தமிழ் புத்தாண்டு சித்திரை 1,என்று இருந்தது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அரசு முதன் முறையாக பல இலக்கண , இலக்கிய நூல்களை ஆராய்ந்து தை1'ஐ தமிழ் புத்தாண்டு என்று சட்டம் இயற்றிவிட்டது.தை1'ஐ தமிழர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்! இதில் புதிதாக முளைத்தது போல் புத்தாண்டு என்று அனைவரும் கொண்டாடினால் அது சரியாகுமா? அப்படியென்றால் இதுதான் தமிழின் முதல் புத்தாண்டா? ஏனென்றால் பல நிறுவனங்கள் வேடிக்கையாக விளம்பர படுத்தியுள்ளன. "அரசு அறிவித்த முதல் தமிழ் புத்தாண்டு" என்று! மேற்போக்காக பார்த்தால் எதற்காக இந்த அறிவிப்பு என்று பார்த்தால் சித்திரை 1. தமிழ் வருட பிறப்பு என்று பார்ப்பனர்களின் கூற்று என்று அரசு விளக்கம் கூறுகிறது! அப்படியென்றால் நாம் புதிதாக 12 மாதங்கள் உருவாக்கி தையை முதல் மாதமாக கொண்டு புத்தாண்டு என்று கொண்டாட வேண்டும் அல்லவா!...............சித்திரை .....வைகாசி.....ஆனி........பார்ப்பனர் வைத்த மாதங்கள் அல்லவா! ஆதலால் நாம் அரசு அறிவித்தது போல் தை மாதத்தை கொண்டாடலாமா? அல்லது தமிழர் திருநாளாக கொண்டாடலாமா? தங்களின் மேலான கருத்துகள் என்ன?
ஆகாகா!
பார்ப்பனரை இழுத்தாச்சா?
பாப்பனைத்தவிர மற்ற எல்லோரும் அடிமுட்டாள்கள் என்று சொல்லும் ஒரு அரசை
வேறு எங்கு காணமுடியும்?
இப்போதுதான் பகுத்தறிவு தமிழகத்தில் தோன்றியிருக்கிறது. இதன் முன்வரை
நமக்கு அறிவே கிடையாது! சபாஷ்!
க.>
On Jan 6, 4:01 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2009/1/6 நினா.கண்ணன் <kannan...@gmail.com>:
அண்மையில் கவிஞர் ஹரி பெங்களூரில் கோடி என்பதை ஸம்ஸ்க்ருத உச்சரிப்பில்
kOTi
என்றும், தமிழில் kODi என்றும் உச்சரிப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.
கன்னடியர் kODi என்ற ஒலிப்பிற்கு முகம்திரிதலைச் சொன்னதாக ஞாபகம்.
நம் அண்டை மாநிலங்கள் - மலையாளியர், கன்னடியர், தெலுங்கர் - யாவரும்
தமிழ்(நாட்டு) தொடர்புகளை விடுத்து, ஸம்ஸ்க்ருத மயமாக்கலைப் பெரிதும்
விரும்புதல் கண்கூடு.
நேற்று வா. மணிகண்டன் (மறைந்த எழுத்தாளர் சு்ஜாதாவின் பரமரசிகர்,
சுஜாதா வெளியிட்ட கடைசிநூல் வா. மணிகண்டனுடையது ஆகலாம்.
வா. மணிகண்டன் உயிர்மை இதழில் எழுதுபவர், இங்கிருக்கிறாரா? )
இட்ட பதிவைப் படித்தேன்:
வா. மணிகண்டன், கிளிநொச்சி:
http://pesalaam.blogspot.com/2009/01/blog-post.html
தமிழ்நாட்டைப் பற்றிப் பரப்புரைகள் கோவில்களில்
எப்படி நடக்கின்றன என்று பார்த்தால்,
தமிழருக்கு - முதலிலேயே இந்தி தெரியவில்லை -
நிலைமை கஷ்டந்தான்.
நா. கணேசன்
அவர்களில் பலருக்கும் அது தெரியாது. தெரிந்தவர்களும்
அங்கே அதைப் பெரிதாக எழுதவோ பேசுவதோ இல்லை.
அதற்காகத் தான் இதனைக் குறிப்பிட்டேன்:
http://pesalaam.blogspot.com/2009/01/blog-post.html
பொது இடங்கள், மீடியா, பத்திரிகைகள், கோவில்கள், ....
கன்னடியர், மலையாளியர், தெலுங்கர் - இவற்றில் உயர் வர்க்கம்
ஸம்ஸ்கிருதத் தொடர்பைக் கொண்டாடுவார்கள், பரப்புவார்கள்.
ஆனால், ஏழைத் தமிழை யார் போற்றுகிறார் அங்கெல்லாம்??
//ஆனால், ஏழைத் தமிழை யார் போற்றுகிறார் அங்கெல்லாம்??//
இத்தான் உண்மை .
தமிழன் வலிமையாக இருந்தால் தான்
தமிழ் போற்றப்படும், பலராலும் பயிலப்படும் ,
தமிழன் வளமாக இருந்தால் தான் தமிழும்
வளமுடன் வாழும் , தமிழன் வேறு தமிழ் வேறு அல்ல .
வளமான தமிழகத்தில் தமிழ் தானே வளரும் ,
பிறரால் மதிக்கப் படும் .
தமிழன் முதலில் தலை நிமிர்ந்து இருக்கவேண்டும் .
அறிவியல் அறிஞர்கள் தமிழகம் உலகில் ,
வலிமையுடன் இருக்க, தமிழருக்கு தேவையான
தன்னம்பிக்கையையும் , சுய பெருமையையும்
வளர்க்க வேண்டும் . இன்னும் எத்தனை நாள்
நமக்குள் வேற்றுமை பேசி நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்ளவது .
நம்மை தங்கள் முன்னோடி என்று சொல்லிக் கொள்ள ,
தெலுங்கரும் , கன்னடத்தவரும் பெருமை கொள்ளவேண்டும் .
அந்த அளவிற்கு உலகில் தமிழன் தமிழகத்தில் ,
வளமுடனும் , வலிமையாகவும் வாழவேண்டும் ,
பிழைப்புக்காக கையேந்தி வேறு மாநிலம் செல்லாத நிலை வேண்டும் .
தமிழன் வாழ்த்தால் தமிழ் தானே வளமுடன் வாழும் ,
சரித்திரம் அதைக்க்தான் கூறுகிறது .
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்
2009/1/6 நினா.கண்ணன் <kann...@gmail.com>:
> மலையாளம்,கன்னடம்,தெலுங்கு.........இவை அனைத்துமே தமிழோடு ஒன்றிஅவர்களில் பலருக்கும் அது தெரியாது. தெரிந்தவர்களும்
> வருகிறது..........இதுதான் திராவிட மொழி...........இதில் பண்படுத்தப்பட்ட
> இலக்கிய இலக்கண நூல் கொண்ட முதன்மை மொழி தமிழ்
>
அங்கே அதைப் பெரிதாக எழுதவோ பேசுவதோ இல்லை.
--
A.Sugumaran ,
AMIRTHAM INTL .....Source globally......
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
தமிழ் மாதங்களின் பெயர்கள் பலவற்றில் வடசொற் பலுக்கல் இல்லையே !
ஆண்டுகளின் பெயர்கள் வட சொற்கள் ஆனாலும் இடைக்காடர்
அப்பெயர்களைக் கொண்டே பலன் கூறியுள்ளார்.
‘சௌமியன்’ என்ற புனை பெயரில் அறிஞர் அண்ணா கதை, கட்டுரைகள் எழுதினார்.
இவை பற்றியெல்லாம் அரசு கருத்துக் கூறினால் தெளிவு பிறக்கலாம்.
இக்கேள்விகள் பகுத்தறிவுக்கு ஒவ்வா என்றால் விட்டு விடலாம்.
தேவ்
40 வருஷ வளர்ச்சியில்லா... சும்மாவா....//
மஞ்சள் துண்டு வந்தது; சாதாரணம் போச்சு டும்,டும்,டும் !
தேவ்
காண்கையில் புல் அரிக்குது.
ஆனால் ஆரியர்கள் துருக்மெனிஸ்தானில் இருந்து இந்தியா வந்தனர் எனபதை
தொல்லியல் சான்றுகளோடு விளக்குகிறார்.
ஹூமன் ஜீனோம் திட்டத்தில், இந்தியாவில் இருந்தே மக்கள் ஆசியாவுக்கு பரவி
இருக்கார்கள் எனப்படுகிறது. தீர்க்க இயலா முரண்பாடு.
அதில் யாருக்கேனும் தயக்கம் இருந்தால் மைக்கேல் வுட்டிடம் கேள்விகள் தொடுக்கலாம்
http://www.pbs.org/thestoryofindia/
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
On Jan 6, 11:28 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> நேற்றுமுதல் அமெரிக்க மக்கள் தொலைக்காட்சியில் The story of India என்ற
> தலைப்பில் ஒளிபரப்புகிறார்கள்.
>
> காண்கையில் புல் அரிக்குது.
>
> ஆனால் ஆரியர்கள் துருக்மெனிஸ்தானில் இருந்து இந்தியா வந்தனர் எனபதை
> தொல்லியல் சான்றுகளோடு விளக்குகிறார்.
>
> ஹூமன் ஜீனோம் திட்டத்தில், இந்தியாவில் இருந்தே மக்கள் ஆசியாவுக்கு பரவி
> இருக்கார்கள் எனப்படுகிறது. தீர்க்க இயலா முரண்பாடு.
>
> அதில் யாருக்கேனும் தயக்கம் இருந்தால் மைக்கேல் வுட்டிடம் கேள்விகள் தொடுக்கலாம்
>
> http://www.pbs.org/thestoryofindia/
>
> --
வேந்தரே,
நான் இன்னும் மை. உட்டின் விவரணப் படம் பார்க்கவில்லை.
அவருக்கு இந்தக் கட்டுரைகள் தெரியாமல் இருக்கலாம்.
அவற்றை அனுப்பி விடுங்கள். நன்றி.
http://www.harappa.com/script/
http://www.harappa.com/script/indusscript.html
Asko Parpola:
http://www.harappa.com/script/indusscript.pdf
http://www.harappa.com/script/indus-writing.pdf
from our Suuluur, see I. Mahadevan's essay:
http://www.harappa.com/arrow/megalithic-inscription.html
I believe he will like reading these papers. Thanks.
நா. கணேசன்
>
> வேந்தரே,
>
> நான் இன்னும் மை. உட்டின் விவரணப் படம் பார்க்கவில்லை.
> அவருக்கு இந்தக் கட்டுரைகள் தெரியாமல் இருக்கலாம்.
> அவற்றை அனுப்பி விடுங்கள். நன்றி.
>
சிக்ஸ் பார்ட் சீரீஸ் எனப்தால் இன்றும் நாளையும் இரண்டு மணி நேரம் ஒளிபரவலாகலாம்
தமிழர்களுக்கு தாய்மொழி உணர்வு குறைவு என்று தமிழக நிதி அமைச்சர் க. அன்பழகன் வேதனை தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை (6/1/09) தொடங்கிய "உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, புலம் பெயர்ந்த தமிழர் சந்திப்பு -2009" மாநாட்டில் அவர் பேசியது:-
மற்றவர்களைவிட தமிழர்களுக்கு தாய்மொழி உணர்வு குறைவு. தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களில் தாய் மொழி உணர்வோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் சீரழிந்த தமிழர்களாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தமிழர்களுக்கு, தமிழ் தலைவருக்கு இருக்க வேண்டிய மதிப்பு இல்லை. மலேசியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நல்ல தமிழில் பேசுகிறார்கள். ஜாதி, மத உணர்வுகள் அதிகமாகும் போது தமிழ் உணர்வு குறைந்து விடுகிறது.
தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கு வளமாக இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் விருப்பம்.
"நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ, அந்த நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும்," என்று அண்ணா ஒருமுறை மலேசியாவில் பேசினார். அதனை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
முதன்முறையாக உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் நமக்கு பின்னால் ஒரு சமூகம் இருக்கிறது என்ற பலத்தைக் கொடுக்கிறது என்றார் க. அன்பழகன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு:- மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணியில் உள்ள அரசுகள் இருப்பதால் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியால் உலகமே ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமும் தான் காரணம். தற்போது உள்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ள ப. சிதம்பரம் அத்துறையிலும் முத்திரை பதிப்பார். இந்த மாநாட்டுக்கு வந்துள்ள தமிழர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். அதற்கு மத்திய அரசு எல்லா வகையிலும் உதவ தயாராக உள்ளது என்றார்.
இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். இலட்சுமணன்:- ஜவாஹர்லால் நேரு, தான் எழுதிய "டிஸ்கவரி ஆப் இந்தியா" என்ற நூலில் மூன்று பக்கங்களுக்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வாணிபச் சிறப்பு பற்றி எழுதியுள்ளார். மலேசிய நாட்டுக்கு வங்கி முறையை அறிமுகப்படுத்தியது நகரத்தார்கள் தான் என்று நேரு எழுதியுள்ளார். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் நான் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தமிழகத்தைப் போல எந்த மாநிலமும் இந்தியாவில் வளர்ச்சி பெறவில்லை என்றார்.
On Jan 6, 4:56 pm, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
> மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச்
> செய்தியை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன்
> வாசித்தார்.
>
ஔவை கண்ணன்,
அப்பாவுக்கு பொங்கல் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
குலத்தொழில் கல்லாமல் பாகம் படும்! என்று கிராமப்புரத்தில் சொல்வார்கள் ;-)
நீங்கள் ஓளவை கண்ணன் மட்டுமல்ல, ஔஷதக்கண்ணன் (மருத்துவர் என்பதால்)!!
கண்ணனையும், நடராஜனையும் இணைப்பதால் "கூத்தபிரான்" (கண்ணனைக் கூத்தன்
என்று சொல்லும் பாசுரங்கள் உண்டு).
க.>
தெரியப்படுத்துகிறேன் - பொங்கல் வாழ்த்தை மட்டுமன்றி தமிழ்ப் புத்தாண்டையும் சேர்த்து.
On Jan 6, 6:39 pm, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2009/1/7 Kannan Natarajan <thara...@gmail.com>:
>
> > எனது பாட்டனாருக்கும்,தந்தையாருக்கும் அவர்கள் பெயர்களுக்கு முன் இடம்பெறும்
> > அடைமொழிக்கு ஏற்ப தமிழில் புலமையும், தமிழால் பெருமையையும் பெற்றனர். நானோ
> > இன்னும் தமிழ் மாணவனாக உள்ளேன். அந்த அடைமொழிக்கு தகுதி பெறுவதற்கு - ஊர்
> > மட்டும் இருந்தால் போதாது, தமிழ் மொழி ஏர் கொண்டு நல்முத்துக்களை கொணரும் வரை
> > மற்றவர்கள் "ஏல்" பெறுவதில் தான் அடைமொழிக்கும், தலைமுறைக்கும் பெருமை. அதுவரை,
> > ந.கண்ணன் அல்லது கண்ணன் நடராசனாகவே திகழவும், குறிக்கவும் வேண்டுகிறேன்.
>
அன்பின் ஔவைப்பாக்கத்து ந. கண்ணன்,
உங்களுக்கும் பொங்கல்/புத்தாண்டு தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
நான் இன்று வாசித்த ஓரு பதிவு:
http://eelavarkural.blogspot.com/2009/01/blog-post_6723.html
> குலத்தொழில் கல்லாமல் பாகம் படும்! என்று கிராமப்புரத்தில் சொல்வார்கள் ;-)
>
குலம் என்பது நல்ல தமிழ்ச்சொல், குலாய என்று இருக்கு வேதத்திலும்
வருகிறது.
குலம் : குலை.
இலக்கியத்திலேயும் கரிகாற் சோழன் இளைஞனாக இருக்கையிலே
நரைமுடி தரித்து நீதி சொல்லி குலவித்தையைக் கல்லாமல் காட்டினான்
என்று பழமொழி நூல் பாடுகிறது.
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
தமிழில் இப்போதுள்ள ஒரே பௌத்தக் காப்பியம் மணிமேகலையில் உண்டு இக்கதை.
உரையில் இதனை ந. மு. வே. நாட்டார் குறிப்பிடுகிறார்:
"4 பளிக்கறை புக்க காதை
[...]
பாதியறைப் பட்டோர்போன்று உளம் வருந்தி மது மலர்க் கூந்தற் சுதமதி
உரைக்கும் - தேன் பொருந்திய மலர்களையணிந்த குழலினையுடைய சுதமதி
சாளரமில்லாத நிலவறையிற் பட்டோர் போல மனம் வருந்திக் கூறுகின்றாள், இளமை
நாணி முதுமை எய்து உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு இளமைப் பருவத்தை
நாணி முதுமைப்பருவத்தை அடைந்து தம்முள் மாறு கொண்டு வந்தார் இருவருடைய
சொல்லை ஆராய்ந்து அறிந்து அவர்கட்கு அவற்றின் முடிவை விளக்கிய
பேரறிவுடையோனாகிய கரிகாற் பெருவளத்தானது வழித்தோன்றலாகிய நினக்கு,
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-
நல்லறிவினையும் அமைதியையும் அரசியல் நீதியையும் செறிந்த வளையையுடைய
மகளிர் கூறுமாறும் உண்டோ;
கறிகாற் பெருவளத்தான் உரை முடிவு காட்டிய இவ்வரலாறு
2உரை முடிவுகாணா னிளமையோ னென்ற, நரைமுது மக்களுவப்ப - நரை முடித்துச்
சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை, கல்லாமற் பாகம் படும்" என்னும்
பழமொழி வெண்பாவாலும், "தம் முள் மறுதலையாயினா ரிருவர் தமக்கு முறை செய்ய
வேண்டி வந்து
சில சொன்னால் அச் சொன் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத
இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்க ளுவக்கும்வகை நரை
முடித்துவந்து, முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே
ஆராய்ந்தறிந்து முறைசெய்தான் கரிகாற் பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால்
தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாக முளவாம்
என்றவாறு" என்னும் அதன் உரையாலும் அறியப்படும்: பொருநராற் றுப்படையிலும்
1"முதியோ, ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்" என இது கூறப்பட்டுளது.
மருகற்கு முன்னிலையிற் படர்க்கை."
மணிமேகலை கடைசி நான்கு காதையுரை ஔவையாரால் எழுதப்பட்டது.
அன்புடன்,
நா. கணேசன்
> நீங்கள் ஓளவை கண்ணன் மட்டுமல்ல, ஔஷதக்கண்ணன் (மருத்துவர் என்பதால்)!!
On Jan 6, 8:13 am, devoo <rde...@gmail.com> wrote:
> // Jan 6, 2:46 pm, "நினா.கண்ணன்" <kannan...@gmail.com> wrote:
> *தமிழ் புத்தாண்டு:*
> மேலான கருத்துகள் //
>
> தமிழ் மாதங்களின் பெயர்கள் பலவற்றில் வடசொற் பலுக்கல் இல்லையே !
தேவ்,
இதற்கு ஒரு காரணத்தைத் தமிழ் மற்றும் மொழியியல் அறிஞர் சுட்டுவர்.
முதலில் சமணர்கள் வடமொழிச் சொற்களைத் தமிழுக்கு ஏற்ப
தற்பவம் ஆக்கி அளித்தனர் என்று.
மலையாளத்திலும் நீண்ட மரபாக இதனை (கிரந்த விலக்கை) போற்றியுள்ளனர்.
அனியன், சேட்டன்/சேட்டை பற்றிப் பேசினோம்.
இசுலாமிய bAbar வாவர் என்றே தூய தமிழ்முறையில் மலையாளம் விளிக்கும்:
http://maddy06.blogspot.com/2008/12/legend-of-vavar.html
http://www.ayyappa.com/
நா. கணேசன்
ஆங்கிலப் புத்தாண்டு என்றதுமே இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கு வருவது கேளிக்கைகளும், கொண்டாட்டங்களும்தான்.
புத்தாண்டு ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாள்களில் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளால் ஜனவரி 1ம் தேதியே புத்தாண்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது பழமையான வரலாறு. கி.மு. 46ல் ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார்!
"ஜனுஸ்" (Janus) என்பவர் ரோமானியர்களின் "வாயில் கடவுள்" (God of Gate). அவருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு முகங்கள் உண்டு. பின்னால் இருக்கும் முகம் பழைய விஷயங்களையும், முன்னால் இருக்கும் முகம் எதிர்காலத்தையும் குறிப்பதாக இருந்தது. புது வருஷத்துக்குள் பிரவேசிக்க உதவும் கடவுளாக அவரை ரோமானியர்கள் வழிபட்டனர்.
"ஜனுஸ்" என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டே "ஜனவரி" என்று ஆண்டின் முதல் மாதத்துக்கு ஜூலியஸ் சீசர் பெயர் சூட்டினார். ஆனால் முதல் புத்தாண்டு கொண்டாட்டத்திலேயே சீசர் மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றினார். புரட்சியில் ஈடுபட்ட யூதர்களுக்கு எதிராக தனது படையை ஏவிவிட்டு தெருக்களில் இரத்த ஆறு ஓடச் செய்தார்.
பின்னர் வந்த புத்தாண்டுகள் கேளிக்கை தினமாகவே கொண்டாடப்பட்டன.
கிறிஸ்தவ மதம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய காலகட்டத்தில் அந்நாடுகளில் அறிவிப்பு நாள் (Annunciation Day) என்று கூறப்படும் மார்ச் 25ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி, "கடவுளின் அருளால் ஏசு கிறிஸ்து உனது கருவில் உருவாவார்" என்று மேரி மாதாவுக்கு தேவதூதர் கேபிரியல் (Angel Gabriel), மார்ச் 25ம் தேதி அறிவித்தார் என்று கூறப்படுகிறது.
1066ம் ஆண்டு இங்கிலாந்தின் மன்னரான வில்லியம், ஜூலியஸ் சீசரைப் பின்பற்றி ஜனவரி 1ம் தேதியைத்தான் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டார். எனினும் அவரது காலத்துக்குப்பின் ஜனவரியை நிராகரித்து மார்ச் 25ம் தேதி மீண்டும் புத்தாண்டாக ஏற்கப்பட்டது.
பின்னர் சுமார் 500 ஆண்டுகளுக்குப்பின் 1582ம் ஆண்டு போப் எட்டாவது கிரிகோரி, மீண்டும் ஜனவரி ஒன்றை புத்தாண்டாக பிரகடனப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை(427 ஆண்டுகள்) ஜனவரியில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
ஆனால் அவரும் யூதர்களுக்கு எதிரான போக்கைக் கைவிடவில்லை. 1577ல் புத்தாண்டு தினத்தன்று, ரோமில் உள்ள அனைத்து யூதர்களும் கண்டிப்பாக கத்தோலிக்க மதவழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு அடுத்த புத்தாண்டில் யூதர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதற்காக யூதர்கள் மீது சிறப்பு வரி விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
1581ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் யூதர்களின் மத புத்தகங்களைக் கைப்பற்றி அழிக்குமாறு படையினருக்கு போப் கிரிகோரி உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த முயன்றபோது ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால்தான் யூதர்களின் நாடான இஸ்ரேலில் இன்றும் ஜனவரி 1ம் தேதி பொது விடுமுறை கிடையாது.
காலண்டரில் மாற்றம் கொண்டு வந்த போப் கிரிகோரி, லீப் ஆண்டைக் கணக்கிட்டு, காலண்டரில் பத்து நாள்களை அதிகப்படுத்தி, 1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதியை, அக்டோபர் 15ம் தேதி என்று கடைப்பிடிக்க உத்தரவிட்டார். அவர் அங்கீகரித்த காலண்டர் அவரது பெயரிலேயே "கிரிகோரியன் காலண்டர்" என்று அழைக்கப்படுகிறது. தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போப் கிரிகோரியால் அங்கீகரிக்கப்பட்ட காலண்டர் பின்பற்றப்படுகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உள்பட்ட இந்தியா/பாகிஸ்தான்/இலங்கை/பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அதனைப் பின்பற்றி ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
புத்தாண்டு பிறப்பு வழக்கமான ஒன்று என்றாலும் இலக்கை நிர்ணயித்து அதை எட்ட முயல்வதற்கான வரையறையாகக் கொண்டால், ஒவ்வொரு புத்தாண்டும் வாழ்க்கையின் ஏணிப்படியாகத்தான் அமையும்.
இதற்குத்தான் ஓர் நா.கணேசன் வேண்டுமென்பது. குழந்தையில் கேள்விப்பட்ட பழமொழி அது.
அதை யாரோ பாடிவைத்திருப்பது இப்போதுதான் தெரிகிறது!
ஏன் குலவித்தை எனாமல் குலவிச்சை? என்று வருகிறது?
க.>
On Jan 6, 10:24 pm, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2009/1/7 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>:
சமணர்.
> க.>
http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
பொங்கல்(பனிமுடங்கல்) விழா பற்றிய உண்மையான விளக்கம்
பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர்
திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச்
சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான,
பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல
வேண்டுமால், சரியானபடி அறிய இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும்.
குறிப்பாக "தை முதல் நாளில் இந்த விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற
கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும் இந்த விடைகாணலின் முதற்படியாக,
சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse;
இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் =
செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான்,
நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை
புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா
முன்னால் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட
வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.
சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் =
star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve)
கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே
தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ஏகலோடி என்று வானியலிற்
சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் =
செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த
ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்பு படுத்தும்
முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது
வேறு ஒன்றும் இல்லை; ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவில்
தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான்
நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவர். இந்த வான்
நடுவரையை இன்னொரு விதமாய் விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்று கூடச்
சொல்லுவதுண்டு.
விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation)
தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களுமாய்ச் சுற்றும் ஒரு வலயத்
தளம். இந்த இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity)
வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ஒருக்களித்தல்/
ஒருக்கணித்தல் என்ற வினைச்சொல் சாய்ந்து இருத்தல் என்ற பொருளைக்
கொள்ளும். ஒருக்களித்துப் படுத்தான் என்றால், மல்லாக்கப் படுக்காமல்
கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல்
ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய்,
கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப்
பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம்
என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்;
autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும்
காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால்
கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு
அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய)
தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச்
சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக்
குறையப் போகிறது" என்று உணர்த்துகின்ற நாளாகும். அந்த நாள் வரும் போது,
"இனிமேல் வருவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்"
என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.
இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின்
அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.
ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12
மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு
நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும்
இரவும் ஒத்த (=ஒரே அளவுள்ள) நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க
நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ,
இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல்
குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன).
இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம்
நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம்
நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.
இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை
அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம்
(median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும்
சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக்
கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில்
மட்டும்,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில்,
இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய்
புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter
solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்;
பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில்
புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer
solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22ம் நாள்) நாம்
சொல்லுகிறோம்.
புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு
இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும்
இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து
கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது
இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் இந்த ஒக்க நாட்கள்
என்பவை சிறிது சிறிதாக முன்நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன
மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு
ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே
நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம்
(precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.
இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில்
ஏற்படுகிறது (=விழுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில்
கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து
விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் =
ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் வந்து சேரும்.)
என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின்
முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில்
ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள்
விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க
நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது.
இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல்,
வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன.
அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே
நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும்,
சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.
இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக்
குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து
கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783
ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த இயக்கத்தின்
நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று
எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள்
என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று
சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித்
தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில்
அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;
இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு
ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு உடன் அயன முறை
(உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method)
என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் கணிக்கிறார்கள்.
மாறாக, முற்செலவம் என்ற அயனத்தைக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன
முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத்
திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பது விதப்பாகப்
பின்பற்றப்படுகிறது. நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி
மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்)
என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத்
தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள்.
தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவை நில்லயன முறையின் படி சூரியன்
தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது உடன் அயன முறையின் படி,
இந்த வடசெலவு தொடங்குவது இந்தக் காலத்தில் திசம்பர் 22 ஆகும். இங்கே
கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது. இன்னொரு விதமாய்ப்
பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன்
போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக
வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப்
பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று
கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722
ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும்.
அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில்
நடந்திருக்கும். அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும்
ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின்
அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த
ஆண்டு கி.பி. 285 ஆகும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் முற்செலவச்
சுற்று தொடங்கிய நாளும் இந்திய வானியலின் படி கி.பி.285 க்கு அண்மையில்
தான்.
இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த நிலையை
நினைவு படுத்தி, பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் ஒன்று சேர்ந்திருந்தன
என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை
தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு
என்றும் சொல்லுவார்கள். மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை
விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)
பொங்கல் நாள் என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) பனிமுடங்கலைச்
சுட்டிக் காட்டிய பண்டிகை என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும்.
பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு
குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும்,
சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள்
அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க்
கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத்
தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான்
இந்தப் பொங்கல் விழா.
அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய
காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.
இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய
இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய
குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் பொங்கல் விழாவைத்
தமிழர் அதற்கு முன் என்ன சொல்லிக் கொண்டாடினர் என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் கேள்விக்கான விடை, விழாவைக் கொண்டாடும் முறையில் இருக்கிறது.
பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும்
ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட
வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற
புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள்
(குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு,
கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை
இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான்
படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து,
முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும்
கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ,
பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே
குறிக்கிறது.
இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு
(tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின்
நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing
philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு
வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க
முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து
கொள்ளுகிறோம். அந்த வேறு எது என்பது அடுத்த கேள்வி. [இன்றைக்கும் கூட
இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன்
கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal
worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும்
கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என
இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]
[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள்
நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில்
விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து
வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட
ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த
மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப்
பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம்
நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும்
முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற்
சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே
பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும்
இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்)
சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க
வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியல்காரர்.)
கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி
என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம்
என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும்
பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று
இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில்
என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/
கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது.
ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின்
அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற
இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.
அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே
இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப்பொருள்கள்
பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா),
பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு
முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள்
சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட
முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என
இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில்
ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில்
உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு
ஒரு பொழுது பார்க்கலாம். இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப்
படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச்
சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை
சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும்,
தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும்,
திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை
நான் தமிழில் கண்டதில்லை.]
சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும் என்பதை
இனிப் பார்ப்போம்.
கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப்
பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம்
முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது.
மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி
ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.
இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி
சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி
காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலில் தொடங்கியது
சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா
இளவேனிலில் தொடங்குகிறது.)
சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning) என்பது பனிமுடங்கல்,
வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க
முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில்
கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும்
குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும். இனக் குழுக்களாய் வாழ்ந்த
காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய
வானியலில் சாய் என்ற சொல் (இது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்;
வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற
பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற
சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று sine ஆகி
நிற்கிறது.) கூட நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும்.
பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது வட செலவில் இருந்து தொடங்குவதற்கு
இணையானது. தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத்
தொடக்கத்தைக் குறித்தது. ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து
இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில்
தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு
பருவங்களுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும்
தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே.
இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும்
இருக்கின்றன.
பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில்
(மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி),
(ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக்
குறிப்பிடுவார்கள்.
இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால்,
ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க
வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை,
மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை)
மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார்
என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)
மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும்
குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல்
நாளே என்பது புரியும்.
பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற
உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை
என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----
என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு
முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.
அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில்
தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில்
இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத்
தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக்
குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே
காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம்
ஆயிற்று போலும்.
சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு.
அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர்
ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம்
(=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல்
(=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை
(தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார்
போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச்
சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி,
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே
பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக
மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப்
பட்டிருக்கின்றன.]
இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1
தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது.
மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல்
மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30
ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக்
கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும்
விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!
கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.
பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்"
- அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப்
போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால்,
இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற
விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி
மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று
எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை
என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்
(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு
உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில்
திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச்
சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே
இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]
பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம்
எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும்
மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும்
மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.
பொங்கலோ பொங்கல்!
அன்புடன்,
இராம.கி.
http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
--------------------
இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு
On Jan 6, 6:12 pm, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
> தெரியப்படுத்துகிறேன் - பொங்கல் வாழ்த்தை மட்டுமன்றி தமிழ்ப் புத்தாண்டையும்
> சேர்த்து.
>
> > ஔவை கண்ணன்
>
அன்பின் ந. கண்ணன்,
ஏன் தமிழ்நாட்டு அரசு தமிழ்ப் புத்தாண்டை மாற்றிற்று? என்று துழாவினேன்.
http://www.tamilnation.org/forum/sabesan/080412new_year.htm
அதில் பெருமை வாய்ந்த அபிதான சிந்தாமணி சித்திரை முதல் நாள் பற்றிய
புராணக் கதையைச் சுட்டியுள்ளனர். அபிதான சிந்தாமணி,
பாலவநத்தம் ஸ்ரீ பாண்டிதுரைத் தேவர் ஆதரவில்
சென்னை தமிழ்ப் பேரா. ஆ. சிங்காரவேலர் தொகுத்த பழைய கதைகள், ....
வரலாறுகள் அடங்கியது.
அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு
குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம்
கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’
என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான்.
இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார்.
ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்
கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான்
தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன்
நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள
பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது
குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம்.
இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
இதற்கும் தமிழர் புத்தாண்டு தினம் அமைத்ததற்கும் தொடர்பில்லை.
ஈழத் தமிழர் (உ-ம்: தமிழின் முதல் கணி எழுத்துருக்கள் தரும்
ஆவரங்கால் ஸ்ரீவாஸ் அவர்கள்) தமிழை எளிமையாக்குதலை என்றும்
போற்றுவர். சிறீவாசுக்கு மிகவும் பிடித்த செயல் தமிழ்
எழுத்துக்களின் சீர்மை. உ/ஊ உயிர்மெய் உடைதலைச்
செய்யவேண்டும்:
http://groups.google.com/group/minTamil/msg/2662062c4f435999
நா. கணேசன்
உதவி: உங்கள் தந்தையார்க்கு இந்த மடலை முற்செலுத்தி விடுங்கள்.
அவர் பார்க்கட்டும், நன்றி.
புரியவில்லை!
தமிழ் எழுத்துரு அமைப்பியலில் பின்னால் வந்தவர் ஸ்ரீவாஸ்.
இங்கு "முதல்" என்பது தரத்தைக் குறிக்கிறதோ? அதிலும் எவ்வளவோ அழகான
எழுத்துருக்களை உருவாக்கியவர்கள் உண்டே!
ஸ்ரீவாஸ் - நானும் இலண்டனில் வானொலி நிகழ்ச்சி கொடுத்திருக்கிறோம்.
க.>
இந்த முயற்சியைத் தமிழின் வளர்ச்சி என்று கொள்ள வேண்டுமா அல்லது
பின்னடைவாக ஏற்பதா?
வட சொற்கள் எல்லாமே தமிழிலிருந்து தோன்றியவை என்றால் இம்முயற்சி எதற்காக?
தற்பவம், தற்சமம் போன்றவற்றையும் ஒருவகை retrofitting என்று கொள்ளலாம்
தானே?
இரு மொழிகளிடையேயும் வெகு இயல்பாக retrofitting நடந்துள்ளதாகவே
தேறுகிறது.
மன விகல்பம் இல்லாததால் சான்றோர் அனுமதித்து வந்துள்ளனர்.
குரு வம்சத்தில் பிறந்த பாண்டவர்களும் உண்மையில் கௌரவர்கள்தான்.
பிணக்குக்கு இடமளித்து விட்டதால் த்ருதராஷ்ட்ரன் ‘மாமகா:’, ‘பாண்டவா:’
போன்ற சொற்களைக் கையாண்டான். உலகோரும் அவ்வழியில் செல்வாராயினர்.
தேவ்
On Jan 6, 4:11 pm, "நினா.கண்ணன்" <kannan...@gmail.com> wrote:
> மலையாளம்,கன்னடம்,தெலுங்கு.........இவை அனைத்துமே தமிழோடு ஒன்றி வருகிறது
> ..........இதுதான் திராவிட மொழி...........இதில் பண்படுத்தப்பட்ட இலக்கிய
> இலக்கண நூல் கொண்ட முதன்மை மொழி தமிழ்
>
> 2009/1/6 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > On Jan 6, 4:01 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> > > 2009/1/6 நினா.கண்ணன் <kannan...@gmail.com>:
>
> > > > தமிழ் வருட பிறப்பு என்று
> > > > பார்ப்பனர்களின் கூற்று என்று அரசு விளக்கம் கூறுகிறது! அப்படியென்றால்
> > நாம்
> > > > புதிதாக 12 மாதங்கள் உருவாக்கி தையை முதல் மாதமாக கொண்டு புத்தாண்டு என்று
> --
> நினா.கண்ணன்- Hide quoted text -
>
> - Show quoted text -
தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!
On Jan 6, 6:07 pm, "annamalai sugumaran" <amirthami...@gmail.com>
wrote:
> //ஆனால், ஏழைத் தமிழை யார் போற்றுகிறார் அங்கெல்லாம்??//
>
> இத்தான் உண்மை .
> தமிழன் வலிமையாக இருந்தால் தான்
> தமிழ் போற்றப்படும், பலராலும் பயிலப்படும் ,
> தமிழன் வளமாக இருந்தால் தான் தமிழும்
> வளமுடன் வாழும் , தமிழன் வேறு தமிழ் வேறு அல்ல .
> வளமான தமிழகத்தில் தமிழ் தானே வளரும் ,
> பிறரால் மதிக்கப் படும் .
> தமிழன் முதலில் தலை நிமிர்ந்து இருக்கவேண்டும் .
> அறிவியல் அறிஞர்கள் தமிழகம் உலகில் ,
> வலிமையுடன் இருக்க, தமிழருக்கு தேவையான
> தன்னம்பிக்கையையும் , சுய பெருமையையும்
> வளர்க்க வேண்டும் . இன்னும் எத்தனை நாள்
> நமக்குள் வேற்றுமை பேசி நம்மை நாமே
> ஏமாற்றிக் கொள்ளவது .
> நம்மை தங்கள் முன்னோடி என்று சொல்லிக் கொள்ள ,
> தெலுங்கரும் , கன்னடத்தவரும் பெருமை கொள்ளவேண்டும் .
> அந்த அளவிற்கு உலகில் தமிழன் தமிழகத்தில் ,
> வளமுடனும் , வலிமையாகவும் வாழவேண்டும் ,
> பிழைப்புக்காக கையேந்தி வேறு மாநிலம் செல்லாத நிலை வேண்டும் .
> தமிழன் வாழ்த்தால் தமிழ் தானே வளமுடன் வாழும் ,
> சரித்திரம் அதைக்க்தான் கூறுகிறது .
> அன்புடன் ,
> ஏ .சுகுமாரன்
>
> 2009/1/6 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > 2009/1/6 நினா.கண்ணன் <kannan...@gmail.com>:
> > > மலையாளம்,கன்னடம்,தெலுங்கு.........இவை அனைத்துமே தமிழோடு ஒன்றி
> > > வருகிறது..........இதுதான் திராவிட மொழி...........இதில் பண்படுத்தப்பட்ட
> > > இலக்கிய இலக்கண நூல் கொண்ட முதன்மை மொழி தமிழ்
>
> > அவர்களில் பலருக்கும் அது தெரியாது. தெரிந்தவர்களும்
> > அங்கே அதைப் பெரிதாக எழுதவோ பேசுவதோ இல்லை.
>
> > --
> > A.Sugumaran ,
> > AMIRTHAM INTL .....Source globally......
> > PONDICHERRY INDIA
> > MOBILE 09345419948- Hide quoted text -
தமிழர்களுக்கு தாய்மொழி உணர்வு குறைவு என்று தமிழக நிதி அமைச்சர் க.
அன்பழகன்
வேதனை தெரிவித்தார்.
ஓ! அதனால்தான் அரசுப் பள்ளிகளை முடக்கிப்போட்டு ஆங்கில வழியில் பாடம்
கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வளர்க்கிறீர்களோ?
சிறுபான்மையாக இருக்கும் இடங்களில் தாய் மொழி உணர்வோடு இருக்கிறார்கள்.
தங்கள் தலைவர்கள் சிலர் சில நோண்புகள் இருப்பதன் காரணம் புரிகிறது.
*தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கு வளமாக இருக்க வேண்டும்
என்பதுதான்
தமிழக அரசின் விருப்பம்.*
தை மாதம் தமிழ் வருடம் பிறக்க வைத்துவிட்டதால் தங்கள் அரசின் விருப்பம்
நிறைவேறி விட்டது போலும்!
*"நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ, அந்த நாட்டுக்கு உண்மையாக
இருக்க
வேண்டும்,"* என்று அண்ணா ஒருமுறை மலேசியாவில் பேசினார். அதனை இங்கே
நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அதனால்தான் ஈழத்தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறீர்களா? நன்று.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு:- மத்தியிலும், மாநிலத்திலும்
ஒரே
கூட்டணியில் உள்ள அரசுகள் இருப்பதால் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட
வளர்ச்சி
அடைந்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் தங்களுக்கு "மொட்டை" தான்.
அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியால் உலகமே ஆட்டம் கண்டுள்ளது. ஆனால்
இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு பிரதமர் மன்மோகன்
சிங்கும், நிதி
அமைச்சராக இருந்த ப. சிதம்பரமும் தான் காரணம்.
ஓ! அப்படியா?
தமிழகத்தைப் போல எந்த மாநிலமும் இந்தியாவில் வளர்ச்சி பெறவில்லை
என்றார்.
இலவச தொலைக் காட்சிகளுக்கு நன்றி.
ஸம்ஸ்க்ருதத்தில் அனேகமான சொற்கள் பாரசீக, ஆங்கில, ஜெர்மானியச்
சொற்களோடு தொடர்புடையவை. தமிழோ, தெலுங்கோ அல்ல.
வடசொற்கள் (உ-ம்: ஸமரம் > சமர்/அமர்) பற்பல தமிழும் வாங்கியிருக்கிறது,
வடக்கே திராவிடர் வதிகையில் கடனும் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.
ஆனால், அனேகம் வடசொற்களுக்கும் திரராவிடச் சொற்களுக்கும்
தொடர்பிருக்காது. வலிந்து சொல்லப்படும், தமிழ் > வடசொல் இ-மெயில்களில்
எனக்கு நம்பிக்கையில்லை.
சில முக்கியமான கோட்பாடுகளை வடமொழி "தமிழ்" (தொல்திராவிடம்)
பெறும்போது மொழிபெயர்த்தும் உள்ளது. தமிழரிடையே
உள்ள ஜாதக, நவக்கிரக நம்பிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.
பிடித்து ஆட்கொள்ளுதல் என்னும் ஆற்றலை நம் பண்டை முன்னோர்
வைத்திருந்தனர். அதனால் கிரகங்களுக்கு 'கோள்" என்ற பெயர் தமிழில்.
ஸம்ஸ்கிருதத்தில் "கோள்" என்பதில் அடங்கியுள்ள தத்துவத்தை
மொழிபெயர்த்து வார்த்தை அமைத்துள்ளனர்: க்ரஹ.
Graha is cognate with word, "grab" in English - & other Indo-European languages'
words with the meaning "to grab". But Europeans or Iranians do not use
the idea behind "grabbing" (கொள்ளுதல், கோள்) for planets.
So, Graha "planet" is a Dravidian loan-translation into Sanskrit.
On Jan 7, 3:03 am, akr <akrconsulta...@gmail.com> wrote:
> இலவச தொலைக் காட்சிகளுக்கு நன்றி.
திரு. ராஜகோபால்,
தமிழ்நாட்டில் சினிமா-சின்னத்திரை-பத்திரிகைகள்
ஒரு திரிகோணத்தின் மூன்று உச்சம்புள்ளிகளாக உள.
எல்லாம் அரசியல் தலைகள், வாரிசுகள் சமாச்சாரம்.
மூளைச் சலவைக்கே பயன்படுகிறது.
கணினி, வலை தமிழில் அபிவிருத்தி அரசாங்கமா
செய்தது?? இன்னும் சொல்லப் போனால்
தடையாக உள்ளது.
ஈழத் தமிழர் (உ-ம்: தமிழின் முதல் கணி எழுத்துருக்கள் இலவசமாகத் தரும்
ஆவரங்கால் ஸ்ரீவாஸ் அவர்கள்) தமிழை எளிமையாக்குதலை என்றும்
போற்றுவர். சிறீவாசுக்கு மிகவும் பிடித்த செயல் தமிழ்
எழுத்துக்களின் சீர்மை. உ/ஊ உயிர்மெய் உடைதலைச்
செய்யவேண்டும்:
http://groups.google.com/group/minTamil/msg/2662062c4f435999
(அ) கன்னடியர் போல, எல்லாப் பள்ளிகளிலும் ஒரு தமிழ்ப் பாடம்
கட்டாயமாகணும்.
(ஆ) ஆங்கிலத்தில் தட்டச்சுவது தமிழுக்கு ஊறு.
டைப்ரைட்டரே காலாவதியாகி விட்டது, இன்னும் டைப்ரைட்டர் விசைப்பலகையை
தமிழர் ஏன் கட்டியழுகணும்? டைப்ரைட்டர் முறையும் காலாவதி ஆகணும்.
தமிழுக்கு சிறப்பு அரசு சொல்லும், சிங்கப்பூரினர் செய்த
"தமிழ்99" கணிப்பலககை முறைதான். இவ்விசைப் பலகைகள்
சலுகை விலையில் அரசு விற்க ஏற்பாடு பண்ணனும்.
(சாராயம் அரசு விற்கையில் நேரிலும், under the tableலும்
கிடைக்கும் லாபம் இல்லைதான் :-) )
(இ) தமிழ்நாடு அரசாங்க தளங்கள் ஆங்கிலம் மட்டுமின்றி,
தங்கள் சொந்தவீட்டு என்கோடிங் மாத்திரம் இல்லாமல்
உலகில் தமிழர் பெருவாரியாய்ப் புழங்கும்
யூனிகோடில் வேண்டும்.
உ-ம்: இணையப் பல்கலை, செம்மொழி நிறுவனம்.
ஆண்டுக்கு 2 கோடிக்கு புரப்போஸல் கொடுத்தோம்,
1 கோடி கொடுக்கின்றனர் என்று அதைப் பெற்ற
வா.செ.கு. ஐயா என்னிடம் சொன்னார் (அவர் மனைவி
நம் ஊர்தான், உறவினர்).
(ஈ) எலலாவற்றுக்கும் மேலாக, புத்தாண்டு தின மாற்றம் என்பதையெல்லாம்
விட, தமிழ் கற்பித்தலை எளிமைப் படுத்தணும். அதற்கு,
முக்கியமான ஒன்று: உ/ஊ உயிர்மெய்யை உடைத்தும்
எழுதலாம் என்ற ஒரு ஜி.ஓ.
உயிர் 12, மெய் 18, உயிர்மெய் உருவாக்க மாத்திரைக் கீற்றுகள் 10,
கிரந்தம் 5,
அவ்வளவுதான் தமிழ் எழுத்தின் வரிவடிவம் என்பதால்
- ஏழை எளியோரும், பிற மாநில தமிழ் மக்களும்,
2-3 தலைமுறை தமிழில் இருந்து விலகிப்போனவரும்
எளிதில் தமிழைப் படிக்க முடியும்.
http://groups.google.com/group/minTamil/msg/2662062c4f435999
My theory follows the work of Vedicist and linguist, Asko Prpola's
books and papers.
He has written extensivly on கோள் > க்ரஹ (வடசொல்) theory.
I am Cc'ing this to Asokan Parpola (Helsinki) and George Hart
(Berkeley) as well.
Best wishes,
N. Ganesan
On Jan 7, 6:52 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>,
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> -
Here is my original e-mail in minTamil:
2009/1/7 devoo <rde...@gmail.com>:
> வட சொற்கள் எல்லாமே தமிழிலிருந்து தோன்றியவை என்றால் இம்முயற்சி எதற்காக?
ஸம்ஸ்க்ருதத்தில் அனேகமான சொற்கள் பாரசீக, ஆங்கில, ஜெர்மானியச்
சொற்களோடு தொடர்புடையவை. தமிழோ, தெலுங்கோ அல்ல.
வடசொற்கள் (உ-ம்: ஸமரம் > சமர்/அமர்) பற்பல தமிழும் வாங்கியிருக்கிறது,
வடக்கே திராவிடர் வதிகையில் கடனும் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.
ஆனால், அனேகம் வடசொற்களுக்கும் திரராவிடச் சொற்களுக்கும்
தொடர்பிருக்காது. வலிந்து சொல்லப்படும், தமிழ் > வடசொல் இ-மெயில்களில்
எனக்கு நம்பிக்கையில்லை.
சில முக்கியமான கோட்பாடுகளை வடமொழி "தமிழ்" (தொல்திராவிடம்)
பெறும்போது மொழிபெயர்த்தும் உள்ளது. தமிழரிடையே
உள்ள ஜாதக, நவக்கிரக நம்பிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.
பிடித்து ஆட்கொள்ளுதல் என்னும் ஆற்றலை நம் பண்டை முன்னோர்
வைத்திருந்தனர். அதனால் கிரகங்களுக்கு 'கோள்" என்ற பெயர் தமிழில்.
ஸம்ஸ்கிருதத்தில் "கோள்" என்பதில் அடங்கியுள்ள தத்துவத்தை
மொழிபெயர்த்து வார்த்தை அமைத்துள்ளனர்: க்ரஹ.
> ஸம்ஸ்க்ருதத்தில் அனேகமான சொற்கள் பாரசீக, ஆங்கில, ஜெர்மானியச்
> சொற்களோடு தொடர்புடையவை. தமிழோ, தெலுங்கோ அல்ல.>
> வடசொற்கள் (உ-ம்: ஸமரம் > சமர்/அமர்) பற்பல தமிழும் வாங்கியிருக்கிறது,
> வடக்கே திராவிடர் வதிகையில் கடனும் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.//
பாலி, பாகதம் போன்ற பிற மொழிகளுக்குப் போன சொற்களை
‘அபப்ரம்சம்’ எனும் தலைப்பில் வடநூலார் வகைப்படுத்துவர்.
கடன் பெற்ற வேர்ச்சொற்களையும் வகைப்படுத்தியுள்ளனர்.
அன்பர் நடராஜன் கூறியவை ஏற்புடையவையாக உள்ளன.
சமயப் பணிகளுக்காகச் சமணர் தமிழில் மேற்கொண்ட தற்பவ முயற்சி ஒரு புறம்.
வட புலத்தில் அபப்ரம்ச வேலைகள்.
மொத்தத்தில் மொழிகளின் வளர்ச்சியில் அவர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது.
பேராசிரியர் நன்னனும் இது போலவே கூறுகிறார்.
தேவ்
> ஸம்ஸ்க்ருதத்தில் அனேகமான சொற்கள் பாரசீக, ஆங்கில, ஜெர்மானியச்
> சொற்களோடு தொடர்புடையவை. தமிழோ, தெலுங்கோ அல்ல.
> வடசொற்கள் (உ-ம்: ஸமரம் > சமர்/அமர்) பற்பல தமிழும் வாங்கியிருக்கிறது,
> வடக்கே திராவிடர் வதிகையில் கடனும் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.
> ஆனால், அனேகம் வடசொற்களுக்கும் திரராவிடச் சொற்களுக்கும்
> தொடர்பிருக்காது. வலிந்து சொல்லப்படும், தமிழ் > வடசொல் இ-மெயில்களில்
> எனக்கு நம்பிக்கையில்லை.//
it will be interesting to see
which comment they give.
As an element for the discussion,
here is one occurrence of the word "kool."
which is usually translated by planet:
கனை யிரு ளகன்ற கவின்பெறு காலைக்
கோள்கா னீங்கிய கொடுவெண் திங்கட்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
(அகம் 86_5-7)
[as it stands in the 1933/34 edition based
on the work of ரா. ராகவையங்கர்
and printed by ராஜகோபாலார்யன்]
In the Rajam edition (1981 NCBH reprint),
the sandhi-split text appears as:
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
I'll be glad to know how you understand this passage
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
naa.g...@gmail.com a écrit :
> ஸம்ஸ்க்ருதத்தில் அனேகமான சொற்கள் பாரசீக, ஆங்கில, ஜெர்மானியச்
> சொற்களோடு தொடர்புடையவை. தமிழோ, தெலுங்கோ அல்ல.>
> வடசொற்கள் (உ-ம்: ஸமரம் > சமர்/அமர்) பற்பல தமிழும் வாங்கியிருக்கிறது,
> வடக்கே திராவிடர் வதிகையில் கடனும் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.//
Looking for further references on "graha",
I came across an article by
Michio Yano, "Planet Worship in Ancient India",
which is contained on pages 331-348 of the volume
/Studies in the History of the Exact Sciences in Honour of David Pingree/
edited by
Charles Burnett, Jan Hogendjik, Kim Pfloker and Michio Yano.
(Brill, Leiden -- Boston, 2004)
Michio Yano writes on page 331:
<BEGIN QUOTE Michio Yano>
Putting aside references to /graha/ in medical contexts,(FN2) the
concept of /graha/ as heavenly body experienced at least the following
stages of development.
1. A demon which eclipses the Sun and the Moon was called /svarbhaanu/
and, probably, /graha/ (from the Sanskrit root \/ /grah/, "to seize").
2. The demon got the name Raahu and, somewhat later, the tail of the
truncated Raahu was called Ketu.
3. Five planets were regarded as /grahas/ because they possess man and
do him harm.
4. The Sun and the Moon joined the /graha/s, and a group of seven
/graha/s --- or nine /graha/s including Raahu and Ketu --- was
established, although the order of enumeration was not yet fixed.
5. The week-day or der of the seven /graha/s (Sun, Moon, Mars, Mercury,
Jupiter, Venus, Saturn) and the group of the nine /graha/s were
established.
<END QUOTE Michio Yano>
I suggest you have a look at the book before we continue the discussion
because I don't feel like typing the whole 18 pages article
Let me simply add that the Akanaan_uur_u passage
which I already quoted in another message (see below),
seems compatible with an adaptation of stage 1 or 2
to Tamil because it is the Moon which seesm to be concerned
But the கோளறு திருப்பதிகம் (Teevaaram 2:85)
seems to be an adaptation to Tamil of a later stage.
So far, my own personal conviction
is that கோள் is a loan-translation from Sanskrit
but I would be glad to have feedback from others on all this data.
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
<BEGIN QUOTE AKAM 86_5-7>
கனை யிரு ளகன்ற கவின்பெறு காலைக்
கோள்கா னீங்கிய கொடுவெண் திங்கட்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
(அகம் 86_5-7)
[as it stands in the 1933/34 edition based
on the work of ரா. ராகவையங்கர்
and printed by ராஜகோபாலார்யன்]
In the Rajam edition (1981 NCBH reprint),
the sandhi-split text appears as:
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
<END QUOTE AKAM 86_5-7>
<BEGIN QUOTE Teevaaram 2:85_1>
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிக நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி,
சனி, பாம்புஇரண்டும், உடனே
ஆசு அறும்; நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
<END QUOTE Teevaaram 2:85_1>
naa.g...@gmail.com a écrit :
My take remains that of Sanskritists like A. Parpola.
Graha in Sanskrit comes from the Dravidian idea of "kOL" (the one that
grabs).
Note that Aryans when they entered India during the decline of Indus
valley civilisation,
and co-opting with Dravidian elites living in Sindh, Harappa
transfered the
Dravidian idea of "kOL" as graha, Note that this concept is unique to
Indian
language familes - Dravidian and Indo-Aryan, and totally missing in
European
languages etc.,
For Draviidian substratum, see the articles by Asokan and Iravatham
in the *Harappan, Indus valley archaeologists* website:
http://harappa.com/script/
My old posting:
இன்னுமொன்று: தொல்தமிழர் பாரத நாகரீகத்திற்கு
அளித்த கலாசாரப் பங்களிப்பு பற்றி அறிய
இன்னும் 20 ஆண்டு ஆகும் என்று நினைக்கிறேன்.
சென்ற வாரம் ஐராவதம் தான் எழுதிக் கொண்டிருக்கும்
2009 பெங்குவின் புக்ஸ் வெளியீடாக வரவிருக்கும்
புத்தகக் கட்டுரையை அனுப்பியிருந்தார். ஐராவதத்தின்
அம்மடலின் ஒரு பத்தியை இங்கே தருவன்:
>I am sure you have seen the three recent papers of
>mine on the Indus script from the website
>http://www.harappa.com. I have written another paper
>with the title 'How did the great god get his blue neck?
>A bilingual clue to Indus script' . I consider this paper
>to be a breakthrough. It is being included as a chapter
>in my forthcoming book 'Interpreting the Indus Script:
>A Dravidian Model' to be published by Penguins India
>next year. I am attaching a PDF file of the paper and
>shall value your comments.
ஐராவதம் மகாதேவன் ஐயா, ஹார்ட், அசோகன் (Asko)
பார்ப்போலா, ... போன்றோர் சில தரவுகளைத்
தந்துள்ளனர். ஆனால் இன்னும் விரிவுபடுத்தக்
களம் காத்திருக்கிறது. இதனைத் தமிழர்கள்
செய்யவேண்டும். தமிழுணர்வோடு ஆழ்ந்த
தென்மொழி, வடமொழி, மொழியியல், கலையியல்,
அறிவுடன் கூடிய பேராசிரியர் இந்தியப்
பல்கலைக் கழகங்களிலும், வெளியிலும்
தோன்ற வேண்டும். ஐராவதம், அசோகன்
இருவர் கட்டுரைகளைப் படிக்க:
http://www.harappa.com/script/
http://www.harappa.com/script/indusscript.pdf
http://www.harappa.com/script/indus-writing.pdf
For now, I'm convinced & if anyone quotes Parpola's
works in publications, will discuss. Otherwise, bye.
நா. கணேசன்
Ref.:
http://groups.google.com/group/santhavasantham/msg/13876352b4fd4a1b
Dear NG,
Asko Parpola has just sent me two of his articles.
I will read them and send him my comments
but if you do not make the effort of reading the article by Michio Yano
in the Pingree volume
there is no point in continuing
this discussion here.
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
> [....]
மிச்சியோ யானோ, ஐரோப்பிய ஆரியர் (இரண்டாம் உலகப் போர்)
சற்றே அறிவோம். புத்தகங்கள் பற்றிக் குறிப்பிட்டால் நன்றி,
சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து நிச்சயம் பார்ப்பேன்.
இப்போதைக்கு இல்லை. இதையெல்லாம் பார்க்க நேரம் இல்லை.
தமிழ் படித்தும் எழுதவும் நிறைய இருக்கிறது அன்றோ?
கிரஹம் கோள் ஆகி இருக்குமானால் கோளம் என்பது பந்து வடிவுக்கு பெயரானது எங்கனம்?
கோளம் கோலி குண்டு ஆச்சு!
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
On Jan 7, 10:46 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> கிரஹம் கோள் ஆகி இருக்குமானால் கோளம் என்பது பந்து வடிவுக்கு பெயரானது எங்கனம்?
>
> கோளம் கோலி குண்டு ஆச்சு!
>
:-)
சொல்றாங்க. தமிழன் காதிலெ பூ.
> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> I have enough love for you to forgive your follies.- Hide quoted text -
>
> - Show quoted text -
நினா கண்ணன்,
ஒரு சில கருத்துக்கள்.
தொல்திராவிடரின் தமிழ்
சார்ந்த கோட்பாடுகளை முதலில் சமிற்கிருதம்
பதிவு செய்ததால் பிராமணர்கள் மாத்திரம்
அக்கருத்தை இந்தியாவில் உருவாக்கினர்
என்பது அறிவியல் நோக்குக்குப் பொருந்தா
ஒன்று. தமிழ்ச் சங்க நூல்களில் காலங்
கணிக்கும் கணியர்களைப் பற்றிய எவ்வளவு
செய்திகள் உள்ளன என்றால் வியப்படைய
வைக்கிறது. அவர்கள் கோள்நிலை கணித்தனர்.
எனவேதான் கோள் என்னும் தமிழ்க் கோட்பாட்டில்
இருந்து சமிற்கிருதத்தில் உருவான கருத்தாக்கம்
க்ரஹம் என்பது என்பதை நேற்று விளக்கினேன்.
கார்த்திகை தீபவிழா தொல்தமிழருக்கு
மிகவும் முக்கியமான திருவிழா.
பழந்தமிழில் அவ்விழாவே கொண்டாடப்
படும். தீபாவளி எல்லாம் விசயநகருக்குப்
பின்னீடுதான் (பேரா. தொ. பரமசிவனின்
கட்டுரை காண்க. தொ.ப.வும் நாங்களும்
தமிழ்மண வலைப்பதிவர் விழா பற்றி
எழுதியுள்ளார் பேரா. மு. இளங்கோவன்
படங்களுடன் பார்க்கலாம்). தீபாவளி,
கார்த்திகை விழா எல்லாம் ஒருகாலத்தில்
ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
சில காலக்கணக்கு காலண்டர்களில்
காலப்போக்கில் சில நாட்கள் வித்தியாசம்
ஏற்பட்டிருக்கும். அது என்ன என்று
ஆராய வேண்டும்.
கார்த்திகை விழா உலகப்பிரசித்தியான
திருவண்ணாமலையைப் பற்றிப்
பாடிய தேவாரம் பிரபஞ்சம் தொடங்க
அம்மையப்பர் விளையாடும் வட்டாட்டைக்
குறிப்பிட்டு ஒரு பதிகத்தையே தொடங்குகிறார்கள்.
இதை ஏற்கெனவே இந்தியக் கலைவரலாறு
காட்டிக் குறிப்பிட்டேன்.
திருத் தருமை ஆதீனம் முதன்முறையாக
சைவ வரலாற்றிலே இத்திருமுறைக்கு
(மாசிலாமணி முதலியார் என்பதாக நினைவு.
சரியான பெயர் தெரிந்தவர் தரலாம்,
நானும் பார்க்கிறேன்.) உரையெழுதி
அச்சுப்போட்டார்கள். அதில் அவர்க்கு
சிவனை "வட்டன்" என்னும் வட்டாடும்
பிரானைப் பற்றித் தெரியவில்லை.
இதனால் 1960-க்கு பின்வந்தோர் அவ்வாறே
கொள்வாராயினர். அவ்வாறு உரைசெய்தால்
அப்பதிகச் சிறப்பு வெளிப்படுவதில்லை
கார்த்திகைப் பெண்டிர், ஏழு கன்னிமார்
வழிபாடுகள் கோள், விண்மீன் வழிபாடு
குறித்தௌ. மேலைநாட்டு அறிஞர்
வேதம் இந்தியாவில் தோன்றுவதன் முன்னம்
இருந்தது என்று சொல்கிற சிந்து சமவெளி
நாகரிகத்திலேயே காட்டப்பட்டுள்ளனர்.
உ-ம்:
தொன்மையான அம்பாள் வழிபாடு காட்டும்
http://www.harappa.com/indus/34.html
சிந்தில் கொற்றி/கோட்டவை வழிபாடு
பற்றி ஏற்கெனவே எழுதினேன்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
எனவே, பாரதத்தின் பண்பாடுகள் பலவற்றை
வடமொழி நூல்கள் பதிவு செய்துள்ளன.
ஆனால் அவற்றின் மூலம் இந்தியாதான்,
(ஐரோப்பாவோ, பாரசீகமோ அல்ல), பல
பண்பாட்டுக் கொடைகளைக் கொடுத்த
தொல்லினம் திராவிடர்களே.
ஆமாம், தமிழ்ப் பத்திரிகைகளில்
தமிழ்நாட்டிலிருந்து குடிபோன
ராகுல் திராவிடின் பெயரை
ஏன் "ட்ராவிட்" (அ) "டிராவிட்"
என்று எழுதுகிறார்கள்? திராவிட்
என்பது பூர்வீகமான திராவிட/தமிழ் அந்தணர்
பெயர் அல்லவா? ராகுல் திராவிட்
என்றல்லவா இருக்கவேண்டும்?
இதைப் பத்திரிகையாளர்களிடம்
தெரிவிக்க வேண்டுகிறேன்.
"ட்ராவிட்" என்று எழுதுதல் பெரும்பிழை.
திராவிடர்களுக்கு ராகு வழிபாடு
எவ்வளவு முக்கியம், அதன் பெயரின்
மூலம், தமிழ் எல்லாம் ஆஸ்கோ பார்போலா
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக (1994)
நூலில் விவரித்திருப்பார். யாராவது
இங்கே இடலாம், நானும் தருவேன்.
எனக்கு புத்தகம் எழுதியவுடன்
அவர் தந்த தகவலை நினைத்துப்
பார்க்கிறேன்.
ராகுல் திராவிட் - இரண்டுமே தமிழுக்குத்
தொடர்புடய சொற்கள். கிரிக்கெட் வீரர் பெயர்
- தமிழைக் காட்டிநிற்கிறது.
--
அடுத்த மடலில் பறவைப் பாட்டு (bird-song),
வேதத் தொடர்பு, அவ்வாறான மந்திரங்கள்
ஏனை ஆரியர் (ஐரோப்பா, ஈரான்) இல்லாமை,
அது திராவிடரின் சிந்து சமவெளி மதத்தில்
மந்திரமாக உச்சரித்தது, வேதமாக கிளைத்திருக்கும்
வாய்ப்புகள். (mantras - words
without meaning, பேரா. ஃப்ரிட்ஸ் ஸ்டால்
புத்தகங்களைப் பாருங்கள்).
வேதங்களை இருக்கோதி பிராமணர் உருவாக்கியதால்
உலகில் முதன்முதல் ஏற்பட்ட ஒலியியல் (Phonetics)
மொழியியல் கோட்பாடு போன்றன தெரியவரும்.
(ராகுல் திராவிட் முன்னோர் என்றுதான் வைத்துக்
கொள்ளுங்களேன்).
அதன் பயன் என்ன? இந்தியாவின் எல்லா மொழிகளிலும்
(தமிழ் உட்பட) எழுத்து வரிசை ஒலியியல் விஞ்ஞானப்
படிதான் அமைந்துள்ளது. a, b, b, d, ... எல்லாம் தான்
போனபோக்கில் சித்தம்போக்கு சிவன்போக்காய் உள்ளது.
தமிழில் மாத்திரம் வடமொழி/மற்ற மொழிகளின்
வர்ணமாலை குறுக்கமாகவும் அழகாகவும் இருப்பதால்
தொல்தமிழர் தங்கள் வாய்மொழிப் பாட்டுகளால்,
தாங்கள் இறைமையைப் போற்றிய கிளிபோலும்
பறவைகள் பாடும் பாட்டைப் பார்த்துப் பாடி
தமிழ் எழுத்தை வரையறுத்தனர் என்க.
பின்னர் வேத மறைமொழி உருவானபோழ்து.
க என்பதை ka, kha, ga, gha (என்று
voiced (ga, ja, Da, da, ba), aspirated (kha, cha, ...)எழுத்தைச்
சேர்த்துக் கொண்டார்கள் போலும் (பாணினி). Voiced, & aspirated
லெட்டெர்ஸுக்கு தமிழ் இலக்கணப் பெயர்கள்
உண்டு. உலகெங்கும் ஆரியர் தங்கள்
குதிரை, சாரட்டு தொழிநுட்பத்தால் வென்றாலும்,
ஏன் ஸம்ஸ்க்ருதத்தில் மாத்திரம் அழகான,
விஞ்ஞான பூர்வமான அட்சரமாலை இருக்கிறது.
இதன் அடிப்படையாக, தொல்தமிழர்
வாய்மொழி மந்திரங்கள் சிந்து சமவெளியில்
அமைந்ததாகக் கருதுகிறேன். இன்றும்,
பௌத்த சமயத்தில் உள்ள அடிப்படை மந்திரங்கள்
(பிரித்துப் பார்த்தால் பொருள் இருக்காது)
திராவிடர் கொடை என்றே பௌத்த அறிஞர்
எழுதியுள்ளனர். பல நண்பர்கள் உள்ளனர்
- நான் 30 வருடமாய்ப் பழகினோர்.
மெல்லத் தருவேன் - திருவருள் கூட்டிவைப்பின்.
இன்னும் வேத ஃபோனெடிக்ஸ் வளர்ச்சிக்கும் தொல்திராவிடர்
கொடை பற்றி அனேக சம்ஸ்கிருதப் பேராசிரியருக்கு
ஒன்றும் தெரியாது. வடமொழி தெரிந்த தமிழர்கள்
இன்னும் 30-40 ஆண்டுகளில் செய்ய வேண்டிய
பெரும்பணி. ஆஸ்கோ, ஹார்ட், ஐராவதம்
- எல்லாம் retired, வயசு 70+, தமிழ் உணர்வு,
படிப்பு, உழைப்பு, பன்மொழிப் புலமை
கொண்ட பேராசிரியர்கள் தமிழ்நாட்டில்,
பின் இந்தியாவில், இலங்கையில், உலகெங்கும்
உருவாவரோ? பார்ப்போம்.
In Elephanta and Ellora, the dice
game scene is common.
http://groups.google.com/group/minTamil/msg/489e1c5b4025f669
(Earlier I've given here Tamil tEvAram, tiruppukaz, .. where
this dice game is mentioned also in the above link)
முக்கியமாக, கார்த்திகை விளக்கீடு திருநாளில்
அமமையும் அப்பனும் வட்டாடும் திருவிளையாட்டை
ஆடுகின்றனர். அதனால், தேவாரத்தில்
கார்த்திகை தீபத்துக்குப் பேர்போன திருவண்ணாமலையில்
"வட்டன்" என்று பரவுகின்றனர். எத்தனை
சித்தர்கள் வாழுமலை அண்ணாமலை?
குரு, குக நமச்சிவாயர்கள், இரமணர், .....
படையப்பா அண்ணாமலை பக்தரல்லவா?
நலமா?
ஆங்கில (;-) புத்தாண்டு வாழ்த்துக்கள் !
தொ.ப. வின் கட்டுரையின் உரல் என்ன ?
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
-------------------------------------
நலமே. நீங்கள் நலமா? காணவே இல்லையே?
தொ. ப. கட்டுரைச் சுட்டி தெரியாது. பல ஆண்டுமுன்,
தமிழ்-உலகத்தில் (வாசன் பிள்ளை?) தந்ததாக நினைவு.
தொ. பரமசிவனின் 'அறியப்படாத தமிழகம்' என்ற புத்தகத்தில் உள்ள
கட்டுரை.
------------------
ஆனால், எனக்கு் வேண்டுவது கார்த்திகை தீபம் - தீபாவளித் தொடர்புகள்.
பொதுவாக, சிவனும் பார்வதியும் தீபாவளி அன்று தாயம் விளையாடுவதாய்ச்
சொல்வார்கள். siva parvati dice game diwali எனக் கூகுளப் பெருமாளை வேண்டுங்கள்.
ஆனால், இலிங்க, மச்ச புராணங்ககளைப் பார்க்க வேண்டும்.
அனேகமாக, கார்த்திகை தீபத்தன்று தான் இந்த வட்டாடும் திருவிளளயாட்டு
ஆடப்பட்டதாய் இருக்கும் என்பது என் யூகம்.
ஏனெனில் கார்த்திகை விளக்கீடு தான் சங்க இலக்கியத்தில் வருகிறது.
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/34424
thirunAvukkaracar aruLiya thEvAram
thalam thiruvaNNAmalai
thirukkuRunthokai
5th thirumuRai
thirucciRRambalam
vaTTanai mathi cUDiyai vAnavar
ciTTanaith thiruvaNNAmalaiyanai
iTTanai ikazn^thAr puram mUnRaiyum
aTTanai aDiyEn maRan^thu uyvanO.
thirucciRRambalam
Meaning:
One Who wears disc like moon,
the Excellent One for the celestials,
the Lord of thiruvaNNAmalai,
the Beloved,
One Who attacked the three puras of those who did contempt
- Him, can this slave forget and get uplifted?
Notes:
1. vaTTu - disc; ciTTan - shrEShTan - ultimate;
iTTan - beloved; aTTal - to attack.
2, 3, 4 அடிகளில் சிட்டன், இட்டன், அட்டன் என்று சிவன்
குறிக்கப் படுவதால், பதிக முதலில் உள்ள பதம் "வட்டன்" = வட்டாடும் சிவன்
என்பது. அங்கே வட்டு = disc என்பது மாத்திரம் பொருள் அல்ல, அந்த வட்டிலில்
வட்டாடுவோன் சிவன்.
*வட்டனை*, மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,---அடியேன் மறந்து உய்வனோ
பாடல் முழுக்கச் சிவனைக் குறிக்கும்
மதிசூடி, சிட்டன், அண்ணாமலையன், இட்டன், திரிபுரம் அட்டன்
எனப்படுவதால், முதற் சொல் சிவனின் ஒரு பெயர் ஆகிய வட்டன்.
இராவணன் வரலாறு வரும் திருப்புகழிலும் இத் திருவிளையாட்டு
வருவதைச் சுட்டியுள்ளேன்.
பிரபஞ்சத் தொடக்கம் கார்த்திகக விளக்கீடு நாள் என்று
இருந்திக்குமோ?
வட்டாடும் சிவ-பார்வதி சிற்பங்கள்:
http://groups.google.com/group/minTamil/msg/489e1c5b4025f669
அன்புடன்,
நா. கணேசன்
இராமகி ஐயாவின் கட்டுரை:
http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
பொங்கல்(பனிமுடங்கல்) விழா பற்றிய உண்மையான விளக்கம்
பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர்
திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச்
சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான,
பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல
வேண்டுமால், சரியானபடி அறிய இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும்.
குறிப்பாக "தை முதல் நாளில் இந்த விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற
கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும் இந்த விடைகாணலின் முதற்படியாக,
சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse;
இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் =
செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான்,
நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை
புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா
முன்னால் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட
வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.
சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் =
star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve)
கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே
தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ஏகலோடி என்று வானியலிற்
சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் =
செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த
ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்பு படுத்தும்
முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது
வேறு ஒன்றும் இல்லை; ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவில்
தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான்
நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவர். இந்த வான்
நடுவரையை இன்னொரு விதமாய் விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்று கூடச்
சொல்லுவதுண்டு.
விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation)
தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களுமாய்ச் சுற்றும் ஒரு வலயத்
தளம். இந்த இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity)
வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ஒருக்களித்தல்/
ஒருக்கணித்தல் என்ற வினைச்சொல் சாய்ந்து இருத்தல் என்ற பொருளைக்
கொள்ளும். ஒருக்களித்துப் படுத்தான் என்றால், மல்லாக்கப் படுக்காமல்
கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல்
ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய்,
கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப்
பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம்
என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்;
autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும்
காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால்
கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு
அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய)
தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச்
சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக்
குறையப் போகிறது" என்று உணர்த்துகின்ற நாளாகும். அந்த நாள் வரும் போது,
"இனிமேல் வருவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்"
என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.
இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின்
அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.
ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12
மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு
நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும்
இரவும் ஒத்த (=ஒரே அளவுள்ள) நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க
நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ,
இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல்
குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன).
இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம்
நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம்
நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.
இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை
அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம்
(median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும்
சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக்
கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில்
மட்டும்,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில்,
இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய்
புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter
solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்;
பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில்
புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer
solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22ம் நாள்) நாம்
சொல்லுகிறோம்.
புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு
இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும்
இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து
கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது
இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் இந்த ஒக்க நாட்கள்
என்பவை சிறிது சிறிதாக முன்நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன
மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு
ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே
நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம்
(precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.
இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில்
ஏற்படுகிறது (=விழுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில்
கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து
விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் =
ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் வந்து சேரும்.)
என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின்
முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில்
ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள்
விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க
நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது.
இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல்,
வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன.
அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே
நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும்,
சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.
இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக்
குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து
கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783
ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த இயக்கத்தின்
நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று
எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள்
என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று
சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித்
தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில்
அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;
இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு
ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு உடன் அயன முறை
(உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method)
என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் கணிக்கிறார்கள்.
மாறாக, முற்செலவம் என்ற அயனத்தைக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன
முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத்
திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பது விதப்பாகப்
பின்பற்றப்படுகிறது. நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி
மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்)
என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத்
தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள்.
தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவை நில்லயன முறையின் படி சூரியன்
தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது உடன் அயன முறையின் படி,
இந்த வடசெலவு தொடங்குவது இந்தக் காலத்தில் திசம்பர் 22 ஆகும். இங்கே
கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது. இன்னொரு விதமாய்ப்
பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன்
போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக
வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப்
பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று
கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722
ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும்.
அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில்
நடந்திருக்கும். அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும்
ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின்
அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த
ஆண்டு கி.பி. 285 ஆகும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் முற்செலவச்
சுற்று தொடங்கிய நாளும் இந்திய வானியலின் படி கி.பி.285 க்கு அண்மையில்
தான்.
இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த நிலையை
நினைவு படுத்தி, பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் ஒன்று சேர்ந்திருந்தன
என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை
தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு
என்றும் சொல்லுவார்கள். மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை
விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)
பொங்கல் நாள் என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) பனிமுடங்கலைச்
சுட்டிக் காட்டிய பண்டிகை என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும்.
பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு
குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும்,
சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள்
அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க்
கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத்
தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான்
இந்தப் பொங்கல் விழா.
அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய
காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.
இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய
இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய
குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் பொங்கல் விழாவைத்
தமிழர் அதற்கு முன் என்ன சொல்லிக் கொண்டாடினர் என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் கேள்விக்கான விடை, விழாவைக் கொண்டாடும் முறையில் இருக்கிறது.
பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும்
ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட
வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற
புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள்
(குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு,
கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை
இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான்
படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து,
முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும்
கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ,
பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே
குறிக்கிறது.
இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு
(tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின்
நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing
philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு
வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க
முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து
கொள்ளுகிறோம். அந்த வேறு எது என்பது அடுத்த கேள்வி. [இன்றைக்கும் கூட
இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன்
கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal
worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும்
கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என
இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]
[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள்
நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில்
விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து
வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட
ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த
மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப்
பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம்
நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும்
முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற்
சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே
பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும்
இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்)
சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க
வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியல்காரர்.)
கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி
என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம்
என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும்
பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று
இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில்
என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/
கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது.
ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின்
அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற
இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.
அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே
இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப்பொருள்கள்
பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா),
பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு
முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள்
சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட
முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என
இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில்
ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில்
உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு
ஒரு பொழுது பார்க்கலாம். இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப்
படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச்
சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை
சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும்,
தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும்,
திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை
நான் தமிழில் கண்டதில்லை.]
சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும் என்பதை
இனிப் பார்ப்போம்.
கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப்
பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம்
முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது.
மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி
ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.
இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி
சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி
காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலில் தொடங்கியது
சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா
இளவேனிலில் தொடங்குகிறது.)
சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning) என்பது பனிமுடங்கல்,
வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க
முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில்
கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும்
குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும். இனக் குழுக்களாய் வாழ்ந்த
காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய
வானியலில் சாய் என்ற சொல் (இது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்;
வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற
பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற
சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று sine ஆகி
நிற்கிறது.) கூட நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும்.
பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது வட செலவில் இருந்து தொடங்குவதற்கு
இணையானது. தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத்
தொடக்கத்தைக் குறித்தது. ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து
இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில்
தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு
பருவங்களுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும்
தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே.
இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும்
இருக்கின்றன.
பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில்
(மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி),
(ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக்
குறிப்பிடுவார்கள்.
இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால்,
ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க
வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை,
மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை)
மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார்
என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)
மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும்
குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல்
நாளே என்பது புரியும்.
பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற
உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை
என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----
என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு
முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.
அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில்
தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில்
இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத்
தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக்
குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே
காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம்
ஆயிற்று போலும்.
சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு.
அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர்
ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம்
(=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல்
(=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை
(தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார்
போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச்
சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி,
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே
பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக
மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப்
பட்டிருக்கின்றன.]
இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1
தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது.
மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல்
மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30
ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக்
கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும்
விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!
கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.
பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்"
- அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப்
போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால்,
இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற
விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி
மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று
எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை
என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்
(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு
உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில்
திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச்
சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே
இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]
பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம்
எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும்
மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும்
மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.
பொங்கலோ பொங்கல்!
அன்புடன்,
இராம.கி.
http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
--------------------
இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு
தைக்கும் சரி, சித்திரைக்கும் சரி ஆண்டுப் பிறப்பு என்பதாக
எங்கும் குறிப்பிடப்பட வில்லை என்றே நினைக்கிறேன்.
அன்புடன்,
கணேசன்
எஸ். இராமச்சந்திரனின் கட்டுரையைப் பாருங்கள்:
http://groups.google.com/group/minTamil/msg/47bd2d7a599ca2fd
அன்புடன்,
நா. கணேசன்
> தையில் ஆண்டு தொடங்கும் என்பதற்கு இஅழந்தமிழ்
தொல்காப்பியர் ஆவணி மாதத்தில் புத்தாண்டு பிறப்பதாகக்
கருதினார் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.
<<<
சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை
நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய
சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து
தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் கூறுவது:
கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய
கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே
குறிப்பிடுகிறார்?
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர்
ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி.
கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி
ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின்
மூலம் அறிய முடிகிறது. அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு
தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று. >>>>
ஏன் ஆவணி முதல் மாதமாகக் கொண்டாடப்பட்டது?
என் கருத்தை விரிவாகப் பின்னர் எழுதுவேன்.
நன்றி!
நா. கணேசன்
இக்கட்டுரை மரு. ந. கண்ணன் முன்புக் கொடுத்ததாக நினைவில்லை.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=37511&mode=threaded
பழுதை நீக்கி வந்த பழந்தையே வருக!
"தெய்வத்தமிழ்" இணையத்தில் வெளிவந்த கட்டுரை
இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு
தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு
வைக்கப்பட்டது.
ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது
தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள்
தினவு!
காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத்
திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும்,
மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின்
பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும்
உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும். கிழமை
ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும். அதிலும் ஒரு தொலைக்காட்சியில்
ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது
அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும்.
ஆமாம், இந்த சக ஆண்டு என்பது என்ன? யாருக்குத் தெரியும் என்கிறீர்களா?
நானே சொல்லி விடுகிறேன்.
விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன்
தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில்
தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?
கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின்
நிலைமை என்ன? எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல்
ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி
பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத்
தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே
இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும். ஆகவே கல்வெட்டு
ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு, யாண்டு என்பது வேறு என்று
தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை
சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று
கவலைப்படுவதில்லை. எனவே, எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப்
பற்றித் தான் அது பேசும்.
ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு
நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து
கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது
ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை
செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன்
ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு
மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு
ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழிப்
பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால்
குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள்
தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு
ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக
சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை
வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.
இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை. அதன்பின் தொடர்ந்து
பல்லவரும், இசுலாமியரும், நாயக்கர்களும், மராட்டியர்களும், பிரஞ்சுக்
காரர்களும், ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே
நிலைத்துப் போயிற்று.
ஒரு கேள்வி: பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆண்டை திடீரென மாற்றலாமா?
ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது
என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. அப்படியானால் தமிழரசு ஒன்று
தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா? அவனோடு தான் இந்த உலகம்
பிறந்ததா? இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக்
கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன்
இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க
இயலும்?
சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை
நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய
சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து
தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் கூறுவது:
கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய
கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே
குறிப்பிடுகிறார்?
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர்
ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி.
கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி
ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின்
மூலம் அறிய முடிகிறது. அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு
தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.
சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு
உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான
மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத்
தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும்
வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு
பெற்று கல்வெட்டுக்களில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும்
ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை
பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.
இதை உணர்ந்து தான் ஏற்கெனவே தெய்வமுரசு இந்த ஆண்டு, மாதம், தேதி
ஆகியவற்றின் பெயர்களை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டிய நெறி முறையின்
அடிப்படையில் தமிழ்ப் பெயர்களாக மாற்றிப் பட்டியலிட்டுக் காட்டியது
வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவை தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப்
பேசப்பட்டு ஏற்றுக் கொண்டு வரப்படுகின்றன.
இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள்
தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு
என்ற தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக்
கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக்
கொள்வது எப்படி அநியாயம் ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும். இனி இதை
எப்படி அமைப்பது?
போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன்
சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப்
பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்கள் எடுத்த
முக்கிய தீர்மானங்கள் இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை
என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக்
கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது
வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில
ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும்.
இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தைத் தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.
இதில் முதலாவது ஏற்கெனவே தமிழக அரசின் நாட்காட்டிகளில் நடைமுறைக்கு வந்து
விட்டது. அடுத்து அதை ஒட்டிய தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு எனக்
கடைப்பிடிப்பது. இதோ, இன்னும் சில நாளில் அரசு முத்திரை அதற்குக்
கிடைத்துவிடும் என்பது இனிப்பான செய்தி.
அடுத்து இன்னொரு கேள்வி. ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி
இருக்கிறாரே. மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது
தானே! இப்போது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும்
வேட்டு வைக்கிறீர்களே! இப்படி ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில்
இருந்து கேட்கிறது.
விடுமுறையை விடுங்கள். பழைய ஆவணி மாதம் பற்றிய கேள்வி கவனிக்கப்பட வேண்டியதே!
தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது
உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து
பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். தை
பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன். ஆவணி
பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை. அந்த மாதத்திற்குச்
சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய
முடியுமா? இயற்கை அப்படி இல்லையே. எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய
வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே! அப்போது
தானே ஆண்டு முழுவதும் அவனக்கு நல்ல படியாக நடந்தேறும். இதையெல்லாம்
சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத்
தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான
கரும்பைக் கொடுக்கிறது. தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.
சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன. தாயருகா நின்று
தவத்தை நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு. தையில் நீராடிய
தவம்தலைப் படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59-ஆவது
பாடல். நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம் என்று பாடுகிறது
ஐங்குறுநூற்றின் 84-ஆம் பாடல். எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க
நூற்கள் கருத்து. அதனால் வள்ளலார் தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ
ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத் தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில்
அருட்சோதி தரிசனம் காட்டினார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என்று
சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார். ஆக உலகியலாலும்
அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை. இதுவே ஆண்டின் முதல்
மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது.
தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த
வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி
தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!
அப்தம் என்ற வடமொழிச் சொல்லுக்கு முடிவு என்று பொருள். சஷ்டி அப்தம்
என்றால் அறுபது நிறைந்தது என்று பொருள். இனி சகம் அப்தமாவதால்
சகாப்தத்திற்கு இது சகாப்தம். தொடங்கட்டும் புதிய தமிழ் வரலாறு! பழுதை
நீக்கி வந்த பழந்தையே வருக!
2009/1/9 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Jan 7, 11:12 am, "NATARAJAN SRINIVASAN" <engee...@gmail.com> wrote:
> //திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
> விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
> முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
> உரோகிணி நினைவனள் நோக்கி -----//
>
> சித்திரையே ஆண்டின் முதல் மாதம் என்பதற்கு நெடுநல்வாடையில் அசைக்க முடியாத
> ஆதாரம் இருப்பதுபோல் தையில் ஆண்டு தொடங்கும் என்பதற்கு இஅழந்தமிழ்
> இலக்கியத்தில் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
>
> அன்புடன்
> நடராஜன்.
>
உங்களின் கேள்வி என் உள்ளத்தில் எழுப்பிய வினாக்கள் சில.
என் கருத்துக்களை விரிவாக எழுதணும்.
//திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----//
ஆடு (மேஷம்) ஷகர்களின் அப்தத்தில் சித்திரை ஆகிவிட்டது உண்மை.
ஆனால் சகர்களுக்கு 1000, 2000 ஆண்டு முன்னர்?
ஆடு என்ற சொல் தான் ஆண்டு, ஆட்டை (=year) என்னும் பண்டைத் தமிழ்ச்
சொற்களுக்கு
வேர். ஆனால் ஆண்டு/ஆட்டை போன்றன கிறிஸ்து அப்தத்திற்கும் முந்தைய
2000 ஆண்டுப் பழமையாவது இருக்கும்.
உரோஹிணி = சிவப்பு என்ற பொருள்.
கயல்/சேல் = carp, பாண்டியர்களின் சின்னம்.
அதனால்தான் ரோஹிணி நட்சத்திரத்தையும், அவள் இணைபிரியாத் துணைவன்
திங்களையும்
கொண்ட சித்திரததைப் பார்த்து பாண்டியன் தேவி தன் தலைவன் பாண்டியமன்னனி
நினைவூட்டுவதாக இந்தச் சங்கப் பாட்டு. பாண்டியர் சந்திர வங்கிசத்தார்
என்பதும் ஓர்க.
கயல் (carp, ஸம்ஸ்கிருதத்தில் ரோஹித என்பபடுவதும், இந்தச் செம்மீனுக்கு
வானில்
ரோஹிணி என்று பெயர் கொடுத்துள்ளனர். சேல்மீன்/கயல்மீன் என்பதன் நேரான
சங்கத
மொழிபெயர்ப்பு ரோஹிணி என்று கருதலாம்.
சேல்மீன்/கயல் எப்பொழுதும் இணைபிரியாமல் அஷ்டமங்கலப் பொருள்களில்
இருக்கும்,
இந்தியாவில் உள்ள 2300 வருஷமான கலைப்பொருள் யாவிலும். இணைகயலுக்குப்
பொருள் என்ன? சிந்து சமவெளியில் வான நட்சத்திரங்கள் எல்லாம் மீன்
(விண்மீன்)
எனப்பட்டன. என்றும் இணைபிரியாமல் சந்திரனையும்-ரோஹிணியையும் குறிக்கத்
தொல்தமிழர்
இணைகயல் சின்னத்தைக் கொண்டனர். தமிழ் வளர்த்த பாண்டியர்க்கும் இணைகயல்
சின்னம் ஆயிற்று. திங்கள்-ரோஹிணி சித்திரம் பாண்டியர் மாட மாளிகையில்
இலங்கியதை
நெடுநல்வாடை பேசுகிறது.
இந்தச் செம்மீன் (ரோஹிணி) கணவனை (சந்திரனை) என்றும் பின்பற்றுவதால்,
பாரதப் பழைய திருமணங்களில் பொட்டு/திலகம் நெற்றியில், தலைவகிடில்,
வைக்க ஏற்பாடு. கணவனை இழந்தாளுக்குப் பொட்டு இல்லை என்பதும் நினைக்க.
"ஆடு தலையாக" மேஷம் தான் முதல் என்பது தெளிவு. ஆனால் அது சித்திரையா?
இல்லை, தொல்காப்பியம் கூறும் கார்காலத் தொடக்கமா? இராசி சக்கரம்
(Fortune wheel போல சக அப்தக் கணக்கிற்கு சற்று சுழற்றி மாற்றினார்களா?)
ஆராய இடமுண்டு.
என் கருத்துக்கள் விரிவாகப் பின்னர் பேசுவோம்.
அன்புடன்,
நா. கணேசன்
. carp fish (= rohita 'red' in Sanskrit)
2. star or red dot/blood drop (= rohini 'red' in Sanskrit) The red dot
painted on the forehead at marriage = the 'third' eye of the Heavenly
Bull < alpha Tauri = the ancient star of the new year (marriage of Sun
+ the heavenly bride rohini, 'menstruating'), represented by the red
fish (scales as tilaka mark).
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் தலைவர்கள் தமிழுக்காக
கூப்பிடுகிறார்கள் என்றெண்ணி பல இலட்சம் பேர் வந்தனர்.. பிறமொழி மீது
கரியெல்லாம் பூசினர்.. கல்லக்குடி மறியலெல்லாம் நடந்தனர்..
வந்தோரை வேக வைத்து விட்டு தங்களை தூக்கிக் கொண்டு விட்ட தலைமையால்
நேர்ந்ததொ?
--
ஆமாச்சு
The mid December solstice marks the beginning of winter in the Northern Hemisphere and summer in the Southern Hemisphere.
In the Northern Hemisphere, the Winter Solstice occurs on December 21, 2008 at 7:04 AM EST and 12:04 UT (Universal Time).
In the Southern Hemisphere, the Winter Solstice takes place on June 20, 2008 23:59 UT (Universal Time).
While the beginning of summer marks the longest day of the year, the winter solstice brings the shortest day - and the longest night! - of the year.
|
Month |
Max °C |
Min °C |
Rain (mm) |
|
Jan |
29 |
20 |
24 |
|
Feb |
31 |
21 |
7 |
|
Mar |
33 |
23 |
15 |
|
Apr |
35 |
26 |
25 |
|
May |
38 |
28 |
52 |
|
June |
37 |
28 |
53 |
|
July |
35 |
26 |
83 |
|
Aug |
35 |
26 |
124 |
|
Sept |
34 |
25 |
118 |
|
Oct |
32 |
24 |
267 |
|
Nov |
29 |
23 |
309 |
|
Dec |
28 |
21 |
139 |
On Jan 9, 4:43 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> தமிழக வெப்பனிலை வரைபடம்:
>
வேந்தரே,
இதில் உள்ள நான்கு நாள்களில்தான் புதுவருடப் பிறப்பை வைக்க
முடியும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றலாம்,
அவ்வளவே.
http://www.sciencehelpdesk.com/img/science1_1/SolsticesEquinoxes.gif
(1) சிந்து சமவெளியிலும் பின்னர் இந்தியாவிலும்
சித்திரை 1 புதுவருஷமாக இருந்துள்ளது.
நடராஜன் காட்டிய நெடுநல்வாடை வரிகளும்
"ஆடு தலையாக" இதையே காட்டி நிற்கின்றன.
இது வசந்தத் திருவிழா. கொற்றவைக்கு ஏற்ற நாள்.
தமிழ் மரபில் சொன்னால் "அகத்திணை நாள்" இது.
வசந்த ருது தொடங்கும் நாள்.
இந்தப் பழைய புத்தாண்டுக்கும் சுமேரியாவுக்கும் தொடர்புண்டு.
Vernal Equinox is the ancient Indian New Year's day,
as seen in Sangam text or even modern Tamil calenders.
(2) சித்திரை 1-லிருந்து 6 மாதம் தள்ளினால்
வருவது சரசுவதி பூஜை, துர்க்கா பூஜை தினம்.
விஜய தசமி என்று கிருஷ்ணதேவராயர், வங்காளிகள்
கொண்டாடுவது. தமிழ்மரபில் இது "புறத்திணை" நாளிது.
Autumnal Equinox.
(3) டிசம்பர் 25, ஜனவரி 1 - ஆரியர்களின் புத்தாண்டு.
இது Winter solstice திருவிழா.
அதற்கு இந்தியாவில் "autumnal equinox" விஜயதசமி
நோன்பு மரபுகளை மாற்றம் கண்டுள்ளது.
இது "மகாவிரதிகளின்" நோன்பு வழிமுறைகளாக
வேத நூல்களில் வரும்.
தைத்திரீய பிராமணத்தில் கிழக்கே சென்று
பயிர், ஆநிரை கவர்வததன் தொடக்கமாய்
இந்நாள் சொல்லப்படுகிறது,
இந்த இந்தோ-ஐரோப்பிய புத்தாண்டு தினத்தையே
புத்தாண்டு என்று கலைஞர் அரசு அறிவித்துள்ளது,
(4) மிச்சம் இருப்பது Summer Solstice ஒன்றுதான்.
அதைப் புத்தாண்டு என்று தொல்காப்பியமும்,
சீவக சிந்தாமணி போன்ற நூல்களும் சொல்கின்றன.
இது ஆரியர் பஞ்சாப் (இன்றைய பாக்கிஸ்தான்)
நெல்பயிர், ஆநிரை கவர்ந்து ஊர் திரும்பும் நாள்.
பின்னர் சாரதைக்கு ('சாரதா < சரத் பருவம்)
அரிசிப் பொங்கல் இடுவர்.
-----------------
ஆழமாகப் பார்த்தால்
சித்திரை 1 (vernal equinox) தொல்தமிழர் புத்தாண்டு,
அது மீள, மீளப் பு்துப்பிக்ப்படும் அகவியல் கொண்டது,
நெடுநல்வாடை சுட்டிநிற்கும் நாளதுவே.
6 மாதம் கழித்தால், புறத்திணை நாள்,
கொற்றவையின் விசய்ததசமி - ஆண்டின் நடுவில்.
சித்திரை 1க்கே தென்மொழி தமிழாயினும்,
வடமொழியாயினும் சான்றுகள் உள்ளன.
பின்னர் ஒரு கட்டுரை தருவேன்.
விஜயதசமி மரபுகளை பின்னால் கூதிர்கால
ஸோல்ஸ்டசுக்கு மாற்றம் ஆக முயற்சித்துள்ளார்கள்.
தமிழ் புத்தாண்டு:தமிழ் புத்தாண்டு சித்திரை 1,என்று இருந்தது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அரசு முதன் முறையாக பல இலக்கண , இலக்கிய நூல்களை ஆராய்ந்து தை1'ஐ தமிழ் புத்தாண்டு என்று சட்டம் இயற்றிவிட்டது.தை1'ஐ தமிழர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்! இதில் புதிதாக முளைத்தது போல் புத்தாண்டு என்று அனைவரும் கொண்டாடினால் அது சரியாகுமா? அப்படியென்றால் இதுதான் தமிழின் முதல் புத்தாண்டா? ஏனென்றால் பல நிறுவனங்கள் வேடிக்கையாக விளம்பர படுத்தியுள்ளன. "அரசு அறிவித்த முதல் தமிழ் புத்தாண்டு" என்று! மேற்போக்காக பார்த்தால் எதற்காக இந்த அறிவிப்பு என்று பார்த்தால் சித்திரை 1. தமிழ் வருட பிறப்பு என்று பார்ப்பனர்களின் கூற்று என்று அரசு விளக்கம் கூறுகிறது! அப்படியென்றால் நாம் புதிதாக 12 மாதங்கள் உருவாக்கி தையை முதல் மாதமாக கொண்டு புத்தாண்டு என்று கொண்டாட வேண்டும் அல்லவா!...............சித்திரை .....வைகாசி.....ஆனி........பார்ப்பனர் வைத்த மாதங்கள் அல்லவா! ஆதலால் நாம் அரசு அறிவித்தது போல் தை மாதத்தை கொண்டாடலாமா? அல்லது தமிழர் திருநாளாக கொண்டாடலாமா? தங்களின் மேலான கருத்துகள் என்ன?
--
நினா.கண்ணன்
ஆடு (மேஷம்) ஷகர்களின் அப்தத்தில் சித்திரை ஆகிவிட்டது உண்மை.
ஆனால் சகர்களுக்கு 1000, 2000 ஆண்டு முன்னர்?
ஆடு என்ற சொல் தான் ஆண்டு, ஆட்டை (=year) என்னும் பண்டைத் தமிழ்ச்
சொற்களுக்குவேர். ஆனால் ஆண்டு/ஆட்டை போன்றன கிறிஸ்து அப்தத்திற்கும் முந்தைய
2000 ஆண்டுப் பழமையாவது இருக்கும்.
On Jan 10, 9:28 am, "Innamburan Innamburan"
<innambu...@googlemail.com> wrote:
> திரு. நினா. கண்ணனின் வினா சிந்தனையைக் கிளறுகிறது. பலநாட்களாகவே நான்
> இதைப்பற்றி நினைத்தது உண்டு. புராதனங்களை, மனம் போன போக்கில் மாற்றலாகுது.
> பார்ப்பனர்களை இழுப்பதற்கு சான்றுகளும் இல்லை. இது எல்லாம் வெறும் அரசியல் என
> அறிக.
> இன்னம்பூரான்
>
இன்னம்பர் எழுத்தறிநாதர் உருத்திராக்கப் பந்தற்கீழ் வீற்றிருக்கிறார்.
உங்கள் ஊர்க் கோவில் படங்களுடன் எழுதலாமே. நானும் பபடித்ததைச்
சொல்வேன், வந்தும் பார்க்க ஆசை,
எழுத்துப் பிழை இல்லாமல் இருக்கவேண்டும் என்று
அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார்:
அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் எரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட் டிழுக்குமன்றோ கவி கற்கின்றதே
இசைப் பயிற்சி:
http://ca.youtube.com/watch?v=Oj_UBuLNiC4
நன்றி: பேரா. பசுபதி
இப்போதைய பிலாகுகளைக் பார்த்தால் அருணகிரியார் தற்கொலை செய்வாரோ?
சீழ்த்தலை ஆகுமோ?
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை
இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே!
~
படிக்காசுப் புலவர்
(மோரூர்ப் பாம்பலங்காரர் வவருக்கக்கோவை - 100 பாடலால்
இயன்றது. படிக்காசரின் பலரறியா இப் பிரபந்தத்தைப்
15 வருஷம் முன்னர் வெளியிட்டேன்.)
அன்புடன்,
நா. கணேசன்
> 2009/1/6 நினா.கண்ணன் <kannan...@gmail.com>
>
>
>
> > *தமிழ் புத்தாண்டு:*
>
> > தமிழ் புத்தாண்டு சித்திரை 1,என்று இருந்தது எல்லோருக்கும் தெரியும்.ஆனால்
> > அரசு முதன் முறையாக பல இலக்கண , இலக்கிய நூல்களை ஆராய்ந்து தை1'ஐ தமிழ்
> > புத்தாண்டு என்று சட்டம் இயற்றிவிட்டது.தை1'ஐ தமிழர் திருநாள் என்று
> > கொண்டாடுகிறோம்! இதில் புதிதாக முளைத்தது போல் புத்தாண்டு என்று அனைவரும்
> > கொண்டாடினால் அது சரியாகுமா? அப்படியென்றால் இதுதான் தமிழின் முதல்
> > புத்தாண்டா? ஏனென்றால் பல நிறுவனங்கள் வேடிக்கையாக விளம்பர படுத்தியுள்ளன. "
> > அரசு அறிவித்த முதல் தமிழ் புத்தாண்டு" என்று! மேற்போக்காக பார்த்தால்
> > எதற்காக இந்த அறிவிப்பு என்று பார்த்தால் சித்திரை 1. தமிழ் வருட பிறப்பு
> > என்று பார்ப்பனர்களின் கூற்று என்று அரசு விளக்கம் கூறுகிறது! அப்படியென்றால்
> > நாம் புதிதாக 12 மாதங்கள் உருவாக்கி தையை முதல் மாதமாக கொண்டு புத்தாண்டு
> > என்று கொண்டாட வேண்டும் அல்லவா!...............சித்திரை .....வைகாசி.....ஆனி
> > ........பார்ப்பனர் வைத்த மாதங்கள் அல்லவா! ஆதலால் நாம் அரசு அறிவித்தது போல்
> > தை மாதத்தை கொண்டாடலாமா? அல்லது தமிழர் திருநாளாக கொண்டாடலாமா? தங்களின்
> > மேலான கருத்துகள் என்ன?
>
> > --
> > நினா.கண்ணன்- Hide quoted text -
2009/1/10 naa.gane...@gmail.com
> குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
> குரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
> எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை
> இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு
> வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை
> விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
> தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு
> தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே!
> ~
> ~ படிக்காசுப் புலவர்
:-))
வலைதந்த வரம்
தண்டமிழில் கவியாப்போர் தவறி ழைத்தால்
. . தள்ளிடுமோர் சங்கத்துப் பலகை யில்லை ;
வென்றிக்கோர் விலையாகப் புலவர் காதை
. . வெட்டிடுமோர் குறடுகொண்ட 'வில்லி' யில்லை ;
குன்றனைய குற்றங்கள் குவிக்கும் என்னைக்
. . குறைகூறக் கூரறிவுக் 'கீர' னில்லை ;
மின்குப்பை ஜல்லியடி வீணர் மேயும்
. . மின்வலையில் மேதையென மின்னு வேனே --- வெறும்
. . மேம்புல்மேய்ந் தேகாலம் தள்ளு வேனே ! (1)
செருகலெனச் சீறும்'டி. கே.சி.' யில்லை ;
. . சிரச்சேதம் செய்'ஒட்டக் கூத்த' னில்லை ;
கருத்துகளைக் கேலி செய்யக் 'கல்கி' யில்லை ;
. . கடிந்துவசை சொல்'காள மேக' மில்லை ;
விருத்தமென்று சொற்குவியல் வீச லாமே ;
. . 'வீரபத்ரர்' விதியெல்லாம் மீற லாமே!
இறுமாப்பை ஒளிவளையம் என்ற ணிந்தே
. . இணையத்தில் இரவியென இலங்கலாமே ! --- அங்கே
. . எளிதாக ஏமாற்றிப் பிழைக்க லாமே ! (2)
அம்பலத்தில் அங்குமிங்கும் அஞ்சல் மூலம்
. . அன்றாடம் அரங்கேறி ஆடு வேனே !
தம்பட்டம் தட்டுவதைத் தவமாய்க் கொண்டு
. . சளைக்காமல் தற்பெருமை சாற்று வேனே !
சம்பந்தம் சற்றுமின்றிச் சான்றோர் பேரைச்
. . சட்டென்று தகவலிலே சொருகு வேனே !
வம்புகளை வாய்மையென மாற்று வேனே!
. . வலைஞனென மாபெரும்பேர் வாங்கு வேனே ! --- வைய
. . வலைதந்த வரமெனமார் தட்டு வேனே ! (3)
****
வீரபத்ரர்='விருத்தப்பாவியல்' ஆசிரியரான வீரபத்திர முதலியார்.
வலைஞன் = வலைக் கலைஞன் .
13-12-2001
=================
பசுபதி
10-1-09
>(மோரூர்ப் பாம்பலங்காரர் வவருக்கக்கோவை - 100 பாடலால்
>இயன்றது. படிக்காசரின் பலரறியா இப் பிரபந்தத்தைப்
>15 வருஷம் முன்னர் வெளியிட்டேன்.)
> நா. கணேசன்- Hide quoted text -
தாங்களும் இராம.கி போல் பொறிஞர், விஞ்ஞானி, தமிழறிஞர். எனவே தொழில்
நுட்பமும் தமிழும் கைகோர்த்து நடக்கின்றன (நமது பொள்ளாச்சி நசன் கூட
உயிரியல் பேராசிரியர்தான்). இப்போது வலைப்பூ உலகில் வலம் வருகிறீர்கள்.
"பிளாக்குகளின் போக்குகள்" அல்லது "பிலா(ளா)க்கனம்" என்று தாங்கள்
வலைப்பதிவில் காணும் பின்னடைவுகள் பற்றி சின்னச் சின்னக் குறிப்புகள்,
தொடுப்போடு கொடுங்களேன். அதுவொரு ஆவணமாகவும், மற்றோர் திருத்திக்கொள்ள
உதவும் குறிப்பாகவும் ஆகும்!
க.>
2009/1/11 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>:
1998-9 வாக்கில் தமிழ் இணையத்தின்
பயனர் ஆனபோது சொன்ன வெண்பா:
காலத்திற்கேற்ற ஊர்தி
----------------------------
ஒருநாளென் பெற்றோர் உவக்க வலம்வந்து
அருமாங் கனியும் அடைந்தேன் - முருகன்
அணிமயில் வேண்டாம் அகிலம் தொடலக்
கணியெலி இன்றுண்டு காண்!
~ கணேசன் :-)
(கணியெலி = computer mouse,
தொடலுதல் = தொடர்பாடல் = to communicate,
ல/ர போலி: தொடர்பாடல்/தொடலாடல்).
2001-ல் எழுதிய மடல் ஒன்றில், இவ்வெண்பா
முன்னரும் இணையத்தில் கிட்டும்.
http://tech.groups.yahoo.com/group/CTamil/message/252
On Tue, 22 May 2001 suvidya@o... wrote:
> Mice migrated out of India :-)
> >From Steve Jones, "Darwin's Ghost" :
> "The center of genetic diversity of the world's mice
> is in Pakistan and India. Mus musculus {the Swedish mouse}
> and Mus domesticus {the American, West European and Australian
> mouse } began their journey there, in a common homeland and with
> a shared pool of genes. Their ancestors traveled in man's wake,
> in separate waves north and south around the icy Alps as farmers
> moved west. As they went, they evolved, until, at last, when the
> circle was closed and the mice met, each had changed enough to
> render them incompatible..."
lmfosse@o... wrote:
>I don't want to be spoil-sport, but when did you recently
>ride a mouse?
Few years ago, I penned a short poem in an ancient tamil
meter.
kAlattiRkERRa Urti
--------------------
orunALen2 peRROr uvakka valamvantu
arumAG kan2iyum aTaintEn2 - murukan2
aNimayil vENTAm akilam toTalak
kaNiyeli in2RuNTu kaaN!
(kaNiyeli = computer mouse, toTalutal = to communicate)
Roughly:
A vAhanam fit for the times
-----------------------------
One day long ago, making my parents happy,
I won the delicious mango;
Even nowadays, I don't need Skanda's peacock
to go around the world;
My computer mouse is good enough to communicate
with one and all. - Ganesan
This refers to a well known stalapurANam of Palani Murukan temple.
Palani is the maximum revenue producing temple in Tamil Nadu,
and Govt. uses the funds. Here Skanda stands only with a
loin cloth (kaupIna) and as daNDapANi. The ancient legend says
that Shiva and Parvati got a rare mango (variant: modakam),
and were confused to decide which of their sons must get
the award. They set up a competition, "the fruit goes
to whoever circles the earth first". The energetic Skanda
flew immediately on his peacock vAhanam, but the bulky
Ganesha said and did, "parents are the whole world, if I do the
pradakshina, that's as good as going around the entire globe",
and he won! Subrahmanya was angry upon return, became a sannyasi
and climbed Palani hills to stay as an ascetic.
A question for Sanskritists:
Does Shiva Purana 2.5.19.15-20, 26 or some other purana
narrate a story of Ganesha winning a prize from his parenst?
Regards
N. Ganesan
From RISA-L postings:
------------------------
see Shiva Purana 2.5.19.15-20, 26
John Grimes
There is also a variant of this story where Shri Ganesha goes around
his mother, the Goddess, and wins the prize. In this story the race is
between two brothers, Kartikeya on his peacock, who goes around the
world, and Ganesha on his mouse, who goes around his mother. The story
is used to show the wisdom of Shri Ganesha.
John Noyce
Melbourne, Australia
>From: Erickasri@a...
>Reply-To: risa-l@l...
>To: Multiple recipients of list RISA-L <risa-l@l...>
>Subject: ganesa myth
>Date: Fri, 1 Dec 2000 05:54:38 -0800 (PST)
>Hello,
>Does anyone know the source for the following myth about Ganesa? It
>goes something like this:Brahma (or Visnu?) decides to hold a race
>for all the gods and goddesses. Whoever goes around the entire
>universe first wins. Ganesa is initially pessimistic since he rides
>on the rat (not the quickest vehicle when compared to tigers, lions,
>and magical birds!), but then he realizes that the entire universe is
>embodied within Brahma/Visnu. He rides around said deity on his
>little rat and wins the race.
>If anyone is familiar with this story, I'd be grateful for a
>reference!Thanks, Ericka Schnitzer