Re: [MinTamil] surgical strike

14 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 12, 2017, 9:23:04 PM10/12/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Thu, Oct 12, 2017 at 5:14 PM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது பக்கவிளைவுகள் இல்லாமல் இலக்கைமட்டும் தாக்குவது. 

கற்காலத்தில் இதுபோன்ற தாக்குதலைச் செய்து காட்டுப்பன்றிகளை வீழ்த்தினர்.
hog (or, boar) hunting with spear என யுட்யூபில் பார்க்கலாம்:

இதனை, கொங்குநாட்டில் சையமலையோர கிராமங்களில் சில கோவில்களில்
திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். சலாகைக்குத்து என்பர். சலாகை - கூர்மையான ஆயுதம்.

ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் = சலாகைக்குத்து, சலாகைத்தாக்கு
- பழைய சொல் மறையாமல் இருக்க உதவும்.

---------------------
  • சலாகைக் குறியீடுகள் Bar Codes


சத்திர சிகிச்சை : அறுவைச் சிகிச்சை.
ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் = சத்திரத்தாக்கு 
- இதுவுமுண்டு.

நா. கணேசன்
 

2017-10-12 12:13 GMT-07:00 PazamaiPesi <pazam...@gmail.com>:
அமெரிக்காவில் இருக்கும் ஆசுடின் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த, பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கருத்தரங்கத்தில் எழுத்தாளர் பெருமாள்முருகன் உரையானது எமது சிந்தனையை இன்னும் வலுவாக்கிவிட்டது. பொதுவாகவே சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பது என்பது இணையத்தில் வெகுவாக நடக்கும் ஒன்றுதான். அத்தகைய போக்கே,, இலக்கிய நூல்களிலும் இடம் பிடிக்கிறது என்பதை அறிய வரும்போது வருத்தமாக இருக்கிறது. சொல்லுக்குப் பின்னால் இருக்கும் பண்பாட்டு விழுமியம், ’இடம், பொருள், ஏவல்’ கருதிவரும் உறுபொருள் முதலானவற்றை இழக்க நேரிடுகிறது. தமிழ்சார்ந்த பன்னாட்டு அரசாங்கங்கள் இணைந்து ஒரு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களிடையே வாசிப்புப்பழக்கம் பெருக வேண்டும். வணிகம், தன்விளம்பரம் முதலானவற்றை ஒதுக்கிவிட்டு, சொல்லாக்க முனைப்புகளுக்கு உரிய புரவுதொகையைப் புரவலர்கள் அளிக்க முன்வர வேண்டும்.

”surgical strike, துல்லிய தாக்குதல்” என இணையத்தில் பார்க்க நேரிடுகிறது. தூய தமிழில் எழுத வேண்டுமென்கிற நாட்டம், உவப்புக்குரியவொன்றுதான். ஆனால், முனைந்த செயல் வெற்றி பெற்றிருக்கிறதாயென்றால், இல்லையென்றே சொல்ல வேண்டும். accurate attack, pricison attack என்றெல்லாம் சொல்ல நேரிடும்போதும் நாம் ’துல்லிய தாக்குதல்’ என்றே சொல்ல நேரிடும்.

அதிரடி, சொல்லின் ஓசையிலேயே நாம் அதிர்வினைக் காணமுடிகிறது. அதற்குக்காரணம், ’அதிர்’ எனும் சொல்லின் வெற்றிதான். அதுபோல, நாங்கள் கிராமத்து இட்டேரிகளில் பள்ளிக்குச் செல்லும் போது சக மாணவனோடு/மாணவர்களோடு சண்டையிட்டுக் கொள்வது, கொழுவிக்கொள்வது வழமைதான். அப்படியான கொழுவலின் போது இடம் பெறும் தாக்குதல் முறைகளில், செயல்களில், ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சொல் உண்டு.

1.விளார் எடுத்து விளாசு விளாசிட்டான்.
2.கொப்பெடுத்து சாத்துசாத்துன்னு சாத்திட்டான்.
3.சில்லுல நெமைக்குறதுக்குள்ள குத்திட்டான்.
4.கம்பெடுத்து ஓச்சிட்டான்.
5.கல்லெடுத்து ஒரே வீக்கு வீக்கிட்டான்.

இப்படி இனியும் என்னவெல்லாமோ தனிச்சொற்கள், நுண்மைக்கான சொற்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, விழுமியம், இடம் பொருள் ஏவல் மதிப்பீடு கொண்டு சொற்களை அடையாளப்படுத்துதல் பயனைக் கொடுக்கும். surgical strike என்பது, விரைவையும், இலக்கினைச்த் சரியாக இனம்கண்டு தனிமைப்படுத்தித் தாக்குவதையுமே குறிக்கிறது. கல்லெடுத்து வீசினான் மண்டை உடைந்து விட்டது என்பதற்கும், கல்லெடுத்து வீக்கினான் பல்லுடைந்து விட்டது என்பதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. இரண்டுக்குமே உள்ள ஒற்றுமை தாக்குதல் என்பதுதான். ஆனால், வீசியதென்பது தோராயமான தாக்குதல். வீக்கினானென்பது, விரைவும் இலக்கும் ஒருசேரப் பொருந்தி வருவது. இப்படிச் சரியானதொரு சொல், தமிழில் இருக்கும். அறிஞர்கள்தாம் துழாவிப் பார்த்துச் சொல்ல வேண்டும். அல்லாவிடில், தமிங்கலமே மேலெனப் போய்விடுவான் எழுத்தாளன். இஃகிஃகி!!

-பழமைபேசி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 12, 2017, 9:36:28 PM10/12/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Thu, Oct 12, 2017 at 5:14 PM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது பக்கவிளைவுகள் இல்லாமல் இலக்கைமட்டும் தாக்குவது. 

கற்காலத்தில் இதுபோன்ற தாக்குதலைச் செய்து காட்டுப்பன்றிகளை வீழ்த்தினர்.
hog (or, boar) hunting with spear என யுட்யூபில் பார்க்கலாம்:

இதனை, கொங்குநாட்டில் சையமலையோர கிராமங்களில் சில கோவில்களில்
திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். சலாகைக்குத்து என்பர். சலாகை - கூர்மையான ஆயுதம்.

ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் = சலாகைக்குத்து, சலாகைத்தாக்கு
- பழைய சொல் மறையாமல் இருக்க உதவும்.


சலாகைக்குத்து - பெருங்கற்கால நாகரீகத்தின் எச்சம்.
கொங்குநாட்டுக் கோவில்களில்.
சலாகை - கூரான ஆய்தம். முனைவர் பட்ட ஆய்வேட்டில் காண்க,

N. Ganesan

unread,
Oct 13, 2017, 11:08:03 PM10/13/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Thursday, October 12, 2017 at 12:14:01 PM UTC-7, பழமைபேசி wrote:


1.விளார் எடுத்து விளாசு விளாசிட்டான்.
2.கொப்பெடுத்து சாத்துசாத்துன்னு சாத்திட்டான்.
3.சில்லுல நெமைக்குறதுக்குள்ள குத்திட்டான்.

கொங்குநாட்டில் கண் இமை என்று சொல்லிக் கேட்டதில்லை. இமையைச் ”சூடு” என்பது வழக்கம். பெருமாள் முருகனிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
ஏதாவது கொங்குக்கதைகளில் பெ. தூரன், ஆர். ஷண்முகசுந்தரம் (வலைப்பதிவர் லதானந்தின் பெரியப்பா), சி. ஆர். ரவீந்திரன், பெருமாள்முருகன், ... போன்றோர்
பயன்படுத்தியிருக்க வேண்டும். கண்ணைச் சூழ்ந்திருப்பதால் சூடு எனப் பெயர். “கண்ணுச் சூட்டிலே பிக்குது” போன்ற வாசகங்களைக் கேட்பது வழமை.
 ஆத்தி சூழ்ந்துள்ளதால் ஆத்தி சூடி அமர்ந்த தேவன் என பார்சுவ தீர்த்தங்கரரை ஔவை அழைத்தாள். பள்ளிக்கல்வி ஆத்திசூடியுடன் தொடங்குகிறது.

நிமைத்தல் என்பது செந்தமிழ். இதனைத் திருப்புகழில் காணலாம்.

சிமிட்டுதல் - to wink - இது ஒருகண்ணால் நிகழ்வது. (Cf. சிமிழ் - மூடி)
To entrap, catch; அகப்படுத்துதல். வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274).

நிமைத்தல் - to blink - இருகண்ணாலும், இயற்கையாக நிகழ்வது. நிமை > இமை.
நிமிஷ/நிமேஷ என்னும் வடசொற்களின் தோற்றம். சாயணர் பாஷ்யத்திலே
ஐரோப்பிய விஞ்ஞானிகள் கணித்த ஒளியின் வேகம் இடைச்செருகலாக
19-ஆம் நூற்றாண்டிலே நுழைந்துள்ளது. அதனை 20-ஆம் நூற்றாண்டில் பாரதி
’திசைகள்’ கவிதையில் பயன்படுத்தியுள்ளார்:


நிமைத்தல் : நெமைக்கிறது என்ற பேச்சுவழக்காக இருப்பதை எழுதியமைக்கு நன்றி.
சூடு ‘eye lid', நெமைக்கிறது (நிமைத்தல்) - கொங்குச் சிறுகதைகளில் யாராவது பயன்படுத்திருந்தால் தாருங்கள்.

நா. கணேசன்
 
4.கம்பெடுத்து ஓச்சிட்டான்.

N. Ganesan

unread,
Oct 14, 2017, 10:10:01 AM10/14/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


2017-10-14 6:42 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2017-10-14 5:11 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
//கொங்குநாட்டில் கண் இமை என்று சொல்லிக் கேட்டதில்லை. இமையைச் ”சூடு” என்பது வழக்கம்.//

சூடு என்பது கண்ணிமை அல்ல; கண்நோய்.


இல்லை. ஒருசொல்லுக்குப் பல்பொருள்கள் உண்டு.
விளா என்றால் விளாங்காய்/கனி, ஆனால், ஏர் ஓட்டும் தோட்டத்தில் விளா என்றால்  furrow.
சிலம்பு, திருவாசகம் ... 
யால்- என்றால் விழுது/வடம். வடம்போல் உள்ள துதிக்கையால் யால்- யானை என்ற சொல்.
ஆலமரத்துக்கும் யால்- ‘விழுது’ கொண்டு பெயர் அமைந்தது. வடக்கே, வட வ்ருக்ஷம் என்பது,
இதில் வட- இந்த யால்/ஆல் தான். யகரம் பல மொழிகளில் சகரம் ஆகிவிடும்:
யாவகம் > சாவகம். யாமை > சாமெ, ... அதுபோல், யால்- > சால்- என்றாகும்.
கள்ளிறக்குதலுக்கு மரம் ஏற முக்கியமானது பாளைக்கத்தியும், சால் என்னும் கயிறும்.
எனவே, சான்றாண்மை = கள்ளிறக்கல் தொழில். சான்றார் = ஈழுவர் (கள்ளிறக்குவோர்) ...
கால்- : to walk, to move, to pass by, to eject'. எனவே, கான்றுதல் = காலுதல் (சாலுதல் > சான்றுதல்,
சால் போடுதல் விளாவில் வித்து விதைப்பது, மழைக்காலத்தில் ஏர்ப் பூட்டி).
கத்துந் தரங்கம் எடுத்தெறியக்
        கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
    கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
        கான்ற மணிக்கு விலையுண்டு


இப்பொழுது, பலருக்கும் (டவுன்வாசிகளுக்கு விளா என்றாலோ, சால் என்றாலோ தெரிவதில்லை.
விளா - horizontal; சால் - vertical phenomenon. சால் மிடாவில் இருந்து சொட்டுச்சொட்டாய் கடலை முத்து
சால் போடுவது போல் நீர்விழும் - மிக மெதுவாய். அதனால் சால். கமலையைக் ’கவலை
இறைத்தல்’ எனக் கொங்குநாட்டில் சொல்வோம். தோலால் செய்த தூம்பு வடம் போல் இருக்கும்,
நீரை இறைத்துக் கொட்ட. எனவே, இதுவும் சால் என்கிறோம். கமலையேற்றம் படம்
பழமை கொடுத்துள்ளார். பார்க்கவும்.

ஆனால், சால்பு (என்ன பயத்ததோ சால்பு), சான்றாண்மை, சான்றோர் போன்ற வள்ளுவர் குறளில்
வேறொருபொருளில் சால்-  தாதுவேர் பயன்படுகிறது. அது ‘சால உறு தவ நனி கூர் கழி மிகலே’
என்னும் சூத்திரத்துடன் தொடர்பு உடையது.
 

--------------

பழமையான ஆட்சி: சூடு என்றால் நிமை(> இமை). சூழ்தல் என்னும் வினைச்சொல்லில் பிறப்பது.

வெப்பம் என்ற பொருளில் உள்ள சூடு பற்றி நான் இங்கே பேசவில்லை. அச்சொல்லை நன்கறிவேன்.
சூடு ‘வெம்மை’. சுள்-/சுடு/சுண்டு என்ற சொற்களின் நீட்சி அது. உஷ்ணம் என்ற சொல்லின் 
பிறப்பும், இந்திய மொழிகளில் ரெட்ரொஃப்லெக்ஷன் - Retroflexion is a deep structural phenom in Indic due to
Dravidian, and is demonstrated by the presence of -L-/-N-/-D- word sets - பற்றியும் எழுதியுள்ளேன்.

NG
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

N. Ganesan

unread,
Oct 14, 2017, 10:51:01 AM10/14/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
On Friday, October 13, 2017 at 9:28:10 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
அவனை ஒரே "செங்குத்தில்" வீழ்த்தினான் என்ற சொல் எங்கள்நெல்லைச்சீமையில் புழங்குவதுண்டு.குறி பார்த்து நெற்றி அடி அடிப்பதையே இது குறிக்கிறது.மேலும் செங்குத்து என்பது 90 டிகிரி தாக்குதல் கீழ் நோக்கி அல்லது மேல் நோக்கி அல்லது எப்பக்கத்திலிருந்தும் அதே செங்கோட்டில் (பெர்பெண்டிகுலர்) குத்துதல் ஆகும்."சர்ஜிகல் ஸ்ட்ரைக்" அதுவாக இருக்கலாம்.


செம்+குத்து = செங்குத்து. செமைக்குத்து என்றும் சொல்கிறோமே.

செம்- என்னும் வேர்ச்சொல், செமை என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது. கழுதை செமையா உதைக்கும் ...
செமைக்குத்து, ....

நிம்-/நிவ்- என்றால் மூடுதல், சூடுதல். எனவே, blinking நிமைத்தல் என திராவிட மக்கள் என்கின்றனர்.
நிம்-/நிவ்- நிமை (> இமை. இவெ (கன்னடத்தில்) )


கோவிலுக்கு ‘நிவந்தம்’ அளிப்பதாகப் பல கல்வெட்டுகள் உண்டு.
தம் கொடையைச் சூடி மகிழ்கிறான் மன்னன் என்ற பொருளில்
உருவான சொல். நிமைத்தல்/நிவத்தல். “சூடு” என்றால் கண்ணின்
இமையைக் கொங்குநாட்டில் குறிப்பர். “கண்ணுச்சூடு நெமைக்கறதுக்குள்ளே
மாயமாய் மறைஞ்சுட்டான்.”

மலரிலே மகரந்தம் தேய்த்து, பூவின் கர்ணகத்த்தின் உச்சியிலே
சூடினாற்போல அமர்ந்து தேன் தேன் உண்ணும் வண்டு
நிமிறு- இந்த நிம்-/நிவ்- தாதுவேர் என்பது தெரிகிறது. ஞிமிறு
என்று சங்கத்தமிழில் இருப்பதால், ஞிமித்தல் தான் நிமைத்தல்/நிவத்தல்
என்னும் வினைகளின் ஆதிச்சொல் என்று தோன்றுகிறது.
ஞிமிறு மெட்டாதீஸிஸ் ஆகி மிஞிறு என்றும் வருதலான்.
ஞிம்- என்னும் வினைச்சொல் நிமைத்தல், நிமை/நெமை
என ஈழநாட்டிலும், தமிழகத்திலும் பரவலாக வழங்குகிறது.

செம்- செமை (செமையடி) ...
ஞிம்-/நிம்- > நிமை/நெமை > இமை.

விந்து என்னும் தமிழ்ச் சொல் இந்து ‘drop, soma, semen, candra'
என ரிக்வேதத்திலேயே வந்துவிடுகிறது. விடங்கர் ‘gharial, linga'
இடங்கர் என்று சங்கத் தமிழிலே உண்டு. அதுபோல,
ஞிமை/நிமை சொன்முதல் நகாரஎழுத்தை இழந்து இமை
என சங்கத்தமிழில் காண்கிறோம்.

தமிழின் அழகுதான் என்னே!
இதனாற்றான், பார்த்த உடனே ஒரு சொல்லின் பிறப்புக்காரணம்
தெரிவதில்லை என்கிறாரா தொல்காப்பியர்? :
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.

நா. கணேசன்

 

 
_________________________ருத்ரா இ.பரமசிவன்
 

N. Ganesan

unread,
Oct 16, 2017, 9:37:58 AM10/16/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


2017-10-14 21:46 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

கொங்கு வட்டாரச் சொல்லகராதி, தொகுப்பும் பதிப்பும்: பெருமாள் முருகன்
குருத்து வெளியீடு, மே 2000, கோபிசெட்டிபாளையம், விலை ரூ. 60

பக்கம் 89:
”சூட்டு மயிர்- பெ. கண்ணிமை முடி. ‘சூட்டு மயிரில பூளை கட்டிக் கெடக்குது.’

சூடு - பெ. 1. கண்ணிமை. ‘சூடு வீங்கியிருக்குது,’ “


பக்கம் 52:

”கண்ணுச்சூடு - பெ. கண்ணிமை. ’கண்ணுச்சூடு ரண்டுநாளாத் துடிக்குது.’ “


கோட்டு அடுப்பு எனச் சங்கத்தமிழ் குறிக்கும் அடுப்பைச்
சூட்டு அடுப்பு என்னும் வழக்காறு இதைப் போன்றதே.

----------------

2017-10-14 7:50 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
> நிம்-/நிவ்- என்றால் மூடுதல், சூடுதல். எனவே, blinking நிமைத்தல் என திராவிட மக்கள் என்கின்றனர்.
நிம்-/நிவ்- நிமை (> இமை. இவெ (கன்னடத்தில்) )


கோவிலுக்கு ‘நிவந்தம்’ அளிப்பதாகப் பல கல்வெட்டுகள் உண்டு.
தம் கொடையைச் சூடி மகிழ்கிறான் மன்னன் என்ற பொருளில்
உருவான சொல். நிமைத்தல்/நிவத்தல். “சூடு” என்றால் கண்ணின்
இமையைக் கொங்குநாட்டில் குறிப்பர். “கண்ணுச்சூடு நெமைக்கறதுக்குள்ளே
மாயமாய் மறைஞ்சுட்டான்.”

Reply all
Reply to author
Forward
0 new messages