறப்பட்டது. முருகாற்றுப்படைக்கு 'நல்' என்ற அடைகொடுத்தது, சொற்பொருளமைதியும் சிறப்பும் நோக்கி. இந்நூல் பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்ட சிறப்பும் நினைக. 
 தற்கோலல் - தற்செருக்குக் கெடுதல். தன் - தானென்னுஞ் செருக்கு; அகங்காரம். கோலல் - கொல்லுதல், கெடுதல். நக்கீரரை நற்கீரரென்றும் வழங்குப: அப்பெயர் ஈண்டு எதுகைக்குச் சிறந்து காணினும், நக்கீரர் என்பதே பெருவழக்காதலின், இன வெதுகை வந்தது. 

தேமொழி

unread,
Jun 1, 2021, 5:16:48 PM6/1/21
to மின்தமிழ்
61  –  “நா.பா. என்னும் நல்லிசைப் புலவர்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு இறுதியில் 08.01.1991 அன்று சென்னை வானொலி நிலையத்தில் ‘நூல்நயம்’ பகுதியில் ஆற்றிய என் உரை:-

நல்ல நூல்களைப் போன்ற நண்பர்களை நானிலத்தில் நாம் எளிதில் எங்கும் காண முடியாது. இனிய நண்பர்களின் உறவுக்கு உவமை கூற வந்த திருவள்ளுவர்,
"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு"
என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மன மகிழ்ச்சிக்காகவும், நல்லுணர்ச்சிக்காகவும், தகவல்களை அறிவதற்காகவும், நடைமுறை வாழ்க்கையின் நளினங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்காகவும் என்றெல்லாம் நூல்கள்
சிந்தனையாளர்களால் எழுதப்படுகின்றன. மனதில் மலரும் சிந்தனைகள் சொல்லாகவும், பிறகு எழுதப்படும் எழுத்தாகவும் பதிய வைப்பது ஒர் அரிய கலையாகும்.

இப்போது நாம் நூல்நயம் நுகரப்போகும் நூல் ‘தகடூர் வரலாறும்-பிரகலாதன் சரித்திரமும்’ என்பதாகும். ஒரு நாட்டினுடைய வரலாற்றை அந்த நாட்டின் இலக்கியங்களில், மக்களின் வாழ்க்கை வழியில் அவர்கள் வாயிலிருந்து உதிரும் பழமொழியில்,  அவர்கள் கையாண்ட கருவியில் அவர்கள் உருவாக்கிய நாணயங்களில், கல்வெட்டுக்களில், செப்பேடுகளில், திரட்டப்பட்ட பொருள்களில், அயல் நாட்டு வழி நடையாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளில்
எனப்பல வழிகளில் கண்டறியலாம்.

ஒரு வரலாற்றை வரைந்து காட்டுவதென்பது அருமையான செயல். நினைத்ததை எல்லாம் வரலாற்று ஆசிரியரால் எழுத முடியாது. ஆனால், நினைத்து, நினைத்து தகவல்களைத் தேடித் தேடி, அங்குமிங்கும் ஓடி ஓடித் திரட்டிய விளக்கங்களைச் சான்றுகளுடன் தெளிவாக எழுத வேண்டும். "ஒரு வரி எழுதுவதற்கு ஒன்பது மைல் பயணம் செய்தவர்" என்று எழுத்தாளர் அடிசனைப்பற்றிக் கூறுவார்கள். காலங் கடந்த பொருள்களையும், கல் மேடுகளையும் ஆய்வுக்கண்ணோடு செப்பேடுகளையும் ஆராய்ந்து காண்பதையே தன்னுடைய அலுவலகப்பணியாக கொண்டுள்ள ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

நாமெல்லாம் அறிந்த ஊர் தான் தகடூர். இப்போது தருமபுரி தனி மாவட்டத்தில் (02.10.1965 முதல்) தருமபுரி என்ற பெயரோடு இருக்கிறது. தகடூர் என்னும் இந்தப் பெயரைப் பதிற்றுப்பத்து வழங்குகிறது. தருமபுரியின் தென் கிழக்கில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதமன் கோட்டை என்னும் ஊர் அதியமான் கோட்டை என்பதன் சிதைவாகும். கோட்டையின் இடிபாடுகளையும் சிதைபாடுகளையும் இன்றும் காணலாம். கோட்டையும் சிதைந்தது விட்டது. அது கொண்ட பெயரும் மறந்து விட்டது.

தகடு என்றால் பொன், பூவின் புறவிதழ் என்ற பொருள் உண்டு. பூவிற்குப் ‘புறவிதழ்’ என்ற பொருள் உண்டு. பூவிற்குப் புறவிதழ் போலத் தன் மாநகருக்குப் புறத்தே பொலிவாகக் கட்டிய மதிலின் மாட்சியினால் தகடூர் என்ற பெயரைத் தன்னூருக்கு தந்திருக்கிறார் போலும் அதியமான் நெடுமான் அஞ்சி. மட்டப்பாறை, குட்டப் பாறை, தட்டைப் பாறை, தகட்டு மலை என்ற மலைப் பெயர்களைப் போல, உயரமில்லாமல் ஓரளவு குறைந்த தகடாக இருந்த மலையூர் என்ற கருத்தில் தகடூர் என்றார்களோ என்னவோ! அமிழ்தை விஞ்சுகின்ற அரு நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி, அற்புதமான அந்த தருமத்தைக் கண்டு தான் தருமபுரி என்று பின்னாளில் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது.

தருதல் வழியாகப் பிறந்த சொல் தான் தருமம். எனவே, ஈடில்லாத நெல்லிக்கனியின் ஈகையைக் கருதி, அந்த ஊரைத் தருமபுரி என்றே அழைக்கலானார்கள். வைரக்கற்களைப் போன்ற வரலாற்றுச் செய்திகளையும் ஒரு பழஞ்சுவடியில் பதுங்கிக்கிடந்த பிரகலாதன் சரித்திரம் என்ற மணிகளையும் ஒன்றாகக் கோர்த்து நூலாசிரியர் நன்மாலையைக நமக்கு அணிவித்து மகிழ்கிறார். ரூ.50/- என்னும் விலைக்குக் கிடைக்கும் இந்த நூல் அளவாலும் பொலிவாலும் அழகிய நூல்,
சிந்தனையைத் தூண்டுகிற சீறிய நூல், நம் கருத்தில் மட்டும் நிறைந்திருந்தத பழைய வரலாற்றுப் படிவத்தை வரைந்து காட்டுகிற பயனுள்ள நூல்.

வானொலி நிலையத்தின் வாயிலாக நூற்கனிகளை சுவைத்து திறனாய்வதில் மகிழ்ந்தேன்.

அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லி படிக்க வைத்தது தீபம் நா.பார்த்தசாரதியின் (18.12.1932 – 13.12.1987) நூல்களைத்தான். நா.பா.வின் குறிஞ்சிமலர், பொன்விலங்கு தான் அனைவரும் படித்து மகிழ்வார்கள். குறிப்பிட்ட இரு புதினங்களும் புதின உலகத்தின் வைரப் பரல்கள் எனலாம். அரவிந்தனைப் போல, பூரணி போல நாமும் வாழவேண்டும் என்று பலர் முயற்சித்தனர். அவ்வண்ணமே, நா.பா.வின் மணிபல்லவம், இராணி மங்கம்மாள் போன்ற புதினங்களையும் குறிப்பிடலாம். நா.பா. ஒரு சமயத்தில் ‘தீபம்’ இதழை நடத்த முடியவில்லை என்ற போது பல மாதரசிகள் தங்கள் அணிகலன்களை அவரிடம் நேரிலும் அஞ்சலிலும் அனுப்பி வைத்து நடத்தச்சொன்னது மறக்க முடியாத வரலாறாகும். அவரும் சில தருணங்களில் மறக்காமல் வந்த ஆபரணங்களை உரியவர்களிடம் தக்க முறையில் திருப்பி அனுப்பிய நேர்மையும் போற்றத் தகுந்த நெறிமுறையாகும்.

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் தமிழில் புலவர் பட்டம் பெற்று இலக்கியக் கல்வியில் நுண்மான் நுழைபுல ஆற்றல் வாய்ந்த எழுத்துச் சிகரமாவார். அப்பாவும் அவரும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். ஒரு முறை பட்டிமன்றத்தில் அப்பாவை நோக்கி ஒளவை அதிகமாக புறம் பேசுபவர் என்றாராம். எதிரணியில் தலைமை தாங்கிய அப்பா சிரித்துக்கொண்டே, நண்பர் நா.பா. அகம் கொண்டவர் என்று பலரும் குறை சொல்வார்களே என்றாராம். பட்டிமன்றத் தலைப்பு “சங்க இலக்கியத்தில் விஞ்சிய புகழ் அக இலக்கியத்திற்காக? புற இலக்கியத்திற்காக?” என்பதாகும்.

அவருடைய மணிபல்லவம் வரலாற்றுப் புதினம் நுண்ணிய தமிழ்நடை மிளிர்வோடு புனையப்பட்ட கதையாகும். நல்ல தமிழ் படிப்பிற்கு இப்புதினம் சான்றாகும். சில சான்றுகள் இன்னும் மறக்காமல் பதிந்துள்ளன என்நெஞ்சில். அதனை என் கருத்துக் கோவையில் 22.11.1986-இல் பதிந்துள்ளப் பகுதிகள் காண்க.

“நம்முடைய தமிழ் மொழிக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது பார்த்தீர்களா? பேசினால் ஒருவகை இனிமை; பாடினால் ஒருவகை இனிமை; எழுதினால் ஒரு வகை இனிமை அவ்வண்ணமே, புதிதிலேயே கொடும்பாளூரான் பேசும் ஒரு தொடரில் திருக்குறளை எவ்வளவு நேர்த்தியாக தன் உரையிலேயே இணைத்து எழுதிய கலையை என்னென்று சொல்லி பாராட்டுவது. அதேபோல இக்கதை நெடுகிலும் பலவாண்டுகளாக ஆசிரியர் நா.பா. படித்த தமிழ் இலக்கியக் கருத்துகளையும் அழகான தத்துவங்களையும் பொருத்தமாக இணைத்துள்ளார். அறிஞர் நா.பா. எக்காரணத்திலும் கதையின் சுவையும், விறுவிறுப்பும் கெடாதவாறு மிளிர வைத்துள்ளார்.

“நண்பர்களே! நம் எல்லோருக்கும் நோக்கமும், நினைவும் ஒன்றானாலும் அரசும் அவசியம். வேறு வேறாக இருப்பவை நன்றாற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். அதே போல மகாராணியின் மனம் எப்படி தனிமையில் உழன்றது என்பதற்கு உளவியல் பூர்வமாக எழுதிய வரிகளில் நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலைய வேண்டியிருந்தது. மண்ணின் உலகத்தில் பாண்டி நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது. மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழைப் போல் வெறுமை சூழ்கிறது. ஒரே அவைக்கலப்பற்ற தனிமை!

உள்ளும் புறமும் நினைவும் கனவும் எங்கும் எதுவும் சூனியமாகப் பாழ் வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மை உண்டாக்கும் தனிமை அது. ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக் கொள்ள முடியாதது போல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்ட மாட்டேனென்கிறது. மகாமண்டலேசுவர் ஓரிடத்தில் சீவல்லபமாறனிடம் யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா? 

சங்க காலத்தில் கிள்ளிவளவன் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய கண் பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்க ஆற்றல் இருந்ததை நீ உடன்று நோக்கும் வாய் எரிதலழ நீ நயந்து நோக்குவாய் பொன் பூப்ப செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் புகழ்ந்து பாடியிருந்தார் என்று சொல்லிவிட்டு சேரநாட்டில் யானைகள் இருக்கின்றன, சோழநாட்டில் சோறு இருக்கிறது பாண்டிய நாட்டில் தமிழறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பேசிய வரிகளை நெஞ்சில் நிழலாடினால் தமிழை எப்படி வனப்பாக எழுதலாம் என்பதற்கு 1986 ஆம் ஆண்டில் படித்த இப்புதினம் சான்று. அதேபோல் 16 பாத்திரங்களின் பெயர்ப் பட்டியல் என் நெஞ்சில் ஆழமாக இன்னும் படிந்த குணச்சித்திரங்களாவார்கள்.

முல்லைப் பற்கள் தெரிய குழல்மொழி, பாலைப் பருகினால் கழுத்து வழியே பால் தொண்டைக்குள் இறங்குவது தெரியும் சிறப்பான விலாசினி, நிமிர்ந்த நடை, நேரான பார்வை, கணீரென்று பேச்சு, கலீர் என்ற சிரிப்பு, இளமைப்பருவத்தின் துடிதுடிப்பான பகவதி, குட்டையான தமிழ்த்தோற்ற முனிவர் அகத்தியர் போன்ற நாராயணன் சேந்தனன், இரத்தத்தோடு இரத்தமாகப் பழக்கத்தோடு பழக்கமாக, தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும் பிறவிலேயே இயல்பாக அமைந்திருக்கின்ற வல்லாள தேவன், அம்பலவன் வேளான், குமார பாண்டியன், இராஜசிம்மன், இடையாற்றுமங்கலம் நம்பி, சீவல்லப மாறன், மகா மண்டலேசுவரர், குணவீர பண்டிதர், வானவன் மாதேவி, கோட்டாறு பண்டிதர், வண்ண மகள், புவனமோகினி.

அதே போல இலண்டன், பாரிசு, ரோம், கிரேக்கம், போலாந்து சோவியத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு நா.பா 1976 சனவரி மாதம் முதல் மே மாதம் சென்று வந்த பயணக் கட்டுரையான “புது உலகம் கண்டேன்” கட்டுரைக் கனியில் பல சுவையான நறு மலர்கள் பூத்துக் குலுங்கின. குறிப்பாக என் கருத்துக்கோவையில் பதிந்த குறிப்பு; 
"102 மொழிகளில் 447.7 மில்லியன் பிரதிகள் லெனினின் புத்தகங்களும்,
81 மொழிகளில் 96.5 மில்லியன் பிரதிகள் மார்க்சு ஏங்கெல்சு புத்தகங்களும்,
புஷ்கின் தொகுதிகளை (பத்து மடலங்கள்) 300,000 இலட்சம் பிரதிகளும்,
தாஸ்டயேவ்ஸ்கி தொகுதிகள் (10 மடலம்) 100,000 பிரதிகளும் வெளிவந்தன”
என்று துல்லியமான புள்ளி விவரங்களுடன் குறித்துள்ளார்.

ஓரிடத்தில் மிக நுட்பமாக நா.பா. அவர்கள் பிரான்சில் உள்ள நோத்தர் தாம் இடத்தை நயமாக விவரித்த விதம் அலாதியானது. “திருச்சிராப்பள்ளி அருகே காவிரி இரண்டாகப் பிரிந்து நடுவே திருவரங்கம் துண்டாக்கி இருப்பதுபோல் பாரிசின் சேன் நதி இரண்டாகப் மாலை போலப் பிரிந்து நடுவே ஒரு சிறு தீவை உண்டாக்கி இருக்கிறது. அதுதான் புகழ்பெற்ற நோத்தர்தாமாகும். அறிஞர் நா.பா. வின் சிந்தனை வளம், சிந்தனை மேடை, வஞ்சிமாநகரம், திறனாய்வு செல்வம் நூல்களும் கற்கண்டு மாலைகளாகும்.

தொல்காப்பியம் - சேனாவரையரின் உரை நூலினைப் படிக்கும் பொழுது என்னுடைய பள்ளி நாட்களின் கணக்குப் பாடம் தான் நினைவிற்கு வந்தது. அப்போது அப்பா என்னிடம் இலக்கணத்தை நன்கு கற்றால் தான் மொழிப்புலமை வளமாகும் என்று துல்லியமாக விளக்கினார். அதற்கேற்ப எழுத்துச்சிகரம் நா.பார்த்தசாரதி வரைந்த ‘சொல்லின் செல்வம்’ நூலினை ஊன்றிப் படிக்குமாறு அறிவுறுத்தினார். எளிய முறையில் சொல்லதிகார விளக்கங்களை சொல்லின் செல்வத்தில் காணலாம். குறிப்பாக மொழியைப் போற்றுங்கள் என்ற தலைப்பில் செந்தமிழ் வாணர் நா.பா வரைந்த நுட்பமான கருத்து மணிகளை என்னுடைய கருத்துக் கோவையில் 22.11.1986 அன்று பதித்த பகுதியைக் காணலாம்.

மொழியைத் தூய்மை செய்யத் தவறுகின்றவன் மனித வாழ்வின் பயனில் பெரும் பகுதியை வீணாக்குகிறான். பிற மொழிகளைக் கற்பது கைகொட்டி வரவேற்கலாம். ஆனால், தாய் மொழியை அறியாது பிறமொழி அறிந்ததையே பேரறிவுடைமையாகக் கருதக்கூடாது. தாய் மொழி இலக்கண இலக்கியங்களைத் துளக்கறக் கற்றுத் தூய பேச்சும், வழுவற்ற எழுத்தும் பெற வேண்டும்.

மிதிக்க வொண்ணாத பொருள்களைக் காலினால் மிதித்து விட்டால் அருவருத்துத் தூய்மை செய்யும் மனிதன், தாய்மொழியில் பிழைபட எழுதினாலும், முன்னரெய்திய அதே அருவருப்பை எய்தித் தூய முறையிற் பேசவும் எழுதவும் பழகிக் கொள்ள முனைந்து பாடுபட வேண்டுமே! மொழித் தாய் தன் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதும் அது தான். உண்மையைக் கூர்ந்து நோக்கப்போனால் மனிதனுக்கு முதல் தாய்மொழியே, இரண்டாம் தாய் தான் பெற்ற தாயாவாள்.

மொழி மனிதனைப்பழி வாங்குவதில்லை. மனிதன் புறக்கணிப்பால் மொழியைய் பழிவாங்கப் போய்த்தனக்கே பழியை எய்துகின்றான். இக்குறிப்புகளையெல்லாம் நான் தனியாக எழுதி வைத்து இலக்கணப் பயிற்சியில் ஆயந்த போது ஆசிரியர் திலகம் நா.பா வின் பொன் வரிகள் என்னை விழிக்க வைத்தது. மொழியிலக்கணப் பயிற்சியை ஏதோ ஒரு பயங்கர நிகழ்ச்சியாக எண்ணி அஞ்சுகின்றவர்கள் அவ்வச்சம் நீங்கித் துணிவு பெற இத்துறையிற் செய்ய வேண்டிய முதல் வேலை தமிழ் உணர்ச்சியைப் பரப்புவது. உணர்ச்சியிலிருந்து பற்றும், பற்றிலிருந்து அறிவும் பெருகும்.  இத்தொண்டு பரந்தால், மொழியிலக்கண ஆர்வம் எங்கும் பரக்கும்.

கல் தோன்றி மண் தோன்றி மூத்த தமிழ்க்குடிக்கு வைப்பு நிதியாக தொல்காப்பியம் அமைந்தது என்று சொல்லின் செல்வர் நா.பா. சுட்டிக்காட்டியதையும், சொல்லின் செல்வம் நூலினை கல்லூரிக்காலத்திலேயே அறிமுகப்படுத்திய என் ஆருயிர் அப்பாவுக்கு பல்லாயிரம் முறை வணங்க கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு முறை மூதறிஞர் ராஜாஜி கல்கியில் வெளி வந்த குறிஞ்சி மலரைப் படித்து யார் இந்த ஆசிரியர்? ‘மலர்’ என்று எழுதுகிறாரே, ‘பூ’ என்று எழுதினால் தானே புரியும் என்று வினவியதாகக் கூறுவார்கள். காலம் புதுமையாகும் பொழுது ஆசிரியர் நா.பா.வின் கருத்து ஏன் சில இடங்களில் இடறியது என்பது புதிராகவே உள்ளது.

சங்கப்புலவர்களை ‘நல்லிசைப்புலவர்’ என்றே அழைக்கும் மரபுண்டு. அவ்வண்ணமே நல்லறிஞர் நா.பா.வையும் நல்லிசைப்புலவர் என்று அழைத்து மகிழலாம்.

------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி ...... 

‘திருக்கோயில்’ இதழின் தனிப்பெரும் ஆசிரியர் திரு. ந.ரா. முருகவேள் 1981-ஆம் ஆண்டு இதழில் குறித்த பதிவு நோக்கத்தக்கது.

நக்கீரரின் அரிய - அழகிய சொல்லாக்கம்!
கவிஞர்களும் புலவர்களும், ஒரு மொழியின் சொற்களையே கருவிகளாகக் கொண்டு, தத்தம் கலைத் திறத்தின் எழில் நலம் காட்டிக் களிப்புறுத்துவர். சொற்களைத் திறன் தெரிந்து கையாளும் அரும் பெரும் திறமையைக் கொண்டே கவிஞர்கள் அல்லது புலவர்களின் அருமையும் பெருமையும் அளக்கப் பெறும். நக்கீரர் என்பதில் ந-சிறப்புணர்த்தும் இடைச்சொல்; கீர்-சொல், சொல்வன்மை, நக்கீரர் என்னும் சொல்லுக்குச் ‘சிறந்த சொல்வன்மையுடையவர்’ என்பது பொருள். அதற்கேற்ப, நக்கீரர் பலப்பல புதிய அரிய சொல்லாக்கங்களைப் படைத்துக் கவிதை இயற்றும் நல்லாற்றல் மிக்கவர் என்பதனை, அவர் பாடியருளிய திருமுருகாற்றுப்படையில் வரும் பல சான்றுகள் புலப்படுத்துகின்றன.

மாற்றுயர்ந்து தூய சிறந்த பொன்னானது. ஆடகம், சாதரூபம், கிளிச்சிறை, சாம்பூநதம் என்று நான்கு வகைப்படும். இவற்றுள்ளும் சாம்பூநதம் என்னும் பொன்னே மிகவும் சிறந்துயர்ந்தது ஆகும். திருப்பரங்குன்றம் ஆகிய மலைநிலத்துச் சூரர மகளிர், சாம்பூநதம் என்னும் உயர்ந்த பொன்னால் இயன்ற அழகிய இழைகளை அணிந்துள்ளனர். அதனைக் குறிப்பிட வரும் நக்கீரர், சாம்பூநதம் என்னும் சொல் வடசொல்லாதலின், அதனை அங்ஙனமே தமது தெய்வீகக் கவிதையில் அமைக்க விரும்பிற்றிலர். 'சம்பு' என்றும் சொல்லுக்கு நாவற்பழம், நாவல் மரம் என்பது பொருள். அந்நாவல் மரங்கள் நிறைந்திருப்பது சம்புத்தீவம். அதன்கண், ‘நாவல்மரப் பழங்களின் சாறு படிந்து அதனால் விளைந்த பொன்’ என்பது, சாம்பூநதம் என்னும் வடசொல்லுக்குரிய பொருள். ஆதலின் அக்கருத்தினைக் குறிக்கும் வகையில் ‘நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை’ என்னும் தொடரினை அழகுற அமைத்து வழங்குகின்றார் நக்கீரர்! இப்புதிய சொல்லாக்கத்தொடர், நக்கீரரின் நல்ல தமிழ் உணர்வைத் தெள்ளிதின் விளக்குவதாகும்.

நக்கீரர் பெருமானின் நயம்மிகுந்த இத்தகைய நல்ல சொல்லாக்க முறையினைப் பின்வந்த சான்றோர்கள் சிலரும், பெரிதும் தழுவிப் போற்றியுள்ளனர். இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிடுதல் சாலும். பாரதக்கதையின் போதரும் ‘திருதராட்டிரன்’ என்னும் அரசனைப் பற்றிய குறிப்பொன்று சங்க கால நூலாகிய கலித்தொகைப் பாடல் ஒன்றில் வருகின்றது. திருதராட்டிரன் என்னும் சொல், தமிழ்மொழியின் இயல்பிற்கேற்ற சொல்லமைப்பு உடையதன்று. ஆதலின், அதனை அங்ஙனமே குறிப்பிட விரும்பாமல், பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சங்க காலப் புலவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். திருதராட்டிரன் கண்பார்வையற்றவன்; பிறவியிலேயே குருடன். அவனைப் பிறர் பார்த்தல் இயலுமேயன்றி அவன் பிறரைப் பார்த்தல் இயலாது. அவனது நிலை கண்ணாடியைப் போன்றது. கண்ணாடியை நாம் பார்க்கலாம். ஆனால் கண்ணாடியால் நம்மைப் பார்க்கமுடியாது. இத்தகைய கண்ணாடியைப் போன்ற இயல்புடையவர் ஆதலின் திருதராட்டிரனுக்குத்
‘தர்ப்பண ஆனனன்’, ‘முகுர ஆனனன்’ (தர்ப்பணம், முகுரம் – கண்ணாடி; ஆனனம் – முகம்) எனப் பெயர்கள் வழங்கும். இதுபற்றி அவனைன "வயக்குறு மண்டிலத்து வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன்’ என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிட்டருளுகின்றார்.

“வயக்குறு மண்டிலம்” என்பது கண்ணாடியைக் குறிக்கும். 'ஒளி மிகுந்த வட்ட வடிவம் உடையது' என்பது பொருள். சூரியர்கள் பன்னிருவரின் பகன் என்றும் சூரியன், தக்கனின் வேள்வியில், வீரபத்திரரால் மறுக்கப்பெற்றுக் கண்குருடாயினான் என்பது வரலாறு. அதனைத் தழுவி ‘வயக்குறு மண்டிலம்’ என்றும் தொடர் 'பகன்' என்னும் சூரியனையும் குறிப்பதாகக் கொள்ளலாம். சாம்பூநதம் என்னும் பொன்னை 'நாவலொடு பெயரிய பொலம்' என்று நக்கீரர் வழங்கியதைத் தழுவியே, திருதராட்டிரனை ‘வயக்குறு மண்டிலத்து வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன்' என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியருளினார் ஆதல் வேண்டும்!

இச்சொல்லாக்க முறையினைத் தழுவி மாணிக்கவாசகர் ‘நரசிங்கம்’ என்பதனை 'ஆள்அரி’ என்றும் திருத்தக்கதேவர் ‘புத்திசேனன்’ என்பானைத் ‘திங்கள் விரவிய பெயரினான்' என்றும்; கம்பர் ‘அசகாய சூரன்' என்பவனைக் ‘கூட்டு ஒருவரை வேண்டாக் கொற்றவன்' என்றும் ஆங்காங்குத் தம் நால்களில் அழகுற குறிப்பிட்டருள்வாராயினர். ஆசிரியர் அருட்டிரு மறைமலையடிகளார்  Tennyson என்பதனைத் தேனிசையன் என்றும். Shakespeare என்பதனைச் செகப்பிரியர் என்றும், Annie Besant என்பதன் அன்னை வசந்தை என்றும் குறிப்பிடுதல், இங்கு நாம் சிந்தித்து இன்புறுதற்குரியது.

தேமொழி

unread,
Jun 7, 2021, 2:48:20 AM6/7/21
to மின்தமிழ்
62  –  “கூட்டிலிருந்த குயில்கள்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

என்னுடைய கருத்துக் கோவையில் பதிந்த எஞ்சிய அறிஞர் நா. பார்த்தசாரதியின் அருமையான வரிகளை குறிப்பதில் மகிழ்கிறேன்.  வளர்ந்த ஒரு பொற்காலம் சொற்கோலமாக வரையப்படவிருக்கிறது.  கபாட புரத்தில் இடைச்சங்கத்தின்  ஐம்பத்தொன்பது  தமிழ்ப்பெரும் புலவர்கள் கவியரங்கேறி நூலாய்வு செய்தனர். 

சிறந்த நல்ல முத்துக்களுக்கு பெயரே கபாடம்; அதனால் பாண்டியா கபாடம் என்று சொல்லி வழங்கலாம். 
ஓரிடத்தில் பொன் நகைகளைக் குறிப்பிடும்போது,  சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என்னும் நால்வகைப் பொன்னும், வயிரம், மரகதம், மாணிக்கம், புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதம், பவழம், முத்து என்னும் ஒன்பது வகை மணிகளும், ஆடவர் அணிந்து கொள்ளும் தாழ்வடம், கண்டிகை, கரி, பொற்பூ, கைக்காறை, திருப்பட்டிகை, குதம்பை, திருக்கம்பி, கற்காறை, சுருக்கின வீரபட்டம், திருக்குதம்பைத் தகடு, திரள் மணிவடம் ஆகியவைகள் ஒரு புறம் இலங்க, பெண்கள் அணிந்து கொள்ளும் திருக்கைக்காரை மோதிரம், பட்டைக்காறை, தாலி, திருக்கம்பி, திருமகுடம், வாளி, உழுத்து, ஆடகம், திருமாலை வாகுலலயம், திருக்கைப்பொட்டு, பொன்னரிமாலை, மேகலை... வியப்பாக விரிந்தன விழிகள்...
பக்குவமான மணத்துக்குச்  சாரகந்தம் என்று பெயர். 

தேரின் சட்டம் முறிந்தாலோ, சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற்  போல் நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே! கலைஞர்கள் இன்னொருவரைப்  பார்ப்பதற்கு ஏங்குபவர்களாக  இருத்தல் கூடாது.  இன்னொருவர் தங்களைப் பார்க்க ஏங்கச் செய்பவர்களாக இருக்க வேண்டும். கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும்  வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து  கீழே  நழுவவே  கூடாது.  

அனுபவம் மட்டும் தேடி அலைந்தே அடைய முடியும்.  நூலறிவைக் கற்பிக்கலாம். உலகியலை கற்றுத்தான் அறிய வேண்டும். பெரும் புலவர்களும், பேரறிஞர்களும், மக்களும் கூடிச் சிந்திக்கும் முதன்மையும், அருமையும் இருப்பதால்தானே இந்த மதுரைக்குக் கூடல் என்றே ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்!
 உலகத்தை முழுவதையும் பெயர்த்துக்கொண்டு வந்து ஒரு தராசுத்தட்டில் வைத்து மற்றொரு தராசுத்தட்டில்  மதுரை மாநகரத்தை மட்டும் வைத்தால் கூட இதன் மதிப்பு தான் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் புலவர்கள் புகழ்ந்தது பொருத்தம் என்றே தோன்றியது. 

காடுகளும் கூட்டம் கூட்டமாகப் பசுக்களை மேய்க்கும் ஆயர்களும் சூழ்ந்த முல்லை நிலம்! 
குன்றமும், அருவியும், தினைப்புலமும், வேடர்களும் நிறைந்த குறிஞ்சி நிலம்! 
நிலம் என்னும் நல்லாள் நெடும் பசுமை சூல் கொண்டு தோன்றும் வயல் வெளிகளும்,  தாமரைப் பொய்கைகளும், சிற்றூர்களும் செறிந்த மருத நிலம்! 
தாழம்பூ தரும் மீனவர் குடியிருக்கும் பரதவர் பாக்கமும் மலிந்த நெய்தல் நிலம்!
இத்தகைய நானிலங்களின் நானாவிதமான வாழ்க்கை முறைகளையும் கொண்டது நம் தமிழ் நிலமாகும்! 
ஆனாலும் குறிஞ்சி நில வாழ்வின் செழிப்பு மருத நிலத்தில் இல்லை! மருத நில வாழ்வின் வளம் முல்லை நிலத்தில் இல்லை! முல்லை நில வாழ்வின் ஊட்டம் நெய்தல் நிலத்தில் இல்லை!  ஆனால் மொத்தமாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா இடத்திலும் ஒடிக்கொண்டிருந்தது. நிற்காமல் ஒடிக் கொண்டும் ஓடாமல் நின்று கொண்டும் நிலத்துக்கேற்ப, வளத்துக்கேற்ப, இன்ப துன்பங்களின் மிகுதிக்கேற்ப, உயிரியக்கம் நடை பெய்ர்ந்து கொண்டிருந்தது.

அறிவு ஒருவனை வெறும் விவரம் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது. அனுபவம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன்.  அனுபவம் தான் திறமையைக் கற்றுக்கொடுக்கிறது. அனுபவம்தான் மனத்தையும், வாக்கையும், புத்தியையும் பளிச்சென்று  இலட்சணமாகத் தெரியும்படி  மெருகிடுகிறது. நம்பிக்கைதான் அரசியலில் தவம்!  நம்பிக்கை தான் வெற்றி !  நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம்.  நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் ஒன்றைத்  தொடங்கும்  முன்னேயே தோற்றுப் போகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ தோற்றுப்போன பின்னும் வெற்றிகொள்ளத் தொடங்குகிறார்கள்.

நினைவுகள் எல்லாமே நிழலைப் போன்றவை. நாம் எங்கெல்லாம் நடந்து போகிறோமோ, அங்கெல்லாம் அவை நம்மைத்  தொடரவே செய்யும் என்று அறிஞர் நா.பா  எழுதிய  இராணி மங்கம்மாள் வரலாற்றுப் புதினத்திலுள்ள முத்துச் சுடர்களை என் குறிப்பேட்டில் 22.11.1986-ல் குறித்ததை இப்பொழுது சுட்டிக்காட்டுவதில் இன்பம் அடைகிறேன். 

நா.பாவின் நூல்களைப் படிப்பது போல அப்பா  என்னை ‘எழுத்துத்திலகம்’ அரு.இராமநாதன் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’ வரலாற்றுப் புதினத்தையும் படிக்குமாறு அறிவுறுத்தினார். அதைப்படித்து என் கருத்துக் கோவையில்  அப்புதினத்தில்  வரும்  ஜனநாதனின்  மேற்கோள்:-
“அரசியல் என்பது உம்மைப் போன்று உத்தம உள்ளம் படைத்தவர்களுக்கோ, உணர்ச்சியாளர்களுக்கோ ஏற்றதல்ல!  மனித உணர்ச்சிகளையும், உன்னத லட்சியங்களையும் களிமண் பொம்மைகளாக உருட்டி விளையாடும் என்னைப் போன்ற இதயமற்ற அரக்கர்களுக்குத்தான் அரசியல் ஏற்ற தொழிலாகும்!
 அரசியல் துறையில் நல்லவர்களை விடப் பொல்லாதவர்கள் தான் வெற்றி கண்டு சரித்திரத்தை உண்டாக்க முடியும்!   நீர் சரித்திரத்தை விட்டு மறைவதைப்  பற்றியும் கவலைப்படாதீர்!  ஏனெனில் மனைவி மக்களோடு ஆனந்தமாக வாழ்க்கை வாழ விரும்புபவனுக்குச் சரித்திரமில்லை!  சரித்திரத்தை விரும்புகிறவனுக்கு  மனைவி  மக்களோடு  கூடிய  வாழ்க்கையில்லை! இந்த இரண்டு பெரும் உண்மைகளில் முதலாவதற்கு  உதாரணமாக நீர் விளங்குவீர்.  இரண்டாவதற்கு உதாரணமாக  ஜனநாதனாகிய  நான் விளங்குவேன்.

கோவையில் வதிந்து திடுமென மறைந்த கவிஞர் சேவற்கொடியோன் (14.11.1942 - 14.12.1996) என் அப்பாவின் இனிய நண்பர் ஆவார். சேவற்கொடியோன், தொண்ணூறுகளில் தமிழ்க் கவிதையுலகில் யாப்பு, அணி போன்ற இலக்கண அலங்காரங்களைத் தன் மீசைக்குள்ளே வைத்து - பீடுநடை போட்ட பெருங்கவிஞர்.  அகவெட்டு, முகவெட்டு இரண்டிலும் தமிழ்த்தாயின் பிள்ளையொத்த சாயலைக் கொண்டவர். கம்பீரக் கவிஞராக, தமிழின் அத்துணை உயரங்களையும் தாண்டக் கூடிய தடகளக் கவிஞராக உலா வந்தவர் என்று அருமை நண்பர் பால.ரமணி சொல்லிச் சொல்லி மகிழ்வார். ‘சேவற்கொடியோன்’ என்னுமவர் கையொப்பத்தில் கூட, தமிழ்க் கொடி பறக்கும் அழகைக் காணலாம் என்று அவர் மகன் கோவலன் பெருமிதமாகச் சொல்லி மகிழ்ந்த கையொப்பமாகும்.

அவர் எழுதிய ‘பர்ணசாலை மான்கள்’, ‘இரத்ததில் கரைந்த சாத்தியங்கள்’ குறிப்பிடத்தக்கன. அவருடைய மகன் கோவலன் தமிழக அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக  பணியாற்றி வருகிறார்.  அவரிடம் அவர் அப்பா சொன்னது மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே உயிர் நீங்க வேண்டுமென்று, அவ்வண்ணமே, மேடையிலேயே உயிர் நீத்தவர் ஆவார் சேவற்கொடியோன்.

 22.11.1986-ல்  அவர் எழுதிய சில குறிப்புகளை என்னுடைய கருவூலத்திலிருந்து: 
“நவீன கலை இலக்கியம் என்ற பெயரால் இரத்தம் சிந்தாத  கொலைகளைச் செய்யும் குருரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவையும் குறிப்பிடப்படுவதில்  வருத்தமடைகிறேன்.   தமிழ்க் கவிஞர்கள் பலரும் வாழ்க்கைக்குரிய கன பரிமாணங்களைப் பெறுவதற்கு முனையாமல்  கனவுகளைப் பற்றிக்கொண்டும், அவமானகரமான சோகங்களுக்கு ஆட்படும் அவைகளையே  சுகமான கவிதைகளாகச் சொரிந்து சொரிந்து இன்பங்காணும் நோயாளிகளாக மாறிப்போனார்கள்.  
கதாசிரியர்கள்  இராத்திரிக்  கதைகளையே எழுதி எழுதி பகலிலும் அஸ்தமன  விகாரங்களில்  வாய்பதித்துக் கிடக்கிறார்கள். “தகிக்கின்ற  உந்தன் கண்ணீர் கோகினூர்”  என்று பாடினான் மலையாள கவிஞர் ரமேஷ் நாயர்.  தேவைகள் அனைத்தையும் தெய்வீகமாகக்கருதி மயங்கும் சரீர ருசிக்காரர்கள் தமிழில் அதிகரித்திருக்கிறார்கள். 

அதேபோல சீக்கிய இனப் படுகொலையைக் குறித்து சேவற்கொடியோனின்  சீற்ற   வரிகள் வலம்புரி நடையில் வளர்ந்தன. “வெள்ளையராட்சியில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய படுகொலையால் மனித நாகரிகத்திற்கே அஸ்தி கண்டதாக உலகம் அறிந்தது.   இன்று தங்களது ஜீவ காண்டத்தை சிருஷ்டிப்பதற்காக இரத்தமே பூமியின் மணமாகும் அளவிற்குச் சீக்கிய சகோதரர்கள்  இரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.   சாம்பிராணி மணக்கின்ற பஞ்சாபில் எதேச்சதிகார துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.  எனினும்,  அவர்களின் மரணத்திலிருந்து உரிமைப் பேரொளி என்றேனும்  எழும்.
 சிரைகளிலும்,  தமனிகளிலும் வீரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் சீக்கிய சகோதரர்கள் தங்களது உரிமைப் போரில் அடைகின்ற வெற்றியே தேசிய இனங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.” 

அதேபோல வேறொரு இடத்தில் தன்னுடைய சிவப்புச் சிந்தனையைப் படர விட்டதைக் காணலாம்...
“கண்ணுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் நியாயமான உலகினைப் புறக்கணித்து விட்டுக் கனவு வெளிகளில் வலம் வரும் கவிஞர்களின் படைப்பால் ஆக்கங்கள் விளைவதில்லை.  கற்பனை, நளினம் என்ற பெயர்களில் பலர் உருவாக்கும் சொற்குவியல்கள் காற்றுக் குமிழிகளைப் போல் வலிமையற்று உதிர்ந்து விடுகின்றன.   சமுதாய அவலங்களைப்  பற்றி அலட்டிக்கொள்ளாமல்,  எப்படியாவது ஒரு கவிஞனாக முத்திரையிட்டுக்  கொள்ள வேண்டும் என்ற ஆவலில் ரசனைக்காகப்  பாட்டெழுதுவது  ஒரு வகைச்  சுயநலமே!   பொய்கள் மண்டிக் கிடக்கும் இடத்தில் நிஜத்தை சிரமப்பட்டே கண்டுபிடிக்க வேண்டுகிறது.   தாகூரின் கவிதைகளை ‘குளிர்காலக்  காற்றின் இதமான வருடல்’ என்று எஸ்ரா  பவுண்டு கூறினார்.  ஒரு சிலரின் புதுக்கவிதைகளோ  புயல் வீசும் கடலில் அலை வீசும் வேகத்தையே உணர்த்துகின்றன. 

கவிஞர் மதுபாலிகா (K. வள்ளிநாயகம்), மயக்கம் தெளிவிக்கிற மாற்று மருந்து எழுத்துக்காரர்; 
எட்டாம் வகுப்பு பயிலும்போதே கவிதை இயற்றத் தொடங்கியவர்; அமிலத்தை விழுங்கி அஸ்திரத்தைக் கொப்பளிக்கிற அனல் கவிஞர் மதுபாலிகா ஆவார்.  தான் பணியாற்றிய தொலைதொடர்புத் துறையின் தொழிற்சங்கங்களில் மாவட்டச்செயலாளர், மாநிலச் செயலாளர் மற்றும் அகில இந்தியப் பொதுச் செயலாளர் எனப் பல்வேறு நிலைகளில் தடம் பதித்தவர்.  ‘புதிய கீதை’, ‘அசுவமேத யாகம்’, ‘பூச்சொரியும் வானம்’, ‘குங்குமப் பூக்கள்‘, ‘மதுபாலிகா கவிதைகள்’, ‘கந்தர்வ கானம்’ எனப் பல்வேறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.  அவருடைய போர்க்கவிதைகளைப் படித்து என்னுடைய கருத்துக் கோவையில் 23.11.1986-ல் பதிவிட்டேன்.  
“பவனிவரும் கவிதைக்குப் பதிலிருந்தால் சொல்லுங்கள். 
பாய்ந்துவரும் குதிரையிது  பாதை விட்டு விலகுங்கள். 
இதன் சுவடுபட்ட  மண்ணெல்லாம்  சிவப்பாகும்  எண்ணங்கள். 
அவனியினை எமது கொடி ஆளும்; விலகி நில்லுங்கள்! 
விதி! இது ஆண்டவன் வகுத்ததல்ல; நம்மை ஆள்பவன் வகுத்தது! 
இதற்குப் பலியாவது தீர்ப்பல்ல; நாம் ஆள்வதே வழி!  உணர்க!
மெல்லினமாய் இருந்தால் மிதித்து விடும் உடைமை வர்க்கம்! 
இடையினமும் அவர் காலில் இடறிவிழும்! 
வல்லினமாய் நிமிர்ந்து நீ போராடு,  வழிவிடும்  உலகமுனக்கு. 
அவர்கள் நெற்றிக்கண் திறந்தால்  எங்கள் குடிசைகள்  சாம்பலாகும் போது எங்கள் அடி வயிற்று நெருப்பில் ஏன் மாளிகைகள் பொசுங்கவில்லை? 
அக்கினிதேவனே!  நீயுமா  அன்பளிப்பில்  மயங்கிவிட்டாய்! 
அறிவுப்புரட்சிக்கு ஆக்க வழி தேடுங்கள்! அமைப்பாக செயற்படுங்கள், ஆழமாக செயற்படுங்கள், இமைப்பொழுதும் லட்சியத்தை மறவாமல் செயல்படுங்கள்.  கொள்கைத்  தீ வளர்த்து  வர்க்க பேதத்தைச் சுட்டுப்பொசுக்கிடுவோம்.” 
“அர்ச்சுனா! கண்ணனை இன்னும் காணோம்!
.....ம்! சங்கைப்பிடி, சாரதியாகு!”
என்று தன் ‘புதியகீதை’யில் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கிய வகுப்பில் மூத்த மாணவராக அறிமுகமானவர்தான்  கவிஞர் பேரமனூர் சந்தானம்.   சிரிக்க சிரிக்க நம்மை சொக்க வைக்கும் நண்பர்.   நடக்கும் பொழுதே நளினமாகக் கவிதைகளை உதிர்க்கும் வல்லமை வாய்ந்தவர்.  எங்கள்  பேராசிரியர்,  ‘புதுக்கவிதையின் தாத்தா’ என்று புகழ்ப்பெற்ற முனைவர் மேத்தாவின் மனங்கவர்ந்த மாணவச் செம்மல் தான் சந்தானம். அப்பாவும் சந்தானத்தின் கவிதைகளையும்,  எடுப்புரைகளையும் பாராட்டி மகிழ்வார்கள். 
வெடித்த வாயில்  தொடுத்த  இக்கவிதை சந்தானம்  கல்லூரியில் சொன்னது.
“தலைவாரிப்  பூச்சூடி 
என்னைப் பாடசாலைக்குப் 
போ என்றார் என் அன்னை.  
இன்று வரைக்கும்  
அங்கே தான் இருக்கிறேன்.” 

அதே போல,  மிதிவண்டியைப்  பார்த்தவுடன் சொன்ன வரிகள், 
“டயரே   டயரே  நீ  யாரோ 
ட்யூபுக்கு  நீதான் தாயாரோ.” 
அதேபோலக் கல்லூரிப் போட்டிகளில் பரிசு கிடைக்காமல் வரவே மாட்டார்.  அப்படித் தவறி விட்டால்  உடனே சொன்ன வரி, 
“எனக்குப் பழக்கமானவர்களே!  
என் வழக்கமான பாதையில் பள்ளம் பறிப்பதால் நான் வழுக்கி விழுகிறேன்!” 

என்னிடம் அடிக்கடி சந்தானம் சொல்வது இது. 
“எப்போதும் நினைவில் வைத்துக்கொள் அருள்...
பூனை எலி பிடிக்கும்
புதுத் தண்ணீர் சளி பிடிக்கும்
ஆனை வரும் முன்னே
அழகாக மணியடிக்கும்
அடங்காத பசங்களெல்லாம்
அப்பனோடு தம்மடிக்கும்...”

“தம்பிக்கு அண்ணன் நான்
அண்ணனுக்குத் தம்பி நான்
தம்பிக்கு அண்ணன் நான்
அண்ணனுக்குத் தம்பி நான்
அண்ணன் தம்பி இருவருக்கும்
ஆங்கிலத்தில் 'பிரதர்' நான்”

“பொங்கி வச்ச பொங்கலிலே
புதைந்திருக்கும் முந்திரி நான்
பூட்டி வச்ச நாய்களுக்கு
ஸ்ட்ராங்கான சங்கிலி நான்
ஷாருக் கான் சல்மான் கான்
சத்தியமாய் இல்லை நான்
சாஞ்சுக்கிட்டே தின்னுகிற 
சாதாரண பாப்கார்ன் நான்.”     
  
எளிமையாக வாழ்வைத் தொடங்கிப்  திரைப்படங்களில் பல  நடித்து,  இன்று சிந்தனை மன்றங்களில் அருவியாகப் பொழிவாற்றும் அறிவுச்சுடராக மின்னுகிறார்.  அவ்வண்ணமே பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வெற்றி வரலாறுகளை  திரைக்காவியங்களாக இயக்கும் வெற்றி வாணராக வலம் வருகிறார்.
------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை

சோழன் கரிகால் பெருவளத்தானை, முடத்தாமக் கண்ணியார் பாடியது. பொருநர், ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என மூன்று வகைப்படுவர். 
 இப்பாட்டின் பொருநன், போர்க்களம் பாடுவோன்.  பரிசின் பெற்றுத் திரும்பும் பொருநன், பரிசில் பெறச்செல்லும் பொருநனை ஆற்றுப்படுத்துகின்ற பாடல்.  
இந்த ஆற்றுப்படையின் தலைவன், சோழன் பெருவளத்தான்.  இவன், புகாரிலிருந்து அரசாண்டவன்.  இவன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன். 
 இளமையில், கால் கரிந்து போயிற்று என்பதால், கரிகாலனானான்.
148 முதல் 197 முடியவுள்ள அடிகள்

‘கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
தாள்நிழல் மருங்கி ணணுகுபு குறுகித்
தொழுதுமுன் நிற்குவி ராயின், பழுதின்று,
ஈற்றா விருப்பின் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா வளவை யொய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்
பெறலருங் கலத்தின் பெட்டாங் குண்கவெனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர,
வைகல் வைகல் கைகவி பருகி,
எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி,
நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர, ஓரி நுடங்கப் 
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலி னேழடிப் பின்சென்று, கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி……’        
  
நீங்களும் இளஞ்சேட்சென்னியின் மகனாகிய கரிகால் வளவனிடம் செல்லுங்கள். 
அவன், உங்களுக்கு அனைத்தையும் தருவான். 
வேண்டிய அளவும் தருவான். 
உங்கள் பருத்தியாடைகளை நீக்கிப் பட்டாடைகளை உடுத்தத் தருவான். 
அதையும் நாள்தோறும் தருவான். 
பொற்றாமரைப் பூவைச் சூட்டி மகிழ்வான். 
பொன்னரி மாலைகளையும், முத்து மாலைகளையும் விறலியர் அணியக் கொடுப்பான். 
வெண்குதிரைகள் நான்கிளைப் பூட்டிய தந்தத்தேரில் உங்களை அமரவைத்து, யாழிசைக்கும் பாணர்க்குச் செய்யும் நலங்களையெல்லாம் உங்களுக்கும் செய்வான்.  
உங்கள் தேரின் பின்னால் ஏழடி வந்து, உங்களை வழியனுப்பி வைப்பான். 
அத்தகு பண்பாளனாகிய அவனிடம் செல்லுங்கள்.  

வளரும்...
- முனைவர் ஔவை அருள், 
தொடர்புக்கு: dr.n.arul[at]gmail.com

------


தேமொழி

unread,
Jun 21, 2021, 2:54:08 AM6/21/21
to மின்தமிழ்
63  –  “முத்தாரம் வழங்கிய மு.வ”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

கல்லூரிகளில் கல்வி நிறுவனங்களில் தமிழ்த் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பொதுவாகப் புதினம், சிறுகதை  எழுதும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்ததில்லை என்றே கருதிய வரையறையை நகர்த்திப் பெரும் பெயரும், உயரிய புகழும் பெற்ற மாபெரும் தமிழ்ப் பேராசிரியராக தமிழகம் கை குவித்து வணங்க மிளிர்ந்தவர் அறிஞர் மு.வ. (25.4.1912-10.10.1974) ஆவார்.

உலகப் புதின வரலாற்றை ஆராய்ந்தால் பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்தி / வார / மாத / காலாண்டு இதழ்களின் வாயிலாகவே தங்கள் படைப்புக்களையும், புதினங்களை தொடர்களாக வெளியிட்டுச் செல்வமும், செல்வாக்கும் பெற்றனர். இதற்கும் விதிவிலக்காக துணைவேந்தர் மு.வ. விளங்கினார்.  இவருடைய பன்னிரெண்டு புதினங்களும் நேர் அச்சு வடிவில் பாரி நிலையத்தின் வெளியீடாக வந்தது என்பது தனிச்சிறப்பாகும். மு.வ.வின் புதினங்களைப் படிக்கும்போதே மொழியின் ஒலிவளம், தமிழ்நாட்டின் நில அமைப்பு, தமிழர்களின் வாழ்வுநிலையை எடுத்துச் சொல்லும்போது படிப்பவர் அனைவருக்கும் மொழிப்பற்று மீதூர்ந்து பெருகும்.

புதினம், சிறுகதை, நாடகம், கடித இலக்கியம், பயண இலக்கியம், இலக்கிய வரலாறு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு, மொழியியல், வாழ்க்கை வரலாறு, சிந்தனை, குழந்தை உளவியல், சிறுவர் இலக்கியம் ஆகிய எழுத்துத்துறைகளில் வல்லவராக மு.வ. ஒளிர்ந்தார்.  அவருடைய எழுத்தைப் படித்து மதுரையிலிருந்து சென்னைக்குத் தனியாக துணிந்த வந்து பச்சையப்பர் கல்லூரியில் அவர் மாணவராகச் சேர்ந்தவர் என் தந்தையார். அப்பா அடிக்கடி எங்களிடம் சொல்வது சென்னைக்கு நான் வந்ததற்கு  நான்கு காரணங்கள்.
1. படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பர் கல்லூரி
2. பேரறிஞர் அண்ணா பயின்ற கல்லூரி
3. தமிழ்க்கடல் மு.வ. மாணவராக மிளிர வேண்டும் என்ற கனவு
4. மாமன் மகள் தாரா மீது ததும்பிய காதல்

மு.வ.வின் மாணவராக இருந்தாலும் அவரிடம் பாடம் பயின்றாலும் அவரின் அடக்கமான மாணவர் என்ற நிலையை என்னால் பெற முடியவில்லை என்று அப்பா சொல்வார்.  அவருடைய நெருங்கிய நண்பர் இ.சு.பாலசுந்தரம் அப்பாவின் நெருக்க வலையிலிருந்து பிரிந்த நிகழ்வை பேராசிரியர் மு.வ தன் புதினத்தில்  ஒரு கதை வாயிலாகவே வரைந்தார் என்றும் சொன்னதுண்டு. 

என் பெற்றோரின் திருமணம் நிறைவேறிய பிறகு மு.வ வரைந்த வாழ்த்து மடலை இன்று வரை அப்பா மறவாமல் பேணி வருவதை நல்லாசிரியர் மேல் மதிப்புக்கொண்ட நன் மாணாக்கர் நிலையை அறியலாம்.

திருமண வாழ்த்துக் கடிதம்:
திரு. மு. வரதராசன்,
தமிழ்ப்பேராசிரியர்,
செனாய் நகர்,
சென்னை 600 030.

11.12.1961

அன்புடையீர்,
    வணக்கம். திருமண அழைப்பு இன்றுதான் வரப்பெற்றேன்.  திருமணம் (10.12.1961) நன்கு நிறைவேறியிருக்கும். 
மணமக்கள் நலமெல்லாம் நிரம்பி நீடு வாழ இறைவன் அருள்க.
    வாழிய திரு நடராசன்--திருமதி தாரா நடராசன்!
அன்புடன்
மு.வ.

அப்பா அடிக்கடி என்னிடம் சொல்வது, “எதுவும் பிறக்கும்போதே வருவதில்லை; எல்லாம் பழக்கம்தான்”.  அதேபோல பேராசிரியர்   மு.வ.வினுடைய ‘கயமை’ புதினத்திலிருந்து ஒரு மேற்கோளைத் தவறாமல் சுட்டிக் காட்டுவார்.

“கால் புல்தரையிலும் நடந்து பழக வேண்டும்;  கல்மேட்டிலும் நடந்து பழக வேண்டும். இல்லையானால், தொல்லைதான். காதும் அப்படித்தான்.  இனிய கொஞ்சுமொழியும் கேட்டு மகிழ வேண்டும்;  கடுமையான வசைச் சொற்களையும் கேட்டுப் பழக வேண்டும்.  செவி கைப்பச் சொல் பொறுக்க வேண்டும்  என்று வள்ளுவர் சொன்னது மூவேந்தர்களுக்கு மட்டுமல்ல உங்கள் மூன்று பேருக்கும்தான்”
என்று அடிக்கடி கல்லூரிக் காலங்களில் அப்பா சொல்லிக் காட்டுவார்.  கூடுதலாக ஒரு தகவலையும் அப்பொழுது சொன்னார்,
“பேராசிரியர் மு.வ.விற்கு மூன்று ஆண்மக்கள், அவர்கள் முறையே, திருநாவுக்கரசு, நம்பி, பாரி. அம்மூவருமே மருத்துவ மாமணிகளாக மிளிர்கிறார்கள்” என்றும் சொல்வார்.  அதேபோல, மு.வ.வின் சிறந்த மாணவர் என்னை வழிநடத்திய பேராசிரியர் எந்தையாரின் நெருங்கிய நண்பர் சி.பா.வின் மூன்று ஆண்மக்கள், முறையே, சேரன், வளவன், செழியன் ஆவார்கள்.  அதேபோல, இவ்வரிசையில் எங்கள் பெற்றோருக்கும் கண்ணன், அருள், பரதன் என மூவரும் ஆண்மக்களே! 

அல்லி புனைகதையை 1986ஆம் ஆண்டு கல்லூரியில் பயிலும் போது தொடக்கத்திலேயே வந்த வரிகள் என் நெஞ்சை விட்டு இன்றும் நீங்கவில்லை.
“பெற்றோருக்கு உள்ள மயக்கம் எதுவென்றால் ஒழுங்கு, தெளிவு, முயற்சி, ஊக்கம் ஒன்றும் இல்லாத மகனைப் பற்றி கவலை இல்லையாம்.  இவையெல்லாம் இருந்தும்,  நன்றாக வாழ்வேன் என்று தெரிந்திருந்தும், எனக்காகக் கவலைப்படுகிறார்கள் பெற்றோர்கள்”.

இக்கதையைப் படிக்கும் பொழுதே எத்தனை இலக்கிய / சமய / வரலாற்றுச் சான்றுகளைத் தன் தெள்ளிய தமிழ் நடையில் உளவியல், நுட்பவியல் அறிஞரைப் போல நூலாசிரியர் எழுதியுள்ளதை நினைந்து போற்றலாம்.
ஓரிடத்தில் 
“அறிவின் ஆற்றல் தடுமாறுகிறது;  காட்டிக் கொடுக்கிறது.  அன்பின் தியாகம் வலுப்படுத்துகிறது; வழுவாமல் காப்பாற்றுகிறது.  விவேகாநந்தர், இராமகிருஷ்ணர், நிவேதிதையார் மலைகள், நானோ சிறு மணற்குன்று. எது குற்றம் என்ற ஓர் கதையை வெளியிடுவதாகவும், வெளியிட்ட நிலையம் பறம்பு நிலையம் என்று தன்  நூல்களை வெளியிடும் பாரி நிலையத்திற்குப் புகழ் சேர்க்கும் முறையாக எழுதியுள்ளதையெல்லாம் நுணுகிப்  படித்து அறிந்தேன்.  
அவர் எழுதிய கதைகள்;
செந்தாமரை (1946),
கள்ளோ காவியமோ (1947), 
பாவை (1948), 
அந்த நாள் (1948), 
மலர்விழி (1950), 
பெற்ற மனம் (1951), 
அல்லி (1952), 
கரித்துண்டு (1953), 
கயமை (1956), 
நெஞ்சில் ஒரு முள் (1956), 
அகல் விளக்கு (1958), 
வாடா மலர் (1960), 
மண் குடிசை (1961)

அவர் எழுதிய புதினப் பாத்திரப் பெயர்கள் மோகன், மங்கை, செல்வநாயகம், வடிவு, சந்திரன், மெய்யப்பன், அறவாழி, மெய்கண்டார், கமலக்கண்ணர், அருளப்பன், சீராளர், திலகம், பாவை, செந்தாமரை, மான்விழி, மென்மொழி, தேமொழி, ஆணவர், வசீகரன், காஞ்சனை, சந்திரன், கற்பகம், வேலய்யன், கயற்கண்ணி, இமாவதி, மாலன், பாக்கியம் தமிழ் உலகத்தின் தனிப் பெயர்களாகும். ‘பாரிமுனை’ என்ற கவினார்ந்த பெயரினை அணிசூட்டியவர் ஈடு இணையற்ற பெரும்பேராசிரியர் மு.வ. அவர்களே. 

அவ்வண்ணமே, ‘கள்ளோ? காவியமோ? என்ற அவரின் தலைசிறந்த புதினத்தில் மங்கை பேசும் வரிகள் இன்னும் சிலிர்க்க வைக்கின்றன. 
“மானம் வந்தபோது நான்தான் அரசி; என் நாடி நரம்புகள் என் அடிமைகள். என் மனத்தை நான் ஆள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கின்றது. என் உடலுக்கு அமாவாசையாய் என் உள்ளம் என்னும் மானம் இருண்டு தோன்றுகின்ற காலத்திலும், என் ஆட்சியைக் கைவிட்டதில்லை. அப்போதும் காதல் என்னும் நந்தாவிளக்கு எனக்குக் குன்றா ஒளிவீசித் தவறாமல் காக்கின்றது. நிறைகாக்கும் காப்பை இந்த நாடி நரம்புகளின் பேரால் தகர்க்க முடியுமா? இதனால்தான், ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று அந்த உலகப் பெருந் தலைவரும் கேட்டார்”.  

“தான் விரும்பிப் பயன்கொண்ட பழுத்த என் எழுத்துப் பணியிலிருந்து நான் ஓய்வு பெறமாட்டேன், எழுத்து என் உயிருடன் கலந்து விட்டது” என்றெழுதிய பேராசிரியர் மு.வ.வின் பெருமிதம் எல்லையற்றது.

இன்றைக்கு நமது அரசு அறிவிப்பாகவே நூல்களைப் பரிசாகத் தாருங்கள்.  பூங்கொத்துகளைத் தவிர்த்து விடுங்கள் என்கிறார்கள்.  ஆனால், ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் திருமணப் பரிசுகளாக மு.வ.வின் நூல்களை மட்டுமே பரிசாகவே மகிழ்ந்து வழங்கினார்கள்.   நேற்றைக்குக் கூட வேறு துறையின் சார்புச் செயலர் என்னிடம் நேரில் வந்து மு.வ எழுதிய திருக்குறள் உரையை 300 படிகளை பாரி நிலையத்தில் வாங்கித் தருக என்ற போது பெருந்தகை மு.வ. காலங்காலமாக நினைக்கப்படும் தமிழ்க்கு வாய்த்த தனிப்பெரும் பேராசிரியராவார்.

பேரறிஞர் மு.வ. தன் நூலான ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கத்’திற்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க.விடம் அணிந்துரை பெற்றார். ஏனைய நான்கு புதினங்களுக்கும் ‘பாயிரம் மாணவர் தரலாம்’ என்ற நன்னூல் உரைக்கேற்ப பேராசிரியர் மாணவர்களான  அறிஞர் ம.ரா.போ.குருசாமி, சி.வேங்கடசாமி,  கா.அ.சீ. ரகுநாயகன், இரா.சீனிவாசன்  போன்றோர் முன்னுரை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளங்கலை வகுப்பில் மு.வ.வின் ‘மொழி வரலாறு’  நூல் தான் பயின்ற நூலாகும்.  

இயல்பாக எந்த நூலையும் படித்தாலும் பொருள் விளங்கும்படி படிப்பது தான் அனைவரின் முயற்சியாகும். ஆனால் இந்நூலில் ஒவ்வொரு பக்கத்தின் இறுதித் தொடர்கள் பல இலக்கண நுணுக்கம் வாய்ந்தவை. மொழியியலில் மேனாட்டு அறிஞர்களின் ஆங்கில மேற்கோள்கள் அணிவகுத்து நின்றன.   அதில் குறிப்பாக அந்தந்த ஆங்கிலத் தொடர்களை மிக எளிமையாகத் தன் அருவி நடையிலேயே பேராசிரியரின் மொழிபெயர்ப்பு மிளிர்ந்தன.

சான்றாகப் பழங்காலச் சொற்களாக இராமல் புதியனவாக ஏற்படும் சொற்களானால், அவை ஒப்புமையாக்கம் தவறாமல் ஒழுங்காக அமைகின்றன.  ‘காரன்’ என்ற புதிய விகுதி ஏற்கும் சொற்கள், தயிர்க்காரன், வீட்டுக்காரன், பணக்காரன், கடன்காரன், கடைக்காரன் என ஒரே ஒழுங்காக அமைவது காணலாம். ஒப்புமையாக்கத்தால் இத்தகைய சொற்கள் பற்பல அமைந்து மிக வேகமாகப் பெருகுதல் உண்டு,  அவை பெருகிப் பரவும் வேகம், தொற்று  நோய்கள் பரவும் வேகத்தை நினைவூட்டுவதாகக் கூறுகிறார் அறிஞர் எசுபர்சுன்.

 இளங்கலை பயிலும்போதே தமிழ் மொழிக்கு பிறமொழிச் சொற்கள் இணைப்பது தேவையில்லை என்பதை மிக நுட்பமாக அறிந்து கொண்டேன்.  அதற்கு ‘மொழி வரலாறு’  பாடம் நடத்தும்போதே இந்த மேற்கோள்தான் என் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டது.    இன்றும் பலர் என்னை ஏன் ஆங்கிலச் சொற்களை இணைத்தே எழுதலாமே என்று கேட்கும் போதெல்லாம் எசுபர்சினின் மேற்கோள் தான் நினைவில் நிற்கும்.

“இருள் வானத்தில் ஒளிக் கீற்றாய் மின்னும் சொற்களைக் கடன் வாங்குவதற்குரிய காரணங்கள் மூன்றாகும். 
முதலாவது, தம்மிடம் இல்லாத புதியபொருள்களை அவற்றின் பிறமொழிப்பெயர்களைக் கடன் வாங்குதல். 
இரண்டாவது, ஒரு மொழியாரிடமிருந்து செல்வாக்கோ, உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது அதற்குரிய அம்மொழிச் சொற்களையும் கற்றும் கையாளுதல். 
மூன்றாவது, மொழிபெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரணமாக, தம் மொழிச்சொற்களைத் தேடிக்காணாமல், பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வந்து கலந்து சேர்த்தல்.”

கடித இலக்கியங்களில், தங்கைக்கு, நண்பருக்கு என்று பேராசான் மு.வ. வரைந்த கடிதங்கள் கருத்துக் கருவூலங்களாகும்.  நண்பருக்கு என்று ஒன்பது கடிதங்களை நம்பி என்பவர் வளவனுக்கும் எழிலுக்கும் எழுதுவது போலப் பாங்குறத் தன்னுடைய வாழ்வியல் கருத்துகளை எழிலார்ந்த நடையில் எழுதிய கடிதங்கள் தமிழுலகத்திற்குப் பெருங்கொடை எனப் போற்றலாம்.  எழிலுக்கு ஓரிடத்தில் எழுதும்போது, உலக மக்களுக்குப் புரிய வேண்டும் என்ற பெருமனத்தைக் குறிப்பிடுகிற வரிகளை என் கருத்துக் கருவூலத்தில் 30.07.1986 அன்று குறித்திருந்தேன். 

“வேகமான உணர்ச்சி கானாறு போன்றது. நமக்கும் பயன்படாமல் விரைவில் வடிந்து போகும். கானாற்று வெள்ளம் திறந்த மலைக்கும் காட்டுக்கும் பயன்படாமல் அடுத்துள்ள காட்டுக்கும் மேட்டுக்கும் பயன்படுகிறது. 
வேகம் மிகுந்த உணர்ச்சியும், தற்காப்புக்குப் பயன்படுவதில்லை. தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுவதில்லை.  உறங்கும் எதிரியைத் தட்டியெழுப்பி விழுப்புடன் வாழுமாறு செய்து காப்பாற்றுவதற்கே மறைமுகமாகப் பயன்படுகிறது.” 
என்ற அவரின் ஆணை வரிகளை நம் வாழ்வின் கல்வெட்டு வரிகளாகப் பொறிக்க வேண்டும்.

------
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படையென்ற தொடர் - பொருநரையாற்றுப்படுத்தும் நூல் எனப்பொருள்படும்: 
இரண்டாம் வேற்றுமைத்தொகை. ஆற்றுப்படை - வழியிற்செலுத்துவது என ஏழாம் வேற்றுமைத் தொகை. இங்குப் பொருநரென்ற சொல், ஒருவரைக்கூறும் பன்மைக்கிளவியாகும். பொருநர் மற்றொருவர் போல வேடங்கொள்பவர்;  இப்பொருநர், ஏர்க்களம்பாடுவோர் போர்க்களம்பாடுவோர் பரணி பாடுவோரெனப் பலர். 
அவர்களுள் இப்பொருநன், போர்க்களம் பாடுபவன்: இவ்விஷயம், 
“போந்தைத்தோடுங் கருஞ்சினை, அரவாய் வேம்பினங்குழைத்தெரியலும், ஓங்கிருஞ்சென்னி மேம்படமிலைந்த, இருபெருவேந்தருமொருகளத்தவிய, வெண்ணித்தாக்கிய வெருவருநோன்றாட், கண்ணார்க் கண்ணிக் கரிகால்வளவன்” 
எனப் - போர்க்கள வெற்றியை எடுத்துக் கூறுதலாலும், இப்பொருநன் தடாரிப்பறை கொட்டுபவன் என்பது “கைக்கசடிருந்தவென் கண்ணகன்றடாரி,...ஒன்றியான் பெட்டாவளவையின்” என வருவதாலும் அறியப்படும்.

ஆற்றுப்படை யென்பது - கூத்தர் முதலியவர்களுள் ஒருத்தர் கொடையாளியான ஒருவனிடத்துத் தாம் பெற்ற செல்வத்தை எதிர்வந்த இரப்போர்க்கு உணர்த்தி அவரும் அந்தக்கொடையாளியினிடம் தாம் பெற்றது போலவே பொருளைப்பெறுமாறு வழிப்படுத்துவது. இது புறப்பொருளான பாடாண்டிணையின் துறைகளுள் ஒன்று.  இதன் இலக்கணம்- "கூத்தரும் பாணரும் பொரு நரும் விறலியும், ஆற்றிடைக்காட்சி யுறழத்தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கறிவுறீ இச், சென்று பயனெ திரச்சொன்ன பக்கமும்" என்று தொல்காப்பியத்துக் கூறப்பட்டுள்ளது.
இதன் பொருள்:-ஆடல்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப்பொருநரும் இவருட் பெண்பாலராகிய விறலியும் என்னும் நாற்பாலரும் - தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவித்து, அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவை யெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பது.

ஒவ்வொருவரும் இங்ஙனம் தாம் பெற்ற செல்வத்தை இரவலர்க்கு அறிவுறுத்தி வழிப்படுத்துதற்கு உரியராயினும், கூத்தர் முதலியோரே எதிர்வந்த கூத்தர் முதலியோர்க்குத் தாம் பெற்றதைக் கூறி அவரை வழிப்படுத்துவதாகச் செய்யுள் செய்வதே கவிமரபு.  இங்ஙனம் இயற்றப்பெற்றவை- கூத்தராற்றுப்படை பாணராற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை என வழங்கும்.

இந்தப் பொருநராற்றுப்படை, நக்கீரனார் முதலிய கடைச்சங்கப் புலவர்களாலியற்றப்பட்ட பத்துப்பாட்டுக்களுள் இரண்டாவது. பத்துப்பாட்டுக்களான - திருமுருகாற்றுப்படை, 
பொருநராற்றுப் படை, 
சிறுபாணாற்றுப்படை, 
பெரும்பாணாற்றுப்படை, 
முல்லைப்பாட்டு, 
மதுரைக்காஞ்சி, 
நெடுநல்வாடை, 
குறிஞ்சிப்பாட்டு, 
பட்டினப்பாலை, 
மலைபடுகடாம் 
என்பன. 
(இவைகளைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் இன்னாரென விளங்கவில்லை.)  இந்நூல்- 248 - அடிகளையுடைய நேரிசையாசிரியப்பாவாலாகியது: இந்த ஆசிரியப்பா முழுதும் ஓரோசையாக அகவலோசையே கிடப்பின் படிப்போர்க்கு ஊக்கங்குன்றுமென்று 177 - அடிகளுக்குப்பின் படிப்போர்க்கு ஊக்கம்பெருகுமாறு இருசீர்வஞ்சியடிகள் 46 - இடையிடையே வரத் தொடுத்து அகவலோசையன்றி வேற்றோசையாகிய தூங்கலோசை முதலியன விரவிவரப் பாடிய ஆசிரியரின் திறமை மிகவும் பாராட்டுதற்கு உரியது. 

ஆசிரியப்பாவில் வஞ்சியடிவரலா மென்பதை "ஆசிரியநடைத்தேவனஞ்சி'' என்று தொல்காப்பியனார் பெறவைத்தமை காண்க. 186 - ஆவது அடியை "ஈற்றி யாமை தன்பார்ப் போம்பவும் ” என நாற்சீரடியாகப் பிரிக்கவும் இடமுண்டு.  ஈற்றயலடி முச்சீரடியாலமைந்தது, இச்செய்யுள் நேரிசையாசிரியப்பாவாதலாலாகும்.

இஃது பரிசில்பெறக் கருதிய ஒருபொருநனை, பரிசில் பெற்றானொரு பொருநன் இளஞ்சேட்சென்னிபுதல்வனாகிய கரிகாற்பெருவளத்தானிடத்திற் செல்லுமாறு வழிப்படுத்தியதாகக் கற்பித்து முடத்தாமக்கண்ணியார் பாடியது: (தாம் ஒருபொருநனாகவும், மற்றொருபொருநனைத் தமக்குப் பரிசுகொடுத்தவனிடத்தே ஆற்றுப் படுத்துவதாகவும் இவ்வாறு படைத்துக்கொண்டு கூறுதல், கவி மரபு.)
இதனை இயற்றியவர்-முடத்தாமக்கண்ணியார்: "இயற்பெயர் முன்னர்'' என்னுஞ் சூத்திரவுரையில் 'ஆர்' விகுதி பன்மையோடு முடிதற்கு முடத்தாமக்கண்ணியார் வந்தாரென்பது உதாரணமாகக் காட்டப்பெற்றிருத்தலால், இவர்பெயர் 'முடத்தாமக்கண்ணி' என்று தெரிகின்றது. இப்பெயர் உறுப்பால் வந்ததென்றும், இவர் பெண்பாலாரென்றும் கொள்ள இடமுண்டு. இவரைப்பற்றி வேறுவிவரமொன்றும் தெரியவில்லை.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டுக்கும் உரையெழுதியுள்ளார். அவ்வுரை இல்லாவிடின், இக்காலத்தார்க்குப் பத்துப் பாட்டுப்போன்ற பழைய நூல்களுக்குப் பொருள் ஒருசிறிதும் புலப்படாது. ஆயினும், அவ்வுரையை உள்ளபடியே பதிப்பித்தால், அவ்வாசிரியர் சில இடங்களில் இங்கே ஒரு சொல்லையும் எங்கேயோ கிடக்கும் மற்றொரு சொல்லையும் பிணைத்துப் பொருள் கூறும் வழக்கமுடையராதலால் நேராகச் சொல்லக்கூடிய பொருள் தவறுதலாலும், மாணவர்க்குப் பொருள் விளங்குவது அருமையாமாதலாலும் அங்ஙனஞ்செய்யாது, பெரும்பாலும் அவ்வுரையை ஆதாரமாகக்கொண்டு, நேராகவே பொருள் சொல்லுதற்கு உரியனவாத் தோன்றுமிடங்களில் வருந்திப்பொருள் கூறாது நேராகவே அந்வயித்து எளிய நடையில் இவ்வுரை எழுதப்படுகிறது.

கரிகாற்பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தக்கருதும் பொருநன் ஆற்றுப்படுத்துபவனை நோக்கி, 'பரிசில்கொடுப்பாரைத்தேடிச் செல்லும் நீ வேறு வழியிற்போகாது என்னையெதிர்ப்பட்டது, உனது முன்னைய நல்வினைப் பயனே' என்று முதல் 59 - அடிகளில் அன்னான் தன்னை வழியிடைக் கண்டதைப் பாராட்டிக் கூறுகின்றான். முதலில் மூன்று அடிகளால் ஆற்றுப்படுத்துபவன் ஆற்றுப் படுத்தக்கருதும் பொருநனை விளிக்கின்றான்:
1-3: அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
       சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
       வேறுபுல முன்னிய விரகறி பொருந !
(1) அறா அ - இடையறாத, யாணர் - செல்வவருவாயினையுடைய, அகல் தலை - அகன்ற இடத்தையுடைய, பேர் ஊர்-பெரிய ஊர்களிடத்து, 
(2) சாறு கழி வழி நாள் - விழாக்கழிந்த பின்னாளில், சோறு நசை உறாது - (அங்கே பெறுகின்ற) சோற்றை விரும்பு தல் செய்யாமல்,
(3) வேறு புலம் முன்னிய - (விழாக்கொண்டாடும்) வேறோரிடத்தை (அடைய)க் கருதிய, விரகு. அறி-உபாய்த்தை யறிந்த, பொருந-பொருநனே! 

திருவிழா நடந்து முடிந்த ஊரிலே பின்னுஞ்சோறு கிடைக்குமென்றாலும் அங்கே தங்கியிராது புதிதாகத் திருவிழா நடக்கும் வேறூரை நாடிச்செல்பவன் இந்தப் பொருநனென்க.  திருவிழாக் கழிந்தபின்பும் இரண்டொருநாள் அங்கு உணவுகிடைக்குமேனும் உணவு இடுபவர் வெறுக்குமளவும் அங்குத்தங்குவது நன்று அன்று என்றுகருதி, திருவிழாநடக்கின்ற வேற்றுப்புலத்துக்குச் செல்வதனால், பொருநனுக்கு 'விரகறி' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

திருவிழாக்காலங்களில் பலர்க்கும் உணவு இடுதல் முற்காலத்து இயல்பு என்பது, இதனாற் பெறப்படும்.
பொருந-அண்மைவிளி: “அண்மையினியல்பு மீறழிவும் ” என்பது, 4 - ஆவது அடிமுதல் 24 - ஆவது அடிவரை, பொருநனுடன் செல்லும் பாடினி பாலையாழ் வாசித்துக்கொண்டு பாடுவதைக் கூறுகின்றான் : 
அவற்றுள் 19-அடிகளால் அந்தப்பாடினி வைத்துக்கொண்டுள்ள பாலையாழ், பத்தல் முதலிய உறுப்புகளைக் கொண்டிருத்தல் கூறப்படும்.
4:  குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
குளம்பு வழி அன்ன - ( மானின் ) குளம்பு அழுத்திய இடத்தையொத்த, கவடு படு -  இரண்டருகுந் தாழ்ந்து நடு உயர்ந்த, பத்தல் - பத்தலினையும், குளம்பு - விலங்குகளின் அடிப்பாதம். பத்தல் - குடுக்கை போலுள்ளயாழின் ஒருறுப்பு. கவடு - பகுப்பு.
“கொன்றைகருங் காலிகுமிழ் முருக்குத் தணக்கே” என்பதனால், பத்தற்கு - மரம், குமிழும் முருக்கும் தணக்குமாமென்பர். (கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம். கீழ் 13 - ஆம் வரி உரைகாண்க.)

தேமொழி

unread,
Jul 3, 2021, 2:45:15 AM7/3/21
to மின்தமிழ்
64 –  “தென்றலை வருடிய திரு.வி.க!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

கல்லூரியில் திரு.வி.க நூலான "முடியா? காதலா? சீர்திருத்தமா?" என்ற பனுவலை வகுப்பிலும், இல்லத்திலும் நான் பயின்ற போது நூலாசிரியரின் நுண்மான் நுழைபுலம் கண்டு விம்மிதம் அடைந்தேன்.  வின்சர் கோமகனாரைப் பற்றி எழிலோவியமாக காட்சித் தந்தது கவின் நடைப் படைப்பாகும்.  சொல் ஆளுமைத் திறனைக் குறித்து அந்நாளைய கூட்டங்களில் மேற்கோள் வரிகளாகவே சொல்லிப் பழகினேன். அறிமுகவுரை, முடிப்புரை என்றெல்லாம் எழுத மாட்டேன், திரு.வி.க. வின் நடையழகிலேயே தோற்றுவாய், இறுவாய் என்று தான் எழுதி மகிழ்வேன்.  அந்நூலில் எத்தனை மேற்கோள்களை அடுக்கி அடுக்கி அறிவுக்கு விருந்தாக அணி செய்துள்ளார் என்பது பாராட்டத்தக்க பணியாகும்.

கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி,  மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்குதான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி, உள்ளுங்கள் உயர்வடையலாம்.  இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய் என்றெல்லாம் நாடு போற்ற வாழ்ந்து பன்முகத் தமிழ் விளக்காய் திரு.வி.க. இருந்தார்.

திரு.வி.க.விற்கு நடையில் எளிமை, உடையில் எளிமை, வாழ்வில் எளிமை, அரசியலில் வாய்மை, நெஞ்சில் நேர்மை, தொழிலாளர்களை அரவணைக்கும் தாய்மை, அனைத்துச் சமயங்களையும் ஒன்றாகக் காணும் பெருந்தன்மை, பெண்களைத் தாயாக, இறைமையாகப் போற்றிப் பாராட்டிய பண்பு.  இவையெல்லாம் ஒரு வடிவம் பெற்றால் திரு.வி.க.வின் வடிவமாகத் திகழும். ஐந்தடி நான்கு அங்குலம் உயரமும் மெல்லிய உடலோடும் ஒரு கையில் ஆறு விரல்களோடும், காலில் மூன்று விரல்கள் ஒட்டிய நிலையிலும் பிறப்பிலேயே புதுமை வாய்ந்தவராகப் பிறந்தவர் என்பர். உறுதியான மனத்தோடும் வாழ்ந்த திரு.வி.க.வைத்தான் அறிஞர் மு.வ. தனது வழிகாட்டியாகக் கொண்டார்.

அறிஞர் மு.வ. அவர் தோற்றத்தைக் காட்டி எழுதியதை என் கருத்துக் கோவையில் 18.12.1986-இல் குறித்த வரிகள்:-
“வெள்ளாடை சூழ்ந்த மெல்லிய உடலும்,
புலமைப் பொலிவு பெற்ற அழகிய முகமும்,
அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி அவர்; தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் வானம்பாடி;
சமரச வானம் கண்டு களிக்கும் வானம்பாடி;
தமிழகம் தழைக்க உலகம் உய்யப் பொதுமை மழை பொழியுமாறு வாழ்த்துப் பாடும் ‘வானம்பாடி’ எனத் திரு.வி.க.வுடன் மிக அணுக்கமாக நெருங்கிப் பழகிய நிலையில் டாக்டர் மு. வரதராசன், அவரைப் பொதுமை வானம்பாடியாகச் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, திரு.வி.க. போராட்டவாதி; வர்க்க உணர்ச்சி கொண்டவர்; அன்புள்ளத்தில் காந்தியடிகளின் சீடர்; பொருளாதாரத்தில் காரல் மார்க்சின் பக்தர்; இந்தச் சிறப்பு இயல்புகளால்தான் அவர் சென்ற காலம் - நிகழ்காலம் - வருங்காலம் ஆகிய மூன்றுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார். திருக்குறள் தெளிவுரை என நூற்றுக்கணக்கான உரைகள் இன்று பெருகியுள்ளதற்குத் திரு.வி.க. எழுதிய திருக்குறள் விளக்கமே அடிப்படையாகும்.

திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்களை எழுதினார்.  திரு.வி.க. பெரிய ஆலமரம் போன்றவர்.  பெண்ணின் பெருமையில் காதல் மணம், விதவை மணம், கலப்பு மணம் முதலியவற்றை வற்புறுத்தியதோடு இளைஞர்கள் வாழ வேண்டிய நெறிமுறைகளும் அதில் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் விடுதலையும் என்ற நூலில் அரசியல் வளர்ச்சியும், சமுதாய சீர்திருத்தமும், தீண்டாமை ஒழிப்பும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் என்ற நூலில் மனிதன், வாழ்க்கை, காந்தி அடிகள் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் அரிய கருத்துக்கள் இடம் பெற்றன.  நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய மிலாதுநபியில், நபிகள் நாயகம் - திருநாவுக்கரசர் - விருஷப தேவர் ஆகிய மூவரையும்
ஒருங் கிணைத்து இசுலாமியர் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ந்து போற்றும் வகையில் பேசிய பேராற்றல் படைத்த திரு.வி.க.வின் மேடைத்தமிழ் தமிழுக்கு வாய்த்த அணிகலனாகும்.  அரசியலில் தெளிவான தமிழ் நடனமாடியது.

திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கலியாண சுந்தரனார் என்ற பெயர் தான் திரு.வி.க. என நிலைத்தது.  படிப்பாலும், பண்பாலும், உழைப்பாலும், ஒழுக்கத்தாலும், நாட்டுப்பற்று, மொழிப்பற்றாலும், அரசியல் பொதுத் தொண்டினாலும், பொதுமை உணர்வாலும் சிறப்புற்று வாழ்ந்த இவரை இராயப்பேட்டை முனிவர் என்றே அழைத்தனர்.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை பல்கலைக்களஞ்சியமாக எழுதியதோடு அரசியல் தலைவர்கள், கலைவாணர்கள், இலக்கியப் புலவர்கள், பல்வேறு சமயங்களின் தலைவர்கள், சமுதாயத் தொண்டர்கள், மகளிர் என்று 125 சான்றோர் பெருமக்களைப் பற்றி அந்த வரலாற்று நூலில் எழுதியுள்ளார்  ஏறத்தாழ திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காட்டிலும், தமிழகத்தினுடைய வரலாறு என்றே அதைக் குறிப்பிடலாம்.

சான்றாக தமிழ்த்தாத்தா உ.வே.சா வைப் பற்றிய கருத்தைக் காணலாம்.  டாக்டர் சாமிநாத ஐயர் வாழ்க்கை ஓர் இலக்கியம். சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்பும் தமிழ்; வளர்ப்புந் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாந் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ், தமிழ் அவர்.  பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்.

தமிழகத்தில் சங்கங்கள், நிலையங்கள், நிறுவனங்கள், இதழ்கள் முதலிய பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் சில சீர்குலைந்து போனதற்கு 13 காரணங்களைத் திரு.வி.க. சுட்டிக் காட்டியுள்ளார் என்று என் நெருங்கிய உறவினர் அறிஞர் நாகலிங்கம் பட்டியலிட்டுள்ளார்.
1.சங்கங்கங்களை எல்லாம் ஒன்றுபடுத்தி காக்க வல்ல ஒரு தாய்ச்சங்கம் இன்மை
2.பல கலைகளை விடுத்து வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுதல்
3.உள்ளாட்டம் - வெளியாட்டம் - ஆடல் பாடல் - சிலம்பம் - சிற்றுண்டி - முதலியன இன்மை
4.வகுப்புப் பிணக்கு
5.தமிழ் பயின்றவருள் பெரும்பான்மையோர் பிற் போக்கராயிருத்தல்
6.நாட்டுப் பற்றின்மை
7.கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியாமை
8.பொறாமை
9.பிடிவாதம்
10.கால தேச முறைமைக்கேற்பச் செயல்களை மேற்கொள்ளத் தயங்கள்
11.தன்னலம்
12.பொறுமையின்மை
13.ஊக்கமின்மை
இவை இன்றும் பொருத்தமாகின்றன.

அப்பா, ஒன்றைச் சொல்லி சுட்டிக் காட்டுவார். தமிழிலேயே தோய்ந்த தமிழ்த் தென்றல் தான் நடத்திய இதழ்களின் பெயர்கள்: தேசபக்தன், நவசக்தியாகும். அதே வேளையில் தந்தை பெரியார் நடத்திய இதழ்களின் பெயர் விடுதலை, குடியரசு.

------

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை தொடர்ச்சி...


           5-10. விளக்கல் உருவின் விசியுறு பச்சை
           எய்யா விளஞ்சூல் செய்யோ ள்அவ்வயிற்று
           ஐதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
           பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
           பொருநராற்றுப்படையின் படையின் புனைதிறம் காண சில            தொடர்களுக்கு உரையமைந்ததை எண்ணி இன்புறலாம்.

(5) விளக்கு அழல் உருவின் - விளக்கினது எரிகின்ற நிறத்தையுடைய, விசி உறு - விசித்துப்போர்த்தலுற்ற, பச்சை. தோலாகிய,

(6) எய்யா-மிக அறியப்படாத, இள சூல்இளையகருப்பத்தையுடைய, செய்யோள் - சிவந்தநிறத்தையுடை யோளது,அ வயிறு - அழகினையுடைய வயிற்றின்,

(7) ஐது மயிர் ஒழுகிய மெல்லிதாகிய மயிர் ஒழுங்குபடக்கிடந்த, தோற்றம்போல -,

(8)பொல்லம் பொத்திய- கூட்டித்தைத்த, பொதிஉறு - பொதிதல்பொருந்திய, போர்வை - போர்வையினையும்.
இது, பத்தரைப்போர்த்ததோல். ''விளக்கழலஉறுத்தபோலும் விசியுறுபோர்வை" என்ற சிந்தாமணியிலும் வரும். உரு - பத்தரைமூடிய தோலின்தையலுக்குச் செய்யோளின் இளஞ்சூலையுடைய வயிற்று ஐது ஒழுகியமயிரையுவமை கூறினார். செய்யோளென்றது. மயிரொழுங்கு விளங்கித்தோன்று தற்கு. 'எய்யாமையே அறியாமையே'. அளைவாழ் லவன் கண்கண் டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி

(9) அளை வாழ் அலவன் - வளையிலே வாழ்கின்ற நண்டின், கண் கண்டு அன்ன - கண்ணைக் கண்டாலொத்த,

(10) துளை வாய் தூர்ந்த - துளைகளின் வாய் மறைதற்குக் காரணமாகிய, துரப்பு அமை-( தோல்ஞெகிழாமல் ) முடுக்குதலமைந்த, ஆணிஆணியினையும், துளைவாய் தூர்ந்த துரப்பமையாணி என்பதற்கு - பத்தல் இரண்டுஞ்சேர்தற்கு முடுக்கின ஆணியென்றும் கூறுவர். ஆணி அளைவாழலவன் கண்ணைப்போலுமென்பர்.

"திவவுத்திங்கள் கோணிரைத் தனையவாணி" என்ற இடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'கோள் நிரைத்த திங்கள் பத்தரில் தோலைச் சூழ முடுக்கின ஆணிக்கு உவமம். அதுளைவாய் தூர்ந்த துரப்பமையாணி என்றார் பிறரும்' என்று கூறியிருத்தற்கு ஏற்ப, இங்கு உள்ள ஆணியென்பதனை மேலடியோடும் இயைத்து, 'ஆணி, திங்களின் வடிவிற்றாகியிருப்ப' என்று உரைத்தார்.

           11-12. எண்ணாள் திங்கள் வடிவிற்றாகி
           அண்ணா வில்லா வமைவரு வறுவாய்

(11) எண் நாள் திங்கள் வளர்பிறை எட்டாம் நாளில் தோன்றுஞ் நிலவின், வடிவிற்று ஆகி வடிவையுடைய தாய்,

(12), அள் நா இல்லா-உள் நாக்கு இல்லாத, அமைவருபொருந்துதல் வந்த, வறு வாய் வறிய வாயினையும்,

           13.பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்

(13) பாம்பு அணந்து அன்ன - பாம்பு தலையெடுத்தால் போன்ற, ஓங்கு - ஓங்கின, இரு மருப்பின் - கரிய தண்டினையும்,யாழின் நீண்ட தண்டம், பாம்பு தலையெடுத்திருந்தாற்போலு மென்க. தண்டிற்கு மரம், கொன்றையுங் கருங்காலியுமாம்.

           14-15.மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
           கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின்

(14) மாயோள் - கரியநிறத்தையுடையோளுடைய, முன்கை-முன்னங்கையிலேயணிந்த, ஆய் தொடி - அழகிய தொடி யை, கடுக்கும் ஒத்திருப்பதும்,--

(15) கண் கூடு இருக்கை திண் பிணி - ஒன்றோடொன்று நெருங்கின இருப்பையுடைத்தாகிய திண்ணிய பிணிப்பினையும் உடைய, திவவின் - வார்க்கட்டினையும்,யாழின் வார்க்கட்டு, மாயோள் முன்கை ஆய்தொடிகடுக்குமென்க.

'மடந்தைமுன்கைக், குறுந் தொடி யேய்க்கு மெலிந்து வீங்குதிவவு'' என்ற பெரும்பாணாற்றுப் படை, இங்கு ஒப்புநோக்கத்தக்கது. 'தொடித் திரி வன்ன தொண்டு படுதிவவின்' என்றது மலைபடுகடாம்.

           16-18. ஆய்தினை யரிசி யவைய லன்ன
           வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
           கேள்வி போகிய நீள்விசித் தொடையல்

(16) ஆய் தினை அரிசி-ஆராய்ந்தெடுத்த தினையரிசியின், அவையல் அன்ன - குத்தலரிசியையொத்த,

(17) வேய்வை போகிய குற்றம்போகிய, விரல் உளர்-விரலாலசைக்கும், நரம்பின்நரம்பினுடைய,

(18)கேள்வி போகிய- இசைச்சுருதிமுற்றுப்பெற்ற, நீள் விசி - நீண்ட விசித்தலையுடைய, தொடையல் - தொடர்ச்சியினையும்,-தினையின்குத்தலரிசி யாழ்நரம்பிற்கு உவமையாதலை “ஆய் தினையவையலனையவா நரம்பு” என்றும் கூறினார்.

           19-20.மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
           அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி

(19) மணம் கமழ் மாதரை - திருமணம் செய்தமை தோன்றுகின்ற மாதரை, மண்ணி அன்ன. அலங்கரித்தாலொத்த,

(20) அணங்கு மெய் நின்ற-( யாழிற்கு உரிய ) தெய்வம் தன்னிடத்தே நின்ற, அமை வரு-அமைதல் வருகின்ற, காட்சி-அழகினையும், “மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்தி... குற்றம் நீங்கிய யாழ்" என்ற சிலப்பதிகாரம் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

யாழிற்கு உரிய தெய்வம் மாதங்கி எனப்படுவார்.

           21-22. ஆறலை கள்வர் படைவிடல் அருளின்
           மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை

(21) ஆறு அலை கள்வர் -வழியையலைக்கின்ற கள்வர், படைவிட- (தம் கையிற்) படைக்கலங்களை விடும்படி, அருளின்

(22) மாறு. அருளுக்கு மாறாகிய மறத்தினை, தலை பெயர்க்கும் - ( அந்தக்கள்வருடைய ) இடத்தினின்று போக்குகின்ற, மருவு இன்-மருவுதலினிய, பாலை-பாலையாழை.

பாலையாழின் இசையைக் கேட்ட ஆறலை கள்வர் தமது கையிற் படை நெகிழ்ந்து விழத் தமக்கு இயற்கையான மறக்குணத்தினின்று நீங்குவரென, அவ்யாழின் சிறப்பைக் கூறினார்.

           23-24. வாரியும் வடித்து உந்தியு முறழ்த்தும்
           சீருடை நன்மொழி நீரொடு சிதறி

(23) வாரியும் - ( நரம்புகளைக் ) கூடத்தழுவியும், வடித்தும்-உருவியும், உந்தியும் - தெறித்தும், உறழ்ந்தும் - ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும்,

(24) சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி-சீரையுடைத்தாகிய தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி.

யாழ் மீட்டலைக் காட்டும் நுணுக்கம் வியப்பைத் தருகிறது.

பாலையாழை வார்தல் முதலியன செய்து நன்மொழியைப் பரக்கப்பாடினர் . 'வார் தெலென்பது - சுட்டுவிரற் செய்தொழில்: வடித்தல் என்பது சுட்டுவிரலும் - பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.

உந்தலென்றது நரம்புகளைத் தெறித்து வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழி பட்டதுமென்று அறிதல்.

உறழ்தலென்பது - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்' என்று, சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் எழுதினார்.

சீர்' எனவே, பாணியும் தூக்கும் உள்ளனவாம்.

சீர்முதலியன தாளவிசேடங்கள்: 'சீர்-முடியுங்காலத்தைத் தன்னிடத்தேயுடையது; பாணி-எடுக்குங்காலத்தைத் தன்னிடத்தேயுடையது: தூக்கு-நிகழுங் காலத்தைத் தன்னிடத்தேயுடையது' என்று
கலித் தொகையுரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

தேவபாணியென்பது-தேவரைப்பரவுதல்: அது பெருந்தேவபாணி சிறுதேவபாணியென இருவகைப்படுமென்றும், அவை முத்தமிழ்க்கும் பொதுவென்றும், இசைத் தமிழில் வருங்கால் செந்துறை முதலிய இசைப்பாக்கள் பத்தின் பாற்படுமென்றும் கூறுவர்.

பொருநன் செல்லும்போது உடன் செல்லும் பாடினியின் உருவத்தைக் கூந்தல் முதல் அடிவரையில்

           25 - முதல் 47 - வரையிலுமுள்ள இருபத்துமூன்று அடிகளால் புனைந்துள்ளார்.

25. அறல்போற் கூந்தல்
அறல் போல் கூந்தல் - (ஆற்றின்) கருமணல் போன்ற கூந்தலினையும்,-பிறைபோல் திருதுதல் பிறை போல்-பிறைநிலாப்போல், திரு-அழகினையுடைய, நுதல் – நெற்றியினையும்.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு: dr.n...@gmail.com

தேமொழி

unread,
Jul 4, 2021, 4:28:47 AM7/4/21
to மின்தமிழ்
65 –  “இமயப் புலமை மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
=================================================

எந்தையார் பெரிதும் மதித்துப் போற்றிய பெரும் பேராசிரியர் பேரறிஞர் வ.சுப. மாணிக்கம் (17.04.1917 - 25.04.1989) ஆவார்.  சென்னை வரும்போதெல்லாம் அப்பாவைத் தவறாமல் தலைமைச் செயலகத்திலும், அண்ணாநகர் இல்லத்திலும் சந்தித்துப் பேசுவார்.  1986 ஆம் ஆண்டில் ஓடியாடிக் கொண்டிருந்த என்னிடம் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் தமிழிலக்கியம் பயில்கிறாய் நீ  எவ்வளவு பாடல்கள் உனக்கு மனனமாகத் தெரியும் என்றார்.   திகைத்து நின்றேன். நூறு பாடல் தெரியும் என்றேன்;  அதற்கு உடனே என்னப்பா, அருள் ! திருக்குறளே ஆயிரத்துக்கு மேல, கம்பராமாயணமோ பத்தாயிரத்திற்கு மேல்; நீ என்ன நூறு என்று சொல்கிறாய்?  என்றவுடன் அறிவார்ந்த அறிஞரிடம் எப்படி பேசக்கூடாது என்று பின்னர் தெளிந்தேன்.

மூதறிஞரின் வள்ளுவம்,  இரட்டைக்காப்பியங்கள்,  கம்பர்,  காப்பியப் பார்வை, தலைவர்களுக்கு, தமிழ்க்காதல், தொல்காப்பியத்திறம்  தொடர்பான நூல்கள் நெல்லிக்கனி, மாணிக்கக்குறல் எப்போதும் அப்பாவின் மேசையில் முதன்மையாக அணி நிற்கும்.  ஒருநொடியில் மூதறிஞரின் பல நூல்களை எழுதிக் கோடிட்டு அப்பா படிப்பதும் பல கருத்துகளை  மீளவும் அடிக்கோடிட்டிருப்பதும் பல நிலைகளில் கண்டுள்ளேன்.  அவரின் அழகான முத்து முத்தாக  கைப்பட எழுதிய கடிதங்கள் அப்பாவிற்கு வந்தமையையும் கண்டுள்ளேன்.  பிறகு மெதுவாக அவரின் நூல்களைப் புரட்டத் தொடங்கியபோது மூதறிஞரின் செம்மாந்த நடையைக்கண்டு வியந்து மகிழ்ந்தேன்.

மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் நடையைப்பற்றி என் கருத்துக் கோவையில் ( 04.10.1986 ) நான் குறித்த வரிகள்:
“என் எழுத்துகள் கட்டளைச் சொற்களால் கட்டளை நடையால் அமைந்தவை;  சொற் பல்குதல் என்ற மிகைக்கு இடமில்லாதவை;  செறிவு மிகுந்தவை; வேண்டுங்கால் புதிய சொல்லாக்கங்களும், புதிய சொல் வரவுகளும், புதிய தொடராட்சிகளும் உடையவை.  நீண்ட செந்தமிழுக்கு எதனையும் நிறைவாகத் தூய்மையாகச்  சொல்லவல்ல தற்கிழமைத் திறமுண்டு;  மொழித்திறத்தைப் பயன்படுத்தும் பயில்திறம் எழுத்தாண்மையர்க்கு வேண்டும். தூய செந்தமிழால் ஒருவர் எழுதவில்லையெனின், அது தமிழ்க் குறைபாடன்று;  தெளிவும் உறுதியும் பயில்வும் இல்லா எழுதுகையர் குறைபாடு, என்று உணர்வதே மெய்யுணர்வு”
 என்று எழுதிய வரிகள் எந்நாளும் மின்னும் பொன் வரிகளாகும்.

அதே போல மாணவர்களுக்கே உரித்தான ஒரு கேள்வி வரும் அப்படியென்றால் செவ்விய உரைநடை எது என்று கேட்கத் தூண்டும்;  எங்களையெல்லாம் கருத்திற் கொண்டு அதற்கும் விளக்கம் வந்ததைக் கண்டு திகைத்தேன்; அவ்வரிகளையும் என் அந்நாளைய குறிப்பில் எழுதியிருந்தேன்.
“செவ்விய உரைநடைக்குத் தொடர் இரத்தமாகும்;  சொற்கள் எலும்பாகும். நல்ல தமிழ்ச் சொல்லும் பொருந்திய தொடர்பாகும் பெருவரவாக அமைந்தால் தான் வருங்காலத் தமிழ் உரைநடை பின் வாங்காது சீர்மையும், நீர்மையும், நேர்மையும் பொலிந்து வானுயர் தோற்றமாக வளரும் என்ற அவரின் அழுத்தமான கருத்தாக மிளிர்ந்தது."  

அவரின் செந்தமிழ் நடைக்குப் பல சான்றுகள் உள்ளன. என்னைக் கவர்ந்த மற்றொரு சான்று;
"எப்பருவத்தினரும் எந்நிலையினரும் செய்யக்கூடிய பொது நலன்கள் ஏராளமாக உள்ளன.  இவற்றைச் செய்வதற்கு பணம் தேவையில்லை, மனமே தேவை.
 அழைப்புத் தேவையில்லை; உழைப்பே தேவை.  அறிவு கூடத் தேவையில்லை; அன்பு கூடத் தேவை." 
என்ற வரிகளை நான் அரிமாக்குருளையர் கூட்டங்களில் அவ்வப்போது சொல்லிக் காட்டி அறப்பணிகளை செவ்வனே செய்ய ஊக்கமூட்டும் அறவுரை என்றேன்.

அப்பா அடிக்கடி அவரின் வள்ளுவத்தைத் தொடர்ந்து படிப்பார்; திருக்குறள் வினையின் நீங்கி விளங்கிய அறிவன் கண்ட தலை நூல் என்று பேரறிஞர் வ.சுப.மா எழுதுவதைப் படித்துக்காட்டி அந்நூலை நடைமுறைக் கண்ணோடு தான் நாளும் பார்க்க வேண்டும். வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு கூராய வேண்டும்; காலப்போக்கோடு ஒத்திட்டுக் காண வேண்டும் என்ற கருத்தை வழிமொழிவார் அப்பா.

அவ்வண்ணம் 02.02.1993 ஆம் நாளன்று மூதறிஞர் செம்மல் வ சுப மாணிக்கனார் பற்றி அப்பா எழுதிய குறிப்பு வருமாறு :-
“மூதறிஞர் செம்மல் வ சுப மாணிக்கனார் தமிழறிஞர் மூலம் போற்றி வழிபடத் தக்கதோர் பொன் விளக்கு.  நகரத்தார் மட்டுமின்றி நாட்டாரெல்லாம் அறிந்து புகழ்ந்த முழு நிலவு. நன்குளம், தமிழ்க்காதல், சிந்தனை களங்கம், கம்பர் ஆகிய நூல்கள் இவர்தம் ஆராய்ச்சி திறனை தமிழ் உலகிற்கு அறிவித்த அரிய நூல்கள். மரபு வழி சிந்தனை, இலக்கணம், புதுமை கண்டுரைக்கும் புலமை நுட்பம், தமிழ் நெறி பாதுகாப்பு உணர்வு, மொழிப்பற்று எனப்பல செம்மாந்த சிறப்புகளை உடையவர் எங்கள் வ.சுப.மா.. தமிழன்னையின் ஈடு இணை உற்று நேர்காணர் வ சுப அவர்களின் சாயலே எனக்கு தோற்றம்.

பல்லாண்டுகள் பேராசிரியராக பணியாற்றி புலமை மிக்க மாலை பிறக்கடைகளை உருவாக்கிய பீடுசால் பெருந்தகை;  மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தராயமர்ந்து விழுமிய கல்வி பணிபுரிந்த வித்தகர். தமிழ்வழி கல்வி இயக்ககம் கண்டு உடல் சலியாது உரைத்த உறவோர் என பல வகையில் நாம் போற்றத்தக்கவர் மூதறிஞர் செம்மல் மாணிக்கனார்.  நான் நழுவிய போதெல்லாம் என்னை எடுத்தெடுத்த தழுவிய தந்தை. மாணிக்கனாரின்  நினைவைப் போற்றும் வகையான் தமிழ் மொழிக்குத் துறைதோறும் தொண்டு செய்து வாழ்வதே நமக்கு கடனாகும்.

மூதறிஞர் வ.சுப. என்னுடைய பாட்டனார், உரை வேந்தர் ஒளவை துரைசாமி குறித்து எழுதிய பகுதி, பேருரை கண்ட பெருஞ்செல்வர் மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கம்:
“பல்வேறு காலத்தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள்.  தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும், சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித்தமிழ்ப் பண்பு இவர்பால் காணலாகும். எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரை விளக்கம் செய்தவர்.  இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக்குறிப்பும், கல்வெட்டுக்குறிப்பும் மண்டிக்கிடக்கின்றன.

ஐங்குறு நூற்றுச்செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல், விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறனைக் காண்கின்றோம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெளிந்து வரம்பு செய்து கோடல் இவர்தம் உரையொழுங்காகும்.  தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரை கண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஔவை  துரைசாமி ஆவார்.  இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப்பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று.

பரந்த சமயவறிவும், நுண்ணிய சைவ சித்தாந்த தெளிவும் உடையவராதலின் சிவஞான போதத்துக்கும், ஞானாமிர்தத்துக்கும், மணிமேகலையின் சமய காதைகட்கும்  அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும்  பரப்பிய அருமை நோக்கி சித்தாந்த கலாநிதி என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச்செய்தவர். மதுரை குமரனார், சேர மன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஔவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

கடவுட் பற்றும், சைவத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர் முதுமை மறப்பிக்கும் இளையவீறு பெற்று  இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம் தமிழ்ப்பேழைக்குத் தாங்கொணாச் செல்வமாகும்.  நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க்கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஔவை துரைசாமி நெடும் புகழ் என்றும் நிலுவுவதாக!

வளம் படைத்த தமிழ்மொழிக்குச் சொல்லாக்கிகள் மிகத்தேவை.  அவ்வப்போது சொல்லை வடித்துக் கொடுக்காதவன், வடித்துக்கொள்ளாதவன் மொழிக்கடன் ஆற்றாதவன் ஆகின்றான்;  வேற்றுச்சொல் வரவுக்கு இடங்கொடுப்பவன் ஆகின்றான் என்பது வ.சுப.மாவின் உயிர்க் கருத்தாகும்.

1962 ஆம் ஆண்டிலேயே இளைஞியர் என்றும்,  திறனாய்வாளர் என்பதைத் திறனி என்றும்,  புதின ஆசிரியர் என்பதைப் புதினர், கற்புடைய பெண்ணை கற்பி, உறுப்பினரை உறுப்பி என்றும்  வளர்வு, ஆயுரை, இன்பி, வினைச்சி, வேந்தி, அல்லெண்ணம், இலக்கியல், இல்லாட்சி, குழமை, விதிக்காட்டி, வீழ்வுகள், நிறைபாடு, சொல்லாளர், கேள்வியாளர், எழுத்தாளி, எழுத்துழவர், எழுதுகுலத்தோர், இழுக்கும், நாளை நீக்கி, குளிரகம் (Fridge), ஒலிப்பான் (Mike), அடக்கி (Break), முகமா (Powder), செல்லுரிமை (License), பல்லுரசி (Tooth brush), மேலாள் (Manager), சொற்மொழிந்தேன், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், காப்பியர், இலக்கணர், தமிழ்மை, அணிய நாடுகள், அரச மரியாதை என்பதைப் படையணி வணக்கத்தோடு என்றெழுதியதும் நினைக்கத் தக்கது.

சால்பியம், புரட்சியம், பொதுவியம், மக்களியம், ஒப்பியம், தமிழியம், உயிரியம், பண்டிதமணியம், கண்ணதாசம், இளங்கோவம் எண்ணற்ற புதிய சொல்லாக்கங்களை மூதறிஞர் படைத்துள்ளார். இவைபோலும் பல தமிழர்களுக்கு அவர் வழங்கிய  பெருங்கொடையாகும்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் ஆரம் படைத்த தமிழ்நாடு என்ற வாக்கினைப் பின்பற்றி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதிய உரைநடைச் சிலப்பதிகாரத்தை நெஞ்சை வெல்லும் சிலப்பதிகாரம் என்று ஓர் நேர்மை படைத்த தமிழ்நாடு என்ற வ.சு.மா பாராட்டு வரிகள் வரலாற்று வரிகளாகப் பொலிந்தன.

அருந்தமிழின் அழகையும் ஆற்றலையும், வண்ணத்தையும், வனப்பையும் வகை வகையாக வளமார் தமிழ், அருந்தமிழ், பெருந்தமிழ், முறைத்தமிழ், வெண்தமிழ், செந்தமிழ், பெரிய தமிழ், நந்தமிழ், எந்தமிழ், தீந்தமிழ், கோல்தமிழ், தன்னிந் சிறந்த தமிழ், நெடுந்தமிழ், விளிவில் தமிழ், சொற்றமிழ், செய்தமிழ், வளர்தமிழ், செல்தமிழ், தொழுதமிழ், படிதமிழ், உரிமைத் தமிழ் ஐம்பதுக்கு மேற்பட்ட நயமான அடைமொழிகளை நிரல்பட தன்னுடைய மாணிக்கக்குறளில் அடுக்கிப் பேசுவதைக் கேட்பதற்கு ஆணிவேராக இருந்தவர் பேராசிரியர் வ.சுப.மா.

இந்தியத் தமிழன் தன் அன்புத் தலைவர்களுக்கு எழுதிய 25 கடிதங்களின் வடிவமாக தலைவர்களுக்கு என்ற உயர்ந்த நூலைப் படைத்துள்ளார்.  தமிழர்களுக்கு அது பெரும்பேறாகும். இந்நூலை என் நாட்டுத் தொண்டு என்ற ஒரே வரி முகவுரையும் என் கடன் இந்தியப் பணி செய்து கிடப்பதே என்ற முத்தாய்ப்பும் பெருஞ்சான்றாகும்.

துணைவேந்தரின் மூத்த மகனார் பொறிஞர் தொல்காப்பியனும், அமெரிக்க வாழ் திருமகளார்  தென்றலும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.  இது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த பெரும்பேறு. தமிழ்நாடு மின்வாரியம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் முதலிய பயின்ற வழக்குகளுக்கு புதிய இலக்கண நூற்பாக்களை வழங்கிய திறமை மூதறிஞரின் பெருமைக்குக் கட்டளைக் கல்.

தமிழ்நாடு என்னும் தண்ணார் தொகைச்சொல்
பொதுநிலம் குறிக்கும் பொருண்மைத் தாயின்
இருவழி யானும் இரட்டும் ஒற்றே 
அரசினை அதன்மேல் ஆட்சியைக் குறிப்பின்
இரட்டல் வேண்டா இயல்பா கும்மே! 

------
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை தொடர்ச்சி...

26. கொலைவிற் புருவத்து
கொலைவில் - கொலைத்தொழிலையுடைய வில்லைப் போன்ற, புருவத்து. புருவத்தினையும்.
கொழுங்கடை மழைக்கண்
கொழு கடை - அழகிய ஓரத்தினையுடைய, மழைக் கண் - குளிர்ச்சியையுடைய கண்ணினையும்,

27. இலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்
இலவு இதழ் புரையும் - இலவினது இதழையொத் திருக்கின்ற, இன்மொழி துவர் வாய் - இனிய சொல்லையடைய செந்நிறத்தையுடைய வாயினையம்,

28. பலவுறு முத்தின் பழிதீர் வெண்பல்
பல உறு - பலவுஞ்சேர்ந்த, முத்தின் - முத்துக்கள் போல, பழி தீர் - குற்றந் தீர்ந்த, வெள் பல் - வெள்ளிய பல்லினையும்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்

29. மயிர்குறை கருவி மாண் கடை அன்ன-மயிரை வெட்டுகின்ற கத்தரிகையினுடைய மாட்சிமைப்பட்ட குழைச்சை யொத்தனவாகி, 

30. பூங்குழை ஊசல் பொறை சால் - பொலிவினைக்கொண்ட (மகரக்) குழையின் அசைவினைப்பொறுத்த லமைந்த, காதின் - கா துகளையும்,-(எ.று.) கத்தரிகையின்குழைச்சு, காதுக்கு வடிவுவமமாம்.

31. நாணடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்
நாண் அட - நாணம் வருத்து தலால், சாய்ந்த. (பிறரை நோக்காது) கவிழ்ந்த, நலம் கிளர்-நன்மை விளங்குகின்ற, எருத்தின் - கழுத்தினையும், நாணந்தோன்றக் கவிழ்ந்த எருத்துடனிருத் தல், இயல்பு.

32. ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
ஆடு - அசைகின்ற, அமை - மூங்கில்போலும், பணை - பெருத்தலையுடைய, தோள் - தோளினையும்,--அரி மயிர் - மெல்லிய மயிரினையுடைய, முன் கை - முன்னங் கையினையும்,

33. நெடுவரை மிசைஇய காந்தன் மெல்விரல்
நெடு வரை மிசை இய - நெடிய மலையின் உச்சியிடத் துள்ளன வான, காந்தள் - காந்தள் போலும், மெல் விரல் - மெல் லிய விரலினையும்,

34. கிளிவாய் ஓப்பின் வெளிவிடு வள்ளுகிர்
கிளிவாய் ஒப்பின் . கிளியின்வாயோடு ஒத்திருத் தலையுடைய, ஒளி விடு - ஒளிவிடுகின்ற, வள் உகிர் - பெருமையையுடைத்தாகிய உகிரினையும்,

35. அணங்கென உருத்த சுணங்கணி யாகத்து
ஈர்க்கிடை போகா ஏரிள வனமுலை
அணங்கு என உருத்த - (பிறர்க்கு) வருத்த மெனத் தோன்றின, சுணங்கு அணி ஆகத்து - சுணங்கையணிந்த மார்பினிடத்துள்ள, ஈர்க்கு இடை போகா ஏர் இள வனம் முலை - ஈர்க்கும் நடுவேபோகாத எழுச்சியையுடைய இளைய அழ கினையுடைய முலையினையும்,

36.  நீர்ப்பெயர்ச் சுழியி நிறைந்த கொப்பூழ் (இ - ள்.) நீர் பெயர் சுழியின் - நீரினிடத்துப் பெயர் தலை யுடைய சுழிபோல, நிறைந்த - நிரம்பின, கொப்பூழ் - கொப்பூழினையும்,-)

37. உண்டென வுணரா உயவு நடுவின்
உண்டு என உணரா - உள்ளதென்று ( பிறரால் ) உணரப்படாத (மிகவும் நுண்ணிய), உயவும் வருந்துகின்ற, நடு வின் - இடையினையும், மிகவும் நுண்ணி தாயிருத்தலால், பிறவுறுப்பின் சுமையைத் தாங்கமாட்டாது இடை வருந்தும்.

38.  வண்டிருப் பன்ன பல்கா ழல்குல்
வண்டு இருப்பு அன்ன - பலவண்டுகளின் இருப்பை யொத்த, பல் காழ்பலமணிகோத்தவடங்களை யுடைய மேகலையை அணிந்த, அல்குல் - இடைக் கீழமைவு. மேகலை- ஏழுவடங்களை யுடையதென்பர். எண்கோவை மேகலை என்றுரைப்பதும் உண்டு .

39.  இரும்பிடித் தடக்க கயிற் செறிந்து திரள் குறங்கின் இரு பிடி 5 - கையின் - பெரிய பெண்யானையின் பெருமையையுடைய கைபோல, செறிந்து திரள் - (நீள வந்து மெல்லி தாபத தம்மில்) நெருங்கியொன்றித் திரட , குறங்கின் - துடையினையும்,

40-41. பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி

42. பொருந்து- (கணைக்காற்கு இலக்கணமென்பதற்குப்) பொருந்தின, மயிர் ஒழுகியமயிரொழுங்குபட்ட, திருந்து - (ஏனை இலக்கணங்கள்) திருந்தின, தாட்குகணைக்காலுக்கு, ஒப்பபொருந்த, 

43. வருந்து நாய் நாவின்-ஓடியிளைத்த நாயினது நாவினைப் போல, சிறு சிறிய, பெரு தகு-பெருமை தக்கிருக்கின்ற, அடி-அடி யினையுமுடைய, மயிரொழுகிய தாள், திருந்து தாள் . தாளுக்குஒப்பச் சிறு அடி என வந்தது . 
பெரு என்னும் முதனிலை, பெருமையையுணர்த்தியது. 
சிறுமை + அடி = சீறடி: நாயின் நாவைப் போன்ற சீறடி என்ற உவமை நுட்பமான அருமையுடையது.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்
 தொடர்புக்கு: dr.n.arul[at]gmail.com


தேமொழி

unread,
Jul 19, 2021, 9:31:53 PM7/19/21
to மின்தமிழ்
66 –  “கலைவானின் நிலவு - கண்ணதாசன்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
===============================================

சென்னை மாநிலக் கல்லூரியில், இளங்கலை தமிழிலக்கியம் முதலாமாண்டு மாணவரான நான் சேர்ந்த சில திங்களிலேயே நெருக்கமான நண்பராக சிவகுமார் என்னோடு இருந்தார்.  அவர் அப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர் என்பது தான் பலருக்கும் வியப்பு.  அவர் வாயிலாகத்தான் எனக்கு கவியரசர் கண்ணதாசனின் (24.06.1927 – 17.10.1981) திரைக்கதை / திரைப்பாடல் வரிகள், தைப்பாவை, சேரமான் காதலி, வனவாசம், ஆட்டனத்தி ஆதிமந்தி, அதேபோல இளங்கலை வகுப்பில் இயேசு காவியமும் அறிமுகமானது.  சிவகுமார் வாய் திறந்தால் கண்ணதாசன் வரிகளைத் தான் சொல்லி மகிழ்வார்.  சான்றாக மூர் அங்காடி தீக்கிரையான பொழுது (1985) உடனே சிவகுமார் என்னிடம் சொன்ன ‘நாடோடி மன்னன்’ திரை வசன வரிகள்,
“தீயிடுவோம் தீமைக்கு;
கொள்ளையடிப்போம் மக்களின் உள்ளங்களை;
குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை”.

அப்பாவிடம் கவிஞரைக் குறித்து வினவிய போது, அவர் மூலம் நான் அறிந்த செய்திகள் என் விழிகளை வியப்பில் விரியச் செய்தன.  ஒருமுறை புதுவையிலுள்ள மருத்துவமனையில் கவிஞர் இருந்தபோது அப்பா அவரைச் சந்தித்து அண்ணா, “விழிப்பாக உடல்நலனைப் பேண வேண்டும் , நீங்கள் எங்கள் வாழ்வின் வேர் ” என்றபோது  கவிஞர் சொன்ன வரி,
சுட்டபின் நெருப்பென்றும்,
தொட்டப் பின் பாம்பென்றும்
உணர்வதே என் பழக்கம் ஔவை என்றாராம்.

புரட்சித்தலைவர் முதலமைச்சராக இருந்தபோது கவிஞர் கண்ணதாசனை அரசவைக் கவிஞராக நியமித்தாராம்.  அதற்கு அரசாணையாக, அப்பா அந்நாளைய மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக இருந்தபோது தகுதியுரை எழுதித் தருமாறு கூறியவுடன், அப்பா எழுதிய அத்தகுதியுரை தான் கவியரசருக்கு வழங்கப்பட்டது.

தகுதியுரை:
“திரு.கண்ணதாசன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருப்பத்தூர் வட்டத்தில் சிறுகூடற்பட்டி என்னும் சிற்றூரில் 24.6.1927-இல் பிறந்தார்.  இயற்பெயர் முத்தையா. தந்தையார் திரு.சாத்தப்பர். தாயார் திருமதி விசாலாட்சி.

இளமை முதலே தமிழ் இலக்கியங்களை ஆர்வத்தோடு கற்ற புலமை வாய்ந்த திரு.கண்ணதாசன், கவிதை படைப்பததில் பேராற்றல் வாய்ந்தவராய்த் திகழ்ந்தார்.  பழைய மரபைப் போற்றியும், புதிய எழுச்சிக்கு வழி காட்டியும் தமிழ்க் கவிதை உலகிற்கு வளம் ஊட்டினார். புலவர்கள், பொதுமக்கள் என்ற இரு சாராரின் உள்ளங்களையும் தன் கவிதைத் திறனால் கவர்ந்து வருகிறார்.  கவியரசரைப் பின் தொடாதவர் என எவருமே இல்லை. எல்லோருடைய எழுத்திலும் அவர் பொன்முகம் மின்னியது.  கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், தெய்வீகம், வரலாறு ஆகிய துறைகளில் எல்லாம் கவியரசரின் தமிழ் எண்ணங்கள் வண்ணங்களாகி வனப்பூட்டுகின்றன.  உரைநடைக்குக் கவிதையின் ஒளிவீச்சைக் காட்டியும் கவிதைக்கு எளிமையின் இனிமையைக் கூட்டியும் கவியரசர் கண்ணதாசன் தமிழ் இலக்கியத்திற்கு ஏற்றம் தந்திருக்கிறார்.  இவரது தமிழ் இலக்கியத் தொண்டினையும், சிறப்பான கவிதை எழுச்சியையும் பாராட்டித் தமிழக அரசு கவியரசர் கண்ணதாசனை 1-4-1978 முதல் வாழ்நாள் முழுவதும் அரசவைக் கவிஞராக்கிச் சிறப்பிக்கின்றது.”

உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு அப்பா அரசு சார்பாளராக அமெரிக்கா சென்றபோது அங்கு வந்த கவிஞர் கண்ணதாசனுடன் பல மணிநேரம் உரையாடியதும் அங்கேயே கவிஞர் மறைந்ததும் கண்ணீரைக் குளமாக்கும் வரலாறாகும்.

கல்லூரிக் காலங்களில்  இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் கவியரசர் கண்ணதாசனை குறித்து பேசும் உரைவீச்சில் திளைப்பேன்.  அதில் குறிப்பாக,
“அவனை எழுப்பாதீர்,
அப்படியே தூங்கட்டும்,
ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்,
அன்பு குழந்தை அவன்.
அரையாண்டுச் செல்வனவன்.
இந்த வயதினிலே
இப்போதே தூங்குவதே
சுகமான தூக்கம்,
அவன் சுகமாகத் தூங்கட்டும்”
என்று நீண்டு செல்கிற கவிதை வரிகளைச் சொல் மழையாய் இலக்கியச் சுடர் சொல்ல கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன்.  இலக்கியச் சுடர் எங்கே பேசினாலும் கவியரசரின் கவிதை வருவதும், அவை கைதட்டிக் களிப்பதும் வாடிக்கை.  கவிதை வானில் ஒரே நிலவாகச் சுடர் விட்டார்.

தான் இறந்து விட்டதை வாழும்போது எழுதிக் காட்டிய பெருங்கவிஞர் கண்ணதாசன்.   வைகை தொடங்கி வால்கா வரை கண்ணதாசன் கவிதைகள் அங்குமிங்குமாக என் கருத்துக் கருவூலத்தில் கண்ணதாசன் கவிதை  வரிகள்,
“நாமெல்லாம் ஒன்று நம்பெயர் தமிழர்
தேனுலாம் காடு செந்தமிழ் நாடு”

“கொடுமையைக் கண்டு யார் தான் பயப்படமாட்டார்கள்.
உச்சி வெயிலின் கொடுமை
தாங்காமல் மனிதனின்
நிழல்கூட அவன் காலடிக்குள் ஒட்டிக்கொள்கிறது.”

“கூட்டிய வரைக்கும் லாபம் என்றால் குனிவோமா?
குனிந்தவர் நாங்கள் நிமிர்ந்தால் உன்னை விடுவோமா?”

“கடவுளை உலகில் கற்பித்தவன் தான்
முட்டாள் மனிதனடா
கடவுள் பெயரைப் பரப்புகிறவன்
யோக்கியன் இல்லையடா - இது நான்
சொன்னதில்லை - இந்த நாடறிந்த உண்மை!
கல்லாயிருக்கும் கடவுளுக்கேண்டா
பாலால் அபிஷேகம் ?
இல்லாதிருக்கும் பிள்ளைக்கு தந்தா
ஏழையின் பசியாறும்
பக்தி என்பது தனிச் சொத்தாகும்
நமக்கது தேவையில்லை
ஒழுக்கம் என்பது பொதுச்சொத்தாகும்
காப்பது நம் வேலை - இது
நான் சொன்னதில்லை - இந்த
நாடறிந்த உண்மை!” 

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடி விடாது” – (சுமைதாங்கி)

இதே நிலையில்,  இறை உணர்வுக்கு இலக்கணம் வகுத்த,
பூஜ்யத்துக்குள்ளே ஒரு,
ஆறு மனமே ஆறு,
ஏன் பிறந்தாய் மகனே,
சட்டி சுட்டதடா,
போனால் போகட்டும் போடா
போன்ற பாடல்கள் எவர் மனத்தையும் உருக்கும்.

“உனக்கும் எனக்கும் உறவு காட்டி
உலகம் சொன்னது கதையா?” – (இல்லற ஜோதி)
என்ற கவியரசரின் பாடல் வரிகள், எந்தக் குழந்தை மனத்தையும் குமுறிக் குமுறி அழ வைக்கும்.

கவியரசரின் கவிதைகளைப் படித்து முடித்ததும் அறிவினில் வேகமும், ஆழநீர் அசைவதையும், சமதளத்தில் சலசலக்கும் சங்கீதமும், கடலைச் சேரும் கலகலப்பும், கவிதைகளில் காணலாம்.  அவர் காலந்தோறும் கண்சிமிட்டும் கவிதையரசர் என்றால் மிகையாகாது.

இலக்கிய கருத்துக்களாயினும் சரி, அரசியல் கருத்துக்களாயினும் சரி அதில் தனது போர்க்குணத்தை கவிஞர் கண்ணதாசன் வெளிப்படுத்தினார்.  மணிக்கொடி காலம், சரசுவதி காலம் என்று சொல்வதைப்போல தென்றல் இதழில் ஒரு வற்றாத வரலாற்றை உண்டாக்கிப் பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கியது போற்றத் தகுந்ததாகும்.

யார் வெற்றி பெற வேண்டுமென்றாலும் அவர்கள் மீது விமர்சனங்களும், தேவையில்லாத விவாதங்களும் எழுந்தாலும், பொருட்படுத்தாமல் பீடுநடை போட வேண்டும் என்ற கவியரசரின் பிரகடன வரிகள்:-

“போற்றுபவர் போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து செல்வேன்,
ஏற்றதொரு கருத்தை
எனதுள்ளம் எடுத்துரைப்பேன்.
எவர்வரினும் நில்லேன்
அஞ்சேன்!”

22.06.1954-ல் தென்றல் இதழ் பிறந்தபோது,
“தென்றல் உங்களைத் தீண்ட வருகிறது.
ஆம் தென்றல் தான் மனிதனை தீண்டுகிறது.
தீண்டலில் நயம் இருந்தால், நளினம் இருந்தால் 
வாரம் இரண்டனா கொடுங்கள், 
இல்லையேல் வேண்டாம்”
என்று முடிப்பு வரிகள் எவரையும் ஈர்க்கும்.

கம்பர் பாடல்களில் என்னை முதன்முதலாக ஈர்த்தவர் ரசிகமணி டிகேசி. பட்டப்படிப்பில் குகப்படலம் முழுவதையும் பாடம் செய்தேன். ஆனந்த விகடனில் பி.ஸ்ரீ எழுதிய இராமாயண விளக்கமும் அண்ணாவின் கம்பரசம் கம்பர் விழாக்களும் தான் என்று சொன்ன உண்மை வரிகள் கவிஞரின் தெளிவான மனம் புரியும்.

அதேபோல என் மாமா மருத்துவர் திலகம் நலங்கிள்ளி தன் மகன் குமணன் பிறந்தபோது, தாலாட்டுப் பாடலாகக் கண்ணதாசன் அவர்கள் பாடிய வரிகளைப்பாடி தன் பிள்ளையை மகிழ்விப்பதைக் கேட்டு நான் பூரித்தேன்.
“உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்”
(வேட்டைக்காரன்)

கால நதி வெள்ளத்தில் மிகப் பெரிய கவிதை மாமரமாகவும், காலங்களை வென்ற பாட்டுத்தலைவனாகவும் கவியரசர் கண்ணதாசன் திகழ்வது தமிழ் உலகத்தின் பெரும் பேறாகும்.
பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழ் மேதையாகத் தெரிந்தார்.
கவிஞர் கண்ணதாசன் ஊட்டிய தமிழ்ப் போதை எவரையும் மயங்க வைத்தது.
கம்பனுக்கு பிறகு சந்தம் இவரிடம் அடைக்கலமானது.
அள்ளிக் குவிக்க முடியாத அளவுக்குப் பொன்னாகவும் - மணியாகவும் பொலபொலவென உதிர்த்த பேரறிவுப்பெருக்கு என்று கூறிப் பெருமையடையலாம் .
-----

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை தொடர்ச்சி...

யாழின் அமைப்பு வனப்பையும் - பாடினியின் பேரழகையும் கண்டோம் !  இனிப் பரிசில் பெற்றவன் கூறும் செய்தி :-

பொருநனே ! யாழையுடைய கூத்தர்க்குத் தலைவனே ! மற்றவர் புகழை அரசவைகளிற் பரப்ப வல்லவனே! கேட்பாயாக!
யானும் பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவை போலப் பரிசு தருபவர்களை நாடிச் சென்றேன்.  ஒருநாள் கரிகாலன் அரண்மனை வாயிலை அடைந்தேன். அவ்வாயில் அரசனை விரும்பி வந்தவர்களை தடுப்பாரற்றது.  அதனுட் புகுந்தேன். மகிழ்ச்சியால் என் அலுப்புத் தீர்ந்தது.  என் கையிலிருந்த தழும்பு பட்ட உடுக்கையைத் தட்டி பாடத் தொடங்கினேன்.

வெள்ளி முளைத்த நேரம்; நன்றாகப் பொழுது புலரவில்லை.  அரசன் கரிகாலன் புறப்பட்டு வந்து நெடு நாட் பழகிய நண்பனைப்போல என்னிடம் உறவு கொண்டு பரிவுரப் பேசினான்;  தனக்கு அருகிலே என்னை இருத்திக் கொண்டான்;  தன் கண்ணாற் பருகுவதுபோல் என்னைப் பார்த்தான்.  அவனுடைய மொழிகள் யான் இரந்து நிற்கும் தொழிலையே எப்போதும் விரும்பும்படி அவ்வளவு இனிமையாக இருந்தன.  அவனது பார்வை என் என்பையும் மெழுகுபோல் இளகச்செய்து குளிர்ச்சியைப் படர வைத்தது.

என் இடுப்பிலுள்ள கந்தை, வேர்வையாலே நனைந்திருந்தது;  ஈரும் பேனும் கூடியிருந்தன; தையல்கள் பல பொருந்தியது.  அதனை அவன் போக்கினான்; வேறு ஆடை நல்கினான்.  அவ்வாடை, இழை போனவழியை அறிய முடியாதபடி அத்துணை மெல்லியது ;  பூத்தொழில் பொருந்தியது; பாம்புச் சட்டை போன்றது.

"ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதா அர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி.''
(பொருந . 71)

அணியணிந்து பாட்டாலும் கூத்தாலும் அரசனை மகிழ்விக்கும் மகளிர் சிலர் வந்தனர்;  பொற்கிண்ணத்தில் கள்ளை வார்த்து வார்த்துத் தந்தனர்.  யான் வழிநடை வருத்தந்தீர நிறையவுண்டேன்.  பின்னர் மாலைக்காலம் வந்தது.  மன்னன் கோயிலின் ஒருபுறம் தங்கித் துயின்று எழுந்தேன்.  வேந்தனைக் காண்பதற்கு முன்னால் என்பால் இருந்த சொல்ல முடியாத வறுமையையும் இப்போதிருக்கின்ற மகிழ்ச்சியையும் கண்டு, கனவோ என்று மயங்கித் தெளிந்தேன்.

பல நறுமணப் - பொருள்களை மெய் முழுவதும் பூசியிருந்த என்னைக் கண்டோர் இவன் நேற்று வந்தவனல்லன் என்று மருளும் அளவுக்கு என்னை வண்டுகள் சூழ்ந்தன.  என்னுடன் வந்த சுற்றம்: மகிழ்ச்சியுற்றது.  அருகம் புல்லால் திரித்த பழுதையையுண்ட செம் மறிக் கடாவின் வேகவைத்த துடையின் தசையை யாங்கள் தின்றோம்; இருப்புக் கம்பியிற் கோத்து நெருப்பில் வாட்டிய இறைச்சியையும் உண்டோம். இங்ஙனம் வேக வைத்ததும் சுடவைத்ததுமாகிய புலாலைத் தின்று வெறுத்த பின், பலவகையான பணியாரங்களையும் எங்களுக்கு அவன் அளித்தான் .

விறலியர், யாழினது ஒலிக்கும் மத்தளத்தினது ஓசைக்குப் பொருந்தப் பாடி ஆடினர்.  கள்ளுண்டலிலியே பல நாள் போக்கினோம். ஒருநாள் அரசன் சோறு உண்ணவேண்டுமெனக் கேட்டுக்கொண்டான. முல்லை அரும்பு போன்ற முறியாத அரிசியாலமைந்த சோற்றைப் பொரிக்கறியுடன் கழுத்தில் வந்து நிரம்புமாறு உண்டோம்.  இங்ஙனமெல்லாம் இராப்பகலாய்ப் புலால் தின்று எம் பற்கள் புன்செய் நிலத்தையுழுத கலப்பையின் கொழுப் போல முனை மழுங்கிவிட்டன.  இளைப்பாறவும் இடமின்றித் தின்றமையால் உணவில் வெறுப்புண்டாயிற்று.  ஊர் திரும்ப எண்ணினோம்.

ஒருநாள் அரசனை நோக்கிச்  "செல்வ! எம் ஊருக்குச் செல்வேம்''  என்று மெதுவாகத் தெரிவித்தேன். உடனே வளவன் கோபித்தான் போல நாங்கள் வருந்துமாறு பார்த்து, "எம்மை விட்டுப் போகின்றீரோ" என்றான். பின்னர் இணங்கிக் களிறுகளையும் பிடிகளையும் கன்றுகளுடன் தந்தான்;  இன்னும் பல ஊர்திகள், ஆடைகள், அணிகலன்களையும் மேலும் மேலும் அளித்தான்.  யானும் அளவுடன் வேண்டியவற்றை வாரிக்கொண்டேன்;  இனி வறுமை எக்காலமும் இல்லை என்னுமாறு வந்தேன். ஆற்றுப்படுத்தியவன் உரை அப்படியே நிகழ்ந்தது.

நான்கு வெண்புரவிகள் பூட்டிய பெரிய தேரிலே உம்மை யேற்றி ஏழடி பின்னே வந்து வழிவிட்டான்.  இங்ஙனம் பாணர்க்குக் கொடுக்கும் முறையிற் கொடுத்த பின்னர், நல்ல பல ஊர்களையும் யானைகளையும் நீங்கள் பிறர்க்கும் அளித்துச் செல்லுமாறு அளித்து மகிழ்ந்தான்.

வளரும்...

- முனைவர் ஔவை அருள்,

தேமொழி

unread,
Aug 11, 2021, 10:45:46 PM8/11/21
to மின்தமிழ்
67 –  “மராட்டிய மதிவாணர் காண்டேகர் என்ற கதைப்புதையல்”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
===============================================

அப்பாவின் நூலக அடுக்குகளில் உடற்பயிற்சிக்கு நிற்கும் காளையர் போல நூல்கள் அடுக்கடுக்காக அணிவகுத்து இருக்கும். மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலுங்கால் பல நூலாசிரியர்களைப் படிப்படியாக அப்பா அறிமுகம் செய்து படிக்கச் சொன்னார்.  அவ்வண்ணம் சமுதாயத்தில் உள்ள மனிதர்களுக்கு வாழ்வின் இன்ப துன்பங்களைக் கதைப்போக்கில் சுவைக் குன்றாமல் நெஞ்சில் நிறுத்தும் வல்லமை வாய்ந்த மராட்டியக் கதை மன்னர் காண்டேகரின் தமிழாக்கப் புதினங்களைப் படித்துப்பார் அருள் என்றவுடன் படித்தவை, காண்டேகர் (11.01.1898 - 02.09.1976) எழுதி கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழாக்கம் செய்த புதினங்களான  கண்ணீர், அமுதக் கொடி, யயாதி, இரு துருவங்கள், புயலும் படகும், வெண்முகில், கருகிய மொட்டு.  அக்காலங்களில் திலீபன் என்ற விடுதலைப் போராளியின் பெயர் இதழ்களில் வெளிவந்தபோது அப்பா என்னைக் ‘கிரௌஞ்சவதம் படி. அதில் திலீபன் என்ற புரட்சிப் பாத்திரம் வரும்’ என்றதால், அதனை நுணுகிப் படித்து 6.2.1986-ல் என் கருத்துக்கோவையில் குறித்த பகுதிகளில் சில:- 
“குழந்தை  உலகம் எத்தனை அழகியது. அதிலுள்ள கண்ணீர் பனித்துளி போலவும் ஆவல்கள் பல நிறம் பூப்பறவைகள் போலவும் மகிழ்ச்சி பவளமல்லிகை போலவும் இருக்கின்றன.”
“காலம் கடந்து எப்போதும் முன்னால் ஓடுகிறது, ஆனால் மனம் மட்டும் ஏதாவது பழைய பிரியமான இடத்தில் குழம்பி நிற்கிறது.” 
“மனிதரை விலக்குவது எளிது, மனிதருடன்  கூடுவது கடினம்.” 
“சுகத்தை எப்போதும் தனியாக நுகராதே, துயரத்தை எப்போதும் பங்கிடாதே.”  
“கல்லூரிப் பெண்களின் வம்பளப்பு என்பது கால்பந்து விளையாட்டு போல ஓடிப்போய் உதைத்துப் பந்தைத் தொலைவில் உயரப் பறக்க விடுவது போல சொற் சித்திரங்களால் உயர உயரக் களிக்கிறார்கள்.”  
“பக்தி என்பது காதலின் அடுத்தபடி, வாழ்வு என்பது பரந்த கடல், பலவகை விந்தைகள் நிரம்பியது எவ்வளவு அழகோ அவ்வளவு பயங்கரம், ஆனால் அதற்கு இக்கரையும் அக்கரையும் இல்லை.” 
“இந்தக் கடலில் மனிதனுக்கு உணவாக மீன்கள் ஏராளமாக உள்ளன. அதனை உணவாகக் கொள்ளக் கூடிய திமிங்கலங்களும் கொஞ்சம் நஞ்சமாக இல்லை.” 
“அமுதக் கொடியில் வரும் நந்தா தன் இளநெஞ்சப் புயலை நோட்டில் குறித்து வைத்திருப்பேன். அந்த நோட்டுப் புத்தகமே அவளின் உயிர்த் தோழி போலும்.”
“குழந்தையின் பிடிவாதம். பெண்ணின் பிடிவாதம், அரசனுடைய பிடிவாதம் இந்த மூன்று பிடிவாதங்கள் உலகத்திலே பிரசித்தமானவை.  ஆனால் கணவருடைய பிடிவாதம் என்பது இந்த மூன்று பிடிவாதங்களும் சேர்த்துப் பிடித்த உருண்டையாகும்.” 
“இளமை என்பது முன்யோசனை இல்லாமல் நியாயத்தீர்ப்பு பெறுவது மிக ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய நாடகம்.”
“எந்தப் புரட்சியும் கண்ணீரினாலே நடப்பதில்லை, எந்த புரட்சிக்கும் பிடித்தமான நைவேத்தியம் ஒன்றே ஒன்றுதான் அதாவது அன்பர்களின் ரத்தம்.” 
“எலுமிச்சைப்பழ ஊறுகாய் பழகப்பழகப் புளிப்பும் இனிப்பும் கலந்து ருசியாக இருக்கும். வாழ்க்கையின் பழைய ஞாபகங்களும் அதைப்போலவே சுவை நிரம்பியவை.” 
“வாழ்க்கை என்பது பூஞ்சோலை அல்ல அது போர்க்களம்.” 
“மனிதன் மனிதனாகவே பிறந்து விடுவதில்லை. உலகம் அவனை மனிதனாக்குகிறது.” 
“வாழ்க்கை என்பது சாதாரண போர்க்களம் அல்ல.  இந்த போர்க்களத்தில் எதிரிகளோடு மட்டும் போராடினால் போதாது. நண்பர்களுக்கு எதிராகவும் வாளை உருவ வேண்டும். இது மட்டுமல்ல சமயம் வந்தால் நம்மோடு நாமே போராடவும் வேண்டும்.” 
“தென்னை மரத்துக்கும் கிளை இல்லை, பூ இல்லை, அடர்ந்த நிழல் இல்லை, ஒன்றும் இல்லை.  ஆனால் அதன் தலையில் தொங்கும் நீரை உடைத்தால் அமுத வெள்ளம் பெருகும்.”
“அரசியலில் ஒட்டாமல் இருக்கும் மாணவர்கள் மெழுகுப் பொம்மைகள். புத்தகப் படிப்பில் உழலும் கிளிப்பிள்ளைகள்.” 
“வறுமையிலும் மென் முறுவல் மறையக்கூடாது . என்ன துன்பம் நேர்ந்தாலும் இலட்சியத்திலிருந்து வழுவக்கூடாது.” 
“கலை என்பது கடந்த காலத்தின் கன்னிகை, நிகழ்காலத்தின் மனைவி, வருங்காலத்தில் தாய்.” 
“மனிதன் கனவுகளினால் வாழ்கிறான்.  இலட்சியத்தால் வாழ்கிறான். சோற்றைப் போலவே நம்பிக்கையும் அவனுக்கு இன்றியமையாத தேவையாகும்.”
“கம்யூனிசமும் காந்தியியமும் நுட்பமாகப் பார்த்தால் அவை ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பவை. கம்யூனிசம் உலகை ஒரு தகப்பனுடைய கண்ணோடு பார்க்கிறது,  காந்தியியம் தாயின் கண்ணோடு பார்க்கிறது.  கம்யூனிஸம் புது உலகைப் படைக்க விரும்புகிறது.  காந்தியியம் புதிய மனிதர்களைப் படைக்க விரும்புகிறது.” 
“சிதைந்த கனவின் துணுக்குகளைத் தழுவிக்கொண்டு சோர்ந்து கிடப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை.  வெறுமே கடந்த காலம் என்ற இரும்புச் சங்கிலி கொண்டு மனத்தை இறுகக் கட்டி வைக்க முடியாது.” 

சமுதாயத்தில் வாழ்கின்ற மனித இனத்தில் உள்ள இன்ப துன்பங்களை கதைப் போக்கிலே சுவை குன்றாமல் எழுதும் வல்லமை வாய்ந்தவர் மதிவாணர் காண்டேகர்.  அவரின் இலக்கியங்கள் காலத்தால் அழியக் கூடியது அல்ல.  இலட்சியவாதியான சிறந்த எழுத்தாளர்.  தம் இளம் வயதிலேயே இலக்கிய வாயிலாகச் சமூகத்தை உயர்த்த முடியும் என்ற வேட்கையில் மராட்டிய மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர், காண்டேகர் இலக்கியத்தைத் தமிழ்நாட்டில் ஊறவைத்துப் பரப்பிய பெருமை அல்லயன்சு நிறுவனத்திற்கும், கலைமகள் இதழுக்கும் மட்டுமே உண்டு.  காண்டேகரின் மணிமொழிகளை அப்பாவும் அவரின் நண்பர்களும் மனப்பாடமாகச் சொல்வார்கள் என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு.  காண்டேகரின் கதைகள் துன்புற்ற மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒப்பற்ற துணிவைத் தந்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற ஊக்கமளித்தது. கோலாப்பூரிலுள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் காண்டேகரின் அருங்காட்சியகம் உள்ளது.  அவருடைய நூல்கள், விருதுகள், ஒளிப்படங்கள் அங்கு அணிசெய்வது பெருமிதமாக உள்ளது. 

தமிழ்நாட்டின் காண்டேகர் என்று பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட கா. ஸ்ரீ. ஸ்ரீநிவாசாரியர் (15.12.1913 - 28.07.1999)  தமிழ், வடமொழி, இந்தி, மராட்டியம், ஆங்கிலம் அறிந்த வல்வவர்.  இந்தி பிரச்சார சபையிலும், கலைமகள் இதழிலும் பணியாற்றிய பெருந்தகையாவார்.  மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  தன்னுடைய 24வது வயதில் இந்தி இதழான ‘அம்சு’ல் காண்டேகர் சிறுகதைகளைப் படித்துத் தமிழில் மொழியாக்கம் செய்ய ஆர்வப்பட்டதால் தினமணி மலரில் சகோரமும் சாதகமும் என்ற காண்டேகரின் கதையின் மொழியாக்கம் வெளிவந்தது. பிறகு அவரின் கதைகளை வெளியிட்டு வந்தாலும் பேரறிஞர் அண்ணா தான் நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் காண்டேகரின் நூல்களைப் பற்றி கருத்தோவியம் வரைந்த பிறகு அரசியல் தொண்டர்களிடையே காண்டேகர் கதைகள் செல்வாக்குப் பெற்றன. காண்டேகர் ஞானபீட விருது பெற்ற போது, விருதுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னது மொழிபெயர்ப்பு உலகிற்குப் பெரும் பேறாகும்.

“வருங்காலம் என்ற கருடச் சிறகும் மனத்துக்குப் பெரு வரமாகும்.”
“மனோரஞ்சிதம் தாமரைக்குளத்தில் மிக மெல்லிய இதழ்களைக் கொண்டது போன்ற எளிய நடை.”
 அண்ணல் காந்தியடிகளுக்குத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தியில் மொழிபெயர்த்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.ஐச் சாரும். மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை, மின்சார இரயில் வண்டியை இழுத்துச் செல்வது போல மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்பது கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மேற்கோளாகும்.  கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்ப்புகளால் எனக்குத் தற்கால இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னது மொழிபெயர்ப்பு உலகிற்கு வாய்த்த வைர மகுடமாகும்.

காண்டேகரும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் ஒருவரையொருவர் கண்டதில்லை என்பார்கள்.  கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு நம் நினைவுக்கு வருகிறது.  ஒருவர் எழுத்தே திருமுகம் என்றே குறிப்பிடலாம். மராத்தியத்தை விடத் தமிழகத்தில் என் பெயர் செல்வாக்குப் பெற்றது என்று காண்டேகர் பெருமிதமாகக் கூறினாராம். 

“கண்களை விளக்காக்குகிறாள். கைகளைக் கட்டிலாக்கினாள். தன் இரத்தத்தைப் பாடலாக்கினாள். இவளை வெறும் தாய் என்ற சொல்லால் அடக்க முடியவில்லை” என்ற மராட்டிய மதிவாணர் காண்டேகரின் கதைப் புதையல் வரிகள் கல்வெட்டுத் தொடர்களாக எந்நாளும் மின்னுகின்றன. தொடருக்குத் தொடர் இயல்பான உவமைகளை எளிமைக்கு எளிமையாக எழுதிக் காட்டிய கலை வித்தகம் காண்டேகருக்குக் கைவந்த கலையாகும். அக்கதையின் உள்ளுணர்வுகளை தன் நெஞ்சில் கலந்து பொருத்தமான வைர வரிகளோடு மொழிபெயர்த்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மட்டுமே சாரும். 

-----

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை தொடர்ச்சி...

கரிகால் வளவன் கரிகாலன் சோழ நாட்டு முடி மன்னன்;  இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; செங்கோலன்; தண்ணளியன்; பகைவரிடத்து முருகனது சீற்றம் போலும் சீற்றமுடையவன். இவன் பிறக்க வேண்டிய காலத்தே பிறவாமல் நல்ல பொழுது வருமளவும் தாயின் வயிற்றிலேயேயிருந்து பின்னர்ப் பிறந்து அதனாலே அரசவுரிமையடைந்தவனென்பர்.
“உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்
 முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்
 தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி.'
இவன் இளமைப்பருவத்திலேயே கூற்றுவன் போல வலிமையிற் சிறந்து விளங்கினான்.  பால் குடிக்கும் பருவத்திலேயே, இரை வேட்டைக்குச் சென்ற சிங்கக்குட்டி போல வெண்ணில் என்ற இடத்தில் சேர பாண்டியராகிய இரு பெரு வேந்தரையும் ஒரு களத்தே பொருது வீழ்த்தினான்.

ஒருசமயம் தம்முள் மாறுபட்ட இருவர், தமக்கு முறை வேண்டி இவ்வரசர் பெருமானது அவையிற் புகுந்தனர்; இவனது இளமை கண்டு, தம் மாறுபாட்டைத் தீர்க்க இவ்விளை யோன் வல்லவனோவென ஐயுற்றனர். கரிகாலன் அவரது ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்து நரை முடித்து முதுமைக் கோலத்துடன் தோன்றி முறை வழங்கினான்.

"முதியோர் அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்'' 
என்ற தொடரால் கூறப்படுகின்றது. இவ்வரலாற்றை,
“உரை முடிவு காணான் இளமையோன் என்ற 
நரைமுது மக்கள் உவப்ப-நரை முடித்துச் 
சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமற் பாகம் படும்.” என்னும் பழமொழிப் பாடல் தெரிவிக்கின்றது.

அவன் ஆண்ட சோழ நாடு  நிறைந்த வளமுடையது.  ஒரு மாநிலத்திற்கு ஒன்றாக மேடுகளெங்கும் நெற்கூடுகள் திகழ்வதை ஆங்குக் காணலாம்.  உழவர்கள் தென்னைமரச் சோலையில் குடியிருப்பர். உழத்தியர் கடற்கரை மணலில் வண்டல் (மணல் விளையாட்டு) விளையாடுவர். மருதநிலக் காக்கைகள் குருதி பெய்த சோற்றைக் குறைவிலாது உண்டு, பசித்தபோது தின்பதற்கென நொச்சியின் நிழலில் நெய்தல் நில ஆமைக்குட்டிகளை மறைத்து வைக்கும்.

பாகற் பழமும் பலாமரச் சுளையும் தின்ற மயிற்பெடைகள் காஞ்சி மரத்திலும் மருத மரத்திலும் இருந்து ஆரவாரிக்கும். ஆண்மயில்கள் வண்டுகளின் ஓசை கேட்டு மருதநிலத்தை விட்டு நெய்தல் நிலத்து உலர்  மணலிலே சென்று தோகை விரித்து ஆடும்.  மருதமும் அடும்பும் பகன்றையும் புன்கும் ஞாழலும் ஏனைய மரங்களும் திரண்டு வளர்ந்திருக்கும்.

அவ்விடத்து வாழ்வார் கரும்பையும் நெல்லையும் அறுக்கின்ற களமருடைய  ஓசையை வெறுத்ததால் முல்லை நிலத்தே சென்று விரும்பியுறைவர்.  முல்லை நிலத்தே தளவும் தோன்றிய யாழினையும் கொன்றையும் காயாவும் செழித்து மலர்ந்திருக்கின்றன. அங்கு வசிப்பவர் அவ்விடத்தை வெறுப்பின் மருத நிலத்தே சென்று அதனைப் புகழ்ந்து அங்கே தங்குவர்.

நெய்தல் நிலத்தே கடல் மீனைத் தின்று, புன்னைக் கிளையில் தங்கிய நாரைகள் அலையோசையை வெறுத்து மலையில் சென்று தங்கும். நெய்தல் நில ஊர்களான பாக்கங்களில் தெங்கும் வாழையும் காந்தளும் சுர புன்னையும் பேராந்தைகளும் உள்ளன.  அங்கு வாழும் பரதவர் அவ் வாழ்வை வெறுத்துக் குறிஞ்சி நிலத்தே சென்று தங்குவர். 

கானவர் மருதம் பாடுவர். பரதவர் குறிஞ்சி பாடுவர்.  தேனும் கிழங்கும் விற்பவர் மீனின் நெய்யும் கள்ளும் பண்டமாற்றாகப் பெறுவர். கரும்பும் அவலும் கொடுத்தவர் மான்தசையும் கள்ளும் கொண்டு போவர்.  குறிஞ்சிக் குறவர் நெய்தற் பூக்களைச் சூடுவர்.  காட்டுக் கோழிகள் நெல்லைக் கவர்ந்து தின்னும். 
மருதக் கோழிகள் தினைக்கதிரைக் கவரும். மலைக்குரங்கு கழியிலே மூழ்கும். இவ்வகையில் நால்வகை நிலங்களும் அடுத்தடுத்து அச்சோழ வள நாட்டிலே நெருங்கி வளப்பமாயிருக்கின்றன.

பகலவன் வெம்மையால் கஞ்சங்குல்லை தீய்ந்தன; மரக்கிளைகள் கரிந்தன; மலையிடத்து அருவிகள் இல்லையாயின;  மேகம் கடல் நீரை முகந்து பெய்யவில்லை; இங்ஙனம் வறண்ட காலத்தும் காவிரியாறு  பெருக்கெடுத்து வருகின்றது; நறைக்கொடி, நரந்தப்புல், அகில், சந்தனம் இவற்றைத் துறைகள் தோறும் தள்ளிக் கொண்டு செல்கின்றது; நுரையைச் சுமந்து போகின்றது, ஆரவாரத்துடன் குளத்திலும் கோட்டத்திலும் கமழ்கின்றது.  பெண்கள் அவ்விடங்களில் குடைந்து குடைந்து விளையாடுகின்றனர். அக் காவிரி தனது நீரைப் பாய்ச்சுவதால் ஒருவேலி நிலத்தில் ஆயிரங்கலமாகச் பெருகி விளைகின்றது.  இது காவிரியின் சிறப்பாகும்.

உன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண் மாற
சொல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவும் மற்றக்
கருவி வானம் கடற்கோள் மறப்பவும் 
பெருவ ற னாகிய பண்பில் காலையும்
நரையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறை துறை தோறும் பொறையு திர்த் தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுந்தொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்

காவிரி புரக்கும் நாடுகிழ வோனே.''
வளரும்...
- முனைவர் ஔவை அருள்,
 தொடர்புக்கு: dr.n.arul[at]gmail.com
----
Reply all
Reply to author
Forward
0 new messages