அன்பின் சு. கோதண்டராமன் ஐயா,
வணக்கம் கணக்கில.
வேய் ‘மூங்கில்’ - வேய்ங்கடம் > வேங்கடம் (பார்க்க; அகநானூறு)
நய்ப்பு > நப்பு (நப்பாசை)
வை ‘< வீ’’ (=நெல்) வய்+அல் = வயல் =வை + அல் (பீஜம் என்னும் வடசொல் ஆராய்ச்சி. விரிவாக எழுதியுள்ளேன். அங்கே பாருங்கள்)
குய் = sharp blade grass = தருப்பை (குய்யால் வேய்ந்த குடில். குய்ச்சு > குச்சு. கூர்ச்சரம் = சிந்து நாகரிகம், அண்மையில் காந்தி, வல்லபபாய் பட்டேல்,
பிரதமர் மோதி நாடு - கூர்ச்சர (குச்சர) நாடு என்ற த்ராவிடப் பெயர் இதனாலோ? காலப்போக்கில் கூர்ச்சரம் குஜராத் ஆகியுளது.)
குய்- ‘மென்மை’ என்ற தாதுவேரால் ஆவது குயவன், குயக் குண்டு (= குசவன் கலயம் வனைய மண்ணெடுக்கும் மட்குழி = soft soil pit), ...
பெண்ணுறுப்புகள் யாவுக்கும் குய்- ‘மென்மை’ என்ற தாதுவேர் அடிப்படையாய் தெரிகிறது; குயம்/குய்யம், ... சென்னைப் பேரகராதி காண்க.
க-ப்ரத்யம் ஏற்றிப் பொருள்வளர்ச்சி காணும் இந்திய மொழிகள்:
-க என்னும் விகுதியை ஏற்றிப் பொருள் விரிவு செய்வன இந்திய பாஷைகள். இது ஓர் முக்ய உத்தியாம்.
In the Language of Mathematics, we have generalized eigenvectors (my specialty in Space loads and dynamics),
generalized inverses of Matrices (used heavily in Digital SIgnal Processing, Modal Testing, ...),
similarly we can posit a generalized k-pratya for word genesis in Indian linguistic area.
That is, like -ka ending, -na, -la/-ra endings in Words used to generate words with semantic extension from
their roots which are seen without the -ka, or -na or -la/-ra endings.
தாழை என்னும் கைதை நிலத்தில் வளரும் தாவரத்துக்கு,
சதம் (=100) செய்யுள் இருந்தால் சதகம் என்று பிரபந்தப் பெயராக,
கப்பிரத்தியம் பெறுதல் போல, கைதகம்/கைதகை என்று ஒரு பெயர்.
செய் (நஞ்சை, புஞ்சை, தஞ்சை (தண் + செய்) - இவற்றில் உள்ள ‘செய்’,
கைதையில் உள்ள ’கை’ ஆகும். தகர விகுதி சேதா-வில் உள்ளது போன்ம்.
கண் என்ற சொல்லினின்றும் கண்ணகம் என்று தாமரைப்பொகுளுக்கு
ஒரு பெயர் த்ராவிடமொழிகளில் இருந்து வடமொழிக்குச் சென்றதுபோல
(cf. மஹால்க்ஷ்மி பேரால் கண்ணகி. கர்ணகை/கர்ணகி என்றும் தமிழர் வழங்குவர்),
கைதகை வடமொழியில் கேதகை, கேதகி என்றாகிறது. கேது என்றால்
கொடி. தாழை கொடிவகைத் தாவரம் இல்லை. கேது
என்றால் மின்னல் என்று எஸ். ராமச்சந்திரன் சொல்லியிருக்கிறார்.
ஆனால், கேதுவுக்கு மின்னல் என்று வடமொழிப் பொருள்
ஏதுமில்லை என்பதுவும் குறிப்பிடத்த்தக்கது. மோதியை மோடி என்றும்,
ராகுல் திராவிடரை ட்ராவிட் என்றும் பத்ரிகை, டிவி ஆக்குவதுபோல்,
கேதகி (இந்தியில் கேத்கி) தவறாக கேட்கி என்று எழுதியுளார் எஸ். ராமச்சந்திரன்.
மிழகு தமிழகத்தில் சிறப்பான விளைபொருள் ஆனதால் நாட்டின்/மொழியின்
பெயரே அமைந்த தாவரம். (த)மிழகம் > மிழகு/மிளகு. சிந்து நாட்டிற்கும்
இதுவே பெயர். மிழகம் என்பதை சுமேரியாவில் மெலுஹ (பழம் பலம் என்று
தமிழறியா வடவர் பலுக்கி வடசொல் ஆவது போல், சுமேரியருக்கு ழ வராததால்
மெலுஹ எனறனர். தமிழர் முருகன், அகம், ... எல்லாம் ஹ (voiceless fricative sound)
உச்சரிப்பு சிந்திலும் இருந்தமை சுமேரியாவில் பதிவானது மிக இன்றியமையாத
த்ராவிட பாஷகளின் ஒலியனியல் குறிப்பு. மிழகர் > மிளக்கர் (பாலி) . மிலேச்சர்.
ஹ (voiceless fricative sound) - இதனை தமிழ்க் கடவுள் முருகனின் ஒரு பெயரிலும் காண்கிறோம்.
குய்- என்றால் மென்மை. பென்ணுறுப்புகள் எல்லாவற்றூக்கும் அதனால்
குயம்/குய்யம் என்னும் பண்டைத் தமிழிப்பெயர். எனவே மர்மம்/மறைவானது
என்ற பொருளூம் குயம்/குய்யம் அடைகின்றன. எழு- எழிங்கம் லிங்கம்
(பழம் .> பலம், மிழகம் > மிலேச்ச, போல (எ)ழிங்க- > லிங்க. குடிமல்லம் லிங்கம்
இந்தியாவிலேயே பழமை). குய் ‘soft' தரும் சொற்கள் குயம்/குய்யம்.
இவை மறைவுப் பொருள் தரும்.
எனவே, கப்பிரத்தியம் ஏற்று, குய்க- குக- என்று மறைபொருள்/மர்மம்.
மெலுஹ என்று மிழக நாட்டைச் சொன்னவர்கள் குக ( < கு(ய்)க-) என்னும்
சொல்லை குஹ என்றது இன்றும் வடமொழியில் குஹ, குஹ்ய என்றெல்லாம்
பதிவாகி வழங்குகிறது.
தமிழின் குஹனருளால் வாழ்வோம் வளமுடன்,
நா. கணேசன்