மதுரையம் பதியில் உதித்தான்

34 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Sep 6, 2023, 10:16:39 PM9/6/23
to santhavasantham


மதுரையம் பதியில் உதித்தான்
(எழுசீர் ஆசிரிய விருத்தம்) 

அன்பினால் நினைவார்க் கமுதினும் இனியான் 
... அணிமயில் இறகொளிர் சிகையான் 
மென்னிலா புரையும் திலகநன் நுதலான் 
... மிளிர்குழை திகழ்தரு செவியான் 
இன்பெலாம் மலரும் குழலமர் இதழான் 
... என்பெலாம் உருக்கிடும் இசையான் 
நன்றுநாம் உய்ய உதித்திடும் நகராம் 
... நலமிகு மதுரையம் பதியே. 

(மென்னிலா = மென்மை மிக்க நிலா; புரையும் = போன்ற; குழல் அமர் இதழ் = புல்லாங்குழல் தவழ்கின்ற உதடு; என்பெலாம் = எலும்பெல்லாம்) 

 - இரா. ஆனந்த்

சௌந்தர்

unread,
Sep 6, 2023, 10:30:58 PM9/6/23
to சந்தவசந்தம்
அருமை திரு.ஆனந்த். ஶ்ரீஜயந்தி நல்வாழ்த்துகள்.
சௌந்தர் 

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 6, 2023, 10:51:01 PM9/6/23
to santhav...@googlegroups.com
சிறப்பான விருத்தம்
     
       —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/766d1f03-2b5d-4db9-99c1-bc47985801d8n%40googlegroups.com.

Anand Ramanujam

unread,
Sep 7, 2023, 5:41:58 AM9/7/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. செளந்தர். ஶ்ரீஜயந்தி வாழ்த்துகள்!

--

Anand Ramanujam

unread,
Sep 7, 2023, 5:42:43 AM9/7/23
to santhav...@googlegroups.com
மிக்க நனறி, திரு. தில்லைவேந்தன்!

N. Ganesan

unread,
Sep 7, 2023, 8:47:22 AM9/7/23
to சந்தவசந்தம்
அணிமயில் இறகொளிர் சிகையான் 

   அணிமயில் சிறகொளிர் சிகையான்
                        - என இருக்கலாமோ??

குருநாதன் ரமணி

unread,
Sep 7, 2023, 8:58:40 AM9/7/23
to சந்தவசந்தம்
மிகவும் அருமை, கவிஞரே.
ரமணி

Anand Ramanujam

unread,
Sep 7, 2023, 11:52:57 AM9/7/23
to santhav...@googlegroups.com
சிறகு என்பது இறக்கையையும், இறகு என்பது பீலியையும் குறிக்கும் சொற்கள் என்பது எனது புரிதல். 
அதனால் தான், மயிற்பீலி அணிந்த சிகையைக் குறிக்கும்போது இறகொளிர் என்று சொன்னேன். 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Sep 7, 2023, 11:53:29 AM9/7/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

Siva Siva

unread,
Sep 7, 2023, 12:02:35 PM9/7/23
to santhav...@googlegroups.com
Nice song.

1)
மென்மையான நிலா - புதிய உவமையோ?

2)
/நன்றுநாம் உய்ய உதித்திடும் நகராம் 
... நலமிகு மதுரையம் பதியே. /

மன்புகழ் பெற்ற மதுரையம் பதியில்
மண்ணலம் பெறவுதித் தனனே

or some such re-phrasing may focus the song on Krishna's birth rather than on the place where he was born.

V. Subramanian

N. Ganesan

unread,
Sep 7, 2023, 1:36:20 PM9/7/23
to santhav...@googlegroups.com
On Thu, Sep 7, 2023 at 10:52 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
சிறகு என்பது இறக்கையையும், இறகு என்பது பீலியையும் குறிக்கும் சொற்கள் என்பது எனது புரிதல். 

Yes. On more words like iRaku < ciRaku with word-initial consonant loss:



 

Anand Ramanujam

unread,
Sep 7, 2023, 4:29:14 PM9/7/23
to santhav...@googlegroups.com
சொல் முதல் மெய்யெழுத்தாகிய ‘ச்’ மறைவதால், சிறகிலிருந்து பிறந்த சொல்லே ‘இறகு’ என்று கண்டுணர்ந்தேன்.

தங்கள் பதிவைக் காட்டித் தெளிவுறுத்தியமைக்கு நன்றி, திரு. கணேசன்!

Anand Ramanujam

unread,
Sep 7, 2023, 5:21:24 PM9/7/23
to santhav...@googlegroups.com
Thank you for your nice suggestions! 

I have rephrased ‘மென்னிலா புரையும்’ as ‘மின்னுமா மணிபோல்’ as it sounds better. 

Also, I have rephrased the last line as 
‘மன்னுமா நிலத்தின் மகுடமாய் விளங்கும்   
... மதுரையம் பதியுதித் தனனே. ‘

The modified song is as follows:

அன்பினால் நினைவார்க் கமுதினும் இனியான் 
... அணிமயிற் சிறகொளிர் சிகையான் 
மின்னுமா மணிபோல் திலகநன் நுதலான் 
... மிளிர்குழை திகழ்தரு செவியான் 
இன்பெலாம் நிறைக்கும் குழலமர் இதழான் 
... என்பெலாம் உருக்கிடும் இசையான் 
மன்னுமா நிலத்தின் மகுடமாய் விளங்கும்   
... மதுரையம் பதியுதித் தனனே. 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 7, 2023, 6:00:15 PM9/7/23
to santhav...@googlegroups.com
Nice.

Anand Ramanujam

unread,
Sep 7, 2023, 6:05:55 PM9/7/23
to santhav...@googlegroups.com
Thank you!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 10, 2023, 9:26:56 AM9/10/23
to santhav...@googlegroups.com
வடமதுரை உதித்தான்!
--------------------------------------
அன்பினால் நினைவார்க் கமுதினும் இனியான் 
... அணிமயிற் சிறகொளிர் சிகையான் 
மின்னுமா மணிபோல் திலகநன் நுதலான் 
... மிளிர்குழை திகழ்தரு செவியான் 
இன்பெலாம் நிறைக்கும் குழலமர் இதழான் 
... என்பெலாம் உருக்கிடும் இசையான் 
மன்னுமா நிலத்தின் மகுடமாய் விளங்கும்   
... மதுரையம் பதியுதித் தனனே.  - இமயவரம்பன்

On Thu, Sep 7, 2023 at 3:29 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
சொல் முதல் மெய்யெழுத்தாகிய ‘ச்’ மறைவதால், சிறகிலிருந்து பிறந்த சொல்லே ‘இறகு’ என்று கண்டுணர்ந்தேன்.
தங்கள் பதிவைக் காட்டித் தெளிவுறுத்தியமைக்கு நன்றி, திரு. கணேசன்!

சிறகு > இறகு
சூழ்- > ஊழ் (ஆஜீவகத்தின் முக்கியக் கோட்பாடு. புறத்நானூற்றில் கணியன் பூங்குன்றன், குறளில் ஊழ் அதிகாரம்).
சணில்/செணில் (schwa, செண்ணகேசவன்) > அணில்
சிப்பி > இப்பி
சபா (sabhA) > சவை  > அவை
ஶ்ரமண > சமணர் > அமணர்
சமை- (சமையம்) > அமை-
ஸஹஸ்ர > ஸாசிர- > சாசிரம் > ஆயிரம் (= 1000)  . மலெஸாசிரம் (கன்னடக் கல்வெட்டு கண்டேன்) = மலையாயிரம்.
சமர் > அமர்
சிமிழ் > இமிழ்
சுணங்கு > உணங்கு
சுள்-/சுடு- > உள்- > உஷ்ண-
சுடு- (சுடர்) > உடு (= நக்ஷத்ரம்)
சாயல் (அழகு) > ஆய் (ஆயிழை)
சான்றோர் > ஆன்றோர்
சார்- > ஆர்-
சிதை (சிதார்) > இதை
சுருள் > உருள்
சிமை- ‘from IE, snow' > இமையம்
சுலாவு > உலாவு
சுப்பு/சப்பு (சுவை) > உப்பு
சுப்பளம் (கல்வெட்டு) > உப்பளம்
சேர் ‘plough' > ஏர்
சாறு ‘6' > ஆறு
சரிவு > அருவி
...

இப்பொழுது இந்தியா என்ற பெயர் செய்திகளில் அடிபடுகிறது. சீந்து/சிந்து (ஈஞ்சு மரம், நதி, பூமிக்கு ஆகிவந்தது) > ஹிந்து, கிரேக்க பாஷையில் இந்தியா எல்லாவற்றுக்கும் மூலப்பெயர் சீந்து/சிந்து என்று ஈங்க மரத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லின் பெயர்தான் என்பது அறிக.

சீ(கு) மரப் பாளைகளில் இருந்து வடியும் கள் சீழ்/சீழம் எனப்படுகிறது. கரிய இரும்புக்கு மாழை (< மா ‘கருப்பு, ஒளிர்வது’), நெஞ்சில் கோக்கும் கபத்துக்குக் கோழை ( < கோ-) அதுபோல், சீழம் < சீ-. பின்னர் ஈழம் < சீழம். (Cf. சிறகு:இறகு, சிப்பி:இப்பி).   ...   (see my mails/notes, essaysin the last 30 years on the meaning of Sindu = Indus civilization). சீ- இன்னும் கொங்குநாட்டில் புழங்குகிற சொல். சீமாறு ‘துடைப்பம்’, சீ- > சீகு- சீவக்கட்டை < சீகக்கட்டை. பாகற்காய் > பாவக்காய் ஆதற் போல.  சீ (சீமாறு, சீக்காடு > ஈக்காடு (ஈர்க்காடு)) சீ- (சீந்து/சிந்து ஆறு) > ஈந்து/ஈங்கு/ஈஞ்சு, ... ஈர்ந்தூர் கிழான். இவன் ஈரோடு அருகே வாழ்ந்த கிழான். ஈங்கியூர் எனப்படுகிறது. ஈஞ்சன் கூட்டம் உண்டு. புலவர் அ.மு. குழந்தை ஈந்தூர் எங்கே எனக் காட்டியுள்ளார்.

என்னென்ன சொன்முதல்மெய் மறையும் எனக் காட்டும் உதாரணங்கள் பல தந்துள்ளேன்:
https://groups.google.com/g/santhavasantham/c/34ebzqoFK64/m/ZfjCNyGKCgAJ
இவற்றால், குறளில் ஊங்கு- என்னும் சொற்பொருள் விளங்கும்.
https://groups.google.com/g/santhavasantham/c/yd4MIrPO2Lo/m/sZwCtmc4BQAJ

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages