​தாலி அல்லது தமிழர் திருமண மங்கலச் சின்னம்

1,902 views
Skip to first unread message

Suba.T.

unread,
Mar 22, 2015, 6:24:07 AM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.ராம் காமேஸ்வரன் பகிர்ந்து கொண்ட தொ.பாவின் கட்டுரையை வாசித்த போது தமிழர் திருமண மங்கலச் சின்னம் பற்றி தனி இழையில் உரையாடலாமே என மனதிற்குத் தோன்றியது. ஏற்கனவே சில பதிவுகள் முன்னரே நமது மின் தமிழில் வந்துள்ளன. 

இந்த இழையில் இந்த திருமண மங்கலச் சின்னம், அதன் தோற்றம், வரலாறு, பின்னனி, பல வேறுபட்ட சமூகங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி உரையாடலாம் என நினைக்கின்றேன்.

முதலில் எனது பங்களிப்பாக நான் வெளியிட்ட விழியப் பதிவு. இது தமிழக நாடார் சமூகத்தில் நாடார் வழக்கில் உள்ள வழக்கத்தை விளக்கும் பதிவு https://www.youtube.com/watch?v=Rytla9KDHwU  தோழி திலகபாமாவின் மாமியார் இவர். 

சுபா

---------- Forwarded message ----------
From: Suba.T. <ksuba...@gmail.com>
Date: 2015-03-22 11:18 GMT+01:00
Subject: Re: [MinTamil] மாட்டிறைச்சி விருந்து இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>

தொ.பாவின் எழுத்துக்களை நான் விரும்பிப்படிப்பேன். நல்லதொரு கட்டுரை.
10ம் நூற்றாண்டு வரை தாலி என்னும் அடையாலச் சின்னம் பற்றிய குறிப்பு இல்லை என்பது யோசிக்க வைக்கின்றது. தனி இழையாகத்
​​
தாலி அல்லது தமிழர் திருமண மங்கலச் சின்னம் என்ற வகையில் ஒரு இழை தொடஙகாலம் என நினைக்கின்றேன்.

சுபா

2015-03-21 3:10 GMT+01:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:

தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

Evening-Tamil-News-Paper_78357660771

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும். ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும். தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம். நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன.

மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது. நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர். புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு) இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்) தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும். ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது. இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன.

பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

On Friday, March 20, 2015 at 4:20:47 PM UTC-4, தேமொழி wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
nkantan r

unread,
Mar 22, 2015, 11:29:12 AM3/22/15
to mint...@googlegroups.com

என்னுடைய தமிழ் இலக்கிய அறிவு குறைவே; நான் 8,9, 10-ம் வகுப்பில் இருந்தபோது என் வகுப்பு விஞ்ஞான  ஆசிரியர்தான்  தமிழ் இஇலக்கிய ஆர்வத்தைத் தூண்டியவர் . ஆனால் BE, Hindi,  படிக்கப்போய், வேறு பக்கத்தில் கவனம் போய்விட்டது.

தாலி தமிழ் இஇலக்கியத்தில் ஆண் பெண் இருவரும் அணியும் தாயத்து போன்றது.

essentially it was an ornament used to be worn by young infants ( தாலப்பருவம்,, so thaali has the root to தாலாட்டு which has its own etymology! )

(may be we can look at the etymology of talisman and though google links to the Arabian words, I believe probably talisman and thaali has a common link, see below!)
======
kambaramaynam has some instances of thaali. I remember two; went to google and got these: (I am looking at ambadai thaali)

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வாய் நிலா உறக் குவிவ மானுமே.        89.

ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் மார்பையுடைய , சீராக சொள்ளு வடிக்கும் குழந்தைக்குப் பால்ச்சோறு வழங்கும் போது குவிந்திருக்கும் தாயின் கைகளானது; நிலா எழும் போது குவிந்திருக்கும் தாமரை மலர்களைப் போல இருக்குமாம்.

The thaali is worn on the chest of the baby and not mother; how and why?  it is aimbadai thaali, which is worn as a talisman to protect young child. remember அரைஞாண் கயிறு with silver objects having embossed images? and why I say the infants are the objects of these talisman?

I again googled for the thaali in the older literature and got this beautiful link: http://valavu.blogspot.in/2007/07/5.html which mentions that young boys used to wear the ஐம்படைத் தாலி (காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும்)

ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது.

புறநானூற்றின் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்து நின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருது அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவது ஆகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அல்லாது, பெரியவனாயும் அல்லாது, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.

"கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுதுதான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்." என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.

"................................................. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்"

"மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்." என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது

====

kamba ramayan also talks about the மங்கையர் மங்கல தாலி ; we can discuss that later!

(btw mrs suba, as you mentioned தாலி களைதல்  is a better word than தாலியறுத்தல் ; the latter has a semblance of violence?)

regards

rnkantan

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 22, 2015, 12:01:09 PM3/22/15
to mint...@googlegroups.com

ஸ்ரீ ஆரியத்தமிழன் என்ற அன்பரின் அக்ரஹாரம் என்ற தனிநபர் தளத்தில் வாசித்த தாலி பற்றிய குறிப்புகள்.

தமிழர்கள் வைதீகத் திருமணத்தினை ஏற்கக்கூடாது என்றும் “தாலி அடிமைச்சின்னம்” என்றும் “பகுத்தறிவு அட்டை கத்திகள்” கண்டுபிடித்துள்ளன. இதற்குக் காரணம் வைதீக திருமணங்கள் பிராமணர்களால் நடத்தி வைப்பதும்
, பிராமண வெறுப்பிலிருந்து உண்டான பிராமண எதிர்ப்பு வெறியுமே   காரணம்.
        திராவிட கழக தலைவர் ஈ.வே. ராமசாமி முதல் இன்றைய கி.வீரமணி வரை “தாலி அடிமை சின்னம்” என்றும் அதற்காக தாலி அறுப்பு போராட்டங்களும் நடத்தினார்கள் / பேசினார்கள். தாலி தமிழ் திருமணங்களில் கூடாது என்றனர். தாலி பார்பனீய அடையாளம் என்பதும் இவர்களது கண்டுபிடிப்பு.
        உண்மை என்ன எனில் தமிழ் சங்க இலக்கியங்கள் காட்டும் திருமண முறை வைதீக திருமணம் தான், இரண்டாவதாக இவர்கள் சொல்லும் “தாலி” என்பது வைதீக தொடர்புடையது அல்ல,
        வேதவழி வைதீக திருமணங்களில் தாலி கிடையாது என்பதால் பகுத்தறிவாளர்கள் தாலி குறித்து கொண்டுள்ள கருத்து ஆராய்ச்சி இல்லாத அறைவேக்காட்டுத்தனம்.
        சங்கத்தமிழ் இலக்கியங்களில் திருமணம் மற்றும் சடங்குகள் குறித்து என்னதான் சொல்லியுள்ளது பார்ப்போமா...
        தொல்காப்பியம் என்பது பழமையான தமிழ் இலக்கண நூல். திருமணங்களை இரு வகையாக கூறுகிறது இந்நூல். அதாவது கற்புத்திருமணம், “கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன், கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே“ (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல்-1)
        இரண்டாவது “களவுத்திருமணம்” அதாவது மணப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் தலைவன் தன் ஊருக்குப் பெண்ணை அழைத்துச் சென்று செய்து கொள்ளும் திருமணம். களவுத் திருமணத்தினை தொல்காப்பியம் கற்புத்திருமணமாகச் சொல்லவில்லை, “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான” (தொல்காப்பியம் பொருளதிகாரம்  கற்பியல் 2)
        ஆனால் கற்புத்திருமணமானாலும், களவுத்திருமணமானாலும் திருமணச்சடங்குகள் உண்டு என்கிறது தொல்காப்பியம்.
        வர்ணங்கள் நான்கு என்பதையும் அதில் கீழ் மேல் உண்டு என்றும், அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூவர்க்கும் ஏற்பட்ட சடங்குகள் அவர்கட்கு கீழ்பட்டவர்களுக்கும் அதே சடங்குகள் உண்டு என்கிறது சங்கத்தமிழ் இலக்கியம் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 3)
        திருமண சடங்குகளில் தற்போது முக்கியமானதாக கொள்ளப்படுவது “மாங்கல்யதாரணம்” அதாவது  தாலிகட்டும் / அணிவிக்கும்  சடங்குக்கு “மாங்கல்யதாரணம்” என்று பெயர். அதற்காகத்தான் “முகூர்த்த லக்னம்” குறிக்கப்படுகிறது, ஆனால் பெண் கழுத்தில் தாலி கட்டும்படி வேதம் சொல்லவில்லை. “மாங்கல்யம் தந்துநாநேந” எனத்துவங்கும் தாலி கட்டும் போது சொல்லப்படும் மந்திரம் வேதமந்திரம் இல்லை.
        வேதம் சொல்லாத தாலி காட்டும் பழக்கத்தினை வேதநெறி எனத் தவறாக எண்ணிய,  பகுத்தாராயாத பகுத்தறிவு அட்டைகத்திகள் தாலி, பிராமணீய சடங்கு என்றும், தாலி அடிமைச்சின்னம் என்றும் பேசி வந்தன. இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் பெண்சுதந்திரம் பற்றி பேசும் பலரும் இதற்கு ஆராய்சி இல்லாது ஆமாம் சாமி போடுவது.
        அப்படியானால் “தாலி” யாருடைய பழக்கம்? யாருடைய சடங்கு?  
        தமிழ்நாட்டு மக்களின் பழக்கம்தான் தாலி, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய, கிறிஸ்துவ, மதத்தினரிடையேயும் கூட, இன்றும் தாலி அணிவிக்கும் பழக்கம் காணப்படுகிறது. உலகமெங்கும் பரவியுள்ள இஸ்லாமிய கிறிஸ்துவ மதத்தினரிடையே மதபிடிமானம் அதிகம். ஆனால் உலகில் வேறு எங்கும், ஏன் பாரத தேசத்திலேயே கூட தமிழகம் அல்லாத மற்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என அனைவரிடமும் காணப்படாத தாலி என்னும் சடங்கு தமிழகத்தில் மட்டும் அனைத்து ஜாதி, மதத்தினரிடமும்   காணப்படுகிறது.
        “கருமணித்தாலி” தமிழக இஸ்லாமியர்களிடையே, சிலுவைத்தாலி“ தமிழக கிருஸ்துவர்களிடையே, “தங்கத்தாலி” பிராமணர் அல்லாதவர்களிடையே பிராமணர்களிடையே தமிழகத்தின் கலாசார அடையாளமான தாலி மட்டும் இரண்டு தாலியாக அணிவிக்கப்படுகிறது, ஆம்! பெண் வீட்டினர் சார்பில் ஒன்று மாப்பிள்ளை வீட்டின் சார்பில் ஒன்று எனத் தமிழ் கலாச்சாரத்தினை மற்றவர்களைவிட ஒருபடி மேல் சென்று போற்றுகின்றனர் பிராமணர்கள்.
        தேவையற்ற தாலி அறுப்பு போராட்டங்களை அதாவது தமிழ் கலாச்சாரத்தினை புரியாமல் எதிர்க்கும் பழக்கமும், விபரம் புரியாது “பிராமணீயம்” என்று முத்திரை குத்தி வெறுக்கும், எதிர்க்கும் முட்டாள்தனத்தினையும் பகுத்தறிவு அட்டைகத்திகள் கைவிடவேண்டும்.
        தங்கத்தாலான தாலியில் தான் வேட்டையாடி கொன்ற புலிப்பல்லினையும், ஒலிக்கும் மணிகளையும் இணைத்து உருவான தாலி அணிந்தவள் பற்றிய குறிப்பு அகநானூறு 7ஆம் பாடலில் 17, 18 வரிகளில் “ பொன்னோடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி “ என உள்ளது. 
        “ஈகை யரிய இழையணி மகளிர்” என புறநானூறு தாலி பற்றிய குறிப்பை காட்டுகிறது. தமிழ் சங்க இலக்கியங்கள் தாலி பற்றியும் அது தமிழ்நாட்டின் பண்டைய கலாசாரம் என்றும் தெளிவாக்குகிறது.
        தாலி பற்றிய குறிப்புகள் வேதங்களில் இல்லை, தமிழ் இலக்கியங்களில் மட்டும் தான் உள்ளது. எனவே தாலி பிராமணர் உண்டாக்கிய சடங்கல்ல, அது தமிழக கலாசாரம்   என்பதை பகுத்தறிவு அட்டை கத்திகள் உணரவேண்டும்.

        திருமணத்திற்கு நாள் நட்சத்திரம் பார்த்தல் தமிழ் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளது “தீய கோள்களின் தொடர்பு நீக்கிய வளைந்த வெண்மையான சந்திரனைக் கேடற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள்வந்து அடைந்த நல்ல நாள் அது” என்று மணநாள் பற்றி பதிவு செய்கிறது “கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென”  அகநானூறு 86வது பாடல் 6,7 வரிகள்.
        அந்த தெளிந்த ஒளியையுடைய திங்களை உரோகிணி கூடியதனால் எல்லாத்தோஷமும் நீங்கிய சுபநாள் சேர்க்கையில் திருமண வீட்டை அலங்கரித்துக் கடவுளைப்பேணி என்பதாக திருமணத்திற்கு நல்லநாள் பார்த்தல் முதல் கடவுளை வணங்குதல் வரை உள்ள நிகழ்வுகளை பதிவுசெய்கிறது “புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடினர் புனைந்து கடவுட் பேணிப்” அகநானூறு 136வது பாடலின் 3-6 வரிகள்
        மணப்பெண்ணை ”வது” என்று அழைப்பது வழக்கம் இந்த சொல் பிராமணர்களிடையே வழக்கில் உள்ள வடமொழி சொல் “வதுவை நன்மணம்” என்கிறது அகநானூறு 86-17வது வரி. வது என்னும் சொல் பருவம் அடையாத கன்னிப்பெண்ணை குறிக்கும், அகநானூறு மூலம் இன்று பலராலும் ஏன் சாரதா தடுப்பு சட்டத்தாலும் தடை செய்யப்பட்டுள்ள “குழந்தை திருமணமே” வைதீக முறைபடியும் தமிழ் மரபுபடியும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
        திருமணத்தின் சம்ஸ்க்காரங்களில் ஒன்றான முதலிரவு எனப்படும் சாந்திமுகூர்தம்” அன்று பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்படும் புடவையை பெண் அணிவித்துக்கொள்வது இன்றும் பிராமணர்களிடையே உள்ளது.  இந்த புடவைக்கு “கோடிப்புடவை” எனப்பெயர். ஸ்ரீ ஆண்டாளும் தனது நாச்சியார் திருமொழியில் “மந்திரக்கோடியுடுத்தி” (6-3) எனத் தனது திருமண நிகழ்வை பதிவு செய்கிறாள். இந்த வைதீக நெறியினையே       அகநானூரில் சங்க தமிழக / தமிழர்  திருமண மரபாகவும் பார்க்க முடிகிறது.
        முதலிரவின் அறையில் மணமாகிய பெண் முதுகினை வளைத்துக் கொண்டவளாக குனிந்தபடி கோடிப்புடவைக்குள்ளே அவள் நாணமுடன் இருந்ததை  “கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த” அகநானூறு (86 – 21,22)  விவரிக்கிறது.
        தமிழ்வழி / தமிழர்வழி / சங்க இலக்கியம் காட்டும் திருமணம் வேதநெறி கொண்ட திருமணங்கள் தான். சங்ககாலம் முதல் நடந்துவரும் வைதீக திருமணத்தினை எதிர்ப்போர் சங்க இலக்கியத்தினையும், உண்மையான தமிழ் கலாச்சாரத்தினையும் எதிர்ப்பவர்கள் என்னும் பழியை ஏற்க நேரிடும். தமிழர் நெறியே வைதீக நெறிதான்.

nkantan r

unread,
Mar 22, 2015, 2:38:14 PM3/22/15
to mint...@googlegroups.com
though I don't jump to DMK and DK bashing (just as DMK and DK are happy to do brahmanic bashing!) I agree that Vedic marriage doesnot include mangal sutra (even in Brahma and prajapatya vivah.. leave alone the other forms of marriage in the smiritis), Yes Ram's marriage to Sita was completed as it was Kanyadan by Janak. Only TV serials talk about the mangal sutra; I have to check if kamba talks about thaali here;

Hindu Vedic rituals: (the three essentials are in red)
======
  • Vara Satkaarah – Reception of the bridegroom and his kinsmen at the entrance gate of the wedding hall where the officiating priest chants a few mantras and the bride’s mother blesses the groom with rice and trefoil and applies tilak of vermilion and turmeric powder
  • .Madhuparka Ceremony - Reception of the bridegroom at the altar and bestowing of presents by the bride’s father.
  • Kanya Dan - The bride’s father gives away his daughter to the groom amidst the chanting of sacred mantras.
  • Vivah-Homa - The sacred fire ceremony ascertaining that all auspicious undertakings are begun in an atmosphere of purity and spirituality.
  • Pani-Grahan - The groom takes the right hand of the bride in his left hand and accepts her as his lawfully wedded wife.
  • Pratigna-Karan - The couple walk round the fire, the bride leading, and take solemn vows of loyalty, steadfast love and life-long fidelity to each other.
  • Shila Arohan - The mother of the bride assists her to step onto a stone slab and counsels her to prepare herself for a new life.
  • Laja-Homah - Puffed rice offered as oblations into the sacred fire by the bride while keeping the palms of her hands over those of the groom.
  • Parikrama or Pradakshina or Mangal Fera - The couple circles the sacred fire seven times. This aspect of the ceremony legalizes the marriage according to the Hindu Marriage Act as well custom.
  • Saptapadi - Marriage knot symbolized by tying one end of the groom’s scarf with the bride’s dress. Then they take seven steps representing nourishment, strength, prosperity, happiness, progeny, long life and harmony and understanding, respectively.
  • Abhishek - Sprinkling of water, meditating on the sun and the pole star.
  • Anna Praashan - The couple make food offerings into the fire then feed a morsel of food to each other expressing mutual love and affection.
  • Aashirvadah - Benediction by the elders.
  • =========================
Where mangal sutra appears? well in Devi bhagavatham and certainly in Lalita sahasranam! (Kamesha baddha mangalya sutra shobitha kandhara --She who shines with the sacred thread in her neck tied by Lord Kameshwara)

but I don't know at what period they were composed.

regards
rnkantan

Oru Arizonan

unread,
Mar 22, 2015, 10:31:53 PM3/22/15
to mintamil
rnkantan அவர்களின் கருத்துடன் நான் மாறுபடுகிறேன்.  
கிருஷ்ணகுமார் அவர்களும் தாலி என்பது ஒரு அடையாளச் சின்னமாகத் தோன்றிய மரபு என்று சான்றுகளை முன்வைக்கிறார்.  
மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவனஹேதுனா  |
கண்டேஹ் பத்னாமி சுபஹே! ஸம்ஜீவ ஸரதஸ் ஸதம் ||
என்ற மந்திரத்துடன் தாலியை ஆண் பெண்ணுக்குக் கட்டுகிறான்.

இதன் பொருளாவது:

இந்த மங்கலமான [கயிறு] என் வாழ்வுக்கானது.
(மங்கை) நல்லாளே!  [நாம்] பல்லூழி காலம் வாழ்வதற்காக [இதை உன்] கழுத்தில் கட்டுகிறேன்.

இதன் பொருளை உற்று நோக்கினால்:
  1. மங்களமானது என்றுதான் பகரப்படுகிறது.  ஆயினும் இரண்டாம் வரியில் உன் கழுத்தில் கட்டுகிறேன் என்றிருப்பதால் அது கயிறு என்பதை ஊகித்து அறிந்துகொள்ளலாம்.  மேலும் அது ஒரு மங்கலச் சின்னம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
  2. என் வாழ்வுக்கானது என்று சொல்வது ஆணின் சுயநலம் என்று சிலர் வாதிடக்கூடும்.  ஒரு பெண் அவளது கணவன் இருக்கும்வரைதான் அந்த மங்கலச் சின்னமான தாலியை -- அக்கணவன் கட்டிய தாலியை அணிந்துகொண்டிருக்கிறாள்.  எனவே,  கணவன் இறந்துவிட்டால், அவன் கட்டிய தாலியையும் நீக்கி விடுகிறாள்.  எனவேதான் என் வாழ்வுக்கு [முக்கிய]மானது என்று ஆண் கூறுகிறான்.
  3. சுபஹே என்பது  நல்லாளே, மங்கலமானவளே என்று விளிக்கும் சொல்லாகிறது. எனவே, தாலியைக் கட்டும்போது [அணிவிப்பது அல்ல, ஏனெனில் பத்னாமி என்ற வடமொழிச் சொல் கட்டுகிறேன் என்றே குறிக்கிறது] அவளை மங்கை நல்லாளே என்று மரியாதையுடன்தான் விளிக்கிறான்.
  4. [உன்]கழுத்தில் கட்டுகிறேன் [கண்டேஹ் பத்னாமி] என்று சொல்லியவன், அது எதற்கு என்றும் கூடவே சொல்லுகிறான்.  ஸம்ஜீவ ஸரதஸ் ஸதம், அதாவது, நூறு ஆண்டுகள் ஒன்றாக வாழ்வோம் [ஸம்ஜீவ என்றால் ஒன்றாக வாழ்வோம்] என்கிறான்.
  5. எனவே, தாலி என்பது அடிமைச் சின்னமல்ல, தனது உயிர் அவள் கழுத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதையே சொல்கிறான்.
மந்திரங்களின் உட்பொருளை அறிந்தால் அதன்மீது வெறுப்பு வராது.  அதை எந்த மொழியில் சொல்லவேண்டும் என்று வேண்டுமானால் வாதிக்கலாம்.  அவை தேவையற்றது என்று முடிவு கட்டுமுன் அவை என்ன சொல்கின்றன என்பதை அறிவது மேலல்லவா?  

ஆண் மட்டும்தான் பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டுமா, நாங்கள் எந்தவிதமான அடையாளச் சின்னத்தை அவனுக்குக்  கட்டுவோம்  என்பதற்காகவே,  ஆண்கள் காலி விரல்களில் வளையம் அணிவிக்கப்பட்டது.  

கூர்ந்து கவனித்தால் இங்கு பெண்ணுக்கே அதிக உரிமை அளிக்கப்பட்டது தெரியவரும்.  ஆணோ, மங்கலச் சரடைத்தான் பெண் கழுத்தில் கட்டுகிறான்.  அவளோ அவனைக் கட்டுப்படுத்தும் வளையத்தை அவன் காலில் அணிவிக்கிறாள்.  அந்த வலையமானது, பெண்தான் அந்த ஆணைத் தனது உரிமைப்போருளாக வளையமிட்டு [வளையத்திற்குள் இருப்பதுதான் உரிமைப்பொருள்] வைத்திருப்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.

அப்படிப்பட்ட தனது உரிமைக்கான அடையாளத்தை பெண் ஏன் விட்டுக்கொடுத்து, தனது காலில் அந்த வளையத்தை அணியத் துவங்கினாலள்  என்பது ஆய்வுக்குரிய ஒன்று.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Mar 22, 2015, 10:48:35 PM3/22/15
to mint...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 7:31:53 PM UTC-7, oruarizonan wrote:
rnkantan அவர்களின் கருத்துடன் நான் மாறுபடுகிறேன்.  
கிருஷ்ணகுமார் அவர்களும் தாலி என்பது ஒரு அடையாளச் சின்னமாகத் தோன்றிய மரபு என்று சான்றுகளை முன்வைக்கிறார்.  
மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவனஹேதுனா  |
கண்டேஹ் பத்னாமி சுபஹே! ஸம்ஜீவ ஸரதஸ் ஸதம் ||
என்ற மந்திரத்துடன் தாலியை ஆண் பெண்ணுக்குக் கட்டுகிறான்.

தாலி (< தாழை ‘palm tree') மிகப் பழமையானது. 10-ஆம் நூற்றாண்டு என்பதெல்லாம் 
சான்றுகளோடு ஒத்துப்போவதில்லை. 

யாழ என்ற சங்ககால முன்னிலை மருவி அசைச்சொல் எலெ, எல்லே (ஆண்டாள்), 
தருவியாலெ/போடுவியாலெ (நெல்லை)  என்பவற்றில்  உள்ளதுபோல தெரிகிறது.
அதுபோல், தாலி < தாழையில் உள்ள ழ > ல. பழம் > பலம்-னு சொல்வதுபோல்.

நச்சினார்க்கினியர் ’பின்னமை நெடு வீழ் - குத்துதல் அமைந்த நெடிய தாலி’ 
எனப்பொருள் கூறுகிறார். இது ஏன்? பெருந்தாலி பற்றிய செய்தியைச் சொல்கிறார்.
திருமணமானவர்களுக்கு தெரியலாம்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 22, 2015, 11:53:38 PM3/22/15
to mint...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 7:31:53 PM UTC-7, oruarizonan wrote:
மந்திரங்களின் உட்பொருளை அறிந்தால் அதன்மீது வெறுப்பு வராது.  

 நன்று.  மூன்று முடிச்சுகளின் உட்பொருளைக் கூறுக....

அடிமை வாழ்வை வெறுப்பவள் நான்.   நாமார்க்கும் குடியல்லோம் என்பது எனது வாழ்வு நெறி. 

வேண்டுகோள்:  விளக்கத்தில் காலத்திற்கு ஏற்ப பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் தவிர்க்கவும் 

///
 அவளோ அவனைக் கட்டுப்படுத்தும் வளையத்தை அவன் காலில் அணிவிக்கிறாள்.  அந்த வலையமானது, பெண்தான் அந்த ஆணைத் தனது உரிமைப்போருளாக வளையமிட்டு [வளையத்திற்குள் இருப்பதுதான் உரிமைப்பொருள்] வைத்திருப்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.
///

இந்தக் கட்டுப்பாட்டை அணியாமல் ஆண்கள் வலம் வரும்பொழுது ....  அடுத்தவரை மட்டும் வற்புறுத்துவது ... அதை வைத்து தவிர்க்கும் ஒருவரது ஒழுக்கத்தை எடைபோடுவது... சமத்துவம் இல்லாமல் போகிறதல்லவா?  மரபுக் காவல் என்பது அனைவரது பொறுப்பு. 

..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 22, 2015, 11:59:52 PM3/22/15
to mint...@googlegroups.com
எனக்கு இந்தத் தலைப்பில் ஒவ்வாமை உண்டென்றாலும் பெண்கள் எதை அணிவது, எப்படி அணிவது என்று ஆண்கள் விவாதித்துக் கொண்டிருப்பதனைக் காணச் சகிக்காமல் இடையிட வேண்டியிருக்கிறது.

..... தேமொழி 

K R A Narasiah

unread,
Mar 23, 2015, 12:03:03 AM3/23/15
to mintamil
Every custom and tradition has its place only with reference to TIME and SPACE. We will not go anywhere discussing them positing them in the current time. Social Dynamics have to be understood and respected as per the norms of the TIME and SPACE.

It really does not make any sense to discuss such things so much. Some people air their views more by their own understanding of the situation without any respect to some who respect certain values.
In as much as THERE IS FREEDOM OF EXPRESSION, THERE IS ALSO FREEDOM TO CONDEMN PEOPLE WHO WANTONLY HURT OTHER FEELINGS JUST TO SHOW THAT THEY THINK DIFFERENTLY.
narasiah

தேமொழி

unread,
Mar 23, 2015, 12:30:31 AM3/23/15
to mint...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 9:03:03 PM UTC-7, naras...@gmail.com wrote:
Every custom and tradition has its place only with reference to TIME and SPACE. We will not go anywhere discussing them positing them in the current time. Social Dynamics have to be understood and respected as per the norms of the TIME and SPACE.

It really does not make any sense to discuss such things so much. Some people air their views more by their own understanding of the situation without any respect to some who respect certain values.
In as much as THERE IS FREEDOM OF EXPRESSION, THERE IS ALSO FREEDOM TO CONDEMN PEOPLE WHO WANTONLY HURT OTHER FEELINGS JUST TO SHOW THAT THEY THINK DIFFERENTLY.

அதை வைத்து தவிர்க்கும் ஒருவரது ஒழுக்கத்தை எடைபோடுவது...    என்று நானும் இதே கருத்தைத்தான்  சொன்னேன் ஐயா.  

தாலி விவாதத்தில் கோணங்கள் மாறுபட்டால் எதிர் கோணங்கள் கொண்டவர்கள் மக்களை ஏமாற்றப் பிறந்தவர்கள்  என்று சொல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.  யார் யாருடைய  உணர்வுடன் விளையாடுகிறார்கள் என்பதும் அவரவர் கோணத்தில் மாறுபடுவதே. 

..... தேமொழி 

narasiah

2015-03-23 9:23 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Sunday, March 22, 2015 at 7:31:53 PM UTC-7, oruarizonan wrote:
மந்திரங்களின் உட்பொருளை அறிந்தால் அதன்மீது வெறுப்பு வராது.  

 நன்று.  மூன்று முடிச்சுகளின் உட்பொருளைக் கூறுக....

அடிமை வாழ்வை வெறுப்பவள் நான்.   நாமார்க்கும் குடியல்லோம் என்பது எனது வாழ்வு நெறி. 

வேண்டுகோள்:  விளக்கத்தில் காலத்திற்கு ஏற்ப பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் தவிர்க்கவும் 

///
 அவளோ அவனைக் கட்டுப்படுத்தும் வளையத்தை அவன் காலில் அணிவிக்கிறாள்.  அந்த வலையமானது, பெண்தான் அந்த ஆணைத் தனது உரிமைப்போருளாக வளையமிட்டு [வளையத்திற்குள் இருப்பதுதான் உரிமைப்பொருள்] வைத்திருப்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.
///

இந்தக் கட்டுப்பாட்டை அணியாமல் ஆண்கள் வலம் வரும்பொழுது ....  அடுத்தவரை மட்டும் வற்புறுத்துவது ... அதை வைத்து தவிர்க்கும் ஒருவரது ஒழுக்கத்தை எடைபோடுவது... சமத்துவம் இல்லாமல் போகிறதல்லவா?  மரபுக் காவல் என்பது அனைவரது பொறுப்பு. 

..... தேமொழி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Mar 23, 2015, 12:55:12 AM3/23/15
to mint...@googlegroups.com
sorry ms thenmozhi
I did not mean to discuss what women folk should or should not wear or how they carry themselves (on their own volition or as instructed)..

1) I just mentioned that Thaali has been a traditional talisman ornament of male and female children upto the age of 16/17.
2) that tamil literature with a date of  2000 years back mentioned thaali (see http://valavu.blogspot.in/2007/07/5.html) ; and the purpose, look, and sanctity changed over as the society changed.
3) that though Vedic rituals donot show mangal sutra, devi bhagvatam does say about mangal sutra (and also mentions that it was "baddha" tied by Kaamddev) and as I mentioned elsewhere many Sanskrit hymns show goddesses adorned with mangal sutra
4) my scattered knowledge of Sanskrit doesnot give the total meaning of the " Vedic" (sic) mantra as mentioned by many; for that matter, I donot think one would find it as part of any vedas. But certainly it Should be part of Apasthmbasutra as that is what is followed in our family.
5) there is even a post in the net discussing the mangal sutra (four five years back?) where it finally emerged that the mantra can be interpreted differently as there are instances where the GROOM has a neck band after the marriage. That means that kandhe padnaami does not mean whose neck it is!

regards
rnkantan

செல்வன்

unread,
Mar 23, 2015, 12:58:32 AM3/23/15
to mintamil

2015-03-22 22:59 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
எனக்கு இந்தத் தலைப்பில் ஒவ்வாமை உண்டென்றாலும் பெண்கள் எதை அணிவது, எப்படி அணிவது என்று ஆண்கள் விவாதித்துக் கொண்டிருப்பதனைக் காணச் சகிக்காமல் இடையிட வேண்டியிருக்கிறது.

அணியவிரும்பும் பெண்கள் தானே அணிகிறார்கள்? 

விரும்பாத பெண்களின் கழுத்திலா தாலியை கட்டுவார்கள்?

--

தேமொழி

unread,
Mar 23, 2015, 1:01:42 AM3/23/15
to mint...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 9:55:12 PM UTC-7, nkantan r wrote:
sorry ms thenmozhi
I did not mean to discuss what women folk should or should not wear or how they carry themselves (on their own volition or as instructed)..

1) I just mentioned that Thaali has been a traditional talisman ornament of male and female children upto the age of 16/17.

ஓ....  இதைக் குறிப்பிட மறந்தேன் பாருங்கள்... இது ஒரு நல்ல மாறுபட்ட கோணம்....amulet  என்றுபடிக்கும் பொழுதெல்லாம்  இதென்ன இந்த "தாயத்து" நம்பிக்கை உலகமெல்லாம் இருக்கும் போலிருக்கிறதே என நினைத்ததுண்டு.  

தேமொழி

unread,
Mar 23, 2015, 1:06:45 AM3/23/15
to mint...@googlegroups.com

On Sunday, March 22, 2015 at 9:58:32 PM UTC-7, செல்வன் wrote:

விரும்பாத பெண்களின் கழுத்திலா தாலியை கட்டுவார்கள்?

 1981 supreme court annulled a marriage where force was used;

செல்வன்

unread,
Mar 23, 2015, 1:11:21 AM3/23/15
to mintamil

On Mon, Mar 23, 2015 at 12:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
 1981 supreme court annulled a marriage where force was used;

I hope that 99.99% marriages aren't forced :-)

--

தேமொழி

unread,
Mar 23, 2015, 1:29:44 AM3/23/15
to mint...@googlegroups.com
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள்  குறைந்து வருவது  கண்கூடு.

இனிமேல் திருமண நாளிலும் பிட்டு அடிக்க வேண்டிய நிலை உருவாகும் போல் உள்ளது.  

தாலி கொண்டு போகிறார்களோ இல்லையோ மணமகன்கள் கையோடு கால்குலேட்டர் கொண்டு போக வேண்டிய நிலைமை உருவாகிறது. 

அது சரி .... யாரந்த பெங்களூரு போலீஸ்காரர் பெண்ணை அடித்த பேஸ்புக் படம் பகிர்ந்து கொண்டது...ஹ்ம்ம்... நினைவில்லையே :))

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Mar 23, 2015, 1:32:05 AM3/23/15
to மின்தமிழ்
​நான் இங்கேயே முன்னர் பகிர்ந்துள்ளேன். என்னதான் இருந்தாலும் உள்ளூர்க்காரனுக்கு மதிப்பே தருவதில்லை இந்த உலகம்
சர்க்கரைச்சீமான்

--

தேமொழி

unread,
Mar 23, 2015, 1:40:42 AM3/23/15
to mint...@googlegroups.com
///
 என்னதான் இருந்தாலும் உள்ளூர்க்காரனுக்கு மதிப்பே தருவதில்லை இந்த உலகம்
///

ஆசையைக் கெடுப்பானேன்.  உள்ளூர்க்காரர்களும் சாதனையில்  சற்றும் சளைத்தவர்கள் அல்லவே. 

சுடச் சுட செய்தி.  ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது.

சிறுமியை கட்டாய திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர்: உதவிய நண்பரும் கைது
By dn, சேலம்
First Published : 23 March 2015 11:02 AM IST
புகைப்படங்கள்

சேலத்தில் 14 வயது சிறுமியை கட்டாண திருமணம் செய்ததாக ஆட்டோ ஓட்டுநரையும், இந்த திருமணத்துக்கு உதவிய குற்றத்துக்காக அவரது நண்பரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரியின் 14 வயது மகளை அவரது தாய் அழைத்துச் சென்று, வீராணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன் (32) என்பவருக்கு கடந்த 27-ஆம் தேதி அங்குள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாத சிறுமி, அங்கிருந்து தப்பி தனது தந்தை, சகோதரிகளைச் சந்தித்து தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அன்பு இல்ல ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தேவி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீஸார், சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் மோகன், அவருக்கு உடந்தையாக இருந்த பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த உறவினர் மோகன் (24) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிறுமியின் தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.

..... தேமொழி 

On Sunday, March 22, 2015 at 10:32:05 PM UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
​நான் இங்கேயே முன்னர் பகிர்ந்துள்ளேன். என்னதான் இருந்தாலும் உள்ளூர்க்காரனுக்கு மதிப்பே தருவதில்லை இந்த உலகம்
சர்க்கரைச்சீமான்
2015-03-23 10:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள்  குறைந்து வருவது  கண்கூடு.

இனிமேல் திருமண நாளிலும் பிட்டு அடிக்க வேண்டிய நிலை உருவாகும் போல் உள்ளது.  

தாலி கொண்டு போகிறார்களோ இல்லையோ மணமகன்கள் கையோடு கால்குலேட்டர் கொண்டு போக வேண்டிய நிலைமை உருவாகிறது. 

அது சரி .... யாரந்த பெங்களூரு போலீஸ்காரர் பெண்ணை அடித்த பேஸ்புக் படம் பகிர்ந்து கொண்டது...ஹ்ம்ம்... நினைவில்லையே :))

..... தேமொழி 

On Sunday, March 22, 2015 at 10:11:21 PM UTC-7, செல்வன் wrote:

On Mon, Mar 23, 2015 at 12:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
 1981 supreme court annulled a marriage where force was used;

I hope that 99.99% marriages aren't forced :-)

--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Mar 23, 2015, 2:10:20 AM3/23/15
to mintamil

2015-03-23 0:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள்  குறைந்து வருவது  கண்கூடு.

பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு

--

தேமொழி

unread,
Mar 23, 2015, 2:15:26 AM3/23/15
to mint...@googlegroups.com
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி

தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?
;-)

..... தேமொழி 

செல்வன்

unread,
Mar 23, 2015, 2:25:00 AM3/23/15
to mintamil
அதுக்கு முதலில் தனி எத்தனை, பெரும்பான்மை எத்தனை என்ற கணக்காவது தெரியவேண்டாமா? 

பெரும்பான்மை திருமணம் பெண்கள் விருப்பபட்டு தானே நடைபெறுகிறது?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Mar 23, 2015, 2:28:57 AM3/23/15
to Groups

 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Dhivakar

unread,
Mar 23, 2015, 2:32:11 AM3/23/15
to மின்தமிழ்
//பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு// Selvan
//தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?// Themozhi

திருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)

--

தேமொழி

unread,
Mar 23, 2015, 2:58:12 AM3/23/15
to mint...@googlegroups.com
எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்...

திருமண விருந்து 

மணமக்களின் விருப்பம் பற்றி அறிவது

..... தேமொழி 

On Sunday, March 22, 2015 at 11:32:11 PM UTC-7, dhivakar wrote:
//பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு// Selvan
//தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?// Themozhi

திருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)

2015-03-23 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி

தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?
;-)

..... தேமொழி 

On Sunday, March 22, 2015 at 11:10:20 PM UTC-7, செல்வன் wrote:

2015-03-23 0:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள்  குறைந்து வருவது  கண்கூடு.

பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு

--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 23, 2015, 3:23:27 AM3/23/15
to mint...@googlegroups.com
\\ இந்த இழையில் இந்த திருமண மங்கலச் சின்னம், அதன் தோற்றம், வரலாறு, பின்னனி, பல வேறுபட்ட சமூகங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி உரையாடலாம் என நினைக்கின்றேன். \\

குறை கூறுவதாக எண்ண வேண்டாம். மன்னிக்க.  இந்த இழையின் நோக்கம் என்ன என்று ஸ்ரீமதி சுபாஷிணி முதல் பதிவில் பகிர்ந்திருக்கிறார்கள். சில பதிவுகள் அதிலிருந்து விலகுவது போலத் தெரிகிறது.

ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.

\\ கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம்.  \\

புனிதப்பொருளாகக் கருதப்பட்டமை தான் பத்தாம் நூற்றாண்டு என்று எடுத்துக்கொள்வதா அல்லது தாலி என்ற வழக்கமே 10ம் நூற்றாண்டா?

\\ தங்கத்தாலான தாலியில் தான் வேட்டையாடி கொன்ற புலிப்பல்லினையும், ஒலிக்கும் மணிகளையும் இணைத்து உருவான தாலி அணிந்தவள் பற்றிய குறிப்பு அகநானூறு 7ஆம் பாடலில் 17, 18 வரிகளில் “ பொன்னோடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி “ என உள்ளது. \\

என்ற குறிப்பைப் பார்க்கையில் அகநானூற்றுக்காலத்திலேயே **தாலி** என்ற சொல் வழக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது.  அகநானூற்றுக்காலம் எந்த காலகட்டம்?

தேமொழி

unread,
Mar 23, 2015, 3:45:38 AM3/23/15
to mint...@googlegroups.com

திரு.க்ருஷ்ணகுமார்,

தாலி பற்றி தமிழிலக்கிய ஆய்வுகள் 60 ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளன.... 

இங்கு பார்க்கவும்...https://groups.google.com/d/msg/mintamil/xUh4Htxy5zs/IUQ1GGhyiasJ

அத்துறையின் ஆய்வறிஞர்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இது என் நிலைப்பாடு. 

மாற்றுக் கருத்து மறு ஆய்வு போன்றவற்றிற்கு  இங்கு மேலும் பல தமிழறிஞர்களும் உள்ளனர்.

தமிழிலக்கிய கால ஆய்வுக்கு இந்நூல் உதவும்

..... தேமொழி 

Malarvizhi Mangay

unread,
Mar 23, 2015, 8:31:54 AM3/23/15
to mint...@googlegroups.com

கிருஷ்ணக்குமார் அவர்களின் பதிவு ஆழ்ந்த சிந்தனைக்கு
உரியது.
உடன் இன்னுமோர் சம்சயம் தோனி?கரணம் என்று தொல்காப்பியர் குறித்தது திருமணம் என்றால்
கரணம் தப்பினால் மரணம்
என்ற பழமொழிக்கு அர்த்தம்?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Mar 23, 2015, 8:44:13 AM3/23/15
to தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, mintamil, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Raji M, mylai rathnavelu, Saravanan Somasundaram, Naga Loga, JayaChandran M
\ தங்கத்தாலான தாலியில் தான் வேட்டையாடி கொன்ற புலிப்பல்லினையும், ஒலிக்கும் மணிகளையும் இணைத்து உருவான தாலி அணிந்தவள் பற்றிய குறிப்பு அகநானூறு 7ஆம் பாடலில் 17, 18 வரிகளில் “ பொன்னோடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி “ என உள்ளது. \\
என்ற குறிப்பைப் பார்க்கையில் அகநானூற்றுக்காலத்திலேயே **தாலி** என்ற சொல் வழக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது.  அகநானூற்றுக்காலம் எந்த காலகட்டம்?
-------------------------------------------------------------------------------------
எ னும பகுதியை இந்த மடலாடல் இழையில் கண்டேன் 

புலியின் பல் தொங்க கட்டுவது ஒர்  பொதுவான அணிகலன் மட்டும்தானே அன்றி ஓர் இல்லத்தின் தலைவன்
தலைவி என்னும் பொருளால் குறித்தவாறு நான் காண வில்லை  விடலை ஆண்களும் சிறார்களும் கழுத்திலும் 
இடையிலும் புலிப்பல்லைக்  கட்டும் மரபு இருந்துள்ளது குறித்த அகம் 7 பாடலிலும்  கனவன் மனைவி எனும்
நிலைக் கானவில்லை 

தேவாரக் காலத்தில் இன்று பேசப்படும் தாலிக்கு இணையாக பெண்கள் அணியும் கலன் ஒன்றுண்டு 
அதனை கடவுளரின் திருவுருவங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது (&&)

ஆடல் வல்லா ன் திரு உருவத்தில் நன்றாக உற்று நோக்கினால்
இடது  காதின் துளையில் ஓலைச் சுருளும் 
வலது காதில் மகரக் குழையும் காணலாம் 
Inline image 1  

சிவபெருமான் திரு உருவில்(#) பாதி பெண்ணாகக் காட்டுவது ஒர் உருவ நிலை (மூர்த்தம்) மாதொரு பாகன் என்பர் 
அதன் வழி ஆடல்வல்லன் திரு உருவில் இடது பாகம் பெண்ணாக் கருதப்படும் ஆக அக் காதில் ஒலைச் சுருளும்
தூக்கிய திருவடியாம் (குஞ்சிதபாதம் )இடது காலில் சிலம்பும் அமைப்பர்  வலது காதில் மகரக் குழையும் வலது காலில்
கழலும் ஆண்களுக்குறிய அணிகலன்களாகக் காணலாம்   

தோடுடைய செவியன் எனத்தொடங்கும் அருள் வழிபிறந்த திருஞான சம்பந்தர்  தம் முதல் பாடல் முதல் 
சொல்லில் பெ ண்பாகத்தினைக்கட்டி தொடங்குகின்றார்  தோடு அக்காலத்து தாலிக்கு இணை யனது ஆகும் தோடு  = பனை ஓலைச் சுருள் (##)
தோடு டைய எனும் சொல்லால் ஞானசம்பந்தர் மங்கலக் கரமான  பெண்ணும் ஆணுமாக உள்ளான் எனடக்கா ட்டியே தொடங்குகின்றர் 

மேலும்
சேக்கிழார் பெருந்தகை  தன்  முதல் பாடலில் 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங் குவாம் 

என பெண்பாகத்து தூக்கிய திருவடியாம் சிலம்பணிந்த திருவடியையே
அஃதாவது பெண்கள் அணியும் சிலம்பு எனவே குறித்துள்ளமைக் காண்க 

ஆண்கள் காலில் அணிவது கழல் அதுபோல் கா தில் ஆண்களுக்கு குழை பூணா கும் 

ஐப்பசியில் (தீபாவளித் திருனாளன்று) வட தமிழிழகத்திலும்  ஆந்திரத்திலும்  கொ கோண்டாடும் ஓர் நோன்பு கேதார கௌரி  விரதம் 
இது பெண்கள் தன் கண வன் நீடு வாழ்ந்து தன் தாலி பாக்கியம் சிறக்க வேண்டும் எனும் எண்ணத்தில் நோற்பது 
இதனில் வைத்து பூசிக்கப்படும் பொருள் காதோலையும் கரு மணியும் ஆகும் அதாவது அந்நாளைய தாலிக்கு ஆனது

இன்றும் கூட மதுரையிலும் கேரளத்திலும்  ( சில பெண்கள் ) தொங்கத் தொங்க (%%) அணியும் காதணிக்கு ஓலை என்பதே சொல்லாகும் 
தமிழகத்திலும் ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் மாராட்டத்திலும் கருமணி யும் மி கவும் சிறப்பாக தாலி யுடன்  பயன்கொள்ளப்படுவது  கண்கூடு

தோடு ஓலை மடல் என்பன புல்லினத்திற்கு பயன் கொள்ளும் சினைச் சொல் 
மேலும் மரம் எனும் இனத்திற்கும் தொடர்புடையது ஆகும் தோல்கா ப்பிய நூற்பாக்கள் காண்க (##) 

அந்நாளில் பனை ஓலையில் தான்  எழுதினர்  இ ந்நாளில் எழுதப்பயன்படும் காகிதத்தையும் தாள் எனும் சொல்லலே குறிக்கக் காணலாம்
அதான்று தாள் என்றால் பனைமரம் ஆகும் திருப்பனந்தாள் ( தேவாரப்பாடல் பெற்றத் தல ம் ) 
வடநாட்டில் தாடு ताड़ என்பார் பனைமரத்தை அதனின்று தாடி(TODDY ) பிறந்தது

அன்புடன்
நூ த லோ சு
மயிலை 
----------------------------------
(&&)
இலிங்கம் என்பது அருஉருவம் = உருவம் தான் ஆனால் நம்மைப்போல் கைகால்களுடைய உருவம் அல்லாதஅடையாளக் குறி மட்டும்  ) 
மற்றவை உருவங்கள் = மூர்த்தங்கள் (மூர்த்திகள் )  பல்வேறு நிலைகளில் காணலாம் ஏரூர்தி   கங்கை அணிந்தோன் பிறைமிளிர்ந்தோன் போன்றவை 

(##)
தொல்காப்பியம் மரபியல்
புறக்காழனவே புல் என மொழிப                     86 (monocotyledons ஒற்றை விதையிலை பயிரினம்
                                                                                        அடிமரம் வெளியில் வயிரம் பாய்ந்தது நடுவில் ஒன்றும் இல்லாமலும் இருக்கும் (மூங்கிலில் காண்க 
அகக் காழனவே மரம் என மொழிப                87 ( Dicotyledons) இரட்டை விதையிலை பயிரினம் நடுவில் உறுதியானப் பகுதி கொண்டது (காழ்) 
                                                                                       ஏனைய மரங்களுள் காணலாம் தேக்கு மா புளி  சால் போன்றவை  நடுவில் உறுதியும் புறத்தே பட்டை முதலியன மட்டும் 
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்  88 

இலையே தளிரே முறியே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப               89

(%%)
புத்த பிரான் / சமண  தீர்தங்க்காரர்கள் திரு உருவங்களில் அணிகலன்கள் ஏதும் இல்லாமலும் 
துளையிட்ட காதின் அடிப்பகுதி தொங்கக் சிலவற்றில் தோளினையும் தொடும் நிலைக்கு உள்ளமையைக்
காணலாம் அணிகலன்கள் எல்லாம் இருந்தால் தொங்கும் ஆ னால்  அவர்கள் துறந்தனர்  இருக்க வேண்டிய
ஒன்றை துறந்ததைக்கட்ட  ஒன்றும் இல்லாதும் தொங்கும் காதின் துளையா ல்  காட்டுகின்றனர் என நினைகின்றேன் 
  
2015-03-23 12:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்...

திருமண விருந்து 

மணமக்களின் விருப்பம் பற்றி அறிவது

..... தேமொழி 

On Sunday, March 22, 2015 at 11:32:11 PM UTC-7, dhivakar wrote:
//பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு// Selvan
//தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?// Themozhi

திருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)

2015-03-23 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி

தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?
;-)

..... தேமொழி 

On Sunday, March 22, 2015 at 11:10:20 PM UTC-7, செல்வன் wrote:

2015-03-23 0:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள்  குறைந்து வருவது  கண்கூடு.

பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு

--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
aadal vallan mukam.jpg

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 23, 2015, 9:35:08 AM3/23/15
to mint...@googlegroups.com
பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ லோகசுந்தரம் ஐயா,

மிகவும் ஆழ்ந்து (சித்திரங்களுடன் கூட) தாங்கள் அளித்த விளக்கங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் ஐயன்மீர்.

நான் குறிப்பிட்டிருந்த அகநானூற்றுப்பாடலில் **தாலி** என்ற சொல் திருமணத்தில் அணிவிக்கப்படும் மங்கலநாண் என்ற பொருளில் அமையவில்லை என்று விளக்கியிருந்தீர்கள்.

இன்று காலை ஸ்ரீமதி ராஜம் அம்மா அவர்கள் ஸ்ரீ பாண்டியராஜா ஐயா அவர்களது தொடரடைவு தளம் பற்றி அறிமுகம் செய்து அங்கு சங்க நூற்களில் சொற்களைத் தேட பணிப்பித்திருந்தார்கள். அதன் படி தாலி என்ற சொல்லைத் தேடப்புகையில்

தாலி (5)
புலி பல் தாலி புதல்வன் புல்லி - குறு 161/3
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் - ஐங் 166/2
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி/ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் - அகம் 7/18,19
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி - அகம் 54/18
தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு - புறம் 77/7

பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய் - திணை150:3 66/3

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி - மது 12/28 (சிலப்பதிகாரம்)

அமளி துஞ்சும் ஐம்படை தாலி
   குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு - மணி 7/56,57

 தாலி (2)
பாசி பாசத்து பைம்பொன் நிரை தாலி பூத்த வேங்கை - சிந்தா:7 1649/1
நாண் உள் இட்டு சுடர் வீச நல் மாணிக்க நகு தாலி
   பேணி நல்லார் கழுத்து அணிந்து பெரும் கண் கருமை விருந்து ஊட்டி - சிந்தா:13 2697/1,2

தாலி (4)
தாலி ஐம்படை தழுவு மார்பிடை - பால:2 58/1
யாளியினை பல தாலி இசைத்தாள் - ஆரண்:14 47/3
மங்கையர் மங்கல தாலி மற்றையோர் - சுந்:3 48/1
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் - சுந்:5 55/4

மேற்கண்ட செய்யுட்கள் எதிலும் **தாலி** என்ற சொல் மங்கலநாண் என்று பொருள் படும்படிக்கு.........திருமணத்தில் அணிவிக்கப்படும் அணிகலனாக இல்லையா? என்ற சம்சயம் களையப்படல் வேண்டும். தாங்கள் இது பற்றி விளக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

மங்கையர் மங்கல தாலி ........... கம்பராமாயணச் செய்யுளில் ............ மங்கலநாணாகத் தான் இருக்குமோ என்று சொற்களை வாசிக்கையிலேயே தோன்றுகிறது. 

தொடரடைவில் தேடிக்கண்டது போல இந்த செய்யுட்களுக்கு இணையத்தில் உரையும் கிட்டுமானால் உரையாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்வோம். இந்த செய்யுட்களுக்கு  உரை இணையத்தில் காணக்கிட்டுமானால் அதையும் பகிருமாரு அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 23, 2015, 9:38:10 AM3/23/15
to mint...@googlegroups.com
அன்புடை மலர்விழிமங்கை அம்மை

மன்னிக்க.  பதிவு என்னுடையது இல்லை அம்மா.  எனக்கு தமிழ் மொழியிலோ சம்ஸ்க்ருதத்திலோ பாண்டித்யம் இல்லை.

பதிவு ஸ்ரீ ஆரியத்தமிழன் என்ற அன்பருடையது. நான் செய்ததெல்லாம் அந்தப் பதிவை வாசித்து நகலெடுத்து இங்கு ஒற்றியது மட்டிலும் தான் அம்மா.  ஸ்ரீ ஆரியத்தமிழன் அவர்கள்  தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் என்ற இரு மொழிகளிலும் பாண்டித்யம் உள்ளவர்.

\\ உடன் இன்னுமோர் சம்சயம் தோனி?கரணம் என்று தொல்காப்பியர் குறித்தது திருமணம் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு அர்த்தம்? \\

தாங்கள் தான் விளக்க வேண்டும் அம்மா.  சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

செல்வன்

unread,
Mar 23, 2015, 11:03:41 AM3/23/15
to mintamil

2015-03-23 1:32 GMT-05:00 Dhivakar <venkdh...@gmail.com>:
திருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)

ஆரியகூத்தாடினாலும் தாண்டவகோனே, தளிகையில் கண்வையடா தாண்டவகோனே :-)

--

தேமொழி

unread,
Mar 23, 2015, 12:27:49 PM3/23/15
to mint...@googlegroups.com

On Monday, March 23, 2015 at 6:35:08 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ லோகசுந்தரம் ஐயா,

மிகவும் ஆழ்ந்து (சித்திரங்களுடன் கூட) தாங்கள் அளித்த விளக்கங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் ஐயன்மீர்.

நான் குறிப்பிட்டிருந்த அகநானூற்றுப்பாடலில் **தாலி** என்ற சொல் திருமணத்தில் அணிவிக்கப்படும் மங்கலநாண் என்ற பொருளில் அமையவில்லை என்று விளக்கியிருந்தீர்கள்.

இன்று காலை ஸ்ரீமதி ராஜம் அம்மா அவர்கள் ஸ்ரீ பாண்டியராஜா ஐயா அவர்களது தொடரடைவு தளம் பற்றி அறிமுகம் செய்து அங்கு சங்க நூற்களில் சொற்களைத் தேட பணிப்பித்திருந்தார்கள். அதன் படி தாலி என்ற சொல்லைத் தேடப்புகையில்

தாலி (5)
புலி பல் தாலி புதல்வன் புல்லி - குறு 161/3
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் - ஐங் 166/2
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி/ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் - அகம் 7/18,19
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி - அகம் 54/18
தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு - புறம் 77/7

பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய் - திணை150:3 66/3

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி - மது 12/28 (சிலப்பதிகாரம்)

அமளி துஞ்சும் ஐம்படை தாலி
   குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு - மணி 7/56,57

திரு. க்ருஷ்ணகுமார்

இதற்குக் கீழே இருப்பது சீவகசிந்தாமணி மற்றும் கம்பராமாயணம் வரையிலும் உள்ள குறிப்புகள்.

பாண்டியராஜா ஐயா உழைப்பில் உருவான  http://sangamconcordance.in/  தளம் கொடுக்கும் இலக்கியங்கள் யாவும் தமிழ் இலக்கியங்கள்.

அவற்றில் சங்க இலக்கியங்களும் உண்டு, சங்க  காலம் தவிர்த்த பிற்கால இலக்கியங்களும் உள்ளன.

மா. ராசமாணிக்கனார் தந்த குறிப்பில் பத்தாம் நூற்றாண்டு  வரை காணும் இலக்கியங்களில் "தாலி" எனக் குறிப்பிடப்படும் ஓர் அணிகலன் திருமணத்திற்கு தொடர்புடையதாகக்   காணப்படவில்லை என்ற குறிப்பு உள்ளது.  எனவே முற்காலத்தில் இருந்த தாலி என்ற அணிகலன் பிற்காலத்தில் திருமண நிகழ்வுகளில் இடம்பெற்றது என்பது தெளிவு. 

[ மா. ராசமாணிக்கனார் தமிழிலக்கிய உலகில் தனிச்சிறப்புப்  பெற்ற  அறிஞர் ... காரணம் அவர் தமிழிலக்கியம், கல்வெட்டுதுறை - தொல்துறை ஆய்வு, தமிழக  வரலாறு என முத்துறைகளில் தேர்ச்சி பெற்றதுடன், அதன் வழி தானறிந்தவற்றை நூல்கள் பல எழுதி வைத்துச்  சென்றவர்.  அவர் எழுதியவற்றில்  வரலாற்று நூல்களே அதிகம்.  அதனால் அவரது வார்த்தைகளில் நான் மதிப்பு மிக அதிகம் கொண்டு அவரே சொல்லிவிட்டார் என்றால் அப்படியே எடுத்துக்கொண்டு நாமும் ஆணித்தரமாகக் கூறலாம்  என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளேன்.  தமிழிலக்கிய பின்புலம் சற்றும் இல்லாத எனக்கு அவர் எழுத்து இந்த விதத்தில் உதவுகிறது.  நிற்க.]

அவர்  குறிப்பில் காணும் பத்தாம் நூற்றாண்டைக் கணக்கில் கொண்டால் சீவகசிந்தாமணி குறிப்புகளையும் தவிர்த்து விடலாம்.  அது பிற்கால ...பத்தாம்நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கியம்..

அது போன்றே கம்பராமாயணமோ ...பெரிய புராணமோ அவற்றையும் தவிர்த்து விடலாம்.  

சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் (1133–1150) காலமென்றும், கம்பர் மூன்றாம் குலோத்துங்கன் (1178–1218) காலமென்றும் நாமறிவோம். 

எனவே இப்பகுதிக்கு கீழுள்ள குறிப்புகளை விவாதிப்பதில் பொருளில்லை. 

நூதலோசு ஐயா ஒரு பழம்பாடலில் புலிப்பல் தாலி எப்படி இக்கால வழக்கில் வழங்கப்படவில்லை என்று குறிப்பு தந்துள்ளார்.

நீங்கள் காட்டிய ...

அமளி துஞ்சும் ஐம்படை தாலி
   குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு - மணி 7/56,57

மணிமேகலை பாடல்  குறிப்பிலும் அதைக் காணலாம்.  குதலை செம்வாய் குறுநடை புதல்வர் (tiny tot) ஐம்படைத் தாலி அணிந்திருந்தனர் என்ற குறிப்பு உள்ளதை நானும் காட்டி விடுகிறேன். 

charms என்று கூறப்படும் இக்கால வழக்கில் உள்ளது அது ...

திருமாலின் ஐந்து ஆயுதங்களை.  சங்கு, சக்கரம் போன்றவற்றை கொண்ட உருவங்களை குழந்தையின் காப்பாக அணிவித அணிகலன் என்ற பொருள் எனக்குப் படுகிறது.

..... தேமொழி

Oru Arizonan

unread,
Mar 23, 2015, 12:38:32 PM3/23/15
to mintamil
மதிப்பிற்குரிய லோகசுந்தரம் ஐயா அவர்களே,

தங்களுடைய விளக்கம் மிகவும் அருமை.  இந்த இழை தங்களுடைய விளக்கம்போல இழையின் தலைப்பிற்கும், சுபா அவர்கள் \\ இந்த இழையில் இந்த திருமண மங்கலச் சின்னம், அதன் தோற்றம், வரலாறு, பின்னனி, பல வேறுபட்ட சமூகங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி உரையாடலாம் என நினைக்கின்றேன். // என்று கொடுத்துள்ள வழிமுறையை  அனுசரித்தும் \\ இந்த இழையில் இந்த திருமண மங்கலச் சின்னம், அதன் தோற்றம், வரலாறு, பின்னனி, பல வேறுபட்ட சமூகங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி உரையாடலாம் என நினைக்கின்றேன். //  திசைதிருப்பாமலும் சென்றால் மிகவும் இனிதாக இருக்கும்.  

தங்கள் தமிழறிவுக்குப் பணிகிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Mar 23, 2015, 12:38:37 PM3/23/15
to mint...@googlegroups.com

On Monday, March 23, 2015 at 6:38:10 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:

\\ உடன் இன்னுமோர் சம்சயம் தோனி?கரணம் என்று தொல்காப்பியர் குறித்தது திருமணம் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு அர்த்தம்? \\
தாங்கள் தான் விளக்க வேண்டும் அம்மா.  சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

 மலர்விழி குறிப்பிட்ட கரணம் என்ற சொல்லிற்கு பல பொருள்கள் உள்ளது.

கரணம் (p. 196) [ karaṇam ] {*}, s. instrument, means, உபகர ணம்; 2. an organ of sense, இந்திரியம்; 3. the faculty of mind, அந்தகரணம்; 4. gambol, tumbling, tricks of a rope-dancer, கூத்து; 5. marriage ceremony, விவாகச் சடங்கு; 6. number, எண்; 7. a title-deed, document சாஸ னம்; 8. coition, கலவி; 9. astrological and astronomical calculations; 1. an accountant, karnam,கணக்கன்.

http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/   தளத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த தளம்தான் எனக்குத் தெரியாத சொற்களின் பொருள் அறிந்து கொள்ள உதவும் தளம்.

கரணம்போட, to play at gambols, to tumble, to solicit earnestly, to use all possible means.

என்ற பொருளில் (குட்டிக் கரணம் - somersault) போன்ற வித்தைகளில் கழைக்கூத்தாடி, கயிற்றின் மேல் நடப்பவர் போன்றவர்கள்  செய்யும் வித்தைகளில் சற்று தவறினாலும் உயிர் பிழைக்க முடியாது என்ற பொருள் வருகிறது.

இங்கு கரணம் என்ற திருமணம் செய்து கொள்ளாவிட்டால் மரணம் என்ற உயிர்ழப்பில் முடியும் என்று பொருள் கொள்ள வழியில்லை.

..... தேமொழி 

N D Logasundaram

unread,
Mar 23, 2015, 3:15:14 PM3/23/15
to mintamil
அன்புடை கிருஷ்ண குமார் அவர்களுக்கு 

நீங்கள் கா ட்டிய தாலி  எனும் சொல் லின் நி ரல் பற்றி நானும் அறிவேன் 
நான் காட்டியது 

மங்கல(ள)  நாண் (ஞாண்)  = தாலி எனும் சொல் இக்காலத்து வழங்கும் பொருளில்
அதாவது தலைவன் தலைவியை தன மனைவியாக ஏற்று க்கொ ண்டதற்கு அடையாளமாக
கட்டுவதும் அதனைதாங்கும் பெண் மகள் திருமணமா னவள்   என்பதனைக்கட்டும் குறிப்பாகவும் 
அக்காலத்தே வழங்கவில்லை என்பதுவும் இக்காலத்து பயன் பாட்டில் உள்ள ஓர் சூழ் அதன் பொருள் 1000 2000 
ஆண்டுகள் வயதுடைய முந்தைய நூலின் வரி களுடன் இணைத்துப் பா ர்ப்பதில்தான் பிழை உள்ளதுஎனக்கட்டியிருந்தேன் 

தால் என்றல் நாக்கு
தாலாட்டுதல் என்றால் நா க்கினைக்கொண்டு ஒலி  எழுப்புதல் 
ஆராரோ ஆரிரரோ என்றோ கோயில் வழிபட்டினில்பெண்கள்  லோ  லோ  லோ  லோ  லோ  லோ என்றோ ஒலித்தல் போல் 

கழுத்தில் (மார்பில்) அரை யில் (இடுப்பில்)அணியும் அணிகலன் களில் புலிப்பல் சேர்ப்பது ஓர் மரபு 
இதுவே ஒலி க்கும் பூணாக இருக்குமானால் அதனை தாலி எனலாம்

இந்த தால்>> தால ம்  சிறிது திரிந்து தாளம் எனும் ஒழி எழுப்பும் செயலைக்  குறிக்க வந்துள்ளது 
(மங்களம் மங்கலம் என போலியாவது போல்) 

நாண்  என்றால் கயிறு
மங்களல  நா ண் என்றால் இன்றைய தாலி க்கயிரறு க்கு நிகர் எனலாம் 

கீழ்காணும் வரி கள் நாண் என ஒன்றி னைக் குறி க்கின்றன இவற்றை மேலும் கூர்ந்து ஆய்தல் வேண்டும்

இவை நாணம்  எனும் பெண்களின் ஒற் குணம் அல்ல
  
மேலும் சங்கநூலகளில் காணும் திருமண நிகழ்ச் பற்றி பலர் ஆய்ந்துள்ளனர் அதனில் 
காணும் குறிப்புகள் சில
விடியல் கலையில் நடக்கும் 
வெண்மணல் பரப்பி முளைப் பாலிகைகள் (अंकुर  )வைத்து முது மூ தாட்டி ஒருவர் முன்னின்று நடத்த 
எனும் விள்ளகங் கள் நினைவிற்கு வருகின்றன பின்  நினைவு கூர்ந்து இவை பற்றி எழுதுகின்றேன் 

மன்றல் வதுவை என்பன  திருமண நிகழ்வினைக்குறி க்கும் சொற்களாகும் என்பர் 

தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள் நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே அகம் 112

மதர்எழில் மழைக்கண் கலுழ இவளே
பெருநாண் அணிந்த நறுமென் சாயல்
மாண்நலம் சிதைய ஏங்கி ஆனாது அகம் 120

அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்குப்
புதுவை போலும் நின் வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே கலி 52

ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்
விடையோடு இகலிய விறல் நடையோரும்     40
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்
கடல் நிரை திரையின் கரு நரையோரும் பரிபாடல் திரட்டு

நமர் கொடை நேர்ந்தனர்ஆயின் அவருடன்
நேர்வர்கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே நற்றிணை 393

பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை
நாண்ஒடுக்கம் என்றைந்தும் நண்ணின்றாப் - பூண்ஒடுக்கம்
பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும்
தன்வரைத் தாழ்த்தல் அரிது சிறு பஞ்ச மூலம் 44

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 24, 2015, 12:29:34 AM3/24/15
to mint...@googlegroups.com
அன்புடை ஸ்ரீ லோகசுந்தரம் ஐயா, தேமொழி அம்மை

தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாது என்னுடைய வினாக்களுக்கு பதில்களித்தமைக்கு உளமார்ந்த நன்றிகள்.

முதலில் தேமொழி அம்மையார் சுட்டிகள் மட்டிலும் கொடுத்த படிக்கு சம்சயங்கள் தீர்ந்த பாடில்லாமல் இருந்தது.  பின்னர் ஸ்ரீ லோகசுந்தரம் ஐயாவும் அடுத்து தாங்களும் அடுத்தடுத்து விளக்கங்கள் அளித்தமை..... பல விஷயங்களைத் தெளிவு படுத்தியது.

கம்ப ராமாயணம் பிற்காலத்து நூல் என்று மேம்போக்காகத் தெரிந்தது.  ஆயினும் மற்ற தொல் தமிழ் நூற்களையும் சங்க நூற்களிலிருந்து வேறுபடுத்தினால் காலகட்டத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கும் என்ற தங்களது விளக்கம் கனகச்சிதமாக இருந்தது.  தாங்கள் பகிர்ந்த தளத்தையும் குறித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.  இதற்காக கூடுதல் நன்றி. சங்க நூற்கள் மற்றும் தொல் தமிழ் நூற்களுக்கு உரை இணையத்தில் எங்கு கிட்டும்? சுட்டிகள் பகிர்ந்தால் பலரும் பயனுறுவோமே. 

மலர்விழிமங்கை அம்மை கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு அளிக்கவிருக்கும் விளக்கத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.  தனி இழையில் பகிர்ந்தால் நன்று.

அன்பின் ஸ்ரீ லோக சுந்தரம் ஐயா, சங்க நூற்கள் மற்றும் தொல் தமிழ் நூற்கள் வாயிலாக தமிழகத்தில் திருமண நிகழ்வுகள் எப்படி நிகழ்ந்தன என்று தாங்கள் விளக்கங்கள் பகிர்ந்தால் பலரும் பயனுறுவார்கள். தாங்களே குறிப்பிட்ட படி தனி இழையில் அதைப் பகிர்வது அது பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைப் பகிர வழிவகுக்கும். அப்புறம்,  தாலி என்ற சொல் கழுத்தில் கட்டப்படும் ஒரு நாண் என்ற படிக்கு மட்டிலும் அல்லாது மற்றைய பாகங்களிலும் கட்டப்படும் ஒரு நாண் என்று தொல் தமிழ் நூற்கள் வாயிலாகத் தாங்கள் பகிர்ந்த கருத்தும் மேலதிக விஷயத் தெளிவு கொடுக்கிறது.

Nagarajan Vadivel

unread,
Mar 24, 2015, 12:46:14 AM3/24/15
to மின்தமிழ்

2015-03-24 9:59 GMT+05:30 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:
அன்பின் ஸ்ரீ லோக சுந்தரம் ஐயா, சங்க நூற்கள் மற்றும் தொல் தமிழ் நூற்கள் வாயிலாக தமிழகத்தில் திருமண நிகழ்வுகள் எப்படி நிகழ்ந்தன என்று தாங்கள் விளக்கங்கள் பகிர்ந்தால் பலரும் பயனுறுவார்கள்.

​மீண்டும் ஸ்ரீமான் பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் தமிழர் திருமணம் பற்றி வில்லங்கம் செய்கிறார்.  கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குமுன் சங்ககாலத்தில் புரோகிதர் வைத்து அக்னிவலம் வந்து நடக்கும் திருமணமுறை தமிழர் திருமண முறையாக இருக்கவில்லை என்று கருதுகிறார்.  இன்றும் தென்தமிழ்நாட்டுப் பழங்குடிகளான மறவர் திருமணம்போல் பெண்ணுக்குப் பரிசல்போட்டு மலைபோல் சோறு குவித்த்து ஆட்டிறைச்சியுடன் விருந்தளித்துக் கொண்டாடினர் என்று குறிப்பிடுகிறார். 
மணப்பெண் பொன்னாலும் வெள்ளியாலும் ஆன நகைகளை உடலெங்கும் அணிந்துள்ளதாகவுக் குறிப்பிடூகிறார்.  அதில் தாலி என்பது திருமணத்துக்கு அடையாளம் என்ற குறிப்பில்லை.  திருமணம்பற்றி நகரத்தார் திருமணம் பற்றிய முனைவர்பட்ட ஆய்வு உள்ளது.  தமிழர் திருமணம்பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் இணியத்தில் தேடிப்பார்க்க வேண்டும்

பழங்குடிகள் மரபில் மானுடவியலார் திருமணமுறையில் தாலி அணிவிக்கும் பழக்கம் இல்லை என்று ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளனரா என்பதை அறிந்தோர் கூறவேண்டும்

தேமொழி

unread,
Mar 24, 2015, 12:59:06 AM3/24/15
to mint...@googlegroups.com

On Monday, March 23, 2015 at 9:29:34 PM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
அன்புடை ஸ்ரீ லோகசுந்தரம் ஐயா, தேமொழி அம்மை

தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாது என்னுடைய வினாக்களுக்கு பதில்களித்தமைக்கு உளமார்ந்த நன்றிகள்.

முதலில் தேமொழி அம்மையார் சுட்டிகள் மட்டிலும் கொடுத்த படிக்கு சம்சயங்கள் தீர்ந்த பாடில்லாமல் இருந்தது.  பின்னர் ஸ்ரீ லோகசுந்தரம் ஐயாவும் அடுத்து தாங்களும் அடுத்தடுத்து விளக்கங்கள் அளித்தமை..... பல விஷயங்களைத் தெளிவு படுத்தியது.

கம்ப ராமாயணம் பிற்காலத்து நூல் என்று மேம்போக்காகத் தெரிந்தது.  ஆயினும் மற்ற தொல் தமிழ் நூற்களையும் சங்க நூற்களிலிருந்து வேறுபடுத்தினால் காலகட்டத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கும் என்ற தங்களது விளக்கம் கனகச்சிதமாக இருந்தது.  தாங்கள் பகிர்ந்த தளத்தையும் குறித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.  இதற்காக கூடுதல் நன்றி.

http://www.tamilvu.org/library/libindex.htm  <<<  பற்பல தமிழ் நூல்களும் உரைகளும் கிடைக்குமிடம் இதுவே
http://projectmadurai.org/pmworks.html <<<  பல தமிழிலக்கியங்கள் இங்கு கிடைக்கும் 

தேமொழி

unread,
Mar 24, 2015, 1:05:42 AM3/24/15
to mint...@googlegroups.com

On Monday, March 23, 2015 at 9:46:14 PM UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:

2015-03-24 9:59 GMT+05:30 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:
அன்பின் ஸ்ரீ லோக சுந்தரம் ஐயா, சங்க நூற்கள் மற்றும் தொல் தமிழ் நூற்கள் வாயிலாக தமிழகத்தில் திருமண நிகழ்வுகள் எப்படி நிகழ்ந்தன என்று தாங்கள் விளக்கங்கள் பகிர்ந்தால் பலரும் பயனுறுவார்கள்.

தமிழர் திருமணம்பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் இணியத்தில் தேடிப்பார்க்க வேண்டும்

Thamizh Thirumanam - Kannappa Muthaliyaar - 1953

..... தேமொழி 

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 24, 2015, 1:45:33 AM3/24/15
to mintamil
2015-03-24 10:16 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

​மீண்டும் ஸ்ரீமான் பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் தமிழர் திருமணம் பற்றி வில்லங்கம் செய்கிறார்.  கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குமுன் சங்ககாலத்தில் புரோகிதர் வைத்து அக்னிவலம் வந்து நடக்கும் திருமணமுறை தமிழர் திருமண முறையாக இருக்கவில்லை என்று கருதுகிறார்.  
 
திருமணம்பற்றி நகரத்தார் திருமணம் பற்றிய முனைவர்பட்ட ஆய்வு உள்ளது.

இன்றும் நகரத்தார் திருமணங்களில் திருப்பூட்டும்போது புரோகிதர் அங்கு இருப்பதில்லை. முதலில் பெண்,மாப்பிள்ளை இருவருக்கும் தாய்மாமன் காப்புக்கட்டும்போது புரோகிதர் மந்திரம் சொல்லி காப்புக்கட்டச்செய்கிறார். பின்பு பெரியவர்கள் பூமணம் இடுகிறார்கள். பிள்ளையார் பூசையிலிருந்து பூமணம் இடுகிறவரை உடனிருக்கிற புரோகிதர் அங்கிருந்து நீங்கிவிடுகிறார். களுத்துஉரு தட்டில் மாலையுடன் வைக்கப்பட்டு வந்திருக்கும் பெரியோர்களுடைய ஆசிகள் மாமன்,அத்தையால் பெறப்பட்ட பிறகு உறவினரில் வயதில் மூத்தவர் களுத்துஉரு எடுத்துத்தர மாப்பிள்ளை அணிவிக்கிறார். 
திருப்பூட்டிய பிறகு மணவறைச்சடங்குக்கு புரோகிதர் திரும்பவந்து செய்துவைக்கிறார். இன்றைய நடைமுறையை எழுதியுள்ளேன். திருப்பூட்டும்போது புரோகிதர் நீங்கிவிடும் வழக்கம் ஏனென்றும் எப்பொழுதிருந்தும் என்பது தெரியவில்லை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 
 
தேமொழி

unread,
Mar 24, 2015, 2:01:13 AM3/24/15
to mint...@googlegroups.com

On Monday, March 23, 2015 at 10:45:33 PM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
திருப்பூட்டும்போது புரோகிதர் நீங்கிவிடும் வழக்கம் ஏனென்றும் எப்பொழுதிருந்தும் என்பது தெரியவில்லை.

அது ஒரு வகையில் நல்லது என்றே வைத்துக் கொள்ளுங்கள் ஐயா...

Thamizh Thirumanam - Kannappa Muthaliyaar - 1953

இந்த நூலின் கடைசிப் பக்கத்தைப் பார்த்தீர்களானால் சிரிப்பு தாளவே தாளாது.

..... தேமொழி

செல்வன்

unread,
Mar 24, 2015, 2:28:50 AM3/24/15
to mintamil

பகுத்தறிவாளர்களும் விரும்பும் தாலி

தேமொழி

unread,
Mar 24, 2015, 2:46:12 AM3/24/15
to mint...@googlegroups.com

சட்ட வரைவு:
https://youtu.be/7-Qs-PVvGf4?t=2h5m50s

கழக ஆட்சியின் முதல் சட்டம்:

..... தேமொழி 

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 24, 2015, 2:57:48 AM3/24/15
to mintamil
:)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 3:05:31 AM3/24/15
to mintamil

2015-03-24 12:27 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
:)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

இறுதிச் சடங்கு செய்யும் போது, ‘இது என் தந்தை (அல்லது தாயின்) பிரேதம்.. இதற்கு நான் கடன் செலுத்துகிறேன்’ என்று மந்திரம் சொல்லும் போது, புரோகிதர் முதலில் சொன்ன பிறகே அந்த மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.  அப்படியானால் இறந்து கிடப்பது புரோகிதரின் பெற்றோரா?

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

செல்வன்

unread,
Mar 24, 2015, 3:24:55 AM3/24/15
to mintamil
சத்தியசோதனையை ஆசிரியர் வகுப்பில் சத்தமாக "காந்தி ஆகிய நான்.." என படித்ததால் அவர் தான் காந்தி என சொல்லுவது மாதிரி இருக்கு.

இதனால் தான் முற்போக்கு என்பது ஜோக் என்பது..படித்தால் சிரிப்பு வருதுல்ல :-)

தேமொழி

unread,
Mar 24, 2015, 3:30:39 AM3/24/15
to mint...@googlegroups.com
///
சத்தியசோதனையை ஆசிரியர் வகுப்பில் சத்தமாக "காந்தி ஆகிய நான்.." என படித்ததால் அவர் தான் காந்தி என சொல்லுவது மாதிரி இருக்கு.
இதனால் தான் முற்போக்கு என்பது ஜோக் என்பது..படித்தால் சிரிப்பு வருதுல்ல :-)
///

///
இறுதிச் சடங்கு செய்யும் போது, ‘இது என் தந்தை (அல்லது தாயின்) பிரேதம்.. இதற்கு நான் கடன் செலுத்துகிறேன்’ என்று மந்திரம் சொல்லும் போது, புரோகிதர் முதலில் சொன்ன பிறகே அந்த மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.  அப்படியானால் இறந்து கிடப்பது புரோகிதரின் பெற்றோரா?
///

ஒரு தாயோ தந்தையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பெற்றோராக இருக்கலாம் ... சகோதர சகோதரி, மகன் மகள் என்பதும் அவ்வாறே.

மனதில்  அன்பிருந்தால் அனைவரையும் சகோதர உறவுடன் ஏற்றுக் கொள்ளலாம்....விவேகானந்தர் அவ்வாறுதான் அழைத்தார்.

ஆனால், கணவன் மனைவி உறவு அவ்வாறா?

தனது தம்பியயை உன் தம்பி என்றவர் தனது மனைவியை குகனிடம் ராமர் எப்படி அறிமுகப்படுத்துவதாகக் கம்பர் கூறுகிறார்.

அன்னவன் உரை கேளா,
     அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ’
     இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்;
     நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில்
     உரிமையின் உள்ளேன்.’

என் உயிரைப்போலச் சிறந்த குகனே ... 
என் தம்பி தம்பி இலக்குவன் உன்தம்பியாவான்
அழகிய நெற்றியை உடையாளாகிய இந்த சீதை உன் கொழுந்தியாவாள்
குளிர்ந்த கடலாற் சூழப்பெற்ற எனது நாடு உன்னுடையது நான் உன்னுடைய ஏவல் தொழிலுக்குக் கட்டுப்படும் உரிமையில்இருக்கின்றவனாவேன்.

..... தேமொழி

செல்வன்

unread,
Mar 24, 2015, 3:35:42 AM3/24/15
to mintamil

2015-03-24 2:30 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒரு தாயோ தந்தையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பெற்றோராக இருக்கலாம் ... சகோதர சகோதரி, மகன் மகள் என்பதும் அவ்வாறே.

அதெப்படி இருக்கமுடியும்? ஒருவரது தந்தை குத்துக்கல் மாதிரி இருக்கையில் இன்னொருவர் "நான் உன் அப்பா மாதிரி.." என்றால் கேட்பவர் கடுப்பாகமாட்டாரா? 

எல்லாமே விகல்பமாக எடுப்பதும், நன்றாக எடுப்பதும் கேட்பவர், சொல்பவரை பொறுத்தே அமைவது.

--

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 3:36:54 AM3/24/15
to mintamil

2015-03-24 13:00 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனால், கணவன் மனைவி உறவு அவ்வாறா?

என்னுடைய (மம) என்று சொல்லும் போதெல்லாம் புரோகிதர் ‘மம-ன்னு சொல்லுங்கோ’ என்று தன்னை விலக்கிக் கொள்வது வழக்கம்.  அது திருமணச் சடங்காயினும் சரி, மற்ற எந்தச் சடங்காயினும் சரி.

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 3:39:13 AM3/24/15
to mintamil

2015-03-24 13:05 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஒருவரது தந்தை குத்துக்கல் மாதிரி இருக்கையில் இன்னொருவர் "நான் உன் அப்பா மாதிரி.." என்றால் கேட்பவர் கடுப்பாகமாட்டாரா? 

அதுவும் ‘இது என் தந்தையுடைய பிரேதம்’ என்னும்போது, புரோகிதருடைய தந்தையார் உயிரோடு இருந்தால், அதுவும் பொருத்தந்தானோ?

தேமொழி

unread,
Mar 24, 2015, 3:40:39 AM3/24/15
to mint...@googlegroups.com

On Tuesday, March 24, 2015 at 12:35:42 AM UTC-7, செல்வன் wrote:

2015-03-24 2:30 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒரு தாயோ தந்தையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பெற்றோராக இருக்கலாம் ... சகோதர சகோதரி, மகன் மகள் என்பதும் அவ்வாறே.

அதெப்படி இருக்கமுடியும்? ஒருவரது தந்தை குத்துக்கல் மாதிரி இருக்கையில் இன்னொருவர் "நான் உன் அப்பா மாதிரி.." என்றால் கேட்பவர் கடுப்பாகமாட்டாரா? 

Exactly!!!  you have got the point that I try to make

அந்த தந்தைக்கு ஏன் கோபம் வருகிறது?

செல்வன்

unread,
Mar 24, 2015, 3:46:04 AM3/24/15
to mintamil

2015-03-24 2:40 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Exactly!!!  you have got the point that I try to make

அந்த தந்தைக்கு ஏன் கோபம் வருகிறது?

தந்தை பெரியார் என்றால் கோபித்துகொள்ள வேண்டுமா?

நேரு மாமா என்றால் தப்பாக எடுத்துக்க வேண்டுமா?

--

Banukumar Rajendran

unread,
Mar 24, 2015, 3:46:26 AM3/24/15
to மின்தமிழ்
மறுபடியும் வெறுமே பேசிக் கொண்டிருப்பதிற்கு பதில், வடமொழி வல்லாரை கொண்டு, புரோகிதர்கள் சொல்லும் கல்யாண மந்திரத்தை, வரிக்கு வரி தமிழில் மொழிப்பெயர்த்து இங்கு இடலாம். (யான் திரு.கோதண்டராமர் ஐயாவைப் பரிந்துரைக்கிறேன் - அவருக்கு விருப்பம் இருப்பின்). 

இரா.பானுகுமார்

--

தேமொழி

unread,
Mar 24, 2015, 3:49:42 AM3/24/15
to mint...@googlegroups.com
of course ... 

இம்த மந்திர தந்திர கேள்விகளுக்கு விளக்கம்  பெற விழைவோருக்கு 

///
மந்திரங்களின் உட்பொருளை அறிந்தால் அதன்மீது வெறுப்பு வராது.  அதை எந்த மொழியில் சொல்லவேண்டும் என்று வேண்டுமானால் வாதிக்கலாம்.  அவை தேவையற்றது என்று முடிவு கட்டுமுன் அவை என்ன சொல்கின்றன என்பதை அறிவது மேலல்லவா?  
///

என்று சொன்னவர் உதவக் கூடும்.

back to Mr. Arozonan 

..... தேமொழி

On Tuesday, March 24, 2015 at 12:46:26 AM UTC-7, இரா.பா wrote:
மறுபடியும் வெறுமே பேசிக் கொண்டிருப்பதிற்கு பதில், வடமொழி வல்லாரை கொண்டு, புரோகிதர்கள் சொல்லும் கல்யாண மந்திரத்தை, வரிக்கு வரி தமிழில் மொழிப்பெயர்த்து இங்கு இடலாம். (யான் திரு.கோதண்டராமர் ஐயாவைப் பரிந்துரைக்கிறேன் - அவருக்கு விருப்பம் இருப்பின்). 

இரா.பானுகுமார்
2015-03-24 13:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Tuesday, March 24, 2015 at 12:35:42 AM UTC-7, செல்வன் wrote:

2015-03-24 2:30 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒரு தாயோ தந்தையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பெற்றோராக இருக்கலாம் ... சகோதர சகோதரி, மகன் மகள் என்பதும் அவ்வாறே.

அதெப்படி இருக்கமுடியும்? ஒருவரது தந்தை குத்துக்கல் மாதிரி இருக்கையில் இன்னொருவர் "நான் உன் அப்பா மாதிரி.." என்றால் கேட்பவர் கடுப்பாகமாட்டாரா? 

Exactly!!!  you have got the point that I try to make

அந்த தந்தைக்கு ஏன் கோபம் வருகிறது?
 
எல்லாமே விகல்பமாக எடுப்பதும், நன்றாக எடுப்பதும் கேட்பவர், சொல்பவரை பொறுத்தே அமைவது.

--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Mar 24, 2015, 4:05:31 AM3/24/15
to மின்தமிழ்
இல்லை தேமொழியாரே, உண்மையில் இதுபோன்ற பிரச்சனைகள் தீர நல்ல நடுனிலைமையான சார்புயின்றி எழுதும் இருமொழி வல்லார்தான் தேவை. பிரச்சனைக்கு முடிவு உண்டாகும். சில வருடங்களுக்கு முன்னால், நக்கீரன் இதழில் தாத்தாச்சாரியார் அவர்கள் கிட்டதட்ட (தாங்கள் கொடுத்த பொத்தகத்தில்) அதே கருத்தை சொல்லியிருந்தார். உண்மையை வெளிப்படுத்த இது ஒரு நல்ல தருணமாக எடுத்துக் கொண்டு தக்காரை வைத்து முடிவு செய்யலாம். வாதி, பிரதிவாதி இருவருக்குமே பிரச்சனையின்றி சுமூகமாக முடியும்.

இரா.பானுகுமார்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 24, 2015, 4:11:06 AM3/24/15
to mint...@googlegroups.com
///
 பிரச்சனைகள் தீர நல்ல நடுனிலைமையான சார்புயின்றி எழுதும் இருமொழி வல்லார்தான் தேவை
///

ஆம்...ஒப்புக்கொள்கிறேன்....

Geetha Sambasivam

unread,
Mar 24, 2015, 4:28:23 AM3/24/15
to மின்தமிழ்
முழுவதும் வாசித்தேன். மேல் அதிகத் தகவல்கள், விளக்கங்களுக்குக் காத்திருக்கிறேன். :)

இராமகி

unread,
Mar 24, 2015, 7:26:31 AM3/24/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com

8 ஆண்டுகளுக்கு முன்னால் 2007 இல் கீழே 7 பகுதிகளில் தாலி பற்றி ஓரளவு சொன்னேன். என்னுடைய எத்தனையோ தொடர்கள் முடிவுறாது இருப்பன போலவே இதுவும் முடிவுறாது போனது. இருந்தாலும் எழுதியதைப் படித்துப் பாருங்கள். தாலி என்ற சொல்லும், பொருளும் தமிழருடையது என்றே நான் கருதுகிறேன். அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.
  
http://valavu.blogspot.in/2007/06/1.html
http://valavu.blogspot.in/2007/06/2.html
http://valavu.blogspot.in/2007/06/3.html
http://valavu.blogspot.in/2007/06/4.html
http://valavu.blogspot.in/2007/07/5.html
http://valavu.blogspot.in/2007/07/6.html
http://valavu.blogspot.in/2007/07/7.html

அன்புடன்,இராம.கி.

On Sunday, March 22, 2015 at 3:54:07 PM UTC+5:30, Suba.T. wrote:
திரு.ராம் காமேஸ்வரன் பகிர்ந்து கொண்ட தொ.பாவின் கட்டுரையை வாசித்த போது தமிழர் திருமண மங்கலச் சின்னம் பற்றி தனி இழையில் உரையாடலாமே என மனதிற்குத் தோன்றியது. ஏற்கனவே சில பதிவுகள் முன்னரே நமது மின் தமிழில் வந்துள்ளன. 

இந்த இழையில் இந்த திருமண மங்கலச் சின்னம், அதன் தோற்றம், வரலாறு, பின்னனி, பல வேறுபட்ட சமூகங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி உரையாடலாம் என நினைக்கின்றேன்.

முதலில் எனது பங்களிப்பாக நான் வெளியிட்ட விழியப் பதிவு. இது தமிழக நாடார் சமூகத்தில் நாடார் வழக்கில் உள்ள வழக்கத்தை விளக்கும் பதிவு https://www.youtube.com/watch?v=Rytla9KDHwU  தோழி திலகபாமாவின் மாமியார் இவர். 

சுபா

---------- Forwarded message ----------
From: Suba.T. <ksuba...@gmail.com>
Date: 2015-03-22 11:18 GMT+01:00
Subject: Re: [MinTamil] மாட்டிறைச்சி விருந்து இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>

தொ.பாவின் எழுத்துக்களை நான் விரும்பிப்படிப்பேன். நல்லதொரு கட்டுரை.
10ம் நூற்றாண்டு வரை தாலி என்னும் அடையாலச் சின்னம் பற்றிய குறிப்பு இல்லை என்பது யோசிக்க வைக்கின்றது. தனி இழையாகத்
​​
தாலி அல்லது தமிழர் திருமண மங்கலச் சின்னம் என்ற வகையில் ஒரு இழை தொடஙகாலம் என நினைக்கின்றேன்.

சுபா

2015-03-21 3:10 GMT+01:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:

தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

Evening-Tamil-News-Paper_78357660771

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும். ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும். தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம். நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன.

மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது. நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர். புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு) இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்) தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும். ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது. இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன.

பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

On Friday, March 20, 2015 at 4:20:47 PM UTC-4, தேமொழி wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Hari Krishnan

unread,
Mar 24, 2015, 7:41:17 AM3/24/15
to mintamil, Subashini Tremmel

2015-03-24 16:56 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.

நன்றாக உரக்கச் சொல்லுங்கள் ஐயா.  வால்மீகி இராமாயணத்தில், தாலி கட்டாமல்தான் சீதையின் திருமணம் நடக்கிறது.  இதைப் பின்பற்றிய கம்பன் தன்னுடைய காப்பியத்தில், கடிமணப் படலத்தில் எல்லாச் சடங்குகளையும் சொன்னாலும், தாலி கட்டுவதைப் பற்றித் தனியே குறிப்பிடவில்லை.

ஆனால், பின்னால் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்தில்:

'கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,
பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?
இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ

உன் கழுத்தில் இன்று தாலி இருக்கிறதென்றால், அதற்கு நீ அன்று களைந்த மற்ற அணிகலன்கள்தான் காரணம்.  (நீ அந்த அணிகலன்களை இட்டதால்தான், இராமன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.) என்று அழுத்தமாக வலியுறுத்துகிறான் கம்பன்.

அரக்கியர் கழுத்திலும் தாலி இருந்தது.  அனுமனைக் கட்டுவதற்குக் கயிறு தேடியபோது (சுந்தர காண்டத்தில்) அவனவன் தன் மனைவி கழுத்திலிருக்கும் தாலியைத் தவிர மற்ற எல்லாக் கயிறுகளையும் கொண்டு வந்தானாம்.

மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார். 

மங்கலம் என்றால் தாலியைத்தான் குறிக்கிறது என்பது இந்தப் பாடலில் வலுப்பெறுகிறது.

மங்கலம் என்ப மனைமாட்சி.  இதுவும் அதுவே அன்றோ.

N. Ganesan

unread,
Mar 24, 2015, 8:53:29 AM3/24/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai, housto...@googlegroups.com

On Tuesday, March 24, 2015 at 4:41:17 AM UTC-7, Hari wrote:

2015-03-24 16:56 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.

நன்றாக உரக்கச் சொல்லுங்கள் ஐயா.  வால்மீகி இராமாயணத்தில், தாலி கட்டாமல்தான் சீதையின் திருமணம் நடக்கிறது.  இதைப் பின்பற்றிய கம்பன் தன்னுடைய காப்பியத்தில், கடிமணப் படலத்தில் எல்லாச் சடங்குகளையும் சொன்னாலும், தாலி கட்டுவதைப் பற்றித் தனியே குறிப்பிடவில்லை.

ஆனால், பின்னால் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்தில்:

'கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,
பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?
இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ

உன் கழுத்தில் இன்று தாலி இருக்கிறதென்றால், அதற்கு நீ அன்று களைந்த மற்ற அணிகலன்கள்தான் காரணம்.  (நீ அந்த அணிகலன்களை இட்டதால்தான், இராமன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.) என்று அழுத்தமாக வலியுறுத்துகிறான் கம்பன்.

அரக்கியர் கழுத்திலும் தாலி இருந்தது.  அனுமனைக் கட்டுவதற்குக் கயிறு தேடியபோது (சுந்தர காண்டத்தில்) அவனவன் தன் மனைவி கழுத்திலிருக்கும் தாலியைத் தவிர மற்ற எல்லாக் கயிறுகளையும் கொண்டு வந்தானாம்.

மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார். 

மங்கலம் என்றால் தாலியைத்தான் குறிக்கிறது என்பது இந்தப் பாடலில் வலுப்பெறுகிறது.

மங்கலம் என்ப மனைமாட்சி.  இதுவும் அதுவே அன்றோ.

“ஈகை அரிய இழை அணி மகளிரொடு” - புறம்.
பொருட் கஷ்டம் வந்தால் மற்ற அணிகளைக் கொடுத்துவிடும் சுமங்கலி (உ-ம்: கண்ணகி), தாலியை ஒருபோதும் தரமாட்டாள்.
அது “ஈகை அரிய இழை” என்கிறது புறநானூறு. 
என் அப்பச்சி (அம்மாவின் தந்தை) 1975-ல் இறந்தபோது பார்த்தேன்.
பாட்டியை ஊஞ்சலில் உட்காரவைத்து, அம்பட்டன் “சாமி, இழையை வாங்கணுங்க”
என்று தாலியை வாங்கினான். அதன்பிறகு பொட்டு போய்விட்டது. வெள்ளைச்சீலை அணிந்திருந்தார்கள்.
நிகழ்ந்த இடம்: தேவர்மகன் படத்தில் வரும் சிங்கநல்லூர் வீடு.

-----------------------------------

"யாழ” என்னும் முன்னிலை அசைச்சொல் 
“போடுவையா? யாழ!” > போடுவியாலெ? என்றாகிவிட்டது (நெல்லையில்).
"எலே' என்பது நெல்லை மக்கள் சகஜமாகப் பயன் படுத்தும் ஒரு சொல். அது, பல பாவங்களில் பிரயோகமாகும். "எலே... இந்த வருஷமாவது கலியாணச் சாப்பாடு போடுவியாலே?'  - (அன்பு) "என்னலே நினைச்சுக் கிட்டே!' - (கோபம்) இந்த, "எலே' என்பது "எல்லே' என்ற பழைய தமிழ்ச் சொல்லின் மரூஉ. "எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?' என்று,  திருப்பாவையில், பாடுகிறாள் ஆண்டாள். *** (தினமலர்)

தாழை என்பது palm இன மரங்களுக்குப் பொதுப்பெயர். தெலுங்கில் தாடி என்று
ழகரம் டகரம் ஆகும். இதுவே Toddy liquor. 

பழம் > பலம், யாழ > யாலெ, போல தாழை > தாலம் (தாலி = பனையோலைச் சுருள்).
உள்ள மரங்களிலே மனிதர் போல், ஆண் பெண் பால் உள்ள பனையில்
பெண்ணை குலைஈனும். குலை என்னும் சொல்லோடு தொடர்புள்ள குலம்
தழைக்க தாழம் > தாலம்  (தாலி) அணியத் தலைப்பட்டனர் போலும் தமிழர்கள்.

--------------------
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.

நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த  தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):

நா. கணேசன்

2697நாணுள் ளிட்டுச் சுடர்வீசு
  நன்மா ணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்தணிந்து
  பெருங்கண் கருமை விருந்தூட்டி
நீணீர் முத்த நிரைமுறுவல்
  கடுச்சுட் டுரிஞ்சக் கதிருமிழ்ந்து
தோணீர்க் கடலுட் பவளவாய்த்
  தொண்டைக் கனிக டொழுதனவே.

   (இ - ள்.) நாண் உள்இட்டுச் சுடர் வீசும் நன்மாணிக்கம் நகுதாலி - நாணைத் தன்னுள்ளே அடக்கி, ஒளிவீசும் நல்ல மணிகளிழைத்த நகுகின்ற தாலியை; நல்லார் பேணிக் கழுத்து அணிந்து - மடவார் ஓம்பிக் கழுத்திலே அணிந்து ; பெருங்கண்கருமை விருந்து ஊட்டி - பெரிய கண்ணிலே கரிய மையைப் புதுமைபெற அணிந்து; நீள்நீர் முத்தம் நிரைமுறுவல் - பெரு நீர்மையுடைய முத்தனைய வரிசையான பற்களை; கடுச்சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து - கடுவைச் சுட்டுத் தேய்த்தலால் அவை ஒளியை வீசி; தோள்நீர்க் கடலுள் பவளவாய் - தோண்டின நீரையுடைய கடலிலுள்ள பவளம் போன்ற வாயை; தொண்டைக் கனிகள் தொழுதன - கொவ்வைக் கனிகள் தோற்று வணங்கின.

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 9:04:00 AM3/24/15
to mintamil, Subashini Tremmel, vallamai, housto...@googlegroups.com

2015-03-24 18:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.

நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த  தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):

தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?

N. Ganesan

unread,
Mar 24, 2015, 9:10:08 AM3/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Tuesday, March 24, 2015 at 6:04:00 AM UTC-7, Hari wrote:

2015-03-24 18:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.

நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த  தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):

தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?

இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் மங்கலம் என்று வள்ளுவர் மங்கிலிய சூத்திரத்தைச்
சொல்லுதலும், மங்கிலிய சூத்திரத்தை தாலி என்றே சிந்தாமணி குறிப்பிடுதலும் பார்ப்போம்.

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Mar 24, 2015, 1:25:25 PM3/24/15
to mintamil
// உண்மையில் இதுபோன்ற பிரச்சனைகள் தீர நல்ல நடுனிலைமையான சார்புயின்றி எழுதும் இருமொழி வல்லார்தான் தேவை. பிரச்சனைக்கு முடிவு உண்டாகும். //

//ஆம்...ஒப்புக்கொள்கிறேன்//

நான் நடுநிளைமையற்றவன் என்று முன்மொழிந்த உயர்திரு பானுகுமார் அவர்களுக்கும், அதை வழிமொழிந்த தேமொழி அவர்களுக்கும் மிக்க நன்றி.  இங்கு யாரும் வாதியும் இல்லை, பிரதிவாதியும் இல்லை.  இனி இந்த இழையில் நான் எந்தக் கருத்துப் பதிவதிலும் ஒருவிதமான பயனும் இல்லை.

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Mar 24, 2015, 3:12:40 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
நன்றி

//
தாலி கட்டுவது அடிமைத் தனம் என்று சொல்லுகின்ற இவர்களுக்கு, அதே பொழுது, வெள்ளைக்கார முறையில் மோதிரம் மாற்றுவது மட்டும் முற்போக்காய்த் தெரிவது தான் வேடிக்கை; திருமண முறிவு வரை தாலியைப் போல, மோதிரத்தைக் கழட்டாமல் தான் அங்கு பெரும்பாலும் இருக்கிறார்கள். "தாலிக்குள் முடங்கிக் கிடக்கும் மூதிகங்களை விட்டொழித்துப் பார்த்தால் மோதிரத்திற்கும் தாலிக்கும் வேறுபாடு ஒன்றும் பெரிதாய்க் கிடையாது" என்று கூட அறியாது முற்போக்காளர்கள் இருப்பார்களோ? :-) "வெள்ளைக்காரன் மரபு ஒசத்தி, நம்முடையது மட்டும் தாழ்த்தி" என்ற முடிவிற்கு இவர்கள் வருவதே ஓர் அடிமைத்தனம் அல்லவா?) 
//

​கிறிஸ்துவ முறையில் ஆண் பென் இரு பாலருமே மோதிரம் அணிகின்றனர். தமிழர் வழக்கில் பெண்ணுக்கு மட்டும் தானே சடங்காக தாலி அணியப்படுகின்றது. இது தான் அடிமைத்தனத்தை ஒப்பிட்டு சொல்லப்படுகின்ரது என நான் நினைக்கின்றேன். இரு பாலருக்கும் அனைவரும் காணக்கூடிய ஒரு சின்னம் வழங்கப்பட்டால் அடிமைத்தனம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

சுபா

தேமொழி

unread,
Mar 24, 2015, 4:08:52 PM3/24/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
பெண்கள் திருமணமானவரா இல்லையா என்ற தகவலை உலகில் அனைவரும் ஏதோ ஒருவகையில் அறிய விரும்புகிறார்கள்

நட்பு என்ற நிலையில் அவர் யாராக இருந்தாலும் பின்புலம் தெரிந்து என்ன ஆகப் போகிறது, அதைப்பற்றி, அவர் ஆணோ..பெண்ணோ தெரிந்து கொள்ளத் தேவை என்ன என்பது என் கருத்து. 

ஒருவர் உறவுக்கு கிடைப்பாரா மாட்டாரா என்ற அடிப்படை நோக்கில் கேட்காமலே தெரிந்துகொள்ள புறச்சான்றுகள் தேவைப் படுகிறது  போலும். மோதிரம் ...தாலி ...இன்ன பிற...

ஆடவன் நிமிர்ந்து நடந்தான் எனவே பெண் கழுத்தில் தாலி....பெண் குனிந்து நடந்தாள் அதனால் ஆண் காலில் மெட்டி  என்ற விளக்கம் இதைத்தான் கூறுகிறது.

இருவரும் அணியும் பொழுது அவர்கள் தகுதி ...மணமாகிவிட்டது என்று புரிகிறது. 

இங்கு ஒருமுறை திருமணமான ஆண் செய்தி வாசிப்பவர் ஒருவர் கையில் மோதிரம் இன்றி தோன்றிய பொழுது உடனே அலர் தொடங்கியது.  மனைவியுடன் சண்டை, மணவிலக்கு என்பது போன்ற பேச்சுகள்.

ஆனால் நம் நாட்டில் பெண் மட்டும் அணிய "புனிதம்" "மரபு" என்ற போர்வையில் மூளைச்சலவையாக  கருத்து திணிப்பு நடந்துள்ளது.  ஆண்கள் அணியாமல் இருப்பது தனது திருமண நிலையை மறைக்க  விரும்பும் மனநிலை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலை  வேறு மதங்களைப் பின்பற்றினாலும் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப் போய் விட்டது. 

இந்த நூற்றாண்டிலும், இருவரும் அணிந்து  கொள்ளுங்கள்; அல்லது இருவரும் விட்டு விடுங்கள் என்பது போன்ற யோசனையை நான் இழையில் இதுவரை கேட்கவில்லை. 

அப்படியே புற அடையாளங்களை விட்டொழித்தாலும் பெயர் சொல்லும் பொழுதாவது பெண்கள் அவர்கள்  திருமதியா அல்லது செல்வியா என்று சொல்லியே ஆக வேண்டும். இந்த எதிர்பார்ப்பும்  உலகம் முழுவதுமே இருக்கிறது. 

..... தேமொழி

தேமொழி

unread,
Mar 24, 2015, 4:12:09 PM3/24/15
to mint...@googlegroups.com

On Tuesday, March 24, 2015 at 6:10:08 AM UTC-7, N. Ganesan wrote:
On Tuesday, March 24, 2015 at 6:04:00 AM UTC-7, Hari wrote:
தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?
இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் மங்கலம் என்று வள்ளுவர் மங்கிலிய சூத்திரத்தைச்
சொல்லுதலும், மங்கிலிய சூத்திரத்தை தாலி என்றே சிந்தாமணி குறிப்பிடுதலும் பார்ப்போம்.

இது எங்கு போய் நிற்கும் என இப்பொழுதே  கொஞ்சம் கிலியாக இருக்கிறது.

..... தேமொழி

செல்வன்

unread,
Mar 24, 2015, 6:50:28 PM3/24/15
to mintamil

2015-03-24 14:12 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
கிறிஸ்துவ முறையில் ஆண் பென் இரு பாலருமே மோதிரம் அணிகின்றனர். தமிழர் வழக்கில் பெண்ணுக்கு மட்டும் தானே சடங்காக தாலி அணியப்படுகின்றது. இது தான் அடிமைத்தனத்தை ஒப்பிட்டு சொல்லப்படுகின்ரது என நான் நினைக்கின்றேன். இரு பாலருக்கும் அனைவரும் காணக்கூடிய ஒரு சின்னம் வழங்கப்பட்டால் அடிமைத்தனம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

கிறிஸ்துவமதம், இந்துமதம், இஸ்லாம் மூன்றிலும் கணவனே குடும்பத்தின் தலைவன். மனைவி அவனுக்கு கட்டுபட்டு இருக்கவே பணிக்கபடுகிறது. ஆனால் அதன் பெயர் அடிமைத்தனம் அல்ல. ஒருவரை நாம் தலைவராக ஏற்றால் அவருக்கு நாம் அடிமைகள் என பொருள் இல்லையே?

எபிசெயர் 5:22

மனைவிகளே, நம்முடைய எஜமானருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.

பேதுரு 3:1-22

அதேவிதமாக மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும்,  உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து உங்கள் நடத்தையினாலேயே விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்;

இதுவே இந்துசமயத்திலும் இல்வாழ்க்கைநெறியாக கூறப்பட்டது

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

(இல்வாழ்க்கையில் கற்ப்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.)

அண்ணாதுரை அவர்கள் சொன்ன கடமை, கண்ணியம், கட்டுபாடு இதனுடன் ஒப்புநோக்குக...குடும்பத்தில் சமத்துவம் எம்மதங்களிலும் வலியுறுத்தபடவில்லை. கணவனே குடும்பத்தின் தலைவன். மனைவி அவன் தலைமையை ஏற்றவர். தலைவன் சர்வாதிகாரியாக நடக்க அனுமதி இல்லை. அவனுக்கான நெறியும் கூறபட்டது

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

எந்த ஒரு அமைப்புக்கும் நல்ல தலைமை அவசியம். அப்படி அமைந்ததாலேயே குடும்ப அமைப்பு சிறந்தது. அதற்கே உலக மதங்கள் அனைத்தும் வழிகாட்டின. கணவனிடம் தலைமை இருந்தாலும் அதை அவன் நல்ல முறையில், மனைவியின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

இதை இன்று பின்பற்றவேண்டும் என கூறவில்லை :-) ஆனால் வரலாற்று ரீதியாக குடும்ப அமைப்பு சமத்துவத்தை கொண்டு உருவாக்கபட்டதில்லை.

--

தேமொழி

unread,
Mar 24, 2015, 7:10:00 PM3/24/15
to mint...@googlegroups.com

On Tuesday, March 24, 2015 at 3:50:28 PM UTC-7, செல்வன் wrote:

2015-03-24 14:12 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
கிறிஸ்துவ முறையில் ஆண் பென் இரு பாலருமே மோதிரம் அணிகின்றனர். தமிழர் வழக்கில் பெண்ணுக்கு மட்டும் தானே சடங்காக தாலி அணியப்படுகின்றது. இது தான் அடிமைத்தனத்தை ஒப்பிட்டு சொல்லப்படுகின்ரது என நான் நினைக்கின்றேன். இரு பாலருக்கும் அனைவரும் காணக்கூடிய ஒரு சின்னம் வழங்கப்பட்டால் அடிமைத்தனம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

கிறிஸ்துவமதம், இந்துமதம், இஸ்லாம் மூன்றிலும் கணவனே குடும்பத்தின் தலைவன். மனைவி அவனுக்கு கட்டுபட்டு இருக்கவே பணிக்கபடுகிறது. ஆனால் அதன் பெயர் அடிமைத்தனம் அல்ல. ஒருவரை நாம் தலைவராக ஏற்றால் அவருக்கு நாம் அடிமைகள் என பொருள் இல்லையே?

இதை இன்று பின்பற்றவேண்டும் என கூறவில்லை :-) ஆனால் வரலாற்று ரீதியாக குடும்ப அமைப்பு சமத்துவத்தை கொண்டு உருவாக்கபட்டதில்லை.

அதனால் என்ன செல்வன்...

காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

...வாலி 

தேமொழி

unread,
Mar 24, 2015, 7:15:50 PM3/24/15
to mint...@googlegroups.com

கற்றுக்கொடுப்பது தமிழினம்! 

அல்லவா ...

..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 24, 2015, 7:21:14 PM3/24/15
to mint...@googlegroups.com, vallamai
:-) ரசித்தேன் :-)

----------
திருச்செங்கோடு/தில்லிகை (< தில்லை) கிருட்டிணகுமாருக்காக ஒரு கந்தரலங்காரம்:
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்‌ஷா
பரண
க்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.

-------------

இழை (அ) நாணில் ஓலைச் சுருளில் தாயத்து போன்றவை கோத்துச்
செய்த தாலி (ஆண், பெண், குழந்தை ...) கலியாணத் தாலி என்று
கி.பி. 3-4 நூற்றாண்டுகளில் மலர்ச்சி அடைந்திருக்கணும். ஸ்ரீ
உத்தர காரணாகமத்திலும், லலிதா சகசிரநாமத்திலும் காண்கிறோம்.
’மாங்கல்யம் தந்துநாநேன’ எந்த நூலில், எந்த நூற்றாண்டில் வருகிறது
எனப் பார்க்கணும். தாலி  obviously a Dravidian custom that is widely prevalent
as a substratum element from Northwest India to Ceylon.

இராவணன் இமையத்தை அசைக்கிறான். போர் மூளுமோ என்று
உமை அஞ்சுகிறாள். மங்கிலியம் நிற்குமோ? - என பயம். எனவே,
அந்த situation-ஐ பாடும் பாடல்களில் சேயிழை, ஏந்திழை, ஆயிழை, ... 
என்று பாடுவார்கள் தேவார முதலிகள். இங்கே அச் சொற்களுக்கு
மங்கலநாண் அணிந்த பார்வதி எனப் பொருளுண்டு.

கைலாசத்தைப் பாடுகையில் இந்த நினைவில் அப்பர் 
ஒரே பதிகத்தில் பாடுகிறார்:

களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்தஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்---
திருத்தனாய் நின்ற தேவன்---திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றாமுன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே!

கற்றனன், கயிலைதன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிக்
செற்றவன் எடுத்தஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றாமுன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

----------------

தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு,
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சிதன்னுள்---
இன்னவற்கு அருளிச்செய்தார்---இலங்கு மேற்றளியனாரே.

தேவாரத்தில் கயிலை பெயர்த்தபோது -இழை என்று
உமையைச் சொல்லும் பாடல்களைப் பார்க்கலாம்.
இங்கே எல்லாம் மங்கல்ய தந்து ரக்‌ஷாபரணம் (அருணகிரிநாதர்)
தான் -இழை எனக் குறிக்கின்றனர் எனக் கருதலாம்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Mar 24, 2015, 7:27:23 PM3/24/15
to mintamil

2015-03-24 18:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

வீடுகட்டிய பின் மேல்பூச்சு, பெயிண்டு என விரும்பிய மாற்றம் செய்யலாம் தேமொழி. ஆனால் அஸ்திவாரத்தை மாற்றுகிறேன் என ஆரம்பித்தால் அப்புறம் பில்டிங்கே தகர்ந்துவிடும் :-)

ஆதிமனிதன் உருவாக்கிய ஒரே சமூக அமைப்பு குடும்பம் மட்டுமே. நாகரிக மனிதன் உருவாக்கிய மதம், ஜாதி, அரசியல், கம்யூனிசம், பெண்ணியம், லிபரலிசம், கேப்பிடலிசம், ஜனநாயகம், போஸ்ட்மாடர்னிசம் போன்ற எந்த அமைப்பும் அந்த குடும்ப அமைப்பின் வெற்றிக்கு அருகே கூட நெருங்க முடியவில்லை. சொல்லபோனால் பின்னாளைய அமைப்புகள் உருவாக்கிய தீமைகள் பலவற்றில் இருந்து குடும்ப அமைப்பே மனித இனத்தை காத்து வந்தது. குடும்ப அமைப்பு சிதைந்தால் அதன்பின் பணம், சோஷியல் செக்யூரிட்டி, மெடிகேர், வெல்ஃபேர் என எதுவும் பயனளிக்காது...

இன்றைய குடும்ப அமைப்பு பல மில்லியன் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானது. அதில் சோஷியல் எஞ்சினியரிங் செய்கிறேன் என ஆரம்பிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு குட்லக். முன்பு சொன்னது போல We all can கோ-எக்சிஸ்ட் :-)

--

N. Ganesan

unread,
Mar 24, 2015, 7:41:38 PM3/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
சௌந்தர்யலகரி 69:
galē rēkhāstisrō gatigamakagītaikanipuṇē
vivāhavyānaddhapraguṇaguṇasaṁkhyāpratibhuvaḥ
virājantē nānāvidha madhurarāgākarabhuvāṁ
trayāṇāṁ grāmāṇāṁ sthitiniyamasīmāna iva tē ||69|| 

O Devi highly proficient in gatigamaka and gita (the essential elements of music)!  The three lines on your neck corresponding to the three strands of the mangalsutra tied by Shiva on the auspicious occasion of your marriage lead one to imagine that they mark the boundary between the three swaragramas  which are the sources of different sweet ragas (melodies).

Oru Arizonan

unread,
Mar 24, 2015, 7:42:25 PM3/24/15
to mintamil
//மூடப் பழக்கத்தை விட்டுவிடு//

அப்படிச் சொல்வதே, தாங்கள் அறிவாளிகள் என்றும், மற்றவர்கள் மூடர்கள் (stupid moran) என்று சொல்வது போலவும் அல்லவா இருக்கிறது?!  குருட்டு நம்பிக்கை, குருட்டு நம்பிக்கைப் பழக்கம் என்று சொன்னால் அதில் பொருள் இருப்பதாக எனக்குப் படுகிறது.  எதிரே இருப்பவரை மூடன் என்று ஒரு விரலைச் சுட்டினால், மூன்று விரல்கள் நம்மைச் சுட்டுகின்றனவே!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

தேமொழி

unread,
Mar 24, 2015, 8:08:41 PM3/24/15
to mint...@googlegroups.com

On Tuesday, March 24, 2015 at 4:27:23 PM UTC-7, செல்வன் wrote:

2015-03-24 18:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

வீடுகட்டிய பின் மேல்பூச்சு, பெயிண்டு என விரும்பிய மாற்றம் செய்யலாம் தேமொழி. ஆனால் அஸ்திவாரத்தை மாற்றுகிறேன் என ஆரம்பித்தால் அப்புறம் பில்டிங்கே தகர்ந்துவிடும் :-)

ஆதிமனிதன் உருவாக்கிய ஒரே சமூக அமைப்பு குடும்பம் மட்டுமே. நாகரிக மனிதன் உருவாக்கிய மதம், ஜாதி, அரசியல், கம்யூனிசம், பெண்ணியம், லிபரலிசம், கேப்பிடலிசம், ஜனநாயகம், போஸ்ட்மாடர்னிசம் போன்ற எந்த அமைப்பும் அந்த குடும்ப அமைப்பின் வெற்றிக்கு அருகே கூட நெருங்க முடியவில்லை. சொல்லபோனால் பின்னாளைய அமைப்புகள் உருவாக்கிய தீமைகள் பலவற்றில் இருந்து குடும்ப அமைப்பே மனித இனத்தை காத்து வந்தது. குடும்ப அமைப்பு சிதைந்தால் அதன்பின் பணம், சோஷியல் செக்யூரிட்டி, மெடிகேர், வெல்ஃபேர் என எதுவும் பயனளிக்காது...

இன்றைய குடும்ப அமைப்பு பல மில்லியன் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானது.

செல்வன்

unread,
Mar 24, 2015, 8:31:25 PM3/24/15
to mintamil
பரிணாமகொள்கையில் நம்பிக்கை இல்லையெனில் படைப்புவாதத்தை நம்பலாம். :-)

Ape family structure:

Gorilla’s Social Structure and Behavior

http://www.brighthub.com/environment/science-environmental/articles/21325.aspx

The Social Structure of Gorillas

Typically gorillas can be found living in groups of between three and thirty members. Groups are usually comprised of a single adult silverback and three to four adult females. Other immature males and females younger than eight may also be part of the group. The adult male is the leader and protector in this type of grouping. Groups of bachelors are also common, with an older dominant male as the primary leader and protector.

Chimpanzee

http://www.janegoodall.ca/about-chimp-behaviour-social-organization.php

Within a chimp community, a male hierarchy, ordered more or less in linear fashion, establishes social standing, with one male at the top or "alpha" position. All adult males dominate all females, although females have their own hierarchy, albeit much less straightforward.

Age is a deciding factor in male dominance hierarchies - the alpha-male is usually between the age of 20 and 26. Other factors that determine dominance and social status are physical fitness, aggressiveness, skill at fighting, ability to form coalitions, intelligence, and other personality traits. Status is either maintained or changed through communication and social interactions, such as physical competition and grooming.

பெண்வழி குடும்ப அமைப்புமுறை காணப்படும் விலங்குகளில் யானை முதன்மையானது.

Matriarchs / Hierarchy Status

  • The oldest, most dominant female is called the matriarch. The matriarch is the backbone of the elephant family unit because she provides stability and determines ranging patterns for the rest of the family.
  • The other females comprising the family unit are usually the matriarch's daughters and their offspring. The hierarchal ranking for these females is based on leadership, experience, and age. Generally, the older the female, the higher her ranking.
  • The primary function of elephant family units is the protection and rearing of calves. Adult females cooperate in the assistance of calf movements, foraging, protection, and social experiences. Calf survivability greatly increases with an increased number of females taking care of them.

Malarvizhi Mangay

unread,
Mar 24, 2015, 11:02:08 PM3/24/15
to mint...@googlegroups.com

கரணம் தப்பினால் மரணம் வரை
அது தொடரும்./ஒரு முறை நிகழும்
திருமணம் தவறின்றி நடைபெறவேண்டும்./இல்லையேல்
மரணம் வரை தொடரும் நரக வாழ்க்கை/.இது ஒரு முறை மட்டுமே திருமணம் என எண்ணி வாழ்பவர்களுக்கு.

--

தேமொழி

unread,
Mar 24, 2015, 11:07:46 PM3/24/15
to mint...@googlegroups.com
On Tuesday, March 24, 2015 at 5:31:25 PM UTC-7, செல்வன் wrote:
பரிணாமகொள்கையில் நம்பிக்கை இல்லையெனில் படைப்புவாதத்தை நம்பலாம். :-)

செல்வன், 
குடும்பம் என்பது மனித இனத்திற்கே உரிய சிறப்பு கண்டுபிடிப்பு  போல நீங்கள் சொல்லவும்... சமூக அமைப்பில் வாழும் பிற விலங்குகளைக் காட்ட எண்ணினேன்.  
மற்றபடி வாழும் அமைப்பு தனித்தோ, குடும்பமோ, அதில் தலைமை ஆணோ பெண்ணோ விலங்கிற்கு விலங்கு மாறுபாடும். மனித இனத்திலேயே மாறுபடும்.

இப்படிக்கு ஒரு "ராணி"த்தேனீ 

Banukumar Rajendran

unread,
Mar 24, 2015, 11:18:11 PM3/24/15
to மின்தமிழ்
2015-03-24 22:55 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
// உண்மையில் இதுபோன்ற பிரச்சனைகள் தீர நல்ல நடுனிலைமையான சார்புயின்றி எழுதும் இருமொழி வல்லார்தான் தேவை. பிரச்சனைக்கு முடிவு உண்டாகும். //

//ஆம்...ஒப்புக்கொள்கிறேன்//

நான் நடுநிளைமையற்றவன் என்று முன்மொழிந்த உயர்திரு பானுகுமார் அவர்களுக்கும்,

மன்னிக்கவும் ஐயா. அவ்வாறு பொருள் வருகிறது. எனினும் யான் அவ்வாறு நினைத்து எழுதவில்லை.

தாங்கள் அதற்கு விளக்கம் கொடுத்தால், பிரச்சனை தீராது. தாங்கள் கொடுக்கும் விளங்களுக்கு வேறோரு தொடுப்பின் மூலம் பதில் விளக்கம் கொடுத்து, விவாதம் வளர்ந்துக் கொண்டேயிருக்கும் என்பதால் யாவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தக்காரை வைத்து விளக்கம் கொடுத்தால் அது நிலையாகவிருக்கும் என்றுதான் சொல்லவந்தேன். யானறிந்து உண்மையை மறைக்காமல் (தான் சார்ந்த சமயத்திற்கு எதிராகயிருந்தாலும்) மடலாடல் அரசியலில் புகாமல் நடுநிலையாக எழுதுவர் என்பதால் அவர் பெயரை முன்னிருத்தினேன்.

என் நிலையை இங்கு எழுதிவிட்டேன். ஏற்பதும் ஏற்காததும் தங்கள் விருப்பம்

நன்றி.

Oru Arizonan

unread,
Mar 24, 2015, 11:31:07 PM3/24/15
to mintamil
தங்கள் நிலைமையைத் தெளிவு படுத்தியதற்கு நன்றி, பானுகுமார் அவர்களே!

தாங்கள் பரிந்துரை செய்பவர் சொல்வதைப் பற்றி விவாதம் செய்யமாட்டார்கள் என்றும் நிச்சயமல்ல.

ஒரு அரிசோனன்

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 25, 2015, 1:24:02 AM3/25/15
to mint...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ கணேசன் ஐயா

இன்று ஒரே கந்தர் அலங்கார நினைவு.

ஆமாம்..........மரண ப்ரமாதம் நமக்கில்லையாம் ............ அலங்காரத்தில்

சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷாபரண க்ருபாகரா........சசிதேவி (இந்த்ரனின் மனைவி) யின் மங்கலநாணைக் காப்பாற்றிய பெருமானே என்று நாககிரிப்பெருமானைத் துதிக்கிறார் வள்ளல் அருணகிரிப் பெருமான்.

மங்கலநாண் என்ற படிக்கு அழகான குறிப்பு.

ஆனால் இந்த இழையில் மங்கலநாண் காலச்சுழலில் சிக்கித் திளைக்கிறது..........முக்கியமான .....ஆனால்.... பிற்கால இலக்கியக் குறிப்பு இது.

செல்வன்

unread,
Mar 25, 2015, 2:03:02 AM3/25/15
to mintamil

On Tue, Mar 24, 2015 at 10:07 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
குடும்பம் என்பது மனித இனத்திற்கே உரிய சிறப்பு கண்டுபிடிப்பு  போல நீங்கள் சொல்லவும்... சமூக அமைப்பில் வாழும் பிற விலங்குகளைக் காட்ட எண்ணினேன்.  
மற்றபடி வாழும் அமைப்பு தனித்தோ, குடும்பமோ, அதில் தலைமை ஆணோ பெண்ணோ விலங்கிற்கு விலங்கு மாறுபாடும். மனித இனத்திலேயே மாறுபடும்.

இப்படிக்கு ஒரு "ராணி"த்தேனீ 

நம் ஒபாமாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது குடும்ப அமைப்பு ஐடியலான குடும்ப அமைப்பு. மிசல் ஒபாமா கணவருக்காக வேலையை விட்டு சம்பளம் இல்லாத வேலையான பர்ஸ்ட் லேடி ஆனார். அப்படி செய்ததால் தான் ஒபாமாவால் ஜனாதிபதி ஆக முடிந்தது.

அதுக்காக ஒபாமா மிஷலை ஒடுக்குகிறார் என சொல்ல முடியுமா? மிஷல் சொன்னபடி தான் பராக்கும் கேட்டு நடக்கிறார். ராம்னியும், ஆன் ராம்னியும் கூட அப்படித்தான். இதை எல்லாம் ஆணாதிக்கம் என்றால் என்ன சொல்ல? :-)

--

N. Ganesan

unread,
Mar 26, 2015, 12:38:42 AM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

தாலி கட்டுதலை திருப் பூட்டுதல் என்பது கலியாணத்தில். கணவன் இறந்தபின், மனைவியை ஊஞ்சலில் இருத்தி
மங்கலன் கீழம்ர்ந்து ஊரார் உறவினர் முன்னிலையில் அத் திருவை வாங்குதலும் ஈமச் சடங்கு. இதனைக்
கம்பன் பாடியுள்ளான்.

5809.

‘ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம்;இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம்; இவன்சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம்’ என்றுஅழும் மாதரார் பலர்.

     ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - ‘மலை போன்ற மிக்க
வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை;
நீங்கலம் - 
இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் -
(இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம்
ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால்
திருவாங்கலம் - 
இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து
இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்’; என்று
அழும் மாதரார் பலர் - 
என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர்.

     ‘தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன்
தலையின் மேல் தான் நடத்துவோம்’ என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன்
கூறினர் என்க.                                           (5)

N. Ganesan

unread,
Mar 26, 2015, 1:23:53 AM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

இழை (அ) நாணில் ஓலைச் சுருளில் தாயத்து போன்றவை கோத்துச்
செய்த தாலி (ஆண், பெண், குழந்தை ...) கலியாணத் தாலி என்று
கி.பி. 3-4 நூற்றாண்டுகளில் மலர்ச்சி அடைந்திருக்கணும். ஸ்ரீ
உத்தர காரணாகமத்திலும், லலிதா சகசிரநாமத்திலும் காண்கிறோம்.
’மாங்கல்யம் தந்துநாநேன’ எந்த நூலில், எந்த நூற்றாண்டில் வருகிறது
எனப் பார்க்கணும். தாலி  obviously a Dravidian custom that is widely prevalent
as a substratum element from Northwest India to Ceylon.

இராவணன் இமையத்தை அசைக்கிறான். போர் மூளுமோ என்று
உமை அஞ்சுகிறாள். மங்கிலியம் நிற்குமோ? - என பயம். எனவே,
அந்த situation-ஐ பாடும் பாடல்களில் சேயிழை, ஏந்திழை, ஆயிழை, ... 
என்று பாடுவார்கள் தேவார முதலிகள். இங்கே அச் சொற்களுக்கு
மங்கலநாண் அணிந்த பார்வதி எனப் பொருளுண்டு.

இராவணன் கயிலையை அலைக்கையில், இலங்கிழை என்று பார்வதியை
சொல்லும் தேவாரம்:
உளங்கையில், இருபதோடு ஒன்பதும் கொடு, ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,
தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.

N. Ganesan

unread,
Mar 26, 2015, 10:39:00 PM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
சிலம்பிலே திருமணக்காட்சி - மபொசி

சிலம்பிலே திருமணக்காட்சி

தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்
கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்
சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட
இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்
மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்
காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய
நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது
வருமாறு:

"யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்
அவ்வழி
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்
வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி
யெழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு
உழையதா வெப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ழி உருட்டுவோ னெனவே
(மங்கல வாழ்த்துப் பாடல்)

மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"
என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"
என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்து
வேறுபாடிருக்கவில்லை.

மணணுலக அருந்ததி

ரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றது
என்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளே
திருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்
திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.

இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாக
அருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.
அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்
கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்
கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்
பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்
சடங்கல்ல.

இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்
கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்
திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்
"புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்
வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொது
நம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்.

"மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேத
வழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே
"புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது.

"மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்
இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்
வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.

பொக்கை வாய்ப் புரோகிதர்

பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பது
இந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்
பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.
அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்
நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்
சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்
பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்
தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தை
நடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.

கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்
பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பது
வரையுள்ள வரிகளுக்கு,
" மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்
வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்ற
இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."
என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.

சிலம்பில் படும் புரோகிதர்

இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்த
அடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத
(இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரான
வணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்
இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலி
அணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்று
கிவிடாது.

கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல
- இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்
என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.

சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" என
வரும் சொற்றொடருக்கு,

"மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறிய
இழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.

சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமை
நெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு

" முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது
குத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"

என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்
நச்சினாக்கினியர்.

சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்ய
சூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்
பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியை
பாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணி
மகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.

பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்
என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்
அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.

வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடு
கண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்
இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.

திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி
கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக
அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.

நன்றி
மபொ சிவஞானம்
தமிழர் திருமணம்
பூங்கொடி பதிப்பகம்

N. Ganesan

unread,
Mar 26, 2015, 10:56:05 PM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
நெடுநல் வாடையில் (136-7) அரசனைப் பிரிந்த அரசியின் நிலையை வர்ணிக்கின்ற பொழுது ’ஆரந்தாங்கிய அலர்முலை ஆகத்துப் பின்னும் நெடுவீழ் தாழத் துணைதுறந்து’ என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ’முன்பு முத்தாற்செய்த கச்சு சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நாணொன்றுமே தூங்க’ என்று கூறுகிறார். நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஜே.வி. செல்லையா ‘The Marriage Tie’ (தாலி) என்றே மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையே சிலம்பிலும் காண்கிறோம்:
அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியில் பிறிதணி மகிழாள்

புறநானூற்றில் (127) ஈகையரிய இழையணி மகளிரோடு என்று குறிப்பிடப்படுவதற்கு எழுதப்பட்டுள்ள பழைய உரையில் கொடுத்தற்கரிய மாங்கல்ய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே என்று ஈகையரிய இழையணி என்பது தாலி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

தாலி (< தாழை ‘palm tree') மிகப் பழமையானது. 10-ஆம் நூற்றாண்டு என்பதெல்லாம் சான்றுகளோடு ஒத்துப்போவதில்லை.  யாழ என்ற சங்ககால முன்னிலை மருவி அசைச்சொல் எலெ, எல்லே (ஆண்டாள்), ம்தருவியாலெ/போடுவியாலெ (நெல்லை)  என்பவற்றில்  உள்ளதுபோல தெரிகிறது. அதுபோல், தாலி < தாழையில் உள்ள ழ > ல. பழம் > பலம்-னு சொல்வதுபோல்.

தேவாரத்தில் மங்கல இழை (தாலி)

உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே. 3.78.7

மணவன் காண்! மலையாள் நெடு மங்கலக்
கணவன் காண்! கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்! குரங்காடு துறைதனில்
அணவன் காண்! அன்பு செய்யு மடியர்க்கே. 5.63.4
(மங்கலம் என்ப மனைமாட்சி - குறள்)

இராவணன் கயிலைமலையை அசைக்கும்போது
பர்வதராஜகுமாரி கழுத்தில் மங்கல இழை நிற்குமோ?
- எனப் பயந்தாள். எனவே, இந்த நிகழ்ச்சியைப் பாடும்போதெல்லாம்
தேவாரம் பாடிய நாயன்மார்கள் உமையாளை -இழை
என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். காட்டுகள் சில.

இராவணன் கயிலையை அலைக்கையில், இலங்கிழை என்று பார்வதியை
சொல்லும் தேவாரம் சில:

கறுத்தார், மணிகண்டம்; கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர்கோன் முடிபத்தும்;
அறுத்தார், புலன்ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்---புகலூர்ப் புரிசடையாரே.

வஞ்ச(அ)ரக்கன் கரமும்---சிரத்தொடும்---
அஞ்சும்அஞ்சும்ஓர்ஆறும்நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல்அஞ்சல்! என்றார்---அன்னியூரரே.
இங்கே எல்லாம் மங்கல்ய தந்து ரக்‌ஷாபரணம் (அருணகிரிநாதர்)
தான் -இழை எனக் குறிக்கின்றனர் எனக் கருதலாம். புறநானூற்றில்
“ஈகை அரிய இழையணி” என்பது கொடுத்தற்கரிய மாங்கல்ய சூத்திரம்
என்பதுவும் காண்க. மங்கல அணியில் பிறிதணி மகிழாள் (சிலப்பதிகாரம்).

நா. கணேசன்

Meenavan M

unread,
Mar 27, 2015, 2:34:14 AM3/27/15
to mint...@googlegroups.com
தாலி பற்றிய ஆய்வு முனைவர் இராசமணிக்கனார் காலம் முதல் ஆய்ந்து ஓய்ந்து போன தலைப்பு.
மங்கல அணி என்பது தாலியா அன்றி வேறு பொருளா ! என்ற ஐயபாடு இன்றுவரை நிலவி வருகின்றது.
நீங்கள் கூறிய எடுத்துக்காட்டுகள் பலவற்றை அனைவரும் கூறியுள்ளனர்.சில்ப்பதிகாரம் புகார்க காண்டத்தில்
இந்திரவிழாக் கொண்டாடும் காலத்தில் நகரப் பெண்டிர் அனைத்து அணிகளையும் அணிந்திருக்கக்
கண்ணகியைச் சுட்டும் போது ” மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் “ என்று சொல்லப்படுகின்றது.
புகார்க் காண்டத்தில் “ அகலுள் மங்கல அணி எழுந்தது “ என்று வருகின்றது.மதுரைக் காண்ட இறுதியில்
கண்வனொடு மதுரை புகுந்த நான் இப்பொழுது வ்றிதே பெயர்கின்றேன்.என்று சொல்லிப் புறப்படும் போது
தன் கை வளையல்களை உடைத்தெறிந்து விட்டுப் போனாள் என்று சொல்லப் படுகின்றது.எனவே மங்கல
அணி என்பது தாலியன்று  கை வளையலே என்பாரும் உளர்.ப்ழ்ங்காலத்தில் அரக்கில் செய்யப் பெற்ற
வளையல்களைப் பெண்ணின் கை அளவு பார்த்துத் திருமணத்திற்கு முதல்நாள் ஒட்டிச் சேர்ப்பது உண்டு
என்று கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் த்ன்னுடைய நெடுங்கதையான “ இராவ் பகதூர் சிங்காரம் “என்பதில்
பதிவு செய்கின்றார்.மங்கல அணி அணியும் வழக்கமுண்டு .அது மெய்யே.ஆனால் அதனை முற்கால
இலக்கியங்கள் சுட்டவில்லை.பிற்கால்த்தில்தான் தாலி அணிதல் வ்ழ்க்கிற்கு வந்துள்ளது என்பாரும் உளர்.
தாலி இருந்த்தா இல்லையா என்ப்தை முடிவு செய்து என்ன செய்யப் பொஆகின்றோம்.இன்னும் அறியப்பட
வேண்டிய வ்ரலாற்றுச் செய்திகள் நிறைய உள.வரலாற்று உண்மைகள் பல திரித்து எழுதப்பட்டுள்ளன.சிவகங்கை
மாவட்டத்தில் ஏராளம் உண்டு.அதனை எழுதுகிறவர்கள் சாதிப் பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.தாலி பற்றி எழுதிக் கால விரையம் செய்வதைவிட இதுவரை வெளிவ்ராத நூல்களை
வெளிக்கொணரும் முயற்சியில் காலத்தைச் செலவிடலாம் என்பது என் கருத்து.யாரையும் குறைத்து
நான் மதிப்பிடவில்லை.தேர்ந்த தமிழறிவு உடைய உங்களின் இலக்கியப் பங்களிப்பு த்மிழிலக்கிய வளர்ச்சிக்குத்
திரும்பட்டுமே என்ற ஆதங்கம்தான் நான் இதை எழுதக் காரணம்.இதில் பிழையிருந்தால் அறிவுசால் நண்பர்களே
பொறுத்தருளுங்கள்.
மீனவன்

--

N. Ganesan

unread,
Mar 27, 2015, 9:24:03 AM3/27/15
to mint...@googlegroups.com, vallamai

On Thursday, March 26, 2015 at 11:34:14 PM UTC-7, meenavan2 wrote:

நன்றி, மீனவன் ஐயா. பழைய நூல்களை நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம்.

என்னிடம் உள்ள பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் (இசைத்தமிழின்
ஆதார நூலாகிய பஞ்சமரபு படித்திருப்பீர்கள். அதற்கு முன் அடியார்க்குநல்லார்
மேற்கோள்களே கிடைத்திருந்தன.) போன்றார் தேடிக் காத்த ஓலைச்சுவடிகள் உண்டு.
(1) பழனி மதனவித்தாரம். சுப்பிரதீபக் கவிராயர். குறைப்பிரதி. நூலின் கடைசியில் சில
கண்ணிகள் இல்லை. கடிகைமுத்துப்புலவரின் (ஊற்றுமலை) மதனவித்தாரம் அச்சாகியுள்ளது
100 வருஷம் முன்னரே.
(2) படிக்காசுப் புலவரின் மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை.  அடியார்க்கு நல்லாரைப்
புரந்த பொப்பணகாங்கேயன் மரபினரான மோரூர்க் காங்கேயர்களுக்காகப் பாடியது.
மோரூர் திருச்செங்கோட்டின் அருகே. இதர்கு உரையும் இருக்கிறது. முழுநூலும் உள்ளது.
(3) தக்கை ராமாயணம். இதன் அச்சாகாத யுத்தகாண்டம். கம்பனை அப்படியே சுருக்கி
இசைராமாயணமாக செய்த நூல். 

தமிழின் முக்கியமான நூல்களில் ஒன்று. இந்தியாவில் இரண்டே இரண்டு
லோகாயத நூல்கள் தாம் மிஞ்சியுள்ளன. ஒன்று வடமொழியில் ஜெயராசியின்
தத்துவ உபப்லவ சிம்மம். தமிழில் கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டாரின்
காராணை விழுப்பரையன் வளமடல். தமிழில் ஐந்தே ஐந்து வளமடல்கள்தாம்
இயற்றப்பட்டுள்ளன - ஆழ்வார் காலத்திலிருந்து. பாட்டுடைத் தலைவைன்
பெயரின் எதுகை நூல் முழுதும். இந்நூலை 15 வருடம் முன்னரே “மதுரை
திட்டத்துக்கு” அளித்தேன். பெரும்புலவர் வேராதெ சுவடி தான் நூலைக் காத்தது.
இன்றைய விஞ்ஞானம் சொல்லும் உயிர்கள் தோன்றும் விதத்தைச் சொல்லும்
நூல் இது. துறவை எதிர்ப்பதால் சமணத்தைச் சாடுவது. எல்லா மதங்களையும்
எதிர்க்கும் நூல். ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரைகள் பல ஜெயராசியின்
வடமொழி நூலுக்கு வந்துகொண்டுள்ளன. ஆனால், இந்நூல் பற்றி
அர்ச்சனா வெங்கடேசன் விரிவாக பெர்க்கிலி கான்பரன்ஸ் ஒன்றில் பேசியுள்ளார்.

---------------------

என் தொகுப்பின் நோக்கம் “ஈகை அரிய இழை” என்ற புறப்பாட்டுக்கு
தேவாரத்தில் இழை என்ற சொல்லாலேயே, பார்வதியைச் சொல்லி
உள்ளதும் அதன் தொடர்பும் உங்களைப் போன்றோர் ஆராயவேண்டும்
என்று வேண்டுகோளுக்காகவே. எல்லா தேவாரப் பாடல்களும்
பார்த்து, ”கயிலைமலை அலைப்பும், -இழை என அப்பாடல்களில் 
உமைநங்கை அழைப்பும்” முன்னர் நீங்கள் சொல்லிய கட்டுரைகள்
காட்டவில்லை. கணினியால் இதனைச் செய்ய முடிந்திருக்கிறது.

தாலி கட்டும் திராவிட மரபு க்ர்ஹிய சூத்திரங்களில் குறிப்பிடப்படாததால் தாலி பெயர்
சொல்லாமல் இருந்தாலும், இழை, மங்கல அணி என்று சொல்லியுள்ளனர்.
பி. டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், தமிழர் வரலாறு என்னும் முக்கியமான நூலில்.
எல்லா Amulets-மே ஒரு காலத்தில் பனையோலைச் சுருளில் தான்
வைத்துள்ளனர் போலும். எனவே, தாலி என்ற பொதுப்பெயர் (ஐம்படைத் தாலி)
கலியாணத் தாலிக்கும் வந்துவிட்டது. 

தாழை என்பது பனை, தென்னை, ஈஞ்சு, கைதை --- இந்த தாவரங்களுக்குப் பொது.
இந்தச் சங்கச் சொல்வளம்தான் தாலம், தாலி, ஸ்ரீதாலி (70-80 வருஷத்துக்கு
ஒருமுறை பூக்கும். பின்னர் இறக்கும்). ஸ்ரீதாலி மரம் சிந்து சமவெளியில் விசேஷமாக
வளர்த்து கொண்டாடியுள்ளனர். சிந்து முத்திரைகளில் பார்த்திருக்கிறேன்.
தாழை > தாலி என்பது நானறிய யாரும் குறிப்பிடாத சொல்லாராய்ச்சி.
யாழ யாலெ என நெல்லையில் ஆதலும், இந்தியா முழுதும் வடமொழிகளில்
பழம் > பல என்றாதலையும் ஒத்தது. 

நா. கணேசன்
 
வேந்தன் அரசு

unread,
Mar 27, 2015, 8:25:14 PM3/27/15
to vallamai, மின்தமிழ்
தெலுகில் பனை மரத்துக்கு தாட்டிமான் என்பர். அது தாழை அல்லது தாலம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்

27 மார்ச், 2015 ’அன்று’ 9:24 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 27, 2015, 10:51:35 PM3/27/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Friday, March 27, 2015 at 5:25:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தெலுகில் பனை மரத்துக்கு தாட்டிமான் என்பர். அது தாழை அல்லது தாலம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்

தெலுகில் தாடி என்பர். தாடிக்கொம்பு ஊரில் சௌந்தராஜப்பெருமாள் கோவில் அழகானது. திண்டுக்கல் நாயக்கர்கள்
உருவாக்கிய ஊர். சோழர் = சோட என்பதுபோல், தாழ்- > தாடி.  

தாழ்/தாள்/தாலம் என்பன பனையின் பெயர்கள்:
http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33826 
சோழர் சோட- என்று வடமொழியில் வருதற்போல், தாழ்/தாள் தாட- என்று வட மொழிகளில் ஆகின்றன. எனவே, பனையின் வெண்டோட்டு வளையம் தாடங்கம் என்ற பெயர் பெறுகிறது. ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் சிறப்பு (சௌந்தர்ய லஹரி, தாடங்க மஹிமை). திருக்கடவூர் அபிராமியும் தாடங்கம் கொண்டு அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கினதாக ஐதிஹ்யம். தாடங்கம் = (பனையின்) தாட + அங்கம் (Cf. தாடி (toddy))

பெண்ணை (பெண்பனை) மரத்தில் தூக்கணாங் குருவிகள் கூடு கட்டும்: 

மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பை (நற்றிணை 303). 
தூக்கணங்குரீஇ . . . பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்தொகை 374). 
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங்குரீஇக் கூட்டுள சினையே (இறை. 9) 

எனவே, ஆங்கிலத்தில், தூக்கணங்குருவிக்கு Toddy bird எனப்பெயர்,
ஹாப்ஸன் - ஜாப்ஸன் அகராதி:
TODDY-BIRD , s. We do not know for certain what bird is meant by this name in the quotation. The nest would seem to point to the Baya, or Weaver-bird (Ploceus Baya, Blyth): but the sizealleged is absurd; it is probably a blunder. [Another bird, the Artamus fuscus, is, according to Balfour (Cycl. s.v.) called the toddy shrike.]

[1673. -- "For here is a Bird (having its name from the Tree it chuses for its Sanctuary, the toddy-tree). . . ." -- Fryer, 76.]

c. 1750-60. -- "It is in this tree (see PALMYRA, BRAB) that the toddy-birds, so called from their attachment to that tree, make their exquisitely curious nests, wrought out of the thinnest reeds and filaments of branches, with an inimitable mechanism, and are about the bigness of a partridge (?) The birds themselves are of no value. . . ." -- Grose, i. 48.

தாடி (< தாழை) என்பது ஹிந்தி-உர்துவில் உள்ள பனையின் தமிழ்ப்பெயர் ஆகும்.
TODDY , s. A corruption of Hind. tāṛī, i.e. the fermented sap of the tāṛ or palmyra, Skt. tāla, and also of other palms, such as the date, the coco-palm, and the Caryota urens; palm-wine. Toddyis generally the substance used in India as yeast, to leaven bread. The word, as is well known, has received a new application in Scotland, the immediate history of which we have not traced. Thetāla-tree seems to be indicated, though confusedly, in this passage of Megasthenes from Arrian:

c. B.C. 320. -- "Megasthenes tells us . . . the Indians were in old times nomadic . . . were so barbarous that they wore the skins of such wild animals as they could kill, and subsisted (?) on the bark of trees; that these trees were called in the Indian speech tala, and that there grew on them as there grows at the tops of the (date) palm trees, a fruit resembling balls of wool." -- Arrian, Indica, vii., tr. by McCrindle.

c. 1330. -- ". . . There is another tree of a different species, which . . . gives all the year round a white liquor, pleasant to drink, which tree is called tari." -- Fr. Jordanus, 16.

[1554. -- "There is in Gujaret a tree of the palm-tribe, called tari agadji (millet tree). From its branches cups are suspended, and when the cut end of a branch is placed into one of these vessels, a sweet liquid, something of the nature of arrack, flows out in a continuous stream . . . and presently changes into a most wonderful wine." -- Travels of Sidi Ali Reïs, trans. A. Vambéry, p. 29.]

[1609-10. -- "Tarree." See under SURA.]

1611. -- "Palmiti Wine, which they call Taddy." -- N. Dounton, in Purchas, i. 298.

[1614. -- "A sort of wine that distilleth out of the Palmetto trees, called Tadie."-<-> Foster, Letters, iii. 4.]

1615.-
". . . And then more to glad yee
Weele have a health to al our friends in Tadee."
Verses to T. Coryat, in Crudities, iii. 47.

1623. -- ". . . on board of which we stayed till nightfall, entertaining with conversation and drinking tari, a liquor which is drawn from the coco-nut trees, of a whitish colour, a little turbid, and of a somewhat rough taste, though with a blending in sweetness, and not unpalatable, something like one of our vini piccanti. It will also intoxicate, like wine, if drunk over freely."-<-> P. della Valle, ii. 530; [Hak. Soc. i. 62].

[1634. -- "The Toddy-tree is like the Date of Palm; the Wine called Toddy is got by wounding and piercing the Tree, and putting a Jar or Pitcher under it, so as the Liquor may drop into it." --Sir T. Herbert, in Harris, i. 408.]

1648. -- "The country . . . is planted with palmito-trees, from which a sap is drawn called Terry, that they very commonly drink." -- Van Twist, 12.

1653. -- ". . . le tari qui est le vin ordi- naire des Indes." -- De la Boullaye-le-Gouz, 246.

1673. -- "The Natives singing and roaring all Night long; being drunk with Toddy, the Wine of the Cocoe." -- Fryer, 53.

" "As for the rest, they are very respectful, unless the Seamen and Soldiers get drunk, either with Toddy or Bang."-<-> Ibid. 91.

1686. -- "Besides the Liquor or Water in the Fruit, there is also a sort of Wine drawn from the Tree called Toddy, which looks like Whey." -- Dampier, i. 293.

1705. -- ". . . cette liqueur s'appelle tarif." -- Luillier, 43.

1710. -- This word was in common use at Madras. -- Wheeler, ii. 125.

1750. -- "J. Was vor Leute trincken TaddyC. Die Soldaten, die Land Portugiesen, die Parreier (see PARIAH) und Schiffleute trincken diesen Taddy."-<-> Madras, oder Fort St. George, &c., Halle, 1750.

1857. -- "It is the unfermented juice of the Palmyra which is used as food: when allowed to ferment, which it will do before midday, if left to itself, it is changed into a sweet, intoxicating drink called 'kal' or 'toddy.'" -- Bp. Caldwell, Lectures on Tinnevelly Mission, p. 33.

"The Rat, returning home full of Toddy, said, If I meet the Cat, I will tear him in pieces." -- Ceylon Proverb, in Ind. Antiq. i. 59.

Of the Scotch application of the word we can find but one example in Burns, and, strange to say, no mention in Jameson's Dictionary:

1785.-
"The lads an' lasses, blythely bent
To mind baith saul an' body,
Sit round the table, weel content.
An' steer about the toddy. . . ."
Burns, The Holy Fair.

1798. -- "Action of the case, for giving her a dose in some toddy, to intoxicate and inflame her passions." -- Roots's Reports, i. 80.

1804.-
". . . I've nae fear for't;
For siller, faith, ye ne'er did care for't,
Unless to help a needful body,
An' get an antrin glass o' toddy."
Tannahill, Epistle to James Barr.

கைதையில் பால்பாகுபாடு:
தாழையிலும் ஆண் பெண் வேறுபாடு உண்டு: ஆண் தாழை காய்க்கும், பூக்காது; பெண் தாழை பூக்கும், காய்க்காது. தாழ்- என்னும் வினைச்சொல்லில் பிறந்த தமிழ்ப் பெயர்கள் பனை, தென்னை, கைதை - மூன்று புல்வகைகளுக்கும் உண்டு. தாழை = தென்னை என்பதற்கு உதாரணம்: குலையிறங்கிய கோள்தாழை (புறநா. 17). தாடி (< தாழ்-) = பனை. கைதை = ஈரமான சதுப்பு நிலம், எனவே கைதை/கைதல் தாழைக்கு ஒரு ஆகுபெயர். கைதை > வடமொழியில் கேதகீ என்றாகும். ஏற்றை என்று அஃறிணை ஆண்பாலுக்குப் பேர் என்கிறது தொல்காப்பியம் (மரபியல் சூத்திரம், 50 இளம்பூரணர் உரை: ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக்கண்ணும் கொள்ளப்படும்). எனவே ஆண் தாழையை ஏற்றைத்தாழை என்றும், பெண் தாழையைப்பெண்ணைத்தாழை என்றும் அழைக்கத் தமிழ்மரபு வழிகாட்டுகிறது எனலாம். வீழ் இல் தாழை = தெங்கு, அதில் ஆண், பெண் தனியாய் இல்லை. ஆனால், விழுதுகள் உள்ள தாழையாம் வீழ்தாழையிலே தான் ஏற்றை, பெண்ணை பகுப்புகள் ஈச்சை, பனைபோல உள்ளன

இவை உள்ள பதிவு:

நா. கணேசன்

Malarvizhi Mangay

unread,
Mar 28, 2015, 7:16:29 AM3/28/15
to mint...@googlegroups.com

அருமையான தரவு.

--

செல்வன்

unread,
Apr 12, 2015, 6:41:47 PM4/12/15
to mintamil
http://www.dinamalar.com/news_detail.asp?id=1227869

ஹவாய்: அமெரிக்காவில், இந்து மதத்தை சேர்ந்த துளசி கப்பார்டு, 33 என்ற பெண் எம்.பி., வேத மந்திரங்கள் முழங்க, இந்து முறைப்படி, ஆபிரகாம் வில்லியம்ஸ், 26 என்ற, திரைப்பட ஒளிப்பதிவாளரை மணந்தார்.

ஹவாய் தீவில் நடைபெற்ற இத்திருமணத்தில், அமெரிக்க எம்.பி.,க்கள், மற்றும் இந்தியாவில் இருந்து, பா.ஜ., பொதுச்செயலர் ராம் மாதவ் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர். கரோல் - மைக் கப்பார்டு தம்பதியின் மகளான, துளசி, ஜனநாயக கட்சியின் ஹவாய் தீவு எம்.பி.,யாக உள்ளார். இவரது தாய், அமெரிக்காவில், 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தில் இணைந்து, இந்து மதத்தை தழுவினார். அதனால், பிரம்ம மத்வ கவுடிய சம்பிரதாய முறையில் வளர்ந்த துளசி, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க, துளசி கழுத்தில், வில்லியம்ஸ் தாலி கட்டினார். நிச்சயதார்த்தத்தின் போது, கிறிஸ்தவ முறைப்படி, துளசியின் கை விரலில், வில்லியம்ஸ் வைர மோதிரம் அணிவித்தார். துளசிக்கு இது, இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Oru Arizonan

unread,
Apr 12, 2015, 7:56:10 PM4/12/15
to mintamil
பல இந்திய அமெரிக்கர்கள் அரசியலில் நுழைய சமயம் மாறும்போது [உ-ம்: பாபி ஜிண்டால்], வெள்ளையர் இனத்தவரானாலும், தான் பின்பற்றிய இந்து சமயத்தை அரசியலுக்காகத் துறக்காத -- அமெரிக்காவின் ஒரே  இந்து நாடாளுமன்றப் பிரதிநிதி துளசி கப்பார்ட்.

அவர் அமேரிக்காவில் வாழும் இந்து அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையாகாது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 22, 2015, 11:21:57 PM4/22/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham

புலிப்பல் தாலி ஆண் அணிவது. ஆனால் கலியாணச் சின்னமாக பெண் அணிவதாகக் காணோம்.
சங்க காலத்திலோ, பின்னரோ.

பனைக் கொடியும், கலப்பையும் கொண்டவன் வேளாண் கடவுளான பலராமன்.
கலப்பைக் கொழுமுனை போல அமைவது தாலி. இதனை சங்க இலக்கிய வரியை
விளக்கும் போது “குத்துதல் அமைந்த தாலி” எனச் சொன்னார் நச்சினார்க்கினியர்.
கலப்பைக்கு fertility symbolism எல்லா வேளாண் சமூகங்களிலும் உண்டு.
முதலில் மான்கொம்பு, பின்னர் இரும்பு இவற்றால் கொழு அமைந்த
கலப்பை பனமரத்தால் செய்யப்பட்டிருக்கும். எனவே, தாலி கலியாணத்தில்
கணவன் கட்டுவது திராவிட மக்கள் தொடங்கியுள்ளனர்.

இன்று பூணூல் அணிந்த சிவாச்சார்ய குருக்கள் தாக்கப்பட்டுள்ளனர்
என்ற அதிர்ச்சியான செய்தி. அவர்கள் வேத வழிப்பட்ட மந்திரங்களில்
தாலியை சம்ஸ்கிருத இலக்கியங்களில் - முதலில் சைவ ஆகமங்களிலே
- சொல்ல முற்படுகின்றனர். அதன் பின்னர் இலளிதை சகசிரநாமத்திலே
பார்வதி தாலி கழுத்தில் அமைந்தது வருகிறது.

ஈருயிர் ஓருயிராய்க் கலப்பதற்கு கலப்பை (தாலி) பொருத்தமான சின்னம் தானே.
கலப்பு நின்றால் தாலி வாங்கப்படுகிறது.

நா. கணேசன்

வேத கால இலக்கியங்களிலே உள்ள தவளைக் கலியாணம். இன்றும் இந்தியா எங்கிலும் நடப்பதாகும்.

தவளைகளுக்கு தாலி கட்டி கொண்டாடிய மக்கள்! 
[Wednesday 2013-10-02 18:00]

கோவை அருகே மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தடபுடலாக விருந்து தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அன்றே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் தேதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். தவளைகளுக்கு புதுத் துணி கட்டி, மலர் களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.

நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த மொய் பணம் ரூ.3 ஆயிரம் சேர்ந்தது.காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம்,, குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

N. Ganesan

unread,
Apr 23, 2015, 8:42:15 AM4/23/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai
எள் + நெய் = எண்ணெய். பின்னர் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ... என சொற்கள் விரிகின்றன. தாலி என்றால் மங்கலவணி என்னும் கலியாணத்தைக் குறிக்கும் அணிகலன் தான். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என விரிவது போல புலிப்பல் தாலி, ஐம்படைத் தாலி, விரலிமஞ்சள் தாலி, ...
என விரிந்தது போலும்.

கொழுநுதி 1, 2, 3 எனக் காட்டும் “குத்துதல் அமைந்த தாலி” ஏர்க்காலுடன் சேர்க்கும் இடத்திலும்
கூராக இருக்கும். இது தாலம் என்னும் பனை  மரத்தால் செய்துள்ளனர். பனை வேளாண் கடவுள் வாலியோனின் சின்னம்.
அவன் கலப்பையை தோளில் சுமப்பவன். கலப்பைக் கொடி தாலக் கொடி - பலராமனுக்கு உண்டு. இந்த வளமைச் சின்னத்தை
தாலி என வடிவமைத்தனர் திராவிட மக்கள். அது ஏன் வளமைச் சின்னம்? - எனப் பின்னர் பார்ப்போம்.

subsoil plough : தாலியின் அடிப்படை வடிவமைப்பு காண:

இழை என்பது தாலியின் ஒரு பெயர். கூடல் இழைத்தல் என்றால் சேர்த்துதல். இழைப்புளி, வேளாண் கருவான harrow - plough's
extension. நச்சினார்க்கினியர் உரை காண்க.

மூன்று கொழு (cf. plough or harrow)

two tipped plough shape

பழைய வடிவம் தாழ்- தால மரத்தால் செய்யும் கலப்பையை அடியொற்றியது.
எள் + நெய் = எண்ணெய். பின்னர் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ... என சொற்கள் விரிகின்றன. தாலி என்றால் மங்கலவணி என்னும் கலியாணத்தைக் குறிக்கும் அணிகலன் தான். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என விரிவது போல புலிப்பல் தாலி, ஐம்படைத் தாலி, விரலிமஞ்சள் தாலி, ...
என விரிந்தது போலும்.

இனி மாறலாம், அணியாகவே இல்லாமலும் போகலாம்.

நா. கணேசன்

Suba.T.

unread,
Apr 23, 2015, 8:58:48 AM4/23/15
to மின்தமிழ்
2015-04-23 5:21 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

தவளைகளுக்கு தாலி கட்டி கொண்டாடிய மக்கள்! 
[Wednesday 2013-10-02 18:00]

கோவை அருகே மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தடபுடலாக விருந்து தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அன்றே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் தேதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். தவளைகளுக்கு புதுத் துணி கட்டி, மலர் களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.

நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த மொய் பணம் ரூ.3 ஆயிரம் சேர்ந்தது.காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம்,, குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஒரு அளவே இல்லையா..?
மழை வர வேண்டுமென்று தவளைகளுக்கு தாலி கட்டும் மக்களை என்ன சொல்வது? அதிலே மணப்பெண் மணமகன் ஊர்வலம் வேறு.. விருந்து மொய்ப்பணம்.. எந்த காலத்தில் இருக்கின்றோம் நாம்?

மழைவரவேண்டுமென்றால் மரங்களை நட்டு வைத்து இயற்கை பாதுகாப்பை வள

​ப்ப
டுத்தவேண்டும். இதனை விட்டு ...ம்ம். .என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

​சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages