22 பேர் பெற்ற பிரமதேய நிலக் கல்வெட்டு

8 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Feb 27, 2019, 3:39:10 AM2/27/19
to seshadri sridharan

22 பேர் பெற்ற பிரமதேய நிலக் கல்வெட்டு

மேலதிருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

mela.jpg

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் அமைந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர் கல்வெட்டு. 

பிரமதேயம் என்றால் பிராமணர்க்கு இறையிலியாக வழங்கும் நிலம் என்று தெரியும் ஆனால் அது எப்படியானது என்று விளங்கத் தெரியாது. இக்கல்வெட்டில் அது பற்றிய தெளிவு ஏற்படுகின்றது. வாணகோவரையன் கட்டித் தந்த 22 வீட்டுக் கல்வெட்டை நினைவுபடுத்துவதாக இக்கல்வெட்டு உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் தென்முட்ட நாட்டு மணிக்கயத்து சிவன் கோவிலுக்கும், குலசேகர மங்கலத்து நாயனார்க்கும் வழங்கிய தேவதானத்தின் எல்லையும் கருநிலக்குடி நாட்டு பிரம்மதேயத்தில் ஒவ்வொரு பிராமணரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கான பங்கினை அரை முதல் ஒன்றேகால் நிலம் வரை குறிப்பிடுகின்றது. இந்த வேறுபாடு அவரவர் பொறுப்பிற்கும் தகுதிக்கும் தக்கவாறு அமைந்ததாகலாம். இவர்கள் பெரும்பாலும் சுற்றத்தாராகவே உள்ளனர் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாக உள்ளது. இதில் செய்தி கிடைக்கின்ற அளவில் 21 பிராமணர்கள் இருப்பது தெரிகின்றது இதற்கு மேலும் இருக்கக்கூடும். ஆனால் இக்கல்வெட்டு இறுதி முற்றும் முன்பு உள்ள பகுதி சிதைந்துள்ளதால் அதில் இடம்பெற்றோரின் பெயர்கள் அவர்கான பங்குகள் அறிய முடியாமல் உள்ளது.   இந்த பிரமதேயம் நன்செய், புன்செய் அல்லாத வீட்டு அடிமனை என்றே கொள்ளத்தக்கது. அப்படியானால் வீடு கட்டித் தரப்பட்டதா என்ற செய்தியும் அறியமுடியாமல் உள்ளது.

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் ஜயமகள் / திருப்புயத்திருப்ப எழு க / டலளவு நிலமகள் புணர / க் கடவுள் மேருவி[ற்] கயல் / விளையாட _ _ _ / வந்தம் _ _ _/ நெடு _ _ _ வெண்கு / டைநிழ _ _ _ செங்கோ / ல் நடப்பக் [கருங்]கலி துரந்து / வேத வீதி _ _ / _ _ _ / ஞ்ச வீரமும் _ _ _ புகழுமிகளணி விளங்க _ _ _ / மதிப்பெருச் சடை முடி நாத / னிம்ப திகழ்மணி முடி சூடி வி / ளங்கிய மணியணி வீரஸிம்ஹா / சனத்து வீற்றிருந்தருளிய [கோ] மாறபன்மரான திரிபுவனச் சக்கரவ / த்திகள் ஸ்ரீ விக்கிரம பாண்டிய [தே] / வற்கு யாண்டு13 வது ஸ்ரீ பாண் / டி மண்டலத்து மதுரை உதைய / வளநாட்டுத் தென் / முட்ட நாட்டு திரு / மணிக்கயத்து உடை / யார்த் திருமணிக்கய / முடைய  நாயனார் தேவ / தானம். கருநிலக்குடி நா / ட்டு ப்ரஹ்மதேய[ம்] ஸ்ரீ குலைசே / கரச் [சதுர்வேதி மங்]கலத்து / டைய நாயனார் தேவதான / _ _ _ க் கய நல்லூர் மூலப்பி /_ _ _ / லை[ப் பெ]ருந்தலைக் குளத்தில் வய / லில் மேல் வரம்புக்கு மேற்[கு] / பெருந்தலை குளத்தில் வயலில் / வாயல்ப் பவளசேரிக்கு நின்றும் / _ _ _ ப்போன பெருவ / [ழியே]ய்க் கொண்டு நாலப் பொய் / [கையார்] இக் குளத்துக்கு பாய்கி / ற காலுக்கு மேற்கும் தென்னெல்லை /அத்தாணி நல்லூர்[க்கா] லுக்கு  வடக்கும் மேல்லெல் / லை கிழவர்குறிச்சி வயலுக் / கு கிழக்கும் ஆனை சுரத்தில் நின் / றும் தெற்கு நோக்கிப் போகிற / வழிக்கு கிழக்கும் வடவெல்லை /  தலைமலை ஆற்றுக்கு தெற்கும் இ / _ _ _ / [மா] _ _ _ மும் கீணோக்கிய கிணறும் [மற்றும்] / யெப் பேற்பட்டனவும் / _ _ _ ளிச் / _ _ த்து இருந்து ஸ்ரீ மாஹே[ஸ்வர] _ _ _ / வாஜ கோத்ரத்து _ _ _ / த்துமு _ _  திறபடி _ _ _  / _ _ _ _ / தம்பி ஸுப்ரஹ்மண்ய பட் / டன் பாக[ம்] ஒன்றும் இக்குடியில் / இக்கோத்திரத்து இச்சூத் / திரத்து சுந்தரத் தோளுடை / யான் பட்டன் பாகம் முக்கா / லும் இவன் தம்பி சோலை பிரா / ன் பட்டன் பாகம் அரையும் இவ / ன் மகன் ஸுப்ரஹ்மண்ய பட்டன் பாகம் / அரையும் இக்குடியில் ஸ்ரீ க்ருஷ்ண பட்டன் பாக / ம் ஒன்றும் இக்குடியில் சோலைப் பி / [ரான் பாக]ம் ஒன்றும் இக்[குடியி] / _ _ _ ட வில்லி பட்டன் பா _ _ _ / _ _ _ ப கோத்திரத்து வெ / பிரான் பட்டன் பாகம் _ _ _  கோத்திரத்து / _ _ _ _ / ஒன்றும் இவன் _ _ _ / ண் காடுடைய _ _ _ / இவன் தம்பி _ _ _ / பாகம் ஒன்று _ _ _ / ம் ஹரி கோத்ரத்து இ / ஸுத்திரத்து குரவசேரி ஸ்ரீ / குமார பட்டன் பாகம் ஒன் / றும் [ஸ்வத்தாப] கோத்ரத்து வேற்புறத்து ஸுப்ரஹ்மண்ய ப / ட்டன் பாகம் ஒன்றே காலும் / இக்குடியில் இவன் தம்பி மருளாள / ப் பெருமாள் பட்டன் பாகம்  ஒன்றும் பாரத்து / வாரிய கோத்திரத்து இஸூத்திரத்துக்கு ரோவி / கேசவ பட்டன் பாகம் ஒன்றும் ஹரிதகோத் / திரத்து _ _ _ ஸூத்திரத்து பிறையம்புரத்து சிவநாரா / யண பட்டன் பாகம் ஒன்று இவன் தம்பி / அருளாளப் பெருமாள் பட்டன் பாகம் ஒன்றும் காஸ்ய / ப கோத்திரத்து உருப்புட்டூர் இராமபிரான் பட்டன் / பாகம் ஹரித கோத்ரத்து இஸூத்திரத்து கோமபுறத்து பா / கம் ஒன்றே காலும் இவன் தம்பி முற்றுமாண்டான் _ _ _ / யும் _ _ _ இவன் மகன் திருவரங்கம் _ _ _ / இஸூத்திரத்து காரம்பி செட்டுதிருவேங் _ _ _ / யும் வஸிஷ்ட கோத்திரத்து இ ஸூத்திரத்து _ _ _ / ஒன்றும் இக் கோத்திரத்து இஸூத்திரத்து _ _ _ / பாகம் _ _ _ இ கோத்திரத்து இஸூத்திரத்து / _ _ _

இக்குடியில் – இக்கோவிலில் பணிசெய்யும்; அல்லது இவ்வழியில், கோத்திரத்தில் வந்த (lineage) அல்லது இவ்வூரைச் சேர்ந்த. தெலுங்கில் கோவில் குடி என்று வழங்குகிறது. சுப்ரமணிய, ஸ்ரீ குமார ஆகிய பட்டர் பெயர்கள் ஆந்திரத்தில் இருந்து இங்கு வழங்கும் பெயர்கள். சுந்தர பாண்டியன் வடதமிழகம் கடந்து தென் ஆந்திரத்தில் தனது ஆளுகையை நிறுவியபோது அங்கிருந்து பிராமணர்களை அழைத்து வந்து குடியேற்றிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆகலாம் இவர்கள். 

விளக்கம்: விக்கிரம பாண்டியனின் மெய்கீர்த்தி முதலில் இடம் பெறுகின்றது. அன்றைய திருமணிக்கயம் இன்று திருமாணிக்கம் ஆகிவிட்டது. மேற்கு திசையை குறிக்கும் மேல என்பது ஊருக்கு முன்னொட்டாகிவிட்டது. இதில் பிரமதேய நிலம் பெற்ற 22 பிராமணர் கோத்திரமும் பெயரும் இன்னார்க்கு இன்னார் உறவு என்பதும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. 97 வரிகளுக்கு மேல் செல்வதாக இக்கல்வெட்டு உள்ளது. மன்னவர் கோவில் தமது எனக் கருதியதாலும் அதில் பணியாற்றுவோர் தமது பணியாளர் என்று கருதியதாலும் இவ்வாறு அளப்பரிய கொடைகளை ஈந்துள்ளனர் போலும். அடிமனையை வைத்து என்ன செய்வது? வீட்டை யார் கட்டித்தருவது என்ற கேள்வி எழுகிறது? ஆனால் கல்வெட்டு நடுநடுவே சிதைந்துள்ளதைப் போல இறுதியில் சிதைந்துள்ளதே!! அதனால் கற்பனையை கைவிடவேண்டியது தான். பிற பழங் கோவில்கள் போல இக்கோவிலை அண்டி ஆறு பாய்ந்தது கல்வெட்டில் குறிக்கப்பெறுகின்றது.


mela 3.jpg


வல்லமையில் http://www.vallamai.com/?p=90789

seshadri sridharan

unread,
Mar 2, 2019, 11:53:51 AM3/2/19
to seshadri sridharan, vall...@googlegroups.com
ஏற்கனவே ஒரு அரிசோனன் முன்பொரு பதிவில் பிராமணர் சம்பாதித்து தான் வீடுகட்டினர் என்றார். அவர் சொன்னது பிராமணர்கள் கோவில்பணி அல்லாமல் வணிகம், அரசரிடம் பணி என்று பணி  செய்திருந்தால்   தாம் ஈட்டிய வருவாயில் வீடு கட்டி இருக்க முடியும்.ஆனால் கோவில் பணி பிராமணர்கள் இப்படி பிரமதேயம் பெற்றுதான் வீடு அமைந்திருக்க முடியும். நான் தொல்லியல் துறை தொல்லெழுத்தாளர் திரு நாகராஜனிடம் பேசும்போது பிராமணர்கு வீடு அரசரால் தரப்பட்டது என்றேன். அதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் அது என்ன என்று என்னிடம் வினாவினார்? நான் ஆட்சியாளர்கள் தம்மை புராணசமயத்தின் தலைவர்கள் என்று கருத்திக்கொண்டதால் தம் பணியாளரான பிராமணருக்கு இப்படி சலுகை செய்து தந்தனர் என்றேன். 

சுப. வீ.ர பாண்டியன் 3 கோவில் ஊர்களில் 5,000 பிராமணர்கள் வேதம் பயின்றனர் என்று வெளிநாட்டு பயணி தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டி சொன்னார். ஆனால் அரசர்கள் இப்படி வீடும் வீட்டு மனையும் தந்தனர் என்று அறிந்தால் "தம தம" என்று வானுக்கும் மண்ணுக்கும் குதியாய் குதிப்பார்.   அரசர்கள் புராணசமயத்தின் தலைவர்கள் என்று சொன்னது பலரும் அவர்களை மடாதிபதி பீடாதிபதி ஒப்பிட்டு எண்ணுகின்றனர். அது தவறு. 

https://www.youtube.com/watch?v=3TEzWGSiemo

தமிழ் வேந்தர் காலத்திலும் மடங்கள் இருந்தன ஆனால் இப்போது போல் அவை அதிகாரம் பெற்றுருக்கவில்லை. ஆனால் மக்களிடம் மதிப்பு பெற்றிருந்தனர் மடத்தின் தலைவர்கள். அவ்வளவே. 

தேவரடியார்கள் குறைதீர்க்க அவர்களை நடுவராக கொண்ட செய்தியை சுட்டியில் உள்ள கல்வெட்டு மூலம அறியலாம்.   பதியிலார், தேவடிரயார், இஷபத் தளியிலார் ஆகியோரிடையே ஓர் உடன்பாடு https://groups.google.com/d/msg/vallamai/cCn-bkpg2cU/WK62SfjpBwAJ



Oru Arizonan

unread,
Mar 2, 2019, 12:33:10 PM3/2/19
to vallamai, seshadri sridharan
நல்லதொரு விளக்கம்
ஒரு அரிசோனன்
Reply all
Reply to author
Forward
0 new messages