வேடந்தாங்கல்

46 views
Skip to first unread message

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Mar 10, 2015, 1:33:29 PM3/10/15
to mint...@googlegroups.com
வேடந்தாங்கல்
==========================================ருத்ரா

ஒன்று
நைந்த சிறகை ஆட்டி
அழகு பார்த்துக்கொண்டது.

இன்னொன்று
அலகை ஆற‌ அமர கூர் தீட்டி
தினவை தீர்த்துக்கொண்டது.

ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அப்படி பார்த்ததே போதும் என்று
தாகம் தீர்த்துக்கொண்டது.

ஒன்று சிற்றலகு பிளந்து
உள்ளே செந்தளிர் போல் நா அசைய‌
இனிய ஒலியை
ஜாங்கிரி ஜாங்கிரியாய்
பிழிந்து 
காடு கரையெல்லாம் இனிப்பு..

இன்னொன்று வண்ண வண்ணக்கொண்டையை
சிலுப்பி
எதிரே ஏதோ ஒரு மரம் இருப்பதாய்
கொத்தி கொத்தி துளையிட்டது
வெறும் காற்றுப்படலத்தை.

ஒன்று
நேர்குத்தாக‌
தலைகீழாய் பாய்ந்து
அதை கவ்வியே தீருவது
தண்ணீர்ப்பிழம்பின்
மணிவயிற்றைக்கீறி
சிசேரியன் ஆவது போல்
சளக் என்ற சத்தத்தை
அங்கே எதிரொலித்தது.

ஒன்று அசையாமல் கிடந்தது.
அவ்வளவு தான்
அதைப்பார்த்து
மற்றொன்று கா கா ..வென்று
கீறல் விழுந்த கர்ர் சத்தத்தை
காற்றெல்லாம் தெளிக்க‌
அதன் சுற்றம் எல்லாம்
கருஞ்சிறகுக் காடாய் அங்கே குழுமி விட்டது
கருப்புச்சட்டைக்காரர்கள்
திடீரென்று அணிதிரள்வது போல்.

தாய்ப்பறவைகள் எல்லாம்
இன்னும்
தன் பொன் முட்டைக்குள்ளிருக்கும்
பொன் குஞ்சுகளோடு
இந்தப் பிரபஞ்சத்துக்கே
ஒரு பொன் விடியலை 
கிழித்துக்காட்டும் பெருமிதத்தை
அரங்கேற்றி பாசாங்கு செய்தன.

ஊசி அலகு கொண்டு
பன்னீர்ப்பூக்குள்ளும்
தேன் சுவைக்க 
சிறகை வினாடிக்கு
ஆயிரம் அதிர்வுகளாய்
துடித்துத்தீர்த்தது
சிட்டு ஒன்று.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
சிறகொடிந்த‌
அலகொடிந்த‌
ஒலி இழந்த‌
ஒளி இழந்த‌
அந்த பறவைகளின் "வேடந்தாங்கல்" அது.

பாசம் தாங்கியதெல்லாம் போய்
வெறும்
பஞ்சடைத்த 
வைக்கோல் கூளமடைத்த‌
பறவைகளாய்
வேடங்கள் தாங்கிய இடம் அது.

அடைய கூடும் இல்லை.
பறக்க வானமும் இல்லை.
கால்களும் இல்லை.சிறகுகளும் இல்லை.
என்ற எல்லைக்கோடு
அங்கு ஆடிக்கொண்டே இருக்கிறது
"ஓலைக்கிளிகள்"போல.

அந்த தொட்டில்களில்
தங்கள் இதயங்களை மட்டுமே 
போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும்
அந்த சூன்ய தேசத்தில்
அன்பெனும்
பாசாங்குகள் வேடம் கலைந்த‌
ஒரு வேடந்தாங்கல் அது.
ஆம்
அது ஒரு முதியோர் இல்லம்.

====================================================






தேமொழி

unread,
Mar 10, 2015, 10:38:29 PM3/10/15
to mint...@googlegroups.com
முதியோர்கள் சரணாலயம் = பறவைகள் சரணாலயம் 

அந்த தொட்டில்களில்
தங்கள் இதயங்களை மட்டுமே 
போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும்
அந்த சூன்ய தேசத்தில்
அன்பெனும்
பாசாங்குகள் வேடம் கலைந்த‌
ஒரு வேடந்தாங்கல் அது.
ஆம்
அது ஒரு முதியோர் இல்லம்.


மிக ...மிக அருமை கவிஞரே ..

அன்புக்கு ஏங்கும் நெஞ்சங்கள்  ..

.படிக்கும் பொழுதே மனதில் ஒரு வெறுமை சூழும் உணர்வு.


..... தேமொழி

துரை.ந.உ

unread,
Mar 11, 2015, 12:05:44 AM3/11/15
to Groups


.அன்று ஆங்காங்கே  
ஒன்றிரண்டு உதிர்ந்தது - விதி
இன்று ஒரேயடியாய் 
அத்தனையும் உதிர்க்கப்படுவது - சதி..

இப்படியே 
உதிர உறவுகளை
எல்லாம் உதிர்த்த பின்னர்
என்னதான் மீதமிருக்கும் 
நிவாணத்தைத் தவிர !




--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Mar 11, 2015, 8:11:51 PM3/11/15
to mint...@googlegroups.com
 அன்பின் துரை ந.உ அவர்க‌ளே

ர் சேர்க்கவே தேவையில்லை.அது இருந்தால் அரை நிர்வாணம்.அந்த "ர்"
ஆடையையும் கழற்றினால் முழு நிர்வாணம்.

"ஆடையின்றிப் பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமே"

என்று கவியரசு (படம் ..பாவமன்னிப்பு) பாடினானே.முழு ஆடை போர்த்தியவர்கள் கூட முழு ஆசையுடன் தான் இருக்கிறார்கள் என்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோமே.

 அன்பின் துரை ந.உ அவர்க‌ளே

ர் சேர்க்கவே தேவையில்லை.அது இருந்தால் அரை நிர்வாணம்.அந்த "ர்"
ஆடையையும் கழற்றினால் முழு நிர்வாணம்.

"ஆடையின்றிப் பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமே"

என்று கவியரசு (படம் ..பாவமன்னிப்பு) பாடினானே.முழு ஆடை போர்த்தியவர்கள் கூட முழு ஆசையுடன் தான் இருக்கிறார்கள் என்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோமே.

அந்த "ஒற்றைச்சிறகின்" அசைபடம்
 ஒரு ஒப்பற்ற காவியம்.வாழ்க்கையின் இறுதியில்
 "உரித்த கோழியாய்" இற்று விழுந்தவன் 
ஆடி ஆடி ஓய்வு பெற்று
 (ராக்கிங் சேர் அல்லது சாய்வு நாற்காலியில்) 
தன் முற்றுப்புள்ளியை 
எச்சம் இட்டும் செல்லும் பறவையாய் 
ஓய்ந்தே போய்விடும் அற்புதக்காட்சி அது.
அந்தப்படம்
மனதைப் பிசைகிறது.

அன்புடன் ருத்ரா 

On Tuesday, March 10, 2015 at 10:33:29 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Mar 11, 2015, 8:19:19 PM3/11/15
to mint...@googlegroups.com



அன்பின் தேமொழி அவர்களே

"...புதல் மறைத்து வேட்டுவன் 
புள் சிமிழ்த்தற்று"

வாழ்க்கையின் தேடலே இங்கு வேட்டை.
நம் மனங்களுக்குள் மறைந்து கொண்டு
நம்மையே (மன சாட்சி) "நடித்துக்காட்டி"
(புள்ளின் குரல் போல் மிமிக்ரி செய்து)
நம் மீது நாமே அம்பு எய்து விளையாடும்
நிகழ்வுகளின் மொத்தக்குத்தகையே
நம் குடும்ப வாழ்க்கை.

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா


On Tuesday, March 10, 2015 at 10:33:29 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Mar 11, 2015, 8:23:44 PM3/11/15
to mint...@googlegroups.com
அந்த பாடலில் இரண்டாவது வரி

"ஆசையின்றிப் பிறந்தோமா?" என்பது.
விரல் தட்டிய வேகத்தில் விழுந்த பிழை.

ருத்ரா

On Tuesday, March 10, 2015 at 10:33:29 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

N. Kannan

unread,
Mar 11, 2015, 8:39:35 PM3/11/15
to mint...@googlegroups.com

வழக்கம் போல்! ஜாங்கிரி பிழிவது  போல் தமிழைப் பிழிந்து இனிப்பைத் தருகிறீர்கள்.

குழந்தை போல் வயதாகும் பொழுது நமக்கு யாராவது வேண்டியிருக்கிறது. முதியோர் சரணாலயம் எப்பட்டியிருக்குமென்று தெரியவில்லை. அன்புடையீர் அங்கு இல்லாமலா போய் விடுவர்? உறவில்தான் அன்பு இருப்பதாக எண்ணுவது பிழை. உலகம் நம் வீடு.

நாள்.கண்ணன்

N. Ganesan

unread,
Mar 12, 2015, 4:45:53 AM3/12/15
to mint...@googlegroups.com, Santhavasantham, vallamai, housto...@googlegroups.com


On Tuesday, March 10, 2015 at 10:33:29 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
வேடந்தாங்கல்
==========================================ருத்ரா


அருமையான கவிதை. கவிதை முடிவு, மக்கள் நீண்ட நாள் வாழ
மருந்துகளும், விஞ்ஞானமும் துணைசெய்ய மக்கள் என்ன செய்கிறார்கள்
எனக் காட்டுகிறது. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வாழ்க்கையைப்
பார்த்தோமே.

நா. கணேசன்

Innamburan S.Soundararajan

unread,
Mar 12, 2015, 10:35:32 AM3/12/15
to vall...@googlegroups.com, mintamil, Santhavasantham, housto...@googlegroups.com
முதியோர் சரணாலயம் எப்பட்டியிருக்குமென்று தெரியவில்லை.

தெரியுமே.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Mar 12, 2015, 11:43:03 AM3/12/15
to mint...@googlegroups.com

On Mar 12, 2015 10:35 PM, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
>
> முதியோர் சரணாலயம் எப்பட்டியிருக்குமென்று தெரியவில்லை.
>
> தெரியுமே.
> இ

எப்படி இருக்கும்? தாங்குமா?

நா.கண்ணன்

Innamburan S.Soundararajan

unread,
Mar 12, 2015, 11:48:34 AM3/12/15
to mintamil
ஓ!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Mar 12, 2015, 9:43:06 PM3/12/15
to mint...@googlegroups.com

"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ? "

கண்ணதாசச் சித்தர் 
கணக்காய்த் தான் 
பாடியிருக்கிறார்.

மரணம் மனிதனைத்தான்
மிகவும் பயமுறுத்தி இருக்கிறது.
மனிதியை (மனுஷி) இல்லை.
அவளுடைய 
தேசப்படம்
எல்லை தொல்லை எல்லாம்
அந்த பூவும் பொட்டும் தானாம்.
அதனோடு சிதையேறினால் போதும்.

பாருங்கள்
நம் வீடுகள் வாசல்கள் 
நம் ஏடுகள் எழுத்துக்கள்
காடுகள் கடவுள்கள் எல்லாம்
பெண்ணை எங்கோ கொண்டுபோய்
நாடு கடத்தி வைத்திருக்கிறது.
ஆனால் தாய் எனும் நிழல் மட்டும்
ஒட்டியே கிடக்கிறது
பெண் எனும் மரம்
காடுவெட்டிகளின் தீனியாகி விட்டது.
தாய்க்கும் இன்னொரு தாய்க்கும்(மறுமகள்) கூட‌
இங்கே கோடாலி யுத்தம் வந்ததே
அது ஏன்?
சொர்க்கம் எனும்
பிறப்பறுத்த பேரானந்தத்திற்கு
பெண் தான் மாயப் பிசாசாம்.
ஆணின் மனத்துக்குள்ளேயே
அந்த பிசாசு 
தன் புளியமரத்தை வேரூன்றியிருக்கும்போது
வெளியே 
தன் நிழலைக்கூட காண அஞ்சுபவன்
பெண்ணை
அந்நியமாக்கி விடுகிறான்.
தனக்கு மட்டும் "பாஷ்யங்கள்" அடுக்கிக்கொள்பவன்
பெண்ணுக்கு சிதைகள் மட்டுமே அடுக்குகிறான்.

ஆனால் இன்று
அந்த மரணம் என்ற புள்ளி
ஒரு கன(ல்) பரிமாணமாய்
சுட்டெரிக்க எதிரே வந்த போது
அந்த வெளிச்சத்தில் 
கண் கூசி "கண் திறந்தது" போலும்.
அந்த முதியோர் இல்லத்தில்
ஒரே கூட்டில் கூட‌
அங்கே இரண்டு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன
ஏக்கங்களை பறிமாரிக்கொள்ள.
தனிப்பறவைகளுக்கு
சக பறவைகளின் 
நட்பு சடசடக்கும்
இறக்கை சத்தங்களே
ஒரு சமூகத்தின் இதயசத்தங்கள்.

=======================================================ருத்ரா






 










On Tuesday, March 10, 2015 at 10:33:29 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Mar 12, 2015, 11:16:18 PM3/12/15
to mint...@googlegroups.com
என் பால்ய வனத்து "வேடந்தாங்கலே" 
அந்த செடியின் குச்சி தான்.
அங்கு அந்த
கண்ணாடிச்சிறகுகளில் தான்
 என் பிம்பங்கள்
நொறுங்கி நொறுங்கி 
உயிர்த்தெழுந்திருக்கின்றன.
துரை அவர்களின் அசை படம் அற்புதம்

================================ருத்ரா




​தோழன் :)​


​ 
- show quoted text -

-- 
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

-- 
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
me (ருத்ரா change
7
- show quoted text -

On Tuesday, March 10, 2015 at 10:33:29 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Mar 12, 2015, 11:20:38 PM3/12/15
to mint...@googlegroups.com
அன்பின் திரு.துரை ந.உ அவர்களே

என் தோழனை
அந்த "குச்சி" மிட்டாயில் நிறுத்தி
இனிப்பின் பிரபஞ்சத்தை
துடிப்புகளாக்கி விட்டீர்களே துரை அவர்களே!
மகாத்மாவின் அகிம்சையெல்லாம்
புரியாத 
அந்த களிமண் பருவத்தில்
அந்தக்கண்ணாடிபூச்சியின்
நுண்கொம்புகளில்
நுண்கல் பற்றச்செய்து
கனக விசயர்களின் தலையில்
மொத்த இமயத்தையுமே ஏற்றிக்களித்த‌
பொய் மகிழ்ச்சியின்
மெய் நெகிழ்ச்சியை காட்டும்
உங்கள் அரிய இந்த குறும்(பு) படத்துக்கு
தலைப்பு
"கண்ணாடி இதயங்கள்"
பாராட்டுகள்
"அசை படச் செம்மல்" அவர்களே

அன்புடன் ருத்ரா
- show quoted text -

On Tuesday, March 10, 2015 at 10:33:29 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages