மயிலாடுதுறை அஞ்சொலாள்

32 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 21, 2008, 8:36:14 PM12/21/08
to Santhavasantham
மயிலாடுதுறை அஞ்சொலாள்

பரணீதரன், தீட்சிதர் பாடிய
திருத்தலங்கள், விகடன், 2007
(ISBN 978-81-8476-038-5).
பக். 99:
" மாயூரத்தில் 'பெரிய கோயில்' எனக்
கூறப்படுவது ஸ்ரீ மாயூரநாத சுவாமி
திருக்கோயிலாகும். இது தொன்மைச்
சிறப்பு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.
கிழக்கே உயர்ந்த கோபுரம் கொண்ட
இந்தக் கோயிலுக்கு வீதி உட்பட ஐந்து
பிரகாரங்கள் உள்ளன.

இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன்
ஸ்ரீமாயூரநாதர். இங்கு உறையும் அம்பிகையை
'அபயாம்பிகை' எனவும், 'அஞ்சல்நாயகி'
எனவும் அழைக்கிறார்கள்.தேவாரத் திருப்பாடல்களில்
இறைவன் மயிலாடுதுறை அரன்,
மயிலாடுதுறையன்,அஞ்சொலாள் உமைபங்கன்
எனவும், அம்பிகை, அஞ்சொலாள் எனவும்
வழங்கப்படுகின்றனர்."

இதை எப்படி அண்மைக் காலப் பதிப்பொன்றில்
மாற்றப் பட்டுள்ளது, அதை மறுத்து
தருமபுர ஆதீன தேவார உரையில் உள்ள
மறுப்புரையும் தந்திருந்தேன்:
http://groups.google.com/group/minTamil/msg/45a14325f0655ee6

மேலும்,
தேவாரத்தில் "அஞ்சொலாள்" பயிலும் இடங்கள்:
---------------------------------------------------------------------------­-----------

மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
*அஞ்சொலாள் உமை*யொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே. 3.34.7


வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பு மறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறை யுறை
*அஞ்சொலாள் உமை*பங்க னருளிலே. 5.39.4


["அஞ்சொலாள் உமை" என்று 3.34.7 மற்றும்
5.39.4 செய்யுள்களில் வருவது கருதத்தக்கது.]


நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
*அஞ்சொலாள்* காண நின்று
அழகநீ யாடு மாறே. 4.23.9


வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
*அஞ்சொலாள்* பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 6.5.8

இந்த 'அஞ்சொலாள்' உமையின் வாக்கைப்
பற்றிப் பல இடங்களில் தேவார முதலிகள்
கூறுவர், அவற்றொடும் ஒப்பிடுவோம்:

(1) கரும்பமரு மொழிமடவாள் - கோயில்
(2) குயிலாரு மென்மொழியாள் - மணஞ்சேரி
(3) கரும்பொடுபடுஞ் சொலின் மடந்தை - புறம்பயம்
(4) பண்ணின் நேர் மொழியாள் - கருகாவூர்
(5) பண்தடவுசொல்லி - தேவூர்
(6) யாழன மொழியுமை - விளமர்
(7) தேன்மொழிப் பாவை - கோட்டூர்
(8) பாலின் மொழியாள் - வாய்மூர்
(9) யாழைப் பழித்தன்ன மொழி மங்கை - மறைக்காடு
(இது யாழ்ப்பாணன் இராவண சம்பந்தம் உடைய
தலம் ஆதலினாலே என்று நினைக்கிறேன்.
http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna...
)
(10) அஞ்சொல் அணியிழையாள் - பரங்குன்றம்
(11) தேனிற்பொலி மொழியாள் - கொடுங்குன்றம்
(12) தேனமரும் மொழி மாது - பாண்டிக்கொடுமுடி
(13) இளங்கிள்ளை அரிவை (the one with
parrot-like speech) - அச்சிறுபாக்கம்
(14) அஞ்சொலாள் உமை - முதுகுன்று, மயிலாடுதுறை

ஏற்கெனவே, தேவாரத்தில் அம்பிகைக்கு
"அஞ்சுவாள்" என்று பொருந்தும்,
"அஞ்சலாள்" அல்ல. "அஞ்சலள்" = வீறாயி
என்னும் எல்லா இலக்கியங்களிலும் வரும்
பொருட்பொருத்தமின்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்,
http://groups.google.com/group/minTamil/msg/45a14325f0655ee6
"அஞ்சொலாள்" என்று தேவாரம் பேசிய
காலத்தில் அம்பிகை படிமம்/கோட்டம் மாயவரத்தில்
வள்ளலார் தலத்தில் இல்லை. அது பின்னால்
ஏற்பட்டது. "அஞ்சல் கரத்தினாள்/கையினாள்" (அ)
"அஞ்சல் எனும் மொழி மடந்தை"
என்றெல்லாம் உமைக்குத் தேவாரத்தில் அறவே வராது.
அம்பிகை வழிபாடு பெருங்கோயில்களில் விரிவானதே
பிற்காலச் சோழ, பாண்டிய, விசயநகர ஆட்சிகளில்தான்
(கி.பி. 1000க்குப் பின்னர்).

அஞ்சொலாள் > அஞ்சலாள் தேவிவழிபாடு தலைதூக்கிய
பிற்காலத்தில் நிகழ்ந்திருக்கும். அதற்கு, உ/ஒ எழுத்துக்கள்
அகரம் ஆனதும் துணையாகி இருக்கலாம்.

-u- > -a- in first syllable - some examples:
உ-ம்: *புல்லி > பல்லி,
நுகம் > நகம் (ஸம்ஸ்க்ருத நகம்)
(Cf. நுகிர்/உகிர் - விரல் எலும்பின்மேல் உகுத்திருப்பது,
எருத்தின் கழுத்தில் வண்டியில் (அ) ஏரில்
பூட்டும்போது/நுகுக்கும்போது உள்ள மரத்தடி = நுகம்.
இதிலிருந்து ஸம்ஸ்கிருத நகம் ஆனது.
இந்தோ-ஐரோப்பிய வல்லுநர்கள் nakha என்பதன் -k-
விளக்க இயலாமல் இருக்கிறது என்றபோது,
தமிழைப் பாருங்கள் என்று சொன்னேன்.)
....

-o- > -a- examples:
பொத்து > பத்து (தீப் பொத்துதல்)
நொறுக்கு > நறுக்கு
கொம்பு > கம்பு
கொங்கு (வளைந்தது) > கங்கம் (kaGkha -வடமொழியில்).
கொக்கு எனப்பொருள்.
கொங்கு நாட்டிலிருந்து சென்று ஆண்ட
மன்னர்கள் - கங்கர்கள் (கொங்கர் > கங்கர் (Ganga dynasty) ).
வளைசங்கு கோடு
- இதன் பெயர் கொங்கு > வடமொழியில் ('saGkha)
சங்கு என்றானது.
மொல்லன் 'wrestler' > மல்லன்
மொல்லாடும்/மல்லாடும் கடாவுக்குத்
தமிழில் மொல்லை என்று பெயர்.
புத்தர் சாக்கியக் குடியில் பிறந்தவர்
(ஈரானிய சகர்களுடன் தொடர்புண்டு).
இந்தியாவின் தேசிய காலண்டர்
சகாப்த வருஷக் கணக்கிடுவதாகும்.
அந்தத் சகாக்கள் வீரம் மிக்கவர்கள்,
போராடுபவர்கள் - அக் குடிப்பிறந்த
புத்தர்பிரான் மல்லன் என்பர்.
இப்பெயர் திராவிட substratum தருவது.
மொல்ல(ர்) > மல்ல(ர்). சேலம் மாவட்டத்தில்
கவிஞர்கள் ந. கந்தசாமி, பெரி. சந்திரா ஊர்:
மல்லசமுத்திரம். புத்தனைத் தொழுத ஊர்.

அதுபோலவே, சமற்கிருதத்தில் ஒரு முக்கியச்
சொல்: பலி ( பல்லியை தெலுங்கு, அதன் வடக்கே
balli என்பது போல, தமிழ்ப் 'பலி' வடசொல்லாக
bali என்ப).
பொலி > பலி.
தமிழர் பலியூட்டை பொலியூட்டு என்று சொல்வர்.
பொலிசை >பலிசை.
பொலி போடறது, பொலி கொடுக்கறது என்று
வலையில் தேடிப் பாருங்க. பொலி > பலி (= Skt. bali)
ஆட்சி புரியும். சினிமா, கதைகளில் போலிபோடல்
மிகுதியும் உண்டு.

இஸ்லாமியர் சூஃபிகளுக்கு பிர்/பீர்
என்ற சாமியார் பெயர் உண்டு. தமிழில்
பீர் முகமது, ....
இது பாகிஸ்தானில் சிந்து மாகாணச் சொல்,
பின்னர் இஸ்லாம் முழுக்கப் பரவிய சொல்.
பிர்/பீர் தமிழில் பிரான், பிராட்டி,
தம்பிரான் - ஆதீனகருத்தர்.
தம்புரான்/தம்புராட்டி - கேரளத் தரவாடுகளில்
நிலக்கிழார்கள். (Islamic) Pir is an ancient Dravidian
substratum from Sindh.

அம்- முன்னொட்டுடன் அம்புலி > அம்பலி.
அம்புலீ ஆட வாவே - பிள்ளைத்தமிழ்.
ஒரு தாளவாத்யப் பறை (சந்திரன் போல இருப்பதால்)
"அம்பலி கணுவை யூமை" - கம்பன்.
கொங்குநாட்டில் பட்டிநாய்களுக்குக்
கூழ்காய்ச்சும் பாத்திரம் (கல்லால் சமைந்தது)
துடும்பு போன்றது அது அம்புலிக்கல்.
அம்புலிப் பறையைத் காடுகிழாள்/கொற்றி
துருக்கை கொண்டிருப்பாள். அதுபோலவே,
தலைச்சும்மாடு > தலைச்சம்மாடு.

அதுபோலே, அஞ்சொலாள் > அஞ்சலாள்.

இன்னுமொன்று: தொல்தமிழர் பாரத நாகரீகத்திற்கு
அளித்த கலாசாரப் பங்களிப்பு பற்றி அறிய
இன்னும் 20 ஆண்டு ஆகும் என்று நினைக்கிறேன்.

சென்ற வாரம் ஐராவதம் தான் எழுதிக் கொண்டிருக்கும்
2009 பெங்குவின் புக்ஸ் வெளியீடாக வரவிருக்கும்
புத்தகக் கட்டுரையை அனுப்பியிருந்தார். ஐராவதத்தின்
அம்மடலின் ஒரு பத்தியை இங்கே தருவன்:

>I am sure you have seen the three recent papers of
>mine on the Indus script from the website
>http://www.harappa.com. I have written another paper
>with the title 'How did the great god get his blue neck?
>A bilingual clue to Indus script' . I consider this paper
>to be a breakthrough. It is being included as a chapter
>in my forthcoming book 'Interpreting the Indus Script:
>A Dravidian Model' to be published by Penguins India
>next year. I am attaching a PDF file of the paper and
>shall value your comments.

ஐராவதம் மகாதேவன் ஐயா, ஹார்ட், அசோகன் (Asko)
பார்ப்போலா, ... போன்றோர் சில தரவுகளைத்
தந்துள்ளனர். ஆனால் இன்னும் விரிவுபடுத்தக்
களம் காத்திருக்கிறது. இதனைத் தமிழர்கள்
செய்யவேண்டும். தமிழுணர்வோடு ஆழ்ந்த
தென்மொழி, வடமொழி, மொழியியல், கலையியல்,
அறிவுடன் கூடிய பேராசிரியர் இந்தியப்
பல்கலைக் கழகங்களிலும், வெளியிலும்
தோன்ற வேண்டும். ஐராவதம், அசோகன்
இருவர் கட்டுரைகளைப் படிக்க:
http://www.harappa.com/script/
http://www.harappa.com/script/indusscript.pdf
http://www.harappa.com/script/indus-writing.pdf

நா. கணேசன்

நானும் சில ஆண்டுகளாகச் சிந்து நாகரிக
முத்திரைகளை ஆய்ந்து வருகிறேன்.
சென்ற ஆண்டு (2007) ஓராய்வுக் கட்டுரை
சிந்துவெளிச் சமயம் - திராவிடர் பண்பாட்டுத்
தொடர்பு பற்றி எழுதினேன். ஐராவதம்,
பார்ப்பொலா, மாபாரத அறிஞர் வான் சிம்ஸன்,
யரஸ்லாவ் வாசில்காஃப், பிரான்சிஸ்கோ (மிலான்),
டோரிஸ் ஸ்ரீநிவாஸன், ... போன்றோர் பாராட்டிச்
சில கருத்தும் தந்தனர். தலைப்பும் அதன்
பொருளடக்கமும் ஈண்டுத் தருகிறேன்.

"Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion."

Abstract: In the Mature Harappan period seals and tablets produced
about 4000 years ago, gharial crocodile is portrayed as a 'horned'
being. As in the famous Pashupati seals (M-304), this horned gharial
deity is the central figure surrounded by a typical set of animals. A
female being, often connected with tigers, is seen coupling together
with the gharial in a fecundity scene in an Indus Valley Civilization
(IVC) creation myth. A number of seals show a man on the tree along
with a tiger below. This shaman on the tree and tiger motif is linked
archaeologically with the gharial deity in the sky, and the
Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC
tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger
motif is seen in the 'horned' gharial "Master of Animals" seals. A
comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic
art is needed to understand the pan-Indus founders' myth cycle, and it
is illustrated with pictures of the IVC sealings. These religious
myths of the gharial and tiger divinities are at least as important as
the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and
seven women in front of a bodhi fig tree.

புத்தர் குடி மொல்லர் > மல்லர் என்று குறிப்பிட்டேன்
அல்லவா? அவரைக் குறிக்கும் சின்னம் 2000 வருஷமாக
இந்தியாவில் ஒரு மயிடமுகம் (மகிஷமுகம்),
அதை Buddhist trident nandyavarththa nandipada என்றெல்லாம்
பெயரை கலைநிபுணர் சொன்னார்கள். அதன் திராவிட
சம்பந்தத்தை விளக்கியும் ஓர் கட்டுரை எழுதியுள்ளேன்.
The megalithic symbols' connection with Indus signs is very
important. For example, prof. A. Sundara's paper. I almost finished
a paper on a particular symbol that will be of interest to Buffalo
culture history in India, the paper is tentatively titled:
"Trisula-Nandipada-Triratna: is it originally Mahishamukha?
Buddhist symbol and its possible antecedents in Indus valley".
http://tech.groups.yahoo.com/group/IndiaArchaeology/message/8099
http://tech.groups.yahoo.com/group/IndiaArchaeology/message/8108

புத்த மதத்தில் முக்கியமான டாகினி எனும்
பெண் தெய்வப் பேர் பற்றி நான் சொன்னது:
http://groups.yahoo.com/group/Indo-Eurasian_research/message/11808

நன்றி!
நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages