குய் > குழைதல் பொருளில் தோன்றிய வினைச்சொல்லாம்.
தி.பொ.ச.இனி குழைவான பொருட்களுக்கு மென்மைத் தன்மையும் உண்டு. இதனின்று மென்மைப் பொருளும் தோன்றிற்று என்க. இதனான்,குயக்குழி = மண்ணைத் தோண்டி எடுத்த குழிமண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்பவன் - குயவன்குயம் = குழையும் தன்மையுடைய தனம்.குய் என்பது குழைவுத் தன்மையுடைய நெய் / எண்ணெயையும் குறிக்கும்.குய்ப்புகை = நெய் / எண்ணையின் தாளிப்புப் புகை.இனி, குழையும் பொருட்களுக்கு வளையும் தன்மையும் உண்டு என்பதால் வளைதல் பொருளும் தோன்றிற்று.குயம் = வளைந்த அரிவாள்.இந்த குய் என்னும் வேரில் இருந்தே குஞ்சம் (எ.கா : பட்டுக்குஞ்சம் ), குஞ்சித (வளைந்த), குயம் (புல்), குச்சம் (நாணல்), குச்சு ( புல்லால் வேய்ந்த வீடு), குச்சி ( புல்லின் தண்டுப் பகுதி), போன்ற பல சொற்கள் தோன்றிற்று.அன்புடன்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
மனமோ வயிறோ கெட்டுப் போனால்
மகிழ்ச்சி தொலைந்து போகும் - அதனால்நல்லதை மட்டுமே நினைப்போம் ! - உயிர்க்குநல்லதை மட்டுமே உண்போம் !
----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
On Saturday, November 15, 2014 3:07:00 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:குய் > குழைதல் பொருளில் தோன்றிய வினைச்சொல்லாம்.குழைதல் - குள்-/குண்-/குட்- என்னும் வேர்.(1) குய்- sharp - குயம்/குசம் (Kusha grass which has sharp edge), கு(ய்)ச்சு (=குச்சு.Cf. Sangam lit.,), குயம் - நாவிசன் கத்தி (நேராக இருக்கும்).
குய் துளைப்பொருள் கருத்து. குய்ல் > குல் > கொல் = ஆயுதத்தால் உடலில் துளைப்படுத்தி உயிர் போகச் செய்தல் .culling என்பதன் பொருள் கொல்லுதலைக் குறிப்பதை நோக்குக.சேசாத்திரி
On Saturday, 15 November 2014 06:13:00 UTC-8, N. Ganesan wrote:(1) குய்- sharp - குயம்/குசம் (Kusha grass which has sharp edge), கு(ய்)ச்சு (=குச்சு.Cf. Sangam lit.,), குயம் - நாவிசன் கத்தி (நேராக இருக்கும்).(2) குய்- - soft - குய்யம்/குயம், குயக்குண்டு, குயவன்/குசவன் (from potter's tech, we have the word for spices. kuyyuTai aTicil,frying spices : neyyum kuyyum ATi (naR.)
>>>>குய்யோ…முறையோ…கூச்சல்… குழப்பம்…. நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்தது என்ன? -வெளிவராத எக்ஸ்குளூசிவ் தகவல்கள்.<<<<ஐயா, இந்தக் குய்யோவின் பொருள் என்ன ? வேர் யாது ?
தேவ்
On Saturday, November 15, 2014 7:35:50 AM UTC-8, seshadri sridharan wrote:குய் துளைப்பொருள் கருத்து. குய்ல் > குல் > கொல் = ஆயுதத்தால் உடலில் துளைப்படுத்தி உயிர் போகச் செய்தல் .culling என்பதன் பொருள் கொல்லுதலைக் குறிப்பதை நோக்குக.சேசாத்திரிதமிழில் குய்-/கொய்- அரிதற் கருத்து (reaping, plucking). குயங் கொண்டு கொய்யும் தினை.
On Saturday, November 15, 2014 7:35:50 AM UTC-8, seshadri sridharan wrote:குய் துளைப்பொருள் கருத்து. குய்ல் > குல் > கொல் = ஆயுதத்தால் உடலில் துளைப்படுத்தி உயிர் போகச் செய்தல் .culling என்பதன் பொருள் கொல்லுதலைக் குறிப்பதை நோக்குக.சேசாத்திரிதமிழில் குய்-/கொய்- அரிதற் கருத்து (reaping, plucking). குயங் கொண்டு கொய்யும் தினை.கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து (porunaraarruppatai-)
I believe kuyam in PuRam 348 has the same meaning.
குயம் பற்றி செங்கை பொதுவன் ஐயா அவர்களின் பதிவு கீழே
On Sunday, November 16, 2014 11:53:23 PM UTC-8, கோதண்டராமன் wrote:தனத்தைக் குறிக்கும் குயம் என்ற சொல் குய்யம் என்பதை விட குசம் என்பதோடு நெருங்கி இருப்பதாகத் தோன்றுகிறது.
திராவிட மொழிகளின் வார்த்தைகளில் மெய்-உயிர்-மெய்(CVC) வேர் காட்டும். kuy- '= soft' is the source for kuya- and kuyya. Cf. nal- is the source for nala- and nalla-.குய- ய-/ச- மாற்றம்: குசவன், குசம் (கொங்கை), ...
2014-11-16 17:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Sunday, November 16, 2014 1:16:07 AM UTC-8, Dev Raj wrote:On Saturday, 15 November 2014 23:11:08 UTC-8, கோதண்டராமன் wrote:சித்த மருத்துவ நூல் ஒன்றில் குய்யம் என்பது மர்ம உறுப்புகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.இதற்கு மூலம் குஹ்யம் guhyam गुह्यम् என்ற வட சொல். குஹ் - மறைத்தல், குஹ்யம் - மறைக்கப்படவேண்டியது.அரிவாள் என்ற பொருள் தரும் குயம் பழந்தமிழ்ச் சொல்லாக இருக்கலாம். மற்றது வடசொல்லின் திரிபாக இருக்கலாம்.ஆம், சிந்தாமணியில் ’குய்யம்’ சொல்லாட்சி உள்ளது -நட்பிடைக் குய்யம் வைத்தான்பிறர்மனை நலத்தைச் சோ்ந்தான்கட்டழற் காமத் தீயிற்கன்னியைக் கலக்கி னானுமட்டுயி ருடலந் தின்றானமைச்சனா யரசு கொன்றான்குட்டநோய் நரகந் தம்முட்குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.குய்யம் வைத்தல் - நண்பனை குஹ்யமாக [மறைவாக] வஞ்சித்தல் .குய்ய ரோகம், குய்ய தீர்த்தம் இவையும் உள்ளனபெண்குறிக்கு குய்யம் என்னும் பெயர் குய்- ‘மென்மை’ என்னும் வேர் எனக் கொள்ளலாம்.குய்யரோகம், kuyya-rōkam, n. <id. +. Veneral disease peculiar to women, as chancre; பெண்குறியில் வரும் ரோகம். (சீவரட். 313).
குயம்/குய்யம் - மென்மை. குயம் = நகில். எனவே, அண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் அபீத-குசாம்பாள்>குயம் ‘soft breast' > குசம்.
நா. கணேசன்
குயம் (=கொங்கை) என்பது சங்க இலக்கியத்திலும் பின்னரும் இலக்கியங்களில் பயிலும் சொல்.குய்- = மென்மை ‘soft' என்னும் வேர் கொண்ட குயம் பேச்சுவழக்கில் குசம். குசம் இப்பொருளில்தமிழ் தந்த சொல்லாக வடமொழியில் வருகிறது.
12. பந்தடி கண்டது |
85 கூன்மேற் புரட்டியுங் குயநடு வொட்டியும் வாக்குறப் பாடியு மேற்படக் கிடத்தியும் நோக்குநர் மகிழப் பூக்குழன் முடித்தும் பட்ட நெற்றியிற் பொட்டிடை யேற்றும் மற்றது புறங்கையிற் றட்டின ளெற்றியும் 90 முன்னிய வகையான் முன்னீ ராயிரங் கைந்நனி யடித்துக் கையவள் விடலும் |
குய் - குயம் = இளமை (திவா.).
குயம் - கயம் = 1. இளமை (திவா.). 2. மென்மை (பிங்.).
“கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்’’ (தொல். உரி. 24).
கயந்தலை = 1. குழந்தையின் மெல்லிய தலை. “முக்காழ் கயந்தலை தாழ’’ (கலித். 86 2). 2. யானைக்கன்று.
“துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே’’ (கலித். 11)
சிறுபிள்ளைகளைக் கன்றுகயந்தலை யென்பது பாண்டிநாட்டு வழக்கு.
கய (மேலும் ஒரு பொருள்) | ||||
316. | கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும் (25) (கய என் கிளவி மென்மையும் செய்யும்) | |||
ஆ. மொ. இல. ‘Kaya’ means tenderness also ஆல். The morpheme ‘Kaya’ means tenderness also. பி. இ. நூ.: இல.வி. 284-4 கயவே பெருமையும் மென்மையும் கருதலும் இளம். உரை :கய என்னும் சொல் பெருமையே யன்றி மென்மைப் வ-று :‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) எனவரும். | ||||
| ||||
இதுவுமது. இ-ள் : கய என் கிளவி மென்மையும் செய்யும்கய என்னும் சொல் உ-ம் : ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) எனவரும். வெள். இ-ள் : கய என்னும் உரிச்சொல் பெருமையே யன்றி உ-ம் : ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) எனவரும். மெல்லியோர் ஆதி. பொருள் :கய-கீழ்த்தர-மெல்லிய. |
தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?
குயம் (=கொங்கை) என்பது சங்க இலக்கியத்திலும் பின்னரும் இலக்கியங்களில் பயிலும் சொல்.குய்- = மென்மை ‘soft' என்னும் வேர் கொண்ட குயம் பேச்சுவழக்கில் குசம். குசம் இப்பொருளில்தமிழ் தந்த சொல்லாக வடமொழியில் வருகிறது.குய்- என்னும் வேர் (1) மென்மை (soft) (2) கூர்மை (sharp) இரு பொருள் கொண்டு சொற்களை விரித்துள்ளது.குயம் என்றால் ‘மென்மை’ என்று தருவது பிங்கல நிகண்டு, பாவாணர் குறித்துள்ளார்.அந்த சூத்திரம் முழுதும் பார்க்கவேண்டும்.கொங்குவேள் பாடியுள்ளார்:
12. பந்தடி கண்டது
85 கூன்மேற் புரட்டியுங் குயநடு வொட்டியும்
வாக்குறப் பாடியு மேற்படக் கிடத்தியும்
நோக்குநர் மகிழப் பூக்குழன் முடித்தும்
பட்ட நெற்றியிற் பொட்டிடை யேற்றும்
மற்றது புறங்கையிற் றட்டின ளெற்றியும்
90 முன்னிய வகையான் முன்னீ ராயிரங்
கைந்நனி யடித்துக் கையவள் விடலும்குயம் > கயம்:
குயம் =கூர் என்ற தென் சொல்லும் குசம்= குயம் என்ற வடசொல்லும் சங்கமம் ஆகி இருக்கலாம். அன்னம் எனும் சொல் போல்
On Wednesday, November 19, 2014 1:45:28 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:குயம் =கூர் என்ற தென் சொல்லும் குசம்= குயம் என்ற வடசொல்லும் சங்கமம் ஆகி இருக்கலாம். அன்னம் எனும் சொல் போல்அன்னம் என்னும் சொல் தமிழ்தானே.
குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்றுஆராயலாம்:பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.
குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்றுஆராயலாம்:
பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.ஓ அப்படி போகுதா கதை.
On Wednesday, November 19, 2014 6:02:08 AM UTC-8, வேந்தன் அரசு wrote:குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்றுஆராயலாம்:இன்னொன்றும் நீங்க பாக்கணும். மறைவிடச் சொற்கள், வசைச் சொற்கள் எல்லாம் மிக ஆழமானவரலாறு கொண்டன. எளிதில் மாறாதவை. பகு- என்னும் வினைச்சொல் தான் பகல்/பால். பால் > வால் = வெள்ளை.இந்தப் பால் வால் என பாலூட்டிகளுக்குச் சொல்கிறோம், பகுப்பிடம்.வால் (< பால்) வடமொழியில் பேரென்ன?பொக்கை, பொக்குள் என்னும் சொல்லொடு தொடர்புடைய த்ராவிட/தமிழ்ச் சொல் இது என தாங்கள் அறிந்ததே.அதனால் குய்- ‘மென்மை’ என்னும் அடிப்பொருளில் உள்ள குயம்/குய்யம் என்ற சொற்கள் தமிழ்தந்த லோன் வொர்ட்ஸ் எனக் கருதமுடிகிறது. புச்சம் ‘=tail' தமிழன்றோ. வடமொழியில் உள்ள த்ராவிட வார்த்தை.பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.ஓ அப்படி போகுதா கதை.
கணேசர் ஐயா,’குயம்’ நகிலைக் குறிப்பதாகச் சீவக சிந்தாமணியில்,கம்ப ராமாயணத்தில் இருக்கிறதா ?
தேவ்
On Thursday, November 20, 2014 4:32:49 AM UTC-8, Dev Raj wrote:கணேசர் ஐயா,’குயம்’ நகிலைக் குறிப்பதாகச் சீவக சிந்தாமணியில்,கம்ப ராமாயணத்தில் இருக்கிறதா ?தெரியலை. பார்க்கணும். குயம் - அபித குயாம்பிகை = உண்ணாமுலை
2014-11-20 19:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:On Thursday, November 20, 2014 4:32:49 AM UTC-8, Dev Raj wrote:கணேசர் ஐயா,’குயம்’ நகிலைக் குறிப்பதாகச் சீவக சிந்தாமணியில்,கம்ப ராமாயணத்தில் இருக்கிறதா ?தெரியலை. பார்க்கணும். குயம் - அபித குயாம்பிகை = உண்ணாமுலைபூவினால் வேய்ந்து செய்த பொங்குபேர் அமளிப் பாங்கர்,தேவிமார் குழுவும் நீங்கச்சேர்ந்தனன்; சேர்தலோடும்,நாவி நாறு ஓதி நவ்வி நயனமும்,குயமும், புக்குப்பாவியா, கொடுத்த வெம்மைபயப்பயப் பரந்தது அன்றே.ஆரணிய காண்டம், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம். (இராவணனுடைய காம நோய். குயம் என்பது மார்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.)
On Thursday, November 20, 2014 6:14:47 AM UTC-8, Hari wrote:
19 நவம்பர், 2014 5:19 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:On Wednesday, November 19, 2014 1:45:28 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:குயம் =கூர் என்ற தென் சொல்லும் குசம்= குயம் என்ற வடசொல்லும் சங்கமம் ஆகி இருக்கலாம். அன்னம் எனும் சொல் போல்அன்னம் என்னும் சொல் தமிழ்தானே.சோற்றுக்கும் அன்னம் என பேர்.
குயம் என்றால் மென்மை, இளமை என்கின்றன நிகண்டுகள். இத்துடன்குய்யம் என்ற சொல்லையும் சேர்த்துப் பார்த்தால் குய்- தமிழ் ஆகத்தான் இருக்கிறது. குயம் ‘=கொங்கை’த்ராவிட மொழிகளில் இருந்து குசம் என்று வடசொல் ஆகியது என்க.வடமொழியில் குகன், (குஹ) என்ற சொல் பிறக்கும் விதம் தெரியலை என்பார்கள். ஈரான், ஐரோப்பிய மொழிகளில் இல்லை.குய்- ‘மென்மை’ குயம்/குய்யம் மறையுறுப்புகளுக்கு ஆகி, மறைவிடம் குஹா, மறைந்திருப்பவன் குஹன் என்றுஆராயலாம்:பெண்களின் மென்மையான குயங்கள் மண்டித் தழுவும் திண்ணிய மார்புடைய தலைவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.ஓ அப்படி போகுதா கதை.
"குய்புகை"கமழும் குறுந்தொகை உள்ளிட்டு எண்ணற்ற அந்த சொல் தடங்களைக்காட்டிய தங்கள் ஆராய்ச்சி மிகவும் "கூர்மையானது" செறிவானது.குசம் குயம் இவையே குஞ்சம் என்பதையும் குறிக்கும் என நினைக்கிறேன்.குஞ்சம் அல்லது குச்சம் எனும் மென்மைத்தன்மை பெண்கள் கூந்தல் அழகு படுத்தலில் வழங்குகிறது.தேனி அருகில் உள்ள அந்த குஞ்சம் போன்று வளர்ந்திருக்கும் அந்த கோரைப்புல் இனக்காட்டில் தான் சனீஸ்வரன் (குச்சனூர்)கோயில் இருக்கிறது.நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.கொன்றை அங்குழல் மட்டும் அல்ல வேய்ங்குழல் எனும் மூங்கில் புல் குழல் (இதுவே புல்லாங்குழல்) இசையோடு ஒலி யெழுப்பி பாடல்கள் தான் ரிக் "வேய்தம்"ஆகியிருக்கலாம்.ரிக் என்ற(பாரசீக) அவெஸ்தா ஒலிச்சொல் சிந்துவெளித்தமிழன் பல நாடு கண்டு பல ஒலி கேட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்ததே ஆகும்.ரி என்ற எழுத்து சொல் முதல் வருவதுதமிழ் வழக்கம் இல்லாததால் இரிக்கு என்று ஆக்கப்பட்டபோதும்வண்டின் இமிழொலியான ரீங்காரமும் புல்லாங்குழல் ஒலியும்(வண்டு துளைத்த புல்லாங்குழல் ஒலியே) பொருள் குறிக்காத இரட்டைக்கிளவி போன்ற ஒற்றைக் கிளவியே ரீ இசையாகி ரிக் பாடல்ஆகியிருக்கலாம்.தமிழன் ஆக்கிய வடதமிழே சமஸ்கிருதம் என்பதுஎனது கருத்து.==================================================ருத்ரா
குயத்தொழில் முதலில் செய்வது மண்ணை குழைவது. குழைவன் குயவன் ஆகி இருப்பான் சென்னைத்தமிழில்.
நம் இரவுகள் குயத்தொழிலில் தானே தொடங்குது--
துழித் தோழி தாயர்க்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர்முதலியோர்க்கு அறத்தொடுநிற்ப, அவரும் ஒருவாற்றான் 1உடன் பட்டமை தோழி தலைவிக்குக் கூறி, தானும் அவளும் வரைவுகடிதின் முடிதற் பொருட்டு வரையுறை தெய்வத்திற்குக் குரவையாட அவன் வரையவருகின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது.
இதன்பொருள்.
(39.) | (1) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா (2) டாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா னீணாக 2நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் (3) பூணாக முறத்தழீஇப் 3போதந்தா 4னகனகலம் வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி (1) யருமழை 1தரல்வேண்டிற் (2) றருகிற்கும் (3) பெருமையளே எ - து : எம்மோடேகூடி விருப்பத்தையுடைய (4) கடிய நீரையாடுகின்றவள் கால்தளர்ந்து அஞ்சித் தாமரைபோலுங் கண்ணைப் புதைத்து அந்நீரோடே போகையினாலே தனக்குச்சென்ற (5) அருளினாலே நீண்ட சுரபுன்னைப் பூவாற் கட்டின நறிய குளிர்ந்த மாலை அசையும்படி அந்நீரிலே குதித்துப் பூணினை யுடைய இவள் மார்பைத் தன்மார்போடே உறும்படி அணைத்துக்கொண்டு கரையிலே போதவிட்டவனுடைய அகன்ற மார்பை இவளுடைய எழுகின்ற முலைகள் கூடினவென்று பிறர் கூறுகின்ற கூற்றாலே என்னுடைய தோழி நமக்கு அரியமழையைப் பெய்விக்க நாம் விரும்பில் அதனை நமக்குத் தரவல்ல கற்பின் பெருமையளாயினாள்; எ - று. |
குயம் என்ற ஒரு தமிழ்ச் சொல்லுக்கு இத்தனை விளக்கமா? இந்தச் சொல்மாரி விளக்க மழையில் நனைந்து தமிழ்த் தேனைப் பருக வாய்ப்பளித்த தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!பணிவன்புடன்,ஒரு அரிசோனன்
On Thu, Nov 20, 2014 at 11:30 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:On Thursday, 20 November 2014 07:56:26 UTC-8, N. Ganesan wrote:சோற்றுக்கு அன்னம் என்று இருப்பதால்தான், தமிழ் அன்னம் என்ற சொல்லை .....அன்னம் - வேர் என்ன ?தேவ்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--