நிமை:இமை ‘eye lid', நிமைத்தல் > இமைத்தல் [திருப்புகழ்]
தமிழில் ஆயிரம் என்ற சொல் சகசிரம் (sahasra) என்ற சொல்லின்
மாறுபாடு என திராவிட மொழியியல் அறிஞர்கள் முடிபு. ஆனால்,
ப. கிருஷ்ணமூர்த்தி கூட, கன்னடத்தில் சாயிரம் என்ற சொல்லைக்
குறிப்பிடவில்லை. அதனால், -க்- > -ச்- > -ய்- (in second syllable)
அவர் எழுத இயலவில்லை. சொன்முதல் ச்- அழிபாடு குறித்த சொற்கோவைகளை
முன்னர்க் கொடுத்துள்ளேன். சுள்-/சுண்-/சுட்- > உண்ணம் > உஷ்ணம் என்ற
வடசொல் பிறப்பு இது என முன்னர் எழுதியுள்ளேன்.
ச்- என்னும் சொல்முதல் எழுத்து கெடுமாப்போலே, ந்- என்ற
எழுத்து அழிந்து சொற்கள் பல உருவாகியுள்ளன. உ-ம்:
நீர் > ஈரம், நிணக்கு > இணக்கு, ... நுக்- என்ற வேர்ச்சொல் தரும்
நுக்கு-/நுகு- “to fit tightly, to tighten up, to force/load
(something) upon or inside". இத் தாதுவே, நுகைத்தல் என்கிற
போது “to loosten, to become lax, tired" என்றும் பொருள்
வருகிறது. நுக்- வேரில் ந்- இழப்பு வரும்போது வரும் சொல் யாதெனப்
பின்னர் பார்ப்போம். அதற்காக ந்- வர்க்க உயிர்மெய் எழுத்தைச்
சொல்முதலாய்க் கொண்ட வார்த்தைகளைப் பார்த்தால்,
கண்ணிமை = கண் + நிமை எனத் தெரிந்தது. இமைத்தலின் பழைய
சொல்லைத் திருப்புகழில் பயன்படுத்தியுள்ளார் அருணகிரிநாதர்.
”நிமை¹ nimai , n. < இமை. cf. nimēṣa. Eyelid; இமை. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே. (பழ.).
நிமை²த்தல் nimai- , 11 v. tr. < நிமை. [K. evē.] To wink; இமைத்தல். புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க (திருப்பு. 497).”
[லெக்ஸிகானில் நிமை > இமை, நிமைத்தல் > இமைத்தல் என ந் loss
பதிவாகணும். லெக்ஸிகான் எடிட்டர் பேரா வ. ஜெயதேவன் அவர்களுக்கும்,
பா. ரா. சுப்பிரமணியன், செ. வை. சண்முகம், கி. நாச்சிமுத்து, சிற்பி - கடிதம்
அனுப்பியுள்ளேன்.]
அருணைத் திருப்புகழ் - இரத சுரதமுலை:
"அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழப் பரிவாலே
புருவம் நிமிர இரு கண் அ(வ்)வாள் நிமைக்க உபசார(ம்)
மிஞ்ச அவசம் கவசம் அளவு இயலே தரிக்க ... வாய் இதழ்
ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு
காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும்
ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம்
அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக,"
இந்த த்ராவிடபாஷைகளின் சொல் சம்ஸ்கிருதத்திலும் இயங்குகிறது.
நிமிஷ என்ற மோனியர்-வில்லியம்ஸ் அகராதிச்சொல் நிமிழ- என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு. கலூழ் > கலூஷ போல எனலாம்.
nimiSa m. twinkling , shutting the eye (also considered as a measure of time , a moment MBh. R. ; as a disease Sus3r.) ; N. of a son of Garud2a MBh. ; of Vishn2u L. ; %{-kSetra} n. N. of a district Cat. ; %{-SA7ntara} n. the interval of a moment ; (%{eNa}) , in a mñmoment MBh. Ka1v.
நா. கணேசன்