எவ்வளவு நாள் ஆவ்சம் அமெரிக்கா சொல்லிக்கொண்டிருப்பது
ஆவ்சம் ஆவசம் தமிழ்நாடு என்று சொல்வது
நாகராசன்
1. வேறு எந்த நாட்டில் ஜாதி அடிப்படையில் கல்வி, வேலை இடங்களில் தேர்வு
செய்யப்படுகிரது, ஆனால் ஜாதி என்றாலே பெரும் தீது என பார்க்கப்
படுகிறது.
2. ஜாதி அடிப்படையில் சிறு குழந்தகளுக்கு அரசாங்கம் சர்டிபிகேட்
கொடுக்கிறது, அதே சமயம் தெருப் பெயர்களில் நபர்களின் ஜாதிப் பெயர்களை
அழிக்கிரது
3. வேறு எந்த நாட்டில் தன் தாய்மொழி 50,000 ஆண்டுகளுக்கு முன்
லெமூரியாவில் பிறந்து, சமஸ்கிருதம், ஹீப்ரூ, அசீரியன், கிரேக்கம், லத்தீன
போன்ற உலக் மொழிகளுக்கும் , தெலுங்கு போன்ர இந்திய மொழிகளுக்கும் `தாய்`
என கணிசமான நபர்களால் நம்பப் படுகிறது..
4. வேறு எந்த நாட்டில் சொல், செயல், உணர்வு ஆகியவற்றிற்க்கு இடையே
தொடர்பே இல்லை. மொழி அளவில் இது எழுத்து, பேச்சு, படிப்பு இவற்றிற்க்கு
இடையே பெரும் இடை வெளியை காண்பிக்கின்றது
5. வேறு எந்த நாட்டில் இனமானத் தலைவர்களில் முதல் வேலையான தன் சொத்து,
தன் குடும்ப நலன் அபிவிருத்தி இன அழிவை மறக்கச் செய்கிறன.
6. வேறு எந்த நாட்டில் தனிமனித வாழ்கை அளவில் சுய நலனும், பொது மேடையில்
மற்றவர்களுக்கு உபயோகமாகாத உபதேசங்களும் சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறது
அமெரிக்கா மட்டும்தான் ஆவ்சம் இல்லை, தமிழ்நாடும் கூட - வேறு விதங்களில்
தமிழ்நாடு ஆவ்சம்தான
வகொவி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>நீங்கள் சுட்டும் ஆறு காரணங்களா
நான் சுட்டியது “காரனங்கள்” அல்ல, நான் எதையும் எக்ஸ்ப்ளைய்ன்
செய்யவில்லை
>அல்லது தான் பிறந்த
> மண்ணுக்குச் செய்யவேண்டுயது எதுவுமில்லை என்ற எண்ணமா?
> நாகராசன்
“பிறந்த மண்” ஒரு செண்டிமெண்டல் கருத்து. அப்படி வைத்துக் கொண்டாலும்
உங்கள் வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
what you say is incomprehensible
விஜயராகவன்
கோலிவுட்டின் இயக்கமே தெலுங்கர், மலையாளிகளிடம் உள்ளது. தமிழகத்தின்
”சூப்பர்” நடிகர்கள் யாரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் அல்ல.
தமிழ் மண்ணின் வாசம் பேசும் சமயங்கள் கூட வந்தோரால் புறம் தள்ளப்பட்ட
நிலையைக் காண்கிறோம்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!
ஆவ்சம் தமிழ்நாடு!
நா.கண்ணன்
2011/10/8 rajam <ra...@earthlink.net>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆவ்ஸம் தமிழ்நாடு - ஆவேசம் தமிழ்நாடு
1. வேறு எந்த நாட்டில் ஜாதி அடிப்படையில் கல்வி, வேலை இடங்களில் தேர்வுசெய்யப்படுகிரது, ஆனால் ஜாதி என்றாலே பெரும் தீது என பார்க்கப்படுகிறது.
வேறு எந்த நாட்டில் சாதி உள்ளது. இருந்தால் அங்கும் இட ஒதுக்கீடு இருந்திருக்கும். ஆம் ஐயா தீது தான்.
2. ஜாதி அடிப்படையில் சிறு குழந்தகளுக்கு அரசாங்கம் சர்டிபிகேட்
கொடுக்கிறது, அதே சமயம் தெருப் பெயர்களில் நபர்களின் ஜாதிப் பெயர்களை அழிக்கிரது
மறுக்கப்பட்ட சம வாய்ப்பைப் பெறுவதற்காக கொடுக்கின்றது. சாதி ஒழிக என்ற சொல்லிக் கொண்டே தெருப்பெயர்களில் சாதி இருந்தால் எள்ளமாட்டார்களா. அதற்கு எடுத்துக்காட்டு தான் தெருப் பெயரில் சாதி ஒழிப்பு. ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறுவோர் சாதி பெயர்களை அவர்களாகவே இடுவதில்லை.
3. வேறு எந்த நாட்டில் தன் தாய்மொழி 50,000 ஆண்டுகளுக்கு முன்
லெமூரியாவில் பிறந்து, சமஸ்கிருதம், ஹீப்ரூ, அசீரியன், கிரேக்கம், லத்தீன போன்ற உலக் மொழிகளுக்கும் , தெலுங்கு போன்ர இந்திய மொழிகளுக்கும் `தாய்` என கணிசமான நபர்களால் நம்பப் படுகிறது..
உண்மையிலேயே இருந்தால் சொல்லிக் கொள்வதில் தவறு ஏது இராது. சமற்கிருதமே உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற அணியிலா கோமாண்டூரார். அதைச் மட்டும் சாடுவதில்லையே.
4. வேறு எந்த நாட்டில் சொல், செயல், உணர்வு ஆகியவற்றிற்க்கு இடையேதொடர்பே இல்லை. மொழி அளவில் இது எழுத்து, பேச்சு, படிப்பு இவற்றிற்க்கு இடையே பெரும் இடை வெளியை காண்பிக்கின்றது
எல்லா நாட்டிலும் அது வாழ்வோடு கலந்துள்ளது தமிழ்நாட்டில் தான் என்பதல்ல.
5. வேறு எந்த நாட்டில் இனமானத் தலைவர்களில் முதல் வேலையான தன் சொத்து, தன் குடும்ப நலன் அபிவிருத்தி இன அழிவை மறக்கச் செய்கிறன.
6. வேறு எந்த நாட்டில் தனிமனித வாழ்கை அளவில் சுய நலனும், பொது மேடையில் மற்றவர்களுக்கு உபயோகமாகாத உபதேசங்களும் சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறது
அண்டை மாநிலங்களே உள்ளன. காட்டாக, கருநாடகம்.
அமெரிக்கா மட்டும்தான் ஆவ்சம் இல்லை, தமிழ்நாடும் கூட - வேறு விதங்களில்
தமிழ்நாடு ஆவ்சம்தான
அவரவர் நோக்கில் இது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளது.
வகொவி
On Oct 8, 7:31 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Dear list,
>
> As a post-scriptum,
> I must add that it was simply
> because I had not searched enough.
>
> There are indeed articles written on "the concept of AWE".
>
> See for instance:
> "http://www.huji.ac.il/dataj/controller/ihoker/MOP-PUB_LINK?pub_id=069..."
> "On the concept of awe in Maimonides."
>
> and other items found
> by googling for "concept of AWE"
> (including the quotation mark).
>
> However, this probably does not fit within the discussion which has
> already started.
>
> My suggestion is, therefore, probably TOO ACADEMIC :-)
>
> Cheers
>
> -- jlc (Paris)
>
> ************************************
>
ழான் - லூக்,
அணங்கு¹-தல் aṇaṅku-
, 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல்.
நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல்.
நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as
bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு.
223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன்
(இறை. 50, உரை).--v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ
னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).
அணங்கு² aṇaṅku
, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.)
2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய்.
(திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.)
7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away
one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந்
தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as
resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10.
Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண்.
459). 11. Dancing under religious excitement, esp. possession by
Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13.
Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
(சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின்
குருளையும் (சிலப். 25, 48).
அணங்குதல் என்பதன் முதற்பொருள் வருத்துதல். affilction, suffering.
தமிழ் (திராவிட ஸப்ஸ்ட்ரேற்றம் உள்ள இந்தியா) கிராமங்களில் நாம் காணும்
பேய்ச்சி, பிடாரி, மாரி, காளி, குடலுருவி அம்மன் (ஒரு போட்டோ சுபா
தந்திருந்தார்)
இவை அணங்குகள்.
அணங்குடை தமிழ்நாடு = suffering or afflicted Tamil Nadu என்பது
awesome Tamil Nadu, செல்வன் சொல்லும் ஆவ்சம் அமெரிக்கா என்ற
பொருள் ஆகுமா? எனக்குத் தெரியலை.
நா. கணேசன்
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
thanks for the data, BUT ....
My suggestion that Tamil "அணங்குடை" might be a possible rendering for
English "awsome"
was based on the following facts.
அணங்கு is not included in the Cre-A dictionary (2nd edition), which
possibly means that it is considered as belonging to the Classical
resources of Tamil,
rather than to the immediately usable vocabulary (it is a word which
DOES inspire AWE to its potential users :-)
Besides,
அணங்கு occurs 3 times in the குறள், which is the item from Tamil literature
which seems to be the first Classical vocabulary fountain to which
people go when they are thirsty for words...
K1081: அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு
K1082: நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து
K918: ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப மாய மகளிர் முயக்கு
(the combination of those 3 examples nicely seems to show the inherent
AMBIVALENCE of the word அணங்கு
[kindly correct me if I am wrong]
ADDITIONALLY,
when we read the beginning of பரிபாடல் 1,
namely
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை //
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர //
......................
"அணங்கு உடை" REALLY seems to mean "awe inspiring"
(whatever its connotation might have been in the eyes of Tamil villagers
...)
Does any of those arguments make sense?
The பரிபாடல் also can be used for enriching Modern எழுத்துத் தமிழ் ...
Let us wait for the 3rd or the 4th edition of the Cre-A dictionary ;-)
அன்புடன்
-- Jean-Luc Chevillard (Paris)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அணங்கு அணங்குதல்/அணுங்குதல் என்னும் சொற்கள் திராவிட மொழிகளில்
உள்ள அடிப்படையான சொல். அதன் அடிப்படையான பொருள் வருத்துதல்,
அச்சுறுத்துதல். சம்ஸ்க்ருதத்துக்கு தமிழ் தந்த சொல் காமம்.
காமன் தமிழ்க் கடவுள். இந்தியா முழுமைக்கும் த்ராவிட ஸப்ஸ்ட்ரேற்றத்தால்
common ஆகிவிட்டான். காமனின் ஒரு பெயர் அனங்கன். அன் + அங்கம் என்று
பிரித்தால் உடல் உறுப்பு தான். காமன் உண்மையிலே சிவன் உடலை எரித்து
உருவமே இல்லாதவன் என்றால் தேஹம் இல்லாதவன் என்றல்லவா
வடசொல் அமையும். காமம் (தமிழ் வடமொழிக்குக் கொடுத்த கடன்)
மிக்கு வருத்துபவன் அணங்கன். இந்த தமிழ்/த்ராவிட கடவுட்கோட்பாடு
அனங்கன் என்று வடமொழி ஆக்கியுள்ளது. அன் + அங்கன் என்ற கதை
சிருஷ்டிப்புகள் கட்டப்பட்டன. இதனை ஜி. யு. போப்பையர் முதலில்
விளக்கி எழுதியுள்ளார்கள்.
வாழ்க நலமுடன்,
நா. கணேசன்
On Oct 8, 9:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
NGanesan> > அணங்குடை தமிழ்நாடு = suffering or afflicted Tamil Nadu
என்பது
> > awesome Tamil Nadu, செல்வன் சொல்லும் ஆவ்சம் அமெரிக்கா என்ற
> > பொருள் ஆகுமா? எனக்குத் தெரியலை.
>
Venthan> ஆகாது
>
> அது வியப்பு வெளிப்பாடு
> அணங்கு அச்சம்தரும் சொல்
>
> ஆய்மயில்கொல்? அணங்குகொல்?
>
> மாலும் என் நெஞ்சு
>
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
On Oct 8, 9:07 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
Unfortunately not.
Sincerely Yours,
N. Ganesan
piRa pin2n2ar.
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this
you write:
<QUOTE>
அன் + அங்கன் என்ற கதை
சிருஷ்டிப்புகள் கட்டப்பட்டன. இதனை ஜி. யு. போப்பையர் முதலில்
விளக்கி எழுதியுள்ளார்கள்.
<QUOTE>
Can you substantiate that assertion
by providing quotations from G.U. Pope
(with precise bibliography)?
According to what I remember myself,
I mentionned to you
during one of our exchanges
(which I could trace , if necessary)
that I HAD READ in a book
written by my friend professor Alexander Dubiansky (from MOSCOW university)
that the late professor Thomas Burrow (one of the two authors of the DED)
had proposed that அணங்கு
was ultimately rooted in அநங்கன் (= காமன்)
When I made that remark,
you IMMEDIATELY said you thought that it was a very good suggestion
but George Hart said he did not believe that this was the correct
explanation.
Is this not what happened?
Did G.U. Pope (rather than Thomas Burrow) really write about this?
Please kindly clarify
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
P.S. I do not ccopy this to the other lists
because it DOES create confusion
to do TOO MUCH cross posting.
(the members of the other lists lack the context)
On Oct 8, 9:59 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Dear NG,
>
> you write:
>
> <QUOTE>
>
> அன் + அங்கன் என்ற கதை
> சிருஷ்டிப்புகள் கட்டப்பட்டன. இதனை ஜி. யு. போப்பையர் முதலில்
> விளக்கி எழுதியுள்ளார்கள்.
>
Dear JLC,
The suggestion for ananga from Dravidian aNaGku was not
done by Th. Burrow first. Even though prof. Burrow said
in 1979 that it is correct. This ananga derivation was first
done by G. U. Pope, made first in his Naladiyar translation.
I've Dubianski's book, and I remember he also mentioning
G. U. Pope as the author of this derivation.
You can check G. U. Pope, then T. Burrow, Dubianski.
anbudan
N. Ganesan
hat I HAD READ in a book
written by my friend professor Alexander Dubiansky (from MOSCOW university)
that the late professor Thomas Burrow (one of the two authors of the DED)
had proposed that அணங்கு
was ultimately rooted in அநங்கன் (= காமன்)
I am unable to locate the நாலடியார் translation at the moment
but I have found A.Dubianski's book.
He does write, indeed,
on page 22, fn 39
<QUOTE>
Considering the abundance of erotic motifs in Murukaṉ's mythology and
cult, there are
sufficient grounds to view him as the ancient Tamil god of love. [...]
the obvious similarity between the words /aṇaṅku/ and
/anaṅka/ "the bodiless", an epithet of Kāma, is quite interesting.
G.U. Pope in his commetary to the /nālaṭiyār/ noted the similarity
and suggested, albeit cautiously, that the epithet might have been a
dravidian loanword.
[....] T. Burrow hods that such an interpretation "should be adopted"
</QUOTE>
Has George Hart also adopted the intepretation?
-- jlc
தமிழகத்திலிருந்து அறிஞர்கள் மேற்படிப்புக்கு ஆய்வுக்கு என்று அமெரிக்கா செல்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த தமிழ் நாட்டு அறிஞர்கள் குறுகிய காலஅளவில் தமிழகம் வந்து கல்லூரிகளில் (அவர்கள் ஊருக்கருகில் உள்ள கல்லூரிகள்) தங்கள் அறிவு ஆய்வு வளர்ச்சியைத் தானம் தரலாமேதடுப்பது எதுவோ்?
On Oct 8, 10:54 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/10/8 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
>
> > hat I HAD READ in a book
> > written by my friend professor Alexander Dubiansky (from MOSCOW university)
> > that the late professor Thomas Burrow (one of the two authors of the DED)
> > had proposed that அணங்கு
> > was ultimately rooted in அநங்கன் (= காமன்)
>
> An old tamil movie song By Papanasam sivan has the words
>
> "அணங்கனே உன் அழகுக்கு உவமையும் ஏது?"
>
> Song: உன் அழகை காண இரு கண்கள் போதாதே MKT bhagavathar
>
Selvan,
It was not T. Burrow who proposed anangan from aNaGku,
it was G. U. Pope. See JLC quoting from Dubianski book.
Also, T. Burrow in his orig. paper gives credit to Pope.
காமவேளை (அனங்கன்) அழகானவன் என்பது
தமிழ் இலக்கியம். பாபனாசம் சிவன் பாட்டில்
“அனங்கனே உன் அழகுக்கு உவமையும் ஏது?”
என்றிருக்கும் என நினைக்கிறேன். பாட்டு
யுட்யூப் (அ) பாட்டுவரிகள் கிடைத்தால் தாருங்கள்.
போப்பையரும், பர்ரோவும் அனங்கன் என்ற
சொல்லை வடமொழி படைத்த வரலாற்றைக்
காட்டியுள்ளனர்.
நா. கணேசன்
> --
On Oct 8, 12:08 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> பாகவதர்: உன் அழகை காண இரு கண்கள் போதாதே..
> என் கண்கள் போதாதே
> உனதெழிலில் ரதி மங்கையும் நிகரோ நாணமுறாளோ?
>
> பெண்: அணங்கனே உன் அழகிற் உவமையும் ஏது?
ஆண் பெண்ணை ‘ரதி மங்கையும் நிகரோ உனதெழிலில்’ என
பெண் ‘அனங்கனே உன் அழகிற்குவமையுண்டோ’ என தூக்குகிறாள்.
ரதி - பெண், அவள் கணவன் அனங்கன் (மன்மதன், மாரன் “மரணம்” என்ற சொல்லோடு
தொடருடையது).
நல்ல பாட்டு. கேட்டேன். நன்றி.
கணேசன்
> இனி உவமையும் ஏது?
> அமரர் நிலை உலகமதை, அமரர் நிலை உலகமதை
> நான் விரும்பேனே, இனி நான் விரும்பேனே
>
> பாகவதர்: செவியில் அமுதை பிழிந்திட்ட குயில்மொழி அணங்கே
> எம் குயில்மொழி அணங்கே
> சிந்தை கவர் பூங்கோதாய்..தன்னை மறந்தேன்
> ஜெகம் தன்னை மறந்தேன்
>
> http://www.geetham.net/forums/showthread.php?31392-M.K.Thyagaraja-Bha...
இது பழைய போராட்டம். ஈடுபட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் விட்டாலும் தவறு அல்லவா?"அணங்கு" பற்றிய என் ஆய்வுக் கட்டுரையை இணைத்து அனுப்புகிறேன். அது சரியாக உங்கள் கணினியில் இறங்கவில்லை என்றால் ... இங்கே என் தளத்திற்கு ( http://letsgrammar.org/occasionals.html ) போய், 'On "aNanku" ' என்ற சுட்டியைச் சொடுக்கித் தரவிறக்கிக்கொள்ளவும்.என் கருத்தை யார்மேலும் திணிக்க விரும்பவில்லை. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அறிவு, ேர்மை, சால்பு ... இவற்றின் துணையுடன் சிந்தித்து ... தயவுசெய்து "அணங்கு" என்ற சொல்லைப் பெண்ணுடன் மட்டும் தொடர்புபடுத்தாதீர்கள். இது என் வேண்டுகோள். அவ்வளவே.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அதுக்கென நேரம் ஒதுக்கி, கட்டுரையைப் படித்துக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி செல்வன்!ஒவ்வொரு சொல்லையும் கால வாரியாக அதன் வரவு, ஆட்சி இவற்றின்படி ஆய்வு செய்ய வேண்டும். வெறுமனே அகராதிகளைப் புரட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு செய்யுள்களை உரைகாரர்களின் உதவி மட்டுமே கொண்டு படித்து ... "அமோகமான ஆய்வு முடிவுகள்" வெளியியிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை; மதிப்பும் இல்லை!:-) :-) :-)
> இழையில் ழான் குறிப்பிட்டது போல ஆவ் என்ற பொருளும் அணங்கு என்பதற்கு வருகிறது
> என கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதனால் அணங்குடை அமெரிக்கா என சொல்வது
> பொருத்தமாக இருக்கும் அல்லவா? (ஆனால் அந்த இழையின் தலைப்பு ஆவ்சம் அமெரிக்கா என
> தான் எழுதுவேன் என்பது வேறு விஷயம்:-)
> --
> செல்வன்
>
அணங்குடை அமெரிக்கா என்று எழுதினால்
fear/distress/suffering causing America என்று பொருள் வரும்.
மிடில் ஈஸ்ட்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
அணங்குடை தமிழ்மண் = Tamil country causing distress/suffering.
3 குறளில் அணங்கு வருகிறது. என்ன பொருள் என்று படித்துப்
பாருங்கள்:
அணங்குதாக்கு aṇaṅku-tākku, n. < id. +. Possession by a demoness of
lust or harm; வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918, உரை.)
அணங்கு பொருள்கள் என்ன?
DEDR 112
112 Ta. aṇaṅku (aṇaṅki-) to suffer, be distressed, be slain; to
afflict; n. pain, affliction, killing; aṉuṅku (aṉuṅki-) to suffer
pain, be in distress, fade, droop; aṉukku (aṉukki-) to distress, cause
to suffer, ruin; aṉukkamsuffering, distress, pain, weakness. Ka. aṇaku
to press into a narrower compass, subdue, control; aṇacu to depress,
humble; aṇaka closeness, compactness, firmness, state of being in good
repair; aṇakuve humbleness, modesty; aṇagu to hide, disappear, be
humbled, crouch; aṇuṅku to depress, humble, abate, ruin, destroy;
aṇuṅgu to be depressed, etc. Tu. aṇaka narrowness, closeness; narrow,
small. Te. aṇãgu to yield, submit, be humbled; aṇãcu to suppress,
humble, subject; aṇãkuva humility, modesty, submissiveness. Go. (Tr.)
ancānā to press (Voc. 21). DED(S) 56(b).
நா. கணேசன்
அணங்குடை அமெரிக்கா என்று எழுதினால்
fear/distress/suffering causing America என்று பொருள் வரும்.
மிடில் ஈஸ்ட்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
On Oct 8, 9:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/10/8 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அணங்குடை அமெரிக்கா என்று எழுதினால்
> > fear/distress/suffering causing America என்று பொருள் வரும்.
> > மிடில் ஈஸ்ட்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
>
அணங்கு போல அமெரிக்கா வருத்தினால்/நெருக்கினால்
மற்ற எல்லாமும் வரும். affliction/compression causes
all these. Did you see what Dravidian Etymological Dictionary
gives as the root meanings?
அணங்கியோன் aṇaṅḳiyōṉ
, n. < அணங்கு- One who persecuted; வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ
ளணங்கி யோனே (ஐங்குறுநூறு 182).
வியட்னாமை அணங்கியோன் அமெரிக்கன்.
N. Ganesan
அணங்குடை அமெரிக்கா = fearsome or afflicting America.
அன்புடன்
நா. கணேசன்
அணங்கு அணங்குதல்/அணுங்குதல் என்னும் சொற்கள் திராவிட மொழிகளில் உள்ள அடிப்படையான சொல். அதன் அடிப்படையான பொருள் வருத்துதல், அச்சுறுத்துதல். சம்ஸ்க்ருதத்துக்கு தமிழ் தந்த சொல் காமம்.காமன் தமிழ்க் கடவுள். இந்தியா முழுமைக்கும் த்ராவிட ஸப்ஸ்ட்ரேற்றத்தால் common ஆகிவிட்டான். காமனின் ஒரு பெயர் அனங்கன். அன் + அங்கம் என்று பிரித்தால் உடல் உறுப்பு தான். காமன் உண்மையிலே சிவன் உடலை எரித்து உருவமே இல்லாதவன் என்றால் தேஹம் இல்லாதவன் என்றல்லவா வடசொல் அமையும். காமம் (தமிழ் வடமொழிக்குக் கொடுத்த கடன்) மிக்கு வருத்துபவன் அணங்கன்.
வாழ்க நலமுடன்,
நா. கணேசன்
On Oct 8, 9:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
NGanesan> > அணங்குடை தமிழ்நாடு = suffering or afflicted Tamil Nadu
என்பது
> > awesome Tamil Nadu, செல்வன் சொல்லும் ஆவ்சம் அமெரிக்கா என்ற
> > பொருள் ஆகுமா? எனக்குத் தெரியலை.
>
Venthan> ஆகாது
>
> அது வியப்பு வெளிப்பாடு
> அணங்கு அச்சம்தரும் சொல்
>
> ஆய்மயில்கொல்? அணங்குகொல்?
>
> மாலும் என் நெஞ்சு
>
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
பிழை திருத்தம்.அணங்கன், காமன் ஆகிய இரு பெயர் சொற்களும் சிந்து முத்திரையில் காணப்படுதலால் அவை தமிழ் வேர் உடையன என்பதில் ஐயம் இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள சானூரில் கிட்டிய பானை ஓட்டில் சிந்து எழுத்தில் அணன்க என னகர மெய் இன்றி எழுதப்பட்டுள்ளது. அண்மையில் பிரகாசு சுகுமாறன் அனுப்பிய பாறை எழுத்து படத்திலும் இநத பெயர் அணங்(க) என உள்ளது அதை இங்கு ஒட்டுகிறேன்
அணங்குதல்/அணுங்குதல் என்றால் அடிப்படைப் பொருள் வருத்துதல்.
எல்லா இடங்களிலும் இப்பொருள் - அச்சம் தரும், வருத்தம் ஊட்டும் -
சங்க இலக்க்கியத்தில் உள்ளது. பெரும்பான்மையும் தலித், சீர்மரபினர்
இனத்தாரை
பூசகராய்க் கொண்ட கிராம சிறுதேவதை வழிபாட்டில் அணங்கு பிரதான
இடம் வகிக்கிறது. ஒன்றை நெருக்கி சிறிதாக்கல் அணுக்குதல். இதில் இருந்து
பிறக்கும் சொல்: அணு. *அணு* என்ற தமிழ்ச் சொல் சம்ஸ்கிருதத்தில்
கடனாகச் சென்ற சொல் ஆகும்.
முனைவர் செல்வன் அநங்கன் (=ரதி புருஷன்) என்னும் வார்த்தையை பழைய
சினிமாப்பாட்டை எழுதுங்கால் அணங்கன் என்று எழுதினார்.
திரு. போப்பையர் அனங்கன் < அணங்கன் என்று முதலில் சொல்லியவர்
(நாலடியார்). அவர்தரும் ஜீவக சிந்தாமணிப் பாடலைக் கண்டுபிடித்து
எழுதவேண்டும். அணங்கு/அணுங்கு- அனுங்கு-/அனங்கு- என்ரும்
ஆகும். “பல்லவம் அனுங்க” (கம்பர்). கொற்றவையை (< கொல்- ) கொல்லிப்பாவை
என்போம். கொல்லுதல் அடியாகக் கொண்ட கொல்லி கொற்றவை.
அவளாக தமிழைப் பார்ப்பதும் துறைமங்கலம் வீரசைவர்கள்
துவக்கிவைத்தது. (அதற்குமுன் வில்லிபுத்தூர் பாரதத்தில்
பூதேவியாகத் தவழ்ந்தவள்). எல்லிஸ், கால்ட்வெல் திராவிட
மொழிக்குடும்பத்தின் தலைவியாய் செந்தமிழ் அணங்கு
ஆக்கியதன் தாக்கம் தமிழ்த்தாய்வாழ்த்து. அதில் கொற்றவையாய்
(< கொல்- ) மாற்றாருக்கு துர்க்கையாய் இருப்பவள் தமிழணங்கு.
தமிழின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று மனோன்மணீயப்
பாயிரம்.
அணங்குடை அமெரிக்கா = Fearsome or distressing America.
பிற பின்னர்
நா. கணேசன்
On Oct 8, 11:42 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > அணங்கு அணங்குதல்/அணுங்குதல் என்னும் சொற்கள் திராவிட மொழிகளில் உள்ள
> > அடிப்படையான சொல். அதன் அடிப்படையான பொருள் வருத்துதல், அச்சுறுத்துதல்.
> > சம்ஸ்க்ருதத்துக்கு தமிழ் தந்த சொல் காமம்.காமன் தமிழ்க் கடவுள். இந்தியா
> > முழுமைக்கும் த்ராவிட ஸப்ஸ்ட்ரேற்றத்தால் common ஆகிவிட்டான். காமனின் ஒரு
> > பெயர் அனங்கன். அன் + அங்கம் என்று பிரித்தால் உடல் உறுப்பு தான். காமன்
> > உண்மையிலே சிவன் உடலை எரித்து உருவமே இல்லாதவன் என்றால் தேஹம் இல்லாதவன்
> > என்றல்லவா வடசொல் அமையும். காமம் (தமிழ் வடமொழிக்குக் கொடுத்த கடன்) மிக்கு
> > வருத்துபவன் அணங்கன்.
>
> அணங்கன், காமன் ஆகிய இரு பெயர் சொற்களும் சிந்து முத்திரையில் காணப்படுதலால்
> அவை தமிழ் வேர் உடையன என்பதில் ஐயம் இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள சானூரில்
ஐயா! பேராசிரியரே,
செய்யலாம்...இணையத்தின் மூலம் மின் அஞ்சல் மூலம் மின் தமிழில் சில பாடங்களைத் தொகுத்து ஒரு வகுப்பாகக் கொடுக்கலாம்... ஆன்லைன் வகுப்புகளையும் நீங்கள் திட்டமிடலாமே... ஆனால், ஸர்.பி.ராஜகோபாலாச்சரியார் சொன்னாற்போல, ‘அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். பாடம் வந்தது. படித்தோம்/படிக்கவில்லை என்று கூட சொல்லாதவர்களை என்னத்தை செய்யலாம்??
சுவரை வைத்துத்தானே சித்திரம் தீட்டமுடியும்!
இன்னம்பூரான்
--
> > அணங்கன், காமன் ஆகிய இரு பெயர் சொற்களும் சிந்து முத்திரையில் காணப்படுதலால்
> > அவை தமிழ் வேர் உடையன என்பதில் ஐயம் இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள சானூரில்
> > கிட்டிய பானை ஓட்டில் சிந்து எழுத்தில் அணன்க என னகர மெய்
> > இன்றி எழுதப்பட்டுள்ளது. ணைமையில் பிரகாச் சுகுமாறன் அனுப்பிய பாறை எழுத்து
> > படத்திலும இநத பெயர் அணங்(க) என உள்ளது அதை இங்கு ஒட்டுகிறேன்
> >
இது பற்றி நான் அஸ்கோ பர்ப்போலாவிடம் சொன்னபோது சிந்து முத்திரை
தமிழகத்தில் கிடைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். தென்னகத்தில்
உள்ளவை சிந்து முத்திரைகளென்று அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?
நா.கண்ணன்
you ask
<QUOTE>
தென்னகத்தில் உள்ளவை சிந்து முத்திரைகளென்று அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?
</QUOTE>
I am not sure what you mean when you say
"அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?"
because Tamil Nadu has often been governed by people who thought
they could OFFICIALLY decide what was the scientific TRUTH
by passing a G.O. (Government Order).
;-)
HOWEVER,
most importantly,
I do not think that the very good scientific journal
called ஆவணம்
(edited by the Tamil Nadu Archaeological Society)
has ever considered that serious discoveries
had been made in that domain.
The latest issue of
ஆவணம் is number 22
and it came out in july 2011
Best wishes
-- jlc (Paris)
அணங்கு போல அமெரிக்கா வருத்தினால்/நெருக்கினால்
மற்ற எல்லாமும் வரும். affliction/compression causes
all these. Did you see what Dravidian Etymological Dictionary
gives as the root meanings?
உங்கள் ஆய்வுக்கு:
"ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி"
(பொருநராற்றுப்படை)
"மானினது வருத்துதலையுடைய குருளை"
- நச்சினார்க்கினியர்
N. Ganesan
On Oct 9, 6:00 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/10/9 N. Ganesan <naa.gane...@gmail.com>
அன்பின் நா.கண்ணன்
(a) என் பெயர் இதில் ஏன் குறிப்பிடுகிறீர்கள்?
என் மடல் இல்லையே.
(b) தமிழ் நாட்டில் வேளிர் துவரையில் இருந்து
வலசை வந்து அங்கே இருந்த மக்களுடன்
சேர்ந்து வேளாண் நாகரிகம் தொடங்கி
சுமார் 2800 - 3000 ஆண்டுகளே ஆனது.
எனவே, சிந்து முத்திரை அங்கே கிடைக்க
வாய்ப்பே இல்லை.
(c) ஆனால் 2500 ஆண்டுகளில் கிடைக்கும்
செராமிக் ஓடுகளில் சிந்து குறியீடுகள்
கிடைக்கின்றன. உ-ம்: கோவை சூலூர்
அருகே கிடைத்த மட்கிண்ணம். பிரிட்டிஷ்
ம்யூசியத்தில் உள்ளது. ஐராவதம் கட்டுரை
போட்டோக்களுடன் உள்ளது. ஏராளமான
சிந்து குறிகலுடன் கிட்டிய ஓடுகளின்
ஊர், எந்த நூற்றாண்டு என பட்டியலிட்டு
பேரா. குருமூர்த்தி (ஆர்க்கியாலஜி)
சென்னை பல்கலைக் கழக நூல்.
சேசாத்திரி அவர்கள் குறிப்பிடும்
சானூர் ஓடு காலம் - 2200 -2300 வருடம் இருக்கலாம்.
சிந்து கரையில் 4000 வருஷம் ஆச்சு.
(d) சிந்து எழுத்துக்களை கணேசன் வரி,வரியாய்
படிக்கிறார் என்று சொல்லலையே.
நா. கணேசன்
இது பற்றி நான் அஸ்கோ பர்ப்போலாவிடம் சொன்னபோது சிந்து முத்திரை தமிழகத்தில் கிடைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். தென்னகத்தில் உள்ளவை சிந்து முத்திரைகளென்று அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?
சென்னைப் பல்கலைக்கழக மேனாள் வரலாற்றியல் துறைத் தலைவர் பேரா. ச. குருமூர்த்தி தென்னகத்தில் கிடைதத பானை ஓட்டு கீறல் எழுத்துகள் சிந்து எழுத்துகளே என உறுதி செய்து நூல் ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் சுருங்கிய கட்டுரையின் தமிழாக்கம் ஒன்றை நான் மின்தமிழுக்கு வழங்கி உள்ளேன். சுபா இது தொடர்பாக உங்களுக்கு உதவக்கூடும் என எண்ணுகிறேன். இவருடைய நேர்காணல் ஒன்று கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் இடம் பெற நான் ஏற்பாடு செய்து அது கடந்த மார்ச்சு மாதத்தில் ஒளிபரப்பானது.
நா.கண்ணன்
நா.கண்ணன்
2011/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Oct 10, 8:27 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> புரிகிறது ஐயா!
> அஸ்கோவிற்கு இது தெரியாமல் இருக்குமா?
> நான் கேட்டபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னார்.
> தாங்கள் அவரிடம் மேல்விளக்கம் கேட்கலாம். உங்கள் நண்பரும்தானே அவர்.
>
> நா.கண்ணன்
>
என் பெயர் இருக்கவே திடுக்கிட்டேன்.
கிடக்கட்டும். கொரியா - தமிழ் ஆராய்ச்சிகள் எப்படி உள்ளன?
அன்புடன்
நா. கணேசன்
> 2011/10/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
இந்த அகழாய்வு குறித்த விரிவான அறிக்கை Ancient India (Bulletin of the archaeological survey of India) number 15, 1959 இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்பு 1986 வெளியானது. அதில் 30 ஆம் பக்கத்தில் சிந்து எழுத்துகளான கீறல் எழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பேரா. சா. குருமூர்த்தி தமது ஆய்வில் கணக்கில் கொண்டுள்ளார். மொத்தம் 39 பானை ஒடுகளில் கீறல் எழுத்துகள் உள்ளன.
ழான் சொல்வது போல் ‘தரம்’ என்பது அங்கு நிரந்தரப்பட பன்னாட்டு
அறிஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். சீனா இவ்விஷயத்தில்
மிகக்குறியாக இருக்கிறது. திறமை வாய்ந்தோர் உலகில் எங்கிருந்தாலும் உடனே
வேலை கொடுத்து அழைக்கிறது. என் துறை சார்ந்த ஒரு மூத்த விஞ்ஞானிக்கு,
சீனாவின் ஐன்ஸ்டைன் விருது வழங்கி கௌரவித்தது. அவர் இரண்டுமுறை ஓய்வு
பெற்றும் அவரை விடுவதாயில்லை. முன்னேறும் நாட்டின் வெறி அது! நம்மவரிடம்
அம்மாதிரி திறமைக்கு ஏங்கும் நோக்கு வர வேண்டும். ராஜம் போன்றோரை என்ன
கொடுத்தாலும் அள்ளிக்கொண்டு போகும் போக்கு வர வேண்டும். நாம்
வாழ்த்துவோம்.
நா.கண்ணன்
2011/10/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
Please take a look at the commentary on ParipATal 1, by P. V. Somasunadaranar, SISS Kazakam edition. I would translate this way into any language. உரை
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918
Here, the couplet occurs in வரைவின் மகளிர் and is employed to mean such women who are paid for a 'particular kind of service'. There cannot be a second opinion that the அணங்கு employed here can mean fearsome, dreadful, horrific, etc. There is not even a trace of divinity associated in this particular instance, whereas 'awe inspiring' carries a certain amount of divinity along with it.
Now, let us take the second example of Kural:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081
Is she something out of this world, an angel perhaps, or perhaps the so-called 'awe inspiring' 'heavenly spirit' is the wonderment that comes out of the man who is taken aback at the 'jaw dropping' beauty that stands before him. Now, this அணங்கு is diagonally opposite to that which Kural 918 speaks about. It has acquired divinity, awe, and (may be due to the face that this is the first time that the man is seeing this woman) the budding of love.
In the third instance,
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன
துடைத்து. 1082
தாக்கணங்கு seems to be the female form of Cupid. This couplet wonders, 'Is it not sufficient if a தாக்கணங்கு appears unarmed, without bearing any kind of weapons! Would the mere sight be not sufficient to 'kill' a person! And lo! She looks back into my eyes as I cast a glance! This அணங்கு has the most potent of all weapons, namely, her looking back into my eyes, in response! தாக்கணங்கு தானை கொண்டு அனைத்து.
I had mentioned in CTamil the following quartet from Kamban, when Rama and Sita see each other for he first time:
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
This தாக்கணங்கு அனையவள் refers to Sita herself. And therefore it would not be anything less than blasphemy to read a meaning that is contained in Kural 918. Here, it is more associated with Kural 1082 than anything else.
I had mentioned these அணங்குகள் in CTamil:
ஏத்து மடியவ ரீரே ழுலகினை யும்படைத்தும்
காத்து மழித்துந் திரிபவ ராங்கமழ் பூங்கடம்பு
சாத்துங் குழலணங் கேமணம் நாறுநின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி யேறிய வாறு நகையுடைத்தே.n. < id. + அணங்கு. 1. A goddess who smites men with love; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம். தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (குறள், 1082). 2. Lakṣmī; இலக்குமி. தாக்கணங் குறையுந் தடந்தாமரை (சீவக. 871).
Expressions like ஆரணங்கு, பூங்கடம்பு சாத்தும் குழலணங்கு etc., have carried the shades of meaning associated with the word அணங்கு as employed in Kural 918 or 1082. (Incidentally, the OTL defines தாக்கணங்கு as
மிகவும் ரசமான இடுகை ஹரிகி.
நெடு நெடு என்ற வளர்ந்து நெடுமால் போல் தோற்றமளிக்கும் என் தமிழாசிரியர்
ஸ்ரீநிவாசன், “அணங்கு என்றால் பெண் என்றும் பொருள்” என்று எங்களைப்
பார்த்து சொல்லிவிட்டு, “பேயென்றும் பொருள்” என்று பெண் பிள்ளைகளைப்
பார்த்துச் சொன்ன போது, சும்மா சிரிக்கத்தான் தெரிந்தது. உங்கள்
உதாரணங்கள் மிகத்தெளிவாக ‘அணங்கு’ என்ற சொல்லின் பல்வேறு வண்ணங்களைக்
காட்டியது. இடத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டுமென்பதை அழகாகச்
சுட்டியுள்ளீர்கள்.
மொழி என்பதே ஒரு குழுமக் குறியீடுதானே! தவம் எனும் அருமையான சொல்லை
செமத்திய சமயப்பின்னணியுள்ள சொல்லோடு பொருத்தும் போது இழக்கும் நயத்தைச்
சொல்லவும் வேண்டுமோ?
நா.கண்ணன்
பிகு:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta