1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது
மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி
அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).
2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)
3)விசும்பு வழங்கும் மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.
எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.
4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)
5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)
6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).
7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)
8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)
9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.
ராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம். உலகமே அயோத்தி மாநகரை நோக்கி வெள்ளம்
போல நகர்ந்து செல்கிறது. ரகு வம்ச குல குருவான வசிட்ட மாமுனிவன் 2000
பிராமணர்கள் புடை சூழ முத்துப் பல்லக்கில் பிரம்மா போல அயோத்தி நோக்கி பவனி
போகிறார். அதை வருணிக்கும் கம்பன்:—
10)கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் முத்துச்
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்னச் சென்றான் (801)
சீதையை அருந்ததிக்கு ஒப்பிடும் கம்ப ராமாயண வரிகள்:—
11)கன்னி அருந்ததி காரியை காணா
நல்மகனுக்கு இவள் நல்லணி என்றார் (1254)
12) அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே! (2006)
சீதையை ராமன் அருந்ததி என்று போற்றியது தெரிகிறது.
13) அருந்ததி ! உரைத்தி – அழகற்கு அருகு சென்று உன்
மருந்தனைய தேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில்……. (5350)
என்று அனுமன் பகர்வான். இது போல இன்னும் பல குறிப்புகள் உள (அகம் 16, பரிபாடல்-20—68; பதிற்றுப்பத்து 89- 17/19)
On Thursday, October 12, 2017 at 12:14:01 PM UTC-7, பழமைபேசி wrote:1.விளார் எடுத்து விளாசு விளாசிட்டான்.2.கொப்பெடுத்து சாத்துசாத்துன்னு சாத்திட்டான்.3.சில்லுல நெமைக்குறதுக்குள்ள குத்திட்டான்.
4.கம்பெடுத்து ஓச்சிட்டான்.
5.கல்லெடுத்து ஒரே வீக்கு வீக்கிட்டான்.இப்படி இனியும் என்னவெல்லாமோ தனிச்சொற்கள், நுண்மைக்கான சொற்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, விழுமியம், இடம் பொருள் ஏவல் மதிப்பீடு கொண்டு சொற்களை அடையாளப்படுத்துதல் பயனைக் கொடுக்கும். surgical strike என்பது, விரைவையும், இலக்கினைச்த் சரியாக இனம்கண்டு தனிமைப்படுத்தித் தாக்குவதையுமே குறிக்கிறது. கல்லெடுத்து வீசினான் மண்டை உடைந்து விட்டது என்பதற்கும், கல்லெடுத்து வீக்கினான் பல்லுடைந்து விட்டது என்பதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. இரண்டுக்குமே உள்ள ஒற்றுமை தாக்குதல் என்பதுதான். ஆனால், வீசியதென்பது தோராயமான தாக்குதல். வீக்கினானென்பது, விரைவும் இலக்கும் ஒருசேரப் பொருந்தி வருவது. இப்படிச் சரியானதொரு சொல், தமிழில் இருக்கும். அறிஞர்கள்தாம் துழாவிப் பார்த்துச் சொல்ல வேண்டும். அல்லாவிடில், தமிங்கலமே மேலெனப் போய்விடுவான் எழுத்தாளன். இஃகிஃகி!!
அன்புள்ள திரு.கணேசன் அவர்களேசிமய என்ற தமிழ்ச்சொல்லே இமய ஆனது என்ற தங்கள் ஆராய்ச்சிபோற்றற்குரியது.இன்னொரு இலக்கணம் மூலம் இமை என்பதும்மலையைக்குறிக்கும்.இங்கே இமைய மலை ஒரு பொருட்பன்மொழி.இரண்டு சொல்லும் "மலை"யை குறிக்கிறது.மலை என்றால் மலைத்தல் அல்லது வியத்தல் என்ற வினைச்சொல்லின் அடியாக ஒரு மலை எனும் வினைச்சொல் ஆகுபெயர் தான் மலை ஆயிற்று.அதே இலக்கணப்படி மலை எனும் அந்த உயரமான இடப்பகுதியைக்கண்டு வைத்தகண் வாங்காமல்"இமை"த்தல் எனும் வினைச்சொல் ஆகுபெயர் தான் இங்கு "இமை(ய)மலை" ஆயிற்று.எனவே "இமை" என்பதும் மலையைக்குறிக்கும்எனவே வடக்கின் "இமை மலை"தான் இமையமலை ஆகும்.அன்புடன் ருத்ரா
1. அருந்ததியென்பது, அருந்துதியென்றும் தமிழில் வழங்குமென்பதை, செம்மீனென்பதற்கு அருந்துதியென்று (பதிற். 31.) உரை எழுதப் பெற்றிருத்தலாலும் ‘‘சூளையருந்துதி......யென்றெண்ணி’’ (கம்பரந். 34.) ‘‘கற்பினல, மருந்துதியானம் புவிக்களித்தார்’’ (திருமுல்லை. 85.) எனச் சிவஞானமுனிவரும், ‘‘அருந்துதிக்குக் கற்பணியா ரருந்துதிக்குக் கற்பணியார்’’ (திருவானைக்கா. கோச்செங்கணார் 6.) எனக் கச்சியப்பமுனிவரும் மாற்றவொண்ணாதபடி அமைத்திருத்தலாலும் அறிக.
2. கற்புடைமகளிரை எல்லாருந்தொழுதேத்தல்: (அ) ‘‘உரைசால் பத்தினிக்குயர்ந்தோ ரேத்தலும்’’ - புகழமைந்த கற்புடைமகளை மக்களேயன்றித் தேவரு முனிவரு முதலாயுள்ளோர் சென்றேத்துதல் இயல்பாகலும்’ சிலப். பதிகம். 56. அடியார். (ஆ) ‘‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத், தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்’’ சில. 23. இறுதிவெண்பா. (இ) ‘‘நாடு மூரு நனிபுகழ்ந் தேத்தலும், .....பாடு சான் மிகு பத்தினிக் காவதே’’ வளையாபதி. (ஈ) ‘‘படியேழுந் தலைமேற் கொண்ட கற்பினாள்’’ கம்ப. கடல்காண். 7. (உ) ‘‘தொழுதகு கற்பினாளை’’ நைடத. மணம்புரி 60. என்பவை முதலியவற்றால் அறியலாகும். (ஊ) ‘‘அருந்ததியும் வந்தனைசெ யஞ்சொலிள வஞ்சி’’ என்பதும் ஈண்டறிதற்பாலது.
3. கற்பியல் முதற் சூத்திரத்து, ‘கற்பியல் - கற்பினது இயலெனவிரிக்க. இயல், இலக்கணம்.......அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுக வெனவும் இருமுதுகுரவர் கற்பித்தலானும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலை மகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று’ என எழுதிய பகுதி ஈண்டறிதற்பாலது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeNbxb4Dy4Y63vvrFuVi_hbNp6AsEv7-X0Ln9Dj-TCE%3Dg%40mail.gmail.com.
நிமை என்ற சொல் பயிலும் வேறு இடம் உண்டா?
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே 15 நீர் இதழ் புலரா கண் நிமை கூம்ப இயைபவால் நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே என ஆங்குஏனெனில், நிமைக்கிறது இன்றும் தமிழில் வழங்கும் சொல், காலமெல்லாம்
இந்தப்பாடலில் இமை எனில் ஒளிரும் என்ற பொருள்தானே!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hm9yGW3TTru7-83-nw06a309ScarAcCbu3aQbaeMF1Sw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfgXH4AsxoH6bHD6a%2Bt8YgsF7qA4Ti%3Dd5jvtjO_PN1nqw%40mail.gmail.com.
னி = ன் + நி; என்று அமைந்திருக்கும் பாடலடி ஒன்று...எந்த இலக்கியம் என்று நினைவில் இல்லை. ஏதோ ஒரு இலக்கண நூற்பாவிற்கு சான்றுப்பாவாக இருந்திருக்க வேண்டும்; புறப்பொருள் வெண்பாமாலை...?"என்னை முன்னின்று கன்னின்றவர்" =என் ஐ முன் நின்று கல் நின்றவர்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/436fc937-fba6-452d-ad64-3d440b440b2an%40googlegroups.com.
நன்றி.சக
இந்தப்பாடலில் இமை எனில் ஒளிரும் என்ற பொருள்தானே!
பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே,
On Monday, November 16, 2020 at 8:45:09 AM UTC-6 kanmani...@gmail.com wrote:நன்றி.சகன் எழுத்து இரட்டித்தும், இரட்டிக்காமலும் சந்தி ஏற்படுகிறது.செம்மீன் நிமைக்கும் = செம்மீனிமைக்கும்உறின் நட்டு = உறினட்டுகற்பின் நறுநுதல் = கற்பினறுநுதல்...கல் நின்றவர் = கன்னின்றவர்கண் நிமை(இமை) = கண்ணிமை....யால் (விழுது போன்ற துதிக்கை) + நை விகுதி ==> யானை,பூல் (பூரி-த்தல், உடலை வளைத்தல்) + நை விகுதி ==> பூனை... (இவற்றில் இரட்டிப்பு இல்லை).
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6i9_%3D329W9%2BEv4G_Y0QJt-3LO4r1uAAJ5OJT%3DORF27kLw%40mail.gmail.com.
///நிமை என்ற சொல் வேறு எங்கேனும் தென்படுகிரஹடா?/// 4மணி நேரத்திற்கு முன்னர் வேந்தர் ஐயா எழுதியது.தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு நூற்பா 7"கண்ணிமை நொடி அவ்வே மாத்திரை" (நான் பாடம் படித்த காலத்தில் இப்படித்தான் பாடப்புத்தகத்தில் பார்த்த நினைவு.)இந்த நூற்பா தவறாக'கண் இமை நொடி' என்று பிரிக்கப்பட்டுப் பொருள் சொல்லப்படுவதாக எண்ணுகிறேன் ஐயா.
நிமைப்பொழுது, ஒரு கண்ணிமை; a twinkling of the eye, a moment.
நிமை மூட, to close or shut the eye.
நிமைக்கிறதற்குள்ளே வருகிறேன், I shall come in a moment.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvcxrayRkR6ftwqzymKWPnfgF0KXkwySZHMN1%3DbFvDPBQ%40mail.gmail.com.
பிராமணர் தென்னாட்டுத் தமிழநாகரிகச் சிறப்பைப்பற்றிக் கேள்விப்பட்டு,இங்கும் தம் மேம்பாட்டை நிறுவுமாறு, நைமிசஅடவியில் அடிக்கடி மாநாடு கூடிச் சூழ்ந்ததாகத்தெரிகின்றது.
ஒரு நிமை (நொடி) நேரத்தில் ஒருபெரும்படை கொல்லப்பட்ட இடம், நைமிசம் என்றுபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.இமை-நிமை - வ. நிமி - நிமிஷ - நைமிஷ - நைமிச.
நைமிசாடவி மாநாட்டுத்தீர்மானத்தின்படி, அகத்தியர் தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். அவர் காசியினின்றுவிந்தமலை யடைந்து அங்கிருந்து தண்டக அடவி வந்துதங்கி, அதன்பின் காஞ்சி யடைந்து, பின் காவிரிதோன்றும் சையம் என்னும் குடகுமலை சென்று, குடமலைவழியாகப் பொதியமலை போய்ச் சேர்ந்ததாகக்காஞ்சிப் புராணங் கூறுகின்றது.
விந்தமலை கடக்க முடியாத தென்றுஆரியர் நெடுநாளாகக் கருதிக்கொண்டிருந்ததனால்,அகத்தியர் அதைக் கடந்து வந்தபோது அதன்செருக்கை யடக்கினதாகக் கூறினர்.
"யோகமுறு பேருயிர்கள் தாமுலைவு றாமல் | (ஆரணி. அகத்.39) |
என்பது கம்பராமாயணம்.
நிமை-நிமி
இமை = இமைத்தல், கண்ணிமை.
ம. இம, க., து. இமெ.
இமை-நிமை = இமைத்தல், கண்ணிமை. க. எவே.
"நீலிக்குக் கண்ணீர் நிமையிலே" (பழமொழி).
வடவர்
நிமி என்னும் சொல்லை இக்குவாவின் மகன் (நிமி)
பெயரொடு தொடர்புபடுத்தி, அவன் வசிட்டர் சாவிப்பினால் தன்
உடம்பை யிழந்து எல்லா வுயிரிகளின் கண்களையும் இடமாகக்
கொண்டானென்று, ஒரு கதை கட்டுவர் (விஷ்ணு புராணம், 4: 5).
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUde_m3HWRfSiBUprYf9W6xHRmXqMwC7_4cPH5KApubiZw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6htrXESU7ZMJFdqnuiX9GbMOMOG5tLtX6ucxc64VQWO7A%40mail.gmail.com.
மருத்துவன் தாமோதரனார் என்பது புலவரின் பெயர்.அவர் பாணருள் ஒரு பிரிவினர்; அதாவது திணைமாந்தர் என்கிறீர்கள்.