சிமிழ்த்தல் - closing or shutting down the bird trap

396 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 17, 2015, 1:18:48 AM3/17/15
to mint...@googlegroups.com, vallamai

சிமிழ்த்தல் - closing or shutting down the bird trap

குறிஞ்சிப்பாட்டிலும், மலைபடுகடாத்திலும் சங்கினால் ஆன
வளையல்களுக்குப் புள் என்று இருப்பதை நச்சினார்க்கினியர்
விளக்கியிருக்கிறார். குருகு (அ) புள் என்று Egrets இனங்களால்
சங்கு வளைகள் தமிழ் இலக்கியங்களில் ஒரு 1500 வருஷமாய்
அழைக்கப்படுகின்றன. 

புள் எனப்படும் வளையல்கள் என்ற பழைய பொருளை விட்டுவிட்டு
மேலுள்ள இலக்கியங்களின் வேறு பொருள் உள்ளதா? - எனப் பார்க்க முயற்சி. 
புள் என்றால் பறவை ஒலி போல தலைவன் தலைவி எழுப்பும் ஒலிகள் என்று 
விளக்க முற்படும்போது, சிமிழ்த்தல் என்ற குறளின் சொல்லுக்கு 
ஒரு புதிய பொருளை திரு. சரவணன் முன்வைக்கிறார். அதாவது, 
சிமிழ்த்தல் = (வேடர்) ஒலி எழுப்புதல்.
இதனைத் தொடர்ந்து சிமிழ்த்தல் = மிமிக்ரி செய்தல் என்று சங்கப் பாடல்
போல புதுப்பாடல் செய்யும் கவிஞர் ருத்ரா பயன்படுத்தத்
தொடங்கியுள்ளார்.
"...புதல் மறைத்து வேட்டுவன் 
புள் சிமிழ்த்தற்று"

வாழ்க்கையின் தேடலே இங்கு வேட்டை.
நம் மனங்களுக்குள் மறைந்து கொண்டு
நம்மையே (மன சாட்சி) "நடித்துக்காட்டி"
(புள்ளின் குரல் போல் மிமிக்ரி செய்து)

புள் சிமிழ்த்த வேட்டுவன் அம்பு ஆகினளே
புண் உமிழ் நெஞ்சின் குருதி குமிழ‌
[...]
 மறைந்திருந்து பலப்பல புள்ளின் பல்குரல் ஒலித்து ஒரு வேடனைப்போல் 
பறவைஒலி காட்டி (புள் சிமிழ்த்து..மிகிக்ரி செய்து) மாயம் செய்கிறாள்.
அந்த வேடனின் கள்ள அம்பு போல் (அக்குரல்கள் போல்) ஆகினாள் தலைவி.

வேந்தன் சரவணன்:
”இந்த புள் ஒலி பெரும்பாலும் ஏதாகிலும் ஒரு பறவையின் ஒலியாகவே இருக்க வேண்டும். இப்படி பறவையின் ஒலியை எழுப்பி வேடர்கள் பறவைகளைப் பிடிப்பதுமுண்டாம். இதனை வள்ளுவர் கூடா ஒழுக்கத்தில் கூறுகிறார்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274


2015-03-11 9:40 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
அம்மா

புள் என்பது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான ஒரு சங்கேத ஒலிக்குறிப்பாக இருக்கலாம். அதாவது, தலைவன் தான் வந்துவிட்டதை தலைவிக்குத் தெரிவிக்க ஒருவகையான ஒலியை எழுப்புவான். அதைக்கேட்டதும் தலைவி அவனைச் சந்திக்கத் தயாராவாள். 

இந்த புள் ஓசையினை தலைவியின் குடும்பத்தார் அறிந்துவிட்டதனால் தலைவியை வெளியே விடாமல் இற்செறித்தனர். இதனால் தலைவியை தனிமைத் துன்பம் அலைக்கக் கழிக்கத் துவங்கியது. ”

---------------------------

ஆனால், வள்ளுவர் சிமிழ்த்து என்று பயன்படுத்தும் போது வேடன் “மிமிக்ரி”
செய்தான் என்று சொல்லவில்லை.

சிமிழ் என்றால் மூடி உள்ள செப்பு. கண் இமை மூடுதலைச் சிமிட்டுதல் என்கிறோம். 
பறவைக் கண்ணியை மூடிப் புள்ளைப் புள்ளைப் பிடித்தலைச் சிமிழ்த்தல் என்கிறார் 
வள்ளுவர். இங்கே, சிமிழ்த்தல் = மூடுதல், மூடிப் பிடித்தல் என்பது பொருள். 
ஒலி எழுப்புதல், மிமிக்ரி செய்தல் என்றெல்லாம்
சிமிழ்த்தல் என்ற வினைக்கு அர்த்தமில்லை.

இமிழ்- < சிமிழ்-

சிமிழ்த்தல் - closing like a shutter (of a bird trap).
Think of a camera lens shutter while photographing.
(It looks imai 'eye lid' has to do with this verb, cimizttal. And, cimizttal obviously has nothing to
do with mimicry or making simulation of bird sounds).

காழ் - காழ்த்தல், காழ்த்து, காழ்ப்ப, காழ்த்த 
சிமிழ் - சிமிழ்த்தல், சிமிழ்த்து, சிமிழ்ப்ப, சிமிழ்த்த
குழிழ் - குமிழ்த்தல், குமிழ்த்து, குமிழ்ப்ப, குமிழ்த்த
ஊழ் - ஊழ்த்தல், ஊழ்த்து, ஊழ்ப்ப, ஊழ்த்த

முற்றிலே காழ்த்தவன, காழ்க்கும், சிமிழ்த்தன, சிமிழ்க்கும் முதியனவாய் வரும். காழ்த்தல் - முதிர்தல், உறைத்தல். “ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு’’ (வள்ளு.). “காழ்க்கும் வெள்ளிலை’’ (சிந்தா.). சிமிழ்த்தல் - கட்டுதல், அகப்படுத்தல். “சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட’’ (சிந்தா.). குமிழ்;தல் - திரண்டெழல். ஊழ்த்தல் - உதிர்தல், பதனழிதல், மலர்தல். “மரங்களிலைய+ழ்த்து’’, “மதுக்கலந்தூழ்த்து’’ (சிந்தா). “இணரூழ்த்து நாறாமலர்’’ (வள்ளு.). “அலரூழ்க்கும்’’ (தணிகை.). இயைபின்படி விகுதிகள் சேர்தலாற் பலவிதமாகிய பெயர்களும் இங்கே தோன்றும்.

 1246: துவல்-உதிரிப் பூ, அருச்சிக்கும் பூ; 'துவலைச் சிமிழ்த்து நிற்பவள்'-(திருப்.280)- தினைப் புனக்காவலில் வள்ளியம்மை பூ கட்டிக் கொண்டிருந்தது). சிமிழ்த்தல்- கட்டுதல். 'அடியார் இடு துவல்' சம்பந்தர் 377-2.

“முன்னை நான் செய்த வல்வினைச் சிமிழ்ப்பால் மோகவாரியில் மூழ்கினேன்” என உரைக்கின்றார். சிமிழ்த்தல் - பிணித்தல். பறவை வேட்டுவர் புள்ளினங்களை வலைவீசிப் பிணித்தலைச் சிமிழ்த்தல் என்பர். “புதல் மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று” (குறள். 274) என வருதல் காண்க. 

தேடிய கால தூதர் சி்மிழ்த்தல் விட்டொழிவரே
 தேடிய காலதூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே - (உயிரை) 
தேடிப்பற்றிய எமதூதர் கட்டிச் செல்லுதலை விடுத்து நீங்குவரோ? (நீங்கார்)

குறளில் சிமிழ்த்தல் என்றால் விரைந்து மூடுதல் - பறவைக் கண்ணியை
காமிரா ஷட்டர் போல் மூடுதல், கண்ணிமை இமைப்பது போல் விரைந்து
மூடுதல், கட்டுதல்/பிணித்தல் எனப் பொருள். குறளில் சிமிழ்த்தல் என்றால் மிமிக்ரி என்னும்
ஒலிகளை எழுப்புதல் என்ற பொருள் இல்லை என்பது தெளிவு.

குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் வரிகளில் புள் = வளை. இங்கே பறவை ஒலி என்ற பொருள் இல்லை.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274
இக் குறளிலும் வள்ளுவர் எங்கும் பறவை ஒலி என்றோ, அதை மிமிக்ரி செய்கிறான் வேடன் என்றோ
குறிப்பிடவேயில்லை.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Mar 17, 2015, 2:52:24 AM3/17/15
to vallamai
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு உறுதி ஆகாது.  உங்கள் கருத்தை முன்வையுங்கள்.  மற்றவர்கள் கருத்து சரியல்ல என்று கூறவேண்டிய அவசியம் என்ன?

சங்க இலக்கியம் வள்ளுவம் பிற்கால இலக்கியன் என்று காலத்துக்கேற்பப் பொருள் மாறும் வாய்ப்புள்ள நிலையில் புள் என்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்க வாய்ப்புள்ளது. 

கணினிதாசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 17, 2015, 9:07:28 AM3/17/15
to vall...@googlegroups.com


On Monday, March 16, 2015 at 11:52:24 PM UTC-7, மின்னம்பலத்தான் wrote:
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு உறுதி ஆகாது.  உங்கள் கருத்தை முன்வையுங்கள்.  மற்றவர்கள் கருத்து சரியல்ல என்று கூறவேண்டிய அவசியம் என்ன?


சிமிழ்த்தல் என்ற சொல்லுக்கு ஒலிக் குறிப்புச் செய்தல் என்ற பொருள் தமிழ் இலக்கியங்களில் இல்லை
என்று காட்டியுள்ளேன் பேராசிரியரே. அவ்வாறு உங்கள் தமிழ் ஆய்வுகளில் தெரிந்தால் விளக்குங்கள்.
கற்றுக்கொள்கிறோம்.

N. Ganesan

unread,
Mar 17, 2015, 10:02:58 AM3/17/15
to vall...@googlegroups.com, vallamai
சிமிழ்த்தல் என்றால் பறவைகள் ஒலிகள் என்று திருக்குறளிலோ, தமிழ் இலக்கியத்தில் வேறெங்குமோ இல்லை. ~NG

கூடாவொழுக்கம்
274தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து 
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.
பரிமேலழகர் உரை

தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)

******************************************************************
மு.வரதராசனார் உரை
தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
******************************************************************
மணக்குடவர் உரை

தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும்.

அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.

******************************************************************
ஞா. தேவநேயப் பாவாணர்

தவம் மறைந்து அல்லவை செய்தல்-மனத்தை யடக்கும் வலிமையில்லாதவன் தவக்கோலத்தின்கண் மறைந்து நின்று கூடா வொழுக்கம் ஒழுகுதல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்த அற்று-வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும்.

'தவம் ' ஆகு பொருளது.

******************************************************************
Rev. Dr. G.U.Pope Translations
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks,
When, clad in stern ascetic garb, one secret evil works.
******************************************************************
Yogi Shuddhananda Translations
Sinning in saintly show is like
Fowlers in ambush birds to strike.
******************************************************************
கலைஞர் உரை

புதரில்   மறைந்து  கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப்
பிடிப்பதற்கும்,    தவக்கோலத்தில்    இருப்பவர்கள்  தகாத  செயல்களில்
ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

******************************************************************

N. Ganesan

unread,
Mar 17, 2015, 11:11:14 PM3/17/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, Santhavasantham

சீந்து (சிந்து சமவெளிக்குப் பெயர் > ஈந்து (ஈங்கு/ஈஞ்சு - ஈச்ச மரம்)
சுவணம் (சுபர்ண) > உவணம்
சேண்- > ஏணி (ச்ரேணி)
சிறை > இறை
சிறகு > இறகு
சுலவு > உலவு
சுருள் > உருள்
சுழல் > உழல்
சுண்ணம் > உண்ணம் (> உஷ்ணம்)
சமை > அமை
சுளுக்கு > உளுக்கு
சிப்பி > இப்பி
சமணர் > அமணர்
சமர் > அமர்
சேமம் > ஏமம்

....

இந்தப் பட்டியலில் இன்னும் சில சொற்கள்.
சிமிழ்த்தல் > இமிழ்த்தல் (விரைந்து மூடுதல் - பறவைக் கண்ணியை
மூடுதலை சிமிழ்த்தல் என்கிறார் வள்ளுவர்)
சிமையம் > இமையம் (பனி மூடிய இமைய மலை. சிமையம் - மலையுச்சி)
hima (= snow in Sanskrit) is probably from sima in Dravidian, as snow in Iranian is a totally different word. Cf. Sindu > Hindu, Sarasvati > Haraixvati.
Similarly, sima "snow, snow-clad" > hima by Iranian languages such as Pashto.
சிமை > இமை ‘eye lid' (cf. cimital/cimizttal = "to close the eye lids")

விடங்கர் ”gharial" என்னும் சொல் வ்- இழந்து இடங்கர் என்று சங்க இலக்கியத்தில் (உ-ம்: புறநானூறு). பிங்கலந்தை விடங்கர் சொல்லைத் தருகிறது.
இதுபோல், சிமை ச்- இழந்து இமை என்று சங்க காலத்திலேயே ஆகிவிட்டது எனலாம்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Mar 17, 2015, 11:58:26 PM3/17/15
to vallamai

2015-03-17 18:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கற்றுக்கொள்கிறோம்

​ஆராய்ச்சி நெறிமுறையில் ஆய்வாளர்கள் சில திருவிளையாடல்களில் ஈடுபடுவதுண்டு.  அவற்றில் ஒன்று சுத்தியல் எடு என்ற விளையாட்டு.  சிறு குழந்தை கையில் சுட்டியல் கிடைத்தால் அது கிடைத்த பொருளையெல்லாம் அடிக்க வேண்டும் என்று விரும்பும்.  ஆய்வாளர்களும் தங்களுக்குப் பிடித்த ஆய்வு உத்தியை  அவர்கள் கிடைத்த இடங்களில் எல்லாம் பயன்படுத்துவார்கள்

நீங்கள் இந்த வேர்ச்சொல் சுத்தியலைக் கையில் எடுத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் ​பயன்படுத்துவதைக் காணலாம்.  ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்படும் பொருள் ஆய்வு எளிமையாக அமைய ஒரு வரைவுக்குள் அமைப்பது மரபு

சங்க இலக்கியம் சங்கம் மருவிய இலக்கியம் பக்தி இலக்கியம் என்று ஒரு சிறு தொகுப்பைத் தேர்ந்தெடுப்பதும் இதன் அடிப்படையில் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். பக்தி இலக்கியத்துக் சங்ககாலச் சொற்களையும் சங்ககாலத்துக்குச் சிந்துவெளிச் சொல்லும் என்று எடுத்து நீங்கள் கையாளுவது சித்துவிளையாட்டுபோல் தோன்றுகிறது

புள் என்ற சொல்லின் அடிப்படையில் புள்ளினம் என்ற பிரிவே உண்டு.  அக இலக்கியத்தில் தலைவன் தலைவி சந்திப்பில் தலைவன் தலைவியைச் சந்திக்க புள்ளின் ஒலியை எழுப்புவதை ஒரு நடத்தையாகவே சுட்டப்பட்டுள்ளது.  காட்டு மைனாக்கள் குறிஞ்சி நிலத்தில் வேடர்களால் பிடிக்கப்பட்டு வீடுகலில் கூட்டுப்பறவையாக கிள்ளைமொழி பேசுவதும் குறிப்புகளால் காட்டப்படுகிறது. 

பசலை நோயால் வளையல் கழன்றது என்ற இடத்தில் து சங்கில் ஆனது என்று நீங்களே அனுமானித்துக்கொள்வதாகத் தோன்றுகிறது.  குறிஞ்சி நிலத்தில் திணை ஒழுக்கம் பிரிதல் அல்ல நீங்குதல் என்ற தற்காலிகப் பிரிவு மட்டுமே.  அதில் பசலை நோயின் தாக்கம் வளை கழன்றோடும் அளவுக்கு இருக்கும் என்று நீங்கள் நம்புவதாகத்தான் தோன்றுகிறது

உங்களுடைய வலிமையும் திறமையும் மற்றவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாத கோணத்தில் வாதத்தை முன்வைத்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விடாப்பிடியாக உங்கள் நிலைப்பாட்டில் நிற்பது வழக்கம்.  ஆனால் அது ஆய்வுக்கு உகந்ததல்ல.  மாற்றுக் கருத்தில் உள்ள தரவுகள் தகவில என்று நிறுவுதலே ஆய்வின் அடிப்படை

எனவே இங்கு புள் என்றால் பறவையின் ஒலி என்று சுட்டப்பட்ட கருத்தில் உள்ள தரவுகளைத் தகவில என்று நிறுவுதலே பொருத்தமானது.  அதற்கு மாற்றாக சிந்துவெளிவரைக்குச் சென்று சிந்துவெளிச் சொற்களை வலியப் புகுத்தி வாதிடுவது அழகல்ல

கணினிதாசன்

வேந்தன் அரசு

unread,
Mar 18, 2015, 7:03:31 AM3/18/15
to vallamai
கணேசர் சொல்லும் பொருள்தான் எனக்கு ஏற்புடையதாக இருக்கு.புள் = வளை

17 மார்ச், 2015 ’அன்று’ 11:58 பிற்பகல் அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 18, 2015, 7:23:39 AM3/18/15
to vall...@googlegroups.com


On Tuesday, March 17, 2015 at 8:58:26 PM UTC-7, மின்னம்பலத்தான் wrote:

இ-மெயில் ஆராய்ச்சிகளில் தமிழ் ஆய்வுகள் எப்படி செய்ய வேண்டும்
என விளக்குபவர்களில் தாங்கள் முக்கியமானவர்.

கணினியில் தமிழ் என்கோடிங் பற்றியும் தங்கள் கருத்துக்கள் ஆழமானவை.
மாற்றி விடுவீர்கள் என்பது எங்களைப் போன்ற மாணவர்களின் நம்பிக்கை.

நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages