இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
சக
On Sun, 13 Apr 2025, 10:21 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளை முதன் முறையாக அச்சிட்டு மக்களிடம் எடுத்துச் சென்றவர், முல்லை முத்தையா ஆவார். தமிழ்ப் புது வருஷமாக, சுபானு ஆண்டு 1943-ல் பிறந்தது. அதற்கு, வாழ்த்துப்பா பாரதிதாசனிடம் பெற்று முல்லை முத்தையா அச்சிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாக, சுபானு, சித்திரை 1-ம் நாள் (1943 CE) பாரதிதாசன் பாடிய வாழ்த்து இது.
சுபானு (1943) வருட வாழ்த்து
--------------------
முந்நூற் றறுபதுன் முத்துச் சிலம்படி
ஒவ்வொன் றாக ஊன்றி, நீ "உமக்குச்
செம்மை, செம்மை, செம்மை" என்று
நடந்துவா! எம்மனோர் நல்வாழ்வு
தொடங்கும் வண்ணம் தூயோய் வாழியே!
- பாரதிதாசன்
முதன்முறையாக பாவேந்தரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தைத் தன் தொகுப்பில் தேடித் தந்த முல்லை முத்தையா அவர்களுக்கு நன்றி பல.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தைப் புரட்சிக் கவிஞர் பாடியதற்கு அவரது சங்க இலக்கியப் பயிற்சியும், புலமையும் துணைநின்றன எனலாம்.
சித்திரையைப் புரட்சிக்கவி தொடக்க நாள் என வர்ணிப்பது, சங்க நூல்களில் தமிழ்ப் புத்தாண்டு சுட்டும் "தலைநாள்" என்பதுடன் ஒக்கும்.
வேங்கை, கொன்றை மலர்கள் பூப்பது தமிழ்ப் புத்தாண்டின் போது தான். எனவே, "தலைநாள்" என்கிறது சங்க நூல் வழமை.
"தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை"
- மலைபடுகடாம், பாடல் வரி 305
"தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்"
-சிறுபாணாற்றுப்படை
பாடல் வரிகள் (145-149)
இதன்முலமாக, வேங்கை மலர்கள் பூக்கும் சித்திரை மாதத்தை தலை நாளாக, அதாவது முதல் நாளாக மற்றும் இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், அதை தலைநாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள்
இளவேனில் காலமான சித்திரை மாதத்தை தமிழர்கள் முதல் மாதமாக கொண்டுள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிந்துகொள்ளலாம். பேரா. ச. கண்மணி என் மடலுக்கு இட்ட மறுமொழி,
https://groups.google.com/g/vallamai/c/opxGYwOCuX8/m/3cONu7jmAAAJ
(1) தமிழர் பஞ்சாங்கம் கணித்தல், 4500 ஆண்டுப் பழமை கொண்டது. முன்பெல்லாம், நக்ஷத்திரங்கள் (Lunar Mansions) கோட்பாடு, கணிப்பு சீனர்கள் ஏற்படுத்தியது என தொல்வானியல் ஆய்வர்கள் கூறிவந்தனர். இப்போது அது மறுக்கப்பட்டு, சிந்துவெளி இந்தியர்கள் செய்தது Lunar Mansions என்றாகிவிட்டது. திங்கள்/மாதம் (< மதி) ~30 நாள் கொண்டது. (29.53 நாள்). இது தான் இந்தியா முழுமையும் சந்திரமானப் பஞ்சாங்கம் (Lunar Calendar). பாரதிதாசன் ஓர் ஆண்டுக்கு 360 நாள் என திங்களை அடிப்படையாகக் கொண்ட கணக்கைச் சொல்கிறார். ஆண்டாள், மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்னும் போது, பூர்ணிமாந்த மாதத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு காலப் பஞ்சாங்கக் கணிப்பைப் பாடுவதாகத் தோன்றுகிறது. சங்க காலத்தில் இது, சக வருஷ காலண்டரைத் தமிழ் மன்னர்கள் ஏற்றமை, "ஆடு தலையாக" (நெடுநல்வாடை) என்று கனலிவட்டம் பாண்டியன் அரண்மனையில் இருந்த ஓவியம், ஆடு கோட்பாட்டை, வடக்கே இருந்து கொணர்ந்த சேர மன்னன் போன்றவற்றால் அறிகிறோம். ஏற்கெனவே சொன்ன நக்ஷத்திரக் கணிப்புக்கு முதன்மை கொடுத்து, பௌர்ணமியில் அந்த நட்சத்திரம் என இயைத்து தமிழ் வருஷத்தின் 12 மாதங்களின் பெயர்களை வைத்துள்ளனர். தமிழ் மாதப் பெயர்களுக்கான இலக்கணத்தைத் தொல்காப்பியர் பாடியுள்ளார். சேர அரசன், ஆடு கோட்பாடு ஏற்படுத்தினபோது, இப்போதைய தமிழ் LuniSolar Calendar தொடங்குகிறது.
(2) பாரதிதாசன் தை மாதம் தமிழ் வருஷம் பிறப்பு என்று பாடிய இரு பாடல் உண்டு. அப்போது நட்சத்திரக் கணிப்பின் பழைமை போன்ற செய்திகள் தெரியாது. பின்னர் தமிழறிஞர்கள் எடுத்துக் கூறியிருக்கவேண்டும். சிந்தித்து, சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு முதல் திங்கள் எனப் பின்னர் பாடியுள்ளார். பிற பின்.
https://groups.google.com/g/vallamai/c/RqdyXU5wgKM/m/CWrVsWxTAwAJ
சென்ற முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆட்சியில், "முத்திரை பதிக்கும் சித்திரை" எனத் தமிழ்நாட்டு அரசாங்கம் புத்தாண்டு விழாமலர் வெளியிட்டுள்ளது. பல கவிஞர்கள், கட்டுரையாளர்கள் (உ-ம்: பழ. கருப்பையா) எழுதியன காண்க,
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010861_முத்திரை_பதிக்கும்_சித்திரை.pdf
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
நா. கணேசன்
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf85r2QhrgLrvz68CakoJp54utKzpO3VmnWegiN%3DUiuBw%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuGLaP7MfPQzqb84ja3TmaCHzCp%2ByhNmSN3FLns6z4kVQ%40mail.gmail.com.
திங்கள்தன் தலைக்கொண்ட சங்கரன் புலவனாய்ச்
சீராட்டிப் பாராட்டவும்
சிறுவனாம் கந்தனும் தான்வேண்டிப் பெற்றதோர்
செல்வமாய் ஆராட்டவும்
சங்கங்கள் ஒருமூன்றில் சிங்காதனம் பெற்று
தனியாட்சி நீ செய்தனை
தணியாத இனிமையின் அணியாக நல்லறச்
சத்தியம் நீ காத்தனை
எங்களரும் அன்னையே என்றுமிளங் கன்னியே
இளைத்திடா இன்ப ஊற்றே
எண்ணங்கள் பதிவாக்கி வண்ணங்கள் உருவாக்கி
எத்தனை நீ தந்தனை
மங்காத புகழ்தனைப் பங்காகக் கொண்டெங்கள்
வாழ்வுக்கு வரவாகினாய்
வாழிய செந்தமிழ் அன்னையே தெய்வமே
வாழ்கவே, வாழ்க வாழ்க *
அறுசீர் விருத்தம்
பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்
பதினெண் கீழ்க்கணக்கும்,
சித்தம் மயக்கும் சிந்தா மணியும்
சிலம்பும், மேகலையும்,
சத்தாம் கம்ப ராமா யணமும்,
சமயப் புராணமதும்,
முத்தாம் அன்னை மேனிக் கழகாய்
முந்தும் அணிமணியாம்.
அகமும், புறமும், அம்மை கழுத்தில்
அணியும் முத்தாரம்.
அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சி
அவள்கைக் கங்கணமாம்.
தகமை அருண கிரியின் சந்தம்
தாய்க்குச் சலங்கைகளாம்
நிகரில் கவிஞன் பார தியின்பா
நெளியும் புன்னகையாம்.
மாலை, கோவை, துhது, சிந்து,
வண்ணம், அந்தாதி,
சால விருத்தம், யமகம், மடக்கு,
சதகம், பரணி, உலா,
சீலப் பள்ளு, பிள்ளைத் தமிழ்ப்பா,
சிறப்புக் குறவஞ்சி,
ஏலும் பாவை, பள்ளி யெழுச்சி,
எல்லாம் ஒய்யாரம்.
எழுசீர் விருத்தம்
ஆழியைப் போலவே ஆழமும் மண்ணினை
அளந்திடும் வியன்பரப்பும்
சூழுயர் வானினைத் தொட்டிடும் உயர்வதும்
சொல்லிலே கொண்டவள் யார் ?
வாழுமோர் வகையிலே வரலாறு கொண்டதோர்
மாண்பினைக் கண்டவள் யார் ?
வாழிய செந்தமிழ் * வாழிய நம் அன்னை *
வாழிய, வாழியவே *
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCawWdULMQhVmfLktw%2Bg2jUYwsW8kz6CLhORA-kUJ%3D07A%40mail.gmail.com.
--
On Apr 13, 2025, at 22:42, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdz4kVGAaL7ZQg%2BxO%3DYKsC8HB6r463RhBJ84QkewYPiww%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO1%3DxCOgs%2BkZyogB0CWX2pcGeQporbdH6RrLh2c%3Dzu1GA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCQ_niY4H69U7jDzQKzEbPOHAKf8r8FBQ6zyOvg3NgjOA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNT1L-VKZHdt3b7rdD%2BNs5xeVdFQQSoxwANFRVXXt%2BnOQ%40mail.gmail.com.