எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

2,697 views
Skip to first unread message

Kumaran Malli

unread,
Aug 29, 2008, 7:11:05 AM8/29/08
to minT...@googlegroups.com
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தின் சில பகுதிகள்:
 
 
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டம் இதில்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே
 
 
நீர் ஆர்ப்பரிக்கும் கடலினை ஆடையாக உடுத்தியிருக்கும் நிலமடந்தைக்கு அழகு கொஞ்சும் பெருமைகள் எல்லால் ஆர்ப்பரிக்கும் வதனம் (முகம்) எனத் திகழ்கிறது பரத கண்டமாகிய இந்தியா. இதில் தக்காணம் (தென்னிந்தியா) அந்த முகத்தில் இருக்கும் அதன் அழகுற்கு ஏற்ற பிறை போல் வளைந்த நெற்றி. திராவிட நல் திருநாடு அந்த நெற்றியில் தரித்திருக்கும் நறுமணம் கமழும் பொட்டு (திலகம்). அந்த கஸ்தூரித் திலக வாசனை போல் அனைத்து உலகத்தாரும் இன்பம் அடைய எல்லாத் திசையும் புகழ் மணக்க என்றும் இருந்த, இருக்கும், இருக்கப் போகும் தமிழ்ப்பெண்ணே.

இந்தப் பகுதியில் உவமையணி நன்கு அமைந்திருக்கிறது.

உலகம் - கடலாடை சூட்டியிருக்கும் நிலமடந்தை
பரத கண்டம் - அந்த நிலமடந்தையின் வதனம்
தக்காணம் - அந்த வதனத்தில் இருக்கும் நெற்றி
திராவிட நாடு - அந்த நெற்றியில் சூட்டிய திலகம்
தமிழ் - அந்தத் திலகத்தின் நறுமணம்.

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே
பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும் அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சியாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்

இங்கும் உவமை அணி நன்கு அமைகிறது. எல்லா உயிர்களையும் உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் இறை எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது - அது போல் பல மொழிகளைத் தன்னுள் இருந்து படைத்தும் தமிழ் எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது. மற்ற மொழிகளைப் போல் அழிந்தொழியவில்லை.

கடல்குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே
கடலினைக் குடித்த குடமுனியாம் அகத்தியர் உன்னைப் படித்து உன் கரையைக் காண குருவினை நாடி உனக்கு வானத்தைத் தொடும் கடலை உவமையாகச் சொல்லுவது உனக்குப் புகழாகுமா? உன் புகழ் பெரும்புகழ். உப்புக்கடலைக் குடிக்கலாம்; ஆனால் தமிழ்க்கடலைக் குடிக்க முடியாது. அது வான் வரை உள்ளது என்கிறார்.
 
ஒரு பிழைக்கா அரனார் முன் உரை இழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.
 
 
ஒரு சிறு பொருட்பிழைக்காக முன்பொரு நாள் சிவபெருமான் என்ன சொல்வது என்று தெரியாமல் நெற்றிக்கண்ணை விழிப்பார் என்றால் இறையான சிவனுக்கே அறிய அரியது உனது இலக்கணம் என்று சொல்லுவதும் அற்புதமா?

விழிப்பார் என்று உலக வழக்கில் இருக்கும் ஒரு சொல்லை சிலேடையாக இங்கே சொல்லியிருக்கிறார்; நெற்றிக்கண்ணை விழித்ததைக் குறிப்பால் உணர்த்தி.

சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே
 
என்றுமுள்ளன வேதங்கள் என்று சொல்கிறார்கள். அந்த நான்கு மறைகளை உடைய ஆரியம் தோன்றும் முன் உலகம் முழுதிலும் நீ இருந்தாய் என்றால் உன்னை முதுமொழி என்றும் அநாதி என்றும் சொல்லுவதும் வியப்போ?
 
வேகவதிக்கு எதிர் ஏற விட்டது ஒரு சிற்றேடு
காலநதி நினைக் கரவா காரணத்தின் அறிகுறியே
 
வேகவதியாம் வைகையில் வேற்று மொழியில் எழுதிய நூல்களையும் தமிழ்ப்பா எழுதிய ஒரு சிற்றேட்டையும் விட்ட போது நதியின் வேகத்திற்கு எதிராக கரை ஏறியது என்றால் அது காலம் எனும் நதி உன்னை மறைக்காமல் (காலவெள்ளத்தில் அழிக்காமல்) விட்ட காரணத்தின் ஒரு அறிகுறியே.
 
 
கடையூழி வரும் தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே
உலகங்கள் எல்லாம் அழிந்து யாருமே இல்லாத போது இறைவன் மட்டுமே தனிமையாக இருப்பான். அந்தத் தனிமையின் துணையாக இருக்க வேண்டியே திருச்சிற்றம்பலம் உடையாரான சிவபெருமான் உன் வாசகமாம் திருவாசகத்தில் ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்.
 
தக்க வழி விரிந்து இலகும் சங்கத்தார் சிறுபலகை
மிக்க நலம் சிறந்த உன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே
தக்க நூற்களுக்கு மட்டும் வழி தந்து விரிந்தும் சுருங்கியும் இருக்கும் மதுரைத் தமிழ்ச்சங்கப் பலகை மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம்.

வியஞ்சனம் - குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்

வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.
கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.
 
 
வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்
 
 
பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.
 
 
கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்
கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?
 
 
பத்துபாட்டு ஆதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம் இல் கற்பனையே
 
பத்துபாட்டு முதலிய நூற்களில் மனம் பற்றியவர்கள் எந்த வகையிலும் பொருள் இல்லாத இலக்கணம் இல்லாத கற்பனைகளைக் கூறும் நூற்களில் மனம் வைப்பார்களோ?
 
 
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி.
 
திருவள்ளுவர் செய்த திருக்குறளை குற்றம் இல்லாமல் நன்கு படித்து உணர்ந்து கொண்டவர்கள் மநு முதலிய ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் நூற்களை மனத்தில் கொள்ளுவார்களோ?
 
 
மனம் கரைத்து மலம் கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென்று உருவேற்றிக் கண் மூடிக் கதறுவரோ
மனத்தைக் கரைத்து நம் குற்றங்களை எல்லாம் நீக்கும் திருவாசகத்தில் ஆழ்ந்தவர்கள் கனபாடம் என்று சொல்லி வேதங்களையும் மந்திரங்களையும் உருவேற்றி கண் மூடிக் கதறுவார்களா?

venkatram dhivakar

unread,
Aug 29, 2008, 7:56:39 AM8/29/08
to minT...@googlegroups.com
குமரன்.. நீங்கள் உண்மையான சமதர்மவாதி. நம்மாழ்வாருக்குப் பின் அடுத்து மணிவாசகரின் புகழ் பாடும் பாடல் போட்டு அசத்துகிறீர்கள்.
 
தமிழ்த்தாய் வாழ்த்து அனைவருமே முதல் ஆறு வரிகளை மட்டுமே பாடிவருகிறோம். தமிழ்த் தாயை முன்வைத்து தமிழை மட்டுமல்லாமல் திருவாசகத்தையும் அதன் உயர்வான நிலையையும் பாடியவர் சுந்தரனார் அவர்கள். தமிழன் தலைநிமிரப் பாடும் பாடல் இது. முதல் ஆறு வரிகளை மட்டுமல்லாது அடுத்து வரும் அனைத்துப் பாடல்களையும் மனனம் செய்யவேண்டிய பாடல்.  
 
திவாகர்

 

Kumaran Malli

unread,
Aug 29, 2008, 8:35:03 AM8/29/08
to minT...@googlegroups.com

திவாகர்,

இவை எல்லாம் முன்பே எனது வலைப்பதிவில் எழுதியவை என்பதால் அடுத்தடுத்து இட முடிகிறது. மின் தமிழில் இடலாம் என்று எண்ணுபவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன். சட்டியில் இருப்பது தீர்ந்தவுடன் அகப்பையில் வருவதும் குறைந்துவிடும் - புதிதாக சமைத்து இடவேண்டும். :)

இலக்கியம் என்ற வகையில் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. காமக்கடவுள் (இஷ்டதெய்வம்) கண்ணன் என்றாலும் குலக்கடவுள் (குலதெய்வம்) முருகனையும் அவன் அன்னை தந்தையையும் போற்றும் இலக்கியங்கள் எல்லாவற்றையும் படிக்கிறேன். ஒவ்வொன்றாக அவற்றையும் இட்டு வருகிறேன்.

அடியேனைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர இது நல்லதொரு தருணம் என்று நினைக்கிறேன். சென்ற வாரம் தமிழ்மணத்தில் இரண்டாம் முறையாக விண்மீனாக இருந்த போது அனுப்பிய அறிமுகம் இது:

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்று தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினெட்டு; அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

விளையாட்டுத் தோழனாய்
வீட்டிலே அக்கைக்கு
விளைந்தானே மைந்தனவனே!
தளை நீக்கி அடியாரைத்
தான் தாங்கிக் காப்பாற்றும்
சிவகுமரன் சேந்தனவனே!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்;
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்
தமிழ்மணத்தின் விண்மீனாய்
வாழ்த்திடுவீர்! வாழ்த்துவீரே!


அடியேனின் வலைப்பதிவுகளில் சில:
 
http://abiramibhattar.blogspot.com/ - அபிராமி அந்தாதி நூறு பாடல்களுக்கான பொருள் விளக்கம் அண்மையில் நிறைவு பெற்றது.
 
அன்பன்,
குமரன்.
 

Geetha Sambasivam

unread,
Aug 29, 2008, 7:43:29 AM8/29/08
to minT...@googlegroups.com
விளக்கம் நல்லா இருக்கு.  மற்றபடி இலக்கணம் எல்லாம் ரிவிஷன் பண்ணணும்.

2008/8/29 Kumaran Malli <kumara...@gmail.com>

Kumaran Malli

unread,
Aug 29, 2008, 8:59:48 AM8/29/08
to minT...@googlegroups.com
எனக்கும் அப்படித் தான் கீதாம்மா. :-)

Tirumurti Vasudevan

unread,
Aug 29, 2008, 11:23:22 AM8/29/08
to minT...@googlegroups.com
அட, நம்ம கூடல் குமரன்தானா?
வாங்க வாங்க!

அட யாரது கூடவே ? நம்ம கீதா அக்கா! ஆச்சரியம்தான். இப்பதான் வறீங்களா,
இல்லை முன்னாலேந்தே ஒளிஞ்சுகிட்டு இருக்கீங்களா?

நல்வரவு.

தி. வா
2008/8/29 Kumaran Malli <kumara...@gmail.com>:


> எனக்கும் அப்படித் தான் கீதாம்மா. :-)
>
> On 8/29/08, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
>>
>> விளக்கம் நல்லா இருக்கு. மற்றபடி இலக்கணம் எல்லாம் ரிவிஷன் பண்ணணும்.
>>

--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Kumaran Malli

unread,
Aug 29, 2008, 11:38:48 AM8/29/08
to minT...@googlegroups.com
ஆமாம் தி.வா. ஐயா. உங்கள் கூடல் குமரன் தான். அப்பப்ப ரெண்டு மூனு வார்த்தை சொல்லிக்கிட்டு தான் இருந்தேன். ஆனா கீதாம்மா இன்னைக்குத் தான் திருவாய் திறந்திருக்காங்க. :-)

Geetha Sambasivam

unread,
Aug 29, 2008, 11:41:26 AM8/29/08
to minT...@googlegroups.com
:))))))))))))

2008/8/29 Kumaran Malli <kumara...@gmail.com>

Hari Krishnan

unread,
Aug 29, 2008, 10:52:35 PM8/29/08
to minT...@googlegroups.com


2008/8/29 Kumaran Malli kumara...@gmail.com

 
வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.
கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.
 
 
வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்
 
 
பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.
 
 
கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்
கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?
 
இந்த இழையில் பொங்கும் உற்சாகம் உவப்பானது.  மனோன்மணீயம் அருமையான கவிநடையுள்ள படைப்பு.  குறிப்பாக இந்த நாடகத்துள் வரும் சிவகாமியின் சரிதம் சந்த ஓட்டத்திலும் கவிதை இனிமையிலும் செறிவானது.
 
வடமொழி, தென்மொழி விவாதக் களத்தில் நீண்ட நாளாகப் பேசப்பட்டு வருவனவற்றுள் 'ஆரியம்போல் வழக்கொழி்ந்த' முதலான, மனோன்மணீய தமிழ்த்தாய் வாழ்த்து.  தன்னுடைய நாடகத்தில் ஏராளமான வடமொழிச் சொற்களைக் கலந்தே இயற்றியுள்ள சுந்தரம் பிள்ளையவர்கள் இப்படி ஒரு கருத்தைப் பேசிவைத்துச் சென்றதால் உண்மையிலேயே தமிழும் தமிழரும் மற்ற மொழியினரால் மதிக்கப்படுகின்றனரா இல்லையா என்பது பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களுக்குத்தான் தெரியும். 
 
அது ஒருபுறம்.  இந்தக் கருத்தைச் சொல்லவேண்டாம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன்.  இருந்தாலும், 'கண்ணுக்குத் தெரிந்த' ஒன்றை எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
 
மேற்படி அடிகளில் உள்ள கருத்தைச் சற்று கவனிப்போம். 
 
வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே
 
அதாவது, கலைமகளுக்கு இந்த இருமொழிகளும் இருவிழிகள் என்பதை சுந்தரம்பிள்ளை மறுக்கவில்லை.  எது வலதுவிழி என்பதில்தான் பூசல்.  'எந்தக் கண்ணை இழக்கத் தயார்' என்று யாராவது கேட்டால், வலது கண்ணை இழப்பதா, இடது கண்ணை இழப்பதா, எதை விரும்புவோம்! 
 
சரி, போகட்டும்.  தமிழ்தான் கலைமகளுக்கு வலதுவிழி என்று இவ்வளவு பாடுபட்டு நிறுவியிருக்கத்தான் வேண்டுமா என்று யோசித்தால், ஆண்களுக்கு வலமும், பெண்களுக்கு இடமும் துடிப்பது நற்சகுனம் என்பது நெடுங்கால வழக்கு.  பொதுவாகப் பெண்களுக்கு இடதுபாகமே உயர்வாகச் சொல்லப்படும் ஒன்று. 
 
கலைமகள் என்ற பெண்ணுக்கு வலதுவிழியான தமிழ் 'துடித்தால்' அது (நம்முடைய மரபில், மரபுக் கவிதைகளில் வழங்கப்பட்டுவரும் நம்பிக்கையின் அடிப்படையில்) அது நன்மையா, தீமையா?  யாருக்கு?  தமிழ் துடிக்கலாமா கூடாதா?
 
நான் இந்தக் குழுவுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவன் என்பதனால் இதைப் பேசத் தயங்கினேன்.  நாக இளங்கோவன் போன்றவர்கள் கண்ணில் தென்படுகிறார்கள்.  அவரைப் போன்றவர்கள் என் தமிழ்ப் பற்றை நன்கறிந்தவர்கள் என்பதனால், போற்றி இசைப்பதுபோல் பாடப் புகுந்து, சுந்தரனார் செய்திருக்கும் faux pasஐ சுட்ட முனைந்தேன்.  நாடகச் சுவையில் மறுக்கமுடியாத சுவையுடையது மனோன்மணீயம்.  எனக்குப் பல பகுதிகள் மனப்பாடமாகவே தெரியும்.  இருந்த போதிலும், வழு வழுதான். 


--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Aug 30, 2008, 12:00:16 AM8/30/08
to minT...@googlegroups.com
On 8/30/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
> > வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
> > கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.

இந்திய உளவியல் மிகவும் வித்தியாசமானது! சில நேரங்களில் கொடூரமானது கூட!

எங்கள் பள்ளிக்கு தமிழ் வாத்தியார் ஒருவர் வந்தார். பாவம் அவருக்கு வலது
கை ஊனம். எல்லாம் இடது கையால்தான். அவர் தினம், தினம் பள்ளியில் படும்
அவமானம் இருக்கிறதே! அது அவரை ஒரு வன்முறையாளராகிக்கிவிட்டது. அவர்
பிரம்பைக் கையில் எடுத்தால் உயிர் போகும்வரை அடிப்பார். இதுவே மேலைநாடாக
இருந்தால்?

ஒன்றை விட ஒன்று உயர்ந்தது எனப்பார்ப்பதுதான் ஜாதீயம். இதைக் கலைமகள்
கண்கள் வரை கொண்டு செல்ல வேண்டுமா? என்னே தமிழ் உளவியல்?

கண்ணன்

Kumaran Malli

unread,
Aug 30, 2008, 12:19:32 AM8/30/08
to minT...@googlegroups.com
ஹரியண்ணா.
 
நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (5/6 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம்) தங்கள் கம்பராமாயணக் கட்டுரைகளை விரும்பிப் படித்தவன் அடியேன். இப்போது அந்த வலைப்பக்கத்தில் தங்கள் கட்டுரைகளைக் காண முடியாமல் வருத்தப்படுபவன். அந்த உரிமையில் எல்லோரையும் போல் ஹரியண்ணா என்று அழைக்கிறேன். அடியேனைத் தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
 
பாரதியார் அன்றைக்கு எழுதிய சில வார்த்தைகளுக்கு இன்றைய பொருளை எடுத்துக் கொண்டு சிலர் விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அன்றைக்கு இருந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்தப் புலவன் பாடினான் என்பதை பாரதி அன்பரான நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். அதே போல் தானே சுந்தரம் பிள்ளையவர்களும்.
 
தாங்களே சொன்னது போல் பிள்ளையவர்களும் மிகச் சிறந்த கவிஞர். சிறந்த நாடகாசிரியர். அவர் காலத்தில் எதெல்லாம் தர்க்க முறைக்குச் சரி என்று பட்டதோ அதனைச் சொன்னார். அவ்வளவே. அதற்கு அடுத்த நிலையை எடுத்து அவர் வெளிப்படையாகச் சொல்லாததை சொல்ல வேண்டுமா நாம்?
 
வடமொழிக்கு உயர்வு கற்பித்து தமிழ்மொழியை சிலர் தாழ்த்தினார்கள் அன்று. மிகச்சிலரே அப்படி இருந்திருந்தாலும் பெரும்பான்மையோர் அப்படி செய்தார்கள் என்றொரு எண்ணம் பரவலாக இருந்தது. அதனால் கலைமகளுக்கு இருவிழிகளைப் போன்றவை இருமொழிகளும்; அவற்றில் கொடுவழக்கு தொடர்பவர்கள் திசையறியார் மூடர் என்றார். அது இன்றைக்கு மாறி தமிழ் பற்று என்ற பெயரில் தமிழ் வெறி கொள்பவர்களையும் சாடுகின்றது.
 
அவருடைய இயற்கையான உந்துதலின் படி வலதுவிழி தமிழ் என்று நாட்டினால் அது தமிழின் உயர்வை நாட்டியதாகும் என்று அப்படியே பாடினார். பொதுவாக உடலின் வலப்பக்கம் தானே உயர்வாக எண்ணப்படுகிறது?! பணத்தைக் கொடுக்கும் போதும் பெறும் போதும் வலக்கையைத் தானே பயன்படுத்துகிறோம்?! வீட்டிற்குள் முதல்முறை வரும் போது வலக்காலைத் தானே எடுத்து வைத்து வரச் சொல்கிறோம்?1 அப்படி பொதுவாக வலப்பக்கமே உயர்வாக எண்ணப்படுவதால் அந்த வகையில் தமிழை வலதுவிழி என்று சொல்லி தமிழை உயர்த்திக் காட்ட இந்தத் தமிழன் இயற்கையான உந்துதலின் படி செயல்பட்டிருக்கிறார். சகுன சாத்திரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலதுவிழி துடித்தால் தீங்கு என்ற மரபைக் காட்டி இந்த வரிகளை எடுத்துக்காட்டுவது சரி தானா? கைரேகை சாத்திரத்திலும் பெண்களின் இடக்கையைத் தான் பார்ப்பார்கள். ஆனால் மற்ற இடங்களில் ஆணோ பெண்ணோ, மேலே சொன்னது போல், வலக்கையும் வலக்காலும் தானே முன்னே வருகின்றது?
 
நானும் இந்தக் குழுவிற்குப் புதியவன் தான். ஏதேனும் துடுக்காகப் பேசியிருந்தால் தடுத்தாட்கொள்ளுங்கள்.
 
அன்பன்,
குமரன்.


Hari Krishnan

unread,
Aug 30, 2008, 1:23:18 AM8/30/08
to minT...@googlegroups.com


2008/8/30 Kumaran Malli <kumara...@gmail.com>

ஹரியண்ணா.
 
நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (5/6 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம்) தங்கள் கம்பராமாயணக் கட்டுரைகளை விரும்பிப் படித்தவன் அடியேன். இப்போது அந்த வலைப்பக்கத்தில் தங்கள் கட்டுரைகளைக் காண முடியாமல் வருத்தப்படுபவன். அந்த உரிமையில் எல்லோரையும் போல் ஹரியண்ணா என்று அழைக்கிறேன். அடியேனைத் தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
 
அடேங்கப்பா.... என்னை நினைவில் வைத்திருப்பவர்கள்கூட இருக்கிறார்களா!  மகிழ்ச்சி.
 
அண்ணா என்றழைத்தால் தவறாக எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது!  ரொம்ப நாளாச்சு ஹரியண்ணா என்று அழைக்கப்பட்டு.  அது இன்னும் இரட்டிப்பு மகிழச்சி.   
 
சகுன சாத்திரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலதுவிழி துடித்தால் தீங்கு என்ற மரபைக் காட்டி இந்த வரிகளை எடுத்துக்காட்டுவது சரி தானா? கைரேகை சாத்திரத்திலும் பெண்களின் இடக்கையைத் தான் பார்ப்பார்கள். ஆனால் மற்ற இடங்களில் ஆணோ பெண்ணோ, மேலே சொன்னது போல், வலக்கையும் வலக்காலும் தானே முன்னே வருகின்றது?
 
பேச்சு, கையையோ காலையோ பற்றியது அன்று.  கண்ணை.  அடுத்தது, என் பேச்சின் அடிப்படை சகுன சாத்திரம் என்பதாகவே இருந்தாலும், இதைத் தமிழிலக்கிய மரபும் ஒப்புக் கொண்டிருக்கிறது அல்லவா?  எடுத்துக் காட்டாக, சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதையின் கடைசி சில அடிகளைப் பார்க்கலாமா?
 
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.
 
இந்திர விழா தொடங்கும் சமயத்தில் கண்ணகிக்கு இடது கண்ணும், மாதவிக்கு வலது கண்ணும் துடித்ததாம்.  கோவலன் மாதவியைப் பிரியப் போகிறான், கண்ணகியைக் கூடப் போகிறான் என்பது குறிப்பு.
 
கம்பராமாயணம், கரதூடண வதைப்படலம்.  கரன் போருக்குக் கிளம்புகிறான். அகம்பனன் என்ற அரக்கன், 'இப்போது சமயம் சரியாக இல்லை.  போர் வேண்டாம்' என்று தடுத்துச் சொல்வனவற்றில் இதுவும் ஒன்று:
 

வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன; வயவர்

தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன; தூங்கி

மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன; விரவி

ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரிக் குலம் பலவால்

 
வீரர்களுடைய இடது தோள்களும், இடது கண்களும் துடிக்கின்றன.  (ஆணுக்கு இடம் துடித்தல் கேட்டின் அறிகுறி என்ற நம்பிக்கையின்படி)
 
அனுமன் இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கிறான்.  அப்போது அரக்கக் குலமகளிருக்கு நேர்ந்த நிமித்தங்கள்:
 

நிலம் துடித்தன நெடுவரை துடித்தன நிருதர்தம் குலமாதர்

பொலம் துடித்தன மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன் தோளும்

வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடுவானம்

கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள்

 
அதே நேரத்தில் சீதைக்கு நிகழ்வது:
 

நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை

சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?

பொலம் துடி மருங்குலாய் ! புருவம் கண் நுதல்

வலம் துடிக்கின்றில  வருவது ஓர்கிலேன்
 
திரிசடை!  என் வலதுகண், புருவம், நெற்றி ஆகியவை துடிக்கவில்லை.  (இடதுகண், புருவம் நெற்றி ஆகியவை துடிக்கின்றன.)  என்னதான் நடக்கப் போகிறது!
 
இன்னமும் பல இடங்களிலிருந்து இந்த வலதுகண், இடதுகண் துடித்த அறிகுறி, நிமித்தங்களை எடுத்துச் சொல்ல முடியும்.  தமிழ் இலக்கியத்தின் இரண்டு கரைகளாக இளங்கோவும் கம்பனும் சொல்வதை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.  தேடினால் மனோன்மணீயத்திலேயே இந்த இடம் துடித்தல், வலம் துடித்தல் விஷயங்களை எடுக்க முடியும். 
 
எனவே, சொல்லியிருக்கும் உவமை பொருந்தாத உவமைதான்.  சுந்தரம்பிள்ளையும் இந்த மரபில் வந்தவர்தானே?  இதை எண்ணிப் பார்த்திருக்க வேண்டுமல்லவா?  முதல் பிழை, கண்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்க முயன்றது.  இரண்டாவது பிழை பொருந்தாத உவமையை வலியுறுத்திச் சொன்னது.  
 
மற்றபடி, மனோன்மணீயத்தின் மீது மிக உயர்ந்த மதிப்பும், நல்லெண்ணமும் உடையவன்தான் நான்.  அதனால்தான் பல பகுதிகள் மனப்பாடமாகவே தெரியும் என்று குறிப்பிட்டேன்.  அத்தனை முறை படித்திருக்கிறேன் என்பதல்லவா பொருள்?  விரும்பாத ஒன்றை யாராவது படிப்பார்களோ?  துலாக்கோலுக்கு மதிப்பீட்டில் விருப்பு வெருப்பு கிடையாது.

வேந்தன் அரசு

unread,
Aug 30, 2008, 7:59:06 AM8/30/08
to minT...@googlegroups.com
மனுசனுக்கு இரண்டு கண்ணும் சமம் தான்
 
ஒரு கண்ணை நமக்கு வேண்டியவர்க்கு ஈயணும்  என்றால் நாம் என கண்ணை தானம் செய்ய விரும்புவோம் என்பது ஆய்வுக்கு உரியது
 
ஆனால், துப்பாக்கி சுடுவோர் எநத கண்ணை குறுக்கி எநத கண்ணால் இலக்கு நோக்குவார்கள்?
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

வேந்தன் அரசு

unread,
Aug 30, 2008, 8:01:11 AM8/30/08
to minT...@googlegroups.com
இருந்த பெரும் தமிழ் அணங்கே.
 
இறந்த காலத்தில் சொல்லியதே வெறும் பழம் பெருமைதான் என்று சிலர் சொல்லாடுகிறார்களே?

Tirumurti Vasudevan

unread,
Aug 30, 2008, 10:11:49 AM8/30/08
to minT...@googlegroups.com
2008/8/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> மனுசனுக்கு இரண்டு கண்ணும் சமம் தான்
>
> ஒரு கண்ணை நமக்கு வேண்டியவர்க்கு ஈயணும் என்றால் நாம் என கண்ணை தானம் செய்ய
> விரும்புவோம் என்பது ஆய்வுக்கு உரியது

ஆய்வு சுலபம்தானே? எது சரியா தெரியலையோ அதை கொடுத்துடுவோம். :-)


> ஆனால், துப்பாக்கி சுடுவோர் எநத கண்ணை குறுக்கி எநத கண்ணால் இலக்கு
> நோக்குவார்கள்?

வலது கை பழக்கம்னா வலது கண். இடதுன்னா இடது. மாத்தி யோசிச்சு பாருங்க.
முடியாது. தோதா இருக்காது.

திவா

Kumaran Malli

unread,
Aug 31, 2008, 3:47:18 AM8/31/08
to minT...@googlegroups.com

ஹரியண்ணா.

தகுந்த தரவுகளை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. வலக்கண், இடக்கண் துடிப்பது என்பது சகுண சாத்திரம் மட்டுமில்லை; தமிழ் இலக்கிய மரபிலும் அவை இருந்தது என்பதைக் காட்ட மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் இவை. பிள்ளையவர்கள் இந்த மரபினை அறிந்தவராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதனால் தங்களின் சுட்டிக்காட்டலை ஒத்துக் கொள்கிறேன்.

அன்பன்,
குமரன்.

2008/8/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

Kumaran Malli

unread,
Aug 31, 2008, 3:51:30 AM8/31/08
to minT...@googlegroups.com
இதென்ன விதண்டா வாதம் அவர்கள் பேசுவது வேந்தன் அரசு ஐயா? :-) 'இருந்த' என்றால் இறந்த காலம் என்றா பொருள் கொள்வது? 'மன்னியிருந்த' என்றல்லவா பொருள் கொள்ள வேண்டும்! எத்திசையும் புகழ் மணக்க நிலையாக வீற்றிருந்த தமிழணங்கே என்னும் போது என்றுமுள தென் தமிழின் இயல்பை அன்றோ கூறுகிறார் ஆசிரியர். அப்படி சொல்லாடுபவரைக் கண்டால் சொல்லுங்கள். நானும் பேசிப் பார்க்கிறேன். :-)

2008/8/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இருந்த பெரும் தமிழ் அணங்கே.

வேந்தன் அரசு

unread,
Aug 31, 2008, 12:42:11 PM8/31/08
to minT...@googlegroups.com


2008/8/31 Kumaran Malli <kumara...@gmail.com>

இதென்ன விதண்டா வாதம் அவர்கள் பேசுவது வேந்தன் அரசு ஐயா? :-) 'இருந்த' என்றால் இறந்த காலம் என்றா பொருள் கொள்வது? 'மன்னியிருந்த'
 
புகழ் மணக்க  (மன்னி)  இருக்கும் பெரும் தமிழணங்கே என்று இருக்கலாம் இல்லையா ?
 

Elangovan N

unread,
Aug 31, 2008, 4:08:30 PM8/31/08
to minT...@googlegroups.com
இதமான இழை இது.
அரியண்ணாவையும் நண்பர் குமரனையும் இங்கே கண்டதில் மகிழ்ச்சி.

கலைமகளின் இரண்டு கண்களை இரண்டு மொழிகளுக்கு ஒப்பிட்டுச்
சொல்வதனைப் பற்றிய அரியண்ணாவின் சிந்தனைகளோடு எனக்குஒப்புமை உண்டு.
சகுனம் பற்றிய நம்பிக்கையையும் இலக்கியத் தரவுகளையும் கண்டு சுவைத்தேன்.
சகுனங்களோடும், கண்களின் திசைகளோடும்  ஒப்பிடாமல் எனக்கு வேறு பார்வை உண்டு.
 
கலைமகளின் இரண்டு கண்கள் வட, தென் மொழிகள் என்றால்
கலைமகளுக்குப் பிறமொழிகள் என்னவாம்? என்று எழும் வினாவுக்கு
விடை தெரியவில்லை.

இதே வகையில் பார்த்தால் முக்கண்ணன், முக்கண்ணியின்
மூன்றாவது கண்ணுக்கு என்ன மொழி? என்று கேட்கத் தோன்றுகிறது.
 
இதுவாவது கண்களோடு ஆன ஒப்புமை. சிவபெருமானின்
உடுக்கையின் இரண்டு பக்கங்களில் ஒன்று தமிழ்;
மற்றொன்று சமற்கிருதம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள்.
அதையும் படிக்க வாய்த்திருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியாமல்
சின்னதாக ஒரு சிரிப்பை மட்டுமே என்னால்
உதிர்க்க முடிகிறது. நாத தத்துவத்தை அறிந்தவர்கள்
இதனைப் படித்தால் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை.
(தலையைப் பிய்த்துக் கொள்வார்கள் ;-)) )

தமிழ், சமற்கிருதத் தகராறுகளுக்கு எதை எதையெல்லாம்
சமாதானத்திற்கு நம்மாளுங்க பயன்படுத்தியிருக்கிறார்கள்
என்று எண்ணும்போது வியப்பாக இருக்கிறது.

சமற்கிருதமே உயர்ந்தது என்று சொல்பவர்கள் மேல் எனக்கு
நிறைய மதிப்பு உண்டு. ஏனென்றால் சமற்கிருதக்காரர்களுக்கு
புழக்கமும் நம்பிக்கையும் மட்டுமல்லாமல் உறுதியும் அது.

அதேபோல தமிழே உயர்ந்தது என்று சொல்பவர்கள் மேல்
எனக்கு நிறைய மதிப்பு உண்டு. ஏனெனில் தமிழ்க்காரர்களுக்கு
புழக்கமும் நம்பிக்கையும் மட்டுமல்லாமல் உறுதியும் அது.

ஆனால், இந்த இரண்டையும் சாமிகளின் மேல் ஏற்றியோ
இன்னபிறவற்றின் மீது ஏற்றியோ ஒரு வழவழ சொதசொத
என்ற வசனங்கள் தீட்டுவாரைக் கண்டால்
நகைப்பு வருகிறது. இப்படியும் இல்லாமல் அப்படியும்
இல்லாமல் அவர்கள் படும்(+படுத்தும்) அவதி அதிகம் :-)))
 
தொன்மையான மொழிகள் என்று பார்த்து, சரி கலைமகளின்
கண்களாகவே வைத்து விடலாம் இந்த இரண்டையும் என்று
எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டாலும், இலத்தீன,
சீன, அரேபிய மொழிகளையெல்லாம் கலைமகள்
கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வி வருகிறது.

ஏங்க எங்க சீன மொழி கலைமகளுக்குத் தெரியாதா? அல்லது அரேபிய
மொழியைத் தெரியாதா?, அல்லது உங்க சிவனின் உடுக்கையில் சீன மொழியோ அல்லது இலத்தீனமோ ஒலிக்காதா என்று ஒரு சீனனோ அல்லது அரேபியனோ கேட்டான் என்றால், அதற்கு எப்படி விடை சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. (இல்லங்க உங்க மொழிகள் இரண்டும் கலைமகளின் காதுகள் என்று சொல்லமுடியுமா? ). அங்கே சைவ, வைணவஏன் வேதிய இறை தத்துவங்களே குழம்பிப் போகின்றன.
 
அவ்வளவு ஏன் இப்பொழுது பெரும்பாலானோர் ஆங்கிலப் புத்தகங்களை
வைத்துத்தான் கலைமகள் நாளன்று கலைமகள் பூசனை செய்கிறார்கள்.
(ஏனென்றால் வீட்டில் இருப்பதைத்தானே பிள்ளைகளிடம்
இருப்பதைத்தானே வைக்க முடியும்? இந்து நாளிதழை வைக்காமல்
இருந்தால் சரி ;-) )
 
இன்றைக்கு காசாகக் கொட்டுகிற ஆங்கில மொழிக்கும்
கலைமகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியுமா? 
 
Think Globally; Act Locally என்பார்கள்;
 
ஆனால் இந்த இரண்டு மொழிகளையும் சமாதான வளையத்துக்குள்
போட முயல்பவர்கள் Think Locally; Act Globally என்றவாறே
போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. வேறுமாதிரி
சொன்னால் இறைவன் இறைவியையே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட
வைப்பது இப்படித்தான் :-)
 
அவர்களை எண்ணும்போது கண்ணதாசனின்
"ஒன்றிருக்க ஒன்று வந்தால், என்றும் அமைதி இல்லை..."
என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது :-))

அன்புடன்
நாக.இளங்கோவன்


On 8/30/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

Elangovan N

unread,
Aug 31, 2008, 4:51:47 PM8/31/08
to minT...@googlegroups.com
இது காலவழுவமைதி என்று கருத இடமிருக்கின்றது.
 
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று....."
என்ற மாகவி பாரதியின் வரியை காலவழுவமைதிக்குக் காட்டாகச் சொல்லுவார்
இலக்கண ஆசிரியர் சொ.பரமசிவம். எதிர்கால நிகழ்வை, இறந்த காலமாகச் சொல்லுகின்ற
கவிதை நயமாக மரபு ஏற்றுக் கொள்ளும். அப்படிததான்
இருந்த, இருக்கின்ற, இருக்கும் தமிழணங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
இருக்கப் போகும் தமிழணங்கே என்றால் பொருந்தாது.
இருக்கும் தமிழணங்கே என்று சொன்னால் அது இல்லாமல்
போக வாய்ப்பிருப்பதாக எண்ண இடம் இருக்கிறது.
இருந்த என்ற சொல்லில் காலத்தைத் தாண்டி
ஒரு நிலைப்புத் தன்மை இருப்பதாகப் படுகிறது.
 
"வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்" என்ற சுந்தரப் பெருமான்
திருவரியில் "வைத்தாய்" என்ற சொல்லும், சுந்தரம் பிள்ளையவர்களின் "இருந்த" என்ற
சொல்லும் ஒப்பு நோக்கக் கூடியன என்று கருதலாம் என்று தோன்றுகிறது.
 
அதேபோல "பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரம யோகீ..." என்ற அப்பர் பெருமானின்
வரியிலும் மாட்டேன் என்ற சொல் கவனிக்கத்தக்கது. பாடாமல் இருக்கின்றேனே என்ற நிகழ்காலத்
தவிப்பை பாடமாட்டேன் என்று எதிர்காலம் குறிக்கும் சொல்லால் சொல்வதாக அமைந்திருக்கின்றது.
 
(பிழையெனின் இலக்கணப் பெரியவர்கள் பொறுத்தருள்க)
 
அன்புடன்
நாக.இளங்கோவன்

 

Narayanan Kannan

unread,
Aug 31, 2008, 7:20:06 PM8/31/08
to minT...@googlegroups.com
On 9/1/08, Elangovan N <nela...@gmail.com> wrote:
> கலைமகளின் இரண்டு கண்கள் வட, தென் மொழிகள் என்றால்
> கலைமகளுக்குப் பிறமொழிகள் என்னவாம்? என்று எழும் வினாவுக்கு
> விடை தெரியவில்லை.
> தமிழ், சமற்கிருதத் தகராறுகளுக்கு எதை எதையெல்லாம்
> சமாதானத்திற்கு நம்மாளுங்க பயன்படுத்தியிருக்கிறார்கள்
> என்று எண்ணும்போது வியப்பாக இருக்கிறது.
>
> சமற்கிருதமே உயர்ந்தது என்று சொல்பவர்கள் மேல் எனக்கு
> நிறைய மதிப்பு உண்டு. ஏனென்றால் சமற்கிருதக்காரர்களுக்கு
> புழக்கமும் நம்பிக்கையும் மட்டுமல்லாமல் உறுதியும் அது.
>
> ஆனால், இந்த இரண்டையும் சாமிகளின் மேல் ஏற்றியோ
> இன்னபிறவற்றின் மீது ஏற்றியோ ஒரு வழவழ சொதசொத
> என்ற வசனங்கள் தீட்டுவாரைக் கண்டால்
> நகைப்பு வருகிறது. இப்படியும் இல்லாமல் அப்படியும்
> இல்லாமல் அவர்கள் படும்(+படுத்தும்) அவதி அதிகம் :-)))

அன்பின் சிலம்புக்கனியே!

உமக்குத்தெரியாத நூல நயம் இல்லை.

நம் கருத்துகோளுக்கிணங்க symbolism என்பதை வளைத்துக்கொள்ள முடியும்தான்.

நான் கூட ஆரம்ப காலங்களின் கண்ணன் பரம்பொருள் என்றால் நதிகளிலே தன்னை
கங்கை என்று சொல்வானேன்? அமேசான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் என்று
கேட்டு வந்திருக்கிறேன்.

கவிதையின் பொருள், அதிலுள்ள குறியீடுகள் பல நேரங்களில் பிரபஞ்ச நிலையில்
பேசப்பட்டாலும், சில நேரங்களில் அச்சமூகமறிந்த, பார்த்து, ரசிக்கும்
உதாரணங்களை எடுத்தாள்வதுண்டு.

தமிழ், சமிஸ்கிருதம் என்பது அறிஞர்கள் அறிந்து திளைக்கும் மொழிகள். சிலர்
அதில் ஒன்றே உயர்ந்தது எனச் சொல்ல முற்பட, இல்லை இரண்டும் சிறந்தது
என்பதைச் சொல்ல கண்களை உவமித்தனர். அவ்வளவுதான். அது சொதப்பல் அல்ல. மேலே
என்ன சொல்ல?

கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Aug 31, 2008, 9:33:15 PM8/31/08
to minT...@googlegroups.com
அவரவர் கருத்தை கைக்கொள்ளலாம்தான். ஆனால் மற்றாரை பழிக்கும் போக்கு
இருக்கும் போது என்ன செய்வது? இப்படி அனாவசிய சண்டை சச்சரவு வேண்டாம்
என்றுதான் இரண்டையும் சமமாக பாவிக்க பெரியவர்கள் அப்படி சொல்லி வைத்தனர்.
சமம் என்றால் நீ பெரியவன் நான் பெரியவன் என்று சண்டை வராமல் இருக்குமோ
என்று ஒரு நப்பாசை வேறு என்ன?

ஆனால் பாருங்கள் இன்னும் மக்கள் போக்கு மாறவில்லை.

அண்ண பிளவுக்கு அறுவை சிகித்சை செய்த பின் சம்ஸ்கிருதம் கற்பிப்பதன்
மூலம் பேச்சு பயிற்றுவிப்பது நல்ல பலன் தருகிறது என்று ஒருவர் ஆராய்ச்சி
செய்த விஷயம் பத்திரிகையில் வந்தது. செய்தி ஒரு சீர்திருத்த அறுவை
சிகித்சை நிபுணர் (plastic surgeon) ஒரு மாநாட்டில் சமர்ப்பித்த
அறிக்கையின் அடிப்படையிலானது.

இதை என் வலைப்பூவில் பதிவிடப்போய் ஆளுக்கு ஆள் சண்டைக்கு
வந்துவிட்டார்கள். பல பின்னூட்டங்கள் பிரசுரிக்க லாயக்கில்லாமல்
போயிற்று. கலீஜ் பின்னூட்டம் கூட வந்தது.

இவ்வளவு தூரம் பொறுமை இருக்கும் சமுதாயத்தில் இரண்டும் சமம் என்று
இன்னும் சொல்ல வேண்டிதான் இருக்கிறது.

திவா

2008/9/1 Narayanan Kannan <nka...@gmail.com>:


>
>> ஆனால், இந்த இரண்டையும் சாமிகளின் மேல் ஏற்றியோ
>> இன்னபிறவற்றின் மீது ஏற்றியோ ஒரு வழவழ சொதசொத
>> என்ற வசனங்கள் தீட்டுவாரைக் கண்டால்
>> நகைப்பு வருகிறது. இப்படியும் இல்லாமல் அப்படியும்
>> இல்லாமல் அவர்கள் படும்(+படுத்தும்) அவதி அதிகம் :-)))
>
>
>
> அன்பின் சிலம்புக்கனியே!
>
> உமக்குத்தெரியாத நூல நயம் இல்லை.
>
> நம் கருத்துகோளுக்கிணங்க symbolism என்பதை வளைத்துக்கொள்ள முடியும்தான்.
>

>..............


> தமிழ், சமிஸ்கிருதம் என்பது அறிஞர்கள் அறிந்து திளைக்கும் மொழிகள். சிலர்
> அதில் ஒன்றே உயர்ந்தது எனச் சொல்ல முற்பட, இல்லை இரண்டும் சிறந்தது
> என்பதைச் சொல்ல கண்களை உவமித்தனர். அவ்வளவுதான். அது சொதப்பல் அல்ல. மேலே
> என்ன சொல்ல?
>
> கண்ணன்
>

> -

Hari Krishnan

unread,
Aug 31, 2008, 9:35:35 PM8/31/08
to minT...@googlegroups.com


2008/9/1 Elangovan N <nela...@gmail.com>
இது காலவழுவமைதி என்று கருத இடமிருக்கின்றது.
 
அதேபோல "பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரம யோகீ..." என்ற அப்பர் பெருமானின்
வரியிலும் மாட்டேன் என்ற சொல் கவனிக்கத்தக்கது. பாடாமல் இருக்கின்றேனே என்ற நிகழ்காலத்
தவிப்பை பாடமாட்டேன் என்று எதிர்காலம் குறிக்கும் சொல்லால் சொல்வதாக அமைந்திருக்கின்றது.
 
(பிழையெனின் இலக்கணப் பெரியவர்கள் பொறுத்தருள்க)
 
அன்புடன்
நாக.இளங்கோவன்
 
அன்புள்ள இளங்கோவன்,
 
வணக்கம்.  இந்த 'இருந்த பெரும் தமிழணங்கே' என்பதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது.  'நான் காலையில் பத்திரிகை படிக்கிறேன்' என்று சொன்னால், 'நேற்று காலை படித்தேன், இன்று காலை படித்துக் கொண்டிருக்கிறேன், நாளை காலை படிப்பேன்' என்று முக்காலங்களுக்கும் பொருந்தும்.  இது ஆங்கிலத்திலும் உண்டு.  Simple present can be employed in 16 different (but not 'absolute present) contexts.  Simple future can be applied to a past event also.  ஏதோ ஒரு பழைய சம்பவத்தைப் பற்றிப் பேசும்போது, 'நான் இங்க நிக்கறேன்.  அவன் எதிர்ல நிக்கறான்.  நாங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டிருக்கிறோம்' என்று நிகழ்காலத்தில் இறந்தகால நிகழ்வை நாம் இன்னமும் பேசுகிறோம்.  இது ஆங்கிலத்திலும் உண்டு.  மற்ற மொழிகளிலும் கட்டாயம் இருக்கும்.  ஆகவே, இப்படிப் பொருள் சொல்வது உண்மையில் பொருளற்றது. 
 
பிரமாத்திரப் படலத்தில் வீழ்ந்து கிடக்கும் இலக்குவனை மடியில் கிடத்திக் கொண்டு ராமன் 'வந்தனன் ஐயா, வந்தனன் ஐயா, இனி வாழேன்' என்று கதறுகிறான்.  'இனி வாழேன்' என்று எதிர்காலத்தில் பேசுகிறவன், 'வந்தனன், வந்தனன்' என்று நிகழ்காலத்தில் பேசுகிறானே, இவன் இறந்தேவிட்டானா என்று யாரும் கேட்பதில்லையே?  பின்னர் எதற்காக இந்த 'இருந்த பெரும் தமிழணங்கே' 'எப்போதோ அப்படி இருந்தாள், இப்போது இல்லை'என்று பொருள்படுகிறது என்றொரு விளக்கம் என எனக்குத் தெரியவில்லை. 
 
அப்புறம், நலம்தானே?

Hari Krishnan

unread,
Aug 31, 2008, 9:38:34 PM8/31/08
to minT...@googlegroups.com


2008/9/1 Narayanan Kannan <nka...@gmail.com>

தமிழ், சமிஸ்கிருதம் என்பது அறிஞர்கள் அறிந்து திளைக்கும் மொழிகள். சிலர்
அதில் ஒன்றே உயர்ந்தது எனச் சொல்ல முற்பட, இல்லை இரண்டும் சிறந்தது
என்பதைச் சொல்ல கண்களை உவமித்தனர். அவ்வளவுதான். அது சொதப்பல் அல்ல. மேலே
என்ன சொல்ல?

கண்ணர்,
 
அது சொதப்பலே இல்லை.  ஆனால், அதற்குள் வலதுவிழி எது, இடதுவிழி எது என்று செய்யப்பட்ட ஆராய்ச்சி அக்மார்க் ISO சொதப்பல். 

Neduchezhian T. Chezhian

unread,
Sep 1, 2008, 7:39:37 AM9/1/08
to minT...@googlegroups.com
அன்புள்ள நாக. இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம்.
கலைமகளின் இருவிழிகள் இருமொழிகளோடு உவமானப்படுத்தப்பட்டது தொடர்பான தங்களின் செய்தி படித்தேன்.
கலைமகளுக்கு மற்ற இந்திய மொழிகள் தெரியாதா? என்றால் என்ன விடை சொல்வது. அரபி போன்ற உலக மொழிகள் தெரியாதா? என்றால் என்ன விடை சொல்வது என்ற வகையில் தங்களின் பதில் பலதிசைகளில் பயணம் செய்தது. புதிதாக சிந்திப்பதற்குத் தங்களின் பயணம் பயனுடையதாகவே அமைந்திருந்தது. வாழ்த்துகள்.
என் பதிவு என்னவெனில்,
இந்திய பெருநிலப்பரப்பில்(நாடு அல்ல) இரண்டு மொழி குடும்பங்கள் மட்டுமே உள்ளன. 1. ஆரிய மொழி குடும்பம் (வட மொழிகள்) தலைமை மொழி - சமஸ்கிருதம், 2. திராவிட மொழிக் குடும்பம்(தென் மொழிகள்) தலைமை மொழி - தமிழ். தலைமை மொழியிலிருந்து கிளைத்த மொழிகள் மற்ற மொழிகள் என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. காலம் சென்ற முனைவர் ச.அகத்தியலிங்கம் பல விழாக்களில் மொழிக் குடும்பங்கள் குறித்து உரையாற்றியுள்ளார். அமெரிக்க மொழியியல் அறிஞர் சோம்ஸ்கி அவர்கள் உலக மொழிகளில் இலக்கண, இலக்கிய வளம் கொண்ட மொழிகளைப் படித்துபார்த்துவிட்டு உலக மொழிகளில் உள்ள அனைத்து மொழிகளின் வேர்ச் சொற்களும் உலகில் இன்றைக்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இருமொழிகளிலிருந்து உருவாக்கப்பட்டவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.(தினமணியில் தி.அன்பழகன் வாசகர் கடிதம்) அந்த இரு மொழிகள் 1, தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் சுவாகிலி அல்லது சுவாகினி 2. இந்திய பெருநிலப்பரப்பின் தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ் என்பதாகும். இது குறித்து மயிலாடுதுறை ஏவிசி கலலூரியில் என்னோடு பணியாற்றும் நண்பர் சு.தமிழ்வேலு(முனைவர் க.ப.அறவாணன் மாணவர்)அவர்களிடம் இது தொடர்பாக உரையாடிக் கொண்டிருக்கும்போது அறவாணன் அவர்கள் தற்போதைய உலக வரைபடத்தை வைத்துக் கொண்டு தற்போதைய தென்ஆப்பிரிக்காவிலிருந்துதான் தற்போதைய இந்தியா என்றழைக்கப்படும் இந்திய பெருநிலப்பரப்பு நகர்ந்து தோன்றியிருக்க வேண்டும் (தற்போது சுநாமியால் சில கி.மீ. கிழக்கு நோக்கி அந்தமான் தீவுகள் நகர்ந்தது போல்) எனச் சுட்டியதைத் தமிழ்வேல் நினைவுபடுத்தினார். அப்படியானால் கலைமகளுக்கு சுவாகிலி மொழியும் தெரிந்திருக்க வேண்டும் தானே என நாக. இளங்கோவன் அவர்கள் கேட்டால் அவரின் வினா சரிதான்.
அறிவையும் தகவல்களையும் பகிர்ந்து புதிய சிந்தனைகள் பெறுவோம்.
நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்

2008/9/1 Elangovan N <nela...@gmail.com>

Narayanan Kannan

unread,
Sep 1, 2008, 9:48:24 AM9/1/08
to minT...@googlegroups.com
On 9/1/08, Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com> wrote:
உரையாடிக் கொண்டிருக்கும்போது
> அறவாணன் அவர்கள் தற்போதைய உலக வரைபடத்தை வைத்துக் கொண்டு தற்போதைய
> தென்ஆப்பிரிக்காவிலிருந்துதான் தற்போதைய இந்தியா என்றழைக்கப்படும் இந்திய
> பெருநிலப்பரப்பு நகர்ந்து தோன்றியிருக்க வேண்டும் (தற்போது சுநாமியால் சில
> கி.மீ. கிழக்கு நோக்கி அந்தமான் தீவுகள் நகர்ந்தது போல்) எனச் சுட்டியதைத்
> தமிழ்வேல் நினைவுபடுத்தினார்.

Key words: Continental drift, Geo tectonic, Gondwana, plate tectonics

உலகின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் எனும்
அறிவியல் கோடுபாடு தோன்றிய வரலாறு காண விக்கிபீடியா வாசிக்கவும்.

http://en.wikipedia.org/wiki/Continental_drift

இந்தியாவும் ஆப்பிரிக்காவும் இணைந்திருந்தன எனும் வரைபடம் காண:

http://earthscience.files.wordpress.com/2007/04/gondwana.gif

இந்தியா அண்டார்டிக், ஆஸ்திரேலிஅக் கண்டங்களுடன் இணைந்திருந்தன எனும் வரைபடம் காண:

http://www.cyburbia.org/gallery/data/6457/pangea-continental-drift.gif

இப்போது எல்லோருமே ஒத்துக் கொள்கின்ற கொள்கை இந்த நிலப்பயணம். இது
சுநாமியில் வருவதல்ல. (மேல் விவரம் சுட்டியில் காண்க).

இந்தக் கண்டப்பெயர்வு நடந்த காலங்களில் மனித இனம் உருப்பெறவே இல்லை. நவீன
மனித இனம் மிகச் சமீபத்தில் கிமு 25000 ஆண்டுகளில்தான்
உருவாகியிருக்கிறது. வெறும் 5000 ஆண்டுகளுக்குள்தான் எழுத்து என்பதே
பிறந்துள்ளது.

எனவே ஸ்வாகிலியும்-தமிழும் கண்டத்தொடர்பால் உருவானது என்று சொல்ல
முடியாது. ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்த மனிதர்கள் கொண்டு
வந்திருக்கலாம் (விருமாண்டி இருக்கார் சாட்சியாக).

அனைத்துக் கண்டங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி எல்லாப் புராணங்களும்,
வேதமும் பேசுகிறது. சாதாரண சந்தியா வந்தன மந்திரத்திலேயே கோண்டுவான
குறிப்பு இருப்பது ஆச்சர்யமே!

கலைமகள் என்பது குறியீடு. அது மனிதப்பொது. வாசிக்கும் குழமங்களுக்கு
ஏற்றவாறு அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணன்

பிகு: இணையத்தொடர்பு வந்த பிறகு தமிழ்ப் பேராசிரியர்கள் அறிவியல் கற்று
தங்கள் கோட்பாடுகளை அறிவியல் பூர்வமாக முன்னிருந்த முன்னெப்போதும் இல்லாத
வசதி கிடைத்துள்ளது. தனிமனித முயற்சியும், சுதந்திர வேட்கையும் இருந்தால்
தமிழ் வளர்ச்சியுறும்.

வேந்தன் அரசு

unread,
Sep 1, 2008, 10:44:38 AM9/1/08
to minT...@googlegroups.com


2008/8/31 Elangovan N <nela...@gmail.com>

இது காலவழுவமைதி என்று கருத இடமிருக்கின்றது.
 
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று....."
 
 
இது எல்லாம் எனக்கு ஹைடெக்கா தெரியுது.
 
ஆனால்,
 
பூவிருந்தவல்லி,
 
திருநின்றவூர்
 
என்ற பெயர்களால் இது மரபு என மட்டும் உணர்கிறேன்

Elangovan N

unread,
Sep 1, 2008, 11:20:39 AM9/1/08
to minT...@googlegroups.com
On 9/1/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
On 9/1/08, Elangovan N <nela...@gmail.com> wrote:
> கலைமகளின் இரண்டு கண்கள் வட, தென் மொழிகள் என்றால்
> கலைமகளுக்குப் பிறமொழிகள் என்னவாம்? என்று எழும் வினாவுக்கு
> விடை தெரியவில்லை.
> தமிழ், சமற்கிருதத் தகராறுகளுக்கு எதை எதையெல்லாம்
> சமாதானத்திற்கு நம்மாளுங்க பயன்படுத்தியிருக்கிறார்கள்
> என்று எண்ணும்போது வியப்பாக இருக்கிறது.
>
> சமற்கிருதமே உயர்ந்தது என்று சொல்பவர்கள் மேல் எனக்கு
> நிறைய மதிப்பு உண்டு. ஏனென்றால் சமற்கிருதக்காரர்களுக்கு
> புழக்கமும் நம்பிக்கையும் மட்டுமல்லாமல் உறுதியும் அது.
>
> ஆனால், இந்த இரண்டையும் சாமிகளின் மேல் ஏற்றியோ
> இன்னபிறவற்றின் மீது ஏற்றியோ ஒரு வழவழ சொதசொத
> என்ற வசனங்கள் தீட்டுவாரைக் கண்டால்
> நகைப்பு வருகிறது. இப்படியும் இல்லாமல் அப்படியும்
> இல்லாமல் அவர்கள் படும்(+படுத்தும்) அவதி அதிகம் :-)))



அன்பின் சிலம்புக்கனியே!

உமக்குத்தெரியாத நூல நயம் இல்லை.
 
 
அன்பின் நண்பர் கண்ணன்,
 
நூல் நயத்தில் ஓங்கிய பலர் இருக்கையில், என்னை கனி என்றெல்லாம் சொல்லி என்னை கூச வைக்கிறீர்கள். உண்மையில் இந்தச் சொற்களுக்கெல்லாம் நான் தகுதியானவன் இல்லை. இளங்கோவன் என்றே
அழைக்க வேண்டும் என்பது அன்புக் கட்டளை :-)
 
//

நான் கூட ஆரம்ப காலங்களின் கண்ணன் பரம்பொருள் என்றால் நதிகளிலே தன்னை
கங்கை என்று சொல்வானேன்? அமேசான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் என்று
கேட்டு வந்திருக்கிறேன்.

தமிழ், சமிஸ்கிருதம் என்பது அறிஞர்கள் அறிந்து திளைக்கும் மொழிகள். சிலர்
அதில் ஒன்றே உயர்ந்தது எனச் சொல்ல முற்பட, இல்லை இரண்டும் சிறந்தது
என்பதைச் சொல்ல கண்களை உவமித்தனர். அவ்வளவுதான். அது சொதப்பல் அல்ல. மேலே
என்ன சொல்ல?
//
 
அப்படிச் சொன்னதும் எது எந்தக் கண் என்று ஆகிறது பாருங்கள் :)
எந்தக்கண் என்று எண்ணுவதைவிட, கலைத்தெய்வத்தின் கண்களோடு
மொழியை ஒப்பிடுவதையே தவிர்க்கவேண்டும் என்ற கருத்து என்னுடையது.
10 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டங்களுக்கெல்லாம் தலைவர்கள் பெயரை வைக்கப் போய்
அப்புறம் அது எங்கேயோ போய், கடைசியில் எல்லா தலைவர்களின் பெயர்களும் அம்பேல் ஆனது ;)
கிட்டத்தட்ட அது போலத்தான் இதுவும்;  அறிஞர் தளத்தின் உவமமாக இருந்தாலும்.
அறிஞர்களின் மொழித் தளத்தின் பற்றைக் காட்டுவதாக இருந்தாலும், அவர்களின் தத்துவ தளத்தில் இது
இருக்காது.
 
இது ஒரு இதமான உரையாடல்.
மிக்க நன்றி.
 

Elangovan N

unread,
Sep 1, 2008, 11:41:56 AM9/1/08
to minT...@googlegroups.com
 ட்ஹெ

அரியண்ணா, வணக்கம். நலமே.
 
நீங்கள் சொல்வது மிகச் சரி. நான் சொல்ல விழைவதும் அதுவே. ஒரு வேளை
நான் எதையும் தவற விடுகிறேனா என்று தெரியவில்லை. நீங்கள் சொன்ன இதே விளக்கத்தைத்தான்
வழுவமைதி என்ற இலக்கணப் பகுதியில் நான் படித்தது. காலம் மாற்றிச் சொல்லும் இயல்பை வழு
என்று சொல்லி அதனை மறுக்காமல் இலக்கணம் ஏற்றுக் கொள்கிறது என்ற அடிப்படையில்
இதனை வழுவமைதி என்று கருத இடம் இருக்கிறது என்று சொன்னேன்.
தங்களின் விளக்கமும் வழுவமைதிக்குச் சொல்லப்படும் விளக்கமும் ஒன்று போலவே தெரிகிறது.
ஒரு வேளை எனது புரிதல் தவறென்றால் இரண்டுக்குமுள்ள வேறுபாட்டைத்
தெளிவு செய்வதற்கு  உங்களை விடச் சிறந்தவர் கிடைப்பது அரிது. வேறுபாடு உண்டெனின் அன்புடன் தெரிவிக்கவும்.
 
மிக்க நன்றி.

Elangovan N

unread,
Sep 1, 2008, 11:45:55 AM9/1/08
to minT...@googlegroups.com
அன்பின் முனைவர் நெடுஞ்செழியன்,
வணக்கம்.
 
சுவாகிலி உள்ளிட்ட நல்ல செய்திகளைத் தெரிவித்திருக்கிறீர்கள்.
உண்மையில் இது ஒரு தத்துவ விசாரனையைக் கிளர்க்கிறது.
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
 
அன்புடன்
நாக.இளங்கோவன்
 
 
On 9/1/08, Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com> wrote:

Neduchezhian T. Chezhian

unread,
Sep 1, 2008, 1:05:59 PM9/1/08
to minT...@googlegroups.com
அன்புள்ள ஐயா கண்ணன் அவர்களுக்கு, வணக்கம்.
என் எதிர்வினைக்கு தாங்கள் கொடுத்த விளக்கத்திற்கு நன்றி.
தொடர்ந்து வாசிக்க கொடுத்தத் தொடுப்புகளுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிக்கான பின் குறிப்பு நன்று என்பதை விட தமிழ் வளர்ச்சிக்கான முன் குறிப்பு என்பதுதான்  பொருத்தமாக அமையும்.

நன்றி.
தமிழன்புடன்,
தி.நெ.

2008/9/1 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Sep 1, 2008, 5:53:59 PM9/1/08
to minT...@googlegroups.com
அன்பின் நெடுஞ்செழியன்:

தமிழின் ஆழம் பிரம்மிக்கத்தக்கது. நாமறிந்த நூட்களோ மிகக்குறைவு. அறியாத
பல நூட்கள் இன்னும் உண்டு. அவற்றில் எல்லாம் இன்னும் அதிசயத்தக்க சேதிகள்
இருக்கலாம். விருமாண்டி ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கலாம் ஆனால்
ஆப்பிரிக்காவில் இத்தகைய நீண்ட அரிய பண்பாடு உருவாகி நிலை பெறவில்லை. அது
இந்திய மண்ணிற்குரிய சிறப்பு. அதனால்தான் பாரதி, ம.சு.பிள்ளை போன்றோர்
இப்பூமியை, இங்குள்ள மொழி வளத்தை வானளாவப் புகழ்கின்றனர்.

எனவே தமிழறிந்த பெரியோர் எளிய இணையக்கல்வியை நுகர்ந்து, தங்கள் தமிழ்ப்
புலமையுடன் அதை ஒப்புநோக்கி பல அரிய சேதிகளைத் தர வேண்டும் என்பதே என்
ஆசை. அப்போது தமிழ் வீறுகொண்டு முன் செல்லும்.

கண்ணன்

Narayanan Kannan

unread,
Sep 1, 2008, 6:05:27 PM9/1/08
to minT...@googlegroups.com
அன்பின் இளங்கோவன்:

பாகவதம் எனும் நூலின் சிறப்பைச் சொல்லும் போது அது சுகமுனி எனும் கிளி
சுவைத்த கனி என்று சிறப்பித்துச் சொல்வார்கள். அது போல சிலம்பைச்
சுவைக்கும் தாங்கள், சுவைத்த அமுதைப் பகிர்ந்து கொள்ளும் தங்களை அப்படி
அழைக்கத்தோன்றியது.எந்தப்பட்டமும் இல்லாத இளங்கோவன் என்பதும் அழகென்றே
உணர்கிறேன் :-)

> எந்தக்கண் என்று எண்ணுவதைவிட, கலைத்தெய்வத்தின் கண்களோடு
> மொழியை ஒப்பிடுவதையே தவிர்க்கவேண்டும் என்ற கருத்து என்னுடையது.

ஒத்துக்கொள்கிறேன். பெரியவர் தவிர்த்திருக்கலாம். தமிழ் மண்ணில்
நக்கீரர்கள் (பேரு என்ன ஹரிகி யா? ;-) உண்டு என்பதும் அவர் அறியாததோ?
:-))

ஆனால் ஏன் அவர் அப்படிச் செய்தார் என்று பார்க்கும் போது அவர் தமிழ்
மொழியின் மீது கொண்ட மரியாதையே, காதலே அப்படிப் பேச வைத்தது என்று
கொள்வோம்! "சீரிளமைத் திறம் வியந்து, "செயல் மறந்து" வாழ்த்துதுமே!"
என்று ஒப்புக்கொள்கிறார். தமிழ் அவரை செயல் மறக்கச் செய்துவிட்டது!

கண்ணன்

N. Ganesan

unread,
Mar 5, 2009, 8:57:09 PM3/5/09
to Narayanan Kannan, மின்தமிழ்

வைரமுத்து-ரகுமான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு என் ஆசையை
எழுத ‘தமிழ்த்தாய்’ என்று மின்தமிழ் மடல்களத்தைக் கிளறினேன்.

தமிழ்த்தாய் வாழ்த்து (மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை)
பற்றிய இழை கிடைத்தது. இப்பொழுதே அதனைப் பார்க்கிறேன்.
முக்கியமாய், ஹரியண்ணா, குமரன் சொல்லும் கருத்துக்களைக்
கண்டேன்.
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/4bb98d1c9c780909/

என் பதிலாக ஒரு கருத்தைத் தர விழைகிறேன். பின்னூட்டங்களிலும்
எனக்கு மேலும் விளக்கலாம், தவறெனில் சுட்டிக் காட்ட
விண்ணப்பிக்கிறேன்.

மனோன்மணீயம் எழுதப்பட்ட முறை:
http://groups.google.com/group/minTamil/msg/9d4c60c0644cbe7b
முப்பால்மணி (தமிழ்ப் பேரா. அ. கிருஷ்ணசாமி நாயுடு மகன், கோவை):
”1891ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார்.
1877-78ல்
நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்

- பிரம்ம கீதை,
- சூதசம்ஹிதை,
- பெருந்திரட்டு

காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற
வேதாந்த
ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித
வேதாந்தத்தையே
உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து
திருத்தங்கள்
செய்து கொண்டார். ”

பொதுவாக, உலக மொழிகளில் தொன்மையான, ஆனால் வழக்கில்
இல்லாத மொழிகளைத் தந்தைமொழி என்கிறார்கள்.
இலத்தீனம், கிரேக்கம், பண்டை ஸ்லாவானியம் (ருஷ்யா), ஸம்ஸ்கிருதம்
... எல்லாம் தந்தைமொழிகளே (Fathertongue).
மக்கள் பேச்சு வழக்கில் இருந்து ஒழிந்து சில ஆயிரம் ஆண்டுகள்
ஆகியிருக்கும், பெண்கள், சிறுவர் பேசுவதாக இல்லாமல்
மொழியின் வளர்ச்சி மெத்தப் படித்த ஆண்களால் ஏற்பட்டிருக்கும்
வளர்ச்சி செயற்கைத்தன்மையைக் காட்டும், எனவே இவற்றுக்கு
தந்தை மொழி எனப் பெயர். ஆனால் தாய் மொழி பெண்கள், சிறுவர்,
கல்லாதார், எளியரால் உயிருடன் இருப்பது. தமிழ் போன்ற
பெரும்பாலும் தாய்மொழிகளில் சிறுபான்மைச் செய்யுள்நடை இருந்தாலும்,
மக்களிடையே எல்லா வர்க்கம், பால் வேறுபாடின்றிப் புழங்குவன.

பொதுவாக ஆண்கள், அதிகாரிகள், பண்டிதர்கள் பேசுவதாய்
வடமொழி நாடகங்கள் இருக்க, பெண்கள், வேலையாள், ...
பேசுவது பிராகிருதம். வேதக் கிரியைகள், ஹோமம்,...
எல்லாம் வடமொழி. ஆனால் பக்தியைக் காட்டத் தமிழ்
என்பது ஆழ்வார், நாயனார் காலந்தொட்டே ஏற்பட்டுவிட்ட மரபு.
நா. கண்ணன் இதனை அழகாய்ச் சொல்கிறார்:
http://groups.google.com/group/minTamil/msg/f01261bd94de4f6e

பொதுவாக பாரத மரபில் வலிமை வலக்கை ஆணுக்கும்,
இடக்கை பெண்ணுக்கும் ஆகும். இடப்பக்கம் (வங்காளியில் Baamaa)
இடக்கைக்கு இந்தியா கீழே பார்க்கப்பட்டது (வாம மார்க்கம்.
இடாகினி என்ற சொல் - இடம் என்ற வேரில் கிளைத்த சொல்).
மாதவச் சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தில்
நடராஜாவின் டமருகத்தில் வலப்புறம் வடமொழி,
இடப்புறம் தென்மொழி என்கிறார்.

ஆண்-வலம்-வடமொழி; பெண்-இடம்-தமிழ் என்ற
உறவுகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆணியல் பார்வையில்
பெண்ணுக்கு இடம் துடிப்பதும், ஆணுக்கு வலம் துடிப்பும்
உயர்வு என்றார்கள். ஆனாலும், ஒரு பெண்ணை அவளை
தனியாய் ’வலக்கால் வைத்து வா’ என்றும், பெண்ணுக்கும்
கூட வலக்கை சோற்றாங்கை ஆகவும் இந்தியக் கலாச்சாரம்
போதிக்கிறது.

>வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்

>கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.

இந்த இடத்தில் வடமொழியில் சூர்ய நமஸ்காரம் மூலமாக
ஏற்பட்ட திசைப் பெயர்களைச் சுட்டுகிறார்.

கிழக்கே உதிக்கும் சூரியனுக்கு முன்னால் நின்று
‘ஞாயிறு போற்றுதும்’ என்னும் போது,
வலக்கை தெற்கேயும், இடக்கை வடக்கேயும்
இருக்கும். தக்‌ஷிணம் = தென்திசை, வலக்கை.

கிழக்கு = Orient, மேற்கு = Occident
என்னும் சிலேடை நயம் காண்க.

மேலும் ஒன்று: அப்போதெல்லாம், ஆரியர்
வடக்கே திபெத்தில் இருந்து வந்தோர் என்று
சில மேல்நாட்டார் எழுதிக் கொண்டிருந்த காலம்.
அதனால் வடக்கு திசையை ஆரியருக்கு
அளிக்கிறார்.

ஹிட்லரின் ஒரு மந்திரி பின்னாளில்
திபெத்துக்குப் போய் ஆரியர்களைத் தேடினார்.
பாலகங்காதர திலகரும் திபெத் பற்றி எழுதினார்.
பெ. சுந்தரம் போலவே அவர் உறவினர்
வி. கனகசபைப்பிள்ளை, (Tamils 1800 years ago)
நூலில் திபெத்திலிருந்து வந்தனர் தமிழர்
என்று எழுதியிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

>வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
>கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்

”பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும்


என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக்
கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று

அறியாதவர்கள்.”

குணதிசை = கிழக்கு. அதைப் பார்க்கும் தமிழ்த்தாய்க்கு
வலப்புறம் தமிழ், இடப்புறம் ஆரியம் என்று சொல்கிறார்.

தமிழ்த்தாயை கலைமகள் கொற்றவை என்றும் கொள்ளலாம்.
சாரதை - பார்வதிக்கும், சரஸ்வதிக்கும் உள்ள பெயர்கள்.
கூத்தனூர் கலைமகளை விஜயதசமி அன்று இன்றும்
துர்க்கையாகவே வழிபாடு நடக்கிறது.

இந்திய மரபில் ஆணை வலத்தும், பெண்ணை இடத்தும்
வைத்து அர்த்தநாரீசுவரராய்ப் பார்ப்பது நம் பழைய மரபு.

சுந்தரர் இங்கே புரட்சிப் புதுமை செய்கிறார்.
தமிழ்த்தாயை அர்த்தேசுவரநாரியாக வழிபாடுகிறார்.
சில கோவில்களில் இவ்வாறுண்டு அபூர்வமாய்.
பெண்மைக்குப் (அதாவது தமிழ்) பிரதானம்
கொடுக்கிறார். வலப்பக்கம் தமிழ்த்தாயை
(கலைமகளை- ஐயையை) வைத்து,
இடப்பக்கம் ஐயனை வைத்துப் பார்க்கிறார்.

வடமொழி இலக்கியங்கள் எல்லாம் ஆணை நாயகனாகக்
கொள்ள இளங்கோ கர்ணகியை தமிழ்க்காப்பிய
நாயகியாக்கியதுபோலே, சுந்தரனார் தமிழை வலப்பக்கமும்,
வடமொழியை இடப்பக்கமும் வைக்கிறார்.
வடமொழி தந்தைமொழி இடக்கண் - அது தமிழ்த்தாய் கண் அன்று.
அவள் வலப்புறமாக இருப்பதால் அவளுக்கு வலக்கண்
ஒன்றே இருப்பதாகக் கொண்டார் எனலாம்.

இக் கண்ணிகளை முக்கியமாக மேலைநாட்டாருக்காகச்
சொல்கிறார். ஆரியங்கற்கப் புதிதாய் இந்தியாவில் நுழைந்து
தமிழை வெறும் பிராகிருதம் என்று சொல்லும்
மிலேச்சர்களுக்கு தமிழின் தொன்மையை விளக்குவதற்காகச்
சொன்ன வரிகள் இவை. அப்பொழுதெல்லாம்
ஒரு 200 சம்ஸ்கிருதம் படிக்க வெளிநாட்டார் வந்தால்
தமிழ் பக்கம் வருபவர் ஒருவரே இருக்கும்.
அவருக்கும் நல்ல வேலை கிடைக்காது. சுவலெபில்
போன்றோர் எழுதத் தொடங்குவதற்கு 70-80
ஆண்டுகளுக்கு முன்னம் என்பதை நாம் நினைக்க
வேண்டும். மேலை நாடுகளில் திராவிடர்
வெளியில் இருந்து வந்தோர் என்று 7-8 ஆண்டு முன்னால்
கூடச் சொல்லிக்கொண்டிருந்தனர். இன்று
டோரியன் ஃபுல்லர் போன்றோர் ஆய்வுகளால்
திராவிட இனம் இந்தியாவின் பூர்வீகமான
குடிகள் என்று உறுதியாகிவிட்டது.

அன்புடன்,
நா. கணேசன்


>கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
>வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்

-------------

இந்த கண்ணியில் வில்லியம் ஜோன்ஸ், கால்ட்வெல்
போன்றோர் தேற்றங்களை உள்வாங்கிச் சொல்கிறார்:

>*சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
>முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே

-----------

devoo

unread,
Mar 5, 2009, 10:27:58 PM3/5/09
to மின்தமிழ்
Mar 6, 6:57 am, "N. Ganesan"

நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்
- பிரம்ம கீதை,
- சூதசம்ஹிதை,
- பெருந்திரட்டு
காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். //

சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர
சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும்
பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

http://ta.wikipedia.org/wiki/பெ._சுந்தரம்_பிள்ளை

தேவ்

வேந்தன் அரசு

unread,
Mar 6, 2009, 11:08:51 PM3/6/09
to minT...@googlegroups.com
>பொதுவாக பாரத மரபில் வலிமை வலக்கை ஆணுக்கும்,
இடக்கை பெண்ணுக்கும் ஆகும். இடப்பக்கம் (வங்காளியில் Baamaa)
இடக்கைக்கு இந்தியா கீழே பார்க்கப்பட்டது (வாம மார்க்கம்.
இடாகினி என்ற சொல் - இடம் என்ற வேரில் கிளைத்த சொல்).

வலக்கை வலிமை படைத்ததாக இருப்பதால் வலது கை ஆணின் கையாக இருக்க ஆண் வலது பக்கமும் பெண் இடது பக்கமும் இருக்க வேண்டியது இயற்கை

வன்மை, வலிமை, வல்லவன் , வலம் என்ற ஒரு  வேரில் கிளைத்த சொற்கள். எனவே பலம் என்பதும் இந்த வேரில் இருந்தே தோன்றி இருக்கணும்.

தெலுகுமொழியிலும் ”நா வல்ல”  (able )என்ற மரபு உண்டு.




--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side.
Reply all
Reply to author
Forward
0 new messages