Re: பழைமையா - பழமையா ?

504 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 5, 2012, 8:50:53 AM10/5/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mintamil
On Oct 4, 9:17 pm, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:
> அப்படி என்றால் புடவை ? புடைவை ? எது சரி ?
>

புடைவை, பழைமை, உடைமை என்று செந்தமிழ் செய்துள்ளது.
குழைந்தை என்பதும் உண்டு - குழந்தைக்கு.
ஆனால், புடவை, பழமை, உடமை என்பன பேச்சு வழக்கில் இருப்பன.
செந்தமிழை விடப் பழமையானவை எனக் கருதுகிறேன்

கொங்கில் இறந்தகால நிகழ்ச்சிகளை இருவர் பேசும்போது,
உ-ம்: இரு பாட்டிகள் திண்ணையில் பேசிக்கொண்டிருக்கையில்
‘என்ன செய்கிறீர்கள்” என்றால், “எங்கள் பாடு, பழமை பேசிக்கொண்டுள்ளோம்”
என்பார்கள். பழமைபேசி என்ற வலைப்பதிவில் மாணிக்கவாசகம் கொங்குத்
தமிழில் அழகாக எழுதுகிறார். அங்கே ‘பழமை’ என்றால் இப்பொருள்தான்.

கோவையில் பழமன் என்றே ஒரு சிறுகதை எழுத்தாளர் உள்ளார்.

-----------

சங்க இலக்கியத்தில் போர்த்தலைவர்களையும், அரச குடியினரையும்
கடுமான் தோன்றல் என்று வரும். முக்கியமாக, சேரர்களுக்கு இப்பெயர்.
கடுமான் என்றால் என்ன என்பது இப்போது தமிழ் பிராமி கல்வெட்டுக்களால்
தெரிகிறது. வயநாடு மாவட்டம் அடர்ந்த குகைகளில் சில கல்வெட்டுக்கள்
கிடைத்துள்ளன. அதில் ஒரு கல்வெட்டு 3-ஆம் நூற்றாண்டு.
கடும்மிபுத சேர (திரிசூலம் Symbol) - எழுதப்பட்டுள்ளது.
இதனைச் சரியாக ஐராவதம் மகாதேவன் தன் புஸ்தகத்தில் விளக்கவில்லை
எனக் கருதுகிறேன். கடுமிபுத - தமிழ் + ப்ராகிருதச் சொல் என்கிறார்.
ஸதியபுதோ (அதியமான்) என்பது போல். அது சரியே.
ஆனால், கடுமி என்பதன் பொருளைச் சொல்லவில்லை.
நெடுமி என்றால் உயர்ந்த பெண் (மெட்ராஸ் லெக்ஸிகன்),
அதுபோல், கடுமி என்றால் கடுமையானவள். போர்த் தெய்வம்.
கொற்றவன் சேரன் கொற்றவை மகன் எனக் குறிக்க கடுமிபுத சேர
எனத் திரிசூலத்துடன் எழுதியுள்ளான். திரிசூலத்தைப்
பனை என்கிறார் ஐராவதம். (தமிழ் பிராமி கல்வெட்டு எண்: 80)

பக்கத்திலேயே, கொற்றவையின் சிற்பம் இருக்கிறது.
மிக அண்மைக் காலத்தில், கல்வெட்டு - வட்டெழுத்து தோற்றம் -
கிடைத்துள்ளது. அதில், சீபழமி என்று எழுதியுள்ளனர். இதன்
காலம் கி.பி. 400 என்கிறார் ஐராவதம். சீகாமரம் - ஸ்ரீகாமரம்
என்னும் ராகம், சீதாளி - சிறந்த பனை ஒன்று, 80 வருடம்
வாழ்ந்து மிகப்பெரிய பூ பூப்பது, சீநக்கன் - தலைவன் பெயர்,
சீதுங்கன் - சோழன் பெயர் (சீதுங்கமங்கலம்), சீதரன், சீராமன், ...
போல சீபழமி என்று துர்க்கையைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடுமிபுத எனச் சேரர்கள் கொற்றவையுடன் தொடர்பு கொள்வதும்,
கடுமி யார்? என விளக்க 100 ஆண்டு பின்னர் சீபழமி (< ஸ்ரீபழமி)
என்று எழுதியிருப்பதும் அருமையான வரலாற்றுச் சின்னங்கள்.
தமிழ் மன்னர்களை சிந்தின் தெய்வத்துடன் இணைப்பவை.

கடுமி என்று தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஸ்ரீபழமியின்
வரலாறு:

அரைசன், அரசன்; புடவை, புடைவை, ... இங்கே பேசியுள்ளோம்.
அரை - கொற்றவைக்கான அரசமரம். தொல்காப்பியம் தரும் பெயர்.
அது ஒரு காரணப்பெயர். யால்/ஆல் மரமும் அரை மரம் போல்
ஒரு fig மரம் தான். யால்/ஆல் (ficus indica), அரை/அரைசு (ficus
religiosa)


அடர்ந்த கானகத்தில் ஒரே ஒரு மரத்தின் இலைகளின் ஓசை நிசப்தத்தைக்
கலைக்கும். இதை ஏராளமான இந்திய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
நெடிதுயர்ந்து வளரும் அரை மரம். அரை - அரச மரம் - தொல்காப்பியம்
தரும் பெயர். அரைச்சல் - இரைச்சல் (கடா - கிடா என்பதுபோல்).
அரவம் என்னும் பெயரும் அரைதல் (hissing) என்பதால் வருவதே.
பாம்புக்கு ஹிஸ்ஸிங் ஸவுண்டால் வரும் காரணப் பெயர் - அரவம்.
அரைச மரம் இன்று அரச மரம் எனப்படுவது. போர் அரவம் மிக்கது.
போர்த்தெய்வம் கொற்றவை (கொற்றி - கலித்தொகை) - அவளது மரம்
அரைச மரம்தான். 4000 வருதத்துக்கு முன்னரே இந்தியா கொற்றவையின்
மரம் அரை மரம் எனக்காட்டுகிறது. அவளது கணவன் மகரவிடங்கர்
என்றும் 4500 ஆண்டு முன்னர் கலைப்படைப்பில் காணலாகும்.
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

மேலும்,
https://groups.google.com/forum/?fromgroups=#!searchin/santhavasantham/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88$20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88/santhavasantham/e-3Hvhpc-To/QO_ctEgX7EUJ

https://groups.google.com/forum/?fromgroups=#!searchin/santhavasantham/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88$20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88/santhavasantham/qecwZamYEj8/8vxcYQiZ0r4J

On Sep 4, 7:57 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> த்ரிபங்கத்திற்கு ஆங்கிலத்தில் என்ன ?தமிழ்ச்சொல் யாது ?
>

முச்சாய்கை, முவ்வளவு.

வளவு - வளைவு
(அரசு (மரம்) - அரைசு,
புடவை - புடைவை
சினப்பு - சினைப்பு
அரப்பு - அரைப்பு
சமயம் - சமையம்
குழந்தை - குழைந்தை
அறப்பள்ளி - அறைப்பள்ளி
நிரயம் - நிரையம்
உடமை - உடைமை
தகமை - தகைமை
புழக்கடை - புழைக்கடை
முரசு - முரைசு
..
ஐகாரக் குறுக்கம்).

N. Ganesan

unread,
Oct 5, 2012, 9:52:40 AM10/5/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_ulagam@googlegroups, yavaru...@googlegroups.com
On Oct 4, 6:57 pm, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:
> எல்லார்க்கும் வணக்கம்,
>
> நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு சந்தேகம்.  என் அலுவலகத்தில் என்
> ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு பழமை என்பது சரியா ? பழைமை என்பத சரியா ?
> என்று கேட்டார்.
>
> நான் அவரிடம் பழமை தான் சரி என்றேன். ஆனால்,  "பழைய" என்று எழுதுகிறார்களே ?
>  அப்போது பழைமை தானே சரி என்று கேட்டார்.
>
> நான் திருதிருவென்று விழித்தேன்.  அதைப் பார்த்ததும் அவர் "உறுதிப்படுத்துங்க
> நிரஞ்சன்" என்றார்.
>
> நான் சந்தவசந்தம் இருக்க பயமேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு "சரி"
> என்றேன்.
>

உங்கள் ஆசிரியருக்கு இமெயில் அட்ரெஸ் இருந்தால் என் மடலை
அனுப்புங்கள். மறுமொழி அவரிடம் பெற்றால் மகிழ்ச்சி.
https://groups.google.com/group/vallamai/msg/6bec03324322c43c

பழையோளைப் பழமி (ஸ்ரீபழமி) என்று நான்காம் நூற்றாண்டுத்
தமிழ்க் கல்வெட்டிலேயே வந்துவிடுகிறது என்று சொல்லவும்.

தேவசேனாபதியை இந்தியாவின் முதல் பக்தி இலக்கியம்
திருமுருகார்றுப்படை ”கொற்றவை சிறுவன்” எனப் பேசுகிறது.
”வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி! (திருமுருகாற்றுப்படை 258 - 259)
முருகு, அதன் பின்னர் தேவாரம், திவ்ய ப்ரபந்தம், ...
தமிழின் பக்தி இலக்கியங்கள் இந்தியா மொழிகள் எல்லாவற்றிலும்
மாபெரும் பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தது வரலாறு.
இந்திய பக்தி இலக்கியத்தில் சிறந்த ஒன்று: ஸ்ரீமத் பாகவதம்
இப்பெருநூல் தமிழ்நாட்டில் எழுதப்பட்டது 9-ஆம் நூற்றாண்டில்.
ஆழ்வார்களின் தாக்கம்.

கடுமி-புத என்று சேரர்கள் ”கொற்றவை-மக்கள்” என்று கல்வெட்டில்
அவளுடைய திரிசூலத்துடன் குறித்துள்ளனர். (3-ஆம் நூற்றாண்டு).

நான்காம் நூற்றாண்டிலேயே பழமி - பழையோள் தமிழ்
எழுத்து வடிவத்தில் வந்துவிடுகிறாள்.

நா. கணேசன்

> ஆதலால் அதைத் தீர்த்து வையுங்கள் ஆன்றோர்களே.
>
> அன்புடன்,
> நிரஞ்சன்

N. Ganesan

unread,
Oct 7, 2012, 5:43:20 PM10/7/12
to தமிழாயம், vall...@googlegroups.com, Santhavasantham
On Oct 6, 5:11 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> அன்புடன் நா.க.
>
> பழமை என்றாலும் பழைமை என்றாலும் பொருள் ஒன்றே! ஆனால், பழைமை என்பதே மூலச்சொல்.
> பழமை என்பது போலி.
>

பழு- பழுத்தல் என்னும் வேரில் பிறந்தவை பழமை/பழைமை.

பழமை தொல்காப்பியத்திலேயே வந்துவிடுகிறது.

தொல்காப்பியர் - சொல்லதிகாரச் சூத்திரம் 17:
வண்ணம் வடிவே அளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை என்றா
முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை *பழமை* ஆக்கம் என்றா
இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதல் என்று
அன்ன பிறவும் அதன் பால என்மனார். 17

தொல்காப்பியர் பழைமை என்பதில்லை.
பழைமை என்னும் சொல்லைப் படைத்து
வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

எனவே, பழமை (< பழு-) என்பதன்
போலி பழைமை எனக் கருதுகிறேன்.

தேவாரத்திலும் பழமை உண்டு.
பாரதியார் பல இடங்களில் பழமை
எனப் பாடுகிறார்.

> காட்டு:
>
> அமைச்சன், அமைச்சு என்பதே சரியான மூலச்சொல். ஆனால், அமச்சன், அமச்சு என்பது
> போலி என இலக்கணம் கூறுகிறது.
>

பாலி அகராதியைப் பார்க்கிறேன். அமாத்ய என்றால் தோழன் என்ற பொருள்
வேதத்தில். அது பாலி, பிராகிருதமாக அமச்ச என்றாகிறது என்கின்றனர்
பாலி மொழி அறிஞர்கள்.

அமச்சன் என்னும் வடசொல்லின் போலி அமைச்சன். அமைச்சு என்று
வள்ளுவர் ஆளுகிறார்.

> வள்ளுவத்தில் “பழைமை” என்றொரு அதிகாரம் இருப்பதைக் காணலாம்.
>

ஆம். பழமை தொல்காப்பியம் சொல்லுக்கு இலக்கணம்
வகுக்கும் சொல்லதிகாரத்திலேயே உள்ளது.

அன்புடன்,
நா. கணேசன்

இன்னொன்று: வள்ளுவம் என்பது இக்க்கால வழக்கு.
முன்பெல்லாம் திருவள்ளுவர் என்பதுதான். முற்காலத்தில்
வள்ளுவம் என்றால் சோதிடம்.

>  இருக்கும் வரை தமிழ் அணையில்
>                   அன்புடன்
>                       இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்:  www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>
> 5 அக்டோபர், 2012 7:22 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:

> > --
> > இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
> >               விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

Reply all
Reply to author
Forward
0 new messages