Re: அணங்குடை தமிழ்மண்

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 9, 2011, 9:59:13 AM10/9/11
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com

On Oct 9, 8:50 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 8, 7:43 am, Innamburan Innamburan <innambu...@gmail.com> wrote:
>
>
> > அணங்குடை தமிழ்மண்
>
> > ‘கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
>
> > வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’
>
> > என்றாலும்,
>
> > ‘தமிழிசை, தமிழ் எழிலி, தமிழ் மணம், தமிழ்க்கொடி, தமிழ்ச்செல்வி,
> > தமிழ்க்குரல், தமிழ்ச்சோலை, தமிழ்மலர், தமிழினி, தமிழ்த்தென்றல், தமிழருவி,
> > தமிழின்பம், தமிழ்முலை, தமிழ்ப்பாவை, தமிழணங்கு, தமிழ்ப்பொழில்,
> > தமிழ்ச்சிட்டு, தமிழ்மங்கை, தமிழ்மதி, தமிழ்நெஞ்சி, தமிழரசி, தமிழ்நிலம், தமிழ்
> > இலக்கியா, தமிழமுது’
>
> > என்று அடுக்கி நாமங்கள் ஆயிரம் நவின்று தமிழன்னையை தொழுது வணங்கினாலும்,
>
> > "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
>
> > சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
> > தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
> > தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
> > அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
> > எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
>
> > பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
> > எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
> > கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
> > உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
> > ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
> > சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
>
> > என்று மும்முறை வாழ்த்தி மனோன்மணிய சுந்தரனாருடன் உறவு கொண்டாடினாலும்,
>
> > யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
>
> > இனிதாவ தெங்குங் காணோம்
>
> > பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
>
> > இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
>
> > நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
>
> > வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
>
> > தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
>
> > பரவும் வகை செய்தல் வேண்டும.
>
> > யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
>
> > வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
>
> > பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
>
> > உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
>
> > ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
>
> > வாழ்கின்றோம், ஒருசொற் கேளீர்
>
> > சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
>
> > தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
>
> > பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
>
> > தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
>
> > இறவாத புகழுடைய புதுநூல்கள்
>
> > தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
>
> > மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
>
> > சொல்லுவதிலோர் மகிமை யில்லை
>
> > திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
>
> > அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
>
> > என்று மஹாகவி பாரதியாரோடு கூட்டமைத்து, ‘இது நன்றோ’ என்று வினவி, யான் பிறந்த
> > விதம் யாது என்று வியந்து, நாடும், கடலும் கடந்து முழங்கி, தாய்மொழியை
> > வணங்கினாலும்,
>
> > “சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார் ; தமிழிலே வளர்ந்தார் ; தமிழிலே வாழ்ந்தார்.
> > அவர் பிறப்புத் தமிழ் ; வளர்ப்புத் தமிழ் ; வாழ்வுந் தமிழ் ; அவர் மனமொழி
> > மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர் ; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ் ;
> > தமிழ் அவர்” எனத் தொடரும் மொழியிலும் (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் -
> > பக்.100). “மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது.
> > இப்போராட்டம் பொருளற்ற தென்பது எனது உள்ளக் கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலேயே
> > பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப் பழக அவருக்கென்று ஒரு நடை இயற்கையாகும்.
> > இன்னொருவருக்கு வேறுவித நடை இயற்கையாகும்”
>
> > எனத் தொடரும் திரு.வி.க. அவர்களின் துள்ளல் நடையில், ஓடோடி வந்து,
> > கட்டித்தழுவி,
>
> > ‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
> > செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
> > நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
> > நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!’
>
> > என்று பாவேந்தருடன் கீதம் இசைத்தாலும்,
>
> தமிழ் அணங்கு கொற்றவையின் (< கொல்-) அவதாரமாக
> சுந்தரம்பிள்ளை கண்டார். உலகம் முழுக்க
> தமிழ்த்தாய் வாழ்த்து அதுதான்.
>
> 3+ ஆண்டுகளுக்கு முன்னம் தமிழ்த்தாய் வாழ்த்தின்
> ஒரு கண்ணிக்கு விளக்கம்:
http://groups.google.com/group/mintamil/msg/cb7a86b0fc0e6b2d
>
> அணு என்னும் ஸம்ஸ்கிருதச் சொல் தமிழில் இருந்து
> சென்றது:
http://groups.google.com/group/mintamil/msg/e070dc766469bcc8
>
> அணங்குடை அமெரிக்கா = Fearsome or distressing America,
> மூலம்: திராவிட வேர்ச்சொல் அகராதி:
> DEDR 112
>
> 112 Ta. aṇaṅku (aṇaṅki-) to suffer, be distressed, be slain; to
> afflict; n. pain, affliction, killing; aṉuṅku (aṉuṅki-) to suffer
> pain, be in distress, fade, droop; aṉukku (aṉukki-) to distress, cause
> to suffer, ruin; aṉukkamsuffering, distress, pain, weakness. Ka. aṇaku
> to press into a narrower compass, subdue, control; aṇacu to depress,
> humble; aṇaka closeness, compactness, firmness, state of being in good
> repair; aṇakuve humbleness, modesty; aṇagu to hide, disappear, be
> humbled, crouch; aṇuṅku to depress, humble, abate, ruin, destroy;
> aṇuṅgu to be depressed, etc. Tu. aṇaka narrowness, closeness; narrow,
> small. Te. aṇãgu to yield, submit, be humbled; aṇãcu to suppress,
> humble, subject; aṇãkuva humility, modesty, submissiveness. Go. (Tr.)
> ancānā to press (Voc. 21). DED(S) 56(b).
>

பரிபாடல் 1:

திருமால்
(அரு மறைப் பொருள் )

ஆயிரம் விரித்த *அணங்குடை* அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,

உரை

1 - 5: ஆயிரம் . . . . . . . . . . . ஒருகுழை யொருவனை

(இதன் பொருள்) அணங்கு உடை விரித்த ஆயிரம்
அருந்தலை - எவ்வுயிர்க்கும் *அச்சந்தரும்* இயல்பினையுடைய படம்
விரிக்கப்பட்ட ஆதிசேடனுடைய நோக்குதல் அரிய ஆயிரந் தலைகளும்,
தீஉமிழ் திறனொடு - சினத்தீயைச் சொரிகின்ற தன்மையோடே, முடிமிசை
அணவர - நினது திருமுடியின் மேலிடத்தே உயர்ந்தெழுந்து
நிழற்றாநிற்ப, (பெரும்புலவர் பொ. வே. சோமசுந்தரனார், பரிப்பாடல்,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்).

அணங்குதாக்கு aṇaṅku-tākku, n. < id. +. Possession by a demoness of
lust or harm; வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918, உரை.)

திருக்குறளில் 3 இடங்களில் அணங்கு பயில்கிறது. எல்லாவற்றிலும் இப்பொருள்
உள்ளது.
அணங்கு = வருத்தும் தெய்வமகள். கிராம சிறுதேவதை வழிபாட்டில் அணங்கு
வாழ்கிறாள்.

அன்புடன்,
நா. கணேசன்
>
>
>
> > ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்று என் போல் பாமரனாய் கொஞ்சினாலும்,
>
> > அணங்குடை தமிழ்மண் புகழ் பாடுவோமே.
>
> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 10, 2011, 9:50:22 AM10/10/11
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com
On Oct 10, 4:49 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
> Tamil Lexicon (University of Madras) இல் கீழ்க்க‌ண்ட‌ சொற்க‌ளும், பொருள்க‌ளும்
> உள்ள‌ன‌.
>
> அண‌ங்கு
>
> வ‌ருத்தம், அச்ச‌ம், கொலை, தெய்வ‌ம், தெய்வ‌ம‌க‌ள், வ‌ருத்திக்
> கொல்லும் தெய்வ‌ம‌க‌ள், தெய்வ‌த்திற்கொப்பான‌ மாத‌ர்,
> வ‌டிவு, அழ‌கு, ச‌ண்டாள‌ன், குட்டி.
>
> அண‌ங்குத‌ல்
>
> வ‌ருந்துத‌ல், இற‌ந்துப‌டுத‌ல், பின்னிவ‌ள‌ர்த‌ல், பொருந்துத‌ல், வ‌ருத்துத‌ல்.
>
> அண‌ங்காடுத‌ல்
>
> தெய்வ‌மாவேசித்த‌ல் (சாமி ஆடுத‌ல்)
>
> அண‌ங்கியோன்
>
> வ‌ருத்திய‌வ‌ன்
>
> அன்புடன்,
> ஆர்.எம்.பால்ராஜ்
>

திரு. பால்ராஜ்,

நலமா. ஜான் சாமுவேலை நான் நலம்
விசாரித்ததாய் சொல்லவும்.

------

ஃழான் - லூக் “அணங்குடை தமிழ்மண்” என்று தந்தார்.
அதில் ஒற்று மிகுதல் வேண்டும்.


அணங்குடை அமெரிக்கா = Fearsome or distressing America

என்று பொதுஜனங்களிடம் ஆகிவிடும் என்ற கருத்தை
செல்வன் அவர்களுக்கு விளக்கி எழுதியுள்ளேன்.
அமெரிக்கப் பெருமை பற்றிப் பரப்ப அவர் சொல்ல
விரும்பிய பொருள் நேர்மாறாக ஆகிவிடக் கூடாதன்றோ?

(1)

"ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி"
(பொருநராற்றுப்படை)

"மானினது வருத்துதலையுடைய குருளை"
- நச்சினார்க்கினியர்

ஒற்று மிகுதலைப் பார்க்கலாம், இ ஸார்.

(2)

பரிபாடல் 1:

ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை


தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர

(3) மாதவிலக்குக் காலத்தில் மாதர்
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலங்களைத் தொடமாட்டார். அஞ்சி
விலகுவர் (புறம் 299).

உரை
1 - 5: ஆயிரம் . . . . . . . . . . . ஒருகுழை யொருவனை
(இதன் பொருள்) அணங்கு உடை விரித்த ஆயிரம்
அருந்தலை - எவ்வுயிர்க்கும் *அச்சந்தரும்* இயல்பினையுடைய படம்
விரிக்கப்பட்ட ஆதிசேடனுடைய நோக்குதல் அரிய ஆயிரந் தலைகளும், தீஉமிழ்
திறனொடு - சினத்தீயைச் சொரிகின்ற தன்மையோடே, முடிமிசை அணவர - நினது
திருமுடியின் மேலிடத்தே உயர்ந்தெழுந்து

நிழற்றாநிற்ப, [பெரும்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்,
பரிபாடல், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்]

பழைய சங்க இலக்கியப் பொருளைப் பார்த்தால்,
அணங்குதல்/அணக்குதல்; அணுக்குதல்/அணுங்குதல்
வருத்துதல், நெருக்குதல், என்றுள்ளது. அவ்வாறு
சுருக்கியது அணு. அதனில் நூற்றில் ஒருபாகம் கோண்
என்கிறார் கம்பர். அணு என்ற திராவிடச் சொல்
ஸ்ம்ஸ்க்ருதத்துக்கு சென்றுள்ளது. இதற்கு உறவுடைய
சொல் ஐரோப்பிய, பாரசீக மொழிகளில் காணோம்.

ஸ்ரீ போப்பையர் அவர்கள் அனங்கன் என்ற சொல்லை
அணங்கு- என்பதன் திரிபு என எழுதியிருப்பதைக்
குறிப்ப்ட்டபோது. தாமஸ் பர்ரோ பற்றி ழான் குறிப்பிட்டார்.
பர்ரோவுக்கு முன்பு எழுதியது போப் என பர்ரோவே
எழுதியுள்ளார். அனங்கன் ( < அணங்கு- ) = காமத்தால்
வருத்துபவன். இக்கருத்தாக்கம், மரித்தல் என்ற வடசொல்லின்
அடிப்பிறந்த மாரன் என்ற பெயரிலும் நிற்கிறது காண்க.
காமம் என்னும் தமிழ்/த்ராவிடச் சொல் காமவேள் என்ற
பெயரையும் அவனுக்கு தருகிறது.

திராவிட வேர்ச்சொல் அகராதி:
DEDR 112

112 Ta. aṇaṅku (aṇaṅki-) to suffer, be distressed, be slain; to
afflict; n. pain, affliction, killing; aṉuṅku (aṉuṅki-) to suffer
pain, be in distress, fade, droop; aṉukku (aṉukki-) to distress, cause
to suffer, ruin; aṉukkamsuffering, distress, pain, weakness. Ka. aṇaku
to press into a narrower compass, subdue, control; aṇacu to depress,
humble; aṇaka closeness, compactness, firmness, state of being in good
repair; aṇakuve humbleness, modesty; aṇagu to hide, disappear, be
humbled, crouch; aṇuṅku to depress, humble, abate, ruin, destroy;
aṇuṅgu to be depressed, etc. Tu. aṇaka narrowness, closeness; narrow,

small. Te. aṇãgu to yield, submit, be humbled; aṇãcu to suppress,
humble, subject; aṇãkuva humility, modesty, submissiveness. Go. (Tr.)


ancānā to press (Voc. 21). DED(S) 56(b).

அணு என்ற சொல்லின் வேர் தமிழில் இருக்கிறது.
ணகரம் - solitary retroflex letter in aNu also points to Dravidian
source.

நா. கணேசன்

எல்லா தமிழ் சங்க, காவிய இலக்கியங்களில்
இருந்து தமிழ் லெக்சிகன் தரும் சான்றுகள்:

அணங்கு¹-தல் aṇaṅku-
, 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல்.
நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல்.
நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as
bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு.
223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன்
(இறை. 50, உரை).--v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ
னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).

அணங்கு² aṇaṅku
, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.)
2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய்.
(திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.)
7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away
one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந்
தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as
resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10.
Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண்.
459). 11. Dancing under religious excitement, esp. possession by
Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13.
Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
(சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின்
குருளையும் (சிலப். 25, 48).

அணங்குதல் என்பதன் முதற்பொருள் வருத்துதல். affilction, suffering.
தமிழ் (திராவிட ஸப்ஸ்ட்ரேற்றம் உள்ள இந்தியா) கிராமங்களில் நாம் காணும்
பேய்ச்சி, பிடாரி, மாரி, காளி, குடலுருவி அம்மன் (ஒரு போட்டோ சுபா
தந்திருந்தார்)
இவை அணங்குகள். அணங்குதாக்கு aṇaṅku-tākku, n. < id. +. Possession by a


demoness of
lust or harm; வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918, உரை.)

அணங்குடைத் தமிழ்நாடு = suffering or afflicted Tamil Nadu
நாம் பத்திரிகையாளர்களிடம் லெக்சிகன், திராவிட
வேர்ச்சொல் அகராதி காட்டும் இலக்கிய வரிகளைக்
காட்டி இதனையா பயன்படுத்துவீர்கள் என்று வினவி
சர்வே நடத்தலாம். தமிழர்கள் (புலவர்கள், பொதுமக்கள்) புரிந்துகொள்வார்கள்
என நம்பிக்கை இருக்கிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages