சநாதன தர்மம்

40 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 11, 2023, 9:03:27 AMSep 11
to Santhavasantham, Balakrishnan R, Karthikeya Sivasenapathty, Dr. Y. Manikandan
ஹிந்து/இந்து, சனாதன தர்மம் என்னும் சொற்களைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இந்தியாவிலே பல கோணங்களில் பேசப்படுகின்றன. சிந்து என்பது தமிழ்ச்சொல். இது பாரசீக மொழியில் ஹிந்து எனப்படும். சரஸ்வதி ஆறு ஈரானில் ஹைரக்ஸ்வதி, சோம லதையை, ஹோம- (Haoma) ...  என்றும் சொன்முதல் ஸ்- ஹ்- ஆக ஈரானில் திரிந்துவிடுகிறது. ஈரானின் மிகப்பழைய அவெஸ்தன் காதா என்னும் சமய நூல், இந்தியாவின் ரிக்வேதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கிரேக்க பாஷை ஹ்- என்னும் எழுத்துடன் வார்த்தைகளைத் தொடங்காது. எனவே, ஹிண்டுஸ்தான், இந்தியா எனக் கிரேக்கர் பெயரிட்டு அழைத்தனர். பாரசீகத்தில் கிரேக்கர்கள் கி.மு. 800-ல் இருந்தே போர்களை நடாத்தினர். பாரசீகர்கள் ‘இந்தியப் பறவை’ எனக் குறிப்பிட்ட கோழி, கிரேக்கம் சென்றடைந்து. சேவலைக் கேடயத்தில் பொறிக்கும் கலைவடிவங்கள் கிரேக்கக் கலை ம்யூசியங்களில் கண்டு அதிசயிக்கலாம்.

சிந்து என்பது தமிழ்ச்சொல்.
https://groups.google.com/g/santhavasantham/c/T2jROAn-qwI/m/2DGYLaNbBQAJ
இப்பொழுது இந்தியா என்ற பெயர் செய்திகளில் அடிபடுகிறது. சீந்து/சிந்து (ஈஞ்சு மரம், நதி, பூமிக்கு ஆகிவந்தது) > ஹிந்து, கிரேக்க பாஷையில் இந்தியா எல்லாவற்றுக்கும் மூலப்பெயர் சீந்து/சிந்து என்று ஈங்க மரத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லின் பெயர்தான் என்பது அறிக.

சீ(கு) மரப் பாளைகளில் இருந்து வடியும் கள் சீழ்/சீழம் எனப்படுகிறது. கரிய இரும்புக்கு மாழை (< மா ‘கருப்பு, ஒளிர்வது’), நெஞ்சில் கோக்கும் கபத்துக்குக் கோழை ( < கோ-) அதுபோல், சீழம் < சீ-. பின்னர் ஈழம் < சீழம். (Cf. சிறகு:இறகு, சிப்பி:இப்பி).   ...   (see my mails/notes, essaysin the last 30 years on the meaning of Sindu = Indus civilization). சீ- இன்னும் கொங்குநாட்டில் புழங்குகிற சொல். சீமாறு ‘துடைப்பம்’, சீ- > சீகு- சீவக்கட்டை < சீகக்கட்டை. பாகற்காய் > பாவக்காய் ஆதற் போல.  சீ (சீமாறு, சீக்காடு > ஈக்காடு (ஈர்க்காடு)) சீ- (சீந்து/சிந்து ஆறு) > ஈந்து/ஈங்கு/ஈஞ்சு, ... ஈர்ந்தூர் கிழான். இவன் ஈரோடு அருகே வாழ்ந்த கிழான். ஈங்கியூர் எனப்படுகிறது. ஈஞ்சன் கூட்டம் உண்டு. புலவர் அ.மு. குழந்தை ஈந்தூர் எங்கே எனக் காட்டியுள்ளார்.

ஹிந்து என்பது சிந்து நதிக்குக் கிழக்கே, தெற்கே உள்ள நிலங்களின் பெயராக சுமார் 3000+ ஆண்டுகளாக உலகெங்கும் இருக்கிறது. இந்தியா என்று 2500+ ஆண்டாய் ஐரோப்பிய மொழிகளுக்குக் கிரேக்கர் அமைத்தனர். இது இந்தியாவின் அரசியல் அமைப்பிலும் உள்ள பெயராக விளங்குகிறது. உ-ம்: Govt. of India என ஆங்கிலத்தில் எழுதுவது நடைமுறை. ஹிந்து என்ற சொல் ஹிந்து சமயத்துக்கு ஏற்பட்டது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் என்று பல எழுத்தாளர், டிவி பேச்சாளர், அரசியல் கக்ஷியினர் தமிழ் மக்களுக்குச் சொல்லிவருவதைக் காண்கிறோம். அது பிழைபட்ட கருத்து. ஹிந்து சமயத்தினர். ஹிந்து ராஜ்யம், ஹிந்து ராஜா ... என்பதெல்லாம் இந்தியாவின் பெரும்பான்மைச் சமயத்தைக் குறிப்பிடும் சொற்களாக உருவெடுத்தது விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலே தான். கன்னடம், ஸம்ஸ்கிருதம், தமிழ் கல்வெட்டுகளிலே இதைக் காணலாகும். தமிழ்க் கல்வெட்டுகளில், ஹிந்து என்ற சொல் “இந்து” எனக் குறிப்பிடப்படுகிறது.

சனாதன தர்மம்
-----------------------------

தமிழ் மரபில் சனாதன முனிவர் முதன்முதலாக, தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் கேட்கும் நால்வரில் ஒருவராக வருகிறார். தட்சிணாமூர்த்தி அறம்(தர்மம்) கற்பிக்கும் நால்வர் பற்றி ஏராளமான தேவாரப் பாடல்கள் உண்டு. அப்பர் சுவாமிகள் தேவாரம் ஒன்று பார்ப்போம். மற்ற பாடல்களைத் தொகுக்கலாம்.

அடர்ப்பரிய விராவணனை யருவரைக்கீ ழடர்த்தவனே யென்கின் றாளால்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் ணீற்றவனே யென்கின் றாளால்
மடற்பெரிய ஆலின்கீ ழறநால்வர்க் கன்றுரைத்தா னென்கின் றாளால்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

"கல்லாலின் புடையமர்ந்து  நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி
 வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
மறைக்கு
 எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச்
 சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்"

                                - பரஞ்ச胻தி முனிவர்: திருவிளையாடற் புராணம்.

http://www.geocities.ws/shivaperumant/dhakshinaamoorthy.html

தமிழின் சைவ இலக்கியங்கள், தலபுராணங்களைத் தேடினால் இந்த நால்வரின் பெயர்களைக் குறிப்பிடும் பாடல்களை எடுக்கலாம். தமிழின் பழைய நிகண்டாகிய பிங்கலந்தையில் சனாதனன் என்றால் இந்த நால்வரில் ஒருவர் எனக் கண்டிருக்கிறது. சனாதனன் என்றால் சிவபெருமான் என மச்சபுராணம் வரையறுக்கிறது.

MTL: சனாதனன் caṉātaṉaṉ , n. < id. 1. Eternal one, as the Ancient; அனாதியாகவுள்ளவன். உறுசனா தனராய் (மச்சபு. பிரமாண். 17). 2. A sage, one of four caṉakātiyar, q.v.; சனகாதியருள் ஒருவராகிய முனிவர். (பிங்.)


ஆழ்வார் பாசுரங்களை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் திருவரங்கம், காஞ்சி போன்ற நகரங்களில் எழுதியது ஸ்ரீமத் பாகவதம். தமிழில் திருக்குறள் போல, ஸம்ஸ்கிருதத்தில் எல்லோரும் அறிந்த, புகழ்பெற்ற இலக்கியம் ஸ்ரீமத் பாகவதம் . அதிலும், தட்சிணாமூர்த்தியின் அடியார்கள் நால்வரின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன.
பிரம்மாவின் மனதில் இருந்து இடையறாத தவத்தினால் உதித்த சனக சனந்தன சனாதன சனத்குமாரர்கள், முந்தைய கல்பத்தில் பிரளயத்தினால் நசித்த ஞானத்தை உலகிற்கு அளித்த அவதாரம்.”

திரு. ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்:
> சதுர்வேதம், சந்திரமவுலி, சர்க்கார், சக்கரம், சக்தி, சங்கரன், சங்கராசார்யன் என்று எத்தனையோ அயற்சொல்லாட்சிகளை
> கையாளும் மகாகவி பாரதியாரும் தனது கவிதைகளில் சனாதனம் என்ற பதத்தைப் பயன்படுத்தவே இல்லை.

> இவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கிப் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப்பரப்பு

> நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சந்தித்திராத சொல் சனாதனம். https://angusam.com/the-rhetoric-of-sanathanam/


Not really. பிங்கலந்தை நிகண்டிலேயே சனாதனன் வந்துவிடுகிறது. சனாதனன் = சிவபிரான் என மச்சபுராணம் புகழுகிறது. சைவ, வைணவ இலக்கியங்களில் தமிழ்நாட்டில் அறம்/தர்மம் உபதேசம் பெற்ற நான்கு முனிவருள் ஒருவர் பெயர் சனாதனன்.  


19-ம் நூற்றாண்டிலே, சனாதன தர்மம் என ஹிந்து சமயத்துக்கு வடநாட்டில் பெயர் ஏற்படுகிறது.  https://en.wikipedia.org/wiki/Sanātana_Dharma  .   சனாதன தர்மம் = ஹிந்து சமயம் என அழகாகப் பாடல் தந்தவர் பாரதியார் ஆவார் (பாரதி அறுபத்தாறு). ஒரு கீர்த்தனையில் சனாதனன் எனப் பாடியுள்ளார். சுவாமி விவேகானந்தரைப் பற்றி எழுதிய கட்டுரையில் சனாதன தர்மத்தினை அமெரிக்காவில் பரப்பி, உலகத்திற்கு பாரத நாட்டின் அறிவை ஊட்டியவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் விவேகானந்தர் என விளக்கியவர் பாரதியார். இவற்றையெல்லாம் இவ்விழையில் பார்ப்போம். வேத நெறி “Way of the Veda" எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில் அழைக்கும் தொடர் தான் சநாதன தர்மம் என வடநாட்டில் 19-ம் நூற்றாண்டில் அழைத்தனர் என மரபின்மைந்தன் முத்தையா (கோவை), நிரஞ்சன் பாரதி (சென்னை) குறிப்பிடுகின்றனர்.

பிற பின்!
நா. கணேசன்

சனாதனம்என்ற சொல்லாட்சி!

சங்க இலக்கியம் முதல் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற்பதம் ‌. “சனாதனம்”!
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவேஎன்பது தொல்காப்பிய இலக்கணம். (தொல்.சொல். 157) எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும்.

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.’ ( தொல். எச்ச.‌‌1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும் தொல்காப்பியர் எச்சவியலில் பேசுகிறார். வடசொற்களைத் தமிழில் பயன்படுத்தும் முறை பற்றியும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.” ( தொல். எச்ச.‌5)

அண்மையில்சனாதனம்என்றசொல்”; அதன் பொருள் மற்றும் அச்சொற்பொருள் சார்ந்த கருத்தியல் மற்றும் கோட்பாடுகள் பற்றி பொதுவெளியில் பரவலாக, பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.‌

எனவே இச்சொல் தமிழ் இலக்கியப் பரப்பில் எப்போது / எங்கு / யாரால் பயன்படுத்தப்பட்டது என்ற தேடல் தேவைப்படுகிறது. இதில் நம்முடைய நோக்கம் இச்சொற்பயன்பாடு தமிழில் இருக்கிறதா? இருந்தால் எத்தகைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் பதிவு செய்வதே ஆகும்.‌

இதற்காகத் தமிழ் இலக்கியப் பரப்பைப் பழந்தமிழ் இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவு செய்யலாம்.

இந்தத் தேடலில் நமக்கு உற்ற துணையாகப் பயன்படுவது கணிதப் பேராசிரியர் பா.‌பரமசிவம் மிகமுயன்று தொகுத்து இணையத்தில் அனைவரது பயன்பாட்டிற்குமாக வெளியிட்டுள்ள தொடரடைவுகள் என்பதை நன்றியுடன் பதிவு செய்வது நமது கடமையாகும்.
சகரக் கிளவியும் அதனோரற்றே  அஐஔ எனும் மூன்றலங் கடையேஎன்று இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தில்சனாதனம்என்ற சொல் இருக்கிறதா என்று தேடுவதே நியாயம் இல்லை தான்.‌ இருந்தாலும்இல்லைஎன்று பதிவிடும் முன்பு முறைப்படி தேடிப்பார்த்தேன். “இல்லை”.

சங்க இலக்கியம் எந்தவொரு தனிச் சமயத்தையும் தனியொரு கடவுளையும் முன்னிறுத்தவில்லை.‌எனினும் திணை சார்ந்த கடவுள்கள்; ஆண்பெண் தெய்வங்கள்; நம்பிக்கை மரபுகளுக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெறுவதால் சனாதனம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகிறதா என்று தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது . அவ்வாறு தேடிப்பார்த்ததில் கிடைத்த விடைஇல்லைஎன்பதுதான். (பரிபாடல் திருமுருகாற்றுப்படை யிலும் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) சங்க இலக்கியங்களில் சகடம், சதுக்கம், சரணத்தர், சலதாரி, சனம், சங்கம், சக்கரம், சங்கு, சபை, சந்தனம், சமயத்தார் போன்ற சொற்கள் உள்ளன. ஆனால் சனாதனம் என்றசொல் இல்லவே இல்லை.

அடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அடிப்படையில் நீதி நூல்கள். சனாதனம் என்பது ஒருதர்மம்என்பதைக் கருத்தில் கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்களின் தொடரடைவுகளைத் தேடினேன்.இதில் திருக்குறள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி போன்ற நூல்கள் அடங்கும். சனாதனம் என்ற சொல்லாடல் இந்நூல்கள் எவற்றிலும் இடம்பெறவில்லை. திருக்குறள் என்ற உலகப்பொதுமறைஇதன் சாரம்; அதன் சாரம்என்று வதந்திகளைப் பரப்புவோர்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

இரட்டைக் காப்பியங்கள்என்று போற்றப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் பல்வேறு சமயக்கோட்பாடுகள் உள்ளன.‌ ஆனால் சனாதனம் என்றசொல் இடம் பெறவே இல்லை.

மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்களின் சமயக்கோட்பாடுகள் பற்றி கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்தச் சமயம். மணிமேகலை சந்தித்த அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி,வைசேடிகவாதி, பூதவாதி என்றஇந்தச் சமயக்கணக்கர்களில் யார் சனாதனவாதி என்பது தெரியவில்லை.‌‌ ஏனெனில் சனாதனம் என்ற‌‌ சொல்லாடலேமணிமேகலையில் இல்லை. சைவம், வைணவம், வேதம் ஆகியவை தனித்தனிக் கோட்பாடுகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ஐம்பெரும் காப்பியங்களில் அடங்கிய ஏனைய காப்பியங்களானசீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல் இடம்பெறவில்லை . இந்த நூல்கள் சமணப் பௌத்தக் கருத்தியல்கள் சார்ந்தன.‌சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி ஆகிய இலக்கியங்கள் ஒருவகையில் வடபுலத் தொடர்பு உள்ளவையே ஆகும்!

மூவா முதலா உலகம்என்றகடவுள் வாழ்த்தோடு தொடங்கி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும்; நன்றி மறவாமை போன்ற அறக்கருத்துகளையும் வலியுறுத்தும் சீவக சிந்தாமணியிலும் சனாதனம் இல்லை! வளையாபதி குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல் இல்லை!

கம்பராமாயணம் தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களில் இருக்கக்கூடுமோ என்ற வினாவுடன் பாண்டியராஜாவின் தொடரடைவை துழாவினேன். வியப்பாகத்தான் இருக்கிறது இவை எவற்றிலுமே சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை.

கம்பராமாயணத்தில் சலம், சனம், சழக்கு, சவரி, சழக்கியர் எல்லாம் இருக்கிறது. ஆனால் சனாதனமோ சனாதனியோ இல்லவே இல்லை. மூவர் தேவாரத்திலும் அதே கதை தான்.‌சனாதனம் என்றசொல் இல்லவே இல்லை.‌ சைவக் குரவர்களாகிய நாயன்மார்கள் பற்றிய சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் சதுக்கம், சதுர், சதயம், சந்தனம், சந்திரன், சபை, சமயம், சரணம் என்று வடமொழி சார்ந்த சகர முதலானஏராளமான சொற்கள் உள்ளன; ஆனால் சனாதனம் இல்லை.

இந்தியத் துணைக் கண்டத்தின் மிகமுக்கியமான வைணவ இலக்கியத். தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சமணம், சமயம், சரணம், சன்மம் என்பது போன்ற பல சொற்கள் இருந்தாலும் சனாதனம் இல்லை.

ஐஞ்சிறுங்காப்பியங்களிலும் சனாதனம் இல்லை.பெருங்கதையிலும் இல்லை. வில்லிபாரதத்தில் சன்பதம் இருக்கிறது ஆனால் சனாதனம் இல்லை.

சன்மார்க்கம், சற்குரு, சமரசம் போன்றசொல்லாட்சிகள் இடம்பெறும் திருவருட்பாவிலும் சனாதனம் இல்லை. தாயுமானவர் பாடல்களிலும் இல்லை. கலிங்கத்துப்பரணியில்சலுக்குமுலுக்குஎன்ற சொல்லாட்சி கூட இருக்கிறது; ஆனால் சனாதனம் இல்லை.

நளவெண்பா, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, அபிராமி அந்தாதி, மதுரைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் எவற்றிலும் சனாதனம் இல்லை.

சதுர்வேதம், சந்திரமவுலி, சர்க்கார், சக்கரம், சக்தி, சங்கரன், சங்கராசார்யன் என்று எத்தனையோ அயற்சொல்லாட்சிகளை கையாளும் மகாகவி பாரதியாரும் தனது கவிதைகளில் சனாதனம் என்ற பதத்தைப் பயன்படுத்தவே இல்லை.

இவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கிப் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப்பரப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சந்தித்திராத சொல் சனாதனம்.

மேலும் கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலி யில் தேடிப் பார்த்தேன். அதிலும் சனாதன/ சநாதன/ ஸனாதன போன்ற சொற்பயன்பாடு எதனையும் காண இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்காலத் தமிழ் உரைநடைகளில், புதினங்களில், ஏனைய புனைவு இலக்கியங்களில், திறனாய்வுகளில் சனாதனம் என்ற சொல் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது; சனாதனம் சார்ந்த கருத்தியலுக்கு எதிரான கருத்தியல்கள் எவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தனதுபாதையில் பதிந்த அடிகள்பாகம் 1 (அத்தியாயம் 1-16) நூலின் முன்னுரையில் சனாதனம் பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்தைப் பதிவிட்டு முடிக்கிறேன்.

ஒரு தேசிய வரலாற்றில் எந்த ஒரு மக்கள் இயக்கமும் பெண்கள் சம்பந்தப்படாததாக இருக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் இயக்கத்தை அச்சாணியாக நின்று இயக்குபவர்கள் பெண்களே என்றாலும் கூட மிகையில்லை. ஏனெனில் அதன் சாதக, பாதகமான பாதிப்புக்களை முழுமையாகத் தாங்குபவர்களும் அவர்களே தாம். ஆனால் ஒரு தேசிய வரலாற்றையோ, சமுதாய வரலாற்றையோ கணிப்பவர்களும், பதிவு செய்பவர்களும் பெண்ணின் முக்கியத்துவத்தை அத்துணை உயர்வாகக் கருதுவதில்லை.”

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் சனாதனச் சமயக் கொடுமைகளுக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாகி ஒடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை மீறுவதற்கே போராளியாக மாறவேண்டி இருக்கிறது.”

சனாதனம் என்றகருத்தியலின் உள்ளடக்கம் அதன் சமூகப் பொருளாதார அரசியல் பரிமாணங்கள் பற்றியதாகும்.

சிந்து வெளி ஆய்வாளர்
 R. பாலகிருஷ்ணன் எஸ்
(முகநூலில்)






N. Ganesan

unread,
Sep 12, 2023, 7:56:10 AMSep 12
to Santhavasantham, Dr. Y. Manikandan
பாரத தேசத்தவர்களுக்கு ஐரோப்பியர் தொடர்பினால், பொதுவான கல்லூரிக் கல்வி, மற்ற உலகச் சமயங்கள் பற்றிய அறிவு மிகலாயிற்று. 5000 ஆண்டுகளாக இந்திய உபகண்டத்தில் உள்ள ஹிந்து சமயத்தை நவீனப்படுத்தும் முயற்சிகளில் இளைஞர்களும், அறிஞர்களும் உழைக்கலாயினர். வட இந்தியாவில் மேற்கே பஞ்சாபில், குஜராத்தைச் சார்ந்த தயானந்த சரசுவதி ஆர்ய சமாஜம் இயக்கம், கிழக்கே வங்காள மறுமலர்ச்சி தோன்றி வளர்ந்தன. ஹிந்து சமயம் என்ற பெயருக்கு இணையானதாக, “சனாதன தர்மம்” என்ற புதுப்பெயரை (neologism) 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துறவிகள் அமைத்துத் தந்தனர். இது வேத நெறி எனப்படுவது என விளக்கினர். சனாதன தர்மம் பற்றி ராமகிருஷ்ணர் இயக்கம் செய்த முன்னெடுப்புகளால், பிரம்ம சமாஜம் இயக்கம் வலுவிழந்தது.

கதாமிருதம் என்னும் தொகுப்பில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “சனாதன தர்மம்” என்று ஹிந்து சமயத்தைப் புகழுகிறார். அவரது சீடர், சுவாமி விவேகானந்தர், சனாதன சமயம் “Eternal Religion" என்று அமெரிக்காவில் நிகழ்ந்த மாநாட்டில் குறிப்பிட்டு விவரித்தார்.  அகில உலகம் எங்கும் சனாதன தர்மம் “Eternal Religion" என்கிற பெயர் முதன்முறையாகப் பரவலானது. விவேகானந்தரின் அமெரிக்க விஜயம் பற்றி எழுதிய கட்டுரையில் பாரதியார் “சனாதன தர்மம்” என்ற சொல்லை ஆளுகிறார். பாரதியிடம் வங்காள மறுமலர்ச்சியின் தாக்கம் அதிகம். சகோதரி நிவேதிதை அவரது குரு. பாரதமாதா தத்துவத்தைத் தமிழருக்குப் போதித்த தலைவர்களில் பாரதிக்கு முக்கிய இடமுண்டு: http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “சனாதன தர்மம்” பெருமையை அக்டோபர் 20, 1884-ம் தேதியன்று விளக்கினார்:
 “The Hindu religion alone is the Sanatana Dharma. The various creeds you hear of nowadays have come into existence through the will of God and will disappear again through His will. They will not last forever. Therefore I say, ‘I bow down at the feet of even the modern devotees.’ The Hindu religion has always existed and will always exist.” ராமகிருஷ்ண பரமஹம்சர், அக்டோபர் 20, 1884.

ராமகிருஷ்ணரின் புகழை உலகில் நிலைபெறச் செய்தவர் விவேகானந்தர். அவர் தான் சனாதன தர்மத்தை உலகில் நிலைநிறுத்தியவர். விவேகானனதரைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள், கட்டுரைகள் உண்டு. உ-ம்:
Vivekananda asserts that perhaps the most important idea he gleaned from Ramakrishna was that the religions do not contradict one another. He explains this view in his own words as follows: “They are but various phases of one eternal religion. That one eternal religion is applied to different planes of existence, is applied to the opinions of various minds and various races.” Swami Vivekananda. Reform Hinduism, Nationalism and Scientistic Yoga, Interdisciplinary Journal for Religion and Transformation in Contemporary Society
Author: Karl Baier, 18 Dec 2019
https://brill.com/view/journals/jrat/5/1/article-p230_12.xml?language=en
Swami Vivekananda, The Guru of Sanatana Dharma:
https://www.facebook.com/profile.php?id=100063575381134

Grounding Religious Cosmopolitanism: Three Phases in the Evolution of Vivekananda’s Doctrine of the Harmony of Religions
https://academic.oup.com/book/38781/chapter-abstract/337596972?redirectedFrom=fulltext

Swami Vivekananda and the Modernisation of Hinduism,
Ed. by William Radice. Oxford University Press. 1998

Zavos, John: Emergence of Hindu Nationalism in India. Oxford University Press. 2000

Anantanand Rambachan, The Limits of Scripture: Vivekananda's Reinterpretation of the Vedas
(University of Hawaii Press, 1994)

Sharma, Arvind: The Concept of Universal Religion in Modern Hindu Thought.
Houndmills: Macmillan 1998.

Sharma, Jyoirmaya: A Restatement of Religion. Swami Vivekananda and the Making of
Hindu Nationalism. New Haven: Yale University Press 2013.

Vivekananda, Swami: The Complete Works of Swami Vivekananda. Mayavati Memorial
Edition. Eight Volumes. 11th Reprint of the first subsidized edition (1989). Kolkata:
Advaita Ashrama 2006 (cited as VCW).
etc.,

அரவிந்தர் ஆங்கிலேயர் இட்ட சிறையில் இருந்து மீண்டவுடன் பேசிய பிரசங்கம் பிரசித்தி பெற்றது. அதனில் சனாதன தர்மம் பற்றிச் சொல்லி முடிக்கிறார்:
”The agnostic and the sceptic in you have been answered, for I have given you proofs within and without you, physical and subjective, which have satisfied you. When you go forth, speak to your nation always this word, that it is for the Sanatan Dharma that they arise, it is for the world and not for themselves that they arise. I am giving them freedom for the service of the world. When therefore it is said that India shall rise, it is the Sanatan Dharma that shall be great.

When it is said that India shall expand and extend herself, it is the Sanatan Dharma that shall expand and extend itself over the world. It is for the Dharma and by the Dharma that India exists. To magnify the religion means to magnify the country. I have shown you that I am everywhere and in all men and in all things, that I am in this movement and I am not only working in those who are striving for the country but I am working also in those who oppose them and stand in their path. I am working in everybody and whatever men may think or do, they can do nothing but help in my purpose.

They also are doing my work, they are not my enemies but my instruments. In all your actions you are moving forward without knowing which way you move. You mean to do one thing and you do another. You aim at a result and your efforts subserve one that is different or contrary. It is Shakti that has gone forth and entered into the people. Since long ago I have been preparing this uprising and now the time has come and it is I who will lead it to its fulfilment."

This then is what I have to say to you. The name of your society is "Society for the Protection of Religion". Well, the protection of the religion, the protection and upraising before the world of the Hindu religion, that is the work before us. But what is the Hindu religion ? What is this religion which we call Sanatan, eternal ? It is the Hindu religion only because the Hindu nation has kept it, because in this Peninsula it grew up in the seclusion of the sea and the Himalayas, because in this sacred and ancient land it was given as a charge to the Aryan race to preserve through the ages.

But it is not circumscribed by the confines of a single country, it does not belong peculiarly and for ever to a bounded part of the world. That which we call the Hindu religion is really the eternal religion, because it is the universal religion which embraces all others. If a religion is not universal, it cannot be eternal. A narrow religion, a sectarian religion, an exclusive religion can live only for a limited time and a limited purpose. This is the one religion that can triumph over materialism by including and anticipating the discoveries of science and the speculations of philosophy.

It is the one religion which impresses on mankind the closeness of God to us and embraces in its compass all the possible means by which man can approach God. It is the one religion which insists every moment on the truth which all religions acknowledge that He is in all men and all things and that in Him we move and have our being. It is the one religion which enables us not only to understand and believe this truth but to realise it with every part of our being. It is the one religion which shows the world what the world is, that it is the Lila of Vasudeva. It is the one religion which shows us how we can best play our part in that Lila, its subtlest laws and its noblest rules. It is the one religion which does not separate life in any smallest detail from religion, which knows what immortality is and has utterly removed from us the reality of death.

This is the word that has been put into my mouth to speak to you today. What I intended to speak has been put away from me, and beyond what is given to me I have nothing to say. It is only the word that is put into me that I can speak to you. That word is now finished. I spoke once before with this force in me and I said then that this movement is not a political movement and that nationalism is not politics but a religion, a creed, a faith. I say it again today, but I put it in another way. I say no longer that nationalism is a creed, a religion, a faith; I say that it is the Sanatan Dharma which for us is nationalism. This Hindu nation was born with the Sanatan Dharma, with it it moves and with it it grows. When the Sanatan Dharma declines, then the nation declines, and if the Sanatan Dharma were capable of perishing, with the Sanatan Dharma it would perish.

The Sanatan Dharma, that is nationalism. This is the message that I have to speak to you. ” Aurobindo Ghosh, 30 May 1909.
https://en.wikisource.org/wiki/Uttarpara_Speech
An effect of this famous speech by Sri. Aurobindo: https://timesofindia.indiatimes.com/blogs/india-to-bharat/the-famous-uttarpara-speech-of-sri-aurobindo/

மரபின் மைந்தன், சநாதன தர்மம் பற்றி எழுதியுள்ளார்,
https://vimarisanam.com/2022/12/11/அற்புதமான-ஒரு-விளக்கம்/

சனாதன தர்மம், விவேகானந்தரின் அமெரிக்க விஜயம் பற்றிப் பாரதியார் கட்டுரை பார்ப்போம்.
NG

N. Ganesan

unread,
Sep 13, 2023, 6:21:14 AMSep 13
to Santhavasantham, Dr. Y. Manikandan
விவேகானந்தர் பற்றிப் பாரதியார்
---------------------------

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு மலர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை 4 வெளியிட்டுள்ளது. அதில் விவேகானந்தரைப் பற்றி பாரதி பல்வேறு சமயங்களில் எழுதியவற்றில் சிறந்த வாக்கியங்களைத் தொகுத்துள்ளனர். இந்த ஒன்பது பகுதிகளும் உள்ள முழுக்கட்டுரைகள் இணையத்தில் கொண்டுவர வேண்டும். சனாதன தர்மத்தை உலகுக்கு விளக்கிய ஒளிவிளக்கு சுவாமி விவேகானனதர், இந்திய விடுதலை இயக்கத்துக்கு வித்திட்டவர் என்று பாரதியார் கணித்துக் கூறியுள்ளார்.

மதுரை இராமகிருஷ்ணர் திருமடத்தில் இருக்கும் சுவாமி கமலாத்மானந்தர் 4 பாகங்களாக வெளியிட்ட நூல்கள், மேற்சொன்ன இரு சனாதன ஞானியர் வாழ்க்கையை அறிய உதவுபவை. ”சுவாமி விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை” (4 தொகுதிகள்), ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை- 4

~NG

1.  ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.

2.  சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்கோ எல்லையே கிடையாது.

கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்து மதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானந்தரே ஆவார் என்று தோன்றுகிறது.

‘அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பராசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அளித்து அருள் புரிந்துவிட்டாள்.  அவர் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.

‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு இலட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன் வெற்றிக்கொடியை நிலைநாட்ட வேண்டும்’ என்று, இறைவனின் சங்கல்பம் இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகுதான் வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

4. ‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்.

5. ஸ்ரீசுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில், நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப்பற்றி, சப்த மேகங்கள் ஒன்றுகூடி மழை பொழிந்ததுபோல் சண்டமாருதமாகச் சொற்பொழிவு செய்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வென்று வெற்றிவீரராக இந்தியாவிற்குத் திரும்பி வருவதற்கு போஸ்டன் என்ற துறைமுகத்தில் கப்பலில் ஏறினார்.

6. விவேகானந்தரின் சத்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களே சமீபத்தில் தோன்றி மறைந்த மகான்கள்.

‘இவர்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர்?’ என்று வகுத்துக் கூறுவதற்கு இது சமயம் இல்லை. அதற்கு நான் தகுதி உடையவனுமில்லை.

சுக்கிர கிரகத்திற்கும், புதன் கிரகத்திற்கும் உள்ள உயர்வு தாழ்வு பற்றிப் பேசுவதற்கு, பாறைக்குள் இருக்கும் ஒரு தேரைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

சுயநலம், ஆசை, அச்சம் என்ற குணங்கள் நிறைந்த உலக மாயை என்ற பாறைக்குள் இருக்கும் தேரையாகிய நான், ஞானம் என்ற ஆகாயத்தில் சர்வ சுதந்திரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஜோதி நட்சத்திரங்களாகிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கேசவசந்திரர் முதலானவர்களின் உயர்வு-தாழ்வு பற்றி எப்படி வகுத்துச் சொல்ல முடியும்?

ஆனால் அந்தப் பாறையிலிருந்தும் ஒரு சிறிய பிளவின் மூலம், ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஒளியைப் பார்த்து மகிழும் தன்மை தேரைக்கும் இருக்கலாம் அல்லவா?

அதுபோல் எனக்குத் தெரிந்த வரையில், விவேகானந்தச் சுடரின் பெருமையைச் சிறிது பேசத் தொடங்குகிறேன்.

உண்மையான புருஷத் தன்மையும், வீரநெறியும் மனித வடிவும் எடுத்தது போல் அவதரித்தவர் விவேகானந்தர். அவருக்கு அவருடைய தாய் தந்தைகள், ‘வீரேஸ்வரன்’, ‘நரேந்திரன்’ என்ற பெயர்கள் வைத்தது, மிகவும் பொருத்தமானது அல்லவா?

‘இந்த ஜகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை’ என்ற மகத்தான கொள்கையை, உலக மக்களுக்கு எடுத்துப் போதனை செய்வதற்கு வந்த இந்த மகான், ‘இந்த ஜகத்தில் தெய்வமே கிடையாது’ என்ற கொள்கையை சிறிது  காலம் வைத்திருந்தார். ஆனால், இந்தக் கொள்கை சிறிது காலத்திற்குப் பிறகு அவரிடமிருந்து நீங்கிவிட்டது.

தட்சிணேஸ்வரம், கல்கத்தாவிக்கு வடக்கில் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த தட்சிணேஸ்வரத்திற்கு நரேந்திரன் ஒரு நாள் சென்று, மகாஞானியைத் தரிசித்தார். அந்த ஞானிதான் புகழ் பெற்ற ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்று சொல்ல வேண்டியதில்லை.

7. ‘உலகத்திற்கெல்லாம் ஒரு புதிய ஒளி கொடுப்பதற்குப் பிறந்த மகான் இவர்!’ என்பது, அந்த ஞானியின் திருவுள்ளத்தில் தோன்றிவிட்டது.

அப்போது பரமஹம்சர், நரேந்திரருக்கு ஞானநெறி உணர்த்தினார்.

அதனால் பிரம்மத் தேனை நரேந்திரர் முற்றிலும் அருந்தி, வெறிகொள்ளும்படி செய்துவிட்டார் பரமஹம்சர். அந்த மகா ஞானநெறி, நரேந்திரரை விட்டு ஒருபோதும் நீங்கவில்லை.

பிரம்மக் கள்ளுண்டு, இந்த நரேந்திரப் பரதேசி பிதற்றிய வசனங்களே இனி, எந்நாளும் அழிவில்லாத தெய்வ வசனங்களாகப் பெருஞ்ஞானிகளால் போற்றப்பட்டு வருகின்றன.

ஞானோபதேசம் பெற்ற காலம் முதல், நரேந்திரர் தனது பழைய இயல்புகளெல்லாம் மாறிப் புதிய ஒரு மனிதராகிவிட்டார்.

தாய்க்குக் குழந்தையின் மீது இருக்கும் அன்பைக் காட்டிலும், நரேந்திரர் மீது பரமஹம்சர் அதிக அன்பு செலுத்தினார்.

சுமார் ஆறு வருட காலம் நரேந்திரர், தன்னுடைய குருவுடன் செலவிட்டார். இந்த ஆறு வருடங்களில்தான் - உலகம் முழுவதையும் கலக்கத் தோன்றிய அற்புதப் பெரிய எண்ணங்கள் இவர் மனதில் உதித்து நிலைப்பெற்றன.

8. வேறு பல சாதாரண சந்நியாசிகளைப் போன்று, சுவாமி விவேகானந்தர் பெண்களைக் குறித்துத் தாழ்வான, கெட்ட அபிப்பிராயங்கள் உடையவர் அல்லர்.

‘எல்லா ஜீவாத்மாக்களும், முக்கியமாக எல்லாவிதமான மனிதர்களும், தெய்வங்களைப் போலவே கருதி நடத்துவதற்கு உரியவர்’ என்ற தன் கொள்கையை, சுவாமி விவேகானந்தர் மிகவும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

சுவாமி விவேகானந்தர், ‘நம்முடைய நாட்டிற்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் - அதற்கு மூலாதாரமாக நம்முடைய பெண்களுக்கும் பரிபூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும்’ என்றும், ‘அவர்கள்  வானத்துப் பறவைகள் போல் சுதந்திரமாக இருப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும்’ என்றும், ‘அவர்கள் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிறைந்திருக்க வேண்டும்’ என்றும் ‘தங்களுக்கு வேண்டிய பொருளைத் தாங்களே உத்தியோகங்கள் செய்து தேடிக்கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும்’ என்றும், ‘ஆண்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில் புரிவதற்கு இடம் தர வேண்டும்’ என்றும், ‘பெண்களை நாம் பொதுவாகப் பராசக்தியின் அவதாரங்கள் என்று கருத வேண்டும்’ என்றும் கருதினார் என்று தெளிவாகத் தெரிகிறது.

9. ‘சுவாமி விவேகானந்தரின் கல்விப் பெருமையும், அறிவுத் தெளிவும், தெய்வீகமான அன்பும், அவருடைய தைரியமும் மேருமலை போன்ற மனவலிமையும், அவர் செய்திருக்கும் சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் இருப்பதைக் காட்டிலும் - அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே தெரிகின்றன’ என்று கூறுவது தவறாகாது.

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு மலர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை 4 வெளியீட்டிலிருந்து
*****************************

Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Sep 14, 2023, 9:31:14 AMSep 14
to Santhavasantham
In my whatsapp group, Selvakumar, Atlanta (engineer from Virusunagar) wrote:
> Bharati can’t be given as reference because  Bharati wrote for both sides

> Yes Vivekananda is a good reference. But he represented in US, for Brahminism.  
> Thus proves this whatever dharma is for a section not a religion in whole.

Subramania Bharati can definitely be given as an example of Sanatana Dharma. I have shown to R. Balakrishnan, IAS etc., the key 3 places Bharati uses Sanatana Dharmam and it is he who  represents Sanatana Dharma in Tamil Nadu, just as Ramakrishna Paramahamsa, Vivekananda, Dayananda Saraswathi in the North India. 

N. Ganesan

On Thu, Sep 14, 2023 at 7:27 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
எழுத்தாளர் ஜெயமோகன் “சனாதனம்” என்ற சொல் எவ்வாறு இந்தியாவின் சமையத்தில் இயங்குகிறது எனக் கட்டுரை தந்துள்ளார்:
சனாதனம், சனாதன எதிர்ப்பு https://www.jeyamohan.in/188571/
இக் கட்டுரை பற்றிச் சில கருத்துகளை எழுத ஆவல்.

பாரதியார் மூன்று முறை சனாதனம் என்ற சொல்லை முக்கியமான இடங்களில் ஆள்கிறார். (1) இராமபிரான் கீர்த்தநத்திலும், (2) சுவாமி விவேகாநந்தர் அமெரிக்கா போன்ற அயல்தேசங்களில் சனாதத்தைப் பற்றிப் பரப்பியதை விளக்குகையிலும் (3) பாரதி 66-லும் இருப்பதைத் தந்துள்ளேன். மேலும் இருக்கும், தேடுவோம்.
             “பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
                   புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
                சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
                       *சநாதனமாம் ஹிந்து மதம்*,இஸ்லாம்,யூதம்,
                நாமமுயர் சீனத்துத் 'தாவுமர்க்கம்,” - பாரதி 66
https://ta.wikisource.org/wiki/பாரதி_அறுபத்தாறு

வங்க தேசத்தில் சனாதன தருமம் பற்றிப் பரப்பியவர்களில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரும், பஞ்சாபில் ஆர்ய சமாஜம் கண்ட சுவாமி தயானந்த சரஸ்வதியும் முக்கியமானவர்கள். இராமகிருஷ்ணர் இயக்கம் சனாதன தர்மத்தைச் சீர்திருத்தியது. இதனைத் தமிழில் விளக்கி நூல்கள் எழுதியவர் சுவாமி சித்பவானந்தர். தமிழ்நாட்டில் ஹிந்து சமயம், ஹிந்துத்துவம் நிலைநாட்டியவர்களில் 20-ம் நூற்றாண்டில் இருவர் முக்கியமானவர்கள்: (1) பாரதி (2) காஞ்சிப் பெரியவர்.

காந்திஜி தன்னை என்றும் நான் ஒரு சனாதனி என அறிவித்தார். சனாதன தர்மம், அதன் சீர்திருத்தங்களில் காந்திக்கு ஒரு பங்குண்டு. “காந்தியின் சனாதனம்” என ஆறு பகுதிகளாய் 2012-ல் ஜெமோ எழுதியுள்ளார். இணையத்தில் எல்லா மக்களுக்கும் போய்ச் சேரும் வகையில் இலக்கியம், தற்கால விவாதங்களில் எனத் தினந்தோறும் எழுதிவருபவர் ஜெயமோகன். திருவள்ளுவர் சமண சமயப் பின்புலம் கொண்டவர் என்பதை எளிய முறையில் பல லட்சம் மக்களை அடையச் செய்பவர். அவரது “சனாதனம், சனாதன எதிர்ப்பு” படித்து விவாதிக்கத் தக்க ஒரு முக்கியமான கட்டுரை. இதர்கு முன் மலையாளி ஜர்னலிஸ்ட்டுக்கு ஜெமோ கொடுத்த பேட்டி ஆங்கிலத்தில் உள்ளது. அதன் தொடர்ச்சியே இத் தமிழ்க் கட்டுரை. https://www.jeyamohan.in/188571/

உத்தமம் (https://infitt.org) பல ஆண்டுகளாய் இணையத் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. 2024-ல் அதன் கருத்தரங்கம் நடாத்த முயற்சிகள் எடுத்துவருகிறோம். மின்மஞ்சரி என்ற மின்னிதழ் இண்பிட் நடத்தியது. ஜெயமோகன் அவர்களை இணையம் பற்றியும், இணையத்தில் அவர் நுழைவு பற்றியும் சொல்ல 2009-ம் ஆண்டில் கேட்டேன். அப்போது எழுதிய கட்டுரை வாசிக்கலாம்.  ~NG

From: jeyamohan_ B <jeyamoha...@gmail.com>
Date: Mon, Sep 14, 2009 at 10:08 AM
Subject: Re: உத்தமம் கருத்தரங்க (கொலோன், ஜெர்மனி) சிறப்பிதழ் கட்டுரை

இணைய உலகமும் நானும்
      - ஜெயமோகன்

N. Ganesan

unread,
Sep 15, 2023, 7:54:11 AMSep 15
to Santhavasantham
There are two essays by Makarand Paranjape that are relevant to the discourse on Sanatana Dharma. Gandhi often said that he is a Sanatani. In his path, Bharati also considered reforms in Sanatana Dharma essential for its survival and India's growth in the World. Sanatana Dharmam = Hinduism, acc. to Bharati like many others including Ramakrishnar, Vivekanandar, Gandhi, ...

The philosophy of Mahatma Gandhi for the twenty-first century / edited by Douglas Allen.
This book has an essay by M. Paranjape:
10. The "Sanatani" Mahatma: Rereading Gandhi Post-Hindutva / Makarand Paranjape

Makarand Paranjape (2009), Sanatana Dharma and (Post)modernity, South Asian Review, 30:1, 18-35.
From this paper,

"A Sanatani Reclamation of Gandhi

A convenient point of entry into the question of Sanatana Dharma
in the context of postmodernity is through the thought of Gandhi, arguably
the "greatest" Hindu of recent times. Consider this statement of
his:
   I know that friends get confused when I say I am a Sanatanist Hindu
   and they fail to fmd in me things they associate with a man usually
   labeled as such. But that is because, in spite of my being a staunch
   Hindu, I find room in my faith for Christian and Islamic and Zoroastrian
   teaching, and, therefore, my Hinduism seems to some to be a
   conglomeration and some have even dubbed me an eclectic. Well, to
   call a man eclectic is to say that he has no faith, but mine is a broad
   faith which does not oppose Christians-not even a Plymouth Brother--
   not even the most fanatical Mussalman. It is a faith based on the
   broadest possible toleration. I refuse to abuse a man for his fanatical
   deeds because I try to see them from his point of view. It is that
   broad faith that sustains me. It is a somewhat embarrassing position, I
   know-but to others, not to me! (Young India, 22-12-1927: 426;
   Collected Works 35: 254-55) "

"I would like to use the word "Sanatani" to describe this narrative.
This was a word that Gandhi, as we have seen, often used to describe
himself. Gandhi, by his own admission, was a Sanatani Hindu. Witness
his famous remark to Ranchodlal Patwari in a letter of June 9,
1915: "I will sacrifice this life itself to uphold the sanatana dharma as I
understand it" (Collected 15:9). This he said at a time when a Sanatani
Hindu was thought of as conservative and traditionalist, quite in contrast,
to consider the example of North India, to the Arya Samaji, who
was seen as a reformist. But Gandhi redefined what it meant to be a
Sanatani Hindu. He upturned the entire belief system of the Hindus,
especially those that pertained to social observances. He was, in that
sense, the most reformist or modernizing of all recent Hindus. His pronouncements
and actions on untouchability, the rights of women, and
Hindu-Muslim relations, or even idol worship, for that matter, would
put him in direct conflict with most so-called Sanatani Hindus of his
time. His lengthy correspondence, not to mention his fast unto death,
over the denial of temple entry to untouchables in Travancore state,
amply demonstrates his resolve to purge Hinduism of both social ills
and irrationalities. In the end, Gandhi succeeded in redefining Hinduism
in ways that no other national leader before or since has."

பாரதியார் காந்தி போன்ற சனாதன தர்மத்தைத் தமிழில் சொன்னவர் ஆவார்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages