’செம்மீன் நிமைக்கும் மாக விசும்பு’ (புறப்பாட்டு 60, Cf. நிமிஷம்)

335 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 12, 2020, 2:30:17 PM11/12/20
to vallamai, housto...@googlegroups.com, K R A Narasiah, kra narasiah, Ganesan V

’செம்மீன் நிமைக்கும் மாக விசும்பு’ (புறப்பாட்டு 60, Cf. நிமிஷம்)
-----------------------------------------------

புறநானூறு 60
  - உறையூர் மருத்துவன் தாமோதரனார்

முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல,
செம்மீன் நிமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து,
தொழுதனெம் அல்லமோ, [...]

கடல் நடுவே தோன்றுகின்ற திமிலின்கண் இடப்பட்ட விளக்குப்போலச் செம்மீன் என்னும் சாலினி (அருந்ததி) சப்தரிஷி மண்டிலத்தில் இமைக்கின்ற மாகமாகிய விசும்பினது உச்சிக்கண்ணேநின்ற உவாநாளின் மதியத்தைக் கண்டு காட்டுள் வாழும் மயிலைப்போலச் சுரத்திடைப்பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும் கடிதின் விரைந்து தொழுதேமல்லேமோ பலகால்?

இது தமிழர்களின் கடலாடுந் திறத்தைக் கூறும் அரிய பாடல். செம்மீன் என்பது அருந்ததி (star Alcor, pair of Mizar). மருத்துவனாரின் புறம் 60 பாட்டில் செவ்வாய் என்றோ, திருவாதிரை என்றோ கொள்ளுதல் பொருந்தாது. ஏனெனில், 20-ஆம் நூற்றாண்டு உரைகாரர்கள் கூறுவது போல, செம்மீன் = செவ்வாய் கிரகம் என்றால், அது வட்டமான பந்து போல இருக்கும், ஆனால் கண்ணைச் சிமிட்டுவது போல இருக்காது. முந்நீர் என்னும் கடலிலே, பெரிய திமில் கொண்ட கப்பல்களைச் செலுத்தும் போது, அதில் விளக்கு எரிப்பர். அவ்வாறு கடலாடும்போது, வடமீன் என்னும் செம்மையான கற்புத் திறங்கொண்ட அருந்ததியையும், அதுகொண்ட சப்தரிஷி மண்டிலத்தையும் திசை அறியும் கருவியாகக் கொள்வர் பரதவர்கள். சப்தரிஷி மண்டிலத்தில் அருந்ததி - வசிட்டர் ஜோடி கண்ணாமூச்சி விளையாடுவது போல ஒன்றையொன்று சுற்றிவரும் விண்மீன்கள். இச் செயலை அவதானித்த பழந்தமிழர் செம்மீன் இமைக்கின்ற மாக விசும்பு என்று சப்தரிஷி மண்டிலத்தைக் குறித்தனர்.  இச்செயலால், கலியாணம் ஆகிய புதுமணத் தம்பதியர் விரல்மீது விரல்வைத்து செம்மீன் தம்பதியரைக் காண்பர்.
https://www.youtube.com/watch?v=rwD6RzIdPAY
https://www.youtube.com/watch?v=b5x6DafAeLo

 மருத்துவன் என்பது நாவிதருக்குப் பரியாயப் பெயர். உடல் அமைப்பு, ஸர்ஜரி, மருத்துவம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்கினோர். பாணர்களில் ஒருவகையினர் இம் மருத்துவர்கள். 'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்? (கலித்தொகை 68.19 ). பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனை(த்) [...] எனப் பல இடங்களில் சங்க இலக்கியம் காட்டும். பொலிக பொலிக என்று வாழ்த்தும் மருத்துவக் குடியினரை கலியாணம், இழவு ... இன்றும் காணலாம். பாணர்களில் ஒரு வகையினர் இவர்கள். எனவே, மருத்துவனுக்கு மங்கலன் என்றும் கூறுதல் உண்டு. மங்கல வாழ்த்து இசைப்பதும், நாதசுரம் ஊதுதலும் உண்டு. இவர்களது மருத்துவத் திறத்தால் “ஆமாத்திய அந்தணர்” என்று அழைப்பர். மங்களாதிராசன் என்று கல்வெட்டுகளில் மங்கலன்/மருத்துவன் குறிப்பிடப்படுகிரான். ஊருக்கு ஒரு சில குடும்பங்களே உள்ளதால், இவர்கள் பங்கு தமிழ் மற்றும் இந்திய வரலாற்றில் அறியப்படாததாக உள்ளது. அண்மைக் காலத்தில் திருமூர்த்திமலைப் புராணம், சிவராத்திரிப் புராணம் போன்றன செய்த வேலாயுத பண்டிதர், தமிழிசை ஆராய்ச்சியில் முத்திரை பதித்த ஆபிரகாம் பண்டிதர், மாணிக்கவாசகர் (ஆமாத்தியர் குலம்), பல்லவர் படைத் தளபதி பரஞ்சோதி, ... போலப் பலர் மருத்துவக் குடியினர் ஆவார். இந்திய விஞ்ஞானத்தில் இசை, நடனம், மருத்துவர், சர்ஜரி, ... இவற்றில் மங்களாதி அரையரின் சேவை மகத்தானது.

அருந்ததி (செம்மீன்) வைத்து திசையறி கடலோடிகள் உள்ள சோழநாட்டு நெய்தல் நிலத்திலே, கரையில் உப்பு விளைந்தது. அதை எடுத்துக்கொண்டு, சையமலை (ஸஹ்யாத்ரி) என்னும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள கல்நாட்டுக்கு (கர்நாடகா, ஊட்டி, சத்தியமங்கலம், ... போன்ற பகுதிகள்) உமணர்களின் வண்டிகள் செல்கின்றன என்கிறார் மருத்துவனார். தமிழ்க் கடலோடிகள் அருந்ததி செம்மீனைப் பார்த்து கீழைக் கடற்கரையில் இருந்து மலாயா நாட்டுக்குச் சென்று வெள்ளீயம் (tin, தகரம்) கொணர்ந்தனர்.  Tin Bronze - மிகப் பழையவை ஊட்டி மலையிலே மக்கள் பயன்படுத்தியுள்ளமை தொல்லியல் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இவை மருத்துவன் தாமோதரன்  கூறும் மாட்டு வண்டிகளின் ஒழுகைகளால் சென்ற உலோகத்தைக் கொங்குநாட்டில் பயன்கொண்டு (உ-ம்: கொடுமணல், பொருந்தல், ...) அமைந்தன எனலாம்.

கால்- “செல்வது, செல்லும் உறுப்பு, கால்+து = காற்று” என்பதை வைத்து இந்தியாவில் TIME என்பதற்குக் காலம் எனப் பெயர் வைத்தனர்.
http://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html
Ancient Indian linguistic signs:
This interesting linking of PiLLaiyArsuzhi/letter-o shape to OM sound has some ancient precedents in India & Let us look at some linguistic signs (1) In Indus era seals, the fish sign, due to Dravidian homophones, is said to stand for "star/deity" by Indologists. (2) Recently, an Indus sign is identified as standing for sky-crocodile (Parpola's paper on IVC crocodile cult, 2011, Tokyo). It clearly shows the "high walk" of freshwater crocodiles (known as "muggers"), and the four legs of the mugger are explicit in the sign. Let me suggest the linguistic sound for this crocodile sign, it is mokaray (connected with mogara/mogra, makara/magar - modern Indic names for crocs) (Ref. [2]), I derive mokaray from mok- (DEDR 5127 + DEDR 4897) and aray (DEDR 228). (3) The widow dying by immolation when her husband dies is performed even by monkeys in Sangam Tamil. This custom is known as sati, and the memorial stones (called as "thii-p-paayntaaL kallu", "maa-sati-kal" are found in Tamil Nadu, Karnataka, ...) See the Rajasthan sati memorials. In all these sati stones, a palm of the lady's hand is depicted and this "kai" (hand) seems to do with "kaimmai" (widowhood), "kaimpeN" (widow). See the Sati memorial stone photio here. (4) In Indian languages, Time is "kaala", the same word in Dravidian means "leg" (eg., kaal in Tamil). In Indian epic literature, use of legs of the bull of Dharma for the symbolism of yugas & how many legs of Dharma were standing in each yuga are significant which shows the connection between Dravidian "kaal-" (leg) and "kaala" (time) concept. Even fractions (1/4 kaal -"one leg out of 4", 2/4 = 1/2 "arai 'cutting into half, also hip', or "irukaal" (2/4 literally, "2 legs out of 4" (of a cow), 3/4 mukkaal - "3 legs", are named in association with the 4 legs of a cow (Ref. [7]). Note that "kaala" (Time) in all Indian languages has a Dravdiian origin. In old Tamil, "kaal" is "to move, that moves" & so, kaal = leg, wind. kaalam (T=Time) also passes by and is never static and like, leg or wind (kaal), kaala (Time) is always in motion.

காலத்தின் பகுப்பாகிய நிமிஷம் என்ற சொல், நிமைப்பது (> இமைப்பது) என்னும் வினைச்சொல் தரும் பெயர். நிமி என்பதன் புராணக் கதையை ஓர்க.
செம்மீன் நிமைக்கும் மாக விசும்பு = அருந்ததி நக்ஷத்ரம் இமைக்கிற பெரிய வானம்.
நிமை:இமை ‘eye lid', நிமைத்தல் > இமைத்தல் [திருப்புகழ்]
https://groups.google.com/g/houstontamil/c/gF2C33H5Ar8/m/UkvxuA0dnEoJ
https://groups.google.com/g/houstontamil/c/EWGAiO4B0HM/m/r40q4_xTAwAJ
”செம்மீன் நிமைக்கும் மாக விசும்பின்” - எனப் பிரிக்க வேண்டும் என செம்மொழிகள் இரண்டின் ஒப்பீட்டால் அறிகிறோம்.
அருணைத் திருப்புகழ் - இரத சுரதமுலை:
http://kaumaram.com/thiru/nnt0398_u.html

"அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழப் பரிவாலே
புருவம் நிமிர இரு கண் அ(வ்)வாள் நிமைக்க உபசார(ம்)
மிஞ்ச அவசம் கவசம் அளவு இயலே தரிக்க ... வாய் இதழ்
ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு
காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும்
ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம்
அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக,"

இந்த த்ராவிடபாஷைகளின் சொல் சம்ஸ்கிருதத்திலும் இயங்குகிறது.
 நிமிஷ என்ற மோனியர்-வில்லியம்ஸ் அகராதிச்சொல் நிமிழ- என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு. கலூழ் > கலூஷ போல எனலாம்.
nimiSa m. twinkling , shutting the eye (also considered as a measure of time , a moment MBh. R. ; as a disease Sus3r.) ; N. of a son of Garud2a MBh. ; of Vishn2u L. ; %{-kSetra} n. N. of a district Cat. ; %{-SA7ntara} n. the interval of a moment ; (%{eNa}) , in a mñmoment MBh. Ka1v.

ஸ்கந்த-முருகன் திரு அவதாரம்:  (அருந்ததி தவிர சப்தரிஷி மனைவியர் அறுவர், முருகன். ஸ்கந்த = இந்து.)

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 12, 2020, 6:41:41 PM11/12/20
to vallamai, housto...@googlegroups.com, K R A Narasiah, kra narasiah, Ganesan V
https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/

1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)
3)விசும்பு வழங்கும் மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.
4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)
8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)

9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.

ராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம். உலகமே அயோத்தி மாநகரை நோக்கி வெள்ளம் போல நகர்ந்து செல்கிறது. ரகு வம்ச குல குருவான வசிட்ட மாமுனிவன் 2000 பிராமணர்கள் புடை சூழ முத்துப் பல்லக்கில் பிரம்மா போல அயோத்தி நோக்கி பவனி போகிறார். அதை வருணிக்கும் கம்பன்:—
10)கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் முத்துச்
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்னச் சென்றான் (801)

சீதையை அருந்ததிக்கு ஒப்பிடும் கம்ப ராமாயண வரிகள்:—
11)கன்னி அருந்ததி காரியை காணா
நல்மகனுக்கு இவள் நல்லணி என்றார் (1254)
12) அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே! (2006)
சீதையை ராமன் அருந்ததி என்று போற்றியது தெரிகிறது.

13) அருந்ததி ! உரைத்தி – அழகற்கு அருகு சென்று உன்
மருந்தனைய தேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில்……. (5350)
என்று அனுமன் பகர்வான். இது போல இன்னும் பல குறிப்புகள் உள (அகம் 16, பரிபாடல்-20—68; பதிற்றுப்பத்து 89- 17/19)

-------------

நிமைத்தல் :: பேச்சுவழக்கில், நெமைத்தல் என்றாகிறது.
இதனை பெப்ரிசியஸ் அகராதி (1786) -ல் காணலாம்.
“கண்ணுச்சூடு நெமைக்கறதுக்குள்ளே மாயமாய் மறைஞ்சுட்டான்.”

A Dictionary of the English and Malabar Languages. (A Dictionary Malabar and English.) [By J. P. Fabricius and C. Breithaupt.], Volume 2



நிமைத்தல்:
https://en.wikipedia.org/wiki/Blinking

சிமிட்டுதல்:
Humans use winking, the blinking of only one eye, as a form of body language.

On Thursday, October 12, 2017 at 12:14:01 PM UTC-7, பழமைபேசி wrote:


1.விளார் எடுத்து விளாசு விளாசிட்டான்.
2.கொப்பெடுத்து சாத்துசாத்துன்னு சாத்திட்டான்.
3.சில்லுல நெமைக்குறதுக்குள்ள குத்திட்டான்.
4.கம்பெடுத்து ஓச்சிட்டான்.
5.கல்லெடுத்து ஒரே வீக்கு வீக்கிட்டான்.

இப்படி இனியும் என்னவெல்லாமோ தனிச்சொற்கள், நுண்மைக்கான சொற்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, விழுமியம், இடம் பொருள் ஏவல் மதிப்பீடு கொண்டு சொற்களை அடையாளப்படுத்துதல் பயனைக் கொடுக்கும். surgical strike என்பது, விரைவையும், இலக்கினைச்த் சரியாக இனம்கண்டு தனிமைப்படுத்தித் தாக்குவதையுமே குறிக்கிறது. கல்லெடுத்து வீசினான் மண்டை உடைந்து விட்டது என்பதற்கும், கல்லெடுத்து வீக்கினான் பல்லுடைந்து விட்டது என்பதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. இரண்டுக்குமே உள்ள ஒற்றுமை தாக்குதல் என்பதுதான். ஆனால், வீசியதென்பது தோராயமான தாக்குதல். வீக்கினானென்பது, விரைவும் இலக்கும் ஒருசேரப் பொருந்தி வருவது. இப்படிச் சரியானதொரு சொல், தமிழில் இருக்கும். அறிஞர்கள்தாம் துழாவிப் பார்த்துச் சொல்ல வேண்டும். அல்லாவிடில், தமிங்கலமே மேலெனப் போய்விடுவான் எழுத்தாளன். இஃகிஃகி!!


நிமைத்தல் : நெமைக்கிறது என்ற பேச்சுவழக்காக இருப்பதை எழுதியமைக்கு நன்றி.
சூடு ‘eye lid', நெமைக்கிறது (நிமைத்தல்) - கொங்குச் சிறுகதைகளில் யாராவது பயன்படுத்திருந்தால் தாருங்கள்.

-----------------------------
2017-10-06 3:14 GMT-07:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
அன்புள்ள திரு.கணேசன் அவர்களே 

சிமய என்ற தமிழ்ச்சொல்லே இமய ஆனது என்ற தங்கள் ஆராய்ச்சி
போற்றற்குரியது.இன்னொரு இலக்கணம் மூலம் இமை என்பதும்
மலையைக்குறிக்கும்.இங்கே இமைய மலை ஒரு பொருட்பன்மொழி.
இரண்டு சொல்லும் "மலை"யை குறிக்கிறது.

மலை என்றால் மலைத்தல் அல்லது வியத்தல் என்ற வினைச்சொல்லின் அடியாக ஒரு மலை எனும் வினைச்சொல் ஆகுபெயர் தான் மலை ஆயிற்று.அதே இலக்கணப்படி மலை எனும் அந்த உயரமான இடப்பகுதியைக்கண்டு வைத்தகண் வாங்காமல்
"இமை"த்தல் எனும் வினைச்சொல் ஆகுபெயர் தான் இங்கு "இமை(ய)மலை" ஆயிற்று.எனவே "இமை" என்பதும் மலையைக்குறிக்கும்எனவே வடக்கின் "இமை மலை"தான் இமையமலை ஆகும்.

அன்புடன் ருத்ரா



மலை, வரை என்ற சொற்கள் தொடர்புடையன.

இமையோர் என்பதற்கு கண்களை இமையார் என்ற விளக்கம் தருவதுண்டு. ஆனால், இமய- சிமய- என்றாகாதே. சிம- = ஹிம- ‘snow'.

------------------------

இமைத்தல் : நிமைத்தல் என்ற சொல்வழிப் பிறந்தது. இந்த நிமைத்தல் என்ற சொல்லாட்சியை திருப்புகழில் காணலாம்.
விரலை நிமிண்டுதல், நிமிட்டாம்பழம், நிமைத்தல் ... தொடர்புடைய சொற்கள். சங்கத் தமிழிலே நிமிறு (ஞிமிறு) இந்த
நிமித்தல்/ஞிமித்தல் வினைச்சொல் தாதுவேர் எனக் கொள்ளலாம். நிமிஷம் என்றால் விரலையோ, நிமையையோ சொடுக்கல்.
இன்று நிமிஷம் 60 செக்கண்ட் என மொழிபெயர்த்தாலும், ஆதியில் நிமிஷம் ஒரு செகண்ட் தானே. ஞிமிறு இடவலமாக மாறி
(மெட்டாதீஸீஸ்) மிஞிறு என வருதலும் சங்கத்தமிழ் படிக்கும் தாங்கள் அறிந்ததே.

ஆக,
(1) இமையம் < சிமையம். சிம- = ஹிம- 'snow, of Indo-European heritage'
(2) இமைத்தல் < நிமைத்தல் (நிமிஷ-, ஞிமிறு(நிமிறு), நிமிண்டு/நிமிட்டாம்பழம்) ...
நீர்- > ஈரம், நுண்ணி- > உண்ணி (நாய் உண்ணி, உண்ணி கிருஷ்ணன் (குருவாயூரில்) ...), நுந்து > உந்து (நுந்தாவிளக்கு, நொந்தாவிளக்கு, நந்தாவிளக்கு : தூண்டாவிளக்கு) ...
போல, இமை < நிமை

-------------

அண்மையில் நாமக்கல் புலவர் பொ. வேலுசாமி, கலித்தொகைக்கு இ (இடையாற்றுமங்கலம்) வை. அனந்தராமையர் வெளியிட்ட பதிப்பைப்
பற்றி எழுதியிருந்தார். புலவர் கம்பராமன் அவர்களால் எனக்கு அறிமுகப்படுத்தப்பெற்ற அரிய நூல் இது. அன்றில் பறவை, ஞாழல் மரம் என்பது
என்ன என எனக்கு அறிவித்த நூல்.

கலித்தொகை, இ. வை. அ. பதிப்பில் அருந்ததி மீன்:
அருந்ததி, (அ) அனசூயையின்றிருமகள்; (ஆ) வசிட்டமுனிவரின் பத்தினி; (இ) வானிடத்தே வடதிசைக்கண் துருவநட்சத்திரத்தி னருகிலுள்ள எழுமுனிவர் குழுவிடையே கொழுநனொடு கெழுமி ஒரு சிறுவிண்மீன் வடிவமாகத் தோற்றுபவள்; (ஈ) கலங்காத தெய்வக் கற்புடையவள்; (உ) வாழ்நாளற்றவர்க்குத் தோன்றாதொளிப்பவள்; (ஊ) வதுவைக்காலத்துக் கணவரால் மகளிர்க்குக் காட்டப்படுபவள்; (எ) அம்மகளிரால் அக்காலத்துத் தம் வாழ்நாளை அறிதற்கு நோக்கப்படுபவள்; (ஏ) கற்புடைமகளிரால் அந்திக் காலத்துத் தொழப்படுபவள்; (ஐ) தன்னைத் தரிசித்தோர்க்கு மாசு நீக்குபவள்; (ஒ) புகழ்மிக்கவள்; (ஓ) 1: வடமீனவள், 2: வடமீன், 3: வடக்குமீன், 4: உத்தரமீன், 5: தெய்வம், 6: அணங்கு, 7: கடவுள், 8: கடவுண்மீன், 9: சிறுமீன், 10: அந்திமீன், 11: செம்மீன், 12: சாலினி, 13: சாலி, முதலிய பெயருடையவள்; (ஒள) கற்பிற் சிறந்தார்க்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவள்; (ஃ) 1: ‘‘பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ், சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல் வளைக்கை மகடூஉ’’ பெரும்பாணாறு 302-4. 2: ‘‘அருந்ததி யனைய கற்பிற்......புதல்வன்றாயே’’ ஐங். 442. 3: ‘‘வடமீன் புரையுங் கற்பின் மடமொழி யரிவை’’ புறம். 122. 4: ‘‘அருந்ததிக் கற்பினார் தோளும்’’ கடுகம். 1. 5: ‘‘பொருந்திய வுலகினுட் புகழ்கண் கூடிய, வருந்ததி யகற்றிய வாசில் கற்பினாய்’’
6: ‘‘அருந்ததிக் கற்பி னாளை யடிபணிந் தவனுங் கண்டான்’’ 7: ‘‘தொழுதகு தெய்வ மன்னாள்’’ சீவக. 327; 1729; 1912. 8: ‘‘தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்றும்’’ ‘‘வடமீன் கற்பின் மனையுறைமகளிர்’’ சில. (1) 27; (5) 229. 9: ‘‘கடவுண்மீன் கற்புமாதர்’’ 10. ‘‘வடபுலத்து வயங்கு மருந்ததிக், கடவுட் கற்பினர்’’ காசி. ‘‘தேவர்கள் பிரமலோகம், 28; கற்பிலக்கணம் 34. 11: ‘‘வடபுலத்தினி னோக்குநர் மாசற விளங்குங், கடவுண் மீனினுந் தொழுதகு கற்பினர்க் கரசாங், கொடிமருங்குலை’’ நைடதம். தேவியைக்கண்ணுற்ற 25. 12: ‘‘தொழத்தகு வடமீனென்ன, நடையறி புலவரேத்தி நவிறம யந்தியென்பாள்’’ பிரமோ. சோமவார விரத 40. 13: ‘‘கற்பா லந்திவா யருந்ததி’’ 14: ‘‘கற்பினா லந்திமீ னனையவள்’’ 15: ‘‘வடமீனிகர் கற்பினாளை’’ 16: “விண்ணிலங் கருகித் தோன்று மேதகு வடமீனன்றி, மண்ணிலங் குவமை சொல்ல மடந்தையர் யாருமில்லாப், பண்ணலங் கடந்த மென்சொற் பாவையை‘‘ வில்லி சம்பவ. 25. வாரணாவத. 28. திரௌபதி. 96, சூது. 202. 17: ‘‘மறுவி லாவட மீன்புரை கற்பினாள்” திருவிளை. மாணிக். 4. என்பவை ஈண்டு அறிதற்பாலன. பிறவும் விரிப்பிற் பெருகும்.

1. அருந்ததியென்பது, அருந்துதியென்றும் தமிழில் வழங்குமென்பதை, செம்மீனென்பதற்கு அருந்துதியென்று (பதிற். 31.) உரை எழுதப் பெற்றிருத்தலாலும் ‘‘சூளையருந்துதி......யென்றெண்ணி’’ (கம்பரந். 34.) ‘‘கற்பினல, மருந்துதியானம் புவிக்களித்தார்’’ (திருமுல்லை. 85.) எனச் சிவஞானமுனிவரும், ‘‘அருந்துதிக்குக் கற்பணியா ரருந்துதிக்குக் கற்பணியார்’’ (திருவானைக்கா. கோச்செங்கணார் 6.) எனக் கச்சியப்பமுனிவரும் மாற்றவொண்ணாதபடி அமைத்திருத்தலாலும் அறிக.

2. கற்புடைமகளிரை எல்லாருந்தொழுதேத்தல்: (அ) ‘‘உரைசால் பத்தினிக்குயர்ந்தோ ரேத்தலும்’’ - புகழமைந்த கற்புடைமகளை மக்களேயன்றித் தேவரு முனிவரு முதலாயுள்ளோர் சென்றேத்துதல் இயல்பாகலும்’ சிலப். பதிகம். 56. அடியார். (ஆ) ‘‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத், தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்’’ சில. 23. இறுதிவெண்பா. (இ) ‘‘நாடு மூரு நனிபுகழ்ந் தேத்தலும், .....பாடு சான் மிகு பத்தினிக் காவதே’’ வளையாபதி. (ஈ) ‘‘படியேழுந் தலைமேற் கொண்ட கற்பினாள்’’ கம்ப. கடல்காண். 7. (உ) ‘‘தொழுதகு கற்பினாளை’’ நைடத. மணம்புரி 60. என்பவை முதலியவற்றால் அறியலாகும். (ஊ) ‘‘அருந்ததியும் வந்தனைசெ யஞ்சொலிள வஞ்சி’’ என்பதும் ஈண்டறிதற்பாலது.

3. கற்பியல் முதற் சூத்திரத்து, ‘கற்பியல் - கற்பினது இயலெனவிரிக்க. இயல், இலக்கணம்.......அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுக வெனவும் இருமுதுகுரவர் கற்பித்தலானும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலை மகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று’ என எழுதிய பகுதி ஈண்டறிதற்பாலது.

N. Ganesan

unread,
Nov 13, 2020, 6:16:01 AM11/13/20
to vallamai, housto...@googlegroups.com, K R A Narasiah, kra narasiah, Ganesan V
”வானின்றுலகம்” வழங்கி வருதலால் = ”வான் நின்று உலகம்” வழங்கி வருதலால் (குறள்).
அதுபோலே, ”செம்மீனிமைக்கும்” மாக விசும்பின் = ”செம்மீன் நிமைக்கும்” மாக விசும்பின் (புறம் 60)
எனச் சந்திப்புணர்ச்சி பிரியும்.

செம்மீன் = திருவாதிரை மீன் என்றுதான் புறப்பாட்டின் பழைய உரைகாரர் கூறுகிறார்.
(மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், பக். 327). ஆனால், உவேசா அவர்கள், ஆதிரையை விடுத்து,
செம்மீன் என்பதைச் செவ்வாய்மீன் என்று உரைசெய்கிறார். இது பாடலில் கூறும் கடலாடுந்திறனும்,
’Double Star’ என்று அறியப்படும் Mizar-Alcor (வசிட்டன் - அருந்துதி) பற்றிய வானியலை
அறியாமையாலும் நேர்ந்துவிட்டது. அருந்ததி சிவந்த நிறத்தால் செம்மீன் எனப் பெயர் என்கிறார்
பதிற்றுப்பத்து உரையில் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை. செம்மீன் என்பது, எப்பொழுதும் தன்
துணைவனை விட்டு நீங்காத் தன்மையுடையள் ஆனதால், “Double Star", கற்புக்கரசி அருந்ததி
ஆதனின் செம்மைத் தன்மையால் செம்மீன் எனப் பெயர்பெறுகிறாள். மாதர் தம் கற்புக்குத் தமிழரிடையே
உள்ள மாண்பால், மதிப்பால் அருந்ததி செம்மீன் எனப்படுகிறாள். நிறத்தால் அல்ல, கற்பின் திறத்தால் அருந்ததிக்குச் செம்மீன்
எனும் பெயர். ’பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்’ என்றார் வள்ளுவரும்.
இதனால் தான் ஹிந்துக்களின் கலியாணங்களில், தம்பதி விரல் மேல் விரல் வைத்து கற்பின் இலக்கணம் ஆக,
அம்மி மிதித்து அருந்ததிச் செம்மீன் பார்த்தல் சீர் இருக்கிறது. இது சிந்து சமவெளிக் காலத்தில் ஏற்பட்ட மணச்சீர்.
Double star observation by Naked Eye Astronomy of Indians, 5000+ years ago, in Indus Valley Civilization.
Mizar and Alcor are two stars forming a naked eye double in the handle of the Big Dipper (or Plough) asterism in the constellation of Ursa Major. Mizar is the second star from the end of the Big Dipper's handle, and Alcor its fainter companion.
https://en.wikipedia.org/wiki/Mizar_and_Alcor
https://earthsky.org/brightest-stars/mizar-and-alcor-the-horse-and-rider
https://www.astropix.com/html/observing/doubles/doubles06.html
http://stars.astro.illinois.edu/sow/alcor.html

நிமைத்தல்/இமைத்தல் - சூடுதல். இமைக்குச் சூடு என்றே பெயர் உண்டு. வானில், ஒன்றின் மேல் ஒன்றாக
நிமைத்து/இமைத்து விளங்கும் ஜோடி ஆதலான் “செம்மீன் நிமைக்கும் மாக விசும்பின்” என்றார்
மருத்துவன் தாமோதரனார். இப்பாட்டில் செம்மீன் = அருந்ததி தான் என்பதற்கு, மாக விசும்பின் பொருளை ஆராய்ந்தால் உணரலாம்.
இப்பாட்டில் ஆதிரையோ, செவ்வாயோ அல்ல. சங்க இலக்கியத்தில் எங்குமே செவ்வாய் செம்மீன் எனக் குறிப்பிடப்படவில்லை.)

‘மாக விசும்பு’ என்பதன் பொருளை உணர்த்தினார் அல்லர் உரையாசிரியர்கள் என விளக்கியுள்ளார்
பி. டி. சீனிவாசையங்கார், 100+ ஆண்டு முன்னர். அவரும் ”மாக விசும்பு” என்ன எனச் சொல்லவில்லை.
பி. டி. எஸ். ஐயங்கார் (தமிழர் வரலாறு) எழுதியுள்ளார் (I am quoting from the Tamil translation from PTS Aiyangar's book in English. He mentions the same in his Pre-Aryan Tamil Culture book also. Maagha = Maasi month's original name,
next of Thai = Makara. Thai, as in tanthai, nunthai, enthai ... means "Father, King, God". Thai maasam = Makara maasam):
“கடல் நடுவே, மீன் பிடிபடகுகளாம் திமில்களில் ஏற்றப்பட்டுக் காட்சி அளிக்கும் விளக்குகள் போல , செம்மீன்கள் ஒளிவிடும் விசும்பின் உச்சிக்கண், முழுமதி நாளன்று, அம் முழுமதியைக் கண்டு, காட்டுவாழ் மயில் போன்ற, சில வளையல்கள் அணிந்தவளாய என் விறலியும் நானும், அம் முழுமதி, வளவன் வெண்கொற்றக் குடை போன்றுளது என எண்ணியவாறே தொழுதோம் அல்லவோ?' என்ற புலவர் வினாவில், மதி வழிபாடு குறிப்பிடப்பட்டுளது.

'முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ ? ..................
வளவன் ...
 மாலை வெண் குடை ஒக்குமால் எனவே", - -புறம் : 60

'மாக விசும்பு' எனும் இத்தொடர், புறம் : 35, 60, 270, 400, அகம் : 253, மதுரைக்காஞ்சி: 454; : பரிபாடல் 47
ஆகிய பல இடங்களில் வந்திருந்தாலும், உரையாசிரியர்கள் அதற்கான தெளிவான பொருளை உணர்த்தினாரல்லர்.” (PTS Aiyangar).
Maagha is the star Regulus, the brightest star in Leo constellation. Using star Maagha,
the Saptarishi maNDalam (in which Arundhati is the Double-Star of VashiSTa Rshi) can be seen
and ascertained. This is what is mentioned by the great Sangam poet, Maruththuvan Damotharanar
in his PuRam 60 poem. Ancient naked eye astronomy of 5000 years old Indian Astronomy!

மாக நக்ஷத்ரத்தை (star Regulus) வைத்து, சப்த ரிஷி மண்டிலத்தின் விண்மீன்களைக் கணித்தல் பலகாலமாக இருக்கிறது.
https://skyandtelescope.org/observing/big-dipper-spring-sky-sights/
http://www.fortworthastro.com/beginner2.html
Cologne Digital Sanskrit Dictionaries: The Purana Index
   1) Maghā (मघा).—Or magha—a constellation attached to Śiśumāra;1 śrāddha in, marks the rise in social status.2
   2a) Māgha (माघ).—Considered as the first of months;1 gift of brahmavaivarta purāṇa in this month leads one to Brahmaloka;2 Mahesvara to be worshipped in this month.3
   2b) (Pañcadaśi): a yugādi for śrāddha; (saptami) a manvantarādi for śrāddha.

http://old.narit.or.th/en/files/2019JAHHvol22/2019JAHH...22..294S.pdf
(I am attaching the PDF of this paper.)
B. S. Shailaja, Venkateswara Pai,
IDENTIFICATION OF THE STARS OF THE SAPTARṢI MAṆḌALA AND ITS VICINITY
Journal of Astronomical History and Heritage, 22(2), 294‒300 (2019).
"The seven stars can be identified in the sky without any ambiguity. Therefore, we can use them to fix the coordinates of other fainter stars. References to their positions are given in the context of the heliacal rising with the star Regulus (Maghā) which has been used by various scholars to fix the epoch of specific texts (e.g. see Abhyankar, 2007; Saha and Lahiri, 1954)."
இதைத் தான் ’மாக விசும்பு’ என்கிறார் வான சாஸ்திர நிபுணர் மருத்துவன் தாமோதரனார், புறப்பாட்டில்.

சிஞ்சுமார மண்டிலத்தில் ஒரு விண்மீன், மாக நட்சத்திரம். மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடு (பரிபா. 1:47) என்பார் பரிமேலழகர். மாகம் - திக்குகளை உடைய ஆகாயம் (மதுரைக்.454.) என்பார் நச்சினார்க்கினியர். எளிதில் கீழ்த்திசையில் காணும் மாக விண்மீனை வைத்து விண்ணியல் கணிப்புகள் நடந்திருக்கின்றன. எனவே, ’மாக விசும்பு’ என்பது, சிசுமார/மகர மண்டலம், சப்தரிஷி மண்டலம் போன்றவை காணக் வானியல் கணியர்களுக்கு உதவுகிறது. வேத காலத்தில், மகர விடங்கர் எனும் மழுவாள் நெடியோன் வருணனுடன் ஒன்றிவிட்டான். மழுவாள் நெடியோன் பற்றி மதுரைக்காஞ்சி பேசுகிறது. தொல்லியல் வழி என் கட்டுரைகளில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன், பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள், சிம்சுமார மண்டலத்தை மஹாவிஷ்ணுவின் வடிவம் என்று பேசுகின்றனர். இதனைப் பக்தி இலக்கியங்களில் முதன்மையான ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றில் காணலாம். ஆழ்வார்களுக்குப் பின் தமிழ்நாட்டில் உருவானது ஸ்ரீமத் பாகவதம்.
நம்மாழ்வார், திருவாய்மொழியில் மாகவிசும்பை, ’மாக வைகுந்தம்’ என்கிறார்.
     ஆகம் சேர் நரசிங்க மதாகி ஓர்
     ஆகம் வள்ளுகிரால் பிளந்தா னுறை
      மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம்
      ஏகமெண்ணு மிராப்பக லின்றியே.
https://vaniquotes.org/wiki/The_eight_stars_from_Magha_to_Anuradha,_which_mark_the_southern_course,_are_on_the_ribs_of_the_left_of_its_body,_and_the_eight_stars_from_Mrgasirsa_to_Purvabhadra,_which_mark_the_northern_course,_are_on_the_ribs_on_the_right_side
The eight stars from Maghā to Anurādhā, which mark the southern course, are on the ribs of the left of its body, and the eight stars from Mṛgaśīrṣā to Pūrvabhādra, which mark the northern course, are on the ribs on the right side (ஸ்ரீமத் பாகவதம்).
https://www.thetantric.co.uk/2020/07/04/the-sisumara-planetary-system/
“The eight stars from Magha to Anuradha, which mark the northern course, are on the ribs and right side.”

4500 ஆண்டு பழமையான சிந்து சமவெளி வானியலில் தொல்தமிழர் கண்ட இந்த வானியல் - மருத்துவன் தாமோதரன் புறப்பாட்டில் பாடினது - பற்றி
வேதவியல் நிபுணர் ஆஸ்கோ பார்ப்போலா எழுதியிருப்பதை வாசிப்போம். The Roots of Hinduism: The Early Aryans and the Indus Civilization (2015, Oxford University Press).
https://groups.google.com/g/vallamai/c/L-c7Wm2x6TM/m/5G2Cw6N2CwAJ
"In chapter 15 we saw that Varuṇa was the successor to the Harappan god of water and fertility,
which had the crocodile (Varuṇa’s mount in Hinduism) among his symbols. The crocodile’s long
snout with a swelling protuberance at its tip represents a phallus. Crocodiles are believed to grant babies, and Hindus are known to have sacrificed their first-born child to crocodiles in the hope of
further offspring. Now the Taittirīya-Āraṇyaka (2,19) speaks of a divyaḥ śākvaraḥ śiśumāraḥ, “a
mighty divine crocodile” with a tail (puccha) of four sections. Because fore and hind legs are also
mentioned among this creature’s body parts represented by various stars, śiśumāra- cannot here have
the alternative meaning “dolphin,” but must denote “crocodile.” Literally, śiśumāra- means “babykiller.”

  The context of this heavenly crocodile is the worship of Brahma, which a Vedic householder is
supposed to perform by uttering a prayer at dusk while facing the region of the pole star, Dhruva. This
prayer begins with “dhruvas tvam asi, dhruvasya kṣitam” (“You are firm, foundation of the firm”),
and ends with “obeisance to Śiśukumāra” (perhaps a corrupt reading for Śiśumāra). The oldest parts
of the cosmographic descriptions of the Purāṇas tell that the god Viṣṇu appears in the sky in the shape
of a crocodile consisting of stars, and that the pole star is in the tail of the crocodile. Thus the pole
star occupies in the sky a position comparable to that of the pole in the back part of the body of the
cultic crocodile images in Gujarati tribal villages and in the Harappan painted pot from Amri
discussed in chapter 15 (Figs. 15.7, 15.8). In the sky the heavenly crocodile turns around with the
pole star as its pivot, in the same way as tribal crocodile images. Moreover, on the Indus tablets
depicting a procession of animals, the crocodile appears not in the lower register with the other
animals but in the upper register corresponding to the sky."

N. Ganesan
http://nganesan.blogspot.com

On Thu, Nov 12, 2020 at 1:35 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

Virus-free. www.avg.com
2019JAHH...22..294S.pdf

N. Ganesan

unread,
Nov 13, 2020, 10:29:42 PM11/13/20
to vallamai, housto...@googlegroups.com, K R A Narasiah, kra narasiah, Ganesan V
> ”வானின்றுலகம்” வழங்கி வருதலால் = ”வான் நின்று உலகம்” வழங்கி வருதலால் (குறள்).
> அதுபோலே, ”செம்மீனிமைக்கும்” மாக விசும்பின் = ”செம்மீன் நிமைக்கும்” மாக விசும்பின் (புறம் 60)
> எனச் சந்திப்புணர்ச்சி பிரியும்.

(1) செம்மீனிமைக்கும் மாக விசும்பின் - மருத்துவன் தாமோதரனார் (புறம் 60).
= செம்மீன் நிமைக்கும்.

(2) வானின்று உலகம் வழங்கி வருதலால் (குறள்)
= வான் நின்று உலகம்

(3) சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல் வளைக்கை மகடூஉ’’ பெரும்பாணாறு 302-4
= கற்பின் நறுநுதல்

(4) வடமீனிகர் கற்பினாளை - வில்லிபாரதம்
= வடமீன் நிகர் கற்பினாளை.

இவ்வாறு மன்றல் அயர்வித்தபின், ஈன்ற காதல்
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற,
மை வார் அளக வடமீனிகர் கற்பினாளை
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார்.

இவைபோல, னி = ன் + நி எனப் பிரிபடும் செய்யுள்கள் தாருங்கள்,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 15, 2020, 1:23:39 PM11/15/20
to vallamai, housto...@googlegroups.com, K R A Narasiah, kra narasiah, The Hindu - Subramanian Thinniam Sivam, rajan...@gmail.com, Subbarayalu Yellava, bavanit...@gmail.com
Sri. T. S. Subramanian, who reported Tamil Brahmi for many decades in The Hindu, Madras newspaper wrote:
>> 🙏🙏🙏👏👏👏👏👏👌🏾👌🏾👌🏾Solid scholarship.
Thanks, Shri. TSS. There is a Technique of Suggestion (Dhvani) in this poem. In Akam poems (Interior Landscape, A. K. Ramanujan called it), there are mainly 2 kinds: uLLuRai uvamam and iRaicci. The dhvani in this PuRam poem is interesting. முதல் வரிகளில், வசிட்டனும் - அருந்ததி தம்பதியரை நினைவுக்குக் கொணர்கிறார் மருத்துவனார். கிழக்குக் கடற்கரையில் இருந்து தென்கிழக்கு ஆசியா (மலாயா, யாவகம் > சாவகம், ஜாவா, ..) கடலாடுவோருக்கு உறுதுணையாகிய வடமீனைச் செம்மீன் என்றார். முழுநிலவைத் (உவவுமதி) தொழுவது மரபன்று. பிறைதான் பெண்கள் தொழுவர். இங்கே, விதிவிலக்காக, பாணனும், விறலியும் சேர்ந்து உவாநாளில், சோழன் வெண்கொற்றக் குடையென என்ண்ணி வாழ்த்துகின்றனர். எனவே, இது குடைமங்கலம் என்னும் துறை யாயிற்று. பாடாண்டிணைச் செய்யுள். பாணன் - விறலி தம்பதியருக்காகவே, வசிட்டன் -செம்மீன் தம்பதியரை நினைவுக்கு வரும் சப்தரிஷி மண்டிலத்தை முதலில் கூறித் தன் பாடலை யாக்கத் தொடங்குகிறார் எனலாம். இது பாட்டில் உள்ள அரிய தொனிப்பொருள்.

பெப்ரீசியஸ் 18-ஆம் நூற்றாண்டு அகராதியில் நிமைத்தல் மற்றும் நெமைத்தல் வினைச்சொல்லைக் குறிப்பிடுகிறார். மேலும், கண்ணிமை = கண்ணிமை (கண்+இமை or நிமை) எனப் பதிந்துள்ளார். Dr. G. U. Pope (1893), நாலடியார் (பக். , 293) கண் நிமை/இமை என்கிறார். முன்பு, திருப்புகழில் இருப்பதும் காட்டினேன். நிமிஷம், நிமி என்பவனின் புராணக் கதை ஓர்க. நிமிஷ - நிமிழ்-தல் (cf. ஞிமிறு, நிமிண்டு-, ...) என்னும் வினை என்னும் சொல்லாகத் தெரிகிறது. கலூழ்- கலூஷ என்பது போல.  ப்ராமி எழுத்தில் ஆர்வமுடையவர் நீங்கள். ஹிண்டு பத்திரிகையில் பல பதிற்றாண்டுகள் ஐராவதம், கா. ராஜன், ... போன்றோர் தமிழ் பிராமி ஆய்வுகளை வெளியுலகிற்கு அறிவித்தவர். ஞெகிழ்-நெகிழ்- இச்சொல்லில் தொடங்கும் மந்திரத்தைக் கொண்ட மகர விடங்கர் சிற்பம் ஹரியானாவில் கிடைத்துள்ளது. இதை வெளியிட்ட திரு & திருமதி. அர்விந்த் மஞ்சுல் போன்றோர் பன்றி எனக் கொடுத்துவிட்டனர். அது பிழை. பன்றி, இன்றைய இந்தியா போலவே ஓர் உயர்ந்த விலங்காக, சிந்துவெளியில் இல்லை என்பது அதன் கலை முத்திரைகளில் அறியலாகும். “ஸம் ஞக” என்பது முதல் வரியில் உள்ள ஆதிகாலப் பிராமி ஆகலாம். ஞெகிழ்- > ஞகர்- ”ஞக” என்னும் மந்திரம் கொண்டு தொடங்குகிறது. இன்றும், நகர் என்றால் கடியால் முதலையின் பெயர் வடக்கே. நகளீசர், இப்போது லகுளீசர் என வழங்குகிறது. Gandharan thesis of Brahmi origin, Brahmi was designed specifically for Indo-Aryan languages first.I have given some recent ref.s to start with. E.g., prof. Michael Lockwood.
http://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html
இதன் பின்னர், பிராமி தமிழகம் வந்து கொடுமணல், பொருந்தல், தாதப்பட்டி, கீழடி, ... எனச் செல்கிறது எனத் தொல்லியல் காட்டுகிறது.

பேரா. ப. பாண்டியராஜா இணைய தளத்தில், “ன் ந*” (ந்* - நகார எழுத்து உயிர்மெய் வருக்கம்) தேடினால் ஏராளமான காட்டுகள் கிடைக்கும்.
5 காட்டுகள் தருகிறேன்:

> ”வானின்றுலகம்” வழங்கி வருதலால் = ”வான் நின்று உலகம்” வழங்கி வருதலால் (குறள்).
> அதுபோலே, ”செம்மீனிமைக்கும்” மாக விசும்பின் = ”செம்மீன் நிமைக்கும்” மாக விசும்பின் (புறம் 60)
> எனச் சந்திப்புணர்ச்சி பிரியும்.

(1) செம்மீனிமைக்கும் மாக விசும்பின் - மருத்துவன் தாமோதரனார் (புறம் 60).
= செம்மீன் நிமைக்கும்.

(2) வானின்று உலகம் வழங்கி வருதலால் (குறள்)

= வான் நின்று உலகம்

(3) சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல் வளைக்கை மகடூஉ’’ பெரும்பாணாறு 302-4
= கற்பின் நறுநுதல்

(4) வடமீனிகர் கற்பினாளை - வில்லிபாரதம்
= வடமீன் நிகர் கற்பினாளை.
http://www.tamilvu.org/slet/l3800/l3800uri.jsp?song_no=588&book_id=57&head_id=54&sub_id=1375
இவ்வாறு மன்றல் அயர்வித்தபின், ஈன்ற காதல்
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற,
மை வார் அளக வடமீனிகர் கற்பினாளை
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார்

(5) உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
= உறின்நட்டு அறினொரூஉம் ...

மருத்துவன் தாமோதரனார் புறநானூற்றுப் பாடலும், செம்மீன் என்பது அருந்ததி வடமீன் எனும் விளக்கமும்:
https://groups.google.com/g/vallamai/c/3r59oYXld5E

பிற பின்!
நா. கணேசன்

Virus-free. www.avg.com

வேந்தன் அரசு

unread,
Nov 15, 2020, 8:19:08 PM11/15/20
to vallamai, housto...@googlegroups.com, K R A Narasiah, kra narasiah, The Hindu - Subramanian Thinniam Sivam, K Rajan, Subbarayalu Yellava, bavanit...@gmail.com
நிமை என்ற சொல் பயிலும் வேறு இடம் உண்டா?

இந்தப்பாடலில் இமை எனில் ஒளிரும் என்ற பொருள்தானே!

பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே,

ஞாயி., 15 நவ., 2020, பிற்பகல் 11:53 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeNbxb4Dy4Y63vvrFuVi_hbNp6AsEv7-X0Ln9Dj-TCE%3Dg%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Nov 16, 2020, 6:21:19 AM11/16/20
to vallamai, housto...@googlegroups.com, K R A Narasiah, kra narasiah, The Hindu - Subramanian Thinniam Sivam, K Rajan, Subbarayalu Yellava, bavanit...@gmail.com
On Sun, Nov 15, 2020 at 7:19 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
நிமை என்ற சொல் பயிலும் வேறு இடம் உண்டா?

உண்டு. உ-ம்: கலித்தொகை 70
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே		15
நீர் இதழ் புலரா கண் நிமை கூம்ப இயைபவால்
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின்
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே
என ஆங்கு
ஏனெனில், நிமைக்கிறது இன்றும் தமிழில் வழங்கும் சொல், காலமெல்லாம்
இலக்கியங்களில் உள்ள வினைச்சொல். கண் நிமை எனப் பிரித்து 250 ஆண்டு முன்,
பெப்ரீசியஸ் எழுதியுள்ளார். எனவே, செம்மீன் நிமைக்க (புறம் 60).
உவேசா சொல்வதுபோல், செம்மீன் செவ்வாய் எனைல் நிமைக்க/இமைக்க பொருள் பொருந்துவதில்லை.

புல்- புலை ‘meat, stench, foul smell, blood, menstrual blood' etc., புலி 'meat-eater, carnivorous mammal - large cat'.
Similarly,
In Proto-Dravidian, nim- is the root for Nimi (a name), nimisha 'time measure of blinking', imai 'eye-lid' < nimai.

ஏற்கெனவே, அமணர் என்பதில் சமணர் வராது என உங்களுக்கு பல ஆண்டு முன்னர் குறிப்பிட்டேன்.
சமணர் > அமணர்; சிப்பி > இப்பி, ...
க், ச், ந், ம், ய், வ் - இவை சொன்முதல் அழிபட்டுப் பல சொற்கள் தோன்றும்.

யால்- “Banyan tree" > ஆல் (ஆல மரம்). யால்- என உள்ள இடங்களை தமிழ் இலக்கியங்களில் தொகுக்கலாம்.

விந்து (வித்து) > இந்து (ஸம்ஸ்கிருதத்தில்). வடக்கே,  விந்து எனும் தமிழ்ச்சொல் bindu என்ப.
(1)விடங்கர் > இடங்கர் “Gharial, one of 3 species of crocs in India, mentioned in old Tamil, the source of Linga worship initially for VaruNa as in Gudimallam, later Pallava perios as god Shiva"
(2) விந்து > இந்து ‘தந்திரயாநத்தில் முக்கியச் சொல், யோக நூலில் திருமந்திரம் தந்திரம் எனப் பிரியும்;
drop, dot, Soma, semen, moon ..' தமிழில் விந்துமதி/பிந்துமதி வெண்பாக்கள் இலக்கணத்தில் உண்டு. இந்துமதி வெண்பா எனலாம்.
...
இவை போல,
(3) வரி > அரி (அரிகி/அரிசி). வேளிர் வட இந்தியாவில் இருந்து கொணர்ந்த வேளாண் பயிரில் முக்கியமானது. 3000 ஆண்டு இருக்கலாம். வேள் ஒருவன் இறந்தபோது உடைத்த குடத்தில் கொற்றி, விடங்கர், நெல், நெல்வயலின் கொக்கு காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பழைய சமயக் கதை ஆதிச்சநல்லூர்ப் பானையோட்டில் சொல்லப்பட்டுள்ளது

நுண்ணி > உண்ணி, ...
 

இந்தப்பாடலில் இமை எனில் ஒளிரும் என்ற பொருள்தானே!

ஆம். கண் நிமைத்தலின் பொருள் விரிவாக்கம்.
Sword, made of Wootz steel, "flashing, flickering" is told as "imaiththal".
In dynamic movement, different shades of light flickering across - just like eye lids blinkering (nimaittal-) or winking (cimiTTu-).

In Kinnimangalam lingam, ekan (< eHku) is found. Prof. K. Rajan and his student Dr. Ramesh have
published a ~ 1000 BCE eHku "Wootz" sword from Kongunad, near Chera mountain, the Kolli hills.

NG

kanmani tamil

unread,
Nov 16, 2020, 9:03:59 AM11/16/20
to vallamai
னி = ன் + நி; என்று அமைந்திருக்கும் பாடலடி ஒன்று...
எந்த இலக்கியம் என்று நினைவில் இல்லை. ஏதோ ஒரு இலக்கண நூற்பாவிற்கு சான்றுப்பாவாக இருந்திருக்க வேண்டும்; புறப்பொருள் வெண்பாமாலை...?

"என்னை முன்னின்று கன்னின்றவர்" =
என் ஐ முன் நின்று கல் நின்றவர் 

சக 



N. Ganesan

unread,
Nov 16, 2020, 9:30:03 AM11/16/20
to வல்லமை
On Monday, November 16, 2020 at 8:03:59 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
னி = ன் + நி; என்று அமைந்திருக்கும் பாடலடி ஒன்று...
எந்த இலக்கியம் என்று நினைவில் இல்லை. ஏதோ ஒரு இலக்கண நூற்பாவிற்கு சான்றுப்பாவாக இருந்திருக்க வேண்டும்; புறப்பொருள் வெண்பாமாலை...?

"என்னை முன்னின்று கன்னின்றவர்" =
என் ஐ முன் நின்று கல் நின்றவர் 

“என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்னை முன்னின்று கன்னின்றவர்” (குறள்)  

kanmani tamil

unread,
Nov 16, 2020, 9:45:09 AM11/16/20
to vallamai
நன்றி. 
சக 

N. Ganesan

unread,
Nov 16, 2020, 9:09:30 PM11/16/20
to வல்லமை
On Monday, November 16, 2020 at 8:45:09 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
நன்றி. 
சக
 
ன் எழுத்து இரட்டித்தும், இரட்டிக்காமலும் சந்தி ஏற்படுகிறது.
செம்மீன் நிமைக்கும் = செம்மீனிமைக்கும்
உறின் நட்டு = உறினட்டு
கற்பின் நறுநுதல் = கற்பினறுநுதல்
...
கல் நின்றவர் = கன்னின்றவர்
கண் நிமை(இமை) = கண்ணிமை
....

யால் (விழுது போன்ற துதிக்கை) + நை விகுதி ==> யானை,
பூல் (பூரி-த்தல், உடலை வளைத்தல்) + நை விகுதி ==> பூனை
... (இவற்றில் இரட்டிப்பு இல்லை).

N. Ganesan

unread,
Nov 17, 2020, 8:00:16 AM11/17/20
to vallamai, housto...@googlegroups.com
இந்தப்பாடலில் இமை எனில் ஒளிரும் என்ற பொருள்தானே!

ஆம். மின்மினி இருளில் இமைக்கிறது என்பது போல, உருக்கு (வுட்ஸ்) வாள் மின்மினுக்குகிறது.
ஒரு நல்ல பாடல், இப்போது:
சின்ன தவளைகள் சத்தமிடக் - கூட்டில்
சிட்டு துணைநாடி முத்தமிட
மின்மினி பொன்னெனக் கண்சிமிட்ட - வண்ண
மின்னலும் மேகத்தைத் தான்நிமிட்ட

நிமிஷ- (Sanskrit) < நிமிழ- நிமிட்டுதல் "to blink"
சிமிழ்- சிமிட்டு “to wink"

-------

ஆம். கண் நிமைத்தலின் பொருள் விரிவாக்கம்.
Sword, made of Wootz steel, "flashing, flickering" is told as "imaiththal".
In dynamic movement, different shades of light flickering across - just like eye lids blinkering (nimaittal-) or winking (cimiTTu-).

In Kinnimangalam lingam, ekan (< eHku) is found. Prof. K. Rajan and his student Dr. Ramesh have
published a ~ 1000 BCE eHku "Wootz" sword from Kongunad, near Chera mountain, the Kolli hills.

NG


பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே,

வேந்தன் அரசு

unread,
Nov 17, 2020, 8:24:34 PM11/17/20
to vallamai


செவ்., 17 நவ., 2020, முற்பகல் 7:39 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Monday, November 16, 2020 at 8:45:09 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
நன்றி. 
சக
 
ன் எழுத்து இரட்டித்தும், இரட்டிக்காமலும் சந்தி ஏற்படுகிறது.
செம்மீன் நிமைக்கும் = செம்மீனிமைக்கும்
உறின் நட்டு = உறினட்டு
கற்பின் நறுநுதல் = கற்பினறுநுதல்
...
கல் நின்றவர் = கன்னின்றவர்
கண் நிமை(இமை) = கண்ணிமை
....

யால் (விழுது போன்ற துதிக்கை) + நை விகுதி ==> யானை,
பூல் (பூரி-த்தல், உடலை வளைத்தல்) + நை விகுதி ==> பூனை
... (இவற்றில் இரட்டிப்பு இல்லை).

 நிமை என்ற சொல் வேறு எங்கேனும் தென்படுகிரஹடா?

kanmani tamil

unread,
Nov 18, 2020, 12:54:39 AM11/18/20
to vallamai
///நிமை என்ற சொல் வேறு எங்கேனும் தென்படுகிரஹடா?/// 4மணி நேரத்திற்கு முன்னர் வேந்தர் ஐயா எழுதியது.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு நூற்பா 7
"கண்ணிமை நொடி அவ்வே மாத்திரை" (நான் பாடம் படித்த காலத்தில் இப்படித்தான் பாடப்புத்தகத்தில் பார்த்த நினைவு.)
இந்த நூற்பா தவறாக
                                  'கண் இமை நொடி' என்று பிரிக்கப்பட்டுப் பொருள் சொல்லப்படுவதாக எண்ணுகிறேன் ஐயா.

கலித்தொகை 70 பற்றி இதே இழையில் முன்மடல்களில் குறிப்பு உள்ளது ஐயா.
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 18, 2020, 2:20:33 AM11/18/20
to vallamai, housto...@googlegroups.com
On Tue, Nov 17, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///நிமை என்ற சொல் வேறு எங்கேனும் தென்படுகிரஹடா?/// 4மணி நேரத்திற்கு முன்னர் வேந்தர் ஐயா எழுதியது.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு நூற்பா 7
"கண்ணிமை நொடி அவ்வே மாத்திரை" (நான் பாடம் படித்த காலத்தில் இப்படித்தான் பாடப்புத்தகத்தில் பார்த்த நினைவு.)
இந்த நூற்பா தவறாக
                                  'கண் இமை நொடி' என்று பிரிக்கப்பட்டுப் பொருள் சொல்லப்படுவதாக எண்ணுகிறேன் ஐயா.

கண் நிமை எனப் பிரிப்பது தொன்மையான தமிழின் சொல்லைக் காட்டும். இதுபற்றி,
பெப்ரீசியஸ் 18-ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளார். பாடல்களில், யால மரம்
என்பதாக இருந்தால் ஆல மரம் என்றும், விடங்கர் என்பதை இடங்கர்  (முதலையின் 3 சாதிகளுள்
ஒன்று என்பார் தொல்காப்பிய உரைகாரர்கள். இன்றைய விலங்கியல் விஞ்ஞானம் சொல்வதும் அஃதே.)
என்றும் பிரித்து அச்சிடுவர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புலவர்கள் கருதியது என்ன என
மொழியியல் நோக்கிலும் பார்க்கப்பட வேண்டும். சங்க காலத்தில் நிமை என்று
இமை வழங்கியிருக்கலாம். இதை இன்றும் புழங்கும் நிமை, நிமிட்டு-/நிமிண்டு- (Cf. நிமிறு-/ஞிமிறு)
... போன்ற வினைச்சொற்களால் அறியலாம். மேலும், இவ்வினைச்சொற்கள் நிமிஷ என்னும்
வடசொல் த்ராவிடபாஷைகள் தரும் சொல் எனவும் அறிவிக்கிறது (Sanskrit nimi, nimisha are loan words
from Dravidian). நிமிட்ட- என வரும் இன்றைய பாடல், ஃபேஸ்புக்கில் இருந்து கொடுத்தேன் (அகரம் அமுதன் பாட்டு).

N. Ganesan

University of Madras Lexicon

நிமை

nimai   n. இமை cf. nimēṣa.Eyelid; இமை நீலிக்குக் கண்ணீர் நிமையிலே. (பழ.).  

J.P.Fabricius Tamil and English Dictionary

நிமை

nimai   s. (com. இமை) eyelid.
நிமைப்பொழுது, ஒரு கண்ணிமை; a twinkling of the eye, a moment.
நிமை மூட, to close or shut the eye.

நிமை

nimai   VI. v. i. twinkle, இமை.
நிமைக்கிறதற்குள்ளே வருகிறேன், I shall come in a moment.

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

நிமை

nimai   s. [com. இமை.] Eyelid.

 

N. Ganesan

unread,
Nov 18, 2020, 2:44:22 AM11/18/20
to vallamai, housto...@googlegroups.com
பாம்பன் சுவாமிகள்: ஆனந்தக் களிப்பு
நாலு அரை தன்னில் ஆகாய - கம
னம்தனக்கு உண்டாம் அதில் முக்கால் குன்றில்
கோலப் பதினான்கு உலகும் - நிமை
கொட்டும் அளவிலே
சுற்றி வரலாம். (ஆனந்த)

நிமைத்தல், நிமிழ (> நிமிஷ), நிமிட்டு/நிமிண்டு.
வடமொழியின் சில புராணக் கதைகள் பற்றிப் பாவாணர்:

பிராமணர் தென்னாட்டுத் தமிழநாகரிகச் சிறப்பைப்பற்றிக் கேள்விப்பட்டு,இங்கும் தம் மேம்பாட்டை நிறுவுமாறு, நைமிசஅடவியில் அடிக்கடி மாநாடு கூடிச் சூழ்ந்ததாகத்தெரிகின்றது.

ஒரு நிமை (நொடி) நேரத்தில் ஒருபெரும்படை கொல்லப்பட்ட இடம், நைமிசம் என்றுபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.இமை-நிமை - . நிமி - நிமிஷ - நைமிஷ - நைமிச.

நைமிசாடவி மாநாட்டுத்தீர்மானத்தின்படி, அகத்தியர் தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். அவர் காசியினின்றுவிந்தமலை யடைந்து அங்கிருந்து தண்டக அடவி வந்துதங்கி, அதன்பின் காஞ்சி யடைந்து, பின் காவிரிதோன்றும் சையம் என்னும் குடகுமலை சென்று, குடமலைவழியாகப் பொதியமலை போய்ச் சேர்ந்ததாகக்காஞ்சிப் புராணங் கூறுகின்றது.

விந்தமலை கடக்க முடியாத தென்றுஆரியர் நெடுநாளாகக் கருதிக்கொண்டிருந்ததனால்,அகத்தியர் அதைக் கடந்து வந்தபோது அதன்செருக்கை யடக்கினதாகக் கூறினர்.

"யோகமுறு பேருயிர்கள் தாமுலைவு றாமல்
ஏகுநெறி யாதெனமி தித்தடியி னேறி
மேகநெடு மாலைதவழ் விந்தமெனும் விண்டோய்
நாகமது நாகமுற நாகமென நின்றான்" 

(ஆரணி. அகத்.39)

என்பது கம்பராமாயணம்.

நிமை-நிமி

     இமை = இமைத்தல், கண்ணிமை.

     ம. இம, க., து. இமெ.

     இமை-நிமை = இமைத்தல், கண்ணிமை. க. எவே.

     "நீலிக்குக் கண்ணீர் நிமையிலே" (பழமொழி).

     வடவர் நிமி என்னும் சொல்லை இக்குவாவின் மகன் (நிமி)
பெயரொடு தொடர்புபடுத்தி, அவன் வசிட்டர் சாவிப்பினால் தன்
உடம்பை யிழந்து எல்லா வுயிரிகளின் கண்களையும் இடமாகக்
கொண்டானென்று, ஒரு கதை கட்டுவர் (விஷ்ணு புராணம், 4: 5).

வேந்தன் அரசு

unread,
Nov 18, 2020, 4:40:48 AM11/18/20
to vallamai, housto...@googlegroups.com
<நீலிக்குக் கண்ணீர் நிமையிலே" (பழமொழி)>

பழமொழி நானூறா? அதில் எந்தப்பாடல்?

புத., 18 நவ., 2020, பிற்பகல் 1:14 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Nov 19, 2020, 2:05:00 AM11/19/20
to vallamai
மருத்துவன் தாமோதரனார் என்பது புலவரின் பெயர். 
அவர் பாணருள் ஒரு பிரிவினர்; அதாவது திணைமாந்தர் என்கிறீர்கள். 

பெயர் அடிப்படையில் எனக்குத் தோன்றும் ஐயம்...

தாமன் + உதரன் = தாமோதரன்; அல்லவா?!
இது வடமொழிப் புணர்ச்சி விதிப்படி அமைந்துள்ள பெயர். 

தொகையிலக்கியக் காலத்தில் தமிழில் வடசொற்கள் அருகித்தான்  வழங்கின. 
வடமொழிப் புணர்ச்சி விதி எப்படித் திணைமாந்தர் பெயரில் இடம் பெற்றது?

எனக்கென்னவோ இந்தப் புலவர் திணை மாந்தர் என ஏற்றுக் கொள்ள இடமில்லை போல் தெரிகிறது. தாமன் என்ற பெயர் தொகை இலக்கியக் காலத்துப் பெயராக வழங்கியிருக்க...

சக 

 

N. Ganesan

unread,
Nov 19, 2020, 4:48:49 AM11/19/20
to வல்லமை
On Thursday, November 19, 2020 at 1:05:00 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
மருத்துவன் தாமோதரனார் என்பது புலவரின் பெயர். 
அவர் பாணருள் ஒரு பிரிவினர்; அதாவது திணைமாந்தர் என்கிறீர்கள். 

நான் கூறியிருப்பது மஹாவிஷ்ணுவின் 12 திருநாமங்களில் ஒன்றாகிய (கடைசிப் பெயர்) தாமோதரன்
பற்றியது அன்று.

நேற்று, கொங்கு அம்மாள் எனப்படும் பிரெண்டா பெக், கனடாவில் இருந்து அழைத்தார்.
மருத்துவன்களைப் பற்றிப் பேசினோம். அண்ணன்மார்சாமி கதை என்னும் வீரர்கதையை
இன்றளவும் பாடும் பாணர்கள்  மருத்துவன் (அ) மங்கலன் எனப்படும் நாவிதன் சமூகஞ் சார்ந்தவர்கள்.

மருத்துவன் என்பது நாவிதருக்குப் பரியாயப் பெயர். உடல் அமைப்பு, ஸர்ஜரி, மருத்துவம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்கினோர். பாணர்களில் ஒருவகையினர் இம் மருத்துவர்கள். 'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்? (கலித்தொகை 68.19 ). பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனை(த்) [...] எனப் பல இடங்களில் சங்க இலக்கியம் காட்டும். பொலிக பொலிக என்று வாழ்த்தும் மருத்துவக் குடியினரை கலியாணம், இழவு ... இன்றும் காணலாம். பாணர்களில் ஒரு வகையினர் இவர்கள். எனவே, மருத்துவனுக்கு மங்கலன் என்றும் கூறுதல் உண்டு. மங்கல வாழ்த்து இசைப்பதும், நாதசுரம் ஊதுதலும் உண்டு. இவர்களது மருத்துவத் திறத்தால் “ஆமாத்திய அந்தணர்” என்று அழைப்பர். மங்களாதிராசன் என்று கல்வெட்டுகளில் மங்கலன்/மருத்துவன் குறிப்பிடப்படுகிரான். ஊருக்கு ஒரு சில குடும்பங்களே உள்ளதால், இவர்கள் பங்கு தமிழ் மற்றும் இந்திய வரலாற்றில் அறியப்படாததாக உள்ளது. அண்மைக் காலத்தில் திருமூர்த்திமலைப் புராணம், சிவராத்திரிப் புராணம் போன்றன செய்த வேலாயுத பண்டிதர், தமிழிசை ஆராய்ச்சியில் முத்திரை பதித்த ஆபிரகாம் பண்டிதர், மாணிக்கவாசகர் (ஆமாத்தியர் குலம்), பல்லவர் படைத் தளபதி பரஞ்சோதி, ... போலப் பலர் மருத்துவக் குடியினர் ஆவார். இந்திய விஞ்ஞானத்தில் இசை, நடனம், மருத்துவர், சர்ஜரி, ... இவற்றில் மங்களாதி அரையரின் சேவை மகத்தானது.
Reply all
Reply to author
Forward
0 new messages